இந்த ஆண்டு பிறந்த நாளில் இத்திட்டத்தை அமல்படுத்துவோம் - தோழர்களே!
திருச்சி மாணவரணி - இளைஞரணி கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவித்த அரிய திட்டம்
திருச்சி, செப்.8- வருகின்ற 17 ஆம் தேதி
அன்று கட்டாயம், தந்தை பெரியார் அவர்களின் படத்தினை தயாரித்து, மிகப்பெரிய
அளவிற்கு, பிளக்ஸ் மூலமாகவோ அல்லது மற்றவை மூலமாகவோ தயாரித்து, அதனை
வாகனங்களில் அலங்கரித்து, அதனை ஊர்வலமாகக் கொண்டு சென்று, அது பெரியாருடைய
பெருந்தொண்டை எங்கே பார்த் தாலும் பிரச்சாரம் செய்யக்கூடிய அளவிற்கு,
எத்தனை ஊர்களில் நடத்த முடியுமோ, அத்தனை ஊர்களிலும் நடத்துவதற்குத் தயாராக
வேண்டும் என்பதுதான் இந்த ஆண்டினுடைய உறுதிமொழி என்று திராவிடர் கழகத்
தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.
7.9.2014 அன்று திருச்சியில் நடைபெற்ற
இளைஞரணி, மாணவரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்
உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
கட்டுப்பாடு, கட்டுப்பாடு, கட்டுப்பாடு!
நல்ல கருத்துகளை அதுவும் அறிவாசான்
தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய 136 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவை,
நாம் பெரிய திருவிழாவாகக் கொண்டாடு வதற்குத் திட்டமிடும் இந்த நேரத்தில்,
எப்படி யெல்லாம் எதிரிகள் நம்முடைய கருத்தை முறியடிப்பதற்கு, பல ஆயுதங்களை
அவர்கள் எடுத்து, இன்றைக்கு மறைமுகமாகவும், நேரிடையாகவும்
பயன்படுத்துகிறார்கள் - இன எதிரிகள் என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லி,
இளைஞர்களாகிய தோழர்கள் நினைத் தால், மாணவர்கள் செயல்பட்டால்,
இவைகளையெல்லாம் மிக அற்புதமாகச் சந்திக்கலாம்; முறியடிக்கலாம் என்பதைத்
தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.
அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன,
தெளிவான பல கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். நான் அதனையே மீண்டும்
சொல்ல விரும்பவில்லை. எல்லோ ரும் அதனை உருவாக்கிக் கொண்டு, செயல்படுத்தக்
கூடிய தருணம் இப்பொழுது. ஏனென்றால், இதுதான் நமக்கு மிக முக்கியமானது.
செயல்படுவது என்று சொல்லும்பொழுது மற்ற அமைப்புகளுக்கும், நம்முடைய
திராவிடர் கழக அமைப்புகளுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. நம்முடைய
அமைப்புகளுக்கு மிகப்பெரிய தனித்தன்மை என்னவென்று சொன்னால், எண்ணிக்கை
அல்ல; எவ்வளவு அதிகமான எண்ணிக்கை என்று சொல்வதல்ல;
அல்லது வேறு ஆடம்பரங்களும் அல்ல. நம்முடைய
அமைப்பை அசைக்க முடியாத அமைப்பாக ஆக்கிக்கொண்டு, என்றென்றைக்கும்
எதிரிகளால் நம்மைத் தோற்கடிக்க முடியாது என்ற துணிவை நமக்குத் தந்துகொண்டு,
அவர்களையும் அதனை உணர வைக்கக்கூடிய, அளவிற்கு செய்யக்கூடிய ஒன்று
இருக்கிறது என்றால், அதுதான் நம் முடைய அறிவாசான் தலைவர் தந்தை பெரியார்
அவர்கள் நமக்குத் தந்த கட்டுப்பாடு, கட்டுப்பாடு, கட்டுப்பாடு!
எனவே, திராவிடர் கழகத்தினுடைய தனித்தன்மை
அதுவும், மற்ற அணிகள் எப்படி இருந்தாலும், இளைஞரணி, மாணவரணி என்பவர்கள்
தனித்தன்மையோடு இருக்கிறார்கள் என்று சொன்னால், கட்டுப்பாடு! எந்த ஒரு
அமைப்பாக இருந் தாலும், கட்டுப்பாடு இல்லை என்றால் சரியாக இருக்காது.
ராணுவ வீரர்களைவிட ஒரு படி மேல் உயர்ந்தவர்கள் கறுப்புச் சட்டைக்காரர்கள்
ராணுவத்திற்கு உள்ள சிறப்பு என்ன?
எண்ணிக்கை அல்ல; ராணுவ வீரர்களுக்கு இருக்கின்ற ஒரு தனித் தன்மை என்னவென்று
சொன்னால், அவர்கள் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு கடமையாற்றுகிறார்கள்.
எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உயிர் போகும்; களத்தில் அவர்கள் உயிர்
போவது உறுதி. அதிலிருந்து பின் வாங்குவது ராணுவ வீரர்களின் வேலையல்ல.
அதில் பின் வாங்கிவிட்டால், அதைவிட பெரிய
குற்றம், ஒழுக்கக்கேடு, ஒழுங்கீனம் வேறு கிடையாது. ஆகவே, ராணுவத்தில்
சேர்ந்த பிறகு, வெளியில் வரும் வரையில், அவர்கள் உழைப்பது முக்கியமல்ல
நண்பர்களே, அவர்கள் தன்னம்பிக்கையோடு, பெருமையோடு உழைப்பதுதான் ராணுவ
வீரர்களுக்குரிய பெருமையாகும்.
நாம் களத்தில் உயிர் விட்டால், இந்த நாட்டிற்காக என்று நினைப்பார்கள். இந்த ராணுவ வீரர்களைவிட ஒரு படி மேல் உயர்ந்தவர்கள் கறுப்புச் சட்டைக்காரர்கள்; பெரியார் தொண்டர்கள். பெரியாரின் ராணுவம் என்பதிருக்கிறதே, எல்லாவற்றையும்விட, ராணுவ வீரர்கள்கூட பல்வேறு சூழ்நிலைகளில் யோசிப்பார்கள்; ஆனால், நாம் யோசிக்கவேண்டிய வேலையே இல்லை.
யோசிப்பது, சிந்திப்பது எல்லாம் கடமைதான்.
செயல்படுவது, செயல்பட்டு வெற்றியை நாம் ஈட்டுவது; கழனியில் விளைந்தவைகளை
நாம் பத்திரமாகச் சேர்ப்பது; விளை நெல்லைப் பாதுகாப்பது இதுதான் நம்முடைய
பணி என்று சொல்லும்பொழுது, இது பெரியாரின் தனி மனித ராணுவம் இருக்கிறதே,
கட்டுப்பாட்டிற்குப் பெயர் போன ராணுவம்.
எனவே, அந்த ராணுவத்திலேயே உங்களை ஈடுபடுத்திக் கொள்கிற, ராணுவ கருஞ்சட்டை வீரர்கள், இளைஞர்கள், மாணவர்கள்.
மாணவர்கள் என்றால், மற்ற அமைப்புகளில் அவர்கள் கேளிக்கைக்கு உரியவர்கள், வேடிக்கைப் பேச்சுக்கு உரியவர்கள் என்று நினைப்பார்கள்.
மாணவர்கள் என்றால், மற்ற அமைப்புகளில் அவர்கள் கேளிக்கைக்கு உரியவர்கள், வேடிக்கைப் பேச்சுக்கு உரியவர்கள் என்று நினைப்பார்கள்.
இந்த ஆண்டினுடைய உறுதிமொழி
வருகின்ற 17 ஆம் தேதி அன்று கட்டாயம், தந்தை பெரியார் அவர்களின்
படத்தினை தயாரித்து, மிகப்பெரிய அளவிற்கு, பிளக்ஸ் மூலமாகவோ அல்லது மற்றவை
மூலமாகவோ தயாரித்து, அதனை வாகனங்களில் அலங்கரித்து, அதனை ஊர்வலமாகக் கொண்டு
சென்று, பெரியாருடைய பெருந்தொண்டை எங்கே பார்த்தாலும் பிரச்சாரம்
செய்யக்கூடிய அளவிற்கு, எத்தனை ஊர்களில் நடத்த முடியுமோ, அத்தனை ஊர்களிலும்
நடத்துவதற்குத் தயாராக வேண்டும் என்பதுதான் இந்த ஆண்டினுடைய
உறுதிமொழியாகும்.
எல்லோரும் தயாராக இருக்கவேண்டும்; காவல் துறையினருக்கு எழுதி அனுமதி
வாங்கிக் கொள் ளுங்கள். பெரியாருடைய ஊர்வலத்தை வரவேண்டாம் என்று யாரும்
சொல்ல முடியாது. நாங்கள் ஒன்றும் பெரியாரைக் கொண்டு போய், பிள்ளையார்போல
கரைக்கப் போவதில்லை.
பெரியாருடைய கொள் கையை, இன்றைக்கு மற்றவர்களிடம் பரப்பி, நீங்கள் எங்கே
போகிறீர்கள் என்றால், கரைக்கப் போவதில்லை; கரை சேர்க்கப் போகிறீர்கள் என்ற
அளவிற்கு அந்த வாய்ப்பினை உருவாக்கிக் காட்டவேண்டும். இந்தப் பணிக்கு
இப்பொழுதே ஆயத்தமாகிக் கொள்ளுங்கள்.
