Search This Blog

19.11.12

பெரியார் ராமசாமி நாஸ்திகன் அவரோடு சேரலாமா?

கணவர்களைத் திருத்துங்கள்

தலைவரவர்களே! தாய்மார்களே!
இத்தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட் டில் உங்கள் முன்னால் பேச சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி உண்மையிலேயே பெருமகிழ்ச்சியடைகிறேன். சமுத்திரம் போல் பெண்கள் கூடியுள்ள இக்கூட் டத்தைப் பார்க்க என் மனமே ஒருவித நிலைகொள்ளா மகிழ்ச்சியடைகிறது.

சென்னையைப் பற்றி...

இவ்வளவு பெரிய ஒரு பெண்கள் கூட்டம் சென்னையில் கூடும் என நான் நினைக்கவில்லை. சென்னையைப் பற்றி நான் சில சமயங்களில் பரிகாசமாய் நினைப்பதுண்டு. என்னவென்றால் சென்னை மூடநம்பிக்கைக்கு இருப்பிட மானது என்று நான் சொல்லுவதுண்டு. இதை நான் அடிக்கடி பத்திரிகையிலும் எழுதி வந்திருக்கிறேன். சென்னையி லுள்ள எனது சில தோழர்களுக்கு நீங்கள் மூடநம்பிக்கையை விடுங்கள். பகுத்தறிவுடன் வாழுங்கள் என்று கூறுகின்ற காலத்து அவர்கள், நீங்கள் சொல்வதெல்லாம் சரி என்றும், அவற்றை அப்படியே ஒப்புக் கொள்வதாகவும் ஆனால் தங்கள் வீட்டிலுள்ள பெண்கள் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார்களே என்றும், உங்களை இழித்துக் கூறி உங்கள் மீது பழியைப் போட்டதை நான் பலதடவை கேட்டிருக்கிறேன். ஆனதால் தான் வெளி ஜில்லாக்களைப்போல் சென்னையில் பகுத்தறிவியக்கக் கொள்கைகள் அவ்வளவு அதிகமாக பரவ வில்லையோ என்றும் கருதுவதுண்டு. ஆனால், இன்று இப்பெண்கள் மாநாட் டையும் இங்குள்ள உணர்ச்சியையும் ஊக்கத்தையும், இங்கு நடந்த உபன் யாசங்களையும் தீர்மானங்களையும் பார்க்கும்போது எனக்கு ஒரு புதிய எண்ணம் தோன்றுகிறது. அதாவது, சென்னை பெண்மக்கள் ஆண்மக்களை விட எந்த வகையிலும் பின்னடைந்தவர் களல்ல என்பதைக் காட்டுகிறது. 

ஆச்சாரியாருக்கு நன்றி

இங்கு நான் அநேக வயது சென்ற பெண்களைக் காண்கிறேன். அவர்களது ஊக்கம் எனக்குப் பெரியதொரு வெளிச்சத்தையும், தைரியத்தையும் கொடுக் கிறது. சென்னை தாய்மார்களுக்கு இப்படிப்பட்ட உணர்ச்சி ஏற்பட்டதற்கு முக்கிய ஆதாரம் எனது பழம்பெரும் தோழராகிய கனம் ஆச்சாரியாருடைய பெருங் கருணையேதான். இதற்காக அவருக்கு என் உள்ளம் நிறைந்த நன்றி செலுத்துகிறேன். பின்னும் இக்கிளர்ச் சியும் உணர்ச்சியும் மேலும் மேலும் வளர வேண்டுமானால், இன்றைய அடக்கு முறை ஆட்சியை இதுபோலவே குறைந் தது இன்னும் ஒரு வருஷத்திற்காகவது நடத்தி உதவ வேண்டுமென்று எனது அருமைத் தோழர் ஆச்சாரியாரை மற்று மொருமுறை வணக்கமாகக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

உண்மையில் இன்றைய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் பெண்கள் பிரதிநிதித்துவம் வழிந்தோடுகின்றது. அநேக பிரபல பெண்கள் கூடியிருக் கிறீர்கள். பல அருமையான தீர்மானங் களையும் செய்தீர்கள்.

சூழ்ச்சி மகாநாடு

ஆனால், நான்கு நாட்களுக்கு முன்பு உலகந்தெரியாத சில பெண்கள் கூடிக் கொண்டு இந்திய மாதர் சங்கம் என்னும் பேரால் ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டு இந்நாட்டு மக்கள் அபிப்ராயத் துக்கு நேர்மாறாக இந்தியை ஆதரித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றனர் என்பதாகத் தெரிகிறது. இதற்கு நமது எதிரிகள் பத்திரிகைகள் பிரமாதமாகப் பெருக்கி விளம்பரப் படுத்தியிருக்கின்றன. அது எதற்காகச் செய்யப்பட்டது என்றால், இம்மாநாடு கூடப்போவது தெரிந்து இம்மாநாட்டுத் தீர்மானங்கள் அரட்டை செய்யச் செய்வதற்காகவும், இங்கு செய்யப்படும் தீர்மானங்கள் சரியான பிரதிதிதித்துவம் பெற்றதல்லவென்று கருதும்படி செய்வதற்காகவும், நமது சுயமரியாதைக்குக் கேடு சூழவும் கூட்டப்பட்ட ஒரு சூழ்ச்சி மாநாடு ஆகும். நம்மிடையில் (தமிழர்களிடத்து) ஒற்றுமை இல்லாததால் அவர்கள் யாரோ அகவிலை அறியாத இரண்டு பெண் களைக் கொண்டு நம்மைக் கேலி செய் யவும், தாழ்வாக நினைக்கவும் இடம் உண்டாக்கப் பார்க்கிறார்கள்.

வடமொழிச் சார்புடையது - ஆரியக் கலைகளுக்காக இருக்கிறது என்றும், அவர்களாலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட இந்தி என்கின்ற ஒரு மொழியை நம் குழந்தைகளுக்கும் புகட்டி, நம்மக்கள்தம் மானத்தை மாசுபடுத்தும் ஒரு சூழ்ச்சியை எதிர்ப்பதற்காக நாம் இங்கு கூடினோம். நம்மில் பல கருத்துக்காரர்களிருக்கலாம். சைவ, வைணவ மதக்காரர்களிருக்க லாம். முஸ்லிம், கிறிஸ்தவர்கள் இருக் கலாம், மேல்ஜாதி கீழ்ஜாதிக்காரர்கள் என்பவர்களிருக்கலாம். எந்த மதத்தை யும், ஜாதியையும் நம்பாதவர்களுமிருக்கலாம்.

எனவே, நம்மில் ஒருவருக்கும் தீங்கு வராத நிலையில் ஒரு குறிப்பிட்ட கொள் கைக்காக நாம் ஒன்றுசேர்ந்து பாடு படவேண்டுவது இன்றியமையாததாகும். நம் தாய்மொழி மீதுள்ள பற்று காரண மாகவே நம் மானத்துக்கு ஏற்க கலைகள், உணர்ச்சிகள் காரணமாகவே நாம் இன்று ஒன்று கூடியுள்ளோம். உண்மை யிலேயே ஒருவனுக்கு நாட்டுப்பற்று உண்டானால் - மொழிப்பற்று உண்மை யில் ஏற்படுமானால் - அதனை கனம் ஆச்சாரியார் அடக்க நினைப்பாரானால் அது ஒரு நாளும் முடியாத காரியமாகும். அதற்கு மாறாக பற்றும், உணர்ச்சியும் வளரத்தான் செய்யும். மேலும், அவர் கடினமான அடக்கு முறைகளைக் கையாளுவாரானால், அதனால் தமிழர்கள் மனங்கொதிப்படையுமானால் அது எங்குபோய் நிற்கும் என்பதைச் சொல்வதற்கில்லை. அது தமிழர்களிடத் திலும் ஏன் இட்லருணர்ச்சியை உண்டாக் காது எனக் கேட்கிறேன். எதற்காக இந்த அடக்குமுறை?

பெண்கள் பாராட்டு

இன்று 400 பேர் சிறை சென்றதைப் பாராட்டி நீங்கள் தீர்மானம் நிறைவேற்றிய போது உண்மையிலேயே எனக்கு பரிகாசமாயிருந்தது. ஆண்கள் சிறை செல்வதில் அதிசயம் ஒன்றும் இல்லையே! ஆண்கள் சென்றதைப் பற்றி நீங்கள் பாராட்டிவிட்டால் நீங்கள் வீரப்பெண்மணிகள் என்று அர்த்தமா? நீங்கள் 400 பேர் சிறைசென்று அதை ஆண்கள் அல்லவா பாராட்ட வேண்டும்?  நீங்கள் ஏன் செல்லக் கூடாது? இது கனம் ஆச்சாரியார் கோயில் பிரவேச விஷயத்தில் திருவி தாங்கூர் ராஜாவைப் பாராட்டிவிட்டு, தோழர் எம்.சி.ராஜாவை ஏமாற்றிவிட்டது போலல்லவா இருக்கிறது. (சிரிப்பு) இன்று ஒரு அம்மையார் என்னிடம் வந்து, தான் சிறைக்குப் போகத் தயார் என்றார். அந்தப் பேச்சு எனக்கு மகிழ்ச்சியாயிருந்தது.

ஆனால், அது நாளைக்குத் தெரியப் போகிறது. அக்காலம் - அதாவது தமிழ்ப் பெண்களை சிறை செய்யும் காலம் வந்தால்தான் நமக்கு நன்மையுண்டாகும். மாநாட்டுத் திறப்பாளர் முற்காலப் பெண்களின் வீரத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசினார். நான்கூட அப் போது அக்காலத்தில் ஒரு பெண்ணாய்ப் பிறந்திருந்தோமா என்றுகூட நினைத்தேன். அவ்வளவு பெருமையாய்ப் பேசினார். ஆனால், பழம் பெருமைப் பேசிப் பயனென்ன? இது பார்ப்பனர் பேசுவது போல்தானே இருக்கிறது. இன்றைய பெண்களைப் பற்றியும் அவர்கள் கடமையைப் பற்றியும் பேசினால் தானே நீங்கள் உரிமை பெறலாம் - நன்மை யடையலாம். பெரியவர்கள் தேடிவைத்த சொத்தைக் கொண்டு எவ்வளவு நாளைக்குப் பிழைக்கலாம்? நமது வாழ்வுக்கு வகை என்ன? இவை கட்கெல்லாம் - பெண்கள் முன்னேற்றத் திற்கும் வீரத்திற்கும் - இம்மாநாடு ஒரு வழிகாட்டிவிட்டது.

