Search This Blog

14.9.14

பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17 - நமது சூளுரை!

செப்டம்பர் 17 - நமது சூளுரை!

திருமணமாகி கணவன் மனைவி இரு வரும் சரி சமமாக கல்வி கற்று விடுகிறார்கள்.

சிலர் கணவனைவிட உயர் பதவிக்குச் சென்று விடுகிறார்கள். வருமானமும் கணவனைவிட அதிகம் வரத் துவங்கி விட்டது; இந்த இடத்தில் கணவனின் மனநிலைக்கு ஏற்ப நடக்காத சூழல் மனைவிக்கு ஏற்பட்டு விடும் -_ இங்கு ஈகோவும் தோன்றி விடுகிறது. இந்த ஈகோதான் அதிகமான விவாகரத்திற்கு காரணமாக அமைந்து விடுகிறது.


மனைவி என்பவள் கணவனின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். வீட்டைக் கவனிக்க வேண்டும். கணவ னுக்கு இன்பம் தர வேண்டும். இது பெண் ணின் கடமை.


இந்தப் பணியிலிருந்து ஒரு பெண் விலகி விட்டால், அவள் தேவை யில்லை. அவர்களுக்கான ஒப்பந்தம் முடிந்து விட்டது, விலக்கி விட வேண்டும் கணவனின் தேவைகளை நிறைவேற்றாத மனைவியை உடன் வைத்திருப்பதால் கணவனுக்கு என்ன பலன்? ஆகையால் திருமணம் என்னும் காண்ட்ராக்டை முடித்துவிட வேண்டும்.


இந்தூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பொதுக் கூட்டத்தில் அதன் அகில இந்திய தலைவர் மோகன் பகவத்: (பாரதத்தில் கற்பழிப்பு நடைபெறவில்லை; இந்தியாவில் தான் நடக்கிறது என்று சொன்னவரும் இவரே)


முசுலிம்களுக்கு எச்சரிக்கை!

மத்தியில் பிஜேபி ஆட்சி அமைந்து விட்டதால், முசுலிம்கள் இந்து மத உணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். முஸ்லீம்கள் இந்துக்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்தால் எவ்வளவு காலம் அவர்களால் இங்கு வாழ முடியும்?


முசுலிம்கள் அயோத்தி, காசி, மதுரா கோவில்கள் மீதான உரிமைகள் கோரலைக் கைவிட வேண்டும். ராமர் கோவில் மற்றும் கோத்ரா விவகாரங்கள் தேர்தலில் பிஜேபி வெற்றிக்கு அடித்தளமாக இருந்தன.
- அசோக்சிங்கால்

வி.எச்.பி. தலைவர் டில்லியில் பேட்டி (மாலை முரசு 17.7.2014).


குஜராத் கலவரம் நினைவில்லையா?

2002இல் நடைபெற்ற குஜராத் கலவரத்தை மக்கள் மறந்திருக்கலாம். ஆனால் கடந்த வருடம் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற முஸாபர் நகர் கலவரத்தை அவ்வளவு சீக்கிரம் மறந் திருக்க முடியாது.
 
- விசுவ ஹிந்துப் பரிஷத் பொதுச் செயலாளர் பிரவீண் தொகாடியா

ராமராஜ்யம் வரும்?

உத்தரப்பிரதேச மக்கள் பிஜேபிக்கு வாக்களித்தால் கண்டிப்பாக இந்தியாவில் ராமராஜ்யத்தை ஏற்படுத் துவோம்.

- நரேந்திரமோடி (21.12.2013  பி.டி.அய். செய்தி)

பசு பாதுகாப்பு!

பிஜேபி தேர்தல் அறிக் கையில் தெரிவித்திருந்த படி பசு பாதுகாப்புக்காக கோசாலைகளை அமைக்க 500 கோடி ரூபாயை நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப் பட்டுள்ளது.

இந்தியா என்றால் இந்துக்கள் தானாம்!

இங்கிலாந்தில் வசிப்பவர்கள் ஆங்கி லேயர்கள் என்றால், ஜெர்மனியில் வசிப் பவர்கள் ஜெர்மனியர்கள் என்றால், அமெரிக்காவில் வசிப்பவர்கள் அமெரிக் கர்கள் என்றால், இந்துஸ்தானில் வசிப்ப வர்கள் மட்டும் ஏன் இந்துக்களாக அறிவிக் கப்படக் கூடாது?

