Search This Blog

8.11.12

பிராமணாள் இனியும் தலை காட்டக் கூடாது!சிறீரங்கத்தில் கிருஷ்ணய்யர் பிராமணாள் என்னும் ஓட்டல் 6.11.2012 ஆம் நாள் இரவோடு இரவாகக் கடையைக் கட்டிக் கொண்டது.

திராவிடர் கழகத் தோழர்கள் கேட்டுக் கொண்ட போதே அந்தப் பிராமணாள் பெயரை நீக்கி யிருந்தால், இப்பொழுது அந்த உணவு விடுதியையே மூடிவிடும் அவல நிலை ஏற்பட்டு இருக்காது.

பார்ப்பனர்கள் உணவு விடுதி நடத்தக் கூடாது. அவர்கள் பிழைப்புக்காக எந்தத் தொழிலையும் செய்யக் கூடாது என்ற அற்பப் புத்தி நமக்கொன்றும் இல்லை. பார்ப்பனர்கள் நன்றாகவே பிழைக்கட்டும்; நன்றாகவே சகல சம்பத்துகளுடனும் வாழட்டும் நமக்கொன்றும் அட்டியில்லை.
பார்ப்பான் பணக்காரனானால் என்ற கட்டுரையை குடிஅரசு இதழில் (9.11.1946) தந்தை பெரியார் தெளிவாகவே எழுதியுள்ளார்.

எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து ஒரு பார்ப்பான் கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத் தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது, அவன் நல்வாழ்வு வாழக் கூடாது; அவன் ஏழையாக இருக்க வேண்டும் என்பதல்ல.

ஒவ்வொரு பார்ப்பானும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், பொப்பிலி ராஜா, சர் சண்முகம் செட்டியார், சர். ராமசாமி முதலியார் போன்றவர்களாக கோடீஸ்வரனாக வும், லட்சாதிபதியாகவும் ஆகி விட்டாலும் சரியே எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும் மடாதிபதிகள் உட்பட எவரும், சிறிதுகூட நமக்கு மேல் ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான் என்று தெளிவாக, நீரோட்டமாகக் கூறியுள்ளாரே!

பிராமணாள் உணவு விடுதி என்பதில் உள்ள பிராமணாள் என்பதை ஒழிப்பது என்பதற்கான விளக்கம் இதில் தெள்ளத் தெளிவாக இருக்கிறதே!
பார்ப்பனர்களுக்கு இது தெரியாதா? பிராமணாள் என்பது உயர் வருணத் தன்மையைப் பறைசாற்றக் கூடியதென்று தெரிந்துதானே அதனை இன்றளவும் நிலைநாட்டிடத் துடிக்கின்றனர் - அடம் பிடிக்கின்றனர்.
அரசர்கள்  முதல் அவர்களுக்கு அடங்கிக் கிடந்து விட்டதாலும், வருணாசிரம தர்மத்தில் உயர் ஆளுமை அவர்களுக்கு எல்லா வகையிலும் வசதி வாய்ப் புள்ளதாக இருப்பதாலும் அதனை விட்டுக் கொடுக்க மனம் இர(ற)ங்கி விடுவதில்லை.

பிராமணாள் என்று தங்களை உச்சமான இடத்தில் ஆசனம் போட்டு உட்கார வைத்தாலும் கூடப் பரவாயில்லை; அந்த வருணாசிரமத் தன்மையில் பெரும்பாலான மக்களை சூத்திரர்கள் என்று   சுட்டுவதுதான் சகிக்க முடியாததாக இருக்கிறது. ஏன் சகிக்க முடியாதது என்று சொல்லுகிறோம்? சூத்திரன் ஏழு வகைப்படுவான். அதில் ஒன்று தமது விபச்சாரி மகன் என்று பார்ப்பான் எழுதி வைத்திருப்பதுதான்.

பிராமணாள் ஒழிப்புப் போராட்டத்தை எதிர்த்து எழுதுவோர்கூட, திராவிடர் கழகம் எடுத்து வைக்கும் இந்தக் குற்றச்சாற்றுக்கு நேரிடையாகப் பதில் சொல்லாமல், பிரச்சினையைத் திசை திருப்பும் தன்மையில் எழுதுகோல் பிடிப்பது பரிதாபமே!

சிறீரங்கத்தில் கிருஷ்ணய்யர் நடத்திய உணவு விடுதியில் இடம் பெற்ற பிராமணாள் ஒழிப்பு - இத்தோடு முடிவுக்கு வந்தாக வேண்டும். மறுபடியும் சிறீரங்கத்திலோ, வேறு இடங்களிலோ பிராமணாள் முளைப்பதை அனுமதிக்க முடியாது, முடியவே முடியாது.

அப்படி எந்த ஊரிலாவது பிராமணாள் தலை காட்டுமேயானால் முதலில் கோரிக்கையை நேரிடையாக வையுங்கள். நாகரிகமாகப் பிரச்சினையை முடித்துக் கொண்டால் பிரச்சினை இல்லை; முரண்டு பிடித்தால் உடனே தலைமைக்குத் தெரிவிக்குமாறு கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். உரிய முயற்சியைத் தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதலோடு மேற்கொள்ளலாம்.

திராவிடர் கழகத்தின் முறையான முயற்சியும், பண்பாட்டுடன் கூடிய அணுகுமுறையும்தான் இந்த வெற்றியைத் தேடித் தந்துள்ளது.
கொள்கையும் முக்கியம் - வழிமுறையும் முக்கியம் என்பதை எந்தக் காரணத்தோடும் கழகத் தோழர்கள் மறந்துவிட வேண்டாம். இந்தப் பிரச்சினையில் முழு முயற்சியுடன் செயல்பட்ட கழகத் தோழர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.
                       -------------------------------"விடுதலை” தலையங்கம் 8-11-2012

9 comments:

தமிழ் ஓவியா said...


டெசோவின் பயணம் மேலும் தொடரும்! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை


டெசோவின் தீர்மானங்கள் அய்.நா. மற்றும் மனித உரிமை ஆணையத்திடம் முறையாக அளிக்கப்பட்டன

தவறான புரிதலோடு இருந்த நாடுகளும்

தமிழர் பக்கம் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டுள்ளன

டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் அய்.நா. துணைப் பொதுச்செயலாளர் மற்றும் மனித உரிமை ஆணையத்தின் இயக்குநர் ஆகியோரிடம் அளித்தது குறித்தும், அதனால் ஏற்பட்டுவரும் பலன்கள் குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

சென்னையில் நடைபெற்ற டெசோ ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டின் தீர்மானங்களை அய்.நா. மாமன்றத்தின் செயல்பாட்டிற்காக, அதன் துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசன் அவர்களிடம் கடந்த ஒன்றாம் தேதி (நவம்பர் 2012) அய்.நா. தலைமையகத்துக்கு (நியூயார்க் மேன் ஹாட்டினில்) மானமிகு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், நாடாளுமன்ற தி.மு.க. குழுவின் தலைவர் மானமிகு டி.ஆர். பாலு அவர்களும் சென்று சுமார் அரை மணிநேரம் விளக்கமாக எடுத்துரைத்து, முள்வேலிக் குள்ளும், இராணுவ வளையத்துக்குள்ளும் அவதியுற்றுக் கொண்டுள்ள ஈழத் தமிழர் வாழ்வின் பல வகை அவலங்களைப் போக்க, விடிவு காண வற்புறுத்தித் திரும்பியுள்ளனர்!

பான்-கி-மூன் பார்வைக்குச் சென்றது

அய்.நா. துணைப் பொதுச்செயலாளர் அவர்கள் மிகுந்த பரிவுடன் கேட்டு, அதனை பொதுச்செயலாளர் பான்-கி-மூன் அவர்களிடம் உடனடியாகக் கொண்டு சென்று, பரிகாரம் எப்படி, எந்த அளவுக்குத் தேடிட முடியுமோ, அதைச் செய்வதாக, ஆக்க ரீதியாக (Postive response) செய்துள்ளார்கள்.
தமிழ் ஓவியா said...

அதன்பிறகு அதே தீர்மானங்களை தற்போது சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்தில், சிங்கள இராஜபக்சே அரசுமீது பற்பல நாடுகளும் சரமாரி போர்க் குற்றங்களை, அத்துமீறல் களையெல்லாம் பற்றிப் பேசியுள்ளனர்!

இலங்கை அரசின் சார்பானவர்கள் அதைத் தக்க வகையில் எதிர்கொள்ள இயலாத நிலையும், மழுப்பலான வகையிலும் - மறுக்க தங்களுக்கு இடம் உள்ளது என்று பொத்தாம் பொதுவிலும்தான் பேசியுள்ளார்கள்.

