Search This Blog

25.9.14

இரணியன் நாடகத்தில் -- பெரியார்

இரணியன் நாடகத்தில்

தோழர் ஈ.வெ.ரா.
                

தோழர்களே!

சென்னை சீர்திருத்த நாடக சங்கத்தாரால் நடிக்கப்பட்ட இந்த முதல் நாடகத்துக்குத் தலைமை வகிக்கும் பெருமை எனக்களித்ததற்கு நன்றி செலுத்துகிறேன்.

நாடகம் என்பது ஒரு விஷயத்தை தத்ரூபமாய் நடித்துக் காட்டுவது என்பதோடு, அதைப் பெரிதும் மக்களின் நடத்தைக்கு வழி காட்டியாகவும், ஒழுக்கங்கள் கற்பிக்கப்படுவதற்கும் பயன் படுத்தப்படுகின்றது என்றும் சொல்லப்படுகின்றது.

ஆனால் அது அந்தப்படி தத்ரூபமாய் நடத்திக் காட்டப்படுவதும் இல்லை. மக்கள் ஒழுக்கத்துக்கும், நடப்புக்கும் வழிகாட்டியாய் நடப்பிப்பதும் இல்லை என்று சொல்லுவதற்கு நாடக அபிமானிகள் மன்னிக்க வேண்டுகிறேன்.

தத்ரூபம் என்பதில் விஷயங்களின் ரசபாவங்களும், உண்மை யாய் நடந்திருக்கும் என்று நினைக்கும்படியான எண்ணமும் ஜனங்களுக்கு விளங்க வேண்டும்.

அந்தப்படி இல்லாமல் நமது நாடகங்கள் பெரிதும் சங்கீதக் கச்சேரி போலவும், காலறக்ஷப சபை போலவும், விகட சபை போலவும், நகைகள் உடுப்புகள் காக்ஷி சாலைகள் போலவும், விஷயங்களுக்குப் பொருத்தமில்லாத பேச்சுக்களை அடுக்கி பேசும் பேச்சுவாத சபை போலவும் விளங்குகின்றது என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. நாடகங்களுக்கு நடிப்புகளில் மிக விஷேச சமயங்களில் அல்லது அசல் விஷயத்திலேயே பாட்டு வரும் சந்தர்ப்பங்களில் தவிர மற்ற சமயங்களில் பாட்டுகள் பொருத்தமற்றது என்பது நமது அபிப்பிராயம்.

உதாரணமாக நெருப்பு பிடித்துவிட்ட சமயத்தைக் காட்ட நடிக்க வேண்டியவர் தடபுடலாய் ஆத்திரப்பட்டு குளருபடியாய் இருப்பது போல் நடிக்க வேண்டுமா? அல்லது தாளம், சுதி, ராகம் முதலியவை களைக் கவனித்து சங்கீத லட்சியத்தில் திரும்பி ஜனங்களுடைய கவனத்தையும் சங்கீதத்தில் திரும்ப விட்டு விட்டால் நடிப்பு சரியானதாக இருக்க முடியுமா என்று கேட்கின்றேன். அதுபோலவே நடிப்புக்குப் பொருத்தமற்ற உடை, நடை, நகை முதலியவைகளுடன் விளங்கினால் விஷயம் நடந்ததாகத் தத்ரூபமாய் கருதப்பட முடியுமா?

மேல்நாடுகளில் ரசபாவங்களுக்காகவும் தத்ரூபமாய் நடந்ததாகக் காட்டப்படும் நடப்புக்காகவும் நடத்தப்படும் ட்றாமாக்களில் பாட்டு என்பதே மிக மிக அருமையாய்த்தான் இருக்கும். சங்கீதத்துக்காக நடக்கும் விஷயத்தை அங்கு ஆப்ரா என்று சொல்லப்படுமே தவிர, ட்றாமா என்று சொல்லமாட்டார்கள். இங்கு சங்கீத வித்வான்களே நாடக மேடையைக் கைப்பற்றிக் கொண்டதானது நாடகக் கலையைச் சங்கீதம் அழித்துவிட்டது என்றும், மக்களது நாடகாபிமானமும் சங்கீதத்தில் திருப்பப்பட்டு விட்டது என்றும் தான் கருத வேண்டும்.

