Search This Blog

5.7.12

இந்துமதவாதிகள்இதற்குஎன்னபதில்சொல்லப்போகிறார்கள்?


கிறித்துவ மதத்தவர்கள் அதிகம் வாழும் இங்கிலாந்தில் சர்ச்சுகள் விற்பனைக்குத் தயாராக உள்ளன. மத அடிப்படையில் பின்பற்றப்பட்ட பழக்க வழக்கங்களிலும் மாறுதல் புயற்காற்று வீச ஆரம்பித்து விட்டது.

1837 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட சம்பிரதாயப்படி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரைதான் திருமணங்கள் செய்யப்பட்டு வந்தன. இதிலும் அதிரடி மாற்றம் இப்பொழுது கொண்டு வரப்பட்டுள்ளது.


24 மணி நேரத்தில் இரவு - பகல் பாராமல் எந்த நேரம் வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். முக்கியமாக தேவாலயங்களில், அவை திறந்திருக்கும் எந்த நேரத்திலும் திருமணம் செய்து கொள்ளலாம்.

மற்ற மற்ற இடங்களில் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் 15 நாள்களுக்கு முன்னதாக எழுத்து மூலமாகத் தெரிவித்து அதன்படி திருமணம் செய்து கொள்ளலாம்.

இந்துமதவாதிகள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? இங்கிலாந்தில் இருக்கும் கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கையாளர்கள் இத்தகு மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறார்கள்.

இங்கு அத்தகு நிலை ஏற்பட அனுமதிப்பார்களா? ஒரு பகல் நேரத்தை இராகுகாலம், எமகண்டம், குளிகை என்று பிரித்து வைத்து நான்கரை மணி நேரத்தைக் கெட்ட காலம், அபசகுனமான நேரம் என்று சொல்லி காலத்தை கரியாக்குபவர்கள் உலகத்தில் இந்து மதக்காரர்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? காலம் கண்போன்றது என்பார்கள். பொருளை இழந்தால் சம்பாதித்துக் கொள்ளலாம்; ஆனால் காலத்தைப் பறி கொடுத்தால் இழந்தது இழந்ததுதான்.

இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு வீச்சால் பேரழிவுக்கு உள்ளான ஜப்பான், இன்று பொருளாதாரத்தில் நிமிர்ந்து நிற்கிறது என்றால் இராகு காலம், எமகண்டம் பார்த்தா? உழைப் பாலும், அறிவைப் பயன்படுத்தித் திட்டமிடுத லாலும்தானே அது உயர்ந்த முகட்டை எட்டியுள்ளது!
நல்ல நேரத்தில் திருமணம் செய்து கொண் டால்தான் அவர்களின் வாழ்க்கை நலமாக, வளமாக இருக்கும் என்பதெல்லாம் சுத்த பித்தலாட்டம்.

தந்தை பெரியார் சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்தி, ஆத்திகர்கள் நடுநடுங்கும் இராகு காலத்தில் கறுஞ்சட்டைத் தோழர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்கள் எல்லாம் கெட்டுப் போய் விட் டார்களா? நல்ல நாள் நட்சத்திரம், ஜாதகப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்து கொள்பவர்கள் எல்லாம் ஓகோ என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களா? இவற்றிற்கான புள்ளி விவரங்களை ஆன்மீக ஏடுகளாவது வெளியிட்டதுண்டா?

இராமாயணத்தில் ராமனுக்கும், சீதைக்கும் பொருத்தம் பார்க்கப்படவில்லையா? முகூர்த்த நேரம் கணிக்கப்படவில்லையா? ராமன் பட்டாபிஷேகம் சூடுவதற்கு நேரம் நிர்ணயிக் கப்படவில்லையா? அவன் வாழ்வில் இந்த இரண்டு நிகழ்வுகளுமே தலை கீழாகப் போய் விட்டனவே! நிறைமாத கர்ப்பிணியான சீதை, காட்டில் கொண்டு போயல்லவா விடப்பட்டாள்?

கடைசியில் ராமன் சரயூ நதியில் விழுந்து தானே தற்கொலை செய்து கொண்டான்! சீதை, பூமி பிளந்தல்லவா தற்கொலை செய்து கொண்டாள்!

இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்குவதில் கூட பார்ப்பனர்கள் நல்ல நேரம் குறிக்க வில்லையா? இரவில் வாங்கப்பட்ட சுதந்திரம். இன்னும் விடியவில்லையே!

இங்கிலாந்தைப் பார்த்தாவது இந்தியர்களே! மாற்றங்களுக்குத் தயாராகுங்கள்! வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்!

-------------------"விடுதலை” தலையங்கம் 5-7-2012

10 comments:

தமிழ் ஓவியா said...

கடவுளின் சக்தி இவ்வளவுதான்

கோவிலில் நகை, பணம் திருட்டு!

