Search This Blog

17.11.12

ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திட இந்தியா முன்வர வேண்டும்!

ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டபோது அய்.நா.தன் கடமையைச் செய்யத் தவறிவிட்டது காலங் கடந்து அய்.நா.வும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில் அய்.நா.வுக்கு அழுத்தம் கொடுத்து, ராஜபக்சேவை
குற்றவாளிக் கூண்டில் நிறுத்திட இந்தியா முன்வர வேண்டும்!

பொது வாக்கெடுப்பையும் நடத்த வைக்க வேண்டும் டெசோவும் இந்த நேரத்தில் தன் கடமையைச் செய்யும் தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை


2009இல் ஈழத்தில் இலங்கை சிங்கள இனவாத அரசால் பல்லாயிரம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அய்.நா. அதனைத் தடுத்து நிறுத்தும் தன் கடமையைச் செய்யத் தவறி விட்டது என்று அய்.நா. பொதுச் செயலாளரே ஒப்புக் கொண்டுள்ள இந்தக் கால கட்டத்தில், இந்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் சிங்கள இராஜபக்சே அரசால் நடத்தப் பெற்ற தமிழர் இன அழிப்புப் படுகொலைகள் உச்சக் கட்டத்தில் 2009 வாக்கில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

விடுதலைப்புலிகள் ஈழத் தமிழரின் மான உரிமை மீட்பர்களாக இருந்து உயிரைக் கொடுத்து களத்தில் நின்று போராடிய நிலையில், லட்சக்கணக்கான அப்பாவி பொது மக்களான தமிழர்கள் வன்னிப் பகுதி போன்ற வைகளிலும்கூட இலங்கை அரசின் விமான குண்டு வீச்சாலும், மற்ற சிங்கள இராணுவ வன்கொடுமையாலும் பல வகையில் நாசத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள்.

90 ஆயிரம் தமிழச்சிகள் விதவைகளான கொடுமை!

கோயில்கள், பள்ளி வாசல்கள், சர்ச்சுகள் ஆகிய வற்றில் தஞ்சம் அடைந்த மக்களையும்கூட குறி வைத்து குண்டு வீசித் தமிழர்களை அழித்தனர். சுமார் 90 ஆயிரம் தமிழச்சிகள் போர்க் கொடுமையால் விதவைகளாக்கப் பட்டனர்! வன்புணர்ச்சிக்கும், மான பங்கத்திற்கும் ஆளான அவலங்கள் நம் இதயங்களில் இன்னமும் இரத்தம் வழியச் செய்கிறது.
செஞ்சிலுவைச் சங்கம் என்ற உலகப் பொது மருத்துவ அமைப்பு அதன் உதவியை அடிபட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்காமல் தடுக்கப்பட்டனர் சிங்கள இராணுவத்தால்!

அய்.நா. செய்த தவறும் - பான்-கீ-மூனின் ஒப்புதலும்

இந்தக் கால கட்டத்தில் அங்கு இருந்த அய்.நா. சபையில் அதிகாரிகள் உண்மையான நிலவரத்தைக் கூறி இந்தக் கொடுமையைத் தடுப்பதற்குக்கூட முன்வரவில்லை என்ற தகவல்கள் அண்மையில் அய்.நா. மனித உரிமை, போர்க் குற்றங்கள் பற்றி அலசி ஆராயப்படும் போது, ஓர் உள் அறிக்கையாக வெளிவந்து, அது கசிந்துள்ளது; அது உண்மைதான்; அய்.நா. தன் கடமையைச் செய்யத் தவறியது என்றும் அதனை நாம் பாடமாக எடுத்துக் கொண்டு இனி விழிப்போடு செயல்படுவோம் என்றும் அய்.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-முன் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் போன்று கூறியுள்ளது - அவரது பெருந் தன்மையையும், மனச் சாட்சியுடன் நடந்து கொள்ளும் ஒரு மாமனிதர் அவர் என்பதையும் உணர்த்துவ தாக அமைந்துள்ளது.

எழுத்தாளர் கார்டன்வைஸ்

இலங்கையில் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக அய்.நா.வின் அலுவலராக அக்கால கட்டத்தில் (வன்னிப் பேரவலம் நடைபெற்றபோது) பணியாற்றி பிறகு வெளியேறி தற்போது ஆஸ்திரேலிய தாயகத்தில் வாழும் பத்திரிகை யாளர்  - எழுத்தாளர் - கருத்தாளர் கார்டன்வைஸ் (ழுயசனந றுளைந) அவர்கள் முதன்முதலாக ஓராண்டுக்கு முன் 2011இல் எழுதிய ஆங்கில  நூல் கூந ஊயபந என்பதாகும். தமிழில் அது கூண்டு என்ற பெயரில்  இலங்கைப் போரும் விடுதலைப்புலிகளின் இறுதி நாட்களும் என்ற தலைப்பில் தமிழில் மொழியாக்கம் செய்து இரண்டு பதிப்புகள் வெளிவந்துள்ளது.
அந்நூலில் அப்பட்டமான பல உண்மைகளை அதாவது அய்.நா.வின் போர்க்கால செயலின்மை இலங்கையில் எப்படி என்பதை விளக்கியுள்ளார்கள். 2008இல் அங்கே நடந்த கொடுமைபற்றி கார்டன்வைஸ் அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

அன்று யூதர்கள் கொல்லப்பட்டது போலவே....

இறுதிக் கட்டத்தில், எவ்வளவு பேர் இறந்தனர் என்பது தெரிய வேண்டுமானால், எல்லா உண்மைகளும்  வெளிக் கொணரப்பட வேண்டுமென்றால், ஏழாண்டு களோடு நாம் நிறுத்தக் கூடாது. குறிப்பாக 1983இல், ஆயிரத்திலிருந்து மூவாயிரம் தமிழர்கள் வரை கொல்லப் பட்டனர்;   பல ஆயிரம் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
அக்கலவரங்களின்போது உடைகள் எல்லாம் களையப்பட்டு, தங்களை நோக்கிப் பாய்ந்து வரும் சிங்களக் கும்பலைப் பார்த்து நடு நடுங்கிக் கொண்டி ருக்கும் - கழுத்தில் டயர் மாட்டப்பட்டு, எப்போது அதற்குத் தீ வைக்கப்பட்டு தாங்களும் உடல் கருகி இறக்கப் போகிறோம் என்ற மரண பீதியில் இப்படிக் கொடுமையான முடிவுகளைச் சந்தித்த தமிழர் பலரது புகைப்படங்களை நாம் பார்க்க முடியும்!

கார்டன்வைஸ் மேலும் எழுதுகிறார்:

நாஜி ஜெர்மனியில் யூதர்களின் கடைகள் உடைக்கப் பட்டு, பலர் கொல்லப்பட்டு, 30,000 பேர்கள் வரை சித்ரவதை முகாம்களுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட   அக்கண் ணாடிகள் உடைந்த இரவு, கிரிஸ்டலில் நாட் எப்படி அய்ரோப்பிய வரலாற்றில் மிகக் கொடுமையான தொரு பகுதியோ, யூத  மனங்களில் ஆறாத ரணத்தை அச்சம்பவங்கள் ஏற்படுத்தினவோ, அதேபோல்தான் இலங்கைத் தமிழர் அனைவரையும் அக்கறுப்பு ஜூலை நாளும் மிக ஆழமாகப் பாதித்தது. ஜெர்மனியைப் போல், இலங்கையிலும் அரசே முன்னின்று அரங்கேற்றிய கொடுமைகள் தான் அவை. படுகொலை செய்து, சொத்துக்களை தீக்கிரையாக்கி, இனியும் அங்கு வாழ இயலாது என்ற அச்சத்தை உருவாக்கி, ஈழத் தமிழர்களை நாட்டைவிட்டே வெளியேறச் செய்த நாள், அச்சம்பவங் களின் உடன் விளைவு, சில நூறு பேர் மட்டும் இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பில், ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் இணைந்தனர்...

இதன் மூலம் தீவிரவாதம், பயங்கரவாதம் இலங்கை யில் பரவி விட்டது என கூறிய இலங்கை அரசுதான் அதனை உருவாக்கியது என்பது தெள்ளத் தெளியத் தெரியவில்லையா?

அதே ஆசிரியர் - 2008இல் போர் உச்சக் கட்டத்தில் இலங்கையில் நடந்தபோது அங்கே அய்.நா.வின் பங்களிப்பு எப்படி இருந்தது என்பதை (பக்கம் 181இல்) விவரிக்கிறார்.

கடமையைச் செய்யத் தவறிய அய்.நா.

இலங்கைச் சமூகமே அச்சத்தின் பிடியில் இருந்தது. எதிர்ப்பவர்கள் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்டார்கள். அரசை எதிர்த்து நிற்கும்  திராணியே அய்.நா. பன்னாட்டு நிறுவனத்திற்குத்தான் இருக்க முடியும்.
அப்படி இருந்தும் அய்.நா. மவுனம் சாதித்தது. தார் மீக ரீதியான தனது அதிகாரத்தைப் பயன்படுத்தத் தவறிய இலங்கை அரசின்மீது அழுத்தம் கொடுக்காம லிருந்தது. எல்லாமே குடிமை சமூகத்திற்கு, மனித உரிமை ஆர்வலர்களுக்குப் பின்னடைவுதான்

ஓராண்டுக்கு முன்னர் கார்டன்வைஸ் கூறிய தகவலை, அய்.நா. பொதுச் செயலாளர் இப்போது ஒப்புக் கொண்டு பாடமாக எடுத்துக் கொள்வதாக அறிவித் துள்ளார்!

இந்தக் கால கட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பு அய்.நா.விலும் சரி; இலங்கை அரசுக்கும் எச்சரிக்கும் வகையிலும் சரி முக்கிய பங்காற்றி, எஞ்சி இருப்பவர்களின் உரிமையை மீட்டு எடுத்து வாழ வைக்க  செயல்பட முன் வர வேண்டும்.

இந்தியா என்ன செய்ய வேண்டும்?

இலங்கை பற்றிப் பேசும்  போதும் இந்திய அரசு  கவலையளிக்கிறது, மெத்தவும் கவலை கொள்கிறது என்ற வழக்கமான வார்த்தைகளோடு நிறுத்தி விடாமல், ஆக்கப் பூர்வ விளைவுகளை ஏற்படுத்தும் வண்ணம் அழுத் தந்திருத்தத்துடன் அதனைப் போர்க் குற்றவாளியாக நிறுத்த வைக்க இந்தியா முன் வர வேண்டும். இதுவரை இந்திய அரசு செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தமாக அது இருக்கும். ஈழத் தமிழர்கள் மத்தியிலே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, அதனை எப்படியும் செயல்படுத்துமாறு போதுமான அழுத்தத்தை அய்.நா.வுக்கு இந்தியா அந்தரங்கச் சுத்தியோடு கொடுக்க வேண்டும்.

சரியான தருணத்தில் டெசோ டெசோ சரியான நேரத்தில் துவக்கப்பட்டு, சரியான திசையில், சரியான பார்வையோடு கலைஞர்  தலைமை யில் செயல்பட்டு வருகிறது; இந்த அய்.நா. உள் அறிக்கை கண்டு டெசோ மேலும் பல முடிவுகளை எடுத்து, இந்திய அரசுக்கும், அய்.நா. மன்றத்திற்கும் இந்திய அரசு மூலம் செயல்பட விரைந்து வற்புறுத்துவோம்.

