Search This Blog

5.9.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 26

அயோத்தியா காண்டம்
எட்டாம் அத்தியாயம்

திருமாலை வழிபட்டிருந்த கோசலை பல நாளாகக் காணாத இராமனை எதிர்கொண்ட ழைத்து, வாக்குத் தவறாதவராகிய உன் தந்தை எனக்கு இன்று முடிசூட்டுவார். நீ இங்கேயே உண்ண வேண்டும் என்று ஓர் இருக்கையில் அவனை உட்காரச் சொன்னாள்.


இராமன் அதில் இருக்காமல் வெட்கத்துடன், அம்மா! உனக்கும் சீதைக்கும், இலக்கு மணனுக்கும் துக்கத்தைக் கொடுக்கும் ஒரு பெரிய பயம் நேர்ந்திருக்கிறது. தந்தை என் முடிசூட்டை நிறுத்தி விட்டார். பரதனே இளவரசராகப் போகிறான். நான் பதினான்காண்டுகள் காட்டில் வாழக்கட்டளையிட்டிருக்கிறார்.


இதோ புறப்படப் போகிறேன். மாமிசத்தை விலக்கிக் காய் கனிகளைத் தின்று காட்டில் வாழப்போகிறேன். ஆதலின் இந்த இரத்தின ஆசனம் எனக்கு இப்பொழுது தகாது என்று கூறினான். அதைக்கேட்ட கோசலை உணர்ச்சியற்றுக் கீழே வீழ்ந்தாள். இராமன் அவனைத் தூக்கினான். அவள் உணர்ச்சி வந்து இலக்குவன் கேட்டுக்கொண்டிருக்க, இராமா! எனக்கு ஒருவரும் படாத துக்கம் ஏற்பட்டிருக்கிறது. நான் அரசனுடைய முதல் மனைவி, இருந்தாலும் எனக்கு அதற்குரிய செல்வம், நகை, அதிகாரம் ஒன்றும் கிடையாது.


மன்னனும் என்னை வெறுக்கிறான். உன்மேலுள்ள அன்பால் அவன் என்னையும் நேசிப்பான். அதனால் அதிகாரம் பெறலாம் என்ற ஆசையாலேயே இதுவரை உயிர் வைத்திருந்தேன். இனி இதைவிடத் துக்கத்தை அடைய வேண்டியிருக்குமே. இயற்கையாக நான் அனுப விக்க வேண்டிய சுகம் எனக்கில்லை.


என் சக்களத்திகள் இனி என்மேல் பிரியத்தைக் குறைக்கக்கூடிய வார்த்தை களை மன்னனிடம், தெளிவாகக் கூறுவார்கள். என்னுடைய கணவனுக்கெதிரே நிற்காதே போ என்பார்கள். மன்னன் என் வீட்டிலிருக்கும்போது, இங்கே உனக்கென்ன வேலை. என் அந்தப்புரம் போவோம் வா என்று பலாத்காரமாக அவரைக் கையைப்பிடித்து இழுப்பார்கள்.
பெண்களுக்கு இதைவிடத் துன்பம் உண்டோ? என் துக்கத்துக்கும் அழுகைக்கும் எல்லையில்லை. நீயும் காட்டுக்குப் போய்விட்டால் நான் என்ன செய்வேன்? நீ பிறந்த பதினேழு ஆண்டுகளாய்த் துன்பங்களையெல்லாம் பொறுத்திருந்தேன்.
இனிமேல் எல்லோரும் என்னை அவமதிப்பார்களே. எனக்கோ வயதும், பலமும், அழகும் போய்விட்டன. இனி மன்னர் என்னை விரும்பக் காரணமில்லை என் எண்ணமெல்லாம் வீணாயினவே. உன்னையும் பிரிந்து அவமானப்பட்டு உயிரோடிரேன் என்று வாய்விட்டு அழுதாள்.


அதைக்கேட்ட இலக்குவன், ஒரு பெண்ணிடத்தில் காமப்பரவசனாயிருக்கும் விபரீத புத்தியுடைய விவேகமற்ற மன்னனுடைய பேச்சைக்கேட்டுத் தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நாட்டைவிட்டுப் போதல் எனக்கும் தகுந்ததாகத் தோன்றவில்லை. காமப்பித்தேறியிருக்கும் மன்னனுடைய சொல்லை அரசநீதி தெரிந்த எந்த மகனாவது கவனிப்பானா? ஆதலால் அண்ணா! உடனே வில்லை எடுத்து இந்த நாட்டைக் கைப்பற்றும்.
பரதனுக்கு வேண்டியவர்களையெல்லாம் நாசஞ் செய்து விடுகிறேன். நம் தந்தை கைகேயியால் தூண்டப்பட்ட நம் பகைவர் களுக்கு உதவி செய்தால், அந்தத்தீயவனை ஏன் சிறையில் வைக்கக் கூடாது? ஏன் கொல்லக் கூடாது? இதுவே மநுநீதியும். உம்மையும் என்னையும் பகைத்துக் கொண்டு இவரால் இந்த அரசைப் பரதனுக்குக் கொடுக்க முடியுமா? தாங்கள் படும் துன்பத்தை என் வீரியத்தால் அழிக்கிறேன் என்ற்ன். உடனே கோசலை, இராமா, தம்பி சொன்னது காதில் விழுந்ததா? தந்தை கட்டளையைவிடத் தாயின் சொல்லே மிகவும் மேலானது. ஆதலின் நீ காட்டுக்குப் போவதில் எனக்கு விருப்பமில்லை.


நீ என் கட்டளையை மீறிக் காட்டுக்குப் போனால் நான் உயிரை விட்டுவிடுவேன். முன்காலத்தில் சமுத்திர மன்னன் தன் தாய்க்குத் துக்கத்தை உண்டுபண்ணிய பாவத்தால், பிராமணனைக் கொன்ற வர்கள் அடையும் நரகத்தை அடைந்தான். நீயும் இந்த லோகத்தில் என்றும் அழியாத துக்கத்தை அடைவாய் என்றாள்.


இராமன், அம்மா! தந்தை கட்டளை முந்தியது. ஆதலின் அதையே நான் முதலில் நிறைவேற்ற வேண்டும். முன் தந்தை சொல்லைக் கேட்டுக்கண்டு முனிவர் பசுவைக் கொன்றார். பரசுராமர் தாயையே கொன்றார். ஆதலின் தந்தை சொல்லே சிறந்தது என்றான். பின் இராமன், தம்பி! இலக்குவா! தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவதே கடமை.


ஆதலின் நம் தகப்பனாயிருந்தாலும் அவரைக் கொன்று நாடாளுவோம் என்ற கேவலப்புத்தியை விட்டுவிடு என்று தம்பியிடம் கூறிப் பின் தாயைப் பார்த்து பதினான்கு ஆண்டுகள் காட்டிற் போயிருந்து பின் உமது அருகேயிருந்து பணிவிடை செய்வேன். ஆணையிட்டுச் சொல்கிறேன், எனக்கு விடை தர வேண்டும் என்றான்.


மறுபடியும் கோசலை, நான் உத்தரவு தரமாட்டேன். உன்னைப்பிரியேன் என்றாள். அதனால் இராமனுக்குக் கோபம் உண்டாயிற்று. அவன், தம்பி! நம் தந்தை நமக்குப் பெரியார், அரசர். அவர் சொல்லைத் தட்டக்கூடாது. அவர் இருக்கும்போது என் தாய் கணவனை இழந்தவளைப் போல என் கூட வரலாமா, அம்மா! எனக்கு விடைதாரும் என்றான்.


பின் அவன், தம்பி! நான் காட்டுக்குப்போகத் தீர்மானித்து விட்டேன். என்னுடைய எண்ணத்தை மாற்ற முடியாது. எல்லாம் தெய்வச்செயல், என் கையிற்கிடைத்த அரசாட்சி தவறிப்போனதும் என்னிடத்தில் அளவிலா அன்பு வைத்திருந்த கைகேயி மனம் மாறினதும் தெய்வச் செயலே; அதை எதிர்க்க யாராலும் முடியாது. நமக்கு நாடு கிடைக்காமைக்காக வருந்தாதே என்று புகன்றான்.


இலக்குவன் மிகச்சினத்தோடு, அண்ணா! வீரமற்ற வர்களும், பித்தேறியவர்களும் பேசுமாறு விதியின் பெருமையைப் பேசினீர். தங்களுக்குக் கேடு சூழ்ந்த அந்தப் பாவிகளான கைகேயி தசரதர்களின் சூழ்ச்சி உமக்குத் தெரியவில்லையா? மூத்த மகனாகிய உமக்குக் கிடைக்க வேண்டிய அரசாட்சியைப் பரதனுக்குத் தர அவர்கள் செய்த சூழ்ச்சி இது. நான் இராமனுக்கு முடிசூட்ட ஆரம்பிக்கிறேன். அப்போது நீ தடுத்துவிடு என்று தசரதன் கூறிய சூழ்ச்சியே இது. தங்களுக்குச் சித்தப் பிரமையே தவிர வேறில்லை.


காமத்துக்கு அடிமையாகிய அவர்கள் வார்த்தைக்கு யார்தான் கட்டுப்படுவர்? விதியை நம் முயற்சியால் வெல்லலாம். தேவரேயாயினும் யாவரேயாயினும் தங்களுடைய முடிசூட்டைத் தடுக்க முடியாது. கைகேசி தசரதர்களையே காட்டுக்குத் துரத்துகிறேன். நம் தந்தை நிலையான மனமுடையவரல்லர்.
அரசாட்சி அடிக்கடி மாறுமென்று தங்களுக்குச் சந்தேகமுண்டாகித் தங்களுக்கு அரசாட்சி வேண்டாமென்றால், நானே அரசாட்சியை ஏற்றுக் கொண்டு நாட்டைக் காப்பாற்றுவேன், ஆதலின் இப்போதே முடிசூட்டிக் கொள்வதில் மனத்தைச் செலுத்தும். எனது திறமையை இன்றே காண்பீர்; நம் தந்தையின் அதிகாரத்தை அவரிடத்திலிருந்து பிடுங்கித் தங்களுக்குக் கொடுக்கப் போகிறேன்.


தடைசெய்வோன் இந்திரனேயாயினும் கொல்வேன் என்றான். இராமனோ, தம்பி! பொறுமையாயிரு. பெற்றோர்கள் சொல்லைத் தட்டக்கூடாது. நான் எப்படியானாலும் காட்டுக்குப் போகிறேன் என்று கூறினான்.


கோசலை, அப்படியானால் நானும் உன்கூட வருவேன், என்றாள். இராமன், கணவனுக்குப் பணிவிடை செய்வதை விட்டு என்னுடன் வருதல் கூடாது என்றான். கோசலை அவனைக் காட்டுக்கனுப்பவும் தான் அயோத்தி லிருக்கவும் இணங்கினாள். தன் சக்களத்திகளின் கொடுமையை நினைத்து மறுபடியும் தன்னை அவனுடன் அழைத்துப்போக வேண்டுமென்றாள்.
அப்போது இராமன் அழுதுகொண்டு, சக்களத்திகள் தங்களுக்குக் கேடு செய்ய நியாயமில்லை. பரதனும் நல்லவன். தந்தையோ கிழவர். என்னைப் பிரிந்ததால் ஏற்படும் துக்கத்தால் அவர் இறக்காமல் தாங்கள் பாதுகாக்க வேண்டும். அவருக்கும் பணிவிடை செய்து கொண்டு நான் திரும்பி வரும் காலத்தை எதிர்பார்த்திரும் என்று சொன்னான்.


கோசலை அவனை வழி அனுப்புவதற்குச் செய்ய வேண்டிய ஓமங்களைச் செய்யத் தொடங்கினாள். தேவதைகளை வேண்டினாள். பின் ஒரு பிராமணனால் ஓமம் வளர்த்து, வேண்டிய அளவு காணிக்கைப் பொருள் கொடுத்தாள். பின் இராமனை வாழ்த்தி வழியனுப்பினாள்.


இராமன் சீதையிருக்குமிடம் வந்தான். அங்கே தன் பரிவாரங்கள் தன்னுடன் முடிசூட்டுக்காகச் செய்து கொண்டிருந்த அலங்காரங்களையும், அவர்கள் மகிழ்ச்சி யையும் பார்த்து வெட்கத்தால் சற்றுத் தலைகுனிந்தான்.
தன் கணவன் துக்கத்தால் வாடிய முகத்துடன் கவலையால் இந்திரியச் சுவாதீனமின்றி வருவதைக் கண்டு சீதை இருக்கையிலிருந்து திடீரென்று எழுந்து, நம் கணவன்

       -------------------------"விடுதலை” 5-9-2014

71 comments:

தமிழ் ஓவியா said...


ஆஸ்திரேலியாவிலிருந்து பரோல் முடிந்து திரும்பும் நம் கடவுள்கள்!


ஆஸ்திரேலியாவிலிருந்து அரியலூர் ஸ்ரீபுரந்தான் கோவிலில் இருந்த 1050 ஆண்டு பழமை வாய்ந்த நடராஜர் சிலை 2006-இல் திருட்டுப் போனது.

இதன் மதிப்பு 31 கோடி ரூபாயாம்! அதே போல விருத்தாசலத்தில் உள்ள விருத்த கிரீஸ்வரர் கோவில் 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்த மற்றொரு சிலை- இதன் மதிப்பு 3 கோடி ரூபாயாம்!

தமிழக கோவில்களிலிருந்து கடத்தப்பட்ட இந்த சிலைகளை சுபாஷ் சந்திரகபூர் என்ற வடநாட்டுப் பேர் வழி, ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றுக்கு பல கோடிக்கு விற்பனை செய்ததாக தெரிய வந்ததாம்!

நமது சிலை திருட்டு தடுப்புக் காவல்துறை பிரிவினர் அங்கே சென்று கண்டுபிடித்து, ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்குப் புகார் கூறியபின், அவ்வரசின் மூலம் ஆஸ்திரேலியா வந்துள்ளது. இப்போது ஆஸ்திரேலிய பிரதமர், புதுடில்லியில் நமது பிரதமரிடம் பத்திரமாக ஒப்படைக்கவிருக்கிறாராம்!

பிரதமர் அமைச்சர்கள் மட்டும் வெளி நாடுகளுக்குச் சென்றால் போதுமா? காலங் காலமாக காராக்கிரகத்தில் வவ்வால் புழுக்கை நாற்றத்தில் அடைந்து கிடக்கும் நம் கடவுள், கடவுளச்சிகளும் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று வர வேண்டாமா?

அதனால்தான் அரியலூர் நடராஜப் பெருமானும், விருத்தாசலம் கடவுளும் ஆஸ்திரேலியா பயணமாகி விட்டனர் போலும்!
ஆஸ்திரேலியப் பிரதமரான வெள்ளைக் காரர் நம் ஹிந்து கடவுளர்களை மிக பத்திர மாகக் கூட்டி வந்து, நீங்கள் ஜப்பானிலிருந்துத் திரும்பி சென்று வந்துள்ளீர்கள்;

நீங்கள் வணங்கும் கடவுள்களோ, எங்கள் நாட்டு அருங்காட்சியகத்தில் 8 ஆண்டுகள் வாசஞ் செய்து விட்டு, சுகம் அனுபவிக்கிறார்கள் அபிஷேகம் - அப்படி இப்படி என்ற எந்தத் தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக இருந்து விட்டு - இப்போது சொந்த நாடு திரும்பி யுள்ளனர் - எனது துணையோடு என்று சொல்லாமற் ஆஸ்திரேலியப் பிரதமர் சொல்லக் கூடும்!

நம்ம கடவுள்களின் சக்தியே சக்திதான்! எப்படியும் சிலை தடுப்புக்கும், திருடிய பொருளை மீட்பதற்கும் மனித உதவி, காவல் துறையினர் உதவி தானே தேவைப்படுகிறது?

கடவுளை மற, மனிதனை நினை என்றாரே பெரியார் - அதன் பொருள் இப்போதாவது விளங்குகிறதா?

இவ்வளவு பத்திரமாக பெரிய மதில் சுவர்கள் நெடுங் கதவுகள், பூட்டுப் போட்ட நிலை எல்லாம் இருந்தும் சிறையில் இருந்த சர்வ சக்தி(?)க் கடவுளர்கள் திருடப்பட்டு ஆஸ்தி ரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டு - பரோல் முடிந்து திரும்புவதுபோல திரும்புகின்றனரே, பலே, பலே நாம் இதற்கொரு சம்ப்ரோட்சண உத்சவம் நடத்திக் கொண்டாட வேண்டாமோ? முன்பு சிவபுரத்து நடராஜர் திரும்பினார்.

இப்போது அரியலூர் நடராஜர் பரோல் முடிந்து பத்திரமாக ஊர் திரும்பியுள்ளார்.

ஆனால், ஒரே ஒரு வருத்தம் தான்! போயும் போயும் இந்த மிலேச்சர் வெள்ளைக்காரனான ஆஸ்திரேலியாக்காரனோடா நம்ம ஆபத் பாந்தவன், அனாதைரட்சகன், சர்வ சக்தி நடராஜன் திரும்புவது; நமக்கு தோஷ மில்லையா எப்படி தோஷம் கழிப்பது?

இராம. கோபாலய்யரை அல்லது வழக்கு புகழ் காஞ்சி மட ஆதிபதிகளையோ கேட்டு முடிவு செய்தால் நன்னா இருக்கும்! இல்லையா?

Read more: http://viduthalai.in/e-paper/87122.html#ixzz3CRqGWWLH

தமிழ் ஓவியா said...

இவ்வாண்டு ஆசிரியர் நாளில் ஏற்படுத்தப்பட்ட குழப்பங்கள்!


மத்திய அரசோ சமஸ்கிருதத்தைத் திணிக்கிறது, தமிழக அரசோ ஆசிரியர்கள் நியமனத்தில் பிடிவாதம்!

வெயிட்டேஜ் முறையை அறவே நீக்குக!

இவ்வாண்டு ஆசிரியர் நாளை குருஉத்சவ் என்று மத்திய அரசு சமஸ்கிருதமயமாக்கி இருக்கிறது. தமிழ்நாடு அரசோ ஆசிரியர்கள் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப் பெண்கள் என்று கூறி, சமூகநீதிக்கும், ஆசிரியர்களின் மூப்புக்கும், பி.எட் படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கும் மதிப்பளிக்காத நிலையை மேற்கொண்டுள்ளது; இதுதான் ஆசிரியர் நாளில் அளிக்கப்படும் பரிசா? என்ற வினாவை எழுப்பிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை முதலமைச்சர் அழைத்துப் பேச வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அறிக்கை வருமாறு:

இன்று ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் நாள் இன்று பிரதமர் முதல் அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களையும், ஆசிரியர் தொண்டின் மேன்மைகளையும் உள்ளடக்கிக் கூறியுள்ளனர்.

சமஸ்கிருத வாரமா?

ஆனால் இவ்வாண்டு ஆசிரியர்கள் நாள், ஆற்றொழுக்காக - அமைதியாக - வழமைபோல் நடைபெறாது, மிகப் பெரிய எதிர்ப்புப் புயலை வீசிடச் செய்து விட்டது. காரணம் சமஸ்கிருத வாரம் என்று, அரசியல் சட்டத்தினால் ஒப்புக் கொள்ளப்பட்ட 22 மொழிகளில் ஒரு மொழியான - பேச்சு வழக்கில் இல்லாத, 125 கோடி இந்திய மக்களில் வெறும் 0.01 சதவீத மக்கள் மட்டுமே பேச்சு மொழி என்றுபதிவாகியுள்ள சமஸ் கிருதத்தைப் பரப்பும் வகையில், மறைமுகப் பண்பாட்டுப் படையெடுப்பு ஒன்று நடத்தப் பட்டதுதான்.

மூல காரணம் என்ன?

இதற்கு மூல காரணம் யார் என்பது உலகறிந்த உண்மை - ஆர்.எஸ்.எஸ். மயமாக்கப்பட்டுள்ள அதிகார ஆட்சியின் திட்டமிட்ட முயற்சிகளாகும் இவை.

ஆசிரியர் நாள் என்ற பெயர் மாற்றி, குருஉத்சவ் என்று ஆக்கிய முயற்சி பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. மாலை 5 மணிக்கு பிரதமர் உரையை கட்டாயமாக மாணவர்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்பதாக சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டன.

பெரும் எதிர்ப்பலை எழுந்ததால் இவை இரண்டு முயற்சிகளும் மத்திய அரசால் பின் வாங்கப்பட்டன.

பிறகு ஏதோ நொண்டிச் சமா தானமும் பொருந்தா விளக்கங்களும் கூறப்பட் டுள்ளன.

வெயிட்டேஜ் முறை ஏன்?

இப்படி, மத்திய அரசில் நிகழ்ந்தது. என்றால், தமிழ்நாடு மாநில அரசில் ஆசிரியர் நியமனத்தில் குறிப்பாக பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறை என்ற ஒன்றினைப் புகுத்தி அவர்கள் பள்ளிக் கல்வி முடித்தபோது வாங்கிய மதிப்பெண்ணிற்கு கூடுதல் தகுதியாக தந்து (Weightage) நியமன முறை அமைந்தது; இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஆசிரியப் பெரு மக்களானவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட கொடுமைக்கு ஆளாகியுள்ளார்கள்.

என்ன செய்ய வேண்டும்?

தனித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு முதிர்நிலை (Seniority) யையும் கணக்கில் கொண்டால் ஒரு கூடுதல் தகுதியைத் தேடுவது தேவையற்றதாகி விடும்; சமூக நீதிக்குப் பாதிப்பும் ஏற்பட்டிருக்காது.

பள்ளிக் கல்வி முடிக்கையில் அதிக மார்க் எடுத்துத் தேறியவர்கள், கல்லூரிக்குச் சென்று படித்து வெளியே வரும் நிலையில் தோல்வி யினைத் தழுவியதும் உண்டு. அப்போது அதிக மதிப்பெண் பெறத் தவறியவர்கள், கல்லூரிப் படிப்பில் மிகச் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவதும் நாம் கண்கூடாகக் காணும் அனுபவம் ஆகும்.

இதற்கு மூல காரணம், முதிர்ச்சியும், பக்குவமும், சூழலும் ஆகும். கல்லூரிப் படிப்பில் அதிக கவனம் செலுத்திப் படித்ததேயாகும்.

தமிழ் ஓவியா said...


இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் அந்த மதிப்பெண்களுக்கே அதி முக்கியத்துவம் தந்து, பல்லாயிரம் போட்டியாளர்களான ஆசிரியர் படிப்பு முடித்து பல ஆண்டுகள் வேலை கிட்டாத தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத் தப்பட்ட, மலைவாழ் சமூகங்களைச் சார்ந்த கிராமப்புறங்களைச் சேர்ந்த இருபாலர்கள் இந்த வயதுகளில் இப்படி ஒரு வேதனையை எதிர்த்து, வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலை தமிழக அரசு உருவாக்கியுள்ளது நியாயமல்ல.

ஆசிரியர்களை அழைத்துப் பேசியிருக்க வேண்டாமா முதல் அமைச்சர்

முதல் அமைச்சர் மக்கள் நாயகத்தில் போராடுபவர்களை அழைத்துப்பேசி, சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்காத தமிழ்நாட்டு தலைவர்களே இல்லை என்ற நிலை யில், ஏன் வீண் பிடிவாதம் காட்டவேண்டும்?

பல ஆசிரியர்கள் மனமுடைந்து, விஷத்தைக் குடித்து உயிருக்குப் போராடி, மேலும் செய்வ தறியாது தங்கள் பட்டங்களையும், வாக்காளர் அட்டைகளையும் அரசுக்கே திருப்பித் தரும் விரக்தி நிலைக்கே சென்று விட்டிருப்பதுதான் ஆசிரியர் நாளில் அவர்களுக்கு அளிக்கும் பரிசா? மதுரைக் கிளை உயர்நீதிமன்றம் அளித்த இடைக்காலத் தடையை விலக்குமாறு தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்வது ஏன்?

ஆசிரியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த அரசு அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறக்கணிக்காமல், தங்களது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து- வெயிட் டேஜ் முறையை ரத்து செய்து, அவர்களுக்கு ஆசிரிய நாள் பரிசினை வழங்கிட வேண்டுமென முதல் அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

சென்னை
5.9.2014

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/87130.html#ixzz3CRqUR3Mx

தமிழ் ஓவியா said...

ஜப்பான் பிரதமருக்கு இந்தியப் பிரதமர் அளித்த பரிசு எது?


பிரதமர் ஆன நூறு நாட்களுக்குள் அதிக நாள் வெளி நாடு சென்ற சாதனையாளர் இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ற விருதினைக் கூடக் கொடுக்கலாம்; அது ஒரு புறம் இருக்கட்டும்!

ஜப்பான் சென்ற இந்தியப் பிரதமர் மோடி அந்நாட் டுப் பிரதமருக்கு ஒரு பரிசினை அகம் பொங்கும் உணர்வுடன் அளித்து மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.

அந்தப் பரிசு வேறு ஒன்றும் இல்லை - கீதை என்ற நூல்தான் அது. பகவான் கிருஷ்ணன் அருளியது என்று இந்துத்துவாவாதிகள் பெருமை பேசுவர்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வி உண்டு. மதச் சார்பற்ற இந்திய நாட்டின் ஆட்சித் தலைவராக இருக்கக் கூடிய பிரதமர்; இந்து மதத்தின் முக்கிய நூலை இன்னொரு நாட்டு ஆட்சித் தலைவருக்கு அளிக்க லாமா என்பதுதான் அந்த அரிய கேள்வியாகும்.

மதச் சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை உள்ளவர் களும், இந்திய அரசமைப்புச் சட்டத்தை அறிந்தவர் களும் இத்தகைய வினாக்களை எழுப்பத்தான் செய்வார்கள் என்பது இந்தியப் பிரதமர் மோடிக்கு வெகு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

இந்த நிலை ஏற்படும் என்பதை கீதையை ஜப்பான் பிரதமருக்கு அளித்த நிலையில், ஒப்புதல் வாக்கு மூலமும் கொடுத்துள்ளார் (குற்றம் உள்ள நெஞ்சம் குறுகுறுக்கத்தானே செய்யும்?)

கீதையை அளித்ததால் இந்தியாவில் உள்ள மதச் சார்பின்மை பேசுவோர் எதிர்த்துப் புயலைக் கிளப்பு வார்கள்; தொலைக்காட்சிகளில் விவாதங்கள்கூட நடக்கும். ஜப்பான் பயணத்தை வகுப்புவாதப் பயணமாக இந்தியப் பிரதமர் மாற்றி விட்டார் என்று குற்றஞ்சாட்டுவார்கள்.

மதச் சார்பற்ற தலைமைபற்றிப் பேசுபவர்களுக்கு வாழ்க்கை நடக்க வேண்டுமே - என்னைப்பற்றிப் பேசா விட்டால் அவர்களுக்கு ஏது பிழைப்பு? என்கிற அளவுக்கு 125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டின் பிரதமர் பேசி இருக்கிறார்.

இன்னொரு நாட்டில் இருந்து கொண்டு, சொந்த நாட்டில் உள்ளவர்களைப் பற்றிக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது மோடி அவர்களின் மலிவான அரசியலைத்தான் பிரதிபலிக்கிறது; அவர் செய்யும் தவறு எது என்பதை அவரின் மற்றொரு பக்க அறிவே இடித்துச் சொல்லியிருக்கிறது.

மோடியின் இந்த விமர்சனம் எதை உணர்த்துகிறது? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கியமாக இடம் பெற்றுள்ள மதச் சார்பின்மை என்பதை ஒரு பிரதமரே கேலி செய்யும் விபரீதத்தை அறிய முடிகிறது. இவ்வளவுக்கும் மதச் சார்பின்மையை வலியுறுத்தும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை மதித்து ஒழுகுவதாக சத்திய பிரமாணம் செய்து கொண்ட ஒரு பிரதமரே அதற்கு மாறாக எதிராகப் பேசுவது உகந்தது தானா - பெருமை சேர்ப்பதுதானா?

தாம் தெரிவித்த கருத்து கடுமையாக விமர்சிக்கப் படும் என்று தெரிந்திருந்தும் அவ்வாறு பேசுகிறார் என்றால், அவருடைய மனப்போக்கை எளிதில் உணர்ந்து கொள்ளலாம் எதிலும் இணக்கமான சுமூக மான அணுகுமுறை என்பது அவரைப் பொருத்தவரை ஒவ்வாமை (Allergy) தான்போலும் பிஜேபி பிரச்சாரக் கூட்டத்திலும் - ஆர்.எஸ்.எஸ். வட்டாரத்திலும் எப்படிப் பேசுவாரோ - அதே சண்டைக் கோழி மனப்பான்மையுடன் தான் எந்தத் தகுதி மிக்க சபையிலும்கூடப் பேசக் கூடிய இயல்பு படைத்தவர் பிரதமர் என்பது இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பது ஆகாது.

தமிழ் ஓவியா said...


கீதை என்பது இந்து மத நூல் என்பதை மறுக்க முடியுமா? இந்துமதத்தில்கூட இந்த நூலை அனை வரும் ஒரு முகமாக ஏற்றுக் கொள்கிறார்களா? 125 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் மற்ற மற்ற மதங்களைச் சார்ந்தவர்கள் இல்லையா? மதத்தையே ஏற்றுக் கொள்ளாதவர்கள் வாழவில்லையா?

மோடிஇந்துக்களுக்கு மட்டும்தான் பிரதமரா? வாக்குகளைப் பெறுகிற வரைக்கும் அவர் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும்; ஆட்சி நாற்காலியில் அமர்ந்தவுடன் அவர் ஒட்டு மொத்தமாக அனைத்து மக்களுக்குமான பிரதமர் இல்லையா?

ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் மோடியின் திருவாய் மலர்ந்தது என்ன? 125 கோடி மக்களுக்குப் பொது வானவன் என்று சொன்னது வெற்றுச் சொற்கள் தானா?

வேண்டுமானால் இந்துத்துவாவாதிகள் ஒன்றைச் சமாதானமாக சொல்லலாம்; தேர்தலுக்கு முன்பாக நான் ஓர் இந்து தேசியவாதி (Hindu Nationalist)
என்று தானே சொன்னார் என்று சமாதானம் சொல்ல முன்வரலாம்.

அதுபற்றி அப்பொழுது பிரச்சினை எழுந்தபோது இந்து என்று சொன்னது மதக் கண்ணோட்டத்தில் அல்ல - ஒரு கலாச்சாரத்தின் அடையாளம் என்ற பொருளில்தான் அவர் சொன்னார் என்று சில பாஷ்யக்காரர்கள் பக்கவாத்தியம் வாசித்தார்களே!
அவர்கள் இப்பொழுது என்ன சொல்லப் போகிறார்கள்? கீதை - இந்து மத நூல் அல்ல - கிறித்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும், பவுத்தர்களுக் கும், சீக்கியர்களுக்கும்கூட பொதுவான வேத நூல் என்று சொல்லப் போகிறார்களா? கீதையை கொடுக்க வில்லை மாறாக பிரதமர் இந்தியா மதவாதம் காரண மாக சிதையப் போகிறது என்பதைச் சொல்லாமல் சொல்லியுள்ளார் என்றே கருத வேண்டும்.

இந்த நூறு நாட்களிலேயே மோடி தலைமையிலான இந்திய அரசு - இந்துத்துவா ஆட்சியாக நடைபோடத் துவங்கி விட்டது. நாடெங்கும் மதக் கலவரங்களும் வெடித்துக் கிளம்புகின்றன - எதிர்காலம் அச்சத்துக்கு உரியதுதான் - மக்கள் விழித்துக் கொள்ளட்டும்!

Read more: http://viduthalai.in/page-2/87136.html#ixzz3CRr6xMKB

தமிழ் ஓவியா said...


முன்னேற்றமடையவோ முடியாது


மதக் கட்டளையையும், கடவுள் நம்பிக்கையையும் கொண்ட ஒரு அடிமை, ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் ஒரு நாளும் விடுதலை அடையவோ, முன்னேற்றமடையவோ முடியவே முடியாது.
(குடிஅரசு, 7.5.1933)

Read more: http://viduthalai.in/page-2/87131.html#ixzz3CRrIGJqp

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் தமிழில் வழிபாடு


தமிழில் கல்வி, தமிழிசை, தமிழில் நீதி என்றெல்லாம் இன்னும் முழு மூச்சாக முயற்சிக்காமல், வழிபாட்டில் தமிழ் என சிலர் ஊடுருவ முனைந்துள்ளனர் என திரு லா.சு. ரங்கராஜன் என்பார் அவர்கள் வழக்கமான பாணியில் தினமணியில் (20.10.2012) கட்டுரை வரைந்துள்ளார்.

ஒரு சிலருக்கு வரும் வரும்படி பாதிக்குமேயெனக் கருதி தமிழில் வழிபாடு என்பது அவருக்கு ஊடுருவல் போலத் தோற்றமளிக்கின்றது. தமிழ்நாட்டில் தமிழ் கூடாதோ! இனி திருக்கோயில்கள் தோறும் தமிழில் மட்டுமே வழிபட வேண்டும் என இறைவன் திருமறைக்காட்டில் திருவிளை யாடலைத் தொடங்கினான்.இச்செய்தியை தினமணி அப்போதே வெளியிட்டது.

எல்லாவற்றிற்கும் அய்ரோப்பாவை உதாரணம் கூறுவோரே, அங்கே லத்தீன் மொழி வழிபாட்டை தூக்கி எறிந்து அவரவர் தாய்மொழி வழிபாட்டை நடைமுறைப் படுத்திய வரலாறு மறந்து போனது ஏன்? உலகில் எல்லா நாடுகளிலும் அவரவர் தாய்மொழி மூலம் தானே வழிபாடு, கல்வி, ஆட்சி நடைபெறுகின்றது.

மேலும், கி.மு. 1500 வாக்கில் இந்தியாவில் குடியேறிய சிறுபான்மையினர், பன்னிகு திருமுறை, சிவஞானபோதம் போன்றவற்றை தம் மொழிக்கு மொழிபெயர்த்துக் கொண்டு பின் நாளில் மொழி பெயர்ப்புதான் மூலம் என கதைத்த வரலாற்றை தமிழ்ப் பேரறிஞர் திருச்சிற்றம்பலம் மு. அருணாசலம் தனது தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூலில் (14 தொகுதிகள்) விரிவாக விளக்கி விட்டாரே!
தமிழனுக்கு தமிழில் வழிபாடு செய் கின்ற எண்ணம் கூடாதா? அது என்ன தவறா? இறைவனே விரும்பி தமிழ் வழிபாடு வேண்டும் எனக் கூறியதாக பெரிய புராணத்திலேயே உள்ளதே!

- பெ. சிவசுப்பிரமணியன்
ஆட்சி அலுவலர் (ஓய்வு)./ தலைவர்
தாயுமானசுவாமி தமிழ்வளர்ச்சி மன்றம்,
சென்னை - 600 081

Read more: http://viduthalai.in/page-2/87143.html#ixzz3CRrWo8xV

தமிழ் ஓவியா said...


காணவில்லை!

திருடுபோன மோதிரம்

திரும்பவுமே கிடைத்திட்டால்

விரும்பி வந்து செய்திடுவேன்

திருப்பணிக்கு பொருளுதவி

என்று நானும் நித்தமுமே

வேண்டி வந்தேன் சாமியிடம்

வேண்டுதலும் பலித்தது

மோதிரமும் கிடைத்தது

பொருளுதவி அளிப்பதற்கு

திருக்கோயில் சென்ற போது சாமிசிலை திருடுபோன

சங்கதியைக் கேட்டேன்

அந்தசாமி கிடைப்பதற்கு

எந்தசாமியை வேண்டுவேன்?

மா.அமிர்தலிங்கம், சென்னை

Read more: http://viduthalai.in/page-7/87114.html#ixzz3CRsSnTwh

தமிழ் ஓவியா said...


குமுதம் ஒப்புக்கொள்ளுமா?


ஆசிரியர் அவர்கட்கு!

குழந்தையும், தெய்வமும் ஒன்று; அறியாமல் செய்த பிழைகள் அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன என்று ஆஸ்திகர்கள் வாய்கிழியப் பேசுகிறார்கள். ஆனால் நடப்பது என்ன?
15.11.1979ஆம் தேதி வெளிவந்த குமுதம் இதழின் பகுதியினை இங்கே தருகிறோம்.

கோபாலகிருட்டிணன் என்பவர் தன்னுடைய 7 மாத பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு குருவாயூரப்பன் சன்னிதானத்திற்குச் சென்றாராம். அவ்வமயம் அந்தப் பச்சிளங்குழந்தை அக்கோவிலுக்குள் சிறுநீர் இருந்து விட்டதாம். உடனே அக்கோவில் நிர்வாகிகள், உன் குழந்தை கோவிலை அசுத்தப்படுத்தி (களங்கப்படுத்தி) விட்டது.

ஆகையால், அதை (கோவிலை) புனிதப்படுத்த ரூ.14.37 என்று கூறி வசூலித்து விட்டார்களாம். (இது அதிகாலையில் நடந்ததினால் குறைந்த தொகை; இந்த நிகழ்ச்சி பிற்பகலில் என்றால் ரூபாய் 3000 வரை கட்ட வேண்டியிருக்கும். உனக்கு கெட்ட நேரத்திலும் நல்ல நேரம் போ- என்று கூறினார் களாம்.

பணம் கொடுத்தால் புனிதமாகி விடும் என்று கூறுகிறார்களே! அப்படியானால், சாமியையே (சிலை) அசிங்கப்படுத்துகிறோம்; உடனே அபராதத்தொகை கட்டி னால் அந்தச் சிலை புனிதமாகி விடும் அல்லவா! (எவ்வளவு பணம் என்றாலும்) அதற்கு அவர்கள் சம்மதிப்பார்களா? (அல்லது) விபச்சாரமே (அதிகாலையில்) நடக்கிறது .

அதனால் அந்த இடம் களங்கப்பட்டு விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்; உடனே அபராதம் கட்டி அந்த இடத்தை புனிதப்படுத்தி விடலாம். இதற்கு அவர்கள் ஒத்துக் கொள்வார்களா?

(விபச்சாரம் செய்வதையே இன்றைய தினம் விழாவாகக் கொண்டாடுகிறார்கள் - சித்திரை திருவிழாவின் பிற் பகுதி)

ஆனால், அறியாமல் செய்த சிறு குழந்தைக்கு இந்த அபராதம் ஏன்? நன்றாக சிந்திப்பீர். பக்திக்கு வக்காலத்து வாங்கும் குமுதமும் குமுதத்தின் அரசும் புத்தி வந்து திருந்தி னால் சரி.

கோசு.இராசா, மதுரை

Read more: http://viduthalai.in/page-7/87115.html#ixzz3CRswQm8X

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

மனிதனுடைய எண்ணம் விரிவடைந்து முன்னேறிக் கொண்டு போவதே இயற்கையாய் இருப்பதால், முற்போக்குக்கு அவசியமான மார்க்கங் களைக் கைப்பற்றவும் கண்டுபிடிக்கவும் முயலவேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/87115.html#ixzz3CRt7ugpm

தமிழ் ஓவியா said...

சமூகப் புரட்சி

ஒரு பெரிய சமூகப் புரட்சி உண் டாகாமல் அபேதவாதிகள் (சோஷலிஸ்ட்) விரும்பும் பொருளாதார சுதந்திரம் ஏற்பட போவதில்லை என்பது உறுதி. புரட்சி செய்து அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானால் ஏழை - எளியோர் முன் வந்துதான் ஆக வேண்டும். ஏனையோர், தம்மை சமமாகவும், சகோதர உணர்வுடனும், நீதியாகவும் நடத்துகிறார்கள் என்ற நம்பிக்கை இருந்தால்தான் பாமர மக்கள் மற்ற மக்க ளுடன் சேர்ந்து புரட்சி செய்வார்கள்.

வெற்றி பெற்ற பிறகு ஜாதி - மதவேற்றுமை பாராட்டாமல் சமத்துவமாக நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலொழிய எத்தகைய புரட்சிக்கும் மக்கள் முன் வரமாட்டார்கள். ஜாதியில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று வாயளவில் மட்டும் அபேதவாதிகள் கூறிவிட்டால் போதாது. ஜாதி உயர்வு - தாழ்வு பிரச்சினையை முடிவு செய்யாமல் அபேத வாதிகள் ஒரு விநாடி கூட ஆட்சி நடத்த முடியாது.

- டாக்டர் அம்பேத்கர்

Read more: http://viduthalai.in/page-7/87115.html#ixzz3CRtJPMVz

தமிழ் ஓவியா said...

முன்னேற்றத்திற்கு அதிர்ஷ்டத்தை நம்புகிறவன் சோம்பேறி அவன் ஒரு காலும் உயர்வடையமாட்டான். தன் உழைப்பை நம்புகிறவனே மனிதன். நிச்சயம் அவன் உயர்வடைவான். - இப்ஸன்

Read more: http://viduthalai.in/page-7/87115.html#ixzz3CRtQSDdr

தமிழ் ஓவியா said...


சிக்கலில் வாரியார்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மகாபாரதத்தில் துரோணர் காணிக்கையாக கேட்டு ஏகலைவன் கட்டை விரலை வெட்டிக் கொடுக்க வில்லை என்று மதுரையில் கிருபானந்தவாரியார் புராண பிரசங்கம் செய்த பொழுது கிருஷ்ண ஆரியா என்பவர் எழுந்து, இல்லை இல்லை, துரோணர் கேட்டுத்தான் ஏகலைவன் தன் கட்டை விரலைக் கொடுத்தான் என்று மறுப்புக் கூறினார்.

இருவரும் ஒருவருக்கொருவர் ஒரு லட்சம் ரூபாய் பந்தயம் கட்டிக் கொண்டனர். மகாபாரதத்தில் கிருஷ்ண ஆரியா சொல்லியபடிதான் உள்ளது. ஆனால் , வாரியார் சொன்ன படி நடந்து கொள்ளவில்லை. அதனால் கிருஷ்ண ஆரியா வாரியார் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். மதுரை அடிஷனல் முதலாவது சப்- மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

15.1.2.1979-உண்மை

Read more: http://viduthalai.in/page-7/87116.html#ixzz3CRtZNSK9

தமிழ் ஓவியா said...

கோயில் பெருச்சாளிகள்

தினசரி சிறீரெங்கநாத சாமி கோயிலில் 6 கால பூஜை நடக்கிறது. பொங்கல், புளியோதரை, ததிஅன்னம், வடை, அதிரசம், தேன்குழல், தோசை, பாயாசம், சுக்கு நீர், இவைகள் படைக்கப்படுகின்றன. பூஜை முடிந்தவுடன் மேற்படி ஸ்தலத்தார் (பட்டர்கள் 4, அண்ணங்கார் 2, ஜீயர்கள் 2, ஆக 8 பேர்) திரைபோட்டுக் கொண்டு பங்கு பிரித்துகொள்ள ஒரு மணி நேரம் ஆகிறது.

முன்னாள் மடாலய அமைச்சர் வெங்கடசாமி நாயுடுவிடம், ஆர்.ராஜகோபாலய்யங்கார் என்ற பார்ப்பனர் கொடுத்த புகார் மனு இது.

ஆதாரம்: 6.11.1954, விடுதலை

Read more: http://viduthalai.in/page-7/87116.html#ixzz3CRtgYpEk

தமிழ் ஓவியா said...

அப்பா - மகன்

மகன்: எதிர்த்த வீட்டு ஜோசியரு ஜாதக பொருத்த மெல்லாம் பார்க்க ரொம்பவும் ராசி யான ஆளா? 50, 100ண்ணு அங்க வர்றவங்கள்ளாம் தட்சணை கொடுக்கிறாங்களே... அந்த பணத்தை எல்லாம் அவரு என்ன பண்ணுவாரு?

தந்தை: அங்க வர்றவங்கள்ளாம் தர்ற தட்சணைப் பணத்தை எல்லாம் சேர்த்து வச்சு தம் பொண்ணுக வரனுக்கு வரதட்சணையா கொடுப்பாரு!

Read more: http://viduthalai.in/page-7/87116.html#ixzz3CRtnPM8b

தமிழ் ஓவியா said...


சர்வ சக்தி(?)


மேற்கு வங்காளம் கொத்தல் பூரிலிருந்து கடந்த 24ஆம் தேதி நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 60 பேர்கள் குடும் பத்துடன் தமிழ்நாட்டுக் குச் சுற்றுலா புறப்பட்டு வந்தனர். சமையல் செய்து சாப்பிடுவதற்கு 6 சமையல் எரிவாயு உருளைகளையும் (சிலிண்டர்களையும்) பேருந்தில் ஏற்றியிருந் தனர். 30.8.2014 இரவு 10 மணியளவில் கன்னியா குமரி சென்று கொண்டி ருக்கும்போது திருபுல் லாணி தாதனேந்தல் பேருந்து நிறுத்தம் அரு கில் பேருந்து வந்தபோது, பேருந்தின் பின்புறத்தில் திடீரென தீபிடித்தது.

ஓட்டுநர் அவசர அவசரமாக பேருந்தை சாலை ஓரத்தில் சாமர்த் தியமாக நிறுத்தினார். பேருந்துக்குள்ளிருந்த சமையல் வாயு உருளை யும் வெடித்தது. பயணி கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி னர். ஆனால் வயது மூப் படைந்த 5 பேர் விரை வாக வெளியேற முடி யாத நிலையில் கருகிப் போனார்கள் என்பது பெரி தும் வருந்தத்தக்கதாகும்.

இவ்வளவுக்கும் இந்தப் பயணிகள் தமிழ கம் வந்தது கோயில் தலங்களைச் சுற்றிப் பார்த்து சாமி தரிசனம் செய்யத்தான்! திருப்பதி ஏழுமலையான் கோயி லில் தரிசனத்தைத் தொடங் கிய இவர்கள் வழியில் காஞ்சீபுரம், திருக்கழுக் குன்றம், சிறீரங்கம், இராமேசுவரம் உட்பட பல கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.

கன்னியாகுமரி சென்று அங்குள்ள அம் மனை வழிபடச் சென்ற வர்களுக்குத்தான் இந்தப் பரிதாப நிலை ஏற்பட் டுள்ளது.

கோயிலுக்குச் சாமி கும்பிட சென்றவர்கள், கோயில் திரு விழாக் களுக்குச் செல்லக் கூடிய வர்கள். இதுபோன்ற விபத்துக்களில் சிக்கி பரிதாபகரமாக மரணம் அடைவது அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்றுகூட விநாயகர் பொம்மையை நீரில் கரைக்கச் சென்ற ஓமலூர் கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி மரணம்! பொள்ளாச்சி அருகே சிலைகளைக் கரைக்க காரில் சென்ற இந்து முன்னணியினர் மூவர் விபத்தில் மரணம் என்ற செய்திகள் வெளி வந்துள்ளன. இவ்வளவுக்குப் பிற கும் கோயில் கோயிலாக மக்கள் போவதும், சாமி தரிசனம் செய்வதும், நேர்த் திக் கடன் கழிப்பதும் சரியானதுதானா? என் பதைச் சிந்திக்க வேண் டாமா?

கடவுள் என்ற ஒருவர் இருந்தால், அவருக்குச் சக்தி இருக்கிறது என்பது உண்மையென்றால் கரு ணையே வடிவமானவன் என்று எழுதி வைத்திருப் பதில் கடுகளவு யதார்த் தம் இருக்குமேயானால், நாட்டு மக்களைக் காப் பாற்றுவது ஒருபுறம் இருக் கட்டும்; குறைந்தபட்சம் தன்னை நாடி வந்த பக்தர்களையாவது காப் பாற்ற வேண்டாமா?

பக்தி வந்தால் புத்தி போகும் என்று பெரியார் சொன்னது கேலிக்கல்ல வாழ்க்கையின் யதார்த் தம் என்பதை மக்கள் உணரட்டும்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/86915.html#ixzz3CRu5E8xp

தமிழ் ஓவியா said...

மயிலாப்பூரில் கேட்கும் குரல்


சென்னையில் இந்திய தேசிய பெண்கள் சம்மேளனத் தின் 60ஆம் ஆண்டு விழா கடந்த சனியன்று நடைபெற் றுள்ளது. அதில் உயர்நீதிமன்ற நீதிபதி பிரபாஸ்ரீதேவன், சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா, பெண்கள் கூட்டமைப்பின் தலைவர் கே. சாந்தகுமாரி, பேராசிரியர் காதம்பரி போன்றோர் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை மட்டுமே பெண்களுக்கு எதிரான கொடுமையல்ல. கல்வி, சுகாதாரம், சொந்த நிலம் வழங்கப்படாததும் பெண்கள்மீதான வன்முறைதான் என்று கூறப்பட்டு இருப்பது சிறந்த கருத்துக்களே!

பாலியல் வன்முறை என்று கூறும்பொழுது அண்மைக் காலங்களில் இதன் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. பெண் குழந்தைகள்கூட இதில் தப்ப வில்லை என்பது - நாம் 21ஆம் நூற்றாண்டில்தான் வாழு கிறோம் என்று சொல்லுவதற்கும் வெட்கப்படத்தான் வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்த நோய் வெகு வேகமாகப் பற்றிக் கொண்டு திரிகிறது. டில்லியில் மருத்துவக் கல்லூரி மாண விக்கு ஏற்பட்ட கொடுமையை எதிர்த்து தலை நகரமே மக்கள் தலைகளாகக் காணப்பட்டது. பெரும் யுத்தமே நடந்தது; அதன் விளைவாக ஆட்சி மாற்றமேகூட நிகழ்ந்ததுண்டு.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் இந்தத் திசையில் ஒரு செய்தியாக வந்து கொண்டு தானி ருக்கிறது! ஆனால் இந்தியாவின் தலைநகரம் கொதித் தெழுந்ததுபோல தமிழ்நாட்டில் ஏன் நிகழவில்லை? இதில் அரசியலும் இருக்கிறது. ஊருக்கே உபதேசம் செய்யப் பிறப்பெடுத்ததாக மார் தட்டும் தமிழ்நாட்டு ஊடகங்களும் இதற்குத் துணை போயுள்ளன என்பதும் வருத்தத் திற்குரியதே.

இன்னும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய இழப்பீடுகள் பற்றியது. 357-ஏ குற்ற நடைமுறைச் சட்டம் 1973 இதுபற்றிப் பேசுகிறது. உயிரிழப்பு ரூ.3 லட்சம், பாலியல் வன்முறை ரூ.3 லட்சம், மன உளைச்சல் ரூ.ஒரு லட்சம் வழங்கப்பட வேண்டும்.

கடந்த ஈராண்டுகளில் இதுபற்றிய நிலை என்ன? 212 வழக்குகளில் 73 குழந்தைகள் மருத்துவ உதவிக்காகவும் 65 பேர் மனநல மருத்துவ உதவிக்காகவும், 38 பேர் பாதுகாப்பு இல்லங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். 2013-2014 கால கட்டத்தில் வெறும் ஏழு பேர்களுக்கு மட்டுமே இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடுமைக்கு இழப்பீடு பரிகாரமா என்று கேட்கக் கூடும்.

பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாலேயே அவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா? அந்தக் கொடுமைக்கு ஆளானவர்களா அதற்குக் காரணம்! காரணமானவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து நுழைந்து தப்பித்துக் கொள்கின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வுதான் பரிதாபமானது! இந்த நிலையில் அவர்களுக்கு இழப்பீடும், பராமரிப்புச் சேவைகளும் கண்டிப்பாக தேவைப்படுகின்றன.

இது போன்ற வழக்குகளில் காவல்துறைக்கு ஒரு காலக் கெடு விதித்துக் குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்த வேண்டும். பத்து பதினைந்து ஆண்டுகள் என்றால் இது அந்தப் பாலியல் கொடுமையைவிட மோசமானது.

பெண்களுக்குக் கல்வி வேலை வாய்ப்பு அவசியம் தேவை. அதே நேரத்தில் கல்விச் சாலைகளிலும், பணியாற் றும் இடங்களிலும்கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையே! இதற்கொரு முடிவு கட்டப்பட வேண்டாமா? கொஞ்ச நாட்களுக்குப் பெண்கள் கைகளில் துப்பாக் கியைத் தான் கொடுத்துப் பார்க்கலாமே - என்ன ஆகி விடப் போகிறது என்பதை அனுபவத்தில்தான் அறிய முடியும்.

தமிழ் ஓவியா said...


பெண்களைப் பலகீனமானவர்கள் என்று கருதும் ஆண்களின் சிந்தனையில் ஒரு அச்சத்தை ஏற்படுத்த வேண்டியது. காலத்தின் கட்டாய மட்டுமல்ல; உளவியல் ரீதியான நோய்த் தடுப்பு என்றுகூட இதனைக் கருதலாம்.

ஆண்களுக்கு நிகராக பெண்களுக்குச் சொத்துரிமை என்று சட்டம் வந்தாகி விட்டது; இது எந்த அளவுக்குச் செப்பமாக, நீதியாக, நேர்மையாக, நாணயமாக செயல்பாட்டில் இருக்கிறது என்பது கண்டறியப்பட வேண்டும். இதில் ஓட்டைகள் ஏதேனும் இருக்குமானால் அதனையும் அடைத்தாக வேண்டும்.

சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய நீதிபதி - நீதித்துறையில் பெண்களுக்கு உரிய இடங்கள் கிடைக்கப் பெறவில்லை. பெண் நீதிபதியாக இருக்கும் பட்சத்தில்தான் வாழ்வியல் அனுபவங்களின் அடிப் படையில் பெண்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு தீர்ப்பு வழங்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

இதுபோன்ற அடிப்படை உரிமைகளைப் பெண்கள் பெற வேண்டும் என்றால் சட்டம் செய்யும் இடங்களில் (சட்டமன்றம் - நாடாளுமன்றங்களில்) பெண்களுக்கு 33 சதவீதம் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்படாமல் தடைகளுக்குள் சிக்கிக் கிடக்கிறதே அதுநடைமுறைக்கு வர வேண்டாமா? இது வரக் கூடாது என்பதில் மட்டும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஓரணியாகத் திரண்டு கூடிக் குலவுவதை என்னென்று சொல்லுவது?

பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? அதுபோலவே ஆண்களால் பெண்களுக்கு விடுதலை ஒரு போதும் கிடைக்காது என்று சொன்ன பெண்ணியல்வாதி தந்தை பெரியார் அவர்களின் கருத்துதான் சமுதாயத்தின் முன் பேரொளியாய் எழுந்து நிற்கிறது.

