நான்கு செய்திகள் மீதான விவாதங்கள்!
உத்தரகாண்டம் பொய்யா?
சம்புகனின் சாவு பற்றி பல மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. இராமாயணம் பட்டாபிஷேகத்துடன் முடிவடைந்துவிடுகிறது. இதன் பிறகு நடந்தவை உத்தர ராமாயணத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. ஆனால் பல்வேறு உத்தர ராமாயணங்கள் இருக்கின்றன. ஆனால் வால்மீகி இவற்றை எழுதவில்லை.
ஒரு உத்தர ராமாயணத்தில் சம்புகனின் கதை இருக்கிறது. அதில் இராமன் கொன்ற காரணம் பின் வருமாறு சொல்லப்படுகிறது. சம்புகன் தன் உடலுடனேயே தேவர் ஆக வேண்டும் என்று கடுந்தவம் மேற் கொண்டான். அது குறித்து தேவர்கள் அஞ்சினர். அவர்கள் மனிதர்களை அச்சப்படுத்த மழை பெய்யாமல் செய்தனர். சம்புகன் இராமனை வணங்கினான் என்றே கூறப்பட்டி ருக்கிறது. இராமன் தேவர்களின் அச்சத்தைப் போக்க சம்புகனின் தலையைக் கொய்தான். உடனே, தேவர்கள் மகிழ்ச்சி கொண்டு மழை பெய்யச் செய்தனர். மேலும் அந்த குழந்தை உயிர் பெறச் செய்தனர்.
இவ் வாறு போகிறது அந்தக் கதை. ஆனால், புத்த சமண இராமாயணங்களில் இந்தக் கதை இல்லை. கதை உண்மை என்று கொண்டாலும் இராமன் இதை மழை பெய்வதற்காக பொது நலனுக்காக செய்தான் என்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்தக் காலத்தில் மழை பெய்ய தேவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று நம்பிக்கை இருந்தது. ஆகவே, இந்தக் கதையை அந்தக் காலத்தில் நிலவி வந்த நம்பிக்கை சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும். இந்தக் காலத்து விஞ்ஞான அறிவை வைத்து அல்ல. சம்புகன் கொலை இந்தக் காலத்தில் யாரும் ஆதரிக்க வில்லை. அப்படி செய்ய வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.
இப்படி ஒரு செய்தி ஊடகத்தில் உலவ விடப்பட்டுள்ளது. மிகச் சாமாத்தியமாக! சம்புகவதை இடைச்செருகல் என்று சொல்லி விட்டு, பிறகு அதை நியாயப்படுத்தும் கேவலத்தைக் கவனிக்கத் தவறக் கூடாது; நம்பிக்கை என்னும் பதுங்கு குழியில் ஒளிவதையும் கவனிக்கவும். தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் மூட்டிய பிரச்சாரத் தீயில் சம்புகன் கொலையை இன்று ஏற்கவில்லை என்று கூறும் நிலை ஏற்பட்டு விட்டது. எதை எதையெல்லாம் நியாயப்படுத்த முடியாதோ அவற்றை யெல்லாம் கைகழுவ வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டுள் ளது என்பது உண்மையானால் ஒட்டு மொத்தமாக இராமாயணத்தையே கைவிடவேண்டியிருக்கும். பாரதத்தில் கீதை இடைச்செருகலென்றால் ஏற்கமாட்டார்கள். ஆனால் இராமா யணத்தில் உத்தரகாண்டம் என்பதோ இடைச் செருகல் என்பார்கள். அவர்களின் வசதியைப் பொறுத்தது.
இராமன் பிறப்பை மட்டும் நியாயப் படுத்த முடியுமா? வால்மீகி கூறும் புத்திரகாமேஷ்டி யாகம் ஆபாசத்தின் எல்லையல்லவா? வெட்டுண்ட குதிரையோடு தசரதனின் பத்தினி மார்கள் படுத்துப் புரண்டனர் - அதன்பின் யாகப் புரோகிதர்களிடம் அப்பெண்கள் ஒப்படைக்கப்பட்டனர்; இவர்கள் தசரதனின் மனைவிகளைப் புணர்ந்தனர் என்பதை நியாயப் படுத்திப் பேசப் போகிறார்களா?
இந்தியாவில் இராமாயணம் ஒன்றா இரண்டா? வால்மீகிதானே மூலம். அவன் உத்தரகாண்டத்தை எழுத வில்லை என்று எதை வைத்து எழுது கின்றனர்?
சம்புகனை இராமன் கொல்ல வேயில்லை என்றே வைத்துக் கொள் வோம் - அப்படியானால் இராமன் வருணாசிரம தர்மத்தை ஆதரிக் காதவன் என்று சாதிக்கப் போகி றார்களா?
எத்தனை எத்தனை இடங்களில் பார்ப்பனர்களின் பாதந்தாங்கியாக தன்னை வருணித்துக் கொள்கிறான்?
அனுமன் பார்ப்பன வடிவத்தில் வந்தபோது கூட காலில் விழுந்து வணங்குகிறானே இராமன்; - நான் பார்ப்பனன் அல்லன், குரங்கு வம்சத்தவன் என்று அனுமன் ஒப்புக் கொண்டபோது கூட அது எனக்கு முக்கியமல்ல. பிராமணன் உருவத்தில் உம்மைக் கண்டேன் -உம் காலில் பணிவது என் கடமை என்று இராமன் சொல்லவில்லையா?
ஒரே ஒரு வரியில் இராமன் பொய்யன், இராமாயணம் உண்மை அல்ல என்று ஒப்புக் கொண்டு இரண்டு கைகளையும் தூக்கி சரண் அடையவேண்டியதுதானே!
சக்ரவர்த்தி திருமகன் எழுதிய ராஜாஜியே இராமாயணம் பொய் என்று சொல்லிவிட்ட பிறகு வேறு எந்த அம்மாஞ்சிகள் அலறி என்ன பயன்?
வால்மீகி முனி அல்லது யார் முதலில் பாடினாரோ அந்தக் கவிஞர் ஓர் அரக்கனைக் கற்பித்தார். உள்ளும் புறமும் மகா பயங்கரமாக விரிந்த ஒரு பிரகிருதியை சிருஷ்டித்தார். தமிழர் சிலர் அந்த அரக்கனே தம் குல புருஷன் என்று வைத்துக் கொள்ள முற்படுகிறார்கள்.
கதையைச் சரித்திரமாக்கி, அதிலிருந்து பகைமையை உண்டாக்கிக் கொண்டு, ஒருவரை ஒருவர் தாக்கி, இல்லாத துக்கத்தை சம்பாதிக்கப் பார்க்கிறோம் என்கிறார் ராஜாஜி. (ராஜாஜியின் கட்டுரைகள் எனும் நூலில் பொருளற்ற சண்டைகள் எனும் தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில் இருந்து.)
இராமாயணத்தில் உத்திர காண்டம் மட்டுமல்ல. இராமாயணத்தையே காப்பாற்றிட முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது ராஜாஜியின் கட்டுரை மூலம்.
இராமாயணத்தைக் காப்பாற்றிடத் துடிக்கும் அண்ணாவின் தம்பிகள்
ஆளானப்பட்ட ஆச்சாரியாராலேயே இராமாயணத்தைக் காப்பாற்ற முடியவில்லை என்கிற போது, இராமாயணத்தைத் தீயிட்டுப் பொசுக்க வேண்டும் என்று சூளுரைத்த அறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்ட அண்ணா தி.மு.க.வினர் அனுமாராகத் தாண்டிக் குதிப்பதுதான் வேடிக்கை.
செங்கோட்டையன் அவர்களை அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சிப் பதவியிலிருந்தும் வெளியேற்றினார் முதல் அமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளருமான மாண்புமிகு செல்வி ஜெயலலிதா. அந்தக் கட்சியில் இதெல்லாம் சர்வ சாதாரணம்.
ஓராண்டுக்குள்ளேயே அமைச்சரவை ஆறுமுறை மாற்றப்பட்டுள்ளது. அனேகமாக எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஓர் சுற்று அமைச்சர் பதவி கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது எப்படியோ போகட்டும்! வெளியேற்றப்பட்ட செங்கோட்டையன் என்ன பேசுகிறார்? நான் உண்மை யான தொண்டன் என்பதை நிரூபிக்க அனுமான் மார்பைப் பிளந்து காட் டியது போல இயக்கத்துக்காக மார்பைப் பிளந்து காட்டுவேன் என்று பேசி இருக்கிறார்.
எப்படியோ தன்னை அனுமன் என்று காட்டிக் கொண்டு விட்டார் செங்கோட்டையன். இராமாயண காலத்திலிருந்து இன்று வரை அனுமார்கள் ஆரியர்களுக்கு மிக மலிவாகவே கிடைத்து விடுகிறார்கள்.
நல்லமுத்து கம்பன் அறநிலையப் பொன்விழா ஆண்டு விழாவில்தான் இவ்வாறு பேசியிருக்கிறார்.
கம்ப இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று வாதம் புரிந்து இரா.பி. சேதுப்பிள்ளையையும் நாவலர் சோமசுந்தரபாரதியையும் வாதில் வென்றவர் அண்ணா. கம்பனைக் காட்டிக் கொடுக்கும் துரோகி என்று தோலுரித்துக் காட்டினார் அண்ணா. அந்த அண்ணாவின் பெயரில் ஒரு கட்சி. அதில் இப்படிப்பட்ட தள(ர்)பதிகள்!
பதவியைத்தான் பறி கொடுத்தார்; அண்ணாவின் கொள்கையையும் கூடவா பறிகொடுக்க வேண்டும்? இன்னொரு தகவலையும் இந்த நவீன அனுமார்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வால்மீகி மூல இராமாயணத்திலேயே கூட அனுமார்களுக்குக் கடைசியில் கிடைத்த பரிசு என்ன தெரியுமா?
இதோ!
வால்மீகி இராமாயணம் (உத்தர காண்டம். சமஸ்கிருதத்தில் உள்ளதை பதத்துக்கு பதம் தமிழ் வசன நடையில் காலம் சென்ற ராவ் சாகேப் பி.எஸ்.கிருஷ்ணசாமி அய்யரால் மொழி பெயர்க்கப்பட்டுள்ள புத்தகத் தில் எழுதி உள்ளதை கீழே அப் படியே ஆதாரமாகத் தருகிறோம். இராமாயணப் பிரியர்கள் படித்துப் பார்ப்பார்களாக!)
மேற்கண்ட புத்தகம் பக்கம் 555-ல் ராமபட்டாபிஷேக காலத்தில் வெகு மானிக்கப்பட்டவர் பட்டியல் தரப்பட்டுள்ளது. புருஷோத்தமர் (இராமர்) லட்சம் குதிரைகளையும், அப்படியே அப்போது ஈன்ற பசுக்களையும் நூறு காளை மாடு களையும் முதலில் பிராமணர்களுக்குத் தானம் செய்தார். (பக்கம் 556)
மீண்டும் இராமர் பிராமணர்களுக்கு முப்பது கோடி பொன் நாணயங் களையும், மிகவும் விலையுயர்ந்த பொன் ஆபரணங்களையும் வஸ்திரங் களையும் தானம் செய்தார்.
