Search This Blog

25.7.12

பெண்களுக்குத் தாடி மீசை முளைக்காதது ஏன்?


ஆன்மிகச் சிறப்பிதழ்கள் என்று வெளியிடுகிறார்களே - கொஞ்சமாவது புத்தியைச் செலுத்துகிறார்களா? இதோ ஒரு கதையைக் கேளுங்கள்! கேளுங்கள்!!

சிறீபக்ஷிராஜர் திரு நட்சத்திரம்

கசியப மகரிஷி - வினதை இருவருக்கும் பிறந்தவர் கருடன். தாயின் அடிமைத் தளையை நீக்க தேவலோகத்திலிருந்து இந்திரனிடம் சண்டையிட்டு அமிர்தத்தைப் பெற்று வந்தார். அதைத் தர்ப்பையைப் பரப்பி ஊற்றி தாயின் அடிமைத்தனத்திற்குக் காரணமாக இருந்த கத்ருவின் பிள்ளைகளான நாகர்களைக் குடிக்கச் செய்தார். தர்ப்பையால் நாக்கு பிளவுபட்ட சர்ப்பங்கள் இரத்தம் கொட்ட மயங்கி விழுந்தன. மாற்றாந் தாயான கத்ரு, கருடனின் வலிமையைப் புரிந்து கொண்டு சக்களத்தியான வினதைக்கு அடிமைத் தளையிலிருந்து விடுதலை அளித்தார்.

கருடனின் தமையன் சூரியனின் ரதசாரதியான அருணன். கருடன் திருமாலின் வாகனம். நரகாசுரவதத்திற்கு பெரும் உதவியாக இருந்தவன். கருடனின் அம்சமாகப் பிறந்தவர் பெரியாழ்வார். இன்று, பெரிய திருவடி எனப்படும் பட்சி ராஜா வாகிய கருடனை பெருமாள் கோயில் சென்று வழிபடுவதால் சாதனை புரியும் ஆற்றலும், வீரமும், திருமால் அருளும் கிட்டும்.

ஏதாவது புரிகிறதா?

கருடனின் அண்ணன் சூரியனின் ரத சாரதி (எவ்வளவுக் காட்டு விலங்காண்டிகள்!) ஆகாயத்தில் இப்பொழுது பறக்கின்றனவே - இவை எல்லாம் கூட மகரிஷிக்குப் பிறந்தவைகள்தானா? பெரியாழ்வார் யார் என்று கேட்டால் கருடனின் அம்சமாம். கருடன் தலைக்கு மேல் பறந்தால் காண்பவர்களுக்கு நல்ல பலன் கிட்டுமாம். வியாழன் அல்லது சனிக்கிழமைகளில் கருடனைத் தரிசித்தால் வழக்குகளில் ஜெயமாம். (வாதி, பிரதிவாதி இருவரும் தரிசித்தால் யாருக்கு வெற்றியாம்?) அது சரி, கோழிக்குஞ்சுக்கு மேல் கருடன் பறந்தால் யாருக்குப் பலனாம்?

அந்தப் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்தான் ஆண்டாளாம். அந்த ஆண்டாள் யார் என்றால் தந்தையாகப் போற்றத் தகுந்த பெருமாளைப் புருஷனாகக் கொண்டு புணர்ந்திட ஆசைப்பட்டாளாம்! (அட ஒழுக்கம் கெட்ட கூட்டமே!)

பக்தரிடம் பெருமாள் கடிபட்டாராம்

பக்தர் ஒருவரிடம் கடவுள் பெருமாள் ஒவ்வொரு நாளும் கடிபட்டாராம். சிறீரங்கம் கோயிலில் சிறீமான் ரெங்கநாதன் பள்ளி கொண்டு இருக்கிறார் அல்லவா? அரையர் சுவாமிகள் பாடும் பாசுரங்கள் பெருமாளுக்குப் ப்ரீதியாம். அரையர் வெற்றிலைப் பாக்குப் பிரியராம். குழைய குழைய வெற்றிலைப் பாக்குப் போட்டுக் கொண்டே பாசுரங்களைப் பாடுவாராம். பெருமாளைத் தம் வெற்றிலைப் பாக்குப் பெட்டியில் எழுந்தருளச் செய்தாராம் (பெருமாளின் கதியைப் பார்த்தீர்களா!)

அடிக்கடி வெற்றிலைப் பாக்குப் பெட்டியைத் திறந்து பார்த்துத் தொட்டு வணங்குவாராம். சில நேரங்களில் கொட்டைப் பாக்கு என்று நினைத்து பெருமாளையும் கடித்துவிடுவாராம். பிறகு நீராட்டிப் பாசுரம் பாடி வெற்றிலைப் பாக்குப் பெட்டிக்குள் வைத்துவிடுவாராம். (கடவுளா கொட்டைப்பாக்கா?)

கடவுளைப் பக்திச் சிமிழுக்குள் அடைக்கும் விபரீதத்தை என்ன சொல்ல!

பெண்களுக்குத் தாடி மீசை முளைக்காதது ஏன்?

மாண்டவ்ய முனிவருக்கும், டிண்டிகைக்கும் ஒரு மகள். தம்பதியர்கள் காசி யாத்திரை செய்ய விரும்பி, மகளை உத்தமராக நம்பிய எமதர்மனிடம் விட்டுச் சென்றனராம்.

அந்த யோக்கிய சிகாமணி என்ன செய்தான்? நம்பி விட்டுச் சென்ற அந்தப் பெண்ணுடன் சுகபோகம் அனுபவிப்பதும், பகல் நேரத்தில் அவளை விழுங்கி விடுவதும் வழக்கமாம்.

ஒருமுறை குளிக்கச் சென்றபோது அந்தப் பெண்ணை வயிற்றிலிருந்து வெளியே உமிழ்ந்து விட்டு குளிக்கச் சென்றான். அப்பொழுது அந்த வழியில் வந்த அக்னி பகவான் அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி அவளை கற்பழித்துவிட்டானாம். (இந்து மதம் என்றாலே கடவுள் கற்பழிக்கவேண்டுமே!)

குளிக்கச் சென்ற எமதர்மன் வெளியில் வந்த போது வேறு வழியின்றி அக்னியை அப்படியே அலக்காகப் போட்டு அந்தப் பெண் விழுங்கி விட்டாளாம்.

எமதர்மன் வழக்கம்போல அந்தப் பெண்ணை விழுங்கி விட்டானாம். இப்பொழுது எமன் வயிற்றில் பெண் - அந்தப் பெண்ணின் வயிற்றில் அக்னி! (இன்னும் கேளுங்கள்! கேளுங்கள்!!)

அக்னி அமுங்கிவிட்டதால் தேவர்கள் யாகம் முதலியவற்றைச் செய்ய முடியவில்லையாம்.

அக்னி பகவான் இருக்கும் இடம் எப்படியும் வாயு பகவானுக்குத் தெரியும் என்று கருதி அக்னியைக் கொண்டு வருமாறு தேவர்கள் வேண்டினர்.

வாயு பகவான் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தான். எமதர்மராஜாவுக்குப் பக்கத்தில் இரண்டு இலைகள் போடப்பட்டன. எமதர்மன் வாயுவைப் பார்த்து என் பக்கத்தில் இரண்டு இலைகள் ஏன் என்று கேட்க, அதுதான் சந்தர்ப்பம் என்று கருதி, உன் வயிற்றுக்குள் பெண் இருக் கிறாரே - அவளுக்குத்தான் என்று வாயு கூற, வேறு வழியின்றி எமராஜா பெண்ணை வெளியில் கக்கினான். இன்னொரு இலை யாருக்கு என்ற வினா எழுந்தது. உன் வயிற்றில் இருக்கும் அக்னி பகவானை வெளியில் கொண்டு வா என்று அந்தப் பெண்ணிடம் கூறினான் வாயு.

அக்னி பகவான் பெண்ணின் வாயிலிருந்து வெளியே வந்தபோது பெண்ணின் தாடி மீசை பொசுங்கிப் போய் விட்டதாம். அதிலிருந்துதான் பெண்களுக்கு தாடி மீசை முளைக்காது போய்விட்டதாம்!

காட்டுமிராண்டிகளுக்கும் காட்டுமிராண்டிகள் என்பார்களே - அவர்கள் இந்த இந்து மதப் பேர்வழிகளாகத்தான் இருக்க வேண்டும்.

இந்துப் புராணங்களைப் படித்தால் பைத்தியம் பிடித்து, உலக்கையைக் கோவணமாகக் கட்டிக் கொண்டுதான் திரியவேண்டும்.

நாட்டில் பக்தி குறைந்ததால் தான் ஒழுக்கம் குறைந்து போய்விட்டது என்று கூறும் புத்தி சிகாமணிகளை முச்சந்தியில் நிறுத்தி நாலு கேள்விகளைக் கேட்கக் கூடாதா?

-------------------"விடுதலை” தலையங்கம் 25-7-2012

18 comments:

தமிழ் ஓவியா said...

வெலிக்கடை


ஜூலை 25 ஆம் நாளை மறக்க முடியுமா? ஆம், இந் நாளில்தான் 1983 இல் - உலகம் கேள்விப்பட்டிராத வெங்கொடுமை நிகழ்ந் தது. இப்பொழுது நினைத் தாலும் குருதி உறைந்து விடும்!

இலங்கையில் வெலிக் கடை சிறையில் தமிழ்ப் போராளிகளை, சிங்கள வெறியர்கள் புகுந்து படு கொலை செய்த பொல்லா நாள் இந்நாள்!

கொலை செய்யப்பட்ட வர்களுள் ஒருவர் குட்டி மணி. மரண தண்டனை கைதியாக அச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர்.

சிறையில் இருந்த போதே தேர்தலில் நின்று நாடாளுமன்ற உறுப்பின ராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 27 வயது கொண்ட இளை ஞர் அவர்.

விடுதலை பெறும் ஈழத்தை இந்தக் கண் களால் பார்ப்போம் என்று கனவு கண்டு கொண் டிருந்த அந்த வீரனின் - கண்களைப் பிடுங்கிக் காலால் இடறினார்களே இரக்கமற்ற அந்தச் சிங் கள ஓநாய்கள்.

சிறைதான் பாதுகாப்பு இடம் என்பார்கள். தமிழர் கள் என்றால் இலங்கையில் சிறையிலும்கூடப் பாதுகாப் புக் கிடையாது.

