Search This Blog

11.7.12

கோயிலுக்குள் நுழைந்தால் ஆபாசம்-கோயில்சிலைகள் தேர்கள் அருவருப்பு


கோயிலுக்குள் நுழைந்தால் ஆபாசம் - கோயில் சிலைகள் - தேர்களைப் பார்த்தால் அருவருப்பு - சாமியார்களைப் பற்றியோ கேட்கவே வேண்டாம்! கோயில் கருவறையிலோ அர்ச்சகனின் காம லீலைகள்! கடவுள் கதைகள், புராணங்கள், இதிகாசங்களைப் படித்தால் கேவலமான ரசனைகள் - இத்தோடு முடிந்ததா?

ஏடுகளை, இதழ்களைப் புரட்டினால் அரைகுறை ஆடைகளோடு பெண்களின் வண்ண வண்ணப் படங்கள் (ஆனந்தவிகடன் உள்ளிட்ட வார இதழ்கள் எல்லாம் இதில் அடக்கம்!)

ஓட்டல்களில் இரவு நேரங்களில் மதுவிருந்து - நடிகர் நடிகைகள் பட்டாளங்கள் அங்கு அணிவகுப்பு - ஆட்ட பாட்டம் - அடிதடிக் கூத்துகள். செய்தி ஏடுகளில் வெட்கம் கெட்ட முறையில் இவைகளுக்கு முன்னுரிமை!

இதுபோன்ற ஓட்டல் ஆட்டம் பாட்டங்களில் கல்லூரி மாணவிகளும், கைநிறைய சம்பாதிப்பவர்களும் பங்கேற்கிறார்களாம்.

சின்னத் திரை - பெரிய திரைகள் என்றால் ஆபாச நச்சுக் காற்றின் பிரவாகம்! வசனம், பாடல்களில் இரட்டை அர்த்தங்கள். இணையதளங்களிலோ எழுத்துக்களால் கூறமுடியாத அளவுக்கு நிர்வாணங்கள். இவற்றைப் பயன்படுத்தி மோசடிகள்!

இவற்றின் தாக்கங்களால் இளைஞர்கள், மாணவர்கள் திசைமாறித் தத்தளிக்கும் போக்குகள். 15 வயதுக்குள் மது பழக்கம் வந்துவிட்டதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

பேருந்துகளில் சக பயணிகள் பயணம் செய்ய முடியாத அளவுக்கு இளம் வட்டங்களின் அருவருப்பான பேச்சுகள் - அதீதமான சேட்டைகள்!
இரவு நேரங்களில் கடற்கரைச் சாலைகளில் பெருங்குடி மகன்களின் ஆர்ப்பாட்டமான நடவடிக்கைகள்.

சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் இளைஞர்கள் எட்டு வளைவு போட்டுப் பறக்கும் போக்குகள் - இவை எல்லாம் எங்கு கொண்டு போய் விடும் என்கிற அச்சமும், கவலையும் நாணயமான சமூக சிந்தனையாளர்களுக்கு ஏற்படாமல் போகாது. கல்வித் திட்டமும், கல்வி நிறுவனங்களும் இவற்றிற்குத் தீர்வு காணும் என்கிற நம்பிக்கை இல்லை. உயர்நிலைப் பள்ளி மாணவன் தன் ஆசிரியையே கத்தியால் குத்திக் கொலை செய்கிறான்.

வீட்டில் பெற்றோர்கள் பரபரப்பாக இருக்கிறார்கள். அவர்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள். பிள்ளைகளைக் கவனிக்க நேரம் ஏது? அப்படியே நேரம் கிடைத்தாலும் சின்னத்திரை சாகரத்தில் அவர்கள் மூழ்கிவிடுவார்கள்.

அரசியல் போக்கோ கேட்கவே வேண்டாம். சித்தாந்தங்கள் சிறகொடிந்து போய், பெரும்பாலும் குறுக்கு வழியில் குபேரர் ஆவதற்கான மும்முரங் களில் மூளைகளைக் கசக்கிக் கொண்டு இருக்கிறார்கள் - புதிய தலைமுறையினர்.

போதும் போதாததற்கு உலக மயம் என்ற பொருளாதார ஒட்டகம் நுழைந்து, நுகர்வுக் கலாச்சாரம் எனும் அபினில் மக்கள் மயங்கிக் கிடக் கிறார்கள். தங்கள் வருமானம் என்ன என்பதைப் பற்றி கவலையில்லை - கடன் வாங்கியாவது சொகுசுப் பொருள்களை வாங்கி வீட்டை நிரப்பும் போலித்தன படுகுழியில் வீழ்ந்து கிடக்கும் நிலை!

சித்தாந்தம் உள்ள தலைவர்களைவிட, கட்சிகளை விட சினிமாக்காரர்கள்தான் தங்கள் வழிகாட்டிகள் என்று சிகரத்தில் வைத்து வழிபடும் அவலம்!

இவற்றைப் பற்றி எல்லாம் சிந்திக்கும் தலைவர்கள் எத்தனைப் பேர் இருக்கிறார்கள்? எத்தனை ஏடுகள் - இதழ்கள் இருக்கின்றன? பொதுக்கூட்டங்களில் ஒரு மணி நேரம் பேசினால் அதில் ஒரு பத்து நிமிடம் தனி ஒழுக்கம், பகுத்தறிவு, பொது ஒழுக்கம்பற்றிப் பேசக்கூடாதா? கேடுகெட்ட கலாச்சாரத்தைக் கண்டித்துக் கருத்துக் கூறக்கூடாதா?

எழுத்தாளர்கள் என்ன செய்கிறார்கள்? சிந்தனையாளர்கள் என்ன செய்கிறார்கள்? ஆன்மீகத்துக்காக வாரம் ஒருமுறை சிறப்பு இதழ்களை வெளியிடும் பத்திரிகை முதலாளிகள், பொது ஒழுக்கத்தைப்பற்றி நான்கு வரிகளை இடம்பெறச் செய்யக்கூடாதா?

இவை குறித்த உரத்த சிந்தனை தேவை - செயல் பாடுகளும், திட்டங்களும் தேவை! தேவை!! கழகமும், நமது ஏடுகளும்தான் இவற்றை ஆழமாகச் செய்து கொண்டு இருக்கின்றன என்பதை மறுக்க முடியுமா?

---------------------”விடுதலை” தலையங்கம் 11-7-2012

16 comments:

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்தில் இணைதல் வேண்டும்- ஏன்?


சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும், கல்வியைக் கொடுக்காதே என்று எழுதி வைத்து, சூத்திரர்கள் என்றழைக்கப்பட்ட திராவிடர் இனத்தவர்களை பல வழிகளில் காலில் இட்டு மிதித்த மனுதர்ம பார்ப்பனர்கள், கல்வியில்தான் முதலில் நம்மை நசுக்கி னார்கள் என்பது, தந்தை பெரியாரால் நமக்கு அதிகம் விளக்கப்பட்ட ஒன்று.