அய்.நா.வின் பார்வையில், அணுகுமுறையில் நல்ல மாற்றம் காணும் இவ்வேளையில், அமெரிக்கா போன்ற பல நாடுகள் - மெக்சிகோ போன்ற நாடுகள் வலியுறுத்தும் இவ்வேளையில், போர்க் குற்றம் புரிந்த இலங்கையை உலக நாடுகள் முன் நிறுத்தும் வேளை நெருங்கி வருகிறது!

சென்னை                                                                                            கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
16.11.2012

21 comments:

தமிழ் ஓவியா said...


ஈழத்தமிழர் பிரச்சினை


இலங்கையில் உள்ள அமெரிக்கக் குழு அதிகாரி தமிழர் தலைவரை சந்தித்தார்

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களை இன்று (16.11.2012) காலை 10.30 மணிக்கு, பெரியார் திடலில், ஸ்ரீலங்கா, மாலத்தீவு ஆகியவைகளின் அமெரிக்க அரசு குழுவின் ஆலோசகர் மைக்கேல் ஹோனிங்ஸ்டெயின் அவர்கள் சந்தித்து, இலங்கைத் தமிழர் பிரச்சினைபற்றி சுமார் 45 நிமிடங்கள் விவாதித்து, தமிழ்நாட்டின் நிலைப்பாடு முதலியவைகளைப் பற்றி விரிவாகக் கேட்டதோடு கலந்துரையாடிச் சென்றார்.

அவருடன் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரக அரசியல் பொருளாதாரத் துறை அதிகாரி மேத்யூ பே, அலுவலக அரசியல் வல்லுநர் பிஃனிஜேக்கப் ஆகியோர் வந்து கலந்து கொண்டு விடை பெற்றுச் சென்றனர்.

தமிழ் ஓவியா said...


துறவியும் - நடன மாதும்!


காரில் பயணம் செய்யும்போது, வானொலி கேட்கும் பழக்கமுடையவன் என்பதால் இரண்டு நாள்களுக்குமுன், 75ஆம் ஆண்டு விழாவைக் கொண் டாடும் சென்னை வானொலியைக் கேட்கும்போது, இலக்கியப் புரட்சி எழுத்தாளர் பொன்னீலன் அவர்களது கணீர் குரலில் கதையொன்று ஒலித் தது!

ஒரு ஊரில் ஒரு துறவி. அவர் நமது ஆனந்தாக்களைப் போன்றவர்கள் அல்லர். உண்மையான துறவி - அவருக்குள்ள சிறப்பு சிறப்பாக ஓவியம் வரைதல்.

எவரையும் சிறப்பாக உயிரோட்டத் துடன் அவர் வரையும் ஓவியங்களால் இந்தத் துறவி பிரபலமானார்; ஆனால் அவரிடம் சென்று எவர் ஓவியம் வரையுமாறு கேட்டாலும் அதிகமான கட்டணம் கேட்பாராம்! அவரது வியத்தகு திறமையைப் போற்றுவதால், அதிக கட்டணம் கொடுப்பதற்கு பலர் தயங்குவதில்லையாம்!

இவரது பெருமையை, ஓவியத் திறமையைக் கேள்வியுற்று ஒரு நாட்டியக்காரியான பெண்மணி - அவரும் ரொம்ப பிரபலமானவர்தான் - தனது ஓவியத்தை இந்தத் துறவி வரைவாரோ மாட்டாரோ தெரிய வில்லை; எதற்கும் நேரிற் சென்று கேட்டுப் பார்ப்போமே என்று எண்ணி, அவரிடம் சென்று தனது வேண்டு கோளை - விருப்பத்தைத் தெரிவித்தார். கட்டணம் மற்றவர்கள் தருவதைவிட மூன்று மடங்கு நீங்கள் எனக்குத் தர சம்மதம் தெரிவித்தால் ஓவியமாக உங்களை வரைந்து கொடுப்பேன் என்றார்.

இருவரும் ஒப்புக் கொண்டு, ஓவியம் வரைந்து முடிந்தவுடன், வேண்டுமென்றே அவரைச் சிறுமைப்படுத்த எண்ணிய நாட்டியக்காரியான அந்த நடன மங்கை, இது என்ன ஓவியம் என்னை மாதிரியே இல்லை; எனக்குத் தேவையில்லை என்று கூறி பணத்தை மட்டும் கொடுத்து, வீசி விட்டு போய்விட்டார். இவரோ அதற்காக சலனப்படவே இல்லை! இப்படி இவரை அவமானப்படுத்தியும் மனுஷன் கவலைப் படவே இல்லையே; இவரை வேறு வகையில் சிக்க வைக்க வேண்டும். அவமானப்படுத்த வேண்டும் என்று ஒரு விஷமத் திட்டத்தைப் மனதிற்குள் போட்டுவிட்டு, அவரிடம் சென்று, அந்த ஓவியம் தான் சரியாக இல்லை; இன் னொரு ஓவியம் வரையுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை எனது உள் பாவாடையை தருவேன். அதில் என் உருவ ஓவியத்தை வரைந்து தருவீர்களா? என்று கேட்டார்.

துறவி, வரைவேன்; ஆனால் அதற்கு ஆறு மடங்கு கட்டணம் தர வேண்டும் - ஒப்புவீர்களா? என்றார்! உடனே இருவரும் ஒப்பந்தம் முடித்து விட்டபின், இந்தப் பெண்மணிக்கு மனதிற்குள் ஏமாற்றம் - சரியென்று வெளியே கிளம்பிவிட்டார்.

சில நாள்கள் கழித்து, நடன மாது காரில் போகும்போது வேறு ஒரு கிராமம் வழியே செல்லுகிறார். அங்கே ஒரு புறத்தில் இந்த துறவி நின்று யாரிடமோ எதையோ அந்த ஊரின் மக்களிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறார். இந்தத் துறவி அந்த ஊரைவிட்டு, இங்கே வந்திருப்பது ஏன் என்று விசாரித்தபோது, அம்மா இவர் தனது ஓவியங்கள் மூலம் திரட்டிய பெரும் பணத்தை எங்களூரில் சாலை, பள்ளிக் கூடம், மக்களுக்கு உதவிகள் - இப்படியே செலவழித்து, எங்கள் ஊரையே மிகப் பெரிய புதுமைபுரியாக மாற்றிட நாளும் உழைக்கிறார்; இப்படிப் பட்டவரை எளிதில் எங்கும் காண முடியாது என்ற சொன்னவுடன்தான் அவர் ஏன் எவ்வளவு அவமானத்தையும் பொதுக் காரியத்திற்காக தொண்டுக் காக ஏற்றுக் கொண்டு அப்படி பணம் திரட்டினார் என்பது அந்த நடன மங்கைக்குப் புரிந்தது!

பணத்தாசை பொது வாழ்வில் உள்ள சிலருக்கு ஏன் வருகிறது என்பது புரிகிறதல்லவா?

பொது வாழ்வில் மானம் பாராது பணி செய்யும் வகையில் பணம் திரட்டி அதை தனது ஜாதிக்கோ, உற்றார் உறவினர் களுக்கோ, வைத்துவிட்டு, அல்லது உயில் எழுதி வைத்துவிட்டுப் போகாமல் தொண்டறம் புரிந்த தந்தை பெரி யாரின் பணத்தாசை பற்றி பலர் பேசியதுதான் நினைவுக்கு வந்தது!

கையெழுத்துக்குக்கூட நாலணா, புகைப்படம் எடுக்க அய்ந்து ரூபாய் என்று கட்டணம் இப்படி வசூலித்து தனது சொந்த செல்வத்தையும் பொது மக்களுக்கே தந்து, பல்கலைக் கழகங் களும், மருத்துவமனைகளும், பகுத் தறிவுப் பிரச்சார பரப்புரை நிலையங் களும், கைவிடப்பட்ட குழந்தைகள், முதியோரை காக்கும் தொண்டறப் பணிகளுக்காகவும் அவர் திரட்டிய செல்வம் - பெரியாரின் திரண்டதனம் என்று சிலரால் வர்ணிக்கப்பட்டதற்குப் பொருள் அவருக்குப் பிறகு மக் களுக்குப் புரிந்தது.

தோழர் பொன்னீலனின் கதையைக் கேட்டபோது, பெரியாரையே அவரது தொண்டறத்தை உருவகப்படுத்திய தாகவே எங்களுக்குத் தெரிந்தது!

பணத்தைச் சேர்ப்பது முக்கியமல்ல. எதற்காக அது பயன்படுகிறது என்ப தல்லவா முக்கியம்!

துறவிகளுக்கு இப்படி ஆசை வந் தால் அதுவும் பொது நலத்தின் பாற் பட்டதென்றால் அது விரும்பத்தக்கதே!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


சில்லறைப் பிரச்சினையல்ல!


சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்குப் பச்சைக் கொடி காட்டிய மத்திய அரசு - இன்றைய தினம் நெருக்கடியான ஒரு காலகட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

வரும் 21ஆம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்குமுன் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டம் செயல்படுத்தப்படாமல் அறவே முடக்கப்பட்டது.

இப்பொழுது நடைபெற உள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரும் எந்த நிலைக்கு ஆளாகப் போகிறதோ!

இந்தக் கூட்டத்தின் தொடக்க நாளே - அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குப் பெரும் சோதனை யாக அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தொடர்பான மத்திய அரசின் முடிவின்மீது வாக் கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தக்கோரி இடதுசாரிகள் தாக்கீது ஒன்றைக் கொடுத்துள்ளனர்.

மற்ற மற்ற பிரச்சினைகளிலும் எதிரும் புதிருமாக இருக்கக் கூடிய இடதுசாரிகளும், பி.ஜே.பி.யும், திரிணாமுல் காங்கிரசும் ஒத்த முடிவோடு இந்தப் பிரச்சினையைக் கையாளப் போவது உறுதியாகி விட்டது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க. போன்ற கட்சிகளேகூட இந்தப் பிரச்சினை குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப் படும் என்று அறிவித்திருப்பது மத்திய அரசுக்குக் கூடுதலாக ஏற்படப் போகும் நெருக்கடியாகும்.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு கூடாது என்ற கருத்தினை ஏற்கெனவே திமுக கூறி வந்துள்ளது. கூட்டணியில் இருக்கிறது என்பதற்காக மக்கள் நலம் சார்ந்த பிரச்சினைகளில் தனிக் கருத்துக் கொண்டிருப்பது ஒன்றும் குற்றமான செயல் அல்ல. பெட்ரோல், சமையல் எரிவாயு போன்ற அன்றாட வாழ்க்கைப் சம்பந்தப்பட்டுள்ள பிரச்சினை களில் திமுக தன் கருத்தை வலுவாக எடுத்துத்தான் வைத்துள்ளது.