பார்ப்பனர்கள், ஊர் பெயர் தெரியாத பெண்களைப் பிடித்து, தங்களைப் பற்றியே தங்களுக்குத் தெரியாத பெண்களைப் பிடித்தும் படம்போட்டு விளம்பரப்படுத்தி பட்டம், பதவி வாங்கிக் கொடுக்கின்றனர். உண்மையாக எத்தகைய கஷ்டங்களையும் அனுபவிக் கத் தயாராக உள்ள, நாட்டு நலனுக்குப் பாடுபடக்கூடிய பல பெண்கள் நம்மில் இருக்கின்றார்கள். ஆனால், நம் ஆண்கள் அவர்களை வெளியில் விடாது வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கின் றனர்.

நமது நண்பர்கள் கனம் ராமநாதனுக்கும், கனம் சுப்பராயனுக்கும் பல ஊர் களில் எத்தனையோ பார்ப்பனப் பெண்கள் கார் ஓட்டினர். அதற்காக எந்தப் பெண்ணை அவர்கள் தள்ளிவிட்டனர்? யார் மீது அவர்கள் குறை கூறினார்கள்? பெண்களாகிய நீங்கள் தலைநிமிர்ந்து எங்கள் உரிமையில் தலையிட்டால் நாங்கள் சும்மாயிரோம் என்றால் என்ன? இதைவிட்டு அல்லிராணி, கண்ணகி, மாதவி முதலிய நமது பாட்டிமார்களைப் பற்றிப் பெருமை பேசுவதில் என்ன பலன் இருக்கிறது? ஆணுடன், பெண்களும் ஒத்துழைத்துப் போராட முன்வரவேண்டும். போராட்டத்தில் ஆணுக்கு ஒரு வேலை பெண்ணுக்கு ஒரு வேலை என்று இல்லை. இருவரும் சமமே. ஆகவே, ஆண்களைப்போல் பெண்களும் தமிழ்ப் போராட்டத்தில் இறங்கினால் கூடிய சீக்கிரம் தமிழ்நாடு தமிழனுக்கே ஆகிவிடும்.

கணவர்களைத் திருத்துங்கள்

நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஏன் சிறையை நிரப்பக்கூடாது? சிறை என்றால் பயமா? அதற்காக யாரையாவது அடிக்கவோ வையவோ வேண்டுவ தில்லை. எந்தச் சட்டத்தையும் மீறவேண் டியதில்லை. காங்கிரஸ் பேரால் சட்டம் மீறியவர்கள் பிரதிநிதிகளாக சட்டப் பாதுகாப்பாளர்களாகி விட்டார்கள். ராஜத்துவேஷம் எனது மதம் என்றவர்கள் மகாத்மாக்களாகி விட்டார்கள். நாம் அப்படிக் கூடச் செய்ய வேண்டியதில்லை. தமிழ் வாழ்க! என்றால் சிறை பிடிப் பார்கள். இந்தி வீழ்க! தமிழ் வாழ்க! என்றால் போதும். உடனே ஆச்சாரியார், சிறைக்கு வா என அழைத்துக்கொள் வார். (கைத்தட்டல்) எனக்கு ஒரு பயம்! என்னவென்றால், எங்கே அவர் பின்வாங்கி விடுவாரோ என்று. முதலில் நான்கு பேர் போனால் பின்னால் அவர் பிடிக்கிறாரா என்று பார்த்து பிறகு 8, 10, 100, 1000 என்று போகவேண்டும். நமக்கு ஏற்படும் வேதனைக்கோ, தொல் லைக்கோ எல்லையில்லை. இந்நிலையில் நீங்கள் சொல்வதைக் கேட்காது - நாட் டுக்குப் பாடுபடாது ஆண்கள் உங்கள் கிட்ட வருவார்களானால் ரோஷம் இருக்கும் இடம் பார்த்து அவர்களைக் குத்தவேண்டும். வீட்டிற்குள்ளே அனு மதிக்கக் கூடாது. கதவை மூடிவிட வேண்டும். இதேபோல் அநேக நாடு களில் பெண்கள் தங்கள் கணவர்களை இடித்துத் திருத்தியதாகச் சரித்திரம் கூறுகின்றது. அனேக ஆண்கள் நீங்கள் சிறைக்குப் போவதைக் காண பயப்படு கிறார்களாம். அவர்களைத் திருத்த வேண்டுமானால் நீங்கள் ஏதாவதொரு ஊருக்குப் போவதாக வீட்டில் சொல்லிவிட்டு அவர்கட்குத் தெரியாது சிறைக்குப் போய்விட வேண்டும். அப்படிச் செய்தால் அவர்களும் பின்வந்து விடு வார்கள். நம்மில் ஜாதிமத உயர்வு களையும், சுயநலத்தையும், மறக்க வேண்டும்.
இங்கு ஒரு தோழர் (பெயர் கூற ஆசைப்படவில்லை), ராமசாமி நாஸ்திகன் அவரோடு சேரலாமா என்று ஒரு வரிடம் கூறினாராம். ராமசாமி எப்படிப் பட்டவனாயிருந்தாலென்ன? அவன் கூறுவது சரியா, தப்பா என்பதைத்தானே நீங்கள் ஆலோசிக்க வேண்டும். இப்பொழுது இங்கு நான் ஒரு கடை வைத்தால், நாஸ்திகன் என்று சாமான் வாங்க மாட்டீர்களா? அன்றி நான் ஏறின ரயில் வண்டியில் ஏறமாட்டீர்களா? அல்லது உங்கள் வண்டியில்தான் எனக்கு இடம் கொடுக்க மாட்டீர்களா? நான் நாஸ்திகனா அல்லவா என்று உங்களிடம் விளக்க வேண்டியதில்லை. ஏனெனில், இது சில காங்கிரஸ் பார்ப்பனர்களின் சூழ்ச்சி. அதைக் கேட்டு சில சோண கிரிகள் ஏமாறலாம்.

இழி குணமில்லை

இன்று தேசிய மகாசபை என்று கூறப்படும் காங்கிரஸ் தலைவராக, ராஷ்டிரபதி என்னும் பேரால் தோழர் ஜவகர்லால் தலைவரா யிருந்தார். அவர் தன்னை நாஸ்திகன் என்று சொல் லிக்கொள்கிற முறையில் எனக்குச் சத்தியத்தில் - கடவுள் மீது நம்பிக்கை யில்லையென்பதாகக் கூறி, கோர்ட்டில் சத்தியப் பிரமாணம் கூற மறுத்திருக் கிறார். இன்று அவருடைய வீரத்தைப் பற்றி சூரர், தீரர் என்று பாராட்டுகிறார் களே ஒழிய, எந்தப் பார்ப்பனராவது பண்டித ஜவகர்லால் நாஸ்திகர் என்பதற்காக அவரை வெறுத்தார்களா? ஆனால், எங்களிடத்து இவ்விழிகுணம் கிடையாது.

ஜஸ்டிஸ், சுயமரியாதை முதலிய கட்சிகளிருந்தாலும் நாம் என்ன செய்தால் வாழமுடியும் என்பதை யோசிக்க வேண்டும். காடு வா வா என்கிறது. எனக்கு மட்டிலும் இதி லென்ன அத்துணை அக்கறை? சென்ற 25 ஆண்டுகளாகப் பார்க்கிறேன்; பார்ப்பனர்கள் நாள்தோறும் நம்மைப் பற்றி கேவலமாக - அகங்காரமாகப் பேசுகிறார்கள் - எழுதுகிறார்கள். ஒரு குரங்குப் பத்திரிகை, தோழர் சண்முகம் செட்டியாரைப் பற்றி செக்கு போட்டு - செக்கு ஆட்டுகிற மாதிரி படம்போட்டு இழிவுபடுத்திற்று.

நம்மைக் கழுதை என்றும், நாய் என்றும் வயிற்றுச் சோற்றுக்காரர் களென்றும் கூறி வருகிறது. இதைப் பார்த்து உங்கள் ரத்தங் கொதிப்பதில்லை; கண் சிவப்பதில்லை. இந் நிலையில் வீணே தமிழ்நாடு தமிழனுக்கு என்று கூற உங்கட்கு யோக்கியதை உண்டா? தமிழ்மொழி, கலை, நாகரிகம், காப்பாற்றப்பட - நாடு வளர வேண்டுமானால் பெண்மணிகளாகிய நீங்கள் துணிந்து முன்வரவேண்டும். இதைக்கருதியே இம்மாநாட்டைக் கூட்டினீர்கள், பல தீர்மானங்கள் நிறைவேற்றினீர்கள். பெண்கள் உண்மை யில் வீரமுடையவர்கள்தான். நினைத்ததை முடிக்கும் ஆற்றலுடையவர்கள் தான் என்பதை செயலில் காட்ட வேண்டும். ஆனால், சிறைக்குச் செல்லும் ஆண்களை மட்டும் பாராட்டுவதுடன் நில்லாது, நீங்கள் செல்வதைப் பார்த்து ஆண்கள் பாராட்ட வேண்டிய நிலையை உண்டாக்க வேண்டும். இதற்குச் சிறிதும் பின்னிடலாகாது. (நீண்ட கைத்தட்டல்)

                     -----------------------13-11-1938 ஆம் தேதி அன்று சென்னையில் கூடிய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் தலைவர் ஈ.வெ.ரா. பேசியது.
குடிஅரசு - சொற்பொழிவு - 27-11-1938

20 comments:

தமிழ் ஓவியா said...


எல்லா வகை தவறுகளையும் திருத்துபவன் பிராமணனாம்!