தன்னுடன் இராவணன் மீது நடத்தப்பட்ட போரில் உதவிய சுக்ரீவனுக்குப் பொன் ஆரம் ஒன்றைக் கொடுத்தார். அங்கதனுக்குத்தான் வளையம் கொடுத்தார். அனுமானுக்கு சீதை இரண்டு வஸ்திரங்களைக் கொடுத்தார். சீதைக்கு ஒரு முத்தாரத்தை இராமர் கொடுத்தார். இலங்கை பக்கமே தலை எடுத்து வைத்துப் படுக்காத, போர்க் களத்தின் பக்கமே தலைகாட்டாத பார்ப்பனர்களுக்கு முப்பது கோடி பவுனாம், லட்சம் குதிரைகளாம், பசுக்களாம், கடைசிவரை எல்லாக் களத்திலும் துணை நின்ற அனுமா னுக்கு இரண்டு வஸ்திரங்களாம்.
சூத்திரனுக்கு ஒரு நீதி; தண்டச் சோறுண்ணும் பார்ப்பானுக்கு ஒரு நீதி. இதுதான் இராமாயணம்.
மார்பைப் பிளந்து தன்னை அனுமார்களாக வரித்துக் கொள்ளும் செங்கோட்டையன்கள் இதனைத் தெரிந்து கொள்வதோடு மட்டுமல் லாமல் புரிந்து கொள்ளவும் வேண்டும். இப்பொழுது அவருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை உட்பட!
செங்கோட்டையன் அவர்களை அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சிப் பதவியிலிருந்தும் வெளியேற்றினார் முதல் அமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளருமான மாண்புமிகு செல்வி ஜெயலலிதா. அந்தக் கட்சியில் இதெல்லாம் சர்வ சாதாரணம்.
ஓராண்டுக்குள்ளேயே அமைச்சரவை ஆறுமுறை மாற்றப்பட்டுள்ளது. அனேகமாக எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஓர் சுற்று அமைச்சர் பதவி கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது எப்படியோ போகட்டும்! வெளியேற்றப்பட்ட செங்கோட்டையன் என்ன பேசுகிறார்? நான் உண்மை யான தொண்டன் என்பதை நிரூபிக்க அனுமான் மார்பைப் பிளந்து காட் டியது போல இயக்கத்துக்காக மார்பைப் பிளந்து காட்டுவேன் என்று பேசி இருக்கிறார்.
எப்படியோ தன்னை அனுமன் என்று காட்டிக் கொண்டு விட்டார் செங்கோட்டையன். இராமாயண காலத்திலிருந்து இன்று வரை அனுமார்கள் ஆரியர்களுக்கு மிக மலிவாகவே கிடைத்து விடுகிறார்கள்.
நல்லமுத்து கம்பன் அறநிலையப் பொன்விழா ஆண்டு விழாவில்தான் இவ்வாறு பேசியிருக்கிறார்.
கம்ப இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று வாதம் புரிந்து இரா.பி. சேதுப்பிள்ளையையும் நாவலர் சோமசுந்தரபாரதியையும் வாதில் வென்றவர் அண்ணா. கம்பனைக் காட்டிக் கொடுக்கும் துரோகி என்று தோலுரித்துக் காட்டினார் அண்ணா. அந்த அண்ணாவின் பெயரில் ஒரு கட்சி. அதில் இப்படிப்பட்ட தள(ர்)பதிகள்!
பதவியைத்தான் பறி கொடுத்தார்; அண்ணாவின் கொள்கையையும் கூடவா பறிகொடுக்க வேண்டும்? இன்னொரு தகவலையும் இந்த நவீன அனுமார்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வால்மீகி மூல இராமாயணத்திலேயே கூட அனுமார்களுக்குக் கடைசியில் கிடைத்த பரிசு என்ன தெரியுமா?
இதோ!
வால்மீகி இராமாயணம் (உத்தர காண்டம். சமஸ்கிருதத்தில் உள்ளதை பதத்துக்கு பதம் தமிழ் வசன நடையில் காலம் சென்ற ராவ் சாகேப் பி.எஸ்.கிருஷ்ணசாமி அய்யரால் மொழி பெயர்க்கப்பட்டுள்ள புத்தகத் தில் எழுதி உள்ளதை கீழே அப் படியே ஆதாரமாகத் தருகிறோம். இராமாயணப் பிரியர்கள் படித்துப் பார்ப்பார்களாக!)
மேற்கண்ட புத்தகம் பக்கம் 555-ல் ராமபட்டாபிஷேக காலத்தில் வெகு மானிக்கப்பட்டவர் பட்டியல் தரப்பட்டுள்ளது. புருஷோத்தமர் (இராமர்) லட்சம் குதிரைகளையும், அப்படியே அப்போது ஈன்ற பசுக்களையும் நூறு காளை மாடு களையும் முதலில் பிராமணர்களுக்குத் தானம் செய்தார். (பக்கம் 556)
மீண்டும் இராமர் பிராமணர்களுக்கு முப்பது கோடி பொன் நாணயங் களையும், மிகவும் விலையுயர்ந்த பொன் ஆபரணங்களையும் வஸ்திரங் களையும் தானம் செய்தார்.
தன்னுடன் இராவணன் மீது நடத்தப்பட்ட போரில் உதவிய சுக்ரீவனுக்குப் பொன் ஆரம் ஒன்றைக் கொடுத்தார். அங்கதனுக்குத்தான் வளையம் கொடுத்தார். அனுமானுக்கு சீதை இரண்டு வஸ்திரங்களைக் கொடுத்தார். சீதைக்கு ஒரு முத்தாரத்தை இராமர் கொடுத்தார். இலங்கை பக்கமே தலை எடுத்து வைத்துப் படுக்காத, போர்க் களத்தின் பக்கமே தலைகாட்டாத பார்ப்பனர்களுக்கு முப்பது கோடி பவுனாம், லட்சம் குதிரைகளாம், பசுக்களாம், கடைசிவரை எல்லாக் களத்திலும் துணை நின்ற அனுமா னுக்கு இரண்டு வஸ்திரங்களாம்.
சூத்திரனுக்கு ஒரு நீதி; தண்டச் சோறுண்ணும் பார்ப்பானுக்கு ஒரு நீதி. இதுதான் இராமாயணம்.
மார்பைப் பிளந்து தன்னை அனுமார்களாக வரித்துக் கொள்ளும் செங்கோட்டையன்கள் இதனைத் தெரிந்து கொள்வதோடு மட்டுமல் லாமல் புரிந்து கொள்ளவும் வேண்டும். இப்பொழுது அவருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை உட்பட!
தமிழன் தலையில் மிளகாய் அரைக்கும் கூட்டம்
புதுவையை அடுத்த ஆரோவில் அருகே உள்ள இடையஞ்சாவடி கிராமத்தில் வர்ணமுத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு மிளகாய் தூள் கரைசல் மூன்று கைகள் கொடுக்கப்பட்டது. அதனை அவர்கள் வாங்கிக் குடித்தவுடன் அவர்களின் தலையில் அக்கரைசல் ஊற்றப்பட்டது (3-.7.-2012).
ஏமாந்தவன் தலையில் மிளகாய் அரைப்பது என்பது நம் நாட்டுப் பழமொழி. பக்தியில் புத்தியைப் பறி கொடுப்பவனும் ஏமாந்தவன்தானே! அதுதான் இங்கும் நடந்திருக்கிறது.
பக்தி என்று வந்துவிட்டால் புத்தி போகிறது என்பது மட்டுமல்ல; மான அவமானம் பற்றியும் கவலைப் படுவதில்லை.
சேலம் அன்னதானப்பட்டியில் செருப்படி திருவிழா நடைபெறுகிறது. தட்சணை கொடுத்தல்லவா படித்த வர்களும் கோயிலுக்குச் சென்று செருப்படி படுகின்றனர்.
பெண்கள் கூட பெரிய பாளையத் தம்மன் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடும்போது வேப்பிலையை மட்டும் உடலில் கட்டிக் கொண்டு கிட்டத்தட்ட நிர்வாணமாக நிற்கி றார்கள். இவ்வளவுக்கும் அக்கோயில் அர்ச்சகர்கள் ஆண்கள்தான்.
பார்ப்பான் பஞ்சகவ்யம் என்று கூறி, மாட்டு மூத்திரம், சாணம், பால், தயிர், வெண்ணெய் இவற்றைக் கலக்கிக் கொடுத்தால் பயபக்தியோடு தட்சணை கொடுத்தல்லவா, முகம் சுளிக்காது மொடக்கு மொடக்கு என்று குடிக் கிறான். கீழே அது சிந்தினால், அதனை அப்படியே கையில் வாங்கித் தலையில் அல்லவா தடவிக் கொள் கிறான். நமது முட்டாள்தனத்தை அளக்கும் தர்மா மீட்டர் என்று தந்தை பெரியார் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.
ஏமாந்தவன் தலையில் மிளகாய் அரைப்பது என்பது நம் நாட்டுப் பழமொழி. பக்தியில் புத்தியைப் பறி கொடுப்பவனும் ஏமாந்தவன்தானே! அதுதான் இங்கும் நடந்திருக்கிறது.
பக்தி என்று வந்துவிட்டால் புத்தி போகிறது என்பது மட்டுமல்ல; மான அவமானம் பற்றியும் கவலைப் படுவதில்லை.
சேலம் அன்னதானப்பட்டியில் செருப்படி திருவிழா நடைபெறுகிறது. தட்சணை கொடுத்தல்லவா படித்த வர்களும் கோயிலுக்குச் சென்று செருப்படி படுகின்றனர்.
பெண்கள் கூட பெரிய பாளையத் தம்மன் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடும்போது வேப்பிலையை மட்டும் உடலில் கட்டிக் கொண்டு கிட்டத்தட்ட நிர்வாணமாக நிற்கி றார்கள். இவ்வளவுக்கும் அக்கோயில் அர்ச்சகர்கள் ஆண்கள்தான்.
பார்ப்பான் பஞ்சகவ்யம் என்று கூறி, மாட்டு மூத்திரம், சாணம், பால், தயிர், வெண்ணெய் இவற்றைக் கலக்கிக் கொடுத்தால் பயபக்தியோடு தட்சணை கொடுத்தல்லவா, முகம் சுளிக்காது மொடக்கு மொடக்கு என்று குடிக் கிறான். கீழே அது சிந்தினால், அதனை அப்படியே கையில் வாங்கித் தலையில் அல்லவா தடவிக் கொள் கிறான். நமது முட்டாள்தனத்தை அளக்கும் தர்மா மீட்டர் என்று தந்தை பெரியார் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.
ராஜமரியாதை ஒரு பொழுதுதானா?
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த திருவரங் குளம் அரங்குளலிங்கநாதர் திருக் கோயிலில் ஆடிப் பூரத் தேரோட்டம் நடந்தபோது வடம் தொட்டுக் கொடுப்பதற்காக தாழ்த்தப்பட்ட இனத்தவர் வெண்கொற்றக் குடை பிடித்து ராஜமரியாதையுடன் அழைத்து வரப்படும் காட்சி.
தேவகோட்டையில் தேர் இழுக்க தாழ்த்தப்பட்டவர் வந்தால் உயர் ஜாதியினர் உறுமுகின்றனர். புதுக் கோட்டையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இப்படி ராஜமரியாதை - ஏன் இந்த முரண்பாடு?
ஏதோ ஒரு நாள் கோயில் திருவிழா வின்போது ராஜமரியாதை கொடுத்தால் போதுமா? அந்தத் திருவிழா முடிந்த அடுத்த நொடியில் அந்தத் தோழருக்கு அளிக்கப்படும் மரியாதை என்ன என்பதுதான் கேள்வி.
ஒரு நாள்தான் உனக்கு மரியாதை - மற்ற நாளில் மரியாதையாக ஒதுங்கிப்போ என்று சொல்லாமல் சொல்லுவதுதானே இதற்குள் புதைந்திருக்கும் சம்பிரதாயம்?
