Search This Blog

21.7.12

ஈழத்தில் பத்து பார்ப்பனக் குடும்பம் சுட்டுக் கொல்லப் பட்டு இருந்தால் கல்கி துக்ளக் கூட்டம் இப்படி எழுதுமா?


பார்ப்பனர்கள் பார்வையில் ஈழத் தமிழர் பிரச்சினை!

பார்ப்பனர்கள் பார்வையில் ஈழத் தமிழர்கள் பிரச்சினை எப்படி இருக்கிறது என்பதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் போதுமானவை. ஒன்று கல்கி இதழில் (22.7.2012) வெளிவந்துள்ள ஒரு கேள்வி பதில்:

கேள்வி: இலங்கை விமானப் படையினருக்கு சென்னையில் பயிற்சி அளித்தது குறித்து...

பதில்: பல காலமாகத் தரப்பட்டு வரும் பயிற்சி இது.

இந்நாள் ஜெயலலிதா, கருணாநிதி பிற எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை உணர்ந்து கொண்டு இலங்கை பயிற்சி விமானிகள் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் எங்குமே இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என்று ஜெ. குரல் கொடுத்திருக்கிறார். இதுபோன்ற எதிர்ப்புகளால் இலங்கைத் தமிழர் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படாது; அந்த இலக்கை அடைவது மேலும் கடினமாகும். தேவை சாணக்கியம் ஆத்திரமல்ல என்று கல்கி எழுதுகிறது.

துக்ளக் (25.7.2012) என்ன எழுதுகிறது?

கேள்வி: இலங்கை விமானப் படையினருக்கு சென்னையில் பயிற்சி அளிப்பதாக எழுந்துள்ள சர்ச்சைபற்றி...?

பதில்: என்னைப் பொறுத்தவரையில் சொல்கிறேன். இலங்கையும், இந்தியாவும் நட்பு நாடுகள்தான் அதுவுமின்றி இரண்டு நாடுகளும் சார்க் அமைப்பில் இடம் பெற்றிருக்கின்றன. அந்த அமைப்பில் ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு இந்த மாதிரி பயிற்சிகளில் உதவுவது என்பது வழக்கம் என்று தெளிவாக்கப் பட்டிருக்கிறது. அப்படியிருக்க இலங்கை விமானப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டது என்பது ஆட்சேபத்துக்குரிய விஷயமல்ல என்பது என் கருத்து என்று துக்ளக்கில் திருவாளர் சோ. ராமசாமி எழுதுகிறார்.

இலங்கையும், இந்தியாவின் நட்பு நாடாம், சார்க் அமைப்பில் உள்ள நாடுகளாம்; அதனால் இத்தகைய இராணுவப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றனவாம். நட்பும், சார்க் அமைப்பில் இருக்கிறோம் என்ற உணர்வும் என்ன ஒரு வழிப்பாதை தானா? இந்தியாவுக்கு இருக்கும் அதே உணர்வு. இலங்கைக்கு இருக்க வேண்டாமா? அப்படி ஓர் உணர்வு இலங்கைக்கு இருந்திருக்குமானால் இந்தியாவில் வாழும் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுக் காரர்களான ஈழத் தமிழர் பிரச்சினையில் இலங்கை மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளுமா?

பல்லா யிரக்கணக்கான மக்களை நெஞ்சில் ஈரம் சிறிதுமின்றிக் காக்கை குருவிகள் போல சுட்டுத்தான் தள்ளுமா? இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியா அளிக்கும் பயிற்சி ஈழத் தமிழர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை எனத் தெரிந்திருந்தும், கல்கி துக்ளக் கூட்டம் இப்படி எழுதுகின்றன என்றால், அவர்களின் உணர்வு என்பது தமிழினப் பகையைச் சார்ந்தது என்பது விளங்கவில்லையா?

தமிழ்த் தேசியம் என்று பார்ப்பனர்களை மடியில் தூக்கி வைத்துக் கொள்ளும் கும்பல் இதுபற்றி சிந்திக்க வேண்டாமா? உலகில் வேறு எந்த நாடுகளாவது தங்கள் நாட்டு மக்களைக் கொல்லுவதற்கு எதிரி நாட்டுக்கு இராணுவ உதவிகளை வாரி வழங்குமா? ஈழத் தமிழர்கள் பிரச்சினையில், தமிழ்நாட்டு மக்கள்தம் குரலின் நிர்ப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டு இந்தியா எப்பொழுதாவது குரல் கொடுக்கும் பொழுது துக்ளக் கூறும் அந்த நட்பு நாடு அதனை மதித்ததுண்டா?

ஈழத் தமிழர்ப் பிரச்சினை ஒருபுறம் இருக்கட்டும்; இந்தியாவுக்கு எதிரி நாடாக சிந்திக்கின்ற, செயல்படுகிற சீனாவுக்கு உற்ற தோழனாக இன்னும் சொல்லப் போனால் சீனாவுக்குக் கட்டுப்பட்ட நாடாக இருக்கிறதே இலங்கை - அதைபற்றியெல்லாம் கல்கி துக்ளக் கூட்டத்துக்கு அக்கறை கிடையாதா? மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகள் விதவை யாக வேண்டும் என்று கருதுகிற குரூர மனப்பான்மை தான் பார்ப்பனர்களின் குணம் என்பது விளங்கிட வில்லையா!?

ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் எப்பொழுதும் தமிழர்களுக்கு விரோதமான சிந்தனையில் மூழ்கிக் கிடக்கும் இந்தப் பார்ப்பனக் கும்பல், இந்தப் பிரச்சினையில் வேறு விதமாக சிந்திக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா? செம்மொழியானாலும், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டானாலும், பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறப்பதானாலும் பார்ப்பனர்களுக்கு வயிறு எரிவதேன்? ஈழத்தில் பத்து பார்ப்பனக் குடும்பம் சுட்டுக் கொல்லப் பட்டு இருந்தால் கல்கி துக்ளக் கூட்டம் இப்படி எழுதுமா? தமிழர்களே, சிந்திப்பீர்!
--------------------"விடுதலை” தலையங்கம் 21-7-2012

29 comments:

தமிழ் ஓவியா said...

அய்.நா.வில் தமிழீழக் கோரிக்கை


அய்க்கிய நாட்டு மன்றத்தின் தெற்காசியாவின் முக்கிய அதிகாரி ஹிடோகிடென் அவர்களை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சந்தித்து, 27.06.2012 அன்று இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்தும், தனியீழத்தைத் தவிர வேறு வழியில்லை என்பதை வலியுறுத்தியும் 50 நிமிடங்கள் உரையாடினார்.

ஹிடோகிடென் தெற்கு ஆசியாவின் முக்கிய அதிகாரி ஆவார். இவர் முன்னர் மியான்மா (பர்மா) சமாதானத்தில் முக்கிய பங்கு வகித்தவர்.அய்க்கியநாட்டுச் சபையின் சிறப்புத் தூதுவராக அங்கு சென்று ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டவர். உலக அரசுகள், முக்கியமாக அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து போன்ற அரசுகள் சேர்ந்து இது போன்ற அதிகாரியை அனுப்பினால் தான் ஈழத் தமிழர்களுக்கு ஒரு முடிவான தீர்வு கிடைக்கும்.

கி.வீரமணி அவர்கள் இலங்கையில் அங்குள்ள இராணுவ ஆதிக்கம், தொடர்ந்து நடக்கும் வன்கொடுமைகள், பத்திரிகைச் சுதந்திரம் இல்லாமை இவற்றை விவரமாக எடுத்துரைத்து தனி ஈழம் ஒன்றே முடிவான தீர்வாக அமைய முடியும் என்பதை எடுத்துச் சொன்னார்.

அங்கு நடக்கும் அத்துணை வன்முறைகளையும் நன்கு அறிந்தவர் இவர். தெற்கு ஆசியா முழுவதற்கும் இவர் பொறுப்பானவர். தெற்கு ஆசியாவின் அரசியல் விவகாரங் களுக்குத் தலைமை அதிகாரியாவார். இலங்கையில் நடக்கும் கொடுமைகளை நன்கு அறிந்தவர்.

இத்தனைக் காலமும் தீவிரவாதம் என்று இலங்கை அரசு சொன்னதை நம்பிய அமெரிக்கா மற்ற நாடுகள் இப்போதுதான் முழு உண்மையைப் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.இது மக்கள் போராட்டம்.

மக்கள் தங்கள் மொழி, இனம், படிப்பு, வேலை வாய்ப்பு என்று அனைத்து உரிமைகளுக்காகவும் போராடினர். இவற்றை அடைய அவர்கள் பெரும் விலையை உயிராக, மானமாக, வதை யாகக் கொடுத்துள்ளனர் என்பதை உலகம் இப்போது தான் உணரத் தொடங்கியுள்ளது என்பதையும் கிழக்கு தைமூர், கோசோவா போன்ற நாடுகளின் விடுதலை போன்று ஈழத்தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டுமென்பதை வலியுறுத்தினார். டெசோ இயக்கத்தைப் பற்றியும் எடுத்துச் சொன்னார்.

மேலும், உலக அரசுகளை, முக்கியமாக இந்திய அரசையும் நீங்கள் அதை உணர வைக்கவும், செயல்படவும் செய்யுங்கள் என்று கூறினார். அப்போது தான் அய்க்கிய நாட்டுச் சபை எதையும் செய்ய முடியும் என்பதை எடுத்துக் கூறினார்.

ஆகவே உலகெங்கும் வாழுந்தமிழர்கள் தாம் வாழும் நாடுகளின் அரசுகளிடம் உண்மைகளை உணரச் செய்வோம். அவர்களின் கண்களையும், உள்ளங்களையும் திறக்கப் பாடுபடுவோம். டெசோவின் முயற்சியே அது தான் என்று கூறி விடை பெற்றார்.

திரு ஹிடோகிடென் அய்க்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரத் துறையின் மூத்த அரசியல் விவகார அதிகாரியாக தற்போது இருக்கிறார். தெற்கு ஆசியா மற்றும் அய்க்கிய நாடுகள் -ஆசிய உறவுகள் (குறிப்பாக மியான்மா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ்) பற்றிய பகுதிகளில் நிபுணத்துவம் பெற்றவராவார்.

அரசியல் விவகாரத் துறையின் ஆசிய பசிபிக் பகுதியில் தெற்கு ஆசியாவின் குழுத் தலைவராக அவர் இப்போது பணியாற்றி வருகிறார். நேபாளத்தில் அய்க்கிய நாடுகள் மேற்கொண்டுள்ள செயல் திட்டத்திற்கு அரசியல் மற்றும் அடிப்படையான ஆதரவு அளிக்கும் முயற்சிகளில் அவர் இப்போது ஈடுபட்டுள்ளார்.

இதற்கு முன், அமைதி மற்றும் பாதுகாப்பு பகுதியில் அய்க்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பை பலப்படுத்தும் பணியில் பணியாற்றி வந்துள்ளார். அதன் மூலம் 2006 இல் அய்க்கிய நாடுகளில் நோக்குநராக அவர் ஆனார். 2001--_05 காலத்தில் மியான்மருக்கான அய்க்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் சிறப்புத் தூதுவரின் மூத்த ஆலோசகராக அவர் இருந்தார்.

இக்காலகட்டத்தில் மியான்மார் நாட்டில் அமைதி நிலவவும், மக்களாட்சி மலரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவர் தனது முதுகலைப் பட்டத்தை கார்னல் பட்டப் பள்ளியிலும், பட்டப்படிப்பை சேடன் ஹால் பல்கலைக் கழகத்திலும் பெற்றவர். மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தாய்பே ஃபூ ஜென் கேத்தலிக் பல்கலைக் கழகத்திலும் பயின்றவர்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவரிடம் தமிமிழக் கோரிக்கை எடுத்துக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். உண்மை 16 31 2012

தமிழ் ஓவியா said...

