Search This Blog

18.7.12

தமிழன் உயிர் மலிவான ஒன்றா?


உலகில் மிகவும் மலிவான ஒன்று, தமிழனின் உயிர் தானோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. இலங்கையில் ஈழத் தமிழர்கள் குருவிகள் போல சுட்டுக் கொல்லப்பட்டது ஒருபுறம்; தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கையின் சிங்களக் கடற்படை சுட்டுக் கொல்வது என்பது, பொழுது போக்கு விளையாட்டாகவே இருந்து வருகிறது.

அதிக பட்சமாகப் போனால் இந்திய அரசு என்ன சொல்லும்? கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம்; வருத்தத்தைத் தெரிவிக்கிறோம் என்று சொல்லும் அவ்வளவுதான். இந்த மென்மையான மொழிகளுக்கெல்லாம் வெறி பிடித்த விலங்குகளாகத் திரியும் சிங்களக் கடற்படை ஓநாய்களுக்குப் பொருள் தெரியுமா?

கேட்டால் என்ன சொல்கிறார்கள்? இலங்கைக்குச் சொந்தமான கடற்பகுதியில் தமிழ் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லுவதால் இந்த நிலைமை என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். பட்டுப் புடவையை இரவல் கொடுத்துவிட்டு ஈச்சம்பாயைத் தூக்கிக் கொண்டு அலையும் அபலைபோல கச்சத் தீவைத் தூக்கிக் கொடுத்துவிட்டு அல்லல்படும் நிலை!

திருப்பி நாம் கேட்க முடியாதா? இலங்கை மீனவர்கள் இந்தியக் கடற்பகுதிக்கு வந்து மீன் பிடிக்கிறார்களே, அப்பொழுதெல்லாம் இந்தியக் கடற்படை இலங்கை மீனவர்களைச் சுடுவது உண்டா?

கொட்டினால் தானே தேள் - இல்லாவிட்டால் பிள்ளைப் பூச்சிதானே!

கேரளாவில் அம்மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவரை இத்தாலியைச் சேர்ந்த கப்பல் அதிகாரிகள் சுட்டுக் கொன்றபோது கேரள அரசு எப்படி நடந்துகொண்டது? இந்திய அரசும் எவ்வளவு அமர்க்களம் செய்தது? கோடிக்கணக்கில் ரூபாய்கள் நட்ட ஈடு கிடைக்குமாறு செய்யவில்லையா? தமிழக மீனவர் குடும்பத்துக்கு அந்த அளவு நட்ட ஈடு உண்டா? தமிழர்கள் என்று வந்துவிட்டால் மட்டும் என்ன அப்படி ஓர் அலட்சியம்?

இப்பொழுது ஒரு நிகழ்ச்சி! பக்ரைனில் உள்ள அமெரிக்காவின் கடற்படைக்குப் பொருள்களைக் கொண்டு சென்ற கப்பலின் பாதுகாப்புப் படையினர் துபாய் கடற்பரப்பில் சிறிய படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத் தியதால் இராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் சேகர் படு கொலை செய்யப்பட்டார். அவருடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த மூன்று தமிழக மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

என்ன காரணம் சொல்லப்படுகிறது? மீன் பிடிப் படகு தங்கள் கப்பலை நெருங்கி வந்ததாகவும், எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் நெருங்கி வந்ததன் காரணமாக சுட நேரிட்டது என்றும் கதை அளக்கிறார்கள் (Cock and Bull Story).

அப்படியே படகு நெருங்கி வந்து கப்பலைக் கவிழ்த்துவிடுமோ - புளுகினாலும் பொருத்தமாகப் புளுகுங்கடா அட போக்கத்தப் பசங்களா என்று உடுமலை நாராயணகவி பாடினாரே - அந்த வரிகள்தான் நினைவிற்கு வருகின்றன.

தீவிரவாதிகள் தாக்கி விடுவார்கள் என்ற பயத்தால் நடந்துவிட்டதாம் - சமாதானம் சொல்லப்படுகிறது. ஆகாயத்தை நோக்கிச் சுட்டுக் காட்டியிருக்கலாமே - செய்தார்களா?

பொதுவாக இந்திய அரசு சொந்த நாட்டு மக்களை குறிப்பாக தமிழர்களைப் பாதுகாப்பதில் போதிய அக்கறை காட்டுவதில்லை. அதனைப் பலகீனமாக மற்ற நாடுகள் கருதுகின்றன என்பதுதான் இதில் உள்ள சூட்சமம்!

ஆயுத பூஜை கொண்டாடும் நாட்டின் இந்துத்துவா மனப்பான்மை என்பது இதுதான் போலும்!

--------------------”விடுதலை” தலையங்கம் 18-7-2012


16 comments:

தமிழ் ஓவியா said...

காரணம்


வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலா ஷைகளையும் புரிந்து கொள்ள முடியாத வாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகை கள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம்.
---பெரியார் - (விடுதலை, 28.8.1963)

தமிழ் ஓவியா said...

வரதட்சணை...?


இச்சமுதாயம் வெகு ஆண்டு களாக பெண்களை பிள்ளைபெறும் இயந்திரமாகவும், அலங்கார பொம்மை களாகவும், போகப் பொருளாகவும் மட்டுமே கருதி வந்தது.

