தந்தை
பெரியாரும், திராவிடர் கழகமும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்
என்றால், இந்து மத சாஸ்திரங்களையும், வேதங்களையும், கீதையையும் அவற்றில்
உள்ளது உள்ளபடியே எடுத்துச் சொல்லி நிறுவ முடியாத நிலைக்குப் பார்ப்பனர்கள்
தள்ளப்பட்டுள்ளனர்.
புதிய விளக்கங்கள் வியாக்கியானங்களைக்
கற்பித்துக் காப்பாற்றிவிட லாமா என்ற முயற்சியில் ஈடுபட்டு வருவது கண்டு
பரிதாபப்படத்தான் வேண்டும்.
இந்த வார துக்ளக் இதழில் (14.11.2012)
ஸ்ரீமத் பாகவதம் என்ற தொடரில் ஒரு முட்டுக் கொடுத்துப் பார்த்து கீதையின்
சுலோகத்தைக் காப்பாற்ற முயற்சிக்கப்பட்டுள்ளது.
சதுர்வர்ணம் மயாஸ்ருஷ்டம் குணகர்ம விபாசக
தஸ்ய கர்த்தாரமபிமாம்
வித்திய கர்த்தார மவ்யம்
தஸ்ய கர்த்தாரமபிமாம்
வித்திய கர்த்தார மவ்யம்
(பகவத் கீதை 4-13)
என்ற சுலோகத்தை எடுத்துக்காட்டி அதற்கு எத்தகைய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா?
அர்ஜுனா! நான்கு வர்ணங்களையும் நான்தான்
படைத்தேன். குணத்தின் அடிப்படையிலும், அவர்கள் செய்யும் கர்மத்தின்
அடிப்படையிலும் அவர்களை வகுத்து ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்து அனைவரும்
மேம்பட வேண்டும் என்பதற்காக அமைத்துள்ளேன். அவர்களின் பூர்வ குணங்களின்
விளைவாக ஸத்வ குணம், ரஜோ குணம்; தமோ குணம் ஆகியவற்றில் விகிதம்
ஒவ்வொருவரிடையே வெவ்வேறு அம்சங்களில் மாறுபட்டிருக்கலாம். இதன்
அடிப்படையிலும் உகந்த தொழில்களின் அடிப்படை யிலும் பிரித்தேன் என்று
துக்ளக் வியாக்யானம் செய்துள்ளது.
பூர்வ கர்ம பலன்களின் அடிப்படையில் மனிதன் பிறக்கிறான் - அவனின் குணங்களும் அமை கின்றன என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.
அடுத்து என்ன சொல்கிறது துக்ளக்? இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பணிகள் உயர்வு - தாழ்வு உடையன அல்ல என்றும் கூறுகிறது.
இதனைப் புரியம்படியாகச் சொல்ல வேண்டுமானால் பிர்மாவின் நெற்றியில் பிறந்த பிராமணன் செய்யும் ஓதல் ஓதுவித்தல்
என்பதும், காலில் பிறந்தவன் செய்யும் கூலித் தொழிலும், மலம் எடுக் கும்
தொழிலும் அவர்களின் பார்வையில் எந்தவித வித்தியாசமும் கிடையாது - அதனை நாம்
ஏற்றுக் கொள்ள வேண்டுமாம்.
இதில் இன்னொரு பித்தலாட்டம் என்னவென் றால்
பிறப்பால் ஒரு வர்ணத்தவனாக இருந்தாலும் நம்முடைய ஒழுக்கத்தாலும் அல்லது
கடைப்பிடிக்கும் தொழிலாலும் நாம் வர்ணம் மாறலாம் என்கிறது துக்ளக்.
இது உண்மையானால் தவம் செய்த சூத்திரனான சம்புகனை இராமன் ஏன் வெட்டிக் கொன்றான்?
வில் வித்தை கற்ற ஏகலைவனின் கட்டை விரலை துரோணாச்சாரி ஏன் காணிக்கையாகப் பெற வேண்டும்?
உண்மை என்னவென்றால், பிறப்பின் அடிப்படை
யில் என்னால் உண்டாக்கப்பட்ட வர்ண தர்மம் என்ற முறையை அதனைப் படைப்பித்த
நான் நினைத் தாலும் கூட மாற்ற முடியாது என்கிறான் கீதையில் கிருஷ்ணன்.
(கீதை அத்யாயம் -4 சுலோகம் 13)
இதில் இன்னொன்றும் முக்கியமானது. கட
வுளின் தலையில் பிறந்தால் என்ன? தோளில் பிறந்தால் என்ன? இடுப்பில்
பிறந்தால் என்ன? காலில் பிறந்தால் என்ன? எல்லாம் இறைவன் திருமேனியில் உள்ள
உறுப்புகள் தானே என்று வக்கீல்வாதம் செய்கிறது.
அப்படி என்றால் காலில் பிறந்தவனை
சூத்திரன் என்றுகூறி, அவன் ஏழு வகைப்படுவான்; அதில் ஒன்று தமது விபசாரி
மகன் என்று மனுதர்ம சாஸ் திரம் (அத்தியாயம் 8, சுலோகம் 415) கூறுவானேன்?
கீதையைக் கைவிடப் போகிறதா? அல்லது மனுதர்ம சாஸ்திரத்தைக் கைவிடப் போகிறதா துக்ளக்?
மனுதர்மத்தையும் கைவிட்டு விட முடியாது
துக்ளக். காரணம் வெறுக்கத் தகுந்ததா பிராமணீ யம்? எனும் துக்ளக் தொடரில்
மனுதர்மத்தை உச்சியில் வைத்துக் கூத்தாடியிருக்கிறார்.
ஒன்றும் மட்டும் உண்மை! தொடக்கத்தில்
குறிப்பிட்டுள்ளபடி பார்ப்பனர்கள் தங்கள் சாத்திரங்களை அவற்றில் உள்ளது
உள்ளபடி எடுத்துக் கூறிக் காப்பாற்றிட முடியாது என்பது தெரிந்து விட்டது.
இது நமது இயக்கத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியே!
-----------------------"விடுதலை” தலையங்கம் 9-11-2012
30 comments:
ஈரோட்டுப் பாதையில் ராம்ஜெத்மலானி!
- கி.வீரமணி -
புதுடில்லியில் நேற்று ஆண் - பெண் உறவுகள் பற்றிய நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய பிரபல வழக்குரைஞரும், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரு மான ராம்ஜெத்மலானி அவர்கள் ராமன் ஒரு மோசமான கணவன் என்ற உண்மையைக் கூறி, இராமனை புருஷ உத்தமனாகக் காட் டும் பொய்மையை மறுத்துள்ளார். (ராம் ஜெத் மலானி மாநிலங்கள் அவை உறுப்பினரும் ஆவார்!)
ராமன் ஒரு மோசமான கணவன். எனக்கு அவனைப் பிடிப்பதே இல்லை. யாரோ சில மீனவர்கள் கூறினார்கள் என்பதற்காக பரிதாபத்திற்குரிய சீதையை வீட்டை விட்டு வெளியேற்றி, காட்டுக்கனுப்பினான் அவன்.
அது மட்டுமா? லட்சுமணன் அவனைவிட மோசமானவன். சீதையைக் கடத்திக் கொண்டு போன நிலையில், அவளைத் தேடிக் கண்டுபிடித்து வரும்படி இராமன் லட்சுமணனிடம் கூறிய போது, லட்சுமணன் இராமனிடம் மறுமொழி யாக என்னால் அது இயலாது, காரணம் அவள் என் அண்ணி. அவள் முகத்தையே நான் பார்த்ததே இல்லை; எனவே அவளை என்னால் அடையாளம் காணவே முடியாது என்று கூறியதாக இராமாயணத்தில் உள் ளதைக் கூறினார் ராம்ஜெத்மலானி!
அது மட்டுமல்ல; நம் நாடு மிகவும் சிக்கலான கட்டத்தில் உள்ளது. மதம் முழு மையாக மாறிவிட்டது! மதம் பயங்கர வாதத்தைத்தான் உருவாக்கியுள்ளது. கொலை செய்யும்படி, தலையைக் கொணரவும் கட் டளை இடும் அளவுக்கு மதம் பிடித்துள்ளது!
- இவ்வாறு உண்மைகளைத் தோலுரித் துக் காட்டியுள்ளார் ராம்ஜெத்மலானி.
தந்தை பெரியார் அவர்களும், சுய மரி யாதை இயக்கமும் இதனை சுமார் 80 ஆண்டு களுக்குமுன்பே சொல்லி- மக்களைப் பக்கு வப்படுத்தியதால்தான் இன்றும் தமிழ்நாட்டில் இராமனைக் காட்டி அரசியல் வட நாட்டைப் போல நடத்த எந்த அரசியல் கட்சியாலும் முடியவில்லை.
இராமன் மோசமான கணவன் மட்டுமா? இல்லை இல்லை, அதைவிட அவன் ஒரு மோசமான மனிதனும் கூட!
1. சிறுவயதிலேயே தாடகையைக் கூனி யைக் கல்லெடுத்து அடித்தவன்.
2. இராவணனின் தங்கை சூர்ப்பனகையை மானபங்கப்படுத்துவதாகக் கூறி, மூக்கை யும், முலையையும் அறுத்த மனிதாபி மானமற்றவன்.
3. சீதையைத் தீக்குளித்து வரச் சொல்லி, (கடவுள் அவதாரமாயினும்) மனைவியின் கற்பு பற்றிச் சந்தேகப்பட்ட கொடுமைக்கார கயவன்.
4. நிறைமாத கர்ப்பிணியான சீதையை காட்டிற்கு அனுப்பியவன்.
இராம இராஜ்யம் எப்படி? ஆளும்போது பார்ப்பனச் சிறுவன் ஒருவன் இறந்ததற்கு வர்ணதர்மம் கெட்டுப் போனதே காரணம். சூத்திர சம்பூகன் தவம் செய்தான். கட வுளை நேரே காணும் உரிமை சூத்திரனுக் குக் கிடையாது. எனவே தரும விரோதம் அது. தவமிருந்த சம்பூகனை எவ்வித விசா ரணையும் இன்றி நேரே புறப்பட்டுச் சென்று கண்டந் துண்டமாக தனது வாளால் வெட் டிய அரசநீதி கொன்ற அயோக்கியன்.
5. பல வகையான மதுவகைகளைக் குடித்த குடிகாரன்.
6. வாலியை மரத்திற்குப் பின்னால் மறைந் திருந்து கொன்ற கோழை - பேடி!
இவ்வளவும் செய்த இராமர் இந்தியன் பீனல்கோட்படி பல்வேறு கிரிமினல் குற்ற செக்ஷன்கள்படி, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவன்.
இராமாயணம் நடந்த கதையாக இல்லா விட்டாலும், தெய்வீக புருஷனாகச் சித்திரிக் கப்பட்டு இன்று அயோத்தியில் கோயில் கட்ட வற்புறுத்தும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பன சனாதன ஹிந்து அமைப்புகள் கூறுகிறதே - அந்த பாத்திரத்தின் தன்மை - இதிகாசப் படியே - எப்படி உள்ளது என்பதைத்தான் தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கத்த வரும் கூறி வந்தனர்; வருகின்றன.
இப்போது ராம்ஜெத்மலானிகளே கூறும் அளவுக்கு பொய்த்திரை விலக்கப்பட்டு, இராமன் சாயம் வெளுக்கிறது!
இராம பக்தர்களே, இனியாவது திருந்துங் கள்! இராமாயணத் திற்குப் பதில் திருக்குறள் படியுங்கள்.
திருக்குறளைப் பரப்புங்கள்! 9-11-12
கடவுள் சர்ச்சை
மேற்கு வங்க மாநில இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (மார்க் சிஸ்டின்) முன்னணித் தலைவர் களுள் ஒருவரும், மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமான அப்துற் ரசான் மொவ்லா ஹஜ் புனித யாத்திரைக்குச் செல்லுவதாக முடிவு எடுத்த நிலையில், கட்சியின் கொள் கைக்கு விரோதம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. கட்சியின் கொள்கை வேறு, தனி மனித நம்பிக்கை வேறு என்று அவர் விளக்கம் சொல்லி யுள்ளார்.
அப்படியானால் கட்சியின் கொள்கையைப் பின்பற்றாதவர்கள் எல்லாம் இதுமாதிரி சொல்லித் தப்பித்துக் கொள்ளலாமே! அதே மேற்கு வங்கத்தில் போக் குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சுபாஷ் சக்ரவர்த்தி (செப் டம்பர் 2006) அக்கட்சியைச் சேர்ந் தவர் காளி கோயிலில் காணிக்கை செலுத்தவில்லையா? அதுபற்றி பிரச்சினை எழுப்பப்பட்டபோது முத லில் நான் இந்து - பிராமணன் அதற்குப்பின்தான் மார்க்ஸிஸ்டு என்று சொன்னதைவிடவா இது பெரிய குற்றம்?
கடவுளை ஏன் கேட்கவில்லை?
தஞ்சாவூரில் உள்ள பிரகதீசு வரன் கோவில் கோபுரத்தில் இடி விழுந்து அய்ந்து கலசங்களில் ஒன்று சுக்கு நூறாகி கீழே விழுந்தது. இதனைத் தொடர்ந்து தஞ்சை பெரிய கோவிலில் உள்ள வாகன மண்டபத்தில் இடி விழுந்து சுவர் இடிந்து விழுந்தது.
இடிதாங்கி வைக்கவில்லை - கோவில் பாதுகாப்பு சரிவரவில்லை என்று ஆட்சியாளரையும், தொல் பொருள் துறையையும் குறை கூறு கிறார்களே தவிர, தஞ்சை பிரக தீஸ்வரன் என்ன செய்தான்? அவன் சக்தி இதுதானா என்று கேட்கவில் லையே - பக்தர்களும், பத்திரிகை களும்?
திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் அவர்களின் குமுறல் கவனிக்கத்தக்கது. விளம்பரம் பெற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களுக்குத் தான் திரையரங்குகளில் முன் னுரிமை கொடுக்கப்படுகிறது (அவை பெரும்பாலும் தோல்வியைக் கண்டும்கூட)
கதையையும், மக்களையும் நம்பி படம் எடுக்கும் எங்களைப் போன்றவர்களின் நிலை என்னாவது? அவர்களுக்கு 500 அரங்கங்களை அளித்தால் எங்களுக்கு 50 அரங்கு களைக் கொடுக்கக் கூடாதா என்று புலம்புவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
எந்த இடத்திலும் மேல்தட்டு, பண ஆதிக்கம், விளம்பர மோகம் என் பவை இருக்கத்தான் செய்கின்றன. இவற்றையெல்லாம் உடைத்துக் கொண்டு வெளியில் வர தனி அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள லாம்; அரைத்த மாவையே அரைக் கும் பழைய பாணிகளைத் தூக்கி எறிந்து, புரட்சிகரமான கொள்கை களைக் கூறி இளை ஞர்களைத் தம் பக்கம் ஈர்க்கும் படங்களை எடுக்கும் துணிவையும் பெற வேண்டும். - வெற்றி நிச்சயம்!
செய்தியும் - சிந்தனையும்
ஆக்கிரமிப்பு
செய்தி: திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில் சார்பில் 9 கோடி ரூபாய் செலவில் திருமண மண்டபம் கட்டப்படுகிறது. சிந்தனை: அந்த மருந்தீசுவரர் கோயிலே சட்ட விரோதமாக ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதே - அதை மூடி மறைக்கத்தான் இதுவா? 9-11-2012
தமிழ்நாடு தேர்வாணையம்
தமிழ்நாடு அரசுப் பணி பிரிவு -2 க்கான (Group-2) தேர்வு 2011 ஆகஸ்டு 12ஆம் தேதி நடைபெற்றது. கேள்வித்தாள் வெளியானதால் மறு தேர்வு 4.11.2012 அன்று நடை பெற்றது. இதில் 42 சதவிகிதம் பேர் பங்கு ஏற்கவில்லையாம்.
இதன் பொருள் என்ன? வேலை வாய்ப்பில் நாடு முன்னேற்றம் அடைந்துவிட்டதா? தமிழ்நாடு தேர் வாணையத்தின்மீது நம்பிக்கையை இழந்து விட்டனரா?
தகுதிக்கே பெயர் போன ஜாதியைச் சேர்ந்தவர் தேர்வாணையத்தின் தலைவராக ஆக்கப்பட்ட அந்த லட் சணம் எத்தகையது என்பது இந்தத் தேர்வில் அம்பலமாகிவிட்டது. தேர்வுக்கு அதிகம் வராததற்குச் செய்யப்படும் காரணங்களை நினைத்தால் இப்படிக்கூட ஒரு நிரு வாகமா என்று நினைக்கத் தோன் றுகிறது.
பொதுவாக தேர்வு நடைபெறும் நாள்பற்றி குறுந்தகவல் (sms) முன்கூட்டியே அனுப்பப்படுமாம். இந்த முறை அவ்வாறு அனுப்பப்பட வில்லையாம். திடீரென்று நடத்தப் பட்டதால் விடுப்பு எடுத்துக் கொண்டு வருவதிலும் சிக்கலாம். பார்ப்பனர்களின் தகுதி - திறமை இலட்சணம் இதுதானா?
கீழத் தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் கடும் பாதிப்பு!
ஒரு கட்டத்தில் நீர் இல்லாமலும், மற்றொரு கட்டத்தில் வெள்ளத்தாலும்
கீழத் தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் கடும் பாதிப்பு!
மத்திய - மாநில அரசுகள் உரிய பரிகாரங்களைச் செய்யட்டும்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
கீழத்தஞ்சை மாவட்டத்தில் ஒரு கட்டத்தில் நீர் இல்லாமலும், மற்றொரு கட்டத்தில் மழை வெள்ளத்தாலும் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய - மாநில அரசுகள் நட்ட ஈடு உட்பட உரிய பரிகார நடவடிக்கை களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
குறுவை சாகுபடி விடுபட்டு, சம்பா சாகுபடிக்கும் காவிரி நீர் கிட்டாமல் போய்விடுமோ என்ற நிலையில், தமிழக அரசும், முதல் அமைச்சரும் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, முழு அளவு கருநாடகம் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புப்படியும், காவிரி நதிநீர் ஆணையத்தின் ஆணைப்படியும் எஞ்சிய நீரைத் தமிழகத்திற்குத் தரவில்லையென்றாலும்கூட, ஓரளவு கிடைக்கும்படிச் செய்தது, ஓரளவு டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதியைத் தரும் நிலை ஏற்பட்டுள்ளது!
மழை வெள்ளத்தில் மூழ்கிப் பயிர்கள் நாசம்!
எதிர்பாராத மழை வரவேற்க வேண்டிய அளவில் இருந்தது துவக்கத்தில். ஆனால் சில பகுதிகள் - குறிப்பாக கீழத் தஞ்சை மாவட்டம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டப் பகுதிகளில் சம்பா பயிரிடப்பட்ட நிலப் பகுதிகளில் அளவுக்கு அதிகமான மழை நீரில் பயிர்கள் மூழ்கிப் பயனற்று, அழுகி கையை விட்டுச் சென்றுவிட்ட அவல நிலையை உண்டாக்கி விட்டது விவசாயிகளுக்கு.
மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் குழு விரையட்டும்!
இச்சேதம் பற்றி வருவாய்த்துறையினர் கணக்கெடுப்ப தாகச் செய்திகள் வந்துள்ளன; இது போதாது. உடனடி யாக மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் குழு ஒன்றை தமிழக முதல் அமைச்சர் அப்பகுதிகளுக்குச் சென்று நேரில் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் களோடு கலந்தும், விவசாயிகளையும், அவர்கள் பிரதி நிதிகளைச் சந்தித்தும் சேதாரங்களைக் கணக்கிட்டு, அதற்குரிய நிவாரணத்தை உடனே வழங்கிட போர்க் கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.
இப்படி மழை வரும்போது, நிலங்களில் தண்ணீர்த் தேங்கி பயிர்கள் அழுகுவதற்கு மூல காரணம் - சரியான நேரத்தில், தூர்வாருதல், மற்றைய மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படாமையே என்று விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதிலும் தக்க கவனத்தை தமிழக அரசும், வேளாண்துறை, பொதுப்பணி மற்றும் பாசனத் துறையும் கவனித்து ஆவன செய்தல் அவசியமாகும்.
மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராசன்
இதற்கிடையில் நரிமணம் பெட்ரோலியப் பகுதிக்குச் செல்லும் எண்ணெய்க் குழாய்களில் ஏற்பட்ட கசிவுகளால், கீழ்வேளூர் பக்கம் உள்ள சில கிராம நிலங்கள் வேளாண்மைப் பயிர்கள் முளைக்க முடியாத - சுற்றுச் சூழலுக்கும் புறம்பான நிலை ஏற்பட்டமையைப்பற்றி மத்திய இணை அமைச்சர் திருமதி ஜெயந்தி நடராசன் அவர்கள் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று, நேரில் பார்வை யிட்டு, விவசாயிகளிடம் குறை கேட்டு, அதற்கடுத்து அவர்களுக்குத் தேவையான நட்ட ஈடு தொகையைக் கொடுக்கவும், மேலும் அந்நிலங்கள் விவசாயத்திற்குப் பயன்படும் வகையில் செப்பனிடும் பணியை ஓ.என்.சி.சி. அமைப்பு (மத்திய எண்ணெய் துரப்பண அமைப்பு) செய்ய வேண்டுமென அறிவுறுத்தியிருப்பதும் மிகவும் பாராட் டத்தக்க செயல் திறன் ஆகும்!
தஞ்சை மாவட்ட - காவிரிப்பகுதி விவசாயிகளுக்கு அடுக்கடுக்காக இப்படி இயற்கைத் தொல்லைகளும், துன்பங்களும் வருவது வேதனைக்குரியது.
என்ன செய்வது? தவிர்க்க இயலாததை எதிர் கொள்ளத்தானே வேண்டும்?
மத்திய, மாநில அரசுகள்
மத்திய, மாநில அரசுகள்தான் அவர்களது மனக் காயங்களுக்குத் தக்க பரிகார நடவடிக்கைகள் மூலம் மருந்திட முன் வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுகிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
9.11.2012
சென்னை
பொருளல்ல...
மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொருளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும். (விடுதலை, 10.6.1970)
ஜாதீயின் கோரத்தாண்டவம்! நத்தத்தில் நடந்ததென்ன?
கலவரத்தால் முற்றிலும் எரிந்துபோன, வீட்டிலுள்ள பொருள்கள் கருகிய நிலையில்...
தருமபுரி, நவ. 9- தருமபுரி அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவன் மிக பிற்படுத்தப்பட்ட பெண்ணை ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த கலவரக்காரர்கள் மூன்று கிராமங்களை அடியோடு எரித்து சாம்பலாக்கி உள்ளனர். இதனால் பல கோடி ரூபாய் பொருள் இழப்பு ஏற்பட்டு அகதிகளைப் போல் அல்லல்பட்டு வருகின்றனர்.
தருமபுரி செல்லங்கொட்டகையைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் லதா (வயது 21) தரும புரியில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்துள்ளார்.
ஜாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிர்ப்பாம்!
நாய்க்கன் கொட்டாய் நத்தம் காலனியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகன் ராஜா (வயது 24) இவர் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 14 ஆம் தேதி பதிவுத் திருமணம் செய்துகொண்டு சேலம் டி.அய்.ஜி. அலு வலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளார். பிறகு ராஜாவும், லதாவும் நத்தம் காலனிக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் லதாவின் பெற்றோர் என் மகளைத் திருப்பி அனுப்பி வைக்கவேண்டும் என்று நத்தம் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர்களிடம் கேட்டுள் ளனர். அதன் பிறகு இரண்டு நாள்களுக்குமுன் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அந்தப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.
இந்நிலையில், புதனன்று மதியம் லதாவின் தந்தை நாகராஜன் தற்கொலை செய்துகொண்டார்.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மாலை 4 மணியளவில் தற்கொலை செய்து கொண்ட நாகராஜன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவரது உடலைத் தருமபுரி திருப்பத்தூர் நேர்வழி சாலையில் வைத்து மறியல் செய்தனர். அங்கே இருந்த ஒரு பெட்டிக் கடையை தீக்கிரையாக்கி உள்ளனர். காவல்துறையினர் உடலை உடற்கூறு ஆய்விற்காக எடுத்துச் செல்லவும் அனுமதிக்க வில்லை.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் 1800 பேர்களாம்!
இந்நிலையில், நாக ராஜன் சமுதாயத்தைச் சேர்ந்தவர் கதிர்நாய்கன் அள்ளி, நாய்கன் கொட் டாய், வாணியம்பாடி கொட்டாய், புளியம் பட்டி, ஆண்டி அள்ளி, செங்கல்மேடு, சவுக்கு தோப்பு, கொள்ளப்பட்டி மற்றும் 10 கிராமங் களைச் சேர்ந்த 1800 பேர் கள் நத்தம் காலனி ஆதி திராவிடர் குடியிருப்பு களில் உள்ள கூரை வீடு களைத் தீயிட்டு கொளுத் தியும், ஓட்டு வீடுகளை பெட்ரோல் ஊற்றியும் கொளுத்தியதுடன், காங் கிரீட் வீடுகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்துத் தள்ளி உள்ள னர். நத்தம் காலனியில் ஒரே ஒரு வீடு கூட எரிக் கப்படாமல், பெட்ரோல் ஊற்றி தீயிடாமல், அடித்து நொறுக்காமல் எந்த வீடும் இல்லை.
அதே பகுதியில் உள்ள அண்ணா நகர் தாழ்த் தப்பட்டவர்களின் குடியிருப்பு, கொண்டம்பட்டி கிராமங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அனைத்து வீடுகளிலும் பீரோ, கட்டில் மெத்தை, இரு சக்கர வாகனம், மினி லாரி, வாகனங்கள், மோட்டார் தையல் எந்திரம், ஒலி பெருக்கி சவுன்ட் சிஸ்டம், அரிசி, நெல், சோளம், கம்பு போன்ற தானியங்கள் தீயிட்டு கொளுத்தியதுடன், சமையல் கேஸ் இருந்த வீடுகளில் எல்லாம் கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு தீயிட்டு வெடிக்க வைத்துள்ளனர். 268 வீடுகள் எரிந்தன. கோவில் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டன.
மாலை 6 மணிக்குத் தொடங்கிய கலவரம் தொடர்ந்து 11 மணிவரை நடந்தது. கலவரக்காரர்கள் மூன்று கிராமங்களையும் தீயிட்டு கொளுத்திவிட்டு அவர்களாகவே வெளியேறிச் சென்ற பின்தான், காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும், வட்டாட்சியரும், உதவி ஆட்சியரும் உள்ளே சென்றனர். கலவரத்தைத் தடுக்க போதிய காவல் துறையினர் இல்லை. நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளும் அமைதி காத்தனர். அதனால் கலவரக்காரர்களால் நேரம் எடுத்துக்கொண்டு மூன்று கிராமங்களையும் எரிக்க முடிந்தது.
உளவுத் துறை என்ன செய்தது?
ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டதால் இரு தரப்பும் பேச்சுவார்த்தை தோல்வி அடை யும்போதே உளவுத்துறை சரியாக செயல்பட்டு காவல்துறைக்கு தெரியப்படுத்தி இருந்தால், இந்தக் கலவரம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். இதில் உளவுத் துறை, காவல்துறை, வருவாய்த் துறை, மாவட்ட நிருவாகத்தின் செயல்பாடுகள் மெத்தன மாக இருந்ததாலே இந்தக் கலவரம் நடந்துள்ளது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
மூன்று கிராமங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பல வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வை தெரிந்து செய்தியாளர்களும் புகைப்படக்காரர்களும் அங்கே வந்தனர். அவர் களை விரட்டியதுடன், கேமராக்களைப் பிடுங்கி தகராறு செய்ததினால், பத்திரிகையாளர்கள் படம் எடுக்க முடியாமல், செய்தி சேகரிக்க முடியாமலும் திண்டாடினர். செய்தி சேகரிக்க நத்தம் காலனிக்குள் சென்றால், பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று காவல் துறையினர் கையை விரித்து விட்டனர். இதனால் இரவில் தீயிட்டு எரிவதை படம் எடுக்க முடியாமல் திரும்பி விட்டனர்.
காவல்துறை
கலவரப் பகுதிக்கு டி.அய்.ஜி. சஞ்சய் குமார் தலைமையில் தருமபுரி எஸ்.பி. அசரர் கார்க், அய்.ஜி. சுந்தரமூர்த்தி, கிருஷ்ணகிரி எஸ்.பி. அசோக்குமார், சேலம் எஸ்.பி. அஸ்வின்கோஸ், நாமக்கல் எஸ்.பி. கண்ணம்மாள், வேலூர் மாவட்ட எஸ்.பி. ஈஸ்வரன் ஆகியோர் முகாமிட்டு, கலவரத்தை கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வந்துள்ளனர்.
500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 90-க்கும் மேற் பட்டோரை கைது செய்துள்ளதாக காவல்துறை யினர் தெரிவித்துள்ளனர். நேற்று தருமபுரி குற்ற வியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வீடுகளை இழந்த ஒவ்வொருவருக்கும் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசு ஆணை பிறப்பித் துள்ளது.9-11-2012
ஆனந்தவிகடனின் யோக்கியதை இதுதானா?
புதுடில்லி, நவ. 9- ஆனந்தவிகடன் தான் சொல்லாதஒன்றை வெளியிட்டு இருப்பதாக மத்திய இணை அமைச் சர் வி. நாராயணசாமி அறிக்கை வெளியிட் டுள்ளார்.
அறிக்கை வருமாறு:
ஆனந்தவிகடனில் என்னை பேட்டி காண வேண்டுமென்று திரு. ராஜீவ்காந்தி என்ற நண் பர் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு கேட் டார், நான் அவருக்கு ஒரு தேதி குறிப்பிட்டுக் கொடுத்திருந்தாலும், முடியாத காரணத்தால் பத்திரிகைகாரர்களோடு நட்புறவோடு இருக் கின்ற காரணத்தால், அடுத்த வாரம் சென்னை வரும்போது அவரை சந்திக்கிறேன் என்று கூறினேன். பேட்டி தரு கின்றேன் என்றும் கூறி னேன்.
அதன் அடிப் படையில் இஸ்ரோ ஓய்வு விடுதியில் சந்தித் துப் பேட்டி அளித்தேன். அந்தப் பேட்டியை என் னால் தமிழக முன்னாள் முதல்வர் திராவிட முன் னேற்றக் கழகத்தின் தலைவர் டாக்டர் கலை ஞர் அவர்கள் அறிக்கை யைப் பார்த்த பிறகுதான் ஆனந்தவிகடனில் எப்படி என் பேட்டியில் சொல்லாதவற்றையெல் லாம் சேர்த்துப் போட் டிருக்கின்றார்கள் என்று தெரிய வந்தது.
நான் தி.மு.க. தேவை யில்லை, ஜெயலலிதா அம்மையார் ஆதரவு போதும் என்று பேட் டியில் சொல்லாததை பேட்டியாளர் திரு. ராஜீவ் காந்தி அவர்கள் எழுதியிருப்பது எனக்கு விந்தையாக இருக் கின்றது. பேட்டியாளர் என்னை இது சம்பந்த மாக எந்தக் கேள்வி களையும் கேட்கவில்லை. ஆகவே, நான் பதில் சொல்லவேண்டிய அவ சியம் இல்லை. நான் சொல்லாததை எல்லாம் திரித்துப் போட்டிருக் கிறார்கள்.
நான் திராவிட முன் னேற்றக் கழகம் முதலில் ஆதரவு கொடுத்தார் கள், பிறகு பின்வாங்கி விட்டார்கள் என்று கூறவே இல்லை. என் னுடைய பேட்டியின் போது திராவிட முன் னேற்றக் கழகம் கூடங் குளம் அணுமின் நிலை யத்திற்கு முழுமையான ஆதரவு கொடுத்து வரு கிறது என்றும், தமிழக முதலமைச்சரும் கூடங் குளம் அணுமின் நிலை யம் அமைவதற்கு ஒத் துழைக்கிறார்கள் என்றுதான் கூறினேன்.
நான் பேட்டியில் சொல்லும்போது காங் கிரஸ்-தி.மு.க.வினுடைய உறவு பலமாக இருக் கிறது. தி.மு.க. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி யில் காங்கிரசை அடுத்து பலமான கட்சி எனவும், நாடாளுமன்றத்துக்குள் ளேயும், வெளியேயும் இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்படு கின்றன. டாக்டர் கலை ஞர் அவர்கள்மீது எனக்கு மிகுந்த அன்பும், மரியாதையும் உண்டு.
அதையெல்லாம் இருட் டடிப்பு செய்து, நான் பேட்டியில் சொல்லாத தையெல்லாம் எழுதி சிண்டு முடிகின்ற வேலை யில் ஈடுபட்டு காங்கிரஸ் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடையே குழப்பம் விளைவிக்கும் வகையில் இந்தப் பேட்டி வெளியாகி இருப்பது வருந்தத்தக்கது.
ஆகவே, அதற்கு விளக் கம் அளிக்கவேண்டிய கடமை எனக்கு இருக் கிறது. நான் பலமுறை தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்கின்றேன். கடந்த 10 நாள்களுக்கு முன்புகூட தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்து உடல்நலம் விசாரித்து வந்தேன்.
பத்திரிகை தர்மம் கருதி என்னுடைய அறிக் கையை ஆனந்தவிகடன் இதழில் பிரசுரம் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
- இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
இனப்படுகொலைசெய்தஇலங்கைஅரசுக்குஎதிராக
சுய அதிகாரம் படைத்த பன்னாட்டு விசாரணைதேவை!
இலண்டன் பன்னாட்டுத் தமிழ் மாநாட்டில் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
லண்டன், நவ. 9- பிரித்தானிய தமிழ்ப் பேரவை மற்றும் தமிழருக்கு ஆதரவான பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து 7-11-2012 முதல் 9-11-2012 வரை உலகத் தமிழர் மாநாடு ஒன்றை ஒருங் கிணைக்கின்றன. இம்மாநாடு பிரித்தானிய நாடாளு மன்ற வளாகத்தில் உள்ள ஓர் அரங்கில் நடை பெறுகிறது. இதில் கலந்துகொண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவள வன் ஆற்றிய உரை வருமாறு:
முக்கியமானதொரு கட்டத்தில் இம்மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக தமிழர்களுக்கான அனைத் துக் கட்சி நாடாளுமன்றக் குழு மற்றும் பிரித்தா னியத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளுக்கு முதலில் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மையில் நடந்து முடிந்த அய்.நா. மீளாய்வுக் கூட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இலங்கை அரசின் மீது தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளதோடு, அங்கு தமிழர்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்முறையைக் கண்டித்திருக்கின்றன.
2011 மார்ச் மாதத்தில் அய்.நா. அவையால் அனுப் பப்பட்ட நிபுணர் குழு தெரிவித்திருந்த கருத்துகளை இங்கு நான் வலியுறுத்துகிறேன். வன்னிப் பகுதியில் தமிழ் மக்களுக்கு எதிராக பெருமளவில் இலங்கை அரசாங்கம் வன்முறை புரிந்தது என்பதை அந்தக் குழு உறுதி செய்திருந்தது.
இரகசிய முகாம்களில் இன்னும் தமிழர்கள்
இப்போதும் இலங்கையில் இரகசிய முகாம் களில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக் கிறார்கள். இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர் இளைஞர் கள் காணாமல் போயிருக்கிறார்கள். தமிழ்ப் பெண்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் பாலியல் வல்லுறவில் ஈடுபடுவதாக பல புகார்கள் வந்துள்ளன. இத்தகைய கொடுமைகளைத் தீர்ப் பதற்கான எந்தவோர் ஏற்பாடும் இலங்கையில் இல்லை. அங்கு நீதித் துறையும்கூட அச்சுறுத்தலுக் குள்ளாகியிருக்கிறது.
வெள்ளை வேன்களில் வந்து தமிழ் இளைஞர் களைக் கடத்துவதாகவும், 2009 மே மாதத்திற்குப் பிறகு நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இவை இலங்கையில் அன்றாட நிகழ்வு களாகிவிட்டன.
ஊடகவியலாளர்களும் இலங்கை இராணுவத் தின் தாக்குதலிலிருந்து தப்பிக்கவில்லை. அவர்களது நடவடிக்கைகள் இனப்படுகொலை என்ற பிரிவில் அடங்கக்கூடியவை. 2004-2008 ஆம் ஆண்டுகளுக் கிடையே ஊடகவியலாளர்கள் 31 பேர் இலங்கை யில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 24 பேர் தமிழர்கள்.
இலங்கை அரசு சர்வதேசச் சமூகத்தை ஏமாற்றும் விதமாக தடுப்பு முகாம்களை மூடி வருகிறது. ஆனால் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களை தமது சொந்த ஊருக்குச் செல்ல இராணுவம் அனுமதிக்கவில்லை. மாறாக, அவர்கள் எந்த வசதியுமற்ற அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
'மெனிக் முகாமில்' அடைத்து வைக்கப்பட் டிருந்த இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் தமிழர்கள் தமது சொந்த ஊர்களுக்குச் செல்ல இதுவரை அனுப்பப்படவில்லை என்பது இதற் கோர் உதாரணம் ஆகும்.
சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பலவும் இலங்கை இராணுவம் ஈழத் தமிழர்களின் நிலங் களையும் கட்டடங்களையும் சட்டவிரோதமாக அபகரித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளன.
தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள்
சிங்களவர்களை வலிந்து தமிழர் பகுதிகளில் குடியேற்றும் வேலையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.
தமிழர்களின் அன்றாட வாழ்க்கை சிங்கள இராணுவத்தால் முடக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் தமது வீடுகளில் தனிப்பட்ட சடங்குகளைச் செய்வதற்குக்கூட இராணுவத்திடம் அனுமதிபெற வேண்டிய நிலை உள்ளது. முடிதிருத்தும் கடைகளையும், மளிகைக் கடைகளையும்கூட இராணுவமே நடத்துகிறது. விவசாயத்திலும், மீன்பிடித் தொழிலிலும் சிங்கள இராணுவம் ஈடுபட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் மறுக்கப்படுகிறது.
இவற்றையெல்லாம் சர்வதேசச் சமூகம் அறிந் திருந்தும், இலங்கை அரசே இதுகுறித்து விசாரித்து நீதி வழங்கவேண்டுமென்று கூறிவருகிறது. இன வெறி பிடித்த இலங்கை அரசை நம்புவதற்கு எந்தவொரு காரணமும் இல்லை. மூன்றாண்டுகள் கடந்து விட்டன. எந்தவொரு நம்பிக்கையும் கண்ணில் தெரியவில்லை.
நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்!
ஆகவே, தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு உடனடியாக சர்வதேச சுயாதீனமான விசாரணை ஒன்றை ஏற்பாடு செய்து இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட வர்களைத் தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாட்டு மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
ஈழத்தமிழர் பிரச்சினையை இந்திய நாடாளு மன்றத்தில் எழுப்புவேன் என்றும் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவிலிருக்கும் தேசியக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக நான் முயற்சி எடுப்பேன் என்றும் உங்களிடம் உறுதி கூறுகிறேன். நன்றி.
- இவ்வாறு இலண்டனில் நடைபெற்ற சர்வ தேசத் தமிழர் மாநாட்டில் தொல்.திருமாவளவன் உரையாற்றினார்.
ஆனந்தவிகடனின் யோக்கியதை இதுதானா?
புதுடில்லி, நவ. 9- ஆனந்தவிகடன் தான் சொல்லாதஒன்றை வெளியிட்டு இருப்பதாக மத்திய இணை அமைச் சர் வி. நாராயணசாமி அறிக்கை வெளியிட் டுள்ளார்.
அறிக்கை வருமாறு:
ஆனந்தவிகடனில் என்னை பேட்டி காண வேண்டுமென்று திரு. ராஜீவ்காந்தி என்ற நண் பர் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு கேட் டார், நான் அவருக்கு ஒரு தேதி குறிப்பிட்டுக் கொடுத்திருந்தாலும், முடியாத காரணத்தால் பத்திரிகைகாரர்களோடு நட்புறவோடு இருக் கின்ற காரணத்தால், அடுத்த வாரம் சென்னை வரும்போது அவரை சந்திக்கிறேன் என்று கூறினேன். பேட்டி தரு கின்றேன் என்றும் கூறி னேன்.
அதன் அடிப் படையில் இஸ்ரோ ஓய்வு விடுதியில் சந்தித் துப் பேட்டி அளித்தேன். அந்தப் பேட்டியை என் னால் தமிழக முன்னாள் முதல்வர் திராவிட முன் னேற்றக் கழகத்தின் தலைவர் டாக்டர் கலை ஞர் அவர்கள் அறிக்கை யைப் பார்த்த பிறகுதான் ஆனந்தவிகடனில் எப்படி என் பேட்டியில் சொல்லாதவற்றையெல் லாம் சேர்த்துப் போட் டிருக்கின்றார்கள் என்று தெரிய வந்தது.
நான் தி.மு.க. தேவை யில்லை, ஜெயலலிதா அம்மையார் ஆதரவு போதும் என்று பேட் டியில் சொல்லாததை பேட்டியாளர் திரு. ராஜீவ் காந்தி அவர்கள் எழுதியிருப்பது எனக்கு விந்தையாக இருக் கின்றது. பேட்டியாளர் என்னை இது சம்பந்த மாக எந்தக் கேள்வி களையும் கேட்கவில்லை. ஆகவே, நான் பதில் சொல்லவேண்டிய அவ சியம் இல்லை. நான் சொல்லாததை எல்லாம் திரித்துப் போட்டிருக் கிறார்கள்.
நான் திராவிட முன் னேற்றக் கழகம் முதலில் ஆதரவு கொடுத்தார் கள், பிறகு பின்வாங்கி விட்டார்கள் என்று கூறவே இல்லை. என் னுடைய பேட்டியின் போது திராவிட முன் னேற்றக் கழகம் கூடங் குளம் அணுமின் நிலை யத்திற்கு முழுமையான ஆதரவு கொடுத்து வரு கிறது என்றும், தமிழக முதலமைச்சரும் கூடங் குளம் அணுமின் நிலை யம் அமைவதற்கு ஒத் துழைக்கிறார்கள் என்றுதான் கூறினேன்.
நான் பேட்டியில் சொல்லும்போது காங் கிரஸ்-தி.மு.க.வினுடைய உறவு பலமாக இருக் கிறது. தி.மு.க. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி யில் காங்கிரசை அடுத்து பலமான கட்சி எனவும், நாடாளுமன்றத்துக்குள் ளேயும், வெளியேயும் இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்படு கின்றன. டாக்டர் கலை ஞர் அவர்கள்மீது எனக்கு மிகுந்த அன்பும், மரியாதையும் உண்டு.
அதையெல்லாம் இருட் டடிப்பு செய்து, நான் பேட்டியில் சொல்லாத தையெல்லாம் எழுதி சிண்டு முடிகின்ற வேலை யில் ஈடுபட்டு காங்கிரஸ் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடையே குழப்பம் விளைவிக்கும் வகையில் இந்தப் பேட்டி வெளியாகி இருப்பது வருந்தத்தக்கது.
ஆகவே, அதற்கு விளக் கம் அளிக்கவேண்டிய கடமை எனக்கு இருக் கிறது. நான் பலமுறை தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்கின்றேன். கடந்த 10 நாள்களுக்கு முன்புகூட தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்து உடல்நலம் விசாரித்து வந்தேன்.
பத்திரிகை தர்மம் கருதி என்னுடைய அறிக் கையை ஆனந்தவிகடன் இதழில் பிரசுரம் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
- இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
பலன்கள் பலிப்பது ஏன்?
ஜோதிடர்கள் நமது ஜாதகத்தை பரிசீலித்து வாக்குக் கூறும் போதும், வாரபலன், தினபலன் படிக்கும் போதும் அவர்கள் கூறுவது சரியாக வே உள்ளது போன்று நம்மில் பலருக்கும் தோன்றுவதுண்டு. ஜோதிடத்தில் நம்பிக்கையில்லை என்று கூறுபவர்கள் கூட சில சமயம் இவ்வாறு மனச் சஞ்சலம் அடைவ துண்டு. பலன்கள் பலிப்பது போன்று தோன்றுவது ஏன்?
எடுத்துக்காட்டாக தினமணி மே 11, 2001இல் காலம் உங்கள் கையில் பகுதியில் வெளியான ஒரு ஜாதகப் பலன் குறிப்பைப் பார்க்கலாம்.
கனகாம்பாள், ஈரோடு.
கேள்வி: நான் பல கடிதங்கள் எழுதியும் தங்களுக்கு ஏன் பதில் கூற மனம் வரவில்லை? என் மகனின் ஜாத கத்தில் தோஷம் இருக்கிறதா? எனக்கு 60 வயதாகிறது. என் மகனுக்கு எப்போது விவாகம் நடைபெறும்?
என்ற கேள்விக்கு ஜோதிட ஆராய்ச்சி மய்யத்தினை சார்ந்த ஏ.எம்.ராஜகோபாலன் பதில் அளித்துள்ளார். அவர் என்ன பதில் கொடுத்துள்ளார் என்று பார்க்கும் முன் பதில் எத்தன்மையுடையதாக இருக்கும் என எண்ணுகிறீர்கள்?
உங்கள் மகனுக்கு ஜாதகத்தில் இந்த தோஷம். ஆகவே கல்யாணம் - ஆண்டுகள் கடந்து நடக்கும். அல்லது, உங்கள் மகன் ஜாதகம் சரிதான், ஆகவே - தேதி என்று திருமணம் நடக்கும் என குறிப்பான, தெளிவான பதில் நமது எதிர்பார்ப்பு. ஆனால் ஜோதிடரின் பதில் என்ன தெரியுமா?
பதில்: தங்கள் மகனின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்திற்கு எவ்வித தோஷமும் ஏற்படவில்லை. வரும் 13ஆம் தேதியிலிருந்து கிரக நிலைகள் சாதகமாக உள்ளதால் விவாக முயற்சிகளை மேற்கொள்ளவும். சுத்த ஜாதகத்தைத்தான் சேர்க்க வேண்டும்.
என்ன பதிலின் தன்மையை உற்று கவனித்தீர்களா? எந்த தேதியில் திருமணம் நடக்கும், அல்லது எந்தக் கால இடைவெளியில் திருமணம் கை கூடும் என்பது குறித்த தகவலே இல்லை. முயற்சி மேற்கொள்ளவும் என்று உள்ளது. அத்தாயாரும் முயற்சி மேற்கொண்டு திருமணம் கை கூடினால் அது ஜாதகப் பலனா? அல்லது முயற்சியின் பலனா?
இதுபோன்றுதான் பல ஜாதகப் பலன்கள் வார பலன்கள் பொதுப்படை யானவை. குறிப்பாக கணிப்பு ஏதுமிருப்ப தில்லை. பொதுவான செய்திகள் பலிப்பது போன்று தோன்றுவது இயல்புதானே! இங்கு ஒரு செய்தியைக் கவனத்திற்குக் கொண்டு வரவும் விரும்புகிறேன். இல்லஸ்டிரேடட் வீக்லி என்ற இதழின் ஆசிரியராக குஷ்வந்த்சிங் இருந்த போது, தற்செயலாக வாரபலன் எழுதும் ஜோதிடரிடமிருந்து அவ்வார பலன் வரவில்லை.