நாடகம் நடிக்கப்படும் கதைகள் விஷயமும் தற்கால உணர்ச்சிக்கும், தேவைக்கும், சீர்திருத்த முறைக்கும் ஏற்றதாயில்லாமல் பழமையைப் பிரசாரம் செய்யவும், மூடநம்பிக்கை, வர்ணாச்சிரமம், ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வு, பெண் அடிமை, பணக்காரத் தன்மை முதலிய விஷயங்களைப் பலப்படுத்தவும், அவைகளைப் பாதுகாக்கவும் தான் நடிக்கப்படுகின்றதே ஒழிய வேறில்லை. அரிச்சந்திரன் கதை, நந்தனார் கதை முதலாகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அரிச்சந்திரன் கதையில் சத்தியம் பிரதானம் என்று சொல்லப்பட்டாலும் சத்திய அசத்திய விஷயம் நடக்காமல் கதையில் அலட்சியமாய் இருக்கிறது. ஜாதி வித்தியாசம், தீண்டாமை, பெண் அடிமை, பார்ப்பன ஆதிக்கம், பணக்காரத் தன்மை, எஜமானத் தன்மை ஆகியவைகள் தான் தலைதூக்கி இருக்கிறது. அது போலவே நந்தன் கதையிலும், ஆள் நெருப்பில் விழுந்து வெந்து போனதுதான் மிளிர்கின்றதே தவிர, உயிருடன் தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக இல்லவே இல்லை. ராமாயணமும் சீதையை படுத்தின பாடு பெண் ஒரு சொத்து போல் பாவிக்கப்படுகிறதும் விளங்கும்.

இப்படிப்பட்ட கதைகள் ஒழிக்கப்பட வேண்டும். சுயமரியா தையும், சீர்திருத்த வேட்கையுமுள்ளவர்கள் அதை நடிக்கக் கூடாது.

இரணியன் கதையில் வீர ரசம், சூட்சித்திரம், சுயமரியாதை ஆகியவைகள் விளங்கினதோடு பகுத்தறிவுக்கு நல்ல உணவாகவும் இருந்தது. ஆனால் சில விஷயங்களில் தலைகீழ் மாறுதலாகவும், கடின வார்த்தையாகவும் காணலாம். சீர்திருத்த நாடகம் என்றாலே மாறுதல் இருந்துதான் தீரும். மாறுதலுக்கு அவசியமானதும் பதிலுக்கு பதிலானதுமான வார்த்தைகள் இருந்தால்தான் பழமை மாற சந்தர்ப்பம் ஏற்படும். அப்படிக்கில்லாமல் இருந்தால் தகுந்த மாறுதல் ஏற்பட இடமிருக்காது. ஆரியப் புராணங்களில் ஆரியர்களல்லாதவர்களை, குரங்கு, அசுரன், ராக்ஷதன், சண்டாளன், பறையன் என்பன போன்ற வார்த்தைகளையும் அது உபயோகிக்கும் முறையையும் பழக்கத்தில் இருந்து வரும் மாதிரியையும் பார்த்தால் இந்த சரித்திரம் படிப்பதில் அவசியமான மாறுதல் ஏற்பட உதவி செய்யுமா என்பது சந்தேகம் தான்.

நிற்க இச்சரித்திரம் உண்டாக்கிய தோழர் புதுவை பாரதிதாசனை நாம் போற்றிப் பாராட்ட வேண்டும். அவர் உணர்ச்சியுடன் உண்டாக்கி இருக்கிறார். இன்னமும் இதுபோல் பல நாடகங்கள் உற்பத்தி செய்ய வேண்டும். பாத்திரர்களுக்கு கற்பித்த தஞ்சை தோழர் டி.என். நடறாஜன் அவர்களின் ஆசிரியத் தன்மை மிகவும் போற்றத்தக்கது. அவர் 20 வருஷமாய் பொதுநலச் சேவையில் இருந்து வருகிறவர். ஜெயிலுக்கும் சென்றவர். அவர்கள் இருவருக்கும் இந்த இரண்டு பதக்கங்களைச் சீர்திருத்த நாடக சங்கத்தார் சார்பாய் சூட்டுகிறேன்.