கொலை செய்யப்பட்ட மற்றொரு விடுதலைப்புலி யோகேசுவரன் என்ற ஜெகன். மற்றொரு வீரன் தங்கதுரை. இவர்களோடு வெலிக்கடை சிறையில் பாதகர்களால் படுகொலை செய்யப்பட்ட போராளிகள்,

செல்லத்துரை, குகன், கருப்பையா என்ற கிருஷ்ண குமார், யோகநாதன், உதய குமார், அமுதன், அழகு ராஜா, சிற்றம்பலம், சாந்த குமார், வைத்திலிங்கம், நடராசன் என்ற தங்கவேல் மற்றும் சிவபாதம்.

இராணுவத்தினர் முன் னிலையில் சிறைக்குள் புகுந்து கொடிய ஆயுதங் களால் இந்தக் கொலை களைச் செய்தனர். அப்படி என்றால் அரசே உடந்தை என்று பொருள்!

தமிழர்கள் கொல்லப் பட்டது மட்டுமல்ல; கொழும்பு நகரில் இருந்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந் தியா கட்டடமும், இந்தியத் தூதரக அலுவலகமும் கூட சிங்கள இனவெறிக் காடை யர்களால் எரியூட்டப்பட்டன - தமிழர்கள் சூறையாடப் பட்டனர்.

தமிழ்நாடே திரண்டு நின்றது - மாபெரும் பேர ணியை நடத்திக்காட்டியது. இந்திய அரசு அன்று நினைத்திருந்தால், இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் தொடக்கத்திலேயே முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு இருக் கும்.

என்ன செய்வது, நாம் தமிழர்கள் ஆயிற்றே!

- மயிலாடன் 5-7-2012

தமிழ் ஓவியா said...


பழ.அதியமான் - தமிழில் ஒரு தனஞ்செய்கீர்
க.திருநாவுக்கரசு

நூல் அறிமுகம்

பெரியாரின் நண்பர்
டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு
ஆசிரியர்: பழ. அதியமான்
வெளியீடு: காலச்சுவடு
விலை: ரூ.375
2012, ஏப்ரல்

பழ. அதியமான் அவர்கள் தாம் எழுதிய ‘பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு’ நூலினை, அந்நூல் வெளியீட்டு விழா முடிந்தவுடனேயே எமக்கு அஞ்சலில் அனுப்பி வைத்தார். வெளியீட்டு விழாவிற்கும் நாம் சென்றிருந்தோம். சுப. வீரபாண்டியன் ஒரு விபத்தில் சிக்கி முழுநலம் பெறாத நிலையிலும், அதியமானின் நூலைத் திறனாய்வு செய்து பேசினார். ஒரு நூலைப் படிக்கிறபோது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம் தோன்றும். இன்னும் செய்திகள் கூடுதலாகவோ, குறைவாகவோ கிடைக்கக்கூடும். குறைகள், பிழைகள் என நூலினுள் தெரியலாம். ஏற்கனவே ஒரு முறை நூலைப் புரட்டிப் பார்த்து வைத்திருந்த நமக்கு, உமாவின் தொலைபேசி மீண்டும் ஒரு முறை நூலை ஆழமாகப் படிக்கும்படி செய்துவிட்டது.

பழ. அதியமான் எமக்கு ‘அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப்’ நூலின் மூலம் அறிமுகமாயிருந்தார். பொதுவாகவே அதியமான் எடுத்துக்கொண்ட பொருளுக்கு ஏற்ப அதன் ஆழத்திற்குச் சென்று முத்துகளைக் குவிப்பதில் வல்லவர். அந்த வகையில் ‘பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு’ அமைந்திருப்பது பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது. நூலின் அட்டையில் நாயுடுவைவிட, ‘பெரியாரின் நண்பர்’தான் பெரியதாகவும், பளிச்செனவும் தெரிகிறது. இந்நூல் 476 பக்கங்களைக் கொண்டது. 8 அத்தியாயங்களில் 269 பக்கங்களில் வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாறு முடிந்துவிடுகிறது. மீதமுள்ள 207 பக்கங்களில் பின்னிணைப்புகள், துணை நூற்பட்டியல் ஆகியவை இடம் பெற்று இருக்கின்றன.

எம்முடைய பட்டறிவில், தனிப்பட்ட தலைவர்களுடைய வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியவர்களில் முன்னணியில் இருப்பவர் - நிற்பவர் தனஞ்செய்கீர்! தமிழில் இப்போது அந்த வகையில் பழ. அதியமான் பிறைக்கீற்றாய்த் தோன்றி வருகிறார். இவ்வரலாற்று நூலில் நன்றி தெரிவிக்கும் பகுதியில் அதியமான் தான் பட்ட பாட்டை பஞ்சுதான் படுமோ என்று சொல்லி இருக்கிறார். ஒரு தலைவரைப் பற்றிய அனைத்துப் பரிமாணங்களையும் - நல்லவை, அல்லவை, சிறந்தவை எனக் காய்த்தல் உவத்தல் இன்றி நடுநிலையோடு நாயுடுவை நமக்கு நூலாசிரியர் எடுத்துக் காட்டி இருக்கிறார்.

1919-1957 வரை சுமார் 40 ஆண்டுகள் தமிழ்நாட்டின், ஏன் இந்தியாவின் காங்கிரஸ் கட்சி, சுயமரியாதை இயக்கம், இந்து மகா சபை ஆகியவற்றின் உள்ளும் புறமுமான சமுதாய, அரசியல் நிகழ்வுகளை நூல் முழுக்கக் காண முடிகிறது. அதுவும் நாயுடுவின் அரசியல் உஷ்ணம் காலப் பகுப்புச் செய்யப்பட்டு அந்தந்தத் தலைப்பின் கீழ் நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளது நூலின் பெருஞ்சிறப்பாகும்.

நாயுடு பத்திரிகை ஆசிரியர். அதுவும் அவ்வேடு புகழ்பெற்ற ‘தமிழ்நாடு’ எனப் பெயர் பெற்றதாகும். அதில் ம.பொ.சி. மட்டுமன்று, என்.டி. சுந்தரவடிவேலு போன்றவர்களும் பணியாற்றி இருக்கிறார்கள். நூலெங்கும் செய்திகளின் குவியலாகத் தோற்றமளிக்கிறது.

நூலுக்குரிய கதாநாயகர் சிறந்த பேச்சாளர் மட்டுமில்லாமல் எழுத்தாளராகவும் பணியாற்றியவர். அவர் பேச்சும் எழுத்தும் படிப்போருக்கு நல்விருந்தாகவும், கால நிலையை அறிந்து கொள்கிற கருவூலமாகவும் திகழ்கின்றன. நாயுடு, பிரபஞ்சமித்திரன், ஆந்திர பிரஜா தெலுங்கு நாளிதழ், இந்தியன் எக்ஸ்பிரஸ்(1932) ஆகிய ஏடுகளையும் நடத்தி இருக்கிறார். ராம்நாத் கோயங்காவுக்கு முன்பே இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை அந்தப் பெயரிலே முதன் முதலாக நாயுடுதான் நடத்தி இருக்கிறார் என்பதை இந்நூலால் அறிய முடிகிறது. பழ.அதியமான் இந்நூலில் நாயுடுவின் பல பேச்சுகளைப் பதிவு செய்து இருக்கிறார். அத்தகைய பேச்சுகளுள் ஒன்று, இக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாய் இருக்கிறது. அப்பேச்சின் ஒரு பகுதி வருமாறு:-

“அணுகுண்டைவிட அரசியல் அதிகாரம் அதிக வலிமையுடையது. அணுகுண்டு மக்களை அழித்துவிடும். மாண்டாருக்குத் துயரமில்லை. நீதியற்ற அரசியல் ஆதிக்கமோ மக்களை அல்லல்படுத்தி துயரத்தில் ஆழ்த்திவிடும். ஆகையால் இந்நாட்டின் ஆட்சி நல்ல ஒழுக்கமுள்ள திறமைசாலிகள் வசம் இருக்கும்படி ஓட்டர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்”. (பக்.187)

இப்போதும் பொருந்தி வருகிற பேச்சு. இது மட்டுமா? இன்னொன்றையும் மிகுந்த எச்சரிக்கையோடு எடுத்துக் கூறியிருக்கிறார் நாயுடு. அவரின் அந்த எச்சரிக்கை - கணிப்பு உண்மையாகிப் போனதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். நாயுடு 1952இல் சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்களைப் பற்றிப் பேசுகின்றபோது, ‘அங்குள்ள தமிழர்கள் தம் மக்களைக் காக்க, ஆயுதம் ஏந்தும் காலம் ஒருநாள் வரும்’ என்று பேசினார். (பக்.191). அது உண்மையாகிவிட்டது அல்லவா? இப்படிப்பட்ட பல பதிவுகள் நூலினுள்ளே விரவிக் கிடக்கின்றன.

தமிழ் ஓவியா said...

கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு என்றோ, கே.வி.ரெட்டி என்றோ, கே.வி. ரெட்டி நாயுடு என்றோ எதாவது ஒன்றைப் பயன்படுத்தி இருக்கலாம். மூன்று பெயரும் ஒருவரையே குறிக்கின்றன. முதல் இரண்டு பெயர்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் வெவ்வேறு நபர்கள் என்று படிப்போர்க்குக் குழப்பம் ஏற்படக் கூடும். தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தைப் பற்றி இன்னும் விரிவாகச் சொல்லி இருக்கலாம். சில இடங்களில் நூலாசிரியரின் மதிப்பீடுகள் அரசு அலுவலர்கள் மேலதிகாரிக்கு எழுதும் குறிப்புகள் போல், பட்டும்படாமலும் இருக்கின்றன.

மதிப்பீடுகள் தவறாகக் கூட கணிக்கப்படலாம். ஆனால் அவை கறாராக முன் வைக்கப்பட வேண்டும். விமர்சகர்கள் அதை நேர் செய்து கொள்வார்கள். அப்படி நேராமலும் மதிப்பீடுகளை வரலாற்று நூலாசிரியர்கள் செய்ய வேண்டும் என்பது எமது வேண்டுகோள்.

நூலின் பின்னிணைப்புகள் மிகவும் பயன்படத் தக்கவையாகும். நாயுடுவின் வாழ்க்கை நிகழ்வுகளின் படங்களை பழ. அதியமான் பதிவு செய்து இருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதாகும். நாயுடு உடல் கிடத்தி வைக்கப்பட்டிருக்க, அவர் முகத்தைப் பெரியார் தன் கரத்தால் தொட்டுப்பார்ப்பது போல் உள்ள படம் மிகுந்த நெகிழ்ச்சியை உருவாக்குகிறது. அது குறித்து அதியமான் நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பட்டப்படிப்பே படிக்காத மூவர் - பெரியார், திருவிக, வரதராஜுலு ஆகியோர் மக்களால் நாயக்கர், முதலியார், நாயுடு என அழைக்கப்பட்டனர். இம்மூவரில் ஒருவர் - திருவிக, முதல் சுற்றிலேயே அரசியலிலிருந்து விலகிவிட்டார்.

போராட்ட வீரரான நாயுடு அரசியலில் ஈடுகொடுத்து இறுதி வரை போராடினார். காமராசரை முதல்வராக முன்மொழிந்த நாயுடு, தாமே அப்பதவிக்கு வர இயலும். ஆனால் அவர் விலகி நின்றார். பெரியார், திருவிகவின் மரணத்தின் போது 200 மைல்களுக்குக் காரில் பயணம் செய்து இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார். இரங்கல் உரையாற்ற ஏற்பாடு செய்யப்படவில்லை. நாயுடுவின் இறுதிப் பயணத்திலும் பெரியார் பங்கேற்றார். இரங்கல் உரை ஆற்றினார். நூலில் அவ்வுரை பின்னிணைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நூலினுள் எம்மால் மறக்க முடியாத, நெஞ்சில் பதிந்த கருத்தாக இருப்பது - மாநில சீரமைப்பின் போது, நாயுடு அவர்தம் கருத்தைச் சொல்கிறதுபோது, தமிழ்நாட்டின் தனித்தன்மையை எடுத்துரைத்தார்:

“தமிழ்நாட்டைப் பொருத்தவரை மொழி இயக்கம் வல்லமை பொருந்தியதாக இருக்கிறது. அரசியல் வரலாற்றில் தமிழ்நாட்டின் இடம் தனித்தன்மை வாய்ந்தது. அயலவராலோ, வட இந்தியராலோ அது எப்போதும் முழுவதும் ஆளப்படவில்லை. அசோகர் காலத்தில் கூட அது சுதந்திரத்துடன் தனியாக இருந்தது. பிரிட்டிஷ்தான் முதலில் ஆண்டு, அதை இந்தியாவுடன் இணைத்தது”.

இதே கருத்தை அறிஞர் அண்ணா அவர்கள் கூறுகிறபோது, “கனிஷ்கருடைய காலடியும், அசோகருடைய ஆட்சியதிகாரமும், அக்பருடைய ஆதிக்க நிழலும் படாத நாடல்லவா நம்நாடு” என்று குறிப்பிட்டார்.

இப்படிப் படிப்பவருக்குப் பல நினைவுகளை ஊட்டக்கூடிய மிகச் சிறந்த நூலாக பழ. அதியமானின் ‘பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு’ திகழுகிறது. 20ஆம் நூற்றாண்டின் அரை நூற்றாண்டை நம் மனக்கண்முன் கொண்டு வந்து காட்டும் காலக் கண்ணாடியாக நாயுடுவின் வரலாறு திகழுகிறது. வாங்கிப் படித்து விட்டுப் புத்தகப் பேழையில் வைக்க வேண்டிய கருவூலம். ---கருஞ்சட்டைத் தமிழர் ஜூலை16_2012

தமிழ் ஓவியா said...

சகுனங்கள் சரியா?
மக்களிடையே மண்டிக் கிடக்கின்ற மூடநம்பிக்கைகளுள் சகுன நம்பிக்கையும் ஒன்று. இதனால் ஏற்படும் பாதிப்புகள், கேடுகள், இழப்புகள் ஏராளம் என்பதோடு இவை உருவாக்கும் மன உளைச்சல், வீண்பழி, மனத்தளர்ச்சி, வாழ்விழப்பு போன்றவை ஏராளம். குறிப்பாக, விதவைப் பெண்களும், திருமணத்தை எதிர்நோக்கும் இளம்பெண்களும் அடையும் இழப்பும், இன்னல்களும் ஏராளம். ஒரு பெண்ணின் வாழ்வையே பல்லியின் ஓசையில் பலிகொடுக்கும் அவலமும் இதில் அடங்கும். எனவே, சகுனம் பற்றிய விழிப்புணர்வு பிஞ்சுகளுக்கேயன்றி பெரியவர்களுக்கும் வேண்டும்.

சகுனங்கள் பல வகைப்படும்:

மனிதர்கள்: எதிரில் வரும் மனிதர்கள் யார்? என்பதை வைத்து சகுனம் பார்க்கப்படுகிறது.

சலவைத் தொழிலாளி, பால்காரர் எதிரில் வந்தால் நல்ல சகுனம்; எண்ணெய், விறகு எடுத்துக்கொண்டு எதிரில் வந்தால் கெட்ட சகுனம்.

காரணம், பால் மங்கலப் பொருள். அழுக்கு நீக்கி ஆடை வெளுப்பவர் சலவைத் தொழிலாளி. எனவே, நல்ல சகுனம். எண்ணெய், விறகு அமங்கலப் பொருள். எனவே, அது கெட்ட சகுனம்.

விதவை வாழ்வு இழந்தவள். அதனால் கெட்ட சகுனம். சுமங்கலி வாழ்வுடையவள். எனவே, நல்ல சகுனம்.

ஒலி: சங்கு ஊதினால், வெடிவெடித்தால் கெட்ட சகுனம். மணி ஒலித்தால் நல்ல சகுனம்.

பறவை: சில பறவைகள் கத்தினால் நல்லது. ஆந்தை போன்றவை கத்தினால் கெட்ட சகுனம்.

பல்லி: கத்துகின்ற இடத்தைப் பொறுத்து நல்ல சகுனம், கெட்ட சகுனம் என்று கொள்ளப்படுகிறது.

விலங்கு: கழுதை கத்தினால் நல்ல சகுனம். பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனம்.

தோணி(ஓடம்) : ஆற்றின் இக்கரையில் இருந்தால் நல்ல சகுனம். அக்கரையில் இருந்தால் கெட்ட சகுனம்.

தும்மல்: சிலர் தும்மினால் நல்ல சகுனம். சிலர் தும்மினால் கெட்ட சகுனம்.

வார்த்தைகள்: ஒரு காரியத்திற்குச் செல்லும் போது, காதில் விழும் வார்த்தைகளை வைத்து நல்ல கெட்ட சகுனம் கணிக்கப்படுகிறது.

பொருள்கள் தவறிவீழ்தல்: விழாமல் பிடித்துக் கொண்டால் நல்ல சகுனம். தவறி விழுந்தால் கெட்ட சகுனம். தவறி விழுந்து பொருள் உடைந்தால் பாதிப்பு வரும் என்ற நம்பிக்கை.

மேற்கண்ட சகுனங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. காட்சியின் தன்மையை வைத்து நல்ல காட்சியாயின் நல்ல சகுனம்; கெட்ட காட்சியாயின் கெட்ட சகுனம்.

2. நாம் எதிர்நோக்கும் ஆளோ, பொருளோ, வாகனமோ அமைவது, சாதகமான நிலையாயின் நல்ல சகுனம், பாதகமான நிலையாயின் கெட்ட சகுனம்.

3. மரபுவிழா சொல்லப்படும் சகுனங்கள்: முதலாவதாக, நல்ல காட்சி - நற்சகுனம் கண்டால் - நல்லது நடக்கும் என்பதும், கெட்ட காட்சி - கெட்ட சகுனம் கண்டால் கெட்டது நடக்கும் என்பதும், நம் மனதில் எழும் வெறுப்பு விருப்புகளின் வெளிப்பாடாகும்.

இரண்டாவதாக, காட்சி சாதகமா அல்லது பாதகமா என்பதை வைத்து எழும் சகுன நம்பிக்கை, நடக்கப்போகும் காரியத்தின் முன்னறிவிப்பாக இக்காட்சிகளைக் கருதும் அறியாமையால் எழுகிறது.

மூன்றாவதாக, பல்லி, பூனை போன்ற சகுன நம்பிக்கைகள் மரபு வழியில் கற்பிக்கப்பட்ட சகுன நம்பிக்கைகள் ஆகும்.

விதவை என்பவள் வாழ்விழந்தவள், அலங்கோலப்படுத்தப்பட்டவள். எனவே, அவள் எதிரில் வந்தால் கெட்டது நடக்கும் என்ற நம்பிக்கை. அவள் மீதுள்ள வெறுப்பால் எழுந்தது. நடக்கப்போகும் கெடுதலுக்கு அவள் எப்படிப் பொறுப்பாவாள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

நடக்கப்போகும் கெடுதலுக்கு வாழ்விழந்த பெண்ணை, அபாய அறிவிப்பாக ஆக்குவதும், அதை நம்புவதும் அடிமுட்டாள்தனமல்லவா? அநியாயம் அல்லவா?

நடக்குப்போகும் காரியத்திற்கு, புறப்படுமுன் நல்லதாயின் நல்லது நடக்கும் என்பதும், கெட்டதாயின் கெட்டது நடக்கும் என்பதும், காட்சியோடு காரியத்தைப் பொருத்திப் பார்க்கும் மூடத்தனத்தின் விளைவாகும்.

இந்தக் காட்சிகளை பலமுறைச் சோதித்துப் பார்த்தால், கெட்ட சகுனத்தைப் பார்த்துச் சென்றபோது நல்லது நடப்பதையும், நல்ல சகுனத்தைப் பார்த்துச் சென்றபோது கெட்டது நடப்பதையும் நாம் அறியலாம்.

எந்தவொரு காட்சியும், வார்த்தையும், ஒலியும் நடக்கப்போவதை அறிவிக்கக் கூடியவை அல்ல. எல்லாம் நமது உள விருப்பு, வெறுப்பின் வெளிப்பாடுகள்; தொடர்புப்படுத்திப் பார்ப்பதன் விளைவுகள்.

மேலும், ஒரே காட்சியை, ஒரே சகுனத்தைப் பார்த்துச் செல்கின்ற அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் கிடைப்பதில்லை. விதவையைப் பார்த்துச் சென்ற ஒருவருக்குக் கெட்டது நடந்திருந்தால், இன்னொருவருக்கு நல்லது நடந்திருக்கும். எனவே, காட்சிகளுக்கும், நடக்கப்போகும் காரியங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை, பிஞ்சுக் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் நன்கு சிந்தித்து, சகுன நம்பிக்கையென்னும் மூடநம்பிக்கையை விட்டொழித்து பகுத்தறிவுப் பாதையில் பரிசோதித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

- சிகரம்

தமிழ் ஓவியா said...