அய்யா பெரியார் வரலாற்று நாயகன்


வடநாட்டில் எத்தனையோ மதக் கலவரங்கள் நடக் கின்றன. ஆனால், தென்னிந்தியாவில் நடப்பதில்லை. அப்படி நடக்காமல் இருப்பதற்கான விதையை ஊன்றி யவர் பெரியார்தான். நான் இஸ்லாமியன். இறை நம்பிக்கை உள்ளவன். ஆனால், மூட நம்பிக்கை களை எதிர்ப்பவன். அவர் வரலாற்று நாயகன் என்பதில் சந்தேகமே இல்லை. திரைப்பட இயக்குநர் அமீர் - (குமுதம் ரிப்போர்ட்டர், 12.7.2012)

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


நாம் செய்றது நல்ல காரியமா இருந்தாப் போதும். பக்தனா இருக்கிறத விட யோக்கியனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிக்கிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா? என்று கேள்வி எழுப்பிய பகுத்தறிவாளர் பெருந்தலைவர் காமராஜர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

தூள்... தூளான கடவுள், கடவுளை அழிக்கும் துகள்


அறிவியல் முடிவில்லாதது. மெழுகுவர்த்தி எரிய நெருப்பு தேவை என்றது. முடிவில் ஆக்சிஜன்தான் தேவை என்றானது. அய்சக் நியூட்டனின் கண்டுபிடிப்புகளுக்கு அப்பாலும் போய்ப் புதிய உண்மைகளைக் கூறினார் அயீன்ஸ்டின். ஆனால் மதம் அப்படியல்ல; ஆன்மிகம் என்று அர்த்தமே இல்லாமல் சிலர் கூறுகிறார்களே, அதுவும் அப்படியல்ல! எவனோ ஆய்வறிவு கொஞ்சமும் இல்லாமல் உளறிக் கொட்டியதையெல்லாம் எழுதிவைத்துக் கொண்டு இதுதான் முடிவு. இதுதான் வேதாந்தம், இதுதான் சித்தாந்தம் என்று கூறிக் கொண்டிருக்கிறார்களே, அவையும் அப்படியல்ல! மாறிக்கொண்டே இருப்பதுதான் இயற்கை என்று அறிவியல் கூறினால் _ அல்ல, அல்ல மாறாததுதான் சநாதனம் என்று சண்டித்தனம் செய்வது மதம்.

கலிலியோ காலந்தொட்டு உதை வாங்கியும் மதத்திற்குப் புத்தி வரவில்லை. இதோ, இன்றைய நிலையில் இவர்களின் முட்டாள்தனமான கருத்துக்கு, நம்பிக்கைக்கு மரண அடி விழுந்திருக்கிறது, ஹிக்ஸ் போசான் எனும் கண்டுபிடிப்பின் வாயிலாக! கடவுள் உண்டாகட்டும் எனக் கூறியதும் எல்லாம் உண்டாகின என்று மூன்று மதங்கள் முனகிக் கொண்டிருப்பது முட்டாளின் முனகல் என்று மதத்தின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அடித்திருக்கிறது அறிவியல்.

உலகம் இப்படித்தான்

இவ்வுலகம் 12 அடிப்படைக் கூறுகளாலும் 4 அடிப்படை விசைகளாலும் உருவானது என்று ஏற்கெனவே கண்டுபிடித்து எண்பித்திருக்கிறது அறிவியல், 1964இல் பிரிட்டிஷ் அறிவியல் அறிஞர் ஒருவர், 13ஆவதாக ஒரு துகள் இருக்கிறது என அறிவித்தார். அவர் பீட்டர் ஹிக்ஸ் எனும் 83 வயது நிறைந்த இயற்பியல் அறிஞர். இவர் கடவுள் நம்பிக்கை அறவே இல்லாத நாத்திகர்.

நோபல் பரிசு பெற்ற இயற்பியல் அறிஞர் வியோன் லெடர்மேன் என்பவர் உருவாக்கிக் கொடுத்த சொல்தான் கடவுள் துகள் என்று ஏடுகளில் எழுதப்படும் சொல். உண்மையில் ஹிக்ஸ் வைத்த பெயர் பாழாய்ப் போன துகள் (GODDAMN PARTICLE) என்பதே! பத்திரிகை ஆசிரியர் அதனை வெளியிட அச்சங்கொண்டு GOD PARTICLE என்று எழுதி வெளியிட்டார். அதனையே அனைவரும் கையாள்கிறார்கள்.

உண்மையில் கடவுளுக்கும் பிரபஞ்சத்திற்கும் சம்பந்தமில்லை எனும் உண்மையை வெளிப்படுத்த உதவும் கண்டுபிடிப்புக்கு கடவுள் பெயரை வைத்து அழைக்கும் பித்துக்குளித்தனத்தை எப்படி விவரிப்பது?

துல்லியமான கண்டுபிடிப்பு

கடவுளை ஒழிக்கும் துகள் ஒன்று இருப்பதை இயற்பியல் அறிஞர்கள் அறிவர். மதவாதிகளைப் போல நான் சொல்கிறேன்; நம்புங்கள் என்று அறிவியலாளர்கள் சொல்லமாட்டார்கள் அல்லவா? அதனால் அத்துகள் இருப்பதை நிரூபிக்க ஆய்வுகள் செய்து, கண்டறிந்து, துளிக்கூடப் பிசிறு இல்லாமல் கண்டறிந்து, அதனை வெளியிட்டுள்ளனர். 5 சிக்மா (5 SIGMA) என்று குறிப்பிடப்படும் அளவு துல்லியமாகத் தெரிந்த பின்னர்தான் வெளியிட்டுள்ளனர். 10 லட்சத்தில் ஒரு பங்குதான் சந்தேகம் இருக்கக்கூடும் என்கிற அளவுக்குத் துல்லியமாகத் தெரிந்த பின்னர்தான் (இதைத்தான் 5 சிக்மா என்பார்கள்) வெளியிட்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

இப்படி ஒரு துகள் இருக்கும் என்பதை வெளியிட்டவர் பீட்டர் ஹிக்ஸ் என்பவர். 1964இல் ஒரு கட்டுரையில் இக்கருத்தை எழுதியிருந்தார். PHYSICS LETTERS எனும் ஏடு இக்கட்டுரையை வெளியிட மறுத்தது. என்றாலும் அமெரிக்காவின் PHYSICAL REVIEW LETTERS எனும் ஏடு வெளியிட்டது. அறிவியல் உலகம் அதுபற்றி விவாதித்து, ஆய்ந்து பார்த்தது. கண்டுபிடிப்புகளின் திரள், அவற்றை ஆய்வு செய்தபோது வெளிப்பட்ட மெய்யான நிலைப்பாடுகள், அவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்ட உண்மைதான் அறிவியல்! (SCIENCE IS NOTHING BUT COLLECTION OF OBSERVATIONS, FACTS AND TRUTHS) எனவே ஆய்வுகள் நடத்திப் பார்க்க முடிவு செய்தனர் அறிவியலறிஞர்கள்.

இணைப்புச் சக்தி எது?

உலகத்தைக் கடவுள் படைத்தார் என்று சொல்லிவிட்டுத் தூங்கிவிட்டது மதம். ஆனால் 13 ஆயிரத்து 750 கோடி ஆண்டுகளுக்கு முன் பேரண்டத்தில் ஏற்பட்ட பெருவெடிப்பின் (BIG BANG) காரணமாக பேரண்டம் உருவானதாக அறிவியல் கூறுகிறது. அணுக்களின் சேர்க்கைதான் உலகமும் மற்ற பொருள்களும். அணு என்ற சொல்லையே, டெமாக்ரடிஸ் எனும் கிரேக்கர் 2500 ஆண்டுகளுக்கு முன் கூறினார். அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகுத்தி என்றெல்லாம் கூட நம்ம ஊர் ஆள்கள் பாடியிருக்கிறார்கள். அந்த அணு என்பது மூன்று பொருள்களின் கலவை என்றது அறிவியல். எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற மூன்றின் சேர்க்கை அணு என்றது அறிவியல். சேர்க்கை என்றால் சேர்த்தது எது? அதுதான் ஆய்வுக்குரிய பொருள்!

மிகப் பெரிய இடிப்பான் (COLLIDER) ஒன்றை நிலத்தின் அடியில் 100 மீட்டர் ஆழத்தில் அமைத்தனர். 27 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைத்தனர். பிரான்சு மற்றும் சுவிட்ஜர்லாந்து நாடுகளின் எல்லையில் வெட்டப்பட்ட சுரங்கத்தில் அமைத்துச் சோதனைகளை நடத்தினர். சுரங்கத்தை அமைக்கவே பத்து ஆண்டுகள் ஆயின. 1998இல் தொடங்கி 2008இல் முடித்தனர். நூறு நாடுகளிலிருந்து 10 ஆயிரம் அறிவியலாளரின் உழைப்பு. இதில் பொருத்தப்பட்ட மோதல் எந்திரம் (COLLIDER) மட்டுமே 30 ஆயிரம் லட்சம் யூரோ செலவு பிடித்துள்ளது. ALICE, CMS, ATLAS மற்றும் LHDB எனும் நான்கு வகை ஆய்வுகள் நடத்தப்பட்டன. பெருவெடிப்பின்போது நிகழ்ந்தவையாகக் கருதப்படும் வகைகள் இவை. இந்த ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் நாள் நடந்த CMS, ATLAS சோதனைகளின் முடிவில் ஹிக்ஸ் போசான் இருப்பது கண்டறியப்பட்டது. ஒருவரியில் சொல்லப்படக்கூடிய ஆராய்ச்சி அல்ல. 10-.9.2008இல் தொடங்கிய ஆய்வு மின்சாரக் கசிவினால் பாதிப்படைந்து நிறுத்தப்பட நேரிட்டது. சீர்செய்து 13 மாதங்கள் உழைத்து 20.11.2009இல் மீண்டும் ஆய்வு தொடங்கப்பட்டது. 2012 ஜூலை 4இல் முடிவு தெரிந்தது. மீண்டும் மீண்டும் ஆய்வு செய்து துல்லியமாகக் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தனர்.

பெண் அறிவியலாளர்

அட்லஸ் (ATLAS) சோதனையைச் செய்தவர் ஃபேபியோலா கியான்னாட்டி எனும் இத்தாலியப் பெண்மணி. 37 நாடுகளில் 169 நிறுவனங்களின் உழைப்பால் இச்சோதனை நடத்தினார் ஃபேபியோலா. அதுபோலவே மற்றொரு சோதனையான CMS சோதனையை நடத்தியவர் ஜோ இன்கான்டெலா எனும் அமெரிக்க இயற்பியல் அறிஞர்.

அய்ன்ஸ்டீனுடன் இணைந்து பணிபுரிந்து பல இயற்பியல் கண்டுபிடிப்புகளை 1920களில் அறிவித்த சத்யேந்திரநாத் போஸ் எனும் வங்காள இயற்பியல் அறிஞரின் பெயரால்தான் துகள் எனப்படும் போசான் (BOSON) கூறப்படுகிறது. அப்படி ஒரு 13ஆவது துகள் இருக்கிறது எனக் கூறிய ஹிக்ஸ் பெயரை இணைத்து ஹிக்ஸ் போசான் எனப்படுகிறது. அதனை மறைத்து கடவுள் துகள் என்று எழுதுவது மிகவும் கண்டிக்கத் தக்க விசமத்தனம் ஆகும். ஏறத்தாழ எல்லா இயற்பியலாளர்களுமே கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்தாம்! ஆனால், ஏடு நடத்துபவர்கள் வயிற்றை வளர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் வாழும் பிறவிகள் என்பதால் கடவுளை இழுத்துப் போட்டு எழுதுகின்றனர்.

கடவுள் அழிந்தது

தமிழ் ஓவியா said...

ஆறு நாள்களில் உலகமும் உயிர்களும் மரங்களும் செடிகளும் பூக்களும் படைக்கப்பட்டு விட்டன என்கின்றன மேலை நாட்டு மதங்கள். எல்லாவற்றையும் பிரம்மம் படைத்தது என்று மிகச் சுலபமாகக் கூறுகிறது இந்துமதம். இந்த மதத்திற்கு வியாக்யானம் கூறவந்த மதகுருக்கள், எல்லாம் மாயை என்று தள்ளிவிட்டனர். மாயனார் எனும் குயவன் செய்த மண்பாண்டம் என்றே கூறிவிட்டனர். இவர்களது மடமைப்பாசி பிடித்த மூளை எதையும் யோசிக்கவில்லை; செயல்படவும் இல்லை. கடவுளை ஒரு பக்கம் நம்பினாலும் எதையும் துருவிப் பார்க்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டுவிட்ட மேலை நாட்டினர் சும்மா இருக்கவில்லை. ஆய்வுகள் செய்தனர். பாமரர்கள் அறியாதவற்றைப் பற்றி ஆய்ந்து, அறிந்து, முடிவுகளை அறிவித்தனர்.