வாக்கெடுப்பு என்று வந்தால் மத்திய அரசின் நீட்சி எந்த அளவுக்குச் சாத்தியக் கூறு என்பது கேள்விக் குறிதான். அப்படியே வெற்றி பெற்றாலும் கூட அன்றாடம் மக்களைப் பாதிக்கச் செய்யும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்ற முடிவு, காங்கிரஸ் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வெகு மக்களின் வெறுப்பை, எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொடுக்கும் என்பதில் அய்யமில்லை. அது கல்லின்மேல் செதுக்கப்பட்ட எழுத்தாகும்.

சில்லறை வர்த்தகத்தில் நுழையும் அந்நிய முதலீட்டால் ஏற்படப் போகும் பார தூர விளைவுகள் குறித்துப் பெரிய ஆய்வுகள் தேவைப்படவில்லை. இதற்குமுன் பல தரப்பிலும் இதுகுறித்து விவாதிக் கப்பட்டுள்ளது.

சிறு வியாபாரிகள் என்பவர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் மிக முக்கியமான பாத் திரத்தை வகிக்கக் கூடியவர்கள்; கோடிக்கணக்கான மக்கள் இதில் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

கூடாரத்துக்குள் நுழைந்த ஒட்டகம் என்ற நிலையைத்தான் இது ஏற்படுத்தும். வணிக அமைப்புகளும் தன் வன்மையான எதிர்ப்பைப் பல வகைகளிலும் வெளிப்படுத்தியுள்ளன.

வெளிநாடுகளில் நுழைந்த அந்நிய முதலீடுகள் அங்கெல்லாம் எத்தகைய விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்கிற விவரங்கள் ஏராளமாக வெளிவந்துள்ளன.

வெகுதூரம் போக வேண்டாம். குளிர் பானங்களில் வெளிநாடுகளை அனுமதித்த நிலையில், இந்த மண்ணில் மக்கள் மனதில் இடம் பிடித்திருந்த வின்சென்ட் சோடா, காளிமார்க் சோடா நிறுவ னங்கள் காணாமற் போய்விடவில்லையா?

வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டு நிலத்தடித் தண்ணீரைத் தோண்டி எடுத்து, மிக வசீகரமான லேபிள்களை ஒட்டி, நம் தலையிலே கட்டி, கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் என்ற பட்டு மெத்தையில் படுத்துப் புரண்டு கொண்டு நிற்பதை நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்?

நம் ஊர் தண்ணீரை வெளிநாட்டு வியாபாரி களால் நமக்கே விற்கப்படும் அவலத்தை என் னென்று சொல்ல? இவ்வளவுக்கும் நம் கிணற்று நீரை மொண்டு சுட வைத்துக் குடிப்பதைவிட, இந்த வியா பார தண்ணீர் எந்த வகையிலும் பாதுகாப்பானதும் அல்ல.

அந்நியப் பொருள்களைப் பகிஷ்கரிக்க வேண்டும்; சுதேசிப் பொருள்களை வாங்க வேண்டும் என்று ஒரு காலத்தில் இயக்கம் நடத்திய காங்கிரஸ், இப் பொழுது என்னடானென்றால் அந்நிய முதலாளி களே, வருக! எங்கள் சுதேசிப் பொருள்களை ஒழித்துக் கட்டுக என்று தாம்பூலம் கொடுத்து வரவேற்பது நாட்டின் தன்மானத்துக்குக்கூட இழுக்காகும்.

வாக்கெடுப்பு அபாயமும் தலைக்குமேல் தொங்கும் வாளாக இருக்கிறது காங்கிரஸ் இதனை வெறும் சில்லறைப் பிரச்சினையாகக் கருத வேண்டாம் - எச்சரிக்கை!16-11-2012

தமிழ் ஓவியா said...


இல்லவே இல்லை!


எல்லா மதக்காரர்களும் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது, ஒரு முடிகூட உதிராது என்று கூறுகிறார்கள். அது வெறும் வேஷம் ஆகும். அவன் அவன் முடியை எடுத்துக்கொள்ள வேண்டுமானால், நாவிதனிடம்தான் போகின்றான்! எனவே, 370 கோடி மக்களில் எவனும் கடவுளிடம் நம்பிக்கை உடையவன் இல்லவே இல்லை. _ (விடுதலை, 26.4.1972)

தமிழ் ஓவியா said...


இலங்கையில் நடந்த இனப்படுகொலை


இலங்கையில் நடந்த இனப்படுகொலை: அய்.நா. அதிகாரிகள் தடுக்க தவறி விட்டனர்
அய்.நா. விசாரணை அறிக்கை

நியூயார்க், நவ.15-இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது, அப்பாவி தமிழர்களின் உயிரை காப்பாற்ற அய்.நா. அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அய்.நா. விசாரணைக் குழுவின் அறிக்கையிலேயே பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு உச்சகட்ட போரின்போது, சுமார் 40,000 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து விசாரிக்க, முன்னாள் அதிகாரி சார்லஸ் பெட்ரி தலைமையில் ஒரு குழுவை அய்.நா. சபை அமைத்தது. இக்குழுவின் அறிக்கை ஐ.நா. சபை யிடம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், இந்த ரகசிய அறிக்கையில் கூறப்பட்டிருந்த விவரங்கள் கசிந்து விட்டன.

இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி யில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தில் இருந்தபோது, இலங்கையிலும், தலைமை அலு வலகம் அமைந்துள்ள நியூயார்க் கிலும் ஐ.நா. அதிகாரிகள் மிக அஜாக்கிரதையாக நடந்துள்ளனர். இலங்கையில் இருந்த அய்.நா. அதிகாரிகளின் செயல்பாடு நீண்ட தயக்கமானதாக இருந்தது. பாதிக்கப் பட்ட மக்களின் உரிமையைக் காக்க போராட வேண்டியவர்கள், அதைக் கண்டுகொள்ளாதது வருத்தமான விஷயம்.

போரில் அப்பாவி மக்களை பாது காக்க வேண்டிய பல மூத்த அதிகாரி கள், தங்களுடைய பொறுப்புகளை மறந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறி விட்டனர். இதேபோல் நியூயார்க்கில் இருக்கும் அய்.நா. சபை தலைமை அலுவலகமும் பிரச்னைக் கான வழியை கண்டறிந்து, அதற்கான தீர்வை எடுக்க தவறிவிட்டது.

சாதாரண வர்த்தக பரிமாற்றங் களை போன்றுதான், இலங்கையில் இருந்த அய்.நா. அதிகாரிகளும், தலைமை அலுவலகத்தில் இருந்த அய்.நா. அதிகாரிகளும் முடிவுகளை மேற்கொண்டனர்.

பொறுப்புகள் மற்றும் சர்வதேச விதி மீறல்கள் குறித்து அதிகாரிகள் மவுனம் காத்துள்ளனர். அவர்கள் நினைத்திருந்தால் அந்த சமயத் திலேயே சரியான நடவடிக்கைகளை எடுத்து அப்பாவி தமிழர்களின் படுகொலையை தடுத்திருக்க முடியும்.

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இறுதிப் போரில் ஈழத் தமிழரைக் காப்பாற்ற தவறிவிட்டோம்: அய்.நா. செயலர் பான் கி மூன் ஒப்புதல்

இலங்கை இறுதிப் போரில் தமிழ் மக்களைக் காப்பாற்ற ஐக்கிய நாடு கள் சபை தவறிவிட்டது என்ற அய்.நாவின் சார்லஸ் பெட்ரியின் கருத்தை ஏற்பதாக பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித் துள்ளார்.

இலங்கை இறுதிப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபை மேற் கொண்ட நடவடிக்கைகள் தொடர் பாக சாலர்ஸ் பெட்ரியை அறிக்கை தாக்கல் செய்ய ஐ.நா. உத்தரவிட்டி ருந்தது. இந்த அறிக்கையின் சில பகுதிகள் வெளியாகி இருந்த நிலை யில் முழு அறிக்கையும் நேற்று பான் கி மூனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதை வெளியிட்ட பிறகு கருத்து தெரிவித்துள்ள பான் கி மூன். தமது உள்ளக குழு ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை ஏற்றுக் கொள் கிறோம். இறுதி யுத்த காலப்பகுதியில் இலங்கையில் அய்க்கிய நாடுகள் சபை தமது பொறுப்புகளை சரிவர செயல்படுத்தவில்லை. இதனை அய்க்கிய நாடுகள் சபை ஒரு பாடமாக கொள்ள வேண்டும்.

இனிவரும் காலங்களில் அய்க்கிய நாடுகள் சபை மீதான நம்பிக்கை இழக்காமல் இருக்க ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டாளர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


டெசோ சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேராசிரியர் உரை


ஈழத்தமிழர்களுக்கு நீதி - நியாயம் கிடைக்க வேறுவழி கிடையாது என்பதால்

அய்.நா. மன்றத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

டெசோ சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேராசிரியர் உரை

சென்னை, நவ.16- ``ஈழத் தமிழர்களுக்கு நீதி நியாயம் கிடைக்க இதைத் தவிர வேறு வழி கிடையாது என்பதால், கலைஞரின் ஆணையை ஏற்று இருவரும் அய்.நா. மன்றத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் குறிப்பிட்டார்.

டெசோ சார்பில் 11.11.2012 அன்று நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:- இந்த நிகழ்ச்சியிலே நான் கலந்து கொள்வது வாழ்த்துவதற்காகத்தான். வயது ஒரு காரணம், பொறுப்பு ஒரு காரணம். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயலாளர் என்ற முறையில் இந்த நல்ல பணியை சிறப்பாக நிறைவேற்றி வந்திருக்கின்ற கலைஞருடைய தூதுவராக அய்க்கிய நாடுகள் சபை மன்றத்திலே டெசோ தீர்மானங்களை எடுத்து வலியுறுத்தி சொல்லி வந்திருக்கின்ற நம்முடைய ஸ்டாலின் அவர்களையும், பாலு அவர்களையும் நான் உளமாற வாழ்த்துகிறேன்.

ஈழத் தமிழர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக ஆக்குவதற்கான தகுந்த முயற்சி!

எனக்கு முன்னால் பேசிய நண்பர்கள் சொன்னதைப் போல இது ஒரு சாதாரண காரியமல்ல. மகத்தான சாதனை என்று நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். ஈழத் தமிழர்களுடைய எதிர்காலத்தை மறுபடியும் ஒளிமயமாக ஆக்குவதற்கான தகுந்த முயற்சி நடைபெற்று இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னாலே டெசோவை தோற்று வித்தபோது பல ஊர்களிலே டெசோ மாநாடுகளை நடத்தி, பேரணிகளை நடத்தி வலியுறுத்தியபோது இருந்த நிலை வேறு. இடைக்காலத்திலே ஏற்பட்ட நிலை வேறு. போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றபோது சிங்கள அரசிடத்திலே யாரும் எந்த ஒரு நியாயத்தையும் சொல்லக் கூடிய ஒரு நிலை இல்லாத ஒரு சூழல் இருந்தது. இந்திய அரசும், தமிழகம் சார்பாக வாதாடுகின்ற இடத்திற்கு வரவேயில்லை. இந்தப் பிரச்சினையை தாங்கள் அணுகுவதாகக் காட்டிக் கொண்டார்களே தவிர, தமிழர்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பு நமக்கு உண்டு என்று மத்திய அரசு கருதவில்லை. அதனுடைய விளைவு பல்வேறு வகையிலே பாதிப்பு ஏற்பட்டது. தி.மு.கழகம் தகுந்த முறையில் தலையிடுவதற்கு ஏற்ற சந்தர்ப்பம் வரும்போது உரிய முறையிலே செயலாற்று வதற்கு என்றைக்கும் தயாராக இருந்தது. ஆட்சிக்காகவோ, பதவிக்காகவோ, அதிகாரத் திற்காகவோ ஈழத் தமிழர்களை நாம் கைவிடவில்லை. பதவி இழந்தாவது ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற முடியுமேயானால் என்றைக்கும் நாம் தயாராகத்தான் இருக் கிறோம். ஆனால் அந்த வாய்ப்பு முறையாக அமையவில்லை.