ஆனால், பெண்ணுரிமைக் காவலர் பெரியார் அவர்கள் சமுதாய நோக்கத் தோடும், தொலைநோக்குப் பார்வை யோடும் சிந்தித்ததின் விளைவாக பெண்களுக்குக் கல்வியும், வேலை வாய்ப்பும் கிடைக்கப் பெற்றால் அவர்கள் யாருடைய தயவும் இன்றி சொந்தக் காலில் நிற்க முடியும் என்று பெண்களின் நலனிற்காகவும், உரிமைக்காகவும், வாழ் வின் விடியலுக்காகவும் தனி மனிதராக நின்று தனது வாழ்நாள் முழுவதும் போராடினார்.

அதன் பயனாய், நீண்ட நெடுங் காலத்திற்குப் பிறகு பெண்கள் கல்வி கற்கவும், அதன்மூலம் வேலை வாய்ப் பினைப் பெறவும் வாய்ப்பு ஏற்பட்டது.

பெரியாரால் கிடைக்கப்பெற்ற இத் தகைய நல் வாய்ப்பினை மகளிர் சமு தாயம் நன்கு பயன்படுத்திக் கொண்டு தற்போது கல்வியிலும், வேலை வாய்ப் பிலும் பீடுநடை போடத் தொடங்கி யுள்ளனர்.

ஆனாலும், பெண்கள் என்னதான் படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும், வேலைக்குச் சென்று கைநிறைய சம்பாதித்தாலும் ஆணாதிக்கத்தின் விபரீதப் போக்கால் பெண்களுக்கு எதி ரான வன்கொடுமைகளும், வரதட் சணைக் கொடுமைகளும் இன்றளவும் தொடர் கதையாகவே உள்ளன.

தமிழ் ஓவியா said...

அனைத்து நாடுகளிலும் பெண்களின் பாதுகாப்பிற்காகவும், நலனிற்காகவும், உரிமைக்காகவும் தனிச்சட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. உலகில் வளர்ந்த நாடான அமெரிக்காவில்கூட பெண்களுக்கென தனிச் சட்டங்கள் உள்ளன. இருப்பினும், அவை அனைத்தும் ஆணாதிக்கத்தின் அலட்சியப் போக்கால் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

குறிப்பாக, இந்தியாவில் பெண்களைப் பணம் பறிக்கும் இயந்திரமாகக் கருதி பெண்களுக்கு எதிரான வரதட்சணைக் கொடுமைகள் நாளும் நடந்த வண்ணம் உள்ளன. ஆனால், அவற்றில் ஒரு சில சம்பவங்கள் மட்டுமே வெளிச்சத்திற்கு வருகின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் சொல்வதற்குத் தயங்கிக் கொண்டு, வேறு வழியின்றி தற் கொலையை தற்காப்பாகக் கருதி தங் களது இன்னுயிரை தாங்களே மாய்த்துக் கொள்கின்றனர் அல்லது கணவர் மற்றும் உறவினரால் உயிரோடு எரித்துக் கொல் லப்படுகின்றனர் என்பதே இன்றுவரை நிலவும் கசப்பான உண்மை நிலையாகும்.

எடுத்துக்காட்டாக, உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியைச் சேர்ந்த ஒரு பெண் மணியை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தது மட்டுமன்றி, 1996 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி கணவர் மற்றும் மாமியார், மைத்துனர் ஆகியோர் ஒன்று சேர்ந்து அப்பெண்மணியை உயி ரோடு எரித்துக் கொன்றனர் என்கின்ற கொடுமையான செய்தியினை அண்மை யில் (11.6.2012) நாளேட்டின் வாயிலாக அறிய முடிந்தது.

இப்படிப்பட்ட கொடூரமான, காட்டு மிராண்டித்தனமான, ஈவு, இரக்கமற்ற செயல் உத்தரகாண்ட் மாநிலத்தில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளதை எண்ணி, பெண்ணுரிமை மாண்பாளர்கள், சமூகநீதிச் சிந்தனையாளர்கள், பகுத்தறி வாளர்கள், மற்றும் மகளிர் அமைப்புகள், நடுநிலையாளர்கள் ஆகியோர் வெட்கித் தலைகுனிந்தனர். வேதனை மிகுதியால் வாயடைத்து நின்றனர். அதிர்ச்சியில் உறைந்து போயினர். செய்வதறியாது திகைத்து நின்றனர். மீளாத் துயரத்தில் மூழ்கினர்.

இத்தகைய துயரம் மிகுந்த சூழலில் தான், அனைவரும் சற்றே ஆறுதல் அடை யக் கூடிய செய்தியாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுவந்தந்தர்குமார், ரஞ்சன் ககோய் ஆகியோர் மேற்கண்ட சம் பவத்தை ஒட்டிய வழக்கில், வரதட்சணைச் சாவில் ஆயுள் சிறைக்குக் குறைவான தண்டனை வழங்கமுடியாது என்று பரபரப்பான தீர்ப்பினை வழங்கியுள்ளனர் என்பதை சமீபத்தில் (11.06.2012) நாளிதழை நோக்கியபோது காண முடிந்தது.

தமிழ் ஓவியா said...