அறிஞர்களில் வாழ்வில்..வாழ்க்கைக்கு சாவே இல்லை!

தூக்கு மேடைக்குச் செல்வதற்கு முதல் நாள் இரவு ஒப்பற்ற இலக்கியத்தைப் படைத்தவர் ஜூலியஸ் பியூசிக். செக்கோஸ்லோவாகியா நாட்டின் புரட்சிமிக்க எழுத்தாளராகத் திகழ்ந்தவர்,பத்திரிகையாளர், அந்நாட்டுப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினர்.

நாஜிக்களின் தலைவன் ஹிட்லரால் செக்கோஸ்லோவாகியா நாட்டினர் துன்புறுத்திக் கொலை செய்யப்பட்டனர். நாஜிக்களின் நாசப் போக்கைக் கண்டித்து 1929இல் சிருஷ்டி பத்திரிகையில் தலையங்கம் எழுதினார் ஜூலியஸ் பியூசிக்.

இவரது எழுத்துகள் நாட்டு மக்களைத் தட்டி எழுப்பி வீறுகொள்ள வைத்தன. மக்களைத் தூண்டிவிட்டதற்காக பியூசிக்கையும் வேட்டையாட உத்தரவிட்டார் ஹிட்லர். இதனை அறிந்த பியூசிக் தலைமறைவானார். எனினும், பத்திரிகை தொடர்ந்து வெளிவந்தது. நிறைய இலக்கியங்களைப் படைத்தார்.

1942 ஏப்ரல் 24 இல் ஹிட்லரின் ரகசிய காவல் துறையினர் பியூசிக்கைக் கைது செய்து கொடுமைப்படுத்தினர். அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நீதிமன்றத்தில் நீதிபதியிடம், உங்கள் நாடகத்தை நான் பார்ப்பது மட்டுமல்ல, உணரவும் செய்கிறேன். உங்கள் தீர்ப்பு என்ன என்பது எனக்குத் தெரியும். எனது உயிரைப் போக்க, விசாரணை என்பது ஒரு நாடகம். உண்மையில் குற்றவாளி நீங்கள்தான். நான்தான் நீதிபதி, எனது தீர்ப்பை எப்போதோ எழுதிவிட்டேன். என் தீர்ப்பின் மூலம் நாஜிசத்திற்கு மரண தண்டனை விதிக்கிறேன். எதிர்காலம் என் தீர்ப்பை நிச்சயம் நிறைவேற்றும் என்றார்.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதும், தாய், சகோதரி, மனைவி ஆகியோருக்குக் கடிதம் எழுத அனுமதி கேட்டார். அனுமதி கொடுக்கப்பட்டது. ஒரே கடிதமாக எழுதினார். எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பேதைகளால் என் மன மகிழ்ச்சியை மாய்க்க முடியவில்லை. தூக்கிலிடுவதால் எந்த ஒரு மனிதனின் மதிப்பும் தாழ்வதில்லை. என் வாழ்வு முடிந்த பிறகு, நான் இதுவரை மகிழ்ச்சியுடனேயே இருந்தேன் என்ற உண்மையினை உணர்ந்து நீங்களும் மகிழ்ச்சியடையுங்கள் என்பதே எனது விருப்பம் என்று முடித்தார்.

தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு முந்தைய நாள் இரவு, சிறைக்காவலன் பியூசிக்கிடம் வந்து உங்கள் தேசபக்தியை விரும்பும் ஆயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன். தங்களது கடைசி ஆசையைச் சொல்லுங்கள், நிறைவேற்றுகிறேன் என்றார்.

கொஞ்சம் தாள்களும், எழுதுகோலும் தேவை என்றார். கொண்டுவந்து கொடுத்ததும் எழுதி முடித்துவிட்டு, தனது மனைவியிடம் எப்படியாவது ஒப்படைத்துவிடுங்கள் என்று சிறைக் காவலரிடம் கொடுத்தார் பியூசிக்.

காலையில் தூக்குமேடையில், தூக்குக் கயிற்றை முத்தமிட்டபடியே இன்பத்துக்காக வாழ்ந்தேன்; இன்பத்துக்காகப் போராடினேன்; இன்பத்துக்காக இதோ இறந்து கொண்டிருக்கிறேன். எனவே, துன்பம் என் பெயரோடு எந்தக் காலத்திலும் இணைக்கப்படக்கூடாது; அது முறையல்ல. வாழ்க்கையை நான் முழுமையாகக் காண்கிறேன். என்னிடம் இருக்கும் அனைத்தும், வாழ்க்கை எனக்கு அளித்த பரிசு. வாழ்க்கை மிகச் சிறந்தது, உயர்ந்தது, ஈடு இணையற்றது. அழிக்கவே முடியாதது. வாழ்க்கைக்குச் சாவே இல்லை என்றார்.

சிறைக்காவலர் கடைசியாக பியூசிக் எழுதியவற்றை அவரது மனைவி அகஸ்டினாவிடம் ஒப்படைத்தார். அவர் அதனைப் புத்தகமாக வெளியிட்டார். 12 மணி நேரப் படைப்புக் காவியம். உலகம் முழுவதும் வீர காவியமாக 80 உலக மொழிகளில் 200 பதிப்புகளைக் கண்ட வெற்றிக் காவியமாக உலா வருகிறது. தமிழில் தூக்கு மேடைக் குறிப்புகள் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

ஜூலியஸ் பியூசிக் இறக்கவில்லை; நூல் வடிவில் உலவி நம்முன் - நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

அறிஞர்களின் வாழ்வில்...

ஏழைகளுக்காகவே வாழ்ந்தவர்

நடு இரவில் கத்தியுடன் ஜோதிராவ் ஃபூலேயின் வீட்டிற்குள் இருவர் நுழைந்தனர். ஏதோ சத்தம் கேட்பதைப் போல் தூக்கத்தில் உணர்ந்த ஜோதிராவ் எழுந்தார். சிறு விளக்கினைக் கையில் ஏந்தி, யார் என வினவினார். வந்த இருவரும், உங்களைக் கொலை செய்ய வந்திருக்கிறோம் என்றனர். உங்களுக்கு நான் ஏதேனும் கெடுதல் செய்துள்ளேனா என்றார்.

இல்லை என்று சொல்லிவிட்டு, உங்களைக் கொல்லச் சொல்லி எங்களைச் சிலர் அனுப்பியுள்ளனர் என்றனர்.

இதனால் உங்களுக்கு என்ன லாபம் என்றார் ஜோதிராவ். ஒவ்வொருவருக்கும் 1,000 ரூபாய் கொடுப்பதாகச் சொல்லியுள்ளனர் என்றனர்.

உடனே ஜோதிராவ், எனது மரணம் உங்களுக்கு லாபம் கொடுக்கும் என்றால் உங்களுக்கு முன்பு வந்து நிற்கிறேன், என்னைக் கொல்லுங்கள். எந்த ஏழை மக்களுக்காக நான் ஊழியம் புரிந்தேனோ, எந்த ஏழை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேனோ அவர்களாலேயே நான் கொல்லப்படுவதைப் பெருமையாகவே நினைக்கிறேன்.

ஏழைகளுக்காகவே வாழ்ந்தேன். என் மரணம் மூலம் ஏழைகளுக்குப் பலன் கிடைக்கிறது என்றால் அமைதியாக, கவலை, வேதனையின்றி மகிழ்ச்சியாகவே என் மரணத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

தங்கள் தவற்றினை உணர்ந்த இருவரும் அவரின் காலில் விழுந்தனர். இப்படிப்பட்ட நல்ல மனம் படைத்த ஒருவரைக் கொல்லச் சொன்ன அந்த எதிரியைக் கொன்று வருகிறோம், அனுமதி கொடுங்கள் என்றனர்.

இதனைக் கேட்ட ஜோதிராவ், இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது. யாரிடமும் விரோதமும் கூடாது. அவர்கள் நீண்ட காலம் வாழட்டும் என்றார்.

வந்த இருவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. பின்பு, ரோடி என்பவன் பாதுகாவலனாக ஜோதிராவிடம் சேர்ந்தான். கும்பர், படித்துப் பண்டிதனாகி, அவரது உண்மை நாடுவோர் சங்கத்தின் தூணாகச் செயல்பட்டான். அடிமைத்தனம் பற்றிய புத்தகம் எழுதி ஜோதிராவின் கொள்கையைப் பரப்பினான்.

தமிழ் ஓவியா said...

செவ்வாயில் மனிதன் தோன்றினானா?

ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள பில்பாரா மாகாணத்தின் கடைக்கோடிப் பகுதியில் ஸ்டெரெலி ஏரி உள்ளது. அங்கு சுமார் 3 கோடியே 40 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய புதை படிவங்கள் கண்டெடுக்கப்பட்டன.

வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிபுணர்கள் அவற்றை ஆய்வு செய்தனர். அப்போது அதில் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்த நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருந்தன.

ஆனால், புதை படிவத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாக்டீரியாக்கள் 3 கோடியே 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை. அப்போது பூமியில் உயிர் வாழ்வதற்கான ஆக்சிஜன் இல்லை. கடல் நீரால் மட்டுமே பூமி சூழப்பட்டு இருந்தது. கடும் வெப்பமாகவும் இருந்தது. உயிர் வாழக்கூடிய தட்ப வெப்ப சூழ்நிலை இல்லை.

