ஜூனியர் விகடனுக்கு ஆசிரியர் பேட்டி
தமிழ்நாட்டில் பி.ஜே.பி., தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., கூட்டணி சாதிக்குமா?
திமுக கூட்டணியின் சூறாவளி சுற்றுப் பயண
பிரமுகர்களில் ஒருவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. தமிழகம் முழுக்க
சுற்றுப்பயணம் கிளம்ப இருந்த நிலையில் சென்னை பெரியார் திடலில் அவரைச்
சந்தித்தோம்.
திராவிடர் கழகம் தேர்தலைப்பற்றி கவலைப்படாத இயக்கம். ஆனால் நீங்கள் திமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யக் கிளம்பிவிட்டீர்களே?
இந்தத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல்.
காங்கிரசுக்கு எதிரான அலையை முழுமையாகப் பயன்படுத்தி, ஒரு இந்துத்துவ
ஆட்சியை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நேரடியாகக் களத்தில்
குதித்திருக்கிறது. இதுவரையில் பின்னணியில் இருந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு,
நேரடியாக முன்னால் நிற்கும் பி.ஜே.பி.யை, பின்னால் போங்கள்; நாங்களே
பொறுப்பேற்றுக் கொள்கிறோம் என்று சொல்லி களத்தில் இறங்கி யிருக்கிறார்கள்.
எனவே தான், இந்த இந்துத்துவ கும்பலை வீழ்த்த வேண்டி யிருக்கிறது. அதற்கான
பிரச்சாரம் இது.
நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி அலை வீசுவதாக சொல்கிறார்களே?
நாடு முழுவதும் மோடி அலை வீசு கிறது
என்றால், ஏன் இத்தனை ஊர் களுக்கு அலையாய் அலைகிறார். கேரளாவில் மஞ்சேரி
என்ற தொகுதியில்தான் தமிழகத்தைச் சேர்ந்த கண்ணியத்துக்குரிய காயிதே
மில்லத் அவர்கள் போட்டியிடு வார்கள். தேர்தல் சமயத்தில் வேட்புமனுத்
தாக்கல் செய்வதோடு சரி; பின்னர், அங்கு செல்ல மாட்டார். தமிழகத்தில் தான்
பிரச்சாரம் செய்வார். அவர் பல முறை வெற்றிபெற்றார். அதுதான் அலை. ஆனால்
நரேந்திர மோடி காலையில் வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம்
செய்கிறார். மாலையில் வண்டலூர் வருகிறார். நாடு முழுவதும் மோடி அலை
வீசவில்லை. அவர்தான் ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று
அலையாய் அலைகிறார்.
மோடி அலை வீசவில்லை. அவர்தான் வலை வீசுகிறார்.
தமிழகத்தில் பிஜேபி, தேமுதிக, பாமக, மதிமுக கூட்டணி சாதிக்குமா?
அரசியலில் பொதுவாக இரட்டை வேடம் என்று
விமர்சிப்பது உண்டு. ஆனால், பல வேடங்கள் தரிப்பதில் சிவாஜி கணேசன்,
கமலஹாசன்கூட ராமதாஸிடம் பிச்சை வாங்க வேண்டும். பாமகவின் 25-ஆவது ஆண்டு
தொடக் கத்தை முன்னிட்டு 16.7.2013 அன்று வெளியிட்ட அறிக்கையில், தேசியக்
கட்சிகள், திராவிடக் கட்சிகள் இல்லாத கூட்டணி அமைப்போம் என்று கூறினார்.
அதற்குள் எப்படிப்பட்ட பல்டி அடித்து விட்டார். பிஜேபி தேசியக் கட்சி இல்
லையா? தேமுதிக, மதிமுக கட்சிகள் திராவிடக் கட்சிகள் இல்லையா? திரா விடம்
என் றால் கெட்ட வார்த்தை என்று சொன்னவர், இப்போது கெட்டுப்போனது ஏன்?
ஈழத் தமிழர்கள் வாழ்வைக் காப்பாற்றிட
மோடியைத் தூக்கிச் சுமக்கத் தோள்களைத் தயாரித்துக் கொண்டு விட்டார். தோழர்
வைகோ. பிஜேபி ஆட் சிக்காலத்தில் சுகன்யா என்ற போர்க் கப்பலை இலங்கைக்கு
வாஜ்பாய் கொடுத் தார். மத்தியப்பிரதேசம் சாஞ்சியில் புத்த பல்கலைக்கழகத்தை
திறந்து வைக்க ராஜபக்சேவை சிவப்புக் கம்பளம் கொடுத்து வரவேற்றது அந்த
மாநிலத்தை ஆளும் பி.ஜே.பி. அரசுதான். அந்த விழாவுக்கு வந்த ராஜபக்சேவுக்கு
எதிர்ப்பு தெரிவிக்க 1,000 தொண்டர்களை பஸ்களில் அழைத்து சென்ற வைகோவைத்
தடுத்து நடுவழியில் நிறுத்தியது. ஞாபகம் இல்லையா? ஈழத் தமிழர்களைக் காப்பது
இருக்கட்டும்; மதவாதத்தை எதிர்ப்பது மதிமுக கொள்கை இல்லையா? தோளில்
தொங்கும் நீண்ட கருப்புச் சால்வையும், நாக்கும் உச்சரிக்கும் பெரியாரும்,
அண்ணாவும் மனச்சான்றாய் கொஞ்சம்கூட உறுத்தாதா? சேது சமுத்திரத் திட்டம்
என்னால் தான்வந்தது என்று மார்தட்டிய வைகோ அதையும் கைவிட்டுவிட்டாரே?
தமிழகத்தின் ஆதரவு இல்லாமலேயே பிஜேபி 272 இடங்களுக்கு மேல் ஜெயிக்கும்
என்று ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசியாக வைகோ பேசுகிறார். புரட்சிப் புயல்
புஸ்வாணம் ஆகிவிட்டது.
விஜயகாந்த் கடைசி வரை யாரோடு கூட்டணி
என்பதைச் சொல்லாமல் எல்லா கட்சிகளிடமும் கையாட்டிக் கொண்டிருந்தார். கார்
ஓட்டுகிறவர்கள் திரும்புதற்காக இன்டிகேட்டரை போடுவார்கள். இடது பக்கமாக
இன்டிகேட்டரைப் போட்டார் விஜயகாந்த். உடனே அங்கே உள்ள காவலர்கள் இங்கே
கையைக் காட்டுவதற்குத் தயாரானார்கள். உடனே அவர், இல்லை, இல்லை... நான் வலது
புறமாக செல்கிறேன் என்று கையை வலதுபுறம் நீட்டினார். ஆனால் நேராக
சென்றுவிட்டார். அதனால் என்ன விளை வுகள் ஏற்படும் என்று இலக்கு தெரியாமல்
சென்றுள்ளார். இந்தக் கூட்டணிக்கு தலைமைதாங்கும் பிஜேபி, விஜயகாந்த
கட்சிக்கு ஒதுக்கியதைவிட குறைவான தொகுதிகளை வைத்து கூட்டணிக்குத் தலைமை
தாங்குகிறது. வேடிக்கையான விநோதக்கூட்டணி. கொள்கை முரண் பாடுகள் நிறைந்த
இந்த அணி, தேர்தலில் தேறாது என்பது மட்டும் உறுதி.
அமைதி, வளம், வளர்ச்சி என்ற கோஷத்தை முன்வைத்து 40 தொகுதி களும் நமதே என்கிறாரே ஜெயலலிதா?
எங்கே அமைதி? யாருக்கு வளம் எப்படி
வளர்ச்சி? இது எதுவுமே தமிழகத் தில் அவர் செய்யவில்லையே! அவரது ஆட்சியில்
சாதனைகள் இல்லை. வேத னைகள் மட்டும்தான். அது இந்தியா முழுக்கப் பரவ
வேண்டுமா?
வீரமணியின் வேன் புறப்பட்டு விட்டது.
- எஸ்.முத்துகிருஷ்ணன், படம்: சு.குமரேசன்
நன்றி: ஜூனியர் விகடன் 6.4.2014
50 comments:
பி.ஜே.பி.யின் வேட்பாளர் பட்டியலைப் பாரீர்! உ.பி.யில், குஜராத்தில் ஒரு முஸ்லீம்கூட நிறுத்தப்படவில்லை
பி.ஜே.பி.யின் வேட்பாளர் பட்டியலைப் பாரீர்!
உ.பி.யில், குஜராத்தில் ஒரு முஸ்லீம்கூட நிறுத்தப்படவில்லை
மூன்று சதவீதப் பார்ப்பனர்களுக்கோ 20 சதவிகித வாய்ப்பு!
இவர்களை ஆதரிக்கலாமா? வாக்காளர்களே சிந்திப்பீர்!
100 அம்சங்களைக் கொண்ட தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கு ஈடு இணை ஏது?
பி.ஜே.பி. வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலங்களில் ஒரே ஒரு முஸ்லீம் வேட்பாளர்கூட அறிவிக்கப்படவில்லை; ஆனால் உ.பி.யில் பார்ப்பனர்களுக்கோ 20 சதவிகித வாய்ப்பு! சமூக நீதிக்கு எதிரான இந்த அணியைத் தோற்கடிப்பீர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
எப்பாடுபட்டேனும், யாருடன் கூட்டுச் சேர்ந்தாவது, மத்தியில் ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தள்ளப்பட்டிருப்பதால், அதனுடைய இந்துத்துவா கொள்கையை அப்படியே தனது குஜராத் மாநிலத்தில், ஒரு பரிசோதனைக் கூடம் போல நடத்தி சிறுபான்மையினரான இஸ்லாமியர்களைப் பழி வாங்கிய நிகழ்வுகள் ஏராளம்! ஏராளம்!! கோத்ரா மற்றும் பல போலி என் கவுண்ட்டர்கள் வரை செய்ததில் சளைக்காதவராக திகழ்ந்ததால் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேர்தலை முன்னணியிலிருந்து நடத்தி வருகிறது.
இடத்திற்கேற்ப வேடம் போடும் மோடி!
அதற்காக அது ஆங்காங்கே இடத்திற்குத் தக்கபடி வேடத்தை அவ்வப்போது ஏற்கும்படி மோடியை இயக்கி வருகிறது.
1992-இல் மண்டல் குழுப் பரிந்துரையின் ஒரு பகுதியை வேலை வாய்ப்பை - அமல்படுத்த ஆணை பிறப்பித்து, சமூகநீதியை நடைமுறைப்படுத்தக் காரணமான சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களது ஆட்சியை 9 மாதங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆணைப்படி பா.ஜ.க. கவிழ்த்தது!
மண்டல் நாயகர் வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் யார்?
அதற்காகவே மண்டலுக்கு எதிராக இராமன் கோவில் மண்டல் Vs மந்திர் என்ற முழக்கம் எழக் காரணமாகியது.
அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிற்கு எதிராக மாணவர்களையும், முன்னேறிய ஜாதி என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் (ABVP) தூண்டி கலவரங்களைத் திட்டமிட்டு நடத்தியது; காங்கிரசும் மறைமுகமாக இதை ஆதரித்து சமூகநீதிக்காக ஆட்சியை இழந்த வி.பி. சிங்கை ஜாதிமூலம் நாட்டைத் துண்டாடுபவர் “He is a Castesist” என்று பழி தூற்றினர்!
உ.பி.யிலோ புதிய ராகம் ஏன்?
ஆனால் அதே உ.பி.யில் 22 ஆண்டுகளுக்குப் பின், அங்கு வேகமாக வீசும் மண்டல் சமூக நீதிக் காற்றைப் பயன்படுத்தி, அதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, மோடி தனது முதல் பிரச்சாரத்தினைச் செய்யத் துவங்கும்போதே, நான் மிகவும் பிற்படுத்தப்பட்டவன். இனி (OBC & Dalits) பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் தான் முனைப்பான எதிர்காலம் என்கிறபடி நடப்பேன்! என்று புதிய ராகம் பாடினார்!
காரணம்; முலாயம்சிங், மாயாவதி ஆகியோர் இந்த சமூக நீதி - மண்டல் காற்று வீசியதைப் பயன்படுத்தி அல்லவா ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றினர் என்று கணக்குப்போட்டு, அதே குரலில் முன்பு வி.பி. சிங்மீது எந்தக் குற்றச் சாற்றினைக் கூறினார்களோ, அதற்கு மாறாகச் சிறிதும் லஜ்ஜை இல்லாமல், இப்போது ஏதோ சமூகநீதிக்காகவே திடீர் அவதாரம், எடுத்ததுபோல வாக்காளர்களை ஏமாற்றிட முனைந்து, அதற்கே வீர வசனங்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.
சமூகநீதியைக் கொள்கையாக ஏற்று பிஜேபி. அறிவிக்குமா?
இது ஒரு தேர்தல் உத்தி, வியூகம். அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு நேர் விரோதமாகும்.
குஜராத் வளர்ச்சி மாடல் என்று கூறுகிறார்களே அங்கே இடஒதுக்கீடு - சமூகநீதி ஓட்டங்கள் - எவ்வளவு விழுக்காடு அமலில் உள்ளன? ஆர்.எஸ்.எஸ். இதை ஒரு கொள்கை முடிவாக ஏற்று ஒரு தேர்தல் அறிக்கையை - பா.ஜ.க. பெயரில்- வெளியிடத் தயாரா?
மிகப் பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மக்களின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி, அவர்கள் கையில் உள்ள வாக்குகளைப் பறிக்கும் திட்டம் இது என்பதல்லாமல் வேறு என்ன?
கலைஞர்ஆட்சியில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு
சமூகநீதி - இடஒதுக்கீடு என்பது அனைவர்க்கும் அனைத்தும் என்பதால்தானே தமிழ்நாட்டில் - கலைஞர் ஆட்சியில் - இந்தியாவுக்கு முன்னோடியாக இஸ்லாமியச் சிறுபான்மையினருக்கு முதல் கட்டமாக மூன்றரை விழுக்காடு இடஒதுக்கீடு தரப்பட்டது; அதுபோலவே பிற்படுத்தப்பட்ட கிறித்துவர்களுக்கும் முன்பே இடஒதுக்கீடு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
உ.பி.யில், குஜராத்தில் பிஜேபி சார்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர்கூடக் கிடையாது!
குஜராத்தில் என்ன நடக்கிறது? மக்கள் தொகையில் 9 சதவிகிதமாக உள்ள இஸ்லாமியர் இதுவரை சட்டமன்றத்தில் ஒருவர்கூட கிடையாது. இதைவிடக் கொடுமை வேறு உண்டா? இதைப் பெருமையான சாதனை என்றும், இனி இப்படித்தான் எல்லா இடங்களிலும் நடைபெற வேண்டும் என்றும் இந்து நாளேட்டில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் (18.10.2013இல்) பேட்டி கொடுத்து மகிழ்கிறாரே!
உத்தரப்பிரதேசத்தில் பெருவாரியான இடங்களை மோடியின் ஆர்.எஸ்.எஸ். (பாஜக என்பது வெளி வேஷம்) வென்றால்தானே நாடாளுமன்றத்தில் அதன் இலக்கு 272 இடங்கள் என்பதுமுடியும்?
அதற்காக 80 இடங்களில் 78 இடங்கள் மோடி கட்சி போட்டியிடுகிறது; (இரண்டு கூட்டணிக் கட்சிக்கு)
இந்த 78 இடங்களில் ஒரே ஒரு இஸ்லாமியர்கூட வேட்பாளராக நிறுத்தப்படவில்லை; இதுதான் குஜராத் மாடல் புரிந்து கொள்ளவேண்டும் பொது வாக்காளர்கள்!
அங்குள்ள மக்கள் தொகையில் 17 விழுக்காடு இஸ்லாமியர்கள்; அவர்களுக்கு ஒரு இடம்கூட கிடையாது - பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில்.
பார்ப்பனர்களுக்கு 20 சதவிகிதம் வாய்ப்பு!
ஆனால், சுமார் 12 விழுக்காடு உள்ள உ.பி. பார்ப்பனர்களுக்கு - 80 இடங்களில் இவர்களது வேட்பாளர்கள் 16 பேர்! - அதாவது 20 விழுக்காடு!
இன்னொரு வேடிக்கை - விசித்திரம் - மாய வலை. பிற்படுத்தப்பட்டவருக்கு (ளிஙிசி) 24 இடம் அதாவது ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி (33 விழுக்காடு) பிற்படுத்தப்பட்டோர்மீது திடீர் கரிசனம்!
இவர்களது தந்திரம் வியூகம் - பிற்படுத்தப்பட்டவர்களை, தாழ்த்தப்பட்டவர்களை முன்னிறுத்தி, சிறுபான்மையோரை முதலில் ஒதுக்கிவிட்டால், பிறகு ஆட்சியைப் பிடித்த பிறகு, மற்றவர்களை அடுத்த கட்டத்தில் பிடித்துக் கீழே தள்ளிவிட அதிக காலம் பிடிக்காது என்பதுதான்.
தேவை பெரியார் நுண்ணாடி!
இதை பெரியார் கண்ணாடி என்ற நுண்ணாடி போட்டுப் பார்த்தால் தான் புரியும்.
இது புரியாமல், சில சீட்டுகளுக்காக மோடி வலையில் விழுந்தவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்பது போகப் போகப் புரியும்.
சமூகநீதியில்கூட போலிகளும், கள்ள நாணயங்களும் பெருகி விட்டன - எச்சரிக்கை! எச்சரிக்கை!!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
முகாம் : திண்டுக்கல்
3.4.2014
Read more: http://viduthalai.in/e-paper/78037.html#ixzz2xs8h7AKl
அந்தோ பரிதாபம்!
மாநிலக் கட்சிகளுக்கு வாக்களித்தால் குழப்பம் ஏற்படும் என்று பிஜேபியின் மாநிலத் துணைத் தலைவரும் சிவகங்கைத் தொகுதி பிஜேபி வேட்பாளருமான திருவாளர் எச்.ராஜா முத்துக்களை உதிர்த்துள்ளார்.
பி.ஜே.பி. கூட்டணியில் உள்ள மாநிலக் கட்சிகளான தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடாதீர் என்று சேம்சைடு கோல் அடித்துள்ளாரே!
அந்தோ பரிதாபம்!
கலகக் காரர்களுக்குப் பரிசு
முசாபர்நகர் மற்றும் அந்நகரின் அருகாமை நகரங்களில் கடந்த ஆண்டு செப்டம்பர் ஏழாம் தேதி அன்று நடைபெற்ற கலவரங்களால் 67 பேர் உயிரிழந்தனர்.
85 பேர் படுகாயமடைந்தனர். சுமார் 51 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து அகதிகளாக்கப்பட் டனர். இப்படியான கலவரங்களுக்கு காரணமான வர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள முசாபர்நகர் தொகுதி பாஜக வேட்பாளர் சஞ்சீவ் பாலியான், பிஜ்னோர் தொகுதி பாஜக வேட்பாளர் பரதெந்து சிங் ஆகியோரை ஆதரித்து யோகா குரு என்று சொல்லிக்கொள்ளும் பாபா ராம்தேவ் பிரச்சாரம் செய்ய களத்தில்குதித்து உள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ஊழலற்ற, நாட்டின் வளர்ச்சி மற்றும் சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியாவின் கருப்பு பணத்தை எல்லாம் மீட்பது ஆகிய காரணங்களுக்காக பாஜகவை ஆதரிப்பதாகக் கூறுகிறார்.
சஞ்சீவ் பலியான், பரதெந்து சிங் ஆகியோர் பிணையில் வெளியே வந்துள்ளவர்கள். இதேபோல், கலவரத்தில் தொடர்புடையவராகக் குற்றம் சுமத்தப் பட்டுள்ள குக்கும்சிங் என்பவரை பாஜக கைரனா தொகுதியில் நிறுத்தி உள்ளது. இவர்மீதும், சஞ்சீவ் பாலியான் மீதும் இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கலவர வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள், சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் பிணையில் வெளியே விடப்பட்டுள்ளவர்கள் என்று அவர்கள் அளித்துள்ள தேர்தலுக்கான வேட்பு மனுவின் உறுதிமொழி ஆவணத்தில் கூறியுள்ளனர்.
