Search This Blog

23.11.12

சோவின் பார்வையில் - ராஜதர்மம் என்பது மனுதர்மம் தானே?


உபன்யாஸத்திலகம்
சோவின் பார்வையில் - ராஜதர்மம் என்பது மனுதர்மம் தானே?

துக்ளக் (28.11.2012) இதழில் நண்பர் சோ அவர்கள்.
ராமன் ஒரு மோசமான கணவன் என்று கூறிய ராம்ஜெத்மலானியின் கூற்றுக்கு பதில் எழுதியுள்ளார்.

ராம் ஜெத்மலானி சட்ட நிபுணரே தவிர, உபன்யாஸத்திலகம் அல்ல. அவர், ராமர் ஸீதையை கை விட்டவர்; ஆகையால் அவர் நல்ல கணவன் அல்ல என்று ஒரு தீர்ப்பு அளித்திருக்கிறார். இது பலவகைகளில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், இதுவே இன்று கூறப்படுகிற கருத்து அல்ல; ராமாயணத்திலேயே ராமரின் முடிவு விமர்சிக்கப்படுகிறது. ரைட் ஆனரபிள் வி.எஸ். சீனுவாச சாஸ்திரி தனது இராமாயண உரைகளில் இதைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இப்படி பலர் அபிப்பிராயபேதம் கொண்டு பேசியிருக்கிறார்கள்.

ஆனால் என்னைப் பொறுத்த வரையில் ராமர் செய்தது ராஜரீகமான ஒரு அவசியமான காரியமாகப் போய்விட்டது.

ராம் ஜெத்மலானி சொல்வது போல் ஒரு மீனவர் பேசியது போல் (மீனவர் அல்ல சலவைத் தொழி லாளி என்பது முக்கிய கருத்து அத்தொழி லாளி அவரது சந்தேகம் நியாயமானது - பொருத்தமானது காரணம் அவருக்குச் சேலைகளைத் துவைக்கும்போது ஏற்பட்ட பழைய  அனுபவம் புதிய அனுபவம் என்ற அடிப்படையிலேயே அப்படி ஒரு சம்பவம் - சந்தேகம் கூறப்பட்டிருக்கிறது) நகரத்தில் இந்தப் பேச்சு பரவிக் கொண்டே இருக்கிறது என்று ஒற்றர்கள் மூலம் அறிந்தார்.

இப்படி ஸீதையைப் பற்றி சந்தேகப்படுகிற பேச்சு பரவிக் கொண்டே போனால், அது அவளுக்கும் நல்லதல்ல. ஆட்சிக்கும் நல்லதல்ல என்ற முடிவுக்கு அவர் வந்தார். Ceaser’s wife must be above suspicion என்று சொன்னால் அதை நாம் பெரிய வார்த்தையாகப் பாராட்டுகிறோம். அதை ராமர் காரியத்தில் காட்டினார்.
அரசனின் மனைவிபற்றி நாட்டில் பலவித விமர்சனங்கள் எழுந்து விட்டால், அரசனுக்கு மரியாதை அவனுடைய ஆணைகளுக்கு மரியாதை இருக்காது. அவனுடைய ஆணைகளுக்கு மரியாதை இல்லை என்றால், ராஜ்யத்தில் அமைதி ஒழிந்து போகும். இவையெல்லாம் கருத் தில் கொண்டுதான் ராமர் ஸீதையை வெளியேற்றினார்.

(இது ஏன் ரைட் ஆனரபிள் சீனுவாச சாஸ்திரிக்குத் தெரியாமல் இந்த லெப்ட் ஆனரபுள்களுக்கும் மட்டும் எப்படி தெரிகிறதோ தெரியவில்லை!)

ஒரு வகையில் பார்த்தால், அது அவர் தனக்குத் தானே விதித்துக் கொண்ட தண்டனை; ஏனென்றால் அந்த அளவுக்கு அவர் ஸீதைமீது அன்பு கொண்டிருந்தார்.

ஸீதையை வெளியேற்றியபின்பு அவர் வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இப்படிக் கூறுகின்றன சோ வின் கூற்று ஓட்டையை அடைக்கும் உதவாக்கரை வக்கீலின் வாதம்தான் அக்கால ராஜதர்மம் என்பது மனுதர்மமே! அதன் ஆட்சியே! பெண் என்பவள் சுதந்திரமாக விடப்படக் கூடியவள் அல்ல என்று கூறி, பெண்கள் இயல்பாகவே மோசமானவர்கள் - கணவனால் அடக்கி ஆளப்பட வேண்டிய வர்கள் என்பதை நிலை நாட்டுவது மனு தர்மம் - மனித தர்மத்தின் நேர் எதிரான பிறவியை அடிப்படையாகக் கொண்ட குல(அ) தர்மம்!
இவர் கூறுவதுபோல், இராமன் ஏக பத்தினி விரதன் அல்ல வால்மீகி இராமா யணத்திலேயே ஆதாரங்கள் உண்டு.

அதைவிட, இராவணனிடமிருந்து மீட்டு வந்த சீதையைப் பார்த்து, ஸீதே நீ ஒழுக்கமுள்ளவள், தவறு செய்யாதவள் என்பதற்காக உன்னை நான் மீட்டுக் கொண்டு வரவில்லை.

உனக்காக யுத்தம் செய்தேன் என்று நினைக்காதே, என் வீரத்தைக் காண் பிக்கவே என் க்ஷத்திரிய தர்மத்தைக்  நிறைவேற்ற வேண்டியது, எனக்குச் செய்த அவமானத்தைப் போக்க வேண்டியது கடமை. துஷ்டனான இராவணனுடைய வீட்டில் வசித்ததால் உன் நடத்தைப் பற்றி சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது

----------------------- வால்மீகி இராமாயணம் சர்க்கம் 117, பக்கம் 487

இதை அப்படியே மறைத்திடுவது தான் அறிவு நாணயமா?

அது மட்டுமா? அவன் நிறைமாத கர்ப்பிணியை காட்டுக்கனுப்பியதற்கு - அக்னி பிரவேசத்திற்குப் பின்பும் என்ன வகையில் நியாயப்படுத்தக் கூடிய செயல்?
இராம் ஜெத்மலானி கூற்றை நிரூ பிக்க இதுபோதாதா? இதுவும் ராஜ தர்மம் தானா?

