Search This Blog

23.3.13

இந்தியா மீண்டும் சரித்திரப் பழியைத் தேடிக் கொண்டது- கி.வீரமணி


  • இந்தியா மீண்டும் சரித்திரப் பழியைத் தேடிக் கொண்டது
  • அகில இந்தியக் கட்சிகளின் முகத்திரையும் கிழிந்தது
குற்றவாளிகள் உறுதியாகத் தண்டிக்கப்படுவார்கள்
டெசோவின் பயணம் தொடரும்! தொடரும்!!


தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
ஜெனிவாவின் மனித உரிமைக் கழகத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் -   அதனை நீர்த்துப் போகச் செய்த முயற்சி - இவற்றின்மூலம் சரித்திரப் பழியைத் தேடிக் கொண்டது இந்தியா, என்று கூறும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், டெசோ தன் பயணத்தைத் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:

உலகம் வெகு ஆவலாக எதிர்பார்த்த, ஜெனிவாவில் கூடி விவாதித்து, இலங்கையின் போர்க் குற்றங்களுக் காகவும், மனித உரிமை மீறல்களுக்காகவும், அங்கு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளுக்காகவும்,  இராஜபக்சே அரசு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மட்டுமல்ல; இனி எதிர்காலத்திலும் எந்த ஒரு அரசும், இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபடாதிருக்க ஒரு பாடம் புகட்டப்படுவதாகவும் அமைய வேண்டும் என்று விரும்பிய உலகத் தமிழர்கள் மற்றும் உண்மையான மனித உரிமை ஆர்வலர்கள் மிகப் பெரிய ஏமாற்றத்திற்குத் தள்ளப் பட்டுள்ளனர்!

இந்த ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் சென்ற ஆண்டைப் போலவே, வெடியாக இல்லாமல் நீர்த்துப் போன புஸ்வாணம் ஆகிவிட்டது.

மற்ற நாடுகளைவிட இலங்கைக்கு இந்தியாவின் உதவி அதிகம்!

ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமையை - போராட்டத்தை நசுக்கிட, சுண்டைக்காய் இலங்கைக்கு சகல இராணுவ உதவிகளையும் செய்து, தமிழினம் பூண்டற்றுப் போகும் நிலையை உருவாக்கிட சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் செய்த இராணுவ உதவியைவிட, அதிகமாக இந்தியா அளித்துள்ளது என்பதை பல முறை இலங்கை இராஜபக்சே அரசே பெருமிதத்துடன் அறிவித்துள்ளதே!
அய்.நா.வின் போர்க் குற்றங்கள் ஆதாரப்பூர்வமாக சேனல் 4 போன்ற அமைப்புகளால் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டன. இலங்கையின் அத்துமீறிய போர்க்குற்றக் கொடுமைகள், முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் இவர்களையெல்லாம் கூட குண்டு போடப்படாத பகுதி (No fire zone) என்று குறிப்பிடப்பட்ட பகுதிக்கு ஏமாற்றி வரச் செய்து, அங்கும் ஒரே மூச்சில் கொத்துக் குண்டுகளை வீசி, பல்லாயிரக் கணக்கில் தமிழர்களை அழித்தனரே!  12 வயது பாலகன் பாலச்சந்திரனைக்கூட மார்பில் 5 குண்டுகளால் துளைத்து சாகடித்த இதயமில்லா மனித மிருகங் களின் செயல் உட்பட படமாக வந்து உலகத் தாரின் உணர்ச்சியை எரிமலையாக்கிய பின்னரும், இந்திய அரசின் போக்கில் துளிகூட மாற்றம் காணாதது - வேதனைக் கும், வெட்கத்திற்கும், கண்டனத்திற்கும் உரியதாகும்.

இரட்டை வேட அரசியலை மாற்றிக் கொள்ளாத இந்திய அரசு!

தி.மு.க. அதனுடன் சேர்ந்த பாவத் திற்காக பழி சுமப்பதற்கு இனியும் தயாராக இல்லை; இவர்களை இனி திருத்தவே முடியாது என்று உணர்ந்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலி ருந்தே வெளியேறிய நிலையில்கூட, மாணவர்கள் போராட் டம் தமிழ்நாட்டில் கொழுந்துவிட்டு எரியும் நிலையில்கூட, இந்திய அரசு தனது இரட்டை வேட அரசியலை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை.

அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை மேலும் வலுவானதாக்கி, இலங்கை அரசு தன் தவறுகளுக்காக வருந்தி, எஞ்சிய தமிழர் வாழ்வையாவது, இனி ஒரு பாதுகாப்புடன் வாழ வகை செய்வதை விடுத்து, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு சென்ற முறை நீர்த்துப் போகச் செய்ததைப் போலவே, இம்முறையும் உள்ளடி வேலைகளைச் செய்து, இறுதியில் ஒப்புக்காக தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்ததாகக் காட்டிக் கொண்டு சரித்திரப் பழியைச் சுமந்து நிற்கிறது இந்தியா!

இந்தியா என்ன செய்திருக்க வேண்டும்?

சென்ற ஆண்டைவிட, இம்முறை கிடைத்த ஆதா ரங்கள் ஏராளம்; இலங்கை அரசின் போக்கோ மேலும் கொடுமை என்ற நிலையில், இந்திய அரசு LLRC என்பதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க வேண்டிய இலங்கைக்கு இடித்துரைத்து, அதனை வழிக்குக் கொண்டு வர எதனைச் செய்தது?
நரிவலமும் போக வேண்டாம்; இடமும் போக வேண் டாம். மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால்போதும் என்ற பழமொழி போலக் கூட இல்லாது, அதனையும் தாண்டிடும் தன்மையை அல்லவா காட்டி விட்டது!

அய்.நா.வின் மனித உரிமை ஆணையம்

அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவி இந்தத் தீர்மானத்தில்
1. சுதந்திரமான சர்வதேச நாடுகள் குழுவின் ஆய்வு நடவடிக்கை தேவை,
2. கால வரையறைப்படுத்தப்பட்ட - குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த விசாரணை நடவடிக்கைகள் முடிய வேண்டும்

- என்பது போன்ற எதுவும் - இத்தீர்மானத்தில் இடம் பெறவில்லை. இதை தி.மு.க.வும் டெசோ அமைப்பும், இன்னும் பலரும் உணர்ந்தே, இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முனைந்தும், அதனை இந்திய அரசு ஏற்கத் தயாராக  இல்லாது ஒரு திருத்தத்தைக்கூட வைக்காதது மட்டுமல்ல; ஏற்கெனவே வந்த தீர்மானமும் நீர்த்துப் போகும்படிச் செய்து தனது மாபெரும் பழி எனும் பங்களிப்பைச் செய்துள்ளது! என்னே கொடுமை!!

குற்றவாளியே தன்னை விசாரித்துக் கொள்ள வேண்டுமா?

25 நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித் துள்ளன.
13 நாடுகள்தான் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
8 நாடுகள் நடுநிலை வகித்துள்ளன. தீர்மானம் இலங்கைக்கெதிராக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை விசாரிப்பவர்கள் யார்?  யார் குற்றம் புரிந்தார்களோ  அதே இலங்கை அரசுதான் விசாரணையை நடத்தும் அமைப்பை உருவாக்குமாம்! என்னே விசித்திரம்!

தனது நாட்டில் நீதித்துறையில் அரசுக்கு மாறுபட்ட தீர்ப்புக்காக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டார நாயகாவை நீக்கிய இராஜபக்சே அரசு தான் விசாரித்து நீதி வழங்கப் போகிறதா?

அறுவை சிகிச்சை வெற்றி - நோயாளி செத்தார்!

தீர்மானம் 25 நாடுகள் ஆதரவோடு நிறைவேறியும் உருப்படியான எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.

ஆபரேஷன் வெற்றி; நோயாளி செத்தார் என்பது போன்ற ஒரு வேதனையான நிலைதான்!

பா.ஜ.க.வும், காங்கிரசும் ஒன்றே! இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய மற்ற பா.ஜ.க. போன்ற எதிர்க்கட்சிகளும்கூட, ஆரம்பத்தில் ஒப்புக்காக ஒப்பாரி வைத்தனவே தவிர, உண்மையாக ஒத்துழைப்பு நல்கவில்லையே!

போர்க் குற்றவாளி என்று இலங்கை அரசு கூறப்படுவதை பா.ஜ.க. ஏற்காது என்று எதிர்க்கட்சித் தலைவி திருமதி சுஷ்மா சுவராஜ் கூறியது - இலங்கை இராஜபக்சே அரசை காங்கிரசும் சரி, பா.ஜ.க.வும் சரி தூக்கிப் பிடிக்கிறது என்பதற்கான சான்றே!

நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொணரக்கூட இக்கட்சிகள் ஒத்துழைப்பு தரவில்லையே! இந்திய அரசின் வெளி உறவுக் கொள்கையில் பா.ஜ.க. தலை யிடாதாம். அப்படியானால் பாகிஸ்தான் பற்றி மட்டும் - காசாபைத் தூக்கிலிடுவது வரை பேசலாமா?

அகில இந்தியக் கட்சிகள் பலவற்றின் முகத்திரையைக் கிழித்துள்ளது ஈழத் தமிழர் பிரச்சினை.

காங்கிரசுக்கு, அண்ணனாக, உருட் டைக்கு நீளம்; புளிப்பில் அதற்கு அப்பன் என்பதுபோல அல்லவா உள்ளது!

கூண்டில் கண்டிப்பாய் ஏற்றப்படுவார்கள்!

தமிழ் நாட்டு மக்களும், வரலாறும் இவர்களை ஒரு போதும் மன்னிக்கவும் மாட்டார்கள், மறக்கவும் மாட்டார்கள்!
டெசோ தன் பயணத்தைத் தொடரும். கடமையைத் தொய்வின்றி மேற்கொள்ளும். குற்றவாளிகள் கூண்டில் கண்டிப்பாய் ஏற்றப்படுவர்; தண்டனைக்கு ஆளாவார்கள் என்பது உறுதி! உறுதி!!

                     -----------------------கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்


நமக்குரிய இலக்கு இராஜபக்சேவே!

இந்த நேரத்தில் பொது எதிரி இராஜபக்சே என்பதை மறந்து விட்டோ, அல்லது மறைத்து விட்டோ, டெசோவையும், அதன் தலைவரையும் முதல் அமைச்சர் வசைபாடுவது எதைக் காட்டுகிறது?
ஈழப் பிரச்சினை அரசியல் ரீதியாக திசை திருப்பப்பட வேண்டும் என்ற குறுகிய நோக்கைத்தானே காட்டுகிறது!
முந்தைய அவரது நிலைப்பாடுபற்றிக் கூறி, அதே தவறை நாமும் செய்ய வேண்டாம் என்றே நினைக்கிறோம்.
நமக்குள்ள இலக்கு - இலங்கை இராஜபக்சேவே தவிர, இங்குள்ளவர்கள் பற்றியதல்ல - ஈழப் பிரச்சினை!

- கி.வீரமணி
                      ---------------------------”விடுதலை” 22-1-2013

36 comments:

தமிழ் ஓவியா said...


தமிழர்களை மத்திய அரசு ஏமாற்றிவிட்டது


நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் முழக்கம்
அவைகள் ஒத்தி வைப்பு


புதுடில்லி, மார்ச் 22- இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அமளி ஏற்பட்டதால் நாடாளு மன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை தொடங் கியதும் இருக்கையில் இருந்து எழுந்துநின்ற தமிழக எம்.பி.க்கள், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா திருத்தம் மேற் கொள்ளாததற்கு கடும் கண்டனம் தெரிவித் தனர்.

மேலும் சபாநாயகர் இருக்கையை முற்றுகை யிட்டும் அவர்கள் எதிர்ப்புக்குரல் எழுப் பினர். இதுதவிர தனி மாநிலம் கோரி போராடிய மாணவர் கள் மீதான தடிய டியைக் கண்டித்து தெலங்கானா ராஷ் டிரிய சமிதிக் கட்சி உறுப்பினர்களும் முழக் கமிட்டனர். இதனால் மக்களவையில் கடும் கூச்சம் குழப்பம் ஏற்பட் டதால் அவை நண்பகல் வரை ஒத்திவைக்கப் பட்டது.

இதேபோன்று மாநிலங்களவையிலும் இலங்கைத் தமிழர் விவகாரம் எதிரொ லித்தது. அப்போது, தமிழர்களை மத்திய அரசு ஏமாற்றிவிட்ட தாக தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் உறுப்பினர் கள் முழக்கமிட்டனர். இதையடுத்து மாநிலங் களவைத் தலைவர் ஹமித் அன்சாரி, நண் பகல் வரை அவை நட வடிக்கைகளை ஒத்தி வைத்தார்.

தமிழ் ஓவியா said...


தளபதி மு.க. ஸ்டாலின் வீட்டில் சி.பி.அய். திடீர் சோதனை: தமிழர் தலைவர் கண்டனம்!


அய்.ஏ.எஸ். தேர்வு இந்தியிலும், இங்கிலீஷிலும்தான் எழுதப்பட வேண்டுமா? ஒடுக்கப்பட்ட மக்களே, கிளர்ந்தெழுவீர்!

தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் வீட்டில் திடீரென்று சி.பி.அய். மேற்கொண்ட சோதனை அரசியல் நோக்கம் கொண்டது - கண்டனத்துக்கு உரியது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நேற்று காலை தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களது மகன் வாங்கிய வெளி நாட்டுக் கார் சம்பந்தமான சி.பி.அய். (ஊ.க்ஷ.ஐ) என்ற மத்திய புலனாய்வுத்துறை தளபதி ஸ்டாலின் அவர்கள் இல்லத்திலும், அவரது மற்ற நண்பர்கள் இல்லங்களிலும் நடத்திய திடீர்ச் சோதனைகள் நேற்று டில்லி வரை அதிர்வை உருவாக்கியிருக் கின்றன. காரணம் - திடீர் சோதனைக்கு யார் பொறுப்பு?

1. அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து நேற்று முன்தினம் (19.3.2013) தி.மு.க. விலகியது.

2. உடனே சி.பி.அய். திடீர்ச் சோதனைகள், தி.மு.க.வின் பொருளாளர் -ஏதோ அவர்தான் கூட்டணி முறிவுக்கு முழுக் காரணம் என்ற தவறான செய்திகளைத் திட்டமிட்டு பார்ப்பன ஊடகங்கள் பரப்பிய நிலையில் இப்படி நடந்துள்ளது.

3. இதில் பிரதான எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலித்துள்ளன. (தி.மு.க. நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர். பாலு எம்.பி. அவர்கள் அறைகூவல் விடுத்துப் பேசியது ஒருபுறம் என்ற நிலையில்)

4. திடீர்த் திருப்பமாக மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் போன்ற முக்கிய ஆளுங் கட்சிப் பொறுப்பாளர்கள், இது தங்களுக்குச் சம்பந்தமில்லாமல் நடந்து விட்ட நிகழ்வு என்று கூறி வருத்தம் -விளக்கம் தெரிவித்துள்ளனர்.

5. தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் செய்தி யாளர்களிடம் மேற்கூறியவைகளையொட்டி, இது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையா என்பதை நம்பலாம்; நம்பாமலும் இருக்கலாம் என்று கூறி மிகவும் பெருந் தன்மையுடன் இப்படி நடந்ததைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது போன்று கண்ணியம் பொங்க பதில் அளித் துள்ளார்கள்.

6. சி.பி.அய். என்ற அமைப்பு, பிரதமர் அலுவலகக் கண்காணிப்புக்குக் கீழே உள்ள ஒரு அமைப்பு என்பது ஊர் அறிந்த செய்தி.

அப்படி இருக்கையில், இப்படி ஒரு நிகழ்வு பிரதமர் தகவலுக்கே போகாமல் நடந்துள்ளது என்றால், இது எவ்வளவு வியப்பும் வேடிக்கையும் ஆன ஒன்று?
ராஜாவை விஞ்சும் விசுவாசிகள் யார்?

அப்படியானால் அங்கே இதற்குக் காரணமான ராஜாவை விஞ்சும் ராஜ விசுவாசிகள்! யார்? அவர்களால் பிரதமருக்கும், ஆட்சிக்கும் நேற்று ஏற்பட்ட அவமானத்திற்குரிய நிலைமைக்கு பரிகாரம் - தக்க தண்டனை காண வேண்டும் என்று பொதுவானவர்கள் கேட்க மாட்டார்களா?


7. தளபதி மு.க. ஸ்டாலின் ஒரு திறந்த புத்தகம். எனவே இதுபோன்ற நடவடிக்கைகள் தி.மு.க. வயலில் வீசப்பட்ட உரம் என்பது, ஸ்டாலினுக்கு மேலும் பலம் சேர்ப்பதே ஆகும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


நீதித்துறையில் இரு வேறு நிலைப்பாடுகளா?


1992 டிசம்பர் 6இல் உத்தரப்பிரதேச மாநிலமான அயோத்தியில் சிறுபான்மை மக்களான முசுலிம் களின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியை இந்துத்துவா வெறியர்களான சங்பரிவார்க் கும்பல் - பெரும் தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி வினய் கட்டியார் முதலியோரின் வழிகாட்டுதலில் பட்டப் பகலில் கடப்பாறை உள்ளிட்ட கருவிகளைப் பயன்படுத்தி அடித்து நொறுக்கினர் அதன் அதிர்வு இந்தியா முழுமையும் எதிரொலித்தது.

குறிப்பாக மும்பையில் ஏற்பட்ட வன்முறை யினால் 250 பேர் பலியானார்கள். அது தொடர் பான வழக்கில் நடிகர் சஞ்சய்தத் உட்பட பலருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனைகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் மும்பையில் நடைபெற்ற மதக் கலவரத்திற்கு மூல சக்தியாக இருந்த சிவசேனா மீதும், அதன் தலைவர்மீதும் சிவசேனா தொண் டர்கள்மீதும் உள்ள வழக்கு என்னவாயிற்று?

நீதிபதி கிருஷ்ணா தலைமையில் அமைக்கப் பட்ட விசாரணை ஆணையின் அறிக்கை முக்கிய மாக சிவசேனாவைக் குற்றப்படுத்தியிருந்தது - சிறப்பாக அதில் சிவசேனாவின் தலைவர் பால்தாக்கரேயையும் - சுட்டிக் காட்டியிருந்தது.

மாநிலத்தில் பி.ஜே.பி. - சிவசேனா ஆட்சி வந்த நிலையில் ஒரே வரியில் நீதிபதி சிறீகிருஷ்ணா அறிக்கை நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டது.

பிறகுவந்த காங்கிரஸ் ஆட்சி அதனை ரத்து செய்தது; பாதிக்கப்பட்ட முசுலிம்கள் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றனர்.

பிஜேபி, சிவசேனா ஆட்சி 1371 வழக்குகளின் கோப்புகளை மூடிவிட்டது. மறுபடியும் அந்த வழக்குகள் திறக்கப்பட்டன.

குறிப்பாக சிவசேனா தலைவர் பால்தாக்கரே மீதான வழக்கு சரிவர நடத்தப்படவில்லை. ஓரிருமுறை நீதிமன்றத்திற்கு அவர் வரவழைக்கப் பட்ட பொழுது சிவசேனா வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. வல்லான் வகுத்ததே வாய்க்கால் வழி என்ற நிலை சரியானதுதானா? சட்டம் அதனை அனுமதிக்கிறதா?
ஊருக்கு இளைத்தவர்கள் இஸ்லாமியர்கள் தானா? மூல வழக்கான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ராஜ நடைபோட்டுத் திரிகிறார்கள். அவர்கள் மீதான வழக்கு ஊறுகாய் கலயத்தில் தூங்குகிறது.

அதன் எதிர்வினையாக மும்பையில் நடைபெற்ற வன்முறையில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கூறித் தண்டனை இப்பொழுது வழங்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி வழக்கில் சம்பந்தப்பட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கட்டியார் போன்றவர்கள் என்பதால், அவர்கள் மீதான வழக்கு தாமதப்படுத்தப்படுகிறது என்பது தானே உண்மை?

இந்த நிலை நீடித்தால் சட்டத்தின்மீதும், நீதிமன்றத்தின் மீதும் மக்களுக்கு எப்படி மரியாதை ஏற்படும்? வன்முறை நடவடிக்கைகள்தான் எப்படி குறையும்?

இதில் மிகவும் வெட்கக் கேடானது - பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் அந்த சம்பவத் துக்குப் பிறகு இந்தியாவின் உள்துறை அமைச் சராகவும், துணைப் பிரதமராகவும், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், மாநில முதல் அமைச்சராகவும் பதவி வகித்தார்கள் என்பதாகும்.

அதற்குப் பின் அத்வானி பிஜேபியின் பிரத மருக்கான வேட்பாளர் என்று 2009 தேர்தலில் அறிவிக்கப்பட்டாரே!

இந்தக் கொடுமை இந்தியாவைத் தவிர, வேறு எங்கு நடக்கும்? இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்குமா?

இந்த வழக்கை விரைவாக நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் இந்தியாவில் சட்டம், நீதி, ஜனநாயகம் இருக்கிறது என்று மதிக்கப்பட முடியும்.

தமிழ் ஓவியா said...


திருக்குறள்



நம் நாட்டினருக்கு என்ன கலை, என்ன குறிக்கோள், என்ன நாகரிகம் என்று கேட்டால் அதற்கு ஆதாரமாகத் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஒன்றைத்தான் எடுத்துக்காட்ட முடியும்.
(விடுதலை,3.10.1958)

தமிழ் ஓவியா said...


அமெரிக்கத் தீர்மானம்: தொல்.திருமாவளவன் கண்டனம்


அய்.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்தில் சர்வதேச விசாரணைக்கு ஆணையிடும் வகையிலும் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதை அறிவிக்கும் வகை யிலும் இந்திய அரசு திருத்தங்களை முன்மொழிய வேண்டுமென தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் ஒரே குரலில் வலியுறுத்தி வந்தோம். அதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், உரிய திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றும் மத்திய அரசு கூறிவந்தது. திமுக தனது ஆதரவை விலக்கிக் கொண்ட நேரத்திலும்கூட மத்திய அமைச்சர்கள் இதே கருத்தைத்தான் தெரிவித்து வந்தனர். தாங்கள் முடிவெடுப்பதற்கு முன்பாகவே திமுக அவசரப்பட்டு விட்டது என்றும் குற்றம்சாட்டி வந்தார்கள். ஆனால், அவர்கள் கூறிவந்ததற்கு மாறாக, அய்.நா. மனித உரிமைகள் அவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது இந்திய அரசு நடந்துகொண்டுள்ளது. இலங் கையில் நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், வடக்கு- கிழக்கு மாகாணங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் மட்டுமே இந்தியா கருத்துத் தெரிவித்தது. இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்றோ, சர்வதேச விசாரணை வேண்டுமென்றோ இந்தியா கோரவில்லை. அது மட்டுமின்றி, அமெரிக்கத் தீர்மானத்தில் எந்த வொரு திருத்தத்தையும் முன்மொழியவில்லை. இது தமிழக மக்களின் உணர்வுகளையும் கோரிக்கை களையும் அலட்சியப்படுத்தி அவமதிக்கிற செயலாகும். இந்திய அரசின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மை யாகக் கண்டிக்கிறது.

எப்பொழுதும் இந்தியா இலங்கைக்கு ஆதரவுதான்

இந்திய அரசு தொடர்ந்து இலங்கைக்கு ஆதரவா கவே செயல்பட்டு வருகிறது. அதற்கு பல்வேறு சாக்குப் போக்குகள் கூறப்படுகின்றன. ஆனால், அய்.நா. அவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் ஒப்பந்தங்கள், தீர்மானங்கள் பலவற்றில் இந்தியா கையெழுத்திட வில்லை. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை அமைப்ப தற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ரோம் ஒப்பந்தத்திலும் இந்தியா இதுவரை கையெழுத்திட வில்லை. இவ்வாறு சர்வதேச அளவில் மனித உரிமைகள் தொடர்பாக நிறை வேற்றப்படும் ஒப்பந்தங்களை மதிக்காத ஒரு நாடாகவே இந்தியா இருந்து வருகிறது. அதனால்தான் இனப்படு கொலை நாடான இலங்கை யை இந்தியா ஆதரிக்கிறது.

ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று தமிழகத்தில் எழுச்சியோடு போராடிக் கொண்டிருக்கிற மாணவர்களும் பொதுமக்களும் இந்தியாவை சனநாயகப்படுத்துவதற்கு முன்வர வேண்டும். இந்தியா ஒரு சனநாயக நாடாகவே இருந்தால் தான் இன்னொரு நாட்டில் அது சனநாயக உரிமை களைப் பாதுகாப்பதற்காகக் குரல் கொடுக்க முடியும். எனவே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நம்முடைய போராட்டம் இந்திய அரசின் சனநாயக விரோதப் பண்பினை அம்பலப்படுத்துவதாக நீட்சி பெற வேண்டும். அதற்கு சனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைவரையும் விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவி அழைக்கிறது.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் காமன்வெல்த் நாடுகளின் கூட்டம் இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகள் பங்கேற்கக் கூடாது என அந்நாட்டின் சனநாயகச் சக்திகள் தீவிரமாகக் குரல் எழுப்பி வருகின்றனர். அதேபோல இந்தியாவும் சிங்கள அரசின் இனப்படுகொலையைக் கண்டிக்கிற வகையில் அம்மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தும் வகையில் தமிழ் மக்களின் போராட்டம் அமைய வேண்டும் என்பதை இச்சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டக் கடமைப் பட்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு வினாக்கள்

உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?
நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?
குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?
எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?
எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?
அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?
அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?
முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?
ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?
மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?
நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?
எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?
அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?
அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?
பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?
சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?

தமிழ் ஓவியா said...


பெண்கள் அர்ச்சகராகலாமா?


தமிழர் கொள்கைப்படி, உயிர்களிடையே பால் வேற்றுமை கருதப்படாமையால் ஆடவரைப் போலவே பெண்ணும் முக்திக்குத் தகுதி உடையவள் ஆகிறாள். ஆகவே முக்தி சாதனமாகிய கோயில் வழிபாட்டிலும் பெண்ணுக்கு உரிமை உண்டு. இதை நாயன்மார் வரலாற்றினாலும் அறிகிறோம். காரைக்காலம்மையார், திலகவதியார், மங்கையர்க்கரசியார் ஆகியோர் இந்த நிலைக்குத் தக்க சான்றுகள். மேலும் திருப்பனந்தாள் சிவாலயத்தின் பெயராகிய தாடகை யீச்சுரம் என்பது, ஒரு பெண் வழிபட்ட சிறப்பைக் கொண்டது. இவ்வரலாறு பெரிய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அவ்வூர் அர்ச்சகர் பெண்ணாகிய தாடகை என்பவள் தன் தந்தையார் வெளியூர் சென்றிருந்த போது தான் பூசை செய்தாள். அச்சமயம் பூமாலையைச் சிவலிங்கத்தின் முடியில் அணிவிக்க எழுந்த போது இடையில் இருந்த ஆடை நழுவவே அதைத் தன் இரண்டு கைகளாலும் நழுவாது இடுக்கிக் கொண்டாள். அந்த நிலையில் பெருமான் சமீபம் இவளால் செல்ல முடியவில்லை. இவளுடைய பக்திக்கு அருள்கூர்ந்த பெருமான், தம்முடியைச் சாய்த்து பூமாலையை ஏற்றுக் கொண்டார். தாடகைக்கு அருள்செய்தமையால் இத்தலத்திற்கு தாடகையீச்சரம் என்று பெயர் வந்தது.

இப்பெயரைத் திருஞான சம்பந்தர் இத்தலத்தின் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்புறம் முடிசாய்ந்த லிங்க உருவத்தை நிமிர்க்க முடியாமல் குங்குலியக் கலய நாயனார் என்ற அடியவர்க்கே நிமிர்க்க முடிந்தது என்று பெரியபுராணம் கூறுகிறது.

பெண்கள் பூசிக்கலாகாது என்று ஆகமத்தில் எந்தத் தடையும் விதிக்கவில்லை. தற்போதும் தமிழ்நாட்டில் சில அம்பிகை கோயில்களில் பெண்களே பூசித்து வருகிறார்கள்.

- மகராசன் குழு அறிக்கையிலிருந்து பக்கம் 29-31
உண்மை - 15.5.1983

தமிழ் ஓவியா said...


நமது நாடகம், சினிமா! -பாரதிதாசன்-


சீரிய நற்கொள்கையினை எடுத்துக் காட்ட சினிமாக்கள், நாடகங்கள் நடத்த வேண்டும். கோரிக்கை பணம் ஒன்றே என்று சொன்னால் கொடுமை இதை விட வேறே என்னவேண்டும்? பாராத காட்சியெலாம் பார்ப்பதற்கும், பழைமையினை நீக்கி நலம் சேர்ப்பதற்கும் ஆராய்ந்து மேனாட்டார் நாடகங்கள் அமைக்கின்றார், முன்னேற்றம் அடைகின்றார்கள்.

ஒரு நாட்டின் வேரிலுள்ள தீமை நீக்கி உட்புறத்தில் புத்தொளியை சேர்ப்பதற்கும் பெரு நாட்கள் முயன்றாலும் முடியா ஒன்றைப்பிடித்த பிடியில் முடித்து தீர்ப்பதற்கும், பெரு நோக்கம் பெருவாழ்வு கூட்டுதற்கும் பிறநாட்டார் நாடகங்கள் செய்வார்! என் திருநாட்டில் பயனற்ற நாடகங்கள் சினிமாக்கள் தமிழர்களை பின்னே தள்ளும்.

தமிழ்நாட்டில் நாடகத்தால் சம்பாதிப்போர் தமிழ்பாஷையின் பகைவர்; கொள்கையற்றோர்; இமயமலை யவ்வளவு சுயநலத்தார்; இதம் அகிதம் சிறிதேனும் அறியாமக்கள்; தமைக் காக்க! பிறர்நலமும் காக்க என்னும் சகஜ குணமேனுமுண்டா? இல்லை இந்த அமானிகள் பால் சினிமாக்கள், நாடகங்கள் அடிமையுற்றுக் கிடக்கு மட்டும் நன்மையில்லை.

உண்மை - 15.6.1983

தமிழ் ஓவியா said...


வர்க்கப் பார்வையை சிதைக்கும் சாதி


பிறப்பில் சாதிய உயர்வு தாழ்வு எனும் தத்துவம் வேத சாஸ்திரக் கருத்துக்களோடு இணைந்து இந்தியாவில் சமூக ஆதிபத்தியக் கருத்தாக நிலைநாட்டி வருவது பிராமணியம் என்பதாகும்.

இந்தியாவைத் தவிர உலகில் மற்றெல்லா நாடுகளிலும், குறிப்பாக மேலை நாடுகளில் ஆளும் வர்க்கத்தின் அடிப்படையில் ஆதிபத்தியம் நிலவியது. பொருள் உற்பத்தி உறவு முறையில் - அரசியல், பொருளாதாரம், ஆட்சி அதிகார ஆதிக்கம் வகிக்கும் வர்க்கம் மேலான வர்க்கமாகக் கருதப்பட்டது.

உதாரணமாக மன்னர்கள் நிலப்பிரபுக்கள் முதலாளிகள் உயர்வான சமூக அந்தஸ்து படைத்தவர்களாக கருதப்பட்டனர்.

ஆனால் இந்தியாவில் மேற்கூறியவாறு வர்க்க அடிப்படையில் உயர்வு தாழ்வு எனும் சமூக அந்தஸ்து நிலவி வந்த போதிலும் இவை அனைத்திற்கும் மேலாக - முதன்மையாக பிறப்பில் சாதிய உயர்வு தாழ்வு எனும் சாதிய முறை ஏற்படுத்தப்பட்டது வேத சாத்திர கருத்துக் களேயாகும்.

இந்தியாவில் அடிமை முறையும், நிலப்பிரபுத் துவ உற்பத்தி உறவுமுறையும், பின்னிப் பிணைந் திருந்த சமுதாயத்தில் பொருள் உற்பத்தி உறவு முறையில் அரசியல், பொருளாதாரம், ஆட்சி அதிகாரம் என்ற அமைப்பில் ஏற்படும் வர்க்கப் பாகுபாடு அல்லது வர்க்க பிரிவுகளை மக்கள் பார்க்க விடாது தடுத்தும், தடைப்படுத்தியும் வந்தது பிராமணியம் எனும் தத்துவமாகும்.

-எம்.வி.சுந்தரம் எழுதிய சாத்திரப் பேய்களும், சாதிக்கதைகளும் (ஒரு மார்க்ஸியப் பார்வை) நூலின் பக்கம் 54-55

(சாதியா, பொருளாதார பார்வையா என்று நாம் இதுகாறும் எழுப்பி வந்த கேள்விக்கு பொருளாதாரமே என்று கிளிப்பிள்ளைப் பாடம் சொல்லி வந்த மார்க்ஸிஸ்டுகள் இன்றைய தினம் நம் கருத்தின் பக்கம் நெருங்கி வந்துள்ளனர் என்பதை இது காட்டுகிறது.)

உண்மை - 15.5.1983

தமிழ் ஓவியா said...


ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதுதான்!


ஜெனிவா, மார்ச் 22- இலங்கைக்கு எதிராக அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நேற்று வெற்றிகரமாக நிறைவேறி யது. ஆதரவாக இந்தியா உள்பட 25 நாடுகளும், எதிர்த்து பாகிஸ்தான் உள்பட 13 நாடுகளும் வாக் களித்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிகட்ட போரில் அந்நாட்டு ராணுவம் அப் பாவி தமிழர்களை கொன்று குவித்தது. இலங்கை யின் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச அமைப்பு மூலம் விசாரணை நடத்தி, அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கோரினர்.

இந்நிலையில், ஜெனிவாவில் அய்.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாடு பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கியது. இலங்கையில் தமிழர் மறுவாழ்வு பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும், போர்க் குற்றங்கள் குறித்து நியாயமான விசாரணை நடைபெறவில்லை என்றும் கூறி, அமெரிக்கா 2 ஆவது தீர்மானத்தை கொண்டு வருவதாக அறி வித்தது. ஏற்கெனவே அமெரிக்கா, இதே போன்ற தீர்மானத்தை கடந்த முறை கவுன்சில் கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது.

தற்போது, 2 ஆவது தீர்மானத்தின் வரைவு அறிக்கையை அமெரிக்கா, கடந்த 12 ஆம் தேதி தாக்கல் செய்தது. அதில், இலங்கையின் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டது. சில கடுமையான வாசகங் களும் இடம்பெற்றன. இதை இலங்கைக் கடுமை யாக எதிர்த்தது. அதற்கு ஆதரவாக சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் தீர்மானத்தை எதிர்த்தன.

இதன்பின், அமெரிக்காவின் இறுதி தீர்மானம் கடந்த 18 ஆம் தேதி, அய்.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டது. வரைவு தீர் மானத்தில் இடம் பெற்ற கடுமையான வாசகங்கள்

நீக்கப்பட்டு, தீர்மானமே நீர்த்து போயிருந்தது. வரைவு தீர்மானத்தில் இருந்த, போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற வாசகம் நீக்கப்பட்டிருந்தது. மறுசீரமைப்பு பணிகளை முறையாக நடக்கவில்லை என்று சுட்டி காட்டுவதற்கு பதிலாக அவற்றை விரைவாக செயல்படுத்த ஊக்குவிப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் இறுதிகட்ட போரின் போது நடந்த சர்வதேச மனித உரிமை சட்ட மீறல்கள் குறித்த கடுமையான குற்றச்சாட்டுகள் மீது முறை யான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை கவலையுடன் சுட்டிகாட்டுகிறோம்.

தமிழ் ஓவியா said...

ஆட்கள் காணவில்லை, துன்புறுத்தல்கள், கருத்து சுதந்திர உரிமைகள் பறிப்பு, அமைதியான கூட்டங்களை தடுத்தல், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களை தடுத்தல், சுதந்திரமான நீதித்துறைக்கு அச்சுறுத்தல் மத, இனரீதியான வேறுபாடுகள் போன்றவை குறித்து தொடர்ந்து செய்திகள் வருகிறது என்பதை கவலையுடன் சுட்டி காட்டுகிறோம். போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திர மான, நம்பகத்தன்மையுடன் கூடிய விசாரணை நடத்தப்பட வேண்டும். - இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தீர்மானத்தை முன்மொழிந்த அமெரிக்க பிரதி நிதி, இலங்கையில் நடந்துள்ள சீரமைப்பு பணி களின் முன்னேற்றத்தை அங்கீகரிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியாவின் ஏழு திருத்தங்கள்

இந்தியா தரப்பில், 7 திருத்தங்கள் பரிந்துரைக்கப் பட்டன.

இலங்கையில் 13 ஆவது அரசியல் சட்ட திருத் தத்தை அமல்படுத்த வேண்டும், வடக்கு மாகாணத் தில் தேர்தல் நடத்த வேண்டும், போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தது தொடர்பாக உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் சுதந்திரமான விசா ரணை நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை இந்தியா எழுத்து மூலம் தெரிவித் திருந்தது. ஆனால், இத்திருத்தங்கள் ஏற்றுக் கொள் ளப்படவில்லை.

அய்.நா. மனித உரிமை கவுன்சிலுக்கான இந்தி யாவின் நிரந்தர பிரதிநிதி திலிப் சின்ஹா கூறிய தாவது: இலங்கையில் நடைபெற்ற போர் தொடர்பாக நம்பகத்தன்மையுடனான சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். மனித உரிமை கவுன்சிலில் 2009 ஆம் ஆண்டு இலங்கை அளித்த உத்தர வாதத்தை அந்நாடு முழுமையாக நிறைவேற்ற வில்லை என்பதைக் கவனத்தில் கொண்டுள்ளோம்.