நாடகத்துக்கு உதவி செய்த தோழர்கள் சி.டி.நாயகம், எஸ்.எஸ்.ஆனந்தம், அழகப்பா முதலியவர்களுக்கும் நன்றி கூறுகிறேன். சிறப்பாக தோழர் மாசிலாமணி முதலியவர்கள் இந்நாடகத்துக்கு விளம்பரம், அச்சுவேலை, காகிதம் முதலிய விஷயங்களில் திரேகப் பிரயாசை, பொருள் செலவு முதலியவைகள் செய்ததுடன் இவ்வளவு சிறப்புக்குக் காரணமாய் இருந்ததாகவும் கேட்டு மிகவும் மகிழ்வதோடும் அவரையும் பாராட்டி நன்றி செலுத்துகிறேன்.

இந்த புதிய நாடகத்துக்கு இவ்வளவு தோழர்கள் விஜயம் செய்து கௌரவித்ததற்கும், நாடக பாத்திரர்களுக்கும் சபையாருக்கும் ஊக்கமளித்ததற்கும் நான் நன்றி செலுத்துகிறேன்.

--------------------------------------சென்னை சீர்திருத்த நாடக சபையார் 09.09.1934 மாலை விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடித்துக் காட்டிய நாடகத்தின் இடையில் சீர்திருத்த நாடகத்தின் தேவை குறித்து பெரியார் அவர்கள்  பேசியது.”பகுத்தறிவு” சொற்பொழிவு 16.09.1934

8 comments:

தமிழ் ஓவியா said...

தூக்கமும் மருந்துதான் - மறவாதீர்!

போதிய தூக்கம் என்பதை நாம் ஒவ்வொரு நாளும் பெறுவது மிக மிக அவசியம். உடல் நலத்திற்கும் உள்ள வளத்திற்கும் உணவு- சத்துணவு - எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தூக்கமும்கூட!

தூக்கமின்மை என்பதும், மிகக் குறைந்த அளவே ஒருவர் தூங்குகிறார் என்பதும் விரும்பத்தகாத ஒன்று - உடல் நலக் கண்ணோட்டத்தில்!

செரிமானத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் போதிய தூக்கம் - உணவு, தூய காற்று, ஓய்வு, இளைப்பாறுதல் ஸிமீறீணீஜ்ணீவீஷீஸீ போலவே மிகவும் இன்றியமையாதது.

மிகக் குறைந்த வயதுள்ள குழந்தைகள் அதிக நேரம் தூங்க வேண்டும். வயது ஏற, ஏற இதன் கால அளவுதானே சுருங்கி, ஓர் ஒழுங்கான கட்டுக்குள் வரும்! (7 மணி - 8 மணி நேரம்).

குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் சென்று, குறிப்பிட்ட நேரத்தில் விழித்து எழுந்து விடுவது என்ற பழக்கம், வழக்கமாகிவிட, உடம்பு என்ற கடிகாரம் அதனை வகைப்படுத்திக் கொள்ள தானே முயன்று வெற்றி பெற்று விடுகிறது!

உடலின் மூளை மற்ற அவய வங்கள் எல்லாம் இந்த உடற் கடிகாரம் சொன்னபடி கேட்க முன்வருவது இயற்கைக் கூறுகளின் அதிசயங்களில் ஒன்று.

அளவோடு தூங்கி எழுவது என்பது உழைப்பவர்களுக்கு ஒரு வகை புத்துணர்வைத் தரும் அரிய மாமருந்தாகும்.

நாளும் திட்டமிட்ட பணிகள், உடற்பயிற்சி, போதிய நடைப்பயிற்சி, இரவில் படுக்குமுன் தொலைக்காட்சி பார்க்காமல், ஏதாவது விரும்பும் ஓர் நூலின் சில பக்கங்களையாவது படித்து, துயில் கொள்ளச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் இயற்கை யாகவே தூக்கம் நம் கண்களைத்தானே வந்து தழுவும்.

இரவில் போதிய உணவை எடுத்துக் கொள்ளத்தவறும் போதோ, அல்லது பல்வேறு, மனதை அலைக்கழிக்கும் பிரச்சினைகள் உள்ளத்தை உலுக்கும் போதோ, எளிதில் தூக்கம் வராது; அப்போது உடனே இரவு எத்தனை மணியானாலும் எழுந்து உட்கார்ந்து கொண்டு புத்தகங்களை எடுத்து உங்கள் கண்களில் தூக்கம் வந்து அசத்தும் வரை படித்துக் கொண்டே இருங்கள்; மனமும், வேறு திசையில் செனறு மன உளைச்சலைத் தவிர்க்க உதவிடக் கூடும்.
விளக்குகள் அணைக்கப்பட்டு, இருட்டு வந்துவிடும்போது, நமது மூளை முற்றிலும் வேறு வகையாக - அதாவது நாம் விழித்திருந்து வேலை பார்க்கும் போது இருந்த முறைக்கு மாறாக - இயங்குமாம்.

