Search This Blog

1.9.14

ஒரு கோவிலையாவது பார்ப்பனர்கள் கட்டியிருப்பார்களா?-பெரியார்


காலத்திற்கேற்ப வாழுங்கள்


நம் கழகமும், நமது முயற்சியும், பிரசாரமும் எந்த ஒரு தனிப்பட்ட வகுப்பு நலத்துக்கோ, தனிப்பட்ட மனிதனின் சுயநலத்துக்கோ அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும்.


பொதுவாகவே நம் நாட்டு மனித சமுதாய முன்னேற் றத்தின் அவசியத்திற்காகவே பாடுபடுகிறோம்.

இன்று நாம் நம்மையும், மற்ற வெளிநாட்டு உலக மக்களையும் நோக்கும்போது நமது மூளை எப்படி இருக்கிறது? மிக மிகத் தாழ்ந்த நிலையாக இல்லையா?

நாமும், நம் நாடும் உலகில் மிகவும் பழைமையானவர் களாவோம். மற்ற நாட்டவரைவிட நம் பெருமையும், வாழ்வும் மிக மிக உயர்ந்த தன்மையில் இருந்ததாகும்.

அப்படிப்பட்ட நிலையில் இருந்த நாம், நமது நாடு, இன்று பழிப்புக்கு இடமான தன்மையில் இருக்கிறோம். அதாவது நாம் சமுதாயத்தில் கீழான மக்களாக்கப்பட்டு, வாழ்வில் அடிமைகளாக இருக்கும்படி செய்யப்பட்டு விட்டோம்.

இன்றைய உலகம் மிகவும் முற்போக்கடைந் திருக்கிறது. மக்கள் அறிவு மிகவும் மேலோங்கி இருக்கிறது. மக்கள் வாழ்வும் எவ்வளவோ மேன்மை அடைந்திருக்கிறது. ஆனால் நாம் மாத்திரம் காட்டுமிராண்டிகளாகவே இருந்து வருகிறோம். இதற்குக் காரணம் எதுவானாலும் நாம் சமுதாயத்தில் கீழ்ஜாதி மக்களாக இருந்து வருவதல்லாமல், நம்முடைய பழக்கம், வழக்கம் முதலிய காரியங்களும், அதற்கேற்ற வண்ணம் உலகோர் பழிக்கும்படியிருக்கிறது.
நம் பெண் மக்கள், தாய்மார்கள் இதை உணரவேண்டும். நாம் சூத்திரர்களாகவும், நம் பெண்கள் சூத்திரச்சிகளாகவும் இருக்கிறோம் நம்மில் 100க்கு 10 பேருக்குக்கூட கல்வி இல்லை. நாம் 100க்கு 90 பேர் உடலுழைப்புப் பாட்டாளி மக்களாகக் கீழ் வாழ்வு வாழுகிறோம்.

இந்த நிலைக்குக் காரணம் என்ன? நம் இழிவையும் கஷ்டத்தையும் பற்றி நமக்கு ஏன் கவலை இலலை? பாட்டாளி மக்களாகிய நாம் ஏன் தாழ்ந்த ஜாதிகளாகக் கருதப்பட வேண்டும்? அதுவும் இந்த விஞ்ஞான காலத்தில்? என்று உங்களை, நீங்களே கேட்டுப் பாருங்கள்.

நம்மிடத்தில் எந்தவிதமான இயற்கை இழிவோ, இயற்கைக் குறைபாடோ கிடையாது. நாம் சமுதாயத் துறையில் கலைப்படு வதில்லை. நம் சமுதாய வாழ்வுக்கு ஆன காரியங்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. நாம் தனித்தனியாக, தத்தம் நலம் பேணி வெறும் சுயநலக்காரர் களாகி, பொதுவில் தலைதூக்க இடமில்லாமல் போய் விட்டது.

நமது சமுதாய வாழ்வுக்கென்று, இன்று நமக்கு எவ்விதத் திட்டமும் கிடையாது. நம் வாழ்வுக்கு, நமக்கு, பொருத்தமில்லாதவைகளை மதம், கடவுள், தர்மம் என்று சொல்லிக்கொண்டு அவைகளுக்கு அடிமையாகி வாழ்வது தான் நம்மைத் தலையெடுக்க வொட்டாமல் செய்து விட்டது.
நமக்கு நல்வழிகாட்டவும், அறிவைப் பெருக்கவும், மனிதத் தன்மையடையவும் நல்ல சாதனம் கிடையாது. நம் மதம், கடவுள், தர்மம் என்பவை நமக்குக் கேடானதாக இருந்து வருவதை நாம் உணரவில்லை.
நம் மதம் நம்மை என்றைக்குமே முன்னேற்றாததாக இருந்து வருகிறது. மதத்தின் பயனாகத்தான் நாம் சூத்திரர், சூத்திரச்சி, கடை ஜாதியாக இருக்கிறோம்.

நம் கடவுள்கள் நம்மை ஏய்ப்பவையாக, நம்மை மடையர்களாக ஆகும்படியாக ஆக்கி வருகிறது.

நமது தர்மங்கள் என்பவை நம்மை முயற்சி இல்லாதவர்களாக ஆக்கிவிட்டன.
ஆகையால், நாம் இத்துறைகளில் எல்லாம் பெருத்த மாறுதல்களையடைய வேண்டும்.

நம் கடவுள் தன்மையில் இருந்து வரும் கேடு என்ன வென்றால், கடவுளை ஒரு உருவமாகக் கற்பித்துக் கொண்டு, அதற்கு ஆக வீடு வாசல், (கோவில்) பெண்டு பிள்ளை, சொத்து சுகம், போக போக்கியம் ஆகியவை செய்து கொடுத்து அனுபவிக்கச் செய்கிறோம். அது மாத்திரமல்லாமல் நாம் கற்பனை செய்து, நாம் உண்டாக்கி, நாமே மேல்கண்டபடி வசதியும் செய்து கொடுத்துவிட்டு, அப்படிப்பட்ட கடவுள் நம்மை இழி ஜாதியாய்ச் சிருஷ் டித்தது என்று கூறிய எவனோ அயோக்கியன் பேச்சைக் கேட்டுக் கொண்டு, நம்மையும் நாமே இழி ஜாதியாய்க் கருதிக் கொண்டு, அக்கடவுளைத் தொடவும், நெருங்கவும் செய்வது தோஷம் - கூடாது என்று நம்பி எட்ட நிற்கிறோம்.
இதனால் நம்மை நாமே கீழ்மைப் படுத்திக் கொண்டோம் என்று ஆகிறதா? இல்லையா? இப்படிப்பட்ட மடத்தனமும், மானமற்றதனமும் உலகில் வேறெங்காவது காணமுடியுமா?

இன்றைய நம் கோவில்கள் எவ்வளவு பெரிய கட்டடங்கள்? எவ்வளவு அருமையான சிற்பங்கள்? அவை களுக்கு எவ்வளவு கோடி ரூபாய் சொத்துகள்? அவை களுக்கு எவ்வளவு பூசை உற்சவ போக போக்கியங்கள்? இவை யாரால் ஏற்பட்டன? யாரால் கொடுக்கப்பட்டன? ஆனால், அவை  மூலம் பயனடைந்து, உயர்ந்த மக்களாக ஆகிறவர்கள் யார்? அவைகளுக்கெல்லாம் அழுதுவிட்டு, கிட்ட நெருங்கக்கூடாத மக்களாய், எட்டி நின்று இழிவும், நட்டமும் அடைகின்றவர்கள் யார்?

நீங்கள் உண்மையாய்க் கருதிப் பாருங்கள்!

இந்த நாட்டில் உள்ள பல ஆயிரக்கணக்கான கோவில் களில், ஒரு கோவிலையாவது, மேல் ஜாதிக்காரர் என்று உரிமை கொண்டாடும் பார்ப்பனர்கள் கட்டியிருப்பார்களா? அவைகளுக்கு இன்று இருந்துவரும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பெறுமான சொத்துகளில், ஒரு ரூபாய் பெறு மான சொத்தாவது பார்ப்பனர்களால் கொடுக்கப்பட்டி ருக்குமா?

நாம் கோவில்கட்டி, நாம் பணம் கொடுத்து, பூஜை உற்சவம் செய்வித்து, இதற்குப் பணம் கொடுத்த நாம் ஈன ஜாதி, இழி ஜாதி, நாலாஞ் ஜாதி, சூத்திர ஜாதி, அய்ந்தாம் ஜாதி, கடை ஜாதி என்பதாக ஆவானேன்? நம்மைப் பல வழியாலும் ஏய்த்துச் சுரண்டி அயோக்கியத் தனமாகக் கொள்ளை கொண்டு வாழும் பாடுபடாத சோம்பேறிப் பித்தலாட்டப் பார்ப்பனன் மேல் ஜாதியாக இருந்து வருவானேன்? இதைச் சிந்தித்தீர்களா? சிந்திக்க யாராவது இதுவரை நமக்குப் புத்தி கூறி இருக்கிறார்களா?

நாம் ஈனஜாதி, இழி மக்கள் என்று ஆக்கப்பட்டதற்குக் காரணம் இந்தக் கடவுள்கள் தான் என்பதையும், நாம் முட்டாள்கள், மடையர்கள் ஆனதற்குக் காரணம் இந்தக் கடவுள்களுக்குக் கட்டடம் சொத்து போக போக்கியச் செலவு கொடுத்ததுதான் என்பதையும் இப்போதாவது உணரு கின்றீர்களா? இல்லையா?

அதுபோலவேதான் நம் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் இந்து மதம் என்பது நம்மைச் சூத்திரனாகவும், நம்மை ஏய்த்துப் பிழைக்கும் பார்ப்பானைப் பிராமணனாகவும் ஆக்கியிருக் கிறதா? இல்லையா?
அதுபோலவேதான் நம் தர்மங்கள் என்று சொல்லப் படும் மனுதர்மம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்களில் அல்லாமல் வேறு எதனாலாவது, நம்மைச் சூத்திரன், சூத்திரச்சி, வேசி மகன், தாசி மகன், அடிமை, கீழ்ஜாதி என்று யாராவது சொல்ல இடமிருக் கிறதா? காரண காரியங்கள் இருக்கின்றனவா?

ஆகவே நமது இழிவுக்கும் ஈனத்துக்கும் மேற்கண்ட நம் கடவுள், மதம், தர்ம சாஸ்திரங்கள் எனப்பட்டவை அல் லாமல், வேறு ஒன்றும் காரணம் அல்ல என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?