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் சம உரிமை, அங்கீகாரம் அளிப்பதற்கான 13 ஆவது சட்ட திருத்தத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இலங்கை அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை இலங்கைக்குச் சென்று அங்கு பார்வையிட வேண் டும்.

போர்படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்று வதுடன், அங்குள்ள அனைத்துத் தரப்பு மக்களும் கண்ணியத்துடனும், சம உரிமை மற்றும் சமமான பாதுகாப்புடன் வாழ்வதை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நட்பு நாடாக உள்ள இலங்கையுடன் தொடர்புகளை முறித்துக் கொள்ள முடியாது. அங்குள்ள பிரச்சினைகளில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம் என்றார்.

தமிழ் ஓவியா said...

முன்னதாக, தீர்மானத்தில் இந்தியா சார்பில் 7 திருத்தங்கள் சேர்க்க கூறப்பட்டது. ஆனால், தீர்மா னத்தை முன்மொழிந்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதை ஏற்கவில்லை. பின்னர், தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அய்.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் மொத்தம் 47 நாடுகள் உள்ளன. இதில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு 25 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 13 நாடுகள் இத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

தீர்மானத்தை ஆதரித்த நாடுகள்

அர்ஜெண்டினா, ஆஸ்திரியா, பெனின், பிரேசில், சிலி, கோஸ்டாரிகா, கோட்டிவாய்ர், செக்குடியரசு, எஸ்டோனியா, ஜெர்மனி, குவாதமாலா, இந்தியா, அயர்லாந்து, இத்தாலி, லிபியா, மான்டிரீக்ரோ, பெரு, போலந்து, தென்கொரியா, மோல்டோவா, ருமேனியா, ஸியாரா லியோன், ஸ்பெயின், சுவிட்சர் லாந்து, அமெரிக்கா.

எதிர்த்து வாக்களித்த நாடுகள்

காங்கோ, ஈகுவடார், இந்தோனேசியா, குவைத், மாலத்தீவுகள், மவுரிடேனியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கத்தார், தாய்லாந்து, உகாண்டா, அய்க்கிய அரபு அமீரகம், வெனிசூலா.

வாக்கெடுப்பில் பங்கேற்காத நாடுகள்

அங்கோலா, போட்ஸ்வானா, பர்கினா ஃபாஸா, எத்தியோப்பியா, ஜப்பான், கஜகஸ்தான், கென்யா, மலேசியா.

மத்திய ஆப்பிரிக்க நாடான கபோன், வாக் குரிமை தொடர்பான சர்ச்சை காரணமாக வாக் களிக்கவில்லை.

இதையடுத்து, தீர்மானம் நிறைவேறியது. தீர் மானத்தில் கடும் வாசகங்கள் நீக்கப்பட்டாலும், இது இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சர்வதேச நாடுகள் உள்ளதை சுட்டிக்காட்டுவதால், வரவேற் கத்தக்கது என்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறியுள்ளது.

ஆம்னெஸ்டி கருத்து

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா பிரிவு தலைமை நிர்வாகி அனந்தபத்மநாபன் கூறியுள்ள தாவது:

அமெரிக்கத் தீர்மானம் நிறைவேறியது வரவேற்கத்தக்கது. இலங்கையில் நடந்த போர் குற்றங்களை சாதாரணமாக ஒதுக்கி விட முடியாது, அவற்றை விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு அய்.நா. உறுப்பு நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இலங்கை யில் மனித உரிமை மீறல்கள் நீடிப்பதை தீர்மானம் சுட்டிக்காட்டுவதுடன், மறுசீரமைப்பு பணிகள் குறித்து அய்.நா.வுக்கு அறிக்கை அளிக்கவும் வலியுறுத்துகிறது. எனினும், போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை கேட்கப்படாதது வருந்தத்தக்கது. தீர்மானம் காமன் வெல்த் நாடு களுக்கு ஒரு விழிப்புணர்வு அழைப்பாக அமையும். காமன்வெல்த் தலைவர்கள் நவம்பரில் கூடுவதற்கு முன்பு போர்க் குற்றவாளிகள் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும்.

- இவ்வாறு அனந்தபத்மநாபன் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


அமெரிக்கத் தீர்மானம் உருக்குலைந்த,உருப்படாத தீர்மானம்: கலைஞர் பேட்டி

சென்னை, மார்ச் 22- ஜெனிவா மனித உரிமைக் கூட்டத்தில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு, இந்தியா உள்பட 25 நாடுகளால் ஆதரிக்கப்பட்ட தீர்மானம் உருக்குலைந்த உருப்படாத ஒன்று என்று கருத்துக் கூறியுள்ளார் டெசோ தலைவரும், தி.மு.க. தலைவருமான கலைஞர் அவர்கள்.

செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் (21.3.2013) அவர் கூறியதாவது:

செய்தியாளர்: அய்.நா. சபையில் இன்று (20.3.2013) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இந்தியா தெரிவித்த கருத்துபற்றி உங்கள் கருத்து என்ன? நீங்கள் திருப்தி அடைந்திருக்கிறீர்களா?

தலைவர் கலைஞர்: நான் திருப்தி அடையவில்லை.

செய்தியாளர்: எதனால்?

கலைஞர்: நாங்கள் அமெரிக்கத் தீர்மானத்தில் எவை யெவை இடம்பெற வேண்டுமென்று எடுத்துச் சொன் னோமோ, அறிவித்தோமோ அவற்றில் எதுவுமே இடம் பெறவில்லை. அதனால் இது நீர்த்துப்போன அமெரிக்கத் தீர்மானம் என்றுதான் சொல்லவேண்டும். குறிப்பிட்ட காலவரையறைக்குள் சுதந்திரமான விசாரணை நடைபெற்று, அவற்றின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்திச் சொல்லியிருக்கிறோம். அதை இந்தியப் பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்திலும் குறிப்பிட்டிருக்கிறேன். சோனியா காந்தி அம்மையார் அவர்களுக்கு எழுதிய கடிதத்திலும் சுட்டிக் காட்டி அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

அது மாத்திரமல்ல; இனப் படுகொலை நடைபெற்றதை மூடி மறைக்கக் கூடாது, அதை ஒப்புக் கொண்டு இலங்கை அரசு விசாரணைக்கு உட்பட வேண்டும் என்று அதையும் திட்டவட்டமாக வலியுறுத்தியிருக்கிறேன். இவற்றில் எதையும் ஏற்றுக் கொள்ளாத ஒரு சூழ்நிலையில் அமெரிக்காவின் தீர்மானம் - அமெரிக்கா - அமெரிக்கா என்று ஒரு வசீகரச் சொல்லை வைத்து, ஏதோ பூதா காரமாக வரப்போகிறது என்று எல்லோரும் எண்ணி யிருந்ததற்கு மாறாக, குறிப்பாக நம்முடைய தமிழகத்தின் இளைஞர்கள், மாணவர்கள், வணிகர்கள், வழக்கறி ஞர்களும் கூட, அமெரிக்கத் தீர்மானம் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கக் கூடியது, வாழ வைக்கக் கூடியது, என்று நம்பியிருந்ததற்கு மாறாக, அந்தத் தீர்மானம் இன்றைய ஜெனிவா நிகழ்ச்சிகளுக்குப் பிறகு நீர்த்துப் போனது என்று கருதக்கூடிய அளவிற்கு உருக்குலைந்து போய் விட்டது, உருப்படாத ஒன்றாகவும் ஆகிவிட்டது.

தமிழ் ஓவியா said...

டெசோ முடிவெடுக்கும்

செய்தியாளர்: இந்தச் சூழ்நிலையில் இலங்கையில் என்ன செய்ய முடியும்?

கலைஞர்: என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி எங்கள் டெசோ ஆலோசித்து முடிவெடுக்கும்.

செய்தியாளர்: நீங்கள் கோரிய இரண்டு திருத்தங் களை இடம் பெறச் செய்து, நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதற்கு நீங்கள் ஒப்புதல் தருவீர்களா?

கலைஞர்: அப்படியொரு நிலைமை வருவதாகத் தெரிய வில்லையே? நாடாளுமன்றத்தில் அது நிறைவேற்றப்பட வேண்டுமென்று நாங்கள் கோரியதே, அவ்வாறு நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அது இங்கேயிருந்து அனுப்பப்பட வேண்டும், அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு அமெரிக்கத் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என் பதற்காகத்தான்! அதற்கு இப்போது இடமே இல்லாமல் போய் விட்டது.

செய்தியாளர்: அய்க்கிய முற்போக்குக் கூட்டணியி லிருந்து நீங்கள் வெளியே வந்தது உறுதியானதுதானா?

கலைஞர்: நடைபெறும் நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்போது சரியான முடிவினைத் தான் நாங்கள் எடுத்திருக்கிறோம் என்று கருதுகிறேன்.

செய்தியாளர்: மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது என்று நினைக்கிறீர்களா?

கலைஞர்: துரோகம் என்று நான் சொல்ல மாட்டேன். கவலைப்படாமல் இருந்து விட்டார்கள்.

செய்தியாளர்: இந்திய அரசு இந்த முயற்சியை முன்பே எடுத்திருக்கலாம் என்று கருதுகிறீர்களா?

கலைஞர்:- யூகங்களுக்குப் பதில் சொல்ல முடியாது.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

தமிழ் ஓவியா said...


அமெரிக்கத் தீர்மானம்-நீர்த்துப்போன ஒன்று டெசோ தலைவர் கலைஞர் அறிக்கை


சென்னை, மார்ச் 22- ``ஈழத் தமிழர் பிரச்சினைக்காக அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப் பட்டிருக்கிறது! என்றும், ``அந்தத் தீர்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற நமது கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலனை செய்யவில்லை என்றும் டெசோ தலை வரும், தி.மு.க. தலைவருமான கலைஞர் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று (20.3.2013) வெளியிட்டுள்ள கருத்து வருமாறு:-

இலங்கையில் அதிபர் ராஜபக்சே அரசால் நடத்தப் பட்டது போர்க் குற்றங்களே என்றும், இனப் படுகொலை களே என்றும் பிரகடனப்படுத்தப்பட வேண்டும்; நம்பகத் தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து, குறிப்பிட்ட காலவரை யறைக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும்; என்ற இரண்டு திருத்தங்களை இந்திய நாடாளுமன் றத்தில் தீர்மானமாக நிறைவேற்றுவதோடு, அய். நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திலும் இணைத்து நிறை வேற்ற வேண்டும் என்ற நமது நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகிறோம்.

போர்க் குற்றம்பற்றிகூடக் குறிப்பிடப்படவில்லை

தமிழ் ஓவியா said...

நாம் வலியுறுத்தி வருவதன் தொடர்ச்சியாக மூன்று மத்திய அமைச்சர்கள் நேரடியாக வந்து கலந்தாலோ சனை செய்தனர். இந்திய நாடாளுமன்றத்தில் நமது திருத்தங்கள் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கை அந்தக் கலந்தாலோசனையின் போது எனக்கு ஏற்பட்டது. இதற்கிடையே அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் நான்கு முறை திருத்தப்பட்டு, நான்காவது முறை திருத்தப்பட்ட இறுதித் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்ட தகவல் நமக்குக் கிடைத்தது.

அந்தத் இறுதித் தீர்மானத்தில் போர்க் குற்றங்கள் பற்றியோ, இனப்படுகொலை என்பதுபற்றியோ, சுதந்திர மான பன்னாட்டு விசாரணை ஆணையம் பற்றியோ எவ்விதக் குறிப்பும் இல்லை. இந்திய நாடாளுமன்றத்திலும் நாம் வலியுறுத்தி வரும் திருத்தங்கள் தொடர்பாக, தீர்மானம் நிறைவேற்றுவதில் பல்வேறு வகையான தடைகள் உருவாகி வந்ததும் நமக்குத் தெரிய வந்தது. இந்தச் சூழ்நிலைகளிலேதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்; இனியும் மத்திய அமைச்சரவையிலும், கூட்டணியிலும் நீடிப்பது ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது என்று கருதி, மத்திய அமைச் சரவையிலிருந்து விலகிக் கொள்வதென்றும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் நீடிப்பதில்லை என்றும் முடிவெடுத்து அறிவித்தோம்.

தமிழ் ஓவியா said...

அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெ ரிக்கா கொண்டு வந்த தீர்மானம் எந்தெந்த வகையில் நீர்த்துப் போய் விட்டது என்பதை சர்வ தேச பொது மன்னிப்பு நிறுவனத்தின் (ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்) இந்தியப் பிரதிநிதி திரு. அனந்தபத்மநாபன், இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென மனித உரிமைகள் ஆணையர் திருமதி நவநீதம்பிள்ளை வற்புறுத்தியிருந்தார். இதை அமெரிக்காவும் ஏற்று தனது வரைவுத் தீர்மானத்தில் சேர்த்திருந்தது.

