Search This Blog

14.11.12

தீபாவளி - துக்க நாள்


தீபாவளி என்று கூறி இன்று சில தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். அது ஏதோ சம்பிரதாயமாக எந்திரமயமாகச் சொல்லும் ஒன்றுதான்.

இந்தப் பண்டிகையின் அடிப்படையை உணர்ந்தோ புரிந்தோ வாழ்த்துக்களைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.
இன்னும் சொல்ல வேண்டுமானால் இந்தத் தீபாவளி  தொன்று தொட்டு தமிழர்கள் கொண்டாடி வந்த பண்டிகையும் அல்ல. இதுகுறித்து பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் வரலாற்று ரீதியாகச் சொல்லி யுள்ள தகவல் முக்கியமானது.

தீபாவளி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டி லிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருநாள் இது பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படவே யில்லை. சென்னை செங்கற்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம்! அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை என்கிறார் அ.கி. பரந்தாமனார் (ஆதாரம்: மதுரை நாயக்கர் வரலாறு பக்கம் 433-434).

விஜயநகர சாம்ராஜ்ய காலத்திலும் (14 முதல் 16ஆம் நூற்றாண்டு வரை) பிறகு நாயக்கர் ஆட்சியிலும் (16 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை) பார்ப்பனர்களது ஆதிக்கம் தமிழ்நாட்டில் கொடி கட்டிப் பறந்தது; வேறு எப்பொழுதையும்விட அதி உன்னத நிலையை அடைந்தது.

அக்கிரகாரங்களை நிறுவுவதே அவர்களின் முக்கியப் பணிகளில் ஒன்றாக இருந்தது; பார்ப்பனர்களுக்குப் பிரத்தியேகக் கல்வி வசதியும் பெருகி வளர்ந்தது. அவர்களுக்குக் கல்வி கற்பித்த முறை மற்றவர்களுக்குக் கற்பித்த முறைகளிலிருந்து வேறுபட்டிருந்ததால் அவர்கள் ஆட்சிக் காலத்தில் தான் தமிழ்நாட்டில் தீபாவளி என்ற புதிய பண்டிகையும் புகுந்தது (திராவிடர் இயக்க வரலாறு பக்கம் 42 - முரசொலிமாறன்)

இந்த வரலாற்றுப் பின்னணியைக் கூர்ந்து பார்க்கும்போது பார்ப்பனர் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தபோது தான் தீபாவளி புகுத்தப்பட்டுள்ளது என்பது வெளிப்படை.

தமிழர்களின் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பின் ஒரு அம்சமாகவே தீபாவளியைக் கருத வேண்டும்.
தமிழ்நாட்டில் எங்கே கங்கை இருக்கிறது? இந்த நாளில் கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்ப தெல்லாம் பொருத்தம்தானா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இது ஒருபுறம் இருக்க, தீபாவளிப் பண்டிகைக்காக சொல்லப்படும் புராணக் கதை சற்றும் அறிவுக்குப் பொருத்தமற்றதாகும்.

இரண்யாட்சதன் என்பவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலில் வீழ்ந்தான் என்பதும், மகா விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து பூமியை மீட்டான் என்பதும் - பூமிக்கும், பன்றிக்கும் பிள்ளை பிறந்தது என்பதும், அவன்தான் நரகாசுரன் என்பதும், அவன் பூதேவர்களுக்குத் தொல்லை கொடுத்தான் என்பதும், கிருஷ்ண அவதாரம் எடுத்து  அவனைக் கொன்றான் என்பதும் அந்நாள் தான் தீபாவளி என்பதும் அறிவுக்குப் பொருத்தமற்றது மட்டுமல்ல; ஆபாசமும், அருவருப்பும் கொண்டவை யல்லாமல் வேறு என்ன?
ராட்சதன், அசுரன், அரக்கன் என்று சொல்லப்படுவது எல்லாம் திராவிடர்களைத்தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதைக் கவனத் தில் கொண்டால்,  தீபாவளி பண்டிகைகாகக் கூறப் படும் கதையில் வரும் இரண்யாட்சதன், நரகாசுரன் என்பவர்கள் எல்லாம் திராவிடர்களைத்தான் குறிக்கிறது என்பது சொல்லாமலே விளங்கும்.

பூதேவர்கள், ஆரியப் பார்ப்பனர்கள்; ராட்சதர்கள் அசுரர்கள், திராவிடர்கள் என்பதைப் புரிந்து கொண்டால் ஆரியப் பார்ப்பனர்கள் திராவிடர்களை சூழ்ச்சியால் வீழ்த்தியதை பதிய வைப்பதுதான் இந்தத் தீபாவளி என்பது எளிதில் விளங்குமே.

அதனால்தான் தந்தை பெரியார் இது துக்க நாள் என்றார்; திராவிடர் கழகமும் இந்த அடிப்படையில் மக்கள் மத்தியில் பிரச்சாரமும் செய்து வருகிறது.
தீபாவளி கொண்டாடும் தமிழா! ஆரியர்கள் திராவிடர்களை வீழ்த்திய நாளை நாம் கொண் டாடலாமா? என்று தன்மான வினா தொடுக்கும் நாளாக இதனைக் கொள்ள வேண்டாமா? சிந்திப்பீர்!

 -------------------”விடுதலை” தலையங்கம் 13-11-2012

22 comments:

தமிழ் ஓவியா said...


தீபாவளிஸ்பெஷல்!


தீபாவளி பட்டாசு வெடித்து சென்னைகாசிமேட்டில் ஏழு குடிசைகள் தீப்பிடித்து எரிந்து சாம்பல்! சென்னை மயிலாப்பூர் கிழக்கு மாட வீதிகள் அருகில் பட்டாசு வெடித்து பத்து குடிசைகள் சாம்பல்! (கங்கா ஜலம் ஆயிற்றா?)

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம் பாடியைச் சேர்ந்த சுரேஷ் (28) தங்கேஷ் (28) கருணாநிதி ஆகியோர் காரைக்காலுக் குச் சென்று பட்டாசுகள் வாங்கிய பார்சல்கள் மோட்டார் சைக்கிளில் சைலன்ஸரி உரசியதால் பட்டாசுகள் வெடித்து மூவரும் தூக்கி எறியப்பட்டனர் ஒருவர் மரணம் - இருவர் படுகாயம் (நமது அனுதாபம் உரித்தாகுக - கிருஷ்ண பகவானின் உபயம் இதுதானா?)

இவ்வாண்டு பட்டாசு விற்பனை 32 விழுக்காடு குறைவு! (நல்ல சேதி! சுற்றுச் சூழல் மாசு ஏற்படாமல் மக்கள் தப்பித் தனர்).

தீபாவளி வெடி விபத்து முன்னெச்சரிக்கையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயத் திற்குச் சிறப்பு ஏற்பாடு! (கடவுளை மற - மனிதனை நினை!)

தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் காவல் பாதுகாப்பு - சென்னை யில் அதிரடிப் படை ரோந்து! (பண்டிகை கொண்டாடி என்ன பயன்? தனியொழுக்கம் - பொது ஒழுக்கம் வளரவில்லையே!)

தீபாவளியையொட்டி திரையரங்குகளில் 5 காட்சிகள் தமிழ்நாடு அரசு அனுமதி (ரொம்பத்தான் அவ சியம்!; தீபாவளி என்றால் காசைக் கரியாக்குவது தானே!)

தீபாவளிக்கு மின் நிறுத்த நேரம் குறையும் - மின்துறை அதிகாரிகள் தகவல் (அப்பாடா! இன்று ஓரு நாளாவது விடிந்ததே!)

காஞ்சிபுரம் அருகே விஷார் கிராமத்தில் உள்ள ஆல மரத்தில் தங்கும் வவ்வால்களுக்காக தீபாவளி பட்டாசுகளை மக்கள் புறக்கணித்தனர்.

(விஷார் மக்கள், உஷார்தான்! முட்டாள்தனம் ஒழிய காரணமாக இருந்த வவ்வால்கள் வாழ்க, வாழ்கவே!)

சென்னை வியாசர்பாடியில் அனுமதி பெறாமல் பட்டாசு வியாபாரம் செய்தவர் கைது - ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் பறி முதல் - புழல் சிறையில் அடைப்பு!

(நாய் விற்ற காசு குரைக்கவா போகுது என்று நினைத் திருக்கலாம்!)

