Search This Blog

7.7.12

தந்தைபெரியாரும் -நுழைவுத்தேர்வும்


நுழைவுத் தேர்வு கூடாது!

கல்வித் துறையில் அரசாங்கம் பெரிய பார்ப்பனியம் செய்து வருகிறது. அடுத்த ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேருவதற்கு நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்குத் தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளதாம்! எதற்காக? பாஸ் செய்த சர்ட்டிபிகேட்டில் காலேஜில் சேர - சேர்த்துக்கொள்ளத் தகுதி உடையவன் என்று எழுதி, கையெழுத்துச் செய்து கொடுத்துவிட்டு, காரியத்தில் மார்க்குப் பார்த்து, திறமை பார்த்து, புகுமுகப் பரீட்சை வைத்துச் சேர்க்க வேண்டும் என்று உத்திரவு போடுவதும் தராதரம் பார்க்காமல் சேர்க்கக்கூடாது என்பதும் பார்ப்பனியமா? அல்லவா? ஏனென்றால், இவை பார்ப்பான் மூளையில் தோன்றியதுதானே?

பிற்படுத்தப்பட்ட வகுப்பு, தாழ்த்தப்பட்ட வகுப்பு என்பவர்களைக் கல்வி விஷயத்தில் குழியில் தள்ளி மூடுவதுதானே இந்த யோசனையின் பலன்?

கல்வித்துறையில் அதிகாரம் பிற்படுத்தப்பட்ட வகுப்பார், தாழ்த்தப்பட்ட வகுப்பார் கையில் இருந்தால் இந்த எண்ணம் அவர்களது ஞாபகத்துக்கு ஆவது வருமா? மொத்த ஜனத்தொகையில் முற்பட்ட வகுப்பு மக்கள் எவ்வளவு? பிற்படுத்தப்பட்ட வகுப்பார் ஜனத்தொகை எவ்வளவு? வரி கொடுப்பதில் யார் 1 க்கு 3 ஆக, 4ஆக வரி கொடுக்கிறார்கள்? ஓட்டர்களில் அதுபோல் யார் அதிகம்? நாளைக்குப் பதவிக்கு, நிருவாகிகள் ஆசைப்பட்டால் ஓட்டர்களில் இதை எண்ணிப் பார்க்கமாட்டார் களா? கல்வித் துறையில் பார்ப்பன ஆதிக்கத்தை உயிருக்குத் துணிந்து ஒழித்ததன் பலன் இதுதானா? இராஜாஜி, பக்தவத்சலனார் உத்திரவுகளுக்கும் இதற்கும் என்ன பேதம்? இதனால் யார் பயனடைவார்கள்?

உத்தியோகத்திற்குத் தகுதி _ திறமை பார்ப்பதே யோக்கியமற்ற காரியம் என்று 40 ஆண்டுகளாகச் சொல்லிப் போராடி வருகிற நான், பாஸ் செய்தவனைப் பள்ளியில் சேர்ப்பதற்குத் தரம் பார்க்கவேண்டுமென்றால் பெரிதும் ஜாதித் தரம் தவிர வேறு தரம் என்ன? நாம்தான் பாஸ் பண்ணாதவனைப் பெயில் ஆக்குகிறோமே! தகுதி _ திறமை பார்த்துச் சேர்க்கப்பட்டவனும் பெயில் ஆகிறானே?

நான் மனித சமுதாயத்தின் தகுதி, தரம் என்பவைகளைப் பார்த்து வந்த அனுபவமுடை யவன், அவைகளைப் பற்றி நான் எழுதி வந்த கருத்துகள் இன்னமும் இருக்கின்றன. பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு ஆக, தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கு ஆக உழைத்து வந்தவன் _ வருபவன் நான். மந்திரிகள் முதல் அவர்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஆகித் தீரவேண்டும் என்பவன்.

கல்வி விஷயத்தில் இந்த ஆட்சியைவிட காமராஜர் ஆட்சி மிக்க தேவலாம் என்று ஆக்கிவிடக்கூடாது.