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கட்டாக்கில் பேச்சு 10.8.2014

மண்ணெலாம் மதக்கலவரங்கள்

உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள்படி 2013இல் 823 வகுப்புவாத வன்முறைகள், உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 2013இல் 247 வன்செயல்கள், 2014இல் ஏப்ரலுக்கும் ஜூனுக்கும் இடை யில் 149 வகுப்புவாத மோதல்கள், மத்தியில் பிஜேபி ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு (மே 16க்குப் பின்) உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 605 வகுப்புவாத வன் செயல்கள்.
இன்றைய பிஜேபியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா மக்களவைத் தேர் தலின்போது 2013ஆம் ஆண்டு வன்முறை யில் ஜாட் மக்கள் பலர் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் வகையில் பிஜேபிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வகுப்புவாத வெறியை ஊட்டினார்.

முஸ்லீம்களை மதமாற்றம் செய்க!

ஓர் இந்துப் பெண்ணுக்காக 100 முஸ்லிம் பெண்களை மதம்மாறி திருமணம் செய்து கொள்ள வேண்டும்.    (- 28.8.2014)

@@@@@@@@@

சிறுபான்மையினர் 10 சதவீ தத்துக்கு மேல் ஒரு பகுதியில் இருந்தாலே அங்கு வன்முறை ஏற்பட்டு விடுகிறது  - (தி இந்து 31.8.2014)
பிஜேபி எம்பி யோகி ஆதித்யா

விஷம் கக்கும் பகவத்

இஸ்லாமியர்களைக் காத லிக்கும் முன் இந்துப் பெண் களைச் சிந்திக்க வையுங்கள்.

அனைத்து இஸ்லாமியர் களும் இந்துப் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து அவர்களை மத மாற்றம் செய்வதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். இஸ்லாமியர் களின் இந்த லவ் ஜிஹாத் என்ற பெயரில் நடைபெறும் அனைத்து மத மாற்றக் கொடு மையை நாம் நமது பெண் களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்

- ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத்

இந்தி திணிப்பு - சமஸ்கிருத வாரம் - குருஉத்சவ் அறிவிப்புகள்

இந்துத்துவா என்னும் பார்ப்பனீய நச்சுப் பாம்பு எப்படியெல்லாம் ஆலகால நஞ்சைக் கக்கி வருகிறது என்பதற்கு இவை ஒரு சிறிய அளவிலான எடுத்துக்காட்டே!

பச்சையாக ராமராஜ்யம் என்று சொல்லி விட்டார்கள்; இந்தியாவில் உள்ளவர்கள் இந்துக்கள் என்று இறுமாப்புப் பேசு கிறார்கள்.

இந்து ராஜ்யத்தை உண்டாக்க  குஜராத் கலவரங்களையும், முசாபர் நகர் கலவ ரத்தையும் உண்டாக்க முண்டாசு கட்டிக் கொண்டு இறங்கிடக் கவாத்துப் பயிற்சியை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

சிறுபான்மையின மக்களை சூ காட்டும் இவர்கள் யார்? இந்த நாட்டில் உள்ள கோடானு கோடி தாழ்த்தப்பட்ட மக்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று கூறுபவர்கள்.

பெரும்பான்மையான பார்ப்பனர் அல்லாத மக்களைச் சூத்திரர்கள் என்று கூறும் மதத்தைச் சார்ந்தவர்கள்.

சூத்திரன் என்றால் ராவ்பகதூர் பட்டமல்ல; பாரத ரத்னா பட்டமும் அல்ல; வேசி மக்கள் என்று தான் பொருள். இப்படிக் கூறும்  மனு தர்மத்தை இன்றைக்கு ஆராதித்துக் கொண்டு இருப்பவர்கள்.

முஸ்லிம்களை மூர்க்கமான எதிரிகள் என்று அடையாளம் காட்டுபவர்கள்; தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், ஏன் அனைத்துப் பார்ப்பனர் அல்லாத மக்களும் பயிற்சி பெற்று கோவில் கருவறைக்குள் செல்லக் கூடாது என்று தடை  போட்டு வருபவர்கள்; கோவில் கருவறைக்குள் சென்றால் சாமி தீட்டுப் பட்டுவிடும், செத்துபோய் விடும் என்று உச்சநீதிமன்றம் வரை படி ஏறிச் சென்று படி கட்டி மூத்த வழக்குரைஞர்களை வைத்துப் பேசக் கூடியவர்கள் தானே இவர்கள்!

இவர்கள் முதுகில் பத்தைப் பத்தையாக அழுக்கு சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

பார்ப்பனர் அல்லாத மக்கள் பார்ப்பன ஆதி பத்திய இந்து மதத்தின்மீது தாக்குதலைத் தொடுப்பதைத் திசை திருப்பவே சிறுபான்மை மக்களான நமது சகோதரர்களை நமது எதிரிகளாகக் காட்ட முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியாவுக்குள் வாழும் முசுலிம்களும், கிறித்தவர்களும் அரேபியாவிலிருந்தோ, செருசலத்திலிருந்தோ வந்து குடியேறி யவர்கள் அல்லர்.

போன தலைமுறையில் வேறு மதத்துக்குச் சென்றவர்கள்தான்; அவர்கள் சென்றதற்கான காரணம் என்ன?

நீ அவனைத் தீண்டாதவன் என்கிறாய்; கிட்டே வராதே - தீட்டுப்பட்டு விடும் என்று ஒதுக்கினாய்; மிலேச்சன் என்றாய்; கீழ் ஜாதி என்றாய்; விபசாரி மகன் என்னும் பொருளுடைய சூத்திரன் என்பதைப் பச்சை குத்தினாய்; பஞ்சமன் என்றாய் - ஊருக்கு ஒதுக்குப்புறம் ஓடு என்றாய். அந்த அவமானம் பொறுக்க முடியாமல், தன்னைத் தீண்டாதவன் என்று சொல்லாத சூத்திரன் என்று இழிவுபடுத்தாத சுடுகாட்டிலும்கூட ஜாதி பார்க்காத மற்றொரு மதத்தைத் தழுவினான்.

இதில் என்ன குற்றம் காண முடியும்?

இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாமா? இந்துத்துவா என்ற குரலை உயர்த்தும் ஆரியப் பார்ப்பனர்களின் பின்புலத்தில் இருக்கும் இந்தச் சூழ்ச்சி வலைகளை அடையாளம் காண வேண்டாமா!?

காண வேண்டும் என்றால் அதற்கென்று ஒரு தத்துவம் இருக் கிறது. அதுதான் அறிவுலக ஆசானாம் தந்தை பெரியார் தந்து சென்ற தன்மானம் வெடித்துக் கிளம்பும் பகுத்தறிவுச் சுயமரி யாதைத் தத்துவம்!

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி! என்னும் அறிவுப் புரட்சி!
பெண்களைப்பற்றி இந்துத்துவாவின் பார்வை என்ன என்பதை ஆர்.எஸ்.எஸின் தலைவர் திருவாய் மலர்ந்தது மேலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

பெண்ணுரிமை தேவை என்கிற கண்ணோட்டத்தை எடுத்துக் கொண்டாலும் தேவைப்படும் தத்துவம் தந்தை பெரியார்தம் பெண்ணியக்கோட்பாடே! அதிகாரத்தில் அமர்ந்து விட்டது ஆரிய நச்சரவ இந்துத்துவா!

இந்தியா முழுமையிலிருந்தும் இதனை வீழ்த்தும் வீறு கொண்ட கொள்கைச் சீலத்தைத் தந்தவர் தலைவர் தந்தை பெரியார் அன்றோ!

அந்தத் தலைவரின் தகத்தகாய பிறந்த நாள்தான் செப்டம்பர் 17. இவ்வாண்டு 136ஆம் ஆண்டு வீடெல்லாம் விழா எடுப்போம்! வீதியெலாம் கொடி கட்டுவோம்!

ஊர்வலம் நடத்துவோம் - ஒப்பரிய கொள்கைகளை ஒலி முழக்கமாக எழுப்புவோம்!

நம்மைச் சுற்றி நிற்கும் மதவாத நச்சரவங்களை வீழ்த்திட்ட வெண்தாடி வேந்தரின் கொள்கைகளை குமரி முதல் காஷ்மீர் வரை கொண்டு செல்லுவோம். இதுவே ஈரோட்டு வேந்தரின் பிறந்த நாள் சூளூரையாகட்டும்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

                -------------- கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 13-09-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

6 comments:

Unknown said...

விவாதக்கலை வலைப்பூவில் தினம் ஒரு விவாதம் - வாதமாக எடுத்துக்கொள்ளப்படும். நண்பர்கள் & அன்பர்கள் தங்களின் வாதத்தை முன்வைக்கலாம்..
http://vivadhakalai.blogspot.com/

Unknown said...

