Search This Blog

14.11.12

சிறீரங்கத்தில் பிராமணாளும்ஒழிந்தது கிருஷ்ண அய்யரும் ஒழிந்தது!

சிறீரங்கத்தில் ஒரு திருப்பம்! பிராமணாளும்ஒழிந்தது கிருஷ்ண அய்யரும் ஒழிந்தது!
திராவிடர் கழகத்திற்கு அடுத்த கட்ட வெற்றி!

பிராமணாள்  என்றும், அய்யர் என்றும் இடம்பெற்றிருந்த பழைய நிலை!

 சிறீரங்கத்தில் பிராமணாள் என்று உணவு விடுதி விளம்பரத்தில் எழுதி வைத் திருந்த வருணாசிரம ஆதிக்க உணர்வை எதிர்த்து திராவிடர் கழகம் மேற்கொண்ட நட வடிக்கையால் அந்த உணவு விடுதி அந்த இடத்தில் மூடப்பட்ட துடன் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அந்த உணவு விடுதியின் பெயர்ப் பலகையில் பிராமணாள் என்பதும் கிருஷ்ண அய்யர் என்பதில் உள்ள அய்யரும் நீக்கப்பட்டு விட்டன.
திராவிடர் கழகத்திற்குக் கிடைத்த அடுத்த கட்ட வெற்றியாகும் இது.

பிராமணாளும், அய்யரும் நீக்கப்பட்ட நிலையில் இப்போது...

சிறீரங்கம் ரங்கநகர் சாலையில் கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே (ஓட்டல்) என்ற பெயரில் மணி கண்டன் என்ற பார்ப்பனர்  நடத்தி வந்தார்.  திடீ ரென்று பிராமணாள் என்ற சொல்லை விளம்பரப் பலகையில் புகுத்தினார். அந்த உணவு விடுதியின் பெயர்ப் பலகையில் உள்ள பிராமணாள் என்ற பெயரை அகற்றுமாறு திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி அந்த உணவு விடுதியின் உரிமையாளர் மணிகண்டன் பார்ப்பனரிடம் வலியுறுத்தப்பட்டது.

மேலும் திருவரங்கம் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரின் முக்கிய கவனத்திற்கு என்று அறிக்கை  ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் திருவரங்கத்தில் ஜாதி ஒழிப்புப் பொதுக்கூட்டம் நடத்த கழகம் சார்பில் அனுமதி கோரியிருந்தது;

ஆனால் காவல்துறை அனுமதி மறுத்தது. மூன்று முறை தொடர்ந்து காவல் துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்று 4.11.2012 அன்று திருவானைக்காவலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது.

போராட்டம் அறிவிப்பு

அப்பொதுக் கூட்டத்தில்  பிராமணாள் ஓட் டல் பெயரை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் அகற்றுகின்றவரை போராட்ட நடவடிக்கையைக் கழகம் மேற்கொள்ளும். மேலும் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி இப்போராட்டத் திற்கான அறிவிப்பினை வெளியிடுவேன்  என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திருவானைக் காவல் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.

நள்ளிரவில் அகற்றம்

இந்நிலையில் அந்த உணவு விடுதி கட்டடத்தின் உரிமையாளர் (பாவை டவர்ஸ்) ராஜா, மணி கண்டன் பார்ப்பனரிடம் கடையை உடனடியாக காலி செய்யுமாறு கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து     (6.11.2012) நள்ளிரவு திடீரென்று  கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே உணவு விடுதியை மணிகண்டன் முழுமையாக கடையை இழுத்து மூடி காலி செய்தார். பிராமணாள் கபே பெயர்ப் பலகையும் அகற்றி எடுத்துச் சென்றார். இப்பொழுது வேறு ஒரு இடத்தில் அவரே உணவு விடுதியைத் திறந்துள்ளார். பெயர்ப் பலகையில் இடம் பெற்றிருந்த பிராமணாள் என்ற பெயரும், கிருஷ்ண அய்யர் என்ற பெயரில் இருந்த அய்யரும் நீக்கப்பட்டு விட்டன. திராவிடர் கழகத் திற்குக் கிடைத்த சிறப்பான வெற்றியாகும் இது.
                             ------------------------"விடுதலை” 14-11-2012

24 comments:

தமிழ் ஓவியா said...


நான் தீபாவளி கொண்டாடுவதில்லை - கலைஞர்


சென்னை, நவ. 14- நான் தீபாவளி கொண்டாடுவதில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார் தி.மு.க. தலைவர் கலைஞர்.

செய்தியாளர்களிடம் (13.11.2012) அவர் கூறியதாவது:

செய்தியாளர்: மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் நேற்று உங்களைச் சந்தித்தாரே, அதுபற்றி?

கலைஞர்: ப. சிதம்பரம் தீபாவளி கொண்டாடக் கூடியவர். வாழ்த்துச் சொல்ல வந்தார். நான் தீபாவளி கொண்டாடுவதில்லை. பொங்கல்தான் தமிழர்களுடைய திருநாள்.

செய்தியாளர்: தமிழகத்தில் பண்டிகை தினத்தில்கூட மின்வெட்டு அதிகரித்துள்ளதே?

கலைஞர்: அம்மா ஆட்சி என்றாலே அப்படித்தான் இருக்கும்!

செய்தியாளர்: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு மசோதா தாக்கல் செய்தால், அதனை தாங்கள் ஆதரிப்பீர்களா, தங்கள் நிலைப்பாடு என்ன?

கலைஞர்: மசோதா தாக்கல் செய்யும்போது தி.மு.க. எடுக்கும் நிலை என்னவென்று தெரிய வரும்.

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர் சொன்ன நவமணிகள்


தோழர்களே, 4.11.2012 ஞாயிறன்று திருச்சி ராப்பள்ளி பெரியார் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் தலைவர் கூறிய கருத் துரைகள், இலக்குகள் நினைவிருக்கிறதா?

1) கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் இங்கே எடுத்துக் காட்டினாரே - தந்தை பெரியார் கூறியதை எடுத்துச் சொன் னாரே எனக்கு ஒருபுறம் வயது வளர்ந்து வந் தாலும் வாலிபமும் கூடவே வளர்ந்து வருகிறது என்று தந்தை பெரியார் அவர்கள் கூறினாரே, அதே உணர்வைத்தான் உங்களிடமிருந்து நான் பெறுகிறேன். உரக்கச் சிந்தியுங்கள் - எப் பொழுதும் உற்சாகத்துடன் இருங்கள்.

என் இளமையின் ரகசியம் உங்களிடம்தான் இருக்கிறது. இங்கு வரும்போது 80 வயதுடைய வனாக வந்தேன். நீங்கள் காட்டும் எழுச்சியைப் பார்க்கும் போது, இங்கு இருந்து செல்லும்போது உங்களைப் போலவே வாலிபராகத் திரும்பு கிறேன்.

2) இது ஓர் உலக இயக்கமாகும். இந்த இயக்கத்தில் உள்ள இளைஞர்கள் உள்ள பலமும், உடல் பலமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

3) கொள்கையில் தீவிரமாக இருக்க வேண்டும்; கட்டுப்பாடு நமது கவசமாகும்.

4) கைப்பேசி என்றாலும் தேவைக்கு மேல் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை, எல்லாப் போதைகளிலிருந்தும் விடுபட வேண்டும்.

5) இளைஞர்களைப் பிடித்து ஆட்டும் கிரிக் கெட் போதையை முதலாவதாகத் தெளிய வைக்க வேண்டும்.

6) கூடுமானவரை சைக்கிள் பயணத்தைப் புதுப்பியுங்கள். அதனால் சுற்றுச்சூழல் பாதிக் காது. சீனாவுக்குப் போனால் எங்கு பார்த்தாலும் சைக்கிள் சவாரியைப் பார்க்க முடியும்.

7) 2013ஆம் ஆண்டில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க 80 ஆயிரம் மரக்கன்றுகளை நட வேண்டும்.

8) 800 பிரச்சாரக் கூட்டங்களை நடத்த வேண்டும். அது பெரிய பொதுக் கூட்டமாகக் கூட இருக்க வேண்டிய அவசியமில்லை. தெரு முனைக் கூட்டங்களாகக் கூட இருக்கலாம்.

9) பிரச்சாரம் என்று சொல்லும்போது இப் பொழுதெல்லாம் கலை அம்சம் தேவைப்படுகிறது. இசை, இசைக் கருவிப் பயிற்சி, வீதி நாடகக் குழுப் பயிற்சி, மந்திரமா? தந்திரமா? பயிற்சி, கணினிப் பயிற்சி - இவற்றை நடத்தி ஏராளமான இளைஞர்களைத் தயாரிக்க வேண்டும்.
பிரச்சாரம்! போராட்டம்!! இரண்டுமே நமது அணுகுமுறைகள்!

தோழர்கள் உரை

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங் குன்றன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

திருக்குவளை தோழர் கவியரசன் கடவுள் மறுப்புக் கூறினார்.

பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை. சந்திரசேகரன், தஞ்சை இரா. செயக்குமார் மற்றும் அதிரடி அன்பழகன், மாநில இளைஞரணி செயலா ளர் இல. திருப்பதி, மாநில மாணவரணி செயலாளர் இளந்திரையன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தமிழ் சாக்ரட்டீஸ், மாநில மாணவரணி துணைச் செயலாளர் மு. சென்னியப்பன். அறிவுச்செல்வன் (காஞ்சி மண்டல இளைஞரணி செயலாளர்), சந்திரசேகரன் (கோவை மண்டல இளைஞரணி செயலாளர்), சுரேஷ் (சென்னை மண்டல இளைஞரணி செயலாளர்), சிவக்குமார் (வேலூர் மண்டல இளைஞரணி செயலாளர்), மணிவேல் (கடலூர் மண்டல இளைஞரணி செய லாளர்), சாக்ரட்டீஸ் (மதுரை மண்டல இளைஞரணி செயலாளர்), மணியம்மை (சென்னை மண்டல மாணவரணி செயலாளர்), தம்பி பிரபாகரன் (கடலூர் மண்டல மாணவரணி செயலாளர்), ச. சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), பெ. வீரையன் (மூடநம்பிக்கை குழு அமைப்பாளர்), சண்முகப் பிரியன் (தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர்), நன்றி: ஆத்தூர் சுரேஷ், (சேலம் மண்டல இளைஞரணி செயலாளர்).

இளைஞரணி, மாணவரணி, மாநில கலந்துரை யாடல் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு மதிய உணவு ஏற்பாட்டை தஞ்சை மாவட்ட ப.க. துணைத் தலைவர் வழக்குரைஞர் வீ. கதிரேசன் ஏற்று வழங்கினார்.

தமிழ் ஓவியா said...


கட்டப் பஞ்சாயத்து


இளம் பெண்கள் கைப்பேசியைப் பயன்படுத்துவதால் யாருடனும் தொடர்பு கொள்ள முடிகிறது. இது தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்துகிறது. எனவே, இந்தக் கிராமத்தில் எந்த ஓர் இளம்பெண்ணும் கைப் பேசியைப் பயன்படுத்தக் கூடாது என்று ராஜஸ்தான் மாநில டவுசா மாவட்டத்தில் உள்ள பண்டரேஜ் என்னும் ஊரில் கிராமப் பஞ்சாயத்தார் கூடி முடிவு செய்துள்ள னராம்.

சில மாதங்களுக்கு முன் உத்தரப்பிரதேசத்தில் அசரா என்னும் கிராமத்தில் இதேபோல பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதைவிட பிற்போக்குத்தனம் வேறு என்ன? ஆண்கள் கைப்பேசியைத் தவறாகப் பயன்படுத்துவதில் லையா? கருநாடக மாநில சட்டப்பேரவைக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, அமைச்சர்கள் மூவர் கைப்பேசியில் ஆபாசக் காட்சிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கவில்லையா?

எல்லாவற்றிலும் ஆணுக்கொரு நீதி; பெண்ணுக் கொரு நீதிதானா? இதுபோன்ற அநீதிகளைத் தட்டிக் கேட்பதற்கு பெண்களுக்கான பிரதிநிதித்துவம் (குறைந்தபட்சம் 33 விழுக்காடு) சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் அவசியம்தான் என்பது இப்பொழுது புரிகிறதா - இல்லையா?

தமிழ் ஓவியா said...

அரோஹரா!

தீபவிழா என்ற பெயரில், நெருப்பில் கொட்டி வீணடிக்கும் நெய்யின் விலையை, ஜெயலலிதா தலை யிட்டு குறைத்துள்ளாராம். திருவண்ணாமலை கார்த் திகை தீப விழாவை முன்னிட்டு, 10 ஆம் நாள் மலையில் தீபம் ஏற்றப்படுமாம்! இதற்கு முழுவதும் அக்மார்க் பொறிக்கப்பட்ட சுத்தமான நெய்தான் பயன்படுத்தப் படுகிறதாம்!

இந்தத் தீ 11 நாள்களுக்கு எரியுமாம். இதற்கான நெய்க்கான செலவு ஏமாளி பக்தர்களிடமிருந்து பெறப் படுகிறது. உலகின் பல நாடுகளிலிருந்தும் பக்தர்கள் இதற்காக காணிக்கை (காசோலை) அனுப்புவார்களாம். விழித்துக்கொண்ட கோவில் நிருவாகம், இந்த ஆண்டு நெய்யின் விலையை ஒரு கிலோ 200 ரூபாயிலிருந்து 250 ரூபாய்க்கு உயர்த்தியது. இந்தச் செய்தி முதலமைச்சரின் காதுக்குப் போக, பொரிந்து தள்ளிவிட்டாராம். நெருப்பில் கொட்டி வீணடிக்கும் நெய்யின் விலையை உடனே குறைக்கச் சொல்லி உத்தரவிட்டாராம்! வாழ்வாதாரப் பிரச்சினையல்லவா? இந்தச் செய்தியை வெளியிட்டு புளகாங்கிதம் அடைந்திருக்கிறது தினமலர்.

உலகில் ஊட்டச் சத்துக் குறைவால் மரணம் அடையும் குழந்தைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பாகம் இந்தியாவில்தான்! இந்த வெட்கக்கேட்டில் மதத்தின் பெயரால் டன் டன்னாக நெய்யை நெருப்பில் கொட்டிப் பாழாக்குவது கிரிமினல் குற்றம் அல்லவா! அதற்கொரு முதலமைச்சர் துணை போகலாமா?

தமிழ் ஓவியா said...

துக்ளக் அய்யர்வாள்

தேவர் ஓட்டல், நாயுடு மெஸ் போன்றவை காலாகால மாக இருக்கிறதாம் - அதையெல்லாம் எதிர்க்காமல் வீரமணி பிராமணாள் ஓட்டலை எதிர்த்துப் போராட்டம் நடத்துவது - ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி; கழகத்தாருக்கு இளைத் தவன் பிராமண ஜாதிக்காரன் என்று திருவாளர் துக்ளக் அய்யர் சோ எழுதியுள்ளார் (துக்ளக், 14.11.2012, பக்கம் 15, 22).

எல்லாப் பார்ப்பானும் கோடு கிழித்தது மாதிரி பிசிறு இல்லாமல் ஒரே மாதிரியாக சொல்லுவதைப் பார்த்தீர் களா? (இது புரியாமல் சில புரட்(டு)சிகள் பேனா தூக்கு கின்றன!).

திருவாளர் சோ அவர்களே, ஜாதி அடுக்குமுறை வேறு; வருண அமைப்பு முறை வேறு என்பது உங்களுக்குப் புரியாதா?

ஜாதியின பெயரால் எதுவும் கூடாது என்பது சரியானது தான். இதுமாதிரி கருத்தை இதற்கு முன் எப்பொழு தாவது சொன்னதுண்டா? பிராமணாள் ஓட்டல் பெயரை எதிர்க்கும்போது மட்டும் இதையெல்லாம் இழுத்துப் போட்டுத் திசை திருப்பும் உங்கள் தந்திரம் எங்களுக்குப் புரியாதா என்ன?

தேவர் என்று போட்டால் ஒரு யாதவரை இழிவுபடுத்த வில்லையே! பிராமணாள் என்று போட்டால் அப்படியா? அடுத்தவனை சூத்திரன் என்று சீண்டுகிறதே!

ஊருக்கு இளைத்தவர்களா நீங்கள்? சென்னை - அண்ணா நகரில் சாந்தி காலனியில் பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி மேடையிலே அரிவாளைத் தூக்கி ஆடினீர் களே - அதிலே உங்கள் சுஜாதாவும், பாலச்சந்தரும் பங்குகொண்டு பூணூலை முறுக்கிடவில்லையா?

தேவரும் சரி, நாயுடுவும் சரி - ஒட்டுமொத்தமாக உங்கள் இந்து அமைப்புப்படி சூத்திரன் என்ற ஒரே பட்டியலைச் சார்ந்தவர்கள்தானே? அவர்கள் இழிவையும் சேர்த்து ஒழிக்கத்தான் இந்தப் போராட்டம்.

சுண்ணாம்பும் வெள்ளை, வெண்ணைய்யும் வெள்ளை என்று உலகத்தை ஏமாற்றவேண்டாம்!

தமிழ் ஓவியா said...

ஊழல் உற்பத்தி

மனிதனுடைய ஆசையில்தான் ஊழல் ஆரம்பிக்கிறது என்றெல்லாம் சுற்றி வளைத்துப் பதில் சொல்லும் திருவாளர் துக்ளக் சோ அய்யர் (துக்ளக், 14.11.2012, 13, 14) அரசியலைக் காரணமாகச் சொல்கிறார்.

திருப்பதி கோவில் உண்டியலில் கட்டுக் கட்டாகப் பணம் போடுகிறானே - அவர்கள் எல்லாம் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களா? கடவுளிடம் காணிக்கை கொடுத்துத் தப்பிக்கலாம் என்பது ஊழல் மனப்பான்மை இல்லையா!

காணிக்கை என்பது ஒரு வகை இலஞ்சம்தானே!

ஊழல் தொடக்கமே கோவிலில்தான் ஆரம்பிக்கிறது என்று ஒத்துக்கொள்வதில் என்ன தயக்கம்? திருப்பதி நாமக் கடவுளுக்கே நாமம் போடும் டாலர் புகழ் டாலர் சேஷாத்திரிகள் இருக்கிறார்களே - என்ன பதில்?

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.யும் - காங்கிரசும்!


அடுத்து ஆட்சியை நாங்கள்தான் பிடிக்கப் போகிறோம் என்று தலைகால் புரியாமல் துள்ளிக் குதிக்கும் பி.ஜே.பி.,க்குள் என்ன நடக்கிறது?

