Search This Blog

24.4.12

ராஜபக்சேவின் வாலை நிமிர்த்த முடியாது


இலங்கை அதிபர் ராஜபக்சேவைச் சந்திக்கவும், இலங்கையில் ஈழத் தமிழர்களின் நிலைப்பாட்டை நேரில் அறிந்து கொள்ளவும் இந்தியாவிலிருந்து குழுக்கள் சென்று வந்திருக்கின்றன - அதிகாரிகள் மட்டத்திலும் அத்தகைய குழுக்கள் சென்று வந்ததுண்டு.

இவையெல்லாம் விளக்கெண்ணெய்க்குக் கேடாக முடிந்தவையே தவிர, பிள்ளை பிழைத்த பாடில்லை. சுருக்கமாகச் சொல்லப் போனால் இன வெறியில் இட்லரைத் தூக்கிச் சாப்பிட்ட வராகத்தான் ராஜபக்சே இருந்து வருகிறார்.

தமிழன் என்று ஒருவன் இருந்தால்தானே - ஓர் இனம் இருந்தால்தானே - உரிமைக்காகக் குரல் கொடுப்பார்கள் - அந்த இனத்தையே பூண்டோடு அழித்து விட்டால் அப்பொழுது பிரச்சினையே ஏற்படாது அல்லவா! அந்தத் திட்டத்தோடு அமைந்ததுதான் ராஜபக்சேயின் ஒவ்வொரு செயல்பாடும். ஊரையும், உலகத் தையும் ஏமாற்ற அவ்வப்பொழுது கபட நாடகம் ஆடுவார் - அவ்வளவுதான்.

ஜெனிவா - மனித உரிமைக் குழுவின் தீர்மானத்துக்குப் பிறகுதான் ராஜபக்சேவின் பாச்சா பலிக்கவில்லை.

உலக மக்கள் ராஜபக்சேயின் உண்மை முகத்தை அதிகார பூர்வமாகத் தெரிந்து கொண்டு விட்டனார்.

பிரிட்டன் தொலைக்காட்சியின் (பிரிவு - 4) வெளிப்படுத்திய - இன அழிப்புக் கொடூரக் காட்சிகள் உலக மக்களின் மனச்சான்றினைத் தட்டி எழுப்பிவிட்டன.

இன்றைக்கு உலகம் முழுவதும் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை (Genocide) ஓரளவு தெரிந்துகொண்டு இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் வெளிநாடுகள்தான் - அதிலும் பிரிட்டனும், அமெரிக்காவும்தான்.

இந்தியாவின் பிரதமராக இருந்த திருமதி. இந்திராகாந்தி அவர்கள் இலங்கையில் நடப்பது இனப்படுகொலையே என்று விளித்தார். அதற்குப் பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர்கள். இந்நிலையிலிருந்து தடம் புரண்டு ஓரினமே முற்றிலும் அழிக்கப்படுவதற்குத் துணை போய் விட்டனர். இதன் மூலம் மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும் உன்னத நாடு இந்தியா என் னும் புகழைக் குப்புறப் புரட்டித் தள்ளி விட்டனர்.

உலகை உய்விக்கும் உன்னதக் கொள்கை என்று - முற்போக்குச் சிந்தனையுடையவர்கள் மதித்து வந்த - கம்யூனிஸ்டு நாடுகள் தடம் புரண்டு, அந்தத் தத்துவத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டன.

திருமதி சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் ஒரு குழு இலங்கை சென்று மீண்டது, அதன் ஈரம் காய்வதற்கு முன்னதாகவே - தமிழர் பகுதிகளி லிருந்து இராணுவத்தை வெளியேற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று மட்டையடியாகக் கூறிவிட்டார் ராஜபக்சே!

ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தைக் கிழித்துக் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து விட்டார்; வடக்கு- கிழக்கு மாகாண இணைப்புப் பற்றி அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்தது.

அதனை நீதிமன்றம் வாயிலாக செல்லாது என்று ஆக்கிக் கொண்டு விட்டார்.

13ஆவது திருத்தம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அலையாதீர்கள் என்று அடித்துச் சொல்லி விட்டார்.

இதற்குமேல் என்ன இருக்கிறது? இதற்குப் பிறகு இந்தியாவோ, அய்.நா.வோ என்ன செய்ய வேண்டும் என்பதுதான் இப்பொழுது உலக நாடுகள்முன் செங்குத்தாக எழுந்து நிற்கும் பிரச்சினை.

உலக நாடுகளுக்கே சவால்விட்டு நிற்கிறது இலங்கை சிங்கள அரசு. இப்பொழுது இது ஏதோ ஈழத் தமிழர் பிரச்சினையல்ல; அதையும் தாண்டி உலக நாடுகளைச் சவாலுக்கு இழுக்கும் மனித உரிமைப் பிரச்சினை.