ஒரு தொலைக்காட்சியில் விஷமப் பிரச்சாரம்

சீறி எழுகிறார் ஒரு வீராங்கனை


(தொலைக்காட்சிகளில் நடைபெறும் ஒருவிஷமப் பிரச்சாரம்பற்றி ஒருவீராங் கனை சீறி எழுந்துள்ளார். இணையதளம் ஒன்றில் அந்த வீராங்கனை செய் துள்ள பதிவு இதோ:)

கடந்த 14 ஆம் தேதி நான் மாலை 6 மணியளவில் விஜய் தொலைக்காட்சியில் வந்த சிவம் என்ற தொடரைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
அதில் உள்ள உரையாடல்:

ஒரு (பார்ப்பான்) பிராமணன் என்றால், எல்லாவித தவறான செயல்களையும் திருத்துவதற்காக வந்தவன். இப்பொழுது அவர்கள் அதைத்தான் செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் இந்த உரையாடல்.

அது எப்படி முடியும்? அதனால் தான் அய்.அய்.டி (இந்தியன் இன்ஸ்ஷடியூட் ஆஃப் டெக்னா லஜி) முழுதும் பிராமணர்களாலும் மற்ற நடுவண் அரசு அலுவலகங் களின் உயர் அலுவலர்களும் பார்ப்பனராயுள்ளனர் போலும்!

பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் (உங்களையும், என்னையும் சேர்த்துதான்) இது வெட்கப்படக் கூடியது. பெரியார் பல நலங்களை நமக்குச் செய்திருந்தும், இன்னும் பார்ப்பனர்கள் நம்மை ஆண்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.

மேலும், ஜெயா, சன், ராஜ் தொலைக்காட்சிகள் மற்றவையும், நமது செலவில், அவர்களது எண் ணங்களையும் நம்பிக்கையையும் வளர்க்கிறார்கள். தற்போது தினகரனும், எழுதுகிறது. இதை அறியாத நிலையில் உள்ள பார்ப் பவர்களையும், படிப்பவர்களையும் மூளைச் சலவை செய்வதற்கே.

விஜய் மற்ற தொலைக்காட்சி களும், தினகரனும் செய்து வரும் இந்த மோசமான செயலைத் தடுக்க நாம் ஏதாவது செய்து ஆக வேண்டும்.

ராம் ஜெத் மலானி, ராமன் ஒரு மோசமான கணவன் என சொல்லியிருப்பது ஒரு நல்ல செய்தி என்று நான் கருதுகிறேன். ராம் ஜெத் மலானி மீது அவருக்கு எதிராக, யாராவது ஒருவர் வழக்கு தொடர நாம் ஆவன செய்ய வேண் டும். அவர் வழக்கு மன்றத்தில் மேலும் பற்பல உண்மைகளைச் சொல்லுவார்.

ஆகவே ஜெத்மலானி கோபம் அடையக் கூடிய முறையில் அவரைத் தூண்டி விட்டுச் செயல் பட வேண்டும்.

2ஜி ஊழல், சங்பரிவாரத்தின ரால்தான் உண்டாக்கப்பட்டது.

ராஜாவின் நவீன பங்களா வையும் பொய்யாகப் பரப்பி வரு கிறார்கள் அந்தப் பங்களா எங்குள்ளது? (உண்மை இதழ் அம்பலப்படுத்தி விட்டதே!)
நிலக்கரி ஊழலில், பிரதமர் பதவி விலகல் செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கூட்டம் முழங்கி வருகிறது. ஆனால் கட்காரி விவகாரத்தில் இரட்டை நாக்குடன் செயல்படுகிறது.

ராமன் மற்றும் அவன் செயல்கள் குறித்தவற்றை வெளிப்படுத்து வதன் மூலம் பார்ப்பனீயத்திற்கு எதிராக நாம் இந்தியாவில் வெற்றி கொள்ள முடியும்... செய்வோமாக!

- உங்கள் உடன் பிறந்தாள்
இராசம்மா செல்வி 18-11-2012

தமிழ் ஓவியா said...


புதுவையல்ல புரட்சியின் அழைப்பு

புதுச்சேரியைப் புதுவை என்று அழைக்கிறோம். உண்மையைச் சொல்லப் போனால் அது புரட்சிக் கவிஞரை ஈன்ற மண்ணாயிற்றே!

எத்தனையோ கவிஞர்கள் தந்தை பெரியார் அவர்களைப் பாட்டுப் பட்டாடைப் போர்த்தியிருந் தாலும், அந்தக் கவிஞன் நான்கே வைர வரிகளில் படம் பிடித்தானே! ஆகா அதற்கு நிகர் ஏது!

தொண்டு செய்து பழுத்த பழம்

தூய தாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக் குகையில் சிறுத்தை எழும்

என்றாரே - ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு வரியும் பொருள் காவியத்துக்கான கருப்பொருள் அல்லவா?

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றாரே, எத்தகைய தொலைநோக்கு!

மத அச்சுறுத்தல் என்னும் கோரப் பற்களால் மனிதக் குடலைப் பிடுங்கி மாலையாகப் போடப்பட்டு வரும் காலம் இது.

மதக் காரணங்களால் மனிதக் குருதி மண் முழுவதையும் செந்நிறமாக்கி விட்ட கொடுமை!

ஒரு மதத்துக்குள்ளேயே உட்பிரிவுகளுக்கிடையே குத்து வெட்டு!

மதம், பெண் உரிமைகளையும் காலில் போட்டு மிதிக்கும். மதவாதங்களும் இன்னொரு புறம்.

ஈராக்கில் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், நான் கடவுளிடம் அனுமதி பெற்றே இந்தப் போரை நடத்தினேன் என்று

கடவுளைக் காரணமாக்கிப் படுகொலை செய்த கொடுமையை என்ன சொல்ல!

மதமற்ற உலகம் தேவை! அது ஒன்றுதான் மனித நேயத்தை வளர்க்கும், மனித உரிமையை மதிக்கும் சகோதரத்துவத்தை மலர்விக்கும்.

அந்த மதமற்ற உலகை உலகுக்குத் தருவது தந்தை பெரியாரியல்தான்! தத்துவப்போதகம் தான்.

மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி!

மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி!

மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி!

மதமே மனித சமூக சமதர்மத்துக்கு விரோதி!

மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை!

மதமே முதலாளி வர்க்கத்துக்குக் காவல்!

மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு!

மதமே உழைப்பவனைத் தரித்திரத்தில் ஆழ்த்தி, உழைக்காதவனை உச்சத்தில் வைப்பதற்கு உதவி
(புரட்சி, தலையங்கம், 26.11.1933)

மத ஓடத்தில் ஏறிய மாந்தரைப் பற்றியும் புரட்சிக் கவிஞர், தந்தை பெரியார் அடியொற்றிப் பாடியதுண்டே.

அந்தப் புரட்சிக் கவிஞர் பிறந்த புதுவையாம் புரட்சி மண்ணிலே வரும் 23ஆம் தேதி திராவிடர் கழக மாநாடு.

மாநில மாநாடோ என்று வியக்கும் அளவுக்கு தடபுடலான ஏற்பாடுகள். சுவர்கள் எல்லாம் மாநாட்டு விளம்பரப் பதாகைகளாகப் பறை சாற்றிக் கொண்டு இருக்கின்றன. கழக அலுவலகமாம் பெரியார் படிப்பகம். கருஞ்சட்டைத் தொண்டர்களின் பாடி வீடாகக் காட்சி அளிக்கிறது. தேனீக்கள் போல பறந்து, பரம்பரமாய்ச் சுழன்று பணிகள் வாயு வேகத்தில் நடந்து கொண்டு இருக்கின்றன.

23ஆம் தேதி காலையிலே கனல் பறக்கும் கருத்தரங்கம். காலத்திற்கேற்ற கருத்துரைகள் கனமாகக் கிடைக்கும்.

பேரணியை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். திராவிடர் கழகம் ஒன்றுதானே கலாச்சாரப் புரட்சிப் பாட்டையை வகுத்துக் கொடுக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் புதுச்சேரியின் நீள - அகலத்தைக் கலக்கப் போகிறது கட்டுப்பாட்டுப் பேரணியைக் கண்ணுறும் இருபால் இளைஞர்கள் ஈர்க்கப்படுவார்கள்.

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு முழக்கங்கள் - விண்ணை முட்டும். சமூக நீதி சங்க நாதத்தைக் கேட்கப் போகிறீர்கள். மனித நேயத்தின் மணம் வீசும்.
திறந்த வெளி மாநாட்டில் தமிழர் தலைவர் உரை, புதிய செய்திகளைச் சுமந்து வரும்! அறிவிப்புகள் மிதந்து வரும்.

கழகத்துக்குப் புது முறுக்கு

தமிழக மக்களுக்கோ முக்கிய அழைப்பு.

ஆக புதுவை மாநாடு புரட்சி முழக்கமாக, எழுச்சியான இடியோசையாக,
சமூக நீதியின் சங்கநாதமாக, ஜாதிக் காட்டை அழிக்கும் எரிமலையாகச் சுழன்றடிக்கும்.

23ஆம் தேதி - உங்கள் வாழ்நாளில் பொன்னாளாக இருக்கும். பயனுடைய நாளாக எண்ணி அசை போடலாம்.

தனியாக வராதீர்கள் குடும்பத்தோடு வாருங்கள். கொள்கைச் சத்துணவு தாராளமாகக் கிடைக்கும்.

லட்சிய தூய காற்று இலவசமாகவே கிடைக்கும்.

புதுவை வாரீர்! வாரீர்!!

புன்முறுவலோடு தமிழர் தலைவர் உங்களுக்காகக் காத்திருப்பார் என்ன புறப்படத் தயார்தானே!

- மின்சாரம் -

தமிழ் ஓவியா said...


நீதிக்கட்சியின் 96ஆம் ஆண்டு விழா


சென்னை - பெரியார் திடலில் திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவு விழா - நீதிக்கட்சியின் 96ஆம் ஆண்டு விழா

திராவிடர் இயக்கக் குறிப்புகள் திரிபு வாதத்திற்கு இடந்தராமல் பதிவு செய்யப்பட வேண்டும்

வரலாற்று அறிஞர்கள் பங்கேற்று வலியுறுத்தல்!

