Search This Blog

6.9.14

ஜாதிக்கொடுமை,உயர்வு தாழ்வு ஒழிய - பெரியார்

இருகூர் திராவிட முன்னேற்ற சங்கம் முதலாவதாண்டு விழா

ஜாதிக்கொடுமை, உயர்வு தாழ்வு ஒழிய,

கடவுள் நம்பிக்கையையும், மத நம்பிக்கையையும்,

வினை, விதி நம்பிக்கையையும் அடியோடு ஒழிக்க வேண்டும்.

சகோதரர்களே! சகோதரிகளே!!


உங்கள் சங்க ஆண்டு விழாவில், சங்க சம்மந்தமாகவும் மற்றும் உங்கள் முன்னேற்ற விஷயமாகவும் பெரியோர்களான ராவ்சாகிப் ராமச் சந்திரம் செட்டியார், சின்னப்பாவு, சுப்பையா ஆகியவர்கள் பேசியது கேட்டி ருந்தீர்கள். உங்களது குறைகளை யெல்லாம் எடுத்துக்காட்டினார்கள். உங்களைத் தெருவில் நடக்கவிடாததைப் பற்றியும், உங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கவிடாமல் தடுத்து கலகம் செய்ததைப்பற்றியும், உங்கள் பிள்ளைகள் படிப்பதனால் இந்த ஊர் உயர்ந்த ஜாதியார்கள் என்பவர் கள் தங்கள் பிள்ளைகளை நிறுத்திக் கொண்டதைப் பற்றியும், மற்றும் ராமநாத புரம் ஜில்லாவில் ஆதிதிராவிட சமூகத்தை மற்ற சமூகத்தார் செய்யும் கொடுமைகளைப்பற்றியும் இங்கு பேசியவர்கள் எடுத்துச் சொன்னதை கேள்க்க எனக்கு மிக மிக ஆத்திரமாய் இருக்கின்றது. ஆனால் இதற்கு யார் ஜவாப்புதாரிகள் என்பதைப்பற்றி யோசித்துப் பார்க்கையில் உங்களை இக் கொடுமை செய்பவர்கள் ஜவாப்தாரியல்ல வென்றும் நீங்களும் இக் கொடுமை அனுபவத்தில் உங்கள் சமூகத்தை உத்தேசித்து பரிதாபப்பட நியாயமில்லை என்றும் எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் அவர்கள் தங்களது நம்பிக்கை யின் பேரில் தங்களது பழக்க வழக்கங்களின் பேரில் தங்களது மத உணர்ச்சி, மத ஆதாரம் ஆகியவைகளில் உள்ள பற்றுதலின் பேரில் அவர்கள் நம்பும் - வணங்கும் கடவுளின் கட்டளை, செய்கை என்ற உறுதியின் பேரில் தங்கள் முன் ஜென்மத்தின் கர்மம் - பூர்வ புண்ணியம் - தலைவிதி என்கின்ற சுதந்திரத் தின் பேரில் ஒரு உரிமைப்பாராட்டி அம்மாதிரி செய்கின்றார்களே ஒழிய வேறில்லை. அதுபோலவே நீங்களும் பிறர் உங்களை நடத்துகின்ற அந்த மாதிரியான கொடுமைகளை நினைத்து மாத்திரம், அதுவும் அந்த சமயத்தில் மாத்திரம் சிறிது அக்கிரமமாகவும் கொடுமையாகவும் இருப்பதாக கருது கின்றீர்களே ஒழிய இதற்கு காரணமென்ன? இப்படிப்பட்ட ஒரு கொடுமை யானதும், அக்கிரமமானதுமான காரியம் ஏன் நடக்கின்றது? என்கிற விஷயத்திலும் இதை எப்படி அடியோடு ஒழிப்பது? இதற்காக என்ன செய்ய வேண்டியது? என்கின்ற விஷயங்களை நீங்கள் நினைப்பதுமில்லை. அப்படிப்பட்டவைகளை வேறு யாராவது எடுத்துச் சொன்னாலும் அவை களை ஒப்புக்கொண்டு நடவடிக்கையில் நடப்பதற்கு துணிவதுமில்லை. வீணாய் இப்படிப்பட்ட ஏதாவது ஒரு சமயங்களில் உங்களில் தனிப்பட்ட வர்களுக்கு ஏதாவது சங்கடம் வந்த காலத்தில் மாத்திரம், இரண்டொரு வார்த்தைகளால் அதுவும் இதன் அஸ்திவாரத்தை கவனியாமல் தனிப்பட்ட நபர் மீதோ வகுப்பார் மீதோ குற்றம் சொல்லி கூப்பாடு போடுவதும் பிறகு நாலுநாள் கடந்து விட்டால் அது மறைந்து போய் பழையபடி ஆய்விடுவதும் வழக்கமாக இருந்து வருகின்றது. பொதுவாழ்க்கையில் உள்ள சில கனவான் களும் உங்களுக்குப் பரிந்து பேசுவதுபோல் வக்காலத்து பேசுவதுபோல் சில வார்த்தைகளைப் பேசிவிட்டு பிறகு அவரவர்கள் சொந்தவேலையை அவரவர்கள் பார்ப்பதும், பிறகு என்றும் போல் சாதாரணமாயிருப்பதும் வழக்கமாக இருக்கின்றது. 

என்னுடைய சுமார் 20, 30 வருஷ­ பொது வாழ்க்கைத் தொண்டில் இந்த சம்பவங்கள் அநேகம் எனக்கு அனுபவ முண்டு. உங்களிடத்தில் ரொம்பவும் அனுதாபமிருப்பது போல் பேசி கண் களில் கண்ணீர் வடித்துவிட்டுப்போவார்கள். பிறகு அவர்கள் வீட்டிற்குப் போனவுடன் பழைய உணர்ச்சிதான் அவர்களிடம் தாண்டவமாடும். இதற்கு உதாரணம் வெளியில் போய்த் தேடவேண்டியதில்லை உங்களிடத்திலேயே இருப்பதை ஞாபகப்படுத்திப் பார்ப்பீர்களானால் விளங்கும். அதாவது உங்களில் பலர் உங்களை விட உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக் கொள்ளும் அய்யர், கவுண்டர், நாயுடு முதலிய ஜாதியார் உங்களைத் தாழ்மையாகக் கருது வதை மாத்திரம் நினைத்து வருத்தப்படுகின்றீர்களே யல்லாமல் பறையர் சக்கிலியர்கள் என்பவர்களை நீங்கள் உங்களிலும் தாழ்ந்த ஜாதியாகக் கருதி அவர்களை உங்களுக்குச் சமமாக நினைத்து சுதந்திரங்கள் கொடுக்க மறுக் கின்றீர்கள். இதற்கு எல்லாம் காரணம் உங்கள் மத உணர்ச்சியும், உங்கள் கடவுள் உணர்ச்சியும், உங்கள் விதி உணர்ச்சியுமேயாகும். மத சம்பிரதாயப்படி நீங்கள் சக்கிலியரை பறையர்களை விட உயர்ந்த ஜாதியாராகவும் கடவுள் அந்தப்படி உங்களைப் படைப்பித்ததாகவும் அதற்குக் காரணம் உங்களு டைய பூர்வஜன்ம கர்மத்தின் விதி யென்றும் கருதுகிறீர்கள். உங்களைத் தாழ்ந்த ஜாதியாய் கருதியிருப்பவர் களும் அப்படியேதான் மத ஆதாரத் தாலும் கடவுள் செயலாலும் பூர்வ ஜன்மாந்தர கர்ம விதியாலும் அப்படிப் பிறந்ததாகக் கருதியிருக்கின்றார்கள்.


 இந்த மாதிரியான மதம் கடவுள் ஜென் மாந்திர விதி ஆகிய மூன்றையும் நம்பியிருக்கின்றவன் இம்மூன்றையும் பாதுகாக்க விரும்புகின்றவன் எப்படி மற்ற மக்களை சமமாகக் கருதக்கூடும்? பணக்காரனும் தான் பணக்காரனா யிருப்பதற்கு இதே காரணம்தான் கருதிக் கொண்டிருக்கிறான். திருடனும் தான் திருடனாய் இருப்பதற்கும், அயோக்கி யனும் தான் அயோக்கியனாய் இருப்பதற்கும், அரசனும் தான் அரசனா யிருப்பதற்கும், கூலியும் தான் கூலியாயிருப்பதற்கும், ஏழையும் தான் ஏழை யாயிருப்பதற்கும், கொடுங்கோல் ஆட்சியில் கஷ்டப்படும் குடிகளும் (பிரஜையும்)தாங்கள் கஷ்டப்படுவதற்கும் மத சம்பிரதாயத்தையும் கடவுள் சித்தத்தையும் பூர்வ ஜன்ம கர்மவிதியையும் காரணமாய் கருதி தங்கள் நிலையில் திருப்தி கொண்டு இருக்கின்றார்கள். இந்த மாதிரி மக்களை உடைய தேசத்தில் எந்த மாதிரியான முன்னேற்றத்தைக் காணக்கூடும்? இந்த தேசத்தை மனிதத் தன்மையுடைய தேசமாகவும், மானமுள்ள தேசமாகவும், சுவாதீனமும் சமத்துவமுமுள்ள தேசமாகவும், ஆகச் செய்யவேண்டுமானால் மேல்கண்ட மூன்றும் அதாவது மதம், கடவுள், விதி ஆகிய மூன்றும் அடியோடு ஒழிக்கப் பட்டாக வேண்டும். அந்தப்படி யில்லாதபட்சம் வெறும் பேச்சுதான் நடை பெறுமே யொழிய காரியத்தில் ஒரு சிறிதும் பயனடைய முடியாது என்று நான் உறுதியாய்ச் சொல்லுவேன்.

சகோதரர்களே! உங்கள் இழிவு அதாவது தாழ்ந்த ஜாதித்தன்மை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. வேதகாலத்தில் இருந்திருக்கின்றது. அரிச் சந்திரன் காலத்தில் இருந்திருக்கின்றது. ராமன் காலத்தில் இருந்திருக் கின்றது. எல்லா ஆழ்வார், நாயன்மார் காலத்திலும் இருந்திருக்கின்றது. அதற்குமேல் இனி எப்போது இருந்திருக்க வேண்டும் என்று சொல்ல ஆசைப் படுகின்றீர்கள்?

மனிதனுக்கு கடவுள் உணர்ச்சி தோன்றிய காலந்தொட்டே இந்த நாட்டில் மேல் கீழ் ஜாதி உணர்ச்சி தோன்றிவிட்டது. கடவுள் பேராலேயே மேல் ஜாதி கீழ் ஜாதி உணர்ச்சிகளை காட்டப்பட்டிருக்கின்றன. இந்துமதம் என்பதில் வைணவத்திலாவது சைவத்திலாவது ஜாதிப்பிரிவு உயர்வு தாழ்வு தத்துவம் காணப்படாத கடவுள்களோ அவதாரங்களோ, திருவிளையாடல் களோ, கடவுளைக் காட்டிய பெரியார்களோ, புராணங்களோ, இதிகாசங்களோ ஏதாவது ஒன்றைக்காட்ட முடியுமா? என்று கேட்கின்றேன். 64 நாயன்மார் களுக்கும், 64 ஜாதிக்காரர்களாய் பிறந்திருக்கிறார்கள். 12 ஆள்வார்களும் 12 ஜாதிக்காரர்களாய் பிறந்திருக்கிறார்கள். இந்து மதத்திற்கு ஆதாரமான - சட்டமான மனுதர்ம சாஸ்திரம் முதலியவைகளை எடுத்துக்கொண்டால், அவைகளில் அளவில்லாத ஜாதியும் அதற்கு தாரதம்மியமும் காணப் படுவதை யாரும் மறுக்கமுடியாது. ஆகவே எந்த நிலையில் எந்த ஆதாரத் தைக் கொண்டு இன்று உங்கள் மத நம்பிக்கைக்காரனும், அதைச்சேர்ந்த கடவுள் நம்பிக்கைக்காரனும், அது சம்பந்தமான வேதம் சாஸ்திரம், புராணம், இதிகாச நம்பிக்கைக்காரனும் உங்களிடம் வந்து ஜாதி பாகுபாடும், ஜாதி வித்தியாசமும் இல்லை என்று சொல்ல முடியும்? என்று கேட்கிறேன்.

இந்து மத சம்பிரதாயப்படி ஜாதி இல்லை என்று உங்களிடம் யார் சொல்ல வந்தாலும் அவர்களை மூடர்கள் என்றோ மோசக்காரர்கள் என்றோதான் கருத வேண்டும். மற்றும் சிலர் தொழில் பாகுபாட்டைக் கண்டு ஜாதி வகுக்கப்பட்டதே ஒழிய பிறவியைக் கொண்டு பிரிக்கப்பட வில்லை. ஆதலால் தொழில் பிரிவு இருக்கத்தான் வேண்டும் என்று சொல்லி “கீதை யில் பகவான் சொல்லுகின்றார்” என்று உங்களை ஏய்க்கக்கூடும். அவர் களும் அதுபோலவே அறியாதவர்களாகவோ, ஏய்க்க வந்தவர்களாகவோ தான் இருக்க வேண்டும். தொழிலுக்காக வந்தாலும் ஏன் பாகுபாடு இருக்க வேண்டும் என்றுதான் கேட்கின்றேன். ஒரு மனிதன் காலையில் தச்சனாகவும், மத்தியானம் வியாபாரியாகவும், இராத்திரியில் உபாத்தியராக வும், ஒருவனை ஒருவன் இம்சைப்படுத்துகின்ற காலத்தில் அவனை உபத்திரவத்தில் இருந்து மீட்பவனாகவும் ஏன் இருக்கக்கூடாது என்று கேட்கிறேன். மறுநாள் காலையில் உழுகின்றவனாகவும், பகலில் நெய்கின்ற வனாகவும், மாலையில் விற்கின்றவனாகவும், இரவில் காவல்காரனாகவும் ஏன் இருக்கக்கூடாது? என்று கேட்கின்றேன். 


ஆகவே பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்று சொல்லுகின்றவர்களும், அந்தணர், அரசர், வணிகன், வேளாளர், குடிமக்கள் என்று சொல்லுகிறவர்களும், இவர்கள் பிறவியினால் என்று சொல்லுகிறவர்களும், இவர்கள் தொழிலினால் என்று சொல்லுகிறவர்களும், ஒரே மாதிரியானவர்களே தவிர இவர்களில் அறிவாளி களோ அல்லது யோக்கியர்களோ இருக்க முடியாது என்றே சொல்லுவேன். இந்தப்படி ஒரு முறையும் நமக்கு வேண்டியதில்லை என்றும் சொல்லுவேன். அது மக்களுக்கு எந்த முறையிலும் எந்த அர்த்தத்திலும் பயன் விளைவிக்க வேயில்லை. 