இரவில் நீரோன் என்பவை ஓர் குழுவாகி, இராணுவப் படை எப்படி அணிவகுத்து அதன் பணி முடிக்க அணியமாகிறதோ அதுபோலத் தயாராகி விடுகிறது, மின்காந்த அலைகளும், நமது மூளையை மிக அருமையான மென்மை யான வகையில் லேசாக தழுவுவது போன்று அலையால் வருடிக் கொடுத்து இதமான சுகத்தை உருவாக்குவதால், ஒரு வகை புதுவகை சக்தியைத் தந்து, தூக்கத்தின் மூலம் புதியதோர் வலி மையைச் சுட்டி அண்மையில் இணையத் தில் ஓர் கட்டுரை வந்துள்ளது!

மதியம் பகல் உணவுக்குப்பின், ஒரு பூனைத் தூக்கம் ஷிவீமீணீ (சியெஸ்டா) லேசாகப் போட்டால், அந்த சிறிய இளைப்பாறுதல் மூலம் மேலும் மற்றைய நேரப் பணிகளில் நமக்குத் தெளிவும், தெம்பும் ஏற்படக் கூடும். குறிப்பாக வயது முதிர்ந்த மூத்த குடி மக்களான பெரிய வர்களுக்கு இது எப்போதும் நல்லது.

டெல்லியில் 92 வயதுக்கு மேலும் மிகவும் சுறுசுறுப்புடன் செயலாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் - முதுபெரும் தலைவர் - தோழர் அர்கிஷண்சிங் சுர்ஜித் அவர்கள் எவ்வளவு பணிகள் இருந்தாலும் பகல் 2 மணி முதல் 4 மணி வரை தூக்கம் - ஓய்வைத் தவறவே மாட்டாராம்.

தொலைப்பேசியை அணைத்து விடுவார் ரிசீவரை எடுத்துக் கீழே - மணியடிக்க வாய்ப்பில்லாமல் - வைத்து விடுவாராம்.

பல முறை சந்திக்க விரும்பிய எங்கள் இருவருக்கும் நேரம் வாய்ப் பாக அமையாமலேயே இருந்து வந்தது.

ஒரு நாள் டில்லியில் நான் இருந்த போது அவர் வீட்டில் சந்திக்க ஏற்பாடு செய்து நேரம் கொடுத்தார்; நான் விமானத்திற்கு வர வேண்டி இருந் ததைச் சொன்னேன் அப்படியானால் 2 மணிக்கு வாருங்கள் என்றார்; மற்ற தோழர்கள் வியப்படைந்தனர். அவர் 2 மணிக்கா தந்தாரா? யாருக் குமே அந்த நேரத்தை ஒதுக்க மாட்டாரே என்றனர். விதிக்கு விலக்காக நான் உங்களைச் சந்திக் கவே என் வழமையான தூக்க நேரத்தைச் சற்று தள்ளி வைத்தேன். நான் நன்றி கூற, பேசி எவ்வளவு விரைவில் உரையாடலை முடித்துக் கொள்ளும். அந்த முயற்சியை இங்கிதத்தோடு செய்தேன். அவர் அதைப் புரிந்து கொண்டு, நான் இன்று பெரியாருக்காக எனது ஓய்வை, தூக்கத்தைத் தள்ளி வைத்துள்ளேன்.

அதுபற்றி கவலைப்படாமல் நீங்கள் என்னிடம் பேசிவிடை பெறலாம்; தயங்க வேண்டாம் என்று கூறி, எத்தகைய பெருந்தகையாளர் கொள்கை உணர்வு படைத்த புரட்சி வீரர் என்பதை நிரூபித்தார்!

எனவே, தூக்கம் அனைவருக்கும் பொது உடைமைதானே! ஏழை களுக்கே அது பெரிதும் தனி உடைமை; பணக்கார முதலாளிகளை அது அவ்வளவு எளிதாக நெருங்குவ தில்லை! முதலாளித்துவத்திற்கும் தூக்கத்திற்கும் அத்தகைய விசித்திர உறவு - இல்லையா?

- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/88273.html#ixzz3ETSvEiTA

தமிழ் ஓவியா said...

திருவாசகத்தில் திரளும் காமச்சுவை!


திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என ஆத்தீக நண்பர்கள் மிக்க பெருமையுடன் கூறிக் கொள்வதும், சைவப் பற்றாளர்கள் இறைவனின் சிறப்பையும், அடியார்களின் உள்ளத்தை உருக்கி இறைப்பணிக்கு ஏற்புடையதாக்கியும் நிற்கும் பெருநூல் என்றும் கூறுவர்.

சைவ குரவர் நால்வரில் பாண்டி மாமன்னனிடம் அமைச்சராகப் பணியாற்றி, அரசுப் பணத்தை பக்திப் பரவசத்தால் திருப்பணிக்குச் செலவிட்டு அதன் காரணமாக மன்னன் தண்டனை வழங்க, இறைவனின் அருளால் பெருமை கொண்டதாகக் கூறப்படும் மாணிக்கவாசகர் பாடிய நூல் பக்திச் சுவையைப் பரப்புவதை விட பாமரரும் படிப்பதைப் பக்கம் நின்று கேட்பதால் மயங்கும் காமச்சுவையை அதிகம் பரப்பி நிற்கிறது.

மயக்கம் தரும் அபின் என்ற போதைப் பொருள் சீன நாட்டிற்குள் விற்கக்கூடாது என்பதற்காக நடைபெற்ற போரைப் போல, இந்த மயக்கம் தரும் காமச்சுவையை ஆரியம் பயன்படுத்தி தமிழினத்தை அடிமை கொண்டது. அதைப் போலவே நுண்கலைகளையும் கருவிகளாகப் பயன்படுத்தி ஆரியம் ஆட்சி மன்றம் ஏறியது. அந்த மயக்கத்தைப் போக்குவதுதான் நமது நோக்கமே தவிர, காமச்சுவையின் பால் கொண்ட காதலால் அல்ல என்பதை முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

ஆத்திகத்தின் மோசடி வேலை

ஆத்திகத்தின் பெயரால் எத்தனையோ மோசடிகள் நடைபெறுவதைப் போலவே காமச்சுவையும் ஒன்று என்பதை விளக்கும் போது விரசம் ஏற்படுவதை உணர்ந்தாலும், உள்ளதை உள்ளபடி உரைப்பது இன நலத்திற்கு ஏற்புடையது என்பதால் எழுதுகிறோம்.

காமம் என்பது திருக்குறளிலும் கையாளப்பட்ட சொல் என்றாலும் காமத்து பாலில் உணவிற்கு உப்பைப் போல் பயன்படுத்தப்பட்ட காமம் ஆண்டவனின் பெருமையை - உயர்வை உரைக்க எழுந்ததாகக் கூறப்படும் திருவாசகத்தில் காமச்சுவை ஆறெனப் பெருகி, பெருவெள்ளமாகப் பெருக்கெடுத்தோடுவதை காண் கிறோம்.

எனவே ஆண்டவன் பெயரால் ஆரியர்களும், ஆரிய அடிவருடிகளும் நடத்தும் காமச்சுவை மிகுந்த நாடகத்தில் பல காட்சிகள் உண்டு. அவைகளில் ஒன்று இவண் காட்சிக்கு வருகிறது. காட்சி மாணிக்கவாசகரின் மணிமொழிகள் என்று பக்தகோடிகள் கூறும் திருவாசகத்திலிருந்து-