பாஸ் செய்த பின்பு தகுதி, திறமை, தரம் எதற்காகப் பார்க்கப்படுகிறது? அது எதற்காக வேண்டும்? அதன் அர்த்தம் என்ன? அதன் பலன் என்ன? மந்திரி சபையில், பெரிய பதவியில், அதிகாரத்தில் தரமுள்ளவர்களால், திறமை உள்ளவர்களால் ஏற்பட்ட நன்மை பெருமை என்ன? தகுதி, திறமை, தரம் அற்றவர்களால் ஏற்பட்ட கெடுதி என்ன? அதிகாரம், உத்தியோகங் களிலும் வகுப்பு, உள்வகுப்பு, உட்பிரிவு, ஜாதி வகுப்புரிமை வேண்டும். சர்க்காருக்கு 50 கோடி ரூபாய் மது இலாகா மூலம் வருவாய் கிடைத்திருக் கிறது. இது யார், எந்த வகுப்பார் தந்த பணம்? இந்த வருவாய் கொடுத்தவர்களை வடிகட்டுவது தான் பலனா? இதைக் கவனிக்கவேண்டும்.

கண்டிப்பாய் அரசாங்க அகராதியில் தகுதி, திறமை, தரம் என்ற சொற்களை எடுத்துவிட வேண்டும்.
இது என் சொந்தக் கருத்து.


---------------------------தந்தை பெரியார் "விடுதலை" 17.7.72

(தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த டாக்டர் நாவலர் அவர்கள் நுழைவுத் தேர்வைக் கொண்டு வருவதுபற்றிக் கருத்துத் தெரிவிக்க - அதனை எதிர்த்து தந்தை பெரியார் விடுதலையில் வெளியிட்ட முக்கிய அறிக்கை இது. (குறிப்பு: தந்தை பெரியார் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு டாக்டர் கலைஞர் அவர்கள் டாக்டர் நாவலரின் கருத்தைச் செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). நுழைவுத் தேர்வு என்னும் சமூகநீதிக்கு எதிரான முறையை கலைஞர் அவர்களின் தி.மு.க.ஆட்சி நீக்கியது. அதன் மூலம் கடந்த மூன்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் உயர் கல்வியில் தமக்குரிய இடத்தை பெற்று வருகின்றனர். இதன் மூலம் சமூக நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் நுழைவுத்தேர்வு நடைமுறையில் இல்லாத நிலையில் மத்திய அரசு மீண்டும் இந்திய அளவில் நுழைவுத் தேர்வைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இந்த சமூக நீதிக்கு எதிரான முறையைக் கைவிட வலியுறுத்தி வழக்கம் போல திராவிடர் கழகம் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி தனது முதல் குரலை எழுப்பியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் நுழைவுத் தேர்வைப் பற்றிய தந்தை பெரியார் அவர்களின் கருத்து என்ன என்பது தெரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். அதன் அடிப்படையில் இது வெளியிடப்படுகிறது)

8 comments:

தமிழ் ஓவியா said...

ஒற்றைச் செருப்புகள்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கேட்பாரற்றுக் கிடக்கும்
பிளாட்பார ஒற்றைச் செருப்புகள்!
பெற்ற பிள்ளைகள்
பார்ப்பாரற்றுக் கலங்கும்
முதியோர் இல்ல
அனாதை பெற்றோர்கள்!

இதுவன்றோ தாய்மொழி!

Female - Male
பெண் - ஆண்
She - He
அவள் - அவன்
Sister - Brother
சகோதரி - சகோதரர்
Aunt - Uncle
அத்தை - மாமா
தாய்மை - ?
தமிழில் தாய்மை மட்டுமே!
இதுவன்றோ தாய்மொழி!

உள்ளே! வெளியே!

பார்ப்பன பிச்சைகள் -
அர்ச்சனைத் தட்டுடன்! கோவிலின் உள்ளே!
சூத்திர பிச்சைகள்
அலுமினியத் தட்டுடன்! கோவிலின் வெளியே!

வெறுங் காலோடு!