மதக் கலவரம் செய்த பெரிய மனுஷரான மோடியே பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும்போது, அதைவிட குறைந்தளவு கலவரம் செய்தவர்களுக்கு வாய்ப்பு பி.ஜே.பி.யில் கிடைக்காமல் வேறு எங்குக் கிட்டும்?
திரும்பிப் போ!
நாகை மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கோபால் - அதிமுக தோழர்களுடன் நாகை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங் களுக்குச் சென்றபோது கிராம மக்கள் வழி மறித்து, எங்கள் பகுதிகளில் கடந்த இரண்டாண்டு காலமாகக் குடிக்கத் தண்ணீர் இல்லை. எத்தனையோ போராட் டங்களை நடத்தியும் எந்தவிதப் பயனும் இல்லை. இப்பொழுது ஓட்டுக்கு வந்து விட்டீர்களா? என்று கூச்சல் போட, வேறு வழியின்றி வந்த வழியே திரும்பிச் சென்றுள்ளார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை தான் பதம் என்பது இதுதானோ!
அம்மையார் தமிழிசைக்காக முற்றுகை!
பி.ஜே.பி. வேட்பாளராக டாக்டர் தமிழிசைக்கு வாய்ப்புக் கொடுக்காததைக் கண்டித்து சென்னைப் புறநகர் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பினர் சென்னையில் உள்ள பிஜேபி தலைமையகத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளனர். அரசியல் என்று வந்து விட்டால் ஜாதியும் வந்து விடுகிறதே!
இதில் என்ன கொடுமையென்றால் பி.ஜே.பி.யில் மட்டுமல்ல - அந்த அணியிலேயே ஒரே ஒரு பெண் வேட்பாளர்கூட இல்லை என்பதுதான் அவர்களில் நிறம். பெண்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்!
Read more: http://viduthalai.in/e-paper/78048.html#ixzz2xsBNGsYZ
பொருளல்ல...
மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொருளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும். - (விடுதலை, 10.6.1970)
Read more: http://viduthalai.in/page-2/78038.html#ixzz2xsBwqgHP
விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல் அறிக்கை
ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கையை அளித் துள்ளது. தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை - தி.மு.க. அறிக்கையைப் போலவே சிறப்பு அம்சங்களைக் கொண்டதாகும்.
1) சிறுபான்மை மதத்தினரின் உரிமைகள்,
2) சமூக நீதிப் பாதுகாப்பு (ஒடுக்கப்பட்ட தலித் மக் களின் உரிமைகள், பழங்குடியினர் புறக்கணிக்கப் பட்டோர் உரிமைகளைப் பாதுகாப்போம்! பெண்ணுரிமைப் பாதுகாப்பு).
3) தமிழின நலன்கள் (ஈழத் தமிழர் நலன்கள், புலம் பெயர்ந்தோர் நலன்கள், வேளாண் தொழில் பாதுகாப்பு, மனித வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை, பொரு ளாதாரம், சுகாதாரம்).
4) கல்வி - இவற்றை உள்ளடக்கிய அம்சங்கள் சிறப்பாக இடம் பெற்றுள்ளன.
பாரதீய ஜனதா கட்சி, திரு. நரேந்திரமோடி அவர்களை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்கிறது. அக்கட்சியிலே தீவிரவாதப் போக்குக் கொண்டவராகக் கருதப்படுபவர் அவர். அவர் முதலமைச்சராக ஆட்சி செய்யும்போது குஜராத் மாநிலத்தில் 2002இல் நடைபெற்ற வகுப்புக் கலவரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய் யப்பட்டனர். அந்தக் கலவரத்தைக் கட்டுப் படுத்துவதற்கு ஒரு முதலமைச்சர் என்கிற முறையில் அவர் தவறி விட்டார் என்பது மட்டுமின்றி கலவரத்தை ஊக்கப்படுத்தினார் என்ற குற்றச்சாற்றுகளும் அவர்மீது உள்ளன.
அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்கள் மதக் கலவரத்தில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டி ருக்கிறார்கள். இத்தகைய கடும் போக்குக் கொண்ட ஒருவரை இப்போது பாரதீய ஜனதா கட்சி தனது பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியிருப்பதில், அதன் தாய் அமைப்பாகச் சொல்லப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்ற பீடிகையோடு தேர்தல் அறிக்கை தொடங்கப்பட்டு இருப்பது மிகவும் சரியான பார்வையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தலைச் சந்திக்கிறது என்பதற்கான அடையாளமாகும்.
உலகமே தலை குனியத்தக்க வகையில் நடைபெற்ற மனிதப்படுகொலையின் கோரத் தாண்டவம் அது(Genocide).
குறைந்தபட்சம் ஒரு வருத்தம் கூடத் தெரிவிக்க முன்வரவில்லை - அம்மாநில முதல் அமைச்சரான நரேந் திரமோடி! காலம் கடந்து இப்பொழுது வாய் திறந்தபோது கூட என்ன சொல்லுகிறார்? வருத்தப்படுகிறேன்; ஆனால் அந்தச் சம்பவங்களுக்கு நான் பொறுப்பாளி அல்ல என்று, தன் வாழ்க்கை வரலாற்று நூலில் மோடி குறிப்பிட் டுள்ளதாக தினமணி (26.3.2014) ஏடு கூறுகிறதே - இதைவிடப் பொறுப்பற்ற பதில் வேறு உண்டா?
ஒரு மாநிலத்தில் 2000 பேர்களுக்கு மேல் படுகொலை செய்யப்பட்டனர் என்றால் அதற்கு யார் பொறுப்பு? அந்த மாநில அரசு தானே! அதற்குத் தலைமை தாங்கும் முதல் அமைச்சர்தானே?
அந்தப் பொறுப்பை ஏற்க முன் வராதவர், முதல் அமைச்சர் பதவியைவிட மிகப் பெரிய பொறுப்பான பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவராக இருக்க முடியுமா?
இவர்தான் இப்படியென்றால், பிஜேபியின் அகில இந்தியத் தலைவரான ராஜ்நாத்சிங், குஜராத் சம்பவத்துக்கு வருந்துவதாக முதல் நாள் சொல்லுகிறார் - மறுநாளே மறுப்பு வருகிறது - அப்படி சொல்வதானால் அந்தக் குற்றத்தை மோடி செய்ததாகப் பொருள்படும் என்று கூறுகிறார்கள் என்றால் இவர்களை இந்தியாவை ஆள விட்டால் நாட்டின் துணைக் கண்டத்தின் கதி என்னாவது?
சமூக நீதியைப்பற்றி விரிவாகப் பேசுகிறது. இந்தத் தேர்தல் அறிக்கை, கல்வி வேலை வாய்ப்புகளையும் தாண்டி தலித்துகளுக்காகத் தனி வங்கிகள் உருவாக்கப்பட வேண்டும் என்கிற அளவுக்கு வலுவான கருத்தினை விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.
நிலமற்ற விவசாயக் கூலிகளாய் நீண்ட நெடுங்காலமாக அடிமைப்பட்டு அல்லலுற்று வரும் தாழ்த்தப்பட்ட - பழங்குடியின மக்களின் அவல நிலையைத் தலை கீழாய்ப் புரட்டிப் போடுகிற வகையில், புதிய நிலப் பகிர்வுகள் சட்டத்தைக் கொண்டு வர விடுதலைச் சிறுத்தைகள் பாடுபடும் என்கிறது தேர்தல் அறிக்கை!
ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி என்ற திட்டத்தை இந்தியாவிலேயே அறிமுகப்படுத்திய சாதனை திமுக ஆட்சியைச் சாரும்; ரூபாய் 50க்குப் பத்து வகைப் பல சரக்குகள் என்ற திமுக அரசின் திட்டம் வறுமையின் முது கெலும்பை முறித்து குறிப்பாக கிராமப்புறங்களில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூறும் நிலப் பகிர்வுகள் என்பது செயல்படுத்தப்பட்டால் அது ஒரு மாபெரும் புரட்சிக்கான பெரும் பாய்ச்சலாகவே இருக்கும்.
விண்ணப்பங்களைப் போட்டுக் கொண்டிருக்கும் இடத்தில் இன்னும் எத்தனைக் காலத்திற்குத் தான் ஒடுக்கப்பட்ட மக்களைக் கட்டிக் போட்டு வைப்பது?
சாலையோரத்தில் வேலையற்றதுகள் - அதுகளின் கண்களிலே விபரீதக் குறிகள் என்று அறிஞர் அண்ணா சொன்னதுதான் இந்த இடத்திலே நினைவிற்கு வருகிறது.
இனி வரும் ஆட்சி அமைப்பு என்பது வெறும் சலுகை தரும் ஒன்றாக இருக்கக் கூடாது. அடிப்படை உரிமைகளை தட்டாது அனைத்துத் தரப்புகளுக்கும் கண்டிப்பாகக் கிடைக்கச் செய்ய உத்தரவாதம் தரும் ஆட்சிகளாக அமைந்திட வேண்டும்.
இந்தியாவிலேயே இத்தகைய அடிப்படையான புரட்சிகரச் சிந்தனைகள் தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணிலிருந்து வெடித்துக் கிளம்புவது பொருத்தமான தாக இருக்க முடியும். இதற்கு மாறாக பிற்போக்குக் கும்பலான பி.ஜே.பி. அதன் மறுபதிப்பான அ.இ.அ.தி.மு.க. போன்றவற்றை இத்தேர்தலில் நிராகரிப்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவிலேயே ஒரு புதிய பாதைக்கான வழியைத் திறந்துவிடும் முடிவை 16ஆவது மக்களவைத் தேர்தலில் அளிப்பார்களாக!
தி.மு.க. தலைமையில்அமைந்திருக்கும் ஜனநாயக முற்போக்கு அணியின் வெற்றியை உறுதி செய்து, அதற் கான அடித்தளத்தை உருவாக்கிட தமிழின வாக்காளர்கள் முன் வருவார்களாக!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
Read more: http://viduthalai.in/page-2/78039.html#ixzz2xsC4gXue
குஜராத் தொழில் வளர்ச்சியில் முன்னோடியா?
2011-12-இல் மாநிலங்களில் தொழில்கள் நிலவரம் பற்றிய கருத் தாய்வினை மத்திய அரசின் புள்ளி யியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை வெளியிட்டுள்ளது. அதில் வெளியிட்ட புள்ளி விவரப்படி, இந்தியாவில் 2011-12-இல் 2,17,554 தொழிற்சாலைகள் உள்ளது. அதில் 17 விழுக்காடு தொழிற்சாலைகள் தமிழ் நாட்டில் உள்ளது என்றும் அதாவது 36,996 தொழிற்சாலைகள் அமைந்து, தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்றும் அரசின் அறிக்கை கூறுகிறது. பணியாளர் எண்ணிக்கையிலும், 15.9 லட்சம் தொழிலாளர்கள் தமிழ் நாட்டில் இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றி, நாட்டில் தொழிற் சாலைகளில் பணிபுரியும் தொழில ளர்கள் எண்ணிக்கையிலும், தமிழ் நாடு முதலிடத்தில் உள்ளதாக, அறிக்கை கூறுகிறது.
ஆனால், தெருவுக்கு தெரு குடுகுடுப்பைக்காரன் போல சொன் னதையே சொல்லிக்கொண்டுவரும் மோடி கம்பெனிகள், குஜராத்தில் தொழில் வளம் நாட்டிலேயே முதன் மையாக இருப்பதைப்போல கதை யளக்கிறார்களே, அந்த குஜராத்தில் நிலைமை என்ன தெரியுமா?
தொழிற்சாலைகள் எண்ணிக்கை யிலும், பணியாளர் எண்ணிக்கையி லும் குஜராத் 4-ஆவது இடத்தில் தான் உள்ளது. குஜராத்தில் 22,220 தொழிற் சாலைகள் உள்ளன. 10.5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இரண்டாவது இடத்தில் மகாராஷ் டிரமும், மூன்றாவது இடத்தில் ஆந்திரபிரதேசமும் உள்ளதாக, அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.
குஜராத் மட்டுமல்ல, பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் 4286 தொழிற்சாலைகள் தான் உள்ளது. அது 12-ஆவது இடத்திலும், பாஜக ஆளும் இன்னொரு மாநிலமான சட்டீஸ் கரில் 2472 தொழிற்சாலைகள் உள் ளது. அந்த மாநிலம் 16-ஆவது இடத்தில் உள்ளது.
இத்தகைய நிலையில் தான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், குஜராத் போல தொழில் வளர்ச்சியும், வேலை வாய்ப்பும் உருவாக்குவோம் என பாஜக கூறி வருகிறது. இது தான் எங்களது முதல் பணி என்கிறார் மோடி.
நம்மூர் பாஜக சீட்டணியில் உள்ள மேதைகள், ஆஹா ஓஹோ என மோடி பஜனையில் ஈடுபட்டு, தொழிற்சாலை எண்ணிக்கையிலும், தொழிலாளர் எண்ணிக்கையிலும் முதல் இடத்தில் இருக்கும் தமிழ் நாட்டை அவமதிக்கிறார்கள் என் பதை தமிழக மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
- குடந்தை கருணா
Read more: http://viduthalai.in/page-2/78044.html#ixzz2xsCFLu6w
பொய் சொல்வது நாங்களா? அல்லது நீங்களா? கலைஞர் கடிதம்
உடன்பிறப்பே,
முதலமைச்சர் ஜெயலலிதா கோவையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதியன்று, தொழில் வளர்ச்சி பற்றி அவருக்கே உரிய பாணியில் பேசியிருக்கிறார். தமிழகத் தொழில் அதிபர்கள் கர்நாடகாவுக்குப் போய் விட்டார்கள் என்று நானும், பொருளாளர் தம்பி ஸ்டாலினும் பொய்ப் பிரச்சாரம் செய்வதாகக் கூறியிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவே, அந்தப் பேச்சில் கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ் நகரில் தொழில் துவங்க வருமாறு கர்நாடக முதல மைச்சர் அழைப்பு விடுத்தார் என்றும், இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்டத்தைச் சார்ந்த தொழில் அதிபர்கள் கலந்து கொண்டார்கள் என்றும் தொடர்ந்து தெரிவித்திருக்கிறாரே தவிர, நல்ல வேளையாக அதை மறுக்கவில்லை. இந்தி யாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்க, கர்நாடக மாநில முதலமைச்சர் தமிழகத்திலே உள்ள ஒரு நகரில், தமிழகத் திலே உள்ள தொழில் அதிபர்களை யெல்லாம் அழைத்து கர்நாட காவில் வந்து தொழில் தொடங்குங்கள் என்று அழைக்கிறார் என்றால், அதற்கு என்ன அர்த்தம் என்பதை சாதாரண ஒரு தொழில் அதிபர் கூடப் புரிந்து கொள்ள முடியும். தள்ளி விடும் தமிழகம்! தினமலர் நாளேடு தி.மு. கழக இதழ் அல்ல!
அந்த இதழில் ஜனவரி 22ஆம் தேதி ஒரு செய்தி வந்தது. அதன் தலைப்பே, தள்ளி விடும் தமிழகம்; கவர்ந்திழுக்கும் கர்நா டகம் - கை நழுவிய 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு என்ப தாகும். அந்தச் செய்தியில், கொங்கு மண்டலத் தொழிலதி பர்களின், 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் கர்நாடகா விற்குச் செல்ல உள்ளன.தமிழகத்தில் மோசமாகி வரும் முதலீட்டு சூழல்தான் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.இந்த நிலை தொடர்ந்தால், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும், வேறு மாநிலங்களுக்கு தொழில்கள் இடம் பெயர வாய்ப்பு உள்ளது.தமிழக - கர்நாடகா எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், 1,400 ஏக்கரில் தொழில் மண்டலம் அமைக்கப் பட்டு வருகிறது. இதற்கு முதலீட்டாளர்களை இழுக்கும் வகையில், கோவையில், கடந்த, 20ம் தேதி சாம்ராஜ் நகர் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டில் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கர்நாடகாவில் தொழில் துவங்க வாருங்கள், அனைத்து வசதிகளையும் செய்து தருவோம் என்று தமிழக தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள் ளார்.
கொங்கு மண்டலப் பகுதி தொழிலதிபர்கள் கருநாடகத்திற்கு படையெடுப்பு!
இந்த மாநாட்டின் விளைவாக, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளில் தொழில் நடத்தும் ஏறத்தாழ 200 தொழில் அதிபர்கள், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, சாம்ராஜ் நகரில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளனர் என்றெல்லாம் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு மாநாடு நடை பெற்றதாக நானோ, ஸ்டாலினோ கூறவில்லை.தினமலர் நாளேட்டிலும், வேறு சில நாளேடுகளிலும் இந்தச் செய்தி வெளிவந்துள்ளது. ஆனால் கோவையில் போய் முதல மைச்சர் ஜெயலலிதா நாங்கள் ஏதோ பொய் கூறிவிட்டதாகப் புலம்பியதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?
தங்கள் மாநிலத்திலே தொழில் தொடங்க வாருங்கள் என்று கர்நாடக முதல் அமைச்சர் நம்முடைய மாநிலத்திற்கு வந்து மாநாடு நடத்து கிறார். அதற்காக வெட்கப்பட வேண் டாமா? தமிழ்நாடு என்ன செய்கிறது? தமிழக முதலமைச்சர் என்ன செய்கிறார்? இவர்களுக்கு தொழில் வளர்ச்சியில் அக்கறை இருந்தால், பெங்களூரில் சென்று மாநாடு நடத்தி, அங்கே யுள்ள தொழில் அதிபர்களையெல்லாம் தமிழகத் திற்கு வாருங்கள் என்று அழைக்க வேண்டியது தானே? அதை விட்டு விட்டு, எங்கள் மீது ஜெயலலிதா பாய்ந்து குதறுவது ஏன்? இந்த அரசுக்கு எதிராக எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக நாங்களா இந்தச் செய்தியைச் சொன்னோம். இந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிகைகளை விட்டு விட்டு, அவ்வாறு பத்திரிகையிலே வந்திருக்கிறது என்று நாங்கள் கூறியது குற்றமா?
ஒரே நாளில் 12000 கோடி ரூபாய் கருநாடகத்துக்கு!
இந்த மாநாட்டிற்குப் பிறகு, கர்நாடகா தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் உதவிச் செயலாளர், விஜயகுமார் என்பவர், கோவையில் நடத்தப்பட்ட மாநாடு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஒரே நாளில், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவுக்கு சாம்ராஜ் நகர் தொழில் மண்டலத்தில் முதலீடு செய்ய முன்வந்திருப்பது பெரிதும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்று கூறி, அதுவும் நாளேட்டில் அப்போதே வெளி வந்தது. ஜெயலலிதா ஏன் அப்போதே அந்தச் செய்தியை மறுக்கவில்லை? குறிப்பாக, திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் ஒன்று, 2000 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளது.கோவையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர், அந்தத் தொழில் மண்ட லத்தில், 1000 கோடி ரூபாய் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித் துள்ளார் என்று செய்தி வந்ததா? இல்லையா?இதுபற்றி ஜெய லலிதா கோவையில் ஏன் வாய் திறக்கவில்லை?
