Search This Blog

1.9.14

புத்தரை விநாயகர் ஆக்கிய புல்லர்கள்!


வைதிக வருணாசிரம ஆரிய ஆதிக் கத்தை வீழ்த்தத் தோன்றியவர்தான் அரச குலத்தில் தோன்றிய சித்தார்த்தன் - அவர்தான் புத்தியைப் பயன்படுத்திய புத்தர் ஆனார்.


புத்தரின் போதனைச் சீலத்தால் கவரப்பட்ட அசோகர் போன்ற அரசர்கள் அவற்றை இந்தியத் துணைக் கண்டத்தில் மட்டுமல்ல; அயல்நாடுகளிலும் பரப்பிய பெருஞ் சாதனையைச் செய்த வரலாற்று மாந்தர்களாக ஒளிர்கின்றனர்.


இந்தியத் துணைக் கண்டத்தில் அரிய கருவூலமாகத் தோன்றிய பவுத்தம் அது பிறந்த மண்ணில் தரை மட்டமாக்கப்பட்டது. சீனா, ஜப்பான், மியான்மா, இலங்கை நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டு விட்டது. (மார்க்கம் மதமாக்கப்பட்டு மவுடீகத்தின் மடியில் விழுந்து புரள்கிறது என்பதும் உண்மைதான்)


இந்தியத் துணைக் கண்டத்தில் அது ஏன் வீழ்த்தப்பட்டது? விவேகத்தாலா? நாணயமான எதிர்ப்பாலா? இதைவிட உயர்ந்த சீலங்கள் தோற்றுவிக்கப் பட்டதாலா?


அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் அல்ல?


வன்முறைகளால்! ஆரியத்தின் அடிமை களாக ஆக்கப்பட்ட அரசர்களின் அதி காரத் துரைத்தனத்தால் புத்த விகாரங்கள் எல்லாம் இந்துக் கோயில்களாக உரு மாற்றப்பட்டன என்பதற்கு எத்தனை எத் தனையோ ஆதாரங்கள் அலை அலையாக எழுந்து நிற்கின்றன.


தமிழ் இந்து இதழில் (21.8.2014)   வெளிவந்த ஒரு தகவல் இதோ:

சென்னையில் பவுத்தச் சுவடுகள் 

இன்றைக்குச் சென்னையின் ஒரு பகுதி யாகிவிட்ட பல்லாவரம் ஒரு காலத்தில் பல்லவ அரசர்கள் வாழ்ந்த பகுதி. பல்லவபுரம் என்பதுதான் இந்த ஊரின் பெயர். பல்லாவரம் என்று திரிந்துவிட்டது.


இன்றைக்குச் சென்னையோடு கலந்துவிட்ட இந்த ஊரில் பல்லவர்கள் வாழ்ந்தபோது, அது சிறப்புடையதாக இருந்திருக்க வேண்டும். அதற்குக் காரணமும் இருக்கிறது. முதலாம் மகேந்திர வர்மன் இந்த ஊரில் கற்பாறையைக் குடைந்து அமைத்த குடைவரைக் கோயில் ஒன்று இருக்கிறது.

பல்லவ அரச குடும்பம் வாழ்ந்த ஊரில், புத்தர் கோயில் இருந்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால், பல்லவ அரச குடும்பத்தில் ஒரு பிரிவினர் பவுத்தர்களாக இருந்திருக்கிறார்கள்.

பவுத்தரும் பிள்ளையாரும்

இந்த ஊருக்கு அருகேயுள்ள கணிக் கிலுப்பை என்ற ஊரில் புத்தர் சிலைகள் இருந்திருக்கின்றன. இந்த ஊரில் இருக்கும் பிள்ளையார் கோயில் பகுதியில் முன்பு புத்தர் கோயில் இருந்திருக்க வேண்டு மென்று பவுத்த ஆராய்ச்சியாளர் மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளார். பண்டைக் காலத்தில் புத்தர் கோயிலாக இருந்தவை பிற்காலத்தில் பிள்ளையார் கோயில்களாக மாற்றப்பட்டதற்கு இந்த ஊரில் உள்ள கோயிலும் ஒரு சான்று என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஊர் மானியம்

அதேபோலச் செங்கல்பட்டு மாவட் டத்தின் ஒரு பகுதியாகப் பூந்தமல்லி அருகே இருக்கும் மாங்காடு பகுதியில் உள்ள வெள்ளீஸ்வரர் கோயிலில் ஒரு கல்வெட்டு உள்ளது. சுந்தரபாண்டியத் தேவர் (1251-64) என்ற அரசரின் காலத்தில் பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு சாசனத்தில், இங்கிருந்த புத்தக் கோயிலுக்கு மாங்காடு கிராமம் மானியமாகக் கொடுக் கப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது.

மாங்காட்டுக்கு அருகில் உள்ள பட்டு என்ற கிராமத்திலும் புத்தர் கோயில் அகற்றப்பட்டு, பிள்ளையார் கோயிலாக மாற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

காஞ்சியின் புகழ்

காஞ்சியில் இருந்த கச்சிக்கு நாயகர் கோயில் என்ற புத்தக் கோயிலுக்கு, பொன்னேரிக்கு அருகேயிருக்கும் நாவலூர் மானியமாக எழுதப்பட்டிருக்கிறது. இன்றைக்கு இந்து மதப் புனிதத் தலமாகக் கருதப்படும் காஞ்சிபுரம், ஒரு காலத்தில் பவுத்த காஞ்சி என்றே அழைக்கப்பட் டுள்ளது. கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் அர சாண்ட அசோக சக்கரவர்த்தி கட்டிய ஒரு பவுத்த ஸ்தூபி காஞ்சியில் இருந்ததாக, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிக்கு வந்து சென்ற புகழ்பெற்ற சீனப் பயணி யுவான் சுவாங் எழுதியிருக்கிறார்.


இப்படிப் பழைய செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இன்றைய சென்னை மாவட் டங்களில் உள்ள பல ஊர்களில் புத்தர் சிலைகளும் தர்மச் சக்கரங்களின் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. (தி இந்து 21.8.2014)
இந்தத் தகவலைக் கொடுத்திருப்பது விடுதலை ஏடல்ல - திராவிடர் இயக்க இதழ்களும் அல்ல இந்துக் குழுமத்தி லிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் தி தமிழ் இந்து ஏட்டில்தான்.


தமிழ்நாட்டில் எந்தெந்த பவுத்தக் கோயில்கள் இந்துக் கோயில்களாக திட்ட மிட்டு உருமாற்றம் செய்யப்பட்டன என்ப தற்குத் தக்க ஆதார நூல் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய நூல் பவுத்தமும் தமிழும் அதிலிருந்து சில எடுத்துக்காட்டுகள் இதோ:


கும்பகோணம்: நாகேசுவர சுவாமி திருமஞ்சன வீதியில் உள்ள ஒரு விநாயகர் ஆலயத்தில் பகவரிஷி என்னும் பெயருள்ள ஒரு புத்தர் உருவம் இருக்கிறது. பகவன் என்பது புததர் பெயர்களில் ஒன்று. புத்தருக்கு விநாயகன் என்ற பெயர் உண்டென்று நிகண்டு நூல்கள் கூறுகின்றன. புத்தர் கோயில்கள் பல, பிற்காலத்தில் விநாயகர் (பிள்ளையார்) கோயில்களாக்கப் பட்டன. இங்குள்ள விநாயகர் கோயிலும் அதில் உள்ள புத்தர் உருவமும் இதற்குச் சான்றாகும். (பக்.45)


மேலும் அதே நூலில் சில முக்கிய தகவல்கள் இதோ:


இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவ மதம் புத்தரைத் திருமாலின் ஓர்  அவதாரமாக ஏற்றுக் கொண்டது போலவே, மற்றொரு பிரிவாகிய சைவ சமயமும் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டது. சாஸ்தா, அல்லது அய்யனார் என்னும் பெயருடன் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டு, பின்னர், முருகர், அல்லது சுப்பிரமணியரோடு புத்தரை ஒற்றுமைப் படுத்திக் கொண்டது. புத்தருக்குத் தருமராசன் என்றும், விநாயகன் என்றும் பெயர் உள்ளன. இப்பெயர்களை நிகண்டுகளிலும் காணலாம்.


தருமராசன் என்னும் பெயருடன் இருந்த பௌத்தக் கோயில்களைப் பிற்காலத்தில், பாரதத்தில் கூறப்படும் பஞ்சபாண்டவரைச் சேர்ந்த தருமராசன் கோயிலாக மாற்றி விட்டனர். அதுபோலவே, விநாயகன் என்னும் பெயருடன் இருந்த புத்தர் கோயில்களை விநாயகர் (பிள்ளையார்) கோயிலாகவும் மாற்றி விட்டார்கள். துடிதலோகத்தில் எழுந்தருளியிருந்த அவலோகிதர் எனப்படும் போதிசத்துவர், புத்தராக மாயாதேவியின் திருவயிற்றில் வந்து அமர்ந்தபோது, வெள்ளையானைக் கன்று உருவமாக வந்தார் என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன.


பௌத்தமதம் செல்வாக்குக் குறைந்த பிற்காலத்தில், விநாயகர் என்னும் பெயருடைய புத்தக் கோயில்கள் விநாயகர் (பிள்ளையார்) ஆலயங்களாக மாற்றப்பட்டன. பழைய சைவ சமயத்தில் விநாயகர் வணக்கம் கிடையாதென்றும், கி.பி.6ஆம்  நூற்றாண் டிற்குப் பிறகு விநாயகர் வணக்கம் சைவ சமயத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதென்றும் சைவப் பெரியார் உயர்திரு மறைமலை யடிகள் போன்ற அறிஞர்கள் கூறுவதும் ஈண்டு கருதத்தக்கது.


பவுத்த சிறுதெய்வங்களை இந்துமதம் ஏற்றுக் கொண்டது


மணிமேகலை, சம்பாபதி, தாராதேவி முதலிய சிறு தெய்வங்கள் பண்டைக் காலத்தில் பவுத்தர்களால் வணங்கப்பட்டு வந்தன. இந்தத் தெய்வங்களின் கோயில் களை, இந்துக்கள் பிற்காலத்தில் கைப்பற்றிக் கொண்டு, இவைகளுக்குக் காளி, பிடாரி, திரௌபதையம்மன் என்னும் புதுப்பெயர்கள் சூட்டிக் கிராம தேவதை களாக்கிக் கொண்டனர். காஞ்சீபுரத்தில் வீடுபேறடைந்த மணிமேகலை என்னும் காவியத் தலைவியாகிய மணிமேகலை ஆலயந்தான் காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள அன்னபூரணி அம்மன் என்றும், காஞ்சி காமாட்சியம்மன் ஆலயம் பவுத்தரின் தாராதேவியம்மன் கோயில் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். அவ்வாறே, ஆங்காங்குத் திரௌபதை யம்மன் ஆலயம் என்னும் பெயருடன் இப்போது இருக்கும் ஆலயங்கள் எல்லாம் பண்டைக்காலத்தில் தாராதேவியால யங்களாக இருந்தன என்றும் கூறுவர்.


வேள்வியில் உயிர்க்கொலை நீக்கியது


யாகங்களில் ஆடு மாடு முதலிய வற்றைக் கொல்வது பெரும்பாவமென்பது பவுத்தமதக் கொள்கை. அதற்கு நேர்மாறாக, யாகங்களில் ஆடு, மாடு, குதிரை முதலிய வற்றைப் பலியிட வேண்டுமென்பது பிராமண மதத்தின் கொள்கையாக இருந்து வந்தது. கடைசியாக,. வைதீக பிராமண மதம் தனது கொள்கையை விட்டுக் கொடுத்து, பவுத்த மதக் கொள்கையாகிய கொல்லாமையை ஏற்றுக்கொண்டது.


அன்றியும், பிராமணர் மாமிசம் உண்டு வந்ததையும் நிறுத்திச் சைவ உணவை உண்ணும்படி செய்ததும் பவுத்த மதந் தான். வைதீக மதத்தார் மாமிசம் உண் பதையும் யாகங்களில் உயிர்க்கொலை செய்வதையும் தடுத்து, அவற்றை நிறுத்தச் செய்த பெருமை பவுத்த மதத்திற்கு மட்டுமன்று, ஆருகத மதத்திற்கும் உரிய தாகும்.


(மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் எழுதிய பவுத்தமும் தமிழும் பக். 77-78)
ஆதாரம்: இத்துடன் அறுந்து விட வில்லை!


நாகரிமற்ற இந்து பார்ப்பனிய மதவெறி

காஞ்சியில் புத்தப் பல்கலைக் கழகம் இருந்ததாக வரலாற்றில் படிக்கிறோம்; அதன் சுவடுகளைக் காண முடியவில்லை. நாகையில் புத்த பாழி இருந்ததாகவும் அறிகிறோம்.

 


தஞ்சை மாவட்டத்தில் திருவலஞ்சுழியில் புத்தர் சிலை கடன் காரச்செட்டி என்று பெயரிடப்பட்டு அறியாச் சிறுவர்களால் கல்லால் அடிக்கப்பட்டு சிதைக்கப்பட்டதும், புத்தர் இருக்கையான மலர் பீடத்தில் கணேசன் வைக்கப்பட்டதும் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த செய்தி, கேரளத்தில் கிடைத்த புத்தர் சிலையை குள்ளப் புலையன் சிலை என்றும் விஷ்ணுவால் தண்டிக்கப்பட்டவன் என்றும் கொச்சைப் படுத்தப்பட்ட வரலாறும், சென்னையிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் உடைந்தும்,
சிதைந்தும் அடி நிலங்களில் காணப்பட்டு, தோண்டியெடுக்கப்பட்ட புத்த இயக்க (சமய) சான்றுகளும், சுவடுகளும் நெஞ்சை நெகழச் செய்கின்றன. தமிழகத்தில் தருமராசர், போதிராசர், அய்யனார் ஆகிய வழிபாடுகள் புத்தரையே குறிக்குமென்றார் தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம், புத்த சமயம் (இயக்கத்தில்) தடயங்களையும், சுவடுகளையும் அழிப்பதிலும், மறைப்ப திலும் இந்துப் பார்ப்பனீயப் புரட்டர்கள் கை தேர்ந்தவர்கள். இதற்கு இந்து இதழ் செய்தியொன்று சான்றளிக்கிறது.
(Sculptural Treasure Trove - Hindu Weekly Edition 3 September, 1980 Madras).


ஆந்திரத்தின் குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள அமராவதியில் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கடவுள் நிலக்கிழார் (லிஷீக்ஷீபீ)  அமரேசுவர சுவாமி, கடவுளச்சி - நிலக் கிழத்தி (Goddess)  ஜுவாலமுகி ஆகி யோரின் கோவில் உள்ளது. ஆந்திரத்தின் சாலை கட்டிட அமைச்சர் திரு.கே. ரோசையா அவர்களைத்தலைவராகக் கொண்டு கோயில் புதுப்பிப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.


இந்தக் கோயிலை 30 லட்சம் ரூபாயில் புதுப்பிக்க இக்குழு திட்டமிட்டுள்ளது. அமரேசுசுவாமிக் கோயிலைப் புதுப்பிக்கும் பணி தொடங்கிய நிலையில் அக்கோயிலில் வரலாற்றுச் சிறப்புக்குரிய சிற்பச் சுவடுகள் காணப்பட்டுள்ளன. இந்த கோயிலை மாற்றிக் கட்டுவதற்குக் கோயிலின் கூரையை இடித்தபோது 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செங்கற்களும் கல்துண்டுகளும் (ஷிறீணீதீ) காணப்பட்டன ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதா வது  9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலின் கூரையில் 2ஆம் நூற்றாண்டு கற்களும், கல்துண்டுகளும் காணப்பட் டுள்ளன. இப்போதுள்ள கோயிலில் ஆகம விதிகள்படி இல்லாத அரச கோபுரத்தை நீக்கிவிட்டு புதிய அரச கோபுரம் கட்ட அடித்தளம் தோண்டிய போது மேலும் பல பழம் கட்டிடச் சுவடுகள் காணப்பட்டன.


இந்த 2ஆம் நூற்றாண்டு சுவடுகள் கவுதமபுத்தரின் வாழ்க்கை தொடர்பானவை, அதாவது 2ஆம் நூற்றாண்டில் இருந்த புத்த இயக்க (சமய) பாழி 9 ஆம் நூற்றாண்டு சிவன் கோயிலில் (அமரேசுவரர் கோயிலில்) இடம் பெற காரணம் என்ன? ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அமரேசுவரர் - ஜுவாலமுகி கோயில், முந்திய (2ஆம்) நூற்றாண்டிற்குரிய புத்தப்பாழியின் இடிபாடுகளையும் செங்கற்களையும், கல்துண்டுகளையும் கொண்டு கட்டப்பட்டி ருப்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
புத்தர் அமரும் தாமரைப் பீடமும், புத்தர் குதிரையில் ஏறியுள்ளது. போன்றும், புத்தர் அரசு நிலையில் இருப்பது போன்றும் பல சிற்பங்கள் காணப்பட் டுள்ளன. மேலும் பல புத்த சமயச் சான்றுகள் கிடைக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் நூற்றாண்டின் கட்டிடம் ஒன்பதாம் நூற்றாண்டில் இடிபாடுகளாக காலச்சிதைவால் ஏற்பட்டிருந்தால் அவை மற்றொரு கோயில் கட்டப் பயன்பட்டிருக்க முடியாது. மாறாக புத்தப்பாழி இந்துமதப் புரட்டர்களால் இடித்துத் தள்ளப்பட்டிருக்க வேண்டும். இதற்கு உதவியாக பல பொய்கள் வதந்திகள் கடவுள் சார்பான புரட்டுகளை இந்துப் பார்ப்பனீய புரட்டர்கள் மக்களிடையே பரப்பியிருக்கக் கூடும்.

ஆக புத்தப் (பாழிகளை) விஃகார்களை உடைத்து நொறுக்கி சிவன் கோவில் கட்டிய நாகரிக மற்ற செயல்தான் அமராவதி அமரேசுவரர் ஆலய சான்றுகளால் வெளிப்படுகிறது. நாகரிக சமயவாணர்கள் அடுத்த சமயத்த வரின் இயற்கையான இடிபாடுகளைத் தங்களுக்கு உடைமையாக்க விரும்ப மாட்டார்கள். அந்த இடத்தில் தங்களின் சமய அமைப்புகளை எழுப்புவதற்கு முயல மாட்டார்கள்.

ஆனால் பொய்யால், புரட்டால், கொச்சைப்படுத்தும் இழிசெயல்களால் புத்த விகாரை (பாழியை) அழித்து சிவன் கோயிலாக மாற்றியுள்ளனர். இந்த நாகரிக மற்றவர்களின் வாரிசுகள்தான் இசுலாமி யரின் வரலாற்று சின்னமான தாசு மகா லிலேயே இந்துக் கோயில் என நிரூபிக்க புரட்டுப் பேச்சுக்களையும் போலி ஆராய்ச்சிகளையும் தொடங்கியுள்ளனர்.


 

தெருவெல்லாம் நடைபாதைக் கடவுள் களை நட்டு, ஊரில் நடமாடும் நாய்க ள்மூலம் நாய் மூத்திர அபிசேகம் செய்ய வைத்து மதம் வளர்க்கும் சவுண்டிகளும், சவுண்டிகளின் மருமகப் பிள்ளைகளும் (பார்ப்பானுக்குப் பல்லாக்குத் தூக்கிகளும்) பெரியார் சிலையை காஞ்சியில் வைப்பதால் காமகோடியின் மனம் புண்படும் இந்து மத உணர்வுகள் புண்படும் என ஒலமிட்டனர்.


அமராவதியில் புத்தரை அழித்த புரட்டர்கள் - புத்த அமைப்புகளை அழித்தவர்கள் புதிய புத்தரை - பெரியாரை அவரின் கொள்கைகளை அழிக்க பெரியார் மண்ணில் அண்ணாவின் காஞ்சியில் பகல் கனவு கண்டனர். அமராவதி அழிப்பு வேலை இயலவில்லை . இயலாது.


(பேராசிரியர் முனைவர் இராசகோபால் உண்மை 1.10.1980 பக்கம் 2,10)


திருப்பதி கோயில் புத்தர் விகாரமே!


பாபர் மசூதி இருக்கும் இடம் ராமன் பிறந்த  இடம்; ராமர் கோயிலை இடித்து விட்டுத்தான், அந்த இடத்திலே பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்று பார்ப்பனர்கள் கூறி, பாபர் மசூதியை இடித்துவிட்டு, அதே இடத்திலேயே ராமர் கோயில் எழுப்பப்பட வேண்டும் என்று வெறிப் பிரச்சாரம் செய்து, நாட்டில் மதத்தின் பெயரால் ரத்த வெள்ளத்தைப் பெருக்கோடச் செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் “Tirupati Balaji was a Buddhist Shrine”  என்ற நூல் வெளிவந்துள் ளது.


மராட்டியத்தைச் சேர்ந்த டாக்டர் கே. ஜமனாதாஸ் F.R.C.S. என்பவர் எழுதி யுள்ளார். இந்நூலைப் பற்றி குறிப்புரை இதோ:


Lord vengatrama presiding deity on the famous tirumalai hills. Popular known as balaji of  tirupathi, is important  vaishnava shrine of south india. The natives of lord venkatrama has always been a matter of dispute for centuries Some consider him as vishnu,  skanda, siva, some as sakti same as skanda and some as harithra. In fact it was on old Buddhist shrine murthi itself being Buddhist; and it was taken over for bramine worship during the general fall off Buddhism . he was a god of tribal Buddhist and was vaishanavized by saint  and lattu sankarithzed and brahmanized by pandits in his present form. The weapons on him are not original but provided at a lattu date . how this was  brought about is captained with all historical and archeological evidence. Cult’s of vitiated of pandharpur  jagannath of puri.  Ayappa on sabarimala etc. which were  originally Buddhists are directed  and many other Buddhist shrines which was buried are destroy  and the history of india in general and south India in particular from seventh  to tenth century  during the period of fall in Buddhist and rise of Brahmin tirupathi in Tread.


இப்படியெல்லாம் உருட்டல், புரட்டல்,  இடித்தல், அழித்தல் உருமாற்றம் செய்த வெறியர்கள் தான் - அயோத்தியில் ராமன் கோயிலை இடித்து விட்டு, மசூதியைக் கட்டி விட்டார் பாபர்  என்று பச்சை - கொச்சை பிரச்சாரம் செய்து பாபர் மசூதியை இடித்து முடித்தார்கள்.


 

நம் கண் முன்னே இந்த வேலையைச் செய்தார்கள் புத்தர் கோயில்களை இடித்து விட்டு இந்துக் கோயிலாக மாற்றியுள்ளார் கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.


புத்தருக்கு விநாயகர் என்ற பெயர் இருந்ததை - அழுக்குருண்டைப் பிள்ளை யாருக்கு புத்தரின் அந்த விநாயகர் பெயரைச் சூட்டி இன்றைக்கு ஊர்வலம் விடுகிறார்களாம்!

எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

               ------------------------------ கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 30-08-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

71 comments:

தமிழ் ஓவியா said...

நெஞ்சம் மறக்கவில்லை

மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எழுத்தராகப் பணி புரிந்து கொண்டு பகுத்தறிவாளர் கழக செயலாளராகவும் பணி செய்து வந்தேன். மன்னை நாராயணசாமி அவர்களின் வீடு ஒன்றில் வாடகைக்குக் குடி இருந்தேன். எனது வீட்டின் அரு கில் அன்னை நாகம்மையார் மன்றம் இருந்தது. அங்கு கழகக் கூட்டங்கள், வாழ்க்கை ஒப்பந்த விழாக்கள் நடந்து வந்தன.

உள்ளிக்கோட்டை பக்கிரிசாமி, எடமேலையூர் இராசன், நகரத் தலைவர் அழகிரிசாமி, காளவாய்க்கரை கோவிந்தராசு, நீடாமங்கலம் ஆறுமுகம், சுப்பிரமணியன் போன்ற கழகத் தலைவர்கள் வீட்டிற்கு வருவார்கள். மன்னை நாராயணசாமி, அவர்களை சந்தித்து பேசிவிட்டு செல்வார்கள். அரசு அதிகாரிகளும் என் மூலம் மன்னை அவர்களை சந்தித்து வரு வார்கள். நானும் அவர்களை மன்னை யிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைப்பேன். கும்பகோணம் சோழன் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணி செய்த பாசுக்கரன் என்பவர் கழகத் தலைவர்களுடன் எனது வீட்டிற்கு வந்தார்.

எனது மூத்த மகள் திலகவதி பள்ளி இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) முடித்து விட்டு வீட்டில் இருந்தது. அதைக் கவனித்த ஓட்டுநர், குடந்தை போக் குவரத்துக் கழக மேலாண்மை இயக் குநராக ஞான.அய்யாசாமி பணி செய்கிறார்கள். தந்தை பெரியார் அவர்களிடம் நெருங்கிப் பழகியவர். அவர்களிடம் கூறினால் கட் டாயம் வேலை போட்டுத் தருவார்கள் என்றும், கூடவே தானும் வருவதாக வும் தெரிவித்தார்கள்.

அவர்களை தாங்கள் பார்க்க வரும்போது அன் றைய விடுதலை நாளிதழை அவர்கள் பார்க்கும்படி கையில் எடுத்து வரவும் என்று தெரிவித்தார். அதன்படி அவரை அழைத்துக் கொண்டு கும்பகோணம் தலைமை அலுவலகம் சென்றேன். நான் மன்னார்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணி செய்வதையும், பகுத்தறிவாளர் கழக செயலாளராகச் செயல்படுகிறேன் என்றும் கூறினார். கையில் வைத்திருந்த அன்றைய விடுதலை நாளிதழை அவர்கள் மேசை மீது வைத்தேன். அதைப்படித்து விட்டு அதன் பிறகுதான் விசாரித்தார்கள்.

எனது மகள் திலகவதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றுள்ளது. அதனால் ஏதாவது வேலை போட்டுத் தாருங்கள் என்றேன். கூட வந்த ஓட்டு நரும் நான் மன்னை நாராயணசாமி அவர்கள் வீட்டில்தான் குடியிருக்கிறார் என்று கூறினார்கள்.

போக்குவரத்து கழகத்தில் பெண் களை வேலைக்கு சேர்ப்பதில்லையே என்றார்கள். உடன் அருகில் தட்டச்சு செய்து கொண்டிருந்த எனது பெண்ணுடன் படித்த பெண்னைப் பார்த்தேன். அதை கவனித்த அவர்கள் தட்டச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எழுத்தர் பணிகளுக்கு பெண்களை சேர்ப்ப தில்லை என்றார்கள். எனக்கு பையன்கள் இல்லை அவசியம் செய்ய வேண்டு மெனக்கூறி விண்ணப்பத்தைக் கொடுத்தேன்.

வாங்கிக் கொண்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதா என்று கேட்டார்கள். செய்துள்ளது என்று கூறினேன். உடன் தட்டச்சரிடம் தஞ்சாவூர் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு கடிதம் எழுதி பட்டியல் கேட்கும்படி கூறினார். எனது மகள் பெயரைச் சேர்த்து பட்டியல் வாங்கி வந்தேன். எனது மகள் வேலை சம்பந்தமாக மன்னை அவர்களிடம் நடந்த விவரங்களைக் கூறி கட்டாயம் வேலை வாங்கித் தரும்படிக் கூறினேன்.

சரியெனக்கூறி இயக்குநரிடம் சொன்னார்கள். அவர் களும் தொலைபேசியில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வந்த பட்டி யலில் உள்ள அனைவருக்கும் நேர்முகத் தேர்விற்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அதில் மன்னை அவர்களின் நேர்முக உதவியாளர் கடகம் இராமநாதன், உறவினர் பையனுக்கும் நேர்முக தேர் விற்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

அந்தப் பையனுக்கும் மன்னை அவர்களிடம் சொல்லி சிபாரிசு செய்யப்பட்டது. எனது மகளுக்கும் அந்தப் பையனுக்கும் சிபாரிசு செய்த தால் உடனே இயக்குநர் அவர்கள் மன்னை அவர்களிடம் கேட்டபோது முதலில் பரிந்துரை செய்ததை நினைவில்லாமல் சொல்லிவிட்டேன். முதலில் சொன்ன திலகவதிக்கே நியமன ஆணை வழங்கும்படிக் கூறினார்கள்.

ஆகவே மன்னார்குடி போக்குவரத்து கழக பணி மனையில் ரூ.600 (ஆறு நூறு ரூபாய் மட்டும்) தினக்கூலியாக நியமனம் செய்தார்கள். தனது வேலையை திறமையாகச் செய்ததால் ஓராண்டுக்குப் பிறகு கும்பகோணம் தலைமை அலுவலகத்திற்கு எழுத்தராகப் பணி நியமனம் செய்தார்கள். அங்கு பணி மூப்பு அடிப்படையில் பிரிவு கண் காணிப்பாளராக பணி செய்து அண் மையில் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளது.

சென்னை பெரியார் திடலுக்கு வரும் போதெல்லாம் ஞான.அய்யாசாமி அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்து வருவேன். அவர்கள் இயற்கையெய் தியதை விடுதலை மூலம் அறிந்து பெரிதும் வருந்தினேன்.

- ச.மு.செகதீசன் (மாவட்ட தி.க. (மயிலாடுதுறை)

Read more: http://viduthalai.in/page2/86875.html#ixzz3C1XdiQCp

தமிழ் ஓவியா said...

சட்டத்தின் முன் அனைவரும் சமம் சங்கராச்சாரியாரைத் தவிர!


கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பத்திரிக்கைகளுக்கு செய்தியாக அச்சில் ஏறிவந்த ஒரு சம்பவம், பி.ஜே.பி. அரசால் ஒரு வழியாக ஒரு நாடகத்தின் மூலம் முடிக்கப்பட்டிருக்கிறது. அது காஞ்சிபுரம் வரதராச பொருமாள் கோவில் மேலாளர் சஙகரராமன் கொலை வழக்கில் அப்பீல் எதுவும் செய்யத் தேவை இல்லை என்று மத்திய பி.ஜே.பி. அரசின் அட்டர்னி ஜெனரல் மிக வேகமாக தன் கருத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டார்.

இந்த சட்டக் கருத்து (Legal opinion) காஞ்சி மடாதிபதிகளுக்கும் வழக்கை சந்தித் தவர்களுக்கும் நிம்மதியாக இருக்கும். ஆனால் சங்கரராமன் குடும்பத்தின ருக்கும், கோவிலில் நடந்த கொலையைப் பார்த்து அதிர்ந்த பொது மக்களுக்கும் இதில் நன்கு திட்டமிட்டு உண்மையை மூடி மறைத்துள்ளார்கள் என்பதும், அதற்குக் காரணங்கள் என்னவென்பதும் தெரியும்.

சங்கராச்சாரியார்கள் கைது ஏன்?

2004-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் இராதாகிருஷ்ணன் என்பவர் சிலரால் வீடு புகுந்து தாக்கப்படுகிறார். அதற்காக சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது அரசல் புரசலாகப் பேசப்பட்ட ஒரு செய்தி சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் காஞ்சி மடாதிபதி ஜெயேந் திரரைப் பற்றி மொட்டைக் கடிதம் இராதாகிருஷ்ணன் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதால் அவரை அச்சுறுத்து வதற்காக தாக்கப்பட்டார் என்ற செய்தி வந்தது.