வானமே கடையின் கூரை!
சூரியனே கடை விளக்கு!
குனிந்த தலை நிமிராமல்
குத்திக் குத்தித் தைக்கிறான்!
கிழிந்து போன செருப்புகளை!
ஒற்றை இலக்க நாணயங்கள்,
ஒவ்வொரு முறை கூலிப் பணமாய்!
வெளிச்சத்துக்கு மெள்ள மெள்ள
விடை கொடுக்கும் மாலைவேளை,
முடிந்துவிட்டது வேலை நேரம்!
கிழிசலை மறைத்து வேட்டியை
மேலே தூக்கிக் கட்டி,
விறுவிறுவென நடக்கிறான்
வெறுங்காலோடு வீதியிலே!

ஆக்கம்: தமிழ்ச்செல்வி 7-7-2012

தமிழ் ஓவியா said...

சிலந்தி


ஒரு வகை சிலந்தி, `கறுப்பு விதவை' என்று அழைக்கப்படுகிறது.

`லேட்ரோ டெக்டஸ் டிரெடி சிம்கட்டாடஸ்' என்பது இதன் அறிவியல் பெயர்.

இந்த வகை சிலந்தியில் ஆண் சிலந்தி உருவத்தில் சிறிதாகத்தான் இருக்கும். ஆண் சிலந்தியுடன் இனக்கலவி செய்தபின், பெண் சிலந்தியானது, ஆண் சிலந்தியையே அடித்து சாப்பிட்டுவிடும்.

இப்படி வினோத செயலால் பெண் சிலந்தி விதவை ஆகிவிடுவதாலும், தன் கறுத்த உருவத்தினாலும் அது கறுப்பு விதவை (பிளாக் விடோ ஸ்பைடர்) என அழைக்கப்படு கிறது. மேலும் இதன் வயிற்றுப் பாகத்தில் சிகப்பு வட்டம் ஒன்று காணப்படும்.

இது மற்ற எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள இயற்கையாக எச்சரிக்கை குறியாக அமைந்துள்ளது. பொதுவாக வெப்ப நாடுகளில் இவ்வகை சிலந்திகள் வாழ்கின்றன. கறுப்பு விதவை விஷம் மிக்கது. மனிதர்களைக் கடித்தால் மரணம் நிச்சயம். 7-7-2012

தமிழ் ஓவியா said...

சமூகநீதி


இவ்வாண்டு மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் மாணவிகள்: 18,060 பேர். மாணவர்கள்: 9,816 பேர். மாணவர் களைக் காட்டிலும் 2 மடங்கு அதிகமாக மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகள் 11,883 பேர். பழங்குடியினத்தைச் சேர்ந்த 194 மாணவ மாணவிகள்.

மொத்த விண்ணப்ப தாரர்களில் 10 ஆயிரத்து 475 பேர் குடும் பத்தில் முதல் தலைமுறையாக கல்லூரிப் படிப்புக்கு வருபவர்கள்.

தகவல்: க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனருக்குப் புரோகிதம் இல்லை


தொல்காப்பியம் காலத்தில் பார்ப் பனருக்குப் பாங்கன் தொழில் இருந்த தேயன்றி புரோகிதத் தொழில் இல்லை.

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில், இன்ப ஒழுக்கத்தையும், இல்லறத்தையும் சிறப்பாய்க்கூறும் அகத்திணையில், களவியல், கற்பியல்களிலேனும் பொதுப் படக்கூறும் பிற இயல்களிலேனும், பார்ப்பனர்க்கு அறுத்தொழிலும் பாங்கத் தொழிலும் ஆவொடு நிமித்தங்கூறலும் வாயில் தொழிலுமேயன்றிப் பிற தொழில்கள் கூறப்படவேயில்லை.

பார்ப்பனர் தொழில்களைக் கூறும் தொல்காப்பிய நூல் பாக்கள்:

கற்பியல்

காமநிலை யுரைத்தலும் தேரிநிலை உரைத்தலும்

கிழவோள் குறிப்பினை எடுத்துக் கூறலும்

ஆவொடுபட்ட நிமித்தங் கூறலும்

செலவுறு கிளவியும் செலவழுங்குளவியும்

அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய

தோழி, தாயே, பார்ப்பான், பாங்கன்

யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப

செய்யுளியல்:

பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி

களவிற் கிளவிக் குரியவர் என்ப

பேணுதரு சிறப்பிற் பார்ப்பான் முதலா

முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகையித்

தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்

பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி

யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே.
7-7-2012

தமிழ் ஓவியா said...

