Search This Blog

3.11.12

தீபாவளிப் பண்டிகை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

இவ்வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப் போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப் போகின்றீர்கள்? அப்பண்டி கைக்கும், எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லி விடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையைக் கொண்டாடப் போகின்றீர்களா? என்பதுதான் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்பதின் தத்துவமாகும்.

நண்பர்களே! சிறிதும் யோசனை இன்றி, யோக்கியப் பொறுப்பின்றி, உண்மை தத்துவமின்றி, சுயமரியாதை உணர்ச்சி இன்றி, சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள் ளுகின்றீர்களேயல்லாமல், மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரச்சாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர் களேயல்லாமல், மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும், ஜீவனற்ற தன்மையான பழைய வழக்கம் பெரியோர் காலம் முதல் நடந்து வரும் பழக்கம் என்கின்றதான வியாதிக்கு இடம் கொடுத்துக் கொண்டு கட்டிப் போடப்பட்ட கைதிகளைப் போல் துடிக்கின்றீர்களேயல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவைச் சிறிதுகூட செலவழிக்க சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செல வழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்க தயாராயிருக்கின்றீர்கள். ஆனால் உங்கள் பகுத்தறிவைச் சிறிது கூட பயன் படுத்தத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந் நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? பார்ப்பனரல்லாதார் களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராணப் புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக் கான மக்கள் ஞானமற்று, மானமற்று கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலை வதைப் பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றேன்.
புராண கதைகளைப் பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள்; அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்ளுகின்றீர்கள். எல்லா ருக்கும் தெரிந்தது தானே! அதையேன் அடிக்கடி கிளறுகின்றீர்கள்? இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா? என்று கேட்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி, மூச்சுவிடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராண புரட்டை உணர்ந்தவர் களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.

பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை, கொண் டாடினீர்கள்? எவ்வளவு யாத்திரை செய் தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும், நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப் பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய் கோபிப்பதில் என்ன பிரயோ ஜனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி, அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றியும் பேசுவதால் என்ன பயன்? நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய் என்றால் அதற்கு நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன் என்று பதில் சொல்லி விட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா?

அன்பர்களே! சமீபத்தில் வரப்போகும் தீபாவளிப் பண்டிகையை பார்ப்பனரல்லாத மக்களாகிய நீங்கள் 1000க்கு 999 பேர்களுக்கு மேலாகவே எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள். துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்து துணி வாங்குவது என்பது ஒன்று; மக்கள், மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்து வதற்கு ஏற்றதல்லாததுவுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்த மற்றதும், பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பார்ப்பனர் உள்பட பலர் இனாம் பிச்சை என்று வீடுவீடாய், கூட்டங்கூட்டமாய்ச் சென்று, பல்லைக் காட்டி கெஞ்சி, பணம் வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும், செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர் விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து, அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து, அவை களில் பெரும் பாகம் கண்டவர்களுக்கு கொடுப்பதும், வீணாக்குவதும் ஆறு: இந்தச் செலவுகளுக்காக கடன் படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காக கடன்பட வேண்டியிருப்பது என்பதும், பட்டாசு வெடிமருந்து ஆகியவைகளால் அபாயம் நேரிட்டு பல குழந்தைகள் சாவதுமான விஷயங்களொரு புறமிருந் தாலும் மற்றும் இவைகளுக் கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்த சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும் தீபாவளி பண்டிகை என்றால் என்ன? அது எதற்காக கொண்டாடப்படுகிறது என்கின்ற தான விஷயங்களுக்கு சிறிது கூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம். 

                     தொடரும்.. --------------------------------- பெரியார் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை -”குடிஅரசு” 1-11-1936

36 comments:

தமிழ் ஓவியா said...


ஆபாசம்!


சசிதரூருக்கு மனித வள மேம்பாட்டுத்துறை யின் இணை அமைச்சர் என்பதற்குப் பதிலாக காதல் விவகாரத்துறை என்று ஒரு புதிதாக ஒரு துறையை உருவாக்கி அதற்கு இணை அமைச்ச ராக ஆக்கி இருக்கலாம் என்று திருவாய் மலர்ந் தருளியுள்ளார்.

பி.ஜே.பி. யின் மூத்த தலைவர் களுள் ஒருவராகக் கருதப் படும் முக்தர் அப்பாஸ்.

இதே போல குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியும் சசி தரூரைக் கிண்டல் அடித்துள்ளார். 50 கோடி ரூபாய் பெண் தோழி சுனந்தாவுக்காக பேரம் பேசியவர் சசிதரூர் என்று விமர்சித்துள்ளார்.

என் மனைவி சுனந்தா 50 கோடி ரூபாய் மதிப்புடையவர் அல்லர். அதைவிட அதிக மதிப் புடையவர். அவருக்கு விலையே கிடையாது. அதைவிட அதிக மதிப் புடையவர் இதைப் புரிந்து கொள்ள அவளைப் போன்ற யாராவது ஒரு வரை நீங்கள் காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்று பதிலடி கொடுத் துள்ளார்.

நம் நாட்டு அரசிய லின் தரம் தனி மனிதர் வாழ்க்கைப் பிரச்சி னையை எல்லாம் சுற்றி சிரிப்பாய் சிரிப்பதை நினைத்து வெட்கப்படத் தான் வேண்டும்.

பி.ஜே.பி. அமைச்சர் களின் யோக்கியதாம்சம் என்ன? கருநாடக மாநி லத்தில் சட்டப் பேரவை நடந்து கொண்டு இருந்த போது பி.ஜே.பி. அமைச் சர்கள் (லட்சுமணன் சாவடி உட்பட) எத்தகைய முக்கியமான வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந் தனராம்?

சகல வசதிகளையும் உடைய கைப்பேசியில் ஆபாசப் படங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கவில் லையா? பிரச்சினை பெரிதாகி வெடித்த காரணத்தால் அமைச்சர் பதவியை விட்டே மூவர் விலக நேர்ந்ததல்லவா!

அடுத்தவர் மனை வியை தன் மனைவி என்று கூறி பொய் பாஸ் போர்ட் தயாரித்துப் பயணம் செய்தபோது பிடிபட்டவர் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் அல்லவா! (பாபுலால் சுதாரா)

இவர்கள் எல்லாம் மனிதர்கள் - ஆசாபாசம் உள்ளவர்கள் - விட்டுத் தள்ளுங்கள்.

பி.ஜே.பி. சங்பரிவார் போற்றும் கிருஷ்ண பகவானின் யோக்கியதைதான் என்ன?

அறுபதாயிரம் கோபிகாஸ்திரீகளுடன் கும்மாளம் அடித்தவன் அல்லவா?

குளிக்கப் போன பெண்களின் ஆடைகளைத் திருடிச் சென்று மரத்தில் ஒளிந்து கொண்டு பெண்களின் நிர்வாணத்தை ரசித்த வக்கிரப் புத்தி கொண்ட வன் அல்லவா!

கடவுள் செய்தால் லீலை - மனிதன் செய் தால் ஆபாசமா?

தனி ஒழுக்கம், பொது ஒழுக்கம்பற்றி எல்லாம் பி.ஜே.பி.யினரோ சங்பரி வார்க் கும்பலோ பேச யோக்கியதை உண்டா?

- மயிலாடன் 2-11-12

தமிழ் ஓவியா said...


சிறீரங்கம் போகாமல் இருப்போமா?


தோழர்களே, தோழர்களே, கருஞ்சட்டைக் குடும்பத்தினரே! ஒன்று போனால் இன்னொன்று; பிரச்சினைகள் நமது கதவுகளைத் தட்டிக் கொண்டுதானிருக்கும்.
இப்பொழுது சிறீரங்கத்தில் மீண்டும் பிராமணாள் ஓட்டலாம் - பெயரை எடுக்க முடியாதாம்.

1957ஆம் ஆண்டோடு இந்தக் கசுமாலம் ஒழிந்தது என்று நினைத்தோம். அது எப்படி? நாங்களாவது - திருந்துவதாவது? என்று பார்ப்பனர்கள் வீராப்புப் பேச ஆரம்பித்து விட்டனர்.

மீண்டும் முரளிஸ் கபே போராட்டம்! போராட்டம்!!

அது தேவைப்படாத அளவுக்குப் பார்ப்பனர்கள் நடந்து கொண்டால், அவர்களுக்கு நல்லது! நல்ல புத்தி சொல்லிக் கொடுக்கப் பார்ப்பனர்களுக்குத் தலைமை இல்லை. ஏதோ தங்களுக்கு ஒரு வசந்தகாலம் வந்துவிட்டதாக நினைத்து, பூணூலை வெளியில் தொங்கப் போட்டு நடமாடலாம் என்று நினைக்கிறார்கள்.

ஒரு பழமொழி உண்டு. நினைப்பு, பொழப்பைக் கெடுத்து விடும் என்பதுதான் அந்தப் பழமொழி.

4.11.2012 ஞாயிறு மாலை தமிழர் தலைவர் சங்கநாதம் செய்ய இருக்கிறார். சிறீரங்கத்தின் - திருவானைக்காவலில்; நீதிமன்றம் சென்று ஆணை பெற்று வந்துள்ளோம் - மறவாதீர்! திருச்சி மாவட்டம் கழகத்தின் சிறப்பான ஏற்பாடுகளைக் காணப் போகிறீர்கள்!

தனி நபர் தாக்குதல் என்பது நம்மிடம் கிடையாது. அது கையாலாகாதவர்கள் செயல்.

நம்மால் பந்தை அடிக்க முடியும் என்கிறபோது காலை ஏன் அடிக்கப் போகிறோம்?

பெரியார் சிலையையே சிறீமான் ரங்கநாதன் பள்ளி கொண்டிருக்கும் கோயிலுக்கு முன் வைத்தவர்கள் நாம்.

நீதிமன்றம் வரை பூணூல்கள் படையெடுத்துப் பார்த்து மூக்கறுபட்டதுதான் மிச்சம்!

இப்பொழுதும் இதிலும் வெற்றி பெறுவோம் தோழர்களே! கருஞ்சட்டைத் தோழர்களே!! குடும்பம் குடும்பமாக திருவானைக்காவல் நோக்கித் திரள்வீர்! திரள்வீர்!!2-11-12

தமிழ் ஓவியா said...


இன்னொரு மைல் கல்!


ஈழத் தமிழர்கள் கடுமையான தாக்குதலுக்கு ஆளான கால கட்டத்தில் - குறிப்பாக 1983இல் ஈழத்திலிருந்து தமிழர்கள் தமிழ்நாட்டை நோக்கி அலை அலையாக வந்து கொண்டிருந்தனர். அவர்களில் போராளிகளும் உண்டு.

அந்தக் கால கட்டத்தில் திராவிடர் கழகம் முக்கிய பாத்திரம் வகித்து அத்தமிழர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியது.

சென்னை அமைந்தகரை புல்லா ரெட்டி அவின்யூவில் இத்திசையில் கூட்டப்பட்ட முதல் பொதுக் கூட்டத்தை திராவிடர் கழகம் முன்னின்று நடத்தியது.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற அந்தச் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார், பழ. நெடுமாறன், பன்மொழிப் புலவர் அப்துல் லத்தீப் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் போர் முரசு கொட்டினர்.

ஈழத் தமிழர்களுக்காகப் பல்வேறு இன்றியமையாத பொருள்கள் நன்கொடையாக பொது மக்களிடம் திரட்டப்பட்டன.

தமிழ் நாட்டில் பல இடங்களிலும் போராளிகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அந்தக் கால கட்டத்தில் பிரதமர் இந்திராகாந்தி, தமிழ்நாடு முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆகியோர் இதற்குப் பச்சைக் கொடியும் காட்டினர்.

மதுரையில் ஈழ விடுதலை மாநாட்டையே திராவிடர் கழகம் நடத்தியதுண்டு. ஈழத்திலிருந்து அமிர்தலிங்கம், கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்டவர்கள் எல்லாம் அம்மாநாட்டில் கலந்து கொண்டு கர்ச்சனை புரிந்தனர்.

ஈழத்தில் சிங்களப் பேரினவாத அரசால் நடத்தப்பட்ட வெங் கொடுமைகளை விளக்கும் கண்காட்சியும் நாடகமும் அம்மாநாட்டில் இடம் பெற்று இருந்தன.

தமிழ்நாட்டில் பல அமைப்புகளும் போட்டிப் போட்டுக் கொண்டு ஈழத் தமிழர்களுக்காக முன்வந்தன. அதன் பரிணாம வளர்ச்சிதான் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையிலான டெசோ உருவாகியது.

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் பழ. நெடுமாறன், பார்வேர்டு பிளாக் தலைவர் அய்யண்ணன் அம்பலம் ஆகியோர் டெசோவில் அங்கம் வகித்தனர் - தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் எல்லாம் பேரணியும், பொதுக் கூட்டமும் எழுச்சியுடன் நடத்தப்பட்டன.

தமிழ்நாடே கொந்தளிக்கும் எரிமலையாக விண்முட்ட எழுந்து நின்றது என்பதெல்லாம் என்றும் நிலைத்திருக்கும் வரலாற்று நிகழ்ச்சிகள்.