அமெரிக்கா நற்பெயரைத் தட்டிக் கொண்டு போய் விட்டது. நியாயமாக அந்த இடத்தில் இந்தியா இருந்திருக்க வேண்டும்; கோட்டை விட்டு விட்டது; இனியாவது நற்புத்தி வருமா? எங்கே பார்ப்போம்!

------------------"விடுதலை” தலையங்கம் 24-4-2012

9 comments:

தமிழ் ஓவியா said...

நீதித்துறை ஊழல் பற்றி சோ வா பேசுவது அச்சச்சோ


18.04.2012, தேதியிட்ட ''துக்ளக்'' ஏட்டில் பக்கம் 29-ல் ஒன்றுக்கு பதில் அளித்த ''துக்ளக்'' சோ.

''சென்னை உயர்நதிமன்றத்தில் 1962இல் ஊழல் நீதிபதி கிடையாது. இப்போது? ஊழல் இல்லா நீதிபதிகள் உண்டா என்று தெரியாது. இது தான் திராவிடர் கழகம் ஏற்படுத்திய மகத்தான மாற்றம்'' என்று புலம்பியிருக்கிறார்.

''இது தான் திராவிடர் கழகம் ஏற்படுத்திய மகத்தான மாற்றம்'' எனபதிலிருந்தே 1962க்குப் பின்னர் பார்ப்பனரல்லாதார் பெருமளவு (மக்கள் தொகை விகிதாசாரத்திற்கும் குறைவாகத்தான்) நீதிபதிகள் வநது வட்டார்கள் என்பதே பூணூல் அய்யரை இப்படிப் புலம்ப வைத்திருக்கிறது. அது ஒரு புறம் இருக்கட்டும்! இப்புலம்பலில் உண்மை அல்லது நாணயம் உள்ளதா என்பதே நமது கேள்வி.

இதோ வரலாற்றுக் குறிப்பு ஆதாரத்துடன் அய்யர்வாளுக்கு சமர்ப்பணம்:-

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அதிகாரிகள் அனைவரும் ஆங்கிலேயர் களாகவே இருந்த காலத்தில், இன்று சென்னை என அழைக்கப்படும் மதராசபட்டினத்தில் 1644-ஆம் ஆண்டு முதன்முதலாக கிராம நீதிமன்றத்திற்கு அதிகாரியாக, அதாவது மாஜிஸ்ட்ரேட்டாக முதன்முதலாக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் பெயர் கண்ணப்பா, அவர் பார்ப்பன இனத்தைச் சார்ந்தவர். சிவில் மற்றும் கிரிமினல் சம்பந்தமான சிறு வழக்குகளை விசாரித்து வந்தார். சிறிது காலத்திலேயே அவர் மீது லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு கைது செய்யப்பட்டார், தகுந்த விசாரணைக்குப்பின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவரை பதவியிலிருந்து நீககினார்கள். இதன் விளைவு என்ன தெரியுமா? 1648லிருந்து ஆங்கிலேயர்களே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டார்கள். அந்த அளவுக்கு இநதியர்களுக்கு ''பெயர்'' வாங்கித்தந்த ''புனிதமான்'' புண்ணியவான்கள் தான் இந்தப் பார்ப்பனர்கள் என்பதை நாம் சொல்லவில்லை வரலாறு சொல்கிறது. இதோ ஆதாரம்:

‘’According to the old native system a Choultry court was administering justice in the village area of Madharasapatinam. This court was presised over by the village Headman known as “Adigar”, or a Governor of the Town as he was called. An Indian native Kannappa a Brahmin by caste, was appointed first Adigar and magistrate of the Town in 1644 to decide petty civil and criminal cases. Due to some charges of benbery and corruption against Kannappa, he was arrested and placed behind the bars. His downfall encouraged his enemies and a petition was handed over to the higher authorities against him stating certain serious charges. The Agent and the counsel made enquiry into these charges and held Kannappa guilty, and dismissed him from the office, dishonourably. One important consequence of this incident was that European persons were appointed judges to preside over the Choultry court from 1648 onwards.
ஆதாரங்கள்:

1. Lore “Vestiges of old Madras” Vol I, Pages 272,273

2. India Office records, original correspondence servies No. 2542.

மேலே கண்ட தகவல்கள் “Land Marks in Indian Legal History and consititutional History” by V.D. KULSHRESHTHA - Page 44 -ல் காணப்படுகிறது. இந்நுல் சட்டக்கல்லுரி மாணவர்களுக்கு பாட நுலாக பரிந்துரைக்கப்பட்ட நுல் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இப்பொழுது புரிகிறதா? இந்திய வரலாற்றில் முதல் (பார்ப்பன) நீதிபதியின் யோக்யதை?

இதைப் போல திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில் ராசகோபாலச்சாரியார் புலம்பி தனது SWARAJYA இதழில் எழுதியதும் உண்டு. அதே சமயம் கோவையைச் சேர்ந்த பார்ப்பன வழக்கறிஞர் HINDU நாளிதழில் ஆசிரியருக்கு கடிதம் பகுதியில் இதே கருத்தை வெளியிட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்ட வரலாறும் உண்டு.