மாறாக, கூட்டம் முடிந்தவுடன் தொழிலதிபர்கள், எங்களை அழைத்தார்கள், வந்தோம், அவ்வளவு தான். எந்தச் சூழ்நிலையிலும் சாம்ராஜ் நகரில் தொழில் தொடங்க நாங்கள் தயாராக இல்லை என்று சொன்னதாக அனைத்து நாளிதழ் களிலும் வந்துள்ளது என்று ஜெயலலிதா சொல்லியிருக் கிறார். தொழில் முனைவோர் சிலர், யாரும் இங்கிருந்து தொழிலை அங்கு இடம் மாற்ற வில்லை, தங்கள் தொழிலை அங்கு விரி வாக்கம் செய்கின்றனர். கிரானைட் பாலிஷிங் தொழிலுக்கு கர்நாடகா மாநிலம் சிறப்பான இடம். அதேபோல உணவு பதப்படுத்துதல், காற்றாலை மின் உற்பத்தி போன்ற தொழில்களை அங்கே விரிவாக்கம் செய்ய, நல்ல வாய்ப்பு உள்ளது என்றெல்லாம் கூறியதாகத் தான் தினமலர் இதழ் வெளியிட் டிருக்கிறது. மேலும், அந்த இதழ், இவை கூடுதல் முதலீடுகள் என்றாலும், தமிழகத்திற்கு இவை கிடைத்திருந் தால், இங்கு வேலை வாய்ப்பு அதிகரித்து இருக்கும். பரிதவிக்கும் தமிழ்நாடு! ஆனால், தமிழகத்தில் மின்வெட்டு, அரசு நிர்வாகக் கோளாறு, உள்கட்டமைப்புப் பற்றாக்குறை, ஆட்சியாளர் களைச் சந்திக்க முடியாத சூழல் உள்ளிட்ட காரணங்களால், முதலீட்டுச் சூழல் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது என்பதே உண்மை. இதனால், தமிழக தொழில் முனைவோர், சத்தீஸ்கர், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.சாம்ராஜ் நகர் முதலீட்டாளர் மாநாடு, கொங்கு மண்டலத் தொழில் வரலாற்றில் ஒரு குறிக் கப்பட வேண்டிய சகாப்தமாக மாறலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் என்றெல்லாம் எழுதியிருக் கிறதே, முதலமைச்சர் ஜெயலலிதா அந்த ஏட்டிற்கு அல்லவா விளக்கம் அளித்திருக்க வேண்டும்.
அதை விட்டு விட்டு, அந்த இதழில் இவ்வாறு செய்தி வந்திருக்கிறது என்று சொன்னால், நாங்கள் சொல்வது பொய்ப் பிரச்சாரமா? கோவையில் முதல்வர் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிரித்திருக்க மாட்டார்களா? தமிழகத்தி லிருந்து இவ்வாறு தொழில் முதலீடுகள் வெளி மாநிலங் களுக்குச் செல்ல என்ன காரணம் என்பது பற்றியும் பலரிடம் பேட்டி கண்டு தினமலர் நாளேடு 24-1-2014 அன்று அரைப் பக்க அளவிற்குச் செய்தி வெளியிட்டது. அந்தச் செய்திக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்தாலே நிலைமையைப் புரிந்து கொள்ள முடியும். என்ன தலைப்பு தெரியுமா? தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் லஞ்சம், மின்வெட்டு, நில மதிப்பு - மேற்கு மாவட்ட முதலீடுகள் கர்நாடகா செல்லும் மர்மம் இதுதான்! - இப்படியெல்லாம் நாளேடுகளில் வருகின்ற செய்திகளைப் பார்த்து உண்மையைப் புரிந்து கொள்ளாமல், நாங்கள் பொய் கூறுகிறோம் என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினால் என்ன அர்த்தம்? தமிழ கத்தை ஆட்டிப் படைக்கும் லஞ்சம் என்றே தலைப்புச் செய்தி வெளியிட்டு, எத்தனை நாட்களாகிறது? தமிழக அரசு அதற்குப் பதிலளித்திருக்க வேண்டாமா? முதல் அமைச்சர் ஜெயலலிதா நம்மீது கோபப்படுவதற்குப் பதிலாக நாளேடு களைப் படித்து அவருடைய ஆட்சி பற்றி மக்களிடம் என்ன கருத்து இருக்கிறது, பத்திரிகைகள் என்ன எழுதுகிறார்கள், உண்மை என்ன என்பதைப் புரிந்து கொள்ள முன்வர வேண்டும். ஹெலிகாப்டரிலேயே பறந்து கொண் டிருந்தால், கீழே நடப்பது புரியாது! கீழே இறங்கி வரக் கற்றுக் கொள்ள வேண்டும்.
வார்த்தை வேண்டாம். எத்தனைப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்பட்டன
முதலமைச்சர் ஜெயலலிதா கோவையில் பேசும்போது, அவருடைய மூன்றாண்டு கால ஆட்சியில் 33 இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் 31,306 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட 33 நிறுவனங் களில், இதுவரை எத்தனை நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிலைத் தொடங்கியிருக்கின்றன என்ற விவரத்தைத் தெரிவிக்க முடியுமா? புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல நிறுவனங்களுடன் போடலாம்.உண்மையில் தொழில் தொடங்கினால்தானே பயனளிக்கும்.
முதலமைச்சர் நேற்று பேசிய கூட்டத்திலேயே; 31,706 கோடி ரூபாய்க்கு 34 மாதங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டதில், 10,660 கோடி ரூபாய் முதலீடுகள் தான் கிடைக்கப் பெற்றதாக அவரே தெரிவித்திருக்கிறார். ஆனால் முதல் அமைச்சர் ஜெயலலிதா பேரவையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றியெல்லாம் விளக்கமாக நீண்ட நேரம் பேசி, அதற்கு நான் 6-2-2014 அன்றே விளக்க மாகப் பதில் கூறிவிட்டேன். ஆனால் முதலமைச்சர் ஜெய லலிதா அந்தப் பதிலைப் படிக்காத காரணத்தால், பேரவை யிலே பேசியதையே கோவைக் கூட்டத்திலும் பேசியிருக் கிறார். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பற்றியும், முதலீடுகள் எவ்வாறு வெளி மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றன என்பது பற்றியும், நாங்கள் பொய் சொல்வதாக கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் பேசி யிருக்கிறாரே; இந்த ஆட்சியின் தொழில் வளர்ச்சிக்குச் சான்றாக மேலும் ஒரு உதாரணம் கூறுகிறேன்.
பெண்களின் வேலைவாய்ப்பும் பறி போகிறதே!
தி.மு. கழக ஆட்சியில் தொழிற்சாலைகளில் பணியாற்றிய பெண்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 93 ஆயிரம் ஆகும். ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் தொழிற்சாலை களில் பணியாற்றுகின்ற பெண்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 78 ஆயிரம். வேலை வாய்ப்பினை இழந்த பெண்களின் எண் ணிக்கை 1 இலட்சத்து 15 ஆயிரம் ஆகும். இதுதான் தொழில் வளர்ச்சிக்கான அடையாளமா?
மற்றுமோர் உதாரணம்!தமிழக அரசு இரண்டு சிமெண்ட் தொழிற்சாலைகளை ஆலங்குளத் திலும், அரியலூரிலும் நடத்தி வருகிறது. ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலையில், 2010-2011ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியில் உற்பத்தி 2 இலட்சத்து 3 ஆயிரத்து 40 டன்கள்.அ.தி.மு.க. ஆட்சியில், 2011-2012ஆம் ஆண்டில் அங்கே சிமெண்ட் உற்பத்தி 1 இலட்சத்து 34 ஆயிரத்து 640 டன்கள். 68 ஆயிரத்து 400 டன்கள் குறைவு. அதுபோலவே அரியலூர் அரசு சிமெண்ட் தொழிற் சாலையில் கழக ஆட்சியில் உற்பத்தி 4 இலட்சத்து 90 ஆயிரத்து 35 டன்கள். அ.தி.மு.க. ஆட்சியில் உற்பத்தி 3 இலட்சத்து 88 ஆயிரத்து 55 டன்கள். கழக ஆட்சியை விட 1 இலட்சத்து ஓராயிரத்து 980 டன்கள் குறைவு. தொழில் வளர்ச்சி என்றால் உற்பத்தியும் தொடர்ந்து அதிகரித்திருக்க வேண்டாமா? இதுதான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகியிருப்பதற்கான அடையாளமா?
சு.சாமி என்ன சொல்கிறார்?
ஏன்?அம்மையாருக்கு அவ்வப்போது மிக வேண்டியவர் சுப்பிரமணியம் சுவாமி! அவர் அம்மையாரின் ஆட்சி பற்றி என்ன சொல்லி யிருக்கிறார் தெரியுமா? முதலமைச்சருக்குப் படிக்க நேரம் இருந்திருக்காது.இப்போது அவர் கூறியதை நான் மீண்டும் நினைவுபடுத்துகிறேன். தொழில் வளம், பொருளாதார வளம் எதுவுமே இல்லை. தமிழகம், கர்நாடகம் என பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. ஆனால், இங்கிருக்கும் தொழில் அதிபர்களை, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தங்கள் மாநிலத்துக்குக் கவர்ந்து போயிருப் பதாக அறிந்தேன். தமிழகத்தில் இருந்து 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடுகள், கர்நாடகத்துக்குப் போயிருப்பதற் கான காரணம், அதை இங்கேயே தக்க வைக்க, தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்காததே!
கடுமையான மின் பற்றாக்குறை யும், அரசு அதிகாரிகளின் ஒத்துழையாமையும் எல்லா நிலை களிலும் இருப் பதால், வெளி மாநிலங்களில் இருந்து யாரும் தமிழகத்தில், முதலீடு செய்ய முன்வரவில்லை. தகவல் தொழில் நுட்பத் துறையில், தமிழகம், நாட்டிலேயே முதன்மை யான மாநிலமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலை மாறியிருக்கிறது. அதற்குக் காரணம், மாநில அரசு நிர்வாகம் சரியில்லாததே என்று தெரிவித்திருக்கிறார் என்றால், முதலமைச்சர் ஜெயலலிதாவே, பொய் சொல்வது நாங்களா? அல்லது நீங்களா?
அன்புள்ள,
மு.க.
(நன்றி: முரசொலி, 3.4.2014)
Read more: http://viduthalai.in/page-3/78055.html#ixzz2xsCjKyjZ
திமுக கூட்டணி முரண்பாடற்றது! மற்ற கூட்டணி தேர்தலுக்குப் பின் மாறக்கூடியது கொள்கைக் கூட்டணியான திமுக கூட்டணியை ஆதரிப்பீர்!
தேனியில் தமிழர் தலைவர் கருத்துரை
தேனி, ஏப். 3- திமுக தலைமையில் உள்ள கட்சிகளிடையே கொள்கை முரண்பாடு கிடையாது. மற்ற கட்சிகளின் கூட்டணிகள் கொள்கை முரண்பாடு கொண்டவை - தேர்தலுக்குப்பின் மாறுபடக் கூடியவை - எனவே கொள்கைக் கூட்டணியான திமுக அணியை ஆதரிப்பீர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. அவர்கள் கூறியதாவது:
இந்தத் தேர்தலில் திமுக கொள்கை கூட்டணி. ஒன்று சேர்ந்து அது வென்றால் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும். அதனை மய்யப்படுத்தித்தான் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணியை விட பலமான அணி இருக்கிறதா?
மக்களின் உயர்வுக்காக உருவான இயக்கம்
நம்முடைய தோழர்கள் சொன்னார்கள்; ஒடுக்கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை சமுதாயம். ஒடுக்கப்பட்ட சமுதாயம் என மிகப்பெரும்பான்மை சேர்ந்தது தான். இந்த அணி டாக்டர் கலைஞர் தலைமையில் உள்ள ஜனநாயக முற்போக்குச் கூட்டணி, இந்த இயக்கம் திராவிடர் இயக்கம் (இந்த அணி) சமூக நீதியைப்பார்த்த இயக்கம்.
மக்களின் உயர்வுக்காக உருவான இயக்கம், ஒடுக்கப்பட்டட மக்கள், வாழ்வாதாரங் கள் பெற வேண்டியவர்கள் பெண்ணுரிமைக்காக குரல் கொடுப்பவர்கள். இப்படி இந்த அணி கொள்கை ரீதியான அணியைச் சார்ந்தவர்கள் உள்ள அணி.
நல்ல ஜனநாயகம் என்பது நாட்டிலே நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்பதே! ஆளுகின்றவர் பெரும்பான் மையாக இருந்தாலும் வாழ்கின்றவர்களாக, நசுக்கப்படக் கூடாதவர்களாக, ஒடுக்கப்படாத சிறுபான்மை சமுதாயம், நசுக்கப்படாத சமுதாயமாக இருக்க வேண்டும் என்று ஆட்சி நடத்தியவர் உண்டு என்றால், இந்திய வரலாற்றில் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களே ஆவார்.
இனத்தின் பாதுகாவலர் - டாக்டர் கலைஞர்
கலைஞர் ஆட்சியில் இருக்கிறாரா? இல்லையா? என்பது முக்கியமில்லை. என்றைக்கும் நம் இனத்தின்பாது காவலராக திகழ்ந்து கொண்டிருக்கிறார், ஆகவேதான் தாழ்த்தப்பட்ட சமுதாயம், பிற்படுத்தப்பட்ட சமுதாயம் இது வரையிலே உரிமைகள் இழந்த சமுதாயம், என அத்தனைப் பேரும் இந்தக்கூட்டணியிலே இருக்கிறார்கள்.
இந்த கூட்டணியிலே முரண்பாடுகள் கிடையாது. அந்த கூட்டணி யில் உள்ளது போன்று அந்தக் கொள்கையை அவர் ஏற்க மாட்டார். இந்த கொள்கையை இவர் ஏற்க மாட்டார் என்று இந்த கூட்டணியிலே கிடையாது. இது கொள்கைக் கூட்டணி சர்க்கஸ் கூடாரம் அல்ல.
சமுதாய மாற்றத்திற்காக உழைக்கக்கூடியவர்கள்
மதவாவதத்தை முன்னிறுத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கூட்டணி, இவர்களின் முகமூடியை அகற்றத்தான் திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்து வருகிறது. மக்கள் மத்தியில் இவர்களை அம்பலப்பப்படுத்த வேண்டும் என்ற நிலையில் உள்ளது.
இந்தக் கூட்டணியில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள், சமுதாய மாற்றத்திற்காக உழைக்கக் கூடியவர்கள் அதையே இலக்காக கொண்டு உள்ளவர்கள் இவர்கள். இது தேர்தல் கூட்டணி அல்ல; அடுத்த தலை முறையை மாற்றக்கூடிய மிகப்பெரிய சமுதாயக் கூட்டணி
வெற்றி உறுதி!
நாங்கள் கன்னியாகுமரி தொடங்கி அனைத்து ஊர்களி லும் அனைத்து தரப்பு மக்களையும் பார்த்து வருகிறோம். அவர்கள் எங்களை பார்த்து வருகிறார்கள். ஏன்? நேற்றைய தினம் கூட எதிர்கட்சி நண்பர்கள் கூட, எங்களை பார்த்த நேரத்திலே நட்பு முறையிலே அப்போது அவர்களே தெளிவாக சொல்கிறார்கள்.
வெளிப்படையாக நட்புரீதியாக சொல்கிறார்கள் இந்த முறை வெற்றி பெறப் போவது நீங்கள் தான். அதிலே ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று சொல்கிறார்கள் அதுவும் உண்மையே!
மக்களை சந்திக்கிறவர்கள் நாங்கள்
நாங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்கிறவர்கள் அல்ல, சென்னையில் இருந்தாலும் எங்கே சென்றாலும், ஒரு மாதத்திற்கு முன்பு கூட இதே தேனியில் பொதுக்கூட்டத்திலே மன்ற நிகழ்வுகளிலே நாங்களும் நண்பர் திமுக மாவட்டச் செயலாளர் மூக்கையா அவர்களும் கலந்து கொண்டோம். நாங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து போகிறவர்கள் அல்ல. மக்களுடன் மக்களாக பழகுகிறவர்கள் இருக்கிறார்கள்.
நாங்கள் வாக்கு கேட்பதற்காக வருகிறவர்கள் அல்ல. ஒருமுறை வந்துவிட்டு காணாமல் போகிறவர்கள் இல்லை. இதுவரை கலவரம் குண்டுவெடிப்பு ஆர்.எஸ்.எஸ்., பாஜக வினர்களால் வெளியில் நடந்தது. இப்போது அவர்களுக்குள் ளாகவே சண்டை நடக்கிறது. கட்சிக்குள்ளே சண்டை நடக்கிறது.
பாஜக பாரதிய ஜனதா-கட்சி அல்ல, பாரதீய ஜகதா பார்ட்டி! ஜகதா என்றால் ஹிந்தியில் சண்டை என்ற பெயர் உண்டு. இப்பொழுது தான் புரிகிறது அவர்களுக்குள் ஏன் சண்டை போடுகிறார்கள்? கூட்டணி கட்சிக்காரர்கள் ஏன் ஒத்துப் போகவில்லை என்று அனைவரும் தெரிந்து கொள்வீர்!
வழக்கறிஞர் கொ.சுப்பிரமணியம், சுப.ஜெகநாதன், திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் ஏன் என்ற நூலினை தமிழர் தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டனர் (திண்டுக்கல், 2.4.2014).
மோடி அலை வீசிக்கொண்டிருக்கிறது என்று சொல் கிறார்கள். அது அலை அல்ல வலை. அந்த வலையிலே இப் பொழுது தமிழ்நாட்டில் உள்ளவர்கள் சிக்கக்கூடாதவர்கள் சிக்கிக் கொண்டார்கள். மோடி அலை வீசுகிறது என்று சொல்பவர்களைப் பார்த்து இரண்டு கேள்விகளை கேட்கிறோம். மோடி அலை நாடு வீசுகிறது என்றால் ஏன் மோடி இரண்டு தொகுதிகளில் நிற்கிறார்? எண்ணிப்பார்க்க வேண்டாமா? குஜராத்தில் நிற்கிறார் என்றால் அது அவர் மாநிலம். ஏன் காசிக்கு வருகிறார்?
கருமம் தொலைக்கக் காசியா?
சாதாரண வைதீகன் சொல்வான், கருமத்தை தொலைக்க வேண்டுமானால் காசிக்குத்தான் செல்ல வேண்டும் என்பான்.
மோடி தன் பாவத்தைக்கழிக்க காசிக்கு செல்கிறாரா? பாவம் அந்த கங்கை நதி எவ்வளவு தான் பாவத்தை தாங்குமோ? தெரியாது. தாங்கிக்கொண்டே இருக்கிறது.
அங்கே முரளி மனோகர் ஜோஷி நிற்கிறேன் என்று எல்லா ஏற்பாடும் செய்துவிட்டேன் என்றார் உங்களுக்கு இட மில்லை போங்கள் வேறு தொகுதி தருகிறோம். இப்போது நாங்கள் ஆர்.எஸ்.எஸ். கண்ட்ரோல் எடுத்துக் கொண்டோம். ஆர்.எஸ்.எஸ் கண்ட்ரோலில் வந்திடுச்சி, உங்களுக்கு வேறு தொகுதி தருகிறோம் என்றார்கள்.
இனிமேல் இங்கு பிஜேபி க்கு பங்கு கிடையாது அத்வானிக்கு நாங்கள் பார்த்து தொகுதி கொடுத்தால்தான் உண்டு. நாங்கள் முடிவு செய்ய வேண்டும். மத்தியப் பிரதேசம் கேட்டால் தரமாட்டோம். முரளி மனோகர் ஜோஷிக்கு இடம் கிடையாது. ஜஸ்வந்த் சிங்கிற்கு இடம் கிடையாது. என்று அங்கே ஒரே தகராறு, சண்டை பிஜேபியில் நடந்து கொண்டிருக்கிறது.
ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகள்
இங்கே தமிழ்நாட்டில் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகள் மோடி அலை வீசுகிறது. தமிழ்நாட்டு வெற்றி மோடிக்கு தேவையில்லை. தமிழ்நாட்டு வெற்றிக் கணக்கு அவருக்கு தேவைப்படாது அங்கேயே (மற்ற) இரு மாநிலங்களிலேயே வெற்றி பெற்று விடுவார் என்று நம்மிடம் இருந்து போனவர்கள் சொல்கிறார்கள்.
இன்றைய (2.4.2014) தி டைம்ஸ் ஆம் இந்தியா நாளிதழிலே மோடியைப் பற்றி செய்தி வந்துள்ளது. நாங்கள் எதையும் ஆதாரத்துடன் சொல்கிறவர்கள். மற்றவர்களைப் போல் கண்டதையும் சொல்கிறவர்கள் அல்லர்.