குடியரசு தலைவர், பிரதமர், முதல் அமைச்சர் தீபாவளி வாழ்த்து (இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மனப்பான்மையை வளர்ப்பது விஞ்ஞான சீர்திருத்த உணர்வை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமை என்னும் பகுதியை 51a(h) நீக்கி விடலாம்தான்! வேலியே பயிரை மேய்கிறது! ஒருக்கால் குடிமக்களின் கடமையே தவிர எங்கள் கடமை இல்லை என்று வியாக்கியானம் செய்தாலும் செய்வார்கள் - யார் கண்டது?)

பட்டாசுகளின் சத்தம் 115 டெசிமலைத் தாண்டக் கூடாது என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பு! (அணுகுண்டு வெடியின் சத்தம் 125 டெசிமலாம்! சட்டமாவது சத்தமாவது!)

கொத்தங்குடி கிராமத்தில் 30 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடப்படுவதில்லை (புத்திசாலி மக்களுக்கு ஒரு சபாஷ்) 13-11-2012

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர் விடிவுக்குப் பொது வாக்கெடுப்புத் தேவை!

மெக்சிகோவுக்குள்ள ஆர்வம் இந்தியாவுக்கு வேண்டாமா?
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

ஈழத் தமிழர் விடிவுக்கு ஈழத் தமிழர் களிடையே பொது வாக்கெடுப்புத் தேவை. இந்தப் பிரச்சினையில் மெக்சிகோ போன்ற நாடுகளுக்குள்ள ஆர்வம் இந்தியாவுக்கு இருக்க வேண்டியது அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் உள்ள ஈழத் தமிழர் இனப் படு கொலையை நடத்திய சிங்கள ஹிட்லர் இராஜ பக்சேயின் அரசு, தீவிரவாதத்திற்கு எதிரான போர்தான் என்று உலக நாடுகளின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி நம்ப வைத்தது.

2009இல் என்ன நடந்தது?

போர் நியதிகளுக்கும், நெறிமுறைகளுக்கும் மாறுபட்டு சொந்த நாட்டு மக்களையே குண்டு வீசி அழித்தது; போர்ப் பாதுகாப்புப் பகுதியாகிய (குண்டு வீச்சு நிகழாத) வன்னிப் பகுதிக்கு வந்துவிடுங்கள் என்று அந்த நாட்டு பொது மக்களாகிய தமிழர் சிவிலியன்களை நம்ப வைத்து, அவர்கள் சுமார் மூன்றரை லட்சம் பேர் திரண்டி ருந்தபோது அங்கும் குண்டுவீசி கொடூரமாக ஒரு லட்சம் தமிழர்களைக் கொன்றது. 90 ஆயிரம் தமிழச்சிகளை விதவைகளாக்கிப் பழி தீர்த்தது.

2009இல் கடைசிக் கட்டப் போரின்போது, கனரக ஆயுதப் பிரயோகம் நிறுத்தப்பட்டு விட்டது என்று இந்தியா போன்ற நாடுகளுக்குக் கூறி, ஏமாற்றி விட்டு, சரண் அடையவந்த வெள்ளைக் கொடியேந்திய அந்த விடுதலைப் புலித் தலைவர்களையும், சுட்டுக் கொன்று, வெற்றி என்று முள்ளிவாய்க்கால் பகுதியில் எக்காள மிட்டது. இந்தியாவும் அது தந்த வாக்குறுதியை நம்பிய தலைவர்களும் ஏமாற்றப்பட்டனர்.

தமிழ் ஓவியா said...


தங்கள் அரசின் ஹிட்லரிச இன ஒழிப்பு, கருத்துச் சுதந்திர உரிமையைப் பேசுவோர் சிங்களவர்களேயானா லும்கூட அவர்களை சிறைக்குள் தள்ளி சித்ரவதை செய்தது; செய்கிறது (வெளிக்கடை சிறை கலவரம் இப்போதும்) இராணுவத்தின் அடக்குமுறை அம்புகள் அவர்கள்மீது பாய்வது வாடிக்கையாகிவிட்டது. யாழ்ப் பாணம் பகுதி தமிழர்கள் பகுதி என்ற அடையாளத்தையும் மாற்றி அழித்துவிட, சிங்களக் குடியேற்றம் அதிவேகமான முறையில் அமலாகும் கொடுமையும், கோரமும் ஆன அன்றாட அவலங்கள் அங்கே!

சிங்கள இராணுவம், சிங்கள காவல் என்பதைத் தாண்டி, சிங்கள அரசினாலேயே உருவாக்கப் பெற்று ஆட்களைத் தூக்கும் கூலிப்படை மூலம் கடத்திக் கொலை செய்யும் மற்றொரு திருப்பணியும் சேர்ந்திருக்கிறது. உலக நாடுகளிடம், இந்தியாவிடம் கொடுத்த வாக்குறுதிப் படி, அரசியல் தீர்வு எதுவும், ஈழத் தமிழர் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வண்ணம் நடந்த பாடில்லை.

இன்னும் மோசமான நிலையே!

முள்வேலி அகற்றப்பட்டாலும், சிங்கள இராணுவ இரும்பு வேலிக்குள் தான் ஈழத் தமிழர் தத்தம் அன்றாடப் பணிகளை நிகழ்த்திட வேண்டிய மிக மோசமான நிலையே இன்னமும் நீடிக்கிறது!

பன்னாட்டு பத்திரிகையாளர்களோ, ஊடகங்களோ சுதந்தரமாக இலங்கையின் தமிழர் வதியும் பகுதிகளுக் குள் செல்ல முடியாத நிலைதான் இன்னமும்!

நெஞ்சுப் பொறுக்குதில்லையே இந்த நிலை கண்டு என்று குமுறும் வேளையில், அய்.நா.வும்., அதன் மனித உரிமை ஆணையமும் தலையிட்டு, நிலைமை மேலும் மோசமாகாமல் தடுக்க முன் வந்தால் அதுதான் முதல் உதவி - ஈழத் தமிழர்களுக்கு!

முதிர்ந்த ராஜ தந்திரியான கலைஞர் கூறிய கருத்து!

தமிழ் ஓவியா said...

இந்திய அரசுக்குப் போதிய அழுத்தம் கொடுப்போம்; அவர்கள் நம் மக்களுக்கு உறுதுணையாக இருந்தால் மட்டுமே நாம் அவர்களுக்கு (மத்திய அரசுக்கு) உறுதுணையாக இருப்போம் என்று மிகுந்த அரசியல் நாகரிகத்தோடும், கண்ணியத்தோடும், முதிர்ந்த ஒரு ராஜ தந்திரியின் வார்த்தைகளாக நமது டெசோ விழாவில் தி.மு.க. வின் தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் தெளிவுபடுத்தி யிருக்கிறார்கள்.

இது சுவர் எழுத்துப் போன்றது; இதைப் படித்துச் செயல்பட வேண்டியது மத்திய அரசின் மகத்தான கடமையாகும்.

இந்திய அரசிடம் இலங்கையில் இராஜபக்சே அரசு தந்த உறுதிமொழிகளைச் செயல்படுத்தவில்லை - அரசியல் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை; 4 ஆண்டுகள் ஓடி விட்டன.

இந்திய அரசிடம் முன்பு ஒப்பந்தம் போட்ட இராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே (Indo Srilanka Pact) என்பதையும் (அதுவே அவ்வளவு உரிமை தந்த ஒப்பந்தம் அல்ல என்ற உண்மைகூட ஒருபுறம் இருக் கட்டும்.) செயல்படுத்தவில்லை. இந்திய அரசு கூறிய 13ஆவது சட்டத் திருத்தப்படியான (இதில் எவ்வளவு உரிமை ஈழத் தமிழர்களுக்கு என்பதும்கூட கேள்விக் குறிதான் என்ற போதிலும்) அந்த குறைந்தபட்ச மாற்றங்களைக்கூட - அரசியல் தீர்வுகளைக்கூட செய்ய - இராஜபக்சே அரசு தயாராக இல்லை.

ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்!

மாறாக, ஒட்டக் கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற முதுமொழிக்கேற்ப, 19ஆவது சட்டத் திருத்தம் என்று ஒன்றை இலங்கை நாடாளுமன் றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிய இராஜபக்சே அரசு அதனைச் செயல்படுத்த ஆவன செய்து கொண்டிருப்பதாக வருகின்ற செய்தி, கொஞ்ச நஞ்சம் இருக்கின்ற உரிமைகளைக் கூடப் பறிப்பதாகவே இருக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்!