பெரியபாளையம், ஜூலை.5- ஆரணி அருகே நடுக்குப்பம் கிராமத்தில் உள்ளது துலுக் கானத்தம்மன் கோவில். வழக்கம் போல இந்தகோவிலை திறக்க நேற்று காலை கோவிலின் அறங்காவலர் குமரவேல் (வயது 55) சென்றார். கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந் தார். உள்ளே சென்று பார்த்த போது அம்மன் சிலை கழுத் தில் இருந்த தங்க தாலி மற்றும் உண்டியலில் இருந்த ஒரு ஆண்டு காணிக்கை தொகை போன்றவை திருடப்பட்டிருந்தன.
இதுகுறித்து குமரவேல் ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். உதவி ஆய் வாளர் பரந்தாமன் வழக்குப் பதிவு செய்து கோவில் பூட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற நபர்களைத் தேடி வருகிறார்.
சாலை விபத்தில் பக்தர்கள் படுகாயம்

பனைக்குளம்,ஜூலை.5- கோயிலுக்கு சென்ற பக்தர்கள் பேருந்து கவிழ்ந்து 12 பேர் படுகாயம் அடைந்தனர். திருப் பூர் அருகே வீரபாண்டியைச் சேர்ந்த பக்தர்கள் 26 பேர் கடந்த 24-ஆம் தேதி பேருந்து மூலம் காசிக்கு சென்றனர். அங்கிருந்து ராமேசுவரம், தேவிப்பட்டினத் தில் சாமி தரிசனம் செய்ய நேற்று வந்த னர். ராமேசுவரத் தில் சாமி தரிசனம் செய்து விட்டு காலை 9.30 மணிக்கு பெருங்குளத்தைக் கடந்து நதிப்பாலம் அருகே பேருந்து வந்தபோது முன்னே சென்ற வாகனத்தை முந்திச் சென்ற போது திடீரென நிலை தடுமாறியது.

சிறிதுநேரத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து கூச்சலிட் டனர்.உடனே அக்கம் பக்கத் தினர் விரைந்து சென்று பேருந் துக்குள் இருந்தவர்களை மீட் டனர். பேருந்தில் பயணம் செய்த 26 பேரில் 12 பேர்படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து மண்டபம் யூனியன் ஒன்றிய கவுன்சிலரும் மாவட்ட துணைச் செயலாளர் முனியசாமியும் விரைந்து வந்து 108 ஆம்புலன் சுக்கு தகவல் கொடுத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதை யடுத்து படுகாயம் அடைந்த 12 பேரும் ராமநாதபுரம் அரசு மருத் துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
கோவில் ஊழியரை அடித்துக் கொன்று, கோபுர கலசம் திருட்டு

திருவனந்தபுரம், ஜூலை.5- பத்தனம்திட்டை அருகே, கோவில் பாதுகாப்பு ஊழியரின் உதவியாளரை அடித்துக் கொன்ற பின், தங்கம் பொதியப் பட்ட கோபுர கலசத்தைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத ஆசாமிகளை காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.

இது பற்றி காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பத்தனம்திட்டை அருகே உள்ள மல்லப்பள்ளி பகுதியில் கல்லுப்பாறை பகவதி அம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்த கோவில் அருகில் வசிக்கும் இளைஞர் அனில் குமார். நேற்று அதிகாலை 4 மணியளவில், சிலர் மோட்டார் சைக்கிளை திருட முயற்சி செய்தனர். சத்தத்தைக் கேட்டு அனில் குமார் அவர்களை அப்பகுதியில் தேடிப் பார்த்தார். பகவதி கோவில் பாதுகாப்பு ஊழியர் கல்லுப் பாறை சந்திரசேகர பணிக்கர் (வயது 60), அவருடைய உதவியாளர் குன்னந்தானம் தாணிக்காடு ஜி. கோபால கிருஷ்ண பிள்ளை (65) ஆகிய இருவரும் உடலில் அடிபட்ட காயங்களுடன் அப் பகுதியில் உள்ள 2 தூண்களில் கட்டி வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர்களுடைய வாய், திறக்க முடியாதபடி பிளாஸ்திரியால் ஒட்டப்பட்டு இருந்தது.

உடனடியாக அனில் குமார் இது பற்றி அப்பகுதி மக்களுக் கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.

பொதுமக்களும் காவல் துறையினரும் தூணில் கட்டி வைக்கப்பட்டு இருந்த இரு வரையும் விடுவித்தனர். கும்பநாடு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே, பாதுகாப்பு ஊழியர் சந்திர சேகர பணிக்க ரின் உதவியாளர் கோபால கிருஷ்ண பிள்ளை பரிதாபமாக உயிர் இழந்தார். அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசா ரணை நடத்தினர். விசாரணையில், கோவில் பிரகாரத்தின் மேற்கூரை நடுவில் வைக்கப்பட்டு இருந்த தங்கம் பொதியப்பட்ட அய்ம்பொன் னாலான கலசத்தை திருடர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். 5-7-2012

தமிழ் ஓவியா said...