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்ற ஆங்கில மொழியைக் காட்டும் சோ அவர்களே,

அந்த மொழியின்படி, அது சீசரின் மனைவியின் கடமைபற்றியதே தவிர சீசரைப் பற்றியதல்லவே. பெண் சந்தேக மற்றவர்களாக இருக்க வேண்டும் என்று கூறினால், அது சீதையைப் பொறுத் ததே தவிர, இராமனின் செயலை நியாயப்படுத்த அதைத் துணைக்கழைப்பது, பொருத்தமற்ற, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் பொருந்தாவாதம் அல்லவா?
எனவே புதிய உபன்யாஸத்திலகம் சோ அவர்களே இந்த வழக்கிலும் உங்களுக்குத் தோல்விதான் மிச்சம்
 

 -------------------------- ஊசி மிளகாய் - எழுதிய கட்டுரை-”விடுதலை” 22-11-2012

15 comments:

தமிழ் ஓவியா said...


கலைஞர் தொலைக்காட்சியில் பேரா.சுப.வீ.


பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் பற்றி கலைஞர் தொலைக்காட்சியில் பேரா.சுப.வீ. கலைஞர் தொலைக்காட்சியில் நாள்தோறும் காலை 8.50 மணிக்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசும் ஒன்றே சொல் நன்றே சொல் பகுதியில் நாளை (23.11.2012) வல்லம் - பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் பற்றி பேசுகிறார்.

தமிழ் ஓவியா said...


மருத்துவமனையா? மடமா?


மதுரை அரசு பொது மருத்துவமனையில் யாகமாம்!

மதுரை, நவ.22- மதுரையில் டெங்கு காய்ச்சலால் அதிகம் உயிரிழப்புகள் ஏற் படுவதை அடுத்து, அரசு பொது மருத்துவ மனையில் யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று காலை 6 மணி அளவில் இந்த யாகம் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் மதுரை மருத்துவமனையில் 44 பேர் டெங்கு காய்ச் சலுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் மருத் துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகள் பலர் பீதியுடன் காலம் கழிக்கின்றனர்.

அவர் களின் மனச் சாந்திக்காகவும், அச்சத்தைப் போக்கவும் சில நடவடிக்கைகளை மருத்துவ மனை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

சுற்றுப் புறத் தூய்மை, உடனடி மருத்துவ வசதிகள் என அனைத்தும் மேற்கொள்ளப் பட்டும், உளவியல் ரீதியாக நோயாளிகளைத் தேற்றும் பொருட்டு இந்த யாகம் மேற் கொள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


நாடாளுமன்றத்தை நடத்த விடுவீர்!



இன்று நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கப்படுகிறது. இந்தத் தொடராவது அமைதியாக நடக்குமா? மன்ற உறுப்பினர்கள் தத்தம் தொகுதிப் பிரச்சினை பற்றிப் பேசுவார்களா? பேசத்தான் விடுவார்களா?

தொகுதியையும் தாண்டிப் பொதுப் பிரச்சினையைப் பற்றிப் பேசுவார்களா? அல்லது பேசத்தான் விடுவார்களா?

இந்த வினாக்கள் சர்வ சாதாரணமாக நாட்டு மக்கள் மத்தியில் பேசப்படுகின்றன. அந்த அளவுக்கு நாட்டை நடத்த வேண்டியவர்கள் வழிகாட்ட வேண்டியவர்கள் தசை வலியைக் காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.

இந்தக் காட்சிகள் நேரடியாக தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்கள் நேரில் பார்க்கும் வண்ணம் ஒளிபரப்பவும் செய்யப்படுகிறது.

தங்களுக்கு வாக்களிக்கும் மகாராசர்களாகிய பொது மக்கள் தொலைக்காட்சி வழியாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்களே என்ற அச்சமோ, கவலையோ, பண்பாடோ சிறிதும் இருப்பதாகத் தெரியவில்லை.

தனிப்பட்ட யாரை மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள்? ஏதோ ஒரு கட்சியின் வேட்பாள ராக நிற்கும்போது, தனிப்பட்டவர்கள் குறித்த கேள்வி எழுவதில்லை; எல்லாம் கூட்டத்தில் கோவிந்தா! தான்.

ஜனநாயக நாட்டின் மிகப் பெரிய அவையாகிய நாடாளுமன்றமே அமைதி குலைந்து அமளியாகும் போது, உள்ளாட்சி மன்றங்களின் போக்குகள் பற்றி விளக்கவா வேண்டும்? அவர்களும் தங்கள் பங்குக் குக் கூச்சல் போடுவது நாற்காலிகளைத் தூக்கி வீசுவது (நல்ல வாய்ப்பாக இந்த நோய் நாடாளு மன்றத்தைத் தொற்றவில்லை) மன்றத் தலைவர் களைச் சூழ்ந்து கொண்டு முழக்கமிடுவது இன்னோரன்ன ஜனநாயகத்தின் தலை சிறந்த கடமையை (?) ஆற்றி வருகிறார்கள்.

இதற்கெல்லாம் திட்டவட்டமான வகையில் ஏற்பாடுகள் வரையறுக்கப்படாத வரை ஜனநாயகம் என்பது அசல் கோமாளி நாயகமாகத்தான் ஆட்டம் போடும்; யாரும் யாரையும் கண்டிக்கவும் முடியாது.

இவ்வளவுக்கும் நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி, சட்டமன்றமாக இருந்தாலும் சரி, அவை நடைபெற மக்கள் தரும் வரிப் பணம் தானே பாழாய்ப் போகிறது?

இதற்காகத்தானா இவர்களுக்கு வாக்கு அளித்தோம் என்று வாக்காளர்கள் துணுக்குறும் வண்ணம் மாண்புமிகு உறுப்பினர்கள் நடந்து கொள்கிறார்கள்.

தொலைக்காட்சிகளில் அவை காட்டப் பெறுவதால் தங்களுக்குக் கிடைக்கும் விளம்பரம் என்று ஒருக்கால் எண்ணுகிறார்களோ, என்னவோ தெரியவில்லை.

அரசியல்வாதிகளின் இந்தப் போக்கு குடி மக்களையும், மாணவர்களையும் இளைஞர்களையும் கூடத் தவறான வழியில் போகச் செய்கிறது.

வேலியே பயிரை மேய்ந்தால் இந்த நிலைதான்.

இதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகள் கிடையாது. ஆளும் கட்சியாக இருந்தால் இதோபதேசம் செய்வார்கள்; அவர்களே அடுத்து எதிர்க்கட்சியானால் அதனை மறந்து விட்டு சபையை நடத்த விடாமல் சண்டியர்த்தனம் செய்வார்கள்.

ஆளும் கட்சியின் குறிப்பிட்ட மசோதாக்களை எதிர்ப்பதில்கூட எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவும் வாய்ப்பு இல்லை.

என் மருமகள் என்ன உனக்கு இல்லை என்று சொல்லுவது. நான் சொல்கிறேன் - உனக்கு ஒன்றும் கிடையவே கிடையாது! என்று பிச்சைக்காரரைப் பார்த்து சத்தம் போடும் மாமியாரைப் போல அரசியல் கட்சிகள் நடந்து கொள்வது வெட்கக்கேடு!

மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்ச்சி இருந் தால் இந்த அரசியல்வாதிகளைக்கூட வழிக்குக் கொண்டு வரலாம்.

அரசியலால் பிளவுண்டு கிடக்கும் மக்கள் மத்தியிலே இந்த விழிப்புணர்வு ஏற்படாது; காரணம் எல்லாரும் ஆங்கே தனித் தனிதான்! எடுத்துக் காட்டு: சில்லறை வாணிபத்தில் அந்நிய முதலீடுகள் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் நெல்லிக்காய் மூட்டைகளாகச் சிதறி கிடப்பதாகும்.22-11-12

தமிழ் ஓவியா said...


காதல் திருமணத்தை எதிர்க்கலாமா? திருமாவளவன் கேள்வி

தர்மபுரி, நவ.22-தனது சொந்த நலனுக் காக காதல் திருமண எதிர்ப்பு பிரசாரத்தை செய்து வருவதாக பாமக நிறுவனர் ராம தாஸ் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவ ளவன் குற்றம்சாட்டி யுள்ளார்.

தர்மபுரி வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தர்மபுரியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந் தது. இதில் பங்கேற்ற அவர் பேசியது:

தர்மபுரியில் 3 தலித் கிராமங்களில் நடந் துள்ள வன்முறைகள் காதல் திருமணங்க ளால் மட்டுமே நடந் தது அல்ல. திட்ட மிட்டு நடத்தப்பட்ட வன்முறை. இந்த சம் பவத்தில் திவ்யாவின் தந்தை நாகராஜ் தற் கொலைசெய்து கொண்டதில் மர்மம் நீடிக்கிறது. எனவே நாகராஜ் இறப்பு குறித்து சிபிஅய் விசா ரணை நடத்த வேண் டும். நாகராஜ் குடும்பத் திற்கு அரசு உதவ வேண் டும். திருமணமான தம்பதி களுக்கு அரசு உரிய பாது காப்பு வழங்க வேண்டும்.

தலித்துகளுக்கு எதிராக வன்முறைகள் காவல்துறையின் துணை யோடு கட்டவிழ்த்து விடப்படுகிறது. இந்த சம்பவத்தில் 142 பேரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்துள் ளதை சம்பந்தப்பட்ட கிராம மக்களே பாராட் டுகின்றனர். வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட பெண்கள் இதுவரை கைதுசெய்யப்பட வில்லை.
பாமக நிறுவனர் ராம தாஸ் காதல் திருமணம் தொடர்பாக பேசி வரும் கருத்துகள் உள்நோக்கம் உடையது. அரசியல் ஆதாயத்திற்காக பேசி வருகிறார். நாடாளு மன்ற தேர்தலுக்காக, அவருடைய கட்சி 6 சதவீத ஓட்டுகள் வைத் திருக்க வேண்டும் என்ப தற்காக தமிழகத்தில் உள்ள ஜாதி சங்கங்களை ஒன்றிணைத்து சாதி கூட்டணி அமைப்பதாக கூறி வருகிறார். சட்ட சபையில் 3 எம்எல் ஏக்கள் மட்டுமே இருப்ப தால் தங்களது அங்கீ காரத்தை காப்பாற்றிக் கொள்ளவும் சொந்த நலனுக்காகவும் காதல் திருமண எதிர்ப்பு பிரச் சாரம் செய்து வருகிறார். பிற சாதி இந்துக்களி டையே பகையை பெற்று விட கூடாது என்பதற் காக பேசுகிறார். காதல் திட்டமிட்டு செய்வ தில்லை. அதுதானாக வரக்கூடியது. சாதி மறுப்பு திருமணம் தொடர்பாக காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்துதான் அதிக மாக நடக்கிறது. சாதி மறுப்பு திருமணம் மற் றும் காதல் திருமணங் களுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம்.

நான் மற்ற சமுதாய பெண்களை கட்டாயப் படுத்தி திருமணம் செய்ய சொல்வதாக கூறுவதை நிரூபித்தால் முச்சந்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.
-இவ்வாறு அவர் பேசினார்

தமிழ் ஓவியா said...

திராவிட இயக்கத்தின் சாதனைகளைப் பட்டியலிட்டு அவிநாசி பொதுக்கூட்டத்தில் இரட்டைக் குழல் துப்பாக்கிகளின் எழுச்சி முழக்கம்!

திராவிட இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கோவைத் தென்றல் மு.இராமநாதன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர். அவிநாசி 19.11.2012

அவிநாசி, நவ.22-திருப்பூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பில் திராவிட இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட அவிநாசி வ.உ.சி திடலில் 19.11.2012 மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அவிநாசி நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இராமசாமி தலைமை தாங் கினார். திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வெ.குமாரராசா அனைவரையும் வர வேற்றுப் பேசினார். அவிநாசி நகர பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் க.அங்கமுத்து, திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் வழக் குரைஞர் நா.சக்திவேல் மற்றும் திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் கு.மணிவண் ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிட இயக்கம் சாதித்தது என்ன? என்று பெற்ற தாயையே அடையாளம் தெரியாமல் ஆரிய சூழ்ச்சியால் உளறிக்கொண்டு திரிபவர்களுக்கு தக்க ஆதாரத்தோடு இயக்கம் தமிழகத்தை பண்படுத்திய விதத்தை எடுத்து கூறினார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர் களும், தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான கோவைத் தென்றல் மு.இராம நாதன் அவர்களும் ஆற்றிய உரை வருமாறு:

தமிழ் ஓவியா said...