அதன் பிறகு காஞ்சிபுரம் வரத ராஜப் பெருமாள் கோயிலில் மேனே ஜராக இருக்கும் சஙகரராமன் தான் அந்தக் கடிதத்தை எழுதுகிறார் என்று கண்டுபிடித்து அவரை தீர்த்துக்கட்ட ஆட்களை ஏவி கோவிலுக்குள்ளேயே சங்கரராமனைக் கொடூரமான முறையில் தீர்த்துக் கட்டினார்கள். பிறகு உண்மைக் குற்றவாளிகளைத் தப்புவிக்கும் நோக் கத்தோடு போலிக் குற்றவாளிகளைச் சரணடையச் செய்து உண்மையை மறைக்கப் பார்த்தார்கள், போலிக் குற்றவாளிகளை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கும் போது அவர்கள் சொன்ன தகவலின் அடிப்படையில் வழக்கு விசாரணை வெகு வேகமாக நடைபெற்றது.

தமிழ் ஓவியா said...


இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று விசாரித்த போது காஞ்சி மடத்தின் ஜெயேந்திர சரஸ்வதி உள்ளிட்ட சிலர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்து அவரை 08.11.2004-ல் ஆந்திர மாநிலம் மெகபூப் நகரில் வைத்துக் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தார்கள். பிறகு அதன் தொடர்ச்சியாக விஜயேந்திர சரஸ்வதி மற்றும் பலர் கைது செய்யப்பட்டார்கள்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

எந்த ஒரு பிணைவிடத்தகாத வழக்கிலும் (NON-BAILABLE) குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 439இன் படி முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டால் அதற்கு பிறகு உயர் நீதிமன்றத்தில் மனு செய்து பிறகு பிணையில் வர வேண்டும் என்பது எல்லா வழக்குகளிலும் கடைப்பிடிக்கப் படும் பொதுவான விதியாகும்.

ஆனால், 08.11.2004 அன்று விடுமுறை நாளாக இருந்த போதிலும் சென்னை உயர்நீதி மன்றம், சங்கராச்சாரியாரின் பிணை மனுவினை உடனே விசாரிக்க வேண்டும் என்று அப்போதைய சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி அப்போதைய நீதிபதி ஆ.பாலசுப்ரமணியத்திற்கு உத்தரவிட, பிணை மனு காலையிலேயே உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி பாலசுப்ரமணியம் ஜெயேந்திரரை சிறையில் வைக்காமல் ஏதாவது ஒரு பயணியர் மாளிகையில் வைக்கலாமே என்று அரசு தரப்பின ருக்கு வேண்டுகோள் விடுத்தார் கொலை வழக்குகளில் இது போன்று செய்தால் தவறான முன்னுதாரண மாகிவிடும் என்று அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு, பிணை மனு விசாரணை வேறொரு நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இதற்கிடையே தான் காலைக் கடனை வாழை இலையில்தான் கழிப்பேன் என்றும் தான் விரும்பிய சைவ உணவை சிறை நிர்வாகம் தர வேண்டும் என்றும்/ தான் எப்போதும் வைத்துக் கொண்டி ருக்கும் தண்டத்தினை சிறைக்குள்ளும் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று சங்கராச்சாரியார் கேட்டுக் கொள்ள சிறை நிர்வாகம் அவர் கேட்ட வசதிகளை செய்து தந்தது. இதை பிணை மனுவினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும்/ உச்ச நீதிமன்றமும் கவனத்தில் கொள்ளவில்லை.

உயர்நீதிமன்றத்தில் நடந்த பிணை மனு விசாரணையின் போது ஜெயேந்திரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, ஜெயந்திரர் ஒரு சன்யாசி என்றும் அவரை சட்டத்திற்கு முரணான வகையில் கைது செய்து இருக்கிறார்கள் என்றும் அவரை கைது செய்த போது அவமானப்படுத்தினார்கள் என்றும் 1997-ஆம் ஆண்டு டி.கே. பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய நெறி முறைகளை விசாரணை அதிகாரிகள் பின்பற்றவில்லை என்றும் வாதங்களை அடுக்கிக் கொண்டே போனார்.

அதற்கு பதில் அளித்த அப்போதைய அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் (Public Prosecutor) கே. துரைசாமி அவர்கள், சங்கராச்சாரியார் சன்யாசி யல்ல என்றும் அவர் ஒரு Undeserved Criminal (கருணை காட்ட லாயக்கற்ற குற்றவாளி) என்று கூறி சங்கராச் சாரியாரை கைது செய்யும் போது எந்த விதி மீறலும் நடக்கவில்லை என்று அவர் கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களை நீதிமன்றத்திலேயே நீதிபதிக்கு போட்டுக் காட்டினார்.

தமிழ் ஓவியா said...

திட்டமிட்டு வழக்கினைத் தாமதப்படுத்தியது யார்?

எந்த ஒரு குற்றவியல் வழக்கிலும் குற்றஞ் சாட்டப்பட்டவருக்கு தாஙகள் நிரபராதிகள் என்று தன்னை நிரூபித்துக் கொள்வதற்காக பல்வேறு சந்தர்ப்பங் களை குற்றவியல் நடைமுறை சட்டத் தில் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் நோக்கம், ஆயிரம் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்பதேயாகும். ஜெயேந்திரர் தரப்பு/ சட்டத்தின் அத்துணை சந்து பொந்துகளிலும் புகுந்து விளையாடி வழக்கினை தாமதப்படுத்தும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது.

தமிழ் நாட்டில் வழக்கு விசாரிக்கப்பட்டால் தஙகள் தரப்புக்கு நீதி கிடைக்காது என்று கூறி உச்சநீதிமன்றத்தில் மனு செய்து தமிழ்நாட்டில் வழக்கை நடத்தத் தடை வாங்கி முட்டுக்கட்டை போட் டார்கள் (Transfer Petition (Crl) No. 134 of 2005 dated 26.10.2005) புதுச்சேரிக்கு வழக்கை மாற்றிய உச்சநீதி மன்றம் மற்ற குற்றவியல் வழக்குகளில் குறிப்பிட்ட காலத்தில் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று குறிப்பிடுவது போல இந்த வழக்கின் விசாரணையை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க வேண்டும் என்று யாதொரு உத்தர வையும் பிறப்பிக்க வில்லை.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறி ஞர்களும் குறிப்பிட்ட காலக்கெடுவுக் குள் புதுச்சேரி அமர்வு நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் வலியுறுத்திக் கேட்கவில்லை. ஒரு வழியாக புதுச் சேரிக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட் டவுடன் ஜெயேந்திரர் தரப்பு அடுத்த மனுவை தயாராக வைத்திருந்து அதனை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள்.

அது என்னவென்றால்/ புதுச்சேரி மாநிலத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் போது தமிழக அரசின் சார்பில் எந்த வழக்கறிஞர்களும் (Public Prosecutor) ஆஜராகக் கூடாது மாறாக புதுச்சேரி மாநிலத்தில் இருந்து புதுச்சேரி அரசால் நியமிக்கப்படும் அரசு வழக்கறிஞரே (Public Prosecutor) வழக்கை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் கூறினார்கள். சென்னை உயர்நீதிமன்றம் அந்த மனுவினை தள்ளுபடி செய்தது.

வழக்கம் போல் உச்சநீதிமன்றம் சென்ற ஜெயேந்திரர் தடை உத்தரவு பெற்று (Crl Appeal No.1132/2008 in S.L.P (Cr)No. 1248/2006) இறுதியாக 22.07.2008 அன்று புதுச்சேரி மாநிலத்தின் அரசு வழக்கறிஞரோ (Public Prosecutor) (அ) சிறப்பு அரசு வழக் கறிஞரோ (Special Public Prosecutor) வழக்கு விசாரணையை புதுச்சேரி நீதிமன்றத்திலேயே தொடரலாம் என்று உத்தரவு பெற்றார்கள்.

சங்கரராமன் குடும்பத்தினரின் தடுமாற்றம்

மேற்படி உத்தரவுக்குப் பிறகும் வழக்கு விசாரணையில் மந்தநிலை ஏற்படுத்த முதலில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளான கொலையுண்ட சங்கர ராமனின் மனைவி பத்மா மகள் உமா மைத்ரேயி மகன் ஆனந்த் சர்மா ஆகியோரை (PW1 to PW3) குறுக்கு விசாரணை செய்யாமல் காலம் கடத் தினார்கள்.

இதில் குறிப்பிடத் தகுந்த அம்சம் என்னவென்றால் மேற்படி மூவரும் தஙகள் முதல் விசாரணையில் கொலையுண்ட சங்கரராமனுக்கும் சங்கராச்சாரியாருக்கும் இருந்த முன்விரோதம், அவர் எழுதிய கடிதங்கள் சோமசேகர கனபாடிகள் என்ற புனைப்பெயரால் எழுதிய கடிதங்கள் மற்றும் சங்கரராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிபேராணை மனுவின் நகல், (Writ Petition WP No. 17759/2001 dated 5.10.2001) பல்வேறு தேதிகளில் சங்கரராமன் சங்கராச்சாரியாருக்கு எதிராக அரசுக்கும் இந்து சமய அற நிலையத்துறைக்கும் எழுதிய கடிதங்கள், அதன் நகல்கள், சங்கரராமன் கையெ ழுத்துதான் அவைகளில் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் சாட்சி யம் அளித்தார்கள், மேற்படி ஆவணங் கள் (Ex P-1 முதல் Ex P-13) அரசு தரப்பு சான்றாவணங்களாக குறியிடப்பட் டுள்ளது.

தமிழ் ஓவியா said...

அந்த அளவிற்கு அரிய (!) பெரிய (?) செய்திகள் அடங்கியுள்ளது. முதல் நிலை சாட்சியம் அளித்த பிறகு குறுக்கு விசாரணைக்கு வரும்போது மேற்படி மூவரும் ஏற்கனவே தாங்கள் முதல் நிலை விசாரணையில் போலீஸ் சொன்னதையே சொன்னதால்தான் (?) தாங்கள் அவ்வாறு கூறியதாக முன்னுக்குப்பின் முரணாக சாட்சியம் அளித்தார்கள். அப்பொழுதே இந்த வழக்கின் அஸ்திவாரம் ஆட்டம் காணத் தொடங்கி விட்டது என்பதை விட ஜெயேந்திரர் தரப்பினரின் ஆட்டம் நீதிமன்றத்தில் தொடங்கி விட்டது என்று சொல்லலாம்.

விசாரணை அதிகாரிக்கு ஆவணங்களை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

இதற்குப்பிறகு சாட்சிகள் மளமள வென்று பிறழ்சாட்சிகளாக (Lostile Witnesses) மாறிப் போனார்கள். ஒவ் வொரு நாளும் பத்திரிக்கை செய்தி யில் சங்கரராமன் கொலை வழக்கில் இத்தனை சாட்சிகள் பல்டி அடித் தார்கள் என்று வருவது வாடிக்கை யாகிப் போனது. இதில் உச்சக்கட்ட மாக அப்ரூவர் ஆன ரவி சுப்ர மணியனும் பிறழ்சாட்சியாக மாறி இறந்துபோன S.P. பிரேம்குமார் தன்னை மிரட்டி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கச் சொன்னதால்தான் சங்கராச் சாரியாருக்கு எதிராக அப்ரூவர் ஆன தாக வாக்குமூலம் அளித்தார்.

மொத்த மாக விசாரிக்கப்பட்ட சாட்சிகள் 189 அதில் 83 சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறினார்கள் அல்லது மாற்றப்பட் டார்கள். மொத்தமாக 491 சான்றா வணங்கள் (Exhibits) குறியிடப்பட்டுள் ளது. 74 சான்று பொருட்கள் (Material Objects) குறியீடு செய்யப்பட்டன. சான்றாவணங்களில் மிக முக்கியமானவை மாஜிஸ்டிரேட் முன்பு சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் ஆகும்.

காஞ்சி மடத்தின் வங்கிக் கணக்கிலிருந்து பணப்பரிமாற்றம் குறிப்பிட்ட காலத்தில் நடைபெற்றதை குறித்தவை, செல்போன் மூலம் நடைபெற்ற உரையாடல்களுக் கான ஆதாரங்கள், குற்றவாளிகள் என்று தங்களை அறிவித்துக் கொண்டு சரணடைந்த போலி குற்றவாளிகளின் வாக்குமூலங்கள் ஆகியவை மற்றும் பல முக்கிய ஆவணங்கள் ஆகும். 188 சாட்சிகளிடம் நடைபெற்ற விசா ரணைக்கு பிறகு இறுதியாக விசாரணை அதிகாரிகளில் ஒருவரான காவல்துறை கண்காணிப்பாளர் S.P. சக்திவேல் அவர்களுக்கு வழக்கின் ஆவணங்களை படிக்கத்தராமல் உடனடியாக வந்து சாட்சியம் அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி விசாரணை நீதிமன்றம் அறிவுறுத்தியது.

தமிழ் ஓவியா said...

வழக்கு கோப்புகளை பார்க்க அவகாசம் அளிக்காமல் தன்னை விசாரணைக்கு அழைக்கக்கூடாது என் றும் பிறழ்சாட்சிகளாக மாறியவர்கள் மீதும் அப்ரூவர் ரவிசுப்ரமணியத்தின் மீதும் பிரிவு 308 குற்றவியல் நடை முறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை உயாநீதிமன்றத்தில் S.P. சக்திவேல் writ மனு ஒன்றினை தாக்கல் செய்தார். (W.P.No.7575/2011) சென்னை உயர் நீதிமன்றம் 23.03.2011 தேதியிட்ட தீர்ப்பில் விசாரணை அதிகாரிக்கு விசா ரணை தொடர்பான அனைத்து ஆவ ணங்களையும் அளித்து பிறகு அவரை விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித் தது.

பிறழ்சாட்சிகள் மீது நடவடிக் கையை அரசு விரைவில் எடுக்கும் என்று அரசு தரப்பு கொடுத்த உறுதியை உயர்நீதிமன்றம் பதிவு செய்து கொண்டது. இதற்குப்பிறகு S.P. சக்திவேல் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். பிறகு இந்த வழக்கில் ஒரு ஒலிநாடா (Tape) ஒன்று வெளியாகி அது சம்பந்தமான ஒரு விசாரணையை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக் கல் செய்யப்பட்டு அதன் காரணமாக வழக்கு விசாரணை சிலகாலம் தள்ளிப் போடப்பட்டது.

கொலையுண்ட சங்கர் ராமனின் மனைவி மற்றும் மகன் தங்களுக்கு வந்த கொலை மிரட்டலால் தான் குறுக்கு விசாரணையின் போது அரசுக்கு எதிராக சாட்சியம் அளித்த தாக கூறி மீண்டும் தங்களை விசாரிக்க வேண்டும் என்று மனு அளித்தார்கள். அது பின்பு திரும்பப் பெறப்பட்டது.

காலதாமதமானதற்கு யார் பொறுப்பு?

இப்படியாக ஜெயேந்திரர் தரப்பில் எந்த அளவிற்கு இந்த வழக்கினை தாமதப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு தாமதப்படுத்தியதால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி நீதியை (உ) பெற்றார்கள். இந்த வழக் கினை விசாரித்த அரசு வழக்கறிஞர் தேவதாஸ், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யவேண்டும் என்று வற்புறுத்தி அதற்கான காரணஙகளைத் தெளிவாகக் கூறி சட்டக் கருத்துரு ஒன்றை புதுவை அரசுக்கு அனுப்பினார்.

அதன்மேல் எந்த முடிவினையும் உடனடியாக எடுக்காமல் புதுவை அரசு காலதாமதம் செய்தது. இதற்குள் மேல்முறையீட்டுக் கான காலம் (Limitation for filing appeal) முடிந்துவிட்டது. மேல்முறையீடு காலம் முடிந்து விட்டாலும் தகுந்த காரணங் களை தெளிவாக கூறி காலவரையறை சட்டம் பிரிவு 5ன் கீழ் மனு செய்யப் பட்டால் காலதாமதத்தை மன்னித்து மேல்முறையீட்டு மனுவினை ஏற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட தரப்பினர் களுக்கு நீதிமன்ற அறிவிக்கை அனுப்ப லாம்.

அதற்கு பிறகு தாங்கள் விடுதலை செய்யப்பட்டது சரியே என்று ஜெயேந்திரர் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வாதாடலாம். ஆனால், அப்படியில் லாமல் பதவியிலிருக்கும் போது மேல் முறையீடு செய்ய ஒப்புதல் வழங்கிய ஆளுநர் தனக்கு தெரியாமல் கையெ ழுத்து வாங்கி விட்டதாக சொல்லு வதும் சுப்ரமணியசாமி ஜனாதிபதியை பார்த்து புதுச்சேரி அரசு மேல்முறையீடு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கக் கூடாது என்று ஜனாதிபதியிடம் கேட்பதும், ஜனாதிபதி அதற்கு அட்டர்னி ஜெனரலிடம் கருத்துரு கேட்பதும், அவர் முன்பு எத்தனையோ கோப்புகள் சட்டக்கருத்துருவிற்காக காத்திருக்க இதனை மட்டும் மிக விரைவாக படித்துப் பார்த்து மேல் முறையீடு செய்தால் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கும் (அட என்ன ஒரு தீர்க்க தரிசனம்) என கருத்துரு தெரிவித்துள்ளதைப் பார்க்கும்போது சட்டத்தின் முன் அனைவரும் சமம் _ காஞ்சி சங்கராச்சாரியாரைத் தவிர என்றே எண்ணத் தோன்றுகிறது.

Read more: http://viduthalai.in/page4/86831.html#ixzz3C1YA6ngr

தமிழ் ஓவியா said...

சத்தியமூர்த்திபற்றி ராமசாமி முதலியார்!


அரசியலாகட்டும், அலுவலகமா கட்டும் மகா உழைப்பாளிகள் போலவும், உண்மைத் தொண்டர்கள் போலவும் பாவலா செய்வது பார்ப் பனர்களுக்கு கை வந்த கலை!

பார்ப்பன அரசியல் மேதை சத்தியமூர்த்தி 1934 வாக்கில் காங்கிரஸ் சார்பில் மத்திய சட்டசபை தேர்தலுக்கு நின்றார். தேர்தல் கூட்டங்களில் என்ன பேசினார்கள் தெரியுமா? காங்கிரஸ் நாட்டுக்கு தியாகம் செய்த கட்சி. நாங் கள் எல்லாம் ஜெயிலுக்கு போனவர்கள், எனவே எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்றார். இங்கேதான் வேடிக்கை.

சத்தியமூர்த்தி ஜெயிலுக்கு போக நேர்ந்ததையும் -_ அங்கு அவர்பட்ட கஷ்டத்தையும் ஏ. ராமசாமி முதலியார் அம்பலமாக்குவதைக் கவனியுங்கள்.

ஒரு சமயம் தோழர் சத்தியமூர்த்தி கோவிந்தப்ப நாயக்கன் தெருவில்ஒரு கடையில் நாற்காலி போட்டு உட் கார்ந்து கொண்டு சட்ட பகிஷ்கார துண்டு பிரசுரங்களை ஜனங்களுக்கு விநியோகித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரை போலீசார் கைது செய்து மாஜிஸ்டிரேட்டின் முன் நிறுத்தினார்கள். மாஜிஸ்டிரேட் சத்தியமூர்த்தியை பார்த்து அய்யா சத்தியமூர்த்தியே -_ இவ்வளவு மலிவான விலையில் நான் உன்னை பெரிய வீரனாக்க விரும்பவில்லை என்று சொல்லி எச்சரித்து விடுதலை செய்து விட்டார். சத்தியமூர்த்தி சிறைக்கு போகாததைப்பற்றி மக்கள் கேவலமாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். அவர் சிறைக்கு போனால்தான் மரியாதை என்ற நிலைமை ஏற்பட்டது.

கணக்கற்ற இளைஞர்கள் தடியடிபட்டு ஜெயிலுக்கு போய்க் கொண்டிருந்தனர். உயிர் போனாலும் சத்தியமூர்த்தி அப்படி தடியடி படமாட்டார். எனவே ஒரு மோட்டார் தேடிபிடித்து அதில் உட்கார்ந்துகொண்டு மறுபடியும் நோட்டீஸ் விநியோகம் செய்தார். இது பெரிய குற்றமாகாது என்றும், கைது ஆனாலும் பெரிய தண்டனை கிடைக் காது என்றும் முழு நம்பிக்கையோடு சத்திய மூர்த்தி மோட்டார் சட்ட மறுப்பில் இறங்கினார்.

ஆனால் பாவம். பதினெட்டு மாதம் தீட்டினார்கள். சிறை தண்டனை உத்தரவான அதே இடத்தில் ஏ வகுப்பு போடும்படி மன் றாடி வேண்ட, மாஜிஸ்டிரேட்டும் மனம் இரங்கி அவ்விதமாக அனுமதித் தார். வேலூர் ஜெயிலுக்கு அனுப்பி னார்கள். உடம்பு சரியில்லை என்று ஜெனரல் ஆஸ்பத்திரியில் நான்கு மாதம் இருந்தார். ஆஸ்பத்திரியில் எல்லா சுதந்திரங்களும் உண்டு.

ஜெயிலில் இருந்தபோதும் -_ அங்குவரும் (சத்திய மூர்த்திக்கு எதிர்க்கட்சி) பிரமுகர்களை வேண்டி எவ்வளவோ வசதிகளை ஜெயிலில் பெற்றுக் கொண்டார். மேலும் நீதிக்கட்சிக்காரர்களின் உதவி யுடன் குறித்த காலத்திற்கு முன்பே விடுதலை ஆனார். அப்படி உதவியவர் களில் நானும் ஒருவன். சத்தியமூர்த்திக்கு எள் மூக்கத்தனையாவது பெருந்தன்மை இல்லை என்பது நிச்சயம். வடிகட்டிய நன்றி கெட்டதனமே அந்த மகானுபா வரின் இயற்கைச் சுவாபம் என்று தெரிகிறது.

பார்ப்பனர்களால் _- மகாமேதை யாகவும், தியாகியாகவும் இன்று சொல்லப்படும் சத்தியமூர்த்தியின் யோக்கியதையே இப்படி என்றால்.. அந்தோ! வெட்கம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும் விசித்திர இனமே!

பகுத்தறிவு 21.10.1937

Read more: http://viduthalai.in/page8/86825.html#ixzz3C1ZC3jZp

தமிழ் ஓவியா said...

அன்றும் - இன்றும்!


காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பட்டப் பகலில் அக்கோ யில் மேலாளர் சங்கரரா மன் கொலை செய்யப்பட் டார். அந்த சங்கரராமன். காஞ்சிபுரம் சங்கராச்சாரி யார் ஜெயேந்திர சரஸ்வதி மீது குற்றஞ்சாட்டி எழுதிய கடிதங்கள் பிரசித்திப் பெற் றவை. அந்தச் சூழலில் காஞ்சி ஜெயேந்திரரால் ஏவப்பட்டவர்கள் இந்தப் படுகொலையைச் செய்த னர் என்று ஏடுகளில் ஏராளமான செய்திகள் வெளி வந்ததுண்டு

இந்த வழக்குத் தமிழ் நாட்டில் விசாரிக்கப்பட் டால் தமக்கு நியாயம் கிடைக்காது என்று கூறி சங்கராச்சாரியார் தரப்பில் உச்சநீதிமன்றம் சென்ற போது, உச்சநீதிமன்ற நீதி பதி திரு. பாலசுப்பிரமணி யம் என்பவர் நான் சங்க ராச்சாரியார் சீடன்; எனவே இந்த வழக்கினை நான் விசாரிக்க மாட்டேன்! என்று சொன்னது எத் தனைப் பேருக்கு நினை வில் இருக்கும் என்று தெரிய வில்லை.

உச்சநீதிமன்ற ஆணைப்படி இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. மொத்தம் 189 சாட்சியங்களில் 83 பேர் பிறழ் சாட்சியாகி விட்டார் கள். எந்த ஒரு வழக்கிலும் இத்தனைப் பேர் பிறழ் சாட்சியங்களாக மாறிய வரலாறு இல்லை; இப்படி பிறழ் சாட்சி சொன்னவர் கள்மீது கூட நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உண்டு. இந்த வழக்கில் அதுபற்றிக் கவலைப்பட்ட தாகத் தெரியவில்லை.

சங்கராச்சாரியார் இரு வரும் மற்றவர்களும் ஒட்டு மொத்தமாக விடுதலை செய்யப்பட்டார்கள்; அதன் மீது மேல் முறையீடு செய்ய புதுச்சேரி அரசு - ஆளுநர் அனுமதி வழங் கிய நிலையில், சுப்பிர மணியசாமி என்ற பச்சை பார்ப்பனர் ஒருவர் குடி யரசு தலைவருக்கு மனு கொடுக்கிறார். இந்த வழக் கின்மீது மேல் முறையீடு செய்வதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று அதில் கூறியுள்ளார்.

அதனைக் கண்டித்து தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். சு. சாமி யின் புகாரை ஏற்கக் கூடாது என்று குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு அந்த அறிக் கையில் வேண்டுகோள் விட்டிருந்தார். (8.8.2014)

இந்தச் சூழ்நிலையில் இந்த வழக்கை மேல் முறையீடு செய்யலாமா கூடாதா என்று அட்டர்னி ஜெனரலின் கருத்துக் கேட் கப்பட்டது. ஒரு மாவட்ட அளவில் நடைபெற்ற ஒரு வழக்குக்காக அட்டர்னி ஜெனரலிடம் கருத்துக் கேட்கும் போதே அதன்மீதான அய் யப்பாட்டை திரா விடர் கழகத் தலைவர் எழுப்பினார். (21.8.2014) அது உண்மை என்பதை நிரூபிக் கும் வகையில் அட்டர்னி ஜெனரல் மேல் முறையீடு தேவையில்லை என்று கூறி விட்டார்.

இந்த நேரத்தில் குடிஅரசு ஏட்டில் (20.2.1927) வெளி வந்த ஒன்றை எடுத்துக் காட்டுவது பொருத்தமான தாகும். பார்ப்பானை சுவாமி என்ற காலமும் போச்சே! லோக குரு என்ற காலமும் போச்சே! காலில் விழும் காலமும் பேச்சே! காலைக் கழுவி தண்ணீரைக்குடித்து மோட்சத்திற்குப் போகும் காலமும் போச்சே! நம் எல்லோரையும் வைப் பாட்டி மக்கள் சூத்திரர் கள் என்னும் காலமும் போச்சே!

காங்கிரஸ் தலைவர்: துரைகளே! இது வகுப்புத் துவேஷம் அல் லவா!

துரை: பொறும் பொறும் சட்ட மெம்பரை யும் அட்வொகேட் ஜென ரலையும் அபிப்ராயம் கேட் போம்; அவசரப் படாதே யும் (குடிஅரசு - 20.2.1927).

இதற்கு விளக்கம் தேவையில்லை அன்றும் அட்வொகேட் ஜெனர லைக் கேட்டார்கள்; இன்று அட்டர்னி ஜெனரலைக் கேட்கிறார்கள் - புரிகிறதா!

- மயிலாடன் 30-8-2014

Read more: http://viduthalai.in/page1/86799.html#ixzz3C1aDuUkJ

தமிழ் ஓவியா said...

உள்ளதைச் சொன்னால் எரிச்சலா?

மும்பை, ஆக.30_ விநாயகரை பற்றி, சமூக வலைதளத்தில் கிண்டலடித்தும், அவதூறாகவும் கருத்து தெரிவித்த, பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பாலிவுட்டின் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா. 'சத்யா, ரங்கீலா, சர்க்கார் ராஜ்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். விநாயகர் சதுர்த் தியான நேற்று, சமூக வலைதளமான, 'டுவிட்டர்'ல், சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். விநாயகரை கிண்டலடித்தும், கேலி செய்தும், அவ மதிக்கும் வகையிலும், பல கருத்துகளை தெரி வித்திருந்தார்.

'விநாயகருக்கு, அவரின் தலையையே, அவரால் காப்பாற்ற முடியவில்லை. பக்தர்களை எப்படி காப்பாற்றுவார். மற்ற கடவுள்களை விட, விநாயகர் அதிகம் சாப்பிடுவார் போலிருக்கிறது. அதனால் தான், குண்டாக இருக்கிறார். விநாயகரை வழிபட்டு, பலன் அடைந்த பக்தர்களின் பட்டியலை வெளியிட முடியுமா?' என்பது போன்ற பல சர்ச் சைக்குரிய விஷயங்களை அவர் தெரிவித்திருந்தார்.

விநாயகர் சதுர்த்தி அன்று, ராம்கோபால் வர்மா இவ்வாறு தெரிவித்துள்ளது, கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ''என் கருத்துகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்,'' என்றார்.

Read more: http://viduthalai.in/page1/86804.html#ixzz3C1aSchzc

தமிழ் ஓவியா said...

காய்கறி உண(ர்)வுப் பிரச்சினை!

மத்திய ஆட்சி இந்துத்துவா ஆட்சியாகவே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடந்து கொண்டு வருகிறது.

பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் கலந்து கொள்ளும் விருந்தில் இறைச்சி உணவுக்குத் தடையாம். அயல் நாடுகளில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகங் களுக்குக்கூட இந்த ஆணை பொருந்துமாம்.

பிரதமர் அலுவலகம் சார்பில் அனைத்து அமைச்சர் கள், உயர் அலுவலகங்கள், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகங்களுக்கு இந்தியப் பிரதமர் அலுவலகத்திலிருந்து இந்த வகையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இது சரியானது தானா? சட்ட ரீதியிலோ, தார்மீக ரீதியிலோகூட இது ஏற்றுக் கொள்ளத்தக்கது தானா என்பதைப் புத்தியைச் செலுத்தி சிந்திக்க வேண்டும்.

பிரதமராக இருக்கக் கூடிய ஒருவர் சைவ உணவை சாப்பிடுபவராக இருக்கலாம்; பிரதமர் அப்படி இருக்கிறார் என்பதற்காக மற்றவர்களும் அவ்வாறுதான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்த, ஆணை பிறப்பிக்க, நிர்ப்பந்திக்க யாருக்கும் உரிமை கிடையாது. இந்த அடிப்படை மனித உரிமையைக் கூடத் மதிக்கத் தயாராக இல்லாதவர்தான் இந்தியாவின் பிரதமர் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பிரதமர் அலுவலகத்தில் இந்த ஆணை இந்தியாவின் உயர் மட்டப் பதவியை அலங்கரிக்கும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தைக் கட்டுப்படுத்தப் போவதில்லை. வங்காளத்தில் உள்ளவர்கள் விரும்பிச் சாப்பிடுவது மீன்தான் என்பது பிரதமருக்கும் பிரதமரின் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும் இது தெரிந்தது தானே!

இதில் இன்னொரு கேள்வியும் தொக்கி நிற்கிறது. பிரதமர் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது (இந்த நூறு நாட்களில் அது தானே தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது) வெளிநாட்டு அரசு அளிக்கும் விருந்திலும் இந்தக் கட்டுப்பாட்டை இந்தியப் பிரதமர் அலுவலகம் விதிக்கப் போகிறதா என்பது ஒரு கசப்பான கேள்வியாக இருக்கலாம்.

பசுவதைத் தடை சட்டம்பற்றி இன்னொரு வகையில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். பிஜேபி ஆளும் மாநிலங்களில் பசுவதைத் தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கோ பாதுகாப்புப் பற்றி தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளார்கள்; அனேகமாக மத்திய அரசே பசு வதைத் தடுப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டைக் கண்டு உலக நாடுகள் கைதட்டிச் சிரிக்காதா?

