தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை
திருச்சி - அவருக்குத் தலைநகரம் போல; தமிழ்நாட்டுக்கே கூட திருச்சிதான்
தலைநகரமாக இருக்க வேண்டும்; அதுதான் தமிழ் நாட்டில் நடுநாயகமான இடம் என்பது
தந்தை பெரியார் அவர்களின் கருத்தாகும்.
பெரும்பாலும் சுற்றுப் பயணத்தில் இருக்கும் தந்தை பெரியார் அவர்கள், சுற்றுப் பயணம் முடித்து போய் தங்குமிடம் திருச்சிராப்பள்ளியே!
திருச்சியில் இருக்கும் பொழுதெல் லாம் கழகத் தோழர்களும், நகரப் பிரமுகர்களும் தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்துத் தங்களின் குறைபாடுகளையும், பொதுப் பிரச்சினைகளையும் கூறுவார்கள்.
திருச்சியில் இருக்கும் பொழுதெல் லாம் கழகத் தோழர்களும், நகரப் பிரமுகர்களும் தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்துத் தங்களின் குறைபாடுகளையும், பொதுப் பிரச்சினைகளையும் கூறுவார்கள்.
கல்லூரிப் படிப்பைப் பொறுத்த வரை
கிருத்தவர்களுக்கு செயின்ட் ஜோசப், பிஷப்ஹிபர் போன்ற கல் லூரிகள் உள்ளன.
முஸ்லீம்களுக்கு ஜமால் முகம்மது என்ற கல்லூரி உண்டு. பார்ப்பனர்களுக்கோ நேஷ
னல் கல்லூரி இருக்கிறது (கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிபுகுந்தது
போல பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்தவர்களால் தொடங்கப் பட்ட அந்தக்
கல்லூரி பார்ப்பனர் கைவசம் சிக்கிக் கொண்டது!)
இந்த நிலையில் பொதுவாக தாழ் த்தப்பட்டோர்,
பிற்படுத்தப்பட்டோர் கள் சேருவதற்கென்று சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு
கல்லூரி இல் லாத நிலையில் நானே ஒரு கல்லூரியை திருச்சியில் தொடங்கு கிறேன்
என்று அறிவித்தார் தந்தை பெரியார்.
இப்படி அறிவித்த தந்தை பெரி யார் அவர்கள்
ஈரோடு சென்றபோது - அங்கு செயல்பட்டு வரும் சிக்கைய நாயக்கர் கல்லூரியின்
பொறுப்பாள ராக இருந்து வரும் சிக்கைய நாயக்கர் அவர்களிடம் இதுபற்றிக்
கருத்தறிய விரும்பினார் (அந்தக் கல்லூரியின் நிருவாகக் குழு தலைவர் தந்தை
பெரியார் என்றாலும் அங்கு தங்கி நிருவகிக்கும் வாய்ப்பு இல்லை. எல்லா
நிருவாகத்தையும் தந்தை பெரியார் அவர்களின் உறவினரான சிக்கைய நாயக்கர்
அவர்களே கவனித்து வந்தார்).
தந்தை பெரியார் அவர்களை அழைத்து
கல்லூரியைச் சுற்றி காட்டிக் கொண்டு வந்தனர், பரிசோதனைச் சாலை (Laboratory)
யைப் பார்த்த போது அங்கு இருந்த உபகரணங்கள் பற்றி அவற்றின் விலை நிலவரங்
களைக் கேட்டார். அவற்றின் விலையை அறிந்தபோது ஒரு கல் லூரியில் பரிசோதனைச்
சாலைக்கே இவ்வளவு செலவா என்று மலைத்தார் தந்தை பெரியார்.
நாமே நடத்துவது என்பது சரிபட்டு வராது;
வேண்டுமானால் நாம் நன் கொடையாக குறிப்பிட்ட நிதியைக் கொடுத்து, அரசே
கல்லூரியை நடத்தச் செய்து விடலாம் என்ற முடிவுக்குத் தந்தை பெரியார்
வந்தார்.
அப்பொழுது உயர்கல்வி இயக் குநராக இருந்த
நெ.து. சுந்தரவடி வேலு அவர்களை அழைத்துத் தன் விருப்பத்தைக் கூறினார்.
முதல் அமைச்சராக இருந்தவர் எம். பக்தவத் சலம் அவர்கள்.
தனிப்பட்டவர்கள் 5 லட்சம் ரூபாய் நன்கொடை
கொடுத்தால் அவர்கள் பெயராலேயே அந்தக் கல்லூரியை அரசே நடத்துவது என்ற ஒரு
கொள்கை முடிவை வைத்திருந் தனர். அய்ந்தரை இலட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார்
அய்யா. இன்று திருச்சியில் இருக்கும் பெரியார் ஈ.வெ.ரா. கலைக் கல்லூரி
அப்படி உண்டானது தான். அந்தக் கல்லூரி திறப்பு விழாவுக்கு முதல் அமைச்சர்
பக்தவத்சலம் வந்திருந்தார்.
நாங்கள் கேட்டது
அந்த விழாவுக்கு வந்திருந்த தந்தை
பெரியார் அவர்களை பேசச் சொல்லவில்லை என்றதும் ஒரு பதற்றமான சூழல்
ஏற்பட்டது; ஆனால், தந்தை பெரியார் அவர்களின் பெருந் தன்மையால் அச்சூழல்
வராத வகையில் தடுத்தாட் கொண்டார். இந்தத் தகவல்களை எல்லாம் தமிழர் தலைவர்
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் நூலக வாசகர் வட்டம் நடத்திய அய்யா
அண்ணா விழாவின்போது தெரிவித் தார். (18.9.2014 சென்னை பெரியார் திடல்).
இந்தத் தகவல்களை சொல்லிக் கொண்டிருந்தபோது இடையில் ஒன்றைப் பளிச்சென்று
சொன்னார்.
பெரியார் கோபம் சமுதாயத் துக்கு லாபம் என்பதுதான் அது.
எதற்காக அதை பயன்படுத் தினார்?
திருச்சியில் ஒவ்வொரு மதத் தினருக்கும் படிப்பதற்குக் கல்லூரிகள் இருக்கும்
பொழுது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்
படிக்க ஒரு கல்லூரி இல்லையே என்ற தந்தை பெரியாரின் கோபம் தான் ஒரு கல்லூரி
உருவாகக் காரணமாக அமைந்தது என்பதை வைத்துத்தான் தமிழர் தலைவர் அந்தக்
கருத்தினைத் தெரிவித்தார்.
