Search This Blog

25.11.12

பார்ப்பனர்கள் திருந்தி விட் டார்களா? பார்ப்பனர்கள் இன்றைக்கும் எப்படி இருக்கிறார்கள்?

ஹிந்து தர்மாவைக் காப்பாற்றுகிறார்களாம்!

பார்ப்பனர்கள் இன்றைக்கும் எப்படி இருக்கிறார்கள்?

அவர்கள் எப்பொழுதோ திருந்தி விட்டார்கள். அவர்களிடையே எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டன!

முனியாண்டி ஓட்டலில் மூச்சு முட்ட சாப்பிடுகிறார்கள் _ தண்ணி அடிக்கிறார்கள்; கஞ்சா அடிக்கிறார்கள் என்று சொல்லுவதெல்லாம் மாற்றமா?
மாட்டு நாக்கைத் தேடி வாங்கி சாப்பிடும் சர்.சி.பி. இராமசாமி அய்யர் கூட பார்ப்பனீயத் தன்மையைக் கட்டிக் காப்பதிலும், முட்டுக் கொடுப் பதிலும் முப்புரி நூலை முறுக்கிக் கொண்டு முன் வரிசையில் தானே நின்றிருக்கிறார்.

பல்கலைக் கழகத்திலே தங்க மெடல் வாங்கிய கே.ஆர். நாராயணன் பட்டுச் சட்டை போட்டு வந்தார் என்பதற்காக ஒரு கல்லூரி உதவிப் பேராசிரியர் வேலை கொடுக்க முன் வரவில்லையே! மாறாகக் கிளார்க்கு வேலை இருக்கிறது _ என்ன போறீயா என்று கேட்டவர்தானே?

குடிஅரசு தலைவரான நிலையில் இதுபற்றிக் கூறிப் புலம்பினாரே கே.ஆர். நாராயணன்.

வலைத் தளத்தில் ஒரு செய்தி! சென்னையைச் சேர்ந்த நாகராசன் என்ற ஒரு பார்ப்பனர்; அவர் ஒரு காலத்தில் நாத்திகவாதியாக இருந்து, மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் தெய்வத்தின் குரலைப் படித்துத் திருந்தி விட்டாராம். (அரைகுறை ஆசாமி!)
என்ன திருத்தம்? அங்கேதான் சமாச்சாரமே சத்தம் போடாமல் ஒளிந்து கொண்டிருக்கிறது.

நாகராஜனின் மகள் -வைஷ்ணவி பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போதே கல்யாணம் கட்டி இருக்கிறார்கள். பிள்ளையாண் டானுக்கும், பெண்ணுக்கும் இடைப் பட்ட வயது ஒன்றும் அதிகம் இல்லை _  பத்தே பத்து தானாம்!

சென்னையில் படித்த பெண்;  நன்றாகப் படித்துக் கொண்டிருந்த பெண்ணுக்குத் திருமணம் ஏற்பாடு _ பள்ளித் தலைமை ஆசிரியை நல்லா படிக்கிற பெண்ணுக்கு இப்ப என்ன கல்யாண அவசரம் என்று கேட்டி ருக்கிறார்.
இல்லை; இல்லை; கல்யாணத்துப் பிறகும் கூட எங்கள் பெண் படிப்பாள் என்று உத்தரவாதம் கொடுக்க, தலைமை ஆசிரியையும் நம்பி ஆசீர் வாதம் பண்ணி அனுப்பி வைத்தாராம்!

பெண்ணின் தாயார் சொல்கிறார் கேண்மின்! சிட்டியில கல்யாணப் பண்ணினா பிரச்சினை ஆகுமுன்னு கிராமத்திலே பண்ணினோம். அந்த நாள் கல்யாணம் பெரியவர் எப்படி சாஸ்திர வார்தமா பண்ணச் சொன்னாளோ அதே மாதிரி நடந்தது விவாகம் என்றார்.

பெண்ணின் தோப்பனாரோ கல்யாணம் சத்தியமங்கலத்தில் நடந்தது என்று கூறுகிறார்.

காஞ்சி  பெரியவாள் கூறியபடி நடத்தினார்களாம். ஹிந்து தர்மாவை கடைப்பிடிப்பதற்காகவே இப்படி செய்தார்களாம்!

பார்ப்பனர்கள் என்னவோ திருந்தி விட்டனர் என்று பார்ப்பனர்களைவிட பத்து மடங்கு அதிகம் பாய்ந்து பார்ப்பனர் அல்லாதார் சிலர் பசப்பு கிறார்களே _ இந்தக் குழந்தைத் திருமணத்துக்கு என்ன சமாதானம் சொல்லுவார்கள்?
ஹிந்து தர்மாவைக் காப்பாற்ற இவ்வாறு செய்தார்களாம். பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பு திருமணம் செய்தால் சட்டப்படி குற்றம்... ஆனால் சாஸ்திரத்தைப்பற்றி கவலைப்படுகிறார்களே தவிர சட்டத்தை மலம் துடைக்கும் காகிதமாக அல்லவா கசக்கி வீசுகிறார்கள்?

பெண்களுக்கு வயது வரம்பை நிர்ணயிக்கும் சாரதா சட்டத்தை எதிர்த்துப் பார்ப்பனத் தலைவர்கள் எப்படி எல்லாம் கூச்சல் போட் டார்கள்?
அரசாங்கம் இந்துக்களுடைய விவாகத்தில் தலையிட்டால் இந்து சமூகமே கெட்டு விடும்; பெண் களுக்கு 10,12 வயதுக்கு முன்னமையே திருமணம் செய்து விட வேண்டும், இல்லையேல் பாவம் வந்து சூழும் என்று பராசரர் எழுதி இருக்கிறார். நாங்கள் பாவத்திற்குப் பயப்படு வோமா? அல்லது உங்கள் சட்டத் திற்குப் பயப்படுவோமா என்று வயது சம்மதக் குழுவின் முன் சாட்சியம் அளித்தாரே திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர்.

இந்து ஏட்டுக்கு மூக்குடைப்பு

இந்து ஏடு வேடிக்கையான வெண்டைக்காய், விளக்கெண்ணெய் பாஷ்யம் செய்தது.

இதுகுறித்து திராவிடன் ஏடு மூக்கை உடைக்கும் வண்ணம் பதிலடி கொடுத்தது.

இந்து பத்திரிகையில்  10 வயதுப் பெண்ணோ அல்லது 12 வயதுப் பெண்ணோ ஒருவனுக்கு கல்யாணத் திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்தது. இதைப் பார்த்து ஒரு சீர்திருத்தக்காரர் இந்துவை ஒரு கேள்வி கேட்டார். அதாவது ஓ! இந்துவே. நீர் சீர்திருத்தக்காரன் என்று முழக்கம் செய்கின்றனயே! இந்தக் காலத்தில்கூட 10 வயது அல்லது 12 வயது பெண் ஒரு மாப்பிள்ளைக்குக் கல்யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்யலாமோ? என்று கேட்டார். அதற்கு இந்துப் பத்திரிகை சொன்ன பதில் என்ன என்று பாருங்கள்: 10 அல்லது 12 வயது பெண்களை இப்போது விவாகம் செய்வது என்பதாகக் காணப்படுவதானது விவாகச் சடங்கல்ல. அது நிச்சயதார்த்தத்திற்கு ஒப்பானது. பெண்ணையும், மாப்பிள்ளையையும் வீட்டுக்குள் விட்டுக் கதவு சாத்து கின்றோமே அதுதான் விவாகம் என்று அயோக்கியத்தனமாகப் பதில் எழுதிற்று.

இதற்கு அந்தச் சீர்திருத்தக்காரர் என்ன பதில் எழுதினார் என்றால் ஓ இந்துவே! 10 வயதிலும் 12 வயதிலும் கல்யாணம் செய்வதுபோல் கண்ணுக் குத் தெரிவதெல்லாம் கல்யாணம் அல்ல. அது நிச்சயதார்த்தம் என்று சொல்ல வருவாயானால் அந்த 10,12 வயது பெண்களின் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட புருஷன் செத்தால் தாலி அறுபட்டதாக பெயர் செய்து மொட்டையடித்து முக்காடு போட்டு மூலையில் உட்கார வைப்பது ஏன்? அதுகூட உங்கள் நிச்சயதார்த்தச் சடங்கில் சேர்ந்த நிபந்தனையா? என்று கேட்டார். உப்புக் கண்டம் பறி கொடுத்த பார்ப்பனத்திபோல் இந்து இதற்கு ஒரு மறுமொழியும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டது. (திராவிடன் 13.03.1928 பக்கம் 7)
என்னதான் பார்ப்பனர்கள் படித் திருந்தாலும், பட்டம் பெற்றிருந்தாலும், தங்களின் பாசி பிடித்த பார்ப்பனீய ஆபாச கலாச்சாரத்திலிருந்து வெளியேறிட விரும்புவதில்லை.

எடுத்துக்காட்டாக திருவாளர் சோ. ராமசாமி அய்யரை எடுத்துக் கொள்ளலாம். இன்று வரை மனுதர்ம சாஸ்திரத்திற்கு முட்டுக் கொடுத்து எழுதி எழுதி மாய்கிறார்.

அந்த மனுதர்மம் என்ன கூறு கிறது? நாம் கூறினால் நமக்கு ஒரு முத்திரையைக் குத்தி விடுவார்கள் மறைந்த காஞ்சி மகாப் பெரியவாள் என்று மகாத்மியம் பேசுவார்களே, சந்திரசேகரேந்திர சரஸ்வதி, அவரின் அத்தியந்த சீடர் அன்னியோன்யம் என்று சொல்லுவார்களே _ அந்த அளவுக்குப் பாசக் கயிற்றால் பிணை யப்பட்டவரான அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

நக்கீரன் இதழில்  எழுதிய  எங்கே போகிறது இந்து மதம்? என்ற தொடர் பெரிய நூலாகவே வெளி வந்துள்ளது.

பால்ய திருமணம் குறித்து மனுகூறுவதை அவரே விசனப்பட்டு எழுதியுள்ளார். அதனை எடுத்துக் காட்டுவதற்குக்கூட, எழுதுவதற்குக் கூட பேனாமுனை வெட்கப்படுகிறது.

இந்த ஸ்மிருதி (மனுஸ்மிருதி) விதியை எழுதுவதற்கு என் பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டு இருப்பதற்காக சமஸ்கிருதப் பாஷையே கூச்சப்பட வேண்டும் என்று பீடிகை போட்டே எழுதியுள்ளார்.
அவர் எழுதியதாவது: இக்கால அப்பாக்களுக்கு தெரி யாமல் இருக்கலாம். அக்கால அப்பாக் களுக்கு மநு வகுத்த தண்டனைகள் தெரியும். அதனால் அவர்கள் ஆடிப் போயிருந்தார்கள். அந்தத் தண் டனையை அனுபவிப்பதை அவர் களால் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.
அந்த அசிங்கத்தை செய்வதை விடவும் தங்கள் ஆயுளையே முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் அந்த அப்பாக்கள்; அப்படிப்பட்ட அளவுக்கு அது என்ன தண்டனை?

மாஸி மாஸி ரஸ்தஸ்யஹா
பிதா பிபதி கோனிதம்...

இந்த ஸ்மிருதி விதியை எழுது வதற்கு என்  பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டிருப்பதற்காக சமஸ்கிருத பாஷையே கூச்சப்பட வேண்டும். அந்த விதியின் விளக்கத்தை உங்களுக்கு தமிழில் நான் சொல்லும்போது.. தமிழன் தரம் கெட்டுவிடக் கூடாதே என நான் பயப்படுகிறேன்.

அது என்னவென்றால்... அடே கையாலாகாத அப்பா.. உன் பெண்ணை எட்டு வயதிலேயே இன்னொருவனுக்கு நீ பிடித்துக் கொடுக்க வேண்டும். தவறிவிட்டாய், அவள் இப்போது ருதுவாகி விட்டாள்.

ருதுவான பின் மூன்று வருஷத் துக்குள் நீ அவளுக்கு மண முடிக்க வில்லையென்றால்.. அவளாகவே சுயம்வரம் நடத்தி தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், ருதுவாகும்வரை நீ அவளை உன் வீட்டிலேயே வைத்திருப்பது எப்படிச் சரியாகும்?

அதனால் உனக்கு இதோ தண்டனை. ருதுவாகி கல்யாணமா காமல் அவள் இருக்கும் காலம் வரை... உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற் றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படியொரு தண்டனையை பெறு கிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்தத் தண்டனை!