ஒரே ஒருவர் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் அனைவரும் அத்தகைய உணவையே சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துவது ஜனநாயகமா? இந்தியா இதற்கு மாறான திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறதா? என்ற நியாயமான கேள்வி சிந்தனைத் திறன் உள்ள ஒவ்வொருவருக்கும் ஏற்படாமல் போகாது!

வி.வி. கிரி அவர்கள் குடியரசு தலைவராக இருந்தபோது சிங்கப்பூர் சென்றிருந்தார். அப்பொழுது தனக்குச் சமையல் செய்பவர்கள் பிராமணர்களாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்த தமிழ்நாட்டி லிருந்து பார்ப்பன சமையற்காரர்கள் அனுப்பி வைக்கப்பட்டதையும் இந்த இடத்தில் நினைவு கூர்வது பொருத்தம்.

சைவ உணவு தேவை என்றால், சிங்கப்பூரிலேயே அதனை சமைத்துக் கொடுக்க தேர்ந்த சமையற்காரர்கள் இல்லாமலா போய் விட்டார்கள்? அப்பொழுது இது ஒரு பிரச்சினையாகப் பேசப்பட்டதுண்டு - விமர்சிக்கப் பட்டதுண்டு.

நீண்ட காலத்திற்குப் பிறகு ஆட்சியில் உயர்மட்டப் பதவியில் உள்ளவர்களின் உணவுப் பிரச்சினை, அரசின் அதிகார பூர்வ அறிக்கையாக இப்பொழுது வெளி வந்துள்ளது.

இது அடுத்தவர்களின் உரிமையில் மூக்கை நுழைக்கும் மோசமான நடவடிக்கையாகும். இந்தப் போக்குத் தொடருமேயானால், தனி மனிதனின் தனிப்பட்ட உணர்வுகளில் பழக்க வழக்கங்களில் மோடி அரசு தலையிடக்கூடும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

தொடக்கத்திலேயே இது கண்டிக்கப்பட வேண்டும் எதிர்க்கப்பட வேண்டும் - விவாதங்கள் எழுப்பப்பட வேண்டும். ஊடகங்களும் ஒதுங்கிக் கொள்ளாமல் பெரும்பான்மையான மக்களின் உண(ர்)வுப் பிரச்சினையைத் தனி மனிதரின் ஆசாபாசத்தின் முடிவுக்கு விட்டுவிட முடியுமா? வெளிப்படையான விவாதங்கள் வெளிச்சத்திற்கு வரட்டும் - அதனை வரவேற்கிறோம்.

Read more: http://viduthalai.in/page1/86790.html#ixzz3C1atUqRG

தமிழ் ஓவியா said...

சென்னையில் நடைபெற்ற பெரியார் 1000 வினா - விடைப் போட்டித் தேர்வு

சென்னை, ஆக. 30- வட சென்னை திராவிடர் கழகம் சார்பில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், பெரியார் 1000 மற்றும் பெரியார் சிந்தனைச் சோலைகள் போட்டித் தேர்வு நடைபெற்றது. போட்டித்தேர்வை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்கிவைத்தார்.

வட சென்னை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ், பகுத்தறிவாளர் கழக செயலாளர் கோபால், வழக்குரைஞர் சந்தர் உட்பட பலர் கலந்துகொண்டனர். வட சென்னை திராவிடர்கழகம் சார்பில் 30.8.2014 இன்று 4 இடங்களில் பெரியார் 1000, பெரியார் சிந்தனைச் சோலைகள் போட்டித் தேர்வு நடைபெறுகின்றது. பள்ளி மாணவ, மாணவியர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பெரியார் 1000 போட்டித்தேர்வு குறித்து திரைப்படத்துறை இணை இயக்குநர் கலைச் செல்வன்-ஞானதேவி ஆகியோரின் மகள் ஏழாம் வகுப்பு மாணவி கனிமொழி தேர்வெழு தியுள்ளார்.

இதுகுறித்து கலைச்செல்வன் கூறும்போது, எனக்கு 10 வயதாகும்போது 1973ஆம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற இரண்டு நாள் பகுத்தறி வாளர் கழக மாநாட்டில் தந்தைபெரியாரிடம் விழா மலரில் கையொப்பம் பெற்றேன்.

தந்தைபெரியார் கடுமையாகத் திட்டிப் பேசும்போது அனைவரும் கைதட்டியதைப் பார்த்த எனக்குள் புதிய சிந்தனை உருவானது. பத்து வயதுமுதல் நான் பகுத்தறிவு நூல்களைப் படித்து வருகிறேன். என்னைப்போல் என் மகளும் பகுத்தறிவு, பெரியார் கொள்கைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்பதால் இத் தேர்வில் என் மகளைப் பங்கேற்க செய்துள் ளேன். அவளுக்கு நிறைய புத்தகங்களை வாங்கிக் கொடுத்துவருகிறோம். பெரியார் 1000 வினா-விடையாக இருக்கிறதே என்று அதைப் படிக்கும்போது ஏராளமான கேள்விகளை விளக்கமாகக் கேட்பாள்.

பெரியார் 1000 புத்தகத்தைப் படித்தபிறகு மருத்துவம் படிப்பதற்கு ஏன் சமஸ்கிருதம் என்று என்னிடம் கேட்டாள். சமஸ்கிருதம் தேவை இல்லை என்று சட்டம் போட்ட பனகல் அரசர், அப்போதைய கல்வி அமைச்சர் ஏபிபட் ஆகியோர் குழு அமைத்து சமஸ்கிருதம் தேவை இல்லை என்று சட்டம் கொண்டுவந்த வரலாறைச் சொல்லிக் கொடுத்தேன் என்று கலைச்செல்வன் கூறினார்.

தமிழ் ஓவியா said...


கனிமொழியின் தாயார் ஞானதேவி கூறும்போது, நான் கோயிலுக்கு என் மகளை அழைத்துச் சென்றபோது, கோயில் கர்ப்பக்கிருகத்துக்குள் நாம் ஏன் செல்லக்கூடாது என்று கேட்டாள். நாம் ஏன் வெளியே நிற்க வேண்டும் என்று கேட்ட அவள் திடீரென்று கோயில் கருவறைக்குள்ளேயே சென்று விட்டாள். அப்போது அர்ச்சகர் என் மகளையும் ,என்னையும் கண்டித்தார்.

அதனால் தீட்டு பட்டுவிட்டது, கருவறையைக்கழுவி சுத்தம் செய்ய வேண்டி உள்ளதாகவும் கூறினார். என் மகள் தீட்டு என்றால் என்ன? என்று கேட்டு இந்த மதத்தில் நம்மை இழிவுபடுத்துகிறார்கள். ‘I was ashamed’ வெட்கமாக இருக்கிறது. நாம் மதத்தைவிட்டு விலகினால் என்ன என்றும் கேட்டார். அவர் சிந்தனையை முழுவடிவத் துக்கு வருவதற்கு பெரியார் 1000 தேர்வு மிகுந்த பயன் உள்ளதாக உள்ளது. எனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தாலும், நான் வளர்ந்த சூழல்தான் காரணம்.

தந்தை பெரியார் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கா மல் போராடுமாறு சொல்லி உள்ளார். இன்றும் பிரச்சினைகள் உள்ளன. எனவேதான் துணிச் சலாக இருப்பதற்கு என் மகளுக்கு பெரியார் 1000 தேர்வில் சேர்த்துள்ளோம் என்று ஞானதேவி கூறினார்.

தியாகராயர் நகர் வேளாங்கண்ணி பள்ளி யின் ஏழாம் வகுப்பு மாணவியான கனிமொழி கூறும்போது, பெரியார் 1000 தேர்வுமூலம் பயன் நிறைய ஏற்பட்டுள்ளது. பாடத்தில் கொஞ்சம்தான் படித்தோம். இப்போது நிறைய தெரிந்து கொண்டுள்ளோம். தந்தை பெரியார் ஜாதியை ஒழிச்சாரு. சமூக சீர்திருத்தம் செய்தாரு. கடவுள் இல்லை என்றார். ஆண்களுக்கு பெண்கள் அடிமை இல்லை என்று தந்தைபெரியார் கூறியுள்ளார் என்று கனிமொழி கூறினார்.

10ஆம் வகுப்பு மாணவி யாமினிசிறீயின் தாயாரான புதுவண்ணையைச் சேர்ந்த விமலா கூறும்போது,கடந்த ஆண்டும் என் மகள் இத் தேர்வை எழுதினாள். நான் படித்தபோது தெரியாத தகவல்களை என் மகள் பெரியார் 1000 நூலைப்படித்து சொல்லும்போது தெரிந்து கொள்கிறேன். பரவிவருகின்ற மூடநம்பிக்கை யைத் தடுக்க இத்தேர்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

இதன்மூலம் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும். யார் என்ன சொன்னாலும், நம் பிள்ளைகள் ஏமாறாமல் இருப்பார்கள். என் மகள் இந்த தேர்வில் பங்கேற் பதை அறிந்த மற்ற பிள்ளைகளும், அவர்களின் பெற்றோரும் எங்களிடம் ஆர்வமுடன் விசாரிக்கிறார்கள். பெண்களுக்கு உரிமை இருக்க வேண்டும். பெண்கள் அடிமைத்தனம் இருக்கக் கூடாது என்பதால்தான் என் மகளை இத் தேர்வில் பங்கேற்க செய்துள்ளேன் என்று விமலா கூறினார்.

தமிழ் ஓவியா said...

யாமினிசிறீ கூறும்போது, நாட்டுக்கு உழைத் துள்ளவர் தந்தை பெரியார். பெண்களுக்காகப் பாடுபட்டுள்ளார். சுயமரியாதைக்காகப் பல போராட்டங்களை நடத்தி உள்ளார். பெரியார் 1000 தேர்வுக்கு முன்பாக தந்தைபெரியார்பற்றி கொஞ்சம்தான் தெரிந்திருந்தது. இப்போது நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண் டுள்ளேன் என்று கூறினார்.
தண்டையார்ப்பேட்டையைச் சேர்ந்த மேதின மலர் என்பவர் கூறும்போது, என் மகள் சாலினி பத்தாம் வகுப்பு படிக்கிறாள். பெரியார் 1000 போட்டித் தேர்வில் பெரியார் சிந்தனைச் சோலை எழுதுகிறாள். பள்ளியின்மூலமாகத் தெரிந்து வந்துள்ளோம்.

பெரியார் 1000 தேர்வு அவசியமானது. மிகவும் முக்கியமானது. பிள்ளைகள் தெரிந்துகொள்ள வேண்டியது. பிள்ளைகளும் பெரிதும் விருப்பத்துடன் கலந்து கொள்வதால் அவர்கள் ஆர்வம் தெரிகிறது. அடுத்த முறை அவளின் தம்பியும் எழுதுவான் என்று கூறினார்.

புதுவண்ணையைச் சேர்ந்த மீனாட்சி கூறும்போது, கடந்த ஆண்டில் என் மகள் புஷ்பலதா எழுதினாள். பரிசும் பெற்றாள் இப்போது தம்பியும் எழுதுகிறான்.

ஆட்டோ ஓட்டுநரின் மகளான திவ்யா கூறும்போது,இரண்டாவது முறையாக எழுது கிறேன். ஆர்வம்தான் காரணம். பெரியார் பற்றி தெரிந்து கொள்கிறோம். ஆர்வத்துடன் புத்தகங் களைப் படித்துவருகிறேன். மூடநம்பிக்கை ஒழிப்பிலிருந்து நிறைய தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தந்தைபெரியார் வரலாற்றை முழுமையாக அறிந்து கொண்டுள்ளேன் என்று கூறினார்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 136ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும், பெரியார் பிஞ்சு இதழும் இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான பெரியார் 1000 வினா - விடை போட்டி கடந்த 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் முதல் இரண்டு கட்டங்களாக பல்வேறு கழக மாவட்டங்களில் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக மூன்றாவது கட்டமாக இன்று (30.8.2014) கோலாகலமாகத் தொடங்கியது. 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ - மாணவியர்களுக்கு பெரியார் 1000 என்ற தலைப்பிலும் 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ - மாணவிகளுக்கு சிந்தனைச் சோலை பெரியார் என்ற தலைப்பிலும், நடைபெறும் இப்போட்டி யில் இன்று (30.8.2014) 26 கழக மாவட்டங்களில் 58 மய்யங்களில் நடைபெற்றது. நாளை (31.8.2014) நான்காவது கட்டமாக பெரியார் 1000 வினா-விடை போட்டி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

Read more: http://viduthalai.in/page1/86789.html#ixzz3C1bHEaTV

தமிழ் ஓவியா said...

சட்டசபைக்குப் பார்ப்பனர் செல்வதன் ஆபத்து

திருவாளர் ராவ்பகதூர் கிருஷ்ணமாச்சாரியர் எம். எல். ஏ. இந்திய சட்டசபைக்கு நமது பிரதிநிதியாக அனுப் பப்பட்டவர். அவர் சமூக சட்டம் செய்ய சட்ட சபைக்கு அதிகாரம் இருக்கக் கூடாதென்றும் மத விஷயங்களில் எந்தச் சீர்திருத்தவாதியும் பிரவேசிக்கக் கூடாதென்றும், கல்யாண வயதைப் பற்றி சாஸ்திரங்களில் என்ன கூறியிருக்கிறதோ அதற்குச் சிறிதுகூட மாற்றம் செய்யச் சீர்திருத்தவாதி களையாவது, சர்க்காரையாவது, சட்டசபைகளை யாவது அனுமதிக்கக் கூடாது என்றும் பேசி அதற்காகக் கட்டுப்பாடான பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று தன்னால் கூடியவரை தான் சட்ட சபையில் பார்த்துக் கொள்வதாகவும் கூறியிருக்கின்றார்.

சுயராஜ்யம் கிடைத்த பிறகு சமூக சட்டம் செய்து கொள்ளலாம் என்று மக்களை ஏமாற்றி அரசியல் குழியில் விழுகும்படி செய்யும் பார்ப்பன தேசியவாதிகளும் அவர்களது பத்திரிகைகளும் இதற்கு யாதொரு பதிலும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டேயிருக்கின்றன.

நாம் இந்தப் பித்தலாட்டங்களை எடுத்துக் காட்டினால் அது தேசத்துரோகம் என்பதாகவும் சுயராஜ்யத்திற்கு முட்டுக் கட்டையாகவும் போய்விட்டதாகக் கூக்குரல் போட்டு விஷமப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆகவே எப்படியாவது சட்டசபை முதலிய தானங் களுக்கு அரசியல் கட்சிகளையும் அபிப்பிராயங்களையும் எதிர்பார்க்காமல் உண்மையான சீர்திருத்தத்திற்கு போதிய உணர்ச்சியுள்ள மக்களாகப் போகும்படி பார்த்துக் கொள்ள வேண்டியதாகும்.

அதை விட்டு விட்டு அரசியல் கொள்கைகள் என்பதைக் கவனித்துக் கொண்டு எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பார்ப்பனர்களை நமது பிரதிநிதிகளாக அனுமதித்தோமானால் விதவைகள் கற்பம் உதிரக் கட்டியாகி திடீரென்று மறைந்து விடுவதுபோல் நமக்குத் தெரியாமலேயே அவர்கள் பார்ப்பனியப் பிரதிநிதி யாகவேதான் ஆகிவிடுவார்கள். அதில் சிறிதும் சந்தேகம் கொள்ளுவது அறியாமையேயாகும்.

- குடிஅரசு - கட்டுரை - 26.10.1930

Read more: http://viduthalai.in/page1/86768.html#ixzz3C1bdsXMW

தமிழ் ஓவியா said...

இரண்டு வழக்குகள் விடுதலை


ஈரோடு ஆலயப் பிரவேச வழக்கில் 3 பேர் தண்டனை அடைந்து அவ்வழக்குகள் ஹைக்கோர்ட் அப்பீலில் இருந்தது. நேயர்களுக்கு ஞாபகமிருக்கும். அதுபோலவே சுசீந்திரம் தெருப் பிரவேச வழக்கிலும் 12 பேர்கள் தண்டனை அடைந்து அவ்வழக்கும் திருவாங்கூர் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டிருந்ததும் நேயர் களுக்கு ஞாபகமிருக்கும்.

இவ்வாரம் மேற்படி இரண்டு வழக்குகளும் அப்பீலில் விசாரிக்கப்பட்டு தண்டனைகள் முழுவதும் தள்ளப்பட்டு வழக்குகள் விடுதலையாகிவிட்டன.

முதல் வழக்கு. அதாவது ஈரோடு கோவில் பிரவேச வழக்கு போலீசாருடைய அக்கிரமத்தினாலேயே கொண்டு வரப்பட்டதாகும். அவர்களுக்குச் சலுகை காட்டினது ஜில்லா பெரிய அதிகாரியாகும். இவ்வழக்கை அதிகாரிகள் நியாயம் தெரியாமலோ, சட்டம் தெரியாமலோ நடத்தி னார்கள் என்பதாக யாரும் சொல்ல முடியாது. அவர்கள் வேண்டுமென்றே சிலரைத் திருப்தி செய்யத்தான் இப்படிச் செய்தார்கள் என்றே நாம் சொல்லவேண்டியிருக்கிறது.

இரண்டாவது வழக்காகிய சுசீந்திரம் வழக்கும் அக்கிரம மாகவே நடத்தப்பட்டது என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்காது. அதன் ஜட்ஜ்மெண்ட் கீழே குறிப் பிட்டிருக்கிறோம். திருவாங்கூர் போலீசு கமிஷனர் திரு. பிட் துரை இருந்திருந்தால் இன்றைய தினம் திருவாங்கூரில் ஒரு ரோடுகூட ஒரு நபருக்கும் உரிமை இல்லாததாக இருக்காது. கோவில் பிரவேசம் கூட அனுமதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் அங்குள்ள பார்ப்பன ஆதிக்கமானது இவ்வளவு தொல்லையைக் கொடுத்துவிட்டது. இம்மாதிரி சந்தர்ப் பங்களில் ஒவ்வொரு வழக்கு முடிவும் அய்கோர்ட்டுக்குச் சென்றே நியாயம் பெறவேண்டுமானால் சாதாரண ஜனங்களுக்குச் சாத்தியப்படக்கூடியதாகுமா என்பதை யோசித்தால் இம்மாதிரி விஷயங்களுக்கு வெளிப் படையாயும் தெளிவாயும் ஒரு சட்டம் ஏற்பட்டுவிட வேண்டியது அவசியமாகும்.

பொதுவாகவே இந்துக்கள் என்பவர்களுக்குள் ஜாதி வித்தி யாசமும், உயர்வு தாழ்வும் ஒழிவதற்குப் பார்ப்ப னர்கள் எப்படி சம்மதிக்க மாட்டார்களோ அது போலவே மகமதியர்கள், வெள்ளைக் காரர்கள், கிறித்தவர்கள் ஆகி யவர்கள் சம்மதிக்க மாட்டார்கள்.

ஆதலால் இந்துக்கள் ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு ஆகியவைகளை ஒழிக்கப் பாடுபடுகின்றவர்கள் மேல் கண்டவர்களின் விரோதத் தையும், அவர்களால் செய்யப் படும் தொல்லைகளையும் சமாளிக்க தயாராயிருந்து கொண்டுதான் பிரவேசிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும். நிற்க, இவ்விஷயங் களில் இனி மேல் நடக்க வேண்டிய விஷயங்களைப்பற்றி யோசித்து பின்னால் வெளியிடுவோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம், 09.11.1930

Read more: http://viduthalai.in/page1/86769.html#ixzz3C1bnmBFs

தமிழ் ஓவியா said...

ஜாதி மதப் பெயர் கொடுக்காதீர்கள்: முக்கியமான வேண்டுகோள்

இவ்வருஷக் கோடியில் சர்க்காரால் ஜனங்களுடைய எண்ணிக்கையை எடுக்கும் சென்சஸ் வேலை நடைபெறும். அதில் கணக்கெடுப்பவர்கள் உங் களிடம் வந்து விசாரிக்கையில் நீங்கள் ஜாதி மதத்தைப் பற்றி கேட்கப்படுவீர்கள்.

அப்போது முறையே இந்தியன் என்றும் பகுத்தறிவுக்காரன் என்றும் மாத்திரம் தான் சொல்ல வேண்டுமே ஒழிய எவ்வித மதத்தின் பேராவது ஜாதியின் பேராவது சொல்லக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

ஏனெனில் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க இந்தியாவில் எல்லாப் பிரமுகர்களும் ஒரே முகமாய் நின்று மும்முரமாய் வேலை செய்யும் போது நாம் மறுபடியும் அதைச் சொல்லிக் கொண்டிருப்பது மூடத்தனமும் கவலையும் சுயமரியாதையும் அற்ற தன்மையுமாகும்.

அதுபோலவே இந்தியர்களில் யாராவது தன்னை இந்து என்று மதத்தின் பெயரைச் சொல்லுவதும் சுத்த முட்டாள் தனமாகும். இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை யென்றும் அப்படியிருப்பதாகச் சொல்லும் மதத்தின் தத்துவமும் மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிப்பதும் 20 கோடி இந்துக்கள் என்பவர்களில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் எல்லோரும் பார்ப்பனருக்கு அடிமைகள்,

அவர்களது தாசிமக்கள் என்கின்ற மானமற்ற தன்மை கொண்ட பொருளே இருப்பதால் சுயமரியாதையுள்ள எவரும் தங்களை இந்துக்கள் என்று சொல்லக்கூடாது. தவிரவும் இந்து என்னும் பதத்திற்குத் திருடன், அயோக்கியன், மோசக்காரன் என்று அர்த்தம் என்பதையுமுணருங்கள் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

- குடிஅரசு - வேண்டுகோள் - 09.11.1930

Read more: http://viduthalai.in/page1/86769.html#ixzz3C1c7VNXC

தமிழ் ஓவியா said...

அரசியல் வியாபாரம்


டா க்டர் பி. சுப்பராயன் அவர்கள் அடுத்துக் கூடும் சட்டசபைக் கூட்டத்திற்கு மூன்று தீர்மானங்கள் அனுப்பப் போவதாகத் தெரிகின்றது. அதாவது,

1. சில பாதுகாப்புகளுடன் குடியேற்ற நாட்டத்துக்குக் குறைந்த எந்தத் திட்டமும் திருப்தியளிக்காது என்று இச்சபை அபிப்பிராயப்படுவதாக இந்த கவர்ன்மெண்ட் பிரிட்டிஷ் கவர்மெண்டாருக்குத் தெரிவிக்க வேண்டுமென இச்சபை சிபார்சு செய்கிறது.

2. பலாத்காரமற்ற குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட அரசியல் குற்றவாளிகளையெல்லாம் விடுதலை செய்ய வேண்டுமென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சிபார்சு செய்யும்படி இச்சபை சிபார்சு செய்கிறது.

3. அரசியல் கைதிகள் நடத்தப்படும் விதத்தைப் பற்றி விசாரணை செய்ய ஒரு கமிட்டி நியமிக்க வேண்டுமென்று இச்சபை கேட்டுக் கொள்ளுகிறது. என்பவையாகும். ஆகவே, இம்மூன்று தீர்மானங்களையும் நம்மைப் பொறுத்தவரை நாம் இவைகளை அரசியல் வியாபாரத் தீர்மானங்களென்றே சொல்லுவோம்.

இதற்காக ஜஸ்டிஸ் கட்சியார்கள் பயந்து கொள்ளவோ திக்கு முக்காடவோ தேவையில்லையென்றும் சொல் லுவோம். ஏனெனில் இந்த மாதிரி காரியங்களின் நடவடிக் கைகளை ஆதாரமாய் வைத்துக் கொண்டு கூப்பாடு போடும் தேசியப் பத்திரிகைகள் என்பவைகள் எல்லாம் ஜஸ்டிஸ் கட்சிக்கு நிபந்தனையில்லாத அடிமைகளாய்ப் போய்விட்டபடியாலும் சென்ற தேர்தலின் போது தேசியக் கட்சியை விட ஜஸ்டிஸ் கட்சி மோசமானது என்று கருதி அதைக் காப்பாற்ற வேண் டிய பொறுப்பு ஏற்பட்டது போல் இப்போது ஜஸ்டிஸ் கட்சியை விட தேசியக்கட்சி மோசமானது என்று கருதி ஜஸ்டிஸ் கட்சியைக் காப்பாற்றித் தீரவேண்டிய பொறுப் புடை யவைகளாகி விட்டபடியாலும் அவைகள் கருவாடு திருட்டுக் கொடுத்த பார்ப்பனத்தி போல் வெளியில் சொல்லாமல் வாயை மூடிக் கொள்ளும்.

ஆகையால், ஜஸ்டிஸ் கட்சியார் இவ்விஷயத்தில் யாருக்கும் பயப்படாமல் தங்கள் கொள்கையைத் தைரியமாய் வலியுறுத்தலாம் என்பதாகத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 09.11.1930

Read more: http://viduthalai.in/page1/86770.html#ixzz3C1cEsRh0

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்


செய்தியும் சிந்தனையும்

ஸ்வீட் கடை

செய்தி: ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட் கடைகளில் சிறப்பு இனிப்பு கார வகைகள் தனி டப்பாக்களில் விற்பனை - 2600 விநாயகர் கண்காட்சி யும் உண்டு.
சிந்தனை: வியாபாரத்திற்கும் வியாபாரம்! பார்ப்பனீய பக்திப் பிரச்சாரமும் இன் னொரு புறம்; சும்மா ஆடுமா அவாள் குடுமி?

வருண ஜெபம்

செய்தி: மழை வேண்டி திருக்கழுக்குன்றம் வேத புரீஸ்வர் கோயிலில் யாகம் நடைபெற்றது. சிந்தனை: இதுபோன்ற சேதிகள் ஏடுகளில் வருகின் றன; ஆனால், மழை பொழிய வில்லை என்பது மட்டும் மக்கள் அறிந்த உண்மை!

Read more: http://viduthalai.in/page1/86716.html#ixzz3C1cbcjo5

தமிழ் ஓவியா said...

புதிய பாரத் மாதா - ஹிந்து மாதாதான்! ஜே! ஜே!!

- ஊசி மிளகாய்

இந்த வார கல்கி ஏட்டில் (7.9.2014) ஒரு கேள்வி - பதில் வெளிவந்துள்ளதை அப்படியே தருகிறோம்.

கேள்வி: ஜாதி, மத உணர்வுகளை 10 ஆண்டுகள் நிறுத்தி வையுங்கள் என்கிறாரே மோடி?

(கல்கியின்) பதில்: பிரதமர் பதவியேற்றபின் முதல் முறையாக ஒரு அபத்த வேண்டுகோளை விடுத்துள்ளார் மோடி. பத்து ஆண்டுகள் என்ன கணக்கு? அதன் பிறகு மறுபடி இந்த தீய உணர்வுகள் தலையெடுத்தால் பாதகமில்லையா? என்ன? சரியான திட்டங்களை வகுத்து மனப்பூர்வமாக செயல்படுத்தினால் பத்து ஆண்டுகளில் ஜாதி, மத உணர்வுகளை அடியோடு ஒழித்துக் கட்ட முடியும்.

ஆனால், அதற்குக்கூட சங்பரிவார் அமைப்பு களின் ஒத்துழைப்பு மோடிக்குக் கிடைக்காது.

- கல்கியின் தராசு கூறும் இக்கருத்துக்களை உண்மையான - யதார்த்தமான - நிலவரத்தின் பிரதிபலிப்பாகும். சங்பரிவாரங்கள் என்றாவது ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறிட முன் வருமா? அதன் தத்துவ கர்த்தரான கோல்வாக்கரின் ஞான கங்கை நூலில் அவர் வர்ண தர்மத்தை (ஜாதியை) நியாயப்படுத்தியுள்ளதோடு அதனை சிலாகித்துப் பாதுகாக்க அல்லவா வற்புறுத் துகிறார்?

இங்குள்ள ஆர்.எஸ்.எஸ். காரரான கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளை ஸ்ரீமான் குருமூர்த்தி அய்யர் வாள் சில நாள்களுக்கு முன் ஜாதி, பொருளாதாரத்திற்கு மிகவும் உதவுவதாகக் கூறி, ஜாதிப் பாதுகாப்பை மேம்படுத்தி உபந்நியாசம் செய்தாரே மறந்து விட்டதா?

அதை மிகப் பெரிய அளவில் தினமணி ஏட்டில் போட்டு விளம்பரப் படுத்தினரே - குருமூர்த்தி அய்யர்வாளின் ஆர்.எஸ்.எஸ். கூட்டு சகாவான ஸ்ரீமான் விளம்பரப்புகழ் வைத்தியநாத அய்யர்வாள் - அது எதைக் காட்டுகிறது?

மோடி ஜாதியை ஒழிக்க, மதத்தை அடக்க முன் வருவாரா? வரத்தான் முடியுமா? அவரது மூக்கணாங்கயிறு ஆர்.எஸ்.எஸ். கையில் அல்லவா உள்ளது?

பிரதமர் மோடி உண்மையில் விரும்பினால் அரசியல் சட்டத்தில் உள்ள 17ஆவது விதியில் மாற்ற வேண்டியது ஒரே ஒரு வார்த்தையைத்தான்! (ஒரு அரசியல் சட்டத் திருத்தம் ஏகமனதாக நிறைவேற போதிய பெரும்பான்மை உள்ளதே!) தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்ற 17ஆவது விதியில் திண்டாமைக்கு பதில் ஜாதி என்ற சொல்லை மாற்றிப் போட்டாலே, பெரிய சமூகப் புரட்சி சரித்திரத்தை மோடியால் படைத்து விட முடியுமே! 18 இடங்களில் இந்திய அரசியல் சட்டத்தில் ‘Caste (ஜாதி) இடம் பெற்றுள்ளதே!

அது மட்டுமா? இந்தியாவின் அத்தனைக் குடி மக்களும் ஹிந்துக்கள் தானாம்! அதுதான் இந்தியாவின் அடையாளமாம்!

தேசிய அடையாளம் என்று மோடி அரசின் சிறுபான்மையினர் நலன் காக்கும் திருமதி நஜ்மா அப்துல்லா திருவாய் மலர்ந்தருளி, ஆர்.எஸ்.எஸ். தலைவரின் குரலுக்கு ஹெர் மாஸ்டர்ஸ் வாய்ஸ் ஆக ஆகி உள்ளார் நியூஸ்X என்ற ஆங்கில TV சேனல் இன்று காலை இதனை தொடர்ந்து விளம்பரப்படுத்திக் கொண்டே இருந்தது!

நாடு எங்கே போகிறது பார்த்தீர்களா? நமது அரசியல் சட்டத்தின் அடிப்படையை இம்மாதிரி கடப்பாறைகளால் பெயர்க்கும் முயற்சி துவங்கி, ஜாம் ஜாம் என்று நடைபெறுகிறது!

அகண்ட பாரதம் அட்லஸ் வந்து விட்டது.

புதிய பாரத மாதாக்கீ! ஜே! ஜே!!

இந்தியா ஒழிந்து ஹிந்துயா வந்தது போலும்!

Read more: http://viduthalai.in/page1/86725.html#ixzz3C1cjREQh

தமிழ் ஓவியா said...

பார்ப்பன தர்மம்


பார்ப்பன தர்மம் என்பதே கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு, புரட்டு, பித்தலாட்டம், துரோகம், அசிங்கம், ஆபாசம், நம்பிக்கைக் கேடு, நாணயக் கேடு ஆகிய கூடாத காரியங்களை, குணங்களை அடிப் படையாகக் கொண்டே ஏற்பாடு செய் யப்பட்டவை என்றே சொல்லக் கூடியவையாக இருக்கின்றன. - (விடுதலை, 5.1.1966)

Read more: http://viduthalai.in/page1/86695.html#ixzz3C1d8ZR80

தமிழ் ஓவியா said...

பிள்ளையார் ஊர்வலம் என்ற பெயரால்....

தமிழ்நாட்டில் விநாயக ஊர்வலம் என்பது மகாராட்டிர மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப் பட்டது. தமிழ்நாடு முழுவதும் 60 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டையாம். ஒரு சிலைக்கு கிட்டதட்ட செய்யப்படும் செலவு ரூ.10 ஆயிரத்திற்குமேல்; 60 ஆயிரம் சிலைகள் என்றால் ரூ. 60 கோடி செலவாகும். சில இடங்களில் நாள் கணக்கில் வைத்துப் பூஜை செய்கிறார்கள். அப்படி வைக்கப்படும் சிலைக்கும் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்குப் பணம் பரிமாறப்படுகிறது.

பச்சையாகச் சொன்னால் பச்சை வியாபாரமாகவே இருக்கிறது; பிள்ளையாரின் கதையைச் சொல்ல ஆரம்பித்தால் வயிற்றைப் புரட்டிக் கொண்டுதான் வரும் - அத்தகைய கும்பிச் சகதி.

திருஞானசம்பந்தன் எழுதி வைத்துள்ள பாடல் ஒன்று வலிவலம் சிவன் கோயிலில் (நாகை மாவட்டம்) பொறிக்கப்பட்டுள்ளது.

பிடியதன் உருவுமைகொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம் உறையிறையே
இமயமலையின் அடிவாரத்தில் ஆண் யானையும் பெண் யானையும் புணர்வதைக் கண்ட அம்மையும் அப்பனும் (சிவனும் - பார்வதியும்) காம வெறி கொண்டு இவர்களும் ஆண் - பெண் யானைகளாக உருக் கொண்டு புணர்ந்ததால் யானைத் தலை கொண்ட பிள்ளையாரைப் பெற்றெடுத்தார்களாம்.

மக்களைப் பக்திப் போதையில் ஆழ அழுத்தி விட்டதால் இந்த ஆபாசங்கள் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

இந்து மதத்தில் இந்த பிள்ளையார் இருக்கிறாரே - சரியான கோமாளிப் பாத்திரப் பிறப்பு!

பக்தர்கள் இந்தப் பிள்ளையாரை எந்தப் பெயரிட்டும் அழைக்கலாம்; கார்கில் பிள்ளையார் கிரிக்கெட் பிள்ளையார், கடன் தீர்த்த விநாயகர் - என்று எந்த அளவுக்கும் கிறுக்கலாம் யாரும் ஏன் எதற்கு என்று கேட்க மாட்டார்கள்.

பிடித்து வைத்தால் பிள்ளையார் என்ற சொலவடையையும் நினைவில் கொள்க!

சிவன் கோயில்களிலும், தேர்களிலும் ஒரு பெண்ணின் பெண் உறுப்பினுள் துதிக்கையை நுழைத்துக் கொண்டு இருப்பது போல உருவங்களை வடிக்கிறார்கள் என்றால் இந்த வெட்கக் கேட்டை என்னவென்று சொல்லுவது?

தமிழ் செம்மொழி ஆனால் ஏழை விவசாயி வீட்டுக் கட்டுத்தறி தடை இல்லாமல் ஓடுமா? வீட்டுக்கு வீடு மட்டன் பிரியாணி கிடைக்குமா? என்று எழுதும் பார்ப்பனர்களை நோக்கி நாம் கேட்க வேண்டாமா? இந்தப் பிள்ளையார் ஊர்வலம் நடத்தினால், மழை கொட்டோ கொட்டென்று கொட்டுமா? முப்போகம் சாகுபடி நடக்குமா? மின்பற்றாக்குறை மின்னல் போல பறந்து ஓடிடுமா?

பள்ளிகளில்கூட கழிப்பறை இல்லாமல் தமிழ்நாட்டு இருபால் மாணவர்கள் அவமானப்படும் இந்த நாட்டில் அழுக்குருண்டை பிள்ளையாருக்கு ஒரு சதுர்த்தியா? அதற்காக ஊர்வலமா? அதற்காக அரசு விடுமுறையா? அதற்காக பல கோடி ரூபாய் செலவழிப்பா? என்ற நியாயமான கேள்விக்கு நாணயமான பதில் உண்டா என்று சவால் விட்டுக் கேட்கிறோம்.

விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் ஆங்காங்கே கலவரங்கள்; சிறுபான்மையினர் வழிபாட்டு இடங்கள் மீது கல்லெறிதல், கலாட்டா செய்தல் இன்னோரன்ன நாகரிகமற்ற அழி செயல்கள்!

சமுதாய அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ ஊர்வலம் நடத்தினால் ஆயிரத்தெட்டு கேள்விகளை எழுப்பி அனுமதி மறுக்கும் அரசாங்கம், காவல்துறை ஒவ்வொரு முறையும் பிள்ளையார் ஊர்வலத்தில் வன்முறைகள் வெடிக்கின்றனவே - அதற்கு மட்டும் அனுமதியளிப்பு - ஏன்?

மதக் காரணம் என்றால் அது என்ன நெய்யில் பொரித்ததா?

பல ஊர்களில் பிள்ளையார் ஊர்வலத்தின் போது இந்து முன்னணிகளின் துண்டறிக்கைகள் விநியோகம் - அவற்றில் சிறுபான்மை மக்கள் மீது அவதூறு மாரி!

போதும் போதாதற்கு இப்பொழுது மத்தியில் ஒரு இந்து மதவாத ஆட்சியே அமைந்து விட்டது - கேட்கவா வேண்டும்?

தந்தை பெரியார் பிறந்து பகுத்தறிவுப் போதனை செய்தார். அதனால் புத்தி தெளிவு பெற்று கல்வி, உரிமை, வேலை வாய்ப்புகள் பெற்று முன்னேற்றத் திசையில் பயணித்து வருகிறோம்.

அவற்றை நேரில் வீழ்த்த முடியாத வேதியக் கூட்டம், பக்தி என்னும் போதை மாத்திரைகளை இத்தகைய மத ஊர்வலங்கள் மூலம் இலவசமாக விநியோகித்து வருகிறது; ஏமாந்து விடாதீர்கள்! ஏமாந்தால் மீண்டும் ஒரு குலத்துக்கொரு நீதி என்னும் - மனுதர்மப் பார்ப்பன ஆதி பத்தியத்தின் காலடியில் தான் மிதிபட நேரிடும்!

ஏமாறாதீர்கள்! ஏமாறாதீர்கள்!! எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page1/86699.html#ixzz3C1dFtaRZ

தமிழ் ஓவியா said...

வெண்ணீறு அணிந்தது என்ன? என்ன? என்ன?


நாடகக்காரன் ராஜாவேசம் போட்டுக் கொண்டு
நடிப்பது போல், இந்த மடையன்களும் சாம்பல் அடித்துக் கொண்டு, கொட்டை கட்டிக் கொண்டு
பக்தன் போல வேசம் போடுகிறான். - ஈ.வெ.ராமசாமி

நேசமுற்று பூசை செய்து நீறுபூசிச் சந்தனம்
வாசமோடு அணிந்து நெற்றிமை திலகம் இட்டுமே
மோசம், பொய், புனைசுருட்டு முற்றிலும் செய் மூடர்காள்
வேசரி களம் புரண்ட வெண்ணீறாகும் மேனியே.
-சிவவாக்கியர்

நேமங்கள், நிட்டைகள், வேதங்கள், ஆகம நீதிநெறி
ஓமங்கள், தர்ப்பணம், செப மந்திர யோகநிலை,
நாமங்கள், சந்தனம், வெண்ணீறு பூசி நலமுடனே
சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் கற்பனையே!
- பட்டினத்தார்

அழகிய உடல்மேல் சாம்பலைப் பூசி
அருவருப்பாக்கலும், மகளிர்
கொழுவிய குழலை மொட்டையாய் மழித்துக்
குரங்கைப் போல் தோன்றலும், அறியா
மழலையர் கையினுட் காவடி எடுத்து
மலையின் மேல் ஏற்றலும் இவைதாம்
வழிபடு முறையோ? இதுகொலோ சமயம்?
மடமைகள் கண்டிரங்குமென் நெஞ்சே.
- தடங்கண்சித்தர்

கோவணாண்டி கோலத்திலோ, சடைமுடியுடனோ, அழுக்கேறிய உடம்புடனோ, பட்டினியாக இருத்தலோ, மண்மீது புரள்தலோ, மூச்சை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருத்தலோ ஆசையை வெல்லாத ஒருவனை புனிதனாக்கி விட முடியாது.
- புத்தர்

தொகுப்பு: சி.நடராசன்

Read more: http://viduthalai.in/page1/86712.html#ixzz3C1dgyIqj

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

இன்றைய சுதந்திரம் வட நாட்டா னுக்கும் அவன் மொழிக்கும் தென்னாட்டவர் அடிமையாய் வாழ வேண்டுமென்றே ஆக்கப்பட்டுவிட்டது. வெள்ளையரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தைவிட வடவரிடமிருந்து சுதந்திரம் பெறுவதே மிகமிக முக்கியமானது.

Read more: http://viduthalai.in/page1/86718.html#ixzz3C1dxe1jD

தமிழ் ஓவியா said...

இராவணனுக்குப் பிறந்த பிள்ளை

இலங்கையினின்று சீதையை இராமன் மீட்டு வரும்போதே அவள் கர்ப்பிணி!

இது ஊருக்குத் தெரிந்து விட்டது. ஆதலால், இலக்குமணனை விடு, அவளைக் காட்டிற்குக் கொண்டுபோ என்றான். இலக்கு மணன் ஒரு கொழுத்த தவசியிடம் விட்டு மீண்டான். குசன் பிறந்தான். அதன்பிறகு சீதை ஒரு பையனைப் பெற்றிருந்தாள். அவன் பெயர் இலவன்.

இராமனால் விடப்பட்ட குதிரை இலவ னால் பிடித்துக் கட்டப்பட்டது. அதனால் குதிரையுடன் வந்தவர்கள் இலவனை உதைத்து தேர்க்காலில் சுட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். பிறகு குசன் கேள்விப்பட்டுத் தம்பியை ஓடி மீட்கிறான். கட்டியவர்களைக் கொல்லு கின்றான். இராமன் வருகின்றான். அவனையும் கொன்று விடு கிறான்.

இலவன் தோற்றதேன்? இலவன் தவசிக்கு பிறந்தபிள்ளை குசன் ஏன் வென்றான்? அவன் இராவணனுக்குப் பிறந்தவன் தந்தையை கொன்ற இராமனைப் பழிக்குப் பழி கொடடா என்று தீர்த்தான் வேலையை!

-புரட்சிக் கவிஞர்

Read more: http://viduthalai.in/page1/86718.html#ixzz3C1e3x5Cn

தமிழ் ஓவியா said...

தலை எழுத்து

பிரம்மனால் பெண்ணுக்கும், ஆணுக்கும் தலை எழுத்து தனித்தனியே எழுதப்படு மாயின், மருத்துவத்தால் பெண்ணாக மாறும் ஆணுக்கும் ஆணாக மாறும் பெண்ணுக்கும் எவ்வாறு பொருந்தும்?

- சாமி. சேகரன், புதுவை

Read more: http://viduthalai.in/page1/86718.html#ixzz3C1eAsjRQ

தமிழ் ஓவியா said...

நிர்வாணப் பெண்கள்!

ஒரிசா மாநிலம் தன்சாரண்யா என்ற காட்டுப் பகுதியில் மலைவாழ் மக்கள் வாழ்கிறார்கள். அங்கு ஆண்கள் உடை உடுத்திக் கொள்கிறார்கள். பெண்கள் மட்டும் நிர்வாணமாகத் திரிகிறார்கள். அதற்குக் காரணம் கீழ்க்கண்ட மூடநம்பிக்கையாகும்.

ராமனுடன் சீதை இந்த காட்டில்தான் தங்கினாளாம். தனது ஆடைகளைக் கரையில் களைந்து வைத்து விட்டு ஒரு அருவியில் சீதை குளிக்கச் சென்றாளாம். அந்த உடைகளை அக்காட்டில் இருந்த பெண்கள் எடுத்துக் கொண்டு போய் விட்டார்களாம். குளித்து விட்டுக் கரையேறிய சீதை உடைகளின்றி நிர்வாணமாக நின்றாளாம். உடனே அந்தப் பெண்களுக்கு சாபமிட்டாளாம்.

என்னுடைய உடைகளைத் தூக்கிக் கொண்டு போய் வீட்டீர்கள் இனிமேல் இந்தப் பகுதியில் எந்தப் பெண்ணாவது உடை அணிந்தால் அவன் கணவன் இறந்து போய் விடுவான் என்று சாபமிட்டாளாம். அதிலிருந்து அந்தப் பகுதியில் எந்தப் பெண்ணும் உடை அணியாமல் நிர்வாணமாய் திரிகிறார்களாம். இப்பொழுது அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டு இடுப்பில் சிறுதுணியைச் சுற்றிக் கொள்ளச் செய்துள்ளனர்.

மூடநம்பிக்கையின் கேவலத்திற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்?

Read more: http://viduthalai.in/page1/86717.html#ixzz3C1eI4iHI

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

செம்புக் கம்பி

தேக்கி வைக்கப்பட் டுள்ள மின்சாரத்தைச் செலுத்துவதற்கு செம்புக் கம்பியை இன்றைய விஞ் ஞானம் கண்டுபிடித்துள் ளது. ஆனால், அக்காலத் திலேயே ஆண்டவன் அருள் ஒளியை செம்பி னால் கடத்த முடியும் என உணர்ந்து, இறைவன் உருவங்களை செம்பி னால் சிலை வடித்தார்கள்.
- கிருபானந்தவாரியார் தாய் வார இதழ் 28.8.1983)

அப்படியானால் கல்லால் செதுக்கப்பட்ட கடவுள் சிலைகள், அய்ம் பொன்னால் செய்யப் பட்ட கடவுள் சிலைகள் அருள் ஒளியைக் கடத் தாது என்று அர்த்தமா? செப்புக் கம்பியால் மின் கடத்தப்படுகிறது என் பதை நிரூபிக்க முடியும் (கையை வைத்தால தெரி யும் சங்கதி) செம்பினால் செய்யப்பட்ட கடவுள் சிலை அருள் ஒளியை கடத்துகிறதுஎன்பதற்கு என்ன நிரூபணம்?

Read more: http://viduthalai.in/page1/86658.html#ixzz3C1ejkrMF

தமிழ் ஓவியா said...

திருமணமாகுமுன் மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை:

திருமணமாகுமுன் மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை:

நீதியரசர் என். கிருபாகரன் கருத்து வரவேற்கத்தக்கதே!

இதனை ஒரு இயக்கமாகவே நடத்துவோம் - வாரீர்!


21ஆம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவுகளை மனிதனே சுமப்பதா? நவீன தொழில் நுட்ப முறைகளைக் கையாள வேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்வியல் அறிக்கை திருமணத்திற்குமுன் மணமக்கள் மருத்துவ சோதனை செய்து கொள்வது தான் சரியானது - அறிவியல் பூர்வமானது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி என். கிருபாகரன் அவர்கள் அளித்த தீர்ப்பை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜஸ்டீஸ் திரு. என். கிருபாகரன் அவர்கள் வாழ்க்கை சம்பந்தமான வழக் கொன்றில் மிக அருமையான தீர்ப்பு ஒன்றினை சமூக நலம் சார்ந்த கண்ணோட்டத்தில் விஞ்ஞான பார்வையோடு வழங்கியுள்ளார்கள்.

ஜோதிடப் பொருத்தமல்ல - மருத்துவ ரீதியான பொருத்தம் தேவை!

திருமணங்களை ஏற்பாடு செய்யும் முன்பு நம் நாட்டுச் சமூக அமைப்பில் உள்ள பெரும்பாலான நடைமுறை என்ன?

ஜாதி, மதம், அதற்குப் பாதுகாப்பான ஜோசியம் பார்த்தல் - இவைகளைப்பற்றி தான் கவலைப்பட்டு அதிக முக்கியத்துவம் கொடுத்து, (ஏராளமான வரதட்சணை என்று கொடும் சமூக நோய்க்கும் சத்தமில்லாமல் ஆளாகி) திருமணங்களை நடத்திக் கொள்ளுகின்றனர்.

மணமக்களுக்கு மற்ற பொருத்தங்களைப் பார்ப்பதற்குப் பதிலாக, அறிவியல் அடிப்படையில் ஆதாரபூர்வமானதாக இவை இல்லாத நிலையில் - அறிவியல், உடலியல் - மருத்துவ ரீதியாக அவ்விருவருக்கும் மருத்துவப் பரிசோதனை சான்றுகளைப் பார்த்து ஒருவருக்கொருவர் உடல் ரீதியாகப் பொருத்தமானவர்களா என்று அறிந்து, திருமணங்களை ஏற்பாடு செய்தால், பின்னாள் அத்திருமணங்கள் - அந்தக் காரணங்களுக்காகத் தோல்வி அடையும் நிலை - வழக்கு மன்றங்களுக்குச் செல்லும் அவசியம் ஒரு போதும் ஏற்படாது. தேவையற்ற மன உளைச்சல்கள் - தானாகவே தீரும்.

ஜோதிடம் பார்ப்பது, மற்ற பொருத்தங்களை சடங்கு சம்பிரதாயங்கள் வழியில் பார்ப்பது அறிவியல் - பகுத் தறிவுக் கண்ணோட்டத்தில் சரியானது - உண்மையானது அல்ல.

சட்டத் திருத்தம்கூட கொண்டு வரலாமே பல திருமணங்களில் முதல் இரவிலேயே பல அதிர்ச்சி மணமகளுக்கோ, மணமகனுக்கோ தாக்கும் நிலை ஏற்பட்டு, அவர்கள் துன்பக் கேணியில் தள்ளப்படுகிறார்கள்.

ஏற்பாடு செய்த இருசாராரின் பெற்றோர்களுக்கோ அவர்களைவிட பன்மடங்கு வலியும், வேதனையும்! யாரையோ தேள் கொட்டியது போன்ற நிலையும்தான் ஏற்படுகிறது.

மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் தந்த நல்லதோர் தீர்ப்பு!

மத்திய, மாநில அரசுகள் திருமணச் சட்டங்களில் இம்முயற்சியை ஒரு முன் நிபந்தனையாக்கிடும் வகையில் சட்ட திருத்தத்தைக் கொணர மதுரை உயர்நீதிமன்றத்தில் (அது சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு பகுதிதான்) வழங்கப்பட்ட இத்தீர்ப்பு ஒரு முன்னோட்டமாக அமைய வேண்டும்.

மருத்துவர்கள் தவறான சான்றிதழ் தந்தால் கடும் தண்டனை என்றும்கூட அச்சட்டத்தின் ஒரு பிரிவை முக்கியமாக இணைக்கலாம். அதன்மூலம் எப்போதாவது நிகழக் கூடிய தவறும்கூட நிகழ வாய்ப்பின்றித் தடுக்கலாம்!

இந்தக் கருத்தை வலியுறுத்தி- அதாவது மண ஏற்பாடுகளுக்குமுன் மணமக்களாக விரும்புவோர் சரியான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சான்று களோடும், மற்ற ஏற்பாடுகள் துவங்கி நடந்தால், பாதி திருமணங்கள் தோல்வி அடையாது. நீதிமன்றங்களுக்கு வழக்குக்குச் செல்ல முடியாது.

நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த கருத்துதான்

உடல் நோய்களை மறைத்து, எப்படியாவது திருமணம் நடந்து விட்டால்போதும் என்ற தவறான முயற்சிகள்தான் இப்படி இரு சாராருக்கும்; பிறகு தீராத வேதனையையும், மாறாத துயரத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன என்பதை பல சுயமரியாதைத் திருமண மேடைகளிலும், பெண்கள் விடுதலை மாநாட்டிலும் சொற்பொழிவு ஆற்றும் போதும் நாம் இடைவிடாமல் வலியுறுத்தி வந்துள்ளோம் - வருகிறோம்.

அது மட்டுமல்ல சென்னை பெரியார் திடலில் இயங்கும் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின்மூலம் ஏற்பாடாகும் மணமக்கள் இருவருக்கும் இரத்தச் சோதனை, HIV சோதனை போன்றவைகளை நடத்திய பிறகே மணம் ஏற்பாடுகள் துவங்கி நடைபெறுவது வழக்கத்தில் உள்ளது.

சமூக ஆர்வலர்களும் முன்வரட்டும்!

இப்படி ஒரு சட்டத் திருத்தம் வந்து திருமண முறையில் நம் நாட்டில் மாறுதல் வந்தால் அதனால் அதிகம் பயன் பெறுவது முதலாவது மகளிரே ஆவர்; அடுத்து பெற் றோர்கள்ஆவார்கள்; அவர்களின் நிம்மதி குலைக்கப் படாது, முதுமையில் வாழும் வசதியும் உத்தரவாதமும் அதனால் ஏற்படும்.

சமூகநல ஆர்வலர்களும், சமூக சீர்திருத்த அமைப்பு களும் இதற்காக ஒரு தனி இயக்கமே நடத்திட உடனடியாக முன் வருதல் அவசியம் - அவசரமுங்கூட.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
28.8.2014

Read more: http://viduthalai.in/page1/86653.html#ixzz3C1eszjp8

தமிழ் ஓவியா said...

நன்றி காட்டுவதின்மூலம் உயருங்கள்!


சிறந்த வாழ்க்கை என்பது பணத்தால் அளக்கப் படுவது அல்ல பதவியால் மதிப்பிடுவதும் அல்ல; பகட்டான ஆடம்பரங்களில் அடையாளப்படுத்தப் படுவதல்ல; பட்டங்களாலும் கணக்கிடப்படுவது அல்ல.

மனித வாழ்வின் பண்புகளால் நிர்ணயிக்கப்பட்டு, நிலைக்கப்படுவதே மனிதர்களாகிய நம்முடைய சிறந்த வாழ்க்கை என்பது.

அதன் மிக முக்கிய மதிப்புறு விழுமியங்களில் (Values) ஒன்று நன்றி காட்டுதல் என்னும் செய்ந்நன்றி அறிதல் ஆகும்.

செய்ந்நன்றி அறிதல் என்ற தலைப்பில், திருக்குறளில் தனித்த 10 குறட்பாக்களைக்கொண்ட ஒரு அதிகாரத்தையே எழுதி, வலியுறுத்தியுள்ளார்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழரின் சிந்தனை வளம் - பண்பாட்டுப் படையெடுப்பு மெல்ல நுழைந்து கொண்டிருந்த காலம் என்ற போதிலும் கூட - எவ்வளவு செழுமையானது பார்த்தீர்களா?

நன்றி என்பது என்ன என்பதை அறியாத மக்களே நம் மக்கள் தொகையில் பெரும்பாலோர்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வு இல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு (குறள் 110)

எவ்வகைப்பட்ட அறங்களையும் அழித்தவர் களுக்கும் தப்பிப் பிழைத்துக் கொள்ளுவதற்குக்கூட வழி உண்டாகக்கூடும். ஆனால், ஒருவர் செய்த பேருதவியை மட்டும் மறந்து போய் விடுபவர்க்கு, எப்பொழுதும் நல்வாழ்வு என்பது ஏற்படுவதில்லை என்பதே இக்குறளின் கருத்தாகும். இதிலிருந்து நன்றி என்ற சொல்லுக்குப் பொருள் உதவி பெறுதல் என்பதே ஆகும்.

எந்நன்றி -செய்நன்றி என்று பகுத்து ஆராய்ந்து பார்த்தாலே இது தெளிவாய் விளங்கும்.

1931இல் குடிஅரசு வார ஏட்டில் ஒரு தலையங் கத்தில் எழுதும்போது, தந்தை பெரியார் அவர்கள், நன்றியின் தத்துவம் பற்றி மிக அருமையாக விளக்கி யுள்ளார்கள்.

தமிழ் ஓவியா said...


நன்றி என்பது பலன் அடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர் பார்க்கக் கூடாத ஒன்றாகும்; அப்படி எதிர் பார்த்தால் அது சிறுமைக் குணமேயாகும்

மனிதப் பண்புகளில் இயல்பானது சமூக வாழ்க்கை என்பது கூட்டு வாழ்க்கையாக அமைந்து விடுவதால், ஒருவருக்கொருவர் உதவியை நாடுவது தவிர்க்க இயலாதது. அதனால் உதவிட முன்வர வேண்டும் கட்டாயம்; ஆனால் அதற்காக நன்றி சொல்ல மறந்து விட்டாரே என்று உதவிய எவரும் ஆதங்கமோ, வருத்தமோ, கவலையோ கொள்ளக் கூடாது என்ற மிக உயர்ந்த தத்துவத்தை தென் கிழக்காசியாவின் சாக்ரடீஸ் என்று அய்.நா.வின் யுனெஸ்கோ வர்ணித்ததே - அதை தந்தை பெரியார் அவர்கள் கூறியுள்ளார்கள்!
இக்கருத்தின் ஒரு அடி நீரோட்டத்தையும் நாம் புரிந்து கொள்ளத் தவறக் கூடாது. அதாவது, நம்மால் உதவி பெற்றவர்களில் பலரும் நன்றி கூறிட முன் வருவதில்லை என்பதே உலக இயற்கையில் நாம் காணும் நடைமுறை.

அதனை எதிர்பார்த்தால் உதவியவர்களுக்கு ஏற்படுவது ஏமாற்றம்; ஏமாற்றத்தின் விளைவு வருத்தம் அல்லது கோபம் - அதன் விரிவாக்கம் -விளைவு...? அடுத்த ஒருவர் நம்மிடம் வந்து உதவிகளை அது மிகவும் தேவையானதாகவும் நியாயமானதாகவும்கூட இருக்கலாம் என்ற போதிலும், இந்த வருத்தத்தைக் தேக்கி வைத்து, குமுறும் நெஞ்சத்தை உடைய வர்களுக்கு அடுத்தவருக்கு உதவிடும் எண்ணம் வராமல் தடுக்கும் நிலைகூட உருவாகி விடலாமே!

தமிழ் ஓவியா said...

எப்போதும் உதவிடக் கூடிய நமது உற்சாகமான நம் உள்ளப்பாங்கிற்கு இந்த எதிர்பார்ப்பு ஊறு செய்துவிடும் அல்லவா! அதனால்தான் உயர் எண்ணங்கள் மலரும் சோலையான பெரியார் அவர்கள். அதைச் சிறுமைக்குணம் என்று ஒரு போடு போட்டு, ஓங்கி சம்மட்டி அடி அடித்தார்கள்.

நன்றி என்பதும் உதவி என்பதும் ஒரு வகைப்பட்டது.

எங்கோ ஒரு நிகழ்வில், பெரிய நிலைக்கு உயர்ந்த ஒருவர் அங்கே உதவி செய்த வரை எதிர்பாராமல் சந்திக்கும்போது, சட்டென்று அவர்தம் நண்பர், உறவினர்கள் குழுவினரிடம் இவரின் அரிய உதவியால் தான் நான் இன்றுள்ள நிலையை அடைந்தேன் என்று பூரிப்புடனும் பெருமையுடனும் கூறிடும்போது, நல்ல மனிதர்கள் கூச்சத்தாலும், நாணத்தாலும் சற்றே தலை கவிழ்ந்து அடக்கத்துடன், அப்படி ஒன்றும் பெரிதாக நான் ஏதும் செய்துவிட வில்லை என்றுகூறி, மலையிலும் மாணப் பெரிதாக உயர்வார்!

நன்றி சொல்லவில்லையே என்று உதவி செய்தவர்கள் வருந்துவதற்குப் பதிலாக, அரிதாக மேற்காட்டிய நிகழ்வுகள் நடைபெறும்போது, அதனை எண்ணி எண்ணி மகிழ்வதுகூட தேவையில்லை. செய்த உதவியை செய்தவர்கள் மறந்து விடுவது நல்லது; உதவி பெற்றவர்கள் என்றும் நினைவில் வைத்துக் வாழுவதும் அங்குள்ள மனிதப் பண்பு வளர்ந்தோங்கு செழிப்புடன் உள்ளது என்பதே பொருளாகும்.

அண்மையில் அன்றாட அறிவுரைகள் ரகசியம் என்ற தலைப்பில் ஒரு அருமையான ஒரு ஆங்கில நூலினைப் (Secret - Daily Teachings by Rhonda Bynre)படித்தபோது, இந்த நன்றி உணர்வின் வெளிப்பாடுபற்றி மிக அருமையான நடைமுறை ஒன்றினை எழுதியுள்ளார்.

(இந்நூல் உலகின் 50 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது; 2.4 கோடி புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளன சென்ற ஆண்டுவரை)

ஆழமான நன்றி உணர்வை நீங்கள் உங்களுக்குள் அனுபவிக்கப் பழகிக் கொள்ளுங்கள்; ஒவ்வொரு நாளும் அமர்ந்து நீங்கள் யாருக்கெல்லாம் நன்றிக் கடன்பட்டுள்ளீரோ, யார் யாரிடம் எவ்வகை உதவிகளைப் பெற்றுள்ளீர்களோ அந்தப் பட்டியலை கைப்பட எழுதிடுங்கள். எழுதிக் கொண்டே இருங்கள். உங்கள் கண்களில் நீர்ப்பெருக்கெடுத்து ஓடும் வரை எழுதிக் கொண்டே அப்பட்டியலை நீட்டுங்கள். கண்ணீர் மேலும் ஊற்றாக வரும் நிலையில், உங்கள் இதயம் மிக அற்புதமானதாக உங்களுக்கு அமையும். நன்றி காட்டுதலின் உண்மைக் கூறுபாட்டை உணர்தல் இதன் மூலமே முடியும் இதை திரும்பத் திரும்ப செய்து கொண்டே இருங்கள். அதன் மூலம் உயர்வீர்கள் நீங்கள்.

- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page1/86646.html#ixzz3C1f3t2Sf

தமிழ் ஓவியா said...

செப்டம்பர் 3- மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஏன்? ஏன்?

இலங்கையில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை என்பது உலகறிந்த ஒன்றாகும். இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவர்கள் இலங்கையில் நடப்பது இனப்படு கொலையே என்று அழுத்தந் திருத்தமாகவே கூறினார் (16.8.1983).

1984 செப்டம்பர் 23 - வெளிநாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்த பிரதமர் இந்திரா காந்தி ஒரு பேட்டியில் கூறினார். இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அங்குள்ள தமிழர்களில் மிதவாதிகள்கூட தீவிரவாதிகளா கும் விபரீதம்தான் ஏற்படும் என்று சொன்னாரே - ஈழத்தில் அதுதானே நடந்தது.

காந்தியாரைவிட அகிம்சைவாதி என்று போற்றப்படும் ஈழத் தமிழர் தந்தை செல்வநாயகம் - தனி நாடு என்பதை எந்த கால கட்டத்தில், எந்த அவசியத்தில் முழங்கினார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

செல்வா அவர்கள் மறைந்த போது சிறீமாவோ பண்டார நாயகா என்ன கூறினார்? கண்டனம் தெரிவிக் கும் போதுகூட மென்மையான வார்த்தைகளையே உபயோகிக்கக் கூடியவர் செல்வா என்று ஒப்புதல் வாக்கு மூலம் அல்லவா கொடுத்தார்.