அடிப்படையான 12 துகள்களும் 4 விசைகளும் சேர்ந்து உலகம் உருவானது எனக் கண்டுபிடித்துள்ளனர். என்றாலும் எங்கோ இடித்தது. ஆய்வு முழுமையடையவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த நிலையில் ஹிக்ஸ், இன்னும் ஒன்று இருக்கிறது என்றார். ஆய்வு தொடர்ந்தது. அறிவியல் முடிவு இல்லாததுதானே! QUARKS எனும் பிரிவில் 6 (UP. DOWN, TOP, BOTTOM, STRANGE, CHARMED) துகள்களும் LEPTONS எனும் பிரிவில் 6 (எலக்ட்ரான், எலக்ட்ரான் நியுட்ரினோ, மூவான் (MUON), மூவான் நியுட்ரினோ, டாவ் (TAU), டாவ் நியுட்ரினோ) துகள்களும் ஆக 12 ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன. தற்போதைய ஹிக்ஸ் போசான் துகள் 13ஆம் எண் பெற்றிருக்கிறது. இவற்றை இணைக்கும் விசைகளாக 4 உள்ளன. இத்துகள்கள் Z, W, போட்டான் (PHOTON), க்ளுவான் (GLUON) என அறிவியலாளர் குறிக்கின்றனர். இந்த 17ம் சேர்ந்து பேரண்டம் உருவானது என்பது அறிவியலின் கருத்து. (இங்கே இக்கட்டுரையின் முதல் வரியை மீண்டும் படிக்கவும்)

தமிழ் ஓவியா said...

விசமங்கள் எத்தனை

இந்த மகத்தான ஆய்வில் முக்கியப் பங்காற்றியுள்ள பெண் இயற்பியலாளர் ஃபேபியாலா கியான்னாட்டி என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற ஆணின் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று எழுதி வைத்துக் கொண்டிருக்கும் ஆண்கள், அந்த இலக்கணப்படியே, அந்த அம்மையாரைப் பின்னுக்குத் தள்ளி வைத்திருக்கிறார்களோ?

கடவுள் என்பது இருக்கிறது என்றோ இல்லை என்றோ கூறுவதற்காக நாங்கள் முயற்சி செய்யவில்லை. பேரண்டத்தின் அமைப்பு எத்தகையது என்பதைக் கண்டறிவதுதான் எங்கள் ஆய்வின் நோக்கம் என்கிறார் ஜான் எல்லிஸ் என்னும் இயற்பியல் அறிஞர். கடவுள் துகள் என்ற வார்த்தை ஆய்வாளர்களுக்குப் பரவசம் எதையும் ஏற்படுத்தி விடவில்லை. அந்தச் சொல் பத்திரிகை நடத்துபவர்கள் வைத்தது. அந்தத் துகள் இருப்பது எங்களுக்குத் தெரியும். அதை நிரூபிக்கத்தான் இந்த ஆய்வு என்கிறார் இந்திய இயற்பியலாளர் தபன் நாயக் என்பவர். ஆய்வுக்கூடத்தில் பணிபுரியும் இந்திய விஞ்ஞானிகளில் முதன்மையானவர்.

6000 விஞ்ஞானிகளுக்கு மேல் இரவும் பகலமாக உழைத்துக் கொண்டிருக்கும் ஆய்வுக்கூடத்தின் (CERN) வெளியே, நடனமாடும் நடராசன் சிலையை வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு சாமிமலை எனும் ஊரில் வடிக்கப்பட்ட பித்தளைச் சிலை. கலை அழகுக்கோ எந்தக் கண்றாவிக்கோ இதனை அங்கே வைத்திருக்கிறார்கள். அழிக்கும் கடவுள் எனப் புளுகப்படும் சிவனின் சிலை, அண்டம் எப்படி அமைந்துள்ளது என்பதை ஆயும் இடத்தில் இருப்பது நகைமுரண்தான்!

வலையும் விரியும்

வலைத்தளம் எனப்படும் இன்டர்நெட் தற்போதைய வேகத்தைவிட 1000 மடங்கு வேகமாகச் செயலாற்ற எப்படி வடிவமைப்பது எனும் ஆய்வும் இங்கு நடத்தப்படுகிறது. அதன் முடிவும் தெரிந்தால் உலக அறிவு எங்கோ போய்விட முடியும் என்ப கொசுறுச் செய்தி.

இவையெல்லாம் எப்படி சாத்தியமாகின்றன? ஞானபூமி எனப் பீற்றிக் கொள்ளும் இந்தியாவில் ஏன் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை? ஞானம் முற்றுப் பெற்று விட்டதோ? வேதங்களும் உபநிசத்துகளும் அவற்றிற்கான பாஷ்யங்களும் வேதாந்த சாரங்களும் எதைச் சாதித்திருக்கின்றன? இயற்கைதான்

செர்ன் ஆய்வுக்கூடத்தில் கடவுள் துகளைக் கண்டுபிடித்து விட்ட செய்தியை உலகுக்கு அறிவித்த ஆய்வுக் கூடத்தின் செய்தித் தொடர்பாளர் சொன்னதை இங்கே கவனிக்க வேண்டும். நாங்கள் கடவுள் துகளைக் கண்டுபிடித்து விட்டோம்! இயற்கைக்கு நன்றி (THANK NATURE)” என்றுதான் கூறினார். கடவுளுக்கு நன்றி எனக் கூறவில்லை. THANK GOD என்றுதான் கூறுவது பழக்கம். ஆனால் அவர் கூறவில்லை. காரணம், அவர் அறிவார் _ கடவுள் ஒன்றையும் கழற்றவில்லை என்று!

ஆனால் இங்கே? விண்வெளியில் யூரி காகரின் பறந்த நிகழ்ச்சியைப் பத்திரிகையில் படித்த இந்திய விஞ்ஞானி ஒருவர் இதெல்லாம் சுத்த தப்புங்க! விண்வெளி கடவுளின் சாம்ராஜ்யம். அங்கெல்லாம் மனுசாள் போகப்படாது எனக் கூறினார். அவர் சி.வெங்கட்டராமன் எனும் அய்யங்கார். சர் பட்டம் பெற்றவர். நோபல் பரிசும் பெற்றவர். ஆம், சர்.சி.வி.ராமன்தான்! ஆயிரம்தான் அறிவியலாளராக இருந்தாலும், இந்துமதப் புத்தி அவரைவிட்டுப் போகவில்லை! ஆனால் அங்கே அப்படி இல்லை!

அழகிய சிலையைக் கண்டால், கலைவண்ணம் காண்பதற்கு மாறாக, கடவுள் வண்ணம் காணும் புத்தி! சிற்பியைப் பாராட்டாமல், சிலையைக் கும்பிடும் புத்தி! அறிவியல் கண்டுபிடிப்புகளை உலகிலேயே அதிகம் பேர் அனுபவித்துக் கொண்டு வாழும் இந்திய நாட்டில் (மக்கள் திரள் 120 கோடிக்கு மேல்) அறிவியலை அறியாதது மட்டுமல்ல, அலட்சியப்படுத்தும் புத்தியும் இருப்பதை என்ன சொல்ல? அரசமைப்புச் சட்டமே வலியுறுத்தியும் கூட, அறிவியல் மனப்பான்மை வளரவில்லையே! இந்த ஏக்கம் தீருவது எப்போ? இந்தியா மாறுவது எப்போ?

- சு.அறிவுக்கரசு

தமிழ் ஓவியா said...

பெரியாரின் தொண்டு வியந்த அமெரிக்கப் பேராசிரியை


அமெரிக்காவின் பாஸ்டன் அருகில் உள்ள (Studbury) ஸ்டட்பர்ரி என்ற சிறு நகரத்தில் அமைந்துள்ள பிரபல ஆங்கிலக் கவிஞர் ஹென்ரி வேர்ஸ்ஒர்த் லாங்பெல்லோ (H.W.Longfellow) அவர்கள் பெயரில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவத்துடன் அமைக்கப்பட்டுள்ள லாங்க்பெலோ இன் (Longfellow Inn) உணவகத்தில், World Teach உலக நாடுகளுக்கு ஆங்கிலத்தினை நன்கு எழுதப் பேச உதவிடும் அமைப்பின் நிர்வாக இயக்குநர் பேராசிரியை ஹெலன் கிளாரி செலிவெர்ஸ் (Helan Clariessievers) நமது உண்மை ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு சிறப்பான மதிய உணவுக்கொப்ப சிற்றுண்டி விருந் தினை (Breakfast) 8.7,2012 ஞாயிறு காலை 9.30 மணி அளவில் கொடுத்து வரவேற்றார். சுமார் ஒன்றரை மணி நேரம் - பெரியார் கல்வி நிலையங்கள், தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்களின் சீரிய சமூகப் புரட்சித் தொண்டு பற்றியும் பாராட்டி, ஊக்கமூட்டும் வகையில் கலந்துரையாடினார்.

சென்னை, திருச்சி, தஞ்சை கல்வி நிறுவனங்களை பெரியார் அறக்கட்டளைகள் நடத்துவதை நேரில் வந்து பார்த்து ஆய்வு செய்த அந்த அம்மையார் (இவர் ஹார்டு வேர்டு பல்கலைக்கழக அமைப்பில் உள்ள உலக நாடுகளுக்கு ஆங்கில ஆசிரியர்களை அனுப்பி உதவும் தொண்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆவார்). நமது நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் உயர் நிலைப் பள்ளி - குழந்தைகள் இல்லம் குழந்தைகள் பயன்படும் வகையில் ஆசிரியைகளை அனுப்பியுள்ளார். நமது இயக்கம், சமூகப் புரட்சியை அமைதியான வழியில் நடத்தி வருகிறது என்றும் இந்திய அரசியல்வாதிகள் பெரியார், காந்தி போன்ற தலைவர்களைப் பின்பற்றி தங்களின் நாட்டில் ஒரு புதிய சமூகத்தை அமைக்கலாம் என்று கூறினார். கி.வீரமணி அவர்களுடன் அசோக்ராஜ் அவர்களும் சென்றிருந்தார். பெரியார் உலகமயமாகி வருவதற்கு இது ஒரு அருமையான சான்று ஆகும்.

இச்சந்திப்பு குறித்து அசோக்ராஜ் அவர் களுக்கு பேராசிரியை ஹெலன் கிளாரி செலிவெர்ஸ் மின்னஞ்சலில் அனுப்பியுள்ள கடிதத்தில், மகிழ்ச்சியெல்லாம் என்னுடையதே! அன்று காலை உணவு அருந்திய நிகழ்ச்சி எனக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. நீங்கள் இருவரும் கூறியவை அனைத்தும், நீங்களும் உங்கள் தந்தையும், சகோ தரரும் செய்துவரும் நற்செயல்கள் அனைத்தும் மிகுந்த ஆர்வமும் தூண்டுதலும் அளிப்பதாக இருந்தன. என்னை சந்தித்துப் பேச டாக்டர் வீரமணி முன்வந்ததை நான் மிகவும் பாராட்டுகிறேன் எனக்காக அவரிடம் எனது நன்றியைத் தெரிவிக்கவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

மாற்றுப் பாதையில் சேதுக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த முடியாது!


கற்பனை வாதத்தை தகர்த்த வல்லுநர் குழுவின் அறிக்கை


சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்ற வாய்ப்பே இல்லை என்று வல்லுநர் குழு அறிக்கையை சுட்டிக் காட்டி, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவித்தது.

தமிழ்நாட்டில், ராமேசுவரத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2-ஆம் தேதி சேது சமுத்திரத் திட்டப்பணிகள் தொடங்கி, முழு வீச்சில் நடந்து வந்தன. சேது சமுத்திர திட்டப்பணிகள் 30 மீட்டர் அகலம், 12 மீட் டர் ஆழம், 167 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டி நிறைவேற்றுவது ஆகும்.

சேது சமுத்திர திட்டப்பணிகளை ஏற்கெனவே திட்டமிட்டிருந்த பாதையில் நிறைவேற்றினால், கப்பல்கள் இந்திய பெருங்கடலில் இருந்து இலங்கையை சுற்றாமல் சேது சமுத்திரக் கால்வாய் வழியாக வங்கக்கடலை நேராக அடை வதற்கு வழி பிறக்கும்.இதனால்,தமிழ்நாட்டின் தென் மாவட்டம் வளம் பெரும் ,தமிழர்களின் நூற்றாண்டுக் கனவு நிறைவேறும். ஆனால்,இதனை விரும்பாத வடநாட்டு இந்துத்துவ சக்திகள் கற்பனையான காரணத்தைக் கூறி சிறப்பான சேது சமுத்திரத் திட்டத்தை தடுக்க நினைத்தனர்.

சேது சமுத்திர திட்டப்பணிகள் விரைவாக நடந்த நிலையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாக் ஜல சந்திப்பகுதியில் ராமனின் வானரப் படையினால் கட்டப்பட்ட பாலம் இருப்பதாக கதை கட்டினர்..
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து சேது சமுத்திர திட்டத் துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால், ரூ.2 ஆயிரத்து 487 கோடி மதிப்பில் நிறைவேற்றப் படவிருந்த திட்டம் கிடப் பில் போடப்பட்டது.