நந்தனைக் கூட தீக் குளித்து விட்டு தானே நடராஜன் வரச் சொன்னான்? அதன் பொருள் என்ன? நந்தன் பறை ஜாதி! -தீக்குளிக்கச் செய்தால்தான் தீண் டாமையைப்போக்க முடியும் என்று கட வுளே கருதுவதாகத்தானே பொருள்?
இந்து மதக் கண்ணி வெடியைக் கண்டு ஏமாறவேண்டாம்! எச்சரிக்கை!
--------------------"விடுதலை” ஞாயிறுமலர் 28-7-2012 “ஞாயிறுமலரில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை
ஏதோ ஒரு நாள் கோயில் திருவிழா வின்போது ராஜமரியாதை கொடுத்தால் போதுமா? அந்தத் திருவிழா முடிந்த அடுத்த நொடியில் அந்தத் தோழருக்கு அளிக்கப்படும் மரியாதை என்ன என்பதுதான் கேள்வி.
ஒரு நாள்தான் உனக்கு மரியாதை - மற்ற நாளில் மரியாதையாக ஒதுங்கிப்போ என்று சொல்லாமல் சொல்லுவதுதானே இதற்குள் புதைந்திருக்கும் சம்பிரதாயம்?
நந்தனைக் கூட தீக் குளித்து விட்டு தானே நடராஜன் வரச் சொன்னான்? அதன் பொருள் என்ன? நந்தன் பறை ஜாதி! -தீக்குளிக்கச் செய்தால்தான் தீண் டாமையைப்போக்க முடியும் என்று கட வுளே கருதுவதாகத்தானே பொருள்?
இந்து மதக் கண்ணி வெடியைக் கண்டு ஏமாறவேண்டாம்! எச்சரிக்கை!
--------------------"விடுதலை” ஞாயிறுமலர் 28-7-2012 “ஞாயிறுமலரில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை
19 comments:
தூக்கில் போடலாமே!
தூக்குத் தண்டனை தூக்கி எறியப்படும் வரை - அந்தத் தண்டனை வழங்கப் பெற முழுத் தகுதி உள்ளவர்தான் குஜராத் மாநில முதல்அமைச்சர் நரேந்திர தாஸ் தாமோதரதாஸ் மோடி.
அவருடைய ஆட்சியில்தான் 2000 முசுலிம்கள் படு கொலை செய்யப்பட்டனர். ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீடுகள் தீக்கு இரையாக்கப்பட்டன. 203 தர்க் காக்கள், 205 மசூதிகள் சாம்பலாக்கப்பட்டன. 4000 கார்கள், 20 ஆயிரம் இரு சக்கர வண்டிகளும் நெருப்பின் பசியை ஆற்றின. ரூ 3,800 கோடி இழப்பு என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 70 ஆயிரம் முசுலிம்கள் சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக ஆக்கப் பட்டுள்ளனர். காவல்துறையினர் 10,000 தோட் டக்களைப் பயன்படுத்தி இருக்கின்றனர்.
இவ்வளவும், மோடி முதல் அமைச்சராக இருந்த நிலையில்தான் நடைபெற்று இருக்கின்றன. குறைந்த பட்சம் இவற்றிற்குப் பொறுப்பேற்று, நரேந்திர மோடி முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகி இருக்க வேண்டாமா? அரியலூரில் ரயில் கவிழ்ந்ததற்கு லால்பகதூர் சாஸ்திரியும், ஓ.வி.அளகேசனும் பதவி விலகி இருக்கும்போது, இவ்வளவு கொடுமைகள் நடந்திருக்கும் ஒரு மாநிலத்தில் அவற்றிற்குப் பொறுப்பேற்க வேண்டியவர் அம்மாநில முதலமைச்சர் என்பது, அரசியலில் பாலபாடமாகும்.
அதனைக் கூடச் செய்ய முன்வராத ஒருவர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நான் தவறு செய் திருந்தால், என்னைத் தூக்கில் போடுங்கள்! என்று குரல் கொடுப்பது அசல் பசப்பும், நயவஞ்சகமும், நரித்தனமும் கொண்டதே!
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச் சரும், பிரபல சட்ட வல்லுநருமான கபில் சிபல் கிளப்பிய வினாவுக்கு முதலில் பதில் சொல்லட்டும்.
10 வருடங்களாக மோடி மீது ஒரே ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட அனுமதிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி நாணயமான கேள்வி அல்லவா?
ஏதாவது நீதிமன்றம் தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு கூறினால் அதனை வீரவாளாகச் சுழற்றுவார்கள் சோ போன்ற பார்ப்பனர்கள். இதே மோடி மீது உச்சநீதிமன்றம் எப்படிப்பட்ட வார்த் தைகளால் விமர்சனம் செய்தது? முதல் அமைச்சர் மோடியை நீரோ மன்னனுககு ஒப்பிட்டுக் கூற வில்லையா? அப்போது தம் வீரத்தைக் காட்டாமல் மவுனிகள் ஆனது ஏன்?
மனித நேயத்தின் சிறுசிறு துளிகள் சேர்ந்துதான், மனிதம் உண்டாக்கப்பட்டது. இந்த மனிதம் கொடுங்கோலர்களிடம் வற்றிப்போய்விட்டதோ! ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் பிறந்தவர்கள் என்பதற் காகவா, இவர்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வியை எழுப்ப வில்லையா?
மொத்தம் 4,252 வழக்குகளில் 2000 க்கும் மேற்பட்ட வழக்குகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், இந்த வழக்குகளுக்கும் புலனாய்வு மீண் டும் செய்யப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் வைத்த குட்டு, மோடியின் தலையில் அல்லவா?
மோடியின் அமைச்சரவையில். முக்கியப் பொறுப் பில் இருந்தவர் ஹரேன் பாண்டியா; மக்கள் விசா ரணை ஆணையத்திடம் நடந்தவற்றை அப்படியே வெளியிட்ட நிலையில், அவர் படுகொலை செய்யப் பட்டதன் பின்னணி என்ன?
தனது மகன் படுகொலைக்குக் காரணம், குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடிதான் என்று ஹரேன் பாண்டியாவின் தந்தையார் நானாவதி ஆணையத்திடம் தெரிவித்தாரே!
குஜராத் கலவரம் நடைபெற்றபோது காவல் துறையில் உயர்ந்த பொறுப்பில் இருந்த அதி காரிகளான ஸ்ரீகுமார், ஷர்மா, சஞ்சீவ் பட் முதலி யோர், வன்முறையின் பின்னணியில் முதல் அமைச்சர் மோடி இருந்தார் என்று கூறி இருக் கிறார்களே - நீதிமன்றத்திலேயே பிரமாணப் பத்திரம் கொடுத்துள்ளனரே! இவ்வளவுக்குப் பிறகும் நான் தவறு செய்திருந்தால் என்னைத் தூக்கில் போடுங்கள் என்று ஒரு முதல் அமைச்சர் சொல்கிறார் என்றால், எவ்வளவு அசட்டுத் துணிவும், நீதித் துறையின் மீது ஏளன உணர்வும் இருக்க வேண்டும்?
இப்படிப்பட்ட நரவேட்டைப் பேர்வழியை பிரதமராக்க வேண்டும் என்று சிலர் சொல்லு கிறார்கள் - எழுதுகிறார்கள் என்றால் அவர்கள் எத்தகைய காட்டு மிருக உணர்வைக் கொண்ட வர்களாக இருக்க வேண்டும் என்று எண்ணிப் பாரீர்! - வாய்ப்பு இருந்தால் முதலில் இத்தகையவர்களைத் தூக்கில் போட வேண்டுமே! 287-2012
தமிழ் செம்மொழி: நீதிக்கட்சியின் தீர்மானம்
தமிழைச் செம்மொழி என அறிவிக்க 1918ஆம் ஆண்டில் நீதிக்கட்சி மாநாட்டுத் தீர்மானம்.
1918 மார்ச் 30, 31 நாட்களில் தஞ்சை, திருச்சி பார்ப்பன ரல்லாதார் முதல் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டுத் தீர்மானங்களில் ஒன்று:
தீர்மானம் 8(ஆ)
எல்லாப் பழைமையான மொழிகளைப் போல பழைமையான, வளமான, உயர்தரமாக உருவாக்கப்பட்ட பல திறப்பட்ட இலக்கியங் களைக் கொண்டது தமிழ் மொழி. இது பல்கலைக்கழகத்தால் பாரசீக, அரேபிய, சமஸ்கிருத மொழிகட்கு ஈடாக மதிக்கப்பட்டுச் செம்மொழி என ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
முன்மொழிந்தவர்: திரு.ஜே.பி. நல்லுசாமி பிள்ளை பி.ஏ., பி.எல்., மதுரை
வழிமொழிந்தவர்: திரு. ந.மு.வேங்கடசாமி நாட்டார், தமிழ்ப் பண்டிதர், எஸ்.பி.ஜி. கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
ஆதரித்தவர்: திருமதி அலர்மேலு மங்கை தாயாரம்மாள், சென்னை.
தீர்மானம் நிறைவேறியது. அரசு ஆணை யிலும் பதிவு செய்யப்பட்டது.
(தகவல்: பேராசிரியர் பு.இராசதுரை, விடுதலை 29.6.2008)
வால்நட்சத்திரம் தெரிந்தால் ஆட்சி மாற்றம் வருமா?
வால்நட்சத்திரம் தெரிந்தால் ஆட்சி மாற்றம் வருமா என்பது பற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நிர்வாகிகள் சி.ராமலிங்கம், பா.சிறீகுமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஹோல் பாப் வால் நட்சத்திரம் பூமியில் இருந்து தெரியும் வகையில் வர உள்ளது. இதை அடுத்து பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. நாட்டில் ஆட்சி மாற்றம் வரும். விலைவாசி உயரும், நண்பர்கள் பிரிவார்கள், இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்ற வதந்தி உலா வருகிறது. நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்கும் வால் நட்சத்திரம் தெரிவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஆகாயத்தில் ஆயிரக்கணக்கான வால் நட்சத்திரங்கள் உள்ளன. 126 வால் நட்சத்திரங்கள் 6 வருடத்திற்கு குறைவான காலத்தில் பூமியை ஒரு முறை சுற்றி வரும். 839 வால் நட்சத்திரம் 12 வருடத்திற்கு ஒருமுறை பூமியை சுற்றும். அதுபோல் 2 ஆயிரத்து 670 வால் நட்சத்திரங்கள் நூறு வருடத்திற்கு ஒருமுறை தெரியும். இப்படி பார்த்தால் வருடத்திற்கு 2 அல்லது 3 நட்சத்திரங்களை பூமியில் இருந்து பார்க்கலாம். அப்படி நட்சத்திரங்கள் தெரிவதன் மூலம் ஆட்சி மாற்றம் வரும் என்றால் ஒரு வருடத்திற்கு 2 அல்லது 3 முறை ஆட்சி மாற்றம் வரும்.
எனவே நட்சத்திரம் தெரிவதற்கும் ஆட்சி மாற்றம் வருவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வால் நட்சத்திரத்தைப் பற்றி மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் வால் நட்சத்திர விழா ஒன்றை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்துகிறது.
அதன்படி ஒரு மாவட்டத்தில் 20 இடத்திற்குமேல் வால் நட்சத்திர விழா நடத்தி வருகிறோம். இதில் நட்சத்திரம் பற்றிய சிலைடு காட்சிகள், பதாகை கண்காட்சிகள், இரவு நேரத்தில் நட்சத்திரங்களை தொலைநோக்கி மூலம் விளக்கி சொல்லுதல் ஆகிய முறையில் வால் நட்சத்திரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம்.