எங்கே கல்வியை இவன் பெற்றுவிட்டால் இயல்பான அறிவுடையவன், அதீத அறிவு பெற்று நம்மை காலி செய்துவிடுவானோ என்ற பயத்திலே தான் மேற்கண்ட தர்மங்கள் மனுதர்மத்தில் எழுதி வைக்கப்பட்டன. அறிவு சூழ்ச்சியால் அடிக்கப்பட்டோம், கீழே தள்ளப் பட்டோம், மீண்டு எழுவதற்கு அறிவாசான் தேவைப்பட்டார், இன்றும் தேவைப்படுகிறார்.

இந்தக் கல்வியைப் பெற நாம் எந்தளவுக் குப் போராடினோம், போராடிக் கொண்டு இருக்கிறோம் என்பது வரலாற்றுப் பக்கங் களுக்குத் தெரியும். வீட்டிற்குள் பெண்களை கூண்டுக் கிளிகளைப் போல் அடைத்து வைத்திருக்காதீர்; சுதந்திர பறவைகளாய் பறக்கவிட்டு உலக அறிவை பெறச் செய்யுங் கள், கல்வி கற்க ஏற்பாடு செய்யுங்கள் என்று அன்றாடம் கூறிக் கொண்டிருந்தார் பகுத் தறிவுப் பகலவன்.

அந்த எண்ணம், கூற்று, கனவு, அதற் கான போராட்டங்கள் இன்று செயலில் நம் கண்முன்னே தெரிகிறது. அனைத்துப் பெண் குழந்தைகளும் பள்ளிகளுக்கும், கல் லூரிகளுக்கும் செல்கின்றனர். வீட்டின் ஒவ்வொரு பிள்ளைகளும் படிக்கின்றனர். ஸ்ரீஸ்ரீ வீடுகளிலிருந்து மட்டுமே படிக்க செல்ல முடியும் என்றிருந்த அடக்குமுறை உடைத்தெறியப்பட்டு இன்று, முனுசாமி, கந்தசாமி போன்றவர்களின் வீட்டுப் பிள்ளைகளும் படிக்கச் செல்ல முடிகிறது.

படிப்பது மட்டுமல்ல, மாநிலத்திலே முதல் மாணவர்களாகவும் தேர்ந்து தங்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்கின்றனர். இந்த உழைப்பும், பெருமை யும் ஆகிய அனைத்தும் தந்தை பெரியா ரையே சேரும் என்று அடித்துக் கூறலாம்.

ஆம், ஏனென்றால் அவர்களின் சிந் தனையும், அவர்கள் உருவாக்கிய திராவிடர் இயக்கமுமே அதற்கான வித்திட்டது. திரா விடர் இயக்கமே இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது, நுழைவுத்தேர்வினை அடித்து விரட்டியது. தந்தை பெரியாரின் மாணவன், தமிழர் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள் இயற்றித் தந்த 31-சி சட்டமே அவைகளை நிலைநாட்டியது.

அதற்கான எடுத்துக்காட்டு தற்பொழுது வெளியிடப்பட்ட மருத்துவம் மற்றும் பொறியி யல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஒன்று போதும். மருத்துவ பட்டியலில் 200க்கு 200 பெற்று முதல் பதினோரு இடங்களை, பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களே பிடித்துள்ளனர். இது ஒன்று போதாதா? மருத்துவ படிப்பிற்கு மொத்தம் இருக்கும் இடங்கள் 2395; அதில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு போக இதர 742 இடங்கள் பொது இடங்கள்.

அந்த 742 பொது இடங்களில் 678 இடங்களை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பிடித்துள்ளனர் என்பது எவ் வளவு ஆச்சரியமான, பாராட்டவேண்டிய, வியக்கவேண்டிய ஒரு விடயம். ஏனென்றால் 742 இடங்களில் 678 இடங்களை பிடித்தது போக மீதமிருக்கும் 64 இடங்களை உயர் வகுப்பினர் எடுத்துக்கொள்கின்றனர்.

இதை இவ்வாறே பார்த்தால் மொத்தம் 2395 இடங் களில் வெறும் 64 இடங்களையே உயர்ஜாதி யினர் நிரப்புகிறார்கள், மீதமிருக்கும் 2331 இடங்களை திராவிடர் மாணவர்கள் நிரப்பு கின்றனர். இந்த மாற்றம் எத்துணை பெரிய மாற்றம். அதிலும் 64 இடங்களை பார்ப்பனர் களே அடைந்து விடுகிறார்களா, என்றால் இல்லையே. அந்த 64 இடங்களில் முற்பட்ட திராவிடர் சமுதாயத்தினர் பிடிக்க வாய்ப் பிருக்கிறதே.

அந்த 64 இடங்களை பார்ப்பனர்களே பிடித்துக் கொள்வதாய் வைத்துக் கொண்டாலும் மீதமுள்ள 2331 இடங்களை திராவிடர் மாணவர்கள், பார்ப் பனர் அல்லாதவர்கள் அல்லவா பிடித்துள்ளார் கள். அதேபோல் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் முதல் 15 மாணவர் களில் பிற்படுத்தப்பட்டோர் 8, மிகவும் பிற் படுத்தப்பட்டோர்-1, தாழ்த்தப்பட்டோர்-1, தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியினர்)-1, பழங் குடியினர்-1 என்று அருமையாக தேர்ச்சி பெற்றுள்ளனர் நம் மாணவர்கள்.

தமிழ் ஓவியா said...

இதை எப்படி அந்த பார்ப்பனர்களால் ஜீரணிக்க முடியும், உறங்க முடியும், வாய் விட்டுச் சிரிக்க முடியும்? அதனால் தானே தினமலர், தினமணி, துக்ளக் போன்றவை களுக்கு செரிமானக் கோளாறு ஏற்படுகிறது. அதனால் தானே மருத்துவ தரவரிசை பட் டியலில் மாணவர்களின் ஜாதியை குறிக்கும் வண்ணம், பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., என்று முதல் பக்க செய்தியாய் போட்டு குத்திக்காட்ட தெரிகிறது.

குளித்த குதிரை, மதம் பிடித்த யானை, படித்த சூத்திரன்- ஆகியோர் மிகவும் ஆபத்தானவர்கள் என்று சாஸ்திரம் தரித்த பார்ப்பனர்களாகிய அவர்களுக்கு, சூத்திரன் என்றழைக்கப்பட்ட, படித்த திராவிடனால் இன்று ஆபத்து காத்திருக்கிறது, என்று சொன்னால் அது மிகையாகாது.

நீதிக்கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்கும் முன்புவரை மருத்துவ கல்லூரிகளில் சேர கட்டாயம் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண் டும். ஆனால் இன்றோ, அவ்வாறு இல்லை, தகுதியான மதிப்பெண்கள் மட்டுமே போதும் அல்லவா. இந்த மிகப்பெரிய மாற்றங்களுக்கு வழிவகுத்தது யார்? எதிர்ப்புகள் முன்நின்று சந்தித்து ஏவுகணை பிரச்சினைகளை எட்டி உதைத்து போராடி உரிமைகளை வென் றெடுத்தது யார்? சூத்திரன் என்பவன் படிக்கவே கூடாது அவ்வாறு அவன் ஓதலை செய்தால் மிகக் கடுமையான தண்டனை களை கொடுக்க வேண்டும் என்று இருந் ததை அடியோடு அழிக்க பாடுபடுவது யார்?

