Search This Blog

7.11.12

பிராமணாள் ஹோட்டலும், சிறீரங்கம் கூட்டமும்!

பிராமணாள் ஹோட்டலும், சிறீரங்கம் கூட்டமும்!

நாம் செய்ய வேண்டியதை நாம் தீர்மானிப்பது ஒருபுறம்; பார்ப்பனர்கள் தீர்மானிப்பது மறுபுறம். நமக்கு வேலை கொடுத்துவிட்டு,  அதன் விளைவுகளை மொத்த விலைக்கு வாங்கிக் கொள்வது அவர்களின் வாடிக்கை! அப்படித்தான் தொடங்கியிருக்கிறது "கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே" விவகாரமும்! இது சாதாரண கபே அல்ல, பாரம்பரிய பிராமணாள் கபே. என்ன பாரம்பரியம்? எனக் கேட்காதீர்கள்.

தொட்டுத் தொடரும் பட்டுப் பாரம்பரியம் போல இது ஒரு வகை. பிராமணன் என்றால் உயர்ந்தவர்  என்று எல்லாப் புத்தகத்திலும் எழுதி வைத்துள்ளனர்.
(எத்தனை அடி உயர்ந்தவர் என்பதற்கான சான்றுகள் அதில் இல்லை).
 
இப்படி அவர்கள் எழுதியும் , சொல்லியும் வந்ததைச்  சற்றொப்ப 80 ஆண்டு காலமாக ஒரு இயக்கம் மறுத்து வருகிறது. அவர்கள் கேட்ட  ஒரே கேள்வி,  நீங்கள் உயர்ந்தவர் என்றால் நாங்கள் யார் ? காலச் சக்கரங்கள் வேகமாக ஓடிய  நிலையில், "நாங்கள் உயர்ந்தவர்கள்" என்பதை வெளிப்படையாகச்சொல்வதை விட்டிருந்தார்கள். இதோ இப்போது வந்திருக்கிறார் "கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே" உரிமையாளர்  மணிகண்டன். விடாக்கண்டன், கொடாக் கண்டன் என்றெல்லாம் சொல்வார்களே, அதுபோல இருக்க ஆசைப்படுகிறார் இக்கண்டன். இருந்துவிட்டுப் போகட்டும் நமக்கு ஒன்றுமில்லை. அதேநேரம்  அவரின்  முரளி தாத்தா (கபே)  குறித்ல்லாம் தெரிந்து கொள்வது நலம் நலமறிய ஆவல் என்கிறோம். கடந்த 04.11.2012 திருவானைக்காவலில் நடைபெற்ற கூட்டம்  என்பது ஆரம்பம்! மற்ற முடிவுகளை நாங்கள் எப்படி எடுக்க  வேண்டும் என்பதை அந்த ஹரிஹரசுதன் (அதான் மணிகண்டன்) எடுப்பார்! இது ஒருபுறமிருக்க  சிறீரங்கத்தில் நடைபெறும்  இந்த விவகாரத்தைப் பொது மக்கள் எப்படிப்  பார்க்கி றார்கள் என்பதை அறிய ஆவல் கொண்டோம். நாம் இன்னார் என அறிமுகம் செய்து கொள்ளவில்லை. செய்தியாளர் என்பதாகப்  பொதுவாகவே  நடந்து கண்டோம். இந்த இயக்கம், இன்ன பத்திரிகை என்றால், அதற்கேற்ப அவர்கள் கருத்தில் ஆதரவோ, சார்போ இருந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். நம்முடைய கேள்வியை நாம் இப்படித்தான் அமைத் திருந்தோம். "சிறீரங்கத்தில் ஒருவர் "பிராமணாள் கபே"  எனக் கடைக்குப் பெயர் வைத்திருக்கிறார். இதைத் திராவிடர் கழகம் கடுமையாக எதிர்த்து வருகிறது.  நான்காம் தேதி கூட பொதுக்கூட்டம் நடத்தினார்கள், இந்தப் பிரச்சினையைப் பொது மனிதராய்  நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் ? இதுகுறித்த உங்களின் கருத்து என்ன ?"

முதலில் "ஜெயம் சேவா சங்கத்தின்" நிறுவனரும், கடவுள் பக்தியும் நிறைந்த தா.ஜெயராஜன் (63) அவர்களைச் சந்தித்தோம். "பிராமணன் என்பதே  கிடையாதே, இங்கு ஒருவராவது பிராமணராக  இருக்கிறார்களா என்பதே என் கேள்வி. பிரம்மன் நெற்றியில் பிறந்தோம் என அடிக்கடி  சொல்கிறார்களே, அப்படி என்றால் உங்களுக்கு அம்மா, அப்பா இல்லையா?  பெண்களை பஞ்சமன் மற்றும் தாழ்த்தப்பட்டவருக்குக் கீழாக ஆறாவது இடத்தில் வைத்துள்ளீர்கள். அப்படி என்றால் அப்பெண் பிராமணாள் இல்லை.  பிராமணாள் இல்லாத பெண்ணோடு வாழும் நீங்கள் எப்படி பிராமணராக இருக்க முடியும் ? பிராமணாள் என்றால் வெங்காயம், உப்பு உள்ளிட்ட உணர்வுகளைத் தூண்டும் எப்பொருளும் சேர்க்காமல், தினமும்  5 குவளை  மட்டுமே  உணவு செய்ய வேண்டும். அதில் ஒரு குவளை பட்சிக்கும், இன்னொரு குவளை பிராணிக்கும், மீதம் 3 குவளை தனக்கும்  வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த வேளைக்கென்று உணவை சேமித்து வைக்கக் கூடாது. அதேபோல் சத்திரியன், வைசியன், சூத்திரன்  ஆகிய மூவருக்காகவும் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டும், தனக்காகப்  பிரார்த் தனை செய்து கொள்ளக் கூடாது. இங்கு அப்படியா நடக்கிறது? வைசியன் என்றால் யார் ?  வியாபாரி. அதாவது வியாபாரம் செய்பவன் வைசியன். நீங்கள் ஹோட்டல் வியாபாரம் செய்கிறீர்கள்..  நான் கேட்கிறேன் ,  நீங்கள்  வைசியரா? பிராமணரா?. சரி ! அதுபோகட்டும். உங்கள் கடையில் சமைப்பவர் யார்? சூத்திரர். சாப்பிடுபவர் யார் ? சூத்திரர். பிறகு எதற்கு பெயரில் மட்டும் "பிராமணாள் கபே?" என நெற்றியில் திலகமிட்டவாறே பேசி முடித்தார் தா.ஜெயராஜன்.

அவரைத் தொடர்ந்து மு.கருணாநிதி (25) என்ற இளைஞரைக் கேட்ட போது, தான்  எம்.பி.ஏ., எம்.எஸ். டபுள்யு முடித்திருப்பதாகக் கூறினார். 
"வெள்ளைகாரன்  இந்த நாட்டை விட்டு போகக் கூடாது எனச் சொன்னவர் பெரியார்" என பிராமணர்கள் ஒரு துண்டறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்  வெள்ளைக்காரன் தானே உணவு, மருத்துவம், கல்வி எல்லாம் கொடுத்தான்.  நீங்களோ  அடிமை வாழ்வை மட்டும் தானே கொடுத் தீர்கள்", எனச்சுருக்கமாக முடித்தார் . மூன்றாவதாக, சிறீரங்கம் காளியம்மன் கோயில்  நிர்வாகியும், டிவிஎஸ் அய்யங்கார் நிறுவனத்தில் 13 ஆண்டுகள் வேலை செய்தவருமான  மா.முத்துக்கண்ணன் (80) நம்மி டையே பேசினார். "நான் திருச்சி டிவிஎஸ் நிறுவனத்தில்தான் வேலை பார்த்தேன். நல்ல சம்பளம், நிறைவான  வேலை. அதற்காக அவர்கள் செய்யும் தவறுகளை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் ?
நான் சாதரணமாகவே கொஞ்சம் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவன். அதில் பிராமணன் என்ற சொல்லுக்கு உயர்ந்த ரகம் என்பதாகப் பொருள் உள்ளது. நீ உயர்ந்த ரகம் என்றால் நான்  யார் என்ற  கேள்வி எனக்கு இயல்பாகவே எழும்.  பிறகு எப்படி பிராமணாள் கபே என்பதை ஏற்க முடியும் ?  நம்மைவிட அவர்கள் உயர்ந்தவர்கள்  என்பதை என்னால் ஏற்க முடியாது. நாம் செய்யும் ஒரு வேலையையாவது அவர்களால் செய்ய முடியுமா? சிறீரங்கத்தில் அய்யங்கார், அய்யர்  உள்ளிட்ட வேறு சில பிரிவுகளும் உள்ளனர். எனினும் அய்யங்கார் ஆதிக்கமே அதிகம். அவர்கள் நிறைய பிரிவுகளில் இருந்தாலும்,  நம்மை இழிவுபடுத்தும் போது  மட்டும் பிராமணர்களாகச் சேர்ந்து கொள்கிறார்கள்" என அழகுகூறினார். அவரைத் தொடர்ந்து ஒலி ஒளி அமைப்பாளர் கலியபெருமாள் (44) என்பவர் கூறும்போது, பிராமணர் என்ற வார்த்தை தமிழர்களை  இழிவுபடுத்து வதாகச் சொல்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள் கடைக்கு நாம் போகாமல் இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள்  தங்கள் பெயரை மாற்றிக் கொள்வார்கள்" என்று கூறினார்.

தேநீர் கடை வைத்திருக்கும் கலை வாணன் (35) என்ன சொல்கிறார் பார்ப்போம். "பொது வாகப் பார்த்த போது பிராமணாள் என்பது எனக்குப் பிரச்சினையாகத் தெரியவில்லை. அவர்கள் கடைக்கு அவர்கள் பெயர் வைத்திருக்கிறார்கள் என்றே கருதினேன். ஆனால் பிராமணாள்  என்பதற்குப் பொருள் தெரிந்த பிறகு, என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிராமணாள் என்பதை ஜாதிப் பெயராகவே இவ்வளவு நாள் கருதி வந்தேன்", என மனதில்பட்டதைப்  பளிச் சென்று கூறினார். ரைஸ்மில் ஊழியர் செல்வராஜ்(58) என்ன சொல்கிறார்?   "எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதுதான்  என் ஆசை.  பிராமணாள் எனப் பெயர் வைத்துப்பிரச்சினை செய்ய வேண்டாம் என்பதே என் கருத்து. சைவ உணவகம் என்று வைத்தாலே போதுமே? உயிர்களைக் கொல்லக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் சைவம் சாப்பிடுகிறோம் என்கிறார்கள். அய்ந் தறிவு உயிர்களைக் கூடக் கொல்லக்கூடாது எனக் கருதும் அவர்கள், சக மனிதர்களை  இழிவுபடுத்துவது எந்த விதத்தில் நியாயம்? அய்யர் என்றால் சுத்தமானவர் என்கிறார்கள்.  பிறகு நாங்கள் எல்லாம் அசுத்தமானவர்களா?  சமுதாயத்தில் எல்லோரும் மனிதர்கள் என்ற நிலை வர வேண்டும் என செல்வராஜ்  தன்  ஆசையை வெளிப் படுத்தினார்.


அதேபோல வெற்றிலை வியாபாரி தயாநிதி (38) கூறுகையில், "அந்தப் பெயரில் அவுங்க பெரியவுங்க, நாம தாழ்ந்தவுங்க என இருப்பதாகச்  சொல்கிறார்கள். இது தொடர்பா பழைய விசயங்களும் கேள்விப்பட்டிருக் கிறேன். ஏற்கனவே நடந்ததிலும், இப்போது நடப்பதிலும்   ஏதோ பொருள் உள்ளதாகவே கருதுகிறேன் என்றார். இறுதியாக ஒருவரை நாம் தொடர்பு கொண்டோம். அவர் பெயர் வீரராகவன். வயது 50. பெயரைப் படித்ததும் அய்யராக இருப்பாரோ என  நீங்கள் எண்ணக்கூடும்? அப்படியெனில்  உங்கள் எண்ணம் சரிதான். தமிழர் களாகப் பார்த்து மட்டும் ஏன் கேட்க வேண்டும்? அவர்களில் ஒருவரைக் கேட்கலாமே என நினைத்த போது  நமக்குக் கிடைத்தவர் வீரராகவன். இப்போது அவரைப்  பேச விடுவோம். "தொழில் நிலையங்களில் பிராமணர் என்ற சொல் பயன்படுத்துவது மறைந்து போன ஒன்று. பொது மக்களிடம் குழப்பத்தை ஏற் படுத்தவும், சிறீரங்கத்தில் வாழும் எங்களுக்குப் பிரச்சினை உண்டாக்கவும் செய்த செயலாகவே இதனை நான் பார்க்கிறேன். இதையே தி.மு.க ஆட்சியில்  செய்திருப்பார்களா ? அ.தி.மு.க ஆட்சி வந்ததும் செய்கிறார்கள். உணர்வு என்பது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஆட்சிக்குத் தகுந்தாற்போல மாறக்கூடாது.  நான் கடை உரிமையாளர் மணிகண்டனிடம் நேரடியாகவே இதனைத் தெரிவித்தேன்.
தமிழர்களுக்குப் பெரியார் பெற்றுத் தந்த  பல்வேறு  உரிமைகளை நாங்களும் அனுபவிக்கிறோம். பெரியாரிடம் நங்கள் ஏற்காதது இரண்டு. ஒன்று கடவுள் மறுப்பு, இன்னொன்று ஜாதி மறுப்பு. ஒரு காலத்தில் கணவன் இறந்ததும், மனைவிக்கு மொட்டை அடிப்பார்கள். "மொட்டைப் பாப்பாத்தி" என்ற சொல் கூட இருந்தது. ஆனால் இன்றைக்கு யார் மொட்டை அடிக்கிறார்கள்?  மொட்டை அடிக்காமல் இருப்பது  மட்டுமல்ல, பூ வைத்துக் கொள்கிறார்கள், மூக்குத்தி அணிந்து கொள்கிறார்கள், மறுமணம் செய்து கொள் கிறார்கள்.. இந்த வாய்ப்பும்,  மகிழ்ச்சியும் எங்களுக்கு எப்படிக் கிடைத்தது ? பெரியார் தானே காரணம். இதை வெளியில் சொல்வதற்குத் தயங்கலாம். அதற்காக   உண்மையை மறைத்துவிட முடியாதே !

சிறீரங்கத்தில் அய்யர், அய்யங்கார்கள் எத்தயோ பேர் உணவகம் வைத்திருக்கிறார்கள். ஆனால் இப்படி யாரும் பெயர் வைக்கவில்லையே ? அதேநேரம் உள்ளூரில் இருக்கும் பெரும்பாலான நாங்கள் இதனை விரும்பவில்லை. அதற்குச் சான் றாகவும் ஒன்றை நான் சொல்வேன்.  கடந்த 04.11.2012 அன்று  சிறீரங்கத்தில் நடைபெற்ற பிராமணர் சங்க உண்ணாவிரதத்தில், சிறீரங்கத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று பேர்  மட்டுமே நேரடியாகக் கலந்து கொண் டார்கள்.  எனவே இந்தப் பெயர் வைத்ததில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதைச் தைரியமாகச் சொல்வேன். இன்னும் சொல்லப் போனால் ஜாதிய உணர்வுக்குக் கூட நான் தகுதியானவன் இல்லை.  பிராமணன் என்றால் வேதம்  படித்திருக்க வேண்டும் உள்ளிட்ட ஏகப்பட்ட நிபந்தனைகள் உள்ளன. அதில் எந்த ஒன்றையும் நான் செய்யவில்லை. பிறகு எப்படி  பிராமணன் என்று சொல்லிக் கொள்வேன்? என் மனதுக்குப்பட்ட நியாயங்களை நீண்ட நாட்களாகவே நான் ஒப்புக் கொண்டு வருகிறேன்," என நீண்ட விளக்கம் கொடுத்தார்.

ஆக இந்தக் கருத்துகளின் வாயிலாக பொதுவான  தமிழர்களும், கணிசமான பார்ப்பனர்களும் கூட இதை விரும்பவில்லை எனத்  தெரிய வருகிறது.  ஆக ஏதோ  ஒரு காரணத்தை முன்னிட்டு, திட்டமிட்டு  செய்வ தாகவே  நாம் கருதமுடிகிறது. அவர்களால் முடிகிற போது, அதை வெல்வதற்கு நம்மால் நிச்சயம் முடியும் என்பதையும்  அவர்கள் அறிவர். தமிழ்நாட்டின் பிற பகுதித்தோழர்களுக்கும், சிறீரங்கம் போன்ற பகுதித் தோழர்களுக்கும்   உள்ள  வித்தியாசங்களை நாம் அறிய வேண்டியிருக்கிறது. தலையில் உச்சிக்குடுமியுடன், பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு, பூணூல் மேனியாய் போய்  வருபவர்களை பிற பகுதிகளில் ஒன்றிரண்டுதான் நாம் காண முடியும். ஆனால் சிறீரங்கம் பகுதிகளில்  நூற்றுக்கணக்கில் காணலாம். தொழிற்சாலையில் வேலை முடித்துப் போய் வருவதைப் போல, ரங்கநாதர் கோவிலுக்குள்  போவதுமாக வருவதுமாக இருப்பார்கள்.
அதிகாரம், ஆதிக்கம் இவைகளைக்  கொண்டு  என்னென்னமோ செய்யப் பார்க்கிறார்கள் சிறீரங்கத்துப்  பார்ப்பனர்கள். 


ஆனாலும் நமது சிறீரங்கம் தோழர்கள் எதையும் விடுவதாய் இல்லை.  அவர்களிடம் அய்யா சிலை உண்டு,  படிப்பகம் உண்டு,  இயக்க அலுவலகம் உண்டு,  அடிக்கடி கூட்டம் போடும் ஆற்றல் உண்டு.  மொத்தத்தில் இனமானம் காக்கும் போரில் அவர் களுக்குரிய சவால்களை லாவகமாக சமாளித்து, தொடர் சாதனை படைத்து வருகிறார்கள்!
                                --------------------------- வி.சி.வில்வம் --”விடுதலை” 7-11-2012

10 comments:

தமிழ் ஓவியா said...


கழக செயல்பாட்டுக்கு வெற்றி!

சிறீரங்கத்தில் பிராமணாள் பெயர் உணவு விடுதி மூடப்பட்டது

நள்ளிரவில் கடையைக் காலி செய்தனர்!

திருச்சி, நவ.7- சிறீரங்கம் ரங்கநகர் சாலையில் கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே (ஓட்டல்) என்ற பெயரில் மணிகண்டன் பார்ப்பனர் நடத்தி வந்தார். திடீரென்று பிராமணாள் என்ற சொல்லை விளம்பரப் பலகையில் புகுத்தினார். அந்த உணவு விடுதியின் பெயர்ப் பலகையில் உள்ள பிராமணாள் என்ற பெயரை அகற்றுமாறு திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி அந்த உணவு விடுதியின் உரிமையாளர் மணிகண்டன் பார்ப்பனரிடம் வலி யுறுத்தப்பட்டது. மேலும் திருவரங்கம் காவல்நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரின் முக்கிய கவனத் திற்கு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

காவல்துறை அனுமதி மறுப்பு

இந்நிலையில் திருவரங்கத்தில் ஜாதி ஒழிப்புப் பொதுக்கூட்டம் நடத்த கழகம் சார்பில் அனுமதி கோரியிருந்தது; ஆனால் காவல்துறை அனுமதி மறுத்தது. மூன்று முறை தொடர்ந்து காவல் துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்று கடந்த ஞாயிறன்று திருவானைக் காவலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது (4.11.2012). போராட்டம் அறிவிப்பு

அப்பொதுக் கூட்டத்தில் பிராமணாள் ஓட் டல் பெயரை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் அகற்றுகின்றவரை போராட்ட நடவடிக்கையைக் கழகம் மேற்கொள்ளும். மேலும் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி இப்போராட்டத் திற்கான அறிவிப்பினை வெளியிடுவேன் என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திருவானைக் காவல் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.