மக்கள் விழிப்புணர்வு இதில் மகத்தானது; தந்தை பெரியார் அவர்களின் பெண்ணியக் கருத்துகள் ஆரம்பக் கல்வி நிறுவனங்களிலிருந்து கற்பிக்கப்பட வேண்டும் பெண்ணடிமைத்தனம் என்பது மதத்தின் வாயிலாக - பக்தியின் வாயிலாக குருதியில் ஊறச் செய்யப்பட்டுள்ளது. அந்த வேரை எடுத்தெறியாமல், வெறும் ஒத்தடங்கள் கொடுப்பது நகைச்சுவைக்கான நல்ல தீனியாகும்.

உடல் ரீதியாக பெண்கள் பலகீனமானவர்கள் என்றால் அந்தப் பலகீனத்தைப் போக்குவதற்கான பயிற்சிகள் பள்ளிகளில் கட்டாயம் இடம் பெற வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவதுபோல பெண்கள் சிங்காரம், அணிமணிகளில் ஆழ்ந்து கிடக்கும் உணர்வு என்னும் சிறையிலிருந்து விடுதலையாக வேண் டும். அப்படியொரு நிலைப்பாடு பெண்கள் மத்தியில் வெகுண்டெழுந்தால், சிந்தனைகள் உரிமைகளின் பக்கமும், ஆண்கள் ஆதிக்கத்தின் பக்கமும், கம்பீரமாக எழும் அல்லவா! மயிலாப்பூரில் பேசிய பெண்ணுரிமையாளர்கள் இந்தத் திசையில் சிந்தித்தார்களா பேசினார்களா? என்று தெரியவில்லை! அவர்கள் பேசாவிட்டாலும் பெரியார் இயக்கம் பேசும் - பெரும் புரட்சியையும் நடத்திக் காட்டும்! வாழ்க பெரியார்!

Read more: http://viduthalai.in/page1/86921.html#ixzz3CRuIeSoT

தமிழ் ஓவியா said...


நிரந்தர விரோதி

நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூடநம்பிக்கை யும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கின்றன.
(குடிஅரசு, 13.4.1930)

Read more: http://viduthalai.in/page1/86927.html#ixzz3CRuSUl9q

தமிழ் ஓவியா said...


தேனினும் இனிய விடுதலை


22.8.2014 நாளிட்ட விடுதலை நாளிதழில் வெளிவந்துள்ள செய்திகள் அனைத்தும் அருமை. அவை பாதுகாக்கப்பட வேண் டிய பாதுகாப்புப் பெட்டகமாகவும், கருத் துக் கருவூலமாகவும் திகழ்கின்றன. குறிப்பாக

1) ஜாதி - தீண்டாமை ஒழிய அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமையினை நிறைவேற்றித் தருமாறு முதல்வர் ஜெயலலிதா அவர்களை வலி யுறுத்தி தமிழர் தலைவர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை மற்றும் கோமாதா ஆந்திராவில் படுத்தியபாடு!

2) நம்ம தியாகராயர் நகர்! - கோவி. லெனின் அவர்கள் எழுதிய கட்டுரை.

3) 375-ஆம் ஆண்டில் சென்னை நகரம்! - தலையங்கம், கைவல்யம் நாள் (22.8.1877).

4) சிப்பாய்க் கலகம் சுதந்திரப் போராட்டம் அல்ல - மதப்போராட்டமே என்று சொன்னவர் தந்தை பெரியார்! என் கின்ற அரிய என் போன்ற இளைஞர் களுக்கும் - மாணவர்களுக்கும் புதிய தகவலை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய சிறப்புக் கூட்டத்தில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாரி வழங்கிய பல வரலாற்றுத் தகவல்கள்.

5) மாணவர்களுக்கான பெரியார் 1000 வினா - விடைப் போட்டி நடைமுறைகள்!

6) பகுத்தறிவுக் களஞ்சியம் பகுதியில்; புத்தர் அறிவுரைகள், தந்தை பெரியார் பொன்மொழி மற்றும் தாய்மார்களுக்கு தந்தை பெரியார் அறிவுரை, மருத்துவம் வென்றது, விடை என்ன? என்ற தலைப்பில் ஆத்திகவாதிகளுக்கு அடுக்கடுக்கான அர்த்தமுள்ள கேள்விகள் ஆகியவை மக்களை சிந்திக்கத் தூண்டுகின்றன.

7) மேலும், சென்னையின் 375 ஆம் ஆண்டில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் வரலாற்றுக் கொண்டாட்டம் - நடைப்பயணம்! நடைப்பயணம் மேற் கொண்ட கழக முன்னோடிகள் - தோழர்கள் ஆகியோர் தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலை முன்பும், தியாகராயர் நகர் டாக்டர் நடேசன் பூங்காவிலும் எடுத்துக்கொண்ட வண்ணப் புகைப்படங்கள் கண்களைக் கவர்ந்தன.

8) இறுதியாக, நாளைய தலைமுறைக் கான நாற்றங்கால் - பெரியார் 1000! போன்ற எண்ணற்ற பயனுள்ள செய்திகள் இளைஞர் களுக்கும், மாணவர்களுக்கும் விருந்தாக வும் அரு மருந்தாகவும் அமைந்தது.

இவ்வாறு தேனினும் இனிய செய்தி களைத் தாங்கி பல வண்ணங்களுடனும், பகுத்தறிவு எண்ணங்களுடனும் நாள் தோறும் வெளிவருகின்ற உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளேட் டினை இளைஞர்களும் - மாணவர்களும் ஆவலுடன் படித்துப் பாராட்டி மகிழ் கின்றனர், போற்றிப் புகழ்கின்றனர்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- சீ.இலட்சுமிபதி, தாம்பரம், சென்னை-45

Read more: http://viduthalai.in/page1/86924.html#ixzz3CRufCWbD

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தினம் என்பதை குருஉத்சவ் என மாற்றி தமிழ்மொழியை வீழ்த்திட ஆரியம் சூழ்ச்சி கலைஞர் எச்சரிக்கை!

சென்னை, செப். 1_ தி.மு.க.தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று (31.8.2014)அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங் கில் சட்டமன்ற முன்னாள் செயலாளர் மா.செல்ரவாஜ் இல்ல மண விழாவை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

அப்போது கலைஞர் அவர்கள் தமது உரையில் ``ஆண்டாண்டு காலமாக நாம் கடைப் பிடித்து வருகிற ``ஆசிரியர் தினம் என்பதை ``குரு உத்சவ் என மாற்றிக் கொண்டாட வேண்டுமென்று அனைத்துப் பள்ளிகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நம்முடைய மொழியில் முதலில் கை வைத்து அதை வீழ்த்தி விட்டு அதற்குப் பிறகு மொழிக்குரியவர்களை வீழ்த்திட கொஞ்சம், கொஞ்சமாக சூழ்ச்சி வலை பின்னப் படுகிறது என்று குறிப்பிட்டார்.

தமிழக சட்டமன்றப் பேரவை முன்னாள் செயலா ளர் எம்.செல்வராஜ் இல்ல மணவிழாவை தலைமை யேற்று நடத்தி வைத்து கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

ஆச்சரியப்படுகின்ற அளவுக்கு நன்றியுரையாற்றிய செல்வராஜ்!

இந்த மண விழா நிகழ்ச்சியில் நம்முடைய சட்டப் பேரவையினுடைய முன்னாள் செயலாளர் அழைப்பின் பேரில் அவருடைய அன்பிற்குரிய நண்பர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போது பதவியில் இருந்தால் என்ன ஆகுமோ என்ற அச்சத்திற்கு இடமின்றி, எதிர் காலத்திலே நம்முடைய தமிழ்ச் சமுதாயம் வாழ எப்படிப்பட்ட திறமும், வீரமும், நெஞ்சுறுதியும் ஒவ்வொரு தமிழனுக்கும் தேவை என்பதை உணர்த்துகின்ற வகையில், இந்த மணவிழா வினை நடத்து கின்ற நம்முடைய அருமை நண்பர் செல்வராஜ் அவர்கள் நம்மையெல்லாம் வியப்பிலே ஆழ்த்துகின்ற வகையில், அவரே ஒரு சொற்பொழிவை இங்கே ஆற்றி முடித்திருக்கிறார்.

இப்படிப்பட்ட மணவிழாக்களில் நன்றி கூறுவது என்ற பெயரால், மணமக்களுடைய குடும்பத்தார் சார்பில் அனைவருக்கும் நன்றி என்று கூறிவிட்டு அமர்ந்து விடுவார்கள். ஆனால் செல்வ ராஜ் அவர்கள் நீண்ட நேரம் ஒரு உரையையே ஆற்றி எனக்குப் பேசுவதற்கு இடம் தருவாரோ மாட்டாரோ (சிரிப்பு) என்கிற அளவுக்கு ஒவ்வொருவருக்கும் நன்றி கூறி நீண்ட உரையாற்றி உங்களையெல்லாம் மகிழச் செய்திருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

குறிப்பாகச் சொல்ல வேண்டுமே யானால், என்னையும் வியப்பிலே ஆழ்த்தியிருக்கிறார், மகிழ்ச்சியிலே ஆழ்த்தியிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. சட்டப்பேரவையிலே செயலா ளராக இருந்த செல்வராஜா இப்படிப் பேசுகிறார் என்று நான் ஆச்சரியப்படுகின்ற அளவுக்கு தன்னு டைய நன்றி உரையை அவர் ஆற்றியிருக்கிறார். இந்த மண விழாவில் மணமக்களாக வீற்றிருப்ப வர்கள் இருவருமே படித்தவர்கள், கல்வியில் சிறந்தவர் கள், உலகம் அறிந்தவர்கள். செல்வராஜின் அன்பு மகள் செல்வி அனுஷா, வாழ்க்கைத் துணைவராக ஏற்கிற மணமகனின் பெயர் அர்மேஷ்;

அதாவது மணமக்கள் அனுஷா, அர்மேஷ் இரண்டு பெயர்களுமே தமிழ்ப் பெயர்கள்தான் என்று நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று இல்லை. அந்த இரண்டு பெயர்களும் வடவர்களால் தமிழ்ச் சமுதாயத்தின் மீது ஒரு காலத்தில் திணிக்கப்பட்ட பெயர்கள்.

ஆனாலும் வழக்கத்தில் வந்து விட்ட காரணத்தால், இனி அதை மாற்றுவதால் அதிலே பல சட்டச் சிக்கல்கள் வரக் கூடும் என்பதை உணர்ந்து அவர்கள் அந்தப் பெயரிலேயே தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு இந்த மணவிழாவினை நடத்திக் கொண்டிருக் கிறார்கள். அவர்களை வாழ்க வாழ்க என்று நான் வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

சட்டம் - ஒழுங்கு, அமைதி என்ன விலை என்று கேட்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது!

குறிப்பாக தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு, அமைதி என்றால் என்ன விலை என்று கேட்கக் கூடிய நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நேரத்திலும் ஒரு காலத்தில், ஆட்சியில் அலுவலராக, செயலாளராக, எங்களுக்கு உற்றத் துணைவராக இருந்த செல்வராஜ் அவர்கள், அந்த நன்றியை மறவாது, எங்க ளுக்குத் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிப்பதைப் பற்றிக் கவலையில்லை, ஆனால் தான் தமிழன், தமிழ்ச் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பெரும் பணிகளை ஆற்ற வேண்டியவன் என்கின்ற அந்த உணர்வோடு இன்றைக்கு இந்தத் திருமணத்திலே, தன்னுடைய வீட்டுச் செல்வங்களுக்கு தமிழ் முறைப்படி, தமிழர் களுடைய நாகரிகத்தின் அடிப்படையில் இந்தத் திருமணத்தை நடத்தியிருப்பது பெரிதும் பாராட்டுக் குரிய ஒன்றாகும்.

நாம் மகிழத்தக்க ஒரு நிகழ்ச்சி யாகும். இதை நான் ஏன் மகிழத் தக்க நிகழ்ச்சி, பாராட் டுக்குரிய நிகழ்ச்சி என்று சொல்கிறேன் என்றால், இன்றைய தினம் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள படிப்படியான தீமைகளையெல்லாம் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்று நம்முடைய கையிலே தமிழுக்கு ஏற்றம் தரக் கூடிய எந்த சக்தி யையும் நாம் படைத்திருக்க வில்லை. என்னால் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல முடியும்.

தமிழ் ஓவியா said...


நான் தமிழகத்தின் முதலமைச்சராக அய்ந்து முறையும், தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பின ராக பன்னிரண்டு முறையும், சட்டப் பேரவை உறுப்பினராக ஏறத்தாழ 50 ஆண்டுக் காலம் இருந்தவன் என்ற முறையில் உங்களோடு பழகியவன், பழகிக் கொண்டிருக்கிறவன், மேலும் பழகப் போகிறவன் என்ற வகையில் சில அபாய அறிவிப்பு களை நீங்கள் மனதிலே பதிய வைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகச் சொல்கிறேன்.

நம்முடைய தமிழ்ச் சமுதாயம் வாழ்வதற்காகப் பாடுபட்டவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதியார் என்று ஒருவர் இருந்தார். அவர் தமிழ் நெறி,தமிழ் முறை, தமிழ் நலன், தமிழ் இயக்கம், இதற்காக தன்னையே ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்தவர். அவர் நம்முடைய இல்லங்களிலே நடைபெறுகின்ற விழா வானாலும், நாம் நடத்துகின்ற பெரு விழாக்களானாலும், அந்த விழாக்களில் எல்லாம் தமிழைப் போற்றுங்கள், தமிழை வாழ்த்துங்கள், தமிழர்கள் இலக்கியங்களை மறவாமல் அவற்றைப் பின்பற்றுங் கள் என்பதைச் சொல்லிச் சொல்லி மக்கள் மனதிலே பதிய வைப்பார்.

தமிழ் ஓவியா said...


அப்படிப்பட்ட அந்தப் பாரதியார், நாவலர் பாரதியார் ஒன்றைச் சொல்வார். நம்மை இன்றைக்கு சீரழிக்க வந்துள்ள மொழி ஆதிக்கத் திற்குப் பெயர் சஞ்சுகிருதம் என்று சொல்லுவார். அதாவது சமஸ்கிருதத்தை அவ்வளவு கிண்டலாக, கேலியாக, சஞ்சுகிருதத்தை யாரும் பின்பற்றாதீர்கள் என்று சொல்லுவார்.அப்படிப்பட்ட பெரியவர்கள், தியாகச் செம்மல்கள், தமிழ்ச் சான்றோர்கள் வாழ்ந்த தமிழ் நிலத்தில் இன்றைக்கு தமிழ்த் திருமணத்தை நடத்திக் கொள்கின்ற நேரத்தில் ஒன்றை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

அவர் சொன்ன அந்த சஞ்சுகிருதம் - அவர் கேலியாகச் சொன்ன, ஏளன மாகச் சொன்ன, அந்த சஞ்சுகிருதம் இன்றைக்கு தமிழ் நாட்டில் சமஸ்கிருத வாரமாகக் கொண்டாடப்பட வேண்டுமென்று சொல்கிற அளவுக்கு ஓங்கி வளர்ந்திருக்கின்றது.

அது மாத்திரமல்ல; இன்றைக்கு காலையிலே நான் பத்திரிகையிலே படித்த ஒரு செய்தியில், என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், இனிமேல் ஆசிரியர் தினம் என்பதற்குப் பதிலாக குரு உத்சவ் என்ற பெயரில் அதைக் கொண்டாட வேண்டுமென்று மத்திய அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக செய்தி வெளி வந்துள்ளது. ஆசிரியர் தினம் என்பதை நாம் ஆண்டாண்டு கால மாகக் கடைப்பிடித்து வருகிறோம்.

அந்தச் சொல்லை மாற்றி இன்றைக்கு வந்துள்ள மத்திய புதிய அரசு வெளியிட்டுள்ள ஆணையில், இனிமேல் அனைத்துப் பள்ளிகளிலும் குரு உத்சவ் என்றுதான் ஆசிரியர் தினத்தை அழைக்க வேண்டும் என்று சொல்லியிருக் கிறார்கள்.

இப்படி நம்முடைய மொழியில் முதலில் கை வைத்து, அதை வீழ்த்தி விட்டு, அதற்குப் பிறகு இந்த மொழிக்குரி யவர்களை, இந்த மொழியால் உயர்ந்தவர்களை, இந்த மொழியால் தங்களை வருத்திக் கொண்டவர்களை வீழ்த்தி விட கொஞ்சம் கொஞ்ச மாக, சிறிது சிறிதாக சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது என்பதற்கு இதை விட வேறு எந்த உதாரணமும் தேவையில்லை.

சட்டமன்ற ஜனநாயகத்திற்குக் கேடு வராமல் பாதுகாத்துச் செயல்பட்டவர் செல்வராஜ்!

ஆகவே தான் நாம் இந்தத் திருமணத்தை தமிழர் முறைப்படி நடத்திக் கொண்டாலுங்கூட, இந்தத் தமிழர் முறைகளுக்கு வேட்டு வைக்கின்ற அளவுக்கு மெல்ல மெல்ல ஆரியம் தமிழகத்திலே தன்னுடைய சித்து வேலைகளைத் தொடங்கி விட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சமுதாயத் துறையிலே திராவிட முன்னேற்றக் கழகம் ஈடுபாடு கொண்டு இத்தகைய செய்திகளை யெல்லாம் வெளியிடா விட்டால், தமிழன் மேலும் அடிமைப் பட்டுப் போய் விடுவான் என்பதை ஞாபகத்திலே வைத்துக் கொண்டு, அந்த ஞாபகத்தை சிறிதும் மறவாமல் தமிழர்களுக்காக, தமிழன் வாழ வேண்டும், தமிழ்ச் சமுதாயத்திற்காக உழைக்க வேண்டும், பாடுபட வேண்டும் என்ற அந்த உணர் வோடு செயல்படுங்கள் என்று நான் இந்தத் திருமண விழாவிலே அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மணவிழாவிலே உரையாற்றிய, நன்றி உரையாற்றிய நம்முடைய அருமை நண்பர், சட்டப் பேரவையின் முன்னாள் செயலாளர் தம்பி செல்வராஜ் கழகத்திற்கு, கழகக் கொள்கைகளுக்கு எவ்வளவு உடன்பாடானவர் என்பதை நான் அறிந்திருந்தாலுங் கூட, அவர் வேலை பார்த்த நேரத்தில், அவர் அலுவல கத்திலே பணியாற்றிய நேரத்தில், அந்தக் கொள்கை களை முன் வைத்து, அவருடைய உழைப்பை, அவருடைய செயலாற்றலை முன் வைத்து இந்த இயக்கத்தை, இந்த அரசை நடத்த வேண்டுமென்று எண்ணினாரே தவிர எந்த நேரத்திலும் அவர் தன்னுடைய சுயநலத்திற்கு அல்லது அமைச்சர்களே கூட,

நானே கூட, தவறாக ஒன்றைச் செய்தால் அதை என்பால் உணர்த்தி, திருத்தி, சட்ட மன்றம் ஜனநாயக மன்றம், அந்த ஜனநாய கத்திற்கு கேடு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் அழுத்தந்திருத்தமான கருத்து உடையவராகத் திகழ்ந்தார். அதனால்தான் ஜனநாயக முறையில் ஆட்சி ஒன்று கடந்த காலத்தில் நடைபெற்றது என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்றால் அதற்கெல்லாம் காரணம், நம்முடைய செல்வராஜைப் போன்ற நண்பர்கள் ஜனநாயகத்திலே கொண்டிருந்த பற்றும், அந்தப் பற்று கொண்டிருந்த எங்கள் பால் அவர்கள் கொண்டிருந்த பரிவும் அன்பும் தான் காரணம் என்பதை எடுத்துச் சொல்லி, அப்படிப்பட்ட நல்ல அலுவலாளர்கள், நல்ல செயலாளர்கள் யாராவது வாய்த்தால், அவர்களைப் பாராட்டி,

புகழ்ந்து, அவர்கள் வழி நடந்து, தாங்கள் கொண்டிருக்கின்ற எந்தக் காரியமாயினும், அதைத் தமிழ் வழியில், தமிழர்களுடைய வழியில் சிறப்பாக, செம்மையாகச் செய்து, பெரியா ருக்கு, பேரறிஞர் அண்ணாவுக்கு நாம் கட்டுப்பட்டவர்கள், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அந்த மூன்று தாரக மந்திரங்களையும் மறவாதவர்கள் என்ற அந்த ஒரு நிலையை எடுத்துச் சொல்வதற்காக நான் இதைக் குறிப்பிட்டேன் என்பதை இங்கே கூறி,

நம்முடைய அனுஷா அவர்களும், அர்மேஷ் அவர்களும் இல்வாழ்க்கையை இனிது நடத்தி, எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிட வேண்டுமென்று வாழ்த்தி வாழ்க வாழ்க மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழ்க என்று என்னுடைய வாழ்த்துகளை இணைத்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page1/86914.html#ixzz3CRurnY15

தமிழ் ஓவியா said...


பற்களில் கறை போக்க...


என்னதான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கறை கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான். நீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (Pottasium Permanganate) (KMNO4)பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch) போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும். (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கறைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

பல் வலியிலிருந்து நிவாரணம் பெற சில வழிமுறைகள்

பல் வலியிலிருந்து நிவாரணம் பெற கோவைப்பழம் சாப்பிடலாம்.

மகிழம் இலையை கஷாயம் செய்து வாய்க் கொப்பளித்து வந்தால், பல் நோய் எதுவும் அண்டாது.

மாவிலையைப் பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால், பற்கள் உறுதி பெறும்.

ஒரு துண்டு சுக்கை எடுத்து வாயில் போட்டுக் கொண்டால், பல்வலி நீங்கும்.

நந்தியாவட்டை வேரை மென்று துப்பினால், பல்வலி குணமாகும்.

Read more: http://viduthalai.in/page1/86882.html#ixzz3CRvKqo3y

தமிழ் ஓவியா said...


நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்


நெல்லிக்காய் லேகியம்: 150 கிராம் பனை வெல்லத்துடன் இரண்டு ஆழாக்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பனைவெல்லம் கரைந்தவுடன் இறக்கி இதனை மேலாக இறுத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் விட வேண்டும்.

பின்னர் அடுப்பில் வைத்து அதனுடன் ஒரு ஆழாக்கு அளவு சுத்தமான பசும்பால் விட்டு நன்றாக கொதித்து வரும் சமயம், இடித்து சலித்த நெல்லிக்காய் வற்றல் தூளில் ஆழாக்கு அளவு இதில் போட்டு பாகுபதம் வரும்போது, அரை ஆழாக்கு தேன், அரைஆழாக்கு சுத்தமான பசு நெய்யினை விட்டுக் கிளறி லேகியபதம் வந்தவுடன் இறக்கவேண்டும்.

ஆறிய பின்னர் வாயகன்ற பாட்டிலில் இட்டு மூடி வைத்து தினசரி காலை மற்றும் மாலையில் தேக்கரண்டி சாப்பிடலாம்.

இந்த லேகியம் வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகியவற்றை சமன் செய்யும். உடலுக்குப் பலத்தை தருவதுடன், பித்தம் காரணமாக ஏற்படும் கிறுகிறுப்பு, வாந்தி, அரோசிகம் மாறும். ரத்தம் சுத்தமாகும்.

பெருங்குடல், சிறுகுடல், இரைப்பைகளில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும். சொறி, சிரங்கு நமைச்சல் குணமாகும். கருவுற்ற நிலையில் 21 நாள்கள் சாப்பிட சுகப்பிரசவம் ஏற்படும். கருப்பை கோளாறுகளைக் குணப்படுத்தும். காய கல்ப மாக செயல்படும் இந்த லேகியம் 3 மாதம் வரை கெடாது.

நெல்லிக்காய் வடாம்: ஒரு படி நெல்லிக்காயை கொஞ்சம் கொஞ்சமாக உரலில் போட்டு இடித்தால் மசித்து அதன் வித்துக்கள் வெளியேறும். நைந்தபின் வித்துக்களை நீக்கி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

எல்லாக் காய்களையும் இடித்த பின் பெரிய பச்சை மிளகாயில் 10-ம், இரண்டு கொட்டை பாக்களவு தோல் சீவிய இஞ்சி, கைப்பிடியளவு கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு ஆகியன சேர்த்து மறுபடியும் உரலில் போட்டு மைபோல் இடிக்கவேண்டும்.

பின்னர் அதனை எடுத்து உளுந்து வடை அளவிற்கு அடையாகத் தட்டி சுத்தமான பாயில் வைத்து, வெயிலில் உலர்த்தவேண்டும்.
நீர் சுண்டி சருகுபோல காய்ந்த பின் எடுத்து ஜாடியில் அடுக்கி மூடி வைத்துவிட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவேண்டும். இது வெகுநாட்கள் கெடாது.

நெல்லிக்காய் சஞ்சீவி லேகியம்: நன்றாக பழுத்த நெல்லிப்பழங்களின் விதைகளை நீக்கி வெயிலில் சருகாக உலரவிட வேண்டும். பின்னர் அதனை உரலில் இடித்து சலித்துக் கொள்ள வேண்டும்.

சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை தலா 5 கிராம் எடுத்து இடித்து சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இரண் டாழாக்கு பசுவின் பாலை நன்றாக கொதிக்க வைத்து, அதில் 200 கிராம் பனைவெல்லத்தை போட்டு பாகு பதம் வரும் சமயம், அரை ஆழாக்கு சுத்தமான தேனை விட்டு சுக்கு, மிளகு, திப்பிலி தூளையும் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி ஒரு வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி தேக்கரண்டி காலையில் மட்டும் சாப்பிட்டு வர 40 நாளில் ரத்தம் சுத்தமாகும்.

Read more: http://viduthalai.in/page1/86883.html#ixzz3CRvVQz1K

தமிழ் ஓவியா said...

நோய்களை விரட்டியடிக்கும் செவ்வாழைப்பழம்

எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புசத்தும், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களை கொண்டது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ் டரீகா மற்றும் கியூபா என கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு ஆகாரத்துக்கு பிறகு தொடர்ந்து 40 நாள்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.

பல்வலி, பல்லசைவு போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாள்கள் செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற தோல் வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும் செவ்வாழை பழத்தைத் தொடர்ந்து 7 நாள்கள் சாப்பிட்டு வர சரும நோய் குணமாகும். நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும்.

எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட வர்கள் தினசரி இரவு செவ்வாழைப்பழம் சாப்பிடவேண்டும். தொடர்ந்து 48 நாள்கள் செவ்வாழை சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை தன்மை சீரடையும்.

Read more: http://viduthalai.in/page1/86883.html#ixzz3CRvedmQN

தமிழ் ஓவியா said...

ரத்த அணுக்களை பெருக்கும் முருங்கைக் கீரை


உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது. தோலை உரிக்காமல் வேக வைக்கும்போது வைட்டமின் பி, சி மற்றும் தோலில் காணப்படும் தாதுக்கள் பாதுகாக்கப்படுகின்றன.

பாசிப் பயறுதான் மற்ற பயறுகளைவிட எளிதில் செரிமானமடைவதுடன் உடலால் விரைவில் ஏற்றுக் கொள் ளப்படுகிறது. காரணம், இது சிறிய அளவில் இருப்பதால் எளிதில் வெந்துவிடுகிறது. பாசிப் பயறை அதிகமாகச் சாப்பிடுவதால் குடல் பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் வாயுக்களை உற்பத்தி செய்து கழிவை ஏற்படுத்துகின்றன.

தினசரி கொய்யாப் பழம் சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகமாகும். ரத்த சோகை வராமல் தடுக்கலாம்.

நம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வெங்காயம், கேரட் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

பார்லி நீரை தினமும் அருந்திவந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

துளசி இலையைக் கசக்கி முகத்தில் தேய்த்துக் கொண்டு இரவில் படுத்து, காலையில் எழுந்து முகம் கழுவினால் முகம் அழகு பெறும்.

முதல் நாள் இரவில் உலர்ந்த திராட்சைப் பழங்களைத் தண்ணீரில் ஊறவைத்து, மறு நாள் காலையில் வெறும் வயிற்றில் பழங்களைச் சாப்பிட்டு தண்ணீரையும் குடித்தல் உடல் நன்கு சக்தி பெறும்.

வாரத்தில் இரண்டு நாட்களாவது முருங்கைக் கீரையை சாப்பிட்டு வர ரத்த அணுக்கள் அதிகமாக உற்பத்தியாகும்.

சுரைக்காயை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து தொப்பைக் கரையும்.

வால் மிளகு பசியைத் தூண்டிவிடும். செரிமான சக்தியை உண்டாக்கும். கபத்தையும் வாயுவையும் போக்கும்.

Read more: http://viduthalai.in/page1/86886.html#ixzz3CRvuW3Zd

தமிழ் ஓவியா said...

தருமபுரி மாவட்டத்தில் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளைமுறை : கைது நடவடிக்கை வரவேற்கத்தக்கது!


அரசியல் பதவி வேட்டைக்காக ஜாதியை முன்னிறுத்துவது வெட்கக் கேடானதே!
ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் ஒத்த கருத்துள்ளோரை ஒருங்கிணைத்து களம் அமைப்போம்!
தந்தை பெரியார் 136ஆம் ஆண்டு பிறந்த நாளில் சூளுரை ஏற்போம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறையா? தந்தை பெரியார் 136ஆம் ஆண்டு பிறந்த நாளில் (செப்டம்பர் 17) ஜாதி - தீண்டாமை ஒழிப்பை முன் னிறுத்தி, ஒத்த கருத்துள்ளவர்களை ஒருங் கிணைத்து, களம் அமைப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்தியா - விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன போதிலும் அந்நாடு - பலவகையான இயற்கை வளங்களைப் பெற்றிருக்கும் ஒரு நாடான போதிலும்கூட, அது வளர வேண்டிய அளவுக்கு வளராமல் மிகவும் கீழான நிலையில் இருப்பதற்கு மூலகாரணம் அங்குள்ள ஜாதி முறைதான். அந்தத் தீமையை ஒழிக்கா விட்டால் அந்த நாடு எளிதில் முன்னேற முடியாது என்று சில மாதங்களுக்குமுன் வெளியிட்ட ஒரு நூலில் (உலகத்தின் பல நாடுகளைப்பற்றிய எனது கண்ணோட்டம் என்ற ஒரு ஆங்கில நூலில்) நவீன சிங்கப்பூரின் தந்தை என்று கருதப்படும் லீக்வான்கியூ அவர்கள் எழுதியுள்ளார்கள்.

தமிழ் ஓவியா said...

சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகளாகியும் இன்னும் ஜாதி தீண்டாமைக் கொடுமையா?

சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னமும் ஜாதி- தீண்டாமை - அதன் காரணமாக ஜாதி பஞ்சாயத்துக்கள் (காப்பஞ்சாயத்து என்று வடபுலத்தில் ஹிந்திக்காரர்களால் அழைக்கப்படுவது) ஜாதி மறுப்பு, காதல் திருமணங்கள் படித்த இளைஞர்களிடையே ஏற்பட்டால், ஜாதி வெறியர்கள் அவர்களைக் கொலை செய்வதும், ஜாதி வெறி பிடித்த பெற்றோர்களும், உற்றார் உறவினர்களுமே இதற்கு தூண்டுதலாக அமைதலும் நாளும் குறைவதாகவே தெரியவில்லை.

பெரியார் பிறந்த மண்ணில் தமிழ்நாட்டில் - இந்த ஜாதி வெறி, சில அரசியல் பதவி வேட்டைக்கார சந்தர்ப்பவாதி களால் நாளும் நீர் ஊற்றி, உரம் போட்டு வளர்க்கப் படுகிறது.

பதவி அரசியலுக்கு ஜாதி மூலதனமா?

ஜாதியை அரசியல் மூலதனமாக்கி, அதன் மூலம் எப்படியாவது பதவி சிம்மாசனத்தில் அமர நினைக்கும் இவர்களால் அப்பாவி இளைஞர்கள் - வளர வேண்டிய இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் ஜாதி வெறி என்ற புற்று நோய்க்கு ஆளாகி, வாழ்நாளை வீணாக்கி, வீழ்ந்து வருகின்றனர்!

தமிழ்நாட்டில், மீண்டும் ஜாதி வெறி, மதவெறிக்குப் புத்துயிர் ஊட்ட, ஆட்சியும், அரசியலும் அருமையான கருவிகள் என்ற நோக்கோடு ஊடகங்களின் துணையோடு பழைய கருப்பனாக - பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த குலதர்ம சமுதாயம் மீண்டும் தோன்றுவதற்கு கடுமையான முயற்சிகள் தொய்வின்றி நடைபெற்று வருவதன்மூலம், தமிழ்நாட்டிற்குத் தலைகுனிவை ஏற்படுத்துகின்றனர்.

தமிழ் ஓவியா said...


ஜாதியின் தேவை, மேன்மையை நியாயப்படுத்தியும், சிலாகித்தும் பேசும் அளவுக்கு இப்போது இந்த மண்ணில் ஒரு குருட்டுத் தைரியம் முளைத்துள்ளது. இந்த அறை கூவலை ஏற்க நாம் (திராவிடர் கழகம்) மட்டுமல்ல, அனைத்து முற்போக்கு சக்திகளும் முண்டா தட்டி களத்தில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது!

தமிழ் ஓவியா said...

சமுதாய ஒருமைப்பாடு இன்றி, தேசிய ஒருமைப்பாடோ, மற்ற எந்த வெங்காயமோ ஒரு போதும் ஏற்பட முடியாது.

உண்மைச் சுய ஆட்சி வரவில்லை. இன்று வந் திருப்பது இடைக்கால வர்ணாசிரம ராச்சியந்தான். உண்மைச் சுய ஆட்சியில் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் இருக்க முடியாது. இருப்பதைச் சுய ஆட்சி என்று கூற முடியுமா? என்று தந்தை பெரியார் கூறியுள்ளதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

தந்தை பெரியார் பிறந்த நாளில் நாம் எடுக்கும் சூளுரை!

செப்டம்பர் பிறந்து விட்டது. தந்தை பெரியாரின் 136ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் நாம் எடுக்கும் சூளுரை - ஜாதித் தீண்டாமை ஒழிப்புக்காக அனைத்துக் கள அறப்போரில் ஈடுபடுவது என்பதேயாகும்!

ஒத்த கருத்துள்ள அனைவரையும் ஓர் அணியாக ஆக்கிச் செயல்பட திட்டம் வகுப்பது அவசர அவசிய மாகும்.

தருமபுரி மாவட்டத்தில் இரட்டைக் குவளை வைத்தோர் கைது!

தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் வட்டம், தாசம்பட்டி என்ற ஊரில் தேநீர் சிற்றுண்டிச் சாலை நடத்தும் சில கடைகளில் இரட்டைக் குவளை முறை நடைமுறைப் படுத்தப்பட்டு, தீண்டாமையைப் பாதுகாத்து, ஜாதியைப் பாதுகாக்கும் முறை இருப்பதாகப் புகார் வந்ததையொட்டி, தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அஸ்ரா கார்க் (மாவட்ட எஸ்.பி) அவர்கள் ஆணையின் பேரில் தனிப்படை காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் இதுபற்றி நடவடிக்கை எடுத்து, இரட்டைக் குவளை வைத்து, தேநீர்க் கடை நடத்துவோர்மீது வழக்குப் போட்டு, கைது செய்துள்ள நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது. மற்ற மாவட்ட காவல் துறையினரும் பின்பற்ற வேண்டியதாகும்.

மற்ற பகுதிகளிலும் கைது நடவடிக்கை தொடரட்டும்!

பாலக்கோடு வட்டம், நம்மாண்டஹள்ளி பகுதியிலும், இதுபோல சிலர் இதே குற்றத்திற்கு தீண்டாமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வந்துள்ளன.

இதுபோலவே இம்மாவட்டத்தின் பிற பகுதிகளான அரூர், பொம்மிடி, பாபிரெட்டிப் பட்டி - போன்ற பகுதிகளி லும்கூட உள்ளன என்று பல ஏடுகளில் செய்திகள் வருகின்றன.

அந்த மாவட்டத்தில் உள்ளதுபோல, தமிழ்நாட்டில் வேறு சில மாவட்டங்களிலும்கூட இந்த இரட்டைக் குவளை முறை நடைமுறையில் உள்ளது. தேநீர்க் கடைகளில் சட்டம் ஊமையாக இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது! இந்த தர்மபுரி நடவடிக்கைபோல எங்கும் பரவலாக சட்டபூர்வ நடவடிக்கைகள் தொடர வேண்டும். கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த ஜாதிவெறித்தனத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க குண்டர்சட்டம் போன்றவை பாய்ச்சப்பட்டால்கூட தவறல்ல.

ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் மட்டும் போதாது; இதுபோன்ற சட்ட நடவடிக்கைகளின் துணையும், செயலும் தேவை! தேவை!!

சென்னை
2.9.2014

- கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்
- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page1/86942.html#ixzz3CRwEVoU2

தமிழ் ஓவியா said...

இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளைத் திருப்பிக் கொடுக்கக் கூடாது என்று சுப்பிரமணியசாமி சொல்லுவதா?


சுப்பிரமணியசாமிகளை தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்கக் கூடாது! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

தமிழக மீனவர்களை விடுவிக்கலாம்; ஆனால் அவர்களின் படகுகளைத் திருப்பிக் கொடுக்கக் கூடாது என்று கூறும் சுப்பிரமணிய சாமிகளைத் தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமே மீன்பிடித் தொழிலாகும். அவர்கள் கடலில் சென்று தம் தொழிலை மிகப் பெரிய சூறாவளி, கடல் சீற்றம் - இவைகளை யெல்லாம் பொருட்படுத்தாது, தம் வாழ்வைப் பணயம் வைத்து மேற்கொண்டு வரும் இத்தொழிலையே செய்ய இயலாத வகையில், சிங்களக் கப்பற்படையினராலும், ஆதரவு காட்ட வேண்டிய நமது கடலோரக் கப்பற் படையினராலும் பல்வேறு இடையூறுகளையும் இடை யறாது சந்தித்து வருகின்ற அவலம் அன்றாடத் தொடர் கதையாகியுள்ளது.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியால் சாதிக்க முடியாததை தாம் சாதித்துக் காட்டப் போவதாக மார்தட்டிய பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில், எந்தப் பெரிய மாறுதலும் இன்றி அவர்களது வேதனையான வாழ்வுக்கான கெடுபிடிகளும், சிறை வாசங்களும், படகுப் பறிப்புகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

ஒரு சிலரை விடுதலை செய்து வித்தை காட்டியது இராஜபக்சே அரசு.

யார் இந்த சுப்பிரமணியசாமி?

இந்த நிலையில் தமிழ் இன விரோதி சுப்பிரமணிய சுவாமி என்ற பார்ப்பனர், பா.ஜ.க.வுக்குள் புகுந்து கொண்டு தான் தான் ஏதோ இலங்கை அதிபர் இராஜபக்சேவையே வழி நடத்துபவர்போல பீற்றிக் கொள்வதோடு, பகிரங்கமாக மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு வேட்டு வைக்கும் வகையில் பேசியும், பேட்டி கொடுத்தும் வருகிறார். இவருக்கு மத்திய ஆட்சியில் அளிக்கப் பட்டுள்ள அதிகாரம் - தகுதி என்ன என்பதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கையின் மீன் வளத்தைச் சுரண்டுவதாகவும், அவர்களின் படகுகளை (61 படகுகள்) இலங்கை அரசு அவர்களிடம் திருப்பிக் கொடுக்கக் கூடாது என்றும் தான்தான் ராஜபக்சே அரசுக்குக் கூறியதாகவும், இவர்கள் கொழுத்த பணக்காரர்கள் என்றும் ஏதோ வாயில் வந்தபடி உளறிக் கொட்டியுள்ளார்.

இதை பிரதமர் மோடியும், வெளி உறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜும், அமைச்சரவையில் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டு பிஜேபி தலைவர் மறுக்கிறார்

பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள், சுப்பிரமணிய சாமியின் கருத்துக்கும் பா.ஜ.க.வுக்கும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டுப் பிஜேபி தலைவர் சொல்லுவது எனக்கு ஒரு பொருட்டல்ல; மத்திய அமைச்சர் யாராவது அப்படி சொல்லியிருக்கிறார்களா என்று ஆணவத்தோடு பதில் சொல்லியுள்ளார் இந்த சாமி (தமிழ்நாடு பிஜேபியின் புதிய தலைவர் இதில் இழையோடும் உணர்வைப் புரிந்து கொண்டால் சரி!) அந்தப்படி இருக்கையில், மத்திய அரசு சு.சுவாமிகளின் இந்த அடாவடித்தன அகம்பாவப் பேச்சுகளைக் கேட்டு சும்மா இருக்கலாமா?

மாநில அரசு இந்தப் பேர்வழியை தமிழ்நாட்டுக்குள்ளே வர அனுமதிக்கவே கூடாது. மீனவர்களின் கொதிப்பும், கொந்தளிப்பும் பாய்ந்தால் அது சட்டம், ஒழுங்கு கெட வழி வகுத்து விடாதா?

மத்திய அரசு வேடிக்கை பார்க்கலாமா?

அதுபோலவே மத்திய அரசும் விரைவில் இவரால் ஏற்படும் தலைவலி, திருகு வலிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டாமா? வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கலாமா?

மக்கள் எதிர்ப்பு கண்டு பயந்துதானே தனக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்புக் கேட்டுப் பெற்றுள்ளார் இந்த சூராதி சூரர்?

தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்கக் கூடாது!

தமிழ்நாட்டில் எங்கும் நுழைய இத்தகைய தமிழ் இன விரோதிகளை அனுமதிக்கவே கூடாது. இராஜபக்சேவின் ஏஜண்ட்டுகள் போல் செயல்படும் இத்தகையவர்களை ஒருபோதும் தமிழ் மண்ணும், மக்களும் மன்னிக்கவே மாட்டார்கள் என்பது உறுதி.

சென்னை
2.9.2014

- கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page1/86941.html#ixzz3CRwSIf8C

தமிழ் ஓவியா said...

குரு உத்சவ்வா பின்னணி என்ன?


பி.ஜே.பியை ஆட்டுவிப்பது ஆர்.எஸ்.எஸ்.தான் என்று சொன்னால் அதெல்லாம் ஒன்றும் கிடையாது என்று அரட்டைக் கச்சேரி செய்யும் பி.ஜே.பி. பிரமுகர்களைப் பார்க்கிறோம். ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவர்கள் தான் பிஜேபியின் அகில இந்திய பொதுச் செயலாளராக வர முடியும் என்று விதிமுறைகளே திருத்தப்பட்ட நிலையில், இவ்வாறு சொல்பவர்களை அறிவு நாணயம் அற்றவர்கள் என்று ஒரே வரியில் எடுத்த எடுப்பிலேயே கூறி அவர்களின் கருத்தை முறித்து விடலாம்.

ஆர்.எஸ்.எஸின் குருநாதர் என்று பெருமையாகக் கூறிக் கொள்ளும் எம்.எஸ். கோல்வாக்கர் - ஆர்.எஸ். எஸின் வேதநூல் என்று உச்சி மோந்து போற்றப்படும் ஞானகங்கை (Bunch of Thoughts) எனும் நூலில் - இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்குவதுதான் என்று கூச்சமில்லாமல் எழுதி வைத்துள்ளாரே.

அதனைத்தான் பிஜேபி ஆட்சி இப்பொழுது செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி என்பதும், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி மொழிவாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று அறிவிப்புக் கொடுப்பதெல்லாம் ஆர்.எஸ்.எஸ் ஆணை யின் விளைவே!. இந்தி என்பது சமஸ்கிருதக் குடும்பத்தைச் சார்ந்ததுதான்;

ராஜாஜி அவர்கள் சென்னை மாநில பிரதம அமைச்சராக இருந்து 1937-1939களில் இந்தியைப் பள்ளி களில் திணித்த போது, சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தவே முதற்கட்டமாக இந்தியைக் கொண்டு வந்து இருக்கிறேன் என்று சொன்னதையும் இந்த இடத்தில் இணைத்துக் கொண்டால், கொஞ்ச நஞ்சம் இருக்கும் சந்தேக இருளும் சிட்டாகப் பறந்து போய் விடும்.

நேற்று முதல் நாள் ஓர் அறிவிப்பு வெளி வந்துள்ளது. இனி ஆசிரியர் நாள் என்று டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளை (செப்டம்பர் 5) கொண்டாடிக் கொண்டு வருகிறார்கள் அல்லவா? - இனி அந்தப் பெயரில் அழைக்கக் கூடாதாம்! அப்படியென்றால் வேறு எந்தப் பெயரில் அழைப்பதுவாம்? மத்தியில் உள்ள தாமோதர தாஸ் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சி ஆணை ஒன்றினைப் பிறப்பித்துள்ளது. ஆசிரியர் நாளுக்குப் பதிலாக குருஉத்சவ் என்று கண்டிப்பாக அழைக்க வேண்டுமாம்.

தமிழ் ஓவியா said...

பாம்பு தனது தோலை (சட்டையை) உரித்துக் காட்டுவதால் அதன் நச்சுத் தன்மை போய் விட்டதாகப் பொருளாகாது.

பி.ஜே.பி.யும் அப்படித்தான். அது அறிவிக்கும் திட்டமெல்லாம் கூட சமஸ்கிருதப் பெயரைத் தான் மணி முடியாக தாங்கி வருகிறது. எல்லோருக்கும் வங்கித் திட்டம் என்பதற்குக்கூட .பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா என்றுதான் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். என்ற அடிப்படைவாத அமைப்பு - சரஸ்வதி, சிசு மந்திர், வித்யாபாரதா என்ற பெயரில் 14 ஆயிரம் பள்ளிகளையும், 60 கல்லூரிகளையும், மேற்படிப்புக்காக 25 கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறது. அப்பள்ளிகளில் ஆசிரியர் தினம் என்று சொல்ல மாட்டார்கள்;

மகாபாரதத்தை எழுதி யவராகச் சொல்லப்படும் வியாசர் நாள் என்றுதான் கொண்டாடுவார்கள் (வியாசரின் பிறந்த நாளை குறித்து வைத்தவர்கள் யாரோ?) நேரு பிறந்த நாளை குழந்தைகள் நாள் என்று நாட்டில் கொண்டாடி வருவதற்குப் பதிலாக கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாள் என்று கூறி கோகுலாஷ்டமியைத்தான் அந்த நாளாகக் கொண்டாடுவார்கள். (இந்து மதத்தில்தான் கடவுள் பிறப்பார் - இறப்பார்).

இந்த எண்ணம் கொண்டவர்கள்தான் இப்பொழுது ஆசிரியர் நாளை குருஉத்சவ் என்று அழைக்க ஆணை பிறப்பித்துள்ளார். குரு என்றால் தவறா என்று புது விளக் கம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். பா.ஜ.க. தமிழக புதிய தலைவர்; சரி இருக்கட்டும்; அது என்ன உத்சவ் - பதிலுண்டா?

அதிகாரத்தை வளைத்து, எந்த எல்லைக்கும் சென்று இந்துத்துவா வெறி நஞ்சைக் கக்கிடத் தயாராகி விட்டார்கள். இதைத் தொடக்கம் முதல் கழகம் கூறி வந்தும், அதனைப் பொருட்படுத்தாத சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பொது இடத்தில் முகத்தைக் காட்ட முடியாமல் நாணிக் கோணி நிற்கிறார்கள். இப்பொழுது எதிர்க்கவும் ஆரம்பித்து விட்டார்கள். திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணத் தில் (சட்டமன்ற முன்னாள் செயலாளர் திரு செல்வராசு அவர்களின் மகள் திருமணத்தில்). ஆணித்தரமான கருத்தை அழகாகப் பதிவு செய்துள்ளார்கள். அந்தத் திருமண மண மக்கள் பெயர்கள் அனுஷா என்றும் அர்மேஷ் என்றும் இருப்பதைச் சுட்டிக் காட்டியதோடு இடித்துக் கூறியுள்ளார்.

செங்கற்பட்டில் 1929இல் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டின் 80ஆம் ஆண்டு விழாவில் முதல் அமைச்சராக கலந்து கொண்ட மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் - மாநாட்டு மேடையில் சுயமரியாதை முறையில் தம் திருமணத்தை நடத்திக் கொண்ட செங்கற்பட்டு நகர திமுக செயலாளர் சதீஷ்குமார் என்ற பெயரை அன்புச்செல்வன் என்று அதே மேடையில் மாற்றியமைத்தார்.(18.2.2008)

அண்மைக் காலமாக தமிழன் வீட்டுப் பிள்ளைகளின் பெயர்கள் எந்த மொழியைச் சார்ந்தது என்று புரிந்து கொள்ள முடியாத புதுநாகரிகம் புழுத்துக் கிளம்ப ஆரம்பித்துவிட்டது. திராவிடர் இயக்கம் தமிழ் நாட்டில் பெயர் சூட்டுவதில் புது மறுமலர்ச்சியை உண்டாக்கியது. இயக்கத்தின் முன்னோடிகள் எல்லாம் தங்களின் பெயர்களை மாற்றிக் கொள்ளவில்லையா?

நாராயணசாமி - நெடுஞ்செழியன் என்றும், இராமையன் -அன்பழகன் என்றும், சோமசுந்தரம் - மதி யழகன் என்றும், கோதண்டராமன் - தில்லை வில்லாளன் என்றும் மாற்றியமைத்துக் கொண்டதையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாமா?

தமிழர் வீட்டுப் பிள்ளைகளின் பெயர் தமிழில் இருக்க வேண்டும் என்று சொல்லுவது மொழி வெறியா? அப்படி சொல்லுகின்ற ஒரு கூட்டம் நாட்டில் இன்றும் இருக்கத் தான் செய்கிறது.

தமிழால் வாழ்ந்து கொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டு, தமிழ்நாட்டில் தமிழை முன்னிறுத்தினால் மொழி நக்சலிசம் (துக்ளக் 15.9.2010) என்று சொல்லக் கூடிய வர்களும் இருக்கிறார்கள்.

இத்தகையவர்கள்தான் சமஸ் கிருதப் பெயர்களைத் திணிக்க சிலம்பம் எடுக்கிறார்கள். எதிர்ப்பு வெடித்துக் கிளம்பிய நிலையில் பின் வாங்கி வேறு வியாக் யானம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இது இவர்களின் வழமையான யுக்தியே!

அதனைத்தான் ஆரியம் என்று ஆணித்தரமாக அருமையாகப் படம் பிடித்துக் காட்டினர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும்.

தமிழா தமிழனாக இரு! தமிழா இனவுணர்வு கொள்!!

என்று தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கொடுத்த முழக்கத்தை மறக்காமல் - முடிச்சுப் போட்டு வைத்திடுவீர்! செயல்படுவீர்!

Read more: http://viduthalai.in/page1/86931.html#ixzz3CRwjH8ip

தமிழ் ஓவியா said...


ஆரியப் பண்டிகைகள்


ஆரியப் பண்டிகைகளின் அடிப்படைக் காரணமெல்லாம் திராவிடர்களை ஆரியர் கள் அடக்கினது; கொன்றது; இழிவு படுத்தியதுதான். அதுவும் சாதாரண மக்களைக் கடவுள் அவதாரம் என அழைத்து நமது அரசர்களை அசுரர்_ சூத்திரர் என்று இழிவுபடுத்தி ஏற்படுத்தப் பட்ட பண்டிகைகள்.

(விடுதலை,18.1.1951)

Read more: http://viduthalai.in/page1/86930.html#ixzz3CRwvvxmq

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக கர்மத்துக்குரியவர்களான நாங்கள் (டெசோ) கடைசிவரை இருப்போம் - போராடுவோம்! பொது வாக்கெடுப்பு நடத்துக - தனியீழமே ஒரே தீர்வு!


பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்

சென்னை, செப்.3- ஈழத் தமிழர்களுக்கு ஒரே தீர்வு தனியீழமே - அதற்காக டெசோ தொடர்ந்து போராடும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் டெசோ சார்பில் இன்று (3.9.2014) காலை நடை பெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய இந்தத் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய வயதில் அறிவில் முதியார்; வாய்மைப் போருக்கு என்றும் இளையார் என்ற தந்தை பெரியாரின் வழித்தோன்றலாக, பெரி யாரின் ஒப்பற்ற தயாரிப்பாக இருக்கக்கூடிய டெசோ வின் தலைவரும், மானமிகு சுயமரியாதைக்காரன் என்பதை எப்பொழுதும் மறக்காமல் சொல்லிக் கொண் டிருக்கின்ற தமிழர்களுடைய வழிகாட்டியாகவும் இருக்கக்கூடிய தமிழினப் பாதுகாவலர் அருமை தலைவர் கலைஞர் அவர்களே

தி.மு. கழகத்தினுடைய போற்றுதலுக்குரிய இனமான பேராசிரியர் அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சிறந்த பொருளாளரும், தமிழ் இனத்தினுடைய நம்பிக்கை நட்சத்திரமுமாக இருக்கக்கூடிய அருமைச் சகோதரர் தளபதி அவர்களே,

இந்த நிகழ்ச்சியில் எனக்கு முன்பாக உரையாற்றி அமர்ந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அருமைச் சகோதரர் மானமிகு தொல்.திருமா வளவன் அவர்களே,

திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செய லாளர் அருமை சகோதரர் மானமிகு பேராசிரியர் சுப.வீ. அவர்களே,

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முதன்மைச் செய லாளர் ஆர்க்காட்டார் அவர்களே, துணைப் பொதுச் செயலாளர் சகோதரர் துரைமுருகன் அவர்களே,


தமிழ் ஓவியா said...

நம் அனைவரையும் வரவேற்று, இந்த ஏற்பாட் டினை செய்திருக்கக்கூடிய இப்பகுதியின் மாவட்டச் செயலாளர் அருமைச் சகோதரர் அன்பழகன் எம்.எல்.ஏ. அவர்களே,

இந்த மேடையைச் சுற்றி இங்கே அமர்ந்திருக்கக் கூடிய அருமை திராவிட முன்னேற்றக் கழகத்தினு டைய முக்கிய பொறுப்பாளர்களே, தாய்மார்களே, சகோதரர்களே, நண்பர்களே, டெசோவின் அங்கத்தி னர்களே, வெள்ளம்போல் பெருந்திரள் ஆர்ப்பாட்டத் தில் கலந்துகொண்டுள்ள அருமைத் தமிழ்ப் பெரு மக்களே! உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

டெசோ எடுத்த முடிவு

டெசோ சார்பாக நடைபெறக்கூடிய இந்தப் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தினுடைய நோக்கம் என்ன என்பதை, இங்கே நம்முடைய பொருளாளர் அவர்களும், டெசோ அமைப்பின் உறுப்பினர்களான தோழர்களும் மிகச் சிறப்பாக இங்கே சொல்லியிருக் கிறார்கள்.

