Search This Blog

27.11.12

ஜாதியை ஒழிக்காமல், சுதந்திரம், சமத்துவம் என்பதெல்லாம் ஏமாற்று வேலையே!

நவம்பர் 26 
 
நவம்பர் 26 என்பது மறக்க முடியாத பொன்னாள். இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமை பெற்றது நவம்பர் 26 இல் (1949) என்பதற்காக அல்ல - இந்த நவம்பர் 26 இல் (1957) ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவை எரிக்கும் போராட்டத்தை நடத்தினார் தந்தை பெரியார்.

சட்டத்தை எரித்தால் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை என்ற அவசர சட்டம் கொண்டுவந்தும் அதனைக் கிஞ்சிற்றும் சட்டை செய்யவில்லை கருஞ்சட்டைத் தோழர்கள்.

தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கை எந்த வகையில் கழகத் தொண்டர்களை உருவாக்கி யுள்ளார் என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

மூன்று ஆண்டுகளுக்கோ, பத்து ஆண்டு களுக்கோ, நாடு கடத்தலுக்கோ, தூக்குக்கோ மற்றும் பிரிட்டிஷ்காரன், காங்கிரஸ்காரன் கிளர்ச்சியின்மீது கையாண்ட எவ்விதமான கொடிய, தீவிரமான அடக்கு முறைகள் நம்மீதும், கழகத்தின் மீதும் பிரயோகித்தாலுங்கூட, அவைகளுக்குப் பயப்பட்டு என் லட்சியத்தையோ, திட்டத்தையோ மாற்றிக் கொள்ளப் போவதில்லை.

கழகத் தோழர்களே! தீவிர லட்சியவாதிகளே, நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்து விடவேண்டியதில்லை, பயந்துவிட மாட்டீர்கள்!
சட்டத்தைப் பார்த்து பயந்துவிட்டதாக கெட்டப் பேர் வாங்காதீர்கள்!
ஆகவே, இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற பெயர் கொடுங்கள் என்று தந்தை பெரியார் அறிக்கை வெளியிட்டார்.

தந்தை பெரியார் அவர்களின் கட்டளையை ஏற்று 10 ஆயிரம் கழகத் தோழர்கள் போர்க் களத்தில் குதித்தனர் என்றாலும், 4000 பேர்கள் மட்டும் கைது செய்யப்பட்டனர். நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்கள் கூடப் போராட்டத்தில் குதித்தனர். சிறையில் பிறந்த குழந்தைக்குச் சிறைப் பறவை என்றுகூடப் பெயர் சூட்டப்பட்டதுண்டு.

பலர் சிறையில் பலியானார்கள் - சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு விடுதலையாகி வந்த சில நாள்களில், சில மாதங்களில்  மரணமடைந்தனர் சிலர்.

1957 நவம்பர் 26 இல் எந்தக் காரணத்தை முன்னிட்டு தந்தை பெரியார் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தச் செய்தார்களோ அந்தக் காரணம் இன்னும் நிலுவையில் இருக்கத்தான் செய்கிறது.

தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக நடத்திய (1973 டிசம்பர் 8, 9) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக, ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

தீண்டாமை என்பது ஜாதியின் விளைவாகும். ஜாதியைக் காப்பாற்றிக் கொண்டு தீண்டாமை ஒழிப்பு என்பது நிஜத்தைவிட்டு நிழலோடு மோதுவதாகும்.

இன்றுவரை கோவில் கருவறைகளில் பார்ப்பனர் தவிர்த்த மற்றவர்கள் அர்ச்சகர் ஆகக் கூடாது என்பதெல்லாம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள மதப் பாதுகாப்புப் பிரிவுகளே!

இன்றைக்கும் ஜாதி வெறியர்கள் ஜாதியை தன்னலத்துக்கும், தலைவர்கள் ஆவதற்கும், அரசியலுக்கும் பயன்படுத்தி வருவதை நாடு கண்டுகொண்டுதானே இருக்கிறது.

55 ஆண்டுகளுக்குமுன் தந்தை பெரியார் அறிவித்து நடத்தப்பட்ட போராட்டம் இன்றைக்கும் தேவைப்படும் ஒரு நிலை - இந்தியா ஜனநாயக நாடு என்று சொல்லப்படுவதற்குத் தகுதியுடையது அல்ல. சோசலிசம்பற்றிப் பேசுவதற்கு, அருகதை உடையதும் அல்ல.

முற்போக்குச் சக்திகள் இதில் கவனம் செலுத்துவார்களாக!

ஜாதி என்பது பிறவியில் பேதம் பேசும் கீழ்க் குணமாகும். இதனை ஒழிக்காமல், சுதந்திரம், சமத்துவம் என்பதெல்லாம் ஏமாற்று வேலையே!


                --------------------” விடுதலை” தலையங்கம் 26-11-2012

20 comments:

தமிழ் ஓவியா said...


இரு பயிற்சிகள்!


ஏடுகளில் இன்று இரண்டு செய்திகள் வெளிவந்துள்ளன. ஒன்று முதலமைச்சர் ஆணைப்படி மனநல மும், உடல்நலமும் பேணு வதற்காக 45 யானை களுக்குச் சிறப்பு நுழைவு முகாம் இன்று தொடங் குகிறது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களி லிருந்தும் யானைகள் லாரிகள்மூலம் முகாம் களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன என்பது ஒரு செய்தி.

இன்னொரு செய்தி இன்றைய நாளேடுக ளில் வெளிவந்துள்ளது.

அர்ச்சகர்களுக்குப் புத்தொளி பயிற்சி முகாம் - காஞ்சிபுரத்தில் தொடக்கம் என்பது தான் அந்த இன் னொரு செய்தி.

இதுவும் தமிழக முதல்வரின் உத்தரவுப் படிதான். தமிழகக் கோவில்களில் அர்ச்ச கர்களாகப் பணிபுரி வோர்க்கு புத்தொளி பயிற்சி முகாம் 42 நாள் கள் நடத்தப்படுகிறது.

முன்னது 48 நாள் கள்; பின்னது 42 நாள் கள். கிட்டத்தட்ட ஒரே அளவில் புத்தாக்கப் பயிற்சி முகாம்கள்.

சபாஷ், நல்ல நட வடிக்கைதான் - நல்ல ஒற்றுமைதான்!

யானைக்கு மதம் பிடிக்கும்; இந்த அர்ச்ச கர்களுக்கும் மதம் (இந்து) பிடிக்கும். ஆக, இரு வகைப் பிரிவினர்க் கும் பிடித்தது ஒன்று - மதம்தானே!

மதம் பிடித்ததால் தானே இதே காஞ்சி புரத்தில் மச்சேந்திர நாதன் கோவில் அர்ச்ச கன் தேவநாதன் கோவிலுக்குத் தரிசிக்க வந்த பெண்களை வேறு வகையில் தரிசித்தான்!

பெரியவாளுக்கு மதம் பிடித்ததால்தானே இதே காஞ்சிபுரம் வரத ராஜபெருமாள் கோவி லில் பட்டப் பகலில் சங் கரராமன் படுகொலை செய்யப்பட்டார்.

யானைக்கு அய்ந் தறிவு; அதனால் மதம் பிடித்துத் துவம்சம் செய் கிறது. ஆறு அறிவு கொண்ட மனிதனுக்கு மதம் பிடித்தால் ஓரறிவு குறைந்து அய்ந்தறிவு யானையாகி துவம்சம் செய்கிறான்.

இவற்றையெல்லாம் நல்லறிவால் சிந்தித்து நமது முதலமைச்சர் ஒரே நாளில் இப்படி இரு அறிவிப்புகளைக் கொடுத்துள்ளார்! பலே! பலே!!

யானைக்கு மதம் பிடித்தால் ஆபத்து! மனி தனுக்கு மதம் பிடித் தாலோ பேராபத்து!! - மயிலாடன் -26-11-2012

தமிழ் ஓவியா said...


தருமபுரியில் தாழ்த்தப்பட்டோர் காலனிகள் தீ வைப்பு!

ஜாதி அடிப்படையில் அணி திரட்டுவதை முறியடிப்போம் - ஒத்த கருத்துள்ளோர் ஒன்று திரளுவோம்!