ஈழத் தமிழர் வாழ்வுரிமையில் இப்போதுதான் தக்க வகையில் சர்வதேச நாடுகளின் பார்வையை ஈர்த்துப் பரிகாரம் தேடிடும் ஈர நெஞ்சக் குரலொலி கேட்கத் தொடங்கியுள்ளது!

தவறாக நினைத்தவர்கள்கூட இப்பொழுது உணர்ந்தனர்

இதற்கு முன்னர் இலங்கை அரசின் தவறான பிரச்சாரத்தை நம்பி, இது ஒரு சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினை - மனித உரிமைப் பிரச்சினை என்று பார்க்காமல், ஏதோ தீவிரவாதம், பயங்கரவாதிகளை எதிர்த்து அந்நாட்டு அரசுப் போராடுவதாகவே தவறாக நினைத்திருந்தார்கள்.
இப்போதுதான் அந்தப் போலிப் பொய்யுரை பனிமூட்டம் விலகத் தொடங்கியுள்ளது!

2008 இல் தீவிரவாதத்திற்கெதிரான போர் என்ற சாக்கில் எப்படி ஒரு இனப் படுகொலை பட்டாங்கமாய் நடந்தது என்பது அய்.நா. போர்க்குற்றம் பற்றிய குழு அறிக்கை மூலம் தொடங்கி, அது மெல்ல மெல்ல ஆனால், உறுதியாக விரிவாகி, பன்னாடுகளும் விளங்கிக் கொள்ளும் வெளிச்சமாகி வருகிறது.

மனித உரிமை ஆணையத்திடம் டெசோ தீர்மானங்கள்

அதனை மேலும் வளர்த்து, மனித உரிமையோடு, வாழ்வுரிமையை அம்மக்களுக்குப் பெற்றுத் தர, டெசோ உருவாக்கப்பட்டு மாநாடும் நடத்தப்பட்டு சிறப்பான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. காழ்ப்புணர் வாளர்களின் காமாலைக் கண்களுக்கு இது சரியாகத் தெரியாது; அதுபற்றி கவலைப்படாமல் முடிந்ததை முயற்சியில் எதுவும் பாக்கியில்லை என்று செய்வது நம் கடமை என்ற உணர்வோடு நடந்த அம்மாநாட்டின் தீர்மானங்களை நேற்று ஜெனீவாவில் மனித உரிமை ஆணையத்தின் கமிஷனர் நவநீதம் பிள்ளை அம்மையார் அவர்களிடம் அளித்துள்ளனர் -

நியூயார்க் அய்.நா. துணைப் பொதுச்செயலாளரது சந்திப்புக்குப் பின்!

அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவரான அம்மையாரிடம், அரசியல் தீர்வுக்கு ஒரே தீர்வு மற்ற சில நாடுகளில் அய்.நா. தலையிட்டுச் செய்ததைப்போல, வாக்கெடுப்புதான் சரியான ஒரே தீர்வு என்பதை வலியுறுத்தியுள்ளார்கள்.

அவர்களும் அதனைப் புரிந்து, அனுதாபத்தோடு கேட்டு, ஆவன செய்வதாக வாக்களித்துள்ளார்கள் என்பது பன்னாட்டளவில் நமது உள்ளங்களில் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்களுக்கு அவசர முதலுதவி மருத்துவம் செய்ததுபோல உள்ளது!

கழகத் தலைவரோடு பேசினர்

ஜெனீவாவிலிருந்து சகோதரர்கள் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், டி.ஆர். பாலு அவர்களும் தொலைபேசியில் முதலில் டெசோ தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் விளக்கி விட்டு, நம்மிடம் தொடர்பு கொண்டு விளக்கமாகச் சொன்னார்கள். அடுத்து இலண்டன் சென்று இப்பிரச்சினை உரிய முறையில், பிரித்தானிய தமிழர் பேரவையில் கலந்து, உரிய பிரிட்டிஷ் எம்.பி.,க்களிடம் எடுத்துச் சொல்லவிருப்பதாகக் கூறினார்கள்.

நாம் மகிழ்ச்சியோடு அவர்களுக்கு உலகத் தமிழர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்தோம்.