ஆனால் தீர்மானத்தின் இறுதி வடி வத்தில் சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீக்கப்பட்டு விட்டது. திருத்தப்பட்ட தீர்மானத்தால் இலங் கைக்குப் பெரிய நெருக்கடி ஏதும் ஏற்படப் போவதில்லை. அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப் போனதற்குப் பின்ன ணியில் இந்தியாவும் உள்ளது என்று தெரிவித்துள்ள கருத்து ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதாகும்.

அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அதன் துணைத் தலைவர் கியாங்வா என்பவர், நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசு அதிகக் கவனம் செலுத்தவில்லை. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுகுடியேற்றம், நிவாரணம் போன்றவற்றில் இலங்கை அரசு நேர்மையாகச் செயல்படவில்லை. இலங்கையின் ராணுவ நீதிமன்றங்கள் சுதந்திரமாகச் செயல்படாததால் பல விசாரணைகள் முடிக்கப்படாமல் உள்ளன என்று தெரிவித்துள்ள கருத்தும் இலங்கையின் நிலையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

நீர்த்துப்போன தீர்மானம்

இன்று பிற்பகல் அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள முழுவதுமாக நீர்த்துப் போய் விட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது என்றும்; இந்தியாவின் சார்பில் எந்தவித திருத்தங்களும் வாய்மொழியாகக்கூட முன்மொழியப் படவில்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் இன்று இந்தியாவின் சார்பில் அதன் பிரதிநிதி திரு.திலிப் சின்கா ஜெனிவாவில் பேசும்போது, மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும், அரசியல் ரீதியாக பிரச்சினை களைத் தீர்ப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசே மேற்கொள்வதை நாங்கள் ஊக் குவிக்கிறோம் என்று சொல்லி ஈழத் தமிழர் பிரச் சினையை இலங்கை அரசிடமே ஒப்படைத்திருக்கிறார்.

நமது கோரிக்கைகளை மத்திய அரசும் பரிசீலனை செய்யவில்லை; அய்.நா. மனித உரிமைகள் ஆணை யத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானமும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருக்கிறது. எனவே நாம் எடுத்துள்ள முடிவு தவிர்க்கமுடியாதது என்பது நான் அளித்துள்ள இந்த விளக்கங்களின் மூலம் தெளிவாகிறது.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


ராசி பலனும், தாயத்தும் ஒரு வடிகட்டப்பட்ட மூட நம்பிக்கை


ராசி பலனும், தாயத்தும் ஒரு வடிகட்டப்பட்ட மூட நம்பிக்கை கிரக பலன்களையும் ராசி பலன் களையும் நம்புவது நட்சத்திரங்கள் மூலமாக ராசி பலன் பார்ப்பதும், கோள்கள், நட்சத்திரங்களால் உலகில் மாற்றங்கள் எற்படுகின்றன என நம்புவதும் வடிகட்டப் பட்ட மூட நம்பிக்கையாகும். நாளிதழ், வார இதழ், மாத இதழ்களில் வெளியிடப் படும் நட்சத்திர ராசி பலன்களை நம்புவது அறிவுள்ளவர்கள் செய்யும் காரியம் அல்ல. அதை படிப்பதும், அதன்படி நடப்பதும் நம் தலையில் நாமே மண்ணைப் போடுவது போன்றது. ஒவ்வொரு பத்திரிகையி லும் ஒரே ராசி உள்ளவர்களுக்கு வெவ்வேறு விதமான பலன்களைச் சொல்லி எழுதி, இந்தப் போலிகள் கணிசமான காசு பார்க்கிறார்கள். இந்த சாதாரண விவரங்கள் கூட தெரியாத முட்டாள்கள், இன்றும் இவற்றை நம்பிக் கொண்டு இருக் கின்றார்கள். ராசி பலன் எழுதி வந்த குஷ்வந்தசிங், தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்றும் அது ஒரு வடி கட்டப்பட்ட பொய் என்றும் அடித்துக் கூறி உள்ளார். பொருந் தாத எதிர்பார்ப்புகள்
சிலர் தாயத்துகள், கயிறுகள், வளையங்கள் பேன்றவற்றை அணிந்து கெள்கிறார்கள் அல்லது தங்களது பிள்ளைகளுக்கு அணிவிக்கிறார்கள். சிலர் தங்களது கை, கழுத்து, இடுப் பில் அவைகளை கட்டிக் கொள் கிறார்கள். சிலர் சில கற்களை ராசிக் கல் என்று கூறி அதை மோதிரங் களில் பதித்து அணிகிறார்கள். இவ்வகையான அனைத்துச் செயல்களும் அறிவுக்குப் பொருந்தா என்பதை நாம் உணர வேண்டும்.

ஒரு ரூபாய் கூடப் பெறாத தாமிரத் தகடுகளில் ஏதேதோ கிறுக்கி எழுதி, ஆயிரக்கணக்கில் இப்பொ ழுது பலரும் சம்பாதித்து வரு கிறார்கள். இதற்கு என்று டிவியிலும் பத்திரிகைகளிலும் ஆயிரக்கணக்கில் செலவழித்து, இந்த ஏமாற்றுத் தொழிலில் லட்சக் கணக்கில் பணம் பார்க்கிறார்கள்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்குக் கொண் டாட்டம்தான்.
பிள்ளையாரின் விலை?

இந்துக்களால் மதித்து வணங்கப் படும் பிள்ளையாரை ஒரு சாமி சிலைகள் செய்து விற்கும் நிறுவனத் தில் விலைப் பட்டியல்

இதோ!

1. வைரப் பிள்ளையார் ரூ.1.25 லட்சம்

2. தங்கப் பிள்ளையார் ரூ. 80,000
3. வெள்ளிப் பிள்ளையார் ரூ. 20,000
4. செம்புப் பிள்ளையார் ரூ. 1,200
5. மற்ற உலோகங்களில் ரூ. 300
6. பிள்ளையார் படங்கள் ரூ 125
7. லித்தோ படங்கள் ரூ. 45
8. நல்ல பேப்பரில் ஜெராக்ஸ் செய்யப்பட்டது ரூ.3 * கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
ஆக மொத்தத்தில் பிள்ளையா ருக்கு அல்ல, அவர் செய்யப் பட்ட உலோகத்திற்குத்தான் மதிப்பு உள்ளது என்பதே உண்மை.
எப்படியோ நகை வியாபாரிகளுக் குக் கொண்டாட்டமே!

தமிழ் ஓவியா said...


மிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி?


இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதி தருவது Google Tamil Transliteration. இதனை எப்படி பயன்படுத்துவது என்று இந்தப் பதிவின் மூலம் அறியலாம்.

1.முதலில் இங்கே சென்று தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதில் தமிழ் மொழியை தெரிவு செய்த பின் 32Bit/64Bit என்பதை தெரிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். எது என்று தெரியாதவர்கள் 32Bit தெரிவு செய்யவும்.

2.Windows 7/Vista/XP பயன்படுத்தும் அன்பர்கள் இதை பயன்படுத்த இயலும்.

3.இதை இப்போது இன்ஸ்டால் செய்யவும்.

4.இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் Desktop -Task Bar இல் Right Click செய்து Toolbars -> Language bar என்பதை தெரிவு செய்யவும்.



இதில் இந்த வசதி வராத நண்பர்கள் கீழே உள்ளதை பின் பற்றவும்.

5. Windows 7/Vista பயனாளிகள்

Control Panel ->Date, Time, Language, and Regional Options--> Regional and Language Options -> Keyboard and Languages என்பதற்கு செல்லவும்.

Change keyboards... என்பதை கிளிக் செய்து Text services and input languages என்பதை ஓபன் செய்யவும்.

Language Bar க்கு வரவும்.

Language Bar -ல் உள்ள Docked in the taskbar என்ற ரேடியோ பட்டனை Enable செய்ய வேண்டும்.

இப்போது Apply கொடுக்கவும். இப்போது நீங்கள் மேலே கூறி உள்ள Step-4 ஐ செய்யவும்.

6.Windows XP பயனாளிகள்

Control Panel -> Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு செல்லவும்.

முதலில் System configuration, என்பதில் Turn off advanced text services என்பது கிளிக் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.


Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு மீண்டும் செல்லவும்.

இப்போது Settings>Language Bar ஐ கிளிக் செய்து அதில் Details >Language bar என்பதை தெரிவு செய்து வருவதில் Show the Language bar on the desktop என்பதை கிளிக் செய்து விடவும்.

இப்போது எல்லாவற்றையும் Apply கொடுத்து விடவும்.


7. இப்போது உங்கள் Tool Bar இல் கீழே உள்ளது போல ஒன்று வந்து சேர்ந்து விடும். இதில் தட்டச்சு செய்யும் போது கிளிக் செய்தால் Tamil என்று வரும்.


8.இது உங்களுக்கு Desktop இல் இவ்வாறு தோற்றம் அளிக்கும்.



9. இப்போது நீங்கள் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். உதாரணம்:

Amma - அம்மா,
karpom - கற்போம்


இதில் மாற்று வார்த்தைகள் அடுத்தடுத்து வருவதை கவனிக்கவும். இதை Key Board-இல் உள்ள Arrow பட்டன்களை பயன்படுத்தி தெரிவு செய்ய முடியும்.

10.இதில் சரியாக தட்டச்சு செய்தும் உங்களுக்கு சில எழுத்துகள் வரவில்லை என்றால் Ctrl+K என்பதை கொடுத்து குறிப்பிட்ட எழுத்தை இடைச் செருகலாக சேர்க்கலாம். ‌

11. இதில் இருந்து உடனடியாக ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய CTRL+G கொடுக்கவும்.
- பிரபு கிருஷ்ணா (கற்போம்

தமிழ் ஓவியா said...


எடை மேடை தமிழரின் மொத்தமும் தந்தை பெரியார்தான்



தி.மு.க தலைமைக் கழகப் பேச் சாளர் - எண்ணிய எண்ணத்தைத் துணிவாய்ச் சொல்லும் வல்லமையர் _- பெரியார் தொண்டர் மதுரைக் கவிஞர் இரா. ஜீவா.

பொறுக்குமணிகளாய்த் தேர்ந் தெடுத்த சொற்களில் நறுக்குக் கவிதைகளை கலகக்காரர் பெரியார் என்ற பெயரில் புத்தகமாய் வடித் துள்ளார்.

ஒவ்வொரு கவிதையும் கருத்துக் கருவை சூல்தாங்கிக் கொண்டு கம்பீரமாக நிற்கிறது என்று மானமிகு தமிழர் தலைவர் அவர்களின் பாராட்டுப் பட்டயம் பெற்ற புத்தகம்.

கவிஞர் ஜீவாவின் உள்ளத்து உணர்ச்சிகளின் ஒருசில துளிகள் இதோ உங்களுக்காக.

மூடத்தனம்
அழிந்தால்தான்
மூலதனம் வெல்லும் என
முடிவாய்ச் சொன்னவன்
தீப்பந்தம் இன்றி
தீண்டாமை
கொளுத்தியவன்
தமிழைச்
சீர்திருத்தியவர்
தமிழனைச்
சீர்படுத்தியவர்

உன்மீது
செருப்பை வீசினார்கள்
நாங்கள்
அக்ரஹாரத்திலும்
செருப்பணிந்து
நடந்தோம்.

தந்தையே உன்மீது
நரகலை வீசினார்கள்
நாங்கள் நாடாளவே
வந்துவிட்டோம்.
உன்மீது
அடிவிழ விழ
உயர்ந்தது தமிழ்இனம்
உருக்குலைந்தது
ஆரிய இனம்.
இவை போன்ற எண்ணற்ற கவிதைகளின் வழியாக தமிழரின் மொத்தமும் தந்தை பெரியார்தான் என்பதை உணர்த்தும் வகையில் புத்தகம் அமைந்துள்ளது. கவிஞர் ஜீவாவை அழைத்து வாழ்த்த அழுத்த வேண்டிய எண்கள் 09443925216 கலகக்காரர் பெரியார் புத்தகம் கிடைக்குமிடம்: அஞ்சுகம் பதிப்பகம், 65, மேலப்பச்சேரி திருப்பரங்குன்றம், மதுரை -625 005.
விமர்சகர்
பா. சடகோபன்,
பகுத்தறிவாளர் கழகம்
மதுரை - 94433 62300

தமிழ் ஓவியா said...


யக்ஞவல்கியா கூறுகிறார்!


ஒரு பிராமணன் சண்டாளனுடைய கிணற்றிலிருந்து தண்ணீரைக் குடித்தால், அல்லது சண்டாளன் பாத்திரத்தில் தண்ணீர்க் குடித்தால் சாந்த பானா செய்ய வேண்டும். இவ்வாறு யக்ஞவல்கியா இயற்றிய அங்கிரா என்ற நூல் கூறுகிறது.