சமுதாயத்துறையில்கூட பிறப்பி லேயே ஒருவன்
ஏன் உயர்ந்தவன்? இன்னொருவன் ஏன் இழிந்தவன்? எனும் பிறவிப் பேதத்தின்மீதான
கோபம்தானே சுயமரியாதை இயக்கத் தோற்றத்திற்குக் காரணமாக இருந்தது!
படிப்பும், பதவியும் பார்ப்பனர் களுக்கு மட்டும்தானா என்ற கோபம் தானே வகுப்புரிமை சமூகநீதி பிறப் பெடுப்பதற்குக் காரணமாக அமைந்தது!
முதல் அமைச்சர் பக்தவத்சலம் அவர்களை
மய்யப்படுத்திய இன் னொரு கோபமும் தந்தை பெரியார் அவர்களிடம் வெடித்துக்
கிளம்பிய துண்டு. அது நடந்தது 1965இல்.
S.S.L.C. தேறியவர்கள் எல்லோ ருக்கும்
கல்லூரிகளில் உயர்தரப் படிப்பு வசதி கொடுக்க வேண்டு மென்பது முடியாத
காரியம்; இது எந்த நாட்டிலும் முடியாத காரியம் என்று முதல் அமைச்சர்
பக்தவத்சலம் அவர்கள் சொன்னதற்கு தந்தை பெரியார் அவர்கள் விடுதலை யில்
(2.8.1965 பக்.2) கையொப்பமிட்டு நீண்ட தோர் அறிக்கை ஒன்றை வெளி யிட்டார்.
இதில் அறிவுடைமை, பொறுப்புடைமை ஏதாவது இருக் கிறதா என்ற வினாவை எழுப்பினர்
தந்தை பெரியார் அவர்கள்.
நாட்டில் இரண்டே ஜாதிதான் உண்டு. அவை
இரண்டிலும் ஒன்றுக் கொன்று இமயமலை உச்சி உயரமும், பசிபிக் மகா சமுத்திர
அடிநிலப்பள்ள (ஆழம்) அளவும் போன்ற பேதம், அதுவும் கொடுமையான பேத உயர்வு,
தாழ்வு இருக்கும்போது சூத்திரன் என்ற தன்மையில் இடம் பெற்ற முதல்வர்
(பக்தவத்சலம்) இது இய லாத காரியம் என்று ஒரு வார்த்தை யில் பதில் சொல்லி
விட்டால் இந்த மக்களின் கதி என்னாவது?
இன்று எந்த எஸ்.எஸ்.எல்.சி. படித்த பார்ப்பனப் பையனுக்கு மேல் படிப்பு படிக்க இடமில்லை? நமக்கு மாத்திரம் ஏன் இயலாது?
நாடு நம்முடையது! பணம் நம்மு டையது!!
மந்திரி நம்மவர்!!! இந்த நிலையில் நமது எதிரியான பார்ப் பானுக்கு மாத்திரம்
முழுமைக்கு மிருக்கும் இடம் நமக்கு மாத்திரம் இயலாது இயலாது என்றால் இந்த
ஆட்சியை எப்படி ஜனநாயக சமதர்ம ஆட்சி என்பது? இதில் பிரஜையாய் வாழ்வதை
எப்படி மானமுள்ள வாழ்வு எனறு கருதுவது?
1965இல் தந்தை பெரியார் அவர் களுக்கு
ஏற்பட்ட கோபம் தான் இன் றைக்குத் தமிழ் நாட்டில் தடுக்கி விழுந்தால்
கல்லூரி என்ற நிலை தலை தூக்கி நிற்கிறது.
ஊராட்சி ஒன்றியங்கள் 385 என்றால் பொறியியல் கல்லூரிகள் மட்டும் 552 இருக்கின்றன.
தந்தை பெரியார் அவர்களின் கோபம் சமுதாயத்துக்கு இலாபம் என்று கழகத் தலைவர் சொன்னது சரியானது தானே?
------------------------------ கருஞ்சட்டை அவர்கள் 21-09-2014 “விடுதலை”யில் எழுதிய கட்டுரை
13 comments:
பெரியார் அன்றும்-இன்றும்-என்றும்! ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் மீதான விமர்சனம்
சென்னை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பெரியார் அன்றும் - இன்றும் - என்றும் எனும் தலைப்பில் விவாத மேடை ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. நால்வர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடினர் (20.9.2014).
விவாதத்தின் கருப்பொருள் தந்தை பெரியார் என்றும் தேவைப்படுகிறார் என்ற உணர்வில் நடைபோட்டது போற்றத்தகுந்ததே!
அதேநேரத்தில், அந்த விவாதத்தில் சொல்லப்பட்ட சில தகவல்களும், கருத்துகளும் மிகத் தவறாக இருந்ததையும் சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமையாகும்.
தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளை திராவிட இயக்கம் பின்பற்றவில்லை, செயல்படுத்தவில்லை என்பது பொத்தாம் பொதுவில் பேசியது சரியானதாகாது.
குறிப்பாக, தி.மு.க.வையே குறியாக வைத்துத் தாக்குதல் தொடுத்ததும் சரியானதல்ல.
தி.மு.க. - அரசியல் வடிவம் கொண்டு, தேர்தலில் குதித்த நிலையில், தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக் கோட்பாடுகளில் குறிப்பாக கடவுள் மறுப்பு - மத மறுப்புப் போன்றவற்றில் முழு அளவில் ஈடுபாடு கொண்டதாக இல்லை என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும், அதன் பொதுச்செயலாளர் அவர்களும்கூட இதனைப் பல நேரங்களில் ஒப்புக்கொண்டுள்ளனர். அதேநேரத்தில், தி.மு.க. வெறும் அரசியல் கட்சியல்ல, சமுதாயக் கொள்கையுடைய அமைப்பு என்பதையும் சொல்லத் தவறிவிடவில்லை. திராவிட இயக்கக் கொள்கையில் தி.க.வுக்கு அடுத்தபடி தி.மு.க.தான் என்று கலைஞர் அவர்கள் கூறியதுண்டு (முரசொலி, 23.9.2006).
டில்லி பெரியார் மய்யம் திறப்பு விழாவில் பகுத்தறிவுக் கொள்கையைக் கண்டிப்பாக தி.மு.க.வினர் பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் கலைஞர் கட்டளையாகக் கூடத் தெரிவித்ததுண்டு.
இதில் மிக முக்கியமான ஒன்றை விவாதக்காரர்கள் எப்படித் தவற விட்டார்கள் என்று தெரியவில்லை.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்த தி.மு.க. தந்தை பெரியார் கொள்கை வழி நின்று பல சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றியதே - அவற்றை எப்படி மறந்தனர்?