பொதுத் திட்டத்தின்கீழ் ஓர் அணியாக செயல்படுவோம்!

திராவிடர் கழகம் கூட்டிய ஒத்த கருத்துள்ளோர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

சு. அறிவுக்கரசு, கலி. பூங்குன்றன், பொள்ளாச்சி உமாபதி, டாக்டர் இரவீந்திரநாத், பேரா. சுப.வீரபாண்டியன், தாமரைச்செல்வன் எம்.பி., தமிழர் தலைவர் கி. வீரமணி, பீமாராவ் எம்.எல்.ஏ., பாலாஜி, முனைவர் பெ. ஜெகதீசன், தருமபுரி ஊமை செயராமன் ஆகியோர் உள்ளனர்.

சென்னை, நவ.26- ஜாதி - தீண்டாமையை ஒழிக்கும் பணியில் ஒத்த கருத்துள்ளவர்கள் ஒன்றிணைந்து பொதுத் திட்டத்தின் அடிப்படையில் செயல்படுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களில் ஜாதி வெறியர் களால் தாழ்த்தப்பட்டவர்களின் குடி யிருப்புகள் கொள்ளையடித்தும், தீ வைத்து எரித்தும் நாசம் செய்யப்பட்டன. 250-க்கும் மேற்பட்ட வீடுகள் (7.11.2012) சாம்பலாயின. பல கோடி ரூபாய் சொத்துக்கள் இழக்கப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில் ஜாதி - தீண் டாமை ஒழிப்பு என்பதை முன்னெடுத்துச் செல்லவேண்டியது காலத்தின் கட்டாய மாகிவிட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திரா விடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கழகப் பொறுப்பாளர்களுடன் நேரில் சென்று உண்மை நிலவரத்தை அறிந்து வந்தார் (14.11.2012).

தமிழ் ஓவியா said...

டிசம்பர் 9 ஆம் தேதி தருமபுரியில் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெறும் என்றும் அன்றே அறிவித்தார். அதற்கான பணிகளைத் தோழர்கள் வேகமாக செய்துகொண்டும் இருக்கின்றனர்.

நேற்று மாலை சென்னை பெரியார் திடலில் தருமபுரி தீ வைப்பு - பின்ன ணியும்- தீர்வுகளும் எனும் தலைப்பில் சிறப்புப் பொதுக்கூட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர்.

ஒத்த கருத்துள்ளோர் கூட்டம்

அதற்கு முன்னதாக நேற்று மாலை 7 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் இப்பிரச்சினையில் ஒத்த கருத்துள்ள கட்சிகளின், அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது.

தி.மு.க. சார்பில் தருமபுரி மக் களவை உறுப்பினர் தாமரைச் செல் வன், பொள்ளாச்சி உமாபதி, இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) சட்டப் பேரவை உறுப்பினர் பீமராவ், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீர பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர்

பாலாஜி, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் இரவீந்திர நாத், மேனாள் துணைவேந்தரும், திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவருமான பேராசிரியர் பெ. ஜெகதீசன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.

தெரிவிக்கப்பட்ட தகவல்கள் - கருத்துகள்!

1. திட்டமிட்ட வகையில் இந்த வன்முறை அரங்கேற்றப் பட்டுள்ளது.

2. பணம், நகை, பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டு வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. இழப்பு மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய்க்குமேல்.

3. பயின்று கொண்டு இருக்கக்கூடிய மாணவர்களின் புத்தகங்கள், ஆவணங்கள் சாம்பலாகியுள்ளன.

இன்னும் எத்தனை தலைமுறை தேவைப்படும்?

4. ஒரு தலைமுறை உழைத்து வீடு கட்டி, ஓரளவு பொருளாதார வளர்ச்சியும் பெற்று வளர்ந்துள்ள எங்களின் முழு வாழ்வும் நாசமாக்கப்பட்டு விட்டது. எதிர்காலம் இருட்டாகவே உள்ளது. மீண்டும் நாங்கள் தலையெடுக்க இன்னும் எத்தனைத் தலைமுறை உழைக்கவேண்டுமோ என்று கண்ணீர் உகுத்தனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

5. 24 மணிநேரமும் கியூ பிராஞ்சு காவல் துறையால் கண்காணிக்கப்படும் அந்தப் பகுதியில் இப்படி திட்டமிடப்பட்ட வன்முறை நடத்தப்பட்டது எப்படி?
ஆறு மணிநேரத்துக்குமேல் நடைபெற்றுள்ள இந்த வன்முறையைக் காவல்துறை தடுக்கத் தவறியது ஏன்?

தமிழ் ஓவியா said...

தமிழக அரசு இந்தப் பிரச்சினையை அரசியல் கண்கொண்டு பார்க்கக்கூடாது. சட்டப்படியான நடவடிக் கைகளை போதிய அளவில் எடுக்கத் தவறியுள்ளது.

ஜாதி வெறியைத் தூண்டும் பேச்சுகள்

6. ஜாதி வெறியைத் தூண்டும் பேச்சுகளை சில ஜாதிய அமைப்புகளின் முன்னணித் தலைவர்கள் பேசி வருவதும் இந்த வன்முறைக்கு முக்கிய காரணமாகும். இவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

7. அரசியல் பின்னணியும், நோக்கமும் இதில் முக்கிய இடம்பெற்றுள்ளன.

தாழ்த்தப்பட்டோர் ஓர் அணி - தாழ்த்தப்பட்டோர் அல்லாத ஓர் அணியை உருவாக்கும் போக்கு (Polarisation) காணப்படுகிறது. இது ஓர் ஆபத்தான போக்காகும். இலட்சியங்கள், கொள்கைகள், கோட் பாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பிறப்பின் அடிப் படையில் பேதம், பிளவு பேசும் ஜாதியை முன்னிறுத்துவது கடைந்தெடுத்த பிற்போக்குத்தனம் மட்டுமல்ல, மனிதப் பண்புக்கு முற்றிலும் விரோதமும் ஆகும்; இதனை முறியடித்தாகவேண்டும்.

8. தாழ்த்தப்பட்டவர்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியும் ஜாதி வெறியாளர்களின் மத்தியில் பொறாமை உணர்வினை வளர்த்துள்ளது.

9. இவ்வளவு பெரிய கொடுமை நடந்ததற்குப் பிறகும் அது குறித்து ஒரு கண்டனத்தைக் கூடத் தெரிவிக்கா மலும், வருத்தம் தெரிவிக்காமலும் அதேநேரத்தில் அதனை நியாயப்படுத்துவோர் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

10. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இட ஒதுக்கீட்டில் ஜாதி அளவுகோல் கூடாது என்று குரல் கிளம்புவதைக் கவனிக்கத் தவறக்கூடாது. அதற்கு இடமின்றி பிரச்சாரப் பணி தொடரவேண்டும்.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், உயர் ஜாதியினர் பெற்று இருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு இவற்றோடு ஒப்பிடும்போது இன்னும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளனர்.

சமநிலை - உரிய அளவினை எட்டும் வகையில் ஜாதிய அளவுகோல் தேவைப்பட்டே தீரும்.

அதேநேரத்தில் இட ஒதுக்கீடுக்கு மட்டுமே ஜாதி அளவுகோல்; மற்ற எந்தப் பிரச்சினையிலும் ஜாதிய உணர்வு தலை எடுப்பது அனுமதிக்கப்படக் கூடாது. மருந்தில் விஷம் சேர்ப்பதுபோன்றது இட ஒதுக்கீட்டில் ஜாதி அளவுகோலாகும்.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோர்க்கு குறிப்பிட்ட அளவில் (Inter-Caste Quota) சட்ட ரீதியாக அளிக்கப்படவேண்டும்.

11. தந்தை பெரியார் இறுதியாக 1973 டிசம்பரில் நடத்திய மாநாட்டில் முக்கியமாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது (Untouchability) என்ப தற்குப் பதிலாக ஜாதி (Caste) ஒழிக்கப்படுகிறது என்று திருத்தம் செய்யப்படவேண்டும் என்ற தீர்மானம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவேண்டும்.