பொது வாக்கெடுப்பு - வரவேற்கத்தக்கக் கருத்து

இலண்டன் மாநகரில் இங்கிலாந்து நாடாளுமன்றக் கட்டடத்தில் பிரித்தானியா தமிழர் பேரவை சார்பில் நடத்தப்பட்ட உலகத் தமிழர் பன்னாட்டுத் தமிழ் மாநாட்டிலும் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், தி.மு.க. முன்னணியினரும் பங்கேற்றதுடன், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தித் தீர்வு காண வேண்டும் என்ற தலைசிறந்த ஆக்க பூர்வக் கருத்தினை அம்மாநாட்டில் எடுத்து வைத்து முழங்கிய மு.க. ஸ்டாலின் அவர்களின் செயல்பாட்டுக்காகப் பாராட்டுகிறோம் - வரவேற்கிறோம்.

போற்றுபவர், தூற்றுபவர்பற்றிக் கவலைப்படாமல் நம் கடன் பணி செய்து முடிப்பதே என்று டெசோ தனது பயணத்தை நடத்திடுவதும் காலத்தின் கட்டாயமாகும்.


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
8.11.2012

தமிழ் ஓவியா said...


நத்தம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குடியிருப்பு கொளுத்தப்பட்டது - கண்டனத்துக்குரியது!


அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!!

தருமபுரி அருகே நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இரு வேறு ஜாதிகளைச் சேர்ந்த இரு இளைஞர்களுக் கிடையே ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதை ஏற்காமல், நத்தம் தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருப்புகள் ஜாதிவெறி கொண்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன.

நத்தத்தையடுத்துள்ள கிராமங்களில் உள்ள தாழ்த்தப்பட்டோர் குடியிருப் புகளையும் கொளுத்தியுள்ளனர். உயிர்ப் பலி இல்லை என்றாலும் பெண்கள், குழந்தைகள் உட்பட 35 பேர் தீக் காயங்களுக்கு ஆளாகி தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.

கலவரம் ஏற்பட்டு நீண்ட நேரத்திற்குப் பிறகு தான் காவல்துறை செயல்பட்டுள்ளதாகத் தெரிகிறது. திருமணம் நடந்து பல நாட்கள் ஆன நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து காவல்துறை உளவுத்துறை என்ன செய்தது என்று தெரியவில்லை. செய்தியாளர்கள் கிராமத்திற்குள் செல்ல முடியாது தடுக்கப்பட்டுள்ளனர்.


தமிழ் ஓவியா said...

இந்த 2012லும் ஜாதிவெறித்தனத்தோடு நடத்தப் பட்டுள்ள இந்தக் கொடிய செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஜாதியின் பெயரால் அரசியல், ஜாதி தீவிரவாதப் பேச்சுகள் - ஜாதி மறுப்புத் திருமணத்தைக் கண்டிக்கும் வெளிப்படையான போக்குகள்தான் இவற்றிற்கு முக்கிய மூல காரணமாகும்.

இந்தக் கொடுமைக்குப் பிறகாவது சம்பந்தப்பட்டவர்கள் திருந்த வேண்டும்; சம்பந்தப்பட்ட பகுதிகளில் கழகம் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

இத்தகைய அநாகரிகமான கலவரங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

8.11.2012 சென்னை

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களிடையே அய்.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்திடுக!


ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக ஈழத் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களிடையே அய்.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்திடுக! உலகத் தமிழ் பன்னாட்டு மாநாட்டில் மு.க.ஸ்டாலின் முழக்கம்!

இலண்டன், நவ. 8- ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு, இலங்கையில் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் அய்.நா. மேற் பார்வையைப் பொது வாக் கெடுப்பு நடத்த வேண்டும் என்றார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

இங்கிலாந்து நாடாளுமன் றத்தில் சர்வதேச தமிழ் மாநாடு பிரித்தானியா தமிழ்ப் பேரவை சார்பில் தொடங்கியது. இம் மாநாட்டை பிரிட்டன் அனைத் துக் கட்சி நாடாளுமன்றக் குழுவும் இணைந்து நடத்துகிறது.

அந்த அமைப்பின் நிர்வாகி கவின் பார் வெல் அழைப்பின் பேரில் தி.மு.க. சார்பில் கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டா லின் அவர்களும் - கழக நாடாளு மன்றக்குழுத் தலைவர் டி.ஆர். பாலு, எம்.பி., அமைப்புச் செய லாளர் டி.கே.எஸ்.இளங்கோ வன், எம்.பி., கழக வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ் ணன் ஆகியோரும் இம்மாநாட்டில் கலந்து கொண் டனர்.

இலண்டன் மாநகரில் உள்ள இங்கிலாந்து நாடாளு மன்ற கட்டிடத்தில், பிரித்தானிய தமி ழர் பேரவை சார்பில் நடைபெற்ற உலகத் தமிழர் பன்னாட்டுத் தமிழ் மாநாட்டில் கழகப் பொரு ளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (7-11-2012) இங்கிலாந்து நேரப்படி பகல் 12.00 மணியளவில் உரையாற்றினார்.

அம்மாநாட்டில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

மரியாதைக்குரிய தலைவர் அவர்களே!

பிரித்தானியப் பாராளுமன்றத் தின் மதிப்புமிகு உறுப்பினர்களே! அமைச்சர் பெருமக்களே! பன் னாட்டுத் தமிழர்களின் பிரதிநிதி களே! உங்கள் அனைவருக்கும் எனது வணக்கமும், வாழ்த்தும்!

திராவிட முன்னேற்றக் கழகத் திற்கு அனுப்பப்பட்ட அன்பான அழைப்புக்கு, மாநாட்டு அமைப் பாளர் களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தொடக்கத் திலேயே தெரிவித்துக் கொள்ள விரும்பு கிறேன்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள் வதை நாங்கள் பெரும் கடமை யாகக் கருதுகிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் அவர்கள் எங்களை இந்த மாநாட்டுக்கு அனுப்பியி ருக்கிறார்கள்.

இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம், ஈழத்தமிழர் களுக்காக, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் குரல் கொடுத்து வரு கிறது. மாநாடுகளையும் - கருத்த ரங்கு களையும், போராட்டங் களையும் - பொதுக் கூட்டங் களையும், பேரணிகளையும் - மனி தச் சங்கிலிகளையும், உண்ணா நிலையினையும் - வேலை நிறுத்தத் தையும், ஈழத்தமிழர்களின் பிரச் சினைகளில் பொதுமக்களின் கவ னத்தை ஈர்ப்பதற்காக, நாங்கள் நடத்தி இருக்கிறோம்.

அனைத்து நாடுகளின் ஆதரவைப் பெற அண்மையில் மீண்டும் `டெசோ தொடக்கம்!

எங்களுடைய தலைவர் கலை ஞர் அவர்கள், 1985ஆம் ஆண்டு, ஈழத்தமிழர் ஆதரவாளர்களின் அமைப்பு ஒன்றினை உருவாக் கினார்கள். அப்போது முதல் ஈழப்போர் நடந்து கொண் டிருந்த நேரம். இந்திய நாட்டின் கவனத்தை ஈர்ப்பதற்காக, அந்த அமைப்பு, பொதுமக்களின் பேர மைப்பாக உருப்பெற்றது.

தமிழ் ஓவியா said...

போருக்குப் பின்னர், ஈழத் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச் சினைகளுக்கு, இந்திய தேசத்தின் மற்றும் சர்வ தேசத்தின் ஆதர வைத் திரட்டுவதற்காக, சமீபத் தில், எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள், ஈழத்தமிழர் ஆதர வாளர்களின் அமைப்பினை, மீண்டும் தொடங்கி யிருக்கிறார்.

12.8.2012 அன்று சென்னையில் மிகப் பெரிய மாநாடு ஒன்று டெசோ அமைப்பினரால் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் பல நாடுகளிலிருந்தும் வந்திருந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஈழத் தமிழர் களின் துயரங்கள் மற்றும் பிரச்சினைகளை உள்ளடக்கிய பதினான்கு தீர்மானங்கள் மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

அந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் விரிவான மனு ஒன்றைத் தயாரித்து; அதை -1-11-2012 அன்று ஐ.நா. மன்றத்திலும், 6-11-2012 அன்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திடமும் வழங்கியிருக் கிறோம். இலங்கை அரசின் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமென்று நாங்கள் கோரியிருக்கிறோம்.

இன்று இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாநாடு, தக்க தருணத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாடு, ஈழத்தமிழர் பிரச்சினைகளின்மீது, உலக நாடு களின் கவனத்தை ஈர்த்திடப் பெரிதும் உதவி கரமாக இருக்கும். இந்த மாநாட்டு அமைப்பாளர் களின் உயரிய நோக்கம் மற்றும் சரியான குறிக் கோளுக்காக, நாங்கள் அவர்களைப் பாராட்டு கிறோம்.