மேலும் நட்சத்திரங்கள் பற்றிய விளக்கம் அடங்கிய ஹலோ! வால்நட்சத்திரம் என்ற கையேடு ஒன்றையும் வெளியிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார். 28-7-2012
பெரியார் பக்கத்தில் அமர்ந்ததும் பெரியாருக்கு சிலை எழுப்பியதும் மறக்க முடியாதவை! பெரியார் பெருந்தொண்டர் அ. மஜீத் நினைவலைகள்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப் பாடி, பழைய தென்னார்க்காடு மாவட்ட கருஞ்சட்டைப்படை மாநாடு நடைபெற்ற பேரூர். இயக்கத்தின் பாடிவீடுகளில் ஒன்று. மறைந்த சுயமரியாதை வீரர். கு.த.பெ. பழநியப்பன், முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினராக இருந்த இரா.சாம்பசிவம் ஆகியோரை தந்திட்ட ஊரும்கூட!
குறிஞ்சிப்பாடி நகர பகுத் தறிவாளர் கழகத் தலைவராக, திராவிடர் கழக தலைவராக இருந்து இயக்கத்துக்கு பங்களிப்பைத் தந்தவர் அ.மஜீத். தற்போது 93 வயது முது மையிலும் கழக நிகழ்ச்சிகள் என்றால் கறுப்புச் சட்டையுடன் ஆஜராகி விடுவார். கடலூர் சி.என். பாளையத் தில் அப்துல் ரகுமான் - காசிம் வீசபி தம்பதியினர்க்கு பிறந்த மஜீத் வாழ் விடங்களாக குறிஞ்சிப் பாடியையும், காட்டுமன்னார் குடியையையும் தக்க வைத்துக் கொண்டவர்.
பெரியார் வருகை
1946இல் குறிஞ்சிப்பாடிக்கு பெரி யார் வருகை தந்த போது அவரை வரவேற்று வழிகாட்டி அழைத்துவர தன்னையும், இன்னொரு தோழரையும் ஊர் எல்லையில் கழகக் கொடியோடு இருக்கச் சொன்னார்களாம். அப்படி இருந்து முழக்கமிட்டு பெரியாரை வரவேற்று வழிகாட்டியபோது, அய்யா பெரியார் அவர்கள் இருவரையும் வண்டியில் ஏறிக் கொள்ளச் சொல்லி பக்கத்தில் உட்கார வைத்து நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குச் சென்றதை சொன்ன போது தோழர் மஜீத்தின் கண்கள் பனித்தன. எவ்வளவு பெரிய தலைவர் பெரியார். எங்களை பக்கத்தில் உட்கார வைத் தாரே என்பதை பெருமையோடு நினைவு கூர்ந்தார்.
விமர்சித்தவருக்கு கல்லடி
திராவிடர் கழக மாவட்ட மாநாடு குறிஞ்சிப்பாடியில் நடந்தபோது கறுப்புச் சட்டையோடு மஜீத் முதலான இளைஞர்கள் மாநாட்டு வேலைகள் செய்தபோது, நாராயண சாமி என்ற காங்கிரசுகாரர் உங் களுக்கு எல்லாம் என்னடா கறுப்புச் சட்டை என்று கிண்டல் செய்திருக் கிறார். கோபத்தில் அவரைக் கல்லால் அடித்துவிட்டு வந்ததை சிரித்துக் கொண்டே சொல்கிறார் மஜீத்.
ஆசிரியர் செங்குட்டுவன், கு.த.பெ. பழநியப்பன், இரா.சாம்பசிவம் போன்றவர்கள் பெரியார் தொண்டர்களாக இருந்து இயக்கம் வளர்த்ததை உணர்ச்சி பொங்கக் கூறும் மஜீத், தி.மு.க. பிரிந்தவுடன், அக்கட்சியில் சென்று விட்டதையும், காட்டுமன்னார்குடி நகர தி.மு.க. செயலாளராக, குறிஞ்சிப்பாடி நகர தி.மு.க.பொருளாளராக பொறுப்பில் இருந்து பேரறிஞர் அண்ணா, நாவலர், கலைஞர், பேராசிரியர் ஆகியோரை அழைத்து கூட்டங்கள் நடத்திய விதத்தையும் குறிப்பிட்டார். அய்யாவின் கொள்கை தொடர்ந்து நெஞ்சில் நிழலாடிய சூழலில் 1972-_73 வாக்கில் மீண்டும் திராவிடர் கழகத்தில் இணைந்து இன்றுவரை பெரியார் தொண்டனாக, கறுப்புச் சட்டைக்காரனாக வாழுவதை சிறப்பாகக் கருதுகிறார்.
அய்யாவுக்கு சிலை
தந்தை பெரியாருக்கு சிலை எழுப் புதல் வேண்டும் என்ற ஆசையும் நிறைவேறியதை மறக்க முடியாத நிகழ்வாகக் கூறினார். நெசவாளனாக, பேருந்து நடத்துநராக, ஆட்டிறைச்சி விற்பனையாளராக, செங்கல் சூளை உரிமையாளராக பல தொழில் செய்திருந்தாலும், தாம் ஒரு பெரியார் தொண்டனாக வாழுவதையே பெருமையாகக் கருதுகிறார்.
தமிழர் தலைவர் பற்றி . . .
1945 ல் குறிஞ்சிப்பாடி பகுதியில் பல ஊர்களில் கேஸ் லைட்டோடு ஸ்டூல் போட்டு அதன் மீது ஏற்றி நிற்க வைத்து கு.த.பெ.பழனியப்பன் அவர்களால் பேச வைக்கப்பட்ட காலம் தொட்டு தலைவர் வீரமணி அவர்களை நான் அறிவேன்.
சிறுவன் வீரமணியாக அவர் பேசிடும் பேச்சு இரத்தத்தைச் சூடேற்றும் பேச்சு. . . அவரின் பேச்சைக் கேட்கும் யாராக இருந்தாலும் ஆச்சரியப்படுவார்கள். கழகத்தில் சேரவேண்டும் என்ற உணர்வைப் பெறுவார்கள். அப் போது வாராவாரம் இங்கே வந்து ரைஸ்மில் கொட்டகையில் தங்கிடு வார். இப்போது பார்க்கும்போது, என்ன மஜீத் எப்படி இருக்கீங்க? என்று அவர் கேட்கும் பாசஉணர்வு வேறு தலைவர்களுக்கு வராது. தமிழர் தலைவரால்தான் இயக்கம் இன்றும் உயிர்ப்போடு திகழுகிறது என்று பெருமையாக நினைவு கூர்கிறார்.
மதிவாணன் குடியரசு, ஜெரினா, உண்மை என நான்கு பிள்ளைகள் அவருக்கு. இப்போதும் தலைமாட் டில் பெரியார் வாழ்க்கை வரலாறு (தமிழர் தலைவர்) நூலையும், அய்யாவின் அடிச்சுவட்டில் என்ற நூலையும் வைத்துக் கொண்டுள்ளார்.
விடுதலை ஏட்டை யாராவது படிக்கக் கேட்டு மகிழ்கிறார். இன்றைய இளைஞர்கள் நல்ல எதிர்காலம் அமைய பெரியார் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார். பகுத்தறிவு கருத்துக்களைப் பரப்பிட, மூட நம்பிக்கைகளை ஒழித்திட நமது இயக்கத்தை விட்டால் வேறு நாதியில்லை. திராவிடர் கழகத்தைத் தொடர்ந்து வளர்த்திட, மக்களுக்கு நல்வழி காட்டிட வேண்டும். அதுவே தமது ஆசை என்று குறிப்பிட்டார் 93 வயது நிரம்பிய இளைஞர் அ.மஜீத்.
துரை. சந்திரசேகரன் 28-7-2012
சொர்க்கத்திற்கு குறுக்குவழி
பார்ப்பனர்களே நீங்கள் சொர்க்கத்திற்கு போக வேண்டுமா? இதோ ஒரு சார்ட்கட் என்ற தலைப்பில் 1555இல் விடுதலையில் ஒரு கட்டுரை வெளி வந்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளபடி திருவிளை யாடல் புராணம் 26ஆவது திருவிளையாடல் மாபாதகம், தீர்த்தபடலம் அதன் சுருக்கம்:
அவந்தி என்ற ஊரில் ஒரு பார்ப்பான் வாழ்ந்து வந்தான். அவனுடைய மனைவி ஒப்பில்லா அழகு டையவள். அவளது மகன் வளர்ந்து வாலிபன் ஆனதும், அவனது தாயின் மேலேயே ஆசை கொண்டான். அவளும், நாணம், வெட்கம் எல்லா வற்றையும் விட்டு, தன்னுடைய மகனிடம் உடலுறவு கொண்டாள். இதற்கு இடையூறாக இருந்த அவளுடைய கணவனை அவள் மகன் ஒரு இரவில் கொன்று மயானத்தில் இறுதிச் சடங்கை செய்தான். ஊரில் உள்ளவர்கள் தகப்பனைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானைப் பற்றி இழிவாகப் பேசவும், தாயும், மகனும் சொந்த ஊரை விட்டு ஓடி ஊர், ஊராக சுற்றிக் கொண்டு இருந்தனர்.
அப்பொழுது சோமசுந்தர கடவுள் வேடன் உருவத்தில் வந்து இவனிடம் சிவராத்திரி நாளில் சிவனடியார்களுக்கு பணி செய்து சூரியன் உதிக்கும் முன் அருகம்புல்லை பசுமாட்டிற்கு கொடுத்து மூன்று காலமும் நீராடி 108 முறை கோவிலை வலம் வரும் படி சொன்னார். அந்தப் பார்ப்பானும் அப்படியே செய்து அவன் செய்த பாவமெல்லாம் தீர்ந்து சொர்க் கத்திற்கு போனானாம்.
தாயைப்புணர்ந்து தகப்பனை கொன்ற பார்ப்பானுக்குச் சொர்க்கம்
சொர்க்கத்திற்கு குறுக்கு வழி 2
சொர்க்கத்திறகு போக இதோ இன்னொரு சுலபமான வழி பார்ப்பனர்களே, ரிக்வேதத்தில் குறிப் பிட்டுள்ளபடி நடந்தால் போதும் சுலபமாக சொர்க் கத்திற்கு போய் விடலாம். ரிக்வேதம் தாத்தாக்கிரி மெய் சகத்தில் குறிப்பிட்டுள்ளபடி செய்யுங்கள். நீங்கள் உடனே மோட்சத்திற்கு போய் விடலாம். இதோ அந்த சுலோகம்.
வேஸ்யாதர்சனம் புண்யம்
ஸ்பர்சனம் பாவ நாசனம்
சும்பனம் சர்வ தீர்த்தானம்
மைதுனம் மோட்ச சாதனம்
வேசிகளை (விபசாரிகளை)ப் பார்ப்பது புண் ணியம். அவர்களைத் தொட்டால் நீங்கள் செய்த பாவ மெல்லம் போய்விடும். நாசமாகிவிடும். கார்ப்பரேசன் குழாய் தண்ணீரை ஒரு செம்பில் வைத்துக் கொண்டு புரியாத மந்திரங்களை, கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவேரி என்று சொல்லிக்கொண்டு மா இலையால் வீடு முழுவதும் தெளிக்கிறாரே புரோகிதர் அந்த சகல தீர்த்தங்களும், அந்த விபச்சாரிகளை முத்தமிடும் பொழுது வாயில் ஊறும் எச்சிலுக்கு சமமாகும். அதற்கும் மேல் விபச்சாரிகளை புணர்வது மோட்சத்திற்கு வழியாகும்.