தமிழ் ஓவியா said...

கலைஞரிடம் பேசினால் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்தவர் ராஜீவ்காந்தி!

இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொன்னால், தமிழர்களுக்கு எதிரி தமிழ்நாட்டிலே இருக்கிறார்கள். தமிழினத்தை பாதுகாக்கிற கடமையைச் செய்வதற்குக் கூட உலை வைப்பவர்கள் இருக் கிறார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மத்தியிலே பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி அவர்கள் இந்த ஈழத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால் யாரால் முடியும் என்று நீண்ட காலம் யோசித்து, கலைஞர் ஒருவர்தான் அதைத் தீர்க்கக் கூடியவர்; எனவே கலைஞரிடத்திலே பேசி, அப்போது கலைஞரும், ராஜீவ்காந்தியும் ஒரே கூட்டணி அல்ல. சில மாறுபாடுகள் உண்டு. இருந்தாலும் கலைஞரிடத் திலே பேசினால் அவர் பேசி இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பார் என்ற நம்பிக்கையிலேதான் ராஜீவ் காந்தி அவர்கள் கலை ஞரையும் முரசொலி மாறனையும் அழைத்து பேசி, வெளி நாட்டுப் பிரச்சினையை கவனிக்கக் கூடிய அமைச்சரையும் நிலைமைகளை விளக்கி, கலைஞரிடத்திலே சொல்லுங்கள் என்று கேட்டு, கலைஞரும் ராஜீவ் காந்தியினுடைய அந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டு இலங்கைக்குச் செல்கிறேன் என்று ஒப்புக்கொண்டு தமிழ்நாட்டிற்கு வந்தார்.

முரசொலி மாறன் அவர்கள் கலைஞர் செல்வதற்கு முன்னாலே இலங்கைக்குச் சென்று ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அதற்கான சூழலை உருவாக்கிவிட்டு வருவதற்கு மாறனும் தயாராக இருந்தார். கலைஞர் ஒருவேளை அந்தச் சூழல் ஒத்துவந்து கலைஞர் சென் றிருப்பாரேயானால் விடுதலைப் புலிகளினுடைய தலைவரே இன்றைக்கு தமிழ்நாட்டிற்கு ஒரு தோழனாக இலங்கையிலே இருக்கக் கூடிய அந்த நல்ல நிலைமை ஏற்பட்டிருக்கும்.

விடுதலைப் புலிகள் எவ்வளவு பெரிய போராடும் சக்தியாக இருந்தாலும் கூட, தன்னுடைய உரிமை காப்பாற்றப்படுகிறது, தாங்கள் கேட்ட ஒரு தனி நாடு என்றஅமைப்பு இல்லாவிட்டாலுங்கூட, தனி நாட்டு அமைப்புக்குத் தேவையான சூழ்நிலை உருவாகிறது, இலங்கை அரசோடு சமாதானம் செய்து கொள்ளக்கூடிய, மரியாதையோடு சமாதானம் செய்து கொள்ளக் கூடிய ஒரு நிலைமை ஏற்படுகிறது. அதற்கு ராஜீவ் காந்தியே துணை நிற்கிறார் என்ற நிலைமைகள் எல்லாம் இருந்து எதிர்பாராத விதமாக விடுதலைப் புலிகளினுடைய தலைவருக்கு இந்த நாட்டிலே இருந்து சென்ற ஒருவர் இந்தப் பேச்சுவார்த்தையிலே இடம் கொடுத்து ஏமாந்துவிடாதே என்று அவரிடத்திலே தவறான கருத்துக்களைச் சொல்லி, அது காரணமாக கலைஞர் இலங்கைக்குப் போக முடியாத நிலைமை ஏற்பட்டது.

தமிழ் ஓவியா said...

அவருடைய நோக்கப்படி, விடுதலைப் புலிகளினு டைய நோக்கப்படி ஏதோ சில காரணங்களால் ராஜீவ் காந்தியிடத் திலே அவர்களுக்கு மாறுபாடு இருந்திருக் கிறது, அந்த மாறுபாடு வேறு விதத்திலே வெடித்து, தமிழ்நாட்டிலே நாம்தான் அதனுடைய விளைவுகளை எல்லாம் ஏற்றுக் கொண்டோம். பழி நம் மீது. ராஜீவ் காந்தி படுகொலைக்கு ஏதோ சில காரணங்கள். எப்படியோ நடைபெற்றது. அந்த வழக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு கூட பேசப்படுகிறது. ஆனால், தி.மு.கழகத்தின் மீது ஏதோ காங்கிரஸ் தலைவர் களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தி விட்டதாக ஒரு தவறான செய்தியைப் பரப்பி ஒரு தேர்தலில் நம்மைத் தோற்கடித்தார். அதையெல்லாம் தாங்கிக் கொண்டு, ஈழத் தமிழர்களைக் காக்க நம்மால் என்ன செய்ய முடியும்? அது எப் பொழுது செய்ய வேண்டும்? நாம் பெரியாரின் பிள்ளைகள், அண்ணாவின் தம்பிகள், திராவிட இனத்திற்காக வாதாடி யவர்கள்.

தொப்புள்கொடி உறவைநாம் மறந்து விடக்கூடாது!

இன்றைக்கும் நம்மை விட்டால் திராவிட இனத்திற்கோ, தமிழனுக்கோ வேறு ஒரு சக்தி இல்லை. நாம் அதற்காகப் போராடித் தீர வேண்டும். தொப்புள் கொடி உறவை மறந்து விடக்கூடாது. ஈழத்திலே தமிழன் அழிந்தாலும், தமிழ்நாட்டிலே தமிழன் அழிந்தாலும் தமிழன் அழிக்கப்படுகிறான். தமிழனை அழிப்பதற்கு என்று இந்த நாட்டிலே யார் யாரோ இருக்கிறார்கள். ஆக அப்படி ஒரு விளைவு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக கலைஞர் அவர்களோ, தி.மு.கழகத்திலே உள்ள முன்னணியினரோ என்றைக்கும் நாம் தயாராக இருந் தோம். ஆனால் சூழ்நிலை இடம் தரவில்லை, செயல்பட முடிய வில்லை. அவ்வப்போது அந்தக் கருத்துக்களை வலியுறுத்தி வந்திருக்கிறோம். அந்த அடிப்படை யிலேதான் இப்போது டெசோ மறுபடியும் தோற்று விக்கப்பட்டு, குரல் எழுப்பப்பட்டு அய்.நா.விலே போய் கேட்கப்பட்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

அய்.நா.விற்கு இந்தக் குரலை கொண்டு போக வேண்டும், போனால்தான் சாத்தியம் என்று கருதுவதற்குக் காரணம், இந்திய அரசை நாம் தூண்ட வேண்டியிருக் கிறது. ஐ.நா. தீர்மானம் நிறை வேற்றுவதற்கு நீங்கள் உறுதுணையாக இருங்கள். இந்தியாவினுடைய குரல் அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக இருக்கட்டும் என்று நாம்தான் கேட்க வேண்டியிருந்தது. கேட்டோம். அவர்களும் ஆதரவாக இருந்தார்கள்.

ஆனால் தொடர்ந்து செயல்படுவதற்கு பிற நாட்டு அரசியல் காரணமாக தன்னுடைய போக்கை நிறுத்திக் கொள்ளத் தேவையில்லாத அய்.நா. மன்றம்தான் செயல்பட முடியும். அய்.நா. மன்றம் செயல்பட்டால் அது நிச்சயமாக நியாயம் கிடைப்பதற்கு, நீதி கிடைப்பதற்கு, ஈழத் தமிழன் அழிக்கப்படாமல் இருப்பதற்கு, அவர்களுக்கு இழைக் கப்பட்ட கொடுமை தொடர்ந்து இழைக்கப் படாமல் இருப்பதற்கு, வெளிக்கடை போன்ற நிகழ்ச்சிகள் மறுபடியும் நடக்காமல் இருப்பதற்கு அதைத் தவிர வேறு வழி கிடையாது. எனவே அய்.நா.மன்றத்தில் நம்முடைய தளபதி ஸ்டாலின் அவர்களும், பாலு அவர்களும் போய் கலைஞருடைய இந்த வேண்டு கோளை, டெசோ தீர்மானத்தை இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லி யதன் விளைவாக, நான் நிச்சயமாக நம்புகிறேன். ஈழத் தமிழர்களுடைய வாழ்விலே இருள் மறையும். ஒளி பிறக்கிறதோ இல்லையோ, அவர்களுக்கு இழைக்கப் படுகின்ற கொடுமைகள் நிறுத்தப்படும். இரண்டு நாட்களுக்கு முன்னாலே, நம்முடைய ஸ்டாலின் அவர்கள் மனித உரிமை ஆணையத் தினுடைய தலைவி யாக இருக்கிற அந்த அம்மையார் அவர்களைச் சந்தித்தார்கள். அந்த அம்மையார் அவர்களே சொன்ன செய்தியாக, விடு தலையிலே வந்திருக் கின்ற ஒரு செய்தி. அதை நான் படித்துக் காட்ட விரும்பு கின்றேன். ``அய்.நா.

மனித உரிமை ஆணையாளர் தகவல்

``உள்நாட்டுப் போர் 2009-ல் முடிவிற்கு வந்தாலும், சிறீலங்கா இன்னமும் பொது நிலையிலேயே உள்ளது என்று அய்.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறீலங்கா அகதிகளை உடனடியாகத் திருப்பி அனுப்பும் ஆஸ்திரேலியா புதிய கொள்கை தொடர்பாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இந்தோனேசியாவின் பாலி ஜனநாயக மன்றத்தில் பங்கேற்றுள்ள அவர், இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில், நௌரு போன்ற கடல் கடந்த தடுப்பு நிலையங்கள் அமைக்கப்படுவதால் நீண்ட காலம் அவர்கள் தடுத்து வைக்கப்படலாம் என்றும், இன்னொரு மனித உரிமை மீறலாக அது உருவெடுக்கலாம் என்றும் கவலை கொள்கிறேன்.