மோடியைப் பற்றி சொல்லுகிற நேரத்தில்,BJP in talks with Mamta for Outside Support Post polls என்று செய்தி வந்துள்ளதே! இன்றைய நாளிதழ் தி டைம்ஸ் ஆப் இந்தியாவில் இங்கே உள்ளவர்கள் மோடி அலை வீசுகிறது என்கிறார்களே! அப்படியானால், ஏன் அவர் மம்தா பானர்ஜியுடன் இரகசிய ஒப்பந்தம் செய்ய முன்வந்துள்ளார்? பிஜேபியினர் ஏன் மம்தாவை அழைக்கிறார்கள்?
இரகசிய ஒப்பந்தமா?
மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்) நம்ம முதல்வருக்கு அக்கா மாதிரி இருக்கிறார். நான் 25லிருந்து 30 இடம் ஜெயித்துவிடுவேன். இப்பொழுது நீங்கள், எங்களை எதிர்த்தாலும் கவலை இல்லை. பிறகு தேர்தல் முடிந்தவுடனேயே எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.
நம்ம இரண்டு பேரும் இரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம் எனறு மோடி கேட்டுள்ளார். 40 முதல் 56 தொகுதி இதுதான் முக்கியம். பிஜேபியினர் இப்போது எங்கு பார்த்தாலும் அலைகின்றார் கள். 2004இல் கலைஞர் வகுத்த யூகம் இருக்கிறதே, அதிலே தமிழ்நாட்டு பெருமக்களின் வாக்கு காரணமாக 40-க்கும், 40 கொடுத்தார்கள். அதனால் மத்தியிலே பிஜேபி ஆட்சி கீழ் இறக்கப்பட்டது.
2004-2014 மாற்றம் இப்போது
அந்த 2004 இப்பொழுது 2014 ஆக திரும்ப போகிறது இதுதான் சரியான கணிப்பு. மோடி அலை வீசினால் அவர்களுடன் (திரிணாமுல் காங்கிரஸ்) கூட்டணிக்கு ஏன் கேட்க வேண்டும். இங்கே (தமிழ்நாட்டில்) பலபேர் சாமர்த்தியமாக பதில் சொல்கிறார்கள்.
நாக்கில் தேனைத் தடவிக் கொண்டு, எங்களுக்கு (பிஜேபி) மெஜாரிட்டியாக வந்தாலும் கூட அமைச்சர் பதவி தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தருகிறோம். தேன் நாக்கில் நாக்கும் போது மட்டும் சுவையாக இருக்கும். ஆனால் அவர்கள் வந்தால் தானே?
மம்தா மறுத்து விட்டார்!
அந்த அம்மா (மம்தா பானர்ஜிக்கு) தெளிவாக, இஸ்லாமிய சமூகத்தின் ஓட்டு 25 சதவிகிதம் இருக்கிறது எங்களிடம். அதனால் ஆதரவு தரமாட்டேன். இங்கே உங்களுக்கு ஓட்டு கிடையாது. அதனால், ஒப்பந்தம் எல்லாம் போட்டுக் கொள்ள மாட்டோம் என்று சொல்லி விட்டாரே. அதிகாரபூர்வமான செய்தி.
அலை அடிக்கிறது, நாற்காலி தயாராகி விட்டது என்று சொல்வதெல்லாம் சரியான முடிவு அல்ல.
இங்கு ஜெயலலிதா அம்மையார் நிறைய கனவு கண்டார். பிரதமர் கனவு கண்டார். பிளக்சில் பார்த்தீர்கள் என்றால் பாரதப் பிரதமரே! வருங்கால பாரதமே! என்று வைத்திருந்தார்கள். ஆசைப்படலாம் தவறில்லை. அது அவர்களின் கனவு. ஆசைப்பட உரிமையுண்டு. அவர்களுக்கு இப்போது எதார்த்தம் புரிந்து விட்டது!
நாற்பதும் நமதே என்று சொன்னவர் சுருதி இறங்கி அங்கம் வகிக்கப் போகிறோம் என்கிறார். அதிலிருந்து என்ன தெரிகிறது? இனிமேல் நான் பிரதமராக மாட்டேன் எதார்த்ததை உணர்ந்து கொண்டேன் என்பது புரிகிறது. கலைஞர் எத்தனை பிரதமரை உருவாக்கி இருக்கிறார்?
வி.பி.சிங் வந்தது எப்படி?
கலைஞரை பார்த்து அவர் கேட்டபோது, நீங்கள் எல்லோரையும் பிரதமராக தேர்ந்தெடுக்கிறீர்கள். நீங்கள் பிரதமராக ஆக வேண்டியதுதானே! என்று கேட்டனர்.
அதற்கு, கலைஞர் மானமிகு சுயமரியாதைக்காரர் அல்லவா? அவர் சொன்னார் என் உயரம் எனக்குத் தெரியும்! இதுதானே அடக்கம். இதுதானே ஒரு தலைமைக்கு அடையாளம், நான் பிரதமராகி விடுவேன். நாற்காலி கொண்டு வாருங்கள் என்று சொல்லவில்லை.
ஆலினால் அம்மா!
இதோ என் கையில் ஆனந்தவிகடன் இதழ் ஆல் இன் ஆல் அம்மா சொல்வதெல்லாம் சும்மா என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.
அது என்ன அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையா அல்லது அம்மா அருள் வாக்கா? இந்தியா முழுமைக்குமான சர்வ ரோக நிவாரணிபோல ஒரு தேர்தல் அறிக்கையைத் தயாரித் திருக்கிறார் ஜெயலலிதா. தனக்குப் 'பிடித்தது - பிடிக்காதது, தான் இதுவரை 'எதிர்த்தது - எதிர்க்காதது, 'சொன்னது - சொல்லாதது அனைத்தையும் சேர்த்துக் குழைத்து சுண்டவைத்து ஒரு ஸ்பெஷல் சூப் தயாரித்துவிட்டார்.
இனி... இந்தியாவுக்கு காங்கிரசும் தேவை இல்லை; கம்யூனிஸ்ட்டுகளும் அவசியம் இல்லை. தி.மு.க-வும் வேண்டாம்; ம.தி.மு.க-வும் வேண்டாம். தமிழர் இயக்கங் களும் தேவை இல்லை; பி.ஜே.பி-க்கும் ஆம் ஆத்மி-க்கும் இனி வேலையே இல்லை... என்று சொல்லும் அளவுக்கு எல்லாக் கட்சிக் கொள்கைகளையும் கபளீகரம் செய்து விட்டார்.
மக்களவைத் தேர்தலுக்காக ஜெயலலிதா விரித்திருக்கும் இந்த மாயக் கம்பளம், மயக்கம் தருகிறது. முதலில் தலை சுற்றவைப்பது, தனி ஈழம் அமைந்திட, ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு அவர் எடுத்திருக்கும் உறுதி.
2008-2009-ல் இந்தியாவின் காலடியில் ரத்தம் பொங்கி இந்து மகா சமுத்திரத்தை மூழ்கடித்தபோது, 'ஈழம் என்ற வார்த்தையே ஜெயலலிதாவுக்குக் கசந்தது. 'ஈழத் தமிழர்கள் போரில் கொல் லப்படுகிறார்களே? என்று ஜெயலலிதா விடம் (18.1.2009) கேட்கப்பட்டபோது, 'அங்கு ஈழம் இன்னும் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் அரசியல்ரீதியில் அலுவல்ரீதியில் சொல் லப்படுகிறது என்று வியாக்கியான வகுப்பு எடுத்தவர்.
'இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்; இதில் எந்த நாடும் விதிவிலக்கு அல்ல.
ஆனால், இன்று இலங்கையில் என்ன நடக்கிறது என்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லவிடாமல் விடுதலைப் புலிகள், வலுக்கட்டாயமாக அவர்களைப் பிடித்துவைத்துக்கொண்டு, ராணுவத்தின் முன்னால் ஒரு கேடயமாகப் பயன்படுத் திக் கொண்டிருக்கிறார்கள் என்று இலங்கை அரசைக் காப்பாற்றியவர் இவர்.
'மத்திய காங்கிரஸ் அரசு இலங்கைக்கு ஆயுதம் கொடுத்தபோது, தி.மு.க. அதைத் தட்டிக்கேட்கவில்லை என்று தேர்தல் அறிக்கையில் இப்போது குற்றம் சொல்லும் ஜெயலலிதா, 'இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவ தற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதல மைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது (16.10.2008) என்றும் சொன்னவர்.
'போரை நிறுத்த வேண்டும் என்பதன் மூலம் கருணாநிதி, விடுதலைப் புலிகள் அமைப்பைக் காப் பாற்றுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார் என்றும் சொல்லி, ஈழத்தின் பக்கமே முகத்தைத் திருப்பாமல் எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தார். சிங்களப் பத்திரி கைகள், முக்கியத்துவம் கொடுத்து இதனை வெளியிட்டுப் புல்லரித்தபோதுதான் சிங்கள ராணுவம் கிளஸ்டர் குண்டு களைப் போட்டன. கொடூரம் கூடியது; தேர்தல் நெருங்கியது.
தனது நிலைப்பாட்டை மாற்றியாக வேண்டிய நெருக்கடியில் ஜெ., ஈழத் தாய் வேடம் இட்டார். கருணா நிதிக்கு எதிர்மறை விமர்சனம் கொடுத்த விவகாரம் என்பதால், அதனைக் கையில் எடுத்தார் என்று ஆனந்த விகடன் கூறுகிறதே! ஆனந்த விகடன் ஏடு என்ன திமுக ஏடா? தி.க. ஏடா?
எனவே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் பலமுள்ள கூட்டணி. வெற்றி வாய்ப்புள்ள கூட்டணி இருக்கிறது என்றால், அது கலைஞர் அவர்களால் அமைக்கப் பட்டுள்ள ஜனநயாக முற்போக்கு கூட்டணி. அதன் ஆற்றல் மிகு வேட்பாளர் நம்முடைய வழக்கறிஞர் பொன்.முத்து ராமலிங்கம் நிறுத்தப்பட்டு இருக்கிறார். நிங்கள் நன்றாக நினைவு வைத்துக் கொண்டு இங்கே கலைஞர் உருவத்தில் இருக்கிறார். கலைஞர் நிற்கிறார். கலைஞர்தான் வேட்பாளர் என்ற எண்ணம் அத்தனைப் பேருக்கும் இருக்க வேண்டும்.
கலைஞரை நேசிக்கிறார்கள்
நான் கலைஞரை நேசிக்கிறேன் என்று சொல்கிறவர்கள் உண்மையாக நேசித்தால், கலைஞரை விரும்புகிறேன் என்று சொல்கிறவர்கள் அவர்கள் மனதிலே எந்த சங்கடமும் இல்லையென்றால், அது கலைஞரால் நிறுத்தப்பட்டுருக்கிற இவரை வெற்றிப் பெறச் செய்வதன் மூலம் காட்ட வேண்டுமே தவிர, வேறு இல்லை என்பதை அனைவருக்கும் நினைவுப்படுத்தி, அடுத்த பிரதமர் யார் என்பதை அடையாளம் காட்ட வேண்டிய பொறுப்பு கலைஞருக்குத் தான் இருக்கிறது என்று கூறி முடித்தார்கள்.
Read more: http://viduthalai.in/page-6/78075.html#ixzz2xsDjo7BP
உங்கள் மூளை சுத்தமா இல்லையா...?
இரவில் நன்றாக தூங்குவதால் மூளை சுத்தமாகிறது என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது. ஆழ்ந்த உறக்கத்தில் தான் மூளையின் நச்சு கழிவுகள் வெளியேறுவதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒருவர் தூங்கும் போது அவரது மூளையின் அணுக் களிடையே உள்ள இடைவெளி அதிகரிப்பதால் இந்த கழிவுகள் வெளியேறுகின்றன என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
உறக்க நேரத்தில்தான் மூளை தன்னை தானே சுத்திகரிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் குழு தங்களது ஆய்வில் தெரிந்துக் கொண்டது. ஒரு எலியின் தலையில் மய் போன்ற திரவத்தை செலுத்திய விஞ்ஞானிகள், அந்த எலி உறங்கும்போது அந்த திரவம் வெளியேறியதை கண்டறிந்தனர்.
அதுவே அந்த எலி விழித்திருக்கும்போது திரவம் வெளியே வராத நிலை இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனோடு மூளை அணுக்களுக்கு இடையே உள்ள இடைவெளியும், உறக்கத்தின்போது 60 சதவீதம் அதிகரிப்பதும் தெரியவந்துள்ளது.
Read more: http://viduthalai.in/page-7/78073.html#ixzz2xsEIIOrb
நான் செய்தது குற்றமல்ல; புரட்சி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா
உதகை, ஏப்.3- தொலைத் தொடர்புத் துறையில் நான் செய்தது குற்றமல்ல; புரட்சி என்று உதகை பிரச்சாரக் கூட் டத்தில் ஆ.இராசா பேசினார்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் 2 ஆவது முறை யாக போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.இராசா புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பின், ஆட்சியர் அலுவலகம் அருகே கூடியிருந்த திமுக தொண்டர்களிடையே பேசி யதாவது:
நீலகிரி தொகுதிக்கு கலை ஞரால் மீண்டும் ஒப்படைக் கப்பட்டுள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் இத்தொகுதி யில் நான் ஆற்றிய பணிகளை திரும்பத், திரும்ப பட்டியலி டுவதில் அர்த்தமில்லை. ஆனால், அந்த பணிகளின் போதுதான் எனக்குச் சோதனை ஏற்பட்டது. அமைச்சர் பத வியிலிருந்து விலகவேண் டிய நிலை உருவானது.
அதன்பின், இதுவரை யிலும் நான் அளித்த அனைத்து வாக்குமூலங்களி லும் எந்தவிதமான மாற்ற முமில்லை. ஆனால், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாக கூறப்பட்ட வற்றை ஜெயலலிதா தற் போது பேசி வருகிறார். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கெனவே சிபிஅய்யும், நாடாளுமன்றக் கூட்டுக்குழுவும் விசாரணை நடத்தி முடித்த பின், அது தொடர்பான விளக்கத்தை யும் அளித்திருந்தேன்.
ஆனால், அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் எனக்கு எழுதிய கடிதத்தில் இருந்த அறிவுரையை கேட்காமல் நான் செயல்பட்டதாக ஜெய லலிதா கூறிவருவது உண் மைக்குப் புறம்பானது.
இது தொடர்பாக, நாடா ளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு நான் அனுப்பிய 102 பக்க விளக்க அறிக்கை மீது விவா தம் நடத்தப்பட்டபோது, அதில் அதிமுக சார்பில் தம்பிதுரையும், மைத்ரேய னும் பங்கேற்றிருந்தனர்.
ஆனால், அது எதுவுமே தெரியாமல் ஜெயலலிதா தற்போது பேசி வருகிறார். இதுதொடர்பாக, என்னுடன் நேரடியாக விவாதிக்க அவர் தயாரா என்பதை அறிவிக்க வேண்டும். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நான் எந்தக் குற்றமும் செய்ய வில்லை. நான் செய்தது புரட்சியேயாகும். புரட்சிக் காரனை எவ்வகையிலும் குற்றம் சாட்டக்கூடாது.
ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற சம்பவங்களை துண்டறிக்கையாக தயாரித் துள்ளேன். இது அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக் கும் தேடி வரும். அப்போது அனைவருக்கும் உண்மை தெரியும் என்றார்.
Read more: http://viduthalai.in/page-8/78059.html#ixzz2xsEiqkt3
உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறாத மோடியை மக்கள் எப்படி நம்புவார்கள்? சரத்பவார் கேள்வி
அலிபாக், ஏப். 3-குஜராத் கலவரத்தில் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்பியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறாத மோடியை மக்கள் எப்படி நம்புவார்கள் என்று சரத்பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், ரெய்காட் மக்களவை தொகு தியில் போட்டியிடும் தேசிய வாத காங்கிரஸ் வேட்பாளர் சுனில் தத்கரேயை ஆதரித்து மத்திய அமைச்சர் சரத் பவார் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசிய தாவது:
நாட்டின் நலனுக்கு எப்படி உறுதி தருவார்?
குஜராத் கலவரத்தில் உயிருடன் எரித்துக் கொல் லப்பட்ட காங்கிரஸ் எம்பி யின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறுவது குறித்து கவலைப்படாத மோடியை மக்கள் எப்படி நம்புவார் கள்? அப்படிப்பட்ட மனிதர் நாட்டின் நலனுக்கு எப்படி உறுதி தருவார்?
நேரு காலத்தில் இருந்து பல மக்களவை தேர்தல் களை நாங்கள் பார்த்திருக்கி றோம். ஆனால், பிரதமர் வேட்பாளரை அறிவித்து தேர்தலை எதிர்கொள்வது இதுவே முதன்முறையா கும். இவ்வாறு பாஜக செய் வது அரசியலமைப்பை இழிவு படுத்துவதாகும். காங்கிரஸ் இல்லாத இந்தி யாவை உருவாக்க வேண் டும் என்று மோடி கூறு கிறார்.
காங்கிரஸ்தான் ஆங்கிலேயரை விரட்டி இந் தியாவிற்கு சுதந்திரம் வாங் கிக் கொடுத்தது. பாஜக தலைவர்கள் இந்த நாட் டிற்காக என்ன தியாகம் செய்தார்கள். இவர்களை தேர்தலில் நாம் வெற்றிய டைய விடக்கூடாது என்று சரத்பவார் கூறியுள்ளார்.
Read more: http://viduthalai.in/page-8/78057.html#ixzz2xsF3dcwl
நம்பத்தகுந்தவரா - சிந்திப்பீர்! ஜெயலலிதாபற்றி வாஜ்பேயி கூறியது என்ன?
கேள்வி: ஜெயலலிதாவின் அரசியல் நடத்தும் விதம்பற்றி கூட்டணி அமைக்கும் போதே நீங்கள் அறிந்திருக்கவில்லையா?
வாஜ்பேயி: இல்லை, நியாயமற்ற நிபந்தனைகளை நிறைவேற்றும்படி அவர் சொல்லுவார் என்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை. கூட்டணி அமைக்கப்படும் பொழுது இதைப்போன்ற நிபந்தனைகளை அவர் வைக்கவில்லை. விதித்திருந்தால், கூட்டணியை அமைத்திருக்கமாட்டோம்.
கேள்வி: சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா நிறைய தொந் தரவுகளைக் கொடுத்ததாகச் சொன்னீர்கள், என்ன தொந்தரவு கொடுத்தார்?
வாஜ்பேயி: அ.தி.மு.க.வுடன் நல்ல நம்பிக்கையின் அடிப்படையில்தான் கூட் டணி அமைத்தோம். ஆனால், அரசாங்கம் அமைவதற்கு முன்பாகவே பிரச்சினைகள் ஆரம்பித்தன. தமிழ்நாட்டில், அ.தி.மு.க. வுடனான கூட்டணி மகத்தான வெற்றி பெற்ற பிறகும்கூட ஜனாதிபதிக்கு ஆட்சி அமைக்க ஆதரவுக் கடிதம் கொடுக்க மறுத்தார் ஜெயலலிதா. மிகுந்த தாமதம் மற்றும் நிச்சயமின்மைக்குப் பிறகே அந்தக் கடிதத்தை அவர் கொடுத்தார். சுதந்திர தினக் கொண்டாட்டம் உள்பட பல்வேறு சமயங்களில் ஆதரவை வாபஸ் பெறு வோம் என்கிற மிரட்டலை அ.தி.மு.க. விடுத்தது. ஒரு மாபெரும் விலையுடன்தான் அ.தி.மு.க. ஆதரவு எங்களுக்குக் கிடைத் தது என்பதை விரைவில் நாங்கள் உணர்ந்தோம்.
கருணாநிதியின் அரசைக் கலைக்க வேண்டும் என்பதுதான் அந்த விலை. அது மட்டுமல்ல; பல ஊழல் வழக்கு களிலிருந்து ஜெயலலிதாவை மத்திய அரசு விடுவிக்கவேண்டும் என்பதும் அவருடைய நிபந்தனையாக இருந் தது. அந்த விலையைக் கொடுக்க நாங்கள் மறுத்தோம். மிரட்டலுக்கு அடி பணிந்து கொள்கைகளை விட்டுக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.