இன்றைக்குத் தேதி 7; இன்னும் பத்து நாள்கள் இருக்கின்றன. பத்து
நாள்களில் உலகத்தையே சுற்றி வந்துவிடலாம், அதிலொன்றும் சந்தேகமில்லை.
ஆகவேதான், நாள் இல்லை என்று சொல்லக் கூடாது. மிகப்பெரிய அளவிற்கு இந்தப்
பணிகளைச் செய்யுங்கள். அந்த ஊர்வலத்தில் துண்டறிக்கைகளைக் கொடுங்கள்.
************************************************************************************
வரும் அக்டோபர் மாதத்தில் கழக இளைஞரணி, மாணவரணி தோழர்களுக் கிடையே பெரியார் 1000 வினா -விடைப் போட்டி நடைபெறும் என்று கழகத் தலைவர் பெருத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.
பரிசுத் தொகைக்காக ரூ.10 ஆயிரம் தனது பொறுப்பில் நன்கொடையாக அளிப்பதாக திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் டாக்டர் துரை.சந்திர சேகரன் அறிவித்தார்.
************************************************************************************
************************************************************************************
கழக இளைஞரணி, மாணவரணி தோழர்களுக்கு பெரியார் 1000 வினா - விடைப் போட்டி
வரும் அக்டோபர் மாதத்தில் கழக இளைஞரணி, மாணவரணி தோழர்களுக் கிடையே பெரியார் 1000 வினா -விடைப் போட்டி நடைபெறும் என்று கழகத் தலைவர் பெருத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.
பரிசுத் தொகைக்காக ரூ.10 ஆயிரம் தனது பொறுப்பில் நன்கொடையாக அளிப்பதாக திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் டாக்டர் துரை.சந்திர சேகரன் அறிவித்தார்.
************************************************************************************
அடக்கமான செயல்பாடு; ஆழமான செயல்பாடு; உறுதியான செயல்பாடு
ஆனால், நம்முடைய அமைப்புகளில் அப்படியல்ல; இங்கே வேடிக்கைக்கு இடம்
கிடையாது; கேளிக்கைக்கு இடம் கிடையாது. செயல்பாடு! செயல்பாடு! அதுவும்
எப்படிப்பட்ட செயல்பாடு! அதிவேகமான செயல்பாடு எல்லாம் கிடையாது. அடக்கி
ஆளும் செயல்பாடு! அதிகவேகமான செயல்பாடு அல்ல; அடக்கி ஆளும் செயல்பாடு,
ஆழமான செயல்பாடு. அதனை நன்றாக நீங்கள் ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக்
கொள்ளவேணடும்.
அடக்கமான செயல்பாடு; ஆழமான செயல்பாடு; உறுதியான செயல்பாடு. ஆக, அவைகளையெல்லாம் வைத்துக்கொண்டு நாம் செயல்படவேண்டும்.
அந்த வகையில், நமக்கு அதிவேகம் என்ற அடை யாளம் இல்லை. அடக்கமும், உறுதியும், கட்டுப்பாடும்தான் அடையாளம். அதனை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
இங்கே சொன்னார்கள், பெரியார் ஆயிரம், சென்ற ஆண்டில் எவ்வளவு பெரிய வளர்ச்சி. தந்தை பெரியார் - அதுதான் நமக்கு அஸ்திவாரம். ஒரு கட்டடத்திற்கு அஸ்தி வாரம்போல் இளைஞர்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும் என்றால், பெரியாருடைய தத்துவம், பெரியார் நமக்குப் படம் அல்ல; பெரியார் நமக்குப் பாடம். அதுதான் மிக முக்கியம்.
அந்த வகையில், நமக்கு அதிவேகம் என்ற அடை யாளம் இல்லை. அடக்கமும், உறுதியும், கட்டுப்பாடும்தான் அடையாளம். அதனை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
இங்கே சொன்னார்கள், பெரியார் ஆயிரம், சென்ற ஆண்டில் எவ்வளவு பெரிய வளர்ச்சி. தந்தை பெரியார் - அதுதான் நமக்கு அஸ்திவாரம். ஒரு கட்டடத்திற்கு அஸ்தி வாரம்போல் இளைஞர்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும் என்றால், பெரியாருடைய தத்துவம், பெரியார் நமக்குப் படம் அல்ல; பெரியார் நமக்குப் பாடம். அதுதான் மிக முக்கியம்.
பெரியாரை சுவாசிப்போம்!
பெரியாருடைய தத்துவம் என்பது நம்முடைய சுவாசம். நாம் பெரியாரை
வாசிப்போம் என்பதுகூட அல்ல; பெரியாரை சுவாசிப்போம். அதுதான் மிக முக்கியம்.
அதனை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
அதனை, பெரியார் ஆயிரம் வினா-விடைப் போட்டி என்ற எழுச்சிமிகு
நிகழ்ச்சியை இன்றைக்கு இளைஞர் களுக்கு, மாணவர்களுக்கு, மாணவிகளுக்கு நிறைய,
80 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேரை மிகக் குறுகிய காலத்தில், எத்தனையோ
இடர்ப்பாடுகள்,
தடைக்கற்கள் உண்டென்றாலும், தாங்கும் தடந் தோள்கள் உண்டு என்பதுதான் மிக முக்கியம்.
ஆகவே, அப்படிப்பட்ட ஒரு அற்புதமான பணியை செய்துகொண்டிருக்கின்றன.
பெரியார் 1000 பற்றிய தகவல்கள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன.
தடைக்கற்கள் உண்டென்றாலும், தாங்கும் தடந் தோள்கள் உண்டு என்பதுதான் மிக முக்கியம்.
ஆகவே, அப்படிப்பட்ட ஒரு அற்புதமான பணியை செய்துகொண்டிருக்கின்றன.
பெரியார் 1000 பற்றிய தகவல்கள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன.
பெரியார் என்பவர் மனித குலத்திற்கு வழிகாட்டக் கூடியவர்
தந்தை பெரியாரின் 136 ஆவது பிறந்த நாள் மலரில் ஒரு செய்தி
வெளிவரவிருக்கிறது. அது என்னவென்றால், நிரந்தரமாக உலக மொழிகளில் பெரியார்
1000 அச்சிடப் பட்டு, பிரெஞ்சு, ஸ்பானிஸ், சீன மொழியில் அச்சிடப்பட்டு,
யார் வேண்டுமானாலும், உலகத்தின் எந்த மூலை யிலிருந்தும் பெரியாரைப்பற்றி,
பெரியார் 1000 போட்டியில் கலந்துகொள்ளலாம். ஒரு உலகளாவிய, எதிர்காலத்தில்
பெரியாரை உலக மயமாக்கக்கூடிய, பெரியார் என்பவர் ஒரு நாட்டிற்கு, ஒரு
குறிப்பிட்ட மக்களுக்கு, குறிப்பிட்ட இனத்திற்கு, குறிப்பிட்ட
மொழியாளர்களுக்கு மட்டும் உரியவரல்ல. மனித குலத்திற்கே உரியவர். காரணம்,
மனித குலத்திற்கு வழிகாட்டக் கூடியவர் என்பதை, இன்றைக்கு உலகம் உணர்ந்து,
தெரிந்துகொண்டிருக்கிறது.
எனவே, அதனை நாம் தெரிந்துகொள்வதற்காகத்தான் இந்தத் திட்டம்! சிந்தனைச்
சோலை பெரியார், பெரியார் 1000 வினா விடை இவைகளை மாணவர்கள் படித்து, இளம்
பிள்ளைகள் மத்தியில், பசுமரத்தாணிபோல் பதியக் கூடியது. காரணம், அய்ந்தில்
வளையக்கூடியவர்கள். அப்படிப் பட்டவர்கள் மத்தியில் இந்தக் கருத்து போய்ச்
சேருகிறது என்று சொல்லும்பொழுது, ஒவ்வொருவரும் நன்றாகச்
சிந்திக்கவேண்டும்; நம்முடைய தோழர்கள் புத்தகங்கள் வாங்குவார்கள். ஆனால்,
எந்த அளவிற்கு அதனைப் படித்து, இருப்பார்கள் என்பது, நமக்கு நாமே நாணயமாக
எழுப்பவேண்டிய ஒரு கேள்வியாகும்.
உங்களுடைய தனித்தகுதியாக, கூடுதல் தகுதியாக...
எனவே, பெரியாரை மற்றவர்களுக்குக் கொண்டு செல் வதற்கு முன்பு, முதலில் எங்கிருந்து அதனைத் தொடங்கவேண்டும் என்று
நான் நினைக்கிறேன் என்றால், நம்முடைய இயக்கத்தில் இருக்கின்ற இளைஞர்கள்,
மாணவர்கள் முதலில் அவர்கள் எல்லோரும் பெரியார் 1000 வினா விடையை எழுதி,
அதில் எவ்வளவு மதிப்பெண்கள் வாங்குகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியம்.
இது மட்டும் உங்களுக்குச் சரியாக இருந்தால், அப்புறம் எந்தக் கொம்பனும்
உங்களைத் தூற்றிக் கொண்டிருக்க முடியாது. எந்தச் சிந்தனையும் உங்களைக்
கெடுத்துவிட முடியாது. உங்களுக்குத் தன்னம்பிக்கை என்பது மிகப் பெரிய
அளவிற்குத் தானே வரும். எந்தப் பிரச்சினைகளை எப்படி அணுகுவது என்ற சிந்தனை
மிகத் தெளிவாக வரும்.
