Search This Blog

17.7.12

கடவுளுக்குமாதவிடாயாம்!சீமந்த விழாவாம்!

ஆடி மாதத்தில் நல்லவிதமான மங்கலகரமான காரியங்கள் நடக்கக் கூடாது என்று சொன்னால் புரோகிதர்களின் பக்தித் தொழில் நடக்க வேண்டாமா?

கோயில் விழாக்களுக்கு மட்டும் பஞ்சம் கிடையாது. உருவமற்றவர் கடவுள் என்று கதைப்பார்கள். ஆனால் நாட்டு நடப்பு என்ன? வீதிக்கு வீதி கோயில்கள்! ஒவ்வொருவிதமான கோயில் சிலைகள். சிவன் என்றால் ஒரே மாதிரியான உருவம் எல்லாக் கோயில்களிலும் இருக்காது. அதிலும் பலபல உருவங்கள் அவற்றிற் கெல்லாம் தனித்தனித் தலப் புராணங்கள், கட்டுக் கதைகள்.

விஷ்ணு என்றாலும் அப்படியே! மனிதனுக்கு என்னென்னவெல்லாம் நடக்குமோ அவ்வளவும் இந்தக் கடவுள்கள் மீதும் ஏற்றி வைக்கப்பட்டதுதான் படுதமாஷ்!

நாகப்பட்டினத்தில் நீலாய தாட்சி என்னும் கோயில்; இந்த அம்மனுக்கு ருது சாந்தி விழாவாம்! புரியவில்லையா! இந்த அம்மன் ருதுவாகிவிட்டாளாம். இதற்காக வருடம் தோறும் ஆடிப்பூரம் என்று சொல்லி பத்து நாள் திருவிழாக் கூத்தாம்.

ஆமாம். அந்தச் சிலைதான் உலோகங்களால் செய்யப்பட்ட தாயிற்றே! அம்மணி ருது ஆனதை எப்படி கண்டுபிடித்தார்களாம்?

இந்த நீலாயதாட்சி குடி கொண்டுள்ள நாகையில் தான் சுனாமியால் நூற்றுக்கணக் கான மக்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டார்கள். பாவம்! அந்தக் குத்துக் கல்லு என்ன செய்யும்?

கேரளாவில் செங்கண்ணூர் பகவதி அம்மன் என்ற கோயில் ஒன்று இருக்கிறது. இந்த அம்மனுக்கு மாதா மாதம் மாத விடாய்வருமாம். அதனால்தான் அந்த அம்மனை யாரும் ஒளிப் படம் (போட்டோ) எடுக்க அனுமதிப்பதில்லையாம்.
அதெல்லாம் சரி.. மாதா மாதம் மாதவிடாய் வரும் இந்தப் பகவதி அம்மன் கோயிலுக்காவது பெண் அர்ச்சகர் ஒருவரை நியமிக்கக் கூடாதா?

மாதவிடாய் வருவதால் ஏற்படும் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ள தடியனான ஆண் அர்ச்சகன்தான் இருக்க வேண்டுமா? இப்படியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது - இதுதான் அர்த்தமுள்ள இந்துமதம்!

இன்னொரு கூத்து; இதையும் கொஞ்சம் கேளுங்கள். நெல்லை காந்திமதிக்குச் சீமந்த விழாவாம்! புரியவில்லையா? வளையல் காப்புவிழாவாம்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆடி மாதத்தில் 10 நாட்கள் இந்த அம்மணிக்கு விழா; அதில் நான்காம் நாள் தான் இந்தச் சீமந்த விழாவாம்!

அப்படியே பார்த்தாலும் சீமந்தம் என்பது ஒரு தடவை தானே நடக்கும். அதுவும் முதல் பிரசவத்துக்கு முன்னதாக. நெல்லை காந்திமதிக்கு மட்டும் அது எப்படி ஆண்டுதோறும் சீமந்தம் விழா? இப்படியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது! இது அர்த்தமுள்ள இந்துமதம் அல்லவா!

ஹி... ஹி... ஹி....

-----------------------"விடுதலை” 17-7-2012

22 comments:

தமிழ் ஓவியா said...

மாவட்ட ஆட்சியர் என்ன செய்கிறார்?


திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கோயில் ஒன்று கட்டப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளாரா?

அரசு அலுவலகங்கள், வளாகங்களுக்குள் எந்த மத சம்பந்தமான சின்னங்களோ, வழிபாடுகளோ இருக்கக் கூடாது என்ற அரசு ஆணை ஆட்சியருக்குத் தெரியுமா? உச்சநீதிமன்றம் இந்த வகையில் பிறப்பித்த உத்தரவையும் அறிய மாட்டாதவரா மாவட்ட ஆட்சியர்?

தடுக்காவிட்டால் இதுகுறித்து சட்ட ரீதியான நடவடிக்கையைக் கழகம் எடுக்கும். 17-7-2012

தமிழ் ஓவியா said...

ஏ.ஆர். முதலியார்


திரு. இராமசாமி முதலி யார் அவர்கள் திரு. பனகல் அரசரவர்களுக்கு வலக்கை போல் இருந்தவர். திரு. பனகல் அரசரவர்களுக்கு வந்த பெருமை யெல்லாம் அவரைச் சார்ந் தாலும், ஏதாவது சில தப்பாவது, தப்புகளாவது சொல்லக் கூடிய வரிருந்தால் அவ்வளவையும் வாங்கித் தம் தலையில் போட்டுக் கொள்ளக்கூடிய பெரி யவர் நம்முடைய இராமசாமி முதலியார். அவர்களை அறி யாமல் ஒரு காரியமும் நடந் திருக்காது என்றே சொல்லலாம். சாதாரணமாக இந்துக் கோயில் விக்கிரகங்களுக்குச் சொல் லுவதுபோல் திரு. பனகல் அரசரவர்களை மூல விக் கிரகம் என்று சொன்னால், திரு. இராமசாமி முதலியாரை உற்சவ விக்கிரகம் என்று சொல்லலாம். இவ்வளவு தூரம் அவர்கள் இரண்டறக் கலந்து ஒன்றாக நமது நாட்டினுடைய நன்மையைக் குறித்து, நம் முடைய மக்கள் சுயமரி யாதையைக் குறித்து மனமாரப் பாடுபட்டவர்கள். அப்பேர்ப்பட்ட ஒருவர் அப்பெரியாருடைய படத் திறப்பு விழாவிற்குத் தலைமை வகிப்பது மிகவும் பொருத்த மானது. அதிலும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் எத்துணையோ அவசரக் காரியங்களினிடையே இக்காரியத்தைச் செங்கற்பட்டு போர்டாரவர்கள் கேட்டுக் கொண்டவுடனே - யாதொரு விதமான ஆட்சேபணையும் சொல்லாமல் உடனே இன்றைய தினம் விஜயம் செய்து, இந்தக் காரியத்தை நடத்தித் தலைமை வகித்ததற்கு, செங்கற்பட்டு போர்டின் சார்பாகவும், காலஞ் சென்ற தலைவர் அபிமானத் தால் நன்றி செலுத்திய மக்கள் சார்பாகவும் என்னுடைய மனமார்ந்த நன்றியறிலைச் செலுத்துகிறேன்.
(திராவிடன் 18.2.1929).

செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாநில மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது.