இலங்கைத் தமிழர்களின் வரலாறு ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமையானதாகும். தமிழர்கள் இலங்கையின் தேசிய இனம் ஆவர். அவர்களுடைய மொழி மிகப் பழமையானதாகும்; அவர்களுடைய கலாச்சாரம் தனித்தன்மை உடையதாகும். இலங்கை, பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயகம் ; பெரும்பான்மை, சிறுபான்மை எனப் பேதப்படுத்தாது. பெரும் பான்மைக்கு அதிக உரிமைகள் என்பதும், சிறுபான் மைக்குக்குறைந்த உரிமைகள் அல்லது உரிமைகளே எதுவுமில்லை என்றும், ஜனநாயகம் சொல்லாது.

இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மைதான். அவர்களுடைய விருப்பம் மிகவும் எளிமையானது. சமத்துவம், கண்ணியம், சுயமரியாதை ஆகியவையே அவர்கள் வேண்டுவது.

சிங்களப் பெரும்பான்மையினர் அவர்களை நசுக்கிடத் தொடங்கியபோது; அவர்கள் தங்களு டைய மதரீதியிலான அரசை நிறுவிட முடிவெடுத்த போது; சிங்களமொழி மட்டுமே என்பதைக் கொள் கை முடிவாகப் பின்பற்றியபோது; தமிழர்களுக்கு எவ்வித ஜனநாயக உரிமைகளையும், வேலைவாய்ப்பு களையும், கண்ணியமான வாழ்க்கையையும் வழங் கிடச் சிங்களர் கள் மறுத்தபோது; தமிழர்கள் அந்த அநீதிகளை எதிர்த்துப் போராடத் தொடங்கினர்.

சொந்தக் குடிமக்களையே படுகொலை செய்யும் கொடுமை!

அந்தத் தீவு நாட்டில், 1983க்கும் 2009க்கும் இடையே நான்கு ஈழப்போர்கள் நடைபெற்றிருக் கின்றன. ஓர் அரசு, தன்னுடைய சொந்தக் குடிமக்களையே இனப் படுகொலைக்கு உட்படுத்திய நிகழ்வு, உலக வரலாற்றில் வேறெங்கும் நடைபெற்ற தில்லை. அப்படிப்பட்ட பெரும் சோகம் இலங்கை யில் நடந்தேறியது.

தங்களின் தாய் நாட்டைவிட்டு ஒரு இலட்சத்து 25 ஆயிரம் தமிழர்கள் ஓடினர். மூன்று லட்சம் தமிழர்கள் இலங்கை நாட்டிலேயே இடம்பெயர வைக்கப்பட்டனர். 16 ஆயிரம் தமிழர் கள் காணாமல் போய்விட்டனர். 90 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் விதவையராயினர். இலட்சக் கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டனர். மனித உரிமை மீறல்களும், போர்க் குற்றங் களும் மிகப் பெருமளவுக்கு நடைபெற்றதற்கு இவ்வுலகமே சாட்சியாகும்.

மிச்சமிருக்கும் தமிழர்கள் நேர்மையான தீர்வு காண வேண்டும் என்றும், நீதி வேண்டுமென்றும் கேட்கிறார் கள். உலக சமுதாயத்தின் பதிலை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கிறார்கள். அவர் களின் தியாகங்களுக்கும், துன்ப துயரங்களுக்கும் முறையான தீர்வொன்று கிடைக் கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

உலகநாடுகள் அரசியல் தீர்வுதான் தேவையானது என்று முன்வைத்து வருகின்றன. இலங்கைச் சூழலில் அரசியல் தீர்வே முக்கியமென்று ஐ.நா. மன்றத்தின் பொதுச்செயலாளர் வலியுறுத்தி வருகிறார்.

ஈழத் தமிழர்கள் தொடர்பான நிலைப்பாட்டை விளக்கும் வாய்ப்புக்கு நன்றி!

கடந்தகால அனுபவத்தின் அடிப்படையிலும், பல முன்மாதிரிகளின் அடிப்படையிலும், நாங்கள் கருதுவது என்னவெனில்; இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் ஈழத்தமிழர் கள் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் பன்னாட்டுத் தமிழர்கள் மத்தியில், அய்.நா.மன்றத் தின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டு மென்பதிலேதான் அரசியல் தீர்வு அடங்கியிருக்கிறது என்பதாகும்.

