இப்படி சொல்லுபவர்கள் உண்டு. அவர்கள்
கொஞ்சம் கண் திறந்து பார்க்கட்டும். நேற்று முதல் நாள் ஆவணி அவிட்ட மாம்.
அதில் பூணூல் அணியும் காட்சியும் படங்களுடன் ஏடுகளில் வெளி வந்திருக்கிறது.
திரிநூல் மலரான ஏடு முழு பக்கம் ஒரு கட்டு ரையையே தீட்டி தன் பூணூலை உருவி விட்டுள்ளது.
தலைப்பு என்ன தெரியுமா! அறிவு திறனும் ஆவணி அவிட்டமும்!
அப்படி என்ன தான் அறிவு திறன் பொங்கி
வழிகிறது என்று பார்த்தால் அந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்தால்
பைத்தியம்தான் பிடிக்கும். யாருக்கும் புரியக் கூடாது என்பதற்காகவே
திட்டமிட்டு எழுதி வெளியிட்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவு! அவாளின்
அறிவுத் திறனுக்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு.
இப்படியாக சூரியன், சந்திரனின் வீட்டில் நின்று, சந்திரன் சூரியனை எதிர் கொள்ளும் பவுர்ணமி தினமே ஆவணி அவிட்ட தினமாம்.
சூரியன் - சந்திரன் வீட்டில் நின்றானாமே!
இந்தச் சந்திரன் பூமியிலிருந்து 27 லட்சத்து 38 ஆயிரத்து 800 மைல்
தூரத்தில் இருக்கிறது. (இவர்களின் புராணக் கதைப்படி பார்த்தால் இந்தச்
சந்திரன் தனது குரு பத்தி னியின் கற்பை அழித்தான் - முனிவரின் சாபத்தினால்
கிரகணத்துக்கு ஆளானான்).
சூரியனை எடுத்துக் கொண்டால்
பூமியிலிருந்து 9 கோடியே 28 லட்சத்து 30ஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ளது. 9
கோடி மைலுக்கு மேல் உள்ள சூரியன் 27 லட்சம் தூரத்தில் உள்ள சந்திரன்
வீட்டில் நின்றானாமே - இப்படி எழுதப்பட்டுள்ள கட்டுரைக்குத் தினமலர்
கொடுத்துள்ள தலைப்பு என்ன தெரியுமா! அறிவு திறனும் ஆவணி அவிட்டமும் நன்றாக
ஒரு முறை வயிறு குலுங்கக் குலுங்க சிரியுங்கள் - உடலுக்காவது நல்லது!
இந்தச் சூரியனுக்கு அவாளின் புராணம் சொல்லும் கதை என்ன தெரியுமா?
சூரியனின் ரத சாரதியின் பெயர் அருணன்.
இவன் இரு கால்களும் அற்ற முடவன். தாயால் அவயங் காக்கப் பட்ட
முட்டையிலிருந்து பிறந்தவன். இவன் இந்திர லோக வினோதங்களைக் காண்பதற்கு
என்று பெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண்
வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான் - இதனால் வாலி என்பவன்
பிறந்தான். இந்நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்து வர, சூரியன்
காரணம் கேட்டு, நடந்ததையறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வரச்
செய்ய, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான் - அதனால் சுக்ரீவன்
பிறந்தானாம் - இது அர்த்தமுள்ள இந்து மதத்தின் அவலட்சணம்!
இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில்தான் 5500
(செல்சியஸ்) டிகிரியுடைய சூரியன் கூடப் புணருவான்! பிள்ளையையும் பெற்றுத்
தள்ளுவான். ஹி..... ஹி....
சரி கதைக்கு வருவோம்; வேதத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்கள், வேதம் அறிந்தவர்கள் ஆவணி அவிட்ட நாளில் பூணூலைத் தரிப்பார்களாம்.
நேற்று முதல் நாள் ஏடுகளில் வந்துள்ள
தகவல் இந்தியா முழுமையும் சமஸ்கிருதம் அறிந்தோர். 14,000 பேர்கள் தானாம்.
தமிழ்நாட்டில் ஒருவர்கூட தாய்மொழி சமஸ் கிருதம் என்று குறிப்பிடவில்லையாம்
(மாலைமுரசு 10.8.2014 பக்கம் 6).
சமஸ்கிருதம் தெரியாமல் இவர்கள் எப்படி வேதத்தைப் படிப்பார்கள்? ஆக வேதத்தைப் படிக்காமலேயே பூணூல் அணிவது அசல் போக்கிரித்தனம் தானே?
மற்ற மற்ற விடயங்களில் எல்லாம் வித்தாரம்
பேசும் பார்ப்பன ஏடுகள், இதில் மட்டும் பம்முவது ஏன்? இந்த யோக்கியதையில்
அறிவு திறனும் ஆவணி அவிட் டமும் எனும் பெயரில் கட்டுரை ஒரு கேடா?
அப்படியே பார்த்தாலும் பூணூல் அணிவது என்ன? அதன் தாத்பரியம்தான் என்ன?
அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தைப் பிளந்து கட்டிய விவேகானந்தர் பூணூல்பற்றி என்ன சொல் லுகிறார்?
முடிவில்லாத பிறப்பாகிய மாயையைக் காக்கும்
பொருட்டு ஜீவனுடைய சோகங்களையும் துன்பங்களை யும் கருணையினால் அழித்து
விடுகின்றவரே உண்மைக் குரு. பழைய காலத்திலே சிஷ்யனானவன் கையில் சமித்துகளை
(கஞ்சா, ஓமவிறகு) எடுத்துக் கொண்டு குருவினுடைய குடிலுக்குப் போவான்;
குருவும் அவனு டைய தகுதி அறிந்து, உளம், சொல், செயல் ஆகிய மூன் றையும் அவன்
அடக்கி வைத்திருப்பதற்கு அடையாள மாக முப்புரியாகிய முஞ்சா என்னும்
புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி, அவனுக்குத் தீக்ஷை செய்து வேதங்களைப்
போதிப்பார். அரையிலே கட்டிய முப்புரியாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத்தைக்
கட்டிக் கொள்ளுவான். முஞ்சா என்னும் அப்புல்லினால் ஆக்கப்பட்ட
கயிற்றுக்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்து கொள்ளும் வழக்கம் பின்னாளில்
ஏற்பட்டது! (நூல்: சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள்) வேதங்களிலே பூணூலைப்
பற்றிய குறிப்பும் இல்லை என்று இன்னொரு இடத்தில் (அதே நூல் பக்கம் 26-28)
குறிப்பிட்டுள்ளார்.
புரியும்படிச் சொன்னால் கோவணம் கட்டப்
பயன்பட்ட கயிறுதான் பூணூலாக, உடநயனமாக - பார்ப்பானன் என்னும் இரு
பிறவியாளனாக - பிராமணனாக - அடையாளம் காட்டும் வருணத் திமிரின் சின்னமாகி
விட்டது என்பதை நமது சூத்திர பஞ்சம தமிழர்கள் உணர்வார்களா?
--------------------- மின்சாரம் அவர்கள் 12-08-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
20 comments:
சிசேரியன் - சோதிடம்?
குழந்தை பிறக்கும் நேரத்தை வைத்து ஜாதகம் கணிக்கிறார்கள். ஜாதகம் சரியா? என்கிற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்; இவர் கள் குழந்தை பிறக்கும் நேரம் என்கிறார்களே - அது எந்த நேரமாம்?
இதற்குத் தந்தை பெரியார் எடுத்து வைக்கும் வினாக்கள் இணையற்ற அறிவுத் தோட்டாக்கள்.
பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும் போதே ஜீவன் (உயிர்) ஏற் பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7, 8, 9, 10 மாதங்களில் எப்பொழுதானா லும் பிறக்கும் காலமா? அப்படிப் பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரை நாள் குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத் தில் தலை வெளியாகி நிலத் தில் பட்டு, கால் நிலத்தில் விழாமல், தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமா? அல்லது மருத்து வச்சி கைவிட்டு எடுத்த நேரமா? அல்லது டாக்டர் வயிற்றை அறுத்து எடுத்த காலமா? என்பனவாகிய கேள்விகள் ஒருபுறம் இருக்க, ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்பபோமானா லும், அந்த நேரத்தையாவது எப்படிச் சரியாகக் கண்டு பிடிக்க முடியும் என்பதை யோசிப்போம்! (நூல்: சோதி டம்) என்று அறிவு நாணய மாகத் தந்தை பெரியார் எழுப்பும் வினாக்களுக்கு விடையளித்துவிட்டு ஜாதகத் தைக் கணிக்கட்டும்!