சென்னை, நவ.18-திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் 16.11.2012 அன்று சென்னை - பெரியார் திடலில் நடத்திய சிறப்புக்கூட்டத்தில் வரலாற்றுப் பேராசிரியர்கள், அறிஞர்கள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆற்றிய நிறைவுப் பேருரை நேற்றைய விடுதலையில் 17.11.2012 வெளிவந்துள்ளது. நிகழ்வில் பங்கேற்ற பேராசிரி யர்கள் ஆற்றிய உரை வருமாறு:

பேராசிரியர் முனைவர் பெ.ஜெகதீசன் உரை

முனைவர் பெ.ஜெகதீசன்

வரவேற்புரை ஆற்றிய திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத்தலைவர் பேராசிரியர் முனைவர் பெ.ஜெகதீசன் குறிப்பிட்டதாவது:

திராவிடர் இயக்கம் நூற்றாண்டு நிறைவு காணும்வேளையில், திராவிடர்இயக்கம் பற்றி குறிப்புகள், படித்தவர்களால், குறிப்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளும் பேராசிரியப் பெருமக்களால், பொறுப்பில்லாமல் உண்மைக்கு மாறாக பதிவுக ளாக்கப்பட்டு வருகின்றன.

ஒரு பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த வர லாற்றுப் பேராசிரியர் தமது முனைவர் பட்ட ஆய் வினைப் புத்தகமாக தமிழ் மொழி பெயர்ப்பினை வெளியிட்டுள்ளார். வரலாற்று ஆசிரியர்களுக்கு, உண்மையினை விருப்பு, வெறுப்பின்றி வெளியிட வேண்டிய புலன்சார்ந்த பொறுப்பு உள்ளது. அந்தமொழி பெயர்ப்புப் புத்தகத்தில் உள்ள ஒரு பதிவு இவ்வாறு உள்ளது. சுயமரியாதை இயக்கத்தில் பெரியார் மற்றும் அண்ணாதுரையின் பங்களிப்பு கணிச மானது.

உயர்த்து வது போல உள்ள பதிவு,உண்மை யினை பலவீனப் படுத்துவதாகவே உள்ள நிலைமை வரலாற்றுக் கண் ணோட்டம் கொண்டு பார்த் தால் புரியும். பங்களிப்பு என்பதுஇருக்கின்ற ஒன் றிற்கு தனது உழைப்பினை, ஆதரவினை வழங்கு வதாகும். சுயமரியாதை இயக்கம் தந்தை பெரி யாரால் நிறுவப்பட்ட இயக்கம். நிறுவனரை, பங்களிப்பாளர் என சிறுமைப்படுத்தும் செயல் இழையோடி உள்ளதை அந்தப் புத்தகத்தைப் படிப்போர் உணருவர். தந்தை பெரியார், அவரது தலைமை மாணாக்கர் அறிஞர் அண்ணா - இருவரது செயல்களும், பட்ட பாடுகளும், வெறும் பங்களிப்பு என்ற அளவில் சுருக்கிவிடக் கூடியதல்ல.

இந்தத் தவறான பதிவை அந்த வரலாற்றுப் பேராசிரியரிடம் குறிப்பிட்ட பொழுது, ஒன்றும் தெரியாதது போல மொழி பெயர்ப்பாளர் அவ்வாறு செய்துவிட்டார் என தெரிவித்தார். தீர விசாரித்தபொழுது அந்த மொழி பெயர்ப்பாளர் இடதுசாரி இயக்கதினைச் சார்ந்தவர் என்பது தெரிய வந்தது. தமது கருத்து, மொழி பெயர்ப்பில் எப்படி சின்னா பின்னாப் படுத்தப்பட்டு, உண்மைக்கு மாறான தகவல்களாக ஒரு ஆய்வுக் குறிப்பிலே உள்ளது என்பது பற்றிய வருத்தம் சிறிதும் அவரிடம் இல்லை. இதற்கும் மேலே அந்த ஆய்வினை வழிகாட்டிய பேராசிரியர் (சுநளநயசஉ ழுரனைந) தனது முன்னுரையில் குறிப்பிட் டுள்ளதாவது.

திராவிடர் இயக்கத்தினர் என்னதான் கோயி லுக்குள் உள்ள சாமி சிலைகளை உடைத்தாலும், அந்த சிலைகள் மீண்டும் அங்கு வைக்கப்படும் சூழல்கள் உருவாகி உள்ளன. ஆலயங்கள் அவர்களால் இடிக்கப்பட்டாலும் மீண்டும் ஆல யங்கள் பெருகி வரும் சூழல் உருவாகி உள்ளன

தமிழ் ஓவியா said...


எந்த திராவிடர் இயக்கத்தினர் எந்தக் கோயி லுக்குள் நுழைந்து சிலையினை உடைத்தார்கள்? எந்த ஆலயத்தை இடித்தார்கள்? எந்த கோயில் விக்ரகத்தையும் திராவிடர் இயக்கத்தினர் உடைத்த தில்லை. தந்தை பெரியார் தனது கொள்கை வெளிப்பாடாக, அடையாள எதிர்ப்பாக தான் காசு கொடுத்து வாங்கிய ஒரு பிள்ளையார் சிலையை (கோயிலுக்குள் நுழைந்து எடுத்தது அல்ல) பொது இடத்தில் உடைத்தார்.

கோயிலுக்குள் நுழைந்து அங்கு உள்ளவற்றை யாரும் உடைக்கவில்லை. கடவுள் நம்பிக்கை அற்ற பெரியார் இயக்கத்தினர் யாரும் ஆலயத்தை இடித்ததில்லை. சொல்லப் போனால், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களால் தான் வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இந்த உண்மை நிலையினைக் கூட உணராமல், முனைவர்பட்ட ஆய்விற்கு வழிகாட்டும் பேராசி ரியரே தவறாகப் பதிவு செய்யும் நிலை நீடிக்கிறது. திராவிடர் இயக்க வரலாற்று அறிஞர்கள் உண் மையான வரலாற்றை பதிவு செய்யும் போக்கினை வளர்க்க உறுதுணையாக இருக்க வேண்டும். தவறான ஆய்வுப் பதிவுகள் கண்டிக்கப்பட வேண்டும். திருத்தம் செய்யப்பட வேண்டும். -இவ்வாறு அவர் பேசினார்.

பேராசிரியர் முனைவர் அ.இராமசாமி

முனைவர் அ.இராமசாமி

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் அ.இராமசாமி தமது உரையில் குறிப்பிட்டதாவது:

இன்றைய கூட்டத்தில், சிறப்புரையின் தலைப்பு தமிழ்ச் சித்தர் சிந்தனைகள் என்பதாகும். சித்தர்கள் பற்றிய செவிவழிச்செய்திகளாக, பகுத்தறிவிற்குப் புறம்பான செய்தி கள் பல நிலவுகின் றன. எந்த மூடப் பழக்கவழக்கங் களை எதிர்த்து சித் தர்கள்வாழ்ந்த னரோ அதற்கு முற் றிலும் புறம்பாக, அறிவியலுக்கு புறம்பான புரிதல் களாகவே அவர் களைப் பற்றி மக்களிடம் பரப்பப்பட்டு வந் துள்ளன. இன்றும் பரப்பப்பட்டு வருகின்றன.

தமிழ் ஓவியா said...

நான் கல்விப்பணியாற்றிய ஊரில் சித்தர் வழி வந்தவர் என ஒருவர் பிரபலமாக இருந்தார். அவரது ஆற்றலின் பெருமையைக் கூறும்பொழுது, அங்கு நிலவி வந்த செய்தி ஒன்று. அந்த சித்தரை குண்டுக்கட்டாகத் தூக்கி மின் பெருக்கி (நுடநஉவசஉவைல கூசயளேகடிசஅநச) மேலே போட்டார்களாம். அந்த மின் பெருக்கி வெடித்துச் சிதறிவிட்டதாம், தூக்கி வைக்கப்பட்ட அந்த சித்தருக்கு ஒன்றும் ஆகவில் லையாம். சித்தரின் ஆற்றலைக் குறிப்பிட இப்படி ஒரு கட்டுக்கதை. உண்மையிலேயே அந்த சித்தருக்கு ஆற்றல் இருந்திருக்குமானால், ஒருபுதிய மின் பெருக்கியை உருவாக்கி இருக்கலாமே! மின் தட்டுப்பாடாவது குறைந்திருந்திருக்குமே! ஏன் செய்யவில்லை?.

இன்னொரு சித்தர் பற்றி, வியப்பினை ஏற்படுத்த முனையும் வகையில் செய்திகள் வெளியிடப் பட்டன. அந்த சித்தர் இரவில் படுக்கும்பொழுது தனது கை, கால், ஏன் தலையினையும் கழற்றி தனித்தனியாக வைத்துவிட்டு தூங்குவாராம். காலை எழுந்தவுடன் கை, கால், தலை என ஒவ்வொன்றாக எடுத்து தனது உடலில் சேர்த்துக்கொள்வராம். எப்படி இருக்கிறது இந்த வினோதம்?. பூமியைச் சுருட்டிப் பாயாக மாற்றி கடலுக்குள் ஒளிந்த புராணப்புளுகை மிஞ்சிடும் வகையில் இந்த அறிவியல் காலத்திலும் சித்தர் பற்றிய அற்புத (?) செய்திகள் உலா வருவதை மக்களும் நம்பி வருகின்றனர். உண்மையில் அந்த சித்தருக்கு ஆற்றல் இருந்தால் என்ன செய்யலாம்? வாகன விபத்து மற்றும் இதர பேராபத்து நிகழும் நேரங்களில் கை, கால், ஒடிந்த, இழந்த மனிதருக்கு கை கால்களை அவர்களது உடம்பில் ஒட்ட வைத்தால் பெரிய உதவிச் செயலாக இருக்குமே! உடல் பாகங்களைக் கழற்றி மீண்டும் ஒட்ட வைப்பதில் நிபுணர்தானே அந்தச் சித்தர்! இப்படிப்பட்ட எதிர்வினையில், ஆக்க பூர்வமான சிந்தனைகள் மக்களிடம் உரு வாகிட வேண்டும்.