இப்போது நமது உயர்நீதிமன்றம் என்ன செய்யபபோகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்ககிறோம். இன்னும் இது போன்ற ''சாதி ஆணவம்'' கொண்ட சோவை அறிவாளி என எண்ணும் ஏமாந்த அப்பாவித் தமிழர்களுக்கு இனியாவது இன உணர்வு வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

- பி.நடராசன், நீதிபதி (ஓய்வு), மதுரை 28-4-2012

தமிழ் ஓவியா said...

வளைஞ்சு கொத்தும் ஆரியப்பாம்பு


நியூ ஜெனரேஷன் தமிழன் ஒருவர் வேண்டாத விவாதம் என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி எழுதியுள்ளார். அதுதான் வேண்டாத விவாதம் என்பது தெரிந்துவிட்டதே நியூ ஜெனரேஷன் தமிழனுக்கு பிறகு எதற்கு இந்த வேண்டாத கவர் ஸ்டோரி? வேண்டாத விவாதம் தொடர்பான கட்டுரைக்கு இரு அரசியல் பிரமுகர் களின் பேட்டி எதற்கு? இப்படி சிந்திக்கும் சாமானியர்கள் யாருக்கும் இயல்பாய் கேள்வி எழுந்தாலும், உள்ளே படிக்கும்போதுதான் தெரி கிறது, சிலருக்கு அதிலும் குறிப்பாக அந்த நியூ ஜெனரேஷன் தமிழன் போன்றவர்களுக்கு கட்டுரை மூலமாக சில பிரசாரங்கள் செய்ய வேண்டி யுள்ளது என்பது. சரி என்னத்தான் அந்த கட்டுரை சொல்லுகிறது? சித்திரை முதல் புத்தாண்டாக இருந்ததை தை முதல் நாளுக்கு கலைஞர் மாற்றினாராம், மீண்டும் ஜெயலலிதா சித்திரை முதல் நாளுக்கு மாற்றிவிட்டாராம். இந்த கதைதான் ஊருக்கே தெரியுமே, இதில் என்ன செய்தி? என்று படிப்பவர்களுக்கு தோன்றலாம். ஆனால் கட்டுரையின் நோக்கம் அதுவல்ல. யார் செய்தது சரி என்பதை காதைச் சுற்றி வாயில் ஊட்டு வார் கட்டுரையாளர். அதை அடடா என்ன ஒரு நடுநிலையில் ஊட்டுகிறார் என்று நம்பி, அவர் மறை முகமாக திணிக்கும் சிலவற்றை நாம் உண்டு செரிக்கவேண்டும் அதுதான் நோக்கம்.

என்ன கருத்தை அப்படி மறைமுகமாக திணிக்க விரும்புகிறார்? வேறொன்றுமில்லை, ஜெயலலிதா செய்தது தவறு என்று பலரும் பேசிக் கொண்டிருக்கும்போது, அதிலும் குறிப்பாக தமிழுணர்வுள்ளவர்கள் குமுறிக்கொண்டிருக்கும்போது, தமிழன் என்ற பெயரில், கட்டுரையாளர் சொல்லவருவது, ஜெயலலிதாவை மட்டும் யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது, கருணாநிதி ஜெயலலிதா இருவரின் தனிமனித விருப்பு வெறுப்புகளும்தான் காரணம் என்று குற்றச்சாட்டை இருபுறமும் இழுத்துவிட்டு சாமர்த்தியமாக சமன் செய்கிறாராம் இந்த கட்டுரையாளர்.

எப்படி செய்கிறார் அந்த வேலையை? கலைஞர் ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத் தையும் இரத்து செய்கிறாராம் ஜெய லலிதா அதுபோல இதுவும் ஒன்றாம். அடடா என்ன அருமையாக பூசி மெழுகுகிறார் கட்டுரையாளர். அடுத்து கலைஞர் பக்கம் வருகிறார், இப்போது கவனியுங்கள், தமிழ் புத்தாண்டை தைக்கு மாற்றியது கலைஞரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அடிப் படையிலாம். அந்த வெறுப்பிற்கான காரணங்கள் வெளியில் சொல்லாததாம், ஆனால் இந்த கட்டுரையாளருக்கு மட்டும் தெரியுமாம். என்ன அது? திராவிட ஆரிய மோதல், பிரா மணர்கள் மீதான வெறுப்பு, இந்து மக்களின் நம்பிக்கையை நிராகரிக்கும் மனோபாவம் ஆகியவையாம். அடடா என்ன ஒரு நடுநிலை சிந் தனை கொண்டவர் இந்த கட்டுரை யாளர்? அசந்துபோகவேண்டும் இவரது நடுநிலையைக் கண்டு அனைவரும் அப்படி ஒரு நடுநிலை.