பிரதமருக்கான வேட்பாளர்களின் பட்டியல் அங்கு அனுமார் வால்போல நீண்டுகொண்டே போகிறது (இராம பக்தர்கள் அல்லவா! அதனால்தான் இந்த உதாரணம்!).

குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிக்குக் கழுத்து முட்டும் ஆசை புடைத்துக் கொண்டு இருக்கிறது.

அவர் என்னதான் வேடம் கட்டி ஆடினாலும் குஜராத்தில் சிறுபான்மை மக்களான முசுலிம் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று நரவேட்டை ஆடிய ரத்த வாடை அடையாளத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவே முடியாது!

ஒரு மாநிலத்தின் அதிகாரத்தை வைத்துக் கொண்டே இவ்வளவு ஆட்டம் போட்டவர் பிரதம ரானால் நாடு தாங்காது - உலக நாடுகள் மத்தியில் மாபெரும் தலைக்குனிவுதான்!

அன்றையப் பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பேயி குஜராத் படுகொலைகளை மனதிற் கொண்டு, எந்த முகத்தோடு நான் வெளிநாடு செல்லுவேன்? என்று புலம்பினாரே - அந்தப் புலம் பலுக்கான கருப்பொருள் நரேந்திர மோடியல்லவா!

பி.ஜே.பி.யில் இப்படிப்பட்டவர்தான் பிரதமருக்கான வேட்பாளர் என்றால், அந்தக் கட்சியின் யோக்கிய தையும், அடையாளமும் எவ்வளவு மட்ட ரகமானவை என்பதை எளிதிற் புரிந்துகொள்ளலாமே!

உண்மையைச் சொன்ன காவல்துறை அதிகாரிகளையே சிறையில் தள்ளும் இன்னொரு இடிஅமீன் இந்த மோடி! தன் அமைச்சரவையில் இருந்த பெண் அமைச்சர் மாயாபென் கொட் நானிக்கு கொலைக் குற்றவாளியாக 28 ஆண்டுகள் தண்டனை பெற்று இருக்கிறார். இதைவிடக் கொடிய தண்டனைக்கு உரியவர்தான் இந்த நரேந்திர மோடி!

உச்சநீதிமன்றம் நியமித்த அமிக்கஸ் க்யூரி - இராமச்சந்திரன் (பாரபட்சமற்ற நடுவர்) தம் அறிக்கையில் மோடி மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாரே!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) உள்ள கட்சிகளே மோடி பிரதமர் ஆவதற்குத் தம் எதிர்ப் பினை மிக வெளிப்படையாகவே பதிவு செய்துள்ளன. பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத் துக்கு நரேந்திர மோடி வரக்கூடாது என்று முதலமைச்சர் நிதிஷ்குமார் தடை போட்டதும் யாருக்குத்தான் தெரியாது?

இப்பொழுது இன்னொரு குரல் பி.ஜே.பி.,க்குள்; பி.ஜே.பி. தலைவர் நிதின்கட்காரி மீது ஊழல் புகார் கிளப்பப்பட்டுள்ளதன் பின்னணியில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி இருக்கிறார் என்று ஆர்.எஸ்.எஸின் மூத்த தலைவர் வைத்யா கூறியதன் மூலம் கட்சிக்குள் ஓர் அணுகுண்டைத் தூக்கிப் போட்டு, அலைகளை எழுப்பியுள்ளார். அதற்கு எதிர்வாதங்களும் எழும்பிக் குதிக்கின்றன.

நிதின்கட்காரி மீது ஊழல் புகார் கிளம்பிய நிலையில், அவரைக் காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ். துடியாய்த் துடிக்கிறது. ஆர்.எஸ்.எஸின் மூத்த ஆலோசகராகக் கருதப்படும் திருவாளர் ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி அய்யரின் பூணூல் எல்லாம்கூட வியர்த்துக் கொட்டுகிறது; எல்லா ஆவணங்களையும் அலசிப் பார்த்துவிட்டாராம் - நிதின்கட்காரி ஊழல் ஏதும் செய்யவில்லை என்று தீர்ப்பே எழுதி விட்டார்!

ஒன்று மட்டும் உறுதி; ஆர்.எஸ்.எஸின் உற்பத்திப் பொருள் இந்த கட்காரி என்பதால், அவரைக் காப் பாற்றும் நிலையில் அது இருக்கிறது என்பதுதான் பெருத்த உண்மை.

பி.ஜே.பி.க்கு என்று ஊழியர்கள் கிடையாது; எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான் தொண்டர் குழாம்! தேர்தல் பணி என்று வந்தாலும், அவர்கள்தான் ஈடுபடவேண்டும்.

அந்த ஆர்.எஸ்.எஸ். நிதின் கட்காரியின் கையை வலுப்படுத்துவதன்மூலம் மோடியின் நிலை வெளிறிப் போன பரிதாபம்!

பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களைப்பற்றியோ கேட்கவே வேண்டாம்!

இவ்வளவுக் கேடு கெட்டு பி.ஜே.பி. அல்லாடும் நிலையில்,

காங்கிரஸ் தன் நடவடிக்கைகளால் பி.ஜே.பி.,க்கு உதவி செய்தால்தான் உண்டு; அதனை நம்பிதான் பி.ஜே.பி. இருக்கிறது என்றுகூடக் கருதலாம்.

மக்களின் அடிப்படைப் பிரச்சினை - குறிப்பாக விலைவாசிப் பிரச்சினையில் காங்கிரஸ் கவனம் செலுத்தத் தவறினால் அது எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பது கல்லின்மேல் எழுத்தாகும்.14-11-2012

தமிழ் ஓவியா said...


மருத்துவக் கல்லூரி - புதிய அணுகுமுறை தேவைதானா?


மருத்துவக் கல்வித் தேர்வுகளில் புதிய அணுகுமுறைகளால் பெருமள விற்கு மருத்துவக் கல்லூரி மாண வர்கள் தோல்வியைத் தழுவுகின்றனர்.

அண்மைக் காலங்களில் தரமான கல்வியைத் தருவதற்காக முனைப் போடு இருப்பதாக எண்ணிக் கொண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம், மருத்துவக் கல்வித் தேர்வு முறைகளில் தவறுதலான அணுகு முறைகளை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறது.

மருத்துவக் கல்வித் தேர்வுகளில் புதிய அணுகு முறைகளால் பெருமளவிற்கு மருத் துவக் கல்லூரி மாணவர்கள் தோல் வியைத் தழுவுகின்றனர். அதனால், நீதி கேட்டு அடிக்கடி உயர்நீதிமன்றம் - உச்சநீதிமன்றம் செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது. வழக்கை எதிர்கொண்டும், மேல்முறையீடுகள் எனும் முடிவிற்கும் மருத்துவப் பல்கலைக் கழகம் ஈடுபட்டு வருவதும் வருந்தத்தக்க நிகழ்வுகளாகவே அமைந்து விடுகின்றன.

தமிழ் ஓவியா said...

அறிவாற்றலிலும், கடும் உழைப் பிலும் சிறந்து விளங்குபவர்களே பெருமளவில்...

இதில் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது யாதெனில், மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்வியை மேற்கொள்வதற்கு மாணவர்கள் மேல்நிலைப் பள்ளிக் கல்வியின் இறுதிக்கட்டப் பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எனும் தகுதி அடிப்படையில்தான் தேர்ந் தெடுக்கப்படுகின்றனர்;

கூடுதலாக நுழைவுத் தேர்வு வாயிலாகவும் தேசிய தொகுப்பிலிருந்தும் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். அறிவாற்றலிலும், கடும் உழைப்பிலும் சிறந்து விளங்கு பவர்களே பெருமளவில் அதிக மதிப் பெண்களோடு தேர்வு பெற்று தொழில் கல்வி பட்டப் படிப்புகளுக்காக தேர்ந் தெடுக்கப்பட்டு முறையே பொறியியற் கல்லூரிகளிலோ, மருத்துவக் கல்லூரி களிலோ சேருவதற்கு அனுமதிக்கப்படு கின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ஜெர்மனி, சீனா, ரஷியா போன்ற நாடுகளில் ஆங்கிலத்தோடு தாய் மொழியில் மருத்துவக் கல்வி புகட்டப் படுவதால் மாணவர்கள் தேர்வை மேற்கொள்வதில், அதுவும் மருத்துவக் கல்வியின் தொடக்கக் காலத்தி லிருந்து இறுதிக் கட்டம் வரை பிரச்சினைகளே எழுவதில்லை.

ஆனால், நமது நாட்டில் ஆங்கில மொழியில் மட்டுமே மருத்துவக் கல்வி புகட்டப்படுவதால் மருத்துவக் கல்வியின் தொடக்கக் காலத்தில் தாய்மொழி வழி கற்று வந்த மாணவர்களால் பாடங்களை விளக்கமாக தெளிவுற அறிந்து தெரிந்து கொள்வதிலும், எழுத்துத் தேர்வு, பயிற்சித் தேர்வு, வாய்மொழித் தேர்வு போன் றவற்றில் சரளமாக கருத் துகளை எடுத்து வைத்திடுவ திலும் தொய்வென்பது விலக்க முடியாத தாகிவிட்டது. அதுவும் பயத்தோடும் அச்சத்தோடும் தேர்வினை எதிர்கொள் கின்ற தாய்மொழி வழி வந்தவர்களால் நிலைமைகளுக்கு ஈடுகொடுக்க முடிவ தில்லை என்பதும்;

கடும் முயற்சிக்குப் பிறகு தேர்வுறும் கிராமப்புறத்திலிருந்து வந்த மாணவர்கள், தலை சிறந்த ஆசிரியர்களாக பேராசிரியர்களாக மருத்துவர்களாக - வல்லுநர்களாக பின் னாட்களில் உருவாகி இருக்கிறார்கள் - சேவை புரிந்திருக்கிறார்கள்; சேவை புரிந்து வருகிறார்கள் என்பதும்தான் உண்மை.