மேலும், சேது சமுத் திர திட்டத்தை மாற் றுப்பாதையில் நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயும்படி, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சுற்றுச்சூழல் வல்லுநர் ஆர்.கே.பச்ச வுரி குழுவை மத்திய அரசு அமைத்தது.இந்தக் குழு தனது ஆய்வு அறிக்கையை மத் திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இதற்கிடையே ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது ராமர் பாலத்தை பாரம் பரியச் சின்னமாக அறி விப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கோரி உள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்த மத்திய அரசின் கருத்தை கேட்டது. அதற்கு மத்திய அரசு, இந்த விஷயத்தில் முடிவு எடுத்து அறிவிக்க விருப்பம் இல்லை என்றும், அது குறித்து உச்சநீதிமன்றமே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என கூறி விட்டது.

இந்த நிலையில் சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எச்.எல். டட்டு, சி.கே.பிரசாத் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பாக ஜோலோ 2 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் (மத்திய அரசு வழக்கறிஞர்) ரோஹிண் டன் நரிமன், பச்சவுரி குழுவின் 37 பக்க அறிக் கையை நீதிபதிகளிடம் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

தமிழ் ஓவியா said...

ராமர் பாலத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், மாற்றுப் பாதை தேடுவது என்பது ஏற்கத்தகுந்த யோசனை அல்ல. அது பொது நலன் அடிப்படையில் அமைந்ததும் அல்ல.

ஆய்வின் அடிப் படையிலும், நிர்வாக இழப்பு அணுகுமுறையின் அடிப்படையிலும் மட்டு மல்லாமல் சுற்றுச் சூழல் மற்றும் பொரு ளாதார கோணத்திலும் பார்க்கிறபோது, 4 ஏ வரிசையில் (தனுஷ் கோடிக்கு கிழக்கில்) மாற்றுப்பாதை திட்டம் என்பது கேள்விக்குறி தான்.

விரிவான ஆய்வு களில் எழுந்த சந்தேகங் களை தொடர்ந்து, 4 ஏ வரிசையில் சேது சமுத் திர திட்டத்தை நிறை வேற்றுவது என்பது பொது நலனுக்கு உசித மான ஒன்றாக இருக் காது. இந்த மாற்றுத் திட்டம் சுற்றுச்சூழ லுக்கு ஆபத்தை ஏற்படுத் தும். இந்த நிலையில், எளிதில் பாதிக்கக்கூடிய சுற்றுச்சூழலில் மாற் றுத்திட்டத்தை நிறை வேற்றுவதற்கான சாத்தி யக்கூறுகள் தொடர்பாக மேலும் ஆய்வு தேவைப் படும்.
தற்போதைய நிலை யில், 4 ஏ வரிசையில் இந்த திட்டத்தை நிறை வேற்றுவது என்பது சுற்றுச்சூழலுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக அந்த பகுதிகளில் (திட் டப்பகுதிகளில்) சுற்றுச் சூழலுக்கு ஆபத்தாக அமையும்.

இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது. அறிக்கையை தாக்கல் செய்த பின்னர் சொலிசிட்டர் ஜெனரல் ரோஹிண்டன் நரிமன், நீதிபதிகள் முன்னிலையில், பிரபல சுற்றுச்சூழல் வல்லுநர் ஆர்.கே.பச்சவுரி கமிட்டி, சேது சமுத்திர திட்டத்தை மாற் றுப்பாதையில் நிறைவேற்றுவது குறித்து பரிசீலித்துள்ளது. அதில், பொருளாதார ரீதியிலும், சுற்றுச்சூழல் ரீதியிலும் சேது சமுத்திர திட்டத்தை மாற்று வழிப்பாதையில் நிறைவேற்ற சாத்தியமில்லை என கூறப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதையடுத்து சேது சமுத்திர திட்டத்தை எதிர்காலத்தில் நிறைவேற்றுவது குறித்து அறிவிப்பதற்கு மத்திய அரசுக்கு 8 வார கால அவகாசம் வழங்கி, அதுவரை வழக்குகளை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.அறிவியல் வளர்ந்த 21 ஆம் நூற்றாண்டிலும் புரானப்புளுகைகை நீதிமன்றம் வரை கொண்டு சென்று மாபெரும் மக்கள் திட்டத்தை தடுக்க எண்ணிய பிற்போக்காளர்களின் எண்ணத்தில் மண்ணை கொட்டியிருக்கிறது வல்லுநர் குழு அறிக்கை.

தமிழ் ஓவியா said...

இணையதளம்
நாவி - தமிழ்ச் சந்திப் பிழை திருத்தி

http://tamilpoint.blogspot.in/p/naavi.html

தமிழில் எழுத விரும்பும் பலருக்கும் இருக்கும் பிரச்சினை - சந்திப் பிழை. வெகு எளிதில் நினைவு கொள்ளத்தக்கவை , அல்லது படித்துப் பார்த்தாலே சரிசெய்து கொள்ளத்தக்கவை தான், எனினும் தமிழில் பிழையின்றி எழுதும் கலை இன்னும் பலருக்குக் கைவரவில்லை. பிழைகளைத் திருத்திச் சொல்வதற்கும் ஆட்களைத் தேட முடிவதில்லை என்னும் குறை போக்க மிக முக்கியமான பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார் நீச்சல்காரன் என்ற கணிப்பொறியாளர். நாவி என்ற பெயரில் அவர் உருவாக்கியிருக்கும் தமிழ்ச் சந்திப் பிழை திருத்தி தமிழ்க் கணினி வாலாற்றில் முக்கியமான மைல் கல். இன்று தமிழ் எழுதிகள் நிறைய உருவாகியிருக்கின்றன. ஆனால் பிழைதிருத்தி போன்ற அடுத்த கட்ட நகர்வு மிக முக்கியமானது. அதைச் செய்திருக்கிறது இத்தளம்.

ஒருங்குறித் (unicode) தமிழில் நாம் எழுதிய வரிகளை நாவியில் சென்று இட்டு, ஆய்வு செய் என்ற பொத்தானை அழுத்தினால், வலி மிகும், வலி மிகா இடங்களைப் பற்றிப் பரிந்துரைக்கிறது நாவி. பிற மொழிச் சொற்கள், பெயர்ச்சொல் போன்றவை குறித்து அதனால் சரியாகக் கணிக்க முடியாவிட்டாலும் தனது சந்தேகங்களை நாவி வெளிப்படுத்தும். எழுதுபவரின் தேவைக்கேற்ப திருத்திக் கொள்ளலாம்.

அவசியம் அனைவரும் பயன்படுத்தவேண்டிய, அனைவருக்கும் பரிந்துரைக்க வேண்டிய இணையதளம்.

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கையும், உணவுப் பொருளும்


- திருமதி.வாசுகி திருவள்ளுவர்

இந்தியா இன்னும் ஏன் வல்லரசாகவில்லை, லண்டன் பத்திரிகையில் படித்தவை, மூடநம்பிக்கையினால் உணவுப் பொருள்களை வீணடிக்கின்றனர்.

முதலாவது, எலுமிச்சம் பழம். அது படும்பாடு மிகவும் சுவாரசியமானது. அதை இரண்டாக வெட்டி குங்குமத்தை தடவி வாசற்படி இரு மருங்கிலும் வைத்தல், மனிதனை முன்நிறுத்தி எலுமிச்சையை காலால் நசுக்கி அதை நாலாப் பக்கமும் பிய்த்து எறிதல், மாலையாக கட்டி காயும் வரை நிலையில் கட்டி தொங்க விடுதல், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தின் சக்கரங்களில் வைத்து நசுக்குதல், வாகனத்தின் முகப்பில் மாலையாக தொங்க விட்டு திருஷ்டி கழித்தல், தற்சமயம் கடைகளில் கண்ணாடி குவளை நீரில் மிதக்க விடுதல்.

இரண்டாவது, தேங்காய். இதை சூரைத் தேங்காய் என்று வீதியில் போட்டு உடைத்தல். இது சிதறி மண்ணோடு கலந்து யாருக்கும் பயன்படாமல் செய்வது. மேலும் வாகனங்களின் டயர்களை குத்தி சேதப்படுத்துகிறது. மலையாளிகள் தென்னம்பாளையை வெட்டி குவளை (உலோகப் பானையில்) வைத்து அனைத்து விழாக்களிலும் வைக்கின்றனர். அது தேங்காயை கருவிலேயே அழிப்பதாகும்.

மூன்றாவது, பூசணிக்காய் காய்கறிகளிலேயே மிகவும் சத்துள்ளது. மிகவும் குளிர்ச்சியானது. அதை நடு வீதியில் போட்டு உடைத்தல் அல்லது அதில் விகாரமான உருவத்தை வரைந்து நிலையில் கட்டி தொங்க விட்டு அழுகச் செய்வது. நடுவீதியில் போட்டு உடைப்பதால் அதன் மீது ஏறும் வாகனங்கள் சறுக்கி நிறைய விபத்துகள் உண்டாகின்றது. மேலம் பூசணிப் பூக்களை பறித்து சாணியில் சொருகி வைத்து கருவிலேயே அதை அழித்து அழகு பார்க்கின்றனர்.

தினமும் சூடம் (கற்பூரம்) கொளுத்தும் பக்தர்கள் அது வலிநிவாரணி மற்றும் தேமலுக்கு தயாரிக்கும் மருந்து என்று தெரியாமல் வீணடிக்கின்றனர். அதை வெளிநாட்டினர் மருந்தாக்கி இந்தியரிடமே ஒரு குப்பி 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்கின்றனர்.

ஆடி மாதமானால் வேப்ப மரங்களை மொட்டையாக்கி விடுகின்றனர் அம்மன் பக்தர்கள். வேப்பிலை ஆடை அணிந்து கற்கால மனிதனாகின்றனர். அந்த வேப்பக் கொட்டையை எடுத்து வெளிநாட்டினர் பல நோய் எதிர்ப்பு மருந்துகளை தயாரிக்கின்றனர்.

அபிஷேகம் என்ற பெயரில் கற்சிலைகளுக்கு பால், தேன், நெய், தயிர், இளநீர் ஆகியவற்றை ஊற்றி வீணடிக்கின்றனர்.

யாகம் என்ற பெயரில் நெய், பொரி போன்ற உணவுப் பொருள்களையும் விலையுயர்ந்த பட்டுத் துணிகளையும் தீயில் போட்டு பொசுக்குகின்றனர்.

கடவுளை வழிபடும் பக்தர்கள் சிந்தித்தால் இதைத் தவிர்க்கலாம். மற்றவர்களுக்கு இக்கருத்தைத் தெளிவுபடுத்தினால் இந்தியாவின் பொருளாதாரத் தையும், நிதியையும் பெருக்கலாம். விலைவாசியைக் கட்டுப்படுத்தி அரசாங்கத்தைக் குறை கூறுவதைத் தவிர்க்கலாம். இப்படி பக்தியின் பெயரால் உணவுப் பொருள்களை வீணடிக்காமல் இருந்தால் நாமும் நம் நாட்டை வல்லரசாக்கலாம் என்று நம்புவோமாக.

தகவல்: சேக்கிழான், சென்னை _ 81.

தமிழ் ஓவியா said...

ஹிக்ஸ் போசான் கண்டறிந்தது எப்படி?


இன்று உலகையே வியப்பில் ஆழ்த்தியிருக்கும், ஹிக்ஸ் போசான் -_ கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கூடத்திற்கு, அவர்களின் அனுமதி பெற்று நேரில் சென்று பார்த்து வந்தவர், சென்னை வேளச்சேரியில் வசிக்கும் முருகானந்தம். இவரை உண்மை இதழுக்காக அணுகினோம்.

இவர் அழகப்பா கல்லூரி, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பயின்றவர். அறிவியல் ஆராய்ச்சியில் மிகுந்த ஈடுபாடு உடையவர். ஈர்ப்பு விசையின் உண்மைகளை கண்டுபிடிப்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருபவர். அய்ன்ஸ்டீன் அறிவியல் இயக்கம் (Einstein Science Movement) என்ற இயக்கத்தை நிறுவி அறிவியலை மக்களிடம் பிரச்சாரம் செய்து வருபவர்.கேள்வி: ஹிக்ஸ் போசான் - ஏன்? எதற்கு? எப்படி?