சித்தர் இலக்கியங்களில் கூறப்படும் சில சீர் திருத்தக் கருத்துகளுக்கு முன்னுரிமைதந்து வெளிப் படுத்தும் நிலையினை விடுத்து, அற்புதங்கள் செய் வதற்கு சித்தரிடம் ஆற்றல் நிலவியது எனும் மோடி மஸ்தான் வேலைகள் பற்றி விளம்பரப்படுத்துவது சித்தர் வரலாற்றுக்குப் பெருமை சேர்க்காது.

அந்தப் போக்கு உண்மையினை திரித்துக்கூறும் செயலன்றி வேறல்ல. மூடத்தனத்தின் தோலுரித்துக்காட்டி உண்மை நிலையினை மக்களுக்கு உணர்த்தியதில் பெரியார் இயக்கத்தின் பங்கு அளப்பரியது. இயக்கம் நூறாண்டு கண்ட வேளையிலும் அதன் சமுதாயத் தேவை நீடிப்பது அவசியமே!
-இவ்வாறு அவர் பேசினார்.

பேராசிரியர் முனைவர் அரங்க. இராமலிங்கம்

தமிழ் ஓவியா said...

பேராசிரியர் முனைவர் அரங்க. இராமலிங்கம்

நிறைவு விழாவில் சிறப்புப் பேச்சாளர், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையின் தலைவர் பேராசிரியர் முனைவர் அரங்க. இராம லிங்கம் தமிழ்ச்சித்தர் சிந்தனைகள் எனும் தலைப் பில் உரையாற்றினார். அவரது உரையின் சுருக்கம்:

தமிழ்நாட்டில் பல்வேறு காலங்களில் வாழ்ந்த சித்தர்கள் சமூக சீர்திருத்தச் சிந்தனையாளர்களாக இருந்திருக்கின்றனர். சமூக அவலங்களை, ஏற்றத் தாழ்வுகளை, மூடநம்பிக்கைப் பழக்க வழக்கங்களை எதிர்த்து பேசியிருக்கின்றனர். அவர்களிடம் இருந்த மாபெரும் குறைபாடு நிறுவன அடிப்படையில் அவர்கள் செயல்படாததே. தனிப்பட்ட சிந்தனை யாளர்களாகவே அவர்கள் இருந்திருக்கின்றனர். சித்தர்களிடம் பழகிய, பாடம்படித்த சீடர்கள் தாங்கள் கற்றதை வாழையடி வாழையாகவே கூறி வந்தனர். நிறுவன அடிப்படையில் செயல்படாமல், தனிநபர் சிந்தனையாளர்களாக சித்தர்கள் கூற்று இருந்தது.

ஒரு மாபெரும் சமுதாய இழப்பாகும். மேலும் சமூகச்சீர்திருத்தம் என சித்தர்கள் வலி யுறுத்தும் பொழுது; ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தியவர்களின் எதிர்ப்பையும் அவர்கள் சந்திக்க நேர்ந்தது. ஆதிக்கவாதியினர் தங்களுக்கே உரிய திரிபுவாத அணுகுமுறையால் சித்தர் கூற்றுகளாக வந்த இலக்கியங் களில் தங்க ளுக்குச் சாதகமான பல் வேறு இடைச்செரு கல் களைச் சேர்த்து விட்டனர். இடைச்செருகல்கள் சித்தர்களின் கூற்றை பலவீனப்படுத்தி விட்டன. சிலநேரம் கேலிக்கும் உள் ளாக்கிவிட்டன. சாதியஅடக்கு முறையினை எதிர்த்தார்கள் சித்தர்கள்.

சடங்குகளை, சாஸ்திரங்களை எதிர்த்தே வந்துள்ளனர். மனிதன் கட்டிய இடம் கோயில்; கட வுள்கட்டியது மனித உடம்பு.அதை தேகாலயம் எனக் குறிப்பிட்டனர். ஆலயத்தில் கர்ப்பகிரகம் முக்கியம். தேகாலயத்திற்கு கர்ப்பகிரகம் தலைதான். தலைதான் பிரதானம். சிந்தனை சார்ந்த உடல்பகுதி தலை. சிந்தனைகள் முழுமயானால் தானே கடவுள் எனும் நிலைக்கு உயரலாம். கடவுள் என்பது வெளியில் இல்லை. நமக்கு உள்ளேதான் கடவுள் இருக்கிறார்.

இப்படிப்பட்ட கூற்றுகளை சித்தர் இலக்கியங்களில் காண முடிகிறது. அறிவைக்கொண்டு ஆராய வேண்டும் என்பதே அடிப்படை. பாமர மக்களிடம் சீர்திருத்தக் கருத்துகளை எடுத்துச்செல்லும் பொழுது அவர்களுக்கு ஒரு பிடிமானம் வேண்டும் என்பதற்காகவே கடவுள் உண்டு எனும் கருத்து சித்தர்களால் வலியுறுத்தப்பட்டது. பெரியார் இயக்கத்திற்கும், சித்தர்களுக்கும் சமூக சீர்திருத் ததைப் பொறுத்த அளவில் வேறுபாடு இல்லை. கடவுள் உண்டு எனும் நிலைப்பாட்டில்தான் வேறுபாடு தென்படுகிறது. சித்தர் இலக்கியங்களில் அவர்களது சீர்திருத்த சிந்தனைப் போக்கிற்கு முரணான இடைச்செருகல்கள் ஆய்வு அடிப் படையில் இனம் காணப்பட்டு நீக்கப்படவேண்டும். -இவ்வாறு அவர் பேசினார்.

திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்வு வருகை தந்தோருக்கு கருத்து விருந்தாக அமைந்தது.

தமிழ் ஓவியா said...


மாற்றுத் திறனாளிகள் கோயிலில் வழிபடத் தடையா?


மாற்றுத் திறனாளிகள் தோல் செயற்கை உறுப்புகளுடன்

கோயிலில் வழிபடத் தடையா?

மனித உரிமைக்கு எதிரான போக்குக்கு கண்டனம்!

தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை

தமிழ்நாடு இந்து அறநிலையப் பாதுகாப்பு துறையின் சுற்றறிக் கையில்: மாற்றுத் திறனாளி தோல் செயற்கை உறுப்பு களுடன் கோயிலில் வழிபட வழி யில்லை என்று தெரிவித்திருப் பது, மனித உரிமைக்கு எதிரான போக்கு என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள முக்கிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் நோக்கம் - அது சட்டம் இயற்றிய நீதிக்கட்சி காலத்திலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தணிக்கையே தவிர, இந்து மத பிரச்சாரம் செய்வதோ, பக்தியைப் பரப்புவதோ அல்ல.

(அ) இந்திய அரசியல் சட்டத்தில் கூட, மத விஷயங்களில், உள் தத் துவங்கள், முதலியவற்றைத் தவிர, பல வகையில் சீர்திருத்தம் செய்யவும் தெளிவாக இந்திய அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளில் பிரிவு 25இல் (Article) மதச் சார்பற்ற மற்ற விஷயங் களில் அரசுகள் தலையிட, மாற்றம் செய்ய உரிமை உள்ளது.

(ஆ) இந்த உரிமைகளில்கூட எல்லை வகுக்கப்படாத முழு உரிமை கள் (Absolute Rights) அல்ல, பொது அமைதி, பொது ஒழுக்கம், சுகாதாரம், இவற்றோடு இந்திய அரசியல் சட்டத்தின் இந்தப் பிரிவின் மற்ற விதிகள் இவைகளுக்குட்பட்டதே அவ் வுரிமைகள்.

இந்த நிலையில், தமிழ்நாடு இந்து அறநிலையப் பாதுகாப்பு துறையின் சுற்றறிக்கை, ஆணை - மாற்றுத் திறனாளிகளாக உள்ள பக்தர்கள் ஊன்றுகோல், மற்றும் செயற்கைக்கால் மற்றும் செயற்கை உபகரணங்களில் தோல் சம்பந்தப்பட்ட பொருட்களினால் செய்யப்பட்டுள்ளது என்பதனால், கோயில்களில் வழிபட அத்தகைய மாற்றுத் திறனாளிகளை கோயில் இறை சன்னதி வரை சென்று வழிபடச் செய்ய வழி இல்லை என்பது போன்ற நிலை - மனிதநேயத்திற்கும், மனித உரிமைக்கும் முற்றிலும் மாறுபட்டதாகும்.

தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு இதுபற்றி 6.9.2012-இல் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைக்கு இந்த நிலையை அனுமதிக்காததை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

இன்று கோயில் உள்ளே எண்ணெய் விளக்குக்குப் பதில் மின்சார விளக்கு களைப் போடுவதும், பெரிய கோயில் களில் ஏர்கண்டிஷன் உட்பட செய்துள்ள தும், பக்தர்களைக்கூட மெட்டல் டிடெக் டர் வைத்து சோதித்து அனுப்பும் முறை யும், திருப்பதி லட்டு, பழனி கோயிலில் இழுவை ரயில் மூலம் கோயிலுக்கு அனுப்புவதும், ஆகம விதிகளில் உண்டா?

ஆண்டவன் சேவைக்கு அனுமதிக் கட்டணம் வசூலிக்க ஆகமங்கள் கூறு கின்றனவா?

எல்லா கோயில்களும் ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளனவா?

ஆகம விதிப்படி கட்டப்படாத கோயில்கள் அறநிலையப் பாதுகாப்பு துறையின்கீழ் இருக்கலாமா? இருக் கிறதே - அதற்கென்ன பதில்?

மாற்றுத் திறனாளிகளுக்கு, மற்ற மனிதர்களுக்கு உள்ள உரிமை மறுக்கப் படக் கூடாது என்ற நியதி அடிப்படை யிலேயே நாம் இதனை சம்பந்தப்பட்ட துறைக்குத் தெரிவித்து கேட்கிறோம்.

உடனடியாகப் பரிகாரம் கிடைக்கா விட்டால், மனித உரிமை ஆணையம், நீதிமன்றங்கள் மூலம் தீர்வு காணப்பட நேரிடலாம். அந்நிலைக்கு முன்பே பரீசிலித்து நீதி வழங்கிடுவது அவசியம், அவசரம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

18.11.2012, சென்னை

தமிழ் ஓவியா said...