இவை யெல்லாம் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை, எஜமான், அடிமை, முதலாளி, கூலி முதலிய கொடுமைத் தன்மைகளைத்தான் உண்டாக்க பயன்படுகின்றனவே ஒழிய மக்கள் சமத்துவத்திற்கும், சுதந்திரத் திற்கும் சிறிதும் பயன்படவில்லை. ஆகையால் மக்களில் எந்த வகையிலும் உயர்வு தாழ்வு உணர்ச்சி ஏற்பட முடியாத மாதிரியில் தான் உலக வாழ்க்கை நடப்பு ஏற்பட வேண்டும் அதற்கு தகுந்த மார்க்கமே செலாவணியாகப் பார்க்க வேண்டும். இல்லாதவரை இன்றைய கொடுமைகள் ஒழிய மார்க்கமே இல்லை. இத்தொண்டில் தயவு தாக்ஷண்ணியம் பார்ப்பதும் முன்னே செய்த வேலையை பின்னே அழித்துக் கொண்டு போவதாகும். இந்த விஷயங்கள் வரவர ரத்தக்களரியும் மண்டை உடையவும், உயிர்ச் சேதமும் ஏற்படத் தேவையான நிலைக்கே கொண்டுவந்து விட்டுக் கொண்டிருக்கின்றன. இதைக் கண்டு யாரும் பயந்து விடக்கூடாது. இன்றைய அஹிம்சா தர்மம் என்பவைகள் எல்லாம் பெரிதும் புரட்டுகளாகவே முடிந்துகொண்டு வருவதை நேரில் பார்க்கின்றோம். தந்திரசாலிகள் எல்லாம் அடிபடாமல் தப்பித்துக் கொள்ளவும் சாதாரண ஜனங்களும் யோக்கியர்களும் அடியும் உதையும் மண்டை உடைவும் துப்பாக்கி வெடியும் அடையவும்தான் அஹிம்சா தர்மமாய் இருக்கின்றது. அது எப்படியிருந்தாலும் மனிதன் மனித சுதந்திரம் அதாவது, தெருவில் நடப்பது, குளத்தில் தண்ணீர் மொள்ளுவது, மனிதனுக்கு மனிதன் தொடுவது, முதலிய சுதந்திரங்கள் கூட கொடுப்பதற்கு தன்தன் நாட்டினனாலேயே தன் இனத்தாலேயே தடைப்படுத்தப்பட்டிருக்கும் போது அதுவும் மதத்தின் பேராலும் கடவுள் பேராலும் நடக்கும்போது வேறு நாட்டானிடம் அரசாக்ஷி சுதந்திரம் என்று கேட்கப்படுவதைப் பார்த்தால் இதை எதற்கு ஒப்பிடுவது? என்பது எனக்கு புலப்படவில்லை. ஒன்றா உங்களுக்கு மனித சுதந்திரம் கிடைக்கவேண்டும். அல்லது நீங்கள் இந்த நாட்டிலாவது இதை மதத்திலாவது இந்த சமூகத்திலாவது இல்லாமல் இருக்கவேண்டும். இந்த முடிவைத் தவிர எப்படியோ உயிர்வாழ்ந்தால் போதும் என்று நினைத்துக்கொண்டு இப்படியே இருப்பது மிகவும் மானங்கெட்டத்தனமாகும். இவ்விஷயத்தில் பொருத்துப் பொருத்து பார்க்கலாம் என்பதும் பேடியின் கொள்கையேயாகும். எவ்வளவு நாள் பொருப்பது? எவ்வளவு மெள்ளப் போவது? இவற்றிற்கு ஏதாவது நாணையமோ யோக்கியப் பொறுப்பான அர்த்தமோ வேண்டாமா? இந்த நிலைக்காக இதற்கு முன் எத்தனையோ பேர் ஆயிரக்கணக்கான வருஷங்களாய் வக்காலத்துப் பேசியாய் விட்டது. எத்தனையோ பேர் தர்ம நியாயம் பேசியாய் விட்டது. அவ்வளவும் பழய நிலையை பலப்படுத்தவே முடிந்தது. “தோலைக்கடித்து துருத்தியைக் கடித்து வேட்டை நாய் ஆய்விட்டது” என்பதுபோல் தேசீயமானது ஒரு பக்கம் அரசியல் சுதந்திரம் கேட்டுக் கொண்டும் மற்றொரு பக்கம் வர்ணாசிரம சுயராஜ்ஜியமும் பெற முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்த விழிப்பாசை மயக்கத்தில் கூட “ஜாதி வித்தியாசம் இருக்கவேண்டும், பரையர் வேண்டும், தீண்டாமை வேண்டும், மனுதர்மம் வேண்டும்” என்று மகாநாடுகள் கூடிப் பேசப்படுகின்றன. இதை ஏன் என்று கேட்க ஆட்கள் இல்லை. தேசிய வீரர்களில் வெள்ளைக்காரன் ஒடிப்போகவேண்டும் என்று சொல்ல மாத்திரம் அனேக ஆட்கள் இருக்கின்றனர்.சகோதரர்களே! இன்றைய தினம் வெள்ளைக்காரன் இருப்பதா? போவதா? என்பது நமது கவலையல்ல. உங்களுக்கும் அந்தக் கவலை வேண்டாம். நம்மீதும் உங்கள் மீதும் நமது மக்களால் சுமத்தப்பட்ட இழிவு களும் நடத்தப்படும் கொடுமைகளும் ஒழிவதாக வேண்டும் என்பதை முடி வான லக்ஷியமாய்க் கொள்ளுங்கள். அதற்காக உயிரைவிட நீங்களும் உங்கள் பெண்டு பிள்ளைகளும் தயாறாயிருங்கள். இன்றைய தினம் உலகத் தில் பல தேசங்கள் பணக்காரன், ஏழை என்கிற வித்தியாசமும் எஜமான் கூலிக்காரன் வித்தியாசமும் இருக்கக்கூடாது என்று முடிவு கட்டி வேலை செய்து வெற்றியடைந்து கொண்டு வருகிற காலத்தில் நீங்கள் பார்ப்பார ஜாதி பரச்சாதி ஒருவரை ஒருவர் பார்த்தால் தொட்டால் தெருவில் நடந்தால் தீட்டு என்ற கொள்கையை வைத்துக் கொண்டிருந்தால் நமக்கும் அவர்களுக்கும் எவ்வளவு தூரம் இருக்கின்றது என்கிறதை யோசித்துப் பாருங்கள். இந்த உணர்ச்சிகள் உங்களுக்கு தோன்றாமல் இருப்பதற்கு காரணம் உங்கள் முட்டாள் தனமும் அதற்கு ஆதரவான உங்கள் மத நம்பிக் கையும் தெய்வ நம்பிக்கையுமே ஆகும். ஆதலால் அதை முதலில்விட்டு விரட்டி அடியுங் கள். பிறகு தானாகவே சுயமரியாதை தோன்றி நியாயமும் சமத்துவமும் கிடைத்துவிடும்.கடைசியாக சென்ற வருஷம் உங்கள் சங்கத்தை திறந்து வைத்து பல உபன்யாசங்கள் புரிந்து பல உதவியும் புரிந்து உங்கள் முன்னேற்றத்தில் சதா கவலையும் கொண்டு உழைத்து வந்தவரும் இன்றும் இங்கு வந்து உங்களுக்கு அரிய உபன்யாசம் செய்தவருமான திரு. சி.எம். ராமச்சந்திரம் செட்டியார் அவர்களுக்கு அரசாங்கத்தில் ராவ் சாகிப்பட்டம் அளிக்கப் பட்டிருப்பதைக் கேட்க நீங்கள் எல்லோரும் மிக்க மகிழ்ச்சி அடைவீர்கள். ஆகவே அக்கனவானை உங்கள் சார்பாக நான் பாராட்டுகின்றேன். மற்றும் கோவை சிவிக் அசோசியேஷன் செகரட்டரி திரு. சின்ன அப்பாவு அவர்கள் உங்கள் முற்போக்கில் கவலை கொண்டு அடிக்கடி கவனித்து உங்களுக்கு அரிய புத்திமதிகள் சொல்லி வந்ததற்கும் உங்கள் சார்பாய் நான் மனப்பூர்வமாய் பாராட்டுகின்றேன். கோவை திரு. சுப்பன் அவர்கள் இன்று உங்களுக்கு முக்கியமான பிரசங்கம் செய்ததற்கும் அவரையும் பாராட்டுகிறேன். இந்த முதலாவது ஆண்டு விழாவுக்கு தலைமை வகித்து நடத்தும் பெருமையை எனக்குக் கொடுத்து எனக்கு செய்த வரவேற்புக்கும் நீங்கள் வாசித்துக் கொடுத்த வரவேற்புப் பத்திரத்திற்கும் எனது நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

-------------------------------------------கோவை, இருகூரில் 03.01.1931 அன்று நடைபெற்ற இருகூர் ஆதி திராவிட சமூகத்தினர்களால் நிறுவப்பட்ட திராவிட முன்னேற்ற சங்க ஆண்டு விழாவில் தந்தைபெரியார் அவர்கள்  ஆற்றிய  தலைமையுரை."குடி அரசு" - சொற்பொழிவு - 11.01.1931

35 comments:

தமிழ் ஓவியா said...

ஒரு கொலை நூல்தான் பரிசுக்குத் தகுதியானதா?

ஜப்பான் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுப் பிரதமருக்குக் கீதையை அளித்து, அதன் மூலம் ஒரு சர்ச்சைக்கு அடியெடுத்துக் கொடுத்துள்ளார்.

கீதை - பகவான் கிருஷ்ணனால் அருளப்பட்டது என்று கதைக்கிறார்கள். இந்து மதத்தை அமெரிக்கா வரை கொண்டு சென்ற விவேகானந்தர்கூட ஒரு கேள்வியை எழுப்பியதுண்டு ஒரு யுத்தக்களத்திலே கீதா உபதேசம் நிகழ்த்த முடியுமா?

அது இயலக் கூடியதுதானா? கிருஷ்ணன் சொல்லச் சொல்ல அவற்றையெல்லாம் சுருக்கெழுத்து மூலம் எழுதியவர் யார் என்ற கேள்வியோடு மட்டும் அவர் முடிக்கவில்லை; கீதையைப் படிப்பதைவிட கால்பந்து விளையாடுவது நல்லது என்கிற அளவுக்குச்சென்று இருக்கிறார்.

உலகத்தில் எங்காவது கேள்விப்பட்டதுண்டா? கடவுள் என்று சொல்லக்கூடிய ஒருவர் யுத்தம் செய் - மனிதர்களைக் கொலை செய்! கொன்று குவி! என்று உத்தரவிட்டதாகக் கேள்விப்பட்டதுண்டா?

தன் எதிரே இருக்கும் உற்றார் உறவினர்களோடு போர்தொடுக்க அர்ச்சுனன் தயங்கியபோது, கிருஷ்ணன் என்ன சொல்கிறான்?
இந்த உடலில் வாலிபப் பருவமும், யவனப் பருவமும் எவ்வாறு வந்து சேருகின்றனவோ அம் மாதிரியே, ஆத்மாவுக்கு பேச உடலும் வருகிறது. அறிவாளி இதைப் பார்த்து மயங்க மாட்டான்.

எந்த ஆத்மாவானது எங்கும் பரவியுள்ளதோ அது அழிவற்றது என்று அறிவாயாக! இவ்வாறு அழிவற்ற இந்த ஆத்மாவுக்கு எவரும் அழிவை ஏற்படுத்த முடியாது; ஓ, பரதவம்சத்தவனே! என்றென்றும் இருப்பதும், அழிவற்றதும், அளவிற்கு அடங்காததுமான ஆத்மாவால் தாங்கப்படுகின்ற இந்த உடல்கள் அழிவுள்ளவை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன ஆகவே இதனை நன்கறிந்து போர் செய்வாயாக? என்று அர்ச்சுனனுக்கு ஆணையிடுகிறார் அவர்கள் கூறும் பகவான் கிருஷ்ணா!

உலகத்திலேயே இவ்வளவுப் பச்சையாகக் கொலையைத் தூண்டுகிற, நியாயப்படுத்துகின்ற ஒருவன்தான் இந்துத்துவாவாதிகள் போற்றுகின்ற பகவான் கிருஷ்ணன், அதைச் சொல்லுவதுதான் கீதை. புரியும்படிச் சொல்ல வேண்டுமானால் கீதை என்பது ஒரு கொலைகார நூலே!

காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேகூட தனது படுகொலையை நியாயப்படுத்து கிற வகையில் இந்தக் கீதையைத்தான் எடுத்துக் காட்டினான்.

தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு அதர்மத்தையும் செய்யலாம்; அப்படி செய்வதும் தருமமே! என்று கீதை சொல்லுவதை எடுத்துக்காட்டி கொலைக்கு நியாயம் கற்பிக்கும் கொடுமையை என்னென்று சொல்லுவது?

இந்தச் கீதையை இந்தக் கொலைகார நூலைத்தான் ஜப்பான் பிரதமருக்கு இந்தியப் பிரதமர் மகிழ்ச்சியோடு பரிசாக அளித்துள்ளார்.
ஒரு வகையில் நரேந்திரமோடி கீதையைப் போற்றுவதற்கு வழிகாட்டியாகக் கொள்ளுவதற்கு நியாயம் இருக்கிறது.

மோடி முதல் அமைச்சராக இருந்தபோதுதானே சிறுபான்மை மக்கள் ஆயிரக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். எனவே மோடி கீதையைப் போற்றுவதில் ஓர் அர்த்தம்கூட இருக்கிறது.

ஆனால் ஜப்பான் பிரதமருக்குக் கீதையைப்பற்றி தெரிந்திருக்குமா என்பது கேள்விக் குறியே! அது கொலை நூல் என்று தெரிந்திருந்தால், அந்தக் கணமே இந்தியப் பிரதமரிடம் திருப்பியே கொடுத்திருப்பார்.

இது ஒருபுறம் இருக்க, கிருஷ்ணன் என்ற கடவுளே இந்து மதத்தில் கற்பிக்கப்பட்டதே கவுதமப் புத்தர் தோன்றி நாட்டு மக்கள் மத்தியில் வைதிக ஆரியப் பார்ப்பன வருணாசிரமத்தை எதிர்த்து மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்திய பிறகுதான்.

இதுகுறித்துப் பிரபல வரலாற்று ஆசிரியர் ராம்சரண் சர்மா 11ஆவது வகுப்புக்கான என்.சி.ஆர்.பி. வெளியிட்டுள்ள தொன்மை இந்திய வரலாறு (கிஸீநீவீமீஸீ மிஸீபீவீணீஸீ பிவீஷீக்ஷீஹ்) எனும் நூலை எழுதியவர் அந்த நூலில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

கிருஷ்ணன் மகாபாரதத்தில் முக்கியப் பங்கு ஆற்றியதாகக் கூறப்பட்டிருந்தாலும், மதுரா நகரில் கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை கிடைக்கப் பெறும் சிற்பத் துண்டுகள் கிருஷ்ணன் பற்றிய தகவலைத் தரவில்லை.

இதன் காரணமாக இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் அடிப்படையில் இதிகாச காலம் எனும் கருத்தைப் பற்றிப் பேசுவதைக் கைவிட வேண்டும் என எழுதப் பட்டுள்ளது.

ஒரு பொய்யான கதைப் பாத்திரத்தை உண்டாக்கி, அதையும் கொலையைத் தூண்டும் ஒன்றாகச் சித்தரித்து இருப்பது எல்லாம் அசல் கழிசடைத்தனம் அல்லவா?

125 கோடி மக்களின் பிரதமர் இந்த வேலையைச் செய்யலாமா? இந்தியா என்றால் பாம்புகளின் நாடு என்பது போய், பொய்யர்களின் கூடாரம் என்ற புது நாமகரணம் இந்தியப் பிரதமரால் கிடைக்கும் போல் தோன்றுகிறது - இன்னும் 4 ஆண்டு 9 மாதம் எப்படித்தான் கழியுமோ என்று தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/page-2/87192.html#ixzz3CXxhYBeG

தமிழ் ஓவியா said...

திருக்குறள்


நம் நாட்டினருக்கு என்ன கலை, என்ன குறிக்கோள், என்ன நாகரிகம் என்று கேட்டால் அதற்கு ஆதாரமாகத் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஒன்றைத்தான் எடுத்துக்காட்ட முடியும்.
(விடுதலை,3.10.1958)

Read more: http://viduthalai.in/page-2/87191.html#ixzz3CXxtSyfA

தமிழ் ஓவியா said...

வாழ்வியல் சிந்தனைகள் கருத்துக்கள் பயனுடையவை

'நன்றி காட்டுவதின் மூலம் உயருங்கள்' என்ற தலைப்பில் 28.08.2014 அன்றைய விடுதலையில் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனை களை படித்தேன்.

உதவி செய்தவர்கள் தான் செய்த உதவியை மறந்து விடுவது நல்லது என்றும் உதவியை பெற்ற ஒருவர் அந்த நிகழ்வை என்றும் நினைவில் வைத்து வாழ்வது மிகச் சிறந்த மனிதப்பண்புகளில் ஒன்றாகுமென்றும் திருவள்ளுவர், தந்தை பெரியார், ஸிலீஷீஸீபீணீ ஙிஹ்ஸீக்ஷீமீ போன்ற அறிஞர்களின் கருத் துக்கள் மூலம் விளக்கியது அருமை.

உதவி செய் கின்றவர்களுக்கும் உதவியை பெறுகின்ற வர்களுக்கும் அவர் கூறும் கருத்துக்கள் பயனுடையவை மட்டுமல்ல. மனிதப் பண்பை செழுமைப்படுத்து பவையுமாகும்.

- ஞான. அய்யாப்பிள்ளை, மும்பை

Read more: http://viduthalai.in/page-2/87196.html#ixzz3CXy1aSt7

தமிழ் ஓவியா said...

விநாயகர் பொம்மைகளுக்குத் திருட்டு மின்சாரம்!


பெரியார் பிஞ்சு அன்புச்செல்வனின் பிறந்த நாள் விழாவில் கழகத் துணைத் தலைவர் அதிர்ச்சித் தகவல்!