அனைத்து நாடுகளிலும் பெண்களின் பாதுகாப்பிற்காகவும், நலனிற்காகவும், உரிமைக்காகவும் தனிச்சட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. உலகில் வளர்ந்த நாடான அமெரிக்காவில்கூட பெண்களுக்கென தனிச் சட்டங்கள் உள்ளன. இருப்பினும், அவை அனைத்தும் ஆணாதிக்கத்தின் அலட்சியப் போக்கால் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

குறிப்பாக, இந்தியாவில் பெண்களைப் பணம் பறிக்கும் இயந்திரமாகக் கருதி பெண்களுக்கு எதிரான வரதட்சணைக் கொடுமைகள் நாளும் நடந்த வண்ணம் உள்ளன. ஆனால், அவற்றில் ஒரு சில சம்பவங்கள் மட்டுமே வெளிச்சத்திற்கு வருகின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் சொல்வதற்குத் தயங்கிக் கொண்டு, வேறு வழியின்றி தற் கொலையை தற்காப்பாகக் கருதி தங் களது இன்னுயிரை தாங்களே மாய்த்துக் கொள்கின்றனர் அல்லது கணவர் மற்றும் உறவினரால் உயிரோடு எரித்துக் கொல் லப்படுகின்றனர் என்பதே இன்றுவரை நிலவும் கசப்பான உண்மை நிலையாகும்.

எடுத்துக்காட்டாக, உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியைச் சேர்ந்த ஒரு பெண் மணியை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தது மட்டுமன்றி, 1996 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி கணவர் மற்றும் மாமியார், மைத்துனர் ஆகியோர் ஒன்று சேர்ந்து அப்பெண்மணியை உயி ரோடு எரித்துக் கொன்றனர் என்கின்ற கொடுமையான செய்தியினை அண்மை யில் (11.6.2012) நாளேட்டின் வாயிலாக அறிய முடிந்தது.

இப்படிப்பட்ட கொடூரமான, காட்டு மிராண்டித்தனமான, ஈவு, இரக்கமற்ற செயல் உத்தரகாண்ட் மாநிலத்தில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளதை எண்ணி, பெண்ணுரிமை மாண்பாளர்கள், சமூகநீதிச் சிந்தனையாளர்கள், பகுத்தறி வாளர்கள், மற்றும் மகளிர் அமைப்புகள், நடுநிலையாளர்கள் ஆகியோர் வெட்கித் தலைகுனிந்தனர். வேதனை மிகுதியால் வாயடைத்து நின்றனர். அதிர்ச்சியில் உறைந்து போயினர். செய்வதறியாது திகைத்து நின்றனர். மீளாத் துயரத்தில் மூழ்கினர்.

இத்தகைய துயரம் மிகுந்த சூழலில் தான், அனைவரும் சற்றே ஆறுதல் அடை யக் கூடிய செய்தியாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுவந்தந்தர்குமார், ரஞ்சன் ககோய் ஆகியோர் மேற்கண்ட சம் பவத்தை ஒட்டிய வழக்கில், வரதட்சணைச் சாவில் ஆயுள் சிறைக்குக் குறைவான தண்டனை வழங்கமுடியாது என்று பரபரப்பான தீர்ப்பினை வழங்கியுள்ளனர் என்பதை சமீபத்தில் (11.06.2012) நாளிதழை நோக்கியபோது காண முடிந்தது.

தமிழ் ஓவியா said...

வீட்டின் வளர்ச்சிக்கும், நாட்டின் நன்மைக்கும் பயன்பட வேண்டிய ஓர் பெண்ணின் உயிரை சிறிதும் ஈவு இரக்க மின்றி கொடூரமான முறையில் உயிரோடு எரித்துக் கொன்ற இதயமற்ற மனிதர் களுக்கு இத்தீர்ப்பின் வாயிலாக நீதிபதி கள் சரியான பாடம் கற்பித்துள்ளனர்.

இத்தகு சிறப்பு வாய்ந்த தீர்ப்பினை நாளேட்டின் வாயிலாக அறிந்த மகளிர் அமைப்பினர், மாதர் சங்கத்தினர், நடுநிலையாளர்கள் ஆகியோர் கைகூப்பி வணங்கி வரவேற்கின்றனர். வாயார, மனமார பாராட்டி மகிழ்கின்றனர்.

மகளிர் சமுதாயம் பாராட்டி மகிழ்கின்ற அதே வேளையில்; சற்றும் மனிதநேய மின்றி உலாவருகின்ற ஏனைய மனிதர் களைச் சட்டத்தால் மட்டுமே திருத்திவிட முடியாது என்பதே சமுதாய நலனில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர் களின் கருத்தாக உள்ளது.

எனவே, இந்தியாவில் இனிமேலும் வரதட்சணைக் கொடுமைகள் - வரதட் சணைக் கொலைகள் ஆகியவை நடக் காமல் தடுத்து நிறுத்திடும் உயரிய நோக் கத்தில் இளைஞர்களும், மாணவர்களும் ஒன்றிணைந்து வரதட்சணை வாங்கவும் மாட்டோம் - கொடுக்கவும் மாட்டோம் என்கின்ற புரட்சிகரமான முழக்கத் தினை முன்னிறுத்தி நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை உள்ள மக்களி டையே எழுச்சி மிகுந்த பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ள ஆயத்தமாகி விட்டனர்.

ஆகவே, வரதட்சணைக் கொடுமை மற்றும் வரதட்சணைக் கொலைகள் ஆகியவற்றிற்கு எதிராக மக்களிடையே போதிய விழிப்புணர்வையும், புதிய எழுச்சியையும், மனிதநேயத்தையும் வளர்த்தெடுக்க மாபெரும் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள இளைஞர் களையும், மாணவர்களையும் ஊக்கப் படுத்தும் வகையில் அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருந்து தோள் கொடுப்போம்! துணை நிற்போம்!!

மலரட்டும் மனிதநேயம்!

மடியட்டும் வரதட்சணைக் கொடுமை!!


- சீ.இலட்சுமிபதி 18-7-2012

தமிழ் ஓவியா said...

கே.ஆர். நாராயணன்


நமது ஜனநாயகம் என்பது சாணிக் குவியலின் மீது கட்டப்பட்ட அரண் மனையாக மாறாமல் இருக்க, சமூக, பொருளா தார, அரசியல் ரீதியாகப் பின்தள்ளப்பட்ட மக்களுக்கு சமூக நீதி வழங்க இட ஒதுக்கீடு அவசியம்.

இதற்காக சட்டங்களுக் கும், விதிகளுக்கும் புதிய விளக்கங்களை அளித்துக் கொண்டு இட ஒதுக்கீட்டின் பலன்கள் உரியவர்களுக்கக் கிடைக்காமல் தடுக்கும் எதிர்ப் புரட்சிப்போக்கு காணப்படுகிறது. இது மக ளிர், தலித்துகள், இதர நலி வுள்ள பகுதியினர் ஆகியோ ரின் நலன்களுக்கு எதிரானது. சமூகத்தில் ஏற்படக்கூடிய பதற்றங்களைப் பயன் படுத்தி ரத்த ருசி பார்க்க, வன்முறை தன் நாக்கைத் தொங்கவிட்டுக் காத்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு கூறியிருப்பவர் அசாதாரணமானவர் - இந்தி யாவின் முதல் குடிமகன் - முப்படைக்குத் தலைவராக இயங்கக் கூடிய இந்தியாவின் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன்தான்.

அதுவும் எங்குப் பேசினார்? எப்பொழுது பேசினார்? என்பதுதான் மிக முக்கியம்.

குடியரசுப் பொன்விழாப் (26.1.2000) பேருரையில் காத் திருந்து கூறியது போல் சமூக நீதிக் கல்வெட்டாகச் செதுக் கினார்.

அதிகம் பேசாதவர் - சிக்கல் வழுக்கு நிலத்தில் காலூன் றாதவர் - ஒரு சரியான நிகழ்வை மனதில் தேக்கி வைத்து சொல்லவேண்டிய நிகழ்ச்சியில் நச் என்று நவின் றிருக்கிறார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சமூக நீதிக்கு முத லிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதிகார பீடத்தில் அமர்ந்திருந்த ஆரியர் இந்தச் சமூக நீதிக்குச் சவுண்டித் தனமான வியாக்கியானங் களைக் கூறி, அரசமைப்புச் சட்டத்தின் ஆணிவேரையே அசைத்து வந்திருக்கின்றனர்.

திரு. கே.ஆர். நாராயணன் அவர்களுக்கு முன் அதே குடி யரசுத் தலைவர் மாளிகையில் வாசம் செய்த சங்கர்தயாள் சர்மா என்ன கூறினார்?

பிராமணர்களிடமிருந்து இடங்களை நீங்கள் எடுத்துச் செல்லலாமே தவிர, அவர்களின் மூளையை எடுத்துச் செல்ல முடியாது என்று பச்சையாகப் பார்ப்பனத் தனத்தின் திமிர் குறித்துச் சொல்லவில்லையா!

இப்பொழுது கூட பிற்படுத் தப்பட்டவர்களுக்கான கல்வியில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை (சட்டம் அனு மதித்தும்) அளிப்பதில் எந்த வகையில் காலதாமதம் செய்ய வாய்ப்புக் கிடைக்கும் என்பதைத் தேடிப் பிடித்து அந்த வேலை யைச் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்.

ஆண்டு ஒன்றுக்கு ஒன் பது சதவிகிதமாக மூன்றாண்டு களில் நிறைவு செய்யப்படும் என்று சொல்ல வில்லையா? அதனை இப்பொழுது ஆறு ஆண்டுகளாக நீட்டிக்கவில் லையா?

கல்வியைப் பொதுப் பட்டி யலுக்குக் கொண்டு சென்றதன் நோக்கமே இட ஒதுக்கீட்டைக் கொத்திக் குதறுவதற்கே!

குறிப்பு: முதல் தாழ்த்தப்பட்ட குடிமகனாக இந்தியாவின் குடியரசுத் தலைவராக கே.ஆர். நாராயணன் அவர்கள் வெற்றி பெற்ற நாள் இப் பொன்னாள் (1997). - மயிலாடன் 18-7-2012

தமிழ் ஓவியா said...

இந்நாள்... இந்நாள்....

சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தக் கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்த பொன்னாள் இந்நாள் (18.7.1967).

தமிழ்த்தேசியம் பேசுவோர் சிந்திக்கட்டும் - சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தது திராவிடர் இயக்கமே! 18-7-2012

தமிழ் ஓவியா said...

விண்வெளி ஆய்வில் அடுத்த கட்டம்!


விண்வெளி ஆய்வு மய்யத்தில் நான்கு மாதம் தங்கி

ஆய்வுகள் செய்வார் சுனிதா வில்லியம்ஸ்

வீழ்ச்சியுற்றது மத மூட நம்பிக்கைகள்!

வாஷிங்டன், ஜூலை 18- மத மூட நம்பிக்கைகள் வீழ்ச்சி அடையும் வண்ணம் விண்வெளி ஆய்வில் அடுத்தடுத்த முன்னேற்றங்கள் காணப்படுகின்றன

விண்வெளியில் நான்கு மாதங்கள் தங்கி ஆய்வு செய்வார் சுனிதா வில்லியம்ஸ்.