அவருடைய நியாயமற்ற நிபந்தனைகளை நாங்கள் நிறைவேற்றப் போவதில்லை என்பதை உணர்ந்தவுடன் அவர் ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டார். எங்களைக் கண்டிக் கும் சதியில் காங்கிரசுடன் கைகோத்துக் கொண்டார்.
(குமுதம், 20.9.1999)
தேர்தலுக்குப் பிறகு பி.ஜே.பி.யும் - அ.இ.அ.தி.மு.க.வும் கூட்டணி வைப்பதாக ஒரு விவாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும், ஜெயலலிதா சுயநலத்துக்காக, நிபந்தனைகளை வைக்கமாட்டாரா?
வாஜ்பேயிக்கே தண்ணிக் காட்டியவர் - மோடி எம்மாத்திரம்?
Read more: http://viduthalai.in/page-8/78127.html#ixzz2xxigsTch
சிந்தித்துப் பார்
நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந் தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார். - (விடுதலை, 22.9.1967)
Read more: http://viduthalai.in/page-2/78121.html#ixzz2xxj9RGdh
தேர்தல் அறிக்கையைக்கூட வெளியிட முடியாத பாஜக?
இந்தியா என்கிற மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி துவங்கி, ஒன்பது கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் அஸ்ஸாம், திரிபுரா மாநிலங்களில் 7-ஆம் தேதி துவங் குகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் அகில இந்திய கட்சிகள் என்ற நிலை யில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சமாஜ் வாடி, ஜனதா தளம் மற்றும் மாநில அளவில் உள்ள கட்சிகள் திமுக, அதிமுக, மதிமுக, தேசிய காங்கிரஸ், சிவசேனா என தங்கள் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கையை வெளி யிட்டுள்ளன.
தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களது கட்சியின் தேர்தல் அறிக்கை யில் கூறிய விஷயங்களை மக்கள் மன்றத்தில் விவாதிக்கவும், மக்கள் அக்கட்சியின் அடிப்படைக் கொள்கை களை தெரிந்து கொள்ளவுமே இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்படு கிறது என நாம் நம்பிக் கொண்டி ருக்கிறோம். ஆனால், கடந்த பத்தாண்டு காலமாக மத்தியில் எதிர்க்கட்சியாக இருந்த, அதற்கு முன்னர் அய்ந்தாண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக, இதுநாள் வரை, தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. வருகிற 7-ஆம் தேதி, அதாவது, முதல் கட்டத் தேர்தல் துவங்கும் நாளன்று, தேர்தல் அறிக் கையை வெளியிடுவோம் என பாஜக சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி சென்ற ஆண்டு செப் டம்பர் 2013-லேயே அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரேயே, அவர் பிரதமர் வேட்பாளர் என ஆர்.எஸ்.எஸ். தலைமை அங்கீகாரம் செய்து, அத்வானியின் எதிர்ப்பையும் மீறி, மோடியை அறிவித்துவிட்டது பாஜக. அக்டோபர் 2013-இல், தேர்தல் அறிக்கை சம்பந்தமாக மக்கள் கருத்துக்களை கேட்டறிய, பாஜக ஓர் இணையதளத்தையே உருவாக்கியது. இவ்வாறு, ஊருக்கு முன்னேயே, பிரதமர் வேட்பாளர், தேர்தல் அறிக்கை சம்பந்தமாக கருத்து என முந்திக்கொண்டதாக மார்தட்டிக் கொண்ட பாஜக, இதுவரை தேர்தல் அறிக்கையை ஏன் வெளியிடவில்லை? தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது? மோடிதான் பொதுக்கூட் டத்தில் பிரச்சினைகளைப்பற்றி பேசுகிறாரே என பாஜக சார்பில் ஊடகத்தில் ஒருவர் கருத்து கூறுகிறார். ஆமாம். வெற்றி பெற்றால், வருவது பாஜக ஆட்சியல்ல; மோடி ஆட்சி என பாஜகவே விளம்பரம் செய்யும்போது, தேர்தல் அறிக்கை யாவது; கொள்கையாவது; வெங்காய மாவது. ஏப்ரல் 7-ஆம் தேதி தேர்தலில் வாக்களிக்கும் அஸ்ஸாம், திரிபுரா மக்கள், பாஜகவின் தேர்தல் அறிக் கையைப் பற்றி எதுவும் தெரியாமல், வாக்களிக்க வேண்டும். இதுதான் பாஜகவின் சனநாயக மாண்பு?
- குடந்தை கருணா
Read more: http://viduthalai.in/page-2/78135.html#ixzz2xxjIPKdc
ஊழல் மன்னன் மோடி பராக்! பராக்!!
* 5 ஆண்டுகளில் குஜராத் முதல்வர் வணிக விமானங்கள் அல்லது அரசு விமா னங்களை பயன்படுத்தாமல் ஏறத்தாள 200 பயணங்களுக்கு மேல் தனியார் சொகுசு விமானங்களை பயன்படுத்தியுள்ளார் எங்கிருந்து வந்தது அவ்வளவு பணம்?
* குஜராத்தில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஒரு சதுர மீட்டர் ரூபாய் 900 என்ற மதிப்பில் 11000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த நிலத்தின் அன்றைய சந்தை மதிப்பு ஒரு சதுர மீட்டருக்கு ரூபாய் 10,000 இதன் மூலம் அரசுக்கு இழப்பு ரூபாய் 33000 கோடி.
* குஜராத் அரசு தடை செய்யப்பட்ட நிறுவனத்திடமிருந்து கால்நடை தீவ னத்தை 5 கிலோவிற்கு ரூ 240 வீதம் வாங்கி யுள்ளது ஆனால் அதன் சந்தை மதிப்பு 5 கிலோவிற்கு ரூ 120 முதல் 140 வரை தான்!!!
*அரசு நிலத்தை அரசிடமிருந்து அதானி என்னும் பெரு நிறுவனம்
ஒரு சதுர மீட்டர் 50 பைசாவுக்கு வாங்கி அதே நிலத்தை அரசு நிறு வனத்துக்கு ஒரு சதுர மீட்டர் 500 ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டதில் பல லட்சம் கோடி ஊழல் (மோடி ஊரு ஊராக சுற்றுவது அதானியின் சார்டர்ட் விமானங் களில் தான்)
* காண்ட்லா துறைமுகத்தின் 16000 ஏக்கர் நிலத்தை, சந்தை மதிப்பில் 6% ஆக இருக்க வேண்டிய குத்தகை தொகையை ஏக்கருக்கு வெறும் ரு 144 வீதம் ஏலம் விட்டதில் 2 லட்சம் கோடி ஊழல்!!
* கிருஷ்ணா கோதாவரி ஆற்றுபடுகை யில் எரிவாயு கண்டுபிடிக்கும் குஜராத் மின்கழக திட்டம் வெளிநாட்டு நிறுவனத் திற்கு எந்த ஏலத்தொகையுமின்றி விற்றதில் இழப்பு 20000 கோடி!!!
ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் மோடியின்மீது 17 ஊழல் கள் பற்றி விசாரணை நடப்பது ஏன்? வாக்காளர் களே சிந்திப்பீர்!
- அபு ரயான்
Read more: http://viduthalai.in/e-paper/78112.html#ixzz2xxjkj0sf
மத்திய காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகியது ஏன்? கலைஞர் விளக்கம்
கேள்வி :- தி.மு. கழகம் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிலிருந்து விலக உண்மையான காரணம், இலங்கைத் தமிழர் பிரச்சினை அல்ல என்றும், அலைக்கற்றை வழக்கு தான் காரணம் என்றும் ஜெயலலிதா கோவையில் கூறியிருக் கிறாரே?
கலைஞர் :- 1998-1999ஆம் ஆண்டுகளில் சொந்தப் பிரச்சினைகளை-சுயநலக் கோரிக்கைகளை முன் வைத்து மத்தியில் ஆட்சி செய்த வாஜ்பய் அரசை படாத பாடு படுத்தி, இறுதியாக குடியரசுத் தலைவரைச் சந்தித்து வாஜ்பய் அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறக் கடிதம் கொடுத்து, மத்திய அரசையே கவிழ்த்தவரின் எண்ணம் அப்படித்தானே இருக்கும்! அலைக் கற்றை வழக்குக்காக மத்திய அரசிலிருந்து விலகுவது என்றால், அந்த வழக்கில் தி.மு. கழகத்தினரை கைது செய்தபோதே விலகி வந்திருப் போம். ஆனால் அப்போது தி.மு. கழகம் மத்திய அரசி லிருந்து விலக வில்லை. மத்திய அரசிலிருந்து தி.மு.க. விலகிய போது நான் விடுத்த அறிக்கையில், தமிழ் இளை ஞர்களும், வாலிபர்களும் தங்கள் இனம் வாழ - மொழி வாழ - நடத்திய வீர மரணப் போராட்டங்கள்கூட தமிழ் உணர்வற்றவர்களால் எள்ளி நகையாடப்பட்டாலும், அவைகளையெல்லாம் மீறி நமது குறிக்கோள் வெற்றியே முக்கியம் என்ற கொள்கை உறுதியோடு; ஈழப் போரில் மாண்டு மடிந்த போராளிகளுக்கும், அவர்தம் குடும்பத் தாருக்கும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிற சூழலில் அவர்தம் காலடி மண்ணெடுத்து, அதனைத் திலகமாக இட்டுக் கொண்டு, அந்தத் திலகத்தின் சாட்சியாக - தமிழ் ஈழத்தில் சிங்களப் பேரினவாதிகளால் நடத்தப்பட்ட - அதிலும் குறிப்பாக ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்கள் மலிந்த - இரு கருத்துக்கு இடமில்லாத வகையில் இனப் படுகொலையே நடத்தப்பட்டு - உலக அரங்கில் உள்ள நாடுகளின் விவாதத்திற்கு உரியதாக ஆகிவிட்ட இந்தச் சூழலில் உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார் தட்டிக் கொள்ளும் இந்தியத் திருநாடு, இந்தப் பிரச்சி னையின் ஆழத்தை உணராமல், விளைவுகளைக் கருதாமல், ஒதுங்கி நிற்பதோ; அல்லது எதிர் மறை கருத்துரைப்பதோ - இந்தி யாவில் காந்தியடிகளும், இலங்கையில் தந்தை செல்வ நாயகமும் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்து நடத்திய அறவழிகளை - அறவே மூடிவிடுவதற்கான; ஜனநாயக விரோதச் செயல்களாகும். இவைகளையெல்லாம் அய்.நா. மன்றத்திலும், அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்திலும் நீதி நெறியோடு ஆய்ந்து பார்த்து - அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால் அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்கே தள்ளப்பட்ட இலங்கையும், அந்த இலங்கையின் தொப்புள் கொடி உறவு கொண்ட தமிழகம் இடம் பெற்றுள்ள இந்தி யாவும், இந்த ஜனநாயக விரோதச் செயல்களுக்கு கதவு களைத் திறந்து விட்டிருப்பதை இன உணர்வுள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதையாக, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போக விட்டதோடு; திராவிட முன்னேற்றக் கழகம் முன் மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை. எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலை களே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அமைச்சரவை யிலிருந்தும், அய்க்கிய முற்போக் குக் கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப் பட்டுள்ளது என்ற வரிகளை மீண்டும் ஒரு முறை படித்தால், தி.மு.கழகம் எதற்காக மத்திய அரசிலிருந்து விலகியது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். வாதத்திற்கு மருந்து உண்டு, விதண்டா வாதத்திற்கு மருந்து ஏது?
- (முரசொலி, கலைஞர் பதில்கள், 4.4.2014)
Read more: http://viduthalai.in/page-3/78117.html#ixzz2xxkGrcgX
மதம் போதிப்பது என்ன?
வாழ்நாள் முழுதும் உழைத்தும் போதிய வருவாய் இன்றி வாழும் மனிதர்கள் அனைவருக்கும் மதத்தினால் போதிக்கப்படுவது என்ன? இந்தப் பூவுலகில் அடங்கி வாழ வேண்டும்; பொறுமையுடன் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் சொர்க்கத்தின் பரிசு தங்களுக்கு கிடைக்கும் என்ற மன அமைதி கொள்ள வேண்டும் என்பதே.
பிறரது உழைப்பின் மீது தம் வாழ்வினை ஆதாரமாகக் கொண்டு வாழும் நபர்கள் மதத்தினால் என்ன போதிக்கப் படுகிறார்கள்? இவ்வுலகில் வறியோர்க்கு வழங்கும் தரும நெறியினைக் கடைப்பிடித்து வாழ்தல் என்ற சுலபமான வழியில் சுரண்டல்காரர்களின் வாழ்வினையும் மதம் நியாயப்படுத்துகிறது.
அதாவது, சொர்க்கத்தில் நல்வாழ் வினைப் பெறுவதற்குச் சுலபமான விலையில் பயணச் சீட்டுகள் அவர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
- மதத்தைப் பற்றி என்னும் நூலில் லெனின்
Read more: http://viduthalai.in/page-7/78152.html#ixzz2xxkuNKsQ
காந்தியார் மீது நேருவின் தாக்குதல்!
(புதுடில்லியில் 3.1.1947 அன்று நடைபெற்ற இந்திய விஞ்ஞான மாநாட்டில் நேரு அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது. சத்திய சோதனை என்றும், கடவுள் சொன்னார் என்றும் அடிக்கடி கூறிக் கொண் டிருந்த காந்தியாரை மறைமுகமாகத் தாக்குகிறார் நேரு. படித்துப் பாருங்கள் - உங்களுக்கே புரியும்! - ஆ.ர்.)
தனிப்பட்ட நபரொருவரின் சத்திய சோதனையல்ல விஞ்ஞானம். மக்கள் நலனுக்குப் பயன்படுவதாயின், அது தனிப்பட்டவரின் சோதனையைக் காட்டிலும் பரப்பு மிகவுள்ளதே, பட்டினியால் பரிதவிக்கும் மனிதனுக்கு சத்தியம்; உண்மையென்பதெல்லாம் அர்த்தமற்ற வெறுஞ் சொற்களே. அவனுக்கு உணவு வேண்டும். பட்டினிப் பசித்துயரில் சூழ்ந்துள்ளவனுக்கு கடவுளைப்பற்றிக் கவலையில்லை. அவனுக்கு உணவு வேண்டும். இந்தியா பசிப் பட்டினியால் அவதியுற்று வரும் நாடாகும்.
பட்டினிப் பட்டாளங்கள் முன்னிலையிலா கடவுள் சத்தியம்!
கோடிக்கணக்கான பட்டினிப் பட்டாளங்களின் முன்னிலையில் கடவுள், சத்தியம் என்று வெற்றுரை பகருவதும், அழகொழுக வாழ்க்கைத் தத்துவங்களை யெடுத்தியம்புவதும், அவர்களை கேலி செய்வதற்கே யொப்பாகும் பட்டினியால் வதையுறுவோருக்கு, உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் தந்தாக வேண்டும். அவர்களுக்குக் கல்வி அளித்தாக வேண்டும். சுகாதார வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தாக வேண்டும்.
சுருக்கமாக வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதது வேண்டப்படும் வசதிகள் அத்தனையும் அளித்தாக வேண்டும். இவற்றை நாம் செய்து விட்டோ மானால் அதன் பிறகு வேதாந்தம் பேசலாம்; கடவுளைப்பற்றி நினைக்கலாம். எனவே, இந்தியாவின் 40 கோடி மக்களைப் பற்றிய சிந்தனையிலீடுபட வேண்டும் விஞ்ஞானிகள். விஞ்ஞனம் பரப்புவோம். பண்டிதர் ஜவஹர் மேலும் கூறியதாவது:-
நாங்கள் பெரிதும் விரும்புவது
சர்க்கார் நடவடிக்கையெடுத்துக் கொள்வரென்று கருதி விஞ்ஞான காங்கிரஸ் இவ்விஷயங்களைக் கவனியாது வெறுமென இருந்து விடாது என நம்புகிறேன். சர்க்கார்கள் நல்லனவாயுமிருக்கலாம்; கெட்டன வாயுமிருக்கலாம்.
ஆனால், எல்லா சர்க்கார்களும் ஆமை வேகத்தில் செல்லக்கூடியனவே ஆகும். அவர்களை சுறு சுறுப்பாக்குவது ஒன்றே ஒன்றுதான். மறைமுகமாக அவர்களது எதிர்காலத் தைப் பாதிக்கக் கூடிய பொதுமக்கள் கூச்சலே அது. சர்க்காரிடமிருந்து எதுவுமெதிர்பார்க்க விஞ்ஞானி களுக்கு உரிமை உண்டு.
தற்கால இந்திய சர்க்காரின் உறுப்பினன் என்ற முறையில் நான் இதைக் கூற ஆசைப்படுகிறேன். இந்தியாவில் விஞ்ஞானம் பெருத்த அளவில் வளர்ச்சியுற வேண்டுமென நாங்கள் பெரிதும் விரும்பு கிறோம்.
விஞ்ஞான ஆராய்ச்சியை விரிவுபடுத்த எங்களாலியன்றதைச் செய்வோம். விஞ்ஞான முன்னேற்றத்திற்கும், அதன் வாயிலாக உலக மக்களின் நலத்துக்கும் நாங்கள் உலக விஞ்ஞானிகளுடன் ஒத்துழைக்க ஆயத்தமாகியுள்ளோம்.
Read more: http://viduthalai.in/page-7/78152.html#ixzz2xxlCiFbi
மத ஆதிக்கத் தொல்லை!
மதத்தின் பயனாக நமது வாழ்வில் எவ்வளவு துன்பங்கள், தொல்லைகள் அடைய நேரிடுகிறது என்பதை உணர்ந்தால், மேலும் மேலும் மதங்களிடம் வெறுப்புத் தோன்ற இடமேற்படுகிறதே ஒழிய, சிறிதாவது அதைச் சகிக்க இடமே இல்லாமல் இருக்கின்றது.
கிறிஸ்தவ மதத்தைப் பற்றி எழுதினோம் என்பதற்காக குடிஅரசு பத்திரிகை ஜாமீன் கேட்கப்பட்டுப் போயிற்று. மகம்மதிய மதத்தைப் பற்றி எழுதினதற்காக புரட்சி பத்திரிகை ஜாமீன் கேட்கப்பட்டுப் போயிற்று.
இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறோம் என்பதற்காக தினந்தோறும், நிமிடந்தோறும் அடைந்து வரும் தொல்லையும், நசுக்குச்சேட்டை உபத்திரவங்களும் கணக்கு வழக்கில் அடங்காது.
பார்ப்பனர்களை உத்தியோகஸ்தர் களாகக் கொண்ட போலீஸ் இலாகா, போஸ்டல் இலாகா, ரயில்வே இலாகா, நிதி இலாகா, நிருவாகம் மற்றும் அநேக துறைகளில் கீழே இருந்து அய்கோர்ட் நிருவாக சபை வரையில் ஆங்காங்குள்ள மதக் காப்பாளர்களான பார்ப்பனர்களால் நாம் அடைந்து வரும் கஷ்டம் சித்திரவதைக் கொப்பாகவே இருந்து வருகின்றது.
- தந்தை பெரியார்
Read more: http://viduthalai.in/page-7/78153.html#ixzz2xxlLlO30
விதியை நம்பி வீண்போவோர்!
மக்கள் மூடநம்பிக்கையில் மூழ்கியிருப்பதால் அவர்கள் பகுத்தறிவைக் கொண்டு சிந்திக்கமுடியவில்லை. இதற்கு மதமும் துணை போகிறது. இந்த மக்களின் மத நம்பிக்கைகள் முழுக்க முழுக்க மூடநம்பிக்கை நிரம்பி யவை. ஆனால், மேலை நாடுகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே இந்த மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டுக் கொண்டன.