அரசியலில் இப்படியும் ஒரு தோழர்


மே. சு. சண்முகசுந்தரம், தி.மு. கழக முன்னாள் முதல் அவைத் தலைவர், மதுராந்தகம் வட்டம், வாலசாபாத் ஒன்றிய திமு கழக பிரதிநிதி., சீயமங் கலம் துவக்கப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் மன்றத் தலைவர் 133, செட்டித் தெரு திம்மராஜம்பேட்டை, காஞ்சிபுரம் - 631 601. மனப்பூர்வமாக 23.04.2012 அன்று எழுதித் தந்த இறுதி முறி (உயில்).

என் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், இயக்கத் தோழர்கள் அனைவரும் என் மறைவுக்குப் பிறகு நடத்த வேண்டிய நடைமுறைகள்:

1. உடலை குளிப்பாட்டக் கூடாது.

2. நெற்றியில் விபூதி, குங்குமம், சந்தனம் எதுவும் பூசக்கூடாது.

3. உடலுக்கு மாலை இடலாம்.

4. உடல் அருகில் அமர்ந்து அழக் கூடாது.

5. பறை (அ) மேளம் அடிப்பது சங்கு ஊதுவது எதுவும் கூடாது.

6. இறுதிச் சடங்கு என்று எந்தச் சடங்கையும் செய்யக் கூடாது.

7. என் துணைவியாருக்கும் என் மறைவைத் தொடர்ந்து எந்தவித சடங்கும் செய்யக் கூடாது.

8. என் மறைவிற்குப் பிறகும் என் துணைவியார் பூவும் பொட்டும் வைத்துக் கொள்வதையே நான் விரும்புகிறேன்.

9. போரூர், சிறி இராமச்சந்தரா மருத்துவமனையினரின் 13.09.2003 தேதியிட்ட கடித எண் 69/474/MS/2003 பிரகாரம் பெரியார் அண்ணா பிறந்த நாள் முன்னிறுத்தி முடிவெடுத்து உறுதி செய்தபடி என் உடலை அந்த மருத்துவமனைக்கு தானம் கொடுத்துவிட வேண்டும்.

10. என் மறைவை முன்னிட்டு கொள்ளி வைப்பது, பால் ஊற்றுவது, கருமாதி செய்வது, திதி கொடுப்பது எதுவும் இருக்கக் கூடாது.

11. உறவினர், நண்பர்கள், கழகத்தவர் அனைவருக்கும் உரிய நேரத்தில் என் மறைவைத் தெரிவிக் கவும்.

12. மருத்துவமனைக்கு உடல் சென்றதும் வருபவர்கள் மரியாதை செய்ய விரும்பினால் அவர்கள் வசதிக்காக என் புகைப்படம்ஒன்றை வீட்டில் வைக்கலாம்.

13. என் மறைவை அனைவருக்கும் தெரியப்படுத்தும் நோக்கத்துடன் மறைவுக்குப் பின் ஒரு மாதத்திற் குள்ளாக ஏதேனும் ஒரு நாளில் நினைவு ஏந்தல் நிகழ்ச்சி ஒன்றை கூட்டலாம்.

14. இங்கே குறிப்பிட்ட நடை முறைகளை என் மக்கள்

1) அருள் பிரகாசம்

2) இராணி

3) ருக்குமணி

4) கோவலன்

5) துணைவியார் அஞ்சலம் மற்றும் என் மருமகன், மருமகள்கள் பேரன் பேத்திகள் தவறாமல் செய்யக் கடமைப் பட்டவர்கள் ஆவார்கள்.

15. இந்த இறுதி முறி (உயில்) நான் என் மனம் ஒத்து முழு நினைவு டனும் ஒப்புதலுடனும் தயாரிக்கப் பட்டு கையொப்பம் இடப்பட்டது.

