Search This Blog

2.9.14

ஆசிரியர் தினத்தை குருஉத்சவ் என்று மாற்றுவதா?

  • ஆசிரியர் தினத்தை குருஉத்சவ் என்று மாற்றுவதா?
  • மீண்டும் சமஸ்கிருதப் பண்பாட்டை நிலை நிறுத்துவதே இதன் பின்னணி
ஒத்த கருத்துள்ளோர் ஒன்று திரண்டு ஆரிய சூழ்ச்சியை முறியடிப்போம்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
ஆண்டுதோறும் ஆசிரியர் நாள் என்று கொண்டாடப் பட்டு வருவதை குருஉத்சவ் என்று சமஸ்கிருதப் பெயர் சூட்டுவதில் உள்ள ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை ஒன்று சேர்ந்து முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பல ஆண்டுகளாக இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் ஆசிரியர்கள் நாள் (Teacher’s day) என்பதை இனி குருஉத்சவ் என்றுதான் அழைக்க வேண்டும் என்றும், அந்த நாளான செப்டம்பர் 5 அன்று மாலை பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றுவதை ஒவ்வொரு பள்ளி மாணவரும் பள்ளியில் தங்கி (கட்டாயம்) கேட்க வேண்டும் என்பது போன்று மத்திய அரசின் தகவல் அறிக்கை கூறுவது, மெல்ல மெல்ல நாட்டில் ஜனநாயகத்திற்கு விடை கொடுத்து விட்டு, ஆர்.எஸ்.எஸ். நாயகம் அதன் ஆக்டோபஸ் கரங்களை பல துறைகளிலும் விரிக்கத் துவங்கி, மற்ற மொழி, பண்பாடுகளை விழுங்கத் தயாராகி விட்டது என்பதையே காட்டுகிறது!

ஆரிய மொழி என்பதற்காகவே...

இந்திய அரசியல் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22 - அதில் ஒன்று சமஸ்கிருதம் என்ற பேச்சு  வழக்கொழிந்த ஆரியக் கலாச்சாரத்தின் சின்னம். கோயில் வழிபாடு, கல்யாண, கருமாதி மந்திரங்களைத் தவிர வேறு எங்கும் புழங்காத செத்த மொழியாகும். (அதனை உச்சரிப்பவர்களுக்கும்கூட பலருக்கு அதன் அர்த்தம் தெரியாது என்பது வேறு சங்கதி!)
இந்த மொழியை ஆரிய மொழி என்பதற்காகவே ஒரே தேசிய மொழி - இந்தியாவின் ஆட்சி மொழியாக்கிட வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்.ஸின் லட்சியமாகும்.

அதை நோக்கி நகர்த்தவே, சமஸ்கிருத வாரம், இப்படி குருஉத்சவ் என்ற படையெடுப்பு ஆர்.எஸ்.எஸ். என்பது ஆங்கிலம் என்ற போதிலும் ராஷ்டிரிய சுயம் சேவக் சங் - என்பதும் சங்பரிவார் என்பதும் ஆரிய மொழியான சமஸ்கிருதமும் ஹிந்தியும் தான். அதனுடைய அத்தனை அமைப்புகளின் தலைப்புகளும்   இம்மாதிரியே - ஷாகாவில் தொடங்கி சர்ஜலக்சாலக் வரை சமஸ்கிருதமயம்தான் -

அரசியல் படையெடுப்பை விட ஆபத்தானது இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு.

சமஸ்கிருதமயமாக்கப்பட்ட வரலாறு!

சமஸ்கிருத மயமாக்குதல் (Sanskritation) என்பது இதற்கு முன்பும்கூட தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டியர் ஆரிய அடிமைத்தனத்திற்கு அடி பணிந்த அரசர்களாகி ஆட்சி நடத்திய காலத்திலேயே ஊர்ப் பெயர்கள் எல்லாம் சமஸ்கிருத மயமாக்கப்பட்டன.

திருமரைக்காடு (மான்கள்கூட்டம் நிறைந்த காடு வேதாரண்யம்  ஆக; மயிலாடுதுறை - மாயூரமாக ; திருமுதுகுன்றம் - விருத்தாசலமாக; குடமூக்கு - கும்பகோணமாக வெல்லாம் மாற்றப்பட்டன.

தந்தை பெரியார் தோன்றியதற்குப் பிறகு....

தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் இயக்கம் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிராக தோன்றிய பிறகு தான்   - அவர்கள் 1938ல் ஒரு இயக்கமே தொடங்கி தமிழ்மொழி உணர்வு காப்பாற்றப்பட்டது.

தனித் தமிழ், அறிஞர்களான மறைமலை அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க. தொடங்கி புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்ற பலரும் திராவிடர் இயக்க  போராளிகளான அறிஞர்அண்ணா உட்பட இன்று 90 வயதிலும் களம் காணும் கலைஞர் அவர்கள் வரை இந்த பண்பாட்டுப் படையெடுப்புகளுக்கு எதிர்ப்பு - பல்முனைகளில் தொடர்ந்துள்ள நிலையில், மீண்டும் ஆட்சியும் அதிகாரமும் தம் வசம் வந்துவிட்டது என்பதால், இந்த ஆரியக்கூத்து அதிக சூட்சமாக உள்ளது. இதனை தமிழர்கள் புரிந்து கொள்வதோடு,  காங்கிரஸ் ஆட்சி மீதுள்ள கோபத்தால் எடுத்த முடிவின் விளைவு நாடும் மக்களும் எவ்வளவு பெரிய விலை கொடுக்க வேண்டியி ருக்கிறது என்று யோசிக்கத் துவங்கியாக வேண்டும்.

பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்!

எனவே, அனைவரும் ஒன்றுபட்டு இத்தகைய முயற்சி களை எதிர்த்து, இளைதாக முள்மரம் களைய முன்வருதல் வேண்டும்.

நேற்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இதுபற்றிக் கூறிய கருத்தினை நாம் வரவேற்பதோடு, ஒத்த கருத்துள்ளவர்கள் அனைவரும் ஒருங்கே குரல் கொடுத்து, இத்தகைய பண்பாட்டுப் படையெடுப்புகளை முறியடிக்க விரைந்து ஆயத்தமாக வேண்டும்.


 
-------------------------கி.வீரமணி தலைவர்,திராவிடர் கழகம் சென்னை -"விடுதலை” 1.9.2014  

27 comments:

தமிழ் ஓவியா said...

சர்வ சக்தி(?)


மேற்கு வங்காளம் கொத்தல் பூரிலிருந்து கடந்த 24ஆம் தேதி நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 60 பேர்கள் குடும் பத்துடன் தமிழ்நாட்டுக் குச் சுற்றுலா புறப்பட்டு வந்தனர். சமையல் செய்து சாப்பிடுவதற்கு 6 சமையல் எரிவாயு உருளைகளையும் (சிலிண்டர்களையும்) பேருந்தில் ஏற்றியிருந் தனர். 30.8.2014 இரவு 10 மணியளவில் கன்னியா குமரி சென்று கொண்டி ருக்கும்போது திருபுல் லாணி தாதனேந்தல் பேருந்து நிறுத்தம் அரு கில் பேருந்து வந்தபோது, பேருந்தின் பின்புறத்தில் திடீரென தீபிடித்தது.

ஓட்டுநர் அவசர அவசரமாக பேருந்தை சாலை ஓரத்தில் சாமர்த் தியமாக நிறுத்தினார். பேருந்துக்குள்ளிருந்த சமையல் வாயு உருளை யும் வெடித்தது. பயணி கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி னர். ஆனால் வயது மூப் படைந்த 5 பேர் விரை வாக வெளியேற முடி யாத நிலையில் கருகிப் போனார்கள் என்பது பெரி தும் வருந்தத்தக்கதாகும்.

இவ்வளவுக்கும் இந்தப் பயணிகள் தமிழ கம் வந்தது கோயில் தலங்களைச் சுற்றிப் பார்த்து சாமி தரிசனம் செய்யத்தான்! திருப்பதி ஏழுமலையான் கோயி லில் தரிசனத்தைத் தொடங் கிய இவர்கள் வழியில் காஞ்சீபுரம், திருக்கழுக் குன்றம், சிறீரங்கம், இராமேசுவரம் உட்பட பல கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.

கன்னியாகுமரி சென்று அங்குள்ள அம் மனை வழிபடச் சென்ற வர்களுக்குத்தான் இந்தப் பரிதாப நிலை ஏற்பட் டுள்ளது.

கோயிலுக்குச் சாமி கும்பிட சென்றவர்கள், கோயில் திரு விழாக் களுக்குச் செல்லக் கூடிய வர்கள். இதுபோன்ற விபத்துக்களில் சிக்கி பரிதாபகரமாக மரணம் அடைவது அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்றுகூட விநாயகர் பொம்மையை நீரில் கரைக்கச் சென்ற ஓமலூர் கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி மரணம்! பொள்ளாச்சி அருகே சிலைகளைக் கரைக்க காரில் சென்ற இந்து முன்னணியினர் மூவர் விபத்தில் மரணம் என்ற செய்திகள் வெளி வந்துள்ளன. இவ்வளவுக்குப் பிற கும் கோயில் கோயிலாக மக்கள் போவதும், சாமி தரிசனம் செய்வதும், நேர்த் திக் கடன் கழிப்பதும் சரியானதுதானா? என் பதைச் சிந்திக்க வேண் டாமா?

கடவுள் என்ற ஒருவர் இருந்தால், அவருக்குச் சக்தி இருக்கிறது என்பது உண்மையென்றால் கரு ணையே வடிவமானவன் என்று எழுதி வைத்திருப் பதில் கடுகளவு யதார்த் தம் இருக்குமேயானால், நாட்டு மக்களைக் காப் பாற்றுவது ஒருபுறம் இருக் கட்டும்; குறைந்தபட்சம் தன்னை நாடி வந்த பக்தர்களையாவது காப் பாற்ற வேண்டாமா?

பக்தி வந்தால் புத்தி போகும் என்று பெரியார் சொன்னது கேலிக்கல்ல வாழ்க்கையின் யதார்த் தம் என்பதை மக்கள் உணரட்டும்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/86915.html#ixzz3C7YE3p00

தமிழ் ஓவியா said...

பொள்ளாச்சி, செப்.1- பொள்ளாச்சி அருகே விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற போது எதிரே வந்த பேருந்து மீது மோதி, கார் கட்டுப் பாட்டை இழந்து மரத் தில் மோதியது. இந்த விபத்தில் இந்து முன் னணியை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி பலியானார் கள். 3 பேர் படுகாய மடைந்தனர்.