பொதுவாகவே, பொறியியல் பாடத் தினை மேற்கொள்ளும் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் தாங்கள் மேற்கொள்ளும் பாடத் தேர்வுகளில் சில பாடங்களில் தோல்வியுற்றால், மேல் வகுப்புகளுக்குச் சென்று கொண்டு தோல்வியுற்ற பாடங்களுக்கான தேர் வினைத் திரும்பவும் எழுதி வெற்றி பெற்று நிறைவு செய்வதுண்டு.

தமிழ் ஓவியா said...

மருத்துவப் பாடங்களிலும் ஆரம்பக் கட்டமான முதலாண்டுத் தேர்வு என்கிற முதற்கட்டத் தேர்வு நீங்கலாக, இரண் டாம் கட்டத் தேர்வுகளிலும், மூன்றாம் கட்ட தேர்வுகளிலும் சில பாடங்களில் தோல் வியைத் தழுவினாலும் மேற்கொண்டு மேல் வகுப்புப் பாடங்களைத் தொடர்ந்து கொண்டே மீண்டும் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அளித்திடுவதற்கு நடைமுறையில் வழிவகைகள் உள்ளன.
கடுமையான விதிமுறை - கொடு மையான விதிமுறை..

ஆனால், எம்.பி.பி.எஸ். மருத்துவக் கல்வியில் முதலாம் ஆண்டு - முதல் கட்டத் தேர்வில் முழுமையாகத் தேர்வு பெற்றால்தான் மேற்கொண்டு மருத்துவக் கல்வியைத் தொடர முடியும் என்கிற கொடிய முறை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் முடிவானது, கடுமையான விதிமுறை - கொடுமையான விதிமுறை என்பதோடு சமுதாயத்து அடிமட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்து அந்த மக்களின் உரிமையை பறித்திடுவதற்கு உலை வைத்திடும் சூழ்ச்சி வலை என்றுதான் கணித்திடல் வேண்டும்.

கிராமப்புற, ஏழை - எளிய மாணவர் கள் பெருமளவில் தோல்வியைத் தழுவு கின்ற நிலை கடந்த காலங்களிலிருந்தே...

முதற்கட்ட தேர்வுகளில் தாய்மொழி வழி வந்த மாணவர்கள் - கிராமப்புறத் திலிருந்து வந்த - ஏழை - எளிய நிலை யிலிருந்து வந்த மாணவர்கள் தாம் எவ்வளவுதான் அறிவாற்றலும், திறமையும் உடையவர்களாக இருந்தாலும் பெருமளவில் ஆங்கில வழியிலான கடும் சுமை நிறைந்த உடற்கூறு இயல் (Anatomy) உடலியக்க இயல் (Physiology) பாடங்களுக்கான தேர்வுகளில், குறிப்பாக, எழுத்துத் தேர்வுகளிலும், வாய் மொழித் தேர்வுகளிலும் ஈடு கொடுக்க முடிவதில்லை.

அதன் காரணமாக கிராமப்புற, ஏழை - எளிய மாணவர்கள் பெருமளவில் தோல்வியைத் தழுவுகின்ற நிலை கடந்த காலங்களிலிருந்தே இருந்து வருகிறது; மருத்துவக் கல்வி மட்டுமின்றி அனைத்துத் துறை தொழிற் கல்வியை - தொழில் நுட்பக் கல்வியை மேற்கொள்கின்ற குறிப்பிட்ட ஏனைய மாணவச் சமுதாயத்திற்கும் பொருந்தும் என்றாலும், கடந்த இரண்டு - மூன்று ஆண்டுகள் கட்டத்தில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல் கலைக் கழகம் மேற்கொண்ட தவறுதலானதும், உண்மை நிலை களைச் சீர்தூக்கிப் பார்த்து கருத்தில் கொள்ளாததுமான அணுகுமுறைக ளால் - தேர்வு முறைகளால் குறிப்பிட்ட மருத்துவ மாணவச் சமுதாயமே பெரும் பாதிப்பிற்குள்ளாகி தேர்வில் தோல் விகளுக்குள்ளாகியும், அவதிக்குள்ளா கியும் வருகிறது என்பது வெளிப்படை; வேதனைக்குரிய செய்தி.

மாணவர்களின் தகுதி - திறமை களை உரிய கல்வி புகட்டுவதன் வாயி லாக மேம்படுத்துவதற்கான வழி வகைகள் நிறைவாகவே உள்ளன. குறிப்பாக, அறிவியல் மேம்பட்ட நிலையில் உள்ள கணினி உலகத்தில் - இணையதள உலகத்தில், அறிவியலை மாணவர்களுக்கு புகட்டுவதற்கு வழி வகைகளை வகுத்துக் கொடுப்பதற்கும், வழிகாட்டுதலுக்கும் மருத்துவப் பல்கலைக் கழகம் முனைப்பாக இருந் திடல் வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

கொடிய முறை முடிவினை தமிழ் நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் விலக்கிக் கொள் வதற்கு முன் வரவேண்டும்.

ஆகவே, எம்.பி.பி.எஸ். மருத்துவக் கல்வியில் முதலாம் ஆண்டு - முதல் கட்டத் தேர்வில் முழுமையாகத் தேர்வு பெற்றால்தான் மேற்கொண்டு மருத் துவக் கல்வியைத் தொடர முடியும் என்கிற கொடிய அணுகுமுறை முடி வினை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் விலக்கிக் கொள்வதற்கு முன் வர வேண்டும். இல்லையேல் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் தலைமை பொறுப்பிலுள்ள துணைவேந்தர் உள்ளிட்ட பொறுப்பு மிக்க அலுவலர்கள் தார்மீகப் பொறுப் பேற்று பதவி விலகிடல் வேண்டும்.

அதற்கான அறிவுறுத்தலை தமிழ்நாடு அரசு முனைப்போடு உரிய வழிவகைகளில் நிறைவேற்றி ஏழை - எளிய கிராமபுறத்து மற்றும் தமிழ்வழி பாடத்தினை மேற்கொண்டு வந்த மாணவச் சமுதாயத்தின் உரிமையை - நலனை பாதுகாக்கின்ற பேரரணாக இருந்திடல் வேண்டும்.
டாகடர்.வெ.குழந்தைவேலு(கட்டுரையாளர் மக்களவை முன்னாள் உறுப்பினராவார்)

தமிழ் ஓவியா said...

என் சமூக அக்கறைக்குக் காரணம் தந்தை பெரியாரின் புத்தகங்களே!
பெரியார் சுயமரியாதை ஊடகத்துறையின் அய்ந்தாமாண்டு தொடக்கவிழாவில், இயக்குநர் லீனா மணிமேகலை பேச்சு

சென்னை, நவ.14-பெரியார் சுயமரியாதை ஊடகத்துறையின் அய்ந்தாமாண்டு தொடக்க விழாவில் லீனா மணிமேகலை இலக்கிய ஆவணப் படங்களைப் பாராட்டி ஒளிவண் ணன் பேசினார்.

திரையிடல்

9.11.2012 வெள்ளிக் கிழமை சென்னை பெரி யார் திடலில் உள்ள அன்னை மணியம்மை யார்அரங்கத்தில், பெரியார் சுயமாயாதை ஊடகத்துறையின் அய்ந்தாமாண்டு தொடக்கவிழாவை யொட்டி, சிறப்புத்திரை யிடல் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில், பிரபல இயக்குநரும், பெண்ணியச் சிந்தனை யாளருமான லீனா மணிமேகலை அவர் களின் தேவதைகள், எதிர்ப்பு என்ற தொல் குடிப் பாடல் ஆகிய ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.

ஊடகத்துறையின் வரலாறு

பிறகு பகுத்தறிவா ளர் கழக மாநில செய லாளர் பெரியார் சாக் ரடீஸ் அறிமுகவுரையை நிகழ்த்தினார். அவர் தமது உரையில்: பெரி யார் சுயமரியாதை ஊடகத்துறை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டு தலுடன் தொடங்கப் பட்ட வரலாற்றை சுட் டிக்காட்டினார். இன்று அதன் பரிணாம வளர்ச் சியையும் கூறிவிட்டு, இயக்குநர் லீனா மணி மேகலை தொலைக் காட்சியில் தொகுப்பா ளராக இருந்தநாள் முதல் இன்றைய நிலை வரையிலும் அவரின் சிறப்புகளை பட்டிய லிட்டார்.

ஆவணப்படங்களுக்கு ஆதரவு

அறிமுகவுரையைத் தொடர்ந்து, நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்திருந்த பகுத் தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் ஒளி வண்ணன் அவர்கள் திரை யிடப்பட்ட இரண்டு ஆவணப்படங்களின் சிறப்புகளை உணர்வு பூர்வமாக விவரித்தார். ரோட்டரி கிளப் மூல மாக இன்னும் அதிக மக் கள் திரள் முன்பு இந்த ஆவணப்படங்களைத் திரையிட முயல்வோம். தொடர்ந்து, பெரியார் சுயமரியாதை ஊடகத் துறையின் பணிகளில் பங்கேற்போம் என்றும் பலத்த கைதட்டல்களுக் கிடையே அறிவித்தார்.

பெண் ஏன் அடிமையானாள்?

தொடர்ந்து, இயக்கு நர் லீனா மணிமேகலை திரையிடப்பட்ட இரண்டு ஆவணப்படங் கள் தொடர்பான தனது அனுபவங்களை பார்வை யாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். தான் இந்த அளவுக்கு சமூக அக்கறை யோடு, இதுபோன்ற பணி களைச் செய்வதற்குக் கார ணம் எனது தந்தையின் வீட்டு நூலகத்திலிருந்து எடுத்துப் படித்த பெரி யாரின் பெண் ஏன் அடி மையானாள்? என்ற புத் தகம்தான் என்று நன்றி யுணர் வோடும்,பெருமை யோடும் அறிவித்துக் கொண்டார்.

நிறைவு

தொடர்ந்து, இயக்க ஏடுகளையும், புத்தகங் களை யும் ஒளிவண் ணன், இயக்குநருக்கு வழங்கிச் சிறப் பித்தார். முன்னதாக, குறும் படத்துறை அமைப் பாளர் உடுமலை வடி வேல் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கவிஞர் ஏ.ராஜசேகர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, பெரியார் சுய மரியாதை ஊடகத் துறையின் அமைப் பாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நன்றி நவில் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

நிகழ்ச்சியில், நாக இயக்குநர் சிறிஜித் சுந்தரம் திரைப்பட இயக்குநர் நந்தன், வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தமிழ்ச்செல் வன்,செயலாளர் கோபால் மற்றும் ஏரா ளமானோர் கலந்து கொண்டனர். பழனி குமார், ஓவியச் செல் வன், புருனோ, வை. கலையரசன் ஆகி யோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தமிழ் ஓவியா said...


தீ நாள் - பட்டாசு வெடியால் தமிழகத்தில் 150 இடங்களில் தீ விபத்துகள்


சென்னை, நவ.14- தீபாவளிப் பண்டிகை யான நேற்று பட்டாசு வெடித்தது தொடர் பாக தமிழகம் முழு வதும் 150 இடங்களில் தீவிபத்துகள் ஏற்பட்டன. இருப் பினும் தீயணைப்புப் படையினர் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து வைத்திருந் ததால் பெரிய அள விலான விபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை. தீயணைப்புத் துறை தகுந்த முன்னேற்பாடு களைத் தமிழகம் முழு வதும் செய்து வைத் திருந்தது.

அதன்படி அனைத் துத் தீயணைப்பு நிலை யங்களிலும் ஒரு தீய ணைப்பு வண்டியை மட் டுமே நிறுத்தி வைக்கவும், மற்ற வண்டிகளை முக் கிய இடங்களில் நிறுத் துமாறும் உத்தரவிடப் பட்டிருந்தது.

அதன்படி அனைத் துப் பகுதிகளிலும் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. சென்னையைப் பொறுத்த மட்டில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி களில் 22 இடங்களில் தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எங்காவது தீப்பிடித்து விட்டது என்ற தகவல் வந்தால் உடனே அங்கு விரைந்து செல்லும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதேபோல மற்ற நகரங்களிலும் ஏற்பா டுகள் செய்யப்பட்டி ருந்தன. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. பட் டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்ட இடங் களுக்கு உடனடியாக தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்றன.

தமிழகம் முழுவதும் மொத்தமாக 150 இடங் களில் தீவிபத்துகள் ஏற்பட்டதாக கூறப் படுகிறது. காகித ஆலை, குடிசைகள், ஒரு உர ஆலை என தீவிபத்துகள் ஏற்பட்டன என்று தீய ணைப்புத்துறை கூறியுள் ளது.

தமிழ் ஓவியா said...


பாலியல் தொல்லைக் கொடுத்த மந்திரவாதி கைது


ராமநாதபுரம், நவ.14-ராமநாதபுரத்தில் செய் வினையை எடுப்பதாகக் கூறி, பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.

பொள்ளாச்சி, பாலக்காடு சாலையைச் சேர்ந்த அப்துல் ஜபார் என்பவரது மகன் முகமது இப்ராஹிம். இவர் கீழக்கரையில் மந்திரம் செய்வதாகவும், யாருக்கேனும் செய்வினை வைத்திருந்தால் அதனை எடுப்பதாகவும் கூறி வீடுகளுக்குச் சென்று பெண் களை மயக்கி, அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோவில் படம் பிடித்து அதனை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டி பெண்களிடம் இருந்து பணம் பறித்து வந்துள்ளான்.

இவன் கீழக்கரை, ஏர்வாடி போன்ற இடங்களில் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டுள்ளான். இவனை கீழக்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

கோவில் கோபுர சாரத்தில் தீ: முழுவதும் எரிந்து சாம்பல்

சென்னை, நவ.14-சென்னை திருவொற்றியூரில் உள்ளது தியாகேசர்-வடிவுடையம்மன் கோவில். இந்தக் கோவிலில் தற்போது மராமத்துப் பணிகள், திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக கோபுரத்தை ஒட்டி சாரம் போடப் பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மாலை 6.30 மணி அளவில் சிலர் ராக்கெட் பட்டாசுகள் வெடித்தனர். அதில் ஒன்று கோபுரத்தில் போடப் பட்டிருந்த சாரத்தில் விழுந்து எரிந்தது.

இதனால் கோபுரத்தின் கீழே நிறுத்தப் பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சில எரிந்தன.

தீ விபத்து ஏற்பட்டவுடன் பக்தர்கள் வெளியேற்றப் பட்டனர். கோயில் கதவு அடைக்கப் பட்டது. தீய ணைப்புத் துறையினர் வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தமிழ் ஓவியா said...


மாதா கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை


சென்னை, நவ.14- சென்னை எழும்பூர் சேட் காலனியில் சிறிய ஆரோக்கிய மேரி மாதா கோவில் உள்ளது. இங்கு சிறிய உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த உண்டி யலில் காணிக்கை செலுத் துவார்கள்.இன்று காலையில் இந்த உண் டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் கொள்ளை அடிக்கப் பட்டு இருந்தது.

அடுத்த மாதம் இந்த கோவி லுக்கு திருவிழா வர உள்ளதால், பக்தர்கள் நிறைய காணிக்கை செலுத்தி இருந்தார்கள் என்றும், அதை கொள் ளையர்கள் அள்ளிச் சென்றுவிட்டதாகவும், எழும்பூர் காவல் நிலை யத்தில் புகார் கொடுக் கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர் பிரச்சினையை பன்னாட்டளவில் கொண்டு சென்று தீர்வு காணவேண்டுமென்ற கலைஞரின் முயற்சி வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறது டெசோ சார்பில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின்

சென்னை, நவ. 14- ஈழத் தமிழர் பிரச்சினையை பன்னாட்டளவில் கொண்டு வந்து தீர்வு காண வேண்டுமென்கிற தலைவர் கலைஞர் அவர்களின் முயற்சி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறதென்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்காக அய்.நா மன்றத் திற்கும் - சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அய்.நா. மனித உரிமை ஆணையத்திற்கும் சென்று வெற்றியுடன் திரும்பிய மு.க. ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோருக்கு 11.11.2012 அன்று மாலை டெசோ அமைப்பின் சார்பில் தலைவர் கலைஞர் தலை மையில் நடைபெற்ற வரவேற்பு - பாராட்டு விழாக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

டெசோ அமைப்பினுடைய தீர்மானங்களை- இலங்கைத் தமிழர்களுடைய வாழ்வுரிமைப் பாது காக்கப்பட வேண்டும் என்கிற அந்த உணர்வோடு தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந் துள்ள டெசோ அமைப்பின் சார்பில் நடைபெற்ற அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களையும் டெசோ அமைப்பினுடைய தலைவர் கலைஞர் அவர்களும், அதனுடைய உறுப்பினர் களாக இருக்கக் கூடிய பேராசிரியர் பெருந்தகை அவர்களும், ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும், தொல். திருமாவளவன் அவர்களும், சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களும் ஒருங்கிணைந்து பல்வேறு வகைகளில் ஆலோசனைகளை நடத்தி ஆய்வு செய்து, அவர் களால் தயாரிக்கப்பட்ட ஒரு விரிவான அறிக்கை அய்.நா. மன்றத்தில் - அதேபோல் ஜெனீவாவில் அமைந்திருக்கக்கூடிய மனித உரிமை ஆணையத்தில் அவற்றையெல்லாம் நாங்கள் வழங்கி, அதைத் தொடர்ந்து இலண்டன் மாநகரில் இங்கிலாந்து நாடாளுமன்ற கட்டடத்தில் பிரித்தானியா தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற உலகத் தமிழர் பன் னாட்டுத் தமிழ் மாநாட்டிலும் பங்கேற்று இன்று காலையிலே தாயகமாம் தமிழகத்திற்கு திரும்பினோம்.

தமிழ் ஓவியா said...