இப்பொழுது டெசோ தனது இரண்டாம் நிலை பணியைத் தொடங்கி இருக்கிறது. அதன் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட மாநாடு உலகத் தமிழர்களை மட்டுமல்ல; மனித உரிமைப் பேணும் உலக மக்களையும், அய்.நா. போன்ற அமைப்புகளையும் பெரிதும் ஈர்க்கச் செய்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மிகச் சரியாக வடித்தெடுக்கப்பட்டவை என்று பொது நிலையாளர்களின் மத்தியில்கூட கருத்து வலுப் பெற்றது.

டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை அதிகாரப் பூர்வமாக அய்.நா.வின் பொதுச் செயலாளரிடம் அளிப்பது என்பது மிக முக்கியமான செயல்பாடாகும்.

தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நியூயார்க்குக்குச் சென்று (1.11.2012) அய்.நா.வின் துணைப் பொதுச் செயலாளர் யான் லிசானைச் சந்தித்துள்ளனர். டெசோ தீர்மானங்கள் அவைபற்றிய விளக்கங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

அய்.நா. துணைப் பொதுச் செயலாளர் கேள்விகளுக்கான பதில்கள் திருப்தியளிக்கக் கூடிய வகையில் கூறப் பட்டுள்ளன.

அய்.நா.வின் துணைப் பொதுச் செயலாளரும் பிரச்சினையின் ஆழத்தை உணர்ந்து உங்கள் கோரிக்கைகளை அய்.நா. பரிசீலிக்கும் என்ற நம்பிக்கை மிகுந்த பதிலினை கூறியுள்ளார்.

இந்த நிகழ்வு உலகளாவிய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் அய்யமில்லை. இப்பொழுது தேவையெல்லாம் இதனை மேலும் பலப்படுத்தும் வகையில் தமிழர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

இதிலும் அரசியல் என்ற கல்லைத் தூக்கி எறிந்து, எதிரிகள் பலன் அடையும் அலைகளை எழுப்பிட வேண்டாம் என்பதுதான் நமது கனிவான வேண்டுகோள்.

29.10.2012 அன்று சென்னை - பெரியார் திடலில் திராவிடர் கழகம் நடத்திய சிறப்புக் கூட்டத்திலும் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் முக்கிய வேண்டுகோளாக இதனைத்தான் முன் வைத்தார்.

கடந்த காலத்தைக் கிளற ஆரம்பித்தால் ஒவ்வொரு தரப்பிலும் கேள்வி - பதில் நிகழ்ச்சிகள், அதிரடியான பட்டிமன்றங்கள் - எரிந்த கட்சி - எரியாத கட்சி லாவணிகள் தான் நடைபெறும்.

இடையில் புகுந்து கயிறு திரிக்கும் நிரந்தர எதிரிகளுக்கு அல்வா சாப்பிட்டதுபோல் ஆகிவிடும். இலங்கை ராஜபக்சேவுக்கும் புதுத் தெம்பை ஊட்டும். மிக நெருக்கடியான கால கட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே மாட்டிக் கொண்டு திணறுகிறார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆளுக்கொரு தர்மஅடி கொடுக்க வேண்டுமே தவிர, வேறு கண்ணோட்டம் வேண்டாமே!2-11-12

தமிழ் ஓவியா said...


பார்ப்பன சாதி


பார்ப்பன சாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும்வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்துவரும். (விடுதலை, 29.5.1973)

தமிழ் ஓவியா said...


காந்தியாரின் ஆயுளும் - சோதிடமும்

காந்தியார் பிறந்தது 2.10.1869இல் கோட்சே என்ற மராத்திப் பார்ப்பன னால் சுட்டுக் கொல்லப்பட்டது, 30.1.1948இல். எழுபத்து எட்டரை ஆண்டுதான் உயிருடன் இருந்தார்.

ஆனால், திருத்தணி ஜோதிடர் வி.கே.கிருஷ்ணமாச் சாரியார் என்பவர் 15.8.1947 பாரத தேவி இதழில் என்ன கூறியிருக்கிறார், தெரியுமா?

காந்தியடிகள் பிறந்தது சிம்ஹ லக்கினம். மக நட்சத்திரம். விடியற் காலம். மக நட்சத்திரத்தில் ஜனித்தவர் களுக்கு தீர்க்காயுள்யோகம் உண்டு. இதே போல் சிம்ஹ லக்னமும் நீண்ட ஆயுள் தரக்கூடியது.

மேலும் ஜன்ம லக்னம் சிம்ஹமாகவும் அதில் சந்திரன் தனித்து இருப்பதாலும் ஆயுள் ஸ்தானாதிபதியான குரு தசம கேந்திரத்தில் நின்று லக்னாதிபதியான சூரியனையும் ஆயுஷ்காரனாகிய சனியையும் பார்ப்பதனாலும் பரமாயுள் என்ற கணக்கான 120 ஆண்டுகள் மகாத்மாவுக்கு ஆயுள் உண்டு.

தவிர, முன் காலத்தில் தப ஸ்ரேஷ்டர்களான ரிஷீஸ்வரர்கள் தமது தபோ மகிமை யாலும், யோகாசன அனுஷ்டான ஆகார நியமங்களினாலும் தமது ஆயுளைப் பெருக்கிக் கொண்டு ஆயிரக் கணக்கான ஆண்டுகள் ஜீவித்திருந்த தாக நமது புராணங்களின் வாயிலாக அறிகிறோம்.

இதே போல காந்தியடிகளும் தமது ஆகார, அனுஷ்டான நிர்ணயங்களாலும் தெய்வ பிரார்த்தனை யாலும் தமது ஆயுளை விருத்தி செய்து கொண்டு, ஜாதக ரீதியாக ஏற்படும் பரமாயுள் 120 ஆண்டுகளுக்கு அதிகமாகவே ஜீவித்திருப்பாரென்பது எனது திடமான அபிப்பிராயம்.

மகாத்மா காந்தியடிகள் நீடூழி வாழ பகவானைப் பிரார்த்திப்போமாக.

திருத்தணி சோதிடரின் அசைக்க முடியாத சோதிடக் கணக்குப்படி மேலும் 40 ஆண்டுகள் உயிருடன் இருந்திருக்க வேண்டிய காந்தியடிகளை மதவெறிப் பார்ப்பனன் (கோட்சே) சுட்டுக் கொன்று விட்டான்.

தமிழ் ஓவியா said...


கடவுளை நம்புவோர் எத்தனைப் பேர்?


அண்மையில் தி இந்து (16.9.2005) இதழில் மக்கள் எந்த அளவுக்குக் கடவுள், மத நம்பிக்கைக் கொண்டுள்ளனர் என்பது பற்றிய ஒரு கருத்துக் கணிப்பு வெளியானது.

அதில், நீங்கள் எந்த அளவு மதப் பற்றாளராக இருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, ஓரளவு பற்று கொண்டுள்ளேன் என 49 சதவிகிதம் பேரும், எனக்கு மதப் பற்றறு இல்லை என 14 சதவிகிதம் பேரும், அதிக பற்று கொண்டுள்ளேன் என 45 சதவிகிதம் பேரும் பதிலளித்துள்ளனர்.

வழிபாட்டிடத்திற்கு அவ்வப்போது செல்வீர்களா? என்ற கேள்விக்கு, வாரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை செல்வேன் என 31 சதவிகிதம் பேரும், வாரம் ஒருமுறை செல்வேன் என 38 சதவிகிதம் பேரும், மாதத்திற்கு ஒரு முறை செல்வேன் என 18 சதவிகிதம் பேரும் மாதம் ஒருமுறையாவது செல்வேன் என 9 சதவிகிதம் பேரும் இருவாரத்திற்கு ஒரு முறை செல்வேன் என 4 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.


இன்றைய நாட்களில் இளைஞர்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதா? என்ற கேள்விக்கு, சிலருக்கு உள்ளது என 45 சதவிகிதம் பேரும், அதிகமானவர்களுக்கு உள்ளது என 34 சதவிகிதம் பேரும் மிகச் சிலருக்கே உள்ளது என 21 சதவிகதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

18 வயது முதல் 45 வயது வரையுள்ள இருபாலரையும் சேர்த்து 220 பேர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் இது. (ஆதாரம்: தி இந்து 16.9.2005)

தமிழ் ஓவியா said...


சுவீடனிடம் தோல்வி: ருமேனிய வீரர் ஹாஜி வேதனை எங்கள் பிரார்த்தனைகள் பலிக்கவில்லை


எங்கள் பிரார்த்தனைகள் பலிக்கவில்லை என்று சுவீடனிடம் தோற்ற ருமேனிய வீரர் ஹாஜி வேதனையுடன் கூறினார்.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் சுவீடன் - ருமேனியா அணிகள் மோதின. இந்த போட்டியின் முடிவு விறுவிறுப்பாக அமைந்தது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சம நிலையில் இருந்தது. கூடுதல் நேரம் கொடுக்கப்பட்ட போது அதிலம் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமமாக இருந்தது. எனவே பெனால்டி முறை கொண்டு வரப்பட்டது. இதிலும் இரு அணிகளும் 4-4 என்ற கோல் கணக்கில் சமநிலையை கடைப்பிடித்தது.

எனவே வெற்றி தோல்வியை முடிவு செய்ய சடன் டெத் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ருமேனியாவை வீழ்த்தி சுவீடன் ஜெயித்தது.

இந்த போட்டியில் ருமேனியா ஜெயிக்க அதிக வாய்ப்புகள் இருந்தும் அதை பயன்படுத்த அவர்கள் தவறி விட்டனர் தோல்வி குறித்து ருமேனிய கேப்டனும், கார்பதியின் சின்மரடோனா என அழைக்கப்படும் ஜியார்ஜி ஹாஜி கூறியதாவது:

சுவீடனுக்கு எதிரான போட்டியில் நாங்கள் ஜெயித்து இருக்கவேண்டும். ஆனால் முடிவு வேறுவிதமாகி விட்டது.

வெற்றிக்காக நாங்கள் செய்த பிரார்த்தனை பலிக்கவில்லை. கடவுள் சுவீடன் அணி பக்கம் இருந்து விட்டார். - இவ்வாறு அவர் கூறினார்.

கால் இறுதிப் போட்டியில் தோற்ற போதிலும் ருமேனிய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40 லட்சம் கிடைக்கும். இது தவிர 12 வீரர்களுக்கு மெர்சி டஸ் காரும் பரிசாக வழங்கப்படும்.

ருமேனிய வீரர்கள் நேற்று விமானம் மூலம் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்கள்.


(மாலை முரசு, 12.7.1994)

தமிழ் ஓவியா said...


அவாளே கூறுகிறார்கள்

இராமயணமும், பாரதமும் கற்பனைக் காப்பியங்கள் என்றால் நம்மீது சினம் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட போர் நடந்தது என்று காட்ட எந்த வரலாற்றுத்துறை அறிஞராலும் இயலாது என்று சொன்னால் கோபம் கொள்கிறார்கள். நாம் கொடுக்கும் ஆதாரங்களை வேண்டுமானால் மறுத்துப் பேசட்டும்.

ஆரியத்தின் ஏடு ஆனந்த விகடன் ஆங்கில ஏடு மெயிலிலிருந்து எடுத்து வெளியிட்டுள்ள செய்தியின் சுருக்கத்தினை இங்கு தருகிறோம் இதன் பின்பாவது குழப்பவாதிகள் தெளிந்தால் சரி.

எவ்வளவு நாட்கள்தான் ஏமாற்றினாலும் எதிரிகள் கூட நம் கருத்துக்குத்தான் வந்து தீர வேண்டியிருக்கிறது. இதோ படியுங்கள்: பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே குருசேத்திரத்தில் ஒரு பிரமாண்டமான போர் நடந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியின் பின்னணியில் பார்த்தால் அந்த மகாபாரத யுத்தத்தை உண்மை சரித்திர சம்பவமாகக் கருதமுடியாது. அப்படி ஒரு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் ஒன்றுமில்லை.

கி.மு. 1100க்கு முன்பு இரும்பு என்றால் என்னவென்று தெரியாத நிலை. போர்க்கருவிகள் பற்றிக் குறிப்புகள் வருகின்றன. இராமாயணம் மகாபாரதம் இரண்டிலும் அவ்வப்போது பல சமஸ்தான கவிஞர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டிப் பலவற்றைப் புகுத்தியிருக்கிறார்கள். இப்போதுள்ள பதிப்புகள் கி.பி. 4 அல்லது 5ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையே.

உண்மையினைச் சொன்னால் நம்மீது பாய்ந்து சீறும் சீலர்கள் அக்கிரகார ஆனந்தவிகடனே ஆமாம் போட்ட பிறகு பாவம் என்ன சொல்லப் போகிறார்கள்?


ஆதாரம்: 12-10-1975 நாளிட்ட ஆனந்த விகடன்.
தகவல்: அரசிளங்கோவன், திருக்கோகர்ணம்.

தமிழ் ஓவியா said...


மாணவர்களே, இளைஞர்களே உங்களைத்தான்....


அருமை மாணவச் சிங்கங்களே !

இளைஞரணி ஏறுகளே!

பதவிப்பக்கம் போகாத பாசறையின் சொந்தங்களே! தமிழர்களுக்கு பதவிகளும் பட்டங்களும் கிடைத்தன என்றால் அதற்குக் காரணம் நாம் பதவிப் பக்கம் தலைவைத்து படுக்காததால்தான். தந்தை பெரியார் நினைத்திருந்தால் எவ்வளவு பெரிய உயர்ந்த பதவிக்கும் சென்றிருக்கலாமே இருமுறை.

தேடி வந்த முதலமைச்சர் பதவியை கூட முகவரி தெரியாமல் வந்து விட்டீர்களே! என்று விரட்டியடித்த விவேகத்திற்கும் வீரத்திற்கும் சொந்தக்காரர் நமது வெண்தாடி வேந்தர். அவர் வழியில், அம்மா காட்டிய பாதையில், தமிழர் தலைவர் கைநீட்டிய திசையில் எவ்வித சபலத்திற்கும் ஆளாகாத தொண்டர்களாக இருப்பது பெருமை! பெருமை!! பெருமைக்கு மேலும் அணிகலன்.

இத்தகைய பட்டாளத்தில் தான் சமுதாயத் தொடர்புடைய சாதனைகளை நிகழ்த்திக் காட்ட முடியும். முதற்கட்டமாக சகல பரித்தியாகத்திற்கும் தயார் என்னும் ஆயிரம் இளைஞர்களை என் முன் நிறுத்துங்கள் என்று கட்டளையிட்டுள்ளார் நமது தமிழர் தலைவர் - தானைத் தலைவர்.

நமது மாணவரணி பொறுப்பாளர்களும், இளைஞரணி பொறுப்பாளர்களும், ஈட்டியாய் பாய்ந்து கொண்டுள்ளனர். நாம் பட்டியலிடும் பணியின் பக்கம் மற்றவர்கள் பராக்குக் கூட பார்க்கமாட்டார்கள். இன்னும் ஜாதி இழிவு இன்னும் வருணாசிரம பாதுகாப்பு

இன்னும் இடஒதுக்கீட்டில் ஏகப்பட்ட குளறுபடிகள்

இன்னும் மூடநம்பிக்கையின் முடைநாற்றம்

இன்னும் பக்தியின் பெயரால் பகற் கொள்ளைகள்

பகுத்தறிவு என்ஜினை பூட்டிப்பார்த்து பயணம் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை முன்னேறும். புதிய அத்தியாயம் பூக்கும் என்றார் உலகத் தலைவர் பெரியார்.

மதவாதம் மக்களை மாசுபடுத்துகிறது. அறிவை நாசப்படுத்துகிறது. வெறியை விசிறி விடுகிறது. உலகம் பூராவும் மதச்சண்டைகள் - கலவரங்கள்! ஆம். மதமற்ற உலகே ஒரேத் தீர்வு!! அதனைக் கொடுக்கவல்லம் தத்துவத் தந்தை பெரியார் இயலே! வாருங்கள், தோழர்களே வரும் 4ஆம் தேதி காலை திருச்சி பெரியார் மாளிகையில் நடக்க இருக்கும் கழக மாணவரணி, இளைஞரணி, கலந்துரை யாடலுக்கு. கூடிப் பேசுவோம்!

குவலயம் விளக்க குன்றெனத் திட்டங்கள் வகுப்போம்.

ஃ உறுப்பினர் சேர்க்கை

ஃ இதழ்களுக்கு சந்தா சேர்க்கை

ஃ தமிழர் தலைவர் தம் 80ஆண்டு பிறந்தநாள்

இவை அடிப்படையானவை. இந்த கட்டமைப்பின் மீது தான் நமது சவாரியே இருக்கிறது. வாருங்கள் - திருச்சியில் சந்திப்போம்.

குறிப்பு: நமது தமிழர் தலைவர் கருத்துரை வழங்க வாய்ப்பும் உள்ளது.

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பயணத்தில் ஒரு மைல் கல்!


அய்.நா. துணைப் பொதுச் செயலாளர் யான் லியாசனோடு
தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு எம்.பி. சந்திப்பு

உங்கள் கோரிக்கை: அய்.நா. தீர்வு காணும்
அய்.நா. துணைப் பொதுச் செயலாளர் உறுதி

அய்.நா. மன்ற துணைத் பொதுச் செயலாளர் யான் லியாசன் அவர்களிடம் மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு எம்.பி. ஆகியோர் டெசோ மாநாட்டு தீர்மானம், தி.மு.க. தலைவர் கலைஞரின் கோரிக்கை மனு மற்றும் ஆவணங்களை வழங்கி விவரித்த காட்சி!

நியூயார்க், நவ.2- ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பயணத்தில் இதோ ஒரு மைல் கல் என்று சொல்லும் அளவுக்கு - தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. நாடாளு மன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் நியூயார்க் சென்று அய்.நா.வின் துணைப் பொதுச் செயலாளர் யான் லியாசனைச் சந்தித்து சென்னையில் நடத்தப் பட்ட டெசோ மாநாட்டுத் தீர் மானங்கள் மற்றும் அதன் விளக்க ங்களை எழுத்து வடிவத்திலும் குறுந்தகட்டின் வாயிலாகவும் அளித்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள அய்.நா. மன்றத்தில் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து சென்னையில் நடைபெற்ற `டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை, ஜெனீவாவில் அய்க் கிய நாடுகள் மனித உரிமைக் கவுன் சிலில் வழங்கப்பட உள்ள மனுவினை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேற்று அமெரிக்க நேரப்படி பகல் 11.15 மணியளவில் அய்.நா. மன்றத்தின் துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசன் அவர்களிடம் வழங்கினர். அப்போது அய்.நா. மன்றத்தின் துணைப் பொதுச் செயலாளர் யான் லியாசன், மு.க. ஸ்டாலின் அவர்களி டம் ``அமெரிக்காவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய இயற்கை சீற்றத்திற்கு இடையில் மிகவும் சிரமப் பட்டு என்னைச் சந்திக்க வந்திருக் கின்ற இந்த நிகழ்ச்சி ஒன்றிலிருந்தே இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உங்கள் தலைவரும், நீங்களும் எந்த அளவிற்கு மனித நேயத்தில் அக்கறை உள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பதை நான் உணர்கிறேன் என்றார்.

மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் அவர்கள் அப்போது, அய்.நா. துணைப் பொதுச் செயலாளர் யான் லியாசன் அவர் களிடம், ``எங்கள் தலைவர் கலைஞர் அவர்களுக்கு வயது இப்போது 89. இதில் 75 ஆண்டுகளாக அவர் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு உலகெங்குமுள்ள தமிழர்களுக் காகவும், தமிழ் இன உணர்வுகள் பாதுகாக்கப்படவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்.

இலங்கைத் தமிழர் பிரச் சினையில் தி.மு. கழகமும், எங்கள் தலைவர் கலைஞர் அவர் களும் 1958 ஆம் ஆண்டு முதல் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளார். இதற்காக சிறை சென்றும் தியாகம் புரிந்து உள்ளார்.

மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்ட வர் எங்கள் தலைவர் கலைஞர் அவர் கள் என்றார்.

அய்.நா. துணைப் பொதுச் செயலாளர் யான் லியாசன்

அப்போது, அய்.நா. துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசன் அவர்கள், ``இலங்கைத் தமிழர் பிரச்சி னையில் உங்கள் தலைவரும், நீங்களும் அய்.நா. மன்றம் என்ன செய்ய வேண்டு மென்று எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.

இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வாதாரம்

இதற்கு மு.க.ஸ்டாலின் அவர்கள், ``இலங்கையில் நடைபெற்ற போரினால் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க வேண்டும், நிம்மதியான வாழ்க்கை அமைய மீண்டும் அவர்களின் சொந்த இடங் களில் குடிய மர்த்தப்பட வேண்டும், கவுரவமான வாழ்க்கை அமைய வேண்டுமென்ற `டெசோ மாநாட்டின் தீர்மானத்தை நடை முறைப்படுத்த வேண்டும். இலங்கையில் நடைபெற்ற போரினால் 90 ஆயிரம் பெண்கள் விதவைகளாக ஆக்கப்பட் டுள்ளார்கள். அவர்கள் மேலும் துன்பத்தை அனுப வித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை இலங்கை ராணுவம் தவறான முறை யில் நடத்துகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

அய்.நா. துணைப் பொதுச் செய லாளர் யான் லியாசன் அவர்கள், ``நீங்கள் அளித்துள்ள இந்தத் தகவல் மிக மிக முக்கியமானது. இந்தப் பிரச்சி னையை அய்.நா. மன்றம் எப்படி தீர்வு காண வேண்டும் என்பது குறித்து எங்கள் (அய்.நா. மன்றம்) பொதுச் செயலா ளரின் கவனத் திற்கு எடுத்துச் சென்று தீர்வு காண்போம் என்றார்.

தமிழ் ஓவியா said...

வாக்கெடுப்பு

இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் அவர்கள், ``இலங்கைப் போரினால் 1 லட்சத்து 25 ஆயிரம் தமிழர் கள் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக் கின்றனர். அவர்கள் விரும்பியபடி குடியுரிமை பெற்றுத் தர வேண்டும். அனாதைகளாக வாழ்ந்து கொண்டி ருக்கின்ற தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இலங்கை யில் தமிழர் பகுதிகளில் உள்ள அந்நாட்டு ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும். இலங்கைத் தமிழர்கள், அவர்கள் விரும்பிய அரசியல் தீர்வு ஏற்பட - அவர்கள் விருப்பப்படி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றார்.

அப்போது அய்.நா. துணைப் பொதுச் செயலாளர் யான் லியாசன், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சி கள் இலங்கைத் தமிழர்கள் பிரச்சி னையில் எந்த நிலையில் இருக்கிறார் கள் என்றார். ``இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளும் இலங்கைப் பிரச்சினை யில் அங்குள்ள தமிழர்களின் மனித உரிமை காக்கப்பட வேண்டும் என்ப தில் உறுதியாக இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் அய்.நா. மன்றம்தான் சரியான தீர்வை ஏற் படுத்த முடியும் என்று நம்புகிறார் கள், மனித உரிமை மீறல் என்பது இலங்கையில் நடை பெற்ற பிரச்சினை என்று கருதாமல் உலக நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச் சினை என்று எடுத்துக் கொண்டு அய்.நா. மன்றம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று தெரிவித்தார் மு.க. ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரித் தானிய தமிழர் பேரவை சார்பில் லண்டனில் நடைபெறும் உலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்க உள்ள தாக தெரிவித்தார். அதற்கு அய்.நா. துணைப் பொதுச் செயலாளர் யான் லியாசன் அவர்கள் வாழ்த்துக் கூறினார்.

28 நிமிடங்கள்

இந்தச் சந்திப்பின்போது அய்.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் பான் கி மூன் அவர்களின் ஆலோசகர் விஜய நம்பியார் உடனிருந்தார். இந்தச் சந்திப்பு பகல் 11.15 மணி முதல் 11.43 மணி வரை 28 நிமிடங்கள் நடைபெற்றது.

தமிழ் ஓவியா said...


ஜெனிவாவில் அய்.நா. மாநாடு:


இலங்கையை நோக்கி இந்தியாவும் கேள்விக் கணைகள், அமெரிக்கா, கனடா, ஜெர்மனியும் தாக்குதல்

ஜெனிவா, நவ.2- ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் கூட் டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகள் கேள்விக் கணைகளை ஏவின.

இந்தியத் தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்து: இலங்கை வடக்கு மாகாணத்தில் விரைந்து தேர்தல் நடத்த வேண்டும். போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி நம்ப தகுந்த விசாரணை நடத் தப்பட வேண்டும். இறு திப் போரில் அப்பாவி பொதுமக்கள் கொல் லப்பட்டது பற்றியும் உரிய விசாரணை நடத் தப்பட வேண்டும். தமிழர் பிரச்சனைக்கு விரைவான அரசியல் தீர்வு அவசியம்.

தமிழர் பகுதிகளில் தனியார் நிலத்தை ராணு வம் திரும்ப ஒப்படைக் கவும், ராணுவ உயர் பாதுகாப்பு வளையங் களின் எண்ணிக்கை யைக் குறைக்கவும் இந் தியத் தரப்பு வலியுறுத் தியது.

இந்திய- இலங்கை ஒப்பந்தம் மூலமாக இலங்கையின் அரசியல் சட்டத்தில் மேற்கொள் ளப்பட்ட 13-வது அரசி யல் திருத்தத்தை நடை முறைப்படுத்தி தமிழ ருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும், பொதுமக்களின் மீள் குடியேற்றம், முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு ஆகியவை குறித்து கவலை தெரி வித்த இந்தியா, அடுத்த ஆண்டிலாவது தமிழர் கள் வாழும் வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என் றும் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அமெரிக்காவின் கருத்து

இலங்கையில் தற்போது தலைமை நீதி பதியை நீக்குவதற்கான நடவடிக்கையை அந் நாட்டு அரசு மேற் கொண்டிருப்பது நீதித் துறையில் அரசின் தலை யீடாகும். இலங்கையில் மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்புப் பணிகள் பெரும் கவலை ஏற்படுத் துகிறது.

இலங்கை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

தமிழர் பகுதிகளில் ராணுவத்தைக் குறைத் தல், தேசிய இனப் பிரச்சனைக்கு அதிகாரங் களைப் பகிர்ந்தளித்தல், அங்கீகரிக்கப்படாத ராணுவக் குழுக்களின் ஆயுதங்களைப் பறி முதல் செய்தல் மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்யவும் அமெ ரிக்கா வலியுறுத்தியது.

கனடாவின் கருத்து

இலங்கையின் வடக் குப் பகுதியில் உடனடி யாக தேர்தல் நடத்தப் பட வேண்டும். மனித உரிமைகளைக் காக்க உரிய நடவடிக்கைகள் அவசியம்., ஜெர்மன் தரப்பில், இலங்கையின் தலைமை நீதிபதியை நீக்குவதற் கான அரசின் நடவ டிக்கை கைவிடப்பட வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டது.

இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மன் தரப்பில் கருத்துகளைத் தெரிவித்த போது இலங்கை தரப்பில் பதில் தர முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டதால் அனல் பறந்தது என்றே சொல்லலாம்.

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்

சங்கரமடம்

செய்தி: பிரச்சினை ஏற்படும் மடங் களைக் கைப்பற்றி சட்ட திருத்தம் கொண்டு வரலாம்.

- சென்னை உயர்நீதிமன்றம்

சிந்தனை: அப்படியா னால் கொலைக் குற்றத் தில் சிக்கியுள்ள சங்கர மடம்தான் முதலில் கவ னத்தில் கொள்ளப்பட வேண்டும்.

தமிழ் ஓவியா said...


ஆச்சரியம் - ஆனால் உண்மை தினமலரிலும் - இப்படி!


ஜாதிகள் உள்ளதடி பாப்பா!

மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: 2012லும், பிராமணாள், சூத்திராள் என்ற பேதம் தேவை தானா?' கேட்டிருப்பது, திராவிட கழக தலைவர் கி.வீரமணி. ஸ்ரீரங்கத்திலுள்ள, கிருஷ்ணய்யர் உணவு விடுதி'யின் பெயர் பலகையில் சேர்க்கப்பட்டிருக்கும், பிராமணாள்' என்ற முன்னொட்டு மூலம், வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு, அந்த உணவு விடுதி உரிமையாளர், ஸ்ரீகிருஷ்ணன், அவல் சப்ளை செய்து உள்ளார்.

பார்ப்பானை, அய்யர் என்ற காலமும் போச்சே' என்று, பாரதி, சென்ற நூற்றாண்டில், சொல்லியிருப்பினும், இன்றும், அய்யர்' என்ற சொல், பிராமணர்களைத்தானே குறிக்கிறது. பின், எதற்காக, அய்யர் என்பதோடு, பிராமணாள் என்ற சொல்லையும், ஏன் பயன்படுத்த வேண்டும்?

அதற்கான அவசியம் தான் என்ன? அய்யர் என்ற சொல், நாயர், தேவர், செட்டியார், முதலியார் என்பது போல, ஒரு ஜாதியின் குறியீடு.பிராமணாள் என்பது, வர்ணத்தின் குறியீடு. ஏற்கனவே, தமிழகம், கறுப்பு, மஞ்சள், பச்சை என, பல வர்ணங்களிலும், மின்வெட்டு, தண்ணீர் தட்டுப்பாடு என, பல பிரச்னைகளிலும், சிக்கி, சீர்குலைந்து நிற்கையில், இந்தப் புதுப் பிரச்னை தேவை தானா?சட்டப்படி, ஒரு பெயரை, தன் அமைப்புக்கு வைக்கும் உரிமை, தனிமனிதனுக்கு உண்டென்றாலும், சமூக நலன் கருதி, எதிர் வரும் சங்கடங்களைக் கருதி, இதுபோன்றவற்றை தவிர்க்கலாமே.ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது.

எத்தனை ஈ.வெ.ரா.,க்கள் வந்தாலும், மூடநம்பிக்கை ஒழியப் போவதுமில்லை; எத்தனை பாரதி வந்தாலும், ஜாதிகள் தொலையப் போவதுமில்லை. முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று, அன்று, சங்கங்கள், மொழி வளர்ச்சிக்கு வித்திட்டன. இன்றோ, ஜாதிச் சண்டையை, ஊதி ஊதி பெரிதாக்குகின்றன சங்கங்கள். ஜாதிகள் இருக்குதடி பாப்பா!

இது உங்கள் இடம் பகுதியில் (தினமலர் 1.11.2012 - பக்கம் 8)

தமிழ் ஓவியா said...


கோயில்களில் தமிழ் அர்ச்சனை மொழிகோயில்களில் தமிழ்; காந்திஜி கூறியது என்ன? என்ற தலைப்பில் 20.10.2012 தினமணி இதழில் ஒரு வடமொழி ஆதரவாளர் கட்டுரை ஒன்று எழுதி உள்ளார். அதில் கோயில் வழிபாடுகளில் தமிழ் மட்டும் தான் வேண்டும் என்று ஊடுருவ சிலர் தற்போது முனைந்துள்ளனர் என்று குறிப்பிடுகிறார்.

கோயில் பூசைகள், குடமுழுக்கு, வாழ்வியல் சடங்குகள் அனைத்தையும் தமிழ் மயமாக்கும் முயற்சியில் இப்போது ஆதிக்கத் தமிழ்ப் பெருந்தகைகள் தமிழ் வழிபாட்டு வெற்றி விழா என்ற பெயரில் இறங்கியுள்ளனர் என்று ஆத்திகர்களையே கிண்டல் செய் கிறார்!

கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக வேண் டும் என்று தந்தைபெரியார் தன் வாழ்நாளிலேயே கோரிக்கை எழுப்பி அதற்காகப் போராடவும் துணிந்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று பெரியார் விரும்பினார் என்றால் அவர்களுக்கு வடமொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல.

நம் தாய் மொழியாம் தமிழில் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் தமிழில் வழிபாடு நடத்தவேண்டும் என்று எண்ணித்தான் தி.மு.க. அரசு பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்ற சட்டம் கொண்டு வந்தது.

டெல்லி உச்சநீதிமன்றமும் சட்டம் செல்லுபடி யாகும் என்று தனது தீர்ப்பிலே கூறப்பட்டிருந்த போதிலும் சட்டத்தின்படி காரியங்கள் நடைமுறைக்கு வரமுடியாத அளவுக்கு முடக்கப்பட்டு விட்டன. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுதலையில் அறுவை சிகிச்சை வெற்றி - ஆனால் நோயாளி மரணம் என்று அருமையான தலையங்கம் தீட்டியிருந் தார். (விடுதலை நாள்: 16.10.2012).

தந்தை பெரியாரின் தன்மானத் தொண்டர்கள் இலட்சோப இலட்சம் பேர் கோயில்களில் தமிழ்மொழி வழி பாட்டையே விரும்புகின்றனர்.

கட்டுரை ஆசிரியர் நவஜீவன் இதழில் 28.3.1936இல் காந்தியார் அனைத்து இந்து சமயச் சடங்குகளிலும் சமஸ்கிருதம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது அபிப்பிராயம் என்று எழுதி இருந்ததை எடுத்துக்காட்டு கிறார்.

காந்தியார் கூறியது அனைத் தையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. பகவத் கீதையை தனது வாழ்க்கை வழிகாட்டி யாகக் கொண்ட காந்தியார் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நால்வர்ண தர்மத்தை ஆதரித்தார்! இதைப் பண்டித நேரு தீவிரமாக எதிர்த் தார்.

இராமாயணம், மகாபாரதம் இரண் டும் கற்பனைக் கதைகள் என்று கூறியவர் பண்டித நேரு, பகவத் கீதையை அண் ணல் அம்பேத்கர் வெறுத்து ஒதுக்கினார்.

சர் சி.பி. இராமசாமி அய்யர் குழு (1960-62) அறிக்கை பின் வருமாறு கூறுகிறது. அர்ச்சகர்களும், பூசாரி களும் எழுத்து வாசனை அற்றவர்கள் அல்லது அரைகுறை படிப்பே உள்ளவர் கள். இவர்களுக்கு தாங்கள் சொல்லு வதன் பொருளோ, கருத்தோ கொஞ்சமும் தெரியாது.

இதனால் தெய்வ அருள் வேண்டிக் கோயிலுக்கு வரும் சேவார்த் திகளுக்கு பக்தி உணர்வையும், தெய்வ உணர்வையும் ஊட்ட முடிவதில்லை என்பது தெளிவு (விடுதலை நாள் : 22.01.2006).

சமஸ்கிருத மொழி தமிழ்நாட்டில் சமயத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருவதை தந்தை பெரியார் தீவிரமாக கண்டித்தார். சமஸ்கிருதத்தினால் தமிழர்களும், தமிழ்நாடும் இன்று என்ன நிலைமைக் குத் தாழ்ந்து தொல்லையும், மடமையும், இழிவும் அனுபவிக்கிறோம் என்பதைச் சிந்திக்க வேண்டும் (விடுதலை 25.07.2011)

பிராந்திய மொழியில் வழிபாடு ஓதப்பட்டால், ஆயிரம் ஆயிரம் ஆண்டு களாகப் பயபக்தியுடன் ஓதப்பட்டு, தூய்மை மெருகேறிய சமஸ்கிருத மொழி சுலோகங்களின் புனிதத் தன்மை குறைந்துவிடும் என்ற காந்தியாரின் கூற்று பெரியாரின் தொண்டர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

தமிழ் மொழியைத் தமிழ் நாட்டுக் கோயில்களில் வழிபாட்டு மொழியாக்க தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் பாடுபட வேண்டும். இதுவே நாம் பெரியாரின் முக்கால் நூற்றாண்டு பொதுத் தொண்டிற்கு செய்யும் நன்றிக் கடனாகும்.

- செய்யாறு இர. செங்கல்வராயன்

தமிழ் ஓவியா said...


அஞ்சல்துறையில் தேவை சீர்திருத்தம்!


இந்தியாவில் ஒரு கால கட்டத்தில் இரயில்வே துறைக்கு அடுத்தப்படியாக பெரிதும் புகழப்பட்டது - பேசப்பட்டது - பயன்பட்டது அஞ்சல்துறைதான். அஞ்சல் துறையில் பணியாற்றுவது என்பது பெருமைக்கு உரியதாகவும் கருதப்பட்டது.

மக்களுக்கு உண்மையான சேவகனாகவும் விளங்கியதுண்டு. கூடுதல் அஞ்சல் தலை ஒட்டினால் ஞாயிற்றுக்கிழமைகூட தபால்கள் கிடைக்கும்.

அஞ்சல்துறை அறிமுகப்படுத்திய வாழ்த்து மடல்கள் மக்களிடம் புழக்கத்தில் இருந்தது.

அந்த அஞ்சல் துறை அஞ்சுகின்ற துறையாக மாறியது ஏன்? உடல் நலம் சரியில்லை என்று கடிதம் போட்டால் அது அவர்களின் மரணத்துக்குப் பிறகே உரியவர்களுக்குக் கிடைக்கும் அவலம்.

சந்தாதாரர்களுக்கு ஏடுகளை அஞ்சல் மூலம் அனுப்பும் எந்த பத்திரிகை அலுவலகமும் சந்தாதாரர்களின் அதிருப்திக்கு ஆளாகும் நிலை - காரணம் அஞ்சல் துறையின் ஆமை வேகப் பணிகள்.

முதல் நாள் தபால் பெட்டியில் போட்டால் மறுநாள் கிடைக்கும் என்ற காலம் மலையேறிப் போய்விட்டது.

கேட்டால் என்ன காரணம் சொல்லப்படுகிறது? அஞ்சல் துறையில் புதிதாக நியமனங்கள் செய்யப்படுவதில்லை. வேலைப்பளு அதிகம். இந்தக் காரணமே அஞ்சல்துறை ஆமை வேகத்தில் நகர்வதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

பணி செய்வதற்கு நாட்டில் ஆள் பஞ்சமா? கோடிக்கணக்கான இருபால் இளைஞர்கள் பட்டங்கள் பெற்று விட்டு, வேலை வாய்ப்புக் கிடைக்காமல் பரிதவித்துக் கிடக்கின்றனரே! தீவிரவாத அமைப்புகளில் போய் சேர்கின்றனரே!

படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுப்பது ஓர் அரசின் அடிப்படைக் கடமையல்லவா? இரயிலில் ஆர்.எம்.எஸ். சார்டிங் என்பதெல்லாம் போயே போச்சே!

இப்பொழுது அந்தத் துறையில் எஞ்சி இருக்கும் அம்சம் என்பது சிறு சேமிப்பு ஒன்றுதான்.

இந்தத் திட்டம் அதிகப் பயன் அளிக்கக் கூடியதாக உள்ளது. மாத வருமான வைப்புக் கணக்கு, பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் உள்ளிட்டவை அஞ்சல் துறையின் சிறப்பு அம்சம் கொண்டவை என்பதில் அய்யமில்லை.

இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரம் அஞ்சல் நிலையங்கள் இயங்கு கின்றன. 89 விழுக்காடு கிராமப் பகுதிகளிலும் 11 விழுக்காடு நகரப் புறங்களிலும் செயல்படுகின்றன.

எளிதாகப் பொது மக்கள் அணுகுவதற்கு இவை பெரிதும் பயன்படுகின்றன. சேமிப்புத் துறையில் ஏடிஎம் சேவையை அறிமுகப்படுத்த உள்ளனர்.

வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்தால் எந்த வூரிலும் பணம் எடுக்கும் வசதியிருக்கிறது. அஞ்சல் துறையைப் பொறுத்தவரை எந்த அலுவலகத்தில் கணக்கு இருக்கிறதோ அந்த நிலையத்தில்தான் பணத்தைப் பெற முடியும். ஏடிஎம் முறை கொண்டுவரப்பட்டால் எந்த ஊரிலும் தேவைப்படும் பொழுது பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

இது வரவேற்கத்தக்கதாகும். ஓய்வு பெற்றவர் களுக்கும் மூத்த குடி மக்களுக்கும் கூடுதல் வட்டி அஞ்சல் துறையில் அளிக்கப்படுகிறது.