சமூக பொருளாதார நிலைகளும், மதக் கட்டுப்பாட்டின் அடிப்படையிலேயே உள்ளன. இந்த மத நம்பிக்கைகள் புதிய திட்டமிடுதலுக்கும், வளர்ச்சிக்கும் தடைக்கற்களாக இருந்து வருகின்றன. பொருளாதாரத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள மக்களும் இவைகளை பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.
கடவுள் விட்ட விதி இது என்று விதியை நம்பி காலத்தைக் கழிக்கின்றனர். இதனால் தான் தாழ்த்தப்பட்டவர்கள் கோயில்களுக்குள் நுழைய முடியாமலும், பொதுக் கிணறுகளைப் பயன்படுத்த முடியாமலும் உள்ள நிலை இருக்கின்றது.
- இந்திய நிலை குறித்து ஏசியன் டிராமா என்ற நூலில் குன்னர் மிர்டல். பக்கம் 41
Read more: http://viduthalai.in/page-7/78153.html#ixzz2xxlUmAKR
ஈ.எம்.எஸ். பார்வையில் மதம்
புராதன பொதுவுடைமையின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, கிரீஸிலும் ரோமிலும் தோன்றியது போன்ற அடிமை அமைப்பு முறையிலிருந்து மாறுபட்ட ஒரு வர்க்க வேற்றுமையும், சுரண்டல் முறையும்தான் இங்கு உருவாகியது.
சிந்து சமவெளி தடயங்களை பரிசீலிக்கும் போது அன்றைய சமூக வாழ்க்கையின் பகுதியாக, கிரீஸிலும் ரோமிலும் இருந்தது போன்ற அடிமைமுறை சிந்து சமூகத்தில் இருந்திருக்கவில்லையா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
ஆனால் சிந்து சமவெளி நாகரிகத்தையே அழித்து ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்கிய ஆரியர்கள் அடிமைகள் - எஜமானர்கள் என்ற வர்க்க வேறுபாட்டுக்குப் பதிலாக ஆரம்பத்தில் நான்கு வர்ணங்களும் பிறகு எண்ணற்ற ஜாதிகளும் உபஜாதிகளுமடங்கிய ஓரமைப்பை உருவாக்கினர்.
இது நமது சமூக வாழ்க்கையில் இந்தியாவுக்கு உரித்தான ஒரு விசேஷ தன்மையை அளித்தது. அடிமை முறையிலுள்ளதுபோல தெளிவானதும் மறுக்க முடியாதது மான சுரண்டல் முறைக்கு பதிலாக வருணாசிரம தர்மத்தினுடையவும் ஜாதி ஆசாரங்களுடையவும், இவைகளுக்கு நியாயம் கற்பிக்கின்ற மத நம்பிக்கை களுடையவும் திரைக்குப் பின்னால் வளர்ந்த மேல்ஜாதி ஆதிக்கம் மேலோங்கி வந்தது. இதற்குப் பாரதீய நாகரிகம், ஹர்ஷ நாகரிகம் என்பது போன்ற செல்லப் பெயர்களும் கிடைத்துள்ளன.
- ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதிய இந்திய வரலாறு என்னும் புத்தகத்தின் 36ஆம் பக்கத்தி லிருந்து
குறிப்பு: இந்திய சமூகத்தில் வர்க்க பேதத்தை விட ஜாதி பேதமே மேலோங்கியுள்ளது என்ற தந்தை பெரியாரின் கருத்தை ஈ.எம்.எஸ். இங்கு ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.
Read more: http://viduthalai.in/page-7/78153.html#ixzz2xxlcGiJv
முதல்தரமான விரோதி!
எல்லா மதங்களுக்கும், புரோகிதக் கூட்டத்தாருக்கும் முதல்தரமான விரோதியாக இருப்பது எது தெரியுமா? பகுத்தறிவு என்று இருக்கிறதே ஒரு பொருள் - அது தான்! வேறு எது?
- வால்டேர்
Read more: http://viduthalai.in/page-7/78153.html#ixzz2xxll5DZM
பார்ப்பனர்களின் அயோக்கியத்தனத்திற்கு ஒரு உதாரணம்:
பாரதி பாடல் என்பதாக சில பாட்டுகள் காலம் சென்ற திரு.சுப்பிரமணிய பாரதி என்கின்ற ஒரு பார்ப்பனரால் பாடப்பட்டிருந்தது. அவர் இறந்தவுடன் அவர் குடும்பத் தாருக்கு வயிற்றுப் பிழைப்புக்கு ஆதாரமாக அந்தப் பாடல்களைப் பற்றி பிரமாதமாக விளம்பரப்படுத்தி பொதுப் பணமாகிய காங்கிரசின் பணத்திலிருந்து சுமார் ஆயிரம் ரூபாய் பாரதியின் பெண் ஜாதிக்கு தர்மமாகக் கொடுத்து அந்தப் புத்தகத்தை அச்சுப் போடும்படி சொல்லி ஒத்து ழையாமை இயக்கத்தின் மூலம் அந்தப் பாட்டுகளை விளம்பரப்படுத்தி ஒவ்வொருவரையும் அதை வாங்கும்படி செய்யப்பட்டது.
அந்தப் புத்தகம் சாதாரணமாய் இரண்ட ரையணா அல்லது மூன்று அணாவுக்குள் அடங்கக் கூடியதாயிருந்தும் புத்தகம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் விலை போட்டு ஏழைகள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. அது மாத்திரமல்லாமல் முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம், நான்காம் பாகம் என்பதாக அவர்கள் பணத் தாசைக்குத் தக்கபடியும் நம்மவர்கள் மூடத்தனத்திற்குத் தக்கபடியும் புதுப்புது பாகங்கள் வெளியாகிக் கொண்டே வந்தன.
இவ்வளவு கொள்ளையையும் சகித்துக் கொண்டே வந்தும் கடைசியில் அதுதன் ஜாதிப் புத்தியை காட்டியே விட்டது. எப்படி யென்றால். சாதாரணமாக அப்புத்தகத் தின் பேரால் சில பார்ப்பனக் குடும்பம் கொள்ளை அடித்ததை, சிலர் பொறுத்துக் கொண்டு இருந்ததற்குக் காரணமே அப்புத் தகத்தில் அவர் பார்ப்பனர்களை உயர்வாக சில இடத்தில் சொல்லியிருந்தாலும். சில இடத்திலாவது உண்மை பேசி இருக்கின்றார் என்ற எண்ணமேயாகும்.
ஆனால் இப்போது அதையும் கொஞ்சம் கொஞ்சமாய் திருத்த ஆரம்பித்து விட்டார்கள் எனத் தெரிய வருகின்றது. அதாவது பாரதி பாடல் முதற் பாகத்திலுள்ள பாட்டுகளில் ஒன்றான மன்னும் இமயமலை எங்கள் மலையே என்னும் பாட்டின் அடிகளில் உன்னத பாரத நாடெங்கள் நாடே என்னும் வாக்கியம் ஒரு அடியாக இருந்து வந்தது.
இது யாவருக்கும் தெரிந்ததே யாகும். இப்போதைய பதிப்புகளில் பாரத நாடு என்பதை எடுத்துவிட்டு உன்னத ஆரிய நாடெங்கள் நாடே என்று திருத்திபதிக்கப்பட்டிருக்கின்றதாம். இம்மாதிரியாகவே அதில் வேறு பல விஷயங்களும் சந்தேகிக்க வேண்டியதாகவே இருக்கின்றன.
இரண்டரையணா புத்தகத்திற்கு ஒரு ரூபாய் விலை கொடுத்து வாங்கிப் படிப்பதின் மூலம் நமது பொருள் வீணாகுமன்றி, அது நம்மை ஏய்த்துத் தாழ்த்தி வைத்தி ருக்கும் அயோக்கியர்களுக்கு ஆக்கத்தையும் கொடுக்க உபயோகப்படுகின்றது. நிற்க;
இந்தப் புத்தகம் அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப் பட்டபொழுது, வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்ட யோக்கியர்களின் கண்ணுக்கு இந்த மாதிரி அயோக்கியத் தனங்கள் சற்றும் தென்படாமலிருப்பது நமக்கு ஆச்சரிய மல்ல என்றாலும் நாட்டின் தேச பக்தர்கள் யோக்கியதைக்கும் பார்ப்பனர்களின் அயோக்கியத் தனத்திற்கும் இதுவரை அவர்கள் இந்த மாதிரி எத்தனை புரட்டுகள் செய்து நம்மவர் களை கண்மூடி முட்டாள்களாக அடிமை கொண்டிருக் கிறார்கள் என்பதற்கும் முழு மூடர்களுக்கும்கூட உதாரணம் வேண்டுமானால் இந்த பாரதிப் பாடல் புரட்டே போதுமென்று நினைக்கின்றோம்.
- குடிஅரசு - கட்டுரை - 10.02.1929
Read more: http://viduthalai.in/page-7/78209.html#ixzz2y3wwqnkW
நம்பிக்கையில்லாத் தீர்மானம்
தென்னாற்காடு ஜில்லா போர்டு பிரசிடென்ட் திருவாளர் ராவ்பகதூர் சீத்தாராம ரெட்டியார் அவர்கள் மீது அவரது சகோதர அங்கத்தினர்களால் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து பெருமித ஓட்டுகளால் நிறை வேற்றப்பட்டுவிட்டதாக தெரிய வருகின்றது. திரு.ரெட்டியார் பார்ப்பனர்களுக்கு ரொம்பவும் பயந்தவர்.
ஜஸ்டிஸ் கட்சி கூட்டமோ, சுயமரியாதை பிரச்சாரமோ, பார்ப்பனர் அல்லாதார் கூட்டமோ தனது ஜில்லாவுக்குள் கண்டிப்பாய் வரக்கூடாது என்று வெகு கவலையுடன் தனது ஜில்லாவை பாதுகாத்து வந்தவர். கடலூரில் பார்ப்பனர் அல்லாதார் மகாநாடு கூட்டுவதாக பல பார்ப்பனரல்லாத அபிமானிகள் முன்வந்து தேதி முதலானவைகள் குறித்து வேலை தொடங்கி யும் அதை திரு. ரெட்டியார் அவர்கள் அங்குகூட வொட் டாமல் செய்தவர்.
முயற்சி செய்தவர்களையும், பொறுப் பற்றவர்கள் என்று சொன்னவர். பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு விரோதமான திரு.சூணாம்பேட்டை கோஷ்டியார்களுக்கும் சுயமரியாதை கொள்கைக்கு துவேஷமான திரு.முத்துரங்கர் கூட்டத்தாருக்கும் ஆப்த நண்பராகவும் இருந்தவர். மந்திரி கட்சியாருக்கும் வேண்டியவர். ஜஸ்டிஸ் கட்சி தலைவருக்கு வலது கையாய் இருந்தவர். ஜில்லா கலெக்டர் ஒரு பார்ப்பனர். அவரையும் சுவாதீனப் படுத்திக் கொண்டவர்.
அய்யோ பாவம். இவ்வளவும் இருந்தும் கோழிக்குஞ்சை ராசாளி தூக்கிக் கொண்டு போவதுபோல் கண்மூடி கண் திறப்பதற் குள்ளாக திரு.ரெட்டியாரின் நம்பிக்கை பறந்தோடிவிட்டது. தூங்கையிலே வாங்குகின்ற மூச்சு, அது சுழி மாறிப் போனாலும் போச்சு, என்கின்ற பெரியோர் வாக்கியப்படி திடீரென்று சுழிமாறிப் போய் தனக்கு 11 ஓட்டுகளும் தன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தவர்களுக்கு 23 ஓட்டுகளும் கிடைத்தது.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறிவிட்டது. ஆனாலும் ஒன்றும் முழுகிப் போக வில்லை, குறைந்தபட்சம் திரு.ரெட்டியார் உலகம் என்பது கற்றுக் கொள்ளவாவது இந்த முடிவை ஒரு தக்க சந்தர்ப்பமாக கொண்டாரானால் அவசியம் அவருக்கு இந்த நம்பிக்கை யில்லா தீர்மானமே அனுகூலமான பயனைக் கொடுத்தாலும் கொடுக்கலாம். மேலும் திரு.சீத்தாராம ரெட்டியார் போன்ற மற்றும் சில தலதாபன தலைவர்களுக்கும் இது ஒரு படிப்பினையாகவும் ஆகலாம்.
குடிஅரசு - கட்டுரை - 10-03-1929
Read more: http://viduthalai.in/page-7/78209.html#ixzz2y3x6nUdu
ஓர் விஞ்ஞானம்
செங்கற்பட்டில் நடைபெற்ற முதலாவது மாகாண சுய மரியாதை மகாநாட்டின் தீர்மானப்படி, பெயர்களுக்குப் பின்னால் சேர்க்கப்படும் நாயக்கர், நாயுடு, செட்டியார், முதலி யார் போன்ற ஜாதிப் பட்டப் பெயர்களையும், நாமம், விபூதி, பூணூல் முதலிய மதச்சின்னங்களையும் நீக்கி விட்டவர்களின் ஜாபிதாவையும் இனி குடிஅரசுப் பத்திரிகையில் வெளியிட உத்தேசித்திருப்பதால் ஜாதிப் பட்டங்களை நீக்கிவிட்டவர் களும்,
மதக்குறியை விட்டவர்களும், தம் தம் விலாசத்தை அவ்வப்போது தெரியப் படுத்தினால் பிரசுரிப்பதற்கு மிகவும் உபகாரமாயிருக்கும் என்று தெரிவித்துக் கொள்ளுகின் றோம். நிற்க இனி எமக்கு எழுதும் கடிதங்களிலும் எமது பெய ரைக் குறிப்பிடும் சமயங்களிலும் எமது பெயருக்குப் பின் னால் நாயக்கர் என்று குறிப்பிடாமல் இருக்க வேண்டு கின்றோம்.
குடிஅரசு - அறிவிப்பு - 24-02-1929
Read more: http://viduthalai.in/page-7/78209.html#ixzz2y3xDeTMs
இது ஓர் அதிசயமா? பகுத்தறிவும் அதன் விரோதிகளும் - சித்திரபுத்திரன்
மதம், சமயம், கடவுள், குரு, புரோகிதன், வேதம், சாஸ்திரம், புராணம், ஆகமம், சிவன், விஷ்ணு, பிரம்மா, சில்லறை தெய்வங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரிஷிகள், முனிவர்கள், இன்னமும் அநேக சங்கங்கள் பகுத்தறிவுக்கு விரோதிகளாகும்.
உதாரணமாக, மேல் நாட்டில் ஒருபெரிய கூட்டத்தில் ஒரு பெரிய பாதிரியார் (பிஷப்) பேசும் போது, ஒவ்வொருவனும் தன்தன் பகுத்தறிவைக் கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமே ஒழிய குருட்டு நம்பிக்கைக் கூடாது என்று உபதேசம் செய்து கொண்டு வரும்போது ஒரு குட்டிப் பாதிரியார் எழுந்து இந்தப் பிஷப் நாத்திகம் பேசுகின்றார், இவர் பெரிய பாதிரியார் வேலைக்கு லாயக்கில்லை? என்று சொன்னாராம்.
கூட்டத்திலிருந்த வர்கள் ஏன், எதனால் இப்படிச் சொல்லுகின்றீர்கள்? என்று கேட்டதற்கு, குருட்டு நம்பிக்கை வேண்டாம் என்று சொல்லி விட்டால். அல்லது பகுத்தறிவை உபயோகித்துவிட்டால் கிறிஸ்தவ மதமோ ஆண்டவனோ இருக்க முடியுமா? நம்பிக்கையை விட்டு பகுத்தறிவை உபயோகித்துப் பார்ப்ப தனால் வேதத்தின் அஸ்திவாரமே ஆடிப்போகாதா? ஆதலால் மதமோ கடவுளோ வேதமோ இருக்கவேண்டு மானால் நம்பிக்கை இருக்க வேண்டும்.
பகுத்தறிவால் வாதம் செய்யக் கூடாது. ஆதலால், ஒருவன் குருட்டு நம்பிக்கையை விட்டு பகுத்தறிவின் ஆராய்ச்சிக்குப் புகும்படி மக்களுக்கு எடுத்துச் சொல்லுவது நாத்திகத்தை உபயோகிப்பதேயாகும் என்று சொன்னாராம். உடனே அந்தக் கூட்டத்தில் உள்ள குட்டிப் பாதிரிகளும் மற்ற ஜனங்களும் இதை ஒப்புக் கொண்டு பிஷப் சொன்னதை பின் வாங்கிக் கொள்ள வேண்டும், மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார் களாம்! பிஷப், தாம் சொன்ன அக்கிரமமான வாக்கியங் களைப் பின் வாங்கிக் கொண்டு தாம் சொன்ன மகாபாதக மான வார்த்தைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டாராம்.
எனவே 100க்கு 75 பேர்களுக்கு மேல் எழுதப்படிக்கத் தெரிந்த மேல் நாட்டுக் கடவுள்களும், மதமும் வேதமுமே இவ்வளவு பலமான நிபந்தனை மேல் நிற்கும்போது 100க்கு 7ஆண்களும் 1000க்கு ஒன்றரை பெண் களும் படித்திருக்கும் நம் நாட்டின் சாமிகளுக்கும் சமயங் களுக்கும் வேதங் களுக்கும் எவ்வளவு பலமான நிபந்தனை வேண்டியிருக்கு மென்பதையும் பார்ப்பன அகராதியில் வேத புராணங்களை யுக்தியால் வாதம் செய்கின்றவன் நாத்திகன் என்று எழுதிவைத்திருப்பதையும் யோசித்தால் அறிவும், ஆராய்ச்சிக் கவலையும் உள்ள மக்களுக்கெல்லாம் நாதிகப் பட்டம் கிடைப்பது ஒரு அதிசயமா?
குடிஅரசு - கட்டுரை - 03-02-1929
Read more: http://viduthalai.in/page-7/78207.html#ixzz2y3xmnlch
திரு.சாமி வெளியாக்கப்பட்டார்
சென்னைக் காங்கிரஸ் கட்சிக்கும் சுயராஜ்யக் கட்சிக்கும் சட்டசபைத் தலைவராக திரு.சாமி. வெங்கடாசலம் செட்டியாரை வைத்திருந்தார்கள். ஆனால், திரு.செட்டியார், பார்ப்பனரின் கைக்களிமண் உருண்டையாயிருந்த வரையில் தங்களுக்கு வேண்டிய மாதிரி எந்தவித பொம்மை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்கின்ற தைரியத்தில் அவரைத் தலைவர், தலைவர்! என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், திருவாளர் செட்டியார், முத்துரங்கம், குழந்தை, அமீத்கான், கம்பெனியார்களைப் போல் இல்லாமல் கொஞ்சம் தமது சுயபுத்தியைக் காட்ட ஆரம்பித்தவுடன் அவரைக் கீழே தள்ளிவிட்டார்கள். இது வெகுநாளாகவே நாம் எதிர்பார்த்ததுதான். திரு சாமியும் தயாராகவே இருந்ததாகத்தான் தெரிகின்றது.
கடைசியாக திரு. சாமியைத் தள்ளியதற்குக் காரணம், திரு.சாமி, திரு. பனகால் ராஜாவிடம் அடிக்கடி பேசியதுதானாம். பிள்ளையாரைப் பிடித்த சனியன் அரசமரத்தையும் பிடித்தது என்பது போல் திரு. சத்தியமூர்த்தியின் உதவித் தலைவர் பதவியும் பிடுங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், இதற்கு ஏதாவது உள் ரகசியம் இருக்கலாம்.
அதாவது, திரு.ஸ்ரீனிவாசய்யங்கார், திரு.மூர்த்திக்கு ஏதாவது கொஞ்சம் பணம் கூட்டிக் கொடுத்திருக்கலாம் அல்லது கொஞ்ச நாளைக்கு மாத்திரம் பொறுத்திருக் கும்படி கேட்டுக் கொண்டிருக்கலாம் எப்படி ஆனாலும் திரு. சாமி வெளியாக்கப்பட்டுவிட்டார்.
திரு. வரதராஜுலுவும் காங்கிர கமிட்டியில் ராஜினாமா கொடுத்துவிட்டு இந்த 2, 3, நாள்களாகப் பார்ப்பனர்களைத் திட்டுவது போல் வேஷம் போடுகின்றார். இதன் ரகசியம் இன்னது என்பதும் தெரியவில்லை. ஒரு சமயம் ராஜினாமா அனாமத்தில் வைக்கப்பட்டு சைமன் கமிஷன் சென்னையை விட்டுப்போன பிறகு. திரும்பி வாங்கிக் கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டு, வற்புறுத்தலுக்குக் கட்டுப்பட்டு வழக்கம் போல் மறுபடியும் திருவாளர் நாயுடு மெம்பரானாலும் ஆகலாம்.
சென்ற ஆண்டிற்கு முன்னைய ஆண்டில் காங்கிரசைக் குறை கூறி விட்டுக் காங்கிரசை விட்டு ஓடிய திரு. கல்யாணசுந்தர முதலியாரும் காங்கிரசை ஆதரிப்பதுடன், செத்துப்போன ஜில்லா, தாலுகா காங்கிர கமிட்டிகளை உயிர்ப்பித்து கிராமப் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று உபதேசம் செய்கின்றார். இதன் ரகசியம் விளங்கவில்லை.
ஒரு சமயம், ஒரு அய்யங்காரிடம் வியாபாரம் பேசவோ என்பதும் புலப்படவில்லை! நம்முடைய பார்ப்பனர் களுடைய வாழ்க்கைக்குத் தக்கபடி அவர்களை விட்டு ஒருவர் போனால் மற்றொருவர் வந்து வலிய விண்ணப்பம் போட்டுக் கொண்டேதான் இருக்கின்றார்கள்.
குடிஅரசு - செய்திக்குறிப்பு - 10-02-1929
Read more: http://viduthalai.in/page-7/78207.html#ixzz2y3xuDMOi
இது பெரியார் பிறந்த மண்
- குடந்தை கருணா
திராவிடர் கழகத்தலைவர், விடுதலை ஆசிரியர் தொடர்ந்து ஒரு செய்தியை அறிக்கையாகவும், தனது பேச்சின் மூலமாகவும் சொல்லிக் கொண்டே வந்தார்; வருகிறார்.
பிப்ரவரி 2014-இல் தனது அறிக்கையில், இதற்கு முந்தைய தேர்தல்களில் எல்லாம் பின்னணியில் இருந்து, பா.ஜ.க.வை இயக்கிய ஆர்.எஸ்.எஸ். என்ற மதவாத அமைப்பு, இந்தத் தேர்தலில் துவக்கம் முதலே தானே நேரிடையாக சற்றும் ஒளிவு மறைவு இன்றி, கூச்சநாச்ச மின்றி வெளிப்படையாகவே பிரதமர் வேட்பாளராக குஜராத் மோடியைத் தேர்வு செய்து அறிவித்தது; ஹிந்துத் துவாவை அதிகார பீடத்தில் அமர வைக்க தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்டவர்களான பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பறிக்க வியூகங்களை வகுத்துள்ளனர்.
இந்தச் சூழ்ச்சியை ஒடுக்கப்பட்ட மக்களும், புரிந்து கொள்ள வேண்டும்; மதவாத எதிர்ப்புச் சக்திகள் ஒன்றி ணைந்து முறியடிக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்தார்.
தொடர்ந்து மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்தல் சம்பந்தமான பொதுக்கூட்டத்திலும், தனது பேச்சில், மாலேகான் உட்பட பல்வேறு சதிகளில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் அமைப்புகள் மீது, இந்து பயங்கரவாதம் என்ற குற்றச்சாட்டு இறுகியதிலிருந்து தப்பிக்கவே, ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க ஆர்.எஸ்.எஸ். திட்டம் தீட்டியுள்ளதாக, ஆசிரியர் வீரமணி கூறினார்.
தற்போது கோப்ரா போஸ்ட் எனும் இணைய தளம் மேற்கொண்ட வேவு நடவடிக்கையில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்கள் எத்தகைய சதியில் திட்டமிட்டு நடத்தி, பாபர் மசூதியை இடித்தன என்பதை தெரிந்து கொண் டால், ஆசிரியரின் கருத்து எத்தகைய முக்கியத்துவமான கருத்து என்பது தெளிவாகும்.
இந்த நிலையில், புகழ் பெற்ற எழுத்தாளர் குல்திப் நய்யாரைத் தலை வராகவும் என்.டி.பஞ்சோலியைச் செயலராகவும் கொண்டு டில்லியிலி ருந்து இயங்கும் "ஜனநாயகத்திற்கான குடிமக்கள் அமைப்பு" 29.3.2014 அன்று புதுடில்லியில் மாநாடு நடத்தி ஆர்.எஸ்.எஸ் மற்றும் கார்பொரேட் பின்புலத்துடன் பிரதமர் வேட்பாள ராக வலம் வரும் மோடி தலைமை யில் இயங்கும் எதேச்சாதிகார சக்திகளை தோற்கடிக்குமாறு இந்திய மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது.
இதே போன்று கருநாடகாவில் எழுத்தாளர்கள் அனந்த நாராயண மூர்த்தி போன்றோர், சமாகலீனா விசாரா வேதிகே என்கிற அமைப்பின் சார்பில், ஆர்.எஸ்.எஸின் முகமூடி மோடி; அவர் வெற்றி பெறுவது சர்வாதிகாரத்திற்கு வழி வகுக்கும் என அறிக்கை விடுத்துள்ளனர்.
புதுடில்லியில் குல்தீப் நய்யார் போன்றோரும், கருநாடகாவில் எழுத்தாளர்களும் விடுதலை ஆசிரியர் கூறிய கருத்தை ஒற்றி, ஒரே நிலையில் சிந்திக்கின்றனர். பாஜக மோடி ஆர்.எஸ்.எஸ் அபாயத்தை மக்களிடம் கூறி எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்துகின்றனர்.
ஆனால், பாஜக சீட்டணியில் உள்ள வைகோ போன்றோர், மோடி பிரதம ரானால் என்ன என்று மக்களைப் பற்றியும், வரும் அபாயத்தையும் பற்றி சற்றும் கவலைப்படாமல் பேசி வரு கின்றனர். இவர்களை தமிழ் மக்கள் நிச்சயம் அலட்சியப்படுத்துவார்கள்.
ஏனென்றால் இது பெரியார் பிறந்த மண்.
Read more: http://viduthalai.in/page-2/78216.html#ixzz2y4CTdRIy
ஒன்றுமே இல்லை
பார்ப்பனரின் பதவிக் கொள்கையெல்லாம், தனக்கு வராதவை தமிழனுக்குப் போகக்கூடாது - கீழே கொட்டி விடுவோம். அதாவது தமிழன் என்கின்ற உணர்ச்சி இல்லாத எவனுக்கோ போகட்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.
(விடுதலை, 17.10.1954)
Read more: http://viduthalai.in/page-2/78211.html#ixzz2y4CbSssD
பிஜேபியின் பொருளாதாரக் கொள்கை என்பது என்ன
தமிழ்நாட்டில் பி.ஜே.பி. தலைமையில் கூட்டணி என்று சொல்லப்படுவது சம்பிரதாயமானது. தமிழ்நாட்டில் பி.ஜே.பி. எங்கே இருக்கிறது? நடைமுறை உண்மை என்னவென்றால் தமிழ்நாட்டில் தேமுதிக தலைமையில் அமைந்த கூட்டணியில் பிஜேபியும் உள்ளது;
அதுவும் மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்பதுதானே உண்மை!
இந்தக் கட்சிகளின் ஒரே குரல் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை அகற்றி விட்டு, அந்த இடத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சியைக் கொண்டு வந்து வைப்பதுதான்.
அதற்காக இக்கட்சியினரால் சொல்லப்படும் காரணங்கள்தான் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை.
பொருளாதாரப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் அடிப்படையில் வேறுபாடுகள் கிடையாது. அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் இரு கட்சிகளுமே போட்டிப் போடக் கூடியவைதான். இதன் காரணமாக சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு, அவற்றை நம்பி வாழும் மக்களின் வாழ்க்கை நாசமாவதைப் பற்றிக் கவலைப்படாதவர்கள்.
அரசுத் துறைகளைத் தனியார்க்குத் தாரை வார்ப்பதில் காங்கிரசை விஞ்சி நிற்பது பிஜேபியே! இந்தத் தலைப்பில் ஒரு பட்டிமன்றத்தைக் கூட நடத்தலாம்.
பி.ஜே.பி. ஆட்சியில் அரசுத் துறைகளைத் தனியார்க்கு அளிப்பதற்கென்றே ஒரு தனித் துறை உருவாக்கப்பட்டது (Ministry of Disinvestment) அதற்கு அருண்ஷோரி அவர்கள் மத்திய அமைச்சராகவே இருந்தார் என்பதை நினைவூட்டுகிறோம்.
பால்கோ என்ற நிறுவனம் அதன் உபரிநிதி ரூ.4600 கோடி. 2000ஆம் ஆண்டில் அதன் லாபம் ரூ.110 கோடி. சொத்து மதிப்போ ரூ.5000 கோடி. அதனை 551 கோடி ரூபாய்க்கு அடி மாட்டு விலையில் ஸ்டெர்லைட் கம்பெனிக்கு விற்றது வாஜ்பேயி அரசு. பாலக்காட்டில் இன்ஸ்ட்ரூமென்ட்டேசன் என்ற நிறுவனம் அதன் சொத்து மதிப்பு ரூ.175 கோடி; ரூ.19 கோடிக்கு ஃபிஷர் என்ற அமெரிக்க நிறுவனத்துக்கு விற்றதும் வாஜ்பேயி தலைமையிலான பி.ஜே.பி. அரசே!
பி.ஜே.பி ஆட்சிக் காலத்தில்தான் பெப்சி, நெஸ்லே, கோகோ கோலா போன்ற நிறுவனங்கள் இந்தியாவிற் குள் காலடி எடுத்து வைத்து உள் நாட்டில் உற்பத்தி யான குளிர் பானங்களை எல்லாம் காலி செய்தன.
வருடத்துக்கு ஒரு கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்புத் தரப்படும் என்று உறுதிமொழி கொடுத்து ஆட்சிக்கு வந்த பிஜேபி ஆட்சியில் 347 ஆலைகள் மூடப்பட்டு 6,46,379 பேர் வேலை இழப்புக்கு ஆளானார்கள்! இதுதான் வாஜ்பேயி அரசின் நிகர லாபம்.
அமெரிக்காவின் டெர்மினேட்டர் விதைகள் (மலட்டு விதைகள்) இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டதும் பிஜேபி ஆட்சிக் காலத்தில்தான்!
இந்தியாவில் உள்ள விவசாயிகள் அறுவடையில் குறிப்பிட்ட ஒரு பகுதியை விதை நெல்லாகச் சேகரித்து வைப்பார்கள். இந்த மலட்டு விதை அறிமுகப் படுத்தப்பட ஆரம்பித்து விட்டால், பன்னாட்டு விதை விற்பனை நிறுவனங்களிடமிருந்துதான் விதைகளை வாங்கித் தீர வேண்டும் என்ற கட்டாய நிலை. இந்தக் கேடு கெட்டவற்றிற்கெல்லாம் முகூர்த்தக் கால் நட்டது பிஜேபி ஆட்சியே!
நியூயார்க் பன்னாட்டு பொது விவகாரக் கவுன்சிலின் தலைவர் பேராசிரியர் வார்டுமோர் ஹௌஸ் என்பவர் இந்தியாவிற்கு வந்தபோது சொன்னார். (ஏப்ரல் 1999).
அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் மான் சாண்ட்டோவுக்கும் (மலட்டு விதைக்கு) பலத்த எதிர்ப்பு இருந்து வருகிறது. அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி சந்தேகத்துக்கு உரியது. அதனை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று அமெரிக்கப் பேராசிரி யரே கூறியும்கூட பிஜேபி அரசு பொருட் படுத்தவில்லையே!
(இந்த நேரத்தில் இதற்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை நினைவு கூர்வோமாக!)
1998 ஜூலையில் 1308 பொருள்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை பிஜேபி அரசு முழுமையாக அகற்றியது. இது உள்நாட்டு உற்பத்தியின் முதுகெலும்பை முறித்த அபாயகரமான செயல் பாடாகும்.காப்பீடு, மருந்து உற்பத்தி, ஓட்டல்கள், சுற்றுலா, விமான நிலையங்கள் போன்ற துறைகளில் நூறு விழுக்காடு அந்நிய முதலீட்டை அனுமதித்ததும் வாஜ்பேயி தலைமையிலான பிஜேபி ஆட்சியே!
இந்த நிலையில் நரேந்திரமோடி தலைமையில் பிஜேபி புரட்சியைச் செய்யப் போகிறது என்பதெல்லாம் யாரை ஏமாற்றிட? பிஜேபி மட்டுமல்ல - இதற்குத் துணைப் போகும் கட்சிகளும் இந்த மோசடிக்குப் பொறுப்பாகும் என்று எச்சரிக்கிறோம்.
வாஜ்பேயியின் அளவுக்கு அதிகமான அமெரிக்கச் சார்பைக் கண்டித்தும், அதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது யார் தெரியுமா?
மதன்லால் குரானா உள்ளிட்ட 7 பேர்களாகும். இந்த ஏழு பேர்களும் பிஜேபியைச் சேர்ந்தவர்கள் என்பது தான் வேடிக்கை!
மதவாதம் என்றாலும் நாட்டுப் பொருளாதாரம் என்றாலும் எந்த வகையில் பி.ஜே.பி. சிறந்தது - நாட்டு மக்களுக்கு நலன் விளைவிக்கக் கூடியது?
சிந்திப்பீர்! வாக்காளர்களே, செயல்படுவீர்!!
Read more: http://viduthalai.in/page-2/78212.html#ixzz2y4Cj1wSx
நாட்டில் மோடி அலை இல்லை சீதாராம் யெச்சூரி பேட்டி
கொச்சி, ஏப். 5- நாட் டில் மோடி அலை வீச வில்லை என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி எர்ணாகுளத்தில் பத்திரிகை யாளர் கூட்டத்தில் தெரி வித்தார்.
மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி எர்ணா குளத்தில் பத்திரிகையாளர் சங்கத்தில் நடைபெற்ற கூட் டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறிய தாவது:
நாட்டில் மோடி அலை வீசுகிறது என்றால், பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந் திர மோடி வாரணாசியில் மட்டும் போட்டியிட வேண் டியது தானே, ஏன் பாது காப்பான தொகுதியை தேடிச் சென்று 2 தொகுதி களில் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு பிறகு மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜ அல்லாத ஆட்சி அமைக்க மாநிலக் கட்சிகளுடன் சேர்ந்து, 3ஆவது அணி அமைக்க இடதுசாரி கடு மையாக பாடுபடும். மூன் றாவது அணி உருவாகி ஆட்சி அமைக்கும் பட்சத் தில் அதில் சேர்வது குறித்து கட்சியின் மத்தியக் குழு கூடி முடிவெடுக்கும். கடந்த 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வென்றதைப் போல இப்போதும் இடது சாரிகள் வெல்வார்கள் என் றார் அவர்.
Read more: http://viduthalai.in/e-paper/78197.html#ixzz2y4D8dxKl
இரவில் வீட்டுக்கு வீடு சென்று வாக்கு சேகரிப்பதா? வீணான சந்தேகங்கள், கலவரங்களுக்கு வித்திடும்
இரவில் வீட்டுக்கு வீடு சென்று வாக்கு சேகரிப்பதா?
வீணான சந்தேகங்கள், கலவரங்களுக்கு வித்திடும்
திராவிடர் கழகத் தலைவர் கருத்து
மோடியின் முகத்திரையைக் கிழிக்கும் தமிழர் தலைவரின் எச்சரிக்கை அறிக்கை!
1) 16ஆவது மக்களவைத் தேர்தலில் வன்முறை தலை தூக்காது ஜனநாயக உரிமைகளைக் காக்கும் வகையில், தேர்தலை நடத்தி முடிப்பது மிக மிக அவசியமாகும்.
டெல்லியிலேயே வன்முறை
தலைநகர் டெல்லியில் பரப்புரை செய்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை, அவர் தேர்தல் பிரச்சாரம் செய்த நேரத்தில் தட்சண்புரி என்ற பகுதியில், அவரது வேட்பாளரை ஆதரித்துப் பேசும் போது, (அங்கே இம்மாதம் 10ஆம் தேதி தேர்தல்) ஒருவர் மேடையில் ஏறி கன்னத்தில் அறைந்து முகத்தில் குத்து விட்டுள்ளார். டில்லியிலே இப்படி ஒரு நிகழ்வு என்றால் வெட்கித் தலைகுனிய வேண்டாமா?
கட்சித் தலைவர்களுக்குக்கூட தேர்தல் பிரச்சாரத்தின் போது பாதுகாப்பில்லை; தலைவர்களுக்கு, வேட்பாளர் களுக்கு அவர்கள் எக்கட்சியினராக இருந்தாலும் - போதிய பாதுகாப்புத் தர வேண்டும் என்பது குறைந்தபட்ச தேர்தல் அடிப்படைக் கடமை அல்லவா?
இதில் தேர்தல் ஆணையம் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, வன்முறைச் சம்பவங்கள் நிகழாது, உயிர், உடைமைப் பாதுகாப்புக்கும் அமைதியாக தேர்தல் நடைபெறவதற்கும் வழிவகை செய்தல் தலையாய கடமையாகும்.
பணப்பட்டுவாடா செய்ய ஏற்பாடா?
2) தமிழக தேர்தல் ஆணையர் இரவு 10 மணிக்கு மேல் ஒலி பெருக்கி பயன்படுத்தத் தடை என்பது தானேயொழிய, தனித் தனியே வீடுகளுக்கு சென்று ஓட்டுக் கேட்க எந்த தடையும் இல்லை என்று கூறியுள்ளதன் மூலம், இது வீட்டில் பணி செய்து, முடித்து, உறங்கி, எழுந்து, அடுத்த நாள் வேலைக்குச் செல்வோர்க்கும், தேர்வுக்காகப் படிக்கும் மாணவர்களுக்கும், இது மிகப் பெரிய இடையூறாக அமையக் கூடும்.
எனவே, உடனடியாக அனைத்து அரசியல் கட்சிகளும் இதனை எதிர்த்துக் குரல் கொடுத்து இந்த முறையைத் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்.
இரவில் வாக்குச் சேகரிக்கிறார்களா? அல்லது பணம் பட்டுவாடா செய்து வாக்குகளை விலை பேசி வாங்கு கிறார்களா என்பது தெரியாமல் ஆங்காங்கே மற்ற எதிர் அணியினர் திரண்டு நின்று அமைதியைக் குலைத்து, வீண் கலவரங்கள் நிகழத்தான் வாய்ப்பு ஏற்படக் கூடும். சந்தேகங்களுக்கும் இடம் அளிக்கும்.
எனவே, இந்த முறை உடனே கைவிடப்பட்டாக வேண்டும்; இரவில் அமைதியோடு மக்கள் ஒய்வெடுத்தலே நல்லது. பகலில் பணிகள் நடைபெறட்டும்; இன்றேல் வன்முறைகள் நாட்கள் நெருங்க நெருங்க பெருகிடும் அபாயம் ஏற்படும்.
எனவே, சட்டம், ஒழுங்கு சீர்குலையாமல், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், தேர்தல் முடியும் வரை போதிய பாதுகாப்புத் தர ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு
ஆளுங் கட்சிக்காக மட்டும்தானா காவல்துறை என்பது போன்ற கேள்வி எழா வண்ணம், வரு முன்னர் காக்கும் வகையில், தேர்தல் ஆணையம் கண்காணிக்க முன்வர வேண்டும்; அப்போதுதான் பொது ஒழுக்கம், அமைதி காப்பாற்றப்படக் கூடும்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
5.4.2014
முகாம்: மதுரை
Read more: http://viduthalai.in/e-paper/78202.html#ixzz2y4DGnpZz
இசையும் வசையும்!
கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக் கப்பட்டு வழங்கப்பட்டு விட்டது. அதிமுகவும் தனது தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டுள் ளது. இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை அந்த அறிக் கைகளைப் படித்துப் பார்த் தாலே புரிந்து கொள்ளலாம். சுருக்கமாகக் கூற வேண்டு மானால் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் குறிப் பிட்டதைப் போல திமுக வின் தேர்தல் அறிக்கை இசை அதிமுகவின் தேர்தல் அறிக்கை வசை
- கலைஞர் அறிக்கையிலிருந்து முரசொலி 5.4.2014
Read more: http://viduthalai.in/e-paper/78203.html#ixzz2y4DOpOD4
பணபட்டு வாடா!
ஒலி பெருக்கியின்றி நள்ளிரவிலும் பிரச்சாரம் செய்யலாம், வீட்டுக்கு வீடு செல்லலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது பணப்பட்டுவாடா செய்ய வழி வகுக்கும் என்று இடதுசாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சட்டமன்றத்தில் குரல் கொடுப்பாராம்!
மதுரை அவனியாபுரத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய விஜயகாந்த், எங்கள் கூட்டணி வேட்பாளரை ஆதரித்தால் சட்டமன்றத்தில் நமக்காகக் குரல் கொடுப்பார் என்று பேசியுள்ளார். (நடக்கவிருப்பது சட்டமன்றத் தேர்தலா - மக்களவைத் தேர்தலா என்று கூடத் தெரியாமல் வீராவேசமாகப் பேசுகிறார் விஜயகாந்த்)
வேலியே...
தயவு செய்து கொக்கிப் போட்டு மின்சாரத்தைத் திருடாதீங்க! என்று மின்வாரிய அதிகாரிகள் கெஞ்ச ஆரம்பித்து விட்டனர். முதல் அமைச்சர் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கே அவ்வாறு மின்சாரம் எடுக்கப்பட்டது குறித்துத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் குற்றம் சுமத்தியது குறிப்பிடத்தக்கதாகும். (வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்வது!).
அப்படிப் போடுங்க!
அஇஅதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் மின் வெட்டா தமிழ்நாட்டிலா? எங்கே இருக்கிறது! என்று சொன் னாரே பார்க்கலாம் (தினமலர் 4.4.2014) இவர் தனி இருட்டு உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாரோ!
இந்தக் காலத்தில் இப்படி... யா?
அருணாசலப் பிரதேசத்தில் டோபோவா என்னும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்குச் செல்ல வேண்டுமானால் 46 கி.மீ. நடந்தே சென்றாக வேண்டும். வாக்குப் பதிவு எந்திரத்தையும் தூக்கிக் கொண்டு போக வேண்டுமாம் இந்த 2014லும் இப்படியா?
....தேய்ந்து கட்டெறும்பாக
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பி.ஜே.பி.யின் நிலை என்ன? 1998 மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகள் 6.86 சதவிதம் (கூட்டணி உள்பட)
1999 இல் பெற்றது 7.14 சதவிகிதம். 2004இல் பெற்றது 5.07 சதவிகிதம் 2009இல் (கூட்டணி இல்லை) 2.3 சதவிகிதம்.
இந்த லட்சணத்தில் பிஜேபி தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளதாம்! ஹி... ஹி....
Read more: http://viduthalai.in/e-paper/78210.html#ixzz2y4DZ3qWa
சர்க்கரையே பெரிய வில்லன்!
உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் சர்க்கரை அளவு, 8 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு தினசரி 12 கிராம். அதற்கும் மேற்பட்ட வயதினருக்கு 24 கிராம். ஆனால் இதைத் தாண்டுவதால் ஏராளமான பிரச்சினைகள், குறிப்பாக சர்க்கரை சேர்த்த குளிர்பானங்கள்தான் பெரிதும் ஆபத்து தருகின்றன. ஒரு மருத்துவ நிறுவனம் எடுத்த கணக்கின்படி, சர்க்கரை சேர்த்த குளிர்பானங்களுக்கு 20 சதவீதம் அதிக வரி விதித்தால், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு கோடியே 12 லட்சம் பேர் அதிக எடை கூடுவதைத் தடுக்கலாம்; 4 லட்சம் புதிய சர்க்கரை நோயாளிகளைத் தவிர்க்கலாம். விலை அதிகம் என்பதால் வாங்கிக் குடுக்காமல் நோய்களை இப்படி தவிர்ப்பார்கள் என்கிறது அந்த புள்ளி விவரம்.
Read more: http://viduthalai.in/page2/78160.html#ixzz2y4EKoEdq
மோடி விகாஷ் (வளர்ச்சி) புருஷ் அல்ல, அவர் வினாஷ் (நாசம்) புருசர் - உமாபாரதி மோடி விகாஷ் (வளர்ச்சி) புருஷ் அல்ல, அவர் வினாஷ் (நாசம்) புருசர் - உமாபாரதி
நான் குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது புரிந்து கொண்டேன் இங்கே மக்கள் மிகவும் பயமுள்ளவர் களாக வாழ்கின்றனர், இது எல்லாம் நரேந்திரமோடியால் வந்தது, இந்து மக்களின் நலனிற்காக பாடுபடுவதாக கூறும் நரேந்திரமோடி கூறுகிறார். ஆனால் இங்கு பல இந்துக்கள் வாழ்வா தாரமின்றி இருக்கிறார்கள்.
தவறு செய்தவர்களை தூக்கிலிடுங்கள், ஆனால் எந்த தவறும் செய்யாத ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறையில் வாடுகிறார்கள். இவர்கள் குறித்து மோடி இன்றுவரை பேசுவதே இல்லை, இவர்கள் வழக்குகள் குறித்து என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? அவர்கள் ஏன் சிறையில் வாழ்கிறார்கள். அவர்களின் வழக்கின் நிலை என்ன மோடியின் சிறந்த நண்பரான அருண் ஜெட்லி தலைசிறந்த வழக்கறிஞரும் கூட அவரிடம் கேட்கிறேன். இவர்களின் வழக்கு குறித்து இந்த மாநிலத்தின் முதல்வர் என்றாவது உங்களிடம் கேட்டிருக்கிறாரா?
நான் இந்தியா முழுவதும் சென்று பார்த்துவிட்டேன், குஜராத்தைப்போன்று பயத்துடன் வாழும் மக்களை நான் பார்க்கவில்லை, பெண்களுக்கு பாதுகாப் பில்லை, கொலைகள் சர்வ சாதாரணமாக நடக்கிறது குஜராத் தற்போது யீமீணீக்ஷீ றீமீ ணீமீ என்பதற்கு பதிலாக திமீணீக்ஷீ க்ஷீவீளீவீஸீரீ ணீமீ பய மற்ற மாநிலத்திற்கு பதிலாக சாதாரண குடிமகன் பயத்துடன் வாழும் மாநிலமாக மாறிவிட்டது.
குஜராத் வளர்ச்சி அடைந்த மாநிலம் என்று ஊர் ஊருக்கு சென்று கூவிக்கொண்டு இருக் கிறாரே, இது முழுவதும் பொய், நான் சரியான வேலை யின்றி வாழவழியின்றி நிராதரவாக நிற்கும் குஜராத்திகளை ஆயிரக்கணக்கில் நான் காண்பிப்பேன். மோடி விகாஷ் புருஷ் அல்ல, அவர் வினாஷ் புருசர், நான் நரேந்திர மோடியை 1972-லிருந்து அறிவேன் அதனால் தான் நான் அவரை நான் வினாஸ் புருசன் என்று கூறுகிறேன். ஊடகங்கள் அவரது பொய்யை அதிகமாக பரப்பி பலூன் போல் ஊதிப்பெரிதாக்கி விட்டார்கள், அந்தக் காற்றை பிடுங்கி மோடியை பஞ்சராக்கவேண்டியது தான் இனி ஊடகங்கள் வேலையாக இருக்கவேண்டும் என்று அகமதாபாத்தில் (30.9.2013) பேசினார். பிஜேபியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரான உமாபாரதி.
(Daily Bhaskar - Hindi Daily 1.4.2014).
Read more: http://viduthalai.in/page3/78162.html#ixzz2y4F1tLoQ
இரத்த சோகை வராமல் தடுக்கும் கேழ்வரகு
கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்துகள் அதிகம் உள்ளது. பாலில் உள்ள கால்சியத்தை விட கேழ் வரகில் அதிக கால்சியத்தை கொண்டுள்ளது. கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுப் பெறும். நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக் கிறது. உடல் சூட்டை தனிக்கும். குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம். இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும். மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர மாதவிடாய் பிரச்சினைகள் தீரும். அதிக எடை இருப்பவர்கள் எடையை குறைக்க விரும்பினால் கேழ்வரகு சாப்பிடலாம். இது உடல் எடையை குறைக்கும். கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலச்சிக்கலை தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டாக, செய்து சாப்பிடலாம். கூழ் அல்லது கஞ்சியாக சாப்பிடக்கூடாது. இதை கூழாக செய்து குடித்தால் கொலஸ்டிரால் குறையும். இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்பு சத்து உள்ளன. கருவுற்ற பெண்கள் தினம் உணவில் சேர்த்து கொள்ளலாம். குடலுக்கு வலிமை அளிக்கும். உடலில் உஷ் ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். தானியங்களில் அதிக சத்து மிக்கது கேழ் வரகு. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.
Read more: http://viduthalai.in/page3/78163.html#ixzz2y4FBvp9H
இந்திய ஆண்கள் வேலை பார்க்கும் நேரம்
இந்தியாவில் பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது? பெண்களுக்கு ஆண்கள் உதவி செய்கிறார்களா என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு கழகம் என்ற அமைப்பு சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது.
அந்த ஆய்வில் இந்தியாவில் பெண் களே குடும்ப பொறுப்புக்களை அதிக அளவில் சுமப்பதாக தெரிய வந்துள்ளது.
பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் வீட்டு வேலைகள் எதையும் சுத்த மாக செய்வதே இல்லை என்ற தகவலும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆண்கள் சராசரியாக 19 நிமிடங்கள் மட்டுமே தினமும் வீட்டு வேலை செய்கிறார்களாம்.
அதுவும் வீட்டில் அவர்கள் தொடர் புடைய வேலைகளுக்குத்தான் அந்த 19 நிமிடங்களை செலவிடுகிறார்களாம். வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்கும் ஆண்களில் 90 சதவீதம் பேர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து பொழுதை கழிக்கிறார்கள்.
வீட்டில் இருக்காமல் வெளியில் சுற்றும் ஆண்களும், பெண்களுக்கு உதவும் வகையில் எந்த வேலையும் செய்து கொடுப்பது இல்லை என்று தெரிய வந்துள்ளது. வெளியில் இருக்கும் ஆண்கள் தினமும் 11 மணி நேரத்தை தங்கள் வேலை மற்றும் தங்கள் பொழுது போக்குக்கே செலவிடுகிறார்களாம்.
50 சதவீத ஆண்களுக்கு தூங்குவது, சாப்பிடுவது, அரட்டையடிப்பது, மது குடிப்பது போன்ற வகைகளில் தினசரி நேரம் கழிந்து விடுகிறதாம். இந்தியாவில் ஆண்கள் இப்படி இருப்பது சமூக கலாச் சாரமாக ஆழமாக வேருன்றி இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஆண்கள் இப்படி சுய நலத்துடன் இருக்கும் நிலையில் பெண்கள்தான் பொறுப்புடன் குடும்ப சுமையை சுமப்ப தாக தெரிய வந்துள்ளது. சமையல், துணி துவைப்பது, வீட்டை ஒழுங்குப்படுத்து வதை பெண்கள் மட்டுமே செய்வதாக கருத்து கணிப்பு சொல்கிறது.
இத்தனை வேலைகளை செய்து விட்டு குழந்தைகளை கவனிப்பதும் பெண்கள் வேலையாக உள்ளது. நகர்ப் பகுதிகளை விட கிராமங்களில் இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக ஆய்வில் கூறப்பட் டுள்ளது.
ஜப்பானில் ஆண்கள் தினமும் 24 நிமிடமும், கொரியாவில் 21 நிமிடமும், சீனாவில் 48 நிமிடமும் வீட்டு வேலை செய்கிறார்கள்.
உலகிலேயே ஆண்கள் அதிக நேரம் வீட்டு வேலை செய்வது ஸ்லோவேனியா நாட்டில்தான். அந்நாட்டு ஆண்கள் தினமும் 114 நிமிடம் வீட்டு வேலை செய்கிறார்கள்.
டென்மார்க், எஸ்தோனியா நாட்டு ஆண்களும் பெண்களுக்கு உதவும் வகை யில் வீட்டு வேலைகள் செய்து கொடுக் கிறார்களாம். மற்ற நாடுகளில் பெரும் பாலும் வீட்டு வேலைகளை பெண்கள்தான் செய்ய வேண்டியதுள்ளது.
Read more: http://viduthalai.in/page8/78171.html#ixzz2y4Gwo39O
இராமன் கோயில் மக்கள் மனமாற்றம்!
ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையான பஞ்சன்யத்தில் ராமர்கோவில் விவகாரம் குறித்து மக்களிடையே கருத்து கணிப்பு கேட்டிருந்தது, இதில் பெரும்பான்மை யானோர் ராமன் கோவில் விவகாரத்திற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
இதன் மூலம் ராமன் கோவில் பிரச் சினையால் அரசியல் லாபம் காண முடியாது, ராமன் கோவில் விவகாரம் முன்பு ஆட்சியைக்கைப்பற்றும் ஒரு துருப்பு சீட்டாக இருந்தது, ஆனால் தற்போது அது செல்லாக்காசாகிவிட்டது, என தாமதமாக புரிந்துகொண்டது. ஆர்.எஸ்.எஸ் கருத்துக்கணிப்பை தொடர்ந்து பிரபல இந்தி ஊடகமான தைனிக் பாஸ்கரும் இராமன் கோவில் விவகாரம் குறித்து மக்களிடையே கருத் துக்கணிப்பு நடத்தியது.
இதில் ராமன் கோவில் எங்களுக்குத் தேவையில்லை என்றே 70 விழுக்காடு மக்கள் பதிலளித்து இருந்தனர். உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டில்லி, பிகார் போன்ற மாநிலங்களில் நடத்திய கருத்துக்கணிப்பில் 40விழுக்காடு மக்கள் ராமன் கோவில் விவகாரம் முடிந்து போன ஒன்று என பதிலளித்தனர். மேலும் தேர்தல் சமயங்களில் பாஜக வும் அதன் தாய் அமைப்பான இந்துத்துவா குழுக்களும் ராமர் கோவில் விவகாரத்தை கையில் எடுத்து பெரும்பான்மை இந்துக் களின் ஓட்டுக்களை பெறுவதற்கு இது வரை பயன்படுத்தினர், இனி அவர்களின் ராமன்கோவில் நாடகம் செல்லாது என்றனர்.
30 விழுக்காடு மக்கள் மதம் ஒரு பிரச்சினையாகவே எடுத்துக் கொள்ள வில்லை, நாடு இருக்கும் நிலையில், மதப்பிரச்சினைகள் என்பது ஓட்டுவாங்க ஒரு சாதனமாக பயன்படுத்தி அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றுகிறது, கோவில் கட்டுவதால் நாட்டில் வேலைவாய்ப்பு இன்மை குறைந்துவிடுமா, அல்லது தொழில் வளர்ச்சி பெற்றுவிடுமா? இன்றைய சூழலில், உலக நாடுகளுடன் போட்டி போட ஏற்றுமதித் தொழிலை ஊக்கப்படுத்தும் அளவில் ஏதாவது முக்கியத் திட்டங்கள் கொண்டு வர வேண்டும் அதை விட்டுவிட்டு ஆட்சியில் அமர மாத்திரம் இராமன் கோவில் இந்து முஸ்லீம் பிரச்சினைகளை கிளப்பி ஆட்சியில் அமர்ந்த பிறகு அடுத்த தேர்தல் வரை நாட்டு நலனை மறந்து நாடாளு மன்றத்தில் சண்டையிடுகின்றனர் என்று பதிலளித்தனர். பாரதீய ஜனதா கட்சி தற்போது தேர்தல் அறிக்கை தயார் செய்துகொண்டு இருக்கிறது, தனது தேர்தல் அறிக்கையில் இராமன் கோவில் விவகாரம் முக்கிய பங்குவகிக்கும் என்று தேர்தல் பணிக்குழு தலைவர் மனோகர் ஜோஷி சில நாட் களுக்கு முன்பு பதிலளித்திருந்தார். தற் போது மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது தெளிவாக தெரிந்த நிலையில் பாஜக என்ன முடிவெடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.
லாபம் வேண்டுமென்றால் இராமன் வேண்டும், நட்டம் ஏற்படும் போது நட்டாற்றில் வீசுவதுதானே காவிகளின் வேலை?
- சரவணா இராசேந்திரன்
Read more: http://viduthalai.in/page7/78167.html#ixzz2y4HJWH6D
கின்னஸ் சாதனை 48 ஆண்டுகளுக்குப்பின் நிரபராதி என விடுதலை
அய்வாஓஹகமடா இவர் தற்போது 48 ஆண்டுகள் சிறையில் வாடிய ஆயுட் தண்டனைக் கைதி தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். மனித உரிமை ஆர்வலர் களின் தொடர்ச்சி யான போராட் டங்களுக்கிடையே டி.என்.ஏ. பரிசோதனைகளுக்குப்பிறகு கொலை வழக்கில் அவரைக் குற்றமற்றவர் என்று விடுதலை செய்துள்ளது ஷிசுகோ நீதிமன் றம். உலகிலேயே அதிக வாழ்நாள்களை சிறையில் கழித்தவர் அய்வாஓ ஹகமடா என்கிற கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 1966இல் மத்திய ஜப்பானில் இரு குழந் தைகள், மனைவியுடன் நிறுவன மேலாளர் வீட்டில் தீவைத்துக் கொல்லப்பட்ட தாக வழக்கில் அய்வாஓ ஹகமடா என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். விசா ரணையில் தனக்கு அச்சம்பவத்தில் எவ் விதத் தொடர்பும் இல்லை என்று மறுத் துள்ளார். ஆனாலும், காவல்துறையினர் கடுமையாக தாக்கியதால் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். குத்துச் சண்டை வீரரான இவர் பணிபுரிந்த நிறு வனத்தின் மத்திய ஜப்பானில் மேலாளரை யும், அவர் குடும்பத்தினரையும் வீட்டில் தீவைத்துக் கொன்றதாக மரண தண்டனை 1968இல் மரண தண்டனை விதிக்கப்பட் டவர். உச்ச நீதிமன்றத்தால் 1980இல் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. இரண் டாம் உலகப்போருக்குப்பின் மரண தண்டனை வழக்கில் விசாரணை நிலுவை யிலிருந்த 6 பேரில் இவரும் ஒருவர் ஆவார்.
அவருடைய வழக்கறிஞர்கள் மரபணு பரிசோதனை கோரியதால் விசாரணைக்குழு விடம் ஆதாரங்களை மரபணு பரிசோத னைக்குட்படுத்த உத்தரவிட்டதோடு, நீதி மன்றத்தில் அவ்வழக்கில் மறு விசார ணைக்கும் நீதிபதி ஹிரோகி முரயாமா உத்தரவிட்டார். நீதிபதி கூறும்போது, மரபணு சோதனையில் ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறியதோடு, இதற்கு மேலும் அவர் சிறையில் தொடர்ந்து இருப்பது நீதிக்கு எதிரானதாகும் என்று விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
நீண்ட கால தனிமைச்சிறையில் ஆயுட் தண்டனைக் கைதியாக பல தலைமுறை களை செலவிட்டுள்ளார் என்று அம்னிஸ்டி இன்டர் நேஷனல் என்கிற சர்வதேச மன் னிப்பு அமைப்பு இவர் விடு தலை குறித் துக் கூறுகிறது. விடுதலை செய்யப்பட்டவ ருக்கு தற்போது வயது 78 ஆகிறது.
Read more: http://viduthalai.in/page7/78168.html#ixzz2y4HRiIsI
Post a Comment