இத்தோடு எனது சுருக்கமான உரையை நிறைவு செய்கிறேன். சர்வதேச அரங்கில் - ஈழத்தமிழர்கள் தொடர்பான எங்களுடைய நிலைப்பாட்டினை விளக்கி உரைப்பதற்கான வாய்ப்பு ஒன்றினை வழங்கியமைக்கு, மாநாட்டு அமைப்பாளர்களுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

அனைவருக்கும் நன்றி!

வணக்கம்! இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.8-11-2012

தமிழ் ஓவியா said...

பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் கருப்பு உடை அணிந்து கண்டனப் பேரணி
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கிராமப்புற மக்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு எங்களின் மகத்தான ஆதரவு உண்டு கண்டனப் பேரணியைத் தொடங்கி வைத்து தமிழர் தலைவர் உரை

மூன்று முறை பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களின் கருப்புச் சட்டை கண்டனப் பேரணியில் திரண்டிருந்தோர்

சென்னை, நவ. 8- மூன்று முறை பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களின் கருப்பு உடை கண்டனப் பேரணி கண்டிப்பாக வெற்றிபெறும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கிராமப்புற மக்களாகிய உங்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு எங்களின் மகத்தான ஆதரவு என்றைக்கும் உண்டு என இந்த கண்டனப் பேரணியை தொடங்கி வைத்துப் பேசிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் 13,000 பேர்களை அ.தி.மு.க. அரசு மூன்றாவது முறையாக கடந்த 8.11.2011 அன்று ஒரு அரசாணை வெளியிட்டு அவர்களை பணி நீக்கம் செய்தது.

இதனால் பணி இழந்த மக்கள் நலப் பணி யாளர்கள் 20-திற்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டும் சிலர் மரணமும் அடைந்து உள்ளனர். தி.மு.க. ஆட்சியில் இவர்கள் நியமிக்கப் பட்டார்கள் என்ற ஒரே அரசியல் காரணத்திற்காக 13,000 மக்கள் நலப்பணியாளர்களை அ.தி.மு.க. அரசு பணி நீக்கியுள்ளது.

அவர்களை நீக்கியது தவறு; மீண்டும் அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் அ.தி.மு.க. அரசு இன்னும் பணி வழங்கவில்லை.

இந்நிலையில் கடந்த 8.11.2011 அன்று மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டு ஒரு ஆண்டு ஆனதைக் கண்டித்தும், அதை நினைவு கூரும் வகையில் இன்று (8.11.2012) தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் காலை 11 மணியளவில் 3ஆவது முறையாக பணி நீக்கம் செய்யப்பட்ட நவம்பர் 8அய் கருப்பு தினமாக நினைவு படுத்தும் வகையில் தமிழக அரசைக் கண்டித்து மாபெரும் கருப்பு உடை கண்டனப் பேரணி நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர்

இக்கண்டனப் பேரணியைத் தொடங்கி வைத்து பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்:

வேதனையோடு கூடிய பணி நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களின் இந்த கண்டனப் பேரணி மற்றும் நியாயமான இந்தப் போராட்டத்திற்கு எங்களின் மகத்தான ஆதரவு எப்போதும் உண்டு. தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக கொடுமைக்கு ஆளான மக்கள் உண்டு என்றால் இந்த மக்கள் நலப் பணியாளர்கள்தான். தொடர்ந்து மூன்று முறை பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது மனித நேயத்திற்கே விரோதமானது.

தமிழ் ஓவியா said...

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரும் கிராமப்புறத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட குடும்பத் தைச் சேர்ந்தவர்கள்தான் ஆகும். இவர்களை பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கூறும் போது: கால்பந்து விளையாடும் போது பந்தை உதைப்பதைப்போல், மக்கள் நலப்பணியாளர்களை உதைத்துத் தள்ளுவதா? என தமிழக அரசை கேட்டுள்ளார். மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட வேண்டும் என நீதிபதி செல்வி சுகுணா நல்ல தீர்ப்பை தந்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகளே கேட்டார்கள். மக்கள் நலப் பணியாளர்களை ஆடு மாடு போல அரசு நடத்துவதா என கண்டித்து உள்ளனர். எனவே தமிழக அரசு பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் முன்னேற்றச் சங்கம் நடத்தும் இந்த கண்டனப் பேரணி மற்றும் போராட்டம் நிச்சயமான வெற்றி பெறும்.

இதில் நீங்கள் வெற்றி அடைவீர்கள் என்று தமிழர் தலைவர் உரை நிகழ்த்தினார். மீண்டும் பணி வழங்கக்கோரி தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில் நடைபெற்ற இக்கண்டனப் பேரணிக்கு இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் தன.மதிவாணன் தலைமை வகித்து பேசினார். மாநிலப் பொதுச் செயலாளர் தா.இராசேந் திரன், மாநிலப் பொருளாளர் கு.வாகலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எஸ்.விஜயதாரணி, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், விவசாய தொழிலாளர் கட்சியின் தலைவர் பொன்.குமார், ஏஅய்டியுசி மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் பி.எம்.மூர்த்தி ஆகியோர் இக்கண்டனப் பேரணி யில் பங்கேற்று போராட்டம் வெற்றி பெற சிறப் புரையாற்றினர்.

ஏராளமானோர் பங்கேற்பு

இக்கண்டனப் பேரணியில், பணியிழந்த மக்கள் நலப் பணியாளர்கள் குடும்பத்தினர் ஏராளமானோர் பங்கேற்றனர். திராவிடர் கழக தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தென்சென்னை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் தங்க. இரமேஷ்குமார், தோழர்கள் பழனிச்செல்வன், வசந்தராஜ் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...


அதோ பாரப்பா! தினமலராவது திருந்துவதாவது!!


சிறீரங்கத்தில் பிராமணாள் உணவு விடுதி - அதனை எதிர்த்துத் திராவிடர் கழகம் நடவடிக்கை குறித்து தினமலர் (1.11.2012) நம்மை ஆதரித்து வந்த கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தது.

ஆச்சரியம்; ஆனால் உண்மை! என்று விடுதலையும் அந்தக் கடிதத்தை வெளியிட்டு இருந்தது.

அதுதானே பார்த்தோம் - தினமலருக்காவது நல்ல புத்தி வருவதாவது!

நேற்றைய தினமலரில் (9.11.2012) அதற்கு நேர்மாறாக - ஏடா கூடமாக ஒரு கடிதத்தை வெளியிட்டது.

நாட்டில் என்ன என்னவோ நடந்து கொண்டிருக்கும் வேளையில், ஜாதியைப்பற்றி பேசுகிற வீரமணிபற்றி என்ன சொல்வது.

நாட்டுப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் எழுதுவது இல்லையாம் - தினமலர் ரொம்பவும்தான் கவலைப்படுகிறது.

தினமலரின் இன்றைய கடிதத்துக்கு முதல் தேதி தினமலர் கடிதமே பதில் - போதுமானது!

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க, ஏற்கெனவே ஓட்டல் நடத்திவந்த பார்ப்பான் திடீரென்று பிராமணாளைப் புகுத்துவானேன்? ஏன் இந்த விஷம வேலை என்று தினமலர் எழுதவேண்டாமா?

சரி, திராவிடர் கழகத் தலைவர் வேறு பிரச்சினைகள்பற்றி எழுதுவது, பேசுவது கிடையாதா?

இந்த ஒரு வாரத்திலேயே எத்தனை எத்தனையோ அறிக்கைகள், கருத்துகள்!

மருத்துவக் கல்லூரி மாணவர் பிரச்சினை, சேது சமுத்திரத் திட்டப் பிரச்சினை, மத்திய அரசு மின்சாரம் அளிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் வழக்குத் தொடுத்த பிரச்சினை, கீழத்தஞ்சை மாவட்டத்தில் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு ஈட்டுத் தொகை அளிக்கவேண்டும் என்ற அறிக்கை என்று எத்தனை எத்தனையோ நாட்டுப் பிரச்சினைகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளாரே - இவற்றில் ஒரே ஒரு வரியையாவது தினமலர் திரிநூல் வெளியிட்டதுண்டா?

நிழற்படங்களை வெளியிடும்போதுகூட அதில் திராவிடர் கழகத் தலைவர் படம் இருந்தால், அதனை அப்படியே கத்தரித்துவிட்டு செய்தி வெளியிடும் அக்கிரகார தினமலர்கள் திராவிடர் கழகத் தலைவர்பற்றி எழுதுவதுதான் விஷமம் கலந்த வேடிக்கையாகும்!

காலைக்கதிரிலும், தினமலரிலும் வெளிவரும் (இது உங்கள் இடம்) ஒரே கடிதத்தை பெயர் மாற்றி வெளியிடும் பித்தலாட்ட ஏடுகள் பேனா பிடிக்கலாமா?10-11-2012