வருகின்ற செப்டம்பர் 25 ஆம் தேதி அய்க்கிய நாடுகள் மாமன்றத்தில், அங்கே உரையாற்றுவதற்காக, அய்க்கிய நாடுகளால் அமைக்கப் பெற்ற மனித உரிமை ஆணையம், மனித உரிமை மீறல்களுக்காக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, போர்க் குற்றங் களுக்காக குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட்டு, மனித உரிமை மீறல்கள் எந்தளவிற்கு இனப்படுகொலைகளாக மாற்றப்பட்டு இருக்கின்றன என்பதையெல்லாம் மிகத்தெளிவாக உலகத்திற்கு அறிவிக்கவேண்டிய, அந்த விசாரணைக் குழுவினைக்கூட நான் அனு மதிக்கமாட்டேன் என்னுடைய நாட்டில் என்று கொக் கரித்துக் கொண்டிருக்கக்கூடிய இனப் படுகொலைக்கு முதல் ஆளாக இருக்கக்கூடிய, சிங்களப் பேரினவாதி யாக இருக்கக்கூடிய ராஜபக்சேவை அங்கே அழைத்து, அவருக்கு விருந்து கொடுப்பதைப்போல, உதைத்த காலுக்கு முத்தம் இடுவதைப்போல, அய்.நா.வுக்கு வந்து பேசுங்கள் என்று சொல்வது, மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல; அதேநேரத்தில் ஈழத் தமிழர்களுக்கு அவர் களுடைய வாழ்வுரிமைகளைப் பறித்த ஒருவருக்கு சிறப்பு செய்வது என்பது மனித உரிமைகளுக்கும், ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமைக்குமே எதிரான ஒரு போக்கு என்பதை, டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் 26.8.2014 அன்று கூடிய டெசோ கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டம்; நான்கு தீர்மானங்களைப்பற்றி சொன்னார்கள்.

அரசியல் தீர்வு காண்கிறோம் என்று இந்திய அரசுக்கும், உலகத்திற்கும் உத்தரவாதம் கொடுத்தாரே, சிங்கள அதிபர் ராஜபக்சே, செய்தாரா?

ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் என்னாயிற்று?

2009 ஆம் ஆண்டு தீவிரவாதத்திற்கு எதிராகத்தான் நாங்கள் போர் தொடுத்திருக்கிறோம்; ஈழத் தமிழர் களுக்கு எதிராக அல்ல என்று சொன்னார்களே, அதேநேரத்தில், அந்த அரசு ஈழத் தமிழர்களை வாழ வைத்திருக்கிறதா?

நடந்த படுகொலைகள் ஒரு பக்கத்தில் இருக்கட்டும்; எஞ்சியிருக்கின்ற தமிழர்கள், அவர்களுடைய வாழ் வுரிமை என்பது எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது?

அங்கே ஒரு தேர்தல் நடைபெற்று, அந்தத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்குக்கூட எந்தவிதமான மரியாதையும் கொடுக்கவில்லை. அதுமாத்திரமல்ல, ஏற்கெனவே போட்ட ஒப்பந்தம், அரசியல் தீர்வு என்று சொல்லும்பொழுது, இங்கே சுட்டிக்காட்டினார்களே, அந்த 13 ஆவது திருத்தம் என்னாயிற்று?

தமிழ் ஓவியா said...

ஜெவர்த்தனே - ராஜீவ் காந்தி அதாவது இலங்கை - இந்தியா ஒப்பந்தம் இரு அரசுகளுடைய ஒப்பந்தம் என்பது. அப்படியானால், இந்திய அரசுக்கு அதனை வலியுறுத்தவேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறதா, இல்லையா? இன்னுங்கேட்டால், அந்த ஒப்பந்தமே கூட அவர்களுடைய எண்ணங்களை, அவர்களுடைய உரிமைகளைப் பிரதிபலிக்கின்ற ஒப்பந்தம் அல்ல. குறைந்தபட உரிமைகளைக்கூட மறுக்கின்ற ஒரு நிலை.

ஆனால், யானைப் பசிக்கு சோளப் பொரி என்று சொல்வதைப்போல, அதைக்கூட கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. அரசியல் தீர்வுக்கு நாங்கள் உடன்படமாட்டோம். அடிமைகளாக, அழிக்கப்பட வேண்டியவர் களாகத்தான் ஈழத் தமிழர்களை நாங்கள் கருதுகிறோம். இரண்டாம் தர குடிமக்களாகக்கூட கருதவில்லை. அவர்கள் வாழவே உரிமையற்றவர்கள் என்று ஆக்குகிறோம் என்பதுதான் இலங்கை அரசினுடைய இன்றைய போக்காக இருக்கிறது.

ஒரு பக்கத்திலே போர்க்குற்றம்; இன்னொரு பக்கத்திலே எஞ்சி வாழக்கூடியவர்கள் வாழ முடியாத நிலை.

சிங்களவர்களுக்குத்தானே பயன்பட்டது!

அதுமட்டுமல்ல, இங்கேயிருந்து, இந்தியாவிலிருந்து பல்லாயிரம் கோடி ரூபாய்களை நம்முடைய பணத்தையெல்லாம் அங்கே கொடுத்தோமே - ஈழத் தமிழர்களுக்கு மீண்டும் ஒரு புது வாழ்வு, மறுவாழ்க்கு தந்ததே இந்திய அரசு - ஏதோ தாராளமாகக் கொட்டிக் கொடுத்தது முந்தைய மத்திய அரசு; அது யாருக்குப் பயன்படுகிறது?

சிங்களக் குடியேற்றங்களாக மாறிக் கொண்டிருக் கின்றன. அங்கு தமிழர்களுக்குப் புது வாழ்வு தருவதற்கு அங்கே வாய்ப்பு கிடையாது. அங்கே தேர்ந் தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு உரிமையே கிடையாது. இவை எல்லாவற்றையும்விட மோசம், பக்கத்து நாடு, இவ்வளவு உதவி செய்கின்ற நாடு, அந்த நாட்டிலிருந்து நம்முடைய மீனவர்கள் அவர்கள் தினசரி மீன் பிடித் தொழிலைத் தவிர வேறு வாழ்வாதாரத்தை அறியாதவர்கள் என்று சொல்கிற நேரத்தில், அவர்கள் சென்று தங்களுடைய படகுகள்மூலமாகத்தான் மீன் பிடிப்பார்கள்.

தமிழ் ஓவியா said...

அதுமட்டுமல்ல, அது தரையல்ல, கோடு போட்டு, வேலி போட்டு, இதற்கு அப்பால் தாண்டாதீர்கள் என்று சொல்வதற்கு, நிலத்திலே வரையப்பட்டதல்ல. மாறாக, கடல் அலைகளின் மூலமாக செல்லும் நிலை உண்டு.

தங்களுடைய எல்லையைத் தாண்டி, சில நேரங்களில் காற்றடிக்க, புயலினால், சூறாவளியினால், அவர்கள் செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது என்றால், அவர்களுடைய படகுகளைப் பறிக்கின்றனர். 63 படகுகள் இன்றைக்கும் பிடித்து வைக்கப் பட்டிருக்கின்றன.

நண்பர்கள் இங்கே சுட்டிக்காட்டியதைப்போல, ஏதோ மோடி அரசு வந்தால், எல்லாமே சர்வரோக நிவாரணியாக அது முடிந்துவிடும் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால், என்ன நடந்தது?

ஒட்டன்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்!

நம்முடைய நாட்டில் சொல்வார்கள், ஒட்டன் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று. அதுபோலத்தான், இப்பொழுது மிகப்பெரிய வசதியாக, திராவிட முன்னேற்றக் கழகம், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்த காரணத்தினால், மிகபெரிய அளவிற்கு அழுத்தம் கொடுத்த காரணத்தினால், சில அளவிற்காவது உரிமைகளை அவர்கள் பெற்றார்கள்.

தமிழ் ஓவியா said...

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகியதற்கு என்ன காரணம்? மக்களுக்கு மறதி அதிகம். அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்; வேறு எந்தக் காரணத்திற்காகவும் அவர்கள் விலகவில்லை. ஈழத் தமிழர் பிரச்சினைக்காகத்தான், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் விலகி, ஒரு மிகப்பெரிய வரலாற்றை உருவாக்கியது. இதை உலகம் மறந்துவிடாது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்றைக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று அளந்தார்களே, இன்றைக்கு எதைச் செய்தார்கள்? இன்னுங்கேட்டால், இந்திய அரசுக்கும், இலங்கை அரசக்கும் வேறுபாடு இல்லை என்று சொல்வதைப்போல, மனித உரிமை மீறல்கள் என்று வருகிற நேரத்தில், அந்த மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், போர்க் குற்றங்களினாலே பாதிக்கப்பட்டவர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள்; இந்தியாவிலும் இருக்கிறார்கள்.

அண்டை நாடுகளில் தான் உயிர் தப்பி வாழுகிறார்கள். ஆக, அவர் களிடத்தில் சென்று சாட்சியங்களைப் பதிவு செய்யவேண்டும் என்று அந்த விசாரணைக் குழு வருகின்ற நேரத்தில், அந்தக் குழுவை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று ஈழத்தில் இருக்கின்ற ராஜபக்சே அரசு சொல்கிறது என்றால், அது நியாயமில்லாவிட்டாலும், புரிகிறது.

நூறு நாள் சாதனை - பூஜ்ஜியமே!

ஆனால், இங்கே இருக்கிற இந்திய அரசு, இங்கே இருக்கிற மோடி அரசு, இங்கே இருக்கிற மத்திய அரசு நாங்கள் வந்தால் மாற்றிவிடுவோம்; முந்தைய அரசுபோல் நடக்கமாட்டோம் என்று சொல்லி, பதவிக்கு வந்து 100 நாள்கள் ஆகிவிட்டது. -விசாரணைக் குழுவில் இந்தியா அனுமதிக்க மறுக்கிறதே!

நூறில் ஒன்றைத் தவிர, மீதி மிஞ்சியிருப்பது இரண்டு பூஜ்ஜியங்கள்தான் என்று சொல்வதைப்போல, இருக்கக்கூடிய சூழ்நிலை இருக்கிறதே, இதனைச் சுட்டிக்காட்டுவதற்கு, டெசோவை விட்டால், திராவிட இயக்கத்தை விட்டால், வேறு நாதி உண்டா? தமிழர்களே, எண்ணிப்பாருங்கள்!

தமிழ் ஓவியா said...

ஆகவேதான், இந்தப் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் என்பது கேளிக்கைக்காக அல்ல; விளம்பரத்திற்காக அல்ல; இந்தத் தமிழர்களுடைய வாழ்வுரிமைக் காகத்தான் என்பதை மிக முக்கியமாக எண்ணிப் பார்க்கவேண்டும். சிறைப் பிடிக்கப்பட்ட படகுகள் திரும்பக் கொடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்து கிறோம்.

துரோகி சுப்பிரமணியசாமி!

ஒரு தமிழினத் துரோகி, தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கின்ற ஒரு பார்ப்பன சுப்பிரமணியசாமி அங்கே போய், நான் தான் சொல்லிக் கொடுத்தேன்; படகுகளைக் கொடுக்கவேண்டாம் என்று சொல்லிக் கொடுத்தேன் என்று தைரியமாகச் சொல்கிறார். இலங்கை அரசுக்கு, மிகப்பெரிய அளவிற்கு ஆலோசகர் என்று காட்டிக்கொண்டு, இங்கே எரிகின்ற நெருப்பில் பெட்ரோலை ஊற்றுவதைப்போல, மீனவர்களுடைய வாழ்வாதாரத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார் என்றால், இவருக்கும், பா.ஜ.க. அரசுக்கும் என்ன சம்பந்தம்? என்பதைச் சொல்லியாக வேண்டாமா?

யாருடைய முத்திரையிலே போய் அவர் பேசிக் கொண்டிருக்கிறார்? அவரிடம் வெளியுறவுத் துறையை ஒப்படைத்திருக்கிறார்களா? இவைகளையெல்லாம் கேட்பதற்கு இந்த அமைப்பைத் தவிர வேறு எந்த அமைப்பு இருக்கிறது என்பதை நன்றாக நினைத்துப் பாருங்கள்.

கருமத்துக்குரியவர்கள் நாங்கள்!

கருமத்திற்குரியவர்கள் கடைசிவரையிலே இருப்பார்கள். கலைஞரைக் குற்றம் சொன்னார்கள், சகோதரர் திருமாவளவன் இங்கே சுட்டிக்காட்டி யதைப்போல. எங்களைக் குற்றம் சொன்னார்கள். எங்களை யார் பாராட்டுகிறார்கள், யார் நன்றி செலுத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல; நண்பர்களே, தான் ஆடாவிட்டாலும், எங்கள் சதை ஆடும். காரணம், எங்கள் இனம், எங்கள் இனம், எங்கள் இனம்!

தமிழ் ஓவியா said...

அந்த அடிப்படையிலே, இன்றைக்கும் இதனைக் கேட்பதற்கு, டெசோவைத் தவிர, திராவிட இயக்கத்தைத் தவிர வேறு கிடையாது. இதைத்தான் நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். இந்த அணியைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?

நன்றிக்குரிய நவநீதம்பிள்ளை

இன்னொரு நல்ல வாய்ப்பு என்னவென்றால், நம்முடைய டெசோ அமைப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எடுத்துக்கொண்டு தளபதி மு.க.ஸ்டாலினும், தோழர் டி.ஆர்.பாலு அவர்களும் நவநீதம் பிள்ளை அவர்களை சந்தித்துக் கொடுத் தார்கள். அந்த அம்மையாருடைய நடுநிலையான ஒரு போக்கும், மனிதநேயத்தில் அவர்கள் வைத்த நம்பிக்கையும்தான், இந்த அளவிற்கு உலகம் இதனைத் தெரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பை உருவாக்கியது.

அந்த அம்மையார் இரண்டு நாள்களுக்கு முன்பு பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்த டெசோவின் சார்பில் அவருக்கு நம்முடைய நெஞ்சார்ந்த நன்றியைப் பதிவு செய்ய விரும்புகிறோம். ஏனென்றால், அவரின் மனிதாபிமானமிக்க ஒரு போக்குதான் இந்த வாய்ப்பினை உருவாக்கியது.

அய்.நா.வின் மரியாதை என்னாவது?

அதேபோல, இன்று நினைத்துப் பாருங்கள், எதற்காக? மற்ற பிரச்சினைகளை விட்டுவிடுங்கள். அய்.நா. குழுவை எங்கள் நாட்டுக்குள் வரக்கூடாது என்று சொன்னவரை, அய்.நா.வைப் பச்சையாக அவமதித்தவரை அழைத்து அங்கே பேச வைக்கிறார்களாம்.

டெசோ சார்பில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் வெள்ளம் (சென்னை, 3.9.2014)

அதுமட்டுமல்ல, கடந்த ஒரு வாரமாக ராஜபக்சே அமெரிக்காவில் இருக்கிறார். எதற்காக சென்றிருக் கிறார்? யாரிடம் பேசியிருக்கிறார்? இந்தத் தகவல்கள் எதுவுமே சரியாக வரவில்லை. அதேநேரத்தில் இன்னொன்றையும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். இறையாண்மையைப்பற்றி பேசிக் கொண்டிருப் பவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறோம். நீங்கள் கண்ணை மூடிக் கொண்டிருக்க மாட்டீர்கள்; எங்களைவிட உங்களுக்கு காதுகள் அதிகம். எனவே, நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

500 மில்லியன் டாலர்களை சில நாள்களுக்கு முன்பு, இலங்கை அரசுக்கு, ராஜபக்சேவுக்கு சீனா வழங்கியிருக்கிறது. அங்கே என்ன நடக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?

எனவேதான், இலங்கை இந்தியாவினுடைய இறையாண்மைக் கண்ணோட்டத்திலும் சரி, மனிதநேய கண்ணோட்டத்திலும் சரி, தமிழர் வாழ்வுரிமை கண்ணோட்டத்திலும் சரி, டெசோ எடுத்திருக்கின்ற நான்கு தீர்மானங்களும் முக்கிய மானவை. அரசியல் தீர்வு உருவாகவேண்டும். அதுபோலவே, அய்.நா. சபையில், ராஜபக்சேவையோ, அவரின் பிரதிநிதியையோ பேச அனுமதிக்கக்கூடாது என்பதெல்லாம், மனித உரிமையின்பாற்பட்டது; இறையாண்மையின்பாற்பட்டது. தேவையான ஒரு காலகட்டத்தில், தேவையான ஒரு முடிவை, தேவையான பொழுது தலைவர் கலைஞர் அவர்கள் டெசோ கூட்டத்தை கூட்டி, தீர்மானத்தை நிறை வேற்றியிருக்கிறார்கள்.

தமிழ் ஈழமே ஒரே தீர்வு!

எனவே, இந்தப் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இருக்கிறதே, இது கடைசியல்ல; இதுதான் தொடக்கம்; ஒரு போராட்டக் களத்திலே, இந்தப் போராட்டத் தினுடைய வடிவம், பல வடிவங்களை இனி பெறும், பெறும் என்று சொல்லி விடைபெறுகிறேன்.

தமிழ் ஈழம் என்பதுதான் ஒரே தீர்வு! அங்கே பொது வாக்கெடுப்பு என்பதுதான் சரியான தீர்வு! அந்தத் தீர்வை நோக்கி, நகர்த்துவோம், நகர்த்துவோம், நடப்போம் வாரீர்! வாரீர்! என்று அழைத்து முடிக்கிறேன்.

வணக்கம், நன்றி!

வாழ்க பெரியார்! வாழ்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page1/87030.html#ixzz3CRxMYR4B

தமிழ் ஓவியா said...


சுயமரியாதை


மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடப் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு, தாழ்வு உணர்ச்சி போய் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் ஏற்படவேண்டும்.

- (குடிஅரசு, 3.4.1927)

Read more: http://viduthalai.in/page1/87017.html#ixzz3CRxybgvj

தமிழ் ஓவியா said...

டெசோ அமைப்பின் சார்பில் கலைஞர் தலைமையில் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


தமிழர் தலைவர் எழுச்சியுரையாற்றினார்; பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்

சென்னை, செப்.-3_ ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜக்பசேவையோ அந்நாட்டு பிரதிநிதியையோ அய்.நா.வின் பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் டெசோ அமைப்பின் சார்பில் கலைஞர் தலைமையில் நடைபெற்ற பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை யாற்றினார்.

தி.மு.க தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் கடந்த 26.8.2014 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற டெசோ _ தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பின் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* ஈழத்தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை உடனடியாக மேற்கொள்ளவும்,

* இலங்கை அரசினால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை திரும்பத் தரக்கோரியும்,

* அய்.நா. விசாரணையை இந்தியாவில் நடைபெற அனுமதிக்கக் கோரியும்,

* இலங்கை அதிபர் ராஜபக்சேவையோ, அந்நாட்டு பிரதிநிதியையோ அய்.நா.வின் பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் 3.9.2014 அன்று சென்னையில் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று (3.9.2014) காலை 10.30 மணியளவில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் டெசோ அமைப்பின் சார்பில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக்க தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தோழர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை எழுச்சி பெற செய்தனர்.

தமிழ் ஓவியா said...


ஒலிமுழக்கங்கள்

இந்த மாபெரும் எழுச்சி ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் 26.8.2014 அன்று டெசோ அமைப்பால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வலியுறுத்தி ஒலிமுழக்கங்களை தி.மு.க. முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் எழுப்பிட, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் அதற்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.

தலைவர்கள் எழுச்சி உரையாற்றினர்

இப்பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த வர்களை தென்சென்னை மாவட்டச் தி.மு.க. செயலாளருமான சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஜெ.அன்பழகன் வரவேற்று உரையாற்றினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்ட தொடக்க உரையாற்றினார். திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் டெசோ அமைப்பின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்களை வலியுறுத்தி எழுச்சியுரையாற்றினர்.


தமிழ் ஓவியா said...

மு.க.ஸ்டாலின்

பெருந்திரள் ஆர்ப் பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசும்போது குறிப்பிட்ட தாவது: கடந்த 26ஆம் தேதி கலைஞர் தலைமையில் கூடிய டெசோ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது. அய்.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் இலங்கையின் சார்பில் யாரும் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது. இந்த ஆர்ப் பாட்டம் அரசியல் நோக்கத்துக்காக அல்ல. மிச்சமுள்ள தமிழர்களை பாதுகாக்கவே.

இலங்கை அரசு சாசனத்தில் 13 ஆவது சட்ட திருத்தம் 1987 ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனே போட்ட ஒப்பந்தம் 27 ஆண்டுகளாக இன்றுவரை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. வாழும் உரிமை இழந்து உலகெங்கும் அகதிகளாக உயிர்வாழும் நிலையில் தமிழர்கள் உள்ளனர். தமிழர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படும் என்ற ராஜபக்சே வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

தமிழ் ஓவியா said...


ஈழத்தமிழர்களுக்கான அரசியல்தீர்வை விரைவு படுத்த வேண்டும். சீனாவையும், பாகிஸ்தானையும் கையில் வைத்துக்கொண்டு இந்தியாவை மிரட்டிக்கொண்டு இருக்கிறது இலங்கை அரசு. மீனவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட படகுகளை திருப்பி அளிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார்.

சுப.வீரபாண்டியன்

திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசும் போது குறிப்பிட்டதாவது:

நான்கு தீர்மானங்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. குற்றவாளி என்று நிறுத்தப்பட்ட ஒருவரை அய்நா அவையில் பேசுவதை அனுமதிக்க முடியாது. மீனவர்களுக்கு வாழ்வாதாரமே படகுதான். மீனவர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும். செப்டம்பர் 25-_க்குள் கலைஞர் பற்றவைத்த இந்த நெருப்பு, நாடுமுழுவதும் பரவும். உலகெங்கும் பரவும் என சுப.வீரபாண்டியன் பேசினார்

தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசும்போது குறிப்பிட்டதாவது:

செப்டம்பர் 25 அன்று அய்.நா பொதுப்பேரவையில் ராஜபக்சே பேச அழைக்கப் பட்டிருக்கிறார். இதன் மூலம் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி உள்ளது. சர்வதேச விசாரணைக்குழு அய்.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை, போர்க் குற்றவாளி என்று விசாரணை செய்யும்போது அய்.நாவில் ராஜபக்சேவை பேசவைப்பதற்கு அய்.நா மட்டும் காரணமல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியமும் காரணமாக உள்ளது.

இதற்கு இந்திய அரசுக்கும் பொறுப்பு உள்ளது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி நிலைப்பாட்டிலிருந்து மோடி அரசின் நிலைப்பாடு எந்த அளவில் இருக்கிறது. ராஜபக்சேவை அழைத்து பதவி ஏற்றார் மோடி. கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு உரிமை கிடையாது என்று மோடி அரசு அபிடவிட் செய்கிறது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பில் சம்மந்தம் மோடியை சந்தித்தவுடன், டெசோவைக் கூட்டி கலந்தாய்வு செய்துள்ளார் கலைஞர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களின் கோரிக்கைகுறித்து கலைஞர் எடுத்த முடிவுதான் இந்த ஆர்ப்பாட்டம். முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்போது கலாச்சார சீரழிவில் இலங்கை அரசு ஈடுபட்டுவருகிறது.

இராணுவ மயமாக்கி வருகிறது. தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றம் நடை பெற்று வருவது உலக அளவில் செய்திகள் வெளிவரவில்லை. 91 வயதுள்ள கலைஞர்தான் ஈழத்தமிழர்களுக்காகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இன வெறியன், சிங்கள இட்லர் ராஜ பக்சேவை அய்நாவில் பேச வைப்பது, சர்வதேசப் போர்க்குற்றவாளி என்று நிறுத்தப்படும் சூழல் பாதிக்கப்படும் என்றார் தொல்.திருமாவளவன்.

நிறைவாக இம்மாபெரும் பெருந்திரள் ஆர்ப் பாட்டத்திற்கு தலைமை உரையை தி.மு.க. தலைவர் கலைஞர் நிகழ்த்தினார்.

Read more: http://viduthalai.in/page1/86999.html#ixzz3CRyGPihv

தமிழ் ஓவியா said...

டெசோவுக்கு ஆதரவினைத் தாரீர்! தாரீர்!! ஈழத் தமிழர்களின் உண்மையான சுதந்திரப் போரில் நாம் உறுதியாக வெல்வோம்! வெல்வோம்!!


பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் முத்தமிழ் அறிஞர் சூளுரை

சென்னை, செப். 3- ஈழத் தமிழர் உண்மையான சுதந்திரம், சுயமரியாதை பெறுவதற்கு நாம் போராடுவோம் - அதில் வெற்றி பெறுவோம் - டெசோவிற்கு ஆதரவு தாருங்கள் என்றார் டெசோ தலைவர் கலைஞர் அவர்கள்.

நடைபெறுகின்ற இந்தப் பெருந்திரள் ஆர்ப் பாட்டத்தில் கொளுத்துகின்ற வெயிலிலேகூட; இதைவிட அதிகமாக வாடிக் கொண்டிருக்கின்ற தமிழ் இனத்தை இலங்கையிலே வாடிக் கொண்டிருக்கின்ற தமிழ் இனத்தை காப்பாற்றுவதற்காக கூடியிருக்கின்ற உங்களுடைய ஆர்வத்தை நீங்கள் மேற்கொண்டுள்ள அக்கறையை நாம் எடுத்துள்ள தமிழர்களை வாழ்விக்கின்ற செயலுக்கான தீவிரத்தைக் காட்டுகின்ற வகையில் இந்த பெருந்திரள் அமைதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை எனக்கு முன்னால் பேசிய நம்முடைய தலைவர்கள், நண்பர்கள் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்.

இந்தியா இன்றையதினம் கடந்த காலத்திலே இருந்த பல பிரதமர்களால் சாதிக்க முடியாதவைகளை யெல்லாம் சாதிக்கின்ற வல்லமை வாய்ந்த பிரதமரை தற்போது பெற்றிருக்கின்றது என்று பலரும் நம்புகின்ற ஒரு பிரதமர் வாய்த்திருக்கிறார் என்ற நம்பிக்கை நமக்கெல்லாம் இருந்த போதிலும் கூட, அந்தப் பிரதமர் அண்மையிலே வெளியிட்ட கருத்தை அதிலும் குறிப்பாக ஈழத்திலே இருந்து டெல்லிக்கு வந்து எந்தக் குழுவினரை சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றார்களோ, அந்தக் குழுவினர் கொண்ட நம்பிக்கைக்கு ஏற்றவகையில் இந்தியாவினுடைய புதிய அரசும் நிச்சயமாக நடந்து கொள்ளும்.

நடப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்கும் என்ற அந்த நம்பிக்கையை நாம் பெற்றுள்ள இந்தக் காலகட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் மற்றும் தோழமைக் கட்சிகளும் இணைந்து இயக்குகின்ற டெசோ அமைப்பின் சார்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நினைவுகூர்ந்து அந்த தீர்மானங்களுடைய மைய கருத்துக்களைப் புரிந்துகொண்டு உலகத் தமிழர்கள் ஆறுதல் பெறுகின்ற வகையில், நம்பிக்கை பெறுகின்ற வகையில், தங்களுடைய செயல்பாடுகளை அமைக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்ற முறையில் இந்த நிகழ்ச்சியிலே எனக்கு முன்னால் பேசிய நம்முடைய விடுதலை ஆசிரியர், தமிழர் தலைவர் வீரமணி அவர்களும் தம்பி திருமாவளவன் அவர்களும் மற்றும் சுப. வீரபாண்டியன் அவர்களும் ஸ்டாலின் அவர்களும் தங்களுடைய கருத்துக்களையெல்லாம் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.