இந்த பரிதாப சம்பவம் குறித்து காவல்துறை தரப் பில் கூறப்படுவதாவது:-

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதி களில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 36 விநாயகர் சிலைகளை அம்பராம்பாளையம் ஆழியாற்றில் கரைக்க நேற்று ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

ஊர்வலத்தில் சென்ற வர்களுக்கு சாப்பாடு வாங்கி கொண்டு இந்து முன்னணியை சேர்ந்த நாகராஜன் (வயது 32), குகன் (21), கார்த்தீஸ்வரன் (30), சபரி (30), பிரகாஷ் (29), விக்னேஷ்குமார் (24), சுரேஷ்குமார் (27) ஆகி யோர் ஒரு காரில் எஸ் .மேட்டுப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம் பாளையத்திற்கு சென் றனர். காரை கார்த்தீஸ் வரன் ஓட்டினார்.

மாலை சுமார் 5.30 மணிக்கு கார் மீன்கரை ரோடு நஞ்சேகவுண்டன் புதூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற வாகனத்தை கார் முந்த முயன்ற போது எதிரே கோவிந்தா புரத்தில் இருந்து பொள் ளாச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து மீது மோதியது.

இதில் நிலை தடு மாறிய கார், பேருந்துமீது மோதிய வேகத்தில் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி சுக்குநூறாக நொறுங்கி உருக்குலைந்து போனது. மேலும் பேருந்தின் முன் புற கண்ணாடி உடைந்த துடன், முன்பகுதி சேதம் அடைந்தது.

காரில் இருந்தவர்கள் படுகாயங்களுடன் உயி ருக்கு போராடிக் கொண் டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொள் ளாச்சி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வா ளர்கள் தங்கவேல், கோபி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காவல் துறையினர் பொது மக்கள் உதவியுடன் காரில் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டனர்.

இதில் சம்பவ இடத்திலேயே நாகராஜன் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். குகன், விக்னேஷ்குமார், பிரகாஷ் ஆகியோரை அந்த பகுதி யில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், சபரி, கார்த்தீஸ்வரனை கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் குகன், கார்த்தீஸ்வரன் ஆகி யோர் பரிதாபமாக இறந் தனர்.

சபரி ஆபத்தான நிலை யில் கோவை அரசு மருத் துவமனைக்கும், விக் னேஷ்குமார், பிரகாஷ் ஆகியோர் அம்பராம் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை யிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் காரில் வந்த சுரேஷ்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/86916.html#ixzz3C7YNRduS

தமிழ் ஓவியா said...

விநாயகர் சிலையை கரைத்த போது கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் சாவு!

விநாயகர் சிலையை கரைத்தபோது கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரி தாபமாக உயிரிழந்தனர்.

சேலம் கிச்சிப்பாளை யம் கருவாட்டுப்பாலம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி வெண்ணிலா. இவர்களது மகன் விக்னேஷ்வரன் (வயது 17). இவர் சேலம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணபிர சாத் (18). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி யில் 3ஆ-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் விநாய கர் சதுர்த்தியையொட்டி அந்த பகுதியில் வெண் ணிலா உள்பட பலர் ஒரு விநாயகர் சிலையை பூஜைக்கு வைத்திருந்தனர். இந்த சிலையை நேற்று கரைக்க திட்டமிட்டனர். அதன்படி, நேற்று காலை விநாயகர் சிலையை ஒரு சரக்கு ஆட்டோவில் ஏற்றினர். பின்னர் அந்த ஆட்டோவில் வெண் ணிலா, அவரது மகன் விக்னேஷ்வரன், கிருஷ்ண பிரசாத் உள்பட 15 பேர் ஏறி புறப்பட்டார்கள்.

நண்பகல் 1 மணியள வில் அவர்கள் கங்காதரன் குட்டையை அடைந்தனர். அங்கு ஆட்டோவில் இருந்து விநாயகர் சிலையை கீழே இறங்கி வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் விக்னேஷ்வரன், கிருஷ்ண பிரசாத் உள்பட 7 இளை ஞர்கள் சிலையை தூக்கிக் கொண்டு குட்டையில் தேங்கி நின்ற தண்ணீருக் குள் இறங்கினார்கள்.

அப்போது கரையில் நின்ற பெண்கள், ஆழ மான பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கூறி னர். ஆனால், அதையும் மீறி இளைஞர்கள் 7 பேரும் ஆழமான பகு திக்கு சென்று விநாயகர் சிலையை தண்ணீரில் கரைத்தனர். அப்போது விக்னேஷ்வரன், கிருஷ்ண பிரசாத் உள்பட 5 இளை ஞர்கள் சேற்றில் சிக்கிக் கொண்டனர். சிறிது நேரத் தில் 3 பேர் சேற்றில் இருந்து மீண்டு தண்ணீரில் தத்தளித்தபடி கரைக்கு வந்து சேர்ந்தார்கள்.

ஆனால், விக்னேஷ்வர னும், கிருஷ்ணபிரசாத்தும் தண்ணீருக்குள் இருந்த சேற்றில் சிக்கி உயிருக்கு போராடினார்கள். இத னால் கரையில் நின்ற பெண்கள், காப்பாற்றுங் கள்; காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அருகில் நின்று கொண்டிருந்தவர் களும், உடன் வந்த இளை ஞர்களும் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதனால் சேற்றில் சிக்கிய 2 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறை யினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஓமலூர் தீயணைப்பு குழுவினரும் அங்கு வந்தார்கள்.

அவர்கள் குட்டையில் இறங்கி உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு கிருஷ்ணபிரசாத்தின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு விக்னேஷ்வரனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சேலம் ஜாகீர் அம்மா பாளையம் பகுதியை சேர்ந்தவர் அண்ணா மலை (வயது 48), கட்டட தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து விநாயகர் சிலையை கரைப்பதற்காக மேட்டூர் காவிரி ஆற்றுக்கு வந்தார். அங்கு புதுப்பாலம் அருகே உள்ள காவிரி ஆற்றில் இறங்கி சிலையை கரைக்க முயன்றபோது, ஆழமான பகுதிக்கு சென்ற அண்ணாமலை தண்ணீரில் மூழ்கி உயிரி ழந்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/86916.html#ixzz3C7YUi2Sx

தமிழ் ஓவியா said...

மயிலாப்பூரில் கேட்கும் குரல்


சென்னையில் இந்திய தேசிய பெண்கள் சம்மேளனத் தின் 60ஆம் ஆண்டு விழா கடந்த சனியன்று நடைபெற் றுள்ளது. அதில் உயர்நீதிமன்ற நீதிபதி பிரபாஸ்ரீதேவன், சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா, பெண்கள் கூட்டமைப்பின் தலைவர் கே. சாந்தகுமாரி, பேராசிரியர் காதம்பரி போன்றோர் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை மட்டுமே பெண்களுக்கு எதிரான கொடுமையல்ல. கல்வி, சுகாதாரம், சொந்த நிலம் வழங்கப்படாததும் பெண்கள்மீதான வன்முறைதான் என்று கூறப்பட்டு இருப்பது சிறந்த கருத்துக்களே!

பாலியல் வன்முறை என்று கூறும்பொழுது அண்மைக் காலங்களில் இதன் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. பெண் குழந்தைகள்கூட இதில் தப்ப வில்லை என்பது - நாம் 21ஆம் நூற்றாண்டில்தான் வாழு கிறோம் என்று சொல்லுவதற்கும் வெட்கப்படத்தான் வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்த நோய் வெகு வேகமாகப் பற்றிக் கொண்டு திரிகிறது. டில்லியில் மருத்துவக் கல்லூரி மாண விக்கு ஏற்பட்ட கொடுமையை எதிர்த்து தலை நகரமே மக்கள் தலைகளாகக் காணப்பட்டது. பெரும் யுத்தமே நடந்தது; அதன் விளைவாக ஆட்சி மாற்றமேகூட நிகழ்ந்ததுண்டு.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் இந்தத் திசையில் ஒரு செய்தியாக வந்து கொண்டு தானி ருக்கிறது! ஆனால் இந்தியாவின் தலைநகரம் கொதித் தெழுந்ததுபோல தமிழ்நாட்டில் ஏன் நிகழவில்லை? இதில் அரசியலும் இருக்கிறது. ஊருக்கே உபதேசம் செய்யப் பிறப்பெடுத்ததாக மார் தட்டும் தமிழ்நாட்டு ஊடகங்களும் இதற்குத் துணை போயுள்ளன என்பதும் வருத்தத் திற்குரியதே.

இன்னும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய இழப்பீடுகள் பற்றியது. 357-ஏ குற்ற நடைமுறைச் சட்டம் 1973 இதுபற்றிப் பேசுகிறது. உயிரிழப்பு ரூ.3 லட்சம், பாலியல் வன்முறை ரூ.3 லட்சம், மன உளைச்சல் ரூ.ஒரு லட்சம் வழங்கப்பட வேண்டும்.

கடந்த ஈராண்டுகளில் இதுபற்றிய நிலை என்ன? 212 வழக்குகளில் 73 குழந்தைகள் மருத்துவ உதவிக்காகவும் 65 பேர் மனநல மருத்துவ உதவிக்காகவும், 38 பேர் பாதுகாப்பு இல்லங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். 2013-2014 கால கட்டத்தில் வெறும் ஏழு பேர்களுக்கு மட்டுமே இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடுமைக்கு இழப்பீடு பரிகாரமா என்று கேட்கக் கூடும்.

பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாலேயே அவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா? அந்தக் கொடுமைக்கு ஆளானவர்களா அதற்குக் காரணம்! காரணமானவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து நுழைந்து தப்பித்துக் கொள்கின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வுதான் பரிதாபமானது! இந்த நிலையில் அவர்களுக்கு இழப்பீடும், பராமரிப்புச் சேவைகளும் கண்டிப்பாக தேவைப்படுகின்றன.

இது போன்ற வழக்குகளில் காவல்துறைக்கு ஒரு காலக் கெடு விதித்துக் குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்த வேண்டும். பத்து பதினைந்து ஆண்டுகள் என்றால் இது அந்தப் பாலியல் கொடுமையைவிட மோசமானது.

பெண்களுக்குக் கல்வி வேலை வாய்ப்பு அவசியம் தேவை. அதே நேரத்தில் கல்விச் சாலைகளிலும், பணியாற் றும் இடங்களிலும்கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையே! இதற்கொரு முடிவு கட்டப்பட வேண்டாமா? கொஞ்ச நாட்களுக்குப் பெண்கள் கைகளில் துப்பாக் கியைத் தான் கொடுத்துப் பார்க்கலாமே - என்ன ஆகி விடப் போகிறது என்பதை அனுபவத்தில்தான் அறிய முடியும்.