நமது மேன்மைக்கு, நல்வாழ்வுக்கு, நமது இழிவு நீங்கி மனிதத் தன்மை வாழ்வு வாழ்வதற்கு, மனித சமுதாயமே பகுத்தறிவுடன் உயர்ந்த ஜீவப்பிராணி என்பதைக் காட்டிக் கொள்வதற்கு, நமது இன்றைய நிலையில் இருக்கும் கடவுள், மதம், தர்மம், நீதி முதலியவை பெரிய மாற்ற மடைந்தாக வேண்டும்.
நமது கடவுள்கள் காட்டுமிராண்டிக் காலத்தில் கற்பிக்கப் பட்டவை, அல்லது கண்டு பிடிக்கப் பட்டவை, அல்லது நமக்குத் தெரிய வந்தவை. நமது மதமும், மனிதனுக்கு நாகரிகம், பகுத்தறிவுத் தெளிவு இல்லாமல் மிருகப் பிராயத்தில் இருந்தபோது, அப்போ துள்ள அநாகரிக மக்களால் உண்டாக்கப் பட்டதாகும். நமது ஒழுக்கம் நீதி என்பவைகளும் அக் காலத்துக்கு ஏற்ப, அக்காலத்தில் உள்ள அறிவுக் கேற்ப ஏற்பட்டவையாகும்.

இன்று காலம் மாறிவிட்டது, இயற்கை கூட மாறிவிட்டது. அறிவின் தன்மை, அனுபவத்தன்மை மாறிவிட்டது. மனிதனுடைய மனோதர்மம், ஆசாபாசம், ஆற்றல் மாறிவிட்டன. இப்படிப்பட்ட இக்காலத்துக்கு, 20ஆம் நூற்றாண்டுக்கு 4000ஆம் 5000ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கடவுள், மதம், தர்மம், நீதி செல்லுபடியாக முடியுமா?

ஆகவே இன்றைக்கு ஏற்றபடியாக இவை மாற்றப்பட்டாக வேண்டும். இன்று எந்த ஒருஒழுக்கத்தை, நீதியை நாம் விரும்புகிறோமோ, மற்றவர்களிடம் எதிர்பார்க்கின்றோமோ அப்படிப்பட்ட நீதியும், ஒழுக்கமும் கொண்ட கடவுள் மதம் வேண்டும். எப்படிப்பட்ட அறிவை முன்னேற்றத்தை விரும்புகிறோமோ, அப்படிப்பட்ட கடவுள், மதம், நீதி, தர்மம் கொண்ட கடவுள், மதம் வேண் டும். இன்று அப்படிப்பட்ட கடவுள், மதம் நமக்குண்டா? நம் கடவுள்களிடம் இல்லாத அயோக்கியத்தனங்கள் இன்று உலகில் எந்த அயோக்கியனிடமாவது உண்டா? நம் மதத்தில் இல்லாத காட்டுமிராண்டித்தனங்கள், மூடநம்பிக் கைகள் எந்த மடையனிடமாவது - குடுக்கைத் தலையனிட மாவது உண்டா? நான் மதத்தின் மீது, கடவுள் மீது குற்றம் சொல்லவில்லை. ஆனால், அப்படிப்பட்ட காலத்தில் அப்படிப்பட்ட அறிவுள்ள வர்களால் அவை சிருஷ்டிக்கப் பட்டவையாகும். காட்டிக் கொடுக்கப்பட்டவையாகும்.

இந்த மதத்தை - கடவுள் தன்மைகளை ஏற்படுத்தின - உண்டாக்கிய - காட்டின பெரியோர்கள் தெய்வப் பிறவிகள் - தெய்வீகத் தன்மை உடையவர்கள் என்பதான அந்த மகான்களே இன்று இருப்பார்களேயானால், உடனே மாற்றி விட்டு வேறு வேலை பார்ப்பார்கள். அல்லது வெளியில் வர வெட்கப்படு கிறார்கள்.

உதாரணமாக இவைகளை நீங்கள் சரி என்கிறீர்களா? அதாவது மூன்று பெரிய கடவுள்கள், அவைகளுக்கு ஈட்டி, மழு முதலிய ஆயுதங்கள். மாடு, பருந்து முதலிய வாகனங்கள், பெண்டாட்டி பிள்ளை குட்டிகள், போதாதற்கு வைப்பாட்டிகள், மேலும் பல குடும்பப் பெண்களை விரும்பி, கட்டிய கணவனுக்குத் தெரியாமல் வேஷம் போட்டு, உருமாறி விபசாரம் செய்வதில் அம்மூவரும் ஒருவரை ஒருவர் போட்டி போடுவதில் சாமர்த்தியம் நிறைந்தவர்கள்.

இம்மூவரையும் தலைவராகக் கொண்ட மதத்தில் நாலைந்து ஜாதிகள். முதல் ஜாதி பார்ப்பன ஜாதி. இந்த ஜாதி பாடுபடாமல் மற்றவர்கள் உழைப்பைச் சுரண்டியே வாழ்ந்து வரவேண்டும். இவர்களுக்குத்தான் எங்கும் முதலிடம். மற்றவர்கள் எல்லாம் இவர்களுக்குக் குற்றேவல் செய்து, வாயையும் வயிற்றையும் கட்டி அடங்கி ஒடுங்கி வாழவேண்டும்.

இந்த மதத்தில் உள்ள மக்களுக்குச் சொல்லப்பட்டிருக் கும் நீதி - ஒழுக்கம், ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு மாதிரி. பார்ப்பான் திருடினால் அவன் தலையைச் சிரைத்து மொட்டையடிப்பதே போதுமான தண்டனை. அதே திருட்டை ஒரு அய்ந்தாவது ஜாதிக்காரன் செய்தால் அவனுடைய கையை வெட்டி விடுவது அதற்கேற்ற தண்டனை என்று சொல்லுகிறது மனு நீதி. அந்த மனுநீதியில் சொல்லப்பட்டிருக்கும் நீதிகள் எல்லாம் இந்த அடிப்படையில்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன.

ஆகவே அக்காலத்தில் கடவுள் மத தர்மங்களை, இக்காலத்துக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளுங்கள் என்பதற்கு ஆகவே இதைக் குறிப்பிடுகிறேன்.
பெரிய அறிவாளிகள்கூட எண்ணெய் விளக்கை இன்று அறவே நீக்கிவிட்டு, எலெட்ரிக் விளக்குப் போட்டுக் கொள்ளவில்லையா?

கட்டை வண்டிப் பிராயணத்தை நீங்கள் தள்ளிவிட்டு ஏரோப்ளேன் - ஆகாயக்கப்பல் பிராயணத்தை நீங்கள் விரும்பவில்லையா?
ஆகையால், ஆதிகாலம் என்கின்ற காலத்தில், ஆதி கால மனிதர்கள், மகான்கள் என்பவர்களால் ஏற்படுத்தப் பட்ட ஆதிகாலத் தன்மையிலிருந்து மாறுபட்டு, இக்கால நிலைக்கு ஏற்றதுபோல் நடந்து கொள்ளுங்கள்.
காலத்தோடு கலந்து செல்லாதவன் ஞாலத்துள் பயன்படமாட்டான்.

--------------------------------தந்தை பெரியார் அவர்கள் சொற்பொழிவு, (குடிஅரசு 15.1.1949

25 comments:

தமிழ் ஓவியா said...

சர்வ சக்தி(?)


மேற்கு வங்காளம் கொத்தல் பூரிலிருந்து கடந்த 24ஆம் தேதி நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 60 பேர்கள் குடும் பத்துடன் தமிழ்நாட்டுக் குச் சுற்றுலா புறப்பட்டு வந்தனர். சமையல் செய்து சாப்பிடுவதற்கு 6 சமையல் எரிவாயு உருளைகளையும் (சிலிண்டர்களையும்) பேருந்தில் ஏற்றியிருந் தனர். 30.8.2014 இரவு 10 மணியளவில் கன்னியா குமரி சென்று கொண்டி ருக்கும்போது திருபுல் லாணி தாதனேந்தல் பேருந்து நிறுத்தம் அரு கில் பேருந்து வந்தபோது, பேருந்தின் பின்புறத்தில் திடீரென தீபிடித்தது.

ஓட்டுநர் அவசர அவசரமாக பேருந்தை சாலை ஓரத்தில் சாமர்த் தியமாக நிறுத்தினார். பேருந்துக்குள்ளிருந்த சமையல் வாயு உருளை யும் வெடித்தது. பயணி கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி னர். ஆனால் வயது மூப் படைந்த 5 பேர் விரை வாக வெளியேற முடி யாத நிலையில் கருகிப் போனார்கள் என்பது பெரி தும் வருந்தத்தக்கதாகும்.

இவ்வளவுக்கும் இந்தப் பயணிகள் தமிழ கம் வந்தது கோயில் தலங்களைச் சுற்றிப் பார்த்து சாமி தரிசனம் செய்யத்தான்! திருப்பதி ஏழுமலையான் கோயி லில் தரிசனத்தைத் தொடங் கிய இவர்கள் வழியில் காஞ்சீபுரம், திருக்கழுக் குன்றம், சிறீரங்கம், இராமேசுவரம் உட்பட பல கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.

கன்னியாகுமரி சென்று அங்குள்ள அம் மனை வழிபடச் சென்ற வர்களுக்குத்தான் இந்தப் பரிதாப நிலை ஏற்பட் டுள்ளது.

கோயிலுக்குச் சாமி கும்பிட சென்றவர்கள், கோயில் திரு விழாக் களுக்குச் செல்லக் கூடிய வர்கள். இதுபோன்ற விபத்துக்களில் சிக்கி பரிதாபகரமாக மரணம் அடைவது அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்றுகூட விநாயகர் பொம்மையை நீரில் கரைக்கச் சென்ற ஓமலூர் கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி மரணம்! பொள்ளாச்சி அருகே சிலைகளைக் கரைக்க காரில் சென்ற இந்து முன்னணியினர் மூவர் விபத்தில் மரணம் என்ற செய்திகள் வெளி வந்துள்ளன. இவ்வளவுக்குப் பிற கும் கோயில் கோயிலாக மக்கள் போவதும், சாமி தரிசனம் செய்வதும், நேர்த் திக் கடன் கழிப்பதும் சரியானதுதானா? என் பதைச் சிந்திக்க வேண் டாமா?

கடவுள் என்ற ஒருவர் இருந்தால், அவருக்குச் சக்தி இருக்கிறது என்பது உண்மையென்றால் கரு ணையே வடிவமானவன் என்று எழுதி வைத்திருப் பதில் கடுகளவு யதார்த் தம் இருக்குமேயானால், நாட்டு மக்களைக் காப் பாற்றுவது ஒருபுறம் இருக் கட்டும்; குறைந்தபட்சம் தன்னை நாடி வந்த பக்தர்களையாவது காப் பாற்ற வேண்டாமா?

பக்தி வந்தால் புத்தி போகும் என்று பெரியார் சொன்னது கேலிக்கல்ல வாழ்க்கையின் யதார்த் தம் என்பதை மக்கள் உணரட்டும்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/86915.html#ixzz3C7YE3p00

தமிழ் ஓவியா said...