அலுவலகத்தில் அனைவரும் கலக்கமுற்று எவ்வாறு இதழைப் பதிப்பிக்கப் போகிறோம் என்று அச்சமுற்றிருந்தனர். குஷ்வந்த்சிங் ஒரு யோசனை செய்தார். கடந்த இதழ்களில் வெளியான பலன்களை அங்கும் இங்கும் வெட்டி ஒட்டி அவரே ஒரு வாரபலன் தயார் செய்தார்.
ஜோதிடரிடமிருந்து வந்ததாகக் கூறி இதழில் பதிப்பித்தும் விட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த இதழின் வாசகர்கள் பலரும் அந்தவாரம் வெளியான வாரபலனே மிகவும் சிறப்பாக பொருந்தியதாக வாழ்த்தியதுதான்! இதற்குப் பிறகு வாரபலனுக்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டதாக குஷ்வந்த் சிங் ஒரு நூலில் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
(நூல்:- நாள் என்ன செய்யும்? கோள் என்ன செய்யும்? - த.வி.வெங்கடேஸ்வரன்.
இலட்சார்ச்சனை
நம் தேசத்திற்கு இதர தேசத்தவர்களால் ஆபத்துகள் ஏற்படுமோ என்கிற பீதி உண்டாகியிருக்கிறது. நம் தேசத்திலுள்ள எல்லாச் சேத்திரங்களையும், நம்மையும் எந்தவிதமான ஆபத்துகளும் வர ஒட்டாமல் தடுத்துக் காப்பாற்றும் பொருட்டு, சிறீரங்கசேத்திரத்தில் சிறீரங்கநாதனுக்கு இலட்சார்ச்சனை, மாசி மாதம் 29ஆம் தேதி ஆரம்பித்து, பங்குனி 2ஆம் தேதி 15.3.1942 முடிவடையும்படி நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. (இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம்) என்று அறிக்கை வெளிவந்தது.
அதன்படி இலட்சார்ச்சனை நடக்கிறது. இந்த இலட்சார்ச்சனை மூலம் ரங்கநாதர் ஆலயத்து ஊழியர்களுக்கும், புரோகித கூட்டத்துக்கும் இலாபம்தான்! ஆனால், நாட்டுக்கு என்ன இலாபம்? ஆபத்தை போக்க இதுவா வழி?
இராபர்ட் கிளைவ் வந்த காலத்திலே இலட்ச்சார்ச்சனைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தினோமே கண்டதென்ன? கிளைவின் கல்லறை மீது இந்தியாவை வென்ற வீரன் என்று பொறிக்கப்பட்டிருக்கிறது! இந்தப் பிரிட்டிஷ் வல்லரசை இன்று ஜப்பான் சில இடங்களிலே தோற்கடித்தது.
அர்ச்சனைகளின் பலனா? யாகம், யோகம் செய்தா? அவை ஆத்மார்த்தத் துறையின் பணிகள்; பரலோக யாத்திரைக்குப் பிறகு பலன் வேண்டிச் செய்யப்படும் பழைமைகள்!
... பொன்னும், பொருளும், நேரமும், நினைப்பும் போருக்குச் செலவிட வேண்டிய இந்தப் பயங்கரமான வேளையிலே வெண்பொங்கலும், சித்ரான்னமும் உண்ண, ஒரு சாக்குக்காக இலட்சார்ச்சனை செய்யுங்கள், ரங்கநாதர் இரட்சிப்பார் என்று புரோகிதக் கூட்டம் கூறி மக்களின் பணத்தையும், நேரத்தையும் பாழாக்குகிறதே, இதை என்னென்பது?
- அறிஞர் அண்ணா, திராவிட நாடு இதழ் - (5.3.1942)
ஜோதிடமும் - அறிவியலும்!
சஞ்சலமான மனதின் வெளிப்பாடாகவே ஜோதிடம் போன்ற புனைவுகளும் பொதுவாக அமைவதைக் காணலாம். ஆகவே, இத்தகைய கருத்துக்கள் நமது மனதில் இடம் பிடிக்கத் துவங்கியதும் உடனடியாக தாமதியாது ஒரு மருத்துவரின் உதவியை நாடுவதோடு நல்ல உணவும் ஓய்வும் அவசியம்
- விவேகானந்தர்
நரகாசுரன் பிறப்பு கட்டுக்கதையே!
இரணியாட்சன் ஒருமுறை ஞாலத்தைப் (பூமியை)ப் பாயாக சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க, திருமால் பன்றியுருக் கொண்டு தன் கொம்பினால் அதன் மார்பைப் பிளந்து ஞாலத்தைப் பண்டுபோல் நிறுத்தினார் என்றும், அன்று நிலமகட்கும் அவருக்கும் நேர்ந்த தொடர்பினால் நரகாசுரன் பிறந்தானென்றும், கூறிக் கல்லா மக்களை விலங்காக்கும் கட்டுக் கதைகளின் இழிவையும் இடக்கரையும் பொய்மையையும் புரட்டையும் படவாயிலாகப் பெரியார் விளக்கிக் காட்டியபோது, அறிவியலும் ஞான நூலும் உயிர் நூலும் உடல் நூலும் வரலாற்று நூலும் கற்ற இக்காலத்தில் அவருடன் ஒத்துழையாது, ஆரியருடன் சேர்ந்து கண்டித்தது. அவர் கூறியவாறு காட்டு விலங்காட்டித்தனமேயன்றி வேறன்று.
தமிழ் இலக்கிய வரலாறு (பக்கம் 381 ஞா. தேவநேயப் பாவாணர்)
தகவல்: ச. அரங்கசாமி, காரைக்குடி)
ஒரே பிரச்சினை: இருவகை அணுகுமுறைகள்
நேற்று வெளிவந்த நாளேடு ஒன்றில் இரண்டு செய்திகள் இடம் பெற்றன. முதல் செய்தி: கூவம் ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள வீடுகள் - ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. உயர்நீதி மன்றம் உத்தரவிட்டும் இந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படவில்லை.
இதனால் கூவம் ஆறு குறுகி விட்டது என்று அங்கலாய்க்கப்பட்டுள்ளது. சென் னையைப் பொறுத்தவரை கூவம் ஆற்றின் கரை களில் உள்ள வீடுகள் அகற்றப்பட்டு விட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆக்ரமிப்புகள் தான் அகற்றப்படவில்லை என்று விரிவாக அந்த ஏடு செய்தியை வெளியிட்டுள்ளது.
அதே ஏடு இன்னொரு செய்தியையும் வெளியிட் டுள்ளது கோவில் இடிப்பை கண்டித்து இந்து அமைப்பினர் முற்றுகை என்ற தலைப்பில் இந்தச் செய்தி வெளிவந்துள்ளது.
யானைக் கவுனியில், கோவில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து, இந்து அமைப்பினர் நேற்று முற்றுகை யிட்டனர்.
யானைகவுனியில் என்.எஸ்.சி. போஸ் வால்டாக்ஸ் சாலை சந்திப்பில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள அக்கோவில், பல ஆண்டுகளாக மூடியே உள்ளது.
கோவில் பரம்பரை அறங்காவலராக, முத்துலட்சுமி என்பவர் உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கோவில் இடிக்கப்படுவதாக தகவல் வந்ததை அடுத்து, இந்து அமைப்பினர்,கோவில் முன் முற்றுகை யிட்டனர். காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனர்.
விசாரணையில், கோவிலை இடித்து விட்டு சீரமைக்க, கடந்த, 2010ல் சந்தன்மால் என்பவர், அனைத்துத் தரப்பிலும் ஒப்புதல் வாங்கினார் என்பது தெரிய வந்தது. தீபாவளிக்கு. பிறகு, நடவடிக்கை எடுக்கலாம் என, காவல்துறையினர் கூறியதை இரு தரப்பினரும் ஏற்றனர்.
இந்தச் செய்தியின் தன்மை என்ன? முதல் செய்தியின் தன்மை என்ன? இரண்டிற்கும் இடையே இழைந்தோடும் வேறுபாடுகளைக் கவனிக்க வேண்டாமா?
சட்டம் எல்லாருக்கும் பொது என்றால் இரண்டு இடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்தான். அதே நேரத்தில் மக்கள் குடியிருக் கும் வீடுகள் ஆக்கிரமிப்பு என்று குற்றஞ்சாட்டப்பட்டு அகற்றப்பட வேண்டும். உயிர் இல்லாத குத்துக் கல்லை நட்டு வைத்து அதற்குக் கோயில் என்ற பெயர் சூட்டினால் அது ஆக்கிரமிப்பாக இருந்தாலும் அகற்றக் கூடாது என்றால் இது என்ன சட்டம்? என்ன மனிதநேயம்?
கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் தீபாவளிக்குப் பிறகு கோயில் கட்டப்படுமாம். இதற்குக் காவல் துறையின் ஒத்துழைப்பு - கட்டப் பஞ்சாயத்து! நம் நாட்டின் நியாயம், நேர்மை, சட்டம் எந்த யோக்கியதையில் இருக்கின்றன என்பதற்கு பனிமலையின் ஒரு சிறு முனை என்று சொல்லும் அளவுக்குள்ள ஓர் எடுத்துக்காட்டு இது.
சட்ட விரோதமாக அத்துமீறலாக, அரசு இடங்களைக் கோயில்கள் ஆக்கிரமித்து இருந்தால், அவற்றை அகற்றக் கூடாதாம். இந்து அமைப்புகள் இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகளுக்காகக் குரல் கொடுக்குமாம். முற்றுகைப் போராட்டம் நடத்துவார்களாம்.
சட்டப்படி அரசு என்ன நடவடிக்கையை எடுத் திருக்க வேண்டும்? அரசு இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கோயிலை இடிக்கக் கூடாது என்று முற்றுகைப் போராட்டத்தை நடத்தியவர்களைச் கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் தள்ளி இருக்க வேண்டாமா? ஏன் செய்யவில்லை காவல்துறை?
கோயில் என்றால் பயமா? அல்லது காவல்துறை யும் தங்களுக்குள்ள நம்பிக்கையின் அடிப்படையில் ஒத்துழைப்பும் கொடுத்துள்ளார்களா?
இப்படி வேலியே பயிரை மேயும் போக்கினை காவல்துறை மேற்கொள்ளுமேயானால், மக்கள் மத்தியில் சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்படும்?
பொது இடங்கள் மற்றும் அரசு இடங்களில் ஆக்கிரமித்துள்ள கோயில்களை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திட்டமிட்ட முறையில் ஆணை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்புக் கோயில்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளன. அவை அகற்றப்பட்ட விவரத்தை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் உச்சநீதிமன்றத்திற்கு நேரில் வந்து தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆணையிட்ட பிறகும், காவல்துறை இப்படி நடந்து கொள்ளலாமா?
ஆக்கிரமித்துள்ள கோயில்களை சட்ட ரீதியாக அகற்றும் விழிப்புணர்வை திராவிடர் கழகம் மேற் கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.10-11-2012
பெண்களும், தீபாவளியும்
- மனோரஞ்சிதம்
31.10.1959 அன்று தீபாவளிப் பண்டிகை என்று நாட்குறிப்பில் குறிக்கப்பட்டிருக்கிறது. தீபாவளி என்றால் என்ன? அது யாருடைய பண்டிகை? அதன் வரலாறு என்ன? நாம் ஏன் அதைக் கொண்டாட வேண்டும்? என்று நமது நாட்டில் அனேகருக்குத் தெரியாது. அதிலும் நம் தமிழ் மகளிர்க்கு 100-க்கு 90 பேருக்குத் தெரியாது.
ஏதோ அடுத்த வீட்டு அம்புஜம் கொண்டாடுகிறாளே, நாம் சும்மாயிருந்தால் நம் உயர்வு குறித்து அவள் ஏளனம் செய்வாளே என்றும், பக்கத்து வீட்டுப் பங்கஜம் கொண்டாடுகிறாள்; தீபாவளிக்கு 150 ரூபாயில் பட்டுப் புடவையும், 20 ரூபா யிக்குப் பட்டாசு வெடிகளும், பட்சணங் களும் தடபுடலாகச் செய்யும்போது நாம் கொண்டாடாமல் இருந்தால் மற்றவர் என்ன நினைப்பார்களோ என்று கௌரவத்தைக் காப்பாற்ற, தன் கணவனை நச்சரித்துக் கடன் வாங்கியாவது தீபாவளி கொண்டாடும் பெண்கள் அனேகர், ஏதோ வழிவழி வந்த பெரியோர்கள் செய்யும் பண்டிகையை நாம் மூளியாகக் கொண்டாடாமல் இருந்தால் ஏதாவது கெடுதி நேரும் என்று அஞ்சிப் பண்டிகை நிறைவேற்றுபவரும் உண்டு.
நம் தந்தை பெரியார் அவர்களின் சீர்திருத்தச் சுயமரியாதைப் பிரச்சாரத் தால் ஒரளவு மூடநம்பிக்கை நம் தமிழ் நாட்டில் பல ஆண்டுகளாகக் குறைத்து வருகிறது. ஆனாலும் நமது பெண்கள் இன்னும் முழு மூடநம்பிக்கை யிலேயேதான் இருந்து வருகிறார்கள். இந்த தீபாவளிப் பண்டிகையன்று நூற்றுக்கணக்கில் பணம் விரயம் செய்து புடவைகள் எடுத்துப் பட்டாசு, மத்தாப்பு வாணம் விடுத்துக் காசைக் கரியாக்கியும், இரண்டு நாள் 3 நாள் சிரமம் எடுத்துத் தின்பண்டங்கள் செய்து பணம் விரயமாக்கினாலொழிய நம் பெண்கள் திருப்தியடைவதில்லை.
உம்! என்னவோ இந்த முறை தீபாவளி எங்கள் வீட்டில் சரியாகவே இல்லை என்று குறைபடாமல் இருக்க மாட்டார்கள். இவ்வளவு பொருள் வீணாக்குவதுடன் நம் மானத்தையும் விற்று விடுகிறோமே என்ற உண்மைக் கதை தெரிந்தால் நம் பெண்கள் நிச்சயம் தீபாவளி போன்ற ஆரிய பச்சைப் பார்ப்பனப் பண்டிகைகளைக் கொண்டாட மாட்டார்கள்!
நரகாசுரன் வங்காளப் பகுதியில் இருந்த ஒரு திராவிட அரசன். அவன் அக்கால ஜடாமுடி தரித்த முனிபுங்கவர் களாம் வஞ்சக ஆரியர்களின் அடாத செயல்களை எதிர்த்த ஒரு அரசன். அவனது எதிர்ப்பைக் கண்ட பார்ப் பனர்கள், தங்கள் தாசர்களின் தலை வனை, மகாவிஷ்ணுவின் அவதாரம் கிருஷ்ணபகவான் என்று கதை கட்டி விட்டு அவனைக் கொண்டு நரகா சுரனைக் கொன்றார்கள்! அவனது நற்செயல்களை அழித்தொழித்து அவை களைத் தீச் செயல்களாக உருவகப் படுத்தி, நாட்டில் அறிமுகப்படுத்தி அதைத் தீபாவளி யாக்கினார்கள். அதிலும் ஒரு பெண்ணின் துணையுடன் கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்ற தாகக் கதை! அவள் தான் சத்திய பாமாவாம்!
இதைத்தான் ஆரியர்கள் தீபாவளி எனக் கொண்டாடுகிறார்கள். போகட்டும் அவர்கள் தீபாவளியைக் கொண்டாடு வதில் அர்த்தம் (பொருள்) இருக்கிறது. பார்ப்பன இனத்தின் வஞ்சகச் செயல்களைக் கண்டித்த ஒருவனைக் கொன்ற அந்த மகிழ்ச்சியால் புனல் நீராடி, புத்தாடை புனைந்து பண்டங்கள் பல அருந்திப் பரவசமடைகிறார்கள்.
ஆனால் நாம், தமிழர்கள் தீபா வளியைக் கொண்டாடுவதில் ஏதாவது பொருள் இருக்கிறதா? தமிழ்த் தாய் மார்களே! நன்றாக சிந்தித்துப் பாருங்கள். நம் இன வீரன் ஒருவன் வஞ்சனையாக கொல்லப்பட்ட நாளை, மறைந்த நாளைத் துக்கமுடன் நடத்துவதன்றி, பார்ப்பனப் புல்லுருவிகளுடன் சேர்ந்து வித விதமாகக் கறியும், தோசையும், வடையும் இட்டிலியும் செய்து வயிறு முட்டத் தின்று கொட்டமடிக்க வேண்டுமா? சிந்தித்துப் பாருங்கள்!
ஆரியர்களால் தோற்றுவிக்கப்பட்ட பண்டிகை நாட்கள் ஒவ்வொன்றும் இதைப் போலத் தான். அவர்கள் இனம் வாழ எந்தெந்த விதத்தில் நமக்கு நட்டப்படுத்த வேண்டுமோ அவ்வளவையும் செய்து விட்டு அவர்கள் மகிழ்ச்சியால் கொண் டாடக் கூடிய நாட்களை நமக்குப் பண் டிகை நாட்களாக மாற்றியமைத்து விட் டனர்.
தைப் பூசம், ராமநவமி, பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரி போன்ற பல பண்டிகைகளையும் நாம் ஒழித்துக் கட்ட வேண்டும்.
நம் இன மன்னர்களை, வீரர்களை வஞ்சனையால் அழித்து விட்டனர். இராவணனைக் கொன்றான் இராமன், இரணியனைக் கொன்றான் நரசிம்மன். மகாபலிச் சக்ரவர்த்தியை வாமனன் என்ற பார்ப்பான் கொன்றான். சூரபத் மனைக் கொன்றது சுப்பிரமணியன்.
மதம், கடவுள், சாஸ்திரம் சம்பிர தாயம், சகுனம், நாள் நட்சத்திரம் போன்ற பல மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும். நம் வீடுகளில் எந்த நல்ல காரியத்திற்கும் பார்ப்பானை (அவன் மேல் சாதி நாம் சூத்திரர் என்ற முறையில்)அழைக்கவே கூடாது.
மேல் லோகத்தை நமக்குக் காட்டி இந்த உலகில், தாம் வாழ வழி வகுத்துக் கொண்ட புத்திசாலிகள் அவர்கள். அதையும் இப்பொழுது ரஷியாக்காரன் ராக்கெட்டை அனுப்பிச் சந்திர மண்ட லத்தில் உள்ளதையும், அதற்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதையும் படம் பிடித்து வெட்ட வெளிச்சமாக்குகிறான்.
ஆகவே நம் பள்ளி மாணவிகள் யாவரும் சிந்தித்து இன்று உலகம் விஞ்ஞான காலமாக மாறி வருவதை உணர்ந்து, மாட்டு மூத்திரத்தையும், சாணியையும் பஞ்சகவ்யம் என்று பருகுவதை விடுத்துப் பகுத்தறிவு பெற்றுத் தந்தை பெரியார் வகுத் திருக்கும் சுயமரியாதைப் பாதையில் தங்கள் வாழ்க்கையை வகுத்துக் கொள்ள வேண்டும்.
புத்தாடை, தின்பண்டங்கள் வேண்டுமென்றால், நமக்கே உரித்தான உழைப்பின் உரிமைத் திருநாளான பொங்கல் பண்டிகை இருக்கவே இருக்கிறது! அது மட்டுமல்ல. ஆரியச் சழக்கர்களை வீழ்த்தி அவர்தம் வஞ் சனைகளைப் பகுத்தறிவால் வென்ற இந்நாட்டின் அறிவொளி, இன்பத் தமிழகத்தின் இணையற்ற ஒரே தலைவர் பெரியார் பிறந்த நாள் இருக்கிறது. இவைகளை இன்பமுடன் கொண்டாடுவோம்!!
ஆகவே தாய்மார்களே! தீபாவளி தமிழர்க்குத் துக்க நாள்! தமிழனை அடிமைப்படுத்திய நாள்! கொண் டாடாதீர்!
(நன்றி: பாவலர் பாலசுந்தரம் அவர்களின் பெண்களும் தீபாவளியும் 1.11.1959)
பச்சையப்பன் கல்லூரியில் மீண்டும் பார்ப்பனர்கள்?
200 வருடங்களுக்கு மேலாக கல்விச் சேவையை அனைவருக்கும் வழங்கி வரும் பச்சையப்பன் கல்லூரி, திரும்பவும் பார்ப்பனர்கள் வசம் ஒப்படைக்கப்பட் டுள்ளது.
ஆங்கிலேயர்களிடம் துபாஷாக பணிபுரிந்த, குழந்தைகளே இல்லாத பச்சையப்பன், பிராமணர் களின் செயல்களால் வெறுத்துப்போய், குழந்தை களுக்கு கல்வி புகட்ட வேண்டி தனது சொத்துக்களை விற்றுவிட்டு பச்சையப்பன் அறக்கட்டளை ஆரம் பித்தார். அதன் முக்கிய காரணமே அடித்தட்டு மக்களுக்கு உதவத்தான்.
அப்போது இருந்த ஆங்கிலேய அதிகாரிகள் அங்கு நடத்து வரும் வருணாசிரமத்தைப் பார்த்து வருத்தப்பட்டு பிராமணர்களை விரட்டி விட்டு, சமூகத்திலிருந்த முதலியார், பிள்ளைமார், நாயக்கர் போன்ற முக்கியமானவர்களைக் கொண்டு முறைப் படுத்தினார்.
அப்பொழுது 117 மாணவர்களுடன் ஆரம்பித்த பச்சைப்பன் அறக்கட்டளையை, இன்று 5 கல்லூரிகள் 10க்கும் மேற்பட்ட பள்ளிகள், 1 பாலி டெக்னிக் மூலம் சுமார் 2 லட்சம் மாணவர்களுக்கு கல்வி கொடுத்துள்ளது. என்னே பச்சையப்பன் கல்வித் தொண்டு! இன்று அதன் சொத்து மதிப்பு ரூ.6500 கோடிக்கும் அதிகமாகும்.
அதன் பிறகுதான் பல சமூகங்களைக் கொண்ட வசதிபடைத்தவர்கள் பச்சையப்பன் அறக்கட்ட ளைக்கு தாராளமாக தங்களது சொத்துகளை கொடுத்து உதவினார்கள். அப்படிக் கொடுத்தவர் களின் நிபந்தனைகளே பச்சையப்பன் கட்டளையில் பிராமணர்களின் தலையீடு இருக்கக் கூடாது என்பதுதான். இதை நக்கீரன் நவம்பர் (03-06) 2012 - பக்கம் 40இல் உறுதிப்படுத்துகிறது.
மேலும், 149 அரசு செயலாளர் பதவிகளில் ஒருவர் கூட தாழ்த்தப்பட்டவர் இல்லையே! என்று டைம்ஸ் ஆப் இந்தியா படப்பிடிப்பு. மேலும் விடுதலையில் சென்னை அய்.அய்.டி.யா? - அக்கிரகாரமா என்றும் 14.9.2012இல் கேட்டுள்ளது.
அய்.அய்.டி சென்னை, மத்திய அரசின் எய்ம்ஸ் (டெல்லி) போன்ற கல்வி நிலையங்களில் உயர் சாதியின் ஆதிக்கம் அனைவரும் அறிந்ததே. இதனுடன் பச்சையப்பன் அறக்கட்டளையும் சேர வேண்டுமா? என்பதே நம் கவலை.
இன்று பச்சையப்பன் அறக்கட்டளையில் 165 காலி பணியிடங்கள் உள்ளன. அவற்றில் உயர் சாதியினர் நுழைந்தால் தாழ்த்தப்பட்டவர்களின் கல்விக் கனவு நொருங்கி விடும். சாதி பாகுபாடுகள் இல்லாமல் அனைவரிடமும், கையேந்தி பணம் வசூலித்து, கீழ் ஜாதி மக்களின் கை வண்ணத்தில் உருவாகும் கோயில், கட்டி முடித்ததும், கீழ் ஜாதி கோயிலுக்குள் போக முடியாது. அதன் பிறகு பணம் கொடுக்காமல், உழைக்காமல் கோயிலை கையகப்படுத்தி அனுபவித்து அதிகாரம் செய்யும் மேல் ஜாதி மக்களை என்ன செய்வது?
திரு. சேஷன் தேர்தல் பணியிலிருந்த பொழுது, தினமும் அவர்களின் அடாவடி அதிரடிகளை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் அவர்களுக்குப் பிறகு வந்த தேர்தல் அதிகாரிகளின் அடக்கமும் பணிவும், இவர்களுக்கு முன் இருந்த தேர்தல் அதிகாரி திரு. சேஷன் அவர்களுடன் ஒப்பிட்டு, வெயிலின் அருமை நிழலில் தெரிவதாக எழுதினார்கள்.
மேலும் பெரியவர் சங்கராச்சாரியார் இறந்த பொழுது ஆளுயர ஒரு தடியை எடுத்துக் கொண்டு கூட்டத்தை அடாவடியாகக் கட்டுப்படுத்தியது தேவையற்ற செயல். எவ்வளவோ காவல் துறையினர் அங்கிருந்தும் இவர் போட்ட ஆட்டம் அவரது பதவிக்கு அழகல்ல. நல்ல வேளை இவர் அய்.ஏ.எஸ் அதிகாரி மட்டும்தான். ஒரு வேளை அய்.பி.எஸ் படித்திருந்தால் ஆளுயர ஒரு தடிக்குப் பதிலாக ஒரு துப்பாக்கியை வைத்து ஆட்டம் போட்டு இருப்பார்.
பச்சையப்பன் அறக்கட்டளையில் பணியாற்ற தனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என்றும் கேட்டுள்ளார். எதற்கு காவல்துறை பாதுகாப்பு? பச்சையப்பன் அறக்கட்டளையில் எப்பொழுதும் இருக்கும் காவல்துறையே போதும். இவரைப் போல் மற்ற அதிகாரிகளும் கேட்டால் என்னவாகும்? ஆரம்பத்திலேயே தனக்கு வரும் ஆபத்தை புரிந்து கொண்ட இவரை மாற்றி வேறொருவரை நியமிக்க வேண்டும்.
எனவே, சேஷனை மாற்றி விட்டு ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது வேறு பொருத்தமானவர்களை நியமிக்க வேண்டும். மேலும் பச்சையப்பன் அறக்கட் டளையில் உள்ள உயில்களின் கட்டளைகளை மனதில் கொண்டு பார்ப்பனர் அல்லாதவர்களை நியமிப்பதுதான் சட்டத்தின் கடமையும், நியாயமும் ஆகும்.
இதனைப் புரிந்து செயல்படுத்தாவிட்டால் இன்று அல்லது நாளை சட்டத்தின் முன் சம்பந்தப் பட்டவர்கள் தலைகுனிய நேரிடும். வருமுன் காப்பதே சிறந்தது. சாதி பாகுபாடுகள் உடனடியாக ஒழிக்கப்பட்ட நிலையில், பிராமணர்கள் கபே மீண்டும் வந்தது போல், பச்சைப்பன் அறக்கட்டளையும் மீண்டும் அவர்கள் கையில் போகாமல் பார்ப்பது தமிழகத்திற்கு நல்லது.
எப்பொழுது ஒருவரை நாம் பிராமின் என்று சொன்னால் நாம் உடனே சூத்திரர்கள் ஆகிவிடு கிறோம் என்று ஒரு பெரியவர் கூறினார். ஒருவேளை, பச்சையப்பன் கல்லூரியிலிருந்து ஆங்கிலேயர்கள் இவர்களை விரட்டி விடாமல் இருந்திருந்தால், தமிழகம் அண்ணா போன்ற சிறந்த அறிஞர்களை இழந்திருப்போம்.
வாழ்க பச்சையப்பன்! வளர்க பச்சையப்பன் அறக்கட்டளையின் கல்விப் பணி.10-11-2012
மறக்க முடியாத நவம்பர் 10
இந்நாளில் தான் (1912) திராவிட சங்கத்தை சி.நடசேனார் தொடங்கினார். அதன் நினைவாக இதனை நினைத்துப்பாரீர்!
1918இல் நமது நிலை என்ன?
இளைஞர்களே! தாய்மார்களே! பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தின் பிரதிநிதிகளே! நீங்கள் யார் வேண்டுமானாலும் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள். உங்கள் கொடிகள் உங்களோடு இருக்கட்டும்! உங்கள் கொள்கைகள் உங்களோடு இருக்கட்டும்!
ஆனால் நாம் தன்மான உணர்வு படைத்தவர்கள் - மனிதர்களாக வேண்டியவர்கள் - மண்புழுக்கள் அல்ல என்பதை உறுதியாக நம்புவீர்களானால், இந்த சமுதாயத்தில் பெரியார் தோன்றாததற்கு முன்பு நாம் எப்படி இருந்தோம்? எந்த நிலையில் இருந்தோம்! தயவு செய்து எண்ணிப் பாருங்கள்! அந்த சரித்திர நிகழ்ச்சிகளை திரும்பிப் பாருங்கள்!
40 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் எப்படி இருந்தீர்கள்! பங்கா இழுக்கும் உத்தியோகம் தான் உங்களுடையது. ஒருவர் கையிலே பட்டைச் சேவகத்தைக் கட்டிக் கொண்டிருப்பார். மின்சார விசிறி இருக்காத அந்த காலத்தில் வெள்ளைக்காரத் துரைகளுக்கு தலைக்கு மேலே கட்டப்பட்டிருக்கும் அந்த பங்கிளாவை வெளியே உட்கார்ந்து கொண்டு இழுத்துக் கொண்டிருப்பதுதான் உங்கள் வேலையாக இருந்தது!
35 ஆண்டுகாலம் பங்கா இழுத்து விட்டு ஓய்வுபெறும் போது, அந்த வெள்ளைக்காரர் காலிலே போய் விழுந்து துரை அவர்களே, இந்த பங்கா இழுக்கும் வேலையை என்னுடைய மகனுக்கு தயவு செய்து கொடுங்கள் என்று அடிபணிந்து விண்ணப்பம் போடும் நிலையில் தான் உங்கள் சமுதாயம் இருந்தது. கையிலே கட்டியிருந்தவில்லை; அந்த வில்லையை வைத்து விண்ணப்பம் போடும் நிலைதான் இருந்தது என்பதை தந்தை பெரியார் அவர்கள் எடுத்து விளக்கினார்கள்.
இப்படி பரம்பரை பரம்பரை யாக பங்கா இழுத்துக் கொண் டிருந்த சமுதாயம்தான் இன்றைக்கு மந்திரிகளாக, அதிகாரிகளாக, டாக்டர்களாக, என்ஜீனியர்களாக உலவுகிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்!
மாடு மேய்த்துக் கொண்டிருந்த சமுதாயத்தை வில்லையை வைத்து விண்ணப்பம் போட்டுக் கொண்டிருந்த சமுதாயத்தை பார்த்து, நீயும் மனிதன்தான்; உனக்கும் தன்மானம் உண்டு; நீயும் படிக்கலாம்; நீயும் உத்தியோகம் பெறலாம் என்று சொல்லி இதை தலைக்குப்புற கவிழ்த்துக் காட்டிய சரித்திர நாயகர் தந்தை பெரியார். அவர் சரித்திரத்திலே ஒரு ஏடு அல்ல; அவரே ஒரு சரித்திரம்!
சிந்தித்துப் பாருங்கள்! இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன் உங்கள் நிலை எப்படி இருந்தது?
ஒரே ஒரு தகவலை உங்களுக்குக் கூற விரும்புகிறேன். இதோ, என் கையில் இருக்கும் இதழ் ஆடிசவைநைள கூயஅடையேனர தமிழ்நாட்டில் மைனாரிட்டிகள் என்ற நூல்! இது சரசுவதி என்ற பார்ப்பன அம்மையாரால், சென்னை பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சி நூல். அதிலே 1918ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் எத்தனைபேர், உத்தியோகம் பார்த்தவர்கள் எத்தனைபேர் என்ற புள்ளி விவரங்கள் தரப்பட்டிருக்கின்றன.
பட்டதாரிகள்
1918இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.பட்டம் பெற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை 15,209, அதிலே நூற்றுக்கு மூன்று சதவிகிதம் இருக்கும் பார்ப்பனர்கள் எண்ணிக்கை மட்டும் 10,206, 30 சதவிகித எண்ணிக்கையுள்ள பார்ப்பனரல்லாதார் 3,219, எம்.ஏ. பட்டம் பெற்றவர்கள் மொத்த எண்ணிக்கை 511, அதிலே பார்ப்பனர்கள் 389, பார்ப்பனரல்லாதார் 65, ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் மொத்தம் 1,498, பார்ப்பனர்கள் 1094, பார்ப்பனரல்லாதார் 163, சட்டம் படித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 54, பார்ப்பனர்கள் 48, பார்ப்பனரல்லாதார் 4 பேர் மட்டுமே. என்ஜினீயரிங் படித்தவர்கள் மொத்தம் 160, பார்ப்பனர்கள் 121, பார்ப்பனரல்லாதார் 15
உத்தியோக நிலைமை
ரூ.50 லிருந்து 99 வரை ஊதியம் பெறும் உத்தியோக எண்ணிக்கை 298, பார்ப்பனர்கள் 128, பார்ப்பனரல்லாதார் 52, ரூ.100 லிருந்து ரூ.299 வரை ஊதியம் பெறும் பதவிகள் 110, பார்ப்பனர்கள் 78, பார்ப்பனரல்லாதார் 18, ரூ.300 லிருந்து 499 வரை ஊதியம் பெறும் பதவிகள் 13, பார்ப்பனர்கள் 8, பார்ப்பனரல்லாதார் 5, ரூ.500, அதற்கு மேலும் ஊதியம் பெறும் மொத்தப் பதவிகள் 27, பார்ப்பனர் 7, பார்ப்பனரல்லாதார் -0 (ஒன்று கூட இல்லை.
- இதுதான் பழைய தமிழகம் இந்த அநீதியை எதிர்த்துத்தான் நீதிக்கட்சி பிறந்தது. கம்யூனல் ஜி.ஓ வந்தது. கல்விக்கண்களை இழந்து நின்ற நாம் ஓரளவு கல்வி பெற்றோம்! அந்தக் கல்விக்கண்களை குத்துவது நியாயம் தானா? ஓரளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கும் சமுதாயத்தின் வளர்ச்சியை பொருளாதார அளவு கோலைக் கொண்டு வந்து புகுத்தியதன் மூலம் வளர்ந்து வரும் ஒரு சமுதாயத்தை அழிக்க நினைப்பது நியாயமா? நேர்மையா? சமூக நீதியா? இதுதான் பெரியார் கொள்கையா? அண்ணா வழியா?
- சேலத்தில், கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி விடுதலை 17.7.1979
தமிழர் போர் மூண்டுவிட்டது!
எதற்காக? தமிழுக்காக.
தமிழர் தன்மானத்துக்காக தமிழர் அறிவு, கலை, வீரம் ஆகியவற்றிற்காக,
எனவே,
தமிழா உன் கடமை என்ன?
மாதம் 75 ரூபாய் காசுக்கு எதிரியின் காலை நக்குவதா? அற்ப பதவிக்காக சகலத்தையும் உதிர்த்து தமிழை, தமிழனை, தமிழ் நாட்டை காட்டிக்கொடுத்து விட்டு வளையல் போட்டுக்கொண்டு முக்காடிட்டு மூலையில் குந்தி இருப்பதா? சீச்சீ இது சிற்றினப் பிழைப்பல்லவா?
மற்றென்ன உன் கடமை?
எதிரியின் கூட்டுறவை ஒழி.
வீரத்துடன் வெளியில் வந்து மார்தட்டு.
கிளர்ச்சிப் போரில் முன்னணியில் நில்லு.
எதிரி வெட்கப்பட, அறிவு பெற, ஓடி ஒழிய உன் உயிர் விடத் தயாராகு.
இவை உன்னால் ஆகாவிட்டால் காசு கொடுத்து ஆதரித்து நீ தமிழன் என்பதையாவது காட்டிக்கொள்.
குடிஅரசு - பெட்டிச்செய்தி - 29-05-1938
(இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது)
தந்தை பெரியார் பொன்மொழி
மனிதச் சமுதாயத்தை நீங்கள் இன்றைய தினம் கவலையோடு பார்த்தால் மக்களிடத்தில் ஒழுக்கம் இல்லை; நாணயம் இல்லை; திருடுவதைப் பற்றியோ, மோசம் செய்வதைப் பற்றியோ, லஞ்சம் வாங்குவதிலோ, நம்பிக்கைத் துரோகம் செய்வதிலோ யாரும் வெட்கப்படுவ தில்லை என்பது விளங்கும். இந்நிலை மாறி ஒழுக்கம் மிகுந்த சமுதாயமாக வேண்டும்.
முதல்மந்திரி வீட்டின் முன் உண்ணாவிரதம்
சென்னை, ஜூன், 1. இன்று காலை 10 மணிக்கு பல்லடம் தோழர் பொன்னுசாமி அவர்கள் தம்முடைய விரதத்தை சென்னை முதல்மந்திரியார் வீட்டின் முன்பாக ஆரம்பித்து விட்டார்.
கட்டாய இந்தி ஒழியும்வரை தன்னுடைய உண்ணா நோன்பை விடுவதில்லையென்ற ஒரே உறுதியுடன் இருக்கிறார். இந்தி ஒழிப்புத் தலைமை நிலையத்திலிருந்து ஈழத்துச் சிவானந்த அடிகளைத் தலைவராகக் கொண்ட ஓர் ஊர்வலம் இந்தி ஒழிக தமிழ் ஓங்குக முதலிய சொற்பெருக்குடன் புறப்பட்டு முதன்மந்திரி வீட்டை அடைந்ததும் தோழர் பொன்னுசாமி தம்முடைய விரதத்தை ஆரம்பித்தார்.
குடிஅரசு - பெட்டிச் செய்தி - 05-06-1938
முதல்மந்திரி வீட்டின் முன் உண்ணாவிரதம்
சென்னை, ஜூன், 1. இன்று காலை 10 மணிக்கு பல்லடம் தோழர் பொன்னுசாமி அவர்கள் தம்முடைய விரதத்தை சென்னை முதல்மந்திரியார் வீட்டின் முன்பாக ஆரம்பித்து விட்டார்.
கட்டாய இந்தி ஒழியும்வரை தன்னுடைய உண்ணா நோன்பை விடுவதில்லையென்ற ஒரே உறுதியுடன் இருக்கிறார். இந்தி ஒழிப்புத் தலைமை நிலையத்திலிருந்து ஈழத்துச் சிவானந்த அடிகளைத் தலைவராகக் கொண்ட ஓர் ஊர்வலம் இந்தி ஒழிக தமிழ் ஓங்குக முதலிய சொற்பெருக்குடன் புறப்பட்டு முதன்மந்திரி வீட்டை அடைந்ததும் தோழர் பொன்னுசாமி தம்முடைய விரதத்தை ஆரம்பித்தார்.
குடிஅரசு - பெட்டிச் செய்தி - 05-06-1938
அதோ பாரப்பா! தினமலராவது திருந்துவதாவது!!
சிறீரங்கத்தில் பிராமணாள் உணவு விடுதி - அதனை எதிர்த்துத் திராவிடர் கழகம் நடவடிக்கை குறித்து தினமலர் (1.11.2012) நம்மை ஆதரித்து வந்த கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தது.
ஆச்சரியம்; ஆனால் உண்மை! என்று விடுதலையும் அந்தக் கடிதத்தை வெளியிட்டு இருந்தது.
அதுதானே பார்த்தோம் - தினமலருக்காவது நல்ல புத்தி வருவதாவது!
நேற்றைய தினமலரில் (9.11.2012) அதற்கு நேர்மாறாக - ஏடா கூடமாக ஒரு கடிதத்தை வெளியிட்டது.
நாட்டில் என்ன என்னவோ நடந்து கொண்டிருக்கும் வேளையில், ஜாதியைப்பற்றி பேசுகிற வீரமணிபற்றி என்ன சொல்வது.
நாட்டுப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் எழுதுவது இல்லையாம் - தினமலர் ரொம்பவும்தான் கவலைப்படுகிறது.
தினமலரின் இன்றைய கடிதத்துக்கு முதல் தேதி தினமலர் கடிதமே பதில் - போதுமானது!
நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க, ஏற்கெனவே ஓட்டல் நடத்திவந்த பார்ப்பான் திடீரென்று பிராமணாளைப் புகுத்துவானேன்? ஏன் இந்த விஷம வேலை என்று தினமலர் எழுதவேண்டாமா?
சரி, திராவிடர் கழகத் தலைவர் வேறு பிரச்சினைகள்பற்றி எழுதுவது, பேசுவது கிடையாதா?
இந்த ஒரு வாரத்திலேயே எத்தனை எத்தனையோ அறிக்கைகள், கருத்துகள்!
மருத்துவக் கல்லூரி மாணவர் பிரச்சினை, சேது சமுத்திரத் திட்டப் பிரச்சினை, மத்திய அரசு மின்சாரம் அளிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் வழக்குத் தொடுத்த பிரச்சினை, கீழத்தஞ்சை மாவட்டத்தில் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு ஈட்டுத் தொகை அளிக்கவேண்டும் என்ற அறிக்கை என்று எத்தனை எத்தனையோ நாட்டுப் பிரச்சினைகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளாரே - இவற்றில் ஒரே ஒரு வரியையாவது தினமலர் திரிநூல் வெளியிட்டதுண்டா?
நிழற்படங்களை வெளியிடும்போதுகூட அதில் திராவிடர் கழகத் தலைவர் படம் இருந்தால், அதனை அப்படியே கத்தரித்துவிட்டு செய்தி வெளியிடும் அக்கிரகார தினமலர்கள் திராவிடர் கழகத் தலைவர்பற்றி எழுதுவதுதான் விஷமம் கலந்த வேடிக்கையாகும்!
காலைக்கதிரிலும், தினமலரிலும் வெளிவரும் (இது உங்கள் இடம்) ஒரே கடிதத்தை பெயர் மாற்றி வெளியிடும் பித்தலாட்ட ஏடுகள் பேனா பிடிக்கலாமா?10-11-2012
உறுதுணையாக இருக்குமா இந்தியா?
சென்னை - அண்ணா அறிவாலயம் கலைஞர் மண்டபத்தில் நேற்று (11.11.2012) மாலை நடைபெற்ற பாராட்டுக் கூட்டம் ஈழத் தமிழர் வரலாற்று ஓட்டத்தில் முக்கிய இடம் வகிக்கக் கூடியதாகும்.
டெசோ மாநாட்டில் (சென்னை - 12.8.2012) நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள், அவை குறித்த விளக்கங்கள் அடங்கிய ஆவணத்தை அய்.நா.விலும், மனித உரிமை ஆணையத்திடமும் வழங்கிட தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்ற தி.மு.க. குழுவின் தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் சென்றிருந்தனர். அந்தப் பணி களை வெற்றிகரமாக நடத்தித் திரும்பிய அவ்விருவர்க் கும் நடைபெற்ற வரவேற்புப் பாராட்டு விழா நிகழ்ச்சி அது.
பாராட்டு விழா என்று சொல்லப்பட்டாலும், அதனை மய்யப்படுத்தி ஈழத் தமிழர் உரிமைகள்பற்றி விளக்கமான கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டன.
ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக அறவழி யில் போராடியது ஒரு கட்டம். இலங்கை அரசு அசல் சிங்கள இனவாத அரசாக உருவெடுத்து, ஈழத் தமிழினம் என்ற ஒன்று வரலாற்றில் இருக்கக் கூடாது என்கிற திட் டத்தில் செயல்பட்டதன் காரணமாக ஈழத் தமிழர்களிலே போராளிகள் உருவாகி ஆயுதம் தாங்கிப் போராடியது இன்னொரு கட்டம்.
பன்னாட்டு இராணுவ உதவிகளுடன், ஈழத் தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்தது மற்றொரு கட்டம்.
இந்த மூன்று கால கட்டங்களிலும் தமிழ்நாடு பலவகைகளிலும் ஈழத் தமிழர்கள் பக்கம் நின்று வந்திருக்கிறது.
இன்னும் சொல்லப் போனால் 1939ஆம் ஆண்டிலேயே நீதிக்கட்சியே இதுகுறித்து கருத்தும் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய கால கட்டத்தில் கவனிக்கப்பட வேண் டியது - எஞ்சி இருக்கும் ஈழத் தமிழர்களின் வாழ் வுரிமையைப் பற்றியதும் மற்றும் அரசியல் தீர்வுமாகும்.
அய்.நா. மூலம் தான் இதற்குத் தீர்வு காணப்பட முடியும் என்ற நிலையில் பன்னாடுகளின் ஆதரவு மிக முக்கியமாகத் தேவைப்படும் இந்தக் கால கட்டத்தில் கலைஞர் அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட டெசோ என்ற அமைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தி.மு.க. திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை ஆகியவை இந்த அமைப்பில் இணைந்துள்ளன.
இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட நிலையில் பல விமர்சனங்கள் எழுந்ததுண்டு.
ஆனாலும் டெசோ உருவாக்கப்பட்டு, சென்னையில் டெசோ மாநாடு நடத்தப்பட்டதும், அம்மாநாட்டில் இந்தி யாவின் பல மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல; பன்னாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு திறந்த மனதோடு கருத்துக்கள் வெளியிட்டதும், அவசியமான, ஆழமான கருத்தாக்கம் கொண்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் உலகக் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கும் ஒரு நிலையை உருவாக்கி விட்டன.
இந்திய அரசின் போக்கிலும் சில மாற்றங்கள் ஏற்படவும் வழி வகுத்தது.
அய்.நா. துணைப் பொதுச் செயலாளர் மற்றும் ஜெனிவாவில் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் சந்திப்பு என்பது - ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் மேலும் அடுத்த கட்ட பாய்ச்சலாகும்.
ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவி வந்த இலங்கை அரசு இப்பொழுது பன்னாடுகளின் முன்னிலையில் கைகட்டி நிற்கும் ஒரு அவல நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு இந்த நேரத்தில் ஓர் அழுத்தத்தைக் கொடுக்குமேயானால் அனேகமாக ராஜபக்சே தண்டனைக்குரிய குற்றவாளியாக அறிவிக்கப்படுவதற் கான கூடுதல் சூழல் விரைவில் உருவாகும்.
இந்த விடயத்தில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் இந்தியா நடந்து கொள்ளவில்லை. குறிப்பாக இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது, தமிழக மீனவர்கள் தொடர்ந்து வேட்டை யாடப்படுவது என்பதில் இந்திய அரசு தமிழர்களுக்கு விரோதமாக நடந்து கொண்டு வருகிறது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இந்த இரு பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டி, இந்திய அரசுக்கு ஆதரவு அளிப்பது பற்றிய முடிவினை டெசோ தலைவர் கலைஞர் அவர்களின் முடிவுக்கே விட்டு விடுவதாகவும் கூறினார்.
நிறைவுரையாற்றிய மானமிகு கலைஞர்அவர்கள் இந்திய அரசு நமக்கு உறுதுணையாக இருந்தால், நாமும் உறுதுணையாக இருக்க முடியும் என்று அறிவித்திருப்பது அர்த்தம்மிக்கதும், அவசியமானதுமாகும்.
உறுதுணையாக இல்லாவிட்டால் நாமும் உறு துணையாக இருக்க முடியாது என்பதை இதன் மூலம் கலைஞர் அவர்கள் அறிவித்துவிட்டார்கள்.
இது உல கெங்கும் அலைகளை ஏற்படுத்தக் கூடியதுதான், இதைத் தவிர வேறு வழியில்லை. இந்தியா என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம்!
பந்து அவர்கள் பக்கம்தான் இப்பொழுது இருக்கிறது.12-11-2012
கட்டப்பட்டிருக்கின்றன
உலகில் உள்ள மதங்கள் எல்லாம், குருட்டு நம்பிக்கை என்ற பூமியின்மீதே கட்டப்பட்டிருக்கின்றன.
(விடுதலை, 12.10.1962)
Post a Comment