நள்ளிரவில் அகற்றம்

இந்நிலையில் அந்த உணவு விடுதி கட்டடத்தின் உரிமையாளர் (பாவை டவர்ஸ்) ராஜா, மணி கண்டன் பார்ப்பனரிடம் கடையை உடனடியாக காலி செய்யுமாறு கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து நேற்று (6.11.2012) நள்ளிரவு திடீரென்று கிருஷ் ணய்யர் பிராமணாள் கபே உணவு விடுதியை மணிகண்டன் முழுமையாக கடையை இழுத்து மூடி காலி செய்தார். பிராமணாள் கபே பெயர் பலகையும் அகற்றி எடுத்துச் சென்றார். மீண்டும் பிராமணாள் முளைத்தால்...

வேறு இடத்தில் இதே மணிகண்டன் உணவு விடுதியைத் திறந்து அதிலும் பிராமணாள் பெயரைப் புகுத்தினால், அதனை எதிர்த்தும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

சிறீரங்கத்தில் மணிகண்டன் பார்ப்பனர் நடத்தி வந்த கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே எனும் உணவு விடுதியை நேற்று (6.11.2012) நள்ளிரவு கடை உரிமையாளரே காலி செய்தார்.

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை!


பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமை யான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை. (விடுதலை, 22.6.191973)

தமிழ் ஓவியா said...


பள்ளிகளில் கிரிக்கெட் பயிற்சி- எச்சரிக்கை!


இன்றைக்கு இளைஞர்களை, மாணவர்களைக் கெடுக்கும் பல்வேறு போதைகளில் கிரிக்கெட் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் நீண்ட காலமாகவே கூறி வருகிறார். இந்தக் கருத்தை இன்றைக்கு வேறு பலரும் பொதுவாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

வெள்ளைக்காரர்களால் அவர்கள் நாட்டில் உருவாக்கப்பட்ட இந்தச் சோம்பேறி விளையாட்டு சூரியன் அஸ்தமிக்காத பேராட்சியை மேற்கொண்ட இங்கிலாந்து எந்தெந்த நாடுகளைத் தன் ஆதிக்கத் தின்கீழ் கொண்டு வந்ததோ, அந்தந்த நாடுகளில் எல்லாம் இந்தக் கிரிக்கெட் விதையும் தூவப்பட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரை எப்படி பிரிட்டிஷார் ஆட்சி காலம் உள்ளவரை இந்தியாவில் நீடிக்க வேண்டும் என்று பார்ப்பனர் ஆதிக்கத்தில் இருந்த காலகட்டங்களில் காங்கிரஸ் மாநாடுகளில் தீர் மானங்களை நிறைவேற்றினார்களோ, அதுபோலவே வெள்ளைக்காரர்களின் கிரிக்கெட்டையும், சிக் கெனப் பிடித்துக் கொண்டனர்.

மற்ற மற்ற விடயங்களில் எல்லாம் சுதேசி பற்றி வாய்கிழியப் பேசும் பார்ப்பனர்கள் இந்தக் கிரிக்கெட்டில் மட்டும் அந்த வகையில் சிந்தனையைச் செலுத்த மாட்டார்கள்.

விவசாயம் - தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கையில் இருக்கக்கூடிய காரணத்தாலும், அது உடலுழைப்பைச் சார்ந்ததாக இருப்பதாலும் அத னைப் பாவத் தொழில் என்று மனுதர்மம் சொல்கிறது.

உடலுழைப்புத் தேவைப்படும் விவசாயத் தொழிலை தாங்கள் செய்யாமல் தவிர்த்துக் கொள்ள சாஸ்திர ரீதியாக ஏற்பாடு செய்துகொண்டதைக் கவனிக்கவேண்டும்.
அதேபோல்தான் உடலுழைப்புக்கு அதிகம் வேலையில்லாத இந்தக் கிரிக்கெட்டையும் பெரும் பாலும் தங்கள் வலைக்குள் வளைத்துக் கொண்டு விட்டனர்!

ஊடகங்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களின் கைகளில் வலுவாக வசமாகிவிட்டதால், இந்தக் கிரிக்கெட்டை பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி விட்டனர்.

உள்நாட்டு விளையாட்டும், உழைப்புக்கும், உண்மை யான திறமைக்கும் எடுத்துக்காட்டானதுமான சடு குடு, கால்பந்து, கைப்பந்து விளையாட்டுகளுக்கு இந்த ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்காமல் கூட்டி ஒதுக்கிவிட்டன. குறிப்பாக தொலைக் காட்சிகள் இந்த வேலையைச் செய்துவிட்டன.

இதன் காரணமாக கிராமங்களில் வயல்வெளி களில் கூட கிரிக்கெட் ஆக்கிரமிப்புச் செய்துவிட்டது. இப்படி ஒரு போதையை ஏற்றி, மக்களிடம் பண வசூல்மூலம் பெரும் சுரண்டல் தொழிலை நடத்தி வரு கின்றனர். ஒரு போட்டி அரசாங்கம்போல கிரிக்கெட் வாரியத்தின் வரவு - செலவு அமைந்துவிட்டது.

கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஆவதற்குக் கடும் போட்டி - அதிலும் ஏகப்பட்ட ஊழல் - நீதிமன்றம் வரை சிரிப்பாய் சிரிக்கிறது.

கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள் மட்டும் அல்ல - நடுவர்கள்கூட சூதாட்டத்தில் சிக்கி, விளையாட்டு என்பதன் வீரியமே கொச்சைப்படுத்தப்பட்டு விட்டது.

பணம் காய்ச்சி மரமாகி விட்டது கிரிக்கெட், டெண்டுல்கருக்கு விளம்பரம் ஒன்றுக்கு எட்டு கோடி ரூபாயாம். நூறாவது சதம் அடித்ததற்காக ஹேமில் டன் பிளான்ட் என்னும் நிறுவனம் ரூ.30 கோடி அளித்துள்ளது.

கிரிக்கெட்டில் அவருக்கு இதுவரை கிடைத்தது 500 கோடி ரூபாயாம், என்ன கொள்ளை இது!

அதுவும் அய்.பி.எல். 20-20 ஆட்டம் வந்தாலும் வந்தது, பகற்கொள்ளைதான். நிமிடம் ஒன்றுக்கு ஆட்டக்காரருக்குச் சம்பளம் ரூ.1200.
இவ்வளவுக் கொள்ளை அடிப்பவர்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகளோ கொஞ்சநஞ்சமல்ல!