பதில்: Science is nothing. But, Searching the Truth. கேள்வி முற்றுப் பெறும் வரையிலும் உண்மையைத் தேடிச் செல்வதுதான் அறிவியல். அறிவியல் இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு புதிரையும் அவிழ்த்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில்தான், கேள்வி மேல் கேள்வி கேட்டு செயல்முறையில் அந்த கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்து வருகிறது. முதலில் இந்த பிரபஞ்சம் என்றால் என்ன? கேலக்சி. கேலக்சி என்றால் என்ன? Solar System போல் கோடிக்கணக்கான Solar System சேர்ந்ததுதான் கேலக்சி. Solar System என்றால் என்ன? இந்த சூரியன், கிரகங்கள். சரி, இவை அனைத்தும் எவற்றால் ஆனவை. இவை அனைத்தும் அணுக்களால் ஆக்கப்பட்டவை. சரி, அணு என்றால் என்ன? இப்படியே போய் போய்த்தான் பிரபஞ்சத்தின் தொடக்கத் துகள் ஹிக்ஸ் போசான் வந்தது.

மத நம்பிக்கையாளர்கள், இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்றும், பகுத்தறிவாளர்கள் இல்லையில்லை இது தானாகவே தோன்றியது என்றும் காலங்காலமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அறிவியலுக்கு எதற்குமே ஆதாரம் தேவைப்படும். அந்த ஆதாரம்தான் இந்த ஹிக்ஸ் போசான்.

சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனிவாவில் இந்த ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. அதில், பிரான்சில் 75%, சுவிட்சர்லாந்தில் 25% நிலமும் சேர்ந்தாற்போல பூமிக்கு கீழே 27 கிலோ மீட்டர் சுற்றளவில் ஒரு பக்கம் 500 அடிக்கு கீழேயும், மற்றொருபுறம் 300 அடிக்கு கீழே சாய்வாக ஒரு சுரங்கம் அமைத்திருக்கிறார்கள். அதில் இதற்காகவே புதிதாக வடிவமைக்கப்பட்ட மூன்றடி உயர உருளைக் குழாய் இருக்கிறது. அந்தக் குழாயைச் சுற்றி மயிரளவில் ஏழில் ஒரு பங்கு அளவில் காப்பர் கம்பிகள் Automation மூலம் சுற்றப்பட்டிருக்கிறது. அதைச் சுற்றி காந்தம் இருக்கிறது. அந்த காந்தத்தைச் சுற்றி திரவ நிலையில் ஹீலியம் இருக்கிறது. தீ பற்றக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. அதையும் - 2700 cg உறைய வைத்திருக்கிறார்கள். (அண்டார்டிக்காவில் -600 cg தான். நிலவிலும் கூட - 2000 cg தான். பிரபஞ்சத்திலேயே அதிகபட்சம் -2500 cgதான்) அப்படி அமைக்கப்பட்ட குழாயினுள்Super Conductivity-யை ஏற்படுத்தி அணுவை நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான் எனத் தனித்தனியாக பிரித்து அதையே சூரியனின் மையத்தில் இருக்கும் வெப்பத்தைப் போல இலட்சம் மடங்கு அதிக வெப்பத்தில் மோதவிடுகிறார்கள். (இரண்டு ஊசி முனைகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டுப் பாருங்கள். முடியாது. ஆனால், ஊசி முனையைப் போல கோடிக்கணக்கான மடங்கு சிறியது அணு.) அப்படி நடந்த மா...பெரும் மோதலில்தான் இதுவரை இல்லாத ஒரு புதுப்பொருள் ஹிக்ஸ் போசான் இருப்பதாக 99% உறுதியாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

கேள்வி: இது எப்படி சாத்தியமாயிற்று?

பதில்: வெவ்வேறு காலகட்டங்களில் அறிவியலாளர்கள் பலர் பல வியப்பான உண்மைகளை கண்டறிந்து கூறியிருந்தாலும் அய்ன்ஸ்டீனுக்குப் பிறகு ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. 1900ஆம் ஆண்டுவரை நியூட்டன் சொன்னதுதான் சரி என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்தார்கள். நியூட்டன்,Light Travels in Straight path என்றார். ஆனால், அய்ன்ஸ்டீன் Light 1.170 /sec வளைகிறது என்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அய்ன்ஸ்டின் சொன்னதுதான் சரி என்று நிரூபிக்கப்பட்டது. நியூட்டன்,“Mass Contract Weight Various” என்றார். ஆனால், “Mass is also Various” என்றார். நியூட்டன், “Accellaration due to Gravity”என்றார். ஆனால், அய்ன்ஸ்டீன் தலைகீழாக, “Gravity due to Accellaration” என்றார். அய்ன்ஸ்டீனின் கணக்கு கச்சிதமாக இருந்தது. அய்ன்ஸ்டீனின் E = MC2 என்பது 38 ஆண்டுகள் கழித்துத்தான் நிரூபணம் ஆனது. நிறையும், சக்தியும் ஒன்றுதான். வேறு வேறு அல்ல. விரிந்தால் சக்தியா கிறது. சுருங்கினால் பொருளாகிறது. இதுபோல பல ஆய்வு களால்தான் இது சாத்தியமாயிற்று.

கேள்வி: ஜெனிவாவில் கடந்த முறை இதே ஆராய்ச்சி தோல்வியில் முடிந்ததே? அதற்கு என்ன காரணம்?

பதில்: அதைத் தோல்வி என்று சொல்ல முடியாது. தொழில் நுட்பக் கோளாறுதான் காரணம். முதன் முதலில், இவ்வளவு பெரிய Project செய்யும்போது இப்படிப்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகள் ஏற்படுவது என்பது இயல்பான ஒன்றுதான். பதினான்கு டெரா எலக்ட்ரான் Volt டை முதன்முதலில் தொடங்-கும்போதே பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த அனுபவத்தின் வாயிலாக, அடுத்த முறை ஒரு டெரா எலக்ட்ரான் வோல்ட்டிலிருந்து தொடங்கி இதை செய்து முடித்திருக்கிறார்கள். அதனால்தான், தவறு எங்கெங்கு நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து அதை சரி செய்ய முடிந்திருக்கிறது. ரால்ஃப் ஹியூபர் என்பவர்தான் இந்த ஆராய்ச்சி மய்யத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். இவர் ஜெர்மானியர்.

கேள்வி: ஹிக்ஸின் தியரி என்ன?

தமிழ் ஓவியா said...

பதில்: 1964லில் ஹிக்ஸ் என்பவர், இந்த பிரபஞ்சம் விரிவடைகிறது. அது சுருங்கி இருந்தது. ஒரு பெருவெடிப்பின் மூலம் அது விரிந்து கொண்டிருக்கிறது. நீயூட்டனின் முதல் விதிப்படி, போய்க் கொண்டிருக்கிற பொருள். போய்க் கொண்டேதான் இருக்கும். Unless it is affected by external force. ஒரு சக்தி தடுக்கிற வரையிலும். இதை அவர் Hubble கண்டுபிடித்த தொலைநோக்கி மூலம் பார்த்து கண்டுபிடித்தார். இதுதான், இந்த ஆராய்ச்சிக்கு அடிப்படை.

கேள்வி: கண்ணுக்கே தெரியாத அணுக்களை எப்படி பிரிக்கிறார்கள்? அதை எப்படி மோத விடுகிறார்கள்?

பதில்: கண்ணுக்கே தெரியாது என்று சொல்வதை விட, கண்ணுக்கு தெரிந்த தூசியை 100 கோடி மடங்காக பிரித்தால் எப்படி இருக்கும். கற்பனைக்கு எட்டாத விசயம். அவ்வளவு சிறிய துகள்களை பிரிப்பதும், மிகவும் கடினமான விசயம் என்றுதான் நமக்குத் தோன்றுகிறது. ஆனால், விஞ்ஞானிகள் மிக மிகச் சுலபமாக பிரித்து விடுகிறார்கள். அதாவது, Electron Negative Charge, Proton - Positive charge ஒரு பக்கம் Positive முனை. மறுபக்கம் Negative முனை. அதனுள் ஹைட்ரஜனை உள்ளே செலுத்துகிறார்கள். Electron - Negative என்பதால் Positive நோக்கி ஓடுகிறது. Proton Positive என்பதால் Negativeவை நோக்கி ஓடுகிறது. புரோட்டானையும், எலக்ட்ரானையும் எதிர்எதிர் திசையில் ஓடச் செய்வதற்கு Radio Cavity என்ற ஒரு கருவியை வைத்திருக்கிறார்கள். இப்படித்தான் அணுக்கள் எதிரெதிர் திசையில் ஓடி (Clockwis + Anti Clockwise) மோதி வெடிக்கிறது. இரண்டும் மோதுகின்ற நேரம் என்பது நூறு கோடியில் ஒரு பங்கு. இதை அறிய Photo device. Data device என்ற கருவிகளை பொருத்தியிருக்கிறார்கள். அந்த 100 கோடி மடங்குகளில் ஒரு பகுதியில் என்ன நடக்கிறது என்பதை இந்தக் கருவிகள் துல்லியமாக காட்டி விடுகிறது. எதிரெதிர் திசையில் ஓடிவரும் அணுக்களின் வேகம் என்பது கற்பனைக்கும் எட்டாத வேகம்.

தமிழ் ஓவியா said...

கேள்வி: அணு வெடிப்புக்கு தேவைப்படும் வெப்பம் எவ்வளவு?

பதில்: சூரியனில் இருக்கும் வெப்பம் ஒரு கோடியே நாற்பது இலட்சம் சென்டிகிரேடு. அந்த வெப்பத்தில் கூட இந்த நிறை என்பது கிடைக்கவில்லை. ஒரு ஹைட்ரஜன் அணுவும், நைட்ரஜன் அணுவும் மோதி நிறை அதிகமான ஹீலியம் அணுவாக வருகிறது. இதைப்போல இலட்சம் மடங்கு கூடுதலாக வெப்பம் தேவைப்படுகிறது. இது கற்பனைக்கும் எட்டாத ஒன்று. சூரியனுக்குள் நாம் வாழும் பூமியைத் தூக்கிப் போட்டால் ஒரு நொடியில் சாம்பாலாகிப் போய்விடும். அவ்வளவு வெப்பம் சூரியனுக்குள் ளேயே இருக்கிறது. அந்த வெப்பத்தைக் காட்டிலும் இலட்சம் மடங்கு வெப்பம் இருந்தால்தான் அணு வெடிப்பு நிகழ்கிறது. இந்த வெப்பத்தை எப்படி அடக்கி வைத்திருக்கிறார்கள் என்றால் மேக்னடிக் பிளக்ஸ்க்_குள்ளே வைத்திருக்கிறார்கள். மேக்னடிக் பிளக்ஸ் பொருள்களை பாதிக்காது.

கேள்வி: சரி, பிரபஞ்சத்தில் கடைசித் துகளை ஏறக்குறைய கண்டுபிடித்தாயிற்று. அதற்கும் அடுத்து என்ன? என்ற கேள்விக்கு பதில் இருக்கிறதா?

தமிழ் ஓவியா said...

பதில்: Graviton-தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. Graviton என்பது Big Bangக்கு முன்னாலேயே இருக்கிறது. Gravitation என்பது Zero. Zero என்பது Arithmatic-க்கில்தான் ‘Nothing’ - என்று சொல்கிறோம். விஞ்ஞானத்தில், அதாவது இயற்கை Law-வின்படி Zero- nothing கிடையாது. Something meaningful. Zero-வுக்கு ஒரு பொருள் இருக்கிறது.

அதாவது, 1 _ என்பது 1/2 + 1/2 _தான். அல்லது 2-1தான். Zero எப்படி வருகிறது? _, + = 0. So, 0 - can be divided into two parts. ஆக, Negative, Positive இரண்டும் சேரும் போதுதான் 0 வருகிறது. ஆகவே, Graviton என்பது ஒன்னுமேயில்லாத போசான். ஆனால், Big Bang-க்கு முன்னாலேயே அந்த Field இருக்கிறது.Absolute 0- வில் அணுக்கள் எல்லாம் நின்றுபோகும். ஆனால், இந்த Graviton Contracting Motion இருந்துகிட்டுதான் இருக்கும். அது ஒன்று சேரும்போது முதல் சிறிய Big Bang உருவாகிறது. இந்த Big Bang பல கோடி ஆண்டுகளுக்கு முன்பாக உருவானது. பல கோடி ஆண்டுகளுக்கு பின்னாலும் நடக்கும். தோன்றுதல், வாழ்தல், மறைதல் என்பது பிரபஞ்சத்துக்கு இருக்கிறது. இதுவும் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டதுதான்.

- சந்திப்பு : உடுமலை வடிவேல்

சிவக்குமார் said...