1. சுயமரியாதைத் திருமணச் சட்டம்
2. சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்
3. இந்திக்கு இடமில்லை, தமிழ், இங்கிலீஷ் மட்டுமே என்ற இருமொழிச் சட்டம்
4. பெரியார் நினைவு சமத்துவபுரம்
5. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம்
6. பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம்
7. பொதுத் தொண்டில் ஒளிவிட்ட பெண் தலைவர்கள் பெயரில் பெண்களுக்கான உதவித் திட்டங்கள். 8. தீண்டாமை வெறி காரணமாக நீண்டகாலமாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்த பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் போன்ற ஊராட்சிகளில் தி.மு.க. வெற்றிகரமான தேர்தலை நடத்திக் காட்டவில்லையா?
ஆட்சியில் இருந்து தந்தை பெரியார் கொள்கை வழியில் நிறைவேற்றப்பட்ட இந்தத் திட்டங்கள், சட்டங்கள்பற்றி ஒருவர்கூட வெளிப்படுத்தாதது ஏன்?
தி.மு.க. ஆட்சியில்தானே இவை நிறைவேற்றப்பட்டன - இவையெல்லாம் தந்தை பெரியார் கொள்கை வழி செயல்பாடுகள் அல்லவா?
சமுதாயத் துறையில் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்போல இடதுசாரிகள் ஆண்ட மாநிலங்களில்கூடக் கிடையாதே!
இவற்றையெல்லாம் துப்பட்டிப் போட்டு மறைத்துவிட்டு தி.மு.க.மீது சேற்றைவாரி இறைப்பது எந்த வகையில் அறிவு நாணயம்?
தந்தை பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு அண்ணா பெயரில் கட்சியையும் வைத்துக்கொண்டு, அண்ணாவின் உருவத்தைக் கட்சியின் கொடியிலும் பொறித்துக் கொண்டு, திராவிட இயக்கம் என்றும் சொல்லிக் கொண்டு முழுக்க முழுக்க பெரியார் கொள்கைக்கு விரோதமாக நடந்துகொண்டு வருகிறதே - அன்றாடம் பெரியாரின் கொள்கைக்கு விரோத மாக ஆன்மிகத்திற்கு என்று இடம் ஒதுக்கி அவர்களின் அதிகாரபூர்வ நாளேடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளேட்டில் கட்டுரைகளையும், புராணக் குப்பைகளையும் கொட்டிக் கொண்டு இருக்கிறார்களே - பூணூலை ஆணவமாகத் தூக்கிக் காட்டிப் பூணூலின் தத்துவம் என்கிற அளவுக்கு அந்த ஏட்டில் தத்துவார்த்தம் பேசுகிறார்களே - அதைப்பற்றி மூச்சு விடவில்லையே, ஏன்?
ஒரே ஒருவர் அதனை ஒரே ஒரு இடத்தில் சுட்டிக்காட்டிய போது - ரொம்பவும் ராஜதந்திரமாக(?) கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டிய அளவுக்கு அ.தி.மு.க. அருகதை பெறவில்லை என்று சொன்னால் போதுமா?
பெரும்பாலும் தி.மு.க.வை மட்டும் குறை சொன்னதால், அதன் அரசியல் லாபம் என்பது - பெரியார் கொள்கையை முற்றிலும் கைகழுவிவிட்ட அ.இ.அ.தி.மு.க.வுக்குப் போய்ச் சேராதா? ஒரு பிற்போக்குத்தனமான கட்சிக்குப் பேருதவி செய்தது ஆகாதா?
இன்னொன்றை நிச்சயமாக சுட்டிக்காட்டிக் கண்டித்தாக வேண்டும். திராவிட இயக்கக் கட்சிகள் பிற்படுத்தப்பட்டோருக் கானவை என்று கூறியதன்மூலம் குணா போன்றவர்கள், ஒரு காலகட்டத்தில் தலித் என்று சொல்லிக் கொண்ட எழுத்தாளர்கள், சிலர் தந்தை பெரியார்மீது வீசிய அவதூறுச் சகதி அல்லவா இது.
மத்திய அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது; பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அறவே மறுக்கப்பட்டிருந்த நிலையில், மண்டல் குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்தவேண்டும் என்று போராடியதால், பிற்படுத்தப் பட்டோருக்காக கட்சி என்று முத்திரை குத்துவதில் பொருள் உண்டா?
மண்டல் குழு பரிந்துரைகளில் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டை சமூகநீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் செயல் படுத்தியதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் தாழ்த்தப்பட்டவர்களுக்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பதையும் இதில் கொண்டு வந்து திணித்து, தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கிடையாது என்று ஒரு தீர்ப்பை வழங்கி, தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கிடையே மித்திர பேதம் செய்த நீதிமன்றத்தின் போக்கைப் புரிந்துகொள்ளாமல், விமர்சனங்களைச் செய்ததை மறந்துவிடலாமா?
இன்னொரு காலகட்டத்தில் அதன் தன்மை புரிய வைக்கப்பட்டது. இவ்வளவுக் காலத்திற்குப் பிறகு பழைய பஞ்சாங்கத்தைப் புதுப்பிப்பது அபாயகரமானது.
அரசியல் காரணங்களுக்காக கொள்கைக் கோட்பாடு அற்றவர்கள் ஜாதியைக் கையில் எடுத்துக் கொள்வதைப் புரிந்து கொண்டு பேசியிருக்கவேண்டாமா? தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜாதி அரசியல் சவக்குழிக்குப் போனதன்றி, பொட்டு அளவுக்கும் வெற்றி பெற்றதில்லை என்பது கடந்தகால வரலாறாகும்.
மின் ஊடகத்தில் உட்கார்ந்து கொண்டு வித்தாரம் பேசியவர்கள் பெரியார்கொள்கையைப் பரப்புவதில் இந்த ஊடகத்தின் பங்கு என்னவாக இருந்தது என்று ஒரு கிழி கிழித்திருக்கவேண்டாமா?
பெரியார், அண்ணா விழாக்களை சடங்காச்சாரமாக நடத்துவதாகக் கூறும் இந்தத் தொலைக்காட்சிகள், இந்தத் தலைவர்களின் பிறந்த நாள்களையொட்டித்தானே - வியாபார ரீதியாக, சடங்காச்சாரமாக இந்தத் தலைப்புகளைக் கொடுத்து விவாதிக்கச் செய்கின்றன- மறுக்க முடியுமா?
பெரியார் கொள்கைகள்மீது அப்படியே உயிரையே வைத்துள்ளதுபோல பாவனை காட்டும் காகித ஊடகங் களும், மின் ஊடகங்களும் எந்த அளவுக்குப் பெரியாரின் தத்துவங்களை, பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பரப்புவதற்கு உதவி புரிந்துள்ளன என்பதற்கு நாணயமான விடை உண்டா?
அவற்றுக்காகத் தொடர்ந்து பாடுபடும் திராவிடர் கழகத்தின் செய்திகளை வெளியிட்டு உதவுகின்றனவா?
காலைமுதல் இரவுவரை முட்டாள்தனம், மூடத்தனங்கள், பேய், பிசாசு, ஆவி சமாச்சாரங்கள், சாமியார்களின் இதோபதேசங்கள், இராமாயணம், மகாபாரதத் தொடர்கள், கும்பாபிஷேக நேரடி ஒளிபரப்பு, மகரஜோதி நேரடி ஒளிபரப்பு (அது பித்தலாட்டம் என்று தெரிந்திருந்தும்) என்னும் சீழ்பிடித்த சமாச்சாரங்களையெல்லாம் தேடித் தேடிச் சென்று ஒளிபரப்புகின்றனவே!
இந்த வெட்கக்கேட்டில், பெரியார் கொள்கைகளை திராவிட கட்சிகள் கடைப்பிடிக்கவில்லை என்று குற்றங்கூற அருகதை உண்டா? மக்களை அறிவுத் திசையில் கொண்டு வருவதில் ஊடகங்களுக்குப் பொறுப்பு இல்லையா?
பகுத்தறிவு இயக்கங்கள்நடத்தும் நிகழ்ச்சிகளை எந்த அளவு ஒளிபரப்புகின்றன? செய்திகளை வெளியிடுகின்றன?
தொலைக்காட்சிகள் என்ன சாயிபாபா கையசைப்பில் குதித்தனவா? ஏழுமலையான் கிருபையால் பிரசவிக்கப்பட்ட வையா?
பகுத்தறிவு - விஞ்ஞான வளர்ச்சியின் நன்கொடை யல்லவா அவை? விஞ்ஞானக் கருவியை அஞ்ஞானத்தின் குப்பைத் தொட்டியாக மாற்றலாமா?
வைத்தியரே, முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்வீர்!
Read more: http://www.viduthalai.in/page-8/88038.html#ixzz3E0ToASBP
இணையதளத்தின் மூலம் பெரியார் 1000 வினா விடைப் போட்டி
ஆப்பிள் இயங்குதளத்தில் iPhone, iPad கருவிகளுக்கான செயலி தொடங்கி வைத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்
periyarquiz.com இணையதள மற்றும் periyarquizster ஆப்பிள் செயலி அறிமுக விழா, பெரியார் 1000 பிரெஞ்சு நூல் வெளியீட்டு விழா, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா சென்னை பெரியார் திடலில் 19.9.2014 அன்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பேராசிரியர் எஸ்.எப்.என். செல்லையா, பேராசிரியர் அஜித்கண்ணா பரம்ப்ரீதி இணையதள முருகவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
சென்னை,செப்21-- பெரியார் 1000 வினா - _ விடைப் போட்டியில் எந்த வயதினரும் பங்கேற் கும் வகையில் புதிய இணையதளத்தை திராவி டர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தொடங்கி வைத் தார். 19.9.2014 மாலை செய்தியாளர்கள் மத் தியில் இதனைத் துவக்கி வைத்தார்.
சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம். ஆர்.ராதா மன்றத்தில் (19.9.2014) அன்று மாலை periyarquiz.com இணையதள அறிமுக விழா, பெரியார் 1000 பிரெஞ்சு நூல் வெளி யீட்டு விழா மற்றும் periyarquizster (iOS app) ஆப்பிள் செயலி அறிமுக விழாவும் நடைபெற்றது.
இணையத்தின்மூலமும் உலகின் எந்தப் பகுதியிலி ருந்தும் மாணவர்கள், இளைஞர்கள் மட்டு மின்றி யார் வேண்டுமா னாலும் இந்தப் போட் டித் தேர்வில் பங்கேற்க லாம். குறிப்பிட்ட நேரம் அளிக்கப்பட்டு, தேர்வில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்படும். இணையத்தில் பெரியார் 1000 மற்றும் சிந்தனைச் சோலை பெரியார் ஆகிய நூல்களை (PDF வடிவில்) பதிவிறக்கம் செய்து கொள்ள வசதி அளிக்கப் பட்டுள்ளது.
ஆப்பிள் அய்-பேட் கையடக்க சாதனங்களின் மூலம் பெரியார் வினா-விடைப் போட்டியில் பங்கேற்க ஆப்பிள் செயலி (iOS app) உருவாக்கப்பட் டுள்ளது. இதன்மூலம் விளையாடுவதுபோன்று பெரியார் வினா விடைப் போட்டி விளையாட்டு போல் பதிவு செய்து கொண்ட எவரும் தொடர்ந்து கேள் விகளுக்கு இதன்மூலம் பதில் அளிக்கலாம்.
ஒருவரே மீண்டும் மீண்டும் வினா,விடைப் போட்டியில் விளையாட் டில் பங்கேற்கும் ஆர்வத் துடன் தொடர்ந்து பதில் அளிக்கலாம். சரியான பதில்களுக்கு விழுக் காட்டு அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும். தவறான விடை அளித் தால், சரியான பதிலைக் குறிப்பிட்டுவிட்டு, அடுத்த கேள்விக்குத் தாவிச் செல்லும். இறுதியில் குறிப்பிட்ட கால அளவுக் குள் அளித்த பதில்களில் சரியானவை, தவறானவை ஆகியவற்றையும், பெறப் பட்ட தேர்ச்சி விழுக் காட்டையும் அளித்து விடும்வகையில் ஆப்பிள் செயலிமூலம் பெரியார் வினா விடைப் போட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இணையதளம், ஆப்பிள் செயலி அறிமுகம்
முன்னதாக சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங் கில் செய்தியாளர்களுடன் தமிழர் தலைவர் சந்திப்பு நடைபெற்றது. செய்தியா ளர்கள் முன்னிலையில் பெரியார் வினாவிடைக் கான இணையதளமாக பெரியார்குயிஸ்டர்.காம் (periyarquizster.com) இணைய தளத்தையும், அய்பேட் போன்ற கைய டக்க சாதனங்களில் பயன் படுத்திட பெரியார் வினா விடைக்கான periyarquizster (iOS app) ஆப்பிள் செயலி யையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர் கள் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார்கள்.
அயல்நாடுகளில் உள்ள தமிழர்களுடன் காணொலியில் தமிழர் தலைவர்
உலகின் பல திக்குகளி லும் உள்ள தமிழர்க ளோடு காணொலி வாயி லாக தமிழர் தலைவர் தொடர்பு கொண்டு இணையம் மற்றும் ஆப்பிள் அய்பேட் மூலம் பெரியார் வினாவிடை அமைக்கப்பட்டுள்ளது குறித்து கலந்துறவாடி னார்கள்.