12. சென்னை பெரியார் திடலில் இன்று (25.11.2012) வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் ஜாதி மறுப்பு, மத மறுப்பு, துணைவரை இழந்தோர், மண முறிவு பெற்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான இணையர் தேடும் மன்றல் விழாவினை தமிழ்நாட்டின் இதரப் பகுதிகளிலும் விரிவுபடுத்தினால் மிகுந்த பயன் அளிக்கும் - நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தும்.

13. உலகக் காதலர் தினமான பிப்ரவரி 14 - இந்துத்துவா அடிப்படைவாதிகளாலும், ஜாதி வெறியர் களாலும் கடுமையாக எதிர்க்கப்படுகிறது - விமர்சிக்கப் படுகிறது. அந்த நாளில் காதலை ஊக்குவிக்கும் நாளாக அனுசரிக்கலாம். ஜாதி ஒழிப்பு - காதல் ஊக்குவிப்பு நாளாக அனுசரிக்கலாம்.

14. ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பினை முன்னிறுத்த ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்துக் கூட்டு இயக்கமாக நடத்தவேண்டும்.

15. டிசம்பர் 9 ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் தருமபுரியில் நடத்தப்பட உள்ள ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் ஒத்த கருத்துள்ளவர்கள் பங்குகொள்ள அழைப்பு விடுத்து, ஏற்பாடு செய்தல்.

16. மீண்டும் டிசம்பர் 3 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, மீண்டும் ஒத்த கருத்துள்ள கட்சிகளின், இயக்கங்களின், அமைப்புகளின் பிரதிநிதிகளை பெரியார் திடலில் கூட்டி, கருத்துருவாக்கத்தின் அடிப்படையில் பொதுத் திட்டம் ஒன்றை உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
26-11-2012

தமிழ் ஓவியா said...


புதுவையில் 69 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்


தமிழர் தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

திராவிடர் கழக மாநாடு புதுவையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க புதுவை சென்ற தமிழர் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும். நாள் ஒன்றுக்கு ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மத்திய அரசுக்கு புதுவை மாநில அரசு வட்டி செலுத்தி வருகிறது. கழுத்தை நெரிக்கக் கூடிய அளவுக்கு இது உள்ளது. மாநில அரசின் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல, தமிழ்நாட்டைப் போல புதுவையிலும் 69 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிட உரிய முறையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும். அதற்கான நடைமுறைகளை மாநில அரசு மேற்கொள்ளவேண்டும்.

அதேபோல, புதுவையிலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக மாநில அரசு சட்டம் இயற்றவேண்டும்.

மாநிலத் தகுதி

மத்திய அரசு தென்னக மாநிலங்களில் நிலவும் மின் பற்றாக் குறையைப் போக்கிட உரிய மின் வழித்தடத்தை அமைக்கவேண்டும். வடநாட்டில் பெருத்த வெள்ளம் ஏற்பட்டு கடலில் சென்று தண்ணீர் வீணாகிறது. இதற்காக நதிகளை இணைக்க வலியுறுத்துவதைப்போல மின்சாரத்தையும் மிகையாக உள்ள இடங்களில் இருந்து உபரியாக உள்ளதை மற்ற மாநிலங்கள் பயன்படுத்தும் வண்ணம் தென்னக மாநிலங்களில் மக்களுக்குப் பயன்பட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

காவிரி நதிநீர்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பும், கெஜட் செய்யாமல் இருக்கிறது. அரசிதழில் வெளியிட்டால்தான் சட்ட வலிமை ஏற்படும். புதுவை மாநிலம் காரைக்கால் பகுதிகளுக்கு 5 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும் உரிய பங்கு நியாயமான ஆதங்கமாகத்தான் இருக்கிறது.

எனவே, மேற்கண்ட கோரிக்கைகளை தீர்மானங்களாக மாநாட்டில் நிறைவேற்றி இருக்கிறோம். இதனை மத்திய - மாநில அரசுகள் நிறைவேற்றவேண்டுமென தமிழர் தலைவர் கேட்டுக் கொண்டார்.

உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர்கள் துரை. சந்திரசேகரன், வீ. அன்புராஜ், புதுவை மாவட்டத் தலைவர் சிவ. வீரமணி ஆகியோர் இருந்தனர்.

தமிழ் ஓவியா said...


எக்கணமும் சிக்கனமே சிறந்தது!


வாழ்க்கையில் சிக்கனம் என்பது எக்கணமும் தேவை!

பேச்சில் சிக்கனம், நேரத்தை அனாவசியமாகச் செலவிடுவதைக் குறைத்து, பயனுறு வகையில் செலவிடும் காலச் சிக்கனம் தலையாயது; செலவிடுவதில் மட்டும் பொருள் சிக்கனம் மட்டும்தான் சிக்கனம் என்ற ஓர் எண்ணம் பரவலாக உள்ளது. அது ஏற்கத்தக்கது அல்ல. குழந்தைப் பேற்றில்கூட சிக்கனம் என்பதன் வெளிப்பாடுதான் குடும்பக் கட்டுப்பாடு என்ற அளவான குடும்பம் வளமான வாழ்வு என்பதன்மூல காரணம் ஆகும்! பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! என்று வாழ்த்தி விடுபவர்கள், கடைசியாக எச்சரிக்கிறார்கள், பதினாறு என்றால் குழந்தைகள் என்று எண்ணி, 16 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முயலாதீர்கள்; மாறாக, பதினாறு பேறுகள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என்று விளக்கம் கூறுகிறார்கள்!

சொல்பவர்கள் எதை நினைத்துச் சொல்கிறார்கள் என்பதைவிட, புரிந்துகொள்பவர்கள் எப்படிப் புரிந்துகொண்டு செயல்படுகிறார்கள் என்பதே முக்கியம்.

திருமணங்களில் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை, வசதி அதிகம் இல்லாத குடும்பத்தவர்கள்கூட, போலிப் பெருமை, வெற்று ஜம்பம், வீண் பெருமை இவைகளை எண்ணி கடன் வாங்கியாவது ஆடம்பர மண்டபங்களில் ஏற்பாடு செய்து, அதிகமானவர்களுக்கு அழைப்புகளை அனுப்பி, செலவு செய்து நடத்துகின்றனர்; டம்பாச்சாரிகளாக செலவழிக்கின்றனர்.

இதில் பெண் வீட்டுக்காரர் செலவு என்று அவர்கள் தலையில் இச்சுமையை ஏற்றி, கழுத்தை ஒடிப்பதுபோல அவர்கள் வாழ்க்கையை ஒடித்து விடுகிறார்கள் - பல திருமணங்களில்!

அழைப்பிதழ்கள் எளிமையாக இருந்தால் போதாதா? தகவல் தரத்தானே அழைப்புகள்? அதில் தேவையான விவரங்கள் இருந்தால் மட்டும் போதுமே!

அதற்கு எத்தனை எத்தனை டிசைன்கள், ஒலிப்பதிவில் தங்கள் குரலை ஒலிக்கச் செய்து, நேரில் அழைக்க திறக்கும்போதே நாதஸ்வர ஓசையுடன் கூடிய அழைப்பு - இது ஒன்று சுமாராக 150, 200 ரூபாய்கள் இருக்குமே! ஒரு புத்தகத்தைப் புரட்டுவதுபோல ஏழெட்டுப் பக்கங்கள்! அழைப்பிதழைப் பெறும் எவரும் அதைப் பாதுகாத்து, புத்தக அலமாரியிலா வைக்கப் போகின்றார்கள்? அல்லது பூஜை அறையில் (பக்தர்களாக இருந்தால்) வைத்து பூஜிக்கப் போகிறார்களா? என்னே விசித்திரம் - ஆடம்பர வெளிச்சம்!

திருமண மண்டபங்கள் பிடிக்க 6 மாதங்கள் முன்பே அலைச்சல், பல லட்ச ரூபாய்கள் அதற்கு வாடகைக் கட்டணம்!