கவிஞர் கலி.பூங்குன்றன் உரை வீச்சு

திராவிட இயக்கம் ஒன்றுமே செய்யவில்லை. திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று ஆரிய அம்புகளாக நம்மவர்களே பேசித் திரிகின்ற இந்தக் காலகட்டத்தில் பொருத்தமான தலைப்போடு இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உண்மைக் கருத்துகளை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்: திராவிட இயக்க விமர்சனங் களை நாம் எதிர்கொள்ள வேண்டும். கற்பனைக் கதாபாத்திரமும், திராவிட மக்களை இழிவு செய்யக் கூடிய இராமாயணத்தை எவ்வாறு பார்ப்பனர்கள் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்திக் கொண் டிருக்கிறார்களோ, அதைப்போல நாமும் இன இழிவைத் துடைத்த திராவிட இயக்கக் கருத்து களையும், செயல்பாடுகளையும், மூடநம்பிக் கையைத் தொலைத்து பகுத்தறிவை வளர்க்கின்ற பிரச்சாரத்தை மக்களிடத்திலே சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

கடைசி முட்டாள் இருக்கின்ற வரை கருப்புச்சட்டைக்காரனுக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும்.

இழிவைத் துடைத்தது எந்த இயக்கம்

ஒரு காலத்தில் சென்னைப் பட்டினத்தில் பார்ப்பன விடுதிகளில் தங்கிப் படிக்கவும், உணவு உட்கொள்ளவும் பார்ப்பனரல்லாதவர்களுக்கு அனுமதியில்லை. 1912இல் திராவிடர் சங்கத்தை தோற்றுவித்த திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரான சி.நடேசனார் பார்ப்பனரல்லாதவர்கள் தங்கிப் படிக்கவும், உணவு உட்ககொள்ளவும் திராவிடர் விடுதி என்ற விடுதியையே ஏற்பாடு செய்தார்.

பார்ப்பனர்களின் உணவு விடுதியில் பறையன், நாய், குஷ்ட்டரோகிகள் நுழையக்கூடாது என்றி ருந்த விளம்பரப் பலகையையும் அகற்றியது நீதிக் கட்சியே.

அரசு ரிக்கார்கடுகளில் சூத்திரர், பறையர் என்ற சொற்களை நீக்க ஆணை பிறப்பித்து, ஆதி திராவிடர் என்று எழுத வைத்த பெருமை நீதிக் கட்சியைச் சாரும்.

1940களில் ரயில்வே உணவு விடுதிகளில் பிரமணாள், சூத்திராள் என்றிருந்த பேதத்தை ஒழித்தவர் அறிவு ஆசான் தந்தை பெரியார்.

இன்றும் அதாவது 2012லும் சிறீரங்கத்தில் திடீரென்று முளைத்த பிராணாள் என்ற பேதத்தை ஒழித்ததும் திராவிடர் கழகமே! இப்படியாக மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும் என்ற அளவில் சமத்துவத்தை நிலை நாட்டியது திராவிட இயக்கம் தானே!

இழிவை இழிவு இல்லை என்று கருதுபவர்கள் வேண்டுமானால் திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது? என்று கேட்கலாம்.

கல்வியும், இடஒதுக்கீடும்

சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் திருவாசகம் அவர்கள் ஒரு தகவலை வெளியிட்டார். சென்னைப் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் பார்ப்பனரல்லாதவர் களின் எண்ணிக்கை 1,44,450 அதாவது 89 சதவிகிதம் என்று கூறியிருக்கிறார்கள்.

60, 70 ஆண்டுகளுக்கு முன் படிப்பின் வாசனை யையே அறியாத நமது தமிழ்ச்சமுதாயம் இன்று ஏற்றம் பெற்றிருக்கிறதென்றால் அது இடஒதுக் கீட்டை கம்யூனல் ஜி.ஓ. அய் தந்தை பெரியார் பெற்றுத் தந்து நமக்கு இட்ட பிச்சை.

1928இல் முத்தையா முதலியார் நீதிக்கட்சி அரசில் அமைச்சராய் இருந்த போது இடஒதுக்கீடு முறையைக் கொண்டு வராவிட்டால் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏது? இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இடஒதுக்கீடு என்பது வெறும் ஆணையாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் தான் 69 சதவிகித இடஒதுக்கீடு சட்டமாகவும், அது அரசமைப்புச் சட்டத்தில் பாதுகாப்பாகவும் உள்ளது. இதற்கு காரணம் எந்த இயக்கம்?

தமிழ் ஓவியா said...

மண்டல் குழு பரிந்துரைகளை அமல்படுத்த 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி வீட்டு முன்பு, நாடாளுமன்றத்தின் முன்பு திராவிடர் கழகம் வட இந்தியாவிலும் மறியல் செய்ததன் விளைவே 7.8.1990இல் இந்தியா முழுமைக்கும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு பிரக டனம்.

அப்பிரகடனத்தின் போது அன்றைய பிரதமர் சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்கள் நாடாளு மன்றத்திலேயே இன்றுதான் தந்தை பெரியார், அம்பேத்கர், மனோகர் லோகியா ஆகியோரின் கனவு நனவாகியது என்று புகழாரம் சூட்டினார்!

அந்த அளவுக்கு கடும் விலை கொடுத்து சமூக வளர்ச்சிப் பாதை முன்னேற்றத்தில் பங்கெடுத்தது திராவிட இயக்கம்!

பெரியாரின் பலமுனைப்பேராட்டங்கள்

சுதந்திரம் இருக்கும் நாட்டில் ஜாதி இருக்க லாமா? ஜாதி இருக்கும் நாடு சுதந்திரநாடா? என்று தந்தை பெரியார் அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவு களைச் சுட்டிக்காட்டி கேட்ட இந்தகேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.

1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியல் சட்டம் வடிவம் பெற்றது. அதிலுள்ள ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை நீக்கக்கோரி 1957ஆம் ஆண்டு அதே நவம்பர் 26ஆம் தேதி தந்தை பெரியார் அவர்கள் அரசியல் சட்டத்தைக் கொளுத்திட ஆணையிட்டார். இந்தப் போராட் டத்தில் 10,000 கருஞ்சட்டை தோழர்கள் கலந்து கொண்டு சட்டத்தைக் கொளுத்தினார்களே!
தேசிய கவுரவச் சின்னங்களை அவமதித்தால் 3 ஆண்டுகள் தண்டனை என்று இயற்றிய புதிய சட்டப்படி தோழர்கள் சிறையில் அடைக்கப்பட் டனர்.