காஞ்சிபுரம், செப். 6_ ஒழுக்கத்தை கற்றுத் தருகிறது என்று சொல்லப்படுகிற கடவுளர்கள் எப்படிப்பட்ட ஒழுக்கம் கெட்ட காரியங்களைச் செய்யத் தூண்டுகிறது என்பதைச்சுட்டி காட்டி, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் விநாயகர் பொம்மைகளுக்கு திருட்டுத் தனமாக மின்சாரம் எடுக்கப்படுகிறது என்பதை கவலையோடு கழகத் துணைத் தலைவர் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் இறுதியில் அதாவது 28.8.2014 அன்று பூவிருந்தமல்லியை அடுத்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் உள்ள காமாட்சி திருமண மண்டபத்தில் போரூர் காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த திராவிடர் கழகத்தோழர் தனது மகன் அன்புச்செல்வனின் முதலாமாண்டு பிறந்த நாளை வெகு சிறப்பான ஏற்பாடுகளைச் செயது கொண்டாடினார்.
நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு நடராஜன் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று வருகை தந்திருந்த துணைத் தலைவரை தென்சென்னை மாவட்டத் தலைவர் வில்வநாதன் தலைமையில் சிறப்பாக வரவேற்றனர். திராவிடர் கழகத்தின் தோழர்களும் நடராஜனின் உறவினர்களும் கூடியிருந்த கூட்டத்தில் தென் சென்னை மாவட்டத் தலைவர் வில்வநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
அதைத்தொடர்ந்து தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தோழர் செங்குட்டுவன், அன்புச்செல்வனை வாழ்த்திப் பேசினார்.
கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரையாற்றினார். அவர் தமதுரையில்:_ எடுத்த எடுப்பிலேயே ஒரு பிறந்த நாளுக்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? என்று கேட்டு பார்வையாளர்களை திகைக்க வைத்தார். பிறகு கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியாரின் சிக்கனத்தைப்பற்றி கோடிட்டுக்காட்டி விட்டு, பெரியார் தொண்டரான நடராஜன் செலவு செய்து இந்த விழாவை விழாவை ஏற்பாடு செய்திருப்பது பெரியாரின் கொள்கையை பின் பற்றியவர்கள் ஒருநாளும் வீழ்ந்ததில்லை வாழ்ந்துதான் இருக்கிறார்கள் என்பதை உறவினர்களான உங்களுக்கு உணர்த்தத்தான் என்று கூறினார்.
மேலும் அவர் பெரியாரியம் என்பது ஒரு வாழ்க்கை நெறி. அதில் ஒழுக்கத்திற்கு சிறப்பான இடம் உண்டு என்று கூறிவிட்டு அதனால்தான் பக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து என்று பெரியார் குறிப்பிட்டார் என்பதையும் சேர்த்துச் சொல்லி, ஆனால் கடவுள்களால் ஒழுக்கம் வளர்கிறதா என்று கேள்வி கேட்டு தற்போது நடைபெற்றுக் கொண் டிருக்கும் விநாயகர் சதுர்த்தி தொடர்பான நிகழ்வுகளை எடுத்துக்காட்டிப் பேசினார்.
அதாவது ஊரெங்கும் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் பொம்மைகளுக்கு மின்சாரம் திருட்டுத் தனமாக எடுக்கப்படுவதை எடுத்துக் கூறினார். இப்படி இருந்தால் பக்தர்களிடையே ஒழுக்கம் எப்படி வளரும் என்று கேள்வியை எழுப்பினார். கூடியிருந்தோரும் அதை ஆமோதிப்பதுபோல் தலையாட்டினர்.
தொடர்ந்து நடராஜனின் உழைப்பையும் அதனால் அவர் பெற்ற உயர்வையும் பாராட்டி பெரியார் பிஞ்சு அன்புச்செல்வனையும் வாழ்த்திவிட்டு மழையைத் தொடர்ந்து பொழியும் தூரலைப்போல தற்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பொருளே தெரியாத பெயர்களை வைத்து, மொழி மானத்தை மிதிக்கிற தன்மையையும் கவலையோடு சுட்டிக்காட்டி னார்.
அதைத்தொடர்ந்து கேக் வெட்டப்பட்டு குழந்தை அன்புச்செல்வனுக்கு ஊட்டி அனைவரும் மகிழ்ந்தனர். வருகை தந்திருந்த அனைவருக்கும் இரவு இறைச்சி விருந்து வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பூவிருந்தவல்லி பகுதியைச் சேர்ந்த பெரியார் மாணாக்கன், செல்வி ஆகியோர், உடுமலை வடிவேல், வேலவன் தொண்டறம் மற்றும் தாம்பரம் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Read more: http://viduthalai.in/page-3/87213.html#ixzz3CXymyFD8

தமிழ் ஓவியா said...

கடவுள் மறுப்பாளர் கண்மதியன் கவிதை நூலை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டு சிறப்புரை


கவிச்சிங்கம் கண்மதியன் கவிதைகளின் மூன்றாம் தொகுப்பினை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, முதல் பிரதியை மேனாள் மேயர் சா.கணேசன் மற்றும் சிலம்பொலி செல்லப்பன், வா.மு.சேதுராமன், மறைமலை இலக்குவனார், கவிக்கொண்டல் செங்குட்டுவன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர் (சென்னை, 5.9.2014).

கவிஞர் கண்மதியனுக்குப் பாராட்டு

சென்னை,செப்.6- சென்னை கலைமாமணி ஜி.உமாபதி கலையரங்கத் தில் பன்னாட்டுத் தமிழு றவு மன்றம், தமிழ் எழுத் தாளர் கழகம், அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய கவிச்சிங்கம் கண்மதியன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி) நூல் வெளியீட்டுவிழா நடை பெற்றது. நூல் வெளி யீட்டு விழா சிலம்பொலி சு.செல்லப்பன் தலைமை யில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் வெளியிட்டு சிறப் புரை ஆற்றினார்.

கவி முரசு வா.மு.சே.திருவள் ளுவர் வரவேற்றார். பெருங் கவிக்கோ வா.மு.சேது ராமன், கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் முன் னிலை வகித்தனர். முதல் நூலைப் பெற்றுக் கொண்டு மேனாள் மேயர் சா.கணே சன் வாழ்த்துரை ஆற்றி னார். பேராசிரியர் மறை மலை இலக்குவனார் நூல் ஆய்வுரை ஆற்றி னார். கவிச்சிங்கம் கண் மதியன் ஏற்புரைக்குப்பின் கவிஞர் இளவரச அமிழ் தன் நன்றி கூறினார்.

தமிழர் தலைவர் உரை

விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் நூலை வெளியிட்டு உரையாற் றியதாவது:

தமிழ் ஓவியா said...


இந்த விழாவை ஒரு பகுத்தறிவு இலக்கிய பண் பாட்டு நிகழ்ச்சி என்று அழைக்க வேண்டும். நவில்தொறும் நூல்நயம் என்பதுபோல் மறைமலை இலக்குவனார் ஆய்வுரை யாகப் பேசினார். துப் பாக்கிக்குண்டின் வயிற் றில் பிறந்த வெடிகுண் டாக வாமுசேதிருவள் ளுவர் வரவேற்றுள்ளார். இங்கு கலந்துகொண் டுள்ள அத்துணை பேரும் சிறப்புக்கு உரியவர்கள். அணிக்கும் அணி சேர்க் கும் பெருமை பெற்றவர் கள். நான் எப்போதும் நேரக் கட்டுப்பாட்டுக்குக் கட்டுப்பட்டவன்.

இங்கு பேசியவர்கள் பாராட் டும்விதமாக பலவாறு கூறினார்கள். பெரியார் ஒரே ஒரு பெரியார்தான். நான் பெரியார் தொண் டன். வாழ்நாள்முழுவதும் அவர் கொள்கையை பரப் புபவன். மூத்த குடிமக்கள் அரங்கம் என்று சொல் லக்கூடிய வகையில் இங்கு கூடி உள்ளீர்கள். ஒன்றரை மணிநேரம் ஆய்வு செய்ய தனிக்கூட்டம் ஏற்பாடு செய்யுமாறு மறைமலை இலக்குவனார் கோரினார். அந்தக் கூட்டத்தை பெரியார் திடலில் வாசகர் வட்டத்தில் நடத்துங்கள். நானும் பங்கேற்பேன்.

வானொலி, தொலைக் காட்சிகளில் நேரத்தைக் குறைத்துக்கொள்கிறார்கள். ஆனால், இதுபோன்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சி களில் அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். கவிக்கொண்டல் ஆசிரி யர் மா.செங்குட்டுவனிடம் அவர் துணைவியார் பேச வேண்டாம் என்று கூறிய தாக சொன்னார்.

அது போன்று என் துணைவி யார் எனக்கு சொல்ல மாட்டார். ஏனென்றால், நான் கேட்க மாட்டேன் என்பதால். கண்மதியன் அரசுப்பணியாக துறை முகத் துறையில் பணி யாற்றி சமுதாயத்துறையில் பணியாற்றி வருகிறார். பாராட்டுக்குரியவர்.

தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்

தமிழ்க்கவிஞர்கள் மட்டுமல்ல தமிழர்களை ஒன்றுபடுத்த வேண்டும். எது நம்மை இணைக் கிறது என்பதைவிட எது நம்மை பிரிக்கிறது என்று இருந்து விடுகிறார்கள். கொள்கை உறுதி உள்ள வர்கள் எதிரிகளையும் கூட பாராட்டுவார்கள் என்பதை இவர் கவிதை யில் காணலாம். கவிதை என்றாலே கவிஞர்கள் வெறும் அலங்காரம், அழகு என்று இருப்பது ஒரு வகை. மற்றவர்களைப் பாராட்டக்கூடியவர்களாக இருப்பார்கள். எங்கும் தங்கள் அடையாளத்தை மாற்றிக்கொள்ளாதவர் புரட்சிக்கவிஞர். புரட்சிக் கவிஞரின் வாரிசுகளாக இங்கே பலரும் உள்ளனர்.

கொள்கைத் தெளிவு, துணிவு வேண்டும்

தந்தைபெரியார், பேர றிஞர் அண்ணா, காமரா சர் உள்ளிட்ட தலைவர் கள் பலரைப்பற்றியும் எழுதிய கண்மதியான் தன்னை ஒரு கடவுள் மறுப்பாளன் என்று எழுதிய கண்மதியான் போன்று கொள்கையில் தெளிவு, துணிவு இரண் டும் இருக்க வேண்டும்.

சிலருக்கு கொள்கையில் தெளிவிருந்தாலும் துணிவு இருக்காது. அப்படி கொள்கைதான் மூச்சு. கவி தைகளாகப் பிறக்கின்றன. அப்படி உள்ள கவிதை களில், அறிவார்ந்த அடை யாளமாக பெரியார் தொண்டர் பகுத்தறிவுக் கனல் கொள்கை வீச்சு ஏராளமாக உள்ளது. ஆணுக்கு உள்ள சொத் துரிமை, படிப்புரிமை பெண்ணுக்கு வேண் டாமா? என்று கேட் கிறார். தந்தைபெரியாரின் இயக்கத்தால் பெற்றுள் ளார்கள். பெண்கள் இன் றைக்கு பக்குவம் பெற்றி ருக்கிறார்களா? என்பது கேள்வியாகத்தான் உள் ளது.

தமிழ் ஓவியா said...

பலிகடாக்கள்

பெண்கள் குறித்து கண் மதியான் வேங்கைகள் வெள்ளாடுகளாக மாறி உள்ளதாக கவிதையில் கூறி உள்ளார். பெண்கள் மட்டுமல்ல. ஆண்களும் வேங்கைகள் வெள்ளாடுகளாக மட்டு மின்றி, பலபேர் கோயி லுக்கு பலி கடாக்களாக ஆகிறார்கள். சாதாரண மாக பயன்படும் அளவில் உணவுக்குகூட இல்லா மல் பலிகடாக்களாக ஆகியுள்ளனர்.

பகுத்தறிவு கனல் தெறிக்கும் கவிதைகளாக உள்ளன. தந்தைபெரியார் சிந்தனைதான் காரணம். பெண்கள் நகைகள் அணிந்து செல்ல பாது காப்பு உள்ளதா? கவரிங் நகை போட்டவர்களுக்கு அதிகமாகவே அடி விழு கிறதே.

தமிழ் ஓவியா said...

திராவிடர் இயக்க சாதனை

தாலி அடிமைச்சின் னம் என்று துணிச்சலாகச் சொல்லி உள்ளார். ஆணுக்கே படிப்பு, சொத்து என்று ஒரு காலத்தில் இருந்தது. பாட்டி சரசுவதி கையெ ழுத்துப்போடத் தெரி யாமல் இருந்தார். பேத்தி சரசுவதி பொறியாளராக, மருத்துவராக, கலெக்ட ராக உள்ளார் என்றால், அதுதான் இந்த இயக்கம் செய்த சாதனை. பெண் களுக்கு சொத்துரிமைக் கும், பெண்கள் கல்வி பெற்றுவருவதும் திரா விட இயக்கத்தின் சாத னைதான் காரணம். திரா விடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்கிறவர்கள் நினைத்துப்பார்க்க வேண் டும். திராவிட இயக்கத் தால்தான் சமுதாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துள் ளன.

பாட்டி சரசுவதி காலத் தில் பெண் அடிமைத் தனம் இருந்தது. இந்த இயக்கத்தின் பணியின் காரணமாக பேத்தி சரசு வதிக்கு எல்லா உரிமை களும் கிடைக்கின்றன. தாலி பெண் அடிமைச் சின்னம் என்று சொல் லும்போது, தாலி எல் லாம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

தாலியில் ஜாதி வழக்கம். ஜாதி யைப்பாதுகாக்கும் நல்ல கருவியாக வைத்து உள் ளார்கள். தாலியை கழற்றி எறி என்று எழுதி சுயமரி யாதைக் கவிஞராக உள் ளார். வைதீக பழைமை களை நோக்கி வெடி குண்டுகளை வீசுவது போல், புல்டோசர் மாதிரி வேகமாக கருத்துக்களை கவிதைநூலில் கூறி உள் ளார். ஆரியத் திருமணம் தள்ளு; தமிழ்த்திருமணத் தில் நில்லு. என்று கண் மதியான் கொள்கைக் கவிஞராக உள்ளார்.

இலக்கியம் என்பதே (இலக்கு+இயம்) இலக் குடன் குறிக்கோளுடன் இருப்பதுதான். புதிய உலகுக்கு பயணத்துக்கு வழிகாட்டும் கருத்து. கவிதை இலக்கியம் என் றைக்கும் நிலைத்திருக்கும். புரட்சிப்பொறிகளாக, புரட்சிக்கருத்துக்கள் கவிதைகளில் இடம்பெற் றுள்ளன. நூலைப்படி என்று புரட்சிக்கவிஞர் கூறுவதுபோல் அனை வரும் படிக்க வேண்டிய நூல். தமிழ், கவிதை ஆற்றல் பயன்படுகிறது என்றால் புதிய சமூகத்தை உருவாக்குதற்கு பயன்பட வேண்டும். பெரியார் கருத்தைச் சொல்கின்ற தன்மானக்கவிஞர்களை பயன்படுத்திக்கொள்ள நாங்கள் தயாராக இருக் கிறோம்.

-இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் பேசி னார்.

விழாவில் கவிஞர் கண் மதியனுக்கு அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் அமைப்பின் சார்பில் விருது வழங்கப்பட்டது. சிலம்பொலி செல்லப்பன், தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை மற்றும் மாலை அணிவித்து பாராட்டினார்கள். விழாக் குழுவினரால் சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடைகள் அணிவிக் கப்பட்டு சிறப்பு செய்யப் பட்டது. கவிஞர் கண்மதி யனின் 90 வயது தாயா ருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பய னாடை அணிவித்துப் பாராட்டினார்கள்.

இளம்பாரி

உமாபதி கலையரங்கத் திற்கு வருகை புரிந்த தமிழர் தலைவரை அதன் உரிமையாளர் இளம்பாரி அன்போடு வரவேற்று, அரங்கினுள் அழைத்துச் சென்றார்.

Read more: http://viduthalai.in/page-8/87172.html#ixzz3CXz8Z32a

தமிழ் ஓவியா said...

திரு.பன்னீர்செல்வம்

உயர்திரு ராவ் பகதூர், பன்னீர் செல்வம் தமிழ்நாட்டில் தல ஸ்தாபனங்களில் இருக்கும் வெகு சில கண்ணியமான தலைவர்களில் முக்கியமானவர் களுக்குள் ஒருவராவார். அவர் மீது நாணையத் தவறுதலான வார்த்தைகள் இது வரையிலும் யாருமே பிரதாபித்தது கிடையாது.

அவரைப் போல் பார்ப்பன ரல்லாத மக்கள் விஷயத்தில் தனது ஆதிக்கத்தில் உள்ள எல்லா இலாக்காக் களிலும் விகிதாச்சார உரிமை கொடுத்தவர்கள் மிக மிக அருமையாகும். அப்படிப்பட்டவரைச் சென்னை அய்கோர்ட்டார் ஏதோ ஒரு விண்ணப்பம் போட்டதின் காரணமாய் நாணை யமற்றவர் என்றும், யோக்கியர் அல்லாதவர் என்றும் அய்க்கோர்டு ஜட்ஜீகள் பேசியதாக பத்திரிகைகளில் காணப்படு கின்றன.

கோர்ட் விவகாரங்களில் விண்ணப்பம் போடும் விஷயங்களைக் கொண்டு ஒருவனை யோக்கியன், அயோக்கியன் என்று தீர்மானிப்பதாயிருந்தால் இந்த இந்தியாவில் கோர்ட்டு சம்பந்தமுள்ள மக்களில் 100க்கு வீசம் பேர் கூட இருக்கமாட்டார்கள் என்று நாம் உறுதியாய்ச் சொல்லுவோம்.

கோர்ட்டு சட்டங்களே உண்மைக்கு நியாயமளிக்க முடியாதபடி தான் இருக்கின்றன. அவைகளைக் கையாளும் வக்கீல்கள் அவ்விண்ணப்பம் போடும் விஷயத்தில் செலுத்தும் புத்தியும் மனப்பான்மையும் நடுநிலை யிலிருந்து பார்த்தால் அவர்களை விட நாணையக் குறைவான வர்களும் யோக்கியர்கள் அல்லாதவர்களும் வேறு யாரும் இல்லையென்று சொல்ல வேண்டிய அளவுக்கே இருப்பார்கள்.

அச்சட்டங்களின் மேல் ஆதிக்கம் செலுத்தி அவ்விண்ணப்பங்களை விசாரிக்கும் ஜட்ஜீகள் என்பவர் களும் ஏறக்குறைய பெரும்பான்மையான பேர்கள் இக்கூட்டத் திலிருந்தே தான் பொறுக்கி எடுக்கப்படு கிறார்கள். ஆகவே கோர்ட்டு விவகாரங்களில் பெரும் பாலும் இப்படிப்பட்ட வக்கீல்களுடைய யோசனைகளை அனு சரித்தே நடந்து கொள்ளுகின்ற கட்சிக்காரர்களைப் பற்றி ஜட்ஜீகள் திடீரென்று இம்மாதிரியான அபிப்பிராயத்திற்கு வருவதானது மிக்க அதர்மமானதென்றே கருதுகின் றோம்.