சமையல் கலைஞர்கள், அறுசுவையில் தொடங்கி, லட்சக்கணக்கில் விருந்து செலவுகள் -

பசித்துச் சாப்பிடுவதோ,

தேவைக்கேற்ப சாப்பிடுவதோ,

உடல்நலத்தைப் பாதுகாக்க (அளவீடு)

உதவும் வகையிலோ, சாப்பிடுவதோ அற்ற

வீண் விரய விருந்துகள்

படைக்கும் நிலை புகழ் வாய்ந்த பாடகருக்கு லட்சக்கணக்கில் கொடுத்து, எவரும் கேட்பதில்லை; ரசித்துக் கேட்கும் சூழ்நிலையும் அங்கு இருப்பதில்லை. வெறும் ஒலிநாடா போதாதா?

ஒரு நாள் மட்டுமல்ல, இரு நாள், பலமான காலை, முற்பகல் (பகல்கூட அல்ல) பசியில்லா விருந்து - அதில் வீணாகி இலையோடு கொட்டும் பண்டங்கள் அளவு வர்ணிக்க முடியாத கொடுமை!

மணப்பெண் வரவேற்புக்கு பியூட்டி பார்லர் சென்று சிங்காரம் செய்ய, ஆயிரக்கணக்கில் செலவு செய்யப்படுகிறது. (கிராமங்களில்கூட இத்தொற்றுநோய் பரவி) இயற்கை அழகான பெண்களை அலங்கோல உருவமாக்கிட செலவு - என்னே கொடுமை! அடடா!!

இப்படி திருமணச் சிக்கனம் மிகவும் தேவை!

1976 இல் 100 இலைகளுக்குமேல் கூடாது என்ற நெருக்கடி காலம் மீண்டும் வராதா என்று நெருக்கடி காலத்தை விரும்பாதவர்களே, விரும்பும் அளவுக்கு அது தள்ளி விடுகிறதே!

அந்தஸ்து வெளிச்சத்திற்காக இப்படி ஒரு வீண் செலவுகளை நிறுத்தும்போதுதான் நாமும் உருப்படுவோம்; நாடும் உருப்படும்.

இன்று (26.11.2012) உலகச் சிக்கன நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


இழிநிலை


உலகெங்கும் உள்ள மக்கள் விஞ்ஞான அறிவியல் துறையில் தீவிர முன்னேற்ற மடைந்து கடவுள்களிடம் போட்டியிட்டு வருகையில், தமிழன் மட்டும் இன்னும் மாட்டு மூத்திரம் குடித்து, மோட்சம் போக எண்ணும்படியான காட்டுமிராண்டியாய் மானமற்று வாழ்வதேன்? புத்தரின் அறிவுப் பிரச்சாரத்தைக் கைவிட்டதன் பயனல்லவா இந்த இழிநிலை! (விடுதலை, 10.8.1961)

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்


மன்றல் 2012 நிகழ்வும் - வேண்டுகோளும்!

அய்யா வணக்கம்.

மன்றல் 2012 என்ற நிகழ்ச்சி பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி தமிழகம் மட்டுமல்ல, இந்தி யாவிற்கே எடுத்துக்காட்டாக விளங்கக் கூடிய வகையில் அமைந்தது என்றால் அது மிகையாகாது.

நேற்று (25.11.2012) சென்னை பெரியார் திடலில் காலை 8 மணி முதலே மணவிழாக்கோலம் பூண்டது.

ஜாதி மறுப்பு, மத மறுப்பு, மாற்றுத் திறனாளிகள், இணையை இழந்தோர், மண முறிவு பெற்றோர் ஆகியோருக் கென தனித்தனியே பதிவு மய்யங்கள் அமைக்கப்பட்டு இருந் தன.

இந்த நிகழ்ச்சி நம் பகுதிகளிலும் நடக்காதா என தமிழகம் முழுவதி லுமிருந்து வந்திருந்த அனைவரும் எதிர்பார்க்கும் வண்ணம் இருந்தது.

சில மாதங்களுக்கு முன் திரு மணம் நடந்த ஒரு இளைஞர், நான் துணையை இழந்தவரைத்தான் திரு மணம் செய்யவேண்டும் என்று நினைத் திருந்தேன்.

ஆனால், இது போன்ற நிகழ்ச்சி இப்போதுதான் நடைபெறுவ தால் என் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்று வருத்தத் துடன் தன் நண்பர்களிடம் சொல்லிய தையும் கேட்க முடிந்தது.

சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், நேற்று நடைபெற்ற மன்றல் 2012 நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பகிரங்க மாக அந்த மேடையில் அறி வித்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத் தது.

ஜாதி மறுப்பு மட்டுமல்ல, மத மறுப்புக்கும் நாங்கள் தயார் என்று 33 பேரும்,

மாற்றுத் திறனாளிகள் 29 பேரும்,

மண முறிவு பெற்றோர் 51 பேரும்,

துணையை இழந்தவர்கள் 34 பேரும் தங்களது இணை தேடலுக் காகப் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் சென்னை மட்டுமல்லாது, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களிலும் நடை பெற்றால், ஆங்காங்குள்ள இருபால் இளைஞர்களுக்கும் ஏதுவாக இருக் கும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்பது பலருடைய கருத்தாகும்.

தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவரின் வழிகாட்டுதலோடு மன்றல் 2012 இணை தேடல் நிகழ்ச்சி நடை பெற்றது.

நிகழ்ச்சியின் முடிவில் தமிழர் தலைவர் தலைமையில் ஜாதி மறுப்பு திருமணம் இரண்டு இணையர்க ளுக்கு நடைபெற்றது நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக இருந்தது.

பெரியார் காண விரும்பிய ஜாதி யற்ற சமுதாயம் படைக்க இதுபோன்ற இணை தேடல் நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றால், இந்த ஜாதி என்ற அடையாளம் மாறி, அனைவரும் ஒரு ஜாதி - அது மனித ஜாதி என்ற உணர்வு மேலோங்கி இருக்கும்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமி ழகம் முழுவதும் அவசியம் நடைபெற வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அய்யா அவர்களை மிகப் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி!

- ச. பாஸ்கர், சென்னை-18

தமிழ் ஓவியா said...


அரசு மருத்துவமனையில் யாகம்: ஆர்டிஓ விசாரணை


மதுரை, நவ.26- டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் நலம் பெற அரசு மருத்துவமனையில் நடத்தப் பட்ட யாகம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) விசா ரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது: அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக யாகம் நடத்துவது மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை களை அவமதிப்பு செய்வதாக இருக் கிறது. இது மருத்துவர்களுக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது அரசின் மதச்சார்பின்மைக்கும் எதிரானது. ஆகவே, இதுகுறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். விசாரணையின் அறிக்கையைப் பெற்று மேல்நட வடிக்கைக்கு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

தமிழ் ஓவியா said...


சென்னையில் சாதி மறுப்பு வாழ்க்கை துணைதேடும் நிகழ்ச்சி


பிற ஏட்டிலிருந்து

சென்னையில் சாதி மறுப்பு வாழ்க்கை துணைதேடும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர் 2 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது

பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் சார்பில் நடந்த சாதிமறுப்பு தேடல் பெருவிழாவில் இணைந்த ஜோடிகளுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி திருமணம் நடத்தி வைத்தபோது எடுத்த படம். அருகில், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பாலாஜி உள்ளனர்.


சென்னை, நவ.26- சென்னை பெரியார் திடலில் நடந்த சாதிமறுப்பு இணை தேடல் பெருவிழாவில் சுயமரியாதை திருமணம் செய்து கொள்வதற்காக வாழ்க்கை துணையை தேடி மாற்றுத்திறனாளிகள், அரசு பள்ளி ஆசிரியை, ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 291 பேர் விண்ணப்பித்தனர். மாலையில் 2 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

சுயமரியாதை திருமணம்

பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் சார்பில், முற்போக்கு சிந்தனையுள்ள குடும்பத் தினருக்கு பயன்படும் வகையில், தமிழகம் தழுவிய அளவில் சாதிமறுப்பு இணை தேடல் பெருவிழா மன்றல் 2012 என்ற பெயரில், சென்னை பெரியார் திடலில் நேற்று நடந்தது. இதற்காக சாதி மறுப்பு, மதமறுப்பு, மாற்றுத்திறனாளிகள், மணமுறிவு பெற்றோர், துணையை இழந்தோர் என்று தனித்தனியாக 5 அரங்குகள் அமைக்கப்பட்டி ருந்தன. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வர்கள் இந்த அரங்குகளில் தங்கள் பெயர்களை நேற்று காலை பதிவு செய்தனர். பின்னர் ஆண், பெண் இருவரும் 21 வயது நிரம்பியதற்கான சான்றுகள், தனித்து வாழ்க்கை நடத்துவதற்கான பொருளாதார வாய்ப்புகள் குறித்த சான்றுகள் சரிபார்க்கப்பட்டது.