சிவசேனைத் தலைவர் பால்தாக்கரேயின் மறைவுக்கு இரங்கல்


சிவசேனா இயக்கத் தலைவர் பால்தாக்கரே மறைவு குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:

மராத்திய மாநிலத்தின் மகத் தான தலைவராகத் திகழ்ந்த 86 வயது நிறைந்த சிவாஜி சேனை என்ற சிவசேனை கட்சியின் நிறுவனர் பாலாசாகேப் என்று மரியாதையாக அனைவராலும் அழைக்கப்பட்ட பால்தாக்கரே அவர்கள் நேற்று (17.11.2012) பிற்பகல் 3.30 மணிக்கு காலமானார் என்ற துயரச் செய்தி, மராத்திய மாநில மக்களின் உரிமைகளுக்காக எப்போதும் போர்க் குரல் எழுப்பிய ஒரு அத்தியாயத்தின் சோகமான முடிவாகும்.

அவருடைய கொள்கைகளில் மாறுபடும் நம்மைப் போன் றவர்கள்கூட, அவருடைய ஒளிவு மறைவு அற்ற அணுகு முறையை, துணிச்சலைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

மராத்திய மண்ணின் மைந்தர்களின் உரிமைக்கே முன்னுரிமை தந்து பாடுபட்ட கருத்தியலை, முன் வைத்தவர். அதன் விளைவாகவே மராத்திய மாநிலத்தின் தனிப் பெரும் செல்வாக்கு படைத்த தலைவராக இறுதிவரை தலைதாழாது வாழ்ந்து வரலாறு படைத்தவர் அவர்.

அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தவர்கள், சிவசேனைக் கட்சியினர் ஆகியோருக்கு நாம் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.18.11.2012, சென்னை

தமிழ் ஓவியா said...

யானைகளுக்கு அடித்த யோகம்?

கோவில்களுக்குச் சொந்தமான 45 யானைகளுக்கு சிறப்பு நல்வாழ்வு முகாம் - முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு. ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் ஒருபுறம்; நாள் ஒன்றுக்கு ரூபாய் இருபதே வருமானம் உள்ள மக்கள் மற்றொருபுறம். இந்த நிலையில் கோயில் யானைகளுக்குச் சிறப்பு நல வாழ்வு முகாமாம். கோயில்களுக்குச் சொத்துக்களா பஞ்சம்? வருமானமா குறைவு? அதைக் கொண்டு யானைகளைப் பராமரிக்கக் கூடாதா?

ஓ, யானை என்றால் சாதாரணமா? யானை முகத்தான் பிள்ளையார் ஆயிற்றே! கஜேந்திரனாயிற்றே - அதனால்தான் முதலமைச்சரின் பிரத்தியோக கவனிப்போ

தமிழ் ஓவியா said...

இங்கல்ல...

எகிப்தில் பள்ளிக்கூட பேருந்து மோதி 47 குழந்தைகள் பலி! எகிப்தில் நடந்த இந்த விபத்துக்குப் பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலகினார். ஏதோ ஓர் ஆறுதல்! நம் நாட்டில் மட்டும்தானா, பள்ளிப் பேருந்தில் பிள்ளைகள் பலி! எகிப்திலும்தான் என்று இங்குள்ளோர் சமாதானம் அடையாமல் இருந்தால் சரி!

பள்ளிக் குழந்தைகள் பலியானதற்குப் பொறுப்பே ஏற்று அங்கு அமைச்சர் பதவி விலகி இருக்கிறாரே! நம் நாட்டில் நடக்குமா? பிடரியைப் பிடித்துத் தள்ளினால்தான் உண்டு. சகலத்தையும் சம்பாதிக்கும் அமைச்சர் பதவி யாயிற்றே! சுலபத்தில் விட்டு விடுவார்களா?

தமிழ் ஓவியா said...

சபரிமலை

சபரிமலையில் மண்டல பூஜை விழா நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. பக்தர்கள் திரண்டனராம். சபரிமலை செல்லும் பக்தர்கள் வருடா வருடம் சரணம் போட்டு கரணம் அடித்து மரணம் தழுவுவது உண்டு பத்திரமாகத் திரும்பினால் மகிழ்ச்சியே!

ஆமாம் சென்ற ஆண்டு சென்று வந்த பக்தர்களுக்குக் கடந்த ஓராண்டில் பெற்ற நலன்கள் என்ன? வருமானம் பெருகிற்றா? கடன் தொல்லையிலிருந்து விடுபட்டனரா?

அவருக்கோ அவருடைய வீட்டில் உள்ள வர்களுக்கோ உடல் நலம் பாதிக்கப்பட்டதே யில்லையா? ஏற்கெனவே உடல் நலம் பாதிக் கப்பட்டவர்கள் உடல் நலன் பெற்று விட் டனரா? இப்படியெல்லாம் கூட்டல் கழித்தல் கணக்குப்போட்டுப் பாருங்கள்! உங்களுக்கே உண்மை புரியும். ஓர் எச்சரிக்கை! பம்பா நதியில் மலம் மிதக்கும், தயவு செய்து வாய் கொப்பளிக்காதீர்கள்!

தமிழ் ஓவியா said...

நம்பிக்கை?

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை முதலாக வைத்து மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லாத தீர்மா னத்தைக் கொண்டு வருவோம் என்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல் அமைச்சருமான மம்தா.

இடதுசாரிகளோ வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் என்று சொல்கின்றன. மற்றவர்கள் வாக்கெடுப்பு எல்லாம் வேண்டாம். வெறும் விவாதம் மட்டும் நடந்தால் போதும் என்றும் சொல்கின்றனர். முதலில் எதிர்க்கட்சி களுக்கிடையே நம்பிக்கைத் தீர்மானம் உருவாகவில்லையே!

குடியரசுத் தலைவர் தேர்தலிலேயே அணிமாறி வாக்கு அளித்த எதிர்க்கட்சியினர் - இதில் எப்படி நடந்து கொள்வார்களாம்!

எந்தக் கட்சியும் இப்பொழுது உடனடியான பொதுத் தேர்தலை விரும்பவில்லை. இரண்டு ஆண்டுகாலம் எஞ்சியிருக்கக் கூடிய பதவி சுகத்தை இழக்க விரும்புவார்களா, என்ன?

காங்கிரஸ் ஒன்றை மட்டும் உணர வேண்டும் பொதுத் தேர்தலுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான அவகாசம் தான் இருக்கிறது. வேலியில் ஓடும் குச்சிப் பூச்சியைக் காதில் விட்டுக் கொண்ட (தந்தை பெரியார் உதிர்த்த பழமொழி இது!) கதையாக காங்கிரஸ் ஏன் நடந்துகொள்ள வேண்டும். அரசியல் தெரிந்தவர் பிரதமராக இருந்தால் தானே ஓட்டைப் பற்றிக் கவலை இருக்கும்?

தமிழ் ஓவியா said...

மருத்துவர் கண்டனம்?

கேரளாவில் நாடார் சமுதாய மக்கள் மீது - போலீஸ் தடியடி - டாக்டர் ராமதாசு கண் டனம்! சரிதான் கண்டிக்கப் பட வேண்டியது தான் - முதலில் தருமபுரி மாவட்டத்தில் மூன்று தாழ்த்தப்பட்டோர் வாழும் கிராமங்கள் கொளுத்தப்பட்டனவே! அதற்கொரு கண்டனத்தையும் காணோமே! காரணம் - உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி நிலைமையோ!

தமிழ் ஓவியா said...

நிதி நெருக்கடி!

கட்டுமானத்திற்கான அனுமதி கிடைப் பதில் தாமதம் மற்றும் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறித்த நேரத்தில் பணி முடிக்க முடியாத நிலையில் பணச் செலவு அதிகரிக்கிறதாம்.

இந்த உண்மை நம் நாட்டில் உள்ள நீதிமன்றங்களுக்குத் தெரியவில்லையே! சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தின் மதிப்பீடு ரூ.2400 கோடி. பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருக்க வேண்டிய திட்டம். இந்நேரம் கப்பல்கள் ஓடிக் கொண்டு இருக்கும். தமிழக முதல் அமைச்சரும், ஓர் அனாமதேயப் பேர்வழியும் போட்ட வழக்கில் திட்டப் பணிகள் முடக்கப்பட்டு விட்டன. உச்சநீதிமன்றமும் இடைக்காலத் தடையை விதித்தது. இதன் விளைவு திட்டப் பணிக்கான செலவினம் பல மடங்கு எகிறி விடாதா?

தமிழ் ஓவியா said...

ஏழுமலையான்?

கோவை மாவட்டம், வெள்ளக்கோயில் ஊரைச் சேர்ந்த தொழில் அதிபர் பரணீதரன் (வயது 42) மற்றும் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த அய்ந்து பேர்களும் திருப்பதி சென்று ஏழுமலையானைத் தரிசனம் செய்து காரில் திரும்பியபோது - ஈரோடு, கருங்கல்பாளையம் அருகே விபத்து ஏற்பட்டு, காரின் முன் பகுதியில் உட்கார்ந்திருந்த தொழிலதிபர் நசுங்கிச் செத்தார் என்பது வருத்தத்திற் குரியது. ஒன்றை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பார் கோவிந்தன் என்று கூறுவோரே, வினையைத் தீர்ப்பது பிறகு இருக்கட்டும். பக்தர் பரணீதரன் வாழ்வே தீர்ந்துவிட்டதே! இதுதான் தீர்த்து வைப்பவரின் லட்சமணமா?

தமிழ் ஓவியா said...


குற்றங்கள் கூறலாம் ஆனால் தீர்ப்புகளை எழுதலாமா? ஊடகங்களை நோக்கித் தமிழர் தலைவர் கேள்வி


சென்னை, நவ.18- ஊடகங்கள் செய்திகளை வெளியிடலாம்; குற்றங்களைக் கூட எடுத்துக் காட்டலாம். ஆனால் தீர்ப்புகளையும் அவையே எழுதலாமாஎன்ற வினாவைத் தொகுத்தார் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்கள்.