1957இல் சென்னை முரளீஸ் கபே முன்பு வருண பேதத்தை ஒழிக்க தந்தை பெரியார் 6 மாதப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார்.

சுயமரியாதை இயக்கம் தோன்றிய பின் 1929ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற மாநாட்டில் ஜாதிப்பட்டங்கள் துறக்கப்பட்டது.
பொட்டுக்கட்டும் முறையை ஒழித்து பெண் விடுதலையைப் பேணிக்காத்தது திராவிட இயக்கம். மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற முறையை ஒழித்தது திராவிடர் இயக்கம்.

1938இல் இந்தி எதிர்ப்பு பிரச்சாரத்தின் மூலம் தமிழ்நாட்டில் இனத்தின் சுயமரியாதை, மொழி யின் சுயமரியாதை ஆகியவற்றை ஊட்டியது திராவிட இயக்கம்
கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்ளுப வர்கள் கூட ஜாதிப்பட்டத்தை துறக்கவில்லையே! சோம்நாத் சாட்டர்ஜி என்ற நாடாளுமன்ற மேனாள் சபாநாயகர் தன் பேரனின் பூணூல் கல்யாணத்திற்கு பத்திரிகை அடித்து கொடுத்து சகாக்களை அழைத்தவராயிற்றே!

விடமாட்டோம், ஜாதி ஆதிக்கத்தை விட மாட்டோம். தக்க நேரத்தில் வேடம் அணிந்து திரியும் கபட வேதடதாரிகளை அடையாளம் காட்டுவோம். திராவிட இயக்கத்தின் தாக்கம், முயற்சி, உழைப்பு, பிரச்சாரம் இல்லாமல் தமிழகத்தில் ஏற்பட்ட ஒரு முக்கியமான நிகழ்ச்சியைச் சொல்ல யாரால் முடியுமா?

பெரியார் கொள்கையைப் பேணிக்காத்த கலைஞர் ஆட்சி

பெரியாரின் கொள்கைகளை பெரிய அள வுக்கு சட்ட வடிவம் கொடுத்த பெருமை தி.மு.க.வை. சாரும்.

சுயமரியாதைத் திருமணச் சட்டம், பெண் களுக்கு சொத்துரிமைச் சட்டம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம், தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு, சிதம்பர நடராசர் கோவிலை அரசுடைமையாக்கி அரை நூற்றாண்டு வழக்கை வெற்றி கொண்ட சாதனை, சேது சமுத்திரக் கால்வாய்த்திட்டத்தை நல்ல முறையில் விரைவு படுத்தி தொடர்ந்து போராடிக் கொண்டி ருப்பது இவ்வாறாக அறிஞர் அண்ணாவுக்குப் பின் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் கொள்கை களான கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு, இனவுணர்வு, மதவாத எதிர்ப்பு, ஜாதி எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு, இன நலன், கல்வி வேலை வாய்ப்புகளில் பெரியார் கொள்கை இவ்வாறாக பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் விதமாக கலைஞர் அவர்கள் முயற்சி எடுத்தும், முயற்சித்தும் வருகிறார்கள்.

மேற்கண்ட சாதனைகளை சட்ட வடிவமாக ஆக்கியது எந்த இயக்கம்? அந்தச் சாதனைகள் எந்த இயக்கத்தின் தாக்கம்?

திராவிடத்தால் வீழ்ந்தோம்! என்று சொல்லுப வர்களே பதில் சொல்ல முடியுமா உங்களால்?

ஜாதி ஒழிப்பு மாநாடு

கடந்த 14.11.2012 ஆம் தேதி தருமபுரியில் அண்ணாநகர், நத்தம் ஆகிய பகுதிகளில் 245 வீடுகள் ஜாதி ஆதிக்ககாரர்களால் தீக்கிரையாக்கப்பட் டுள்ளது.

உளவுத்துறை என்ற ஒன்று இருக்கிறதா அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரிய வில்லை. ஒரே சமயத்தில் மூன்று கிராமங்கள் தீக்கிரையாக்கப்படும் வரை காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது?

தமிழ் தேசிய வாதிகள் என்ன சொல்கிறார்கள்? இலங்கையிலுள்ள தமிழனை மட்டும்தான் காப் பாற்றுவார்களா? தருமபுரியில் எரிந்தது தமிழன் வீடுகள் அல்லவா?

தமிழ் ஓவியா said...

தமிழ்த்தேசியம் பேசுவோர்க்கு ஏனிந்த இரட்டைவேடம்? ஜாதி, தீண்டாமை ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, இடஒதுக்கீடு போன்றவை குறித்து ஏன் பேசுவதில்லை? நாங்கள் சவால் விட்டுக் கேட்கிறோம். பதில் சொல்ல முடியுமா? எடுத்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஜாதியைப் பிடித்திருக் கிறார்கள். ஜாதியை எடுத்து சிலம்பம் விளையாடலா மென்று நினைப்பு யாருக்காவது இருக்குமானால் அவர்களுக்கு நமது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

டிச.19ஆம் தேதி தருமபுரியில் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடக்கும் என்று எங்கள் தலைவர் தெரிவித்துள்ளார்.

தனியார் துறையிலும் இடஒதுக்கீடு

தனியார் துறையில் பார்ப்பனர்களின் கொட்டம் அதிகம் இருப்பதால் அடுத்து நமது போராட்டம், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு என்பது. இப்படியாக ஒவ்வொரு கட்டத்திலும் திராவிட இயக்கம் தனது சாதனையை முடித்திருக்கிறது.

தமிழ் ஓவியா said...

திராவிட இயக்கத்தில் ஆரியம்

அண்ணாவின் பெயரையும், திராவிட இயக்கத் தின் பெயரையும் தாங்கியிருக்கிற கட்சியின் அதி காரப்பூர்வ பத்திரிகையில் ஆன்மீகச் செய்திகள் என்ற தலைப்பில் பூணூலின் தத்துவம், திருநீற்றின் மகிமை, வாரியார் என்ன சொன்னார் என்று ஆரிய ஊடுருவல் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் சேது சமுத்திரத்திட்டம் வரக்கூடாதென்று பார்ப்பனர்கள் வழக்குத் தொடுத்ததென்பதும் எதிர்ப்பதென்பதும் ஒரு புறம் இருக்கட்டும். தமிழ்நாட்டின் முதல்வர், அண்ணா வின் பெயரையும் திராவிட இயக்கத்தின் பெயரையும் தாங்கி நின்கின்ற கட்சியின் பொதுச்செயலாளர் உச்சநீதிமன்றத்தில் சேது சமுத்திரத்திட்டம் வரக் கூடாதென்று மதத்தை முன்னிறுத்தி வழக்கு தொடுக்கிறாரென்றால் என்ன அர்த்தம்?