விவாதக்கலை வலைப்பூவில் தினம் ஒரு விவாதம் - வாதமாக எடுத்துக்கொள்ளப்படும். நண்பர்கள் & அன்பர்கள் தங்களின் வாதத்தை முன்வைக்கலாம்..
http://vivadhakalai.blogspot.com/

தமிழ் ஓவியா said...


அண்ணா வெறும் படமல்ல - பாடம்! அவற்றைப் படிப்போம் - செயல்படுத்துவோம்! தமிழர் தலைவர் அறிக்கை


அறிஞர் அண்ணாவின் 106ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அறிஞர் அண்ணாவின் 106ஆம் பிறந்த நாள் பெரு விழா! (செப்.15- 2014) இன்று.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் தலை சிறந்த மாணவராகத் திகழ்ந்து, அவர் கண்ட பகுத்தறிவு - சுயமரியாதை இயக்கத்தின் தளபதியாய் உயர்ந்து, பிறகு கோலோச்சும் நிலைக்கு மக்கள் ஆட்சியின் மகத்தான வாய்ப்புக் காரணமாக உயர்த்தப்பட்ட நிலையில், இளமையில் கற்ற பாடங்களை மறக்காது, ஆட்சியின் அரிய திட்டங்களாக - சட்டங்களாக ஆக்கி, தன்னை ஆளாக்கிய தலைவனின் பாராட்டையும், வாழ்த்தையும் பெறும் அளவுக்கு வாழ்ந்து காட்டி, வரலாறு படைத்தவர் அறிஞர் அண்ணா. ஆட்சி அவருக்கு அலங்கார பீடமல்ல; அவனியோர்க்கு ஆற்ற வேண்டிய மனித நேயக் கடமைக்களுக்கான வாய்ப்பு ஆகும்.

அப்படித்தான் செயற்கரிய செய்து குறுகிய காலத்தில் சாதனைச் சரித்திரம் படைத்தார்.

இன்றோ அண்ணாவைப் பற்றிய வெளிச்சங்கள், வாண வேடிக்கைகள் அதிகம்; ஆனால், அண்ணா எந்த பகுத்தறிவுக் கொள்கையை இறுதி மூச்சடங்கும் வரை ஆட்சியில் இருந்தபோதும் செயல்படுத்துவதில் சமரசம் விரும்பாத தலைவராக இருந்தாரோ, அந்தப் புரிதலும் அதை ஒட்டிய செயல்பாடும் தேடித் தேடியும், காணாமற் போனவைகளாகி விட்டது - வேதனைக்கும் வெட்கத் திற்கும் உரியது!

கடவுள் படங்களை நீக்கச் சொன்னார்

ஆட்சிக்கு வந்தவுடன், மதச் சார்பின்மை என்பது ஆட்சியின் தத்துவம் ஆனதால், அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்களை மாட்டியிருப்பது தவறு; அவைகளை அகற்றிட வேண்டும் என்று சுற்றறிக்கையே அனுப்பி தலைமைச் செயலகத்திலேயே அதனை செயல்படுத்தவும் வற்புறுத்தினார் 1967-இல்.

அவருக்கு ஆதரவு கொடுத்த ஆச்சாரியார் - ராஜாஜி அவர்களேகூட இந்தச் சுற்றறிக்கையை பின் வாங்கிட வேண்டும் - தமிழக அரசு என்று அறிக்கை விட்டு, எதிர்ப்புத் தெரிவித்ததையும் பொருட்படுத் தாது, ஆட்சியைத் தொடர்ந்த துணிச்சலின் சொந்தக்காரராக முதல் அமைச்சர்அண்ணா திகழ்ந்தார்!

ஆனால், அது பிறகே செயல்பாடற்றுப் போனது - வேதனையான நிலையே!

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே பார்ப் பனர் இல்லாத அமைச்சரவையை அமைத்து வெறும் 9 பேர்களையே (முதல்வர் உட்பட) கொண்டு ஆட்சியை நடத்தி, அகிலத்தையே வியக்க வைத்தார்!

எங்கும் பகுத்தறிவு முழக்கம் செய்தார்; பட்டமளிப்பு விழாக்கள் என்றாலும் சரி, பாராட்டு விழாக்களானாலும் சரி, அதை ஒரு முக்கிய கடமையாகவே செய்து சரித்திரம் படைத்தார்! கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற சொற்களையும் அண்ணாவையும் பிரித்துப் பார்க்க முடியாது!