//உலகில் வேறு எந்த நாடுகளாவது தங்கள் நாட்டு மக்களைக் கொல்லுவதற்கு எதிரி நாட்டுக்கு இராணுவ உதவிகளை வாரி வழங்குமா? ஈழத் தமிழர்கள் பிரச்சினையில், தமிழ்நாட்டு மக்கள்தம் குரலின் நிர்ப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டு இந்தியா எப்பொழுதாவது குரல் கொடுக்கும் பொழுது துக்ளக் கூறும் அந்த நட்பு நாடு அதனை மதித்ததுண்டா?// இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது ஈழத்தமிழர்கள் என்பவர்கள் இந்தியா என்ற நாட்டிலிருந்து குடியேறியவர்கள் எனபது. இத்துடன் மூன்றுமுறை சுட்டிக் காட்டி விட்டேன். இன்னும் தொடர்ந்து ஈழத்தமிழர்களை இந்தியர்கள் என்றே எழுதி வருவது கண்டனத்திற்குரியது. இந்தியாவிலிருந்து குடியேறியவர்களுக்கு எதற்குத் தனிநாடு என்று மற்றவர் கேட்டால் தாங்கள் பதில் ?

தமிழ் ஓவியா said...

இங்கர்சால்

இங்கர்சால் மத உலகை ஆட்டிப் படைத்த பெயர். கிறித்துவ உலகம் இவர் பெயரைக் கேட்டால் நடு நடுங்கும். இவ்வள வுக்கும் இவர் தந்தையார் ஒரு பாதிரியார்தான். தன் மகனையும் பாதிரியாராக ஆக்கத்தான் விரும்பினார் - அதுதான் ஆபத்தாக முடிந்தது.

பாதிரியார் என்றால் தந்தையார் பாதிரி - மகனும் பாதிரி என்ற பாரம்பரியப் பயணத்தில் கண்மூடித்தனமாகப் பாதிரியாக விரும்பவில்லை! பைபிளை அக்குவேர் ஆணிவேராகப் படித்தார். சுவிசேஷங்களைச் சுத்தமாகக் கற்றறித்தார்.

வெறும் நம்பிக்கை என்னும் முரட்டுக் குதிரை சவாரியில் அவர் பயணிக்க வில்லை; படித்தவற்றை தமது நியாயமான பகுத் தறிவுத் தராசில் எடை போட்டுப் பார்த்தபோது, அவை தாக்குப் பிடித்து நிற்க முடியவில்லை!

பைபிள்பற்றி விமர்சித் தார். சுவிசேசங்களைப் பற்றி வினாக்களை எழுப் பினார்.

பாதிரியார் ஒருவர் இங்கர்சாலுடன் ஞானஸ் நானம் பற்றி விவாதித்தார். இங்கர்சாலோ எனது ஞானஸ்நானம் சுத்த மாகக் குளிப்பதுதான்! அது உங்கள் ஞானஸ் நானத்தைவிடச் சிறந் தது என்று பட்டு தெறித் ததுபோல் பக்குவமாகப் பதில் புகன்றார். மிகப் பிரபலமான வழக்குரைஞராக பரிணமித்தார். அட்டர்னி ஜெனரல் என்கிற அள வுக்கு உயர்ந்தார். ஆளுநர் (கவர்னர்) பதவி அவரைத் தேடி வந்து கதவைத் தட்டியது. ஏற்கவில்லை; மக்கள் தொண்டை நோக் கியே அவர் மனம் சென் றது.

சம்பாதித்தவற்றை ஏழை - எளிய மக்களுக்குச் செலவிட்டார்.

அவர் மேடைப் பேச்சு அமெரிக்க மக்களைச் சுண்டி இழுத்தது.

ஏழையாக இருப்பவன் இன்பம் அடைவான் உன்னிடம் உள்ளதைப் பிறர் எடுத்துக் கொள்ள இன்ப மாக அனுமதி கொடு! ஆனால் பிறரிடமிருந்து எதையும் பெற்றுக் கொள் ளாதே! உணவில்லை யென்று வருந்தாதே! ஏனெ னில் மேல் உலகில் உனக்கு உணவு கிடைக் கும்! எனும் பாதிரிகளின் வார்த்தைகளில் ஏமாறாதீர் மயங்காதீர் என்று எடுப் பான குரலில் எழுச்சிமிகு சொற்பொழிவுகளை நாடெங்கும் நிகழ்த்திய நாத்திகப் பேரறிஞர் இங் கர்சால்! அவர் உரையைப் பணம் கொடுத்துக் கேட்க மக்கள் மொய்த்தனர்.

60 ஆண்டுகளே வாழ்ந் தார் எனினும் அவரின் அறிவு அலைகள் கால வெள்ளத்தைத் தாண்டி எதிரொலித்துக் கொண் டுள்ளன.

(11.8.1833 - 21.7.1893).

மனிதனுடைய சிறந்த ஒரு தொழில் ஒரு நாணயமான கடவுளைப் படைப்பது தான்!

- இங்கர்சால்

சிந்திப்பீர்!

- மயிலாடன் 21-7-2012

தமிழ் ஓவியா said...

இங்கர்சால்

இங்கர்சால் மத உலகை ஆட்டிப் படைத்த பெயர். கிறித்துவ உலகம் இவர் பெயரைக் கேட்டால் நடு நடுங்கும். இவ்வள வுக்கும் இவர் தந்தையார் ஒரு பாதிரியார்தான். தன் மகனையும் பாதிரியாராக ஆக்கத்தான் விரும்பினார் - அதுதான் ஆபத்தாக முடிந்தது.

பாதிரியார் என்றால் தந்தையார் பாதிரி - மகனும் பாதிரி என்ற பாரம்பரியப் பயணத்தில் கண்மூடித்தனமாகப் பாதிரியாக விரும்பவில்லை! பைபிளை அக்குவேர் ஆணிவேராகப் படித்தார். சுவிசேஷங்களைச் சுத்தமாகக் கற்றறித்தார்.

வெறும் நம்பிக்கை என்னும் முரட்டுக் குதிரை சவாரியில் அவர் பயணிக்க வில்லை; படித்தவற்றை தமது நியாயமான பகுத் தறிவுத் தராசில் எடை போட்டுப் பார்த்தபோது, அவை தாக்குப் பிடித்து நிற்க முடியவில்லை!

பைபிள்பற்றி விமர்சித் தார். சுவிசேசங்களைப் பற்றி வினாக்களை எழுப் பினார்.

பாதிரியார் ஒருவர் இங்கர்சாலுடன் ஞானஸ் நானம் பற்றி விவாதித்தார். இங்கர்சாலோ எனது ஞானஸ்நானம் சுத்த மாகக் குளிப்பதுதான்! அது உங்கள் ஞானஸ் நானத்தைவிடச் சிறந் தது என்று பட்டு தெறித் ததுபோல் பக்குவமாகப் பதில் புகன்றார். மிகப் பிரபலமான வழக்குரைஞராக பரிணமித்தார். அட்டர்னி ஜெனரல் என்கிற அள வுக்கு உயர்ந்தார். ஆளுநர் (கவர்னர்) பதவி அவரைத் தேடி வந்து கதவைத் தட்டியது. ஏற்கவில்லை; மக்கள் தொண்டை நோக் கியே அவர் மனம் சென் றது.

சம்பாதித்தவற்றை ஏழை - எளிய மக்களுக்குச் செலவிட்டார்.

அவர் மேடைப் பேச்சு அமெரிக்க மக்களைச் சுண்டி இழுத்தது.

ஏழையாக இருப்பவன் இன்பம் அடைவான் உன்னிடம் உள்ளதைப் பிறர் எடுத்துக் கொள்ள இன்ப மாக அனுமதி கொடு! ஆனால் பிறரிடமிருந்து எதையும் பெற்றுக் கொள் ளாதே! உணவில்லை யென்று வருந்தாதே! ஏனெ னில் மேல் உலகில் உனக்கு உணவு கிடைக் கும்! எனும் பாதிரிகளின் வார்த்தைகளில் ஏமாறாதீர் மயங்காதீர் என்று எடுப் பான குரலில் எழுச்சிமிகு சொற்பொழிவுகளை நாடெங்கும் நிகழ்த்திய நாத்திகப் பேரறிஞர் இங் கர்சால்! அவர் உரையைப் பணம் கொடுத்துக் கேட்க மக்கள் மொய்த்தனர்.

60 ஆண்டுகளே வாழ்ந் தார் எனினும் அவரின் அறிவு அலைகள் கால வெள்ளத்தைத் தாண்டி எதிரொலித்துக் கொண் டுள்ளன.

(11.8.1833 - 21.7.1893).

மனிதனுடைய சிறந்த ஒரு தொழில் ஒரு நாணயமான கடவுளைப் படைப்பது தான்!

- இங்கர்சால்

சிந்திப்பீர்!

- மயிலாடன் 21-7-2012

தமிழ் ஓவியா said...

இந்தி மொழி பிரச்சினை: நேருவின் வாக்குறுதி நீர்மேல் குமிழியா? கலைஞர் கேள்வி


சென்னை, ஜூலை 21- இந்தி மொழி பிரச்சினை தொடர்பாக நேருவின் வாக்குறுதி என்னா யிற்று என்ற வினாவைத் தொடுத்துள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர். முர சொலியில் இன்று எழுதி யுள்ள பகுதி யாவது:

கேள்வி: தமிழகத் திலே உள்ள எல்.அய்.சி. ஊழியர்கள் எல்லாம் வாரத்தில் ஒரு நாள் இந்தியில் கையெழுத்து கட்டாயமாக போட வேண்டுமென்று மத்திய அரசு ஆணை பிறப் பித்திருக்கிறதாமே?

கலைஞர்: 29.6.2012 அன்று நடைபெற்ற அலுவலக மொழி நடை முறைப்படுத்துதல் கூட்டத்தில் எடுத்த முடி வின்படி, ஆயுள் காப் பீட்டுக் கழக, தென் மண்டல மேலாளர் (மனிதவள மேம்பாடு) ஒரு சுற்றறிக்கை அனுப் பியிருக்கிறார் என்றும், அதில் அனைத்து அலு வலர்களும், ஊழியர் களும் வாரத்தில் ஒரு நாள், குறிப்பாக திங்கள் கிழமைகளில் இந்தியில் கையெழுத்திட வேண் டும், கடிதங்கள் மற்றும் தகவல்களில் இந்தியில் கையெழுத்திட்டு, இந்தி மொழி தொடர்பு அதி கரிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சுற்ற றிக்கைகளினால்தான் முன்பு இந்தி எதிர்ப்புப் போராட்டமே தொடங் கியது.

பண்டித நேரு இந்தி பேசாத மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டு மீண்டும் தேவையில்லாமல் இந்தி யைத் திணிக்க எத்தனிப் பது கடும் கண்டனத் திற்குரியது. மத்திய அரசு இதுபற்றி கவனித்து தக்க நடவடிக்கை எடுக்குமா என்பதே இப்போது நம்முன் உள்ள கேள்வி!

நேருவின் வாக்குறுதியே நீர்மேல் குமிழியாவதா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது! 21-7-2012

தமிழ் ஓவியா said...

இந்தி மொழி பிரச்சினை: நேருவின் வாக்குறுதி நீர்மேல் குமிழியா? கலைஞர் கேள்வி


சென்னை, ஜூலை 21- இந்தி மொழி பிரச்சினை தொடர்பாக நேருவின் வாக்குறுதி என்னா யிற்று என்ற வினாவைத் தொடுத்துள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர். முர சொலியில் இன்று எழுதி யுள்ள பகுதி யாவது:

கேள்வி: தமிழகத் திலே உள்ள எல்.அய்.சி. ஊழியர்கள் எல்லாம் வாரத்தில் ஒரு நாள் இந்தியில் கையெழுத்து கட்டாயமாக போட வேண்டுமென்று மத்திய அரசு ஆணை பிறப் பித்திருக்கிறதாமே?

கலைஞர்: 29.6.2012 அன்று நடைபெற்ற அலுவலக மொழி நடை முறைப்படுத்துதல் கூட்டத்தில் எடுத்த முடி வின்படி, ஆயுள் காப் பீட்டுக் கழக, தென் மண்டல மேலாளர் (மனிதவள மேம்பாடு) ஒரு சுற்றறிக்கை அனுப் பியிருக்கிறார் என்றும், அதில் அனைத்து அலு வலர்களும், ஊழியர் களும் வாரத்தில் ஒரு நாள், குறிப்பாக திங்கள் கிழமைகளில் இந்தியில் கையெழுத்திட வேண் டும், கடிதங்கள் மற்றும் தகவல்களில் இந்தியில் கையெழுத்திட்டு, இந்தி மொழி தொடர்பு அதி கரிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சுற்ற றிக்கைகளினால்தான் முன்பு இந்தி எதிர்ப்புப் போராட்டமே தொடங் கியது.