பொள்ளாச்சி, செப்.1- பொள்ளாச்சி அருகே விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற போது எதிரே வந்த பேருந்து மீது மோதி, கார் கட்டுப் பாட்டை இழந்து மரத் தில் மோதியது. இந்த விபத்தில் இந்து முன் னணியை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி பலியானார் கள். 3 பேர் படுகாய மடைந்தனர்.

இந்த பரிதாப சம்பவம் குறித்து காவல்துறை தரப் பில் கூறப்படுவதாவது:-

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதி களில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 36 விநாயகர் சிலைகளை அம்பராம்பாளையம் ஆழியாற்றில் கரைக்க நேற்று ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

ஊர்வலத்தில் சென்ற வர்களுக்கு சாப்பாடு வாங்கி கொண்டு இந்து முன்னணியை சேர்ந்த நாகராஜன் (வயது 32), குகன் (21), கார்த்தீஸ்வரன் (30), சபரி (30), பிரகாஷ் (29), விக்னேஷ்குமார் (24), சுரேஷ்குமார் (27) ஆகி யோர் ஒரு காரில் எஸ் .மேட்டுப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம் பாளையத்திற்கு சென் றனர். காரை கார்த்தீஸ் வரன் ஓட்டினார்.

மாலை சுமார் 5.30 மணிக்கு கார் மீன்கரை ரோடு நஞ்சேகவுண்டன் புதூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற வாகனத்தை கார் முந்த முயன்ற போது எதிரே கோவிந்தா புரத்தில் இருந்து பொள் ளாச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து மீது மோதியது.

இதில் நிலை தடு மாறிய கார், பேருந்துமீது மோதிய வேகத்தில் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி சுக்குநூறாக நொறுங்கி உருக்குலைந்து போனது. மேலும் பேருந்தின் முன் புற கண்ணாடி உடைந்த துடன், முன்பகுதி சேதம் அடைந்தது.

காரில் இருந்தவர்கள் படுகாயங்களுடன் உயி ருக்கு போராடிக் கொண் டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொள் ளாச்சி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வா ளர்கள் தங்கவேல், கோபி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காவல் துறையினர் பொது மக்கள் உதவியுடன் காரில் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டனர்.

இதில் சம்பவ இடத்திலேயே நாகராஜன் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். குகன், விக்னேஷ்குமார், பிரகாஷ் ஆகியோரை அந்த பகுதி யில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், சபரி, கார்த்தீஸ்வரனை கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் குகன், கார்த்தீஸ்வரன் ஆகி யோர் பரிதாபமாக இறந் தனர்.

சபரி ஆபத்தான நிலை யில் கோவை அரசு மருத் துவமனைக்கும், விக் னேஷ்குமார், பிரகாஷ் ஆகியோர் அம்பராம் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை யிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் காரில் வந்த சுரேஷ்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/86916.html#ixzz3C7YNRduS

தமிழ் ஓவியா said...

விநாயகர் சிலையை கரைத்த போது கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் சாவு!

விநாயகர் சிலையை கரைத்தபோது கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரி தாபமாக உயிரிழந்தனர்.

சேலம் கிச்சிப்பாளை யம் கருவாட்டுப்பாலம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி வெண்ணிலா. இவர்களது மகன் விக்னேஷ்வரன் (வயது 17). இவர் சேலம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணபிர சாத் (18). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி யில் 3ஆ-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் விநாய கர் சதுர்த்தியையொட்டி அந்த பகுதியில் வெண் ணிலா உள்பட பலர் ஒரு விநாயகர் சிலையை பூஜைக்கு வைத்திருந்தனர். இந்த சிலையை நேற்று கரைக்க திட்டமிட்டனர். அதன்படி, நேற்று காலை விநாயகர் சிலையை ஒரு சரக்கு ஆட்டோவில் ஏற்றினர். பின்னர் அந்த ஆட்டோவில் வெண் ணிலா, அவரது மகன் விக்னேஷ்வரன், கிருஷ்ண பிரசாத் உள்பட 15 பேர் ஏறி புறப்பட்டார்கள்.

நண்பகல் 1 மணியள வில் அவர்கள் கங்காதரன் குட்டையை அடைந்தனர். அங்கு ஆட்டோவில் இருந்து விநாயகர் சிலையை கீழே இறங்கி வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் விக்னேஷ்வரன், கிருஷ்ண பிரசாத் உள்பட 7 இளை ஞர்கள் சிலையை தூக்கிக் கொண்டு குட்டையில் தேங்கி நின்ற தண்ணீருக் குள் இறங்கினார்கள்.

அப்போது கரையில் நின்ற பெண்கள், ஆழ மான பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கூறி னர். ஆனால், அதையும் மீறி இளைஞர்கள் 7 பேரும் ஆழமான பகு திக்கு சென்று விநாயகர் சிலையை தண்ணீரில் கரைத்தனர். அப்போது விக்னேஷ்வரன், கிருஷ்ண பிரசாத் உள்பட 5 இளை ஞர்கள் சேற்றில் சிக்கிக் கொண்டனர். சிறிது நேரத் தில் 3 பேர் சேற்றில் இருந்து மீண்டு தண்ணீரில் தத்தளித்தபடி கரைக்கு வந்து சேர்ந்தார்கள்.

ஆனால், விக்னேஷ்வர னும், கிருஷ்ணபிரசாத்தும் தண்ணீருக்குள் இருந்த சேற்றில் சிக்கி உயிருக்கு போராடினார்கள். இத னால் கரையில் நின்ற பெண்கள், காப்பாற்றுங் கள்; காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அருகில் நின்று கொண்டிருந்தவர் களும், உடன் வந்த இளை ஞர்களும் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதனால் சேற்றில் சிக்கிய 2 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறை யினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஓமலூர் தீயணைப்பு குழுவினரும் அங்கு வந்தார்கள்.

அவர்கள் குட்டையில் இறங்கி உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு கிருஷ்ணபிரசாத்தின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு விக்னேஷ்வரனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சேலம் ஜாகீர் அம்மா பாளையம் பகுதியை சேர்ந்தவர் அண்ணா மலை (வயது 48), கட்டட தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து விநாயகர் சிலையை கரைப்பதற்காக மேட்டூர் காவிரி ஆற்றுக்கு வந்தார். அங்கு புதுப்பாலம் அருகே உள்ள காவிரி ஆற்றில் இறங்கி சிலையை கரைக்க முயன்றபோது, ஆழமான பகுதிக்கு சென்ற அண்ணாமலை தண்ணீரில் மூழ்கி உயிரி ழந்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/86916.html#ixzz3C7YUi2Sx

தமிழ் ஓவியா said...

மயிலாப்பூரில் கேட்கும் குரல்


சென்னையில் இந்திய தேசிய பெண்கள் சம்மேளனத் தின் 60ஆம் ஆண்டு விழா கடந்த சனியன்று நடைபெற் றுள்ளது. அதில் உயர்நீதிமன்ற நீதிபதி பிரபாஸ்ரீதேவன், சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா, பெண்கள் கூட்டமைப்பின் தலைவர் கே. சாந்தகுமாரி, பேராசிரியர் காதம்பரி போன்றோர் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை மட்டுமே பெண்களுக்கு எதிரான கொடுமையல்ல. கல்வி, சுகாதாரம், சொந்த நிலம் வழங்கப்படாததும் பெண்கள்மீதான வன்முறைதான் என்று கூறப்பட்டு இருப்பது சிறந்த கருத்துக்களே!

பாலியல் வன்முறை என்று கூறும்பொழுது அண்மைக் காலங்களில் இதன் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. பெண் குழந்தைகள்கூட இதில் தப்ப வில்லை என்பது - நாம் 21ஆம் நூற்றாண்டில்தான் வாழு கிறோம் என்று சொல்லுவதற்கும் வெட்கப்படத்தான் வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்த நோய் வெகு வேகமாகப் பற்றிக் கொண்டு திரிகிறது. டில்லியில் மருத்துவக் கல்லூரி மாண விக்கு ஏற்பட்ட கொடுமையை எதிர்த்து தலை நகரமே மக்கள் தலைகளாகக் காணப்பட்டது. பெரும் யுத்தமே நடந்தது; அதன் விளைவாக ஆட்சி மாற்றமேகூட நிகழ்ந்ததுண்டு.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் இந்தத் திசையில் ஒரு செய்தியாக வந்து கொண்டு தானி ருக்கிறது! ஆனால் இந்தியாவின் தலைநகரம் கொதித் தெழுந்ததுபோல தமிழ்நாட்டில் ஏன் நிகழவில்லை? இதில் அரசியலும் இருக்கிறது. ஊருக்கே உபதேசம் செய்யப் பிறப்பெடுத்ததாக மார் தட்டும் தமிழ்நாட்டு ஊடகங்களும் இதற்குத் துணை போயுள்ளன என்பதும் வருத்தத் திற்குரியதே.

இன்னும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய இழப்பீடுகள் பற்றியது. 357-ஏ குற்ற நடைமுறைச் சட்டம் 1973 இதுபற்றிப் பேசுகிறது. உயிரிழப்பு ரூ.3 லட்சம், பாலியல் வன்முறை ரூ.3 லட்சம், மன உளைச்சல் ரூ.ஒரு லட்சம் வழங்கப்பட வேண்டும்.

கடந்த ஈராண்டுகளில் இதுபற்றிய நிலை என்ன? 212 வழக்குகளில் 73 குழந்தைகள் மருத்துவ உதவிக்காகவும் 65 பேர் மனநல மருத்துவ உதவிக்காகவும், 38 பேர் பாதுகாப்பு இல்லங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். 2013-2014 கால கட்டத்தில் வெறும் ஏழு பேர்களுக்கு மட்டுமே இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடுமைக்கு இழப்பீடு பரிகாரமா என்று கேட்கக் கூடும்.

பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாலேயே அவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா? அந்தக் கொடுமைக்கு ஆளானவர்களா அதற்குக் காரணம்! காரணமானவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து நுழைந்து தப்பித்துக் கொள்கின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வுதான் பரிதாபமானது! இந்த நிலையில் அவர்களுக்கு இழப்பீடும், பராமரிப்புச் சேவைகளும் கண்டிப்பாக தேவைப்படுகின்றன.

இது போன்ற வழக்குகளில் காவல்துறைக்கு ஒரு காலக் கெடு விதித்துக் குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்த வேண்டும். பத்து பதினைந்து ஆண்டுகள் என்றால் இது அந்தப் பாலியல் கொடுமையைவிட மோசமானது.

பெண்களுக்குக் கல்வி வேலை வாய்ப்பு அவசியம் தேவை. அதே நேரத்தில் கல்விச் சாலைகளிலும், பணியாற் றும் இடங்களிலும்கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையே! இதற்கொரு முடிவு கட்டப்பட வேண்டாமா? கொஞ்ச நாட்களுக்குப் பெண்கள் கைகளில் துப்பாக் கியைத் தான் கொடுத்துப் பார்க்கலாமே - என்ன ஆகி விடப் போகிறது என்பதை அனுபவத்தில்தான் அறிய முடியும்.

பெண்களைப் பலகீனமானவர்கள் என்று கருதும் ஆண்களின் சிந்தனையில் ஒரு அச்சத்தை ஏற்படுத்த வேண்டியது. காலத்தின் கட்டாய மட்டுமல்ல; உளவியல் ரீதியான நோய்த் தடுப்பு என்றுகூட இதனைக் கருதலாம்.

ஆண்களுக்கு நிகராக பெண்களுக்குச் சொத்துரிமை என்று சட்டம் வந்தாகி விட்டது; இது எந்த அளவுக்குச் செப்பமாக, நீதியாக, நேர்மையாக, நாணயமாக செயல்பாட்டில் இருக்கிறது என்பது கண்டறியப்பட வேண்டும். இதில் ஓட்டைகள் ஏதேனும் இருக்குமானால் அதனையும் அடைத்தாக வேண்டும்.

தமிழ் ஓவியா said...


சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய நீதிபதி - நீதித்துறையில் பெண்களுக்கு உரிய இடங்கள் கிடைக்கப் பெறவில்லை. பெண் நீதிபதியாக இருக்கும் பட்சத்தில்தான் வாழ்வியல் அனுபவங்களின் அடிப் படையில் பெண்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு தீர்ப்பு வழங்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

இதுபோன்ற அடிப்படை உரிமைகளைப் பெண்கள் பெற வேண்டும் என்றால் சட்டம் செய்யும் இடங்களில் (சட்டமன்றம் - நாடாளுமன்றங்களில்) பெண்களுக்கு 33 சதவீதம் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்படாமல் தடைகளுக்குள் சிக்கிக் கிடக்கிறதே அதுநடைமுறைக்கு வர வேண்டாமா? இது வரக் கூடாது என்பதில் மட்டும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஓரணியாகத் திரண்டு கூடிக் குலவுவதை என்னென்று சொல்லுவது?

பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? அதுபோலவே ஆண்களால் பெண்களுக்கு விடுதலை ஒரு போதும் கிடைக்காது என்று சொன்ன பெண்ணியல்வாதி தந்தை பெரியார் அவர்களின் கருத்துதான் சமுதாயத்தின் முன் பேரொளியாய் எழுந்து நிற்கிறது.

மக்கள் விழிப்புணர்வு இதில் மகத்தானது; தந்தை பெரியார் அவர்களின் பெண்ணியக் கருத்துகள் ஆரம்பக் கல்வி நிறுவனங்களிலிருந்து கற்பிக்கப்பட வேண்டும் பெண்ணடிமைத்தனம் என்பது மதத்தின் வாயிலாக - பக்தியின் வாயிலாக குருதியில் ஊறச் செய்யப்பட்டுள்ளது. அந்த வேரை எடுத்தெறியாமல், வெறும் ஒத்தடங்கள் கொடுப்பது நகைச்சுவைக்கான நல்ல தீனியாகும்.

உடல் ரீதியாக பெண்கள் பலகீனமானவர்கள் என்றால் அந்தப் பலகீனத்தைப் போக்குவதற்கான பயிற்சிகள் பள்ளிகளில் கட்டாயம் இடம் பெற வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவதுபோல பெண்கள் சிங்காரம், அணிமணிகளில் ஆழ்ந்து கிடக்கும் உணர்வு என்னும் சிறையிலிருந்து விடுதலையாக வேண் டும். அப்படியொரு நிலைப்பாடு பெண்கள் மத்தியில் வெகுண்டெழுந்தால், சிந்தனைகள் உரிமைகளின் பக்கமும், ஆண்கள் ஆதிக்கத்தின் பக்கமும், கம்பீரமாக எழும் அல்லவா! மயிலாப்பூரில் பேசிய பெண்ணுரிமையாளர்கள் இந்தத் திசையில் சிந்தித்தார்களா பேசினார்களா? என்று தெரியவில்லை! அவர்கள் பேசாவிட்டாலும் பெரியார் இயக்கம் பேசும் - பெரும் புரட்சியையும் நடத்திக் காட்டும்! வாழ்க பெரியார்!

Read more: http://viduthalai.in/page-2/86921.html#ixzz3C7YnT6b3

தமிழ் ஓவியா said...

நிரந்தர விரோதி

நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூடநம்பிக்கை யும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கின்றன.
(குடிஅரசு, 13.4.1930)

Read more: http://viduthalai.in/page-2/86927.html#ixzz3C7YvBjDx

தமிழ் ஓவியா said...

தேனினும் இனிய விடுதலை

22.8.2014 நாளிட்ட விடுதலை நாளிதழில் வெளிவந்துள்ள செய்திகள் அனைத்தும் அருமை. அவை பாதுகாக்கப்பட வேண் டிய பாதுகாப்புப் பெட்டகமாகவும், கருத் துக் கருவூலமாகவும் திகழ்கின்றன. குறிப்பாக

1) ஜாதி - தீண்டாமை ஒழிய அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமையினை நிறைவேற்றித் தருமாறு முதல்வர் ஜெயலலிதா அவர்களை வலி யுறுத்தி தமிழர் தலைவர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை மற்றும் கோமாதா ஆந்திராவில் படுத்தியபாடு!

2) நம்ம தியாகராயர் நகர்! - கோவி. லெனின் அவர்கள் எழுதிய கட்டுரை.

3) 375-ஆம் ஆண்டில் சென்னை நகரம்! - தலையங்கம், கைவல்யம் நாள் (22.8.1877).

4) சிப்பாய்க் கலகம் சுதந்திரப் போராட்டம் அல்ல - மதப்போராட்டமே என்று சொன்னவர் தந்தை பெரியார்! என் கின்ற அரிய என் போன்ற இளைஞர் களுக்கும் - மாணவர்களுக்கும் புதிய தகவலை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய சிறப்புக் கூட்டத்தில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாரி வழங்கிய பல வரலாற்றுத் தகவல்கள்.

5) மாணவர்களுக்கான பெரியார் 1000 வினா - விடைப் போட்டி நடைமுறைகள்!

6) பகுத்தறிவுக் களஞ்சியம் பகுதியில்; புத்தர் அறிவுரைகள், தந்தை பெரியார் பொன்மொழி மற்றும் தாய்மார்களுக்கு தந்தை பெரியார் அறிவுரை, மருத்துவம் வென்றது, விடை என்ன? என்ற தலைப்பில் ஆத்திகவாதிகளுக்கு அடுக்கடுக்கான அர்த்தமுள்ள கேள்விகள் ஆகியவை மக்களை சிந்திக்கத் தூண்டுகின்றன.

7) மேலும், சென்னையின் 375 ஆம் ஆண்டில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் வரலாற்றுக் கொண்டாட்டம் - நடைப்பயணம்! நடைப்பயணம் மேற் கொண்ட கழக முன்னோடிகள் - தோழர்கள் ஆகியோர் தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலை முன்பும், தியாகராயர் நகர் டாக்டர் நடேசன் பூங்காவிலும் எடுத்துக்கொண்ட வண்ணப் புகைப்படங்கள் கண்களைக் கவர்ந்தன.

8) இறுதியாக, நாளைய தலைமுறைக் கான நாற்றங்கால் - பெரியார் 1000! போன்ற எண்ணற்ற பயனுள்ள செய்திகள் இளைஞர் களுக்கும், மாணவர்களுக்கும் விருந்தாக வும் அரு மருந்தாகவும் அமைந்தது.

இவ்வாறு தேனினும் இனிய செய்தி களைத் தாங்கி பல வண்ணங்களுடனும், பகுத்தறிவு எண்ணங்களுடனும் நாள் தோறும் வெளிவருகின்ற உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளேட் டினை இளைஞர்களும் - மாணவர்களும் ஆவலுடன் படித்துப் பாராட்டி மகிழ் கின்றனர், போற்றிப் புகழ்கின்றனர்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- சீ.இலட்சுமிபதி, தாம்பரம், சென்னை-45

Read more: http://viduthalai.in/page-2/86924.html#ixzz3C7ZRhKpG

தமிழ் ஓவியா said...

பற்களில் கறை போக்க...

என்னதான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கறை கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான். நீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (Pottasium Permanganate) (KMNO4)பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch) போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும். (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கறைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

பல் வலியிலிருந்து நிவாரணம் பெற சில வழிமுறைகள்

பல் வலியிலிருந்து நிவாரணம் பெற கோவைப்பழம் சாப்பிடலாம்.

மகிழம் இலையை கஷாயம் செய்து வாய்க் கொப்பளித்து வந்தால், பல் நோய் எதுவும் அண்டாது.

மாவிலையைப் பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால், பற்கள் உறுதி பெறும்.

ஒரு துண்டு சுக்கை எடுத்து வாயில் போட்டுக் கொண்டால், பல்வலி நீங்கும்.

நந்தியாவட்டை வேரை மென்று துப்பினால், பல்வலி குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/86882.html#ixzz3C7a9FYir

தமிழ் ஓவியா said...

நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்


நெல்லிக்காய் லேகியம்: 150 கிராம் பனை வெல்லத்துடன் இரண்டு ஆழாக்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பனைவெல்லம் கரைந்தவுடன் இறக்கி இதனை மேலாக இறுத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் விட வேண்டும்.

பின்னர் அடுப்பில் வைத்து அதனுடன் ஒரு ஆழாக்கு அளவு சுத்தமான பசும்பால் விட்டு நன்றாக கொதித்து வரும் சமயம், இடித்து சலித்த நெல்லிக்காய் வற்றல் தூளில் ஆழாக்கு அளவு இதில் போட்டு பாகுபதம் வரும்போது, அரை ஆழாக்கு தேன், அரைஆழாக்கு சுத்தமான பசு நெய்யினை விட்டுக் கிளறி லேகியபதம் வந்தவுடன் இறக்கவேண்டும்.

ஆறிய பின்னர் வாயகன்ற பாட்டிலில் இட்டு மூடி வைத்து தினசரி காலை மற்றும் மாலையில் தேக்கரண்டி சாப்பிடலாம்.

இந்த லேகியம் வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகியவற்றை சமன் செய்யும். உடலுக்குப் பலத்தை தருவதுடன், பித்தம் காரணமாக ஏற்படும் கிறுகிறுப்பு, வாந்தி, அரோசிகம் மாறும். ரத்தம் சுத்தமாகும்.

பெருங்குடல், சிறுகுடல், இரைப்பைகளில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும். சொறி, சிரங்கு நமைச்சல் குணமாகும். கருவுற்ற நிலையில் 21 நாள்கள் சாப்பிட சுகப்பிரசவம் ஏற்படும். கருப்பை கோளாறுகளைக் குணப்படுத்தும். காய கல்ப மாக செயல்படும் இந்த லேகியம் 3 மாதம் வரை கெடாது.

