Search This Blog

9.9.14

இதுதான் வால்மீகி இராமாயணம்- 27

அயோத்தியா காண்டம் 

இதுதான் வால்மீகி இராமாயணம்
(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)

எட்டாம் அத்தியாயம் தொடர்ச்சி

எப்பொழுதும் போலில்லாமல் கவலையோடு தலைகுனிந்து ஏன் வருகிறார் என்று நினைத்து நடுங்கினாள். இராமனுக்கு இதுவரையில் வருத்தமென்பதே கிடையாது. அடக்கமுடியாத கவலையோடும் அவன் தன் மனோ தைரியத்தை இழந்து, தான் பிரிந்தால் சீதை என்ன பாடுபடுவாளோ என ஏக்கம் மேலிட்டான்.
முகத்தில் ஒளி குறைந்தது. கையில் கிடைத்த அரசாட்சியை இழந்தேன். நானும் காட்டுக்குப் போகவேண்டியதாயிற்று என்று எப்படிச் சொல்வது என்ற சோகத்தால் உடம்பு வியர்த்தது.


தன் மனத்திலுள்ள கவலையை அவன் அடக்க முடியாத தைக் கண்ட சீதை, முடிசூட்டானதற்கு அடையாளமாக குடை, சாமரை, தேர் முதலியன ஒன்றுமின்றி கவலைக் கொள்ளக் காரணமென்ன என்று புலம்பினாள். இராமன் அவளுக்கு நடந்ததைச் சொல்லி, நான் பதினான்காண்டு காட்டில் வாழப்போகிறேன்.


நீ பரதனிடம் என்னைப் புகழாமல் அவன் மனப்படி நாம் நடந்து கொள்ள வேண்டும். அரசர்களுடைய மனப்படி நாம் நடந்து கொண்டால் அவர்கள் நம்மேல் தயவு வைப்பார்கள் என்று கூறினான்.


சீதை கோபங்கொண்டு, இராமா! இவ்வளவு அற்ப மான வார்த்தைகள் உமது வாயிலிருந்து வந்ததேன்? தாங்கள் என்னை அழைத்துக் கொண்டு போனால் தங்களுக்கு சுகமே ஒழிய துக்கமில்லை.


பாலைவனத்தில் பிரயாணம் செய்கிறவர்கள் தங்களுக்கு வேண்டிய தண்ணீரைக் குடித்துவிட்டு மிகுந்ததைக் கொட்ட மாட்டார்கள். பிறகு வேண்டியிருக்குமென்று கொண்டு போவார்கள். அப்படிச் செய்வதால் அவர்களுக்குச் சுகமே. அப்படியே என்னையும் அழைத்துக் கொண்டு போக வேண்டும். இல்லையேல் உயிரை விடுவேன்.


மனைவி கணவனுடைய உடலில் பாதியல்லவா? என்றாள். இராமன் காட்டிலே சிங்கம் முதலிய மிருகங்களால் உண்டாகும் பலவிதத் துன்பங்களை எடுத்துக் கூறினான். சீதை, எத்தனை ஆயிரமாண்டுகள் காட்டில் நான் தங்களுடன் வாழ்ந்தாலும் எனக்குக் காலம் போவதே தெரியாது. நான் தங்களுடனிருக்கையில் இந்திரனானாலும் என்னைக் கண்ணெடுத்துப் பார்க்கத் துணிவானா? சோதிடர்களும் உறுப்பு நூல்வல்லாரும் எனக்குக் காட்டில் வாழும் காலம் ஏற்படுமென்று சொல்லியிருக்கிறார்கள்.
அக்காலம் இப்பொழுது வந்தி ருக்கிறது. அது பூர்வ கர்மத்தின் பலனே! பூர்வ கர்ம பலனை அனுபவிக்காமல் முடியுமா? ஆனால் தங்க ளுடன் காட்டிற்குப் போவேனே யொழிய, நான் மாத்திரம் போகமாட்டேன். பெண்களுக்குக் கணவனே தெய்வம் என் நடத்தையில் இதுவரையில் தங்களுக்கு ஏதேனும் குற்றம் தோன்றிற்றா? தங்களை விட்டுப் பிரிய வேண்டுமென்ற எண்ணத்தாலேயே இவ்வளவு வருத்தப் படும் என்னை அழைத்துப் போகாமலிந்தால் நஞ்சைக் குடிப்பேன்; நெருப்பில் விழுவேன்; நீரில் குதிப்பேன்; எப்படியாவது உயிரைப் போக்கிக்கொள்வேன் என்று வேண்டினாள்.
அவள் எவ்வளவு சொன்னாலும் இராமன் இணங்கவில்லை.

சீதைக்குக் கோபம் வந்துவிட்டது. அவள், நீரோ உமது தேகத்தின் அழகாலேயே பிறரை மோகிக்கச் செய்கிறீர். அதைத்தவிர உம்மிடத்தில் வேறு யோக்கியதை இருப் பதாக எனக்கு தெரியவில்லை.