திரு. பன்னீர்செல்வத்தை நன்றாய் அறிந்தவர்கள். இந்த ஜட்ஜீகளின் அபிப்பிராயத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதுடன் பொது ஜனங்களும் இந்த ஜட்ஜீகள் அபிப்பிராயத்தால் ஏமாந்து போகமாட்டார்கள் என்றும் நாம் உறுதியாய் நம்புகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 09.11.1930

Read more: http://viduthalai.in/page-7/87188.html#ixzz3CXzXLjwP

தமிழ் ஓவியா said...

கே.பி.கே.மேனனுக்கு ஜே! பார்ப்பனத் தொல்லைக்கு உதாரணம்

உயர்திரு பாரிஸ்டர் கே.பி.கேசவமேனனவர்கள் இந்தியாவில் சிறப்பாகத் தென்னிந்தியாவில் ஒரு பிரபல வக்கீலாகவும், ஒரு பெரிய தேச பக்தராகவும் தியாகி யாகவும் இருந்து வந்ததும் அவரது தேசபக்தி காரணமாக மாதம் 1000 கணக்கான ரூபாய்கள் வரும்படி உள்ள தமது வக்கீல் தொழிலை நிறுத்தி தனது செல்வமெல்லா வற்றையும் இழந்து, மனைவியையும் இழந்து மிக்க கஷ்டமான பரிசோதனைக்கெல்லாம் ஆளான ஒரு உண்மை தேசபக்தர் என்பதும், திரு. காந்தியவர்களுக்கும் மிகவும் நம்பிக்கை உள்ள சகாவாகவும், கேரள காங்கிரசு தாபனத்தின் டிக்டேட்டராகவும் இருந்த ஒரு யோக்கியமும், கீர்த்தியும் வாய்ந்தவர்.

அஹிம்சையில் மிக்க நம்பிக்கை யுடையவர். சமுதாய சீர்திருத்த விஷயத்தில் திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் தமது சமுகத்திற்கே விரோதமாக வைக்கம் கோவில் தெருவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமை வாங்கிக் கொடுக்க தீர்மானித்து மற்றும் சில பாரிஸ் டருடனும், பி. எ. பி. எல். வக்கீல்களுடனும் சத்தியாக்கிரகம் துவக்கி அவ்வரசாங்கத்தாரால் 6 மாதம் காவலில் வைக்கப் பட்டாலும் சிறையில் மிக்க கௌரவமாய் நடத்தப்பட்டு தண்டனை காலம் தீருவதற்கு முன்பாகவே விடு தலை செய்யப்பட்டு அவர் கோரிய படியே திருவாங்கூர் அரசாங்கம் இணங்கி வந்து வைக்கம் தெருக் களைப் பொது ஜன நடமாட்டத் திற்கு எல் லோருக்கும் பொதுவாய் விட்டு விட்டதுடன் மற்றும் பல ரோட்டு களையும் எல்லா ஜாதி யாருக்கும் பொதுவாக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.

ஆகவே இவைகளிலிருந்து திரு. கே.பி. கேசவ மேனன் அவர்களின் யோக்கியமும், முயற்சியும் எப்படிப்பட்ட தென்பது யாரும் நன்றாய் உணரலாம். அன்றியும் அவர் தென்னிந்தியாவிலுள்ள கௌரவமான கனவான்களில் ஒருவராகவும், எல்லா கௌரவமான கனவான்களின் சிநேகிதராகவும், அய்கோர்ட் ஜட்ஜ், திவான். நிர்வாக சபை மெம்பர்கள் முதலியவர்களுடன் நெருங்கிப் பழகினவராக வுமிருந்து வந்ததும் இம்மாகாணத்தாருக்கு நன்றாய்த் தெரியும்.

இந்தப்படி உள்ள இவர் இங்கு வக்கீல் தொழில் நடத்துவது என்பது பிடிக்காமல் ஏனெனில், இவ்விடத்திய நியாயாதிபதிகள் பெரிதும் பார்ப்பனர்களாக ஏற்பட்டு வருகின்ற படியாலும், அவர்களில் பெரும்பாலோர் பார்ப்பனச் சலுகையிருப்பதாகவும் மற்றும் பல காரணங்களாலும் அவருக்கு ஏற்பட்ட சில குடும்ப துக்கத்தாலும் இந்தியாவிலிருக்க மனமில்லாமல் மலேயா நாட்டுக்குப் போய் தனது தொழிலை கண்ணியமாய் நடத்திவரலாமென்று கருதி அங்குள்ள நியாயாதிபதிகளின் நேர்மை குணத்தை நம்பி மலேயா நாட்டுக்குச் சென்றால் அங்கும் இவ்விடத்திய பார்ப்பனர்களே தொல்லை கொடுக்க ஆரம்பித்து அவருக்குப் பல உபத்திரவம் செய்து வருவ தாகத் தெரிகிறது. இதைப்பற்றி முன்னோரு தடவையும் குறிப்பிட்டிருக்கின்றோம்.

அதாவது திரு. கே. பி. கேசவமேனனவர்கள் மீது மலாய் நாட்டு வக்கீல்களில் சிலர் பொறாமை காரணமாக குறிப் பாய் சொல்ல வேண்டு மானால் ஒரு பார்ப்பனரின் கிருத்திரிமம் மீது அவரை F.M.S. கோர்டு களின் வக்கீல்கள் சங்கத்தில் சேர்க்கக் கூடாதென்று பல முயற்சிகள் செய்யப்பட்டன.

அதென்னவெனில் திரு. கே. பி. கே. மேனன் ராஜத்துரோகி என்றும் அவர் சிறை சென்றவர் என்றும் வக்கீலாயிருக்க லாயக் கற்றவரென்றும் தொழிலாளர் களை தூண்டிவிட்டு கலகம் செய்பவரென்றும் பல மாதிரி யான விஷமப் பிரசாரங்கள் செய்து அவரை அங்கு அனு மதிக்காமல் இருக்கும்படியாகச் செய்யப் பல விதத்திலும் பலமாக முயற்சித்தார்கள் எவ்வளவு சூழ்ச்சி செய்தும் கடைசியாக திரு. மேனன் அவர்கள் ஆதியில் எதிர்ப் பார்த்தது போலவே மலாய் நாட்டு ஜட்ஜிகளின் நேர்மை குணத்தால் வெற்றி பெற்று அந்த நாட்டு நீதிவாத வக்கீலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டார் என்ற சேதி கேட்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

திரு. கே.பி.கே. மேனன் அவர்களையும் பாராட்டுவ தோடு மலாய் நாட்டுத் தலைமை நீதிபதி அவர்கள் பார்ப்பது போலவே நாமும் அவர் மலாய் நாட்டுத் திலகமாய் விளங்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 14.12.1930

Read more: http://viduthalai.in/page-7/87187.html#ixzz3CXziCM6D

தமிழ் ஓவியா said...

வறுமையில் வாடிய ஸ்டாலின்!


சோவியத் ஒன்றி யத்தின் அதிபராகப் பல்லாண்டுகள் ஆட்சி செய்தவர் ஜோசப் ஸ்டாலின். இவருடைய இயற் பெயர் இயோசிப் விஸ்ஸாரி யோனோவின் டிலுகாஷ் விலி என்பதாகும். இவர் 1879ஆம் ஆண்டில் ஜார்ஜியாவில் கோரி என்னும் நகரில் பிறந்தார்.

இவருடைய தாய்மொழியாகிய ஜார்ஜியன் மொழி ரஷிய மொழியி லிருந்து முற்றிலும் வேறுபட்டது. எனினும், ரஷிய மொழியை இவர் பின்னர் கற்றுக் கொண்டார். ரஷிய மொழியை இவர் ஜார்ஜிய மொழிச் சாயலுடனேயே எப்போதும் பேசி வந்தார்.

ஸ்டாலின் கொடிய வறுமையில் வளர்ந்தார். இவருடைய தந்தை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. அவர் எப்பொழுதும் அளவுக்கு மீறிக் குடித்துவிட்டு, மகனை முரட்டுத்தனமாக அடிப்பார். இயோசிப் 11 வயதாக இருக்கும்போது அவருடைய தந்தை இறந்தார். இளமையில் கோரி நகரில் ஒரு மடாலயப் பள்ளியில் இவர் கல்வி கற்றார்,

வாலிப பருவத்தில் டிரிப்ளிசில் ஓர் இறையியல் கல்விக் கூடத்தில் கல்வி பயின்றார். எனினும் 1899-ஆம் ஆண்டில், புரட்சிக் கருத்துகளைப் பரப்பியதற்காக கல்விக் கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன்பின் இவர் தலைமறைவு மார்ச்சி இயக்கத்தில் சேர்ந்தார். சாதாரணப் பின்னணியில் வாழ்க் கையைத் தொடங்கிய ஸ்டாலின், உல கின் பெரிய நாடு ஒன்றின் அதிகார மிக்க தலைவராக உயர்ந்தார். அதற்குப் பொருத்தமாக, இரும்பு மனிதன் என்று பொருள்படும் வகையில் தனக்கு ஸ்டாலின் என்ற பெயரையும் சூட்டிக் கொண்டார்.

Read more: http://viduthalai.in/page2/87234.html#ixzz3CY0E0lK2

தமிழ் ஓவியா said...

பெண்களை கருத்தரிக்க விடாமல் ஆண்களின் உயிரணுக்களே செயல்படலாம்!


தம்பதியரின் நெருக்கத்தைப் பற்றிப் பேசும் போது ஈருடல், ஓருயிர் என்கி றோம். நீ பாதி, நான் பாதி என்கிறோம். அதையெல்லாம் மெய்யாக்கும் வகையில்தான், ஆணில் பாதியும் பெண்ணில் பாதியுமாகச் சேர்ந்து புதிய உயிர் உலகத்துக்கு வருகிறது. இதுதான் உலக நியதி. பெண்ணின் உடலில் உயிராகி வளர வேண்டிய கருவுக்கு, காரணமாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டிய ஆண் அணுக்களே அதற்கு எதிரியானால்? அப்படிக்கூட நடக் குமா என்பதே எல்லோரின் கேள்வி யாகவும் இருக்கும்.

நடக்கும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் மகாலட்சுமி சரவணன். பெண் உடலில் கரு வளர விடாமல் செய்ய, அவளது கணவரின் ரத்தமும், மரபணுக்களுமே எதிராகச் செயல் படுகிற அந்தப் பின்னணி பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். சில பெண்களுக்குக் கருத்தரிப்பதில் சிக்கல் இருக்காது. ஆனால், கருவானது, கருப்பையில் ஒட்டி வளர்வதில்தான் பிரச்சினை இருக்கும். நல்ல கரு வந்து, தங்காதவர்களுக்கும், குழந்தை இல்லாததற்காக அய்.வி.எஃப் சிகிச்சை மேற்கொண்டு, அதிலும் தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறவர்களுக்கும் மேலே சொன்ன விஷயம்தான் பிரச்சினையாக இருக்கும்.

காரணமே தெரியாமல், மறுபடி, மறுபடி சிகிச்சையைத் தொடர்வதும், சிகிச்சை வெற்றி பெறவில்லையே என்கிற விரக்தியில் வாழ்க்கையை வெறுப்பதுமாக துயரத்தின் உச்சத்தில் இருப்பார்கள். கரு என்பது, கணவன் -மனைவி இரண்டு பேரின் ரத்தம் மற்றும் மரபணுக்கள் சேர்ந்தது. சில பெண்களின் உடல், கணவனின் ரத்தத்தையும், மரபணுக்களையும் அந் நியப் பொருள்களாக நினைத்துக் கொண்டு, கருவை ஒட்ட விடாமல் செய்து விடும். அதைப் பரிசோதனை யில் கண்டுபிடித்து, கணவனின் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக் களை எடுத்து, சில மருந்துகள் கலந்து, மனைவியின் உடலில் ஊசி மூலம் செலுத்தப்படும்.

அதாவது, அந்த வெள்ளை அணுக்கள், மனைவியின் உடலில் ஊறி, எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். சில வகை நோய்கள் வரும் முன், எச்சரிக்கை நடவடிக்கையாக முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக் கொள்கிறோம் இல்லையா? அதே டெக்னிக்தான் இதிலும். இதற்கு ஹஸ்பென்ட் லூகோசைட் டிரான்ஸ்ஃபர், அதாவது, ஹெச்.எல்.டி. என்று பெயர். இந்த ஊசியை பெண்களின் சருமத்தின் வழியே செலுத்த வேண்டும்.

வாரம் ஒரு ஊசி வீதம், 8 முதல் 12 ஊசிகள் போட வேண்டியிருக்கும். ஒரு ஊசிக்கு ரூ. 5 ஆயிரம் செலவாகும். இந்த சிகிச்சை முடிந்த பிறகு குழந்தை இல்லாத பெண்களுக்கு அய்.வி.எஃப். செய்தால், கரு தங்கி, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். சென்னைக்கு மிகவும் புதுசான இந்த சிகிச்சை, குழந்தை இல்லாத தம்பதியருக்கு ஆறுதலையும், தீர்வையும் கொடுக்கிறது... என்கிறார் மகப்பேறு மருத்துவர் மகாலட்சுமி சரவணன்.

- ஆர்.வைதேகி
நன்றி: வசந்தம் 23.6.2013

Read more: http://viduthalai.in/page2/87233.html#ixzz3CY0MQg4h

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருதம்பற்றி அண்ணா

சமஸ்கிருதம் பேச்சு வழக்கிலிருந்து ஒழிந்து போனதால் அதனை இறந்த மொழி (Dead Language) என்று பல மொழி ஆராய்ச்சி வல்லுநர் தக்க ஆதாரங்களோடு கூறிப் பன்னெடுங் காலமாயின. என்றாலும் சிலர், இன் றும்கூட அதனை உயிர்மொழி அதாவது பேச்சு வழக்கில் இருக்கும் மொழி என்று கூறும் தங்கள் பழைய பாட்டை விட்ட பாடில்லை. சமஸ் கிருதத்தினிடத்துப் பற்றுக் கொண்டுள் ளவர்கள் அதனைப் போற்றி வளர்ப் பதில் நமக்கொன்றும் தடையில்லை.

ஆனால், சமஸ்கிருதத்தின் துணை கொண்டு, தமிழ் மக்களின் நாகரிகத்தைக் குலைத்து வர்ணாஸ்ரம முறையைப் புகுத்தி, அதனால் பிளவையும் ஒற்று மையின்மையும் ஏற்படுத்தி, ஒரு சிலர் தங்கள் ஆதிக்கத்திற்கு அரண் தேட முயலும் போக்கினையே நாம் கண்டிக் கிறோம் என்று பல முறை விளக்கி யுள்ளோம்.

தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக்கொண்ட போதிலும், தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய் மொழி எனக் கருதுவதில்லை. அவர் களின் எண்ணமெல்லாம் வட மொழி யாகிய சமஸ்கிருதத்தின்மீதுதான். அதைத்தான் அவர்கள் போற்றுவர்.

அதன் உயர்வைத் தான் அவர்கள் உணருவர். அதனிடத்தில் தமக்குள்ள காதலை சில நிமிடங்கள் குளத்தங் கரையில் உட்கார்ந்து கொண்டேனும் ஒரு மூச்சு அழுது பார்த்துவிடுவர் அதற்குக் காரணம் அவர்கள் தம்மை ஆரியரென எண்ணிச் சமஸ்கிருதத்தை ஆரிய மொழியெனக் கொண்டு, அது பிறமொழிகளைவிட மேன்மையானது எனவும் கூறி, அதனைத் தேவபாஷை எனக் கருதி வந்ததால் தங்கள் நல்ல கெட்ட காரியங்களுக்கும், பூசைக்கும், வடமொழிதான் உபயோகிப்பர். அம்மட்டோ! அந்த மொழியையே பிறரும், வாழ்க்கையின் மிக முக்கியமான சமயங்களில் உபயோகிக்க வேண்டு மென்ற வழக்கத்தையும் புக விட்டனர்.

நாள் முழுவதும் நாம் பேசுவது, படிப்பது, எழுதுவது தமிழ், நாம் கேட்கும் அவ்வளவும் தமிழ்! நமது கொஞ்சி கூடிக் குலாவுதலுமான வேளையிலே நமது மொழி. ஆனால் அம்மொழி கல்யாணத்திற்கு உபயோக மாவதில்லை. சாஸ்திரிகள் அழுத்தமும், திருத்தமுமாக ஓகார அலங்காரத்துடன், அழுகுரலோ அலறலோ ஏதோ என நாம் மருளும் நிலையுடன் ஏது அவர் சொன்னாரோ, எது அதன் பொருள் ஏதுமறிகிலோமே, நாம் ஏங்கும் விதத்திலும், சமஸ்கிருதம் சுலோகமோ மந்திரமோ கூறினால் கல்யாணம் முடியும்! அது மட்டுமா! ஆண்ட சிவ னுக்கும் நமக்கும் இடையே, அம்மொழி யிலேயே அய்யர் பேசி அருள்வாக்கு தருவார்.

