இவர்கள் எல்லாம் இல்லை. இதை முதலில் கண்டு பிடித்தது கோயில்கள்தான். விபூதி, குங்கு மத்தோடு நிற்காமல், இலவசமாக வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், வடை என்று பிரசாதம் கொடுத்தால் பக்தர்கள் வருவார்கள் என்று கண்டு பிடித்தது அவர்கள்தான்.
--------------------------(துக்ளக்- 20.6.2012)
அப்பாடி! முதன் முதலில் ஒரே ஒரு உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார் கோயபல்சு துக்ளக் சோ. ராமசாமி.
கோயிலில் கூட்டம் கூடுகிறது, கூடுகிறது, பக்திப் பரவசவெள்ளப் பெருக்கைப் பாரீர்! பாரீர்!! நாத்திகமெல்லாம் படுத்துண்டுட்டுது என்று பல்லவி பாடிய வட்டாரத் திலிருந்து ஒரு உண்மை உதறித் தள்ளி வெளியே வந்து விழுந்துவிட்டது.
இந்த இலவசம் என்ற ஒன்று இல்லையாயின் கோயில்களில் கூட்டமா வது, கீட்டமாவது - என்று உதட்டைப் பிதுக்கி உண் மையை ஒப்புக் கொண்ட தற்காக நாமும் ஒரே முறை சோ அய்யர் வாளைப் பாராட்டலாம் தான்!
ஒன்றை விட்டுவிட் டாரே! அது போலவே இலஞ்சம் உற்பத்தியான தும் சாட்சாத் இந்தக் கோயில்களில்தான் என் பதையும் ஒப்புக் கொண் டிருந்தால் பேஷா நன்னாயிருக்குமோல்லியோ!
ஆதிலட்சுமி, அகோர மூர்த்தி, நான் உனக்குச் கண்ணடக்கம் செய்து வைக்கிறேன்; வெள்ளியாலே ரிஷபம் ஏற்பாடு செய்கிறேன். என் பிள்ளையாண்டான் பரிட்சையில் பேஷா பாஸாகனும், என் ஆத்துக்காரருக்கு புரமோசன் கூடிய விரைவில் கிடைக்கணும்; என் சிரேஷ்ட புத்திரிக்கு நல்ல வரன் கிடைக்கணும் னு வேண்டிக் கொள்கிறார்களே... இதற்குப் பொருள் என்னவாம்?
இலஞ்சம் அல்லாமல் வேறு என்ன வாம்? இதையெல்லாம் செய்து வைச்சாதான், உண்டியலில் பணம் போட் டால்தான் எம்பெருமான் அருள் பாலிப்பாருன்னு ஆகிவிட்ட பிறகு, இலஞ்சம் உற்பத்தியாகும் இடம் இந்தக் கோயில்கள்தான் என்று அடுத்த இதழில் சோவாள் எழுதுவாளா?
--------------------- மயிலாடன் அவர்கள் 7-7-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
6 comments:
நன்றாக சொன்னீங்க... நல்லதொரு பதிவு... தொடர வாழ்த்துக்கள்... பகிர்வுக்கு நன்றி..
பெரியார் ஒருவரே!
மயிலாடுதுறைக்கு வந்த பா.ம.க. நிறுவனர் மருத்துவர் திரு.ச. இராமதாசு அவர்களுக்குக் கட்சியினர் வரவேற்புப் பதாகைகளை அமைத் துள்ளனர். அதில் காணப்படும் வாசகம் இளம் பெரியாரே! வருக! வருக!!
இதனை மருத்துவர் இராமதாசு கண்டிக்க வில்லை. இந்த நாட்டில் பெரியார் ஒருவரே! அய்யா என்றாலும் அவரே!! இதற்கு ஆய்வுகள் தேவைப் படாது. கட்சிகள், கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு ஏற்கப்பட்டுவிட்டவை இவை.
இளம் பெரியார், நடுத்தரப் பெரியார், முதிய பெரியார் என்றெல்லாம் யாரும் கிடையாது. அப்படி யாராவது சொல்ல ஆசைப்பட்டால், அது அவருக்கு அவரே செய்துகொண்ட கேலியும் கிண்டலுமே! 29 பதவிகளைத் தூக்கி எறிந்த புடம் போட்ட, பொது வாழ்வில் தன்னை மூழ்கடித்துக் கொண்ட ஒப்பற்ற உயர் எண்ணங்கள் மலரும் சோலை பெரியார்.
ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி
அணிந்திரா அணியாவார்
அறிந்திராத அறிவாவார்!
என்று புரட்சிக் கவிஞரால், பொறுக்கு மணிச் சொற்களால் கணிக்கப்பட்ட காலக்கதிரவன் பெரியார்! உண்மையான புரட்சித் தலைவரும் கூட! தன்னை நாடி வந்து கதவைத் தட்டிய முதல் அமைச்சர் பதவியை மூக்கறுத்து வெளியில் விரட்டிய வெண்தாடி வேந்தர் அவர்.
அறிவார்ந்த மக்களை உருவாக்கும் சிற்பி அவர். அடிமைத்தனத்தில், அடி முட்டாள்தனத்தில் மயங்கிக் கிடக்கும் மக்களின் பின்னால் ஓடுபவர் அல்லர்! வாக்குகளுக்காக தம் வாக்கினை மாற்றிக் கொள்ளாத மாபெரும் மானுடத் தந்தை பெரியார்.
அவரோடு ஒப்பிட்டுக்கொள்ள ஆசைப்பட வேண்டாம்! அவர் கொள்கைகளை நேசிக்க, சுவாசிக்க முதலில் கற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனமானது - ஆரோக்கியமானது.
குறிப்பு: திராவிடத்தை வெறுக்கும் மருத்துவர் திராவிடர் என்பதன் அவசியத்தை வலியுறுத்திய தந்தை பெரியாரை எப்படி ஏற்றுக்கொள் கிறாராம்? 11-7-2012
மனிதன்
பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
பெரியார் - ”விடுதலை”, 9.6.1962)
அப்படின்னா.... இந்த கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் , பெரியார் வாரிசாக நீங்கள் கொண்டாடும் வீரமணி, இலவசங்கள் கொடுப்பதை வாயைப் பொத்திக்கிட்டு அவர்களுக்கு துதிபாடுவது தவறு என்றும் ஒரு கட்டுரையைப் போடுங்கள். உங்கள் பகுத்தறிவைப் போற்றுகிறோம்.
லட்சுமனப் பெருமாள் சோவ திட்டறதுன்னா அய்யர் கோயபல்சுன்னு சொல்லிட்டுப் போவலாம்...நீங்க முதலுக்கே மோசம் பண்ணப் பாக்கிறிங்களே....
அய்யோ பாவம் - சோவும் கைவிட்டு விட்டாரே!
(துக்ளக் 18.7.2012 நாளிதழில் 24-25ஆம் பக்கத்தில் கர்நாடகங்கள் என்ற தலைப்பில் சோவிடம் துக்ளக் வாசகர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில் களும் வருமாறு: ) - கே.என்.பாலகிருஷ்ணன், சென்னை - 66
கே: கர்நாடக முதல்வர் சதானந்த கௌடாவை நீக்கக் கோரி 9 அமைச்சர்கள் ராஜினாமா செய்துவிட்டு, பிறகு வாபஸ் பெற்றுள்ளது பற்றி...?
ப: சதானந்த கௌடாவை இப்போதே நாங்கள் நீக்கிவிட்டால், பா.ஜ.க. தலைமை ரொம்பவும் பலவீனமாக இருக்கிறது என்று எல்லோரும் பேசுவார்கள். அதனால் உங்கள் விருப்பதைப் பூர்த்தி செய்வதற்கு சில நாட்கள் அவகாசம் கொடுங்கள். நாங்கள் அவரை நீக்கிவிட்டு, வேறு யாரை (எடியூரப்பா சுட்டிக் காட்டுகிறாரோ) அவரையே முதல்வராக ஏற்றுக் கொண்டு விடுகிறோம். - என்று பா.ஜ.க. தலைமை, இவர்களிடம் கூறியிருக்கலாம். அதனால் எடியூரப்பா திருப்தி அடைந்திருப்பார். அவருடைய சீடர்கள் ராஜினாமாவை வாபஸ் வாங்கியிருக் கிறார்கள்.
பா.நாராயணன் சென்னை-92
கே: கர்நாடக பா.ஜ.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்கள், வரும் பாராளுமன்றத் தேர்தலில் அங்கு எதிரொலிக்க வாய்ப்பு உள்ளதா?
ப: அப்படித்தான் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். கர்நாடக பா.ஜ.க.வில் எடியூரப்பா மீது வந்த குற்றச்சாட்டுக்கள், அது தவிர அங்கு நடந்த குழப்பங்கள், கட்சித் தலைமை எந்த முடிவையும் எடுக்க முடியாமல் தடுமாறும் நிலை போன்றவை எல்லாம் பா.ஜ.க.வை பாராளுமன்றத் தேர்தலில் வெகுவாகப் பாதிக்கக் கூடும் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் பா.ஜ.க.வைச் சார்ந்த சில நண்பர்கள், இது தவறான எண்ணம் என்றும், கர்நாடக பா.ஜ.க.விற்கு அங்கு ஓட்டிழப்பு நேரிடாது என்றும் கூறுகிறார்கள். பார்க்கலாம்.
பி.சூடாமணி, திருச்சி - 6
கே : கர்நாடகாவில் மீண்டும், மீண்டும் முதல்வர்களை பா.ஜ.க. மேலிடம் மாற்றுவது ஆரோக்கியமானதா?
ப: நீங்கள் பா.ஜ.க.வின் ஆரோக்கிய நிலை பற்றிப்பேசுகிறீர்கள். ஆனால், கர்நாடக பா.ஜ.க. அமைச்சரவையோ, அவ்வப்போது ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டிய நிலைக்கு வந்துவிடுகிறது. அந்த மாதிரி சமயங்களில் சிலிண்டர்களை மாற்று கிறார்கள். என்ன செய்வது? அதனால்தான் மீண்டும், மீண்டும் சிலிண்டர்கள் மாற்றப்படுவது போல் முதல்வர்கள் மாற்றப்படுகிறார்கள். - பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி
கே: இவ்வளவு நெருக்கடிகள் தந்தும்கூட, பா.ஜ.க. ஏன் எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுகிறது?
ப: எடியூரப்பாவுக்கு மக்களிடையே - அதுவும் லிங்காயத் மக்களிடையே - பெரும் ஆதரவு இருப்பதாகவும், அதை இழந்தால் பா.ஜ.க.வுக்கு மிகவும் பலவீனமான நிலை ஏற்படும் என்றும், ஓர் உறுதியான கருத்து பா.ஜ.க.வில் சிலருக்கும், பா.ஜ.க நண்பர்கள் சிலருக்கும் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் எடியூரப்பா என்ன செய்தாலும், அதைப் பொறுத்துக் கொள்ளவே பா.ஜ.க. தலைமை முயற்சிக்கிறது. இது நல்ல அரசியல் அல்ல. ஜாதியை நம்பி நடத்தப்படுகிற அரசியல். ஆக, ஜாதி அரசியலுக்கு பா.ஜ.கவும் விதிவிலக்கல்ல.
துக்ளக் பிஜேபிக்காக வக்காலத்துப் போட்டு வழக்காடும் திருவாளர் சோ.ராமசாமியாலேயே பிஜேபியைக் காப்பாற்ற முடியவில்லையே! 14-7-2012
Post a Comment