பிரபஞ்சம் உருவாக காரணமான அணுக்களை இணைக்கும் ஒட்டுப் பொருள் கண்டறியப்பட்டது இயற்பியல் துறையில் விஞ்ஞானிகள் சாதனை

ஜெனீவா அருகே செர்ன் ஆராய்ச்சி மய்ய விஞ்ஞான கூடம்.

ஜெனீவா, ஜூலை.5- பிரபஞ்சம் உருவானது எப்படி என்ற ரகசி யத்தை அவிழ்க்கிற விதத் தில், விஞ்ஞானிகள் சாதனை படைத்துள் ளனர்.

1370 கோடி ஆண்டு களுக்கு முன்பு `பிக்-பேங்க்' எனப்படும் பெரு வெடிப்பின்போது வாயுக்கள் உருவாகி பின்னர் அதில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட் களும் உருவானதாக விஞ்ஞானம் கூறுகிறது.

எலக்ட்ரான், புரோட் டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருள்களின் சேர்க்கைதான் அணு. இந்த அணுக்களின் சேர்க்கைதான் வெவ் வேறு திடப்பொருள் களாக ஆகி உள்ளன. நாம் வாழுகிற பூமி, நம்மைச் சுற்றிலும் இருக் கிற தொலைக்காட்சிப் பெட்டி செல்போன், மேஜை, நாற்காலி, பேனா, மோட்டார் வாகனங்கள், கம்ப்யூட் டர் இப்படி எல்லாமே அணு சேர்க்கையில் உருவானவைதான். இவற்றைப் போலவே எல்லாம் ஒன்றிணைந்த இந்த பிரபஞ்சமும் அடிப் படையில் அணுக்களின் சேர்க்கைதான்.

அணுக்களை சேர்க் கும் ஒட்டுப்பொருள் எது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தது.

அணுக்களை ஒன் றோடு ஒன்று ஒட்ட வைக்கும் பொருள் என்ன என்பதை கண்டு பிடித்தால், பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிந்துகொள்ள முடி யும் என்பதால், அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

அணுக்களை மிக வேகமாக ஒன்றுடன் ஒன்று மோதவிடுவதன் மூலம் பெரு வெடிப்பின் போது ஏற்பட்ட சூழ் நிலையை உருவாக்கி அதன் மூலம் அணுக் களின் ஒட்டுப்பொருள் என்ன என்பதை கண்டு பிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

இதற்காக பிரான்சு-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே 574 அடி ஆழத்தில் 27 கிலோ மீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதை போன்று செர்ன் என்ற பெயரில் (அணு ஆராய்ச் சிக்கான அய்ரோப்பிய மய்யம்) ஒரு ஆராய்ச்சிக் கூடம் அமைத்து, உலக புகழ் பெற்ற விஞ்ஞானி கள் ஒன்றுசேர்ந்து ஆராய்ச்சி நடத்தி வந் தனர்.

இதில் அணுக்களின் ஒட்டுப்பொருள் 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறி யப்பட்டன. 12-ஆவது துகள் ஒன்று உண்டு என்று விஞ்ஞானி ஹிக்ஸ், 1964-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். அது அவரது பெயரையும் இணைத்து ஹிக்ஸ் பாசன் துகள் என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த துகளை கண்ட றியும் முயற்சியில் ஜோ இன்கண்டேலா என்ற புகழ் பெற்ற அணு விஞ் ஞானி தலைமையில், இரண்டு விஞ்ஞானிகள் குழுக்கள் இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த ஆராய்ச்சியின் முடிவில் இப்போது ஹிக்ஸ் பாசன் துகள் கண்டறியப்பட்டு விட்டது. இது தொடர்பான அறிவிப்பை ஜெனீவா வில் திரளான விஞ் ஞானிகள் முன்னிலை யில் விஞ்ஞானி ஜோ இன்கண்டேலா நேற்று (4.7.2012) வெளியிட்டார். அதே நேரத்தில் கண்டு பிடிக்கப்பட்டிருப்பது ஹிக்ஸ் பாசன் துகள் தானா என்பதை உறுதி செய்வதற்கு இன்னும் அடுத்தகட்ட ஆராய்ச் சிகள் தேவைப்படுவதாக கூறினார்.

செர்ன் தலைமை இயக்குநர் ரோல்ப் ஹியர் இது பற்றி கூறுகையில், "ஒரு புதிய மைல் கல்லை நாங்கள் எட்டி இருக்கிறோம். ஹிக்ஸ் பாசன் துகளை கண்டறிந்து இருப்பது, புதிய விரிவான ஆய்வு களுக்கு வழிநடத்தி இருக்கிறது. இது பிர பஞ்ச ரகசியம் பற்றிய திரைகளை அவிழ்க்க உதவும்'' என்றார்.

இப்போது கண்டறி யப்பட்டுள்ள ஹிக்ஸ் பாசன் துகள் என்று ஒன்று இல்லாமல், அணுக் களின் சேர்க்கையாக பிரபஞ்சம் உருவாகி இருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் நம்புகின் றனர்.

விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு இயற் பியல் துறையில் ஒரு மிகப் பெரிய சாதனை. 5-7-2012

தமிழ் ஓவியா said...