சாந்தபானா செய்வதென்றால், செய்த பாவம் அல்லது தீட்டுத் தீர ஒரு இரவும், ஒரு பகலும் பட்டினி கிடக்க வேண்டும். அதன்பின் முதலில் பஞ்சகவ்யம் அருந்த வேண்டும்.

தமிழ் ஓவியா said...


பகத்சிங்


இந்நாள் மனித குல வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள் பகத்சிங், ராசகுரு, சுகதேவ் ஆகிய உண்மை யான மாவீரர்கள் தூக்க லிடப்பட்ட நாள் (1931)

1924 - பகத்சிங் பி.ஏ. படித்துக் கொண்டிருந்த கால கட்டம். வழக்கம் போல் பெற்றோர் திருமண ஏற்பாட் டைத் தொடங்கினார்கள்.
பகத்சிங் என்ன சொன் னான் தெரியுமா? இது திருமணம் செய்து கொண்டு மகிழும் கால கட்டம் அல்ல; என் உடல் உள்ளம், பொருள், ஆவி அத்தனையையும் நாட்டுக்கே உரித்தானவை என்ற எண்ணத்தில் நானி ருக்கிறேன் என்று சொன்னான்.

சினிமாவே உலகம் என்றும் சீட்டி அடித்துக் கொண்டு திரியும் இளைஞர் கள் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வார்களாக!

நவஜவான் சபை ஒன்றையும் தொடங்கினான். அந்த அமைப்பில் உள்ளவர் கள் பூணூல், நாமம், விபூதிப்பட்டை, குடுமி, தாடி, தலைப்பாகை முதலிய மதத் தொடர்புடைய அனைத்துச் சின்னங்களையும் தூக்கி எறிந்தனர்.

வெறிபிடித்த இந்துத்து வாவாதிகள் முட்டாள்தன மாகப் புரட்சியாளர்கள் என்று கருதப்பட்ட காலம் அது.

மணியாச்சியில் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் எனும் பார்ப்பனர் சனாதன வெறிக் கண்ணோட்டத்தோடுதான் அதனைச் செய்தான்.

1908இல் வங்காளத்தில் ஆங்கிலேய அதிகாரியைச் சுட்டுக் கொன்ற குதிர்ராம் போஸ் தூக்கிலிடப்பட்ட போது, பகவத் கீதையைத் தன் கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு இருந்தான்.

ஆனால் பகவத்சிங் எப்படி? சிறைக் கொட்டடியில் தூக்குக் கயிறை முத்தமிட இருந்த அந்த நேரத்தில், சீக்கியரான சிறை அதிகாரி ஒருவர் சீக்கியர்களின் புனித நூலைக் கொடுத்து, கடைசி நேரத்திலாவது பிரார்த்தனை செய் என்று கேட்டுக் கொண்டபோது, பகவத் சிங் மறுத்து விட்டான்! (இளை ஞர்களே எண்ணிப் பாருங்கள்!)

ஜாலியன் வாலாபாக் படுகொலை - அவனைப் புரட்சிவாதியாக்கிற்று.

தாங்கள் பயங்கரவாதி கள் அல்லர் - புரட்சியா ளர்கள் என்ற முறையில் இந்திய நாடாளுமன்றத்தில் யாருக்கும் உயிர் சேதத்தை ஏற்படுத்தாமல் வெடி குண்டுகளை வீசி, காவல் துறையிடம் தங்களை ஒப் படைத்துக் கொண்டு நீதிமன்றத்தில் புரட்சிக் கருத்துக்களை எடுத்துக் கூறும் வாய்ப்பாகத்தான் இதனை செய்தனர் என்பது சாதாரணமா?

இந்திய மக்களுக்கு, ஏன் உலக மக்களுக்கே உண்மை யான சமத்துவமும், சாந்தமும் அளிக்கத்தக்கப் பாதையை பகத்சிங் காட்டியுள்ளார் என்று குறிப்பிட்ட தந்தை பெரியார் - எவரும் அடைய முடியாத பேரை பகத்சிங் அடைந்தார் என்று குறிப் பிட்டு விட்டு பகத்சிங்கை மனமார, வாயார, கையாரப் பாராட்டுகிறோம் என்று எழுதினார்.

மாகாணத்துக்கு இது போன்ற 4 பேர்களைத் தூக்கிலிட வேண்டுமென்று நமது அரசாங்கத்தை மனமார வேண்டுகிறேன் என்ற (குடிஅரசு 29.3.1931) தந்தை பெரியாரின் சிந்தனை சாதாரணமானதுதானா? இளை ஞர்களே எண்ணிப் பாரீர்!

- மயிலாடன் 23-3-2013

தமிழ் ஓவியா said...


இன்னும் எத்தனைக் கொடுமைகளோ - இன்னல்களோ?


கடைசி நேரத்தில் இந்தியா எப்படியும் எங்களை ஆதரிக்கும் - எதிராக வாக்களிக்காது என்று இலங்கை எதிர்பார்க்கும் அளவுக்குத்தான் இந்தியாவின் போக்குகள் இருந்தன.

இலங்கை எதிர் பார்த்ததற்கு மாறாக இந்தியா ஜெனிவா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் நடந்து கொண்டாலும் அடிப்படையில் இலங்கைக்கு விரோதமாக நடந்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

இந்தப் பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர்கள் மூவர், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்து இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள். தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்ற முறையில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் தெரிவித்த கருத்துகள் சற்று நம்பிக்கை அளிப்பது போல் இருந்தன.

இந்தப் பிரச்சினை பெரும் நெருக்கடியில் சிக்கியதற்கானக் காரணங்களுள் ஒன்று போதிய அவகாசம் இருந்தும், குறித்த நேரத்தில் பிரச்சினை மீது கவனம் செலுத்தி செயல்படாததேயாகும். கடைசி நேரத்தில் தான் மத்திய அரசுக்கு ஞானோதயம் ஏற்பட்டது போலும்.

போக்குகளை மிகவும் துல்லியமாகக் கணித்த கலைஞர் அவர்கள் அவருக்கே உரித்தான அனுபவம், முதிர்ச்சி காரணமாக, மத்திய அரசிலிருந்தும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் விலகுவதாக அறிவித்து, இந்திய துணைக் கண்டத்தை மட்டுமல்ல உலக நாடுகளிடையிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தினார்.

கலைஞர் அவசரப்பட்டு விட்டார்; மேலும் காத்திருந்திருக்க வேண்டும், இந்தியா அமெரிக்கா வின் தீர்மானத்தில் திருத்தத்தைக் கொண்டு வரும் என்றெல்லாம் கூடப் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

நடந்ததைப் பார்க்கும் போது கலைஞர் அவர்கள் எடுத்த முடிவு மிகவும் சரியானதே - மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சொன்னபடி எதுவும் நடக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ததில் இந்தியாவின் கை இருந் திருக்கிறது என்று பேசப்படும் நிலை ஆகிவிட்டது.

இந்தியாவின் சார்பில் மனித உரிமை ஆணையத் தில் பேசிய திலிப் சின்கா சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறவில்லை; வெறும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சொல் லுவது - திருடன் கையில் சாவியை ஒப்படைத்த கதைதான்.

மறு சீரமைப்பு நடவடிக்கைகளையும், அரசியல் ரீதியான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை

இலங்கை அரசே மேற்கொள்வதை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்று செல்லமாகத் தாலாட்டுப் பாடியிருக்கிறார்.

கேரளாவைச் சேர்ந்த இரு மீனவர்களை, இத்தாலிய கடற்படைக்காரர்கள் கடற் கொள்ளைக் காரர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சுட்டுக் கொன்றதற்கு உலகத்தையே குலுக்கியதும் இதே இந்தியாதான்!

அதே நேரத்தில் ஈழத் தமிழர்களாக இருந்தாலும் சரி, தமிழினத்தைச் சேர்ந்த - தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களாக இருந்தாலும் சரி, படுகொலை செய்யப்படும் பொழுது ஏனிந்த பதற்றம் இல்லை? என்ற கேள்வி நியாயமானதல்லவா? இதனைக் குறுகிய பார்வை என்ற குண்டாந்தடியால் அடிக்க நினைக்கக்கூடாது; தமிழர்கள் ஒன்றும் ஏமாந்தவர்களோ, புரியாதவர்களோ இல்லை.

ஆக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் இந்திய மத்திய அரசு கணக்கிடவே முடியாத அளவுக்குக் கடும் கோபத் தீக்கு இரையாகி விட்டது. அது சார்ந்த அரசியல் கட்சியான காங்கிரசும் பெரும் சேதாரத்துக்கு ஆளாகி விட்டது.

உலக நாடுகளும் இந்தியாவைக் கேலியாகப் பார்க்கும் பரிதாப நிலைக்கும் தள்ளப்பட்டு விட்டது.

இதற்கிடையில் ஒன்றைத் தவறாமல் குறிப்பிட்டாக வேண்டும்; இந்தப் பிரச்சினையில் காங்கிரஸ் மட்டுமல்ல; அகில இந்தியக் கட்சிகளின் முகத்திரையும் கிழிந்து விட்டது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டு இருப்பது கோடி பொன் பெறும் கணிப்பாகும்.

உலகில் தமிழர்களுக்கென்று ஒரு நாடு இல்லா விட்டால் இன்னும் என்னென்ன இன்னல்களோ - கொடுமைகளோ தெரியவில்லை.23-3-2013

தமிழ் ஓவியா said...


ஆதாரமே இல்லை



சரித்திரத்தைப் புராணத்தை எடுத்துக்கொண்டால் பார்ப்பனர்கள் மற்றெவரையும் வாழ வைத்ததாக ஆதாரமே இல்லை.
(விடுதலை, 26.8.1967)

தமிழ் ஓவியா said...


ஆணவம் அடங்கவில்லை அய்.நா. மனித உரிமை ஆணையத் தாக்குதல் மூலம் எங்களை அடக்கி விட முடியாது அமெரிக்கத் தீர்மானம் வெற்றிபற்றி ராஜபக்சே ஆணவப் பேச்சு


கொழும்பு, மார்ச்.24- அய்.நா. மனித உரிமை ஆணை யத்தில் அமெரிக்க தீர்மானம் வெற்றி கண்டது குறித்து இலங்கை அதிபர் ராஜ பக்சே கருத்து தெரிவிக் கையில், தொடுக்கப் பட்ட தாக்குதல்கள் எங்களை அடக்கி விட முடியாது என ஆணவத் துடன் கூறியுள்ளார். அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத் தின் மீது கடந்த 21-ஆம் தேதி ஓட்டெடுப்பு நடந் தது. இதில் 25 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது. இது குறித்து கருத்து தெரிவிக்காமல் கடந்த 2 நாட்களாக இலங்கை அதிபர் ராஜபக்சே மவுனம் காத்து வந்தார்.

இந்த நிலையில், இலங்கையின் வடமேற்கு மாகாணம், குருணேகலா ராணுவ தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொண்டு பேசுகையில், அமெரிக்க தீர்மானம் குறித்து கருத்து வெளியிட் டார். அப்போது அவர் ஆணவத் துடன் கூறியதாவது:-

இந்த தாக்குதல் (அமெரிக்க தீர்மான ஓட்டெடுப்பில் இலங்கைக்கு ஏற்பட்ட தோல்வி) எங்களுக்கு வியப்பை அளிக்கவில்லை. இந்த தாக்குதல் எங்களை அடக்கி விட முடியாது. இவை எங்களை தோற்கடித்து விடவும் இயலாது. எந்த விதத்திலும் எங்களுக்கு அச்சுறுத்தலாகவும் அமையாது. விடுதலைப்புலிகளை எனது தலைமையிலான ராணுவம் வீழ்த்தி விட்ட நிலையில், இந்த தாக் குதல்களை விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப் பிடம் இருந்தும், இலங்கை எதிர்ப்பு சக்தி களிடமிருந்தும் எதிர் பார்த்தேன். எனது அரசு மீதான அனைத்து குற்றச் சாட்டுகளும் தவறானவை. உண் மைக்கு அப்பாற்பட்ட நோக்கம் கொண்டவை.

இந்த நாட்டின் ஒரு பகுதி 2009-க்கு முன்பு (தமிழ்) ஈழம் என அடையாளம் காணப்பட்டது. இது போர் நிறுத்த உடன்படிக்கையிலும் ஏற்கப்பட்டு, சிறிது அங்கீகரிக்கப்பட்டது. சர்வதேச சமூகம் வழிவகுத்த போர் நிறுத்த உடன்படிக்கையை நாங்கள் ஒழிக்க முடியாமல் போயிருந்தால், இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்?
இவ்வாறு ராஜபக்சே பேசியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மக்களை ஏமாற்றும் ஜோசியர் மற்றும் சாமியார் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை!


திரிபுரா அரசு முடிவு!!