ஆகவேதான், நமக்கு கட்சிப் பாடம், இயக்கப் பாடம் என்று சொன்னால், அந்த
இயக்கப் பாடத்தை மற்றவர்கள் சொல்லிக் கொடுக்கிறார்களோ இல்லையோ, இதோ
புத்தகம் இருக்கிறது, அதனை வாங்கிக் கொண்டு செல்லுங்கள்; நாங்கள் போய்
மற்றவர்களை விடை எழுதச் சொல்கிறோம் என்று சொன்னால், யாராவது உங்களிடம்
சந்தேகம் கேட்டால், பதில் சொல்லக்கூடிய அளவிற்கு, உங்களைப்
பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? ஆகவே, முதல் பணியாக அய்யாவின்
பிறந்த நாளுக்கு முன்பாக, நீங்கள் இதில் தெளிவாக இருக்கவேண்டும். திராவிடர்
கழக இளைஞரணியினரும் இதனைச் செய்யவேண்டும். நாங்கள் அந்த வினா விடையில்
இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறோம் என்று சொல்லக்கூடியவை - உங்களுடைய
தனித்தகுதியாக, கூடுதல் தகுதியாக ஆக்கிக் கொள்வதற்குமுயற்சிக்க வேண்டும்
என்பது என்னுடைய முதலாவது வேண்டு கோளாகும்.
அறிவாயுதத்தைத் தூக்கு என்றுதான் சொல்லியிருக்கிறார்!
அடுத்தபடியாக மிக முக்கியமானது என்னவென்றால், பயிற்சி முகாம்பற்றி
சொன்னார்கள். நவம்பர் மாதத்தி லிருந்து பயிற்சி முகாமில்
கலந்துகொள்வதற்குத் தயாராக இருக்கிறேன். நிறைய அளவிற்கு இந்த ஆண்டு
பயிற்சி முகாம்கள் நடைபெறவிருக்கின்றன. நாங்கள் வன்முறை யையோ, ஆயுதம்
தாங்கியோ போராடக் கூடியவர்கள் அல்ல. பெரியார் அவர்கள் சாதித்ததும், அவருடைய
தனித்தன்மையும் என்னவென்றால், அறிவாயுதத்தைத் தூக்கு என்றுதான்
சொல்லியிருக்கிறார்.
மக்களை மாற்றவேண்டும் என்று சொல்லும்பொழுது, இவர்தாம் பெரியார் பார்
என்ற தலைப்பிலே, துண் டறிக்கை; பெரியாருடைய தொண்டு - 136 ஆவது ஆண்டு பிறந்த
நாளிலே, பெரியாருடைய சிந்தனைகள், பெரி யாருடைய செயலாக்கம் என்ன என்பதைத்
தெரிந்து கொள்ளுங்கள்! எல்லாவற்றையும் வடித்தெடுத்து அந்தத்
துண்டறிக்கைகள் விரைவில் ஒரு சில நாள்களில் தயாராகும். அதனை 17 ஆம்
தேதியன்று நாம் நடத்தக்கூடிய மிகப்பெரிய விழாவில், இங்கே எல்லா ஊர்களிலும்
இருந்து தோழர்கள் வந்திருக்கிறார்கள். நாளைக்கு விடுதலையில் வெளிவரும்.
தோழர்கள் எல்லா ஊர்களிலும் பெரியார் பிறந்த நாள் விழாவை, ஒரு மாபெரும்
தேசியத் திருவிழாவாக, இனமானத் திருவிழாவாக இதுவரையில் எப்பொழுதும் இல்லாத
அளவுக்கு நடத்துவோம். ஒரே விழா நமக்கு அந்த பிறந்த நாள் விழா மட்டும்தான்.
எப்படி மதவாதிகளுக்கு அவர்களின் மதப் பண்டி கைகள் மிக முக்கியமோ,
அதேபோல் நமக்கு அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் மிக
முக்கியமாகும். அன்றைக்கு புத்தாடை அணியுங்கள்; பிள்ளைகளைப் புத்தாடை
அணியச் செய்யுங்கள். புத்தகங்களை வழங் குங்கள், சிறுசிறு புத்தகங்களை
வழங்குங்கள்; இனிப்பு வழங்குங்கள். படிப்பகங்களுக்குச் செல்லுங்கள்;
பள்ளிப் பிள்ளைகளுக்குக் கொடுங்கள். என்ன என்று கேட்பார்கள், இன்றைக்குப்
பெரியார் பிறந்த நாள்; 136 ஆவது பிறந்த நாள் என்று சொல்லுங்கள். ஆங்காங்கே
இருப்பவர்கள் திட்டமிட்டு இந்தப் பணியைச் செய்யுங்கள்.
அய்யாபற்றிய பாடல்கள், அய்யாவின் உரைகளையெல்லாம் ஒலிபரப்பி...
மதவாதிகள், சர்வ சக்தியுள்ள கடவுள் அங்கிருக்கிறார், இங்கிருக்கிறார்,
தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக் கிறார் என்று சொல்லிவிட்டு, ஏன்
ஊர்வலமாகக் கொண்டு செல்கிறார்கள். இன்றைக்கு எல்லா மதத்துக் காரர்களும்
அப்படித்தான் ஊர்வலமாகக் கொண்டு செல்கிறார்கள். அது பிரச்சார யுக்தி - வேறு
ஒன்றும் கிடையாது.
ஆகவேதான், நாம் தந்தை பெரியாருடைய உருவத்தை பெரிய அளவில் அலங்கரித்து, ஊர்வலமாகக் கொண்டு செல்லவேண்டும். வாய்ப்பு இருக்கின்ற இடங்களில், பெரியாருடைய கருத்துகள் அடங்கிய ஒலி நாடாக்களை, காவல்துறைக்கு எழுதி, அனுமதி வாங்கிவிட்டு, அய்யா பற்றிய பாடல்கள், அய்யாவின் உரைகளையெல்லாம் ஒலிபரப்பி, ஒரு திருவிழாவினுடைய உணர்வுகளை ஆங்காங்கே உருவாக்கவேண்டும்.
ஆகவேதான், நாம் தந்தை பெரியாருடைய உருவத்தை பெரிய அளவில் அலங்கரித்து, ஊர்வலமாகக் கொண்டு செல்லவேண்டும். வாய்ப்பு இருக்கின்ற இடங்களில், பெரியாருடைய கருத்துகள் அடங்கிய ஒலி நாடாக்களை, காவல்துறைக்கு எழுதி, அனுமதி வாங்கிவிட்டு, அய்யா பற்றிய பாடல்கள், அய்யாவின் உரைகளையெல்லாம் ஒலிபரப்பி, ஒரு திருவிழாவினுடைய உணர்வுகளை ஆங்காங்கே உருவாக்கவேண்டும்.
வாய்ப்பு இருக்கிறவர்கள், அவரவர்களுக்கு வேண்டிய வர்களுக்கு இனிப்பு
அனுப்புங்கள்; என்ன என்று கேட்டால், இன்றைக்குப் பெரியார் பிறந்த நாள்;
அதற்காகத்தான் இனிப்பு வழங்கியிருக்கிறோம் என்று சொல்லுங்கள்.
குழந்தைகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துங்கள்; பெரியார் பிறந்த நாள்
எப்பொழுது வரும் என்ற ஆர் வத்தை ஏற்படுத்துங்கள். தோழர்கள் இதில் கவனம்
செலுத்தவேண்டும். நமக்கென்று ஒரு பெரிய விழா என்றால், அது தந்தை பெரியார்
பிறந்த நாள் விழாதான்.
அடுத்தாண்டுமுதல், மூன்று மாதம் அல்லது 6 மாதங் களுக்கு முன்பாகவே, கருத்தரங்கங்கள், பொதுக்கூட் டங்கள், கிராமப் பிரச்சாரங்கள் நடைபெறவேண்டும். கட்டுப்பாடாக, ஒழுங்காக அந்த ஊர்வலத்தை நடத்தவேண்டும்
அடுத்தாண்டுமுதல், மூன்று மாதம் அல்லது 6 மாதங் களுக்கு முன்பாகவே, கருத்தரங்கங்கள், பொதுக்கூட் டங்கள், கிராமப் பிரச்சாரங்கள் நடைபெறவேண்டும். கட்டுப்பாடாக, ஒழுங்காக அந்த ஊர்வலத்தை நடத்தவேண்டும்
எல்லா இடங்களிலும் பெரியார் பிறந்த நாள் அன்று ஊர்வலம் நடைபெறவேண்டும்.
அந்த ஊர்வலத்தில், என் னென்ன ஒலி முழக்கங்கள் எழுப்பப்படவேண்டும் என்பது
குறித்து விடுதலையில் ஒலி முழக்கங்கள் வெளியிடப்படும். ஏனென்றால், அந்த
ஊர்வலத்தில் கலவரங்களை ஏற்படுத்தலாம், திசை திருப்பலாம் என்று நினைக்கின்ற
மதவாத சக்திகள், ஜாதீய சக்திகள் அவைகளையெல்லாம் புறந்தள்ளவேண்டும். யார்
யார் எல்லாம் பெரியார் ஊர்வலத்தில் கலந்துகொள்ள விரும்புகிறார்களோ, அவர்கள்
எல்லாம் அந்த ஊர்வலத்தில் கலந்துகொள் ளலாம் என்பதை எடுத்துச் சொல்லி,
கட்டுப்பாடாக, ஒழுங்காக அந்த ஊர்வலத்தை நடத்திக் காட்டவேண்டும்.