திராவிட இயக்கத்தில் ஆரியம் ஊடுருவி திராவிடத்தை அழிக்க நினைத்தால் அது நடக்குமா? புத்த மதத்திற்கு பார்ப்பனர்களால் ஏற்பட்ட கெடுதி திராவிட இயக்கத்திற்கு வராது. ஏனென்றால் இதுபோன்ற மாய்மாலங்களை ஒரு கை பார்ப்ப தற்கு ஈரோட்டுக் கண்ணாடி அணிந்த திராவிடர் கழகம் என்ற பெரியார் இயக்கம் - போர்வாள் இருக்கிறது.

இப்படியாக எல்லா வகையிலும் திராவிட இயக்கம் தன் சாதனைகளை தன் வேலையாக சிறப்பானமுறையில் செய்து முடித்திருக்கிறது. திராவிடத்தை கொச்சைப்படுத்துபவர்கள் வரலாற் றில் துரோகிகளாகச் சித்தரிக்கப்படுவார்கள் என்பது உறுதி.

-இவ்வாறு உரையாற்றினார்.

கோவைத்தென்றல் மு.இராமநாதன் எழுச்சியுரை

திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒரு தாய் மக்களால் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திராவிடம் குறித்து நிலவும் பொய்யுரைகளுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதற்கு அரிய வாய்ப்பான கூட்டம்.

யாரையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. பார்ப்பானை விட நம் இனத்தானை நினைத்துத் தான் கவலைப்பட வேண்டும்.

தமிழ் ஓவியா said...

கோடரி தனியாக செயல்பட்டு மரத்தை வெட்ட முடியாது. கோடரிக்கு வேகம் கொடுப்பது காம்பு நம்மவர்கள் பார்ப்பான் என்ற கோடாரிக்கு காம் பாகி நம்மை பதம் பார்க்க வைக்கிறார் என்பதை இன்றைய தலைமுறையினர் உணர்ந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.

வேதசாஸ்திரம் என்ன சொல்கிறது? பிறப்பினால் பிராமணன் என்பவன் தெய்வாம்சம் படைத்தவன். பிராமணன் அல்லாதவர்கள் அனைவரும் சூத்திரர் கள் என்கிறது. இந்த இழிவை ஒழிப்பதற்குத்தான் தந்தை பெரியார் அவர்கள் தள்ளாத வயதிலும் பாடுபட்டார்கள்.

சூத்திர இழிவை ஒழிக்க அனைத்துச் ஜாதியி னரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தைப் போட் டது திராவிட இயக்கம்.

வேதம், கடவுள், சாஸ்திரம், மதம், ஜாதி, தீண்டாமை, மூடநம்பிக்கை ஆகியவற்றிலிருந்து அழியாத, புரியாத மக்களைக் காப்பதற்கு தந்தை பெரியார் மீதும், அண்ணாவின் மீதும் தமிழர் தலைவர் கி.வீரமணி மீதும் உறுதி எடுத்துக் கொண்டு அறிவுக்கண்களைத் திறக்க இன்றைய இளைஞர்களும், மாணவர்களும் முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு என் உரையை முடிக் கிறேன். -என்று உரையாற்றினார்.

இந்நிகழ்வின் தலைவர் அவிநாசி நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இராமசாமி, அவநாசி நகர பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் க.அங்கமுத்து, வெள்ளைச்சட்டையே அணிந்து கொண்டிருப்பதால் இனி கருப்புச்சட்டை தான் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்களால் கருப்புச் சட்டை துணி அணிவித்து சிறப்பு செய்யப்பட்டனர். மேலும் அவிநாசி பேரூராட்சி 6ஆவது வார்டு தி.மு.க. உறுப்பினர் அப்துல் அகமது உள்ளிட்ட கூட்ட ஏற்பட்டாளர்களுக்கு திருப்பூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் திராவிடர் கழக தலைமை நிலையப் பேச்சாளர்கள் கோபி. கருப்பண்ணன், கோவை மண்டல செயலாளர் வழக்குரைஞர் ஆ.பாண்டியன், ஈரோடு மண்டல செயலாளர் த.சண்முகம், கோவை மாவட்ட தலைவர் வேலுச்சாமி, திருப்பூர் மாவட்ட தலைவர் இரா.ஆறுமுகம், கோவை விடுதலைச் செயதியாளர் பழ.அன்பரசு, மேட்டுப்பாளையம் கழக மாவட்ட செயலாளர் மர.வெள்ளியங்கிரி, திருப்பூர் மாநகர தலைவர் யாழ்.ஆறுச்சாமி, செயலாளர் இல.பாலகிருட்டிணன், அமைப்பாளர் ஆசிரியர் முத்தையா, திருப்பூர் பெரியார் புத்தக நிலையப் பொறுப்பாளர்கள் கரு.மைனர், கருப்புச் சட்டை பழனிச்சாமி, நகர தலைவர் அ.பொன்னு சாமி, கருவலூர் பிரகாசு, குரு விஜய்காந்த், பெரியார் பிஞ்சு ஆதவன், சா.துரைமுருகன், பொதுக்குழு உறுப்பினர் கோபி யோகானந்தம், அவிநாசி நகர தி.மு.க. செயலாளர் எசு.எம்.ஆர்.ரவி, துணைச் செயலாளர் ஜபருல்லா, கருவலூர் தி.மு.வைச் சார்ந்த அவிநாசியப்பன், திருப்பூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ச.மணிகண்டன் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு கூட்டத்தினைச் சிறப்பித்தனர். கூட்ட முடிவில் திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் ச.ஆறுமுகம் நன்றி கூறினார்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் உள்ளிட்ட கருஞ்சட்டை தோழர்களுக்கு தலித் விடுதலை கட்சிகளின் பொதுச்செயலாளர் பொறியாளர் எம்.பி., செங்கோட்டை மருத்துவர் அமிர்தாம்பாள் தம்பதியினர் இரவு உணவு அளித்துச் சிறப்பித்தனர்.