சென்னை விமான நிலையத்தில் ஒரு மாபெரும் வரவேற்பு. அந்த வரவேற்பு சிறப்பாக அமையவேண் டும் என்று அதற்கான எல்லா முயற்சிகளிலும் தன்னை ஒப்படைத்துக் கொண்டு, அதற்கான எல்லா பணிகளையும் நிறைவேற்றி வந்திருக்கக்கூடியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை எண்ணி நாமெல்லாம் இன்றைக்கு மகிழ்ச்சிக் கடலிலே திளைத்துக் கொண்டிருக்கிறோம். அதைத் தொடர்ந்து இந்தப் பாராட்டு விழா நிகழ்ச்சியையும், அவரே முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

இந்தப் பயணத்திற்காக புறப்பட்ட நேரம் எப்படிப்பட்ட நேரம் என்பது உங்களுக்குத் தெரியும். அதைத்தான் நம்முடைய பாலு அவர்கள் சுருக்கமாக குறிப்பிட்டுச் சொன்னார். நாங்கள் புறப்பட்ட நேரம் அமெரிக்காவிலே பல்வேறு மாகாணங்களில் புயல் வீசிய நேரம், அப்படிப்பட்ட நேரத்தில்தான் நாங்கள் புறப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு ஏற்பட் டது. அதிலும் குறிப்பாக அய்.நா. மன்றம் அமைந்தி ருக்கக்கூடிய மாநகரம் நியூயார்க் மாநகரம்.

அந்த மாநகரம், புயலில் சிக்கித் தவித்துக் கொண் டிருந்தது. ஏறக்குறைய 150 ஆண்டு காலம் அந்த நியூயார்க் நகரத்தில் மின்தடையே ஏற்பட்டது கிடையாது. ஆனால் அப்படிப்பட்ட மாநகரத்தில் ஏறக்குறைய அய்ந்து நாள், ஆறு நாட்கள் மின்தடை ஏற்பட்டிருந்தது. மின் தடை என்று சொன்னால், இங்கே ஜெயலலிதா ஆட்சியிலே 16 மணி நேரம், 18 மணி நேரம் ஏற்படுகிறதே அந்த மின்தடையைப் போலஅல்ல. நாள்முழுவதும் ஒரு இருண்ட மாநகர மாக அந்த நியூயார்க் நகரம் காட்சி அளித்துக் கொண்டிருந்தது.

அந்த நேரத்திலேதான் எங்களு டைய பயணம் அமைந்தது. கடந்த 29-ஆம் தேதி இந்தப் பயணத்திற்கு நாங்கள் தயாரானோம். ஆனால் விமானங்கள் ரத்து செய்யப் பட்ட காரணத் தால் அதற்குப் பிறகு ஒரு நாள் கழித்து 30-ஆம் தேதி நாங்கள் சென்னையில் இருந்து புறப்பட்டோம். அப்படி புறப்படுகிற நேரத்திலேகூட நியூயார்க்கில் போய் விமானம் இறங்குமா? என்கிற ஒரு கேள்விக் குறியோடு, கேள்விக் குறியோடு மட்டுமல்ல, இறங்கவே முடியாத ஒருநிலையிலே தான் நாங்கள் புறப்பட்டோம். இங்கிலாந்துக்கு 29 ஆம் தேதி புறப்பட வேண்டிய நாங்கள் ஒருநாள் தள்ளி 30-ஆம் தேதி புறப்பட்டு துபாய் போய்ச் சேர்ந்தோம். துபா யிலே இரண்டு மூன்று மணி நேரம் விமான நிலை யத்தில் காத்திருந்து அதற்குப் பிறகு இன்னொரு விமானத்தைப் பிடித்து லண்டன் மாநகர் சென்ற டைந்தோம்.

புயல் கடந்து பயணத்தை முடித்துவிட்டு வந்திருக்கிறோம்!

இலண்டனில் இருக்கக்கூடிய சில நண்பர்களைத் தொடர்பு கொண்டு இலண்டனில் இருந்து நியூ யார்க்கிற்கு எந்த விமானம் முதல் விமானமாக செல் கிறதோ, அந்த விமானத்திற்கு எப்படியாவது நாங்கள் செல்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தாருங்கள் என்று நாங்கள் கேட்டுக்கொண்டு, அங்கிருக்கக் கூடிய அந்த நண்பர்களும் அதற்கான ஏற்பாடுகளை முழு மூச்சிலே ஈடுபட்டு எங்களுக்கான பயணச் சீட்டுகளையெல்லாம் எடுத்துவைத்திருந்தார்கள்.

அதற்குப் பிறகு நாங்கள் லண்டனில் இரண்டு மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்து பிறகு நியூயார்க் சென்று இறங்கினோம். சுமார் 30 மணி நேரம் விமானத்திலேயும், விமான நிலையத்திலேயும் இருந்து எங்களுடைய நேரத்தை கழித்தோம். இது சாதாரணமான காரியமல்ல, அதுவும் பாலுவோடு 30 மணி நேரம் உடன் இருந்தேன் என்று சொன்னால் எப்படி இருந்திருக்கும் என்று அவருக்கும் தெரியும், இங்கிருக்கக் கூடிய தலைவர்களுக்கும் தெரியும். அய்ந்து நிமிடம் கூட ஒரு இடத்தில் அவர் உட்கார மாட்டார், நிற்கமாட்டார்.

அவரைப் பற்றி அறிந்த வர்களுக்கு நன்றாகத் தெரியும். அவரோடு 30 மணி நேரம் இருந்து அதற்குப் பிறகு 10 நாள்கள் அவரோடு இந்தப் பயணத்தை முடித்துவிட்டு வந்திருக்கிறேன் என்று சொன்னால் - அதுவே ஒரு பெரும் வெற்றி என்று நான் கருதிக்கொண்டிருக்கிறேன். அப்படிப் பட்ட ஒரு பயணத்தில் ஈடுபட்ட நேரத்தில் நாடு கடந்து, கடல் கடந்து என்று சொல்வதைவிட, புயல் கடந்து இந்தப் பயணத்தை நாங்கள் முடித்து விட்டு வந்திருக்கிறோம்.
கடந்த ஒன்றாம் தேதி நானும், நம் முடைய நண்பர் பாலு அவர்களும் அய்.நா. மன்றத் தினுடைய துணைப் பொதுச்செயலாளரை சந்தித்து, சுமார் 28 நிமிட நேரம் நாங்கள் உரையாடினோம். நாங்கள் சென்றபோது அய்.நா. மன்றத்திலே எந்த அலுவலகமும் கிடையாது. எங்களுக்கு நேரம் கொடுத்த அதிகாரி - அய்.நா. மன்ற துணைப் பொதுச் செயலாளர் அலுவலகம்தான் இயங்கிக் கொண்டி ருந்தது.

அதுவும் நாங்கள் வருவதற்காக திறந்து வைத்து காத்திருந்தார்கள். அய்.நா. மன்றத்தில் சாதாரணமாக யாரும் உள்ளே எளிய முறையில் நுழைந்து விட முடியாது. மிகுந்த கட்டுப்பாடு உண்டு. அந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் அந்த நேரத்தில் இல்லை. காரணம் எந்த அலுவலக மும் பணியாற்ற வில்லை. அதனால் தான் வீடியோ கேமராக்களை நாங்கள் கொண்டு செல்ல முடிந்தது.

தமிழ் ஓவியா said...

அந்த காட்சிகளைத்தான் நீங்கள் கண்டு களித்தீர்கள். ஆக 28 நிமிடங்கள் அவரோடு சந்தித்து, பாலு அவர்கள் சொன்னதைப்போல எல்லாப் பிரச்சினை களையும் எடுத்துச் சொன்னோம். இவ்வளவு பெரிய ஒரு கொடுமையான சூழ்நிலைகளிலே இயற்கைச் சீற்றத்தின் கொடுமைகளிலே, புயல் வீசிக் கொண்டி ருக்கக்கூடிய இந்த நேரத்திலேயே அதுவும் முதன் முதலாக நான்கு நாட்களுக்குப் பிறகு நியூயார்க் நகரத்திலே முதன் முதலில் போய் இறங்கிய விமானமும், நாங்கள் சென்ற அந்த விமானம்தான்.

இப்படியெல்லாம் சிரமத்தைக் கருதாமல் வந்து சேர்ந்திருக்கிறீர்களே இதில்இருந்தே உங்களுடைய தலைவரும், உங்களுடைய இயக்கமும் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் எந்த அளவிற்கு பற்றை யும், பாசத்தையும் வைத்திருக்கிறார்கள் என்பதை நான் தெளிவாக உணர்ந்து கொண்டேன் என்று அய்.நா. மன்றத்தினுடைய துணைப் பொதுச் செய லாளர் எங்களிடத்திலே பெருமையோடு குறிப் பிட்டுச் சொன்னார்கள்.

கலைஞர் ஆட்சி மீண்டும் ஏற்பட்டிருந்தால் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு முடிவு வந்திருக்கும்

அதைத் தொடர்ந்து இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்து அய்.நா. மன்றத்தின் ஆணை யத்திலே தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்திருந்தாலும், ஈழத் தமிழர் வாழ்விலே மிகுந்த ஈடுபாடு காட்டி வரக்கூடிய பாப்கேஷி, ஷெரட்பி ரேளன் ஆகியோர் செனட் சபைக்கு மீண்டும் தேர்ந் தெடுக்கப்பட்டிருப்பது ஈழத் தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டக்கூடிய செய்தியாக அமைந்தி ருக்கிறது என்று அந்தப் பேச்சுவார்த்தையின்போது நாங்கள் அங்கே பகிர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

தமிழ் ஓவியா said...