எனவே, உயிரினம் செவ்வாய் கிரகத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புதை படிவம் கண்டெடுக்கப்பட்ட பில்பாரா பகுதி செவ்வாய் கிரகத்தில் இருந்து விழுந்த வண்டல் மண் சார்ந்த பாறைகளாக இருக்கலாம். அவை மண்ணில் புதையுண்டு படிவங்களாக மாறியிருக்கிறது என்றும் கருதப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

பீரங்கி மரம்பீரங்கி கேள்விப்பட்டிருப்பீர்கள்.அது என்ன பீரங்கி மரம்? ஆமாம், தென் அமெரிக்கா, அமேசான் வெப்ப மண்டலக் காடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் வளரக் கூடிய ஒரு வகை மரம்தான் இது. 1755 ஆம் ஆண்டில் பிரஞ்சு தாவரவியலாளரான ஜே எஃப்.ஆப்லட் என்பவர் இதனைக் கண்டறிந்தார். இந்த மரத்தின் பழங்கள் பழுப்பு நிறத்தில் பீரங்கிக் குண்டுகள்போல இருந்ததால் பீரங்கி மரம் (Cannon Tree) என்று பெயர் சூட்டப்பட்டது. 82 அடி வரை உயரமாக வளரும் இந்த மரத்தின் பூக்கள் ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். பழங்கள் 24 செ.மீ.அளவு விட்டமுள்ளதாகவும் மிகவும் கடினமானதாகவும் இருக்கும். ஒவ்வொரு பழத்திலும் 200 முதல் 300 விதைகள் உள்ளன. ஒரு பழத்தின் எடை 5 கிலோவுக்குக் குறையாமல் இருக்கும். எனவே, இம்மரத்தின் கீழே நிற்கக்கூடாது. ஏனென்றால், இப்பழம் கீழே விழும்போது மனிதனின் தலையில் விழுந்துவிட்டால் ஆளையே கொன்றுவிடுமாம். எனவே,இப்பழத்தை ஆட்கொல்லிப் பழம் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால், இதன் இலைகள் மற்றும் பூக்களில் இருந்து மருந்து தயாரித்து புண்களில் தடவினால் புண்கள் ஆறிவிடுமாம். இலைகளை மென்று சாப்பிட்டால் வாயின் ஈறுகளில் உள்ள நுண் கிருமிகள் வெளியேறி பற்கள் சொத்தையாகாமல் காப்பாற்றப்படுமாம். இந்த மரங்களைத் தமிழ்நாட்டில் சில இடங்களில் காணலாம். இதனை நாகலிங்க மரம் என்று சொல்லுவார்கள்.

தமிழ் ஓவியா said...

ஆடி மாதக் கோயில் விழா என்ற பெயரில் அடிக்கும் கொள்ளையோ கொள்ளை! காவல்துறை எச்சரிக்கை!

கடலூர், ஜூலை 26- ஆடி மாதம் என்றாலே கோயில் திருவிழாக்கள் தான். இதைப் பயன் படுத்திப் பகல் கொள்ளை அடிப்போர் பற்றி காவல் துறையினர் எச் சரிக்கை விடுத்துள்ளது.

ஆடி மாதம் பிறந்து விட்டாலே அம்மன் கோவில்களில் செடல் திருவிழா, ஊஞ்சல் உற் சவம், மஞ்சள் நீராட்டு விழா, சாகை வார்த்தல் (கூழ் ஊற்றுதல்) என திருவிழாக்கள் நடை பெற்று வரும். ஊர் கோவிலாக இருந்தால் பொதுமக்களிடம் வரி வசூல் செய்து விழாக்கள் நடத்துவார்கள். சில ஊர்களில் பொது மக்களிடம் நன்கொடை வசூல் செய்தும் விழாவை நடத்துவார்கள்.

ஆனால் இந்த சந் தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் சாமியின் பெயரை சொல்லி தீவிர பண வசூல் வேட்டை நடத்தி நூதன மோசடியில் களம் இறங்கி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். அந்த வகையில் நேற்று கடலூர் திருப்பாதிரிப் புலியூர் சுப்புராயநக ருக்கு ஒருவர் காவி உடை அணிந்து நெற்றி யில் பட்டை அணிந்து அம்மனுக்கு கூழ் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று சொல்லி வீடு வீடாக பணம் வசூல் செய்துள்ளார்.

அப்படி ஒரு வீட் டுக்கு வந்தபோது அந்த வீட்டில் இருந்தவரும் வந்திருப்பவர் உண்மை யான அம்மன் பக்தர் என்று நினைத்து தன்னி டம் இருந்த 500 ரூபாய் பணத்தை கொடுத்து ரூ.100 எடுத்துவிட்டு மீதி 400 ரூபாய் பணத்தை தரும்படி கேட்டுள்ளார். ஆனால் பணத்தை வாங்கிய அந்த மனிதன் தன்னிடம் சில்லறை இல்லை இதோ அருகில் உள்ள கடைக்கு சென்று சில்லறை மாற்றிவிட்டு உடனே வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.

அவர் வருவார் என்ற நம்பிக்கையில் பணத்தை கொடுத்தவர் காத்திருந் தார். ஆனால் நேரம்தான் சென்றதே தவிர பணத்தை வாங்கி சென் றவரை காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த தெரு வில் உள்ள கடைகளில் பக்தராக வந்த அந்த மனிதனை தேடிப் பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அந்த நபரை காணவில்லை. அதன் பின்னரே தனது வீட் டுக்கு வந்தநபர் சாமியின் பெயரை சொல்லி நூதன முறையில் மோசடி செய் யும் ஆசாமி என்பது தெரியவந்தது.

இவரை போல படித் தவர்கள், படிக்காதவர் கள் என பலரும் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். இப் படி நூதன முறையில் வருகின்றவர்கள் அவர் கள் மீது பாசம் ஏற்படும் வகையில் நல்லா இருக் கிறீர்களா, பிள்ளைகள் நல்லா இருக்காங்களா என பாசமழை பொழி வார்கள். இதனால் அவர் களின் மீது நம்பிக்கை யும், பாசமும் வந்து விடும். அதன் பின்னர் வந்திருப்பவர் பிரபல மான சில கோவில்களின் பெயரை சொல்லி அம்மனுக்கு திருவிழா நடத்த இருக்கிறோம், கூழ் காய்ச்சப்போகி றோம் என்று நிதி உதவி செய்யுங்கள் என்று சொல்லுவார்.

அதன் பின்னர் அவ ரது பேச்சில் மயங்கும் சிலர் தங்களிடம் உள்ள பணத்தை கொடுத்து விடுவார்கள். பின்னர் குறிப்பிட்ட அந்த கோவி லுக்கு செல்லும்போது அங்குள்ள நிர்வாகி களிடம் உங்கள் கோவி லில் இருந்து நிதி உதவி கேட்டு வீட்டுக்கு வந் தார்கள். பணம் கொடுத் தோம் என்பார்கள். ஆனால் அப்படி பணம் வசூல் செய்ய யாரையும் நாங்கள் அனுப்பி வைக்க வில்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவிக்கும். இப்படியும் பல சம்பவங் கள் நடந்துள்ளன.

நூதன முறையில் வசூல் வேட்டை நடத்த வரும் நபர்கள் சாமியார் வேடம் அணிந்து வருவ தில்லை. சாதாரண மனி தனாகவும் வருவார்கள். நம்பிக்கை ஏற்படுத்த சிலர் போலியான ரசீது புத்தகம், நோட்டு புத்த கத்தையும் வைத்திருப் பார்கள். கூடுதலாக பணம் வசூல் செய்வ தற்காக ரசீது, நோட்டு புத்தகத்தில் ஏற்கெனவே பலர் 5 ஆயிரம், 10 ஆயி ரம் நன்கொடை வழங்கி இருப்பது போன்ற நம்பிக்கையை ஏற்படுத்த இவர்களே எழுதி வைத்திருப்பார்கள்.

எனவே இதுபோன்ற மோசடிப் பேர்வழிகளி டம் பொதுமக்கள் மிக வும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மோசடி பேர் வழிகள் யாராவது வந்து பணம் வசூல் வேட்டை நடத் தினால் அது பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தர வேண்டும் என பொது மக்களை காவல்துறை எச்சரித்துள்ளது. 26-7-2012

தமிழ் ஓவியா said...

இவர்தான் சாகுமகராஜ்சாகு மகராசர் தனது நிர்வாகத்துக் குட்பட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கு அனைத்து வேலைகளிலும் 50 சதவீத இடங்களை ஒதுக்கவேண்டும் என்று 1902 ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தார். இது போன்ற ஒரு சமூகநீதி ஆணை பிறப்பிக்கப்பட்டது அதுவே இந்தியாவில் முதன் முறை! பிறகு தென்னகத்தில் பல பகுதிகளில் இடஒதுக்கீடு ஆணை பிறப்பிப்பதற்கு இதுவே வழிகாட்டியாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து 1921 ஆம் ஆண்டு மைசூர் அரசாங்கமும் அதே ஆண்டு நீதிக்கட்சி ஆட்சி நடந்த சென்னை மாகாண அரசாங்கமும் - இதே போன்ற ஆணைகளைப் பிறப் பித்தன. பின்னர் 1925 ஆம் ஆண்டு பம்பாய் அரசாங்கமும் இதே போன்ற ஆணையைப் பிறப்பித்தது.

கோலாப்பூரில் 1894 இல் 71 அலு வலர்களில் 60 பேர் பார்ப்பனர்கள். 1912 இல் 95 அலுவலர்களில் 35 பேர் மட்டுமே பார்ப்பனர்கள்! இட ஒதுக்கீட்டால் ஒடுக்கப்பட்டவர்கள் வாய்ப்புகளைப் பெற வழி ஏற்பட்டது.

சாதி ஒழிப்பு

பிற்காலத்தில், இரண்டாம் கட்டத்தில், சாதி அமைப்பையே ஒழிக்க வேண்டும் எனக் குரல் கொடுக்கத் தொடங்கினார், சாகுமகராசர்.
தாம் சார்ந்த மராத்திய சாதியாரின் சார்பாக நின்று, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த பொழுது, சாகுமகராசருக்கு அவர்கள் பலமான ஆதரவு அளித்தனர். ஆனால் அவரே, பிற்காலத்தில், தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்திற்கும், சாதி ஒழிப்பிற்கும் உழைத்தபொழுது அவர்கள் முகம் கோணினர். ஆனால், அதைப் பற்றிக் கவலைப்படாமல் இவர் தம் பணியைத் தொடர்ந்தார்.

தாழ்த்தப்பட்டோர்

தாழ்த்தப்பட்டவர்கள் கல்வியும், பதவியும் பெறுவதில் சாகு மகராசர் தனிக் கவனம் செலுத்தினார். அவர்களுக்கு என மாணவர் விடுதி ஒன்றை நிறுவியதை ஏற்கெனவே கண்டோம்.

அரசு மருத்துவமனைகளில் பிற நோயாளிகளுடன் அவர்களையும் சம மாகக் கவனிக்கவும், நடத்தவும் ஏற்பாடு களைச் செய்தார்.