எனவே, என்னதான் மேன்மை, தொன்மை முதலியன பேசினாலும், எவ்வளவு ஏடுகளைத் தேடி பிடித்துப் பதிப்பித்தாலும், மடத்தில் மகாவித் வான் ஆனாலும் விருத்தியுரையும் விளக்க உரையும் எழுதினாலும் பார்ப் பனர் சமஸ்கிருதத்தின் மீதுதான் தமது உயிரை வைத்துள்ளார்கள். நேரிடும் போது அதற்குத்தான் சலுகை காட்டு வார்கள்.

உயர்வும், உரிமையும் அதற்கே தருவார்கள் பரணையில் இருப்பினும், ஏதேனும் கிட்டினால், அன்புடன் சமஸ்கிருதத்திற்கே ஆக்கம் தருவார். எமது மொழி எம்மை உயர்த்திய மொழி! பரந்த திராவிட நாட்டில் எம்மைக் குருமாராக்கிய மொழி! உயர் சாதிக்காரராக எம்மை உயர்த்திய மொழி பிறரை அடிமை கொள்ள உதவிய மொழி அம்மொழிக்கு ஆக்கமெனில் எமக்கே அம்மொழி அழிந்ததெனில் எமது உயர்வுக்கு அழிவு என்ற எண்ணம் பார்ப்பனர் மனதை விட்டு அகன்றதே இல்லை அவர்கள் அவ்விதம் எண்ணுவதில் தவறுமில்லை.

தம்மை உயர்த்திக் கொள் ளவும், பிறரை அடிமை கொள்ளவும் சமஸ்கிருதந்தான் அவர்களுக்கு உதவி தந்தது. கங்கை நதி தீரத்திலிருந்து கன்னியாகுமரி வரையிலே அவர்களை, காவலரையும் ஏவலராக கொள்ள உதவி செய்தது. வீராதி வீரனும், வீழ்ந் தடி பணியும் விசித்திரத்தை உண்டாக் கிற்று. முடிதரித்து நாடாண்டவர்கள் கண்டால், நடுநடுங்கிப் பொன்னும் பொருள் பிறவும்தந்து அடிமைகளாக வாழ வைத்ததற்கு அம்மொழி உத விற்று. ஆரியர் வாழ்விற்கு சமஸ்கி ருதமே அடிகோலிற்று. ஆரியர் ஆதிக் கம் அழிக்கப்பட வேண்டுமானால் சமஸ்கிருதத்துக்குள்ள ஆக்கம் தேய வேண்டும் என்ற உண்மையைப் பார்ப் பனர் உணர்ந்துள்ளனர்.

அதன் பய னாக அம்மொழிக்கு ஆபத்து என்றால் தமக்கே ஆபத்து வந்ததெனத் துடித்து அதற்குப் பாதுகாப்புத் தேடவும், அந்த மொழிக்குப் பக்கபலமாக உள்ள மொழியையும், வழியையும் ஆதரிக்கவும் முற்படுகின்றனர். தமது ஆதிக்கத்தை வளர்த்துக் கொள்ள அவர்கள் மொழியைப் போற்றுவதும், அதனைப் பரப்பி ஆக்கம் பெற எண்ணுவதும், இயற்கை. ஆனால் இந்த உண்மையை உணராது, பிறர் ஏமாந்து அவர்கள் பின் சென்று வலையில் சிக்குகிறார்களே, அதுதான் ஆச்சரியமாகவும், நமக்குக் கவலை தருவதாகவும் இருக்கிறது.

எதற்காகப் பார்ப்பனர்கள் சமஸ் கிருதத்தைப் போற்றுகின்றனர்? ஏன் அதற்கொரு தனி உரிமை கேட்கின்ற னர்? எதற்காக ரானடே மண்டபத்தில் கூடி, சமஸ்கிருத காப்புப் படை திரட்டுகின்றனர்? இதனை எண்ணிப் பார்க்க வேண்டாமா, ஏமாந்துள்ள தமிழர்கள்?

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருதம், பேசப்பட்டும் எழுதப் பட்டும், பலருக்கும் பயன்பட்டும் இருக் கிறதா? கடைவீதியிலும் பள்ளிக்கூடத் திலும், பாராளுமன்றத்திலும், காராளர் களத்திலும், சாலையிலும், சோலையி லும், சமஸ்கிருதமா உலவுகிறது? கொஞ்சும் குழந்தைகள் பேசுவது அம்மொழியா! கோமள காதலியர் குழையும் மொழி அஃதோ! எங்கே இருக்கிறது. சமஸ்கிருதம்? என்ன பணியாற்றுகிறது? எவர்க்கு உதவுகிறது? செத்த மொழியன்றோ? சீந்துவாரற்றுச் சாய்ந்த மொழியன்றோ? தமிழர் விரட்டி ஓட்டிய மொழியல்லவா? அப்படிப்பட்ட மொழிக்குத், தம்மாலி யன்ற வரை முயற்சி செய்து ஒரு ஹானியும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாகச் சிலர் கூறுகின்றனரே.

மயானத்திற்குச் சென்ற பிணத்தை மந்திர உச்சாடனம் செய்து பிழைக்க வைப்போம் என்கின்றனரே. இதன் கருத்து என்ன? ஏன் இந்த சாஸ்திரி களுக்கு இவ்வளவு அக்கறை சமஸ் கிருதத்தின்மீது பிறந்தது என்பதை தமிழர் எண்ணிப் பார்க்க வேண்டாமா என்று கேட்கிறோம். நாம் மேலே எடுத்துக்காட்டியபடி சமஸ்கிருதம், இந்நாட்டிலே பரவி இருந்த வேளை யில் தான், பார்ப்பனருக்கு அதிகமான ஆதிக்கம் இருந்தது.

வர்ணாஸ்ரம தர்மம் உச்ச நிலையை அடைந்து வாழ்ந்தது. படிப்படியாகச் சமஸ்கிருத ஆக்கம் சாய்ந்தது, அதன் கூடவே சனாதனமும், வர்ணாஸ்ரமும் வீழ்ந்தன இந்தியாவில் மற்ற இடங்களில், சமஸ் கிருதம் பெற்ற ஆக்கம் அழிக்கப்பட வில்லை என்றாலும், நமது தமிழ்நாட் டில், சமஸ்கிருத ஆதிக்கம் புகுத்துவ தற்குப் பட்டபாடே அதிகம். அதன் படையெடுப்பை எதிர்த்து அநேக புரட்சிகள் நடத்தப்பட்டன. இந்தியா வில் சமஸ்கிருதத்தை தூர விலகி நில் என்று கண்டிப்பாகக் கூறிய இடம் தமிழ்நாடுதான். தமிழ்மொழி ஒன்று தான் சமஸ்கிருத சல்லாபத்துக்கு இரை யாகாது தனித்து நின்று, தன் கருத்தைப் பரப்பிற்று.

இடை இடையே தளர்ந்த காலத்திலே, தமிழரின் ஏமாளித்தனம் தலை தூக்கிய நேரத்திலே, தமிழ்நாட் டில் சமஸ்கிருதம் தனது கருத்துக்களை மட்டும் தமிழர் வாழ்விலே புகுத்தி விட்டது. அதன் பயனாகவே நமது நாட்டிலும் பார்ப்பனியம் வளர்ந்தது. மொழி, கலையைப் புகுத்தும் வழி. சமஸ்கிருதம் ஆரிய மொழி; எனவே ஆரியக் கலையைப் புகுத்த அதுவே வழி. இதுதான் சமஸ்கிருத மொழியைத் தமிழர் பலமாக எதிர்ப்பதற்குக் கார ணம்.

சமஸ்கிருத மொழியை ஏற்றால், அதன் ஆதிக்கத்தை வளர்த்து விட் டால், அதனிடம் தஞ்சம் புகுந்தால், தமிழர் தமது கலையை இழந்து நிலையையும் இழப்பர் என்று கருதுவ தாலே தான், தமிழ்ப் பேரறிஞர்கள் சமஸ்கிருதம் நுழையக் கூடாது எனக்கூறி வந்தனர். சமஸ்கிருத மொழி யின் துணையினால் புகுத்தப்படும் ஆரிய நாகரிகம், வர்ணாஸ்ரமத்தை வளர்க்கும்.

வர்ணாஸ்ரமம் வளர்நதால், முற்போக்கு கெட்டு, காட்டுமிராண்டித்தனம் ஏற்படும் எனக் கருதுவதாலேயே, பகுத்தறிவாதிகள், சமஸ்கிருத நுழை வையும் அதன் சாயலான இந்தித் திட்டத்தையும் எதிர்க்கிறார்கள். இதனை உணராது நம்மவரிலேயே சிலர், இந்தியினால் கேடு என்ன? எதற்காக அதனை எதிர்ப்பது? என்று கேட்கும் போதுதான் நமக்கு விஷய மறியாது பேசுகின்றனரே என்று ஏக்கம் பிறக்கிறது.

திராவிட நாடு 2.11.1947

Read more: http://viduthalai.in/page3/87232.html#ixzz3CY0XjZg0

தமிழ் ஓவியா said...

சுதந்திரமான கைகளுக்கு சுருக்கா?


பெருகி வருகிறதா கயிறு கலாச் சாரம்? இளைஞர்களின் தன்னம்பிக்கை தகர்க்கப்படுகிறதா? எதற்காக அணிந் திருக்கிறோம் என்று அறியப்படுகிறதா? அச்சம் என்ற அறியாமையின் வெளிப் பாடா?

அண்மைக் காலங்களில் மிக வேக மாக இளைஞர்களிடையே ஏன் மாணவர்களிடையேகூட கையிலும், கழுத்திலும் கயிறு கட்டும் கலாச்சாரம் நோய்த் தொற்று போல பரவி வருகிறது. ஒரு பக்கம் திரைப்படங்களும் இந்த மூடத்தனத்தை திணிப்பதில் தன் பங்கை மிகச் சரியாகவே செய்கின்றன.

கோவிலில் வாங்கியது, சாமிக்கயிறு, நல்லதே நடக்கும். தீமைகள் அண்டாது, அடுத்தவருக்காக, அவரின் கவனத்தை ஈர்க்க மற்றும் அச்சத்தைப் போக்க என்று கயிறு ஒன்று ஆனால் காரணம் நிறைய நிறைய...

எந்தவொரு தேவையற்ற பழக்கமும் பக்தியின் பேரால் அங்கீகரிக்கப்பட்டு விட்டால், அதற்கு ஓர் மேலான தன்மை ஏற்படுத்தப்பட்டு, அற்புதமாக்கப்பட்டு, மிகைப்படுத்தப்பட்டு மக்களால் எளிதாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

பணக்காரத்தன்மை என்ற மூட நம்பிக்கைக்காக அனைத்து விரல்களி லும் மோதிரம் போட்டு அழகு பார்க் கும் கலாச்சாரம் மெல்ல மெல்ல குறைந்து இருக்கிறது என்று நாம் நிம்மதி பெருமூச்சு விடும் இந்த காலத் தில் சுதந்திரமாக செயல்பட வேண்டிய கைகள், தானே சுருக்கிட்டு கொள்வது வேடிக்கையானதும் விநோதமானது மாகும்.

திணிக்கப்படும் சுமை

படித்தவர்கள், பாமரர்கள் எனும் வித்தியாசமில்லாமல் புற்றீசல் போல இப்பழக்கம் பெருகி வருகிறது. பிள்ளை களிடம் தன்னம்பிக்கையை விதைக்க வேண்டிய பெற்றோர்களே இந்த காரி யத்தில் ஈடுபட்டு அவர்களை முட்டா ளாக்கும் வேதனை தொடர்கிறது.

தமிழ் ஓவியா said...


பெரும்பாலான பிள்ளைகளுக்கு நாம் ஏன் கயிறு அணிந்திருக்கிறோம் என்ற பொருள் தெரியாது. தங்கள் குடும்பத்தினரால் அவர்கள்மீது ஏற்றப் பட்ட சுமையாகவே கருதுகிறார்கள்.

தன் தாயோ, தந்தையோ, சகோ தரரோ அல்லது நண்பரோ அணிவித் ததால் அணிந்தேன் என்று சொல் பவர்கள் ஏராளம்.

பிள்ளைகளின் அறிவு, ஆற்றல், உழைப்பு அவர்களின் சாதனைகளுக்கு அளவுகோல் இல்லையா?

கயிறு மட்டும் கையில் இருந்தால் போதுமா? அறிவுத்தெளிவு வேண்டாமா?

அறிவியலும் மூடத்தனமும் இணையலாமா?

இன்றைக்கு அறிவியலின் முன்னேற் றம் உலகை தன் வசப்படுத்துகிறது. உலகின் ஓர் மூலையில் நடக்கும் நிகழ்வுகள் மறுநிமிடமே அடுத்த மூலையில் எதிரொலிக்கிறது.

அரசியல் செய்திகள், நாட்டு நடப் புகள், மருத்துவ வசதிகள், போக்கு வரத்து தேவைகள், அத்தியாவசியப் பொருட்கள், கல்வி, வேலை வாய்ப்பு, பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் விஞ்ஞானம் என அனைத்தையுமே நம் கைகளில் இணையத் தொடர்பு மூலம் கொண்டு வந்திருக்கிறது கைப்பேசிகள்.

தொலைத் தொடர்பு மட்டுமல் லாமல் தகவல்கள், புகைப்படங்கள் எளிதாக அனுப்பும் வசதி, தகவல்கள் சேகரிக்கும் வசதி (Message, Camera, Gallery) குழுக்களாக பல பேருடன் தொடர்பு கொள்ள சமூக வலைதள வசதி (Facebook, whats app) பாடல்கள் கேட்டு மகிழ வசதி (Music) நேரம் பார்க்க, நாட்காட்டி அறிய, நிகழ்வுகளை நினைவூட்ட, தூங்கி எழ, கணக்குப் போட செய்திகள், வானிலை அறிய, வரைபடங்கள் மற்றும் செல்ல வேண்டிய இடங்களுக்கு வழிகாட்ட, உடனடி வெளிச்சம் தர (Clock, calendar, reminder, memo, alarm, news & weather, GPS, Calculator, Flash light) என்று இன்னும் எத்தனை எத் தனையோ வசதிகளை பல பொருட் களின் பயன்பாட்டைக் குறைத்து சுருக்கி காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப அறிவி யலின் கொடையாக பரிணமித்திருக்கும் செல்பேசிகள் தவழும் கைகளில் அறிவியலுக்கு முற்றும் முரணான கயிறுகளின் ஆக்கிரமிப்புகள் தொடர் வது வேதனையோ வேதனை!

காலம் மாறிவிட்டது

காத்து கருப்பு என்று பயந்த காலம் இன்றில்லை. இரவில் மரத்தடியில், மரம் வெளியிடும் வாயுவால் ஏற்படும் மூச்சுத் திணறல், இருட்டினால் ஏற்படும் பயம் இவை எல்லாமே நமக்கு விளங்கிப் போச்சு.

அற்புதங்களெல்லாம் ஆதி காலத் தில்தான் நடந்ததே தவிர இப்போது எங்குமே நடக்கவில்லையே ஏன்? அப்படி நடந்தாலும் அது அறிவியலால் தானே நடக்கிறது? ஆழ்கடலையும் அறிவியல் துளைத்தது. விண்வெளி முழுவதும் செயற்கைகோள்கள் துழாவி எடுக்கிறது.

ஆனாலும் ஆண்டவனின் இருப் பிடம் மட்டும் கண்டுபிடிக்கப்படாமலும் காட்சிப்படுத்தப்படாமலும் இருக்கிறதே ஏன்?

அச்சங்களையெல்லாம் அறிவியல் தகர்த்தெறிந்து கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம்.

அறிவு வழிகாட்ட வேண்டாமா?

கைக் கயிற்றை எடுத்து பரிசோ தனைச்சாலைக்கு அனுப்புங்கள். எத் தகைய நோய் விளைவிக்கும் கிருமிகள் உலவுகின்றன என்பதை அறியலாமே!

ஆரோக்கியம் சார்ந்த அணுகுமுறை

கைகளை முறைப்படி சோப்பு போட்டு கழுவும் பழக்கத்தையும், நகங்களை சீராக வெட்டி அழுக்குகள் இல்லாமல் இருக்கச் செய்வதையும் மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும் ஒரு பக்கம் ஆரோக்கிய கேடான இந்த மாதிரி விடயங்களை சமூகம் தனக்குத் தானே அங்கீகரித்துக் கொள்கிறது.

நாம் குளிக்கும்போது ஒவ்வொரு முறையும் கயிறுகள் சுத்தப்படுத்தப் படுகிறதா? எவ்வளவு நாள் அணிய வேண்டும் எத்தனை அணிய வேண்டும் என்ற வரையறை உண்டா?

இத்தனை நாள் கட்டியதில் கண்ட பலன் என்ன என்ற சிந்தனை உண்டா? சோதனைகூடங்களில் இந்த கயிறுகளை ஆராய்ச்சி செய்தால் இருக்கக்கூடிய கண்ணுக்கு தெரியாத கிருமிகள் எவை எவை? அவை என்ன மாதிரியான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்?

கேள்வி கேட்கவும் துணிவில்லை, காரணமறிய முயல்வதுமில்லை, ஏதாவது ஒன்று நம்மை அடிமைபடுத்த விட்டே பழகி விட்டோம் நாம்.

என்ன தீர்வு?