எல்லாவற்றையும் பெரும் கேடு நம் இளைஞர் களின் மத்தியில் ஏறிய சகிக்க முடியாத போதை யாகும்.

இந்தக் கிரிக்கெட் போதையை மேலும் பரப்பும் வகையில் திட்டமிட்ட ஒரு வேலையில் பார்ப்பனர்கள் இறங்கியுள்ளனர். தமிழ்நாடு ஸ்கூல்ஸ் கிரிக்கெட் அசோசியேசன் என்னும் ஓர் அமைப்பை உண்டாக்கி, தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்குக் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் ஒரு வேலையில் இறங்கியுள்ளனர். (இது ஒரு வகையான பார்ப்பனர் பண்பாட்டுப் படையெடுப்புதான்!)

குறிப்பாக, நாகை மாவட்டத்தில் கொள்ளிடக் கரை முதல் கோடியக்கரைவரை 200 பள்ளிக்கூடங் களுக்கு இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு அனுமதியுடன் இது நடக்கிறதா? அரசுப் பள்ளிகளில் தனியார் அமைப்புகள் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாமா? தமிழ்நாடு கல்வித் துறை இதில் தலையிடவேண்டும் என்பது நமது அழுத்தமான வேண்டுகோளாகும்.7-11-2012

தமிழ் ஓவியா said...

இலங்கை சென்று நேரில் ஆய்வு செய்வோம்!

மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு அளித்த டெசோ தீர்மானங்களை பெற்றுக்கொண்டு
மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை உறுதி

ஜெனீவா, நவ. 7 - இலங்கைத் தமிழர்களின் வாழ் வுரிமைக்காக `டெசோ மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங் களின் அடிப்படையில், `டெசோ அமைப்பின் தலைவரான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கையெழுத்திட்டுத் தந்த அறிக்கையை கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின், கழக நாடாளு மன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் ஆணையத்தின் தலைவரான திருமதி. நவநீதம் பிள்ளை அவர்களைச் சந்தித்து வழங் கினார்கள்.

அச்சந்திப்பின்போது, அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் அவர்கள், மு.க. ஸ்டாலின் அவர்கள் எடுத்துரைத்த விவரங்களை கனிவுடன் கேட்டறிந்தார்.

``இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அய்.நா. பொதுச்செயலாளருடன் கலந்து பேசி உரிய முடிவு எடுக்கப்படும் என்றும், ``இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் நல்லிணக்கம் குறித்து எனது (திருமதி நவநீதம் பிள்ளை) தலைமையில் பன்னாடுகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்கும் மனித உரிமை ஆணை யக்குழு இலங்கை சென்று ஆய்வு செய்யும் என்றும் குறிப்பிட்டார்.

``கலைஞர் அவர்கள் கையெழுத்திட்டு வழங்கி யுள்ள `டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள்மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் திருமதி. நவநீதம் பிள்ளை அவர்கள் உறுதியளித்தார்.

இச்சந்திப்பு குறித்த விபரம் வருமாறு:-

இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் அடிப்படையில் தலைவர் கலைஞர் அவர்கள் கையெழுத்திட்டு அனுப்பிய அறிக்கையை கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்களும் நியூயார்க் கில் உள்ள அய்.நா. மன்றத்தின் துணைப் பொதுச் செயலாளர் யான் லியாசன் அவர்களை, அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள அய்.நா. தலைமை அலுவலகத்தில் கடந்த நவம்பர் 1 அன்று சந்தித்து வழங்கினார்கள்.

அதன் தொடர்ச்சியாக நேற்று (6.11.2012) சுவிட் சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள அய்.நா. மனித உரிமை ஆணையத்தில், அந்நாட்டு நேரப்படி காலை 11.30 மணியளவில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளை அவர்களை, கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் - கழக நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் சந்தித்தார்கள்.

அப்போது; இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான டெசோ மாநாட்டுத் தீர்மானங் களின் அடிப்படையில்; தலைவர் கலைஞர் அவர்கள் கையெழுத்திட்டுத் தந்த அறிக்கையை அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவரிடம் வழங்கினார்கள்.

35 நிமிடங்கள் நடைபெற்ற முக்கியச் சந்திப்பு!

அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங் களை தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் விரிவாக விளக்கினார். அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவருடனான அச்சந்திப்பு ஏறத்தாழ 35 நிமிடங் கள் நடைபெற்றது.

தமிழ் ஓவியா said...


மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பின் போது கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருமதி நவநீதம் பிள்ளை அவர்களிடம் கூறியதாவது:-

சென்ற ஆண்டு அமெரிக்காவால் அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்பட்டு இந் தியா உள்ளிட்ட நாடுகள் ஆதரித்து நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கைத் தமிழர் களுக்கு உரிய தீர்வு ஏற்பட்டதா என்பதைக் கண் டறிய அய்.நா. சபையின் மனித உரிமை ஆணையம், பல்வேறு நாடுகளின் உறுப்பினர்களும் அடங்கிய குழு ஒன்றினை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர் களை, போருக்கு முன்பு அவர்கள் வசித்த பகுதி களிலேயே - தமிழர்களின் பகுதிகளிலேயே குடியமர்த்த வேண்டும்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதி களில் சிங்களவர்களைக் குடியேற்றிட இலங்கை அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். சிங்களவர்களைக் குடியமர்த்துவதற்காகவே அங்கே ராணுவத்தை இலங்கை அரசு குவித்து வருகிறது.

கோவில் விழா, திருமண விழா உள்ளிட்ட சமூக நடவடிக்கைகளுக்குக் கூட தமிழர்கள் சிங்கள ராணு வத்திடம் அனுமதி கோர வேண்டிய அவல நிலை இலங் கையில் உள்ளது.

போரின்போது கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளன. அங்கே கலச்சாரக் கடமைகள் ஒடுக்கப்படுகின்றன.