பெண்களைப் பலகீனமானவர்கள் என்று கருதும் ஆண்களின் சிந்தனையில் ஒரு அச்சத்தை ஏற்படுத்த வேண்டியது. காலத்தின் கட்டாய மட்டுமல்ல; உளவியல் ரீதியான நோய்த் தடுப்பு என்றுகூட இதனைக் கருதலாம்.

ஆண்களுக்கு நிகராக பெண்களுக்குச் சொத்துரிமை என்று சட்டம் வந்தாகி விட்டது; இது எந்த அளவுக்குச் செப்பமாக, நீதியாக, நேர்மையாக, நாணயமாக செயல்பாட்டில் இருக்கிறது என்பது கண்டறியப்பட வேண்டும். இதில் ஓட்டைகள் ஏதேனும் இருக்குமானால் அதனையும் அடைத்தாக வேண்டும்.

சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய நீதிபதி - நீதித்துறையில் பெண்களுக்கு உரிய இடங்கள் கிடைக்கப் பெறவில்லை. பெண் நீதிபதியாக இருக்கும் பட்சத்தில்தான் வாழ்வியல் அனுபவங்களின் அடிப் படையில் பெண்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு தீர்ப்பு வழங்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

இதுபோன்ற அடிப்படை உரிமைகளைப் பெண்கள் பெற வேண்டும் என்றால் சட்டம் செய்யும் இடங்களில் (சட்டமன்றம் - நாடாளுமன்றங்களில்) பெண்களுக்கு 33 சதவீதம் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்படாமல் தடைகளுக்குள் சிக்கிக் கிடக்கிறதே அதுநடைமுறைக்கு வர வேண்டாமா? இது வரக் கூடாது என்பதில் மட்டும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஓரணியாகத் திரண்டு கூடிக் குலவுவதை என்னென்று சொல்லுவது?

பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? அதுபோலவே ஆண்களால் பெண்களுக்கு விடுதலை ஒரு போதும் கிடைக்காது என்று சொன்ன பெண்ணியல்வாதி தந்தை பெரியார் அவர்களின் கருத்துதான் சமுதாயத்தின் முன் பேரொளியாய் எழுந்து நிற்கிறது.

மக்கள் விழிப்புணர்வு இதில் மகத்தானது; தந்தை பெரியார் அவர்களின் பெண்ணியக் கருத்துகள் ஆரம்பக் கல்வி நிறுவனங்களிலிருந்து கற்பிக்கப்பட வேண்டும் பெண்ணடிமைத்தனம் என்பது மதத்தின் வாயிலாக - பக்தியின் வாயிலாக குருதியில் ஊறச் செய்யப்பட்டுள்ளது. அந்த வேரை எடுத்தெறியாமல், வெறும் ஒத்தடங்கள் கொடுப்பது நகைச்சுவைக்கான நல்ல தீனியாகும்.

உடல் ரீதியாக பெண்கள் பலகீனமானவர்கள் என்றால் அந்தப் பலகீனத்தைப் போக்குவதற்கான பயிற்சிகள் பள்ளிகளில் கட்டாயம் இடம் பெற வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவதுபோல பெண்கள் சிங்காரம், அணிமணிகளில் ஆழ்ந்து கிடக்கும் உணர்வு என்னும் சிறையிலிருந்து விடுதலையாக வேண் டும். அப்படியொரு நிலைப்பாடு பெண்கள் மத்தியில் வெகுண்டெழுந்தால், சிந்தனைகள் உரிமைகளின் பக்கமும், ஆண்கள் ஆதிக்கத்தின் பக்கமும், கம்பீரமாக எழும் அல்லவா! மயிலாப்பூரில் பேசிய பெண்ணுரிமையாளர்கள் இந்தத் திசையில் சிந்தித்தார்களா பேசினார்களா? என்று தெரியவில்லை! அவர்கள் பேசாவிட்டாலும் பெரியார் இயக்கம் பேசும் - பெரும் புரட்சியையும் நடத்திக் காட்டும்! வாழ்க பெரியார்!

Read more: http://viduthalai.in/page-2/86921.html#ixzz3C7YnT6b3

தமிழ் ஓவியா said...

நிரந்தர விரோதி

நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூடநம்பிக்கை யும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கின்றன.
(குடிஅரசு, 13.4.1930)

Read more: http://viduthalai.in/page-2/86927.html#ixzz3C7YvBjDx

தமிழ் ஓவியா said...

தேனினும் இனிய விடுதலை

22.8.2014 நாளிட்ட விடுதலை நாளிதழில் வெளிவந்துள்ள செய்திகள் அனைத்தும் அருமை. அவை பாதுகாக்கப்பட வேண் டிய பாதுகாப்புப் பெட்டகமாகவும், கருத் துக் கருவூலமாகவும் திகழ்கின்றன. குறிப்பாக

1) ஜாதி - தீண்டாமை ஒழிய அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமையினை நிறைவேற்றித் தருமாறு முதல்வர் ஜெயலலிதா அவர்களை வலி யுறுத்தி தமிழர் தலைவர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை மற்றும் கோமாதா ஆந்திராவில் படுத்தியபாடு!

2) நம்ம தியாகராயர் நகர்! - கோவி. லெனின் அவர்கள் எழுதிய கட்டுரை.

3) 375-ஆம் ஆண்டில் சென்னை நகரம்! - தலையங்கம், கைவல்யம் நாள் (22.8.1877).

4) சிப்பாய்க் கலகம் சுதந்திரப் போராட்டம் அல்ல - மதப்போராட்டமே என்று சொன்னவர் தந்தை பெரியார்! என் கின்ற அரிய என் போன்ற இளைஞர் களுக்கும் - மாணவர்களுக்கும் புதிய தகவலை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய சிறப்புக் கூட்டத்தில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாரி வழங்கிய பல வரலாற்றுத் தகவல்கள்.

5) மாணவர்களுக்கான பெரியார் 1000 வினா - விடைப் போட்டி நடைமுறைகள்!

6) பகுத்தறிவுக் களஞ்சியம் பகுதியில்; புத்தர் அறிவுரைகள், தந்தை பெரியார் பொன்மொழி மற்றும் தாய்மார்களுக்கு தந்தை பெரியார் அறிவுரை, மருத்துவம் வென்றது, விடை என்ன? என்ற தலைப்பில் ஆத்திகவாதிகளுக்கு அடுக்கடுக்கான அர்த்தமுள்ள கேள்விகள் ஆகியவை மக்களை சிந்திக்கத் தூண்டுகின்றன.

7) மேலும், சென்னையின் 375 ஆம் ஆண்டில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் வரலாற்றுக் கொண்டாட்டம் - நடைப்பயணம்! நடைப்பயணம் மேற் கொண்ட கழக முன்னோடிகள் - தோழர்கள் ஆகியோர் தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலை முன்பும், தியாகராயர் நகர் டாக்டர் நடேசன் பூங்காவிலும் எடுத்துக்கொண்ட வண்ணப் புகைப்படங்கள் கண்களைக் கவர்ந்தன.

8) இறுதியாக, நாளைய தலைமுறைக் கான நாற்றங்கால் - பெரியார் 1000! போன்ற எண்ணற்ற பயனுள்ள செய்திகள் இளைஞர் களுக்கும், மாணவர்களுக்கும் விருந்தாக வும் அரு மருந்தாகவும் அமைந்தது.

இவ்வாறு தேனினும் இனிய செய்தி களைத் தாங்கி பல வண்ணங்களுடனும், பகுத்தறிவு எண்ணங்களுடனும் நாள் தோறும் வெளிவருகின்ற உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளேட் டினை இளைஞர்களும் - மாணவர்களும் ஆவலுடன் படித்துப் பாராட்டி மகிழ் கின்றனர், போற்றிப் புகழ்கின்றனர்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- சீ.இலட்சுமிபதி, தாம்பரம், சென்னை-45

Read more: http://viduthalai.in/page-2/86924.html#ixzz3C7ZRhKpG

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் தினம் என்பதை குருஉத்சவ் என மாற்றி தமிழ்மொழியை வீழ்த்திட ஆரியம் சூழ்ச்சி கலைஞர் எச்சரிக்கை!


சென்னை, செப். 1_ தி.மு.க.தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று (31.8.2014)அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங் கில் சட்டமன்ற முன்னாள் செயலாளர் மா.செல்ரவாஜ் இல்ல மண விழாவை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

அப்போது கலைஞர் அவர்கள் தமது உரையில் ``ஆண்டாண்டு காலமாக நாம் கடைப் பிடித்து வருகிற ``ஆசிரியர் தினம் என்பதை ``குரு உத்சவ் என மாற்றிக் கொண்டாட வேண்டுமென்று அனைத்துப் பள்ளிகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நம்முடைய மொழியில் முதலில் கை வைத்து அதை வீழ்த்தி விட்டு அதற்குப் பிறகு மொழிக்குரியவர்களை வீழ்த்திட கொஞ்சம், கொஞ்சமாக சூழ்ச்சி வலை பின்னப் படுகிறது என்று குறிப்பிட்டார்.

தமிழக சட்டமன்றப் பேரவை முன்னாள் செயலா ளர் எம்.செல்வராஜ் இல்ல மணவிழாவை தலைமை யேற்று நடத்தி வைத்து கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

ஆச்சரியப்படுகின்ற அளவுக்கு நன்றியுரையாற்றிய செல்வராஜ்!

இந்த மண விழா நிகழ்ச்சியில் நம்முடைய சட்டப் பேரவையினுடைய முன்னாள் செயலாளர் அழைப்பின் பேரில் அவருடைய அன்பிற்குரிய நண்பர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போது பதவியில் இருந்தால் என்ன ஆகுமோ என்ற அச்சத்திற்கு இடமின்றி, எதிர் காலத்திலே நம்முடைய தமிழ்ச் சமுதாயம் வாழ எப்படிப்பட்ட திறமும், வீரமும், நெஞ்சுறுதியும் ஒவ்வொரு தமிழனுக்கும் தேவை என்பதை உணர்த்துகின்ற வகையில், இந்த மணவிழா வினை நடத்து கின்ற நம்முடைய அருமை நண்பர் செல்வராஜ் அவர்கள் நம்மையெல்லாம் வியப்பிலே ஆழ்த்துகின்ற வகையில், அவரே ஒரு சொற்பொழிவை இங்கே ஆற்றி முடித்திருக்கிறார்.