அதைத் தொடர்ந்து 6-ஆம் தேதி சுவிட்சர் லாந்து நாட்டிலுள்ள ஜெனீவாவில் அய்.நா. மனித உரிமை ஆணையத்தினுடைய தலைவராக இருக் கக்கூடிய செல்வி நவநீதம்பிள்ளை அவர்களைச் சந்தித்தோம். அப்படி சந்தித்த நேரத்தில் ஆக்கப் பூர்வமான செய்திகளையெல்லாம் நாங்கள் பகிர்ந்து கொண்டோம். பாலு அவர்கள் பேசும் போது தலைவரைப் பற்றி சொன்னார், தி.மு. கழகத்தைப் பற்றி இன்னொரு செய்தியை விட்டு விட்டார்.
நவநீதம் பிள்ளை அவர்கள் எங்களிடத்திலே வெளிப்படையாக ஒருசெய்தி யைச் சொன்னார். மீண்டும் தமிழ்நாட்டிலே கலைஞர் தலைமையில் ஆட்சி அமைந்திருந்தால் இன்னேரம் இந்தப் பிரச்சினைக்கு முடிவு வந்திருக்கும். (பலத்த கை தட்டல்) என்று கவலையோடு அந்த அம்மையார் சொன்னார்கள். இன்னும் சொல்லவேண்டுமென்று சொன்னால் நாங்கள் அமெரிக்காவிலே நியூயார்க் அய்.நா. மன்றத்தில் துணைப்பொதுச் செயலாளரை சந்தித்து விட்டு ஜெனீவா வில் இருக்கக்கூடிய மனித உரிமை ஆணையத்தின் தலைவரை சந்திப்பதற்கு எங்களுக்கு முதலில் நேரம் கிடைக்கவில்லை. எவ்வளவோ தொடர்பு கொண்டு முயற்சித் தோம். அந்த வாய்ப்பு எங்களுக்கு கிட்டவில்லை. அந்த வாய்ப்பு கிட்டவில்லை என்பதால் வேறு பணிகளில் நாங்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீர் என்று ஒருநாள் நம்முடைய நாடாளு மன்ற உறுப்பினர் சகோதரி கனிமொழி எங்களோடு தொலைபேசியிலே தொடர்பு கொண்டு இந்தப் பயண விவரங்களையெல்லாம் விசாரித்துக் கொண் டிருந்தார்.

சகோதரி கனிமொழி தொலைபேசியில் என்னோடு தொடர்புகொண்டு கூறிய செய்தி! அப் போது ஜெனீவாவைப் பற்றி என்னிடம் கேட்ட போது அங்கிருந்து எங்களுக்கு ஒப்புதல் செய்தி இன்னும் வரவில்லை என்று சொன்னபோது - இல்லை, இல்லை நான் அவர்களோடு தொடர்பு கொண்டிருக்கிறேன், உங்களுக்கு எப்படியாவது நேரம் தருவதாக ஒப்புதல் தந்திருக்கிறார்கள் என்று சொன்னார். அப்படி நேரம் தந்தால் நாங்கள் உடனே செல்வதற்கு காத்திருக்கிறோம் என்று சொன்னோம்.

அதற்குப்பிறகு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் சகோதரி கனிமொழி என்னோடு தொடர்பு கொண்டு, உங்களுக்கு நேரம் தந்துவிட்டார்கள் போய் பார்த்து விட்டு வாருங்கள் என்று அந்தச் செய்தியை சொன்னபோது உள்ளபடியே எங் களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. உடனே நானும், பாலுவும் விமானத்தில் ஒரு வேளை டிக்கெட் கிடைக்கவில்லை என்று சொன்னாலும் 6 மணி நேரம் காரிலேயே பயணம் செய்வதற்கு நாங்கள் தயாரானோம். நல்லவேளை விமான டிக்கெட் எங்களுக்குக் கிடைத்தது.

அதற்குப்பிறகு நாங்கள் செல்வி. நவநீதம் பிள்ளை அவர்களைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது அந்த டெசோ மாநாட்டின் தீர்மானங்களை எல்லாம் அங்கே வழங்கிய நேரத்தில் ஒரு குடும்பப் பாச உணர்வோடு எங்களிடத்திலே அவர் எல்லாப் பிரச்சினைகளை யும் கேட்டறிந்தார். நாங்கள் சொன்னதை பொறு மையாக - ஏறத்தாழ 30, 35 நிமிடம் அனைத்தையும் கேட்டு ``அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவரையில் இலங்கை அரசு அதை நிறை வேற்ற முன்வரவில்லை என்பதை நாங்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறோம் என்று சொன்னார்.

நம்முடைய சுப.வீரபாண்டியன் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னார்கள், உண்மைதான். ``டிசம் பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள்ளாக மனித உரிமை ஆணையத்தில் இருக்கக்கூடிய உறுப்பினர் கள் இலங்கைக்குச் சென்று அமெரிக்காவில் அய்.நா. மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்தை முழு அளவிற்கு நிறைவேற்றியிருக்கிறார்களா? என்று கண்டறிய ஆய்வு நடத்த இருக்கிறோம். அப் படி ஆய்வு நடத்துகிற அந்தப் பணியில் ஈடுபடுகிற போது நானே தலைமையேற்றுச் செல்ல முடிவு செய்திருக்கிறேன் என்று செல்வி. நவநீதம் பிள்ளை அவர்கள் சொன்னது உண்மைதான்.

ஆக அந்த நிலையிலே எங்களுடைய பேச்சு வார்த்தை முடிந் ததை இந்த நேரத்திலே குறிப்பிட்டுச் சொல்லி, நாங்கள் ஜெனீவா சென்றிருந்த நேரம் இலங்கை யில் நடைபெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல் - அதைப் பற்றி ஆய்வு செய்வதற்காக ஒரு மாநாடு நடந்திருக்கிறது. நாங்கள் சென்று வந்த நாளில்தான் முடிந்திருக் கிறது. அது முடிந்த இரண்டாவது நாளிலேதான் நாங்கள் அங்கு சென்றிருந்தோம். அப்போது அந்த விவரங்களையெல்லாம் நவநீதம் பிள்ளை அவர்கள் எங்களிடத்திலே தெளிவாகச் சொன்னார். அவர் அப்படி சொல்கிறபோது பட்டியலிட்டே குறிப் பிட்டுச் சொன்னார். நான் அப்போதே அவைகளை குறித்து வைத்துக் கொண்டேன்.

தமிழ் ஓவியா said...

30 ஆண்டு காலமாக போர் நடைபெற்றபோது பொது மக்கள் கொல்லப்பட்ட விவகாரம். அந்த விவகாரத்தைப் பற்றி உடனடியாக விசாரணை நடத்திட வேண்டும். அதற்குரிய நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும், நடவடிக்கை எடுப்பது மாத்திரமல்ல, அதற்குரிய தண்டனைகளையும் வழங்கிட வேண்டும். அதேபோல அரசியல் அதிகாரம் பங்கிடுவதில் தாமதமான சூழ்நிலையில் இருக்கிறது. இராணுவத் தினுடைய ஆக்கிரமிப்பு இவற்றை பற்றியெல்லாம் அங்கு ஆய்வு நடத்தி அந்த மாநாட்டிலே தம் முடைய கருத்துக்களையும் எடுத்து வைத்திருக் கிறார்கள்.

அந்த மாநாட்டிலே பல்வேறு நாடுகளில் இருந்து பல பிரதிநிதிகள் கலந்து கொண்டு - இந்தப் பிரச்சினை இன்றைக்கு பல்வேறு நாடுகளினுடைய கவலையை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறது என்ற செய்தியை எங்களிடத்திலே குறிப்பிட்டுச் சொன்னார்கள். ஆகவே நாங்கள் இவைகளையெல்லாம் அறிகிற போது, இதைப்பற்றியெல்லாம் நம்முடைய தலை வர் கலைஞர் அவர்கள் தன்னுடைய கட்டுரையிலே, கடிதத்திலே, அறிக்கையிலே சுட்டிக்காட்டியிருப் பதைப் போல ஒரு நம்பிக்கை ஒளி இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை, தலைவர் கலைஞர் அவர்கள் அதை தெளிவாக நமக்கு குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள் என்பதை நான் இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதைத் தொடர்ந்து லண்டன் மாநகரில் இங்கி லாந்து நாடாளுமன்ற கட்டடத்தில் ஒரு கூட்டம் நடக்கிறது என்று சொன்னால் அது சாதாரணமான விஷயமல்ல. இங்கிலாந்து நாடாளுமன்ற கட்டிடத்திலேயே இலங்கைத் தமிழர்களுக்காக ஆதரவு தெரிவிக்கக் கூடிய ஒரு மாநாடு நடந் திருக்கிறது என்று சொன்னால் அதுவே ஒருமிகப்பெரிய வெற்றி என் பதை நிச்சயம் நாம் உணர்ந்தாக வேண்டும்.

அங்கே நாடாளுமன்றக் கட்டிடத்திலே பிரித்தானிய தமிழர் பேரவை சார்பில் உலகத் தமிழர் பன்னாட்டுத் தமிழ் மாநாடு ஒன்றை நடத்தினார்கள். அந்த மாநாட்டிலே தி.மு.கழகத்தின் சார்பில் நானும், சகோதரர் டி.ஆர்.பாலுவும், கழகத்தின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.யும், வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனும் அதே போல விடு தலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமா வளவன் அவர்களும், இன்னும் சில கட்சிகளி னுடைய தலைவர்களும், அது மட்டுமல்ல; பிரிட் டன் நாட்டினுடைய பல்வேறு கட்சிகளினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதேபோல் பல் வேறு நாடுகளின் உலகத் தமிழர் பிரதிநிதிகள் அந்த மாநாட்டிலே கலந்து கொண்டு தங்களுடைய கருத் துக்களை எல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கி றார்கள் என்பதையும் நான் இந்த நேரத்திலே உங் களுக்கு குறிப்பிட்டுக் காட்ட கடமைப் பட்டிருக் கிறேன்.