எல்லா மக்களோடும் சகஜமாக வாழ வேண்டும் என்று இராஜபக்சே அரசு நினைத்தால், போர் வெ(ற்)றிச் சின்னம் கட்ட முன் வருமா?

மறைமுகமாக இந்திய அரசையே மிரட்டுவது போல, சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் நாங்கள் நெருக்கமாகி அவர்கள் மூலம் இராணுவப் பயிற்சி, இராணுவ உதவிகள், பொருளாதார உதவிகள் எல்லாம் பெறுகிறோம். உங்களை நாங்கள் முழுமையாக நம்பிடவில்லை என்று கூறாமல் கூறி அச்சுறுத்தல், அலட்சியப் பார்வையோடும் நடப்பது இந்திய அரசு அறியாததா?

உச்சநீதிமன்ற நீதிபதியையே அரசுக்கு ஆதரவான தீர்ப்புத் தரவில்லை என்ற காரணத்தால் பதவி நீக்கம் செய்து, நீதித்துறையையும் அச்சுறுத்தும் ஆணவம் அங்கே கோலோச்சுகிறது!

தேவை பொது வாக்கெடுப்பு!

எனவே இலங்கையின் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றவாளி என்ற முடிவுக்கு இந்தியா தனது முழு ஆதரவைத் தெரிவிப்பதோடு,
பொது வாக்கெடுப்பையும் நடத்திட, இந்தியா முழு முயற்சிகளையும் செய்து ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்குப் பாதுகாப்பு ஏற்படுத்தித் தர வேண்டியது அவசரம் - அவசியம்!

அய்.நா.விலும் மெக்சிகோ போன்ற நாடுகள் காட்டும் ஆர்வத்தைவிட, தமிழர்களின் தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களைப் பாதுகாக்க, இந்திய அரசு மேலும் அதிக மான அழுத்தம் கொடுத்து இலங்கை அரசுக்கு எச்சரிக்கை தர முன்வர வேண்டாமா?

இத்தருணம், முக்கியமான தருணம்.

சென்னை
13.11.2012

கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


முட்டாள்தனம்


இந்து மதத்தையோ, அது சம்பந்தமான கடவுள், சாத்திரம், இதிகாசம், புராணங்களையோ, சீர்திருத்திவிடலாம் என்று நினைப்பது வெறும் கனவும், வீண் வேலையும், கடைந்து எடுத்த முட்டாள்தனமுமேயாகும்.

(குடிஅரசு, 13.1.1945)

தமிழ் ஓவியா said...


தினகரன் பதில் சொல்வது பெரியாருக்கா? அண்ணாவுக்கா? கலைஞருக்கா? முரசொலிமாறனுக்கா?


பிரபல வழக்கறிஞரும் பிஜேபியின் மூத்தத் தலைவருமான ராம்ஜெத்மலானி இராமனை விமர்சித்து விட்டாராம்.

துள்ளிக் குதித்தது இராம. கோபாலன் அல்ல - இல. கணேசனும் அல்ல; தினகரன் ஏடுதான் விட்டேனா பார்! என்று தலை யங்கம் தீட்டி ஆசுவாசப்பட்டு நிற்கிறது.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் தினகரன் தோள் தட்டி மோத வந்திருப்பது - ராம் ஜெத்மலானியுடன் என்பதைக் காட்டிலும் தந்தை பெரியாரோடு, அறிஞர் அண்ணா வோடு, கலைஞரோடு, முரசொலிமாறனோடு மோத வந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

இராமாயணம் ஆரியர், திராவிடர் போராட்டத்தைச் சித்திரிக்கும் காவியம் என்று நேரு முதல் பி.டி. சீனிவாசய்யங்கார் வரை வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு குறிப்பிட்டுள்ளார்கள்.

இப்பொழுது தினகரன் ஆரியர் பக்கம் நிற்கிறதா? திராவிடர் பக்கம் நிற்கிறதா என்பதை வாசகர்கள் ஆழமாகப் புரிந்து கொள்வார்கள்.

தந்தை பெரியாரின் இராமாயணப் பாத்திரங்கள் (தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியிலும் வெளிவந்துள்ளது) அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்! கம்பரசம் கலைஞர் அவர்களின் சக்ர வர்த்தியின் திருமகன் (ராஜாஜி எழுதிய சக்ரவர்த்தி திருமகன் நூலுக்கு மறுப்பு!)

இவற்றையெல்லாம் தினகரன் தலையங்க எழுத்தாளர் படித்தாரா என்று தெரிய வில்லை.

இராமாயணத்தைக் கொளுத்தவேண்டும் என்று டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளையோடும், நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும் வாதிட்டு வென்றவர் அண்ணா என்ற வரலாறு தெரியுமா தினகரனுக்கு? இவற்றை எல்லாம் படித்திருந்தால் திரா விடர் இயக்க உணர்வோடு குருதியோடு கலந்திருந்தால் தினகரன் இப்படி எழு துமா? சன் தொலைக்காட்சிதான் இராமா யணத்தை தொடராக ஒளி பரப்பிக் கொண்டு இருக்குமா?

வால்மீகி இராமாயணம்தான் எல்லா இராமாயணத்துக்கும் மூல நூல். அதில் இராமனைப்பற்றி என்ன கூறியிருக்கிறது என்பதுதான் முக்கியம்.

தந்தை சொன்னவுடன் ராமன் அப்படியே கட்டுப்பட்டு காடேகிடவில்லை.

எந்த மடையனாவது தன் இஷ்டப்படி யெல்லாம் நடந்து வரும் மகனை காட்டுக்கு அனுப்ப சம்மதிப்பானா? என்று இலட்சு மணனிடம் தன் தகப்பனைக் குறை சொல் லித் துக்கப்படுகிறான் ராமன் (அயோத்தியா காண்டம் 53ஆவது சருக்கம்)

இந்த ஒரு சோறு போதுமே!

சீதையின் யோக்கியதை தான் என்ன?

மாரீசன் மானாக வந்த போது, அதனைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று சீதை சொன்னபோது, மானைத் துரத்திக் கொண்டு ஓடிய ராமன் வெகு நேரம் வராமல் இருந்த நிலையில் லட்சுமணா என்ற குரல் மட்டும் கேட்ட நேரத்தில், தன் அருகில் இருந்த லட்சுமணனை நோக்கி ராமனுக்கு ஏதோ ஆபத்து - விரைந்து செல் என்று சொன்ன நேரத்தில், இலட்சுமணன் அகலாது இருந்த நிலையில் சீதை என்ன சொல்லுகிறார்?

அடபாவி! என்னைக் கைப்பற்றக் கருதி, இராமன் சாகட்டும் என்று போகாமல் இருக்கிறாயா? இதற்குத்தான் எங்கள்கூட யோக்கியன் போல வந்தாயா? அட சண் டாளா! நீ என் மீது ஆசை வைத்து இரா மனைக் கொல்ல நினைக்கின்றாய்; பரதன் உன்னை எங்களோடு இதற்காகவே அனுப் பினானா? நீயாவது, பரதனாவது என்னை அனுபவிக்க நான் ஒப்ப மாட்டேன் என்றாளே சீதை.

இலட்சுமணன் தாயே இப்படியெல்லாம் பேசக் கூடாது! என்று வணக்கமாகச் சொன்னபோது சீதை ஏ வஞ்சகா! இப்படி யாவது பேசிக் கொண்டு இன்னும் சற்று நேரம் என்னைப் பார்த்துக் கொண்டு இருக் கலாம் என்று பார்க்கிறாயா? என்றாள் சீதை (ஆரண்ய காண்டம், 45ஆவது சருக்கம்)

சீதையின் தரம் எந்தத் தரத்தில் இருக் கிறது என்பதை தினகரன்கள் உணரட்டும்!

நிறைமாத கர்ப்பிணியை கொடு மிருகங் கள் திரியும் காட்டில் விடுவது எந்த வகை புருஷோத்தமம்?

கணவனைப் பிரிந்திருந்த சீதைமீது இராமன் யாரோ சொன்னதற்காக சந்தேகப் படுவதை நியாயப்படுத்துகிறது தினகரன் யார் என்ன கூறினால் என்ன? என் மனைவி - லட்சுமி அவதாரம் - ஒழுக்க சீலி என்று மகாவிஷ்ணுவின் அவதாரமான இராமன் நினைக்க வேண்டாமா?