டெசோ மாநாடு சென்னையில் நடைபெறும் மாநாடு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன கலைஞர் பேட்டி


சென்னை, ஜூலை 5- டெசோ மாநாடு சென் னையில் நடைபெறும், மாநாடு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின் றன என தி.மு.க. தலை வர் கலைஞர் நேற்று (4.7.2012) சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வின் சிறை நிரப்பும் மறியல் அறப் போராட்டம் நேற்று (4.7.2012) மாலை முடிந் ததும் சென்னை, அண்ணா அறிவாலயத் திலுள்ள கழக அலுவல கத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் செய் தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

செய்தியாளர் :- இன்றைய அறப் போராட் டத்தில் எத்தனை பேர் கைதானார்கள்?

கலைஞர் :- எல்லா மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 797 பேர். (மாவட்ட வாரியாக கைதானவர் கள் பற்றிய விவரத்தை கூறினார்கள்). கேள்வி :- இவ்வளவு பேர் கைதாவார்கள் என்று நீங்கள் எதிர்பார்த் தீர்களா?

கலைஞர் :- இந்த அளவிற்கு எதிர்பார்க்க வில்லை. ஒரு லட்சம் பேர் என்ற அளவிற்குத் தான் கைதாவார்கள் என்று எதிர்பார்த்தேன். அதனால்தான் நீங்கள் காலையில் கேட்ட போது, ஒரு லட்சம் என்று சொன்னேன்.

செய்தியாளர் :- போராட்டத்தில் கைதான வர்கள் ஆட்சியாளர்க ளால் ரிமாண்ட் செய் யப்படாமல் விடுவிக்கப் பட்டுள்ளார்கள். இதை அ.தி.மு.க. ஆட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு என்று நினைக்கிறீர்களா?

கலைஞர் :- ரிமாண்ட் செய்யப் போவதாக பயமுறுத் தினால், சிலபேர் வெளி யேறி விடுவார்கள், கூட்டுத் தொகையைக் குறைத்துக் காட்டலாம் என்று நினைத்தார்கள். ஆனால் யாரும் போவ தாக இல்லை.

செய்தியாளர் :- தி.மு.கழகத்திற்கு இது முதல் போராட்டம். உங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இந்தப் போராட்டத் தைக் கருதுகிறீர்களா?

கலைஞர் :- நீங்கள் கருதுவதைத்தான் நானும் கருதுகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர் கள் (சிரிப்பு) பிரம் மாண்டமான வெற்றி.

செய்தியாளர் :- கடந்த முறை நடை பெற்ற தேர்தலில் தி.மு. கழகம் தோற்றதற்கு நில அபகரிப்பு வழக்குகள் காரணம் இல்லை என்று நீங்கள் இன்னமும் நினைக்கிறீர்களா?

கலைஞர் :- நிச் சயமாக நம்புகிறேன்! ஏன் என்றால், கொட நாட்டிலும், சிறுதாவூரி லும் நில அபகரிப்பு நடைபெற்றுள்ள அளவிற்கு தமிழ் நாட்டில் யாரும் நில அபகரிப்பு செய்யவில்லை. அவர்கள் செய்த நில அபகரிப்புதான் மிகப் பெரியது.

செய்தியாளர் :- தனிப்பட்ட ஒருவரின் பிரச்சினைக்காக தி.மு. கழகத்தினர் இரண்டு லட்சம் பேர் கலந்து கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இது மாதிரி மக்கள் பிரச்சினைக்காக போராட் டம் நடத்து வீர்களா?

கலைஞர் :- இந்தப் போராட்டம் குறித்து நான் விடுத்த அறிக்கைகளை யெல்லாம் நீங்கள் பார்க்கவில்லை என்று கருதுகிறேன். எங்கள் செயற் குழுத் தீர்மானத்திலேயே எதற்காக இந்தப் போராட்டம் என்று விரி வாகச் சொல்லியிருக்கிறோம். அதில் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி யெல்லாம் பேருந்துக் கட் டணம் உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டணம் பயங்கரமாக உயர்வு என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால் இந்த ஓராண்டு காலத்தில் இந்த ஜெயலலிதா ஆட்சியில் எத்தனை கோடி ரூபாய் அளவிற்கு வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை யெல்லாம் நான் விளக்கியிருக்கிறேன். இதை யெல்லாம் மக்களுக்கு எடுத் துச் சொல்லித்தான் இந்தப் போராட் டத்தை நடத்தினோம். செய்தியாளர் :- அடுத்த கட்டப் போராட் டம் ஏதாவது இருக்கிறதா?

தமிழ் ஓவியா said...

கலைஞர் :- உங்களைக் கலந்து கொண்டு அறிவிப்போம்!

செய்தியாளர் :- இந்தப் போராட்டத்தின் மூலம் நீங்கள் உங்கள் பலத்தை அ.தி.மு.க. அரசுக் குக் காட்டியிருக்கிறீர்களா? அல்லது மக்களுக்குக் காட்டியிருக்கிறீர்களா?

கலைஞர் :- எங்களுக்கு நாங் களே எங்கள் பலத்தை உணர்ந்து கொள்வதற்காக நடத்தப் பட்ட போராட்டம் என்று கூடக் கருத லாம். செய்தியாளர் :- டெசோ மாநாடு தள்ளிப் போகலாம் என் பதைப் போல செய்திகள் வருகிறதே?

கலைஞர் :- ஒத்திவைக்கப் பட்டால் ஓரிரு வாரங்கள்தான் ஒத்தி வைக்கப்படும். அந்த மாநாடு சென் னையிலேயே நடைபெறும். ஏனென் றால் அழைக்கப்பட்ட தலைவர் களில் பலபேர் வெளிநாடுகளிலி ருந்தும், பல மாநிலங்களிலிருந்தும் வருகிறார்கள். அவர்கள் சென்னையிலே விமானங்களில் வந்து இறங்கி, பிறகு இங்கிருந்து விழுப்புரம் வரை சென்று திரும்புவதில் சில பிரச் சினைகள் இருப்பதாகக் கூறியிருக் கிறார்கள். எனவே விழுப்புரம் என்பதை மாற்றி சென்னையிலேயே அந்த மாநாட்டினை நடத்துவ தற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பந்தல் அமைக்கப்பட வுள்ளது. பந்தல் அமைப்பாளர்கள் இடங்களைப் பார்த்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

செய்தியாளர் :- சிவசங்கர மேனன் இலங்கை சென்று இலங்கை அதிபரைச் சந்தித்த பிறகு, டெசோ மாநாட்டினை நீங்கள் கைவிட வேண்டுமென்று மத்திய அரசிட மிருந்து உங்களுக்கு வலியுறுத்துதல் வந்ததா?

கலைஞர் :- அப்படியென்றால் சிவசங்கர மேனன் எங்களை அல்லவா சந்தித்திருக்க வேண்டும். செய்தியாளர் :- விலைவாசி உயர்வு அ.தி.மு.க. அரசுக்கு அதிருப்தி அலையை வீசச் செய்திருக்கிறது என்று நம்புகிறீர்களா?

கலைஞர் :- அ.தி.மு.க. அரசு மீது அதிருப்தி அலை வீசுவதற்கு விலை வாசி மாத்திரமல்ல, அண்ணா நினைவு நூலகத்தைப் பார்த்தாலே போதும்.

செய்தியாளர் :- தி.மு.கழகத் தலைவர்கள் மீது தற்போது போடப் படும் வழக்குகளுக்கான புகார்கள் எல்லாம் கழக ஆட்சியிலேயே வந்தவை, அப்போது நடவடிக்கை எடுக்காததால், தற்போது நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம், இதற்காக தி.மு.க. போராட்டம் நடத்துகிறது என்று சொல்கிறார்களே?

கலைஞர் :- அவர்கள் எத் தனையோ பொருந்தாத கற்பனை களையெல்லாம் சொல்வார்கள். அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது.

தமிழ் ஓவியா said...

அய்.நா. அதிகாரியோடு தமிழர் தலைவர் சந்திப்பு தனியீழத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்,


நியூயார்க், ஜூலை 6- அய்க்கிய நாட்டு மன்றத்தின் தெற்காசியாவின் முக்கிய அதிகாரி ஹிடோகிடென் அவர் களை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சந்தித்து, இலங் கையில் ஈழத் தமிழர்களுக்கு இழைக் கப்படும் கொடுமைகள் குறித்தும், தனி யீழத்தைத் தவிர வேறு வழியில்லை என்பதை வலியுறுத்தியும் 50 நிமி டங்கள் உரையாடினார்.சூன் 27 ஆம் நாள் அமெரிக்க நியூயார்க் நகரத்தில் உள்ள அய்க்கியநாட்டுச் சபையில் ஹிடோகிடென் அவர்களைச் சந்தித்து 50 மணித்துளிகள் உரையாடினார்.

ஹிடோகிடென் தெற்கு ஆசியாவின் முக்கிய அதிகாரி ஆவார்.இவர் முன்னர் மியான்மா (பர்மா) சமாதானத்தில் முக்கிய பங்கு வகித்தவர்.அய்க்கியநாட்டுச் சபையின் சிறப்புத் தூதுவராக அங்கு சென்று ஆக்கப் பூர்வமாகச் செயல்பட்டவர். உலக அரசுகள், முக்கியமாக அமெரிக்கா இந்தியா, இங்கி லாந்து போன்ற அரசுகள் சேர்ந்து இது போன்ற அதிகாரியை அனுப்பினால் தான் ஈழத் தமிழர்களுக்கு ஒரு முடிவான தீர்வு கிடைக் கும்.

ஆசிரியர் அவர்கள் இவரிடம் அங்குள்ள இராணுவ ஆதிக்கம், தொடர்ந்து நடக்கும் வன்கொடுமைகள், பத்திரிகைச் சுதந்திரம் இல்லாமை இவற்றை விவரமாக எடுத்துரைத்து தனி ஈழம் ஒன்றே முடிவான தீர்வாக அமைய முடியும் என்பதை எடுத்துச் சொன்னார்.