அமெரிக்காவில் கலி போர்னியாவில் பொறி யாளர் ராஜாகுமார், ஆப்பிரிக்காவில் கானா நாட்டிலிருந்து பெரியார் ஆப்பிரிகன் பவுண்டேசன் தலைவர் கே.கே.சி. எழில ரசன், செயலாளர் சாலை மாணிக்கம் அம்மையார், லண்டனிலிருந்து ஹரீஷ், சினேகா, அபுதாபியிலி ருந்து சேதுராமன், சிங்கப் பூரிலிருந்து பொறியாளர் பூபாலன் மற்றும் அமெ ரிக்காவில் பென்சில்வேனி யாவிலிருந்து மருத்துவர் சோம.இளங்கோவன் உள்ளிட்ட பலரிடமும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இணைதளத்தி லும், அய்பேட்டிலும் பெரியார் வினா விடை குறித்தும், பெரியார் உலகமயமாகிவருவதை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு மொழிகளிலும் பெரியார் வினா விடை கொண்டு வரப்பட உள்ள தையும் உரையாடலின் போது குறிப்பிட்டார்கள். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெரியார் 1000 வினா விடை உள்ளதுபோல், பிரெஞ்சு மொழியிலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஸ்பானிஷ், சீன மொழிகள் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் பெரியார் 1000 வினா விடை நூல் கொண்டு வரப்பட உள்ளதையும் பெருமகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்கள்.
செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர்களிடம் இதுகுறித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கூறும்போது,
தந்தைபெரியார் அறுபது ஆண்டுகளுக்கு முன் இனிவரும் உலகம் குறித்து பேசினார்கள். தந்தைபெரியார் பெரியார் வட ஆர்க்காடு மாவட் டத்தில் செய்யாறு பகுதி யில் நடைபெற்ற திருமண விழாவில் பேசினார். அண்ணா உடன் இருந் தார். எங்களுக்கு தெரி யாத கருத்துக்களை தெளிவாக சொன்னீர்கள். திராவிட நாடு ஏட்டில் வெளியிடுகிறேன் என்று தந்தை பெரியார் உரையை திராவிட நாட்டில் எழுதி னார்கள். அதுதான் இனி வரும் உலகம் என்கிற தலைப்பில் நூலாக வெளி வந்தது. தந்தை பெரியார் பேசும்போது, கையில் வைத்துக்கொள்ளும் அளவில் தொலைப்பேசி வரும் என்றார். சட்டைப் பையில் வானொலி இருக் கும் என்றார். ஒரு இடத் தில் பாடத்தை ஒரு ஆசிரி யர் சொல்லிக்கொடுக்க பலரும் கேட்டுப்படிக்க முடியும் என்றார். ஆண், பெண் சேர்க்கை இன்றியே குழந்தை உண்டாகும் என்றார். அவர் சொன்ன தற்குப் பிறகு அவர் காலத்திலேயே டெஸ்ட் டியூப் பேபியைப் பற்றிய செய்தியைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.
தந்தை பெரியார் கடைசி யாகப் பேசிய தியாகராயர் நகர் கூட்டத்தில் பேசும் போதும் தெளிவாகவே சொன்னார்கள். தந்தை பெரியார் 136ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவில் பெரியார் வினாவிடைப்போட்டியில் எப்போது வேண்டுமானா லும் நடத்திக் கொள்ளும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் கானா பகுதி, சிங்கப்பூர் பகுதி, மத்திய கிழக்கு நாடான அபுதாபி, அமெரிக்கா, லண்டன் என்று பெரியார் கருத்துக்கள் எல்லோரிடமும் கொண்டு செல்லப்படுகிறது. புரட்சிக்கவிஞர் சொல்வதுபோல் மண்டைச்சுரப்பை உலகு தொழும் என்பதற்கேற்ப, (தொழும் என்றால் பின்பற்றும் என்பது பொருள்). பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள்மூலம் கொண்டு செல்வது ஒரு முறை. அடுத்தது இணையம்மூலம் பெரியாரின் கருத்துக்கள் இளைஞர்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. தமிழ் நாளிதழில் முதல் இணைய இதழாக விடுதலை கொண்டு வரப்பட்டது. இங்கு நாம் படிப்பதற்கு முன்பாகவே வெளி நாட்டவர் படித்து விடுகிறார்கள். எல்லா இதழ்களுமே அந்த முயற்சியில் உள்ளவர்களாக உள்ளார்கள்.
ஆப்பிள் செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒவ் வொருவரும் விருப்பம்போல் தேர்வெழுத, விளையாட வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் லட்சம் மாணவர்கள் பெரியார் 1000 வினாவிடைத் தேர்வு ஆர்வமுடன் தாங்கனாகவே முன்வந்து எழுதி உள்ளார்கள். சென்ற ஆண்டு 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள். தமிழ் மாணவர்கள் மட்டுமின்றி எல்லோருக்கும் பெரியார் பற்றி தெரிய வேண்டும் என்று ஆங்கிலத்திலும் நடத்தப்பட்டது. ஆங்கில மொழியில் மொழியாக்கம் செய்தவர் பேராசிரியர் செல்லய்யா. பிரெஞ்சு மொழியில் டில்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜீத் கண்ணா மொழிபெயர்த்துள்ளார். மேலும் ஸ்பானிஷ் மற்றும் சீன மொழியிலும் கொண்டு வர உள்ளோம் என்பதை கூறும்போது எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறோம். பெரியார் நூல்கள் நகர்வுச்சந்தைமூலம் நாடுமுழுவதும் கொண்டு செல்லப்பட்டன.
பல்வேறு மொழிகளில் கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பெரியார் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அமேசான்.காம் மூலம் பெரியார் புத்தகங்கள் பெறலாம். அதற்கான ஏற்பாடு ஆகி உள்ளது. அமேசானில் கிண்டில் (KINDLE) என்பதில் பல லட்சம் நூல்கள் இலவசமாகவும் படிக்கலாம். நான்கு லட்சத்துக்கும் மேல் நூல்கள் கிண்டிலில் உள்ளன. அதிலும் பெரியார் புத்தகங்கள் இடம் பெறும். வாங்கித்தான் படிக்க வேண்டும் என்பதில்லை. அமேசான்.காம்மூலம் முதலில் கொண்டு வரப்படும்.
என்ன மாற்றம் ஏற்படும் என்றாரோ அதை பெரியாருக்கே செய்கிறோம்
21-ஆம் நூற்றாண்டு திருப்பமாக தந்தை பெரியார் என்ன மாற்றம் எல்லாம் ஏற்படும் என்று சொன்னாரோ, அதைப் பெரியாருக்கே செய்துள்ளோம் என்ற மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்கிறோம்.