பன்றிகளுக்குமுன் முத்துக்களைப் போட்டால் என்ன பயன்? அது போன்றதுதான் சிங்கள அரசின் முன் ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கேட்பதும். இதில் அய்.நா. மன்றம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. அப்பிரச்சினையில் கடமை தவறி விட்டோம் என்று, எல்லாம் நடந்து முடித்த தற்குப் பிறகு அய்.நா. செயலாளர் பான்.கீ.மூன் இவ்வாறு கூறுகிறார். பொதுவுடைமைப் பேசும் சீனாவும், ருசியாவும், கியூபாவும் எவ்வளவுக் கேவலமாக நடந்து கொண் டுள்ளன? தேசிய இனப்பிரச்சினைபற்றி மாவீரன் லெனின் சொன்னதையெல்லாம் காலில் போட்டு மிதித்துக் கொண்டு அல்லவா இலங்கை இட்லர் மகிந்த ராஜபக்சேவுக்குச் சந்தன மாலை அணிவித்து சபாஷ் போட்டன.

முதலாளித்துவ நாடான அமெரிக்கா மனித உரிமை ஆணையத்தில் தீர்மானத்தைக் கொண்டு வரவேண்டிய நிலை! ஈழப் பிரச்சினையில் பொதுவுடைமை நாடுகள் என்று கருதப்படுகின்ற நாடுகள் நடந்து கொண்ட விதம் - அந்தத் தத்துவத்தை நோக்கி வீறு கொண்டு எழ வேண்டிய இளைஞர்களைக் காயடித்துப் போட்டு விட்டது.

கம்யூனிசத் தத்துவம் மேலும் பரவாமல் ஆக்கியதில் இந்தக் கம்யூனிஸ்ட் நாடுகள்தான் பொறுப்பு ஏற்றாக வேண்டும். இதற்கு மன்னிப்பு என்பதே கிடையாது.

இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வழக் குரைஞர் மார்ச்சுகி தாருஸ்மான் தலைமையில் அமெரிக் காவின் சட்ட வல்லுநர் எல்வேன் ரெட்னர், தென்னாப் பிரிக்க அறிஞர் யாஷ்மின் சூக்கா ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழுவை அய்.நா. செயலாளர் பான்.கீ.மூன் தான் நியமித்தார். அந்தக் குழு தன் அறிக்கையை அய்.நா. விடம் அளித்து விட்டது. இலங்கையில் நடந்தது இனப்படு கொலை தான் என்று அறுதியிட்டுக் கூறியது அம்மூவர் குழு அறிக்கை.

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அய்.நா.வால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு வழங்கும் மய்யங்கள்கூட இலங்கை ராணுவத்தின் தாக்குதல்களிலிருந்து தப்பிட வில்லை. மருத்துவமனைகளும் குறி வைத்துத் தாக்கப் பட்டன. இலங்கை ராணுவத்தின் இந்த இனப்படுகொலை வெளி உலகத்தின் வெளிச்சத்துக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக வெளிநாட்டு ஊடகக்காரர்கள் அனுமதிக்கப் படவில்லை என்பது உள்பட இலங்கை அரசின் போர்க் குற்றத்தை நீண்ட பட்டியலிட்டுக் காட்டி விட்டது.

இந்த நிலையில் அய்.நா. செய்ய வேண்டியதெல்லாம் சட்டப்படி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதே!

பொது மக்கள்மீது யுத்தம் நடத்தியபோதுதான் அய்.நா. தன் கடமையைச் செய்யவில்லை. அதற்குக் கழுவாயாக, அந்தப் போர்க் குற்றவாளியைக் கூண்டில் ஏற்றுவதற்குப் பதிலாக, அவரைக் கூப்பிட்டு அய்.நா.வின் பொதுப் பேரவையில் பேச அழைப்புக் கொடுப்பது என்றால் இதன் பொருள் என்ன? இனப்படுகொலைக்கு அத்தாட்சிப் பத்திரமா - அங்கீகாரமா?

அய்.நா.வின் கொள்கைக்கு மனித உரிமைக் காப்புக்கு அய்.நா.வே அணுகுண்டு வைக்கிறது என்று தானே பொருள்?

ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அய்.நா.வால் நியமிக்கப் பட்ட விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று இடி அமீன்போல, ஹிட்லரைப் போல கர்ச்சிக்கும் ஒருவரை அய்.நா.வின் முடிவை மதிக்காத ராஜபக்சேவை அய்.நா. மன்றத்தில் பேச அழைப்பது அடிப்படையில் சரியானது தானா?

அய்.நா.வுக்கு என்று பொது மரியாதையும், கவுரவமும் கிடையாதா? அய்.நா. இதுபோன்ற பிரச்சினைகளில் இந்தக் கண்ணோட்டத்தோடு நடந்து கொண்டால் அய்.நா. உறுப்பு நாடுகள்தான் அய்.நா.வை எப்படி மதிக்கும்? தவறு செய்பவர்களை, குற்றம் செய்பவர்களை எப்படிதான் தண்டிக்க முடியும்?

இரண்டாம் உலகப் போரின்போது, போர்க் குற்றம் புரிந்தனர் என்று சொல்லி ஜப்பானிய பிரதமர்களாக விருந்த ஜெனரல் டோஜோ, ஜெனரல் கொய்கோ, ஜப் பானியர் இராணுவத் தளபதியாக இருந்த யோஷி ஜிரோ உமேசு போர் அமைச்சராகவிருந்த செய்ஷிரோ ஹட்ட ஹாக்கி உட்பட பலருக்கும் தண்டனை வழங்கப்பட வில்லையா?


அதைப்போல நூரம்பர்க் விசாரணை மன்றத்தில் ஜெர்மானியப் படைகளின் தலைமைத் தளபதியாகவிருந்த ஹெர்மன் கோயரிங், எஸ்.எஸ். படைகளின் உயர் மட்ட தளபதிகளாகவிருந்த எர்னஸ்ட் கால்ட்டென் புரூனர், அடால்ப் ஈச்மென் ஆகியோர் உட்பட நாஜி உயர்மட்ட தலைவர்கள் தண்டிக்கப்பட்டனரே.

போஸ்னிய முன்னாள் குடியரசுத் தலைவர் கராட்ஜிச் போர்க் குற்றங்களுக்காக 2008ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி கைது செய்யப்பட்டு பெல்கிரேடு போர்க் குற்ற நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டாரே! அதன்பின் பன்னாட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் ஹேக் நகரில் சிறை வைக்கப்பட்டாரே இந்தக் குற்றவாளிகளை விட குரூரமான இனவெறியர் மகிந்த ராஜபக்சேவுக்கு முறைப்படி தண்டனை கிடைக்கச் செய்யாவிட்டால் 21ஆம் நூற்றாண்டே அவமானப்பட்டுத் தலை குனிந்து நிற்கும்.

அதற்கு முன்னதாக குறைந்தபட்சம் அய்.நா. மன்றத்தில் பேசக் கொடுத்திருக்கும் அழைப்பை யாவது அய்.நா. விலக்கிக் கொள்ள வேண்டும் - டெசோ வின் இந்தத் தீர்மானத்தை முதலில் அய்.நா. மதித்து தனது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளட்டும் செப்டம்பர் 3ஆம் தேதி தலைநகரில் டெசோ சார்பில் நடத்தப்பட உள்ள பெருந்திரள் ஆர்ப்பாட்டம் அய்.நா.வுக்கே நெருக்கடி கொடுக்கும் என்பதில் அய்யமில்லை.

கட்சிகளை மறந்து தமிழினமே ஒன்று திரளட்டும்!

Read more: http://viduthalai.in/page1/86645.html#ixzz3C1fUrAfo

தமிழ் ஓவியா said...

மனிதன்பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக் கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

Read more: http://viduthalai.in/page1/86644.html#ixzz3C1fjKvIE

தமிழ் ஓவியா said...

நமது கழகக் குடும்பங்களின் சந்திப்பு அடிக்கடி நிகழ வேண்டியது அவசியமாகும்

நமது கழகக் குடும்பங்களின் சந்திப்பு அடிக்கடி நிகழ வேண்டியது அவசியமாகும்
மும்பை கலந்துரையாடலில் தமிழர் தலைவர்

மும்பை, ஆக. 28- நமது கழகக் குடும்பங்கள் கொள்கைக் குடும்பங்களின் சந்திப்புகள் அடிக்கடி நிகழ வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

14.8.2014 அன்று மும்பையில் நடைபெற்ற பொறுப்பாளர் களின் கலந்துறவாடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:

எதிர்பாராமல் கிடைத்திருக்கிறது...

மறைந்தும், மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்தவ ராக இருக்கக்கூடிய சீர்வரிசையார் அவர்களுடைய படத்திறப்பு நிகழ்ச்சி; அதேநேரத்தில், அவருடைய குடும் பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவேண்டும் என்பதற்காக தோழர்கள் இங்கே ஏற்பாடு செய்த நேரத்தில், உங்களையெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பு எதிர்பாராமல் கிடைத்திருக்கிறது.

புதிய அரசியல் மாறுதல்கள்மூலமாக...

நம்முடைய இயக்கத்தைப் பொறுத்தவரையில், கடந்த மும்பையில் ஆறு மாதங்களுக்கு முன்புகூட, சிறப்பான வகையில் மற்றவர்களுக்கெல்லாம் பாராட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றோம். உங்களுக்கெல்லாம் தெரியும், ஒரு பக்கத்தில் இந்தக் கொள்கைகளுக்கு அறைகூவல்கள், புதிய அரசியல் மாறுதல்கள்மூலமாக வந்துகொண்டிருக் கின்றன என்பது ஒருபுறம். இன்னொரு பக்கத்தில், இந்தக் கொள்கைக்குரிய வளர்ச்சியும், செல்வாக்கும் என்பது வளர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு மாபெரும் திட்டத்தை 30 கோடி ரூபாய் அளவிற்கு!

தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு, இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டதற்குப் பதிலாக, இன்றைக்கு உலகளாவிய அளவில் இந்த இயக்கம் இருக்கிறது. அந்த வகையில், பெரியார் உலகம் என்ற ஒன்றை நாம் சிறப்பான அளவில், அமைக்கவேண்டும்; நம்முடைய காலத்தில், மிகப்பெரிய அளவில், இந்த இயக்கத்தினுடைய சாதனை களை - வரக்கூடிய தலைமுறையினருக்கு மறக்காமல், அவர்களை நினைவூட்டக் கூடிய அளவிற்கு, சான்றா வணங்களாக அவை நிறுத்தப்படவேண்டும் என்பதற் காகத்தான், ஒரு மாபெரும் திட்டத்தை 30 கோடி ரூபாய் அளவிற்கு, ஒரு பெரிய திட்டத்தை உருவாக்கி, அதில் 95 ஆண்டுகாலம் வாழ்ந்தார்கள் பெரியார் அவர்கள் என்பதற்காக 95 அடி உயரச் சிலை; 40 அடி உயர பீடம்; சேர்த்து 135 அடி உயரத்தில் வைக்கவேண்டும் என்பதற்காக ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


தமிழ் ஓவியா said...

அதற்கும், நம்முடைய தோழர்களின் பங்களிப்பும், நம்முடைய ஆதரவாளர்களின் அன்பும் திரட்டப்பட வேண்டும். ஏனென்றால், தந்தை பெரியார் அவர்கள், எங்கெல்லாம் இருக்கக்கூடிய சமுதாயத்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் இந்தப் பணி சிறப்பாக இருந்தது. நான் கடந்த பிப்ரவரி மாதம் வந்தபொழுதுகூட, மிகப்பெரிய அளவிற்கு, மராத்திய நண்பர்கள் இந்தக் கொள்கைகள் அங்கே பரவக்கூடிய அளவிற்கு, அந்த வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதை நாம் பார்க்கிறோம்.

இங்கே இருக்கக்கூடியவர்கள் எல்லோரும் உழைப் பாளிகள்; அவரவர்கள் பணியில் இருக்கக்கூடியவர்கள். அந்த வகையில், நீங்கள் கட்டுப்பாடாக, இந்தக் கொள் கைகளை எந்த அளவிற்கு உங்களால் பரப்ப முடியுமோ அந்த அளவிற்கு செய்வதில் கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மிகப்பெரிய வெற்றி நம்முடைய இயக்கத்திற்கு, ஓர் அங்கீகாரம்!

ஒரு காலத்தில் இந்த மண்டபத்தில் நாமெல்லாம் நுழையக்கூடிய வாய்ப்பில்லை. ஆனால், இன்றைக்கு இந்த இடத்தில் வந்து உங்களையெல்லாம் சந்திக்கிறேன் என்று சொன்னாலே, மிகப்பெரிய வெற்றி. நம்முடைய இயக்கத் திற்கு, ஒரு அங்கீகாரம், நம்முடைய இயக்கத்தவர்களின் பணி தோல்வியடையவில்லை, வெற்றியடைந்திருக்கிறது என்பது மிகப்பெரிய அடையாளமாகும்.

தமிழ் ஓவியா said...

அந்த வகையில், உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக்கொள்வது, வருகின்ற செப்டம்பர் 17 ஆம் தேதி அய்யாவினுடைய 136 ஆவது பிறந்த நாள் வருகிறது. அந்தப் பிறந்த நாளை ஒரு நல்ல கருத்தரங்கமாகவும், நல்ல பிரச்சார யுக்தியாகவும், எல்லாத் தோழர்களையும், பல தரப்பட்ட, நம்முடைய ஒத்தக் கருத்துள்ளவர்கள் அத்தனை பேரையும் அழைத்து, ஒரு நல்ல பிரச்சாரமாக, நீங்கள் திட்டமிட்டு, மழைக்காலத்தைத் தவிர்த்து, ஏனென்றால், வழக்கமாக மும்பை வருகிறபொழுது, மழை தொந்தரவு இருக்கும்; அதையெல்லாம் தாண்டி நீங்கள் சிறப்பாக செய்யவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

பெரியார் உலகச் செய்திகள் மராட்டிய மொழியில் பரப்புங்கள்!

பெரியார் உலகத்தைப்பற்றி, நன்கொடை திரட்டுகின்ற முயற்சியின் மூலமாக, பிரச்சாரத்தையும் செய்யவேண்டும். வெறும் நன்கொடைக்காக மட்டுமல்லாமல், இப்படி ஒரு இயக்கம் இதனை செய்கிறது; திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் சிறப்பாக பெரியார் உலகம் அமையவிருக்கிறது என்பதை, மராட்டியத் தோழர்கள் உள்பட மற்றவர்களுக்கும் போய்ச் சேருமாறு அதனைச் செய்யவேண்டும். முடிந்தால், நாங்கள் வெளி யிட்டிருக்கக்கூடிய பெரியார் உலகத்தைப்பற்றி இருக்கக் கூடிய செய்திகளை, நீங்கள் மராட்டிய மொழியில் மொழி பெயர்த்து, அதனை அச்சடித்து, மற்றவர்களிடம் மராட்டிய மக்களிடம் பரப்புங்கள். பணம் இதில் இரண்டாம் பட்சம் தான்; அதைவிட நாம் செய்கின்ற பணி என்பது இருக்கிறதே அது மிக முக்கியம். அதுமட்டுமல்ல, தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகள் எந்த அளவிற்கு வந்திருக் கிறது என்றால், இட ஒதுக்கீட்டை ஒரு காலத்தில் எதிர்த்த வர்கள் எல்லாம், இன்றைக்கு இட ஒதுக்கீடு கேட்கிறார்கள். இப்பொழுதுகூட, தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்று சொன்னால், மராத்தியர்களுக்கு நாங்கள் இட ஒதுக்கீடு கொடுப்போம் என்று சொன்ன பிறகுதான். இதற்கு என்ன அர்த்தம்? பெரியார் வெற்றி பெற்றிருக்கிறார். பெரியார் தெரிந்தோ, தெரியாமலோ உள்ளே வந்திருக்கிறார் என்று அதற்குப் பொருள்.

ஆடி மாதம்: 30 நாள்களில் 10 நிகழ்ச்சிகள்

மூடநம்பிக்கைகள், ஜாதி வெறி இவற்றையெல்லாம் நாம் எதிர்த்துப் போராடவேண்டிய நேரத்தில், நாம் மனம் தளரவேண்டிய அவசியமில்லை. நமக்கு எத்தனையோ எதிர்ப்புகள் வந்தாலும், நல்ல அளவில் வளர்ந்து கொண் டிருக்கிறது என்பதற்கு அடையாளம் என்னவென்று பார்த்தீர்களேயானால், ஆடி மாதத்தில் திருமணங்களை நடத்தமாட்டார்கள்; நாம் ஆடி மாதத்தில் திருமணம் செய்வதற்கு உடன்பட்டாலும், சம்பந்தம் செய்பவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்குவார்கள்; ஆனால், இன்றைக்கு அப்படியில்லை. இந்த ஆடி மாதம் தொடங்கியதிலிருந்து, ஒரு பத்து நிகழ்ச்சிகளை தலைமை தாங்கி நடத்தியிருக் கிறோம். இது எதைக் காட்டுகிறது? 30 நாள்களில் 10 நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம் என்று சொன்னால், பெரியாருடைய கொள்கை வெற்றியடைந்து கொண்டிருக் கிறது, அதனை எல்லோரும் ஏற்கிறார்கள். இன்னொரு பக்கம் பார்த்தீர்களேயானால், நமக்கு எதிரானவர்கள் ஏராளம்; ஆகவே, நம் தோழர்கள் உற்சாகமாக இருக்க வேண்டும்.

அந்த வகையில், சிறப்பான வகையில் இதனை ஒரு பிரச்சார முறையாக ஆக்கிக் கொண்டு, தெளிவாக இந்தச் செயலை செய்யவேண்டும்.

சுயமரியாதை இயக்க மாநாடு

ஒவ்வொரு துறையிலும் வெற்றியடைந்து கொண்டிருக் கிறோம். பெரியார் உலகமயமாகிக் கொண்டிருக்கிறார். இந்திய மயமல்ல; தமிழ்நாட்டிலிருந்து மராட்டியத்திற்கு வந்து நீங்கள் நீண்ட காலமாகப் பரப்பி, வடநாட்டில் அய்யாவினுடைய புத்தகங்களைப் பார்த்தால், இன்றைக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சுயமரியாதை இயக்கம் 1929 ஆம் ஆண்டு, இங்கே மாநாட்டை நடத்தியிருக்கிறார்கள்; அம்பேத்கர் அவர்கள் தலைமை தாங்கியிருக்கிறார். பெரியார் அவர்கள் வாழ்த்து அனுப்பி இருக்கிறார்.

அடுத்த ஆண்டு ஜெர்மனியில் மாநாடு

தமிழ் ஓவியா said...

இந்தக் கொள்கைகள் மிகவும் வேகமாக எல்லாப் பகுதிகளிலும் பரவத் தொடங்கியிருக்கிறது; இந்திய அளவில் மட்டுமல்ல, அதனைத் தாண்டி உலக அளவில் வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக் கழகத்தில் பெரியாருடைய கொள்கைகளைப்பற்றி உரையாற்றுங்கள் என்று அழைத்திருந்தார்கள்; அங்கே சென்று உரையாற்றி விட்டு வந்தேன். உங்களுக்கு எல்லாம் வியப்பாக இருக்கும், வரும் ஆண்டில், ஜூலையில் ஜெர்மனியில், பெரியார் இன்டர்நேஷனல் என்று சொல்லக்கூடிய பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பாக, பல நாடுகளில் இருந்து, ஒரு மாநாட்டை நடத்துவதற்கு ஜெர்மானியில் உள்ள அமைப் பாளர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஜெர்மனியில் உள்ள பல்கலைக் கழகத்திலேயே அந்த மாநாட்டை நடத்து வதற்கு இடம் கொடுப்பார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த அளவிற்கு நம்முடைய இயக்கம் உலக அளவில் இன்றைக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், போதிய விளம்பரம் இதற்குக் கிடையாது. அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை.

பார்ப்பனர்கள் வியந்த சுயமரியாதைத் திருமணம்!

கடந்த ஜூன் 5 ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக் கழகத்தில் மத மறுப்பு, ஜாதி மறுப்பு, சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்தேன். அந்தத் திருமணத்திற்கு பார்ப்பன நண்பர்கள் இரண்டு பேரும் வந்திருந்தார்கள். இந்தத் திருமணம் மிகவும் எளிமையான முறையில் இருக்கிறதே, நாங்கள் வேறு மாதிரியல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம் என்று சொன்னார்கள்.
நம்முடைய இயக்கம் - கொள்கைகள் - எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், மிகவும் வேகமாக வளர்ந்துகொண் டிருக்கிறது; பரவிக்கொண்டிருக்கிறது.

கொள்கைக் குடும்பங்கள் சந்திக்கவேண்டும்!

நான் அன்போடு உங்களையெல்லாம் கேட்டுக்கொள் வது, பிரச்சாரம்! பிரச்சாரம்!! பிரச்சாரம்!!! அதனை செய்ய வேண்டும். நீங்கள் எல்லாம் ஓய்வாக இருக்கும்பொழுது சந்தித்துக் கொள்ளவேண்டும்; நம் கொள்கைக் குடும்பங்கள் சந்திக்கவேண்டும், அதுதான் மிக முக்கியம்.
நமக்கு ஒரு பெரிய சங்கடம் என்னவென்றால், இந்த மராட்டியத்தைப் பொறுத்தவரையில், இந்த இயக்கத்திற்கு முன்னோடிகளாக இருந்த மூன்று பேர் அடுத்தடுத்து தவறி இருக்கிறார்கள்; மிகப்பெரிய நட்டம்தான். ஒரு பெரிய ஆலமரம் சாய்ந்துவிட்ட பிறகு, விழுதுகள் அதனை சரி செய்யவேண்டும். இளைஞர்கள் இப்பொழுது நிறைய பேர் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பழைய கதைகளையெல்லாம் சொல்லவேண்டும்.

நம்முடைய இயக்கத்தைத் தவிர வேறு கிடையவே கிடையாது!

உங்களைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி; நீங்கள் உற்சாக மாகப் பணியாற்றவேண்டும். நம்முடைய கொள்கைகள் நாளும், நாளும் பரவிக் கொண்டிருக்கின்றன. நாளும், நாளும் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். நமக்கு ஒன்றும் சங்கடங்கள் கிடையாது. ஆனாலும், இது தனித்தன்மை வாய்ந்தது. இந்த இயக்கம் சமுதாயத்திற்குப் பாடுபடக் கூடியது. மக்களை ஒன்றுபடுத்தக்கூடியது; சமத்து வத்தையும், சகோதரத்துவத்தையும், கருத்துச் சுதந்திரத் தையும், அடிமைத்தனம் இல்லாததையும் சொல்லக்கூடிய இயக்கம், நம்முடைய இயக்கத்தைத் தவிர வேறு கிடையவே கிடையாது.

கடைசிப் பிரச்சினை இருக்கின்ற வரையில், பெரியார் தேவைப்படுவார்!

பெரியார் என்றைக்கும் தேவைப்படுவார்! கடைசிப் பிரச்சினை இருக்கின்ற வரையில், பெரியார் தேவைப்படு வார்! பெரியாருடைய கொள்கைகள் வளர்ந்துகொண் டிருக்கும். இன்னுங்கேட்டால், பெரியார் வாழ்ந்த காலத்தை விட, பெரியாரைப்பற்றி ஆய்வு செய்யவேண்டும் என்பது உலகளாவிய நிலையிலே இன்றைக்கு எல்லா இடங் களிலும் அந்த வேகம் வந்துகொண்டிருக்கிறது. நம்மை அறியாமலேயே பலர் பல கருத்துகளைச் சொல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே, உங்களைச் சந்திப்பதிலேயே மிகுந்த மகிழ்ச்சி. தொடர்ச்சியாக அந்தப் பணிகளை நீங்கள் செய்யுங்கள் என்று கேட்டு, விடைபெறுகிறேன்.

வணக்கம்! நன்றி!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page1/86687.html#ixzz3C1fye6Cy

தமிழ் ஓவியா said...

மும்பையில் பணக்கார கணபதியின் சக்திக்கு சவால்! நாளொன்றுக்கு ரூ.50 கோடிக்கு காப்பீடாம்!

மும்பையில் பணக்கார கணபதியின் சக்திக்கு சவால்!

நாளொன்றுக்கு ரூ.50 கோடிக்கு காப்பீடாம்!

தீ விபத்து, தீவிரவாத தாக்குதல், கலவரங்களில் பாதிப்பிலிருந்து இழப்பீடு பெறத் திட்டமாம்

மும்பை, ஆக.27- மும்பை வடாலாவில் ஜி.எஸ்.பி. சேவா மண்டல் சார்பில் விநாயகர் சிலைக்கு ரூ.260 கோடி அளவில் காப்பீடு செய்துள்ளது. விநாயகர் சிலை மற்றும் சிலைக்கு அணிவிப்பதற்காக பக்தர்களால் அளிக்கப்படும் தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை தீ விபத்து, தீவிரவாதம் மற்றும் கலவரங்களிலிருந்து காக்கும் வகையில் காப்பீடு செய்துள்ளதாக ஜி.எஸ்.பி. சேவா மண்டல் கூறுகிறது.

ரூ.22 கோடி மதிப்பில் தங்கம்

மும்பை மாநகரிலேயே பணக்கார அமைப்பாக உள்ள ஜி.எஸ்.பி. மண்டல் ரூ.259 கோடிக்கு காப்பீடு பெற்றுள்ளது. கிங் சர்க்கிள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கணபதி சிலையை 5 நாள்கள் பூஜை செய்வதற்காக வைத்திருப்ப தற்காக நாளொன்றுக்கு ரூ.51.7 கோடி மதிப்பில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. சிலை மட்டும் ரூ.22 கோடி மதிப்பில் தங்கம் இதுவரை செலவாகி உள்ளதாம்.

காப்பீடு தேசியமயமாக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத் தின்மூலம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மும்பை மாகரி லேயே மற்ற மண்டல்களை விட அதிக மதிப்புள்ள மண்ட லாக வடாலாவில் அமைக்கப்பட்டு உள்ளது. மும்பை மாநகரில் பிரபலமான லால்பக்ச ராஜா ரூ.51 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதையும்கூட மிஞ்சிவிட்டது வடாலா ஜிஎஸ்பி மண்டல். தீவிபத்து, தீவிரவாதத் தாக்குதல் மற்றும் கலவரங்களிலிருந்தும் காக்கும்வகையில் ஜி.எஸ்.பி. யின் காப்பீடுமூலம் சிலை, தங்கம், மண்டபம் என்று இவைகளுக்கு மட்டுமின்றி அங்கு கூடும் பக்தர்களுக்கும் சேர்த்து காப்பீடு உள்ளடக்கி உள்ளது. முதல் நாளில் தொடங்கும் காப்பீடு விழா முடிந்ததுமே முடியாது. அமைப்பைச் சேர்ந்தவர்கள் விழா கடைசி நாளில் சிலையின் தங்க ஆப ரணங்களை பாதுகாப்பாக வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்துக்குள் வைப் பதுவரை காப்பீடு இருக் கும். முதல் நாளில் தொடங்கி சிலை நகைக்கடைகளி லிருந்து வரும் தங்க ஆபரணங்களைக்கொண்டு சிலையை தண்ணீரில் மூழ் கடிக்கும் வரையிலும் அலங் காரங்கள் செய்யப்படும். தண்ணீரில் மூழ்கடிப்பதற்கு சற்றுமுன்பாக சிலையிலிருந்து தங்க ஆபரணங்கள் அகற் றப்பட்டு, அடுத்த ஆண்டுக்கு பாதுகாப்பாக வைக்கப்படும்.

மண்டலுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.258.9 கோடி

ஜி.எஸ்.பி.மண்டல் மூத்த அறக்கட்டளை உறுப்பினரான சத்தீஷ் நாயக் கூறும்போது, தேசிய மயமான காப்பீடு நிறுவனங்கள்மட்டும் பங்கேற்பதற்கான ஒப்பந்தப் புள்ளியைக் கோரினோம். காப்பீட்டுத்துறையில் உள்ள தனியாரை உள்ளேக் கொண்டுவரவில்லை. காப்பீட்டுத் தவணைத்தொகையை வெளியிடவில்லை. ஆனாலும், காப்பீட்டுக்கான பிரீமியத் தொகை மட்டும் இலட்சங்களில் இருக்கும். மண்டலுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.258.9 கோடியாக அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

லால்பக்சா ராஜா மண்டல் ரூ. 51 கோடி காப்பீட்டுத் தொகைக்கு தவணைத் தொகையாக(பிரீமியம்) ரூ. 12 இலட்சத்தை செலுத்தியுள்ளது. அதன்படி பார்க்கும்போது, ஜிஎஸ்பி மண்டல் காப்பீட்டுத் தவணைத் தொகை (பிரீமியம்) குறைந்தபட்சம் ரூ.50 இலட்சத்தையாவது செலுத்த வேண்டியிருக்கும் என்று கருதப்படுகிறது.

தவணைத்தொகை ரூ.இரண்டரை இலட்சத்துக்கும்மேல்...

காப்பீட்டு நிறுவனத்தின் மூத்த மேலாளர் ஒருவர் கூறுகையில், சாதாரண பாலிசியைப் போன்று மண்டல் காப்பீட்டுப் பிரீமியித்தை கணக்கிட முடியாது. சாதாரண மாக காப்பீட்டுத்தொகை ரூ.இரண்டு கோடி என்றால், அதற்கானத் தவணைத்தொகை ரூ.இரண்டரை இலட் சத்துக்கும் மேல் இருக்கும். ஆனால், மண்டல் காப்பீடு செயல்பாடு வேறு விதமானது. அவர்கள் காப்பீடு செய் துள்ளதானது தீ விபத்து, தீவிரவாத செயல்கள் போன்ற வற்றைக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவே, ரூ. 259 கோடி காப்பீட்டுக்கு அரை கோடியைத் தாண்டியே தவணைத் தொகை இருக்கும். ஆனாலும், இது யூகத்தின் அடிப் படையிலான வேலையே ஆகும்.

தேங்காய் ஒப்பந்தப்புள்ளி

ஜிஎஸ்பி மண்டல் சார்பில் 1.75 இலட்சம் எண்ணிக்கை யில் தேங்காய்கள் பெறுவதற்காக ஒப்பந்தப்புள்ளியைக் கோரி உள்ளது. இறுதியாக ரூ.31.5 இலட்சத்துக்கு முடி வானது. அதன்படி, தேங்காய் ஒன்றின் விலை ரூ.18-லிருந்து ரூ.20 ஆக இருக்கும்.

5 இலட்சத்தில் தங்க மலர்

ஜிஎஸ்பி மண்டல் 150 கிராம் எடை அளவுள்ள தங்க மலர் ரூபாய் 5 இலட்சம் மதிப்பில் கொடையாகப் பெற் றுள்ளது என்று அதன் அறக்கட்டளை சார்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page1/86597.html#ixzz3C1gYCnrz

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கிருதா யுகத்தில் சத் தியமும், திரேதாயுகத்தில் ஞானமும், த்வாபர யுகத் தில் வைராக்கியமும் மோக்ஷத்திற்குச் சாதனம். ஆனால், இக்கலியில் பக்தியினாலேயே மோக்ஷம் கிடைக்கிறது. - காமகோடி, 1.5.1994

அப்படியோ? திரேதா யுகத்தில்தான் அறிவுக்கு (ஞானத்துக்கு) வேலை. கலியில் அறிவுக்கு வேலை யில்லை என்று பொருளா?

ஆமாம், அது என்ன மோக்ஷம்? அதன் அட் ரஸ் என்ன?

Read more: http://viduthalai.in/page1/86598.html#ixzz3C1gfyG2g

தமிழ் ஓவியா said...