ஒரு செய்தி வெளிவந் திருக்கிறது. என்.கண்ணன் அய்யராம் - பட்டீசுவரத்தை (கும்பகோணம் வட்டம்) சேர்ந்தவர். அவர் நிபுணத் துவம் எதில் தெரியுமா?
இதோ ஓர் எடுத்துக் காட்டு:
நிகழும் விஜய வருஷம் பங்குனி மாதம் 26 (16.3.14) ஞாயிற்றுக்கிழமை பூர நக்ஷத் திரம் கூடிய சுபதினத்தில் காலை 9.30-க்குமேல் 10.15-க் குள் ரிஷப லக்னத்தில் அறு வைச் சிகிச்சை செய்து குழந்தை எடுக்க உத்தமம் - என்று ஜாதகம் கணித்துள் ளார். இச்செய்தி முகநூலில் வெளிவந்துள்ளது.
எப்படி இருக்கிறது? குழந்தை இயற்கையாகப் பிறப்பதற்கு முன்பாக, நல்ல நேரம் குறித்து, அப்பொழுது சிசேரியன் செய்து குழந் தையை வெளியில் எடுப்பார் களாம்!
இந்த வைதிகம் அல்லது அய்திகம் எந்த சாத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளதாம்.
இந்தப் பார்ப்பனர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக எதைத்தான் செய்யமாட்டார் கள்?
இவ்வளவுக்கும் இவர் கள் சொல்லுகிற லக்னமாக இருக்கட்டும், கோள்களாகட் டும் பூமியிலிருந்து எவ்வள வுத் தொலைவில் உள்ளன. சூரியன் (இது கோளே அல்ல நட்சத்திரம்) 93 லட்சம் மைல்கள்; புதன் - 25.8 லட் சம் மைல்கள்; வெள்ளி - 27 லட்சம் மைல்கள்; வியாழன் - 390.6 லட்சம் மைல்கள்; சனி - 777 லட்சம் மைல்கள்; யுரேனஸ் - 1.69 கோடி மைல் கள்; நெப்டியூன் - 2.7 கோடி மைல்கள்.
குழந்தை பிறக்கும் நேரத் திற்கும், இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மைல் தூரத்தில் இருக்கும் இவை களின் நேரத்திற்கும் ஏதாவது சம்பந்தா சம்பந்தம் உண்டா? இவர்கள் இங்குள்ள நேரத் தைத்தானே கணிக்கிறார்கள். ஆனால், அந்தக் கோள்களில் இதே நேரம்தானா?
அறிவையும், பொருளை யும் சுரண்டும் இந்த சோதி டக் கொள்ளையர்களை என்ன சொல்ல - என்ன செய்ய?
- மயிலாடன்
Read more: http://viduthalai.in/page1/86535.html#ixzz3C9lkawcV
செய்தியும் சிந்தனையும்
பசை!
செய்தி: திருப்பதி கோவில் அறங்காவலர் குழுத் தலை வர் பதவிக்கு ஆளும் கட்சிக்குள் கடும் போட்டி; வேறு வழியின்றி முதல மைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடி முடிவு எடுத்து வருவாய்த் துறை செயலா ளரைத் தலைவராக நிய மித்தார்.
சிந்தனை: ஏன் கடும் போட் டியாம்? கோடிக்கணக்கில் பணம் புரளும் பசை மிகுந்த பதவியாயிற்றே!
Read more: http://viduthalai.in/page1/86542.html#ixzz3C9m8LnFV
ஒப்பற்ற ஆயுதம்
உங்கள் தனிப்பட்ட நலனை அலட்சியம் செய்வது என்கின்ற அந்த ஓர் ஒப்பற்ற ஆயுதம் அணுகுண்டையும் வெடிக்காமல் செய்துவிடும். - (குடிஅரசு, 9.3.1946)
Read more: http://viduthalai.in/page1/86543.html#ixzz3C9mNjNfN
திருச்சி அரியமங்கலம் சுடுகாட்டில் அகோரி சாமியார் நிர்வாண பூஜை கண்டுகொள்ளாத காவல்துறை
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூடநம்பிக்கை பரவுவதற்கும் பஞ்சமில்லை.
நம் நாட்டில் கடவுள் அவதாரம்! நடமாடும் தெய்வம்! லோக குரு! தொடங்கி, பீடி, சுருட்டு, பிராந்தி சாமியார். அதற்கும் மேலாக நிர்வாண பூஜை, பாலியல் பூஜை வரைக்கும் சென்ற சாமியாரின் கதைகள் காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் நாறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் அரிய மங்கலம் சுடுகாட்டில் யாரோ ஒருவர் மர்மமான முறையில் தங்கி வருவதாக வும், அவர் கடந்த சில நாள்களாக நிர்வாண பூஜை செய்து வருவதாகவும், இதைக் காண பக்தியின் மோகத்தில் பக்தகே()டிகள் சிலர் சென்று வருவதாக வும் கூறப்பட்டது.
அத்தகவலின் அடிப்படையில் நாம் விசாரித்தபோது, சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த மணி கண்டன் என்பவர்தான் இந்த வேலை களில் ஈடுபட்டு வருதாகவும், அவர்தான் ஒரு அகோரி என்றும், இதுவரையில் காசியில் இருந்ததாகவும், அங்கு நரமாமி சம் சாப்பிட்டு வந்ததாகவும் கூறி, அங்கு வரும் பக்தர்களிடம் அச்சத்தை ஏற் படுத்தி வருகிறார் என்பதும் தெரிந்தது. இவர் காசியிலிருந்து இங்கு வந்த தற்கு காரணம் தனது சொந்த ஊரில் ஆன்மீகப் பணியை செய்யவேண்டு மாம்; அதற்காக அரியமங் கலத்தில் அகோரி காளி கோவில் கட்டி வழிபாடு நடத்த வேண்டுமென்றும், இதற்காக திருச்சி அருகேயுள்ள ஆலம்பட்டி புதூரில் அகோர காளி மாந்திரிக அறக்கட்டளையை நடத்தி வருவதாக வும், இதில் 150-க்கும் மேற்பட்ட மாந்திரிகங்களை சொல்லிக் கொடுத்து வருவதாகவும் கூறிவரும் இவர் பில்லி, சூனியம் பொய் என்று பிரச்சாரம் செய்ப வர்கள் 48 நாள்களில் இறந்து விடுவார் கள். அதற்கான யாகமும் நடத்தி வருவ தாகவும் புளுகு மூட்டை அவிழ்த்து விட்டு வருகிறார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப் பினர் நாடு முழுவதும் வரதட்சிணை, பேய், பில்லி சூனியத்திற்கு எதிரான பிரச் சாரங்களை மேற்கொண்டு வருவதோடு, இவை அனைத்தும் பொய் என்று சுவரொட்டி ஒட்டி வருகின்றனர். இதைக் கண்ட மணிகண்டன், தவ்ஹீத் ஜமாத் தலைவரிடம் சென்று, இப்படி ஒரு சுவரொட்டியை ஒட்டி உள்ளீர்கள். பேய், பில்லி சூனியம் எல்லாம் இருக்கின்றன. இவைகளை நான் நிரூபித்துக் காட்டுகிறேன் என சவால் விட்டுள்ளார். பதிலுக்கு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின ரும், நிரூபித்து காட்டு என்று சவால் விட்டதால் இருவருக்கும் இடையே ஒரு ஒப்பந்தமே போட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மணிகண்டன், திருச்சி மாநகர காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவிடம் சென்று தன்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டு, தான் ஆன்மீக பணியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கான பணிகளில் ஈடுபடும் போது தனக்கு இடையூறு ஏற்படுவதாகவும், எனவே எனக்கு பாதுகாப்பு வழங்கவேண்டு மென்று மனு கொடுத்துள்ளார்.
இதில் என்ன வேடிக்கை என்றால், காவல் ஆணையரும் மனுவை பெற்றுக் கொண்டு, பாதுகாப்பு எல்லாம் உனக்கு கொடுக்க முடியாது. வேண்டுமானால் உன்னுடைய ஆன்மீக பணியை சுடு காட்டிற்குள்ளேயே நடத்திக் கொள் என்று பொறுப்பு இல்லாமல் கூறியிருக் கிறார்.
