Search This Blog

9.7.12

இவன்தான் விஷ்ணு - பெரியார்

மகாவிஷ்ணு என்று அழைக்கப்படும் கடவுள் பற்றி சிந்திப்போமானால், இவன் (விஷ்ணு) மனித சமுதாயத்தில் சிறிது நாகரிகம் ஏற்பட்ட பிறகு கற்பித்துக் கொண்ட கடவுளாகும். அதிலும் பாரதகால விஷ்ணுவுக்கும், இராமாயண கால விஷ்ணுவுக்கும் அதிக பேதமுண்டு. அதாவது பாரதகாலம் இராமாயணக் காலத்தைவிட முந்திய காலமாகும். பாரத காலத்தில் கற்பு என்பது பழக்கத்தில் முக்கியத்துவம் பெற்று இருக்கவில்லை.

இந்த விஷ்ணுவின் உற்பத்திக்கு ஒரு குறிப்பிட்ட தன்மையோ, காலமோ கண்டுபிடிக்க முடியவில்லை. என்றாலும், நடை, உடை, பாவனைகளில் சிறிது நாகரிகம் காணப்படுகின்றது. விஷ்ணு என் னும் கடவுள் நகரத்திற்குள் நகர வாழ் வோடு ஆடம்பரமான தன்மையோடு கற்பிக்கப்பட்டிருக்கிறதுடன், சிவன் கற்பிதம்போல அவ்வளவு முட்டாள்தனம் கற்பிக்காமல் விஷ்ணு சிறிது அறிவாளியாகவும், தந்திரசாலியாகவும் கற்பிக்கப்பட்டிருக்கிறது.

சிவனை எடுத்துக் கொண்டால் அவன் பிள்ளைகள் கணபதி, கந்தன் என்பவைபோல், விஷ்ணுவை எடுத்துக் கொண்டால் அவனது அவதாரங்களைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த அவதாரங்கள் ஒழுங்காக கற்பிக்கப்பட்ட தாகச் சொல்ல முடியாது. அதாவது அவதாரம் பத்து எடுத்ததாகச் சொல்லி ஒன்பது அவதாரங்கள்தான் கற்பிக்கப்பட் டிருக்கின்றன. அந்த ஒன்பதும் ஆரிய - திராவிடப் போராட்டங்களையே கருத்தில் கொண்டு கற்பிக்கப்பட்டிருக்கின்றன.

என்றாலும், அவற்றில் இரண்டு அவ தாரங்களைத்தான் முக்கியப்படுத்தி முக்கியமான கடவுளாகவும் ஆக்கப்பட் டிருக்கின்றன. அதாவது, சிவன், மூலக்கடவுளாகவும் அவன் பிள்ளைகள் கணபதி கந்தன் முக்கிய கடவுள்களாகவும், நடராஜன், சோமசுந்தரம், அண்ணாமலை, ராமனாதன் முதலியவை உபகடவுள்களாகவும் கற்பித்துக் கொண்டனர்.

அதுபோலவே, வைணவர்களும் விஷ்ணு என்பதை மூலக் கடவுளாகவும், கிருஷ்ணன், இராமன் என்பதை - அவதாரங்களில் இரண்டை மாத்திரம் அதாவது கிருஷ்ணன், ராமன் என்பவற்றை முக்கிய கடவுள்களாகவும், ஸ்ரீரெங்கநாதர், வெங்கடாஜலபதி, வரதராஜன் முதலியவற்றை உபகடவுள்களாகவும் கற்பித்துக் கொண்டார்கள். இவையெல்லாம் நல்ல நாகரிகம் ஏற்பட்ட காலத்தில் உண்டாக்கிச் சொல்லப்பட்டவை என்றாலும் இவற்றில் கூறப்படும் கதைகள் மிகமிகக் காட்டு மிராண்டித்தனமான முட்டாள்தனம் கொண்டவையே.

பிரம்மா

மூன்றாவதான பிரம்மா என்னும் கடவுள் பயனற்ற - பிரபலமற்ற கற்பனைக் கடவுளேயாகும். அதற்கு எந்தவித முக்கியத்துவமும் கிடையாது.

பிரம்மாவை சிவன் கற்பித்தான், பிரம்மாவை விஷ்ணு கற்பித்தான், சிவன் விஷ்ணுவை, பிரம்மாவைப் பிறப்பித்தான் என்பது போன்ற முழுமுட்டாள்தனமான கட்டுக்கதைகள் ஏராளம் உண்டு. இவர் களது மனைவிமார்கள் பற்றி அசிங்க ஆபாசக் கதைகள் ஏராளம் உண்டு.