இப்பொழுது மத ஊர்வலங்களில் கலவரங்கள் ஏற்படும்; நாம் பெரியார் ஊர்வலத்தை கலவரம் நடத்துவதற்காக செய்யவில்லை. முழுக்க முழுக்க பகுத்தறிவுப் பணியைச் சிறப்பாக செய்யவேண்டும்.
இப்பொழுது மத ஊர்வலங்களில் கலவரங்கள் ஏற்படும்; நாம் பெரியார் ஊர்வலத்தை கலவரம் நடத்துவதற்காக செய்யவில்லை. முழுக்க முழுக்க பகுத்தறிவுப் பணியைச் சிறப்பாக செய்யவேண்டும்.
வீர விளையாட்டுகள்மூலம்...
அதேபோல், ஒரு தோழர் சொன்னார், விளையாட்டு களின் மூலமாக
மாணவர்களையெல்லாம் ஈர்க்கவேண்டும். பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தை
வேகப்படுத்த வேண்டும் என்று.
உண்மைதான்; வரவேற்கிறேன், நல்ல கருத்து. கால் பந்து போன்ற போட்டிகள்கூட
எத்தனை வகையான போட்டி களை நடத்தவேண்டுமோ, கிரிக்கெட்டை தவிர அத்தனைப்
போட்டிகளையும் நாம் நடத்துவதற்கு தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால்,
கிரிக்கெட் என்பது பார்ப்பனர்கள் விளையாட்டு; அவர்கள் நோகாமல்
இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் அந்த விளையாட்டு. மேலும் அதில்
சூதாட்டமும் நடைபெறுகிறது. ஆகவேதான் அதனை நாம் அந்த விளையாட்டை
புறந்தள்ளுகிறோம். கபடி மட்டு மல்ல, கால் பந்து, கூடைப் பந்து போன்ற
விளையாட்டு களையும், எங்கெங்கே யார் யாருக்கு வாய்ப்பு இருக்கிறதோ அந்த
விளையாட்டுப் போட்டிகளை நடத்தவேண்டும்.
இங்கே ஒரு தீர்மானத்தை கேட்டிருக்கிறார்கள்; சிதம்பரத்தில் வருகின்ற
டிசம்பர் மாதத்தில் மாணவரணி மாநாடு; அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில்,
தருமபுரியில் இளைஞரணி மாநாடு என்று. அந்த இரு மாநாடுகளும் தலைமைக்
கழகத்தினால் அனுமதிக்கப்படுகிறது. அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து
வரலாறு படைக்க வேண்டும்; ராஜபாளையத்தில் எப்படி திருப்பதி அவர்கள் ஒரு
வரலாறு படைத்தார்களோ, அதனை மிஞ்சக்கூடிய வகையில் ஒரு வரலாற்றினைப்
படைக்கவேண்டும்.
மாணவர் கழகத்தை உருவாக்குங்கள்; இளைஞரணியை உருவாக்குங்கள்
இறுதியாக, புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு. இப் பொழுது ஒரு பெரிய வசதி
என்னவென்றால், எல்லோ ரிடமும் கைப்பேசி இருக்கிறது. அதனைக் கொண்டு
உடனுக்குடன் தொடர்பு கொள்ளவேண்டும். நாளைக்கே சென்று ஆங்காங்கே
கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தவேண்டும். அந்த அந்த அமைப்புகள், அந்த அந்த
ஒன்றியங்கள். இல்லாத இடங்களில் எல்லாம் மாணவர் கழகத்தை உருவாக்குங்கள்;
இளைஞரணியை உருவாக் குங்கள். சிறப்பாக அந்தப் பணிகளைச் செய்யுங்கள்.
அரசியல் கட்சிகள் மிகவும் ஆடம்பரமாகச் செய்கின்றன; அதுபோல் நாம்
செய்யவேண்டும் என்று நினைக்காதீர்கள். அதற்காகத்தான் நான் சொன்னேன்,
அடக்கமாக, ஆழமாக, அறிவுப்பூர்வமாக, எதிர்காலத்தில் எந்த விளைவை உண்டாக்கும்
என்று. ஏனென்றால், நாம் உணர்ச்சிக்கு இடம் கொடுப்பதைவிட, அறிவுக்கு இடம்
கொடுக்கவேண்டும். அதுதான் மிக முக்கியம்.
அந்த அடிப்படையில் செய்கின்றபொழுது, வெறும் வெற்று ஆரவாரமோ, ஆடம்பரமோ
நமக்கு முக்கியமல்ல; அரசியல் கட்சிகள் செய்கிறார்கள் என்றால், வியாபாரத்
திற்காக விளம்பரம் செய்கிறார்கள். நமக்கு வியாபாரம் அல்ல; அதுதான் மிக
முக்கியம். நமக்கு காலங்காலமாக இந்த இனத்தைப் பாதுகாக்கவேண்டும்; மொழியைப்
பாதுகாக்கவேண்டும்; பண்பாட்டுப் படையெடுப்பை நாம் முறியடிக்கவேண்டும்.
அந்த உணர்வு இருப்பதால்தான், சமஸ்கிருத வாரம் என்று சொன்னவுடன், அதற்கு
மிகப்பெரிய எதிர்ப்பு; அதேபோல், ஆசிரியர்கள் நாள் என்பதை குருஉத்சவ் என்று
கொண்டாடவேண்டும் என்று சொன்னவுடன், எவ்வளவு பெரிய எதிர்ப்பு. எல்லோரும்,
கம்யூனிஸ்டாக இருந்தாலும், யாராக இருந்தாலும், எதிர்த்துப் பேசி, பெரியார்
பிறந்த நாளான 17 ஆம் தேதியன்று, அதனை எதிர்த்து நிகழ்ச்சி வைத்திருக்
கிறார்கள். தமிழுக்குச் சிறப்பு என்று சொல்லி, நிகழ்ச்சிக்கு
அழைத்திருக்கிறார்கள். இந்த மண் எவ்வளவு பக்குவப் பட்டிருக்கிறது என்பதை
எண்ணி பாருங்கள்.
இந்த மண்ணில் பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்; அதனை யாரும் அசைக்க முடியாது
மத்திய அரசாங்கம் போட்ட ஒரு உத்தரவினை பின் வாங்கக் கூடிய அளவிற்குச்
செய்யக்கூடிய உணர்வு என்றால், இந்த மண்ணில் பெரியார் வாழ்ந்து கொண்டிருக்
கிறார். அதனை யாரும் அசைக்க முடியாது என்பதற்கான அடையாளம்.
அதைவிட, ஆழமாக நம் இயக்கம் எப்படிப்பட்டது? அரசியல் கட்சிகளைப் பார்த்து
அதுபோல் நாம் செய்யவேண்டும் என்று நினைப்பது தேவையற்றது. ஆடம்பரமான
பிளக்ஸ் போர்டுகள் வைத்து, என் படத்தினை போட்டு, வருக! வருக! என்று வைப்பது
தேவையற்றது. வருக! வருக! என்று நீங்கள் கூப்பிட்டாலும் வரப் போகிறேன்,
கூப்பிடாவிட்டாலும் வரப் போகிறேன்.
நீங்கள் எத்தனை பிளக்ஸ் போர்டுகள் வைத்திருக்கிறீர்கள் என்று கணக்குப்
பார்த்தா வரப்போகிறேன்; விளம்பரத் திற்குத் தேவை என்று நம் தோழர்கள்
சொல்கிறார்கள்; அப்படி பிளக்ஸ் வைக்காவிட்டால், நாம் ஒன்றுமே இல்லை என்று
ஆகிவிடும்; நமக்கும் நம் இயக்கத்திற்காக, வைக் கிறோம் என்று சொல்கிறார்கள்,
என்னை சமாதானப் படுத்துவதற்காக. அது சில நேரங்களில் நியாயமாகக்கூட
இருக்கலாம்.
மதவெறி மடியட்டும்;
மனிதநேயம் மலரட்டும்!
மனிதநேயம் மலரட்டும்!
அப்படி வைக்கும்நேரத்தில், பெரியாருடைய கொள் கைகளை எடுத்துப் போடுங்கள்;
கடவுளை மற; மனிதனை நினை! ஜாதியை அழி! அதேநேரத்தில் மதவெறி மடியட்டும்;
மனிதநேயம் மலரட்டும் என்று பெரியார் கொள்கையைப் பரப்பக்கூடிய, அதனைப்
பேசுவதற்காக வருகிறரே வருக! வருக! என்றாவது போடுங்கள்; அது பிரச்சாரமாவது
ஆகும். நான் வருவது முக்கியமல்ல; அதிலுள்ள வார்த்தையை படிக்கிறவர்களுக்கு
அது அவர்களுடைய மனதில் செல்லும். அதுதான் பிரச்சார முறை.
அந்தப் பிரச்சார முறையைக் கையாளவேண்டும்.
அரசியல் கட்சிகளைப் பார்த்து அதுபோல் செய்ய வேண்டும் என்கிற ஆசை வரக்கூடாது.
ஒரு உதாரணம் சொல்கிறேன், அரசியல் கட்சி களுக்கும், நமக்கும் இருக்கின்ற வேறுபாடு என்ன தெரியுமா? இளைஞர்கள் மனதில் நன்றாகப் பதிய வையுங்கள்; மாணவர்கள் நன்றாகப் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
அரசியல் கட்சிகளைப் பார்த்து அதுபோல் செய்ய வேண்டும் என்கிற ஆசை வரக்கூடாது.