ஆக மேலும் மேலும் மனித உரிமை மீறல், மேலும் மேலும் அக்கிரமம், மேலும் மேலும் கொடுமை. புண் இருக்கின்ற இடத்திலே மேலும் காயம். எனவே அப்படிப்பட்ட கொடுமை தொடர்ந்து நடைபெற்றால், அங்கே உள்ள பெண்கள் தன்னு டைய மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல், குடும்ப வாழ்வை நடத்த முடியாமல், பிள்ளைகுட்டிகளை அன்போடு வளர்க்க முடியாமல் நடுத் தெருவிலே நிற்கின்ற அக்கிரமம் இவற்றையெல்லாம் அந்த அம்மையார் உணர்ந்து சொல்லி யிருக்கிறார்கள். அவர் உணர்ந்து சொன்னது, அவர் நமக்காக வாதாடுவதற்கு வாய்ப்பு இருக்கின்ற காரணத்தால் அது நமக்கு மிகப் பெரிய ஒரு நீதி கிடைப்பதற்கான வழியாக அமைகின்றது. எனவே அதற்காகவும், நாம் நம்முடைய ஸ்டாலின் அவர்களையும், பாலு அவர்களையும் கலை ஞருடைய தூதுக் குழு வாகப் போய் வந்தவர்களை நான் உளமார பாராட்டுகிறேன். கொடுமை நின்றால் பின்னர் நீதிக்கு வாதாடலாம். கொடுமைக்கு ஆளாகின்ற தமிழனை காப்பாற்று வதுதான் முதல் கடமை. அந்த முதல் கடமையை செய்வதிலே டெசோ மிகத் தீவிரமாக இருக்கிறது என்பதை நான் தெரிவித்துக் கொண்டு, அந்தப் பணியை நிறைவாகச் செய்வதற்கு நம்முடைய ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் கலைஞருடைய ஆணையை ஏற்று தொடர்ந்து பணியாற்ற வேண்டும் அவர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன். இன்னும் ஒன்று, அவர்களுக்கு நாம் இன்றைய தினம் ஒரு சிறப்பான வரவேற்பு அளித்தோமென் றால், கலைஞருடைய மகன்தான் ஸ்டாலின், கலைஞருடைய தொண்டன்தான் பாலு. அவர்களுக்குப் போய் இவ்வளவு பெரிய வரவேற்பா என்று நானே கூட நினைக் கலாம். ஆனால் அவர்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்பு அவ்வளவு பெரிய பொறுப்பு. அதனாலேதான் கலைஞரே அவர்களுக்கு மாலை அணிவித்து வர வேற்றார். ஆனால் ஒரு பத்திரி கையிலே அவர்கள் வழக்கம்போல இந்த தபால் கொண்டு போய் தருவதற்கு இவ்வளவு பெரிய வரவேற்பா? என்று எழுதியிருக்கிறது. இந்தத் தபால் சாதாரண தபால் அல்ல. இப்படி கேலி செய்பவர்களுக் கெல்லாம் இறுதி செய்யக்கூடிய அந்த முடிவை நாங்கள் எடுப்பதற்கு ஏதுவான தபால். ஆகவே இந்தத் தபால் தமிழனைக் காக்கின்ற தபால், தமிழனு டைய எதிரியை வீழ்த்துகிற தபால் என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.
- இவ்வாறு பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றினா

தமிழ் ஓவியா said...

அய்.நா.விற்கு இந்தக் குரலை கொண்டு போக வேண்டும், போனால்தான் சாத்தியம் என்று கருதுவதற்குக் காரணம், இந்திய அரசை நாம் தூண்ட வேண்டியிருக் கிறது. ஐ.நா. தீர்மானம் நிறை வேற்றுவதற்கு நீங்கள் உறுதுணையாக இருங்கள். இந்தியாவினுடைய குரல் அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக இருக்கட்டும் என்று நாம்தான் கேட்க வேண்டியிருந்தது. கேட்டோம். அவர்களும் ஆதரவாக இருந்தார்கள்.

ஆனால் தொடர்ந்து செயல்படுவதற்கு பிற நாட்டு அரசியல் காரணமாக தன்னுடைய போக்கை நிறுத்திக் கொள்ளத் தேவையில்லாத அய்.நா. மன்றம்தான் செயல்பட முடியும். அய்.நா. மன்றம் செயல்பட்டால் அது நிச்சயமாக நியாயம் கிடைப்பதற்கு, நீதி கிடைப்பதற்கு, ஈழத் தமிழன் அழிக்கப்படாமல் இருப்பதற்கு, அவர்களுக்கு இழைக் கப்பட்ட கொடுமை தொடர்ந்து இழைக்கப் படாமல் இருப்பதற்கு, வெளிக்கடை போன்ற நிகழ்ச்சிகள் மறுபடியும் நடக்காமல் இருப்பதற்கு அதைத் தவிர வேறு வழி கிடையாது. எனவே அய்.நா.மன்றத்தில் நம்முடைய தளபதி ஸ்டாலின் அவர்களும், பாலு அவர்களும் போய் கலைஞருடைய இந்த வேண்டு கோளை, டெசோ தீர்மானத்தை இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லி யதன் விளைவாக, நான் நிச்சயமாக நம்புகிறேன். ஈழத் தமிழர்களுடைய வாழ்விலே இருள் மறையும். ஒளி பிறக்கிறதோ இல்லையோ, அவர்களுக்கு இழைக்கப் படுகின்ற கொடுமைகள் நிறுத்தப்படும். இரண்டு நாட்களுக்கு முன்னாலே, நம்முடைய ஸ்டாலின் அவர்கள் மனித உரிமை ஆணையத் தினுடைய தலைவி யாக இருக்கிற அந்த அம்மையார் அவர்களைச் சந்தித்தார்கள். அந்த அம்மையார் அவர்களே சொன்ன செய்தியாக, விடு தலையிலே வந்திருக் கின்ற ஒரு செய்தி. அதை நான் படித்துக் காட்ட விரும்பு கின்றேன். ``அய்.நா.
மனித உரிமை ஆணையாளர் தகவல்

``உள்நாட்டுப் போர் 2009-ல் முடிவிற்கு வந்தாலும், சிறீலங்கா இன்னமும் பொது நிலையிலேயே உள்ளது என்று அய்.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறீலங்கா அகதிகளை உடனடியாகத் திருப்பி அனுப்பும் ஆஸ்திரேலியா புதிய கொள்கை தொடர்பாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இந்தோனேசியாவின் பாலி ஜனநாயக மன்றத்தில் பங்கேற்றுள்ள அவர், இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில், நௌரு போன்ற கடல் கடந்த தடுப்பு நிலையங்கள் அமைக்கப்படுவதால் நீண்ட காலம் அவர்கள் தடுத்து வைக்கப்படலாம் என்றும், இன்னொரு மனித உரிமை மீறலாக அது உருவெடுக்கலாம் என்றும் கவலை கொள்கிறேன்.

ஆக மேலும் மேலும் மனித உரிமை மீறல், மேலும் மேலும் அக்கிரமம், மேலும் மேலும் கொடுமை. புண் இருக்கின்ற இடத்திலே மேலும் காயம். எனவே அப்படிப்பட்ட கொடுமை தொடர்ந்து நடைபெற்றால், அங்கே உள்ள பெண்கள் தன்னு டைய மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல், குடும்ப வாழ்வை நடத்த முடியாமல், பிள்ளைகுட்டிகளை அன்போடு வளர்க்க முடியாமல் நடுத் தெருவிலே நிற்கின்ற அக்கிரமம் இவற்றையெல்லாம் அந்த அம்மையார் உணர்ந்து சொல்லி யிருக்கிறார்கள். அவர் உணர்ந்து சொன்னது, அவர் நமக்காக வாதாடுவதற்கு வாய்ப்பு இருக்கின்ற காரணத்தால் அது நமக்கு மிகப் பெரிய ஒரு நீதி கிடைப்பதற்கான வழியாக அமைகின்றது. எனவே அதற்காகவும், நாம் நம்முடைய ஸ்டாலின் அவர்களையும், பாலு அவர்களையும் கலை ஞருடைய தூதுக் குழு வாகப் போய் வந்தவர்களை நான் உளமார பாராட்டுகிறேன். கொடுமை நின்றால் பின்னர் நீதிக்கு வாதாடலாம். கொடுமைக்கு ஆளாகின்ற தமிழனை காப்பாற்று வதுதான் முதல் கடமை. அந்த முதல் கடமையை செய்வதிலே டெசோ மிகத் தீவிரமாக இருக்கிறது என்பதை நான் தெரிவித்துக் கொண்டு, அந்தப் பணியை நிறைவாகச் செய்வதற்கு நம்முடைய ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் கலைஞருடைய ஆணையை ஏற்று தொடர்ந்து பணியாற்ற வேண்டும் அவர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன். இன்னும் ஒன்று, அவர்களுக்கு நாம் இன்றைய தினம் ஒரு சிறப்பான வரவேற்பு அளித்தோமென் றால், கலைஞருடைய மகன்தான் ஸ்டாலின், கலைஞருடைய தொண்டன்தான் பாலு. அவர்களுக்குப் போய் இவ்வளவு பெரிய வரவேற்பா என்று நானே கூட நினைக் கலாம். ஆனால் அவர்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்பு அவ்வளவு பெரிய பொறுப்பு. அதனாலேதான் கலைஞரே அவர்களுக்கு மாலை அணிவித்து வர வேற்றார். ஆனால் ஒரு பத்திரி கையிலே அவர்கள் வழக்கம்போல இந்த தபால் கொண்டு போய் தருவதற்கு இவ்வளவு பெரிய வரவேற்பா? என்று எழுதியிருக்கிறது. இந்தத் தபால் சாதாரண தபால் அல்ல. இப்படி கேலி செய்பவர்களுக் கெல்லாம் இறுதி செய்யக்கூடிய அந்த முடிவை நாங்கள் எடுப்பதற்கு ஏதுவான தபால். ஆகவே இந்தத் தபால் தமிழனைக் காக்கின்ற தபால், தமிழனு டைய எதிரியை வீழ்த்துகிற தபால் என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.
- இவ்வாறு பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றினா

தமிழ் ஓவியா said...


என்று தொலையும் இந்தச் சாதி?


சாதியெனும் பகையுணர்ச்சி வாழு மட்டும்
தமிழ்நாட்டின் முன்னேற்றம் கானல் நீரே!
நீதிமுதல் நெறிமுறைகள் பிறர்க்கும் தந்து
நிலைத்திருந்த பெருமையெல்லாம் மண்ணிற் சாயும்!

சாதியினால் நிம்மதியும் அழிந்தே போகும்!
தலைமுறைகள் பலங்குன்றிச் சாயும் அந்தச்
சாதியினைத் தவிர்த்தொன்றும் வாழ்வதில்லை!

தமிழகமே! இனியுனக்கு மீட்சி இல்லை!

- கண்ணதாசன்

சாதி மதங்களைப் பாரோம் - உயிர்
ஜன்மம் இத்தேசத் தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தவரா யினும் ஒன்றே!
சாதிக் கொடுமை கள் வேண்டாம் - அன்பு
தன்னில் செழித்திடும் வையம்
சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!

- பாரதியார்

ஆயிரம் சாதிகள் ஒப்பி - நரி
அன்னவர் காலிடை வீழ்ந்து
நாய்களைப் போல் தமக்குள்ளே - சண்டை
நாளும் வளர்க்கும் மதங்கள்
தூயனவாம் என்று நம்பிப் - பல
தொல்லை யடைகுவ தின்றி
நீயெனல் நானெனல் ஒன்றே - என்ற
நெஞ்சில் விளைவது வாழ்வு!