அமெரிக்கா, ரஷ்யா உள்பட சில நாடுகள் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சிக்காக ஆகாயத்தில் சர்வதேச விண்வெளி மய்யம் அமைத்துள்ளன. விண்வெளி வீடு என்றழைக்கப்படும் இந்த மய்யத் தில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் சுழற்சி முறையில் இருந்து ஆய்வு செய்து வருகிறார்கள். அமெரிக்காவின் நாசா நிறுவனம் இந்த ஆய்வு மய்யத்துக்கு இந் திய வம்சாவளி வீராங் கனை சுனிதா வில்லி யம்சை அனுப்ப முடிவு செய்தது. அதன்படி நேற்று முன்தினம் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் சுனிதா புறப்பட்டார். கஜகஸ்தான் நாட்டில் இருந்து சென்ற அவருடன் ஜப்பான் விஞ்ஞானி அகிகிகோ மற்றும் ரஷ்யா விஞ்ஞானி யூரி ஆகியோரும் சென்ற னர்.

2 நாள்கள் பயணத்துக்கு பிறகு அவர்களது விண்கலம் நேற்று காலை சர்வதேச விண்வெளி மய்யத்தை நெருங்கியது. இந்திய நேரப்படி நேற்று காலை 10.21 மணிக்கு சோயுஸ் விண்கலம் ஆய்வு மய்யத்தை சென் றடைந்தது. இதையடுத்து சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட மூன்று பேரும் ஆய்வு மய்யத்துக்குள் சென்றனர். அந்த ஆய்வு மய்யத்தில் ஏற்கெனவே 32 ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.

அவர்களுடன் சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் இணைந்தனர். அவர்களை ஆய்வு மய்யத்தினர் வரவேற்றனர். சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மய்யத் துக்கு சென்றிருப்பது இது 2 ஆவது முறையாகும். கடந்த முறை அவர் 6 மாதம் விண்வெளியில் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். அது இன்றுவரை முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது. இந்த நிலையில் இந்த முறை 4 மாதம் தங்கியிருந்து சுனிதா ஆய்வுகள் செய்யவுள்ளார். இந்த காலக் கட்டத்தில் சுனிதா விண்ணில் நடந்து ஆய்வு செய்ய இருக்கிறார். விண்வெளி வீட்டில் இருந்தபடி லண்டன் ஒலிம்பிக் போட்டி களை கண்டுகளிக்க திட்டமிட்டுள்ள அவர், அங்கிருந்தபடி அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க உள்ளார். 18-7-2012

தமிழ் ஓவியா said...

ஜூனியர்விகடன் பார்வையில்....

சுயமரியாதைத் திருமணம்
தத்துவமும் வரலாறும்

கி.வீரமணி, திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7 , விலை ரூ. 130

செட்டிநாடு கோட்டை யூரைச் சேர்ந்த ராம.அழ. சிதம்பரம் திருவண்ணா மலையைச் சேர்ந்த ரங்கம் மாள் இருவருக்கும் சுய மரியாதை முறைப்படி திரு மணம் நடத்தி வைத்தார் பெரியார். அவர்களுக்கு இரண்டுஆண்கள், இரண்டு பெண்கள் என நான்கு குழந்தைகள். 20 ஆண்டுகள் கழிந்த பிறகு சிதம்பரம் குடும்பத்தின் பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்கு ஒன்று போடப்பட்டு அதன் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் தீர்ப்பு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜகோபாலன், சத்திய நாராயணராவ் கொண்ட பெஞ்ச், அதிர்ச்சித் தீர்ப்பைக் கொடுத்தது.

குறிப்பிட்ட இந்தத் திருமணம் சுயமரியாதைத் திருமணம் என்று கூறப்படுகிறது. இது சாஸ்திரங் களின்படி நடைபெறவில்லை. எனவே, இது இந்துச் சட்டப்படி செல்லத்தக்க திருமணமே இல்லை. யாரோ சிலர் கூடி தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நாங்கள் இந்தத் திருமணம் நடத்துகிறோம் என்று கூறிச் செய்ய, அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இவர்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் அனைவரும் சட்டப்படியான பிள்ளைகளாகவே கருதமுடியாது என்று அளித்த தீர்ப்பு அந்த நான்கு குழந்தைகளை மட்டுமல்ல. இதே முறைப்படி திருமணம் செய்து கொண்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களையும் நடுத்தெருவில் கேள்விக்குறியாக நிறுத்தியது.

ஆனால், சாஸ்திரம், சடங்குகள் இல்லாமல் செய்யப்பட்ட திருமணங்கள் செல்லும் என்பதை மத்திய அரசாங்கம் கொண்டு வந்த ஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட், அண்ணா முதல்வராக இருந்தபோது கொண்டுவந்த சுயமரியாதைத் திருமணச் சட்டம் ஆகியவை பிற் காலத்தில் இதற்கு சட்ட ரீதியாகப் பாதுகாப்பளித்தன. இதன் மூலமாக சமூக சீர்திருத்த இயக்கம் ஒன்றின் தத்துவம் ஆட்சி நெறிமுறையாக மாறியது. இந்த வரலாற்றை பல்வேறு ஆவணங்களின் மூலமாக அடுக்கி உள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. இதை எழுதுவதற்கு இயக்க ஆர்வம் மட்டுமல்ல, சொந்த குடும்ப ரீதியான பிணைப்பும் வீரமணிக்கு இருக்கிறது. சிதம்பரம்-ரங்கம்மாளுக்குப் பிறந்த பிள்ளைகள் சட்டரீதியானவை அல்ல என்று நீதி மன்றம் தீர்ப்பளித்தது அல்லவா? அந்த பிள்ளைகள் நால்வரில் ஒருவரான மோகனாதான் வீரமணியின் மனைவி.