தலித் விடுதலைக் கட்சியின் பொதுச்செயலாளர் பொறியாளர் எம்.பி. செங்கோட்டையன் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே, பக்தர்களுக்கு 100 கேள்விகள் என்ற பகுத்தறிவு புத்தகத்தை தனது ஆசிரியர் மூலம் கிடைக்கப்பெற்று படித்ததன் பயனாக சமூக விழிப்புணர்வு பெற்று இளம் வயதிலேயே மேடை பேச்சாளனாக எழுச்சி பெற்ற தாகவும், அவற்றிலிருந்து இன்று வரை மூடநம் பிக்கையைத் தோலுரித்துக்காட்டி வருவதாகவும் தெரிவித்தார். தலித் விடுதலைக் கட்சியின் சார்பில் கழக துணைத் தலைவர் கவிஞர் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

தமிழ் ஓவியா said...

டோஸ்


எழும்பூரில் இருந்து பேருந்தில் பயணிக்கும் போது எனது அருகில் அமர்ந்திருந்தவர் அவ்வப் போது கன்னத்தில் தாளம் போட்டார். இது ஆன்மியோஃபோபியா. நான் மும்பையில் இருந்தபோது இதற்கு டோஸ் கொடுத்திருக்கறேன். இங்கேதான் முக்கியமாக கொடுக்கவேண்டும்.

டிரீட்மென்ட்:

ஏரிக்கரை மாரியம்மன் என்ற கோவில் வந்ததும் மீண்டும் தாளம் போட்டார், நான் எனது வைத்தியத்தை ஆரம்பித்தேன்.

அதாவது அதன் அருகிலேயே ஆக்ஸிஸ் பேங்க் ஏ.டி. எம் இருக்கிறது. நான் எழுந்து நின்று கும்பிடு போட்டு உட்கார்ந்தேன், முதலில் அவர் ரோட்டில் பார்த்தார், பிறகு கோடாக் மஹேந்திரா ஏ.டி.எம் வர அதே போல் செய்தேன் அவருக்கு புத்தியில் உரைத்துவிட்டது. டோஸ் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

அதன் பிறகு சித்தி சித்தப்பா அத்தை மாமா விநாயகர் என பலர் தென்பட்டனர். கோவிலையும் பார்த்தார் என்னையும் பார்த்தார். ஆனால் தாளம் போடவில்லை.

சென்னையில் டோஸ் கொடுத்த முதல் தடவையே வெற்றி வெற்றி!

- சரா

தமிழ் ஓவியா said...

நல்லது நடந்தால் கடவுள் செயல் கெட்டது நடந்தால் விதி ....



ஆணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 176,000 கிலோமீட்டர். அதே வயதில் பெண்ணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 149,000 கிலோமீட்டர்.

மனித மூளையில் உள்ள சுமார் 50100 பில்லியன் (5000---10000 கோடி) நரம்பணுக்களில் (1011), சுமார் 10 பில்லியன் நரம்பணுக்கள் (1010) புறணிக் கோபுர உயிரணுக்கள் (cortical pyramidal cells). இவ்வுயிரணுக்கள் தமக்குள் சமிக்கைகளை (குறிகைகளை) அனுப்பி கொள்ள ஏறத்தாழ 100 டிரிலியன் (1014) நரம்பிணைப்பு களை பயன்படுத்துகின்றன.

நல்லது நடந்தால் கடவுள் செயல்
கெட்டது நடந்தால் விதி ....

அப்படியென்றால் இத்தகைய சிறப்பான மூளை மனிதனுக்கு எதற்கு ? ? பூசை செய்யவா ? ?

- ஓவி

தமிழ் ஓவியா said...


எனக்கு இதில் எல்லாம் ஆர்வம் இல்லை

நான் நடிகர் திலகத்திடம் ஏழு ஆண்டுகள் அவருக்கு கார் ஓட்டுநராக இருந்தேன். நான் அறிந்தவரை நடிகர் திலகம் தினமும் காலையில் கடவுள் படங்களையும், அன்னை ராஜாமணி அம்மாளின் திருவுருவப் படத்தையும் வணங்கிவிட்டு அன்றாட அலுவல்களைத் தொடங்குவாரே தவிர, ஜோசியம், ஜாதகம், பரிகாரத்தில் எல்லாம் அவருக்குப் பெரிய ஈடுபாடு இருந்ததே கிடையாது.

கண்ணன் போலவே நிறையப் பேர், 'அந்த கோயிலுக்குச் சென்று பூஜை செய்யுங்கள், பரிகாரம் செய்யுங்கள், யாகம் செய்யுங்கள்... உடல் ஆரோக்கியமாக இருக்கும்' என்று சொல்லும்போது எல்லாம் நகைச் சுவையாகவே பதில் அளிப்பார்.

'எல்லோரும் உடல்நலத்துக்காகக் கோயில்களி லேயே பரிகாரம் தேடிக் கொண்டால், அப்புறம் டாக்டர் எதற்கு? கோடி கோடியாக செலவு செய்து ஆஸ்பத்திரி கட்டுவதெல்லாம் எதற்கு?' என்று கேட்டுவிட்டு, 'மனிதனுக்கு நோயும், உபாதைகளும் அந்தந்த வயதில், வர்ற நேரத்தில் வந்துதான் தீரும். அதை சமாளிச்சு வாழ நாமதான் பழகிக் கணும்' என்பார். அதே நேரத்தில், உடல் நலத்துக்காக மற்றவர்களுக்கு அறிவுரை கூறும்போது, 'உடல்நலம், மன நலம் ரெண்டும் நல்லா இருக்கணும்னா... அண்ணன் மாதிரி (எம்.ஜி.ஆர்.) உடற்பயிற்சியும், எம்.என். (நம்பியார்) மாதிரி உணவுப் பழக்கமும் இருக்கணும்' என்பார். ஆனால் கண்ணன், அந்தப் புத்தகத்தில் நடிகர் திலகம் ஜோசியம், பரிகாரம், இதற்கெல்லாம் விருப்பப்பட்டது போலவும், அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் அதற்கு மாறாக நடந்துகொண்டது போலவும் எழுதி இருக்கிறார்.