நெல்லிக்காய் வடாம்: ஒரு படி நெல்லிக்காயை கொஞ்சம் கொஞ்சமாக உரலில் போட்டு இடித்தால் மசித்து அதன் வித்துக்கள் வெளியேறும். நைந்தபின் வித்துக்களை நீக்கி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

எல்லாக் காய்களையும் இடித்த பின் பெரிய பச்சை மிளகாயில் 10-ம், இரண்டு கொட்டை பாக்களவு தோல் சீவிய இஞ்சி, கைப்பிடியளவு கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு ஆகியன சேர்த்து மறுபடியும் உரலில் போட்டு மைபோல் இடிக்கவேண்டும்.

பின்னர் அதனை எடுத்து உளுந்து வடை அளவிற்கு அடையாகத் தட்டி சுத்தமான பாயில் வைத்து, வெயிலில் உலர்த்தவேண்டும்.
நீர் சுண்டி சருகுபோல காய்ந்த பின் எடுத்து ஜாடியில் அடுக்கி மூடி வைத்துவிட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவேண்டும். இது வெகுநாட்கள் கெடாது.

நெல்லிக்காய் சஞ்சீவி லேகியம்: நன்றாக பழுத்த நெல்லிப்பழங்களின் விதைகளை நீக்கி வெயிலில் சருகாக உலரவிட வேண்டும். பின்னர் அதனை உரலில் இடித்து சலித்துக் கொள்ள வேண்டும்.

சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை தலா 5 கிராம் எடுத்து இடித்து சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இரண் டாழாக்கு பசுவின் பாலை நன்றாக கொதிக்க வைத்து, அதில் 200 கிராம் பனைவெல்லத்தை போட்டு பாகு பதம் வரும் சமயம், அரை ஆழாக்கு சுத்தமான தேனை விட்டு சுக்கு, மிளகு, திப்பிலி தூளையும் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி ஒரு வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி தேக்கரண்டி காலையில் மட்டும் சாப்பிட்டு வர 40 நாளில் ரத்தம் சுத்தமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/86883.html#ixzz3C7aHn1oA

தமிழ் ஓவியா said...

நோய்களை விரட்டியடிக்கும் செவ்வாழைப்பழம்

எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புசத்தும், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களை கொண்டது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ் டரீகா மற்றும் கியூபா என கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு ஆகாரத்துக்கு பிறகு தொடர்ந்து 40 நாள்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.

பல்வலி, பல்லசைவு போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாள்கள் செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற தோல் வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும் செவ்வாழை பழத்தைத் தொடர்ந்து 7 நாள்கள் சாப்பிட்டு வர சரும நோய் குணமாகும். நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும்.

எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட வர்கள் தினசரி இரவு செவ்வாழைப்பழம் சாப்பிடவேண்டும். தொடர்ந்து 48 நாள்கள் செவ்வாழை சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை தன்மை சீரடையும்.

Read more: http://viduthalai.in/page-7/86883.html#ixzz3C7aRZKmR

தமிழ் ஓவியா said...

ரத்த அணுக்களை பெருக்கும் முருங்கைக் கீரை


உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது. தோலை உரிக்காமல் வேக வைக்கும்போது வைட்டமின் பி, சி மற்றும் தோலில் காணப்படும் தாதுக்கள் பாதுகாக்கப்படுகின்றன.

பாசிப் பயறுதான் மற்ற பயறுகளைவிட எளிதில் செரிமானமடைவதுடன் உடலால் விரைவில் ஏற்றுக் கொள் ளப்படுகிறது. காரணம், இது சிறிய அளவில் இருப்பதால் எளிதில் வெந்துவிடுகிறது. பாசிப் பயறை அதிகமாகச் சாப்பிடுவதால் குடல் பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் வாயுக்களை உற்பத்தி செய்து கழிவை ஏற்படுத்துகின்றன.

தினசரி கொய்யாப் பழம் சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகமாகும். ரத்த சோகை வராமல் தடுக்கலாம்.

நம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வெங்காயம், கேரட் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

பார்லி நீரை தினமும் அருந்திவந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

துளசி இலையைக் கசக்கி முகத்தில் தேய்த்துக் கொண்டு இரவில் படுத்து, காலையில் எழுந்து முகம் கழுவினால் முகம் அழகு பெறும்.

முதல் நாள் இரவில் உலர்ந்த திராட்சைப் பழங்களைத் தண்ணீரில் ஊறவைத்து, மறு நாள் காலையில் வெறும் வயிற்றில் பழங்களைச் சாப்பிட்டு தண்ணீரையும் குடித்தல் உடல் நன்கு சக்தி பெறும்.

வாரத்தில் இரண்டு நாட்களாவது முருங்கைக் கீரையை சாப்பிட்டு வர ரத்த அணுக்கள் அதிகமாக உற்பத்தியாகும்.

சுரைக்காயை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து தொப்பைக் கரையும்.

வால் மிளகு பசியைத் தூண்டிவிடும். செரிமான சக்தியை உண்டாக்கும். கபத்தையும் வாயுவையும் போக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/86886.html#ixzz3C7aYJFFV

தமிழ் ஓவியா said...

விநாயகர் ஊர்வலம்: ஊரெல்லாம் ரகளை!செய்யாறில்...

செய்யாறு, செப்.1-_செய்யாறில் விநாயகர் சிலை ஊர்வலம் காந்தி சாலை வழியாக செல்ல அனுமதி மறுத்ததால் 2 மணிநேரம் போராட்டம் நடந்தது.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு செய் யாறு நகர இந்து முன்னணி சார்பில் டவுன் பகுதி யில் 11 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட் டிருந்தன. இந்த சிலைகளை கோனேரிராயன் குளத்தில் கரைப்பதற்காக நேற்று திருவோத்தூர் சிறீவேதபுரீஸ் வரர் கோவிலின் முன்பிருந்து ஊர்வலம் தொடங்கியது.

ஊர்வலம் மார்க்கெட், மண்டித் தெரு வழியாக செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தி காந்தி சாலை யில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் காந்தி சாலை வழியாகத்தான் ஊர்வலம் செல்வோம் என பாதுகாப்புப் பணியிலிருந்த மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் சி.ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடு பட்டனர்.

தொடர்ந்து காந்தி சாலை வழியாக செல்ல காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் இந்து முன்னணி இளைஞர்கள் சாலையில் அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி போராட்டம் நீடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. காந்தி சாலையில் கடைகள் அடைக்கப்பட்டன. காவல் துறையின் சமா தானத்தை ஏற்க மறுத்ததால் காவல்துறையினர் காந்தி சாலை வழியாக ஊர்வலம் செல்ல அனுமதித்தனர்.

விநாயகர் சிலைகள் அனைத்தும் கோனேரிராயன் குளத்தில் கரைக்கப்பட்டன.

Read more: http://viduthalai.in/page-8/86888.html#ixzz3C7aqQ7GQ

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

பசை!

செய்தி: திருப்பதி கோவில் அறங்காவலர் குழுத் தலை வர் பதவிக்கு ஆளும் கட்சிக்குள் கடும் போட்டி; வேறு வழியின்றி முதல மைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடி முடிவு எடுத்து வருவாய்த் துறை செயலா ளரைத் தலைவராக நிய மித்தார்.

சிந்தனை: ஏன் கடும் போட் டியாம்? கோடிக்கணக்கில் பணம் புரளும் பசை மிகுந்த பதவியாயிற்றே!

Read more: http://viduthalai.in/page1/86542.html#ixzz3C9m8LnFV

தமிழ் ஓவியா said...

ஒப்பற்ற ஆயுதம்


உங்கள் தனிப்பட்ட நலனை அலட்சியம் செய்வது என்கின்ற அந்த ஓர் ஒப்பற்ற ஆயுதம் அணுகுண்டையும் வெடிக்காமல் செய்துவிடும். - (குடிஅரசு, 9.3.1946)

Read more: http://viduthalai.in/page1/86543.html#ixzz3C9mNjNfN

தமிழ் ஓவியா said...

இடைத்தேர்தல் முடிவு உணர்த்தும் பாடம் என்ன?


90 நாள்கள் மத்தியில் ஆட்சியில் அமர்ந்த பா.ஜ.க. நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பெருத்த அடியை வாங்கியிருக்கிறது. நேற்று வெளிவந்த தேர்தல் முடிவுகள் இதனை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துவிட்டன! இதற்கு முன்னதாக உத்தரகாண்டில் நடைபெற்ற நான்கு சட்டப் பேரவை இடைத்தேர்தலிலும்கூட நான்கு இடங்களிலும் பா.ஜ.க. மோசமான தோல்வியைத் தழுவிக் கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு மாநிலங் களில் நடைபெற்றுள்ள இடைத்தேர்தலின் முடிவுகள் நேற்று வெளிவந்துள்ளன.

பிகார் மாநிலத்தில் மொத்தம் பத்து இடங்களில் ஆறு இடங்களில் பி.ஜே.பி. தோல்வி. கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற மூன்று சட்டமன்ற இடங்களில் இரு இடங் களில் பி.ஜே.பி. தோல்வி. கருநாடகாவில் பி.ஜே.பி.யின் கோட்டை என்று வீராப்புப் பேசிய பெல்லாரி தொகுதியில் 33142 வாக்குகள் வித்தியாசத்தில் கடும் தோல்விப் பள்ளத் தாக்கில் தலைக்குப்புற வீழ்ந்துவிட்டது. பி.ஜே.பி.யிடமி ருந்து இந்தத் தொகுதியைக் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

வெற்றி பெற்ற ஒரே இடத்தில்கூட பி.ஜே.பி. வேட் பாளர் (எடியூரப்பாவின் மகன்) குறைந்த வாக்கு வித்தியா சத்தில் தான் வெற்றி பெற முடிந்துள்ளது. பி.ஜே.பி.யின் அகில இந்தித் துணைத் தலைவராக ஆக்கப்பட்டுள்ள வரும், முன்னாள் கருநாடக மாநில முன்னாள் முதலமைச் சருமான எடியூரப்பா கருநாடக மாநிலத்தில் தங்களுக்குக் கிடைத்த தோல்வியை சங்கடத்துடன் ஒப்புக்கொண் டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் பி.ஜே.பி.யுடன் கூட்டணி கட்சியான ஆளும் சிரோன்மணி அகாலிதள வேட்பாளர் படுதோல்வி அடைந்துள்ளார். வாக்குகள் வித்தியாசம் 23 ஆயிரம்! பி.ஜே.பி. ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

பி.ஜே.பி. மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு இந்த 90 நாள்களுக்குள் நடைபெற்ற இடைத்தேர்தலில் பி.ஜே.பி. மரண அடி வாங்கியிருக்கிறது என்பது உறுதியாகி விட்டது.