அருப்புக் கோட்டையில் 1928இல் நடந்த ஒரு திருமணம்தான் முதல் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லப்படுகிறது. அதை நடத்தி வைத்த பெரியார் சென்றதும், அப்போது நடந்த காட்சிகளும் இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்படுகின்றன. அவர்களது குடும்பத்துப் பெயரன், பெயர்த்திகள் பிற்காலத்தில் கொடுத்த பேட்டிகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. இந்த முதல் சுயமரியாதைத் திருமணம், கடவுளை நம்பி நடந்துள்ளது. தம்பதிகளுக்கு மேன்மேலும் ஆண்டவன் அருள் சுரக்குமாறு எல்லாம் வல்ல இறைவனை எல்லோரும் வேண்டி அவரவர் ஊருக்கு விடைபெற்றுக் கொண்டு போயினர். சுபம். என்று முடிகிறது அப்போதைய குடிஅரசு பத்திரிகை செய்தி. இதன்படி பார்த்தால் கடவுள் மறுப்புக்கு முன்னதாகவே சாஸ்திர, சடங்கு எதிர்ப்புதான் முக்கியமானதாக பெரியார் நினைத்துள்ளார்.

சடங்கு, சம்பிரதாயம் இல்லாததுதான் சுய மரியாதைத் திருமணம் என்று பலரும் நினைக் கிறார்கள். வீண் செலவு, அதிக ஆடம்பரம், நீண்ட நேரம் நடப்பது - போன்றவற்றையும் தவிர்க்க வேண் டும் என்று பெரியார் வலியுறுத்தினார். வாழ்த்துரை என்ற பெயரால், மணிக்கணக்கில் இன்று திருமணங் கள் நடக்கின்றன. ஆடம்பரத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். இவை இந்தத் தத்துவத்தின் அடிப் படைக்கே விரோதமானவை என்று புரிய வைக்கிறது இந்தப் புத்தகம்.
- புத்தகன்

(நன்றி: ஜூனியர் விகடன் 22-7-2012)

தமிழ் ஓவியா said...

பெரிய - வாள் சொன்ன பெரியார்


ஆனந்தவிகடன் இதழில் சு.சாமி யின் பேட்டிகள் வந்து கொண்டு இருக்கின்றன. அதில் ஒரு கேள்வி. நீங்கள் யாரை அதிகம் நேசிக் கிறீர்கள்? என்ற கேள்விக்கு காஞ்சி மகாபெரியவரை என்று பதில் சொல்லியுள்ளார்.

அவர் அப்படித்தான் சொல்லு வார். பார்ப்பனர்கள் வேறு யாரைத் தான் சொல்லுவார்கள்?

உத்தரப் பிரதேசம் கான்பூரில் சு.சாமி முன்னின்று ஒரு பார்ப்பன மாநாட்டையே நடத்தியவராயிற்றே!

பிராமண சுயாபிமான் அந் தோலன் சமிதி என்ற அமைப்பு தான் என்றாலும் (1995 பிப்ரவரி) அதன் முதுகெலும்பாக இருந்து பல பகுதிகளில் இருந்தும் பார்ப்பனர் களைக் கொண்டு வந்து சேர்க்க மிகவும் பாடுபட்டவர் சு.சாமிதான் என்று இந்துஸ்தான் டைம்ஸ் (8-2-1995) ஏடு வெளியிட்டுள்ளதே!

அப்படிப்பட்டவர் காஞ்சிப் பெரிய-வாளைத்தான் நேசிப்பார்.

இந்த நேரத்தில் இன்னொன் றையும் நாம் நினைவூட்ட வேண்டும். ஒரு முறை இதே சு.சாமி இதே காஞ்சி - பெரியவாளிடம் நான் யாரைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று கேட்டபோது, பெரியாரைப் பின்பற்று என்று சொன்னதாக இதே சு.சாமி சொன்னது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் வெளிவந்த துண்டே! அதையும் ஆனந்த விகடன் பேட்டியில் சு.சாமி சொல்லி இருக்கலாமே!

அடிக்குறிப்பு: இந்தச் சு.சாமி பற்றி கலைஞர் சொன்னது ஒரு மன நோயாளி! இராமகிருஷ்ண ஹெக்டே சொன்னதோ - கழிவறைச் சுவர் களில் ஆபாசப் படங்களை வரை கின்ற மனநோயாளி!

ஆகக் கூட்டிக் கழித்துப் பார்த் தால் இருவரும் சொன்னது மனநோயாளி என்பதே! 19-72012

தமிழ் ஓவியா said...

நடிகைகளுக்கு கடவுள் பக்தி

சினிமா நடிகைகள் சிலருக்கு ஆன்மீகத்தின் மீது நாட்டம் ஏற் பட்டு, கோயில்கள் கூட கட்டு கிறார்களாம் - வார இதழ் ஒன்று ஒரு பட்டியலையே வெளியிட் டுள்ளது.