- பாரதிதாசன்

சாதி குலமில்லை சற்குருவறிந்தால்
... நித்தியம் இதுவே

-சேச யோகியார்

குலமு மொன்றே குடியுமொன்றே
இறப்பு மொன்றே பிறப்பு மொன்றே!
தென் திசைப் புலையன் வடதிசைக் கேகிற்
பழுதறவோதிப் பார்ப் பானாவான்!
வடதிசைப் பார்ப்பான் தென்றிசைக்கேகில்
நடையது கோணிப் புலையனாவான்!

- கபிலர்


சாதி பேதங்கள் சொல்லுகிறீர் - தெய்வம்
நானென்றொருடல் பேத முண்டோ? - கொங்கண நாயனார்
காணப்பா சாதிகுலம் எங்கட்கில்லை
கருத்துடனே என் குலஞ்சுக் கிலந்தான் மைந்தா,
தோணப்பா தோணாமற் சாதிபேதஞ்
சொல்லுவான் சுருக்கமாய்ச் சுருண்டு போவான்!

- காக புசுண்டர்

... நகையாதே, மானிடர் பல் சாதி என்று
நம்பாதே. நல்வழியின் காலைப் பாரே!

- அருணாசல குரு

சமயபேதம் பலவான சாதிபேதங்கள்
சகத்தோர்க்கேயல்லாது சற்சாதுக்களுக்கோ
சமயத்திலேறின பேர் சித்தம் மாறுமோ
சித்தர் சித்தாந்தந் தேர்ந்தாடு பாம்பே!
சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்
சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்!

- பாம்பாட்டிச் சித்தர்

ஒவ்வா வென்ற பல சாதி - யாவும்
ஒன்றென்றறிந்தே உணர்ந்துற வோதிப்
- பாபஞ்செய்யாதிரு மனமே!

- கடுவெளி சித்தர்


தொகுப்பு: திருமங்கலம் மணிமாறன்

தமிழ் ஓவியா said...


அறிஞர்களின் அறிவுரைகள்


மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்தப் பெண் ஜீவ னாவது, ஆண்களுக்காகவே இருக் கிறோம் நாம் என்ற கருத் துடன் - நடையுடன் இருக் கிறதா என்று பாருங் கள். இது என்ன நியாயம்?


- தந்தை பெரியார்

இந்து மதத்தில் எனக்கு அறவே நம்பிக்கை இல்லை; ஏனெனில் அயோக்கியத்தனம் என்பது எனக் குப் பிடிக்கவே பிடிக்காது!


- டாக்டர் அம்பேத்கர்

பைபிள் ஒரு பெண்ணால் எழுதப் படவில்லையே! ஆதலால்தான் அதில் பெண்கள் அவமானம் அடைய வேண்டிய விஷயங்கள் நிரம்பிக் கிடக்கின்றன!


- இங்கர்சால்


மதம் என்பது பிறருக்கு உழைத்து வறுமைப்பட்ட மக்களை தலை எடுக்க விடாமல் அழுத்தி வைக்க ஏற்பட்ட சாதனங்களில் முக்கியமான ஒன்றாகும்.


- லெனின்


உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் நாத்திகவாதியாகப் பிறக்கிறது. பிறருடைய போதனையினாலும் தயாரிப்பினாலுமே தெய்வ நம்பிக்கை ஏற்படுகிறது.


- சார்லஸ் பிராட்லா


ஒரு புழுவைக் கூட படைக்கச் சக்தியற்ற மனிதன் கணக்கில்லா கடவுளரைப் படைத்துக் கொண்டே இருக்கிறான்.


- மான்டெயின்

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர் பிரச்சினை கலைஞர் அவர்களுக்கு பிரிட்டீஷ் தமிழ்க் கன்சர்வேட்டிவ்ஸ் துணைத் தலைவர் பாராட்டு

லண்டன், நவ. 16- தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்கு `பிரிட்டிஷ் தமிழ் கன்சர்வேட் டிவ்ஸ் துணைத் தலைவர் டாக் டர் அர்ஜுன சிவாநந்தன் எழுதி யுள்ள கடிதத்தில், ``இலங்கைத் தமிழர் களுக்காக கடந்த 50 ஆண்டு களாக தாங்கள் (தலைவர் கலை ஞர்) செய்துள்ள தியாகங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கி றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானிய தமிழர் பேரவை சார்பில் தலைவர் கலை ஞர் அவர்களுக்கு அதன் பொதுச் செயலாளர் வி.ரவிக்குமார் எழுதி யுள்ள கடிதத்தில், `உலகத் தமிழர் மாநாட்டில் தி.மு.க. சார்பில் கழகப் பொருளாளர் மு.க.ஸ்டா லின் அவர் களையும், டி.ஆர். பாலு எம்.பி., கே.எஸ்.இராதா கிருஷ்ணன், டி.கே.எஸ்.இளங் கோவன் எம்.பி. ஆகியோரை கலந்து கொள்ளச் செய்தமைக் காக தலைவர் கலைஞர் அவர் களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களையும் அனுப்பி யுள்ளார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்கு பிரிட்டிஷ் தமிழ் கன்சர்வேட்டிவ்ஸ் துணைத் தலைவர் டாக்டர் அர்ஜுன சிவாநந்தன் எழுதியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது:-

பிரித்தானிய தமிழர் பழமை வாதிகளை பழமை வாதிக் கட்சி யில் இணைப்பு அளிக்கப்பட்ட தற்கு தங்களது வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துக் கொள் கிறோம். சர்ச்சில், வெலிங்டன் போன்ற பெரும் தலைவர்கள் இருந்த கட்சியில் முதல் முறையாக ஒரு இனக் குழுவிற்கு இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது தமி ழர்கள் இங்கிலாந்து நாட்டிற்கு அளித் துள்ள பங்களிப்பிற்கு அங்கீகாரமாகும். மேலும், தெற்கு இங்கிலாந்தில் தமிழர்கள்தான் மிகப் பெரிய வாக்கு வங்கியாக இருக்கிறார்கள் என்ற உண்மை யையும் பிரதிபலிக்கிறது.

தொடர்பு கொள்வோம்!

தலைவர் என்ற முறையில் தங் களது செயல்பாடு கள் உலகெங் கும் உள்ள தமிழர்களின் பல தலைமுறையினருக்கு ஊக்க மளிக்கும். இலங்கைத் தமிழர் களுக்காக கடந்த 50 ஆண்டு களில் ஐக்கிய நாடு கள் மனித உரிமை ஆணையம் உட்பட பல இடங் களில் தங்களுடைய தலை யீட்டுக்காகவும், தாங்கள் செய் துள்ள தியாகங்களுக்காகவும் நாங்கள் குறிப்பாக நன்றியுடைய வர்களாக இருக்கிறோம்.

உலகத் தமிழ் இயக்கத்திற்குத் தாங்கள் தொடர்ந்து தலைமை வகிக்கும் வகையில் தாங்கள் நல்ல உடல் நலமும் நீண்ட ஆயுளும் பெற நாங்கள் வாழ்த்துகிறோம். உலகத் தின் செயல்திட்டத்தில் தமிழர் களின் உரிமைகள் மற்றும் நல னுக்கு உரிய இடம் கிடைக்க தாங்கள் மற்றும் திராவிட முன் னேற்றக் கழகத்தின் தலைமை யுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பு கொள்ள விழைகிறோம்.

இவ்வாறு அவர் தனது கடிதத் தில் கூறியுள்ளார்.

தீர்மானங்கள்

உலகத் தமிழர் பாதுகாப்பு தமிழ் மாநாட்டில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள்

பிரித்தானிய நாடாளுமன்றத் தில் நவம்பர் 7ஆம் தேதியன்று நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஐ.நா. பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட வல்லுநர்கள் குழுவின் இலங்கை பற்றிய அறிக் கைக்கு, குறிப்பாக அங்கு அரசியல் காரணங்களுக்காக தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை சுட்டிக் காட்டியமைக்காகவும் எங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

டப்ளினில் நடைபெற்ற இலங்கை மீதான நிரந்தர மக்கள் நடுவர் மன்றத்தின் பரிந்துரை களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவடைந்த பிறகும் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழ் தேசத்தை தொடர்ந்து நாசப் படுத்தி வருவதைப் பற்றி நாங்கள் கவலை கொள்வதுடன் உடனடி யாக தமிழ் மக்கள் மீது நடத்தப் படும் தற்போதைய தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். தமிழ் தேசத்திற்கு எதிராக இலங்கை அரசு நடத்திய போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங் கள், தமிழ் மக்களின் இனப் படுகொலை ஆகியவற்றைப் பற்றி உடனடியாக சர்வதேச சுதந் திரமான விசாரணைக்கு ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் கோர வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறோம்.

தமிழ்த் தேசம்!

சர்வதேச சமுதாயத்தின் தலைவர்களை நாங்கள் பின்வரும் கோரிக்கைகளுக்காக வலி யுறுத்துகிறோம்.

1) இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி களில் நிலவும் உண்மை நிலை களை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் வகை யில் தகவல்கள் வெளிவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

2) இலங்கை அரசால் தமிழ் தேசம் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

3) தமிழர்களின் பாரம் பரிய தாய் மண்ணை சிங்கள மயமாக்கும் போக்கை நிறுத்த வேண்டும்.

4) தமிழ் மக்களின் தாய் மண்ணில் ராணுவத்தை வெளி யேற்றி மக்கள் தங்களது ஜன நாயக உரிமைகளை செயல் படுத்த அனு மதிக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் ஓவியா said...


பெற்றோர்களே! பெற்றோர்களே!


அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள -ஸ்ரீஇண்டர்நேஷனல் என்ற ஆராய்ச்சி நிறுவனம் எட்டாயிரம் குழந்தைகளிடம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டது. ஆய்வுக்குத் தலைமை வகித்த டாக்டர் எரிகா கெய்லர் கூறியதாவது.

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட குழந்தைகள் 9 மாத குழந்தைகளாக இருந்த போதிலிருந்து எவ்வாறு தூங்குகின்றன என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
அதே குழந்தைகளுக்கு 4 வயதான பின்பும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

தினசரி இரவு சீக்கிரமே தூங்கச் செல்வதுடன் 11 மணி நேரம் தூங்கும் குழந்தைகள் சொல்வதை விரைவாகப் புரிந்து கொள்ளுதல், மொழிகளை எளிதாகக் கற்றுக்கொள்ளுதல் கணிதத்தில் புலியாக விளங்குதல் போன்றவற்றில் படுசுட்டிகளாக விளங்குகின்றன. குறித்த நேரத்தில் தூங்கச் செல்லாததுடன் 11 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் குழந்தைகள் அவ்வளவு சுட்டிகளாக விளங்காததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே தினசரி இரவு சீக்கிரமே குழந்தைகளைத் தூங்கச் செய்வதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அளவு தூக்கத்தை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். தூங்குவதற்கு முன் குழந்தைகளுடன் உரையாடுவது, கதைகள் சொல்வது ஆகியவை பயனுள்ளதாக அமையும் என்றார். குழந்தைகளை சீக்கிரமே தூங்கச் செய்ய வேண்டும் என்பதையே இதற்கு முந்தைய ஆய்வுகளும் வலியுறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.17-11-2012

தமிழ் ஓவியா said...