பண்டித நேரு இந்தி பேசாத மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டு மீண்டும் தேவையில்லாமல் இந்தி யைத் திணிக்க எத்தனிப் பது கடும் கண்டனத் திற்குரியது. மத்திய அரசு இதுபற்றி கவனித்து தக்க நடவடிக்கை எடுக்குமா என்பதே இப்போது நம்முன் உள்ள கேள்வி!

நேருவின் வாக்குறுதியே நீர்மேல் குமிழியாவதா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது! 21-7-2012

தமிழ் ஓவியா said...

மழை வேண்டி பூஜை கருநாடக மாநிலத்தில்

கருநாடக மாநிலத்தில் பி.எஸ். எடியூரப்பா, சதானந்தகவுடா, இவர் களைத் தொடர்ந்து ஜெகதீஸ் ஷெட்டர் முதல் அமைச்சராக ஆகி இருக்கிறார்.

கருநாடக மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறதாம். மழை தேவைப் படுகிறதாம். வருண பகவானுக்குப் பூஜை நடத்திட ரூ.17 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளதாம்.

எடியூரப்பா முதல் அமைச்சராக வந்தவுடன் இப்படித்தான் ஒரு வேலையைச் செய்தார். இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள அனைத்துக் கோயில்களிலும் தனது பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்பதுதான் முதல் சுற்றறிக்கை; இதனை எதிர்த்து பகுத்தறிவாளர்கள் குரல் எழுப்பிய நிலையில் திட்டம் கைவிடப் பட்டது. இருப்பினும் தனிப்பட்ட வகையில் கோயில் கோயிலாகச் சுற்றித் திரிந்தவர்தான் அவர். ஒரு கல்லில் கூட மோதிக் கொண்டார் என்றாலும் விளக்கெண்ணெய்க்குக் கேடாக ஆனதே தவிர பிள்ளை பிழைத்தபாடில்லை.

பிரதமராக இருந்த தேவேகவுடா சுற்றாத கோயிலா? நாமக்கல் சோதி டரை மாதம் தவறாமல் சந்திப்பாரே! - பிள்ளை பிழைத்ததா? இந்த 21ஆம் நூற்றாண்டில் மழை பொழிவதற்குப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நம்புவதும், அதற்காக மக்கள் வரிப் பணத்தை ரூ.17 கோடியை நாசமாக்குவதும் கிரிமினல் குற்றமல்லவா!

எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது புழல் ஏரியில் பிரபல பிடில்வித்வான் குன்னக்குடி வைத்தியநாதன் அய் யரை விட்டு அமிர்தவர்ஷினி ராகம் வாசிக்கச் செய்யப்பட்டதே! ஒரே ஒரு சொட்டு மழை பெய்ததுண்டா?

மழை பொழிவது எப்படி என்று எல்.கே.ஜி. படிக்கும் மாணவனைக் கேட்டால் பளிச் சென்று பதில் சொல்வானே! மெத்தப் படித்த வர்கள் பக்தியால் புத்தியை இழந்து இப்படி மக்கள் வரிப் பணத்தை நாசமாக் குவது தடுக்கப்பட்டாக வேண் டாமா? எந்த இடத்துக்கு வந்தாலும் தந்தை பெரியார்தான் முதலில் நிற்கிறார். பக்தி வந்தால் புத்தி போகும் - புத்தி வந்தால் பக்தி போகும்.21-7-2012

தமிழ் ஓவியா said...

சுற்றுலாத் துறை சார்பில் அம்மன் கோயில் சுற்றுலாவாம்

தமிழ்நாடு அரசின் சுற்றுலா சார்பில் (ஆடி மாதத்தில்) 108 அம்மன் கோயில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். கடந்த ஆண்டு முதல் அமைச்சர் ஜெயலலிதா அம்மையாரின் சிறப்பு ஆணைப்படி இத்தகைய சுற்றுலா மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.

முதலில் ஒன்று தெளிவுபடுத்தப்பட வேண்டும். ஓர் அரசுத் துறை குறிப்பிட்ட மதத்தை முன்னிறுத்தி மதம் தொடர்பான சுற்றுலாவை மேற்கொள்வது சட்டப்படி சரியானதுதானா? மதச் சார்பின்மை என்பதுதானே ஓர் அரசின் சட்டப்படியான நிலை! அப்படியிருக்கும்பொழுது சட்ட விரோத மாக ஒரு முதலமைச்சரே இத்தகைய ஆணையைப் பிறப்பிக்கலாமா?

இரண்டாவதாக கொள்கை என்று பார்த் தாலும்கூட அண்ணா பெயரைத் தாங்கியுள்ள ஒரு கட்சி - அதன் ஆட்சி இத்தகு செயல் பாடுகளில் இறங்கலாமா? அறிஞர் அண்ணா அவர்களும் முதல் அமைச்சராக இருந்துள் ளார். இதுபோன்ற தவறான வழியைக் காட்டியுள்ளாரா?

மூன்றாவதாக, இந்திய அரச மைப்பு சட்டப்படி மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை உண் டாக்க வேண்டியது (51A(H) ஒவ் வொரு குடிமகனின் கடமை என்கிற போது அதற்கு மாறாக மூடநம் பிக்கைக்கு ஆக்கம் தேடிட அரசு முனையலாமா?

நான்காவதாக இந்த ஆடி சுற்றுலாவால் என்ன பயன்? அம்மன் கோயில்களைச் சுற்றி வருவதால் காவிரி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினைகள் தீர்ந்து விடுமா? தனிப்பட்டவர்களுக்குத் தான் என்ன பலன்?

வீண் செலவு, கால விரயம், புத்தி நாசம் என்பதல்லாமல் வேறு என்னவாம்? 21-7-2012

தமிழ் ஓவியா said...

எங்குமில்லை

இன உணர்ச்சியினால் பார்ப்பான் வெகு சிறு இனமாக இருந்தாலும் அவன் மேல் மகனாய் வாழ்ந்தான்; வாழ்கிறான்; வாழ்ந்து வருகின்றான்; இனத்தைக் காட்டிக்கொடுத்து வாழும் பார்ப்பான் உலகில் எங்குமே இல்லை.

(பெரியார் சிந்தனைகள்

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவுப் பண்பாளர் காகா இராதாகிருஷ்ணன்

- முனைவர் துரை. சந்திரசேகரன்எண்பது ஆண்டுகள் நாடகத் துறையிலும், திரைப் படத்துறையிலும் மக்களை மகிழ்விப்பதற்காக தமது ஆற்றலைப் பயன்படுத்திய பழம்பெரும் நடிகர் காகா இராதாகிருட்டிணன் தமது 86 ஆவது வயதில் 14-6-2012 அன்று சென்னையில் இயற்கை எய்தினார். விரல்விட்டு எண்ணக்கூடிய திரைத்துறையினரே அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். நியாயமாக ஏராளமான அளவில் திரைப்பட நடிகர்களும், அரசியல் கட்சியினரும் பங்கேற்றிருக்க வேண்டும்.

வீரவணக்கம் தெரிவித்த தமிழர் தலைவர்

நேரடியாக திராவிடர் கழக உறுப்பினரல்ல என்றாலும் தமிழின உணர்வு மேலோங்கியவராக, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு உணர் வுள்ளவராக, பகுத்தறிவுக் கருத் துக்கள் பரவிட வேண்டும் என்பதில் ஆர்வம் உள்ளவராக வாழும் வரை இருந்தார். தந்தை பெரியார், பேரறி ஞர் அண்ணா, தமிழர் தலைவர் மீது அளவற்ற அன்பும் மரியாதையும் கொண்டவர். சீரிய பகுத்தறிவுப் பண்பாளர் என்ற நிலையில் அவரை அறிந்த நடிகர் கமலகாசன், இறுதிக் காலத்தில் தமது படங்களில் காகா இராதாகிருட்டிணனுக்கு வாய்ப் பினைத் தந்தார். பகுத்தறிவுக் கருத் துகள் பரவிட பங்களிப்பைத் தந்தவர் - இனமான உணர்ச்சி உள்ளவர் என்ற நிலையில் அவரின் இறுதி நிகழ்வில் பங்கேற்று வீரவணக்கம் தெரிவித்து குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறினார் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் அவர்கள். உடன் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங் குன்றன் மற்றும் முன்னணி தோழர் கள் பங்கேற்றனர்.

கழக சார்பில் பாராட்டு

கழக சார்பில் பெரியார் திடலில் நடைபெற்ற விழாவில் நடிகர் காகா இராதாகிருட்டிணன் அழைக்கப் பட்டு பாராட்டி விருது வழங்கி சிறப் பிக்கப்பட்டார் தமிழர் தலைவரால் என்பது நினைவில் கொள்ள வேண்டியதாகும்.
கடலூர் மாவட்டத்தில்

கடலூர் மாவட்டத்தில் பல ஊர் களில் அவரை அழைத்து பொதுக் கூட்டங்கள், திருமணங்கள் நடத்திய அனுபவம் எனக்கு (துரை. சந்திர சேகரனுக்கு) உண்டு. நமது இயக்கக் கூட்டங்களில் பகுத்தறிவுக் கருத் துக்களை கேட்போர் வயிறு குலுங்கச் சிரித்திடும் வண்ணம் அவர் பேசிய காட்சி மறக்க முடியாதது. அய்யப்ப பக்தர்களை அவர் நையாண்டி செய் யும் விதம் அலாதியானது. வில்லன் நடிகர் நம்பியாருடன் சேர்ந்து அய்யப்பன் கோவிலுக்கு அவர் சென்றபோது, அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை விளக்கிப் பேசும்போது பக்தி மார்க்கத்தை சந்தி சிரிக்கச் செய்வார்

சிதம்பரம் பகுதியில் உள்ள தெரசூர் கிராமத்தைச் சேர்ந்த சின்ன பொன்னுசாமி நாடக ஆசிரியராக காகா இராதாகிருட்டிணனுக்கும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் இருந்த நினைவுகளை, சிவாஜி கணேசனுக்கு தக்க வழிகாட்டியாக இளம் வயதில் இருந்ததை அவர் எங் களிடம் நினைவு கூர்ந்ததுண்டு. சிவாஜி கணேசனும், காகாவும் நெருக் கமான நண்பர்கள்.

6 வயது முதல் 600 படங்கள்

நவாப் இராஜமாணிக்கம் நாடகக் குழுவில் 6 வயதில் சேர்ந்த காகா இராதாகிருட்டிணன், பின்னர் என்.எஸ்.கே. நாடகக் குழுவில் சேர்ந் தார். கலைவாணருக்கு நெருக்கமாக இருந்தவர். 1949 இல் மங்கையர்க்கரசி இவரின் முதல் படம். இறக்கும் வரை இவர் நடித்த படங்களின் எண் ணிக்கை 600.

காகா ஆன கதை

மங்கையர்க்கரசி திரைப்படத்தில் வேலை கிட்டா பிள்ளையாக இவர் நடித்தபோது, தமது தாயாராக நடித்தவர் இவரிடம் வேலையில் சேரவேண்டும் என்றால் காகா பிடிக்க வேண்டும் என்பார். இவரோ உண்மையிலேயே காகத்தைப் பிடித்துக் கொண்டு போய் வேலை கேட்பார். இந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் வயிறு குலுங்க சிரித்து ரசிப்பர் அந்தக் காலத்தில். அது முதல் காகா இராதாகிருட்டிணன் ஆனார். மனோகரா திரைப்படத்தில் வசந்தன் கதாபாத்திரம், தேவர் மகனில் சிவாஜிக்குத் தம்பியாக நடித்த காட்சி இவரின் நடிப்பாற்றலுக்கு அத்தாட்சி. நல்லதம்பி, வனசுந்தரி, சந்திரகிரி, மங்கையர்க்கரசி, உத்தம புத்திரன், மனோகரா, தாய் மகளுக்குக் கட்டிய தாலி, தாய்க்குப் பின் தாரம், வந்தாளே மகராசி ஆகிய படங்களும், 60 வயதுக்குப் பிறகு வசூல்ராஜா எம்பி.பி.எஸ்., உன்னைத் தேடி, குணா, காதலுக்கு மரியாதை, மாயி, தேவர் மகன் முதலிய படங்களும் இவர் நடித்த திரைப்படங்களில் முக்கிய மானவை.