தந்தைபெரியார் நினைவுநாள் டிசம்பர் 24 அன்று தொடர்ந்து பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு என்று குறிக்கோளுடன் வரலாற்றுக் குறிப்பான நாட்களில் பல பணிகளை செய்து முடிக்க உள்ளோம்.
-இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார். உடன் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் இருந்தனர்.
பெரியார் 1000 பிரெஞ்சு நூலை வெளியிட்டு மொழி பெயர்ப்பாளர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தந்தை பெரியார் 136ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, அறிஞர் அண்ணா 106ஆம் ஆண்டு பிறந்த நாள்விழா மற்றும் 34ஆவது கலை விழா நடைபெற்றது. விழாவில் இணையதளம், ஆப்பிள் செயலி அறிமுகம் செய்து, அங்கிருந்து காணொளி காட்சி மூலம் அமெரிக்காவில் உள்ள பாரதி வெற்றிமணி, பிரகாஷ் செல்வராஜ் மற்றும் நியூசி லாந்து நாட்டின் ஆக்லாந்தில் உள்ள மணி நிலவன் (செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு மகன்) ஆகியோர் periyarquizster. com இணைய தளம் குறித்து உரையாடி மகிழ்ந்தனர். பெரியார் 1000 பிரெஞ்சு நூலை தமிழர் தலைவர் வெளியிட்டார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். ஆப்பிள் செயலிலை உருவாக்கி அளித்த முருகவேலன், பெரியார் 1000 நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பேராசிரியர் செல்லய்யா, பெரியார் 1000 பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்த பேரா சிரியர் அஜீத் கண்ணா ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினைவுப்பரிசை வழங்கி பயனாடை அணிவித்து பாராட்டி னார்கள்.
தமிழர் தலைவர் உரை
தமிழர் தலைவர் உரையாற்றும்போது குறிப்பிட்டதாவது:
பெரியாருடைய சிந்தனை உலகத்தை ஆக்கிரமித்து இருக்கிறது. பிரெஞ்சு எழுத்தாளர் எமிலி சோலா கூறும்போது ஆயுதங்களால் ஆக்கிரமிப்பதைவிட அறிவு தான் ஆக்கிரமிக்க வேண்டும் என்று கூறுவார். பெரியாரின் வாழ்நாள் மாணவன் என்று என்னை இணைத்துக் கொண்டவன், இன்னமும் கற்றுக்கொண்டே இருக்கிறோம். மொழிபெயர்ப்பு என்பது வெறும் வார்த்தை மட்டும் அல்ல. தத்துவம், கருத்து உள்ளதாக இருக்க வேண்டும். பெரியார் 1000 வினா விடைப் போட்டியில் தமிழ்நாட்டில் மட்டும் குறுகிய காலத்தில் லட்சம்பேர் எழுதி உள்ளார்கள். உலகம்முழுவதும் சென்று கோடிகளாக ஆக வேண்டும். அனைவரின் ஒத்துழைப்பு, பேராதரவு தொடர வேண்டும். அனைவருமே பெரியார் மாணவர்கள்தான். பெரியார் 95 ஆண்டு வாழ்ந்த அவர் மக்களிடம் பேசியும், எழுதியும் இருந்த தலைவர் வேறு யாரும் இல்லை. அவருக்குப் பெருமை சேர்க்கிறோம் என்பதில்லை. நமக்கு பகுத் தறிவை ஏற்படுத்திக்கொள்கிறோம். நாம் புதிய உலகத்தின் தூதுவர்களாக பெரியாரின் கருத்துக்களைக் கொண்டு செல்வோம்.
இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தம் பேச்சின்போது குறிப்பிட்டார்கள்.
காணொலிக்காட்சிமூலம் கலந்துறவாடல், இணையத் தொடர்புகள் உள்ளிட்டவற்றை பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், ஊடகத் துறைப் பொறுப்பாளர், மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தார். பெரியார் ஊடகத்துறையின் சார்பில் அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.
தொடர்ந்து பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் கலைவாணன் குழுவி னரின் சந்திரோதயம் பொம்மலாட்டம் நாடகம் கலைத்துறை பொறுப்பாளர் கனகா தலை மையில் நடைபெற்றது. விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் அன்புராஜ், திராவிடர் கழக வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டல செயலாளர் பன்னீர் செல்வம், பார்வதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் திருமகள், பெரியார் களம் இறைவி, சி. வெற்றிச்செல்வி, மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, மாநில தொழிலாளர் கழக துணை செயலாளர் பெ.செல்வராஜ், தென்சென்னை மாவட் டத்தலைவர் இரா.வில்வநாதன், அரும்பாக்கம் சா.தாமோ தரன், கணேசன், மருத்துவர் க.வீரமுத்து, தென் சென்னை இளைஞரணி சண்முகப்பிரியன், சேரலாதன், பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் சத்திய நாராயணன், பொருளாளர் மனோகரன், துணை செயலாளர் சுப்பிரமணியன், சேரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Read more: http://www.viduthalai.in/page-8/88011.html#ixzz3E0UXNiJ4
பண்பாட்டு ஆதிக்க அரசியலை ஒன்றுபட்டு முறியடிப்போம் சென்னை பெருந்திரள் முழக்கப் போராட்டத்தில் தலைவர்கள் உறுதி
சென்னை, செப்.21- சமஸ்கிருத வாரம், குரு உத்ஸவ் ஆகிய அறிவிப்புகளும் இந்தித்திணிப்பு நடவடிக்கை களும் பண்பாட்டு- அரசியல் ஆதிக்கத்திற்கான குறியீடுகளே என்று சென்னை பெருந்திரள் முழக்கப் போராட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அனைத்து மொழிகளுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கச் செய்வதற் கான உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப் பட்டது.
மத்திய பாஜக அரசு நாட்டின் பன்முக அடையாளங் களை அழித்தொழிக்கவும், ஒற்றைப் பண்பாட்டு ஆதிக்கத்தின் ஒரு பகுதியாக ஒற்றை மொழி ஆளுமை யைத் திணிக்கவும் திட்டமிட்ட நடவடிக்கை களை எடுத்துவருகிறது. அதையொட்டி மத்திய பள்ளிக்கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் ஆணையிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், இந்தியாவின் தேசிய மொழிகள் அனைத்திற்கும் சம முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தியும் சென்னையில் பெருந்திரள் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
ஒற்றை மொழித் திணிப்பு முயற்சிகளை உறுதியாக எதிர்த்துப் போராடிய தந்தை பெரியார் பிறந்த நாளாகிய செப்.17 (புதன்) அன்று, இந்தப் போராட்டத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தியது.