காமத்தைப் பரப்பும் கருவி

அணங்குகளின் அழகிற்கு அணி செய்வது கருங்கூந்தல் அதற்கு மெருகூட்டுவது செவ்வாய். கார்காலத்து ஆண்மயில் நடையினையும் கூறி பெண்ணினத்தைப் போற்றிய மாணிக்கவாசகர் போதும் என்று நிறைவு கொண்டாரா? இல்லையே பக்தர்களின் உள்ளத்தை உருக்க வேண்டுமல்லவா? ஆகவே, மேலும் பெருக்குகிறார் பாருங்கள். ஒன்றோடொன்று நெருங்கி, இறுமாப்புக் கொண்டு உள்ளே களிப்புக் கொண்டு, பட்டிகையறும் படாமிகைத்து, இணைத்து எழுந்து ஒளிவீசி எதிரே பருத்து, இடுப்பானது இளைப்புற்று வருந்தி நிற்கும் அளவிற்கு எழுந்து கொங்கைகளின் நடுவே ஈர்க்கும் கூட நுழைய முடியாத அளவிற்கு வாரித்து, விம்மிப் புடைத்து எழுந்து நிற்கும் கொங்கைகளையுடைய பெண்கள் என்று எழுத்தோவியத்தால் இறைவன் புகழ்பாடி இறையடி யார்களின் நெஞ்சில் இன்பப் பெருக்கைத் தாராளமாகப் பாயவிட்ட திருவாசகத்தைப் போல் வாழ்க்கைக்கு ஒரு வாசகம் உண்டா?

இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக திருவாசகப் பாடலையே தருகிறோம். படித்துப் பயன்பெறுங்கள்.

கருங்குழற் செவ்வாய்

வெண்ணகைக் கார்மயில்

ஒருங்கிய சாயல் நெருங்கிஉள் மதர்த்துக்

கச்சற நிமிர்ந்து கதிர்த்துமுன் பணைத்(து)

எய்திடை விருந்த எழுந்து புடைபாத்(து)

ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்தம்

மாணிக்கவாசகர், திருவாசகம் அடியார்கள் ஆண்டவனுக்கு புனைந்த பாமாலையில் பாவையர்களின் உறுப்பு நலம் பாராட்டி புனையப்பட்ட பாமாலைகள் ஆண்டவனைக் காட்டுவதற்கு பதில் ஆரணங்குகளின் மீது மோகங்கொள்ளச் செய்வதற்குக் காரணமாக அமைந்து விட்டது.

எனவே! ஆண்டவனும் இல்லை! அவன் புகழ்பாட எழுதப்பட்ட பாமாலைகள் ஒழுக்கத்தைக் கொடுக்ககவுமில்லை. தமிழனத்தைக் கெடுத்த குற்றவாளிகளில் மாணிக்க வாசகரும் ஒருவர், அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறார். மக்கள் மன்றம் கூறும் தீர்ப்பிற்குக் காத்திருப்போமாக!

-தஞ்சை ஆடலரசன்

Read more: http://viduthalai.in/page-7/88253.html#ixzz3ETTqv1Wi

தமிழ் ஓவியா said...

நீர் பொங்குமாம்!


12 ஆண்டிற்கு ஒருமுறை மகாமகக் குளத்தில் நீர் பொங்கி வருவதாக நேரில் பார்த்ததாகவே சிலர் கூறுகிறார்கள்.

தண்ணீரை நெருப்பில் வைத்துக் காய்ச்சினாலல்லது, பொங்குகிற வஸ்துவை அதில் போட்டாலல்லது தண்ணீர் எப்படி பொங்க முடியும்? மாமாங்க தினத்தன்று தண்ணீர் குளத்தில் விட்டு வைத்த அளவுக்கு மேல் அதிகமாகக் காணப்படுவதாக சில பார்ப்பனர்கள் கதை கட்டி விடுகிறார்கள்.

மக்களைத் தண்ணீருக்குள் இறங்கவிடாமல் தடுத்து நிறுத்தி பிறகு தண்ணீரை பார்த்தால் அப்போது அது பொங்குகிறதா இல்லையா என்பதின் உண்மையை கண்டுபிடிக்க முடியும்.

அப்படிக்கில்லாமல் பதினாயிரக் கணக்கான மக்களை குளிக்க விட்டு அதன்பிறகு தண்ணீர் அதிகமாகி இருக்கிறது என்று சொன்னால் அதை எப்படி தண்ணீர் என்றே சொல்ல முடியும்? குளிக்கப்போகும் மக்கள் அந்தக் குளிரில் தங்கள் சிறுநீரைக் கழிக்க அந்தக் கூட்டத்தில் குளக்கரையில் எங்கு இடம் காணமுடியும்?

ஆதலால் குளிக்கிறவர்கள் அவசர அவசரமாகத் தண்ணீரில் இறங்கி அங்கு சிறுநீர் கழிக்க ஏற்பட்டு விடுவதன் மூலம் குளத்தின் தண்ணீர் பெருகி இருக்கலாம். அந்த சிறுநீரின் தன்மையால் குளத்தில் குமிழிகள் காணப்படலாம். அன்றியும் மக்கள் ஏராளமாகத் தண்ணீரில் இறங்குவதாலும் தண்ணீர் உயர்ந்து இருக்கலாம்.