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தப்பட வேண்டும். எது எதற்கோ தேவையற்ற கட்டுப் பாடுகளை விதிக்கும் நிறுவனங்கள் விடுதிகளில் மட்டுமாவது இதற்கு தடை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

வெறும் நம்பிக்கை அடிப்படையில் கைகளை ஆண்டுக் கணக்கில் ஆக்ரமிக் கும் கயிறுகளை மத அடிப்படையில் அணுகாமல், ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினையாகவே அணுக வேண்டும். குறைந்தபட்சம் நோய்த் தொற்றுகளின் தாக்கத்திலிருந்து மாணவர்களைக் காப்பாற்றுவது இந்நாளைய அவசியத் தேவையாகும்.

- கவி. இளங்கோ, திருப்பத்தூர்

Read more: http://viduthalai.in/page5/87229.html#ixzz3CY0wIDiW

தமிழ் ஓவியா said...

கலிலியோவின் முக்கியக் கண்டுபிடிப்பு!

கலிலியோ தலைசிறந்த இத்தாலிய விஞ்ஞானி தனது காலத்தில் வேறெந்த விஞ்ஞானியையும் விட மிகச் சிறந்த அறிவியல் முறைகளைக் கண்டுபிடித்ததற்காக இவர் உலகப் புகழ் பெற்றார். இவர் பைசா நகரில் 1564-இல் பிறந்தார். இளமையில் பைசா பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றார்.

ஆனால், வறுமையால் பாதியிலேயே படிப்பை விடடார். எனினும் அதே பல்கலைக் கழகத்தில் 1589இல் இவருக்கு ஆசிரியப் பணி கிடைத்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இவர் படுவர் பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்து 1610 வரையில் அங்கு பணிபுரிந்தார். இந்தக் காலத்தின்போது தான் இவர் தமது அறிவியல் கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவற்றைக் கண்டுபிடித்தார்.

இவருடைய முக்கியக் கண்டுபிடிப்புகளில் முதலாவது, எந்திரவியல் தொடர்புடையதாகும். லேசான பொருள்களைவிடக் கனமான பொருள்கள் வேகமாக கீழே விழும் என அரிஸ்டாட்டில் கூறியிருந்தார். அந்தக் கிரேக்கத் தத்துவஞானியின் இக்கூற்றை தலைமுறை தலைமுறையாக அறிஞர்கள் நம்பிவந்தார்கள். ஆனால், கலிலியோ இந்தக் கூற்றைச் சோதனை செய்து பார்க்க விரும்பினார்.

பல தொடர்ச்சியான பரிசோதனைகள் மூலம் அரிஸ்டாட்டிலின் இந்தக் கூற்று தவறானது என்பதை கலிலியோ விரைவிலேயே கண்டுபிடித்தார். காற்றின் உராய்வினால் வேகம் சற்று குறையலாம் என்பதைத் தவிர, கனமான பொருள்கள், லேசான பொருள்கள் இரண்டுமே ஒரே வேக வீதத்தில்தான் கீழே விழுகின்றன என்று அவர் கூறினார்.

இதைக் கண்டுபிடித்த பின்னர் கலிலியோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார். ஒரு குறிப்பிட்ட கால அளவின்போது பொருள்கள் எவ்வளவு தூரம் விழுகின்றன என்பதை மிகக் கவனமாக அளவீடு செய்த இவர். கீழே விழும் ஒரு பொருள் செல்லும் தொலைவானது, அது கீழே விழுகின்ற வினாடிகளின் எண்ணிக்கையில் இருபடி வர்க்கத்துக்குச் சரிசம வீத அளவில் இருக்கும் என்பதைக் கண்டுபிடித்தார். இது வேக வளர்ச்சி வீதம் ஒரே சீராக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

கலிலியோவின் இந்தக் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாக அமைந்தது. இவர் தமது பரிசோதனைகளின் முடிவுகளைக் காண, கணிதச் சூத்திரங்களையும், கணித முறைகளையும் விரிவாகப் பயன்படுத்தியது நவீன அறிவியலின் முக்கிய அம்சமாகும்.

Read more: http://viduthalai.in/page6/87226.html#ixzz3CY1ZJpyd

தமிழ் ஓவியா said...

சொல்லுவது தினமலர் மன அமைதிக்காக சென்று நிம்மதி இழக்கும் பக்தர்கள் திரிசுதந்திரர்கள் பிடியில் சிக்கித்தவிக்கும் திருச்செந்தூர்


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆவது படை வீடு திருச்செந்தூர். இங்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக உலகம் முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் வருவதால் ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். திருச்செந்தூர் ஸ்தலம் குரு பரிகார ஸ்தலமாக இருப்பதால் அங்குவரும் பக்தர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட் டில் உள்ள மிகப்பெரிய 5 கோவில்களில் இதுவும் ஒன்று.

திருச்செந்தூர் மூலவரான பால சுப்பிரமணிய சுவாமியை தொட்டு பூஜை செய்பவர்கள் போத்திகள் இவர்கள் மூலவரைத் தவிர்த்து வேறு எந்த கடவுளுக்கும் பூஜை செய்ய மாட்டார்கள். கோவிலுக்குள் இருக்கும் சண்முகர் மற்றும் பரிவார தேவதை களுக்கு பூஜை செய்பவர்கள் சிவாச் சாரியார்கள்.

இவர்களைத் தவிர்த்து கோவிலில் தேங்காய் பழம் உடைத்து அர்ச்சனை செப்வர்கள் திரிசுதந்திரர்கள். இவர்கள் தான் கோவிலுக்குள் நடத்தப்படும் யாகசாலை பூஜையை செய்வார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களின் பரிகார பூஜையையும் இவர்கள் தான் செய் கிறார்கள்.

கைங்கரியம் செய்பவர்கள் என்று அழைக்கப்படும் திரிசுதந்திரர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் முறைகேடாக, அளவுக்கதிகமாக கட்டாய வசூலில் ஈடுபடுவது பக்தர்களை அதிருப்தி அடையச்செய்கிறது.

திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பொது தரிசனம் தவிர 2 விதமான கட்டண தரிசனம் உள்ளது. அதில் ஒன்று அமர்வு தரிசனம். இதற்கு ரூ. 250 கட்டணம். மற்றொன்று சிறப்பு தரிசனம். இதற்கு ரூ. 100 கட்டணம். இந்த கட்டண தரிசனத்தில் அரசியல் வாதிகளையே மிஞ்சும் அளவுக்கு திரிசுதந்திரர்கள் மோசடி செய்வதால் கோவிலின் வருமானத்தில் தினமும் ரூ. 1 லட்சம் முதல் 1.50 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது.

கோவிலுக்குள் நடக்கும் தங்கத்தேர் மற்றும் பிற தேர்த்திருவிழாவின் போது உற்சவர் ஜெயந்திநாதரை தூக்கி வருபவர்கள் சீர் பாதம், என அழைக்கப்படுகிறார்கள். கோவில் நிர்வாகம் சார்பாக தங்கத்தேர் இழுக்க கட்டணமாக 1,500 ரூ.பாய் இருந்தது. இந்த தொகையை சில மாதங்களுக்கு முன்பு கோவில் நிர்வாகம் ரூ.2,500ஆக அதிகரித்துள்ளது.

அவ்வளவு... சீர்பாதத்தினர் அதி கரிக்கப்பட்ட கட்டணத் தொகையில் தங்களுக்கும் பங்குதர வேண்டும் என கொடி பிடித்தனர். அதற்கு நிர்வாகமே எதிர்ப்பு தெரிவித்ததால் தங்கத்தேருக்கு ஜெயந்தி நாதரை எழுந்தருளச் செய்ய மறுப்புத் தெரிவித்தனர். விளைவு தங்கத்தேர் ஓடவில்லை. கோவில் நிர்வாகத்துகும், சீர்பாதத்தினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சமரசம் ஏற்பட அதன்பின் உற்சவரை, தேருக்கு எழுந்தருளச் செய்தனர் என்பது தனிக்கதை.

கோவில் தக்காராக திரிசுதந்திரர்கள் தரப்பினரே நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் பறிப்பதில் மட்டுமே குறியாக இருப்பதால் மன ஆறுதலுக்காக சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இருக்கும் நிம்மதி யையும் பறிகொடுத்துவிட்டு செல்லும் நிலையே தொடர்கிறது.

தகவல்: கு.பஞ்சாட்சரம் பொதுக்குழு உறுப்பினர்,திருவண்ணாமலை, தினமலர் 30.6.2014

Read more: http://viduthalai.in/page7/87223.html#ixzz3CY1l3W92

தமிழ் ஓவியா said...

பழங்களின் பயன்கள்

வாழைப்பழம்: மலச்சிக்கல் இருப் பவர்கள், மூல நோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப் பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும்.

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும். ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும்.

இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் ஏ உயிர் சத்திற்கு தொற்றுக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது.

ஆரஞ்சுப்பழம்: ஆரஞ்சில் வைட்டமின் ஏ அதிகமாகவும், வைட்டமின் சி-யும், பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.

இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

Read more: http://viduthalai.in/page7/87222.html#ixzz3CY1yh0LQ

தமிழ் ஓவியா said...

வெற்றி! வெற்றி!!

வைக்கம் சத்தியாக்கிரகப்போர் கடைசியாக வெற்றி பெற்றுவிட்டது. திருவிதாங்கூரிலுள்ள எல்லாப் பொது ரஸ்தாக்களிலும், சத்திரங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் எல்லா ஜனங்களும் ஜாதி மத வித்தியாசமின்றிப் பிரவேசிக்கலாமென்று திருவிதாங்கூர் மகாராஜா உத்தரவு பிறப்பித்து விட்ட தாகத் தெரிகிறது. சமீபகாலத்தில் திருவி தாங்கூரில் எத்தனையோ சீர்திருத் தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

தேவதாசி ஏற்பாட்டை முதன்முதலில் ஒழித்த பெருமை திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கே உரியது. கப்பல் பிரயாணம் செய்த ஜாதி இந்துக்களும் கூட ஆலயங்களில் பிரவேசிக்கக் கூடாது என்றிருந்த தடையும் நீக்கப் பட்டது.

நாயர்களுக்கு மட்டும் பிர வேசனமளிக்கப்பட்டு வந்த சர்க்கார் பட்டாளத்தில் எல்லாச் ஜாதியாரும் சேர அனுமதியளிக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது அவர்களுக்கு சிவில் உரிமைகளை அளித்திருக்கும் திருவி தாங்கூர் மகாராஜாவைப் பாராட்டுகிறோம்.

குடிஅரசு - பெட்டிச் செய்தி - 31.05.1936

Read more: http://viduthalai.in/page7/87221.html#ixzz3CY27YdSN

தமிழ் ஓவியா said...

ராஜபக்சே, நீ கொன்றது போதாது! மின்சாரம்

16ஆவது மக்களவைத் தேர்தல் முடிந்தது. மத்தியில் பிஜேபி தலைமையில் ஆட்சி அமைந்து விட்டது; மிகப் பெரிய மாற்றம், மலர்ச்சி - வளர்ச்சி வானைத் தொடப் போகிறது. சகல துறைகளிலும் சாமான்ய மக்கள் மேட்டுக் குடிகளாக ஆகப் போகிறார்கள். என்றெல்லாம் முழங்கப்பட்டது. இணையதளங்களும், ஊடகங்களும் ஓகோ என்று மோடியைத் தூக்கிப் பிடித்து வித்தை காட்டின.

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் ஈழத் தமிழர்கள் வாழ்வில் ஏற்றம் கிடைக்கப் போகிறது; தமிழக மீனவர்களைப் பீடித்த கிரகணம் தொலையப் போகிறது.

மத்தியில் வலுவான ஓர் ஆட்சி இல்லாததால் இலங்கை என்னும் குட்டித் தீவு இந்தியப் பெரு நாட்டை ஏமாளியாக நினைக்கிறது என்று மோடியே கூடப் பேசியதுண்டு.

நாட்கள் நூறு ஓடின! பெரும் எதிர்ப் பார்ப்புடன் கண்களில் விளக்கெண் ணெய்யை விட்டுக் கொண்டு, கண்களை அகலமாகத் திறந்து வைத்துப் பார்த்த திருவாளர் பொது மக்கள் திரு திரு என்று விழிக்கின்றனர்.

நடப்பது கனவா நனவா என்று நம்ப முடியாமல் திகைத்து நிற்கின்றனர். காரணம் அவர்களின் எதிர்பார்ப்போ எவரெஸ்டு உயரம்! நடைபெற்று வருவதோ நகைப் பிற்கு இடமான சூழல்!

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி யின்மீது வெகு மக்கள் கொண்ட கோபப் புயலுக்கு முக்கிய காரணமே விண்ணை முட்டும் விலைவாசியேற்றம்தான்!

இன்றைக்கு நிலை என்ன? வெறுஞ் சோற்றைத் தின்று விதி வந்தால் சாவது! என்பார்களே, கிட்டத்தட்ட அந்த எல்லைக் கோட்டைத் தொடும் நிலையே!

அதெல்லாம் கிடக்கட்டும் தமிழ் நாட்டின் அரசியல்வாதிகளின் நிலையை நினைத்தால் ஒரு பக்கம் பரிதாபமும், இன்னொரு பக்கம் அடங்காச் சினமும் ஆவேச அலையாய்ப் பொங்கி எழுகிறது.

அய்.ந;.வின் மனித உரிமை ஆணையத் தால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவை இந்தியாவுக்குள் அனுமதிக்க முடியாது என்று சொன்னபோது தொடை தட்டியவர்கள்.

கச்சத் தீவை மீட்கும் வழக்கில், முந் தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி காங்கிரஸ் அரசு நீதிமன்றத்தில் கொடுத்த அதே பிரமாண பத்திரத்தை இன்றைய மோடி தலைமையிலான தேசிய ஜனநாய கக் கூட்டணி அரசு அளித்தபோது ஆகா ஊகா என்று ஆகாயம் வரை எழும்பிக் குதித்தவர்கள் -

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப் படும் நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கும் பிஜேபி ஆட்சிக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்று உரக்கப் பேசி எகிறியவர்கள் - மீனவர்களை விடுவித்தால் மட்டும் போதுமா? பறி முதல் செய்யப்பட்ட படகுகளைத் திருப்பிக் கொடுக்காவிட்டால் - தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பறி போகாதா? என்று பாய்ந்து பிராண்டிய வர்கள் மத்திய அரசுப் பணியாளர்கள் இணைய தளங்களில் இந்தியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று மோடி அரசு உத்தரவிட்ட நிலையில் உரத்த குரலில் கண்டித்தவர்கள் - மத்திய அரசு பள்ளிகளில் சமஸ்கிருதவாரம் கொண்டாட வேண்டும் என்று பிஜேபி அரசு சுற்றறிக்கை அனுப்பியது கண்டு சூடாகப் பேசியவர்கள், ஆசிரியர் நாளுக்கு பதிலாக குரு உத்சவ் என்ற சமஸ்கிருத சொற்களை அறிமுகப் படுத்தியதால் அக்னிக் குண்டத்தில் விழுந்ததுபோல் வீர வசனம் பேசிய வர்கள் -

அடடே எப்படிப்பட்ட பல்டி அடித்து அதல பாதாளத்தில் விழுந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்!

பி.ஜே.பி.யோடு கூட்டு வைத்தது கூடாத செயல் என்பது போல நடந்து கொண்டது எல்லாம் வெறும் பாவனைதான் என்பது இப்பொழுது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர் தலில் போட்டியிடப் போவதில்லை என்று பா.ம.க. நிறுவனர் பகன்றார், மதிமுக பொதுச் செயலாளரும் தேர்தல் புறக்கணிப்பைப் புகன்றார்.

தேமுதிக மட்டும் என்ன? அதிமுக ஆட்சியில் தேர்தல் ஒழுங்காக நடக்காது - போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தும் விட்டது. முதலில் அறிவித்தது திமுகதான்; ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு(?) மற்ற கட்சிகளும் தேர்தல் புறக்கணிப்புச் சங்கை ஊதின.

தமிழ் ஓவியா said...

அத்தோடு நின்றாலும் பரவாயில்லை; புரிந்து கொள்ளலாம். பா.ம.க.வும், மதிமுக வும், தேமுதிகவும் உள்ளாட்சி இடைத் தேர்தலில் பிஜேபியை ஆதரிக்கப் போகின்றனவாம்.

இந்த 16ஆவது மக்களவைத் தேர்தலில் பிஜேபியோடு இந்தக் கட்சிகளை ஒட்ட வைக்க ஒற்றைக் காலில் நின்ற திருவாளர் தமிழருவி மணியன் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் தவறு செய்து விட்டேன்! தவறு செய்து விட்டேன்! வேண்டுமானால் தூக்கு மாட்டிக் கொள்கிறேன்! என்று துண்டைப் போட்டுத் தாண்டாத குறையாக பாவ மன்னிப்பு கேட்டார்.

தமிழ் ஓவியா said...


ஆனால், இவரால் பிஜேபியோடு ஒட்ட வைக்கப்பட்ட கட்சிகளோ நடக்க இருக்கும் உள்ளாட்சி இடைத் தேர்தலில் பிஜேபிக்கு ஆதரவு என்று கும்பிடுப் போட்டு குழுப் பாட்டுப் பாடத் தொடங்கி விட்டனவே!

அடடே! இந்த தமிழ்நாட்டு அரசியலை உலக நாடுகள் எல்லாம் மண்டியிட்டு மடிப் பிச்சையாகப் பெற வேண்டும் போங்கோ!