தமிழைப் பற்றி தமிழர் மற்றும் பார்ப்பனர் கருத்துகள்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மனோன்மணியம் ஆசிரியர் பி. சுந்தரம்பிள்ளை தமிழைப் பார்த்து சொல்லுகிறார்:

ஆரியம் போலுலக வழக்கழிந் தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த் துதுமே என்று சொல்லுகிறார்.

இது ஒரு தமிழ் மகனால் சொல்லப் பட்டது.

இனி சுப்பிரமணிய பாரதி தமிழ்த் தாயே சொல்லுவதாக சொல்லுவதைப் பாருங்கள்.

உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் என்று சொல்லுகிறார்.

இது ஒரு ஆரிய மகன் - பார்ப்பனரால் சொல்லப்பட்டது.

என்ன செய்தாலும் ஜாதிப் புத்தி போகாதய்யா ராஜகோபால மாலே என்று பெரியார் கூறிய அனுபவ மொழியை உறுதிப்படுத்த இவை உதவுகின்றன போலும்.
சுந்தரம் பிள்ளை அவர்கள் பேச்சு வழக்கில் இல்லாமல் அழிந்துபட்ட வடமொழி போல் உன் (தமிழின்) கதி ஏற்பட்டு விடாமல் என்றும் ஒன்றுபோல் இளமைத் தன்மையுடன் விளங்குகிறாய் என்று போற்றுகிறார்.

பாரதியோ போற்றாவிட்டாலும் தமிழ்த்தாய்.

உயர்ந்த மொழியான ஆரிய (வட) மொழிக்கு சமானமாக ஒரு காலத்தில் வாழ்ந்தேன் இப்போது சீரழிந்து கெட்டுப் போய் விட்டேன் என்று புலம்புவதாகத் தாழ்வுபடுத்திக் காட்டுவதோடு, ஆரியம் இன்றும் மேன்மையாக இருப்பதாகவும் தமிழ்த்தாயைக் கொண்டே சொல்லச் செய்கிறார்.

ஆகவே, சுப்பிரமணிய பாரதியின் தமிழ்ப் பற்றை அவரது நாளைக் கொண்டாடும் பண்டித முண்டங்கள் இதிலிருந்தாவது உணர்வார்களாக.

இனத்தின் பேரால் பார்ப்பனரும், மதத்தின் பேரால் இஸ்லாமியரும், வகுப்பின் பேரால் சட்டைக்காரர்களும் ஆகிய இவர்களுக்கு எவ்வளவுதான் இரத்தக் கலப்பு ஏற்பட்டாலும் புத்திக் கலப்பு மாத்திரம் ஏற்படவே ஏற்படாது.

ஒரே புத்திதான்.

அதாவது முறையே தங்கள் இனம், மதம், வகுப்பு ஆகியவைகளை சிறிதுகூட விட்டுக் கொடுக்காமலும் அவைகளையே உயர்வென பேசும் அபிமானமும் வேறு எவனாவது தாழ்த்திச் சொன்னால் ரோஷப்படும் குணமும் கொண்ட உயர்ந்த புத்தி மாறவே மாறாது.

தமிழனுக்கு அவை மாத்திரம் கிடையாது.

கம்பனைப் போல் ஒரு கை கூழுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

இதனால்தான் அவர்கள் மேன்மை யாய் வாழுகிறார்கள்.

இவர்கள் கீழ்மையாய் (சூத்திரர் களால்) வாழுகிறார்கள்.

தமிழைக் குறைகூற வேண்டாம் என்று எந்த சமஸ்கிருதப் பண்டிதர்கள் வாயிலிருந்தாவது ஒரு வார்த்தையா வது வந்திருப்பதாக ஒரு பண்டித ராவது காட்ட முடியுமா? (குடிஅரசு தொகுதி 30 பக்கம் 49)

- க. பழநிசாமி, திண்டுக்கல் கோட்டகை

தமிழ் ஓவியா said...


நல்ல பெயர் வாங்க ஆசையில்லை


எனக்கு எந்த விதமான உணர்ச்சிக்கும் இடமில்லாத - மானத்தைப் பற்றிக் கவலை இல்லாத - திராவிட மக்களிடத்திலே நல்ல பேர் வாங்க வேண்டுமென்கிற கவலை சிறிதுமில்லை. அப்படிப் போலிநல்ல பெயரின்மீது எனது வாழ்வு ஏற்பட்டிருக்கவில்லை. திராவிடர்களுக்கு ஏதாவது தொண்டாற்ற வேண்டும். முதன்மையாகத் திராவிடன் இழிவு நீக்க வேண்டும் என்ற ஆசையும் கவலையுமே தவிர, வேறு ஒன்றுமே எனது கவலையாக இல்லை. என் வாழ்வைப் பற்றி எனக்குக் கவலை யில்ல; எனக்கு வேறு அடைய வேண்டிய சாதனமும் இல்லை.

- - தந்தை பெரியார்
குடிஅரசு தொகுதி 2 பக்கம் 239)

தமிழ் ஓவியா said...


பாம்பா? பயமா?

பாம்பைப் பார்த்ததுமே பா...பா...பா... என்று வார்த்தைகளில் தந்தியடிக்கும் மனிதர்களைத் தான் இதுவரை பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு சிறுமி பாம்பிடம் காட்டும் அலாதிப்பிரியம் நம்மை விய(ர்)க்க வைக்கிறது. வழக்கமாக பாம்பு பிடிக்கிறவர்களுக்குக் கூட சில நேரங்களில் சிம்ம சொப்பனமாக விளங்கும் ராஜநாகம் பாம்பை தன் நண்பன் என்கிறாள் இந்த சிறுமி. அவள் பெயர் கஜோல். வயது 8, உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவள். தன் பாம்பு தேசம் பற்றி அவள் கூறும்போது, எனக்கு பள்ளிக்கூடம் போகத்தான் பிடிக்காது. எப்போதும் பாம்புகளுடன் இருக்கப் பிடிக்கும். அவைகளுடன் நான் விளையாடும்போது சில பாம்புகள் என்னை செல்லமாக கடித்து வைப்பதுண்டு. சில நேரங்களில் பல் பதிந்து ரத்தம் வந்துவிடும். அப்போது மட்டும் நான் பயப்படுவதுண்டு. ஆனால் என் அப்பா மட்டும் பதறாமல் நேராக காட்டுக்கு சென்று பச்சிலை பறித்து வந்து வைத்தியம் பார்ப்பார். அப்போதே பயம் பறந்து மற்ற பாம்புகளுடன் விளையாடச் சென்று விடுவேன்என்கிறாள்.

இவளுக் பாம்பு பிடிக்கும் பின்னணியில், பாம்பு பிடிக்கும் இவளது தந்தை இருக்கிறார். காட்டில் இருக்கும் பாம்புகளை அடிக்கடி வீட்டில் பார்த்துப் பார்த்து பாம்பு பயம் போயே போச் என்கிறாள் கஜோல். அதுசரி, கஜோல் பள்ளிக்கூடம் எதற்காக போகவில்லையாம்? படிப்பு வரவில்லையா?
நல்லாத்தான் படிச்சேன். சில நாட்கள் நண்பர்களுடன் (பாம்புகள்) பள்ளிக்கூடத்துக்குப் போய்விடுவேன். அவர்கள் அலறியபடி காட்டிக் கொடுத்ததில் படிப்பா....பாம்பாநீயே முடிவு செய்து காள் என்று பள்ளியில் கண்டிப்பாக கூறி விட்டார்கள் எனகிறாள். அதற்குப்பிறகு தான் பள்ளிப்படிப்பு பாம்புப் படிப்பாகிவிட்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...


பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லையா? அசைவம் சாப்பிடுபவர் - ஏமாற்றுப் பேர் வழிகளாம் சி.பி.எஸ்.இ. பாடம் சொல்லுகிறது
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
சனி, 17 நவம்பர் 2012 17:06
E-mail Print

புதுடில்லி, நவ. 17-அசைவம் சாப்பிடுபவர்கள் பற்றி தவறான கருத்து 6ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கூறப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நியூ ஹெல்த்வே என்ற தலைப் பில் வெளிவந்த 6ஆம் வகுப்பு அறிவியல் புத்தகத்தை பல சிபிஎஸ்இ பள்ளிகள் தேர்வு செய்து மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றன. இதில் ஆரோக்கியம், சுகாதாரம், மனோதத்துவம், பாது காப்பு, பாலியல் கல்வி, விளை யாட்டு மற்றும் உடற்பயிற்சி குறித்த பாடங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தப் புத்தகத்தின் 56ஆவது பக்கத்தில் அசைவ உணவு பற்றி தவறான பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவு சாப்பிடுபவர்கள் ஏமாற்றுவர், பொய் பேசுவர், வாக்குறுதிகளை மறப்பர், கெட்ட வார்த்தை பேசு வர், திருடுவர், சண்டை போடுவர், வன்முறை மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர் என கூறப்பட்டுள்ளது.

மேலும் ஜப்பானியர்கள் சைவ உணவு சாப்பிடுபவர்கள். அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு சைவ உணவுதான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானி யர்கள் உணவில் மீன் உணவுக்கு முக்கியத்துவம் அளிப்பது பற்றி அந்தப் பாடப்புத்தகத்தில் குறிப் பிடவே இல்லை.

இது குறித்து சிபிஎஸ்இ தலை வர் வினித் ஜோஷியிடம் கருத்து கேட்ட போது, 9ஆம் வகுப்புக்கு மேல் உள்ள பாடப் புத்தகங் களைத்தான் சிபிஎஸ்இ பரிந்துரை செய்கிறது. மற்ற வகுப்புக்கான பாடப் புத்தகங்களை அந்தந்த பள்ளிகளே தேர்வு செய்கின்றன. பள்ளி பாடப் புத்தகத்தில் என்ன உள்ளது என்பதை பற்றி சிபி எஸ்இ கண்காணிப்பதில்லை என்றார்.

தனியார் நிறுவனங்கள் வெளி யிடும் பாடப்புத்தகங்களில் முரண் பாடான பல தகவல்கள் இடம் பெறுவது பற்றி கல்வியாளர்கள் பல அறிக்கைகளை கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து சமர்ப் பித்து வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...


மாமிசம் சாப்பிடுவோர்பற்றி அவதூறு மத்திய பாடத் திட்டத்திலிருந்து நீக்குக!


மாமிசம் சாப்பிடுவோரை அசிங்கம் அவதூறு பரப்பும் சி.பி.எஸ்.சி. பாட நூல்களில் பாடத் திட்டக் குழுவினரால் வைக்கப்பட்டுள்ள ஒரு நூலில் (ஆறாம் வகுப்பு) உடல் நலக் கூறுகள் சம்பந்தமான ஒரு பாடம், மாமிச உணவு சாப்பிடுகின்றவர் (Non- Vegetarians) எல்லோரையும் சகட்டுமேனியாக, திருடர்களாக பொய் சொல்பவர் களாகவும், வன்முறையாளர்களாகவும் காமவெறி கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்று எழுதி, அதை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதால் புதிய கண்டனம் வெடித்துக் கிளம்பியுள்ளது நியாயமானதேயாகும்!