இவை தவிர, சிறு தெய்வங்கள் என் னும் பேரால் கற்பிக்கப்பட்ட கடவுள்கள் ஏராளம் உண்டு.

இந்தக் கடவுளால் என்ன பயன் என்று பார்த்தால் அறிவாளிகளுக்கு ஒரு விஷயம்தான் தோன்றும். அதாவது உலகில் கீழ்த்தரமான காட்டுமிராண்டி மக்களும், அயோக்கியர்களும் ஏராளமாய் இருக்கிறார்கள் என்று மற்றநாட்டு மக்கள் தாராளமாகப் பேசிக் கொள்ளக் கூடிய தன்மை ஏற்படத்தான் பயன்படும்.

----------------7.9.1973 விடுதலை நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்

5 comments:

தமிழ் ஓவியா said...

சதானந்தகவுடா


கருநாடக மாநிலத் தில் நடைபெறும் பி.ஜே.பி. யின் சடுகுடு அரசியலில், சதுரங்க விளையாட்டில் சதானந்த கவுடா காவு கொடுக்கப்பட்டார் என்று அய்க்கிய ஜனதா தளத் தலைவர் சரத்யாதவ் மிகச் சரியாகவேதான் சொல்லி இருக்கிறார்.

தென் மாநிலங்களில் கருநாடக மாநிலத்தில் மட்டுமே பி.ஜே.பி.யால் ஆட்சியைப் பிடிக்க முடிந் தது. அப்படி ஒரு முடிவைக் கொடுத்ததில் கருநாடக மாநில மக்கள் இப்பொழுது மிகவும் வெட்கப்பட்டு, தொங்க விட்ட தலையை நிமிர்த்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

பி.எஸ்.எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாற்று குடலைப் பிடுங்குகிறது. ஊழல் காரணமாக பதவி விலக நேர்ந்த அந்த மனிதருக்கு வீராப்பு மட்டும் அடங்கிப் போய் விடவில்லை. அவருடைய ஆலோசனையின் பெயரில்தான் சதானந்த கவுடா முதல் அமைச்சர் ஆக்கப்பட்டார். எடியூ ரப்பா சுழற்றும் கொம்பு களுக்கெல்லாம் ஆடுடா ராஜா ஆடுடா! என்ற குரங்காட்டி ஆணைக் கெல்லாம் சதானந்த கவுடா மசியவில்லை என்றதும் உன்னை ஒழித்துக் கட்டுகிறேன் பார்! என்று முழுவீச்சில் இறங்கினார்.

நேர்மை, நெறிமுறை, தார்மீகம் பற்றியெல்லாம் தன் முதுகைத் தானே தட்டிக் கொள்ளும் பி.ஜே.பி.யோ இதற்கு மேல் யாரும் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ள முடியாது என்கிற அள வுக்குக் கீழிறக்கத்தின் அதளபாதாளத்தைத் தொட்டுவிட்டது!

சதானந்தாவைக் கீழே இறக்கி நான் சொல்லும் ஜெகதீஷ் ஷெட்டரைப் பதவியில் அமர்த்துங்கள். இல்லையேல் ஆட்சி யையே கவிழ்ப்பேன் என்று ஒட்டாரம் பிடித்த பி.எஸ்.எடியூரப்பாவின் கட்டளைக்கு பி.ஜே.பி. தலைமை அடிபணியும் பரிதாப நிலை ஏற்பட்டு விட்டது. சதானந்த கவுடா அப்பாவி போலும்! உமா பாரதிக்குப் பதில் தற் காலிகமாக மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த ஆசாமி மறுபடியும் உமாபாரதிக்கு விட்டுக் கொடுத்தாரா?

கிடைத்த பதவியை மிரட்டலுக்குப் பயந்து கீழே போட்ட சதானந்த கவுடா அரசியலில் ஓர் அப்பாவி என்றுதான் பரிகசிக்கப்படுவார்!

அதோடு, தடி எடுத்தவருக்குத் தலை குப்புற சாய்ந்து தண்டனி டும் பிஜேபியின் தலைமை யும் பரிகசிக்கப்படும்!

- மயிலாடன் 9-7-2012

தமிழ் ஓவியா said...

செவ்வாய்தோஷம் பேசுவோருக்குச் சவுக்கடி!