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அடுத்த நிலையில் - அதிக எண்ணிக்கையுள்ள காங்கிரசுக்கு அளிப்பதே சரியான நிலைப்பாடு! தேவை பிடிவாதம் அல்ல - ஜனநாயகப் பண்பு!


லோக்பால் தலைவர் உள்பட பல நியமனங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தேவை என்பது சட்டத்தின் நிலை!

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அடுத்த நிலையில் - அதிக எண்ணிக்கையுள்ள காங்கிரசுக்கு அளிப்பதே சரியான நிலைப்பாடு!

தேவை பிடிவாதம் அல்ல - ஜனநாயகப் பண்பு!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

21ஆம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவுகளை மனிதனே சுமப்பதா? நவீன தொழில் நுட்ப முறைகளைக் கையாள வேண்டும்!

மக்களவையில் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் இல்லை என்பதைக் காரணம் காட்டி, காங்கிரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பைத் தவிர்ப்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல; இதில் பிடிவாதம் காட்டாமல் ஜனநாயகப் பண்புடன் பி.ஜே.பி. நடந்துகொண்டால், அதுதான் பெருமையாக இருக்க முடியும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

நாடாளுமன்றத்தின் மக்களவையில், தற்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்களது தலைமையில் அமைந்துள்ள ஆட்சிக்கு, அறுதிப் பெரும்பான்மைக்குமேல் எண்ணிக்கை - கடந்த பொதுத் தேர்தலில் மூன்று மாதங்களுக்குமுன் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கிடைத்துள்ளது. (பா.ஜ.க. 39 சதவிகித வாக்குகளையே பெற்றது - ஏராளமான இடங்களைப் பெற்றாலும்கூட!).

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்மீது பலதரப்பட்ட மக்களுக்கும் ஏற்பட்ட கோபம், சுழன்றடித்த சூறாவளியாக மாறி அதனைத் தோற்கடித்து வெறும் 19 சதவிகித வாக்குகளையே அது பெற்று, 44 இடங்களைப் பெற்ற கட்சியாக சிறுத்தது.

இதன் விளைவு.... வெறும் எண்ணிக்கை கணக்கு மக்களவை மொத்த உறுப்பினர்கள் தொகையில் 10 இல் ஒரு பங்கு - அதாவது 55 உறுப்பினர்கள் இருந்தால்தான் அக் கட்சியை அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக அறிவிக்க முடியும்; அந்தப் படிக்கு இல்லாத காரணத்தால், பி.ஜே. பி.க்கு அடுத்த பெரும் கட்சியான காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து தந்து அங்கீகரிக்க இயலாது என்று மக்களவையின் சபாநாயகர் திருமதி சுமித்ரா மகாஜன் அவர்கள் அறிவித்துள்ளார்.

தேவை மறுபரிசீலனை!

இது நமது ஜனநாயகத்தின் ஆரோக்கியமான போக்காக இருக்க முடியாது; இதுபற்றி, பா.ஜ.க.வின் பிரதமரும், ஆளுங்கட்சியும், சபாநாயகரும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற ஜனநாயகக் குரல் ஊடகங்களிலும், ஏடுகளிலும் பரவலாக எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. நேற்று வெளிவந்த எக்னாமிக் டைம்ஸ் என்ற ஆங்கில நாளேடு (25.8.2014) மிக அருமையான தலையங்கம் இது பற்றி எழுதி, சபாநாயகரின் முடிவு என்று கூறி, இப்படி ஒரு நிலைப்பாட்டை - அதாவது இரண்டாவது பெரிய கட்சி யான காங்கிரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவிப் பொறுப் பைத் தர முடியாது. அதன் எண்ணிக்கைக் குறைவு காரண மாக என்ற வாதத்தை எடுத்திருப்பது, அரசுக்குப் பெருமை சேர்க்காது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதோடு, ஏற்கெ னவே மக்களவையின் சபாநாயகராக இருந்த சட்டத்தில் ஆழ்ந்த புலமை கொண்ட, அனுபவம் நிறைந்த பார்லி மெண்டேரியன் ஆன சோம்நாத் சாட்டர்ஜியின் பேட்டி ஒன்றினையும்கூட வெளியிட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

ஆளும் கட்சி பெற்ற வாக்குகளைவிட எதிர்க்கட்சிகள் பெற்றது அதிகம்

திரு.சாட்டர்ஜி அவர்கள், சபாநாயகர் திருமதி சுமித்ரா மகாஜன்மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு; ஆனால், இந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பற்றிய அவரது முடிவு ஏற்கத்தக்கதல்ல. காரணம், அந்த 10 சதவிகித எண்ணிக்கை என்பது சட்டம் அல்ல; அது ஒரு வழிகாட்டும் நெறிமுறையே (Just a direction given by the First Speaker, at a particular context)
- அதுவும் கூட முதல் சபாநாயகரால் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் உருவாக்கிய நெறி அவ்வளவுதான்! அதையே பிடித்துக்கொண்டு இப்போது வாதிடவேண்டிய தேவையில்லை.

அப்படிப் பார்த்தால், மற்ற எதிர்க்கட்சிகள் வாங்கிய வாக்குகள் - பொதுத் தேர்தலில் பி.ஜே.பி.யைவிட கூடுத லாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெறவேண்டிய குழுக்கள்

அத்துடன், ஊழலைத் தடுக்கும் தலைமை அதிகாரி லோக்பால் நியமனத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெறவேண்டும்; அதுபோலவே, மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்புத் தலைமை அதிகாரி (Central Vigilence Commissioner), சி.பி.அய். என்ற மத்திய குற்ற விசார ணைக் கமிஷன் தலைவர், தேசிய மனித உரிமை ஆணை யத்தின் தலைவர் போன்ற மிகமிக முக்கிய பதவிகளுக்குத் தேர்வாவோர்களை முடிவு செய்வதில் எதிர்க்கட்சித் தலைவருக்கு முக்கிய பங்குண்டு என்பது சட்டமாக இருப்பதாலும்தான். இதில் நீக்குப்போக்குடன் ஜனநாயகப் பார்வையுடன் ஆளுங்கட்சி முடிவு எடுக்கவேண்டும் என்பதை இத்தகைய சட்ட வல்லுநர்கள் - மக்களாட்சியின் மாண்பினைக் காக்க விழையும் நடுநிலையாளர்கள் வற்புறுத்துகின்றனர்!

ஊழல், லஞ்ச ஒழிப்பு, மிகப்பெரிய குற்றங்களைக் கண்டறிந்து வழக்குப் போடும் கமிஷன் (சி.பி.அய்.) போன்ற அமைப்புகள் அனைத்துத் தரப்பினரின் கருத்தளிப்பும், பங்கும் இருக்கவேண்டும் என்பதுதான் அச்சட்டங்கள் இயற்றியபோது (இன்றைய ஆளுங்கட்சி அன்றைய எதிர்க்கட்சியாக இருந்தபோதும்) கூறி வற்புறுத்தியே உரு வான சட்டங்கள் அடிப்படையிலான பதவிகள் நிரப்பப் படாமல் செயல்படாமல் - இதன் காரணமாக இருப்பது நாட் டின் நிர்வாக நலனுக்கு - வளர்ச்சிக்குக் கேடு அல்லவா?

இருப்பதில் யாருக்கு அதிக எண்ணிக்கை?


தமிழ் ஓவியா said...

பெரும்பான்மையான கட்சியைத்தான் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க அழைப்பார் சட்டப்படி. அறுதிப்பெரும்பான்மையே யாருக்கும் கிடைக்க வில்லை என்றால், என்ன நடைமுறை அவரால் பின்பற்றப்படுகிறது?

இருப்பதில் யாருக்கு அதிக இடங்கள் பெற்றிருக் கிறதோ, அக்கட்சியை அழைக்கிறார். அவர் ஆட்சி அமைக்க மறுத்துவிட்டால், அதற்கு அடுத்த கட்சியைத் தானே அழைக்கிறார்.

(ஏற்கெனவே ஆம் ஆத்மி கட்சிக்கோ, பி.ஜே.பி.,க்கோ டில்லி சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிட்டாத நிலையில், பின்பற்றப்பட்ட நடைமுறை இவ்வளவு விரைவில் மறந்துவிடுமா?)

சுமார் 5 ஆண்டுகள் நரசிம்மராவ் தலைமையில் நடைபெற்ற ஆட்சி மைனாரிட்டியாக இருந்த அரசுதானே! பா.ஜ.க. அறியாத செய்தியா இது?

ஏன் முதல் முதலாக ப.ஜ.க. வாஜ்பேயி அவர்கள் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்று 13 நாள்களில் தானே ராஜினாமாமூலம் கவிழ்ந்துவிட்ட ஜனநாயக முறை மறந்துவிடுமா?

தேவை பெருந்தன்மை!

ஆளுவதற்கே பெரும்பான்மையில்லாத நிலையிலும், ஆட்சியை ஒரு கட்சியிடம் ஒப்படைக்கும்போது, எதிர்க் கட்சித் தலைவர் பதவி தருவதற்கு இப்படி ஒரு தேவையற்ற பிடிவாதம் - ஜனநாயகத்திற்கு குறுகிய பொருள் தரும் வறட்டுத்தன்மை தேவைதானா? ஜனநாயகப் பண்புடன், ஆளுங்கட்சி நடந்துகொள்ள முன்வரவேண்டாமா?

ஏராளமான எண்ணிக்கையை வைத்துள்ள பா.ஜ.க. இதில் மிகப் பெருந்தன்மையோடு நடந்துகாட்டினால்தான் அதற்குப் பெருமையாக உச்சநீதிமன்றம் போன்றவை இடித்துரைத்த பின்னர் - முடிவுக்கு வருவதோ - தேவை யற்ற வேறு சில சட்டத் திருத்த முயற்சிகளில் ஈடுபடுவதோ அதற்கு ஜனநாயகத்தில் உள்ள நம்பிக்கையைக் காட்டாது.

எனவே, சீர்தூக்கி முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் மத்திய ஆளுங்கட்சி!

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும் - குறள் 448


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

27.8.2014, சென்னை

Read more: http://viduthalai.in/page1/86596.html#ixzz3C1gmHYwN

தமிழ் ஓவியா said...

தமிழ் முன்னேற...


முதலாவதாக தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்கவேண்டுமானால், தமிழையும், மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்கவேண்டும்.
- (குடிஅரசு, 26.1.1936)

Read more: http://viduthalai.in/page1/86602.html#ixzz3C1gyFeD4

தமிழ் ஓவியா said...

1972 பண்டார நாயகா சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்பின் சந்திரிகா பண்டாரநாயகா புது சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதிபர் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார். இனத்தால் சிங்களவர், மதத்தால் பவுத்தர்தான் அதிபராக வர முடியும் என்பதுதான் அந்தச் சட்டம்.

ஜெயவர்த்தனே - ராஜீவ் ஒப்பந்தப்படி தமிழுக்கும் ஆட்சி மொழி தகுதி வழங்கப்படவேண்டும். வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவேண்டும். அதற்காக ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். ஆனால், இவை செயல்படுத்தப்படவில்லை.

இதுகுறித்து இதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் தலைமை யிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் சரி, இப் பொழுதுள்ள பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாக இருந்தாலும்சரி, கண்டுகொள்ளப்பட வில்லையே, ஏன்?

அப்படி ஏதும் கேட்காததால்தான், டெசோ இத்தகு தீர்மானத்தை இயற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதில் குறிப்பிடத்தக்க கொடுமை என்னவென்றால், ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் கண்டுள்ள வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு என்ற அம்சத்தை எதிர்த்து, சிங்கள இனவெறி அமைப்பான ஜே.வி.பி. (இதில் மார்க்சிஸ்டு என்ற வெட்கம் கெட்ட முத்திரை வேறு!) மூலம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

சரத்சில்வா என்னும் ராஜபக்சேவின் எடுபிடிதான் அந்த உச்சநீதிமன்ற நீதிபதி- வடக்கு - கிழக்கு இணைப்புச் செல்லாது என்ற தீர்ப்பினைக் கொடுத்துவிட்டார் (2006 அக்டோபர்).

இரண்டு நாடுகளுக்கிடையே செய்துகொண்ட ஒப்பந்தத் தைத் தன்னிச்சையாக இலங்கை ரத்து செய்தது எப்படி என்ற சட்ட ரீதியான கேள்வியை எழுப்பக் கூட இந்திய அரசுக்கு முதுகெலும்பு இல்லை.

இலங்கை உச்சநீதிமன்றத்தில் இப்படியொரு தீர்ப்பைப் பெற்றுக்கொண்ட இலங்கை சிங்கள அரசு உடனடியாக கிழக்கு மாகாணத்துக்குத் தேர்தலையும் நடத்தி (2.5.2008) துரோகி கருணாவின் குழுவினரான பிள்ளையான் என்ற பிடித்து வைத்த ஒரு கொழுக்கட்டையை முதல் அமைச்சராக்கி வேடிக்கை காட்டியது. ஒவ்வொரு கால கட்டத்திலும் சில ஒப்பந்தங்கள் போடப்பட்டதுண்டு; அவையெல்லாம் காகிதக் கப்பல்களே தவிர, காரியத்திற்கு உதவிடவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

இந்தச் சூழ்நிலையில், உண்மையான உள்ளத்துடன் ஈழத் தமிழர் பிரச்சினையில் ஈடுபாடு காட்டி, 13 ஆவது சட்டத் திருத்தத்தில் கண்டுள்ளவைகளைக் கண்டிப்பாக நிறைவேற்றச் செய்யும்வரை தொடர் நடவடிக்கையும் தொடர் அழுத்தமும் இந்திய அரசு தரப்பில் தேவைப்படுகிறது!

இலங்கைத் தமிழர்கள் சம உரிமை, நீதி, கவுரவம், சுயமரியாதையுடன் வாழ்வதை உறுதி செய்யவேண்டும் என்று இலங்கை அரசை பிரதமர் நரேந்திர மோடி வற்புறுத்தியுள்ளது - வெறும் வார்த்தை அளவில் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதுதான் டெசோவின் தீர்மானமாகும் (26.8.2014).

டெசோவை பொறுத்தவரையில் உரிய காலத்தில் அதன் கடமையைத் தொய்வின்றி ஆற்றி வருகிறது. நேற்றுக் கூடி நிறைவேற்றிய தீர்மானங்களும் அந்த வகையைச் சார்ந்ததே!

Read more: http://viduthalai.in/page1/86604.html#ixzz3C1h6AJ8r

தமிழ் ஓவியா said...

இயக்கத்தை அழித்துவிடலாம் என சில சக்திகள் படமெடுத்தாடுகிறது


இயக்கத்தை அழித்துவிடலாம் என சில சக்திகள் படமெடுத்தாடுகிறது

உங்களைப் போன்ற போர் வீரர்கள் இந்த இயக்கத்திற்குத் தேவை!

திருச்சி சிவா துணைவியார் நினைவேந்தலில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை


சென்னை, ஆக.27- இயக்கத்தை அழித்து விடலாம் என சில சக்திகள் இன்றைக்குப் படமெடுத் தாடுகிறது; அதனால் உங்களைப் போன்ற போர் வீரர்கள் இந்த இயக்கத்திற்குத் தேவை என்று திருச்சி சிவா எம்.பி., துணைவியார் நினைவேந்தல் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருச்சி சிவா எம்.பி., அவர்களின் துணைவியார் படத்திறப்பு நிகழ்வு நேற்று (26.8.2014) நடைபெற்றது. அந்நிகழ்வில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய நினைவேந்தல் உரை வருமாறு:

கனத்த இதயமாக இருந்ததை, லேசாக்கிக் கொண்டிருக்கிறார்

இங்கே நண்பர்கள் பல்வேறு செய்திகளை எடுத்துச் சொன்னார்கள். அதைவிட, திருச்சி சிவா அவர்கள், தன்னுடைய உணர்வுகளையெல்லாம் வடிகாலாக்கி, எழுத்துக்கள்மூலமாக அறிக்கை போல, கட்டுரைபோல வடித்து நமக்கெல்லாம் இங்கே வழங்கியிருக்கிறார். ஒரு வகையில் அது வரவேற்கத் தகுந்தது. ஏனென்றால், நம்முடைய நண்பர் சிவா அவர்கள் மிகப்பெரிய அளவிற்கு குமுறிக் கொண்டிருந்த நிலையை மாற்றி, தன்னுடைய உணர்வுகளையெல்லாம் வெளிப்படுத்தி, அதன்மூலம் தன்னுடைய சுமையைக் குறைத்திருக்கிறார் என்று சொல்லும்பொழுது அந்த எழுத்துக்கள் வரவேற்கப் படவேண்டிய எழுத்துக்கள்; அவைகள் வெறும் எழுத்துக்களாகக் கருதாமல், வெறும் கருத்துகளாக மட்டும் கருதாமல், தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார், அதன்மூலம் தன்னுடைய இதயம் - கனத்த இதயமாக இருந்ததை, லேசாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் உள்ளபடியே நமக்கு ஆறுதல் அளிக்கத் தகுந்ததாகும்.

நாம் சுயமரியாதைக்காரர்கள்; இறந்துவிட்ட பிறகு அதனையே நினைத்துக் கொண்டிருப்பது பகுத்தறி விற்கு ஏற்றது அல்ல; அடுத்தது என்ன? என்பதைப் பற்றி சிந்திக்கவேண்டும்.

நீரோடு போனவர்கள் எப்பொழுதும் ஈரோடு போவதில்லை

மிக அருமையாக இங்கே உரையாற்றிய அத்துணை நண்பர்களும் சொன்னார்கள். பொதுவாழ்க்கையில் இருக்கக்கூடிய யாராக இருந்தாலும், குறிப்பாக திராவிட இயக்கத்தில் இருக்கக்கூடியவர்களுக்கு அதிகப் படியான சங்கடங்கள் உண்டு. ஏனென்றால், மற்றவர்கள் நீரோடு போனவர்கள்; நீரோடு போனவர்கள் எப்பொழுதும் ஈரோடு போவதில்லை என்று கலைஞர் ஒருமுறை சொன்னார். அதுபோல், நாம் ஈரோடு போனவர்கள். எதிர்நீச்சலிலேயே இருக்கவேண்டி யவர்கள் என்று சொல்லும்பொழுது, அது ஆண்களை மட்டும் எப்பொழுதும் பாதிப்ப தில்லை. அவர்களைத் தாக்கிப் பேசுகின்ற நேரத்தில், பொதுவாழ்க்கையில் எதிரிகள் அதோடு நிறுத்தி விடுவதில்லை, நம் நாட்டில். அடுத்ததாக, அவர்களின் தாக்கம் என்பது குடும்பத் திலுள்ள தாய்மார்களை, சகோதரிகளைத் தான் தாக்கி, அவதூறு பேசுவார்கள். தன்னுடைய குடும்பத்துப் பொறுப்புகளைத் தாங்கிக் கொண்டிருப்பதோடு, அவர்கள் அதனையும் சேர்த்து சுமந்து கொண்டிருப்பது, கடைசி நேரத்தில் என்று சொல்லக்கூடிய அந்தக் காலகட்டம்வரையில் இருந்தாலும்கூட, பொதுவாழ்க்கையில் இருப்பவர் களுடைய தொண்டு, அதுவும் குறிப்பாக, திராவிட இயக்கத்திலே பணியாற்றக்கூடி யவர்களின் தொண்டு, அவர்களுடைய வாழ் விணையர்கள், வாழ்க்கைத் துணைநலத்தை ஏற்றிருக்கக்கூடியவர்கள், வாழ்க்கை துணைவியர் என்று சொன்னால், இங்கே கவிஞர் கனிமொழி அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, தளபதி அவர்கள் எடுத்துக்காட்டியதைப்போல, என்ன செய்தி என்றால், அவர்களில் பெரும்பாலோர் அவர்களது அரிய தொண்டு பற்றி எழுதியதோ, பேசுவதோ இல்லை?

ஆம்! கலங்கரை வெளிச்சத்தைப் பார்க்கும் பொழுது, அதனுடைய உச்சியைத்தான் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். மரத்தினுடைய கனிகளைப் பறித்துச் சுவைக்கக்கூடியவர்கள் பல பேருக்கு வேர் எவ்வளவு பலமாக இருக்கிறது; மரத்தினைத் தாங்கிக் கொண்டு தரும் பலாபலன்களுக்குக் காரணமாக இருக்கிறது என்பதை பலர் நினைப்பதில்லை; இது இயற்கை!

தந்தை பெரியாருக்குப் பிடித்த குறள்

ஆனால், அதையும் தாண்டி வேரால்தான் இவைகள் என்று நினைக்கும்பொழுது, வேருக்குள்ள பெருமை இருக்கிறதே, அது யாராலும் மறுக்கப்பட முடியாத, என்றென்றைக்கும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

தந்தை பெரியாருக்குப் பிடித்த குறள்போல,
குடிசெய்வார்க்கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்

பொதுவாழ்க்கையில் இருக்கின்றவர்களுக்கு நேரம், காலம் எல்லாம் கிடையாது. அவர்கள் எந்நேரமும் உழைத்துக் கொண்டிருப்பார்கள். எனவேதான், அந்த முழுச் சுமையை, அந்த முழுப் பொறுப்பை ஏற்கவேண்டியவர்கள், அவர்களுடைய வாழ்விணை யர்கள்; அவருடைய வாழ்க்கைத் துணைவியர்தான். அவர்கள் எவ்வளவு சிறப்பாக இவர்களுக்கு ஒத்துழைக்கின்றார்களோ, அதைப் பொறுத்துதான் அவர்களுடைய வாழ்க்கையில் வெற்றிகரமான பல்வேறு சாதனைகளை அவர்கள் செய்ய, நிகழ்த்த காரணமாக அமைகிறது.


தமிழ் ஓவியா said...

நம்முடைய சிவா அவர்கள் எவ்வளவோ சாதனை களைச் செய்திருக்கிறார். திருச்சியில் அவரை நான் சந்தித்தபொழுது, சுமார் 45 நிமிடம் பேசினார். அவர் நிறைய பேசவேண்டும் என்று நான் விரும்பி, பல்வேறு செய்திகளைக் கேட்டேன். காரணம், அதன்மூலமாக அவரின் மனச்சுமையைக் குறைக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்.

சோதனைகள் தோன்றிய நேரத்தில் எல்லாம்....

அப்பொழுதுதான் எனக்கு வியப்பான ஒரு செய்தி தெரிந்தது. அவருடைய திருமணம் காதல் திருமணம்; அவருடைய திருமணம் ஜாதி மறுப்புத் திருமணம்; அவருடைய திருமணம் கொள்கையிலே ஒன்றுபட்ட ஒரு திருமணம்; கடைசிவரையில் அவர்கள் அந்தக் கொள்கையைக் காப்பாற்றுவதற்காக, தலைவரிடத் திலே, இந்த இயக்கத்திலே எத்தனையோ சோத னைகள் தோன்றிய நேரத்தில் எல்லாம், அவர்கள் உங்களுக்கு மிகப்பெரிய அடித்தளம்; பூகம்பத்திலேகூட மாறாத அடித்தளம்போல, சோதனைகள் ஏற்பட்ட பொழுதெல்லாம், தளமாக இருக்கின்ற அவர், பாலமாக இருக்கக்கூடிய அளவிற்கு மிகத்தெளிவாக இருக்கிறார்.

வெறும் படம் அல்ல; பாடம்!

எனவே, இன்றைக்கு திறந்திருப்பது வெறும் துணைவியார் படம் மட்டுமல்ல; பொதுவாழ்க்கையில் இருக்கின்றவர்களுக்குப் பாடமும்கூட, அதை அவர்கள் மறந்துவிடக் கூடாது. எப்படி என்று சொன்னால், பொதுவாழ்க் கையில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும், அவர்களுடைய வாழ்விணையர் என்பவர்கள் எண்ணற்ற தியாகம் செய்பவர்களாக இருக்கிறார்கள்! இவர்கள் செய்த தியாகத்தைவிட, அவர்கள் கிடைக்க வேண்டிய அன்பைத் தியாகம் செய்திருக்கிறார்கள்; இன்பத்தைத் தியாகம் செய்திருக்கிறார்கள்; வசதி வாய்ப்புகளைத் தியாகம் செய்திருக்கிறார்கள்; அதுவும் கொள்கை ரீதியாக இருக்கக் கூடியவர்கள் என்று சொன்னால், அவர் களுக்கு மிகப்பெரிய சோதனைகள் ஏற்படும்பொழு தெல்லாம், அவர்கள் அதனைத் தாங்கிக் கொண்டிருக் கிறார்கள்.

இயக்கத்தை அழித்துவிடலாம் என்று நினைக்கக்கூடிய சக்திகள் படமெடுத்து ஆடிக்கொண்டிருக்கின்றன

தமிழ் ஓவியா said...


39 ஆண்டுகள் அவர்கள் உங்களோடு வாழ்ந்திருக்கிறார்கள்; இன்றைக்கு இல்லையே என்று நீங்கள் வருத்தப்படுவதும்; அதற்கு யார், எவ்வளவு ஆறுதல் கூறினாலும் உங்களை எளிதில் தேற்ற முடியாது என்றாலும்கூட, அருமைத் தோழர் சிவா அவர்களே, உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள் வோம்; வேறு ஆறுதல் சொல்ல முடியாது. நீங்கள் உங்கள் துன்பத்தை மறக்கவேண்டும்; உங்கள் துயரத்தை ஒதுக்கவேண்டும் என்று சொன்னால், இங்கே நண்பர்கள் அழகாகச் சொன்னதைப்போல், இந்தத் தலைமையைப் பாருங்கள்; இந்த இயக்கத்தைப் பாருங்கள்; இயக்கத்திற்குத் தோன்றியிருக்கின்ற சோதனைகளைப் பாருங்கள்; இந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என்று நினைக்கக்கூடிய சக்திகள் படமெடுத்து ஆடிக்கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில், சிவா அவர்களே, உங்களைப் போன்ற தளபதிகள், உங்களைப் போன்ற போர் வீரர்கள் இந்த இயக்கத்திற்கு இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற அறை கூவல்களைச் சந்திப்போம்; அதன்மூலமாக என்னு டைய துயரம் சாதாரணமானது; என்னுடைய துன்பம் ஒதுக்கப்படவேண்டியது; என்னுடைய கடமை பெரியது; அதனை நான் ஆற்றுவேன் என்று சொல்லி, விரையுங்கள்.

எந்தக் கொம்பனாலும் அழித்துவிடக்கூடிய ஒரு இயக்கமல்ல!

நாடாளுமன்றத்தில் எப்படி உங்கள் குரல் ஒலித்ததோ, அதுபோல், மேடைதோறும் ஒலிக்கட்டும்; திசைகள் தோறும் அந்தக் கருத்துகள் பரவட்டும்; அதன்மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பது எந்தக் கொம்பனாலும் அழித்துவிடக்கூடிய ஒரு இயக்கமல்ல என்பதை நீங்கள் இந்த நாட்டுக்கு நிலைநாட்டுங்கள். அதைத்தான் தேவிகா ராணி அம்மையார் அவர்களுடைய படம் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதைப் பாடமாக, அவர் மட்டுமல்ல, எல்லோரும் பெறுவோம்!

அவருடைய உணர்வுகள் வளர, ஆறுதல் பெற அவருக்கு நமது வீர வணக்கம், வீர வணக்கம், வீர வணக்கம்! நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page1/86625.html#ixzz3C1hHjy5l

தமிழ் ஓவியா said...

சர்வ சக்தி(?)


மேற்கு வங்காளம் கொத்தல் பூரிலிருந்து கடந்த 24ஆம் தேதி நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 60 பேர்கள் குடும் பத்துடன் தமிழ்நாட்டுக் குச் சுற்றுலா புறப்பட்டு வந்தனர். சமையல் செய்து சாப்பிடுவதற்கு 6 சமையல் எரிவாயு உருளைகளையும் (சிலிண்டர்களையும்) பேருந்தில் ஏற்றியிருந் தனர். 30.8.2014 இரவு 10 மணியளவில் கன்னியா குமரி சென்று கொண்டி ருக்கும்போது திருபுல் லாணி தாதனேந்தல் பேருந்து நிறுத்தம் அரு கில் பேருந்து வந்தபோது, பேருந்தின் பின்புறத்தில் திடீரென தீபிடித்தது.

ஓட்டுநர் அவசர அவசரமாக பேருந்தை சாலை ஓரத்தில் சாமர்த் தியமாக நிறுத்தினார். பேருந்துக்குள்ளிருந்த சமையல் வாயு உருளை யும் வெடித்தது. பயணி கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி னர். ஆனால் வயது மூப் படைந்த 5 பேர் விரை வாக வெளியேற முடி யாத நிலையில் கருகிப் போனார்கள் என்பது பெரி தும் வருந்தத்தக்கதாகும்.

இவ்வளவுக்கும் இந்தப் பயணிகள் தமிழ கம் வந்தது கோயில் தலங்களைச் சுற்றிப் பார்த்து சாமி தரிசனம் செய்யத்தான்! திருப்பதி ஏழுமலையான் கோயி லில் தரிசனத்தைத் தொடங் கிய இவர்கள் வழியில் காஞ்சீபுரம், திருக்கழுக் குன்றம், சிறீரங்கம், இராமேசுவரம் உட்பட பல கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.

கன்னியாகுமரி சென்று அங்குள்ள அம் மனை வழிபடச் சென்ற வர்களுக்குத்தான் இந்தப் பரிதாப நிலை ஏற்பட் டுள்ளது.

கோயிலுக்குச் சாமி கும்பிட சென்றவர்கள், கோயில் திரு விழாக் களுக்குச் செல்லக் கூடிய வர்கள். இதுபோன்ற விபத்துக்களில் சிக்கி பரிதாபகரமாக மரணம் அடைவது அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்றுகூட விநாயகர் பொம்மையை நீரில் கரைக்கச் சென்ற ஓமலூர் கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி மரணம்! பொள்ளாச்சி அருகே சிலைகளைக் கரைக்க காரில் சென்ற இந்து முன்னணியினர் மூவர் விபத்தில் மரணம் என்ற செய்திகள் வெளி வந்துள்ளன. இவ்வளவுக்குப் பிற கும் கோயில் கோயிலாக மக்கள் போவதும், சாமி தரிசனம் செய்வதும், நேர்த் திக் கடன் கழிப்பதும் சரியானதுதானா? என் பதைச் சிந்திக்க வேண் டாமா?

கடவுள் என்ற ஒருவர் இருந்தால், அவருக்குச் சக்தி இருக்கிறது என்பது உண்மையென்றால் கரு ணையே வடிவமானவன் என்று எழுதி வைத்திருப் பதில் கடுகளவு யதார்த் தம் இருக்குமேயானால், நாட்டு மக்களைக் காப் பாற்றுவது ஒருபுறம் இருக் கட்டும்; குறைந்தபட்சம் தன்னை நாடி வந்த பக்தர்களையாவது காப் பாற்ற வேண்டாமா?

பக்தி வந்தால் புத்தி போகும் என்று பெரியார் சொன்னது கேலிக்கல்ல வாழ்க்கையின் யதார்த் தம் என்பதை மக்கள் உணரட்டும்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/86915.html#ixzz3C7YE3p00

தமிழ் ஓவியா said...

மயிலாப்பூரில் கேட்கும் குரல்


சென்னையில் இந்திய தேசிய பெண்கள் சம்மேளனத் தின் 60ஆம் ஆண்டு விழா கடந்த சனியன்று நடைபெற் றுள்ளது. அதில் உயர்நீதிமன்ற நீதிபதி பிரபாஸ்ரீதேவன், சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா, பெண்கள் கூட்டமைப்பின் தலைவர் கே. சாந்தகுமாரி, பேராசிரியர் காதம்பரி போன்றோர் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை மட்டுமே பெண்களுக்கு எதிரான கொடுமையல்ல. கல்வி, சுகாதாரம், சொந்த நிலம் வழங்கப்படாததும் பெண்கள்மீதான வன்முறைதான் என்று கூறப்பட்டு இருப்பது சிறந்த கருத்துக்களே!