வேதம் படித்து, பூஜை புனஸ்காரங்களை செய்யும் பார்ப்பனர்களே, அவை எல்லாம் இனிமேல் தேவையில்லை. ரிக் வேதத்தில் சொல்லியபடி உடனே சிவப்பு விளக்கு பகுதிக்குப் போங்கள் சொர்க்கத்தை அடையலாம். காலம் தாழ்த்தினால் இடம் கிடைக்காது. எல்லாம் புக் ஆகிவிடும். ஓடுங்கள் சிவப்பு விளக்குப் பகுதிக்கு. 28-7-2012
ஆர்.வி. வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்!
உலகத்திலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 13ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலுக்கு யாரை ஆதரிப்பது என்று அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட் டுள்ளன. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்குக் கூட்டணிக்கு அறுதி பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், இன்னும் சில கூட்டணிக் கட்சிகளின் ஆதர வைப் பெற பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
அதேபோல் அய்க்கிய முற் போக்குக் கூட்டணியின் குடி யரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் தங்களது வேட்பாளரை அறிவிக்கப் போவ தாக பா.ஜ.க., கூறி வருகிறது. இதற்கிடையே அதன் தலை மைக்கோ, மற்ற எந்தக் கட்சிக் கும் விசுவாசமாக இருந்ததில்லை என்கிற அவப்பெயரைப் பெற்று ள்ள பி.ஏ. சங்மாவை அதிமுக பிஜு ஜனதாதளம் பரிந்துரைத் துள்ளன.
இன்னும் ஓரிரு நாள்களில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, தேர்தல் களம் சூடுபிடிக்கப் போகிறது. இந் நிலையில், குளுகுளு அறையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு சிந்தித்துப் பழக்கப் பட்ட சில அதிமேதாவிகள், தங்களுக்குப் பிறவியிலேயே இருக்கும் ஆங்கிலப் புலமையின் காரணமாக நாளேடுகளில கட் டுரை எழுதி, அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். இதன் மூலம் தனி மனிதர்களை இழிவு படுத்துவதோடு, போற்றுதலுக் குரிய பெருமைமிக்க குடியரசுத் தலைவர் பதவியையும் சிறுமைப் படுத்தி வருகின்றனர்.
ஜுன் 6இல் வெளிவந்த தினமணி நாளேட்டின் நடுப் பக்கத்தில், கடவுளுக்குத்தான் வெளிச்சம் என்கிற தலைப்பில் எஸ். குருமூர்த்தியின் கட்டுரை வெளிவந்திருந்தது. இது தேசிய நண்பர்களைக் கொதிப்படைய செய்திருக்கிறது. இவர் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு கொள்கை கொண்ட ஒரு பிற்போக்குவாதி என்பதில் எமக்குச் சந்தேக மில்லை! இவரது பல கட்டுரை கள் ஜவஹர்லால் நேரு குடும் பத்தின்மீது சேற்றை வாரி இறைத்து எழுதுவதை வழக்க மாகக் கொண்டுள்ளன. அந்த அடிப்படையில்தான் இந்தக் கட்டுரையும் எழுதப்பட்டுள்ளது.
அந்தக் கட்டுரையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பதவி, தனது இழந்த மரியாதையையும் பெருமையை யும், ஆர். வெங்கட்ராமன் குடி யரசுத் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டபோதுதான் மீட்கப்பட்டது. விதிமுறைகளை நிலைநாட்டிய குடியரசுத் தலை வர் Rule Book President என்று சரித்திரத்தில் இடம் பெற்றவர் ஆர். வெங்கட்ராமன் என்று எழுதியிருக்கிறார்.
இந்திய நாடு சுதந்திரம் பெற்றதும் முதல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட் டவர் டாக்டர் ராஜேந்திர பிர சாத். அன்றைய குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளில் 99.24 சதவிகித வாக்குகளைப் பெற்று சாதனை புரிந்தார். இவர் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபை தலைவராக இருந்தவர்.
இவரைத் தொடர்ந்து, டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், டாக்டர் ஜாகீர்உசேன், கேரள ஆளுநராக இருந்து, துணைக் குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து, குடியரசுத் தலைவராகத் தேர்வு பெற்ற தொழிற்சங்கத் தலைவர் வி.வி.கிரி பக்ருதீன் அலி அஹமத், நீலம் சஞ்சீவி ரெட்டி, பிற்படுத்தப்பட்ட விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த கியானி ஜெயில்சிங், ஆர். வெங்கட்ராமன், டாக்டர் சங்கர் தயாள் சர்மா, தலீத் சமுதாயத்தைச் சேர்ந்த கே.ஆர். நாராயணன், விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம், மகளிர் சமுதாயத்தின் பிரதிநிதி யான பிரதிபா பாட்டீல் எனப் பன்னிரெண்டு குடியரசுத் தலை வர்களை இந்த நாடு பெற்றி ருக்கிறது.
இவர்களுடைய பதவிக் காலத்தில் அரசமைப்புச் சட்டம் எத்தகைய அதிகாரங்களை வழங்கியதோ, அதற்குட்பட்டு செயல்பட்டதன்மூலம் இந்திய ஜனநாயகத்தைக் காக்கும் பணியைச் சிறப்பாகச் செய்தனர். இவர்கள் எல்லாரையும் விட்டு விட்டு ஆர். வெங்கட்ராமன் மட்டும்தான் குடியரசுத் தலைவர் பதவிக்குப் பெருமை சேர்த்தார் என்றும், மற்றவர்களெல்லாம் பதவியைச் சிறுமைப்படுத்தினர் என்றும் எஸ். குருமூர்த்தி எழுதி யிருப்பதில் என்ன பொருள் இருக்கிறது? எந்த அடிப்படை யில் அவர் எழுதுகிறார்?
விதிமுறைகளை நிலைநாட் டிய குடியரசுத் தலைவர் என்று யாரை வேண்டுமானாலும் பாராட்டலாம். ஆனால், அத் தகைய பாராட்டைப் பெறுவ தற்கு ஆர். வெங்கட்ராமனுக்கு என்ன தகுதி இருக்கிறது? ராஷ் டிரபதி மாளிகையில் அமர்ந்து கொண்டு தமிழ்நாட்டில் அவர் செய்த குசும்புகளுக்குக் கணக் குண்டா? தமிழக காங்கிரஸ் கட்சியில் அவர் செய்த சகுனி வேலைகளுக்கு அளவுண்டா? தமிழக காங்கிரசில் உள்ள அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மக்கள் தலைவர் மூப்பனாருக்கு எதிராக எம்.பி. சுப்பிரமணியத்தை முன் னிலைப்படுத்தியது யார்?
நீண்ட கால நண்பரான நடிகர் திலகம் சிவாஜியை மூப்பனாருக்கு எதிராக முடுக்கிவிட்டது யார்? தொழிற்சங்கப் பணிகளை ஆற்றிக் கொண்டிருந்த கூ. ராமமூர்த்தியை மூப்பனாருக்கு எதிராகக் கொம்பு சீவிவிட்டது யார்? களத்துக்கு வராமலேயே ராஷ்டிரபதி பவனில் இருந்து கொண்டு காங்கிரசுக்குள் கோஷ்டி மோதலை ஊக்கப் படுத்தியது யார்?
1984இல் குடியரசுத் துணைத் தலைவராகப் பிறகு குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றது முதல் 1992 வரை மக்கள் தலைவர் மூப் பனாருக்கு எதிராக ஆர். வெங்கட் ராமன் செய்த சதி வேலைகள் ஒன்றா, இரண்டா? குடியரசுத் தலைவ ரானதும் வாழப்பாடி ராமமூர்த்தி யைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட் டிக்குத் தலைவராக்க வேண்டும் என்று 1989இல் ராஜீவ் காந்தி யிடம் நச்சரித்தது யார்? தமது உயர்ந்த பதவியை வைத்துக் கொண்டு, சிறுமையான அரசியல் நடத்தத் துணைபோனது யார்? பெரிய பதவி யிலிருந்த ஆர். வெங்கட்ராமனுக்கு இத்தகைய சின்னபுத்தி இருக்க லாமா? குருமூர்த்தி இதை அறிவாரா?
தினமணி நாளேட்டில் எஸ். குருமூர்த்தியின் கட்டுரையில் குடியரசுத் தலைவராக வருபவர்கள் நேரு குடும்பத்தில் சமைப்பது, டீ காபி கொடுப்பது, பாத்திரங்களைக் கழுவுவது எனக் கவுரவம் பார்க்காமல் சேவை செய்தவர்களுக் குத்தான் வழங்கப்படும். பத்துப் பாத்திரம் தேய்ந்த நன்றி விசு வாசத்துக்குக் கொடுப்பட்டதுதான் குடியரசுத் தலைவர் பதவி என்று கொச்சையாக இழிவுபடுத்தி எழுதப் பட்டுள்ளது. இதைவிட யாரும் தரம் தாழ்ந்து எழுதிவிட முடியாது.
யாரைப்பற்றி யார் எழுதுவது? நேருவைப் பற்றி எழுதுவதற்குக் குருமூர்த்திக்குத் தகுதி இருக்கிறதா? விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயர்களின் ஒற்றர் படையாக இருந்த ஆர்.எஸ்.எஸ்.ஸின் தயாரிப் பான குருமூர்த்திக்கு நேருவை விமர்சிக்க என்ன உரிமை இருக்கிறது? இந்திய விடுதலைக்காக 17 ஆண்டுகாலம் சிறையில் வாடிய ஜவஹர்லால் நேருவை இழிவுபடுத் துவது மிக மிகக் கேவலமான செயலாகும். அரண்மனை போன்ற ஆனந்த பவனத்தையே நாட்டுக்கு நன்கொடையாகக் கொடுத்தவர்கள் நேரு குடும்பத்தினர். இப்படிப்பட் டவரது வீட்டில் பத்துப்பாத்திரம் தேய்க்க ஆளில்லாததுபோலவும், அதைத் தேய்த்தவர்களுக்குக் குடிய ரசுத் தலைவர் பதவி கொடுக்கப் பட்டதாகவும் குருமுர்த்தி பிதற்றி யிருக்கிறார்.
இன்று குடியரசுத் தலைவராக இருக்கும் பிரதிபா பாட்டீலையும் இழிவுபடுத்துகிற அதே நேரத்தில், ஆர். வெங்கட்ராமன்தான் ரூல் புக் பிரசிடெண்ட் என்று புகழ்மாலை சூட்டுகிறார். யார் இந்த வெங்கட் ராமன்?
ஏன் இந்த பராபட்சம்?
தஞ்சை மாவட்டம், பட்டுக் கோட்டைக்கு அருகிலுள்ள ராஜா மடத்தில் பிறந்த ஆர்.வெங்கட் ராமனுக்குப் பதவியும் பவிசும் எப்படி வந்தன? கிராம காங்கிரஸ் கமிட்டி, மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி, மாநிலக் காங்கிரஸ் கமிட்டி எனப் படிப்படியாகக் கட்சிப் பணியாற்றிப் பதவிகளைப் பெற்றவரா ஆர்.வி?
சென்னை இராயப்பேட்டையில் போனியாகாத வழக்குரைஞராக இருந்தவர், தொழிற்சங்கத்தில் ஈடுபட ஆரம்பித்தார். பிறகு காமராஜரின் கடைக்கண் பார்வையால் 1952-இல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1957இல் காமராஜர் அமைச்சரவையில் பல்வேறு பொறுப்புக்களை பெற்று, பத்தாண்டு காலம் 1967வரை அமைச் சராக நீடித்தார்.