அறிவியல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ நிரூபிக்கப்பட முடியாத மிக மோசமான கூற்று இது. இந்தப் பாடத்தையும் உடனே மத்திய அரசு திரும்ப பெற வேண்டியது அவசர அவசியமாகும். தேவையற்ற வீண் சர்ச்சைகளை உருவாக்கும், ஜாதி மோதல்களையும், அரசியல் சண்டைகளையும் உண்டாக்கும் நிலையில் பாட புத்தகக் குழுவின் மிகவும் பொறுப்பற்ற முறையில் பணிபுரிந்துள்ளனர் எனத் தெரிய வருகிறது.

இதன்மீது உடனே நடவடிக்கை எடுத்து நீக்குவதோடு, இதற்குக் காரணமான பாட குழுவினர்மீது உரிய சட்டப்படிக்கான நடவடிக்கை எடுத்துத் தண்டிக்கத் தயங்கக் கூடாது. ஏற்கெனவே அம்பேத்கர் பற்றிய கேலிச் சித்திரங்கள், நாடார் மக்கள்பற்றி அவதூறு பரப்பும் பாடம், போன்ற அவலம் எல்லாம் எப்படி நீடிக்கலாம்? மத்தியக் கல்வித் துறை அமைச்சர் போதிய முன் எச்சரிக்கையுடன் செயல்பட தாக்கீது பிறப்பிக்க வேண்டும்.

சென்னை
17.11.2012

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


அசல் நாத்திகம்!


தமிழ்நாடு இந்து சமய அற நிலையத் துறை திடீரென்று நாத்திகக் கொள்கையைக் கடைப் பிடிக்கத் தொடங்கியது ஆச்சரியமானது - ஆனா லும் அது உண்மைதான்.

கடவுளை மற - மனிதனை நினை என்ற தந்தை பெரியார் அவர் களின் வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்டது வியப்பை அளிக்கிறது.

சக்தியுள்ள சாமிக்குச் சாவியும் - பூட்டும் ஏன் என்று சுவர் எழுத்தாளர் சுப்பையா அன்று எழுதி னார்.

இந்தக் கருத்தையும் இந்து சமய அறநிலையத் துறை ஏற்றுக் கொண்டு இருப்பதாகத் தெரிகிறது.

நமது தமிழக முதல் அமைச்சர் திடீரென்று சென்று தரிசிக்கக் கூடிய ஒன்று உண்டென்றால் அது சென்னையை அடுத்த - திருவொற்றியூரில் உள்ள வடிவுடைஅம்மன் கோயில் தான்.

ஓகோ, அவ்வளவு சக்தியுள்ள (ஆ) சாமியோ - இருந்துவிட்டுப் போகட்டும் - அதனாலென்ன?

சரி, என்ன வந்தது அந்தக் கோயிலுக்கு? ஒன்றும் இல்லை - கோலி விளையாட்டுப் பையன்கள் தீபாவளியன்று வெடித்த பட்டாசு ஒன்று ராஜகோபுரத் தின்மீது போடப்பட்டு இருந்த கீற்றுக் கொட்டகை யின்மீது விழுந்து தீப் பிடித்து எரிந்து சாம்பலாகி விட்டது போலும்!

என்ன சொல்கிறீர்கள்? சக்திக் கடவுளான வடி வுடை அம்மன் கோயிலிலா இந்தச் சமாச்சாரம்!

வெடித்தது பட்டாசு. கடவுள் சக்தியோ புஸ் வாணமாகி விட்டது! தீபாவளி நாளில் மிகவும் பொருத்தம்தான் - பேஷ்! பேஷ்!!

வடிவுடை அம்மனுக்கு என்ன வந்தது? அதுதான் அடித்து வைத்த சிலை யாயிற்றே! சீறீரங்கத்தில் ரெங்கநாதன் கோயில் பற்றி எரிந்தபோது கடவுள் ரெங் கநாதன் சிலையும் வெடித் துச் சிதறவில்லையா?

முதல் அமைச்சர் பிரத்தியேகமாகக் கும்பிடும் சாமி ஆயிற்றே! அதிகாரி களால் சும்மா இருக்க முடியுமா?

உத்தரவு பறந்தது. இனிமேல் இது போன்ற கீற்றுக் கொட்டகைகளைக் கோயில்களில் போடக் கூடாது. தீப்பிடிக்காத ஆஸ் பெஸ்டாஸ் பொருள்களைத் தான் பயன்படுத்த வேண் டும் என்பது இந்து சமய அறநிலையத் துறை அதி காரிகளின் உத்தரவு சுற்றறிக்கை.

அது மட்டுமல்ல; கோயில் அதனைச் சுற்றி யுள்ள இடங்களில் அக்னி பகவானுக்கும் தடையாம். தீப்பெட்டி, பீடி, சுருட்டு, சிகரெட் போன்ற பொருட் களைப் பக்தர்கள் எடுத்து வரவும் தடையாம்.

மின் கசிவு ஏற்பட்டு பகவானுக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்ப தற்காக மின் இணைப்பு களை உடனே சரி பார்க் கவும் உத்தரவாம்!

வடலூர் இராமலிங்க அடிகளார் சொன்னாரே நினைவு இருக்கிறதா? சாமி கும்பிடுவது என்பது பிள்ளை விளையாட்டே என்றாரே! அதனை இந்த இடத்தில் கொஞ்சம் நினைவு படுத்திக் கொண்டால், அதற்குப் பெயர்தான் புத்திசாலித்தனம் என்பது!

- மயிலாடன்17-11-2012

தமிழ் ஓவியா said...


நவம்பர் 25 அழைக்கிறது!


திராவிடப் பெருங்குடி மக்களே! வரும் 25ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் ஒரு புரட்சி விழா!

எத்தனையோ புரட்சி அத்தியாயங்களை நம் மக்களுக்கு உருவாக்கிக் கொடுத்த திராவிடர் கழகம் இப்பொழுது அதன் திசையிலே என்றென்றும் ஒளி உமிழும் ஓர் செயல்பாட்டுக்கு உங்களை அழைக் கிறது.

ஜாதி என்பது நமக்கு உரியதன்று. அது இடையில் வந்த ஒரு கூட்டத்தால் திணிககப்பட்ட தீய நஞ்சு.

திராவிடர் இனத்தின் ஒற்றுமையை உருக் குலைத்த எலும்புருக்கி நோய்! நாம் ஓர் இனம் என்ற உணர்வை ஒழித்துக் கட்டிய திட்டமிட்ட ஏற்பாடு அது.

பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் இந்த வருணாசிரம ஏற்பாட்டை ஒழித்துக் கட்டினால் ஒழிய நம் இனத்துக்கு மீட்சியில்லை.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தம் வாழ் நாள் முழுவதும் பிரச்சாரம் செய்ததும், பாடுபட்டதும் ஜாதி ஒழிப்பு சமத்துவ சமுதாயம் ஒன்றைப் படைப்ப தற்காகத்தான்; ஜாதியின் பாதுகாப்புக் கோட்டை யாக இருந்துவரும் கடவுள் மதம், சாஸ்திரம், ஏன் இந்திய அரசமைப்புச் சட்டம் முதலியவற்றின் ஆணி வேருக்கே சென்று அறிவாயுத அணுக்குண்டைப் போட்டவர் அறிவுலக ஆசான் அய்யா.

நாட்டில் ஏராளமான ஜாதி மறுப்புத் திருமணங்கள் - மத மறுப்புத் திருமணங்கள் நடக்கத் தொடங்கின. கோரிக்கையற்றுக் கிடக்கு தண்ணே வேரில் பழுத்த பலா என்று துணைவரை இழந்த பெண்களின் நிலையைக் கண்டு கவிதை வரியில் படம் படித்துக் காட்டினார் நமது இயக்கக் கவிஞர் பாரதிதாசன்.

துணைவரை இழந்தால் இன்னொரு துணை வியை தேடிக் கொண்டால் என்ன என்று துணிச்ச லாக வினா எழுப்பி மக்கள் மத்தியில் சிந்தனை அலைகளை எழுப்பி வந்திருக்கிறோம். அதன் விளைவு ஏராளமான திருமணங்கள் இந்தத் திசையில் நடந்து வருகின்றன.

சிவகாமி - சிதம்பரனார் ரெங்கம்மாள் - சிதம்பரம் என்று தொடங்கி நீண்ட பட்டியலே உண்டு.

மத மறுப்புத் திருமணங்களும் நடந்து வருகின்றன - நாமும் நடத்தியும் வைத்திருக்கிறோம்.

பார்ப்பனப் புரோகிதம் ஒழிந்த சுயமரியாதைத் திருமணங்கள் நாட்டில் நடக்கப் புதுமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியவர் புரட்சியின் சின்னமாம் தந்தை பெரியார்! சட்டப்படி அவை செல்லாது என்று நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியும், சட்டமா? சுயமரியாதையா? என்று வெடித்தெழுந்த வினாவுக்கு சுயமரியாதையே என்று பதில் அளித்ததோடு மட்டுமல்லாமல், புரோகித மறுப்புத் திருமணங்களை நடத்தித்தான் வந்தனர்.

அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த திமுக ஆட்சியில் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாக்கப்பட்டு தந்தை பெரியார் அவர் களுக்கு காணிக்கையாக்கப்பட்டது.

இப்பொழுது அடுத்த கட்ட அத்தியாயத்தை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் எழுதிட உள்ளது.

ஜாதி மறுப்புத் திருமணம், மத மறுப்புத் திருமணம் விதவையர் திருமணம், மாற்றுத் திறனாளிகளுடன் திருமணம், திருமண விடுதலை பெற்று மறு திருமணம் செய்து கொண்டோர்களுக்கு ஒரு பாதுகாப்பு என்று கூடச் சொல்லலாம். இந்த இணையர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யும்போது இடர்ப் பாடுகள் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றிடவும், ஜாதி மறுப்பு - மத மறுப்பு திருமணங்கள், விதவையர் திருமணங்கள், மறு வாழ்வு திருமணங்கள் இவற்றை ஊக்கப்படுத்தவும் வரும் நவம்பர் 25ஆம் தேதி காலை முதல் மாலை வரை முழு நாள் என்று சொல்லும் அளவுக்கு மன்றல் 2012 நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ளது.

ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்கள் விதவைப் பெண்கள் திருமணங்கள் விவாக விடுதலைப் பெற்றோர் திருமணம், மாற்றுத் திறனாளிகளுடன் திருமணம் இவற்றை செய்து கொள்ள விரும்புவோர் அன்று பெரியார் திடலில் கூடலாம்.

முன்னதாகவே பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநருக்குத் தகவல்களைத் தெரிவிக்க லாம்.

ஜாதிக்குள் சுயம்வரங்கள் நாட்டில் நடப்பதுண்டு. இந்த வகையில் நாட்டில் நடைபெறுவது இதுதான் முதல் முறை.

மேலும் மேலும் தொடர்ந்திடவும் வாய்ப்பு இருக் கிறது. திராவிடர் கழகம்தானே எல்லா மறு மலர்ச்சிக்கும் முன்னோடி!

வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வீர்! வாகை மலர் சூட்டிக் கொள்வீர்!!

நவம்பர் 25 அழைக்கிறது! அழைக்கிறது!!17-11-2012