பெற்ற மகளிடம் அப்பா செய்ய வேண்டிய காரியமாக மநு சொன் னதைத் தெரிந்து கொண்டீர்களா? எழுதி முடித்தபின் என் பேனாவுக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. மரண தண்டனை விதித்து தீர்ப்பு எழுதிய பேனாவை முனை குத்தி முறித்துப் போட்டு விடுவதைப் போல... இந்த பேனாவையும் தூக்கி எறிந்து விடலாமா என தோன்றுகிறது என்று எழுதியிருப்பவர் விடுதலை ஆசிரியர் அல்லர்; மறைந்த மகா பெரியவாளின்  அத்தியந்த சிஷ்யர் அக்னி கோத்திரம் ராமானுஜ தாத் தாச்சாரியார் _ நினைவில் வையுங்கள்!

பார்ப்பனர்களின் கூவம் கலாச்சாரத்துக்கு மேலும் என்ன சாட்சியம் வேண்டும்?
பத்தாம் வகுப்பில் படித்த பெண்ணை சத்தியமங்கலத்துக்கு அழைத்துச் சென்று அய்ந்து நாள்கள் கல்யாணம் நடத்தியுள்ளனர் - பெரிய சங்கராச்சாரியார் சொன்னதுக்கேற்ப நடத்தி இருக்கின்றனர். ஹிந்து தர்மாவைக் கடைபிடிப்பதற்காகத்தான் இப்படி செய்துள்ளார்களாம். பார்ப்பனர்கள் திருந்தி விட் டார்களா? பதில் உங்கள் முடிவுக்கே!

சட்டம் என்ன செய்கிறது?

15 வயது பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளனர். சிதம்பரத்தில் தீட்சதர்கள் வீடுகளிலும் பால்ய கல்யாணங்கள் இன்றும் நடந்து கொண்டு தானிருக்கின்றன. அரசு சட்டம் கொட்டாவி விட்டுக் கொண்டு இருப்பானேன்? பார்ப்பனர் சமாச்சாரம் என்றால் சட்டம்கூட பதுங்குக் குழிக்குப் போய் விடுமோ!

 ----------------------- மின்சாரம் அவர்கள் 24-11-2012 “விடுதலை”ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

32 comments:

தமிழ் ஓவியா said...


சிறையில்கூட


பெரியார் அவர்கள் குறிப்பிட்டதாவது:

சிறைகளில்கூட விகிதத்துக்கு மேல் தான் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்!

அவர்களெல்லாம் பாங்கியை மோசடி செய்தவர்களும் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியோருமே!

கஞ்சிக்கில்லாது ஏதோ கத்திரிக்காய் களவாடிய திராவிடர்கள்தான் பெரும் பாலும் சிறைகளில் என்றார்.

- குடிஅரசு தொகுதி 42 பக்கம் 201

தமிழ் ஓவியா said...


என்றும் பயன் தரும் இனிய சிந்தனைகள்!


ஒரு விஷயத்தைத் தத்துவ விசாரணை செய்ய முதலில் என்ன? ஏன்? எதற்காக? எப்படி? எங்கே? எப்போது? என்ற ஆறு வினாக்களைப் போட்டு, திருப்தியான பதில் பெற வேண்டும். - தந்தை பெரியார்

தாங்கள் வகுப்புணர்ச்சியை விடாமல் இருந்து கொண்டு, அதே சமயம், மற்றவர்களைப் பார்த்து வகுப்புணர்ச்சியை விட்டு விடுங்கள் என்று கூறுப வர்கள் தென்னிந்தியப் பார்ப்பன அரசியல்வாதிகள் ஆவார்கள் - லாலாலஜபதிராய்

கோயில் உள்ளே சிலை; இடையே திரை; அதன் பின்னே அய்யர்; அவர் தயவு வைத்தால் திரை விலகும். தயவுக்கு தட்சணை வேண்டும். தயாபரனைக் காண இத்தனை தடைகள்; என்ன நயவஞ்சகம் பொதுவிடத்தில்? - பேரறிஞர் அண்ணா

விவாதம் இருக்கலாம்; வாக்குவாதம் செய்யலாம்; ஆனால் விதாண்டா வாதம்தான் இருக்கக் கூடாது. - முத்தமிழறிஞர் கலைஞர்

விருப்பங்களை (Aptitude) விலை கொடுத்துப் பெறலாம். மன உறுதிகளை (Attitude) மனப் போக்கினை எங்கும், எவரும் விலை போட்டு வாங்கிவிட முடியாது - தமிழர் தலைவர் வீரமணி

எடுத்ததை எல்லாம் கடவுளாக்கி வழிபட்டு கோயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விசித்திர வழக்கம் இந்தியாவில் இருக்கிறது. பெயரளவில் பக்தி, பண்ணிவிட்டு நடைமுறையில் நேர்மாறான செயல்களைச் செய்வதும் நம்மவர் வழக்கமாகி விட்டது _ பண்டித ஜவகர்லால் நேரு

உன் மனம் வலிக்கும்போது சிரி; பிறர் மனம் வலிக்கும்போது, சிரிக்க வை - சார்லி சாப்லின்

பார்க்கின்ற மனிதர்களிடம் அன்பு செலுத்த முடியாத நீ பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்தப் போகிறாய்? - அன்னை தெரசா

மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம்தான் _ அப்துல்கலாம்

ஆம்! அறியாமை அகல, பழமைப் பஞ்சாங்கத்தைப் பொசுக்கும் ஆற்றல்மிகு திராவிட இயக்கத்தின் தீப்பொறிகளே!
நீவிர் எழுந்து நடந்தால் எரிமலையும் வழிகொடுக்கும்! வரலாறும் வாழ்த்து சொல்லும்!! செல்வோம்!! வெல்வோம்!!

தொகுப்பு: நெய்வேலி க. தியாகராசன்
கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...


அறிவியல் கூடமா? அஞ்ஞானிகளின் மடமா....?

அறிவியல் உலகில் வாழும் அன்பர்களே! வணக்கம்.

மனித சமுதாயத்திற்குத் தேவையான புதிய புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கியவர்கள் அறிவியல் அறிஞர்களே ஆவார்கள். வி ஞ்ஞான கண்டு பிடிப்புகளுக்கும் அஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பான கற்பனை கடவுளர்களுக்கும் எள் முனையளவுகூட தொடர்பு கிடையாது. ஆகவே மனித குல மேம்பாட்டிற்காக தம் நேரம் பொருள் உயிரையும் கொடுத்து பாடுபட்ட அறிஞர் பெரு மக்களையே நாம் நன்றி கூறி, பாராட்ட வேண்டியதே அல்லாமல் கற்பனை கடவுளர்களை அல்ல.

இயந்திரங்களைத் திட்டமிட்டு பராமரித்தலே (routine and sheduled maintenance etc). தொழிற் கூடங்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய விதிகளாகும். அதை விடுத்து ஆயுத பூஜை என்ற பெயரில் கடவுளர் படம் சிலை வைத்து மத பூஜை செய்வது அறிவியலை கேலிக்குள்ளாக்குவதோடு நாட்டின் மதச்சார்பின்மை கொள்கையை அவமதிக்கும் செயலாகும். அரசு அலுவலகங்களில், அரசுக்கு சொந்தமான இடங்களில் கடவுளர் படம் சிலை வைத்து மத வழிபாடு செய்யக் கூடாது என மத்திய மாநில உள்துறை அமைச்சக குறிப்பாணை எண்: 5/23/94 தேதி 4.5.94 மற்றும் Lr.No.3379/L&O.B/91-3, Public (L&O.B) dt.16.9.93 மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் இந்தச் சட்டத்தை குப்பையாக ஒதுக்கி விட்டு ஒருபுறம் விஞ்ஞானத்தின் பலனை அனுபவித்துக் கொண்டு மறுபுறம் அஞ்ஞானத்தை பரப்புவதில் முனைப்புடன் செயல்படுகிறார்கள். நிர்வாகப் பொறுப்பிலுள்ளவர்களும் இதனைக் கண்டு கொள்ளாமல் இருப்பது நாட்டின் மத சார்பின்மை தத்துவ கொள்கைக்கு எதிரான செயலுக்கு துணை போவதாகவே அமையும்.

அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது பகுத்தறிவு, மனிதநேயம் சமூக சீர்திருத்த எண்ணத்தில் நாட்டம் இவை ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகளில் ஒன்று என அரசமைப்புச் சட்டம் 51A (h) பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அறிவியல் சாதனங்களை கண்டுபிடித்த அயல் நாட்டினர் எவரும் அதற்கு பூஜை செய்வதில்லை. மேன் மேலும் பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி சாதனை படைக்கிறார்கள். நம் நாட்டில் பக்தி என்ற பெயரில் ஆயுதங்களுக்கு பூசை போடுவதாக அறிவியலைக் கொச்சைபடுத்தும் செயலைக் கூச்சமின்றி செய்கிறார்கள். கொள்ளையடிப்பவன், கூலிப்படை கொலைகாரன், சாராயம் விற்பவன் இன்னும் அவனவன் தொழிலுக்கேற்ற ஆயுதங்களுக்கு பூஜை செய்தால் ஆண்டவன் அவர்களின் செயலுக்கு துணை போவானா? இதனால் நாட்டில் ஒழுக்கம்தான் வளருமா? பக்தி என்பது அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை அதனை பொது இடங்களில் புகுத்துவது என்பது நாகரிகமற்ற செயலாகும்.

ஆகவே, இந்நாளில் உலக அறிவியல் மேதைகளை நினைவு கூர்வோம். நாம் வளமோடு வாழ்வதற்கு இந்த அணுவாற்றல் துறை உருவாகுவதற்கு காரணமாக இருந்த அணுவாற்றல் துறையின் தந்தையாக கருதப்படும் டாக்டர் ஹோமி ஜகாங்கீர் பாபா அவர்களுக்கு நன்றி செலுத்துவோம். இங்ஙனம்

பகுத்தறிவாளர் கழகம், கல்பாக்கம் காஞ்சி மாவட்டம்

(Affiliated to state Rationalists Forum, Madras, Read No.286/70, Societ Act. 1860)
மற்றும் சமூக நல்லிணக்க குழு, கல்பாக்கம்


தமிழ் ஓவியா said...


இடஒதுக்கீட்டுக்கு மட்டுமே ஜாதி அளவுகோல்! தமிழர் தலைவர் எழுச்சி முழக்கம்


இடஒதுக்கீட்டுக்கு மட்டுமே ஜாதி அளவுகோல்!

ஜாதியை வைத்து அரசியல் நடத்த ஆசைப்பட வேண்டாம்!

தந்தை பெரியார் பிறந்த மண் அதனை அனுமதிக்காது - ஏற்காது!

தமிழர் தலைவர் எழுச்சி முழக்கம்

- நமது சிறப்புச் செய்தியாளர்

புதுச்சேரி, நவ.24- இடஒதுக் கீட்டுக்கு மட்டுமே ஜாதி அளவுகோல், அரசியலுக்கு அதைப் பயன்படுத்த ஆசைப்பட வேண்டாம் - தந்தை பெரியார் பிறந்த மண் அதனை ஏற்காது. அனுமதிக்காது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

புதுச்சேரியில் நேற்று (23.11.2012) நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

இன்று காலையில் அரங்கமும், உள்ளமும் நிறையக் கூடிய வகையில் பேசு சுயமரியாதை உலகு! எனும் தலைப்பில் சிறப்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இளைஞர்கள் சிறப் பாகத் தயாராகிக் கொண்டு இருக் கின்றனர் என்பதற்கு அது ஓர் எடுத்துக்காட்டாகும்.

1945இல் இதே புதுவையில்...

1945 ஜூலையில் இதே புதுச் சேரியில் நடைபெற்ற திராவிடர் கழகத் தொடக்க விழாவினையும் நான் நினைத்துப் பார்க்கிறேன்.

அப்பொழுது நான் 12 வயது சிறுவன். விழாவின் முதல் நாள் இரவு போர் வாள் எனும் நாடகம் நடைபெற்றது. கலைஞர் அவர்கள் அதில் முக்கிய பங்கேற்று நடித்தார். சுயமரியாதைத் திருமணம் ஒன்றிற்குத் தலைமை ஏற்று நடத்தும் பாத்திரத்தை அந்த நாடகத்தில் நான் ஏற்றேன்.

கலைஞர் தாக்கப்பட்டார்!

மறுநாள் நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன. அதனைப் பொறுக்க மாட்டாத காலிகள் கழகத் தோழர் களைத் தாக்கினர். அதில் கலைஞர் அவர்கள் கடுமையாகத் தாக்கப் பட்டுத் தூக்கி எறியப்பட்டார்.

அப்படியெல்லாம் வன்முறைகளை பிற்போக்குவாதிகள் நம்மீது ஏவி னாலும் கழகம் ஒன்றும் அழிந்து போகவில்லை.

இன்றைக்கு 67 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே புதுச்சேரியில் இன்று எழுச்சிகரமாகவும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடனும் திராவிடர் கழக மாநாடு வெற்றிகரமாக நடந்து கொண்டுள்ளதே!

எந்தக் கொம்பனாலும் வீழ்த்த முடியாது!

எந்தக் கொம்பனாலும் இந்தக் கழகத்தையோ கொள்கையையோ எவராலும் வீழ்த்தவே முடியாது (பலத்த கரவொலி) இன்னும் சொல்லப் போனால் இயக்கத்தின் சாதனைகள் நாளும் குவிந்து கொண்டுதான் இருக்கின் றன. உலகம் பூராவும் தந்தை பெரியார் கொள்கைகள் பரவிக் கொண்டு தானிருக்கின்றன.
திராவிடத்தால் வீழ்ந்தோமா?

சிலர் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிறார்கள். திராவிடர் இயக்கத் தால் வாழ்ந்தோம் என்பதுதான் வரலாறே தவிர, வீழ்ந்தோம் என்ப தற்கு எந்தச் சான்றும் கிடையாது.

வீழ்ந்தோம் என்று சொல்பவர்கள் - எது எதற்கெல்லாமோ வீழ்ந்திருப் பார்கள் - அதற்கு நாமா பொறுப்பு?

இப்பொழுது சிலர் ஜாதிபற்றிப் பேச ஆரம்பித்துள்ளார்கள். அதை வைத்து அரசியல் நடத்தவும் ஆசைப் படுகிறார்கள். அதில் அவர்கள் வெற்றி பெறவும் முடியாது.

ஜாதி என்பதற்கு என்ன அடை யாளம் என்று சொல்ல முடியுமா? ரத்தத்தை வைத்துப் பரிசோதனை செய்து இது பார்ப்பான் ரத்தம் செட்டி யார் ரத்தம், வன்னியர் ரத்தம், தாழ்த் தப்பட்டோர் ரத்தம், அருந்ததியர் ரத்தம் என்று சொல்ல முடியுமா?

தமிழ் ஓவியா said...

ரத்தத்தில் ஜாதிப் பிரிவு உண்டா?

சாகப் போகும் அபாய கட்டத்தில் இருப்பவனை காப்பாற்றிட ஜாதி பார்த்தா ரத்தம் ஏற்றுகிறார்கள்?

நாம் எடுத்துக் கொள்ளும் மருந்து பாட்டில்களைப் படித்துப் பாருங்கள். அதில் பாய்சன் இத்தனை விகிதம் என்று அச்சிட்டு ஒட்டியிருப்பார்கள். நோயை நீக்க விஷம் அளவோடு கலக் கப்பட்ட மருந்தினை நாம் எடுத்துக் கொள்வதில்லையா?

இடஒதுக்கீட்டுக்கு மட்டுமே ஜாதி அளவுகோல்!

இடஒதுக்கீட்டில் ஜாதி என்பதும் இந்த அளவில்தான். கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும்தான் ஜாதி அளவுகோலே தவிர, வாழ்வில் வேறு எதற்கும் ஜாதி தேவையில்லை என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. மக்கள் மத்தியில் இளைஞர்கள் மத்தியில் இந்தக் கருத்துக்களை எடுத்துச் செல்லுவோம்! இந்தத் தலைமுறையில் ஜாதியை அதன் ஆணிவேரோடு வீழ்த்துவோம் இது தந்தை பெரியார் பிறந்து, பக்குவப் படுத்தப்பட்ட மண் என்பதை மறந்து விட வேண்டாம். இதில் ஜாதியை வைத்து விளையாடலாம். அரசியல் நடத்தலாம் என்று யார் நினைத்தாலும் அவர்கள் தோல்வியைத் தான் சுமப் பார்கள் (பலத்த கரஒலி).
பாலம் கட்டும் இடங்களில் வாகனங் கள் பயணம் செய்ய மாற்றுப் பாதை இருப்பது போல ஜாதி ஒழிக்கப்படும் வரை ஜாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு - இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜாதி அளவுகோல் எதுவரை?

பார்ப்பனர் அல்லாதவர்கள், தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் நூற்றுக்கு நூறு கல்வி, வேலை வாய்ப்புகளை உரிய வகையில் பெறும் வரை இந்த ஜாதி அளவுகோல் இருக்கும். காரணம் - இந்த ஜாதியின் அடிப்படையில்தான், ஜாதியைக் காட்டித்தான் நம் மக்களுக்குக் கல்வி தடை செய்யப்பட்டு இருந்தது.
எனவே கல்வி கற்க எது தடையாக அளவுகோலாக இருந்ததோ அதையே கல்வி உரிமை பெறுவதற்கு அளவுகோ லாக மாற்றுவதுதான் இதன் தத்துவம்.
இதனைப் புரிந்து கொள்ளாமல், ஜாதி உணர்வை விசிறி விடுவதை அனுமதிக்க முடியாது.

புண்படுத்த அல்ல!

திராவிடர் கழகத்தின் பணி என்பது யாரையும் புண்படுத்த அல்ல - மாறாகப் பண்படுத்துவதுதான்.
புண்படுகிறது என்றால் எதைப் பொறுத்தது என்பதுதான் முக்கியம். திருடனைக் கைது செய்தால் அவன் மனம் கூடத்தான் புண்படுகிறது - ஏற்றுக் கொள்ள முடியுமா?

இந்த மாநாட்டில் நாங்கள் நிறைவேற் றியுள்ள தீர்மானம் தொலைநோக் கானவை. நாங்கள் இன்று ஒரு தீர்மா னத்தை நிறைவேற்றினோம் என்றால் அது நாளையதினம் சட்டமாக, திட்டமாக ஆகப் போவதாகும்.

ஈழத் தமிழர்ப் பிரச்சினை

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை இப்பொழுது இன்னொரு கட்டத்தில் அந்தப் பிரச்சினை இருக்கிறது. போர்க் குற்றம் புரிந்த ராஜபக்சே - குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். எஞ்சி வாழும் தமிழர்களின் வாழ்வா தாரம் காப்பாற்றப்பட வேண்டும். பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஈழத் தமிழர்கள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும்.

இவற்றில் இந்தியாவின் உதவியும், பன்னாடுகளின் ஆதரவும் - அய்.நா.வின் ஒத்துழைப்பும் தேவைப்படும் கால கட்டம் இதுவாகும்.
டெசோ இந்தத் திசையில் தன் கடமையைச் சிறப்பாக ஆற்றிவருகிறது.

கழகத் தோழர்களுக்குப் பாராட்டு!

இதில் நமக்குள் அரசியல் பார்வை தேவையில்லை. சமூகப் பார்வை, பொதுப் பார்வை தேவை. குறுகிய காலத்தில் அறி விக்கப்பட்ட மாநாட்டை வெகு சிறப்பாக நடத்தி முடித்த கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் என்று குறிப்பிட்டார்.

வீரபாண்டியார்க்கு இரங்கல்!

சேலத்துக் கொள்கைச் சிங்கம், சுயமரியாதை வீரர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள் மறைவுற்றார் என்ற தகவல் மாநாட்டுக்காக புறப்பட்டு வரும் வழியில் கேள்விப்பட்டு பெரிதும் துயரமடைந்தேன். உடல் நலம் சரியில்லாமல் இருந்த அவரை அவர் வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்து வந்தேன். அவர் முடிவு இப்படி விரைந்து வரும் என்று எதிர்பார்க்கவில்லை. திராவிடர் இயக்கத்தில் முக்கிய தூண் மட்டுமல்ல; பொது வாழ்க்கையில் பல தரப்பினராலும் மதிக்கப் பெற்றவர் வீரபாண்டியார். அடக்கு முறைகளைச் சந்தித்தவர். அவர் மறைவிற்காக இந்த மாநாடு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது!

- புதுச்சேரி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 23.11.2012


தீக்குண்டம் இறங்குவோம்!

இந்த மாநாட்டு நிகழ்ச்சியில் தீக்குண்டம் இறங்குவது என்ற ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கடைசி நேரத்தில் காவல்துறையினரின் குளறுபடியால் மேற்கொண்டு முயற்சிகளுக்கும் போதிய அவகாசமும் இல்லாமை யால் அந்த நிகழ்ச்சி இடம் பெற வில்லை. விரைவில் பெரிய அளவில் அந்த நிகழ்ச்சி கண்டிப்பாக இதே புதுச்சேரியில் நடைபெறும் (பலத்த கைதட்டல்).

காவல்துறையின் இந்த முடிவு சட்ட விரோதமானது; புதுவை காவல்துறையைப் பொறுத்த வரையில் இந்தச் சட்ட விரோத செயல் கடைசியாகவே இருக்கட் டும்; இருக்க வேண்டும். இல்லை யேல் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரி வித்துக் கொள்கிறேன்.

- புதுச்சேரி மாநாட்டில் தமிழர் தலைவர் 24-11-2012

தமிழ் ஓவியா said...


கழகக் குடும்பத்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள்!


கழகப் பொறுப்பாளர்கள், பகுத்தறிவாளர் கழகத்தவர் மற்றும் நமக்கு நெருக்கமான நலம் விரும்பும் நண்பர்கள் ஆகியவர்களின் அன்புக் கட்டளைகள் காரணமாக எனது பிறந்த நாள் விழா என்னையும் சூழ்நிலைக் கைதியாக ஆக்கி விட்டது.

முன்பு 75 வயது என்பதை ஒரு காரணமாகக் காட்டியதுபோல, இப்போது 80 வயது துவக்கம் என்பதையும், ஒரு முக்கிய சாக்காக ஆக்கிக் கொண்டு கழகக் குடும்பத்தினர் ஏற்பாடுகளை - எங்களிருவர் விருப்பத்தைப் பற்றியோ, கருத்தைப் பற்றியோ சிறிதும் பொருட்படுத்தாமல் செய்து வருகின்றனர்.

தந்தை பெரியாரின் வாழ் நாள் மாணவனான எனக்கு தேவையற்ற ஆடம்பர விழா, எனக்கு ஒரு தண்டனை போன்றதே!

என்றாலும் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? சமுதாயத்திற்கும், மக்களுக்கும் பயன்படும் வகையில் அதனை நடத்திடுங்கள் என்று விழாக் குழுவினரை, கழகக் குடும்பத்தவர்களை நான் மெத்தப் பணிவுடன் வேண்டிக் கொண்டேன் - கொள்கிறேன்.

1. மரக்கன்றுகளை, நாடு தழுவிய அளவில் நட்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், புவி வெப்பமயமாதலைத் தடுத்தல் ஆகிய வற்றை மிக முக்கிய பணியாகக் கொள் ளுதல்.

2. 8 முதல் 10 புதிய நூல்களை வெளியிட்டு திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவுக்கு முத்திரை பதித்தல்.

3. ஜாதி, தீண்டாமை பெண்ணடிமை, என்ற பிறவிப் பேதம் ஒழிந்த புதியதோர் அறிவுலகை, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கி, 2013 முடிவதற்குள் தமிழ் நாட்டில் நாடு, நகரம், பட்டி தொட்டி யெல்லாம் அடர்த்தியான பிரச்சாரக் கூட் டங்கள் 800 முதல் 1000 வரை நடத்துதல் - என்றெல்லாம் திட்டமிட்டுள்ளது - மிகவும் புத்தாக்கத்தை உருவாக்கும் என்பது உறுதி!

மற்றொரு முக்கிய வேண்டுகோள்

வாழ்த்துத் தந்திகள், கூரியர் அஞ்சல்கள் - மூலம் செலவழிக்கும் பணத்தை பெரியார் (தொண் டர்கள்) நல பாதுகாப்பு அறக்கட்டளை Periyar Health Care Trustக்கு - சிறு தொகையாக இருப்பினும் அனுப்பி விடுங்கள் - பெயர் மூலம் நீங்கள் வாழ்த்தியுள்ளீர்கள் எனப் புரிந்து கொள்ளும்.

தோழர் சந்திப்பிலும், நேரிலும் கவரில் பெயருடன் உண்டியலில் போடலாம். சிறு துளி பெரு வெள்ளம் ஆகலாம். துயர் துடைக்க, நலம் மீட்க அந்நிதி பயன்படட்டும் - என்பதே நமது பணிவன்பான வேண்டுகோள்!
கி.வீரமணி
சென்னை உங்களின் வாழ்நாள்
24.11.2012 தொண்டன், தோழன்

தமிழ் ஓவியா said...


ஏன் சுயமரியாதை வெடித்தெழவில்லை?


ஜாதியைப் பற்றிப் பேசுகிறார்களே. பார்ப்பனர் களைத் தவிர மற்றவர்கள் கோயில் கருவறைக் குள் நுழையக் கூடாது , முடியாது என்கிறார்களே!

செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்லலாம்; கோயில் கருவறைக்குள் செல்ல முடியாது என்பது எந்த நிலை? காரணம் நாம் சூத்திரர் களாம்!

இதுபற்றி எல்லாம் ஜாதிபற்றிப் பேசுபவர்கள் கவலைப்படாதது ஏன்? எல்லா ஜாதியினரையும் சேர்த்துத்தான் சூத்திரன், பஞ்சமன் என்கிறான். இந்த இடத்தில் சுயமரியாதை வெடித்தெழ வில்லையே - ஏன்?

- புதுச்சேரி மாநாட்டில் தமிழர் தலைவர்

தமிழ் ஓவியா said...

பொலிவான புதுச்சேரி மாநாடு!


புதுச்சேரியில் நேற்று (23.11.2012) நடைபெற்ற திராவிடர் கழக மாநாடு எல்லா வகைகளிலும் சிறப்பானதாகும். மாநாட்டுக்கான ஏற்பாடுகள், நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், உரைகள் - தீர்மானங்கள் - தந்தை பெரியார் சிலை திறப்பு நூல்கள் வெளியீடு, தோழர்களுக்குப் பாராட்டு என்று அனைத்தும் வரலாற்றில் நேர்த்தியாகப் பதிவாகக் கூடியவை! இந்தக் கால கட்டத்தின் கழகத்தில் பொலிவு எத்தகையது என்பதற்கான அளவுகோலாகும்.

இதே புதுச்சேரியில் எத்தனை எத்தனையோ மாநாடுகள். 1931இல் சுயமரியாதை மாநாடு 1932இல் முதல் வாலிபர் மாநாடு, 1945இல் திராவிடர் கழகத் தொடக்க விழா என்று எத்தனை எத்தனையோ மாநாடுகள் கம்பீரமாக நடைபெற்ற கொள்கை மணம் வீசும் பூமிதான் புதுச்சேரி.

மாநாடுகளைத் தவிர தொடர்ந்து விடுதலைப் பொன் விழா, பகுத்தறிவாளர் கழக மாநாடு தந்தை பெரியார் சிலை திறப்பு விழா என்று ஏராளமான நிகழ்ச்சிகளும் நடைபெற்ற துண்டு.

நேற்றைய மாநாட்டைப் பொறுத்தவரை காலையில் பேசு சுயமரியாதை உலகு எனும் தலைப்பில் சிறந்ததோர் கருத் தரங்கம்! ஒவ்வொருவரும் முத்து முத்தான கருத்துக்களை எடுத்து வைத்தனர்.

பிற்பகல் எழுச்சியூட்டும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி பொது மக்களைப் பெரிதும் ஈர்ப்பதாக அமைந்திருந்தது - பேரணியைப் பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் (முக்கியமாக இளைஞர்கள்) கண்டு களித்தனர்.

மாலையில் கலை நிகழ்ச்சிகளுடன் திறந்த வெளி மாநாடு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொது மக்கள் இரவு 10 மணி வரை மாநாடு நிறைவு பெறும் வரை மிகுந்த ஆர்வத்துடன் கூடியிருந்தது குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது.

காலையில் நடைபெற்ற கருத்தரங்கின் போதும் சரி, மாலை மாநாட்டிலும் சரி, மாநாட்டுக்காக உழைத்த கழகத் தோழர்கள், பெரியார் பெருந்தொண்டர்கள், மரணத்திற்குப் பிறகு தங்கள் உடலை மருத்துவமனைக்கு ஒப்படைக்க முன் வந்த தோழர்கள் என்று அனைவருக்கும் பயனாடைகள் அணிவிக்கப்பட்டு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

தமிழ் ஓவியா said...

பொதுக் கூட்டமாக இருந்தாலும் சரி, அதன் வெற்றிக்கு உழைக்கும் தோழர்களைப் பாராட்டுவது, இளைஞர்களை உற்சாகப்படுத்துவது என்பதைத் திராவிடர் கழகம் வழமையாகக் கொண்டுள்ளது. மாநாடு அமைந்திருந்த விதத்தை, புதுச்சேரி மாநில இந்தியக் கம்யூனிஸ்டு செயலாளர் முன்னாள் அமைச்சர் இரா. விசுவநாதன், புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி. முத்து ஆகியோர் ஆற்றிய உரை கட்சிகளையும் கடந்து மாநாடு பாராட்டுப் பெற்றதிலிருந்த சிறப்பை உணரலாம்.

மாநாட்டுக்கு மேலும் அணிகலன் என்பது 5 நூல்கள் வெளியிடப்பட்டதாகும். ஏராளமான தோழர்கள், பொது மக்கள் மேடைக்கே வந்து நூல்களைத் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட வண்ணம் இருந்தனர்.

மாநாடு அறிவிக்கப்பட்ட நாள் முதல் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அடிப்படைவாதிகள் காவல்துறைக்குப் புகார் எழுதுவதையே தங்கள் பிழைப்பாகக் கொண்டிருந்தனர். திராவிடர் கழகப் பிரச்சாரம் நடந்தால் தாங்கள் அடியற்று வீழ்ந்து விடுவோம் என்னும் அச்சம் அவர்களை உலுக்கி எடுக்க, கோழைத்தனமாக இத்தகைய செயல்பாடுகளில் இத்தகையவர்கள் ஈடுபடுவது பரவலாகவே நடந்து கொண்டு தான் இருக்கின்றன. கடைசியில் அவர்கள் தோல்வியின் தொங்கு முகமாகத் தான் வெளியேறுகிறார்கள். புதுச்சேரியிலும் அதேதான் நடந்தது.

உண்மையைச் சொல்லப் போனால் அத்தகு அமைப்பு களில் இருக்கும் பார்ப்பனர் அல்லாதவர்கள்கூட சிந்தனைத் தெளிவு பெறும் வண்ணம் நிகழ்ச்சிகளும், கருத்துரைகளும் அமைந்திருந்தன.

இந்த நேரத்தில் தமிழ்நாட்டிலும் சரி, புதுச்சேரி மாநிலத் திலும் சரி இந்துத்துவா கா(லி)விகள் கொடுக்கும் புகார்களை ஏற்றுக் கொண்டு, திராவிடர் கழகப் பொறுப்பாளர்களை அழைத்து தேவையில்லாமலும், சம்பந்தம் இல்லாமலும் விசாரணை நடத்துவது, குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்று கூறுவதெல்லாம் சரியானதல்ல - முறையுமல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திராவிடர் கழகம் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு, கட்டுப் பாடாக, தனி ஒழுக்கம், பொது ஒழுக்கம், பொது அமைதி இவற்றைப் பேணி காக்கக் கூடியதாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் 51ஹ() என்னும் பிரிவு மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை, ஏன், எதற்கு என்று வினா எழுப்பும் உணர்வை, சீர்திருத்த வேட்கையைத் தூண்டுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறுகிறது.

இந்தச் சட்டப்படியான பணியை திராவிடர் கழகம் முதல் நிலையிலிருந்து நாளும் செய்து வருகிறது. அதற்கு எல்லா வகையிலும் உதவியாக இருப்பது தான் காவல்துறையின் கடமையாக இருக்க வேண்டும்.

அதைவிட்டு விட்டு, இவற்றிற்கு விரோதமான கொள்கை களையும், நடவடிக்கைகளையும் கொண்ட பிற்போக்குச் சக்திகளின் காகிதத் துப்பாக்கிகளுக்கு மதிப்புக் கொடுப்பது - ஒரு பிற்போக்குத்தனமான செயலாகத்தான் இருக்க முடியும். இந்த வகையில் அரசின் துறைகளையும் திருத்தும் வேலை திராவிடர் கழகத்திற்கு இருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.

மாநாட்டின் மகத்தான வெற்றிக்கு அயராது உழைத்த கழகப் பொறுப்பாளர்களுக்கும், தோழர்களுக்கும் பாராட் டுகள்! பாராட்டுகள்!! 24-11-2012

தமிழ் ஓவியா said...


புதுச்சேரி பேரணி - ஒரு நடைச் சித்திரம் - கரைபுரண்ட கருஞ்சட்டை வெள்ளம்!


கட்சிகள் பல மாநாடுகள் நடத்துகின்றன - பேரணி களையும் நடத்துகின்றன.

ஆனால் அவற்றிற்கு முற்றிலும் மாறுபடாது திராவிடர் கழகம் நடத்தும் மாநாடுகளும் - பேரணி களும்.

மாநாடு என்றால் கருத்துகளுக்கு முதலிடம். பேரணி என்றால் முழக்கங்களுக்கு முக்கிய இடம்.

முழக்கங்கள் முன்கூட்டியே அச்சிடப்பட்டு அளிக்கப்படுகின்றன.

தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைக் கருவூலம் - கழகத்தின் கருத்து மலர்கள் மக்களை நோக்கிக் கொண்டு செல்லுவதுதான் திராவிடர் கழகப் பேரணி யாகும் கொள்கைகள், முழக்கங்களாக கொடுக்கப் படுகின்றன. கடவுள் மறுப்பிலிருந்து ஜாதி ஒழிப்பு, சமூகநீதி, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமை தகர்ப்பு வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு - இனநலப் பாதுகாப்பு - இன இழிவு ஒழிப்பு, மத வாத முறியடிப்பு - இவற்றை உள்ளடக்கிய கொள்கைகளின் வீச்சே பேரணி முழக்கங்கள் - கண்ணியமான முழக்கங்கள் மக்களைக் கவரக் கூடியதாகும்.

தமிழ் ஓவியா said...

இரண்டாவதாக மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் காட்சிகள். பெண்கள் தீச்சட்டி ஏந்தி வருதல் - தீச்சட்டி இங்கே, மாரியாத்தாள் எங்கே? என்று அவர்கள் போடும் முழக்கம்.

முதுகில் அலகு குத்தி கார் இழுக்கும் கழகத் தோழர்களின் கடவுள் மறுப்பு முழக்கம். கடவுள் சக்தி என்று சொல்லி சிறுதேர் இழுக்கும் பக்தனே. கடவுள் இல்லை என்று சொல்லி, கார் இழுக்கும் காட்சியைப் பாரீர்! பாரீர்!! என்று முழங் குவது

அரிவாள் மீது ஏறி நின்று பூசாரி கடவுள் சக்தியைக் காட்டுவதாகப் பம்மாத்து அடிக்கிறார்களே, அதனையும் முறியடிக்கும் வகையில் கடவுள் இல்லை என்று முழக்கமிட்டு அத்தகைய நிகழ்ச்சிகளை அனாவசியமாகச் செய்து காட்டும் நிலை (சிறுவர்கள், சிறுமிகள் கூட ஏறி அரிவாள் மீது நின்று காட்டும் அதிசயம்!)

உடம்பு பூராவும் அலகு குத்திக்கொண்டு செடில் காவடி எடுத்தல், நாக்கில் சூடத்தைக் கொளுத்திக் காட்டுதல், சிலம்பாட்டம், தப்பாட்டம், கோலாட்டம் என்று பேரணி என்பது கலைத்திறன் மிக்ககாட்சி - கருத்து வெள்ளம் கரைபுரண்டு ஓடும் முறைதான் திராவிடர் கழகத்தின் தனித்தன்மை மின்னும் பேரணியாகும்.

மூடநம்பிக்கையை முறியடிக்கும் கழக வீராங்கனைகள்!

புதுச்சேரி பேரணியும் இவற்றை உள்ளடக்கிய கொள்கலனாக இருந்தது. மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளை தஞ்சை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி ஒருங்கிணைத்தார்.

பேரணியின் பாட்டை

சுப்பையாசிலை தொடக்கம் குயவர்பாளையம் வழியாக நாதம் வந்தடைந்து தந்தை பெரியார் சிலை வழியாக காமராசர் சிலையை கடந்து அண்ணாசாலையில் அண்ணாசிலை கடந்து வெங்கட சுப்பாரெட்டி சிலை வழியாக மாநாட்டுப் பந்தலை அடைந்தது.

காரிழுத்தல்: ஷே.க.பாஷா, அம்பேத்குமார்.

தப்பாட்ட இசையில் பட்டையை கிளப்பும் தோழியர்கள்!

தீச்சட்டி: விலாசினி ராசு, சுதா, செல்வி, சரஸ்வதி, சுமதி, விஜயலட்சுமி, யாஸ்மின், தேவகி, முருகம்மாள், கல்பனா, விஜயலட்சுமி ஏழுமலை, சாந்தி, எழிலரசி, தமிழரசி.

தப்பாட்டக் குழு - சலங்கை ஒலி குழுவினர் - தஞ்சை

வீரவிளையாட்டு: கறம்பக்குடி முத்து, புதுவை குமார்.

செடல் காவடி : புதுவை முத்துவேல், ஆயிப்பேட்டை ஆறுமுகம், சி.என்.பாளையம் எழிலரசன்.
கோலாட்டம்: சடையார்கோவில் நாராயணசாமி குழுவினர்.

அரிவாள்மீது ஏறிநிற்றல்: வழக்குரைஞர் அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட கழக செயலாளர்).

தமிழர் தலைவர் பார்வையிட்டார்

பேரணியை காமராசர் சிலையருகே அமைக்கப்பட்டு இருந்த தனி மேடையிலிருந்து பேரணியைத் திராவிடர் கழகத் தலைவர் பார்வையிட்டார். கழகத் தோழர்களின் வணக்கங்களை ஏற்றுக்கொண்டார்.

தீச்சட்டி ஏந்திச் சென்ற பெண்களிடமிருந்து ஒரு தீச் சட்டியைக் கொண்டு வரச் செய்து, தீச்சட்டியை அவரே ஏந்திக்காட்டியபோது ஒரே ஆரவாரம்.

புதுச்சேரி மக்கள் அண்மைக் காலத்தில் கண்டு களித்த, கருத்துத் தெளிவு பெற்ற முக்கியமான நிகழ்வாக இந்தப் பேரணி நடைபெற்றது என்று சொல்லலாம்.பேரணி

மாலை 5மணி அளவில் சாவி வ.சுப்பையா சிலை அருகிலிருந்து புறப்பட்டது. பேரணிக்குத் தலைமை வகித்தவர் - பகுத்தறிவாளர்கழக மாநிலத் துணைத் தலைவர் மு.ந.நடராசன். முன்னிலையேற்றோர்: த.சீ.இளந்திரையன், மாநில மாணவரணி செயலாளர், சு.துளசிராமன், துணைத் தலைவர், புதுச்சேரி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.கிருஷ்ணமூர்த்தி, துரை.சிவாஜி, லோ.பழனி, வே.அன்பரசன், துணைச் செயலாளர்கள் த.கண்ணன், ஆ.சிவராசன், வீர.இளங்கோவன், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி தலைவர் விலாசினிராசு, இளைஞரணி தலைவர் தி.இராசா ஆகியோர்.

தமிழ் ஓவியா said...

புதுச்சேரி மாநிலத்திற்கு மாநிலத் தகுதி வழங்குக!

மாநில அரசின் கடனை மத்திய அரசே ரத்து செய்க!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டம் - கொணர்க!

இடஒதுக்கீட்டின் அளவைத் தமிழ்நாட்டைப் பின்பற்றி 50 சதவிகிதத்திலிருந்து மேலும் உயர்த்திட சட்டம் இயற்றுக!
புதுச்சேரி திராவிடர் கழக மாநாட்டின் தீர்மானங்கள்!

புதுச்சேரி, நவ.24- புதுச்சேரி மாநிலத்துக்கு தனி மாநிலத் தகுதி, இடஒதுக்கீட்டின் அளவை 50 சத விகிதத்திலிருந்து மேலும் உயர்த்திட சட்டம் இயற்றுதல் உள்ளிட்ட அரிய தீர்மானங்கள் புதுச்சேரி யில் நேற்று (23.11.2012) அன்று நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

தீர்மானம் - 1

சேலத்துச் சிங்கம், சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளர் - சுயமரியாதை வீரர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மறைவிற்கு இம்மாநாடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. மாநாட்டில் கூடியிருந்தோர் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்தனர்.

தீர்மானம் - 2

முழு மாநில தகுதி கோருதல்

(அ) புதுச்சேரி மாநிலத்திற்கு முழு மாநிலத் தகுதி கொடுக்குமாறு மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

கடனை ரத்து செய்க!

ஆ) புதுச்சேரி மாநில அரசு மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகையை முற்றிலுமாக ரத்து செய்யுமாறு இம்மாநாடு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

நாள் ஒன்றுக்கு புதுச்சேரி மாநில அரசு மத்திய அரசுக்குக் கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டித் தொகை ரூபாய் ஒரு கோடியே 40 லட்சமாகும். சிறிய அளவிலான புதுச்சேரி மாநிலத்தின் கழுத்தை நெரிக்கக்கூடிய பெருந் தொகை இது என்பதால் மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தின்வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு கடன் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசை வற் புறுத்துகிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் - 3

தமிழ்நாட்டைப் போல இடஒதுக்கீட்டைக் கொண்டு வருக!

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவிகிதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகிதம், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவிகிதம், மலைவாழ் மக்களுக்கு ஒரு சதவிகிதம் என்று கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு இருப்பது போலவே, புதுச்சேரி மாநிலத்திலும் மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப உயர்த்தி (இப்பொழுது 50 சதவிகிதம்தான்) தமிழ் நாட்டைப் பின்பற்றி சட்டம் இயற்றிச் செயல்படுத்துமாறு புதுச்சேரி மாநில அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது .

தீர்மானம் - 4

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம் தேவை!

தமிழ்நாட்டைப் போலவே அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கிடைக்கும் வண்ணம் புதுச்சேரி மாநில அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று இம்மாநாடு புதுச்சேரி மாநில அரசைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 5

நடுவர்மன்ற தீர்ப்பை கெசட் செய்க!

காவிரி நீர் தொடர்பாக நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு இதுவரை கெசட் செய்யப்படாமல் உள்ளது. உடனடியாக அதனை கெசட் செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 6

காவிரி நீர்ப் பிரச்சினை

காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாடும் - அதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலமும் பாதிக்கப்பட்டு வருகிறது. காரைக்கால் கடைமடைப் பகுதிக்கு 5 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது.

நீர்ப்பற்றாக்குறையால் விவசாயம் கடும் பாதிப்புக்கு ஆளாவதைக் கணக்கில் கொண்டு புதுச்சேரி மாநிலத் திற்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய காவிரி நீருக்கு வழி செய்யுமாறு மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 7

மின்சாரம் உபரியாக உள்ள மாநிலங்களிலிருந்து பற்றாக்குறை மாநிலங்களுக்கு விநியோகம் செய்ய மின்பாதை அமைத்திடுக!

தமிழ் ஓவியா said...

வடமாநிலங்களில் மின்சாரம் உற்பத்தி உபரியாக இருந்தும் மின்சாரப் பற்றாக்குறை மாநிலங்களுக்கு விநியோகம் செய்திட தேவைப்படும் மின்பாதை (CORRIDOR) இல்லாமையால் மின்சாரத்தை பற்றாக்குறை மாநிலங்களுக்கு அனுப்ப இயலாத நிலை இருந்து வருகிறது. எனவே மின்பாதை அமைத்திட மத்திய அரசு, மாநில அரசுகளுடன் கலந்து ஆவன செய்யுமாறு இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் - 8

மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரமும் - புதுச்சேரி மாநில அரசும்

இந்திய அரசமைப்புச் சட்டம் 51A (h) விஞ்ஞான மனப்பான்மையையும், சீர்திருத்த உணர்வையும் பரப்புதல் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறியுள்ளநிலையில், கடவுள் சக்தி என்று நம்பும் மூடத்தனத்தை மாற்றும் வகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சிக்கு புதுச்சேரி காவல் நிலையம் அனுமதி மறுத்தது சட்ட விரோதமான செயல் என்று இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது. இதுபோல இந்நிலை தொடருமேயானால் நீதிமன்ற வாயிலாகப் பரிகாரம் தேடுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் - 9

மீனவர் கிராமங்களுக்கு நிவாரணம்

கடந்தாண்டு வீசிய தானேபுயலால் பாதிக்கப்பட்ட பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, பிள்ளைச் சாவடி, கனக செட்டிக்குளம் உள்ளிட்ட மீனவப் பகுதிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படாததைக் கண்டித்து உலக மீனவர் தினத்தன்று (21.11.2012) அப்பகுதி மக்கள் கடலுக்குச் செல்லாமலும், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்; புதுவை மாநில அரசு இதில் அக்கறையுடன் கவனம் செலுத்தி - உரிய நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்று இம்மாநாடு வலி யுறுத்துகிறது.

தீர்மானம் - 10

ஜாதி - தீண்டாமை எதிர்ப்பு

ஜாதி - அதன் விளைவான தீண்டாமை என்பது மனித உரிமைக்கும், சமத்துவத்திற்கும், மனித நேயத்திற்கும் விரோதமானதால், எந்தக் காரணத்தை முன்னிட்டும் இவற்றிற்கு ஆட்படக் கூடாது என்று தமிழ்ப் பெரு மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மக்களைப் பேதப்படுத்தும், வீண் சச்சரவுகளை ஏற்படுத்தும், பகைமை உணர்வைத் தூண்டும் ஜாதி - அதன் தீய விளைவான தீண்டாமை இவற்றை எதிர்த்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது - ஆக்க ரீதியாகப் பாடுபடுவது என்று இம்மாநாடு முடிவு செய்கிறது.

அடிப்படை இலட்சியம், கோட்பாடுகள் ஏதுமின்றி, வெறும் ஜாதியை முன்னிறுத்தி, அரசியல் நடத்தத் துடிப்பவர்களை அடையாளம் கண்டு, அந்தச் சக்திகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்ப் பெரு மக்களைக் கேட்டுக் கொள்கிறது.

தந்தை பெரியார் அரும்பாடுபட்டுப் பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் ஊட்டப்பட்டுள்ள - ஜாதிக்கு அப்பாற்பட்ட பெருமைக்குரிய அந்த நிலையை சீர்குலைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதிக் கொள்ள வேண்டும் என்றும், ஜாதி உணர்வு தமிழன் என்ற இனவுணர்வை உருக்குலைக்கக்கூடிய ஆபத்தானபிற்போக்குதனம் என்றும், இனவுணர்வு இல்லாத காரணத்தால் தமிழர்களின் உரிமைகள் பறி போகும் நிலை தொடர்கிறது என்றும் இம்மாநாடு சுட்டிக் காட்டி, ஜாதியற்ற - சமத்துவ - சமதர்ம - சமுதாயத்தைப் படைத்திட ஓயாது பாடுபடும்

- திராவிடர் கழகத்திற்கு தமிழர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
(தீர்மானங்களை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார் முன்மொழிய பெருத்த கரஒலியுடன் நிறைவேற்றப்பட்டன.)

தமிழ் ஓவியா said...


சுந்தரராவ் நாயுடு மறைவு


நீதிக்கட்சியின் முன்னாள் பிரதமத் தலைவர்களுள் ஒருவரான தோழர் டி.சுந்தரராவ் நாயுடு, உதகையில் 07.05.1949 அன்று இருதய நோயால் மரணமடைந்தார் எனச் செய்திக் கேட்டு வருந்துகிறோம்.

அவர் சென்னை நகரசபையில் எழும்பூர் பகுதியின் உறுப்பினராக பலகாலமிருந்தார். அதன் தலைவராகவும் ஆனார். அக்காலத்தில் அவர் நகர அபிவிருத்தி நிர்வாகத்தில் பெரும்பங்கு கொண்டு உழைத்தார். பழைய சட்டசபையில் உறுப்பினராயிருந்தார். பிரதம மந்திரியின் கவுன்சில் காரியதரிசியாகவும் இருந்தார். சிறிது காலம் 1928இல் கீழ்க்கோர்ட் நீதிபதியாக இருந்து வேலை செய்தார்.

அவர் பொதுச்சேவையில் பெரிதும் ஆதித்திராவிடர் நலனுக்குழைத்தவர். தம் இறுதிநாள் வரை திராவிட இன முன்னேற்றத்திற்கு பார்ப்பனரல்லாதார் இயக்கந் தொட்டுத் தொண்டாற்றியவர்.

அவர் திடீரென்று இருதய நோயால் தமது 59ஆவது வயதில் மூன்று பையன்களையும், நான்கு பெண்களையும் விட்டு காலமானார். அவருடைய குடும்பத்தாருக்கும் அவர் பிரிவுக்கு வருந்தும் நண்பர்களுக்கும் நம் ஆழ்ந்த அனுதாபத்தைக் தெரிவித்துக் கொள்கிறோம்.


குடிஅரசு - 14.05.1949

தமிழ் ஓவியா said...


அங்கே சாயவில்லை!


கதர் கதரெனக் கதறும் காங்கிரஸ் மந்திரிகள், பொதுமக்கள் யாவரும் கதரே கட்டவேண்டுமென ஓயாது உபதேசம் செய்கிறார்களல்லவா? அவர்களிடம் உள்ள இலாகாக்களில், காங்கிரஸ் மந்திரிகள் காட்டியுள்ள கதர் அபிமானம் எவ்வளவு என்பது உங்களுக்குத் தெரியுமா? மார்ச்சு 18ஆம் தேதி சென்னை சட்டசபையிலே, தோழர் மு.ஏ.சு. சாமி அவர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு, கனம் டாக்டர் சுப்பராயன் பதிலளிக்கும்போது, காங்கிரஸ்காரரின் கதர் புரட்டு வெளிப்பட்டது. சர்க்கார் இலாகாக்களில், 1937ஆம் வருஷம் ஜூலை மாதம் 14ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 31வரையில், சிப்பந்திகளின் துணிக்காகச் செலவழிக்கப்பட்ட தொகை. 1,03,870 - ரூபாய்

ஒரு இலட்சத்து, மூவாயிரத்து எண்ணூற்று எழுபது ரூபாய். இதில் கதருக்காகச் செலவிடப்பட்ட தொகை 36 - ரூபாய் (முப்பத்து ஆறு ரூபாய் மட்டும்!!)

காங்கிரஸ் ஜூலை மாதம் 14ஆம் தேதிதான் பதவி ஏற்றது. அதுமுதல் 6 மாதங்களில், சென்னை காங்கிரஸ் மந்திரிகள் தங்கள் இலாகாக்களில் கதருக்காக 36 ரூபாய்தான் செலவிட்டிருக்கிறார்கள்.

ஊராருக்கு ஓயாது செய்யும் உபதேசம், சர்க்கார் காரியாலய இலாகாக்களில் சாயவில்லையா! கவர்னரோ, வெள்ளைக்கார அதிகாரிகளோ குறுக்கிட்டதால்தானே கதர் பக்தியின் மதிப்பு 36-ரூபாய் அளவிலே நின்றுவிட்டது. சரணாகதி மந்திரிகள் என்று நாம் சொன்னால் கோபம் மட்டும் கொதித்துக்கொண்டு வருகிறதே! காரியத்திலே நடந்தது என்ன? தேசியச் சிங்கங்கள் கர்ஜிப்பதை விட்டு, சற்று சிந்தித்துப் பார்க்கட்டுமே!!


குடிஅரசு - பெட்டிச்செய்தி - 20-03-1938

தந்தை பெரியார் பொன்மொழி


ஆரியத்தின் கடைசி மூச்சு நிற்கும் வரை திராவிடர் இயக்கம் இருந்தே தீரும். சூழ்ச்சி, வஞ்சகம், அடக்கு முறை, கொடுமை எவை நம்மீது ஏவப்பட்டினும் சரி, நமது எதிரிகள், அரசியலார் எவரால் ஏவப்படினும் சரி, இறுதியில் இயக்கமே வெற்றி பெறும்.

தமிழ் ஓவியா said...


கும்பகோணம் போராட்டம்


உரிமைப் போராட்டத்தை நிறுத்தவேண்டுமென்று, தஞ்சையில் 28.12.1948ஆம் நாள் கூடிய நிர்வாகக் கமிட்டி முடிவு செய்தது. அதையொட்டி, 29.12.1948இல் தலைவர் பெரியாரவர்கள் கொடுத்த அறிக்கை:-

கும்பகோணத்தில் சர்க்காரால் திராவிடர் கழகப் பிரச்சாரத்தைத் தடுப்பதற்காக அநீதியாகப் போடப்பட்ட 144-அய் எதிர்த்து நடத்திய போராட்டத்தை 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை கடுமையான தடியடிப் பிரயோகத்தால் நிறுத்த சர்க்கார் முயற்சி செய்து பார்த்தும், அம்முயற்சி அவர்களுக்கு பயன்படாமல் மேலும் மேலும் போராட்டம் மக்களுக்குள் வேகத்தையும் உணர்ச்சியும், ஊக்கத்தையும் கொடுத்துத் தொடர்ந்து நடந்து வந்ததால் 26ஆம் நாள் முதல் சர்க்கார் தடியடியை நிறுத்திக் கொண்டதோடு உத்தரவை எதிர்த்தவர்களையும், எதிர்ப்புக்கு ஏற்பட்ட சட்ட நிபந்தனைப்படி அரஸ்டு செய்யாமலும் விட்டு விட்டதால், இனி அங்கு போராட்டம் தேவை இல்லை என்று கருதிப் போராட்டத்தை நிறுத்தி விடலாம் என்று 28ஆம் தேதி கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாக கமிட்டி முடிவு செய்திருக்கிறது. நாளையோடு நிறுத்தப்பட்டு விடும். ஆகவே, கும்பகோணத்துக்கு வெளியூரிலிருந்து வந்த தொண்டர்கள் அருள்கூர்ந்து அவரவர் ஊருக்கு சென்று விட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.


- ஈ.வெ.ராமசாமி, குடிஅரசு, 01.01.1949

தமிழ் ஓவியா said...


ஈரோடுவாசி ஆசிரியர் மீது வழக்கு

ஈரோடு தாலுகா மக்களின் பொது நலனுக்கென எவ்விதக் கட்சிப்பற்றும் இல்லாமல், சென்ற ஒரு வருடமாக நடைபெற்று பெரும்பாலான மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் ஈரோடுவாசி என்னும் வாரப்பத்திரிகை ஆசிரியரும், பிரசுரிப்பவருமான தோழர் ப.சண்முகவேலாயுதன் மீதும், அச்சிடுபவரான தமிழன் பிரஸ் தோழர் என்.கரிவரதசாமி மீதும் ஈரோடு டாக்டர் ஜே.டி.ராஜா எம்.பி.பி.எஸ். (பி) என்பவர், இ.பி.கோ.500 பிரிவுப்படி ஈரோடு அடிஷனல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். வாயிதா 26.02.1949 தேதி போடப்பட்டிருக்கிறது.

வழக்கு தொடர்ந்திருப்பதற்குக் காரணம் 05.12.1948ஆம் தேதி ஈரோடு வாசியில் போலி டாக்டர் சாயம் வெளுத்தது என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட சேதியேயாகும் எனத் தெரிகிறது.


குடிஅரசு 19.02.1949

தமிழ் ஓவியா said...


ஈரோடுவாசி ஆசிரியர் மீது வழக்கு

ஈரோடு தாலுகா மக்களின் பொது நலனுக்கென எவ்விதக் கட்சிப்பற்றும் இல்லாமல், சென்ற ஒரு வருடமாக நடைபெற்று பெரும்பாலான மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் ஈரோடுவாசி என்னும் வாரப்பத்திரிகை ஆசிரியரும், பிரசுரிப்பவருமான தோழர் ப.சண்முகவேலாயுதன் மீதும், அச்சிடுபவரான தமிழன் பிரஸ் தோழர் என்.கரிவரதசாமி மீதும் ஈரோடு டாக்டர் ஜே.டி.ராஜா எம்.பி.பி.எஸ். (பி) என்பவர், இ.பி.கோ.500 பிரிவுப்படி ஈரோடு அடிஷனல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். வாயிதா 26.02.1949 தேதி போடப்பட்டிருக்கிறது.

வழக்கு தொடர்ந்திருப்பதற்குக் காரணம் 05.12.1948ஆம் தேதி ஈரோடு வாசியில் போலி டாக்டர் சாயம் வெளுத்தது என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட சேதியேயாகும் எனத் தெரிகிறது.


குடிஅரசு 19.02.1949

தமிழ் ஓவியா said...

ஆணுக்கும் - ஆணுக்கும் பிறந்ததாலா?

சபரிமலை அய்யப்பன் கோயி லுக்கு 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் போகக் கூடாதாம். ஒரு தகவல் ஏடுகளில் வெளி வந்துள்ளது.

ஆந்திராவி லிருந்து அய்யப்பன் கோயிலுக்கு வந்த 30 பக்தர்களில் 3 இளம் பெண்களாம். ஆண் வேடத்தில் வந்தார்களாம்! (பக்தி காட்டும் ஒழுக்கம் இதுதான் - குறித்து வைத்துக் கொள்க!)

இந்த மூன்று இளம் பெண்கள் பம்பை நதியில் குளிக்கும்போது சிக்கிக் கொண் டார்களாம். பிறகு வெளியேற்றப் பட்டார்களாம்.

சில ஆண்டு களுக்குமுன் அய்யப்பன் விக்ர கத்தை நடிகை ஜெயமாலினி தொட்டு விட்ட தாகக் கூறி ஒரே கலாட்டா!

இப்பொழுதோ மூன்று பெண்கள் அய்யப்பனைத் தரிசித்து விட்டு, பம்பை நதியிலும் குளித்திருக்கிறார்கள்.

ஏன் அய்யப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் போகக் கூடாது? அதற் குக் காரணம் எதுவாக இருக்க முடியும்?

அய்யப்பப் பக்தர்கள் என்னதான் விரதமாக இருந்தாலும் பெண் களைப் பார்த்ததும் ஒழுக்கம். தவறி நடப்பார்கள் என்ற எண்ண மாகத்தான் இருக்க முடியும்.
சாஸ்திர ரீதியாக இன்னொரு காரணமும் இருக்கக் கூடும்.

அய்யப்பன் பிறப்பே எப்படி? அரி, அரன் என்னும் இரு ஆண்களுக்குப் பிறந்தவன் தானே!

பெண்ணில்லாமல் பிறந்ததால் பெண்ணை வெறுக்கிறார்களோ என்னவோ!
ஆணுக்கும் ஆணுக்குமோ, பெண்ணுக்கும் பெண்ணுக்குமோ பிள்ளை பிறக்காது என்பது பாமர னுக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் பக்திமானுக்குத் தான் புத்தி கிடை யாதே - எதைச் சொன்னாலும் நம்பத் தயாராக உள்ளவர்கள் தானே!

தமிழ் ஓவியா said...

யாகமாம் யாகம்!

டெங்கு நோயை ஒழித்துக் கட்ட மதுரை அரசு மருத்துவமனையில் யாகம் நடத்தப்பட்டுள்ளதாம்.

அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி என்பார்களே அது இது தானோ!

யாகத்தால் நோயை நீக்க முடியும் என்றால் இந்த மருத்துவ மனைகள் ஏன்? மருத்துவக் கல்லூரி கள் ஏன்?

மருந்து உற்பத்திச் சாலை கள் தான் ஏன்? ஏன்?

டெங்கு நோய்க்கு மூலம் ஒரு வகை கொசுதான் என்கின்றனர். அந்தக் கொசுவைப் படைத்தவன் யார்? அதையும் கடவுள்தான் படைத் திருக்க முடியும் - ஆன்மீக நம்பிக் கைப்படி!

கடவுளால் படைக்கப்பட்ட உயிரை அழிக்கலாமா? அபச்சாரம்! அபச்சாரம்!! அதனால்தான் மதுரை மருத்துவமனையில் யாகமோ, கடவுளின் மனதைக் குளிர வைத்து நோயைக் குணப்படுத்தத் திட்டம் போலும்!

பேசாமல் டாக்டர் கோட்டு களைக் கழற்றி எறிந்துவிட்டு, காவித் துண்டை இடுப்பில் கட்டிக் கொள்ளுதல் உத்தமம்!
நம் நாட்டுப் படிப்பு வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு லைசென்ஸ் - தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

லண்டனைப் பாரீர்!

லண்டனில் ஒலிம்பிக் போட்டி நடந்ததல்லவா! போட்டி நடக்கும் நேரத்தில் அபாய கட்டத்தில் இருக் கும் நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படுமே!

என்ன செய்தனர் அங்கிருந்த சமூக ஆர்வலர்கள்? எட்டு பேர் கொண்ட ஒரு குழு உள்ளாடையை மட்டும் அணிந்து, உடலின்மீது வித் தியாசமான ஓவியங்களை வரைந்து கொண்டனர். ரத்த நாளங்கள் மற்றும் இதயம் போன்றவை வெளி யில் பார்வைக்குத் தெரிவதுபோல உடலில் ஓவியங்களை வரைந்து கொண்டு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ஊர்வலமாகச் சென்றனர்.

இது பெரும் விளைவை ஏற்படுத் தியது. ஏராளமான அளவுக்குக் குருதியும் கிடைத்தது.

நம் நாட்டில் என்ன என்றால் பெண்கள் நிர்வாணமாக ஏர் உழு தால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று பீலா விடு கிறார்கள்! இது அர்த்தமுள்ள இந்து மதத்தின் சரக்கு - வெட்கக்கேடு!

தமிழ் ஓவியா said...

கங்காவின் கருணை?

பீகார் தலைநகரான பாட்னாவில் பக்தியின் பெயரால் மனித உயிர்கள் பலியாகியுள்ளன. தீபாவளி கொண் டாடிய ஆறு நாட்களுக்குப் பின் சூரியக் கடவுளை வணங்கும் சாத் பூஜா கொண்டாடப்பட்டுள் ளது. வட மாநிலங்களில் கொண் டாடப்படுவது வழமையாகும்.

இதற்கான பாட்னா அருகே - அதாலக் கன்ச் என்ற இடத்தில் கங்கை ஆற்றின் கரையில் ஏராள மாக பக்தர்கள் கூடியிருந்தனர். ஆற்றுப் பாலத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மூங்கில் பாலத்தில் அளவுக்கு அதிகமான எண்ணிக் கையில் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு கடக்க முயன்றதால், மக்கள் கூட்டத்தில் நசுங்கி 20 பேர் பலியானார்களாம்.

என்ன கொடுமையடா இது! கங்கா தேவி என்கிறார்களே. சிவபெருமான் தலையில் பார்வதி தேவியாரின் சக்களத்தியாக அமர்ந்து கொண்டு இருப்பதாகக் கித்தாப்புப் பேசுகிறார்களே. அந்தக் கடவுள் தன் பக்தர்களைக் காப் பாற்றவில்லையே!

இதுபோன்ற நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டுள்ள நிலையிலும் கூட மக்கள் தங்கள் பகுத்தறி வுக்குக் கொஞ்சம் வேலை கொடுக் கக் கூடாதா?

தமிழ் ஓவியா said...


முதல்முறையாக சென்னையில் இன்று ஜாதி மறுப்பு இணை தேடல் பெருவிழா: மன்றல் அரங்கம் சென்னை பெரியார் திடலில் துவங்கியது
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு, எண்ணற்ற சுயமரியாதைத் திருமணங்களையும், ஜாதி மறுப்புத் திருமணங்களையும் நடத்தியுள்ளது. மணமுறிவு பெற்றோர், துணையை இழந்தோரும் புது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் பெரிதும் பயன்பட்டிருக்கிறது.

திராவிட இயக்கங்கள், பொதுவுடைமை இயக்கங்கள், தமிழ் அமைப்புகள், ஒடுக்கப்பட்டோர் நலன் காக்கும் இயக்கங்கள், சிறுபான்மை மக்களின் அமைப்புகள் என பல தரப்பினரும் ஜாதி மறுப்பு/மதமறுப்புத் திருமணங்கள் செய்யத் தயாராக இருக்கும் நிலையில், இத்தகைய முற்போக்குச் சிந்தனையுள்ள குடும்பத்தினருக்குப் பயன்படும் வகையில், தமிழகம் தழுவிய அளவில் மாபெரும் ஜாதிமறுப்பு இணை தேடல் பெருவிழாவினை மன்றல் 2012 என்ற பெயரில் நடத்த பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் திட்டமிட்டது.அதன்படி இன்று 2012 நவம்பர் 25 - ஞாயிற்றுக்கிழமை, சென்னை - பெரியார் திடலில் மன்றல் அரங்கம் துவங்கியது .


இன்றைய நாளில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

1. ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா

2. ஜாதி மறுப்புத் திருமண அரங்கம் 1. ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள ஜாதி ஒழிப்பில் ஈடுபாடு கொண்ட குடும்பத்தினர் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். தாங்கள் விரும்பிய வாழ்க்கைத் துணையை ஜாதி, மதம் தடையில்லாமல் தேர்ந்தெடுக்க இந்நிகழ்ச்சியில் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இது மட்டுமில்லாமல், மாற்றுத் திறனாளிகள், மணமுறிவு பெற்றோர், துணையை இழந்தவர்கள் ஆகியோருக்கான தனிப் பிரிவுகளும் உண்டு.

இந்நிகழ்வு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இத்துடன் திருமணத்திற்குத் தயாராதல் குறித்த மருத்துவ, மனநல ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சியும், மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜாதி, மத மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களும், பல்துறைசார்ந்த முக்கியப் பிரமுகர்களும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவுள்ளனர்.

2. ஜாதி மறுப்புத் திருமண அரங்கம்

முன்பே, ஒருவருக்கொருவர் விரும்பி ஜாதி, மதம் பாராமல் காதலித்துத் திருமணம் செய்துகொள்ள விரும்புவோர் சட்டப் பாதுகாப்போடு இந்நிகழ்விலேயே திருமணம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்று திருமணங்களை நடத்திவைத்து உரையாற்றுகிறார் . ஜாதிக்கான சுயம்வரங்கள் இதுவரை தனித்தனியாக நடைபெற்றிருந்தாலும், முதன்முறையாக ஜாதிமறுப்புக்கென ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இணை தேடல் நிகழ்ச்சி தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படவுள்ளது.

தமிழ் ஓவியா said...

உலகில் அர்ச்சகன், மாந்திரிகன், சோதிடன் இவர்களைவிடப் பித்தலாட்டத்தில் கைதேர்ந்தவர்கள் கிடையாது. (விடுதலை, _ 27.6.1973)

தமிழ் ஓவியா said...


இரு பயிற்சிகள்!


ஏடுகளில் இன்று இரண்டு செய்திகள் வெளிவந்துள்ளன. ஒன்று முதலமைச்சர் ஆணைப்படி மனநல மும், உடல்நலமும் பேணு வதற்காக 45 யானை களுக்குச் சிறப்பு நுழைவு முகாம் இன்று தொடங் குகிறது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களி லிருந்தும் யானைகள் லாரிகள்மூலம் முகாம் களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன என்பது ஒரு செய்தி.

இன்னொரு செய்தி இன்றைய நாளேடுக ளில் வெளிவந்துள்ளது.

அர்ச்சகர்களுக்குப் புத்தொளி பயிற்சி முகாம் - காஞ்சிபுரத்தில் தொடக்கம் என்பது தான் அந்த இன் னொரு செய்தி.

இதுவும் தமிழக முதல்வரின் உத்தரவுப் படிதான். தமிழகக் கோவில்களில் அர்ச்ச கர்களாகப் பணிபுரி வோர்க்கு புத்தொளி பயிற்சி முகாம் 42 நாள் கள் நடத்தப்படுகிறது.

முன்னது 48 நாள் கள்; பின்னது 42 நாள் கள். கிட்டத்தட்ட ஒரே அளவில் புத்தாக்கப் பயிற்சி முகாம்கள்.

சபாஷ், நல்ல நட வடிக்கைதான் - நல்ல ஒற்றுமைதான்!

யானைக்கு மதம் பிடிக்கும்; இந்த அர்ச்ச கர்களுக்கும் மதம் (இந்து) பிடிக்கும். ஆக, இரு வகைப் பிரிவினர்க் கும் பிடித்தது ஒன்று - மதம்தானே!

மதம் பிடித்ததால் தானே இதே காஞ்சி புரத்தில் மச்சேந்திர நாதன் கோவில் அர்ச்ச கன் தேவநாதன் கோவிலுக்குத் தரிசிக்க வந்த பெண்களை வேறு வகையில் தரிசித்தான்!

பெரியவாளுக்கு மதம் பிடித்ததால்தானே இதே காஞ்சிபுரம் வரத ராஜபெருமாள் கோவி லில் பட்டப் பகலில் சங் கரராமன் படுகொலை செய்யப்பட்டார்.

யானைக்கு அய்ந் தறிவு; அதனால் மதம் பிடித்துத் துவம்சம் செய் கிறது. ஆறு அறிவு கொண்ட மனிதனுக்கு மதம் பிடித்தால் ஓரறிவு குறைந்து அய்ந்தறிவு யானையாகி துவம்சம் செய்கிறான்.

இவற்றையெல்லாம் நல்லறிவால் சிந்தித்து நமது முதலமைச்சர் ஒரே நாளில் இப்படி இரு அறிவிப்புகளைக் கொடுத்துள்ளார்! பலே! பலே!!

யானைக்கு மதம் பிடித்தால் ஆபத்து! மனி தனுக்கு மதம் பிடித் தாலோ பேராபத்து!! - மயிலாடன் -26-11-2012

தமிழ் ஓவியா said...


புதுவையில் 69 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்


தமிழர் தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

திராவிடர் கழக மாநாடு புதுவையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க புதுவை சென்ற தமிழர் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும். நாள் ஒன்றுக்கு ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மத்திய அரசுக்கு புதுவை மாநில அரசு வட்டி செலுத்தி வருகிறது. கழுத்தை நெரிக்கக் கூடிய அளவுக்கு இது உள்ளது. மாநில அரசின் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல, தமிழ்நாட்டைப் போல புதுவையிலும் 69 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிட உரிய முறையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும். அதற்கான நடைமுறைகளை மாநில அரசு மேற்கொள்ளவேண்டும்.

அதேபோல, புதுவையிலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக மாநில அரசு சட்டம் இயற்றவேண்டும்.

மாநிலத் தகுதி

மத்திய அரசு தென்னக மாநிலங்களில் நிலவும் மின் பற்றாக் குறையைப் போக்கிட உரிய மின் வழித்தடத்தை அமைக்கவேண்டும். வடநாட்டில் பெருத்த வெள்ளம் ஏற்பட்டு கடலில் சென்று தண்ணீர் வீணாகிறது. இதற்காக நதிகளை இணைக்க வலியுறுத்துவதைப்போல மின்சாரத்தையும் மிகையாக உள்ள இடங்களில் இருந்து உபரியாக உள்ளதை மற்ற மாநிலங்கள் பயன்படுத்தும் வண்ணம் தென்னக மாநிலங்களில் மக்களுக்குப் பயன்பட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

காவிரி நதிநீர்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பும், கெஜட் செய்யாமல் இருக்கிறது. அரசிதழில் வெளியிட்டால்தான் சட்ட வலிமை ஏற்படும். புதுவை மாநிலம் காரைக்கால் பகுதிகளுக்கு 5 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும் உரிய பங்கு நியாயமான ஆதங்கமாகத்தான் இருக்கிறது.

எனவே, மேற்கண்ட கோரிக்கைகளை தீர்மானங்களாக மாநாட்டில் நிறைவேற்றி இருக்கிறோம். இதனை மத்திய - மாநில அரசுகள் நிறைவேற்றவேண்டுமென தமிழர் தலைவர் கேட்டுக் கொண்டார்.

உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர்கள் துரை. சந்திரசேகரன், வீ. அன்புராஜ், புதுவை மாவட்டத் தலைவர் சிவ. வீரமணி ஆகியோர் இருந்தனர்.

தமிழ் ஓவியா said...


எக்கணமும் சிக்கனமே சிறந்தது!


வாழ்க்கையில் சிக்கனம் என்பது எக்கணமும் தேவை!

பேச்சில் சிக்கனம், நேரத்தை அனாவசியமாகச் செலவிடுவதைக் குறைத்து, பயனுறு வகையில் செலவிடும் காலச் சிக்கனம் தலையாயது; செலவிடுவதில் மட்டும் பொருள் சிக்கனம் மட்டும்தான் சிக்கனம் என்ற ஓர் எண்ணம் பரவலாக உள்ளது. அது ஏற்கத்தக்கது அல்ல. குழந்தைப் பேற்றில்கூட சிக்கனம் என்பதன் வெளிப்பாடுதான் குடும்பக் கட்டுப்பாடு என்ற அளவான குடும்பம் வளமான வாழ்வு என்பதன்மூல காரணம் ஆகும்! பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! என்று வாழ்த்தி விடுபவர்கள், கடைசியாக எச்சரிக்கிறார்கள், பதினாறு என்றால் குழந்தைகள் என்று எண்ணி, 16 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முயலாதீர்கள்; மாறாக, பதினாறு பேறுகள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என்று விளக்கம் கூறுகிறார்கள்!

சொல்பவர்கள் எதை நினைத்துச் சொல்கிறார்கள் என்பதைவிட, புரிந்துகொள்பவர்கள் எப்படிப் புரிந்துகொண்டு செயல்படுகிறார்கள் என்பதே முக்கியம்.

திருமணங்களில் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை, வசதி அதிகம் இல்லாத குடும்பத்தவர்கள்கூட, போலிப் பெருமை, வெற்று ஜம்பம், வீண் பெருமை இவைகளை எண்ணி கடன் வாங்கியாவது ஆடம்பர மண்டபங்களில் ஏற்பாடு செய்து, அதிகமானவர்களுக்கு அழைப்புகளை அனுப்பி, செலவு செய்து நடத்துகின்றனர்; டம்பாச்சாரிகளாக செலவழிக்கின்றனர்.

இதில் பெண் வீட்டுக்காரர் செலவு என்று அவர்கள் தலையில் இச்சுமையை ஏற்றி, கழுத்தை ஒடிப்பதுபோல அவர்கள் வாழ்க்கையை ஒடித்து விடுகிறார்கள் - பல திருமணங்களில்!

அழைப்பிதழ்கள் எளிமையாக இருந்தால் போதாதா? தகவல் தரத்தானே அழைப்புகள்? அதில் தேவையான விவரங்கள் இருந்தால் மட்டும் போதுமே!

அதற்கு எத்தனை எத்தனை டிசைன்கள், ஒலிப்பதிவில் தங்கள் குரலை ஒலிக்கச் செய்து, நேரில் அழைக்க திறக்கும்போதே நாதஸ்வர ஓசையுடன் கூடிய அழைப்பு - இது ஒன்று சுமாராக 150, 200 ரூபாய்கள் இருக்குமே! ஒரு புத்தகத்தைப் புரட்டுவதுபோல ஏழெட்டுப் பக்கங்கள்! அழைப்பிதழைப் பெறும் எவரும் அதைப் பாதுகாத்து, புத்தக அலமாரியிலா வைக்கப் போகின்றார்கள்? அல்லது பூஜை அறையில் (பக்தர்களாக இருந்தால்) வைத்து பூஜிக்கப் போகிறார்களா? என்னே விசித்திரம் - ஆடம்பர வெளிச்சம்!

திருமண மண்டபங்கள் பிடிக்க 6 மாதங்கள் முன்பே அலைச்சல், பல லட்ச ரூபாய்கள் அதற்கு வாடகைக் கட்டணம்!

சமையல் கலைஞர்கள், அறுசுவையில் தொடங்கி, லட்சக்கணக்கில் விருந்து செலவுகள் -

பசித்துச் சாப்பிடுவதோ,

தேவைக்கேற்ப சாப்பிடுவதோ,

உடல்நலத்தைப் பாதுகாக்க (அளவீடு)

உதவும் வகையிலோ, சாப்பிடுவதோ அற்ற

வீண் விரய விருந்துகள்

படைக்கும் நிலை புகழ் வாய்ந்த பாடகருக்கு லட்சக்கணக்கில் கொடுத்து, எவரும் கேட்பதில்லை; ரசித்துக் கேட்கும் சூழ்நிலையும் அங்கு இருப்பதில்லை. வெறும் ஒலிநாடா போதாதா?

ஒரு நாள் மட்டுமல்ல, இரு நாள், பலமான காலை, முற்பகல் (பகல்கூட அல்ல) பசியில்லா விருந்து - அதில் வீணாகி இலையோடு கொட்டும் பண்டங்கள் அளவு வர்ணிக்க முடியாத கொடுமை!

மணப்பெண் வரவேற்புக்கு பியூட்டி பார்லர் சென்று சிங்காரம் செய்ய, ஆயிரக்கணக்கில் செலவு செய்யப்படுகிறது. (கிராமங்களில்கூட இத்தொற்றுநோய் பரவி) இயற்கை அழகான பெண்களை அலங்கோல உருவமாக்கிட செலவு - என்னே கொடுமை! அடடா!!

இப்படி திருமணச் சிக்கனம் மிகவும் தேவை!

1976 இல் 100 இலைகளுக்குமேல் கூடாது என்ற நெருக்கடி காலம் மீண்டும் வராதா என்று நெருக்கடி காலத்தை விரும்பாதவர்களே, விரும்பும் அளவுக்கு அது தள்ளி விடுகிறதே!

அந்தஸ்து வெளிச்சத்திற்காக இப்படி ஒரு வீண் செலவுகளை நிறுத்தும்போதுதான் நாமும் உருப்படுவோம்; நாடும் உருப்படும்.

இன்று (26.11.2012) உலகச் சிக்கன நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


இழிநிலை


உலகெங்கும் உள்ள மக்கள் விஞ்ஞான அறிவியல் துறையில் தீவிர முன்னேற்ற மடைந்து கடவுள்களிடம் போட்டியிட்டு வருகையில், தமிழன் மட்டும் இன்னும் மாட்டு மூத்திரம் குடித்து, மோட்சம் போக எண்ணும்படியான காட்டுமிராண்டியாய் மானமற்று வாழ்வதேன்? புத்தரின் அறிவுப் பிரச்சாரத்தைக் கைவிட்டதன் பயனல்லவா இந்த இழிநிலை! (விடுதலை, 10.8.1961)

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்


மன்றல் 2012 நிகழ்வும் - வேண்டுகோளும்!

அய்யா வணக்கம்.

மன்றல் 2012 என்ற நிகழ்ச்சி பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி தமிழகம் மட்டுமல்ல, இந்தி யாவிற்கே எடுத்துக்காட்டாக விளங்கக் கூடிய வகையில் அமைந்தது என்றால் அது மிகையாகாது.

நேற்று (25.11.2012) சென்னை பெரியார் திடலில் காலை 8 மணி முதலே மணவிழாக்கோலம் பூண்டது.

ஜாதி மறுப்பு, மத மறுப்பு, மாற்றுத் திறனாளிகள், இணையை இழந்தோர், மண முறிவு பெற்றோர் ஆகியோருக் கென தனித்தனியே பதிவு மய்யங்கள் அமைக்கப்பட்டு இருந் தன.

இந்த நிகழ்ச்சி நம் பகுதிகளிலும் நடக்காதா என தமிழகம் முழுவதி லுமிருந்து வந்திருந்த அனைவரும் எதிர்பார்க்கும் வண்ணம் இருந்தது.

சில மாதங்களுக்கு முன் திரு மணம் நடந்த ஒரு இளைஞர், நான் துணையை இழந்தவரைத்தான் திரு மணம் செய்யவேண்டும் என்று நினைத் திருந்தேன்.

ஆனால், இது போன்ற நிகழ்ச்சி இப்போதுதான் நடைபெறுவ தால் என் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்று வருத்தத் துடன் தன் நண்பர்களிடம் சொல்லிய தையும் கேட்க முடிந்தது.

சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், நேற்று நடைபெற்ற மன்றல் 2012 நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பகிரங்க மாக அந்த மேடையில் அறி வித்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத் தது.

ஜாதி மறுப்பு மட்டுமல்ல, மத மறுப்புக்கும் நாங்கள் தயார் என்று 33 பேரும்,

மாற்றுத் திறனாளிகள் 29 பேரும்,

மண முறிவு பெற்றோர் 51 பேரும்,

துணையை இழந்தவர்கள் 34 பேரும் தங்களது இணை தேடலுக் காகப் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் சென்னை மட்டுமல்லாது, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களிலும் நடை பெற்றால், ஆங்காங்குள்ள இருபால் இளைஞர்களுக்கும் ஏதுவாக இருக் கும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்பது பலருடைய கருத்தாகும்.

தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவரின் வழிகாட்டுதலோடு மன்றல் 2012 இணை தேடல் நிகழ்ச்சி நடை பெற்றது.

நிகழ்ச்சியின் முடிவில் தமிழர் தலைவர் தலைமையில் ஜாதி மறுப்பு திருமணம் இரண்டு இணையர்க ளுக்கு நடைபெற்றது நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக இருந்தது.

பெரியார் காண விரும்பிய ஜாதி யற்ற சமுதாயம் படைக்க இதுபோன்ற இணை தேடல் நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றால், இந்த ஜாதி என்ற அடையாளம் மாறி, அனைவரும் ஒரு ஜாதி - அது மனித ஜாதி என்ற உணர்வு மேலோங்கி இருக்கும்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமி ழகம் முழுவதும் அவசியம் நடைபெற வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அய்யா அவர்களை மிகப் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி!

- ச. பாஸ்கர், சென்னை-18

தமிழ் ஓவியா said...


அரசு மருத்துவமனையில் யாகம்: ஆர்டிஓ விசாரணை


மதுரை, நவ.26- டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் நலம் பெற அரசு மருத்துவமனையில் நடத்தப் பட்ட யாகம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) விசா ரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது: அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக யாகம் நடத்துவது மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை களை அவமதிப்பு செய்வதாக இருக் கிறது. இது மருத்துவர்களுக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது அரசின் மதச்சார்பின்மைக்கும் எதிரானது. ஆகவே, இதுகுறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். விசாரணையின் அறிக்கையைப் பெற்று மேல்நட வடிக்கைக்கு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

தமிழ் ஓவியா said...


மதத்தின் பெயரால் கருத்து சுதந்திரம் திட்டமிட்டு நசுக்கப்படுகிறது நீதிபதி சந்துரு பேச்சு


சென்னை, நவ. 26- கருதது சுதந் திரத்திற்கு எதிரான சக்திகள் வளர்ந்து விட்டன. எனவே, ஒவ்வொருவரும், அறிவியலை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம் என உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு பேசினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இருந்து வெளிவரும் துளிர் சிறுவர் களுக்கான அறிவியல் மாத இதழின் வெள்ளி விழா மாநாடு, தியாகராயர் நகரில் உள்ள, சர்.பி.டி. தியாகராயர் கலை அரங்கத்தில், நவ. 24இல் நடந் தது. இதில், பொன் விழாவையொட்டி, சிறப்பு அஞ்சல்வில்லை வெளியிடப் பட்டது.

மாநாட்டை துவக்கி வைத்து நீதிபதி சந்துரு பேசியதாவது:

அறிவியலுக்கு, கருத்து சுதந்திரம் அடிப்படை தேவை. கருத்து சுதந்திரம் இல்லாத நாட்டில், ஒரு போதும் அறிவியல் வளராது, நம் நாட்டில், கருத்து சுதந்திரத்திற்கு எதிரான சக்தி கள் வளர்ந்து விட்டன. ஒவ்வொரு வரும், அறிவியலை முன்னெடுப்பதன் மூலமாகவே, எதிரான சக்திகளை முறியடிக்க முடியும். பாகிஸ்தானை சேர்ந்த மலாலா என்ற சிறுமி, பெண் குழந்தைகள், பள்ளிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்ததற்கு எதிராக பேசினார்.

அதற்காக, தலிபான் பயங் கரவாதிகளால் சுடப்பட்டு, லண்ட னில் சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளிக்கு செல்ல வேண்டும் என, விருப்பப்படும் கோடிக்கணக்கான பெண் குழந்தைகளின் குறியீடாக, மலாலா மாறிவிட்டார்.

லெனின், ரஷ்யாவில் மறைந்த போது, ரஷ்யாவை ஆட்சி செய்த ஸ்டாலின், லெனினுக்காக ரஷ்யா ஒரு நிமிடம் மட்டும் இயங்காது. மற்றபடி வழக்கம்போல் செயல்படும் என்றார்.

சமீபத்தில், மும்பையில், அரசியல் கட்சி தலைவர் இறந்ததற்காக, பந்த் நடத்தப்பட்டது. அதனால், மும்பை மாநகரமே, ஸ்தம்பித்தது. இதை எதிர்த்து, இரண்டு பெண்கள், பகத் சிங் இறந்தபோதுகூட, பந்த் நடக்க வில்லை. அப்படிப்பட்ட பூமியில் ஏன், பந்த் நடத்தவேண்டும். பந்த்தால் பொது மக்களே வெகுவாக பாதிக்கப் படுகின்றனர் என, முகநூலில் எழுதி னர். அதற்காக அவர்கள் கைது செய் யப்பட்டு, தற்போது பிணையில் வெளி வந்துள்ளனர். இங்கு கருத்து சுதந்திரம் கருவிலேயே நசுக்கப்படுகிறது.

மதத்தின் பெயரால், கருத்து சுதந் திரம் திட்டமிட்டு நசுக்கப்படுகிறது. விஞ்ஞானம் என்றாலே, மேலை நாடுகளை உதாரணம் காட்டுகிறோம்.

அயர்லாந்தைச் சேர்ந்த அன்னி பெசன்ட், இங்கிலாந்தில் பகுத்தறிவு கழகத்தை ஆரம்பித்து செயல்பட் டார். விஞ்ஞானத்தில் முன்னேற்றம் அடைந்த நாடாக நாம் நினைக்கும் இங்கிலாந்து, அன்னிபெசன்ட், மதத் திற்கு எதிராக செயல்படுகிறார் எனக் கூறி, அவர்மீது நடவடிக்கை எடுத்தது.

உலகத்தின் பல நாடுகளில், மதத் தின் பெயரால், கருத்து சுதந்திரம் நசுக் கப்படுகிறது.

சென்னை அய்.அய்.டி.யில், நாடி ஜோதிடம், அறிவியலா என விவாதம் நடந்தது. போகும் போக்கை பார்த் தால், கிளி ஜோசியமும், அறிவியலா எனும் கோணத்தில் ஆராய்ச்சி நடந் தாலும் நடக்கும்.

கருத்து சுதந்திரம் வளர்ந்தால் மட்டுமே, அறிவியல் வளரும். கடந்த, 1976ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, 51ஏ, என்ற பிரிவு, இந்திய குடிமக்களின் கட மையை விவரிக்கிறது. அதில், அறிவி யலை வளர்க்கவும், முன்னெடுத்துச் செல் லவும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் முயல வேண்டும் என்கிறது. இது, ஒவ்வொரு குடிமகனின் கடமை. அதை பின்பற்றி, அனைவரும் அறிவியலை வளர்க்க முன்வர வேண்டும்.

- இவ் வாறு அவர் பேசினார்.