அகர்தலா, மார்ச் 24- ஜோசியர்களும், சாமி யார்களும் மக்களை ஏமாற்றுகின்றனர். எனவே அவர்களின் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கலாம் என திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது.

திரிபுரா மாநிலத் தில் சில ஜோசியர்கள் தொலைக்காட்சியில் விளம்பர நிகழ்ச்சி களை நடத்து கின்றனர். இதே போல சாமியார்கள் என்றும் மந்திரவாதிகள் என் றும் தங்களை அழைத் துக் கொள்ளும் சில ரும் தொலைக்காட்சி யில் நிகழ்ச்சி நடத்து கின்றனர்.

இந்த நிகழ்ச்சி களின் மூலம் இவர்கள் மக்களை ஏமாற்றுகின் றனர் என்று திரிபுரா அரசு கூறியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு அகர்தலாவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. குடும் பத்தின் நலனுக்காக சில சித்து வேலை களை செய்ய வேண் டும் என்று கூறி பாபா கமால் ஜேடி என்ற மந் திரவாதியை அழைத்து வந்தனர். ஆனால் இந்த நபர் அந்த வீட்டிலிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத் துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

சாமியார்களும், மந் திரவாதிகளும் ஜோசியர் களும் கேபிள் டி.வி. நடத்துபவர்களிடம் நிகழ்ச்சி நடத்த உரிமை பெறுகின்றனர்.

இவர்கள் நகரில் உள்ள ஓட்டல்களில் அறை எடுத்து தங்கிக் கொள்கின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர்கள் தங்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக விளம் பரம் செய்கிறார்கள். சில மந்திர, தந்திர நிகழ்ச்சி களை தொலைக்காட்சி யில் செய்து காட்டுகின் றனர். தொலைபேசி யில் கேள்வி கேட்டு இறுதி யில் தங்களை நேரில் சந்திக்கும்படி சாமியார்களும், ஜோசி யர்களும் மந்திரவாதி களும் அழைப்பு விடுக் கின்றனர்.

இவர்களால் பொது மக்கள் ஏமாற்றப்படு கின்றனர் என்ற குற்றச் சாட்டு எழுந்தது. எனவே இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க திரிபுரா அரசு முடிவு செய் துள்ளது.
சட்டமன்ற தேர் தல் போன்ற சில முக் கிய பிரச்சினை களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என் றும் தற்போது சட்ட மன்ற தேர்தல் முடிந்து விட்டதால் இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்கு திரிபுரா மாவட்ட மாஜிஸ்தி ரேட் கிரண்கிட்டி கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


கடவுள்கள் காப்பாற்றவில்லையே! பெண்களிடம் செயின் வழிப்பறி திருட்டு


ஆவடி, மார்ச் 24- ஆவடி காந்தி நகர் வேதவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவரது மனைவி ராதா (53). நேற்று இரவு ராதா தனது மாமியார் அம்முகுட்டியுடன் அங்குள்ள அம்மன் கோயிலுக்குச் சென்றார். பிறகு அங்கிருந்து இரவு திரும்பினர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அவர்களை மறித்து நிறுத்தினர். ராதா அணிந்திருந்த அய்ந்து பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.

திருநின்றவூர் லட்சுமிபுரம் 4ஆவது மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி ராகிணி (40). இவர் ரயில்வேயில் பணியாற்றுகிறார். ராகிணி, மகன் கார்த்திக்குடன் முருகேசன் நகரில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு இரவு திரும் பினார். 12ஆவது குறுக்கு தெருவில் உள்ள ரேஷன் கடை பகுதியில் அவர்களை இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மறித்தனர். ராகிணியிடம் இருந்து 3 பவுன் சங்கிலியைப் பறித்து தப்பிவிட்டனர். இரண்டு வழிப்பறியிலும் ஈடுபட்டவர்கள் ஒரே நபர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று தெரிகிறது. இது குறித்து ஆவடி, திருநின்றவூர் காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அம்மன் கோவிலில் நகை கொள்ளை

திருப்போரூரை அடுத்த தண்டலம் கிராமத்தில் பழண்டியம்மன் கோயில் உள்ளது. நள்ளிரவு 2 மணியளவில் கொள்ளையர்கள் கோயில் கதவை உடைத்து உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை திருடினர். பின்னர் உண்டியலை கடப் பாரையால் உடைக்க முயற்சித்தனர். சத்தம்கேட்டு அருகில் வீட்டில் வசிக்கும் ஒருவர் குரல் கொடுக்கவே கொள்ளையர்கள் தப்பிசென்று விட்டனர்.

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


சி.பி.அய்.

செய்தி: மாணவர்களாகிய நீங்கள் நடத்திய போராட்டம்தான் தி.மு.க.வை மத்திய அரசிலிருந்து வெளியேறச் செய்தது. 2009இல் வெளியேறியிருந்தால் இலங்கைத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்; அவர்களைப் பாதுகாத்திருக்க முடியும். அவ்வளவு சீர்குலைவு ஏற்பட்டிருக்காது. - இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு

சிந்தனை: 2009 மக்களவைத் தேர்தலில் ஈழப் பிரச்சினையை முன்வைக்க மாட்டோம் என்று சொன்னது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இப்பொழுதோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.அய்.டி.யூ.சி.யின் பொதுச் செயலாளர் தோழர் குருதாஸ் தாஸ் குப்தா அவர்கள், மக்களவைத் தலைவர் மீராகுமார் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திருவாய் மலர்ந்தருளிய கருத்து என்ன தெரியுமா?

இலங்கைப் பிரச்சினை - மத்திய அரசுக்கும் தி.மு.க.வுக்குமிடையே உள்ள பிரச்சினை - இது குறித்தெல்லாம் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்று கறாராகச் சொல்லி விட்டாரே!

நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை விவாதத் துக்கு எடுத்துக் கொண்ட போதே இவ்வாறு சொல்லி நாடாளுமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்காமல் காப்பாற்றியிருக்கலாமே?

ஆக, கம்யூனிஸ்டு பார்வையில் இலங்கைப் பிரச்சினை ஒட்டு மொத்தமான நாட்டுப் பிரச்சினை இல்லை, அப்படித்தானே? இனி மேலாவது தோழர் தா.பா. நீட்டி முழக்க மாட்டார் என்று நம்புவோமாக! ஈழத் தமிழர் பிரச்சினையை ஏகடியம் செய்யும் கட்சியினர் தி.மு.க.வையே சதா குற்றம் சுமத்துவது தான் வேடிக்கை - விநோதம்!

தமிழ் ஓவியா said...

நெஞ்சுக்கு நஞ்சு

கேள்வி: திருநீறு, சந்தனம், குங்குமம் திவ்யமா மணக்குது உங்க நெத்தி யில. நீங்க எப்படி அல்லா.. அல்லானு பாட்டுப் பாடினீங்க?

எம்.எஸ்.வி: அல்லா, இயேசு, கிருஷ்ணர் எல்லாருமே எப்போதும் நல்லவங் களுக்குப் பக்கத்துலேயே இருப் பாங்க. முகமது பின் துக்ளக் படத்துல அல்லா.. அல்லா பாட்டை நான் நாகூர் ஹனீபாவைப் பாட வைக்கணுங்கிற முடிவோடதான் இருந்தேன். அவர் குரல்தான் அந்தப் பாட்டுக்குப் பொருத்தமான குரல்னு நிச்சயமா நம்பினேன்.

ஆனா, சோ அந்தப் பாட்டை நான் தான் பாடனும்னு ஒரே பிடிவாதமா இருந்தாரு. நான் முடியவே முடியா துன்னு சொல்லிட்டேன். சரி... யாரையெல்லாம் நீ பாட வைக் கணும்னு விரும்புறியோ அவங்க பேரோட, உன் பேரையும் சீட்டு எழுதிப் போட்டுக் குலுக்கி எடுப் போம்னார் சோ. அது மாதிரியே குலுக்கிப் போட்டு எடுத்தா, என் பேர் எழுதுன சீட்டுதான் வந்துச்சு. சரி.. ஆண்டவன் சித்தம் அதுதான் போலனு நானும் பாடினேன். அந்தப் பாட்டு வெளியாகி பட்டிதொட்டிலாம் பிரபலமான பிறகு, சோ ஒரு உண் மையைச் சொன்னார் அது. சீட்டு எழுதுனப்போ எல்லா சீட்டு லயுமே என் பேரைத்தான் எழுதி வெச்சிருக் கார் அந்த மனுஷன்!

இசை இயக்குநர் எம்.எஸ். விசுவநாதன் ஆனந்தவிகடன் இதழுக்கு (27.2.2013) அளித்த பேட்டி தான் மேலே கண்டது.

மேம்போக்காக பார்த்தால் இதில் மறைந்திருக்கும் நாகப் பாம்பு என்ன என்று தெரியாது.

அந்தப் பாடல் நாகூர் அனிபா வால் பாடப்பட்டால் சிறப்பாக இருக் கும் என்று இசை இயக்குநர் எம்.எஸ்.வி. நினைக்கிறார். விட்டு விட வேண்டியதுதானே? எம்.எஸ்.வி.யைவிட இசை மேதையா திருவாளர் சோ ராமசாமி?

நாகூர் அனிபா முசுலிம் ஆயிற்றே - அவரைக் கொண்டு பாடச் செய்தால் எப்படி என்கிற இந்துத் துவா விஷப்பூனை தான் சோ மன தின் ஆழத்தில்.

யார் பாடுவது என்ற முடிவைச் செய்ய சீட்டுக் குலுக்கிப் போடும் தந்திரம் கையாளப்பட்டு, எல்லா சீட்டிலும் எம்.எஸ்.வி. பெயரையே எழுதி வைத்திருந்தார் சோ என்றால் இவர்களின் அறிவு நாணயத்தையும், மோசடியையும் நம் தமிழர்கள் என் றைக்கு உணரப் போகிறார்களோ!

தமிழ் ஓவியா said...

புதிய போப்

வாடிகன் நகரத்தில் அமளி முடிந்து விட்டது - மூப்பின் காரண மாக பெனெடிக்ட் தாமாக முன் வந்து பதவி விலகி வழி விட்டார். அடுத்த போப் யார் என்பது உலக அரங்கில் கேள்வியாக எழுந்தது. ஜனநாயக அடிப்படையில் போப் தேர்வு என்பது கூட ஒரு சிறப்புதான் (அது என்ன சங்கராச்சாரி மடமா?)

புதிய போப் ஜார்ஜ் மேரியோ பெர் கோக்லியோ (இப்பொழுது பிரான் சிஸ் என்று பெயர் மாற்றம்!) எளிமையானவர், பேருந்தில் பயணம் செய்யக் கூடியவர் என்பதெல்லாம் வித்தியாசமானதுதான்.

பக்தர்களுக்கு இவர் வாழ்த்துச் சொல்லுவதற்குப் பதிலாக பக்தர்கள் இவருக்கு வாழ்த்துச் சொல்லியிருக் கிறார்கள்.

மற்றவர்களைவிட போப் உயர் வானவர் என்பதற்காக ஸ்டூல்மீது போப் நிறுத்தப்படுவது வழக்கமாம் - அதையும்கூட இவர் தவிர்த்து இருக்கிறார்.

இந்தப் பக்கம் கொஞ்சம் கவனத் தைத் திருப்புக! எங்கே உட்கார்ந் திருந்தாலும் சங்கராச்சாரியார் உயரமான மேடையில்தான் பீடத்தில் உட்கார்ந்திருப்பார் - காரணம் ஜகத் குருவாம்.

சென்னையில் 1983இல் இந்திய சமய கலை விழாவை காஞ்சி சங்கராச்சாரியார் நடத்திய போது முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரும் அவ்விழாவில் பங்கு கொண்டார். அப்பொழுதுகூட சங்கராச்சாரி யாருக்கு உயரமான மேடை!

முதல் அமைச்சருக்கு சால்வை யைக்கூட அவர் கையால் போர்த் திடவில்லை தம் சிஷ்யர் ஒருவரிடம் கொடுத்துதான் போர்த்தச் செய்தார்.

போப்பையும் - சங்கராச்சாரி யாரையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!

தமிழ் ஓவியா said...

இசை இயக்குநர் இளையராஜா

எனக்கு மிகவும் நம்பிக்கையான நண்பர் என்று நான் நம்பியிருந்த ஒருவரிடம் என்னுடைய வியாபாரம் சம்பந்தமான விஷயங்கள் அனைத் தையும் ஒப்படைத்திருந்தேன். ஆனால், அவரோ என்னை மோசம் செய்துவிட்டு ஒரு கணிசமான தொகையுடன் ஓடித் தலைமறைவாகி விட்டார். நல்லவனாய் நடித்து இதுபோல் மோசம் செய்யலாமா? தெய்வம் இதைக் கேட்காதா?