அங்கு நடக்கும் அத்துணை வன்முறை களையும் நன்கு அறிந்தவர் இவர். தெற்கு ஆசியா முழுவதற்கும் இவர் பொறுப்பானவர். தெற்கு ஆசியாவின் அரசியல் விவகாரங் களுக்குத் தலைமை அதிகாரியாவார். இலங்கையில் நடக்கும் கொடுமைகளை நன்கு அறிந்தவர்.

இத்தனைக் காலமும் தீவிரவாதம் என்று இலங்கை அரசு சொன்னதை நம்பிய அமெரிக்கா மற்ற நாடுகள் இப்போதுதான் முழு உண்மையைப் புரிந்து கொள்ளத் தொடங் கியுள்ளனர்.இது மக்கள் போராட்டம்.

மக்கள் தங்கள் மொழி, இனம், படிப்பு, வேலை வாய்ப்பு என்று அனைத்து உரிமைகளுக்காகவும் போராடினர். இவற்றை அடைய அவர்கள் பெரும் விலையை உயிராக, மானமாக, வதை யாகக் கொடுத்துள்ளனர் என்பதை உலகம் இப்போது தான் உணரத் தொடங்கியுள்ளது என்பதை அவர் நன்கு புரிந்து சொன்னார்.

ஆசிரியர் அவர்கள் கிழக்கு தைமூர், கோசவா போன்ற விடுதலை தமிழ் மக்களுக் குக் கிடைக்க வேண்டுமென்பதை வலியுறுத் தினார். டெசோ இயக்கத்தைப் பற்றியும் எடுத்துச் சொன்னார்.

அவரும் அது உலக அரசுகளின் ஈடு பாட்டைப் பொறுத்துள்ளது. உலக அரசுகளை, முக்கியமாக இந்திய அரசையும் நீங்கள் அதை உணர வைக்கவும், செயல் படவும் செய்யுங்கள் என்று கூறினார். அப்போது தான் அய்க்கிய நாட்டுச் சபை எதையும் செய்ய முடியும் என்பதை எடுத்துக் கூறினார்.

ஆகவே உலகெங்கும் வாழுந்தமிழர்கள் ஆங்காங்கே உள்ள அரசுகளை உண்மைகளை உணரச் செய்வோம். அவர்களின் கண் களையும், உள்ளங்களையும் திறக்கப் பாடுபடு வோம். டெசோவின் முயற்சியே அது தான் என்று கூறி விடை பெற்றார்.

ஹிடோகிடென்பற்றி

திரு ஹிடோகிடென் அய்க்கிய நாடு கள் சபையின் அரசியல் விவகாரத் துறையின் மூத்த அரசியல் விவகார அதிகாரியாக தற்போது இருக்கிறார். தெற்கு ஆசியா மற்றும் அய்க்கிய நாடுகள் -ஆசிய உறவுகள் (குறிப் பாக மியான்மா, தாய்லாந்து மற்றும் பிலிப் பைன்ஸ்) பற்றிய பகுதிகளில் நிபுணத்துவம் பெற்றவராவார்.

அரசியல் விவகாரத் துறை யின் ஆசிய பசிபிக் பகுதியில் தெற்கு ஆசியா வின் குழுத் தலைவராக அவர் இப்போது பணி யாற்றி வருகிறார். நேபாளத்தில் அய்க்கிய நாடுகள் மேற்கொண்டுள்ள செயல் திட்டத் திற்கு அரசியல் மற்றும் அடிப்படையான ஆதரவு அளிக்கும் முயற்சிகளில் அவர் இப்போது ஈடுபட்டுள்ளார்.

இதற்கு முன், அமைதி மற்றும் பாதுகாப்பு பகுதியில் அய்க்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பை பலப்படுத்தும் பணியில் பணியாற்றி வந்துள்ளார். அதன் மூலம் 2006 இல் அய்க்கிய நாடுகளில் நோக்குநராக அவர் ஆனார். 2001-05 காலத்தில் மியான்மருக் கான அய்க்கிய நாடுகளின் பொதுச் செயலா ளரின் சிறப்புத் தூதுவரின் மூத்த ஆலோசக ராக அவர் இருந்தார்.

இக்காலகட்டத்தில் மியான்மா நாட்டில் அமைதி நிலவவும், மக்க ளாட்சி மலரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட் டன. இவர் தனது முதுகலைப் பட்டத்தை கார்னல் பட்டப் பள்ளியிலும், பட்டப்படிப்பை சேடன் ஹால் பல்கலைக் கழகத்திலும் பெற்றவர். மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தாய்பே ஃபூ ஜென் கேத்தலிக் பல்கலைக் கழகத்திலும் பயின்றவர்.
6-7-2012

தமிழ் ஓவியா said...