தமிழ் ஓவியா said...

கலைஞரின் வெளியில் சொல்லாத வெறுப்பு காரணங்களின் நேர் எதிரான ஆதரவு காரணங்களே ஜெயலலிதாவின் முடிவுக்கு பின்னணி என்று நாம் மாற்றி சிந்திக்கமுடியாதா? சிந்திக்கலாம், ஆனால் அடடா என்ன ஒரு நடுநிலை சிந்தனை கொண்டவர் இந்த கட்டு ரையாளர்? நடுநிலை என்றால் இது வல்லவோ நடுநிலை என்று வாசகர்கள் அனைவரும் அசந்து போவார்கள் என்று கட்டுரையாளர் கற்பனையில் எழுதியுள்ளார் இந்த கட்டுரையை. இப்படியே பலவற்றை எழுதி இறுதியில், வழக்கமாக பல கட்டுரை யாளர்கள் அதிமேதாவிகளாக தங் களைக் கருதிக்கொண்டு பொது மக் களுக்கு ஆலோசனை தருவார்கள், அந்த கடமையை செவ்வனே செய்திருக் கிறார் இந்த நியூ ஜெனரேஷன் தமிழனும். அப்படி என்ன சொல்லி முடித்திருக்கிறார்? இன்று நாம் அன்றாட வாழ்வில், ஆங்கில ஆண்டைத்தான் பின்பற்று கிறோம்.

ஆங்கில ஆண்டின்படிதான் பள்ளியில் சேர்க்கிறோம், வேலைக்கு விண்ணப்பம் போடுகிறோம், பயண முன்பதிவு செய்கிறோம், மின் கட் டணம் கட்டுகிறோம், வரி செலுத்து கிறோம், நீதிமன்றத்தில் ஆஜராகிறோம், திருமண நாள் கொண்டாடுகிறோம், பணி ஓய்வு பெறுகிறோம். தமிழ் புத்தாண்டு என்பது அது சித்திரையானாலும் சரி, தையானாலும் சரி, ஒரு நாள் விடுமுறைக்கும் பட்டிமன்றங்களுக்கும் தவிர வேறெதற்கும் பயன்படுவதில்லை. அப்படியிருக்க, இதற்கேன் இத்தனை சர்ச்சை? இவர்களுக்கும் சேர்த்துதான் திருவள்ளுவர் சொல்லிப் போயிருக் கிறார்:

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு.

என்று கட்டுரையை நிறைவு செய் திருக்கிறார் நியூ ஜெனரேஷன் தமிழன். அடடா என்ன ஒரு நல்ல கருத்தை சொல்லியுள்ளார் இவர் என்று அனைவரும் கருதுவார்கள் என நினைத்தாரோ என்னவோ தெரிய வில்லை அல்லது அப்படி கருத வேண் டும் என்று கருதி வள்ளுவரின் குறளை யும் சொல்லி முடித்துள்ளார் போல.

சரி நாம் கருதியதை இப்போது சொல்லித்தான் ஆகவேண்டும். முதலில் இவரது இறுதி ஆலோசனை அடிப்படையில் அதே அடிப்படையில்....

பஞ்சாங்கம், காலண்டர் போன்ற வற்றில் முட்டாள்தனமாக தேவை யற்றதை எதற்காக போடவேண்டும்? அவற்றை எல்லாம் தடை செய்வது தான் நல்லது என்று எடுத்து சொல்லி, பஞ்சாங்கம் பார்க்கும் பஞ்சகச் சங்களுக்கும், கோவிலில் மணியாட்டும் மனிதர்களுக்கும் அவர்களுக்கு தலையாட்டும் மடையர்களுக்கும், திருக்கல்யாணத்தில் இருந்து திருமஞ்சன உலாவரைக்கும் நடத்துபவர்களுக்கும் ஒரு ஆலோசனை கட்டுரை எழுத இந்த நியூ ஜெனரேஷன் தமிழனுக்கு நேர்மை இருக்கிறதா? அவ்வாறு நேர்மை உணர்வு இருந்தால் அடுத்த கவர் ஸ்டோரி எழுதவேண்டும் அதே நியூ ஜெனரேஷனில். ஆங்கில ஆண்டை பயன்படுத்தும் நமக்கு எதற்கு பழைய பஞ்சாங்கமும் அறுபது ஆண்டு கணக்கும் என்ற தலைப்பில். அவ்வாறு எழுதினால், இந்த தமிழன் ஒரு நேர்மையான திராவிடத் தமிழனே, தமிழன் என்ற பெயரில் பதுங்கி யிருக்கும் பஞ்சகச்சம் அல்ல என்று நிரூபிக்க வாய்ப்பாக இருக்கும். இறுதியாக நானும் முடிக்கிறேன் இந்த கட்டுரையை ஒரு திருக்குறளோடு. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.

- - பிரின்ஸ் என்.ஆர்.எஸ் 28-4-2012

தமிழ் ஓவியா said...