போராட் டத்தில் பங்கேற்று உரையாற்றிய தலைவர்கள் பேச்சுகளின் முக்கிய பகுதிகள் வருமாறு:
திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி
ஒன்று சேரவேண்டியவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறோம். இதற்காக மோடி அரசுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும் அவர்கள் எந்த அளவிற்கு இப்படிப்பட்ட மோசமான நடவடிக்கைகளை எடுக்கிறார்களோ அந்த அளவிற்கு இந்த ஒற்றுமை வலுப்பெறும். ஆட்சியின் வேகம் தணி வதற்கு முன்பாக செய்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்துடன் இந்துத்துவா அஜெண்டா செயல்படுத்தப் படுகிறது.
இது வெறும் மொழிப்போராட்டம் அல்ல; பண்பாட்டுப் போராட்டம்.இந்த ஆட்சி தனது முதல் நூறு நாட்களில், கத்திரிக்காய் விலை ஆகியவைப் பற்றி கவலைப்படவில்லை. மாறாக சமஸ்கிருதம், `ஹிந்தி திணிப்பைப் பற்றித்தான் கவலைப்பட்டிருக்கிறது.
இப்போது நடந்திருப்பது பனிப்பாறையின் ஒரு நுனிப்பகுதிதான் பாறையையே உடைக்கவேண்டிய கடமை நமக்குஇருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இப்படி நடக்கிறது. ஒரு பக்கத்தில் `ஹிந்தி மொழியைத் திணிக்கிற போது அதில் பெரும்பாலோர் பேசும் மொழி என்று காரணம் சொல்கிறார்கள் மிகமிகச் சிறிய அளவில் பேசப்படும் சமஸ்கிருதத்திற்கு சிறப்பு வாரம் கொண் டாடுவது ஏன்? மக்களின் பண்பாட்டு உரிமையில் கை வைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்
இந்திய அரசியலில் ஒரு வலதுசாரித் திருப்பம் ஏற்பட்டி ருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கட்சி சரியாக மதிப்பிட்டி ருக்கிறது. கடந்த நூறு நாட்களில் அனைத்துத் துறைகளிலும் இந்துத்துவா திணிப்பு முயற்சிகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக அப்பட்டமான ஒரு ஆர்எஸ்எஸ் தலைவர் நியமிக்கப்படுகிறார்.
அவர் கல்வியை இந்திமயமாக்க வேண்டும் என்றும், சிறு வயதி லேயே பதியவைக்க வேண்டுமென்றும் பேசுகிறார்.இந்து அரசு என்று சொல்கிறநாள் வரவேண்டும்என்று அத்வானி முன்பு அறிவித்தார் அந்த பாதையில்தான் மோடிஅரசு செல்கிறது. விமானத்தைக் கண்டுபிடித்தது ரைட் சகோதரர்கள் என்பதற்கு மாறாக புராண காலத்திலேயே கண்டுபிடிக்கப் பட்டு விட்டது என்ற அறிவியலுக்கும் வரலாற்றுக்கும் புறம்பான பாடங்கள் புகுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் தமிழை பயிற்று மொழி ஆக்கவேண்டும் என்ற திருத்தத்தை சட்ட மன்றத்தில் என்.சங்கரய்யா கொண்டுவர, முதலமைச்சர் அண்ணா அதை ஏற்று தீர்மானத்தில் திருத்தம் செய்தார். ஆனால் இன்றைய ஜெயலலிதா அரசோ ஆங்கிலத்தை பயிற்று மொழியாக திணிக்கிறது. ஆட்சிக்கு வந்தவர் களுக்கு தமிழ் உதவியது. தமிழுக்கு இவர்கள் உதவியாக இல்லை.மத்திய ஆட்சியாளர்களின் கலாச்சார ஆதிக்க அரசியலை எதிர்க்கும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக துணைநிற்கும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்
மோடி ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார் என்று சொன்னோமோ அதையெல்லாம் கூச்சமின்றி செய்துகொண்டிருக்கிறார். அரசமைப்புச் சாசனத்தின்படி அனைத்து மொழிகளும் சமமாக மதிக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய ஆட்சிக்கு வருகிறவர்கள் மக்கள் உணர்வுகளை அவமதிக்கிற வகையிலேயே செயல்பட்டு வந்திருக்கிறார்கள்.கடந்த காலத்தில் கோவில்களிலிருந்து தமிழ் வெளியேற்றப்பட்டது.
சிறுதெய்வங்களின் கோவில் களிலும். கிராமக் கோவில்களிலும்தான் தமிழில் வழிபாடு நடைபெறுகிறது. இன்றும் சமஸ்கிருத எதிர்ப்பும் இந்துத்துவ எதிர்ப்பும் ஒன்றுபட்டு ஒலிக்கவில்லை. தமிழகத்தில் பாஜக வெற்றிபெற முடியவில்லை என்றாலும் அதே கருத்தி யலைக் கொண்ட ஜெயலலிதாவால் வெற்றிபெற முடிகிறது.
பேராசிரியர் அருணன்:
சமஸ்கிருதத் திணிப்புடன் பிராமணியத் திணிப்பு நடக்கிறதோ என்று கவலையுடன் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. அனைத்து மொழிகளைப் பேசும் மக்களின் வரிப்பணத்தில், சமஸ்கிருத வாரம் மட்டும் கொண்டாடச் சொல்வது மொழிச் சமத்துவத்துக்கு ஆபத்து. முதலமைச்சர் கடிதத்திற்கு நாளது தேதி வரையில் பிரதமர் பதிலளிக்கவில்லை. முதலமைச்சரும் கேட்கவில்லை.
சமஸ்கிருதத்தில் இலக்கியம் இருந்தாலும், பிறப்பால் மனிதர்களைப் பாகுபடுத்தும் அதர்ம சாத்திரங்கள்தான் நிறைந்திருக்கின்றன. வர்ணாஸ்ரம ஆக்கிரமிப்பு வரு கிறதோ என்றுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. மோடி இந்தியர்கள் அனைவருக்கும் பிரதமரா அல்லது சமஸ் கிருதம் அறிந்தவர்களுக்கும் இந்தி பேசுகிறவர்களுக்கும் மட்டும் பிரதமரா என்று கேட்க வேண்டியிருக்கிறது.
பத்திரிகையாளர் ஞாநி
செம்மொழி தமிழ் மையம் உள்ளிட்ட தமிழ் நிறுவனங்கள் சீர்குலைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் புத்துயிர்ப்பு பெறச் செய்வதும் நமது நோக்கமாக இருக்க வேண்டும். பிரதமர் மோடி தனது தாய்மொழியைக் கூட தியாகம் செய்கிறவராக இருக்கிறார்! அய்.நா. சபையில் தன் தாய்மொழி குஜராத்தியில் பேச முடிவு செய்திருந்தால் பாராட்டலாம். ஆனால் ஆர்எஸ்எஸ் கட்டளைப்படி இந்தியில்தான் பேச முடிவு செய்கிறார்.