நிருவாகத்தில் அவர்களைப் பணியமர்த்தம் செய்தார்

அரசுக் கல்வி நிறுவனங்களிலும், மான்யம் பெற்று வந்தவைகளிலும் சாதி யின் பெயரால் மாணவர்களைப் பிளவு படுத்திப் பாகுபாடு காட்டக்கூடாது என்று ஆணையிட்டார்.

கோலாப்பூர் நகர சபைக்குச் சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்தார். தீண்டப்படாதவர் களுக்கும் போதிய இடங்களை அளித்தார். இவர் காலத்தில் முதன் முறையாகத் தாழ்த்தப் பட்டவர் ஒருவர் நகரசபையின் தலைவர் ஆனார்.

கிணறுகள், குளங்கள் முதலிய பொது இடங்களில் மற்றவர்களுடன் தாழ்த்தப் பட்டவர்களுக்கும் சம உரிமை அளித்தார். அவர்களுக்கெனத் தனியாக இருந்த பள்ளிகளை மூடிவிட்டுப் பொதுப் பள்ளி களில், எவ்வித வேறுபாடும் இன்றி அவர்களையும் சேர்க்கச் சொன்னார்.

தீண்டப்படாதவர்கள் வழக்குரைஞர் தொழில் செய்ய அனுமதி அளித்தார்

கிராமங்களில் எல்லாச் சாதியாரும் கணக்குப் பிள்ளைகளாக (குல்கர்னி களாக) நியமனம் பெற ஆணையிட்டார். அந்தப் பதவியில் மிகப் பெரும்பான்மை யாக இருந்த பார்ப்பனர்கள் இதற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆனால், சாகுமகராசர் அதைப் பொருட்படுத்தவில்லை. தாழ்த்தப்பட்டவர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டவர்கள் இந்தச் செல்வாக்கான பதவியில் அமர்ந்தனர். இந்த நடவடிக்கையால் பிற்காலத்தில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தன.

மகர்வடன்

மகர் என்ற தீண்டப்படாத சாதியார், கிராமத்தாருக்கும் அரசுக்கும் தண்டல், தலையாரி போன்ற வகையில் அடிமட்ட ஊழியம் செய்யவேண்டும். அதற்காக அவர்களுக்குச் சிறிது நிலம் அளிக்கப் பட்டது. அதற்கு மகர்வடன் எனப் பெயர். இரவு - பகலாக எல்லா வகையான கடின மான வேலைகளையும் கட்டாயமாகச் செய்து, அதற்காக அளிக்கப்பட்ட நிலத்தில் போதாத ஊதியமே பெற்று வந்தனர். சட்டப்படி வேலையை விட்டுவிட முடியாது. இவ்வாறு வேண்டாத வகையில் மகர்கள் நிலத்தோடு இறுகக் கட்டப் பட்டனர். இந்த முறையை ஒழிப்பதற்காக 1928 ஆம் ஆண்டு முதல், அவர் இறந்த 1956 ஆம் ஆண்டு வரை அண்ணல் அம்பேத்கர் பல வழிகளில் போராடினார்; முடியவில்லை. 1958 இல்தான் சட்டப்படி மகர்வடன் முறை ஒழிந்தது. அம்பேத்கர் பிற்காலத்தில் நிகழ்த்த விரும்பிய சீர்திருத்தத்தை, சாகுமகராசர் 1918 ஜூன் 25 இல் நிகழ்த்தினார். அந்த ஆண்டில் கோல்ஹாப்பூர் அரசின் மகர்வடன் முறையை ஒழிக்க ஆணை பிறப்பித்தார். ஆணையை மீறுவோர் தண்டத் தொகை செலுத்த வேண்டும் அல்லது சிறை செல்ல வேண்டும்.

(நூல் சமூகப் புரட்சியாளர் சாகுமக ராசர் - பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசான்)

குறிப்பு: இன்றுதான் சாகுமகராசர் முதல் இட ஒதுக்கீடு ஆணை பிறப்பித்த நாள் - 1902.
26-7-2012

தமிழ் ஓவியா said...

விளையாட்டிலும் வருண தர்மமே!

லண்டனில் ஒலிம்பிக் போட்டி தொடங்கப்பட உள்ளது. 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, இதில் எதைச் சாதிக்கப்போகிறது என்பது கேள்விக் குறியே!

ஆற்றலும், வலிமையும் கொண்ட மக்கள் கிராமப் புறங்களில், ஒடுக்கப்பட்ட மக்க ளிடையே பல்லாயிரக் கணக்கில் இருக்கத் தான் செய்கிறார்கள்.

வருணாசிரம ஜாதிய ஆதிக்கச் சிந்தனை குடி கொண்ட இந்துத்துவா மனப்பான்மை என்பது இந்தியாவில் இருக்கும் வரைக்கும் உலக சாதனைகள் என்பது கனவு உலகத் தில்தான் இருக்கும். பார்ப்பனியத் தன்மை கொண்ட கிரிக்கெட் போன்றவைதான் இந்தியாவில் கொழிக்க முடியும்.

இங்கு மதம் என்பது வெறும் நம்பிக்கை என்பது மட்டுமல்ல, மனதளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அடிப்படை நீரோட்டத்தைக் கொண்டது.

தலையெழுத்து நம்பிக்கையும், எதையும் பகவான் பாதத்தில் போடு என்கிற சோம்பேறி சித்தாந்தங்களும், அவற்றுடன் தொடர்பான கோயில் அமைப்பு முறைகளும், பண்டிகை களும் திருவிழாக்கள், சடங்குகள், சாத் திரங்களும் இந்தியாவில் வேர் பிடித்திருக்கும் வரை இங்கு தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஆற்றல்கள் வெடித்துக் கிளம்புவதற்கான அடிப்படை வாய்ப்புகளே கிடையாது.

கீதையைப் படிப்பதை விட ஒரு உதைப் பந்தைக் கற்றுக் கொள் என்று விவேகானந்தர் கூற்றையும் கூட கவனத்தில் எடுத்துக் கொள் ளலாம். தகவல் ஒன்று - புதுக்கோட்டை விடுதலை செய்தியாளர் தோழர் கண்ணன் மூலம் கிடைத்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்த சத்தக் குறிச்சியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் கத்தார் நாட்டின் தோகாவில் நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்று, உலக அளவில் நட்சத்திரமாக மின்னினார். தென்னாசியப் போட்டியில் தங்கம் வென்றார்.

இப்படி சாதனை படைத்த சாந்தியின் இன்றைய நிலை என்ன? வறுமைத் தேள் கொட்டப்பட்ட நிலையில், செங்கல் சூளையில் கற்களைச் சுமந்து குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்.

ஏன் இந்த நிலை? மத்திய அளவிலும், மாநில அளவிலும் விளையாட்டுத் துறைகள் இருக் கின்றனவே. இவை எதை வெட்டி முறிக் கின்றன? சாந்தி போன்றவர்களை அடையாளம் கண்டு தேவையான அறிவியல் ரீதியான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து உலக அளவில் நடக்கும் போட்டிகளில் சாதனை களைப் படைக்க ஏன் ஆக்க ரீதியாகச் சிந்திக்கக்கூடாது - செயல்படக்கூடாது?

கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள் என் றால், ராணுவத்தில் கூட பிரிகேடியர் தகுதியில் பணியமர்த்தம் செய்து, உயரிய அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. எந்தப் பணியையும் செய்யாமலேயே அந்தப் பதவிக் குரிய சம்பளம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் சேர்ந்து விடுகிறது. பெரிய பெரிய தனியார் நிறு வனங்களும் இதே போலவே பணியமர்த்தம் செய்து விளம்பரம் பெறுகின்றன.

ஆனால் உண்மையான திறமைகளை வெளிப்படுத்தும் தடகளப் போட்டிகளில் ஏன் இந்த வாய்ப்பு இல்லை? காரணம் தெரிந்ததே! தடகளப் போட்டிகளில் எந்தப் பார்ப்பனரும் ஒளிர்வதில்லை. கிரிக்கெட் போன்றவை பார்ப்பன தர்மம். தடகளப் போட்டிகள் சூத்திர, பஞ்சம தர்மம்.
இந்த வருணாசிரம தர்மம் ஒழிக்கப்படும் வரை கிராமப்புறத்துச் சாந்திகளுக்கு வாய்ப்பு ஏது?

இன்னொரு உண்மை தெரியுமா? சகோதரி சாந்தி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.

நாடு சுதந்திரம் பெற்றுவிட்டதாம். மக்கள் விடுதலை பெற்றுவிட்டார்களாம் - வெட்கக் கேடு! மகா வெட்கக்கேடு!! 26-7-2012

தமிழ் ஓவியா said...

எங்கு பார்த்தாலும் கோவில் விழாக்களில் கலவரம்

விருதுநகர்,ஜூலை 26- அருப்புக் கோட்டை அருகே கோவில் திருவி ழாவில் ஏற்பட்ட குழு மோதலில் 5 பேர் படுகாயம் அடைந்த னர். இது தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள கள்ளாக்காரி பஞ்சா யத்து தலைவராக இருப்பவர் வள்ளி. உள்ளாட்சி தேர்தலின் போது இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் மற்றொரு வள்ளி. இவர்களுக்கு இடையே தேர்தல் சம்பந்த மாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் அப் பகுதியில் உள்ள கோவிலில் விழா நடந்தது. இதில் பஞ்சாயத்து தலைவர் வள்ளி ஆதரவாளர்களுக்கும், மற்றொரு வள்ளி ஆதரவாளர் களுக்கும் இடையே குழு மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில், மலையான், வேல்மயில், ராஜமயில், நாகம் மாள், சந்தானம் ஆகியோர் படுகாயமடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் பரளச்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஜெயபாண்டி உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

அவதானப்பட்டியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் தொடர்ந்து பதற்றம்

கிருஷ்ணகிரி அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் ஆடிப் பண்டிகைக்கு பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த அடி-தடி மோதல் ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட் டோர் காயம் அடைந்தனர். இதையடுத்து கோவில் முன்பு அதிரடிப் படை காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

கிருஷ்ணகிரி அருகேயுள்ள அவதானப் பட்டியில் கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அவதானப்பட்டி மாரியம் மன் கோவில். இந்து அறநிலையத்துறை கண்காணிப்பில் உள்ள இந்த கோவிலை பரம்பரையாக உள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நிர்வகித்து வருகிறார்கள்.