இதற்குக் காரணம் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். மத்திய அரசு வெறும் வாய்ச் சவடால் காட்டி வரும் அளவுக்கு நாட்டு வளர்ச்சியை நோக்கி செல்வதற் கான எந்தவித அறிகுறியும் அதனிடம் காணப்படவில்லை.

காங்கிரஸ்மீது அதிருப்தி அடைந்த மக்கள் பி.ஜே.பி.க்கு வாக்களித்தார்கள். ஆனால், பி.ஜே.பி. ஆட்சியோ முந்தைய காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பாதையிலேயே பயணம் செய்து கொண்டு இருக்கிறது. பொருளாதாரக் கொள்கையாக இருந்தாலும் சரி, வெளியுறவுத் துறைக் கொள்கையாக இருந்தாலும் சரி காங்கிரசுக்கும், பி.ஜே.பி.,க்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை என்பதால், வெகுமக்கள் இன்றைய பி.ஜே.பி. ஆட்சியின்மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆயுள் காப்பீட்டுத் துறையிலும், பாதுகாப்புத் துறை யிலும்கூட 49 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு வழி செய்யப் பட்டு விட்டது. பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பது சம்பந்தப்பட்ட நிறுவனங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்ற காங்கிரஸ் நிலையே இப்பொழுதும் தொடர்கிறது. விலைவாசிகள் விண்ணைத் தொடுகின்றன.

90 நாள்களில் இந்தியா முழுமையும் மதக் கலவரங்கள் கொம்பு முளைத்துக் கிளம்பிவிட்டன. பி.ஜே.பி.யை பின்னணியிலிருந்து ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸின் குரல்தான் ஆட்சிக் கொள்கையாக ஓங்கி ஒலிக்கிறது.

மதச்சார்பற்ற நாடு இந்தியா என்ற அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக இந்தியா இந்து நாடு என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் அப்பட்டமாகப் பேசுகிறார்.

இதுகுறித்து பி.ஜே.பி. தரப்பிலோ, ஆட்சி தரப்பிலோ எந்தவிதமான மறுப்பும் கசியவில்லை. (அப்படிக் கசிந்தால் அடுத்த நொடியே ஆட்சி ஆட்டம் கண்டுவிடும் என்பது தெரிந்ததே!).

இந்திய அரசமைப்புச் சட்டம் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் இடம்பெற்றிருக்க, கிடந்தது கிடக்கட்டும்; கிழவியைத் தூக்கி மணையில் வை என்பதுபோல, சமஸ்கிருத வாரம் கொண்டாடவேண்டும் என்று சொல்லு வதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா அஜண்டாவின் வெளிப்பாடே!

90 நாள்களுக்குள் பி.ஜே.பி.யின் முகமூடி கழன்று வீழ்ந்துவிட்டது. முகச்சாயம் முழு அளவில் கரைந்து போனது.

தேர்தல் முடிவு குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத் அவர்கள் மருத்துவமனையிலிருந்து மிகச் சரியாகவே கூறியுள்ளார். பி.ஜே.பி.,க்கு வாக்களித்த மக்கள் தங்கள் தவறினை உணர்ந்து கொள்ளத் தயாராகிவிட்டனர்.

தமிழ் ஓவியா said...

இந்த இடத்தில் ஒன்று மிக முக்கியம். மத்தியில் பி.ஜே.பி. தலைமையிலான அரசு நாட்டை இந்துத்துவா நாடாக மாற்றும் அபாயகரமான வேலையில் இறங்கிவிட்டது. மதச் சார்பற்ற தன்மைக்கு மரணக் குழியை வெட்டுகிறது. இந்தப் பேராபத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றிட மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரளவேண்டும்.

பிகாரில் லாலுபிரசாத்தும், நிதிஷ்குமாரும் இணைந்தது ஒரு திசை விளக்காகும். இதில் முலாயம்சிங் போன்றோ ரும், மாயாவதியும் இணைந்தால், மதவாத பிற்போக்கு சக்தி களுக்கு இங்கு இடமில்லை என்ற நிலையை உருவாக்கலாம்!

சிறுசிறு கருத்து வேற்றுமைகளையெல்லாம் தூர வைத்துவிட்டு, ஒட்டுமொத்த சமுதாய நலன் எனும் பொறுப்புணர்ச்சியோடு முதன்மையானப் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுப்பதே புத்திசாலித்தனமும், பொறுப் பானதுமாகும்!

Read more: http://viduthalai.in/page1/86544.html#ixzz3C9mYwFxI

தமிழ் ஓவியா said...

மோகனா அரங்கசாமி உருவப் படத்தைத் திறந்துவைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தலுரை

சென்னை, ஆக. 26- பச்சையப்பன் கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் அரங்கசாமியின் வாழ்விணையர் மோகனா அரங்கசாமி நினைவேந்தல் நிகழ்ச்சி காஞ்சி ஓட்டல் மாநாட்டு அரங்கில் நடைபெற்றது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் பேராசிரியர் ப.இரா.அரங்கசாமி அனைவரையும் வரவேற்றார். மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரசு கட்சி செயலாளர் தண்டாயுதபாணி, சட்டமன்ற உறுப்பினர் கோவி. செழியன் மற்றும பலர் இரங்கலுரை ஆற்றினார்கள்.

படத்தைத் திறந்துவைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றியதாவது:

மிகுந்த துன்பத்துக்கும், துயரத்துக்கும் இடையே அன்றாடம் நம்மோடு பாசத்தோடு பழகிய சகோதரியின் படத்தை ஒரு சகோதரனாக திறந்துவைக்கக் கூடியது மிகுந்த துன்பத்துக்கு உரியதாகும். சகோதரியார் மோகனா அம்மையார் அவர்கள் மகளிரணித் தோழியர் களுடன் பெரியார் திடலில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சி களில் உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சி யோடு கலந்துகொள்வார்கள். 45 ஆண்டுக்கால இணைபிரியாத வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அன்பின் வழியதுயிர்நிலை என்று சிறந்த வாழ்க்கையாக, இல்லறம் மட்டுமின்றி தந்தை பெரியார் கூறியதுபோல், இல்லறத்துடன் இணைந்த தொண்டறமாக வாழ்ந் துள்ளார்கள். பணியாளர்களிடம்கூட மனித நேயம் உள்ளவராக இருந்துள்ளார். பெரியார் பெருந்தொண் டர்கள் தலைசிறந்த மனிதநேயக்காரர்களாகவே இருப்பார்கள். தந்தைபெரியார் கூறும்போது, உன்னு டைய சுயமரியாதையை எதிர்பார்ப்பதைப்போல், மற்றவர்களின் சுயமரியாதையையும் மதிக்க வேண்டும் என்றார்.


தமிழ் ஓவியா said...

அதிரடி அரங்கசாமி

மோகனா அம்மையார் பேராசிரியர் அரங்கசாமிக்கு தோழராக, வாழ்க்கைத் துணைநலம் என்பது மட்டுமின்றி வாழ்விணையராக அறிவுரை மட்டுமின்றி, இடித்துரைத்து வழிநடத்துவார். பொதுவாக எவ்வளவு தான் சீர்திருத்தம் பேசினாலும், தந்தைபெரியார் சொல்லுவார் பெண் சுதந்திரம் இன்னமும் முழுமை யாக இல்லை. இல்லறம், துறவறம் என்பதை பெரியார் மாற்றி இல்லறத்துடன் கூடிய தொண்டறம் என்று சொன்னார்கள். மனிதன் அடிப்படையில் சுயநலவாதி. தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும் என்றுதான் இருப்பான். தன்னலம் மறுத்து, பொதுநலம், பிறர் நலம் என்பது இருக்க வேண்டும். திராவிட, பகுத்தறிவு சூழலில், எல்லார்க்கும் இனியராக இருந்து வாழ்ந் துள்ளார்கள். பேராசிரியர் அரங்கசாமி சரியான, தெளி வான பெரியாரிஸ்ட்.. அதிர்வேட்டு, அதிரடி அரங்கசாமி!

ஆணாதிக்கம் உள்ள சமுதாயம். பாராட்டுவதில்கூட கருமித்தனமாக இருக்கும். பச்சையப்பன் கல்லூரியில் ஆற்றல் மிக்கவராக, முத்திரை பதித்த சமூகநீதியை கட்டிக்காத்தவராகத் திகழ்ந்தார் என்றால், அவர்மட்டு மல்ல. அவர் வாழ்விணையரும்தான் காரணமாக இருந் துள்ளார். அறிவுரை சொல்லக்கூடியவர் மோகனா அம்மையார். கூட்டுவாழ்க்கையில் அஸ்திவாரமாகப் பெண்கள்தான் இருக்கிறார்கள். நன்றி உணர்வு குறைவாக உள்ளது. பெருமைகள் அனைத்தும் ஆண் களுக்குத்தான் செல்கிறது. பெண்களுக்கு அளிக்கப் படுவது இல்லை. கோபுரம் வெளியே பார்க்கும்போது பெருமை பெறுகிறது என்றால் அதைத் தாங்கி உள்ளது அஸ்தி வாரம்தான். வேர்கள் வெளியே தெரியாமல் மரங்க ளைக் காப்பதுபோல் பெண்கள் பங்களிப்பு உள்ளது.

செத்தாருள் வைக்கப்படும்

தந்தை பெரியார் கூறும்போது, செத்துப்போவது என்பதை உயிர்ச்சத்து போய்விட்டது என்பார்கள். சத்து இருந்தது இயங்கிக்கொண்டிருந்தார். செத்துப் போனது குறித்து வள்ளுவர் குறளில் கூறும்போது, இறப்பவர்கள் எல்லாம் இறந்தவர்களும் அல்லர். இருப்பவர்கள் எல்லாம் இருப்பவர்களிலும் செத்தாருள் வைக்கப்படுபவர்கள் உண்டு. ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் என்று வள்ளுவர் கூறுகிறார். ஆங்கிலத் திலே சிம்பதி (ஷிஹ்னீஜீணீலீஹ்) என்பது இரக்கம் கொள்வது. இரக்கப்படுதைத் தாண்டி அவர்கள் நிலையில் தம்மை இணைத்துக்கொண்டு துன்பத்தை உணர்வது, இரக்கத்தைவிட பெரிதானது - அதுதான் எம்பதி (ணினீஜீணீலீஹ்). மற்றவர் துன்பத்தைத் தம் துன்பமாக நினைப் பவர்கள் இருப்பவர்கள். அவர்கள்! மற்றவர்கள் செத்தாருள் வைக்கப்படுவர். மற்றவர்களுக்கு பயன் படும் வகையில் பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும்.

ஆத்மா, கோவில், ஜாதி இவை யாவும் குறளில் இல்லை. பெரியார் சொல்லும்போது உன் மொழியில் இல்லாதவை வேறு எங்கிருந்தோ வந்தவை என்று கூறுவார். அன்பின்வழியதுயிர் நிலை என்று இருக்க வேண்டும். எலும்பும், தோலும் போர்த்திய உடம்பு மட்டுமிருந்து அன்பில்லை என்றால் பயனில்லை.