1967இல் காங்கிரஸ் தோல்வி அடைந்ததும், காமராஜரைவிட்டு விலகி ஒதுங்கியிருந்தார். பிறகு இந்திரா காந்தியின் ஆதரவைப் பெற்று 1977இல் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராகத் திடீரெனத் தேர்வு செய்யப்பட்டார். நாடு முழுவதும் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், எந்தக் கட்சியையும் சாராதவர் (Unattached) என்று நாளுமன்றத்தில் இருக் கையைக் கேட்டு வாங்கியவர், அதற்குப்பிறகு, மறுபடியும் இந்திரா காந்தியின் ஆதரவு பெற்று 1980இல் மீண்டும் நாடாளுமன்ற உறுப் பினராகத் தேர்வு செய்யப்பட்டவர், இது எப்படிச் சாத்தியமாயிற்று? கடவு ளுக்கே வெளிச்சம்!
இந்திரா காந்தியின் அமைச் சரவையில் முதலில் நிதி அமைச்சராக வும், பிறகு ராணுவ அமைச்சராகவும் பதவி வகித்தார். இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு, ராஜீவ்காந்தியின் ஆதரவில் துணைக் குடியரசுத் தலைவராகவும், 1987இல் குடியரசுத் தலைவராகவும் பதவிக்கு வந்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சியிலோ, தமிழக மக்களிடமோ எந்தத் தொடர்பும் இல்லாத ஆர். வெங்கட் ராமனுக்கு இவ்வளவு பெரும் பொறுப்புகள் வருவதற்குக் காரணம் என்ன? அவரது உயர்வுகளுக்கு யார் காரணம்? பெருந் தலைவர் காமராஜரோ, மக்கள் தலைவர் மூப்பனாரோ அடைய முடியாத பதவிகளையெல்லாம் இவரால் எப்படி அடைய முடிந்தது? அதன் சூத்திரம் என்ன? ரகசியம் என்ன? இவ்வளவு பதவிகளைப் பெற்றாரே, பதவி வழங்கியவர்களுக்கு
விசுவாச மாக இருந்தாரா? நன்றியோடு இருந்தாரா?
1967இல் பெருந் தலைவர் காமராஜருக்குப் பச்சை துரோகம் செய்தவர் ஆர்.வி! 1977இல் அன்னை இந்திராவின் முதுகில் குத்தியவர் ஆர்.வி! காங்கிரஸ் கட்சியால் பல்வேறு பொறுப்புகளைப் பெற்று, 98 வயது வரை வாழ்ந்த ஆர்.வி. குறைந்தபட்சம் காங்கிரசுக்காவது துரோகம் செய்யாமல் இருந்தாரா?
2004இல் காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டபோது, அதை எதிர்த்து பா.ஜ.க., தில்லியிலுள்ள படேல் சதுக்கத்தில் பேரணி நடத்தியது; அதில் வாஜ்பாய், எல்.கே. அத்வானி ஆகியவர்களுடன் கை கோர்த்துக் கொண்டு ஆதரவுக்கரம் நீட்டியவர்தான் ஆர்.வி.!
பொதுவாகக் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்தவர்கள் பதவி காலத் திற்குப்பிறகு தீவிரமான அரசியலில் ஈடுபடுவதில்லை. ஆனால் ஆர். வெங்கட்ராமனோ கொஞ்சம்கூட வெட்கமில்லாமல், காங்கிரசின் பரம எதிரியான பா.ஜ.க.வோடு கை கோர்த்துக் கொண்டார். இதற்கு என்ன காரணம்?
சிலருக்கு வியப்பாக இருக்கலாம்! ராஜா மடத்துக்கு சங்கர மடத்தின் ஆதரவு எப்போதும் உண்டு. குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த ஆர். வெங்கட்ராமன் சென்னை வரும்போதெல்லாம் காஞ்சிபுரம் சென்று ஜெயேந்திரரின் இருக் கைக்குக் கீழே தரையில் பவ்யமாக அமர்ந்து ஆசி பெறுகிற புகைப் படத்தைப் பார்த்து முகம் சுளிக்காத தமிழர்களே இல்லை! இதை எந்த நாளேடாவது கண்டித்ததுண்டா?
தமது அரசியல் வாழ்க்கையில் துரோகத்தையும் சூது சூழ்ச்சி களையும், இருந்த இடத்திலேயே நகராமல் செய்யக்கூடிய ஆற்றலும் வல்லமையும் பெற்ற ஆர். வெங்கட் ராமன், விதிமுறைகளை நிலை நாட்டிய குடியரசுத் தலைவர் என்று கூறுவதற்கு நா கூசவில்லையா?
- ஆதி
(நன்றி: தேசிய முரசு ஜூன் 16-_30 2012
உலகின் தலைசிறந்த 10 கண்டுபிடிப்புகள்
1. The Telephone - தொலைபேசி அலெக்சாண்டர் கிரகாம்பெல் (1875)
2. The Computer - கணினி கான்ரெட் சியூஸ் (1936)
3. The Television - தொலைக்காட்சிப் பெட்டி பால் நிப்கோ (1884)
4. The Automobile - வாகனத் தயாரிப்பு நிக்கோலஸ் ஜோசப் கக்னாட் (1769)
5. The Cotton Gin - காட்டன் துணி - எல்லி விடனி (1794)
6.The Camera - புகைப்படக் கருவி - ஜோசப் நேயிஸ்போர் நேயிப்ஸ் (1814)
7. The Steam Engine - நீராவி எந்திரம் - தாமஸ் சேவரி (1698)
8. The Sewing Machine - தையல் எந்திரம் பார்த்தெலமி திமோனியர் (1830)
9. The Light Bulb - பல்பு -ஹம்ப்ரி டேவி (1809)
10. Penicillin - பென்சிலின் - அலெக்சாண்டர் பிளம்மிங் (1928)
28-7-2012
பெண்கள் பஞ்சம்!
இந்தியாவில் 62 கோடி ஆண்களும் 59 கோடி பெண்களும் இருக்கிறார்கள் என்பது செய்தி.
பெண்கள் என்றால் வீட்டுக்கும் நாட்டுக்கும் சுமை என்று நினைக்கின்ற மோசமான மனுதர்மச் சிந்தனை நிலவும் மட்டும் இதில் மாற்றம் வரப் போவதில்லை.
கல்வி, வேலை வாய்ப்புகளில் ஆண் களுக்கு நிகராக 50 விழுக்காடு அளிக் கப்பட்டால் மாற்றம் வர வாய்ப்பு உண்டு. இன்றைய சூழலில் ஒரு பெண்ணைத் திரு மணம் செய்து கொடுப்பதில் பெற்றோர் களுக்குப் பெரும் சுமையாகவே இருக்கிறது.
இந்த நிலையில் பெண்கள் தனித் தன்மையினராக, சொந்தக்காலில் வீறு கொண்டு நிற்பவர்களாக மாற்றப்பட வேண்டாமா?
இப்பொழுதுள்ள நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் 10 கோடி ஆண்கள் திருமணம் செய்து கொள்ள பெண்களே கிடைக்க மாட்டார்களாம்!
ஆண்களே உங்கள் ஆதிக்கப் புத்தியை மாற்றிக் கொள்வீர்! இல்லையெனின் அவதிப்படப் போவது நீங்கள்தான்.
சமத்துவக் கல்வியும், பெண்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் கல்வி முறையும் தேவை! தேவை!! பூணூலும் - அரைஞாண் கயிறும்!
அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ நாள் ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆரில் அரைஞாண் கயிறுபற்றி எழுதப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் பூணூல் என்பது சாதியின் அடையாளம் என்றும் எழுதியுள்ளது. மகிழ்ச்சியே! இதே ஏடுதான் பூணூல் தத்துவம் என்று கூறி அதற்கொரு மகத் துவத்தைக் கற்பித்து எழுதியது என்பதை நினைவில் கொள்க!
இதில் கவனிக்க வேண்டியது என்ன தெரியுமா? தொடக்கத்தில் குரு, சீடர் களுக்குக் கட்டச் சொன்ன அரைஞாண் கயிறுதான் பிற்காலத்தில் பூணூலாகி விட்டது என்கிறார் விவேகானந்தர். இதோ விவேகானந்தர் பேசுகிறார்: முடிவில்லாத பிறப்பாகிய மாயையைக் கடக்கும் பொருட்டு ஜீவனுடைய சோகங் களையும் துன்பங்களையும் கருணையினால் அழித்து விடுகின்றவரே உண்மைக் குரு. பழைய காலத்திலே சிஷ்யனானவன் கையில் சமித்துகளை எடுத்துக் கொண்டு குருவி னுடைய குடிலுக்குப் போவான். குருவும் அவனுடைய தகுதியை அறிந்து, உளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய முஞ்சா என்னும் புல் லினை அவனுடைய இடுப்பிலே கட்டி அவனுக்கு தீக்ஷை செய்து வேதங்களைப் போதிப்பார். அரையிலே கட்டிய முப்புரியாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத்தைக் கட்டிக் கொள்ளுவான். முஞ்சா என்னும் அப்புல்லினால் ஆக்கப்பட்ட கயிற்றுக்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்து கொள்ளும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டது.
(சுவாமி விவேகானந்தர் சம்பாஷணை)
புறம்போக்கு ஜெபவீடு இடிப்பு
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், செந்துறை அரசு மருத்துவமனை எதிரில் நீர்வரத்து புறம்போக்கில் அத்துமீறி கட்டியிருந்த ஏசு அலொலியா ஜெப வீடு அரசு அதிகாரிகள் உடையார்பாளையம் வருவாய் வட்டாட்சியர் மற்றும் செந்துறை வட்டாட்சியர் அன்பழகன், செந்துறை கிராம நிர்வாக அலுவலர்கள், செந்துறை ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் இடித்துத் தள்ளப்பட்டது. சட்ட விரோதமாகக் கட்டப்பட்டது எந்த மதத்தின் வழிபாட்டு அமைப்புகளாக இருந்தாலும் அவை இடிபட வேண்டியதே!
உச்சநீதிமன்றமும் சென்னை உயர்நீதி மன்றமும் இத்தகைய நடவடிக்கைகள் தேவை என்று வலியுறுத்தியுள்ளன. தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் உச்சநீதிமன்றத்திற்கு நேரில் வந்து உண்மை நிலையைத் தெரிவிக்க வேண்டும் என்றும், ஆணை பிறப்பித்துவிட்டது. தமிழ்நாடு அரசு இந்தப் பிரச் சினையில் எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை. சட்ட விரோதமாகக் கட்டப் படும் கோயில்களை எதிர்த்து திராவிடர் கழகம் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறது.
ஏன் இப்பொழுது தமிழர் தலைவரின் கேள்வி பதில்கள் விடுதலையில் வருவதில்லை.
பல கேள்விகள் அதன் பதில்கள் தலைவரின் மனவோட்டத்தையும், சரியான இலக்கையும் காட்டி வருவன.
மீண்டும் வருமா?
தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்காவிட்டால் இலங்கையில் மீண்டும் இன மோதல் வெடிக்கும்!