ஒருத்தியைக் காப்பாற்றச் சக்தியில்லாமல் என்னை இங்கே விட்டுப் போகிறீரென்ற சொல் என்னுடைய தந்தை காதில் விழுந்தால், அய்யோ, மோசம் போனேனே, அப்பொ ழுதே தெரியாமல் போயிற்றே. இவனை உண்மையாக ஆணென்று எண்ணி என் பெண்ணை மணம் செய்து கொடுத்தேனே. இப்பொழுதல்லவா உண்மை வெளியாயிற்று. அவன் பார்வைக்கு ஆணேயொழிய உண்மையாகப் பெண் பிள்ளையே யென்று எண்ண மாட்டாரா? தெரிந்திருந் தால் என்னை உமக்கு ஒரு நாளும் மணம் செய்து கொடுத்திருக்கமாட்டாரே.


உலகத்தார், இராமனிடம் ஆண்மை விளங்குகின்றது என்பது முழுப்பொய். அறியாத்தனத்தால் அப்படிச் சொல்வதே யொழிய உம்மிடத்தில் யாதொரு அபூர்வமான சக்தியும் விளங்கு வதை நான் காணேன். அது மாத்திரமன்று, சாமானிய மனிதனிடத்திலுள்ள சக்திகூட உம்மிடத்தில் கிடையாது. என்னைத் தாங்கள் விட்டுப்போக நினைப்பதைப் பார்த்தால், இவளைக்கூட்டிக் கொண்டு போனால் யாராவது நம்மை உபத்திரவிப்பார்களென்று யாரைக் கண்டோ பயப்படுவதைப் போலிருக்கிறது.


எனக்குத் தங்களைத் தவிர வேறு கதியில்லையென்று நான் எத்தனை முறை பிரமாணஞ் செய்தாலும் என்னிடத்தில் நம்பிக்கையில்லாமல் பரதனிடத்தில் இப்படிப் பேச வேண்டும், இப்படி நடக்க வேண்டும் என்று போதிப் பதைப் பார்த்தால், தன் மனைவியைப் பிறரிடத்தில் ஒப்புவித்து அதனால் பிழைக்கிறவனைப் போலத் தாங்கள் என்னைப் பரதனிடத்தில் தானம் செய்ய நினைத்திருப்பதைப் போலிருக்கிறது.


தாங்கள் என்னை எவருக்குக் கட்டுப்படுத்தப் பார்க்கிறீர்களோ, அவ ருக்குத் தாங்களே வேண்டியவராக நடந்து கொள் ளுங்கள். தாங்களே பரிசாரகனாக இருங்கள். நான் அப்படியிருக்க வேண்டிய அவசியமில்லை. தங்களுடனி ருப்பதே, சுவர்க்கம், தங்களைப் பிரிவதே நரகம். என்னை வெறுக்கும் பரதன் முதலியவர் வசத்தில் இருப்பதை விட உயிர் விடுவேன்.


இப்பொழுதே பாரும் என்று கதறினாள். அதைப்பார்த்த இராமன் அவளைத் தழுவி, உன் உண்மையான எண்ணம் தெரியாததால், உன்னை அழைத்துப் போகச் சம்மதிக்கவில்லை, கவலைப் படாதே, அழைத்துப் போகிறேன். நீ என்னுடன் வனத்தில் வசிக்க வேண்டுமென்று முன்னமே கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.


உன் நகைகளையும் பொருள் களையும் பிராமணர்களுக்குக் கொடு. பிறகு அவர் களுடைய உத்திரவால் வேலைக் காரர்களுக்கும் கொடு என்றான். சீதை மகிழ்ந்து அவ்வாறே செய்தாள்.


சீதைக்கும் இராமனுக்கும் நடந்த பேச்சைக்கூட இருந்து கேட்ட இலக்குவன், சீதையை அழைத்துப் போகவே இவ்வளவு சிரமத்துடன் இசைந்தானே என்று வருந்தித் தானும் உடன் வருவதாகக் கூறினான். இராமன், நீயும் வந்தால் கோசலையையும் சுமத்திரை யையும் காப்பது யார்? அரசரோ மன்மத பாசங்களால் கட்டுப்பட்டுப் பிறருடைய மனப்படி நடக்கிறார்.
கைகேயியோ நன்மை செய்யவே மாட்டாள். பரதனோ அவளுக்கு உட்பட்டவன், அதனால் அவள் தன் சக்களத்திகளைத் துன்புறுத்துவதைத் தடுக்கவே மாட்டான். நீ இருந்தால் உன் வல்லமையால் கோசலை யைப் பாதுகாப்பாய்.


பெரியோர்களைப் பேணுவதே கடமை என்றான். இலக்குவன், பரதன் நமக்குப் பயந்தாவது சரியாக நடந்து கொள்வான். கோசலையோ மிகவும் பொருளுடையவள், அவள் தன்னைச் சேர்ந்த வர்களுக்கு அநேகமாயிரம் ஊர்களைக் கொடுத்திருப் பதை நாம பார்த்ததில்லையா? ஆதலின் நானும் உடன் வருவேன்.


என்றான். இராமனும் இசைந்து சரி, தம்பி! மிதிலையில் நம்மிருவருக்கும் வருணனால் நேரில் கொடுக்கப்பட்ட இரண்டு விற்களையும், அம்பறை, கவசம், கத்திகளையும், வசிட்டருடைய வீட்டிலிருந்து எடுத்துவா, நீயும் புறப்படத் தயாராயிரு என்றான்.


இலக்குவன் அவற்றை எடுத்துவந்தான். பின் அவன் இராமனது ஆணையால் வசிட்டருடைய மகனான சுயக்ஞனையும், அகத்தியருடைய மகனையும், விசுவா மித்திரன் மகனையும், ஏனைய பிராமணர்களையும் அழைத்து வந்து அவர்களெல்லோருக்கும் வேண்டும் பொருள்களையெல்லாம் தந்தான்.
சுயக்ஞன் இராமன் அணிந்த நகைகளையும், படுத்த கட்டிலையும் வாங்கிக் கொண்டு சீதையின் அணிகளைத் தன் மனைவிக்கு வாங்கிப்போனான். திரிசடன் என்ற ஏழைப் பார்ப்பானுக்கு வேண்டும் பொருள் கொடுத்து, பிராமணர்களுடைய உபயோகத்திற்காகவே என் பொருள் முழுவதையும் சேகரித்திருக்கிறேன் என்று கூறினான்.

பின் இராமன், இலக்குவன், சீதை ஆகிய மூவரும் அரசனிடத்தில் விடைபெறச் சென்றார்கள். இவ்வரலாற்றை ஆராய்வோம்.

                       -------------------------"விடுதலை”9-9-2014

7 comments:

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்கள்


பார்ப்பனர்கள் இந்நாடு எவ்விதச் சமுதாய மாறுதலும் அடையக் கூடாது என்ற தன்மையினையே தங்கள் மூலாதாரக் கொள்கையாகக் கொண்டுள்ளனர்.

(விடுதலை, 30.12.1972)

Read more: http://www.viduthalai.in/page1/87375.html#ixzz3Cy7t8073

தமிழ் ஓவியா said...


அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியாவில் கொண்டாட்டம்!


உலகின் பல நாடுகளிலும் உலகத் தலைவர் பெரியார் பிறந்த நாள் விழா!

வாஷிங்டன்,செப்.10- உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 136 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா உலகெங்கும் கொண்டாடப்பட உள்ளது.

பெரியார் பன்னாட்டமைப்பு வாஷிங்டனில்...

நாள்: 13.9.2014 பிற்பகல் 2.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை

இடம்: எல்கிரிட்ஜ் கிளை நூலகக் கூட்ட அரங்கு, 6540 வாஷிங்டன் பிஎல்விடி, எம்டி 21075

வரவேற்பு: திருமதி கல்பனா மெய்யப்பன், தலைவர், கிரேட்டர் வாஷிங்டன் தமிழ்ச்சங்கம்.

உரையாற்றுபவர்கள்: இளம் நாத்திகர்களின் போராட்டம் தலைப்பில் திரு.ஹேமந்த் மேத்தா (சிகாகோ பல்கலைக்கழகத்தில் உயிரியல் மற்றும் கணிதவியல் பாடங் களில் 2004 ஆம் ஆண்டில் இரட்டை பட்டம் பெற்றவர்.

உயிரியல் மற்றும் கணிதத்தில் 2007ஆம் ஆண்டுமுதல் பயிற்றுவித்து வருபவர். 2010ஆம் ஆண்டில் டீபால் பல் கலைக்கழகத்தில் கணிதத்தில் முதுகலை பயின்றுள்ளவர். இவர் பயின்ற பல்கலைக்கழகங்களில் மதசார்பற்ற மாணவர் குழுவை ஏற்படுத்தி தலைவராக பொறுப்பில் இருந்தவர்.

நம்பிக்கையைக் கடந்து இலாப நோக்கற்ற அறக்கட்டளை நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருபவர். சுதந்திர சிந்தனைக் காகத் தொடர்ந்து பேசி அமெரிக்க அய்க்கிய நாடுகள் முழுவதும் வருபவர். தி எதியிஸ்ட் நாத்திகம் என்கிற தலைப்பில் உள்ள பிளாக்மூலம் நம்பிக்கை உள்ளவர்கள் மற்றும் நம்பிக்கை இல்லாதவர்களையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டுவருபவர்.)

பெண்களுக்கான அதிகாரம் என்கிற தலைப்பில் முன்னாள் ஆளுநர் மதிப்பிற்குரிய பாரீஸ் நெல்சன் கிளெண்டெனிங் பேசுகிறார்.
பாரீஸ் நெல்சன் கிளெண்டெனிங் அமெரிக்காவின் அரசியல்வாதி ஆவார்.

ஜனநாயக கட்சியின் உறுப்பின ராவார். 18.1.1995 முதல் 15.1.2003 வரை மேரிலாண்ட் 59 ஆவது ஆளுநராக பணிபுரிந்தவர். 1982 ஆம் ஆண்டு முதல் 1994 வரை மேரிலாண்டில் பிரின்ஸ் ஜார்ஜ் பகுதியின் செயல் அதிகாரியாக இருந்துள்ளார். வளர்ந்துவரும் அமெரிக்காவின் தலைமைத்துவ பயிற்சி நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

அதன்படியே ஆளுநரானார். பொரு ளாதாரம் மற்றும் சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடுவதன்மூலம் நாட்டில் மறுகட்டமைப்பை ஏற்படுத்தவும் நாடுமுழுவதும் பல்வேறு தரப்பட்ட தலைவர்களுடன் பணியாற்றி வந்துள்ளார்.

டாக்டர் அரசு மற்றும் டாக்டர் அசாமா ஆகியோரின் விவாதங்களைத் தொடர்ந்து , பெரியார் குறித்த வினாடி-வினா நிகழ்ச்சியை திரு. நாஞ்சில் பீட்டர் மற்றும் கொளந்தவேல் ராமசாமி நடத்துகிறார்கள்.

திரு. எம்.பி. சிவா நன்றி கூறுகிறார்.

தொடர்புக்கு:
டாக்டர் அரசு செல்லய்யா- (410) 404-7222
டாக்டர் சோமஇளங்கோவன்- (708) 361-1998
டாக்டர் சொர்ணம் சங்கர் 443 854-0181

சிங்கப்பூரில்...

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றமும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் பிரிவும் இணைந்து குருதிக் கொடை வழங்கும் விழாவை சிங்கப்பூரில் ஏற்பாடு செய்துள்ளது.

நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை ஊட்ரம் பார்க்கில் உள்ள எச்.எஸ்.ஏ. ரத்த வங்கிக் கட்டடத்தில் நடைபெற வுள்ளது.

நிகழ்ச்சியில் சிங்கப்பூர் அரசின் சுற்றுப்புற, நீர்வளத் துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள உள்ளார்.

குருதிக் கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள் 81185747 என்ற கைப்பேசியில் தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.

16 வயதுக்குமேல் 60 வயதுக்குள் உள்ளோர், சுமார் 45 கிலோ எடைக்கு மேலும், ரத்தத்தில் சிவப்பணுக்களின் அளவு 12.5-க்கு மேலும் இருந்தால், சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏதுமின்றி இருந்தால் அழைத்து, மேல் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
16, 17 வயதில் உள்ளோர் பெற்றோர் அனுமதியுடன் குருதிக் கொடை வழங்கலாம்.

மலேசியாவில்...

மலேசியாவிலும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது என்று மலேசிய திராவிடர் கழகத் தேசியத் தலைவர் பி.எஸ்.மணியம் கோலாலம்பூரிலிருந்து, கழகத் தலைவர் ஆசிரியருக்குத் தொலைப்பேசிமூலம் தெரிவித்துள்ளார்.

Read more: http://www.viduthalai.in/e-paper/87443.html#ixzz3Cy8rpek7

தமிழ் ஓவியா said...


இந்தியைப் பரப்புவது - திருவள்ளுவர் பிறந்த நாளைக் கொண்டாடுவது குறித்து பி.ஜே.பி. ஆய்வு



புதுடில்லி, செப்.10_- இந் தியைப் பரப்புவது குறித் தும், திருவள்ளுவர் பிறந்த நாளைக் கொண்டாடுவது குறித்தும் இந்திய அலுவல் மொழிக்கான நாடாளு மன்றக் குழு ஆய்து செய்து வருகிறதாம்.

டில்லியில் திங்கள் கிழமை நடைபெற்ற மத் திய உள்துறை அமைச்ச கத்தின்கீழ் செயல்படும் இந்திய அலுவல் மொழிக் கான நாடாளுமன்றக் குழுவின் முதலாவது கூட் டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், திரு வள்ளுவர் பிறந்தநாளைக் கொண்டாட அலுவல் மொழிக்கான நாடாளு மன்றக் குழு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

மத்திய அரசுத் துறை களில் நாட்டின் தேசிய மொழியான இந்தியைப் பயன்படுத்துவது குறித் தும், அலுவல் மொழியாக இந்தியை நாடு முழுவதும் பயன்படுத்த வகுக்கப்படும் கொள்கை முடிவுகள் குறித் தும் அலுவல் மொழிக் கான நாடாளுமன்றக் குழு, மத்திய அரசுக்கு யோசனை களை வழங்கி வருகிறது.

அந்த வகையில், மத் தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல் படும் இந்திய அலுவல் மொழிக்கான நாடாளு மன்றக் குழுவின் முதலா வது கூட்டம் டில்லியில் திங்கள்கிழமை கூடியது. மொத்தம் 30 பேர் கொண்ட இக்குழுவில் மக்களவையில் இருந்து 20 பேரும் மாநிலங்களவை யில் இருந்து 10 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் தலைவராக உள்ளார். முதலாவது கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குழுவின் தலைவராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, குழுவின் செயல் திட்டம், எதிர்கால பணிகள் குறித்து இறுதி செய்வதுபற்றி உறுப்பி னர்கள் விவாதித்தனர். இக்குழுவில் இடம் பெற் றுள்ள உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் தருண் விஜய் பேசுகையில், அலு வல் மொழியாக நாம் இந்தியைப் பயன்படுத்தி வருகிறோம்.

அதே சமயம், நாட்டின் தொன்மையான மொழியாக தமிழ் விளங் குகிறது. அதுபோல பல மாநிலங்களின் மொழி களும் தனிச்சிறப்புடன் விளங்குகின்றன. அவற் றுக்கு நாம் மரியாதை செலுத்தவேண்டும்.

உலகின் மிகவும் பழைமை யான மொழியாக தமி ழின் அடையாளமாக திருக்குறள் போற்றப்படு கிறது. உலகப் பொது மறையாக திகழும் அதை எழுதியவர் திருவள்ளுவர்.

அவரது பிறந்த நாள் ஜனவரி மாதத்தில் தமி ழர்களால் கொண்டாடப் படுகிறது. தமிழுக்கும், திரு வள்ளுவருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் மத் திய உள்துறையின் உயர் அமைப்பாகக் கருதப்படும் அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு திரு வள்ளுவர் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும்.

இதன்மூலம் பல மொழி கள் பேசப்படும் இந்தியா வில் அனைவருக்கும் மத் திய அரசு அங்கீகாரம் அளிக் கும் செய்தியை நாட்டுக்கு நம்மால் உணர்த்த முடியும் என்றார்.

இதையடுத்து, ராஜ்நாத் சிங் பேசுகையில், தருண் விஜயின் கருத்து வரவேற்புக்குரி யது. அவரது யோச னையை நாம் நிச்சயம் பரிசீலிக்கவேண்டும். அடுத்த கூட்டம் நடை பெறும்போது இந்த விவ காரத்தில் உரிய முடி வெடுக்கப்படும் என்றார்.

பின்னர் திருவள்ளு வரின் சிறப்புகளை விளக் கிய தருண் விஜய், வட மாநிலங்களில் உள்ள சுமார் 500 பள்ளிகளில் திருக்குறளின் பெருமை களை விளக்கியும், திருவள்ளுவரின் பிறந்த நாளை அடுத்த ஆண்டு கொண்டாடவும் திட்ட மிட்டுள்ளதாகக் கூறினார். அவரது முயற்சிக்கு ராஜ் நாத் சிங் பாராட்டுத் தெரிவித்தார்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மாநிலங்களவையில் தருண் விஜய் கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து, அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திரு வள்ளுவர் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாகக் கொண்டாட வேண் டும் என்று அவர் மாநிலங் களவையில் பேசினார்.

இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழி யாக அறிவிக்கவேண்டும் என்று குடியரசுத் தலை வரிடமும் அவர் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://www.viduthalai.in/e-paper/87450.html#ixzz3Cy95g8dL

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.யின் அரசியல் தார்மீகம்?


பி.ஜே.பி. என்றால் தார்மீகப் பண்புகளுக்குப் பெயர் போனது என்று திட்டமிட்ட வகையில் பிரச்சாரம் செய்து வைத்துள்ளனர் - உண்மையில் அது ஒழுக்கக்கேட்டின் புகலிடம் (இந்து மதம்போல்) என்பதுதான் உண்மை.

பக்திதான் முக்கியமே தவிர - ஒழுக்கமல்ல என்பது தானே இந்து மதம்? எந்த ஒழுக்கக்கேட்டையும் செய்து விட்டு, அதற்கென்றுள்ள பிராயச்சித்தங்களைச் செய்து விட்டால் தீர்ந்தது கதை என்பதுதான் இந்து மதத்தின் கோட்பாடு.

அந்த இந்துத்துவாவை தோளில் தூக்கிக்கொண்டு ஆளும் பி.ஜே.பி. எப்படி நடந்துகொள்ளும்?
டில்லி சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் ஆதரவு அளித்த அடிப்படையில், ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தது. அனுபவம் இல்லாத காரணமாக பதவி விலகியது ஆம் ஆத்மி.

இது நடந்தது கடந்த பிப்ர வரியில்; ஏழு மாதங்கள் ஓடிவிட்டன; சட்டசபையும் கலைக்கப்படவில்லை; மறுதேர்தலுக்கான அறிவிப்பும் வராத நிலையில், தண்டத்துக்கு மக்கள் வரிப் பணத்தை மாதந்தோறும் சம்பளமாக வாங்கிக் கொண்டு இருக் கிறார்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள்.

சட்டசபையைக் கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. இதற்கிடையில் பி.ஜேபி.,க்கு ஒரு நப்பாசை!
தனக்கு அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் களை விலைக்கு வாங்கலாம் என்று திட்டமிட்டுக் குதிரைப் பேரத்தில் இறங்கியது.

ஆம் ஆத்மி கட்சியின் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் ரூபாய் நான்கு கோடி அளிப்பதாகப் பேரம் பேசப்பட்டுள்ளதாம் - இதனைக் கண்ணி வைத்துப் பிடித்துவிட்டது ஆம் ஆத்மி. பி.ஜே.பி.யின் இத்தகைய நடவடிக்கைகள் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்திலும் வழக்கினைத் தொடுத்துவிட்டது ஆம் ஆத்மி. பி.ஜே.பி. குதிரை பேரத்தில் ஈடுபட்டதற் கான வீடியோ ஆதாரங்களும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டன.

இதற்கிடையே எங்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பே கொடுக்கவில்லை என்று அந்தர்பல்டி அடித்தது பி.ஜே.பி. ஆளுநர் எழுதிய கடிதம் அம் பலத்துக்கு வந்துவிட்ட நிலையில், பி.ஜே.பி.யின் தார்மீகம் நார் நாராகக் கிழிந்து எங்கு பார்த்தாலும் தொங்கிக்கொண்டு இருக்கிறது.

உச்சநீதிமன்ற நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு பி.ஜே.பி. அரசுக்கு நல்ல சூடு கொடுத் திருக்கிறது.
நானும் ஒரு குடிமகன்தான். சட்டமன்ற உறுப்பினர் கள் சேவை செய்யவேண்டும் என்றுதான் வாக்களித்த மக்கள் விரும்புகிறார்கள்.

டில்லி சட்டப்பேரவையை இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் முடக்கி வைக்கப் போகிறீர்கள்? உறுப்பினர்களுக்கு வெட்டியாக மாதா மாதம் சம்பளம் கொடுத்துக் கொண்டு இருக்கப் போகிறீர்களா? விரைவாக முடிவெடுங்கள் என்று நீதியரசர் எச்.எல்.தத்து கடுமையாக விளாசி இருக்கிறார்.

இப்பொழுது எல்லாம் நீதிமன்றங்கள் சொல்லுகின்ற, தீர்ப்புகளை மதிக்கும் போக்குக் குறைந்து வருகிறது - இது எதில் போய் முடியும் என்று தெரியவில்லை.

குதிரைப் பேரம் என்பது பி.ஜே.பி.க்கு ஒன்றும் புதி தல்ல; ஏற்கெனவே பலமுறை பழக்கப்பட்ட ஒன்றுதான்.
உத்தரப்பிரதேசத்தில் கல்யாண்சிங் முதல்வராக வருவதற்கு எத்தகைய தில்லுமுல்லுகள் செய்யப்பட்டன! வாஜ்பேயி தலைமையில் 13 நாள்கள் ஆட்சியில் இருந்த போது, உத்தரப்பிரதேச வழிமுறையைப் பின்பற்றத் தயார் என்று பிரதமராக இருந்த வாஜ்பேயி கூற வில்லையா?

இந்தக் கூட்டத்தின் பிரச்சாரப் பீரங்கியாக இருக்கும் சோ ராமசாமியால்கூட அதனைப் பொறுக்க முடியாமல், தலையில் அடித்துக்கொண்டு கண்டித்து எழுத வில்லையா?

பி.ஜே.பி. ஒன்றும் கலப்படமற்ற புனித நெய்யில் பொரிக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பது தெரிந்த ஒன்றுதான்.
அடுத்தவன் மனைவியை தன் மனைவி என்று கூறி வெளிநாட்டுக்குப் பயணம் செய்த பேர்வழிகள் எல்லாம் பி.ஜே.பி.யில் பஞ்சம் இல்லை.

முதலாளிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு நாடாளுமன்றத்தில் முதலாளி களுக்காக கேள்வி கேட்டவர்களின் பட்டியலில் பி.ஜே.பி.க்குத்தான் முதலிடம்!
டில்லியில் பி.ஜே.பி. மேற்கொண்ட குதிரைப் பேரத்துக்குச் சாட்சியங்களாக வீடியோ பதிவுகள் எல்லாம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தீர்ப்புச் சொல்லும்பொழுதுதான் பி.ஜே.பி.யின் முகமூடி கிழியும், பொறுத்திருந்து பார்ப்போம்!

Read more: http://www.viduthalai.in/e-paper/87453.html#ixzz3Cy9a8iLf

தமிழ் ஓவியா said...

ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும், நடந்தபடி சொல்லுவதுமே ஒழியத் தனிப்பட்ட குணங்கள் அல்ல.
_ (குடிஅரசு, 3.11.1929)

Read more: http://www.viduthalai.in/e-paper/87452.html#ixzz3Cy9rIw66

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் அவர்களின் கொள்கைப் பார்வை எந்நாளும் இனநலக் கண்ணோட்டமே!


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள், அறிக்கைகள் எவ்வளவு தொலைநோக்கு சிந்தனையாக, தந்தை பெரியார் தந்த புத்தியின் வெளிப் பாடாக இருக்கின்றன என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள்

1) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிக்கைகளிலும், திருமண விழாக்கள், ஊடகங்களிலும் அடிக்கடி குறிப்பிடக்கூடிய - மணமக்கள் ஜாதகப்பலன்களை பார்ப் பதற்குப் பதிலாக தங்களின் உடல்நல மருத்துவப் பரிசோதனைச் சான்றிதழ்களை ஒப்பிட்டு காண முடிந்தால் மண மக்களின் வாழ்வு சிறப்பாக அமையும் - வழக்கு விவா கரத்து என்று பிரச்சினைக்கு இடமில்லாமல் எதிர்காலம் மகிழ்ச்சிகரமாய் இருக்கும் எனறு தெரிவித்த கருத்துகளை 3.9.2014 அன்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அவர்கள் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கும் போது மேற்கூறிய கருத்துகளை ஆலோ சனைகளாக வழங்கியுள்ளார்.

இதன் எதி ரொலியாக கலைஞர், புதிய தலைமுறை, இமயம் போன்ற தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்தப்பட்டு அறிஞர் பெருமக் கள், மருத்துவர்கள் ஆராய்ந்து அறிவுப்பூர் வமான விவாதங்களை நடத்தி உள்ளனர். ஆனால், இந்துத்துவா கூட்டங்கள் மட்டுமே எதிர்த்து பழைய பஞ்சாங்கங்களையே பாடி வருகின்றன. இதற்கு அடிப்படையே ஆசிரி யரின் அறிக்கைகள், பேச்சுகள் என்பது நிதர்சனமான உண்மை.

2) நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் னரே தமிழர் தலைவர் ஆசிரியர் எல்லா பொதுக்கூட்டங்களிலும், விரிவான அறிக் கைகளிலும் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு கேடு வரும் என்றும், ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் வடிவம்தான் பாரதீய ஜனதா - அதன் சித்தாந்தத்தை நிலைநாட்டுவதற்காக பல தந்திரங்களை கையாளும் என்று தொலைநோக்கோடு முழங்கினார்.

ஆனால் தமிழ்நாட்டில் இருக்கிற ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., போன்ற கட்சிகள் மோடி ஆட்சி வந்தால் நாட்டில் பெரிய மாற்றம் வரும் என்று கிஞ்சிற்றும் கொள்கைப் பார்வை இல்லாது வெறும் அரசியல் பார்வையோடு கூட்டணி அமைத்துக் கொண்டவர்கள் இன்று இருக்கும் இடம் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள் என்பதுதான் உண்மை. பாரதீய ஜனதாவின் 100 நாள் ஆட்சியல் எவ்வித வளர்ச்சிக்கான புதுமைத் திட்டங்களோ, புரட்சித் திட்டங்களோ எதுவுமில்லை - மாறாக இந்துத்வாவின் கொள்கைகளை இந்தியா முழுவதும் பரப்ப நரித்தனமான வேலைகளைச் செய்து வருகின்றன.

அதற்கு எடுத்துக்காட்டு சமஸ்கிருத வாரம் - செத்த மொழி சமஸ்கிருதத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடு - இந்தித் திணிப்பு - இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களே என்ற பேச்சு இப்படி - அடுக்கிக் கொண்டே போகலாம்.

இப்படியெல்லாம் நடக்கும் என்று அன்றே - கொள்கைப் பார்வையுடனும், சமுதாயக் கண்ணோட்டத்துடன் ஆசிரியர் அவர்கள் கூறியது எவ்வளவு சரியாக இருந்தது என்பதை எண்ணிப்பார்க்கும் போது அய்யாவின் அடிச்சுவட்டில் ஆசிரியர் அவர்களின் கொள்கைப் பார்வை எந்நாளும் இனநலக் கண் ணோட்டமே. திராவிட தமிழ்மக்களே! ஆரிய சூழ்ச்சியை புரிந்துகொள்ளுங்கள்; பதவிக்காக அடிமையாகாதீர்! என்றும் பெரியார் கொள்கையே வெல்லும்.
- தி.க.பாலு
(மாவட்ட தலைவர் பகுத்தறிவாளர் கழகம், திண்டுக்கல்)

Read more: http://www.viduthalai.in/e-paper/87457.html#ixzz3CyA3TL4I

தமிழ் ஓவியா said...


பேராசிரியர் அருணனின் காலந்தோறும் பிராமணீயம் நூலுக்கு விருதும் - ஒரு லட்சம் ரூபாய் பணமுடிப்பும்


சென்னை, செப்.10_ காலந்தோறும் பிராம ணீயம் என்ற பேராசிரியர் அருணன் அவர்கள் ஆய்வு நூலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், பணமுடிப்பும் வழங்கப்பட உள்ளன.