சினிமா உலகில் திருமணம் - விவாகரத்து - இத்தியாதி இத்தி யாதி நடப்புகள் எல்லாம் சர்வ சாதாரணம்தான். இப்படி வாழ்க் கையையே தீர்மானித்துக் கொள்ள முடியாதவர்கள் தடுமாற்றத்தின் காரணமாக எதையாவது ஒரு பிடிமானம் என்று கருதி, குளிக்கப் போய் சேற்றில் விழுந்த கதைதான் இது.

இமயமலைச் சாரல் என்றும், பாபா என்றும் ஓடித் திரியும் ஆனானப்பட்ட ரஜினிகாந்தே என்ன சொன்னார் தெரியுமா?

எல்லாம் தெய்வச் செயல், கடவுளே எல்லாம் பார்த்திருப்பா ருன்னு விட்டிருந்தா நான் இன்னும் கண்டக்டராகவே இருந்திருப்பேன். அந்தச் சூழ்நிலையில் உத்தியோ கத்தை விட்டுவிட்டு தைரியமாக சென்னைக்கு வந்து, ஒரு வாசல்ல காத்திருந்தது என் முயற்சிதான் - (ராணி 20-7-2008) என்று இதே ராணிதான் செய்தி வெளியிட்டி ருந்தது.

பக்தி என்பது ஒரு மனநோய் அவ்வளவுதான். தன்மானக்காரனி டத்திலும், தன்புத்திக்காரனிடத்தி லும் இந்நோய் அண்டாது - அண் டவே அண்டாது! 19-7-2012

தமிழ் ஓவியா said...

அயல்நாடுகளுடன் தமிழகம் கொண்டிருந்த வணிகம் பற்றிய ஆதாரங்கள் தரும் 11 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்


பழனி, ஜூலை 19- பெர்சியா, ரோம் போன்ற அயல்நாடுகளுடன் கொண் டிருந்த வணிகத் தொடர்புகள் மற்றும் போக்குவரத்து வழிகள் பற்றி தெரிவிக்கும் 11 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

பழனிக்கு அருகில் உள்ள ரவிமங்கலம் கிராமத்தின் குளத்துக்கு அருகில் பாழடைந்த ஒரு கோயில் இருந்த இடத்தில் புதிய கோயில் ஒன்று கட்டுவதற்காக தோண்டிய போது, கல்வெட்டுகள் அடங்கிய கல் தூண்கள், செங்கற்கள், கருங்கல் சிலைகள் ஆகியவை கிடைத் துள்ளன.

இந்தக் கல்வெட்டுகளில் இருந்து சோழ அரசன் விக்கிரம சோழன் இந்தக் கோயிலுக்கு வந்திருந் ததும், அதற்கு நன்கொடைகள் அளித்ததும் தெரிய வருகிறது. கொழுமம் நெடுஞ்சாலை பற்றிய குறிப்பும் ஒரு கல்வெட்டில் உள்ளது. இந்த நெடுஞ்சாலை மதுரையில் இருந்து புறப்பட்டு பழனி, கொழுமம் வழியாக கள்ளிக் கோட்டை வரை செல்கிறது. அங்கிருந்து கடல் வழியாக பெர்சியா வரை சென்று அங்கிருந்து தரை வழியாக ரோம் நகருக்கும், கடல் வழியாக கிரேக்கத்துக்கும் சென்று தமிழர்கள் வணிகம் செய்திருப்பதாகத் தெரிகிறது. இங்கு கிடைத்துள்ள செங்கற்கள் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை.

இக்கலைப் பொருள்களைப் பற்றி பேசிய கல்வெட்டு சாசன ஆய்வாளர் நாராயணமூர்த்தியும், வரலாற்று மாணவரும் பழனியாண்டவர் மகளிர் கல்லூரி பேராசிரியருமான கோமதி யும், பாழடைந்திருக்கும் கோயிலின் ஒரு பகுதியாக இருக்கும் இரண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன என்று கூறினர்.19-7-2012

தமிழ் ஓவியா said...

கவுதம புத்தர் ஒரு நாத்திகர்


உலகில் தோன்றிய சிந்தனையாளர்கள் வரி சையில் புத்தர் சிறப்பிடம் வகிக்கிறார். இன்று தமிழினத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நாத்திகக் கருத்துகளுக்கு எவ்வாறு புத்தர் கொள்கைகள் முன்னோடியாக திகழ்ந்தது என்பன பற்றி அறிய போதி மாதவன் சரித்திரம் என்னும் நூல் உதவும். அதில் புத்தரின் அறிவுரைகளை அப்படியே வெளியிட்டுள்ளனர்.

கடவுள் மறுப்பு

தெய்வங்களை நினைத்து இரங்கி ஏங்குவதில் பயனில்லை. பிரம்மனே இவ்வுலகை படைத்தான் எனில், இதை ஏன் இவ்வளவு துயரத்தில் ஆழ்த்தி வைக்க வேண்டும். (பக்கம் 73)

புனிதம்

தண்ணீரைத் தெளித்து விட்டு இது புனிதத்தலம் என்று கூறுவதால் ஓர் இடம் புனிதமாகி விடாது. புனிதத்தன்மை இதயத்தைப் பற்றிய உணர்ச்சி யேயாகும். தண்ணீரால் பாவத்தை கழுவ இயலாது (பக்கம் 108)

மனிதன் மயக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் மீன் புலால் முதலிய உணவுகளை விலக்குவதாலோ அம்மணமாக அலைவதாலோ, தலையை மழிப்பதாலோ, அக்கினிக்கு ஆகுதிகள் செய்வதாலோ அவன் பரிசுத்தமாகி விடமுடியாது.