கலைஞர் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப் பாகும் எத்தனை கோணம்! எத்தனைப் பார்வை!! பத்திரிகையாளர் தம்பிராஜாவுடன் சிறப்பு விவாத நிகழ்ச்சியில் 13.11.2012 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி பங்கேற்றார்.

நிகழ்ச்சி விவரம் வருமாறு:

செய்தியாளர்: இன்றைக்கு பொதுவாக நாம் பத்திரிகை, ஊடகங்களை நாட்டினுடைய நான் காவது தூண் என்ற ஒரு சிறப்பு விகுதி கொடுத்து அழைக்கின்றோம்.

நாட்டின் நான்காவது தூண்

அதிகாரவர்க்கம், நீதித்துறை, சட்டமன்றம், நாடாளுமன்றம் இவற்றிற்கு அடுத்தபடியாக, ஒரு நாட்டை சமூக ரீதியாக வலுப்படுத்துவதற்கு அந்த ஊடகமும், பத்திரிகையும் துணை புரி கின்றன என்கின்ற வகையில், அதனை நான் காவது தூண் என்று அழைக்கின்றோம்.

நீங்கள் நாட்டின் நான்காவது தூணை தற்பொழுது எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமையும், ஜனநாயகத்திலே ஆளுங் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, மக்கள் நலன் என்ற கண் ணோட்டத்தோடு செயல்படவேண்டிய ஒரு தூண்தான் ஏடுகள், பத்திரிகைகள் ஆகும்.

ஆனால், அண்மைக்காலத்திலே, இந்தப் பத்திரிகைகள், ஊடகங்கள் என்பது, அறிவியல் ரீதியாக வளர்ந்து, தொலைக்காட்சிகளாக, இணைய தளங்களாக இப்படி தகவல் தொழில் நுட்பத் துறையின் வளர்ச்சியின் காரணமாக வளர்ந்திருக்கின்றன. ஆனால், அதேநேரத்தில் சமுதாயத்தினுடைய தேவைகளைப் புரிந்து, ஒரு சார்பு நிலை இல்லாமல், அல்லது தங்களுடைய முதலாளிகளுடைய குரலை ஒலிக்கின்ற ஏடு களாக இல்லாமல், கொள்கை சார்ந்தவை களைக இருக்கவேண்டும் என்று கூட நாங்கள் நினைக்கவில்லை. மக்கள் சார்ந்தவைகளாக இருக்கவேண்டும் என்ற அளவிலே அந்த ஏடுகள், ஊடகங்கள் நடந்துகொள்ளவேண்டும்.

தமிழ் ஓவியா said...

ஆனால், அப்படியெல்லாம் அண்மைக் காலத் திலே இல்லை. ஊடகங்கள் உண்மைகளைத் திரித்துச் சொல்வது என்ற அளவிலே இருக் கின்றன.
சீத்தாராம் யெச்சூரி கூறினார்

அண்மையிலே ஒரு பத்திரிகையினுடைய 50 ஆவது ஆண்டு காலம். முற்போக்கான நாளேடு தான் - இடதுசாரிகளின் நாளேடாகும்.

அவ்விழா வில் கலந்துகொண்ட அந்தக் கட்சியினுடைய முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரி அவர்கள் உரையாற்றுகையில், ஊடகங்கள் உண்மைகளையும் சொல் வதில்லை, அதேநேரத்திலே கற்பனை செய்தி களை வெளியிடுகின்றன என்று கூறியுள்ளார்.

அவ்விழாவில் கலந்துகொண்ட ஒரு மூத்த பத்திரிகையாளரும் இதே கருத்தைத்தான் சொல்லியிருக்கிறார்.

77 ஆண்டு விடுதலையின் ஆசிரியர்

ஆகவே நாம் சொல்வதைவிட, மற்றவர்களே கூட இப்பொழுது ஊடகங்கள் என்பவை உண்மைகளைச் சொல்வதற்குப் பயன்படக் கூடிய ஆயுதங்கள் அல்ல; அவையெல்லாம் ஒரு காலத்தில் அறிவாயுதங்கள்; சமுதாயத்தினை வழிநடத்தக் கூடிய கலங்கரை விளக்கங்கள். ஆனால், இன்றைக்கு அப்படி இல்லை. அதற்கு மாறாக, ஒரு சார்பு நிலை என்பது மட்டுமல்ல, இன்னும் வெட்கத்தோடு சொல்லவேண்டு மானால் - ஏனென்றால், நானும் அய்ம்பதாண்டு காலங்களாக ஆசிரியராக இருக்கின்ற - ஒரு மிகப் பிரபலமான பத்திரிகையினுடைய - எழுபத்தேழு ஆண்டுகளாக நடைபெறுகின்ற ஒரு நாளேட் டின் ஆசிரியர் என்ற முறையில் வெட்கத்தோடு சொல்வதானால், விலை பேசுகின்ற (ஞயனை சூநறள) ஒரு நிலையும் இருக்கிறது.

இவ்வளவு விலை கொடுத்தால், அந்தச் செய்திகளை நாம் வெளியிடலாம் என்ற அளவில் இருக்கிறது.

செய்தியாளர்: அந்த விழாவில் பேசிய சீதாராம் யெச்சூரி அவர்கள், ஒன்றை முக்கியப் படுத்தி இருக்கிறார். ஒரு பிரச்சினை தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலே நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றபோதே, இந்த ஊடகங்கள் தங்களுக் குள்ளே ஒரு வழக்கு விசாரணையை நடத்தி, அதனுடைய தீர்ப்பை, இவர்கள் நினைக்கின்ற தீர்ப்பை, மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று திணிக்கின்ற போக்கை இன்றைக்குப் பல இடங்களில் பார்க்கின்றோம் என்ற கருத்தினை சீதாராம் யெச்சூரி சொல்லியிருக்கிறார்.

ஊடகங்களின் போக்கு

தமிழர் தலைவர்: அது நூற்றுக்கு நூறு உண்மை. அது ஒரு தவறான போக்கும் கூட! ஏனென்றால், ஊடகங்கள் உண்மைகளை வெளியே கொண்டு வரலாம். அதே நேரத்திலே, அவைகளைத் திரித்துச் சொல்லுவது, கற்பனை யாக செய்திகளைச் சொல்லுவது என்பதையெல் லாம்விட தாண்டி, எல்லை தாண்டிய ஒரு நிலைக்குச் சென்று விடுகிறார்கள்.

குற்றம் சொல்கின்றவர்களும் அவர்களே, விசாரணை செய்கின்றவர்களும் அவர்களே, தீர்ப்பு எழுதுகிறவர்களும் அவர்களே என்று - எல்லாம் நாங்களே என்று சொல்லுகின்ற அவல நிலை இன்றைக்கு இருக்கிறது.

செய்தியாளர்: இந்தத் தீர்ப்பை மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்கிற வகையில், மூளைச்சலவை செய்கிறார்கள் அல்லவா!

மூளையில் சாயம் ஏற்றும் வேலை

தமிழர் தலைவர்: மூளைச் சலவை என்று சொல்வதைவிட, மூளைச் சாயம் ஏற்றுகிறார்கள். ஏனென்றால், சலவை என்பது நல்ல வார்த்தை. அழுக்கு ஏறி இருந்தால் சலவை செய்யலாம். மூளைச் சாயம் ஏற்றுகிறார்கள் அவர்கள். இவர்கள் மக்களுக்கு மூளைச் சாயம் ஏற்றுவதை விட மிக ஆபத்தானது என்னவென்றால், ஒரு செயலைப்பற்றி, ஒரு குற்றத்தை இவர்கள் விளம்பரப்படுத்தினால், இன்றைக்குத் தொலைக் காட்சி இல்லாத வீடுகளே இல்லை, எல்லா இடங்களிலும் தொலைக்காட்சி உள்ளது. விசாரணை செய்திகளை முந்திக்கொண்டு, யார் விசாரிக்கின்றவர்களாக - நீதித்துறையிலே அமைகிறார்களோ, அவர்களும் சேர்ந்து இதனைப் பார்க்கிறார்கள்.

நீதிபதிகள் மனதிலும்...

பார்க்கிறபொழுது, எல்லா நீதிபதிகளும் உண்மைகளை உடனடியாகப் புரிந்துகொள் கிறவர்களாக; அந்தப் பக்குவத்தைப் பெற்றவர் களாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது; ஆனால், இருக்கவேண்டும்.

ஆனால், அவர்களிலேயே பலருக்குத் தவறான நிலைப்பாட்டை - ஒரு தவறான கருத்தை ஒருவர் அதிகமாகத் திரும்பத் திரும்பச் சொன்னால், பொய்யுடை ஒருவன் சொல் மெய் போலுமே, மெய்போலுமே என்பதற்கொப்ப, அவர்கள் மனதிலேகூட, (பொதுமக்கள் மன திலே படிந்தால்கூட விளைவு சாதாரணமானது) யார் தீர்ப்பு எழுதப் போகிறார்களோ, அவர்கள் மனதிலே இந்தக் கருத்து உள்ளே புகுந்து பதி வாகிவிட்டால், அதிலிருந்து அவர்கள் வெளி யேறுவது என்பது அவ்வளவு எளிதல்ல. இதனால் பாதிக்கப்படக் கூடிய சமுதாயத்த வர்கள் என்பதைவிட, உண்மையான - நிரபராதிகள் பாதிக்கப்பட்டு, குற்றவாளி களாக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

தமிழ் ஓவியா said...

மக்கள் நலனைச் சார்ந்து இருக்கிறதா?