பாலியல் வன்முறை என்று கூறும்பொழுது அண்மைக் காலங்களில் இதன் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. பெண் குழந்தைகள்கூட இதில் தப்ப வில்லை என்பது - நாம் 21ஆம் நூற்றாண்டில்தான் வாழு கிறோம் என்று சொல்லுவதற்கும் வெட்கப்படத்தான் வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்த நோய் வெகு வேகமாகப் பற்றிக் கொண்டு திரிகிறது. டில்லியில் மருத்துவக் கல்லூரி மாண விக்கு ஏற்பட்ட கொடுமையை எதிர்த்து தலை நகரமே மக்கள் தலைகளாகக் காணப்பட்டது. பெரும் யுத்தமே நடந்தது; அதன் விளைவாக ஆட்சி மாற்றமேகூட நிகழ்ந்ததுண்டு.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் இந்தத் திசையில் ஒரு செய்தியாக வந்து கொண்டு தானி ருக்கிறது! ஆனால் இந்தியாவின் தலைநகரம் கொதித் தெழுந்ததுபோல தமிழ்நாட்டில் ஏன் நிகழவில்லை? இதில் அரசியலும் இருக்கிறது. ஊருக்கே உபதேசம் செய்யப் பிறப்பெடுத்ததாக மார் தட்டும் தமிழ்நாட்டு ஊடகங்களும் இதற்குத் துணை போயுள்ளன என்பதும் வருத்தத் திற்குரியதே.

இன்னும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய இழப்பீடுகள் பற்றியது. 357-ஏ குற்ற நடைமுறைச் சட்டம் 1973 இதுபற்றிப் பேசுகிறது. உயிரிழப்பு ரூ.3 லட்சம், பாலியல் வன்முறை ரூ.3 லட்சம், மன உளைச்சல் ரூ.ஒரு லட்சம் வழங்கப்பட வேண்டும்.

கடந்த ஈராண்டுகளில் இதுபற்றிய நிலை என்ன? 212 வழக்குகளில் 73 குழந்தைகள் மருத்துவ உதவிக்காகவும் 65 பேர் மனநல மருத்துவ உதவிக்காகவும், 38 பேர் பாதுகாப்பு இல்லங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். 2013-2014 கால கட்டத்தில் வெறும் ஏழு பேர்களுக்கு மட்டுமே இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடுமைக்கு இழப்பீடு பரிகாரமா என்று கேட்கக் கூடும்.

பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாலேயே அவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா? அந்தக் கொடுமைக்கு ஆளானவர்களா அதற்குக் காரணம்! காரணமானவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து நுழைந்து தப்பித்துக் கொள்கின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வுதான் பரிதாபமானது! இந்த நிலையில் அவர்களுக்கு இழப்பீடும், பராமரிப்புச் சேவைகளும் கண்டிப்பாக தேவைப்படுகின்றன.

இது போன்ற வழக்குகளில் காவல்துறைக்கு ஒரு காலக் கெடு விதித்துக் குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்த வேண்டும். பத்து பதினைந்து ஆண்டுகள் என்றால் இது அந்தப் பாலியல் கொடுமையைவிட மோசமானது.

பெண்களுக்குக் கல்வி வேலை வாய்ப்பு அவசியம் தேவை. அதே நேரத்தில் கல்விச் சாலைகளிலும், பணியாற் றும் இடங்களிலும்கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையே! இதற்கொரு முடிவு கட்டப்பட வேண்டாமா? கொஞ்ச நாட்களுக்குப் பெண்கள் கைகளில் துப்பாக் கியைத் தான் கொடுத்துப் பார்க்கலாமே - என்ன ஆகி விடப் போகிறது என்பதை அனுபவத்தில்தான் அறிய முடியும்.

பெண்களைப் பலகீனமானவர்கள் என்று கருதும் ஆண்களின் சிந்தனையில் ஒரு அச்சத்தை ஏற்படுத்த வேண்டியது. காலத்தின் கட்டாய மட்டுமல்ல; உளவியல் ரீதியான நோய்த் தடுப்பு என்றுகூட இதனைக் கருதலாம்.

ஆண்களுக்கு நிகராக பெண்களுக்குச் சொத்துரிமை என்று சட்டம் வந்தாகி விட்டது; இது எந்த அளவுக்குச் செப்பமாக, நீதியாக, நேர்மையாக, நாணயமாக செயல்பாட்டில் இருக்கிறது என்பது கண்டறியப்பட வேண்டும். இதில் ஓட்டைகள் ஏதேனும் இருக்குமானால் அதனையும் அடைத்தாக வேண்டும்.

சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய நீதிபதி - நீதித்துறையில் பெண்களுக்கு உரிய இடங்கள் கிடைக்கப் பெறவில்லை. பெண் நீதிபதியாக இருக்கும் பட்சத்தில்தான் வாழ்வியல் அனுபவங்களின் அடிப் படையில் பெண்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு தீர்ப்பு வழங்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

இதுபோன்ற அடிப்படை உரிமைகளைப் பெண்கள் பெற வேண்டும் என்றால் சட்டம் செய்யும் இடங்களில் (சட்டமன்றம் - நாடாளுமன்றங்களில்) பெண்களுக்கு 33 சதவீதம் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்படாமல் தடைகளுக்குள் சிக்கிக் கிடக்கிறதே அதுநடைமுறைக்கு வர வேண்டாமா? இது வரக் கூடாது என்பதில் மட்டும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஓரணியாகத் திரண்டு கூடிக் குலவுவதை என்னென்று சொல்லுவது?

தமிழ் ஓவியா said...

பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? அதுபோலவே ஆண்களால் பெண்களுக்கு விடுதலை ஒரு போதும் கிடைக்காது என்று சொன்ன பெண்ணியல்வாதி தந்தை பெரியார் அவர்களின் கருத்துதான் சமுதாயத்தின் முன் பேரொளியாய் எழுந்து நிற்கிறது.

மக்கள் விழிப்புணர்வு இதில் மகத்தானது; தந்தை பெரியார் அவர்களின் பெண்ணியக் கருத்துகள் ஆரம்பக் கல்வி நிறுவனங்களிலிருந்து கற்பிக்கப்பட வேண்டும் பெண்ணடிமைத்தனம் என்பது மதத்தின் வாயிலாக - பக்தியின் வாயிலாக குருதியில் ஊறச் செய்யப்பட்டுள்ளது. அந்த வேரை எடுத்தெறியாமல், வெறும் ஒத்தடங்கள் கொடுப்பது நகைச்சுவைக்கான நல்ல தீனியாகும்.

உடல் ரீதியாக பெண்கள் பலகீனமானவர்கள் என்றால் அந்தப் பலகீனத்தைப் போக்குவதற்கான பயிற்சிகள் பள்ளிகளில் கட்டாயம் இடம் பெற வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவதுபோல பெண்கள் சிங்காரம், அணிமணிகளில் ஆழ்ந்து கிடக்கும் உணர்வு என்னும் சிறையிலிருந்து விடுதலையாக வேண் டும். அப்படியொரு நிலைப்பாடு பெண்கள் மத்தியில் வெகுண்டெழுந்தால், சிந்தனைகள் உரிமைகளின் பக்கமும், ஆண்கள் ஆதிக்கத்தின் பக்கமும், கம்பீரமாக எழும் அல்லவா! மயிலாப்பூரில் பேசிய பெண்ணுரிமையாளர்கள் இந்தத் திசையில் சிந்தித்தார்களா பேசினார்களா? என்று தெரியவில்லை! அவர்கள் பேசாவிட்டாலும் பெரியார் இயக்கம் பேசும் - பெரும் புரட்சியையும் நடத்திக் காட்டும்! வாழ்க பெரியார்!

Read more: http://viduthalai.in/page-2/86921.html#ixzz3C7YnT6b3

தமிழ் ஓவியா said...

நிரந்தர விரோதி

நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூடநம்பிக்கை யும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கின்றன.
(குடிஅரசு, 13.4.1930)

Read more: http://viduthalai.in/page-2/86927.html#ixzz3C7YvBjDx

தமிழ் ஓவியா said...

தேனினும் இனிய விடுதலை

22.8.2014 நாளிட்ட விடுதலை நாளிதழில் வெளிவந்துள்ள செய்திகள் அனைத்தும் அருமை. அவை பாதுகாக்கப்பட வேண் டிய பாதுகாப்புப் பெட்டகமாகவும், கருத் துக் கருவூலமாகவும் திகழ்கின்றன. குறிப்பாக

1) ஜாதி - தீண்டாமை ஒழிய அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமையினை நிறைவேற்றித் தருமாறு முதல்வர் ஜெயலலிதா அவர்களை வலி யுறுத்தி தமிழர் தலைவர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை மற்றும் கோமாதா ஆந்திராவில் படுத்தியபாடு!

2) நம்ம தியாகராயர் நகர்! - கோவி. லெனின் அவர்கள் எழுதிய கட்டுரை.

3) 375-ஆம் ஆண்டில் சென்னை நகரம்! - தலையங்கம், கைவல்யம் நாள் (22.8.1877).

4) சிப்பாய்க் கலகம் சுதந்திரப் போராட்டம் அல்ல - மதப்போராட்டமே என்று சொன்னவர் தந்தை பெரியார்! என் கின்ற அரிய என் போன்ற இளைஞர் களுக்கும் - மாணவர்களுக்கும் புதிய தகவலை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய சிறப்புக் கூட்டத்தில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாரி வழங்கிய பல வரலாற்றுத் தகவல்கள்.

5) மாணவர்களுக்கான பெரியார் 1000 வினா - விடைப் போட்டி நடைமுறைகள்!

6) பகுத்தறிவுக் களஞ்சியம் பகுதியில்; புத்தர் அறிவுரைகள், தந்தை பெரியார் பொன்மொழி மற்றும் தாய்மார்களுக்கு தந்தை பெரியார் அறிவுரை, மருத்துவம் வென்றது, விடை என்ன? என்ற தலைப்பில் ஆத்திகவாதிகளுக்கு அடுக்கடுக்கான அர்த்தமுள்ள கேள்விகள் ஆகியவை மக்களை சிந்திக்கத் தூண்டுகின்றன.

7) மேலும், சென்னையின் 375 ஆம் ஆண்டில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் வரலாற்றுக் கொண்டாட்டம் - நடைப்பயணம்! நடைப்பயணம் மேற் கொண்ட கழக முன்னோடிகள் - தோழர்கள் ஆகியோர் தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலை முன்பும், தியாகராயர் நகர் டாக்டர் நடேசன் பூங்காவிலும் எடுத்துக்கொண்ட வண்ணப் புகைப்படங்கள் கண்களைக் கவர்ந்தன.

8) இறுதியாக, நாளைய தலைமுறைக் கான நாற்றங்கால் - பெரியார் 1000! போன்ற எண்ணற்ற பயனுள்ள செய்திகள் இளைஞர் களுக்கும், மாணவர்களுக்கும் விருந்தாக வும் அரு மருந்தாகவும் அமைந்தது.

இவ்வாறு தேனினும் இனிய செய்தி களைத் தாங்கி பல வண்ணங்களுடனும், பகுத்தறிவு எண்ணங்களுடனும் நாள் தோறும் வெளிவருகின்ற உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளேட் டினை இளைஞர்களும் - மாணவர்களும் ஆவலுடன் படித்துப் பாராட்டி மகிழ் கின்றனர், போற்றிப் புகழ்கின்றனர்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- சீ.இலட்சுமிபதி, தாம்பரம், சென்னை-45

Read more: http://viduthalai.in/page-2/86924.html#ixzz3C7ZRhKpG

தமிழ் ஓவியா said...

பற்களில் கறை போக்க...

என்னதான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கறை கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான். நீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (Pottasium Permanganate) (KMNO4)பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch) போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும். (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கறைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

பல் வலியிலிருந்து நிவாரணம் பெற சில வழிமுறைகள்

பல் வலியிலிருந்து நிவாரணம் பெற கோவைப்பழம் சாப்பிடலாம்.

மகிழம் இலையை கஷாயம் செய்து வாய்க் கொப்பளித்து வந்தால், பல் நோய் எதுவும் அண்டாது.

மாவிலையைப் பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால், பற்கள் உறுதி பெறும்.

ஒரு துண்டு சுக்கை எடுத்து வாயில் போட்டுக் கொண்டால், பல்வலி நீங்கும்.

நந்தியாவட்டை வேரை மென்று துப்பினால், பல்வலி குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/86882.html#ixzz3C7a9FYir

தமிழ் ஓவியா said...

நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்


நெல்லிக்காய் லேகியம்: 150 கிராம் பனை வெல்லத்துடன் இரண்டு ஆழாக்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பனைவெல்லம் கரைந்தவுடன் இறக்கி இதனை மேலாக இறுத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் விட வேண்டும்.

பின்னர் அடுப்பில் வைத்து அதனுடன் ஒரு ஆழாக்கு அளவு சுத்தமான பசும்பால் விட்டு நன்றாக கொதித்து வரும் சமயம், இடித்து சலித்த நெல்லிக்காய் வற்றல் தூளில் ஆழாக்கு அளவு இதில் போட்டு பாகுபதம் வரும்போது, அரை ஆழாக்கு தேன், அரைஆழாக்கு சுத்தமான பசு நெய்யினை விட்டுக் கிளறி லேகியபதம் வந்தவுடன் இறக்கவேண்டும்.

ஆறிய பின்னர் வாயகன்ற பாட்டிலில் இட்டு மூடி வைத்து தினசரி காலை மற்றும் மாலையில் தேக்கரண்டி சாப்பிடலாம்.

இந்த லேகியம் வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகியவற்றை சமன் செய்யும். உடலுக்குப் பலத்தை தருவதுடன், பித்தம் காரணமாக ஏற்படும் கிறுகிறுப்பு, வாந்தி, அரோசிகம் மாறும். ரத்தம் சுத்தமாகும்.

பெருங்குடல், சிறுகுடல், இரைப்பைகளில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும். சொறி, சிரங்கு நமைச்சல் குணமாகும். கருவுற்ற நிலையில் 21 நாள்கள் சாப்பிட சுகப்பிரசவம் ஏற்படும். கருப்பை கோளாறுகளைக் குணப்படுத்தும். காய கல்ப மாக செயல்படும் இந்த லேகியம் 3 மாதம் வரை கெடாது.

நெல்லிக்காய் வடாம்: ஒரு படி நெல்லிக்காயை கொஞ்சம் கொஞ்சமாக உரலில் போட்டு இடித்தால் மசித்து அதன் வித்துக்கள் வெளியேறும். நைந்தபின் வித்துக்களை நீக்கி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

எல்லாக் காய்களையும் இடித்த பின் பெரிய பச்சை மிளகாயில் 10-ம், இரண்டு கொட்டை பாக்களவு தோல் சீவிய இஞ்சி, கைப்பிடியளவு கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு ஆகியன சேர்த்து மறுபடியும் உரலில் போட்டு மைபோல் இடிக்கவேண்டும்.

பின்னர் அதனை எடுத்து உளுந்து வடை அளவிற்கு அடையாகத் தட்டி சுத்தமான பாயில் வைத்து, வெயிலில் உலர்த்தவேண்டும்.
நீர் சுண்டி சருகுபோல காய்ந்த பின் எடுத்து ஜாடியில் அடுக்கி மூடி வைத்துவிட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவேண்டும். இது வெகுநாட்கள் கெடாது.

நெல்லிக்காய் சஞ்சீவி லேகியம்: நன்றாக பழுத்த நெல்லிப்பழங்களின் விதைகளை நீக்கி வெயிலில் சருகாக உலரவிட வேண்டும். பின்னர் அதனை உரலில் இடித்து சலித்துக் கொள்ள வேண்டும்.

சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை தலா 5 கிராம் எடுத்து இடித்து சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இரண் டாழாக்கு பசுவின் பாலை நன்றாக கொதிக்க வைத்து, அதில் 200 கிராம் பனைவெல்லத்தை போட்டு பாகு பதம் வரும் சமயம், அரை ஆழாக்கு சுத்தமான தேனை விட்டு சுக்கு, மிளகு, திப்பிலி தூளையும் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி ஒரு வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி தேக்கரண்டி காலையில் மட்டும் சாப்பிட்டு வர 40 நாளில் ரத்தம் சுத்தமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/86883.html#ixzz3C7aHn1oA

தமிழ் ஓவியா said...

விநாயகர் ஊர்வலம்: ஊரெல்லாம் ரகளை!செய்யாறில்...

செய்யாறு, செப்.1-_செய்யாறில் விநாயகர் சிலை ஊர்வலம் காந்தி சாலை வழியாக செல்ல அனுமதி மறுத்ததால் 2 மணிநேரம் போராட்டம் நடந்தது.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு செய் யாறு நகர இந்து முன்னணி சார்பில் டவுன் பகுதி யில் 11 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட் டிருந்தன. இந்த சிலைகளை கோனேரிராயன் குளத்தில் கரைப்பதற்காக நேற்று திருவோத்தூர் சிறீவேதபுரீஸ் வரர் கோவிலின் முன்பிருந்து ஊர்வலம் தொடங்கியது.

ஊர்வலம் மார்க்கெட், மண்டித் தெரு வழியாக செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தி காந்தி சாலை யில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் காந்தி சாலை வழியாகத்தான் ஊர்வலம் செல்வோம் என பாதுகாப்புப் பணியிலிருந்த மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் சி.ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடு பட்டனர்.

தொடர்ந்து காந்தி சாலை வழியாக செல்ல காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் இந்து முன்னணி இளைஞர்கள் சாலையில் அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி போராட்டம் நீடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. காந்தி சாலையில் கடைகள் அடைக்கப்பட்டன. காவல் துறையின் சமா தானத்தை ஏற்க மறுத்ததால் காவல்துறையினர் காந்தி சாலை வழியாக ஊர்வலம் செல்ல அனுமதித்தனர்.

விநாயகர் சிலைகள் அனைத்தும் கோனேரிராயன் குளத்தில் கரைக்கப்பட்டன.

Read more: http://viduthalai.in/page-8/86888.html#ixzz3C7aqQ7GQ

தமிழ் ஓவியா said...

விநாயகர் சதுர்த்தி-மு.க.ஸ்டாலின் வாழ்த்தா? தி.மு.க. தலைமை நிலையம் மறுப்பு!


சென்னை, செப்.1- தி.மு.க. தலைமைக் கழகம் நேற்று (31.8.2014) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பிரத்யேக இணையதளத்தில், விநாயகர் சதுர்த்தி நாளன்று வாழ்த்துக்களை தெரிவித்ததாக வந்துள்ளது.

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் இணைய தளத்தைப் பராமரிக்கின்ற சில தோழர்கள் ஆர்வ மிகுதியின் காரணமாக, எல்லாரும் தெரிவித்திருப்பதைப் போல தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக வெளியிட்டுள்ளனர். இது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னனுமதியின்றி நடைபெற்ற செயலாகும்.

இந்த வாழ்த்துச் செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.குறிப்பு: தி.மு. கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இப்படி கொள்கை தெரியாதவர்களை அம்மாதிரி பொறுப்பில் அமர்த்துவதைத் தவிர்க்கவேண்டும். -ஆசிரியர்

Read more: http://viduthalai.in/page-8/86893.html#ixzz3C7b0mpQj

தமிழ் ஓவியா said...

சிசேரியன் - சோதிடம்?


குழந்தை பிறக்கும் நேரத்தை வைத்து ஜாதகம் கணிக்கிறார்கள். ஜாதகம் சரியா? என்கிற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்; இவர் கள் குழந்தை பிறக்கும் நேரம் என்கிறார்களே - அது எந்த நேரமாம்?

இதற்குத் தந்தை பெரியார் எடுத்து வைக்கும் வினாக்கள் இணையற்ற அறிவுத் தோட்டாக்கள்.

பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும் போதே ஜீவன் (உயிர்) ஏற் பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7, 8, 9, 10 மாதங்களில் எப்பொழுதானா லும் பிறக்கும் காலமா? அப்படிப் பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரை நாள் குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத் தில் தலை வெளியாகி நிலத் தில் பட்டு, கால் நிலத்தில் விழாமல், தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமா? அல்லது மருத்து வச்சி கைவிட்டு எடுத்த நேரமா? அல்லது டாக்டர் வயிற்றை அறுத்து எடுத்த காலமா? என்பனவாகிய கேள்விகள் ஒருபுறம் இருக்க, ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்பபோமானா லும், அந்த நேரத்தையாவது எப்படிச் சரியாகக் கண்டு பிடிக்க முடியும் என்பதை யோசிப்போம்! (நூல்: சோதி டம்) என்று அறிவு நாணய மாகத் தந்தை பெரியார் எழுப்பும் வினாக்களுக்கு விடையளித்துவிட்டு ஜாதகத் தைக் கணிக்கட்டும்!

ஒரு செய்தி வெளிவந் திருக்கிறது. என்.கண்ணன் அய்யராம் - பட்டீசுவரத்தை (கும்பகோணம் வட்டம்) சேர்ந்தவர். அவர் நிபுணத் துவம் எதில் தெரியுமா?

இதோ ஓர் எடுத்துக் காட்டு:

நிகழும் விஜய வருஷம் பங்குனி மாதம் 26 (16.3.14) ஞாயிற்றுக்கிழமை பூர நக்ஷத் திரம் கூடிய சுபதினத்தில் காலை 9.30-க்குமேல் 10.15-க் குள் ரிஷப லக்னத்தில் அறு வைச் சிகிச்சை செய்து குழந்தை எடுக்க உத்தமம் - என்று ஜாதகம் கணித்துள் ளார். இச்செய்தி முகநூலில் வெளிவந்துள்ளது.

எப்படி இருக்கிறது? குழந்தை இயற்கையாகப் பிறப்பதற்கு முன்பாக, நல்ல நேரம் குறித்து, அப்பொழுது சிசேரியன் செய்து குழந் தையை வெளியில் எடுப்பார் களாம்!
இந்த வைதிகம் அல்லது அய்திகம் எந்த சாத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளதாம்.

இந்தப் பார்ப்பனர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக எதைத்தான் செய்யமாட்டார் கள்?

இவ்வளவுக்கும் இவர் கள் சொல்லுகிற லக்னமாக இருக்கட்டும், கோள்களாகட் டும் பூமியிலிருந்து எவ்வள வுத் தொலைவில் உள்ளன. சூரியன் (இது கோளே அல்ல நட்சத்திரம்) 93 லட்சம் மைல்கள்; புதன் - 25.8 லட் சம் மைல்கள்; வெள்ளி - 27 லட்சம் மைல்கள்; வியாழன் - 390.6 லட்சம் மைல்கள்; சனி - 777 லட்சம் மைல்கள்; யுரேனஸ் - 1.69 கோடி மைல் கள்; நெப்டியூன் - 2.7 கோடி மைல்கள்.

குழந்தை பிறக்கும் நேரத் திற்கும், இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மைல் தூரத்தில் இருக்கும் இவை களின் நேரத்திற்கும் ஏதாவது சம்பந்தா சம்பந்தம் உண்டா? இவர்கள் இங்குள்ள நேரத் தைத்தானே கணிக்கிறார்கள். ஆனால், அந்தக் கோள்களில் இதே நேரம்தானா?

அறிவையும், பொருளை யும் சுரண்டும் இந்த சோதி டக் கொள்ளையர்களை என்ன சொல்ல - என்ன செய்ய?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/86535.html#ixzz3C9lkawcV

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

பசை!

செய்தி: திருப்பதி கோவில் அறங்காவலர் குழுத் தலை வர் பதவிக்கு ஆளும் கட்சிக்குள் கடும் போட்டி; வேறு வழியின்றி முதல மைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடி முடிவு எடுத்து வருவாய்த் துறை செயலா ளரைத் தலைவராக நிய மித்தார்.

சிந்தனை: ஏன் கடும் போட் டியாம்? கோடிக்கணக்கில் பணம் புரளும் பசை மிகுந்த பதவியாயிற்றே!

Read more: http://viduthalai.in/page1/86542.html#ixzz3C9m8LnFV

தமிழ் ஓவியா said...

ஒப்பற்ற ஆயுதம்


உங்கள் தனிப்பட்ட நலனை அலட்சியம் செய்வது என்கின்ற அந்த ஓர் ஒப்பற்ற ஆயுதம் அணுகுண்டையும் வெடிக்காமல் செய்துவிடும். - (குடிஅரசு, 9.3.1946)

Read more: http://viduthalai.in/page1/86543.html#ixzz3C9mNjNfN

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

தோப்புக்கரணம்!

ஒரு சமயம், விஷ்ணு வின் சக்கரத்தை விநாயகர் விளையாட்டாக எடுத்து வைத்துக் கொண்டு விட்டார்!

பதறிப்போன விஷ்ணு, விநாயகரிடம், கொடுத்து விடப்பா! என்று கெஞ் சிக் கேட்டார். விநாய கரோ, சக்கரத்தை வாயில் போட்டுக் கொண்டு விட்டார்!

விஷ்ணுவிற்கு என்ன செய்வதென்று புரிய வில்லை! மீண்டும் கெஞ் சிப் பார்த்தார். ம்ஹூம்... எந்தப் பயனும் இல்லை!

விஷ்ணுவிற்கு ஒரு யோசனை வந்தது! வலது கையால் இடது காதை யும் இடது கையால் வலது காதையும் பிடித்துக் கொண்டு வேடிக்கையாக உட்கார்ந்து.... உட்கார்ந்து எழுந்தார்!

இந்தச் செய்கையைப் பார்த்த விநாயகருக்குச் சிரிப்பு வந்துவிட்டது! கடகட வென்று அவர் சிரித்த சிரிப்பில் வாயிலி ருந்த சக்கரம் கீழே விழுந்து விட்டது! பாய்ந்து சென்று அதை எடுத்துக் கொண்ட விஷ்ணு அங்கு நிற்பாரா என்ன?

கர்ணம் என்றால் காது த்வி புஜ என்றால் இரண்டு கைகள். த்விபுஜகர்ணம் என்பதே.

தோப்புக்கரணம் என்று ஆகி விட்டதாம்! தோப்புக்கரணம் தோன்றியது கேலிச் சிரிப் பினால்தானா?

(சிரித்தால் வயிற்றில் உள்ளது வெளி யில் வருமா?) அதற்குப் போய் பெரிய வெண் டைக்காய் விளக்கெண் ணெய் வியாக்கியானங் களைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார் களே - அதை நினைத்தால்தான் பிள்ளையார் சிரித்ததைவிட அதிக சிரிப்பு வெடித்துக் கிளம் புகிறது.

Read more: http://viduthalai.in/page1/86490.html#ixzz3C9nU5E7I

தமிழ் ஓவியா said...

தற்காப்புக்காகப் பெண்கள் கத்தி வைத்திருப்பது வரவேற்கத்தக்கதே!

பெண்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கத்தியை வைத்துக் கொள்ளும் கலாச்சாரம் சென்னையில் பரவி வருவதாக வெளிவந்த செய்தி மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த நிலை ஏற்பட்டதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் வெட்கப்படத்தக்கன; தமிழ்நாட்டில் சட்டம். ஒழுங்கு சீர் கெட்டுப் போய் சந்தி சிரிக்கின்றது என்பதும் கவலைக்குரிய ஒன்றே!

இந்த நிலையில் அரசை நம்பியோ, காவல்துறையை நம்பியோ பயனில்லை; தன் கையே தனக்கு உதவி என்ற தன்னம்பிக்கையோடு, சமூக விரோத சக்திகளை எதிர் கொள்வது என்ற எண்ணம் பெண்கள் மத்தியில் விழித்தெழுந்ததே முதல்நிலையில் வரவேற்கப்பட வேண்டிய, பாராட்டப்பட வேண்டிய உணர்வாகும். மற்றவர்களைவிட, இந்த உணர்வை திராவிடர் கழகம் பெரிதும் மதித்து, மகிழ்வோடு வரவேற்கிறது.

பெண்கள் என்றாலே பலகீனமானவர்கள் என்ற சமூகக் கருத்து நிலவி வருகிறது. ஆண்டாண்டுக் காலமாக பெண்களை ஆண்களுக்குக் கிடைத்த கருவிகளாக வடித்து வைக்கப்பட்டதால், எப்படி வலது கைக்கு முன்னுரிமை கொடுத்து, இடது கையைப் பயனற்ற ஒன்றாக, வலிமையற்ற ஒன்றாக ஆக்கி வைத்திருக்கிறோமோ, அதைப்போல சமுதாயத்தில் ஆண்கள் என்றால் ஆண்மை உள்ளவர்கள் (ஆதிக்கம்) என்றும் பெண்கள் என்றால் பெண்மை (அடிமைத் தனம்)யுள்ளவர்கள் என்றும் அழகு வார்த்தையாம் மதுவைக் கொடுத்து பெண்கள் தன்னுரிமை எழுச்சியற்றவர்களாக ஆக்கப்பட்டு விட்டனர்.

இந்த நிலைமை மாறாத வரை பெண்கள் அச் சுறுத்தப்படுவதும்; பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் படுவதும், ஆண்கள் பெண்களை அடிப்பதும், உதைப்பதும், இழிவுபடுத்துவதும் கசப்பான தொடர் கதையாகத் தானிருக்கும்.

இந்த நிலை நிலவுவது ஏதோ பெண்களுக்கு இழுக்கு என்று கருதக் கூடாது; ஒட்டு மொத்தமான சமுதாயமே வெட்கப்பட வேண்டிய நிலையே!

மனிதனில் ஒரு கூறாகிய பெண்ணை இழிவு படுத்துவது, அடிமைப்படுத்துவது, நாகரிகக் குறைவும், நாணயக் குறைவும் அல்லாமல் வேறு என்னவாம்? மனிதனுக்குப் பகுத்தறிவு இருந்தும் என்ன பயன்?

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம்; பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது (குடிஅரசு 16.6.1935) என்று இன்றைக்கு 79 ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்கோடு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் கூறியதை ஒரு கணம் பெண்களைவிட - ஆண்கள் தான் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

இந்து மதத்தின் சாத்திரங்களும், இதிகாசங்களும் பெண்களைப் புழுப் பூச்சியாகத் தான் பேசுகின்றன. இதிகாசத்தில் சீதையை ராமன் படுத்தியபாடும், மகாபாரதத்தில் திரவுபதையை அவமானப்படுத்திய கேவலமும் போதிய சாட்சியங்களாகும்.

இந்த நிலையில் தந்தை பெரியார் அவர்கள்தான் ஆணாகப் பிறந்த தாயாக இருந்து பெண்களின் நிலையை எண்ணி இரங்கினார்.

பெண்களின் உடலழகை, இடையழகைப் பற்றி வருணித்து நூறு பாடல்களைப் பாடும் புலவர் பெரு மக்கள் அவர்களின் உரிமையின் தேவையைப்பற்றி நான்கு வரிகள் எழுதக் கூடாதா? என்ற வினாவைத் தொடுத்தார்.

சாஸ்திரங்களையும், புராணங்களையும் ஆண் களுக்குப் பதிலாக பெண்கள் எழுதியிருந்தால் பெண் களை இவ்வளவு இழிவுப்படுத்தி எழுதி இருப்பார்களா? என்ற அறிவார்ந்த வினாவையும் எழுப்பியவரும் தந்தை பெரியாரே!