தமிழ் ஓவியா said...

விடிவு காலமே இல்லையா?

இவற்றை விட அதிகமான செய்திகளை இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லப் போவ தில்லை, சொல்லவும் தேவையில்லை. ஏனென்றால் இந்தப் பிரச்சினை குறித்து இன்று நேற்றல்ல;

பல ஆண்டுகாலமாக திராவிட இயக்கத்தின் சார்பாக உங்களோடு தொடர்பு கொண்ட போதெல்லாம் விளக்கங்களைத் தந்திருக் கிறோம். நம்முடைய தமிழ் இனத்திலே ஒரு பகுதி இலங்கையிலே வாழ்கின்ற பகுதியிலே உள்ளவர்கள் எந்த அளவுக்கு இன்றைய தினம் அடிமைகளாய், தொழும்பர்களாய் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது, விடிவு காலமே தெரியாதா, தமிழனாகப் பிறந்தால், அதுவும் இலங்கையிலே பிறந்தால், இலங்கைத் தமிழன் என்ற நிலையிலே வாழ வேண்டிய அளவுக்கு ஒரு நிலை ஏற்பட்டால், அவன் பொட்டுப்பூச்சிகளாய், புன்மைத்தேரைகளாய் வாழ வேண்டுமா என்ற அந்தக் கேள்விக்கு எப்பொழுது தான் நாம் விடை காணப் போகிறோம் என்று விட்ட பெரு மூச்சினுடைய அடையாளம் தான் இன்று நடைபெறுகின்ற இந்த அணிவகுப்பு.

அணிவகுப்பு என்பதால், நாம் படை கொண்டு இலங்கைக்குச் செல்லப் போகிறோம் என்பதல்ல. ஆனால் படை கொண்டு காட்டுகின்ற வல்ல மையை விட அதிக வல்லமை நம்முடைய இயக்கங்க ளுக்கு உண்டு. நம்முடைய பேச்சுக்கு உண்டு. நம்முடைய செயலுக்கு உண்டு. நாம் பெரியார் வழியில், பேரறிஞர் அண்ணா வழியில், தமிழகத்திலே இருந்த தலைவர் கள் வழியில் இலங்கைத் தமிழனைக் காப்பாற்ற வேண்டும் என்ற அந்த முடிவை நிறைவேற்றுகின்ற வகையில் தொடர்ந்து போராட வேண்டும்.

நமது அணிவகுப்பு தொடரும்!

ஒரு போராட்டத்திலே தான் மக்கள் திரள் கிளர்ந்தெழுந்தால் தான் நாம் கோரியது கிடைக்கும். இன்றைக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்ற நம்முடைய இனம், அது இந்தியாவிற்கு மிக அருகில் அடிமைப்பட்டுக் கிடக்கின்ற அந்த இனம், சிலிர்த்தெழ தமிழகத்திலிருந்து எழுந்த இந்த முழக்கமெல்லாம் சிங்கள வெறியர் களுடைய காதுகளிலே விழுகிறதோ இல்லையோ, தமிழ் ஆர்வலர்களுடைய காது களிலேயாவது விழுந்தால், அவர்களுடைய ஒற்றுமை, அவர்களுடைய சக்தி, அவர்களுடைய வல்லமை நம்மை வழி நடத்தும் என்ற அந்த அளவிலே தான் நாம் தொடர்ந்து என்ன தான் அடக்குமுறைகளுக்கு ஆளானாலும்,

தமிழ் ஓவியா said...

சித்திரவதைகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவானாலும், அவைகளை யெல்லாம் சாதாரணமாக மதித்து தமிழன் வாழ வேண்டும், அவனை வாழ வைக்க வேண்டும், பக்கத்து தீவிலே உள்ள தமிழனை வாழ வைக்க முடியாமல், இங்கே உள்ள தமிழன் வாழ்ந்தால் என்ன, வாழா விட்டால் என்ன என்கின்ற அந்தச் சூளுரையை ஏற்க வேண்டுமென்பதற்காகத் தான் இன்றையதினம் இங்கு மாத்திரமல்ல, தமிழகத்திலே இன்றைக்கு மாத்திர மல்ல,

தொடர்ந்து இது போன்ற அணி வகுப்புகள் நடைபெறும், நடைபெற வேண்டும், அப்படி நடை பெற்றால் தான் அது கேளாக் காதினருடைய காது களைத் திறக்கும் என்பதற்காகத் தான் நாம் இன்றைய தினம் இந்த முழக்கத்தை தமிழகத்தின் தலைநகராம் சென்னையிலே நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த முழக்கம் கேட்டு ராஜபக்ஷேயின் செவிப்பறைகள் கிழியட்டும் என்பதல்ல; ராஜபக்ஷேவை நாம் அமைதியான முறையிலே தான், அறவழியிலே தான் கேட்கிறோம்.

ராஜபக்சே வழி வன்முறை வழி - படுகொலை வழி

அவர் வழியிலே அல்ல. ராஜபக்சேயின் வழி வன்முறை வழி. பலாத்கார வழி. படு கொலை வழி. தமிழர்களுடைய பிணங்களைக் காணுகின்ற வழி. அந்த வழியை நாம் மேற்கொள்ளாமல் அறவழியில், அண்ணா வழியில், அய்யா வழியில், தமிழர்களுடைய நெறிப்படி ஏற்றுக் கொண்ட அந்த வழியில் சந்திக்கின்றோம்.

இந்தச் சந்திப்பில் நீங்கள் இந்தக் கொளுத்துகின்ற வெயிலில் கூட, எங்கள் பக்கம் என்றைக்கும் இருப்போம் என்பதைக் காட்டுகின்ற வகையில் நீங்கள் உங்களுடைய உணர்வை வெளிப் படுத்தியிருக்கின்ற காரணத்தால், அச்சம் இல்லை, அச்சம் இல்லை, அச்சம் என்பது இல்லையே, உச்சிமீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும், அச்சம் என்பது இல்லையே என்ற அந்தப் பாரதியின் பாடலுக்கு எடுத்துக் காட்டாக நாம் நிற்போம்.

நின்று வென்றிடு வோம். இன்றைக்கு நாம் முழு வெற்றியைப் பெற முடியாவிட்டாலுங்கூட, வெற்றிக்கான அடையாளங் கள் தெரியத் தொடங்கியிருக்கின்றன. அந்த வெற்றிக் கான அடையாளங்களை, நம்பிக்கை நட்சத்திரமாகக் கொண்டு இந்த டெசோ அமைப்பின் சார்பில் எடுக்கப் பட்டு வரும் முயற்சிகளுக்கெல்லாம் தமிழர்களுடைய ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்ற நம்பிக்கையோடு உங்களைச் சந்தித்த இந்த அருமையான நிகழ்ச்சியிலே நானும் நம்பிக்கை பெற்று,

உங்களையும் நம்பிக்கை பெறுங்கள் என்று கேட்டுக் கொண்டு, அனைவரும் சேர்ந்து ஒத்துழைத்தால், அனைவரும் சேர்ந்து போராடினால் நாம் அடையவிருக்கின்ற சுதந்திரத்தை - இந்தியாவிற்கு மாத்திர மல்ல; இந்தியாவுக்கு அருகே உள்ள ஈழத்திலே வாழ்கின்ற தமிழனுக்கு உண்மை யான சுதந்திரத்தை, சுயமரியாதை வாழ்வைப் பெறுவ தற்கு நாம் நிச்சயமாக நம்முடைய போராட்டத்திலே வெல்வோம், வெல்வோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more: http://viduthalai.in/page1/87043.html#ixzz3CRymb1nU

தமிழ் ஓவியா said...

ராஜபக்சே தப்ப முடியாது - ஓங்கிச் சொல்லும் ஆசிரியர் கி.வீரமணி!


ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, 13-ஆவது சட்டதிருத்தம் அமல் படுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோ ரிடம் விரிவாக விவாதித்திருக்கிறார்கள் இலங்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள். அவர்களிடம் சில உறுதி மொழிகளைத் தந்திருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. இந்த சூழலில், கலைஞர் தலைமையில் டெசோ அமைப்பு கூடி, மத்திய அரசை வலி யுறுத்தி 3 தீர் மானங்களையும் அய்.நா. மன்றத்தை வலியுறுத்தி ஒரு தீர்மா னத்தையும் நிறைவேற்றியிருக்கிறது.

இந்த தீர்மானங்களை முன்னிறுத்தி, மக்கள் பெரும் திரள் போராட்டத்தை செப்டம்பர் 3-ஆம் தேதி தமிழக முழுவதும் நடத்துகிறது டெசோ. இந்த நிலையில், டெசோ உறுப்பினர்களில் ஒருவரான தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணியை பெரியார் திடலில் சந்தித்தோம். ஈழப்பிரச்சினையில் முந்தைய காங்கிரஸ் அரசின் அணுகு முறையையும் தற்போதைய பா.ஜ.க. அரசின் அணுகுமுறையையும் எப்படிப் பார்க்கிறீர்கள்? இலங்கை தமிழ் எம்.பி.க்களிடம், "ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு இந்தியா உறுதுணை யாக இருக்கும்' என பிரதமர் மோடி கூறியிருப்பதாக வரும் செய்திகள் சற்று ஆறுதலை தருகிறது.

ஆனால், வடக்கு மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அமைப்புக்கும் முதல்வர் விக் னேஸ்வரனுக்கும் எந்த ஒரு அதிகாரத் தையும் தராமல் அனைத்து அதிகாரத்தையும் இலங்கை அரசே வைத்துக் கொண்டிருக்கிறது. சிறிய மரியாதைகூட மாகாண கவுன் சிலுக்கு தரப்படவில்லை. இது குறித்தெல்லாம் விவாதிக்காமல் மவுனமாக இருக்கிறது மோடி அரசு. எல்லாவற்றிற்கும் மேலாக, இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை இலங்கையின் நெருங்கிய நாடு களிலிருந்து தொடங்க அய்.நா. குழு முடிவு செய்து அதனை இந்தியாவிலிருந்து தொடங்க நினைத்த மாத்திரத்தில் அக்குழுவிற்கு விசா கொடுக்கவில்லை இந்திய அரசு.

தமிழ் ஓவியா said...

இந்த செயல் இலங்கை அரசுக்கு உதவியாக இருப்பதையே காட்டுகிறது. அதனால் ஈழப்பிரச் சினையில் காங்கிரஸ் அரசுக்கும் பா.ஜ.க. அரசுக்கும் பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை. இந்தியாவில் அரசுகள் மாறியி ருந்தாலும் வெளியுறவு கொள்கையில் மாற்றம் ஏதுமில்லை. ஆக, இரண்டு அரசுகளின் அணுகு முறையும் இலங்கைக்கு அணுசரணை யாக நடந்துகொள்வதாகத்தான் இருக் கிறது. டெசோ அமைப்பு பல சமயங்களில் கூடி விவாதித்து இப்போது போலவே பல தீர்மானங்களை அழுத்தமாக நிறை வேற்றியிருக்கிறது. ஆனால், அதற் கெல்லாம் எந்த பலனும் கிடைத்த மாதிரி தெரியவில்லையே?

ஜனநாயக நாட்டில் அழுத்தமான போராட்டங்களும் வலிமையான வலி யுறுத்தல்களும் தான் ஆட்சி அதிகாரத் தில் இருப்பவர்களை நடவடிக்கை எடுக்க வைக்கும். ஈழத்தமிழர்களின் பிரச்சினை களுக்கு இந்திய அரசின் மூலமாகத்தான் நடவடிக்கை எடுக்க வைக்க முடியும். அந்த வகையில் இந்திய அரசின் ஒரு அங்கமாக இருக்கும் தமிழகம், தன் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர் களைப் பாதுகாக்கவும் ஈழத்தமிழினச் சிக்கல்களுக்கு அரசியல் தீர்வு காணவும் தனது உணர்வுகளை இந்திய அரசுக்கு வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு இருக்கிறது. அதனைத்தான் டெசோ அமைப்பு தொடர்ச்சியாக செய்து வருகிறது.

டெசோவின் தொடர் போராட் டங்களால் தான் இந்திய அரசு இந்தளவுக் காவது ஈழத்தமிழர் பிரச்சினையில் அக்கறையோடு நடந்துகொள்கிறது இந்திய அரசு. இல்லையெனில், இலங் கைக்கான தனது ஆதரவை இன்னும் அதிகரித்திருக்கும். அதனால் இடை யறாதப் போராட்டங்களால்தான் நமது இலக்கை வென்றெடுக்க முடியுமென்ப தால் போராட்டங்களை நடத்தி வருகிறது டெசொ. இதற்கு உடனடி பலன் இப்போது தெரியாதது போல ஒரு தோற்றம் இருப் பினும் இதன் நிரந்தர பலன் எதிர் காலத்தில் எல்லோரின் கண்களுக்கும் புலப்படும்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள், ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்பதை முன்வைக்கும் நிலையில், பொது வாக்கெடுப்பின் மூலம் தனித்தமிழீழம்தான் நிரந்தர அரசியல் தீர்வுக்கு வழிவகுக்கும் என்பதாக டெசோவின் தீர்மானம் இருக்கிறதே?

தனித் தமிழ்நாட்டை வலியுறுத்திய அறிஞர் அண்ணா, பிரிவினையை கை விட்டபோது, "பிரிவினையை கைவிடு கிறேன். ஆனால், அதற்கான காரணங்கள் அப்படியேத்தான் இருக்கின்றன' என்றார். அதேபோலத்தா'ன் தமிழீழத்திற்கான காரணங்களும் அப்படியே இருக்கிறது. அது எப்போதும் நீர்த்துப் போகாது. ராஜபக்சேவின் சர்வாதிகார நாட்டில் இருக்கும் தமிழ் எம்பி.க்கள், "ஒன்று பட்ட இலங்கை' என்றுதான் சொல்ல முடியும்.

அதற்கு மாறாகச் சொன்னால் தமிழர்கள் இலங்கையில் உயிர் வாழ முடியாது. அதனால்தான் நிரந்தர அரசியல் தீர்வுக்கான உண்மையான காரணங்களை அவர்களால் வெளிப் படுத்த முடியவில்லை. ஆனால், அவர்களுக்கும் தெரியும் "தனித் தமிழீழம் மட்டுமே நிரந்தர தீர்வு' என்பது. ஆக, அவர்களால் சொல்ல முடியாததை டெசோ சொல்கிறது. தமிழீழம் நிச்சயம் அமையும். அது காலத்தின் கட்டாயம்.

இலங்கையை சர்வதேச நாடுகள் வெறித்தனமாக ஆதரிக்கும் நிலையில், இனப்படுகொலை செய்த ராஜபக்சே அரசுக்கு தண்டனை கிடைக்கும் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

அமெரிக்காவில் செப்டம்பர் 11இ-ல் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட பயங்கரவாதத்தை அடுத்து உலகெங் கும் நடந்து வந்த விடுதலை போராட் டங்களையும் பயங்கரவாதமாக பார்க்கும் நிலையை சர்வதேச நாடுகள் வரித்துக்கொண்டன. அதில் விடு தலைப்புலிகளின் விடுதலைப் போராட் டமும் சிக்கிக்கொண்டது.

அதனா லேயே ராஜபக்சேவின் நரித்தனத்திற்கு அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவுக் கரம் நீட்ட, விரும்பத்தகாத பல சம்பவங்கள் நடந்தன. ஆனால், இப்போது அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் அனைத்தும் ராஜபக்சேவின் இனப்படுகொலையை புரிந்து தெளிவு பெற்று வருகின்றன. இலங்கைக்கு எதிரான நடவடிக்கை களையும் முன்னெடுக்கின்றன. அத னால், போர்க்குற்றங்களுக்கான தண் டனையிலிருந்து ராஜபக்சே தப்ப முடியாது.

சந்திப்பு : இரா.இளையசெல்வன்
படங்கள் : அசோக்
நன்றி: நக்கீரன் 2014 செப் 03-05

Read more: http://viduthalai.in/page1/87079.html#ixzz3CRzBuLLE

தமிழ் ஓவியா said...


டெசோவின் இன்றியமையாமை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்தனர். அங்கு என்ன பேசப்பட்டது? பிரதமர் எந்த உறுதியைக் கொடுத்தார்? என்பது போன்ற தகவல்கள் உருப்படியாக ஏதும் கசியவில்லை.

ஆனால், இலங்கையின் பிரபல இதழான வீரகேசரி சில முக்கியப் பிழிவுகளை வெளிச்சத் திரையில் ஓட விட்டு இருக்கிறது.

இலங்கையில் நிகழும் அரசியல் மாற்றங்களைக் கண்காணிக்க தனியார் ஆணையம் ஒன்றை இந்தியா நியமிக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக இருந்தது.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி ஒரே வரியில் இலங்கையின் உள்நாட்டு அரசியலில் இந்தியா தலையிட முடியாது; அரசியல் தொடர்பான விவரங்கள் அனைத்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் தலைமையில் உள்ள இலங்கை அரசு கவனித்துக் கொள்ளும்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசுடன் இனப் பிரச்சினை தொடர்பாக பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க வேண்டும்.

மேலும் நாடாளுமன்ற விவாதங்களில் கலந்து கொண்டு இனப் பிரச்சினைபற்றி எடுத்துரைத்து, அவற்றிற்கான தீர்வுகளை அங்குள்ள அரசிடமிருந்தே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி இதோபதேசம் செய்துள்ளார்; இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இலங்கை அரசு பற்றி சரியான புரிதல் இல்லாமல் இந்தியப் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்துங்கள் என்று சொல்லுகிறார்.

இலங்கை அரசு நாங்கள் கூறுவதை செவிமடுத்துச் செயல்பட்டிருந்தால், நாங்கள் ஏன் இந்திய அரசை நாடப் போகிறோம்? என்ற நியாயமான வினா மூலம் தங்கள் ஆதங்கத்தை அதிருப்தியை நாகரிகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய ஏடுகள் வெளிப்படுத்தாத தகவல்களை இலங்கையின் வீரகேசரி வெளிப்படுத்தி விட்டது.

இலங்கை அதிபர் ராஜபக்சேபற்றி தமிழ்நாட்டுத் தலைவர்கள் குறை சொன்னால், அதற்குள் புகுந்து உள்நோக்கம் கற்பித்து, பிரச்சினையை நீர்த்துப் போக வைக்கும் முயற்சியில் இறங்கும் இந்திய நாட்டு ஊடகங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டு மக்களின் பிரதிநிதி என்னும் முறையிலும், இலங்கையிலிருந்து வெளிவரும் ஏடு என்ற தன்மையிலும் வெளிப்படுத்தப் பட்டுள்ள இந்த நுட்பமான தகவல்களுக்கும், கருத் துக்கும் தங்கள் வசம் எந்த நியாயங்களை வைத் துள்ளனர்?

அய்.நா. மன்றத்தால் அதிகாரப் பூர்வமாக அறி விக்கப்பட்ட விசாரணைக் குழுவையே அனுமதிக்க மறுக்கும் ராஜபக்சேயிடம் எல்லா வகைகளிலும் வீழ்த்தப்பட்டு, நொந்து நூலாகிக் கிடக்கும் ஈழத் தமிழர் தம் பிரநிதிதிகளின் குரல் எடுபடுமா? இந்தப் பொது தகவல் - புரிதல்கூட இல்லாமலா நம் நாட்டு தலைமைப் பீட அமைச்சர்கள் இருக்கிறார்கள்?

தேடி வந்தவர்கள் எடுத்து வைக்கும் குறை பாடுகளைக் கேட்டுக் கொண்டதற்காக, எதையாவது சொல்ல வேண்டும் என்ற சம்பிரதாய வார்த்தைகளை இந்தியப் பிரதமர் சொல்லியிருக்கிறார் என்பது தான் இதன் மூலம் தெரிய வருகிறது.

ராஜபக்சே அளவுக்குப் போவானேன்? அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக் குழு இந்தியாவில் வந்து விசாரணை நடத்துவதற்கே விசா மறுக்கும் இந்திய அரசை - அதன் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி என்ன நினைப்பது?

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இந்தியா ஏதாவது உருப்படியான முயற்சிகளை மேற்கொண்டால்தான் ஏதாவது முன்னேற்றம் கிடைக்க வாய்ப்புண்டு என்று ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல; உலகத் தமிழர்களும் சரி, உலகெங்கும் உள்ள மனித உரிமை அலுவலர்களும் சரி எதிர்பார்க்கும் நிலையில் ராஜபக்சேவுக்கு அப்பனாக இங்குள்ள ஆட்சியாளர்கள் நடந்து கொள்கிறோர்களே! இது நியாயமா? சரியா?

இத்தகையதோர் கால கட்டத்தில் கலைஞர் அவர்களின் தலைமையில் அமைந்த டெசோ உருப்படியான திசையில் காலத்தின் தேவையான - அவசியமான நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. காலத்தாற் மேற்கொள்ளப்பட்ட டெசோவின் இந்தச் செயற்பாடுகள் காலத்தால் என்றென்றும் பேசப்படும் என்பதில் அய்யமில்லை.

ஈழத் தமிழர்கள் பிரச்சினையைத் தங்கள் அரசிய லுக்குக் கிடைத்த மூலதனமாகக் கொண்டு முழக்க மிட்டவர்கள், இந்த முக்கியமான கால கட்டத்தில் வெளியில் தலை காட்ட முடியாத ஒரு இறுக்கமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்களோ என்று நினைக்க நிறைய நியாயம் உண்டு

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அடிக்கடி வலியுறுத்துவாரே - நம்மைப் பிளவுப்படுத்துவதை தூர வைத்து நம்மை இணைப்பவற்றைப் பற்றிக் கொண்டு ஓரணியாய்த் திரள்வோம் என்று உன்னதமான நல்வழிகாட்டுதலை தமிழகத் தலைவர்கள் சற்று யோசிக்கக் கூடாதா?

இதில் கொஞ்சம் மானப் பிரச்சினை தட்டுப் படுமேயானால் பொதுத் தொண்டில் மானம் பாராதே என்ற தத்துவத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் உரையை ஒருமுறை அசை போட்டுப் பார்க்கலாமே!

Read more: http://viduthalai.in/page1/87075.html#ixzz3CRzN1ik3

தமிழ் ஓவியா said...


பக்குவமடையாதவன்


அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்து வராததைப் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனாகான்.

- (விடுதலை, 3.4.1950)

Read more: http://viduthalai.in/page1/87074.html#ixzz3CRzX91Xm

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?


ஆயுள்
நம் ஆயுளை நிர்ண யிப்பது நாம் அல்ல - பிறக்கும் பொழுதே நமக்கு மேலே இருக்கக் கூடியவன் எழுதி வைத்த ஒன்று அது - அதனை மாற்ற யாராலும் முடியாது - முடியவே முடியாதாம்.

அப்படியென்றால் 50 ஆண்டுகளுக்குமுன் நம் மக்களின் சராசரி வயதை விட இப்பொழுது மிகவும் உயர்ந்துள்ளதே! இது ஆண்டவன் எழுதி வைத்ததாலா அறிவியல் - மருத்துவ சாதனையாலா?

Read more: http://viduthalai.in/e-paper/87171.html#ixzz3CXx6HxiZ

தமிழ் ஓவியா said...

தண்டனைக் காலத்தில் பாதிக்குமேல் சிறையில் அனுபவித்த விசாரணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்


உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு மனிதநேயம் மிக்க வரலாறு படைக்கும் தீர்ப்பாகும்

தண்டனை காலத்தில் பாதிக்குமேல் சிறையில் தண்டனை காலத்தில் பாதிக்குமேல் சிறையில் அனுபவித்த விசாரணை கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்றும், 2 மாதங்களுக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மனிதநேயம் மிக்க வரலாறு படைக்கும் தீர்ப்பை வரவேற்றும், உச்சநீதிமன்றத்தைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நேற்று (5.9.2014) உச்சநீதிமன்றம் அளித்துள்ள ஒரு தீர்ப்பு மனிதநேயம் மிக்க, வரலாறு படைக்கும் ஒரு தீர்ப்பாகும். இதற்காக உச்சநீதிமன்றத்தைப் பாராட்டுகிறோம்.

நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் உள்ள முழு விசாரணை - அல்லது விசாரணையே நடைபெறாது ரிமாண்டை - தற்காலிகக் காவலை - நீட்டித்துக் கொண்டே பல ஆண்டுகள் சிறையில் கழிக்கும் இள வயதுடைய வர்கள் (பெரிதும்) எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகமாகும் என்பது நம் நாட்டு ஆட்சியாளர்களுக்கோ, நீதிபரிபாலனம் நடத்தும் அமைப்புகளுக்கோ பெருமை தரும் ஒன்றாக ஆகாது.

அக்கைதிகள் - விசாரணைக் கைதிகள் என்று அழைக்கப்படும்(Undertrial Prisoners) பலரும், குற்றங்கள் ஏதும் செய்யாமல் சிக்கிக் கொண்டவர்கள் அல்லது சிக்க வைக்கப்பட்ட பகடைக் காய்களே ஆவர்.

சிறைச்சாலைகளுக்குச் சென்று நிலவரத்தை அறிந்த வர்களும் அதனை ஆய்வு செய்தவர்களும்தான் இது ஒரு முக்கிய சமூகப் பிரச்சினை என்பதைப் புரிந்து கொண்டு, இதற்கு ஒரு நல்ல தீர்வு காணுவது அவசியம் என்று கருத முடியும்.

விசாரணையின்றி இருக்கக் கூடியவர்கள் பலரையும் சந்தேகக்கேஸ் என்ற பெயரிலும், வீட்டை விட்டு ஓடி வருபவர்கள், புதிதாகத் திருட்டு போன்ற குற்றங்களிலும் அனுபவபட்டவர்களின் ஆயுதங்களாகப் பயன்படுத்தப் பட்ட அப்பாவிகள், இவர்கள் திருந்தி வாழ உதவிட முடியாத அளவுக்கு சிறைக்குள்ளே நடக்கும் பல்வேறு நடத்தைகளும், ஒழுங்கீனங்களும் அவர்களை ஆக்கி விடுகின்றன.

ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளவர்கள்தான் சிறைக்குள் மூத்த முன்னோடிகளும், செல்வாக்கு உள்ளவர்களும் ஆவார்கள். அவர்கள் இந்த சிறு இளைஞர்களை உள்ளே வந்தவுடன் மிரட்டி, தங்கள் எடுபிடிகளாக்கிக் கொள்வதோடு அவர்களைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஒழுக்கத் தவறுகளும்(Sodamise) சர்வ சாதாரணமாக்கும் வெட்ககரமான நிலைதான்! சிறைக்குள்ளே பணப் புழக்கம், போதை (கஞ்சா) போன்றவை உள்ளதால், இந்த இளவயது விசாரணைக் கைதிகளை அத்தீய வழக்கத்திற்கு அடிமையாகும் சூழ்நிலை திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது.

விடுதலை ஆகிச் செல்லவிருக்கும் இளைஞர்கள் பலர், நான் திரும்பி வந்து விடுவேனுங்க, இங்கே கிடைக்கிற வாழ்வும், வாய்ப்பும் எங்களுக்கு வெளியே கிட்டுமா என்பது சந்தேகம் என்றுகூட, வெளிப்படையாக (மிசா காலத்தில் எங்களுக்கு பணி செய்த இந்த விசாரணைக் கைதிகள், அல்லது குறைந்த தண்டனை பெற்றவர்கள்), கூறியதை நேரில் கேட்டு அதிர்ந்து போனோம்.