இப்படிப்பட்ட மணவிழாக்களில் நன்றி கூறுவது என்ற பெயரால், மணமக்களுடைய குடும்பத்தார் சார்பில் அனைவருக்கும் நன்றி என்று கூறிவிட்டு அமர்ந்து விடுவார்கள். ஆனால் செல்வ ராஜ் அவர்கள் நீண்ட நேரம் ஒரு உரையையே ஆற்றி எனக்குப் பேசுவதற்கு இடம் தருவாரோ மாட்டாரோ (சிரிப்பு) என்கிற அளவுக்கு ஒவ்வொருவருக்கும் நன்றி கூறி நீண்ட உரையாற்றி உங்களையெல்லாம் மகிழச் செய்திருக்கிறார்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமே யானால், என்னையும் வியப்பிலே ஆழ்த்தியிருக்கிறார், மகிழ்ச்சியிலே ஆழ்த்தியிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. சட்டப்பேரவையிலே செயலா ளராக இருந்த செல்வராஜா இப்படிப் பேசுகிறார் என்று நான் ஆச்சரியப்படுகின்ற அளவுக்கு தன்னு டைய நன்றி உரையை அவர் ஆற்றியிருக்கிறார். இந்த மண விழாவில் மணமக்களாக வீற்றிருப்ப வர்கள் இருவருமே படித்தவர்கள், கல்வியில் சிறந்தவர் கள், உலகம் அறிந்தவர்கள். செல்வராஜின் அன்பு மகள் செல்வி அனுஷா, வாழ்க்கைத் துணைவராக ஏற்கிற மணமகனின் பெயர் அர்மேஷ்;

அதாவது மணமக்கள் அனுஷா, அர்மேஷ் இரண்டு பெயர்களுமே தமிழ்ப் பெயர்கள்தான் என்று நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று இல்லை. அந்த இரண்டு பெயர்களும் வடவர்களால் தமிழ்ச் சமுதாயத்தின் மீது ஒரு காலத்தில் திணிக்கப்பட்ட பெயர்கள்.


தமிழ் ஓவியா said...

ஆனாலும் வழக்கத்தில் வந்து விட்ட காரணத்தால், இனி அதை மாற்றுவதால் அதிலே பல சட்டச் சிக்கல்கள் வரக் கூடும் என்பதை உணர்ந்து அவர்கள் அந்தப் பெயரிலேயே தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு இந்த மணவிழாவினை நடத்திக் கொண்டிருக் கிறார்கள். அவர்களை வாழ்க வாழ்க என்று நான் வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

சட்டம் - ஒழுங்கு, அமைதி என்ன விலை என்று கேட்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது!

குறிப்பாக தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு, அமைதி என்றால் என்ன விலை என்று கேட்கக் கூடிய நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நேரத்திலும் ஒரு காலத்தில், ஆட்சியில் அலுவலராக, செயலாளராக, எங்களுக்கு உற்றத் துணைவராக இருந்த செல்வராஜ் அவர்கள், அந்த நன்றியை மறவாது, எங்க ளுக்குத் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிப்பதைப் பற்றிக் கவலையில்லை, ஆனால் தான் தமிழன், தமிழ்ச் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பெரும் பணிகளை ஆற்ற வேண்டியவன் என்கின்ற அந்த உணர்வோடு இன்றைக்கு இந்தத் திருமணத்திலே, தன்னுடைய வீட்டுச் செல்வங்களுக்கு தமிழ் முறைப்படி, தமிழர் களுடைய நாகரிகத்தின் அடிப்படையில் இந்தத் திருமணத்தை நடத்தியிருப்பது பெரிதும் பாராட்டுக் குரிய ஒன்றாகும்.

நாம் மகிழத்தக்க ஒரு நிகழ்ச்சி யாகும். இதை நான் ஏன் மகிழத் தக்க நிகழ்ச்சி, பாராட் டுக்குரிய நிகழ்ச்சி என்று சொல்கிறேன் என்றால், இன்றைய தினம் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள படிப்படியான தீமைகளையெல்லாம் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்று நம்முடைய கையிலே தமிழுக்கு ஏற்றம் தரக் கூடிய எந்த சக்தி யையும் நாம் படைத்திருக்க வில்லை. என்னால் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல முடியும்.

நான் தமிழகத்தின் முதலமைச்சராக அய்ந்து முறையும், தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பின ராக பன்னிரண்டு முறையும், சட்டப் பேரவை உறுப்பினராக ஏறத்தாழ 50 ஆண்டுக் காலம் இருந்தவன் என்ற முறையில் உங்களோடு பழகியவன், பழகிக் கொண்டிருக்கிறவன், மேலும் பழகப் போகிறவன் என்ற வகையில் சில அபாய அறிவிப்பு களை நீங்கள் மனதிலே பதிய வைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகச் சொல்கிறேன்.

நம்முடைய தமிழ்ச் சமுதாயம் வாழ்வதற்காகப் பாடுபட்டவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதியார் என்று ஒருவர் இருந்தார். அவர் தமிழ் நெறி,தமிழ் முறை, தமிழ் நலன், தமிழ் இயக்கம், இதற்காக தன்னையே ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்தவர். அவர் நம்முடைய இல்லங்களிலே நடைபெறுகின்ற விழா வானாலும், நாம் நடத்துகின்ற பெரு விழாக்களானாலும், அந்த விழாக்களில் எல்லாம் தமிழைப் போற்றுங்கள், தமிழை வாழ்த்துங்கள், தமிழர்கள் இலக்கியங்களை மறவாமல் அவற்றைப் பின்பற்றுங் கள் என்பதைச் சொல்லிச் சொல்லி மக்கள் மனதிலே பதிய வைப்பார்.

அப்படிப்பட்ட அந்தப் பாரதியார், நாவலர் பாரதியார் ஒன்றைச் சொல்வார். நம்மை இன்றைக்கு சீரழிக்க வந்துள்ள மொழி ஆதிக்கத் திற்குப் பெயர் சஞ்சுகிருதம் என்று சொல்லுவார். அதாவது சமஸ்கிருதத்தை அவ்வளவு கிண்டலாக, கேலியாக, சஞ்சுகிருதத்தை யாரும் பின்பற்றாதீர்கள் என்று சொல்லுவார்.அப்படிப்பட்ட பெரியவர்கள், தியாகச் செம்மல்கள், தமிழ்ச் சான்றோர்கள் வாழ்ந்த தமிழ் நிலத்தில் இன்றைக்கு தமிழ்த் திருமணத்தை நடத்திக் கொள்கின்ற நேரத்தில் ஒன்றை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

தமிழ் ஓவியா said...


அவர் சொன்ன அந்த சஞ்சுகிருதம் - அவர் கேலியாகச் சொன்ன, ஏளன மாகச் சொன்ன, அந்த சஞ்சுகிருதம் இன்றைக்கு தமிழ் நாட்டில் சமஸ்கிருத வாரமாகக் கொண்டாடப்பட வேண்டுமென்று சொல்கிற அளவுக்கு ஓங்கி வளர்ந்திருக்கின்றது.

அது மாத்திரமல்ல; இன்றைக்கு காலையிலே நான் பத்திரிகையிலே படித்த ஒரு செய்தியில், என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், இனிமேல் ஆசிரியர் தினம் என்பதற்குப் பதிலாக குரு உத்சவ் என்ற பெயரில் அதைக் கொண்டாட வேண்டுமென்று மத்திய அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக செய்தி வெளி வந்துள்ளது. ஆசிரியர் தினம் என்பதை நாம் ஆண்டாண்டு கால மாகக் கடைப்பிடித்து வருகிறோம்.

அந்தச் சொல்லை மாற்றி இன்றைக்கு வந்துள்ள மத்திய புதிய அரசு வெளியிட்டுள்ள ஆணையில், இனிமேல் அனைத்துப் பள்ளிகளிலும் குரு உத்சவ் என்றுதான் ஆசிரியர் தினத்தை அழைக்க வேண்டும் என்று சொல்லியிருக் கிறார்கள்.

இப்படி நம்முடைய மொழியில் முதலில் கை வைத்து, அதை வீழ்த்தி விட்டு, அதற்குப் பிறகு இந்த மொழிக்குரி யவர்களை, இந்த மொழியால் உயர்ந்தவர்களை, இந்த மொழியால் தங்களை வருத்திக் கொண்டவர்களை வீழ்த்தி விட கொஞ்சம் கொஞ்ச மாக, சிறிது சிறிதாக சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது என்பதற்கு இதை விட வேறு எந்த உதாரணமும் தேவையில்லை.

சட்டமன்ற ஜனநாயகத்திற்குக் கேடு வராமல் பாதுகாத்துச் செயல்பட்டவர் செல்வராஜ்!

ஆகவே தான் நாம் இந்தத் திருமணத்தை தமிழர் முறைப்படி நடத்திக் கொண்டாலுங்கூட, இந்தத் தமிழர் முறைகளுக்கு வேட்டு வைக்கின்ற அளவுக்கு மெல்ல மெல்ல ஆரியம் தமிழகத்திலே தன்னுடைய சித்து வேலைகளைத் தொடங்கி விட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் ஓவியா said...


சமுதாயத் துறையிலே திராவிட முன்னேற்றக் கழகம் ஈடுபாடு கொண்டு இத்தகைய செய்திகளை யெல்லாம் வெளியிடா விட்டால், தமிழன் மேலும் அடிமைப் பட்டுப் போய் விடுவான் என்பதை ஞாபகத்திலே வைத்துக் கொண்டு, அந்த ஞாபகத்தை சிறிதும் மறவாமல் தமிழர்களுக்காக, தமிழன் வாழ வேண்டும், தமிழ்ச் சமுதாயத்திற்காக உழைக்க வேண்டும், பாடுபட வேண்டும் என்ற அந்த உணர் வோடு செயல்படுங்கள் என்று நான் இந்தத் திருமண விழாவிலே அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் ஓவியா said...

