Search This Blog

20.11.12

பக்தியில் நம்பிக்கை உள்ளவர்கள் இதனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

இராம. கோபாலன் கோரிக்கையும் நமது கோரிக்கையும்
எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. ஆனால் இந்துத்துவாவாதிகளுக்கு அவை எல்லாம் ஒரு பொருட்டல்ல.

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளரான திருவாளர் இராம. கோபாலன் அய்யர் அரசுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைத்துள்ளார்.

1) ஒவ்வொரு கோயிலிலும் உள்ள விக்கிரகங்கள், அவற்றின் நகைகள் ஆகியவைபற்றி முழு மதிப்பீடு செய்து குறிப்பிட்ட கால அளவில் பதிவு செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அவை சரி பார்க்கப்பட வேண்டும். இதில் ஏதேனும் குறைவு ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கிறார் திருவாளர் இராம. கோபாலன்.

இந்துக் கோயில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கி இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி வந்த இவர்களுக்கு இப்பொழுது நல்ல புத்தி வந்துவிட்டதா? அரசின் கையில் இருந்தால்தான் அவை பாதுகாப்பு என்று மனம் மாற்றம் பெற்று இருக்கிறார்களா?

சர்.சி.பி, இராமசாமி அய்யர் தலைமையிலே அமைக்கப்பட்ட இந்துக் கோயில்களுக்கெல்லாம் நேரில் சென்று ஆய்வு செய்து கோயில்கள் எப்படி எல்லாம் அர்ச்சகர்ப் பார்ப்பனர்களின் சுரண்டல் கூடாரங்களாக இருக்கின்றன - பாழடைந்த மண்டபங்களாகக் காட்சி அளிக்கின்றன. அர்ச்சகர்களே கோயில் சிலைகளை அபகரிக்கின்றனர் என்றெல்லாம் விலாவாரியாக வெளிப்படுத்தியதுண்டு.

நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் இந்து அற நிலையத் துறை என்ற ஒன்றை உருவாக்கி, இந்துக் கோயில்களை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த காரணத்தால்தான் ஓரளவு பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராசன் கோயில் தீட்சதர்ப் பார்ப்பனர்களின் தனி உடைமையாக இருந்தது. அதனை தி.மு.க. ஆட்சியில், கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராகவிருந்தபோதுதான் இந்து அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டது.

நீதிமன்றம் வரை சென்று பார்த்தனர் தீட்சதர்கள்.

தமிழ்நாடு அரசின் நடவடிக்கை சரிதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பும் அளித்தது. அதனை எதிர்த்தும் உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர். வழக்கு நிலுவையில் உள்ளது.

ஆண்டு ஒன்றுக்கு வெறும் 32 ஆயிரம் ரூபாய்தான் வருமானம் என்று நீதிமன்றத்தில் தீட்சதர்கள் கணக்குக் காட்டினர். அதிலும் பெரும்பாலும் செலவு என்று கணக்குக் காட்டினர்.

அதே நேரத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில் ஆண்டு ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கினை விலக்கிக் கொள்ள முயற்சி எடுப்பாரா இந்து முன்னணி அமைப்பாளர்?
இன்னொன்றையும் கோயில்களில் உள்ள சாமி சிலைகளின் கணக்கெடுப்பையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறார்.

கடவுள் சிலைகளின் சக்திமீது அந்த அளவுக்குத்தான் நம்பிக்கை போலும்! அந்த சிலைகளின்மீது யாரும் கை வைக்க முடியாது - சர்வ சக்தி வாய்ந்தது என்று இராம. கோபாலன்கள் உண்மையிலேயே நம்புவார்களேயானால், இது போன்ற கோரிக்கைகளை வைக்க முன் வருவார்களா?

கோயில் சிலைகள் திருட்டு என்பது அன்றாட செய்தி யாகிவிட்டது. சில திருட்டுகளில் அர்ச்சகப் பார்ப்பனர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதும் நிரூபணமாகி விட்டதே - இதைப்பற்றி  எல்லாம் இந்துத்துவாவாதிகள் வாய் திறக்க மாட்டார்கள்.

இந்துத்துவா பேசும் இந்தப் பேர்வழிகள் இந்து மதத்தில் உள்ள அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால் அதனை ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன்? தி.மு.க. அரசு பிறப்பித்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுவானேன்? மற்ற மற்ற விடயங்களில் எல்லாம் இந்துக் களே! ஒன்று சேருங்கள் என்று அழைப்புக் கொடுக்கும் இவர்கள். அந்த இந்துக்களில் பயிற்சி அளிக்கப்பட்ட எந்த ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை ஏற்றுக் கொள்ளாதது ஏன்?

காரணம் வெளிப்படையானதே! இந்து மதக் கோயில்கள் எல்லாம், அவை பார்ப்பனர்களின் தனி உடைமை, பார்ப்பனர்கள்தான் கடவுளுக்குப் பக்கத்தில் செல்லும் உரிமை பெற்றவர்கள் என்பதை நிலை நாட்டுவதன் மூலம்,  சமூக அமைப்பில் தங்களின் உயர் ஜாதித் தத்துவத்தை நிலை நாட்டுவதுதான் இதில் உள்ள சூட்சுமம் ஆகும்.

பார்ப்பனர் அல்லாதாரில் பக்தியில் நம்பிக்கை உள்ளவர்கள் இதனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

2) அனைத்து ஊர்களிலும் தேர்த் திருவிழா நடைபெற வேண்டும், அதற்கு இந்து அற நிலையத்துறை ஆவன செய்ய வேண்டும், என்பது அடுத்த கோரிக்கை
தமிழ் செம்மொழியாவதுதான் முக்கியமா? நாட்டில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன;அவற்றை எல்லாம் விட்டு விட்டு, செம்மொழி ஆக வேண்டும் என்று குரல் கொடுப்பது ஏன்? என்று பார்ப்பனத் தலைவர்களும், பார்ப்பன ஊடகங்களும் விழுந்து விழுந்து எழுதுவார்கள்.

இப்பொழுது அதையேதான் நாமும் திருப்பிக் கேட்க வேண்டும்.
நாட்டில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன - கடும் மின்வெட்டு உட்பட! இந்தநிலையில் தேர் ஓட்டம்தான் முக்கியமா? என்று கேட்க விரும்புகிறோம்.

மக்களில் அடிப்படை பிரச்சினைகள், தேவைகள் தீர்க்கப்பட கோயில் சொத்துக்களை அரசு பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் - அரசுக்கு நாம் வைக்கும் கோரிக்கை இதுதான்!


          -----------------------"விடுதலை” தலையங்கம் 19-11-2012

16 comments:

தமிழ் ஓவியா said...


எப்போதும் உட்கார்ந்தே இருக்காதீர்!
nt

சிங்கப்பூரின் பிரபல ஆங்கில நாளேடான தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (The Straits Times) வாரத்தில் ஒவ் வொரு வியாழக்கிழமையும் உங்கள் உடலைக் கவனித்துக் கொள் ளுங்கள் (Mind Your Body) என்ற தலைப்பில் மிக அருமையான உடல் நல அறிவுரைகளை பிரபல மருத்துவ வல்லுநர்களிடமிருந்து கட்டுரைகளை வாங்கி வெளியிடுகிறார்கள்!

வாசகர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கக் கூடியவையாக அவை அமைகின்றன.

எப்போதும் மணிக்கணக்காக உட்கார்ந்து கொண்டே இருப்பது கூடாது. அது சர்க்கரை நோய்க்கும், இதய நோய்க்கும், ஏன் மரணத் திற்கும்கூட தள்ளிவிடும் அபாயத்தை உருவாக்குகிறது என்று ஓர் அருமை யான ஆய்வுக் கட்டுரை 15.11.2012 அன்றைய இதழில் வெளி வந்துள்ளது!

நம்மில் பலரும், பல மணி நேரம் நாற்காலிகளில் உட்கார்ந்தே பணி செய்கிறோம்.

இன்னும் பெண்கள், மற்றைய முதியோர் வீடுகளில் முதிய வயதில் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்பே உட்கார்ந்து தொடர்ந்து டி.வி. பார்ப் பதும், அல்லது அமர்ந்து கொண்டே அசை போடுவதும், வீண் விவாதங் களில் ஈடுபடுவதாகப் பொழுதைக் கழிக்கிறோம்.

இன்னும் சிலர் சோம்பல் காரணமாக சாப்பிடுவது, தூங்குவது, தொலைக் காட்சி பார்ப்பது இவற்றிலேயே நேரத்தை செலவழிக்கின்றனர்!

சிங்கப்பூரில் எடுத்த ஒரு கணக்குப் படி 98.7 சதவிகி பிள்ளைகள் சுறு சுறுப்பின்றி (வாரக் கடைசி நாளில்) இருப்பதாகவும், வார நாள்களில் 90.2 சதவிகிதம் அப்படி இப்பிள்ளைகள் இருப்பதாகவும் ஒரு ஏட்டில் (Journal of Kinsology in 2008) எழுதியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

அவர்களது இதயத் துடிப்பு - வாரத் தின் 3 நாள்களில் 120 ஒரு நிமிடத்திற்கு எனவும், 10 முதல் 15 வயதுள்ள குழந்தைகள் 280 பேர்களைக் கொண்டு இப்படி ஒரு கணக்கெடுத்துள்ளனராம்!