இதனைத் தொடர்ந்து அகோரி மணிகண்டன் இரவு நேரங்களில் சுடு காடு அருகே இருக்கும் கிராமத்திற்குள் நிர்வாணமாக சத்தமிடுவதும், ஓடுவது மாக இருப்பதால் அப்பகுதி பெண்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். மூடத்தனத்தை மக்களிடத்தில் பரப்பு வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வரும் மணிகண்டனின் இந்தச் செய லுக்கு திராவிடர் கழகம் மற்றும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இவ்வளவு காலம் காசியில் பிழைப்பு நடத்தி விட்டு தற்போது திருச்சியில் தனது ஊரில் ஆன்மீக பணி செய்ய வந்துள்ளேன் என்று கூறி அரியமங்கலம் சுடுகாட்டில் நிர்வாணமாக பூஜை, புனஸ்காரங்கள் செய்து வருவதோடு, அனைத்து மத ஜாதியினருக்குமான பொதுவான மாநகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள சுடுகாட்டில் மது, கஞ்சா வஸ்து போன்றவைகளை சட்ட விரோதமாக பயன்படுத்துவது மட்டுமல்லாமல், நிர்வாண பூசை செய்து வருவது வெட்கக்கேடானது. இதை இதுவரை மாவட்ட நிருவாகமும், மாநகராட்சி நிருவாகமும், காவல்துறையினரும் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
இந்த மணிகண்டன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சங்கிலியாண்ட புரத்திலுள்ள பிள்ளையார் கோவில் உண்டியலைத் திருடிவிட்டு தப்பியோ டிய வர்தான் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மூடநம்பிக்கையையும், மக்களிடத்தில் அச்சத்தையும் ஏற்படுத்தி வரும் அகோரி மணிகண்டன்மீது இதுவரை காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடருமா னால் திராவிடர் கழகமும், சமூக ஆர்வலர்களும், அகோரி மணிகண் டனை அங்கிருந்து துரத்தும் நடவடிக் கையில் ஈடுபடுவார்கள் என்பதே உண்மை.
- மா.செந்தமிழனியன்
Read more: http://viduthalai.in/page1/86545.html#ixzz3C9nCpNHK
இன்றைய ஆன்மிகம்?
தோப்புக்கரணம்!
ஒரு சமயம், விஷ்ணு வின் சக்கரத்தை விநாயகர் விளையாட்டாக எடுத்து வைத்துக் கொண்டு விட்டார்!
பதறிப்போன விஷ்ணு, விநாயகரிடம், கொடுத்து விடப்பா! என்று கெஞ் சிக் கேட்டார். விநாய கரோ, சக்கரத்தை வாயில் போட்டுக் கொண்டு விட்டார்!
விஷ்ணுவிற்கு என்ன செய்வதென்று புரிய வில்லை! மீண்டும் கெஞ் சிப் பார்த்தார். ம்ஹூம்... எந்தப் பயனும் இல்லை!
விஷ்ணுவிற்கு ஒரு யோசனை வந்தது! வலது கையால் இடது காதை யும் இடது கையால் வலது காதையும் பிடித்துக் கொண்டு வேடிக்கையாக உட்கார்ந்து.... உட்கார்ந்து எழுந்தார்!
இந்தச் செய்கையைப் பார்த்த விநாயகருக்குச் சிரிப்பு வந்துவிட்டது! கடகட வென்று அவர் சிரித்த சிரிப்பில் வாயிலி ருந்த சக்கரம் கீழே விழுந்து விட்டது! பாய்ந்து சென்று அதை எடுத்துக் கொண்ட விஷ்ணு அங்கு நிற்பாரா என்ன?
கர்ணம் என்றால் காது த்வி புஜ என்றால் இரண்டு கைகள். த்விபுஜகர்ணம் என்பதே.
தோப்புக்கரணம் என்று ஆகி விட்டதாம்! தோப்புக்கரணம் தோன்றியது கேலிச் சிரிப் பினால்தானா?
(சிரித்தால் வயிற்றில் உள்ளது வெளி யில் வருமா?) அதற்குப் போய் பெரிய வெண் டைக்காய் விளக்கெண் ணெய் வியாக்கியானங் களைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார் களே - அதை நினைத்தால்தான் பிள்ளையார் சிரித்ததைவிட அதிக சிரிப்பு வெடித்துக் கிளம் புகிறது.
Read more: http://viduthalai.in/page1/86490.html#ixzz3C9nU5E7I
தற்காப்புக்காகப் பெண்கள் கத்தி வைத்திருப்பது வரவேற்கத்தக்கதே!
பெண்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கத்தியை வைத்துக் கொள்ளும் கலாச்சாரம் சென்னையில் பரவி வருவதாக வெளிவந்த செய்தி மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த நிலை ஏற்பட்டதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் வெட்கப்படத்தக்கன; தமிழ்நாட்டில் சட்டம். ஒழுங்கு சீர் கெட்டுப் போய் சந்தி சிரிக்கின்றது என்பதும் கவலைக்குரிய ஒன்றே!
இந்த நிலையில் அரசை நம்பியோ, காவல்துறையை நம்பியோ பயனில்லை; தன் கையே தனக்கு உதவி என்ற தன்னம்பிக்கையோடு, சமூக விரோத சக்திகளை எதிர் கொள்வது என்ற எண்ணம் பெண்கள் மத்தியில் விழித்தெழுந்ததே முதல்நிலையில் வரவேற்கப்பட வேண்டிய, பாராட்டப்பட வேண்டிய உணர்வாகும். மற்றவர்களைவிட, இந்த உணர்வை திராவிடர் கழகம் பெரிதும் மதித்து, மகிழ்வோடு வரவேற்கிறது.
பெண்கள் என்றாலே பலகீனமானவர்கள் என்ற சமூகக் கருத்து நிலவி வருகிறது. ஆண்டாண்டுக் காலமாக பெண்களை ஆண்களுக்குக் கிடைத்த கருவிகளாக வடித்து வைக்கப்பட்டதால், எப்படி வலது கைக்கு முன்னுரிமை கொடுத்து, இடது கையைப் பயனற்ற ஒன்றாக, வலிமையற்ற ஒன்றாக ஆக்கி வைத்திருக்கிறோமோ, அதைப்போல சமுதாயத்தில் ஆண்கள் என்றால் ஆண்மை உள்ளவர்கள் (ஆதிக்கம்) என்றும் பெண்கள் என்றால் பெண்மை (அடிமைத் தனம்)யுள்ளவர்கள் என்றும் அழகு வார்த்தையாம் மதுவைக் கொடுத்து பெண்கள் தன்னுரிமை எழுச்சியற்றவர்களாக ஆக்கப்பட்டு விட்டனர்.
இந்த நிலைமை மாறாத வரை பெண்கள் அச் சுறுத்தப்படுவதும்; பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் படுவதும், ஆண்கள் பெண்களை அடிப்பதும், உதைப்பதும், இழிவுபடுத்துவதும் கசப்பான தொடர் கதையாகத் தானிருக்கும்.
இந்த நிலை நிலவுவது ஏதோ பெண்களுக்கு இழுக்கு என்று கருதக் கூடாது; ஒட்டு மொத்தமான சமுதாயமே வெட்கப்பட வேண்டிய நிலையே!
மனிதனில் ஒரு கூறாகிய பெண்ணை இழிவு படுத்துவது, அடிமைப்படுத்துவது, நாகரிகக் குறைவும், நாணயக் குறைவும் அல்லாமல் வேறு என்னவாம்? மனிதனுக்குப் பகுத்தறிவு இருந்தும் என்ன பயன்?
பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம்; பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது (குடிஅரசு 16.6.1935) என்று இன்றைக்கு 79 ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்கோடு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் கூறியதை ஒரு கணம் பெண்களைவிட - ஆண்கள் தான் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
இந்து மதத்தின் சாத்திரங்களும், இதிகாசங்களும் பெண்களைப் புழுப் பூச்சியாகத் தான் பேசுகின்றன. இதிகாசத்தில் சீதையை ராமன் படுத்தியபாடும், மகாபாரதத்தில் திரவுபதையை அவமானப்படுத்திய கேவலமும் போதிய சாட்சியங்களாகும்.
இந்த நிலையில் தந்தை பெரியார் அவர்கள்தான் ஆணாகப் பிறந்த தாயாக இருந்து பெண்களின் நிலையை எண்ணி இரங்கினார்.
பெண்களின் உடலழகை, இடையழகைப் பற்றி வருணித்து நூறு பாடல்களைப் பாடும் புலவர் பெரு மக்கள் அவர்களின் உரிமையின் தேவையைப்பற்றி நான்கு வரிகள் எழுதக் கூடாதா? என்ற வினாவைத் தொடுத்தார்.