அரங்கசாமி மோகனா இணையர் 45 ஆண்டுகாலம் நிறைவாழ்வு வாழ்ந்துள்ளார்கள். புரட்சிக்கவிஞர் சொல்வதுபோல் முதியோர் காதல். இளமை வாலிபத்திலிருந்ததைவிட முதுமையில் தோழமையின் அவசியம் தேவைப்படும். கஷ்ட,நஷ்டம், தார,தம்மியம் என்று எல்லாவற்றிலும் உற்ற துணையாக இருந்தவரை இழந்து இருக்கும்போது, ஆயிரம்பேர் ஆறுதல் கூறினாலும், ஆறுதல் பெற முடியாது. பிள்ளைகள் நல்லமுறையில் பெற்று வளர்த்துள்ளீர்கள். பக்குவம் பெற்ற குடும்பமாக உள்ளீர்கள். இனி தொண்டறம்தான் முக்கியமானது. இயக்கப்பணிக்கு, பெரியார் திடலுக்கு, பொதுவாழ்க்கைக்கு வாருங்கள். கொள்கையால், செயல்படும்போது மோகனா அம்மையார் உங்களோடு இருக்கிறார். மகன்கள் அன்பு, அரசு, மருமகள்கள், குடும்பத்தில் பெருமைகளைத் தூக்கிப்பிடியுங்கள். கொள்கை, அன்பு மாறாததாக இருக்கும்.

இவ்வாறு தமிழர் தலைவர், ஆசிரியர் பேச்சின் போது குறிப்பிட்டார். பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியம், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன், முனைவர்கள் ஜானகி, ஜாபர்உசேன், மங்கள முருகேசன், மறைமலை இலக்குவன், பேராசிரியர் கருணானந்தம், பேராசிரியர் காமாட்சி, பேராசிரியர் சுந்தரம் பேராசிரியர், குணசேகரன், பேராசிரியர்கள் சம்பந்தம், பேராசிரியர் ராஜீ ஆறுமுகம், தொல்காப் பியன், சம்பத் பாபு, அர.அன்பு (அரங்கசாமி - மோகனா ஆகியோரின் மூத்த மகன்) ஆகியோர் இரங்கலுரை ஆற்றினர். பேராசிரியர் இ.இரவி நன்றி கூறினார்.

அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித் துளிகள் இரங்கல் தெரிவித்தனர்.

Read more: http://viduthalai.in/page1/86523.html#ixzz3C9mpLqpd

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

தோப்புக்கரணம்!

ஒரு சமயம், விஷ்ணு வின் சக்கரத்தை விநாயகர் விளையாட்டாக எடுத்து வைத்துக் கொண்டு விட்டார்!

பதறிப்போன விஷ்ணு, விநாயகரிடம், கொடுத்து விடப்பா! என்று கெஞ் சிக் கேட்டார். விநாய கரோ, சக்கரத்தை வாயில் போட்டுக் கொண்டு விட்டார்!

விஷ்ணுவிற்கு என்ன செய்வதென்று புரிய வில்லை! மீண்டும் கெஞ் சிப் பார்த்தார். ம்ஹூம்... எந்தப் பயனும் இல்லை!

விஷ்ணுவிற்கு ஒரு யோசனை வந்தது! வலது கையால் இடது காதை யும் இடது கையால் வலது காதையும் பிடித்துக் கொண்டு வேடிக்கையாக உட்கார்ந்து.... உட்கார்ந்து எழுந்தார்!

இந்தச் செய்கையைப் பார்த்த விநாயகருக்குச் சிரிப்பு வந்துவிட்டது! கடகட வென்று அவர் சிரித்த சிரிப்பில் வாயிலி ருந்த சக்கரம் கீழே விழுந்து விட்டது! பாய்ந்து சென்று அதை எடுத்துக் கொண்ட விஷ்ணு அங்கு நிற்பாரா என்ன?

கர்ணம் என்றால் காது த்வி புஜ என்றால் இரண்டு கைகள். த்விபுஜகர்ணம் என்பதே.

தோப்புக்கரணம் என்று ஆகி விட்டதாம்! தோப்புக்கரணம் தோன்றியது கேலிச் சிரிப் பினால்தானா?

(சிரித்தால் வயிற்றில் உள்ளது வெளி யில் வருமா?) அதற்குப் போய் பெரிய வெண் டைக்காய் விளக்கெண் ணெய் வியாக்கியானங் களைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார் களே - அதை நினைத்தால்தான் பிள்ளையார் சிரித்ததைவிட அதிக சிரிப்பு வெடித்துக் கிளம் புகிறது.

Read more: http://viduthalai.in/page1/86490.html#ixzz3C9nU5E7I

தமிழ் ஓவியா said...

பொது மக்கள் நலன்!


இது நம்முடைய நாடு; இதன் நலனில் நமக்குப் பொறுப்பும், அக்கறையும் உண்டு. நாம் பொதுமக்கள் நலனுக்காக தொழில் செய்கிறோமே ஒழிய, அரசாங்க அதிகாரிகள் நலனுக்காக அல்ல. (குடிஅரசு, 25.8.1940)

Read more: http://viduthalai.in/page1/86479.html#ixzz3C9o104ip

தமிழ் ஓவியா said...

வாழும் மனிதர்களும் வள்ளுவரின் கணக்கெடுப்பும்!


பிறக்கும் மனிதர்கள் என்றாவது ஒரு நாள் இறக்கும் மனிதர்களே! இது நாள்வரை... எதிர் காலத்தில் எப்படியோ! ஆனால் சாகாமல் வாழும் மனிதர்கள் என்றும், செத்த மனிதர்கள் என்றும், மனித உருவில் உள்ள எலும்பும் தோலும் போர்த்த மனிதர்கள் என்றும், பழிப்பு நீங்கிய மனிதர்கள் என்றும், ஒரு அருமையான கணக்கெடுப்பை, மனிதர்களின் தரப் பிரிப்பை - சமுதாயப் பார்வையோடும், மனிதப் பண்புகளை முன்னிறுத்தியும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் படம் பிடித்துள்ளார் - ஈராயிரம் (2000) ஆண்டுகளுக்கு முன்பே என்பது வியக்கத்தக்கது அல்லவா?

உயிருடன் உள்ள மனிதர்களையெல்லாம் திருவள் ளுவர் வாழும் மனிதர்களாக, தன் கணக்கெடுப்பில் பார்க்க மறுக்கிறார்.

பின் யார்தான் வாழும் மனிதர் - அவரது கூரிய கண்ணோட்டத்தில்...?

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் (குறள் 214)

ஒப்புரவு என்ற அதிகாரத்தில் மற்றவர் துன்பத்தைக் கண்டு வெறும் இரக்கத்தை மாத்திரம் காட்டாமல், துன்பப்படுபவர் இடத்தில் தன்னையே நிறுத்தி, துன்பத்தை உணர்பவராக்கிக் கொண்டு உதவிடத் துடிக்கிறார்களே, அவர்களே உண்மையில், வாழும் மனிதர்கள் ஆவர்; அந்தப்படிக்கு இல்லாத உயிருடன் உலவும் ஏனையோர் செத்தவர்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவர்கள் என்கிறார்!

சமூக வாழ்வில், முந்திக் கொண்டு பிறரது துன்பத்தை தமக்கே ஏற்பட்ட துன்பமாகக் கருதி செயல்படுவோரைத் தான் வாழும் மனிதர் என்று அங்கீகரிக்கிறார் வள்ளுவர்!
இரக்கப்படுதலை ஆங்கிலத்தில் Sympathy என்று அழைக்கிறார்கள்; ஆனால் மேற்காட்டிய - துன்பத்தை உணர்ந்து துன்பப்பட்டவரின் இடத்தில் தன்னை நிறுத்தும் நிலைக்கு Empathy என்று கூறப்படுகிறது.

மனிதநேயத்தின் தலை சிறந்த கூறு இது! ஆனால் மனிதர்களிடையே வெகு அபூர்வமாகவே காணப்படு கிறது என்பதால், மிகக் கோபமாக வள்ளுவர் மற்றவர் களை செத்தவர்கள் கணக்கில் சேருங்கள் என்கிறார்!

இன்னொரு குறளும்கூட இப்படி இறந்தவர்-செத்தவர் கணக்கில் - சேர்க்கப்பட வேண்டியவர்கள் பற்றிக் கூறுகிறது!

இறந்தார் இறந்தார்அனையர் சினத்தை
துறந்தார் துறந்தார் துணை (குறள் 310)

இதன் கருத்து: அளவு கடந்த கோபத்தைக் கொண்டவர்; உயிருடன் காணப்பட்டாலும் அவர் உண்மையில் செத்தாரைப் போன்றே கருதப்படுவார். சினத்தை அறவே துறந்தவர்கள், துறந்தவர்க்கு (உண்மைத் துறவிகளுக்கு) ஒப்பாக உயர்ந்தவராகவே கருதப்படுவர்.

இந்தக் கணிப்புப்படி சினத்தின் உச்சிக்கு சென்றவர்களை வாழும் மனிதர்களின் பட்டியல் கணக்கெடுப்பில் வள்ளுவர் கொண்டுவர மறுக்கிறார்!

உடற்கூறுபடி பற்பல நேரங்களில் உச்சக் கட்ட சினம், அதிகமான ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, மூளை ரத்தக் குழாய் வெடிப்பு (Cerebral Hemorrhage) போன்றவைகளில் கூட கொண்டு போய் மனிதர்களை உண்மையாகவே செத்தவர்களாக்கி விடுகின்றதே அக்கண்ணோட்டத்தோடுகூட இக்குறளை நோக்கின் எவ்வளவு அருமையான மதிப்பீடு இது என்பது புரிகிறது!

மற்றொரு வகையில் தோற்றத்தால் மனிதர்கள்; ஆனால் உண்மையில் அத்தகையவர்கள் வாழும் மனிதர்கள் அல்லர். அல்லவே அல்லர் - வள்ளுவரின் கணக்கெடுப்பின்படி.

இது ஒரு தனி ரகம்!

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்பு தோல்போர்த்த உடம்பு (குறள் 80)

இதன் பொருள்: அன்போடு பொருந்தி இயங்கும் உடம்புதான், உயிர் நிலை பெற்று விளங்கும் உடம் பாகும். அப்படிப்பட்ட அன்பு இல்லாதவரின் உடம்பு எலும்பின் மேல் போர்த்தப்பட்ட வெற்று உடம்பே யாகும்.

மற்றொரு வகையும் வள்ளுவரின் கணக்கெடுப்பில் வருகிறது!

வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
வாழ்வாரே வாழாதவர் (குறள் 240)

தம்முடைய வாழ்க்கையில் பழிப்பு நீங்க வாழ்பவரே, உயிரோடு வாழ்பவர் ஆவார்; புகழ் நீங்க வாழ்பவர் - அவர் உயிரோடு வாழ்ந்தாலும்கூட, உள்ளபடியே வாழாதவரே ஆவார்! என்பதே இக்குறள் கூறும் கருத்து.

எனவே, வள்ளுவரின் கணக்கெடுப்பின்படி மனிதர்கள் நம் நாட்டு மக்கள் தொகையில் மிக மிகக் குறைவுதான்! இல்லையா...?!- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page1/86481.html#ixzz3C9oA5Fyn

தமிழ் ஓவியா said...

அண்ணாவுக்கு பாரத ரத்னா! கலைஞர் வேண்டுகோள்!


சென்னை, ஆக. 25- இந்தியப் பேரரசின் பாரத ரத்னா விருது, இந்திய நாட்டில் உள்ள மூத்த தலை வர்களுக்கு ஆண்டுதோறும் வழங்குவதையொட்டி, தென்னகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு இந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கவேண்டுமென்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் குடியரசுத் தலைவர் அவர்களுக்கும், இந்தியப் பிரதமர் அவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து நேற்று கடிதம் எழுதியுள்ளார்கள்.

அந்தக் கடிதத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது:

விருதுக்குப் பெரிதும் பொருத்தமானவர்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், மிகப்பெரிய சமூகசீர்திருத்தவாதியும், எழுத்தாளரும், இலக்கியவாதியும், சொற்பொழிவாளருமான பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த விருதுக்குப் பெரிதும் பொருத்தமானவர் என்றும், அவருக்கு இந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்குவது பொருத்தமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதன் விபரம் வருமாறு:-

காஞ்சி தந்த காவியத் தலைவர் உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர், பேரறிஞர் பெருந் தகை அண்ணாஅவர்கள்! பல்துறை ஆற்றல் நிரம்பப் பெற்ற அறிவுலக மேதை!

எளிய குடும்பத்தில் பிறந்து, நல்ல மாணவராக, ஆற்றல்மிகு பேச்சாளராக, சிறந்த எழுத்தாளராக, உள்ளம் கவர்ந்த பத்திரிகை ஆசிரியராக, நல்ல நூலா சிரியராக, நாடக ஆசிரியராக, நாடக நடிகராக, பண் பட்ட அரசியல் வாதியாக, உத்தமத் தலைவராக, ஒப்பற்ற வழிகாட்டியாக, நாடு போற்றும் முதல் அமைச்சராக, பல்துறை ஆற்றல் நிரம்பப் பெற்ற அறிவுலக மேதையாக ஓங்கு புகழ் எய்தியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

ஏழை, எளிய மக்களிடையே தம் பேச்சாற்றலால் அறிவுப் புரட்சியை உருவாக்கியவர் அவர்.

தமிழ்ச் சொற்றொடர் அமைப்பிலே புதிய நடை கண்டு, எழுச்சி மிகுஎழுத்தால், இலட்சக்கணக்கான இளைஞர்களின் இதயங்களைக் கவர்ந்து, எழுத்துலகில் புரட்சியை உண்டாக்கிய மேதையான பேரறிஞர் அண்ணா அவர்கள் அடக்கத்தின் வடிவமாகத் திகழ்ந் தார்கள். முதன்முதலாக, அரசியலில் குடும்பப் பாச உணர்வை ஊட்டியவர்; மாற்றாரையும் மதிக்கக் கற்றுத் தந்த ஆசான்; மாபெரும் ஜனநாயகத் தலைவர் அவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர் பேரறிஞர் அண்ணாஅவர்கள்.

சீர்திருத்தக் கருத்துகள்

பேரறிஞர் அண்ணா அவர்கள் திரைப்படங்களுக்குக் கதை வசனம் எழுதி, சுயமரியாதைக் கொள்கைகளை, சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடையே பரப்பினார். ஏழை எளியவர்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு போராட்டங் களில் ஈடுபட்டுப் பலமுறை சிறைவாசம் ஏற்றார்.

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றி, சுயமரியாதை இயக்கத் தலைவர் தந்தை பெரியாருக்கு அன்புப் பரிசு என்று அதனை அறிவித்தார். தமிழ் மக்களின் சிந்தனையில் படிந்து கிடந்த அழுக்குகளை அகற்றி தமிழகத்தை மாற்றியமைக்க தம் நாவையும், எழுது கோலையும், இறுதி மூச்சுவரை பயன்படுத்தினார்.

தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தவர்

தமிழ்மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம் பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாதுபாடுபட்ட உத்தமர் அவர்! தமிழ்நாடு என தாய்க்குப் பெயர் சூட்டிய தனயன்!

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று தம்பிமார் பெரும்படையைக் கண்டு, நெஞ்சுயர்த்திப் பெருமிதம் கொண்ட பெருமகனான பேரறிஞர் அண்ணா அவர்கள் - மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்து தாய்க்குப் பெயர் தந்த தனிப்பெரும் தனயன் என்ற பெரும் புகழுக்குரியவர்!

சுயமரியாதைச் சுடரொளி - சொக்கவைக்கும் சொற்பொழிவாளர் - எழுத்துவேந்தர் - தென்னகத்தின் மிகப்பெரும் அரசியல் தலைவர் எனப் பாராட்டி, வருணித்து முடிக்க முடியாத அளவுக்கு பல்வேறு சிறப்புக்களுக்கும், பெருமைகளுக்கும் உரியவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்!

தமிழ் ஓவியா said...


இந்நிலையில், இந்தியப் பேரரசின் பாரதரத்னா விருது, இந்திய நாட்டில் உள்ள மூத்த தலைவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்குவதையொட்டி, தென்னகத் தின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு இந்த ஆண்டு வழங்கவேண்டு மென்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் குடியரசுத் தலைவர் அவர்களுக்கும், இந்தியப் பிரதமர் அவர் களுக்கும் வேண்டுகோள் விடுத்து நேற்று (24.8.2014) கடிதம் எழுதியுள்ளார்கள். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியுள்ள அக்கடிதங்களில் கூறப்பட்டுள்ள தாவது:-

நமது தேசியத் தலைவர்களில் சிலருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக நாங்கள் அறிகிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டின் மாபெரும் சமூக சீர்திருத்தவாதி, மாபெரும் எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் இலக்கியவாதியாவார்.

தமிழிலும், ஆங்கிலத்திலும்....

தமிழிலும், ஆங்கிலத்திலும் அவரது இலக்கிய மற்றும் அரசியல் படைப்புகள் தமிழ்நாட்டில் மிகச் சிறந்தவற்றில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரதரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட அவர் முற்றிலும் தகுதி உடையவராவார்.

வரவிருக்கும் குடியரசுதினத்தன்று அறிஞர் அண்ணா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கும்படி நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில்கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page1/86472.html#ixzz3C9oy5bFn

தமிழ் ஓவியா said...

கோமாதா ஆந்திராவில் படுத்தியபாடு!


ஞானபூமியாம் இந்த நாடு! புண்ணிய பூமியாம் இந்த நாடு!

பாரத நாடு பழம்பெரும் நாடு - இப்படிப் பாடுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை!

நாள்தோறும் வரும் செய்திகளோ, உலக மகா அவமானத்தின் உச்சத்தில் நம் நாட்டைக் கொண்டு செல்லும் அவலச் சுவைகள்!

இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் ஒரு செய்தி - மூடநம்பிக்கை இந்த நாட்டினை எப்படியெல்லாம் உருக்குலையச் செய்துள்ளது என்பதற்குக் கலங்கரை வெளிச்சம் போல், வெளிச்சம் போட்டு உலகத்திற்குக் காட்டும் செய்தியாகும்!

தெலங்கானா பகுதியில் உள்ள வாரங்கல் பகுதியில் நேற்று ஒரு செய்தி... ஒரு பசு மனித உருவ கன்றுக் குட்டியைப் போட்டதாம்! அது பேச ஆரம்பித்ததாம், (தெலுங்கில் தான் பேசியதோ! அல்லது ஹிந்தி உருது மொழியில் பேசியதோ விசாரிக்க வேண்டும் இனிமேல்தான்) பூகம்பம் வந்து அப்பகுதியே அழியப் போகிறது என்று அந்தப் பசு மாடு மனிதக் குட்டி கூறியதாம்! அதனால் அப்பகுதி மக்கள் பூராவும் வீட்டுக்குள் இருக்காமல், தூங்காமல் இரவெல்லாம் கண் விழித்துக் காத்துக் கிடந்தார்களாம்!
எங்கும் வதந்திகள்! வதந்திகள்!!

அதை நம்பி, செவ்வாய் இரவு முழுவதும் சாவுக்குப் பயந்து, அதே போல புதன் இரவும் இரு நாட்களில் இப்படி விழித்தே வெளியில் பீதியில் குந்தியிருந்தார்களாம் எவ்வளவு பெரிய அறிவுக் கொழுந்துகள் பார்த்தீர்களா? இந்த லட்சணத்தில் கைத் தொலைபேசிகளும் இத்திருப்பணிக்கு - வதந்திக்கு உதவினவாம்! எவ்வளவு வெட்கக்கேடு!
மொபைல்ஃபோன் கண்டுபிடித்தவன் இதைக் கேட்டால் தூக்கு மாட்டிக் கொள்ள மாட்டானா?

கரிம்நகர், வாரங்கல், நாலகொண்டா, மேடாக் பகுதிகளில் குழந்தைகளையும் தூங்கவிடவில்லையாம் பெற்றோர்கள்! என்ன மடமை!!

கோமாதா, குலமாதா என்ன பாடுபடுத்துகிறது பார்த்தீர்களா?

எங்கள் நாட்டுக்கெந்த நாடு ஈடு?

பைத்தியக்காரத்தனத்தைப் பாங்குடன் பரப்புவதில் எந்த நாடு ஈடு?

- ஊசி மிளகாய்

Read more: http://viduthalai.in/page1/86301.html#ixzz3C9rRCD3o

தமிழ் ஓவியா said...

ராகு காலம்


இன்றைய ஆன்மிகம்?

ராகு காலம்

ராகு காலத்தில் வீட்டில் இருந்து கிளம்ப நேரிட்டால் என்ன பரிகாரம் செய்யலாம்?
- ராம. முத்துக்குமரன், கடலூர்

துர்க்கையம்மனுக்கு விளக்கேற்றி சிவப்பு புஷ்பம் சாத்தி வழிபட்டு மனத் தெளிவுடன் கிளம்புங்கள். உங்களுக்கு வெற்றிதான்.
ஓர் ஆன்மிக இதழ்

சரி, ராகு காலத்தில் விமானமோ ரயிலோ புறப்பட்டால் என்ன செய்ய வேண்டுமாம்?

Read more: http://viduthalai.in/page1/86300.html#ixzz3C9rby9FZ