என்று இந்த இடஒதுக்கீடு மூலம் சிறந்த கல்லூரிகளை பெறவிருக்கும் மாணவர் களுக்குத் தெரியுமா? அல்லது அவர்களின் பெற்றோர்கள் தான் அறிவார்களா? அல்லது திராவிடத்தால் வீழ்ந்தோம், திராவிடம் என்பது ஒரு மாயை என்று கூறும் தற்காலத் தலைவர்களாவது அறிவார்களா? மேற் கண்ட திராவிடர் மாணவர்களின் சாதனை களை எண்ணி இனியாவது அவ்வாறு கூறாமல் இருப்பார்களா?

ஆம், அறிவோம் என்று வரும் பதிலை விட, இல்லையே என்றுதான் அதிகம் வரும். அது அவர்களின் அறியாமை. எந்தப் பலனையும், நன்றியையும் எதிர்பார்க்காமல் இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டு இன்றுவரை தமிழர் தலைவர் தலைமையில் பாடுபட்டுக் கொண்டிருக்கும் திராவிடர் கழகம் அல்லவா! இந்த மாற்றத்திற்கு எல்லாம் காரணம். திராவிடர் இயக்கம் என்ற ஓர் இயக்கம் இல்லையெனில், இந்த மண் மானம் இழந்து பல நாள்கள் ஆகியிருக்கும்.

திராவிடர் மாணவர்கள் படிக்க இய லாது, இடமில்லை, தங்கும் வசதியில்லை என்று விரட்டப்பட்ட காலத்திலேயே திராவிடர் இல்லம் என்ற விடுதியை எழுப்பி பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு தங்கும் வசதியை உருவாக்கித் தந்தார், டாக்டர் சி. நடேசனார் அவர்கள்.
பள்ளிகளிலே முதன்முதலில் மதிய உணவுத் திட்டத்தையும், கட்டாய ஆரம்பக் கல்வியையும் கொண்டு வந்து கல்வியில் முதல் புரட்சியை உண்டாக்கினார் அப் போதைய சென்னை மேயர் சர் பிட்டி தியாகராயர்.

கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம் ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத் தோடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்துவது என்பதேயாகும், அல்லது உலகில் நல் வாழ்க்கை வாழத் தகுதியுடையவனாக் குவது என்பதேயாகும் என்று கூறினார் பள்ளிப் படிப்பில்லா பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்.

ஆகவே, அந்த அவசியமான கல்வியை பெற்றுத் தந்த திராவிடர் கழகத்தில்,

ஆச்சாரியார் கொண்டு வந்த குலக் கல்வி முறையை தகர்த்தெறிந்த திராவிடர் கழகத்தில்,

இடஒதுக்கீடு என்ற ஏணிப்படியை ஒடுக் கப்பட்ட மாணவர்களுக்காக ஏற்படுத்திய திராவிடர் கழகத்தில்,

கிராமப்புற மாணவர்களின் படிப்பை அடியோடு அழிக்க நுழைந்த நுழைவுத் தேர் வினை எட்டி உதைத்த திராவிடர் கழகத்தில்,

இன்னும் பல நலத்திட்டங்களை மாண வர்களுக்காக ஏற்படுத்த, போராடிய திராவிடர் கழகத்தில்,

ஏன் திராவிடர் மாணவர்கள் இணைதல் கூடாது?

ஏன் திராவிடர் கழகத்தில் இணைந்து போராடக் கூடாது?

நூறாண்டு காலம் சமுதாய மாற்றத் தினை ஏற்படுத்தி, திராவிடர் இனத்தவர் களை தலைநிமிரச் செய்திட்ட திராவிடர் கழகத்தில் மாணவர்கள்இணைந்தால், மேலும் மிகப் பெரிய சமுதாய மாற்றங்களை உருவாக்கிட முடியுமே.

ஜாதி அடுக்குமுறைகளின் வேராகிய கடவுள், மதம், புராணங்களை முற்றிலுமாக அழித்து, புத்துலகைப் படைக்க இளைய சமுதாயத்தினரால் மட்டுமே முடியும்! முடியும்!!

ஆகையால் திராவிடத்தால் எழுந்தோம், வீழவில்லை என்று உரக்க கூறி, அனைத்து மாணவர்களும் அரசியல் ஆட்சிப் பொறுப்பை ஏற்காத ஒரு சமுதாய புரட்சிகர இயக்கத்தில் இணைந்து நாளைய விடியலை உருவாக்குவோம்!

கல்விப் பயனை முழுவதும் அடைவோம்!

பார்ப்பனர் அடக்குமுறையை முற்றிலும் ஒழிப்போம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இரா.திலீபன், கண்ணந்தங்குடி கீழையூர்

தமிழ் ஓவியா said...

இந்நாள்... இந்நாள்...


இன்று ஆஸ்திகம் என்பது சிறுபான்மையினர் நலம்; இன்று நாஸ்திகம் என்பது பெரும்பான்மையினர் நலம் என்ற ஆழ்ந்த உண்மையை வெளிப்படுத்திய தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (1925).
.......................

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சீடரும், நடமாடும் பல்கலைக் கழகம் என்று அண்ணாவால் போற்றப்பட்டவரும், எந்த நிலையிலும் பகுத்தறிவுக் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத ஆற்றல்மிக்க பேச்சாளருமான டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்களின் 93 ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள்! (1920).

சங்கராச்சாரியாரின் படங்களை வீட்டில் மாட்டி வைக்கும் மட்டிகளும் நாட்டில் இருக்கிறார்களே- என்று சொன்னவராயிற்றே நாவலர்.

தமிழ் ஓவியா said...

உயர்நீதிமன்றங்களில் 42,17,905; உச்சநீதிமன்றத்தில் 57,179 வழக்குகள் நிலுவை நீதிபதி பதவிகளிலோ காலி இடங்கள் 266


புதுடில்லி, ஜூலை 11- இந்திய உயர்நீதிமன்றங்களில் 266 நீதிபதி பதவிகள் காலியாக உள்ளன. இதன் காரணமாக லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மொத்தம் அனுமதிக்கப்பட்டுள்ள 895 பணியிடங்களில் தற்போது 629 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான பணியிடங்கள் காலியாக இருப்பதற்கு முக்கியமான காரணம் தற்போது நடைமுறையில் உள்ள கலேஜியம் என்னும் நீதிபதிகள் குழுவின் மூலம் செய்யப்படும் தேர்வு மற்றும் நியமன நடைமுறையே என்று பரவலாகக் கருதப்படுகிறது. நீதிபதிகள் நியமன நடைமுறையை மறுபரிசீலனை செய்து, மாற்றியமைப்பது மிகவும் அவசியமானது என்ற கருத்தும் நிலவுகிறது.

அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட மொத்த 160 நீதிபதிகளில் தற்போது 86 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இதே போல் ஆந்திராவில் அனு மதிக்கப்பட்ட 49 பணியிடங்களில் 30 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். மும்பை உயர்நீதிமன்றத்தில் 18 காலிப் பணி யிடங்களும், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் 13 காலிப் பணியிடங்களும், டில்லி உயர்நீதிமன்றத்தில் 12 பணி யிடங்களும், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் 11 பணி யிடங்களும், சத்தீஷ்கர் உயர்நீதிமன்றத்தில் 5 பணி யிடங்களும், ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் 14 பணி யிடங்களில் 8 பணியிடங்களும் காலியாக உள்ளன.

கேரளாவில் 11 பணியிடங்களும், மத்திய பிரதேசத்தில் 9 பணியிடங்களும் சென்னையில் 7 பணியிடங்களும் காலியாக உள்ளன. இதி லிருந்தே தற்போதைய நியமன நடைமுறை பயனற்றதாக இருக்கிறது என்பது தெரிய வருகிறது. ஏற்கெனவே தொடக்க நிலை நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அண்மை யில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி உயர்நீதிமன்றங் களில் 42,17,905 வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் 57,179 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 42,17,905 வழக்குகளை இந்த நீதிமன்றங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ள 895 நீதிபதிகள்தான் விசாரிக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு நீதிபதியும் சராசரியாக 4,713 வழக்குகளை விசாரிக்க வேண்டியிருக்கும்.

இந்த நிலையில் இப்போது 629 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 266 பணியிடங்கள் அதாவது 29 விழுக்காடு பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, இந்த நிலுவையில் உள்ள வழக்குகள் எல்லாம் தீர்க்கப்படுவது எக்காலம்? தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பது முதுமொழி.

இவ்வாறு வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பதால், எத்தனை ஆயிரம் அப்பாவிகள் சிறைகளில் வாடவேண்டியிருக்கிறது. எத்தனை ஆயிரம் பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காகக் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது. 11-7-2012

தமிழ் ஓவியா said...

பெரியார் ஒருவரே!

மயிலாடுதுறைக்கு வந்த பா.ம.க. நிறுவனர் மருத்துவர் திரு.ச. இராமதாசு அவர்களுக்குக் கட்சியினர் வரவேற்புப் பதாகைகளை அமைத் துள்ளனர். அதில் காணப்படும் வாசகம் இளம் பெரியாரே! வருக! வருக!!

இதனை மருத்துவர் இராமதாசு கண்டிக்க வில்லை. இந்த நாட்டில் பெரியார் ஒருவரே! அய்யா என்றாலும் அவரே!! இதற்கு ஆய்வுகள் தேவைப் படாது. கட்சிகள், கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு ஏற்கப்பட்டுவிட்டவை இவை.

இளம் பெரியார், நடுத்தரப் பெரியார், முதிய பெரியார் என்றெல்லாம் யாரும் கிடையாது. அப்படி யாராவது சொல்ல ஆசைப்பட்டால், அது அவருக்கு அவரே செய்துகொண்ட கேலியும் கிண்டலுமே! 29 பதவிகளைத் தூக்கி எறிந்த புடம் போட்ட, பொது வாழ்வில் தன்னை மூழ்கடித்துக் கொண்ட ஒப்பற்ற உயர் எண்ணங்கள் மலரும் சோலை பெரியார்.

ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி

அணிந்திரா அணியாவார்

அறிந்திராத அறிவாவார்!

என்று புரட்சிக் கவிஞரால், பொறுக்கு மணிச் சொற்களால் கணிக்கப்பட்ட காலக்கதிரவன் பெரியார்! உண்மையான புரட்சித் தலைவரும் கூட! தன்னை நாடி வந்து கதவைத் தட்டிய முதல் அமைச்சர் பதவியை மூக்கறுத்து வெளியில் விரட்டிய வெண்தாடி வேந்தர் அவர்.

அறிவார்ந்த மக்களை உருவாக்கும் சிற்பி அவர். அடிமைத்தனத்தில், அடி முட்டாள்தனத்தில் மயங்கிக் கிடக்கும் மக்களின் பின்னால் ஓடுபவர் அல்லர்! வாக்குகளுக்காக தம் வாக்கினை மாற்றிக் கொள்ளாத மாபெரும் மானுடத் தந்தை பெரியார்.

அவரோடு ஒப்பிட்டுக்கொள்ள ஆசைப்பட வேண்டாம்! அவர் கொள்கைகளை நேசிக்க, சுவாசிக்க முதலில் கற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனமானது - ஆரோக்கியமானது.

குறிப்பு: திராவிடத்தை வெறுக்கும் மருத்துவர் திராவிடர் என்பதன் அவசியத்தை வலியுறுத்திய தந்தை பெரியாரை எப்படி ஏற்றுக்கொள் கிறாராம்? 11-7-2012

தமிழ் ஓவியா said...

மிரட்டலுக்கு அஞ்சப் போகிறதா மத்திய அரசு? ராமர் பாலம்; நாடு தழுவிய போராட்டமாம்!


புதுடில்லி, ஜூலை 11- ராமர் பாலத்தை பாதுகாக்க மத்திய அரசு தவறினால் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மூத்த தலைவர் வி.கே. மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 7 ஆண்டு களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் சேது சமுத்திர திட்டப்பணிகள் துவங்கின. ஆனால் ராமர் பாலம் வழியாக சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்றும், அதை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும் என் றும் உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப் புகளும், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து இதுபற்றி ஆராயுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சேது சமுத்திர திட்டப் பணிகளை நிறுத்தி வைத்த மத்திய அரசு மாற்றுப் பாதை குறித்து ஆராய நோபல் பரிசு வென்ற சுற்றுச்சூழல் வல்லுநர் ஆர்.கே.பச்சவுரி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அண்மையில் அந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மாற்றுப் பாதையை தேர்ந்தெடுப்பது பொருளாதார ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் சாத்தியமற்றது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து மத்திய அரசு இன்னும் இறுதி முடிவெடுக்க வில்லை. இன்னும் 8 வாரத்திற்குள் ஒரு முடிவு எடுத்து அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் வி.கே. மல்ஹோத்ரா கூறுகையில்,

ராமர் பாலம் விலை மதிப்பற்ற தேசிய பாரம்பரிய சின்னமாகும். அதனால் அதை எந்த விலை கொடுத்தாவது பாதுகாக்க வேண்டும். ராமர் பாலத்தை தகர்க்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவது சாத்தியம் இல்லை என்று கூறும் ஆர்.கே.பச்சவுரியின் அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரிக்க வேண்டும். மத்திய அரசு ராமர் பாலத்தை காக்க தவறினால் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்துவோம் என்றார். 11-7-2012

தமிழ் ஓவியா said...

டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.

அ.இ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளேட்டின் 24 ஆம் ஆண்டு விழா இன்று. கட்சியின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதெல்லாம் சரிதான்.

அண்ணா பெயரையும், திராவிடப் பெயரையும் கட்சியில் வைத்துக் கொண்டு, தந்தை பெரியாரின் பெயரையும் அவ்வப்போது உச்சரித்துக் கொண் டுள்ள அ.இ.அ.தி.மு.க.வின் அதிகார பூர்வ நாளேட்டில் இந்தத் தலைவர்களின் கொள்கை களுக்கு விரோதமான ஆன்மிகச் செய்திகளை வெளியிடலாமா?

பூணூல் தத்துவம் என்று சொல்லி, அதன் மகாத்மியங்களைத் தூக்கிப் பிடிக்கும் அளவுக்குச் செல்லுவதுதான் அண்ணா காட்டிய கொள்கையா? வழியா?

பூணூல் என்ன, வருணாசிரமத்தை குழி தோண்டிப் புதைக்கும் போர்க்கருவியா?

கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். காலத்தில் அவர் நடத்திய ஏடுகளில் ஆன்மிக சேதிகள் உண்டா? தலப் புராணப் புழுதிகள் உண்டா?

அண்ணா தி.மு.க. என்றால் அக்கிரகார தி.மு.க. என்ற நிலையல்லவா இன்று ஏற் பட்டுள்ளது? 11-7-2012

தமிழ் ஓவியா said...

அரசுகள் கண்மூடிக் கொண்டுள்ளனவா?


ஆழ்குழாய் கிணற்றில் குழந்தைகள் வீழ்வது - சாவது என்பது நாட்டில் சர்வ சாதாரணமாகி விட்டனவே! கிணறுகளைத் தற்காலிகமாவது

மூடுவதற்கு வழி செய்யப்பட வேண்டாமா? மரணக் கிணறுகள் என்று பெயர் சூட்டலாமா?

அரசுகள் என்ன செய்கின்றன?

உள்ளாட்சிகள் குறட்டை விடுகின்றனவா? மனித உயிர்கள் என்ன அவ்வளவு மலிவா?

பொதுநல வழக்கு விரும்பிகள் இவற்றில் கவனம் செலுத்தலாமே! குழிகளை மூடாத கொலைகாரர்களுக்குக் குறைந்தபட்சம் ஆயுள் தண்டனைகொடுக்கவேண்டாமா? 11-7-2012

தமிழ் ஓவியா said...

மனிதன்


பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.

பெரியார் - ”விடுதலை”, 9.6.1962)

தமிழ் ஓவியா said...

"டெசோ' மாநாடு ஏன்

"இலங்கையில் தொடரும் அநீதிக்கு விடிவு காண வேண்டும் என்பதற்காக தான், "டெசோ' மாநாடு நடைபெறுகிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: 2013ம் ஆண்டு செப்.,ல் இலங்கை வடக்குப் பகுதியில், தேர்தல் நடத்தப் போவதாக, இலங்கை அதிபர் ராஜபக்ஷே கூறியுள்ளார். ஆனால், தேர்தல் நடைமுறைகள் என்று வாக்காளர் பட்டியல்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என சொல்லியிருப்பதில், ஏதோ உள்ளார்ந்த அர்த்தம் இருப்பதாகத் தெரிகிறது. தேர்தல் நடத்துவது கூட பிறகு இருக்கட்டும்.

இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த, முன்னாள் விடுதலைப் புலிகள் சிலர், கடந்த மாதம் பூசா முகாமுக்கு மாற்றப் பட்டுள்ளனர். அதை எதிர்த்த மற்ற விடுதலைப் புலிகள், பூசா முகாமுக்கு மாற்றப் பட்டவர்களை மீண்டும் வவுனியா சிறைக்கே மாற்ற, கோரிக்கை வைத்துள்ளனர். இதை மறுத்த சிறை அதிகாரிகள், மூன்று விடுதலைப் புலிகளை ஒரே அறையில் தள்ளி பூட்டி விட்டனர். இதனால், வவுனியா சிறையில் கடந்த மாதம், 30ம் தேதி கலவரம் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, வவுனியா சிறையில் இருந்த, 201 கைதிகளும், அனுராதாபுரத்தில் உள்ள சிறைக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில், தமிழ்க் கைதிகள் பலர் காயமடைந்தனர். கணேசன் நிமலரூபன் என்பவர் இறந்து விட்டார். ஆனால், அவர் மாரடைப்பால் இறந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நிமலரூபனின் உடலை தகனம் செய்து விட்டனர். நிமலரூபனின் உடல் முழுக்க ரத்தம் படிந்திருந்ததாகவும், அவருடன் காயம் அடைந்த மற்றொரு கைதி கோமா நிலையில் மருத்துவமனையில் இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மண்ணின் மைந்தனுக்கு மரணத்தில் கூட மண் உரிமை மறுக்கப்பட்டது மாபாதகம் அல்லவா? இதற்கெல்லாம் ஓர் விடிவு காண வேண்டும் என்பதற்காகத் தான், "டெசோ' மாநாடு நடைபெறுகிறது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் கம்மாபட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஒன்றில் ஆதிதிராவிடர் பெண்கள் சத்துணவு சமைத்த காரணத்தால், வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு மாணவர்களை, பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று தடுத்துள்ளனர்.அதைவிடக் கொடுமை, வேற்றுச் ஜாதியினரின் எதிர்ப்புக்கு அரசு பணிந்து, சத்துணவுக் கூடத்தில் பணிபுரிந்து வந்த, ஆதிதிராவிடர் ஊழியர்களான மரகதவல்லி, வீரலட்சுமி ஆகியோரை, அங்கிருந்து பணி மாற்றம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர். தீண்டாமைக்கு ஆதரவான அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. இந்த அலுவலர்களை மாற்றம் செய்துள்ள இடத்திலும், இது போலவே வேறு ஜாதியினர் தங்கள் பிள்ளைகளை சாப்பிட விட மறுத்தால், அப்போது அரசு என்ன செய்யும்?இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

ஆழம் இதழில் வெளிவந்த, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியனின் நேர்காணல்

கால் நூற்றாண்டாக முடங்கிக் கிடந்த டெசோவை மீண்டும் எழுப்பியதற்கு என்ன காரணம்?

ஈழப்போராட்டம் இதுவரை மூன்று கட்டங்களைச் சந்தித்திருக்கிறது. முதல் கட்டம், தந்தை செல்வா போன்றோர் முன்னின்று நடத்திய அறவழிப் போராட்டம். அதன் தொடர்ச்சியாக, விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராளி இயக்கங்கள் நடத்திய ஆயுதப் போராட்டம் என்பது இரண்டாவது கட்டம். ஐ.நா. அவையின் மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மூலம் தமிழீழக் கோரிக்கைக்கு சர்வதேச கவனம் கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி, ஈழப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று உலக நாடுகளை வலியுறுத்தும் கட்டத்துக்கு இப்போது வந்திருக்கிறோம். இது ஈழப்போராட்டத்தின் மூன்றாவது கட்டம்.

karunanidhi_260முதல் இரண்டு கட்டங்களில் தமிழீழம் என்பது இலங்கையின் சிக்கலாக மட்டும் பார்க்கப்பட்டது. தற்போது அது சர்வதேச சிக்கல் என்று உணரப்பட்டு உள்ளது. சர்வதேச சிக்கல் என்று ஏன் சொல்கிறேன் என்றால், இறுதி யுத்தம் என்பது வெறும் சிங்களப் படைக்கும் புலிகளுக்கும் நடந்த யுத்தமல்ல. அப்படி நடந்திருந்தால், ஈழத்தில் என்றைக்கோ புலிக்கொடி பறந்திருக்கும். ஆனால், இந்தியா, சீனா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, இலங்கை ஆகிய ஐந்து நாடுகள் புலிகளை எதிர்த்து நடத்திய யுத்தம் அது. ஆனால், ஈழப் பிரச்சினையில் பல நாடுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தலையிட்டுவிட்டதால், அதற்கான தீர்வும் சர்வதேச அளவிலேயே தீர்க்கப்பட வேண்டும். அதற்கான பணிகளைச் செய்வதற்காகவே டெசோ மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

டெசோவின் கழுத்தை நெரித்துக் கொன்றவரே கருணாநிதிதான் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறாரே வைகோ?

கலைஞர்தான் டெசோவின் கழுத்தை நெரித்தார் என்று வைகோ நம்புவாரானால், அப்போது திமுகவில் இருந்த அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? இதை வெறும் கட்சிக் கட்டுப்பாடு என்று பார்க்க முடியாது.

ஈழத்தமிழர்கள் மீது அளவற்ற பற்றுதல் வைத்திருப்பவர் என்றால் அவர் அப்போதே கட்சிக் கட்டுப்பாட்டை எல்லாம் உடைத்துக் கொண்டு வெளியே வந்திருக்க வேண்டும். டெசோவின் கழுத்தை நெரித்துக் கொன்றது குற்றம் என்றால், நெரிக்கும் போது பார்த்துக் கொண்டிருப்பதும் குற்றம்தான். ஆனால் அப்படி எதுவும் அப்போது டெசோவுக்கு நடந்துவிடவில்லை என்பதுதான் உண்மை.

அன்று காங்கிரசுடன் கூட்டணி வைக்க டெசோவைக் கலைத்தார். தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக டெசோவைப் புதுப்பித்திருக்கிறார் என்ற பழ. நெடுமாறனின் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?

ஈ.வெ.கி. சம்பத் காலத்தில் இருந்து கலைஞர் எதிர்ப்பையே தன்னுடைய அரசியலாக வைத்திருப்பவர் பழ. நெடுமாறன். உண்மையில், டெசோ அமைப்பு கலைக்கப்பட்டது 1987இல். அதன் பிறகு சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்கு நடந்த ஆறு தேர்தல்களில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உருவாகவே இல்லை. 1996இல் கூட த.மா.காவுடன்தான் கூட்டணி. 2004இல்தான் திமுக-காங்கிரஸ் கூட்டணி உருவானது.

காங்கிரசுடன் கூட்டணி வைப்பதற்காக 17 ஆண்டுகளுக்கு முன்னரே டெசோவைக் கலைத்து விட்டார் கலைஞர் என்று பழ. நெடுமாறன் சொன்னால், அதற்கு என்ன பதில் சொல்வது? தற்போதுள்ள சூழலில், காங்கிரஸ் கூட்டணியிலிருந்து பிரிந்து வரவேண்டும் என்று கலைஞர் நினைத்தால், அதற்காகப் பெரிய காரணம் தேடவேண்டிய அவசியமில்லை. ஒரு பக்கம் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகவே டெசோவை உருவாக்குகிறார் கலைஞர் என்கிறார் நெடுமாறன். இன்னொரு பக்கம், வருகின்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரசின் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது இனத் துரோகம் என்கிறார்.

கவனமாகப் பார்த்தால், நெடுமாறனின் இந்த இரண்டு கருத்துகளும் சுயமுரண் உடையவை.

ஈழத்தமிழர் பிரச்சினைக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் பழ. நெடுறாறன், வைகோ, ராமதாஸ் போன்றவர்களை டெசோவில் சேர்க்கும் திட்டம் இருக்கிறதா?

தமிழ் ஓவியா said...

கலைஞர் மேற்கொள்கிற ஒரு காரியத்தை பழ. நெடுமாறனும், வைகோவும் ஒருநாளும் ஆதரிக்க மாட்டார்கள். அது எவ்வளவுதான் நியாயமானதாக இருந்தாலும் கூட. நியாயமாகப் பார்த்தால், தமிழீழத்துக்காகக் கலைஞர் டெசோவை மீண்டும் தொடங்குகிறார் என்றதும் முதல் ஆதரவு அறிக்கை அவர்களிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும். ஆக, தங்கள் கையில் இருக்கும் கடைசிச் சரக்கையும் கலைஞர் எடுத்துக்கொண்டு செல்கிறாரே என்ற வருத்தம் அவர்களுக்கு இருக்கிறதோ, என்னவோ தெரியவில்லை.

ஒரு தலைமையின் கீழ் இயங்குவதற்கு மற்றவர்களுக்குத் தயக்கம் இருக்கலாம். என் பார்வையில், ஈழத்தை ஆதரிக்கும் எல்லாத் தலைவர்களும் ஒரே மேடையில் நின்று, ஒன்றாகக் கைகளை உயர்த்திக் கொண்டு நின்றால்தான் ஒற்றுமை என்று பொருளில்லை. தனித்தனி மேடைகளில் ஒரே கோரிக்கை வந்தாலே போதுமானது.

ஆனால், திமுகவோடு எப்போதும் அணுக்கமாக இருக்கும் திருமாவளவனையும் டெசோவில் இணைத்துக் கொள்ளவில்லையே?

தமிழ் ஓவியா said...

டெசோவில் முதல் கூட்டம் மட்டுமே நடந்துள்ளது. மாநாடு நடக்கவிருக்கிறது. மேலும் சில அறிவிப்புகள் வரக்கூடும். டெசோவில் சேர்க்கப்படாதது குறித்து திருமாவளவனும் அதிருப்தி வெளியிட்டிருக்கிறார்.

தமிழகத்தில் இருக்கும் ஈழ ஆதரவாளர்களில் திருமாவளவன் முக்கியமானவர். அவர் இல்லை என்றால், ஒடுக்கப்பட்ட மக்களிடம் எல்லாம் ஈழத்தமிழர் பிரச்சினை சென்று சேர்ந்திருக்காது என்பது உண்மை. ஆகவே, விரையில் நல்ல செய்திகள் வரும். (அண்மையில், தொல். திருமாவளவன் அவர்கள் டெசோவில் உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளார்)

விடுதலைப்புலிகள் தற்போது களத்தில் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழீழம் கோரவில்லை, எனில், டெசோ யாருக்காக தமிழீழம் கோருகிறது?

இன்று இலங்கையில் இயங்கிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாகத் தமிழீழம் தேவை என்று முழங்கினால், இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கம் கூட முடக்கப்படும். ஆனால் அங்கே அந்த அமைப்பு இயங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆகவே, இப்போது தமிழீழம் தேவை என்று அந்தக் கூட்டமைப்பு முழங்குவதை நாங்களும் விரும்பவில்லை. அதே சமயம், ஈழத் தமிழர்களின் உள்மனத்தில் என்ன இருக்கிறது என்பது நமக்கும் தெரியும்...ராஜபட்சேவுக்கும் தெரியும். தமிழீழம் வேண்டாம் என்றா அவர்கள் சொல்கிறார்கள்? அதற்காக அவர்கள் வெளிப்படையாகக் கேட்கும் கட்டத்துக்கு வரும்வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. இலங்கைக்கு வெளியே இருந்துகொண்டு, நாமும், புலம்பெயர்ந்த தமிழர்களும் குரலெழுப்பலாம். காலம் கனிந்து வரும்போது ஈழத்தமிழர்களும் நம்மோடு சேர்ந்து குரல் கொடுப்பார்கள்.

இறுதி யுத்தத்தின் போது மெளனம் காத்துவிட்டு இப்போது டெசோவைத் தொடங்கியிருப்பது முரண் அல்லவா?

thiirumavalavan_279ஈழப்பிரச்சினைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தவர் கலைஞர். இலங்கையைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேச விரும்பியபோது, அதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தவர் கலைஞர். சம்பந்தம், தேவசேனாபதி, சுரேஷ் பிரேமசந்தினர், செல்வம் அடைக்கலநாதன், பொன்னம்பலம் உள்ளிட்ட ஐந்து பேரை கலைஞரின் ஏற்பாட்டோடு பிரதமரிடம் அழைத்துச் சென்றவன் நான்.

ஒருநாள் அதிகாலை கெளத்தூர் மணி அவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து, ‘இது’ குறித்து முதலமைச்சர் ஓர் அறிக்கை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று ‘அவர்’ விரும்புவதாக ஒரு செய்தி வந்துள்ளது. உடனே நீங்கள் முதல்வரைப் பார்க்க முடியுமா என்று கேட்டார். அதன்படியே செய்தியைக் கலைஞரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இப்படி பல காரியங்கள். ஆனாலும் வேண்டுமென்றே அனைத்தையும் மறைக்கிறார்கள்.

கலைஞர் நினைத்திருந்தால் ஈழத்தமிழர் அழித்தொழிப்பைத் தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்னும் வாதம் உண்மையா?

ஈழப் பிரச்சினையில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் கலைஞரின் செயல்களை விமர்சிப்பதில் அதிகம் கவனம் செலுத்துபவர்களின் விமர்சனம் இது. கலைஞர் நினைத்திருந்தால் ஈழப்போரை நிறுத்தியிருக்கலாம் என்று சொல்வது உலக அரசியலை உள்வாங்கிக் கொள்ளாதவர்களின் கருத்து. மாநில முதலமைச்சராக கலைஞர் இடத்திலே வேறு யார் இருந்திருந்தாலும் அதைத் செய்திருக்க முடியாது.

ஐந்து பெரிய நாடுகள் சேர்ந்து எடுத்திருக்கும் முடிவை ஒரு மாநில முதலமைச்சர் மாற்றியிருக்க முடியும் என்று சொல்வது இயல்புக்கு மாறானது.

டெசோ மூலம் தமிழீழக் கோரிக்கை மீண்டும் எழும்புவது இலங்கை அரசை ஈழத்தமிழர்களுக்கு எதிராகத் தூண்டிவிடாதா?

தமிழ் ஓவியா said...

முள்வேலிக்குள் முடங்கியிருக்கும் தமிழர்கள் இப்போதும் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே, டெசோ தமிழீழம் கேட்பதாலேயே ஈழத்தமிழர்கள் மீது அடக்கு முறை ஏவப்படும் என்று சொல்வதை ஏற்க முடியாது. ஈழப்பிரச்சினையை உலக நாடுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்போகிறோம் என்று டெசோ சொல்லும் சமயத்தில் ஈழத்தமிழர்கள் தாக்கப்பட்டால், அது இலங்கைக்கு எதிரான சாட்சியாகத்தான் போகுமே தவிர வேறல்ல. ஆகவே, டெசோவின் உருவாக்கம் தமிழீழ மக்களுக்கு அரணே தவிர ஆபத்து அன்று.

டெசோவின் மூலம் ஈழப் பிரச்சினையைத் தம்வசப்படுத்திக்கொண்டு, பழ. நெடுமாறன், வைகோ போன்றோரின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்ய முயல்கிறது திமுக என்ற குற்றச்சாட்டு பற்றி?

ஈழத்தமிழர்களுக்காக வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் ஏதேனும் செய்திருந்தால் அதை யாராலும் இருட்டடிப்பு செய்ய முடியாது. தவிரவும், நெடுமாறனும், வைகோவும் கலைஞருடைய போட்டியாளர்கள் அல்ல. அவர்களை இருட்டடிப்பு செய்து வளரவேண்டிய நிலையில் கலைஞர் இல்லை.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு திமுகவுக்கும் புலிகளுக்கும் இடையே ஒரு நல்லுறவை சிலரால் ஏற்படுத்தியிருக்க முடியும். அப்படி ஏற்படுத்தியிருந்தால் அது புலிகளுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் உதவியாக இருந்திருக்கும். ஆனால் அப்படிச் செய்வது விடுதலைப் புலிகள் அல்லது ஈழத்தமிழர்களுக்கும் உதவுகிறதோ இல்லையோ, கலைஞருக்கு உதவிவிடக்கூடாது என்று நெடுமாறன், வைகோ போன்றவர்கள் கவலைப்பட்டு விட்டார்கள். அதன் காரணமாகச் சின்னஞ்சிறு அமைப்புகளின் கையிலேயே ஈழப்பிரச்சினை தங்கிவிட்டது. விளைவு, ஈழப்பிரச்சினை மிகப்பெரிய மக்கள் பிரச்சினையாக கடைசி வரை மாறாமல் முடங்கிவிட்டது. 2009 இறுதி யுத்தத்தில் ஈழத் தமிழர்கள் அழிக்கப்பட்டபோது இங்கே தமிழர்கள் என்ன செய்தார்கள்? தமிழகம் கொந்தளித்ததா? அப்படியொரு தன்னெழுச்சி ஏன் கடைசிவரை வரவில்லை? ஒரே காரணம்தான். ஈழப்பிரச்சினையை திமுக போன்ற மக்கள் சக்தி பெற்ற இயக்கத்திடம் ஒப்படைக்காமல் சிலர் தங்கள் கைகளிலேயே பிடித்துவைத்துக் கொண்டிருந்ததுதான். இதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.

தமிழீழக் கோரிக்கைக்காகத் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவை டெசோ கோருமா?

தமிழீழத்துக்கு எதிராக வெளிப்படையாகவே பல முறை கருத்துக் கூறியவர் ஜெயலலிதா. ஒரே ஒரு தேர்தல் நேரத்தில் மட்டும், நான் ஆட்சிக்கு வந்தால் ராணுவத்தை அனுப்பி தமிழீழத்தைப் பிரித்துக் கொடுப்பேன் என்று சொன்னார். மாநில முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இங்கே ராணுவம் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும், ஜெயலலிதா உள்பட. என் பார்வையில் அவருடைய நிலைப்பாடுகள் இரண்டு வகையானவை. ஒன்று, தமிழீழத்துக்கு எதிராக இருப்பது. இரண்டாவது, நடைமுறை சாத்தியமற்ற, நம்பத்தகாத கருத்தைச் சொல்வது. இப்படிப்பட்ட ஒருவரைச் சார்ந்து ஓர் இயக்கம் இருக்க முடியாது.

மக்களைச் சார்ந்தும் உலக நாடுகளைச் சார்ந்தும்தான் இயங்க முடியும். அதே சமயம், தனித்தமிழீழத்தை ஆதரிக்கிறேன் என்று ஜெயலலிதா பகிரங்கமாகச் சொன்னால், அதை இருகரம் நீட்டி வரவேற்கத் தயாராக இருக்கிறது டெசோ.

ஈழத்தையும் புலிகளையும் ஆதரிக்கும் புதிய தலைமுறைத் தலைவர்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஈழத்துக்காகப் பல மேடைகளில் பல குரல்கள் எழுப்பப்படுவதை வரவேற்கிறேன். அதேசமயம் இன்னொரு கவலையும் இருக்கிறது. பழ. நெடுமாறனோடு தலைவர் பிரபாகரன் ஆயிரம் முறை பேசியிருப்பார்.

வைகோவுடனும் பலமுறை பேசியிருப்பார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட சிலர், கூட்டத்துக்குக் கூட்டம், ‘அண்ணன் என்னோடு பேசினார்’ என்று சொல்கிறார்கள். இன்றைக்கு வந்திருக்கிற சில திரைப்படத் தம்பிகள் ஈழத்தை விளம்பரப் பொருளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட தம்பிகளை எல்லாம் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் கூடுதலாக நம்புகிறார்களே என்ற கவலை எனக்கு இருக்கவே செய்கிறது. ஆனாலும் அடுத்த மழையில் சாயம் வெளுக்கும் என்று நம்புகிறேன்.

இந்தியாவின் மிகப்பெரிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் மூவருமே தனித்தமிழ் ஈழத்தை ஆதரிக்காத நிலையில், ஈழப்பிரச்சினையை இந்தியாவைவிட்டு வெளியே எப்படி எடுத்துச் செல்லப்போகிறது டெசோ?

மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தேசியக் கட்சிகள் தம்மை நிலைநிறுத்திக் கொள்வது சாத்தியமில்லை. திக, திமுக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் அனைவருமே ஈழத்தை ஆதரிப்பவர்கள். தேமுதிகவும் ஈழத்தை எதிர்க்கவில்லை. ஆக, பிரச்சினை அதிமுகவிடம்தான் இருக்கிறது. அதைக் களையவேண்டுமானால், அதிமுகவுக்கு அணுக்கமாக இருப்பவர்கள் அதிமுகவைத் தமிழீழம் நோக்கித் திருப்ப வேண்டும். அனைவரும் ஒருமித்த குரலில் குரல் கொடுத்து, மத்திய அரசுக்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுத்தால், தமிழீழக் கோரிக்கையைப் பொதுவாக்கெடுப்பு என்ற அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று விடலாம்.

தமிழ் ஓவியா said...

உலகம் அறிவுத் துறையில் பயணம் இங்கு சந்திரன் தேய்கிறான் கதை

ஜுராசிக் பார்க் என்ற திரைப்படம் உலகை ஒரு கலக்குக் கலக்கியது. பல லட்சம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்து ஒரு கால கட்டத்தில் முற்றிலும் அழிந்து போன முரட்டு இனம் டைனோசர். அவ்வினத்தின் ஒரு முட்டையைக் கண்டு எடுத்து அதிலிருந்து டைனோசர் உருவாக் குவது என்பதுதான் அந்தத் திரைப் படம். அது எவ்வளவு பெரிய சக் தியைக் கொண்டது; அதன் முன்னர் இடிபடாது ஏதும் இல்லை என்பது ஒருகருத்து.

இப்பொழுது உண்மையாகவே 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த பாக்டீரியா ஒன்றுக்கு விஞ்ஞானிகள் இப்பொ ழுது உயிரூட்டி உள்ளனர். அதன் ஜீன்களை தனியே பிரித்தெடுத்து ஈ.கொயில் என்னும் பாக்டீரியா வுடன் இனப்பெருக்கம் செய்து வைத்து, பின்னர் அதன் ஜீன்களை எடுத்து தனியாக ஒரு பாக்டீ ரியாவை உருவாக்கியுள்ளனர் விஞ் ஞானிகள். இதனால் மக்களுக்கு நன்மையா, கேடா என்பதுபற்றியும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

உலகம் இப்படி எல்லாம் அறிவுத் துறையில் பயணம் செய்து கொண்டு இருக்கிறது. இங்கு என்னடா என் றால் சந்திரன் குரு பத்தினியைக் கற்பழித்தான். அதனால் குருவின் சாபத்தை சந்திரன் ஏற்றான்; அத னால்தான் சந்திரன் தேய்கிறான் என்ற கதைகளை இன்னும் நம் நாட்டு ஊடகங்கள் சிறப்பிதழ்களாக வெளியிட்டுக் கொண்டு இருக் கின்றன. உருப்படுமா இந்த நாடு? 15-7-2012

தமிழ் ஓவியா said...

மலேரியா காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் சாதனை
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
ஞாயிறு, 15 ஜூலை 2012 14:52
E-mail Print

லண்டன், ஜூலை. 15- சுவிட்சர்லாந்தில் பேஸெல் நகரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியின் திட்டத்தலைவரான பிளேய்ஸ் ஜெண்ட்டான் 40 ஆண்டுகால உழைப்புக்கு பின்பு மலேரியா காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்ததில் வெற்றி கண்டுள்ளார். அந்த தடுப்பு மருந்து பல்வேறு மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இப்போது நம்பிக்கை அளித்து வருகிறது. மலேரியா நோய் வைரசால் ஏற்படுவதில்லை. ஒட்டுண்ணியால் தோன்றுகிறது. ஒட்டுண்ணியால் ஏற்படும் ஒரு நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதுவும் மருந்து கொடுக்கப்பட்டவரில் நூற்றுக்கு அய்ம்பது பேருக்கு பலனிக்கிறது. இந்த அய்ம்பது பேர் பலனடைவதே மருத்துவ உலகில் குறிப்பிடத்தக்க சாதனையாகும். ஏழு ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் ஒன்றரை வயது குழந்தை முதல் அய்ந்து வயது சிறுவர் வரை சுமார் 16 ஆயிரம் பேரிடம் இந்த மருந்தைக் கொடுத்து பரிசோதனை செய்து பார்த்ததில் பாதிப் பேருக்கு நோய் தீர்ந்து விட்டது. இருபது வகையான மருந்துகளை கொடுத்து சோதித்ததில் இந்த தடுப்பு மருந்து மட்டுமே பாதிப்பேரையாவது சுகப்படுத்தியது. இதற்காக பலரும் இருபதாண்டுகளுக்கு மேல் கடுமையாக உழைத்துள்ளனர். இதுவே பெரிய சாதனை என்று ஜெனீவா மருந்து ஆராய்ச்சி மய்யத்தின் நிர்வாக இயக்குநர் பெர்னார்டு பிக்கோல் தெரிவித்தார். 15-7-2012