நான் உன்னைப் பிரிந்து இருந்தபோது நீ யோக்கியமாகத்தான் இருந்தாய் என்பதற்கு என்ன அடையாளம்? என்னோடு நீயும் தீக் குழியில் இறங்கு என்று சீதை சொல்லி யிருக்க வேண்டாமா?

பெண்ணென்றால் வெறும் ஜடம் என்று நினைக்கும் ஆரிய மனுதர்மக் கருத்துத் தானே இங்கே மேலோங்கி நிற்கிறது?

இலட்சுமணனின் யோக்கியதைதான் என்ன?

சூர்ப்பனகையிடம், சீதை கெட்ட நடத்தையுள்ளவள், கொங்கை சரிந்தவள் என்கிறானே! (ஆரண்யகாண்டம் 18ஆவது சருக்கம்) தாடகை, சூர்ப்பனகை, அயோமுகி ஆகிய பெண்களை காது, மூக்கு முலை ஆகியவைகளைக் கொய்து கொடுமை செய்தவன் ஆயிற்றே!

இவ்வளவு மோசமான கதாபாத்திரங் களைக் கொண்ட ஒன்றைத்தான் - திராவி டர்கள்மீது துவேசம் கொண்டு எழுதப்பட்ட காவியத்தின்மீதுதான் - தினகரனுக்குக் காதல் பீறிட்டுக் கிளம்புகிறது என்றால், இதனை என்னவென்று சொல்ல!

மீண்டும் சொல்லுகிறோம் தினகரன் தலையங்கம் ராம்ஜெத்மலானியோடு மோது வது என்பதைவிட, தந்தை பெரியார், அறிஞர்அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், முரசொலிமாறன் ஆகியவர் களோடு - திராவிட இனத்தோடு மோதுவதே!

- மின்சாரம் 13-11-12

தமிழ் ஓவியா said...


சங்கராச்சாரியாருக்கு துக்கநாள் இன்று!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
செவ்வாய், 13 நவம்பர் 2012 15:40
E-mail Print

தீபாவளி நாள் காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்குத் துக்க நாள் தான்!

எப்படி?

இன்றைக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன் இதே தீபாவளி நாளில்தான் கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார். 13-11-2012

தமிழ் ஓவியா said...


தீக்கிரையாக்கப்பட்ட தருமபுரி - நத்தம் கிராமத்துக்கு தமிழர் தலைவர் செல்கிறார்


ஜாதி வெறி காரணமாக தீக்கிரையாக்கப்பட்ட தருமபுரியை அடுத்த நத்தம் கிராமத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் செல்கிறார். 14.11.2012 புதன் காலை 11 மணி அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அம்மக்களை நேரில் சந்திக்கிறார்.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்.

தமிழ் ஓவியா said...


தர்மபுரி அருகே வன்முறை நடந்த கிராமங்கள் தேசிய ஆதிதிராவிட ஆணைய இயக்குநர் ஆய்வு


தர்மபுரி, நவ. 13- தர்மபுரி அருகே வன்முறை நடந்த கிராமங்களில் தேசிய ஆதிதிராவிட ஆணைய இயக்குனர் வெங்கடேசன் ஆய்வு நடத்தினார். அந்த கிராமங்களுக்கு இரவில் வெளியாட்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி அருகே காதல் கலப்புத் திருமணத்தால் நத்தம் காலனி, கொண்டம்பட்டி மற்றும் அண்ணா நகர் ஆகிய கிராமங்களில் நூற்றுக்கணக்கானோர் அடங்கிய பல கும்பல்கள் சேர்ந்து திடீர் தாக்குதல் நடத்தின. அப்போது 268 வீடுகளுக்கு தீ வைக்கப் பட்டது. அய்ம்பதிற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 4 கார்கள் மற்றும் வேன்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

தேசிய ஆதிதிராவிட ஆணை யத்தின் இயக்குநர் வெங்கடேசன், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று (12.12.2012) காலை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது தாக்குதலுக்கு உள்ளான ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று எத்தகைய சேதம் ஏற்பட்டுள்ளது? என்பது குறித்து ஆய்வு நடத்தினார்.

வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் சேதப்படுத்தப்பட்டு, நகைகள், பணம் சூறையாடப்பட்டு இருப்பதாகவும் வீடுகளில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் போது பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறுகையில், கொள்ளையடிப்பதை நோக்க மாக கொண்டு இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள் ளது. இந்த தாக்குதலில் ஒரு தலைமுறையின் உழைப்பு முழுமையாக சூறையாடப்பட்டுள்ளது. தாக்குதலில் அனைத்து வீடுகளும் முழுமையாக சேதமடைந்துள்ளன. இந்த வீடுகளை சீரமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.எரிந்து போன குடும்ப அட்டைகள், கல்வி சான்றிதழ்கள், பிற முக்கிய ஆவணங்களை போர்க்கால அடிப் படையில் வழங்க வேண்டும். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய பரிந்துரைகள் செய்யப்படும் என தேசிய ஆதிதிராவிட ஆணைய இயக்குநர் வெங்கடேசன் தெரிவித்தார்.

தாக்குதலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் சேத மடைந்த சொத்துக்களின் மதிப்பு குறித்த அறிக்கை ஆணையத்திற்கு அளிக்கப்பட உள்ளது. அந்த அறிக் கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும், இந்த சம்பவம் தொடர்பாக சட்டரீதியான மேல் நடவடிக்கைகள் எடுக்கவும் அரசுக்கு பரிந்துரைகள் அளிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட கிராமங்களில் மாவட்ட நிர் வாகம் மூலம் கடந்த 2 நாள்களாக உணவு வழங்கப் பட்டது. அந்த மக்களின் உறவினர்கள், நண்பர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் அரிசி, பருப்பு, காய்கறிகள் வழங்கப்பட்டன. இவற்றை கொண்டு பெண்கள் நேற்று பொது இடத்தில் சமைத்து மக்களுக்கு வழங்கினர்.

இந்த கிராமத்தில் பலத்த காவல்துறைப் பாது காப்பு போடப்பட்டுள்ளது. வெளியாட்கள் இங்கு வருவதற்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட 95 பேரை இதுவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.13-11-2012

தமிழ் ஓவியா said...

கல்வியும் கடவுளும்


மாணவச் செல்வங்களும், மழலைப் பிஞ்சுகளும் ஒன்றை உள்ளத்தில் கொள்ள வேண்டும். உண்மை என்பது எது? உறுதி செய்யப்படுவது மட்டுமே! எவை உறுதி செய்யப்படவில்லையோ அவை உண்மையல்ல. அவை வெறும் நம்பிக்கை. நம்பிக்கையென்பவை காரணகாரியத்துடன் இல்லாமல் இருப்பின் அதற்குப் பெயர் மூடநம்பிக்கை!

எந்தவொரு செய்தி பலவிதமாகச் சொல்லப்படுகிறதோ அது உண்மையல்ல. இதுவே நீங்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதியச் செய்யவேண்டிய கருத்து. உண்மையென்றால் அது ஒரேமாதிரி சொல்லப்படும். இந்த அளவுகோலைக் கடவுளுக்குப் பொருத்திப் பார்த்தால் அது உண்மையா, கற்பனையா என்பது உறுதியாகும்.

கடவுள் எது என்றால், ஒருவர் சொல்கிறார் அன்பே கடவுள். இன்னொருவர் கருணையே கடவுள். இன்னொருவர் அறிவே கடவுள். காற்று கடவுள், நீர் கடவுள், நிலம் கடவுள், நெருப்புக் கடவுள். இப்படிச் சொல்பவர் சிலர். நான்கு தலை, அய்ந்து தலை, ஆறு தலை கடவுள்களுக்கு உண்டு. அது மனிதனைப்போல என்பவர்கள் சிலர். சிலர் கடவுளுக்கு உருவம் இல்லை. உருவம் இல்லையென்றால் ஆண் கடவுள் பெண் கடவுள் என்பது பொய்.

ஆக, உருவம் உள்ள கடவுளை வணங்குகிறவர்களைப் பார்த்து உருவமற்ற கடவுளை வணங்குகிறவர், உங்கள் கடவுள் இல்லை என்கிறார். எனவே, கடவுளை நம்புகிறவனே இன்னொருவர் கடவுளை இல்லையென்கிறான்.