நார்வே முன்னாள் அமைதித் தூதர் எரிக் சோல்ஹீம்
கொழும்பு, ஜூலை 29- இலங்கைத் தமிழர் களுக்கு சம உரிமை களை வழங்காவிட்டால் அங்கு மீண்டும் இன மோதல் வெடிக்கும் என்று நார்வே நாட்டின் முன்னாள் அமைதித் தூதர் எரிக் சோல்ஹீம் எச்சரித்துள்ளார். அவர், நார்வே நாட்டின் "ஆஃப்டன்போஸ்டன்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதா வது: இலங்கையில் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்துக்கு தமிழர் பிரச்சினையே காரணமாக இருந்தது. விடுதலைப்புலிகளை ராணுவம் தோற்கடித்த பிறகும் அப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதையும் அவர்கள் இன்னும் செய்யவில்லை. இந்த விவகாரங்கள் தீர்க்கப் படாவிட்டால், இலங் கையில் எதிர்காலத்தில் மீண்டும் இன மோதல் புதிய வடிவங்களில் வெடிக்கும். நான் கடந்த 2000-ஆவது ஆண்டு இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, சிங்கள பயங் கரவாதிகள் என்னைக் கொல்ல முயற்சித்தனர். அந்நாட்டில் நிலவிய அச்சுறுத்தல் மற்றும் அங்குள்ள நிலவரம் குறித்து எங்களுக்கு அவ்வப்போது நம்பக மான தகவல்கள் கிடைத்து வந்தன. கொலை முயற்சி தொடர்பாக நார்வே பாதுகாப்புச் சேவை அமைப்பில் இருந்து எங்களுக்கு எச்சரிக்கை வந்தது. எங்களுக்கு அந்த அமைப்பு பாது காப்பு வழங்கியது. எனினும் உயர் பாது காப்பு வழங்கப்பட்டா லும் அது உயிரைக் காக்க உத்தரவாதம் தராது என்பதை நான் உணர்ந்திருந்தேன்.
விடுதலைப்புலிகளுக்கு எதிராக 2000-ஆவது ஆண்டில் நடைபெற்ற போர், ராணுவத்துக்கு மிக மோசமாக அமைந் தது. அப்போது யாழ்ப் பாணம் பகுதியில் சிக்கிக் கொண்ட ராணுவ வீரர் களை பத்திரமாக வெளி யேற்றுவது தொடர்பாக இந்தியாவிடம், நார்வே பேச்சு நடத்தியது. இவை அனைத்துக் கும் நார்வேதான் கார ணம் என்று அப்போது பெரும்பான்மை சிங்க ளர்கள் கருதினர். அந்த, ஆண்டு மே 24-ஆம் தேதி, நான் கொழும்பை விட்டு நார்வே புறப்பட் டேன். அப்போது அங் குள்ள நார்வே தூதரகத் தின் மீது அடையாளம் தெரியாத சிலர் வெடி குண்டை வீசினர். அது குறி தவறி பக்கத்தில் இருந்த, யாரும் குடி யிருக்காத வீட்டின் தோட்டத்தில் விழுந்து வெடித்தது. அந்த குண்டு என்னைக் குறிவைத்து வீசப்பட்டதா? என்பது தெரியவில்லை என்று எரிக் சோல்ஹீம் தெரி வித்தார்.
29-7-2012
சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியில் சிறீலங்கா
எழுத்துரு அளவு
ஞாயிறு, 29 ஜூலை 2012 14:01
கொழும்பு, ஜூலை 29- போர்க் குற்றச் சாட்டுகள் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு அய்ந்து ஆண்டுகள் தேவைப் படலாம் என்ற சிறீலங்கா அரசின் செயல் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் நிராகரித்துள்ளார்.
இது அனைத்துலக அழுத்தங்களைச் சமாளிக்க தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை.
அனைத்துலகச் சமூகம் இந்த விவகாரத்தை மறந்து போவதற்காக காலத்தை இழுத்தடிக்கும் நோக்கிலேயே இந்த அய்ந்தாண்டு செயற்திட்டம் வனையப்பட்டுள்ளது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதே வேளை, நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத் துவதற்கான செயற்திட்டம், அனைத்துலக அழுத்தங்களை குறைக்கும் முயற்சியே என்று சிறீலங்காவின் எதிர்க்கட்சிகள் விமர்சித் துள்ளன. 29-7-2012
தேவதாசி விண்ணப்பம்
நமது நாட்டில் தெய்வத்தின் பேராலும், மதத்தின் பேராலும் விபசாரித் தனத்திற்கு இடமாயிருக்கிற தேவதாசிகள் என்கிற தத்துவம் எடுபடவேண்டு மென்பதாக பலர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக, சென்னை சட்ட சபை அங்கத்தினரும், உப தலைவருமான ஸ்ரீமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்ட சபையில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டி ருக்கின்றது. அதன் தத்துவம் என்னவென்றால், விபசாரத்திற்காக மதத்தின் பேரால் கோவிலில் பெண்களுக்கு பொட்டுக்கட்டி (முத்திரை போட்டு) விடும் வழக்கம் கூடாதென்றும், அப்படிச்செய்தால் அதற்கு இன்ன தண்டனை என்று ஏற்படுத்த வேண் டுமென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் கூடாது என்பதாக இரண்டு தேவதாசிப் பெண்கள் அதாவது ஸ்ரீமதிகள் துரைக்கண்ணு, பார்வதி, என்கிற இரு சகோதரிகளால் சட்டசபை மெம்பர்களுக்கு விண்ணப் பங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனவாம். இதைப் பற்றி நமக்கு யாதொரு ஆச்சரியமுமில்லை. ஏனெனில், இந்த விண்ணப்பம் அச்சகோதரிகளால் அனுப்பப்பட்டி ருக்காது என்பதும், அதற்குப்பின்புறம் சிலரிருந்துகொண்டு வேலை செய்திருப்பார்கள் என்பதும் நாம் மனப்பூர்வமாய் தீர்மானிக்கக் கூடியதாயிருக்கிறது.
ஏனெனில், அப்பெண்மணிகளுக்கு அவ்வேலை நின்று போனால் பிழைக்க முடியாது என்றாவது, அப்பெண்மணிகளால்தான் உலகத்திலுள்ள மற்ற பெண்களுக்கு கற்புகெடாமலிருக்கின்றது என்றாவது, இச்சட்டத்தால் உலகம் முழுகிப் போகு மென்றாவது நாம் நினைக்கமுடியாது. ஆனால், அப்பெண்களுக்கு தரகர்களாயிருந்து நோகாமல் ஒரு சொட்டு வேர்வைகூட நிலத்தில் விழாமல் மேலாமினுக்காய் இருந்து வாழ்ந்துவரும் மாமாக்கள் என்று சொல்லு கின்றவர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கொரு வழி கிடைப்பது சற்று கஷ்டமாயிருக்கும். ஆதலால், அவர்கள் இந்த விண்ணப்பத்திற்கு மூல கர்த்தாக் களாயிருப்பதில் நமக்கு ஆச்சரியமில்லை. எனினும், இக்கூட்டத்தார் பிழைப்பதற்காக நமது சகோதரிகள் நாட்டுக்கும், சமுகத்திற்கும் இழிவான வேலைகள் செய்து கொண்டிருக்க மதத்தின் பேரால் இடம் கொடுப் பதை விட அதர்மமானதும், கொடுமையானதுமான காரியம் வேறில்லை.
தவிர, மற்றும் சில பெரியோர்கள் நாட்டின் நற்பெயரையும், நமது மற்ற பெண்களின் கற்பையும் காப்பதை உத்தேசித்து, இம்மாதிரி ஒரு கூட்டம் பெண்கள் விபசாரத்திற்கென்றே தனியாயிருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்களாம். இந்தக் கொள்கையைப் பற்றி நாம் விவகாரம் பின்னால் செய்து கொள்ள நினைக்கின்றோம். ஆனால், அப்படி ஒரு கூட்டம் பெண்கள் வேண்டும் என்கிற கட்சியை நியாயமென்று கொள்வதாகவே வைத்துக் கொண்டாலும், அதற்காக ஒரு வகுப்பாரே தலைமுறை, தலைமுறையாக தங்கள் பெண்களை உதவிவர வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? என்று கேட்பதுடன், அந்த தேசாபிமானமும், நாட்டின் கற்பு அபிமானமும் கொண்டதான இந்தப் பரோபகாரம் எல்லா வகுப்புக்கும் பங்கு முறைப்படி வரட்டும் என்பதாக தாராள நோக்கத்துடன் பார்த்து, அதை மற்றவகுப்புக்கும் பிரித்து விடுவதில் என்ன ஆட் சேபனை, அல்லது நாட்டு கற்பில் கவலையுள்ள ஒவ்வொரு குடும்பத் திலும், ஒவ்வொரு பெண்ணை இந்த தேசாபிமானத்திற்கும், கற்பு அபிமானத் திற்கும் விட ஒரு சட்டம் செய்வதற்கு என்ன ஆட்சேபணை என்று கேட்கின் றோம். இப்படிப்பட்ட தர்ம நியாயங்கள் சொல்லி ஏமாற்றித்தானே, ஆதியில் ஒரு வகுப்பார் தலையில் இவ்விழிவு காரியங்கள் போய் விழுந்து விட்டன.
தவிரவும், இவர்கள் இப்படிச் சொல்லுவதிலிருந்து மற்ற பெண்கள் கற்பு தவறுவதற்கு ஆண்களே காரணம் என்றும், அந்த ஆண்களுக்கு வேறு பெண்கள் தயாராயிருந்து விட்டால் மற்ற பெண்கள் கற்பு கெடாது என்றும் கருதுவதாகவும் தெரிகின்றது. இப்படிச் சொல்லுவதானது, ஆண் சமுகத்திற்கே கொடுமை செய்ததாகும். சட்டமும், சாஸ்திரமும், மதமும் எப்படி இருந்தாலும் இயற்கைத் தத்துவமும் கடவுள் சித்தமும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இவ் விஷயத்தில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பது நமது அபிப்பிராயம். ஆனாலும், பெண்களுக்கு காவலும், கட்டுப்பாடும், நிபந்தனை யும் அதிகமாயிருப்பதால் அவர்கள் விஷயத்தில் நாம் அதிக யோக்கியதை கொடுத்துவிட நேருகின்றது. கட்டுப்பாட்டால் காப்பாற்றப்படும் கற்பை, கற்பு என்று நாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது. இவ்விஷயத்தில், உலகத்தில் உள்ள எல்லா மதமும் பழக்கத்தில் தனிமயமாகத்தான் நடந்து கொள்ளு கின்றது. ஆனால், இம்முறைகள் இனி அதிக காலத்திற்கு நிலைக்காது என்பதும் நிலைக்கும் வரை ஆண் பெண் இரு பாலர்க்கும் சரி சமானமான சுதந்திரம் இல்லை என்பதுமே நமது அபிப்பிராயம்.
- தந்தை பெரியார்- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 30.10.1927
சக்தியுள்ள கடவுள்கள்?
தமிழ்நாட்டுக் கோயில்களி லிருந்து திருடப்பட்ட ரூபாய் 110 கோடி மதிப்புடைய சிலைகள் அமெரிக்காவில் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன.
இதனைப் படித்தால் அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. இணைய தளத்தில், வெளியிடப்பட்ட படங்களைப் பார்த்து அதன் அடிப்படையில் இவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளனவாம்.