இப்படிக்கு
(மே.சு. சண்முகசுந்தரம்)
திம்மராஜம்பேட்டை
23.04.2012

சாட்சிகள்:

1. எம். வேதாசலம், தி.மு.க. ஒன்றிய செயலாளர், வாலாசாபாத்,

2. என். பாண்டியன், தி.மு.க. பேரூ ராட்சி செயலாளர், வாலாசாபாத்

3. ஏ. கணேசன், முன்னாள் ஊராட்சித் தலைவர், திம்மராசம்பேட்டை.

குறிப்பு: திராவிடர் கழகத்திற்கு அடுத்த படியாக தி.மு.க.வில் தான் இத்தகைய உணர்வைக் காண முடிகிறது பாராட் டுகள். 7-7-2012

தமிழ் ஓவியா said...

பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு.

உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம், பனாமா கால்வாய்.

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு, ஜெர்மனி.

திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது `பெட்ரோலியம்'.

தபால்தலையை (ஸ்டாம்ப்) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு மலேசியா.

உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி.

இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் தாராப்பூரில் அமைக்கப்பட்டது.

ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டுமே வரிக்குதிரை காணப்படுகிறது.

மேகங்களின் வீடு என்று அழைக்கப்படுவது மேகாலயா.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டில் நீர்த் தேக்கங்களின் மொத்த கொள்ளளவு


1. வீடூர் நீர்த்தேக்கம் 17.13Mm3

2. கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம் 66.10

3. சாத்தனூர் நீர்த்தேக்கம் 228.91

4. வாணியாறு நீர்த்தேக்கம் 11.837

5. வெல்லிங்டன் நீர்த்தேக்கம் 73.40

6. மணிமுக்தாநதி நீர்த்தேக்கம் 20.62

7. கோமுகி நதி நீர்த்தேக்கம் 15.86

8. மேட்டூர் நீர்த்தேக்கம் 2708.79

9. சின்னாறு நீர்த்தேக்கம் 14.15

10. பவானி சாகர் நீர்த்தேக்கம் 929.00

11. அமராவதி நீர்த்தேக்கம் 114.61

12. பாலாறு பொரந்தலாறு நீர்த்தேக்கம் 43.19

13. வரதமாநதி நீர்த்தேக்கம் 16.31

14. குடகனாறு நீர்த்தேக்கம் 12.29Mm3

15. வைகை நீர்த்தேக்கம் 194.78

16. மஞ்சனாறு நீர்த்தேக்கம் 13.48

17. மணிமுத்தாறு நீர்த்தேக்கம் 156.07

18. பேச்சிப்பாறை நீர்த்தேக்கம் 152.36

19. பெருஞ்சாணி நீர்த்தேக்கம் 81.84

20. சித்தாறு நீர்த்தேக்கம் 1 17.28

21. சித்தாறு நீர்த்தேக்கம் மிமி 28.55

22. சோலையாறு நீர்த்தேக்கம் 152.70

23. பரம்பிக்குளம் நீர்த்தேக்கம் 504.66

24. ஆழியாறு நீர்த்தேக்கம் 109.43

25. திருமூர்த்தி நீர்த்தேக்கம் 54.80

25 அணைகள் / நீர்த் தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவு 5738.15Mn3 5738.15 X 106 க.மீட்டர்

பெறக்கூடிய வண்டல் மண்ணின் கொள்ளளவு 574 X 106 க.மீட்டர்

20270 X 106 க.அடி

நன்றி: ஜூலை 2012 தமிழக விவசாயி உலகம்

தமிழ் ஓவியா said...

அவர் நாத்திகரா?


அனுதினமும்

மூன்று வேளையும்

கோவிலுக்குப் போகிறார்...!

குட்டிக் கொண்டு

தலையில்...!

தோப்புக் கர்ணம்

போடுவதில்லை...!

குப்புற விழுந்து சாஷ்டாங்கமாய் கும்பிட்டு வணங்கி

அங்கப் பிரதட்சணம்

வருவதில்லை

குருக்கள்!!

கோ.கலியபெருமாள்