தொடர்ந்து திருமணத்திற்கு தயாராகுதல், மருத்துவம், மனநல ஆலோசனைகள் குறித்த மருத்துவ முகாமும் நடந்தது. திருமணம் செய்து கொள்ள விரும்புவோரிடம் மருத்துவம், மன வளர்ச்சி சோதனைகள், உயரம், எடை மற்றும் ரத்த சோதனையும் செய்யப்பட்டது. பின்னர் பெரியார் திடலில் உள்ள ஹாலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், திருமணம் செய்து கொள்பவர்களின் விருப்பங்களை கேள்வி பதில் மூலம் கேட்கப் பட்டது. இரட்டையர்களை

தேடிவந்த இரட்டையர்கள்

ஜாதி மறுப்பு இணை தேடல் பெருவிழாவில் கலந்துகொண்ட இரட்டையர்கள் கீதா, சீதா ஆகியோரை படத்தில் காணலாம்.

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்தவர் மருதகாசி. இவருடைய மகள்களான இரட்டையர் கள் எம்.கீதா, எம்.சீதா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இவர்கள் சென்னை காமராஜர் நகரில் தங்கியிருந்து இருதய நோயாளிகளுக்கு ஈ.சி.ஜி. எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் கூறியதாவது: ஒன்றாகவே பிறந்தோம், ஒன்றாக படித்தோம், ஒன்றாகவே வளர்ந்தோம், ஒன்றாகவே ஒரே நிறுவனத்தில் வேலையும் பார்க்கிறோம்.

தமிழ் ஓவியா said...

நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்லவேலை பார்க்கும் இரட்டை சகோதரர்களை மண முடிப்பதற்காக தேடிவந்துள்ளோம். அவ்வாறு கிடைக்கவில்லை என்றால் அண்ணன், தம்பிகளாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரே வீட்டில் இரு வரும் மருமகள்களாக செல்ல ஆசைப்படுகிறோம். நன்றாக சம்பாதிப்பதால், மாப்பிள்ளையும் நன்றாக சம்பாதிப்பவராகவும், அழகாகவும் இருக்க வேண்டும். எந்த சாதியாக இருந்தாலும் பரவா யில்லை, மதம் இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பாகும்.-இவ்வாறு இரட்டை சகோதரிகள் கூறினர்.

புதுச்சேரி பெண்

புதுச்சேரியை சேர்ந்த சேகர் மகள் அமுதா. எம்.பார்ம். பட்டமேற்படிப்பு படித்து விட்டு தனியார் மருத்துவ நிறுவனத்தில் புதுச்சேரி அலுவலக மேலாளராக வேலைபார்த்து வருகிறார்.

இவர் கூறுகையில், என்னுடைய பெற்றோர்கள் சுயமரியாதை திருமணம் செய்தவர்கள். அவர் களைப்போல் சாதி, பார்க்காமல் சுயமரியாதை யுடன் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்.

என்னுடைய பெற்றோருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால், வரவிருக்கும் மாப் பிள்ளை எங்கள் வீட்டு பிள்ளையாகவும், என் னுடைய பெற்றோருக்கு மகனாகவும் இருக்கும் மனநிலை படைத்தவரை தேடி வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...

ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர்

சென்னை தலைமைச்செயலகம் குடியிருப்பை சேர்ந்தவர் வி.கே.ராமச்சந்திரன். ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். தனக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருந்தும், சொந்தமாக வீடு இருந்தும், குழந்தைகள் என்னை கவனிக்காததால் சாப்பாட்டிற்காகவும், என்னை கவனித்துக் கொள்வதற்காகவும் 62 வயதில் திருமணம் செய்து கொள்வதற்காக திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், சாதி, மதம் பார்க்காமல், விவாகரத்து பெற்றவர்கள், வாழ்க்கை துணையை இழந்தவராகவும் இருந்தாலும் திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பதாகவும் அவர் தெரிவித்தார். ரெயில் விபத்தில் கணவனை இழந்த பெண் தமிழரசி, திருமணமாகி 3 மாதம் மட்டுமே கணவருடன் வாழ்ந்துள்ளார். திருப்பத்தூரில் உள்ள பாலிடெக்னிக்கில் டைப்பிஸ்டாக வேலை பார்க்கும், இவர் சமுதாயத்தில் தனிபெண்ணாக வாழ முடியாது என்பதால், தன்னை கண் கலங் காமல் பார்த்து கொள்ளவும், மனதுக்கு பிடித்த மணமகனை தேடிவந்ததாக கூறினார்.

அரசுபள்ளி ஆசிரியை

நெற்குன்றம் மேட்டுக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியை ஜெயந்தி. இரண்டு கால்களும் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட இவர், எம்.ஏ., எம்.பில். படித்தவர். தன்நிலையை உணர்ந்து வாழ்நாள் முழுவதும் தன்னை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள ஒரு துணையை தேடி வந்ததாக ஜெயந்தி கூறினார்.

தமிழ் ஓவியா said...

சென்னையை சேர்ந்தவர் வெற்றிமணி. எம்.டெக். படித்த இவர், சென்னையில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலைபார்த்து வருகிறார். கல்வியில் சிறந்த பகுத்தறிவு சிந்தனை கொண்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக தெரிவித்தார். இரண்டு கால்களையும் இழந்து தவழ்ந்து வந்தவர் தாம்பரத்தை சேர்ந்த மகேந்திரன். இவர் பழ வியாபாரம் மூலம் மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக் கிறார். இவர் தன்னை கவனித்துக்கொள்ள பெண் தேவை. சாதி, மதம் பார்க்கமாட்டேன். வரதட் சணையும் தேவையில்லை என்றும் கூறினார்.

சென்னை அடையாறு தரமணி பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது 32). இவர் தன்னுடைய தாய் செண்பகத்துடன் வாழ்க்கை துணை தேடி வந்தார். இவர் கூறும் போது, காரைக்குடியை பூர்வீகமாக கொண்ட நாங்கள் பிராமணர் வகுப்பை சேர்ந்தவர்கள். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மண்பரிசோதனை ஆய்வு செய்யும் பணி செய்து வருகிறேன். வாழ்க்கை துணையை தேடுவதற்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளேன். துணையாக வரவிருக்கும் பெண் இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆனால் எந்த சாதியாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளேன் என்றார்

2 ஜோடிகளுக்கு திருமணம்

சாதிமறுப்பு தெரிவித்த காரைக்குடியை சேர்ந்த அறிவரசுக்கும், மதுரையை சேர்ந்த ஜான்சி ராணிக்கும் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன், தமிழ்செல்வி ஆகிய இரண்டு ஜோடியினரையும் உறுதிமொழி வாசிக்க வைத்து திருமணங்களை திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி நடத்தி வைத்தார். பின்னர் அவர் பேசிய தாவது: சாதி, மதம் மறுப்பு மற்றும் காதல் திருமணங் களை ஊக்குவிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் 291 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 25 திருமணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, ஒரு நல்லதொடக்கம் தான், முடிவு அல்ல. இன்று இரண்டு திருமணங்கள் நடந்துள்ளன. மணமக்கள் அன்போடும், பண் போடும், விட்டுக்கொடுத்து வாழ்ந்து வாழ்வில் வெற்றிபெற வேண்டும்.
-இவ்வாறு கி.வீரமணி பேசினார்.

விழாவில், திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றனார், செயலவைத் தலைவர் அறிவுக்கரசு, பொதுச்செயலாளர்கள் ஜெயக்குமார், டாக்டர் பிறைநுதல் செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள் உட்பட நிர்வாகிகள் பலர் செய்திருந்தனர்.

-(நன்றி: தினத்தந்தி 26.11.2012

தமிழ் ஓவியா said...


மதத்தின் பெயரால் கருத்து சுதந்திரம் திட்டமிட்டு நசுக்கப்படுகிறது நீதிபதி சந்துரு பேச்சு


சென்னை, நவ. 26- கருதது சுதந் திரத்திற்கு எதிரான சக்திகள் வளர்ந்து விட்டன. எனவே, ஒவ்வொருவரும், அறிவியலை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம் என உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு பேசினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இருந்து வெளிவரும் துளிர் சிறுவர் களுக்கான அறிவியல் மாத இதழின் வெள்ளி விழா மாநாடு, தியாகராயர் நகரில் உள்ள, சர்.பி.டி. தியாகராயர் கலை அரங்கத்தில், நவ. 24இல் நடந் தது. இதில், பொன் விழாவையொட்டி, சிறப்பு அஞ்சல்வில்லை வெளியிடப் பட்டது.

மாநாட்டை துவக்கி வைத்து நீதிபதி சந்துரு பேசியதாவது:

அறிவியலுக்கு, கருத்து சுதந்திரம் அடிப்படை தேவை. கருத்து சுதந்திரம் இல்லாத நாட்டில், ஒரு போதும் அறிவியல் வளராது, நம் நாட்டில், கருத்து சுதந்திரத்திற்கு எதிரான சக்தி கள் வளர்ந்து விட்டன. ஒவ்வொரு வரும், அறிவியலை முன்னெடுப்பதன் மூலமாகவே, எதிரான சக்திகளை முறியடிக்க முடியும். பாகிஸ்தானை சேர்ந்த மலாலா என்ற சிறுமி, பெண் குழந்தைகள், பள்ளிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்ததற்கு எதிராக பேசினார்.

அதற்காக, தலிபான் பயங் கரவாதிகளால் சுடப்பட்டு, லண்ட னில் சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளிக்கு செல்ல வேண்டும் என, விருப்பப்படும் கோடிக்கணக்கான பெண் குழந்தைகளின் குறியீடாக, மலாலா மாறிவிட்டார்.

லெனின், ரஷ்யாவில் மறைந்த போது, ரஷ்யாவை ஆட்சி செய்த ஸ்டாலின், லெனினுக்காக ரஷ்யா ஒரு நிமிடம் மட்டும் இயங்காது. மற்றபடி வழக்கம்போல் செயல்படும் என்றார்.

சமீபத்தில், மும்பையில், அரசியல் கட்சி தலைவர் இறந்ததற்காக, பந்த் நடத்தப்பட்டது. அதனால், மும்பை மாநகரமே, ஸ்தம்பித்தது. இதை எதிர்த்து, இரண்டு பெண்கள், பகத் சிங் இறந்தபோதுகூட, பந்த் நடக்க வில்லை. அப்படிப்பட்ட பூமியில் ஏன், பந்த் நடத்தவேண்டும். பந்த்தால் பொது மக்களே வெகுவாக பாதிக்கப் படுகின்றனர் என, முகநூலில் எழுதி னர். அதற்காக அவர்கள் கைது செய் யப்பட்டு, தற்போது பிணையில் வெளி வந்துள்ளனர். இங்கு கருத்து சுதந்திரம் கருவிலேயே நசுக்கப்படுகிறது.

மதத்தின் பெயரால், கருத்து சுதந் திரம் திட்டமிட்டு நசுக்கப்படுகிறது. விஞ்ஞானம் என்றாலே, மேலை நாடுகளை உதாரணம் காட்டுகிறோம்.

அயர்லாந்தைச் சேர்ந்த அன்னி பெசன்ட், இங்கிலாந்தில் பகுத்தறிவு கழகத்தை ஆரம்பித்து செயல்பட் டார். விஞ்ஞானத்தில் முன்னேற்றம் அடைந்த நாடாக நாம் நினைக்கும் இங்கிலாந்து, அன்னிபெசன்ட், மதத் திற்கு எதிராக செயல்படுகிறார் எனக் கூறி, அவர்மீது நடவடிக்கை எடுத்தது.

உலகத்தின் பல நாடுகளில், மதத் தின் பெயரால், கருத்து சுதந்திரம் நசுக் கப்படுகிறது.

சென்னை அய்.அய்.டி.யில், நாடி ஜோதிடம், அறிவியலா என விவாதம் நடந்தது. போகும் போக்கை பார்த் தால், கிளி ஜோசியமும், அறிவியலா எனும் கோணத்தில் ஆராய்ச்சி நடந் தாலும் நடக்கும்.

கருத்து சுதந்திரம் வளர்ந்தால் மட்டுமே, அறிவியல் வளரும். கடந்த, 1976ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, 51ஏ, என்ற பிரிவு, இந்திய குடிமக்களின் கட மையை விவரிக்கிறது. அதில், அறிவி யலை வளர்க்கவும், முன்னெடுத்துச் செல் லவும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் முயல வேண்டும் என்கிறது. இது, ஒவ்வொரு குடிமகனின் கடமை. அதை பின்பற்றி, அனைவரும் அறிவியலை வளர்க்க முன்வர வேண்டும்.

- இவ் வாறு அவர் பேசினார்.

தமிழ் ஓவியா said...

ஒரே மாதிரி மணமகனை தேடும் இரட்டை சகோதரிகள்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிற ஏடுகளிலிருந்து

ஒரே மாதிரி மணமகனை தேடும் இரட்டை சகோதரிகள்

மணமக்களை தேடும் விழாவில் ருசிகரம்

வாழ்க்கைத் துணை! ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. ஆனால் அதை தேர்வு செய்வது அவ்வளவு எளிதல்ல.

மனம் ஒத்து கைபிடித்தவர்கள்கூட மணமுறிவு ஏற்பட்டு தவிக்கிறார்கள். எல்லா பொருத்தமும் பார்த்து திருமண பந்தத்தில் இணைந்தவர்களும் துணையை இழந்து வாடுகிறார்கள். சாதி, மத கட்டுப்பாடுகளால் விரும்பிய துணையோடு இணைய முடியாமல் தவிப்பவர்களும் இருக்கிறார்கள்.

இவர்களுக்காக சாதி மதங் களுக்கு அப்பாற்பட்டு மணமக்களை தேடும் நவீன திருமண தேடல் விழா பெரியார் திடலில் இன்று (நவ.25) நடந்தது. பொதுவாக ஜோடி சேர இளசுகள் படையெடுக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். ஆனால் இந்த இணை தேடல் விழா சற்று வித்தியாசமாக இருந்தது.

சாதி மறுப்பு, மத மறுப்பு, மாற்று திறனாளிகள், மணமுறிவு எற்பட்டவர் கள், துணையை இழந்தவர்களுக்காக தனி தனி பதிவு மையங்கள் அமைக் கப்பட்டிருந்தது. சாதி வேண்டாம், மதம் வேண்டாம் மனசுக்கு பிடித்த துணை வேண்டும் என்று தேடியவர்கள் கல கலப்பாக அரங்கத்தை சுற்றி வந்தார்கள்.

ஆனால் மண முறிவு ஏற்பட்டு மனம் ஒடிந்து போனவர்களும், துணையை இழந்து தவித்தவர்களும் இனி வாய்க்கும் துணையாவது காலமெல்லாம் துணையாய் இருக்க வேண்டும் என்ற ஏக்கத்தோடு தேடி னார்கள். அவர்களில் பலர் காமி ராவுக்கு முகத்தை காட்ட தயங்கி னார்கள். அப்போது அவர்களையும் அறியாமல் அவர்கள் கண்கள் கலங்கி யதை பார்க்க முடிந்தது.

தமிழரசி

இல்லத்தரசியாக வாழ்ந்து வெறும் 3 மாதங்கள்தான் ஆகிறது தமி ழரசிக்கு. ரயில் விபத்தில் கண வனை பறி கொடுத்து திரு மணமான மூன்று மாதத் தில் விதவை கோலத்துக்கு மாறினார். தற்போது திருப்பத்தூரில் பாலி டெக்னிக்கில் டைப்பிஸ்டாக வேலை பார்க்கிறார். தன்னை கண் கலங்காமல் காப்பாற்ற ஒரு துணை வேண்டும் என்பதே இவரது ஆசை.

தேவகி

திருமணமான 2 வருடத்தில் கண வனை இழந்தார். குழந்தைகளும் இல்லை. தனி மரமாக 25 ஆண்டுகளை ஓட்டி விட்டார். அயனாவரத்தில் சொந்தமாக டெய்லர் கடை நடத்தி வருகிறார். வயது ஆக ஆக வாழ்க்கையை பற்றிய பயம். நமக்கென்று துணை இல்லாவிட்டால் கடைசி காலம் எப்படி இருக்கும்....? நினைத்து பார்த்த தேவகி உறவினர்களுடன் இணை தேடி வந்துவிட்டார்.

மனைவியை இழந்தவர் கிடைத்தாலும் பரவாயில்லை கடைசி காலத்தில் எனக்கு அவரும் அவருக்கு நானுமாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை நிறை வேறுமா? என்கிறார் ஏக்கத்துடன்.

தமிழ் ஓவியா said...

கீதா - சீதா

கரூர் பள்ளிப்பட்டை சேர்ந்த இவர்கள் இரட்டை சகோதரிகள் கீதா-சீதா. பள்ளி மாணவிகள்போல் ஒரே சீருடையில் வந்திருந்த கீதாவும், சீதாவும் கூறிய தாவது:-

ஒன்றாகவே பிறந்தோம், ஒன்றாகவே படித்தோம். இப்போது இருவரும் ஒரே நிறுவனத்தில் ஒன்றாகவே வேலை பார்க்கிறோம். இதுவரை எங்களுக்குள் சின்ன சின்ன சண்டைகூட வந்தது இல்லை. எங்களைப்போல் இரட்டையர் கள் மாப்பிள்ளையாக கிடைத்தால் மிகவும் சந்தோஷப்படுவோம். இல்லாவிட்டால் அண்ணன், தம்பிகளுக்கு ஒரே வீட்டில் வாழ்க்கைப்பட வேண்டும் என்று ஆசைப் படுகிறோம்.

நாங்கள் நன்றாக படித்து சம்பாதிக் கிறோம் வரப் போகிறவரும் படித்தவராக நல்ல குணம் கொண்டவராக கொஞ்சம் அழகாக இருக்க வேண்டும் அவ்வளவு தான் என்றார்.

அமுதா

பாண்டிச்சேரியில் தனியார் மருந்து கம்பெனியில் நிர்வாக அதிகாரியாக பணி புரிகிறார் அமுதா. நாங்கள் 2 பெண்கள். அம்மாவும்- அப்பாவும் சுயமரியாதை திரு மணம் செய்தவர்கள். அதேபோல் நானும் சுயமரியாதை திருமணத்தை விரும்புகிறேன். ஆனால் ஒரு கண்டிசன் வரப்போகிறவர் எங்க வீட்டு பிள்ளையாக என் அப்பாவுக்கு மகனைப்போல் இருக்க வேண்டும் என்கிறார்.

ஜெயந்தி

பார்ப்பதற்கு ரதியாக இருந் தாலும் கால்கள் இரண்டையும் கடவுள் பறித்து விட்டானே என்று ஜெயந் தியை பார்த்த வர்கள் ஆதங்கப் பட்டார்கள். ஊன்று கோல் களுடன் வந்த ஜெயந்தி கூறிய தாவது:-

எம்.ஏ., எம்.பில் படித் துள்ளேன். நெற்குன்றம் மேட்டுக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறேன். என் நிலையை உணர்ந்து எனக்கு உற்றதுணையாக இருந்து என்னை கவனித்து கொள்பவர் மாப்பிள் ளையாக கிடைக்க வேண்டும் என்றார்.

மகேந்திரன்

இரு கால்களையும் இழந்து தவழ்ந்து வந்த தாம்பரம் மகேந்திரன் (30), சொந்தமாக பழக்கடை நடத்தி மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கிறார்.

ஊனம் இல்லாத நல்ல மனம் படைத்த பெண் வேண்டும் என்பது இவரது ஆசை.

பாலசுப்பிரமணியன்

தேவகோட்டை பாலசுப்பிரமணியன் துபாயில் பணிபுரிகிறார். குடும்பத்தில் எல்லோரும் சமூக கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்தாலும் சுயமரியாதை கொள்கை பிடிப்பு கொண்ட இவர் தனது சிந் தனைக்கு ஏற்ற பெண்ணை தேடி வந்திருந்தார்.

மதியம் வரை 200-க்கும் மேற்பட்டவர் கள் ஜோடி தேடி பதிவு செய்திருந்தார் கள். திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் மருத்துவ மற்றும் மனவள சோதனைக்கு பிறகு திரும ணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். திருமணத்துக்கு சம்மதிக்கும் ஜோடி களுக்கு கி.வீரமணி இன்று (நவ.25) மாலையில் திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

நன்றி: மாலைமலர் 25.11.2012

தமிழ் ஓவியா said...


குமரியில் திருவள்ளுவர் சிலை பராமரிப்பு


ஆசிரியருக்குக் கடிதம்

குமரியில் திருவள்ளுவர் சிலை பராமரிப்பு

பேரன்புமிக்க தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு கோ. வெற்றிவேந்தன் வணக்கத்துடன் எழுதிக் கொள்வது கன்னியாகுமரியில் இருக்கும் திருவள் ளுவர் சிலை பராமரிப்பு தொடர்பான தகவலை தங்களுக்கு எழுதுகிறேன்.

கன்னியாகுமரியில் அமைக்கப்பட் டுள்ள திருவள்ளுவர் சிலை தனிக் கல்லி னால் ஆனது. கடலின் நடுவே கல்லினால் எழுப்பப்பட்ட சிலை உலகிலேயே இது ஒன்றுதான். முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் வான்புகழ் கொண்ட வள்ளுவனுக்கு வானுயர அவரது சிலை இருப்பது உள்நாட்டு வெளிநாட்டு சுற் றுலா பயணிகளை மிகவும் கவருகிறது.

திருவள்ளுவர் சிலையை தாங்கும் பீடம் 38 அடியாகவும் அந்த பீடத்தின் மேல் அமைந்துள்ள சிலை 95 அடியாகவும் கொண்டு மொத்தம் 133 அடி உயரத்தில் கடலின் நடுவே உள்ள பாறையில் அமைந்துள்ளது. பீடத்தை சுற்றி மண்டபம் உள்ளது.

திருவள்ளுவர் சிலைப் பணியின் மொத்த செலவு 10 கோடி ரூபாய். இத்திட்டத்திற்குப் பயன்படுத்திய கற் களின் எடை 7000 டன் இந்த சிலை யினை கணபதி சிற்பி அவரது தலைமை யில் 500 சிற்பிகள் கடுமையாக உழைத்து இந்த சிலையினை நிறுவினர்.

திருவள்ளுவர் சிலையினை தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் 2000ஆம் ஆண்டின் முதல் நாள் அன்று கன்னியா குமரியில் திறந்து வைத்தார்கள்.

திருவள்ளுவர் சிலை உப்புக்காற்று மழை, வெயிலால் பழுதுபடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாலிசிலிக் கான் இரசாயனம் பூசப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு (2011) இரசாயன கலவை பூசப்பட்டு இருக்க வேண்டும். இதுவரை பூசப்படாததால் சிலை மிகவும் சேத மடையும் ஆபத்து உள்ளது.

இந்த சிலையினை பராமரிக்க வேண் டும் என்று குமரி மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் தமிழக அரசுக்கும், குமரி மாவட்ட ஆட்சி யருக்கும் கோரிக்கை மனு பல முறை கொடுத்தும் இதுவரை பராமரிக்கவே இல்லை. கலைஞர் அந்த சிலையை நிறுவினார் என்ற ஒரே காரணத்திற்காக தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் அந்த சிலையினை பராமரிக்கவும், பாதுகாக்கவும் முன்வர வில்லை. கன்னியாகுமரியில் இருக்கும் திருவள்ளுவர் சிலையினை பராமரிக்க வேண்டும் என குமரி மாவட்ட தமிழர்களும் உலகத் தமிழர்களும் மிகவும் விரும்புகின்றனர். குமரி மாவட்ட திராவிடர் கழக தோழர்களின் விருப்பமும் இதுவே.

- கோ. வெற்றிவேந்தன்
மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்
கன்னியாகுமரி

தமிழ் ஓவியா said...


தமிழை, தமிழனை நேசித்த ஒரே வடநாட்டுத் தலைவர்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரசியலில் நேர்மையையும் நியா யத்தையும் கடைப்பிடிப்பவர்களுக்குச் சோதனைகள் அதிகமாகவே இருக்கும். வி.பி.சிங்கிற்கும் அப்படித்தான். ஆதர வளித்துவந்த பாரதிய ஜனதா கட்சி தரப்பிலிருந்து நெருக்கடிகள், துணைப் பிரதமர் தேவிலால், சந்திரசேகர், சுப்ர மணியசாமி போன்றவர்களும் வி.பி. சிங் கிற்கு நெருக்கடிகளை உண்டாக்குபவர் களாக இருந்தார்கள். எத்தனை குறுக் கீடுகள் ஏற்பட்டாலும் அவர் அது பற்றிக் கலங்காதவராகவே செயல்பட்டார்.

எது நியாயம் என நினைத்தாரோ அதனைச் செயல்படுத்துவதில் உறுதியாகவே இருந்தார். உள்கட்சி நெருக்கடிகள் அதி கரித்துக் கொண்டிருந்த நேரத்தில் மண்டல் ஆணையத்தின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவேன் என்ற உறுதியை மேற்கொண்டார். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரி அவர் நிகழ்த்திய உரையில் சமூக நீதியின் அவசியத்தை அழுத்தமாக வலியுறுத் தினார். அதனை வலியுறுத்திப் பேசும் போதெல்லாம் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா ஆகியோரது பெயர்களை உச்சரித்தார்.

தன் அரசைக் கவிழ்க்க முயல்வது ஏன் என்பதை விளக்கிப் பேசிய அவர், மண்டல் பரிந்துரையை அமல்படுத்த முயன்றது தான் எல்லாவற்றிற்குமே அடிப்படைக் காரணம். அதை நேரடியாக எதிர்க்க முடியாத சக்திகள் வேறு காரணங்களைக் காட்டி திரை மறைவிலிருந்து ஆட்சியைக் கவிழ்க்கச் செயல்பட்டனர் என்றார். எனது கால்கள் உடைக்கப்பட்டிருக் கலாம். ஆனால் அடைய வேண்டிய இலட் சியத்தை நான் அடைந்துவிட்டேன். மரியாதையோடு ஆட்சியை விட்டு நாங்கள் வெளியேறுகிறோம்.

அதற்காகப் பெருமைப்படுகிறோம். அரசியல் நாள்காட்டிகளில் கடைசி தேதி என்று எதுவும் கிடையாது என்று உறுதியான குரலில் தெரிவித்துவிட்டு தோல்வியைத் துணிச்சலாக எதிர்கொண்டார். பிரதமர் பதவியைத் துறந்ததுமே தனக்கு அளிக் கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும்படி தெரிவித்த கண்ணியமான மனிதர் வி.பி.சிங். அவரது அரசைக் கவிழ்ப்பதில் முக்கிய பங்காற்றியவர் சந்திரசேகர்.


தமிழ் ஓவியா said...

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எம்.பி.க் களை மட்டுமே தன்வசம் வைத்திருந்த அவரை காங்கிரஸ் கட்சி ஆதரித்ததால் சந்திரசேகரை பிரதமர் பொறுப்பேற்க அழைத்தார் அன்றைய குடியரசுத் தலை வர் ஆர். வெங்கட்ராமன். தனது ஆட்சி யைக் கவிழ்த்துவிட்டு சந்திரசேகர் பிரதம ராகப் பதவியேற்றார் என்றபோதும் அது பற்றிய அரசியல் காழ்ப்புணர்வு ஏதுமின்றி சந்திரசேகரின் பதவியேற்பு விழாவில் தம் மனைவி சீதாசிங்குடன் கலந்து கொண்ட பண்பாளர் வி.பி.சிங். தமிழகத்தின் பல முக்கிய நகரங்களுக் கும் கலைஞருடன் சுற்றுப் பயணம் மேற் கொண்டார் வி.பி.சிங். மண்டல் ஆணை யத்தின் அறிக்கையை அமல்படுத்திய வெற்றிவீரராக அவரைப் பொதுமக்கள் திரண்டு வரவேற்றனர்.

எந்த ஊருக்குச் சென்றாலும் வழியெங்கும் கூட்டம் நிறைந் திருந்தது. அவரை வரவேற்று ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் தன் இனிஷியல் ஆங்கிலத்திலும் சிங் என்பது தமிழிலும் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்த வி.பி.சிங் காரில் பயணித்தபடியே அதை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதிப் பழகினார். தமிழ்மொழியும் தமிழர்களின் அன்பும் அவரைக் கவர்ந்தன. தன் கவிதைகள் தமிழில் வெளிவரு வது பற்றிக் குறிப்பிட்டு எழுதியுள்ள வி.பி.சிங் தமிழக மக்கள் என்மீது நிறைந்த பாசத்தைப் பொழிந்துள்ளனர்.

அவர்கள் எனக்குக் காட்டும் பாசவுணர்வுக்கு எந்தவொரு பொருளும் மாற்றுப் பரிசாக இருக்க முடியாது. ஆகையால் என்னுடைய ஆழ்ந்த உணர்வுகளை அவர்கள் முன்பு வைக்கிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரி வித்தார். அதோடு தனது தமிழாக்க கவிதை நூலிலிருந்து கிடைக்கும் வரு மானத்தை திருச்சியிலுள்ள நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அளித்துவிடு மாறு தெரிவித்தார் வி.பி.சிங். பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் பல மாநிலங் களில் கலவரங்கள் வெடித்தன.

இத்தகைய தொடர் வன்முறைகளால் இந்தியா மதவெறிக்காடாக மாறிவிடும் என அச்சம் கொண்டு சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவரை எதிர்த்து உண்ணும்விரதம் இருந்தனர் மதவாதிகள். தனது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியதால் தண்ணீர் கூடக் குடிப்பதை நிறுத்திவிட்டார் வி.பி.சிங். அதனால் சிறுநீர் வெளியேறுவது நின்றது. இதனால் அவரது இரண்டு சிறுநீரகங் களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப் பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வி.பி.சிங்கின் ஆட்சியைப் பறித்த மதவாதம் அவரது சிறுநீரகங்களையும் பறித்துவிட்டது. வி.பி.சிங்கிற்கு சிறுநீரகக் கோளாறு என்றதும் துடித்துப் போயினர் தமிழக மக்கள். அவருக்கு மாற்று சிறு நீரகம் பொருத்துவதற்காகத் தங்களின் சிறுநீரகத்தைத் தர முன்வந்தனர் ஒரத்த நாட்டைச் சேர்ந்த திராவிடர் கழக இளை ஞர்கள். ஆனால் வி.பி.சிங் வாழவேண்டிய இளைஞர்களின் சிறுநீரகத்தைப் பெற்று என் ஆயுளை நீட்டித்துக்கொள்ள விரும்ப வில்லை.

என்மீது அன்பு கொண்டு சிறு நீரகம் தர முன்வந்த இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொன்னதுடன் அடுத்த பிறவி என ஒன் றிருந்தால் நான் தமிழனாகப் பிறக்க ஆசைப்படுகிறேன் என்றார் இதயம் நெகிழ. 15 ஆண்டுகளாக அவரை வாட்டி வதைத்த நோய்கள் உச்சக்கட்டத்தை எட்டின. 2008 நவம்பர் 27ஆம் நாள் (இன்று) தமது (77 வயது) இறுதி மூச்சு வரை சமூகநீதியையும் மதச்சார்பின்மை யையும் இறுகப் பற்றியிருந்த வி. பி. சிங்கின் உயிர் பிரிந்தது. அவர் கொள்கையும் எண்ணமும் வென்றது. (நன்றி: கவின்மீடியா)