இந்த மாதிரி காரணங்களால் தண்ணீர் மட்டம் 4, 2 படிக்கட்டுகளுக்கு உயர்ந்து விட்டால், அதைப் பொங்கிற்று என்று சொல்லுவது அறிவுடைமையாகுமா என்று கேட்கிறோம்.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/88254.html#ixzz3ETUIYGxm

தமிழ் ஓவியா said...

எப்போது உங்கள் மனச் சாட்சியும், பகுத்தறிவும் இடங் கொடுத்து, நீங்கள் கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்து விட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச் சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு கழகக் கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றி நடக்க வேண்டியது தான் முறை.

- தந்தைபெரியார்

Read more: http://viduthalai.in/page-7/88254.html#ixzz3ETUhAgXX

தமிழ் ஓவியா said...

கறுப்புக்கொடி ஏன்? கலைஞர் பேட்டி


சென்னை, செப்.25- தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார். பேட்டி வருமாறு:

செய்தியாளர்: இன்று (25.9.2014) நடைபெறும் கறுப்பு தினத்தையொட்டி என்ன கூற விரும்புகிறீர்கள்? கலைஞர்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார் பிலும், டெசோ அமைப்பின் சார்பிலும் அறிவிக்கப் பட்டு, இன்று நடத்தப்படுகின்ற இந்த கறுப்பு நாளை தமிழகத்திலே மாத்திரமல்ல; உணர்ச்சியுள்ள தமி ழர்கள் எங்கெங்கு வாழ் கிறார்களோ அங்கெல்லாம் - எங்கள் அறிவிப்புக்கு இணங்க கறுப்பு தினமாக கடைப்பிடிக் கிறார்கள். செய்தியாளர்: மத்திய அரசுக்கு இதுபற்றி தாங்கள் விடுத்த வேண்டுகோளை அவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லையே?

கலைஞர்: நாங்கள் எங்கள் வேண்டு கோளை இப்போது உள்ள மத்திய அரசு மாத்திரமல்ல; ஏற் கெனவே நடைபெற்ற மத்திய அரசும் உணருகின்ற வகையில், எங்களுடைய எதிர்ப்பையும், மறுப்பையும் தெரிவித்திருக்கிறோம். அதை இன்று உள்ள மத்திய, மாநில அரசுகள் செவிமடுக்க மறுத்தாலும் கூட, இந்தக் கறுப்பு தினம் உருவாக்கியுள்ள உணர்வையும், எழுச்சி யையும் தமிழர்கள் உள்ள வரையில் மறக்கமாட் டார்கள். - இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் செய்தி யாளர்களிடம் கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/88201.html#ixzz3ETVgDdbT

தமிழ் ஓவியா said...

எனது ஆசை?


எனக்கு ஆசை எல்லாம், மக்கள் பகுத்தறிவாளர்களாக ஆகவேண்டும்; ஜாதி ஒழியவேண்டும்; உலகில் பார்ப்பனர் இருக்கக்கூடாது. இதுதான் எனது கொள்கை. - (விடுதலை, 28.8.1972)

Read more: http://viduthalai.in/page1/88211.html#ixzz3ETW3wqRm

தமிழ் ஓவியா said...

உட்காராமல் நடமாடினால் நீண்டநாள் வாழலாம்! சுவீடன் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!


உட்காராமல், சுறுசுறுப்பாக நடமாடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. குறைந்த பட்சம், நின்று கொண்டாவது இருக்க வேண்டும். இதன் மூலம் நமது டி.என்.ஏ. மரபணு மாற்றமடைந்து, நீண்ட காலம் வாழ முடியும் என சுவீடன் நாட்டு விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

உட்காராமல், சுறுசுறுப்பாக நடமாடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. குறைந்த பட்சம், நின்று கொண்டாவது இருக்க வேண்டும். இதன் மூலம் நமது டி.என்.ஏ. மரபணு மாற்றமடைந்து, நீண்ட காலம் வாழ முடியும் என சுவீடன் நாட்டு விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

உட்காருவதை குறைத்து, சுறுசுறுப்பாக செயல்பட்டால், நமது உடல் திசுக் களில் உள்ள வயதாகும் தன்மையின் வேகம் குறையும். நடமாடாவிட்டாலும், குறைந்தபட்சம் நின்று கொண்டாவது இருக்க வேண்டும். இவ்விதம் நாம் செய்தால், நமது டி.என்.ஏ. மரபணுக்களில் மாற்றம் நிகழும். இவற்றின் நுனியிலுள்ள டெலோமெரஸ் என்ற நுண்ணிய மூடிகள் நீளமாக வளர்ந்து, நீண்டநாள் வாழ்வது அதி கரிக்கும்.