இந்த மணவிழாவிலே உரையாற்றிய, நன்றி உரையாற்றிய நம்முடைய அருமை நண்பர், சட்டப் பேரவையின் முன்னாள் செயலாளர் தம்பி செல்வராஜ் கழகத்திற்கு, கழகக் கொள்கைகளுக்கு எவ்வளவு உடன்பாடானவர் என்பதை நான் அறிந்திருந்தாலுங் கூட, அவர் வேலை பார்த்த நேரத்தில், அவர் அலுவல கத்திலே பணியாற்றிய நேரத்தில், அந்தக் கொள்கை களை முன் வைத்து, அவருடைய உழைப்பை, அவருடைய செயலாற்றலை முன் வைத்து இந்த இயக்கத்தை, இந்த அரசை நடத்த வேண்டுமென்று எண்ணினாரே தவிர எந்த நேரத்திலும் அவர் தன்னுடைய சுயநலத்திற்கு அல்லது அமைச்சர்களே கூட,

நானே கூட, தவறாக ஒன்றைச் செய்தால் அதை என்பால் உணர்த்தி, திருத்தி, சட்ட மன்றம் ஜனநாயக மன்றம், அந்த ஜனநாய கத்திற்கு கேடு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் அழுத்தந்திருத்தமான கருத்து உடையவராகத் திகழ்ந்தார். அதனால்தான் ஜனநாயக முறையில் ஆட்சி ஒன்று கடந்த காலத்தில் நடைபெற்றது என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்றால் அதற்கெல்லாம் காரணம், நம்முடைய செல்வராஜைப் போன்ற நண்பர்கள் ஜனநாயகத்திலே கொண்டிருந்த பற்றும், அந்தப் பற்று கொண்டிருந்த எங்கள் பால் அவர்கள் கொண்டிருந்த பரிவும் அன்பும் தான் காரணம் என்பதை எடுத்துச் சொல்லி, அப்படிப்பட்ட நல்ல அலுவலாளர்கள், நல்ல செயலாளர்கள் யாராவது வாய்த்தால், அவர்களைப் பாராட்டி,

புகழ்ந்து, அவர்கள் வழி நடந்து, தாங்கள் கொண்டிருக்கின்ற எந்தக் காரியமாயினும், அதைத் தமிழ் வழியில், தமிழர்களுடைய வழியில் சிறப்பாக, செம்மையாகச் செய்து, பெரியா ருக்கு, பேரறிஞர் அண்ணாவுக்கு நாம் கட்டுப்பட்டவர்கள், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அந்த மூன்று தாரக மந்திரங்களையும் மறவாதவர்கள் என்ற அந்த ஒரு நிலையை எடுத்துச் சொல்வதற்காக நான் இதைக் குறிப்பிட்டேன் என்பதை இங்கே கூறி,

நம்முடைய அனுஷா அவர்களும், அர்மேஷ் அவர்களும் இல்வாழ்க்கையை இனிது நடத்தி, எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிட வேண்டுமென்று வாழ்த்தி வாழ்க வாழ்க மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழ்க என்று என்னுடைய வாழ்த்துகளை இணைத்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-3/86914.html#ixzz3C7ZewvgB

தமிழ் ஓவியா said...

பற்களில் கறை போக்க...

என்னதான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கறை கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான். நீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (Pottasium Permanganate) (KMNO4)பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch) போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும். (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கறைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

பல் வலியிலிருந்து நிவாரணம் பெற சில வழிமுறைகள்

பல் வலியிலிருந்து நிவாரணம் பெற கோவைப்பழம் சாப்பிடலாம்.

மகிழம் இலையை கஷாயம் செய்து வாய்க் கொப்பளித்து வந்தால், பல் நோய் எதுவும் அண்டாது.

மாவிலையைப் பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால், பற்கள் உறுதி பெறும்.

ஒரு துண்டு சுக்கை எடுத்து வாயில் போட்டுக் கொண்டால், பல்வலி நீங்கும்.

நந்தியாவட்டை வேரை மென்று துப்பினால், பல்வலி குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/86882.html#ixzz3C7a9FYir

தமிழ் ஓவியா said...

நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்


நெல்லிக்காய் லேகியம்: 150 கிராம் பனை வெல்லத்துடன் இரண்டு ஆழாக்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பனைவெல்லம் கரைந்தவுடன் இறக்கி இதனை மேலாக இறுத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் விட வேண்டும்.

பின்னர் அடுப்பில் வைத்து அதனுடன் ஒரு ஆழாக்கு அளவு சுத்தமான பசும்பால் விட்டு நன்றாக கொதித்து வரும் சமயம், இடித்து சலித்த நெல்லிக்காய் வற்றல் தூளில் ஆழாக்கு அளவு இதில் போட்டு பாகுபதம் வரும்போது, அரை ஆழாக்கு தேன், அரைஆழாக்கு சுத்தமான பசு நெய்யினை விட்டுக் கிளறி லேகியபதம் வந்தவுடன் இறக்கவேண்டும்.

ஆறிய பின்னர் வாயகன்ற பாட்டிலில் இட்டு மூடி வைத்து தினசரி காலை மற்றும் மாலையில் தேக்கரண்டி சாப்பிடலாம்.

இந்த லேகியம் வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகியவற்றை சமன் செய்யும். உடலுக்குப் பலத்தை தருவதுடன், பித்தம் காரணமாக ஏற்படும் கிறுகிறுப்பு, வாந்தி, அரோசிகம் மாறும். ரத்தம் சுத்தமாகும்.

பெருங்குடல், சிறுகுடல், இரைப்பைகளில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும். சொறி, சிரங்கு நமைச்சல் குணமாகும். கருவுற்ற நிலையில் 21 நாள்கள் சாப்பிட சுகப்பிரசவம் ஏற்படும். கருப்பை கோளாறுகளைக் குணப்படுத்தும். காய கல்ப மாக செயல்படும் இந்த லேகியம் 3 மாதம் வரை கெடாது.

நெல்லிக்காய் வடாம்: ஒரு படி நெல்லிக்காயை கொஞ்சம் கொஞ்சமாக உரலில் போட்டு இடித்தால் மசித்து அதன் வித்துக்கள் வெளியேறும். நைந்தபின் வித்துக்களை நீக்கி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

எல்லாக் காய்களையும் இடித்த பின் பெரிய பச்சை மிளகாயில் 10-ம், இரண்டு கொட்டை பாக்களவு தோல் சீவிய இஞ்சி, கைப்பிடியளவு கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு ஆகியன சேர்த்து மறுபடியும் உரலில் போட்டு மைபோல் இடிக்கவேண்டும்.

பின்னர் அதனை எடுத்து உளுந்து வடை அளவிற்கு அடையாகத் தட்டி சுத்தமான பாயில் வைத்து, வெயிலில் உலர்த்தவேண்டும்.
நீர் சுண்டி சருகுபோல காய்ந்த பின் எடுத்து ஜாடியில் அடுக்கி மூடி வைத்துவிட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவேண்டும். இது வெகுநாட்கள் கெடாது.

நெல்லிக்காய் சஞ்சீவி லேகியம்: நன்றாக பழுத்த நெல்லிப்பழங்களின் விதைகளை நீக்கி வெயிலில் சருகாக உலரவிட வேண்டும். பின்னர் அதனை உரலில் இடித்து சலித்துக் கொள்ள வேண்டும்.

சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை தலா 5 கிராம் எடுத்து இடித்து சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இரண் டாழாக்கு பசுவின் பாலை நன்றாக கொதிக்க வைத்து, அதில் 200 கிராம் பனைவெல்லத்தை போட்டு பாகு பதம் வரும் சமயம், அரை ஆழாக்கு சுத்தமான தேனை விட்டு சுக்கு, மிளகு, திப்பிலி தூளையும் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி ஒரு வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி தேக்கரண்டி காலையில் மட்டும் சாப்பிட்டு வர 40 நாளில் ரத்தம் சுத்தமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/86883.html#ixzz3C7aHn1oA

தமிழ் ஓவியா said...

நோய்களை விரட்டியடிக்கும் செவ்வாழைப்பழம்

எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புசத்தும், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களை கொண்டது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ் டரீகா மற்றும் கியூபா என கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு ஆகாரத்துக்கு பிறகு தொடர்ந்து 40 நாள்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.

பல்வலி, பல்லசைவு போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாள்கள் செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற தோல் வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும் செவ்வாழை பழத்தைத் தொடர்ந்து 7 நாள்கள் சாப்பிட்டு வர சரும நோய் குணமாகும். நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும்.

எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட வர்கள் தினசரி இரவு செவ்வாழைப்பழம் சாப்பிடவேண்டும். தொடர்ந்து 48 நாள்கள் செவ்வாழை சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை தன்மை சீரடையும்.

Read more: http://viduthalai.in/page-7/86883.html#ixzz3C7aRZKmR

தமிழ் ஓவியா said...

ரத்த அணுக்களை பெருக்கும் முருங்கைக் கீரை


உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது. தோலை உரிக்காமல் வேக வைக்கும்போது வைட்டமின் பி, சி மற்றும் தோலில் காணப்படும் தாதுக்கள் பாதுகாக்கப்படுகின்றன.

பாசிப் பயறுதான் மற்ற பயறுகளைவிட எளிதில் செரிமானமடைவதுடன் உடலால் விரைவில் ஏற்றுக் கொள் ளப்படுகிறது. காரணம், இது சிறிய அளவில் இருப்பதால் எளிதில் வெந்துவிடுகிறது. பாசிப் பயறை அதிகமாகச் சாப்பிடுவதால் குடல் பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் வாயுக்களை உற்பத்தி செய்து கழிவை ஏற்படுத்துகின்றன.

தினசரி கொய்யாப் பழம் சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகமாகும். ரத்த சோகை வராமல் தடுக்கலாம்.

நம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வெங்காயம், கேரட் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

பார்லி நீரை தினமும் அருந்திவந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

துளசி இலையைக் கசக்கி முகத்தில் தேய்த்துக் கொண்டு இரவில் படுத்து, காலையில் எழுந்து முகம் கழுவினால் முகம் அழகு பெறும்.

முதல் நாள் இரவில் உலர்ந்த திராட்சைப் பழங்களைத் தண்ணீரில் ஊறவைத்து, மறு நாள் காலையில் வெறும் வயிற்றில் பழங்களைச் சாப்பிட்டு தண்ணீரையும் குடித்தல் உடல் நன்கு சக்தி பெறும்.

வாரத்தில் இரண்டு நாட்களாவது முருங்கைக் கீரையை சாப்பிட்டு வர ரத்த அணுக்கள் அதிகமாக உற்பத்தியாகும்.

சுரைக்காயை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து தொப்பைக் கரையும்.

வால் மிளகு பசியைத் தூண்டிவிடும். செரிமான சக்தியை உண்டாக்கும். கபத்தையும் வாயுவையும் போக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/86886.html#ixzz3C7aYJFFV

தமிழ் ஓவியா said...

விநாயகர் ஊர்வலம்: ஊரெல்லாம் ரகளை!செய்யாறில்...

செய்யாறு, செப்.1-_செய்யாறில் விநாயகர் சிலை ஊர்வலம் காந்தி சாலை வழியாக செல்ல அனுமதி மறுத்ததால் 2 மணிநேரம் போராட்டம் நடந்தது.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு செய் யாறு நகர இந்து முன்னணி சார்பில் டவுன் பகுதி யில் 11 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட் டிருந்தன. இந்த சிலைகளை கோனேரிராயன் குளத்தில் கரைப்பதற்காக நேற்று திருவோத்தூர் சிறீவேதபுரீஸ் வரர் கோவிலின் முன்பிருந்து ஊர்வலம் தொடங்கியது.

