Search This Blog

24.7.12

கடவுள் - மதம் நாட்டுக்குக் கேடே!-பெரியார்



தேவர்கள் என்றும், பல தெய்வங்கள் என்றும், அவற்றின் அவதாரமென்றும், உருவமென்றும், அதற்காக மதமென்றும், சமயமென்றும், மதாச்சாரியார்களென்றும், சமயாச்சாரிகளென்றும் கட்டியழுபவர்கள் ஒன்று. பகுத்தறிவில்லாதவர்களாகவாவது அல்லது வயிற்றுப் பிழைப்பிற்குப் புறப்பட்ட புரட்டர்களாகவாவது இருக்க வேண்டும்.

அதுபோலவே, சிவன் என்றோ, விஷ்ணு என்றோ, பிரம்மா என்றோ அல்லது ஒரு ஆசாமி என்றோ அல்லது ஒரு உருவமென்றோ கொள்ளுவதும் உண்மை ஞானமற்றவர்களின் கொள்கை ஆகும்.

ஆதலால் உலகத் தோற்றமும், அதில் நடைபெறும் உற்பத்தி, வாழ்விப்பு, அழிப்பு என்பவைகளான மூவகைத் தன்மை களையும் மேற்படி சாமிகளோ, ஆசாமி களோ, ஒவ்வொரு தன்மையை ஒவ்வொரு ஆசாமி நடத்துகிறான் என்றோ அல்லது ஒவ்வொரு தன்மைக்கும் ஒவ்வொரு ஆசாமி பொறுப்பாளியாய் இருக்கிறான் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்களை விசாரஞானமற்றவர்கள் என்றே சொல்ல வேண்டும்.

அந்தக் கடவுள் என்பவைகளுக்கு கண், மூக்கு, வாய், கால், கை, தலை, பெயர், ஆண் - பெண் தன்மை பெண்சாதி - புருஷன், வைப்பாட்டி, தாசி, குழந்தை குட்டி, தாய் - தகப்பன் முதலியவைகளைக் கற்பித்து, அவைகளிடத்தில் பக்தி செய்ய வேண்டுமென்றும், அவற்றிற்கு கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்து தினம் பல வேளை பாலாபிஷேகம், படைப்பு, பூஜை முதலியன செய்ய வேண்டுமென்றும், அச்சாமி களுக்குக் கல்யாணம் முதலியவைகளைச் செய்வ தோடு, அந்தக் கடவுள் அப்படிச் செய்தார், இந்தக் கடவுள் இப்படிச் செய்தார் என்பதான திருவிளை யாடல்கள் முதலியவைகள் செய்து காட்ட வருஷா வருஷம் உற்சவம் செய்ய வேண்டும் என்றும், அக் கடவுள்களின் பெருமையைப் பற்றியும், திருவிளையாடல் கள் பற்றியும் பாட வேண்டும். திருமுறையாக, பிரபந்தமாக அப்படிப்பட்ட கடவுள்கள் உண்டு என்பதற்கு ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற இன்னும் பல செய்தால் அக்கடவுள்கள் நமது இச்சைகளை நிறைவேற்று வார்கள் என்றும் மற்றும் நாம் செய்த - செய்கின்ற - செய்யப் போகின்ற எவ்வித அக்கிரமங்களையும், அயோக்கியத் தனங்களையும், கொடுமைகளையும் மன்னிப்பார் என்றும் சொல்லப் படுபவைகள் மூடநம்பிக்கை - வயிற்றுப் பிழைப்பு - சுயநலப் பிரச்சாரமே.

ஏனெனில், இந்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கும், மக்களை மக்கள் ஏமாற்றிக் கொடுமைப்படுத்துவதற்கும், மற்ற நாட் டார்கள் போல நம் நாட்டு மக்களுக்குப் பகுத்தறிவு விசாலப்படாமல், மற்ற நாட்டார்களைப் போல விஞ்ஞான சாஸ்திரத்திலே (சயன்ஸ்) முன்னேற்ற மடையாமலிருப்பதற்கும், இம்மூட நம்பிக்கைகளும், சில சுயநலமிகளின் வயிற்றுச் சோற்றுப் பிரச்சாரமும், இவைகளினால் ஏற்பட்ட கண்மூடி வழக்கங்களும், செலவுகளுமேதான் காரணங்கள் ஆகும்.

ஒருவரையொருவர் உயர்வு - தாழ்வு கற்பித்துக் கொடுமைப்படுத்தி ஒற்றுமை இல்லாமல் செய் திருப்பதற்கும், மக்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பொருள்கள் எல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படாமல் பாழாவதற்கும், மக்களின் அறிவு வளர்ச்சிக் கட்டுப்பட்டுக் கிடப்பதற்கும், சிறப்பாக மக்களின் ஒழுக்கங்கள் குன்றி மக்களிடத்தில் மக்களுக்கு அன்பும், உபகாரமும் இல்லாமல் இருப்பதற்கும் கடவுள் என்பதும், அதன் சமயமும், சமயாச்சாரியார்கள் என்பவர்களும், அவர்களது பாடல்களும், நெறிகளுமே காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்.

நிற்க, இக்கடவுள்களின் பொருட்டாக நம் நாட்டில் பூசைக்கும், அபிஷேகத்திற்கும், அவற்றின் கல்யாணம் முதலிய உற்சவங்களுக்கும், பஜனை முதலிய காலட்சேப நேரக் கேட்டிற்கும், இக்கடவுள்களைப் பற்றிய சமயங் களுக்காக மடங்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மூர்த்திஸ்தலம், தீர்த்தஸ்தலம் முதலிய யாத்திரை களுக்கும், இக்கடவுள் அவதார மகிமைகளையும், திருவிளையாடல்களையும், இக்கடவுள் களைப் பற்றிப் பாடின பாட்டுக்களை அச்சடித்து விற்கும் புத்தகங்களை வாங்குவதற்கும் மற்றும் இவைகளுக்காகச் செலவாகும் பொருள்களாலும், நேரங்களாலும் நம் நாட்டில் பல கோடி ரூபாய்களுக்குக் குறைவில்லாமல் வருஷா வருஷம் பாழாகிக் கொண்டிருக்கிறது.

இந்த பல கோடிக்கணக்கான ரூபாய்கள் இம் மாதிரியாக பாழுக்கிறைக்காமல் மக்களின் கல்விக்கோ, அறிவு வளர்ச்சிக்கோ, விஞ்ஞான (சயன்ஸ்) வளர்ச் சிக்கோ, தொழில் வளர்ச்சிக்கோ செலவாக்கப்பட்டு வருமானால், நம் மக்கள் இன்னும் காட்டுமிராண்டி களாகவும், உடலுழைப்புக் கூலிகளாகவும் இருக்க முடியுமா அன்றியும் தீண்டக்கூடாத, நெருங்கக் கூடாத, பார்க்கக் கூடாத மக்கள் என்போர்கள் கோடிக்கணக் காய் இருக்க முடியுமா?

100-க்கு மூன்று பேர்களா யிருக்கும் பார்ப்பனர்கள் மற்ற 100-க்கு 97 பேர்களை சண்டாளர், மிலேச்சர், சூத்திரர், வேசி மக்கள், தாசி மக்கள், அடிமைப் பிறப்பு என்று சொல்லிக் கொண்டு அட்டைகள் இரத்தத்தை உறிஞ்சுவது போல உறிஞ்சிக் கொண்டு இருக்க முடியுமா? என்று கேட்கிறோம்.

கடவுள் - மத மூடநம்பிக்கை கள் ஒழியச் செய்யும் காரியத்தை நாஸ்திகமென்றும், பாப காரியமென்றும் கூறுவது பகுத்தறிவற்ற பாமர மக்களை ஏமாற்றிச் சுரண்டிப் பிழைப்பவர்களின் சுயநலப் புரட்டே ஆகும்.

--------------------தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம் - "விடுதலை" 29.12.1969

19 comments:

Anonymous said...

மதம் மட்டுமல்ல DOGMA எனப்படும் கொள்கைவாதங்களும் நாட்டுக்கு கேடே !

பெரியாரின் சிந்தனை நிச்சயம் தீர்க்கத் தரிசனமானவை, முற்போக்கானவை என்பதில் ஐயமில்லை !

தமிழ் ஓவியா said...

குவளைத் தண்ணீரில் அம்மன் முகமா?

அறிவியல் பூர்வமாக நிருபித்தால் ரூ.ஒரு லட்சம் பரிசு!
திராவிடர் கழகம் நேரடி பதிலடி!

கடலூர், ஜூலை.24- குவளைத் தண்ணீரில் அம்மன் முகம் என்று புரளி கிளப்பி விடப்பட்டதற்கு திராவிடர் கழகத் தின் சார்பில் நேரடி பதிலடி கொடுக் கப்பட்டது.

கடலூரில் பரபரப்பான தெருமுனைக் கூட்டம் குவளைத் தண்ணீரில் பூஞ் சோலை அம்மன் முகமா! அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் ஒரு லட்சம் பரிசு என துண்டு அறிக்கை வெளியிட்டு கடலூர் திராவிடர் கழகம் சார்பில் 22.7.2012 அன்று அய்ந்து இடங்களில் 4 மணி முதல் இரவு 9 மணி வரை. தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

துணைப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் அவர்கள் கடலூர் திருப் பாதிரிப்புலியூர் தேரடி தெருவிலும், புது பாளையத்திலும் தொடங்கி வைத்துப் உரையாற்றினார். இதில் கடவுளின் தன்மைகள் மனிதனுக்கு எந்த வகையிலும் உதவாத புராணம் இதிகாசத்தில் உள்ள ஆபாசங்களை விளக்கியும் சங்கராச்சாரி முதல் பிரேம நந்தா காஞ்சிபுரம் தேவநாதன் இன்று உள்ள நித்தியானந்தா வரை சாமியார்கள் செய்த லீலைகளை விளக்கியும் சில மாவட்டங்களில் இரத்தக் காட்டேரி மூடநம்பிக்கைகள் சில ஊர் களில் வேப்பிலை மோசடி சில ஊர்களில் இன்று போய் நாளை வா என்று எழுதுவது; கடலூரில் குப்பன்குளத்தில் குவளைத் தண்ணீரில் பூஞ்சோலை அம்மன் முகமா! கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவனுக்கு புத்தி வேண்டாமா? சிந்தியுங்கள் அறிவுக்கு வேலை கொடுப்போம் அறியாமைக்கு விடை கொடுப்போம் என்று பேசினார். கூத்தப்பாக்கத்தில் யாழ் திலீபன் உரை யாற்றினார். வண்ணாரப்பேட்டை மாவட்ட அமைப்பாளர் நா. தாமோதரன் உரையாற் றினார். பெரியார் நினைவு தூண் அருகே கூட்டம் நிறைவடைந்தது. இக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் சொ. தண்டபாணி மண்டல இளைஞரணி செயலாளர் சி. மணிவேல் கடலூர் நகர தலைவர் விஜயக்குமார், மாவட்ட ப.க. செயலாளர் எழிலேந்தி, நெய்வேலி நகர செயலாளர் ச. கண்ணன், கடலூர் சின்னதுரை, கடலூர் பெரியார் நூலகர் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர். துணைப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் உரையாற் றினார். முடிவில் கடலூர் நகர செயலாளர் தென் சிவக் குமார் நன்றி கூறினார்.

தமிழ் ஓவியா said...

அமர்நாத் யாத்திரை: பக்தர்கள் மரணம் : உச்சநீதிமன்றம் அதிர்ச்சியாம்!


புதுடெல்லி, ஜூலை 24- அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் அமர்நாத்தில் உள்ள பனிலிங்கத்தை தரிசிப் பதற்காக இந்த ஆண்டு நடக்கும் யாத்திரையில் இதுவரை ஒரு ராணுவ வீரர் உட்பட 97 பேர் மாரடைப்பு காரண மாக இறந்துள்ளனர். பக்தர்களுக்கு போது மான வசதிகளும் மருத் துவ உதவிகளும் இல் லாததே இறப்பு அதி கரிப்பதற்கு காரணம் என்று செய்திகள் வெளி யானது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தானா கவே முன்வந்து இதை ஒரு வழக்காக ஏற்றது.
நீதிபதிகள் பி.எஸ். சவுகான், சுவதந்தர் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு இது பற்றி விசாரித்தது. போதுமான மருத்துவ உதவிகள் இல்லாமல் பக்தர்கள் இறப்பு எண்ணிக்கை அதி கரிப்பது அதிர்ச்சியளிப் பதாக நீதிபதிகள் கூறினர். ஆண்டுதோறும் இந்த பிரச்னை இருப் பதாக கூறிய நீதிபதிகள், பக்தர்களின் இறப்பை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க உயர் நிலைக் குழுவை கடந்த 20ம் தேதி நியமித்தனர். இந்த குழுவில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, உள் துறை, சுகாதாரத் துறை களின் செயலாளர்கள் இடம் பெறுவார்கள் என்று அறிவித்த நீதிபதி கள், அறிக்கையை காஷ் மீர் ஆளுநரிடம் அளிக்க உத்தர விட்டனர்.
அமர்நாத் சிவனிடம் விளக்கம் கேட்பது தானே!

தமிழ் ஓவியா said...

நதி நீரோட்டமும், தேசிய நீரோட்டமும்!



முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி உச்சநீதிமன்றம் ஒரு ஆணையை நேற்று வழங்கியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையைப் பராமரிக்கும் பொறுப்பை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளலாம் என்று அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.

பராமரிப்புப் பணியை மேற்பார்வையிட தமிழ்நாடு சார்பில் ஒரு பொறியாளரும், கேரளா சார்பில் ஒரு பொறியாளரும், மத்திய பணிகள் ஆணையம் சார்பில் நியமிக்கப்படும் ஒரு பொறியாளரும் இடம் பெறவேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் காணப்படும் மற்றொரு அம்சமாகும்.

காவிரி நீர்ப் பிரச்சினையானாலும், முல்லைப் பெரியாறு பிரச்சினையானாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கும் மனப்பான்மை சம்பந்தப்பட்ட அரசுகளுக்குக் கிடையாது என்ற நிலையில் இந்தத் தீர்ப்பைக் குறித்து தமிழ்நாட்டு மக்கள் எந்த முடிவுக்கும் வருவது என்பது கேள்விக்குறியே!

27-2-2006 அன்று இதே உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று ஆணை பிறப்பித்ததே - அதனைச் செயல்படுத்தியதா கேரள அரசு? அப்படி செயல்படுத் தாத கேரள அரசின் மீது உச்சநீதிமன்றமோ, மத்திய அரசோ எடுத்த நடவடிக்கை என்ன?

மாறாக ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற கதையாக, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில், 142 அடிக்குத் தண்ணீரை முல்லைப் பெரியாறு அணையில் உயர்த்தக்கூடாது என்கிற வகையில் கேரள மாநில அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியதே (Kerala Irrigation and Conservation Act - Amendment 2006). இந்தச் சட்டமீறல் மீது உச்சநீதிமன்றம் இதுவரை குறைந்த பட்சம் விமர்சிக்கவில்லையே!

கருநாடக மாநிலத்திலும் அப்படிதான் நீதிமன்ற தீர்ப் புக்கு எதிராக ஓர் சட்டம் இயற்றப்பட்டது (பங்காரப்பா முதல் அமைச்சர்) அதுவும் கண்டு கொள்ளப்படவில்லையே!

அணை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது - அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நீதி மன்றத்திலேயே கேரள மாநில அரசின் தலைமை வழக்கறிஞரும் ஒப்புக் கொண்டுவிட்டாரே. இதற்கு மேலும் கேரள அரசு சிறு குழந்தை போல் ஒட்டாரம் பிடிப்பது ஆட்சி அமைப்பு முறைக்கு அழகல்லவே!

வெளிப்படையாகப் பிரிவினை பேசினால்தான் சட்டப்படி குற்றம் - இப்படி மறைமுகமாகப் பிரிவினையைத் தூண்டும் வகையில் ஒரு மாநில அரசு நடந்து கொண்டால் அது மட்டும் குற்றம் இல்லையா?

நீதிபதிகள் குழுக்களை எத்தனை முறைதான் நியமிப்பது? அப்படி நியமனம் செய்யப்பட்ட அத்தனைக் குழுக்களும், 142 அடி நீரைத் தாராளமாகத் தேக்கலாம் என்றுதானே உறுதிப் படுத்தியிருக்கின்றன.

இதில் மேலும் ஒரு தகவல் உண்டு. 1241 அடி நீளத்தில் மிகப் பெரிய அளவில் கட்டப்பட்ட இந்த அணை கடல் மட்டத்திலிருந்து 172 அடி உயரம் கொண்டது. இதில் நீரைத் தேக்கும் உயரம் 155 அடி! திடீரென வரும் வெள்ளத்தைச் சமாளிக்கவே 152 அடி என்று வரையறை செய்யப்பட்டது - தொழில் நுட்ப ரீதியாக.

அணையை பலப்படுத்த வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது (25-11-1979) ரூ.21 கோடி செலவில் பெரியாறு அணையைப் பலப்படுத்த வேண்டும் - அந்தச் செலவை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டதே!

இவ்வளவுக்கும் அப்பொழுது மத்திய நீர்வளத்துறை தலைவராக இருந்தவர் கே.சி.தாமஸ் என்ற கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்தான். அணை பலப்படுத்தப்பட்ட பிறகு நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு, தன் செலவில் அணையைப் பலப்படுத்தியது. மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஒப்புதல் அளித்துள்ளனர். ஆனாலும் கேரளம் 142 அடி அளவுக்கு நீர் மட்டத்தை உயர்த்து வதற்கு சம்மதிக்கவில்லை.

அடாவடித்தனம்! அடாவடித்தனம்!! அடாவடித்தனம்!!! இதற்கு மேல் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது? நேற்றைய உச்சநீதிமன்ற ஆணையில் கூட பராமரிப்புப் பணியை மேற்கொள்ளும்போது, கேரள அரசின் சார்பில் பொறியாளர் ஒருவர் இடம் பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை சாக்காகக் கொண்டு எந்தெந்த வகைகளில் எல்லாம் சண்டித்தனம் செய்வார்கள் என்று சொல்ல முடியாது.

சுருக்கமாகச் சொன்னால் நதி நீரோட்டம் - இந்தியத் தேசிய நீரோட்டத்தைக் கேள்விக் குறியாக்கிவிட்டது. 22 காரட் தேசியவாதிகளும், சர்வதேசியவாதிகளும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும் 24-7-2012

தமிழ் ஓவியா said...

முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணி : தமிழக அரசுக்கு அனுமதி உச்சநீதிமன்றம் உத்தரவு
எழுத்துரு அளவு
செவ்வாய், 24 ஜூலை 2012 13:56 0 COMMENTS


புதுடெல்லி, ஜூலை.24- ``முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க தமிழக அரசை அனுமதிக்க வேண்டும்'' என்று கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழகத்துக்கு ஆதரவாக உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவை கேரளா ஏற்க மறுத்து விட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு சட்டம் என்ற ஒன்றை இயற்றி, உச்சநீதிமன்ற உத்தரவை கிடப்பில் போட்டது.

கேரளா அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

மேலும், முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மை, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் அதிகாரம் படைத்த ஒரு உயர் மட்டக் குழுவை 2010-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் நியமித்தது. அந்தக் குழு தனது அறிக்கையை கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கை தமிழக அரசுக்கு சாதகமாக இருப்பதாகக் கூறி கேரளா ஏற்க மறுத்து விட்டது. அத்துடன் அதை எதிர்த்தும் ஒரு வழக்கு தாக்கல் செய்தது.

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு குறித்தும் இரு மாநிலங்களுக்கும் இடையே தகராறு எழுந்து. அணை கேரள மாநிலப் பகுதியில் இருந்தாலும், அணை கட்டப்பட்ட காலத்தில் இருந்து தமிழகம்தான் அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால், சமீப காலத்தில் அணையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள சென்ற தமிழக அரசு அதிகாரிகளை கேரளா தடுத்து, திருப்பி அனுப்பியது.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளச் செல்லும் தமிழக அரசு அதிகாரிகளை கேரளா தடுக்கக் கூடாது. அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும், தூய்மைப் பணிகள் செய்யவும் தமிழக அரசை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரியும் இந்த வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்தும் கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தது.

அத்துடன் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழுவின் அறிக்கையை தமிழக அரசு அளிக்கும்படியும் கேரளா கோரி இருந்தது.

இந்த வழக்குகள் நேற்று நீதிபதிகள் டி.கே.ஜெயின், ஆர்.எம்.லோதா, தீபக்வர்மா, சி.கே.பிரசாத், ஏ.ஆர்.தவே ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் பாப்பே உமாபதி ஆகியோர் ஆஜரானார்கள்.

``முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதிக் கும்படி கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று அவர்கள் வாதாடினார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கேரளா வழக்குரைஞர், ``முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மை குறித்து எந்த அடிப்படையில் நீதிபதி ஆனந்த் தலைமையிலான அதிகாரம் படைத்த குழு அறிக்கை சமர்ப்பித்தது? அது பற்றிய ஆவணங்களை எங்களுக்கு வழங்க வேண்டும்'' என்று கோரினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கீழ்க்கண்ட உத்தரவை பிறப்பித்தனர்.

``முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கிறோம். இதற்கு கேரளா அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். இந்தப் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் இரு மாநில அரசுகளின் சூப்பிரண்டிங் என்ஜினீயர்கள், மத்திய அரசின் நீர் வளத்துறை என்ஜினீயர் ஒருவர் ஆகியோர் அடங்கிய குழுவினர் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.

வல்லக்கடவு முதல் முல்லைப் பெரியாறு அணை வரையிலான பழைய சாலையை புதுப்பிக்கவும், அதற்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டுவது உள்ளிட்ட சில பணிகளை, மத்திய சுற்றுச் சூழல் இலாகா அனுமதி பெற்று மேற்கொள்ளலாம்.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான அதிகாரம் படைத்த குழு, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று அளித்த அறிக்கையை கேரளா பெற்றுக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்டு 31-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.''
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டு உள்ளனர்.

24-7-2012

தமிழ் ஓவியா said...

அமெரிக்க விசுவாசம் அன்று; தமிழர்களின் மீதான வெறுப்பே தினமணிக்கு!



தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்ற அமெரிக்காவுக்கு லாலி பாடும் தினமணியைக் கடுமையாகக் கண்டித்து, 'தினமணியின் அமெரிக்க விசுவாசம்' என்னும் தலைப்பில், இன்றைய தீக்கதிர் நாளேட்டில் (23/07/12) ஒரு சீறும் சிறப்புக் கட்டுரை வெளியாகியுள்ளது; தீக்கதிருக்குப் பாராட்டுகள்!

".....இறந்தவர்கள் தமிழர்கள் என்பதால் மட்டுமே உணர்ச்சிவசப்படத் தேவையில்லை; துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் மீது கூட தவறு இருக்கலாம்! யாருடைய தவறு என்பது உறுதிப்படாத நிலையிலேயே இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணைத்தொகை அறிவிக்கப் படுவது அரசுகளின் வழக்கமாகிவிட்டது! மீனவர்கள் மீதுதான் தவறு என்று நாளை விசாரணையில் தெரிய வந்தால் அந்தத் தொகையைத் திரும்பப் பெற முடியுமா?.........." இது தினமணியின் வெறும் ஆதங்கம் மட்டுமல்ல; ஆத்திரம்! தமிழர்கள் மீதான வெறுப்பு!

தீக்கதிர் நாளேடு ஒரு விஷயத்தை நெற்றிப் பொட்டில் அடித்தது போல கேட்டுள்ளது. 'அந்த மீனவர்களின் பெயர்கள் மட்டும் இஸ்லாமியப் பெயர்களாக இருந்திருந்தால்.... இந்நேரம் அவர்களை அல்-கொய்தாவுடன் முடிச்சுப் போட்டு, "பின்லேடனின் கூட்டாளிகள்..." என்று கதை கட்டியிருக்கும்; இங்குள்ள பத்திரிகைகளும் அதை பக்கம் பக்கமாக வாந்தி எடுத்திருக்கும்! அமெரிக்காவின் அட்டூழியத்தை நியாயப்படுத்தித் தலையங்கம் எழுதி, தமிழர்களிடமே விற்பனை செய்கிறது தினமணி! நம் விடுதலை நாளேடு என்றும் சொல்லிவருவதை, இன்று தீக்கதிரும் சொல்கிறது; நல்லதொரு மாற்றமே!

(தமிழர்களுக்கு எதிரான இதைப்போன்ற கொடுமையை இன்னும் பல மடங்கு செய்யும் 'தினமலர்', துக்ளக்' போன்ற பத்திரிகைகள்!) தீக்கதிர் சொல்லத் தவறிய இன்னொரு அம்சத்தை நாம்(தான்) இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய தாயுள்ளது.

இறந்தவர்களின் முதுகில் பூணூல் மட்டும் தொங்கியிருந்திருக்குமேயானால், ஆர்.எஸ்.எஸ். வைத்தியநாத அய்யரின் தினமணி தலையங்கம் இந்த வகையிலா இருந்திருக்கும்?

அமெரிக்காவை சர்வதேச அரங்கில் தூக்குத் தண்டனைக் குற்றவாளியாக அல்லவா நிறுத்தி யிருக்கும்?
செத்துப்போனது கிள்ளுக்கீரை' தமிழர்கள் தானே?

பார்ப்பனர்களுக்கு...

அதுவும் ஆர்.எஸ்.எஸ்.பார்ப்பானுக்கு தமிழர்கள் என்றாலே வேப்பங்காய்தானே? அந்த வெறுப்பு உமிழும் பார்ப்பன பத்திரிகைகளான தினமணி, தினமலர், துக்ளக் போன்ற பத்திரிகைகளைத்தானே நம் பாழாய்ப்போன தமிழர்களும் காசு கொடுத்து வாங்கிப் படித்து, தம் மூளையைத் துருப்பிடிக்கச் செய்துகொள்வதோடு, அந்தப் பார்ப்பன ஏடுகளையும் வாழ வைத்துக் கொண்டுள்ளனர்? 'செஸ்' ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆகியுள்ளார் திரு.விஸ்வநாதன் ஆனந்த்! ஏற்கெனவே கோடீஸ்வர பிரபுவான ஆனந்துக்கு, தமிழக மக்களின் வரிப் பணத்தில்... சும்மா அஞ்சு லட்சமோ...பத்து லட்சமோ அல்ல; சொளையாக இருநூறு லட்சம் ரூபாய்களை (2 கோடி ரூபாய்) வாரிக் கொடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா.

நம் தமிழ்நாட்டில் பல்வேறு விளையாட்டு களிலும், பன்மடங்கு திறனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நம் தமிழர் குடும்பத்துப் பிள்ளைகள் தேசிய அளவில் - உலக அளவில் - ஒலிம்பிக்கில் பங்கேற்க வசதி வாய்ப்பின்றி, அரசின் உதவி கிடைத்திடாதா என்று ஏங்கித் தவிக்கின்றனர். விஸ்வநாதன் ஆனந்துக்கு இவ்வளவு பெரிய தொகையை அள்ளிக் கொடுக்க வேண்டுமா? ஏழை வீரர்களுக்குக் கிள்ளிக் கிள்ளி கொடுத்து ஊக்குவித்திருந் தாலும், இன்று தமிழக வீரர்கள் தேசிய அள விலும், உலக அளவிலும், நடைபெறப்போகும் ஒலிம்பிக்கிலும் ஒளிவிடும் நட்சத்திரங்களாய்ப் பிரகாசிப்பார்களே என்று இந்தத் தினமணி, தினமலர், துக்ளக் பார்ப்பனக் கும்பல் எழுது கோலைச் சுழற்றியதா? இதே விஸ்வநாதன் ஆனந்த் ஒரு தமிழனாய் இருந்திருந்தால், இந்தத் தினமணிக் கும்பல் மேற்கூறிய ரீதியில் குரைத்துக் குதறியிருக்காது?
ஏன்? பரமக்குடியில் ஜெயலலிதாவின் போலிசால் இன்னுயிரை இழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக 2 லட்சம் என்பதை 5 லட்சமாக உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று கிட்டத்தட்ட அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை வைத்தபோது, அசைந்துகொடுக்க மறுத்தார் ஜெயலலிதா. அப்போது(ம்) இந்தப் பார்ப்பன தினமணி வகையறா தம் எல்லாத் துளைகளையும் பொத்திக் கொண்டு மவுனித்துக் கிடந்தனவே? அதுவே பார்ப்பான் வீட்டில் விழுந்த எழவாய் இருந்திருந்தால், தினமணி கும்பல் தம் சிண்டை அவிழ்த்துப்போட்டு, வீதியில் இறங்கி தாண்டவ மாடியிருக்காதா?

ஆக, தினமணியின் அந்தத் தலையங்கத்தின் நோக்கம் அமெரிக்காவுக்கு லாலி பாடுவது என்பது அன்று; செத்துப்போன தமிழர்களின் - சூத்திரர்களின் பிணங்களை அப்படி ஓரமாய்க் கூட்டித் தள்ளிவிட்டுப் போ......ய்க்கிட்டே இருக் காமல், அதென்ன அஞ்சு லட்ச ரூபாயை அள்ளிக் கொடுப்பது?' என்கிற ஆத்திரமே!

- மதுரை அன்புமதி 24-7-2012

தமிழ் ஓவியா said...

வெலிக்கடை


ஜூலை 25 ஆம் நாளை மறக்க முடியுமா? ஆம், இந் நாளில்தான் 1983 இல் - உலகம் கேள்விப்பட்டிராத வெங்கொடுமை நிகழ்ந் தது. இப்பொழுது நினைத் தாலும் குருதி உறைந்து விடும்!

இலங்கையில் வெலிக் கடை சிறையில் தமிழ்ப் போராளிகளை, சிங்கள வெறியர்கள் புகுந்து படு கொலை செய்த பொல்லா நாள் இந்நாள்!

கொலை செய்யப்பட்ட வர்களுள் ஒருவர் குட்டி மணி. மரண தண்டனை கைதியாக அச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர்.

சிறையில் இருந்த போதே தேர்தலில் நின்று நாடாளுமன்ற உறுப்பின ராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 27 வயது கொண்ட இளை ஞர் அவர்.

விடுதலை பெறும் ஈழத்தை இந்தக் கண் களால் பார்ப்போம் என்று கனவு கண்டு கொண் டிருந்த அந்த வீரனின் - கண்களைப் பிடுங்கிக் காலால் இடறினார்களே இரக்கமற்ற அந்தச் சிங் கள ஓநாய்கள்.

சிறைதான் பாதுகாப்பு இடம் என்பார்கள். தமிழர் கள் என்றால் இலங்கையில் சிறையிலும்கூடப் பாதுகாப் புக் கிடையாது.

கொலை செய்யப்பட்ட மற்றொரு விடுதலைப்புலி யோகேசுவரன் என்ற ஜெகன். மற்றொரு வீரன் தங்கதுரை. இவர்களோடு வெலிக்கடை சிறையில் பாதகர்களால் படுகொலை செய்யப்பட்ட போராளிகள்,

செல்லத்துரை, குகன், கருப்பையா என்ற கிருஷ்ண குமார், யோகநாதன், உதய குமார், அமுதன், அழகு ராஜா, சிற்றம்பலம், சாந்த குமார், வைத்திலிங்கம், நடராசன் என்ற தங்கவேல் மற்றும் சிவபாதம்.

இராணுவத்தினர் முன் னிலையில் சிறைக்குள் புகுந்து கொடிய ஆயுதங் களால் இந்தக் கொலை களைச் செய்தனர். அப்படி என்றால் அரசே உடந்தை என்று பொருள்!

தமிழர்கள் கொல்லப் பட்டது மட்டுமல்ல; கொழும்பு நகரில் இருந்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந் தியா கட்டடமும், இந்தியத் தூதரக அலுவலகமும் கூட சிங்கள இனவெறிக் காடை யர்களால் எரியூட்டப்பட்டன - தமிழர்கள் சூறையாடப் பட்டனர்.

தமிழ்நாடே திரண்டு நின்றது - மாபெரும் பேர ணியை நடத்திக்காட்டியது. இந்திய அரசு அன்று நினைத்திருந்தால், இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் தொடக்கத்திலேயே முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு இருக் கும்.

என்ன செய்வது, நாம் தமிழர்கள் ஆயிற்றே!

- மயிலாடன் 5-7-2012

தமிழ் ஓவியா said...

சகுனங்கள் சரியா?




மக்களிடையே மண்டிக் கிடக்கின்ற மூடநம்பிக்கைகளுள் சகுன நம்பிக்கையும் ஒன்று. இதனால் ஏற்படும் பாதிப்புகள், கேடுகள், இழப்புகள் ஏராளம் என்பதோடு இவை உருவாக்கும் மன உளைச்சல், வீண்பழி, மனத்தளர்ச்சி, வாழ்விழப்பு போன்றவை ஏராளம். குறிப்பாக, விதவைப் பெண்களும், திருமணத்தை எதிர்நோக்கும் இளம்பெண்களும் அடையும் இழப்பும், இன்னல்களும் ஏராளம். ஒரு பெண்ணின் வாழ்வையே பல்லியின் ஓசையில் பலிகொடுக்கும் அவலமும் இதில் அடங்கும். எனவே, சகுனம் பற்றிய விழிப்புணர்வு பிஞ்சுகளுக்கேயன்றி பெரியவர்களுக்கும் வேண்டும்.

சகுனங்கள் பல வகைப்படும்:

மனிதர்கள்: எதிரில் வரும் மனிதர்கள் யார்? என்பதை வைத்து சகுனம் பார்க்கப்படுகிறது.

சலவைத் தொழிலாளி, பால்காரர் எதிரில் வந்தால் நல்ல சகுனம்; எண்ணெய், விறகு எடுத்துக்கொண்டு எதிரில் வந்தால் கெட்ட சகுனம்.

காரணம், பால் மங்கலப் பொருள். அழுக்கு நீக்கி ஆடை வெளுப்பவர் சலவைத் தொழிலாளி. எனவே, நல்ல சகுனம். எண்ணெய், விறகு அமங்கலப் பொருள். எனவே, அது கெட்ட சகுனம்.

விதவை வாழ்வு இழந்தவள். அதனால் கெட்ட சகுனம். சுமங்கலி வாழ்வுடையவள். எனவே, நல்ல சகுனம்.

ஒலி: சங்கு ஊதினால், வெடிவெடித்தால் கெட்ட சகுனம். மணி ஒலித்தால் நல்ல சகுனம்.

பறவை: சில பறவைகள் கத்தினால் நல்லது. ஆந்தை போன்றவை கத்தினால் கெட்ட சகுனம்.

பல்லி: கத்துகின்ற இடத்தைப் பொறுத்து நல்ல சகுனம், கெட்ட சகுனம் என்று கொள்ளப்படுகிறது.

விலங்கு: கழுதை கத்தினால் நல்ல சகுனம். பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனம்.

தோணி(ஓடம்) : ஆற்றின் இக்கரையில் இருந்தால் நல்ல சகுனம். அக்கரையில் இருந்தால் கெட்ட சகுனம்.

தும்மல்: சிலர் தும்மினால் நல்ல சகுனம். சிலர் தும்மினால் கெட்ட சகுனம்.

வார்த்தைகள்: ஒரு காரியத்திற்குச் செல்லும் போது, காதில் விழும் வார்த்தைகளை வைத்து நல்ல கெட்ட சகுனம் கணிக்கப்படுகிறது.

பொருள்கள் தவறிவீழ்தல்: விழாமல் பிடித்துக் கொண்டால் நல்ல சகுனம். தவறி விழுந்தால் கெட்ட சகுனம். தவறி விழுந்து பொருள் உடைந்தால் பாதிப்பு வரும் என்ற நம்பிக்கை.

மேற்கண்ட சகுனங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. காட்சியின் தன்மையை வைத்து நல்ல காட்சியாயின் நல்ல சகுனம்; கெட்ட காட்சியாயின் கெட்ட சகுனம்.

2. நாம் எதிர்நோக்கும் ஆளோ, பொருளோ, வாகனமோ அமைவது, சாதகமான நிலையாயின் நல்ல சகுனம், பாதகமான நிலையாயின் கெட்ட சகுனம்.

3. மரபுவிழா சொல்லப்படும் சகுனங்கள்: முதலாவதாக, நல்ல காட்சி - நற்சகுனம் கண்டால் - நல்லது நடக்கும் என்பதும், கெட்ட காட்சி - கெட்ட சகுனம் கண்டால் கெட்டது நடக்கும் என்பதும், நம் மனதில் எழும் வெறுப்பு விருப்புகளின் வெளிப்பாடாகும்.

இரண்டாவதாக, காட்சி சாதகமா அல்லது பாதகமா என்பதை வைத்து எழும் சகுன நம்பிக்கை, நடக்கப்போகும் காரியத்தின் முன்னறிவிப்பாக இக்காட்சிகளைக் கருதும் அறியாமையால் எழுகிறது.

மூன்றாவதாக, பல்லி, பூனை போன்ற சகுன நம்பிக்கைகள் மரபு வழியில் கற்பிக்கப்பட்ட சகுன நம்பிக்கைகள் ஆகும்.

விதவை என்பவள் வாழ்விழந்தவள், அலங்கோலப்படுத்தப்பட்டவள். எனவே, அவள் எதிரில் வந்தால் கெட்டது நடக்கும் என்ற நம்பிக்கை. அவள் மீதுள்ள வெறுப்பால் எழுந்தது. நடக்கப்போகும் கெடுதலுக்கு அவள் எப்படிப் பொறுப்பாவாள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

நடக்கப்போகும் கெடுதலுக்கு வாழ்விழந்த பெண்ணை, அபாய அறிவிப்பாக ஆக்குவதும், அதை நம்புவதும் அடிமுட்டாள்தனமல்லவா? அநியாயம் அல்லவா?

நடக்குப்போகும் காரியத்திற்கு, புறப்படுமுன் நல்லதாயின் நல்லது நடக்கும் என்பதும், கெட்டதாயின் கெட்டது நடக்கும் என்பதும், காட்சியோடு காரியத்தைப் பொருத்திப் பார்க்கும் மூடத்தனத்தின் விளைவாகும்.

இந்தக் காட்சிகளை பலமுறைச் சோதித்துப் பார்த்தால், கெட்ட சகுனத்தைப் பார்த்துச் சென்றபோது நல்லது நடப்பதையும், நல்ல சகுனத்தைப் பார்த்துச் சென்றபோது கெட்டது நடப்பதையும் நாம் அறியலாம்.

எந்தவொரு காட்சியும், வார்த்தையும், ஒலியும் நடக்கப்போவதை அறிவிக்கக் கூடியவை அல்ல. எல்லாம் நமது உள விருப்பு, வெறுப்பின் வெளிப்பாடுகள்; தொடர்புப்படுத்திப் பார்ப்பதன் விளைவுகள்.

மேலும், ஒரே காட்சியை, ஒரே சகுனத்தைப் பார்த்துச் செல்கின்ற அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் கிடைப்பதில்லை. விதவையைப் பார்த்துச் சென்ற ஒருவருக்குக் கெட்டது நடந்திருந்தால், இன்னொருவருக்கு நல்லது நடந்திருக்கும். எனவே, காட்சிகளுக்கும், நடக்கப்போகும் காரியங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை, பிஞ்சுக் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் நன்கு சிந்தித்து, சகுன நம்பிக்கையென்னும் மூடநம்பிக்கையை விட்டொழித்து பகுத்தறிவுப் பாதையில் பரிசோதித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

- சிகரம்

தமிழ் ஓவியா said...

சகுனங்கள் சரியா?




மக்களிடையே மண்டிக் கிடக்கின்ற மூடநம்பிக்கைகளுள் சகுன நம்பிக்கையும் ஒன்று. இதனால் ஏற்படும் பாதிப்புகள், கேடுகள், இழப்புகள் ஏராளம் என்பதோடு இவை உருவாக்கும் மன உளைச்சல், வீண்பழி, மனத்தளர்ச்சி, வாழ்விழப்பு போன்றவை ஏராளம். குறிப்பாக, விதவைப் பெண்களும், திருமணத்தை எதிர்நோக்கும் இளம்பெண்களும் அடையும் இழப்பும், இன்னல்களும் ஏராளம். ஒரு பெண்ணின் வாழ்வையே பல்லியின் ஓசையில் பலிகொடுக்கும் அவலமும் இதில் அடங்கும். எனவே, சகுனம் பற்றிய விழிப்புணர்வு பிஞ்சுகளுக்கேயன்றி பெரியவர்களுக்கும் வேண்டும்.

சகுனங்கள் பல வகைப்படும்:

மனிதர்கள்: எதிரில் வரும் மனிதர்கள் யார்? என்பதை வைத்து சகுனம் பார்க்கப்படுகிறது.

சலவைத் தொழிலாளி, பால்காரர் எதிரில் வந்தால் நல்ல சகுனம்; எண்ணெய், விறகு எடுத்துக்கொண்டு எதிரில் வந்தால் கெட்ட சகுனம்.

காரணம், பால் மங்கலப் பொருள். அழுக்கு நீக்கி ஆடை வெளுப்பவர் சலவைத் தொழிலாளி. எனவே, நல்ல சகுனம். எண்ணெய், விறகு அமங்கலப் பொருள். எனவே, அது கெட்ட சகுனம்.

விதவை வாழ்வு இழந்தவள். அதனால் கெட்ட சகுனம். சுமங்கலி வாழ்வுடையவள். எனவே, நல்ல சகுனம்.

ஒலி: சங்கு ஊதினால், வெடிவெடித்தால் கெட்ட சகுனம். மணி ஒலித்தால் நல்ல சகுனம்.

பறவை: சில பறவைகள் கத்தினால் நல்லது. ஆந்தை போன்றவை கத்தினால் கெட்ட சகுனம்.

பல்லி: கத்துகின்ற இடத்தைப் பொறுத்து நல்ல சகுனம், கெட்ட சகுனம் என்று கொள்ளப்படுகிறது.

விலங்கு: கழுதை கத்தினால் நல்ல சகுனம். பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனம்.

தோணி(ஓடம்) : ஆற்றின் இக்கரையில் இருந்தால் நல்ல சகுனம். அக்கரையில் இருந்தால் கெட்ட சகுனம்.

தும்மல்: சிலர் தும்மினால் நல்ல சகுனம். சிலர் தும்மினால் கெட்ட சகுனம்.

வார்த்தைகள்: ஒரு காரியத்திற்குச் செல்லும் போது, காதில் விழும் வார்த்தைகளை வைத்து நல்ல கெட்ட சகுனம் கணிக்கப்படுகிறது.

பொருள்கள் தவறிவீழ்தல்: விழாமல் பிடித்துக் கொண்டால் நல்ல சகுனம். தவறி விழுந்தால் கெட்ட சகுனம். தவறி விழுந்து பொருள் உடைந்தால் பாதிப்பு வரும் என்ற நம்பிக்கை.

மேற்கண்ட சகுனங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. காட்சியின் தன்மையை வைத்து நல்ல காட்சியாயின் நல்ல சகுனம்; கெட்ட காட்சியாயின் கெட்ட சகுனம்.

2. நாம் எதிர்நோக்கும் ஆளோ, பொருளோ, வாகனமோ அமைவது, சாதகமான நிலையாயின் நல்ல சகுனம், பாதகமான நிலையாயின் கெட்ட சகுனம்.

3. மரபுவிழா சொல்லப்படும் சகுனங்கள்: முதலாவதாக, நல்ல காட்சி - நற்சகுனம் கண்டால் - நல்லது நடக்கும் என்பதும், கெட்ட காட்சி - கெட்ட சகுனம் கண்டால் கெட்டது நடக்கும் என்பதும், நம் மனதில் எழும் வெறுப்பு விருப்புகளின் வெளிப்பாடாகும்.

இரண்டாவதாக, காட்சி சாதகமா அல்லது பாதகமா என்பதை வைத்து எழும் சகுன நம்பிக்கை, நடக்கப்போகும் காரியத்தின் முன்னறிவிப்பாக இக்காட்சிகளைக் கருதும் அறியாமையால் எழுகிறது.

மூன்றாவதாக, பல்லி, பூனை போன்ற சகுன நம்பிக்கைகள் மரபு வழியில் கற்பிக்கப்பட்ட சகுன நம்பிக்கைகள் ஆகும்.

விதவை என்பவள் வாழ்விழந்தவள், அலங்கோலப்படுத்தப்பட்டவள். எனவே, அவள் எதிரில் வந்தால் கெட்டது நடக்கும் என்ற நம்பிக்கை. அவள் மீதுள்ள வெறுப்பால் எழுந்தது. நடக்கப்போகும் கெடுதலுக்கு அவள் எப்படிப் பொறுப்பாவாள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

நடக்கப்போகும் கெடுதலுக்கு வாழ்விழந்த பெண்ணை, அபாய அறிவிப்பாக ஆக்குவதும், அதை நம்புவதும் அடிமுட்டாள்தனமல்லவா? அநியாயம் அல்லவா?

நடக்குப்போகும் காரியத்திற்கு, புறப்படுமுன் நல்லதாயின் நல்லது நடக்கும் என்பதும், கெட்டதாயின் கெட்டது நடக்கும் என்பதும், காட்சியோடு காரியத்தைப் பொருத்திப் பார்க்கும் மூடத்தனத்தின் விளைவாகும்.

இந்தக் காட்சிகளை பலமுறைச் சோதித்துப் பார்த்தால், கெட்ட சகுனத்தைப் பார்த்துச் சென்றபோது நல்லது நடப்பதையும், நல்ல சகுனத்தைப் பார்த்துச் சென்றபோது கெட்டது நடப்பதையும் நாம் அறியலாம்.

எந்தவொரு காட்சியும், வார்த்தையும், ஒலியும் நடக்கப்போவதை அறிவிக்கக் கூடியவை அல்ல. எல்லாம் நமது உள விருப்பு, வெறுப்பின் வெளிப்பாடுகள்; தொடர்புப்படுத்திப் பார்ப்பதன் விளைவுகள்.

மேலும், ஒரே காட்சியை, ஒரே சகுனத்தைப் பார்த்துச் செல்கின்ற அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் கிடைப்பதில்லை. விதவையைப் பார்த்துச் சென்ற ஒருவருக்குக் கெட்டது நடந்திருந்தால், இன்னொருவருக்கு நல்லது நடந்திருக்கும். எனவே, காட்சிகளுக்கும், நடக்கப்போகும் காரியங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை, பிஞ்சுக் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் நன்கு சிந்தித்து, சகுன நம்பிக்கையென்னும் மூடநம்பிக்கையை விட்டொழித்து பகுத்தறிவுப் பாதையில் பரிசோதித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

- சிகரம்

தமிழ் ஓவியா said...

அறிஞர்களில் வாழ்வில்..



வாழ்க்கைக்கு சாவே இல்லை!

தூக்கு மேடைக்குச் செல்வதற்கு முதல் நாள் இரவு ஒப்பற்ற இலக்கியத்தைப் படைத்தவர் ஜூலியஸ் பியூசிக். செக்கோஸ்லோவாகியா நாட்டின் புரட்சிமிக்க எழுத்தாளராகத் திகழ்ந்தவர்,பத்திரிகையாளர், அந்நாட்டுப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினர்.

நாஜிக்களின் தலைவன் ஹிட்லரால் செக்கோஸ்லோவாகியா நாட்டினர் துன்புறுத்திக் கொலை செய்யப்பட்டனர். நாஜிக்களின் நாசப் போக்கைக் கண்டித்து 1929இல் சிருஷ்டி பத்திரிகையில் தலையங்கம் எழுதினார் ஜூலியஸ் பியூசிக்.

இவரது எழுத்துகள் நாட்டு மக்களைத் தட்டி எழுப்பி வீறுகொள்ள வைத்தன. மக்களைத் தூண்டிவிட்டதற்காக பியூசிக்கையும் வேட்டையாட உத்தரவிட்டார் ஹிட்லர். இதனை அறிந்த பியூசிக் தலைமறைவானார். எனினும், பத்திரிகை தொடர்ந்து வெளிவந்தது. நிறைய இலக்கியங்களைப் படைத்தார்.

1942 ஏப்ரல் 24 இல் ஹிட்லரின் ரகசிய காவல் துறையினர் பியூசிக்கைக் கைது செய்து கொடுமைப்படுத்தினர். அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நீதிமன்றத்தில் நீதிபதியிடம், உங்கள் நாடகத்தை நான் பார்ப்பது மட்டுமல்ல, உணரவும் செய்கிறேன். உங்கள் தீர்ப்பு என்ன என்பது எனக்குத் தெரியும். எனது உயிரைப் போக்க, விசாரணை என்பது ஒரு நாடகம். உண்மையில் குற்றவாளி நீங்கள்தான். நான்தான் நீதிபதி, எனது தீர்ப்பை எப்போதோ எழுதிவிட்டேன். என் தீர்ப்பின் மூலம் நாஜிசத்திற்கு மரண தண்டனை விதிக்கிறேன். எதிர்காலம் என் தீர்ப்பை நிச்சயம் நிறைவேற்றும் என்றார்.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதும், தாய், சகோதரி, மனைவி ஆகியோருக்குக் கடிதம் எழுத அனுமதி கேட்டார். அனுமதி கொடுக்கப்பட்டது. ஒரே கடிதமாக எழுதினார். எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பேதைகளால் என் மன மகிழ்ச்சியை மாய்க்க முடியவில்லை. தூக்கிலிடுவதால் எந்த ஒரு மனிதனின் மதிப்பும் தாழ்வதில்லை. என் வாழ்வு முடிந்த பிறகு, நான் இதுவரை மகிழ்ச்சியுடனேயே இருந்தேன் என்ற உண்மையினை உணர்ந்து நீங்களும் மகிழ்ச்சியடையுங்கள் என்பதே எனது விருப்பம் என்று முடித்தார்.

தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு முந்தைய நாள் இரவு, சிறைக்காவலன் பியூசிக்கிடம் வந்து உங்கள் தேசபக்தியை விரும்பும் ஆயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன். தங்களது கடைசி ஆசையைச் சொல்லுங்கள், நிறைவேற்றுகிறேன் என்றார்.

கொஞ்சம் தாள்களும், எழுதுகோலும் தேவை என்றார். கொண்டுவந்து கொடுத்ததும் எழுதி முடித்துவிட்டு, தனது மனைவியிடம் எப்படியாவது ஒப்படைத்துவிடுங்கள் என்று சிறைக் காவலரிடம் கொடுத்தார் பியூசிக்.

காலையில் தூக்குமேடையில், தூக்குக் கயிற்றை முத்தமிட்டபடியே இன்பத்துக்காக வாழ்ந்தேன்; இன்பத்துக்காகப் போராடினேன்; இன்பத்துக்காக இதோ இறந்து கொண்டிருக்கிறேன். எனவே, துன்பம் என் பெயரோடு எந்தக் காலத்திலும் இணைக்கப்படக்கூடாது; அது முறையல்ல. வாழ்க்கையை நான் முழுமையாகக் காண்கிறேன். என்னிடம் இருக்கும் அனைத்தும், வாழ்க்கை எனக்கு அளித்த பரிசு. வாழ்க்கை மிகச் சிறந்தது, உயர்ந்தது, ஈடு இணையற்றது. அழிக்கவே முடியாதது. வாழ்க்கைக்குச் சாவே இல்லை என்றார்.

சிறைக்காவலர் கடைசியாக பியூசிக் எழுதியவற்றை அவரது மனைவி அகஸ்டினாவிடம் ஒப்படைத்தார். அவர் அதனைப் புத்தகமாக வெளியிட்டார். 12 மணி நேரப் படைப்புக் காவியம். உலகம் முழுவதும் வீர காவியமாக 80 உலக மொழிகளில் 200 பதிப்புகளைக் கண்ட வெற்றிக் காவியமாக உலா வருகிறது. தமிழில் தூக்கு மேடைக் குறிப்புகள் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

ஜூலியஸ் பியூசிக் இறக்கவில்லை; நூல் வடிவில் உலவி நம்முன் - நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

அறிஞர்களில் வாழ்வில்..



வாழ்க்கைக்கு சாவே இல்லை!

தூக்கு மேடைக்குச் செல்வதற்கு முதல் நாள் இரவு ஒப்பற்ற இலக்கியத்தைப் படைத்தவர் ஜூலியஸ் பியூசிக். செக்கோஸ்லோவாகியா நாட்டின் புரட்சிமிக்க எழுத்தாளராகத் திகழ்ந்தவர்,பத்திரிகையாளர், அந்நாட்டுப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினர்.

நாஜிக்களின் தலைவன் ஹிட்லரால் செக்கோஸ்லோவாகியா நாட்டினர் துன்புறுத்திக் கொலை செய்யப்பட்டனர். நாஜிக்களின் நாசப் போக்கைக் கண்டித்து 1929இல் சிருஷ்டி பத்திரிகையில் தலையங்கம் எழுதினார் ஜூலியஸ் பியூசிக்.

இவரது எழுத்துகள் நாட்டு மக்களைத் தட்டி எழுப்பி வீறுகொள்ள வைத்தன. மக்களைத் தூண்டிவிட்டதற்காக பியூசிக்கையும் வேட்டையாட உத்தரவிட்டார் ஹிட்லர். இதனை அறிந்த பியூசிக் தலைமறைவானார். எனினும், பத்திரிகை தொடர்ந்து வெளிவந்தது. நிறைய இலக்கியங்களைப் படைத்தார்.

1942 ஏப்ரல் 24 இல் ஹிட்லரின் ரகசிய காவல் துறையினர் பியூசிக்கைக் கைது செய்து கொடுமைப்படுத்தினர். அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நீதிமன்றத்தில் நீதிபதியிடம், உங்கள் நாடகத்தை நான் பார்ப்பது மட்டுமல்ல, உணரவும் செய்கிறேன். உங்கள் தீர்ப்பு என்ன என்பது எனக்குத் தெரியும். எனது உயிரைப் போக்க, விசாரணை என்பது ஒரு நாடகம். உண்மையில் குற்றவாளி நீங்கள்தான். நான்தான் நீதிபதி, எனது தீர்ப்பை எப்போதோ எழுதிவிட்டேன். என் தீர்ப்பின் மூலம் நாஜிசத்திற்கு மரண தண்டனை விதிக்கிறேன். எதிர்காலம் என் தீர்ப்பை நிச்சயம் நிறைவேற்றும் என்றார்.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதும், தாய், சகோதரி, மனைவி ஆகியோருக்குக் கடிதம் எழுத அனுமதி கேட்டார். அனுமதி கொடுக்கப்பட்டது. ஒரே கடிதமாக எழுதினார். எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பேதைகளால் என் மன மகிழ்ச்சியை மாய்க்க முடியவில்லை. தூக்கிலிடுவதால் எந்த ஒரு மனிதனின் மதிப்பும் தாழ்வதில்லை. என் வாழ்வு முடிந்த பிறகு, நான் இதுவரை மகிழ்ச்சியுடனேயே இருந்தேன் என்ற உண்மையினை உணர்ந்து நீங்களும் மகிழ்ச்சியடையுங்கள் என்பதே எனது விருப்பம் என்று முடித்தார்.

தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு முந்தைய நாள் இரவு, சிறைக்காவலன் பியூசிக்கிடம் வந்து உங்கள் தேசபக்தியை விரும்பும் ஆயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன். தங்களது கடைசி ஆசையைச் சொல்லுங்கள், நிறைவேற்றுகிறேன் என்றார்.

கொஞ்சம் தாள்களும், எழுதுகோலும் தேவை என்றார். கொண்டுவந்து கொடுத்ததும் எழுதி முடித்துவிட்டு, தனது மனைவியிடம் எப்படியாவது ஒப்படைத்துவிடுங்கள் என்று சிறைக் காவலரிடம் கொடுத்தார் பியூசிக்.

காலையில் தூக்குமேடையில், தூக்குக் கயிற்றை முத்தமிட்டபடியே இன்பத்துக்காக வாழ்ந்தேன்; இன்பத்துக்காகப் போராடினேன்; இன்பத்துக்காக இதோ இறந்து கொண்டிருக்கிறேன். எனவே, துன்பம் என் பெயரோடு எந்தக் காலத்திலும் இணைக்கப்படக்கூடாது; அது முறையல்ல. வாழ்க்கையை நான் முழுமையாகக் காண்கிறேன். என்னிடம் இருக்கும் அனைத்தும், வாழ்க்கை எனக்கு அளித்த பரிசு. வாழ்க்கை மிகச் சிறந்தது, உயர்ந்தது, ஈடு இணையற்றது. அழிக்கவே முடியாதது. வாழ்க்கைக்குச் சாவே இல்லை என்றார்.

சிறைக்காவலர் கடைசியாக பியூசிக் எழுதியவற்றை அவரது மனைவி அகஸ்டினாவிடம் ஒப்படைத்தார். அவர் அதனைப் புத்தகமாக வெளியிட்டார். 12 மணி நேரப் படைப்புக் காவியம். உலகம் முழுவதும் வீர காவியமாக 80 உலக மொழிகளில் 200 பதிப்புகளைக் கண்ட வெற்றிக் காவியமாக உலா வருகிறது. தமிழில் தூக்கு மேடைக் குறிப்புகள் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

ஜூலியஸ் பியூசிக் இறக்கவில்லை; நூல் வடிவில் உலவி நம்முன் - நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

அறிஞர்களின் வாழ்வில்...

ஏழைகளுக்காகவே வாழ்ந்தவர்

நடு இரவில் கத்தியுடன் ஜோதிராவ் ஃபூலேயின் வீட்டிற்குள் இருவர் நுழைந்தனர். ஏதோ சத்தம் கேட்பதைப் போல் தூக்கத்தில் உணர்ந்த ஜோதிராவ் எழுந்தார். சிறு விளக்கினைக் கையில் ஏந்தி, யார் என வினவினார். வந்த இருவரும், உங்களைக் கொலை செய்ய வந்திருக்கிறோம் என்றனர். உங்களுக்கு நான் ஏதேனும் கெடுதல் செய்துள்ளேனா என்றார்.

இல்லை என்று சொல்லிவிட்டு, உங்களைக் கொல்லச் சொல்லி எங்களைச் சிலர் அனுப்பியுள்ளனர் என்றனர்.

இதனால் உங்களுக்கு என்ன லாபம் என்றார் ஜோதிராவ். ஒவ்வொருவருக்கும் 1,000 ரூபாய் கொடுப்பதாகச் சொல்லியுள்ளனர் என்றனர்.

உடனே ஜோதிராவ், எனது மரணம் உங்களுக்கு லாபம் கொடுக்கும் என்றால் உங்களுக்கு முன்பு வந்து நிற்கிறேன், என்னைக் கொல்லுங்கள். எந்த ஏழை மக்களுக்காக நான் ஊழியம் புரிந்தேனோ, எந்த ஏழை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேனோ அவர்களாலேயே நான் கொல்லப்படுவதைப் பெருமையாகவே நினைக்கிறேன்.

ஏழைகளுக்காகவே வாழ்ந்தேன். என் மரணம் மூலம் ஏழைகளுக்குப் பலன் கிடைக்கிறது என்றால் அமைதியாக, கவலை, வேதனையின்றி மகிழ்ச்சியாகவே என் மரணத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

தங்கள் தவற்றினை உணர்ந்த இருவரும் அவரின் காலில் விழுந்தனர். இப்படிப்பட்ட நல்ல மனம் படைத்த ஒருவரைக் கொல்லச் சொன்ன அந்த எதிரியைக் கொன்று வருகிறோம், அனுமதி கொடுங்கள் என்றனர்.

இதனைக் கேட்ட ஜோதிராவ், இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது. யாரிடமும் விரோதமும் கூடாது. அவர்கள் நீண்ட காலம் வாழட்டும் என்றார்.

வந்த இருவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. பின்பு, ரோடி என்பவன் பாதுகாவலனாக ஜோதிராவிடம் சேர்ந்தான். கும்பர், படித்துப் பண்டிதனாகி, அவரது உண்மை நாடுவோர் சங்கத்தின் தூணாகச் செயல்பட்டான். அடிமைத்தனம் பற்றிய புத்தகம் எழுதி ஜோதிராவின் கொள்கையைப் பரப்பினான்.

தமிழ் ஓவியா said...

செவ்வாயில் மனிதன் தோன்றினானா?

ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள பில்பாரா மாகாணத்தின் கடைக்கோடிப் பகுதியில் ஸ்டெரெலி ஏரி உள்ளது. அங்கு சுமார் 3 கோடியே 40 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய புதை படிவங்கள் கண்டெடுக்கப்பட்டன.

வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிபுணர்கள் அவற்றை ஆய்வு செய்தனர். அப்போது அதில் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்த நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருந்தன.

ஆனால், புதை படிவத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாக்டீரியாக்கள் 3 கோடியே 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை. அப்போது பூமியில் உயிர் வாழ்வதற்கான ஆக்சிஜன் இல்லை. கடல் நீரால் மட்டுமே பூமி சூழப்பட்டு இருந்தது. கடும் வெப்பமாகவும் இருந்தது. உயிர் வாழக்கூடிய தட்ப வெப்ப சூழ்நிலை இல்லை.

எனவே, உயிரினம் செவ்வாய் கிரகத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புதை படிவம் கண்டெடுக்கப்பட்ட பில்பாரா பகுதி செவ்வாய் கிரகத்தில் இருந்து விழுந்த வண்டல் மண் சார்ந்த பாறைகளாக இருக்கலாம். அவை மண்ணில் புதையுண்டு படிவங்களாக மாறியிருக்கிறது என்றும் கருதப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

பீரங்கி மரம்



பீரங்கி கேள்விப்பட்டிருப்பீர்கள்.அது என்ன பீரங்கி மரம்? ஆமாம், தென் அமெரிக்கா, அமேசான் வெப்ப மண்டலக் காடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் வளரக் கூடிய ஒரு வகை மரம்தான் இது. 1755 ஆம் ஆண்டில் பிரஞ்சு தாவரவியலாளரான ஜே எஃப்.ஆப்லட் என்பவர் இதனைக் கண்டறிந்தார். இந்த மரத்தின் பழங்கள் பழுப்பு நிறத்தில் பீரங்கிக் குண்டுகள்போல இருந்ததால் பீரங்கி மரம் (Cannon Tree) என்று பெயர் சூட்டப்பட்டது. 82 அடி வரை உயரமாக வளரும் இந்த மரத்தின் பூக்கள் ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். பழங்கள் 24 செ.மீ.அளவு விட்டமுள்ளதாகவும் மிகவும் கடினமானதாகவும் இருக்கும். ஒவ்வொரு பழத்திலும் 200 முதல் 300 விதைகள் உள்ளன. ஒரு பழத்தின் எடை 5 கிலோவுக்குக் குறையாமல் இருக்கும். எனவே, இம்மரத்தின் கீழே நிற்கக்கூடாது. ஏனென்றால், இப்பழம் கீழே விழும்போது மனிதனின் தலையில் விழுந்துவிட்டால் ஆளையே கொன்றுவிடுமாம். எனவே,இப்பழத்தை ஆட்கொல்லிப் பழம் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால், இதன் இலைகள் மற்றும் பூக்களில் இருந்து மருந்து தயாரித்து புண்களில் தடவினால் புண்கள் ஆறிவிடுமாம். இலைகளை மென்று சாப்பிட்டால் வாயின் ஈறுகளில் உள்ள நுண் கிருமிகள் வெளியேறி பற்கள் சொத்தையாகாமல் காப்பாற்றப்படுமாம். இந்த மரங்களைத் தமிழ்நாட்டில் சில இடங்களில் காணலாம். இதனை நாகலிங்க மரம் என்று சொல்லுவார்கள்.

தமிழ் ஓவியா said...

இவர்தான் சாகுமகராஜ்



சாகு மகராசர் தனது நிர்வாகத்துக் குட்பட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கு அனைத்து வேலைகளிலும் 50 சதவீத இடங்களை ஒதுக்கவேண்டும் என்று 1902 ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தார். இது போன்ற ஒரு சமூகநீதி ஆணை பிறப்பிக்கப்பட்டது அதுவே இந்தியாவில் முதன் முறை! பிறகு தென்னகத்தில் பல பகுதிகளில் இடஒதுக்கீடு ஆணை பிறப்பிப்பதற்கு இதுவே வழிகாட்டியாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து 1921 ஆம் ஆண்டு மைசூர் அரசாங்கமும் அதே ஆண்டு நீதிக்கட்சி ஆட்சி நடந்த சென்னை மாகாண அரசாங்கமும் - இதே போன்ற ஆணைகளைப் பிறப் பித்தன. பின்னர் 1925 ஆம் ஆண்டு பம்பாய் அரசாங்கமும் இதே போன்ற ஆணையைப் பிறப்பித்தது.

கோலாப்பூரில் 1894 இல் 71 அலு வலர்களில் 60 பேர் பார்ப்பனர்கள். 1912 இல் 95 அலுவலர்களில் 35 பேர் மட்டுமே பார்ப்பனர்கள்! இட ஒதுக்கீட்டால் ஒடுக்கப்பட்டவர்கள் வாய்ப்புகளைப் பெற வழி ஏற்பட்டது.

சாதி ஒழிப்பு

பிற்காலத்தில், இரண்டாம் கட்டத்தில், சாதி அமைப்பையே ஒழிக்க வேண்டும் எனக் குரல் கொடுக்கத் தொடங்கினார், சாகுமகராசர்.
தாம் சார்ந்த மராத்திய சாதியாரின் சார்பாக நின்று, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த பொழுது, சாகுமகராசருக்கு அவர்கள் பலமான ஆதரவு அளித்தனர். ஆனால் அவரே, பிற்காலத்தில், தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்திற்கும், சாதி ஒழிப்பிற்கும் உழைத்தபொழுது அவர்கள் முகம் கோணினர். ஆனால், அதைப் பற்றிக் கவலைப்படாமல் இவர் தம் பணியைத் தொடர்ந்தார்.

தாழ்த்தப்பட்டோர்

தாழ்த்தப்பட்டவர்கள் கல்வியும், பதவியும் பெறுவதில் சாகு மகராசர் தனிக் கவனம் செலுத்தினார். அவர்களுக்கு என மாணவர் விடுதி ஒன்றை நிறுவியதை ஏற்கெனவே கண்டோம்.

அரசு மருத்துவமனைகளில் பிற நோயாளிகளுடன் அவர்களையும் சம மாகக் கவனிக்கவும், நடத்தவும் ஏற்பாடு களைச் செய்தார்.

நிருவாகத்தில் அவர்களைப் பணியமர்த்தம் செய்தார்

அரசுக் கல்வி நிறுவனங்களிலும், மான்யம் பெற்று வந்தவைகளிலும் சாதி யின் பெயரால் மாணவர்களைப் பிளவு படுத்திப் பாகுபாடு காட்டக்கூடாது என்று ஆணையிட்டார்.

கோலாப்பூர் நகர சபைக்குச் சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்தார். தீண்டப்படாதவர் களுக்கும் போதிய இடங்களை அளித்தார். இவர் காலத்தில் முதன் முறையாகத் தாழ்த்தப் பட்டவர் ஒருவர் நகரசபையின் தலைவர் ஆனார்.

கிணறுகள், குளங்கள் முதலிய பொது இடங்களில் மற்றவர்களுடன் தாழ்த்தப் பட்டவர்களுக்கும் சம உரிமை அளித்தார். அவர்களுக்கெனத் தனியாக இருந்த பள்ளிகளை மூடிவிட்டுப் பொதுப் பள்ளி களில், எவ்வித வேறுபாடும் இன்றி அவர்களையும் சேர்க்கச் சொன்னார்.

தீண்டப்படாதவர்கள் வழக்குரைஞர் தொழில் செய்ய அனுமதி அளித்தார்

கிராமங்களில் எல்லாச் சாதியாரும் கணக்குப் பிள்ளைகளாக (குல்கர்னி களாக) நியமனம் பெற ஆணையிட்டார். அந்தப் பதவியில் மிகப் பெரும்பான்மை யாக இருந்த பார்ப்பனர்கள் இதற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆனால், சாகுமகராசர் அதைப் பொருட்படுத்தவில்லை. தாழ்த்தப்பட்டவர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டவர்கள் இந்தச் செல்வாக்கான பதவியில் அமர்ந்தனர். இந்த நடவடிக்கையால் பிற்காலத்தில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தன.

மகர்வடன்

மகர் என்ற தீண்டப்படாத சாதியார், கிராமத்தாருக்கும் அரசுக்கும் தண்டல், தலையாரி போன்ற வகையில் அடிமட்ட ஊழியம் செய்யவேண்டும். அதற்காக அவர்களுக்குச் சிறிது நிலம் அளிக்கப் பட்டது. அதற்கு மகர்வடன் எனப் பெயர். இரவு - பகலாக எல்லா வகையான கடின மான வேலைகளையும் கட்டாயமாகச் செய்து, அதற்காக அளிக்கப்பட்ட நிலத்தில் போதாத ஊதியமே பெற்று வந்தனர். சட்டப்படி வேலையை விட்டுவிட முடியாது. இவ்வாறு வேண்டாத வகையில் மகர்கள் நிலத்தோடு இறுகக் கட்டப் பட்டனர். இந்த முறையை ஒழிப்பதற்காக 1928 ஆம் ஆண்டு முதல், அவர் இறந்த 1956 ஆம் ஆண்டு வரை அண்ணல் அம்பேத்கர் பல வழிகளில் போராடினார்; முடியவில்லை. 1958 இல்தான் சட்டப்படி மகர்வடன் முறை ஒழிந்தது. அம்பேத்கர் பிற்காலத்தில் நிகழ்த்த விரும்பிய சீர்திருத்தத்தை, சாகுமகராசர் 1918 ஜூன் 25 இல் நிகழ்த்தினார். அந்த ஆண்டில் கோல்ஹாப்பூர் அரசின் மகர்வடன் முறையை ஒழிக்க ஆணை பிறப்பித்தார். ஆணையை மீறுவோர் தண்டத் தொகை செலுத்த வேண்டும் அல்லது சிறை செல்ல வேண்டும்.

(நூல் சமூகப் புரட்சியாளர் சாகுமக ராசர் - பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசான்)

குறிப்பு: இன்றுதான் சாகுமகராசர் முதல் இட ஒதுக்கீடு ஆணை பிறப்பித்த நாள் - 1902.
26-7-2012

தமிழ் ஓவியா said...

விளையாட்டிலும் வருண தர்மமே!

லண்டனில் ஒலிம்பிக் போட்டி தொடங்கப்பட உள்ளது. 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, இதில் எதைச் சாதிக்கப்போகிறது என்பது கேள்விக் குறியே!

ஆற்றலும், வலிமையும் கொண்ட மக்கள் கிராமப் புறங்களில், ஒடுக்கப்பட்ட மக்க ளிடையே பல்லாயிரக் கணக்கில் இருக்கத் தான் செய்கிறார்கள்.

வருணாசிரம ஜாதிய ஆதிக்கச் சிந்தனை குடி கொண்ட இந்துத்துவா மனப்பான்மை என்பது இந்தியாவில் இருக்கும் வரைக்கும் உலக சாதனைகள் என்பது கனவு உலகத் தில்தான் இருக்கும். பார்ப்பனியத் தன்மை கொண்ட கிரிக்கெட் போன்றவைதான் இந்தியாவில் கொழிக்க முடியும்.

இங்கு மதம் என்பது வெறும் நம்பிக்கை என்பது மட்டுமல்ல, மனதளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அடிப்படை நீரோட்டத்தைக் கொண்டது.

தலையெழுத்து நம்பிக்கையும், எதையும் பகவான் பாதத்தில் போடு என்கிற சோம்பேறி சித்தாந்தங்களும், அவற்றுடன் தொடர்பான கோயில் அமைப்பு முறைகளும், பண்டிகை களும் திருவிழாக்கள், சடங்குகள், சாத் திரங்களும் இந்தியாவில் வேர் பிடித்திருக்கும் வரை இங்கு தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஆற்றல்கள் வெடித்துக் கிளம்புவதற்கான அடிப்படை வாய்ப்புகளே கிடையாது.

கீதையைப் படிப்பதை விட ஒரு உதைப் பந்தைக் கற்றுக் கொள் என்று விவேகானந்தர் கூற்றையும் கூட கவனத்தில் எடுத்துக் கொள் ளலாம். தகவல் ஒன்று - புதுக்கோட்டை விடுதலை செய்தியாளர் தோழர் கண்ணன் மூலம் கிடைத்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்த சத்தக் குறிச்சியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் கத்தார் நாட்டின் தோகாவில் நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்று, உலக அளவில் நட்சத்திரமாக மின்னினார். தென்னாசியப் போட்டியில் தங்கம் வென்றார்.

இப்படி சாதனை படைத்த சாந்தியின் இன்றைய நிலை என்ன? வறுமைத் தேள் கொட்டப்பட்ட நிலையில், செங்கல் சூளையில் கற்களைச் சுமந்து குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்.

ஏன் இந்த நிலை? மத்திய அளவிலும், மாநில அளவிலும் விளையாட்டுத் துறைகள் இருக் கின்றனவே. இவை எதை வெட்டி முறிக் கின்றன? சாந்தி போன்றவர்களை அடையாளம் கண்டு தேவையான அறிவியல் ரீதியான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து உலக அளவில் நடக்கும் போட்டிகளில் சாதனை களைப் படைக்க ஏன் ஆக்க ரீதியாகச் சிந்திக்கக்கூடாது - செயல்படக்கூடாது?

கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள் என் றால், ராணுவத்தில் கூட பிரிகேடியர் தகுதியில் பணியமர்த்தம் செய்து, உயரிய அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. எந்தப் பணியையும் செய்யாமலேயே அந்தப் பதவிக் குரிய சம்பளம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் சேர்ந்து விடுகிறது. பெரிய பெரிய தனியார் நிறு வனங்களும் இதே போலவே பணியமர்த்தம் செய்து விளம்பரம் பெறுகின்றன.

ஆனால் உண்மையான திறமைகளை வெளிப்படுத்தும் தடகளப் போட்டிகளில் ஏன் இந்த வாய்ப்பு இல்லை? காரணம் தெரிந்ததே! தடகளப் போட்டிகளில் எந்தப் பார்ப்பனரும் ஒளிர்வதில்லை. கிரிக்கெட் போன்றவை பார்ப்பன தர்மம். தடகளப் போட்டிகள் சூத்திர, பஞ்சம தர்மம்.
இந்த வருணாசிரம தர்மம் ஒழிக்கப்படும் வரை கிராமப்புறத்துச் சாந்திகளுக்கு வாய்ப்பு ஏது?

இன்னொரு உண்மை தெரியுமா? சகோதரி சாந்தி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.

நாடு சுதந்திரம் பெற்றுவிட்டதாம். மக்கள் விடுதலை பெற்றுவிட்டார்களாம் - வெட்கக் கேடு! மகா வெட்கக்கேடு!! 26-7-2012

தமிழ் ஓவியா said...

எங்கு பார்த்தாலும் கோவில் விழாக்களில் கலவரம்

விருதுநகர்,ஜூலை 26- அருப்புக் கோட்டை அருகே கோவில் திருவி ழாவில் ஏற்பட்ட குழு மோதலில் 5 பேர் படுகாயம் அடைந்த னர். இது தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள கள்ளாக்காரி பஞ்சா யத்து தலைவராக இருப்பவர் வள்ளி. உள்ளாட்சி தேர்தலின் போது இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் மற்றொரு வள்ளி. இவர்களுக்கு இடையே தேர்தல் சம்பந்த மாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் அப் பகுதியில் உள்ள கோவிலில் விழா நடந்தது. இதில் பஞ்சாயத்து தலைவர் வள்ளி ஆதரவாளர்களுக்கும், மற்றொரு வள்ளி ஆதரவாளர் களுக்கும் இடையே குழு மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில், மலையான், வேல்மயில், ராஜமயில், நாகம் மாள், சந்தானம் ஆகியோர் படுகாயமடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் பரளச்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஜெயபாண்டி உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

அவதானப்பட்டியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் தொடர்ந்து பதற்றம்

கிருஷ்ணகிரி அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் ஆடிப் பண்டிகைக்கு பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த அடி-தடி மோதல் ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட் டோர் காயம் அடைந்தனர். இதையடுத்து கோவில் முன்பு அதிரடிப் படை காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

கிருஷ்ணகிரி அருகேயுள்ள அவதானப் பட்டியில் கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அவதானப்பட்டி மாரியம் மன் கோவில். இந்து அறநிலையத்துறை கண்காணிப்பில் உள்ள இந்த கோவிலை பரம்பரையாக உள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நிர்வகித்து வருகிறார்கள்.

இந்த கோவிலில் 6 மாதத்திற்கு ஒருமுறை உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் ரூ.10 லட்சத்துக்கு மேல் வருகிறது. இந்த பணத்தை கோவில் நிர்வாகிகள் வசம் ஒப்படைக்கப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவில் நிர்வகிப்பது சம்பந்தமாக அவதானப்பட்டியைச் சேர்ந்த முனியப்ப கவுண்டர் தரப்பிற்கும், திருப்பதி கவுண்டர் தரப்பிற்கும் இடையே நீண்ட காலமாக தகராறு இருந்து வருகிறது. இதையடுத்து இருதரப்பினரும் நீதிமன்றத்துக்கு சென்று வழக்குகள் நடந்து வருகிறது.

மேலும் ஒவ்வொரு ஆண்டு திருவிழா சமயம் மற்றும் உண்டியல் திறப்பின் போது இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. காவல் துறையினர் தலையிட்டு இருதரப் பையும் அமைதிப்படுத்தி வருகிறார்கள். கடந்த வாரம் உண்டியல் திறக்கப்பட்ட போது இருதரப் பினரையும் மோதிக் கொண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

கோவில் விழாவிற்காக நேற்று கோவிலை சுற்றி பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது முனியப்ப கவுண்டர் தரப்பினருக்கும், திருப்பதி கவுண்டர் தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.

இருதரப்பினரும் ஒருவரையொருவர் கட்டையாலும், கம்பாலும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் லட்சுமண கவுண் டர் உள்பட 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இருதரப்பினரும் வயல் வெளிகளில் ஓடிச் சென்று ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.

தகவலறிந்த கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் ஆய்வாளர் கன்னையன் தலைமையில் அதிரடிப் படை காவல்துறையினர் கோவில் முன்பு குவிக்கப் பட்டனர். இதனால் நிலைமை சற்று கட்டுக் குள் அடங்கியது. இருப்பினும் இருதரப் பினரும் மீண்டும் மோதிக் கொள்ளலாம் என காவல்துறையினர் கருதுவதால் காவல்துறை யினர் தொ டர்ந்து அவதானபட்டி கிராமம் மற்றும் கோவில் அமைந்துள்ள பகுதிகளில் தொ டர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் அவதானப்பட்டி பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து கிருஷ் ணகிரி தாலுகா காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். 26-7-2012

தமிழ் ஓவியா said...

பீகார் கோவில்கள்

இந்துக்கள் கோவில் கட்டுவதற்கு ஊக்கம் அளித்தது புத்த விகாரங்கள்தான் என்ற கருத்து நிலவுகின்றது. கடவுளைப் பற்றி எதுவும் சொல்லாத புத்தரை பிற்காலத்தில் புத்த மத ஆதரவாளர்கள் கடவுளாக அமர்த்தி வழிபட்டனர். இந்து மதத்தின் ஆதிக்கம்தான் அதில் பிரதிபலிக்கின்றதென்று வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித் துள்ளனர். எப்படியிருந்தாலும் சரி, புத்தருக்கு முன்பு இந்தியாவில் உருவ வழிபாடு பிரபலமடைந் திருக்கவில்லை.

பீகார், புத்தமதப் பணிகளில் தலைமையிடமாக இருந்தது. புத்த விகாரங்களின் ஆதிக்கத்தினால் தான் பீகார் என்ற பெயர் கூட உண்டானது என்று சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இந்து மதத்திலுள்ள பார்ப்பனப் பிரிவு புத்த மதத்துக்கு எதிராக கடுமையான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. சங்கராச்சாரியாரின் பங்கு அதில் மிக முக்கியமானதாகும். இந்தக் கட்டத்தில் ஏராளமான புத்த விகாரங்களை இந்துக் கோவில்களாக மாற்றவும் செய்தனர். இன்று பீகாரில் ஜைனர்கள், பவுத்தர்கள், இந்துக்கள் ஆகியோருக்கு ஏராளமான கோவில்கள் உள்ளன. திரண்ட சொத்துகளும் பெரும் ஆடம்பரங்களும் இவற்றைச் சூழ்ந்து கிடக்கின்றன. வருமானம் அதிகமாக உள்ள சில தென்னிந்தியக் கோவில்களுடன் ஒப்பிட்டால் இவற்றின் நிலை மோசமானதாகும். இந்தக் கோவில்களில் தங்க நகைகளும் விலை மதிப்புமிக்க பிற அசையும் சொத்துகளும் காணாமல் போய்விட்டன. அவை எப்படி காணாமல் போயின என்பது அதைப் பயன்படுத்துபவர்களுக்குத் தெரிந்த ரகசியமாகும். விசாரணை நடத்த யாரும் இல்லாததால் குற்றவாளிகள் தப்புகின்றனர்.27-7-2012

தமிழ் ஓவியா said...

லண்டனில் இருந்து ராஜபக்சவை ஓட ஓட விரட்டுவோம்-பிரிட்டன் தமிழர் ஒன்றியம்


லண்டன், ஜூலை 27- லண்டனில் நடை பெறும்ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்துகொள்ள வருகை தரும் இலங்கை அதிபர் மகிந்த ராஜ பக்சவை ஓடஓட விரட் டியடிக்க அனைவரும் ஓரணியில் திரள்வோம் என்று பிரிட்டன் தமி ழர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக பிரிட்டன் தமிழர் ஒன்றியம் வெளியிட் டுள்ள அறிக்கை:

லண்டனில் இன்று தொடங்கும் ஒலிம்பிக் தொடக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகைதரவுள்ள இலங்கைத் தீவின் இன வெறி அரச அதிபரான மகிந்த ராஜபக்சவை எதிர்த்துகுரல் கொடுத்து தமிழர்களின் ஒருமித்த பலத்தின் மூலம் பிரிட்டனை விட்டுவெளியேற்ற வேண்டிய காலத்தை பிரிட்டன் தமிழர்கள் எதிர்கொண்டு நிற்கின் றனர்.

ஏற்கனவே பிரிட் டன் தமிழர்களின் கடும் எதிர்ப்பு போராட் டங்களால் லண்டன் வருகை தந்திருந்த மகிந்த ராஜபக்ச தனது நிகழ்ச்சிகளை ரத்துச் செய்து உடனடியா கவே இலங்கை திரும் பியிருந்தார்.

இருப்பினும் மீண்டும் தமிழர்களுக்கு சவால் விடுகின்ற வகை யில் லண்டன் வரும் மகிந்தவை ஒன்றுபட்ட தமிழர்களாக பிரிட் டன் வாழ் தமிழர்கள் அனைவரும் எதிர் கொண்டு விரட்டியடிக்க வேண்டியது அவசியமா கிறது.

போராட்டம் நடைபெறும் இடம்

இந்த வகையில் ஹளயீந றயல , இல்அமைந்துள்ள க்ஷடைடபேளபயவந குளை ஆயசமநவ முன்பாக இன்று மாலை 5:00 மணி முதல் 9:00 மணி வரை நடைபெற வுள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பிரிட்டன் வாழ் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு பிரிட்டன் தமிழர் ஒன் றியம் கேட்டுக்கொள் கிறது.

இலங்கைத் தீவில் தமிழர்களை அழித்து, தமிழர்களின் வாழ்விடங் களை பறித்து சிங்கள, பவுத்த மயமாக்கும் முயற்சியில் ஆட்சி நடாத்திவரும் இனப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சவை ஒரே அணி யில் தமிழர்கள் என்ற உணர்வோடு, விரட்டிய டிப்போம்.

இதன் மூலம் பிரிட்ட னில் இம்முறை ஒலிம் பிக் போட்டிகளில் கலந் துகொள்ள வருகைதரும் 150 நாட்டு தலைவர் களுக்கும், 1000 க்கும் மேற்பட்ட இராஜதந்தி ரிகளுக்கும், பத்தாயிரத் துக்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும், பல இலட்சம் மக்க ளுக்கும் தமிழர்களின் உள்ளக் குமுறலையும், தமிழர்களுக்கு இளைக் கப்பட்ட அநீதிகளையும் எடுத்துச் சொல்லும் ஓர் அரிய வாய்ப்பாகவும் அமையும்.

இது போன்றதொரு அரிய சந்தர்ப்பம் எமக்கு இனி எப்போது கிடைக் கும் என்பது தெரியாது. எனவே இச் சந்தர்ப் பத்தை பயன்படுத்தி 2009 இல் எவ்வாறு இரண்டு இலட்சத்திற் கும் அதிகமாக தமிழ் மக்கள் கூடி போராட் டங்களைநடத்தி னோமோஅதே போன்று பெருமளவில் தமிழர்கள் ஒன்று திரண்டு இப் போராட்டத்தை நடத்த வேண்டி யது முக்கியமா கிறது.

இப்போராட்ட மானது பிரிட்டன் அர சிற்கு எதிரானதாகவோ, ஒலிம்பிக் நிகழ்வுகளை குழப்பும்நோக்கம் கொண்டதாகவோ, அன்றி ஒலிம்பிக்கின் புனித நோக்கத்தை புரிந்து கொள்ளாதவ ராகவும், மனித நேயத்தை மதிக்கத் தெரியாதவ ராகவும் விளங்கும் மகிந்த ராஜபக்ச இவ் விழாவில் கலந்து கொள்ள அருகதை யற்றவர் என்பதை எடுத்துணர்த்தும் போராட்டமாகவே தமிழர்களால் முன்னெ டுக்கப்படவேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும் புகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
27-7-2012