சாஸ்திரங்களையும், புராணங்களையும் ஆண் களுக்குப் பதிலாக பெண்கள் எழுதியிருந்தால் பெண் களை இவ்வளவு இழிவுப்படுத்தி எழுதி இருப்பார்களா? என்ற அறிவார்ந்த வினாவையும் எழுப்பியவரும் தந்தை பெரியாரே!
கும்மி, கோலாட்டங்களை ஒழித்து விட்டு, ஓடவும், குதிக்கவும், தாண்டவும், கைக் குத்து, குஸ்தி முதலானவைகளையும் சொல்லி கொடுத்து, ஓர் ஆண் பிள்ளைக்கு உள்ள பலம், தைரியம், உணர்ச்சி ஆகியவை பெண்களுக்கும் உண்டா கும் படியாகவும் செய்ய வேண்டும் என்று ஈரோட்டில் கருங்கல்பாளையம் நகராட்சிப் பெண்கள் பாடசாலை விழாவில் தந்தை பெரியார் குறிப்பிட்டுள் ளதை எண்ணிப் பார்க்க வேண்டும் (குடிஅரசு 26.4.1931).
அதனுடைய எதிரொலிதான் - பெண்கள் தற்காப் புக்காக கத்தி வைத்துக் கொள்ள முடிவு செய்திருப்ப தாகும். இன்னும் ஒருபடி மேலே சென்று இந்த நவீன காலத்துக்கேற்ப, பெண்கள் தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெரிவித்துள்ளது அரிய கருத்தாகும்.
தங்களிடம் விஷமம் செய்யும் - வன்முறையை ஏவிடும் சமூக விரோதிகள் பெண்களால் தாக்கப்பட் டனர் - நான்கு இடங்களில் என்ற செய்தி வெளி வரும்பட்சத்தில் ஆண்கள் மத்தியில் உளவியல் ரீதியாகவே ஒரு சிந்தனை மாற்றம் - தாக்கம் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.
சென்னையில் தற்காப்புக்காக பெண்கள் கத்தி வைத்துக் கொள்ளும் இந்தக் கலாச்சாரம் மற்ற மற்றப் பகுதிகளில் பரவுமேயானால், அதனையும் முதலில் வரவேற்பது திராவிடர் கழகமாகத்தானிருக்கும்.
மகளிர் அமைப்பினர் இதனை ஒரு பிரச்சார இயக்கமாக நாடெங்கும் நடத்திட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
Read more: http://viduthalai.in/page1/86480.html#ixzz3C9nnyLmx
பொது மக்கள் நலன்!
இது நம்முடைய நாடு; இதன் நலனில் நமக்குப் பொறுப்பும், அக்கறையும் உண்டு. நாம் பொதுமக்கள் நலனுக்காக தொழில் செய்கிறோமே ஒழிய, அரசாங்க அதிகாரிகள் நலனுக்காக அல்ல. (குடிஅரசு, 25.8.1940)
Read more: http://viduthalai.in/page1/86479.html#ixzz3C9o104ip
வாழும் மனிதர்களும் வள்ளுவரின் கணக்கெடுப்பும்!
பிறக்கும் மனிதர்கள் என்றாவது ஒரு நாள் இறக்கும் மனிதர்களே! இது நாள்வரை... எதிர் காலத்தில் எப்படியோ! ஆனால் சாகாமல் வாழும் மனிதர்கள் என்றும், செத்த மனிதர்கள் என்றும், மனித உருவில் உள்ள எலும்பும் தோலும் போர்த்த மனிதர்கள் என்றும், பழிப்பு நீங்கிய மனிதர்கள் என்றும், ஒரு அருமையான கணக்கெடுப்பை, மனிதர்களின் தரப் பிரிப்பை - சமுதாயப் பார்வையோடும், மனிதப் பண்புகளை முன்னிறுத்தியும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் படம் பிடித்துள்ளார் - ஈராயிரம் (2000) ஆண்டுகளுக்கு முன்பே என்பது வியக்கத்தக்கது அல்லவா?
உயிருடன் உள்ள மனிதர்களையெல்லாம் திருவள் ளுவர் வாழும் மனிதர்களாக, தன் கணக்கெடுப்பில் பார்க்க மறுக்கிறார்.
பின் யார்தான் வாழும் மனிதர் - அவரது கூரிய கண்ணோட்டத்தில்...?
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் (குறள் 214)
ஒப்புரவு என்ற அதிகாரத்தில் மற்றவர் துன்பத்தைக் கண்டு வெறும் இரக்கத்தை மாத்திரம் காட்டாமல், துன்பப்படுபவர் இடத்தில் தன்னையே நிறுத்தி, துன்பத்தை உணர்பவராக்கிக் கொண்டு உதவிடத் துடிக்கிறார்களே, அவர்களே உண்மையில், வாழும் மனிதர்கள் ஆவர்; அந்தப்படிக்கு இல்லாத உயிருடன் உலவும் ஏனையோர் செத்தவர்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவர்கள் என்கிறார்!
சமூக வாழ்வில், முந்திக் கொண்டு பிறரது துன்பத்தை தமக்கே ஏற்பட்ட துன்பமாகக் கருதி செயல்படுவோரைத் தான் வாழும் மனிதர் என்று அங்கீகரிக்கிறார் வள்ளுவர்!
இரக்கப்படுதலை ஆங்கிலத்தில் Sympathy என்று அழைக்கிறார்கள்; ஆனால் மேற்காட்டிய - துன்பத்தை உணர்ந்து துன்பப்பட்டவரின் இடத்தில் தன்னை நிறுத்தும் நிலைக்கு Empathy என்று கூறப்படுகிறது.
மனிதநேயத்தின் தலை சிறந்த கூறு இது! ஆனால் மனிதர்களிடையே வெகு அபூர்வமாகவே காணப்படு கிறது என்பதால், மிகக் கோபமாக வள்ளுவர் மற்றவர் களை செத்தவர்கள் கணக்கில் சேருங்கள் என்கிறார்!
இன்னொரு குறளும்கூட இப்படி இறந்தவர்-செத்தவர் கணக்கில் - சேர்க்கப்பட வேண்டியவர்கள் பற்றிக் கூறுகிறது!
இறந்தார் இறந்தார்அனையர் சினத்தை
துறந்தார் துறந்தார் துணை (குறள் 310)
இதன் கருத்து: அளவு கடந்த கோபத்தைக் கொண்டவர்; உயிருடன் காணப்பட்டாலும் அவர் உண்மையில் செத்தாரைப் போன்றே கருதப்படுவார். சினத்தை அறவே துறந்தவர்கள், துறந்தவர்க்கு (உண்மைத் துறவிகளுக்கு) ஒப்பாக உயர்ந்தவராகவே கருதப்படுவர்.
இந்தக் கணிப்புப்படி சினத்தின் உச்சிக்கு சென்றவர்களை வாழும் மனிதர்களின் பட்டியல் கணக்கெடுப்பில் வள்ளுவர் கொண்டுவர மறுக்கிறார்!
உடற்கூறுபடி பற்பல நேரங்களில் உச்சக் கட்ட சினம், அதிகமான ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, மூளை ரத்தக் குழாய் வெடிப்பு (Cerebral Hemorrhage) போன்றவைகளில் கூட கொண்டு போய் மனிதர்களை உண்மையாகவே செத்தவர்களாக்கி விடுகின்றதே அக்கண்ணோட்டத்தோடுகூட இக்குறளை நோக்கின் எவ்வளவு அருமையான மதிப்பீடு இது என்பது புரிகிறது!
மற்றொரு வகையில் தோற்றத்தால் மனிதர்கள்; ஆனால் உண்மையில் அத்தகையவர்கள் வாழும் மனிதர்கள் அல்லர். அல்லவே அல்லர் - வள்ளுவரின் கணக்கெடுப்பின்படி.
இது ஒரு தனி ரகம்!
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்பு தோல்போர்த்த உடம்பு (குறள் 80)
இதன் பொருள்: அன்போடு பொருந்தி இயங்கும் உடம்புதான், உயிர் நிலை பெற்று விளங்கும் உடம் பாகும். அப்படிப்பட்ட அன்பு இல்லாதவரின் உடம்பு எலும்பின் மேல் போர்த்தப்பட்ட வெற்று உடம்பே யாகும்.
மற்றொரு வகையும் வள்ளுவரின் கணக்கெடுப்பில் வருகிறது!