விசாலாட்சி, சாரதாம்பாள் எனும் இரு மனைவியர். இரு மகள்கள் உட்பட 8 பிள்ளைகள், 16 பேரன் பேத்திகள் கொண்ட பெருங்குடும்பம் இவருடையது. சொந்த ஊர் திண்டுக்கல். இடையில் வாழ்ந்த ஊர் சங்கிலியாண்டபுரம். (திருச்சி). இறுதியில் சென்னையில் வாழ்ந்து மறைந்தார். இறுதிவரை திராவிடர் இயக்க சார்பாளராகவே வாழ்ந்தார். திரைத் துறையில் பகுத்தறிவுப் பண்பாளராக வாழ்ந்து மறைந்த காகா இராதாகிருட்டிணன் வாழ்க!

21-7-2012

மின் வாசகம் said...

நிறையத் தகவல்கள் அறிந்துக் கொண்டேன். நன்றிகள்.

தமிழ் ஓவியா said...

எது கபட நாடகம்?


“ஆட்சியும் அதிகாரமும், மத்திய அரசின் செல்வாக்கும் இருந்த காலத்தில் எல்லாம், ஈழத்தமிழர்களுக்காகத் தனது சுட்டு விரலைக் கூட அசைக்க அவர்(கலைஞர்) தயாராக இருந்ததில்லை என்பதுதான் வரலாற்று உண்மை” - பழ. நெடுமாறன், “கருணாநிதியின் கபட நாடகம்” கட்டுரை - தினமணி - 27.06.2012

“தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் விடுதலைப் புலிகளுக்குக் கருணாநிதி எல்லா வசதிகளும் செஞ்சு கொடுத்தா. விடுதலைப் புலிகள் இங்கே பெட்ரோல் பங்க் நடத்துனா. கோயம்புத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கிற தொழிற்சாலை வெச்சிருந்தா. எல்.டி.டி.ஈ.க்கு யூனிஃபார்ம் தைச்சுக் கொடுத்தா. இதைப்பத்தி எல்லாம் எனக்கு ரிப்போர்ட் வந்தது. நான்தான் சந்திரசேகர்கிட்ட எடுத்துச் சொல்லி, ‘கருணாநிதி தீவிரவாதிகளுக்கு சப்போர்ட்ட பண்றா, அவா அரசைக் கலைச்சிடுவோம்’னு சொன்னேன். - சுப்பிரமணியன் சுவாமி, ‘விகடன் மேடை’ - வாசகர் கேள்விகள் பகுதி, 04.07.2012

மேற்காணும் இரு கூற்றுகளும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறான வையாக உள்ளன. ஈழ மக்களுக்காகத் தன் சுட்டு விரலைக் கூடக் கலைஞர் அசைக்கவில்லை என்கிறார் ஒருவர். தன் ஆட்சி அதிகாரம் முழுவதையும் அவர்களுக்காக அவர் பயன்படுத்தினார் என்கிறார் மற்றொருவர்.

இவை இரண்டும் எதிரெதிர்க் கருத்துகளாக இருந்தாலும், கருத்துகளை வெளியிட்டுள்ள இருவருக்கும் நோக்கம் ஒன்றுதான். கலைஞரைத் தாக்கி அழிக்க வேண்டும் என்பது மட்டுமே இருவரின் விருப்பமும் ஆகும். எதிரெதிர்த் திசைகளில் நின்று கலைஞரைத் தாக்கும் இருமுனைத் தாக்குதல் இது.

ஒருவர் ஈழ விடுதலையை முழுமையாக ஆதரிப்பவர். மற்றவர் ஈழ விடுதலையை முழுமையாக எதிர்ப்பவர். ஆனால் அவர்கள் இருவரும் ஒருவரோ டொருவர், மோதிக்கொள்ள மாட்டார் கள். இருவரும் இணைந்து கலைஞருடன் மட்டுமே மோதுவார்கள். இது வெகுநாள்களாக நடந்துகொண்டி ருக்கும் குள்ளநரித் தந்திரம்.

ஈழமக்களுக்காகக் கலைஞர் தன் சுட்டுவிரலைக் கூட அசைத்ததில்லை என்பது உண்மையானால், ‘விடுதலைப் புலிகளுக்கு அனைத்து உதவிகளையும் அவர் செய்தார்’ என்னும் குற்றச்சாட்டின் அடிப்படையில், 1991இல் தி.மு.கழக ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது, அய்யா நெடுமாறன் குமுறி எழுந்திருக்க வேண்டாமா? ஆட்சியைக் கவிழ்த்த சந்திரசேகர் மீதும், சுப்பிரமணியன் சுவாமி மீதும் கண்டனக் கணைகளை வீசியிருக்க வேண்டாமா?

சுப்பிரமணியன் சுவாமியாவது, ‘விடுதலைப் புலிகளுக்குக் கலைஞர் செய்யும் உதவிகளை நெடுமாறன் மறைத்திருக்கின்றார். இது ஒரு பெரிய தேசத் துரோகம்’ என்று கூறி, கண்டதற் கெல்லாம் நீதிமன்றம் செல்லும் அவர் நெடுமாறன் மீதும் வழக்குத் தொடுத் திருக்க வேண்டாமா?

இரண்டு பேருக்கும் நோக்கம் ஒன்றாக இருக்கும்போது, அவர்களுக் குள் மோதல் எப்படி வரும்? ஒருவர் நடவடிக்கை மற்றவருக்கு உள்ளூர மகிழ்ச்சியைத்தானே தரும்.

சரி போகட்டும், இரண்டு பேரும் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்துப் பார்க்கலாம்.

தி.மு.க. ஆட்சியில், கோவையில் புலிகள் வெடி குண்டுத் தொழிற்சா லையை, ஆட்சியின் ஆதரவில் நடத்தி னார்கள் என்கிறார் சு. சாமி. அதற்கு இன்று வரையில் ஏதேனும் ஆதாரம் உண்டா? சந்திரசேகர் அமைச்சரவை யில் மத்திய அமைச்சராக இருந்த சு. சாமி, தன் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஏதேனும் விசாரணைக் கமி­ன் நியமித்தாரா? எந்த ஒரு குற்றச்சாட்டேனும் இன்றுவரை மெய்ப்பிக்கப்பட்டுள்ளதா?

சரி, நெடுமாறன் அவர்கள் அள்ளி வீசியுள்ள குற்றச்சாட்டுகளையும் பார்ப்போம்.

தமிழ் ஓவியா said...

1973ஆம் ஆண்டு தொடங்கி, ஈழப் போராட்டத்திற்கு எதிரான செயல்களில் கலைஞர் ஈடுபட்டார் என்று கூறுகின்றார்.
அதனை உண்மையயன்றே வைத்துக் கொண்டு, அய்யா நெடுமாறனிடம் ஒரு கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. அவ்வளவு மோசமான ஒருவரோடு, 1984இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நீங்கள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டீர்களே... அது என்ன நியாயம்? ஈழ விடுதலைக்கு எதிரான ஒருவரோடு, தேர்தலில் மட்டும் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா? ஈழத்திற்கு எதிரானவரோடு கைகோத்துக் கொள்ளத் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்கள் மனசாட்சி இடம் கொடுக்குமா?

பிறகு, கலைஞரின் கபட நாடகத்தை விளக்கி, 23.07.1997 அன்று, மேதகு பிரபாகரன் அவர்கள் அய்யா நெடுமாறனுக்கு ஒரு கடிதம் எழுதினாராம்.

சரி அதனையும் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அவ்வாறு புலிகளின் தலைவரே கடிதம் எழுதிய பிறகும், 2004ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், ஊர் ஊராகச் சென்று, தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்குக் கேட்டீர்களே...

அது எப்படி? தேசியத் தலைவரின் கடிதம் அப்போது உங்களுக்கு மறந்து போய்விட்டதா அல்லது அவருக்கு நீங்கள் உண்மையானவராக இல்லையா?

எது கபட நாடகம் என்பதை எதிர்காலம் சொல்லத்தான் போகிறது.

1987ஆம் ஆண்டு கையயழுத்திடப்பட்ட, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைக் கலைஞர் கண்டிக்கவே இல்லை என்று கூறும் நெடுமாறன், கட்டுரையின் தொடக்கத்தில், எம்.ஜி.ஆர். ஈழத்திற்குச் செய்த பல உதவிகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகளுக்கு எம்.ஜி.ஆர். செய்த உதவிகளை நாமும் மறுக்க வில்லை. ஆனால் எம்.ஜி.ஆர்., இந்திய - இலங்கை உடன்பாட்டை மறுத்தாரா, கண்டித்தாரா?

அப்போது அவருக்கு உடல்நலமில்லை என்று உடனே விடை சொல்வார்கள். உடல் நலமில்லையயன்றாலும், அவர் அப்போதும் அரசியலில்தானே இருந்தார்? தமிழகத்தின் முதல் அமைச்சராகத்தானே இருந்தார்?

அமெரிக்காவிற்குப் புறப்பட்டுக் கொண்டி ருந்த எம்.ஜி.ஆர்., ராஜீவ் காந்தி தொலைபேசியில் அழைத்ததை ஏற்றுத் தன் பயணத்தைக் கூடத் தள்ளிவைத்துவிட்டு, இந்திய - இலங்கை ஒப்பந்த ஆதரவுக் கூட்டத்தில், ராஜீவ்காந்தியுடன் சேர்ந்து கலந்து கொண்டார். அது மட்டுமின்றி, மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு அவர் எவ்வளவு ஆதரவாக இருந்தார் என்பதை, டில்லியிலிருந்து வெளியாகும் ‘ஆசியா டைம்ஸ்’ என்னும் நாளேடு பின்வருமாறு குறிக்கின்றது.

“கூடுதல் ஆதரவு தேவையில்லாத நிலையிலும், ஆளும் காங்கிரஸ் கட்சி வெகுவாகப் பாராட்டும் வண்ணம், அ.இ.அ.தி.மு.க., தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு ஆதரவு கொடுத்தது. இந்திய - இலங்கை ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும், எம்.ஜி.ஆர். உடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, அவருடைய ஒப்புதல் பெறப்பட்ட பின்பே, தில்லி முடிவெடுத்தது” (“The AIADMK consistently backed the Union Government in Parliament, which was greatly appreciated by the ruling Congress Party, eventhough it was not in need of extra support. MGR was consulted and his consent secured before each step taken by New Delhi, even including the Indo - Sri Lankan agreement”)

இதுதான் உண்மை நிலை. ஆனால் இது குறித்து நெடுமாறன் அவர்கள் ஏன் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை?

14.10.2008 அன்று, கலைஞர் முதல்வராக இருந்தபோது, ஈழச் சிக்கலுக்காகக் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்மொழியப் பட்டத் தீர்மானத்தின்படி, 40 தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவில்லை. இதற்கும் கலைஞரே பொறுப்பு என்கிறது தினமணிக் கட்டுரை.

அய்யா நெடுமாறன் அவர்களே, கலைஞர்தான், ஈழ மக்களுக்காகத் தன் சுட்டு விரலையும் அசைக்காதவர் ஆயிற்றே! அவரை விட்டுத் தள்ளுங்கள், தங்கள் உடல் முழுவதையும் அசைக்கக் கூடியவர்கள் கூடத் தங்கள் பதவிகளை விட்டு விலகவில்லையே, ஏன் என்று கேட்டீர்களா?

இந்தக் கேள்வியை ம.தி.மு.க., பா.ம.க., பொதுவுடைமைக் கட்சிகள் ஆகியனவற்றை நோக்கி ஏன் நீங்கள் கேட்கவில்லை. ஏதோ, எல்லாக் கட்சி உறுப்பினர்களும் பதவி விலகி விட்டதைப் போலவும், தி.மு.க.வினர் மட்டுமே பதவிகளில் ஒட்டிக் கொண்டி ருந்ததைப் போலவும் காட்சி அமைப் பதன் நோக்கம் என்ன?

உண்மையான தமிழீழ ஆதரவாளர்கள், மீண்டும் தொடங்கப் பெற்றிருக்கும் ‘டெசோ’ அமைப்பை ஆதரிக்க வேண்டாமா?

ஈழத்தைக் காட்டிலும், கலைஞரைப் பற்றித்தான் எங்கள் கவலை என்று சொல்பவர்களை நாம் என்ன செய்ய முடியும்?

அறிஞர் அண்ணாவையும், தி.மு.கழகத்தையும், கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கிவிட்டு, 1961இல் சம்பத் அவர்களோடு இணைந்து தி.மு.க.வைவிட்டு வெளியேறிய அய்யா நெடுமாறன் போன்றவர்கள் இன்னும் அந்தப் பகையை மறக்கவில்லை என்றே தோன்றுகிறது.

கலைஞரின் மீது - நெடுமாறன் அவர்களுக்குப் பழம் பகை!
சு. சாமிக்கோ பரம்பரைப் பகை!!
---------சுப.வீரபாண்டியன் -கருஞ்சட்டைத் தமிழர் ஜூலை16_2012