ஆன்மா மறுப்பு

உடல் ஆன்மாவற்றது. பிக்குகளே; உடலே ஆன்மாவாயிருந்தால் இந்த உடல் நோய்க்கு உட்படாது. (பக்கம் 186)

உடலின் தோற்றத்தின் போது உள்ளே புகுந்து கொண்டு, அது மடியும் போது வெளியேறும் ஆன்மா ஒன்று இல்லையென்று அவர் (புத்தர்) மறுத்துள்ளார் (பக்கம் 188)

சுவர்க்கம் - நரகம்

நீருள் நின்று தவம் புரிவதால் சுவர்க்கம் கிடைக்கும் என்றால் மீன்களே முதலில் சுவர்க்கத்திற்கு உரியவை (பக்கம் 108)
பலியிடும் உயிர் உடனே சுவர்க்கம் செல்வதானால், ஒருவன் முதலில் தன் தந்தையையே பலியாக்கி அனுப்பி விடலாமே (பக்கம் 125)

பிரார்த்தனை

பிரார்த்தனை செய்து என்ன பயன்? இது வெளுத்துவிடாது. தெய்வங்களை வேண்டி உயிர்ப் பலி இடவேண்டாம். பண்டம் பழங்கள் வைத்து பூஜை செய்து பலனை எதிர்பார்த்து இருக்க வேண்டாம். (பக்கம் 233)

பொது உடைமை

செல்வர்களுடைய வானளாவிய மாளிகைதான் துயரத்தின் இருப்பிடம் 20-7-2012

தமிழ் ஓவியா said...

மனுதர்ம நூலை அம்பேத்கர் எரிக்கச் சொல்கிறார்


சிலவற்றைத் தீர்த்துக் கட்ட வேண்டுமென்பதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே மனுஸ்மிருதி.

அநீதிகளைச் செய்தாவது சிலவற்றை அழிக்காவிட்டால் பார்ப்பன இனம் அழிந்து போகும் என்றெண்ணி, அதற்காகச் சிதறி - ஒற்றுமையின்றிக் கிடந்த பார்ப்பனர்களை ஒன்று திரட்டி, சதி வேலைகளை நரித் தந்திரத்தின் மூலம் செய்து முடிப்பதற்காக விடப்பட்ட அறைகூவல் தான் மனுஸ்மிருதி.

சிதைந்த ஒற்றுமையை மீட்க அவ்வப்போது இதுபோன்ற முயற்சிகள் நடைபெறுவது வரலாற்று உண்மை. முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்கிற பழமொழிக்கேற்ப, மிக மிக முயன்று, புதிய கொடுமையான பார்ப்பன (அ)நீதியை உருவாக்கியவன் மனு.

இந்த மனுஸ்மிருதி, நீதியும் நேர்மை மிக்கத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. அப்படிப்பட்ட நீதி நூலை உருவாக்குமளவுக்கு அவன் (மனு) ஒரு சமூகவியல் அறிஞனும் அல்ல. அவன் ஒரு அயோக்கியன்.

ஒரு குலத்துக்கொரு நீதி வழங்கும் இந்த மனுஸ்மிருதி தீ வைத்துக் கொளுத்தப்பட வேண்டும். மீளமுடியாக் கொடுமைச் சேற்றில் எங்களை புதைக்க எண்ணிய மனுஸ்மிருதியை, உயிரைப் பணயம் வைத்தாவது ஒழித்துக் கட்டியே தீர வேண்டுமென்று நாங்கள் முடிவு செய்தது இதனால் தான்.

அம்பேத்கர் சிந்தனைகள் என்ற நூலிலிருந்து 20-7-2012

தமிழ் ஓவியா said...

கடவுள் ஒருவர் இருக்கிறாரா?


கடவுளை நம்பும் முட்டாள்களே!

அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரே உலகைப் படைத்து, காத்து, நடத்தி வருகிறார். அவரன்றி ஒரு அணுவும் அசையாது, அவரே உலக நடப்புக்குத் காரணஸ்தர் ஆவார் என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே! கடவுளால் உலகத்திற்கு, மனித சமுதாயத்திற்கு, ஜீவகோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?

கடவுள் இருக்கிறார் என்றால், ஜீவன்களுக்கு பசி, தாகம், புணர்ச்சி, உணர்ச்சி, ஆசை, கவலை, நோய், வேதனை, சாவு முதலியவை ஏன் ஏற்பட வேண்டும்?

பிறப்பு, சாவு, தோற்றம், அழிவு எதற்குத் தேவை? இவைகளால் உலகமோ, மக்களோ அடைகிற லாபம் என்ன?

கடவுள் தோன்றி எத்துணையோ காலம் ஆகியும் எத்துணையோ காலமாக மக்கள் கடவுளை நம்பியும், வணங்கியும் வந்தும், யோக்கியனாகவோ கவலையற்றவனாகவோ ஒரு மனிதனைக் கூட காண முடியவில்லையே, ஏன்?

- தந்தை பெரியார் (உண்மை, 14.7.1970

தமிழ் ஓவியா said...

மதம் தேவையா?


மதத்தைக் காப்பாற்றவே கோளல்களும், சொத்துக்களும், அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா?அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா? நீங்காதா? என்பதைத்தான் கவனிக்கவேண்டும்.

பெரியார்-(விடுதலை, 3.12.1962