இந்த கோவிலில் 6 மாதத்திற்கு ஒருமுறை உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் ரூ.10 லட்சத்துக்கு மேல் வருகிறது. இந்த பணத்தை கோவில் நிர்வாகிகள் வசம் ஒப்படைக்கப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவில் நிர்வகிப்பது சம்பந்தமாக அவதானப்பட்டியைச் சேர்ந்த முனியப்ப கவுண்டர் தரப்பிற்கும், திருப்பதி கவுண்டர் தரப்பிற்கும் இடையே நீண்ட காலமாக தகராறு இருந்து வருகிறது. இதையடுத்து இருதரப்பினரும் நீதிமன்றத்துக்கு சென்று வழக்குகள் நடந்து வருகிறது.

மேலும் ஒவ்வொரு ஆண்டு திருவிழா சமயம் மற்றும் உண்டியல் திறப்பின் போது இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. காவல் துறையினர் தலையிட்டு இருதரப் பையும் அமைதிப்படுத்தி வருகிறார்கள். கடந்த வாரம் உண்டியல் திறக்கப்பட்ட போது இருதரப் பினரையும் மோதிக் கொண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

கோவில் விழாவிற்காக நேற்று கோவிலை சுற்றி பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது முனியப்ப கவுண்டர் தரப்பினருக்கும், திருப்பதி கவுண்டர் தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.

இருதரப்பினரும் ஒருவரையொருவர் கட்டையாலும், கம்பாலும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் லட்சுமண கவுண் டர் உள்பட 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இருதரப்பினரும் வயல் வெளிகளில் ஓடிச் சென்று ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.

தகவலறிந்த கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் ஆய்வாளர் கன்னையன் தலைமையில் அதிரடிப் படை காவல்துறையினர் கோவில் முன்பு குவிக்கப் பட்டனர். இதனால் நிலைமை சற்று கட்டுக் குள் அடங்கியது. இருப்பினும் இருதரப் பினரும் மீண்டும் மோதிக் கொள்ளலாம் என காவல்துறையினர் கருதுவதால் காவல்துறை யினர் தொ டர்ந்து அவதானபட்டி கிராமம் மற்றும் கோவில் அமைந்துள்ள பகுதிகளில் தொ டர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் அவதானப்பட்டி பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து கிருஷ் ணகிரி தாலுகா காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். 26-7-2012

தமிழ் ஓவியா said...

காசி விசுவநாதர் கோவில்


இந்துக்களுடைய புண்ணிய புராண பெரிய கோவில் காசி விசுவநாதர் கோவில். புண்ணிய தீர்த்தம் என்று இந்துக்கள் பொதுவாக நம்புகின்ற கங்கைக் கரையில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. பல மன்னர்களும் இந்தக் கோவிலுக்கு ஏராளமான சொத்துக்களைத் தாயனமாக அளித்துள்ளனர். கங்கையில் குளித்து இந்தக் கோவிலைத் தரிசனம் செய்வதை வாழ்க்கையில் பெரும் பேறாக இந்து பக்தர்கள் கருதினர். அங்கேயுள்ள புரோகிதர்கள் - பண்டாக்கள் - ஒரு கொள்ளைக் கூட்டத்தை விட கொடியவர்களும் வலிமை மிக்கவர்களும் ஆவர்.

இந்தக் கோவில் கி.பி.1589இல் கட்டப்பட்டதாகத் கருதப்படுகின்றது. பண்டைக் காலத்தில் காசியில் 2000 கோவில்கள் இருந்தனவாம். இன்று அங்கே நூற்றுக்கு மேற்பட்ட கோவில்கள் உள்ளன. விசுவநாதர் கோவிலின் இரண்டு கோபுரங்கள் தங்க கவசத்தால் ஆனவை. அது ரஞ்சித் சிங் என்ற மன்னர் அளித்த நன்கொடை. இங்கே ஆண்டுக்கு மூன்று முறை விழாக்கள் நடைபெறுகின்றன. புரோகிதர்கள் தில்லு முல்லு செய்வதில் திறமையானவர்கள். மத்திய அமைச்சராக இருந்த கமலபதி திரிபாதி இங்கே மிக உயர்ந்த புரோகிதர்களில் ஒருவராக இருந்தவர்தான்.27-7-2012

தமிழ் ஓவியா said...

பீகார் கோவில்கள்

இந்துக்கள் கோவில் கட்டுவதற்கு ஊக்கம் அளித்தது புத்த விகாரங்கள்தான் என்ற கருத்து நிலவுகின்றது. கடவுளைப் பற்றி எதுவும் சொல்லாத புத்தரை பிற்காலத்தில் புத்த மத ஆதரவாளர்கள் கடவுளாக அமர்த்தி வழிபட்டனர். இந்து மதத்தின் ஆதிக்கம்தான் அதில் பிரதிபலிக்கின்றதென்று வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித் துள்ளனர். எப்படியிருந்தாலும் சரி, புத்தருக்கு முன்பு இந்தியாவில் உருவ வழிபாடு பிரபலமடைந் திருக்கவில்லை.

பீகார், புத்தமதப் பணிகளில் தலைமையிடமாக இருந்தது. புத்த விகாரங்களின் ஆதிக்கத்தினால் தான் பீகார் என்ற பெயர் கூட உண்டானது என்று சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இந்து மதத்திலுள்ள பார்ப்பனப் பிரிவு புத்த மதத்துக்கு எதிராக கடுமையான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. சங்கராச்சாரியாரின் பங்கு அதில் மிக முக்கியமானதாகும். இந்தக் கட்டத்தில் ஏராளமான புத்த விகாரங்களை இந்துக் கோவில்களாக மாற்றவும் செய்தனர். இன்று பீகாரில் ஜைனர்கள், பவுத்தர்கள், இந்துக்கள் ஆகியோருக்கு ஏராளமான கோவில்கள் உள்ளன. திரண்ட சொத்துகளும் பெரும் ஆடம்பரங்களும் இவற்றைச் சூழ்ந்து கிடக்கின்றன. வருமானம் அதிகமாக உள்ள சில தென்னிந்தியக் கோவில்களுடன் ஒப்பிட்டால் இவற்றின் நிலை மோசமானதாகும். இந்தக் கோவில்களில் தங்க நகைகளும் விலை மதிப்புமிக்க பிற அசையும் சொத்துகளும் காணாமல் போய்விட்டன. அவை எப்படி காணாமல் போயின என்பது அதைப் பயன்படுத்துபவர்களுக்குத் தெரிந்த ரகசியமாகும். விசாரணை நடத்த யாரும் இல்லாததால் குற்றவாளிகள் தப்புகின்றனர்.27-7-2012

தமிழ் ஓவியா said...

லண்டனில் இருந்து ராஜபக்சவை ஓட ஓட விரட்டுவோம்-பிரிட்டன் தமிழர் ஒன்றியம்


லண்டன், ஜூலை 27- லண்டனில் நடை பெறும்ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்துகொள்ள வருகை தரும் இலங்கை அதிபர் மகிந்த ராஜ பக்சவை ஓடஓட விரட் டியடிக்க அனைவரும் ஓரணியில் திரள்வோம் என்று பிரிட்டன் தமி ழர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக பிரிட்டன் தமிழர் ஒன்றியம் வெளியிட் டுள்ள அறிக்கை:

லண்டனில் இன்று தொடங்கும் ஒலிம்பிக் தொடக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகைதரவுள்ள இலங்கைத் தீவின் இன வெறி அரச அதிபரான மகிந்த ராஜபக்சவை எதிர்த்துகுரல் கொடுத்து தமிழர்களின் ஒருமித்த பலத்தின் மூலம் பிரிட்டனை விட்டுவெளியேற்ற வேண்டிய காலத்தை பிரிட்டன் தமிழர்கள் எதிர்கொண்டு நிற்கின் றனர்.

ஏற்கனவே பிரிட் டன் தமிழர்களின் கடும் எதிர்ப்பு போராட் டங்களால் லண்டன் வருகை தந்திருந்த மகிந்த ராஜபக்ச தனது நிகழ்ச்சிகளை ரத்துச் செய்து உடனடியா கவே இலங்கை திரும் பியிருந்தார்.

இருப்பினும் மீண்டும் தமிழர்களுக்கு சவால் விடுகின்ற வகை யில் லண்டன் வரும் மகிந்தவை ஒன்றுபட்ட தமிழர்களாக பிரிட் டன் வாழ் தமிழர்கள் அனைவரும் எதிர் கொண்டு விரட்டியடிக்க வேண்டியது அவசியமா கிறது.

போராட்டம் நடைபெறும் இடம்

இந்த வகையில் ஹளயீந றயல , இல்அமைந்துள்ள க்ஷடைடபேளபயவந குளை ஆயசமநவ முன்பாக இன்று மாலை 5:00 மணி முதல் 9:00 மணி வரை நடைபெற வுள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பிரிட்டன் வாழ் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு பிரிட்டன் தமிழர் ஒன் றியம் கேட்டுக்கொள் கிறது.

இலங்கைத் தீவில் தமிழர்களை அழித்து, தமிழர்களின் வாழ்விடங் களை பறித்து சிங்கள, பவுத்த மயமாக்கும் முயற்சியில் ஆட்சி நடாத்திவரும் இனப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சவை ஒரே அணி யில் தமிழர்கள் என்ற உணர்வோடு, விரட்டிய டிப்போம்.

இதன் மூலம் பிரிட்ட னில் இம்முறை ஒலிம் பிக் போட்டிகளில் கலந் துகொள்ள வருகைதரும் 150 நாட்டு தலைவர் களுக்கும், 1000 க்கும் மேற்பட்ட இராஜதந்தி ரிகளுக்கும், பத்தாயிரத் துக்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும், பல இலட்சம் மக்க ளுக்கும் தமிழர்களின் உள்ளக் குமுறலையும், தமிழர்களுக்கு இளைக் கப்பட்ட அநீதிகளையும் எடுத்துச் சொல்லும் ஓர் அரிய வாய்ப்பாகவும் அமையும்.

இது போன்றதொரு அரிய சந்தர்ப்பம் எமக்கு இனி எப்போது கிடைக் கும் என்பது தெரியாது. எனவே இச் சந்தர்ப் பத்தை பயன்படுத்தி 2009 இல் எவ்வாறு இரண்டு இலட்சத்திற் கும் அதிகமாக தமிழ் மக்கள் கூடி போராட் டங்களைநடத்தி னோமோஅதே போன்று பெருமளவில் தமிழர்கள் ஒன்று திரண்டு இப் போராட்டத்தை நடத்த வேண்டி யது முக்கியமா கிறது.