ஊர்வலம் மார்க்கெட், மண்டித் தெரு வழியாக செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தி காந்தி சாலை யில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் காந்தி சாலை வழியாகத்தான் ஊர்வலம் செல்வோம் என பாதுகாப்புப் பணியிலிருந்த மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் சி.ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடு பட்டனர்.

தொடர்ந்து காந்தி சாலை வழியாக செல்ல காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் இந்து முன்னணி இளைஞர்கள் சாலையில் அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி போராட்டம் நீடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. காந்தி சாலையில் கடைகள் அடைக்கப்பட்டன. காவல் துறையின் சமா தானத்தை ஏற்க மறுத்ததால் காவல்துறையினர் காந்தி சாலை வழியாக ஊர்வலம் செல்ல அனுமதித்தனர்.

விநாயகர் சிலைகள் அனைத்தும் கோனேரிராயன் குளத்தில் கரைக்கப்பட்டன.

Read more: http://viduthalai.in/page-8/86888.html#ixzz3C7aqQ7GQ

தமிழ் ஓவியா said...

விநாயகர் சதுர்த்தி-மு.க.ஸ்டாலின் வாழ்த்தா? தி.மு.க. தலைமை நிலையம் மறுப்பு!


சென்னை, செப்.1- தி.மு.க. தலைமைக் கழகம் நேற்று (31.8.2014) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பிரத்யேக இணையதளத்தில், விநாயகர் சதுர்த்தி நாளன்று வாழ்த்துக்களை தெரிவித்ததாக வந்துள்ளது.

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் இணைய தளத்தைப் பராமரிக்கின்ற சில தோழர்கள் ஆர்வ மிகுதியின் காரணமாக, எல்லாரும் தெரிவித்திருப்பதைப் போல தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக வெளியிட்டுள்ளனர். இது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னனுமதியின்றி நடைபெற்ற செயலாகும்.

இந்த வாழ்த்துச் செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.குறிப்பு: தி.மு. கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இப்படி கொள்கை தெரியாதவர்களை அம்மாதிரி பொறுப்பில் அமர்த்துவதைத் தவிர்க்கவேண்டும். -ஆசிரியர்

Read more: http://viduthalai.in/page-8/86893.html#ixzz3C7b0mpQj

தமிழ் ஓவியா said...

சிசேரியன் - சோதிடம்?


குழந்தை பிறக்கும் நேரத்தை வைத்து ஜாதகம் கணிக்கிறார்கள். ஜாதகம் சரியா? என்கிற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்; இவர் கள் குழந்தை பிறக்கும் நேரம் என்கிறார்களே - அது எந்த நேரமாம்?

இதற்குத் தந்தை பெரியார் எடுத்து வைக்கும் வினாக்கள் இணையற்ற அறிவுத் தோட்டாக்கள்.

பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும் போதே ஜீவன் (உயிர்) ஏற் பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7, 8, 9, 10 மாதங்களில் எப்பொழுதானா லும் பிறக்கும் காலமா? அப்படிப் பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரை நாள் குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத் தில் தலை வெளியாகி நிலத் தில் பட்டு, கால் நிலத்தில் விழாமல், தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமா? அல்லது மருத்து வச்சி கைவிட்டு எடுத்த நேரமா? அல்லது டாக்டர் வயிற்றை அறுத்து எடுத்த காலமா? என்பனவாகிய கேள்விகள் ஒருபுறம் இருக்க, ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்பபோமானா லும், அந்த நேரத்தையாவது எப்படிச் சரியாகக் கண்டு பிடிக்க முடியும் என்பதை யோசிப்போம்! (நூல்: சோதி டம்) என்று அறிவு நாணய மாகத் தந்தை பெரியார் எழுப்பும் வினாக்களுக்கு விடையளித்துவிட்டு ஜாதகத் தைக் கணிக்கட்டும்!

ஒரு செய்தி வெளிவந் திருக்கிறது. என்.கண்ணன் அய்யராம் - பட்டீசுவரத்தை (கும்பகோணம் வட்டம்) சேர்ந்தவர். அவர் நிபுணத் துவம் எதில் தெரியுமா?

இதோ ஓர் எடுத்துக் காட்டு:

நிகழும் விஜய வருஷம் பங்குனி மாதம் 26 (16.3.14) ஞாயிற்றுக்கிழமை பூர நக்ஷத் திரம் கூடிய சுபதினத்தில் காலை 9.30-க்குமேல் 10.15-க் குள் ரிஷப லக்னத்தில் அறு வைச் சிகிச்சை செய்து குழந்தை எடுக்க உத்தமம் - என்று ஜாதகம் கணித்துள் ளார். இச்செய்தி முகநூலில் வெளிவந்துள்ளது.

எப்படி இருக்கிறது? குழந்தை இயற்கையாகப் பிறப்பதற்கு முன்பாக, நல்ல நேரம் குறித்து, அப்பொழுது சிசேரியன் செய்து குழந் தையை வெளியில் எடுப்பார் களாம்!
இந்த வைதிகம் அல்லது அய்திகம் எந்த சாத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளதாம்.

இந்தப் பார்ப்பனர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக எதைத்தான் செய்யமாட்டார் கள்?

இவ்வளவுக்கும் இவர் கள் சொல்லுகிற லக்னமாக இருக்கட்டும், கோள்களாகட் டும் பூமியிலிருந்து எவ்வள வுத் தொலைவில் உள்ளன. சூரியன் (இது கோளே அல்ல நட்சத்திரம்) 93 லட்சம் மைல்கள்; புதன் - 25.8 லட் சம் மைல்கள்; வெள்ளி - 27 லட்சம் மைல்கள்; வியாழன் - 390.6 லட்சம் மைல்கள்; சனி - 777 லட்சம் மைல்கள்; யுரேனஸ் - 1.69 கோடி மைல் கள்; நெப்டியூன் - 2.7 கோடி மைல்கள்.

குழந்தை பிறக்கும் நேரத் திற்கும், இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மைல் தூரத்தில் இருக்கும் இவை களின் நேரத்திற்கும் ஏதாவது சம்பந்தா சம்பந்தம் உண்டா? இவர்கள் இங்குள்ள நேரத் தைத்தானே கணிக்கிறார்கள். ஆனால், அந்தக் கோள்களில் இதே நேரம்தானா?

அறிவையும், பொருளை யும் சுரண்டும் இந்த சோதி டக் கொள்ளையர்களை என்ன சொல்ல - என்ன செய்ய?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/86535.html#ixzz3C9lkawcV

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

பசை!

செய்தி: திருப்பதி கோவில் அறங்காவலர் குழுத் தலை வர் பதவிக்கு ஆளும் கட்சிக்குள் கடும் போட்டி; வேறு வழியின்றி முதல மைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடி முடிவு எடுத்து வருவாய்த் துறை செயலா ளரைத் தலைவராக நிய மித்தார்.

சிந்தனை: ஏன் கடும் போட் டியாம்? கோடிக்கணக்கில் பணம் புரளும் பசை மிகுந்த பதவியாயிற்றே!

Read more: http://viduthalai.in/page1/86542.html#ixzz3C9m8LnFV

தமிழ் ஓவியா said...

ஒப்பற்ற ஆயுதம்


உங்கள் தனிப்பட்ட நலனை அலட்சியம் செய்வது என்கின்ற அந்த ஓர் ஒப்பற்ற ஆயுதம் அணுகுண்டையும் வெடிக்காமல் செய்துவிடும். - (குடிஅரசு, 9.3.1946)

Read more: http://viduthalai.in/page1/86543.html#ixzz3C9mNjNfN

தமிழ் ஓவியா said...

நீதியை மறைக்கும் நிழல் விலகுமா?


பிற இதழிலிலிருந்து....

தீக்கதிர் தலையங்கம்


நீதியை மறைக்கும் நிழல் விலகுமா?

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் மேல் முறையீடு செய்யத் தேவையில்லை என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல்ரகோத்கி கூறியுள்ளதாக தகவல் கள் வெளியாகியுள்ளன. மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு நடந்து வரும்பல்வேறு வகுப்புவாத திருகல்களில் ஒன்றாகவே இந்தக் கருத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. காஞ்சி மடாதிபதிகள் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் குற்றம் சாட்டப்பட்ட இந்தக் கொலை வழக்கில் 2013ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத் தில்தான் இந்த வழக்கு பதியப்பட்டது.

தமிழகத்தில் விசாரணை நடைபெற்றால் நியாயமாக நடைபெறாது என்று சங்கராச்சாரியார்கள் வழக்கு தொடுத்ததன் காரணமாகவே புதுவை நீதிமன்றத்திற்கு இந்த விசாரணை மாற்றப்பட்டது. அப்போதிலிருந்தே இந்த விசாரணை தடுமாறத் துவங்கியது. இன்னும் சொல்லப்போனால் வழக்கைப் பதிவு செய்த தமிழக காவல்துறை, குற்றவாளிகள் தண்டனை பெறுவதில் அக்கறை காட்டவில்லை. இந்த வழக்கில் சங்கரராமன் குடும் பத்தினர் உட்பட 83 பேர் பிறழ் சாட்சியங் களாக மாற்றப்பட்டனர். சங்கரமடத்தின் அரசியல் மற்றும் அதிகாரசெல்வாக்கு யாருக்கும் தெரியாத பரம ரகசியமல்ல. சங்கரமடத்தின் மிரட்டல் காரணமாகவே பிறழ்சாட்சி அளித்ததாக சங்கரராமன் குடும்பத்தினர் வழக்கின் தீர்ப்பு வந்தபிறகு கூறியது குறிப்பிடத்தக்கது. சங்கராச்சாரி யார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டபோதே அதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் பாஜகவினர்.இப்போது மத்தியில் அவர்களுடைய ஆட்சி நடப் பதால்தான் அரசுத்தலைமை வழக்கறிஞர் இத்தகைய கருத்தை கூறியுள்ளார் என்றே புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கொல்லப்பட்டவரின் குடும்ப உறுப் பினர்களே பிறழ் சாட்சிகளாக மாறியுள்ள தால் இந்த வழக்கை மேல்முறையீடு செய்தால் உயர்நீதிமன்றத்தின் கண்டனத் திற்கு ஆளாகவேண்டியிருக்கும் என்று அவர் கூறியுள்ளதாக தகவல்கள் தெரி விக்கின்றன.