தமிழ் ஓவியா said...

ஈழத்தமிழர் பிரச்சினையை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கொண்டு சென்று உரிய தீர்வு காண வேண்டும். இதுதான் தலைவர் கலைஞர் அவர்களுடைய நீண்ட கால ஆசை, நீண்ட கால எண்ணம் என்பதை யாரும் மறுத்திட முடியாது. அந்த முயற்சி வெற்றிபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் - சர்வதேசத்தையும் இலங்கைத் தமிழர் பிரச்சினை ஈர்த்திருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்றாக - எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக் கிறது.

அண்ணா, கலைஞர் ஆகியோருடைய முயற்சி வெற்றி பெற இருக்கிறது!

அய்.நா. மன்றம் ஈழத் தமிழர் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று சொல்லி இன்று நேற்றல்ல, ஏறக்குறைய 29 ஆண்டுகளுக்கு முன்பே 1983-லேயே ஒரு மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தலைவர் கலைஞர் அவர்கள் நடத்தி ஏறக்குறைய ஒரு கோடி கையெழுத்துக்களைப் பெற்று அன்றைக்கே ஐ.நா. மன்றத்திற்கு அனுப்பி வைத்த தலைவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் என்பதையும் நாம் மறந்து விட முடியாது.

இன்னும் சொல்லவேண்டுமென்று சொன்னால் 1961-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற தி.மு.கழக பொதுக்குழுவிலே பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அப்படி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முக்கியமான தீர்மானம் - பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களால் கொண்டு வரப்பட்ட தீர்மானம். அந்தத் தீர்மானம் அண்ணா அவர்களே கைப்பட எழுதிக் கொண்டு வரப்பட்டது.

தமிழ் ஓவியா said...

அந்தத் தீர்மானம் என்ன தீர்மானம் என்று சொன்னால் அய்.நா. மன்றத்திற்கு இலங்கைத் தமிழர் பிரச்சினையை கொண்டு செல்ல வேண்டும் என்கிற தீர்மானம். அய்.நா. மன்றம் உடனடியாக தலையிட வேண்டும் என்று சொல்லக்கூடிய தீர்மானம். அண்ணா அவர்களால் எழுதித் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அன்றைக்கு முன் மொழிந்தவர் யார் என்று கேட்டால் நம் முடைய தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

தமிழ் ஓவியா said...

அதை வழிமொழிந்தவர் மதிப்பிற்குரிய கே.ஏ.மதி யழகன் ஆவார். எனவே, அண்ணாஅவர்களுடய எண்ணமும், கலைஞர் அவர்களுடைய முயற்சியும் இன்றைக்கு அய்.நா. மன்றம் வரை நாங்கள் சென்றுவந்த காரணத்தால் ஓரளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறது. டெசோ மாநாட்டுத் தீர்மானங் களையும், தலைவர் கலைஞர் அவர்கள் தயாரித்த அந்த அறிக்கையையும் கொண்டு சென்று நாங்கள் வழங்கியிருக்கிறோம் என்று சொன்னால் தூதுவர் களாக மட்டுமல்ல; துரும்புகளாக நானும், பாலு வும் சென்று அந்தப் பணியை ஓரளவிற்கு நிறை வேற்றி வந்திருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட்டுக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆகவே காலையிலே விமான நிலையத்திலே தந்த வரவேற்பு, அதைத் தொடர்ந்து அண்ணா அறிவா லயத்திலே கலைஞர் அரங்கத்திலே நடைபெறு கின்ற இந்தப் பாராட்டு விழா இவைகள் எல்லாம் ஏதோ பெரும் பணியை நிறைவேற்றி விட்டோம் என்ற நிலையிலே அல்ல, இன்னும் பல பணிகள் நமக்கு காத்திருக்கிறது. அதையும் தொடர்ந்து நாம் ஆற்றிட வேண்டும் என்பதற்காகத்தான் வரவேற்பு நிகழ்ச்சியும், இந்த பாராட்டு விழாவும் நடை பெற்றுக் கொண் டிருக்கிறது என்பதை நான் தெளி வாக உணர்ந்திருக்கிறேன். பாலு அவர்கள் சொன் னார் எங்களுக்கு இந்தப் பாராட்டு விழா - வரவேற்பு தேவைதானா என்றுகூட ஒரு கேள்வியைக் கேட் டார். நான் அதற்காக ஒருசெய்தியை குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

பாலுவுக்காக மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் நான் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன். தான் பெற்ற குழந்தையிடம் ஒருதாய் ஒரு குறிப்பிட்ட பொருளை எடுத்துவரச் சொல்லி, அதற்குப் பிறகு அந்தக் குழந்தை அந்தப் பொருளை எடுப்பதற்காக தேடிக் கண்டுபிடித்து அந்தப் பொருளை எடுத்து வந்து தாயிடம் கொடுத்தால், தாய் எப்படி அந்தப் பிள்ளையை உச்சிமுகர்ந்து வரவேற்பாரோ அதைப் போல இன்றைக்கு தலைவர் கலைஞர் அவர்களும், பொதுச் செயலாளர் பேரா சிரியர் அவர்களும், எங்களை இன்றைக்கு உச்சி முகர்ந்து வரவேற்றிருக்கிறார்கள் என்று சொல்லும் போதுதான் இந்தப் பாராட்டு விழாவும், இந்த வரவேற்பு நிகழ்ச்சியிலும் நாங்கள் பங்கேற்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக் கிறோம்.

சென்ற காரியத்தை முடித்துவர வேண்டும் என்பதில் தலைவர் கலைஞர் உறுதியாக இருந்தார்!

அதுமட்டுமல்ல, நான் எத்தனையோ முறை தலைவர், அவர்களிடத்திலே நேரடியாக அல்லது தொலைபேசி மூலமாக பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது உண்டு. சட்டமன்ற உறுப்பினராக இருந்து பேசியிருக்கிறேன். மேயராக இருந்து பேசியிருக்கிறேன், இளைஞரணியின் செயலாளராக இருந்தும் பேசியிருக்கிறேன். துணைச் பொதுச் செயலாளராக இருந்தும் பேசியிருக்கிறேன், பொரு ளாளராக இருந்தும் இப்போதும் எனது கடமை யை ஆற்றிட பேசிக் கொண்டிருக்கிறேன்.

ஏன் அவர் தலைமையில் அமைந்த அமைச்சரவையிலே அமைச்சராக இருந்து பணியாற்றுகிற நேரத்திலும் பேசியிருக்கிறேன். துணை முதலமைச்சர் பொறுப் பில் இருந்தும் பேசியிருக்கிறேன். இப்படி பலநேரங்களில் பல ஊர்களுக்கு, பல மாவட்டங்களுக்கு, பல மாநிலங்களுக்கு, பல நாடுகளுக்கு நான் செல்கிற போது தொலைபேசி யிலே பேசும்போது நல்ல செய்திகளை சொல் லும்போது மகிழ்ச்சியடைந்திருக்கிறார்.

அதற்காக அதிக அளவிற்கு சந்தோஷப்பட்டிருக்கிறார் ஆனால் பேசும்போது, எல்லாம் ஒரு கேள்வியைக் கேட்பார். எப்போது ஊருக்கு வரப்போகிறாய்? என்று கேட்பார் ஆனால் இந்த முறை அப்படி கேட்கவில்லை. ஏனென்றால் சென்ற காரியத்தை முடித்து விட்டு வரவேண்டும் என்ற நிலையிலே அந்தக் கேள்வியை தலைவர் அவர்கள் கேட்க வில்லை.

நான் அதையும் தாண்டி சொல்கிறேன். அமெரிக்காவில் நியூயார்க்கிலே அய்.நா. மன்றத்திலே சந்தித்து விட்டு அதற்குப் பிறகு ஜெனீவாவிலே பணியை முடித்து விட்டு பிறகு தலைவர் அவர் களோடு நானும், பாலுவும் தொலைபேசியிலே பேசுகிறபோது, தலைவர் அவர்கள் சொன்னார்கள் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனப்பா - மிகவும் பூரிப்பாக இருக்கிறேனப்பா! இதைவிட எனக்கு வேறு எதுவும் தேவையில்லை என்று சொன்னாரே, அப்போதுதான் தலைவர் கலைஞர் அவர்கள் உள் ளத்திலே இலங்கைத் தமிழர் களுடைய பிரச்சினை எந்த அளவிற்கு ஆழமாக பதிந் திருக் கிறது என்பதை - அவரை விட்டால் இதைத் தீர்ப்பதற்கு நாதியில்லை என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம்.

நிறைவாக நான் சொல்ல விரும்புகிறேன், தலை வர் கலைஞர் அவர்கள் பெற்றிருக்கிற லட்சோப லட்சம் தொண்டர்களில் - லட்சோபலட்சம் உடன் பிறப்பு களில் ஒரு வனாக நான் ஒன்றைக் குறிப்பிட விரும் புவது, இலங்கைத் தமிழர்களுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழர்களின் பாது காப்பு அரணாக விளங்கக் கூடிய வர்தான் தலைவர் கலைஞர் அவர்கள். ஆகவே நம்முடைய பயணம் நிற்காது! பாதை மாறாது! என்று கூறி விடை பெறுகிறேன்.

- இவ்வாறு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.