- ராமசாமி, கோபிசெட்டிபாளையம்

இளையராஜா பதில்: இதை நாம் எடுத்துக் கொள்ளும் விதம்தான் நம்மை பாதிக்காமல் இருக்க வைக்கும். பகவான் சிறீ ரமண மகரிஷியிடம் - அவருடன் அருகில் இருந்து நாட்களைக் கழிக்க முடிவு செய்த ஒரு அயல் நாட்டுப் பெண் மணி, பகவானிடம் புகார் செய்தாள், பாவம் ஏழைப் பையனாய் இருக் கிறானே என்று என்னுடனேயே தங்க வைத்து எனக்கு ஏவல் வேலை செய்ய வைத்திருந்த பையன் என் நகையைத் திருடிக் கொண்டு ஓடி விட்டான் என்று.

பகவான் சொன்னார். பார்த் தாயா? நீ எப்போதோ போட்டுக் கொள்வதற்காக வாங்கி வைத்த நகையே - உன்னுடன் எப்போதும் துணைக்கு இருந்த பையனை நீ பிரியக் காரணமாகி விட்டது? என்று; ஆக எல்லாமே நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான இருக் கிறது! என்கிறார் இளையராஜா. (குமுதம் 27.3.2013)

அர்த்தம் கொழுத்த இந்து மதத்தில் தத்துவார்த்தங்களை இப்படி எல்லாம் இசை இயக்குநர் இளையராசா தொடர்ந்து குமுதத் திலே உதிர்த்துத் தள்ளுகிறார்.

இருந்தும் இருந்தும் ரமண ரிஷியைத் துணைக் கழைத்தாரே - அதுதான் படு தமாஷ்!
தம்முடன் தங்கி இருந்த சீடர் தன் நகைகளை திருடிக் கொண்டு ஓடியதற்கு ரமண ரிஷியையா எடுத் துக் காட்டுக்காகக் கூற வேண்டும்? - அவர் என்ன ஆசா பாசமற்றவரா? - பொருள்கள்மீதான பற்றினைத் துறந்தவரா?

ரிஷி வேடம் போட்டு ஏராளமான சொத்துக்களைக் குவித்த அந்த ஆசாமி, அத்தனை திரண்ட சொத் துகளையும், தன் சகோதரர் மகனுக் குத்தானே எழுதி வைத்தார்.

வழக்குத் தொடுக்கப்பட்டதே - துறவிக்கு அண்ணன் தம்பி பாச மெல்லாம் இருக்கலாமா? என்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது நான் எப்பொழுது துறவி யானேன்? அதெல்லாம் ஒரு மண் ணாங்கட்டியும் கிடையாது! என்று நீதிமன்றத்தில் சொல்லவில்லையா ரமண ரிஷி?

(நோய்களிலிருந்து பக்தர்களைக் காப்பாற்ற அருள்பாலித்த அந்த ரமணரிஷி எந்த நோய் கண்டு இறந் தார் என்றெல்லாம் சொல்லுவது உகந்ததல்ல என்பதால் அதனைப் புறந்தள்ளுகிறோம்).

தமிழ் ஓவியா said...

திரிபுரா வழிகாட்டுகிறது!


ஜோசியர்களும், சாமியார்களும் மக்களை ஏமாற்று கின்றனர். எனவே அவர்களின் நிகழ்ச்சிகளை தொலைக் காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கலாம் என திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது.

திரிபுரா மாநிலத்தில் சில ஜோசியர்கள் தொலைக் காட்சியில் விளம்பர நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதே போல சாமியார்கள் என்றும் மந்திரவாதிகள் என்றும் தங்களை அழைத்துக் கொள்ளும் சிலரும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

இந்த நிகழ்ச்சிகளின் மூலம் இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர் என்று திரிபுரா அரசு கூறியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு அகர்தலாவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. குடும்பத்தின் நலனுக்காக சில சித்து வேலைகளை செய்ய வேண்டும் என்று கூறி பாபா கமால் ஜேடி என்ற மந்திரவாதியை அழைத்து வந்தனர். ஆனால் இந்த நபர் அந்த வீட்டிலிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

சாமியார்களும், மந்திரவாதிகளும், ஜோசியர்களும் கேபிள் டி.வி. நடத்துபவர்களிடம் நிகழ்ச்சி நடத்த உரிமை பெறுகின்றனர்.

இவர்கள் நகரில் உள்ள ஓட்டல்களில் அறை எடுத்து தங்கிக் கொள்கின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சி களில் இவர்கள் தங்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக விளம்பரம் செய்கிறார்கள். சில மந்திர, தந்திர நிகழ்ச் சிகளை தொலைக்காட்சியில் செய்து காட்டுகின்றனர். தொலைபேசியில் கேள்வி கேட்டு இறுதியில் தங்களை நேரில் சந்திக்கும்படி சாமியார்களும், ஜோசியர்களும், மந்திரவாதிகளும் அழைப்பு விடுக்கின்றனர்.

இவர்களால் பொது மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் போன்ற சில முக்கிய பிரச்சினை களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் தற்போது சட்டமன்ற தேர்தல் முடிந்து விட்டதால் இத் தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்கு திரிபுரா மாவட்ட மாஜிஸ்திரேட் கிரண்கிட்டி கூறியுள்ளார்.

இந்தத் தகவல் இந்தியா முழுமையும் நல்லதோர் சிந்தனை - பகுத்தறிவு மனப்பான்மை முகிழ்த்துக் கிளம்புவதற்கு வித்திடும் என்று எதிர் பார்க்கிறோம். இதற்குக் காரணமாக இருக்கக்கூடிய திரிபுரா மாநில அரசையும் முதல் அமைச்சரையும் வெகுவாகப் பாராட்டுகிறோம்.

சாமியார்கள்பற்றி ஒவ்வொரு நாளும் வெளிவரும் தகவல்கள் அவர்கள் மோசக்காரர்கள். காமக் கொடூரர்கள் என்பதை சந்தேகமற்ற முறையில் நிரூபித்துக் கொண் டுள்ளன.

விளம்பரம் பெற்ற சந்திரா சாமியார் போன்றவர்கள் அரசியல்வாதிகளின் - அதிகாரப் பீடத்தில் உள்ளவர்களின் ஆலோசகர்களாக இருந்து ஆயுத பேர ஊழல் வரைக்கும் சம்பந்தப்பட்டவர்களாக இருந்து வருகின்றனர் என்பது கண்கூடு!

ஜெகத் குரு என்று விளம்பரப்படுத்தப்பட்ட சங்கராச் சாரியார்கள் கொலைக் குற்றத்தில் சிக்கி சிறைச்சாலைக்குச் சென்று வந்து விட்டார்கள். இவர்களின் காவி வேடம் என்பது இவர்கள் செய்யும் காலித்தனங்களுக்கு, மோசடிகளுக்கு மூடு திரையாக உள்ளது என்பதுதான் உண்மை.

தமிழ் ஓவியா said...


அதேபோல சோதிடம் என்பதும் இந்த நாட்டைப் பீடித்த கேடாகும். மக்களைச் சோம்பேறித்தனத்தில் ஆழ்த்தும் மூடத்தனத்தின் மொத்த உருவமாகும்.

பூமியிலிருந்து எத்தனையோ லட்சம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் நட்சத்திரங்களும், கோள்களும் இங்குள்ள மனிதனின் வாழ்வை நிர்ணயிக்கின்றன என்பதெல்லாம் எத்தகைய பைத்தியக்காரத்தனம்?

சோதிடத்துக்கும், அறிவியலுக்கும் ஏதாவது சம்பந்த முண்டா? கோள்களின் பட்டியலில் நட்சத்திரமாகிய சூரியனை இணைத்து சோதிடம் கூறிக் கொண்டு திரிகிறார்களே - இதைவிட நகைச்சுவை வேறு ஏதேனும் உண்டா?

பூமியின் துணைக் கோளான சந்திரனைக் கோளின் பட்டியலில் சேர்த்து பூமியைக் கை விட்டுவிட்ட இந்தப் புத்திசாலிகள்பற்றி எப்படி மதிப்பிடுவது!

உலகில் ஒரே ஒரு இந்து ராஜ்ஜியம் நடைபெற்ற நேபாளத்தில் இந்து மன்னர் குடும்பமே சோதிட நம்பிக்கை யால் படுகொலை செய்யப்பட்டதை எல்லாம் பார்த்த பிறகும் கூட சோதிடத்தை அனுமதிக்கலாமா?

பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருந்த போது சோதி டத்தைப் பல்கலைக் கழகப் பாடத் திட்டத்தில் சேர்த்தது. தமிழ்நாட்டில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சோதிடத்தைப் பாடமாக வைக்க முனைந்ததும் (திராவிடர் கழகத்தின் போராட்டத்தால் அது தடுக்கப்பட்டது) நாம் இன்னும் காட்டு விலங்காண்டி காலத்தில் வாழ்கிறோம் என்பதற்கான அடையாளம் அல்லவா!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் (51(ய)) மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே. அதன்படி சோதிடம், சாமியார் குப்பை களை அறிவியல் கருவியான தொலைக்காட்சிகளில், ஊடகங்களில் வெளியிடலாமா?
திரிபுரா முதல்வர் மாணிக்சர்க்காரை வெகுவாகப் பாராட்டுகிறோம். பல எதிர்ப்புகள் வரும், விமர்சனங்கள் வெடிக்கும்; அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உறுதியாக நின்று முறியடித்து இந்தியாவுக்கே பகுத்தறிவு வெளிச்சம் கொடுத்த பெருமையை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். இதற்குப் பிறகாவது மத்திய - மாநில ஆட்சிகள் அறிவுக் கொள்முதல் பெறட்டும்! செயல்படட்டும்!!

தமிழ் ஓவியா said...


போகாதே!


அட முட்டாள்களா! எதற்காகக் கோயிலுக்குப் போகிறீர்கள்? அங்கே உன்னைப் பார்ப்பான் வெளியே நில், உள்ளே வரக்கூடாது என்கின்றானே! உனக்குமானமில்லையா?ரோசமில்லையா? அங்கு இனியாவது போகாதே!
விடுதலை, 20.11.1969

தமிழ் ஓவியா said...


தமிழினப் பொறுக்கிகளை அழித்து முடிக்க பார்ப்பனப் படையைத் திரட்டுகிறாராம் பார்ப்பன சு.சாமி

துரோணாச்சாரி என்ற பார்ப்பனர் யுத்தத்திற்கு அர்ஜுனனைத் தயார் செய்ததுபோல தமிழர்களைத் தீர்த்துக் கட்ட பார்ப்பனப் படை ஒன்றைத் தயாரிக்கப் போகிறாராம்! தமிழர்கள் யார் தெரியுமா? பொறுக்கிகளாம்- சொல்லுவது யார்? ஒரு பூணூல் திருமேனி!

இது வன்முறை தூண்டுதல் அல்லவா? தமிழ்நாடு அரசு அடக்கப் போகிறதா? அல்லது தமிழர்கள் அடக்க வேண்டுமா? (வன்முறையால் அல்ல!)

தமிழ் ஓவியா said...


சென்னை சரவணா ஸ்டோர்சின் சிங்கள விளம்பரம்!


சென்னை, மார்ச் 26- இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் வலி யுறுத்தி வரும் நிலையில் சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர் நிறு வனம் சிங்களத்தில் துண்டறிக்கை அச்சடித்து விநியோகித்து வருகிறது. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சரவணா ஸ்டோர் நிறுவனத்திற்கு சென்னை தியாகராயர் நகர் ரங்கநாதன் தெருவிலும், புரசைவாக்கத்திலும் கடைகள் உள்ளன. தமிழர்களுக்கு எதிரான பிரச்சினையில் சரவணா ஸ்டோர் சிக்கியுள்ளது.

இந்தக் கடைகளில் பலவகையான சிங்களப் பொருள்களை விற்பதோடு இப்போது சிங்களவர்களுக்கு சந்தை விரிக்கிறது என்ற குற்றச்சாற்று எழுந்துள்ளது. இந்தக் கடைக்கு ஏராளமான சிங்களவர்கள் பொருள்களை வாங்க வருகிறார்கள். அப்படி வரும் சிங்கள வாடிக்கையாளர்களுக்காக இப்போது சரவணா ஸ்டோர்ஸ் நிருவாகம் அங்காடி பற்றிய தகவல் துண்டறிக்கையை சிங்களத்தில் அச்சடித்து மக்களிடம் கொடுக்கிறது.

கடையின் பெயர் முதற்கொண்டு கடைகளில் கிடைக்கும் பொருள்கள் மற்றும் எந்தத் தளத்தில் அவை கிடைக்கும் போன்ற தகவல்களையும் சிங்கள மொழியிலேயே அச்சடித்து தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டி வருகிறது.