எடிஎம் வசதி அறிமுகப்படுத்தினால், சேமிப்பு கணக்கைப் பொறுத்தவரை அஞ்சலகங்களில் அதிக எண்ணிக் கையில் கணக்குகள் திறக்கப்பட வாய்ப்புண்டு.

அத்தோடு, தபால்களை உடனுக்குடன் மக் களுக்கு வழங்கும் அஞ்சல் பணியில் புதிய சீர் திருத்தங்கள் தான் மிக மிக முக்கியம். இத்துறை இதில் சரிவரப் பணியாற்றாத குறைபாட்டால் தனியார் கொரியர் அமைப்புகள் கொள்ளைப் பணம் ஈட்டி வருகின்றன.

சாதாரணமாக ஓர் உறை ரூ.25 என்கிற அளவுக்கு வாங்குகின்றனர். முதல் நாள் அனுப்பும் தபால் மறுநாள் உரியவர்களுக்குக் கிடைத்து விடுகிறது என்கிற உத்திரவாதம் இருப்பதால், பொது மக்கள் அதிகப் பணம் செலவழிப்பது பற்றி யோசிப்பதில்லை.

அஞ்சல் துறையிலும் கூட கட்டணங்களைச் சற்று உயர்த்தி, இன்றைக்குத் தனியார் கொரியர்கள் பணியாற்றும் வேகத்தோடு செயல்பட்டால் இலாபம் கொழிக்கும் துறையாகவும், மக்களுக்கும் - இலாபகரமானதாகவும் விளங்குமே.

மத்திய அரசு இதுபற்றிச் சிந்திக்குமா? எங்கே பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...

நவம்பர் 4இல் சிறீரங்கம் திருவானைக்காவலில் தமிழர் தலைவர் பேசுகிறார்!


காவல்துறை அனுமதி மறுப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது

இனஉணர்வாளர்களும், கருஞ்சட்டை வீரர்களும் திரளுகின்றனர்!


- நமது தனிச் செய்தியாளர்

மதுரை நவ.1- சிறீரெங்கத்தில் பிராமணாள் உணவு விடுதி விளம் பரத்தை எதிர்த்து திராவிடர் கழகம் நடத்தவிருந்த பொதுக் கூட்டத்திற்குக் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் உயர்நீதிமன்றம் (மதுரை) காவல்துறையின் அனுமதி மறுப்பை ரத்து செய்து நவம்பர் 4ஆம் தேதி திராவிடர் கழகம் பொதுக் கூட்டத்தை நடத்திட ஆணை பிறப்பித்தது.

திருச்சி - சிறீரெங்கத்தில் கிருஷ் ணய்யர் டிபன் சென்டரின் விளம்பரப் பலகையில் திடீரென்று பிராமணாள் என்ற பெயர் முளைத்தது.

1957இல் - தந்தை பெரியார் அறிவிப்பு

தமிழ்நாட்டில் உணவு விடுதிகளில் பிராமணாள் என்று விளம்பரப் பலகைகளில் இடம் பெற்று இருந்ததை எதிர்த்து அதனை அழிக்கும் போராட்டம் 1957ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் அவர்களால் அறிவிக்கப்பட்டு, திராவிடர் கழகத் தோழர்கள் அதற்கான போராட் டத்தில் குதித்த நிலையில் பிராமணாள் என்பது முற்றிலும் நீக்கப்பட்டு விட்டது.

அதற்குப்பின் அவ்வப்போது சில இடங்களில் உணவு விடுதிகளில் பிரா மணாள் தலை நீட்டியபோதெல்லாம் திராவிடர் கழகம் தலையிட்ட போது சம்பந்தப்பட்ட உணவு விடுதிக்காரர்கள் பிராமணாள் வார்த்தையை நீக்கி விட்டனர்.

1978இல் நடந்தது என்ன?

1978இல் மீண்டும் சில இடங்களில் பிராமணாள் தலைகாட்டியபோது திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் எழுதிய கடிதத்திற்கு தமிழ்நாடு உணவு விடுதிகள் சங்கத்தின் தலைவர் திரு எம்.பி. புருசோத்தமன் அவர்கள்,

உணவு விடுதிகளில் இடம் பெற்றுள்ள பிராமணாள் என்ற பெயர் நீக்கப்பட்டு விடும்; அதுபற்றி சுற்றறிக்கை எல்லா உணவு விடுதி உரிமையாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது; போராட்டம் தேவையில்லை என்று கூறி இந்தப் பிரச் சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

திடீரென்று பிராமணாள்!

இப்பொழுது சிறீரங்கத்தில் திரு. கிருஷ்ணய்யர் என்பவர் நடத்தி வரும் உணவு விடுதியில் திடீரென்று பிரா மணாள் என்று எழுதப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக நடந்து வந்த ஓர் உணவு விடுதியில் திடீரென்று பிரா மணாள் முளைப்பது ஏன்? இது வருணாசிரம ரீதியாக பார்ப்பனர் அல்லாதாரை சூத்திரர்கள் என்று இழிவுபடுத்துவதாகும். சூத்திரர்கள் என்றால் இந்துமதத்தின் மனுதர்ம சாஸ்திரப்படி - ஏழு வகைப்படுவர் - அதில் ஒன்று விபசாரி மகன் என்பதாகும் (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415).

இந்த இழிவைச் சுட்டிக்காட்டி பிராமணாள் பெயரை நீக்கி விடுமாறு திருச்சி மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் நேரில் சென்று வேண்டுகோள் விடுத்த போது முரட்டுத்தனமாக நீக்கவே முடி யாது - உங்களால் ஆனதைப் பார்த்துக் கொள்ளுங்கள்! என்று கூறிவிட்டார்.

திராவிடர் கழகத் தலைவரின் அறிக்கை

இந்தநிலையில் இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுதலை வாயிலாக (19.10.2012) அறிக்கை ஒன்றையும் வெளி யிட்டார்.

சிறீரெங்கம் முதல் அமைச்சரின் சட்டப் பேரவைத் தொகுதி என்பதாலும் - முதல் அமைச்சரின் பெயரை இந்தப் பிரச் சினையில் பயன்படுத்துவதாலும், முதல் அமைச்சர் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு வருணாசிரமப் பெயரான பிராமணாளை நீக்குவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று அவ்வறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

பொதுக் கூட்டத்திற்குக் காவல்துறை மறுப்பு!

ஆனால் அதற்கான செயல் இல்லாத நிலையில், திராவிடர் கழகத்தின் நிலைப்பாட்டை பொது மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் 23.10.2012 அன்று சிறீரங்கத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் விளக்கப் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றுவதாக இருந் தது. இதற்கான அனுமதி சீறிரங்கம் காவல் துறையினரால் மறுக்கப்பட்டது.

அடுத்து 28.10.2012 அன்று பொதுக் கூட்டம் நடத்திட விண்ணப்பிக்கப்பட்டது. அதற்கும் காவல்துறையின் அனுமதி கிடைக்கவில்லை. மீண்டும் நவம்பர் 4ஆம் தேதி சிறீரெங்கத்தில் கூட்டம் நடத்திட முறைப்படி திராவிடர் கழகத்தின் சார்பில் காவல்துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், திராவிடர் கழகத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் (மதுரை) திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அவர்களால் வழக்குத் தொடுக்கப்பட்டது. மூத்த வழக்கறிஞர் த. வீரசேகரன் மற்றும் என். இளங்கோ மனுதாரர் சார்பில் வாதிட்டனர்.

நீ

தமிழ் ஓவியா said...

நீதிபதி தீர்ப்பு

வழக்கினை விசாரித்த மாண்பமை நீதிபதி ஆர். சுதாகர் அவர்கள் நவம்பர் 4ஆம் தேதி சிறீரங்கத்தைச் சேர்ந்த திருவானைக்காவலில் திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தை நடத்திட அனுமதி அளித்து ஆணை பிறப்பித்தார். (தீர்ப்பின் சுருக்கம் 2ஆம் பக்கம் காண்க).

பார்ப்பனர்கள் உண்ணாவிரதமாம்

தொடர்ந்து பிராமண சமூகத்தை இழிவுபடுத்தி பேசி வருவதோடு பிராமண சமூகத்தவரின் வியாபார நிறுவனங் களுக்கு தொல்லை கொடுத்து வரும் திராவிடர் கழகத்தைத் தடை செய்யக் கோரி சிறீரெங்கத்தில் வரும் 4ஆம் தேதி பார்ப்பனர் சங்கத்தின் சார்பில் உண்ணா விரதம் என்று பார்ப்பன சங்கத்தின் சார்பில் துண்டறிக்கை வெளியிட் டுள்ளனர்.

நவம்பர் 4ஆம் தேதி மாபெரும் பொதுக் கூட்டம்

இந்தச் சூழ்நிலையில் பொது மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்து இருக்கக் கூடிய திராவிடர் கழகப் பொதுக் கூட்டம் நவம்பர் 4ஆம் தேதி மாலை சிறீரங் கத்தைச் சேர்ந்த திருவானைக்காவலில் எழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எழுச்சியுரை - கருத்துரை - மனிதநேய உரை ஆற்றிட உள்ளார்.

திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் எம். சேகர் தலைமையில் நடைபெறும் அப்பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத்துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் மற்றும் கழகப் பொறுப் பாளர்கள் உரையாற்றிட உள்ளனர்.

பல்லாயிரக்கணக்கில் கழகக் குடும்பத்தினரும் பொது மக்களும் பங்கேற் பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் திராவிடர் கழகத்திற்கே உரிய கட்டுப்பாட்டுடனும், பண்பாட்டுடனும் பொதுக் கூட்டம் நடைபெறும்1-11-2012

தமிழ் ஓவியா said...

தினமலர்

யாரைப் பற்றிப் பேசினாலும், எழுதினாலும் தினமலருக்கு அவ்வளவு கோபம் வராது; ஆனால் பிஜேபியைப் பற்றி ஏதாவது சொல்லி விட்டால் போதும்; அக்கணமே மூக்கைப் பொத்துக் கொண்டு சுருக்கென்று கோபம் வெடித்துக் கிளம்பி விடும்.

பி.ஜே.பி. ஒன்றும் ஊழலுக்கு எதிரான கட்சியல்ல; எங்களை எதிர்ப்பதற்கு ஊழலைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா சொல்லி விட்டாராம். விட்டேனா பார் என்று வில்லெடுத்துப் புறப்பட்டு விட்டது வேதியமலர்.

காங்கிரசும், ஊழலும் பிரிக்க முடியாத ஒட்டிப் பிறந்த இரட்டை யர்களாக ஆகி விட்டதால் உங்களை எதிர்க்கிறதும், ஊழலை எதிர்க் கிறதும் ஒண்ணுதான்!னு பா.ஜ.க. நினைச்சிருக்கலாம் என்கிறது தினமலர்.

அதுசரி, பி.ஜே.பி. ஒன்றும் ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சியில் லேன்னு சோனியா சொல்லியிருக் கிறாரே - அதற்கு ஏன் மறுப்புக் கூற முடியவில்லை தினமலரால்!

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்? பி.ஜே.பி.யை ஊழல் குட்டையிலிருந்து கரையேற்ற முடியாதே!

எடியூரப்பா இருக்கட்டும்; பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர் நிதினே நிலை குலைந்து போய் விட்டாரே, ஊழலில் சிக்கிய பி.ஜே.பி. தலைவர் குஜராத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரக்கூடாது என்று தடை உத்தரவு போடப்பட்டுள்ளதே.

ஆற்றுமணல் அள்ளுவதில் முறை கேடாக நடந்து கொண்டதாக டவுட் தனபாலே சிக்கியிருக்கிறதே - இந்த லட்சணத்தில் அடுத்தவர்கள் மீது ஊழல் புகாரரா?

தமிழ் ஓவியா said...

இல்லை... இல்லை...

இந்த ஆட்சியில் அடிக்கடி உணரக் கூடிய ஒன்று உண்டு என்றால், அது இல்லை இல்லை என்கிற பாடம்தான்.. மாமல்லபுரம் சதுரங்கப்பட்டினத்தில் நேற்று காலை முதல் மின்சாரம் கிடையாதாம். வேறு வழியில்லாமல் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கேட்டால் முதல்வர் சொல்கிறார். மின்சாரத்தைப் பற்றிக் கவலைப் படுகிறவர்களைவிட லட்சம் மடங்கு கூடுதலாக முதல் அமைச்சர் கவலைப்படுகிறாராம். பொது மக்கள் கவலைப்படலாம்; ஆட்சியில் உள்ள வர்களும் அதேபோல சொல்லி விட் டால் போதுமா? கவலையோடு காரியத்தைச் செய்து காட்ட வேண் டாமா?

தமிழ் ஓவியா said...

பேனா இல்லை!

புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக -தேவை யான நிவாரணப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை - மற்றும் வழிகாட்டும் கருத்துக்களைக் கூற வந்த திருவள் ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நடைமுறைக் கண்ணோட்டத் தோடு சிலவற்றைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

பணிகளைச் செய்யாமல் இருப் பதற்குச் சாக்குப் போக்குகள் சொல்லக் கூடாது; பேனா இல்லை, பேப்பர் இல்லை என்றெல்லாம் கதையளக்கக் கூடாது என்று கூறிய ஆட்சியர், எந்த நேரத்திலும் கைப் பேசியை அணைத்து வைக்கவும் கூடாது என்றும் உத்தர விட்டுள் ளார்.

பரவாயில்லை; அடி மட்டத்தி லிருந்து பணியாற்றி வந்திருப்பாரோ - அரசு அதிகாரிகளை இந்த அளவுக்குப் புரிந்து வைத்துள்ளாரே!

தமிழ் ஓவியா said...

மம்...தா!


மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பேனர்ஜி அதிரடி அரசியல்காரர் என்று பெயரெடுத் தவர். அது எப்படியோ போகட்டும்.

கொல்கத்தாவில் காளி துர்கா பூஜை விசேடம்! அரசு ஊழியர் களுக்குப் பண்டிகைப் பணம்கூட இந்தக் காளி பூஜை விழாவுக்குத் தான். இதில் இடதுசாரிகளும் விதிவிலக்கல்ல. 6 நாட்கள் விடுமுறையை நான்கு நாட்களாகக் குறைத்ததுதான் முதல் அமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா செய்த ஒரு நல்ல காரியம்.
விடுவாரா மம்தா? இடது சாரி என்று நினைத்தாலே நெருப்பில் விழுந்ததுபோல துடி துடிப்பாரே!

அவர்கள் என்ன நான்கு நாட்களாகக் குறைப்பது! நான் உத்தரவிடுகிறேன். அரசு ஊழியர்களே துர்கா பூஜைக்காக உங்களுக்கு 10 நாட்கள் அரசு விடுமுறை என்று வரம் தந்துள்ளார்.

10 நாட்கள் அரசு விடு முறை என்றால், அம்மாநிலத்தில் அரசு என்ற ஒன்றே இல்லை - அரசு ஊழியர்களுக்கு அல்ல -அரசுக்கே விடுமுறை (ளுரளயீநளேடி) என்று பொருளாகாதா? பொருளாதாரப் பிரச்சினையி லிருந்து சட்டம் - ஒழுங்குப் பிரச் சினை வெடித்துக் கிளம்பாதா?

இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால், அரசு ஊழியர்கள் அங்கு என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா? எங்களுக்குப் பத்து நாட்கள் விடுமுறை எல்லாம் வேண்டாம். எங்களுக்கு அளிக்கப் படாமல் நிலுவையில் உள்ள அகவிலைப் படியை கொடுத்தால் போதும் (மம்...தா!) என்று கொடி பிடிக்கின் றனர். அதனைத் திசை திருப்ப தானே இந்த வேலை என்பது அரசு ஊழியர்கள் தெரிந்து கொள் ளட்டும்.

தமிழ் ஓவியா said...

ஹெல்மட்...டு

ஹெல்மட் அணிந்தவர்களுக்குத் தான் பெட்ரோல் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேசத்தில் அரசு உத்தரவிட்டுள்ளது. சபாஷ், சரியான ஆணை. நாடு தழுவிய அளவில் இப்படி ஒரு சட்டம் வந்தால் கூட வரவேற்கத்தக்கதுதான்.

ஏதோ யாருக்காகவோ ஹெல்மட் அணிவதாக இரு சக்கர வாகனக்காரர்கள் நினைக்கிறார் களே தவிர தங்கள் உயிர் பாது காப்புக்காகத்தான் என்பதை மறந்து விடுகிறார்களே - அதுதான் பரிதாபம்.

அதுசரி, அப்படி எல்லாம் சரியாக உணர்ந்து கொள்வார்கள் என்றால் நாட்டில் சட்டம் எதற்கு? ஆட்சி முறைதான் எதற்கு?

தமிழ் ஓவியா said...


சீறிரங்கம் - பொதுக் கூட்டம்


உயர்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த ஆணையின் சுருக்கம்

சிறீரங்கத்தில் நவம்பர் 4ஆம் தேதி திராவிடர் கழகம் நடத்தவிருந்த பொதுக் கூட்டத்திற்குக் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் எம்.சேகர் தொடுத்த வழக்கின்மீது மாண்பமை நீதியரசர் திரு. ஆர். சுதாகர் பிறப்பித்த ஆணையின் சுருக்கம் வருமாறு:

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 19(1)(ய) -படி மனுதாரருக்குரிய பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், மாற்று இடத்தில் பொதுக் கூட்டம் நடத்த இசைவளிக்க காவல்துறை தயாராக உள்ளதாகக் கூறப்பட்டது.

மனுதாரரின் சார்பாக வழக்காடிய திரு. வீரசேகரன், கழகத் தலைவர் கி.வீரமணி, பாப்பா நாடு எஸ்.பி. பாஸ்கர் உட்பட சேகரைத் தவிர்த்து நான்கு பேர் கூட்டத்தில் பங்கெடுப்பதாகவும், யாரையும், தனிப்பட்ட முறையிலோ, மற்ற வழியிலோ, தாக்கிப் பேச மாட்டார்கள்; அதனால் சமூக அமைதி பாதிக்கப்பட மாட்டாது என்பதற்கும் தான் உறுதியளிப்பதாகக் கூறினார். அது பதிவு செய்யப்பட்டது. மேலும் பொதுக் கூட்டம் நடத்துவ தற்கு மூன்று இடங்களைத்தான் கூறுவதாகச் சொல்லி 1) உழவர் சந்தை, 2) சந்தனகிரி, 3) மற்றும் திருவானைக்காவல் ஆகிய இடங்களைச் சொன்னார். மேலிட உயர் அலுவலர்களுடன் ஆலோசனை செய்த பிறகு, திராவிடர் கழகத்திற்கு 4.11.2012 அன்று பொதுக்கூட்டம் நடத்த திருவானைக்கோவில் திடலைப் பயன்படுத்த அனுமதி அளித்தனர்.

தமிழ் ஓவியா said...


அய்.நா. பயண வெற்றிக்கு; அனைவரும் வாழ்த்துவோம்! கலைஞர் கடிதம்

டெசோ மாநாட்டுத் தீர்மானங்களையும், ஈழத் தமிழர்கள், அரசியல் உரிமைகள், வாழ்வுரிமைகள் குறித்த கோரிக்கை மனுக்களையும், நியூயார்க்கில் உள்ள அய்.நா. பொதுச் செயலாளர் அவர்களிடமும், ஜெனீவாவில் உள்ள அய்.நா. மனித உரிமை ஆணையத்திடமும் வழங்கிட டெசோ அமைப்பின் சார்பில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு ஆகிய இருவரும் நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றிருக் கிறார்கள். இந்த முயற்சி வெற்றி பெற தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து முர சொலியில் எழுதிய கடிதம் வருமாறு:- உடன்பிறப்பே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் தளபதி தம்பி மு.க.ஸ்டாலினும், நாடாளுமன்ற கழகக்குழுத் தலைவர் தம்பி டி.ஆர்.பாலுவும் இன்று (31-10-2012) விடியற்காலையில் அமெரிக் காவுக்கு டெசோ இயக்கத்தின் சார்பாக - திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூதுவர்களாக - புறப்பட்டுச் சென்றிருக் கிறார்கள். நேற்றிரவு இருவரும் என்னிடம் வந்து விடை பெற்றுச் சென்றார்கள். அமெரிக்க நாட்டில் அய். நா. சபையில் அவர்கள் அளித்திட இருக்கின்ற அறிக்கைகளின் நகல்களையும், சி.டி. போன்றவற்றையும் என்னிடம் காட்டியதோடு, எனக்கும் அதிலே ஒரு பிரதியை அளித்துச் சென்றார்கள். இரவு முழுவதும் திரும்பத் திரும்ப அதைத்தான் பார்த்துக் கொண்டிருந் தேன். நானும், டெசோ உறுப்பினர்களும் அமர்ந்து வரி வரியாகப் படித்து, விவாதித்து, தக்கத் திருத்தங்களைச் செய்து, மிகுந்த கவனத்தோடு தயாரிக்கப்பட்ட அறிக்கைதான் அது. 4-9-2012 அன்று செய்தியாளர் களுக்கு நான் அளித்த பேட்டியில், டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை எல்லாம் நாங்கள் டெசோ மூலமாக ஐ.நா. மன்றத்திற்கு எடுத்துச் செல்லவிருக்கிறோம், இன்னும் ஓரிரு வார காலத்தில் அய்.நா. மன்றத்தில் அந்தத் தீர்மானங்களை மு.க.ஸ்டாலினும், டி.ஆர். பாலுவும் சென்று கொடுப்பதாக ஏற்பாடுகள் நடை பெறுகின்றன. அதற்கான தொடர்பும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் எந்தத் தேதி யில் இருவரும் அய்.நா. மன்றத்திற்கு அந்தத் தீர்மானங் களைக் கொண்டு சேர்க்கவிருக்கிறார்கள் என்பதை வெளியிடுகிறேன் என்று சொல்லியிருந்தேன்.


தமிழ் ஓவியா said...

அதன்படியேதான் இருவரும் இன்று அய்.நா. மன்றத்தில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை டெசோ இயக்கத்தின் சார்பில் கொண்டு சேர்க்கப் புறப்பட்டிருக்கிறார்கள். பொருளாளர் தளபதி தம்பி மு.க.ஸ்டாலின் பற்றி நான் எதுவும் புதிதாக எழுதத் தேவை யில்லை. நெருக்கடி நிலை நேரத்தில் மு.க. ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டபோது, நான் கழகத் தலைவர் என்ற நிலையிலே அல்ல, அவருடைய தந்தை என்ற முறையில் தனியாக அமர்ந்து கலங்கினேன். அப்போது ஸ்டாலின் திருமணமாகி இரண்டாண் டுகள் மட்டுமே கடந்த நிலையில், ஸ்டாலினின் மனைவி கண்ணீர் நிறைந்த கண்களோடு மாமா என்று கதறிய போது, பதில் சொல்ல முடியாமல், ஆறுதலும் வழங் கிட வார்த்தை கிடைக்காமல் வாடித்தவித்தேன். இருந் தாலும் என் மகனும், ஜனநாயக வழியில் பொதுப்பணி ஆற்றியதற்காகச் சிறைக்குச் செல் கிறாரே என்பதை எண்ணி உள்ளுக்குள் பெரு மிதமே ஏற்பட்டது. பின்னர் ஸ்டாலின் மேயராகி, சட்டப்பேரவை உறுப்பி னராகி, கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகி, தமிழகத்தின் துணை முதலமைச்சராகி, தற்போது கழகத்தின் பொருளாளராகத் தமிழகமெங்கும் நான் செல்ல வேண்டிய நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சென்று கழகத்தினரின் வேண்டுகோள்களைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவில் நாளெல்லாம் கழகம், கழகம் என்று பம்பரம்போல் சுற்றிச் சுழன்று பாடுபடு வதைப் பார்த்து; இளம்வயதில் நாம் உழைத்ததைப் போலவே நம் மகனும் உற்சாகத்தோடு உழைப்பதை எண்ணி; மனதிற்குள் பெரும் மகிழ்ச்சி அடையும் நான்; நேற்றைய தினம் அமெரிக்க நாட்டிற்கு ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காகப் பயணம் மேற்கொள்ள என்னிடம் விடை பெற்றுக் கொண்டபோது; மிசா கைதியாக ஸ்டாலின் சிறைக்குப் புறப்பட்ட நினை வும், சிறைச்சாலையிலே அடிக்கப்பட்ட கையிலே உள்ள காயத்தை மறைத்து முழுக்கை சட்டை போட்டுக் கொண்டு என்னைச் சந்தித்த அந்த நினைவும்தான் என் மனதைச் சூழ்ந்து கொண்டி ருந்தன. ஸ்டாலின் பிறந்தபோது ஏற்பட்ட மகிழ்ச் சியைவிட - மிசா கைதி யாக சிறைக்குள் இருந்த போது ஏற்பட்ட மகிழ்ச்சி யைவிட - ஈழத் தமிழர்கள் வாழ்வில் இருள் நீங்கி ஒளி பிறந்திட வேண்டு மென்பதற்காக, அவர் பயணம் மேற்கொள்வதிலே எனக்கு தனிச் சிறப்பான மகிழ்ச்சி ஏற்பட்டது.

தம்பி டி.ஆர். பாலுவைப் பற்றியும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர் சென்னையில் ஸ்கூட்டரில் சுற்றிய காலத்திலிருந்து, கழகம், கழகம் என்று உழைத் ததை நான் அறிவேன். அவருடைய மாமனார் செங் குட்டுவன் சென்னை மாவட்டக் கழகச் செயலாளராக இருந்து பணியாற்றினார். பின்னர் தம்பி ஆர்.டி. சீத்தாபதி மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த போது அவரிடம் துணைச் செயலாளராக இருந்து, கழகப் பணிகளைக் கற்று, பின்னர் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் ஆனவர். தம்பி முர சொலி மாறனின் பேரன்பைப் பெற்றவர். அவரிடம் பாராளுமன்றப் பணிகள் பற்றி பாடம் கற்றவர். நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவராக இன்று டி.ஆர்.பாலு சிறப்பாகப் பணியாற்றுகிறார் என்றால், அதெல்லாம் மாறனிடம் பெற்ற பயிற்சிதான்! என்ன, கொஞ்சம் பிடிவாதக்காரர், கோபக்காரர். அதுவும் என் முன் கோபப்படுவதைப்போலக் காட்டிக் கொள்வார். அவரும் என்னிடம் நேற்று விடை பெற்றார்.

அண்ணா அறிவாலய வாசலில் சாலையில் காவலர்கள் சூழ்ந்து கொண்டு அவரைத் தாக்கிய காட்சியும் - என்னை அ.தி.மு.க. அரசு கைது செய்த போது, காவலர்களிடம் அவர் போராடி அடிகளைத் தாங்கிக் கொண்ட காட்சியும்தான் நேற்று எனக்குத் தெரிந்தது. அவரும் இலங்கைத் தமிழர்களின் நலன் களுக்கான என்னுடைய கோரிக்கையைத் தாங்கி அய்.நா. மன்றத்திலே அதனை வழங்குவதற்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவர்களின் இந்தப் பயணம் வெற்றிபெற என்னு டைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள் கிறேன். என்னுடைய வாழ்த்துகள் மட்டுமல்ல, ஈழத் தமிழர் களின் நலனில் அக்கறையுள்ள அத்தனை தமிழர்களும் இந்தப் பயணம் வெற்றி பெறவும், ஈழத் தமிழர் வாழ்வில் விடியல் காணவும் அனைவரும் வாழ்த்த வேண்டு மென்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் ஓவியா said...

டெசோ மாநாட்டில்...

12-8-2012 அன்று தமிழக அரசின் எதிர்ப்புக் கிடையில் டெசோ மாநாட்டினை சென்னை யிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத் திற்கிடையே மிகச் சிறப்பாக நடத்தி அதிலே முக்கிய பல தீர்மானங்களை வடித்தெடுத்தோம். அங்கே மக்கள் மத்தியிலே அந்தத் தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றுவதற்கு முன்பு உலகத் தமிழர்களின் பிரதிநிதிகளையெல்லாம் காலையிலே அழைத்து நடத்திய ஆய்வரங்கில் நன்றாக விவாதித்த பிறகுதான் தயாரித்தோம். அந்தத் தீர்மானங்களை டெசோ அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டிலே நிறைவேற்றிய தோடு இருந்து விடாமல், அந்தத் தீர்மானங்களை அய்.நா. மன்றத்தில் இந்தியா கொண்டு செல்ல வேண்டு மென்று கேட்டு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு ஒரு கடிதமும் நான் எழுதினேன்.

அந்தக் கடிதத்தில் இலங்கையிலுள்ள தமிழர் கள் கோரி வரும் அரசியல் தீர்வை, அவர்களே முடிவு செய்ய அவர்களுக்கு உரிமைகள் வழங்கும் தீர் மானத்தை அய்.நா. பொதுச்சபையிலும், மனித உரி மைகள் ஆணையத்திலும் கொண்டு வர வேண்டு மென்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டி ருந்தேன். கடிதத்தை பிரதமரிடம் கடந்த 21-8-2012 அன்று கழக நாடாளுமன்ற உறுப்பினர் கள் எல்லாம் இணைந்து நேரில் கொண்டு போய் கொடுத்திருக்கிறார்கள். அடுத்த கட்டமாக, டெசோ சார்பிலும்; கழகத்தின் சார்பிலும் நேரடி யாக அய்.நா.மன்றத்திற்கே நமது கோரிக்கையைக் கொண்டு செல்கின்றோம். அதற்காகத் தான் இன்று தம்பிகள் ஸ்டாலினும், பாலுவும் அமெரிக்கப் பயணம் புறப்பட்டிருக்கின்றார்கள்.

தமிழ் ஓவியா said...

நான் அனுப்பியிருந்த கடிதத்தைப் படித்து விட்டு பிரதமர் அவர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதி அளித்ததோடு, ஏற்கெனவே அய்க்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா நமது வேண்டுகோளை ஏற்று ஆதரித்தது என்பதையும் நினைவு கூர்ந்தார்கள். பிரதமர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் நகலை அய்க்கிய முற்போக்குக் கூட் டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அளித்தனர். இலங்கைத் தமிழர்கள் நலனில் இந்திய அரசு நமது கழக உறுப்பினர்களிடம் நேரில் உறுதி அளித்ததோடு, என்னுடைய கடிதத்திற்கு எனக்குப் பதில் எழுதிய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், இலங்கைத் தமிழர்களின் நலனுக்கும், நல்வாழ்வுக்கும் தேவையான பணிகளில் இந்திய அரசு அக்கறை காட்டி வருகிறது என்றும், ஈழத் தமிழர் களின் மறு குடி அமர்வு மற்றும் மறுவாழ்வுக்கு இந்திய அரசு மிகுந்த முன்னுரிமை வழங்கிச் செயல்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அந்தக் கடிதத்தில், அதிகாரப் பகிர்வு குறித்து ஈழத் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகளை முன் னெடுத்துச் செல்ல வேண்டிய தன் அவசியத்தையும் இலங்கை அரசுக்குத் தெரிவித்திருக்கிறோம் என்றும், எதிர்காலத்தில் ஈழத் தமிழர்கள் சம உரிமை, கௌரவம், சமநீதி மற்றும் சுயமரியாதையுடன் வாழக்கூடிய நிலையை உருவாக்கிட இலங்கை அரசுடன் இந்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார்.

டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டத்தில்

கடந்த 3-10-2012 அன்று என்னுடைய தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தமிழ் ஈழம் ஆதரவாளர் (டெசோ) அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமரின் கடிதத் திற்கு நன்றி தெரிவிக்கப்பட்ட தோடு, ஈழத் தமிழர் களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்திட அய்.நா. மன்றத்தின் தலையீட்டைக் கோரும் தீர்மானத்தை இந்திய அரசு முன் மொழிவதன் மூலம் இலங்கையில் தற்போதுள்ள நிலைமைக்கு விரைந்து முற்றுப் புள்ளி வைத்து, ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும், தங்களுடைய உரிமைகள் குறித்து விவாதித்துத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளவும் இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டு மென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், அதன் உறுப்பினர்களான கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி, விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல். திருமாவளவன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோருடன் நான் விரிவான முறையிலே விவாதித்து, தயாரிக்கப்பட்ட - ஈழத் தமிழர்கள் அரசியல் உரிமைகளையும், வாழ்வுரிமை களையும் குறித்த - எனது கோரிக்கை மனுக்களை நியூயார்க்கில் உள்ள அய்.நா. பொதுச் செயலாளர் அவர்களிடமும் - ஜெனீவாவில் உள்ள அய்.நா. மனித உரிமை ஆணை யத்திடமும் வழங்க முடிவெடுத்து; இந்தக் கோரிக்கை மனுக்களை என்னுடைய சார்பிலும், டெசோ அமைப்பின் சார்பிலும், கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலினும், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவும் நேரில் சென்று அளிப்பார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் அடிப்படை யில் இன்றையதினம் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங் கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக 1956ஆம் ஆண்டி லிருந்து தி.மு.கழகம் தொடர்ச்சி யாக மேற்கொண்ட எத்தனையோ முயற்சிகளில், இந்தப் பயணமும் ஒன்றாக வரலாற்றுப் பதி வேட்டில் இடம் பெறும். இந்தப் பயணம், பயனுள்ள பயணமாக, வெற்றிப் பயணமாக அமைந்து, இலங்கைத் தமிழர் வாழ்வில் அமைதியும், அனைத்து ஜனநாயக உரிமைகளும் கிடைக்க வேண்டுமென்று உலகத் தமிழர்கள் எல்லாம் விரும்புவதைப் போலவே நாமும் பெரிதும் விரும்பு கிறோம்.

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்தின் சார்பில் கூட்டம்

ஆனால் நமது தமிழர்களிலேயே ஒரு சிலர் நமது இனப் பகைவர்களை எதிர்க்கிறார்களோ இல்லையோ, நம்மை எதிர்ப்பதிலேதான் இன்பம் காணுகிறார்கள். இலங்கை அரசு, நமது தமிழர்கள் போரிட்டு மாண்ட இடத்திலே வெற்றிச் சின்னம் அமைத்திருப்பது குறித்து 24-10-2012 முரசொலியில் நான் கடிதம் எழுதியிருந்தேன்.

நமது தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் சார்பில் 29-10-2012 அன்று சென்னை பெரியார் திடலில் அதற்காகக் கூட்டம் ஒன்றையே நடத்தி, அதில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஈழத்தமிழர்கள் பகுதியில் போர் நினைவுச் சின்னம் என்பது சிங்கள அரசின் வெறிச் சின்னமே தவிர வெற்றிச் சின்னம் அல்ல என்று பேசியிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர், தம்பி பேராசிரியர் சுப. வீரபாண்டியன், அன்று கலைஞர் தலைமையில் டெசோ உருவாக்கப் பட்டது - போராளிகள் பக்கம் நின்று; இன்று கலைஞர் தலைமையில் டெசோ உருவாகியிருப் பது ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப் பாற்ற! ஆனால் இன்றையதினம் ஈழத் தமிழர் களுக்காக என்று சொல்லப்படும் மேடைகள், ஈழத் தமிழர்களுக்காக என்ற நிலை மாறி, கலைஞரை யும், தி.மு.க. வையும் தூற்றுவது என்கிற அளவுக்கு குறுகிவிட்டதே? என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

சிலர் என்னைத் தூற்றுகிறார்கள் என்பதற்காக நான் என்றைக்கும் வருத்தப்பட்டதில்லை.

என்னை இப்போது தூற்றுகிறவர்கள் எல்லாம் முன்பு என்னைப் பாராட்டியவர்கள்தான். நாளை மீண்டும் என்னைப் பாராட்டப் போகின்றவர்கள் தான். இன்றைய நிலையில் அந்த ஒரு சிலர் என்னைத் தாக்கிப் பேசுவதை ஏதோ சந்தர்ப்பவசத் தால், இக்கட்டால், பேசப்படுகின்ற ஒன்று என நினைத்து ஒதுக்கிட வேண்டும். போற்றுவார் போற்றட்டும்; புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும்; என் கடன் பணி செய்து கிடப்பதே என்பதை மனதிலே செதுக்கி வைத்துக் கொண்டு, சிந்தனை யைச் சிதற விடாமல், நாளும் நாளும் நமது நல்ல பணியைத் தொடருவோம்! இங்கேயுள்ள தமிழர் களை மட்டுமல்ல; இலங்கைத் தமிழர்களையும், உலகத் தமிழர்களையும் உணர்வுப் பூர்வமாகக் காப்பாற்றவும், அவர்களை முன்னேற் றவும், நம்மால் முடிந்த பணிகளை முனைப்புடன் தொடருவோம், அதற்கெனவே அய்.நா. பயணம் மேற் கொண்டுள்ள தம்பிகள் ஸ்டாலின், டி.ஆர். பாலு ஆகியோரின் இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்து களைத் தெரிவிக்கின்றோம்.

அன்புள்ள,
மு.க.
(நன்றி: முரசொலி, 1-11-2012)

தமிழ் ஓவியா said...


வடகலை - தென்கலைச் சண்டை (நமது நிருபர்)


திருச்சி, மார்ச், 18 - ஸ்ரீரங்கத்தில் புதிதான ஒருவர் வடகலை தென்கலை வம்பை விலைக்கு வாங்கியிருக்கிறார்.

நேற்று காலையில் இந்துமத பரிபாலன போர்டாரிடமிருந்து தந்தியில் ஸ்ரீரங்கம் கோவில் டிரஸ்ட்டிகளுக்கு ஒரு உத்தரவு வந்தது. அதில் வடகலை(யு-மார்க்) அர்ச்சகருக்கு எடுபடி விருது மரியாதைகளைக் கொடுக்க வேண்டுமென குறிப்புக் காணப்பட்டது.

உடனே தென்கலையைச் சேர்ந்தவர்கள் வழக்கமில்லாத வழக்கமாக டாக்டர் ராஜன் (வடகலையைச் சேர்ந்தவர் கனம் மந்திரி) உத்தரவு போடுவதைக் கண்டு கோபங்கொண்டு உடனே கோர்ட்டுக்கு ஓடினார்கள்.

திருச்சி ஜில்லா டிஸ்டிரிக்ட் முனிசீப் இன்று 18ஆம் தேதி மாலை 4 மணிவரை போர்டிலிருந்து வந்த அந்த தந்தி உத்தரவை நிறுத்தி வைத்திருப்பதாகவும், தான் இன்று காலை தீர்ப்புக் கூறுவதாகவும் கூறினார்.

அதன்பேரில் இன்று மாலை 4 மணிக்கு கனம் நீதிபதி, தென்கலையார் பெட்டிஷனை தற்காலிக இன்ஜக்ஷனை தள்ளி விட்டதாகவும், ஒரிஜினல் வழக்குத்தீர்ப்பு வரை போர்டு உத்தரவு அமல் நடக்கவும் தீர்ப்புக்கூறினார்.

இதன் காரணமாக நேற்று முதல் ஸ்ரீரங்கநாதர் கோயிலிலில்லாது வெளியில் மண்டபத்தில் இருக்கிறார்.

குடிஅரசு - பெட்டிச் - செய்தி - 20-03-1938

தமிழ் ஓவியா said...

ளபதி மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு பயணம் பயனுள்ளதுஇலங்கை அரசிடம் கண்டிப்புக் காட்டி ஈழத் தமிழர் வாழ்வுரிமை பெற்றிட

அய்.நா.வும், பன்னாடுகளும் முன்வர வேண்டும்

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கைடெசோ மாநாட்டுத் தீர்மானங் களை, அய்.நா. துணைப் பொதுச் செயலாளரிடம் தளபதி மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு ஆகியோர்அளித்து விளக்கியிருப்பது - நல்ல பயன்களை விளைவிக்கக் கூடியதாகும்.

இலங்கை அரசிடம் அய்.நா. மற்றும் பன்னாடுகளும் கண்டிப்புக் காட்டி ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை பெற ஆவன செய்ய வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஈழத் தமிழர் வாழ்வுரிமையை மீட்டெடுக்க, சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடை பெற்ற பன்னாட்டுப் பேராளர்களும் கலந்து கொண்ட டெசோ மாநாட்டின் தீர்மானங்களை, டெசோ செயற் குழுவினர் முடிவு செய்ததற்கேற்ப, அதன் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களுடைய இணைப்புக் கடிதத் துடன் 1.11.2012 அன்று, நியூயார்க்கில் அய்.நா. மாமன்றத்தின் துணைப் பொதுச் செயலாளர் திரு. யான் லியாசன் அவர்களை நேரில் அய்.நா. தலைமையகத்தில் தி.மு.க.வின் பொருளாளரும் மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவருமான மானமிகு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், தி.மு.க.வின் நாடாளு மன்றக் குழுத் தலைவரான மானமிகு டி.ஆர். பாலு அவர்களும் நேரில் சந்தித்து, அளித்து, விளக்கினார்கள்.

சுமார் 25 மணித்துளிகளுக்கு மேல் நீடித்த இந்தச் சந்திப்பின், உரையாடல்மூலம் ஈழத்தில் போர் முடிந்து சுமார் 4 ஆண்டுகள் ஆகும் நிலையிலும் இன்னமும் அத்தமிழர்களின் வாழ்வுரிமை உறுதி செய்யப்படாததோடு, இராணுவக் கண்காணிப்பில் தமிழர்கள் - வடகிழக்குப் பகுதியிலும் உள்ளார்கள்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்பும் சூழ்நிலை இல்லை; தமிழர் பகுதிகள் திட்ட மிட்டே சிங்களர் வசம் ஒப்புவிக்கப்படுகிறது. எந்தத் தொழிலையும் சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலையில் ஈழப் பகுதி வாழ் மக்கள் இன்னமும் வாழும் அவலம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்து, அய்.நா. போன்ற பொது மன்றம் மூலம்தான் இலங்கை அரசை வற்புறுத்தி அம்மக்களின் வாழ்வுரிமையை மீட்டுடெடுக்க முடியும் என்பதைக் கூறியுள்ளனர்.


தமிழ் ஓவியா said...

பொறுமையாகவும், ஆர்வத்துடனும் கவலை யுடனும் கேட்டுக் கொண்ட துணைப் பொதுச் செயலாளர் யான் லியாசன் இப்பிரச்சினையில் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் தலைவர்களும் ஒத்த கருத்துள்ளவர்களாகவே இருப்ப தற்காக மகிழ்ச்சி; பொதுச் செயலாளர் அவர்களும் இதை முறையாகத் தெரிவித்து வழிவகை காண முயலலாம் என்று கூறியுள்ளார்கள் என்பது மிகவும் நிம்மதியளிக்கக் கூடியது.

ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்டெடுப்பதற்கான விடியலுக்கான வெள்ளி முளைத்துள்ளது இதற்கான நம்பிக்கை இதன்மூலம் கிடைத்திருக்கிறது ஈழத் தமிழர் களுக்கு.

சாண்டி புயல், மழை, வெள்ளம் காரணமாக, அமெரிக்காவின் கிழக்குப் பகுதியே செயலற்று மின்சாரம்கூட இல்லாமல், போக்குவரத்துப் பாதைகள், சுரங்கப் பாதைகளில் எல்லாம் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், மூடப்பட்ட நியூயார்க் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள அய்.நா. தலைமையகம் நவம்பர் ஒன்றாம் தேதிதான் மீண்டும் செயல்படத் துவங்கிய நிலையில், தடைக்கற்களையும் தாண்டி நமது தளபதி அவர்களும், நண்பர் டி.ஆர். பாலு அவர் களும் அய்.நா. துணைப் பொதுச் செய லாளரைச் சந்திக்கக் கொடுக்கப்பட்ட வாய்ப்பு கூட மிகவும் அசாதாரணச் சூழ்நிலையில்தான்! கடமையைச் செய்ய முன்வந்த அந்த அலுவல கத்தாரும், குறிப்பாக துணைப் பொதுச் செய லாளரும் தமிழ் கூறு நல் உலகத்தின் நன்றிக் கும், பாராட்டுக்கும் உரியவர்கள் ஆவார்கள்!

நேற்று மாலை, நம்மிடம் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களும், டி.ஆர். பாலு அவர்களும் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு, நடந்தவற்றை விரிவாக விளக்கிக் கூறினார்கள்.

சென்னையில் 31ஆம் தேதி, புறப்பட்ட அவர்கள் 30 மணி நேரம் பயணம் செய்து பிறகு சந்தித்த தகவலைக் கேட்டதும் மிகவும் வியப்பாகவும், அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் இருந்தது!

டெசோ மாநாட்டின் விழுமிய பயன் துளிர்த் துக் கிளைக்கும்; ஈழத் தமிழரின் பறிக்கப்பட்ட வாழ்வுரிமை மெல்ல மெல்லத் திரும்பும் என்று நம்பிக்கை ஒளிக்கீற்று தெரிகிறது.

சுவிட்சர்லாந்து, ஜெனிவாவில் உள்ள அய்.நா. மனித உரிமை ஆணையத்திற்கும் இத்தீர்மானங்கள் முறையாக சென்றடைவதும் உறுதி.

நவம்பர் ஒன்றாம் தேதி அங்கே பல நாடுகளும் இலங்கை அரசின் மெத்தனப் போக்கு, தமிழர் விரோத நடவடிக்கைகள், மனித உரிமைகள் மீறல், தங்கள் காலடியில் போட்டு மிதித்துவரும் கொடுமைகள்பற்றி அலசப்பட்டுள்ளது; ஆம்னெஸ்டே இன்டர் நேஷனல் பிரதிநிதி இலங்கையின் ராஜபக்சே அரசு நம்பகத்தன்மை உடையதல்ல என்றே கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

இனி இந்திய அரசும் இதில்போதிய உறுதிகாட்ட வேண்டும். நம் அமைப்புகள் அத்துணையும் அதனை விடாது இந்திய அரசு காதுகளில் ஓதிக் கொண்டே இருந்து, வாக்கெடுப்பில் முன்பு செயல்பட வைத்தது போன்று செயல்பட வைக்க தவறக் கூடாது!

இன்றுள்ள சூழலில் ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமையை நியாய உணர்வும், மனிதாபி மானமும் கொண்டு பன்னாடுகளும், அய்.நா. போன்ற பொது மன்றங்களும், மனித உரிமை ஆணையங்களும், பாதுகாக்க உதவிட முடியும்.

அதற்கெல்லாம் மேலாக, தொப்புள் கொடி உறவுள்ள, தமிழ்நாட்டுத் தமிழர்களின் வாக்கு வங்கியை எதிர்பார்க்கும் இந்திய மத்திய அரசின் ஆளுங் கட்சி ஈழத் தமிழர் உரிமைப் பிரச்சினையில் உறுதி காட்டாவிட்டால், தங்களது எதிர்கால அரசியலைக் காப்பாற்றிக் கொள்ளவே முடியாது.

எனவே மனிதநேயக் கண்ணோட்டத்திலும் சரி, தேர்தல் அரசியல் கண்ணோட்டத்திலும் சரி, இலங்கை அரசிடம் கண்டிப்பு காட்டி அரசின் தீர்வுக்கு வலியுறுத்தி, வெற்றி பெற முயற்சிக்க முன்வர வேண்டும் என்பது அவசரம் அவசியம்!


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

3.11.2012 சென்னை

தமிழ் ஓவியா said...


இது என்ன நீதியோ?


சிறீரங்கத்தில் திராவிடர் கழகம் கூட்டம் நடத்த அனுமதி கேட்டால் காவல்துறை அனுமதி மறுக்கிறது. உயர்நீதிமன்றம் சென்று ஆணை பெற்று வர வேண்டி யுள்ளது. அதே நேரத்தில் பார்ப்பனர்கள் சங்கம் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினால், கூட்டம் போட்டால் திராவிடர் கழகம் பொதுக் கூட்டம் நடத்தும் அதே நாளில் (நவம்பர் 4இல்) சிறீரங்கத்தில் முக்கியமான இடத்தில் (பழைய பேருந்து நிலையம்) காவல்துறை அனுமதி வழங்குகிறது.

இது என்ன மனுநீதி? ஏனிந்த இரட்டை அளவுகோல்?

தமிழ் ஓவியா said...


தோடி ராகம் இனிமையானது மோடி ராகம் மோசமானது- ஊசி மிளகாய் -

இமாச்சலப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் அநேகமாக முடிந்த நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற குஜராத் முதல் அமைச்சர் மோடி என்கிற இந்துத்வாவின் அருமருந்தன்ன வாரிசு திருவாய் மலர்ந்துள்ள கருத்துக்கள் அடடா! எவ்வளவு அரசியல் சிந்தனைகளின் அற்புதப் பெட்டகமாகக் காட்சியளிக்கிறது!

நாடும், ஏடும் அதைப்பற்றியே ஆய்வு செய்து கொண்டுள்ள நிலை!

புதிதாக இணையமைச்சரான சசிதரூர் ரூ.50 கோடி மதிப்புள்ள ஒரு மனைவியைப் பெற்றுள்ளாராம்! என்று திருவாசகங்களை உதிர்த்துள்ளார் இவர்!
தரந்தாழ்ந்த அரசியலுக்கு எவ்வளவு சொந்தரக்காரராக இருக்கிறார் மோடி பார்த்தீர்களா?

சசிதரூர் மனைவிக்கும், இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்?

அது மட்டுமல்ல; வீட்டுப் பெண்களை விமர்சித்து அரசியல் மேடைகளில் பேசுவதை விட ஒரு அநாகரிக அரசியல் வேறு உண்டா?

இந்த லட்சணத்தில் இந்த மோடி பிரதமராக வேறு வர வேண்டுமாம்! என்னே கொடுமை!

இதற்குப் பதில் சொல்ல முனைந்த சசி தரூர், என் மனைவி, விலை மதிப்பற்றவர்; மோடி காதலித்துப் பார்க்கத் தெரியாதவர் என்று கூறியுள்ளார். மோடிஒரு கட்டைப் பிரமச்சாரி -ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பிரம்மச்சரியம் ஒரு கூடுதல் தகுதி போலும்!

அது எப்படியோ இருக்கட்டும்!

அரசியல் மேடைகளில் இப்படி தனிப்பட்ட தாக்குதல், தரக் குறைவான விமர்சனங்கள் தேவையா? நியாயமா?

இந்தியத் தேர்தல் ஆணையம் இதனை வேடிக்கை பார்க்கலாமா? உடனே மோடிமீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டாமா?

மோடியைப் புரிந்து கொள்ள, அவரிடம் உள்ள சரக்கைப் புரிந்துகொள்ள இது ஒன்று போதாதா?

ராகங்களில் தோடி ராகம் சிறந்தது, கேட்க இனிமையானது என்பார்கள்; ஆனால் இந்த மோடி ராகம் மிக மிக மோசமானதாக அல்லவா இருக்கிறது?

பொதுவாக எந்தக் கட்சித் தலைவராகட் டும், பேச்சாளர்களாகட்டும் இரு பொருள்படும் படி பெண்களைப்பற்றிப் பேசினால் அவர்களை அத்தலைமையே அனுமதிக்கக் கூடாது.

பெண்ணுரிமை - பெண்கள் சமத்துவம், பற்றிப் பேசும் எந்த இயக்கமும் - மகளிர் வாக்கு வங்கிக்காக தவமாய் தவம் கிடக்கும் எந்தக் கட்சியையும் அதன் தலைமையும் அனுமதிக் கவே கூடாது!

மோடி ராகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும்!

இணை அமைச்சர் சசிதரூரின் துணைவி யார் திருமதி சுனந்தா புஷ்கர் அவர்கள், இவ்வளவு கீழிறக்கத்திற்கு மோடி செல்வார் என்று நினைக்கவே இல்லை; அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள் என்றுகூட நான் கேட்க மாட்டேன்;

காரணம் பல்லாயிரக்கணக்கான அப்பாவி குஜராத்தி மக்களைக் கொன்று குவித்த அதற்கே மனம் வருந்தி மன்னிப்புக் கேட்க முன்வராத மோடியா, என்னிடம் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவிக்கப் போகிறார்? என்று தனது பெருந்தன்மையால் மோடி ராகத்தின் மோசடித் தன்மையை உலகுக்குப் புரிய வைத்துள்ளார்.

குஜராத் பெண்கள் எல்லாம் சரியாகக் கூட, உண்ணாமல் பட்டினி கிடக்கிறார்கள், கேட்டால் அது தான் பேஷன் என்கிறார்கள் என்று பேசி மோடி ராகம் பாடிய மேதைதான் இவர்; இவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? என்றும் நறுக்கெனக் கேட்டுள்ளார் சுனந்தா அவர்கள்!