இவர்களை விடுதலை செய்தால் சிறையில் கூட்டமும், குறையும்; சிறை நிர்வாகமும் செம்மையான அளவில் நடக்க வாய்ப்பு ஏற்படும்.
இவர்களை வெளியே அனுப்பினால் மட்டும் போதாது. இது ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையானபடியால், அத்தகையவர்களுக்குரிய தொழில் கற்றுத் தருதல், அல்லது வேலை வாய்ப்புத் தந்து, வெளியே வந்த அவர்கள் கண்ணியமான முறையில் வாழுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் திட்டங்களைப் பற்றியும் ஆராய்ந்து செயல்படுத்த முன் வர வேண்டும்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. பிரதமர் மோடி அவர்கள் ‘Corporate Social Responsibility’ பெரிய கம்பெனிகள் சமூகப் பொறுப்பாளர்களாக மாறிடும் திட்டம் என்று கூறுகிறாரே, அதில்கூட இதனையும் இணைத்து அத்தகைய இளைஞர்களை மனிதம் பூத்துக் குலுங்கும் நல்ல மனிதர்களாகவும் மாற்றிட யோசிக்க வேண்டும்.சென்னை
6.9.2014

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/87186.html#ixzz3CXxHzuVg

தமிழ் ஓவியா said...

கருப்புச்சட்டை ஏன்?

- தந்தை பெரியார்

இனி நான் இறந்தாலும் ஏனையத் திராவிடத் தோழர்கள் ஏமாந்து விட மாட்டார்கள். எனது வேலையை அப்படியே விட்டுவிடமாட்டார்கள். தொடர்ந்து போராடி, வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுவிட்டது. நமது கொள்கைகள் ஒரு அளவுக்குப் பொது மக்களின் செல்வாக்கைப் பெற்றுவிட்டது. இன்னும் கொஞ்ச காலத்திற்குள் நம் இஷ்டம் போல் நடக்காத மந்திரிகளுக்கு மந்திரிசபை நாற்காலி இடம் கொடுக்காது, நம் இஷ்டப்படி நடக்காத அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடைக்காது.

நம் இஷ்டப்படி நடக்காத சட்டசபை மெம்பர்களுக்கு சட்டசபை இடங்கொடுக்காது என்கிற நிலை ஏற்பட்டுவிடும். இந்நிலை வெகு சீக்கிரமே ஏற்பட வேண்டுமானால் நாம் எல்லோரும் கருப்புச் சட்டைக்காரர்களாக வேண்டும். நீங்கள் என்ன சட்டைக்காரர்களோ என்று நம்மைச் சிலர் கேட்கக் கூடும். நம் நாட்டில் சட்டைக்காரர்கள் என்றொரு கூட்டம் இருந்து வருவது உண்மைதான். அவர்கள் பல ஜாதிக்குப் பிறந்தவர்கள், ஆகவே வெறும் சட்டைக்காரர்கள் என்று மட்டும் அழைக்கப்பட்டு வருகிறார்கள்.

நாம் அப்படிக்கல்ல, நாம் ஒரே ஜாதிக்குப் பிறந்தவர்கள். ஆகவே கருப்புச்சட்டைக்காரர்கள் என்று நம்மை அழைத்துக் கொள்கிறோம். கருப்புச் சட்டை ஒரு படையமைப்பின் சின்னமல்ல. அது இழிவின் அறிகுறி, இழிவிற்காக அவமானப்படுகிறோம், துக்கப்படுகிறோம், அதைப் போக்கிக் கொள்ள முடிவு செய்துவிட்டோம் என்பதன் அறிகுறி. பாடுபட்டுப் படி அளந்துவிட்டுப் பட்டினி கிடக்கும் நானா பஞ்சமன்? என் பாட்டின் பலனால் நோகாமல் உண்டு வாழும் நீயா பார்ப்பனன் இது நியாயமா?

கேள்விகளின் அறிகுறி கருப்புச்சட்டை

பாடுபடும் எங்களுக்கெல்லாம் இழிவான வேலைகள், பாடுபடாத உங்களுக்கெல்லாம் மந்திரி வேலையா? இது நியாயமா? பாடுபடாத நீங்கள் எல்லாம் அய்.சி.எஸ். படிப்பதா? கலெக்டர் ஆவதா? இது நியாயமா? நாங்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும், எவ்வளவுதான் உங்களுக்கு வாரிக் கொடுத்தாலும், எவ்வளவுதான் சுத்தமாய் இருந்தாலும், எவ்வளவுதான் ஒழுக்கமாய் நடந்து கொண்டாலும் நாங்கள் சூத்திரர்கள், பஞ்சமர்கள்?

நீங்கள் எவ்வளவுதான் பாடுபடாத சோம்பேறி வாழ்வு நடத்தினாலும், எவ்வளவோ எங்களை மோசம் செய்து எங்களிடம் பிச்சை எடுத்துப் பிழைத்தாலும், நீங்கள் எவ்வளவுதான் அழுக்குப் பிடித்து, சொறி பிடித்துக் குஷ்டரோகியாகக் கிடந்தாலும், எவ்வளவுதான் ஒழுக்க ஈனர்களாக திருடர்களாக, கொலைக்காரர்களாக, கொள்ளைக்காரர்களாக, தூது செல்பவர்களாக இருந்தாலும் நீங்கள் உயர் ஜாதிப் பார்ப்பனர்களா? இது நியாயமா? என்ற கேள்விகளின் அறிகுறிதான் இந்தக் கருப்புச் சட்டை?

தோழர்களே! நீங்கள் விரும்பி அணியுங்கள் இதை! அடுத்த மாநாட்டிற்குள்ளாவது நம் சூத்திரப்பட்டம் ஒழிந்து போகும். அடுத்த மாநாட்டிற்குள் இந்த இழி ஜாதிப் பட்டம் கட்டாயம் ஒழிக்கப்பட்டேயாக வேண்டும். அதற்காக ஒரு 2000, 3000 பேர்களாவது பார்ப்பனர்களின் பலி பீடத்தில் தம் உயிரை இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.

நானா சூத்திரன்? என் தாய்மார்களா சூத்திரச்சிகள்? இனி இந்நிலை ஒரு நிமிட நேரமேனும் இருக்க இடங்கொடேன்? இதோ என் உயிரை இதற்காக அர்ப்பணிக்கவும் துணிந்து விட்டேன் என்கிற உணர்ச்சி ஒவ்வொரு திராவிடனுக்கும் ஏற்படவேண்டும்.

இழிஜாதிபட்டத்தை ஒழிப்பதென்பது சுலபமான காரியமல்ல என்றாலும் உலக அறிவு முன்னேற்றம், ஜாதி உயர்வு தாழ்வுகளே இனி இருக்க கூடாது. ஆகவே உறுதி பெற்றெழுங்கள், செத்தாலும் சரி இழிவு நீக்கம்தான் முக்கியம் என்று. சாகாமலே கூட வெற்றி பெற்று விடலாம்.

ஆதாரம்: குடிஅரசு 5.6.1948

Read more: http://viduthalai.in/page-1/87235.html#ixzz3CXxTLEFb

தமிழ் ஓவியா said...

ஒரு கொலை நூல்தான் பரிசுக்குத் தகுதியானதா?

ஜப்பான் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுப் பிரதமருக்குக் கீதையை அளித்து, அதன் மூலம் ஒரு சர்ச்சைக்கு அடியெடுத்துக் கொடுத்துள்ளார்.

கீதை - பகவான் கிருஷ்ணனால் அருளப்பட்டது என்று கதைக்கிறார்கள். இந்து மதத்தை அமெரிக்கா வரை கொண்டு சென்ற விவேகானந்தர்கூட ஒரு கேள்வியை எழுப்பியதுண்டு ஒரு யுத்தக்களத்திலே கீதா உபதேசம் நிகழ்த்த முடியுமா?

அது இயலக் கூடியதுதானா? கிருஷ்ணன் சொல்லச் சொல்ல அவற்றையெல்லாம் சுருக்கெழுத்து மூலம் எழுதியவர் யார் என்ற கேள்வியோடு மட்டும் அவர் முடிக்கவில்லை; கீதையைப் படிப்பதைவிட கால்பந்து விளையாடுவது நல்லது என்கிற அளவுக்குச்சென்று இருக்கிறார்.

உலகத்தில் எங்காவது கேள்விப்பட்டதுண்டா? கடவுள் என்று சொல்லக்கூடிய ஒருவர் யுத்தம் செய் - மனிதர்களைக் கொலை செய்! கொன்று குவி! என்று உத்தரவிட்டதாகக் கேள்விப்பட்டதுண்டா?

தன் எதிரே இருக்கும் உற்றார் உறவினர்களோடு போர்தொடுக்க அர்ச்சுனன் தயங்கியபோது, கிருஷ்ணன் என்ன சொல்கிறான்?
இந்த உடலில் வாலிபப் பருவமும், யவனப் பருவமும் எவ்வாறு வந்து சேருகின்றனவோ அம் மாதிரியே, ஆத்மாவுக்கு பேச உடலும் வருகிறது. அறிவாளி இதைப் பார்த்து மயங்க மாட்டான்.

எந்த ஆத்மாவானது எங்கும் பரவியுள்ளதோ அது அழிவற்றது என்று அறிவாயாக! இவ்வாறு அழிவற்ற இந்த ஆத்மாவுக்கு எவரும் அழிவை ஏற்படுத்த முடியாது; ஓ, பரதவம்சத்தவனே! என்றென்றும் இருப்பதும், அழிவற்றதும், அளவிற்கு அடங்காததுமான ஆத்மாவால் தாங்கப்படுகின்ற இந்த உடல்கள் அழிவுள்ளவை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன ஆகவே இதனை நன்கறிந்து போர் செய்வாயாக? என்று அர்ச்சுனனுக்கு ஆணையிடுகிறார் அவர்கள் கூறும் பகவான் கிருஷ்ணா!

உலகத்திலேயே இவ்வளவுப் பச்சையாகக் கொலையைத் தூண்டுகிற, நியாயப்படுத்துகின்ற ஒருவன்தான் இந்துத்துவாவாதிகள் போற்றுகின்ற பகவான் கிருஷ்ணன், அதைச் சொல்லுவதுதான் கீதை. புரியும்படிச் சொல்ல வேண்டுமானால் கீதை என்பது ஒரு கொலைகார நூலே!

காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேகூட தனது படுகொலையை நியாயப்படுத்து கிற வகையில் இந்தக் கீதையைத்தான் எடுத்துக் காட்டினான்.

தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு அதர்மத்தையும் செய்யலாம்; அப்படி செய்வதும் தருமமே! என்று கீதை சொல்லுவதை எடுத்துக்காட்டி கொலைக்கு நியாயம் கற்பிக்கும் கொடுமையை என்னென்று சொல்லுவது?

இந்தச் கீதையை இந்தக் கொலைகார நூலைத்தான் ஜப்பான் பிரதமருக்கு இந்தியப் பிரதமர் மகிழ்ச்சியோடு பரிசாக அளித்துள்ளார்.
ஒரு வகையில் நரேந்திரமோடி கீதையைப் போற்றுவதற்கு வழிகாட்டியாகக் கொள்ளுவதற்கு நியாயம் இருக்கிறது.

மோடி முதல் அமைச்சராக இருந்தபோதுதானே சிறுபான்மை மக்கள் ஆயிரக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். எனவே மோடி கீதையைப் போற்றுவதில் ஓர் அர்த்தம்கூட இருக்கிறது.

ஆனால் ஜப்பான் பிரதமருக்குக் கீதையைப்பற்றி தெரிந்திருக்குமா என்பது கேள்விக் குறியே! அது கொலை நூல் என்று தெரிந்திருந்தால், அந்தக் கணமே இந்தியப் பிரதமரிடம் திருப்பியே கொடுத்திருப்பார்.

இது ஒருபுறம் இருக்க, கிருஷ்ணன் என்ற கடவுளே இந்து மதத்தில் கற்பிக்கப்பட்டதே கவுதமப் புத்தர் தோன்றி நாட்டு மக்கள் மத்தியில் வைதிக ஆரியப் பார்ப்பன வருணாசிரமத்தை எதிர்த்து மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்திய பிறகுதான்.

இதுகுறித்துப் பிரபல வரலாற்று ஆசிரியர் ராம்சரண் சர்மா 11ஆவது வகுப்புக்கான என்.சி.ஆர்.பி. வெளியிட்டுள்ள தொன்மை இந்திய வரலாறு (கிஸீநீவீமீஸீ மிஸீபீவீணீஸீ பிவீஷீக்ஷீஹ்) எனும் நூலை எழுதியவர் அந்த நூலில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

கிருஷ்ணன் மகாபாரதத்தில் முக்கியப் பங்கு ஆற்றியதாகக் கூறப்பட்டிருந்தாலும், மதுரா நகரில் கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை கிடைக்கப் பெறும் சிற்பத் துண்டுகள் கிருஷ்ணன் பற்றிய தகவலைத் தரவில்லை.

இதன் காரணமாக இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் அடிப்படையில் இதிகாச காலம் எனும் கருத்தைப் பற்றிப் பேசுவதைக் கைவிட வேண்டும் என எழுதப் பட்டுள்ளது.

ஒரு பொய்யான கதைப் பாத்திரத்தை உண்டாக்கி, அதையும் கொலையைத் தூண்டும் ஒன்றாகச் சித்தரித்து இருப்பது எல்லாம் அசல் கழிசடைத்தனம் அல்லவா?

125 கோடி மக்களின் பிரதமர் இந்த வேலையைச் செய்யலாமா? இந்தியா என்றால் பாம்புகளின் நாடு என்பது போய், பொய்யர்களின் கூடாரம் என்ற புது நாமகரணம் இந்தியப் பிரதமரால் கிடைக்கும் போல் தோன்றுகிறது - இன்னும் 4 ஆண்டு 9 மாதம் எப்படித்தான் கழியுமோ என்று தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/page-2/87192.html#ixzz3CXxhYBeG

தமிழ் ஓவியா said...

திருக்குறள்


நம் நாட்டினருக்கு என்ன கலை, என்ன குறிக்கோள், என்ன நாகரிகம் என்று கேட்டால் அதற்கு ஆதாரமாகத் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஒன்றைத்தான் எடுத்துக்காட்ட முடியும்.
(விடுதலை,3.10.1958)

Read more: http://viduthalai.in/page-2/87191.html#ixzz3CXxtSyfA

தமிழ் ஓவியா said...

வாழ்வியல் சிந்தனைகள் கருத்துக்கள் பயனுடையவை

'நன்றி காட்டுவதின் மூலம் உயருங்கள்' என்ற தலைப்பில் 28.08.2014 அன்றைய விடுதலையில் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனை களை படித்தேன்.

உதவி செய்தவர்கள் தான் செய்த உதவியை மறந்து விடுவது நல்லது என்றும் உதவியை பெற்ற ஒருவர் அந்த நிகழ்வை என்றும் நினைவில் வைத்து வாழ்வது மிகச் சிறந்த மனிதப்பண்புகளில் ஒன்றாகுமென்றும் திருவள்ளுவர், தந்தை பெரியார், ஸிலீஷீஸீபீணீ ஙிஹ்ஸீக்ஷீமீ போன்ற அறிஞர்களின் கருத் துக்கள் மூலம் விளக்கியது அருமை.

உதவி செய் கின்றவர்களுக்கும் உதவியை பெறுகின்ற வர்களுக்கும் அவர் கூறும் கருத்துக்கள் பயனுடையவை மட்டுமல்ல. மனிதப் பண்பை செழுமைப்படுத்து பவையுமாகும்.

- ஞான. அய்யாப்பிள்ளை, மும்பை

Read more: http://viduthalai.in/page-2/87196.html#ixzz3CXy1aSt7

தமிழ் ஓவியா said...

கே.பி.கே.மேனனுக்கு ஜே! பார்ப்பனத் தொல்லைக்கு உதாரணம்

உயர்திரு பாரிஸ்டர் கே.பி.கேசவமேனனவர்கள் இந்தியாவில் சிறப்பாகத் தென்னிந்தியாவில் ஒரு பிரபல வக்கீலாகவும், ஒரு பெரிய தேச பக்தராகவும் தியாகி யாகவும் இருந்து வந்ததும் அவரது தேசபக்தி காரணமாக மாதம் 1000 கணக்கான ரூபாய்கள் வரும்படி உள்ள தமது வக்கீல் தொழிலை நிறுத்தி தனது செல்வமெல்லா வற்றையும் இழந்து, மனைவியையும் இழந்து மிக்க கஷ்டமான பரிசோதனைக்கெல்லாம் ஆளான ஒரு உண்மை தேசபக்தர் என்பதும், திரு. காந்தியவர்களுக்கும் மிகவும் நம்பிக்கை உள்ள சகாவாகவும், கேரள காங்கிரசு தாபனத்தின் டிக்டேட்டராகவும் இருந்த ஒரு யோக்கியமும், கீர்த்தியும் வாய்ந்தவர்.

அஹிம்சையில் மிக்க நம்பிக்கை யுடையவர். சமுதாய சீர்திருத்த விஷயத்தில் திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் தமது சமுகத்திற்கே விரோதமாக வைக்கம் கோவில் தெருவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமை வாங்கிக் கொடுக்க தீர்மானித்து மற்றும் சில பாரிஸ் டருடனும், பி. எ. பி. எல். வக்கீல்களுடனும் சத்தியாக்கிரகம் துவக்கி அவ்வரசாங்கத்தாரால் 6 மாதம் காவலில் வைக்கப் பட்டாலும் சிறையில் மிக்க கௌரவமாய் நடத்தப்பட்டு தண்டனை காலம் தீருவதற்கு முன்பாகவே விடு தலை செய்யப்பட்டு அவர் கோரிய படியே திருவாங்கூர் அரசாங்கம் இணங்கி வந்து வைக்கம் தெருக் களைப் பொது ஜன நடமாட்டத் திற்கு எல் லோருக்கும் பொதுவாய் விட்டு விட்டதுடன் மற்றும் பல ரோட்டு களையும் எல்லா ஜாதி யாருக்கும் பொதுவாக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.

ஆகவே இவைகளிலிருந்து திரு. கே.பி. கேசவ மேனன் அவர்களின் யோக்கியமும், முயற்சியும் எப்படிப்பட்ட தென்பது யாரும் நன்றாய் உணரலாம். அன்றியும் அவர் தென்னிந்தியாவிலுள்ள கௌரவமான கனவான்களில் ஒருவராகவும், எல்லா கௌரவமான கனவான்களின் சிநேகிதராகவும், அய்கோர்ட் ஜட்ஜ், திவான். நிர்வாக சபை மெம்பர்கள் முதலியவர்களுடன் நெருங்கிப் பழகினவராக வுமிருந்து வந்ததும் இம்மாகாணத்தாருக்கு நன்றாய்த் தெரியும்.

இந்தப்படி உள்ள இவர் இங்கு வக்கீல் தொழில் நடத்துவது என்பது பிடிக்காமல் ஏனெனில், இவ்விடத்திய நியாயாதிபதிகள் பெரிதும் பார்ப்பனர்களாக ஏற்பட்டு வருகின்ற படியாலும், அவர்களில் பெரும்பாலோர் பார்ப்பனச் சலுகையிருப்பதாகவும் மற்றும் பல காரணங்களாலும் அவருக்கு ஏற்பட்ட சில குடும்ப துக்கத்தாலும் இந்தியாவிலிருக்க மனமில்லாமல் மலேயா நாட்டுக்குப் போய் தனது தொழிலை கண்ணியமாய் நடத்திவரலாமென்று கருதி அங்குள்ள நியாயாதிபதிகளின் நேர்மை குணத்தை நம்பி மலேயா நாட்டுக்குச் சென்றால் அங்கும் இவ்விடத்திய பார்ப்பனர்களே தொல்லை கொடுக்க ஆரம்பித்து அவருக்குப் பல உபத்திரவம் செய்து வருவ தாகத் தெரிகிறது. இதைப்பற்றி முன்னோரு தடவையும் குறிப்பிட்டிருக்கின்றோம்.

அதாவது திரு. கே. பி. கேசவமேனனவர்கள் மீது மலாய் நாட்டு வக்கீல்களில் சிலர் பொறாமை காரணமாக குறிப் பாய் சொல்ல வேண்டு மானால் ஒரு பார்ப்பனரின் கிருத்திரிமம் மீது அவரை F.M.S. கோர்டு களின் வக்கீல்கள் சங்கத்தில் சேர்க்கக் கூடாதென்று பல முயற்சிகள் செய்யப்பட்டன.

அதென்னவெனில் திரு. கே. பி. கே. மேனன் ராஜத்துரோகி என்றும் அவர் சிறை சென்றவர் என்றும் வக்கீலாயிருக்க லாயக் கற்றவரென்றும் தொழிலாளர் களை தூண்டிவிட்டு கலகம் செய்பவரென்றும் பல மாதிரி யான விஷமப் பிரசாரங்கள் செய்து அவரை அங்கு அனு மதிக்காமல் இருக்கும்படியாகச் செய்யப் பல விதத்திலும் பலமாக முயற்சித்தார்கள் எவ்வளவு சூழ்ச்சி செய்தும் கடைசியாக திரு. மேனன் அவர்கள் ஆதியில் எதிர்ப் பார்த்தது போலவே மலாய் நாட்டு ஜட்ஜிகளின் நேர்மை குணத்தால் வெற்றி பெற்று அந்த நாட்டு நீதிவாத வக்கீலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டார் என்ற சேதி கேட்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

திரு. கே.பி.கே. மேனன் அவர்களையும் பாராட்டுவ தோடு மலாய் நாட்டுத் தலைமை நீதிபதி அவர்கள் பார்ப்பது போலவே நாமும் அவர் மலாய் நாட்டுத் திலகமாய் விளங்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 14.12.1930

Read more: http://viduthalai.in/page-7/87187.html#ixzz3CXziCM6D

தமிழ் ஓவியா said...

கார்த்திகை தீபம்


கார்த்திகை தீபம் என்ற பண்டிகை வரப்போகின்றது. இதற்காக அருணாசல மென்னும் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களில் பெரும் பெரும் உற்சவங்கள் நடைபெறும் அதற்காக பதினாயிரக்கணக்கான மக்கள் யாத்திரை போவார்கள்.

இது மாத்திரமல்லாமல் பல பல குடங்கள் நெய்யை டின் டின்னாய் கல் பூரத்தைக் கலந்து நெருப்பில் கொட்டி எரிப்பார்கள். சில இடங்களில் கட்டைகளை அடுக்கி அல்லது தட்டுகளைப் போராகப் போட்டு நெருப்பு வைத்து சட்டிசட்டியாக வெண்ணைகளை அந்த நெருப்பில் கொட்டுவார்கள்.

இவைகள் தவிர வீடுகளிலும், கோவில்களிலும் 10, 50, 100, 1000, 10000, 100000 என்கின்ற கணக்கில் விளக்குகள் போட்டு நெய், தேங்காய்எண்ணெய், நல்ல எண்ணெய், இலுப்பை எண்ணை முதலியவைகளை ஊற்றியும், எள்ளுபொட்டணம், பருத்திவிதை பொட்டணம் ஆகியவைகளை கட்டியும், பெரும் பெரும் திரிகள் போட்டும் விளக்குகள் எரிப்பார்கள்.

இந்த சடங்குகள் செய்வதே மேற்படி பண்டிகையின் முக்கிய சடங்காகும். ஆகவே இந்தச் சடங்குகளுக்கு எத்தனை லட்சம் ரூபாய் செலவு என்பதையும் இதற்காக செல்லும் மக்களின் ரயில் செலவு, மற்ற வீண் செலவு, நேரச்செலவு ஆகியவைகளால் எத்தனை லட்சம் ரூபாய் செலவாகும் என்பதையும் கவனித்துப் பார்த்து பிறகு இப்படிப்பட்ட இந்த பெருந் தொகைச்செலவில் நாட்டுக்கோ, மக்க ளுக்கோ, அல்லது மதத்திற்கோ, மக்களின் அறிவிற்கோ சுகாதாரத்திற்கோ அல்லது வேறு எதற்காவது ஒரு அம்மன் காசு பெறுமான பிரயோஜனமாவதுமுண்டா என்பதையும் யோசித்துப் பார்த்தால் நமது மக்களின் பாரம்பரியமான முட்டாள் தனம் விளங்காமற்போகாது.

அர்த்தமற்ற தன்மையில் நமது செல்வம் கொள்ளை போகின்றதே, கொள்ளை போகின்றதே என்று கூச்சல் போடுகின்றோம். ஜவுளிக்கடையில் போய் மறியல் செய்து ஜெயிலுக்குப் போவதைப் பெரிய தேசபக்தியாய்க் கருதுகிறோம். ஆனால் இந்த மாதிரி நமது செல்வம் நாசம் போவதைப் பற்றி நமக்கு சிறிதும் கவலையில்லை.

அதைப் பற்றி நினைப்பது மில்லை. அதைப் பற்றிப் பேசுவதே மதத் துரோகமாகவும், நாத்திகமாகவும் சொல்லப்படு கின்றது. இம்மாதிரி செல்வம் நாசமாவதை விட்டுக் கொண்டு வருவதால் எத்தனை பத்து லட்சக்கணக்கான மக்கள் தலைமுறை தலைமுறையாக முட்டாள்களாகிக் கொண்டு வருகின்றார்கள் என்பதை நாம் கவனிப்பதில்லை.

ஆகவே ஆங்காங்குள்ள சுயமரியாதைத் தொண் டர்கள் இதை கவனித்து இம்மாதிரியான மூடத்தனங்களும், நாசகார வேலைகளும் சிறிதாவது குறையும்படியாக வேலை செய்வார்களானால் அது மற்ற எல்லா முயற்சி களையும் விட எத்தனையோ மடங்கு பயன் தரக்கூடியதும் பல வழிகளிலும் அவசியமானதுமான முயற்சிகளாகும் என்பதை ஞாபகமூட்டுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 30.11.19

Read more: http://viduthalai.in/page-7/87189.html#ixzz3CXztzQma

தமிழ் ஓவியா said...

கலிலியோவின் முக்கியக் கண்டுபிடிப்பு!

கலிலியோ தலைசிறந்த இத்தாலிய விஞ்ஞானி தனது காலத்தில் வேறெந்த விஞ்ஞானியையும் விட மிகச் சிறந்த அறிவியல் முறைகளைக் கண்டுபிடித்ததற்காக இவர் உலகப் புகழ் பெற்றார். இவர் பைசா நகரில் 1564-இல் பிறந்தார். இளமையில் பைசா பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றார்.

ஆனால், வறுமையால் பாதியிலேயே படிப்பை விடடார். எனினும் அதே பல்கலைக் கழகத்தில் 1589இல் இவருக்கு ஆசிரியப் பணி கிடைத்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இவர் படுவர் பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்து 1610 வரையில் அங்கு பணிபுரிந்தார். இந்தக் காலத்தின்போது தான் இவர் தமது அறிவியல் கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவற்றைக் கண்டுபிடித்தார்.