ஒரு உதாரணம் சொல்கிறேன், அரசியல் கட்சி களுக்கும், நமக்கும் இருக்கின்ற வேறுபாடு என்ன தெரியுமா? இளைஞர்கள் மனதில் நன்றாகப் பதிய வையுங்கள்; மாணவர்கள் நன்றாகப் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
அரசியல் கட்சிகள் விடுவது வாண வேடிக்கை; வாணவேடிக்கை மிகத்தொலைவில்
இருந்தால் கூட தெரியும், கண்மூடி கண் திறக்கும்வரையில், அவ்வளவுதான். நாம்
யார்? வீட்டில் எரிகின்ற விளக்கு. அதுதான் மிக முக்கியம். வீட்டில்
எரிகின்ற விளக்கு கொஞ்சம் நேரம் அணைந்தால்கூட, இருட்டில் இருக்க முடியாது.
அதுபோல், திராவிடர் கழகப் பணிகள் இருக் கிறதே, அது கொஞ்ச நாள் தடை
ஏற்பட்டால்கூட, சமுதாயம் வளராது; மக்கள் மானமும், அறிவும் பெறுவதற்கு
வாய்ப்பு கிடையாது.
எனவே, வீட்டில் எரிகின்ற விளக்கிற்கும், திடீரென்று வெளியில் தெரிகின்ற
வாணவேடிக்கைக்கும் என்ன வேறுபாடோ, அதுதான் மற்ற அரசியல் கட்சிக்கும்,
திராவிடர் கழகத்திற்கும் உள்ள வேறுபாடு.
எனவே, இங்கு ஆழம் அதிகம்; அடக்கம் அதிகம்; உறுதி அதிகம். தன்னலம் என்பது அறவே தலைதூக்காத ஒரு இடம் இருக்கிறது என்றால், அதுதான் நம்முடைய அமைப்பு. நம்முடைய பாசறை. இங்கு தன்னலத்திற்கு இடமே கிடையாது. கடைசியாகத் தோழர்களே, துணைத் தலைவர் குறிப்பிட்டார், நம்முடைய இளைஞர்கள், நம்முடைய மாணவர்கள் உடல்நலம் பேணவேண்டும். உள்ளத்தில் நீங்கள் எவ்வளவு உறுதியாக இருக்கிறீர்களோ, கொள்கையில் எவ்வளவு தெளிவாக இருக்கிறீர்களோ அதோடு, உடலில் வலிமையோடு இருக்கவேண்டும். அதுதான் மிக முக்கியம்.
எனவே, இங்கு ஆழம் அதிகம்; அடக்கம் அதிகம்; உறுதி அதிகம். தன்னலம் என்பது அறவே தலைதூக்காத ஒரு இடம் இருக்கிறது என்றால், அதுதான் நம்முடைய அமைப்பு. நம்முடைய பாசறை. இங்கு தன்னலத்திற்கு இடமே கிடையாது. கடைசியாகத் தோழர்களே, துணைத் தலைவர் குறிப்பிட்டார், நம்முடைய இளைஞர்கள், நம்முடைய மாணவர்கள் உடல்நலம் பேணவேண்டும். உள்ளத்தில் நீங்கள் எவ்வளவு உறுதியாக இருக்கிறீர்களோ, கொள்கையில் எவ்வளவு தெளிவாக இருக்கிறீர்களோ அதோடு, உடலில் வலிமையோடு இருக்கவேண்டும். அதுதான் மிக முக்கியம்.
உடல் வலிமைக்கு பயிற்சிகள் போன்றவற்றை செய்யவேண்டும் என்று இங்கே
சொன்னார்கள். திரும்பவும் சொல்லவேண்டிய அவசியமில்லை. எல்லாவற்றையும்விட,
எந்தத் தீய பழக்கங்களுக்கும் நம்முடைய இளைஞர்கள் ஆளாகக்கூடாது; எப்படி
கொள்கைக்கு நம்முடைய இளைஞர்கள் எடுத்துக்காட்டாகத் திகழக்கூடியவர்களோ,
அதேபோலத்தான், நல்ல ஒழுக்கத்திற்கும், கட்டுப்பாட் டிற்கும் நம்முடைய
இளைஞர்கள் எடுத்துக்காட்டாகத் திகழவேண்டும். நம்முடைய இளைஞர்களிடம் எந்தக்
கெட்டப் பழக்கமும் புகுந்துவிடக் கூடாது. அப்படி ஏற்கெனவே நீங்கள் யாராவது
அந்தப் பழக்கத்திற்குக் கொஞ்சம் அடிமையாக ஆகியிருந்தால், தயவு செய்து,
இன்று முதற்கொண்டே, இனிமேல் நான் இந்தப் பழக் கத்திற்கு அடிமையாக மாட்டேன்
என்று சொல்லக்கூடிய அந்த உறுதியைப் பெறவேண்டும்.
கருப்புச் சட்டைக்காரர் என்றால், அவர் சொன்னதுபோல, எல்லா வகையிலும்
அவர்கள் தனித்தன்மையானவர். எல்லா வகையிலும் பிறரால் எட்டப்பட முடியாத
உயரத்தில் இருக்கக் கூடியவர் என்று சொல்லக்கூடிய அந்த உணர்வை நீங்கள்
ஒவ்வொருவரும் பெறவேண்டும்.
அடக்கத்தோடு இருந்தாலும், மலையினும் மாணப் பெரியது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நம்முடைய தோழர்கள் உயர்ந்து நிற்பார்கள்; வெற்றி பெறுவார்கள். நம்முடைய பயணம் என்பது கரடு முரடான பாதை களாகக்கூட இருக்கும்; இருள் நிறைந்ததாககக்கூட இருக்கும்; ஆனால், நம்முடைய பாதை இருக்கிறதே, நாம் ஏற்கெனவே பயிற்சி பெற்ற பாதை இருக்கிறதே, அது ஈரோட்டுப் பாதை - எனவேதான், எந்த முரட்டுப் பாதையையும் சந்திக்கக்கூடிய அளவிற்கு ஈரோட்டுப் பாதையில் நடந்து நடந்து பழக்கப்பட்ட நமக்கு, எதையும் சந்திப்போம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, எந்த சூழ்நிலை வந்தாலும், எதிர்கொள்வோம் - வெற்றி பெறுவோம்! இந்தப் புத்தகங்களை நீங்கள் வாங்கி, படித்துவிட்டு, மற்றவர்களுக்கும் கொடுக்கலாம் எப்பொழுது தேர்வு வைக்கவேண்டும் என்பதை, தலைமைக் கழகத்திடம் சொல்லுங்கள்; தலைமைக் கழகம், இளைஞரணிக்கும், மாணவரணிக்கும் தேர்வுக்கு ஏற்பாடு செய்வார்கள். ஆகவே, அதில் நீங்கள் வெற்றி பெறவேண்டும். இது முதற்கட்டமாக உங்கள் தகுதி என்று கூறி முடிக்கிறேன், வணக்கம், நன்றி!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அடக்கத்தோடு இருந்தாலும், மலையினும் மாணப் பெரியது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நம்முடைய தோழர்கள் உயர்ந்து நிற்பார்கள்; வெற்றி பெறுவார்கள். நம்முடைய பயணம் என்பது கரடு முரடான பாதை களாகக்கூட இருக்கும்; இருள் நிறைந்ததாககக்கூட இருக்கும்; ஆனால், நம்முடைய பாதை இருக்கிறதே, நாம் ஏற்கெனவே பயிற்சி பெற்ற பாதை இருக்கிறதே, அது ஈரோட்டுப் பாதை - எனவேதான், எந்த முரட்டுப் பாதையையும் சந்திக்கக்கூடிய அளவிற்கு ஈரோட்டுப் பாதையில் நடந்து நடந்து பழக்கப்பட்ட நமக்கு, எதையும் சந்திப்போம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, எந்த சூழ்நிலை வந்தாலும், எதிர்கொள்வோம் - வெற்றி பெறுவோம்! இந்தப் புத்தகங்களை நீங்கள் வாங்கி, படித்துவிட்டு, மற்றவர்களுக்கும் கொடுக்கலாம் எப்பொழுது தேர்வு வைக்கவேண்டும் என்பதை, தலைமைக் கழகத்திடம் சொல்லுங்கள்; தலைமைக் கழகம், இளைஞரணிக்கும், மாணவரணிக்கும் தேர்வுக்கு ஏற்பாடு செய்வார்கள். ஆகவே, அதில் நீங்கள் வெற்றி பெறவேண்டும். இது முதற்கட்டமாக உங்கள் தகுதி என்று கூறி முடிக்கிறேன், வணக்கம், நன்றி!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
8 comments:
பார்ப்பனர்கள்
பார்ப்பனர்கள் இந்நாடு எவ்விதச் சமுதாய மாறுதலும் அடையக் கூடாது என்ற தன்மையினையே தங்கள் மூலாதாரக் கொள்கையாகக் கொண்டுள்ளனர்.