ஆனால், இன்று அண்ணா பெயரைப் பயன்படுத்தியும், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், கொடியில் பொறித்தும் நடத்துகின்றவர்கள் இம்மூன்றையும் கடைப் பிடித்து ஒழுகும் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்கள் தானா என்று நெஞ்சில் கைவைத்து கேள்வி கேட்டு நேர்மையான விடை காண முயல வேண்டும்.

அண்ணா வெறும் படம் அல்ல.
பாடம்! பாடம்! படிப்பினை
பெரியார் வாழ்க! அண்ணா விரும்பிய புதிய சமுதாயம் மலர்க!

சென்னை
15.9.2014

கி. வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

Read more: http://www.viduthalai.in/e-paper/87808.html#ixzz3DOLbVtcU

தமிழ் ஓவியா said...


பெருமை

மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக் காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.

- (விடுதலை, 10.10.1973)

Read more: http://www.viduthalai.in/page-2/87810.html#ixzz3DOMSSGWU

தமிழ் ஓவியா said...


ஒல்லியாக இருக்க அடிக்கடி சாப்பிடலாம்!


ரகசியம் என்றாலே அனைவரும் அதை தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவோம். அதில் தற்போது பெரும்பாலானோர் தெரிந்துகொள்ள விரும்பும் ஒன்று ஒல்லியாக இருப்பவர்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதுதான்.

ஒல்லியாக இருப்பவர்கள் நன்கு சாப்பிடுவார்கள். ஆனால், ஒரே சமயத்தில் வயிறு நிரம்ப சாப்பிடாமல் அவ்வப்போது ஏதேனும் சிறிது சிறிதாக சாப்பிடுவார்கள். இப்படி போதிய இடைவெளி விட்டு சாப்பிடுவதால், செரிமான மண்டலம் சீராக இயங்கி, கொழுப்புகள் தங்குவதைத் தடுக்கிறது.

அதேசமயம் தண்ணீரை அதிகம் குடிப்பதோடு உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும். ஒல்லியாக இருக்க விரும்புபவர்கள் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரைக் குடிக்கவேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள நச்சுக்களானது உடலில் இருந்து வெளியேறி, உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும்.

மேலும் டயட்டில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சேர்த்து வர வேண்டும். இதனால் அதில் உள்ள சிட்ரஸ் ஆசிட்டானது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்துவிடும்.

உணவில் அவ்வப்போது கசப்பான உணவுகளையும் சேர்த்து சாப்பிடவேண்டும். இவ்வாறு சாப்பிட்டால் உடலில் கொழுப்புகள் தங்குவதில்லை. மேலும் எவ்வித நோயும் அவ்வளவு எளிதில் தாக்குவதில்லை. நேரம் கிடைக்கும் போது ஏதேனும் ஒரு விளையாட்டு, நடனம் அல்லது உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடவேண்டும். இரவில் சரியாக தூங்காமல் இருந்தால் உடல் பருமனடையும். எனவே குறைந்தது தினமும் 7 மணி நேர தூக்கமானது மிகவும் அவசியம். ஒல்லியாக இருக்க நினைப்பவர்கள் அதிகம் இனிப்பு வகைகளைச் சாப்பிடக்கூடாது.

உடற்பயிற்சிக்கு பின் சாப்பிடக்கூடாதவை: முட்டை ஒரு சத்தான உணவுதான். ஆனால் உடற்பயிற்சிக்கு பின் முட்டை, தயிர், சாக்லெட், பீட்சா போன்றவற்றை சாப்பிடக் கூடாது. குளுட்டென், சர்க்கரை அதிகம் இருக்கும் பிரட் சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு சர்ரென்று ஏறிவிடும் ஆபத்து உள்ளது.

செரிமானத்திற்கும் நல்லதல்ல. உடற் பயிற்சிக்குப் பின், நம் உடலில் ரத்தமானது வயிற்றுக்குள் செல் லாமல் வெளியே பாய்ந்து கொண்டிருக்கும். அப்போது ஒரே ஒரு ஸ்பூன் வெண்ணெய் மட்டும் சாப்பிட்டால் போதுமானது. அதற்கு மேல் சாப்பிட்டால் செரிமானத்திற்கு நல்லதல்ல.

தமிழ் ஓவியா said...


அரிசியும் நோய் தீர்க்கும்

தென்னிந்திய மக்களின் மிக முக்கிய உணவுப் பொருள் அரிசி. நம்மில் பெரும்பாலா னோருக்கு ஒரு வேளையாவது அரிசி சாதம் சாப்பிட்டே ஆகவேண்டும். அண்மைக் காலமாக அரிசிக்குப் பதில், அரிசியைக் குறைத்துக்கொண்டு கோதுமையை அதிக உணவாகப் பயன்படுத்தும் பழக்கம் பெருக ஆரம்பித்திருக்கிறது. அரிசியை முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்று சிந்திப்பதே தவறு.

பதார்த்தகுண சிந்தாமணி போன்ற மருத்துவ நூல்களில் 25-க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் மருந்தாகவும், உணவாகவும் பயன்படும் முறை விளக்கப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நெல் மற்றும் அரிசியின் பயன்பாடும் நம் முன்னோர்களிடையே இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அரிசியையும் மற்ற தானியங் களையும் அவற்றின் தன்மைகளுக்கேற்ப எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப உணவாக்கிக் கொள்வது நல்லது.

அரிசி என்றால், மேலோட்டமாய் புழுங்கல் அரிசி, பச்சரிசி, பாசுமதி அரிசி, சிகப்பரிசி இவைகளைத்தான் நம்மில் பலர் அரிசி என்று தெரிந்து வைத்திருக்கிறோம். இவைதவிர வெவ்வேறு சூழல்களில் வளரக்கூடிய பல்வேறு வகையான நெல் வகைகள் அந்தந்தச் சூழலின் மண்ணின் தன்மையையும் சிறந்த மருத்துவ குணங்களையும் கொண்டிருப்பதை நாம் அறிந்திருக்கவில்லை.

கருங்குறுவை என்றொரு அரிசி கறுப்பு நிறத்திலும் செங்குறுவை என்றொரு அரிசி சிகப்பு நிறத்திலும் இருக்கும். இவைபோல வண்ண அரிசி வகைகளும் நம் பாரம்பரியத்தில் இருந்தன. அரிசியில் மட்டுமல்ல, எந்தப்பொருளிலுமே நிறமிகளிருந்தால் அவற்றில் ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை நிறைவாக இருக்கும் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.

அரிசியின் மேல் இருக்கும் தவிடு, உமி, அன்னக்காடி இவை எல்லா வற்றிலும் நல்ல மருத்துவக் குணங்களும் உடலுக்குத் தேவையான சத்துக்களும் நிறைந்துள்ளன. பருமனாக இருக்கும் அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். இவ்வகை பருமனான அரிசி வேக அதிக நேரம் எடுக்கும் என்பதும் அதேபோல் செரிமானத்துக்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவை ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தக்கூடிய தன்மை கொண்டவை. உதாரணத்துக்கு மணிச்சம்பா அரிசியை கூறலாம். இதுபோல், மாப்பிள்ளைச் சம்பா அரிசியில் சாதம் சமைத்து மதிய உணவு சாப்பிட்டால் இளவட்டக்கல்லைத் தூக்கும் அளவுக்கு உடல் உறுதியும், வலிமையும் பெறலாம்.

புரதச்சத்து, நார்ச்சத்து, தாதுச்சத்து, உப்புச்சத்து எல்லாம் இந்த அரிசியில் நிரம்ப உள்ளன. விஷமுறிவுக்கு கருங்குருவை, பாலூட்டும் தாய்மார்களுக்கு நீளச்சம்பா, பொலிவான தோற்றத்திற்கு அன்னம் அழகி, வாதத்தை போக்க (கெட்ட நீரைப் போக்க) சீரகச்சம்பா உள்ளிட்ட அரிசிகள் உள்ளன. வயிறு தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் பச்சரிசி சாதம் சாப்பிடக்கூடாது.

கைக்குத்தல் அரிசி என்பது தவிடு பிரியாமல் இருக்கக் கூடியது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கூடவே ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்மையும் உள்ளது. புழுங்கல் அரிசி எளிதில் செரிமானமாகும். மலச்சிக்கல் ஏற்படுத்தாது. அரிசி சாதம் மட்டுமல்ல அரிசிப் பொரியும் பித்தத்தைச் சமப் படுத்தக்கூடியது தான்.

அவல் வாதத்தைச் சமப்படுத்தும் மாவுச்சத்து மிகுந்தது. அரிசியை முற்றிலுமாகத் தவிர்க்காமல் அதனூடாகவே மற்ற பல தானியங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.