நித்தியானந்தாவின் இன்னொரு சீடரான ஆர்த்திராவ், இந்தியா டுடே குழும செய்தியாளர் மிருதுளா சந்துரிக்கு தந்த பேட்டியிலிருந்து...
கேள்வி: பல மாதங்கள் கழித்து இப்போது வந்திருப்பது ஏன்?
பதில்: கர்நாடக போலீசிடம் இரு வருடங்களுக்கு முன்பே புகார் தந்து விட்டேன். ஆனால் இப்போது என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுகிறேன். காரணம், என்னுடைய நெருங்கிய தோழி கோபிகாவைக் காணவில்லை. நீதிமன்ற விசாரணைக்கு முன்பாக என்னையும் அதே வழியில் முடித்து விடுவார்களோ என்ற பயம் இருக்கிறது. அதனால்தான் மீடியாவிடம் பேசினேன்.
கேள்வி: நீங்கள் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர் என்றும் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் நித்தியானந்தா கூறுகிறாரே?
பதில்: இதெல்லாம் முட்டாள்தனமான குற்றச்சாட்டுகள். அவருக்கு எதிராக பேசுபவர்கள் மீது இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி கிரிமினல் வழக்குகளைப் போட்டு சரிக்கட்ட முயற்சிக்கிறார்.
கேள்வி: அவர்மீது உங்களின் பிரதான குற்றச்சாட்டுகள் என்ன?
பதில்: ஆறு வருடங்கள் அவரி டம் சீடராக இருந்தேன். அதில் அய்ந்து வருடங்கள் என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். என்னைப் போலவே இன்னும் பலரை அவர் பலாத்காரம் செய்திருக்கிறார். மூளைச் சலவை செய்திருப்பதால் அவர்களால் உண்மையை வெளியே சொல்ல முடியவில்லை.
கேள்வி: சீ.டி.களை வெளியிட்ட போது போலீசிடம் மட்டும் தராமல் மீடியாக்களிடமும் தந்தது ஏன்?
பதில்: வெளியில் சுற்றுக்குவிட நான் வீடியோ படத்தை எடுக்க வில்லை. விஜய்யத்வாஜ், லெனின் போன்றோர் நித்தியானந்தாமீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் தவறு என்று உறுதி செய்து கொள்ளத் தான் வீடியோ எடுத்தேன். ஆனால் குற்றச்சாட்டுகள் உறுதியாயின. எங்களுக்கிடையிலான செக்ஸ் உறவை ஆன்மீக சங்கமம் என்று சொல்லி நம்ப வைத்தார். வீடியோ வைப் பார்த்த பிறகு நான் அந்த ஆசி ரமத்தை விட்டு வெளியேறினேன்.
கேள்வி: தமிழக முதல்வரைச் சந்தித்தீர்களா?
பதில்: முதல்வர் ஜெ. ஜெயலலிதாவிடம் நேரம் கேட்டிருக்கிறேன். நித் தியானந்தாவின் உண்மை முகத்தைக் காட்ட வாய்ப்புக் கிடைத்தால் நல்லது.
கேள்வி: உங்கள் வழக்கு எந்த அளவிற்கு பலமாக இருக்கிறது?
பதில்: பலமாக இருக்கிறது. மருத்துவ பரிசோதனைக்காக 8 முறை தாக்கீது அனுப்பப்பட்டு விட்டது. ஆனால் ஆண்மை இல் லாதவர் என்று கூறி நித்தியானந்தா நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு மறுத்து வருகிறார்.
----------------------------நன்றி: "இந்தியா டுடே" 18.7.2012 பக்கம் 21
10 comments:
ஆடி ஆட்டம் காண்பது ஏன்?
ஒவ்வொரு மாதத்துக்கும் தெய்வீக முலாம் பூச்சுகள் உண்டு. 16.7.2012 அன்று தொடங்கும் ஆடி மாதத்திற்கும் ஏகப்பட்ட சிறப்புகளாம்! ஆடியில் அனு தினமும் நீராடினால் சகல சம்பத்துகளும் கொழிக்கு மாம். ரொம்ப சரி, ஆடி மாதம் பிறக்கப் போகிறது. எந்த ஆற்றிலும் நீரைக் காணோமே - கடவுளை என்ன செய்யலாம்?
******
ஆடி மாதத்துக்கு ஆன்மீகத் தத்துவங்கள் உண் டாம்! மாதங்களில் நான் ஆடியாய் இருப்பதாக ஆதி பராசக்தி கூறி இருப்பதாக ஆதி புராணம் கூறு கிறது.அப்படியானால் திருமணம் உட்பட முக்கிய நிகழ்ச் சிகளை ஆடியில் செய்யக் கூடாது என்ற நிலை இருப்பது - ஏன்? 13-7-2012
அஸ்திவாரம் கிடையாது
பார்ப்பனர்களால் போற்றி வளர்க்கப்படும் இந்து மதம் என்று சொல்லப்படுகிற மதத்துக்கு அஸ்திவாரம் கிடையாது.
பெரியார் - "விடுதலை", 11.7.1954
சாக்ரட்டீஸின் பொன்மொழிகள்
தங்கத்தைக் கண்டுபிடிக்கச் சுரங்கத் திற்குள் நுழைகிறவன் மரியாதையை பார்த்தால் முடியுமா? தங்கத்தை விட மேலான பொருளை அதாவது நீதியைத் தேடி கண்டுபிடிக்க நாங்கள் புறப்பட்டிருக் கிறோம். இதில் மரியாதையை பார்த்துக் கொண்டு முயற்சியைக் கைவிட்டு விடு வோமா?
***************
நீதிக்கு நான் மிக உயர்ந்த ஸ்தானம் கொடுக்கிறேன். அதாவது எந்த விஷ யத்தை அந்த விஷயத்திற்காகவும் அதன் விளைவு களுக்காகவும் நேசிக்கிறோமோ அந்த மாதிரியான விஷயங்களில் ஒன்றாக நீதியை நான் கருதுகிறேன்.
***************
ஒரு மனிதனுக்கு எந்தத் தொழிலைச் செய்ய இயலுகையிலேயே ஒரு திறமை இருக்கிறதோ அந்தத் தொழிலை மட்டும் அவன் செய்து கொண்டு போனால் நல்லது.
***************
விபரீதமான குற்றங்களைச் செய்கிற கடவுளர்களை சிருஷ்டித்து அந்தக் கடவுள்களின் கதைகளைச் சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுப்போமானால் அவர்கள் என்ன நினைத்துக் கொண்டு விடுகிறார்கள் தெரியுமா? கடவுளர்களே பல குற்றங் களை செய்திருக்கிறபோது நாமும்தாம் செய்தாலென்ன! என்று கருதி அதே மாதிரி செய்யத் தொடங்கி விடுகிறார்கள். இந்த மாதிரியான கதைகளை நாம் சொல்லிக் கொடுக்கக் கூடாது. தவிர, ஒரு தெய்வத்திற்கு விரோதமான மற்றொரு தெய்வம் சதி செய்வதாகவோ, யுத்தம் செய்வதாகவோ உள்ள கதைகளையும் நாம் சொல்லலாகாது. ராட்சதர்களோ அல்லது தேவர்களோ ஒருவருக் கொருவர் போராட்டங்கள் நடத்தியதாகவும் நாம் உபதேசிக்கலாகாது. மனிதர்கள் ஒருவரை யொரு வர் நேசிக்க வேண்டுமென்றும், ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், இதை போன்ற நீதிகளைப் புகட்டுகிற கதைகளையே சொல்ல வேண்டும்.
***************
அதிகமான செல்வமோ அதிகமான வறுமையோ தங்கள் ராஜ்யத்திற்குள் வரவொட்டாதபடி அரசர்கள் பாதுகாக்க வேண்டும். அதிக செல்வத்தினால் ஆடம்பரத் தன்மையில் சோம்பேறித்தனமும் உண்டாகும். அதிக வறுமையினால் புரட்சியும், இழிதகைமையும், துரோகமும் ஏற்படும்.
உங்களுக்கு தெரியுமா? தந்தை பெரியார்
சூத்திரன் பார்ப்பானைக் கடவுளாகக் கொண்டு தவம் செய்யாமல் கடவுளை நினைத்துத் தவம் செய்வதற்காக, ராமன் சம்புகன் என்ற சூத்திரனைச் சித்திரவதை செய்து கொன்றான். அதாவது சூத்திரனுக்கு (திராவிடனுக்கு) கடவுள் பார்ப்பான்தான். பார்ப்பானைக் கடவுளாகக் கொண்டு வணங்காதவனைப் பார்ப்பான் அரசன் கொல்ல வேண்டும். இது இராமயண தர்மம் மாத்திரமல்லாமல் மனுதர்மமுமாகும். எனவே இராமாயணம் இருக்க வேண்டுமா?
**************
பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய நான்கு ஜாதிகளை நான் படைத்தேன் என்றும், பிராமணனுக்குச் சூத்திரன் அடிமைப்பணி செய்ய வேண்டும்; செய்யாவிட்டால் நரகத்தில் புக வேண்டும் என்பதாகவும் பாரதத்தில் (கீதையில்) கிருஷ்ணன் சொல்லி இருக்கிறான். எனவே பாரதம் இருக்க வேண்டுமா?
**************
சூத்திரன் என்பவன் தாசி புத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன். இதுதான் மனுதர்மம்; மனுதர்மமாத்திரமல்ல, இந்து லாவும் இப்படித்தான் சொல்லுகிறது.
ஆன்மா அடங்காத ஒன்றா?
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரியங்களும் (அறிவுக்கருவிகள்) வாக்கு, பாணி, பாதம், குதம், குய்யம் ஆகிய கர்மேந்திரயங்களும் (தொழிற்கருவிகள்) இவ்வுடல் அடங்கும் பொழுது தாமாகவே அடங்கி விடுகின்றன அல்லவா? அங்ஙனமிருக்க ஆன்மா மட்டும் ஏன் அடங்காது?
ஆன்மா ரூபமுடையது என் பீரேல், சரீரப் பிரமாணத்ததா, அப்படியானால் சரீரத்துக்குள் புகாது. காரணம்? ஒரே அளவுள்ள இரு குடங்கள் ஒன்றினுள் ஒன்று புகமுடியாது போலாம் என்றறிக!
ரூபம் அற்றது என்றாலோ ரூபமற்ற ஆன்மா ரூபமாகிய சரீரத்துக்குள் புக முடியாது.
ரூபமாகவும், அரூபமாகவும் உள்ளது என்றாலோ, இரு வகைத்தும், குற்றமே என்றறிக.
- (நீலகேசி, மொக்கலவாதச் சருக்கம், பக்கம் 3)
காணாமல் போன கோவில் நகைகள் அர்ச்சகர் வீட்டிலிருந்து மீட்பு
திருவாரூர், ஜூக 14- திருத்துறைப்பூண்டி அருகே, வரதராஜ பெரு மாள் கோவிலில் காணா மல் போன, 49 வகை யான அலங்காரப் பொருட் களில், 40 கிராம் தங்கம், ஏழு கிலோ வெள்ளிப் பொருட்களை, அர்ச் சகர் வீட்டில் இருந்து, காவல்துறையினர் கைப்பற்றினர்.
திருவாரூர் மாவட் டம், திருத்துறைப் பூண்டி அருகே, செம் படவன் குப்பத்தில், இந்து சமய அற நிலையத் துறைக் கட்டுப்பாட்டி லான, வரதராஜ பெரு மாள் கோவில் உள்ளது. தேனி மாவட்டம் சின்ன மனூர் சீத்தாராமன், கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில், குடும்பத் துடன் தங்கி, அர்ச்சக ராகப் பணியாற்றி வந் தார். இவர், கடந்த மாதம், 17ஆம் தேதி முதல் ஊரில் இல்லாத தால், கோவில் பூட்டியே கிடந்தது. அப்பகுதி யினர், கோவில் அதிகாரி மாதவனுக்கு தகவல் தெரிவித்தனர்.
கோவிலைத் திறந்து பார்த்தபோது, மூன்று லட்ச ரூபாய் மதிப்பி லான, 49 வகையான பொருட்களை காண வில்லை என, கடந்த 6ஆம் தேதி, முத்துப் பேட்டை காவல்துறை யில் மாதவன் புகார் கொடுத்தார். காவல் துறை யினர் வழக்கு பதிந்து விரித் தனர்."அர்ச்சகரை கைது செய்ய வேண்டும்; கோவில் பொருட்களை மீட்க வேண்டும்' என, அப்பகுதியினர் போர்க் கொடி தூக்கினர். இத னால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் நிலவியது. காவல் துறை ஆய்வாளர் செங் குட்டுவன், தன் அதி காரத்தின்படி, அர்ச்சகர் சீத்தாராமன் தங்கி இருந்த வீட்டை, 12ஆம் தேதி மாலை, 7 மணிக்கு, கோவில் அதிகாரி மாத வன் உட்பட முக்கிய பிரமுகர்கள் முன்னிலை யில் திறந்து, சோதனை செய்தார்.
அர்ச்சகர் வீட்டில் இருந்து, 40 கிராம் தங் கம், ஏழு கிலோ வெள் ளிப் பொருட்கள் மற்றும் தனியார் வங்கியில் அடகு வைக்கப்பட்ட ரசீதுகள், கைப்பற்றப் பட்டன. இதில் இருந்து, ஏழு கிராம் தங்க நகை மட்டும், காணாமல் போனது தெரிய வந்தது. கோவிலில் இருந்த சுவாமியின் நகைகளை, அர்ச்சகர் வீட்டிற்கு ஏன் கொண்டு வந்தார் என் பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். 14-7-2012
அய்யனாருக்கு ஏது சக்தி? நீலப்பாடி : அய்யனார் கோயில் எரிந்தது
நீலப்பாடி அய்யனார் கோயில் தீப்பற்றி எரிந்ததை, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த காட்சி. (12.7.2012)
நீலப்பாடி, ஜுலை, 14-நாகை மாவட்டம் கீழ் வேளூர் ஒன்றியம் நீலப் பாடியில் உள்ள அய் யனார் கோயில் 12.7.2012 மதியம் ஒரு மணிக்கு தீப்பற்றி எரிந்தது. அய்யனாரை (சிலையை) தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினர்.
நாகை - திருவாரூர் செல்லும் தேசிய நெடுஞ் சாலைக்குஅருகில் உள்ளஅய்யனார் கோயில் எதிரே உள்ள குப்பைமேடு தீப்பற்றிக் கொண்டதாம். அதைத் தொடர்ந்து அய்யனார் கோயிலும் தீப்பற்றி மளமளவென எரிந்தது.
அருகில் உள்ளவர் கள் மண்ணையும், தண்ணீரையும் ஊற்றி அணைத்தனர். தீ கட்டுக்கடங்காமல் கோயில் முழுவதும் எரிந்துபோனது. கீழ்வேளூர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீய ணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.அய்யனா ரையே காப்பாற்ற தீய ணைப்பு வீரர்கள் தான் வேண்டியிருக்கிறது. அப்ப அய்யனாருக்கு சக்தி கிடையாது என்று பொது மக்கள் பேசிக் கொண்டதுதான் சிந்திக்கத்தக்கது.14-7-2012
இளைஞர்களே! உங்களுக்குத் தெரியுமா?
பக்கம் 1 எண் 2:
1925 க்கு முன்பு தமிழ்நாட்டிற்குக் காந்தியார் வந்த போதெல்லாம் மைலாப் பூரில் சீனுவாச அய்யங் கார் வீட்டுத் திண்ணை யில்தான் உட்கார்ந் திருப்பார் - உள்ளே போகாமல்.
1926 க்குப் பின்தான் அவர் வீட்டுக்குள் சென் றார். (காரணம் சுயமரியாதை இயக்கத்தினைப் பெரியார் ஆரம்பித்து 1925 முதல் பிரச் சாரம் செய்தார்.)
மகாத்மா காந்திக்கே இந்தக் கதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
பக்கம் 5 எண். 32:
மைலாப்பூர் கபாலீசுவரன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு, மற்ற எல்லாரையும் விட 1916 ஆம் ஆண்டிலேயே ரூ. 10,000 நன்கொடை வழங்கிய நீதிக் கட்சித் தலைவர் தியாகராயர் விழா மேடையில் உட்காரப் பார்ப்பனர்கள் அனுமதிக்க வில்லை! அதே நேரத்தில் தியாக ராயரின் பார்ப்பன கிளார்க்கு களுக்குக் கூட அந்த உரிமை வழங்கப்பட்டிருந்தது!
இந்த அவமானத்தைக் கண்டு கொதித்தெழுந்த தியாகராயர், பார்ப்பன எதிர்ப்பில் மிகத் தீவிரவாதியாக மாறினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?பக்கம் 18 எண். 113 :
1938 ஆம் ஆண்டு நீடாமங் கலத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் மூன்று ஆதிதிராவிட தோழர்கள் சரிசமமாக உட் கார்ந்து விருந்து சாப்பிட்டார்கள் என்பதற்காக அவர்களை மொட்டை அடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பக்கம் 18 எண். 114:
டாக்டர் சுப்பராயன் முதலமைச்சராக இருந்த காலத்தில் பட்டுக்கோட்டை தாலுகா போர்டுக்கு, பட்டுக் கோட்டை மேலத் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து என்ற தாழ்த்தப்பட்ட தோழரை நியமனம் செய்த காரணத்தால், போர்டு கூட்டத்தைக் கூட்டினால், அந்தத் தாழ்த்தப்பட்ட தோழரும் சமமாக உட்காருவார் என்ற காரணத்தால், போர்டு கூட்டத்தைக் கூட்டா மல் காலங்கடத்தி வந் ததும், இதனை எதிர்த் துப் பட்டுக்கோட்டை சுயமரியாதை இயக்கத் தவர்கள் கண்டனக் கூட்டங்களை நடத்தி கடுமையாக எதிர்ப்புக் காட்டியதைத் தொடர்ந்து முதலமைச்சர் சுப்பராயனே தலையிட்டு தாலுகா போர்டு கூட்டத்தைக் கூட்டா விட்டால் போர்டையே கலைத்து விடுவேன் என்று எச்சரித்ததன் பேரில் போர்டு கூட்டம் நடத்தப் பட்டதும், அந்தக் கூட்டத்தில் அந்தத் தாழ்த்தப்பட்ட தோழர் சமமாக அமர்ந்ததும் உங்களுக்குத் தெரியுமா?
பக்கம் 24 எண். 155:
எட்டயபுரத்திலே நடந்த பாரதி விழா ஒன்றில் மேடையில் நாற் காலியில் ஆச்சாரியார், எம்.எஸ். சுப்புலட்சுமி சதாசிவம் அய்யர் ஆகியோர் அமர்ந்து கொண்டு முதலமைச்சராக இருந்த ஓமந் தூராரையும் டாக்டர் சுப்பரா யனையும் தரையில் பாய்போட்டு உட்கார வைத்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
பக்கம் 27 எண் 174
1929 இல் உத்தமபாளையம் வட்டம் சீலையம்பட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து கோர்ட் உறுப்பினர்களே, பார்ப் பனர்களுக்குச் சரி சமமாக உட் காரத் தடை விதிக்கப் பட்டனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஓடுகிறார் - ஓடுகிறார்
அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் தனது மடத்தின்மீது தொடரப் பட்ட நிதி மோசடி தொடர்பான வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் 19ஆம் தேதியன்று வழங்கப் படும் சூழலில், மதுரை ஆதீன கர்த்தர் கொடுத்துள்ள பேட்டி நித்யானந்தாவைக் கதி கலங்க அடித்துள்ளது என்பது செய்தி. அமெரிக்காவில் நித்யானந்தா பவுண்டேஷன் வசூலித்த 1.6 மில்லியன் டாலரை (8.8. கோடி ரூபாயை) வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று கலி போர்னியா நீதிமன்றம் தீர்ப்பளித் தது. அதோடு விட்டுவிடவில்லை. நித்யானந்தா பவுண்டேஷன் என் பது ஒரு மோசடி நிறுவனம் என்றும் நீதிமன்றம் அறிவித்துவிட்டது.
மேலும் மேலும் நித்யானந்தா மீதான குற்றங்களில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்து விட்டன. மனுசன் ஆடிப் போய் விட்டார்.
போதும் போதாததற்கு, கலி போர்னியா நீதிமன்றம் இறுதி தீர்ப்பில் நித்யானந்தா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் இளைய மடாதிபதி என்ற பதவியிலிருந்து நித்யானந்தாவை நீக்குவேன் என்று மதுரை மூத்த மடாதிபதி அதிரடியாக பேட்டி அளித்து விட்டார்.
இதனை அறிந்த நித்யானந்தா கொடைக்கானலில் இருந்து அவசர அவசரமாக துண்டைக் காணோம் உடுப்பைக் காணோம் என்று மதுரைக்கு ஓடியுள்ளார்.
பிரேமானந்தா என்ற ஒரு சாமியார் இப்படித்தான் ஆட்டம் போட்டார். கடைசியில் இரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரின் ஆயுளும் இயற்கையாகவே பிரிந்து போய்விட்டது. அந்த வரிசையில் நித்யானந்தாவும் வரு வார் என்று எதிர்பார்க்கலாம்.
இதற்குப்பிறகு மதுரை ஆதீனம் அவசரத்தனத்தையும், ஆவேசத்தை யும் அடக்கி வாசிப்பார் என்று நம்புவோமாக!
இந்த நேரத்தில் இன்னும் ஒன்று கவனத்திற்குரியதாகும். நித்யானந் தாவைத் தாண்டி கொலை குற்றம் வரை தாக்கல் செய்யப்பட்டுள்ள காஞ்சி சங்கராச்சாரியார் சுதந்திர மாகத் திரிவது எப்படி? சாட்சிகளை கலைப்பது எப்படி? வழக்குகளை இழுத்தடித்துக் கொண்டு போவது ஏன்? என்கிற வினாக்கள் மக்கள் மன்றத்தில் இருக்கவே செய்கின்றன.
ஊடகங்கள் இவற்றைப்பற்றி எல்லாம் பேசவே மறுக்கின்றனவே. குற்றமற்றவர் என்று சட்ட ரீதியாக அறிவிக்கப்படும் வரை மடாதிபதி களாக இவர்கள் இருக்கக் கூடாது என்று குறைந்தபட்ச நிபந்தனையை வைத்தாவது எந்த ஏடுகளாவது எழுதுவது உண்டா!
பார்ப்பனர் ஏடுகள் எழுதுவது ஒருபுறம் இருக்கட்டும்; பார்ப்பனர் அல்லாத ஏடுகளாவது மூச்சு விடுவது உண்டா.
இன்னும் ஜெகத் குரு என்று அழைக்கப்படுவதும், கோவில் குட முழுக்குகளில் கலந்து கொள்வதும் எப்படி? ஓ, ஆன்மீகத்தின் யோக்கிய தையே! இந்த மட்டத்தில் தானோ! 15-7-2012
எங்கள் பாபாக் கடவுள் நோய்ப்பட்டிருக்கும்போது அவரிலும் பார்க்கப் பெரிய கடவுள்களை நோக்கிக் கூட்டுப்பிரார்த்தனகளும் பூசைகளும் செய்து ஒருமாதிரி அவரை, அவர் அவதரித்ததன் நோக்கம் பரிபூரணம் ஆனதால், அவர் தீர்க்கதரிசனம் சொல்லிய காலத்திற்கு முன்பே சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்துபோட்டோம். இப்ப எங்கள் நித்திச் சுவாமிக்கும் கஷ்டங்கள் ஒழிய, உலகளாவிய ரீதியில் பல தொடர் பிரார்த்தனைகள் செய்தோம் என்றால், அவரும் இந்த இடர்களில் இருந்து நீங்கி நிம்மதியாக மறியலில் ஆயுள் தண்டனையை அனுபவிக்கும் பெரும் பேற்றை நாங்கள் செய்து கொடுக்கலாம்.
Post a Comment