1893ஆம் ஆண்டில் பறையன் என்ற பத்திரிகை
ஒன்றைத் தொடங்குவதற்கு ஒரு தனித் துணிவும், ஆழ்ந்த சிந்தனையும் கண் டிப்பாக
தேவைப்பட்டு இருக்கும்; ஏன் அந்தப் பெயர் சூட்டப்பட்டது? பத் திரிகை
நிறுவனர் அதற் கான காரணத்தையும் கூறி யுள்ளார்.
நான்! நான்! என்ற மகா மந்திரத்தை
ஜெபித்துக் கொண்டிருப்பவன் தன்னை உணர்ந்து சகல மும் அறியும் ஞானியாகி
தலைவனைக் காண்பது போல், நான்! நான்! என்று எவன் ஒருவன் தன்னை யும், தன்
இனத்தையும் மறுக்காமல், அச்சமும், நாணமும் இல்லாமல் உண்மை பேச தனி சுதந்
திரத்தைப் பாராட்டுகிறானோ அவன் மதிக்கப் பெற்று இல்வாழ்க்கையில்
சம்பத்துள்ளவனாய், நித்திய சமாதானத்துடன் வாழ்வானா கையால் பறையர்
இனத்தொருவன் பறையன் என்பவன் நான் தான் என்று முன் வந்தா லொழிய அவன்
சுதந்திரம் பாராட்ட முடியாமல் தாழ்த்தப்பட்டு என்றும் தனித்தவனாய்
இருப்பான். ஆகையால் பறையன் எனும் மகுடம் சூட்டி ஒரு பத்திரிகையை ஆரம்
பித்தேன் என்றார் அவர் வேறு யாருமல்லர் - இரட்டை மலை சீனிவாசன்
அவர்கள்தான்.
தந்தை பெரியார் கறுப்புச் சட்டை அணி
யுங்கள் - அப்பொழுது தான் நாம் இழிவுபடுத்தப் பட்டுள்ளோம் என்ற உணர்வு நமது
நினைவில் என்றும் நிற்கும் என்பதற்கு ஒப்பானது இது. ஏழு ஆண்டுகள்
இப்படியொரு பத்திரிகையை அவர் அந்தக் காலத்தில் நடத்தி யது சாதாரணமானதல்ல.
அந்தக் காலகட்டத்தில் திண்ணைப்
பள்ளிகள்தான் இருந்தன. ஏழு குழந்தை கள் சேர்ந்தால் பள்ளி என்று அரசு
அங்கீகரித்தது. அந்தத் திண்ணைப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள்
சேர்க்க மறுக்கப்பட்டனர். அந்தக் கால கட்டத்தில் (1898இல்) பிரிட்டானிய
அரசுக்கு மனு ஒன்றைத் தயாரித்து அனுப்பினார் இரட்டை மலை சீனிவாசன். அதன்
நியாயத்தை உணர்ந்தது பிரிட்டானிய அரசு. 1898 அக்டோபர் 21ஆம் தேதி
பள்ளிகளைத் தொடங்கிட முடிவெடுக்கப்பட்டது; அதில் ஒரு நிபந்தனை
அப்பள்ளிகளில் தாழ்த்தப் பட்டவர்களுக்குக் கல்வி கற்க முன்னுரிமை அளிக்
கப்பட வேண்டும் என்பது தான்! அப்படி தொடங்கப் பட்டதுதான் சென்னை
முனிசிபாலிட்டி ஸ்கூல்!
சென்னை சர்வ கலா சாலையில் (தற்போது சென்னை பல்கலைக்கழ கம்) இரட்டைமலையாரை செனட் உறுப்பினராக்கிப் பெருமை சேர்த்தது.
சில்வர்டங்க் சீனிவாச சாஸ்திரி என்று
சொல்லு வார்கள் - அந்த அளவுக்கு ஆங்கிலப் புலமை வாய்ந்தவராம்; அவரின் உடை,
நடை, பாவனையும் ஆங்கிலேயரை ஒத்திருக் குமாம்; அதேபோல நடை உடை பாவனை உடைய
இரட்டை மலை சீனிவாசன் ஆங்கிலப் புலமையில் சில் வர்டங்க்காரரை தண்ணீர்
காட்டுவாராம். அவரின் நினைவு நாள் இன்று (1945).
------------- மயிலாடன் அவர்கள் 18-09-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment