அயோத்தியா காண்டம்
- ஏழாம் அத்தியாயம் தொடர்ச்சி
தான் செய்த சூழ்ச்சியெல்லாம் வீண் போயிற்
றேயென்று சிந்தித்தபோது இராமனுக்கு அளவிலடங்கா ஆத்திர முண்டாகியது. அதனால்
வெறுப்பையும் காட்டி, அம்மா! பரதன் என் மனைவியைக் கேட்டாலும் அவனுக்குக்
கொடுத்துவிடுவதில் தடையில்லை, அப்படியிருக்க இவ்வரசாட்சி ஒரு பொருட்டா?
என்று கூறுகிறான்.
இக்கூற்று மிகவும் ஆத்திரமும் அகங்காரமும்
கொண்டு அரசாட்சி கிடையாது போயிற்றே என்ற பெருங் கவலையிற் கூறிய
கூற்றாகுமேயன்றி உண்மையுடையார் கூற்றாகுமா? தன் தம்பியாகிய பரதனுக்குப்
பெண்டாட்டி யைக் கொடுப்பதிலும் தடையில்லை என்கிறானே இராமன்! அந்தோ, இவன்
தன் மனநிலையை என் னென்பது? பரிதாபம்! பரிதாபம்! நாடு கிடைக்கவில்லை!
உரிமையற்ற தனக்கு, உரிமையுள்ள பரதனுக்குக்
கிடைக்கபோகிறது என்ற செய்தியைக் கேட்டால் இவ்வாறெல்லாமா பேசுவது? இவ்வளவு
இழிமகனாகிய இராமனைத் தெய்வமாக வணங்குகின்றனர் தமிழ் மக்களில் சிலர்!
இவனுடைய இழி செயல்களையெல்லாம் மறைத்துத் தமிழுலகத்தை ஏமாற்றினாரே பாபியாகிய
கம்பர்! கம்பர் முன்னிலையிற் சுயநலமே நின்றது.
இராமனுடைய சூழ்ச்சிகளையும் மன நிலையையும்
அறிந்த கைகேயி, அவனை ஒரு சிறிதும் தாமதியாமல் காட்டுக்குப் போகவேண்டுமென்று
அவசரப்படுத்து கிறாள். அதனால் தான் அப்போது எண்ணிய சூழ்ச்சியும் வீண்போவது
கண்டு பெரிதும் வருத்தமடைந்த இராமன், ஏக்கம் பொறுக்கமாட்டாமல் தன்னை
மறந்து பேசிவிடுகிறாள். அதனால் அவன் உள்ளக்கிடை முழுதும் வெளியாகிறது.
அதாவது, எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை
என்பது போன்ற ஒரு பழமொழிக்குத் தகுந்த எடுத்துக்காட்டாக அப்போது இராமன்
ஆகிறான். அது இராமன் அச்சமயம் பேசிய பேச்சு வரலாற்றில் உள்ள தெனினும்
தெள்ளிதின் உலகத்தாரறியுமாறு மறுபடியும் இங்கே குறிப்போம். அப்பேச்சு
வருமாறு:- அம்மா! குடிகளை என் வசப்படுத்தி அரசாள முயல எனக்கு எண்ணமில்லை.
அவ்வாறு எண்ணித் தாங்கள் வருந்தவேண்டாம். நான் தாமதித்திருந்தால் ஒருவேளை
பரதன் எனக்கு அரசைக் கொடுத்துவிடுவானோ என்று அஞ்சுகிறீரோ?
மேலே கண்ட பேச்சினால் இராமன் சிந்தனை
பின்வருமாறு சென்றதாகும். குடிகளை வசப்படுத்தி ஏமாற்றி அரசைப் பெற
நினைத்தது வீண் போயிற்று. மேலும் குடிகள் உண்மையில் அரசுக்குரியவன்
பரதனேயென்பதை உணர்வார்களேயானால், அவர்கள், பரதனை வஞ்சித்து இராமன் அரசாளச்
சம்மதிப்பார்களா? ஒரு நாளும் சம்மதியார்கள்.
மேலும் தங்களை ஏமாற்றிய தீய
செய்கைக்காகவும், பரதனை வஞ்சிக்கத் துணிந்தமைக்காகவும், இராமன் மீதும்
தசரதன்மீதும் அளவிலடங்காத சினங்கொண்டு தீமை செய்யவும் துணிவர்.
இவ்வளவுதூரம் நிகழ்ச்சிகள் விளைந்தபின் முடிசூடுவதும் முடியாத காரியம்.
பரதன் முதலியோர் வருகையை அவன் அன்றே எதிர்பார்த் தமையின், அவனுக்கு
வேண்டியவர்களால் எப்படியும் உண்மை வெளியாகாமற் போகாது.
ஆதலின் இனி முடிசூட்டிக் கொள்ள முயலுதல்
அறிவீனமெனத் துணிந்த தந்திரசாலியாகிய இராமன், பரதன் வரும்வரை
தாமதிக்கத்துணிகிறான். பரதன் வெள்ளறிவாளனாதலினானே எப்படியும் அரசைத்
தனக்குத் தருவான்; தான் தந்திரமாக அவனை நேரில் ஏமாற்றி அரசைப் பெறுதலே
அதற்கு வழி என்று முடிவாகத் தீர்மானிக்கின்றான்.
அத்தீர்மானமும் நிறைவேறாதபடி கைகேயி
மிகவும் அவசரப்படுத்திக் காடேகக் கூறியதனாலேயே, நான் தாமதித்திருந்தால்
பரதன் ஒரு வேளை எனக்கு அரசைக் கொடுத்து விடுவானோ என்று அஞ்சுகிறீரோ? என்று
வினாவு கிறான். உண்மையில் இராமன் தாமதித்ததற்கும் கைகேயி அவனைத் தாமதிக்க
விடாமல் அவசரப்படுத்தியதற்கும் அதுவே காரணமாகும். பரதனுடைய குணத்தையும், மன
நிலைலையும் இராமனும் அறிவான், கைகேயியும் அறிவாள்.
பரதன் வரும்வரை தாமதிக்கலாமென நினைத்ததன்
முயற்சியும் பாழாவது கண்ட இராமன், எப்படியாவது பரதன் தன்னைக் காணவருவான்,
அப்போது அவனை ஏமாற்றி அரசாட்சியைப் பெறலாம் என்ற துணிவு
கொண்டிருந்ததனாலும், அப்போது காடேகாமல் நிற்பது தன் எண்ணங்களுக்கும்
சூழ்ச்சிகளுக்கும் இடையூறாகு மெனத் தீர்மானமாகத் தெரிந்தமையாலும் இராமன்
உடனே காடேகத் துணிகின்றான்.
இவ்வுண்மையை இதனைப் படிக்கும் எமது
உடன்பிறப்பாளர் மறவாது மனத்திற் கொண்டிருக்குமாறு வேண்டுகிறேன். ஏனெனில்
இச்சூழ்ச்சியும் எண்ணமுமே இராமன் பின்னர் செய்யப்போகும் செயல்களுக்கெல்லாம்
காரணமாக முன் நிற்பதாகும்.
இனி கம்பர் புரளியைக் காண்போம். வால்மீகி
கூறியுள்ளபடி கிழவர்கள் பிரம்பேந்தி நின்றமையையும், அவர்கள் இராமனைக்
கட்டியணைத்து மடிமீதிருத்தும் செயல்களையும், அச்செயலுக்கிணங்கியிருந்த
இராமன் சீதையினுடைய காலைத்தொட்டு விடைபெற்றமை யையும் கம்பர் முற்றிலும்
மறைத்தார், இலக்குவன் இராமனைப் பாதுகாத்து பின்னே வந்தமையையும் பிற்பாடு
இராமன் கோசலை வீட்டுக்குப் போகும்போதும் இலக்குவன் அவன் கூடவே வந்தமையையும்
கம்பர் கூறவேயில்லை.
இராமன் நேரே தசரதனிருக்குமிடத்தை
யடைந்ததாக வால்மீகி கூறக்கம்பரோ முதலில் இராமன் மன்னனுறை கோவில் புக்கான்
பின் சிற்றன்னை கோவில் புக்கான் என்று அண்ணலும் அயர்ந்து தேறாத்தூயவனிருந்த
சூழல் துருவினன் வருதல் என்றும் கூறுகிறார். இது அறிவுக்குப் பொருத்தமற்ற
கூற்றாகும். சுமந்திரன் சிற்றன்னை கோவிலில் அவளுடன் இருந்த தசரதன்
அழைத்ததாகக் கூறக்கேட்ட இராமன் இவ்வாறு தேடிக்கண்டுபிடித்து வந்தான் எனல்
அறிவுக்குப் பொருந்திய கூற்றாமா? அழைத்து வரப்போன சுமந்திரன் கொண்டு
வந்துவிடாமல் அவ்வளவில் ஒழிந்தனனோ?
அதன்பின் நிகழ்ந்தவையாகிய, இராமன் தசரத
னையும் கைகேயியையும் பணிந்ததையும், இராம னுடைய தந்திரப்பேச்சுகளையும்
கைகேயி அவனிடமும் வாக்குறுதி பெற்று உண்மையைக் கூறியதையும்,
மூர்ச்சித்துவிழுந்த தசரதனை இராமன் தூக்கியதையும், அவன் தாமதிக்க
முயன்றதையும், கைகேயி அதைத் தடுத்து அவனைக் காடேக அவசரப்படுத்தியதையும்,
அவன் போகும்போது பெண்கள் தசரதனை இகழ்ந்த தையும் முற்றிலும் கம்பர்
மறைத்துவிட்டார். இராமன் வருவதைக்கண்ட கைகேயி அவன் தசரதனைப் பார்க்காதபடி
தடுத்ததற்காக தானே முன்னேறி வெளிக்கட்டுக்கு வந்து அவனைக் கண்டு, பரதன்
நாடாளவும் அவன் காடாளவும் தசரதன் உரைத்ததாகக் கூறியதாகவும், உடனே இராமன்
அதற்கு இணங்கி,
மன்னவன் பணியன்றாகினும்
நும்பணி மறுப்பெனோ என்
பின்னவன் பெற்ற செல்வம்
அடியனேன் பெற்ற தன்றோ
என்னினி யுறுதி யப்பால்
இப்பணி தலைமேற் கொண்டேன்
மின்னொளிர் கானமின்றே
போகின்றேன் விடையுங் கொண்டேன்
நும்பணி மறுப்பெனோ என்
பின்னவன் பெற்ற செல்வம்
அடியனேன் பெற்ற தன்றோ
என்னினி யுறுதி யப்பால்
இப்பணி தலைமேற் கொண்டேன்
மின்னொளிர் கானமின்றே
போகின்றேன் விடையுங் கொண்டேன்
எனக்கூறி அவளடி பணிந்து போற்றித் தன்
தந்தையின் அடிகளைத் திசைநோக்கிக் கும்பிட்டு சென்று கோசலை
அரண்மனையையடைந்தான் எனவும் கம்பர் கூறுகிறார். இவ்வாறு வால்மீகி கூறும்
உண்மையான வரலாற்றை மறைத்து, மேலே கண்டபடி கம்பர் பொய் கூறியது தசரதனையும்,
இராமனையும் மிக நல்லவர்களாகக் காட்டவும், அவர்களுடைய இழிவான செயல்களையும்,
குணத்தையும் மறைக்கவுமே.
தசரதனும் இராமனும் ஒருவரையோருவர்
பார்க்காதபடியே, கூசாமல் பொய்க்கதை கூறிப் போகிறார். இவர்தம் துணிபு என்னே?
உண்மையை உணரும் உலகம் இப்பொய்மை யாளரும் வஞ்சகருமாகிய கம்பரை இகழாது என்
செய்யும்? அதனை உணர்ந்த கம்பரும் வையமென்னை யிகழவும் என்று முதலிலேயே
கூறுவதாக இவ்வா ராய்ச்சித் தொடர்ச்சியிலேயே எடுத்துக் காட்டினோம்.
இனத்துரோகம் செய்தார்.
தம்முடைய இனமாகிய தமிழ் மக்களை உண்மையை
உணரவிடாதபடி பொய்க்கதை கூறி ஏமாற்றித் தமிழ் மக்களுக்கு நேர் விரோதியான
இராமனைத் தம் தெய்வம் போலும் எண்ணச் செய்து விட்டாரே! ஆரியனாகிய இராமன்
தமிழ் மக்களுக்கு நேர் விரோதியென்னும் உண்மைகள் மிகத்தெளிவாக வரவர
விளங்கும்.
22 comments:
கேரள ஆளுநர் பி. சதாசிவம் அவர்களுக்கு வாழ்த்தும் - பாராட்டும்!
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணி செய்து, ஓய்வு பெற்ற நிலையில், ஜஸ்டீஸ் திரு. பி. சதாசிவம் அவர்கள், கேரள ஆளுநராக மத்திய அரசால் நியமிக் கப்பட்டிருக்கிறார்.
இவரது இந்த நிய மனம் பெரிதும் வரவேற் கப்பட வேண்டிய ஒன்று ஆகும். ஒரு தமிழர் - அதுவும் பெரியார் மண் ணிலிருந்து இந்தப் பொறுப்பை- வைக்கம் போராட்டம் நிகழ்த்திய மண்ணுக்கு ஆளுநர் ஆகப் பொறுப் பேற்கிறார் என்பது, அரசியல், மற்ற விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு மகிழத்தக்கதே ஆகும்!
இதற்கு முன் தமிழ்நாட்டு ஆளுநராக கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட, உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற செல்வி பாத்திமா பீவி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளாரே!
அதுபோலவே காஷ்மீர் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும் ஆளுநராக நியமனம் பெற்றுள்ளார்!
எனவே முன் மாதிரிகளும்கூட இருந்துள்ளன. அரசியல் சட்டரீதியாக இந்த நியமனத்திற்கு எதிரான பிரிவுகள் ஏதும் இல்லை.
மற்றொன்றும்கூட சுட்டிக்காட்டப்பட வேண்டும். ஆளுநர்கள் ஒரு மாநிலத்தில் இல்லாதபோதோ, அல்லது தற்காலிகமாக அப்பதவி காலியாக உள்ள போதோ, ஆக்டிங் கவர்னராக - பொறுப்பு ஆளுன ராக, அந்தந்த மாநில தலைமை நீதிபதிகள் (சிலீவீமீயீ யிவீநீமீ) தானே பொறுப்பேற்கின்ற நடைமுறை சட்ட ரீதியாக உள்ளது.
எனவே, இதைப்பற்றி சர்ச்சைகள்பற்றிக் கவலைப் படாமல், ஜஸ்டீஸ் திரு சதாசிவம் அவர்கள் அப் பதவியில் அமர்ந்து தனது கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவார் என்று நாம் நம்பி, பாராட்டுதல் களையும், நமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
சென்னை தலைவர்
5.9.2014
Read more: http://viduthalai.in/e-paper/87124.html#ixzz3CRpuJ8Iw
ஆஸ்திரேலியாவிலிருந்து பரோல் முடிந்து திரும்பும் நம் கடவுள்கள்!
ஆஸ்திரேலியாவிலிருந்து அரியலூர் ஸ்ரீபுரந்தான் கோவிலில் இருந்த 1050 ஆண்டு பழமை வாய்ந்த நடராஜர் சிலை 2006-இல் திருட்டுப் போனது.
இதன் மதிப்பு 31 கோடி ரூபாயாம்! அதே போல விருத்தாசலத்தில் உள்ள விருத்த கிரீஸ்வரர் கோவில் 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்த மற்றொரு சிலை- இதன் மதிப்பு 3 கோடி ரூபாயாம்!
தமிழக கோவில்களிலிருந்து கடத்தப்பட்ட இந்த சிலைகளை சுபாஷ் சந்திரகபூர் என்ற வடநாட்டுப் பேர் வழி, ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றுக்கு பல கோடிக்கு விற்பனை செய்ததாக தெரிய வந்ததாம்!
நமது சிலை திருட்டு தடுப்புக் காவல்துறை பிரிவினர் அங்கே சென்று கண்டுபிடித்து, ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்குப் புகார் கூறியபின், அவ்வரசின் மூலம் ஆஸ்திரேலியா வந்துள்ளது. இப்போது ஆஸ்திரேலிய பிரதமர், புதுடில்லியில் நமது பிரதமரிடம் பத்திரமாக ஒப்படைக்கவிருக்கிறாராம்!
பிரதமர் அமைச்சர்கள் மட்டும் வெளி நாடுகளுக்குச் சென்றால் போதுமா? காலங் காலமாக காராக்கிரகத்தில் வவ்வால் புழுக்கை நாற்றத்தில் அடைந்து கிடக்கும் நம் கடவுள், கடவுளச்சிகளும் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று வர வேண்டாமா?
அதனால்தான் அரியலூர் நடராஜப் பெருமானும், விருத்தாசலம் கடவுளும் ஆஸ்திரேலியா பயணமாகி விட்டனர் போலும்!
ஆஸ்திரேலியப் பிரதமரான வெள்ளைக் காரர் நம் ஹிந்து கடவுளர்களை மிக பத்திர மாகக் கூட்டி வந்து, நீங்கள் ஜப்பானிலிருந்துத் திரும்பி சென்று வந்துள்ளீர்கள்;
நீங்கள் வணங்கும் கடவுள்களோ, எங்கள் நாட்டு அருங்காட்சியகத்தில் 8 ஆண்டுகள் வாசஞ் செய்து விட்டு, சுகம் அனுபவிக்கிறார்கள் அபிஷேகம் - அப்படி இப்படி என்ற எந்தத் தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக இருந்து விட்டு - இப்போது சொந்த நாடு திரும்பி யுள்ளனர் - எனது துணையோடு என்று சொல்லாமற் ஆஸ்திரேலியப் பிரதமர் சொல்லக் கூடும்!
நம்ம கடவுள்களின் சக்தியே சக்திதான்! எப்படியும் சிலை தடுப்புக்கும், திருடிய பொருளை மீட்பதற்கும் மனித உதவி, காவல் துறையினர் உதவி தானே தேவைப்படுகிறது?
கடவுளை மற, மனிதனை நினை என்றாரே பெரியார் - அதன் பொருள் இப்போதாவது விளங்குகிறதா?
இவ்வளவு பத்திரமாக பெரிய மதில் சுவர்கள் நெடுங் கதவுகள், பூட்டுப் போட்ட நிலை எல்லாம் இருந்தும் சிறையில் இருந்த சர்வ சக்தி(?)க் கடவுளர்கள் திருடப்பட்டு ஆஸ்தி ரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டு - பரோல் முடிந்து திரும்புவதுபோல திரும்புகின்றனரே, பலே, பலே நாம் இதற்கொரு சம்ப்ரோட்சண உத்சவம் நடத்திக் கொண்டாட வேண்டாமோ? முன்பு சிவபுரத்து நடராஜர் திரும்பினார்.
இப்போது அரியலூர் நடராஜர் பரோல் முடிந்து பத்திரமாக ஊர் திரும்பியுள்ளார்.
ஆனால், ஒரே ஒரு வருத்தம் தான்! போயும் போயும் இந்த மிலேச்சர் வெள்ளைக்காரனான ஆஸ்திரேலியாக்காரனோடா நம்ம ஆபத் பாந்தவன், அனாதைரட்சகன், சர்வ சக்தி நடராஜன் திரும்புவது; நமக்கு தோஷ மில்லையா எப்படி தோஷம் கழிப்பது?
இராம. கோபாலய்யரை அல்லது வழக்கு புகழ் காஞ்சி மட ஆதிபதிகளையோ கேட்டு முடிவு செய்தால் நன்னா இருக்கும்! இல்லையா?
Read more: http://viduthalai.in/e-paper/87122.html#ixzz3CRqGWWLH
முன்னேற்றமடையவோ முடியாது
மதக் கட்டளையையும், கடவுள் நம்பிக்கையையும் கொண்ட ஒரு அடிமை, ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் ஒரு நாளும் விடுதலை அடையவோ, முன்னேற்றமடையவோ முடியவே முடியாது.
(குடிஅரசு, 7.5.1933)
Read more: http://viduthalai.in/page-2/87131.html#ixzz3CRrIGJqp
தமிழ்நாட்டில் தமிழில் வழிபாடு
தமிழில் கல்வி, தமிழிசை, தமிழில் நீதி என்றெல்லாம் இன்னும் முழு மூச்சாக முயற்சிக்காமல், வழிபாட்டில் தமிழ் என சிலர் ஊடுருவ முனைந்துள்ளனர் என திரு லா.சு. ரங்கராஜன் என்பார் அவர்கள் வழக்கமான பாணியில் தினமணியில் (20.10.2012) கட்டுரை வரைந்துள்ளார்.
ஒரு சிலருக்கு வரும் வரும்படி பாதிக்குமேயெனக் கருதி தமிழில் வழிபாடு என்பது அவருக்கு ஊடுருவல் போலத் தோற்றமளிக்கின்றது. தமிழ்நாட்டில் தமிழ் கூடாதோ! இனி திருக்கோயில்கள் தோறும் தமிழில் மட்டுமே வழிபட வேண்டும் என இறைவன் திருமறைக்காட்டில் திருவிளை யாடலைத் தொடங்கினான்.இச்செய்தியை தினமணி அப்போதே வெளியிட்டது.
எல்லாவற்றிற்கும் அய்ரோப்பாவை உதாரணம் கூறுவோரே, அங்கே லத்தீன் மொழி வழிபாட்டை தூக்கி எறிந்து அவரவர் தாய்மொழி வழிபாட்டை நடைமுறைப் படுத்திய வரலாறு மறந்து போனது ஏன்? உலகில் எல்லா நாடுகளிலும் அவரவர் தாய்மொழி மூலம் தானே வழிபாடு, கல்வி, ஆட்சி நடைபெறுகின்றது.
மேலும், கி.மு. 1500 வாக்கில் இந்தியாவில் குடியேறிய சிறுபான்மையினர், பன்னிகு திருமுறை, சிவஞானபோதம் போன்றவற்றை தம் மொழிக்கு மொழிபெயர்த்துக் கொண்டு பின் நாளில் மொழி பெயர்ப்புதான் மூலம் என கதைத்த வரலாற்றை தமிழ்ப் பேரறிஞர் திருச்சிற்றம்பலம் மு. அருணாசலம் தனது தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூலில் (14 தொகுதிகள்) விரிவாக விளக்கி விட்டாரே!
தமிழனுக்கு தமிழில் வழிபாடு செய் கின்ற எண்ணம் கூடாதா? அது என்ன தவறா? இறைவனே விரும்பி தமிழ் வழிபாடு வேண்டும் எனக் கூறியதாக பெரிய புராணத்திலேயே உள்ளதே!
- பெ. சிவசுப்பிரமணியன்
ஆட்சி அலுவலர் (ஓய்வு)./ தலைவர்
தாயுமானசுவாமி தமிழ்வளர்ச்சி மன்றம்,
சென்னை - 600 081
Read more: http://viduthalai.in/page-2/87143.html#ixzz3CRrWo8xV
காணவில்லை!
திருடுபோன மோதிரம்
திரும்பவுமே கிடைத்திட்டால்
விரும்பி வந்து செய்திடுவேன்
திருப்பணிக்கு பொருளுதவி
என்று நானும் நித்தமுமே
வேண்டி வந்தேன் சாமியிடம்
வேண்டுதலும் பலித்தது
மோதிரமும் கிடைத்தது
பொருளுதவி அளிப்பதற்கு
திருக்கோயில் சென்ற போது சாமிசிலை திருடுபோன
சங்கதியைக் கேட்டேன்
அந்தசாமி கிடைப்பதற்கு
எந்தசாமியை வேண்டுவேன்?
மா.அமிர்தலிங்கம், சென்னை
Read more: http://viduthalai.in/page-7/87114.html#ixzz3CRsSnTwh
போலிக் கடவுள்கள்
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் உள்ள விக்கிரகங்களில் பெரும்பாலானவை உண்மையானவை அல்ல; போலிகளேயாகும். பணத்திற்கு ஆசைப்பட்டு, பல்வேறு புராதன விக்கிரகங்கள் வெளிநாடு களுக்குக் கடத்தப்பட்டு வருவதால், தற்போது கோயில் களில், நாம் வணங்கும் பல்வேறு கடவுள்களின் சிலைகள் போலிகளே!
விக்கிரகங்களைக் கடத்துபவர்கள் அசல்போலவே காட்சி அளிக்கும் போலி விக்கிரகங்களை நிர்மாணித்து விட்டுச் சென்று விடுவதால் அந்த விக்கிரகங்கள் மீது எவருக்கும் சந்தேகம் வருவதில்லை.
விக்கிரக திருடர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் கொடுக்கும் வாக்கு மூலத்தைக் கொண்டே, இன்னின்ன கோயில்களில் உள்ள விக்கிரகங்கள் போலியானவை என்று பொதுமக்களுக்குத் தெரிய வருகிறது.
சமீபத்தில் சர்ச்சைக்குட்பட்ட சிவபுரத்து நடராசன் விக்ரகம் தமிழகத் திலிருந்து ரூ.5 ஆயிரத்துக்கு விற்கப் பட்டு, 15 ஆயிரம், 5 லட்சம், 35 லட்சம் என்று 3 பேர் கை மாறி, கடைசியில் ஒருவரால் 75 லட்சம் கொடுத்து வாங்கப்பட்டது.
அவ்வளவு மதிப்பு வாய்ந்த நடராசன் விக்கிரகம் களவு போன விஷயமே 7 ஆண்டுகளுக்குப் பின்னரே நமக்குத் தெரியவந்தது. சென்னை நகர சி.அய்.டி. போலீஸ் சூப்ரின் டெண்டன்ட் கே.வி.ஞானசம்பந்தம் ஒரு கருத்தரங்கில் வெளியிட்ட விவரமே இவை.
(ஆதாரம்: 8.12.1975, தினமணி, 2ஆம் பக்கம்)
Read more: http://viduthalai.in/page-7/87114.html#ixzz3CRscrN8x
குமுதம் ஒப்புக்கொள்ளுமா?
ஆசிரியர் அவர்கட்கு!
குழந்தையும், தெய்வமும் ஒன்று; அறியாமல் செய்த பிழைகள் அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன என்று ஆஸ்திகர்கள் வாய்கிழியப் பேசுகிறார்கள். ஆனால் நடப்பது என்ன?
15.11.1979ஆம் தேதி வெளிவந்த குமுதம் இதழின் பகுதியினை இங்கே தருகிறோம்.
கோபாலகிருட்டிணன் என்பவர் தன்னுடைய 7 மாத பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு குருவாயூரப்பன் சன்னிதானத்திற்குச் சென்றாராம். அவ்வமயம் அந்தப் பச்சிளங்குழந்தை அக்கோவிலுக்குள் சிறுநீர் இருந்து விட்டதாம். உடனே அக்கோவில் நிர்வாகிகள், உன் குழந்தை கோவிலை அசுத்தப்படுத்தி (களங்கப்படுத்தி) விட்டது.
ஆகையால், அதை (கோவிலை) புனிதப்படுத்த ரூ.14.37 என்று கூறி வசூலித்து விட்டார்களாம். (இது அதிகாலையில் நடந்ததினால் குறைந்த தொகை; இந்த நிகழ்ச்சி பிற்பகலில் என்றால் ரூபாய் 3000 வரை கட்ட வேண்டியிருக்கும். உனக்கு கெட்ட நேரத்திலும் நல்ல நேரம் போ- என்று கூறினார் களாம்.
பணம் கொடுத்தால் புனிதமாகி விடும் என்று கூறுகிறார்களே! அப்படியானால், சாமியையே (சிலை) அசிங்கப்படுத்துகிறோம்; உடனே அபராதத்தொகை கட்டி னால் அந்தச் சிலை புனிதமாகி விடும் அல்லவா! (எவ்வளவு பணம் என்றாலும்) அதற்கு அவர்கள் சம்மதிப்பார்களா? (அல்லது) விபச்சாரமே (அதிகாலையில்) நடக்கிறது .
அதனால் அந்த இடம் களங்கப்பட்டு விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்; உடனே அபராதம் கட்டி அந்த இடத்தை புனிதப்படுத்தி விடலாம். இதற்கு அவர்கள் ஒத்துக் கொள்வார்களா?
(விபச்சாரம் செய்வதையே இன்றைய தினம் விழாவாகக் கொண்டாடுகிறார்கள் - சித்திரை திருவிழாவின் பிற் பகுதி)
ஆனால், அறியாமல் செய்த சிறு குழந்தைக்கு இந்த அபராதம் ஏன்? நன்றாக சிந்திப்பீர். பக்திக்கு வக்காலத்து வாங்கும் குமுதமும் குமுதத்தின் அரசும் புத்தி வந்து திருந்தி னால் சரி.
கோசு.இராசா, மதுரை
Read more: http://viduthalai.in/page-7/87115.html#ixzz3CRswQm8X
தந்தை பெரியார் பொன்மொழி
மனிதனுடைய எண்ணம் விரிவடைந்து முன்னேறிக் கொண்டு போவதே இயற்கையாய் இருப்பதால், முற்போக்குக்கு அவசியமான மார்க்கங் களைக் கைப்பற்றவும் கண்டுபிடிக்கவும் முயலவேண்டும்.
Read more: http://viduthalai.in/page-7/87115.html#ixzz3CRt7ugpm
சமூகப் புரட்சி
ஒரு பெரிய சமூகப் புரட்சி உண் டாகாமல் அபேதவாதிகள் (சோஷலிஸ்ட்) விரும்பும் பொருளாதார சுதந்திரம் ஏற்பட போவதில்லை என்பது உறுதி. புரட்சி செய்து அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானால் ஏழை - எளியோர் முன் வந்துதான் ஆக வேண்டும். ஏனையோர், தம்மை சமமாகவும், சகோதர உணர்வுடனும், நீதியாகவும் நடத்துகிறார்கள் என்ற நம்பிக்கை இருந்தால்தான் பாமர மக்கள் மற்ற மக்க ளுடன் சேர்ந்து புரட்சி செய்வார்கள்.
வெற்றி பெற்ற பிறகு ஜாதி - மதவேற்றுமை பாராட்டாமல் சமத்துவமாக நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலொழிய எத்தகைய புரட்சிக்கும் மக்கள் முன் வரமாட்டார்கள். ஜாதியில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று வாயளவில் மட்டும் அபேதவாதிகள் கூறிவிட்டால் போதாது. ஜாதி உயர்வு - தாழ்வு பிரச்சினையை முடிவு செய்யாமல் அபேத வாதிகள் ஒரு விநாடி கூட ஆட்சி நடத்த முடியாது.
- டாக்டர் அம்பேத்கர்
Read more: http://viduthalai.in/page-7/87115.html#ixzz3CRtJPMVz
முன்னேற்றத்திற்கு அதிர்ஷ்டத்தை நம்புகிறவன் சோம்பேறி அவன் ஒரு காலும் உயர்வடையமாட்டான். தன் உழைப்பை நம்புகிறவனே மனிதன். நிச்சயம் அவன் உயர்வடைவான். - இப்ஸன்
Read more: http://viduthalai.in/page-7/87115.html#ixzz3CRtQSDdr
சிக்கலில் வாரியார்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
மகாபாரதத்தில் துரோணர் காணிக்கையாக கேட்டு ஏகலைவன் கட்டை விரலை வெட்டிக் கொடுக்க வில்லை என்று மதுரையில் கிருபானந்தவாரியார் புராண பிரசங்கம் செய்த பொழுது கிருஷ்ண ஆரியா என்பவர் எழுந்து, இல்லை இல்லை, துரோணர் கேட்டுத்தான் ஏகலைவன் தன் கட்டை விரலைக் கொடுத்தான் என்று மறுப்புக் கூறினார்.
இருவரும் ஒருவருக்கொருவர் ஒரு லட்சம் ரூபாய் பந்தயம் கட்டிக் கொண்டனர். மகாபாரதத்தில் கிருஷ்ண ஆரியா சொல்லியபடிதான் உள்ளது. ஆனால் , வாரியார் சொன்ன படி நடந்து கொள்ளவில்லை. அதனால் கிருஷ்ண ஆரியா வாரியார் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். மதுரை அடிஷனல் முதலாவது சப்- மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
15.1.2.1979-உண்மை
Read more: http://viduthalai.in/page-7/87116.html#ixzz3CRtZNSK9
கோயில் பெருச்சாளிகள்
தினசரி சிறீரெங்கநாத சாமி கோயிலில் 6 கால பூஜை நடக்கிறது. பொங்கல், புளியோதரை, ததிஅன்னம், வடை, அதிரசம், தேன்குழல், தோசை, பாயாசம், சுக்கு நீர், இவைகள் படைக்கப்படுகின்றன. பூஜை முடிந்தவுடன் மேற்படி ஸ்தலத்தார் (பட்டர்கள் 4, அண்ணங்கார் 2, ஜீயர்கள் 2, ஆக 8 பேர்) திரைபோட்டுக் கொண்டு பங்கு பிரித்துகொள்ள ஒரு மணி நேரம் ஆகிறது.
முன்னாள் மடாலய அமைச்சர் வெங்கடசாமி நாயுடுவிடம், ஆர்.ராஜகோபாலய்யங்கார் என்ற பார்ப்பனர் கொடுத்த புகார் மனு இது.
ஆதாரம்: 6.11.1954, விடுதலை
Read more: http://viduthalai.in/page-7/87116.html#ixzz3CRtgYpEk
சர்வ சக்தி(?)
மேற்கு வங்காளம் கொத்தல் பூரிலிருந்து கடந்த 24ஆம் தேதி நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 60 பேர்கள் குடும் பத்துடன் தமிழ்நாட்டுக் குச் சுற்றுலா புறப்பட்டு வந்தனர். சமையல் செய்து சாப்பிடுவதற்கு 6 சமையல் எரிவாயு உருளைகளையும் (சிலிண்டர்களையும்) பேருந்தில் ஏற்றியிருந் தனர். 30.8.2014 இரவு 10 மணியளவில் கன்னியா குமரி சென்று கொண்டி ருக்கும்போது திருபுல் லாணி தாதனேந்தல் பேருந்து நிறுத்தம் அரு கில் பேருந்து வந்தபோது, பேருந்தின் பின்புறத்தில் திடீரென தீபிடித்தது.
ஓட்டுநர் அவசர அவசரமாக பேருந்தை சாலை ஓரத்தில் சாமர்த் தியமாக நிறுத்தினார். பேருந்துக்குள்ளிருந்த சமையல் வாயு உருளை யும் வெடித்தது. பயணி கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி னர். ஆனால் வயது மூப் படைந்த 5 பேர் விரை வாக வெளியேற முடி யாத நிலையில் கருகிப் போனார்கள் என்பது பெரி தும் வருந்தத்தக்கதாகும்.
இவ்வளவுக்கும் இந்தப் பயணிகள் தமிழ கம் வந்தது கோயில் தலங்களைச் சுற்றிப் பார்த்து சாமி தரிசனம் செய்யத்தான்! திருப்பதி ஏழுமலையான் கோயி லில் தரிசனத்தைத் தொடங் கிய இவர்கள் வழியில் காஞ்சீபுரம், திருக்கழுக் குன்றம், சிறீரங்கம், இராமேசுவரம் உட்பட பல கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.
கன்னியாகுமரி சென்று அங்குள்ள அம் மனை வழிபடச் சென்ற வர்களுக்குத்தான் இந்தப் பரிதாப நிலை ஏற்பட் டுள்ளது.
கோயிலுக்குச் சாமி கும்பிட சென்றவர்கள், கோயில் திரு விழாக் களுக்குச் செல்லக் கூடிய வர்கள். இதுபோன்ற விபத்துக்களில் சிக்கி பரிதாபகரமாக மரணம் அடைவது அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இன்றுகூட விநாயகர் பொம்மையை நீரில் கரைக்கச் சென்ற ஓமலூர் கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி மரணம்! பொள்ளாச்சி அருகே சிலைகளைக் கரைக்க காரில் சென்ற இந்து முன்னணியினர் மூவர் விபத்தில் மரணம் என்ற செய்திகள் வெளி வந்துள்ளன. இவ்வளவுக்குப் பிற கும் கோயில் கோயிலாக மக்கள் போவதும், சாமி தரிசனம் செய்வதும், நேர்த் திக் கடன் கழிப்பதும் சரியானதுதானா? என் பதைச் சிந்திக்க வேண் டாமா?
கடவுள் என்ற ஒருவர் இருந்தால், அவருக்குச் சக்தி இருக்கிறது என்பது உண்மையென்றால் கரு ணையே வடிவமானவன் என்று எழுதி வைத்திருப் பதில் கடுகளவு யதார்த் தம் இருக்குமேயானால், நாட்டு மக்களைக் காப் பாற்றுவது ஒருபுறம் இருக் கட்டும்; குறைந்தபட்சம் தன்னை நாடி வந்த பக்தர்களையாவது காப் பாற்ற வேண்டாமா?
பக்தி வந்தால் புத்தி போகும் என்று பெரியார் சொன்னது கேலிக்கல்ல வாழ்க்கையின் யதார்த் தம் என்பதை மக்கள் உணரட்டும்!
- மயிலாடன்
Read more: http://viduthalai.in/page1/86915.html#ixzz3CRu5E8xp
நிரந்தர விரோதி
நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூடநம்பிக்கை யும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கின்றன.
(குடிஅரசு, 13.4.1930)
Read more: http://viduthalai.in/page1/86927.html#ixzz3CRuSUl9q
தேனினும் இனிய விடுதலை
22.8.2014 நாளிட்ட விடுதலை நாளிதழில் வெளிவந்துள்ள செய்திகள் அனைத்தும் அருமை. அவை பாதுகாக்கப்பட வேண் டிய பாதுகாப்புப் பெட்டகமாகவும், கருத் துக் கருவூலமாகவும் திகழ்கின்றன. குறிப்பாக
1) ஜாதி - தீண்டாமை ஒழிய அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமையினை நிறைவேற்றித் தருமாறு முதல்வர் ஜெயலலிதா அவர்களை வலி யுறுத்தி தமிழர் தலைவர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை மற்றும் கோமாதா ஆந்திராவில் படுத்தியபாடு!
2) நம்ம தியாகராயர் நகர்! - கோவி. லெனின் அவர்கள் எழுதிய கட்டுரை.
3) 375-ஆம் ஆண்டில் சென்னை நகரம்! - தலையங்கம், கைவல்யம் நாள் (22.8.1877).
4) சிப்பாய்க் கலகம் சுதந்திரப் போராட்டம் அல்ல - மதப்போராட்டமே என்று சொன்னவர் தந்தை பெரியார்! என் கின்ற அரிய என் போன்ற இளைஞர் களுக்கும் - மாணவர்களுக்கும் புதிய தகவலை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய சிறப்புக் கூட்டத்தில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாரி வழங்கிய பல வரலாற்றுத் தகவல்கள்.
5) மாணவர்களுக்கான பெரியார் 1000 வினா - விடைப் போட்டி நடைமுறைகள்!
6) பகுத்தறிவுக் களஞ்சியம் பகுதியில்; புத்தர் அறிவுரைகள், தந்தை பெரியார் பொன்மொழி மற்றும் தாய்மார்களுக்கு தந்தை பெரியார் அறிவுரை, மருத்துவம் வென்றது, விடை என்ன? என்ற தலைப்பில் ஆத்திகவாதிகளுக்கு அடுக்கடுக்கான அர்த்தமுள்ள கேள்விகள் ஆகியவை மக்களை சிந்திக்கத் தூண்டுகின்றன.
7) மேலும், சென்னையின் 375 ஆம் ஆண்டில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் வரலாற்றுக் கொண்டாட்டம் - நடைப்பயணம்! நடைப்பயணம் மேற் கொண்ட கழக முன்னோடிகள் - தோழர்கள் ஆகியோர் தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலை முன்பும், தியாகராயர் நகர் டாக்டர் நடேசன் பூங்காவிலும் எடுத்துக்கொண்ட வண்ணப் புகைப்படங்கள் கண்களைக் கவர்ந்தன.
8) இறுதியாக, நாளைய தலைமுறைக் கான நாற்றங்கால் - பெரியார் 1000! போன்ற எண்ணற்ற பயனுள்ள செய்திகள் இளைஞர் களுக்கும், மாணவர்களுக்கும் விருந்தாக வும் அரு மருந்தாகவும் அமைந்தது.
இவ்வாறு தேனினும் இனிய செய்தி களைத் தாங்கி பல வண்ணங்களுடனும், பகுத்தறிவு எண்ணங்களுடனும் நாள் தோறும் வெளிவருகின்ற உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளேட் டினை இளைஞர்களும் - மாணவர்களும் ஆவலுடன் படித்துப் பாராட்டி மகிழ் கின்றனர், போற்றிப் புகழ்கின்றனர்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
- சீ.இலட்சுமிபதி, தாம்பரம், சென்னை-45
Read more: http://viduthalai.in/page1/86924.html#ixzz3CRufCWbD
நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்
நெல்லிக்காய் லேகியம்: 150 கிராம் பனை வெல்லத்துடன் இரண்டு ஆழாக்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பனைவெல்லம் கரைந்தவுடன் இறக்கி இதனை மேலாக இறுத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் விட வேண்டும்.
பின்னர் அடுப்பில் வைத்து அதனுடன் ஒரு ஆழாக்கு அளவு சுத்தமான பசும்பால் விட்டு நன்றாக கொதித்து வரும் சமயம், இடித்து சலித்த நெல்லிக்காய் வற்றல் தூளில் ஆழாக்கு அளவு இதில் போட்டு பாகுபதம் வரும்போது, அரை ஆழாக்கு தேன், அரைஆழாக்கு சுத்தமான பசு நெய்யினை விட்டுக் கிளறி லேகியபதம் வந்தவுடன் இறக்கவேண்டும்.
ஆறிய பின்னர் வாயகன்ற பாட்டிலில் இட்டு மூடி வைத்து தினசரி காலை மற்றும் மாலையில் தேக்கரண்டி சாப்பிடலாம்.
இந்த லேகியம் வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகியவற்றை சமன் செய்யும். உடலுக்குப் பலத்தை தருவதுடன், பித்தம் காரணமாக ஏற்படும் கிறுகிறுப்பு, வாந்தி, அரோசிகம் மாறும். ரத்தம் சுத்தமாகும்.
பெருங்குடல், சிறுகுடல், இரைப்பைகளில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும். சொறி, சிரங்கு நமைச்சல் குணமாகும். கருவுற்ற நிலையில் 21 நாள்கள் சாப்பிட சுகப்பிரசவம் ஏற்படும். கருப்பை கோளாறுகளைக் குணப்படுத்தும். காய கல்ப மாக செயல்படும் இந்த லேகியம் 3 மாதம் வரை கெடாது.
நெல்லிக்காய் வடாம்: ஒரு படி நெல்லிக்காயை கொஞ்சம் கொஞ்சமாக உரலில் போட்டு இடித்தால் மசித்து அதன் வித்துக்கள் வெளியேறும். நைந்தபின் வித்துக்களை நீக்கி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
எல்லாக் காய்களையும் இடித்த பின் பெரிய பச்சை மிளகாயில் 10-ம், இரண்டு கொட்டை பாக்களவு தோல் சீவிய இஞ்சி, கைப்பிடியளவு கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு ஆகியன சேர்த்து மறுபடியும் உரலில் போட்டு மைபோல் இடிக்கவேண்டும்.
பின்னர் அதனை எடுத்து உளுந்து வடை அளவிற்கு அடையாகத் தட்டி சுத்தமான பாயில் வைத்து, வெயிலில் உலர்த்தவேண்டும்.
நீர் சுண்டி சருகுபோல காய்ந்த பின் எடுத்து ஜாடியில் அடுக்கி மூடி வைத்துவிட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவேண்டும். இது வெகுநாட்கள் கெடாது.
நெல்லிக்காய் சஞ்சீவி லேகியம்: நன்றாக பழுத்த நெல்லிப்பழங்களின் விதைகளை நீக்கி வெயிலில் சருகாக உலரவிட வேண்டும். பின்னர் அதனை உரலில் இடித்து சலித்துக் கொள்ள வேண்டும்.
சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை தலா 5 கிராம் எடுத்து இடித்து சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இரண் டாழாக்கு பசுவின் பாலை நன்றாக கொதிக்க வைத்து, அதில் 200 கிராம் பனைவெல்லத்தை போட்டு பாகு பதம் வரும் சமயம், அரை ஆழாக்கு சுத்தமான தேனை விட்டு சுக்கு, மிளகு, திப்பிலி தூளையும் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி ஒரு வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி தேக்கரண்டி காலையில் மட்டும் சாப்பிட்டு வர 40 நாளில் ரத்தம் சுத்தமாகும்.
Read more: http://viduthalai.in/page1/86883.html#ixzz3CRvVQz1K
நோய்களை விரட்டியடிக்கும் செவ்வாழைப்பழம்
எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புசத்தும், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களை கொண்டது.
செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ் டரீகா மற்றும் கியூபா என கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு ஆகாரத்துக்கு பிறகு தொடர்ந்து 40 நாள்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.
பல்வலி, பல்லசைவு போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாள்கள் செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற தோல் வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும் செவ்வாழை பழத்தைத் தொடர்ந்து 7 நாள்கள் சாப்பிட்டு வர சரும நோய் குணமாகும். நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும்.
எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட வர்கள் தினசரி இரவு செவ்வாழைப்பழம் சாப்பிடவேண்டும். தொடர்ந்து 48 நாள்கள் செவ்வாழை சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை தன்மை சீரடையும்.
Read more: http://viduthalai.in/page1/86883.html#ixzz3CRvedmQN
ரத்த அணுக்களை பெருக்கும் முருங்கைக் கீரை
உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது. தோலை உரிக்காமல் வேக வைக்கும்போது வைட்டமின் பி, சி மற்றும் தோலில் காணப்படும் தாதுக்கள் பாதுகாக்கப்படுகின்றன.
பாசிப் பயறுதான் மற்ற பயறுகளைவிட எளிதில் செரிமானமடைவதுடன் உடலால் விரைவில் ஏற்றுக் கொள் ளப்படுகிறது. காரணம், இது சிறிய அளவில் இருப்பதால் எளிதில் வெந்துவிடுகிறது. பாசிப் பயறை அதிகமாகச் சாப்பிடுவதால் குடல் பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் வாயுக்களை உற்பத்தி செய்து கழிவை ஏற்படுத்துகின்றன.
தினசரி கொய்யாப் பழம் சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகமாகும். ரத்த சோகை வராமல் தடுக்கலாம்.
நம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வெங்காயம், கேரட் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
பார்லி நீரை தினமும் அருந்திவந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
துளசி இலையைக் கசக்கி முகத்தில் தேய்த்துக் கொண்டு இரவில் படுத்து, காலையில் எழுந்து முகம் கழுவினால் முகம் அழகு பெறும்.
முதல் நாள் இரவில் உலர்ந்த திராட்சைப் பழங்களைத் தண்ணீரில் ஊறவைத்து, மறு நாள் காலையில் வெறும் வயிற்றில் பழங்களைச் சாப்பிட்டு தண்ணீரையும் குடித்தல் உடல் நன்கு சக்தி பெறும்.
வாரத்தில் இரண்டு நாட்களாவது முருங்கைக் கீரையை சாப்பிட்டு வர ரத்த அணுக்கள் அதிகமாக உற்பத்தியாகும்.
சுரைக்காயை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து தொப்பைக் கரையும்.
வால் மிளகு பசியைத் தூண்டிவிடும். செரிமான சக்தியை உண்டாக்கும். கபத்தையும் வாயுவையும் போக்கும்.
Read more: http://viduthalai.in/page1/86886.html#ixzz3CRvuW3Zd
இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளைத் திருப்பிக் கொடுக்கக் கூடாது என்று சுப்பிரமணியசாமி சொல்லுவதா?
சுப்பிரமணியசாமிகளை தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்கக் கூடாது! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
தமிழக மீனவர்களை விடுவிக்கலாம்; ஆனால் அவர்களின் படகுகளைத் திருப்பிக் கொடுக்கக் கூடாது என்று கூறும் சுப்பிரமணிய சாமிகளைத் தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமே மீன்பிடித் தொழிலாகும். அவர்கள் கடலில் சென்று தம் தொழிலை மிகப் பெரிய சூறாவளி, கடல் சீற்றம் - இவைகளை யெல்லாம் பொருட்படுத்தாது, தம் வாழ்வைப் பணயம் வைத்து மேற்கொண்டு வரும் இத்தொழிலையே செய்ய இயலாத வகையில், சிங்களக் கப்பற்படையினராலும், ஆதரவு காட்ட வேண்டிய நமது கடலோரக் கப்பற் படையினராலும் பல்வேறு இடையூறுகளையும் இடை யறாது சந்தித்து வருகின்ற அவலம் அன்றாடத் தொடர் கதையாகியுள்ளது.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியால் சாதிக்க முடியாததை தாம் சாதித்துக் காட்டப் போவதாக மார்தட்டிய பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில், எந்தப் பெரிய மாறுதலும் இன்றி அவர்களது வேதனையான வாழ்வுக்கான கெடுபிடிகளும், சிறை வாசங்களும், படகுப் பறிப்புகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
ஒரு சிலரை விடுதலை செய்து வித்தை காட்டியது இராஜபக்சே அரசு.
யார் இந்த சுப்பிரமணியசாமி?
இந்த நிலையில் தமிழ் இன விரோதி சுப்பிரமணிய சுவாமி என்ற பார்ப்பனர், பா.ஜ.க.வுக்குள் புகுந்து கொண்டு தான் தான் ஏதோ இலங்கை அதிபர் இராஜபக்சேவையே வழி நடத்துபவர்போல பீற்றிக் கொள்வதோடு, பகிரங்கமாக மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு வேட்டு வைக்கும் வகையில் பேசியும், பேட்டி கொடுத்தும் வருகிறார். இவருக்கு மத்திய ஆட்சியில் அளிக்கப் பட்டுள்ள அதிகாரம் - தகுதி என்ன என்பதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கையின் மீன் வளத்தைச் சுரண்டுவதாகவும், அவர்களின் படகுகளை (61 படகுகள்) இலங்கை அரசு அவர்களிடம் திருப்பிக் கொடுக்கக் கூடாது என்றும் தான்தான் ராஜபக்சே அரசுக்குக் கூறியதாகவும், இவர்கள் கொழுத்த பணக்காரர்கள் என்றும் ஏதோ வாயில் வந்தபடி உளறிக் கொட்டியுள்ளார்.
இதை பிரதமர் மோடியும், வெளி உறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜும், அமைச்சரவையில் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டு பிஜேபி தலைவர் மறுக்கிறார்
பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள், சுப்பிரமணிய சாமியின் கருத்துக்கும் பா.ஜ.க.வுக்கும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டுப் பிஜேபி தலைவர் சொல்லுவது எனக்கு ஒரு பொருட்டல்ல; மத்திய அமைச்சர் யாராவது அப்படி சொல்லியிருக்கிறார்களா என்று ஆணவத்தோடு பதில் சொல்லியுள்ளார் இந்த சாமி (தமிழ்நாடு பிஜேபியின் புதிய தலைவர் இதில் இழையோடும் உணர்வைப் புரிந்து கொண்டால் சரி!) அந்தப்படி இருக்கையில், மத்திய அரசு சு.சுவாமிகளின் இந்த அடாவடித்தன அகம்பாவப் பேச்சுகளைக் கேட்டு சும்மா இருக்கலாமா?
மாநில அரசு இந்தப் பேர்வழியை தமிழ்நாட்டுக்குள்ளே வர அனுமதிக்கவே கூடாது. மீனவர்களின் கொதிப்பும், கொந்தளிப்பும் பாய்ந்தால் அது சட்டம், ஒழுங்கு கெட வழி வகுத்து விடாதா?
மத்திய அரசு வேடிக்கை பார்க்கலாமா?
அதுபோலவே மத்திய அரசும் விரைவில் இவரால் ஏற்படும் தலைவலி, திருகு வலிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டாமா? வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கலாமா?
மக்கள் எதிர்ப்பு கண்டு பயந்துதானே தனக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்புக் கேட்டுப் பெற்றுள்ளார் இந்த சூராதி சூரர்?
தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்கக் கூடாது!
தமிழ்நாட்டில் எங்கும் நுழைய இத்தகைய தமிழ் இன விரோதிகளை அனுமதிக்கவே கூடாது. இராஜபக்சேவின் ஏஜண்ட்டுகள் போல் செயல்படும் இத்தகையவர்களை ஒருபோதும் தமிழ் மண்ணும், மக்களும் மன்னிக்கவே மாட்டார்கள் என்பது உறுதி.
சென்னை
2.9.2014
- கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்
Read more: http://viduthalai.in/page1/86941.html#ixzz3CRwSIf8C
சுயமரியாதை
மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடப் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு, தாழ்வு உணர்ச்சி போய் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் ஏற்படவேண்டும்.
- (குடிஅரசு, 3.4.1927)
Read more: http://viduthalai.in/page1/87017.html#ixzz3CRxybgvj
டெசோவின் இன்றியமையாமை!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்தனர். அங்கு என்ன பேசப்பட்டது? பிரதமர் எந்த உறுதியைக் கொடுத்தார்? என்பது போன்ற தகவல்கள் உருப்படியாக ஏதும் கசியவில்லை.
ஆனால், இலங்கையின் பிரபல இதழான வீரகேசரி சில முக்கியப் பிழிவுகளை வெளிச்சத் திரையில் ஓட விட்டு இருக்கிறது.
இலங்கையில் நிகழும் அரசியல் மாற்றங்களைக் கண்காணிக்க தனியார் ஆணையம் ஒன்றை இந்தியா நியமிக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக இருந்தது.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி ஒரே வரியில் இலங்கையின் உள்நாட்டு அரசியலில் இந்தியா தலையிட முடியாது; அரசியல் தொடர்பான விவரங்கள் அனைத்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் தலைமையில் உள்ள இலங்கை அரசு கவனித்துக் கொள்ளும்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசுடன் இனப் பிரச்சினை தொடர்பாக பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க வேண்டும்.
மேலும் நாடாளுமன்ற விவாதங்களில் கலந்து கொண்டு இனப் பிரச்சினைபற்றி எடுத்துரைத்து, அவற்றிற்கான தீர்வுகளை அங்குள்ள அரசிடமிருந்தே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி இதோபதேசம் செய்துள்ளார்; இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இலங்கை அரசு பற்றி சரியான புரிதல் இல்லாமல் இந்தியப் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்துங்கள் என்று சொல்லுகிறார்.
இலங்கை அரசு நாங்கள் கூறுவதை செவிமடுத்துச் செயல்பட்டிருந்தால், நாங்கள் ஏன் இந்திய அரசை நாடப் போகிறோம்? என்ற நியாயமான வினா மூலம் தங்கள் ஆதங்கத்தை அதிருப்தியை நாகரிகமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய ஏடுகள் வெளிப்படுத்தாத தகவல்களை இலங்கையின் வீரகேசரி வெளிப்படுத்தி விட்டது.
இலங்கை அதிபர் ராஜபக்சேபற்றி தமிழ்நாட்டுத் தலைவர்கள் குறை சொன்னால், அதற்குள் புகுந்து உள்நோக்கம் கற்பித்து, பிரச்சினையை நீர்த்துப் போக வைக்கும் முயற்சியில் இறங்கும் இந்திய நாட்டு ஊடகங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டு மக்களின் பிரதிநிதி என்னும் முறையிலும், இலங்கையிலிருந்து வெளிவரும் ஏடு என்ற தன்மையிலும் வெளிப்படுத்தப் பட்டுள்ள இந்த நுட்பமான தகவல்களுக்கும், கருத் துக்கும் தங்கள் வசம் எந்த நியாயங்களை வைத் துள்ளனர்?
அய்.நா. மன்றத்தால் அதிகாரப் பூர்வமாக அறி விக்கப்பட்ட விசாரணைக் குழுவையே அனுமதிக்க மறுக்கும் ராஜபக்சேயிடம் எல்லா வகைகளிலும் வீழ்த்தப்பட்டு, நொந்து நூலாகிக் கிடக்கும் ஈழத் தமிழர் தம் பிரநிதிதிகளின் குரல் எடுபடுமா? இந்தப் பொது தகவல் - புரிதல்கூட இல்லாமலா நம் நாட்டு தலைமைப் பீட அமைச்சர்கள் இருக்கிறார்கள்?
தேடி வந்தவர்கள் எடுத்து வைக்கும் குறை பாடுகளைக் கேட்டுக் கொண்டதற்காக, எதையாவது சொல்ல வேண்டும் என்ற சம்பிரதாய வார்த்தைகளை இந்தியப் பிரதமர் சொல்லியிருக்கிறார் என்பது தான் இதன் மூலம் தெரிய வருகிறது.
ராஜபக்சே அளவுக்குப் போவானேன்? அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக் குழு இந்தியாவில் வந்து விசாரணை நடத்துவதற்கே விசா மறுக்கும் இந்திய அரசை - அதன் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி என்ன நினைப்பது?
ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இந்தியா ஏதாவது உருப்படியான முயற்சிகளை மேற்கொண்டால்தான் ஏதாவது முன்னேற்றம் கிடைக்க வாய்ப்புண்டு என்று ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல; உலகத் தமிழர்களும் சரி, உலகெங்கும் உள்ள மனித உரிமை அலுவலர்களும் சரி எதிர்பார்க்கும் நிலையில் ராஜபக்சேவுக்கு அப்பனாக இங்குள்ள ஆட்சியாளர்கள் நடந்து கொள்கிறோர்களே! இது நியாயமா? சரியா?
இத்தகையதோர் கால கட்டத்தில் கலைஞர் அவர்களின் தலைமையில் அமைந்த டெசோ உருப்படியான திசையில் காலத்தின் தேவையான - அவசியமான நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. காலத்தாற் மேற்கொள்ளப்பட்ட டெசோவின் இந்தச் செயற்பாடுகள் காலத்தால் என்றென்றும் பேசப்படும் என்பதில் அய்யமில்லை.
ஈழத் தமிழர்கள் பிரச்சினையைத் தங்கள் அரசிய லுக்குக் கிடைத்த மூலதனமாகக் கொண்டு முழக்க மிட்டவர்கள், இந்த முக்கியமான கால கட்டத்தில் வெளியில் தலை காட்ட முடியாத ஒரு இறுக்கமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்களோ என்று நினைக்க நிறைய நியாயம் உண்டு
தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அடிக்கடி வலியுறுத்துவாரே - நம்மைப் பிளவுப்படுத்துவதை தூர வைத்து நம்மை இணைப்பவற்றைப் பற்றிக் கொண்டு ஓரணியாய்த் திரள்வோம் என்று உன்னதமான நல்வழிகாட்டுதலை தமிழகத் தலைவர்கள் சற்று யோசிக்கக் கூடாதா?
இதில் கொஞ்சம் மானப் பிரச்சினை தட்டுப் படுமேயானால் பொதுத் தொண்டில் மானம் பாராதே என்ற தத்துவத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் உரையை ஒருமுறை அசை போட்டுப் பார்க்கலாமே!
Read more: http://viduthalai.in/page1/87075.html#ixzz3CRzN1ik3
பக்குவமடையாதவன்
அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்து வராததைப் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனாகான்.
- (விடுதலை, 3.4.1950)
Read more: http://viduthalai.in/page1/87074.html#ixzz3CRzX91Xm
Post a Comment