சுஷ்மா


இந்திய நாடாளுமன்றத் தில் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் - பி.ஜே.பி.யைச் சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் நாடாளுமன்ற குழுவினர் இலங்கைக்குச் சென்றனர். அங்கு நிலவும் சூழல்களை நேரில் கண்டறிந்து, அதன் அறிக்கையை மத்திய அரசுக்குக் கொடுப்பது இந் தக் குழுவின் முக்கிய நோக் கமாகும்.

இதில் குறிப்பிடத்தக்க ஒரு தகவல் - குழுவுக்குத் தலைமை வகித்த திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர் களுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே தனியே அழைத்து விருந்து படைத்துள்ளார்.

சுஷ்மாவுடன் அவரின் மகளும் இந்தச் சுற்றுப் பயணத்தில் சென்றுள்ளார். (இது என்ன செயலோ!) விருந்தில் இருவரும் கலந்து கொண்டுள்ளனர் தனியாக ஒரு மணி நேரம் ரகசியப் பேச்சாம்!

குழு ஒன்றுக்குத் தலைமை தாங்கிச் சென் றுள்ளவர் தனியாகச் சென்று இலங்கை அதிபரைச் சந்திப் பது சரியா? இது பல சந் தேகங்களை ஏற்படுத்தாதா?

தனிப்பட்ட முறையிலா சுஷ்மா இலங்கை சென்றுள் ளார்? ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கிச் சென்றவர் இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளலாமா?

குழுவோடு சந்தித்து உரையாடியதற்கும், தனிப் பட்ட முறையில் சென்று உரையாடியதற்கும் இடையில் வேறுபாடுகள் உண்டா? அங்கே பேசப்பட்டது என்ன என்பதை இதுவரை வெளி யிட்டாரா?

ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கிச் சென்ற வரின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டாமா? (சீசரின் மனைவிபற்றி சொல் லப்பட்ட பழமொழியை அறிந்த வர்தானே திருமதி சுஷ்மா?)

இந்தத் தனிப்பட்ட சந்திப் புக்கும் - அதற்குப் பிறகு இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ள அடாவடித் தனமான கருத்துக்களுக்கும் தொடர்புண்டா என்கிற வினாக்கள் செங்குத்தாக எழுந்து நிற்கின்றன.

நாடாளுமன்றம் இன்று தொடங்கப்படும்போது, இதுகுறித்து வினாக்கள் வெடித்தெழுந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்தியாவின் வெளியுற வுத் துறை செயலாளராக விருந்த நிருபமாராவ் என்ற அம்மையார் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின், இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சிறப்பு அழைப்பை ஏற்று, கொழும்பு சென்றார் நல்ல முறையில் கவனிக்கப்பட்டார் என்றெல்லாம் செய்தி வந்தது. ஜெயவர்த்தனே அதிபராக இருந்தபோது இந்து ராம் துக்ளக் சோ போன்றவர்கள் சிறப்பு விருந் தினர்களாக அழைக்கப்பட்டு கவனிக்கப்பட்டனர்.

இந்த அணுகுமுறை ஆரியர்களான சிங் களவர்களுக்குக் கைவந்த கலை. அந்தக் கவனிக்கப் பட்டவர்களின் பட்டியலில் இப்பொழுது பிஜேபி-யின் சுஷ்மாவும் இடம் பெற்று விட்டார்.

புரிந்து கொள்க! - மயிலாடன் 24-4-2012

தமிழ் ஓவியா said...

காந்தியாரையே கழகத்துக்கு ஈர்த்த நாகர்கோவில் நோக்கி வாரீர்!


திருவிதாங்கூர் சமஸ்தானத் துக்கு உட்பட்ட வைக்கத்தில் தந்தை பெரியார் வருணாசிரமப் பார்த்தீனியத் துக்கு எதிராகக் கொளுத்திவிட்ட தீ... அந்த வட்டாரத்தையே சுழன்று சுழன்று தீய்த்தது.

அதன் உடனடிப் பலன் சுசீந்திரத் தில் முட்டி மோதியது. அங்கு கோயில் நுழைவுப் போராட்டம் என்கிற அள வுக்கு அது தகித்தது.

சுசீந்திரம் கோவில் நுழைவுப் போராட்டத்தை வரவேற்று எழுதினார் வைக்கம் வீரர் (குடிஅரசு, 31.1.1926).

தமிழ்நாட்டில் சுசீந்திரத்தில் உரிமைப்போர் நடப்பதற்குத் தங்களால் இயன்ற நன்கொடையைக் கொடுக் கவும் தயாராக இருக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோளாகும் என்று அந்தக் குடிஅரசு தலையங் கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மலையாளம் - பாலக்காடு நக ராட்சிக்கு உட்பட்ட கல்பாத்தி என்னும் கிராமத்தில் பார்ப்பனர்கள் வாழும் பகுதியில் ஈழவர்களும், தீயவர்களும் நடந்து செல்லக் கூடாது என்ற வருணா சிரமவெறி படம் எடுத்து ஆடியது; மீறிச் சென்றால் அடி உதைதான்.
அது குறித்தும் தந்தை பெரியார் எழுதுகிறார் குடிஅரசில் (16-5-1926).