உட்காருவதும், நிற்பதும் இந்த முறையில் அடக்கம். வகுப்பில் பாடங்கள் படிக்கும்போது, எந்த செயலும் இல்லாததாலும், வெறும் ஹோம் ஒர்க் செய்வதாலும், கம்ப்யூட்டர் கேம்ஸ் என்ற விளையாட்டுகளுக்கு மணிக்கணக்கில் உட்கார்ந்தும் உள்ள நேரங்களை வைத் துத்தான் இந்த ஆய்வு நடத்தப்பட் டுள்ளன.

தேசிய கல்விக் கழகம் (National Institute of Education (NIE) பேராசிரியர், குழந்தைகளுக்கான Exercise Phisiology பேராசிரியர் ஆய்வு செய் துள்ளார்.

இந்த இளம் பிள்ளைகளுக்கு சர்க் கரை வியாதி வரும் அபாயம் 112 சதவிகிதம் - இதய நோய் ஆபத்துக் கான அபாயம் 147 சதவிகிதம் 49 சதவிகிதம் மரண அபாயமும் இணைந்து கொள்கிறதாம்!

எனவே, சில பேராசிரியர்கள் மாணவ இளைஞர்களுக்கு (இருபாலரும் சேர்ந் ததே இது) 150 நிமிடங்கள் சுமாரான உடற்பயிற்சிகளை ஒவ்வொரு வாரமும் தர வேண்டும் என்று டாக்டர் யான் ஹீஃபன் (Dr. Yang Yifan) கூறுகிறார். மேற்காட்டிய அமைப்பில் இவர் உடற் பயிற்சி, மற்றும் விளையாட்டு விஞ்ஞானக் கல்விக் குழுவின் உதவிப் பேராசிரியர் ஆவார்!

எனவே பெரியவர்களும் சரி, இளை ஞர்கள், மாணவர்களும் சரி - வெறுமனே மணிக்கணக்கில் உட்கார்ந்தே இருக்கும் படியாகச் செய்யாமல் ஓரளவு உடற்பயிற்சிகள் அல்லது நடந்து, நடந்து பல விட்டுப் போன பணிகளைச் செய்வது, முதல் தொடர்ந்து ஏதாவது செய்து கொண்டே இருப்பது அவசியம்!

நம் உடல் என்பது 640 தசைகள் (Muscles) 206 எலும்புகளைக் கொண்டது. இவைகளுக்கு அசைவுகள் இருப்பதும் அவசியம்.

நிற்கும்போதும், நடக்கும் போதும் நமது தசைகள் போதிய சக்தியைத் தருகின்ற வகை யில் அதற்குரிய தேவையான சில வற்றை அளிக்கிறது. உட்கார்ந்துள்ள போது அது குறைந்துவிடுகிறது என்கிற டாக்டர் ஸ்லோகன் என்ற நிபுணர் அலுவலகங்களில் உள்ளவர் களும்கூட ஒரே அடியாக அமராமல் சிறிது நேரம் எழுந்து நடமாடலாமே! (நம் நாட்டு அரசு அலுவலர்களில் பலர் இதில் தீர்க்க தரிசிகள் போலும்; ஏனெனில் பெரும்பாலான நேரங்கள் அவர்கள் இருக்கைகளில் இருக்காமல் நடந்து கொண்டே தானே இருக் கிறார்கள்! இந்த சங்கதி - ஆய்வை முன்னாலேயே அறிந்தவர்கள் போலும்) இது யாரையும் குற்றம் சுமத்த அல்ல.

அதுவும் நன்மைக்கே! எனவே அலுவலகங்களில் அமர்ந்து பணியாற் றுவோர்கூட உடல் பயிற்சி அவசியம்! அவசியம்!!

உடற்பயிற்சி செய்தவர்களுக்கும் கூட இந்த நீண்ட நேரம் உட்கார்ந் திருப்பது ஆபத்தை விளைவிக்கக் கூடியதே!

- கி.வீரமணி 19-11-2012

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்


அணுக்குண்டு தேவையில்லை! அறிக்கையே போதும்!!

அறிவுலகத்தின் அழியாச் சின்னம் ஆயிரமாயிரம் ஆண்டுகளானாலும்.. உலகில் அழியாது ஒளி வீசி நிற்கும் அறிவுச் சுடர்.. தந்தை பெரியார்!
மரணம் என்ற ஒரு அச்சம் இருக் கின்றவரை.. கடவுள், மதம், சாஸ்திரம், சடங்கு மனிதனை விட்டு ஒழியாது என்ற நிலையை... தலைகீழாக மாற்றிப் போட்டு...

மனிதநேயத்தை இந்த மண்ணிலே விதைத்து. நல்ல விளைச்சலை தன் கண் முன்னாலேயே அறுவடை செய்து... வெற் றியைக் குவித்த அய்யா அவர்களின் கொள்கை என்றுமே அழியாது என்ப தற்கு, அண்மையில் சிறீரங்க நிகழ்ச்சியே சிறந்த எடுத்துக்காட்டு!

இதுபற்றி, விடுதலை (7.11.2012 புதன்) மூன்றாம் பக்கத்தில் பார்ப்பனர்களே, மனம் திறந்து தந்திருக்கும் விளக்கங் களே.. அய்யாவின் சாதி ஒழிப்புப் பணி, எத்தகைய தாக்கத்தை பார்ப்பனரிடத் திலேகூட ஏற்படுத்தி இருக்கிறது என் பதை தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது.

மொட்டைப் பாப்பாத்தி என்ற இழிவான கொடுமையிலிருந்து பார்ப் பனப் பெண்களே கரையேறி வருவதற்குக் கை கொடுத்து உதவியதே. தந்தை பெரியார் அவர்கள் பெண்ணுரிமைக்காக நடத்திய போராட்டங்களே என நன்றியோடு நினைவு கூர்ந்திருப்பது... பிராமணாள் கபே மணிகண்டன் போன் றோர்க்கு மட்டும் வேம்பாய் கசப்பதேன்? அறியாமையாலா? ஆணவத்தாலோ?...

ஆகம விதிப்படி நடக்கும் உண்மை யான பார்ப்பனர் இன்று யார் இருக் கிறார்கள்? என ஒருபார்ப்பனரே உண்மை நிலையை போட்டு உடைத்திருக்கிறாரே... பதில் சொல்ல முடியுமா? மணிகண்டன் களால்!..

தான் உயர்ந்த ஜாதி என்ற ஆணவம் இனியும் எதற்கு? லோக குருவின் நிலையைக் கண்டபிறகும் இன்னமுமா ஜாதி ஆணவம்? பெரும்பாலான மக்களின் வெறுப்பைத் தவிர வேறு இவர்கள் சாதிக்கப் போவது என்ன? பார்ப்பனரே விரும்பாத ஜாதி ஆணவத்தை இவாளைப் போன்றோர் மட்டும்... இன்னமும் உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பது ஏன்? செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்பி ஆய்வு நடத்திக் கொண்டிருக் கும் இந்த அறிவியல் உலகில், இப்படி ஜாதி எனும் பழைய குப்பையைக் கிளறிக் கொண்டிருப்பதேன்? பூணூலை உருவிக் கொண்டு குடுமியை (அப்படி ஒன்று இருந்தால்) அள்ளி முடிந்து கொண்டு நாங்கள் உயர்ந்த ஜாதி என குதியாய்க் குதிப்பதில் சமுதாயத்திற்கு என்ன லாபம்?

மனிதநேயமில்லாத மனிதன், வாழ்ந் தென்ன லாபம்? அவனால் யாருக்கு என்ன பயன்? சிந்திக்காதது ஏன் பார்ப் பனீயம்?

சாதி ஒழிப்பு, பார்ப்பனீய புறக்கணிப்பு, பெண் கல்வி, விதவை மணம், பெண் ணுரிமை, தீண்டாமை ஒழிப்பு, கல்வி மறுமலர்ச்சி.. இடஒதுக்கீடு, மொழிப்பற்று, பகுத்தறிவுச் சிந்தனை, மனிதநேயம், ஈடு இணையற்ற தந்தை பெரியாரின் இத் தகைய சீரிய பணிகளை மறைக்கத்தான், நாத்திக முத்திரையை மட்டுமே குத்தி அவரது பணிகளை இருட்டடிப்பு செய்ய நினைத்தனர்; பார்ப்பனர்களும்.. பார்ப் பனீயத்தைப் பாதுகாக்க நினைக்கும் ஊடகங்களும்!!

ஆனால்.. அந்த சாதிவெறிக்கு சரி யான சம்மட்டி அடியை.. சீரங்கத்திலேயே தந்து விட்டார். மானமிகு அய்யா ஆசிரியர் அவர்கள்!

பிள்ளையார் சிலை உடைப்பு - தேசியக் கொடி எரிப்பு - அரசியல் சட்ட எரிப்பு... இந்திய தேசப்பட எரிப்பு... கட்டாய இந்தி எதிர்ப்பு... என வரலாற்றுச் சிறப்பு மிக்க களங்களை சந்தித்த பெரியார் பெருந் தொண்டர்களுக்கு... தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு.. சிறீரங்கத்துப் பார்ப்பனரின் சிறுபிள்ளை விளையாட்டை சந்திப்பதா பெரிய காரியம்?

ஆரிய சூதுக்கோட்டையை அழிக்க, இனி அணுகுண்டு தேவையில்லை! மானமிகு ஆசிரியர் அவர்களின் தன் மானம் கொப்பளிக்கும் அறிக்கையே போதும்! தூள், தூளாகும்!!

- நெய்வேலி க. தியாகராசன்,
கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவல்


சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தகவல்

புதுடில்லி, நவ. 19-தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் கொசுக் கள் கட்டுக்கடங்காமல் பெருகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேக மாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கொசுக்களால் பரவும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதில் டெங்கு காய்ச்ச லுக்கு ஏராளமானவர்கள் பலியாகி விட்டனர். இந்த அளவுக்கு டெங்கு பரவிய தற்கு காரணம், ஏடிஸ் ஏஜிப்டி ரக கொசுக்கள் கட்டுக்கடங்காமல் பெருகியதுதான். இந்த நிலையில், ஆசிய டைகர் எனப்படும் புதிய ரக கொசுக்களும் டெங்குவை பரப்புவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏடிஸ் ஏஜிப்டி ரக கொசுக்கள் வீட்டுக்குள் தேங்கி இருக்கும் தண்ணீரில் உருவாகும். ஆனால், ஆசிய டைகர் ரக கொசுகள் திறந்த வெளியில் தேங்கி இருக்கும் தண்ணீரில் முட்டையிட்டு பெருகுகிறது.

இதுபோல கொசுக்கள் அதிகமாக உற்பத்தி ஆவதற்கு காரணம் தவளைகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததுதான் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர். தவளைகள் எண்ணிக்கை குறைந்த தால் கொசுகள் அதிகமாக பெருகி வருகிறது. தவளைகள் அதிகமாக இருந்தால் தண்ணீரில் மிதக்கும் கொசுகளின் லார்வாக்களை அவை சாப்பிட்டுவிடும். அண்மையில் நடத் திய ஆய்வில் இந்தியாவில் பெரும் பாலான பகுதிகளில் தவளைகளே இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால், தவளைகளை காப்பாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

ஊடகங்களின் ஜாதிக் கண்ணோட்டம் பற்றி தமிழர் தலைவர்


2 ஜி ஊழல் என்று எப்படியெல்லாம் ஊதிப் பெருக்கினார்கள்?

உண்மையிலே அது ஊழல் இல்லை என்பது விளங்கிவிட்டதே!

ஊடகங்களின் ஜாதிக் கண்ணோட்டம் பற்றி தமிழர் தலைவர்

சென்னை, நவ.19-ஊடகங்களில் நிலவும் ஜாதிக் கண்ணோட்டம் - பார்வை பற்றி தமிழர் தலைவர் பதிலளிக்கையில் கூறியதாவது:

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எத்தனை கோணம்! எத்தனை பார்வை!! பத்திரிகையாளர் தம்பிராஜாவுடன் சிறப்பு விவாத நிகழ்ச்சியில் 13.11.2012 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி பங்கேற்றார். அவர் அளித்த பேட்டியின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

முதலில் இந்த மருத்துவர் தன்னுடைய நோயை குணப்படுத்திக் கொள்ளவேண்டும். இவர் மற்றவர் களை ஊழல் செய்கிறார்கள் என்று சொல்வதை விட, ஊழலை ஒழிப்பதற்கு அடிப்படையான பணி இன்றைக்குத் தேவையானது ஊடகங்களிலே அறிவு நாணயத்தோடு அவர்கள் செயல்பட வேண்டும். தேர்தல், சட்டங்கள், விதிமுறைகள் திருத்தப் பட்டாலொழிய, ஊழலை ஒழிக்கவே முடியாது.

செய்தியாளர்: கெஜ்ரிவால் போன்றவர்களால் அல்லது இன்னும் சில தலைவர்களால் இதைப் போன்ற இணைய தளங்களைப் பயன்படுத்திக் கொண்டு, ஊடகங்களைப் பயன் படுத்திக் கொண்டு, காலங்காலமாகப் போராடி பெற்று வந்த இட ஒதுக்கீடு போன்ற பலன்களை, இட ஒதுக்கீடு என்பது ஏதோ சமுதாயத்திற்கு எதிரானது என் பதைப் போலவும், பலர் அதனால் பாதிக்கப்படுவது போலவும் இன்றைக்கு ஒரு பிரச்சாரம் செய்யப் படுகிறதே, இதுபோன்ற சவால்களை நீங்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

உயர்ஜாதியினரின் சூழ்ச்சி

தமிழர் தலைவர்: தாராளமாக, இது உயர்ஜாதி யினுடைய மிகப்பெரிய சூழ்ச்சி. மருத்துவக் கவுன்சில் ஆஃப் இண்டியாவில் (எம்.சி.அய்.,) மிகப் பெரிய ஊழலுக்கு ஆளானார் பாருங்கள்; திருப்பதி வெங்கடாஜலபதியை விட அதிகம் லஞ்சம் வாங்கினார். அவருடைய பெயரே மறந்துபோகிற அளவிற்கு (கேசன் தேசாய்) அந்தச் செய்தியை மறைத்து விட் டார்கள். அந்த வழக்கு என்னாயிற்று என்று யாருக்கும் தெரியாது. 2ஜி ஸ்பெக்டரம் பற்றி எல்லா இடங்களிலும் வழக்குப் போடுவார்கள். அதைப் பத்திரிகைக்காரர்களும் விடாமல் எழுது வார்கள். காரணம் என்னவென்றால், அதில் ஈடுபட்டவர்கள் பஞ்சமர்களும், சூத்திரர்களும் என்று சொல்வதால். இந்த நாட்டில் ஜாதிப் பார்வை ஊடகங்களிடத்திலும் உள்ளது.

அதைவிட மிக வேடிக்கையான ஒன்று என்ன வென்று சொன்னால், இதனால் ஏற்பட்ட விளைவு கள் என்ன? இவர்கள் அடிப்படையிலே சமூகநீதி யிலே நம்பிக்கை உள்ளவர்களா? ஜனநாயகத்தில் கருத்துச் சுதந்திரத்தில் நம்பிக்கை உள்ளவர்களா? 18 வயதுள்ளவர்களை மட்டும் தான் தாக்குகிறார்கள். அவர்களை குறிவைத்து ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள். அப்பாவி மக்களுக்கு இது தெரியாது. இதனுடைய விளைவுகள் என்ன? இந்த இட ஒதுக்கீடு எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தது? என்பதை இட ஒதுக்கீட்டை அனுபவித்து, பதவி பெற்றுள்ள பல பேருக்குப் புரியவில்லை.

ஆகவே, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், இவர் வந்தால் ஊழலை ஒழித்து விடு வார்கள் என்று. மாற்று என்பது இருக்கிறதே, அது எவ்வளவு ஆபத்தானது என்பதை தமிழ்நாடு இன்று பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆகவே, மாற்று என்பது நல்ல மாற்றாக அமைந் தால் சரி; ஏமாற்றாக அமைந்தால் அதனுடைய விளைவு என்னவாகும்?

தமிழ் ஓவியா said...


செய்தியாளர்: அவர்களாகவே தன்னிச் சையாக சில லாப நோக்கங்களுக்காக செய்திகளை வெளி யிடுவதும், திருப்புவதும், வளைப்பதும், நெளிப் பதும் ஒருபுறம்; இன்னொருபுறம் பத்திரிகைகளி னுடைய கழுத்தை விளம்பரங்கள் என்ற கொக்கியி னால் நெரித்து, அவர்களைத் தங்கள் வயப்படுத்து கின்ற போக்கையும் சில அரசாங்கங்கள் செய் கின்றன. ஆனால், எது எப்படியிருந்தாலும், இன் றைக்குப் பத்திரிகைகள் எழுதக் கூடிய தீர்ப்புகள் என்பது, அந்தத் தீர்ப்புகளிலேகூட பாரபட்சம் உண்டு.

விளம்பரம் ஒரு வகை லஞ்சமோ!

தமிழர் தலைவர்: ஆம்! காரணம் என்ன வென்றால், பத்திரிகைகளுக்குக் கொடுக்கின்ற விளம்பரம் என்பது இருக்கிறதே, பத்திரிகைகளில் வருகிற விளம்பரத்தின் மூலமாக மக்கள் தெரிந்து கொள்ளக் கூடிய செய்திகள் என்பதைவிட, பத்திரிகைகளுக்குக் கொடுக்கின்ற லஞ்சம் என்று பச்சையாக வேண்டுமானாலும் சொல்லலாம்.