குடும்ப உறுப்பினர்களே பிறழ் சாட்சிகளாக மாற்றப்பட்டுள்ளார்கள் என்றால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து முறையான, நியாயமான விசா ரணை நடைபெறுவதை உத்தரவாதப் படுத்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு இல்லையா?

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய புதுவைஅரசு உரிய ஆர்வம் காட்ட வில்லை. இந்த வழக்கின் முழு உண்மை யும் தமக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று முன்னாள் துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா கூறி யுள்ளார். பின்னர் அவர் அளித்த அனுமதியின் அடிப்படையிலேயே மத்திய அரசின் கருத்தை புதுவை அரசுகேட்டுள்ளது. அதற்கு எதிர் மறையான பதிலை மத்திய அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப் படுவதில் தமிழக அதிமுக அரசும் அக்கறை காட்ட வேண்டும். சட்டப் பூர்வமாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். சங்கரராமன் கொல்லப்பட்டது உண்மையெனும் போது கொலை செய்தவர்கள், கொலைக்கு காரணமானவர்கள் தண் டிக்கப்படுவது அவசியம் அல்லவா?

- நன்றி: தீக்கதிர் 25.8.2014

Read more: http://viduthalai.in/page1/86482.html#ixzz3C9oNmiEI

தமிழ் ஓவியா said...

ஏமாற்றம் - எத்தனை காலந்தான்?


ஆசிரியருக்குக் கடிதம் >>>

ஏமாற்றம் - எத்தனை காலந்தான்?

விடுதலை நாள் விழாவில் (15.8.2014) சென்னை கோட்டையில் கொடியேற்றி வைத்து தமிழக முதல்வர் அவர்கள் ஆற்றிய உரையைக் கவனித்திருப்பீர்கள். ஒவ்வொரு ஆண்டிலும் தியாகிகளின் ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவிப்பது முதல்வரின் வாடிக்கை இவ்வாண்டு ரூபாய் ஆயிரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதன்படி இந்நாள் வரை ரூ. 10000 (பத்தாயிரம்) வாங்கிக் கொண்டிருந்த (சு)தந்திரப் போராட்ட வீரர்கள் இனி ரூ. 11000 (பதினோராயிரம்)மும், ரூ. 4000 (நாலாயிரம்) வாங்கிக் கொண்டிருந்த எல்லைப் போராட்ட வீரர்கள் இனி ரூ. 5000 (அய்யாயிரம்) பெறுவார்கள். ஆனால் ஜிணீனீவீறீ ஷிநீலீஷீணீக்ஷீ தமிழறிஞர்கள் என அழைக்கப்படுகிற மொழிக் காவலர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. இந்த ஆண்டும் மொழிக் காவலர்கள் அலட்சிய படுத்தப்பட்டு, புறக்கணிக்கப்பட்டிருக் கிறாகள். முதுமையில், வறுமையில் வாடும் அவர்களை முதலமைச்சர் கண்டு கொள் வதே இல்லை. அடித்தட்டு வாசிகளாகிப் போன அவர்கள் இன்று வரை பெறுவது வெறும் ரூ. 3000 (மூவாயிரம்) மட்டுமே, விண்ணுக்கும் மண்ணுக்குமான இடைவெளி!

ஏனிந்த ஏற்றத் தாழ்வு? எதனால் வந்தது இந்த மூன்றடுக்கு முரண்? எப்படி வந்தது மாற்றாந்தாய் மனப்பான்மை? உதாசீனப்படுத்தி ஒதுக்கித் தள்ள காரணம் என்ன? அவர்களிடம் கண்ட பிழைதான் என்ன? சமச்சீரான அலைவரிசையில் ஒரு தாய் மக்களாகப் பார்க்கப்பட்ட ஈகிள் புதிய சமூக அநீதிக்கு ஆளாக்கப்பட்டது ஏன்?
இந்த அவல நிலையை அறிந்தும் நம் திராவிடத் தலைவர்கள் அமைதி காப்பதும், குரல் கொடுக்காததும் ஏன்? அன்றாட அறிக்கைகளில் இடம் பெறும் அருகதை கூடவா இல்லை? ஆளும் கட்சியின் அலட்சியம் தெரிந்தும், மொழிப் போரை முன்னின்று நடத்தியவர்களாவது அன்புகாட்டி அரவணைக்கக் கூடாதா? ஊடகங்கள் உதவுமே?

ஓர் அதிர்ச்சித் தகவல் சொல்லித்தான் ஆக வேண்டும். 1965ம் அதற்கு முன்பும் நடத்திய மொழிப்போர்களில் பங்கேற்று சிறை சென்றோர் நூற்றுக்கு 95பேர் இன்று இல்லை. மிகச்சிலரும் மரபுரிமையினருமே மிஞ்சியிருக்கிறார்கள். ஆனால் (1947க்கு முன்) 1942ல் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களாக நம்பப் படுகிறவர்களில் 65 விழுக்காட்டிற்கு மேல் மத்திய மாநில அரசுகளால் பயன்பெற்று வருகிறார்களாம். முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு முறை சொன்னது. இந்தியாவில் ஒரு லட்சம் பேர் சுதந்திர போராட்ட வீரர்களாக உதவித் தொகை பெறுகிறார்கள்!.

உடலை வருத்திப் போராட துணிவு மட்டும் போதாது. வயதும் உடலும் ஒத்துழைக்க வேண்டும். இதை எழுதுகிற நான் உள்ளிட்ட இருக்கிற அத்தனை பேரும் மாற்றுத் திறனாளிகள் என்பதே நிலை.

நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறலாம் என்றால் காலம் கருதி காத்திருக்க வேண்டும். மன உளைச்சல்தான் மிஞ்சும். நிதி உதவிக்கு பிறரை நாடவேண்டும். நாட்கள் எண்ணப்படுகிற இத்தருணத்தில் அரசிடம் கையேந்துவது ஒன்றே போதும்.

(ச.பா) எஸ்.பி.மணியம், மொழிக்காவலர்,
ஈரோடு இல்லம், சிவகாசி, மேற்கு 626124.

Read more: http://viduthalai.in/page1/86486.html#ixzz3C9oXbr00

தமிழ் ஓவியா said...

அண்ணாவுக்கு பாரத ரத்னா! கலைஞர் வேண்டுகோள்!


சென்னை, ஆக. 25- இந்தியப் பேரரசின் பாரத ரத்னா விருது, இந்திய நாட்டில் உள்ள மூத்த தலை வர்களுக்கு ஆண்டுதோறும் வழங்குவதையொட்டி, தென்னகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு இந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கவேண்டுமென்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் குடியரசுத் தலைவர் அவர்களுக்கும், இந்தியப் பிரதமர் அவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து நேற்று கடிதம் எழுதியுள்ளார்கள்.

அந்தக் கடிதத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது:

விருதுக்குப் பெரிதும் பொருத்தமானவர்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், மிகப்பெரிய சமூகசீர்திருத்தவாதியும், எழுத்தாளரும், இலக்கியவாதியும், சொற்பொழிவாளருமான பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த விருதுக்குப் பெரிதும் பொருத்தமானவர் என்றும், அவருக்கு இந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்குவது பொருத்தமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதன் விபரம் வருமாறு:-

காஞ்சி தந்த காவியத் தலைவர் உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர், பேரறிஞர் பெருந் தகை அண்ணாஅவர்கள்! பல்துறை ஆற்றல் நிரம்பப் பெற்ற அறிவுலக மேதை!

எளிய குடும்பத்தில் பிறந்து, நல்ல மாணவராக, ஆற்றல்மிகு பேச்சாளராக, சிறந்த எழுத்தாளராக, உள்ளம் கவர்ந்த பத்திரிகை ஆசிரியராக, நல்ல நூலா சிரியராக, நாடக ஆசிரியராக, நாடக நடிகராக, பண் பட்ட அரசியல் வாதியாக, உத்தமத் தலைவராக, ஒப்பற்ற வழிகாட்டியாக, நாடு போற்றும் முதல் அமைச்சராக, பல்துறை ஆற்றல் நிரம்பப் பெற்ற அறிவுலக மேதையாக ஓங்கு புகழ் எய்தியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

ஏழை, எளிய மக்களிடையே தம் பேச்சாற்றலால் அறிவுப் புரட்சியை உருவாக்கியவர் அவர்.

தமிழ்ச் சொற்றொடர் அமைப்பிலே புதிய நடை கண்டு, எழுச்சி மிகுஎழுத்தால், இலட்சக்கணக்கான இளைஞர்களின் இதயங்களைக் கவர்ந்து, எழுத்துலகில் புரட்சியை உண்டாக்கிய மேதையான பேரறிஞர் அண்ணா அவர்கள் அடக்கத்தின் வடிவமாகத் திகழ்ந் தார்கள். முதன்முதலாக, அரசியலில் குடும்பப் பாச உணர்வை ஊட்டியவர்; மாற்றாரையும் மதிக்கக் கற்றுத் தந்த ஆசான்; மாபெரும் ஜனநாயகத் தலைவர் அவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர் பேரறிஞர் அண்ணாஅவர்கள்.

சீர்திருத்தக் கருத்துகள்

பேரறிஞர் அண்ணா அவர்கள் திரைப்படங்களுக்குக் கதை வசனம் எழுதி, சுயமரியாதைக் கொள்கைகளை, சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடையே பரப்பினார். ஏழை எளியவர்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு போராட்டங் களில் ஈடுபட்டுப் பலமுறை சிறைவாசம் ஏற்றார்.

தமிழ் ஓவியா said...

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றி, சுயமரியாதை இயக்கத் தலைவர் தந்தை பெரியாருக்கு அன்புப் பரிசு என்று அதனை அறிவித்தார். தமிழ் மக்களின் சிந்தனையில் படிந்து கிடந்த அழுக்குகளை அகற்றி தமிழகத்தை மாற்றியமைக்க தம் நாவையும், எழுது கோலையும், இறுதி மூச்சுவரை பயன்படுத்தினார்.

தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தவர்

தமிழ்மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம் பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாதுபாடுபட்ட உத்தமர் அவர்! தமிழ்நாடு என தாய்க்குப் பெயர் சூட்டிய தனயன்!

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று தம்பிமார் பெரும்படையைக் கண்டு, நெஞ்சுயர்த்திப் பெருமிதம் கொண்ட பெருமகனான பேரறிஞர் அண்ணா அவர்கள் - மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்து தாய்க்குப் பெயர் தந்த தனிப்பெரும் தனயன் என்ற பெரும் புகழுக்குரியவர்!

சுயமரியாதைச் சுடரொளி - சொக்கவைக்கும் சொற்பொழிவாளர் - எழுத்துவேந்தர் - தென்னகத்தின் மிகப்பெரும் அரசியல் தலைவர் எனப் பாராட்டி, வருணித்து முடிக்க முடியாத அளவுக்கு பல்வேறு சிறப்புக்களுக்கும், பெருமைகளுக்கும் உரியவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்!

இந்நிலையில், இந்தியப் பேரரசின் பாரதரத்னா விருது, இந்திய நாட்டில் உள்ள மூத்த தலைவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்குவதையொட்டி, தென்னகத் தின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு இந்த ஆண்டு வழங்கவேண்டு மென்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் குடியரசுத் தலைவர் அவர்களுக்கும், இந்தியப் பிரதமர் அவர் களுக்கும் வேண்டுகோள் விடுத்து நேற்று (24.8.2014) கடிதம் எழுதியுள்ளார்கள். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியுள்ள அக்கடிதங்களில் கூறப்பட்டுள்ள தாவது:-

நமது தேசியத் தலைவர்களில் சிலருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக நாங்கள் அறிகிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டின் மாபெரும் சமூக சீர்திருத்தவாதி, மாபெரும் எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் இலக்கியவாதியாவார்.

தமிழிலும், ஆங்கிலத்திலும்....

தமிழிலும், ஆங்கிலத்திலும் அவரது இலக்கிய மற்றும் அரசியல் படைப்புகள் தமிழ்நாட்டில் மிகச் சிறந்தவற்றில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரதரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட அவர் முற்றிலும் தகுதி உடையவராவார்.

வரவிருக்கும் குடியரசுதினத்தன்று அறிஞர் அண்ணா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கும்படி நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில்கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page1/86472.html#ixzz3C9oy5bFn

தமிழ் ஓவியா said...

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் துக்ளக்கும் - கல்கியும் முரண்பாடு!


கேள்வி: பதினைந்து வகையான பயிர்களை மரபணு மாற்றம் மூலம் விளைவிக்க மோடி அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கி யுள்ளதே? இது சரியான நடவடிக்கையா?

பதில்: மரபணு விவகாரம் முன்பு பெரிய சர்ச்சை யைக் கிளப்பியது. மரபணு மூலம் விளைவிக்கப்படுகிற காய்கறிகளும், தானியங்களும் சத்தற்றவையாக இருக் கின்றன என்றும், அவற்றினால் உடலுக்குக் கெடுதல்கூட வரலாம் என்றும் ஆராய்ச்சிகள் கூறுவதாகப் பல செய்திகள் வெளியாகின. விஞ்ஞானிகளிடையே இது விவாதத்திற்குரிய விஷயமானது.

ஆனால், சமீபத்தில் வரும் செய்திகளின்படி பார்த்தால் இந்த மரபணுக் காய்கறிகள் எந்த விதத்திலும் கெடுதியானவை அல்ல என்றும், இயற்கைப் பயிர்களுக்குச் சமமாக இல்லா விட்டாலும், அவற்றாலும் ஊட்டச் சத்து கிடைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது. இப்படி இந்த விஷயத்தில் ஒரு புதிய பார்வை வந்திருப்பதால், மத்திய அரசு எடுத்த தீர்மானத்தில் தவறில்லை; ஆனால், அதற்கு எதிர்ப்பு தோன்றியதால், இந்த முடிவு தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. இந்தத் தயக்கம் தேவை இல்லை என்பது என் கருத்து.

(துக்ளக் 13.8.2014)

மரபணு மாற்றப்பட்ட பயிர்களைச் சோதனை அடிப்படையில் இந்தியாவில் சாகுபடி செய்ய மரபணு ஆராய்ச்சி ஒப்புதல் குழு சமீபத்தில் அனுமதி வழங் கியது விஞ்ஞானிகளையும், விவசாயிகளையும் அதிர்ச் சிக்குள்ளாக்கியது. இவ்விஷயம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகரின் கவனத்துக்குப் போக, அவர் இதை தற்போதைக்கு நிறுத்தி வைத்திருக்கிறார்.

ஏற்கெனவே பி.டி. பருத்தியை இந்தியாவுக்குள் அனு மதித்து, அது ஏற்படுத்திய அவலம் சொல்லி மாளாது. சென்ற ஆட்சிக் காலத்தில் பி.டி. கத்திரி சாகுபடிக்கு அனுமதி அளிக்கப்பட்டபோது, கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தலையிட்டு, பி.டி. கத்திரி சாகுபடிக்குத் தடை விதித்தார்.

பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் பி.டி. மரபணு பயிர்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், உடல் நலக் கேடுகள் மட்டுமின்றி, இயற்கை யின் உயிர்ச் சூழல் பண்மை அழிந்து, சுற்றுச்சூழலும் அழிந்துவிடும் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டிருக் கின்றன.

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் பூச்சிகளால் பாதிப்படையாது; அதிக மகசூலை வழங்கும் என்பது பொய் என்று நிரூபணமாகி விட்டது. மாறாக, அவை விவசாயிகளைக் கடன் சுமையில் தள்ளி, தற்கொலைக்கே இட்டுச் சென்ற அனுபவங்களும் இந்தியாவில் உண்டு.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அனுமதித்த சீனா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகளிலே கடுமையான கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜனநாயக இந்தியாவில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தாலும் அவற்றைத் துரிதமாகவோ கண்டிப்பு கட்டாயத்துடனோ அமல்படுத்த முடியாது.

முதலில், இந்திய மண்ணுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மரபணு மாற்றப்பட்ட விதைகளால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய முழுமையான அறிவியல் ஆய்வு நடைபெற வில்லை. இந்நிலையில், அமெரிக்க நிறுவனங்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி பி.டி. பயிர்களைச் சோதனை செய்ய அனுமதிப்பது, தற்கொலைக்குச் சமம்.

அமெரிக்க நிறுவனங்களின் உள்நோக்கம் அபாய கரமானது. பி.டி. விதைகளை அறிமுகப்படுத்தி, விவசாயிகளிடையே அதன் பயன்பாட்டைப் பெருக்கி, பின்னர் விதைகளுக்கான ஏகபோக உரிமையைக் கொண்டாடுவது, விலைகளைக் கடுமையாக உயர்த்துவது என்ற மோசமான வணிக நோக்கமே இதன் பின்னே உள்ள அபாயம், பொருளாதார அடிமைத்தனத்துக்கான அடிப்படை இது.

பி.டி. பயிர்களால் நிலம் பழுதுபட்டால், அதை மீட்க முடியாது. விஞ்ஞான வளர்ச்சியால் இயற்கையான விவசாய முறைகள் அடைந்துள்ள முன்னேற்றங்கள் அளப்பரியன.

அதை அனைத்து விவசாயிகளுக்கும் சொல்லிக் கொடுத்து, மகசூலை உயர்த்தினாலே, உணவுத் தன்னிறைவை எட்ட முடியும். ஆக்க பூர்வமான வழியில் சிந்திப்பதை விட்டு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் போன்ற குறுக்கு வழியை நாடுவது, நம் மண்ணை நாமே சிதைப்பதற்கு ஒப்பாகும். இந்திய அரசு, பி.டி. பயிர்களை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாகச் சொல்வது ஒன்றே நம் மண்ணையும் மக்களையும் காப்பாற்ற ஒரே வழி.

(கல்கி 17.8.2014)

ஏனிந்த முரண்பாடோ?

Read more: http://viduthalai.in/page1/86455.html#ixzz3C9pUOKhH

தமிழ் ஓவியா said...

கோமாதா ஆந்திராவில் படுத்தியபாடு!


ஞானபூமியாம் இந்த நாடு! புண்ணிய பூமியாம் இந்த நாடு!

பாரத நாடு பழம்பெரும் நாடு - இப்படிப் பாடுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை!

நாள்தோறும் வரும் செய்திகளோ, உலக மகா அவமானத்தின் உச்சத்தில் நம் நாட்டைக் கொண்டு செல்லும் அவலச் சுவைகள்!

இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் ஒரு செய்தி - மூடநம்பிக்கை இந்த நாட்டினை எப்படியெல்லாம் உருக்குலையச் செய்துள்ளது என்பதற்குக் கலங்கரை வெளிச்சம் போல், வெளிச்சம் போட்டு உலகத்திற்குக் காட்டும் செய்தியாகும்!

தெலங்கானா பகுதியில் உள்ள வாரங்கல் பகுதியில் நேற்று ஒரு செய்தி... ஒரு பசு மனித உருவ கன்றுக் குட்டியைப் போட்டதாம்! அது பேச ஆரம்பித்ததாம், (தெலுங்கில் தான் பேசியதோ! அல்லது ஹிந்தி உருது மொழியில் பேசியதோ விசாரிக்க வேண்டும் இனிமேல்தான்) பூகம்பம் வந்து அப்பகுதியே அழியப் போகிறது என்று அந்தப் பசு மாடு மனிதக் குட்டி கூறியதாம்! அதனால் அப்பகுதி மக்கள் பூராவும் வீட்டுக்குள் இருக்காமல், தூங்காமல் இரவெல்லாம் கண் விழித்துக் காத்துக் கிடந்தார்களாம்!
எங்கும் வதந்திகள்! வதந்திகள்!!

அதை நம்பி, செவ்வாய் இரவு முழுவதும் சாவுக்குப் பயந்து, அதே போல புதன் இரவும் இரு நாட்களில் இப்படி விழித்தே வெளியில் பீதியில் குந்தியிருந்தார்களாம் எவ்வளவு பெரிய அறிவுக் கொழுந்துகள் பார்த்தீர்களா? இந்த லட்சணத்தில் கைத் தொலைபேசிகளும் இத்திருப்பணிக்கு - வதந்திக்கு உதவினவாம்! எவ்வளவு வெட்கக்கேடு!
மொபைல்ஃபோன் கண்டுபிடித்தவன் இதைக் கேட்டால் தூக்கு மாட்டிக் கொள்ள மாட்டானா?

கரிம்நகர், வாரங்கல், நாலகொண்டா, மேடாக் பகுதிகளில் குழந்தைகளையும் தூங்கவிடவில்லையாம் பெற்றோர்கள்! என்ன மடமை!!

கோமாதா, குலமாதா என்ன பாடுபடுத்துகிறது பார்த்தீர்களா?

எங்கள் நாட்டுக்கெந்த நாடு ஈடு?

பைத்தியக்காரத்தனத்தைப் பாங்குடன் பரப்புவதில் எந்த நாடு ஈடு?

- ஊசி மிளகாய்

Read more: http://viduthalai.in/page1/86301.html#ixzz3C9rRCD3o