பிஜேபி ஆட்சியில் அமர்ந்த பிறகு அது செய்து வந்த தமிழர் விரோத தமிழ்மொழி விரோத பார்ப்பன நடவடிக்கைகளை எதிர்த்தவர்கள் தான் இப்பொழுது அந்தப் பிஜேபி யோடு ஆலிங்கனத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மோடியே! மோடியே எங்கள் தமிழக மீனவர்களை சிங்களவர்கள் மொத்தியது போதாது - இதற்கு மேலும் மொத்தமான துப்பாக்கிக் கட்டையால் தாக்கி - தேவைப்பட்டால் அந்தத் துப்பாக்கிக் கட்டையைத் திருப்பிப் பிடிக்கச் சொல்!

தமிழ் ஓவியா said...


தமிழக மீனவர்களின் படகுகளைப் பறி முதல் செய்ததோடு நிறுத்தாதே! அவற்றை எல்லாம் உடைத்து சிங்களவன் வீட்டு அடுப்புக்கு விறகாகப் போடு!

அராஜபக்சேவே! நடத்து உனது இன அழிப்பு உற்சாக ஆட்டத்தை! நடக்கட்டும் உன் துப்பாக்கித் துரைத்தனம்!

இந்தியை ஏன் இணையதளத்தோடு நிறுத்தினாய்? ஒற்றை வரி ஆணையோடு இந்திதான் ஆட்சி மொழி என்று அறிவித்து விடவும் மோடியே உமக்கு ஏன் தயக்கம்?

சமஸ்கிருத கொண்டாட்டத்தை ஏன் ஒரு வாரத்தோடு நிறுத்திக் கொண்டாய்? ஓராண்டுக்கு கொண்டாடு - ஜனசங்கத்தின் கொள்கையான - இந்தியாவில் ஆட்சி மொழிக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்குவதே என்ற கோல் வாக்கரின் அஸ்திரத்தை ஏவிட ஏன் தயக்கம்!

ஆசிரியர் தினம் என்ன வேண்டிக் கிடக் குது? அதிகாரப் பூர்வமாகவே குருஉத்சவ் என்பதை அறிவித்து விடு - என்பதற்குச் சற்றும் தயங்காமல், கூசாமல் இந்தக் கட்சிகளே பிஜேபிக்கு முறிச்சீட்டு எழுதி கொடுத்து விட்டன என்பதைத்தானே இது காட்டுகிறது?

உள்ளாட்சி இடைத் தேர்தல்தானே? இதில் என்ன அரசியல் என்று சிலர் கேட் கலாம்! கட்சி சின்னங்களின் அடிப்படை யில்தான் போட்டி நடக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.

16ஆவது மக்களவைத் தேர்தல் முடிந்து மத்தியில் பிஜேபி ஆட்சியில் அமர்ந்து 60 நாட்களுக்குள் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் எல்லாம் சரியான சவுக் கடியை வாங்கிக் கொண்டு சவக்குழியில் விழுந்தது பிஜேபி.; தமிழ்நாட்டுக்கு ஒரு வாய்ப்பு - சவுக்கினைச் சுழற்ற; ஆனால் சரணாகதி அடைந்து விட்டனவே இந்த அரசியல் கட்சிகள்.

ஆக ஒன்று - இந்த கட்சிகள் இனிமேல் எதைச் சொல்லி தான் தமிழர்கள் மத்தியில் விழிக்க முடியும்? பெரியார், அண்ணா, பெயர்களை உச்சரிப்பவர்கள்கூட சோரம் போய் விட்டார்களே!

தமிழ் விரோத, தமிழர் விரோத நட வடிக்கைகளைச் சற்று எண்ணி பார்த்தாவது ஆத்திரப்பட வேண்டாமா?

இவை எல்லாம் ஒரு பொருட்டல்ல என்றால், இவற்றையும் கடந்து என்ன நடந்தது என்ற கேள்வி எழாதா? பேரம் இல்லை. உண்மை நிலைதான் என்றால் உங்கள் உண்மை உருவம் முகமூடி விழுந்து அப்பட்டமாக அம்பலப்படுத்தி விட்டது என்று பொருள்! இப்படி ஓர் அரசியல் தேவையா?

Read more: http://viduthalai.in/page7/87236.html#ixzz3CY2NYPo3

தமிழ் ஓவியா said...

மத்திய அமைச்சரவையில் மாமிசம் கூடாது!மிகவும் அமைதியாக ஒரு மாற்றம் டில்லியில் நடந்ததிருக்கிறது, அமைச்சரவை நிகழ்ச்சிகளில் இனிமேல் அசைவம் கிடையாது என்பதுதான் அது. இந்தச் செய்தி பலருக்குத் தெரியாது. அமைச்சரவைக் கூட்டம் என்பது பார்ப்பனர்களின் யாகமேடை கிடையாது. அமைச்சரவைக் கூட்டத்தின் போது பல்வேறு மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொள்வார்கள். அவர்களின் உணவு முறை அசைவத்துடன் சேர்ந்ததாக இருக்கலாம். மேற்கு வங்கப் பார்ப்பனர்கள்கூட மீன் இல்லாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படி இருக்க அமைச்சரவை நிகழ்ச்சிகளில் அசைவ உணவை நிறுத்தியது ஏன்? இதுவரை யாரும் கேள்வி கேட்கவில்லை. தமிழ்நாட்டிற்கு வருவோம். இங்கு என்ன நடக்கிறது? ஒரு பத்திரிகை அலுவலகம் அசைவ உணவு கொண்டு வருவதால் சைவம் சாப்பிடும் மற்றவர்களுக்கு அருவருப்பாக இருக்கிறதாம். ஆகையால் இனிமேல் அலுவலகத்திற்கு யாரும் அசைவ சாப்பாடு கொண்டுவர வேண்டாம் என்று கூறி அனைத்துப் பணியாளர்களுக்கும் சுற்றறிக்கை விட்டு, அலுவலக தகவல்பலகையிலும் ஒட்டிவிட்டனர். பொதுவாக ஊடக அலுவலகங்களில் அசைவம் கொண்டுவருவதை பல பத்திரிகை நிறுவனங்கள் நேரடியாக இல்லாமல் மறைமுகமாகத் தடுக்கின்றன. புதிதாகச் சேர்ந்தவர்கள் அசைவம் கொண்டுவந்தால் உடனே நாசுக்காக சரஸ்வதி வசிக்கும் இடம் என்று மறைமுகமாகக் கூறிவிடுவார்கள். அப்படி இருந்தும் கொண்டுவந்தால் உடனே தூக்கிவிடுவார்கள். திடீரென இந்த அசைவ எதிர்ப்பு ஏன் கிளம்பியது என்று தெரிகிறதா? இதற்கு உணவு முறையை நன்கு கவனித்தால் தெரியும். பார்ப்பனர்களின் அன்றாட உணவில் அதிக அளவு புரதம், கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின்கள் இருக்கும். மிகக்குறைந்த அளவே மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் இருக்கும். அவர்கள் சேர்க்கும் கொழுப்பு உணவு மிகவும் எளிதில் உடலில் ஆற்றலாக மாற்றமடையும் தாவரக்கொழுப்பு உணவுதான். பார்ப்பனர்களுக்கு அதிகம் உடலுழைப்பு கிடையாது. ஆனால், பார்ப்பனரல்லாத பெரும்பான்மை மண்ணின் மைந்தர்களுக்குத் தேவையான உணவு. அதுவும் இந்த மண்ணின் பாரம்பரிய உணவு என்பது, அசைவ உணவு வகையைச் சார்ந்ததே. இது விவசாய நாடு. பெரும்பான்மை மக்களின் உணவுத்தேவையை நிறைவு செய்ய மாமிசம் மிகவும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. மனித குல வரலாற்றைப் பார்த்தாலே உணவுச் சங்கிலிமுறை நமக்குத் தெரியவரும். மாட்டை மனிதன் உணவிற்காகத் தேர்ந்தெடுத்தது என்பது அதிகமான மக்கள் பங்கிட்டு உண்ணக்கூடியதும் அதே நேரத்தில் அவனது உடலுழைப்பிற்குத் தேவையான அனைத்து ஆற்றலும் மாட்டு மாமிசத்திலிருந்து கிடைக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை குடும்ப வாழ்க்கை அமைப்பில் ஆடு, கோழி மற்றும் மாட்டு மாமிசம் பொதுவாக இருந்தது. விழா நாட்களில் மாட்டை உணவிற்காக அறுப்பது, விருந்தினர் வரும்போது கோழி, ஆடுகளை அறுப்பது என்பது காலம் காலமாகத் தொடர்வதாகும்.

கோமத யாகம், அசுவமேத யாகம், நரமேத யாகம் என்ற பெயர்களில் உயிரினங்களைத் தீயில் இட்டுப் பொசுக்கிய பார்ப்பனர்கள் இன்று மாமிசம் கொண்டுவராதே என்று கூறுகின்றனர். சரி உங்கள் ஆட்சி உங்கள் அலுவலகம் என்று விட்டால் இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் கருவாடு விற்க தடை விதித்துவிட்டார்கள். கேட்டால் கருவாட்டு நாற்றம் அங்குவரும் வியாபாரத் தரகர்களுக்குப் பிடிக்கவில்லையாம். கருவாட்டு விற்பனையாளர்களை எல்லாம் கடையைக் காலிசெய்துவிடச் சொல்லிவிட்டார்களாம். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மட்டுமல்ல... மோடி பதவியேற்பு விழாவிலேயே இந்த முயற்சி செய்யப்பட்டு பின்னர் பன்னாட்டுத் தலைவர்களுக்காக மாற்றடப்பட்டதும் அது கிண்டலுக்கு உள்ளானதையும் நாம் அறிவோம். இப்போது நடந்தேவிட்டது அவ்வளவுதான்.

ஏதேது இனிமேல் மாமிசம் சாப்பிடுபவர்கள் எல்லாம் இந்தியர்களே அல்ல என்று சட்டமியற்றிவிடுவார்கள் போலும்! விழிப்பாய் இரு தமிழா! இனி உனது உணவைக்கூட பார்ப்பானைக் கேட்டுத்தான் சாப்பிடும் நிலை வரப்போகிறது!

- சரவணா ராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறுவர்களின் பங்கு


பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறுவர்கள் ஈடுபடுவது கடந்த ஆண்டு 13.2 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான குற்றங்கள் 70.5 விழுக்காடும் பாலியல் குற்றங்கள் 60.3 விழுக்காடும் அதிகரித்துள்ளது. இந்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் 66.3 விழுக்காட்டினர் 16 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள்.

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2013ஆம் ஆண்டு சிறுவர்கள்மீது மொத்தம் 31,725 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது, 2012ஆம் ஆண்டு 27,936ஆக இருந்துள்ளது. திருட்டு வழக்குகளில் 7,969 சிறுவர்களும், தாக்குதல் சம்பவங்களில் 6,043 சிறுவர்களும் கொள்ளை வழக்குகளில் 3,784 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்டு வருமானம் 25 ஆயிரம் ரூபாய் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 விழுக்காட்டுச் சிறுவர்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

புனைப்பெயரில் திரியும் ஜனநாயகம்


அழுதுகொண்டிருந்தான் அவன்.
யாரும் கவனிக்கவில்லை!
பரட்டைத் தலை
அழுக்கான முகம்
வருவார் போவோரெல்லாம்
அடித்த வாசனைத் திரவியம்
ஆறியும் ஆறாமலும்
உடல் முழுவதும் தீப்புண்கள்
சிகரெட்டால் சுட்ட வடுக்கள்
அங்கங்கே வெட்டுக் காயங்கள்

சில சமயம்
புதுச் சட்டையோடு அரண்மனையிலிருப்பான்
பல சமயம்
கிழிந்த சட்டையோடு தெருவிலிருந்தான்

பிச்சைக்காரனுக்குப் பிச்சையிட்டான்
அதே தெருவில் அவனே பிச்சையெடுத்தான்
அவன் ஊமையென்று சந்தேகித்தார்கள்
அவன் வாய் தைக்கப்பட்டிருந்தது
கையை யாரோ முறித்திருந்தார்கள்

பரிதாபப்பட்டவர்கள் கூட்டிச் செல்வார்கள் வீட்டிற்கு
அடுத்த நாள்
தெருவில் தென்படுவான்.
அவனோடு புகைப்படம்
எடுத்துக்கொண்டார்கள்

பெயரைக் கேட்டேன்
சிரித்துக்கொண்டே நின்றான்
சர்வாதிகாரம் தன்னை
ஜனநாயகமென்பதால்
அடக்கு முறை பாசிசம்
ஜனநாயகமென்று சொல்லிக்கொண்டு திரிவதால்
மத வன்முறை அடிப்படைவாதம்
ஜனநாயகமென்று சொல்லிக்கொள்வதால்
தன் நிஜப்பெயரை தலைமறைவு வாழ்வுக்குக் கொடுத்துவிட்டு
புனைப்பெயரில் திரிகின்றான் ஜனநாயகம்.- கோசின்ரா

தமிழ் ஓவியா said...

இன்றைக்கு 'ஓணம்' கதையை பார்ப்போமா?

சோழ நாட்டில் திருமரைக்காடு (வேதாரண்யம்); அங்கு ஒரு சிவன் கோயில். அங்குள்ள சிவனின் மனைவிக்குப் பெயர் ஞானம் பழுத்த நாயகி என்பதாகும்.

ஒரு நாள் தன் மனைவியோடு சிவன் புணர்ந்து கொண்டு இருந்தானாம்.(அர்த்தமுள்ள இந்து மதம்.....ம்)

அந்த நேரத்தில் எரிந்து கொண்டிருந்த தீபம் ஒளி குன்றி எரிந்து கொண்டிருந்ததாம். அந்த சமயத்தில் அங்கு வந்த எலி விளக்கில் இருந்த நெய்யைக் குடித்துவிட்டு, எலியின் வால் திரியின் மேல் பட்டதால், தூண்டப்பட்டு ஒளி பிரகாசமாகிவிட்டதாம்.

உடனே எலியைப் பார்த்து சிவன், நீ மூவுலகையும் அரசாட்சி செய்வாய்! என்று வரம் கொடுத்தானாம்.

அந்த எலி,
மாவலி என்னும் பெயரோடு பிறந்த அசுர குல அரசன் மண்ணுலகம், விண்ணுலகம், பாதாள உலகம் மூன்றையும் கட்டி ஆண்டானாம்.

விண்ணுலகையும் மாவலி ஆண்டதால், இந்திர லோகத்தின் அதிபதியாகிய இந்திரன் கூட மாவலிக்குக் கட்டுப்பட்டவனாகிவிட்டான். பொறுக்குமா அவர்களுக்கு?

அதே நேரத்தில் யாருக்கும் எந்த கேட்டையும் செய்யாமல் நல்லாட்சி புரிந்து, நல்ல பெயர் எடுத்தான் மாவலி!
அசுர குலத்தவன் நல்லாட்சி செய்வதாவது! நல்ல பெயர் எடுப்பதாவது! விட்டுவிடுவார்களா? இந்திரனின் தகப்பனாகிய காசிப முனிவன், விஷ்ணுவிடம் மனு போட்டானாம். கடும் தவமிருந்து விஷ்ணுவிடம் வரம் வேண் டினானாம். விஷ்ணு தமக்கு மகனாகப் பிறந்து மாவலியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று மன்றாடினானாம். அதன்படியே வரமும் கிடைத்தது.

(மூன்று உலகத்தையும் மாவலி கட்டி ஆள வேண் டும் என்று சிவன் கொடுத்த வரம் என்னவாயிற்று? சிவனை விட வைணவக் கடவுளுக்குச் சக்தி அதிகம் என்று காட்டுவதற்கு இதுபோன்ற கதைகள் போலும்!)

ஒருமுறை யாகம் செய்த மாவலி தான தருமங்களைச் செய்தான். இதுதான் சந்தர்ப்பம் என்று கருதி காசிப முனிவருக்குப் பிறந்த வாமனன் (குள்ளப் பார்ப்பான் - சூழ்ச்சி என்று வந்தால் புராணங்கள் கூட பார்ப்பானைத்தான் தேடிப் பிடிக்கின்றன.) பிச்சைக்காரனாக (யாசகம் புருஷ லட்சணம் என்பதே பார்ப்பன தருமம் ஆயிற்றே!) சென்று மூன்று அடி மண்ணைக் கேட்டானாம். கேட்பாருக்கு இல்லை என்று சொல்லிப் பழக்க மில்லாத அந்தத் தர்மப்பிரபுவாகிய மாவலி எனும் அசுர அரசன் சம்மதித்தான்.

சூழ்ச்சிக்காரக் குள்ளப் பார்ப்பனனாகிய வாமனன் பேருரு எடுத்து (விசுவரூபம்) ஓரடியை மண்ணுலகத்திலும் மற்றொரு அடியை விண்ணு லகத்திலும் வைத்து, மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்டானாம். என் தலையில் வை! என்றானாம் அந்த அப்பாவி; அவ்வளவுதான். தலையில் காலை வைத்து மிதித்து சிறையிலும் அடைத்தானாம்.
இந்த நாளில் மாவலி வீட்டுக்கு வீடு வருகி றானாம். கேரளத்தில் அப்படி ஒரு நம்பிக்கை. வீட்டு வாசலில் கோலம் போட்டு வைக்கிறார்கள்- மாவலியின் வருகைக்காக. ஓணம் பண்டிகை என்பது இதுதான்.