(விடுதலை, 30.12.1972)
Read more: http://www.viduthalai.in/page1/87375.html#ixzz3Cy7t8073
சுப்ரபாதம் நிறுத்தப்பட்டது
தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன் அவர்கள் செங்குன்றம் - தாம்பரம் வழித்தடத்தில் செல்லும் எண்114 குளுமை பேருந்தில் (கிழிமி 2681) 4.9.2014 விடியற்காலை 5.10மணி அளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஏறி பயணமானார்,
அப்பொழுது அந்த பேருந்தினுள் சுப்ரபாதம் என்கிற இல்லாத கடவுளை எழுப்புகிற வடமொழிப் பாடல் (நின்று கொண்டு இருக்கிற ஏழு மலையானை எழுப்புவதாக பாவனை) ஒலித்துக்கொண்டிருந்த்து, 'சுப்ரபாதம்' போடுகிறீர்களே! முஸ்லீம் பாட்டு, கிருத்தவ பாட்டு என்று போடுவீர்களா? எல்லோரும் பயணம் செய்கிற பேருந்தில் இப்படி செய்வது சரியா? என்று நடத்துனரை பார்த்து கேட்டார்.
நடத்துனர் நிறுத்தவா? போடவா? என்று மிரண்டு போய் கூறினார். உங்கள் விருப்பம் என்று சொன்னவுடன், பாடலை நிறுத்திவிட்டார். தகராறு செய்யாமல் பாடலை நிறுத்திய நடத்துனரை பாராட்டித் தான் தீரவேண்டும்! அனைத்து பேருந்து களிலும் மத பாடல்களை நீக்கி பொதுவான பாடல்களை ஒலிபரப்ப பேருந்து கழகம் ஏற்பாடு செய்யவேண்டும்.
- செ.ர.பார்த்தசாரதி, தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர்
Read more: http://www.viduthalai.in/page1/87381.html#ixzz3Cy8EBdqv
அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியாவில் கொண்டாட்டம்!
உலகின் பல நாடுகளிலும் உலகத் தலைவர் பெரியார் பிறந்த நாள் விழா!
வாஷிங்டன்,செப்.10- உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 136 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா உலகெங்கும் கொண்டாடப்பட உள்ளது.
பெரியார் பன்னாட்டமைப்பு வாஷிங்டனில்...
நாள்: 13.9.2014 பிற்பகல் 2.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை
இடம்: எல்கிரிட்ஜ் கிளை நூலகக் கூட்ட அரங்கு, 6540 வாஷிங்டன் பிஎல்விடி, எம்டி 21075
வரவேற்பு: திருமதி கல்பனா மெய்யப்பன், தலைவர், கிரேட்டர் வாஷிங்டன் தமிழ்ச்சங்கம்.
உரையாற்றுபவர்கள்: இளம் நாத்திகர்களின் போராட்டம் தலைப்பில் திரு.ஹேமந்த் மேத்தா (சிகாகோ பல்கலைக்கழகத்தில் உயிரியல் மற்றும் கணிதவியல் பாடங் களில் 2004 ஆம் ஆண்டில் இரட்டை பட்டம் பெற்றவர்.
உயிரியல் மற்றும் கணிதத்தில் 2007ஆம் ஆண்டுமுதல் பயிற்றுவித்து வருபவர். 2010ஆம் ஆண்டில் டீபால் பல் கலைக்கழகத்தில் கணிதத்தில் முதுகலை பயின்றுள்ளவர். இவர் பயின்ற பல்கலைக்கழகங்களில் மதசார்பற்ற மாணவர் குழுவை ஏற்படுத்தி தலைவராக பொறுப்பில் இருந்தவர்.
நம்பிக்கையைக் கடந்து இலாப நோக்கற்ற அறக்கட்டளை நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருபவர். சுதந்திர சிந்தனைக் காகத் தொடர்ந்து பேசி அமெரிக்க அய்க்கிய நாடுகள் முழுவதும் வருபவர். தி எதியிஸ்ட் நாத்திகம் என்கிற தலைப்பில் உள்ள பிளாக்மூலம் நம்பிக்கை உள்ளவர்கள் மற்றும் நம்பிக்கை இல்லாதவர்களையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டுவருபவர்.)
பெண்களுக்கான அதிகாரம் என்கிற தலைப்பில் முன்னாள் ஆளுநர் மதிப்பிற்குரிய பாரீஸ் நெல்சன் கிளெண்டெனிங் பேசுகிறார்.
பாரீஸ் நெல்சன் கிளெண்டெனிங் அமெரிக்காவின் அரசியல்வாதி ஆவார்.
ஜனநாயக கட்சியின் உறுப்பின ராவார். 18.1.1995 முதல் 15.1.2003 வரை மேரிலாண்ட் 59 ஆவது ஆளுநராக பணிபுரிந்தவர். 1982 ஆம் ஆண்டு முதல் 1994 வரை மேரிலாண்டில் பிரின்ஸ் ஜார்ஜ் பகுதியின் செயல் அதிகாரியாக இருந்துள்ளார். வளர்ந்துவரும் அமெரிக்காவின் தலைமைத்துவ பயிற்சி நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
அதன்படியே ஆளுநரானார். பொரு ளாதாரம் மற்றும் சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடுவதன்மூலம் நாட்டில் மறுகட்டமைப்பை ஏற்படுத்தவும் நாடுமுழுவதும் பல்வேறு தரப்பட்ட தலைவர்களுடன் பணியாற்றி வந்துள்ளார்.
டாக்டர் அரசு மற்றும் டாக்டர் அசாமா ஆகியோரின் விவாதங்களைத் தொடர்ந்து , பெரியார் குறித்த வினாடி-வினா நிகழ்ச்சியை திரு. நாஞ்சில் பீட்டர் மற்றும் கொளந்தவேல் ராமசாமி நடத்துகிறார்கள்.
திரு. எம்.பி. சிவா நன்றி கூறுகிறார்.
தொடர்புக்கு:
டாக்டர் அரசு செல்லய்யா- (410) 404-7222
டாக்டர் சோமஇளங்கோவன்- (708) 361-1998
டாக்டர் சொர்ணம் சங்கர் 443 854-0181
சிங்கப்பூரில்...
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றமும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் பிரிவும் இணைந்து குருதிக் கொடை வழங்கும் விழாவை சிங்கப்பூரில் ஏற்பாடு செய்துள்ளது.
நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை ஊட்ரம் பார்க்கில் உள்ள எச்.எஸ்.ஏ. ரத்த வங்கிக் கட்டடத்தில் நடைபெற வுள்ளது.
நிகழ்ச்சியில் சிங்கப்பூர் அரசின் சுற்றுப்புற, நீர்வளத் துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள உள்ளார்.
குருதிக் கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள் 81185747 என்ற கைப்பேசியில் தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.
16 வயதுக்குமேல் 60 வயதுக்குள் உள்ளோர், சுமார் 45 கிலோ எடைக்கு மேலும், ரத்தத்தில் சிவப்பணுக்களின் அளவு 12.5-க்கு மேலும் இருந்தால், சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏதுமின்றி இருந்தால் அழைத்து, மேல் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
16, 17 வயதில் உள்ளோர் பெற்றோர் அனுமதியுடன் குருதிக் கொடை வழங்கலாம்.
மலேசியாவில்...
மலேசியாவிலும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது என்று மலேசிய திராவிடர் கழகத் தேசியத் தலைவர் பி.எஸ்.மணியம் கோலாலம்பூரிலிருந்து, கழகத் தலைவர் ஆசிரியருக்குத் தொலைப்பேசிமூலம் தெரிவித்துள்ளார்.
Read more: http://www.viduthalai.in/e-paper/87443.html#ixzz3Cy8rpek7
இந்தியைப் பரப்புவது - திருவள்ளுவர் பிறந்த நாளைக் கொண்டாடுவது குறித்து பி.ஜே.பி. ஆய்வு
புதுடில்லி, செப்.10_- இந் தியைப் பரப்புவது குறித் தும், திருவள்ளுவர் பிறந்த நாளைக் கொண்டாடுவது குறித்தும் இந்திய அலுவல் மொழிக்கான நாடாளு மன்றக் குழு ஆய்து செய்து வருகிறதாம்.
டில்லியில் திங்கள் கிழமை நடைபெற்ற மத் திய உள்துறை அமைச்ச கத்தின்கீழ் செயல்படும் இந்திய அலுவல் மொழிக் கான நாடாளுமன்றக் குழுவின் முதலாவது கூட் டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், திரு வள்ளுவர் பிறந்தநாளைக் கொண்டாட அலுவல் மொழிக்கான நாடாளு மன்றக் குழு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
மத்திய அரசுத் துறை களில் நாட்டின் தேசிய மொழியான இந்தியைப் பயன்படுத்துவது குறித் தும், அலுவல் மொழியாக இந்தியை நாடு முழுவதும் பயன்படுத்த வகுக்கப்படும் கொள்கை முடிவுகள் குறித் தும் அலுவல் மொழிக் கான நாடாளுமன்றக் குழு, மத்திய அரசுக்கு யோசனை களை வழங்கி வருகிறது.
அந்த வகையில், மத் தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல் படும் இந்திய அலுவல் மொழிக்கான நாடாளு மன்றக் குழுவின் முதலா வது கூட்டம் டில்லியில் திங்கள்கிழமை கூடியது. மொத்தம் 30 பேர் கொண்ட இக்குழுவில் மக்களவையில் இருந்து 20 பேரும் மாநிலங்களவை யில் இருந்து 10 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் தலைவராக உள்ளார். முதலாவது கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குழுவின் தலைவராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, குழுவின் செயல் திட்டம், எதிர்கால பணிகள் குறித்து இறுதி செய்வதுபற்றி உறுப்பி னர்கள் விவாதித்தனர். இக்குழுவில் இடம் பெற் றுள்ள உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் தருண் விஜய் பேசுகையில், அலு வல் மொழியாக நாம் இந்தியைப் பயன்படுத்தி வருகிறோம்.
அதே சமயம், நாட்டின் தொன்மையான மொழியாக தமிழ் விளங் குகிறது. அதுபோல பல மாநிலங்களின் மொழி களும் தனிச்சிறப்புடன் விளங்குகின்றன. அவற் றுக்கு நாம் மரியாதை செலுத்தவேண்டும்.
உலகின் மிகவும் பழைமை யான மொழியாக தமி ழின் அடையாளமாக திருக்குறள் போற்றப்படு கிறது. உலகப் பொது மறையாக திகழும் அதை எழுதியவர் திருவள்ளுவர்.
அவரது பிறந்த நாள் ஜனவரி மாதத்தில் தமி ழர்களால் கொண்டாடப் படுகிறது. தமிழுக்கும், திரு வள்ளுவருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் மத் திய உள்துறையின் உயர் அமைப்பாகக் கருதப்படும் அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு திரு வள்ளுவர் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும்.
இதன்மூலம் பல மொழி கள் பேசப்படும் இந்தியா வில் அனைவருக்கும் மத் திய அரசு அங்கீகாரம் அளிக் கும் செய்தியை நாட்டுக்கு நம்மால் உணர்த்த முடியும் என்றார்.
இதையடுத்து, ராஜ்நாத் சிங் பேசுகையில், தருண் விஜயின் கருத்து வரவேற்புக்குரி யது. அவரது யோச னையை நாம் நிச்சயம் பரிசீலிக்கவேண்டும். அடுத்த கூட்டம் நடை பெறும்போது இந்த விவ காரத்தில் உரிய முடி வெடுக்கப்படும் என்றார்.
பின்னர் திருவள்ளு வரின் சிறப்புகளை விளக் கிய தருண் விஜய், வட மாநிலங்களில் உள்ள சுமார் 500 பள்ளிகளில் திருக்குறளின் பெருமை களை விளக்கியும், திருவள்ளுவரின் பிறந்த நாளை அடுத்த ஆண்டு கொண்டாடவும் திட்ட மிட்டுள்ளதாகக் கூறினார். அவரது முயற்சிக்கு ராஜ் நாத் சிங் பாராட்டுத் தெரிவித்தார்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மாநிலங்களவையில் தருண் விஜய் கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து, அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திரு வள்ளுவர் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாகக் கொண்டாட வேண் டும் என்று அவர் மாநிலங் களவையில் பேசினார்.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழி யாக அறிவிக்கவேண்டும் என்று குடியரசுத் தலை வரிடமும் அவர் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: http://www.viduthalai.in/e-paper/87450.html#ixzz3Cy95g8dL
பி.ஜே.பி.யின் அரசியல் தார்மீகம்?
பி.ஜே.பி. என்றால் தார்மீகப் பண்புகளுக்குப் பெயர் போனது என்று திட்டமிட்ட வகையில் பிரச்சாரம் செய்து வைத்துள்ளனர் - உண்மையில் அது ஒழுக்கக்கேட்டின் புகலிடம் (இந்து மதம்போல்) என்பதுதான் உண்மை.
பக்திதான் முக்கியமே தவிர - ஒழுக்கமல்ல என்பது தானே இந்து மதம்? எந்த ஒழுக்கக்கேட்டையும் செய்து விட்டு, அதற்கென்றுள்ள பிராயச்சித்தங்களைச் செய்து விட்டால் தீர்ந்தது கதை என்பதுதான் இந்து மதத்தின் கோட்பாடு.
அந்த இந்துத்துவாவை தோளில் தூக்கிக்கொண்டு ஆளும் பி.ஜே.பி. எப்படி நடந்துகொள்ளும்?
டில்லி சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் ஆதரவு அளித்த அடிப்படையில், ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தது. அனுபவம் இல்லாத காரணமாக பதவி விலகியது ஆம் ஆத்மி.
இது நடந்தது கடந்த பிப்ர வரியில்; ஏழு மாதங்கள் ஓடிவிட்டன; சட்டசபையும் கலைக்கப்படவில்லை; மறுதேர்தலுக்கான அறிவிப்பும் வராத நிலையில், தண்டத்துக்கு மக்கள் வரிப் பணத்தை மாதந்தோறும் சம்பளமாக வாங்கிக் கொண்டு இருக் கிறார்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள்.
சட்டசபையைக் கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. இதற்கிடையில் பி.ஜேபி.,க்கு ஒரு நப்பாசை!
தனக்கு அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் களை விலைக்கு வாங்கலாம் என்று திட்டமிட்டுக் குதிரைப் பேரத்தில் இறங்கியது.
ஆம் ஆத்மி கட்சியின் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் ரூபாய் நான்கு கோடி அளிப்பதாகப் பேரம் பேசப்பட்டுள்ளதாம் - இதனைக் கண்ணி வைத்துப் பிடித்துவிட்டது ஆம் ஆத்மி. பி.ஜே.பி.யின் இத்தகைய நடவடிக்கைகள் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்திலும் வழக்கினைத் தொடுத்துவிட்டது ஆம் ஆத்மி. பி.ஜே.பி. குதிரை பேரத்தில் ஈடுபட்டதற் கான வீடியோ ஆதாரங்களும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டன.
இதற்கிடையே எங்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பே கொடுக்கவில்லை என்று அந்தர்பல்டி அடித்தது பி.ஜே.பி. ஆளுநர் எழுதிய கடிதம் அம் பலத்துக்கு வந்துவிட்ட நிலையில், பி.ஜே.பி.யின் தார்மீகம் நார் நாராகக் கிழிந்து எங்கு பார்த்தாலும் தொங்கிக்கொண்டு இருக்கிறது.
உச்சநீதிமன்ற நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு பி.ஜே.பி. அரசுக்கு நல்ல சூடு கொடுத் திருக்கிறது.
நானும் ஒரு குடிமகன்தான். சட்டமன்ற உறுப்பினர் கள் சேவை செய்யவேண்டும் என்றுதான் வாக்களித்த மக்கள் விரும்புகிறார்கள்.
டில்லி சட்டப்பேரவையை இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் முடக்கி வைக்கப் போகிறீர்கள்? உறுப்பினர்களுக்கு வெட்டியாக மாதா மாதம் சம்பளம் கொடுத்துக் கொண்டு இருக்கப் போகிறீர்களா? விரைவாக முடிவெடுங்கள் என்று நீதியரசர் எச்.எல்.தத்து கடுமையாக விளாசி இருக்கிறார்.
இப்பொழுது எல்லாம் நீதிமன்றங்கள் சொல்லுகின்ற, தீர்ப்புகளை மதிக்கும் போக்குக் குறைந்து வருகிறது - இது எதில் போய் முடியும் என்று தெரியவில்லை.
குதிரைப் பேரம் என்பது பி.ஜே.பி.க்கு ஒன்றும் புதி தல்ல; ஏற்கெனவே பலமுறை பழக்கப்பட்ட ஒன்றுதான்.
உத்தரப்பிரதேசத்தில் கல்யாண்சிங் முதல்வராக வருவதற்கு எத்தகைய தில்லுமுல்லுகள் செய்யப்பட்டன! வாஜ்பேயி தலைமையில் 13 நாள்கள் ஆட்சியில் இருந்த போது, உத்தரப்பிரதேச வழிமுறையைப் பின்பற்றத் தயார் என்று பிரதமராக இருந்த வாஜ்பேயி கூற வில்லையா?
இந்தக் கூட்டத்தின் பிரச்சாரப் பீரங்கியாக இருக்கும் சோ ராமசாமியால்கூட அதனைப் பொறுக்க முடியாமல், தலையில் அடித்துக்கொண்டு கண்டித்து எழுத வில்லையா?
பி.ஜே.பி. ஒன்றும் கலப்படமற்ற புனித நெய்யில் பொரிக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பது தெரிந்த ஒன்றுதான்.
அடுத்தவன் மனைவியை தன் மனைவி என்று கூறி வெளிநாட்டுக்குப் பயணம் செய்த பேர்வழிகள் எல்லாம் பி.ஜே.பி.யில் பஞ்சம் இல்லை.
முதலாளிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு நாடாளுமன்றத்தில் முதலாளி களுக்காக கேள்வி கேட்டவர்களின் பட்டியலில் பி.ஜே.பி.க்குத்தான் முதலிடம்!
டில்லியில் பி.ஜே.பி. மேற்கொண்ட குதிரைப் பேரத்துக்குச் சாட்சியங்களாக வீடியோ பதிவுகள் எல்லாம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தீர்ப்புச் சொல்லும்பொழுதுதான் பி.ஜே.பி.யின் முகமூடி கிழியும், பொறுத்திருந்து பார்ப்போம்!
Read more: http://www.viduthalai.in/e-paper/87453.html#ixzz3Cy9a8iLf
ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும், நடந்தபடி சொல்லுவதுமே ஒழியத் தனிப்பட்ட குணங்கள் அல்ல.
_ (குடிஅரசு, 3.11.1929)
Read more: http://www.viduthalai.in/e-paper/87452.html#ixzz3Cy9rIw66
ஆசிரியர் அவர்களின் கொள்கைப் பார்வை எந்நாளும் இனநலக் கண்ணோட்டமே!