பேராசிரியர் அ. மார்க்ஸ்
கடந்த காலங்களில் இப்படி சமஸ்கிருத மேலாதிக்கத் திற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்திருக் கின்றன. இன்று வட மாநிலங்களிலும் இந்தத் திணிப்பு களுக்கு எதிராகக் குரல் எழுந்துவருகிறது. ஒன்றுபட்டு எதிர்ப்பதன் மூலம் இப்படிப்பட்ட பண்பாட்டு ஆக்கிரமிப்பு களைத் தடுக்க முடியும்.
தலைமை தாங்கிய தமுஎகச தலைவர் ச. தமிழ்ச்செல்வன்
இந்தப் போராட்டம் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக எடுத்துச் செல்லப்படும். இது சமஸ்கிருத மொழியை எதிர்க்கிற போராட்டம் அல்ல. அதைத் திணிக்கிற முயற்சியையும், அதன் மூலம் இந்துத்துவம் திணிக்கப்படுவதையும்தான் எதிர்க்கிறோம்.
பொதுச்செயலாளர்சு. வெங்கடேசன்
சமஸ்கிருத வாரம் என்று மட்டும் சொல்லியிருந்தால் அந்த வாரம் என்பதோடு போயிருக்கும். ஆனால் அனைத்து மொழிகளுக்கும் தாய் என்று வரலாற்றுக்குப் புறம்பாகச் சொன்னதுதான் அவர்களது உள்நோக்கத்தைக் காட்டுகிறது. இப்படிச் சொன்னதால்தான் அக்காலத்தில் வள்ளலார், அப்படியானால் தமிழ்தான் தந்தைமொழி என்று சொல்ல வேண்டியதாயிற்று.
சமஸ்கிருதம் ஒருபோதும் பேச்சுமொழியாக இருந்ததில்லை என்று பல ஆய்வாளர் களும் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வாதமே தேவை யில்லாத மொழி தமிழ். அது அன்றும் இன்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை மொழியாக இருக்கிறது. செம்மொழி தமிழ் வாரம் கொண்டாடுவதற்கான உறுதி மிக்க நடவடிக் கைககளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட அரசியல் உறுதியோடு நடவடிக்கை எடுக்க வைக்கிற வலிமையோடு அனைத்து முற்போக்குச் சிந்தனையாளர்களும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்.
நன்றி: தீக்கதிர், 18.9.2014
Read more: http://www.viduthalai.in/page-7/88035.html#ixzz3E0VPd6EI
அட, அண்டப்புளுகு தினமலரே!
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி தினமலரும் தன் பங்குக்கு ஏதாவது ஒரு கட்டுரையை வெளியிட வேண்டாமா?
வெளியிட்டது - ஆனால், விஷமமாக!
இதோ தினமலர்....
நட்புக்கு மரியாதை பெரியார் - ராஜாஜி இருவரும் இரண்டு துருவங்களாக இருந்த போதும், இறுதிவரை நல்ல நண்பர்களாக இருந்தவர்கள்.
பெரியார் நாத்திகர், ராஜாஜி ஆத்திகர்; கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் நட்பு நீடித்தது. ராஜாஜி இறந்தபோது மயானம் வரை சென்று கண் கலங்கி அழுதவர், பெரியார். பெரியாரின் தந்தை, பெரியார் இளைஞராக இருந்தபோது பொறுப்பில் லாமல் இருக்கிறார் என்று தன் சொத்துக் களை பழனி முருகனுக்கு என்று உயில் எழுதி வைக்க, பெரியார், ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டபோது ராஜாஜி சொன்னார்:
கவலை வேண்டாம். பழனியில் இருப் பது தண்டாயுதபாணிதான்; பழனியில் ஒரு இடம் வாங்கி முருகன் கோவில் கட்டி, நீங்களே அந்தக் கோவிலுக்குத் தர்மகர்த்தா ஆகிவிடுங்கள். சொத்துகள் உங்கள் வசமே இருக்கும் என்று ஆலோசனை வழங்கி னார். அன்று தொடங்கிய அவர்களின் தூய நட்பு, மூச்சு உள்ளவரை தொடர்ந்தது தினமலர் (17.9.2014) எழுதுகிறது.
தந்தை பெரியார் அவர்களைப் பெருமையாகக் கூறுவதுபோல முற்பகுதி - பிற்பகுதியிலோ அதற்கு மாறான - தாறுமாறான அக்கப்போர்!
தினமலர் இப்படி கிறுக்கியுள்ளதே - இதற்கு ஆதாரம் என்ன? அதை நாணய மாக வெளிப்படுத்தவேண்டாமா?
இதே பாணியில் நாம் எழுத முடியாதா? செத்துப்போன சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஒரு கட்டத்தில் பணமுடை ஏற்பட்டு யாருக்கும் தெரியாமல் ஈரோடு சென்று பெருந்தனவந்தரரும், பக்திமானுமான பெரியாரின் தந்தையார் வெங்கட்ட நாயக்கரிடம் சென்று பண உதவி கேட்டார்;
என் மகன் ராமசாமியிடம் வர்த்தகத்தையெல்லாம் ஒப்படைத்து விட்டேன்; அவனிடம் எதற்கும் கேட்டுப் பாருங்கள் என்று சொன்னார். ஈ.வெ.ரா. விடமா? அது நடக்குமா? என்ற யோச னையில் காஞ்சிபுரம் திரும்பி விட்டார் என்று எங்களால் எழுத முடியாதா?
கவர்னர் ஜெனரலாக இருந்த தனது நண்பர் ராஜாஜியிடம் - திருமண ஏற்பாடு, சம்பந்தமாக ஆலோசனை கேட்க, அப் பொழுது ராஜாஜி சொன்ன யோசனை யையே தூக்கி எறிந்துவிட்டு தன் போக்கில் நடந்துகொண்டு, அதில் முழு வெற்றியும் பெற்றவர் தந்தை பெரியார் என்பதெல்லாம் இந்த இனமலர்களுக்குத் தெரியுமா? தெரிந்தாலும் நாணயமாக அவற்றை யெல்லாம் ஏற்றுக்கொள்ளும் நற்புத்தியும் தான் ஏது?
தினமலரே! தினமலரே! ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக்கொள் ளாதே - எச்சரிக்கை!
- கருஞ்சட்டை
Read more: http://www.viduthalai.in/page-8/88079.html#ixzz3E3QXNaBz
Post a Comment