ஆகவே, அந்தப் பத்திரிகைகள் இதற்காகவே காத்துக்கொண்டிருக்கின்றன; விளம்பரம் தரா விட்டால் நம்முடைய நிலை என்னவாகும் என்று கருதி, அதற்காக, சொல்லவேண்டிய உண்மை யையோ, வெளியே கொண்டுவர வேண் டிய உண்மைகளையோ அல்லது நியாயமான ஜனநாயக விமர்சனத்தையோ அப்பத்திரிகைகள் செய்வ தில்லை. இன்னொரு பக்கத்திலே பார்த்தோ மானால், ஊடகங்களே குற்றங்களைச் சுமத்துவது, அதற் கடுத்தபடியாக விசாரணைகளை நடத்துவது, மூன்றாவதாக தீர்ப்புரைகளையும் அவர்களே எழுதிவிடுவதுபோலத்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆனால், இதிலேகூட இரட்டை வேடம், இரட்டைப் போக்கு, இரட்டை நாக்கு இவை தான் இருக்கின்றன. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டு மானால்,
அலைக்கற்றை - விவகாரம்!

நடக்காத, ஏலம் விடாத ஒரு பிரச்சினை 2ஜி ஸ்பெக்ட்ரம் என்று சொல்லக்கூடிய அலைக் கற்றை விவகாரம். இதிலே, ராசா மற்றவர்கள் பெரிய அளவிற்குத் தவறு செய்தார்கள் என்று சொல்லி, வழக்குப் போட்டு, சட்ட நடை முறைகளை யெல்லாம் மீறி, இன்றைக்கு உச்ச நீதிமன்றமே எடுத்துக் கொள்கிறது என்று சொல்வது, அரசியல் சட்டப்படி சரியானது தானா என்பது கேள்விக்குறி.

தமிழ் ஓவியா said...

அதே அளவுகோல், இந்த ஊடகங்கள், தொலைக்காட்சிகள் ஆனாலும், பத்திரிகைகள் ஆனாலும், மற்றவர்களுக்குச் செய்கிறார்களா?

நிதின்கட்காரி, ஆர்.எஸ்.எஸ்.சினால் பரிந்து ரைக்கப்பட்டு, பா.ஜ.க.வின் தலைவராக அமர்த்தப் பட்டுள்ளவர். ஆர்.எஸ்.எஸ்.காரர் அவர்.

அவர்மீது ஊழலைச் சொன்னார்கள். மேற் கண்ட ஊழலைச் சொன்னவர்கள்.

பல கம்பெனிகளைப்பற்றி சொல்லியிருக் கிறார். நிதின்கட்காரியினுடைய கார் ஓட்டுநர் - இயக்கு நராக உள்ளார்; இது அவருக்கே தெரியாது. இன்னும் கேட்டால், அந்த இயக்குநரிடம் வருமான வரித் துறையினர் போய் கேள்வி கேட்டால், அந்தக் கம்பெனியின் பெயர்கூட அந்த இயக்குநருக்குத் (ஓட்டுநருக்குத்) தெரியவில்லை.

நிதின்கட்காரி பதவி விலகவேண்டும் என்று அவர்களுடைய கட்சியினரே கேட்கின்றனர்.

இதற்கு என்ன பதில் சொல்கிறார்கள் என்றால்,

விசாரணைதானே இருக்கிறது; குற்றவாளி என்று சொல்லிவிடவில்லையே, அதற்காக ஏன் அவர் பதவி விலகவேண்டும் என்று ஒரு கேள்வி கேட்கிறார்கள்.
இன்னொரு பக்கத்தில் என்னவென்றால், எங்கள் ஆர்.எஸ்.எஸ்.காரரே இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, எல்லாக் கணக்கும் பார்த்துவிட்டார்; அதனால் பதவி விலகவேண்டியதில்லை என்றும் சொல்கிறார்கள். இவருக்கு இந்த நீதி?

இன்னொரு பக்கத்தில் ஊடகங்களைப்பற்றி பேசுகின்ற இடதுசாரி கட்சி நண்பர்கள்கூட, ஆகா, ஓகோவென்று 2ஜி பிரச்சினையைப்பற்றி பேசினார்களே, அது என்ன ஏலம் விடப்பட்டதா? இப்படி விட்டிருந்தால் - நட்டம் என்றுதானே - கற்பனையாகத்தானே சொல்கிறார்கள். ஜீரோ லாஸ் என்றுதானே அமைச்சர் சொன்னார்.

செய்தியாளர்: நீங்கள் சொல்வதுபோல, நிலக்கரி சுரங்க முறைகேட்டில் கூட, மத்திய அரசின்மீது சாடினார்களே தவிர, அந்த ஏலம் விட வேண்டாம் என்று சொன்ன நான்கு மாநில முதலமைச்சர்களைப்பற்றி (அவர்கள் பா.ஜ.க. முதலமைச்சர்கள்) சொல்லவில்லையே?

தமிழர் தலைவர்: ஆமாம்! அவர்களைப்பற்றி சொல்லவில்லை. நிதின்கட்காரிக்கு ஒரு நீதி? பா.ஜ.க. ஆளுகின்ற ஆட்சியாளர்கள்மீது இவர்கள் எழுது கின்ற தீர்ப்பு வேறு? மற்றவர்கள் என்றால் வேறு வகையான தீர்ப்பைத்தான் எழுதுகிறார்கள்.

இடதுசாரி நண்பர்கள்கூட அந்தத் தவறை செய்கிறார்கள். ஏனென்றால், இதே 2ஜி பிரச்சினை களில் பார்த்தீர்களேயானால், குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருக்கிறவர்களான ஒரு பக்கத்தில் ராசா, மற்றொரு பக்கத்தில் கனிமொழி போன்ற வர்கள்மீது குற்றம் சுமத்தினார்களே,

வழக்கு முடிந்து தீர்ப்பு வரும்வரை குற்றவாளிகள் அல்ல என்ற நியதி இதற்கும் பொருந்தும் அல்லவா! பிறகு ஏன் ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரினார்கள்.

ஒரு கட்சித் தலைவர் பதவியையே ராஜினாமா செய்ய முடியாதவர்கள், ஒரு ஆட்சியிலே செய்தி ருக்கிறார்கள்?
இன்னொன்று அவர்கள் நடத்தியது சரி என்பதற்கு அடையாளம், 122 உரிமங்களுக்கு மறு படியும் ஏலம் விடும்படியாகக் கேட்டிருக்கிறார்கள். அதில் ஒருவர்கூட ஏலம் எடுக்கவில்லை. இது எதனைக் காட்டுகிறது? ஏலம் விட்டால், 40 கோடி ரூபாய் வரும், 40 கோடி ரூபாய் வரும் என்று சொன்னார்கள்.

இதே ராசா அவர்கள், 3ஜி என்று வருகின்ற நேரத்தில், அதைவிட அதிகமான அளவிற்கு வருமானத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

எனவே, கொள்கை முடிவு என்பது வெறும் ஆதாயத்தைப் பொறுத்ததல்ல.

நுகர்வோருக்கும் பலன் ஏற்பட்டிருக்கிறது; அரசாங்கத்திற்கும் பலன் ஏற்பட்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

இன்றைக்கு 30 காசுக்கு கீரைக்கார முனியம்மா வில் இருந்து வேலைக்காரன் குப்பன் வரையிலும் எல்லோரும் செல்போன் வைத்திருக்கிறார்கள். கல் உடைப்பவர்கூட செல்போன் வைத்திருக்கிறார். வீட்டு வேலை செய்பவர்கள்கூட செல்போன் வைத்திருக்கிறார்கள் - மகிழ்ச்சியானவை கூட!
செய்தியாளர்: நீங்கள் குறிப்பிட்டபடி, நிதின் கட்காரி விசாரணைக்குத் தயார் என்கிறார் - அதற்குள் ஏன் அவசரப்படுகிறீர்கள் என்கிறார்கள். அதுபோலவே, எடியூரப்பாவின்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சொல்லிய போதுகூட, லோக் அயுக்தா தீர்ப்பைச் சொன்ன பிறகுதான், அவரை ராஜினாமா செய்யச் சொன்னார்கள். வேறு சிலருக்கோ இந்த மாதிரி விஷயங்களில் மட்டும் குற்றச்சாட்டினை சொன்னவுடனே, பதவி விலக வேண்டும் என்று சொல்கிறார்கள்.
எடியூரப்பாவிற்கு ஒரு நீதி; கட்காரிக்கு இன்னொரு நீதியா?

தமிழர் தலைவர்: பா.ஜக.விலேகூட எடியூரப்பா விற்கு ஒரு சூழல்; அதேநேரத்தில், கட்காரி என்ற உயர்ஜாதியினருக்கு மற்றொரு சூழல். மனு குலத்துக்கொரு நீதி; மனு அல்லாதவருக்கு இன் னொரு நீதி - ஒரே கட்சியிலே கூட!

செய்தியாளர்: இன்றைக்கு ஊடகங்களின் போக்கைப்பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும் போது, சாதாரணமாக தமிழகத்தை எடுத்துக் கொண்டால், தமிழர்களின் நலன் ஒரு பக்கம், அடுத்து நம் அண்டை நாடான இலங்கையில் வாழும் தமிழர்கள் நலன் ஒரு பக்கம் என்று இரண்டு பேரினுடைய நலனையும் கருத்தில் கொண்டு, உங்களைப் போன்றவர்களும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் போன்றவர்கள் அந்த நோக்கிலே தங்களுடைய செயல்பாடுகளை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு கட்டமாகத் தான் டெசோ அமைப்பின் தலைவராகவும் இருக்கக்கூடிய கலைஞர் அவர்களின் முன்னேற் பாட்டின்படி அந்த டெசோ மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள், வரைவு மனுக்களாகத் தயாரிக்கப்பட்டு, இன்றைக்கு நியூயார்க் நகரத்தில் அய்.நா. மன்றத்திலும், ஜெனீவா மனித உரிமை ஆணையத்திலும், ஏன் நாடாளுமன்றத்தின் தாய் என்று அழைக்கப்படுகின்ற லண்டன் மாநகரத் தில்கூட அந்தக் குரல் ஒலித்திருக்கிறது. ஆனால், இவையெல்லாவற்றையும் ஒரு கேலியும், கிண்டலு மாக அந்த நேரங்களிலே சில பத்திரி கைகள் விமர் சித்தன. அங்கே போய் கொடுத்துவிட்டு வந்ததால், என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது என்றெல் லாம் சொன்னார்கள். ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நன்மை நடக்கட்டுமே என்று நினைக்கின்ற போக்குக்கூட இல்லையே அவர்களிடம்!

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர்: இந்தப் பிரச்சினையில்கூட, தமிழ்நாட்டு ஊடகங்களினுடைய நிலையை எடுத்துப் பார்த்தால், கட்சிப் பத்திரிகைகள் என்று சொல்லக்கூடிய ஏடுகளைத் தவிர, கொள்கை ரீதியாக இருக்கக் கூடிய, இன உணர்வுப் படைத்தவர் களைத் தவிர வேறு யாரும் இதில் சரியான ஒரு போக்கை கடைபிடிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

அவர்கள் ஏற்கெனவே சொன்னது மட்டுமல்ல, இப்போதுகூட, என்ன பிரமாதமாகக் கொண்டு போய் கொடுத்து வந்துவிட்டார்கள் என்று சொன் னார்கள்.
ஈழத் தமிழர்கள் பிரச்சினை

உலக நாடுகளினுடைய பார்வை விழுந்தால்தான் ஈழத் தமிழர்களுக்கு இன்றைக்கு விடியல் ஏற்படும். இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்; அது நடக்கவேண்டும். இந்த இரண்டையும் டெசோ வின் தலைவர் கலைஞர் அவர்களும், அதனுடைய உறுப்பினர்களும் முடிவெடுத்து இதை தெளிவாக உரிய நேரத்தில், கொக்கொக்க கூம்பும் பருவத்து என்ற முறையிலே செய்திருக்கிறார்கள். இதைப் பாராட்ட மனசு இல்லை என்றாலும், ஏன் திசை திருப்பவேண்டும்? காரணம் என்னவென்றால், மீண்டும் மீண்டும் சுற்றி வந்தால், ஒரே மய்யப் புள்ளிக்குத்தான் வரலாம். இந்த நாட்டில் ஊடகங் கள் சுதந்திரமானவை அல்ல; ஜாதி உணர்ச்சி, இன உணர்வு படைத்தவர்களும், பண மனப்பான்மை, பண உணர்வு படைத்தவர்களும் நடத்தக் கூடிய வைதான்.
ஒன்று இன உணர்வு; இல்லையென்றால் பண உணர்வு உள்ளவர்கள்தான்.

இந்த இரண்டு நிலையிலேதான் ஊடகங்கள் உள்ளன. நடுநிலை ஊடகங்கள் என்பது இல்லை.

ஒரு நீதிபதி வழக்கை விசாரிக்கும்போதுகூட, இரண்டு பக்கமும் விசாரித்து, ஒரு பக்கம்தான் தீர்ப்பு எழுத முடியும்.

தீர்ப்பினை முன்னால் எழுதிக் கொள்கிறார்களே!

இவர்கள், தீர்ப்பினை முன்னால் எழுதி வைத்து விட்டு, வழக்கை பின்னால் தொடுக்கக் கூடியவர் களாக இருப்பது மிகவும் கண்டனத்திற்குரிய ஒன்று. இந்தப் போக்குத்தான் இன்றைக்கு நீடிக்கிறது.

ஊடகங்கள் தங்களை விற்றுக் கொள்ளாமல் இருக்கவேண்டும். அதுதான் மிக முக்கியம். சில நேரங்களில் ஊடகங்கள் இருப்பதைவிட இவை இல்லாமல் இருந்தால் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்றுகூட சொல்லலாம்.

பிபிசியில் அண்மையில் ஒரு செய்தி வந்தது. அங்கே ஒரு தவறான செய்தியை சொல்லிவிட்ட தற்காக, அந்த டைரக்டர் ஜெனரல் பதவி விலகி விட்டார்.
அங்கிருக்கும் நேர்மை எப்படிப்பட்டது? நம் நாட்டில் உள்ள ஊடகங்கள் எப்படிப்பட்டவை? என்பதை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே, பாதைகள் எப்படிப் போகின்றன? யார் யார் எப்படிப்பட்டவர்கள்? என்பது தெளிவாகத் தெரியும்.

செய்தியாளர்: நிச்சயமாக, இன்றைக்கு மக்கள் எதையும் சீர்தூக்கிப் பார்த்து, யாருக்கும் மதிப் பளிக்கவேண்டிய உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளவேண்டிய கட்டத்திலே, பொறுப்புணர்வு இன்றைக்கு வாசகர்களுக்கும், நேயர்களுக்கும் அமைந்துவிட்டது என்கிற கருத்தை நீங்கள் இங்கே வலியுறுத்தி இருக்கிறீர்கள். ஏனென்றால், இன்றைக்கு இந்தியா போன்ற பரந்துவிரிந்த நாட்டிலே, பல இனங்கள், பல ஜாதிகள், ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த ஒரு தேசத்திலே, எந்த அளவிற்கு ஒரு சமுதாய நோக்கத்தோடு யார் செயல்படுகிறார்கள் என்பதை ஆராய்ந்து அறிய வேண்டிய பொறுப்புணர்வு இன்றைக்கு மக்கள் மத்தியிலும், வாக்காளர்கள் மத்தியிலும் இருக்கிறது என்பதை நீங்கள் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். இல்லாவிட்டால், நாடு ஒரு தவறான திசையை அல்லது இத்தனைக் காலம் தந்தை பெரியார் போன்றவர்கள் முதற் கொண்டு பாடுபட்டு விதைத்து விருட்சமாக்கிய அந்த விளைவுகள் சிதைந்து போவதற்கு வாய்ப் பளித்துவிடக் கூடாது என்ற கருத்தையும் வலியுறுத்தி உள்ளீர்கள் மிக்க நன்றி!

அய்ந்து நோய்களுள் பத்திரிகையும் ஒன்று

தமிழர் தலைவர்: அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள், மிகவும் சங்கடப்பட்டு, அய்ந்து நோய்களுள் பத்திரிகையும் ஒன்று என்று சொல்லக் கூடிய அளவிற்கு வந்தார்கள். ஆனால், அந்த நோயே ஆளைக் கொல்லக் கூடிய அளவிற்கு, சமுதாயத்திற்கு எதிரான ஒரு நிலை உள்ளது. சரியான நேரத்தில் அதனை விளக்க வாய்ப்பளித்த கலைஞர் செய்திக்கு நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தமிழர் தலைவர் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் பேட்டி அளித்தார்.19-11-2012

தமிழ் ஓவியா said...


திராவிடத்தை ஏற்காதவர்களை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்


தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் கலைஞர் பேச்சு

சென்னை, நவ.19- திராவிடத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை, தமிழர்கள் ஏற்க மாட்டார்கள் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார். மறைமலை நகரில் நேற்று (18.11.2012) திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் - துணை அமைப்பா ளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம், கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

1944ஆம் ஆண்டு வாக்கில், திருச்சி மாநகரத்திலே தந்தை பெரியார் அவர்களின் தலைமையிலே, திராவிடர் கழக வாலிபர்கள் மாநாடு ஒன்று நடத்தப்பட்டு, அதில் கலந்து கொண்ட பெரியார் அவர்கள், வழக்கம் போல் எதிரே அமர்ந்திருக்கின்ற மக்களை விளிக்கும் போது, ``தலைவர் அவர்களே! அமைப்பாளர் அவர்களே! என்று கூறி விட்டு, ``என் வாலிப ஜீவரத்தினங்களே! என்று நா தழுதழுக்கக் கூறினார். அதையே நான் உங்களையெல்லாம் பார்க்கும்போது கூறலாம்போல் இருக்கிறது (பலத்த கைதட்டல்).

பெரியார் சொன்னது போல் ``என் வாலிப ஜீவரத்தினங்களே!

பெரியார் அவர்களுடைய உள்ளத்திலே எத்தகைய கிளர்ச்சி, எத்தகைய உணர்வு பீரிட்டு எழுந்தது என்பதற்கு ``என் வாலிப ஜீவரத்தினங் களே! என்று அவர் குறிப்பிட்டது இன்னமும் என்னுடைய நினைவிலே நிழலாடிக் கொண்டிருக் கிறது. அது நினை விற்கு வந்ததற்குக் காரணம், உங்களையெல் லாம் பார்த்ததும், ``என் வாலிப ஜீவரத்தினங் களே! என்று சொல்லத் தோன்றுகிறது (பலத்த கைதட்டல்). ஆகவே, அவ்வாறே விளிக்கின்றேன். பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களே! வரவேற்புரையாற்றிய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே! முதன்மைச் செயலாளர் அவர்களே! துணைப் பொதுச் செயலாளர் தம்பி துரைமுருகன் அவர்களே! துணைப் பொதுச் செயலாளர்களே, பட்டி மன்றம் நடத்தி உங்களை யெல்லாம் மகிழ்வித்த நகைச் சுவைத் தென்றல் திண்டுக்கல் லியோனி அவர்களே! காலையிலே உரையாற்றிய தம்பி திருச்சி சிவா எம்.பி. அவர்களே! பேராசிரியர் சபாபதி மோகன் அவர்களே! பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களே! காஞ்சி புரம் மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர் தம்பி தா.மோ.அன்பரசன் அவர்களே! இளைஞர் அணியின் அமைப்பாளர், துணை அமைப்பாளர் களே! தலைமைக் கழக, மாவட்டக் கழகச் செயலாளர்களே! வருகை தந்துள்ள என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே!

தமிழ் ஓவியா said...

இன்று காலையிலே இருந்து இதுவரையில் மறைமலைநகரில், தமிழ்ப் பிரவாகமெடுத்து பொங்கி வழிந்தது. அருமையான கருத்துக்கள், சுய மரியாதைக் கருத்துக்கள், சீர்திருத்தக் கருத்துக்கள், அரசியலில் அனுபவமிக்க கருத்துக்கள்; அனைத்தும் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இளை ஞர் அணி என்று சொல்லும்போது சில நண்பர்கள், ஏன் - சில மகா வித்வான்களே கூட, `திராவிட என்ற சொல் தீய சொல். `திராவிடம் என்ற சொல்லை, அந்த இயக்கத்தை நாங்கள் அழித்தே தீருவோம் - என்று புஜம் தட்டிப் புறப்பட்டிருக்கிறார்கள். நான் அவர்களுக்காகப் பரிதாபப்படுகின்றேன். நீங்கள் திராவிடத்தை அழிக்க புஜம் தட்டி இன்றைக்குப் புறப்பட்டிருக்கிறீர்கள் என்றால், ஏன் புறப்பட்டி ருக்கிறீர்கள் என்றால், முன்பொரு காலத்தில் அதே புஜத்தைத் தட்டி எங்களிடத்திலே, `எத்தனை சீட்டுகள் தருவீர்கள்? என்று கேட்கின்ற காலமும் ஒன்று வரும். ஆகவே, நாங்கள் திராவிடத்தை அழித்தே தீருவோம் என்று சொல்லுகின்றவர் களுக்கு ஒன்று கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன். திராவிடத்தால்தான் நீங்கள் உங்களுடைய கட்சியைக் கூட நிற்க வைத்திருக்கின்றீர்கள்.

ஏன் `திராவிடம் என்றால் சில பேருக்கு இன்றைக்குக் கசக்கிறது? `திராவிடம் என்றால் பேராசிரியர் அன்பழகனார் அவர்களோ, அல்லது இந்தக் கருணாநிதியோ, அல்லது காலையிலே பேசியே மூன்று தம்பிமார்களோ, ஸ்டாலினோ, கொண்டு வந்து இங்கே வைத்திருக்கின்ற புதிய செடி அல்ல. அது ஏற்கெனவே - நம்முடைய சுப. வீர பாண்டியன் இன்றைக்கு மாலையிலே பேசும்போது குறிப்பிட்டாரே, அதைப்போல, நடேசனார் நட்டு வைத்த செடி. அந்தச் செடி இன்றைக்கு வளர்ந்து மரமாகி, வேர் விட்டு, பல பறவைகள் வந்து தங்கவும், சில நன்றி கெட்ட பறவைகள், நிழல் தந்த மர மாயிற்றே என்று பார்க்காமல், எச்சம் இட்டுச் செல்லவும் - இப்படியெல்லாம் விளங்குகின்ற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். `திராவிட என்பது ஒரு இனத்தின் பெயர் - தமிழ் பேசும் மக்களின் பெயர்!

`திராவிட என்ற சொல்லை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று யார் யாரோ புறப்பட்டிருக் கிறார்கள். அகில உலகத்தில், ஏன் இன்னும் சொல்லப் போனால் --குறிப்பாகச் சொல்ல வேண்டு மேயானால், அனைத்து இந்தியாவில் இவர்க ளுடைய அங்கீகாரம் கிடைக்காத காரணத் தால்தான் நாங்கள் திராவிடம் பற்றிப் பேசக்கூடாது என்று சொல்லுகிறார்கள்போலும். `திராவிட எங்கே இல்லை? `திராவிடம் என்பது பெரியார் எங்களுக்கு நினைவுபடுத்திய வார்த்தை. அவர் உருவாக்கிய வார்த்தை என்று சொல்லமாட்டேன். அண்ணா உருவாக்கிய சொல் என்று சொல்லமாட் டேன். அண்ணாவும், பெரியாரும், திரு.வி.க. போன்ற வர்களும் எங்களுக்கு நினைவுபடுத்திய வார்த் தைதான் `திராவிட என்ற அந்த இனப் பெயர். `திராவிட என்ற சொல்லில் என்ன இழிவு இருக்கிறது? அது விஷம் என்று கலை உலகத்திலே உள்ள ஒரு தம்பி கூடச் சொல்வதாக நான் ஒரு பத்திரிகையிலே படித்தேன். இங்கே பேசியவர்களும் குறிப்பிட்டார்கள். ஆனால், நான் அவர்களுக்கும் சொல்லுகின்றேன், அந்தச் செய்திகளை ஏடுகளிலே படித்து விட்டு, பெருமூச்சு விடுகின்ற தம்பி மார்களுக்கும் சொல்லுகின்றேன். யாரும் கவலைப் படத் தேவையில்லை. `திராவிடம் என்பது நச்சுச் சொல்; `திராவிடம் என்பது விஷச் சொல்; `திராவிடம் என்பது நம்மையெல்லாம் மௌடீகத்திற்கு ஆளாக் குகின்ற ஒரு சொல் என்று குறிப்பிடுகின்றவர் களையும் சேர்த்து நான் கேட்க விரும்புகின்றேன்; `திராவிடம் என்ற சொல்லை யாரும் பயன் படுத்தியதே கிடையாதா?

``ஜன கண மன அதிநாயக ஜெயஹே பாரத பாக்ய விதாதா
பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா திராவிட உத்கல வங்கா

என்று பாடுகிற தேசிய கீதத்திலே இருக்கிற `திராவிட என்ற வார்த்தையை அழித்து விட்டு எங்களிடத்திலே வாதாட வாருங்கள். அதற்கு உங்களுக்கு வீரம் இருந்தால், விவேகம் இருந்தால், அதை மறைத்து விட்டு, அதை `ஜன கண மன என்ற பாடலிலே இருந்து எடுத்து எறிந்து விட்டு, எங்களோடு வாதாட வாருங்கள்.

தமிழ் ஓவியா said...

``நீராரும் கடலுடுத்த என்று பாடிய சுந்தரம் பிள்ளை `திராவிடத்தை ஏற்றுக் கொள்ளவில் லையா? இந்த நகருக்குப் பெயராக அமைந்துள்ள மறைமலை அடிகளார் திராவிடத்தை ஏற்றுக் கொள்ளவில்லையா? திரு.வி. கல்யாணசுந்தரனார் திராவிடத்தை ஏற்றுக் கொள்ளவில்லையா? ஒரு காலத்திலே அண்ணா அவர்களிடத்திலே வாதாடி னார் திரு.வி.க. `திராவிட என்ற சொல்லை சில பேர் மறுக்கிறார்களே, அதை விட்டுவிட்டால் என்ன என்று கூட கேட்டார். பிறகு, கடலூரில் நடை பெற்ற திராவிட இயக்க மாநாட்டில் அவரும் கலந்து கொண்டு, மூன்று முறை சொல்வேன், நான் சொல் வதை நீங்களும் சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு, அங்கு கூடியிருந்த மக்கள் பெரு வெள்ளத் தில், ``திராவிட நாடு, திராவிட நாடு, திராவிட நாடு என்று திரு.வி.க. அவர்கள் மூன்று முறை சொல்லி, அதை அங்கே குழுமியிருந்த லட்சக்கணக்கான மக்கள் எதிரொலித்தார்கள். ஏன் இதைச் சொல்லு கின்றேன் என்றால், ஜன கண மன பாட்டிலே மாத்திரமல்ல.... இன்றைக்கும் சென்னை கடற்கரை யிலே நடந்து செல்லுகின்றவர்கள் கொஞ்சம் திரும்பி அங்கே இருக்கின்ற மாநிலக் கல்லுரியைப் பார்த்தால், அங்கே கடற்கரைச் சாலையிலே இருக்கின்ற ஒரு பெரிய கட்டிடத்திற்கு முன்னால் ஒரு பெரிய கல் வைக்கப்பட்டிருக்கும் - கறுப்புக் கல். அந்தக் கல்லில் என்ன எழுதப்பட்டிருக்கும் தெரியுமா? டாக்டர் உ.வே.சாமிநாத அய்யருடைய சிலை. அந்தச் சிலைக்குக் கீழே அவரைக் குறிப்பிடு கின்ற புகழுரையும், பட்டமும், பெயருமாக என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது தெரியுமா? ``மகா மகோ பாத்யாய, டாக்டர் திராவிட வித்யா பூஷண உ.வே. சாமிநாதய்யர் என்று எழுதப்பட்டிருக்கும். முதலில், திராவிட என்ற வார்த்தையை கூடாது என்ப வர்களே! உங்களுக்கு வீரம் இருந்தால் அதைப் போய் உடைத்தெறியுங்கள்! உடைத்தெறிந்து விட்டு, `திராவிடம் என்று யாரும் பேசக்கூடாது என்று சொல்லுங்கள். `திராவிடம் என்பது நச்சுச் சொல் அல்ல! உச்சரிக்கக் கூடாத வார்த்தை அல்ல! குறிப்பிடக்கூடாத வார்த்தை அல்ல, அந்தச் சொல் ஒரு இனத்தின் பெயர். தமிழன் என்றால் அந்த மொழி பேசுகின்ற மக்களின் பெயர். அந்தத் தமிழனும் சேர்ந்திருக்கின்ற இடத்திற்குப் பெயர் திராவிட இனம். அந்தத் திராவிட இனத்தின் பெயரைத்தான் நாம் இன்றைக்கு சூட்டிக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் ஓவியா said...

திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு அல்ல, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன் றைக்கு தமிழ்நாட்டு மக்களுடைய உள்ளத்திலே ஊடுருவி திராவிட இனம் என்று ஒன்று உண்டு, அந்த இனம் - ஆரிய இனம் வேறு, திராவிட இனம் வேறு என்று சுட்டிக்காட்டுவதற்காகமட்டுமே பெரியார் அவர்களால், அண்ணாஅவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சொல் அல்ல. அந்த இனம் நம்மு டைய பூர்வீக இனம், நம் முடைய முப்பாட்டன் வாழ்ந்த இனம், இன்றைக் கும் நம்முடைய வீரவரலா றுகளை ஒலித்துக் கொண்டி ருக்கின்ற இனம் திராவிட இனம். அப்படிப் பட்ட இனத்தை, அந்த இனத்தி னுடைய உரிமை களைப் பெறுவதற்காகப் பாடுபடு கின்ற, பணியாற்று கின்ற இயக்கம் திராவிட முன் னேற்றக் கழகம் என்பதை நான் இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தி.மு.கழகத்தின் லட்சியங்களை - எண்ணங்களை மக்களிடம் சேர்க்கும் தூதுவர்களாக மாற வேண்டும்

அய்ந்தாயிரம் பேர் தம்பி ஸ்டாலின் அவர்க ளுடைய முயற்சியால் ஆங்காங்கு உள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களுடைய அயராது பணியினால் இன்று இளைஞர் அணியிலே சேர்ந்திருக்கின்றீர்கள். உங்களு டைய பணிகள் எல்லாம் என்ன என்பதை வகுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாள் இப்படி மறைமலை நகரிலே கூடினால் மாத்திரம் போதாது, அடிக்கடி சிறு சிறு குழுக்களாக அமர்ந்து பேச வேண்டும். அந்தக் குழுக்கள் கட்சிக்குள் ஏற்படு கின்ற வேறு கட்சியிலே ஏற்படுகின்ற குழுக்களைப் போன்ற குழுக்களாக இருக்கக்கூடாது. அந்த குழுக்கள் எல்லாம் நம்முடைய லட்சியங்களை வென்றெடுக்க என்ன திட்டங்களைத் தீட்டலாம், என்னென்ன செயல்களிலே இறங்கலாம், என்று சிந்திக்கின்ற, செயல்படுகின்ற குழுக்களாக அந்தக் குழுக்கள் அமைய வேண்டும் என்று உங்களை யெல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் ஓவியா said...

அப்படிப்பட்ட குழுக்களில் நீங்கள் வென்றெடுக் கின்ற - நீங்கள் தேர்ந்தெடுக்கின்ற பல்வேறு கருத்துக் களை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து மக்கள் இடத்திலே பிரச் சாரத்தைச் செய்ய வேண்டும், மக்கள் இடத்திலே எடுத்துச் செல்ல வேண்டும். நாங்கள் பேசுகின்ற பேச்சுக்கள், எழுதுகின்ற எழுத்துக்கள், எடுக்கின்ற முடிவுகள் இவைகளையெல் லாம் மக்களிடத்திலே எடுத்துச் சொல்லுகின்ற தூதுவர் களாக நீங்கள் எல்லாம் மாற வேண்டும் என்று இன்றைக்கு காலையிலே இருந்து இங்கே அமர்ந்து எங்களு டைய உரையைக் கேட்டுக் கொண்டிருக்கின்ற நண்பர்களுக்கு, இளைஞர்களுக்கு, வாலிபர்களுக்கு நான் மிகுந்த பணிவன்போடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பெரியார் சொல்லுவார்; ஒரு கட்சியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, என்று நீங்கள் சொன்னால் - கடமையும், கண்ணியமும் கூட அடுத்தபடியாக இருக்கட்டும், முதலாவதாக கட்டுப்பாடு மிக மிக முக்கியம் என்று பெரியார் எங்களிடத்திலே சொல்லி யிருக்கின்றார். `உங்க ளுடைய கட்சியிலே அண்ணா சொன்னார் என்று கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அந்தக் கடமையும், கண்ணிய மும் இரண்டாவது, மூன்றாவதாக இருக்கட்டும். கட்டுப்பாடுதான் மிகமிக முக்கியம் என்று - `கட்டுப்பாடு மீறினால் அந்தக் கட்சி உருப் படாது என்று பெரியார் பலமுறை சொல்லியிருக்கிறார். அப்படி உருப்படாமல் போன கட்சிகளை இன் றைக்கு நாட்டிலே பார்க்கின்றோம்.

அந்தக் கட்சி களில் ஒன்றாக நாம் சேர்ந்து விடாது இருக்க வேண்டுமேயானால் கட்டுப்பாட்டோடு நம்முடைய உணர்வுகளை, நம்முடைய எண்ணங்களை, லட்சியங்களை எடுத்துச் சொல்லவேண்டிய அந்தக் கடமையை ஆற்ற வேண்டும், ஆற்ற வேண்டும் என்று நான் இங்கே பயிற்சி பெற்றிருக்கின்ற என்று சொல்லமாட்டேன். இங்கு வந்து காலையிலே இருந்து குழுமியிருக்கின்ற ஐந்தாயிரத் திற்கும் மேற்பட்ட நம்முடைய இளைஞர்களை யெல்லாம் கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய எதிர்காலம், தமிழகத்தினுடைய எதிர் காலம் (பலத்த கைதட்டல்) உங்களுடைய வருங் காலம்தான் தமிழகத்தை வாழ வைக்கக் கூடிய காலம். ஆகவே உங்களை நம்பித் தான் நாங்கள் இருக்கின்றோம். (பலத்த கைதட்டல்) உங்களை நம்பித்தான் இந்த இயக்கம் இருக்கிறது. (பலத்த கைதட்டல்) எங்களை நம்பி பெரியார் இயக்கத்தை ஆரம்பித்தார், எங்களை நம்பி அண்ணா இயக்கத்தை வளர்த்தார், நான் உங்களை நம்பி இந்த இயக்கத்தை உங்களுடைய கரங்களிலே ஒப்படைக்கின்றேன். காப்பாற்றுங்கள்! தமிழர்களு டைய மானத்தைக் காப்பாற்றுங்கள்! (பலத்த கைதட்டல்), தமிழர்களுடைய சுயமரியாதையைக் காப்பாற்றுங்கள்! (பலத்த கைதட்டல்) யாரோ சில பேர் திராவிடர் என்ற சொல்லை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றால் போனால் போகிறார்கள், ஏற்றுக் கொள்ள வேண்டாம் போகட்டும்! திராவி டன் என்றால், நான் தாசி மகன் அல்ல, திராவிடன் என்றால் நான் சூத்திரன் அல்ல, திராவிடன் என்றால் நான் அடிமை அல்ல, திராவிடன் என்றால் ஆண்ட பரம்பரை (பலத்த கைதட்டல்).

``ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை மாண்டிடும் புழுவே மகுடம் கழற்று!

என்று அன்றைக்குக் கவிதை எழுதியவன் நான். ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை, மாண்டிடும் புழுவே மகுடம் கழற்று என்று கூறியவன் நான். அந்தக் கருணாநிதி இன்றைக்குச் சொல்லுகின்றேன். திராவிடத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை இந்த நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை, திரா விடத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திராவிடத்தை ஏற்றுக் கொள் ளாதவர்கள் நல்லதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். திராவிடத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தமிழை ஏற்றுக் கொள்ள மாட் டார்கள். திராவிடத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தமிழ் உணர்வை ஏற்றுக் கொள்ளாதவர்கள். திராவிடத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள், அண் ணாவை ஏற்றுக் கொள்ளாதவர்கள், பெரியாரை ஏற்றுக்கொள்ளாதவர்கள், தன்மானத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள், ஆகவே அவர்களை புறந்தள்ளி நாம் நம்முடைய பாதையிலே நேர்மையாக, நெறியாக, கட்டுப் பாடாக, கண்ணியமாக, அனை வரையும் நண்பர்களாக ஆக்கிக்கொண்டு குழு மனப்பான்மைக்கு துளியும் இடம் தராமல் இந்த இயக்கத்தைக் கட்டிக்காக்க இந்த நாளில் - மறை மலைநகரில் உறுதி கூறுவோம், உறுதி கூறுவோம் என்று கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன். -இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரை யாற்றினார்.

தமிழ் ஓவியா said...

ஊடகங்களில் ஊடுருவிய லஞ்ச லாவண்யம் ஊழல்! சோவின் பார்வையிலும்கூட!

-ஊசி மிளகாய்-


துக்ளக் 21.11.2012 இதழில் ஒரு கேள்வி - பதில்

கே: ஊழல் குறித்த செய்திகளை வெளியிடாமல் இருக்க, ஜீ.டி.வி. சேனல், தன்னிடம் நூறு கோடி ரூபாய் கேட்டு ப்ளாக் மெயில் செய்தது - என்று நவீன் ஜிண்டால் கூறியுள்ளாரே? இது உண்மையாக இருக்குமா? மீடியா இப்படிச் செயல்பட வாய்ப்புண்டா?

ப: டெலிவிஷன் சேனல்களோ, பத்திரிகைகளோ நிச்சயமாக ப்ளாக் மெயிலில் இறங்காது என்று கூற நான் தயாராக இல்லை. இன்று இருக்கிற போட்டா போட்டியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். செய்தியை முந்தித் தருகிறோம் என்று டெலிவிஷன் சேனல்களிடையே இன்று ஒரு பெரிய போட்டி நடந்து வருகிறது. செவ்வாய்க்கிழமையை அடுத்து புதன்கிழமை வரும் என்று முதலில் கூறியது நாங்கள்தான் என்று கூட அவர்கள் சொல்லிக் கொள்வார்கள் போலிருக்கிறது. அந்த அளவுக்கு இந்தச் செய்தியை முந்தித் தரும் போட்டி நடக்கிறது.

இதற்காகவே ஒரு செய்தியை இவர்கள் உண்டாக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? வேண்டு மென்றே ஒரு முறைகேட்டுக்கு ஏற்பாடு செய்து விட்டு, அதைத் தங்கள் சேனலில் முதலில் காட்டிவிட்டு, நாங்கள்தான் முதலில் சொன்னோம் என்று கூடச் சொல் லிக் கொள்வார்கள்.

இந்த டெலி விஷன் சேனல்களின் போட்டி, ஜர்ன லிஸத்தை மிகவும் கீழே இறக்கிக் கொண்டு போகிறது என்பது என்னு டைய கருத்து.

- இன்றைய ஊழல் ஒழிப்புப் பேர் வழிகள் எப்படிப்பட்ட பிளாக்மெயில் என்ற மெகா தொழில் செய்கிறார்கள் என்பது புரிகிற தல்லவா?

தமிழ் ஓவியா said...

பல அரசியல் பிளாக் மெயிலர்களும் ஊழல் ஒழிப்பு அவதாரத்தை முதலீடாகக் கொண்ட பலரும் இந்த லாபகரமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அது மட்டுமா? பா.ஜ.க.வின் தலைவராக, மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் 2014-இல் அல்லது அதற்குள் வரும்போது, தங்களது செல்லப் பிள்ளையான நிதின்கட்கரி அய்யரே மீண்டும் பா.ஜ.க. தலைவராக தொடர வேண்டும் என்பதற்காக ஆர்.எஸ். எஸ். அமைப்பும் பா.ஜ.க.விலேயே உள்ள பார்ப்பனர்களான சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி போன்றவர்களும் முயற்சிக்கின் றனர்.

மோடி, அத்வானி, ராம்ஜெத்மலானி, யஷ்வந்த் சின்கா, ஜஸ்வந்த் சிங் - போன்ற பலரும் கட்கரி பதவி விலக வேண்டும் என்று போர்க் கொடி தூக்கி நிற்கின்றனர்!

ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி அய்யர் ஒரு சர்டிஃபிகேட் தயாரித்து - கட்கரிக்கு வக் காலத்துப் போட்டு வரிந்து கட்டி நிற்கிறார்!

மோடி அல்லது அத்வானியை முன்னி றுத்தும் நண்பர் சோ கட்கரிபற்றி அவரது ஏட்டில்

கட்கரி ஏள பா.ஜ.க. என்ற தலைப்பில் பல கேள்வி - பதில்களை கட்டம் கட்டி வெளியிட்டு கட்கரியை எதிர்த்து நடைபெறும் இந்த உட்கட்சிப் போரில் ஆஸ்.எஸ்.எஸ்., பா.ஜ.க., ஆதரவாளரான அவர் கட்கரி எதிர்ப்பு நிலையைத் தெளிவாகக் காட்டி யிருக்கிறார். இதோ துக்ளக் ஏட்டில் உள்ளபடி

-கட்கரி VS பா.ஜ.க.,

கே: விவேகானந்தரையும், தாவூத் இப்ராஹிமை யும் ஒப்பிட்டு நிதின் கட்கரி பேசியது பற்றி....?

ப: மிகவும் சாமர்த்தியமாகப் பேசுவ தாக நினைத்துக் கொண்டு, அவர் உளறியிருக்கிறார். டெலிவிஷனில் இது முறையாகக் காட்டப்பட்ட பிறகும்கூட, நான் அப்படி பேசவில்லை - என்று அவர் கூறியது வியப்புதான். ஆனால், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின ருக்கு இது தான் பெரிய விஷயமாகப் படுகிறதே தவிர, கட்கரி மீது படிந்துள்ள கம்பெனி முறைகேடு விவகாரம் பெரி தாகப்படவில்லை. அதைப் பூசி மெழுகுகிறார்கள். இதில் மட்டும் கட்கரியின் மன்னிப்பைக் கோருகிறார் கள். நம் நாட்டில் எல்லாமே தலைகீழாக நடக்கின்றன.

கே: பா.ஜ.க. தலைவர் நிதின்கட்கரி மீதான புகார்கள், எங்கள் உள்கட்சி விவகாரம் - என்று அக்கட்சி கூறுவது பற்றி...?

ப: ஒரு கட்சியின் தலைவர், கம் பெனிச் சட்டத்தை ஏமாற்றுகிற வகையில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பதோ, ஊர் பெயர் விலாசம் இல்லாதவர்கள் எல்லாம் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார் கள் என்பதோ உள்கட்சி விவகாரங்கள் அல்ல. அவை எல்லாம் சட்டத்தின்கீழ் பொது மக்கள் பார்வைக்கு வருபவை. ஆகையால், இதை உட்கட்சி விவகாரம் என்று போர்வை போட்டு முடி விடுவது சரியான செயல்பாடு அல்ல.

கே: நிதின் கட்கரி பதவி விலகல் என்ற பேச்சுக்கே இடமில்லை - என்று பாரதிய ஜனதா கூறியது சரியா?

ப: நாங்கள் பலவீனப்பட்டுத்தான் போவோம். அதை யாராலும் தடுக்க முடியாது என்று சவால்விட எந்த அரசியல் கட்சிக்கும் உரிமை இருக்கிறது. அந்த உரிமையை பா.ஜ.க. பயன்படுத்தி இருக்கிறது. இதில் என்ன தவறு?

கே: நிதின் கட்கரி மீதான ஊழல் புகார்கள் பா.ஜ.க.வை எந்த அளவு பாதிக்கும்?

ப: காங்கிரஸ்மீது பல குற்றச்சாட் டுக்களை பா.ஜ.க., கூறுகிறபோது, இவர்கள் மட்டும் என்ன லட்சணம்? என்ற கேள்வி பலர் மனதில் எழும் அளவுக்கு, இதனால் பாதிப்பு இருக்கும்.

கே: பா.ஜ.க., தலைவராக நிதின் கட்கரி நீடிப்பது, விலகுவது - எது கட்சிக்கு நல்லது?

ப: பா.ஜ.க.வுக்கு எது நல்லது என்று பார்க்கிற அக்கறை வெளியிலிருக்கிற அளவுக்கு, அந்தக் கட்சியின் தலைவர் களுக்கு இல்லை. ஆகையால், இந்தக் கேள்வி அனாவசியமானது.

இத்தகையோர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா? நானிலம் ஏற்குமா? யோசியுங்கள் நண்பர்களே!19-11-2012

sathish said...

pongda....