இந்தக் கதை மூடத்தனத்தின் மொத்தக் குத்தகை என்பது ஒருபுறம். இந்து மதத்தில் விஷ்ணு அவதாரம் எடுப்பதெல்லாம் அசுரர்களை அழிக்கத் தான் என்பதை மறந்துவிடவேண்டாம்.

தீபாவளிக் கதையும் இந்த ரகத்தைச் சேர்ந்ததே!

நல்லவனாக இருந்தாலும் அவன் அசுர குலத்தவன் என்றால் - சூத்திரன் என்றால் அவனை ஆளவிடாதே- அழித்துவிடு! என்கிற ஆரிய தத்துவம்தான் இந்த வாமன அவதாரக் கதை!

இங்கு மதம், கடவுள், பக்தி என்பதெல்லாம் நம்மை ஒழிப்பதற்கே! இந்தச் சூழ்ச்சி புரியாமல் கடவுள், காடாத்து என்று அலைவது பரிதாபமே!

(நன்றி: விடுதலை 29.08.2012)

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஜாதகம்

திருமணத்தின்போது பொருளாதாரம், ஜாதகப் பொருத்தம் குடும்ப கவுரவம் - இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்ற கேள் விக்கு ஓர் ஆன்மிக இதழ் தந்துள்ள பதில் இது. முதலில் பெண்ணுக்கும், பையனுக்கும் மனப் பொருத்தம் பார்க்க வேண்டும்.

அடுத்து ஜாத கப் பொருத்தம் பாருங் கள் என்கிறது - ஆன்மிக இதழ். ஆக ஜாதகப் பொருத்தத்தில் மணமக் களின் மனப்பொருத்தத் துக்கு இடம் இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறதா இல்லையா? முக்கியமான விஷயத் திலேயே கோட்டை விட் டபின் அப்புறம் என்ன ஜாதகம் - வெங்காயம்?

Read more: http://viduthalai.in/e-paper/87322.html#ixzz3Ck7VvJdb

தமிழ் ஓவியா said...

முடியாது


மதக் கட்டளையையும், கடவுள் நம்பிக்கையையும் கொண்ட ஒரு அடிமை, ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் ஒரு நாளும் விடுதலை அடையவோ, முன்னேற்றமடையவோ முடியவே முடியாது.
(குடிஅரசு, 7.5.1933)

Read more: http://viduthalai.in/page-2/87325.html#ixzz3Ck7kPKAM

தமிழ் ஓவியா said...

பெரியார் 1000 வினா - விடைப் போட்டி


என் பெயர் ஸி.ணி.லி. ஜான்சிராணி. நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன். 31.08.2014 அன்று நான் தென் சென்னையில் அரும்பாக்கத்தில் நடைபெற்ற பெரியார் 1000 வினா விடைப் போட்டியில் கலந்து கொண்டேன்.

கடந்த 10 நாட்களாக பெரியார் 1000 வினா - விடைப் புத்தகத்தை முழுவதும் படித்தேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் நிறைய தெரிந்துக் கொண்டேன். அதில் சில.

பெண்ணடிமை ஒழிப்பு
ஜாதி ஒழிப்பு
வகுப்புரிமைக்கான போராட்டம்
இனிவரும் உலகம்
மூடநம்பிக்கை ஒழிப்பு
தந்தை பெரியாரின் கடுமையான உழைப்பு
பெண்களுக்கான கல்வி நிறுவனங்கள்
பெரியாரின் வாழ்க்கை வரலாறு
பெரியாரின் இலட்சியங்கள், சிந்தனை.
இந்தப் போட்டியை நடத்திய திராவிடர் கழகத்திற்கு நன்றி.

- ஜான்சிராணி, சைதாப்பேட்டை, மேற்கு, சென்னை-15

Read more: http://viduthalai.in/page-2/87330.html#ixzz3Ck86eoGX

தமிழ் ஓவியா said...

சர்க்கரை நோய் வராமல் தடுக்க ஏழு வழிமுறைகள்

சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5 ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்த பட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் சர்க்கரை குறையும்.

2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும்.

3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அமர்ந்து டி.வி.பார்க்கின்றனர். இதனால் உடலுக்கு உழைப்பு கிடைப்பதில்லை. அப்போது நொறுக்கு தீனி உண்கின்றனர். இதனால் உடலுக்கு சர்க்கரை நோய் வரும். மாலை முழுவதும் விளையாட்டு என்று கடைப்பிடிக்க வேண்டும்.

4. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது எதாவதொரு வகையில் தினசரி 5 மில்லி ஆலிவ் ஆயில் உடலில் சேர்க்க வேண்டியது கட்டாயம்.

5.அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், தேங்காய், பால், தயிர் உள்ளிட்ட வெள்ளை உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும். பேக்கரியில் விற்கும் எல்லா பொருள்களும் சர்க் கரையை கூட்டக்கூடியது. அதையும் தவிர்க்க வேண்டும்.

6. மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக மாற்றி கொள்ள வேண்டும். 3 வேளை சாப்பிடும் அளவை 5 வேளைகளில் சாப்பிட வேண்டும்.

7. தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும். வால்நட், பாதாம்பருப்பு கொஞ்சம், நிறைய காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் ஆகிய பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இவையெல்லாம் கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது முக்கியம்.

Read more: http://viduthalai.in/page-7/87350.html#ixzz3CkAG352y

தமிழ் ஓவியா said...

மழைக்காலம் வந்தாச்சு, குழந்தைகள் பத்திரம்

வெயில் காலம் வந்தா மட்டும் தான் பிரச்சி னையா? மழைக்காலம் வந்தா அதை விடப் பிரச்சினைதாங்க என பெற்றோர்கள் புலம்ப ஆரம்பிச்சாச்சு. மழை பருவம் வந்தாலே மருத்துவமனையில் குழந்தையும் கையுமாக பலரைப் பார்க்கலாம். பெரும்பாலும் சளி, இருமல், காய்ச்சல் பிரச்சினைகள். காரணம் வானிலை மாற்றம் தான். புது மழையில் நனைஞ்சா ஆகாதுன்னு பெரியவங்க சொல்றதைக் கேட்டிருப்பீங்க.

இந்த பருவத்தில் எப்படி சமாளிக்கிறது? குழந்தைகளை நோய்களிலிருந்து எப்படி பாதுகாக்கிறது?

இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சுப்ரமணியன் கூறும்போது: மழைக் காலத்தில் குழந்தைகளை பராமரிப்பது மிகவும் முக்கியமான விஷயம். பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு எளிதில் உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு முதல் காரணம் கொசுதான். மழைக்காலத்தில் கொசுக்களால் மலேரியா, டெங்கு, வைரஸ் காய்ச்சல் போன்றவை வரக்கூடும். எனவே மழைக்காலத்தில் குழந்தைகளை கொசுக்கள் கடிக்காத அளவிற்கு பார்த்துக்கொள்ள வேண்டும்.

கொசுவலை மற்றும் கொசுக்களை விரட்டுவதற்கான பிரத்யோக சாதனங்கள் மூலம் கொசுக்களை குழந்தைகளிடம் நெருங்க விடக்கூடாது. அவ்வாறு செய்வதன் மூலம் கொசுக்களால் பரவும் நோய்களை எளிதில் தவிர்க்க முடியும்.

மேலும் அதிக ஈரப்பதத்தினால் கால்களில் பூஞ்சை நோய்களும் வர வாய்ப்புள்ளது. அதனால் குழந்தைகளின் சருமங்களில் அதிக ஈரப்பதம் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மழைக்காலத்தில் வாட்டர் போன் இன்பெஃக்ஷன் என்று சொல்ல கூடிய எலும்பு தொடர்பான நோய்கள் வருவதற்கும் வாய்ப்புள்ளது.

கோடை காலத்திலிருந்து மழைக்காலத்திற்கு வானிலை மாறும் போது நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை மாத்திரைகளோ, ஊசிகளோ போடுவதற்கு பதிலாக சரியான முறையில் பராமரிப்பதன் மூலமும் நோய்கள் வராமல் தடுக்கலாம். கால நிலை மாறும் போது பெரியவர்கள் தாங்கிக் கொள்வார்கள், ஆனால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவாக இருக்கும் பட்சத்தில் நோய் எளிதில் தாக்கிவிடும்.

இதை தவிர்ப்பதற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக சாப்பிடக் கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம். சரியான விகிதத்தில் உணவுகளை கொடுக்க வேண்டும். குழந்தைகளின் விளையாட்டு திறனை அதிகப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். அதிகமாக எண்ணெய் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

மேலும் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாத போது உடனே அதற்கான மருத்துவரை அணுகி, அவரின் பரிந்துரைப்படியே மருந்து கொடுக்க வேண்டும். நாமே மருந்து கொடுக்கும் முடிவை எடுக்க கூடாது, என்றார். அம்பிகா பாண்டியன் (பாடி): வானிலை மாறும் போது குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி போன்றவை வருவது சகஜம் தான். ஆனால் சரியான முறையில் குழந்தைகளை பாதுகாத்தால் இந்த பிரச்சினைகளை தவிர்க்கலாம். குளிர் காலங்களில் குழந்தைகளுக்கு காதில் குளிரான காற்று படக்கூடாது. அதனால் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் ஸ்வெட்டர், குல்லா போன்றவற்றை போட்டு விடுவதன் மூலம் குளிரிலிருந்து பாதுகாக்கலாம். ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கால்களில் சாக்ஸ் போட வேண்டும்.

சின்ன குழந்தைகளுக்கு காது மற்றும் கால் பகுதி அதிகம் குளிராக ஆகாதபடிக்கு பாதுகாப்பான உடைகளை அணிவிக்கவேண்டும். தண்ணீரை சுட வைத்து கொடுப்பதன் மூலம் குளிர் காலங்களில் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளின் தாக்குதலை தடுக்கலாம். மழையிலே நனைய விடக்கூடாது. நனைந்தால் உடனே துவட்டி விடவேண்டும். குளிர்பானங்கள், அய்ஸ்கிரீம் போன்றவற்றை குளிர் காலங்களில் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இனிப்புகளை அதிகமாக உண்ண கொடுக்கக் கூடாது. குழந்தைகளின் உடல் வெப்பத்தை சரியான அளவில் பாதுகாக்க வேண்டும்.

மணிகண்டன் (குருபுரம்): குழந்தைகளுக்கு மினி ஸ்கர்ட், சிலீவ் லெஸ் போன்ற உடைகளை போடாமல் உடம்பை முழுவதுமாக மூடும் படியாக ஆடை அணிவிக்க வேண்டும். மெல்லிய ஆடைகளை போடாமல் நல்ல குளிருக்கு அடக்கமாக போட்டுவிடுங்கள். குளிர் காத்துப்பட்டால் நெஞ்சு சளி பிடிக்கும்னு சொல்வாங்க.

மாலை நேரங்களில் வெளியில் அலைய விடக்கூடாது. அப்படியே வெளியே போகிற மாதிரி இருந்தால் காதுக்கு ஸ்கார்ஃப் கட்டி கூட்டிப் போங்க. மழை பருவம் என்பதால் குழந்தைகளை வெளியே கூட்டிப்போனால் குடை அல்லது ரெயின் கோட் கட்டாயம் எடுத்துட்டுப்போங்க. உணவில் காரத்துக்கு மிளகாய்க்கு பதில் மிளகு சேர்த்துக்கொள்வது நல்லது. மிளகு ரசம், மிளகு சாம்பார் இப்படி சாப்பிடக்கொடுக்கலாம். கொள்ளு ரசம், இஞ்சி ஆகியவை உடம்பின் சூட்டை அதிகரிக்கும்.

சளிப் பிடிக்காமல் பார்த்துக் கொள்ளும். ஆறிப்போன உணவுகளைக் கொடுக்காமல் சூடான உணவுகளையே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/87349.html#ixzz3CkAPGCkE

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?


கட்டுப்பாடு

உணவில், பேச்சில் கட்டுப்பாடு தேவை எல் லாவற்றிலும் கட்டுப்பா டாக இருக்கின்ற துறவி எல்லாத் துயரங்களிலி ருந்தும் விடுபட்டவனாக இருக்கிறான் என்கிறார் கவுதமப் புத்தர்.

இந்த அளவுகோலை வைத்து காஞ்சி சங்கராச் சாரியார்கள் ஜெயேந்திர ரையும் விஜயேந்திரரை யும் எந்தப் பட்டியலில் வைக்கலாம்? கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுங்கள் பார்க்கலாம்.

Read more: http://viduthalai.in/page1/87255.html#ixzz3CkBD7n00

தமிழ் ஓவியா said...

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழிலாளர் பிரச்சினை!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே 13,000 தொழிலாளர்களின் குடும்பங்கள் வாடிக் கொண்டு வறுமையோடு போராடுவதை நெய்வேலி நிர்வாகமும், மத்திய அரசும் மனிதநேய அடிப்படையில் அணுகி, அவர்களை உடனடியாக நிரந்தரப்படுத்த முன் வர வேண்டுமென திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெறும் ஒப்பந்தத் தொழி லாளர்களாகவே (Contract Labourers)
வைத்து, அவர்களை வழமையான ஊழியர்களாகவோ, நிரந்தரத் தொழிலாளர்களாகவோ ஆக்காமல் இருக்கும் அவலத்தையும் அநியாயத்தையும் கண்டித்து (இதேபோல திருச்சி B.H.E.L. என்ற கனரகத் தொழிற்சாலையிலும்கூட அநீதி தொடர்ந்த வண்ணம் உள்ளது) அங்கே பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வந்தனர்; இதனை எதிர்த்து வேலை நிறுத்தத்திற்குத் தடையாணையை பெற்றுள்ளனர்.

மனிதநேய அடிப்படையில் அணுக வேண்டிய பிரச்சினை இது.

நெய்வேலி நிறுவனம், நல்ல லாபத்தில் இயங்கும் நிறுவனம். இதற்கு அடிப்படைக் காரணம் உழைக்கும் தொழிலாளி வர்க்கம் அல்லவா? அவர்களது உழைப்பை - பணி நிரந்தரம் செய்யாது வெறும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே பல ஆண்டுகள் நீடிக்க வைப்பது கொடுமையிலும் கொடுமை அல்லவா?

காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் - அவன்
காணத் தகுந்தது வறுமையோ?
பூணத் தகுந்தது பொறுமையோ? என்று கேட்டார் புரட்சிக் கவிஞர்.

நல்ல சமூக பொருளாதார நீதியை நிலை நாட்டும் அரசானால், அது தந்தை பெரியார் அவர்கள் அறிவுறுத்தியது போல - தொழிலாளர்களை, லாபத்தில் பங்கு பெற்ற பங்காளிகளாக ஆக்கிட முன் வர வேண்டும். மூலதனம் என்பது இவர்களுடைய உழைப்பும் தானே!
13,000 தொழிலாளர்களின் குடும்பங்கள் வாடிக் கொண்டு வறுமையோடு போராடுவதை வாடிக்கையாகவே வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறதா அரசு?

நல்ல லாபத்தில் இயங்கும் இந்த நிறுவனம் இவர்களை நிரந்தரமாக்கி, வாழ்வளிப்பதனால் உற்பத்தி பெருகும் - காரணம் தொழிலாளர்கள் மேலும் உற்சாகத்துடன் பணி புரிவார்களே!

பெரிய அதிகாரிகள் அரிசி வாங்கும் கடையும் இந்த பரிதாபத்திற்குரிய தொழிலாளர்கள் வாங்கும் கடையும் ஒரே கடைதானே!
பசியும் இருவருக்கும் பொதுவானதுதானே! (வேண்டு மானால் அதிக சம்பளம் பெறுவோர்க்கு பசி சற்று குறைவாகக்கூட இருக்கும் என்பதே உண்மை).

எனவே, சட்டத்தின் சந்து பொந்துகளில் பதுங்கிக் கொண்டால், இப்பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காண முடியாது.
மனமிருந்தால் மார்க்கமுண்டு. தலைமை அதிகாரிகள் இதில் மனிதநேய உணர்வுடன் இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, அந்த 13,000 குடும்பங்களுக்கு நல்வாழ்வு அளித்து, பெருமை தேடிக் கொள்ள முன்வர வேண்டும்.

நெய்வேலி நிறுவனம், B.H.E.L. போன்ற நவரத் தினங்கள் - தொழிலாளர் பிரச்சினையிலும் எடுத்துக் காட்டாக முன்னணியில் நிற்பது, அனைத்துத் தரப்பி னருக்கும் நல்லதல்லவா?

எனவே, காலந் தாழ்த்தாது உடனடித் தீர்வு காண முயன்று இரு சாராருக்கும் (Win-Win) வெற்றி என்ற நிலையில் நிர்வாகம் விட்டுக் கொடுத்து, ஒரு குடும்பத்தில் தன்முனைப்புக்கு எப்படி இடந்தரக் கூடாதோ அதே போல இப்பிரச்சினையில் அணுகு முறையை - நடைமுறைக்கு உகந்ததாக ஆக்கிட முன்வர வேண்டுமென நிர்வாகத் தினை - மத்திய அரசினை திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.


சென்னை

7.9.2014

கி.வீரமணி

தலைவர்,திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page1/87246.html#ixzz3CkBQiWl5