சென்ற வருஷத்தில் வைக்கம் சத்தியாக் கிரகத்திற்குப் பிறகு மறுபடியும் கல்பாத்தி அக்கிரகாரத் துக்குள் ஈழவர்கள் பிரவேசிக்க முயன் றார்கள். அது சமயம் சட்டசபையிலும், பொது ரஸ்தாவிலும், எல்லா ஜாதி யாரும் போகலாம் என்று ஒரு தீர் மானத்தை நிறைவேற்றினார்கள் என்று அத்தலையங்கத்தில் தந்தை பெரியார் குறிப்பிட்டது. குறிப்பிடத் தக்கதே!

நாகர்கோவிலை உள்ளடக்கிய திருவிதாங்கூர் சமஸ்தானம் என்பது ஆரியத்தின் வேட்டைக்காடாக இருந் தது என்று சுருக்கமாகச் சொல்லலாம். கேரள மாநிலத்தைப் பற்றி விவே கானந்தர், பைத்தியக்காரர்களின் நாடு என்று சொன்னது பொருள் பொதிந்த பொன் வாக்காகும்.

அந்தப் பகுதியில் நாகர் கோவிலை நடுநாயகமாகக் கொண்டு முற்போக்குக் காற்று நாலா திசை களிலும் சுழன்றடித்தது.

தமிழ் ஓவியா said...

காந்தியாரையே கலக்கியவர்கள் நாகர்கோவில் சுயமரியாதை இயக்கத் தீரர்கள்.

காந்தியார் திருவனந்தபுரம் வருகிறார் என்றவுடன் தந்தை பெரியா ரின் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த நாகர்கோவில் தோழர்கள், தந்தை பெரியார் நடத்திய புரட்சி இதழில் வெளிவந்த காந்தி பகிஷ் காரம் ஏன்? என்ற தலைப்புடன் வெளி வந்த தலையங்கத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து திருவிதாங்கூர் வாலிபர்களுக்கு விண்ணப்பம், காந்தி யாரை பகிஷ்கரியுங்கள்! என்ற தலைப் பில் பதினாயிரக் கணக்கில் துண்டு வெளியீடுகளை அச்சிட்டு கொல்லம், கோட்டயம், திருவனந்தபுரம், நாகர் கோவில் முதலிய இடங்களில் காந்தி யார் வந்தபோது வெளியிட்டனர். காந்தியாரை நேரில் சந்திக்க விரும்பும் தங்கள் கருத்தையும் தெரியப்படுத்தி யிருந்தனர்.

திருவனந்தபுரம் சுயமரியாதை இயக்கத் தோழர்கள் ஆர். பத்மநாபன் (உப்பு சத்தியாக்கிரத்தின் போது சிறை சென்றவர்) எஸ்.ராமகிருஷ்ணன், பி.கே.வாசுதேவன், எஸ்.பாடலிங்கம் (நால்வரும் பி.ஏ. வகுப்பு மாணவர்கள்) ஆகியோரும், நாகர்கோயில் சுயமரியா தைச் சங்கப் பிரதிநிதிகளான தோழர் கள் ஈ.ராமசாமி, எஸ்.பூதலிங்கம், சுப்பையா ஆகியோரும் 21-1-1933 செவ்வாய் பிற்பகல் 12.30 மணிக்கு நாகர்கோவிலில் சந்தித்தனர்.

தமிழ் ஓவியா said...

பல்வேறு கேள்விகள், குறுக்குக் கேள்விகள் - விடைகள் இடம் பெற்றன.

அத்தோழர்கள், காந்தியாரிடம் தங்களை எப்படி அறிமுகம் செய்து கொண்டார்கள் தெரியுமா?

தேசத்தின் நன்மைக்காக எத்தகைய நஷ்டத்தையும் அனுப விக்க நாங்கள் தயாராயிருக்கி றோம். நாங்கள் அனைவரும் பகுத் தறிவு இயக்கத்தைச் (சுயவடியேடளைவ ஹளளடிஉயைவடி) சேர்ந்தவர்கள். நீங்கள் சொல்லும் ஹரிஜன ஆலயப் பிரவேச சேவையில் எங்களுக்கு நம்பிக்கை யில்லை. இதைவிட்டு பொருளாதாரம், சுகாதாரம், கல்வி முதலிய துறைகளில் நீங்கள் ஒத்துழைப்பதானால், நாங் களும் உங்களோடு ஒத்துழைக்க விரும்புகிறோம். அதற்கு நீங்கள் என்ன திட்டம் போடுகிறீர்கள் என்ற துவக்கத் தோடு வினாக்களை எழுப்பினார்கள். காந்தியார் அவருக்கே உரிய சனாதன முறையில் பதில் கூறிக்கொண்டு இருந்தார். ஓர் இடத்தில் சிக்கலான ஒரு கேள்வியை எழுப்பி காந்தியாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றதுதான் சந்திப்பு இமயமலையின் உச்ச கட்ட மான எவரெஸ்டு விடயமாகும்.

சுயமரியாதைக்காரர்கள்: கல்வி, வைத்தியம், சுகாதாரம் ஆகிய துறை களில் ஈடுபட்டு சட்டசபைகள் மூலம் வேலை செய்ய பலமான ஒரு கட்சியை ஸ்தாபிப்போம்.

காந்தியார்: செய்யலாம். எனது ஆயுள் மிகவும் குறுகியது. இன்னும் சில வருஷங்கள்தான் இருக்க முடியும். ஆகவே வேறு துறைகளில் இனி இறங்க முடியாது. நீங்கள் வாலிபர்கள். உங்கள் கட்சி பலப்பட்டு விட் டால், நான் ஜீவித்திருந்தால், உங்கள் கட்சியில் சேரத்தயார்! என்று காந்தியார் பதில் அளித்தார். (புரட்சி 4-2-1934)

எப்படிப்பட்ட இயக்கம், நமது இயக்கம் பார்த்தீர்களா? காந்தியாரே நமது இயக்கத்தில் சேர ஆசைப்பட்டார் என்றால் அது என்ன சாதாரணமா?

நாகர்கோவில் - நமது இயக்கத் தில் இதன் மூலம் சரித்திரத்தில் முண் டாசு கட்டி நிற்கவில்லையா?

மேலும் வரலாறு படைப்போம். ஏப்ரல் 27 இல் வாருங்கள் தோழர்களே குடும்பம் குடும்பமாக! கொள்கை முரசறைவோம்! குன்றத்து விளக்காய்ச் சுடர் முகம் காட்டுவோம் வாரீர்! வாரீர்!!

- மின்சாரம் 24-4-2012

தமிழ் ஓவியா said...

சூத்திரர்கள்!


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாசாபாத் அருகில் உள்ளது தொடூர் கிராமம். தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் - இளைஞர்கள் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டா டினர் (14.4.2012).

அண்ணலின் உருவம் பொறித்த கல்வெட்டு ஒன் றினையும் வைத்துள்ளனர்.

இதனைப் பொறுக்க முடியாத உயர்ஜாதி ஆண வக் கூட்டம் இரவோடு இரவாக அம்பேத்கருக்கு விழா நடத்திய இளை ஞர்களை கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதில் முனுசாமி எனும் தோழர் (வயது 38) மருத்துவ உதவி பலனின்றி மரணம் அடைந்துள்ளார் என்பது என்னே கொடுமை!

அடித்தவர்கள் சூத் திரர்கள் அடிபட்டவர்கள் பஞ்சமர்கள் என்பதுதானே சமூக நிலை? இந்த இரு வரும் இந்து மதம் என்ற சூளையில் விறகாகப் பயன் படுத்தப்படுபவர்கள்தானே.

பார்ப்பனீயம் திணித் துள்ள ஜாதி அடுக்குமுறை (Graded in Equality) பற்றி அண்ணல் எவ்வளவு சிறப்பாக எடுத்துக் கூறி யுள்ளார்!

பறையன் பட்டம் ஒழியாமல் உன் சூத்திரப் பட்டம் ஒழியவே ஒழியாது என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் எடுத்துக் கூறவில்லையா?

இந்தத் தலைவர்கள் எதற்காகப் பாடுபட்டார்கள் என்பதை அறிய வேண் டாமா? இவர்களின் அய ராத தொண்டின் காரண மாக ஏதோ ஒரு வகையில் பயன் பெற்றவர்கள் அந்தத் தலைவர்கள் எடுத்துச் சொன்ன கொள்கை களைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?

இன்னும் சொல்லப் போனால் இந்து மத சாத்திரப்படி பஞ்சமர்கள் நான்கு வருணத்துக்குள் (டீரவ ஊயளவந) கொண்டு வரப்படாததால் அசிங்கத் திலிருந்து தப்பித்து விட் டனர். நான்கு வருணத் துக்குள் சிக்கிய சூத் திரனோ, பிர்மாவின் காலில் பிறந்த ஜாதி ஆக்கப் பட்டான்! சூத்திரன் என் றால் பாரத ரத்னா பட்டமா? பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்றுதானே பொருள்?

இந்த யோக்கியதையில் உள்ளவர்கள், தமக்கு மேல் உயர் ஜாதிக்காரன் எனும் தன்மையில் சூத்திரர்களின் தலையில் காலை வைத்து அழுத்திக் கொண்டிருப் பவன் பக்கம் தன்மான உணர்வின் கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் முகத்தை வெளிப்படுத் தாமல், தமக்கும் கீழே பஞ்சமர் இருக்கிறார் என்ற போலி பெருமையுடன், அவர்களைத் தாக்குவது அறிவுடையோர் செயலும் அல்ல - மனித உரிமைத் தன்மையும் அல்ல!

- மயிலாடன் 24-4-2012

தமிழ் ஓவியா said...

கட்சிக் குரலில் பேசுகிறார்கள்



இலங்கைக்குச் சென்ற இந்திய நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் - அங்கு என்ன நிலை என்பதைக் குறித்துப் பேசாமல், அவரவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகள் ஏற்கெனவே கொண்டிருந்த நிலைப்பாட்டை இலங்கையின் கருத்தாகக் கூறி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களே இப்படி நடந்து கொள்வது நியாயமானது அல்ல - நேர்மையானதும் அல்ல.

குறிப்பாக இந்தியக் கம்யூனிஸ்டு (மார்க் சிஸ்டு) கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திரு டி.கே. ரெங்கராசன் அவர்கள் தெரிவித்துள்ள கருத்து ஆச்சரியத்தை அளிப்ப தாக உள்ளது.

ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்கள் காலத்திலேயே தனியீழம்தான் ஒரே தீர்வு என்ற முடிவுக்கு வந்தாகி விட்டது.

இதற்காகவே தங்கள் நாடாளுமன்ற உறுப் பினர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனியீழத்தை முன்வைத்து தேர்தலில் நின்று வெற்றி பெற்றும் காட்டிய வரலாறு எல்லாம் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவருக்குத் தெரியாதா?

ஒருக்கால் சீனா என்ன முடிவை எடுக்கிறதோ, அந்த முடிவைத்தான் இந்தியாவில் உள்ள சி.பி.எம். எடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்கிறதோ என்று நினைக்க இடமும் இருக்கிறது.

இலங்கைத் தீவில் நடைபெற்றுள்ள அரசு பயங்கரவாதத்தினால் பல லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். மூன்று ஆண்டு காலமாக முள்வேலி முகாமுக் குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

தமிழர்களில் வாலிப வயதுள்ளவர்களை விசாரணை என்கிற பெயரில் கொண்டு சென்று கொலை செய்வதை வழிமுறையாகக் கொண்டு விட்டனர்.

இராணுவத்தினர் பாலியல் வன்முறையை மேற்கொள்வது என்பது அங்கு சர்வ சாதாரணம்!

சொந்த வீடுகளை இழந்திருக்கின்றனர். தங்களின் பாரம்பரியப் பகுதிகள் எல்லாம் சிங்களவர்களின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளன.

இவ்வளவுக்குப்பிறகும் எந்த ஓர் இனமும் தனி நாடு கோருவது என்பது இயல்பான ஒன்று என்பதை ஒரு மார்க்சியவாதி ஒப்புக் கொள்வதில் என்ன தயக்கமோ!

தொடக்க முதலே சி.பி.எம். எடுத்து வரும் நிலைப்பாட்டை கிளிப்பிள்ளைப் பாடம் போல தோழர் டி.கே.ஆர். ஒப்பித்துள்ளார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொல்லும் தகவல்களையும், கருத்துக்களையும் கவனித்தால் நகைச்சுவையாகத் தானிருக் கின்றன. அவர்கள் கூற்றுகளில் முரண்பாடு தான் முண்டியடித்துக் கொண்டு நிற்கின்றன.

தமிழ் ஈழப் பெண்கள் எப்படியெல்லாம் மானப்பங்கப்படுத்தப்படுகின்றனர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதை பன்னாட்டு ஊடகங்களே தெரிவித்து வந்துள்ள நிலையில், இப்படியெல்லாம் எங்களை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று ஈழத் தமிழ்ப் பெண்கள் தங்களிடம் சொன்னதாக ஒரு காங்கிரஸ் உறுப்பினர் சொல்ல வருகின்றார்.

குழுவுக்குத் தலைமை வகித்த அம்மையாரோ அதிபரைத் தனியே சந்தித்துப் பேசி வந்துள்ளார். இலங்கையின் இறையாண்மைக்குட்பட்ட அரசியல் தீர்வுபற்றி பேசுவதற்கு இவர்கள் யார்?

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்றநேரத்தில், அங்குள்ள தமிழர்களின் பிரதிநிதிகள் எந்தக் கருத்தை முன்வைத்தனர்?

இந்தப் பிரச்சினையில் அக்கறை உள்ள வர்கள் குழுவில் இடம் பெறுவதை தவிர்த்து விட்ட நிலையில், இந்தக் குழுவால் என்ன பயன் என்று வெளிப்படையாகச் சொன்னார்களே!
இந்தியா மேற்கொண்ட கண் துடைப்பு நாடகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாத்திரத்தைத் திறம்படச் செய்துள்ளனர் என்று சொல்லலாம்.
25-4-2012