கோவில் உள்ளிட்ட கலாச்சார நடவடிக்கைகள் நிர் மாணிக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைப்பதற்கு அய்.நா. துணை நிற்க வேண்டும்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், அவர்கள் வாழ்ந்த தமிழர் பகுதிகளில், நிம்மதியற்று இருக்கிறார்கள். இலங்கையில் நடைபெற்ற போரினால் விதவை களாக்கப்பட்ட 90 ஆயிரம் விதவைப் பெண்களின் பரிதாப நிலை; மீள் குடியேற்றப் பணிகள் மேற் கொள்ளப்படாதது; கடந்த மூன்றரை ஆண்டு களாக போரினால் பாதிக்கப் பட்ட தமிழர்கள், தங்கள் சொந்த மண்ணிலேயே நிம்மதி யற்று வாழும் நிலை மாறி, நிம்மதியாக வாழ வழி வகுத்தல்; தமிழர்கள் பகுதிகளில் உள்ள சிங்கள ராணுவ வீரர்கள் உடனடியாக வெளியேற்றப்படுதல்;

தமிழர் பகுதியில் சிங்களவர்களை குடியேற்று வதை தடுத்து நிறுத்துதல்; ஆகியவை குறித்து அய்.நா. மனித உரிமை ஆணையம் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். போரின்போது தங்கள் வீடுகளைவிட்டு ஓடிவிட்ட தாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட 1,25,000 தமிழர்கள் மீண்டும் தங்கள் பகுதிகளில் குடியமர்த்தப்பட வேண்டும்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்திட வேண்டும். அதற்கு அட்டவணை தயாராக இல்லை; எனவே தேர்தலை நடத்தவில்லை என்று இலங்கை அரசு சொல்கிறது. கிழக்கு மாகாணத்தில் மட்டும் தேர்தல் நடக்கிறது. இலங்கை அரசு; சொல்வது எதையும் செய்வதில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு கண்டிட இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்திட வேண்டும். அதற்கான உரிய முயற்சிகளை இந்த ஆணையம் எடுத்திட வேண்டும்.

- இவ்வாறு கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்துக் கூறினார்.

அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் பதிலுரையில் வழங்கிய உறுதி!

அதற்கு மனித உரிமை ஆணையத் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள் பதிலுரையாகக் குறிப்பிட்ட தாவது:-

நீங்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் மிக முக்கிய மானவை. பயனுள்ளவை. உங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் அனுப்பியுள்ள கருத்துருக்கள், ஆதாரங்களை ஆவணமாக எடுத்துக் கொள்கிறேன். அவற்றை எனது பரிசீலனைக்கான - தீவிர கவனத்திற்கான ஒன்றாகக் கருதுகிறேன்.

இலங்கைத் தமிழர்கள் பற்றிய இந்த ஆவணங் களை, எனது சுதந்திரமான முயற்சியாக அய்.நா. சபையில் தெரிவித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

இந்த ஆண்டிலேயே இலங்கைக்கு ஒரு குழுவை அனுப்பி அங்குள்ள நிலைமைகளைக் கண்டறி வோம். விசாரணை மேற்கொள்வோம்.

இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றியும் விசாரணை செய்யப்படும்; அவர் களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைத்திடவும் உரிய அணுகு முறைகளை மேற்கொள்வோம். இலங்கை யில் போர்க் குற்றங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையப் பரிந்துரைகள் குறித்து மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டு, இந்தியா ஆதரித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எந்தளவுக்குச் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் சார்பில், எனது ( திருமதி. நவநீதம் பிள்ளை) தலைமையிலான குழு ஒன்று வருகிற ஜனவரி மாதம் சென்று மேற்பார்வையிட உள்ளது.

உங்கள் தலைவர், கலைஞர் அவர்கள் கையெழுத் திட்டு அளித்துள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து அய்.நா. பொதுச் செயலாளருடன் விவாதித்து , உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இத்தகைய அரிய ஆவணங்களையும் ஆதாரங் களையும் இங்கே எனக்குக் கொடுத்தனுப்பியுள்ள கலைஞர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள் - அச்சந்திப் பின்போது மு.க.ஸ்டாலின் அவர்களிடம் குறிப்பிட்டார்.

குறிப்பு: இதுகுறித்து தமிழர் தலைவரின் அறிக்கை நாளை

தமிழ் ஓவியா said...


வெற்றி பெற்றார் ஒபாமா!


பொருளாதார வீழ்ச்சியைக் காட்டி மிகவும் நெருக்கடி கொடுத்த மிட் ரோம்னியைத் தோற் கடித்தார் ஒபாமா.

மிகவும் நெருக்கடியான தேர்தல் என்று இரண்டு பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவு செய்யப்பட்ட தலைவர் தேர்தல் இது.

ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்காகவும் வயதானவர் களுக்காகவும், பெண்களுக்காகவும் உழைப்பேன் என்று உறுதி கூறிப் போராடினார் பராக் ஒபாமா.

பெண்ணுரிமைக்கு எதிராகப் பேசிய இரண்டு மேலவை குடியரசுக் கட்சி போட்டியாளர்கள் இந்தியானாவிலும், மிசவுரியிலும் தோற்கடிக்கப்பட்டனர். பெண்கள் மிகுதியாக ஒபாமாவிற்கு வாக்களித்தனர். பெண்ணுரிமை, வெளிநாட்டி லிருந்து அமெரிக்காவில் வாழ்வோர் குடியுரிமையாக்குதல், போர்ப்படையை குறைத்தல், வயதானவர்களுக்கும் ஏழை களுக்கும் மருத்துவ உதவி அளித்தல் போன்றவை முக்கிய மான கருத்து வேறுபாடுகளை உண்டாக்கிய போராட்டம் இது. வாழ்க்கையும், வசதியும் உள்ளவர்களுக்காக அரசா? இல்லை அனைவருக்கும் கல்வி, மருத்துவம், முன்னேற்றம், வாய்ப்புக்கள் அளிப்பதற்கு அரசா? என்ற கேள்வியை வைத்தே இந்தத் தேர்தல் நடந்தது.

மேலவையில் ஒபாமாவின் மக்கள் கட்சி வென்றாலும். கீழவையில் குடியரசு கட்சியே பெரும்பான்மை பெற்றுள்ளது ஒபாமாவிற்குத் தலைவலியாகத்தான் இருக்கும். இதுவே கடந்த இரண்டாண்டுகளில் அமெரிக்காவின் முன்னேற்றத் திற்குப் பெரிய தடையாக இருந்தது.

ஆனால், இப்போது குடியரசுக் கட்சி ஒபாமாவுடன் ஒத்துழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. அடுத்த தேர்தலில் ஒபாமா நிற்க முடியாது; இரண்டு முறைகள் தான் தலைவராக இருக்கலாம், என்பதால் பல துணிவான நடவடிக்கைகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

பட்டித் தொட்டிகளும், அமெரிக்கா முழுதும், உலக முழுதும் முன்னேறப் பாடுபடுவோம் என்று அவரது கடைசிப் பேச்சில் கண்ணில் நீர் கசிய அவர் தேர்தல் தொடங்கிய அயோவாவில் உணர்ச்சியுடன் கூறி முடித்து வீடு சென்றார்.

ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது தமிழ் மக்களுக்குப் பெரிய ஆறுதலாக உள்ளது.

கலைஞர் வாழ்த்து

அமெரிக்க மக்களிடையே ஏற்ற தாழ்வற்றதும், இன வேற்றுமை உணர்வு அற்றதுமான சமத்துவம் நிலைக்கவும், சமதர்ம உணர்வு துளிர்த்துச் செழிக்கவும் - இவற்றோடு, இந்தியா போன்ற நாடுகளுடன் உறவு தழைக்கவும் - ஓபாமாவின் இந்த வெற்றி பயன்படும் என்று நம்புகிறேன் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.


- டாக்டர் சோம. இளங்கோவன்

தமிழ் ஓவியா said...


இலங்கை தமிழர் மறுவாழ்வு: சர்வதேசக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றது


கொழும்பு, நவ. 7- இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களை யும், மனித உரிமை மீறல்களை யும் விசாரித்து, அந்நாட்டில் தமிழர் கள் சம உரிமை பெற்ற மக்களாக வாழ பரிந்துரைக்கும்படி அய்க் கிய நாடுகள் மனித உரிமை கவுன் சில் ஒரு குழுவை அமைத்தது. இந்த குழுவில், 99 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உறுப்பினர் களாக உள்ளனர்.

இவர்கள் இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை மற்றும் அயல்நாடுகளில் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வரும் தமிழர்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தினர். 'இலங்கையில் மனித உரிமை - சர்வதேசக் கண் ணோட்டம்' என்ற நோக்கில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் அறிக்கை, இலங்கையில் மனித உரிமையை மேம்படுத்தும் 210 அம்சங்களைப் பரிந்துரைத்தது.

இவற்றில் 110 பரிந்துரைகளை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி யுள்ளது. மீதமுள்ள நூறு பரிந் துரைகளை நிராகரித்ததற்கான காரணங்களை விளக்கி அய்.நா. மனித உரிமை தலைமை செயல கத்திற்கு இன்னும் இரண்டு வாரங் களுக்குள் இலங்கை அரசு தன் னிலை விளக்கம் அளிக்கும் என இலங்கை மனித உரிமை தூதர் மகிந்த சமரசிங்கே கூறியுள்ளார்.

முன்னதாக, ஜெனீவாவில் நடை பெற்ற மாநாட்டில், இலங்கை யின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மேற்கத்திய நாடுகள் சமர்ப்பித்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள இலங்கை அரசு மறுத்தது. தற்போது, இந்த 110 பரிந்துரை களில் எல்.எல்.ஆர்.சி. (கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழு) பரிந்து ரைகளை அமல்படுத்தவும், அந் நாட்டில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து உள் விசாரணை நடத்தவும், தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் இலங்கை ஒப்புக் கொண்டுள்ளது.

இலங்கை அரசின் இந்த முடிவு குறித்து, நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் செய்தித் துறை தலைவர் பொனே பாலராஜன் கருத்து கூறுகையில், 'இலங்கை அரசின் இந்த முடிவும், நிலையும் அவர்களின் எதிர்கால செயல் பாடு எப்படி இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. மீண்டும் ஒருமுறை சர்வதேச சமுதாயத்தை ஏமாற்றும் மோசடி வேலைக்கு இலங்கை அரசு தயாராகி வருகின்றது' என்றார்.

தமிழ் ஓவியா said...


மருத்துவக் கல்லூரிகளில் புதிய நடைமுறை: கலைஞர் கருத்து


கேள்வி :- மருத்துவக் கல்லூரிகளில் புதிய நடைமுறை அமல்படுத்துவதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களே?

கலைஞர்:- மருத்துவக் கல்லூரிகளில் முதல் ஆண்டு மாணவர்களுக்கு, உடற்கூறு, பிசியா லஜி மற்றும் பயோ-கெமிஸ்ட்ரி ஆகிய பாடங் கள் கற்பிக்கப்படும். இந்தப் பாடங்களில் ஒவ்வொன்றிலும் எழுத்துத் தேர்வு, ஆய்வுக் கூட பரிசோதனைத் தேர்வு மற்றும் வாய்மொழி கேள்வித் தேர்வு ஆகியவற்றில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த முதலாம் ஆண்டு பாடங்களில் தோல்வியடையும் மாணவர்கள் ஆறு மாத காலம் வகுப்புகளுக்குச் செல்ல முடியாது என்று தற்போது விதிமுறை வகுக்கப் பட்டுள்ளதாம். எந்தப் பாடத்தில் மாணவர்கள் தோல்வி அடைந்தார்களோ, அந்தப் பாடத்தில் மீண்டும் தேர்வு எழுதி வெற்றிபெற வேண்டும்.

அதன் பிறகுதான் அடுத்த ஆண்டுக்கான வகுப்புக்களுக்குச் செல்ல முடியும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரண மாக கிராமப்புற, ஏழையெளிய, நடுத்தர சமுதா யத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளார்கள். இந்தப் பிரச்சினையில் அரசு உடனடியாகத் தலையிட்டு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

(முரசொலி, 7.11.2012)

தமிழ் ஓவியா said...

மருத்துவக் கல்லூரி தேர்வு முறை-திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை


முதலாண்டு தேர்வில் தோல்வியுற்றால் இரண்டாமாண்டு தொடர முடியாது என்ற திட்டம் ஏழை - எளிய - கிராமப்புற மக்களைப் பாதிக்கச் செய்யும்

பழைய முறையே தொடரவேண்டும்
ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 50 மதிப்பெண் என்பதும் தேவையற்றது

மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு தேர்வில் தோல்வி யுற்றால், அடுத்த ஆண்டுப் படிப்பைத் தொடர முடியாது என்ற புதிய விதி தேவையற்றது - இது ஏழை, எளிய, கிராமப்புற மக்களை, முதல் தலைமுறையாகப் படிக்க வந்தவர்களைப் பாதிக்கச் செய்யும். எனவே, பழைய முறையே தொடரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மருத்துவக் கல்லூரிக்கான பட்டப் படிப்பில் ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளார்கள்.

முதலாண்டு தேர்வில் தோல்வியுறும் மருத்துவ மாணவர்கள் இரண்டாம் ஆண்டுக்குச் செல்ல முடியாது; முதலாண்டு தேர்வில் வெற்றி பெற்ற பிறகே இரண்டாம் ஆண்டிற்குச் சென்று படிக்க இயலும் என்பது முற்றிலும் தவறான - மோசமான ஒரு முடிவாகும்.

முதலாண்டு தேர்வில் சில பாடங்கள், இரண்டாம் ஆண்டில் வேறு சில பாடங்கள் என்று பகுத்து வைத்து மொத்தம் அய்ந்து, அய்ந்தரை ஆண்டுகள் எம்.பி.பி.எஸ். பட்டப் படிப்பை முடிக்க மாணவ, மாணவியர் செலவழிக் கின்றனர்.