நடிகர் திலகம் ஏதாவது விருப்பப்பட்டார் என்றால், அவரது தம்பி சண்முகமும் கமலா அம்மாளும் மற்றும் குடும்பத்தாரும் அதை நிறைவேற்றிவிட்டுத் தான் மறு வேலை பார்ப்பார்கள். கண்ணன் கூறியதுபோல் திருச்செந்தூர் சென்று பரிகாரம் செய்யவில்லை என்றால், நடிகர் திலகமே அதை விரும்பவில்லை என்றுதான் பொருள்.

அந்த சம்பவம் நடந்த நேரத்தில் ஒரு நாள் லயோலா கல்லூரி வழியாக காரில் சென்றுகொண்டு இருந்தோம். அப்போது நடிகர் திலகத்தின் உதவியாளர் இந்தப் பரிகாரப் பேச்சை ஆரம்பித்தார். பதிலுக்கு நடிகர் திலகம் அங்கே இருந்த குடிசைப் பகுதியைப் பார்த்துக்கொண்டே, 'இந்த ஏழை மக்கள் தங்கள் உடம்புக்கு ஏதாவது வந்தால் எங்கேடா போவார்கள்?' என்றார்.

அதற்கு நான், ''அரசு ஆஸ்பத்திரிக்குப் போவார்கள்!'' என்றேன். அதற்கு அவர், 'நாம் மட்டும் ஏண்டா ஜோசியம், பரிகாரம்னு தங்கத்தையும், வைரத்தையும் கடவுளுக்கு லஞ்சமாக் கொடுத்து குறுக்கு வழியில் போகணும்?' என்று சிரித்துக்கொண்டே கூறினார். இதில் இருந்தே நடிகர் திலகத்துக்கு ஜோசியம், பரிகாரம் போன்றவற்றில் எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை அறியலாம். வீட்டில் கணபதி ஹோமம் பண்ணும்போது, 'எனக்கு இதில் எல்லாம் ஆர்வம் இல்லை. நீ சந்தோஷத்தை உணர்ந்தால், செய்துகொள்' என்பார். அந்த அளவுக்கு அன்பும் பாசமும் ஒற்றுமையும் அந்தக் குடும்பத்தில் கரை புரண்டோடியது!

- சொன்னவர்:

சுந்தர மூர்த்தி
(நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கார் டிரைவர் _ 1982_-89)

கேட்டவர்: சந்திரன் வீராசாமி

தமிழ் ஓவியா said...

சட்டசபையில் பேசுவதற்கே லஞ்சம்!


"சத்தியமூர்த்தி லஞ்சம் வாங்குகிறாராமே?" என்று போகிற போக்கில் சிலர் சொல் லிவிட்டு போய்விடுவார்கள். இதை அவரிடமே நேரில் சொன் னேன். அவர் கொஞ்சம்கூட என் மீது கோபப்படவில்லை. நிதானமாக பதிலளித்தார்.

"நாள் பூராவும் வேலைசெய்யவேண்டும். எங்கேயாவது பஞ்சாயத்து தேர்தல் என்றால் கூட அதற்கு மேளம் வாசிக்க சத்தியமூர்த்தி வர வேண்டும்.

நான் பணக்காரனில்லை.நான் எப்படி சாப்பிடுவது? தேர்தல் தம்பட்டம் அடித்துவிட்டு நானும் என் குடும்பத்தினரும் வாயு போஜனம் செய்ய முடியுமா? யாராவது ஒரு பணக்காரனுக்கு அசெம்பளியில் கேள்விகேட்க வேண்டியிருக்கும்.அவனிடம் பணம் இருக்கிறது. என்னிடம் கேள்விகேட்கும் திறமை இருக்கிறது.

எப்பொழுதாவது இதை செய்தால் லஞ்சம் ஆகுமா?" என்று கேட்டார் சத்தியமூர்த்தி.

(பார்ப்பனர்களால் நடத்தப்பட்ட "பாரததேவி" 8.12.1943 இதழில் வெளிவந்த இச்செய்தியை குடியரசு 18.12.1943 ல் வெளியிட்டது.)

தமிழ் ஓவியா said...

மனித மலமும், புளியந்தழையும்!
சுமார் 55 வருடங்களுக்கு முன்னர் மயிலாடுதுறை கண்ணாரத்தெரு பகுதியில் "ராமவிலாஸ்" (பிராமணாள் கபே) என்கிற ஹோட்டல் இருந்தது. அப்போது திராவிடர் கழகத்தில் அண்ணா இருந்த நேரம். அண்ணாதுரை வாலிபர் சங்கம் என்ற அமைப்பு தீவிரமாக இருந்தது. ஒருநாள் ராமவிலாஸ் ஹோட்டல் உரிமையாளருக்கும் அண்ணாதுரை வாலிப சங்கத்தைச்சேர்ந்த ஒரு இளைஞருக்கும் ஏதோ பேச்சு வார்த்தை முற்றி ரகளையில் முடிந்தது.

அண்ணாதுரை வாலிபர் சங்கத்தில் நாங்கள் குடியிருந்த கேணிக்கரை பகுதியில் வசித்துவந்த டைலர் சொக்கன் பிரபலமானவர்.சம்பவம் நடந்த அன்று இரவு டைலர் சொக்கன் தலைமையில் அண்ணாதுரை வாலிபர் சங்கத்தினர், மனித மலத்தில் புளியந்தழையை கரைத்து, ராமவிலாஸ் ஹோட்டல் வாசல் முழுவதும் ஊற்றிவிட்டனர். வழக்கம்போல் காலையில் கடையை திறக்க வந்த அய்யருக்கு துர்நாற்றம் குடலை பிடுஙக ஆட்களை கூப்பிட்டு எவ்வளவோ சுத்தம் செய்து பார்த்தும் நாற்றம் போனபாடில்லை. வெறுத்துப்போய் கடைசியில் ஒரு வாரத்திற்கு கடையை மூடிவிட்டார்! இது எங்கள் பகுதி பெரியார் தொண்டர்கள் சொல்ல கேட்டது.

இப்போது சீரங்கத்தில் ஒரு பார்ப்பான் "பிராமணாள் கபே" என்று போர்டு போட்டுள்ளானாம். தங்களை இழிவு படுத்துவதாக கூறி பலர் அந்த பெயரை மாற்றக் கோரியும் சட்டம் பேசிக்கொண்டு திரிகிறானாம். இதைப்படிக்கும் போது சுயமரியாதை உள்ள எவருக்கும் ஆத்திரம் பீறிட்டு எழுவது இயற்கைதானே...!

- மயில்