இப்படி கடவுள் என்பது பலவிதமாகச் சொல்லப்படுவதிலிருந்தே அது உண்மையல்ல என்பது உறுதியாகிறது. மனிதன் தன் விருப்பத்திற்கும், எண்ணத்திற்கும், சூழலுக்கும் ஏற்பவே கடவுளை உருவாக்குகிறான். எனவே, கடவுள் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டதேயன்றி அப்படியெதுவும் இல்லை.

மீனவர்கள் கடலைக் கடவுள் என்கிறார்கள். உழவர்கள் சூரியனைக் கடவுள் என்கிறார்கள். வீரர்கள் வீரத்தைக் கடவுள் என்கிறார்கள்; செல்வர்கள் பணத்தைக் கடவுள் என்கிறார்கள்; தொழிலாளிகள் தனக்குப் பயன்படும் கருவிகளைக் கடவுள் என்கிறார்கள்; அதைப்போல் படிப்பாளிகள் கல்வியைக் கடவுள் என்கிறார்கள்.

ஆக, தனக்கு அடிப்படையானதை மனிதன் மதிக்கிறான். அதன் உச்சமாக அதை வழிபடுகிறான். அது கடவுளாக்கப்படுகிறது. இவையே உண்மை! இந்த அடிப்படை உண்மையை பிஞ்சுகள் நெஞ்சில் பதிக்க வேண்டும்.

இது ஆயுத பூசை, சரஸ்வதி பூசை நேரம். தொழிற் கூடங்களிலும், கல்விக் கூடங்களிலும் படையல் போடுவார்கள். உங்களையும் கூப்பிடுவார்கள்; கும்பிடச் சொல்வார்கள். ஆனால்,இவை கடவுள்களா? சிந்திக்க வேண்டும். நமக்குப் பயன்படுபவை அவ்வளவே. நாம் அவற்றை வணங்குகிறோம் என்பது அக்கருவிகளுக்கோ அல்லது அந்த புத்தகங்களுக்கோ தெரியுமா? தெரியாது அல்லவா? அவை வெறும் அச்சிட்ட தாள்கள், வார்த்த, வடித்த, உருவாக்கிய கருவிகள் அவ்வளவே! எனவே அவற்றை வணங்குதல், அவற்றிற்கு பூசை, படையல், வழிபாடு என்பவையெல்லாம் அறிவுக்கு உகந்த செயலா? என்பதை பிள்ளைகள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நம் முன்னோர்கள் படையல் போட்டார்கள். நாமும் படையல் போடவேண்டும் என்று எண்ணுவது தவறு. நம் முன்னோர்கள் செய்ததையெல்லாம் நாம் செய்வதில்லை. நம் முன்னோர்கள் சிண்டு வைத்திருந்தார்கள், கோவணம் கட்டி நின்றார்கள். நாமும் அப்படி செய்கிறோமா?

நம் முன்னோர்கள் கட்டை வண்டியில் சென்றார்கள். நாம் செல்வோமா? நம் முன்னோ ருக்கு கம்ப்யூட்டர் தெரியுமா? வானொலி, தொலைக்காட்சி, தொலைப்பேசி தெரியுமா?

அவர்கள் காலத்தில் அவர்கள் சிந்தனைக்கு அவர்கள் செய்தார்கள். நாம் நம் சிந்தனைக்கும் அறிவு வளர்ச்சிக்கும் ஏற்ப நாம் செய்ய வேண்டும்.

அறிவுக்கு உகந்ததை ஏற்று ஒவ்வாததை உதறித்தள்ளி வாழ்வதே அறிவுள்ள, கற்ற, தெளிவுள்ள மனிதர்க்கு அழகு.

கல்விக்கு கடவுள் சரஸ்வதி என்றால் நம் தாத்தாவிற்கும், கொள்ளுத் தாத்தாவிற்கும் ஏன் கல்வியை அது கொடுக்கவில்லை. ஆரிய பார்ப்பனர்களுக்கு மட்டும் ஏன் கொடுத்தது? கடவுள் என்றால் அப்படிச் செய்யுமா? சிந்திக்க வேண்டும்.

பெரியார் போராடித்தான் நமக்கு கல்வி கிடைத்தது. எனவே, கடவுளை மறக்க வேண்டும்; மனிதர்களை நினைக்க வேண்டும்; பெரியாரைப் பின்பற்ற வேண்டும்!

- சிகரம்

தமிழ் ஓவியா said...


நான் தீபாவளி கொண்டாடுவதில்லை - கலைஞர்


சென்னை, நவ. 14- நான் தீபாவளி கொண்டாடுவதில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார் தி.மு.க. தலைவர் கலைஞர்.

செய்தியாளர்களிடம் (13.11.2012) அவர் கூறியதாவது:

செய்தியாளர்: மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் நேற்று உங்களைச் சந்தித்தாரே, அதுபற்றி?

கலைஞர்: ப. சிதம்பரம் தீபாவளி கொண்டாடக் கூடியவர். வாழ்த்துச் சொல்ல வந்தார். நான் தீபாவளி கொண்டாடுவதில்லை. பொங்கல்தான் தமிழர்களுடைய திருநாள்.

செய்தியாளர்: தமிழகத்தில் பண்டிகை தினத்தில்கூட மின்வெட்டு அதிகரித்துள்ளதே?

கலைஞர்: அம்மா ஆட்சி என்றாலே அப்படித்தான் இருக்கும்!

செய்தியாளர்: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு மசோதா தாக்கல் செய்தால், அதனை தாங்கள் ஆதரிப்பீர்களா, தங்கள் நிலைப்பாடு என்ன?

கலைஞர்: மசோதா தாக்கல் செய்யும்போது தி.மு.க. எடுக்கும் நிலை என்னவென்று தெரிய வரும்.

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர் சொன்ன நவமணிகள்


தோழர்களே, 4.11.2012 ஞாயிறன்று திருச்சி ராப்பள்ளி பெரியார் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் தலைவர் கூறிய கருத் துரைகள், இலக்குகள் நினைவிருக்கிறதா?

1) கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் இங்கே எடுத்துக் காட்டினாரே - தந்தை பெரியார் கூறியதை எடுத்துச் சொன் னாரே எனக்கு ஒருபுறம் வயது வளர்ந்து வந் தாலும் வாலிபமும் கூடவே வளர்ந்து வருகிறது என்று தந்தை பெரியார் அவர்கள் கூறினாரே, அதே உணர்வைத்தான் உங்களிடமிருந்து நான் பெறுகிறேன். உரக்கச் சிந்தியுங்கள் - எப் பொழுதும் உற்சாகத்துடன் இருங்கள்.

என் இளமையின் ரகசியம் உங்களிடம்தான் இருக்கிறது. இங்கு வரும்போது 80 வயதுடைய வனாக வந்தேன். நீங்கள் காட்டும் எழுச்சியைப் பார்க்கும் போது, இங்கு இருந்து செல்லும்போது உங்களைப் போலவே வாலிபராகத் திரும்பு கிறேன்.

2) இது ஓர் உலக இயக்கமாகும். இந்த இயக்கத்தில் உள்ள இளைஞர்கள் உள்ள பலமும், உடல் பலமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

3) கொள்கையில் தீவிரமாக இருக்க வேண்டும்; கட்டுப்பாடு நமது கவசமாகும்.

4) கைப்பேசி என்றாலும் தேவைக்கு மேல் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை, எல்லாப் போதைகளிலிருந்தும் விடுபட வேண்டும்.

5) இளைஞர்களைப் பிடித்து ஆட்டும் கிரிக் கெட் போதையை முதலாவதாகத் தெளிய வைக்க வேண்டும்.

6) கூடுமானவரை சைக்கிள் பயணத்தைப் புதுப்பியுங்கள். அதனால் சுற்றுச்சூழல் பாதிக் காது. சீனாவுக்குப் போனால் எங்கு பார்த்தாலும் சைக்கிள் சவாரியைப் பார்க்க முடியும்.

7) 2013ஆம் ஆண்டில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க 80 ஆயிரம் மரக்கன்றுகளை நட வேண்டும்.

8) 800 பிரச்சாரக் கூட்டங்களை நடத்த வேண்டும். அது பெரிய பொதுக் கூட்டமாகக் கூட இருக்க வேண்டிய அவசியமில்லை. தெரு முனைக் கூட்டங்களாகக் கூட இருக்கலாம்.