செய்தியாளர்: நீங்கள் நீண்ட காலமாக நாட்டினுடைய வரலாற்றைப் பார்த்து வரு கிறீர்கள். தமிழகத்தின் வரலாறு மட்டுமல்ல, அகில இந்தியாவினுடைய வரலாற்றையும் உற்று நோக்கி வருபவர். சுதந்திரத்திற்கு முன்பு, நாட்டினுடைய சுதந்திரத்தைப் பெறுவதற்கு பத்திரிகைகளின் பெரும் பங்கு இருந்திருக்கிறது. அவை ஆட்சியாளர்களுக்குச் சாதகமாக இல்லாமல், எது உண்மை நிலையோ அதனைச் சொல்லி, சுதந்திரப் போராட்டத்தில் அவர்களும் ஒரு பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார்கள். அதற் கடுத்தபடியாக, தந்தை பெரியார் தலைமையில் தமிழகத்தில் நடைபெற்ற சமூகநீதிப் போர் - இதிலும் பத்திரிகைகள் ஆற்றிய பங்கு, அடுத்து எழுத்தாளர்கள் ஆற்றிய பங்கு, நூல்கள் வாயிலாக மக்களைச் சந்தித்த போக்கு - இவை எல்லாவற்றிலும் ஒரு நேர்மையான ஒரு அணுகுமுறை. மக்களுக்கு எது நன்மையை பெறவேண்டுமோ அதை நோக்கிச் சென்றது. ஆனால், இன்றைக்கு பத்திரிகைகள், ஊடகங் களின் போக்கு, மக்களின் நலன் சார்ந்து அமைகிறதா?

தமிழர் தலைவர்: நிச்சயமாக இல்லை. காரணம் என்னவென்று சொன்னால், இரண்டு செய்திகளைச் குறிப்பிடவேண்டும். நெருக்கடி காலத் தணிக்கை
சுதந்திரப் போராட்டம் என்று சொல்லக் கூடிய இந்த நாட்டிலே, - இன்னொரு அன்னிய அரசு இருந்த நேரத்திலேகூட, ஏடுகள் துணிந்து பல கருத்துகளை எதிராக வெளியிட்டு, அதற் குரிய விளைவுகளைச் சந்தித்தன. அந்த விளைவு களிலே இருந்து அவர்கள் மாறவில்லை. அது போலவேகூட, நெருக்கடி காலகட்டத்தில், குறி வைத்து தாக்கப்பட்டவைகள் ஊடகங்கள்; அந்த ஊடகங்களிலே சில ஊடகங்கள் நம்முடைய நாட்டிலே நடக்கக்கூடிய நாளேடுகள் ராம்நாத் கோயங்கா போன்றவர்கள் கூட - எத்தனையோ முறை குறி வைத்துத் தாக்கப்பட்ட நேரத்தில், அவர்கள், நான் சாதாரணமாக வந்தேன்; எதை வேண்டுமானாலும் இழந்துவிட்டுப் போவதற்குத் தயாராக இருக்கிறேன் என்று சமாளித்தார்கள்.

தமிழ் ஓவியா said...

அதுபோல, விடுதலை, முரசொலி போன்ற ஏடுகளிலே, எந்தக் கருத்துகளையும் எழுதக் கூடாது; நாங்கள் தணிக்கை செய்து கொடுப் போம் என்றார்கள்.

பெரியார் ஆரம்பித்த விடுதலையிலே, தந்தை பெரியார் என்று எழுதக் கூடாது என்று தணிக்கை அதிகாரி சொன்னார். முடியாது என்று மறுத்துவிட்டார்கள்.
இவைகளையெல்லாம் தாண்டி, அன்றைக்குப் பத்திரிகைகள் தங்கள் உரிமைகளை நிலைநாட் டின.

முதல் சுதந்திரப் போராட்டக் காலம், இரண் டாவது சுதந்திரப் போராட்டக் காலம் என்று கருத்துச் சுதந்திரத்திற்காக நடந்த போராட் டங்கள் இவை எல்லாவற்றிற்கும் இருந்தன.

ஒவ்வொரு காலகட்டத்திலும், நம்முடைய ஏடுகள் அரசாங்கத்தினாலே, வெள்ளைக்காரர் கள் காலத்திலிருந்து ஜாமீன் பெற்றிருக்கிறார் கள். தடைகள் வந்திருக்கின்றன. குடிஅரசு ஏட்டிற்குத் தடை வந்த உடனே, புரட்சி என்று வேறொரு பெயரிலும், பகுத்தறிவு என்ற மற்றொரு பெயரிலும் அந்தப் பத்திரிகையை நிறுத்தாமல் தொடர்ச்சியாக வந்திருக்கிறது.

இப்படியெல்லாம் கடும் விலை கொடுத்து, தம் லட்சியங்களைச் சொல்வதற்காக உண்மை களைச் சொன்னது ஒரு காலம்.

ஆனால், இன்றைக்கு லட்சியங்களைப் பற்றியே கவலைப்படாமல், லட்சங்களைப் பற்றியோ, கோடிகளைப்பற்றியோ கவலைப் படுவதைப்போல, பல ஊடகங்கள் நடந்து கொள்வது; அச்சுறுத்துவது ஆங்கிலத்திலே சொல்லவேண்டுமானால், பிளாக்மெயில் செய்வதைப்போல, ஆதாரமில்லாத செய்தி களைச் சொல்வது என்பது போல உள்ளன.

தமிழ் ஓவியா said...

விலை போகும் ஊடகங்கள்...

ஊடகங்கள் என்பது பத்திரிகைகள் மட்டும் தான் முன்பு - ஆனால், இப்பொழுது தொலைக் காட்சிகளும், இணைய தளங்களும் சேர்ந்திருக் கின்றன. ஃபேஸ் புக் என்று சொல்லக்கூடிய வலை தளங்களும் சேர்ந்திருக்கின்றன. சேர்ந்திருப்பது வளர்ச்சி என்பதைவிட, ஒரு பக்கத்தில் ஒழுக் கத்தைப் பொறுத்தவரையிலே, லட்சியத்தைப் பொறுத்தவரையிலே தளர்ச்சிதான் ஏற்பட்டிருக் கிறது. ஏனென்றால், விலை பேசுகிறார்கள்; அதற்காக வழக்கும் போடுகிறார்கள்.

செய்தியாளர்: பேனா முனை, வாள் முனையை விட மிகவும் சக்தி வாய்ந்தது என்று சொல்வார்கள். ஏனென்றால், வாள் எந்தக் காரியத்தைச் செய்கிறதோ, அதைவிட அதிகமாக பேனா முனை செய்யும் என்று சொல்வார்கள். ஆனால், சிலர் தங்களுக்கு ஏற்றபடி, இந்த சமுதாயத்தை வளைக்கக் கூடியதற்கு வாய்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. உதாரணத்திற்கு, இன்றைய இளைஞர்கள் மத்தியிலே சில விஷயங்களைப் புகுத்துவது, அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற வர்கள் சொல்கின்ற கருத்துகள், அவர்களின் போக்குகள் - முறைகேட்டை எதிர்த்து, ஊழலை எதிர்த்து அவர்கள் போராடுவதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு, அந்த ஊடகங் களோ, பத்திரிகைகளோ முட்டுக் கொடுத்து அவர்கள் செயல்படுகின்ற போக்கு ஒரு தவறான பாதைக்கு இளைஞர்களை வழிநடத்தி விடாதா?
உள்நோக்கம் உள்ளே இருக்கிறது

தமிழர் தலைவர்: நிச்சயமாக! ஒரு நல்ல செய்தியை நீங்கள் கொண்டு வந்தீர்கள். அதாவது இப்பொழுதிருக்கிற ஊடகங்களில் சில அல்லது தொலைக்காட்சிகள் சில - ஏதோ திடீரென்று ஊழலை ஒழிப்பதற்காக அவதாரம் எடுத்த வர்கள்போல் செயல்படுகிறார்கள். ஊழலை யாரும் ஆதரிக்க முடியாது. நாம் அவற்றை ஆதரிக்கக் கூடியவர்கள் அல்ல; அதற்கு எதிரிகள்.

அதேநேரத்தில், ஊழலை ஒழிப்பதாகச் சொல்லிக் கொண்டு வருகிறவர்கள், உள்நோக்கம் இல்லாமல், அல்லது வேறு நோக்கத்தை உள்ளே வைத்துக்கொண்டு வெளியே வேறொரு நோக் கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

இதே கெஜ்ரிவால் போன்றவர்கள் ஏற்கெனவே அன்னா ஹசாரேவுடன் இருந்தனர். ஏன் இவர் தனியாக வந்தார்? அப்படி வருவதற்கு என்ன காரணம்? தான் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொன்னார். அதற்கு என்ன படிக்கட்டு என்று பார்த்தவுடனே, ஊழலை ஒழிக்கக் கிளம்பியவர்களின் யோக்கியதை என்ன?

18 வயதுள்ள இளைஞர்கள் அதிகம் பத்திரிகை களைப் படிக்காமல், தொலைக்காட்சி, குறுஞ் செய்தி இவைகளை நம்பிக் கொண்டிருக்கின்ற இளைஞர்களை திசை திருப்பலாம் என்பதைப் போல, திடீரென்று சொல்லுகிறார்.

அதேநேரத்திலே, அவரைப் பற்றி சில செய்தி கள் வருகின்றன. அதை அவரால் மறுக்க முடியவில்லை. அது என்னவென்றால், ஒரு பிரபலமாக இருக்கக் கூடிய கம்ப்யூட்டர் நிறுவனம் - இன்போசிஸ் நாராயணமூர்த்தி என்பவர், அவர் தெளிவாகச் சொல்கிறார்,

நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் 25 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறோம். இதுவரையில் ஒன் றரை கோடி ரூபாய் கொடுத்திருக்கிறோம் என்றார்.

அதுமட்டுமல்ல, அமெரிக்காவிலே இருக்கக்கூடிய வெளிநாட்டு அமைப்புகளில் இருந்தும் பணம் வாங்கி இருக்கிறார். இவர் ஏற்கெனவே வருமான வரித் துறையிலே அதிகாரி யாக இருந்து, பின்பு ஓய்வு பெற்றவர்.

இவர் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை லாபகரமில்லாமல் (Non Profit Association) நடத்து கிறேன் என்று சொல்லிக்கொண்டு வெளிநாட்டி லிருந்து இவர் பணம் வாங்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

அதுமட்டுமல்ல, இவரிடத்திலே நான் பணம் கொடுத்தது தகவல் அறியும் உரிமைச் சட்டத் திற்காக மட்டும்தான் கொடுத்தேன் என்று - தானே முந்திக் கொண்டு திரு. நாராயணமூர்த்தி அவர்கள் ஒரு விளக்கம் சொல்கிறார். இந்த விளக்கம்தான் சந்தேகத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.

-தொடரும்