பெற்றோர்கள்மீதும் சுமை!

தமிழ் ஓவியா said...

முதலாண்டு தேர்வில் தோல்வியுற்றாலும் இரண்டாம் ஆண்டுக்குச் செல்லும் அவர்கள் அந்த நிலுவை (Arrears)யையும் சேர்த்து எழுதி, வெற்றி வாய்ப்புகளைப் பெறமுடியும். இப்படி அய்ந்து, அய்ந்தரை (அ) ஆறு ஆண்டுகள் (House Surgeon போன்ற பயிற்சி உள்பட) ஆகும் நிலையில், மேலும் ஓராண்டை அவர்கள் - சில பாடங்களில் தோல்வி அடைய நேரிடும்போது, இழக்கும் நிலை என்பது தேவையற்ற சுமையை அவர்கள்மீது மட்டுமல்ல, அவர்களது பெற்றோர்கள்மீதும் சுமத்தும் ஒரு சமூக அநீதியாகும்!

நன்கு படிக்காதவர்களையெல்லாம் தேர்வு செய்து மேல் வகுப்புக்கு அனுப்புங்கள் என்பது நமது வாதமல்ல; தேவையற்று ஓராண்டை அவர்கள் இழந்தால், படிக்க வேண்டிய காலம் நீடித்தால், அதனால் மாணவர்கள் மன உளைச்சல் ஒரு பக்கம்; விடுதிக் கட்டணம் உள்பட அதிகம் செலுத்தும் பாரத்தை பெற்றோர்கள்மீது சுமத்தும் நிர்ப் பந்தத்தை அவர்கள்மீது ஏற்றும் நிலையும் வந்துவிடுமே!

ஏழை - எளிய - கிராமப்புற மக்களைப் பாதிக்கும்

கல்லூரிப் படிப்பில் முதலாண்டில் தேர்வு என்பது, அனுபவ ரீதியாகப் பார்த்தால், மாணவர்கள் தக்க புரிந்துணர்வு கொள்ளக்கூட வாய்ப்பற்ற காலமாகவும் கற்பதில்கூட இரண்டாமாண்டு முதல்தான் அவர்கள் தக்கதோர் பக்குவத்தோடு, பாடங்களை உள்வாங்கும் பெரும்பாலும் ஏற்பட முடியும்.
இப்போதுதான் ஏழை, எளிய, கிராமப்புற மற்றும் முதல் அல்லது இரண்டாம் தலைமுறையான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ- மாணவியர் மருத்துவக் கல்லூரிக்கு வந்து படிக்கத் தொடங்கியுள்ளனர்.

மதிப்பெண் போடுவதில் குறைபாடே கிடையாதா?

மேலும், மதிப்பெண்கள் அப்படியே துல்லியமாக, துலாக்கோலில் நிறுத்திப் போடுகிறார்கள்; இவர்கள் மதிப்பீட்டில் குறைகளே காண முடியாது என்று தேர்வு நடத்துவோர் அறுதியிட்டு உறுதியாகக் கூற முடியுமா?

நன்றாக படிக்கும் மாணவர்கள்கூட சிற்சில நேரங் களில் தேர்வில் அதிக மதிப்பெண் பெறாமல் தோல்வி அடையும் நிலைகூட உண்டு. பல காரணங்களால்.
எனவே, இந்த முறையை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

பொறியியல் கல்லூரிகளில் இல்லாத நடைமுறை!

பொறியியல் (பி.இ.) பட்டப் படிப்பில் நான்காண்டு அதில் செமஸ்டர் முறையில் தேர்வில் முதல் ஆண்டு, இரண்டாம் ஆண்டில் தோல்வி அடைந்தால்கூட, மேல் வகுப்புக்குச் செல்வது நிறுத்தப்படுவது கிடையாது. கூடுதலாகத் தேர்வு எழுதி, தங்களது பாக்கி பாடத் தோல்விகளைச் சரி செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கும் முறைதானே தற்போது உள்ளது- அது எப்படி தவறு என்று கூற முடியும்? மருத்துவக் கல்லூரிக்கு மட்டும் ஏன் புதிய அணுகுமுறை?

மருத்துவர்களின் தேவை நாட்டில் இன்னும் சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை.

சமுதாயத்திற்கு டாக்டர்கள் தேவைப்படும்போது அவர்களை மேலும் படிப்பின் கால அளவை நீட்டினால், அது தேசிய விரயம் - தேசிய குற்றம் ஆகாதா? பொதுமக்கள் நலக்கண்ணோட்டத்தோடு இதனைப் பார்த்தாலும், இம்முறையை நியாயப்படுத்த முடியாது!

டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் ஆறு மாதமல்ல - வெறும் ஆறு வாரம்தான் என்று எளிதாக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் உயர்நீதிமன்றம் சென்று தீர்ப்பும் பெறப்பட்டுள்ளது. முதலாண்டு தோல்வி அடைந்தாலும், அடுத்த ஆண்டு படிப்பைத் தொடரலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவற்றையெல்லாம் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகமும், தமிழ்நாடு அரசும் கணக்கில் எடுத்துக் கொள்வது நல்லது!

பழைய முறையே தேவை!

எனவே, மருத்துவக் கல்லூரி நிபுணர்கள், கல்வி அறிஞர்கள் இதனைக் கருத்தில் எடுத்துக்கொண்டு, தேவையில்லாமல் மருத்துவ மாணவர்களை, அவர்களது பெற்றோர்களைத் தண்டிக்கும் கொடுமையை மாற்றி, பழைய முறைப்படி, அதாவது முதலாண்டு தேர்வில் (சில பாடங்களில்) தோல்வி அடைந்தாலும், இரண்டாம் ஆண்டுக்கு அனுப்பி, நிலுவையில் இருப்பதற்குத் தேர்வு எழுதிட ஒரு சில மாதங்களிலேயே அவர்களுக்கு வாய்ப்பு அளித்து வெற்றி பெறும் வாய்ப்பை நல்குவது நியாயமும், மனிதநேயமும் கொண்ட ஒன்றாகும்.

பாடப் பிரிவுகளில் 50 மதிப்பெண்ணா?

தமிழக அரசும் இதில் தலையிட்டு, இந்த மாற்றத்தை ரத்து செய்ய, தக்க முயற்சிகளை எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 50 மதிப்பெண் வாங்கவேண்டும் என்பதும் தேவையற்றது. ஏற்கெனவே இருந்த 50 மதிப்பெண்கள் (Aggregated) என்ற முறை நீடிக்கவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.



7.11.2012, சென்னை