இவ்வாறு சுவீடன் நாட்டு அறி வியலாளர்கள் ஆராய்ச்சி மூலம் கண்டு பிடித்துள்ளார்கள். சுவீடன் நாட்டு விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிக்காக 68 வயதுடைய, உடல் பருமனான சிலரைத் தேர்ந்தெடுத்தனர். இவர்கள் அனைவரும் பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே பொழுதுபோக்கும் குணமுடையவர்கள். இவர்களை இரு பிரிவாக பிரித்தனர்.

ஒரு பிரிவினரிடம், உட்காருவதை குறைக் குமாறும், முடிந்தவரை நடமாடுமாறும் கூறினர். குறைந்த பட்சம், நிற்பதையாவது அதிகரிக்கும் படியும் தெரிவித்தனர். அடுத்த பிரிவினரிடம், வழக்கமான நடவடிக் கைகளை மேற் கொள்ளும்படி கூறினர். இவ்விதம் 6 மாதங்கள் செயல்படும்படி அறிவுறுத்தினர்.

6 மாதங்கள் சென்றபின் அனைவரது உடல் நிலையையும் விஞ்ஞானிகள் பரிசோதித்தனர். இதில், முதல் பிரிவினரின் டெலோ மெரஸ் கணிசமாக வளர்ந்து, அவர்கள் இளமை துடிப்போடு செயல்பட்டனர். இரண்டாவது பிரிவினரின் டெலோ மெரஸ், அளவில் குறைந்திருந்தது.

உட்காராமல் சுறுசுறுப்பாக நடமாடினால், குறைந்த பட்சம் நிற்பதை அதிகரித்தால், நீண்ட காலம் வாழலாம். இறக்கும் போதும், நமது உடல் இளமை யாகவே காணப்படும். இவ்வாறு சுவீடன் நாட்டிலுள்ள உப்சலா பல்கலைக்கழக பொது சுகாதாரத்துறை பேராசிரியர் பெர் ஜோக்ரென் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்துள்ளார்

Read more: http://viduthalai.in/page1/88197.html#ixzz3ETX2QsXy

தமிழ் ஓவியா said...

பெரியார் வழியில் நண்பர்களாக வாழும் அமெரிக்கர்கள்


அமெரிக்காவில் திருமணம் ஆகாதவர்கள் குறித்த ஆய்வு ஒன்று 20 வயது முதல் 25 வயதுடைய ஆடவர் - மகளிரிடம் அண்மையில் நடத்தப்பட்டது. அதில், முன்பு எப்போதையும் விட தற்போது இளம் வயது அமெரிக்கர்கள் திருமணத்தில் ஆர்வம் இல்லாதவர்களாகவே உள்ளனர் என்பது தெரிய வந்ததுள்ளது.

அமெரிக்க மக்கள் தொகையான 21 கோடியில் சுமார் 20 சதவீதம் பேர் அதாவது, 4 கோடியே 20 லட்சம் பேர் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார்களாம். குறிப்பாக ஆண்களில் 23 சதவீதம் பேரும், பெண்களில் 17 சதவீதம் பேரும் இப்படி உள்ளனர்.

மேலும் தற்போது, அமெரிக்காவில் ஆண்களின் முதல் திருமண வயது 29 ஆகவும், பெண்களின் முதல் திருமண வயது 27 ஆகவும் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் மாறி வரும் வாழ்க்கை முறைதான்.

பெரும்பாலான இளம் இணையர் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்கிறார்களாம். இன்னும் பலர் குழந்தை பெற்றபிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று திருமணத்தை தள்ளிப் போடுகிறார்களாம்.

Read more: http://viduthalai.in/page1/88184.html#ixzz3ETXGMsFc