நீதிக்கட்சியின் குறிப்பிடத் தக்க பெருந்தூண்களுள் ஒரு வர் ஏ.ஆர். முதலியார் அவர்கள். சேது சமுத்திரக் கால்வாய்த் திட் டம் பற்றி சிறந்த அறிக்கையைக் கொடுத்த மேதையும் இவரே!

டாக்டர் டி.எம். நாயரின் மறைவிற்குப்பிறகு ஜஸ்டிஸ் ஏட்டின் ஆசிரியராக எட்டு ஆண் டுகள் இருந்து அவர் எழுதிய தலையங்கங்கள் காலத்தை வென்று நிற்கக் கூடியவை.

அவரின் நூற்றாண்டு விழாவை திராவிடர் கழகம் கொண்டாடிய போது அவர் எழுதிய தலையங்கங்களைத் தொகுத்து (ஆசைசடிச டிக வாந லுநயச) என்ற தலைப்பில் வெளி யிட்டது.

சென்னை மாநகராட்சியின் தலைவராக இருந்தபோது, வெள்ளுடைவேந்தர் தியாகராயர் அவர்களால் அறிமுகப்படுத்தப் பட்ட மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தியவர்.

இரயில் நிலையங்களிலும், வண்டிகளிலும் பிராமணாள் இதராள் என்று இருந்த பேதம் ஒழிக்கப்படுவதற்கு - இரயில்வே போர்டு உறுப்பினராக இருந்த ஏ.ஆர். முதலியார் காரணமாக இருந்தார் என்பது பெருமிதத் திற்குரியது. அய்க்கிய நாடு களின் பொருளாதார மற்றும் சமூகக் கழகத்தின் முதல் தலை வராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர் இவர். இலண்டன் வட்ட மேசை மாநாட்டிலும் கலந்து கொண்டவர்.

சுதந்திர இந்தியாவில் ஆளுநராக இவரை நியமிக்க அரசு முன்வந்தபோது அதனை ஏற்க மறுத்தவர். சென்னை அண்ணாசாலையில் உள்ள அறிஞர் அண்ணா அவர்களின் சிலையை இவர்தான் திறந்து வைத்தார். 89ஆம் வயதில் இந் நாளில் தான் (1976) மறை வுற்றார்.

இரட்டையர்களான இராம சாமி முதலியார், இலட்சுமண சாமி முதலியார் இருவரையும் அடையாளம் கண்டுபிடிப்பது கடினமான ஒன்றாகும். அந்த அளவுக்கு உருவ ஒற்றுமை! - மயிலாடன் 17-7-2012

தமிழ் ஓவியா said...

மூடத்தனத்தில் எடியூரப்பாவுக்கு அண்ணனா ஜெகதிஷ்ஷெட்டர்?


பெங்களூரு, ஜூலை 17- கர்நாடக மாநில புதிய முதல்வராக பொறுப் பேற்றுள்ள ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் அவ ரது அமைச்சரவை சகாக்கள் அனைவருமே தங்களது அலுவலகங் களை வாஸ்து பார்த்து மாற்றியமைப்பதில் மும் முரம் காட்டி வரு கின்றனர். இதனால் வாஸ்து வல்லுநர்கள் மற்றும் ஜோதிடர்கள் காட்டில் செம மழை யாம்!

ஜெகதீஷ் ஷெட் டரைப் பொறுத்தவரை அவர் தம்மை நாத்திகர் என்றுதான் கூறிக் கொள்வார். ஆனால் அவரது அலுவலகத் துக்கு வந்த அவரது மனைவி ஷில்பா வாஸ்து அடிப்படையில் சில மாற்றங்களை செய்த துடன் சண்டிக ஹோம மும் நடத்தியிருக்கிறா ராம். முதலமைச்சரின் மேஜை கிழக்கு மேற்காக போடப்பட்டிருந்தது. இதை வாஸ்துப்படி வடக்கு தெற்காக மாற்றி வைத்திருக்கின்றனர். இதனால் வடக்கு மற் றும் கிழக்குப் பகுதியில் நிறைய வெற்றிடம் இருக்கிறதாம்.

இதேபோல் சுற்றுச் சூழல் அமைச்சர் சொகுடு சிவன்னா, உள் கட்டமைப்புத் துறை அமைச்சர் சுனில் ஆகி யோரது அலுவலகங் களில் கழிப்பறையை நோக்கி மேஜைகள் போடப்பட்டிருந்தன. இது இப்போது மாற் றியமைக்கப்பட்டுள்ளது.

இளைஞர் நலத் துறை அமைச்சர் அப் பச்சு ரஞ்சன், பேரவை வளாகமான விதான் சௌதாவை ஒட்டி அமைந்திருக்கும் விகாஷா சௌதாவில் தமக்கு அலுவலகம் கேட்டு வாங்கியிருக்கிறார்.

இத்தோடு முடிந்து போய்விட்டது என நினைக்கிறீர்களா? பல அமைச்சர்கள் தங்களது வாகன எண்ணின் கூட் டுத் தொகையை 9 ஆக வருமாறு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதுதான் லக்கி நம்ப ராம்!

கர்நாடகத்தில் வறட்சி தான் முதல் பிரச்சினை என்கிறார்கள்.. ஆனால் அமைச்சர்களுக்கோ வாஸ்து ஜூரம்தான் முதல் விவகாரமாக இருக்கிறது! 17-7-2012

தமிழ் ஓவியா said...

இந்நாள்... இந்நாள்....

டி.எம்.நாயர் அவர்களின் நினைவுநாள் கருத்தரங்கம்

திராவிட லெனின் என்று தந்தை பெரியார் அவர்களால் மதிக்கப் பெற்ற நீதிக்கட்சியின் முப்பெரும் தலைவர் களுள் ஒருவரான டாக்டர் டி.எம். நாயர் அவர்களின் மறைவு நாள் இந்நாள் (1919) டாக்டர் நாயர் மறைந்தார் என்ற செய்தியைக் கேட்டு திருவல்லிக்கேணியில் பார்ப் பனர்கள் கோயில்களுக்கு தேங்காய் உடைத்துக் கொண்டாடினர். 17-7-2012

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.யின் தந்திரம்

2014-இல் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற - குறிப்பாக 80 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் அதிகமான இடங்களைப் பெற்றிட பி.ஜே.பி. இப்பொழுதே தந்திர வலைகளைப் பின்ன ஆரம்பித்துவிட்டது.

முதற்கட்டமாக கட்சி அமைப்புகளில் ஓர் அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வரும் வேலையில் இறங்கியுள்ளது.

பாரதீய ஜனதா கட்சி என்றாலே அது பார்ப்பன ஜனதா கட்சி என்பது பாமர மக்கள் உள்பட அறிந்த பச்சையான உண்மையாகும். பெரும்பான்மை மக்களின் எண்ணத்தில் கடுமையான வெறுப்பையும் எதிர்ப்பையும் சம் பாதித்துக் கொடுக்கும் யதார்த்தமான நிலையாகும்.

பெரும்பான்மை மக்களின் இந்தக் கண் ணோட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உ.பி.யில் குறிப்பிடத்தக்க விகிதத்தில் உள்ள யாதவர் களுக்கு 20 விழுக்காடு உள்ள முசுலிம்களுக்கு மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கட்சி அமைப்பில் கணிசமான அளவுக்குப் பிரதிநிதித்துவம் கொடுப்பது என்று தீர்மானித்துள்ளது.

முசுலிம்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப் பட்டவர்களைக் கணிசமாக ஈர்த்துவிட்டால் ஏற்கெனவே தம் பக்கம் உறுதியாக இருக்கும் 10 விழுக்காடு பார்ப்பனர்களின் வாக்குகளையும் பெற்று, உத்தரப் பிரதேசத்தில் பழம் தின்னலாம் என்று மனப்பால் குடிக்கின்றனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் கூட முசுலிம் பெண்களின் மாநாடு ஒன்றை பி.ஜே.பி. முன்னின்று டில்லியில் கூட்டவில்லையா? (13-7-2008) அம்மாநாட்டில் எல்.கே. அத்வானி என்ன பேசினார்?

முசுலிம்களில் எத்தனை சதவிகிதம் பேர் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முசுலிம்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடு வோம். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்போம் என்று பேசவில்லையா?

தேர்தல் அறிக்கையில் கூட ராமநவமி நாள் பார்த்து வெளியிடும் இந்தக் கூட்டம்தான் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கப் போகிறதாம்!

சிறுபான்மையினர் தங்கள் மதத்தையும், வணங்கும் கடவுள்களையும் கூட இந்திய மயமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அச்சுறுத்தியவர்களின் சந்தர்ப்பவாத வலையில் சிறுபான்மையினர் விழ ஒன்றும் ஏமாளிகளல்ல.

ஒரு குஜராத் கலவரம் நடந்து முடிந்த பிறகு, அதுவும் அந்த நடப்புக்கு மூலகர்த்தாவாகிய நரேந்திர மோடியையே பி.ஜே.பி.யின் பிரதமருக் கான வேட்பாளர் என்ற நிலைப்பாட்டை பி.ஜே.பி. எடுக்கும் ஒரு கால கட்டத்தில், சிறுபான்மை மக்கள் சீறி எழமாட்டார்களா? இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று பி.ஜே.பி.யை மண்ணுடனும், மண்ணடி வேருடனும் கெல்லி எறியமாட்டார்களா?

கல்யாண்சிங், உமாபாரதி போன்ற பிற்படுத்தப் பட்டோர்களைக் கறிவேப்பிலையாக பி.ஜே.பி. பயன்படுத்திக் கொண்டதை பிற்படுத்தப்பட்ட மக்கள் உணரமாட்டார்களா?

எந்தத் தைரியத்தில் சிறுபான்மை மக்களை, பிற்படுத்தப்பட்டோரை தாஜா செய்ய முயற்சி செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

பார்ப்பனிய ஜனதா கட்சியல்லவா! அந்தப் பார்ப்பனத்தனம் அவர்களை விட்டு விலகி ஓடிவிடுமா? வளைய வேண்டிய நேரத்தில் வளைந்து, நெளிய வேண்டிய நேரத்தில் நெளிந்து, குனியவேண்டிய நேரத்தில் குனிந்து தேவைப் பட்டால் கால்களில் சரணடைந்து காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் பரம்பரையாயிற்றே!

2014-இல் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தல்தான் பி.ஜே.பி.யைப் பொறுத்தவரை கடைசித் தேர்தலாக இருக்கப் போகிறது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். வாழ்வா, சாவா என்ற நிலையில், எந்த எல்லைக்கும் சென்று எல்லாவித வேடங்களும் போடுவார்கள்! அவற்றில் மக்கள் ஏமாறாமல் பார்த்துக் கொள்வது மதச் சார்பற்ற சக்திகளின் முக்கிய கடமையாகும்.
17-7-2012

தமிழ் ஓவியா said...

மரணத்திலும் கொள்கையை மணக்கச் செய்த நாராயணசாமி


தஞ்சை, ஜூலை 18- பெரியார் பெருந் தொண்டர் தஞ்சை டி.நாராயணசாமி அவர் கள் 14.7.2012 அன்று அதிகாலை 2 மணிய ளவில் மறைவுற்றார். அவர் தான் இறந்தபிறகு இறுதி நிகழ்ச்சி எப்படி நடக்க வேண்டும் என தனது நான்கு மகன்கள் மற்றும் துணைவியாரி டமும் எழுதி கையொப் பம் பெற்று வைத்துள் ளார்கள் மறைந்த நாரா யணசாமி மறைவை யொட்டி தஞ்சை முனி சிபல் காலனி அவரது இல்லத்தில் இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரங்கல் கூட்டத்திற்கு செயலவைத் தலைவர் இராசகிரி கோ.தங்கராசு அவர்கள் தலைமை யேற்று உரையாற்றி னார். தொடர்ந்து வழக் கறிஞர் சண்முகசுந்தரம், ஓய்வுபெற்ற தலைமை யாசிரியர்சி.தங்கராசு மாவட்டத்துணைத் தலைவர் ப.தேசிங்கு மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் சி.அமர்சிங் பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அ.அருள்மொழி ஆகி யோர் இரங்கலுரை ஆற் றினார்கள். மாலை 5 மணியளவில் தஞ்சை முனிசிபல் காலனியில் உள்ள அவர்கள் இல்லத்தி லிருந்து இறுதி ஊர் வலம் புறப்பட்டது. தஞ் சாவூர் இராவுஜோதி சுடுகாட்டில் அஞ்சா நெஞ்சன் அழகிரி நினை விடத்திற்கு அருகில் எந்தவித மூடச்சடங்கும் இல்லா மல் அடக்கம் செய்யப் பட்டது.

இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றோர் : கழக துணைப் பொதுச்செய லாளர் இரா.குணசே கரன், பெரியார் மணி யம்மை பல்கலைக்கழ கம் துணைவேந்தர் முனை வர் நல்.இராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் த.செகநாதன், கழகப் பேச்சாளர்கள் முனைவர் க.அதிரடி அன்பழகன், இரா.பெரியார்செல்வன், மாநிலமகளிரணி அமைப்பாளர் அ.கலைச் செல்வி மண்டல செய லாளர் மு.அய்யனார், நகரத்தலைவர் வ.ஸ்டா லின், நகரச்செயலாளர் அ.முருகேசன், மாவட்ட ப.க.செயலாளர் கோபு. பழனிவேல் மாவட்ட இளைஞரணி செயலா ளர் இரா.இளவரசன், ஒன்றிய செயலாளர் ஆட்டோ ஏகாம்பரம், மாவட்ட மகளிர் பாசறை ச.அஞ்சுகம், சிகாமணி, முருகம்மாள், பெரியார் பெருந்தொண் டர்கள் தண்டாயுத பாணி, ஆசிரியர் கருப் பையன், மண்டல இளை ஞரணி செயலாளர் நா. இராமகிருஷ்ணன் உள் ளிட்ட ஏராளமான பொதுமக்கள் உறவி னர்கள் பங்கேற்றனர்.

மரண சாசனம்



1. உடலைக் குளிப்பாட்டக் கூடாது
2. தலைமாட்டில், விளக்கு ஏற்றி வைக்கக் கூடாது
3. நெற்றியில் சந்தனம், காசு வைக்கக்கூடாது
4. சாம்பல் பயன்படுத்தக்கூடாது
5. கொட்டு முழக்கு எதுவும் கூடாது
6. எல்லோரும் அழுவதைத் தவிர்க்கவும்
7. எந்தவிதமான மூடச்சடங்கும் செய்யக்கூடாது
8. எரியூட்டல் செய்யக்கூடாது
9. ஒரு கறுப்புச் சட்டையும், வேட்டியும் மட்டும் அணிவிக்க வேண்டும்
10. நகராட்சி வேனில் எடுத்துச் சென்று ராஜகோரியில் இயக்கக்காரர்களைப் புதைக்கும் இடத்தில் புதைத்து விட வேண்டும்.
11. எட்டு, பால், கருமாதி எதுவும் செய்யக் கூடாது
12. இன்னும் துணைவியார் தாலி அணிந்திருப்பதால் அன்றே தாலியை அகற்றிக்கொள்ள வேண்டும்.
13. அதற்கு என்று எந்த ஒரு சடங்கும் செய்யக் கூடாது.
14. பூ, பொட்டு, போன்றவை துணைவியாரின் எண்ணப்படி நடக்கலாம்
15. இயக்கக்காரர்கள் செய்தால் படத்திறப்பு செய்யலாம். (மரணத்திற்கு முன்பாகவே கையொப்பங்களுடன் தயார் செய்து வைத்திருந்த மரண சாசனம் இது)
18-7-2012

தமிழ் ஓவியா said...

விண்வெளி ஆய்வில் அடுத்த கட்டம்!


விண்வெளி ஆய்வு மய்யத்தில் நான்கு மாதம் தங்கி

ஆய்வுகள் செய்வார் சுனிதா வில்லியம்ஸ்

வீழ்ச்சியுற்றது மத மூட நம்பிக்கைகள்!

வாஷிங்டன், ஜூலை 18- மத மூட நம்பிக்கைகள் வீழ்ச்சி அடையும் வண்ணம் விண்வெளி ஆய்வில் அடுத்தடுத்த முன்னேற்றங்கள் காணப்படுகின்றன

விண்வெளியில் நான்கு மாதங்கள் தங்கி ஆய்வு செய்வார் சுனிதா வில்லியம்ஸ்.

அமெரிக்கா, ரஷ்யா உள்பட சில நாடுகள் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சிக்காக ஆகாயத்தில் சர்வதேச விண்வெளி மய்யம் அமைத்துள்ளன. விண்வெளி வீடு என்றழைக்கப்படும் இந்த மய்யத் தில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் சுழற்சி முறையில் இருந்து ஆய்வு செய்து வருகிறார்கள். அமெரிக்காவின் நாசா நிறுவனம் இந்த ஆய்வு மய்யத்துக்கு இந் திய வம்சாவளி வீராங் கனை சுனிதா வில்லி யம்சை அனுப்ப முடிவு செய்தது. அதன்படி நேற்று முன்தினம் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் சுனிதா புறப்பட்டார். கஜகஸ்தான் நாட்டில் இருந்து சென்ற அவருடன் ஜப்பான் விஞ்ஞானி அகிகிகோ மற்றும் ரஷ்யா விஞ்ஞானி யூரி ஆகியோரும் சென்ற னர்.

2 நாள்கள் பயணத்துக்கு பிறகு அவர்களது விண்கலம் நேற்று காலை சர்வதேச விண்வெளி மய்யத்தை நெருங்கியது. இந்திய நேரப்படி நேற்று காலை 10.21 மணிக்கு சோயுஸ் விண்கலம் ஆய்வு மய்யத்தை சென் றடைந்தது. இதையடுத்து சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட மூன்று பேரும் ஆய்வு மய்யத்துக்குள் சென்றனர். அந்த ஆய்வு மய்யத்தில் ஏற்கெனவே 32 ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.

அவர்களுடன் சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் இணைந்தனர். அவர்களை ஆய்வு மய்யத்தினர் வரவேற்றனர். சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மய்யத் துக்கு சென்றிருப்பது இது 2 ஆவது முறையாகும். கடந்த முறை அவர் 6 மாதம் விண்வெளியில் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். அது இன்றுவரை முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது. இந்த நிலையில் இந்த முறை 4 மாதம் தங்கியிருந்து சுனிதா ஆய்வுகள் செய்யவுள்ளார். இந்த காலக் கட்டத்தில் சுனிதா விண்ணில் நடந்து ஆய்வு செய்ய இருக்கிறார். விண்வெளி வீட்டில் இருந்தபடி லண்டன் ஒலிம்பிக் போட்டி களை கண்டுகளிக்க திட்டமிட்டுள்ள அவர், அங்கிருந்தபடி அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க உள்ளார். 18-7-2012

தமிழ் ஓவியா said...

ஜூனியர்விகடன் பார்வையில்....

சுயமரியாதைத் திருமணம்
தத்துவமும் வரலாறும்

கி.வீரமணி, திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7 , விலை ரூ. 130

செட்டிநாடு கோட்டை யூரைச் சேர்ந்த ராம.அழ. சிதம்பரம் திருவண்ணா மலையைச் சேர்ந்த ரங்கம் மாள் இருவருக்கும் சுய மரியாதை முறைப்படி திரு மணம் நடத்தி வைத்தார் பெரியார். அவர்களுக்கு இரண்டுஆண்கள், இரண்டு பெண்கள் என நான்கு குழந்தைகள். 20 ஆண்டுகள் கழிந்த பிறகு சிதம்பரம் குடும்பத்தின் பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்கு ஒன்று போடப்பட்டு அதன் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் தீர்ப்பு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜகோபாலன், சத்திய நாராயணராவ் கொண்ட பெஞ்ச், அதிர்ச்சித் தீர்ப்பைக் கொடுத்தது.

குறிப்பிட்ட இந்தத் திருமணம் சுயமரியாதைத் திருமணம் என்று கூறப்படுகிறது. இது சாஸ்திரங் களின்படி நடைபெறவில்லை. எனவே, இது இந்துச் சட்டப்படி செல்லத்தக்க திருமணமே இல்லை. யாரோ சிலர் கூடி தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நாங்கள் இந்தத் திருமணம் நடத்துகிறோம் என்று கூறிச் செய்ய, அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இவர்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் அனைவரும் சட்டப்படியான பிள்ளைகளாகவே கருதமுடியாது என்று அளித்த தீர்ப்பு அந்த நான்கு குழந்தைகளை மட்டுமல்ல. இதே முறைப்படி திருமணம் செய்து கொண்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களையும் நடுத்தெருவில் கேள்விக்குறியாக நிறுத்தியது.

ஆனால், சாஸ்திரம், சடங்குகள் இல்லாமல் செய்யப்பட்ட திருமணங்கள் செல்லும் என்பதை மத்திய அரசாங்கம் கொண்டு வந்த ஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட், அண்ணா முதல்வராக இருந்தபோது கொண்டுவந்த சுயமரியாதைத் திருமணச் சட்டம் ஆகியவை பிற் காலத்தில் இதற்கு சட்ட ரீதியாகப் பாதுகாப்பளித்தன. இதன் மூலமாக சமூக சீர்திருத்த இயக்கம் ஒன்றின் தத்துவம் ஆட்சி நெறிமுறையாக மாறியது. இந்த வரலாற்றை பல்வேறு ஆவணங்களின் மூலமாக அடுக்கி உள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. இதை எழுதுவதற்கு இயக்க ஆர்வம் மட்டுமல்ல, சொந்த குடும்ப ரீதியான பிணைப்பும் வீரமணிக்கு இருக்கிறது. சிதம்பரம்-ரங்கம்மாளுக்குப் பிறந்த பிள்ளைகள் சட்டரீதியானவை அல்ல என்று நீதி மன்றம் தீர்ப்பளித்தது அல்லவா? அந்த பிள்ளைகள் நால்வரில் ஒருவரான மோகனாதான் வீரமணியின் மனைவி.

அருப்புக் கோட்டையில் 1928இல் நடந்த ஒரு திருமணம்தான் முதல் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லப்படுகிறது. அதை நடத்தி வைத்த பெரியார் சென்றதும், அப்போது நடந்த காட்சிகளும் இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்படுகின்றன. அவர்களது குடும்பத்துப் பெயரன், பெயர்த்திகள் பிற்காலத்தில் கொடுத்த பேட்டிகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. இந்த முதல் சுயமரியாதைத் திருமணம், கடவுளை நம்பி நடந்துள்ளது. தம்பதிகளுக்கு மேன்மேலும் ஆண்டவன் அருள் சுரக்குமாறு எல்லாம் வல்ல இறைவனை எல்லோரும் வேண்டி அவரவர் ஊருக்கு விடைபெற்றுக் கொண்டு போயினர். சுபம். என்று முடிகிறது அப்போதைய குடிஅரசு பத்திரிகை செய்தி. இதன்படி பார்த்தால் கடவுள் மறுப்புக்கு முன்னதாகவே சாஸ்திர, சடங்கு எதிர்ப்புதான் முக்கியமானதாக பெரியார் நினைத்துள்ளார்.

சடங்கு, சம்பிரதாயம் இல்லாததுதான் சுய மரியாதைத் திருமணம் என்று பலரும் நினைக் கிறார்கள். வீண் செலவு, அதிக ஆடம்பரம், நீண்ட நேரம் நடப்பது - போன்றவற்றையும் தவிர்க்க வேண் டும் என்று பெரியார் வலியுறுத்தினார். வாழ்த்துரை என்ற பெயரால், மணிக்கணக்கில் இன்று திருமணங் கள் நடக்கின்றன. ஆடம்பரத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். இவை இந்தத் தத்துவத்தின் அடிப் படைக்கே விரோதமானவை என்று புரிய வைக்கிறது இந்தப் புத்தகம்.
- புத்தகன்

(நன்றி: ஜூனியர் விகடன் 22-7-2012)

தமிழ் ஓவியா said...

பெரிய - வாள் சொன்ன பெரியார்


ஆனந்தவிகடன் இதழில் சு.சாமி யின் பேட்டிகள் வந்து கொண்டு இருக்கின்றன. அதில் ஒரு கேள்வி. நீங்கள் யாரை அதிகம் நேசிக் கிறீர்கள்? என்ற கேள்விக்கு காஞ்சி மகாபெரியவரை என்று பதில் சொல்லியுள்ளார்.

அவர் அப்படித்தான் சொல்லு வார். பார்ப்பனர்கள் வேறு யாரைத் தான் சொல்லுவார்கள்?

உத்தரப் பிரதேசம் கான்பூரில் சு.சாமி முன்னின்று ஒரு பார்ப்பன மாநாட்டையே நடத்தியவராயிற்றே!

பிராமண சுயாபிமான் அந் தோலன் சமிதி என்ற அமைப்பு தான் என்றாலும் (1995 பிப்ரவரி) அதன் முதுகெலும்பாக இருந்து பல பகுதிகளில் இருந்தும் பார்ப்பனர் களைக் கொண்டு வந்து சேர்க்க மிகவும் பாடுபட்டவர் சு.சாமிதான் என்று இந்துஸ்தான் டைம்ஸ் (8-2-1995) ஏடு வெளியிட்டுள்ளதே!

அப்படிப்பட்டவர் காஞ்சிப் பெரிய-வாளைத்தான் நேசிப்பார்.

இந்த நேரத்தில் இன்னொன் றையும் நாம் நினைவூட்ட வேண்டும். ஒரு முறை இதே சு.சாமி இதே காஞ்சி - பெரியவாளிடம் நான் யாரைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று கேட்டபோது, பெரியாரைப் பின்பற்று என்று சொன்னதாக இதே சு.சாமி சொன்னது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் வெளிவந்த துண்டே! அதையும் ஆனந்த விகடன் பேட்டியில் சு.சாமி சொல்லி இருக்கலாமே!

அடிக்குறிப்பு: இந்தச் சு.சாமி பற்றி கலைஞர் சொன்னது ஒரு மன நோயாளி! இராமகிருஷ்ண ஹெக்டே சொன்னதோ - கழிவறைச் சுவர் களில் ஆபாசப் படங்களை வரை கின்ற மனநோயாளி!

ஆகக் கூட்டிக் கழித்துப் பார்த் தால் இருவரும் சொன்னது மனநோயாளி என்பதே! 19-72012

தமிழ் ஓவியா said...

நடிகைகளுக்கு கடவுள் பக்தி

சினிமா நடிகைகள் சிலருக்கு ஆன்மீகத்தின் மீது நாட்டம் ஏற் பட்டு, கோயில்கள் கூட கட்டு கிறார்களாம் - வார இதழ் ஒன்று ஒரு பட்டியலையே வெளியிட் டுள்ளது.

சினிமா உலகில் திருமணம் - விவாகரத்து - இத்தியாதி இத்தி யாதி நடப்புகள் எல்லாம் சர்வ சாதாரணம்தான். இப்படி வாழ்க் கையையே தீர்மானித்துக் கொள்ள முடியாதவர்கள் தடுமாற்றத்தின் காரணமாக எதையாவது ஒரு பிடிமானம் என்று கருதி, குளிக்கப் போய் சேற்றில் விழுந்த கதைதான் இது.

இமயமலைச் சாரல் என்றும், பாபா என்றும் ஓடித் திரியும் ஆனானப்பட்ட ரஜினிகாந்தே என்ன சொன்னார் தெரியுமா?

எல்லாம் தெய்வச் செயல், கடவுளே எல்லாம் பார்த்திருப்பா ருன்னு விட்டிருந்தா நான் இன்னும் கண்டக்டராகவே இருந்திருப்பேன். அந்தச் சூழ்நிலையில் உத்தியோ கத்தை விட்டுவிட்டு தைரியமாக சென்னைக்கு வந்து, ஒரு வாசல்ல காத்திருந்தது என் முயற்சிதான் - (ராணி 20-7-2008) என்று இதே ராணிதான் செய்தி வெளியிட்டி ருந்தது.

பக்தி என்பது ஒரு மனநோய் அவ்வளவுதான். தன்மானக்காரனி டத்திலும், தன்புத்திக்காரனிடத்தி லும் இந்நோய் அண்டாது - அண் டவே அண்டாது! 19-7-2012

தமிழ் ஓவியா said...

வசீகரப் புன்னகை தவழும் மோனாலிசாவின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

லண்டன், ஜூலை 19- வசீகரப் புன்னகை தவழும் மோனாலிசா ஓவியம் வரைவதற்கு மாதிரியாக (Model) இருந்த லிசாகெரார்டினி என்பவரின் எலும்புக்கூடுகளைக் கண்டு பிடித்துள்ளதாக தொல் பொ ருள் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இத்தாலி நாட்டின் ஃபிளாரன்ஸ் நகரில் உள்ள ஒரு கல்விக் கூடத்தின் (கான்வென்டின்) தரையில் புதைக்கப் பட்டிருந்த எலும்புக் கூட்டினை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பிரான்செஸ்கோ டெல் ஜியோ காண்டோ என்ற செல்வந்தரான ஒரு பட்டாடை வணிகரின் மனைவி இந்த லிசா என்பவர். புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தில் காட்சி தரும் பெண் அவர்தான் என்பதை பெரும்பாலான நவீன வரலாற்றாசிரியர்கள் ஒப்புக் கொள்கின்றனர். அவரது கணவர் இறந்தபிறகு அவர் கிறித்துவ சமயப் பணி ஆற்றுபவராக ஆகி விட்டார். செயின்ட் உருசுலா கல்விக் கூடத்தில் (கான்வென்டில்) 1542 ஜூலை 15 ஆம் தேதியன்று அவர் இறந்து போனார்.

கைவிடப்பட்ட அந்த கல்விக் கூடத்தில் ஒரு தொல்பொருள் ஆய்வுக் குழுவினர் தோண்டத் தொடங்கினர். லிசா இறுதியில் தங்கியிருந்தது என்று நம்பப்படும் நிலவறையைக் கண்டு பிடித்த அவர்கள் அங்கிருந்து ஒரு வளர்ந்த பெண்மணியின் மண்டை ஓட்டைக் கண்டு பிடித்தனர். கல்விக் கூடத்தின் தரையில் இருந்து 5 அடி ஆழத்தில் அது கண்டெடுக்கப் பட்டது. அத்துடன் மனித மார் பெலும்புகளும், முதுகெலும்புகளும் கூட கண்டெடுக்கப்பட்டன.

கடந்த வாரம் மறுபடியும் தோண்டத் தொடங்கிய போது, ஒரு மனித எலும்புக்கூட்டைக் கண்டு பிடித்தனர். அந்த எலும்புகள் கடந்த ஆண்டு கிடைத்த தலையுடன் ஒத்திருக் கிறதா என்பதைக் கண்டுபிடிக்க மரபணு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரபணு, லிசாவின் இரு குழந்தைகளின் எலும்புகளின் மரபணுக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும்.

இந்த எலும்புக்கூடு மற்றும் மண்டைஓட்டின் தோற்றம் பற்றி அறிவியலறிஞர்கள் சரிபார்த்தவுடன், மரபணு சோதனையாளர்கள் லிசா வின் முகத்தை உருவாக்க முயல்வர் ; அவ்வாறு உருவாக்கப்பட்டவுடன் அது டாவின்சியின் ஓவியத்துடன் எவ்வாறு ஒத்திருக்கிறது என்பதைக் காண முடியும் என்று கூறப்படுகின்றது. 19-7-2012

தமிழ் ஓவியா said...

கவுதம புத்தர் ஒரு நாத்திகர்


உலகில் தோன்றிய சிந்தனையாளர்கள் வரி சையில் புத்தர் சிறப்பிடம் வகிக்கிறார். இன்று தமிழினத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நாத்திகக் கருத்துகளுக்கு எவ்வாறு புத்தர் கொள்கைகள் முன்னோடியாக திகழ்ந்தது என்பன பற்றி அறிய போதி மாதவன் சரித்திரம் என்னும் நூல் உதவும். அதில் புத்தரின் அறிவுரைகளை அப்படியே வெளியிட்டுள்ளனர்.

கடவுள் மறுப்பு

தெய்வங்களை நினைத்து இரங்கி ஏங்குவதில் பயனில்லை. பிரம்மனே இவ்வுலகை படைத்தான் எனில், இதை ஏன் இவ்வளவு துயரத்தில் ஆழ்த்தி வைக்க வேண்டும். (பக்கம் 73)

புனிதம்

தண்ணீரைத் தெளித்து விட்டு இது புனிதத்தலம் என்று கூறுவதால் ஓர் இடம் புனிதமாகி விடாது. புனிதத்தன்மை இதயத்தைப் பற்றிய உணர்ச்சி யேயாகும். தண்ணீரால் பாவத்தை கழுவ இயலாது (பக்கம் 108)

மனிதன் மயக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் மீன் புலால் முதலிய உணவுகளை விலக்குவதாலோ அம்மணமாக அலைவதாலோ, தலையை மழிப்பதாலோ, அக்கினிக்கு ஆகுதிகள் செய்வதாலோ அவன் பரிசுத்தமாகி விடமுடியாது.

ஆன்மா மறுப்பு

உடல் ஆன்மாவற்றது. பிக்குகளே; உடலே ஆன்மாவாயிருந்தால் இந்த உடல் நோய்க்கு உட்படாது. (பக்கம் 186)

உடலின் தோற்றத்தின் போது உள்ளே புகுந்து கொண்டு, அது மடியும் போது வெளியேறும் ஆன்மா ஒன்று இல்லையென்று அவர் (புத்தர்) மறுத்துள்ளார் (பக்கம் 188)

சுவர்க்கம் - நரகம்

நீருள் நின்று தவம் புரிவதால் சுவர்க்கம் கிடைக்கும் என்றால் மீன்களே முதலில் சுவர்க்கத்திற்கு உரியவை (பக்கம் 108)
பலியிடும் உயிர் உடனே சுவர்க்கம் செல்வதானால், ஒருவன் முதலில் தன் தந்தையையே பலியாக்கி அனுப்பி விடலாமே (பக்கம் 125)

பிரார்த்தனை

பிரார்த்தனை செய்து என்ன பயன்? இது வெளுத்துவிடாது. தெய்வங்களை வேண்டி உயிர்ப் பலி இடவேண்டாம். பண்டம் பழங்கள் வைத்து பூஜை செய்து பலனை எதிர்பார்த்து இருக்க வேண்டாம். (பக்கம் 233)

பொது உடைமை

செல்வர்களுடைய வானளாவிய மாளிகைதான் துயரத்தின் இருப்பிடம் 20-7-2012

தமிழ் ஓவியா said...

மனுதர்ம நூலை அம்பேத்கர் எரிக்கச் சொல்கிறார்


சிலவற்றைத் தீர்த்துக் கட்ட வேண்டுமென்பதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே மனுஸ்மிருதி.

அநீதிகளைச் செய்தாவது சிலவற்றை அழிக்காவிட்டால் பார்ப்பன இனம் அழிந்து போகும் என்றெண்ணி, அதற்காகச் சிதறி - ஒற்றுமையின்றிக் கிடந்த பார்ப்பனர்களை ஒன்று திரட்டி, சதி வேலைகளை நரித் தந்திரத்தின் மூலம் செய்து முடிப்பதற்காக விடப்பட்ட அறைகூவல் தான் மனுஸ்மிருதி.

சிதைந்த ஒற்றுமையை மீட்க அவ்வப்போது இதுபோன்ற முயற்சிகள் நடைபெறுவது வரலாற்று உண்மை. முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்கிற பழமொழிக்கேற்ப, மிக மிக முயன்று, புதிய கொடுமையான பார்ப்பன (அ)நீதியை உருவாக்கியவன் மனு.

இந்த மனுஸ்மிருதி, நீதியும் நேர்மை மிக்கத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. அப்படிப்பட்ட நீதி நூலை உருவாக்குமளவுக்கு அவன் (மனு) ஒரு சமூகவியல் அறிஞனும் அல்ல. அவன் ஒரு அயோக்கியன்.

ஒரு குலத்துக்கொரு நீதி வழங்கும் இந்த மனுஸ்மிருதி தீ வைத்துக் கொளுத்தப்பட வேண்டும். மீளமுடியாக் கொடுமைச் சேற்றில் எங்களை புதைக்க எண்ணிய மனுஸ்மிருதியை, உயிரைப் பணயம் வைத்தாவது ஒழித்துக் கட்டியே தீர வேண்டுமென்று நாங்கள் முடிவு செய்தது இதனால் தான்.

அம்பேத்கர் சிந்தனைகள் என்ற நூலிலிருந்து 20-7-2012

தமிழ் ஓவியா said...

கடவுள் ஒருவர் இருக்கிறாரா?


கடவுளை நம்பும் முட்டாள்களே!

அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரே உலகைப் படைத்து, காத்து, நடத்தி வருகிறார். அவரன்றி ஒரு அணுவும் அசையாது, அவரே உலக நடப்புக்குத் காரணஸ்தர் ஆவார் என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே! கடவுளால் உலகத்திற்கு, மனித சமுதாயத்திற்கு, ஜீவகோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?

கடவுள் இருக்கிறார் என்றால், ஜீவன்களுக்கு பசி, தாகம், புணர்ச்சி, உணர்ச்சி, ஆசை, கவலை, நோய், வேதனை, சாவு முதலியவை ஏன் ஏற்பட வேண்டும்?

பிறப்பு, சாவு, தோற்றம், அழிவு எதற்குத் தேவை? இவைகளால் உலகமோ, மக்களோ அடைகிற லாபம் என்ன?

கடவுள் தோன்றி எத்துணையோ காலம் ஆகியும் எத்துணையோ காலமாக மக்கள் கடவுளை நம்பியும், வணங்கியும் வந்தும், யோக்கியனாகவோ கவலையற்றவனாகவோ ஒரு மனிதனைக் கூட காண முடியவில்லையே, ஏன்?

- தந்தை பெரியார் (உண்மை, 14.7.1970

தமிழ் ஓவியா said...

மதம் தேவையா?


மதத்தைக் காப்பாற்றவே கோளல்களும், சொத்துக்களும், அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா?அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா? நீங்காதா? என்பதைத்தான் கவனிக்கவேண்டும்.

பெரியார்-(விடுதலை, 3.12.1962

தமிழ் ஓவியா said...

அய்யா பெரியார் வரலாற்று நாயகன்


வடநாட்டில் எத்தனையோ மதக் கலவரங்கள் நடக் கின்றன. ஆனால், தென்னிந்தியாவில் நடப்பதில்லை. அப்படி நடக்காமல் இருப்பதற்கான விதையை ஊன்றி யவர் பெரியார்தான். நான் இஸ்லாமியன். இறை நம்பிக்கை உள்ளவன். ஆனால், மூட நம்பிக்கை களை எதிர்ப்பவன். அவர் வரலாற்று நாயகன் என்பதில் சந்தேகமே இல்லை. திரைப்பட இயக்குநர் அமீர் - (குமுதம் ரிப்போர்ட்டர், 12.7.2012)

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


நாம் செய்றது நல்ல காரியமா இருந்தாப் போதும். பக்தனா இருக்கிறத விட யோக்கியனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிக்கிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா? என்று கேள்வி எழுப்பிய பகுத்தறிவாளர் பெருந்தலைவர் காமராஜர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

மாலை ஆறு மணிக்கு மேல் தலையை விரித்துப் போடக் கூடாது என்று எண்ணும் ஃபேமிலியில் இருந்து வந்தவள் நான். ஆனால், யுத்தம் செய் படத்துக்காக மொட்டை அடித்தேன். அதனால் என்ன ஆனது? ஒரு காலத்தில் தாலி என்றால் புனிதம் என்று நினைத்தேன். ஆனால் அந்த மதிப்பு இப்போது இல்லை. கழுத்தில் தாலி ஆபரணம் என்ற அளவில் மட்டுமே இருக்கிறது. நான் நடிக்கும் கேரக்டரில் தாலி இருக்கக்கூடாது என்றால், தாலியைக் கழற்றத்தான் வேண்டும். உண்மையான அன்பு மனத்தில் இருக்கும் போது இதெல்லாம் தேவையில்லாத சென்டிமெண்ட்.
_ நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

தமிழ் ஓவியா said...

பெரியாரின் தொண்டு வியந்த அமெரிக்கப் பேராசிரியை


அமெரிக்காவின் பாஸ்டன் அருகில் உள்ள (Studbury) ஸ்டட்பர்ரி என்ற சிறு நகரத்தில் அமைந்துள்ள பிரபல ஆங்கிலக் கவிஞர் ஹென்ரி வேர்ஸ்ஒர்த் லாங்பெல்லோ (H.W.Longfellow) அவர்கள் பெயரில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவத்துடன் அமைக்கப்பட்டுள்ள லாங்க்பெலோ இன் (Longfellow Inn) உணவகத்தில், World Teach உலக நாடுகளுக்கு ஆங்கிலத்தினை நன்கு எழுதப் பேச உதவிடும் அமைப்பின் நிர்வாக இயக்குநர் பேராசிரியை ஹெலன் கிளாரி செலிவெர்ஸ் (Helan Clariessievers) நமது உண்மை ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு சிறப்பான மதிய உணவுக்கொப்ப சிற்றுண்டி விருந் தினை (Breakfast) 8.7,2012 ஞாயிறு காலை 9.30 மணி அளவில் கொடுத்து வரவேற்றார். சுமார் ஒன்றரை மணி நேரம் - பெரியார் கல்வி நிலையங்கள், தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்களின் சீரிய சமூகப் புரட்சித் தொண்டு பற்றியும் பாராட்டி, ஊக்கமூட்டும் வகையில் கலந்துரையாடினார்.

சென்னை, திருச்சி, தஞ்சை கல்வி நிறுவனங்களை பெரியார் அறக்கட்டளைகள் நடத்துவதை நேரில் வந்து பார்த்து ஆய்வு செய்த அந்த அம்மையார் (இவர் ஹார்டு வேர்டு பல்கலைக்கழக அமைப்பில் உள்ள உலக நாடுகளுக்கு ஆங்கில ஆசிரியர்களை அனுப்பி உதவும் தொண்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆவார்). நமது நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் உயர் நிலைப் பள்ளி - குழந்தைகள் இல்லம் குழந்தைகள் பயன்படும் வகையில் ஆசிரியைகளை அனுப்பியுள்ளார். நமது இயக்கம், சமூகப் புரட்சியை அமைதியான வழியில் நடத்தி வருகிறது என்றும் இந்திய அரசியல்வாதிகள் பெரியார், காந்தி போன்ற தலைவர்களைப் பின்பற்றி தங்களின் நாட்டில் ஒரு புதிய சமூகத்தை அமைக்கலாம் என்று கூறினார். கி.வீரமணி அவர்களுடன் அசோக்ராஜ் அவர்களும் சென்றிருந்தார். பெரியார் உலகமயமாகி வருவதற்கு இது ஒரு அருமையான சான்று ஆகும்.

இச்சந்திப்பு குறித்து அசோக்ராஜ் அவர் களுக்கு பேராசிரியை ஹெலன் கிளாரி செலிவெர்ஸ் மின்னஞ்சலில் அனுப்பியுள்ள கடிதத்தில், மகிழ்ச்சியெல்லாம் என்னுடையதே! அன்று காலை உணவு அருந்திய நிகழ்ச்சி எனக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. நீங்கள் இருவரும் கூறியவை அனைத்தும், நீங்களும் உங்கள் தந்தையும், சகோ தரரும் செய்துவரும் நற்செயல்கள் அனைத்தும் மிகுந்த ஆர்வமும் தூண்டுதலும் அளிப்பதாக இருந்தன. என்னை சந்தித்துப் பேச டாக்டர் வீரமணி முன்வந்ததை நான் மிகவும் பாராட்டுகிறேன் எனக்காக அவரிடம் எனது நன்றியைத் தெரிவிக்கவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கையும், உணவுப் பொருளும்


- திருமதி.வாசுகி திருவள்ளுவர்

இந்தியா இன்னும் ஏன் வல்லரசாகவில்லை, லண்டன் பத்திரிகையில் படித்தவை, மூடநம்பிக்கையினால் உணவுப் பொருள்களை வீணடிக்கின்றனர்.

முதலாவது, எலுமிச்சம் பழம். அது படும்பாடு மிகவும் சுவாரசியமானது. அதை இரண்டாக வெட்டி குங்குமத்தை தடவி வாசற்படி இரு மருங்கிலும் வைத்தல், மனிதனை முன்நிறுத்தி எலுமிச்சையை காலால் நசுக்கி அதை நாலாப் பக்கமும் பிய்த்து எறிதல், மாலையாக கட்டி காயும் வரை நிலையில் கட்டி தொங்க விடுதல், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தின் சக்கரங்களில் வைத்து நசுக்குதல், வாகனத்தின் முகப்பில் மாலையாக தொங்க விட்டு திருஷ்டி கழித்தல், தற்சமயம் கடைகளில் கண்ணாடி குவளை நீரில் மிதக்க விடுதல்.

இரண்டாவது, தேங்காய். இதை சூரைத் தேங்காய் என்று வீதியில் போட்டு உடைத்தல். இது சிதறி மண்ணோடு கலந்து யாருக்கும் பயன்படாமல் செய்வது. மேலும் வாகனங்களின் டயர்களை குத்தி சேதப்படுத்துகிறது. மலையாளிகள் தென்னம்பாளையை வெட்டி குவளை (உலோகப் பானையில்) வைத்து அனைத்து விழாக்களிலும் வைக்கின்றனர். அது தேங்காயை கருவிலேயே அழிப்பதாகும்.

மூன்றாவது, பூசணிக்காய் காய்கறிகளிலேயே மிகவும் சத்துள்ளது. மிகவும் குளிர்ச்சியானது. அதை நடு வீதியில் போட்டு உடைத்தல் அல்லது அதில் விகாரமான உருவத்தை வரைந்து நிலையில் கட்டி தொங்க விட்டு அழுகச் செய்வது. நடுவீதியில் போட்டு உடைப்பதால் அதன் மீது ஏறும் வாகனங்கள் சறுக்கி நிறைய விபத்துகள் உண்டாகின்றது. மேலம் பூசணிப் பூக்களை பறித்து சாணியில் சொருகி வைத்து கருவிலேயே அதை அழித்து அழகு பார்க்கின்றனர்.

தினமும் சூடம் (கற்பூரம்) கொளுத்தும் பக்தர்கள் அது வலிநிவாரணி மற்றும் தேமலுக்கு தயாரிக்கும் மருந்து என்று தெரியாமல் வீணடிக்கின்றனர். அதை வெளிநாட்டினர் மருந்தாக்கி இந்தியரிடமே ஒரு குப்பி 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்கின்றனர்.

ஆடி மாதமானால் வேப்ப மரங்களை மொட்டையாக்கி விடுகின்றனர் அம்மன் பக்தர்கள். வேப்பிலை ஆடை அணிந்து கற்கால மனிதனாகின்றனர். அந்த வேப்பக் கொட்டையை எடுத்து வெளிநாட்டினர் பல நோய் எதிர்ப்பு மருந்துகளை தயாரிக்கின்றனர்.

அபிஷேகம் என்ற பெயரில் கற்சிலைகளுக்கு பால், தேன், நெய், தயிர், இளநீர் ஆகியவற்றை ஊற்றி வீணடிக்கின்றனர்.

யாகம் என்ற பெயரில் நெய், பொரி போன்ற உணவுப் பொருள்களையும் விலையுயர்ந்த பட்டுத் துணிகளையும் தீயில் போட்டு பொசுக்குகின்றனர்.

கடவுளை வழிபடும் பக்தர்கள் சிந்தித்தால் இதைத் தவிர்க்கலாம். மற்றவர்களுக்கு இக்கருத்தைத் தெளிவுபடுத்தினால் இந்தியாவின் பொருளாதாரத் தையும், நிதியையும் பெருக்கலாம். விலைவாசியைக் கட்டுப்படுத்தி அரசாங்கத்தைக் குறை கூறுவதைத் தவிர்க்கலாம். இப்படி பக்தியின் பெயரால் உணவுப் பொருள்களை வீணடிக்காமல் இருந்தால் நாமும் நம் நாட்டை வல்லரசாக்கலாம் என்று நம்புவோமாக.

தகவல்: சேக்கிழான், சென்னை _ 81.

தமிழ் ஓவியா said...

தகவல் களஞ்சியம்


இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது தெரியும். இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?

டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள்.

அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும். அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும், டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும், நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும், எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது ஆகும். சரி...உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்று தெரிந்துவிடும். -பெரியார் பிஞ்சு- ஜூலை 2012

தமிழ் ஓவியா said...

கலைவாணரும் கலைஞரும்


மணமகள் படத்துக்கு கதை வசனம் எழுத வேண்டும் என்று என்னைக் கேட்பதற்காக சேலத்துக்கு வந்துவிட்டார் என்.எஸ்.கிருஷ்ணன். திரைக்கதை வசனத்திற்கு எவ்வளவு தரவேண்டும் என்று கேட்டார். நீங்களே முடிவு செய்யுங்கள் என்றேன். ஒரு அட்டையில் 00001 என்று எழுதிக் காட்டினார் கலைவாணர், நான் அந்த அட்டையைத் தலைகீழாகக் காட்டினேன். அதாவது பத்தாயிரம் அந்த நகைச்சுவையை அவரே ரசித்து முன் பணத்தைக் கொடுத்தார்.

கலைவாணர் வீட்டு மாடியில் நான் தனியாக அமர்ந்து மணமகள் படத்துக்குத் திரைக்கதை வசனம் எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதுகிற வேகத்தில் எழுதப்பட்ட தாள்களை ஒழுங்காக அடுக்கி வைக்காமல் அவை காற்றில் பறந்து மாடி முழுவதும் சிதறிக்கிடக்கின்றன. அந்தத் தாள்களை கலைவாணரே அடுக்கி வைக்கிறார். என்ன நீங்களா? என்று கேட்கிறேன் ஆம், கம்பன் எழுதியபோது இப்படித்தான் சோழமன்னன் பின்னால் இருந்து அடப்பக்காரன் போல் தாம்பூலம் கொடுத்தான் என்று கூறுகிறார் கலைவாணர்.

நீங்கள் சோழ மன்னனாக இருக்கலாம். ஆனால் நான் கம்பன் அல்ல என்று பதிலளித்தவாறு அவரைத் தழுவிக் கொள்கிறேன் நான்! -_ டாக்டர் கலைஞர். (டாக்டர் கலைஞர் புகைப்பட ஆல்பம் நூலிலிருந்து... மு.அன்புக்கரசன், பெரியகுளம்)