நம் நாட்டுக் கோயில்களின் வீர தீரப் பிரதாபங்களை ஆன்மீகச் சிறப்பிதழ் போட்டு விளம்பரப்படுத் தும் அதே இதழ்கள்தான் - தமிழ் நாட்டுக் கோயில்களில் இருந்த சாமி சிலைகள் அமெரிக்காவில் பறிமுதல் செய்துள்ளதையும் வெளி யிடுகின்றன. இதில் இவர்களுக்கு வெட்கம் சிறிதும் இல்லை. இந்து மதக் கோயில்களுக்குள் வெளி மதக் காரன் நுழைய அனுமதியில்லை - வெளியிலேயே அறிவிப்புப் பல கையைத் தொங்கவிட்டிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் இப்பொழுது என்ன நடக்கிறது? அமெரிக்காவில் உள்ள கிறித்துவக் காவல்துறை அதிகாரிகள்தான் அந்த இந்துக் கடவுள்களைக் கைப்பற்றுகிறார்கள். கண்டுபிடித்தது கிறித்துவக் கை என்பதால் இந்தியாவுக்குக் கொண்டு வந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட் டோம் என்று சங்கராச்சாரியார் களும், இந்து முன்னணி வகை யறாக்களும் சொல்வார்களா?
பார்ப்பனர்கள் பலே கெட்டிக் காரர்கள் ஆயிற்றே! அதற்கும் சடங்கு, சாங்கித் தியம், சுத்திகரிப்பு என்று சொல்லி பணம் பறிப்புத் தொழிலைத் தயா ராக வைத்திருக்க மாட்டார்களா?
சுரண்டல் தொழிலில் நட்டக் கணக்குக்கு இடம் ஏது? 29-7-2012
ராஜாஜி
கேள்வி: எனது அருமைத் தலைவர் ராஜாஜிக்கு பிராமணர் அல்லாதவரிடம் புகழ் இல்லையே ஏன்?
ஆர்.சேஷாத்திரி அய்யங்கார், பருத்திப்பட்டு
பதில்: பிராமணர் அல்லாத தலைவர்களால் கொண்டாடப் பட்டவர்தான் ராஜாஜி. ஆரம்ப காலத்தில் பெரியார் ஈ.வெ.ரா.வும், வரதராஜூலு நாயுடுவும் அவருக்கு இரு கரங்களாக இருந்தார்கள். சத்தியமூர்த்தி - காமராஜர் புயலை ராஜாஜி எதிர்கொள்ள அரணாக இருந்தவர் ம.பொ. சிவஞானம். தனது எழுத்தால் ராஜாஜிக்கு வலிமை சேர்த்தவர் காண்டீபம் ஆசிரியர் எஸ்.எஸ். மாரிச்சாமி. தனது பேச்சால் உதவினார் சின்ன அண்ணா மலை.
அனைத்துக்கும் மேலாக பிராமணர் அல்லாதார் இயக்கத்தின் நீட்சியாக தன்னை அறி வித்துக் கொண்ட அண்ணா 67 தேர்தலில் ராஜாஜியை தனது அணியின் நடுநாயகமாக வைத்துக் கொண்டார். எந்த ராஜாஜியை எதிர்த்துக் கால மெல்லாம் அரசியல் நடத்தினாரோ அந்த காமராஜர்... ராஜாஜியின் கடைசிக் காலத்தில் அவரோடு ஒரே மேடைக்கு வந்தார். எனவே, ராஜாஜி, அனைவராலும் விமர்சிக்கப் பட்டாரே தவிர, யாராலும் ஒதுக்கப்படவில்லை.
(ஜூனியர் விகடன் 1.8.2012 பக்.10)
கேள்வி கேட்டவர் அய்யங்கார். பதில் சொல்லும் ஜூ.வி.யோ அய்யர்வாள். கேள்வி கேட்கப்படும் ராஜாஜியோ அய்யங்கார். விட்டுக் கொடுத்துவிடு வார்களா? ஆனால் ஒன்று. கேள்வி கேட்கும் அய்யங்காருக்கு ஏன் அப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டது என்று பதில் சொல்லும் ஜூ.வி. அய்யர்வாள் கொஞ்சங்கூட நிதானித்துப் பார்க்க வில்லையே-ஏன்?
பார்ப்பனர் அல்லாதாரிடத் தில் ஆச்சாரியர் மீது வெறுப்பு இருக்கிறது என்ற உண்மை அய்யங்காருக்கு நன்றாகவே தெரிந்திருக்கின்றது. அதனால் தான் அந்தக் கேள்வியையே கேட்கிறார். ஜூ.வி. அய்யர்வா ளுக்கும் இந்த உண்மை தெரி யும். என்றாலும் ஆச்சாரியாரை விட்டுக் கொடுக்க முடியாதே - அதனால்தான் இந்த விளக் கெண்ணெய் கத்தாழைக் கூட்டு வழவழ குழகுழ பதில்.
1937 இல் ஆட்சிக்கு வந்தபோதும் 2500 பள்ளிகளை இழுத்து மூடினார். அதே நேரத்தில் பார்ப்பனர் படிப்பதற்கு சமஸ்கிருதக் கல்லூரியைத் திறந்தார். 1952 இல் வந்த போதும் ஆறாயிரம் கிராமப் பள்ளிகளை இழுத்து மூடி அரை நேரம் படித்தால் போதும், மீதி அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று ஆணையையும் பிறப்பித்தார் ஆச்சாரியார்.
இந்தக் குலக்கல்வித் திட்டத்தின் பின்னணியைத் தந்தை பெரியார் தமிழர்களிடம் விளக்கிக் கூறினார். ஆச்சாரி யார் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டம் வருணாசிரம நோக்கம் கொண்டது என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை தமிழர்கள் ஏற்றுக் கொண்டனர்.
சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்மத் திட்டத்தை ஆச்சாரியார் திணித்தார். பார்ப்பனரல்லாதார் வெறுப்பைத் தேடிக் கொண்டார். இதற்கு என்ன ஆராய்ச்சியா தேவை?
- மயிலாடன் 31-72012
ஜாதி அடையாளம்
ஜாதி ஒழிய வேண்டும் என்று சொல்கிறீர்கள். அதே நேரத்தில் அரசியலில் தாங்கள் ஜாதியைத் தானே முன்னிறுத்துகிறீர்கள் - அடையாளம் காட்டுகிறீர்கள் என்ற கேள்விக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் திரு. ச. இராமதாசு அவர்கள் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் என்ன பதில் சொல்கிறார்?
யாருக்குத்தான் ஜாதி உணர்வு இல்லை? ஒவ்வொரு கட்சிக்குள்ளும் ஜாதி உணர்வு இருக்கிறது. பிகாரில் லாலு பிரசாத், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, கருநாடகாவில் தேவகவுடா, உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி என்று எடுத்துக் கொண்டாலும் இந்தியா முழுமையும் ஜாதி அடிப்படை அரசியல்தான் நடக்கிறது. நாங்கள் சொன்னால் மட்டும் எங்களுக்கு ஜாதி முத்திரையைக் குத்துகிறார்கள் என்பதுதான் மருத்துவரின் பதில்.
மற்ற மற்ற மாநிலங்களில் உள்ள ஜாதி அரசியலைத் தமிழ்நாட்டோடு ஒப்பிட்டுக் கூற முடியாது. தமிழ்நாட்டில் உள்ளது போல் சமூகப் புரட்சி இயக்கம் அங்கெல்லாம் கிடையாது. தந்தை பெரியார் போன்ற ஜாதி ஒழிப்புப் புரட்சியாளரின் முக்கால் நூற்றாண்டுக் கால ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம். அதற்கான போராட்டங்கள் நடத்தப்பட்டதில்லை. இன்னும் சொல்லப்போனால் பெயர்களுக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் போட்டுக் கொள்வது பிற மாநிலங்களில் உண்டு. தமிழ் நாட்டில் அவ்வாறு போட்டுக் கொள்வதில்லை. அப்படிப் போட்டுக் கொள்வதற்கு வெட்கப்படும் நிலைதான் இங்கு. இந்த அடிப்படை உண்மையை மருத்துவர் உணரவேண்டும்.
இதற்கு முன்பும்கூட ஜாதியை முன்னிறுத்தி கட்சி நடத்தியவர்கள் எல்லாம் தமிழ் நாட்டில் வெற்றி பெறவில்லையே. தேர்தல் நேரங்களில ஜாதிக் கட்சிகளோடு கூட்டு சேர்ந்து போட்டியிட்ட நிலைமைகள் எல்லாம் கூட உண்டு. அது வெற்றியைக் கொடுத்திருக்கிறதா?
மருத்துவர் சொல்லும் கூற்றுப்படியே ஒரு கேள்வியை அவரிடம் கேட்க முடியும். தமிழ்நாட்டில் ஜாதி உணர்வு இருக்கிறது என்பது உண்மையானால், ஜாதி அடையாளத்தைக் காட்டி அரசியல் நடத்தும் பா.ம.க. தேர்தலில் குறைந்த பட்சம், வட மாவட்டங்களிலாவது பெரு வாரியான வகையில் வெற்றி பெற்று இருக்க வேண்டுமே. ஏன் வெற்றி பெற முடியவில்லை? தமிழ்நாட்டு மண்ணுக்குரிய தனித்தன்மைதான் இது.
மற்றொரு கேள்விக்கு பா.ம.க. நிறுவனர் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதே - பாட்டாளி என்றால் தமிழ்நாட்டில் வன்னியர் மட்டும்தானா? இப்படி ஒரு கட்சியை தாம் துவக்கியதற்கு தொடக்கத்தில் என்ன கருத்தினை முன்வைத்தார்? நரிக்குறவர், நாவிதர், வண்ணார், போன்ற பல சமுதாயத்தினரும், வன்னியர்கள் போல கல்வி, வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டனர். இந்தச் சமுதாய அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கத்தான் பா.ம.க.வை ஆரம்பித்ததாகக் கூறினாரே! (நம்பு தம்பி நம்மால் முடியும் ஜூலை 2008) அதன்படி நடந்து கொண்டதுண்டா?
இதுவரை எந்த ஒரு சட்ட மன்றத் தேர்தலிலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலிலோ வன்னியரைத் தவிர்த்த வேறு யாரையாவது வேட்பாளராக நிறுத்தியதுண்டா?
அத்தனை சட்டப் பேரவை உறுப்பினர்களும், அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் வன்னியர்களே - பெயர் மட்டும் பாட்டாளி மக்கள் கட்சி. புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் எம் மீது படுத்துக்கொள்ளுங்கள் என்று கூறும் கதையாக அல்லவா இருக்கிறது!
தொடக்கத்தில் தலித் எழில்மலை, பொன்னுசாமி ஆகிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு மத்தியில் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டாலும், பிற்காலத்தில் அந்த நிலையும் மாற்றப்பட்டு அனைத்தும் வன்னியர் களுக்கே என்பதுதானே பா.ம.க.வின் நிலைப்பாடு.
வன்னியர்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னேற்றம் அடைய வேண்டியது மிகவும் அவசியமே. இதில் இரண்டு கருத்துக்களுக்கு இடம் இல்லை. அதே நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி என்ற போர்வையில் வன்னியர்களுக்கு மட்டுமான அரசியல் நடத்துவது எப்படி சரியாக இருக்க முடியும்?
இன்னொரு பக்கத்தில் ஜாதி ஒழிப்பே தங்கள் கொள்கை என்கிறார். அப்படியானால் ஜாதி ஒழிப்புக்காக அவர் வைத்துள்ள திட்டங்கள் என்ன? குறைந்தபட்சம் ஜாதி ஒழிப்பு மாநாடுகளை நடத்த முன்வருவாரா? தம் கட்சியினர் ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவாரா? வன்னிய ஜாதியில் வேறொரு ஜாதியினர் கலப்பு மணம் செய்தால் வெட்டுவோம் என்பதுதான் ஜாதி ஒழிப்பா? ஜாதிப் பெருமை பேசுபவர்களால் எப்படி இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும்?
31-7-2012
Post a Comment