இலங்கை இராணுவ வீரர்களுக்குப் பயிற்சி


சென்னை, ஜூலை 6 - இலங்கை விமானப் படையைச் சேர்ந்த ஒரு சிலருக்கு தாம்பரத்தில் பயிற்சி அளிப் பதாகச் சொல்லப்படுவது உண்மை யானால் அது கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் கலைஞர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட் டியில் கூறியுள்ளார். இதுகுறித்து கலைஞர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வரு மாறு:-

செய்தியாளர் :- இலங்கையின் விமானப் படையைச் சேர்ந்த ஒரு சிலருக்கு தாம்பரத்தில் பயிற்சி அளிப்பதாக சொல்லப்படுகிறதே?

கலைஞர் :- அந்தச் செய்தி உண்மையாக இருக்குமானால் அப்படி பயிற்சி அளிப்பது கண்டிக்கத்தக்கது. பயிற் சிக்கு வந்தவர்களை உடனடியாக மத்திய அரசு திருப்பியனுப்புவதே சரியாக இருக்கும்.

செய்தியாளர் :- முதலமைச்சர் ஜெயலலிதா அதை எதிர்த்து பிரதமருக்கு கடிதம் எழுதியிருக் கிறாரே?

கலைஞர் :- அது பற்றி எனக்குத் தெரி யாது. அவர் அதைப் பின்பற்ற முடியாது. ஏனென்றால் ஏற்கெ னவே விடுதலைப் புலி களின் யுத்தத்தை எதிர்த் துப் பேசி சட்டசபை யிலேயே தீர்மானம் போட்டவர். அவரோடு ஒத்துப்போக முடியாது.

இவ்வாறு கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார். 6-7-2012

தமிழ் ஓவியா said...

இந்தியாவுக்கு இந்நிலை தேவைதானா?


சென்னையை அடுத்த தாம்பரம் விமானப் படைத் தளத்தில் இலங்கை இராணுவத்தினருக்கு இந்திய இராணுவம் பயிற்சி அளித்து வருகிறது என்கிற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் எதிர்ப்புப் பீரங்கி வெடித்துக் கிளம்பியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை அது இரட்டை வேடம் போட்டு வருகிறது என்கிற கூற்று இப்பொழுது அம்பலத்திற்கு வந்துள்ளது.

ஜூன் முதல் வாரத்தில் சிங்கப்பூர் ஆசிய நாடுகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தம்பியும், சிங்கள பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபய ராஜபக்சே மற்றும் இலங்கை அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் ஆகியோர் இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அந் தோணியையும், அமெரிக்க நாட்டின் பிரதிநிதியும் யாகக் கலந்து கொண்ட டெம்ப்சி ஆகியோரைச் சந்தித்து இலங்கைக் கடற்படைக்குப் பயிற்சி அளிப்பதற்கான வேண்டுகோளை முன் வைத்த நேரத்தில், ஏற்றுக் கொள்ளப்பட்டதை இந்த நேரத்தில் பொருத்திப் பார்ப்பது பொருத்தமான தாகும்.

இதற்கு முன்புகூட இலங்கை இராணுவத்திற்கு இந்தியா தாம்பரத்தில் பயிற்சி அளிக்க முன் வந்தபோது திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தின் அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. அதன் எதிரொலியாக அப்பயிற்சி இடையில் நிறுத்தப்பட்டு, வட மாநிலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. என்பதெல்லாம் நினைவூட்டப்பட வேண்டியவை!

1990 செப்டம்பரில் இலங்கைக் கடற்படை, விமானப்படைகளைச் சேர்ந்த 300 பேர்களுக்கு இந்தியா இராணுவப் பயிற்சி அளிக்கிறது என்று இலங்கை இராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் வனசிங்க தெரிவித்த நேரத்தில் விடுதலை கண்டித்து எழுதியதுண்டு.

இலங்கை இராணுவத்துக்கு இந்திய இராணுவம் பயிற்சி தருவது உண்மையென்றால் தமிழகம் பொங்கி எழும்;

பயிற்சியை ஒரு போதும் தமிழர்களால் ஏற்க முடியாது என்பதை மத்திய அரசுக்குத் தெரி வித்துக் கொள்கிறோம் என்று எச்சரிக்கை கொடுத்தது விடுதலை (விடுதலை 24.9.1990 முதல் பக்கம்)

இதையெல்லாம் பார்க்கும்பொழுது ஈழத் தீவில் தமிழினம் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதில் சிங்களவர்களோடு, குறிப்பிடத்தக்க வகையில் இந்திய அரசுக்கும், அதன் இராணுவத்துக்கும் பங்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?

இவ்வளவுக்கும் பிரதமர் இந்திராகாந்தியும், ராஜீவ்காந்தியும் சரி, ஈழத் தீவில் நடைபெறுவது இனப்படுகொலையே (Genocide) என்று தெளி வாகக் கூறியுள்ளனர்.

இதன் மூலம் ஒன்று தெளிவாகவில்லையா?

இனப்படுகொலை செய்யும் இலங்கை சிங்கள இராணுவத்துக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம் இந்திய அரசும், இந்திய இராணுவமும் இந்த இனப் படுகொலைக்குத் துணை போகின்றன என்பது விளங்கவில்லையா?

அய்.நா.வின் ஜெனிவா கூட்டத்தில் இலங் கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும்கூட, இலங்கைக்கு எதிரான தீர்மானத் திற்கு இந்திய அரசு ஆதரவளித்த நிலையிலும்கூட, இலங்கை இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பயிற்சி அளிப்பது என்பது தார்மீகப் பண்பாட்டின் அடிப்படையிலும், மனிதநேய அடிப்படையிலும்கூட இந்தியா தன் தகுதியை இழந்து விட்டதாக உலக நாடுகள் கருதாவா?

எந்த வகையில் இலங்கை அரசுக்கு யார் துணை போனாலும், அவர்கள் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் மிக மோசமான மதிப்பீட்டுக்கு ஆளாவர் என்பது உறுதி. இந்தியாவுக்கு இந்நிலை தேவைதானா? வெறிகளுக்குத் துணை போனால் நெறிகள் சவக் குழிக்குப் போக வேண்டியதுதான்!6-7-2012

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு வினாக்கள்
உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?

நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?

குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?

எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?

எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?

ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?

அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?

அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?

முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?

ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?

மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?

நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?

எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?

அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?

அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?

பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?

சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா? 6-7-2012

தமிழ் ஓவியா said...

திதி மந்திரமும் அதன் பொருளும்


மந்திரம்:

என்மே மாதா ப்ரலுலோபசரதி

அன்னவ் வ்ரதா தன்மே ரேதஹா

பிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யநாம...

பொருள்: நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்ப வேண்டியுள்ளது. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டு போய் சேர்ப்பீர் என்பது இதன் பொருள்.

இம்மந்திரத்தின் வெளிப்படையான அர்த்தமென்ன?

தன் தாயானவள் சந்தேகத்திற்கு உரியவள். தன் கணவனுக்கு உண்மையாக நடக்காதவள். மாற்றானிடம் உடல் தொடர்பு வைத்திருந்தவள் என்ற அடிப்படையில் இந்த மந்திரம் சொல்லப் படுகின்றது. இதைத்தான் மந்திரம் ஓதும் புரோகிதர் சொல்ல திதி கொடுக்கும் மகன் திருப்பி சொல்கின்றான்.

ஆதாரம்: அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாசாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது...

பாகம் -1 - பக்கம் 157, நக்கீரன் வெளியீடு.

எனவே இந்துமதப்படி பெற்றோர்களுக்கு நீ திதி கொடுத்தால் உன் தாய் ஒரு விபச்சாரி என்று பொருள். இதைத்தான் இந்து மதம் கூறுகிறது. 6-7-2012

தமிழ் ஓவியா said...

இந்து திருமண மந்திரமும் அதன் பொருளும்


மந்திரம்:

ஸோம ப்ரதமோ விவித கந்தர்வ விவிவத உத்தர!

த்ருதியோ அக்னிஷ்டே பதி துரியஸ்தே மநுஷ்ஐயா!!

ஸோமோ ததத் கந்தர்வாய

கந்தர்வோ ததத் அக்னயே!

ரயிம்ச புக்ராம் சாசாத் அக்னிர் மஹ்யம்

அதோ இமாம்

பொருள்: அதாவது மணப்பெண்ணை சோமன் முதலில் மனைவியாக அடைந்தான். பிறகு கந்தர்வன் அடைந்தான். இவளுடைய மூன்றாவது கணவன் அக்னி, நான்காவது கணவன் மனித சாதியில் பிறந்தவன்.

சோமன் உன்னை (மணப்பெண்ணை) கந்தர்வனுக்குக் கொடுத்தான். கந்தர்வன் அக்னிக்குக் கொடுத்தான். அக்னிதேவன் இவளுக்குச் செல்வத்தையும் குழந்தையையும் கொடுத்த பிறகு எனக்குத் தந்தான்.... என்பதே புரோகிதர் கூற அதை திருப்பி மணமகன் கூறும் மந்திரத்தின் பொருள்.

இம்மந்திரத்தின் வெளிப்படையான அர்த்தம் என்ன? இந்து மதப்படி திருமணம் செய்து கொள்கின்ற ஒருவரின் மனைவி பலரால் அனுபவிக்கப்பட்ட ஒரு பரத்தை (விபச்சாரி) என்றும், இந்த பெண் (மணப்பெண்) வேறொருவனிடம் குழந்தை பெற்றுக் கொண்டே அவனுக்கு மனைவியாகிறாள் என்றும் இந்து மதம் கூறுகின்றது.

ஆதாரம்: காஞ்சி சங்கராச்சாரியார் எழுதிய தெய்வத்தின் குரல் - பாகம் 2 - பக்கம் 874

எனவே இந்துமதப்படி திருமணம் செய்துக் கொண்டால் உன் மனைவி ஒரு விபச்சாரி என்று பொருள்.