இவருடைய முக்கியக் கண்டுபிடிப்புகளில் முதலாவது, எந்திரவியல் தொடர்புடையதாகும். லேசான பொருள்களைவிடக் கனமான பொருள்கள் வேகமாக கீழே விழும் என அரிஸ்டாட்டில் கூறியிருந்தார். அந்தக் கிரேக்கத் தத்துவஞானியின் இக்கூற்றை தலைமுறை தலைமுறையாக அறிஞர்கள் நம்பிவந்தார்கள். ஆனால், கலிலியோ இந்தக் கூற்றைச் சோதனை செய்து பார்க்க விரும்பினார்.

பல தொடர்ச்சியான பரிசோதனைகள் மூலம் அரிஸ்டாட்டிலின் இந்தக் கூற்று தவறானது என்பதை கலிலியோ விரைவிலேயே கண்டுபிடித்தார். காற்றின் உராய்வினால் வேகம் சற்று குறையலாம் என்பதைத் தவிர, கனமான பொருள்கள், லேசான பொருள்கள் இரண்டுமே ஒரே வேக வீதத்தில்தான் கீழே விழுகின்றன என்று அவர் கூறினார்.

இதைக் கண்டுபிடித்த பின்னர் கலிலியோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார். ஒரு குறிப்பிட்ட கால அளவின்போது பொருள்கள் எவ்வளவு தூரம் விழுகின்றன என்பதை மிகக் கவனமாக அளவீடு செய்த இவர். கீழே விழும் ஒரு பொருள் செல்லும் தொலைவானது, அது கீழே விழுகின்ற வினாடிகளின் எண்ணிக்கையில் இருபடி வர்க்கத்துக்குச் சரிசம வீத அளவில் இருக்கும் என்பதைக் கண்டுபிடித்தார். இது வேக வளர்ச்சி வீதம் ஒரே சீராக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

கலிலியோவின் இந்தக் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாக அமைந்தது. இவர் தமது பரிசோதனைகளின் முடிவுகளைக் காண, கணிதச் சூத்திரங்களையும், கணித முறைகளையும் விரிவாகப் பயன்படுத்தியது நவீன அறிவியலின் முக்கிய அம்சமாகும்.

Read more: http://viduthalai.in/page6/87226.html#ixzz3CY1ZJpyd

தமிழ் ஓவியா said...

சொல்லுவது தினமலர் மன அமைதிக்காக சென்று நிம்மதி இழக்கும் பக்தர்கள் திரிசுதந்திரர்கள் பிடியில் சிக்கித்தவிக்கும் திருச்செந்தூர்


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆவது படை வீடு திருச்செந்தூர். இங்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக உலகம் முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் வருவதால் ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். திருச்செந்தூர் ஸ்தலம் குரு பரிகார ஸ்தலமாக இருப்பதால் அங்குவரும் பக்தர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட் டில் உள்ள மிகப்பெரிய 5 கோவில்களில் இதுவும் ஒன்று.

திருச்செந்தூர் மூலவரான பால சுப்பிரமணிய சுவாமியை தொட்டு பூஜை செய்பவர்கள் போத்திகள் இவர்கள் மூலவரைத் தவிர்த்து வேறு எந்த கடவுளுக்கும் பூஜை செய்ய மாட்டார்கள். கோவிலுக்குள் இருக்கும் சண்முகர் மற்றும் பரிவார தேவதை களுக்கு பூஜை செய்பவர்கள் சிவாச் சாரியார்கள்.

இவர்களைத் தவிர்த்து கோவிலில் தேங்காய் பழம் உடைத்து அர்ச்சனை செப்வர்கள் திரிசுதந்திரர்கள். இவர்கள் தான் கோவிலுக்குள் நடத்தப்படும் யாகசாலை பூஜையை செய்வார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களின் பரிகார பூஜையையும் இவர்கள் தான் செய் கிறார்கள்.

கைங்கரியம் செய்பவர்கள் என்று அழைக்கப்படும் திரிசுதந்திரர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் முறைகேடாக, அளவுக்கதிகமாக கட்டாய வசூலில் ஈடுபடுவது பக்தர்களை அதிருப்தி அடையச்செய்கிறது.

திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பொது தரிசனம் தவிர 2 விதமான கட்டண தரிசனம் உள்ளது. அதில் ஒன்று அமர்வு தரிசனம். இதற்கு ரூ. 250 கட்டணம். மற்றொன்று சிறப்பு தரிசனம். இதற்கு ரூ. 100 கட்டணம். இந்த கட்டண தரிசனத்தில் அரசியல் வாதிகளையே மிஞ்சும் அளவுக்கு திரிசுதந்திரர்கள் மோசடி செய்வதால் கோவிலின் வருமானத்தில் தினமும் ரூ. 1 லட்சம் முதல் 1.50 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது.

கோவிலுக்குள் நடக்கும் தங்கத்தேர் மற்றும் பிற தேர்த்திருவிழாவின் போது உற்சவர் ஜெயந்திநாதரை தூக்கி வருபவர்கள் சீர் பாதம், என அழைக்கப்படுகிறார்கள். கோவில் நிர்வாகம் சார்பாக தங்கத்தேர் இழுக்க கட்டணமாக 1,500 ரூ.பாய் இருந்தது. இந்த தொகையை சில மாதங்களுக்கு முன்பு கோவில் நிர்வாகம் ரூ.2,500ஆக அதிகரித்துள்ளது.

அவ்வளவு... சீர்பாதத்தினர் அதி கரிக்கப்பட்ட கட்டணத் தொகையில் தங்களுக்கும் பங்குதர வேண்டும் என கொடி பிடித்தனர். அதற்கு நிர்வாகமே எதிர்ப்பு தெரிவித்ததால் தங்கத்தேருக்கு ஜெயந்தி நாதரை எழுந்தருளச் செய்ய மறுப்புத் தெரிவித்தனர். விளைவு தங்கத்தேர் ஓடவில்லை. கோவில் நிர்வாகத்துகும், சீர்பாதத்தினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சமரசம் ஏற்பட அதன்பின் உற்சவரை, தேருக்கு எழுந்தருளச் செய்தனர் என்பது தனிக்கதை.

கோவில் தக்காராக திரிசுதந்திரர்கள் தரப்பினரே நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் பறிப்பதில் மட்டுமே குறியாக இருப்பதால் மன ஆறுதலுக்காக சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இருக்கும் நிம்மதி யையும் பறிகொடுத்துவிட்டு செல்லும் நிலையே தொடர்கிறது.

தகவல்: கு.பஞ்சாட்சரம் பொதுக்குழு உறுப்பினர்,திருவண்ணாமலை, தினமலர் 30.6.2014

Read more: http://viduthalai.in/page7/87223.html#ixzz3CY1l3W92

தமிழ் ஓவியா said...

வெற்றி! வெற்றி!!

வைக்கம் சத்தியாக்கிரகப்போர் கடைசியாக வெற்றி பெற்றுவிட்டது. திருவிதாங்கூரிலுள்ள எல்லாப் பொது ரஸ்தாக்களிலும், சத்திரங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் எல்லா ஜனங்களும் ஜாதி மத வித்தியாசமின்றிப் பிரவேசிக்கலாமென்று திருவிதாங்கூர் மகாராஜா உத்தரவு பிறப்பித்து விட்ட தாகத் தெரிகிறது. சமீபகாலத்தில் திருவி தாங்கூரில் எத்தனையோ சீர்திருத் தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

தேவதாசி ஏற்பாட்டை முதன்முதலில் ஒழித்த பெருமை திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கே உரியது. கப்பல் பிரயாணம் செய்த ஜாதி இந்துக்களும் கூட ஆலயங்களில் பிரவேசிக்கக் கூடாது என்றிருந்த தடையும் நீக்கப் பட்டது.

நாயர்களுக்கு மட்டும் பிர வேசனமளிக்கப்பட்டு வந்த சர்க்கார் பட்டாளத்தில் எல்லாச் ஜாதியாரும் சேர அனுமதியளிக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது அவர்களுக்கு சிவில் உரிமைகளை அளித்திருக்கும் திருவி தாங்கூர் மகாராஜாவைப் பாராட்டுகிறோம்.

குடிஅரசு - பெட்டிச் செய்தி - 31.05.1936

Read more: http://viduthalai.in/page7/87221.html#ixzz3CY27YdSN

தமிழ் ஓவியா said...

பவுத்த திருப்பதிகள் இந்துக் கோவில்களான சூழ்ச்சி!


காஞ்சீபுரத்தில் கச்சீஸ்வரர் கோவிலென்று வழங்கும் ஆலயம் பூர்வத்தில் புத்தர் கோவில் எனத் தெரிகிறது. இக்கோவிலின் முன் கோபுரத்தின் அஸ்திவாரக் கல் கட்டடத்தில் சில புத்த விக்கிரகங்கள் இப்போதும் இருக்கின்றன. இன்னும் சில, முன்பு இருந்த உருவம் தெரியா மலிருக்குமாறு அழிக்கப்பட்டிருக் கின்றன.

கோவில் உள்மண்டபத் திலும்` சில கல்தூண்களில் புத்த விக்கிரகங்கள் இப்போதுமிருக்கின்றன. இது புத்தர் கோவில் என்பதற்கு மற் றொரு ஆதாரமிருக்கிறது. அஃதாவது: இக்கோவில் மேல்புறம் வீதிக் கடைசியிலிருந்து வரும் ஏரிக்கு புத்தேரி என்றும், வீதிக்கு புத்தேரித்தெரு என்றும் பெயர்கள் ஏற்பட்டு இப்போதும் வழங்கி வருகின்றன.

கச்சீஸ்வரர் கோவிலுக்கு நான் சென்று பார்த்த போது, தூண்களில் மட்டும் புத்தர் உருவங்களைக் கண் டேன், கோபுர அஸ்திவாரத்தில் இருந்த புத்த விக்கிரகங்கள் காணப்படவில்லை. புத்தேரித்தெரு என்று இப்போது வழங்கப்படுகிற தெரு முற்காலத்தில் புத்தர் தெரு என்று வழங்கப்பட்டு அவ்வாறே விக்கிரயபத்திரங்களிலும் எழுதப்பட்டு வந்தன. புத்தேரித் தெருவின் மேற்குக் கோடியில் உள்ள கயிலாசநாதர் கோவில் என்னும் இராஜ சிம்மேச்சுரம் ஆதியில் புத்தர் கோவி லாக இருக்க வேண்டும் என்பதற்கு அக் கோவிலின் புராண ஆதாரங்களால் யூகிக்கப்படுகிறது.

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் வெளிமதில் சுவரில் சில புத்த விக்கிரகங்கள் பலகைச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜயநகர அரசனான கிருஷ்ணதேவராயரால் 1509இல் கட்டப்பட்டது. பழைய புத்தர் கோவில்களை இடித்து அக்கற்களைக் கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும். அதனால்தான் இப்புத்த விக்கிரகங்கள் இச்சுவரில் காணப் படுகின்றன.

காஞ்சி ஏகாம்பர ஈசுவரர் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் ஒரு புத்த விக்கிரகம் இருக்கிறது. இது பூமியைத் தோண்டியபோது கிடைத்தது. புத்தர் பரிநிர்வாணம் அடையும் நிலை யில் உள்ளதுபோன்ற கற்சிலையொன்று ஏகாம்பர ஈசுவரர் கோவில் மதிற்சுவ ரின் கீழே வைத்துக் கட்டப்பட்டி ருக்கிறது.

காஞ்சீபுரத்தில், கச்சிக்கு நாயகர் கோவில் என்னும் புத்தர் கோவில் இருந்தது. அதற்கு மானியமாக செங் கற்பட்டு ஜில்லாவில் உள்ள நாவலூர் கிராமம் விடப்பட்டிருந்தது. இந்தக் கோவில் இப்போது காணப்படவில்லை. காஞ்சி, கருக்கினில் அமர்ந்தாள் கோவில் என்னும் கோவிலில் இரண்டு புத்தர் சிலைகள் உள்ளன; அவை, முன்பு காஞ்சி மேட்டுத் தெருவில் இருந்தனவாம்.

காமாட்சியம்மன் கோவில் ஆதியில் பவுத்தரின் தாராதேவி ஆலயம். இவ்வாலயத்தில் பல புத்தவிக்கிரகங்கள் இருந்தன. அவைகளில், 6 அடி உயரம் உள்ள நின்ற வண்ணமாக அமைக்கப்பட்ட சாஸ்தா (இது புத்தர் உருவம்) என்னும் உருவம் இப்போது சென்னைப் பொருட்காட்சி சாலையில் இருக்கிறது. காமாட்சி அம்மன் குளக்கரையில் இருந்த புத்தர் சிலைகள் இப்போது காணப்படவில்லை. இக்கோவிலில் இருந்த வேறு புத்தவிக்கிரகங்கள் (கருங்கல் சிலைகள்) சில ஆண்டு களுக்குமுன் நன்னிலையில் இருந்ததைக் கண்டேன். ஆனால் அவை பிறகு துண்டு துண்டாக உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டேன். இப்போது அவை இருந்தவிடமே தெரியவில்லை.

காமாட்சி யம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் புத்தவிக் கிரகம் ஒன்று இப்போதும் நன்னி லையில் இருக்கிறது. இத்தோட்டத்தில் உள்ள மண்டபத்தைக் காட்டியபோது, அதன் அடியில் சில புத்த விக்கிரகங் களைப் புதைத்து இருக்கிறார்களாம்.

(நூல்: பவுத்தமும் தமிழும் மயிலை சீனிவேங்கடசாமி பக்கம் 53,54,55

Read more: http://viduthalai.in/page8/87224.html#ixzz3CY2q17du

தமிழ் ஓவியா said...

மத்திய அமைச்சரவையில் மாமிசம் கூடாது!மிகவும் அமைதியாக ஒரு மாற்றம் டில்லியில் நடந்ததிருக்கிறது, அமைச்சரவை நிகழ்ச்சிகளில் இனிமேல் அசைவம் கிடையாது என்பதுதான் அது. இந்தச் செய்தி பலருக்குத் தெரியாது. அமைச்சரவைக் கூட்டம் என்பது பார்ப்பனர்களின் யாகமேடை கிடையாது. அமைச்சரவைக் கூட்டத்தின் போது பல்வேறு மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொள்வார்கள். அவர்களின் உணவு முறை அசைவத்துடன் சேர்ந்ததாக இருக்கலாம். மேற்கு வங்கப் பார்ப்பனர்கள்கூட மீன் இல்லாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படி இருக்க அமைச்சரவை நிகழ்ச்சிகளில் அசைவ உணவை நிறுத்தியது ஏன்? இதுவரை யாரும் கேள்வி கேட்கவில்லை. தமிழ்நாட்டிற்கு வருவோம். இங்கு என்ன நடக்கிறது? ஒரு பத்திரிகை அலுவலகம் அசைவ உணவு கொண்டு வருவதால் சைவம் சாப்பிடும் மற்றவர்களுக்கு அருவருப்பாக இருக்கிறதாம். ஆகையால் இனிமேல் அலுவலகத்திற்கு யாரும் அசைவ சாப்பாடு கொண்டுவர வேண்டாம் என்று கூறி அனைத்துப் பணியாளர்களுக்கும் சுற்றறிக்கை விட்டு, அலுவலக தகவல்பலகையிலும் ஒட்டிவிட்டனர். பொதுவாக ஊடக அலுவலகங்களில் அசைவம் கொண்டுவருவதை பல பத்திரிகை நிறுவனங்கள் நேரடியாக இல்லாமல் மறைமுகமாகத் தடுக்கின்றன. புதிதாகச் சேர்ந்தவர்கள் அசைவம் கொண்டுவந்தால் உடனே நாசுக்காக சரஸ்வதி வசிக்கும் இடம் என்று மறைமுகமாகக் கூறிவிடுவார்கள். அப்படி இருந்தும் கொண்டுவந்தால் உடனே தூக்கிவிடுவார்கள். திடீரென இந்த அசைவ எதிர்ப்பு ஏன் கிளம்பியது என்று தெரிகிறதா? இதற்கு உணவு முறையை நன்கு கவனித்தால் தெரியும். பார்ப்பனர்களின் அன்றாட உணவில் அதிக அளவு புரதம், கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின்கள் இருக்கும். மிகக்குறைந்த அளவே மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் இருக்கும். அவர்கள் சேர்க்கும் கொழுப்பு உணவு மிகவும் எளிதில் உடலில் ஆற்றலாக மாற்றமடையும் தாவரக்கொழுப்பு உணவுதான். பார்ப்பனர்களுக்கு அதிகம் உடலுழைப்பு கிடையாது. ஆனால், பார்ப்பனரல்லாத பெரும்பான்மை மண்ணின் மைந்தர்களுக்குத் தேவையான உணவு. அதுவும் இந்த மண்ணின் பாரம்பரிய உணவு என்பது, அசைவ உணவு வகையைச் சார்ந்ததே. இது விவசாய நாடு. பெரும்பான்மை மக்களின் உணவுத்தேவையை நிறைவு செய்ய மாமிசம் மிகவும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. மனித குல வரலாற்றைப் பார்த்தாலே உணவுச் சங்கிலிமுறை நமக்குத் தெரியவரும். மாட்டை மனிதன் உணவிற்காகத் தேர்ந்தெடுத்தது என்பது அதிகமான மக்கள் பங்கிட்டு உண்ணக்கூடியதும் அதே நேரத்தில் அவனது உடலுழைப்பிற்குத் தேவையான அனைத்து ஆற்றலும் மாட்டு மாமிசத்திலிருந்து கிடைக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை குடும்ப வாழ்க்கை அமைப்பில் ஆடு, கோழி மற்றும் மாட்டு மாமிசம் பொதுவாக இருந்தது. விழா நாட்களில் மாட்டை உணவிற்காக அறுப்பது, விருந்தினர் வரும்போது கோழி, ஆடுகளை அறுப்பது என்பது காலம் காலமாகத் தொடர்வதாகும்.

கோமத யாகம், அசுவமேத யாகம், நரமேத யாகம் என்ற பெயர்களில் உயிரினங்களைத் தீயில் இட்டுப் பொசுக்கிய பார்ப்பனர்கள் இன்று மாமிசம் கொண்டுவராதே என்று கூறுகின்றனர். சரி உங்கள் ஆட்சி உங்கள் அலுவலகம் என்று விட்டால் இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் கருவாடு விற்க தடை விதித்துவிட்டார்கள். கேட்டால் கருவாட்டு நாற்றம் அங்குவரும் வியாபாரத் தரகர்களுக்குப் பிடிக்கவில்லையாம். கருவாட்டு விற்பனையாளர்களை எல்லாம் கடையைக் காலிசெய்துவிடச் சொல்லிவிட்டார்களாம். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மட்டுமல்ல... மோடி பதவியேற்பு விழாவிலேயே இந்த முயற்சி செய்யப்பட்டு பின்னர் பன்னாட்டுத் தலைவர்களுக்காக மாற்றடப்பட்டதும் அது கிண்டலுக்கு உள்ளானதையும் நாம் அறிவோம். இப்போது நடந்தேவிட்டது அவ்வளவுதான்.

ஏதேது இனிமேல் மாமிசம் சாப்பிடுபவர்கள் எல்லாம் இந்தியர்களே அல்ல என்று சட்டமியற்றிவிடுவார்கள் போலும்! விழிப்பாய் இரு தமிழா! இனி உனது உணவைக்கூட பார்ப்பானைக் கேட்டுத்தான் சாப்பிடும் நிலை வரப்போகிறது!

- சரவணா ராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறுவர்களின் பங்கு


பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறுவர்கள் ஈடுபடுவது கடந்த ஆண்டு 13.2 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான குற்றங்கள் 70.5 விழுக்காடும் பாலியல் குற்றங்கள் 60.3 விழுக்காடும் அதிகரித்துள்ளது. இந்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் 66.3 விழுக்காட்டினர் 16 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள்.

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2013ஆம் ஆண்டு சிறுவர்கள்மீது மொத்தம் 31,725 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது, 2012ஆம் ஆண்டு 27,936ஆக இருந்துள்ளது. திருட்டு வழக்குகளில் 7,969 சிறுவர்களும், தாக்குதல் சம்பவங்களில் 6,043 சிறுவர்களும் கொள்ளை வழக்குகளில் 3,784 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்டு வருமானம் 25 ஆயிரம் ரூபாய் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 விழுக்காட்டுச் சிறுவர்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

புனைப்பெயரில் திரியும் ஜனநாயகம்


அழுதுகொண்டிருந்தான் அவன்.
யாரும் கவனிக்கவில்லை!
பரட்டைத் தலை
அழுக்கான முகம்
வருவார் போவோரெல்லாம்
அடித்த வாசனைத் திரவியம்
ஆறியும் ஆறாமலும்
உடல் முழுவதும் தீப்புண்கள்
சிகரெட்டால் சுட்ட வடுக்கள்
அங்கங்கே வெட்டுக் காயங்கள்

சில சமயம்
புதுச் சட்டையோடு அரண்மனையிலிருப்பான்
பல சமயம்
கிழிந்த சட்டையோடு தெருவிலிருந்தான்

பிச்சைக்காரனுக்குப் பிச்சையிட்டான்
அதே தெருவில் அவனே பிச்சையெடுத்தான்
அவன் ஊமையென்று சந்தேகித்தார்கள்
அவன் வாய் தைக்கப்பட்டிருந்தது
கையை யாரோ முறித்திருந்தார்கள்

பரிதாபப்பட்டவர்கள் கூட்டிச் செல்வார்கள் வீட்டிற்கு
அடுத்த நாள்
தெருவில் தென்படுவான்.
அவனோடு புகைப்படம்
எடுத்துக்கொண்டார்கள்

பெயரைக் கேட்டேன்
சிரித்துக்கொண்டே நின்றான்
சர்வாதிகாரம் தன்னை
ஜனநாயகமென்பதால்
அடக்கு முறை பாசிசம்
ஜனநாயகமென்று சொல்லிக்கொண்டு திரிவதால்
மத வன்முறை அடிப்படைவாதம்
ஜனநாயகமென்று சொல்லிக்கொள்வதால்
தன் நிஜப்பெயரை தலைமறைவு வாழ்வுக்குக் கொடுத்துவிட்டு
புனைப்பெயரில் திரிகின்றான் ஜனநாயகம்.- கோசின்ரா

தமிழ் ஓவியா said...

இன்றைக்கு 'ஓணம்' கதையை பார்ப்போமா?

சோழ நாட்டில் திருமரைக்காடு (வேதாரண்யம்); அங்கு ஒரு சிவன் கோயில். அங்குள்ள சிவனின் மனைவிக்குப் பெயர் ஞானம் பழுத்த நாயகி என்பதாகும்.

ஒரு நாள் தன் மனைவியோடு சிவன் புணர்ந்து கொண்டு இருந்தானாம்.(அர்த்தமுள்ள இந்து மதம்.....ம்)

அந்த நேரத்தில் எரிந்து கொண்டிருந்த தீபம் ஒளி குன்றி எரிந்து கொண்டிருந்ததாம். அந்த சமயத்தில் அங்கு வந்த எலி விளக்கில் இருந்த நெய்யைக் குடித்துவிட்டு, எலியின் வால் திரியின் மேல் பட்டதால், தூண்டப்பட்டு ஒளி பிரகாசமாகிவிட்டதாம்.

உடனே எலியைப் பார்த்து சிவன், நீ மூவுலகையும் அரசாட்சி செய்வாய்! என்று வரம் கொடுத்தானாம்.

அந்த எலி,
மாவலி என்னும் பெயரோடு பிறந்த அசுர குல அரசன் மண்ணுலகம், விண்ணுலகம், பாதாள உலகம் மூன்றையும் கட்டி ஆண்டானாம்.

விண்ணுலகையும் மாவலி ஆண்டதால், இந்திர லோகத்தின் அதிபதியாகிய இந்திரன் கூட மாவலிக்குக் கட்டுப்பட்டவனாகிவிட்டான். பொறுக்குமா அவர்களுக்கு?

அதே நேரத்தில் யாருக்கும் எந்த கேட்டையும் செய்யாமல் நல்லாட்சி புரிந்து, நல்ல பெயர் எடுத்தான் மாவலி!
அசுர குலத்தவன் நல்லாட்சி செய்வதாவது! நல்ல பெயர் எடுப்பதாவது! விட்டுவிடுவார்களா? இந்திரனின் தகப்பனாகிய காசிப முனிவன், விஷ்ணுவிடம் மனு போட்டானாம். கடும் தவமிருந்து விஷ்ணுவிடம் வரம் வேண் டினானாம். விஷ்ணு தமக்கு மகனாகப் பிறந்து மாவலியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று மன்றாடினானாம். அதன்படியே வரமும் கிடைத்தது.

(மூன்று உலகத்தையும் மாவலி கட்டி ஆள வேண் டும் என்று சிவன் கொடுத்த வரம் என்னவாயிற்று? சிவனை விட வைணவக் கடவுளுக்குச் சக்தி அதிகம் என்று காட்டுவதற்கு இதுபோன்ற கதைகள் போலும்!)

ஒருமுறை யாகம் செய்த மாவலி தான தருமங்களைச் செய்தான். இதுதான் சந்தர்ப்பம் என்று கருதி காசிப முனிவருக்குப் பிறந்த வாமனன் (குள்ளப் பார்ப்பான் - சூழ்ச்சி என்று வந்தால் புராணங்கள் கூட பார்ப்பானைத்தான் தேடிப் பிடிக்கின்றன.) பிச்சைக்காரனாக (யாசகம் புருஷ லட்சணம் என்பதே பார்ப்பன தருமம் ஆயிற்றே!) சென்று மூன்று அடி மண்ணைக் கேட்டானாம். கேட்பாருக்கு இல்லை என்று சொல்லிப் பழக்க மில்லாத அந்தத் தர்மப்பிரபுவாகிய மாவலி எனும் அசுர அரசன் சம்மதித்தான்.

சூழ்ச்சிக்காரக் குள்ளப் பார்ப்பனனாகிய வாமனன் பேருரு எடுத்து (விசுவரூபம்) ஓரடியை மண்ணுலகத்திலும் மற்றொரு அடியை விண்ணு லகத்திலும் வைத்து, மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்டானாம். என் தலையில் வை! என்றானாம் அந்த அப்பாவி; அவ்வளவுதான். தலையில் காலை வைத்து மிதித்து சிறையிலும் அடைத்தானாம்.
இந்த நாளில் மாவலி வீட்டுக்கு வீடு வருகி றானாம். கேரளத்தில் அப்படி ஒரு நம்பிக்கை. வீட்டு வாசலில் கோலம் போட்டு வைக்கிறார்கள்- மாவலியின் வருகைக்காக. ஓணம் பண்டிகை என்பது இதுதான்.

இந்தக் கதை மூடத்தனத்தின் மொத்தக் குத்தகை என்பது ஒருபுறம். இந்து மதத்தில் விஷ்ணு அவதாரம் எடுப்பதெல்லாம் அசுரர்களை அழிக்கத் தான் என்பதை மறந்துவிடவேண்டாம்.

தீபாவளிக் கதையும் இந்த ரகத்தைச் சேர்ந்ததே!

நல்லவனாக இருந்தாலும் அவன் அசுர குலத்தவன் என்றால் - சூத்திரன் என்றால் அவனை ஆளவிடாதே- அழித்துவிடு! என்கிற ஆரிய தத்துவம்தான் இந்த வாமன அவதாரக் கதை!

இங்கு மதம், கடவுள், பக்தி என்பதெல்லாம் நம்மை ஒழிப்பதற்கே! இந்தச் சூழ்ச்சி புரியாமல் கடவுள், காடாத்து என்று அலைவது பரிதாபமே!

(நன்றி: விடுதலை 29.08.2012)