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
வாழ்வாரே வாழாதவர் (குறள் 240)
தம்முடைய வாழ்க்கையில் பழிப்பு நீங்க வாழ்பவரே, உயிரோடு வாழ்பவர் ஆவார்; புகழ் நீங்க வாழ்பவர் - அவர் உயிரோடு வாழ்ந்தாலும்கூட, உள்ளபடியே வாழாதவரே ஆவார்! என்பதே இக்குறள் கூறும் கருத்து.
எனவே, வள்ளுவரின் கணக்கெடுப்பின்படி மனிதர்கள் நம் நாட்டு மக்கள் தொகையில் மிக மிகக் குறைவுதான்! இல்லையா...?!
- கி.வீரமணி
Read more: http://viduthalai.in/page1/86481.html#ixzz3C9oA5Fyn
நீதியை மறைக்கும் நிழல் விலகுமா?
பிற இதழிலிலிருந்து....
தீக்கதிர் தலையங்கம்
நீதியை மறைக்கும் நிழல் விலகுமா?
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் மேல் முறையீடு செய்யத் தேவையில்லை என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல்ரகோத்கி கூறியுள்ளதாக தகவல் கள் வெளியாகியுள்ளன. மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு நடந்து வரும்பல்வேறு வகுப்புவாத திருகல்களில் ஒன்றாகவே இந்தக் கருத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. காஞ்சி மடாதிபதிகள் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் குற்றம் சாட்டப்பட்ட இந்தக் கொலை வழக்கில் 2013ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத் தில்தான் இந்த வழக்கு பதியப்பட்டது.
தமிழகத்தில் விசாரணை நடைபெற்றால் நியாயமாக நடைபெறாது என்று சங்கராச்சாரியார்கள் வழக்கு தொடுத்ததன் காரணமாகவே புதுவை நீதிமன்றத்திற்கு இந்த விசாரணை மாற்றப்பட்டது. அப்போதிலிருந்தே இந்த விசாரணை தடுமாறத் துவங்கியது. இன்னும் சொல்லப்போனால் வழக்கைப் பதிவு செய்த தமிழக காவல்துறை, குற்றவாளிகள் தண்டனை பெறுவதில் அக்கறை காட்டவில்லை. இந்த வழக்கில் சங்கரராமன் குடும் பத்தினர் உட்பட 83 பேர் பிறழ் சாட்சியங் களாக மாற்றப்பட்டனர். சங்கரமடத்தின் அரசியல் மற்றும் அதிகாரசெல்வாக்கு யாருக்கும் தெரியாத பரம ரகசியமல்ல. சங்கரமடத்தின் மிரட்டல் காரணமாகவே பிறழ்சாட்சி அளித்ததாக சங்கரராமன் குடும்பத்தினர் வழக்கின் தீர்ப்பு வந்தபிறகு கூறியது குறிப்பிடத்தக்கது. சங்கராச்சாரி யார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டபோதே அதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் பாஜகவினர்.இப்போது மத்தியில் அவர்களுடைய ஆட்சி நடப் பதால்தான் அரசுத்தலைமை வழக்கறிஞர் இத்தகைய கருத்தை கூறியுள்ளார் என்றே புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கொல்லப்பட்டவரின் குடும்ப உறுப் பினர்களே பிறழ் சாட்சிகளாக மாறியுள்ள தால் இந்த வழக்கை மேல்முறையீடு செய்தால் உயர்நீதிமன்றத்தின் கண்டனத் திற்கு ஆளாகவேண்டியிருக்கும் என்று அவர் கூறியுள்ளதாக தகவல்கள் தெரி விக்கின்றன.
குடும்ப உறுப்பினர்களே பிறழ் சாட்சிகளாக மாற்றப்பட்டுள்ளார்கள் என்றால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து முறையான, நியாயமான விசா ரணை நடைபெறுவதை உத்தரவாதப் படுத்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு இல்லையா?
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய புதுவைஅரசு உரிய ஆர்வம் காட்ட வில்லை. இந்த வழக்கின் முழு உண்மை யும் தமக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று முன்னாள் துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா கூறி யுள்ளார். பின்னர் அவர் அளித்த அனுமதியின் அடிப்படையிலேயே மத்திய அரசின் கருத்தை புதுவை அரசுகேட்டுள்ளது. அதற்கு எதிர் மறையான பதிலை மத்திய அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப் படுவதில் தமிழக அதிமுக அரசும் அக்கறை காட்ட வேண்டும். சட்டப் பூர்வமாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். சங்கரராமன் கொல்லப்பட்டது உண்மையெனும் போது கொலை செய்தவர்கள், கொலைக்கு காரணமானவர்கள் தண் டிக்கப்படுவது அவசியம் அல்லவா?
- நன்றி: தீக்கதிர் 25.8.2014
Read more: http://viduthalai.in/page1/86482.html#ixzz3C9oNmiEI
ஏமாற்றம் - எத்தனை காலந்தான்?
ஆசிரியருக்குக் கடிதம் >>>
ஏமாற்றம் - எத்தனை காலந்தான்?
விடுதலை நாள் விழாவில் (15.8.2014) சென்னை கோட்டையில் கொடியேற்றி வைத்து தமிழக முதல்வர் அவர்கள் ஆற்றிய உரையைக் கவனித்திருப்பீர்கள். ஒவ்வொரு ஆண்டிலும் தியாகிகளின் ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவிப்பது முதல்வரின் வாடிக்கை இவ்வாண்டு ரூபாய் ஆயிரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
இதன்படி இந்நாள் வரை ரூ. 10000 (பத்தாயிரம்) வாங்கிக் கொண்டிருந்த (சு)தந்திரப் போராட்ட வீரர்கள் இனி ரூ. 11000 (பதினோராயிரம்)மும், ரூ. 4000 (நாலாயிரம்) வாங்கிக் கொண்டிருந்த எல்லைப் போராட்ட வீரர்கள் இனி ரூ. 5000 (அய்யாயிரம்) பெறுவார்கள். ஆனால் ஜிணீனீவீறீ ஷிநீலீஷீணீக்ஷீ தமிழறிஞர்கள் என அழைக்கப்படுகிற மொழிக் காவலர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. இந்த ஆண்டும் மொழிக் காவலர்கள் அலட்சிய படுத்தப்பட்டு, புறக்கணிக்கப்பட்டிருக் கிறாகள். முதுமையில், வறுமையில் வாடும் அவர்களை முதலமைச்சர் கண்டு கொள் வதே இல்லை. அடித்தட்டு வாசிகளாகிப் போன அவர்கள் இன்று வரை பெறுவது வெறும் ரூ. 3000 (மூவாயிரம்) மட்டுமே, விண்ணுக்கும் மண்ணுக்குமான இடைவெளி!
ஏனிந்த ஏற்றத் தாழ்வு? எதனால் வந்தது இந்த மூன்றடுக்கு முரண்? எப்படி வந்தது மாற்றாந்தாய் மனப்பான்மை? உதாசீனப்படுத்தி ஒதுக்கித் தள்ள காரணம் என்ன? அவர்களிடம் கண்ட பிழைதான் என்ன? சமச்சீரான அலைவரிசையில் ஒரு தாய் மக்களாகப் பார்க்கப்பட்ட ஈகிள் புதிய சமூக அநீதிக்கு ஆளாக்கப்பட்டது ஏன்?
இந்த அவல நிலையை அறிந்தும் நம் திராவிடத் தலைவர்கள் அமைதி காப்பதும், குரல் கொடுக்காததும் ஏன்? அன்றாட அறிக்கைகளில் இடம் பெறும் அருகதை கூடவா இல்லை? ஆளும் கட்சியின் அலட்சியம் தெரிந்தும், மொழிப் போரை முன்னின்று நடத்தியவர்களாவது அன்புகாட்டி அரவணைக்கக் கூடாதா? ஊடகங்கள் உதவுமே?
ஓர் அதிர்ச்சித் தகவல் சொல்லித்தான் ஆக வேண்டும். 1965ம் அதற்கு முன்பும் நடத்திய மொழிப்போர்களில் பங்கேற்று சிறை சென்றோர் நூற்றுக்கு 95பேர் இன்று இல்லை. மிகச்சிலரும் மரபுரிமையினருமே மிஞ்சியிருக்கிறார்கள். ஆனால் (1947க்கு முன்) 1942ல் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களாக நம்பப் படுகிறவர்களில் 65 விழுக்காட்டிற்கு மேல் மத்திய மாநில அரசுகளால் பயன்பெற்று வருகிறார்களாம். முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு முறை சொன்னது. இந்தியாவில் ஒரு லட்சம் பேர் சுதந்திர போராட்ட வீரர்களாக உதவித் தொகை பெறுகிறார்கள்!.