கு.சின்னப்பபாரதி இலக் கிய விருது அறக்கட்டளை யின் சார்பில், அதன் நிர் வாகிகளைக் கொண்ட 6-வது ஆண்டு பரிசளிப்பு விழாவிற்கான கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அறக் கட்டளையின் தலைவர் கு.சின்னப்பபாரதி தலைமை தாங்கினார். வருகின்ற அக்டோபர் 2- ந் வியாழக் கிழமை காந்தி ஜெயந்தி தினத்தன்று நாமக்கல் கவின் கிஷோர் கல்யாண மண்டபத்தில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில், பரிசு வழங்கப்படும் இனங்களான வாழ்நாள் சாதனையாளர் விருது, நாவல், சிறுகதை, கட்டுரை. மொழிபெயர்ப்பு மற்றும் சமூக சேவை ஆகியவற் றிற்கு பரிசு பெறுவோர் விபரங்களை கூட்ட முடி வின்படி அறக்கட்டளை யின் தலைவர் கு.சின்னப்ப பாரதி வெளியிட்டார்.

அறக்கட்டளையின் விருதுக்கு உலக அளவில் வரப்பெற்ற ஒவ்வொரு இனத்திற்கும், கு.சின்னப் பபாரதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, இறுதியில் சிறந்த படைப்புக்கள் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் ஒரு இலட்சத்து தொண்ணூ றாயிரத் துக்கான பண முடிப்பு வழங்கப்படுகிறது.

அதனடிப்படையில், வாழ்நாள் சாதனையாளர் என்ற தலைப்பிற்கு, முதன்மைப் பரிசாக,காலம் தோறும் பிராமணியம் மற்றும் கலை இலக்கிய ஆய்வுக்காக தமிழ்நாட் டைச் சார்ந்த பேராசிரியர் அருணன் அவர் களுக்கு விருதும், ரூபாய் ஒரு இலட் சத்திற்கான பணமுடிப்பும் வழங்கப்படுகிறது.

நாவல் வரிசையில், குடைநிழல் என்ற நாவ லுக்கு, இலங்கையைச் சார்ந்த தெளிவத்தை ஜோசப் என்ற எழுத்தா ளருக்கு விருதும், ரூபாய் பத்தாயிரம் பரிசும் வழங்கப்படுகிறது


நான்கு சிறுகதைத் தொ குப்பின் ஆசிரியர்களான, தவிக்கும் இடை வெளிகள் _ எழுத்தாளர் உஷா தீபன், தமிழ்நாடு இப்படி யுமா? _ எழுத்தாளர் வி.ரி இளங்கோவன், பாரீஸ் ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் - _ எழுத் தாளர் ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர் வெந்து தணிந்தது காலம் - எழுத்தாளர் மு.சிவ லிங்கம், இலங்கை ஆகிய நான்கு சிறு கதைத் தொகுப்புக்களின் ஆசிரியர்களுக்கும் விருதும், தலா ரூபாய் பத்தாயிரமும் வழங்கப்படுகிறது.

நூல் தேட்டம் என்ற கட்டுரைத் தொகுப்பிற்கு லண்டனைச் சார்ந்த என். செல்வராஜா நூலகவியலா ளருக்கு விருதும், ரூபாய் பத்தாயிரம் பரிசும் வழங்கப் படுகிறது.

மொழி பெயர்ப்புக்காக சல்மான் ருஷ்டியின் நள்ளிரவின் குழந்தைகள் என்ற நூலின் மொழி பெயர்ப்பாளர் கா.பூரண சந்திரன் மற்றும் கு.சின் னப்ப பாரதியின் பாலைநில ரோஜா என்ற நூலின், சிங்கள மொழிபெயர்ப் பாளர் உபாலி நீலாரத்தி னாவிற்கு விருதும் தலா ரூபாய் பத்தாயிரம் பரிசும் வழங்கப்படுகிறது,

சமூக சேவைக்காக இலங்கை மலையக மக்களின் கலை இலக்கிய சமூகப் பணிக் கான வாழ்நாள் சாதனை யாளர் விருதாக ஆண்டனி ஜீவாவிற்கு விருதும் ரூபாய் பத்தாயிரம் பரிசும் வழங் கப்படுகிறது.

மற்றும் பெங்களுரு தமிழ் சங்கம் ஆற்றிவரும் தமிழ்பணிக்காக விருதும் ரூபாய் அய்யாயிரம் பரிசும் வழங்கப்படுகிறது என அறக் கட்டளையின் தலைவர் கு.சின்னப்ப பாரதி அறி வித்தார்.

இக்கூட்டத்திற்கு,செயலாளர் கே.பழனிசாமி, உறுப் பினர்கள் சி.ரங்கசாமி மற்றும் கு.பாரதிமோகன் ஆகியோர் கலந்து கொண் டனர்.

Read more: http://www.viduthalai.in/e-paper/87465.html#ixzz3CyAKpXpu