கும்மி, கோலாட்டங்களை ஒழித்து விட்டு, ஓடவும், குதிக்கவும், தாண்டவும், கைக் குத்து, குஸ்தி முதலானவைகளையும் சொல்லி கொடுத்து, ஓர் ஆண் பிள்ளைக்கு உள்ள பலம், தைரியம், உணர்ச்சி ஆகியவை பெண்களுக்கும் உண்டா கும் படியாகவும் செய்ய வேண்டும் என்று ஈரோட்டில் கருங்கல்பாளையம் நகராட்சிப் பெண்கள் பாடசாலை விழாவில் தந்தை பெரியார் குறிப்பிட்டுள் ளதை எண்ணிப் பார்க்க வேண்டும் (குடிஅரசு 26.4.1931).

அதனுடைய எதிரொலிதான் - பெண்கள் தற்காப் புக்காக கத்தி வைத்துக் கொள்ள முடிவு செய்திருப்ப தாகும். இன்னும் ஒருபடி மேலே சென்று இந்த நவீன காலத்துக்கேற்ப, பெண்கள் தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெரிவித்துள்ளது அரிய கருத்தாகும்.

தங்களிடம் விஷமம் செய்யும் - வன்முறையை ஏவிடும் சமூக விரோதிகள் பெண்களால் தாக்கப்பட் டனர் - நான்கு இடங்களில் என்ற செய்தி வெளி வரும்பட்சத்தில் ஆண்கள் மத்தியில் உளவியல் ரீதியாகவே ஒரு சிந்தனை மாற்றம் - தாக்கம் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

சென்னையில் தற்காப்புக்காக பெண்கள் கத்தி வைத்துக் கொள்ளும் இந்தக் கலாச்சாரம் மற்ற மற்றப் பகுதிகளில் பரவுமேயானால், அதனையும் முதலில் வரவேற்பது திராவிடர் கழகமாகத்தானிருக்கும்.

மகளிர் அமைப்பினர் இதனை ஒரு பிரச்சார இயக்கமாக நாடெங்கும் நடத்திட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

Read more: http://viduthalai.in/page1/86480.html#ixzz3C9nnyLmx

தமிழ் ஓவியா said...

பொது மக்கள் நலன்!


இது நம்முடைய நாடு; இதன் நலனில் நமக்குப் பொறுப்பும், அக்கறையும் உண்டு. நாம் பொதுமக்கள் நலனுக்காக தொழில் செய்கிறோமே ஒழிய, அரசாங்க அதிகாரிகள் நலனுக்காக அல்ல. (குடிஅரசு, 25.8.1940)

Read more: http://viduthalai.in/page1/86479.html#ixzz3C9o104ip

தமிழ் ஓவியா said...

வாழும் மனிதர்களும் வள்ளுவரின் கணக்கெடுப்பும்!


பிறக்கும் மனிதர்கள் என்றாவது ஒரு நாள் இறக்கும் மனிதர்களே! இது நாள்வரை... எதிர் காலத்தில் எப்படியோ! ஆனால் சாகாமல் வாழும் மனிதர்கள் என்றும், செத்த மனிதர்கள் என்றும், மனித உருவில் உள்ள எலும்பும் தோலும் போர்த்த மனிதர்கள் என்றும், பழிப்பு நீங்கிய மனிதர்கள் என்றும், ஒரு அருமையான கணக்கெடுப்பை, மனிதர்களின் தரப் பிரிப்பை - சமுதாயப் பார்வையோடும், மனிதப் பண்புகளை முன்னிறுத்தியும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் படம் பிடித்துள்ளார் - ஈராயிரம் (2000) ஆண்டுகளுக்கு முன்பே என்பது வியக்கத்தக்கது அல்லவா?

உயிருடன் உள்ள மனிதர்களையெல்லாம் திருவள் ளுவர் வாழும் மனிதர்களாக, தன் கணக்கெடுப்பில் பார்க்க மறுக்கிறார்.

பின் யார்தான் வாழும் மனிதர் - அவரது கூரிய கண்ணோட்டத்தில்...?

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் (குறள் 214)

ஒப்புரவு என்ற அதிகாரத்தில் மற்றவர் துன்பத்தைக் கண்டு வெறும் இரக்கத்தை மாத்திரம் காட்டாமல், துன்பப்படுபவர் இடத்தில் தன்னையே நிறுத்தி, துன்பத்தை உணர்பவராக்கிக் கொண்டு உதவிடத் துடிக்கிறார்களே, அவர்களே உண்மையில், வாழும் மனிதர்கள் ஆவர்; அந்தப்படிக்கு இல்லாத உயிருடன் உலவும் ஏனையோர் செத்தவர்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவர்கள் என்கிறார்!

சமூக வாழ்வில், முந்திக் கொண்டு பிறரது துன்பத்தை தமக்கே ஏற்பட்ட துன்பமாகக் கருதி செயல்படுவோரைத் தான் வாழும் மனிதர் என்று அங்கீகரிக்கிறார் வள்ளுவர்!
இரக்கப்படுதலை ஆங்கிலத்தில் Sympathy என்று அழைக்கிறார்கள்; ஆனால் மேற்காட்டிய - துன்பத்தை உணர்ந்து துன்பப்பட்டவரின் இடத்தில் தன்னை நிறுத்தும் நிலைக்கு Empathy என்று கூறப்படுகிறது.

மனிதநேயத்தின் தலை சிறந்த கூறு இது! ஆனால் மனிதர்களிடையே வெகு அபூர்வமாகவே காணப்படு கிறது என்பதால், மிகக் கோபமாக வள்ளுவர் மற்றவர் களை செத்தவர்கள் கணக்கில் சேருங்கள் என்கிறார்!

இன்னொரு குறளும்கூட இப்படி இறந்தவர்-செத்தவர் கணக்கில் - சேர்க்கப்பட வேண்டியவர்கள் பற்றிக் கூறுகிறது!

இறந்தார் இறந்தார்அனையர் சினத்தை
துறந்தார் துறந்தார் துணை (குறள் 310)

இதன் கருத்து: அளவு கடந்த கோபத்தைக் கொண்டவர்; உயிருடன் காணப்பட்டாலும் அவர் உண்மையில் செத்தாரைப் போன்றே கருதப்படுவார். சினத்தை அறவே துறந்தவர்கள், துறந்தவர்க்கு (உண்மைத் துறவிகளுக்கு) ஒப்பாக உயர்ந்தவராகவே கருதப்படுவர்.

இந்தக் கணிப்புப்படி சினத்தின் உச்சிக்கு சென்றவர்களை வாழும் மனிதர்களின் பட்டியல் கணக்கெடுப்பில் வள்ளுவர் கொண்டுவர மறுக்கிறார்!

உடற்கூறுபடி பற்பல நேரங்களில் உச்சக் கட்ட சினம், அதிகமான ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, மூளை ரத்தக் குழாய் வெடிப்பு (Cerebral Hemorrhage) போன்றவைகளில் கூட கொண்டு போய் மனிதர்களை உண்மையாகவே செத்தவர்களாக்கி விடுகின்றதே அக்கண்ணோட்டத்தோடுகூட இக்குறளை நோக்கின் எவ்வளவு அருமையான மதிப்பீடு இது என்பது புரிகிறது!

மற்றொரு வகையில் தோற்றத்தால் மனிதர்கள்; ஆனால் உண்மையில் அத்தகையவர்கள் வாழும் மனிதர்கள் அல்லர். அல்லவே அல்லர் - வள்ளுவரின் கணக்கெடுப்பின்படி.

இது ஒரு தனி ரகம்!

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்பு தோல்போர்த்த உடம்பு (குறள் 80)

இதன் பொருள்: அன்போடு பொருந்தி இயங்கும் உடம்புதான், உயிர் நிலை பெற்று விளங்கும் உடம் பாகும். அப்படிப்பட்ட அன்பு இல்லாதவரின் உடம்பு எலும்பின் மேல் போர்த்தப்பட்ட வெற்று உடம்பே யாகும்.

மற்றொரு வகையும் வள்ளுவரின் கணக்கெடுப்பில் வருகிறது!

வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
வாழ்வாரே வாழாதவர் (குறள் 240)

தம்முடைய வாழ்க்கையில் பழிப்பு நீங்க வாழ்பவரே, உயிரோடு வாழ்பவர் ஆவார்; புகழ் நீங்க வாழ்பவர் - அவர் உயிரோடு வாழ்ந்தாலும்கூட, உள்ளபடியே வாழாதவரே ஆவார்! என்பதே இக்குறள் கூறும் கருத்து.

எனவே, வள்ளுவரின் கணக்கெடுப்பின்படி மனிதர்கள் நம் நாட்டு மக்கள் தொகையில் மிக மிகக் குறைவுதான்! இல்லையா...?!- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page1/86481.html#ixzz3C9oA5Fyn

தமிழ் ஓவியா said...

நீதியை மறைக்கும் நிழல் விலகுமா?


பிற இதழிலிலிருந்து....

தீக்கதிர் தலையங்கம்


நீதியை மறைக்கும் நிழல் விலகுமா?

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் மேல் முறையீடு செய்யத் தேவையில்லை என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல்ரகோத்கி கூறியுள்ளதாக தகவல் கள் வெளியாகியுள்ளன. மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு நடந்து வரும்பல்வேறு வகுப்புவாத திருகல்களில் ஒன்றாகவே இந்தக் கருத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. காஞ்சி மடாதிபதிகள் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் குற்றம் சாட்டப்பட்ட இந்தக் கொலை வழக்கில் 2013ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத் தில்தான் இந்த வழக்கு பதியப்பட்டது.

தமிழகத்தில் விசாரணை நடைபெற்றால் நியாயமாக நடைபெறாது என்று சங்கராச்சாரியார்கள் வழக்கு தொடுத்ததன் காரணமாகவே புதுவை நீதிமன்றத்திற்கு இந்த விசாரணை மாற்றப்பட்டது. அப்போதிலிருந்தே இந்த விசாரணை தடுமாறத் துவங்கியது. இன்னும் சொல்லப்போனால் வழக்கைப் பதிவு செய்த தமிழக காவல்துறை, குற்றவாளிகள் தண்டனை பெறுவதில் அக்கறை காட்டவில்லை. இந்த வழக்கில் சங்கரராமன் குடும் பத்தினர் உட்பட 83 பேர் பிறழ் சாட்சியங் களாக மாற்றப்பட்டனர். சங்கரமடத்தின் அரசியல் மற்றும் அதிகாரசெல்வாக்கு யாருக்கும் தெரியாத பரம ரகசியமல்ல. சங்கரமடத்தின் மிரட்டல் காரணமாகவே பிறழ்சாட்சி அளித்ததாக சங்கரராமன் குடும்பத்தினர் வழக்கின் தீர்ப்பு வந்தபிறகு கூறியது குறிப்பிடத்தக்கது. சங்கராச்சாரி யார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டபோதே அதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் பாஜகவினர்.இப்போது மத்தியில் அவர்களுடைய ஆட்சி நடப் பதால்தான் அரசுத்தலைமை வழக்கறிஞர் இத்தகைய கருத்தை கூறியுள்ளார் என்றே புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கொல்லப்பட்டவரின் குடும்ப உறுப் பினர்களே பிறழ் சாட்சிகளாக மாறியுள்ள தால் இந்த வழக்கை மேல்முறையீடு செய்தால் உயர்நீதிமன்றத்தின் கண்டனத் திற்கு ஆளாகவேண்டியிருக்கும் என்று அவர் கூறியுள்ளதாக தகவல்கள் தெரி விக்கின்றன.

குடும்ப உறுப்பினர்களே பிறழ் சாட்சிகளாக மாற்றப்பட்டுள்ளார்கள் என்றால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து முறையான, நியாயமான விசா ரணை நடைபெறுவதை உத்தரவாதப் படுத்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு இல்லையா?

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய புதுவைஅரசு உரிய ஆர்வம் காட்ட வில்லை. இந்த வழக்கின் முழு உண்மை யும் தமக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று முன்னாள் துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா கூறி யுள்ளார். பின்னர் அவர் அளித்த அனுமதியின் அடிப்படையிலேயே மத்திய அரசின் கருத்தை புதுவை அரசுகேட்டுள்ளது. அதற்கு எதிர் மறையான பதிலை மத்திய அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப் படுவதில் தமிழக அதிமுக அரசும் அக்கறை காட்ட வேண்டும். சட்டப் பூர்வமாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். சங்கரராமன் கொல்லப்பட்டது உண்மையெனும் போது கொலை செய்தவர்கள், கொலைக்கு காரணமானவர்கள் தண் டிக்கப்படுவது அவசியம் அல்லவா?

- நன்றி: தீக்கதிர் 25.8.2014

Read more: http://viduthalai.in/page1/86482.html#ixzz3C9oNmiEI

தமிழ் ஓவியா said...

ஏமாற்றம் - எத்தனை காலந்தான்?


ஆசிரியருக்குக் கடிதம் >>>

ஏமாற்றம் - எத்தனை காலந்தான்?

விடுதலை நாள் விழாவில் (15.8.2014) சென்னை கோட்டையில் கொடியேற்றி வைத்து தமிழக முதல்வர் அவர்கள் ஆற்றிய உரையைக் கவனித்திருப்பீர்கள். ஒவ்வொரு ஆண்டிலும் தியாகிகளின் ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவிப்பது முதல்வரின் வாடிக்கை இவ்வாண்டு ரூபாய் ஆயிரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதன்படி இந்நாள் வரை ரூ. 10000 (பத்தாயிரம்) வாங்கிக் கொண்டிருந்த (சு)தந்திரப் போராட்ட வீரர்கள் இனி ரூ. 11000 (பதினோராயிரம்)மும், ரூ. 4000 (நாலாயிரம்) வாங்கிக் கொண்டிருந்த எல்லைப் போராட்ட வீரர்கள் இனி ரூ. 5000 (அய்யாயிரம்) பெறுவார்கள். ஆனால் ஜிணீனீவீறீ ஷிநீலீஷீணீக்ஷீ தமிழறிஞர்கள் என அழைக்கப்படுகிற மொழிக் காவலர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. இந்த ஆண்டும் மொழிக் காவலர்கள் அலட்சிய படுத்தப்பட்டு, புறக்கணிக்கப்பட்டிருக் கிறாகள். முதுமையில், வறுமையில் வாடும் அவர்களை முதலமைச்சர் கண்டு கொள் வதே இல்லை. அடித்தட்டு வாசிகளாகிப் போன அவர்கள் இன்று வரை பெறுவது வெறும் ரூ. 3000 (மூவாயிரம்) மட்டுமே, விண்ணுக்கும் மண்ணுக்குமான இடைவெளி!

ஏனிந்த ஏற்றத் தாழ்வு? எதனால் வந்தது இந்த மூன்றடுக்கு முரண்? எப்படி வந்தது மாற்றாந்தாய் மனப்பான்மை? உதாசீனப்படுத்தி ஒதுக்கித் தள்ள காரணம் என்ன? அவர்களிடம் கண்ட பிழைதான் என்ன? சமச்சீரான அலைவரிசையில் ஒரு தாய் மக்களாகப் பார்க்கப்பட்ட ஈகிள் புதிய சமூக அநீதிக்கு ஆளாக்கப்பட்டது ஏன்?
இந்த அவல நிலையை அறிந்தும் நம் திராவிடத் தலைவர்கள் அமைதி காப்பதும், குரல் கொடுக்காததும் ஏன்? அன்றாட அறிக்கைகளில் இடம் பெறும் அருகதை கூடவா இல்லை? ஆளும் கட்சியின் அலட்சியம் தெரிந்தும், மொழிப் போரை முன்னின்று நடத்தியவர்களாவது அன்புகாட்டி அரவணைக்கக் கூடாதா? ஊடகங்கள் உதவுமே?

ஓர் அதிர்ச்சித் தகவல் சொல்லித்தான் ஆக வேண்டும். 1965ம் அதற்கு முன்பும் நடத்திய மொழிப்போர்களில் பங்கேற்று சிறை சென்றோர் நூற்றுக்கு 95பேர் இன்று இல்லை. மிகச்சிலரும் மரபுரிமையினருமே மிஞ்சியிருக்கிறார்கள். ஆனால் (1947க்கு முன்) 1942ல் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களாக நம்பப் படுகிறவர்களில் 65 விழுக்காட்டிற்கு மேல் மத்திய மாநில அரசுகளால் பயன்பெற்று வருகிறார்களாம். முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு முறை சொன்னது. இந்தியாவில் ஒரு லட்சம் பேர் சுதந்திர போராட்ட வீரர்களாக உதவித் தொகை பெறுகிறார்கள்!.

உடலை வருத்திப் போராட துணிவு மட்டும் போதாது. வயதும் உடலும் ஒத்துழைக்க வேண்டும். இதை எழுதுகிற நான் உள்ளிட்ட இருக்கிற அத்தனை பேரும் மாற்றுத் திறனாளிகள் என்பதே நிலை.

நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறலாம் என்றால் காலம் கருதி காத்திருக்க வேண்டும். மன உளைச்சல்தான் மிஞ்சும். நிதி உதவிக்கு பிறரை நாடவேண்டும். நாட்கள் எண்ணப்படுகிற இத்தருணத்தில் அரசிடம் கையேந்துவது ஒன்றே போதும்.

(ச.பா) எஸ்.பி.மணியம், மொழிக்காவலர்,
ஈரோடு இல்லம், சிவகாசி, மேற்கு 626124.

Read more: http://viduthalai.in/page1/86486.html#ixzz3C9oXbr00

தமிழ் ஓவியா said...

அண்ணாவுக்கு பாரத ரத்னா! கலைஞர் வேண்டுகோள்!


சென்னை, ஆக. 25- இந்தியப் பேரரசின் பாரத ரத்னா விருது, இந்திய நாட்டில் உள்ள மூத்த தலை வர்களுக்கு ஆண்டுதோறும் வழங்குவதையொட்டி, தென்னகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு இந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கவேண்டுமென்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் குடியரசுத் தலைவர் அவர்களுக்கும், இந்தியப் பிரதமர் அவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து நேற்று கடிதம் எழுதியுள்ளார்கள்.

அந்தக் கடிதத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது:

விருதுக்குப் பெரிதும் பொருத்தமானவர்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், மிகப்பெரிய சமூகசீர்திருத்தவாதியும், எழுத்தாளரும், இலக்கியவாதியும், சொற்பொழிவாளருமான பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த விருதுக்குப் பெரிதும் பொருத்தமானவர் என்றும், அவருக்கு இந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்குவது பொருத்தமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதன் விபரம் வருமாறு:-

காஞ்சி தந்த காவியத் தலைவர் உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர், பேரறிஞர் பெருந் தகை அண்ணாஅவர்கள்! பல்துறை ஆற்றல் நிரம்பப் பெற்ற அறிவுலக மேதை!

எளிய குடும்பத்தில் பிறந்து, நல்ல மாணவராக, ஆற்றல்மிகு பேச்சாளராக, சிறந்த எழுத்தாளராக, உள்ளம் கவர்ந்த பத்திரிகை ஆசிரியராக, நல்ல நூலா சிரியராக, நாடக ஆசிரியராக, நாடக நடிகராக, பண் பட்ட அரசியல் வாதியாக, உத்தமத் தலைவராக, ஒப்பற்ற வழிகாட்டியாக, நாடு போற்றும் முதல் அமைச்சராக, பல்துறை ஆற்றல் நிரம்பப் பெற்ற அறிவுலக மேதையாக ஓங்கு புகழ் எய்தியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

ஏழை, எளிய மக்களிடையே தம் பேச்சாற்றலால் அறிவுப் புரட்சியை உருவாக்கியவர் அவர்.

தமிழ்ச் சொற்றொடர் அமைப்பிலே புதிய நடை கண்டு, எழுச்சி மிகுஎழுத்தால், இலட்சக்கணக்கான இளைஞர்களின் இதயங்களைக் கவர்ந்து, எழுத்துலகில் புரட்சியை உண்டாக்கிய மேதையான பேரறிஞர் அண்ணா அவர்கள் அடக்கத்தின் வடிவமாகத் திகழ்ந் தார்கள். முதன்முதலாக, அரசியலில் குடும்பப் பாச உணர்வை ஊட்டியவர்; மாற்றாரையும் மதிக்கக் கற்றுத் தந்த ஆசான்; மாபெரும் ஜனநாயகத் தலைவர் அவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர் பேரறிஞர் அண்ணாஅவர்கள்.

சீர்திருத்தக் கருத்துகள்

பேரறிஞர் அண்ணா அவர்கள் திரைப்படங்களுக்குக் கதை வசனம் எழுதி, சுயமரியாதைக் கொள்கைகளை, சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடையே பரப்பினார். ஏழை எளியவர்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு போராட்டங் களில் ஈடுபட்டுப் பலமுறை சிறைவாசம் ஏற்றார்.

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றி, சுயமரியாதை இயக்கத் தலைவர் தந்தை பெரியாருக்கு அன்புப் பரிசு என்று அதனை அறிவித்தார். தமிழ் மக்களின் சிந்தனையில் படிந்து கிடந்த அழுக்குகளை அகற்றி தமிழகத்தை மாற்றியமைக்க தம் நாவையும், எழுது கோலையும், இறுதி மூச்சுவரை பயன்படுத்தினார்.

தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தவர்

தமிழ்மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம் பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாதுபாடுபட்ட உத்தமர் அவர்! தமிழ்நாடு என தாய்க்குப் பெயர் சூட்டிய தனயன்!

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று தம்பிமார் பெரும்படையைக் கண்டு, நெஞ்சுயர்த்திப் பெருமிதம் கொண்ட பெருமகனான பேரறிஞர் அண்ணா அவர்கள் - மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்து தாய்க்குப் பெயர் தந்த தனிப்பெரும் தனயன் என்ற பெரும் புகழுக்குரியவர்!

சுயமரியாதைச் சுடரொளி - சொக்கவைக்கும் சொற்பொழிவாளர் - எழுத்துவேந்தர் - தென்னகத்தின் மிகப்பெரும் அரசியல் தலைவர் எனப் பாராட்டி, வருணித்து முடிக்க முடியாத அளவுக்கு பல்வேறு சிறப்புக்களுக்கும், பெருமைகளுக்கும் உரியவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்!

இந்நிலையில், இந்தியப் பேரரசின் பாரதரத்னா விருது, இந்திய நாட்டில் உள்ள மூத்த தலைவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்குவதையொட்டி, தென்னகத் தின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு இந்த ஆண்டு வழங்கவேண்டு மென்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் குடியரசுத் தலைவர் அவர்களுக்கும், இந்தியப் பிரதமர் அவர் களுக்கும் வேண்டுகோள் விடுத்து நேற்று (24.8.2014) கடிதம் எழுதியுள்ளார்கள். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியுள்ள அக்கடிதங்களில் கூறப்பட்டுள்ள தாவது:-

நமது தேசியத் தலைவர்களில் சிலருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக நாங்கள் அறிகிறோம்.

தமிழ் ஓவியா said...

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டின் மாபெரும் சமூக சீர்திருத்தவாதி, மாபெரும் எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் இலக்கியவாதியாவார்.

தமிழிலும், ஆங்கிலத்திலும்....

தமிழிலும், ஆங்கிலத்திலும் அவரது இலக்கிய மற்றும் அரசியல் படைப்புகள் தமிழ்நாட்டில் மிகச் சிறந்தவற்றில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரதரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட அவர் முற்றிலும் தகுதி உடையவராவார்.

வரவிருக்கும் குடியரசுதினத்தன்று அறிஞர் அண்ணா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கும்படி நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில்கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page1/86472.html#ixzz3C9oy5bFn

தமிழ் ஓவியா said...

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் துக்ளக்கும் - கல்கியும் முரண்பாடு!


கேள்வி: பதினைந்து வகையான பயிர்களை மரபணு மாற்றம் மூலம் விளைவிக்க மோடி அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கி யுள்ளதே? இது சரியான நடவடிக்கையா?

பதில்: மரபணு விவகாரம் முன்பு பெரிய சர்ச்சை யைக் கிளப்பியது. மரபணு மூலம் விளைவிக்கப்படுகிற காய்கறிகளும், தானியங்களும் சத்தற்றவையாக இருக் கின்றன என்றும், அவற்றினால் உடலுக்குக் கெடுதல்கூட வரலாம் என்றும் ஆராய்ச்சிகள் கூறுவதாகப் பல செய்திகள் வெளியாகின. விஞ்ஞானிகளிடையே இது விவாதத்திற்குரிய விஷயமானது.

ஆனால், சமீபத்தில் வரும் செய்திகளின்படி பார்த்தால் இந்த மரபணுக் காய்கறிகள் எந்த விதத்திலும் கெடுதியானவை அல்ல என்றும், இயற்கைப் பயிர்களுக்குச் சமமாக இல்லா விட்டாலும், அவற்றாலும் ஊட்டச் சத்து கிடைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது. இப்படி இந்த விஷயத்தில் ஒரு புதிய பார்வை வந்திருப்பதால், மத்திய அரசு எடுத்த தீர்மானத்தில் தவறில்லை; ஆனால், அதற்கு எதிர்ப்பு தோன்றியதால், இந்த முடிவு தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. இந்தத் தயக்கம் தேவை இல்லை என்பது என் கருத்து.

(துக்ளக் 13.8.2014)

மரபணு மாற்றப்பட்ட பயிர்களைச் சோதனை அடிப்படையில் இந்தியாவில் சாகுபடி செய்ய மரபணு ஆராய்ச்சி ஒப்புதல் குழு சமீபத்தில் அனுமதி வழங் கியது விஞ்ஞானிகளையும், விவசாயிகளையும் அதிர்ச் சிக்குள்ளாக்கியது. இவ்விஷயம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகரின் கவனத்துக்குப் போக, அவர் இதை தற்போதைக்கு நிறுத்தி வைத்திருக்கிறார்.

ஏற்கெனவே பி.டி. பருத்தியை இந்தியாவுக்குள் அனு மதித்து, அது ஏற்படுத்திய அவலம் சொல்லி மாளாது. சென்ற ஆட்சிக் காலத்தில் பி.டி. கத்திரி சாகுபடிக்கு அனுமதி அளிக்கப்பட்டபோது, கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தலையிட்டு, பி.டி. கத்திரி சாகுபடிக்குத் தடை விதித்தார்.

பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் பி.டி. மரபணு பயிர்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், உடல் நலக் கேடுகள் மட்டுமின்றி, இயற்கை யின் உயிர்ச் சூழல் பண்மை அழிந்து, சுற்றுச்சூழலும் அழிந்துவிடும் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டிருக் கின்றன.

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் பூச்சிகளால் பாதிப்படையாது; அதிக மகசூலை வழங்கும் என்பது பொய் என்று நிரூபணமாகி விட்டது. மாறாக, அவை விவசாயிகளைக் கடன் சுமையில் தள்ளி, தற்கொலைக்கே இட்டுச் சென்ற அனுபவங்களும் இந்தியாவில் உண்டு.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அனுமதித்த சீனா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகளிலே கடுமையான கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜனநாயக இந்தியாவில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தாலும் அவற்றைத் துரிதமாகவோ கண்டிப்பு கட்டாயத்துடனோ அமல்படுத்த முடியாது.

முதலில், இந்திய மண்ணுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மரபணு மாற்றப்பட்ட விதைகளால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய முழுமையான அறிவியல் ஆய்வு நடைபெற வில்லை. இந்நிலையில், அமெரிக்க நிறுவனங்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி பி.டி. பயிர்களைச் சோதனை செய்ய அனுமதிப்பது, தற்கொலைக்குச் சமம்.

அமெரிக்க நிறுவனங்களின் உள்நோக்கம் அபாய கரமானது. பி.டி. விதைகளை அறிமுகப்படுத்தி, விவசாயிகளிடையே அதன் பயன்பாட்டைப் பெருக்கி, பின்னர் விதைகளுக்கான ஏகபோக உரிமையைக் கொண்டாடுவது, விலைகளைக் கடுமையாக உயர்த்துவது என்ற மோசமான வணிக நோக்கமே இதன் பின்னே உள்ள அபாயம், பொருளாதார அடிமைத்தனத்துக்கான அடிப்படை இது.

பி.டி. பயிர்களால் நிலம் பழுதுபட்டால், அதை மீட்க முடியாது. விஞ்ஞான வளர்ச்சியால் இயற்கையான விவசாய முறைகள் அடைந்துள்ள முன்னேற்றங்கள் அளப்பரியன.

அதை அனைத்து விவசாயிகளுக்கும் சொல்லிக் கொடுத்து, மகசூலை உயர்த்தினாலே, உணவுத் தன்னிறைவை எட்ட முடியும். ஆக்க பூர்வமான வழியில் சிந்திப்பதை விட்டு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் போன்ற குறுக்கு வழியை நாடுவது, நம் மண்ணை நாமே சிதைப்பதற்கு ஒப்பாகும். இந்திய அரசு, பி.டி. பயிர்களை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாகச் சொல்வது ஒன்றே நம் மண்ணையும் மக்களையும் காப்பாற்ற ஒரே வழி.

(கல்கி 17.8.2014)

ஏனிந்த முரண்பாடோ?

Read more: http://viduthalai.in/page1/86455.html#ixzz3C9pUOKhH

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மலர் வேண்டாம் மனம் போதும்!

சிவபெருமானுக்கு பூஜை செய்ய புன்னை, வெள்ளெருக்கு, செண் பகம், நந்தியாவட்டை, நீலோத்பவம், பாதிரி, அரளி, செந்தாமரை ஆகிய எட்டு வகையான மலர்களைப் பயன்படுத் தலாம். இம்மலர்கள் அஷ்ட புஷ்பங்கள் எனப்படு கின்றன. இவற்றில் சில இப்போது கிடைப்ப தில்லை. இம்மலர்களை படைத்து மட்டும்தான் சிவனை வழிபட வேண்டு மென்பதில்லை. நமசி வாய என அவர் திருநாமத்தை உச்சரித்து, மனம் என்னும் பூவால் வழி பட்டாலே போதும். மலர்களால் அர்ச்சித்து வணங்கிய பலன் கிடைத்து விடுமாம்!

இதைப் போல கோயி லுக்குச் செல்லாமல் வீணா கப் பணத்தை எதையும் செலவு செய்யாமல், உள்ளமே கோயில் என்று கருதி வீட்டில் இருந்த படியே மனதளவில் சிவனை வழிபட்டால் போதும் என்ற முடிவுக்கு வர வேண்டியதுதானே - கோயில்களையும் இழுத்து மூடிவிடலாம் அல்லவா!

Read more: http://viduthalai.in/page1/86360.html#ixzz3C9qXdZpm

தமிழ் ஓவியா said...

ராகு காலம்


இன்றைய ஆன்மிகம்?

ராகு காலம்

ராகு காலத்தில் வீட்டில் இருந்து கிளம்ப நேரிட்டால் என்ன பரிகாரம் செய்யலாம்?
- ராம. முத்துக்குமரன், கடலூர்

துர்க்கையம்மனுக்கு விளக்கேற்றி சிவப்பு புஷ்பம் சாத்தி வழிபட்டு மனத் தெளிவுடன் கிளம்புங்கள். உங்களுக்கு வெற்றிதான்.
ஓர் ஆன்மிக இதழ்

சரி, ராகு காலத்தில் விமானமோ ரயிலோ புறப்பட்டால் என்ன செய்ய வேண்டுமாம்?

Read more: http://viduthalai.in/page1/86300.html#ixzz3C9rby9FZ