9) பிரச்சாரம் என்று சொல்லும்போது இப் பொழுதெல்லாம் கலை அம்சம் தேவைப்படுகிறது. இசை, இசைக் கருவிப் பயிற்சி, வீதி நாடகக் குழுப் பயிற்சி, மந்திரமா? தந்திரமா? பயிற்சி, கணினிப் பயிற்சி - இவற்றை நடத்தி ஏராளமான இளைஞர்களைத் தயாரிக்க வேண்டும்.
பிரச்சாரம்! போராட்டம்!! இரண்டுமே நமது அணுகுமுறைகள்!

தோழர்கள் உரை

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங் குன்றன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

திருக்குவளை தோழர் கவியரசன் கடவுள் மறுப்புக் கூறினார்.

பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை. சந்திரசேகரன், தஞ்சை இரா. செயக்குமார் மற்றும் அதிரடி அன்பழகன், மாநில இளைஞரணி செயலா ளர் இல. திருப்பதி, மாநில மாணவரணி செயலாளர் இளந்திரையன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தமிழ் சாக்ரட்டீஸ், மாநில மாணவரணி துணைச் செயலாளர் மு. சென்னியப்பன். அறிவுச்செல்வன் (காஞ்சி மண்டல இளைஞரணி செயலாளர்), சந்திரசேகரன் (கோவை மண்டல இளைஞரணி செயலாளர்), சுரேஷ் (சென்னை மண்டல இளைஞரணி செயலாளர்), சிவக்குமார் (வேலூர் மண்டல இளைஞரணி செயலாளர்), மணிவேல் (கடலூர் மண்டல இளைஞரணி செய லாளர்), சாக்ரட்டீஸ் (மதுரை மண்டல இளைஞரணி செயலாளர்), மணியம்மை (சென்னை மண்டல மாணவரணி செயலாளர்), தம்பி பிரபாகரன் (கடலூர் மண்டல மாணவரணி செயலாளர்), ச. சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), பெ. வீரையன் (மூடநம்பிக்கை குழு அமைப்பாளர்), சண்முகப் பிரியன் (தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர்), நன்றி: ஆத்தூர் சுரேஷ், (சேலம் மண்டல இளைஞரணி செயலாளர்).

இளைஞரணி, மாணவரணி, மாநில கலந்துரை யாடல் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு மதிய உணவு ஏற்பாட்டை தஞ்சை மாவட்ட ப.க. துணைத் தலைவர் வழக்குரைஞர் வீ. கதிரேசன் ஏற்று வழங்கினார்.

தமிழ் ஓவியா said...


கட்டப் பஞ்சாயத்து


இளம் பெண்கள் கைப்பேசியைப் பயன்படுத்துவதால் யாருடனும் தொடர்பு கொள்ள முடிகிறது. இது தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்துகிறது. எனவே, இந்தக் கிராமத்தில் எந்த ஓர் இளம்பெண்ணும் கைப் பேசியைப் பயன்படுத்தக் கூடாது என்று ராஜஸ்தான் மாநில டவுசா மாவட்டத்தில் உள்ள பண்டரேஜ் என்னும் ஊரில் கிராமப் பஞ்சாயத்தார் கூடி முடிவு செய்துள்ள னராம்.

சில மாதங்களுக்கு முன் உத்தரப்பிரதேசத்தில் அசரா என்னும் கிராமத்தில் இதேபோல பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதைவிட பிற்போக்குத்தனம் வேறு என்ன? ஆண்கள் கைப்பேசியைத் தவறாகப் பயன்படுத்துவதில் லையா? கருநாடக மாநில சட்டப்பேரவைக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, அமைச்சர்கள் மூவர் கைப்பேசியில் ஆபாசக் காட்சிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கவில்லையா?

எல்லாவற்றிலும் ஆணுக்கொரு நீதி; பெண்ணுக் கொரு நீதிதானா? இதுபோன்ற அநீதிகளைத் தட்டிக் கேட்பதற்கு பெண்களுக்கான பிரதிநிதித்துவம் (குறைந்தபட்சம் 33 விழுக்காடு) சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் அவசியம்தான் என்பது இப்பொழுது புரிகிறதா - இல்லையா?

தமிழ் ஓவியா said...

அரோஹரா!

தீபவிழா என்ற பெயரில், நெருப்பில் கொட்டி வீணடிக்கும் நெய்யின் விலையை, ஜெயலலிதா தலை யிட்டு குறைத்துள்ளாராம். திருவண்ணாமலை கார்த் திகை தீப விழாவை முன்னிட்டு, 10 ஆம் நாள் மலையில் தீபம் ஏற்றப்படுமாம்! இதற்கு முழுவதும் அக்மார்க் பொறிக்கப்பட்ட சுத்தமான நெய்தான் பயன்படுத்தப் படுகிறதாம்!

இந்தத் தீ 11 நாள்களுக்கு எரியுமாம். இதற்கான நெய்க்கான செலவு ஏமாளி பக்தர்களிடமிருந்து பெறப் படுகிறது. உலகின் பல நாடுகளிலிருந்தும் பக்தர்கள் இதற்காக காணிக்கை (காசோலை) அனுப்புவார்களாம். விழித்துக்கொண்ட கோவில் நிருவாகம், இந்த ஆண்டு நெய்யின் விலையை ஒரு கிலோ 200 ரூபாயிலிருந்து 250 ரூபாய்க்கு உயர்த்தியது. இந்தச் செய்தி முதலமைச்சரின் காதுக்குப் போக, பொரிந்து தள்ளிவிட்டாராம். நெருப்பில் கொட்டி வீணடிக்கும் நெய்யின் விலையை உடனே குறைக்கச் சொல்லி உத்தரவிட்டாராம்! வாழ்வாதாரப் பிரச்சினையல்லவா? இந்தச் செய்தியை வெளியிட்டு புளகாங்கிதம் அடைந்திருக்கிறது தினமலர்.

உலகில் ஊட்டச் சத்துக் குறைவால் மரணம் அடையும் குழந்தைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பாகம் இந்தியாவில்தான்! இந்த வெட்கக்கேட்டில் மதத்தின் பெயரால் டன் டன்னாக நெய்யை நெருப்பில் கொட்டிப் பாழாக்குவது கிரிமினல் குற்றம் அல்லவா! அதற்கொரு முதலமைச்சர் துணை போகலாமா?

தமிழ் ஓவியா said...

துக்ளக் அய்யர்வாள்

தேவர் ஓட்டல், நாயுடு மெஸ் போன்றவை காலாகால மாக இருக்கிறதாம் - அதையெல்லாம் எதிர்க்காமல் வீரமணி பிராமணாள் ஓட்டலை எதிர்த்துப் போராட்டம் நடத்துவது - ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி; கழகத்தாருக்கு இளைத் தவன் பிராமண ஜாதிக்காரன் என்று திருவாளர் துக்ளக் அய்யர் சோ எழுதியுள்ளார் (துக்ளக், 14.11.2012, பக்கம் 15, 22).

எல்லாப் பார்ப்பானும் கோடு கிழித்தது மாதிரி பிசிறு இல்லாமல் ஒரே மாதிரியாக சொல்லுவதைப் பார்த்தீர் களா? (இது புரியாமல் சில புரட்(டு)சிகள் பேனா தூக்கு கின்றன!).

திருவாளர் சோ அவர்களே, ஜாதி அடுக்குமுறை வேறு; வருண அமைப்பு முறை வேறு என்பது உங்களுக்குப் புரியாதா?

ஜாதியின பெயரால் எதுவும் கூடாது என்பது சரியானது தான். இதுமாதிரி கருத்தை இதற்கு முன் எப்பொழு தாவது சொன்னதுண்டா? பிராமணாள் ஓட்டல் பெயரை எதிர்க்கும்போது மட்டும் இதையெல்லாம் இழுத்துப் போட்டுத் திசை திருப்பும் உங்கள் தந்திரம் எங்களுக்குப் புரியாதா என்ன?

தேவர் என்று போட்டால் ஒரு யாதவரை இழிவுபடுத்த வில்லையே! பிராமணாள் என்று போட்டால் அப்படியா? அடுத்தவனை சூத்திரன் என்று சீண்டுகிறதே!

ஊருக்கு இளைத்தவர்களா நீங்கள்? சென்னை - அண்ணா நகரில் சாந்தி காலனியில் பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி மேடையிலே அரிவாளைத் தூக்கி ஆடினீர் களே - அதிலே உங்கள் சுஜாதாவும், பாலச்சந்தரும் பங்குகொண்டு பூணூலை முறுக்கிடவில்லையா?