இப்போராட்ட மானது பிரிட்டன் அர சிற்கு எதிரானதாகவோ, ஒலிம்பிக் நிகழ்வுகளை குழப்பும்நோக்கம் கொண்டதாகவோ, அன்றி ஒலிம்பிக்கின் புனித நோக்கத்தை புரிந்து கொள்ளாதவ ராகவும், மனித நேயத்தை மதிக்கத் தெரியாதவ ராகவும் விளங்கும் மகிந்த ராஜபக்ச இவ் விழாவில் கலந்து கொள்ள அருகதை யற்றவர் என்பதை எடுத்துணர்த்தும் போராட்டமாகவே தமிழர்களால் முன்னெ டுக்கப்படவேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும் புகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
27-7-2012

தமிழ் ஓவியா said...

நாவலர் பாரதியார்


இவர் கடவுள் மறுப் பாளர் அல்லர் - மத மறுப் பாளரும் அல்லர். உண் மையைச் சொல்லப்போ னால் சைவ மெய்யன்பர்.

கம்ப இராமாயணத்தை யும், பெரிய புராணத்தையும் தீயிடக்கூடாது என்று அறிஞர் அண்ணாவுடன் சேலத்தில் விவாதப் போர் புரிந்தவர்.

அந்த சேலம் சொற் போரில் அவர் என்னதான் பேசினார்?

என்னுடைய 14 வயதில் எனக்குக் கல் யாணம் நடந்தபோது நேரிட்டதைச் சொல் கிறேன். எட்டையபுர சமஸ்தானத்தில் ஒரு கிராமத்திலே நாகரிக உணர்ச்சி பரவ முடியாத ஊரிலே எனக்குக் கல்யாணம். நான் வைதீக உணர்ச்சி உள்ளவன், நல்ல சைவன். இப்போது இருக்கும் சைவம் போன் றதல்ல. என்னுடைய சிவநெறி வேறு.

இன்று சைவப் பண்டிதர்கள் கூறும் சைவம் நான் கொள்வதல்ல. உண் மையே எனக்குச் சைவம்! எனக்குக் கல்யாணம் பார்ப்பனரை வைத்துச் செய்வதாகக் கூறி னார்கள். அப்படிப்பட்ட கல்யாணம் எனக்கு வேண்டாம் என்றேன். சைவ ஆகமங்களின்படி பார்ப்பனர்களைச் சண்டாளர்கள் என்று கூறப்பட்டிருக்கின்றது. கோயில்களிலே அவர்கள் துவஜஸ்தம்பத்திற்கு அப்புறம் நுழையக் கூடாது.

வந்தால் தீட்டாகி விடும் என்று ஆகமம் கூறுவதால், அப்படிப்பட்ட சண்டாளர்களைக் கொண்டு நான் கல் யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்றேன். என் குடும்பத்தார் திருநெல் வேலிக்கும், மதுரைக்கும் போய் பண்டிதர்களைக் கேட்டார்கள். திருநெல் வேலி பண்டிதர்கள் கூட சரியாகச் சொல்லவில்லை. மதுரையில் இருந்த பண்டிதர்கள் பையன் சொல்லுவது உண்மை தான். ஆகமம் அப்படித் தான் கூறுகிறது என்று சொன்னார்கள்.

-என்று நாவலர் சோம சுந்தர பாரதியார் பேசினார் சேலத்தில். (14-3-1948)

அந்த நாவலர் சோம சுந்தரபாரதியர் அவர்களின் பிறந்தநாள் இந்நாள் (1879).

1938 இந்தி எதிர்ப்புப் போரில் தந்தை பெரியார் சேனையில் தளகர்த்தராகத் திகழ்ந்தவர்.

ஒரு நாயக்கரும், புலவரும்தானே (நாவலர் பாரதியார்) இந்தியை எதிர்க்கிறார்கள் என்று பிரதமர் ராஜாஜி சட்டசபை யில் சொன்னபோது, சர் ஏ.டி.பன்னீர்செல்வம் சொன்னது என்ன தெரியுமா? ஆமாம், இந் தியை எதிர்ப்பவர்கள் இந்த இரண்டு பேர்கள்தான். ஆனால் ஆதரிப்போர் நீங்கள் ஒரே ஒருவர்தானே என்றாரே பார்க்கலாம்!

- மயிலாடன் 27-7-2012

தமிழ் ஓவியா said...

சொர்க்கத்திற்கு குறுக்குவழி

பார்ப்பனர்களே நீங்கள் சொர்க்கத்திற்கு போக வேண்டுமா? இதோ ஒரு சார்ட்கட் என்ற தலைப்பில் 1555இல் விடுதலையில் ஒரு கட்டுரை வெளி வந்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளபடி திருவிளை யாடல் புராணம் 26ஆவது திருவிளையாடல் மாபாதகம், தீர்த்தபடலம் அதன் சுருக்கம்:

அவந்தி என்ற ஊரில் ஒரு பார்ப்பான் வாழ்ந்து வந்தான். அவனுடைய மனைவி ஒப்பில்லா அழகு டையவள். அவளது மகன் வளர்ந்து வாலிபன் ஆனதும், அவனது தாயின் மேலேயே ஆசை கொண்டான். அவளும், நாணம், வெட்கம் எல்லா வற்றையும் விட்டு, தன்னுடைய மகனிடம் உடலுறவு கொண்டாள். இதற்கு இடையூறாக இருந்த அவளுடைய கணவனை அவள் மகன் ஒரு இரவில் கொன்று மயானத்தில் இறுதிச் சடங்கை செய்தான். ஊரில் உள்ளவர்கள் தகப்பனைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானைப் பற்றி இழிவாகப் பேசவும், தாயும், மகனும் சொந்த ஊரை விட்டு ஓடி ஊர், ஊராக சுற்றிக் கொண்டு இருந்தனர்.

அப்பொழுது சோமசுந்தர கடவுள் வேடன் உருவத்தில் வந்து இவனிடம் சிவராத்திரி நாளில் சிவனடியார்களுக்கு பணி செய்து சூரியன் உதிக்கும் முன் அருகம்புல்லை பசுமாட்டிற்கு கொடுத்து மூன்று காலமும் நீராடி 108 முறை கோவிலை வலம் வரும் படி சொன்னார். அந்தப் பார்ப்பானும் அப்படியே செய்து அவன் செய்த பாவமெல்லாம் தீர்ந்து சொர்க் கத்திற்கு போனானாம்.

தாயைப்புணர்ந்து தகப்பனை கொன்ற பார்ப்பானுக்குச் சொர்க்கம்

சொர்க்கத்திற்கு குறுக்கு வழி 2

சொர்க்கத்திறகு போக இதோ இன்னொரு சுலபமான வழி பார்ப்பனர்களே, ரிக்வேதத்தில் குறிப் பிட்டுள்ளபடி நடந்தால் போதும் சுலபமாக சொர்க் கத்திற்கு போய் விடலாம். ரிக்வேதம் தாத்தாக்கிரி மெய் சகத்தில் குறிப்பிட்டுள்ளபடி செய்யுங்கள். நீங்கள் உடனே மோட்சத்திற்கு போய் விடலாம். இதோ அந்த சுலோகம்.

வேஸ்யாதர்சனம் புண்யம்
ஸ்பர்சனம் பாவ நாசனம்
சும்பனம் சர்வ தீர்த்தானம்
மைதுனம் மோட்ச சாதனம்

வேசிகளை (விபசாரிகளை)ப் பார்ப்பது புண் ணியம். அவர்களைத் தொட்டால் நீங்கள் செய்த பாவ மெல்லம் போய்விடும். நாசமாகிவிடும். கார்ப்பரேசன் குழாய் தண்ணீரை ஒரு செம்பில் வைத்துக் கொண்டு புரியாத மந்திரங்களை, கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவேரி என்று சொல்லிக்கொண்டு மா இலையால் வீடு முழுவதும் தெளிக்கிறாரே புரோகிதர் அந்த சகல தீர்த்தங்களும், அந்த விபச்சாரிகளை முத்தமிடும் பொழுது வாயில் ஊறும் எச்சிலுக்கு சமமாகும். அதற்கும் மேல் விபச்சாரிகளை புணர்வது மோட்சத்திற்கு வழியாகும்.

வேதம் படித்து, பூஜை புனஸ்காரங்களை செய்யும் பார்ப்பனர்களே, அவை எல்லாம் இனிமேல் தேவையில்லை. ரிக் வேதத்தில் சொல்லியபடி உடனே சிவப்பு விளக்கு பகுதிக்குப் போங்கள் சொர்க்கத்தை அடையலாம். காலம் தாழ்த்தினால் இடம் கிடைக்காது. எல்லாம் புக் ஆகிவிடும். ஓடுங்கள் சிவப்பு விளக்குப் பகுதிக்கு. 28-7-2012

தமிழ் ஓவியா said...

புறம்போக்கு ஜெபவீடு இடிப்பு

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், செந்துறை அரசு மருத்துவமனை எதிரில் நீர்வரத்து புறம்போக்கில் அத்துமீறி கட்டியிருந்த ஏசு அலொலியா ஜெப வீடு அரசு அதிகாரிகள் உடையார்பாளையம் வருவாய் வட்டாட்சியர் மற்றும் செந்துறை வட்டாட்சியர் அன்பழகன், செந்துறை கிராம நிர்வாக அலுவலர்கள், செந்துறை ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் இடித்துத் தள்ளப்பட்டது. சட்ட விரோதமாகக் கட்டப்பட்டது எந்த மதத்தின் வழிபாட்டு அமைப்புகளாக இருந்தாலும் அவை இடிபட வேண்டியதே!

உச்சநீதிமன்றமும் சென்னை உயர்நீதி மன்றமும் இத்தகைய நடவடிக்கைகள் தேவை என்று வலியுறுத்தியுள்ளன. தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் உச்சநீதிமன்றத்திற்கு நேரில் வந்து உண்மை நிலையைத் தெரிவிக்க வேண்டும் என்றும், ஆணை பிறப்பித்துவிட்டது. தமிழ்நாடு அரசு இந்தப் பிரச் சினையில் எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை. சட்ட விரோதமாகக் கட்டப் படும் கோயில்களை எதிர்த்து திராவிடர் கழகம் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறது.