Search This Blog

24.11.12

பிளேக் நோய் தீர்த்த ஸ்லோகமாம்!சிருங்கேரிகள் பற்றி புரூடாக்கள்!


சிருங்கேரிகள் பற்றி புரூடாக்கள்!

நம் நாட்டில் ஒரு சொலவடை உண்டு; இந்தப் புளுகு கந்த புராணத்திலும் இல்லை. அப்படியானால் கந்தப் புளுகு தான் புளுகுகளின் மெகா தொகுப்பு போலும்!

இவ்வாரக் கல்கி ஏட்டில் (25.11.2012) சிருங்கேரி சங்கராச்சாரியார்பற்றி - சிருங்கேரி மடம்  - ஒரு ஆய்வு என்ற தலைப்பில் வெளியான ஒரு புத்தகத்தைப் பற்றி ஒரு நூல் அறிமுகம் என்ற பகுதியில் மதிப்புரை எழுதப்பட்டுள்ளது.
அதன் தலைப்பு என்ன தெரியுமா? ஸ்லோகத்தால் ப்ளேக்கை விரட்டினார் - இது சிருங்கேரி மடத்தின் சாதனையாம்! நூல்களின் தனி ரகப்புளுகுகள் அவர்களால் ஏமாற்றப்படும் பக்த கோடிகளும், பக்த கேடிகளும் அன்றாடம் பலியாவதால் உச்ச வரம்பின்றி புளுகி, கோணிப்புளுகன் கொயபெல்ஸையும் கூடத் தோற்கடித்து விடுகின்றனர்!
... பல ஆண்டுகளுக்கு முன்னால் பிளேக் என்னும் ஆட்கொல்லி நோய் பரவியபோது ஸ்ரீசச்சிதானந்த சிவாபிநவ நரசிம்மபாரதி சுவாமிகளின்
ஏதாவந்தம் ஸமயம் ஸ்வாபத் பயோசபி
ரக்ஷணம் க்ருத்வா!... என்று தொடங்கும்
துர்காஸ்தவம் ஸ்லோகத்தை மனமுருகிப்பாடி, நோய் பரவாமல் காத்தார் என்று எழுதுகிறார் இந்த ஆய்வாளர். நல்ல நூல் என்கிறார் மதிப்புரையாளர்.
ஸ்லோகங்களினால் - அதுவும் சிருங்கேரி சங்கராச்சாரியார் உச்சரித்த சில மந்த்ர ஸ்லோகங்களில் இப்படி பிளேக் போன்ற கொடிய நோய்களையே சொஸ்தப்படுத்தி விட்டார் என்றால் இதை விட நமக்கு வேறு மருத்துவமனையோ, டாக்டர்களோ, மருந்துக் கடைகளோ தேவையா? தேவையே யில்லையே!

பாழும் புற்று நோய் பல பேர்களைக் கொல்லும் நோயாகிறதே.
இருதயம்  - மாரடைப்பு, சர்க்கரை நோய் - இப்படி பலப்பல நோய்களால் மனித குலம் மாள்கிறதே அதற்கு சிருங்கேரியார் ஸ்லோகம் போதுமே!
பின் ஏன் அனாவசியமாக மருத்துவக் கல்லூரிகளைத் துவங்கி பொருள்களை கோடிக்கணக்கில் செலவழிக்க வேண் டும்? அவரையே - சிருங்கேரி சங்கராச் சாரியையே தேசியமயமாக்கி ஒரு அவசரச் சட்டத்தை உடனே மத்திய அரசு போட்டு, எந்த நோய்க்கு எந்த ஸ்லோகம் என்று அவாளையே விட்டு சொஸ்தப் படுத்திடக் கேட்டுக் கொள்ளலாமே!
அந்தக் காலத்தில் ஈரோட்டில் பிளேக் நோயால் பல நூறு மக்கள் செத்தபோது, ஈரோடு நகரத்தில், நகரத் தந்தை நிலையில் இருந்து, தெருத் தெருவாக, வீடு வீடாகச் சென்று அருகில் இருந்து பிணங்களை அப்புறப்படுத்தி, சிகிச்சை சரியாக நடைபெற நேரிடையாக களத்தில் நின்று பாடுபட்டு வரலாறு படைத்தார் தந்தை பெரியார் அவர்கள்.
அதையெல்லாம் உணர்ந்துதான் சில ஆண்டுகள் கழித்து, சிருங்கேரிபீடம் பெரியாருக்கு ஸ்ரீமுகம் எழுதி, தாங்கள் பாரியாள் (நாகம்மையார்) சகிதமாக சிருங்கேரி மடத்திற்கு வரவேண்டுமென்று கேட்டுக் கொண்டார் போலும்!
இந்த ஸ்லோகத்தை அவர் ஏன் பிளேக் வந்த பகுதிக்குச் சென்று அப்போது ஓதிடவில்லை என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். (இதெல்லாம் நாஸ்தீகாளின் விதண்டாவாதம் என்கிறீர்களா?)
இப்போது டெங்கு காய்ச்சலால் பல பேர் அவதிப்படுகின்ற நிலையும், இறக்கும் கொடுமையும் உள்ளதே, சிருங்கேரி மடத் தலைவர் இந்த மாதிரி டெங்கு காய்ச்சலுக்கும் ஒரு ஸ்லோகத்தை ஓதி - மந்த்ரம் ஜெபித்து, குணமாக்கப்படாதோ! பகவத் கிருபையின் புண்யம் பரலோகம் வரை பரவாதோ!
முன்பு, திராவிடர் இயக்கத்திலிருந்து திடீர் பக்தர் ஆகிய ஒரு முன்னாள் அமைச்சர், காஞ்சிப் பெரியவாளை காஞ்சி மடத்தில் சந்தித்தபோது, மழை பெய்ய வில்லையே என்று பெரியவாளிடம் கேட்டாராம்; அவாள் அதெல்லாம் பெய்யும் என்று அவாள் திருவாய் மலர்ந்தருளினாராம். இவர் காஞ்சியி லிருந்து சென்னைக்கு காரில் திரும்பும் போது, ஸ்ரீபெரும்புதூர் வரும் போதே மழை கொட்டியதாம்! இந்த திடீர் 777 பக்தர் கோடிகள் நெஞ்சும் நெக்குருகி பெரியவாள் வாக்கு பலித்ததோ என்று மகிழ்ந்தனராம்!
இப்படி ஒரு கப்சா - புரூடா - சில வருஷத்துக்குமுன்!
இப்போது மேட்டூர் தண்ணீர் வராத தால் தஞ்சை - காவிரி டெல்டா பகுதியில் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது; விவசாயிகள் கவலைப்படு கின்றனர்!
ஓடி தலைக்காவிரிக்கே சென்று தங்கிய வரலாறு படைத்தவாள்தான் இப்போது பெரியவாள்; இவாள் மந்த்ரம் ஜெபித்து மழையை வரவழைக்க முடியாதோ! நிச்சயம் முடியும் என்கிறார் பக்த கேடிகள் - ஆனால் அவாளுக்கு நேரமில்லை - பெயில் - கோர்ட் - வழக்கு இத்தியாதி இப்படி என்பதால்!
பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்லுங்கடா அட போக்கத்தவர்களே!
- என்ற உடுமலையார் பாட்டு அதோ கேட்கிறது. 

------------------------------- ஊசி மிளகாய் ----------"விடுதலை” 20-11-2012

25 comments:

தமிழ் ஓவியா said...


மத்தியப் பல்கலைக் கழகங்கள்!


புதுச்சேரியில் மத்திய பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டு 27 ஆண்டுகள் ஓடி விட்டன. என்றாலும் இதைப் பல்கலைக் கழகத்தின் சாதனை என்று சொல்லும்படியாக பெரிதாக எதுவும் இல்லை.

புதுவையையோ, தமிழ் நாட்டையோ, தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட ஒருவர்கூட இதுவரை துணைவேந்தராக வந்ததில்லை. பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் என்று எடுத்துக் கொண்டாலும் பிற மாநில ஆதிக்கம்தான் ஆங்கே கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.

தமிழர்கள் பெரும்பாலும் வாழக் கூடிய மாநிலத்தில்தான் இந்த பல்கலைக் கழகம் இருக்கிறதா என்று அய்யப்படும் அளவுக்கு வடமாநில ஆதிக்கம்!

நடப்பு அய்ந்தாண்டுத் திட்டத்தில் புதுவைப் பல்கலைக் கழகத்திற்கென்று ரூபாய் 900 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மற்றும் தமிழ் நாட்டிலிருந்து ஏராளமான விண்ணப்பங்கள் குவிந் துள்ளன.

ஆனால் நிருவாகம் என்ன செய்தது? கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

2012-2013ஆம் ஆண்டுக்கு முது அறிவியல் பாடத்துக்கு ரூ.14,500 முனைவர் பட்டத்துக்கு ரூ.29,000 என்று கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் உள்ளே நுழைய முடியாத அளவுக்குக் கதவு சாத்தப்பட்டு விட்டது.

ஆசிரியர்கள் நியமனம் என்பதெல்லாம் தமிழர் அல்லாதவர்கள் தாம். குறிப்பாக புவி அறிவியல் துறையில் கடைசியாக நியமிக்கப்பட்டவர் தமிழர் 1994 ஆம் ஆண்டுதான். அவருக்குப் பிறகு 18 ஆண்டு காலமாக எந்தத் தமிழரும் நியமனம் செய்யப்படவில்லை.

இந்தக் கால கட்டத்தில் ஆறு முறை தேர்வுக் குழு (Selection Board) நடைபெற்றுள்ளது. 12 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பரிதாபம் என்னவென்றால் இந்த12 பேர்களில் ஒருவர்கூட புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவரோ, தமிழ் மொழி பயின்றவரோ கிடையாது.

மத்தியப் பல்கலைக் கழகம் என்று சொன்னாலே அது ஆரிய ஆதிக்கபுரி என்று சொல்லும் நிலைதான்! இவ்வளவுக்கும் சம்பந்தப்பட்ட மாநில அரசுதான் நிலம், நீர், மின்சாரமெல்லாம் கொடுத்து உதவுகிறது. இவ்வளவு சலுகைகளையும் பெற்றுக் கொண்டு கால் பதித்தவுடன் உள்ளூர் மக்களைப் புறக்கணிக்கும் நிலைதான். இடஒதுக்கீட்டினை முறையாக செயல்படுத் துவதும் கிடையாது.

திருவாரூரில் அப்படிதான் மத்தியப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது. தேவையான நிலத்தை தமிழ்நாடு அரசுதான் அளித்தது. விழாவில் கலந்து கொண்ட முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

அந்தத் தொடக்க விழாவில் கலந்து கொண்ட மத்திய மனிதவளத் துறை அமைச்சர் கபில்சிபல் விழா முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது - இடஒதுக்கீடு எல்லாம் அளிக்க முடியாது என்று சொன்னாரே!

திருவாரூரில் அமைந்துள்ள மத்தியப் பல்கலைக் கழகத்தின் பொதுப் பேரவைக்கு (செனட்டுக்கு) நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் 30 பேர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 17 பேர்கள். இந்த 17 பேர்களில் சிலர் யார் யார் தெரியுமா?

1) திரு. சித்தார்த்த வரதராஜன் இந்துப் பத்திரிகை ஆசிரியர்.

2) நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் (ஓய்வு பெற்ற நீதிபதி)

3) திரு. கிருஷ்ணமூர்த்தி (தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர்)

4) செல்வி பத்மா சுப்ரமணியம் (பரத நாட்டியக்காரர்)

இவர்கள் அத்தனைப் பேருமே அசல் அக்கிரகார வாசிகள்தான் என்று சொல்லித் தான் தெரிய வேண்டுமோ!

திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தில் செயற்குழுவிற்கு (சிண்டி கேட்டிற்கு) 12 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

அதில் ஒருவர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

இப்படி பார்ப்பனர் பண்ணையம் கேட்பாரில்லை என்ற போக்குத்தான் தலை விரித்தாடுகிறது.

அதே நேரத்தில் வெளி மாநிலங்களில் உருவாக்கப் படும் மத்தியப் பல்கலைக் கழகங்களின் நிலை என்ன? வெளிமாநிலத்தவர் ஆதிக்கம் அங்கெல்லாம் உண்டா? அப்படியிருந்தால் அம்மாநிலத்தவர் அதனை அனுமதிப் பதும் இல்லை.

ஏமாந்த கோணகிரியாக தமிழர்கள்தான் இருந்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசும், புதுச்சேரி அரசும் இதில் தலையிட்டு, மத்திய பல்கலைக் கழகங்கள் சம்பந்தப்பட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் படிக்க வழி செய்யப்பட வேண்டும். பணி நியமனங்களிலும் குறிப்பிட்ட சதவிகிதமாவது அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட உத்தரவாதம் தேவை! தேவை!!
23-11-12

தமிழ் ஓவியா said...


பார்ப்பான் உருவில் கடவுள்


- தந்தை பெரியார்-

தோழர்களே! நான் கூறுகிறேன். ஜாதி ஒழிந்தால் கடவுள் ஒழியும். பார்ப்பான் பூசை செய்யும் கோவிலுக்கு இனி எந்த தமிழனும் போகக் கூடாது.

சாமியும் பார்ப்பானுக்கு அனுகூலமாகத்தான் இருக்கிறது. எப்படி நாம் பார்ப்பானை தொடக் கூடாதோ அதுபோல சாமியையும் தொடக்கூடாது.

எப்படி பார்ப்பான் ஜாதியில் உயர்ந்தவனோ அதுபோல கடவுளும் உயர்ந்தது. பார்ப்பானும் பூணூல் போட்டிருக்கிறான். கடவுளும் போட்டிருக்கிறது.

பார்ப்பானுக்கும் உச்சிக் குடுமி, கடவுளுக்கும் உச்சி குடுமி. பார்ப்பான் நாம் சமைத்ததை உண்ணமாட்டான்; கடவுளும் நாம் சமைத்ததை உண்ணமாட்டான்; கடவுளும் அப்படியே. பார்ப்பானுக்கும் பஞ்சகச்சம், கடவுளுக்கும் பஞ்சகச்சம், பாப்பாத்தி தாருபாச்சி கட்டுகின்றாள்.

கடவுளச்சியும் அப்படி கட்டுகின்றாள். பார்ப்பான் வீட்டிற்கும் நாம் செல்லக்கூடாது. இப்போது கூறுங்கள். கடவுளும் பார்ப்பானும் அழிக்கப்பட வேண்டியவர்களா இல்லையா? என்று படித்தவர்களைக் கேட்கின்றேன்; பக்திமான் களைக் கேட்கின்றேன்; கடவுள் உருவம், குணம் ஒன்றும் இல்லாதவன்; அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருப்பவன் என்றெல்லாம் கூறிவிட்டு குழவிக்கல்லில் கடவுள் மகத்துவம் இருப்பதாகக் கூறிபெண்டாட்டியும் பிள்ளைக்குட்டிகளும் கற்பித்திருக் கின்றீர்களே இது எவ்வளவு பித்தலாட்டம்? வெள்ளைக் காரணும், சாயபுவும், கிறிஸ்தவனும் கூறுவது போல ஒரு கடவுளா உங்களிடத்தில் உள்ளது.

எனவே, இந்த நாட்டில் கடவுளுக்கும், கடவுள் தன்மைக்கும் மதிப்பிருந்தால் கடவுளர்களின் தாலிகள் அறுக்கப்படுமா? நகைகள் களவாடப் படுமா? அதே இடத்தில் அவர்களை ஏன் கடவுள் பிடித்து நிறுத்தக் கூடாது?

இவற்றிலிருந்து கடவுளோ கடவுள் தன்மையோ இந்த நாட்டில் இல் லாமல் போய்விட்டது என்பதுவும் அத்தனையும் பித்தாலாட்டமென்பதும் புலனாக வில்லையா?

தமிழ் ஓவியா said...


செவ்வாய் கிரகம்

சூரியனிலிருந்து 4ஆவது கிரக மாகவும், பூமிக்கு அடுத்த வெளி வட்டத்தில் இருக்கக்கூடிய கிரகம் செவ்வாய்! தன்னைத்தானே ஒரு முறை சுற்ற 24 மணி 37 நிமிடம் ஆகிறது. சூரியனை ஒரு முறை சுற்றிவர ஓர் ஆண்டும் 321 நாட்களும் (686.9 நாட்கள் ஆகின்றன) வினா டிக்கு 24 கி.மீ வேகத்தில் சூரியனை சுற்றுகிறது. பூமியில் பாதி அளவே செவ்வாய் உள்ளது. அதற்கு 2 துணை கிரகம் உண்டு. ஒரு துணைக் கிரகம் 9340 கி.மீ தொலைவிலும், மற்றது 23500 கி.மீ தொலைவிலும் செவ்வாயைச் சுற்றி வருகின்றன!

செவ்வாய் தோஷமா?

2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி செவ்வாய் கிரகம் 9 கோடியே 70 இலட்சம் கி.மீ தூரத்திலிருந்து அந்தரை கோடி கி.மீ தூரத்திற்கு பூமியை நெருங்கி வந்தது. அதனால் பூமிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுபற்றி புதுவை அறிவியல் இயக்கப் பொதுச் செயலாளர் திரு. ஆர். தட்சிணாமூர்த்தி கூறும் போது, செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக நெருங்கி வருவதால் செவ்வாய் கிரகத்தை வெறுங்கண்ணால் தெளிவாக பார்க்க முடியும். இதனால் பூமிக்கோ பூமியிலுள்ள உயிரினங்களுக்கோ எந்தப் பாதிப்பும் இருக்காது, எந்த தோஷமும் ஏற்படாது என்று கூறியிருக்கிறார்.

மற்றொரு வானவியல் அறிஞர் தமிழ்நாடு இயக்கச் செயலாளர் திரு.இராமலிங்கம் அவர்கள் பூமிக்கு மிக அருகில் செவ்வாய் வருவதால் எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறியிருக்கிறார்.

செவ்வாய் 2287ஆம் ஆண்டிலும் 2729 ஆம் ஆண்டிலும் மீண்டும் பூமிக்கு மிக அருகில் வருமென்று வானவியல் அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். செவ்வாய் தோஷம் என்று கண்டுபிடித்த ஜோதிடர்கள் செவ்வாய் பற்றிய அறிவியல் கருத்துகளையோ செவ்வாய் மீண்டும் பூமிக்கு மிக அருகில் வரக்கூடிய காலத்தையோ சொல்ல முடிந்ததா!

ஜோதிடர்கள் செவ்வாய் தோஷம் என்று நம்மை பயமுறுத்துகிறார்கள். விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தால் ஆபத்தில்லை - தீங்கில்லை - தோஷமில்லை என்று விளக்கிக் கொண்டிருக்கிறார்கள் சிந்தித்து பாருங்கள். எதை நம்பப் போகிறீர்கள் அறிவியலையா! ஜோதிடத்தையா?

செவ்வாய் கிரகம் பாவக்கிரக மென்றும், புதன் கிரகம் அதற்கு பகையென்றும், சூரியன், சந்திரன், வியாழன் நட்புக் கிரகமென்றும் கூறும் ஜோதிடர்கள், அதற்கு அன்னம், சேவல் வாகனமென்றும் கூறுகிறார்கள். எவ்வளவு அற்புதமான ஆராய்ச்சி இதை நம்ப வேண்டுமாம்.

செவ்வாய் கிரகம் பற்றி மேலும் ஆராய்வதற்காக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் பசடெனா என்ற இடத்திலுள்ள ஜெட் புரபல்சன் லெபாரட்டரி என்ற ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 4200 கோடி டாலரில் தயாரிக்கப்பட்ட போனிஸ் செயற்கைக்கோள் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டது.

மணிக்கு 21 ஆயிரம் கி.மீ வேகத்தில் பறந்து சென்று 9 மாதப் பயணத்திற்குப் பின்னர் 25.5.2008 அதிகாலை இந்திய நேரப்படி 4.59 மணிக்கு செவ்வாய் கிரகத்தில் இறங்கியது. செவ்வாய் கிரகத்தை முழுமையாக ஆய்வு செய்து அங்குள்ள வளங்கள், பாறைகள், பனிக்கட்டிகள் அனைத்தையும் ஆய்வு செய்து மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ முடியுமா என்ற முயற்சியில் ஈடுபட்டுள் ளனர் அமெரிக்கர்கள்.

ஆராய்ச்சி பற்றி சிந்தனையே இல்லாத பாமரத்தனமான மக்கள் பார்ப்பனர்களின் கலாச்சாரத்தில் பிறந்த பிற்போக்கான ஜோதிடத்தை நம்பி தோஷம் இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் ஓவியா said...


பெண் குழந்தை தாலாட்டு


ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆரரிரோ ஆராரோ
சோலை மலரே! சுவர்ணத்தின் வார்ப்படமே!
காலை இளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே!
வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே!
நாய் என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்
தாய் என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே!
வெண்முகத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும்
கண்கள் உறங்கு! கனியே உறங்கிடுவாய்!
அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச்
சின்ன உடலாகச் சித்திரித்த மெல்லியலே!
மின்னல் ஒளியே, விலைமதியா ரத்தினமே!
கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே!
மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!
வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்
துண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி!
புண்ணிற சரம்விடுக்கும் பொய்ம் மதத்தின் கூட்டத்தைக்
கண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே!
தெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை
உய்விக்க வந்த உவப்பே! பகுத்தறிவே!
எல்லாம் கடவுள் செயல் என்று தொடைநடுங்கும்
பொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே!
வாயில் இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைக்
கோயிலென்று காசுதரும் கொள்கை தவிர்ப்பவளே!
சாணிக்குப் பொட்டிட்டுச் சாமி என்பார் செய்கைக்கு
நாணி உறங்கு; நகைத்து நீ கண்ணுறங்கு!

தமிழ் ஓவியா said...

லோக “பிராமணீய” பாலகங்காதர திலகர்!

இந்திய சுதந்திரப்போராட்ட தீவிரவாதி என்று அடையாளப்படுத்தப்படும் திலகர், இந்திய அரசியலை இந்துத்துவ மயமாக்கி, இந்தியாவில் இந்து சனாதன ஆட்சியை நிறுவியே தீரவேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்ட ஒரு இந்துமதத் தீவிரவாதி!

பால்யவிவாக தடுப்புமசோதா!

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, 1880 ம் ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த பி.எம்.மலபார் என்பவர், ஆங்கிலேய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதம், பல்வேறு விவாதங்களைக் கடந்து, பல ஆண்டுகளுக்கு பின்னர் பிரிட்டீஷ் அரசால் குழந்தை திருமணத் தடுப்பு சட்ட மசோதாவாக கொண்டுவரப்பட்டது. இந்து சனாதனத்தில் ஊரித்திளைத்த திலகரோ, இது இந்து மதத்தினருக்கு விடப்பட்ட சவால் என்று கூறி துள்ளிக்குதித்தார்!. இந்துமத சம்பிரதாயங்களில் கை வைப்பதற்கு வெள்ளையனுக்கு எந்த அருகதையும் இல்லை என்றார்! தனது "கேசரி" இதழில் பால்ய விவாகத்தை ஆதரித்து கட்டுரைகளை எழுதினார்! இந்துக்களுக்கு எதிரான எந்த சட்டத்தையும் கொண்டுவர அனுமதிக்க மாட்டோம் என்று ஊர்தோறும் பேசித்திரிந்தார்!

விநாயகர் அரசியல்!

விநாயகனை அரசியலாக்கி, மதவெறி அரசியலுக்கு அடித்தளம் அமைத்தவரும் இவர்தான். மகாத்மா புலே, சாகுமகாராஜ் ஆகியோர் மராட்டியத்தில் துவக்கிய "சத்ய சதக்" இயக்கம், பார்ப்பனரல்லாதாரிடத்தில் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது! இந்துமதம் பார்ப்பனரல்லாதாரை தீண்டத்தகாதவர்களாக, சூத்திரர்களாக, வைத்திருப்பதை அவர்களுக்கு உணர்த்தியது! விழிப்புற்று எழுந்த பார்ப்பனரல்லாதாரை மத போதையில் ஆழ்த்தி, அவர்களை தன் வயப்படுத்தும் சூழ்ச்சியில் இறங்கினார் திலகர்!

"சர்வஜன கணபதி விழா" என்ற பெயரில் விநாயகர் ஊர்வலங்களை நடத்தி, இஸ்லாமியர் களுக்கு எதிராக, இந்துமத வெறியூட்டி, பார்ப்பனரல்லாதாரை என்றென்றும் சூத்திரர் களாகவும், பஞ்சமர்களாகவும் தங்கள் வாழ்க்கை யைத் தொடர பல்வேறு யுத்திகளைக் கையாண்டார். விநாயகனின் வாகனம் எலி!

1897-_ல் புனே, பம்பாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் "பிளேக்" எனும் கொடிய நோய் பரவி மக்கள் பெருமளவில் இறந்து போனார்கள். "பிளேக்" நோய்க்கு "எலி" முக்கிய காரணம் என்று கண்டறியப்பட்டது!. உதவி கலெக்டராக அப்போது பதவி வகித்துவந்த ராண்ட் மற்றும் அயெர்ஸ்ட் ஆகியோர் கொண்ட குழு, "பிளேக்" மேலும் பரவாமல் தடுக்க தீவிரமாக செயல்பட்டது. அப்போது நோய்க்கு காரணமான எலிகளையும் ஒழிக்க முனைந்தது.


தமிழ் ஓவியா said...

"விநாயகனின் வாகனமான எலியை ஒழிப்பதா?" என திமிறி எழுந்து தன் பஞ்சகச்சத்தை இறுக்கினார் திலகர்!. "எலிகளைக் கொல்லுவதன் மூலம் இந்துக்களின் மனதை பிரிட்டீஷ் அரசு புண்படுத்துகிறது" என்று அறிக்கை விடுத்தார்! இதற்கெல்லாம் சற்றும் சளைக்காது, தன் கடமையிலிருந்து பின்வாங்காது செயல்பட்ட உதவிகலெக்டர் ராண்ட்டும், அயெர்ஸ்டும் "பிளேக்" நோயை முற்றிலுமாக ஒழித்து, பொதுமக்களிடத்தில் பெரும் செல்வாக்குப் பெற்றனர்.

கொலைவெறியை தூண்டிய திலகர்! ஜேம்ஸ் என்கிற ஒரு பாதிரியார், ராண்ட்டுக்கும், மக்களுக்கும் இடையிலான இனக்கமான சூழலைப் பயன்படுத்தி, தீண்டப்படாத மக்களாக கருதப்பட்ட அவர்களிடம், கல்வியின் அவசியத்தை எடுத்துக்கூறி அனைத்து மக்களும் கல்வி கற்பதற்கான ஏற்பாட்டினைச் செய்தார். ராண்ட் மற்றும் அயெர்ஸ்ட் மீது ஏற்கனவே கோபம் கொண்டிருந்த பார்ப்பன இளைஞர்களுக்கு ஜேம்ஸ் பாதிரியாரின் செயல் மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிப்பதை எதிர்த்ததோடு, பெண்களுக்கு கல்வி வழங்குவதை அறவே வெறுத்தவர் திலகர். "சூத்திரர்களும், பஞ்சமர்களும் கல்வியே கற்கக்கூடாது" என்று வெளிப்படையாகப் பேசியவர்.

"வீரசிவாஜி இந்துமத நலனுக்காக, அப்சல்கானை கொன்றது சரிதான்" என்றும் "இந்துமதத்திற்கு எதிராக செயல்படுபவர்களை, சிவாஜி வழியில் நின்று கொன்றால் அது தேசபக்தியே யாகும்" என்றும் தனது "கேசரி" இதழில் எழுதி பார்ப்பன இளைஞர்களிடம் கொலைவெறியைத் தூண்டினார் திலகர்! சனாதன வெறிபிடித்த பார்ப்பன இளைஞர் களான தாமோதரஹரியும், பாலகிருஷ்ண ஹரியும், ராண்ட் மற்றும் அயெர்ஸ்ட்_டை கொல்ல சதித்திட்டம் தீட்டினர்! விக்டோரியா மகாராணி பதவியேற்ற நாளின் வைரவிழா 1897ம் ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது! ராண்ட்டும், அயெர்ஸ்டும் அந்த விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்புகையில், அந்தப்பார்ப்பன காலிகளால், திட்டமிட்டபடி சரமாரியாக சுடப்பட்டனர். அயெர்ஸ்ட் அந்த இடத்திலேயே சரிந்தார்!. ராண்ட் உயிருக்குப் போரா டிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார்!

கொலைகாரர்களைப்பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுக்க முயன்ற ஆரிட் என்ற இளைஞனையும், ஜேம்ஸ் பாதிரியாரையும், அந்தக்கும்பல் வேறொரு நாளில் தீயிட்டு கொளுத்தி கொன்றது!. இந்து சனாதனத்தை காப்பாற்ற கலெக்டர் ஆஷ்துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாத அய்யர் எப்படி சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்கப்படுகிறாரோ, அப்படியே தாமோதரனும் பாலகிருஷ்ணனும் வரலாற்றில் தியாகியாக்கப்பட்டு விட்டார்கள்!.

கலப்புமண சட்டம்!

வித்திலபாய் படேல் என்பவர் மத்திய சட்ட சபையில் 1918 ம் ஆண்டு கலப்பு திருமண சட்ட மசோதாவை கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் நீதிக்கட்சியும், மராட்டியத்தில் அம்பேத்கரும், சட்ட மசோதாவை ஆதரித்து பேசினர். திலகரோ, "பார்ப்பனர்கள் பார்ப்பனரல் லாதாரை திருமணம் செய்துகொண்டால், பார்ப்பனத் தன்மையை இழந்துவிடுவார்கள்" என்றார். "அனுலோமத் திருமணங்களை ஆதரித்தால், பிரதிலோமத் திருமணங்களை தடுக்க முடியாது" என்றும் எச்சரித்தார். (சபிக்கப்பட்ட உறவுகளுக்கு மனு வைத்த பெயர் "சங்கரமம்". ஆண் மேல் சாதியாய் இருந்து, கீழ்சாதிப்பெண்ணை மணந்தால் "அனுலோம சங்கரமம்". பெண் மேல் சாதியாய் இருந்து கீழ்சாதி ஆணை மணந்தால் "பிரதிலோம சங்கரமம்". இப்படி திருமணம் செய்துகொள்வோரை சண்டாளர்கள் என்று சொல்லி அவர்களுக்கு கடுமையான தண்டனையை விதித்தான் மனு என்று கூறப்படுகிறது).

சூத்திரனுக்கு ஏது அரசியல் உரிமை?

பார்ப்பனரல்லாதாருக்கு அரசியல் உரிமை கோரி தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதார் இயக்கங்கள் கோரிக்கை வைத்து போராடிய நிலையில் சென்னை வந்த திலகர், பொதுக்கூட்டம் ஒன்றில், "செக்காட்டும் செட்டியும், செருப்பு தைப்பவனும், துணி துவைப்பவனும் சட்டசபைக்கு வர நினைப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சூத்திரர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களே தவிர சட்டத்தை இயற்றுபவர்கள் அல்ல" என்று திமிராக பேசினார்.
இந்துவெறியர்!

"கீதா ரகசியம்" என்ற உரைநூலை எழுதி, மக்கள் கீதையை படித்து இந்துமத உணர்வு பெறவேண்டும் என்று கூறிய திலகர், இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கை தொடர்ந்து கடைபிடித்து, இந்திய அரசியலை, இந்துமதக் கோட்பாட்டுக்குள் அடக்க முயற்சித்தார். ஆர்.எஸ்.எஸ் தளகர்த்தராக விளங்கிய சாவர்க்கரையே இவர்தான் தயார் செய்தார் என்று சொல்லப்படுகிறது!

- கி,தளபதிராஜ்

தமிழ் ஓவியா said...

இராஜராஜசோழனின் வில்லும் வாளும்!
நாளிதழ் ஒன்றில் +2 தமிழ் முதல்தாள் பொதுத்தேர்வுக்கான மாதிரி வினா-விடை வெளியாகியி ருந்தது.அதில் இராஜராஜசோழனின் வில் ஒரு அம்பினை விடுத்து பெருங்கடலே வற்றும்படி செய்தது என்றும் அவனது வாள் காவிரி ஆறு சோழநாடு செல்வதற்காக சைய மலையை வெட்டி வழிவிட்டதோடு, வானத்தில் அசைந்த அசுரர்களின் நகரத்தையே அழித்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இராஜராஜசோழன் வரலாற்றில் வாழ்ந்து மறைந்த ஒரு மனிதன்.அவனை பற்றி குறிப்பிடும் போதே இப்படி அறிவியலுக்கு உட்படாத புனைக் கதைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் கற்பனைக் கதைகளான இராமாயணம், மகாபாரதம் பொன்றவற்றை பற்றிச் சொல்லவும் வேண்டுமா? இவற்றை பார்க்கும் பொழுது தமிழ் மொழி அறிவு வளர்ச்சியடையாத காட்டுமிராண்டி மொழியாக உள்ளது என்று பெரியார் அவர்கள் சொன்னது எவ்வளவு நூற்றுக்கு நூறு உண்மை என்பது தெரிகிறதே!

-_ மீரா

தமிழ் ஓவியா said...
"சத்தியமூர்த்தி லஞ்சம் வாங்குகிறாராமே?" என்று போகிற போக்கில் சிலர் சொல் லிவிட்டு போய்விடுவார்கள். இதை அவரிடமே நேரில் சொன் னேன். அவர் கொஞ்சம்கூட என் மீது கோபப்படவில்லை. நிதானமாக பதிலளித்தார்.

"நாள் பூராவும் வேலைசெய்யவேண்டும். எங்கேயாவது பஞ்சாயத்து தேர்தல் என்றால் கூட அதற்கு மேளம் வாசிக்க சத்தியமூர்த்தி வர வேண்டும்.

நான் பணக்காரனில்லை.நான் எப்படி சாப்பிடுவது? தேர்தல் தம்பட்டம் அடித்துவிட்டு நானும் என் குடும்பத்தினரும் வாயு போஜனம் செய்ய முடியுமா? யாராவது ஒரு பணக்காரனுக்கு அசெம்பளியில் கேள்விகேட்க வேண்டியிருக்கும்.அவனிடம் பணம் இருக்கிறது. என்னிடம் கேள்விகேட்கும் திறமை இருக்கிறது.

எப்பொழுதாவது இதை செய்தால் லஞ்சம் ஆகுமா?" என்று கேட்டார் சத்தியமூர்த்தி.

(பார்ப்பனர்களால் நடத்தப்பட்ட "பாரததேவி" 8.12.1943 இதழில் வெளிவந்த இச்செய்தியை குடியரசு 18.12.1943 ல் வெளியிட்டது.)

தமிழ் ஓவியா said...


2ஜி அலைக்கற்றைப் பிரச்சினையில் பார்ப்பனர்களின் சதி அம்பலம்!


ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் எந்த இழப்பும் இல்லை

என்னை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினர்

ஆர்.பி. சிங் பரபரப்புத் தகவல்


புதுடில்லி, நவ. 23- 2ஜி ஸ்பெக்ட் ரம் விற்பனையால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு என்று தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அலுவலக அறிக்கை என்னு டையதே அல்ல. தனக்கு இப்படித் தான் (ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு என்று கூறி) அறிக்கை வேண்டும் என்று எனது அதிகாரியான சிஏஜி (வினோத் ராய்) எழுத்துப்பூர்வமாகவே உத்தரவு போட்டுவிட்டால் நான் என்ன செய்ய முடியும்? நான் செய்த கணக்குத் தணிக்கையின்படி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் எந்த இழப்பும் இல்லை என்றே எழுதி யிருந்தேன் என்று மத்திய கணக் குத் தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றிய டைரக்டர் ஜெனரலான ஆர்.பி.சிங் தெரிவித் துள்ளார்.

இதுபற்றி செய்தி வருமாறு:

2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை யால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிஏஜி வினோத் ராய் கூறிய தகவல்கள் முழுக்க முழுக்க அவரது சொந்த கற்பனை என்ற விவரம் மெல்ல மெல்ல வெளியே வந்து கொண்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஆரம்பத் தில் இருந்தே வினோத் ராயின் செயல்பாடுகள் கேள்விக்குறி யாகவே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டிருந்தால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி கிடைத்திருக்கும் என்றார் வினோத் ராய். ஆனால், சமீபத்தில் இதை ஏலம் விட்ட போது வாங்கக் கூட ஆள் இல் லாமல் வெறும் ரூ. 9,000 கோடிக்கே அது விற்பனையானது. இதிலி ருந்தே ஸ்பெக்ட்ரத்தின் விலை தொடர்பாக வினோத் ராய் கூறிய மனக் கணக்கு எந்த அளவுக்கு ஏற்றிச் சொல்லப்பட்ட ஒன்று என்பது நிரூபணமாகிவிட்டது.

தமிழ் ஓவியா said...

இந்நிலையில் வினோத் ராய் மற்றும் அவரது துணை அதிகாரி யான ரேகா குப்தாவின் அடுத்த தகிடுதத்தம் வெளியே வந்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை குறித்து உண்மையிலேயே ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க வேண் டியது, மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகத்தில் பணி யாற்றிய டைரக்டர் ஜெனராலான ஆர்.பி.சிங் தான். இவர் தான் தொலைத் தொடர்பு மற்றும் அஞ்சல் துறைக்கான சிஏஜியின் தணிக்கை அதிகாரி ஆவார்.

ஆனால், வினோத் ராய் அண்ட் கே ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுவிட்டதாக தாங்களே ஒரு அறிக்கையை தயார் செய்து அதில் ஆர்.பி.சிங்கிடம் கட்டாயப் படுத்தி வாங்கியுள்ளது. இந்த இழப்புக் கணக்கு சரியானதல்ல என்று ஆர்.பி.சிங் கூறியும் கூட அவரது உயர் அதிகாரியான வினோத் ராய் அதில் கையெழுத்து போட வைத்துள்ளார். இதை ஆர்.பி. சிங் இப்போது வெளியே கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

முரளிமனோகர் ஜோஷி

2ஜி விவகாரம் குறித்து நாடாளு மன்ற பொதுக் கணக்குக் குழு 2008 ஆம் ஆண்டு முதலே விசாரித்து வந்தது. இந் நிலையில் இதன் தலை வராக பாஜக தலைவர் முரளி மனோ கர் ஜோஷி 2010 ஆம் ஆண்டு பதவி யேற்றார்.

அதே நேரத்தில் மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகமான சிஏஜியின் அலுவலகமும் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை குறித்து ஆய்வு செய்து வந்தது. அப்போது, சிஏஜி அலுவ லகத்தை முரளி மனோகர் ஜோஷி பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சிஏஜி தயாரித்து வந்த ரகசிய 2ஜி அறிக்கை குறித்து விவாதித் துள்ளார். இதை சிஏஜி அலுவலகத் தின் தலைமையக டைரக்டர் ஜென ரல் ஆர்.பி.சிங் தனது அலுவலகக் குறிப்புகளில் எழுதியுள்ளார்.

இதன் பின்னர்தான் சிஏஜியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டது. அதில், ஸ்பெக்ட்ரம் விற்பனையால் மத்திய அரசுக்கு ரூ. 57,666 கோடி முதல் ரூ. 1.76 லட்சம் கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

சிஏஜி ஒரு விஷயத்தை ஆய்வு செய்து வந்தபோது முரளி மனோகர் ஜோஷி ஏன் அந்த விவரங்களைப் பெறவும், அது குறித்து அதிகாரி களுடன் விவாதிக்கவும் ஆர்வம் காட் டினார் என்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தமிழ் ஓவியா said...


மேலும் முரளி மனோகர் ஜோஷி இந்த விவகாரத்தில் அறிக்கை தயாரிக்க உதவுவதற்காக சிஏஜி அலு வலக அதிகாரிகள் அவரது வீட் டுக்கே நேரில் சென்று, அதுவும் விடுமுறை நாள்களில், உதவி செய்துள்ள விவரத்தையும் ஆர்.பி.சிங் இப்போது வெளியே கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற ஆர்.பி.சிங் 2ஜி விவகாரத்தில் சிஏஜி வினோத் ராயின் செயல்பாடுகள் குறித்து பத்திரிகைகளுக்கு அளித் துள்ள பேட்டியில்,
கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி, குட் பிரைடே விடுமுறை நாளில், சிஏஜி அலுவலக அதிகாரிகள் முரளி மனோகர் ஜோஷியின் வீட்டுக்குச் சென்றனர். பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரையும் குற்றம் சாட்டி ஜோஷி தயாரித்த 2ஜி அறிக்கையை தயாரிக்க உதவினர்.

ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு என்று தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அலுவலக அறிக்கை என்னுடையதே அல்ல. தனக்கு இப்படித்தான் (ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு என்று கூறி) அறிக்கை வேண்டும் என்று எனது அதிகாரியான சிஏஜி (வினோத் ராய்) எழுத்துப்பூர்வமாகவே உத்தரவு போட்டுவிட்டால் நான் என்ன செய்ய முடியும்?.

நான் செய்த கணக்குத் தணிக்கை யின்படி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் எந்த இழப்பும் இல்லை என்றே எழுதியிருந்தேன். அதே நேரத்தில் கூடுதல் ஸ்பெக்ட்ரம் வைத்திருக்கும் நிறுவனங்களிடம் இருந்து இன்னும் ரூ. 37,000 கோடியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றுதான் எழுதியிருந்தேன்.

இது நடந்தது 2010 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி. இதையடுத்து எனது தலைமையிலான குழுவை சிஏஜி தலைமையகத்தில் உள்ள துணை சிஏஜியான ரேகா குப்தாவின் கீழ் இணைத்துவிட்டனர். மேலும் மத்திய நிதித்துறையின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யும் பணியையும் என்னிடம் தரவில்லை.

2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான் கொடுத்த அறிக்கையை முழு வதுமாகவே திருத்தி (ரூ. 1.76 லட்சம் கோடி வரை இழப்பு என்று எழுதி) அதை மத்திய நிதித்துறைக்கும், தொலைத் தொடர்புத்துறைக்கும் அனுப்புமாறு உத்தரவு போட்டனர். இந்த உத்தரவு மேலதிகாரிகளிடம் இருந்து வந்ததால் என்னால் ஏதும் செய்ய முடியவில்லை.

மேலும் எந்தவித ஆடிட் வழி காட்டுதல்களும் இல்லாமல் இந்த அறிக்கையை தயார் செய்திருந்தனர். எதை வைத்து இந்த இழப்புக் கணக்குக்கு வந்தீர்கள், அந்த வழிகாட்டு விதிமுறைகள் என்ன என்று கேட்டு ரேகா குப்தாவுக்கு பலமுறை கடிதங்கள் அனுப்பியும் பதிலே வரவில்லை.

அதேபோல இந்த நஷ்டக் கணக்கை நான் ஏற்கவில்லை என் பதையும், சரியான வழிகாட்டுதல்கள்- ஆவணங்கள் இல்லாமல் இந்த ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு காட்டப்படு வதையும் எதிர்த்து வினோத் ராய்க்கும், ரேகா குப்தாவுக்கும் அலுவலகரீதியாக பலமுறை எனது எதிர்ப்பைக் காட்டினேன்.

ஸ்பெக்ட்ரத்துக்கு இதுதான் விலை என்று டிராய் அமைப்பே, மத்திய அரசே எந்த கட்டணத்தையும் நிர்ணயித்திருக்கவில்லை. இதனால் எதை வைத்து ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு என்று சொல்ல முடியும். நம்மிடம் இதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லையே என்று சுட்டிக் காட்டினேன். ஆனால், சிஏஜி தலை மையகம் (வினோத் ராய்) சொன்னதை வைத்து இதுதான் இழப்பு (ரூ. 1.76 லட்சம் கோடி) என்று எழுதி அனுப்ப வேண்டிய நிலைக்கு எனது அலு வலகம் தள்ளப்பட்டது. -இவ்வாறு போட்டு உடைத் துள்ளார் ஆர்.பி.சிங்.

நஷ்டம் குறித்து வினோத் ராய் கூறிய தகவல்களை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் ஏற்கெனவே பலமுறை ஆஜராகி ஆர்.பி.சிங் மறுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


சிறையில்கூட


பெரியார் அவர்கள் குறிப்பிட்டதாவது:

சிறைகளில்கூட விகிதத்துக்கு மேல் தான் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்!

அவர்களெல்லாம் பாங்கியை மோசடி செய்தவர்களும் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியோருமே!

கஞ்சிக்கில்லாது ஏதோ கத்திரிக்காய் களவாடிய திராவிடர்கள்தான் பெரும் பாலும் சிறைகளில் என்றார்.

- குடிஅரசு தொகுதி 42 பக்கம் 201

தமிழ் ஓவியா said...


என்றும் பயன் தரும் இனிய சிந்தனைகள்!


ஒரு விஷயத்தைத் தத்துவ விசாரணை செய்ய முதலில் என்ன? ஏன்? எதற்காக? எப்படி? எங்கே? எப்போது? என்ற ஆறு வினாக்களைப் போட்டு, திருப்தியான பதில் பெற வேண்டும். - தந்தை பெரியார்

தாங்கள் வகுப்புணர்ச்சியை விடாமல் இருந்து கொண்டு, அதே சமயம், மற்றவர்களைப் பார்த்து வகுப்புணர்ச்சியை விட்டு விடுங்கள் என்று கூறுப வர்கள் தென்னிந்தியப் பார்ப்பன அரசியல்வாதிகள் ஆவார்கள் - லாலாலஜபதிராய்

கோயில் உள்ளே சிலை; இடையே திரை; அதன் பின்னே அய்யர்; அவர் தயவு வைத்தால் திரை விலகும். தயவுக்கு தட்சணை வேண்டும். தயாபரனைக் காண இத்தனை தடைகள்; என்ன நயவஞ்சகம் பொதுவிடத்தில்? - பேரறிஞர் அண்ணா

விவாதம் இருக்கலாம்; வாக்குவாதம் செய்யலாம்; ஆனால் விதாண்டா வாதம்தான் இருக்கக் கூடாது. - முத்தமிழறிஞர் கலைஞர்

விருப்பங்களை (Aptitude) விலை கொடுத்துப் பெறலாம். மன உறுதிகளை (Attitude) மனப் போக்கினை எங்கும், எவரும் விலை போட்டு வாங்கிவிட முடியாது - தமிழர் தலைவர் வீரமணி

எடுத்ததை எல்லாம் கடவுளாக்கி வழிபட்டு கோயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விசித்திர வழக்கம் இந்தியாவில் இருக்கிறது. பெயரளவில் பக்தி, பண்ணிவிட்டு நடைமுறையில் நேர்மாறான செயல்களைச் செய்வதும் நம்மவர் வழக்கமாகி விட்டது _ பண்டித ஜவகர்லால் நேரு

உன் மனம் வலிக்கும்போது சிரி; பிறர் மனம் வலிக்கும்போது, சிரிக்க வை - சார்லி சாப்லின்

பார்க்கின்ற மனிதர்களிடம் அன்பு செலுத்த முடியாத நீ பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்தப் போகிறாய்? - அன்னை தெரசா

மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம்தான் _ அப்துல்கலாம்

ஆம்! அறியாமை அகல, பழமைப் பஞ்சாங்கத்தைப் பொசுக்கும் ஆற்றல்மிகு திராவிட இயக்கத்தின் தீப்பொறிகளே!
நீவிர் எழுந்து நடந்தால் எரிமலையும் வழிகொடுக்கும்! வரலாறும் வாழ்த்து சொல்லும்!! செல்வோம்!! வெல்வோம்!!

தொகுப்பு: நெய்வேலி க. தியாகராசன்
கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...


அறிவியல் கூடமா? அஞ்ஞானிகளின் மடமா....?

அறிவியல் உலகில் வாழும் அன்பர்களே! வணக்கம்.

மனித சமுதாயத்திற்குத் தேவையான புதிய புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கியவர்கள் அறிவியல் அறிஞர்களே ஆவார்கள். வி ஞ்ஞான கண்டு பிடிப்புகளுக்கும் அஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பான கற்பனை கடவுளர்களுக்கும் எள் முனையளவுகூட தொடர்பு கிடையாது. ஆகவே மனித குல மேம்பாட்டிற்காக தம் நேரம் பொருள் உயிரையும் கொடுத்து பாடுபட்ட அறிஞர் பெரு மக்களையே நாம் நன்றி கூறி, பாராட்ட வேண்டியதே அல்லாமல் கற்பனை கடவுளர்களை அல்ல.

இயந்திரங்களைத் திட்டமிட்டு பராமரித்தலே (routine and sheduled maintenance etc). தொழிற் கூடங்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய விதிகளாகும். அதை விடுத்து ஆயுத பூஜை என்ற பெயரில் கடவுளர் படம் சிலை வைத்து மத பூஜை செய்வது அறிவியலை கேலிக்குள்ளாக்குவதோடு நாட்டின் மதச்சார்பின்மை கொள்கையை அவமதிக்கும் செயலாகும். அரசு அலுவலகங்களில், அரசுக்கு சொந்தமான இடங்களில் கடவுளர் படம் சிலை வைத்து மத வழிபாடு செய்யக் கூடாது என மத்திய மாநில உள்துறை அமைச்சக குறிப்பாணை எண்: 5/23/94 தேதி 4.5.94 மற்றும் Lr.No.3379/L&O.B/91-3, Public (L&O.B) dt.16.9.93 மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் இந்தச் சட்டத்தை குப்பையாக ஒதுக்கி விட்டு ஒருபுறம் விஞ்ஞானத்தின் பலனை அனுபவித்துக் கொண்டு மறுபுறம் அஞ்ஞானத்தை பரப்புவதில் முனைப்புடன் செயல்படுகிறார்கள். நிர்வாகப் பொறுப்பிலுள்ளவர்களும் இதனைக் கண்டு கொள்ளாமல் இருப்பது நாட்டின் மத சார்பின்மை தத்துவ கொள்கைக்கு எதிரான செயலுக்கு துணை போவதாகவே அமையும்.

அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது பகுத்தறிவு, மனிதநேயம் சமூக சீர்திருத்த எண்ணத்தில் நாட்டம் இவை ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகளில் ஒன்று என அரசமைப்புச் சட்டம் 51A (h) பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அறிவியல் சாதனங்களை கண்டுபிடித்த அயல் நாட்டினர் எவரும் அதற்கு பூஜை செய்வதில்லை. மேன் மேலும் பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி சாதனை படைக்கிறார்கள். நம் நாட்டில் பக்தி என்ற பெயரில் ஆயுதங்களுக்கு பூசை போடுவதாக அறிவியலைக் கொச்சைபடுத்தும் செயலைக் கூச்சமின்றி செய்கிறார்கள். கொள்ளையடிப்பவன், கூலிப்படை கொலைகாரன், சாராயம் விற்பவன் இன்னும் அவனவன் தொழிலுக்கேற்ற ஆயுதங்களுக்கு பூஜை செய்தால் ஆண்டவன் அவர்களின் செயலுக்கு துணை போவானா? இதனால் நாட்டில் ஒழுக்கம்தான் வளருமா? பக்தி என்பது அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை அதனை பொது இடங்களில் புகுத்துவது என்பது நாகரிகமற்ற செயலாகும்.

ஆகவே, இந்நாளில் உலக அறிவியல் மேதைகளை நினைவு கூர்வோம். நாம் வளமோடு வாழ்வதற்கு இந்த அணுவாற்றல் துறை உருவாகுவதற்கு காரணமாக இருந்த அணுவாற்றல் துறையின் தந்தையாக கருதப்படும் டாக்டர் ஹோமி ஜகாங்கீர் பாபா அவர்களுக்கு நன்றி செலுத்துவோம். இங்ஙனம்

பகுத்தறிவாளர் கழகம், கல்பாக்கம் காஞ்சி மாவட்டம்

(Affiliated to state Rationalists Forum, Madras, Read No.286/70, Societ Act. 1860)
மற்றும் சமூக நல்லிணக்க குழு, கல்பாக்கம்


தமிழ் ஓவியா said...


கழகக் குடும்பத்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள்!


கழகப் பொறுப்பாளர்கள், பகுத்தறிவாளர் கழகத்தவர் மற்றும் நமக்கு நெருக்கமான நலம் விரும்பும் நண்பர்கள் ஆகியவர்களின் அன்புக் கட்டளைகள் காரணமாக எனது பிறந்த நாள் விழா என்னையும் சூழ்நிலைக் கைதியாக ஆக்கி விட்டது.

முன்பு 75 வயது என்பதை ஒரு காரணமாகக் காட்டியதுபோல, இப்போது 80 வயது துவக்கம் என்பதையும், ஒரு முக்கிய சாக்காக ஆக்கிக் கொண்டு கழகக் குடும்பத்தினர் ஏற்பாடுகளை - எங்களிருவர் விருப்பத்தைப் பற்றியோ, கருத்தைப் பற்றியோ சிறிதும் பொருட்படுத்தாமல் செய்து வருகின்றனர்.

தந்தை பெரியாரின் வாழ் நாள் மாணவனான எனக்கு தேவையற்ற ஆடம்பர விழா, எனக்கு ஒரு தண்டனை போன்றதே!

என்றாலும் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? சமுதாயத்திற்கும், மக்களுக்கும் பயன்படும் வகையில் அதனை நடத்திடுங்கள் என்று விழாக் குழுவினரை, கழகக் குடும்பத்தவர்களை நான் மெத்தப் பணிவுடன் வேண்டிக் கொண்டேன் - கொள்கிறேன்.

1. மரக்கன்றுகளை, நாடு தழுவிய அளவில் நட்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், புவி வெப்பமயமாதலைத் தடுத்தல் ஆகிய வற்றை மிக முக்கிய பணியாகக் கொள் ளுதல்.

2. 8 முதல் 10 புதிய நூல்களை வெளியிட்டு திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவுக்கு முத்திரை பதித்தல்.

3. ஜாதி, தீண்டாமை பெண்ணடிமை, என்ற பிறவிப் பேதம் ஒழிந்த புதியதோர் அறிவுலகை, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கி, 2013 முடிவதற்குள் தமிழ் நாட்டில் நாடு, நகரம், பட்டி தொட்டி யெல்லாம் அடர்த்தியான பிரச்சாரக் கூட் டங்கள் 800 முதல் 1000 வரை நடத்துதல் - என்றெல்லாம் திட்டமிட்டுள்ளது - மிகவும் புத்தாக்கத்தை உருவாக்கும் என்பது உறுதி!

மற்றொரு முக்கிய வேண்டுகோள்

வாழ்த்துத் தந்திகள், கூரியர் அஞ்சல்கள் - மூலம் செலவழிக்கும் பணத்தை பெரியார் (தொண் டர்கள்) நல பாதுகாப்பு அறக்கட்டளை Periyar Health Care Trustக்கு - சிறு தொகையாக இருப்பினும் அனுப்பி விடுங்கள் - பெயர் மூலம் நீங்கள் வாழ்த்தியுள்ளீர்கள் எனப் புரிந்து கொள்ளும்.

தோழர் சந்திப்பிலும், நேரிலும் கவரில் பெயருடன் உண்டியலில் போடலாம். சிறு துளி பெரு வெள்ளம் ஆகலாம். துயர் துடைக்க, நலம் மீட்க அந்நிதி பயன்படட்டும் - என்பதே நமது பணிவன்பான வேண்டுகோள்!
கி.வீரமணி
சென்னை உங்களின் வாழ்நாள்
24.11.2012 தொண்டன், தோழன்

தமிழ் ஓவியா said...


ஏன் சுயமரியாதை வெடித்தெழவில்லை?


ஜாதியைப் பற்றிப் பேசுகிறார்களே. பார்ப்பனர் களைத் தவிர மற்றவர்கள் கோயில் கருவறைக் குள் நுழையக் கூடாது , முடியாது என்கிறார்களே!

செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்லலாம்; கோயில் கருவறைக்குள் செல்ல முடியாது என்பது எந்த நிலை? காரணம் நாம் சூத்திரர் களாம்!

இதுபற்றி எல்லாம் ஜாதிபற்றிப் பேசுபவர்கள் கவலைப்படாதது ஏன்? எல்லா ஜாதியினரையும் சேர்த்துத்தான் சூத்திரன், பஞ்சமன் என்கிறான். இந்த இடத்தில் சுயமரியாதை வெடித்தெழ வில்லையே - ஏன்?

- புதுச்சேரி மாநாட்டில் தமிழர் தலைவர்

தமிழ் ஓவியா said...

பொலிவான புதுச்சேரி மாநாடு!


புதுச்சேரியில் நேற்று (23.11.2012) நடைபெற்ற திராவிடர் கழக மாநாடு எல்லா வகைகளிலும் சிறப்பானதாகும். மாநாட்டுக்கான ஏற்பாடுகள், நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், உரைகள் - தீர்மானங்கள் - தந்தை பெரியார் சிலை திறப்பு நூல்கள் வெளியீடு, தோழர்களுக்குப் பாராட்டு என்று அனைத்தும் வரலாற்றில் நேர்த்தியாகப் பதிவாகக் கூடியவை! இந்தக் கால கட்டத்தின் கழகத்தில் பொலிவு எத்தகையது என்பதற்கான அளவுகோலாகும்.

இதே புதுச்சேரியில் எத்தனை எத்தனையோ மாநாடுகள். 1931இல் சுயமரியாதை மாநாடு 1932இல் முதல் வாலிபர் மாநாடு, 1945இல் திராவிடர் கழகத் தொடக்க விழா என்று எத்தனை எத்தனையோ மாநாடுகள் கம்பீரமாக நடைபெற்ற கொள்கை மணம் வீசும் பூமிதான் புதுச்சேரி.

மாநாடுகளைத் தவிர தொடர்ந்து விடுதலைப் பொன் விழா, பகுத்தறிவாளர் கழக மாநாடு தந்தை பெரியார் சிலை திறப்பு விழா என்று ஏராளமான நிகழ்ச்சிகளும் நடைபெற்ற துண்டு.

நேற்றைய மாநாட்டைப் பொறுத்தவரை காலையில் பேசு சுயமரியாதை உலகு எனும் தலைப்பில் சிறந்ததோர் கருத் தரங்கம்! ஒவ்வொருவரும் முத்து முத்தான கருத்துக்களை எடுத்து வைத்தனர்.

பிற்பகல் எழுச்சியூட்டும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி பொது மக்களைப் பெரிதும் ஈர்ப்பதாக அமைந்திருந்தது - பேரணியைப் பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் (முக்கியமாக இளைஞர்கள்) கண்டு களித்தனர்.

மாலையில் கலை நிகழ்ச்சிகளுடன் திறந்த வெளி மாநாடு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொது மக்கள் இரவு 10 மணி வரை மாநாடு நிறைவு பெறும் வரை மிகுந்த ஆர்வத்துடன் கூடியிருந்தது குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது.

தமிழ் ஓவியா said...


காலையில் நடைபெற்ற கருத்தரங்கின் போதும் சரி, மாலை மாநாட்டிலும் சரி, மாநாட்டுக்காக உழைத்த கழகத் தோழர்கள், பெரியார் பெருந்தொண்டர்கள், மரணத்திற்குப் பிறகு தங்கள் உடலை மருத்துவமனைக்கு ஒப்படைக்க முன் வந்த தோழர்கள் என்று அனைவருக்கும் பயனாடைகள் அணிவிக்கப்பட்டு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

பொதுக் கூட்டமாக இருந்தாலும் சரி, அதன் வெற்றிக்கு உழைக்கும் தோழர்களைப் பாராட்டுவது, இளைஞர்களை உற்சாகப்படுத்துவது என்பதைத் திராவிடர் கழகம் வழமையாகக் கொண்டுள்ளது. மாநாடு அமைந்திருந்த விதத்தை, புதுச்சேரி மாநில இந்தியக் கம்யூனிஸ்டு செயலாளர் முன்னாள் அமைச்சர் இரா. விசுவநாதன், புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி. முத்து ஆகியோர் ஆற்றிய உரை கட்சிகளையும் கடந்து மாநாடு பாராட்டுப் பெற்றதிலிருந்த சிறப்பை உணரலாம்.

மாநாட்டுக்கு மேலும் அணிகலன் என்பது 5 நூல்கள் வெளியிடப்பட்டதாகும். ஏராளமான தோழர்கள், பொது மக்கள் மேடைக்கே வந்து நூல்களைத் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட வண்ணம் இருந்தனர்.

மாநாடு அறிவிக்கப்பட்ட நாள் முதல் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அடிப்படைவாதிகள் காவல்துறைக்குப் புகார் எழுதுவதையே தங்கள் பிழைப்பாகக் கொண்டிருந்தனர். திராவிடர் கழகப் பிரச்சாரம் நடந்தால் தாங்கள் அடியற்று வீழ்ந்து விடுவோம் என்னும் அச்சம் அவர்களை உலுக்கி எடுக்க, கோழைத்தனமாக இத்தகைய செயல்பாடுகளில் இத்தகையவர்கள் ஈடுபடுவது பரவலாகவே நடந்து கொண்டு தான் இருக்கின்றன. கடைசியில் அவர்கள் தோல்வியின் தொங்கு முகமாகத் தான் வெளியேறுகிறார்கள். புதுச்சேரியிலும் அதேதான் நடந்தது.

உண்மையைச் சொல்லப் போனால் அத்தகு அமைப்பு களில் இருக்கும் பார்ப்பனர் அல்லாதவர்கள்கூட சிந்தனைத் தெளிவு பெறும் வண்ணம் நிகழ்ச்சிகளும், கருத்துரைகளும் அமைந்திருந்தன.

இந்த நேரத்தில் தமிழ்நாட்டிலும் சரி, புதுச்சேரி மாநிலத் திலும் சரி இந்துத்துவா கா(லி)விகள் கொடுக்கும் புகார்களை ஏற்றுக் கொண்டு, திராவிடர் கழகப் பொறுப்பாளர்களை அழைத்து தேவையில்லாமலும், சம்பந்தம் இல்லாமலும் விசாரணை நடத்துவது, குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்று கூறுவதெல்லாம் சரியானதல்ல - முறையுமல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திராவிடர் கழகம் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு, கட்டுப் பாடாக, தனி ஒழுக்கம், பொது ஒழுக்கம், பொது அமைதி இவற்றைப் பேணி காக்கக் கூடியதாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் 51ஹ() என்னும் பிரிவு மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை, ஏன், எதற்கு என்று வினா எழுப்பும் உணர்வை, சீர்திருத்த வேட்கையைத் தூண்டுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறுகிறது.

இந்தச் சட்டப்படியான பணியை திராவிடர் கழகம் முதல் நிலையிலிருந்து நாளும் செய்து வருகிறது. அதற்கு எல்லா வகையிலும் உதவியாக இருப்பது தான் காவல்துறையின் கடமையாக இருக்க வேண்டும்.

அதைவிட்டு விட்டு, இவற்றிற்கு விரோதமான கொள்கை களையும், நடவடிக்கைகளையும் கொண்ட பிற்போக்குச் சக்திகளின் காகிதத் துப்பாக்கிகளுக்கு மதிப்புக் கொடுப்பது - ஒரு பிற்போக்குத்தனமான செயலாகத்தான் இருக்க முடியும். இந்த வகையில் அரசின் துறைகளையும் திருத்தும் வேலை திராவிடர் கழகத்திற்கு இருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.

மாநாட்டின் மகத்தான வெற்றிக்கு அயராது உழைத்த கழகப் பொறுப்பாளர்களுக்கும், தோழர்களுக்கும் பாராட் டுகள்! பாராட்டுகள்!! 24-11-2012

தமிழ் ஓவியா said...


புதுச்சேரி பேரணி - ஒரு நடைச் சித்திரம் - கரைபுரண்ட கருஞ்சட்டை வெள்ளம்!


கட்சிகள் பல மாநாடுகள் நடத்துகின்றன - பேரணி களையும் நடத்துகின்றன.

ஆனால் அவற்றிற்கு முற்றிலும் மாறுபடாது திராவிடர் கழகம் நடத்தும் மாநாடுகளும் - பேரணி களும்.

மாநாடு என்றால் கருத்துகளுக்கு முதலிடம். பேரணி என்றால் முழக்கங்களுக்கு முக்கிய இடம்.

முழக்கங்கள் முன்கூட்டியே அச்சிடப்பட்டு அளிக்கப்படுகின்றன.

தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைக் கருவூலம் - கழகத்தின் கருத்து மலர்கள் மக்களை நோக்கிக் கொண்டு செல்லுவதுதான் திராவிடர் கழகப் பேரணி யாகும் கொள்கைகள், முழக்கங்களாக கொடுக்கப் படுகின்றன. கடவுள் மறுப்பிலிருந்து ஜாதி ஒழிப்பு, சமூகநீதி, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமை தகர்ப்பு வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு - இனநலப் பாதுகாப்பு - இன இழிவு ஒழிப்பு, மத வாத முறியடிப்பு - இவற்றை உள்ளடக்கிய கொள்கைகளின் வீச்சே பேரணி முழக்கங்கள் - கண்ணியமான முழக்கங்கள் மக்களைக் கவரக் கூடியதாகும்.

இரண்டாவதாக மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் காட்சிகள். பெண்கள் தீச்சட்டி ஏந்தி வருதல் - தீச்சட்டி இங்கே, மாரியாத்தாள் எங்கே? என்று அவர்கள் போடும் முழக்கம்.

முதுகில் அலகு குத்தி கார் இழுக்கும் கழகத் தோழர்களின் கடவுள் மறுப்பு முழக்கம். கடவுள் சக்தி என்று சொல்லி சிறுதேர் இழுக்கும் பக்தனே. கடவுள் இல்லை என்று சொல்லி, கார் இழுக்கும் காட்சியைப் பாரீர்! பாரீர்!! என்று முழங் குவது

அரிவாள் மீது ஏறி நின்று பூசாரி கடவுள் சக்தியைக் காட்டுவதாகப் பம்மாத்து அடிக்கிறார்களே, அதனையும் முறியடிக்கும் வகையில் கடவுள் இல்லை என்று முழக்கமிட்டு அத்தகைய நிகழ்ச்சிகளை அனாவசியமாகச் செய்து காட்டும் நிலை (சிறுவர்கள், சிறுமிகள் கூட ஏறி அரிவாள் மீது நின்று காட்டும் அதிசயம்!)

உடம்பு பூராவும் அலகு குத்திக்கொண்டு செடில் காவடி எடுத்தல், நாக்கில் சூடத்தைக் கொளுத்திக் காட்டுதல், சிலம்பாட்டம், தப்பாட்டம், கோலாட்டம் என்று பேரணி என்பது கலைத்திறன் மிக்ககாட்சி - கருத்து வெள்ளம் கரைபுரண்டு ஓடும் முறைதான் திராவிடர் கழகத்தின் தனித்தன்மை மின்னும் பேரணியாகும்.

மூடநம்பிக்கையை முறியடிக்கும் கழக வீராங்கனைகள்!

புதுச்சேரி பேரணியும் இவற்றை உள்ளடக்கிய கொள்கலனாக இருந்தது. மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளை தஞ்சை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி ஒருங்கிணைத்தார்.

தமிழ் ஓவியா said...


பேரணியின் பாட்டை

சுப்பையாசிலை தொடக்கம் குயவர்பாளையம் வழியாக நாதம் வந்தடைந்து தந்தை பெரியார் சிலை வழியாக காமராசர் சிலையை கடந்து அண்ணாசாலையில் அண்ணாசிலை கடந்து வெங்கட சுப்பாரெட்டி சிலை வழியாக மாநாட்டுப் பந்தலை அடைந்தது.

காரிழுத்தல்: ஷே.க.பாஷா, அம்பேத்குமார்.

தப்பாட்ட இசையில் பட்டையை கிளப்பும் தோழியர்கள்!

தீச்சட்டி: விலாசினி ராசு, சுதா, செல்வி, சரஸ்வதி, சுமதி, விஜயலட்சுமி, யாஸ்மின், தேவகி, முருகம்மாள், கல்பனா, விஜயலட்சுமி ஏழுமலை, சாந்தி, எழிலரசி, தமிழரசி.

தப்பாட்டக் குழு - சலங்கை ஒலி குழுவினர் - தஞ்சை

வீரவிளையாட்டு: கறம்பக்குடி முத்து, புதுவை குமார்.

செடல் காவடி : புதுவை முத்துவேல், ஆயிப்பேட்டை ஆறுமுகம், சி.என்.பாளையம் எழிலரசன்.
கோலாட்டம்: சடையார்கோவில் நாராயணசாமி குழுவினர்.

அரிவாள்மீது ஏறிநிற்றல்: வழக்குரைஞர் அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட கழக செயலாளர்).

தமிழர் தலைவர் பார்வையிட்டார்

பேரணியை காமராசர் சிலையருகே அமைக்கப்பட்டு இருந்த தனி மேடையிலிருந்து பேரணியைத் திராவிடர் கழகத் தலைவர் பார்வையிட்டார். கழகத் தோழர்களின் வணக்கங்களை ஏற்றுக்கொண்டார்.

தீச்சட்டி ஏந்திச் சென்ற பெண்களிடமிருந்து ஒரு தீச் சட்டியைக் கொண்டு வரச் செய்து, தீச்சட்டியை அவரே ஏந்திக்காட்டியபோது ஒரே ஆரவாரம்.

புதுச்சேரி மக்கள் அண்மைக் காலத்தில் கண்டு களித்த, கருத்துத் தெளிவு பெற்ற முக்கியமான நிகழ்வாக இந்தப் பேரணி நடைபெற்றது என்று சொல்லலாம்.பேரணி

மாலை 5மணி அளவில் சாவி வ.சுப்பையா சிலை அருகிலிருந்து புறப்பட்டது. பேரணிக்குத் தலைமை வகித்தவர் - பகுத்தறிவாளர்கழக மாநிலத் துணைத் தலைவர் மு.ந.நடராசன். முன்னிலையேற்றோர்: த.சீ.இளந்திரையன், மாநில மாணவரணி செயலாளர், சு.துளசிராமன், துணைத் தலைவர், புதுச்சேரி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.கிருஷ்ணமூர்த்தி, துரை.சிவாஜி, லோ.பழனி, வே.அன்பரசன், துணைச் செயலாளர்கள் த.கண்ணன், ஆ.சிவராசன், வீர.இளங்கோவன், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி தலைவர் விலாசினிராசு, இளைஞரணி தலைவர் தி.இராசா ஆகியோர்.

தமிழ் ஓவியா said...


சுந்தரராவ் நாயுடு மறைவு


நீதிக்கட்சியின் முன்னாள் பிரதமத் தலைவர்களுள் ஒருவரான தோழர் டி.சுந்தரராவ் நாயுடு, உதகையில் 07.05.1949 அன்று இருதய நோயால் மரணமடைந்தார் எனச் செய்திக் கேட்டு வருந்துகிறோம்.

அவர் சென்னை நகரசபையில் எழும்பூர் பகுதியின் உறுப்பினராக பலகாலமிருந்தார். அதன் தலைவராகவும் ஆனார். அக்காலத்தில் அவர் நகர அபிவிருத்தி நிர்வாகத்தில் பெரும்பங்கு கொண்டு உழைத்தார். பழைய சட்டசபையில் உறுப்பினராயிருந்தார். பிரதம மந்திரியின் கவுன்சில் காரியதரிசியாகவும் இருந்தார். சிறிது காலம் 1928இல் கீழ்க்கோர்ட் நீதிபதியாக இருந்து வேலை செய்தார்.

அவர் பொதுச்சேவையில் பெரிதும் ஆதித்திராவிடர் நலனுக்குழைத்தவர். தம் இறுதிநாள் வரை திராவிட இன முன்னேற்றத்திற்கு பார்ப்பனரல்லாதார் இயக்கந் தொட்டுத் தொண்டாற்றியவர்.

அவர் திடீரென்று இருதய நோயால் தமது 59ஆவது வயதில் மூன்று பையன்களையும், நான்கு பெண்களையும் விட்டு காலமானார். அவருடைய குடும்பத்தாருக்கும் அவர் பிரிவுக்கு வருந்தும் நண்பர்களுக்கும் நம் ஆழ்ந்த அனுதாபத்தைக் தெரிவித்துக் கொள்கிறோம்.


குடிஅரசு - 14.05.1949

தமிழ் ஓவியா said...


அங்கே சாயவில்லை!


கதர் கதரெனக் கதறும் காங்கிரஸ் மந்திரிகள், பொதுமக்கள் யாவரும் கதரே கட்டவேண்டுமென ஓயாது உபதேசம் செய்கிறார்களல்லவா? அவர்களிடம் உள்ள இலாகாக்களில், காங்கிரஸ் மந்திரிகள் காட்டியுள்ள கதர் அபிமானம் எவ்வளவு என்பது உங்களுக்குத் தெரியுமா? மார்ச்சு 18ஆம் தேதி சென்னை சட்டசபையிலே, தோழர் மு.ஏ.சு. சாமி அவர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு, கனம் டாக்டர் சுப்பராயன் பதிலளிக்கும்போது, காங்கிரஸ்காரரின் கதர் புரட்டு வெளிப்பட்டது. சர்க்கார் இலாகாக்களில், 1937ஆம் வருஷம் ஜூலை மாதம் 14ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 31வரையில், சிப்பந்திகளின் துணிக்காகச் செலவழிக்கப்பட்ட தொகை. 1,03,870 - ரூபாய்

ஒரு இலட்சத்து, மூவாயிரத்து எண்ணூற்று எழுபது ரூபாய். இதில் கதருக்காகச் செலவிடப்பட்ட தொகை 36 - ரூபாய் (முப்பத்து ஆறு ரூபாய் மட்டும்!!)

காங்கிரஸ் ஜூலை மாதம் 14ஆம் தேதிதான் பதவி ஏற்றது. அதுமுதல் 6 மாதங்களில், சென்னை காங்கிரஸ் மந்திரிகள் தங்கள் இலாகாக்களில் கதருக்காக 36 ரூபாய்தான் செலவிட்டிருக்கிறார்கள்.

ஊராருக்கு ஓயாது செய்யும் உபதேசம், சர்க்கார் காரியாலய இலாகாக்களில் சாயவில்லையா! கவர்னரோ, வெள்ளைக்கார அதிகாரிகளோ குறுக்கிட்டதால்தானே கதர் பக்தியின் மதிப்பு 36-ரூபாய் அளவிலே நின்றுவிட்டது. சரணாகதி மந்திரிகள் என்று நாம் சொன்னால் கோபம் மட்டும் கொதித்துக்கொண்டு வருகிறதே! காரியத்திலே நடந்தது என்ன? தேசியச் சிங்கங்கள் கர்ஜிப்பதை விட்டு, சற்று சிந்தித்துப் பார்க்கட்டுமே!!


குடிஅரசு - பெட்டிச்செய்தி - 20-03-1938

தந்தை பெரியார் பொன்மொழி


ஆரியத்தின் கடைசி மூச்சு நிற்கும் வரை திராவிடர் இயக்கம் இருந்தே தீரும். சூழ்ச்சி, வஞ்சகம், அடக்கு முறை, கொடுமை எவை நம்மீது ஏவப்பட்டினும் சரி, நமது எதிரிகள், அரசியலார் எவரால் ஏவப்படினும் சரி, இறுதியில் இயக்கமே வெற்றி பெறும்.

தமிழ் ஓவியா said...


கும்பகோணம் போராட்டம்


உரிமைப் போராட்டத்தை நிறுத்தவேண்டுமென்று, தஞ்சையில் 28.12.1948ஆம் நாள் கூடிய நிர்வாகக் கமிட்டி முடிவு செய்தது. அதையொட்டி, 29.12.1948இல் தலைவர் பெரியாரவர்கள் கொடுத்த அறிக்கை:-

கும்பகோணத்தில் சர்க்காரால் திராவிடர் கழகப் பிரச்சாரத்தைத் தடுப்பதற்காக அநீதியாகப் போடப்பட்ட 144-அய் எதிர்த்து நடத்திய போராட்டத்தை 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை கடுமையான தடியடிப் பிரயோகத்தால் நிறுத்த சர்க்கார் முயற்சி செய்து பார்த்தும், அம்முயற்சி அவர்களுக்கு பயன்படாமல் மேலும் மேலும் போராட்டம் மக்களுக்குள் வேகத்தையும் உணர்ச்சியும், ஊக்கத்தையும் கொடுத்துத் தொடர்ந்து நடந்து வந்ததால் 26ஆம் நாள் முதல் சர்க்கார் தடியடியை நிறுத்திக் கொண்டதோடு உத்தரவை எதிர்த்தவர்களையும், எதிர்ப்புக்கு ஏற்பட்ட சட்ட நிபந்தனைப்படி அரஸ்டு செய்யாமலும் விட்டு விட்டதால், இனி அங்கு போராட்டம் தேவை இல்லை என்று கருதிப் போராட்டத்தை நிறுத்தி விடலாம் என்று 28ஆம் தேதி கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாக கமிட்டி முடிவு செய்திருக்கிறது. நாளையோடு நிறுத்தப்பட்டு விடும். ஆகவே, கும்பகோணத்துக்கு வெளியூரிலிருந்து வந்த தொண்டர்கள் அருள்கூர்ந்து அவரவர் ஊருக்கு சென்று விட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.


- ஈ.வெ.ராமசாமி, குடிஅரசு, 01.01.1949

தமிழ் ஓவியா said...


ஈரோடுவாசி ஆசிரியர் மீது வழக்கு

ஈரோடு தாலுகா மக்களின் பொது நலனுக்கென எவ்விதக் கட்சிப்பற்றும் இல்லாமல், சென்ற ஒரு வருடமாக நடைபெற்று பெரும்பாலான மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் ஈரோடுவாசி என்னும் வாரப்பத்திரிகை ஆசிரியரும், பிரசுரிப்பவருமான தோழர் ப.சண்முகவேலாயுதன் மீதும், அச்சிடுபவரான தமிழன் பிரஸ் தோழர் என்.கரிவரதசாமி மீதும் ஈரோடு டாக்டர் ஜே.டி.ராஜா எம்.பி.பி.எஸ். (பி) என்பவர், இ.பி.கோ.500 பிரிவுப்படி ஈரோடு அடிஷனல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். வாயிதா 26.02.1949 தேதி போடப்பட்டிருக்கிறது.

வழக்கு தொடர்ந்திருப்பதற்குக் காரணம் 05.12.1948ஆம் தேதி ஈரோடு வாசியில் போலி டாக்டர் சாயம் வெளுத்தது என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட சேதியேயாகும் எனத் தெரிகிறது.


குடிஅரசு 19.02.1949