தேவரும் சரி, நாயுடுவும் சரி - ஒட்டுமொத்தமாக உங்கள் இந்து அமைப்புப்படி சூத்திரன் என்ற ஒரே பட்டியலைச் சார்ந்தவர்கள்தானே? அவர்கள் இழிவையும் சேர்த்து ஒழிக்கத்தான் இந்தப் போராட்டம்.

சுண்ணாம்பும் வெள்ளை, வெண்ணைய்யும் வெள்ளை என்று உலகத்தை ஏமாற்றவேண்டாம்!

தமிழ் ஓவியா said...

ஊழல் உற்பத்தி

மனிதனுடைய ஆசையில்தான் ஊழல் ஆரம்பிக்கிறது என்றெல்லாம் சுற்றி வளைத்துப் பதில் சொல்லும் திருவாளர் துக்ளக் சோ அய்யர் (துக்ளக், 14.11.2012, 13, 14) அரசியலைக் காரணமாகச் சொல்கிறார்.

திருப்பதி கோவில் உண்டியலில் கட்டுக் கட்டாகப் பணம் போடுகிறானே - அவர்கள் எல்லாம் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களா? கடவுளிடம் காணிக்கை கொடுத்துத் தப்பிக்கலாம் என்பது ஊழல் மனப்பான்மை இல்லையா!

காணிக்கை என்பது ஒரு வகை இலஞ்சம்தானே!

ஊழல் தொடக்கமே கோவிலில்தான் ஆரம்பிக்கிறது என்று ஒத்துக்கொள்வதில் என்ன தயக்கம்? திருப்பதி நாமக் கடவுளுக்கே நாமம் போடும் டாலர் புகழ் டாலர் சேஷாத்திரிகள் இருக்கிறார்களே - என்ன பதில்?

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.யும் - காங்கிரசும்!


அடுத்து ஆட்சியை நாங்கள்தான் பிடிக்கப் போகிறோம் என்று தலைகால் புரியாமல் துள்ளிக் குதிக்கும் பி.ஜே.பி.,க்குள் என்ன நடக்கிறது?

பிரதமருக்கான வேட்பாளர்களின் பட்டியல் அங்கு அனுமார் வால்போல நீண்டுகொண்டே போகிறது (இராம பக்தர்கள் அல்லவா! அதனால்தான் இந்த உதாரணம்!).

குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிக்குக் கழுத்து முட்டும் ஆசை புடைத்துக் கொண்டு இருக்கிறது.

அவர் என்னதான் வேடம் கட்டி ஆடினாலும் குஜராத்தில் சிறுபான்மை மக்களான முசுலிம் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று நரவேட்டை ஆடிய ரத்த வாடை அடையாளத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவே முடியாது!

ஒரு மாநிலத்தின் அதிகாரத்தை வைத்துக் கொண்டே இவ்வளவு ஆட்டம் போட்டவர் பிரதம ரானால் நாடு தாங்காது - உலக நாடுகள் மத்தியில் மாபெரும் தலைக்குனிவுதான்!

அன்றையப் பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பேயி குஜராத் படுகொலைகளை மனதிற் கொண்டு, எந்த முகத்தோடு நான் வெளிநாடு செல்லுவேன்? என்று புலம்பினாரே - அந்தப் புலம் பலுக்கான கருப்பொருள் நரேந்திர மோடியல்லவா!

பி.ஜே.பி.யில் இப்படிப்பட்டவர்தான் பிரதமருக்கான வேட்பாளர் என்றால், அந்தக் கட்சியின் யோக்கிய தையும், அடையாளமும் எவ்வளவு மட்ட ரகமானவை என்பதை எளிதிற் புரிந்துகொள்ளலாமே!

உண்மையைச் சொன்ன காவல்துறை அதிகாரிகளையே சிறையில் தள்ளும் இன்னொரு இடிஅமீன் இந்த மோடி! தன் அமைச்சரவையில் இருந்த பெண் அமைச்சர் மாயாபென் கொட் நானிக்கு கொலைக் குற்றவாளியாக 28 ஆண்டுகள் தண்டனை பெற்று இருக்கிறார். இதைவிடக் கொடிய தண்டனைக்கு உரியவர்தான் இந்த நரேந்திர மோடி!

உச்சநீதிமன்றம் நியமித்த அமிக்கஸ் க்யூரி - இராமச்சந்திரன் (பாரபட்சமற்ற நடுவர்) தம் அறிக்கையில் மோடி மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாரே!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) உள்ள கட்சிகளே மோடி பிரதமர் ஆவதற்குத் தம் எதிர்ப் பினை மிக வெளிப்படையாகவே பதிவு செய்துள்ளன. பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத் துக்கு நரேந்திர மோடி வரக்கூடாது என்று முதலமைச்சர் நிதிஷ்குமார் தடை போட்டதும் யாருக்குத்தான் தெரியாது?

இப்பொழுது இன்னொரு குரல் பி.ஜே.பி.,க்குள்; பி.ஜே.பி. தலைவர் நிதின்கட்காரி மீது ஊழல் புகார் கிளப்பப்பட்டுள்ளதன் பின்னணியில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி இருக்கிறார் என்று ஆர்.எஸ்.எஸின் மூத்த தலைவர் வைத்யா கூறியதன் மூலம் கட்சிக்குள் ஓர் அணுகுண்டைத் தூக்கிப் போட்டு, அலைகளை எழுப்பியுள்ளார். அதற்கு எதிர்வாதங்களும் எழும்பிக் குதிக்கின்றன.

நிதின்கட்காரி மீது ஊழல் புகார் கிளம்பிய நிலையில், அவரைக் காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ். துடியாய்த் துடிக்கிறது. ஆர்.எஸ்.எஸின் மூத்த ஆலோசகராகக் கருதப்படும் திருவாளர் ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி அய்யரின் பூணூல் எல்லாம்கூட வியர்த்துக் கொட்டுகிறது; எல்லா ஆவணங்களையும் அலசிப் பார்த்துவிட்டாராம் - நிதின்கட்காரி ஊழல் ஏதும் செய்யவில்லை என்று தீர்ப்பே எழுதி விட்டார்!

ஒன்று மட்டும் உறுதி; ஆர்.எஸ்.எஸின் உற்பத்திப் பொருள் இந்த கட்காரி என்பதால், அவரைக் காப் பாற்றும் நிலையில் அது இருக்கிறது என்பதுதான் பெருத்த உண்மை.

பி.ஜே.பி.க்கு என்று ஊழியர்கள் கிடையாது; எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான் தொண்டர் குழாம்! தேர்தல் பணி என்று வந்தாலும், அவர்கள்தான் ஈடுபடவேண்டும்.

அந்த ஆர்.எஸ்.எஸ். நிதின் கட்காரியின் கையை வலுப்படுத்துவதன்மூலம் மோடியின் நிலை வெளிறிப் போன பரிதாபம்!

பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களைப்பற்றியோ கேட்கவே வேண்டாம்!

இவ்வளவுக் கேடு கெட்டு பி.ஜே.பி. அல்லாடும் நிலையில்,

காங்கிரஸ் தன் நடவடிக்கைகளால் பி.ஜே.பி.,க்கு உதவி செய்தால்தான் உண்டு; அதனை நம்பிதான் பி.ஜே.பி. இருக்கிறது என்றுகூடக் கருதலாம்.

மக்களின் அடிப்படைப் பிரச்சினை - குறிப்பாக விலைவாசிப் பிரச்சினையில் காங்கிரஸ் கவனம் செலுத்தத் தவறினால் அது எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பது கல்லின்மேல் எழுத்தாகும்.14-11-2012

தமிழ் ஓவியா said...

என் சமூக அக்கறைக்குக் காரணம் தந்தை பெரியாரின் புத்தகங்களே!
பெரியார் சுயமரியாதை ஊடகத்துறையின் அய்ந்தாமாண்டு தொடக்கவிழாவில், இயக்குநர் லீனா மணிமேகலை பேச்சு

சென்னை, நவ.14-பெரியார் சுயமரியாதை ஊடகத்துறையின் அய்ந்தாமாண்டு தொடக்க விழாவில் லீனா மணிமேகலை இலக்கிய ஆவணப் படங்களைப் பாராட்டி ஒளிவண் ணன் பேசினார்.

திரையிடல்

9.11.2012 வெள்ளிக் கிழமை சென்னை பெரி யார் திடலில் உள்ள அன்னை மணியம்மை யார்அரங்கத்தில், பெரியார் சுயமாயாதை ஊடகத்துறையின் அய்ந்தாமாண்டு தொடக்கவிழாவை யொட்டி, சிறப்புத்திரை யிடல் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில், பிரபல இயக்குநரும், பெண்ணியச் சிந்தனை யாளருமான லீனா மணிமேகலை அவர் களின் தேவதைகள், எதிர்ப்பு என்ற தொல் குடிப் பாடல் ஆகிய ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.

ஊடகத்துறையின் வரலாறு

பிறகு பகுத்தறிவா ளர் கழக மாநில செய லாளர் பெரியார் சாக் ரடீஸ் அறிமுகவுரையை நிகழ்த்தினார். அவர் தமது உரையில்: பெரி யார் சுயமரியாதை ஊடகத்துறை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டு தலுடன் தொடங்கப் பட்ட வரலாற்றை சுட் டிக்காட்டினார். இன்று அதன் பரிணாம வளர்ச் சியையும் கூறிவிட்டு, இயக்குநர் லீனா மணி மேகலை தொலைக் காட்சியில் தொகுப்பா ளராக இருந்தநாள் முதல் இன்றைய நிலை வரையிலும் அவரின் சிறப்புகளை பட்டிய லிட்டார்.

ஆவணப்படங்களுக்கு ஆதரவு

அறிமுகவுரையைத் தொடர்ந்து, நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்திருந்த பகுத் தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் ஒளி வண்ணன் அவர்கள் திரை யிடப்பட்ட இரண்டு ஆவணப்படங்களின் சிறப்புகளை உணர்வு பூர்வமாக விவரித்தார். ரோட்டரி கிளப் மூல மாக இன்னும் அதிக மக் கள் திரள் முன்பு இந்த ஆவணப்படங்களைத் திரையிட முயல்வோம். தொடர்ந்து, பெரியார் சுயமரியாதை ஊடகத் துறையின் பணிகளில் பங்கேற்போம் என்றும் பலத்த கைதட்டல்களுக் கிடையே அறிவித்தார்.

பெண் ஏன் அடிமையானாள்?

தொடர்ந்து, இயக்கு நர் லீனா மணிமேகலை திரையிடப்பட்ட இரண்டு ஆவணப்படங் கள் தொடர்பான தனது அனுபவங்களை பார்வை யாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். தான் இந்த அளவுக்கு சமூக அக்கறை யோடு, இதுபோன்ற பணி களைச் செய்வதற்குக் கார ணம் எனது தந்தையின் வீட்டு நூலகத்திலிருந்து எடுத்துப் படித்த பெரி யாரின் பெண் ஏன் அடி மையானாள்? என்ற புத் தகம்தான் என்று நன்றி யுணர் வோடும்,பெருமை யோடும் அறிவித்துக் கொண்டார்.

நிறைவு

தொடர்ந்து, இயக்க ஏடுகளையும், புத்தகங் களை யும் ஒளிவண் ணன், இயக்குநருக்கு வழங்கிச் சிறப் பித்தார். முன்னதாக, குறும் படத்துறை அமைப் பாளர் உடுமலை வடி வேல் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கவிஞர் ஏ.ராஜசேகர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, பெரியார் சுய மரியாதை ஊடகத் துறையின் அமைப் பாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நன்றி நவில் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

நிகழ்ச்சியில், நாக இயக்குநர் சிறிஜித் சுந்தரம் திரைப்பட இயக்குநர் நந்தன், வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தமிழ்ச்செல் வன்,செயலாளர் கோபால் மற்றும் ஏரா ளமானோர் கலந்து கொண்டனர். பழனி குமார், ஓவியச் செல் வன், புருனோ, வை. கலையரசன் ஆகி யோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தமிழ் ஓவியா said...


தீ நாள் - பட்டாசு வெடியால் தமிழகத்தில் 150 இடங்களில் தீ விபத்துகள்


சென்னை, நவ.14- தீபாவளிப் பண்டிகை யான நேற்று பட்டாசு வெடித்தது தொடர் பாக தமிழகம் முழு வதும் 150 இடங்களில் தீவிபத்துகள் ஏற்பட்டன. இருப் பினும் தீயணைப்புப் படையினர் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து வைத்திருந் ததால் பெரிய அள விலான விபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை. தீயணைப்புத் துறை தகுந்த முன்னேற்பாடு களைத் தமிழகம் முழு வதும் செய்து வைத் திருந்தது.

அதன்படி அனைத் துத் தீயணைப்பு நிலை யங்களிலும் ஒரு தீய ணைப்பு வண்டியை மட் டுமே நிறுத்தி வைக்கவும், மற்ற வண்டிகளை முக் கிய இடங்களில் நிறுத் துமாறும் உத்தரவிடப் பட்டிருந்தது.

அதன்படி அனைத் துப் பகுதிகளிலும் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. சென்னையைப் பொறுத்த மட்டில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி களில் 22 இடங்களில் தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எங்காவது தீப்பிடித்து விட்டது என்ற தகவல் வந்தால் உடனே அங்கு விரைந்து செல்லும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதேபோல மற்ற நகரங்களிலும் ஏற்பா டுகள் செய்யப்பட்டி ருந்தன. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. பட் டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்ட இடங் களுக்கு உடனடியாக தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்றன.

தமிழகம் முழுவதும் மொத்தமாக 150 இடங் களில் தீவிபத்துகள் ஏற்பட்டதாக கூறப் படுகிறது. காகித ஆலை, குடிசைகள், ஒரு உர ஆலை என தீவிபத்துகள் ஏற்பட்டன என்று தீய ணைப்புத்துறை கூறியுள் ளது.

தமிழ் ஓவியா said...


பாலியல் தொல்லைக் கொடுத்த மந்திரவாதி கைது


ராமநாதபுரம், நவ.14-ராமநாதபுரத்தில் செய் வினையை எடுப்பதாகக் கூறி, பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.

பொள்ளாச்சி, பாலக்காடு சாலையைச் சேர்ந்த அப்துல் ஜபார் என்பவரது மகன் முகமது இப்ராஹிம். இவர் கீழக்கரையில் மந்திரம் செய்வதாகவும், யாருக்கேனும் செய்வினை வைத்திருந்தால் அதனை எடுப்பதாகவும் கூறி வீடுகளுக்குச் சென்று பெண் களை மயக்கி, அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோவில் படம் பிடித்து அதனை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டி பெண்களிடம் இருந்து பணம் பறித்து வந்துள்ளான்.

இவன் கீழக்கரை, ஏர்வாடி போன்ற இடங்களில் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டுள்ளான். இவனை கீழக்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

கோவில் கோபுர சாரத்தில் தீ: முழுவதும் எரிந்து சாம்பல்

சென்னை, நவ.14-சென்னை திருவொற்றியூரில் உள்ளது தியாகேசர்-வடிவுடையம்மன் கோவில். இந்தக் கோவிலில் தற்போது மராமத்துப் பணிகள், திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக கோபுரத்தை ஒட்டி சாரம் போடப் பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மாலை 6.30 மணி அளவில் சிலர் ராக்கெட் பட்டாசுகள் வெடித்தனர். அதில் ஒன்று கோபுரத்தில் போடப் பட்டிருந்த சாரத்தில் விழுந்து எரிந்தது.

இதனால் கோபுரத்தின் கீழே நிறுத்தப் பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சில எரிந்தன.

தீ விபத்து ஏற்பட்டவுடன் பக்தர்கள் வெளியேற்றப் பட்டனர். கோயில் கதவு அடைக்கப் பட்டது. தீய ணைப்புத் துறையினர் வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தமிழ் ஓவியா said...


மாதா கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை


சென்னை, நவ.14- சென்னை எழும்பூர் சேட் காலனியில் சிறிய ஆரோக்கிய மேரி மாதா கோவில் உள்ளது. இங்கு சிறிய உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த உண்டி யலில் காணிக்கை செலுத் துவார்கள்.இன்று காலையில் இந்த உண் டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் கொள்ளை அடிக்கப் பட்டு இருந்தது.

அடுத்த மாதம் இந்த கோவி லுக்கு திருவிழா வர உள்ளதால், பக்தர்கள் நிறைய காணிக்கை செலுத்தி இருந்தார்கள் என்றும், அதை கொள் ளையர்கள் அள்ளிச் சென்றுவிட்டதாகவும், எழும்பூர் காவல் நிலை யத்தில் புகார் கொடுக் கப்பட்டுள்ளது.