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள், அறிக்கைகள் எவ்வளவு தொலைநோக்கு சிந்தனையாக, தந்தை பெரியார் தந்த புத்தியின் வெளிப் பாடாக இருக்கின்றன என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள்
1) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிக்கைகளிலும், திருமண விழாக்கள், ஊடகங்களிலும் அடிக்கடி குறிப்பிடக்கூடிய - மணமக்கள் ஜாதகப்பலன்களை பார்ப் பதற்குப் பதிலாக தங்களின் உடல்நல மருத்துவப் பரிசோதனைச் சான்றிதழ்களை ஒப்பிட்டு காண முடிந்தால் மண மக்களின் வாழ்வு சிறப்பாக அமையும் - வழக்கு விவா கரத்து என்று பிரச்சினைக்கு இடமில்லாமல் எதிர்காலம் மகிழ்ச்சிகரமாய் இருக்கும் எனறு தெரிவித்த கருத்துகளை 3.9.2014 அன்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அவர்கள் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கும் போது மேற்கூறிய கருத்துகளை ஆலோ சனைகளாக வழங்கியுள்ளார்.
இதன் எதி ரொலியாக கலைஞர், புதிய தலைமுறை, இமயம் போன்ற தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்தப்பட்டு அறிஞர் பெருமக் கள், மருத்துவர்கள் ஆராய்ந்து அறிவுப்பூர் வமான விவாதங்களை நடத்தி உள்ளனர். ஆனால், இந்துத்துவா கூட்டங்கள் மட்டுமே எதிர்த்து பழைய பஞ்சாங்கங்களையே பாடி வருகின்றன. இதற்கு அடிப்படையே ஆசிரி யரின் அறிக்கைகள், பேச்சுகள் என்பது நிதர்சனமான உண்மை.
2) நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் னரே தமிழர் தலைவர் ஆசிரியர் எல்லா பொதுக்கூட்டங்களிலும், விரிவான அறிக் கைகளிலும் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு கேடு வரும் என்றும், ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் வடிவம்தான் பாரதீய ஜனதா - அதன் சித்தாந்தத்தை நிலைநாட்டுவதற்காக பல தந்திரங்களை கையாளும் என்று தொலைநோக்கோடு முழங்கினார்.
ஆனால் தமிழ்நாட்டில் இருக்கிற ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., போன்ற கட்சிகள் மோடி ஆட்சி வந்தால் நாட்டில் பெரிய மாற்றம் வரும் என்று கிஞ்சிற்றும் கொள்கைப் பார்வை இல்லாது வெறும் அரசியல் பார்வையோடு கூட்டணி அமைத்துக் கொண்டவர்கள் இன்று இருக்கும் இடம் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள் என்பதுதான் உண்மை. பாரதீய ஜனதாவின் 100 நாள் ஆட்சியல் எவ்வித வளர்ச்சிக்கான புதுமைத் திட்டங்களோ, புரட்சித் திட்டங்களோ எதுவுமில்லை - மாறாக இந்துத்வாவின் கொள்கைகளை இந்தியா முழுவதும் பரப்ப நரித்தனமான வேலைகளைச் செய்து வருகின்றன.
அதற்கு எடுத்துக்காட்டு சமஸ்கிருத வாரம் - செத்த மொழி சமஸ்கிருதத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடு - இந்தித் திணிப்பு - இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களே என்ற பேச்சு இப்படி - அடுக்கிக் கொண்டே போகலாம்.
இப்படியெல்லாம் நடக்கும் என்று அன்றே - கொள்கைப் பார்வையுடனும், சமுதாயக் கண்ணோட்டத்துடன் ஆசிரியர் அவர்கள் கூறியது எவ்வளவு சரியாக இருந்தது என்பதை எண்ணிப்பார்க்கும் போது அய்யாவின் அடிச்சுவட்டில் ஆசிரியர் அவர்களின் கொள்கைப் பார்வை எந்நாளும் இனநலக் கண் ணோட்டமே. திராவிட தமிழ்மக்களே! ஆரிய சூழ்ச்சியை புரிந்துகொள்ளுங்கள்; பதவிக்காக அடிமையாகாதீர்! என்றும் பெரியார் கொள்கையே வெல்லும்.
- தி.க.பாலு
(மாவட்ட தலைவர் பகுத்தறிவாளர் கழகம், திண்டுக்கல்)
Read more: http://www.viduthalai.in/e-paper/87457.html#ixzz3CyA3TL4I
பேராசிரியர் அருணனின் காலந்தோறும் பிராமணீயம் நூலுக்கு விருதும் - ஒரு லட்சம் ரூபாய் பணமுடிப்பும்
சென்னை, செப்.10_ காலந்தோறும் பிராம ணீயம் என்ற பேராசிரியர் அருணன் அவர்கள் ஆய்வு நூலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், பணமுடிப்பும் வழங்கப்பட உள்ளன.
கு.சின்னப்பபாரதி இலக் கிய விருது அறக்கட்டளை யின் சார்பில், அதன் நிர் வாகிகளைக் கொண்ட 6-வது ஆண்டு பரிசளிப்பு விழாவிற்கான கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அறக் கட்டளையின் தலைவர் கு.சின்னப்பபாரதி தலைமை தாங்கினார். வருகின்ற அக்டோபர் 2- ந் வியாழக் கிழமை காந்தி ஜெயந்தி தினத்தன்று நாமக்கல் கவின் கிஷோர் கல்யாண மண்டபத்தில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில், பரிசு வழங்கப்படும் இனங்களான வாழ்நாள் சாதனையாளர் விருது, நாவல், சிறுகதை, கட்டுரை. மொழிபெயர்ப்பு மற்றும் சமூக சேவை ஆகியவற் றிற்கு பரிசு பெறுவோர் விபரங்களை கூட்ட முடி வின்படி அறக்கட்டளை யின் தலைவர் கு.சின்னப்ப பாரதி வெளியிட்டார்.
அறக்கட்டளையின் விருதுக்கு உலக அளவில் வரப்பெற்ற ஒவ்வொரு இனத்திற்கும், கு.சின்னப் பபாரதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, இறுதியில் சிறந்த படைப்புக்கள் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் ஒரு இலட்சத்து தொண்ணூ றாயிரத் துக்கான பண முடிப்பு வழங்கப்படுகிறது.
அதனடிப்படையில், வாழ்நாள் சாதனையாளர் என்ற தலைப்பிற்கு, முதன்மைப் பரிசாக,காலம் தோறும் பிராமணியம் மற்றும் கலை இலக்கிய ஆய்வுக்காக தமிழ்நாட் டைச் சார்ந்த பேராசிரியர் அருணன் அவர் களுக்கு விருதும், ரூபாய் ஒரு இலட் சத்திற்கான பணமுடிப்பும் வழங்கப்படுகிறது.
நாவல் வரிசையில், குடைநிழல் என்ற நாவ லுக்கு, இலங்கையைச் சார்ந்த தெளிவத்தை ஜோசப் என்ற எழுத்தா ளருக்கு விருதும், ரூபாய் பத்தாயிரம் பரிசும் வழங்கப்படுகிறது
நான்கு சிறுகதைத் தொ குப்பின் ஆசிரியர்களான, தவிக்கும் இடை வெளிகள் _ எழுத்தாளர் உஷா தீபன், தமிழ்நாடு இப்படி யுமா? _ எழுத்தாளர் வி.ரி இளங்கோவன், பாரீஸ் ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் - _ எழுத் தாளர் ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர் வெந்து தணிந்தது காலம் - எழுத்தாளர் மு.சிவ லிங்கம், இலங்கை ஆகிய நான்கு சிறு கதைத் தொகுப்புக்களின் ஆசிரியர்களுக்கும் விருதும், தலா ரூபாய் பத்தாயிரமும் வழங்கப்படுகிறது.
நூல் தேட்டம் என்ற கட்டுரைத் தொகுப்பிற்கு லண்டனைச் சார்ந்த என். செல்வராஜா நூலகவியலா ளருக்கு விருதும், ரூபாய் பத்தாயிரம் பரிசும் வழங்கப் படுகிறது.
மொழி பெயர்ப்புக்காக சல்மான் ருஷ்டியின் நள்ளிரவின் குழந்தைகள் என்ற நூலின் மொழி பெயர்ப்பாளர் கா.பூரண சந்திரன் மற்றும் கு.சின் னப்ப பாரதியின் பாலைநில ரோஜா என்ற நூலின், சிங்கள மொழிபெயர்ப் பாளர் உபாலி நீலாரத்தி னாவிற்கு விருதும் தலா ரூபாய் பத்தாயிரம் பரிசும் வழங்கப்படுகிறது,
சமூக சேவைக்காக இலங்கை மலையக மக்களின் கலை இலக்கிய சமூகப் பணிக் கான வாழ்நாள் சாதனை யாளர் விருதாக ஆண்டனி ஜீவாவிற்கு விருதும் ரூபாய் பத்தாயிரம் பரிசும் வழங் கப்படுகிறது.
மற்றும் பெங்களுரு தமிழ் சங்கம் ஆற்றிவரும் தமிழ்பணிக்காக விருதும் ரூபாய் அய்யாயிரம் பரிசும் வழங்கப்படுகிறது என அறக் கட்டளையின் தலைவர் கு.சின்னப்ப பாரதி அறி வித்தார்.
இக்கூட்டத்திற்கு,செயலாளர் கே.பழனிசாமி, உறுப் பினர்கள் சி.ரங்கசாமி மற்றும் கு.பாரதிமோகன் ஆகியோர் கலந்து கொண் டனர்.
Read more: http://www.viduthalai.in/e-paper/87465.html#ixzz3CyAKpXpu
Post a Comment