உடலை வருத்திப் போராட துணிவு மட்டும் போதாது. வயதும் உடலும் ஒத்துழைக்க வேண்டும். இதை எழுதுகிற நான் உள்ளிட்ட இருக்கிற அத்தனை பேரும் மாற்றுத் திறனாளிகள் என்பதே நிலை.
நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறலாம் என்றால் காலம் கருதி காத்திருக்க வேண்டும். மன உளைச்சல்தான் மிஞ்சும். நிதி உதவிக்கு பிறரை நாடவேண்டும். நாட்கள் எண்ணப்படுகிற இத்தருணத்தில் அரசிடம் கையேந்துவது ஒன்றே போதும்.
(ச.பா) எஸ்.பி.மணியம், மொழிக்காவலர்,
ஈரோடு இல்லம், சிவகாசி, மேற்கு 626124.
Read more: http://viduthalai.in/page1/86486.html#ixzz3C9oXbr00
அண்ணாவுக்கு பாரத ரத்னா! கலைஞர் வேண்டுகோள்!
சென்னை, ஆக. 25- இந்தியப் பேரரசின் பாரத ரத்னா விருது, இந்திய நாட்டில் உள்ள மூத்த தலை வர்களுக்கு ஆண்டுதோறும் வழங்குவதையொட்டி, தென்னகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு இந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கவேண்டுமென்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் குடியரசுத் தலைவர் அவர்களுக்கும், இந்தியப் பிரதமர் அவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து நேற்று கடிதம் எழுதியுள்ளார்கள்.
அந்தக் கடிதத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது:
விருதுக்குப் பெரிதும் பொருத்தமானவர்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், மிகப்பெரிய சமூகசீர்திருத்தவாதியும், எழுத்தாளரும், இலக்கியவாதியும், சொற்பொழிவாளருமான பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த விருதுக்குப் பெரிதும் பொருத்தமானவர் என்றும், அவருக்கு இந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்குவது பொருத்தமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதன் விபரம் வருமாறு:-
காஞ்சி தந்த காவியத் தலைவர் உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர், பேரறிஞர் பெருந் தகை அண்ணாஅவர்கள்! பல்துறை ஆற்றல் நிரம்பப் பெற்ற அறிவுலக மேதை!
எளிய குடும்பத்தில் பிறந்து, நல்ல மாணவராக, ஆற்றல்மிகு பேச்சாளராக, சிறந்த எழுத்தாளராக, உள்ளம் கவர்ந்த பத்திரிகை ஆசிரியராக, நல்ல நூலா சிரியராக, நாடக ஆசிரியராக, நாடக நடிகராக, பண் பட்ட அரசியல் வாதியாக, உத்தமத் தலைவராக, ஒப்பற்ற வழிகாட்டியாக, நாடு போற்றும் முதல் அமைச்சராக, பல்துறை ஆற்றல் நிரம்பப் பெற்ற அறிவுலக மேதையாக ஓங்கு புகழ் எய்தியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
ஏழை, எளிய மக்களிடையே தம் பேச்சாற்றலால் அறிவுப் புரட்சியை உருவாக்கியவர் அவர்.
தமிழ்ச் சொற்றொடர் அமைப்பிலே புதிய நடை கண்டு, எழுச்சி மிகுஎழுத்தால், இலட்சக்கணக்கான இளைஞர்களின் இதயங்களைக் கவர்ந்து, எழுத்துலகில் புரட்சியை உண்டாக்கிய மேதையான பேரறிஞர் அண்ணா அவர்கள் அடக்கத்தின் வடிவமாகத் திகழ்ந் தார்கள். முதன்முதலாக, அரசியலில் குடும்பப் பாச உணர்வை ஊட்டியவர்; மாற்றாரையும் மதிக்கக் கற்றுத் தந்த ஆசான்; மாபெரும் ஜனநாயகத் தலைவர் அவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர் பேரறிஞர் அண்ணாஅவர்கள்.
சீர்திருத்தக் கருத்துகள்
பேரறிஞர் அண்ணா அவர்கள் திரைப்படங்களுக்குக் கதை வசனம் எழுதி, சுயமரியாதைக் கொள்கைகளை, சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடையே பரப்பினார். ஏழை எளியவர்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு போராட்டங் களில் ஈடுபட்டுப் பலமுறை சிறைவாசம் ஏற்றார்.
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றி, சுயமரியாதை இயக்கத் தலைவர் தந்தை பெரியாருக்கு அன்புப் பரிசு என்று அதனை அறிவித்தார். தமிழ் மக்களின் சிந்தனையில் படிந்து கிடந்த அழுக்குகளை அகற்றி தமிழகத்தை மாற்றியமைக்க தம் நாவையும், எழுது கோலையும், இறுதி மூச்சுவரை பயன்படுத்தினார்.
தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தவர்
தமிழ்மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம் பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாதுபாடுபட்ட உத்தமர் அவர்! தமிழ்நாடு என தாய்க்குப் பெயர் சூட்டிய தனயன்!
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று தம்பிமார் பெரும்படையைக் கண்டு, நெஞ்சுயர்த்திப் பெருமிதம் கொண்ட பெருமகனான பேரறிஞர் அண்ணா அவர்கள் - மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்து தாய்க்குப் பெயர் தந்த தனிப்பெரும் தனயன் என்ற பெரும் புகழுக்குரியவர்!
சுயமரியாதைச் சுடரொளி - சொக்கவைக்கும் சொற்பொழிவாளர் - எழுத்துவேந்தர் - தென்னகத்தின் மிகப்பெரும் அரசியல் தலைவர் எனப் பாராட்டி, வருணித்து முடிக்க முடியாத அளவுக்கு பல்வேறு சிறப்புக்களுக்கும், பெருமைகளுக்கும் உரியவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்!
இந்நிலையில், இந்தியப் பேரரசின் பாரதரத்னா விருது, இந்திய நாட்டில் உள்ள மூத்த தலைவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்குவதையொட்டி, தென்னகத் தின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு இந்த ஆண்டு வழங்கவேண்டு மென்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் குடியரசுத் தலைவர் அவர்களுக்கும், இந்தியப் பிரதமர் அவர் களுக்கும் வேண்டுகோள் விடுத்து நேற்று (24.8.2014) கடிதம் எழுதியுள்ளார்கள். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியுள்ள அக்கடிதங்களில் கூறப்பட்டுள்ள தாவது:-
நமது தேசியத் தலைவர்களில் சிலருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக நாங்கள் அறிகிறோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டின் மாபெரும் சமூக சீர்திருத்தவாதி, மாபெரும் எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் இலக்கியவாதியாவார்.
தமிழிலும், ஆங்கிலத்திலும்....
தமிழிலும், ஆங்கிலத்திலும் அவரது இலக்கிய மற்றும் அரசியல் படைப்புகள் தமிழ்நாட்டில் மிகச் சிறந்தவற்றில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரதரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட அவர் முற்றிலும் தகுதி உடையவராவார்.
வரவிருக்கும் குடியரசுதினத்தன்று அறிஞர் அண்ணா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கும்படி நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில்கூறப்பட்டுள்ளது.
Read more: http://viduthalai.in/page1/86472.html#ixzz3C9oy5bFn
மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் துக்ளக்கும் - கல்கியும் முரண்பாடு!
கேள்வி: பதினைந்து வகையான பயிர்களை மரபணு மாற்றம் மூலம் விளைவிக்க மோடி அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கி யுள்ளதே? இது சரியான நடவடிக்கையா?
பதில்: மரபணு விவகாரம் முன்பு பெரிய சர்ச்சை யைக் கிளப்பியது. மரபணு மூலம் விளைவிக்கப்படுகிற காய்கறிகளும், தானியங்களும் சத்தற்றவையாக இருக் கின்றன என்றும், அவற்றினால் உடலுக்குக் கெடுதல்கூட வரலாம் என்றும் ஆராய்ச்சிகள் கூறுவதாகப் பல செய்திகள் வெளியாகின. விஞ்ஞானிகளிடையே இது விவாதத்திற்குரிய விஷயமானது.