செவ்வாய்க்கிரகத்திலிருந்து எடுக்கப்பட்ட புத்தம் புதிய ஒளிப்படங்களை நாசா முதன்முறையாக வெளியிட்டுள்ளது. செவ்வாய்க்கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய இயந்திர ரோவர் அங்கு தரையிறங்கி இப்புகைப்படங்களை தனது 380 பாகை சுழலக்கூடிய சூப்பர் கேமராக்களால் படம்பிடித்துள்ளது.

செவ்வாயில் சுமார் பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றியதாக கருதப்படும் செம்மண்ணால் போர்த்தப்பட்ட எரிமலை குழிகள், இப்புகைப்படங்களில் தெளிவாக தெரிகின்றன. இயந்திர ரோவர், செவ்வாயில் 3,000 மார்டியன் நாட்கள் (8 வருடங்களும் 6 மாதங்களும்) தங்கியுள்ளதுடன், 15 வருடங்களுக்கு அங்கு தங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 1997ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி குறித்த ஆயசள ஞயவாகனேநச பூமியில் தரையிறங்கியது. இவ்வொளி படங்கள் 2011 டிசம்பர் 21 - 2012 மே 8ஆம் தேதி கால எல்லைக்குள் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் நாசாவின் மற்றுமொரு ரோவர் செவ்வாயில் தரையிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 9-7-2012

தமிழ் ஓவியா said...

பூனைக்குட்டி வெளியில் வந்தது ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்காலில் தமிழர்களைக் கொன்றோம்! ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரியா!


கொழும்பு, ஜூலை 9- முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்குக் காரண கர்த்தா இலங்கை அதிபர் ராஜபக்சேதான் என்ற உண்மையைப் போட்டு உடைத்தார் இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரியா.

முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர் கள் அடைக்கலம் புகுந் திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சேதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தர விட்டார். இதையடுத்தே மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். இதனால் தான் ஈழப் போரில் வெல்ல முடிந்தது அந் நாட்டு படை தளபதி ஜெகத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

ஜெயசூர்யாவின் இந்தப் பேச்சு, ராஜபக் சேவுக்கு எதிரான போர்க்குற்றசாட்டுக்கு தேவையான வலுவான ஆதாரமாக பின்னர் உரு வெடுக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

ஈழத்தில் நடந்த இறுதிகட்டப்போரின் போது முள்ளிவாய்க்கா லில் விஷ கொத்துக்குண் டுகள் வீசி 40,000 தமி ழர்கள் கொல்லப்பட்ட னர். இந்த போர்க்குற்றத் திற்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட தால் சிறீலங்கா அரசு பல்வேறு நெருக்கடி களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் சிறீலங் காவின் குருநாகல் பகுதி யில் நடந்த படை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு படைத் தளபதி ஜெகத் ஜெயசூர்யா ராஜபக்சே சொல்லித்தான் முள்ளி வாய்க்கால் பகுதியை படை நிர்மூலமாக்கியதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

கடந்த 2009-ஆம் ஆண்டு சிறீலங் காவின் வடக்கு பகுதியில் சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளின் உதவியோடு போர் நடத்தினோம். கடைசியாக முள்ளிவாய்க்கால் பகுதி யில் போர் நடத்துவதா வேண்டாமா என்று தோன்றியது. ஏனென்றால் அந்த பகுதியில் 45,000-க்கும் அதிக மான தமிழர்கள் வசித்து வந்தனர்.

அங்கு குண்டு போட்டால் ஒருவர்கூட மிஞ்சமாட்டார்களே என்று நினைத்தோம். மேலும் இறுதி கட்டப் போரை நடத்தக் கூடாது என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தின.

இதையடுத்து அதிபர் ராஜபக்சே விடம் ஆலோசனை நடத்தினோம். அப்போது அவர் எக்காரணம் கொண் டும் போரை நிறுத்த வேண்டாம் என்றும் சர்வதேச மிரட்டல்களுக்கு அடிபணியாமல் தொடர்ந்து திட்ட மிட்டபடி தாக்குதல் நடத்துங்கள் என்று என்னிடம் தொலைபேசி மூலம் உத்தரவிட்டார்.

அவர் கொடுத்த தைரியத்தில்தான் போரை வெற்றிகரமாக நடத்த முடிந்தது. மேலும் போர்காலத்தில் அவர் தான் எங்களுக்கு பலமாக இருந்தார். அவர் மட்டும் மனிதாபி மான அடிப்படையில் இரக்கம் காட்டியிருந்தால் நம்மால் இறுதி கட்டப்போரில் வென்றிருக்க முடியாது. இறுதிகட்டப் போரில் நாம் வெல்ல உறுதுணையாக இருந்த நாடுகளையும், அவர்கள் செய்த உதவிகளையும் மறக்கவே முடியாது என்றார் ஜெயசூர்யா.

ஜெயசூர்யாவின் இந்தப் பேச்சு மூலம் கடைசிக் கட்ட போரின்போது மிகக் கொடூரமாக தமிழர்கள் கொலை செய்யப்பட்டது உண்மை தான் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் ராஜபக்சே சொல்லித்தான் தாங்கள் தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்றோம் என்பதையும் இந்த ஜெயசூர்யா கூறியுள்ளதால் இது ராஜபக்சேவின் போர்க்குற்ற செயல் பாடுகளுக்கான வலுவான ஆதார மாக, வாக்குமூலமாக உருவெடுக்கும் வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.9-7-2012

தமிழ் ஓவியா said...

ஒலிம்பிக்கும் இந்தியாவும்

ஜூலை 5ஆம் தேதி இலண்டன் ஒலிம்பிக் தடகளப் போட்டிக்கான தகுதிப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி கேரளாவைச்சேர்ந்த இரு வீரர்களுக்குக் கிடைத்தது. பி. குனஹூமுகம்மது என்பவர் சிறந்த தடகள வீரர்! 400 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் தங்கம் வெல்லுவார் என்று எதிர்ப் பார்க்கப்படும் வீரராவார்! மற்றொரு வீரர் ஜோசப்ஜி ஆப்ரகாம் என்பவர் ஆசியப் போட்டியில் 400 மீட்டர் தடையோட்டத்தில் (ழரசனடநள) தங்கப் பதக்கம் பெற்றவர்.

மகிழ்ச்சிதான்.. நிலைமை என்ன தெரியுமா? இந்த இரண்டு வீரர்களும் இலங்கையில் நடைபெற்ற தகுதிப் போட்டியில் பங்கு பெற முடியவில்லை; காரணம் என்னவாம்?

இலங்கை செல்வதற்குப் போதிய பண வசதியில்லையாம். 30 ஆயிரம் ரூபாய் பணம் இல்லாததால் போக முடியாமல் போய் விட்டதாம்.

இதுகுறித்து குனஹு முகம்மது கூறியிருப்பதாவது: கேரளாவில் உள்ள பலரிடமும் சென்று நான் பணம் கேட்டேன். ஆனால் யாரும் எனக்குப் பணம் தர முன் வரவில்லை. எனது வங்கிக் கணக்கில் வெறும் 9000 ரூபாய் மட்டும்தான் இருந்தது. இதனால் விமான டிக்கெட் எடுக்க பணம் இல்லாமல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து தேசிய தடகள உதவி பயிற்சியாளர் விஜோ தோட்டன் கூறியதாவது:

இந்த இருவரும் கடந்த இரு நாள்களாக தொலைப்பேசியில் தொடர்பு கொண்டனர். இருவருக்கு உதவும் வகையில் விளையாட்டுத் துறைத் தலைவர், அதிகாரிகள் என்று பல தரப்பட்டவர்களிடம் தடகள வீரர்களின் சூழ்நிலையை எடுத்துக் கூறினேன். ஆனால் யாரும் நிதி உதவி செய்ய முன் வரவில்லை.

இதுகுறித்து விசாரித்தபோது தடகள வீரர்களின் இதுபோன்ற அவசர தேவைகளுக்கு நிதி உதவி வழங்க விளையாட்டு அமைப்பில் நிதி சேமிப்பு எதுவும் இல்லை என்று தெரிய வந்தது. ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் திறமையுள்ள இரு தடகள வீரர்கள் ரூபாய் 30 ஆயிரம் பணம் இல்லாததால் அந்த வாய்ப்பை இழந்தது வருந்தத்தக்கது. இதுபோன்ற துயர சம்பவங்களைத் தவிர்க்க நம் நாட்டு விளையாட்டு அமைப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றார்.

இந்தத் தகவல்கள் எந்த அளவுக்கு வெட்கக் கேடானவை என்று விவரிக்கத் தேவையில்லை. இதுவே கிரிக்கெட் விளையாட்டு என்றால் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். கிரிக்கெட் போன்ற பொழுதுபோக்கு விளையாட்டுக்கு இருக்கும் மரியாதையும், முக்கியத்துவமும் தடகளப் போட்டி என்ற தனி மனிதனின் திறனை வெளிப்படுத்தக் கூடிய உண்மையான ஆற்றலுக்கு மரியாதை இல்லை.

காரணம் என்ன? இதற்குள்ளும் பார்ப்பனீயம் வருணாசிரமம் புகுந்து கொண்டு இருக்கிறது என்பதுதான்! பார்ப்பனர்களுக்குக் குத்தகை போன கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெறுகிறார்கள். அய்ந்து நட்சத்திர ஓட்டல்களை கட்டுகிறார்கள். கிரிக்கெட்காரர்களுக்குப் பாரத ரத்னா பட்டம் கொடுக்க வேண்டும் என்று ஊடகங்களைத் தங்கள் கைகளில் வைத்திருக்கும் பார்ப்பனர்கள் கருத்தினை உருவாக்குகிறார்கள். குறைந்தபட்சம் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேடி வருகிறது.

சுண்டைக்காய் நாடுகள் எல்லாம் ஒலிம்பிக்கில் தங்கங்களைக் குவிக்கின்றன. 120 கோடி மக்களைக் கொண்ட இந்தியா வெட்கக்கேடான இடத்தில் இருப்பதற்குக் காரணம் இது போன்ற பார்ப்பனீய அணுகுமுறைகள் தான்.

விளையாட்டுத்துறைகளுக்கென்று மத்தியிலும், மாநிலத்திலும் அமைச்சர்கள் இருக்கிறார்களே - அவர்கள் எல்லாம் எதற்காக இருக்கிறார்கள்? திறமையுள்ளவர்கள் இருந்தும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளாதது மன்னிக்கப்படவே முடியாத குற்றமாகும். இது வன்மையான கண்டனத்துக்கு உரியதே!9-7-2012

தமிழ் ஓவியா said...

பெரியார் ஒருவரே!

மயிலாடுதுறைக்கு வந்த பா.ம.க. நிறுவனர் மருத்துவர் திரு.ச. இராமதாசு அவர்களுக்குக் கட்சியினர் வரவேற்புப் பதாகைகளை அமைத் துள்ளனர். அதில் காணப்படும் வாசகம் இளம் பெரியாரே! வருக! வருக!!

இதனை மருத்துவர் இராமதாசு கண்டிக்க வில்லை. இந்த நாட்டில் பெரியார் ஒருவரே! அய்யா என்றாலும் அவரே!! இதற்கு ஆய்வுகள் தேவைப் படாது. கட்சிகள், கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு ஏற்கப்பட்டுவிட்டவை இவை.

இளம் பெரியார், நடுத்தரப் பெரியார், முதிய பெரியார் என்றெல்லாம் யாரும் கிடையாது. அப்படி யாராவது சொல்ல ஆசைப்பட்டால், அது அவருக்கு அவரே செய்துகொண்ட கேலியும் கிண்டலுமே! 29 பதவிகளைத் தூக்கி எறிந்த புடம் போட்ட, பொது வாழ்வில் தன்னை மூழ்கடித்துக் கொண்ட ஒப்பற்ற உயர் எண்ணங்கள் மலரும் சோலை பெரியார்.

ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி

அணிந்திரா அணியாவார்

அறிந்திராத அறிவாவார்!

என்று புரட்சிக் கவிஞரால், பொறுக்கு மணிச் சொற்களால் கணிக்கப்பட்ட காலக்கதிரவன் பெரியார்! உண்மையான புரட்சித் தலைவரும் கூட! தன்னை நாடி வந்து கதவைத் தட்டிய முதல் அமைச்சர் பதவியை மூக்கறுத்து வெளியில் விரட்டிய வெண்தாடி வேந்தர் அவர்.

அறிவார்ந்த மக்களை உருவாக்கும் சிற்பி அவர். அடிமைத்தனத்தில், அடி முட்டாள்தனத்தில் மயங்கிக் கிடக்கும் மக்களின் பின்னால் ஓடுபவர் அல்லர்! வாக்குகளுக்காக தம் வாக்கினை மாற்றிக் கொள்ளாத மாபெரும் மானுடத் தந்தை பெரியார்.

அவரோடு ஒப்பிட்டுக்கொள்ள ஆசைப்பட வேண்டாம்! அவர் கொள்கைகளை நேசிக்க, சுவாசிக்க முதலில் கற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனமானது - ஆரோக்கியமானது.

குறிப்பு: திராவிடத்தை வெறுக்கும் மருத்துவர் திராவிடர் என்பதன் அவசியத்தை வலியுறுத்திய தந்தை பெரியாரை எப்படி ஏற்றுக்கொள் கிறாராம்? 11-7-2012