Search This Blog

11.11.12

கறுப்புச் சட்டைக் காரர்களுக்கு பார்ப்பனர்கள் தான் பிரச்சினையா?

விளம்பர ஜாதி!
ஸ்ப்ளெண்டர் மோட்டர் சைக் கிளை விளம்பரப்படுத்திட இப்படி ஒரு முறையைக் கையாண்டுள்ளது இந்த நிறுவனம்.

ஷிவ்ராம் அய்யர் சௌம்யா அய்யர் குடும்பத்தில் இன்னொருவரும் இணைந்துள்ளார் அவர்தான் ஸ்ப்ளெண்டர் அய்யராம்.

இதே பாணியில் கேரளாவில் நாயர் என்றும், மும்பை மற்றும் புனேயில் படேல் என்றும், டில்லியல் சௌகான் என்றும் கொல்கத்தாவில் மிஸ்ரா என்றும் இப்படியாக விளம்பரம் செய்து வருகின்றனர்.

வியாபாரம் செய்வதற்கு எத் தனையோ வழிமுறைகள் உள்ளன.
ஜாதிப் பெயர்களை முன்னிறுத்தி விளம்பரங்களைச் செய்ய வேண்டுமா? இதன் பின்னணி என்ன?

இன்னொரு தகவலும் இது தொடர்பாக உண்டு. மூன்று மாதங் களுக்கு முன்பு இதே சென்னையில் தான் - தரமணி பகுதியிலே உள்ள ஓர் அமெரிக்க நிறுவனம் அதன் பெயர் பேபால் (Paypal)

அந்த நிறுவனத்தின் ஆண்டு விழா! (நடத்தட்டும்! நடத்தட்டும்! மகிழ்ச்சி தான்!)
விளையாட்டுப் போட்டிகள் எல்லாம்கூட! திறமைகளை வெளிப் படுத்த வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டாமா?

விளையாட்டுப் போட்டிகள் என் றால் குழுக்கள் (Teams) பிரிக்கப்பட வேண்டாமா?

ஆமாம்! ஆமாம்!! அதில் என்ன சந்தேகம்? நம் பள்ளிக்கூடத்திலே கூட பிரிப்பார்களே! காந்தி அவுஸ், ஜவகர் அவுஸ், நேதாஜி அவுஸ் அல்லது  வண்ணப் பெயர்கள் சிகப்பு, மஞ்சள், நீலம் என்று கூடப் பிரிப்பார்களே!
சில பள்ளிகளில் பூக்களின் பெயர் களைக்கூட சூட்டுவதுண்டு. முல்லை, ரோஜா, சாமந்தி என்று போகும்.

பேபால் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட விழாவுக்கான  விளை யாட்டுக் குழு எந்தெந்த பெயர்களில் பிரிக்கப்பட்டு இருந்தன? படேல் ஆஃப் குஜராத், பேனர்ஜீஸ் ஆஃப் பெங்கால், சிங்ஸ் ஆஃப், பஞ்சாப், டிசோசாஸ் ஆஃப் கோவா; - என்ன தமிழ்நாட்டைக் காணவில்லையே என்று அவசரப்படாதீர்கள். அய்யர்ஸ் ஆஃப் தமிழ்நாடு.

எப்படி இருக்கிறது? படித்தவர்கள் அல்லவா! அவர்களில் மூளை வித்தியாசமாகச் செயல்பட்டால்தானே பெருமை?

ஆமாம் அமெரிக்க கம்பெனி யாயிற்றே - அவர்களுக்கு இதெல்லாம்....
சொல்லப் போவது புரிகிறது! புரிகிறது!! ஆனால் ஆங்கே பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள் எல்லாம் யார்? அவர்கள் பாஷையில் சொல்ல வேண்டுமானால் “Brahmins! Brahmins”

ஓகோ! கதை அப்படிப் போகிறதா!

பிரச்சினை வெடித்ததும் வியாக்கி யானங்களை சொல்ல ஆரம்பித்தார்கள்.
அய்.பி.எல். கிரிக்கெட்டுக்குப் பெயர் வைக்கவில்லையா? இதெல்லாம் கொஞ்சம் தமாஷ்! எதையும் சீரியஸாகப் பார்த்தால் எப்படி? ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு அடையாளம் - அவ்வளவு தான்.
ஒண்ணும் இல்லாத விஷயத்தை எல்லாம் துருவித் துருவிப் பார்க்கக் கூடாது - என்று வெண்டைக்காய் விளக் கெண்ணெய் வியாக்கி யானங்கள்! பிரச்சினை  பெரிதாக வெடித்ததும் ஊற்றி மூடி விட்டார்கள் - காரணம் தமிழ்நாடு அல்லவா!

இப்பொழுது ஒரு முக்கியமான இடத்துக்கு நாம் வந்தாக வேண்டும்.
இப்படி எல்லாம் யாருடைய மூளை வேலை செய்கிறது?
நுட்பமான கேள்வி இது! ஏன் அவசியமான கேள்வியும்கூட!
தனியார் நிறுவனங்கள் எல்லாம் இப்பொழுது பெரும்பாலும் அக்கிர காரமாகி விட்டன. அதிலும் முக்கிய பதவிகளில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் இடத்தில் எல்லாம் பார்ப்பனர்கள் அட்டாணிக் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு விட்டார்கள்.

(இன்றைக்கு இந்தியாவில் தனியார்த் துறைகளில் இயக்குநர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கை 9052; இதில் பார்ப்பனர்கள் உள்ளிட்ட முன்னேறிய ஜாதியினர் 8367 (92.6%) பிற்படுத்தப்பட்டோர் 34.6 (3.8%) தாழ்த்தப்பட்டோர் 319 (3.5%) (Economic And Political Weekly - 11.8.2012)
இப்படிப் பார்ப்பனர்கள் தனியார் நிறுவனங்களில் படை எடுத்து, படம் எடுத்து ஆக்கிரமித்துக் கொண்டார்கள் அல்லவா!

தனியார் நிறுவனங்கள் எல்லாம் அவாளின் ஆதிக்க புரியாகி விட்டால் அதன் பின் கேட்க வேண்டுமா?

அந்த வேலைதான் மோட்டர் பைக் விளம்பரத்திலும் அய்யர், பானர்ஜி மிஸ்ரா - விளையாட்டுப் போட்டிகளிலும் குழுக்களுக்கும் ஜாதிப் பெயர்கள்.
பார்ப்பனர்களாவது வெங்காயமாவது! அதெல்லாம் பழைய காலம்.
இப்பொழுதெல்லாம் அந்தப் பேச்சுக்கே வேலையில்லை என்று நமது பார்ப்பனர்  அல்லாத மக்கள் அதிலும் கொஞ்சம் படித்தவர்கள் அடுத்தவர்களின் வாய்களையும் கடன்வாங்கி இடக்கு முடக்காகப். பேசுவதுண்டு.
அத்தகைய அதிகப் பிரசங்கிகள் இந்தத் தகவல்களையும் உண்மை களையும் கண்களை அகல விரித்தும், மூளையைக் கொஞ்சம் கசக்கிவிட்டு, வெளிச்சத்தில் குளிப்பாட்டியும் பார்த்தால் தெரியும். உண்மையான சங்கதி.
2012லும் பிராமணாள் ஓட்டல் வைக்க வந்து விட்டாளே தெரிய வில்லையா?
அதிகாரப் பலமும், நம் மக்களில் அப்பாவித்தனம் என்ற பலகீனமும் பார்ப்பனர்களுக்குக் கிடைத்த தெம்பான இரண்டு கால்கள்!
 
நாட்டில் எவ்வளவோ நடக் கின்றன. இந்தக் கறுப்புச் சட்டைக் காரர்களுக்கு இதுதான் பிரச்சினையா? என்று மிகப் பெரிய விசால மனசுக்குச் சொந்தக்காரர்கள் போல கதைப்பார்கள்.

நாம் திருப்பிக் கேட்க வேண்டும்; நாடு எவ்வளவோ முன்னேறி விட்டது - இன்னமும் ஏன் இந்த அய்யர் பிராமணாள் விளம்பரம்?

இதற்கு மட்டும் பதில் சொல்ல மாட்டார்கள். ஏன், பதில் சொல்ல முடியாது - அதனால்.
                 --------------------------மின்சாரம் அவர்கள் 10-11-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

28 comments:

தமிழ் ஓவியா said...


நரகாசுரன் பிறப்பு கட்டுக்கதையே!


இரணியாட்சன் ஒருமுறை ஞாலத்தைப் (பூமியை)ப் பாயாக சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க, திருமால் பன்றியுருக் கொண்டு தன் கொம்பினால் அதன் மார்பைப் பிளந்து ஞாலத்தைப் பண்டுபோல் நிறுத்தினார் என்றும், அன்று நிலமகட்கும் அவருக்கும் நேர்ந்த தொடர்பினால் நரகாசுரன் பிறந்தானென்றும், கூறிக் கல்லா மக்களை விலங்காக்கும் கட்டுக் கதைகளின் இழிவையும் இடக்கரையும் பொய்மையையும் புரட்டையும் படவாயிலாகப் பெரியார் விளக்கிக் காட்டியபோது, அறிவியலும் ஞான நூலும் உயிர் நூலும் உடல் நூலும் வரலாற்று நூலும் கற்ற இக்காலத்தில் அவருடன் ஒத்துழையாது, ஆரியருடன் சேர்ந்து கண்டித்தது. அவர் கூறியவாறு காட்டு விலங்காட்டித்தனமேயன்றி வேறன்று.
தமிழ் இலக்கிய வரலாறு (பக்கம் 381 ஞா. தேவநேயப் பாவாணர்)

தகவல்: ச. அரங்கசாமி, காரைக்குடி)

தமிழ் ஓவியா said...


தண்ணீரைப்பற்றி...


தண்ணீர் கெட்டுப் போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், பாட்டில்களிலும் கேன்களிலும் அடைத்து விற்பனைக்கு வருகிற தண்ணீரில் மட்டும் எக்ஸ்பைரி தேதி குறிப்பிடுவதேன்?

பாட்டில் தண்ணீரைத் திறக்காத வரை, அதில் பாதிப்பில்லை. ஆனாலுமே, அதன் சுவையானது நாள்பட மாறிக் கொண்டே இருக்கும். சரியாக பத்திரப்படுத்தாவிட்டால், அதன் பிளாஸ்டிக் பாட்டிலே, தண்ணீரின் சுவையை மிக மோசமானதாக மாற்றி விடும். சூரிய வெளிச்சம் பட்டாலும், பிளாஸ்டிக்கில் மாற்றங்கள் உண்டாகி, அதன் பாதிப்பு, தண்ணீரின் சுவையை மாற்றும்.

எனவேதான் பாட்டில் மற்றும் கேன்களில் தண்ணீர் வாங்கினால், அவற்றை ஈரமோ, சூரிய வெளிச்சமோ படாத இடத்தில் வைக்க வேண்டும் என்றும், அதன் பக்கத்தில் பெயின்ட், எரிபொருள்கள், உலர்சலவைக்கான ரசாயனங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்றும் சொல்லப்படுகிறது. பாட்டிலைத் திறந்து விட்டால், அதை அதிகபட்சம் 1 வாரத்துக்குள் உபயோகித்து விட வேண்டும்.

இல்லாவிட்டால் அதில் பாசி மற்றும் பாக்டீரியா தொற்றி, வளரத் தொடங்கி, அதைக் குடிப்போரின் ஆரோக் கியத்தைப் பாதிக்கும் அபாயம் உண்டு. அதற்காக திறக்கப்படாமலே வைத்திருக்க வாட்டர் பாட்டில்களை எத்தனை நாள் வேண்டுமானாலும் வைத்து உபயோகிக்கலாம் என அர்த்தமில்லை. அதற்கும் காலக்கெடு உண்டு என்பதால்தான் வாட்டர் பாட்டில்களில் எக்ஸ்பைரி தேதி குறிப்பிடப்படுகிறது. 10-11-12

தமிழ் ஓவியா said...


உணவுக்கு முன்னதாக பழம் சாப்பிடுதல்


சாதாரணமாக, உணவுக்குப்பிறகு பழம் சாப்பிடுவது பலரின் வழக்கம். இது ஒரு நோய் உருவாக்கும் பழக்கம். பழங்கள் இயற்கை யிலேயே முன் ஜீரணம் ஆனவை. ஜீரணத்திற்காக, பழங்களுக்கு அதிக சக்தி தேவயில்லை.

நாம் உண்ணும் உணவு ஜீரணமாவதற்கு மூன்று மணி நேரத்திற்கு மேலாகிறது. உணவு உண்டபிறகு பழம் சாப்பிட்டால், அவை உணவு ஜீரணமாவதற்காக, காத்திருக்கின் றன. இதே சமயம், பழங்கள் வேதியியல் மாற்றத்திற்கு உள்ளாகி, கெட்டுப் போகின்றன.

அவை வயிற்றில் வாயு உபத்திரவத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் ஜீரணம் ஆகிக் கொண்டிருக்கும் உணவை கெட்டுப் போன பழங்கள் கெடுத்து விடுகின்றன. உணவுக்கு முன்னால் பழங்கள் சாப்பிடுவது ஒரு ஆரோக்கியமான பழக்கம்.

தமிழ் ஓவியா said...


வேற்றுக்கிரக மனிதர்கள்


வேற்று கிரக மனிதர்களைப் பார்த்தால் அவர்களுடன் சண்டை போடாதீர்கள்.. என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான பிரையன் ஸ்மித் கூறியுள்ளார். பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து வருவதை ஆய்வின் மூலம் நிரூபித்ததால் 2011ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றவர் பிரையன் ஸ்மித். இவர் பெய்ஜிங்கில் நடைபெற்ற அனைத் துலக வானவியல் சங்க மாநாட்டில் பங்கேற்றார். அந்த மாநாட்டில் வேற்றுக்கிரக மனிதர்களைபற்றிய விவாதம் எழுந்தது. அப்போது பிரையன் கூறியதாவது:

வேற்றுகிரக மனிதனை எப்போது பார்ப்போம் என்று எல்லோரும் பேசத் தொடங்கி விட்டனர். அப்படியே அந்த மனிதர்களை பார்த்துவிட்டால், அவர்களுடன் சண்டை போடா தீர்கள். அது நமக்கு நல்லதல்ல. வேற்றுகிரகங்களில் உள்ள ஜீவராசிகளை கண்டுபிடித்து, அவற்றுடன் தொடர்பு கொள்வதும், நம் பூமியைப் பற்றிச் சொல்வதும் மிக ஆபத்தானது என்று நினைக்கிறேன்.

ஆனாலும், இப்போது நாம் அதுபற்றி கவலைப்படத் தேலை யில்லை. அவை நம்மைவிட்டு பல லட்சம் கோடி மைல் தொலைவில் உள்ளன. அவை பூமிக்கு வர இன்னும் பல நூறாண்டுகள் ஆகலாம். அது எப்போது நடக்குமோ, அப் போதுதான் நடக்கும். எதிர்காலத்தில் பிரபஞ்சம் இருள் நிறைந்ததாக இருக்கும். வேற்று கிரகவாசிகளைப் பார்ப்பது என்பது நடக்காமலும் போக லாம். நம்மைப் போல ஜீவராசிகள் வேறு கிரகங்களில் இருப்பது மிக மிக அரிதானது என்று பிரையன் கூறினார்.

வேற்று கிரகவாசிகள் பூமிக்கே வந்துவிட்டனர் என்று பல்கேரிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பல்கேரிய அறிவியல் அகடாமியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பல்கேரிய அறிவியல் அகடாமியைச் சேர்ந்த விஞ்ஞானிகள், வேற்று கிரவாசிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அவற்றுடன் தொடர்பு கொள்ள பல்வேறு சமிக்ஞைகளை அனுப்பி வருவதாக அவர்கள் சொல்கின்றனர். அந்த அகடாமியின் விண்வெளி ஆராய்ச்சி மைய துணை இயக்குநர் லக்கிஸர் பிலிப்போ கூறியதாவது:

வேற்றுகிரகவாசிகளுக்கு பூமியில் தொடர்பு இருக்கிறது. அவை பூமிக்கு வந்திருக்கலாம். அவற்றுக்கு 30 வகை யான கேள்விகளை சில குறியீடுகள் மூலம் கேட்டிருக்கிறோம். பூமியின் பல பகுதிகளில் காணப்பட்ட சுமார் 150 குறியீடுகளை அவை அனுப்பிய பதிலாக கருதுகிறோம்.

அவை நம்மீது பகைமை உணர்வை கொண்டவை அல்ல. அவை நமக்கு உதவி செய்ய விரும்புகின்றன. அவற்றுடன் நேரடி யாக தொடர்பு கொள்ள இன்னும் 15 ஆண்டுகள் ஆகலாம்.

- கூட்டுறவு 2012 (ஆகஸ்டு - செப்டம்பர்)

தமிழ் ஓவியா said...


வேப்பிலையால் பேருந்து இயங்குமா?


திருவாரூரிலிருந்து திருச்சி வழியாக கரூர் செல்லும் த.நா. 49 -_ நா. 1448 பதிவு எண் கொண்ட அரசு பேருந்தில் முகப்பு விளக்கு ரேடியேட்டர் அருகில் வேப்பிலைக் கொத்து கட்டப்பட்டுள்ளது. ஆயில், கிரீஸ், சரி செய்தல், ஹைடிராலிக் பிரேக், கியர்பாக்ஸ், டயர் செக்கப், ரேடியேட்டர் இவைகளைச் சரிபார்க்காமல் வேப்பிலைக் கொத்துகளை பேருந்தின் முகப்பில் செருகுவதில் போக்குவரத்து ஊழியர்களில் சிலர் ஆர்வமாக உள்ளனர்.

பயணிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்க வேண்டிய இவர்களே இந்த வேலையைச் செய்தால் பயணம் செய்கின்றவர்கள் அச்சப்படுவார்கள் அல்லவா? இதை செய்கின்றவர்கள் இவர்களின் விருப்ப (இஷ்ட) தெய்வச் சிலைகளை ஓட்டுநர் இருக்கைகளில் அமர வைத்து ஸ்டியரிங்கை அத்தெய்வங்களின் கைகளில் கொடுத்துவிடலாம் அல்லவா? டீசலை எரி பொருளாக கொண்டு இயங்கும் பேருந்திலுள்ள டீசல் எஞ்சினைக் கண்டறிந்த அறிவியல் அறிஞர் ரூடால்ப் டீசலின் புகைப்படம் தான் பேருந்தின் ஓட்டுநரின் இருக்கைக்கு எதிரே மாட்டப்பட்டிருக்க வேண்டும்.

விநாயகன், சரஸ்வதி, முருகன் போன்ற கடவுளின் படங்கள் அல்லவா மாட்டப்பட்டுள்ளன. அவர்கள் என்ன அறிவியல் அறிஞர்களா? காமராஜர் முதல்வராக இருந்தபோது அரசால் நேரடியாக இயக்கப்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றபோது சிறுசிறு பழுதின் காரணமாக ஆங்காங்கே பிரேக் டவுன் ஆகி நின்றன. வெளிநாடு (அமெரிக்கா, ஜெர்மன்)களிலிருந்து வாகன இயந்திர பொறியாளர்கள் சென்னை, திருச்சி, சேலம், மதுரை போன்ற நகரங்களில் தங்க வைக்கப்பட்டு பழுதடைந்த பேருந்தை சரி செய்ய தொலைபேசி மூலம் அழைக்கப்படுவர். அவர்களால் சரி செய்யப்பட்டு பேருந்து மீண்டும் இயங்கும்.

இது போதாது என்று வெளிநாட்டு இயந்திர பொறியாளர்களால் நமது ஓட்டுநர்களுக்கு பேருந்துகளில் சிறு சிறு பழுதுகளை அறிந்து சரி செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது. பிறகு இயந்திர பொறியியல் படிப்பு பயின்ற பொறியாளர்கள் (டீசல் மெக்கானிக்) நியமிக்கப்பட்டார்கள். மேற்கண்ட செயல்களில் பெரியாரின் ஆலோசனைகளை கேட்டு காமராசர் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டார். அரசின் செயல்பாடுகள் சமூக அமைப்பில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதாக இருத்தல் வேண்டும்.

கல்வி செயல்பாடுகள் அதை ஒட்டியதாக இருத்தல் வேண்டும். நமது நாட்டில் புதிதாக விமானங்கள் வாங்கி அதை முதல் முதலாக இயக்கும்போது தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி பூஜை செய்தபோது அதை அன்றைய பிரதமர் நேரு கண்டித்தார். பக்ரா நங்கல் அணைக்கட்டை திறந்து வைத்தபோது கூடியிருந்த மக்களை பார்த்து இந்த வரலாற்றுப் புகழ்மிக்க அணையைத் திறந்து வைக்கும் தகுதி இந்த அணையின் பெருமையோடு தங்களது பெயர்களையும் பதித்துக் கொள்ளும் தகுதி உழைத்த பாட்டாளி மக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு எனக்குமுன் அமர்ந்திருக்கிறீர்கள். இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

நாட்டை வாழ்விக்கப் போகும் இது போன்ற பிரமாண்ட அணைகளையும் பெரிய தொழிற்சாலைகளையும் தான் நான் தேடிச் செல்லும் வழிபாட்டுத் தலங்களாக கருதி மிகவும் மதிக்கின்றேன் என்று கூறினார். நமது அரசியல் சாசன சட்டப்பிரிவு Act 51a(h) அறிவியல் விழிப்புணர்வு குறித்து பின்வருமாறு கூறுகின்றது.

Act 51a(h) says it shall be the duty of every citizen to develop scienfic temper, humanism and the spirit of inquiry and reform.

தமிழ் பாட நூல்களில் கற்பனை என்ற பெயரில் மூடநம்பிக்கைக் கருத்துக்களை பரப்பலாமா?

தமிழ் ஓவியா said...

12ஆம் வகுப்பு தமிழ்ப் பாடநூல்6ஆம் பாடம் நீதி நூல்களில் இலக்கிய நயம்

ஆசிரியர்: முனைவர் அ. சிதம்பரநாதன்

162ஆம் பக்கம் மூன்றாம் பத்தி- _உலகில் பலருக்கு பல தொழிலை இறைவர் பிண்டம் பிடிக்குங்காலே அமைத்திருக்கிறார். பிச்சைக்காரன் ஒரு கனவு கண்டதாகவும், அதன் பயனாய் திருவள்ளுவர் ஒரு குறள் எழுதினார் என

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக உலகியற்றி யான்

எனவும், அதற்கு அவர் எதிரே ஒருவன் கனவில் வந்தான் போலும்! வந்தவன் பிச்சைக்காரன். அவன் நேற்று யாசித்தவன், மூன்றாநாள் யாசித்தவன், இன்றும் யாசிக்கத்தான் வேண்டுமோ என அஞ்சுகிறவன். ஆம் என் செய்வது, தலையில் எழுதிய வண்ணந்தானே நடக்கும். இரந்துதான் ஆக வேண்டும் என்று எண்ணினானா?. அதற்குள்ளாக இன்னொரு எண்ணம் அவனுக்குத் தோன்றிற்று.

யாசிப்பதும் ஒரு தொழிலா? உலகில் இன்னின்னார்க்கு இன்னின்னது தொழில் எனப் பிரமன் வகுப்பதாக வைத்துக் கொள்வோம். அத்தொழில்களில் ஒன்றாக யாசித்தலையுஞ் சேர்த்து எண்ணினானா பிரமன்? எண்ணினான். ஆனால், அவனே அந்தத் தொழிலைக் கொஞ்சம் பார்க்கட்டும். உட்கார்ந்த இடத்தைவிட்டு அசையாமற் படைத்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, இந்த உலகிற்கு வரட்டும். வந்து தெருத் தெருவாக அல்லற்பட்டு அலையட்டும்.

தமிழ் ஓவியா said...

அப்பொழுதுதான் அறிவான் இரத்தற்றொழில் எவ்வளவு இழிவானது என்பதை இழிவானதொன்றை எனக்கும் என் போன்றவர்களுக்கும் ஒரு தொழிலாகப் பிரமன் வகுத்தான் என்றால், அவன் ஒரு பாவி அந்தப் பாவத்தால் அவன் ஒரு பிறவி எடுக்கட்டும். அப்பிறவி மானிடப் பிறவியாய் இருக்கட்டும். மானிடனாய், மானம் விட்டு, இரவலனாய் வந்து சேரட்டும். போகிற இடத்திலே உடனே உணைவக் காசைப் பிச்சையைப் பெறாமல், பல வீடுகளில் பல தெருக்களில் அலையட்டும். அலைந்து கெட்டொழியட்டும்!

தமிழ் ஓவியா said...

இவ்வாறு கற்பனை என்ற பெயரில் மாணவர்கள் மனதில் பிற்போக்கான மூட நம்பிக்கை கருத்துக்களை விதைக்க லாமா? உலகில் இன்னின்னார்க்கு இன்னின்னது தொழில் எனப் பிரமன் வகுத்தான் எனக் குறிப்பிடுவது வருண பேதத்தையும், குலக் கல்வியையும் மறைமுகமாக குறிப்பிடுவதும், ஆம் எனச் செய்வது தலையில் எழுதிய வண்ணம் தானே நடக்கும் என்பதும் உலகில் பலருக்கும் பல தொழிலை இறைவர் பிண்டம் பிடிக்குங் காலே அமைத்திருக்கிறார் என்பதெல்லாம் நச்சுக் கருத்தல்லவா?

விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும்

வீணர் எல்லாம் மாறணும்

வேலை செஞ்சா உயர்வோம் என்ற

விபரம் மண்டையில் ஏறணும்

எறும்பு போல வரிசையாக

எதிலும் சேர்ந்து உழைக்கணும்

என்றும்,

மனிதரை மனிதர் சரிநிகர் சமமாய்

மதிப்பது நம் கடமை

என்ற பாடலில்,

உழைப்பை மதித்து பலனை கொடுத்து

உலகில் போரை தடுத்திடுவோம் என்றும்

செய்யும் தொழிலே தெய்வம் அதில்

திறமைதான் நமது செல்வம்

என்ற பாடலில்,

காயும் ஒரு நாள் கனியாகும் -_ நம்

கனவும் ஒரு நாள் நனவாகும்.

காயும் கனியும் விலையாகும்

என்ற நம்பிக்கையையும்,

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே

நாட்டின் நெறி தவறி நடந்துவிடாதே

துன்பத்தை வென்றிடும் கல்வி கற்றிட வேண்டும்

என்ற கல்விக் கருத்துக்களையும்,

வளர்ந்துவரும் உலகத்திற்கு நீ வலது கையடா

என்றெல்லாம் சொன்ன மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் கருத்துக் கள் வாழ்க்கையின்

வசந்த வாசலை தொடப் போகும் +2 மாணவர்களின் பாட நூலில் இடம் பெற்றால் அவர்கள் வாழ்வில் ஏற்றம் பெறும். மாறாக பிரம்மனின் தலை யெழுத்து, இறைவன் பிண்டம் பிடித்தான் - யாசிக்கும் (பிச்சை எடுத்தல்) தொழில் என்ற இழிவான சிந்தனைகளை விதைக்கலாமா? நாம் எதை எண்ணு கிறோமே அதுவாக மாறுகிறோம்.

உயர்ந்த எண்ணங்கள் உயர்ந்த சிந்தனையை உருவாக்கும். மேற்கண்ட இழிவான சிந்தனையுள்ள கருத்துக்கள் தமிழ் நூல்களில் இடம் பெறுவதால் தான் அறிவு ஆசான் பெரியார் அவர்கள் தமிழ் புலவர்களையெல்லாம் கழுவில் ஏற்ற வேண்டும் என்று சொன்னார் போலும்.

- க. ஆறுமுகம்
மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் திருவாரூர்
10-11-12

தமிழ் ஓவியா said...


அறிவும், பொருளும் விரையமாகும் விநாயகர் சிலை ஊர்வலம் (மும்பை நிகழ்வின் அரிய படப்பிடிப்பு)


- மு.வி. சோமசுந்தரம்

பார் போற்றும் பகுத்தறிவுப் பகல வனைத் தந்ததால் பெருமை பெற்றது ஈரோடு நகரம் அறிவு என்ற ஆணி வேரைக் கொண்ட தந்தை பெரியார் என்ற ஆலமரத்தின் கொள்கை விழுதுகள் ஏராளம். பரந்து புறத்தே பரவியுள்ள பெரியார் தொண்டர்கள் எனப்படும் சல்லி வேர்கள் கணக் கிலடங்காதவை.

ஆலமரத்தின் கொள்கை கோமகனாக, பெரியார் தொண்டர் படையின் முன் தொண் டனாக தொண்டறத் தோணியில் பயணிக்கும் தமிழர் தலைவர், கரு மேகங்களாகக் குவிந்திருந்த கருஞ் சட்டைப் படையிடையே கருத்து மழையான உரையை 17.9.2012இல் ஈரோட்டு திறந்தவெளி மாநாட்டில் நிகழ்த்தியுள்ளார். பொழிந்த மழையில் தழைத்து எழுந்த கருத்துச் செடி ஒன்று என் கண்களையும் கருத்தையும் கவ்விப் பிடித்தது.

பெரியார் கொள்கை என்பது ஒரு அறிவியல் உண்மை Scientific Approach, Scienific Temper, Scienific Humanism பெரியார் பிள்ளையாரை உடைத்த வுடனே, அதற்கு மாறுபட்ட கருத்தை சொன்னார்கள். (பத்திரிகையாளர் அருண்ஷோரி, பெரியார் பிள்ளையார் உடைப்பின் உயரிய மூடநம்பிக்கை ஒழிப்புத் தத்துவத்தின் மாண்பைப் பாராட்டியதுடன், தனக்கு ஒரு துணிவையும் தந்ததாகக் குறிப்பிட்டதும் உண்டு) பிள்ளையாரை வைத்து பிற்காலத்தில் அரசியல் செய்வார்கள்.

அதற்கு இந்த மண்ணிலே இடம் கொடுக்கக் கூடாது. மற்ற மாநிலங்களில் (பிள்ளையாரை வைத்து அரசியல் செய்ய முடிந்த காவி கட்சியால், தமிழ் நாட்டில் காலூன்ற முடியவில்லையே

தலைப்பாய் கட்டு தியாகி திலகரின் தரி கெட்ட தலையில் தோன்றியது பிள்ளையார் சதுர்த்தி விழா. இந்துக்களை கட்டிப்பிடித்து வைக்கும் பாசக் கயிறாக (எமன் பாசக் கயிறு அல்ல) அமைத்துக் கொள்ளவும், முஸ் லீம்கள் மத்தியில் ஒரு பயத்தைத் தோற் றுவிக்கவும் திட்டமிட்டு தீட்டப்பட்டுத் தெருவுக்குக் கொண்டு வரப்பட்டது இந்த விநாயகர் சதுர்த்தி விழா.

மேலும் ஒன்றைத் தமிழர் தலைவர் சுட்டிக் காட்டியுள்ளார். வடபுலத்தில் பிள்ளையாரை வைத்துத்தானே அரசியல் செய்தார்கள். அதை வைத்துதானே ஒரு கட்சி வளர்கிறது

அந்த வழியில், தமிழ்நாட்டிலும், காவி கட்சியை வளர்க்க ஆன்மிக ஆலோசகர்கள் ராசகோபுரம் கட்ட நாக்கைத் தொங்கப்போட்டு குரைத்து வருகிறார்கள். அவர்களுக்கு அனுகூல மான அரசியல் காற்றால் ஆட்டம் ஆடுகிறார்கள். கொட்டம் அடிக் கிறார்கள். சனிக்கிழமையுடன் (29.9.2012) பைத்திய கூத்து உப்பு தண்ணீரில் கரைந்து விடுகிறது இதை ஒரு ஆங்கில இதழ் ‘’Farewell to the lord of wisdom’ அறிவுத் தலைவனுக்கு வழியனுப்பும் நாள் என்று எழுதுகிறது.

இந்த அறிவு தலைவனின் விழாவின் ஆரம்ப நகரமான மும்பையில், விழா எப்படி கோலாகலமாக கொண்டாடப் படுகிறது, அதன் பின்னணி என்ன என்பதை, ஷாஷிபாலிகா என்பவர் 16.9.2012 தி இந்து இதழில் வழங்கி யுள்ள செய்தி, அறிவுத் தலைவன் சிஷ்யர்களின் அறிவுத் தன்மையை விளக்குவதாக உள்ளது.

தமிழ் ஓவியா said...


யானைக் கடவுளின் கணேஷ் சதுர்த்தியின் கடைசி நாளான கடலில் அழுத்தும் தின விழாவைக் காண, வலுவான கால்களும், தோள்களும், காதைக் கிழிக்கும் கூச்சலைத் தாங்கும் காதுகளும் தேவைப்படும்.

பலருக்கு இந்த விழா நாள் அந்த ஆண்டின் சிறப்பான நாள். இந்த சமூக விழாவுக்குப் பல லட்ச ரூபாய்கள் வசூல் செய்யப்படுகிறது. நாள் முழுவதும் திரையுலகு இசை காதுகளை துளைக்கும். தொடர்ந்து தட்டப்படும் பாறை ஒலி, கண்கள் கூசும்படியான ஒளிவீசும் ராட்சத விளக்குகள் தொடர்ந்து வர, போதை ஏற்றுவது போன்ற கூத்து ஆட்டம் போட்டுக் கொண்டு கணபதியை அழைத்து வருவார்கள்.

பொது மக்களுக்கு இடைஞ்ச லாகவும், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதாகவும் அமைந்த, வியாபாரத் தன்மையான இந்த விழாவை அங்கீகரிக்காத மக்கள், தனிப் பட்ட வகையில் பூசையை நடத்திக் கொள்கிறார்கள். கூத்தடிக்கும் கூட்ட மும், தனி பூசை செய்பவரும் மதிக்கத் தக்கதாக உள்ளவர்தான் மும்பை கடவுள்.

தற்போது, மக்களவை உறுப்பினராக உள்ள, முன்னாள் பத்திரிகையாளர் பாரத்குமார் ரவுட் கூறுவதாவது: மும்பை, தொழிலாளர்களும், நடுத்தர மக்களும் அதிக அளவு வாழும் நகரம். எனவே பெருநகர மும்பை வாழ் இந்த மக்களுக்கு இந்த விழா தேவைப் படுகிறது. இந்த மக்கள் தினமும் காலை 8.43 மணிக்கு வேலைக்கு ஓடி பிழைக்கும் மக்கள்.

இவர்கள் தங்களின் இயந்திர வாழ்க்கையிலிருந்து தப்பிக் கவும், தங்களுடைய கோபத்தை கொட்டித் தீர்க்கவும், துன்பங்களை மறந்து பொழுது போக்கவும் இந்த விழா தேவைப்படுகிறது. இவர்களுக்கு எளிதாக, மலிவான வகையில் கிடைக்கும் பொழுது போக்கும் நிகழ்ச்சி இந்த விழா.

அடுத்து உளவியல் மருத்துவர், தயால் மிர்சாண்டினி கூறுவது: ஒவ்வொருவரும் இந்த விழாவை அவரவருக்குரிய வகையில் கொண் டாடுகின்றனர். வசதியும், பணமும் உள்ளவர்கள் அவர்கள் வீட்டில் பிரபலமாகக் கொண்டாடுவார்கள். நண்பர்கள் வந்து போகும் நிகழ்ச்சி.

வசதியற்றவர்கள், குழு அமைப்பாக கொண்டாடுகிறார்கள். இந்த இரு தரப்பினருக்கும், பலரோடு கூடி மகிழ உதவும் விழாவாக உள்ளது.
ஜெர்ரி பிண்டோ, ஒரு நூலாசிரியர் கவிஞர் அவர் கருத்தை பார்ப்போம்.

வேற்றுமைகள் இருப்பது யதார்த்தம். ஆனால் அவை இன்பமாக அமைவதில்லை. நகரத்தில் நடைபெறும் அனைத்து மத விழாக்களும், பிரிவை ஏற்படுத்துவதாக உள்ளன. பிரிவுகள் பல கோணங்களில் வருகின்றன. ஒன்று நம்பிக்கைப் பிரிவு மற்றது கலாச்சார அடிப்படையைத் துணைக்கழைப்பது இவர்களுள், நாத்திகர்களும், உருவ வழிப்பாட்டை ஏற்காதவரும் அடங் குவர்.

பல கலைக் குழுவினரின் நிகழ்ச் சிகள் நடைபெறுவதைக் காரணம் காட்டுகின்றனர். அடுத்து, வேறுபட்ட இரண்டு பகுதியினர் உள்ளனர். ஒரு பிரிவினர் அனுதாபம் காட்டுவோர். அடுத்த பிரிவினர் ஆத்திரத்தைக் காட்டுவோர். அனுதாபம் காட்டுவோர், பாவம், ஏழைகளுக்கு ஒரு போதை போன்றதாக இருந்து போகட்டுமே என்று சமாதானம் கூறுகின்றனர்.

ஆத்திரம் காட்டுவோர், இந்த பணத் தையெல்லாம் கல்வி வளர்ச்சிக்குக் கொடுக்கலாமே என்ற கேள்வியை எழுப்புகின்றனர். பிண்டோ மேலும் தொடர்கிறார், பணம்தான் இந்த விழாவில் முக்கிய பிரச்சினை பல மோதல்களுக்கும் காரணமாக உள்ளது. கணபதி விழாவாகட்டும், மற்ற எந்த மத விழாவாகட்டும், எல்லாம் வணிக நோக்கம்தான். அரசியலின் வேலைக் காரியாக பணம் இயங்குகிறது.

தமிழ் ஓவியா said...

பொது மக்கள் தொடர்பாளரும், பத்திரிகையாளருமாகிய சுமிதா தேஷ்முக் அம்மையார் கடுமையான கருத்தைத் தெரிவிக்கிறார். கணேஷ் விழாவானது ஒரு பெரிய அரசியல் சர்க்கஸ். இது ஆபத்தை விளைவிக்கக் கூடிய அளவுக்கு விரிவடைந்து வருகிறது. இது கட்சிக் கடங்காமல் போகும்முன், கடுமையான சட்ட விதிகள் மூலம் இதை ஒடுக்க வேண் டியது அவசியம்.

எல்லா அரசியல் கட்சிகளும் தனித்தனி அமைப்பை (மண்டலம்) ஏற்படுத்தி இந்த விழாவைத் தம் தொண்டர்கள் மூலம் ஊக்குவித்து வருகிறார்கள். மக்கள் நிறைந்துள்ள நகரப் பகுதியை 3,4,5 மண்டலப் பகுதியாகப் பிரித்து, வீதி களையும், நடைபாதைகளையும் சந்துகளையும் இந்த மண்டல அமைப்புகள் ஆக்ரமித்து உள்ளன.

சுமிதா தேஷ்முக் அம்மையாரைவிட பல மடங்கு கடுமையாக, மகாராஷ் டிரத்தின் மேனாள் இணை காவல் ஆணையர் ஓய்.சி. பவார், கணபதி விழாவை சாடுகிறார். அவரின் கூற்றைக் காண்போம்.

இந்த கணேஷ் மண்டலங்களை இயக்கும் முக்கிய சக்தி, அரசியல் அதிகார சக்தியல்லாது மதப்பற்றல்ல. மும்பையில் எங்கும் காணப்படுவது போல், கணபதி கொண்டாட்டம் அரசியலாகவும், குற்றத் தன்மைக்குட் பட்டதாகவும் மாறிவிட்டது. இந்த கணபதி விழாக்கள், பணத்தை சேர்க் கவும், அதன் பலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டவும் பயன்படுத்தப் படுகின்றன. அத்துடன், கட்சிகளின் ஆள் பலத்தையும், வாக்கு வங்கி பலத்தை வெளிப்படுத்தவும் கணேச ஊர்வலங்கள் கைப் பாவையாக உள்ளன.

கோகுலாஷ்டமி விழாவின்போது, அனைத்துக் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு, வெளிப்படையாக பெரும் பெரும் தொகையை பரிசாக அளிக்கின்றனர். ஆனால் கணபதி விழாவில் அந்த அளவுக்கு பணம் இல்லையென்றாலும், அதே போட்டி நிலவுகிறது. தவறான வகையில் சேகரித்த பணத்துக்கெல்லாம் இந்த விழா வடிகாலாக உள்ளது. அரசி யல்வாதிகளின் பின்னால் பெரிய ஆள் பலம் உண்டு.

இதை நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்துவதுதான் நோக்கம். கட்சிக்காரர்களின் கவனத்தில் என்றும் இருப்பது வணிக நோக்கமே. அதனால் பொது மக்களிடமிருந்தும், கடைக் காரர்களிடமிருந்தும் பணம் பெறுவது அவசியமாகிறது. அது குற்றச் செயல்களுக்கு வழி வகுக்கிறது.

தமிழ் ஓவியா said...

1980,90களில் மறை உலகு தாதாக் கள் பெரிய பெரிய விநாயகர் சிலை களை ஊக்குவித்தனர். தாதா வரதராஜ முதலியார் அவர் ஏற்பாட்டில் அமைந்த விநாயகர் சிலை வரும் வண்டியில், அவரும் அமர்ந்து தெருவெல்லாம் வருவதுண்டு., பட்டு லுங்கி, குர்தா உடையில் பளபளக்கும் நகைகளை அணிந்து வரும் வரதராஜ முதலியாருக்கு மக்கள் வணக்கம் செலுத்துவர். கணபதியை கண்டு கொள்வதில்லை.

ஒய்.சி. பவார், மும்பை தாதாக்களை ஒடுக்கும் முயற்சியில் வெற்றி கண்டவர். அவர் தாதா சோட்டா ராஜனை முடக்கிப் போட்டார் என்பதைக் கூறுகிறார்: செம்பூர் பகுதியில் பிரமிக்கத்தக்க கணபதி ஊர்வலத்தை நடத்தினார்.

பல ஆண்டுகளாக, பொது மக்கள் பூங்காக்களையும், மூத்த குடி மக்கள் நடைபயிற்சி செல்லும் பகுதிகளையும் ஆக்கிரமித்து சோட்டா ராஜன் தன் மண்டல செல்வாக்கைக் காட்டி வந்தார். 1993இல் மண்டல் ஆட்கள், தங்கள் சட்ட விரோதமான செயலைக் கைவிட வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டனர். முதலில் ஏற்க மறுத்தாலும், வேறு வழியின்றி அடங்கி போனார்கள்.

10000க்கு மேலான நகர மண்டலங்கள் சிறியதும், பெரியதுமான 3 லட்சத்திற்கும் மேலான கணபதி பொம்மைகள், சுற்றுச்சூழல் பாதிக்கும் வகையிலும், பொது மக்கள் அவதிப் படும் வகையிலும் பல இடங்களில் மூழ்கடித்தனர். வீதிக்கு எதிராக சிலைகள் களிமண்ணால் இல்லாததால் கடற்கரை ஓரங்களில், கரைந்து போகாத உடைந்த சிலைகளின் பாகங்களும், டன் அளவு பூக்கள், அலங்காரப் பொருள்கள் குவிந்து காணப்பட்டன. காவல்துறை பல கட்டுப்பாடுகளை விதித்தாலும் அவை மதிக்கப்படுவதில்லை.

கணபதி சிலைகளை, வசதி படைத்த மண்டல்கள், பல கிலோ கிராம் தங்க நகைகளால் அலங்கரிப்பது பற்றி கேட்கும்போது, ஒரு பக்தர், நம் மகள்களும், மருமகள்களும் நகை அணிந்திருக்கும் போது, கடவுள் ஏன் அணிந்திருக்கக் கூடாது? என்று சிரித்தபடியே கூறுகிறார்.

மும்பையின் பணக்கார கணபதி 5.75 கோடி பணமும், 15 கோடி நகைகளையும் சென்ற ஆண்டு பெற் றுள்ளது. சிலைகளை தண்ணீரில் தள்ள எடுத்துச் செல்லும் ஊர்வ லத்தில் தொண்டை கிழிய கூப்பாடும் பாட்டும், பெண்கள் ஆட்டமும் உண்டு. ஏன் இந்த பெண்கள் நடனம் என்றால், வீட்டில் அடைந்து கிடக்கும் பெண்கள் ஒரு நாள் சுதந்திரமாக ஆட ஒரு வாய்ப்பு என்று பதில் வருகிறது.

ஓரினச் சேர்க்கை இயக்க கூட்டத்திற்கு இந்த விழாவானது வரவேற்கத்தக்க ஒன்று. ஒதுங்கி ஒதுங்கி கூச்சத்துடன் வாழும் அவர் களுக்கு இந்த விழாவில் தடையின்றி மகிழ்ந்து ஆட்டம் போட உதவியாக உள்ளது. இந்த ஆண்டு 12,000 முதல் 15,000 இந்த வகை ஆட்கள் பங்கு கொள்வார்கள். இவர்கள் இந்த கூட்டத்தில் தடையின்றி, மது, போதைப் பொருள்களை பயன்படுத் திக் கொள்ள முடியும்.

செல்வம் கொழிக்கும் தெற்கு மும்பையில் கவர்ச்சி விநாயகர் காட்சி அளிப்பார் மகாலட்சுமி கோயில் அருகில் இந்த விழா நடைபெறும். இங்கு விளம்பர அழகிகள் தொலை காட்சி நடிகைகள் மற்றும் பிரபலங்கள் கூடி, போதை ஏற்றக் கூடிய பாட்டுக்கு ஆட்டம் போட்டு கணேஷ் பாட்டு பாடுவார்கள்.

இந்த விழா காவல்துறையினருக்கு ஒருசோதனையான, கடுமையான விழா என்று ஒய்.சி. பவார் கூறுகிறார். 1992 மும்பை கலவரத்துக்குப் பிறகு, சமூக பாதுகாப்பு அமைதியை விரும்பும் நோக்கில் மத விழாக்களை மக்கள் பார்க்கிறார்கள். ஆனால் இதற்கு மாறான சக்திகள், காவல்துறையினரைக் கண்டு அஞ்சுவதில்லை.

மும்பையில் நடக்கும் இந்த கூத்து தமிழகத்தில் தடம் பதிக்க தடுமாறு வதின் காரணம், இது தந்தை பெரி யாரின் மண்.

இந்த கட்டுரையைப் படிப்போர், மனதில், பெரியார் செய்தது போல் நாம் என நம் வீட்டில் பிள்ளையார் பொம்மையை உடைக்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றலாமல்லவா?

பெரியார் கருத்துதானே, வள்ள லாரின் மதம் எனும் பேய் பிடிக்கா திருக்க வேண்டும் என்ற வரியில் வெளிப்படுகிறது.
மதம் ஒரு நஞ்சு என்று ஜவகர்லால் நேரு சொன்னதும் சரிதானே! 10-11-12

தமிழ் ஓவியா said...

பா.ஜ.க. ஒரு தரை தட்டிய கப்பல்!


பாரதீய ஜனதா கட்சி என்பது 1980க்கு முன்பு பாரதீய ஜனதாவாக இருந்த ஒரு கட்சி.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் வடிவம்; அதன் தேர்தல் பதிப்பு; பாரதீய ஜனதா கட்சிக்கென தேர்தலில் வேலை செய் கிறவர்கள் முதற்கொண்டு தொண்டர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களே!

ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள்தான் அரசியலில் தேர்தல் என்ற ஒரு நடைமுறை தவிர - பா.ஜ.க.வின் கொள்கைகள். யார் பிரதமர், யார் எதிர்க்கட்சித் தலைவர் (பா.ஜ.க. எதிர்க்கட்சியானால்) தேர்தலில் யார் வேட்பாளர் என்பது போன்ற பிரச்சினை களில் இறுதி முடிவுகூட ஆர்.எஸ்.எஸ். தலைமைப் பீடத்திலிருந்தே வரும்.

ஆட்சி நடத்தியபோதுகூட யாருக்கு எந்த இலாகா என்பது உட்பட நிர்ணயித்துச் சொல்லும் உரிமை ஆர்.எஸ்.எசுக்கே!

பா.ஜ.க.வின் மூத்த முன்னணித் தலை வர்கள், ஒரு சிலரைத் தவிர மற்ற அனை வரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களே; ஆர்.எஸ். எஸ். நடத்திய அரைக்கால் சட்ட ஷாகாக் களில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். காரர்களே! ஆர்.எஸ்.எஸ்.ஸில் தீவிரமாகத் தங்களை ஒப்படைத்தவர்கள் பலர் பா.ஜ.க. வில் இன்னமும் கட்டை பிரம்மச்சாரிகளே! ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவர்களே பிஜேபியின் பொதுச் செயலாளராகவும் வர முடியும் என்பது சட்டத் திட்ட விதி!

இப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உத்தரவு போடுவதும், அதை ஏற்று நடத்தும் கிளை அமைப்பாகவும் உள்ள அரசியல் கட்சியான பா.ஜ.க.வின் தலைவராக அதற்குமுன் தேசிய அளவில் பிரபலமாகாத, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவிலிருந்து மராட்டிய பகுதியிலிருந்து வந்த மராத்திப் பார்ப்பனர் நிதின் கட்காரி ஆவார்.

இவர் மகாராஷ்டிர மாநிலத்தில் பல பதவிகளில் இருந்தவர். அங்கே முன்பு பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த போது, இவர் வசதியானவராக உயர்ந்தார் என்றும் ஊழல் புரிந்தார் என்றும் அதன்பின் பல சர்க்கரை ஆலைகளுக்கு அதிபராகி தொழிலதிபர் ஆனார் என்றும், இவர் ஒரு கம்பெனி குழுமத்தின் புர்டி என்ற பெயரில் குரூப் கம்பெனிகளை உருவாக்கியதாகவும், அதில் இயக்குநர்களாக இவரது டிரைவர் மற்றும் பணி செய்வோர் இவர்களையே போட்டுள்ளதாகவும் கம்பெனிச் சட்டத்தின் கீழ் அக்கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டு நடைபெறுகிறது என்றும், ஊழலிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றும் அமைப்பின் (SAS) பொறுப்பாளரான அர்விந்த் கஜ்ரிவால் என்பவர் குற்றஞ் சுமத்தினார்.

பா.ஜ.க.வின் தலைவர் பதவியின் காலம் முடிவடையும் நிலையில், இவர் மீண்டும் வர அக்கட்சியின் சட்ட திட்டத்தில் இடம் இல்லை என்பதை இவருக்காக சட்ட விதி களையே திருத்துமாறு அதன் எஜமானரான ஆர்.எஸ்.எஸ். உத்தரவிற்கேற்பவோ என் னவோ இவருக்கு மீண்டும் பதவி கிடைக்க பட்டாபிஷேகத்திற்குத் தயாரான நிலையில் தான் நிதின்கட்காரிக்கு எதிராக ஊழல் குண்டைத் தூக்கிப் போட்டு உடைத்தார் கஜ்ரிவால்.

பா.ஜ.க. தலைவர் பதவியில்கூட நீடிக்கக் கூடாது, இராஜினாமா செய்ய வேண்டும் அல்லது செய்ய வைக்க வேண்டும் என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் ராம்ஜெத் மலானி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் மகேஷ் ஜெத்மலானி, யஷ்ஸ்வந்த் சின்கா, ஜெஸ்வந்த்சிங் போன்ற பல தலைவர்களும் போர்க் கொடி தூக்கி விட்டனர்

இது பா.ஜ.க.வில் ஒரு புயலைக் கிளப்பி விட்டது. பா.ஜ.க.வின் மற்ற சில பார்ப்பனத் தலைவர்களான திருமதி சுஷ்மா சுவராஜ் அருண்ஜெட்லி போன்றவர்களும், நிதின் கட்காரியை ஆதரித்துக் குரல் எழுப்பி யுள்ளனர்!

பட்டாபிஷேகத்திற்குப் பதில் இராமன் காட்டுக்குப் போன கதைபோல், இவர் மீண்டும் பதவிக்கு வருவதற்குப் பதிலாக வீட்டிற்குப் போவாமோ என்ற எதிர்பார்ப்போ - பரபரப்பு காணப்பட்ட நிலையில்,

இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவு சென்னைக்கு அருகில் முதல் முறையாக அரசியல் கட்சி மாற்றம் காரணமாகவோ என்னவோ ஆர்.எஸ்.எஸ். மத்திய செயற்குழு, கூட்டம் (எல்லாம் சமஸ்கிருதமய பதவிகள்தான்) நடந்து முடிந்து, அக்கட்சித் தலைமையும் செய்தித் தொடர்பாளர் (ளுயீடிமநள ஞநசளடிளே) நிதின் குற்றமற்றவர் என்று தீர்ப்பே வழங்கி ஊடகங்களை ஊமையாக்கி உட்கார வைக்க முயற்சித்துள்ளனர்!

தமிழ் ஓவியா said...

நிதின்கட்காரியைப் பதவியில் நீடிக்க வைக்க - ஆர்.எஸ்.எஸ். தாக்கீதைச் செயல் படுத்த - டில்லியில் கூடிய பா.ஜ.க. உயர் மட்டக்குழுவிலிருந்து விவாதத்தில் கலந்து கொள்ள உடன்படாது வெளியேறினார் அக்கட்சியின் மூத்த தலைவர் லால்கிஷன் அத்வானி. அதன்பிறகு கட்காரி நீடிக்கலாம் என்று வசதியாக தீர்மானித்து விட்டார்களாம்!

ஆர்.எஸ்.எஸ். சார்பில் இவர் ஊழல் செய்யாதவர் என்று காட்ட நீதிபதியாகி தீர்ப்புக் கூறியுள்ளார் - கோயங்கா வீட் டுக்கு மாஜி கணக்குப்பிள்ளை - ஆடிட்டர் ஆர்.எஸ்.எஸின் மற்றொரு ஆக்டிவ் மெம்பர் குருமூர்த்தி அய்யர்வார்!

அவர் நான் பார்த்துவிட்டேன்; ஆராய்ந்துவிட்டேன் எல்லாம் சரியாக இருக்கிறது என்று நற்சான்றிதழ் வழங்கி விட்டார் நிதின்கட்காரிக்கு!

எல்லாம் கண்மூடி கண் திறப்பதற்குள் நொடிப் பொழுதுகளில் மின்னல் வேகத்தில்!

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அமைச்சர் மணீஸ்திவாரி கூறியதுபோலவே அவர்களே புகார்கூறி, அவர்களே நீதிபதி களாகி, அவர்களே விரைந்து தீர்ப்பெழுதி விட்டார்கள்!

என்னா வினோதம்பாரு; எவ்வளவு ஜோக்பாரு! வருமானவரித்துறை, கம்பெனி நிர்வாகத் துறை இவைகளின் விசாரணை யில் இவர் கம்பெனிகளில் முக்கிய பொறுப்பு வகிக்கும் (நிதின்கட்காரியின் கம்பெனியில்) பலரிடம் விசாரித்த போது அக்கம்பெனி களின் பெயர்கூட அவர்களுக்கு சரியாகச் சொல்ல தெரியவில்லை என்று விசாரணை செய்த அதிகாரிகள் கூறியிருப்பது குறிப் பிடத்தக்கதாகும்!

இவைபற்றியெல்லாம் கோயங்கா வீட்டு மாஜி கணக்குப்பிள்ளை - உருளைக் கிழங்கு இரும்பு வியாபாரக் கணக்குப் புகழ் குருமூர்த்தி அய்யங்கார் உடனே சர்டிபிகேட் வழங்கி விட்டார்கள்!

வேலிக்கு ஓணான் சாட்சி; ஓணா னுக்கு வேலி சாட்சி என்பதுபோல நிதின் கட்காரி என்ற ஆர்.எஸ்.எஸ்.காரருக்கு மற்றொரு ஆர்.எஸ்.எஸ் அய்யரே நற்சாட்சி தீர்ப்பெழுதி, மலையைக் கைக்குள் மறைத் திடும் மாய்மால வித்தைகளில் ஈடுபட்டுள் ளனர்!

எங்கள் கட்சி (பா.ஜ.க.) ஒரு வித்தியாச மான கட்சி என்பார்கள்! அதற்குப் பொருள் இப்போது தான் புரிகிறது; ஆம். இது ஒரு வித்தியாசமான கட்சிதான்! கால் ஒரு இடத்திலும் (டெல்லியிலும்) குடுமி மற்றொரு இடத்திலும் (நாகபுரியிலும்) உள்ள வித்தி யாசமான கட்சியே!

அங்கே நடப்பது உட்கட்சிப் போராட் டமா? மறைமுகமாக பார்ப்பனர் - பார்ப்ப னரல்லாதார் போராட்டமா? தேவாசுரப் போராட்டத்தின் புதிய அரசியல் வடிவமா?

போகப் போகத் தெரியும்!

பா.ஜ.க. ஒரு தரை தட்டிய கப்பல், அதனை இழுத்து கடலில் சேர்க்கத் துடிப்பது ஆர்.எஸ்.எஸ். என்ற மற்றொரு கப்பல் போலும்! 10-11-2012

தமிழ் ஓவியா said...


ஒரே பிரச்சினை: இருவகை அணுகுமுறைகள்


நேற்று வெளிவந்த நாளேடு ஒன்றில் இரண்டு செய்திகள் இடம் பெற்றன. முதல் செய்தி: கூவம் ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள வீடுகள் - ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. உயர்நீதி மன்றம் உத்தரவிட்டும் இந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படவில்லை.

இதனால் கூவம் ஆறு குறுகி விட்டது என்று அங்கலாய்க்கப்பட்டுள்ளது. சென் னையைப் பொறுத்தவரை கூவம் ஆற்றின் கரை களில் உள்ள வீடுகள் அகற்றப்பட்டு விட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆக்ரமிப்புகள் தான் அகற்றப்படவில்லை என்று விரிவாக அந்த ஏடு செய்தியை வெளியிட்டுள்ளது.

அதே ஏடு இன்னொரு செய்தியையும் வெளியிட் டுள்ளது கோவில் இடிப்பை கண்டித்து இந்து அமைப்பினர் முற்றுகை என்ற தலைப்பில் இந்தச் செய்தி வெளிவந்துள்ளது.

யானைக் கவுனியில், கோவில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து, இந்து அமைப்பினர் நேற்று முற்றுகை யிட்டனர்.

யானைகவுனியில் என்.எஸ்.சி. போஸ் வால்டாக்ஸ் சாலை சந்திப்பில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள அக்கோவில், பல ஆண்டுகளாக மூடியே உள்ளது.

கோவில் பரம்பரை அறங்காவலராக, முத்துலட்சுமி என்பவர் உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கோவில் இடிக்கப்படுவதாக தகவல் வந்ததை அடுத்து, இந்து அமைப்பினர்,கோவில் முன் முற்றுகை யிட்டனர். காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனர்.

விசாரணையில், கோவிலை இடித்து விட்டு சீரமைக்க, கடந்த, 2010ல் சந்தன்மால் என்பவர், அனைத்துத் தரப்பிலும் ஒப்புதல் வாங்கினார் என்பது தெரிய வந்தது. தீபாவளிக்கு. பிறகு, நடவடிக்கை எடுக்கலாம் என, காவல்துறையினர் கூறியதை இரு தரப்பினரும் ஏற்றனர்.

இந்தச் செய்தியின் தன்மை என்ன? முதல் செய்தியின் தன்மை என்ன? இரண்டிற்கும் இடையே இழைந்தோடும் வேறுபாடுகளைக் கவனிக்க வேண்டாமா?

சட்டம் எல்லாருக்கும் பொது என்றால் இரண்டு இடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்தான். அதே நேரத்தில் மக்கள் குடியிருக் கும் வீடுகள் ஆக்கிரமிப்பு என்று குற்றஞ்சாட்டப்பட்டு அகற்றப்பட வேண்டும். உயிர் இல்லாத குத்துக் கல்லை நட்டு வைத்து அதற்குக் கோயில் என்ற பெயர் சூட்டினால் அது ஆக்கிரமிப்பாக இருந்தாலும் அகற்றக் கூடாது என்றால் இது என்ன சட்டம்? என்ன மனிதநேயம்?

கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் தீபாவளிக்குப் பிறகு கோயில் கட்டப்படுமாம். இதற்குக் காவல் துறையின் ஒத்துழைப்பு - கட்டப் பஞ்சாயத்து! நம் நாட்டின் நியாயம், நேர்மை, சட்டம் எந்த யோக்கியதையில் இருக்கின்றன என்பதற்கு பனிமலையின் ஒரு சிறு முனை என்று சொல்லும் அளவுக்குள்ள ஓர் எடுத்துக்காட்டு இது.

சட்ட விரோதமாக அத்துமீறலாக, அரசு இடங்களைக் கோயில்கள் ஆக்கிரமித்து இருந்தால், அவற்றை அகற்றக் கூடாதாம். இந்து அமைப்புகள் இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகளுக்காகக் குரல் கொடுக்குமாம். முற்றுகைப் போராட்டம் நடத்துவார்களாம்.

சட்டப்படி அரசு என்ன நடவடிக்கையை எடுத் திருக்க வேண்டும்? அரசு இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கோயிலை இடிக்கக் கூடாது என்று முற்றுகைப் போராட்டத்தை நடத்தியவர்களைச் கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் தள்ளி இருக்க வேண்டாமா? ஏன் செய்யவில்லை காவல்துறை?

கோயில் என்றால் பயமா? அல்லது காவல்துறை யும் தங்களுக்குள்ள நம்பிக்கையின் அடிப்படையில் ஒத்துழைப்பும் கொடுத்துள்ளார்களா?

இப்படி வேலியே பயிரை மேயும் போக்கினை காவல்துறை மேற்கொள்ளுமேயானால், மக்கள் மத்தியில் சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்படும்?

பொது இடங்கள் மற்றும் அரசு இடங்களில் ஆக்கிரமித்துள்ள கோயில்களை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திட்டமிட்ட முறையில் ஆணை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்புக் கோயில்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளன. அவை அகற்றப்பட்ட விவரத்தை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் உச்சநீதிமன்றத்திற்கு நேரில் வந்து தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆணையிட்ட பிறகும், காவல்துறை இப்படி நடந்து கொள்ளலாமா?

ஆக்கிரமித்துள்ள கோயில்களை சட்ட ரீதியாக அகற்றும் விழிப்புணர்வை திராவிடர் கழகம் மேற் கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.10-11-2012

தமிழ் ஓவியா said...

பெண்களும், தீபாவளியும்


- மனோரஞ்சிதம்

31.10.1959 அன்று தீபாவளிப் பண்டிகை என்று நாட்குறிப்பில் குறிக்கப்பட்டிருக்கிறது. தீபாவளி என்றால் என்ன? அது யாருடைய பண்டிகை? அதன் வரலாறு என்ன? நாம் ஏன் அதைக் கொண்டாட வேண்டும்? என்று நமது நாட்டில் அனேகருக்குத் தெரியாது. அதிலும் நம் தமிழ் மகளிர்க்கு 100-க்கு 90 பேருக்குத் தெரியாது.

ஏதோ அடுத்த வீட்டு அம்புஜம் கொண்டாடுகிறாளே, நாம் சும்மாயிருந்தால் நம் உயர்வு குறித்து அவள் ஏளனம் செய்வாளே என்றும், பக்கத்து வீட்டுப் பங்கஜம் கொண்டாடுகிறாள்; தீபாவளிக்கு 150 ரூபாயில் பட்டுப் புடவையும், 20 ரூபா யிக்குப் பட்டாசு வெடிகளும், பட்சணங் களும் தடபுடலாகச் செய்யும்போது நாம் கொண்டாடாமல் இருந்தால் மற்றவர் என்ன நினைப்பார்களோ என்று கௌரவத்தைக் காப்பாற்ற, தன் கணவனை நச்சரித்துக் கடன் வாங்கியாவது தீபாவளி கொண்டாடும் பெண்கள் அனேகர், ஏதோ வழிவழி வந்த பெரியோர்கள் செய்யும் பண்டிகையை நாம் மூளியாகக் கொண்டாடாமல் இருந்தால் ஏதாவது கெடுதி நேரும் என்று அஞ்சிப் பண்டிகை நிறைவேற்றுபவரும் உண்டு.

நம் தந்தை பெரியார் அவர்களின் சீர்திருத்தச் சுயமரியாதைப் பிரச்சாரத் தால் ஒரளவு மூடநம்பிக்கை நம் தமிழ் நாட்டில் பல ஆண்டுகளாகக் குறைத்து வருகிறது. ஆனாலும் நமது பெண்கள் இன்னும் முழு மூடநம்பிக்கை யிலேயேதான் இருந்து வருகிறார்கள். இந்த தீபாவளிப் பண்டிகையன்று நூற்றுக்கணக்கில் பணம் விரயம் செய்து புடவைகள் எடுத்துப் பட்டாசு, மத்தாப்பு வாணம் விடுத்துக் காசைக் கரியாக்கியும், இரண்டு நாள் 3 நாள் சிரமம் எடுத்துத் தின்பண்டங்கள் செய்து பணம் விரயமாக்கினாலொழிய நம் பெண்கள் திருப்தியடைவதில்லை.

உம்! என்னவோ இந்த முறை தீபாவளி எங்கள் வீட்டில் சரியாகவே இல்லை என்று குறைபடாமல் இருக்க மாட்டார்கள். இவ்வளவு பொருள் வீணாக்குவதுடன் நம் மானத்தையும் விற்று விடுகிறோமே என்ற உண்மைக் கதை தெரிந்தால் நம் பெண்கள் நிச்சயம் தீபாவளி போன்ற ஆரிய பச்சைப் பார்ப்பனப் பண்டிகைகளைக் கொண்டாட மாட்டார்கள்!

நரகாசுரன் வங்காளப் பகுதியில் இருந்த ஒரு திராவிட அரசன். அவன் அக்கால ஜடாமுடி தரித்த முனிபுங்கவர் களாம் வஞ்சக ஆரியர்களின் அடாத செயல்களை எதிர்த்த ஒரு அரசன். அவனது எதிர்ப்பைக் கண்ட பார்ப் பனர்கள், தங்கள் தாசர்களின் தலை வனை, மகாவிஷ்ணுவின் அவதாரம் கிருஷ்ணபகவான் என்று கதை கட்டி விட்டு அவனைக் கொண்டு நரகா சுரனைக் கொன்றார்கள்! அவனது நற்செயல்களை அழித்தொழித்து அவை களைத் தீச் செயல்களாக உருவகப் படுத்தி, நாட்டில் அறிமுகப்படுத்தி அதைத் தீபாவளி யாக்கினார்கள். அதிலும் ஒரு பெண்ணின் துணையுடன் கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்ற தாகக் கதை! அவள் தான் சத்திய பாமாவாம்!

தமிழ் ஓவியா said...

இதைத்தான் ஆரியர்கள் தீபாவளி எனக் கொண்டாடுகிறார்கள். போகட்டும் அவர்கள் தீபாவளியைக் கொண்டாடு வதில் அர்த்தம் (பொருள்) இருக்கிறது. பார்ப்பன இனத்தின் வஞ்சகச் செயல்களைக் கண்டித்த ஒருவனைக் கொன்ற அந்த மகிழ்ச்சியால் புனல் நீராடி, புத்தாடை புனைந்து பண்டங்கள் பல அருந்திப் பரவசமடைகிறார்கள்.

ஆனால் நாம், தமிழர்கள் தீபா வளியைக் கொண்டாடுவதில் ஏதாவது பொருள் இருக்கிறதா? தமிழ்த் தாய் மார்களே! நன்றாக சிந்தித்துப் பாருங்கள். நம் இன வீரன் ஒருவன் வஞ்சனையாக கொல்லப்பட்ட நாளை, மறைந்த நாளைத் துக்கமுடன் நடத்துவதன்றி, பார்ப்பனப் புல்லுருவிகளுடன் சேர்ந்து வித விதமாகக் கறியும், தோசையும், வடையும் இட்டிலியும் செய்து வயிறு முட்டத் தின்று கொட்டமடிக்க வேண்டுமா? சிந்தித்துப் பாருங்கள்!

ஆரியர்களால் தோற்றுவிக்கப்பட்ட பண்டிகை நாட்கள் ஒவ்வொன்றும் இதைப் போலத் தான். அவர்கள் இனம் வாழ எந்தெந்த விதத்தில் நமக்கு நட்டப்படுத்த வேண்டுமோ அவ்வளவையும் செய்து விட்டு அவர்கள் மகிழ்ச்சியால் கொண் டாடக் கூடிய நாட்களை நமக்குப் பண் டிகை நாட்களாக மாற்றியமைத்து விட் டனர்.

தைப் பூசம், ராமநவமி, பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரி போன்ற பல பண்டிகைகளையும் நாம் ஒழித்துக் கட்ட வேண்டும்.

நம் இன மன்னர்களை, வீரர்களை வஞ்சனையால் அழித்து விட்டனர். இராவணனைக் கொன்றான் இராமன், இரணியனைக் கொன்றான் நரசிம்மன். மகாபலிச் சக்ரவர்த்தியை வாமனன் என்ற பார்ப்பான் கொன்றான். சூரபத் மனைக் கொன்றது சுப்பிரமணியன்.

மதம், கடவுள், சாஸ்திரம் சம்பிர தாயம், சகுனம், நாள் நட்சத்திரம் போன்ற பல மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும். நம் வீடுகளில் எந்த நல்ல காரியத்திற்கும் பார்ப்பானை (அவன் மேல் சாதி நாம் சூத்திரர் என்ற முறையில்)அழைக்கவே கூடாது.

மேல் லோகத்தை நமக்குக் காட்டி இந்த உலகில், தாம் வாழ வழி வகுத்துக் கொண்ட புத்திசாலிகள் அவர்கள். அதையும் இப்பொழுது ரஷியாக்காரன் ராக்கெட்டை அனுப்பிச் சந்திர மண்ட லத்தில் உள்ளதையும், அதற்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதையும் படம் பிடித்து வெட்ட வெளிச்சமாக்குகிறான்.

ஆகவே நம் பள்ளி மாணவிகள் யாவரும் சிந்தித்து இன்று உலகம் விஞ்ஞான காலமாக மாறி வருவதை உணர்ந்து, மாட்டு மூத்திரத்தையும், சாணியையும் பஞ்சகவ்யம் என்று பருகுவதை விடுத்துப் பகுத்தறிவு பெற்றுத் தந்தை பெரியார் வகுத் திருக்கும் சுயமரியாதைப் பாதையில் தங்கள் வாழ்க்கையை வகுத்துக் கொள்ள வேண்டும்.

புத்தாடை, தின்பண்டங்கள் வேண்டுமென்றால், நமக்கே உரித்தான உழைப்பின் உரிமைத் திருநாளான பொங்கல் பண்டிகை இருக்கவே இருக்கிறது! அது மட்டுமல்ல. ஆரியச் சழக்கர்களை வீழ்த்தி அவர்தம் வஞ் சனைகளைப் பகுத்தறிவால் வென்ற இந்நாட்டின் அறிவொளி, இன்பத் தமிழகத்தின் இணையற்ற ஒரே தலைவர் பெரியார் பிறந்த நாள் இருக்கிறது. இவைகளை இன்பமுடன் கொண்டாடுவோம்!!

ஆகவே தாய்மார்களே! தீபாவளி தமிழர்க்குத் துக்க நாள்! தமிழனை அடிமைப்படுத்திய நாள்! கொண் டாடாதீர்!

(நன்றி: பாவலர் பாலசுந்தரம் அவர்களின் பெண்களும் தீபாவளியும் 1.11.1959)

தமிழ் ஓவியா said...


பச்சையப்பன் கல்லூரியில் மீண்டும் பார்ப்பனர்கள்?


200 வருடங்களுக்கு மேலாக கல்விச் சேவையை அனைவருக்கும் வழங்கி வரும் பச்சையப்பன் கல்லூரி, திரும்பவும் பார்ப்பனர்கள் வசம் ஒப்படைக்கப்பட் டுள்ளது.

ஆங்கிலேயர்களிடம் துபாஷாக பணிபுரிந்த, குழந்தைகளே இல்லாத பச்சையப்பன், பிராமணர் களின் செயல்களால் வெறுத்துப்போய், குழந்தை களுக்கு கல்வி புகட்ட வேண்டி தனது சொத்துக்களை விற்றுவிட்டு பச்சையப்பன் அறக்கட்டளை ஆரம் பித்தார். அதன் முக்கிய காரணமே அடித்தட்டு மக்களுக்கு உதவத்தான்.

அப்போது இருந்த ஆங்கிலேய அதிகாரிகள் அங்கு நடத்து வரும் வருணாசிரமத்தைப் பார்த்து வருத்தப்பட்டு பிராமணர்களை விரட்டி விட்டு, சமூகத்திலிருந்த முதலியார், பிள்ளைமார், நாயக்கர் போன்ற முக்கியமானவர்களைக் கொண்டு முறைப் படுத்தினார்.

அப்பொழுது 117 மாணவர்களுடன் ஆரம்பித்த பச்சைப்பன் அறக்கட்டளையை, இன்று 5 கல்லூரிகள் 10க்கும் மேற்பட்ட பள்ளிகள், 1 பாலி டெக்னிக் மூலம் சுமார் 2 லட்சம் மாணவர்களுக்கு கல்வி கொடுத்துள்ளது. என்னே பச்சையப்பன் கல்வித் தொண்டு! இன்று அதன் சொத்து மதிப்பு ரூ.6500 கோடிக்கும் அதிகமாகும்.

அதன் பிறகுதான் பல சமூகங்களைக் கொண்ட வசதிபடைத்தவர்கள் பச்சையப்பன் அறக்கட்ட ளைக்கு தாராளமாக தங்களது சொத்துகளை கொடுத்து உதவினார்கள். அப்படிக் கொடுத்தவர் களின் நிபந்தனைகளே பச்சையப்பன் கட்டளையில் பிராமணர்களின் தலையீடு இருக்கக் கூடாது என்பதுதான். இதை நக்கீரன் நவம்பர் (03-06) 2012 - பக்கம் 40இல் உறுதிப்படுத்துகிறது.

மேலும், 149 அரசு செயலாளர் பதவிகளில் ஒருவர் கூட தாழ்த்தப்பட்டவர் இல்லையே! என்று டைம்ஸ் ஆப் இந்தியா படப்பிடிப்பு. மேலும் விடுதலையில் சென்னை அய்.அய்.டி.யா? - அக்கிரகாரமா என்றும் 14.9.2012இல் கேட்டுள்ளது.

அய்.அய்.டி சென்னை, மத்திய அரசின் எய்ம்ஸ் (டெல்லி) போன்ற கல்வி நிலையங்களில் உயர் சாதியின் ஆதிக்கம் அனைவரும் அறிந்ததே. இதனுடன் பச்சையப்பன் அறக்கட்டளையும் சேர வேண்டுமா? என்பதே நம் கவலை.

இன்று பச்சையப்பன் அறக்கட்டளையில் 165 காலி பணியிடங்கள் உள்ளன. அவற்றில் உயர் சாதியினர் நுழைந்தால் தாழ்த்தப்பட்டவர்களின் கல்விக் கனவு நொருங்கி விடும். சாதி பாகுபாடுகள் இல்லாமல் அனைவரிடமும், கையேந்தி பணம் வசூலித்து, கீழ் ஜாதி மக்களின் கை வண்ணத்தில் உருவாகும் கோயில், கட்டி முடித்ததும், கீழ் ஜாதி கோயிலுக்குள் போக முடியாது. அதன் பிறகு பணம் கொடுக்காமல், உழைக்காமல் கோயிலை கையகப்படுத்தி அனுபவித்து அதிகாரம் செய்யும் மேல் ஜாதி மக்களை என்ன செய்வது?

திரு. சேஷன் தேர்தல் பணியிலிருந்த பொழுது, தினமும் அவர்களின் அடாவடி அதிரடிகளை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் அவர்களுக்குப் பிறகு வந்த தேர்தல் அதிகாரிகளின் அடக்கமும் பணிவும், இவர்களுக்கு முன் இருந்த தேர்தல் அதிகாரி திரு. சேஷன் அவர்களுடன் ஒப்பிட்டு, வெயிலின் அருமை நிழலில் தெரிவதாக எழுதினார்கள்.

மேலும் பெரியவர் சங்கராச்சாரியார் இறந்த பொழுது ஆளுயர ஒரு தடியை எடுத்துக் கொண்டு கூட்டத்தை அடாவடியாகக் கட்டுப்படுத்தியது தேவையற்ற செயல். எவ்வளவோ காவல் துறையினர் அங்கிருந்தும் இவர் போட்ட ஆட்டம் அவரது பதவிக்கு அழகல்ல. நல்ல வேளை இவர் அய்.ஏ.எஸ் அதிகாரி மட்டும்தான். ஒரு வேளை அய்.பி.எஸ் படித்திருந்தால் ஆளுயர ஒரு தடிக்குப் பதிலாக ஒரு துப்பாக்கியை வைத்து ஆட்டம் போட்டு இருப்பார்.

பச்சையப்பன் அறக்கட்டளையில் பணியாற்ற தனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என்றும் கேட்டுள்ளார். எதற்கு காவல்துறை பாதுகாப்பு? பச்சையப்பன் அறக்கட்டளையில் எப்பொழுதும் இருக்கும் காவல்துறையே போதும். இவரைப் போல் மற்ற அதிகாரிகளும் கேட்டால் என்னவாகும்? ஆரம்பத்திலேயே தனக்கு வரும் ஆபத்தை புரிந்து கொண்ட இவரை மாற்றி வேறொருவரை நியமிக்க வேண்டும்.

எனவே, சேஷனை மாற்றி விட்டு ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது வேறு பொருத்தமானவர்களை நியமிக்க வேண்டும். மேலும் பச்சையப்பன் அறக்கட் டளையில் உள்ள உயில்களின் கட்டளைகளை மனதில் கொண்டு பார்ப்பனர் அல்லாதவர்களை நியமிப்பதுதான் சட்டத்தின் கடமையும், நியாயமும் ஆகும்.

இதனைப் புரிந்து செயல்படுத்தாவிட்டால் இன்று அல்லது நாளை சட்டத்தின் முன் சம்பந்தப் பட்டவர்கள் தலைகுனிய நேரிடும். வருமுன் காப்பதே சிறந்தது. சாதி பாகுபாடுகள் உடனடியாக ஒழிக்கப்பட்ட நிலையில், பிராமணர்கள் கபே மீண்டும் வந்தது போல், பச்சைப்பன் அறக்கட்டளையும் மீண்டும் அவர்கள் கையில் போகாமல் பார்ப்பது தமிழகத்திற்கு நல்லது.
எப்பொழுது ஒருவரை நாம் பிராமின் என்று சொன்னால் நாம் உடனே சூத்திரர்கள் ஆகிவிடு கிறோம் என்று ஒரு பெரியவர் கூறினார். ஒருவேளை, பச்சையப்பன் கல்லூரியிலிருந்து ஆங்கிலேயர்கள் இவர்களை விரட்டி விடாமல் இருந்திருந்தால், தமிழகம் அண்ணா போன்ற சிறந்த அறிஞர்களை இழந்திருப்போம்.

வாழ்க பச்சையப்பன்! வளர்க பச்சையப்பன் அறக்கட்டளையின் கல்விப் பணி.10-11-2012

தமிழ் ஓவியா said...


மறக்க முடியாத நவம்பர் 10


இந்நாளில் தான் (1912) திராவிட சங்கத்தை சி.நடசேனார் தொடங்கினார். அதன் நினைவாக இதனை நினைத்துப்பாரீர்!

1918இல் நமது நிலை என்ன?

இளைஞர்களே! தாய்மார்களே! பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தின் பிரதிநிதிகளே! நீங்கள் யார் வேண்டுமானாலும் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள். உங்கள் கொடிகள் உங்களோடு இருக்கட்டும்! உங்கள் கொள்கைகள் உங்களோடு இருக்கட்டும்!

ஆனால் நாம் தன்மான உணர்வு படைத்தவர்கள் - மனிதர்களாக வேண்டியவர்கள் - மண்புழுக்கள் அல்ல என்பதை உறுதியாக நம்புவீர்களானால், இந்த சமுதாயத்தில் பெரியார் தோன்றாததற்கு முன்பு நாம் எப்படி இருந்தோம்? எந்த நிலையில் இருந்தோம்! தயவு செய்து எண்ணிப் பாருங்கள்! அந்த சரித்திர நிகழ்ச்சிகளை திரும்பிப் பாருங்கள்!

40 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் எப்படி இருந்தீர்கள்! பங்கா இழுக்கும் உத்தியோகம் தான் உங்களுடையது. ஒருவர் கையிலே பட்டைச் சேவகத்தைக் கட்டிக் கொண்டிருப்பார். மின்சார விசிறி இருக்காத அந்த காலத்தில் வெள்ளைக்காரத் துரைகளுக்கு தலைக்கு மேலே கட்டப்பட்டிருக்கும் அந்த பங்கிளாவை வெளியே உட்கார்ந்து கொண்டு இழுத்துக் கொண்டிருப்பதுதான் உங்கள் வேலையாக இருந்தது!

35 ஆண்டுகாலம் பங்கா இழுத்து விட்டு ஓய்வுபெறும் போது, அந்த வெள்ளைக்காரர் காலிலே போய் விழுந்து துரை அவர்களே, இந்த பங்கா இழுக்கும் வேலையை என்னுடைய மகனுக்கு தயவு செய்து கொடுங்கள் என்று அடிபணிந்து விண்ணப்பம் போடும் நிலையில் தான் உங்கள் சமுதாயம் இருந்தது. கையிலே கட்டியிருந்தவில்லை; அந்த வில்லையை வைத்து விண்ணப்பம் போடும் நிலைதான் இருந்தது என்பதை தந்தை பெரியார் அவர்கள் எடுத்து விளக்கினார்கள்.

இப்படி பரம்பரை பரம்பரை யாக பங்கா இழுத்துக் கொண் டிருந்த சமுதாயம்தான் இன்றைக்கு மந்திரிகளாக, அதிகாரிகளாக, டாக்டர்களாக, என்ஜீனியர்களாக உலவுகிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்!

மாடு மேய்த்துக் கொண்டிருந்த சமுதாயத்தை வில்லையை வைத்து விண்ணப்பம் போட்டுக் கொண்டிருந்த சமுதாயத்தை பார்த்து, நீயும் மனிதன்தான்; உனக்கும் தன்மானம் உண்டு; நீயும் படிக்கலாம்; நீயும் உத்தியோகம் பெறலாம் என்று சொல்லி இதை தலைக்குப்புற கவிழ்த்துக் காட்டிய சரித்திர நாயகர் தந்தை பெரியார். அவர் சரித்திரத்திலே ஒரு ஏடு அல்ல; அவரே ஒரு சரித்திரம்!

சிந்தித்துப் பாருங்கள்! இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன் உங்கள் நிலை எப்படி இருந்தது?

ஒரே ஒரு தகவலை உங்களுக்குக் கூற விரும்புகிறேன். இதோ, என் கையில் இருக்கும் இதழ் ஆடிசவைநைள கூயஅடையேனர தமிழ்நாட்டில் மைனாரிட்டிகள் என்ற நூல்! இது சரசுவதி என்ற பார்ப்பன அம்மையாரால், சென்னை பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சி நூல். அதிலே 1918ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் எத்தனைபேர், உத்தியோகம் பார்த்தவர்கள் எத்தனைபேர் என்ற புள்ளி விவரங்கள் தரப்பட்டிருக்கின்றன.

பட்டதாரிகள்

1918இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.பட்டம் பெற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை 15,209, அதிலே நூற்றுக்கு மூன்று சதவிகிதம் இருக்கும் பார்ப்பனர்கள் எண்ணிக்கை மட்டும் 10,206, 30 சதவிகித எண்ணிக்கையுள்ள பார்ப்பனரல்லாதார் 3,219, எம்.ஏ. பட்டம் பெற்றவர்கள் மொத்த எண்ணிக்கை 511, அதிலே பார்ப்பனர்கள் 389, பார்ப்பனரல்லாதார் 65, ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் மொத்தம் 1,498, பார்ப்பனர்கள் 1094, பார்ப்பனரல்லாதார் 163, சட்டம் படித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 54, பார்ப்பனர்கள் 48, பார்ப்பனரல்லாதார் 4 பேர் மட்டுமே. என்ஜினீயரிங் படித்தவர்கள் மொத்தம் 160, பார்ப்பனர்கள் 121, பார்ப்பனரல்லாதார் 15

உத்தியோக நிலைமை

ரூ.50 லிருந்து 99 வரை ஊதியம் பெறும் உத்தியோக எண்ணிக்கை 298, பார்ப்பனர்கள் 128, பார்ப்பனரல்லாதார் 52, ரூ.100 லிருந்து ரூ.299 வரை ஊதியம் பெறும் பதவிகள் 110, பார்ப்பனர்கள் 78, பார்ப்பனரல்லாதார் 18, ரூ.300 லிருந்து 499 வரை ஊதியம் பெறும் பதவிகள் 13, பார்ப்பனர்கள் 8, பார்ப்பனரல்லாதார் 5, ரூ.500, அதற்கு மேலும் ஊதியம் பெறும் மொத்தப் பதவிகள் 27, பார்ப்பனர் 7, பார்ப்பனரல்லாதார் -0 (ஒன்று கூட இல்லை.

- இதுதான் பழைய தமிழகம் இந்த அநீதியை எதிர்த்துத்தான் நீதிக்கட்சி பிறந்தது. கம்யூனல் ஜி.ஓ வந்தது. கல்விக்கண்களை இழந்து நின்ற நாம் ஓரளவு கல்வி பெற்றோம்! அந்தக் கல்விக்கண்களை குத்துவது நியாயம் தானா? ஓரளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கும் சமுதாயத்தின் வளர்ச்சியை பொருளாதார அளவு கோலைக் கொண்டு வந்து புகுத்தியதன் மூலம் வளர்ந்து வரும் ஒரு சமுதாயத்தை அழிக்க நினைப்பது நியாயமா? நேர்மையா? சமூக நீதியா? இதுதான் பெரியார் கொள்கையா? அண்ணா வழியா?

- சேலத்தில், கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி விடுதலை 17.7.1979

தமிழ் ஓவியா said...


தமிழர் போர் மூண்டுவிட்டது!


எதற்காக? தமிழுக்காக.

தமிழர் தன்மானத்துக்காக தமிழர் அறிவு, கலை, வீரம் ஆகியவற்றிற்காக,

எனவே,

தமிழா உன் கடமை என்ன?

மாதம் 75 ரூபாய் காசுக்கு எதிரியின் காலை நக்குவதா? அற்ப பதவிக்காக சகலத்தையும் உதிர்த்து தமிழை, தமிழனை, தமிழ் நாட்டை காட்டிக்கொடுத்து விட்டு வளையல் போட்டுக்கொண்டு முக்காடிட்டு மூலையில் குந்தி இருப்பதா? சீச்சீ இது சிற்றினப் பிழைப்பல்லவா?

மற்றென்ன உன் கடமை?

எதிரியின் கூட்டுறவை ஒழி.

வீரத்துடன் வெளியில் வந்து மார்தட்டு.

கிளர்ச்சிப் போரில் முன்னணியில் நில்லு.

எதிரி வெட்கப்பட, அறிவு பெற, ஓடி ஒழிய உன் உயிர் விடத் தயாராகு.

இவை உன்னால் ஆகாவிட்டால் காசு கொடுத்து ஆதரித்து நீ தமிழன் என்பதையாவது காட்டிக்கொள்.

குடிஅரசு - பெட்டிச்செய்தி - 29-05-1938
(இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது)

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் பொன்மொழி
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மனிதச் சமுதாயத்தை நீங்கள் இன்றைய தினம் கவலையோடு பார்த்தால் மக்களிடத்தில் ஒழுக்கம் இல்லை; நாணயம் இல்லை; திருடுவதைப் பற்றியோ, மோசம் செய்வதைப் பற்றியோ, லஞ்சம் வாங்குவதிலோ, நம்பிக்கைத் துரோகம் செய்வதிலோ யாரும் வெட்கப்படுவ தில்லை என்பது விளங்கும். இந்நிலை மாறி ஒழுக்கம் மிகுந்த சமுதாயமாக வேண்டும்.

தமிழ் ஓவியா said...


முதல்மந்திரி வீட்டின் முன் உண்ணாவிரதம்

சென்னை, ஜூன், 1. இன்று காலை 10 மணிக்கு பல்லடம் தோழர் பொன்னுசாமி அவர்கள் தம்முடைய விரதத்தை சென்னை முதல்மந்திரியார் வீட்டின் முன்பாக ஆரம்பித்து விட்டார்.

கட்டாய இந்தி ஒழியும்வரை தன்னுடைய உண்ணா நோன்பை விடுவதில்லையென்ற ஒரே உறுதியுடன் இருக்கிறார். இந்தி ஒழிப்புத் தலைமை நிலையத்திலிருந்து ஈழத்துச் சிவானந்த அடிகளைத் தலைவராகக் கொண்ட ஓர் ஊர்வலம் இந்தி ஒழிக தமிழ் ஓங்குக முதலிய சொற்பெருக்குடன் புறப்பட்டு முதன்மந்திரி வீட்டை அடைந்ததும் தோழர் பொன்னுசாமி தம்முடைய விரதத்தை ஆரம்பித்தார்.

குடிஅரசு - பெட்டிச் செய்தி - 05-06-1938

தமிழ் ஓவியா said...


அதோ பாரப்பா! தினமலராவது திருந்துவதாவது!!


சிறீரங்கத்தில் பிராமணாள் உணவு விடுதி - அதனை எதிர்த்துத் திராவிடர் கழகம் நடவடிக்கை குறித்து தினமலர் (1.11.2012) நம்மை ஆதரித்து வந்த கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தது.

ஆச்சரியம்; ஆனால் உண்மை! என்று விடுதலையும் அந்தக் கடிதத்தை வெளியிட்டு இருந்தது.

அதுதானே பார்த்தோம் - தினமலருக்காவது நல்ல புத்தி வருவதாவது!

நேற்றைய தினமலரில் (9.11.2012) அதற்கு நேர்மாறாக - ஏடா கூடமாக ஒரு கடிதத்தை வெளியிட்டது.

நாட்டில் என்ன என்னவோ நடந்து கொண்டிருக்கும் வேளையில், ஜாதியைப்பற்றி பேசுகிற வீரமணிபற்றி என்ன சொல்வது.

நாட்டுப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் எழுதுவது இல்லையாம் - தினமலர் ரொம்பவும்தான் கவலைப்படுகிறது.

தினமலரின் இன்றைய கடிதத்துக்கு முதல் தேதி தினமலர் கடிதமே பதில் - போதுமானது!

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க, ஏற்கெனவே ஓட்டல் நடத்திவந்த பார்ப்பான் திடீரென்று பிராமணாளைப் புகுத்துவானேன்? ஏன் இந்த விஷம வேலை என்று தினமலர் எழுதவேண்டாமா?

சரி, திராவிடர் கழகத் தலைவர் வேறு பிரச்சினைகள்பற்றி எழுதுவது, பேசுவது கிடையாதா?

இந்த ஒரு வாரத்திலேயே எத்தனை எத்தனையோ அறிக்கைகள், கருத்துகள்!

மருத்துவக் கல்லூரி மாணவர் பிரச்சினை, சேது சமுத்திரத் திட்டப் பிரச்சினை, மத்திய அரசு மின்சாரம் அளிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் வழக்குத் தொடுத்த பிரச்சினை, கீழத்தஞ்சை மாவட்டத்தில் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு ஈட்டுத் தொகை அளிக்கவேண்டும் என்ற அறிக்கை என்று எத்தனை எத்தனையோ நாட்டுப் பிரச்சினைகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளாரே - இவற்றில் ஒரே ஒரு வரியையாவது தினமலர் திரிநூல் வெளியிட்டதுண்டா?

நிழற்படங்களை வெளியிடும்போதுகூட அதில் திராவிடர் கழகத் தலைவர் படம் இருந்தால், அதனை அப்படியே கத்தரித்துவிட்டு செய்தி வெளியிடும் அக்கிரகார தினமலர்கள் திராவிடர் கழகத் தலைவர்பற்றி எழுதுவதுதான் விஷமம் கலந்த வேடிக்கையாகும்!

காலைக்கதிரிலும், தினமலரிலும் வெளிவரும் (இது உங்கள் இடம்) ஒரே கடிதத்தை பெயர் மாற்றி வெளியிடும் பித்தலாட்ட ஏடுகள் பேனா பிடிக்கலாமா?10-11-2012

தமிழ் ஓவியா said...

பணிந்தது ஹீரோ நிறுவனம்.

ஹீரோ நிறுவனம் செய்த விளம்பரத்தில் ஐயர் என்று சாதியை குறிப்பிட்டு இருந்தனர்.
இதற்கு தமிழர்கள் இணையத்தின் ஊடாகவும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் இந்நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர் .
அதன் காரணமாக ஐயர் என்பதை இப்போது குமார் என்று மாற்றியுள்ளனர்.

தமிழ் ஓவியா said...


வெட்கங் கெட்ட இனமலர் பூணூல்களே! இப்படி புத்தி கெட்டு அலையலாமா?


ஊருக்கு இளைத்தவன் பிராமணன்!

என்ற தலைப்பில் பி.தனபாலன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஸ்ரீரங்கத்தில், பாவப்பட்ட ஒரு ஐயர், தன் ஓட்டலுக்கு, "பிராமணாள் ஓட்டல்' என்று எழுதி வைத்ததில், வீரமணிக்கு அப்படி என்ன கடுப்பு?ஒருவர், தன் ஓட்டலில், "பிராமணாள் கபே' என்று எழுதி வைக்கக் கூட, இந்த நாட்டில் சுதந்திரம் இல்லையா?அந்த ஓட்டலுக்கு வீரமணி சாப்பிடப் போக, அங்குள்ள வர், "இங்கு பிராமணாளுக்குத்தான் சாப்பாடு போடுவோம்' என்று சொன் னார்களா?

இல்லையே...பிராமணாள் ஓட்டல் என்றால், பருப்பு, நெய்யுடன், அருமையான முழுச் சாப்பாடு கிடைக்கும் என, பலரும் வருவர்; நாமும் சில சில்லறையைப் பார்க்கலாம் என, அப்படி எழுதி இருக்கலாம் அல்லவா! "பிராமணாள் கபே' என, எழுதியதால், சைவம் சாப்பிடுபவர்கள், தைரியமாகப் போய் சாப்பிடுவர்.

மிலிட்டரி ஓட்டலிலும், சைவ சாப்பாடு கிடைக்கும்; ஆனால், சமைக்கும் பாத்திரம், சைவம் சமைக்க மட்டுமே உபயோகிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் வரும் அல்லவா?"பிராமணாள்' என்று எழுதியதில், எங்கிருந்து வந்தது - வர்ணாசிரமம்? வர்ணாசிரமம் என்றால் என்ன தெரியுமா?வர்ணம் என்றால் என்ன ஜாதி என்பது பொருள். ஆசிரமம் என்பது, ஓர் ஆசானிடம் கற்றுக் கொள்வது.

இங்கு, மகன், தந்தையிட மிருந்து கற்றுக் கொள்கிறான். அதுதான், வர்ணம், ஆசிரமம் = வர்ணாசிரமம். இப்போது, எல்லாவற்றிற்கும் பட்டய படிப்பு வந்துள்ளது; சொல்லிக் கொடுக்கின்றனர். அன்றைய கால கட்டத்தில், தந்தையைப் பின்பற்ற, அந்தத் தொழிலை, அவன் கற்று வந்தான்.இன்று, முடி திருத்தம் செய்வது, மண்பாண்டம் செய்வது போன்றவற் றிற்கு பட்டய படிப்பு உள்ளது. இன்று வரை அது வர்ணாசிரமம் தான்.

வீரமணியிடம் ஒரு கேள்வி... இஸ்லாமிய சாப்பாட்டுக் கடைகளில், "இங்கு, எல்லாம் "ஹலால் செய்யப் பட்டது' என, எழுதியிருப்பர். அப்போது தான், அங்கு முஸ்லிம்கள் சாப்பிடுவர்; அவர்களிடம், "இனி,"ஹலால்' என் பதை எடுத்து விடும்படி சொல்லவேண் டியது தானே...சொல்லமாட்டார்; அப்படி சொன்னால், வீரமணி, "ஹலால்' ஆகி விடுவார்.

எவருக்கு விருப்பம் இருக்கிறதோ, அவரவர்கள், அந்தந்த ஓட்டலுக்குப் போய் சாப்பிடப் போகின்றனர். இந்த, "பகுத்தறிவு' மேதையைக் கேட்டுக் கொண்டா, ஒவ்வொருவரும் சாப்பிட வேண்டும்?உங்களது அறை வாயிலில், "மானம் தமிழனின் உயிர்' என, எழுதி இருக்கும். ஆனால், வாயிலில், செருப்பை கழற்றி போட்டு விட்டுத் தான் போக வேண்டும்' என, எழுதப்பட்டிருக்கும்.

இப்போது எங்கே போனது தமிழனின் தன்மானம்? முதலில், நீங்கள் திருந்திய பின், மற்ற வரைத் திருத்த முயற்சியுங்கள்.ஈ.வெ.ரா., போய்விட்டார்; வீரமணிக்கு நல்ல காலம்.பாவம்... ஊருக்கு இளைத்தவன், பிராமணன் என்றாகி விட்டது.... என்ன செய்ய!

தினமலர், 12.11.2012

தமிழ் ஓவியா said...


பூணூல் மலரில் இப்படி எழுதி புளகாங் கிதம் அடையும் புண்-ணாக்கே, நீர் புரிந்து கொள்ள சில செய்திகள்.

மற்றவர்களைப் புண்படுத்த (கீழ் ஜாதியாக) அரசியல் சட்டத்தில் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதா? மாறாக, அரசியல் சட்டப்படி உள்ள அடிப்படைக் கடமைகளில் முக்கியமானது, அறிவியல் மனப்பாங்கு (Scientific Temper) இதன்படியோ அல்லது அது வற்புறுத்தும் மனிதநேயம் (Humanism) சமூக சீர்திருத்தம் (Reform) படியோ எந்த வகையில் அதற்கு நியாயம் கற்பிக்கப்பட முடியும்?

பிராமணள் ஓட்டல் என்றால் பருப்பு நெய்யுடன் அருமையான முழுச்சாப்பாடு கிடைக்கும் என பலரும் வருவர், நாமும் சில்லறையைப் பார்க்கலாம் என, அப்படி எழுதியிருக்கலாம் அல்லவா என்று கேட்கும் அதிமேதாவியே, அதுபோது ஏராளம் பேர் அன்றாடம் பருப்பு, நெய், வெத்தக்குழம்பு (அவாள் பாஷையில்) வடபாயாசம், தயிருஞ்சா, எல்லாம் தர்ற சரவண பகவான்களும், சங்கீதாக்களும் பல நூற்று கணக்கில் வியாபாரம் செய்து கோடீசுவரர் ஆகியுள் ளனரே - அவர்கள் பிராமணாள் போடவில்லையே - அதற்கு பதில் கூறுவீர்களா?

வேண்டுமானால் பருப்பு, நெய்யுடன் முழுச்சாப்பாடு கிடைக்கும் போடலாமே!

வங்காளத்தில் பிராமணாள் கடையில் மச்ச அவதாரம் - மீன்கறியும் கிடைக்குமே. அதுபோல அங்கே இந்த பருப்பு மட்டும் வேகாது! மீன் வகையறாக்கள் ஏராளம் உண்டே!

ஏழை மிலிட்டரி ஓட்டலிலும் சைவ சாப்பாடு கிடைக்கும் ஆனால் சமைக்கும் பாத்திரம் சைவம் சமைக்க மட்டுமே என்ற சந்தேகம் வரும் அல்லவா? என்று வியாக் கியானம் செய்யும் விவஸ்தையற்றதுகளே, விஜிட்டேரியன் என்று போட்ட ஓட்டல் களுக்கு நாட்டில் பஞ்சமா? அரிதா?

பிராமணாள் என்பது ஜாதி அல்ல; வர்ணம் என்பதை காஞ்சி சங்கராச்சாரியார் கூறியிருப்பது ஒருபுறம் இருக்கட்டும் - சிலநாள்களுக்கு முன், எதற்கு இந்த வீண் வேலை என்று ஓட்டல்காரருக்கு அறிவுரை யாக எழுதி வெளியிட்ட உங்கள் ஏட்டில் வெளிவந்த கடிதமே (1.11.2012) சரியான சான்று அல்லவா?

ஏன் இப்போது இரட்டை வேடம்? ஹலால் என்று போடப்பட்டதால் எந்த முஸ்லீம் யாரைத் தாழ்த்துகிறார்? சூத் திரன் என்பதால் தாசி புத்திரன் என்ற அவமானத்தை, இழிவைச் சுமக்கச் செய்கிறான் என்று கூறமுடியுமா?

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கின் விலை இவ்வளவு என்று கூறி திசை திருப்பும் இந்த தில்லுமுல்லு, திருகுதாளம் - சிண்டு முடியும் சில்லரைத் தனம் ஏன்?

வீட்டுக்கு வெளியே வருபவர் எவரும் செருப்பை முன்பகுதியில் விட்டு விட்டு வருகின்றனர். சுகாதாரம் கருதியே தவிர, அவமானப்படுத்தும் அடிமைத்தனம் ஆகாது. நீங்கள் எல்லாம் - அது இராமன்பீடத்தில் 14 ஆண்டு ஆட்சி புரிந்தது என்பதற்காக வெளியில் வைத்துக் கொண்டே பெரியார் திடலுக்கு வாருங்கள். எங்களுக்கு மறுப்பேது மில்லை உங்கள் வீட்டில் செருப்பைத் தான் வீடு முழுவதும் போட்டுச் செல்லுங்கள்.

எங்களுக் கென்ன ஆட்சேபணை?

இதே பார்ப்பன உணவு விடுதிகள் முன்பு பிராமணர்-கள் சாப்பிடும் இடம் சூத்திராளுக்கு இந்த இடம் என்று எழுதி வைத்திருந்ததை மாற்றிய இயக்கம் இது!

அங்கேயே கிருஷ்ணய்யர்கூட சிறீரங்கத் தில் மாற நினைத்தாலும் இந்த கோபிகை களின் மைந்தர்கள் மாறவிட மாட்டார்கள் போலும்! அட பூணூல் வக்கிரங்களே, மனிதன் செவ்வாய்க் கிரகத்தில் குடியேறப் போகிற விஞ்ஞான காலத்தில் இப்படி ஒரு விதண்டாவாதமா? வெட்கமாக இல்லையா, உங்களுக்கு? மகா மானக்கேடு!

தமிழ் ஓவியா said...


உறுதுணையாக இருக்குமா இந்தியா?


சென்னை - அண்ணா அறிவாலயம் கலைஞர் மண்டபத்தில் நேற்று (11.11.2012) மாலை நடைபெற்ற பாராட்டுக் கூட்டம் ஈழத் தமிழர் வரலாற்று ஓட்டத்தில் முக்கிய இடம் வகிக்கக் கூடியதாகும்.

டெசோ மாநாட்டில் (சென்னை - 12.8.2012) நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள், அவை குறித்த விளக்கங்கள் அடங்கிய ஆவணத்தை அய்.நா.விலும், மனித உரிமை ஆணையத்திடமும் வழங்கிட தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்ற தி.மு.க. குழுவின் தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் சென்றிருந்தனர். அந்தப் பணி களை வெற்றிகரமாக நடத்தித் திரும்பிய அவ்விருவர்க் கும் நடைபெற்ற வரவேற்புப் பாராட்டு விழா நிகழ்ச்சி அது.

பாராட்டு விழா என்று சொல்லப்பட்டாலும், அதனை மய்யப்படுத்தி ஈழத் தமிழர் உரிமைகள்பற்றி விளக்கமான கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டன.

ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக அறவழி யில் போராடியது ஒரு கட்டம். இலங்கை அரசு அசல் சிங்கள இனவாத அரசாக உருவெடுத்து, ஈழத் தமிழினம் என்ற ஒன்று வரலாற்றில் இருக்கக் கூடாது என்கிற திட் டத்தில் செயல்பட்டதன் காரணமாக ஈழத் தமிழர்களிலே போராளிகள் உருவாகி ஆயுதம் தாங்கிப் போராடியது இன்னொரு கட்டம்.

பன்னாட்டு இராணுவ உதவிகளுடன், ஈழத் தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்தது மற்றொரு கட்டம்.

இந்த மூன்று கால கட்டங்களிலும் தமிழ்நாடு பலவகைகளிலும் ஈழத் தமிழர்கள் பக்கம் நின்று வந்திருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால் 1939ஆம் ஆண்டிலேயே நீதிக்கட்சியே இதுகுறித்து கருத்தும் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய கால கட்டத்தில் கவனிக்கப்பட வேண் டியது - எஞ்சி இருக்கும் ஈழத் தமிழர்களின் வாழ் வுரிமையைப் பற்றியதும் மற்றும் அரசியல் தீர்வுமாகும்.

அய்.நா. மூலம் தான் இதற்குத் தீர்வு காணப்பட முடியும் என்ற நிலையில் பன்னாடுகளின் ஆதரவு மிக முக்கியமாகத் தேவைப்படும் இந்தக் கால கட்டத்தில் கலைஞர் அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட டெசோ என்ற அமைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தி.மு.க. திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை ஆகியவை இந்த அமைப்பில் இணைந்துள்ளன.

இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட நிலையில் பல விமர்சனங்கள் எழுந்ததுண்டு.

ஆனாலும் டெசோ உருவாக்கப்பட்டு, சென்னையில் டெசோ மாநாடு நடத்தப்பட்டதும், அம்மாநாட்டில் இந்தி யாவின் பல மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல; பன்னாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு திறந்த மனதோடு கருத்துக்கள் வெளியிட்டதும், அவசியமான, ஆழமான கருத்தாக்கம் கொண்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் உலகக் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கும் ஒரு நிலையை உருவாக்கி விட்டன.

இந்திய அரசின் போக்கிலும் சில மாற்றங்கள் ஏற்படவும் வழி வகுத்தது.

அய்.நா. துணைப் பொதுச் செயலாளர் மற்றும் ஜெனிவாவில் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் சந்திப்பு என்பது - ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் மேலும் அடுத்த கட்ட பாய்ச்சலாகும்.

ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவி வந்த இலங்கை அரசு இப்பொழுது பன்னாடுகளின் முன்னிலையில் கைகட்டி நிற்கும் ஒரு அவல நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு இந்த நேரத்தில் ஓர் அழுத்தத்தைக் கொடுக்குமேயானால் அனேகமாக ராஜபக்சே தண்டனைக்குரிய குற்றவாளியாக அறிவிக்கப்படுவதற் கான கூடுதல் சூழல் விரைவில் உருவாகும்.

இந்த விடயத்தில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் இந்தியா நடந்து கொள்ளவில்லை. குறிப்பாக இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது, தமிழக மீனவர்கள் தொடர்ந்து வேட்டை யாடப்படுவது என்பதில் இந்திய அரசு தமிழர்களுக்கு விரோதமாக நடந்து கொண்டு வருகிறது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இந்த இரு பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டி, இந்திய அரசுக்கு ஆதரவு அளிப்பது பற்றிய முடிவினை டெசோ தலைவர் கலைஞர் அவர்களின் முடிவுக்கே விட்டு விடுவதாகவும் கூறினார்.

நிறைவுரையாற்றிய மானமிகு கலைஞர்அவர்கள் இந்திய அரசு நமக்கு உறுதுணையாக இருந்தால், நாமும் உறுதுணையாக இருக்க முடியும் என்று அறிவித்திருப்பது அர்த்தம்மிக்கதும், அவசியமானதுமாகும்.

உறுதுணையாக இல்லாவிட்டால் நாமும் உறு துணையாக இருக்க முடியாது என்பதை இதன் மூலம் கலைஞர் அவர்கள் அறிவித்துவிட்டார்கள்.

இது உல கெங்கும் அலைகளை ஏற்படுத்தக் கூடியதுதான், இதைத் தவிர வேறு வழியில்லை. இந்தியா என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம்!

பந்து அவர்கள் பக்கம்தான் இப்பொழுது இருக்கிறது.12-11-2012

தமிழ் ஓவியா said...


கட்டப்பட்டிருக்கின்றன


உலகில் உள்ள மதங்கள் எல்லாம், குருட்டு நம்பிக்கை என்ற பூமியின்மீதே கட்டப்பட்டிருக்கின்றன.

(விடுதலை, 12.10.1962)