ஆனால், சமீபத்தில் வரும் செய்திகளின்படி பார்த்தால் இந்த மரபணுக் காய்கறிகள் எந்த விதத்திலும் கெடுதியானவை அல்ல என்றும், இயற்கைப் பயிர்களுக்குச் சமமாக இல்லா விட்டாலும், அவற்றாலும் ஊட்டச் சத்து கிடைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது. இப்படி இந்த விஷயத்தில் ஒரு புதிய பார்வை வந்திருப்பதால், மத்திய அரசு எடுத்த தீர்மானத்தில் தவறில்லை; ஆனால், அதற்கு எதிர்ப்பு தோன்றியதால், இந்த முடிவு தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. இந்தத் தயக்கம் தேவை இல்லை என்பது என் கருத்து.
(துக்ளக் 13.8.2014)
மரபணு மாற்றப்பட்ட பயிர்களைச் சோதனை அடிப்படையில் இந்தியாவில் சாகுபடி செய்ய மரபணு ஆராய்ச்சி ஒப்புதல் குழு சமீபத்தில் அனுமதி வழங் கியது விஞ்ஞானிகளையும், விவசாயிகளையும் அதிர்ச் சிக்குள்ளாக்கியது. இவ்விஷயம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகரின் கவனத்துக்குப் போக, அவர் இதை தற்போதைக்கு நிறுத்தி வைத்திருக்கிறார்.
ஏற்கெனவே பி.டி. பருத்தியை இந்தியாவுக்குள் அனு மதித்து, அது ஏற்படுத்திய அவலம் சொல்லி மாளாது. சென்ற ஆட்சிக் காலத்தில் பி.டி. கத்திரி சாகுபடிக்கு அனுமதி அளிக்கப்பட்டபோது, கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தலையிட்டு, பி.டி. கத்திரி சாகுபடிக்குத் தடை விதித்தார்.
பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் பி.டி. மரபணு பயிர்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், உடல் நலக் கேடுகள் மட்டுமின்றி, இயற்கை யின் உயிர்ச் சூழல் பண்மை அழிந்து, சுற்றுச்சூழலும் அழிந்துவிடும் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டிருக் கின்றன.
மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் பூச்சிகளால் பாதிப்படையாது; அதிக மகசூலை வழங்கும் என்பது பொய் என்று நிரூபணமாகி விட்டது. மாறாக, அவை விவசாயிகளைக் கடன் சுமையில் தள்ளி, தற்கொலைக்கே இட்டுச் சென்ற அனுபவங்களும் இந்தியாவில் உண்டு.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அனுமதித்த சீனா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகளிலே கடுமையான கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜனநாயக இந்தியாவில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தாலும் அவற்றைத் துரிதமாகவோ கண்டிப்பு கட்டாயத்துடனோ அமல்படுத்த முடியாது.
முதலில், இந்திய மண்ணுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மரபணு மாற்றப்பட்ட விதைகளால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய முழுமையான அறிவியல் ஆய்வு நடைபெற வில்லை. இந்நிலையில், அமெரிக்க நிறுவனங்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி பி.டி. பயிர்களைச் சோதனை செய்ய அனுமதிப்பது, தற்கொலைக்குச் சமம்.
அமெரிக்க நிறுவனங்களின் உள்நோக்கம் அபாய கரமானது. பி.டி. விதைகளை அறிமுகப்படுத்தி, விவசாயிகளிடையே அதன் பயன்பாட்டைப் பெருக்கி, பின்னர் விதைகளுக்கான ஏகபோக உரிமையைக் கொண்டாடுவது, விலைகளைக் கடுமையாக உயர்த்துவது என்ற மோசமான வணிக நோக்கமே இதன் பின்னே உள்ள அபாயம், பொருளாதார அடிமைத்தனத்துக்கான அடிப்படை இது.
பி.டி. பயிர்களால் நிலம் பழுதுபட்டால், அதை மீட்க முடியாது. விஞ்ஞான வளர்ச்சியால் இயற்கையான விவசாய முறைகள் அடைந்துள்ள முன்னேற்றங்கள் அளப்பரியன.
அதை அனைத்து விவசாயிகளுக்கும் சொல்லிக் கொடுத்து, மகசூலை உயர்த்தினாலே, உணவுத் தன்னிறைவை எட்ட முடியும். ஆக்க பூர்வமான வழியில் சிந்திப்பதை விட்டு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் போன்ற குறுக்கு வழியை நாடுவது, நம் மண்ணை நாமே சிதைப்பதற்கு ஒப்பாகும். இந்திய அரசு, பி.டி. பயிர்களை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாகச் சொல்வது ஒன்றே நம் மண்ணையும் மக்களையும் காப்பாற்ற ஒரே வழி.
(கல்கி 17.8.2014)
ஏனிந்த முரண்பாடோ?
Read more: http://viduthalai.in/page1/86455.html#ixzz3C9pUOKhH
இன்றைய ஆன்மிகம்?
மலர் வேண்டாம் மனம் போதும்!
சிவபெருமானுக்கு பூஜை செய்ய புன்னை, வெள்ளெருக்கு, செண் பகம், நந்தியாவட்டை, நீலோத்பவம், பாதிரி, அரளி, செந்தாமரை ஆகிய எட்டு வகையான மலர்களைப் பயன்படுத் தலாம். இம்மலர்கள் அஷ்ட புஷ்பங்கள் எனப்படு கின்றன. இவற்றில் சில இப்போது கிடைப்ப தில்லை. இம்மலர்களை படைத்து மட்டும்தான் சிவனை வழிபட வேண்டு மென்பதில்லை. நமசி வாய என அவர் திருநாமத்தை உச்சரித்து, மனம் என்னும் பூவால் வழி பட்டாலே போதும். மலர்களால் அர்ச்சித்து வணங்கிய பலன் கிடைத்து விடுமாம்!
இதைப் போல கோயி லுக்குச் செல்லாமல் வீணா கப் பணத்தை எதையும் செலவு செய்யாமல், உள்ளமே கோயில் என்று கருதி வீட்டில் இருந்த படியே மனதளவில் சிவனை வழிபட்டால் போதும் என்ற முடிவுக்கு வர வேண்டியதுதானே - கோயில்களையும் இழுத்து மூடிவிடலாம் அல்லவா!
Read more: http://viduthalai.in/page1/86360.html#ixzz3C9qXdZpm
ஜாதி - தீண்டாமை ஒழிய அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்ததை செயல்படுத்துக!
ஜாதி - தீண்டாமை ஒழிய அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை
சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்ததை செயல்படுத்துக!
தமிழர் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள்
21ஆம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவுகளை மனிதனே சுமப்பதா? நவீன தொழில் நுட்ப முறைகளைக் கையாள வேண்டும்!
ஜாதி - தீண்டாமை ஒழிய அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்கான ஆதரவை முதல் அமைச்சர்கள் கலைஞர், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் ஆதரவு தெரிவித்ததைச் சுட்டிக் காட்டி, அதனை நிறைவேற்றித் தருமாறு முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களை வலியுறுத்தி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஜாதி - தீண்டாமை - இவைகளைச் சட்ட பூர்வமாக ஒழிக்கும் முயற்சியின் முத்தாய்ப்பான திட்டம்தான் அனைத்து ஜாதியினரும் (ஆதி திராவிடர் உட்பட) அர்ச்சகராகும்! திட்டமும் - சட்டமும்.
தந்தை பெரியார் தமது 95ஆம் ஆண்டிலும் இறுதியாக போராட்டக் களத்திற்கு ஆயத்தமானார்கள் 1973!
பெரியார் நெஞ்சில் முள் - கலைஞர் ஆதங்கம்!
அய்யா மறைந்தபோது அவர்களுக்கு அரசு மரியாதை கொடுத்து, அடக்கம் செய்த தி.மு.க. ஆட்சித் தலைவர், கலைஞர் அவர்கள், தந்தை பெரியார் அவர்களை நெஞ்சில் ஒரு முள்ளோடுதான் புதைத்தோம் என்று தனது ஆதங்கத்தை பெரியார் தொண்டர்கள், ஜாதி ஒழிப்பு சிந்தனையாளர்கள் கருத்தோடு இணைந்து பிரதிபலித் தார்கள். மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ஏற்கெனவே நமக்குக் கொடுத்த வாக்குறுதியைச் செயல்படுத்தி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக, அர்ச்சகர் பயிற்சியை 69 சதவிகித இடஒதுக்கீட்டின்படி, சைவ, வைணவக் கோவில்களில் பணிபுரிய நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்களது குழுவின் பரிந்துரைகளைச் செயலாக்க, சட்டத்தை 2006-இல் இதே நாளில் (22.8.2006) தமிழக சட்டமன்றத்தில் எதிர்ப்பே இன்றி நிறைவேற்றினார்கள்.
இச்சட்டத்தின்படி பயிற்சி முடித்து 200க்கும் மேற்பட்ட அனைத்து ஜாதி மாணவர்களும், பணிக்காக காத்திருக்கும் நிலையில்,
அர்ச்சகர் சங்கத்தினர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், அவ்வழக்கு ஏறத்தாழ ஒரு ஆண்டுக்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, புதிதாக பதவிக்கு வந்த அ.இ.அ.தி.மு.க. அரசு சார்பில் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையினர் நாங்கள் வெளியில் இதை சமாதானமாகத் தீர்த்துக் கொள் கிறோம்; அதுவரை வழக்கு விசாரணை நடவடிக்கை களைத் தள்ளி வையுங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.
ஆனால், இதுவரை அது எந்த விதமேல் நடவடிக்கை யும் இன்றி, கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே கிடக்கிறது!
முன்பு இன்றைய முதல் அமைச்சர் அவர்கள் நாங்கள் இதனை செயல்படுத்துவோம் என்று அறிக்கை வாயிலாக மட்டுமின்றி சட்டமன்றத்திலும் உறுதி கூறியுள்ளார் (9.4.1992).
திருச்சியையடுத்த கம்பரசம்பேட்டையில் அர்ச்சகர் பயிற்சிக் கல்லூரி நிறுவிட அஇஅதிமுக ஆட்சியில் இடமெல்லாம் தேர்வு செய்யப்பட்டதுகூட உண்டு.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில்....
இச்சட்டத்திற்குரிய மூலாதாரமே அதிமுக ஆட்சித் தலைவராக திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தபோது, தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் கொண்டாடி அரசு விழாவாக நடத்திய போது இத்திட்டத்தை அறிவித்து, நீதிபதி மகராசன் குழுவையும் நியமித்து, அவரது பரிந்துரையைப் பெற்றனர்.
உச்சநீதிமன்றத்தில் 1970-இல் ஏற்கெனவே திமுக கொண்டு வந்த சட்டம் செல்லும் என்றே தீர்ப்பளித்து, ஆகம விதிப்படி அர்ச்சகர் நியமனங்கள் அமைய வேண்டும் என்பதை வற்புறுத்தியதன் பேராலேயே மீண்டும் நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் திமுக ஆட்சி குழு அமைத்து, சட்டப்படிக்கான அத்துணை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் பூர்த்தி செய்துள்ளது.
கடந்த 44 ஆண்டுகளாக இம்முயற்சி என்பது, தமிழகத்தில் ஆட்சிகள் மாறி மாறி வந்தாலும், ஒரு தொடர் ஓட்டம், தொடர் முயற்சியாகவே அமைந்துள்ளது.
வேலை வாய்ப்புக்காக அல்ல
வெளியில் பேசித் தீர்த்துக் கொள்ளுவதாக உச்சநீதி மன்றத்தில் உத்தரவாதம் கொடுத்த தமிழக அரசு, இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை மான்யக் கோரிக்கை விவாதம் அண்மையில் நடைபெற்ற போதுகூட இதுபற்றி மூச்சே விடவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.
இச்சட்டம் யாரோ 4 பேர்களுக்கு வேலை கொடுக்கும் சட்டம் அல்ல; அதை விட ஆழமாக ஜாதி, தீண்டாமை வேரில் சென்று அவற்றை அகற்றும் சட்டம் என்பதை தமிழக அரசு மனதிற் கொண்டு, உடனடியாக இதற்குரிய மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, படித்துத் தேர்ச்சி பெற்றுப் பணிக்குத் தயாராக இருப்பவர்களை கோவில் களில் நியமனம் செய்து ஆண்டுதோறும் மற்ற கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கைபோலவே ஆவன செய்யமுன்வர வேண்டும்.
ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒன்று திரட்டித் திட்டம் தீட்டுவோம்!
இதற்காக அடுத்து, ஒத்தக் கருத்துள்ள அனைவரையும் அழைத்து, அரசை வற்புறுத்தும் திட்டங்கள்பற்றி முடிவு செய்ய திராவிடர் கழகம் ஆயத்தமாகும் என்பதை தமிழக அரசுக்கு, குறிப்பாக முதல் அமைச்சர் அம்மையார் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
22.8.2014
Read more: http://viduthalai.in/page1/86292.html#ixzz3C9rGHNIF
கோமாதா ஆந்திராவில் படுத்தியபாடு!
ஞானபூமியாம் இந்த நாடு! புண்ணிய பூமியாம் இந்த நாடு!
பாரத நாடு பழம்பெரும் நாடு - இப்படிப் பாடுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை!
நாள்தோறும் வரும் செய்திகளோ, உலக மகா அவமானத்தின் உச்சத்தில் நம் நாட்டைக் கொண்டு செல்லும் அவலச் சுவைகள்!
இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் ஒரு செய்தி - மூடநம்பிக்கை இந்த நாட்டினை எப்படியெல்லாம் உருக்குலையச் செய்துள்ளது என்பதற்குக் கலங்கரை வெளிச்சம் போல், வெளிச்சம் போட்டு உலகத்திற்குக் காட்டும் செய்தியாகும்!
தெலங்கானா பகுதியில் உள்ள வாரங்கல் பகுதியில் நேற்று ஒரு செய்தி... ஒரு பசு மனித உருவ கன்றுக் குட்டியைப் போட்டதாம்! அது பேச ஆரம்பித்ததாம், (தெலுங்கில் தான் பேசியதோ! அல்லது ஹிந்தி உருது மொழியில் பேசியதோ விசாரிக்க வேண்டும் இனிமேல்தான்) பூகம்பம் வந்து அப்பகுதியே அழியப் போகிறது என்று அந்தப் பசு மாடு மனிதக் குட்டி கூறியதாம்! அதனால் அப்பகுதி மக்கள் பூராவும் வீட்டுக்குள் இருக்காமல், தூங்காமல் இரவெல்லாம் கண் விழித்துக் காத்துக் கிடந்தார்களாம்!
எங்கும் வதந்திகள்! வதந்திகள்!!
அதை நம்பி, செவ்வாய் இரவு முழுவதும் சாவுக்குப் பயந்து, அதே போல புதன் இரவும் இரு நாட்களில் இப்படி விழித்தே வெளியில் பீதியில் குந்தியிருந்தார்களாம் எவ்வளவு பெரிய அறிவுக் கொழுந்துகள் பார்த்தீர்களா? இந்த லட்சணத்தில் கைத் தொலைபேசிகளும் இத்திருப்பணிக்கு - வதந்திக்கு உதவினவாம்! எவ்வளவு வெட்கக்கேடு!
மொபைல்ஃபோன் கண்டுபிடித்தவன் இதைக் கேட்டால் தூக்கு மாட்டிக் கொள்ள மாட்டானா?
கரிம்நகர், வாரங்கல், நாலகொண்டா, மேடாக் பகுதிகளில் குழந்தைகளையும் தூங்கவிடவில்லையாம் பெற்றோர்கள்! என்ன மடமை!!
கோமாதா, குலமாதா என்ன பாடுபடுத்துகிறது பார்த்தீர்களா?
எங்கள் நாட்டுக்கெந்த நாடு ஈடு?
பைத்தியக்காரத்தனத்தைப் பாங்குடன் பரப்புவதில் எந்த நாடு ஈடு?
- ஊசி மிளகாய்
Read more: http://viduthalai.in/page1/86301.html#ixzz3C9rRCD3o
ராகு காலம்
இன்றைய ஆன்மிகம்?
ராகு காலம்
ராகு காலத்தில் வீட்டில் இருந்து கிளம்ப நேரிட்டால் என்ன பரிகாரம் செய்யலாம்?
- ராம. முத்துக்குமரன், கடலூர்
துர்க்கையம்மனுக்கு விளக்கேற்றி சிவப்பு புஷ்பம் சாத்தி வழிபட்டு மனத் தெளிவுடன் கிளம்புங்கள். உங்களுக்கு வெற்றிதான்.
ஓர் ஆன்மிக இதழ்
சரி, ராகு காலத்தில் விமானமோ ரயிலோ புறப்பட்டால் என்ன செய்ய வேண்டுமாம்?
Read more: http://viduthalai.in/page1/86300.html#ixzz3C9rby9FZ
Post a Comment