Search This Blog

29.7.12

திராவிடத்தை எதிர்க்கத் துணிந்துள்ள திரிபுவாதிகள்

திராவிடத்திலிருந்து தமிழைப் பிரிப்பது... அறிவுத் தடுமாற்றமா...! ஆரிய மயக்கமா ...!
ஆரியம், தமது மேம்பாட்டுக்கென வெளிப்படையாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு ஒரு இயக்கத்தையோ, கட்சியையோ தோற்றுவித்து செயல்பட துணிச்சலற்றது. ஆனால் வேறு எந்த இயக்கத்தையும், கட்சியையும் விட ஆகப் பெரிய சமூக சக்தியாக, அரசியல் சக்தியாக உயிர் வாழ்ந்து கொள்ளும் சூழ்ச்சியும் செயல்திறனும் உடையது.

ஆரியம் சார்ந்தவர்களில் சிலர் மன மாற்றம் பெற்று சமநிலை சமூகத்தின் பக்கம் நெருங்கி வந்தாலும், ஆரிய தீவிரவாதிகள் சிலர் அவ்வப்போது தோன்றி ஆரியத் தனித்தன்மைகளையும் காலம் காலமாக அதன் காரணமாக அனுபவித்து வரும் உயர்ந்த சலுகைகளையும் மனதில் கொண்டு சமநிலை சமூகத்திற்கான மாற்றத்தை நீர்த்துப் போகச் செய்கின்ற பணியில் ஒன்று திரட்டி சலியாது உழைக்கத் தொடங்கி விடுவார்கள். இதற்கென்று அவ்வப் போது அவர்களுக்கென்று சில அவதார புருஷர்களை உருவாக்கிக் கொள்வார்கள்.

இத்தகைய அவதாரபுருஷர்கள் சிலபோது அரசியல்வாதியாகவோ, பத்திரிகைக்காரர்களாகவோ, மடாதிபதிகளாகவோ, முன்னாள் நடிகர்களாகவோ, காமெடியன்களாகவோ, எந்த வகையினராகவும் இருக்கலாம்; அதற்காக அவர்கள் கவலையோ, வெட்கமோ படுவதில்லை. மற்றவர்களுக்கு மட்டும் தகுதி, திறமை போன்ற அளவீடுகள் பேசும் அவர்கள், தங்களின் சுயநல மேம் பாட்டுக்காக தலைமையை உருவாக்கி, வியாபாரம் செய்வதில் எவ்வித தகுதியும் திறமையும் பார்க்கமாட்டார்கள்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்த, அத்துமீறிய ஆரிய மொழிப் பண்பாட்டு ஆதிக்கத்தை எதிர்த்து 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி காலகட்டத்தில் தோன்றிய தமிழ் மறுமலர்ச்சி இயக்கம், சாதி, சமயம், அதன் சடங்குகள் என்கின்ற ஆரியப் பண்பாட்டு நிறுவனங்களை எதிர்க் காமலும், தவிர்க்க முயற்சிக்காமலும், அதே நேரத்தில் ஆரியத்தை, அதன் மொழி ஆதிக்கத்தை எதிர்த்து பல்வேறு முனைகளில் முயன்றும், மிகவும் பரிதாபகரமாகத் தோற்றுக் கொண் டிருந்த அவலத்தை தமிழக வரலாறு தெளிவாக நிறுவியுள்ளது.

இவ்வாறாக ஆரியத்தின் மேலாண்மையை வெற்றி கொள்வோம் என்று அணிவகுத்தவர்களில் சிலர் மெய்யான உணர்வு உடையவர்களாகக் கூட இருந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவர்கள் ஆரியத்தின் சூழ்ச்சிப் பின்னலின் ஆற்றலை சரியாகப் புரிந்து கொண்டவர்களாக இல்லாது போனார்கள். காலப் போக்கில் தமிழின் சிறப்பையும் உயர்வையும் காரண காரியங்களோடு எடுத்து வைத்தல், தமிழறிஞர்களாகக் கூடியும், தனித்தும் அறிக்கைகள் விடுதல், தீர்மானங்கள் நிறைவேற்றுதல் ஆகியப் பணிகளோடு ஆரிய எதிர்ப்பு தமிழியக்கம் குறுகிக் கொண்டிருந்தது.

அத்தகைய அவலமான சூழலிலே தான், வடமொழி ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டுமென்றால் அதற்கு, தமிழும், தமிழுணர்வும் சரியானதாக போது மானதாக இருக்கலாம். ஆனால் ஆரியம் என்கின்ற இன நெருப்புப் படைக்கலங்களை புறங்காண வெறும் கைவாளும் வில்லும் போதாது என்று 19ஆம் நூற்றாண்டு இறுதியில், நமக்கான நெருப்புப் படைக்கலங்கள் எங்கே என்று தேடியபோது நம்மால் தெரிந்து கொள்ளப்பட்டு மீட்டெ டுக்கப்பட்டதுதான் திராவிட இனம் - அந்த முழுமையான, முதன்மையான, செம்மையான இனத்தின் வழிவந்த வர்கள் நாம் என்கின்ற உண்மை.

புத்தர் முதல், தந்தை பெரியார் வரை, ஆரிய ஆதிக்கத்தைக் கட்டுப் படுத்த / அழிக்க எத்தனையோ புரட் சியாளர்கள் பாடுபட்டும் ஏன், எப்படி, இன்னும் ஆரியம் மறையாமல் ஆனால் சில சமயம் அடங்குவதும், மீண்டும் எழுச்சி பெறுவதுமாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

திராவிடம் என்றால் என்ன என்று முழுமையாக விளக்கப்படாத கால கட் டத்தில், அத்தகைய மீஉயர் இனத்தினைப் பற்றியும், அதன் தலைமை வழித்தோன்றல்கள் நாம் என்கின்ற உண்மையும், வைகறை வெளிச்சத்தில் இருந்த காலத்தில் - அதாவது சென்ற நூற்றாண்டு முதல்பகுதியில் - திராவிடத்தை வெறுத்து எதிர்த்துத் தகர்க்க நினைத்து எழுந்த சக்திகளையெல்லாம் எப்படி வெல்வது, எவ்வகையில் அடக்கிவைப்பது என்று வழிகாட்ட, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் அணிவகுப்பில் தலைவர் கலைஞர் போன்று நிறைய பேர் இருந்தார்கள்.

அதன் விளைவு, திராவிட இனம் பற்றிய செய்திகள் உலக வரலாற்றில் தாக்கத்தை உருவாக்கியது. . . திராவிட இன உணர்வு இந்திய மக்களால் பேசப் பட்டது . . . திராவிட இந்தியத் தலைவர் களால் அது மக்கள் இயக்கமாக்கப் பட்டது.
அந்த காலகட்டத்திலேதான் ஆரியத்தின் வெப்பத்தால் தடுமாறிக் கொண்டிருந்த தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் திராவிட இன உணர்வோடு இணைந்து திராவிட தேசியம் என உருவானது. அதனால்தான் தமிழ் மறுமலர்ச்சி முழுமைபெற்றது. வலிமை பெற்றது. வடமொழி ஆதிக்கம் உட்பட ஆரிய எதிரிகள் வலுவிழந்தார்கள், செயல் மயங்கினார்கள் என்கின்ற உண்மையை மறந்துவிடக்கூடாது.

1956_-57 ல் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநில மாநாட்டில், அரசியலில் பங்கேற்கலாமா? என்று மக்கள் கருத்தைக் கேட்டபோது, திராவிட உணர்வை விட்டு விட்டோ, ஒத்தி வைத்துவிட்டோ, அல்லது குறைத்துக் கொண்டோ, அரசியல் பணியை மேற் கொள்ளலாம் என்று அண்ணாவும் கூறவில்லை; நாமும் அப்படி எண்ணி வாக்களிக்கவில்லை.

அதோடு இது...!
அதை வென்றெடுக்க இது...!
அதை நிலைக்க வைக்கத்தான் இது...!
என்றுதான் அண்ணாவும் மற்ற தலைவர்களும் கருதிச் சொன்னார்கள்...!
நாமும் அந்த நம்பிக்கையுடன்தான் பின் தொடர்ந்தோம்...!

ஆனால், காலத்தின் கோலம், நாம் சற்று அயர்ந்து விட்ட காரணத்தினால், சாதி வெறியர்களும், மதவெறியர்களும், தமிழ், திராவிட அடையாளங்களை தங்களின் அரசியல் வாணிப தேவைக்காக ஒப்பனை செய்து கொண்டு அதன் அடிப்படைப் பண்புகளை கீழ்மைப் படுத்திக் கொண்டிருக்கும் அவலத்தை இப்போது நாம் காண்கிறோம்.

பழைய எதிரிகள், ஆரிய இனம் சார்ந்தவர்கள், பழமை வாதிகள், அவர்கள் திராவிடத்தையும் எதிர்த் தார்கள், தமிழையும் நீச பாஷை என்றார்கள். ஆனால் தற்போதைய புதிய எதிரிகள் தமிழை வைத்துக் கொண்டு அதன் படைப்பு மூலமான திராவிடத்தை எதிர்க்கத் துணிந்துள்ள திரிபுவாதிகள் . . .! விஷயமறியா பேதைகள்! தமிழை திராவிடத்திடமிருந்து பிரித்து அநாதையாக்கி ஆரிய மாயை யில் தங்களைத் தாங்களே வீழ்த்திக் கொள்ளத் துடிக்கும் விட்டில் பூச்சிகள்.

அவர்களின் இந்த நிலைப்பாட்டிற்கு உண்மையான காரணங்கள் தமிழக அரசியல் களத்தில் திராவிட கட்சிகள், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் தங்களுடைய கட்சிகள் வளரத் தடையாக இருக்கிறதே என்கின்ற விரக்தி. அடுத்து திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான சாதி, சமய எதிர்ப்பு, பகுத்தறிவுக் கருத்துகள் ஆகியவற்றை ஏற்க இயலாத தங்களின் அடிப்படைவாத வெறி.

ஆனால் சாமான்ய தமிழனுக்கு எடுப்பாக இருக்க அவர்கள் கண்டு பிடித்த காரணம், கர்நாடகாவிலும், கேரளாவிலும் சில பிரச்சினைகளின் காரணமாக எழுந்துள்ள தமிழர் எதிர்ப்பு அரசியல் - எனவே திராவிட எதிர்ப்பைக் கையிலெடுத்து விட் டார்கள்.

திராவிட இன உணர்வு நினைவு கூறப்பட்டதும், திராவிடப் பேரியக் கமாக அது எழுந்ததும், பரப்பப்பட் டதும், திராவிட மொழியினங்களான கன்னட, தெலுங்கு, மலையாளம், மற்றும் துளு ஆகிய மக்களுக்காகவும் சேர்த்துதான் என்பது உண்மைதான். என்றாலும் இப்பேரியக்கம் முதன்மையாக நம்மை வைத்தே தொடங்கப் பெற்றது. விரிவாக்கம் கண்டது. காரணம் திராவிடத்தின் முதன்மையானவர்கள் என்பதால் அதற்குரிய உரிமையும் கடமையும் தமிழர்களாககிய நமக்கிருந்தது.

எனவே, கன்னடர்களும், தெலுங்கர்களும், மலையாளிகளும் நம்மோடு சேர்வதால் மட்டுமே நாம் திராவிடர்கள் என்கின்ற அடையாளத்தைப் பெறுவோம் என்பது வடிகட்டிய அறியாமையல்லவா . . .! திராவிட மொழி இனங்கள் சேர்ந்திருந்தாலும், பிரிந்திருந்தாலும் அவர்கள் திராவிட இனம்தானே. .! இதை எந்த நிதான சிந்தனையுடையவனும் மறுக்க முடியுமா.?

காங்கிரஸ், பொதுவுடமை கட்சிகள் தொடங்கி - ஏன் அ.தி.மு.க. வரை, தமி ழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளிலும், இயக்கங்களிலும், திராவிட உணர்வு உடையவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் அவர்கள் சார்ந் துள்ள; அமைப்புகளின் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ள வேறு கொள்கைகளை முன்னிட்டு, திராவிட உணர்வை உள்ளூரக் கனன்று கொண்டிருக்கும் நிலையில் மட்டுமே தனித்து வைத்திருக்கலாம். அதே நேரத்தில் நம்மால் முடியாததை வேறு யாராவது செய்ய மாட்டார்களா? என்கின்ற உள்ளார்ந்த ஏக்கம் அவர்களிடம் இருப்பதை நம்மால் காணமுடிகிறது.

இதைப் போலவே, இதே நிலையில், இதே அளவில், திராவிட இன உணர்ச்சி உடையவர்கள் கர்நாடகா விலும், ஆந்திராவிலும், கேரளாவிலும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதன் தலைசிறந்த எடுத்துக்காட்டுதான் திரு.என்.டி. இராமராவ் அவர்களின் எண்ணத்தில் உதித்து, திரு சந்திரபாபு நாயுடு அவர்களால் நிறுவப்பட்டு செம்மாந்து நிற்கும், திராவிடப் பல்கலைக் கழகம்.

அங்கே தமிழ்த்துறை, திருவள்ளுவர் மாளிகை யிலும், தெலுங்குத் துறை, வேமனாவின் மாளிகையிலும், கன்னடத்துறை பஸவய்யா மாளிகையிலும், மலையாளத் துறை நாராயண குரு மாளிகையிலும் உயர்கல்வி மாணவர் களைப் பயிற்றுவித்தும், நூற்றுக்கணக்கான ஆய்வு மாணவர்களைக் கொண்டு திராவிட இயல் உயராய் வுகளும் நடைபெற்று வருகின்றன.

அப்பல்கலைக் கழகம் நிறுவிய வேளையில் தமிழகத்தின்பங்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ஒரு பெருந்தொகை மானியமாக வழங்கப்பட்டது.

தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் ஏறக்குறைய சங்கமிக்கின்ற குப்பம் என்கின்ற இடத்தில் அமைந்து திராவிடவியல் ஆய்வில் சிறப்பாக நடைபோடும் இப் பல்கலைக் கழகம், திராவிட ஆராய்ச்சிகள் என்னும் காலாண்டு ஆய்விதழை தொடர்ந்து வெளியிட்டும் வருகிறது.

எனவே கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிவழி மக்களில் திராவிட இன உணர்வு உடை யவர்கள் கணிசமான அளவு இப் போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுள் கல்வியாளர்கள், ஆய்வறிஞர்கள், உயர் அதிகாரிகள், நீதி அரசர்கள் என்று பலர் அடங்குவர் - என்ன! அங்கெல்லாம் இதற்காக அரசியல் கட் சிகளோ, தனி இயக்கங்களோ இல்லை - அவ்வளவு தான். . .!

சாதிய மற்றும் மதவாதக் கட்சிகள் என்றுமே கொள்கை அடிப்படையில் தமிழியக்கம் மற்றும் திராவிட இயக்கத்தினைச் சார்ந்து இருக்க முடியாது. ஏனென்றால், சாதியும், மதமும் ஆரிய சமூகத்தின் அங்கங்கள். ஒரு வேளை அதன் காரணமாகத்தானோ என்னவோ இங்கு சில சாதி, மதவாதக் கட்சிகள் திராவிட என்ற இன அடையாளத்தைத் துறக்கத் துணிகிறார்கள் போலும். அவ்வாறாக, ஆரியத்தின் அங்கங்களான பின்னர் இவர்கள் நெஞ்சம் எப்படி தமிழ் நெஞ்ச மாக இருக்க முடியும்...!

மேலும், தமிழ் உணர்வோடு மட்டும் வைத்துக் கொண்டு ஆரியத்தை எதிர்க்க முடியாது, வெல்ல முடியாது. ஏனென்றால் தமிழ், தமிழன் என்கின்ற குடைகீழ் ஆரியர்களும், ஆரியமும் இடம் பிடிக்க முடியும்.

தமிழன் எப்பொழுதெல்லாம் தமது திராவிடப் பற்றை இழக்கிறானோ அப்போதெல்லாம் அந்த அளவுக்கு அவன் ஆரிய மாயையில் வீழ்ந்திருக்கிறான். ஆரிய மாயை என்பது ஒவ்வொருவன் மனதிலும் தாம் மற்ற சிலரை/பலரைக் காட்டிலும் சமூக அந்தஸ்தில் உயர்ந்திருக்கிறோம் என்கின்ற போதையை ஏற்றி அவனது மனிதநேய உணர்வை செயலிழக்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது. ஆனால் தமிழ் நெஞ்சம் என்பதோ திராவிட இனப் பண்பாட்டு அடிப்படையில் உருவாவதுதானே! அப்படியிருக்க, திராவிடம் நீக்கி தமிழ் உணர்வு என்பது ஆரிய இதயமாகத்தானே இருக்க முடியும்!

தமிழ் இலக்கியங்கள் சிலவற்றுள் சில இடங்களில் ஆரியம் கலந்து / ஊடுருவி இருந்தாலும், சற்று நிபந்தனை யோடு அவற்றை தமிழன் ஏற்றுக் கொள்ளக் காரணமே அவனிடத்தில் உள்ள திராவிட இனப்பண்பாடுகளின் அடிப்படை கள்தானே...!

தமிழ் படைப்புகளில் நேர்ந்துவிட்ட ஆரியக் கருத்துகளை திராவிடம் ஏற்காது...!
திராவிடத் தமிழும் ஏற்காது...!
கம்பராமாயணத்தை தமிழ் ஏற்றுக் கொள்ளும்...! ஆனால் திராவிடம் ஏற்றுக் கொள்ளுமா...!
ஏனென்றால், அது தமிழில் எழுதிய ஆரிய இலக்கியம். எவ்வளவுதான் அதில் உள்ள தமிழின் சிறப்பைப் பாராட்டினாலும் அது என்றுமே திராவிடத் தமிழ் இலக்கியம் ஆகாது. .!
எனவே, திராவிட நெஞ்சம் இல்லா தமிழு ணர்வு ஆரிய ஆன்மாவோடு அலையும் தமிழ் வேடதாரிதான்...!

தமிழை மட்டும் கொண்டு ஆரியத்தையும் வெல்ல முடியாமல், தமிழனையும் காப்பாற்ற முடியாமல் போன நிகழ்வுகளையும், வகைகளையும் வரலாறு பல்வேறு கட்டங்களில் உறுதிப் படுத்தியுள்ளது.

இந்திய மொழிகளில் தமிழுக்கென்று உள்ள தனிச் சிறப்பும், அங்கீகாரமுமே, அது திராவிட இனத்தின் தொன்மையான, செம்மை பெற்ற மொழி என்பதால்தான். அப்படி இருக்க, திராவிடத் தாயிடமிருந்து தமிழைப் பிரித்துப் பார்க்கும் செயல் எந்த அரசியல் ஆதாயத்திற்காக...? யாருடைய கோபத்திற்குப் பயந்து...? யாரைத் திருப்தி படுத்துவதற்காக...?

இன்றைய இந்தியாவில் ஊடகங்களில் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆரியம், அந்த ஊடகங்களின் வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு உறவுகளைத் துண்டிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் சில பேதைகள்.

இந்தியாவில் தோன்றிய அத்துணை சிந்தனையாளர்களின் ஒட்டு மொத்த விளைவாக எழுந்து நின்றவர் தந்தை பெரியார். அவர் நமக்கென்று ஆய்ந்து தேர்ந்து கொடுத்த அறிவாயுதம்தான் பகுத்தறிவு. . .! அடையாளம்தான் திராவிடம்...!
அதை எந்தச் சூழலிலும் காப்பாற்ற அண்ணா செய்த பிரகடனம்தான், திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் என்றும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படும் என்பது.

இன்று திராவிடத்தையும் தமிழையும் பிரிக்க நினைக்கும் இரண்டும் கெட்டான்களை தோலுரித்துக்காட்ட பிறவித் தலைவரான கலைஞர் அழைப்பு விடுத்துவிட்டார். . . அவர்கள் பின்னே திராவிடத் தமிழர் அனைவரும் அணி வகுத்துப் புறப்படுவோம்.

எனென்றால்!

திராவிட அடையாளம், திராவிட உணர்வு, திராவிட இயக்கம் என்பவை நாம் இறுதியானதாகப் பெற்ற வரலாற்றுப் பரிமாணம்.

அதற்கு கலைஞரின் இன்றையத் தலைமை காலத்தின் கட்டாயம்.

இதை உணராமல் திராவிடத்திலிருந்து தமிழைப் பிரிக்கத் தூண்டுவது அறிவுத் தடுமாற்றமா...! ஆரிய மயக்கமா...!

-------------------முனைவர் பெ.ஜெகதீசன் (முன்னாள் துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக் கழகம், துணைத் தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்) அவர்கள் முரசொலி 4.6.2012 இல் எழுதிய கட்டுரை

5 comments:

தமிழ் ஓவியா said...

உமாபாரதி
S


பி.ஜே.பி.யில் மீண்டும் சரணடைந்த செல்வி உமாபாரதி சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஒன்றைக் கூறியுள்ளார். ராமர் பாலத்தை இடித்து சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நடவடிக்கை எடுத்தார். அதற்கு எதிர்ப்புத் தெரி வித்து இன்றைய தமிழக முதல் அமைச்சர் ஜெய லலிதா கருத்து ஒன்றைத் தெரிவித்தார். அதைக் காப் பாற்றுவார் என்று நம்பு கிறேன் என்று பேட்டியில் கூறி இருக்கிறார்.

நாட்டு மக்கள் எல்லாம் மறதி மன்னர்கள் அல்லது மாங்காய் மடையர்கள் என்ற நினைப்பில் இத்த கைய அரசியல்வாதிகள், அதிலும் குறிப்பாக இந்த இந்துத் துவாவாதிகள் மிதக்கி றார்கள் போலும்! ராமர் பாலத்தை இடிக் கச் சொன்னது ஒன்றும் அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் அல்ல - அப்படி ஒரு பாலம் இருந்தால் அல் லவா உடைக்கவும் முடியும்.

இந்தப் பாதையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றச் சொன்னது நீரி என்ற தொழில் நுட்ப நிறுவனம். அவ்வாறு முடிவு எடுக்கப் பட்டதும்கூட அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் அல்ல; அது தேசிய ஜனநாயகக் கூட் டணியான வாஜ்பேயி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் தான் அத்தகைய முடிவும் எடுக்கப்பட்டது.

இதில் மேலும் ஒரு முக்கியமான தகவலும் உண்டு - அதுவும் இதே உமாபாரதி சம்பந்தப்பட்டது என்பதுதான் படு நகைச் சுவை!

மத்திய அமைச்சராக உமாபாரதி இருந்தபோது தான் ராமன் பாலம் இருந்ததா, இல்லையா என்பதை தொல் பொருள் துறைமூலமாக ஆய்வு செய்யச் சொல்லப்பட்டது. அந்த ஆய்வு பாலம் இருப் பதற்கான சுவடே இல்லை என்று தெரிவித்துள்ளது என்ற தகவலை சேது சமுத்திரத் திட்டத்தில் நிருவாக இயக்குநர் ரகுபதி வெளிப்படுத்தினர் (ஆதாரம்: தினமலர் 26.7.2007 பக்கம் 5).

உண்மை இவ்வாறு இருக்க அதே உமாபாரதி இப்பொழுது பல்டி அடித் துப் பேசுவதன் பொருள் என்ன?

முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத் துள்ளார். அதுவும் மிகவும் பொருத்தம்தான்! ராமன் பாலத்தை (?) ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று சொன்னதோடு மட் டுமல்ல; இரண்டு தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அச்சிட்டுக் கொடுத் தவரே இதே ஜெயலலிதா தானே! முரண்பாடு என்னும் ஒரே ஓடத்தில் பயணம் செய்பவர்கள் (Sailing in the Same Boat) இப்படி யாகத்தானே நடந்து கொள்வார்கள்.

- மயிலாடன் 30-7-2012

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு முழக்கம் மக்களைப் பக்குவப்படுத்திய மகத்தான கொள்கை முழக்கம் நார்வே நாட்டு மனிதநேயத் தலைவர் போற்றிப் புகழுரை

சென்னை, ஜூலை 30- சென்னை பெரியார் திடலில் 29.7.2012 அன்று பகுத் தறிவாளர் கழகத்தின் சார்பாக மதமில் லாத சமுதாயம் நோக்கி (towards post religious society) எனும் தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

அன்னை மணியம்மையார் மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நார்வே நாட்டு மனிதநேய சங்கத்தின் தலைவர் ஈவன் கிரான்(Even Gran) சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார். அவருடன் அவரது துணைவியார் சமூக வியல் பேராசிரியர் எர்ரி எல்வெஸ்டாட் (Eiri Elevestad) கலந்து கொண்டார். கூட்டத்தின் தொடக்க உரையினை பகுத் தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன் ஆற்றினார். அடுத்து பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வீ.குமரேசன் கலந்துரை யாடல் தலைப்பு பற்றி சுருக்கமாக கருத் துரை வழங்கினார்.

நிகழ்ச்சியின் தொகுப்புரையினை பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெஸ் பெரியார் வழங்கிட தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் திராவிடர் புரட்சி நன்றியுரை ஆற்றினார்.

ஈவன் கிரான் பேச்சுநார்வே ஒற்றை பண்பாட்டுத் தன்மை (mono culturalism) கொண்ட நாடாகும். அந்நாளில் நிலவிவந்த கிறிஸ்தவம் சகிப்புத்தன்மை அற்றும் அனைவரையும் உள்ளடக்கியதாக விளங்கியது. 1814இல் உருவான அந்நாட்டு அரசமைப்புச் சட்ட மும் சில பிரிவு கிறிஸ்தவ நடவடிக்கை களை தடை செய்ய உருவாக்கப்பட்டது. அரசின் கட்டுப்பாட்டில் தேவாலயங்கள் செயல்பட்டு வந்தன. மக்கள் தெளிவு பெற 1845இல் தான் இதர கிறிஸ்தவ பிரிவு களுக்கு அனுமதி, அங்கீகாரம் கிடைத் தது. 19ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட நார்வே சுதந்திர சிந்தனையாளர் இயக்கம் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக மக்களின் மனநிலையில் மதம் குறித்த சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங் கின. மதம் சார்ந்த சமூகச் செயல்பாடுகள் தனி மனித செயல்பாடுகளாக மாற முற்பட்டன. பல்வேறு நாடுகளில் நிலவிய (survival) எழுச்சி கொள் மதிப்பீடுகள் மற்றும் தொன்மை (traditional) பகுத்தறிவு (rationalistic) மதிப்பீடுகள் மக்கள் மனதில் புதுவித ஒளியைப் பாய்ச்சின. இப் படிப்பட்ட பண்பாட்டு மன மாற்றங்களினால் இன்று நார்வே நாடு மதம்நீங்கிய மதச் சார்ப்பற்ற நிலையில் தலையானதாய் விளங்குகிறது.

மதம் நீங்கிய நாட்டின் அம்சங்கள்சென்னை பகுத்தறிவாளர் கழக கூட்டத்தில் பங்கேற்ற நார்வேயைச் சேர்ந்த ஈவன் கிரானுக்கு சிறப்பு செய்யப்பட்டது. உடன் அவரது மனைவி உள்ளார்.

1. மதத்திற்கும் பகுத்தறிவிற்கும் உறவு இல்லை. பைபிளில் அல்லது குரானில் கூறப்பட்டுள்ளது என மேற்கோள் காட்டி கருத்தை உருவாக்கிட முடியாது.

2. மதமும் மதத் தலைவர்களும் முன் னைப்போல அரசு அதிகாரம் கொள்ள முடியாது.

3. மதம் என்பது தனிநபர் சார்ந்த தாகவே இருக்க முடியும். 4. மதங்களே மதச்சார்பின்மையுடன் இருக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

புதிய யுகம் என்பதுதன் பெயரால் ஆன்மீகப் போர்வையில் மீண்டும் மத உணர்வுகள் தலைதூக்கும் அபாயமும் உருவாக்கியுள்ளது. பிற மத நம்பிக்கை களை குறிப்பாக இந்து மத நம்பிக்கை களை உள்வாங்கும் நிகழ்வுகளும் உள்ளன. அறிவியலுக்குப் புறம்பாகவும் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தனிநபர் அக்கறை உணர்வுடன் இத்தகைய புது யுகங்கள் புறப்பட்டு விட்டன. வணிகத் தன்மையும் உடன் சேர்ந்து கொள்கிறது இதில் உள்ள முட்டாள்தனங்களை புலப் படுத்தி மக்களைப் புரிய வைக்கும் முகமாக நார்வே நாட்டு மனிதநேயச்சங்கம் யாரும் முட்டாளாக விரும்புவதில்லை (டிடினல டமைநள வடி நெ கடிடிடநன) எனும் முனைப்பு இயக் கத்தினைத் தொடங்கியுள்ளது.

இந்தியா நார்வே நாடுகளின் மதசார்ப்பற்ற சிந்தனைகள்

நார்வேநாட்டைவிட இந்தியாவில் மதச்சக்தி பெரும் ஆளுமை கொண்டதாக உள்ளது. மதப்பன்மை மற்றும் இனப்பன்மை நிலைமைகளை எதிர்த்து மதச்சார்பின்மை போராட வேண்டி உள்ளது. இருப்பினும் குறிப்பாக தமிழ்நாட்டில் மக்களின் மனதை பக்குவப்படுத்திய நிலைமைகள் வெளிப்படை யாக தெரிகின்றன. தந்தை பெரியாரின் கொள்கை பிரச்சார முழக்கமான கடவுள் இல்லை, கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை

கடவுளை கண்டுபிடித்தவன் முட்டாள்

கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி

என்பதை பகிரங்கமாக சொல்ல முடிகிறது. தந்தை பெரியாரின் சிலை பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இத்த கைய நிலைமைகள் மக்கள் மனதை எந்த அளவிற்கு பக்குவப்படுத்தியுள்ளன. தந்தை பெரியாரின் கொள்கைக்கு ஏற்புத் தன்மை என்பதை விட பெரும்பான்மை யினர் எதிர்ப்புத்தன்மையற்ற நிலைகள் பெருமை அளிப்பதாக உள்ளன. இத்தகைய நிலைமைகள் ஆஸ்லோவில் (நார்வே நாட்டு தலைநகர்) உருவாகுமா என்பதை நினைத்துக் கூட பார்க்கமுடியாது தந்தை பெரியாரின் கொள்கை போற்றுதலுக்கு உரியது. மதமற்ற சமுதாயத்தில் தந்தை பெரியாரின் கொள்கை வழிமுறைகளுக்கு சிறப்பிடம் உண்டு. இவ்வாறு ஈவன் கிரான் பேசினார்.அவரது பேச்சிற்கு அவரது துணை வியார் பேராசிரியர் எர்ரி எல்வஸ்டாட் பேசும்பொழுது மக்களாட்சியில் ஊடகங் களின் போக்கு, கோரிக்கைகள் நிறைந்த தாகவே உள்ளது. அறிவை வளர்ப்பதாக இல்லை எனக் குறிப்பிட்டார்கள்.

சிறப்புப்பேச்சிற்குப் பின், வருகை தந்தோரின் அய்யப்பாடுகள், கேள்வி களுக்கு ஈவன் கிரான் தனது கருத்தினை வழங்கினார். கலந்துரையாடல் கூட்டத்தில் பேராசிரியர்கள், திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, பொறுப்பாளர்கள், சுதந்திர சிந்தனை அமைப்பினர் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் எனப் பலரும் முனைப்புடன் பங்கேற்றனர். 30-7-2012

தமிழ் ஓவியா said...

ராஜாஜி


கேள்வி: எனது அருமைத் தலைவர் ராஜாஜிக்கு பிராமணர் அல்லாதவரிடம் புகழ் இல்லையே ஏன்?
ஆர்.சேஷாத்திரி அய்யங்கார், பருத்திப்பட்டு

பதில்: பிராமணர் அல்லாத தலைவர்களால் கொண்டாடப் பட்டவர்தான் ராஜாஜி. ஆரம்ப காலத்தில் பெரியார் ஈ.வெ.ரா.வும், வரதராஜூலு நாயுடுவும் அவருக்கு இரு கரங்களாக இருந்தார்கள். சத்தியமூர்த்தி - காமராஜர் புயலை ராஜாஜி எதிர்கொள்ள அரணாக இருந்தவர் ம.பொ. சிவஞானம். தனது எழுத்தால் ராஜாஜிக்கு வலிமை சேர்த்தவர் காண்டீபம் ஆசிரியர் எஸ்.எஸ். மாரிச்சாமி. தனது பேச்சால் உதவினார் சின்ன அண்ணா மலை.

அனைத்துக்கும் மேலாக பிராமணர் அல்லாதார் இயக்கத்தின் நீட்சியாக தன்னை அறி வித்துக் கொண்ட அண்ணா 67 தேர்தலில் ராஜாஜியை தனது அணியின் நடுநாயகமாக வைத்துக் கொண்டார். எந்த ராஜாஜியை எதிர்த்துக் கால மெல்லாம் அரசியல் நடத்தினாரோ அந்த காமராஜர்... ராஜாஜியின் கடைசிக் காலத்தில் அவரோடு ஒரே மேடைக்கு வந்தார். எனவே, ராஜாஜி, அனைவராலும் விமர்சிக்கப் பட்டாரே தவிர, யாராலும் ஒதுக்கப்படவில்லை.

(ஜூனியர் விகடன் 1.8.2012 பக்.10)

கேள்வி கேட்டவர் அய்யங்கார். பதில் சொல்லும் ஜூ.வி.யோ அய்யர்வாள். கேள்வி கேட்கப்படும் ராஜாஜியோ அய்யங்கார். விட்டுக் கொடுத்துவிடு வார்களா? ஆனால் ஒன்று. கேள்வி கேட்கும் அய்யங்காருக்கு ஏன் அப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டது என்று பதில் சொல்லும் ஜூ.வி. அய்யர்வாள் கொஞ்சங்கூட நிதானித்துப் பார்க்க வில்லையே-ஏன்?

பார்ப்பனர் அல்லாதாரிடத் தில் ஆச்சாரியர் மீது வெறுப்பு இருக்கிறது என்ற உண்மை அய்யங்காருக்கு நன்றாகவே தெரிந்திருக்கின்றது. அதனால் தான் அந்தக் கேள்வியையே கேட்கிறார். ஜூ.வி. அய்யர்வா ளுக்கும் இந்த உண்மை தெரி யும். என்றாலும் ஆச்சாரியாரை விட்டுக் கொடுக்க முடியாதே - அதனால்தான் இந்த விளக் கெண்ணெய் கத்தாழைக் கூட்டு வழவழ குழகுழ பதில்.

1937 இல் ஆட்சிக்கு வந்தபோதும் 2500 பள்ளிகளை இழுத்து மூடினார். அதே நேரத்தில் பார்ப்பனர் படிப்பதற்கு சமஸ்கிருதக் கல்லூரியைத் திறந்தார். 1952 இல் வந்த போதும் ஆறாயிரம் கிராமப் பள்ளிகளை இழுத்து மூடி அரை நேரம் படித்தால் போதும், மீதி அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று ஆணையையும் பிறப்பித்தார் ஆச்சாரியார்.

இந்தக் குலக்கல்வித் திட்டத்தின் பின்னணியைத் தந்தை பெரியார் தமிழர்களிடம் விளக்கிக் கூறினார். ஆச்சாரி யார் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டம் வருணாசிரம நோக்கம் கொண்டது என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை தமிழர்கள் ஏற்றுக் கொண்டனர்.

சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்மத் திட்டத்தை ஆச்சாரியார் திணித்தார். பார்ப்பனரல்லாதார் வெறுப்பைத் தேடிக் கொண்டார். இதற்கு என்ன ஆராய்ச்சியா தேவை?

- மயிலாடன் 31-72012

தமிழ் ஓவியா said...

ஜாதி அடையாளம்

ஜாதி ஒழிய வேண்டும் என்று சொல்கிறீர்கள். அதே நேரத்தில் அரசியலில் தாங்கள் ஜாதியைத் தானே முன்னிறுத்துகிறீர்கள் - அடையாளம் காட்டுகிறீர்கள் என்ற கேள்விக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் திரு. ச. இராமதாசு அவர்கள் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் என்ன பதில் சொல்கிறார்?

யாருக்குத்தான் ஜாதி உணர்வு இல்லை? ஒவ்வொரு கட்சிக்குள்ளும் ஜாதி உணர்வு இருக்கிறது. பிகாரில் லாலு பிரசாத், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, கருநாடகாவில் தேவகவுடா, உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி என்று எடுத்துக் கொண்டாலும் இந்தியா முழுமையும் ஜாதி அடிப்படை அரசியல்தான் நடக்கிறது. நாங்கள் சொன்னால் மட்டும் எங்களுக்கு ஜாதி முத்திரையைக் குத்துகிறார்கள் என்பதுதான் மருத்துவரின் பதில்.

மற்ற மற்ற மாநிலங்களில் உள்ள ஜாதி அரசியலைத் தமிழ்நாட்டோடு ஒப்பிட்டுக் கூற முடியாது. தமிழ்நாட்டில் உள்ளது போல் சமூகப் புரட்சி இயக்கம் அங்கெல்லாம் கிடையாது. தந்தை பெரியார் போன்ற ஜாதி ஒழிப்புப் புரட்சியாளரின் முக்கால் நூற்றாண்டுக் கால ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம். அதற்கான போராட்டங்கள் நடத்தப்பட்டதில்லை. இன்னும் சொல்லப்போனால் பெயர்களுக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் போட்டுக் கொள்வது பிற மாநிலங்களில் உண்டு. தமிழ் நாட்டில் அவ்வாறு போட்டுக் கொள்வதில்லை. அப்படிப் போட்டுக் கொள்வதற்கு வெட்கப்படும் நிலைதான் இங்கு. இந்த அடிப்படை உண்மையை மருத்துவர் உணரவேண்டும்.

இதற்கு முன்பும்கூட ஜாதியை முன்னிறுத்தி கட்சி நடத்தியவர்கள் எல்லாம் தமிழ் நாட்டில் வெற்றி பெறவில்லையே. தேர்தல் நேரங்களில ஜாதிக் கட்சிகளோடு கூட்டு சேர்ந்து போட்டியிட்ட நிலைமைகள் எல்லாம் கூட உண்டு. அது வெற்றியைக் கொடுத்திருக்கிறதா?

மருத்துவர் சொல்லும் கூற்றுப்படியே ஒரு கேள்வியை அவரிடம் கேட்க முடியும். தமிழ்நாட்டில் ஜாதி உணர்வு இருக்கிறது என்பது உண்மையானால், ஜாதி அடையாளத்தைக் காட்டி அரசியல் நடத்தும் பா.ம.க. தேர்தலில் குறைந்த பட்சம், வட மாவட்டங்களிலாவது பெரு வாரியான வகையில் வெற்றி பெற்று இருக்க வேண்டுமே. ஏன் வெற்றி பெற முடியவில்லை? தமிழ்நாட்டு மண்ணுக்குரிய தனித்தன்மைதான் இது.

மற்றொரு கேள்விக்கு பா.ம.க. நிறுவனர் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதே - பாட்டாளி என்றால் தமிழ்நாட்டில் வன்னியர் மட்டும்தானா? இப்படி ஒரு கட்சியை தாம் துவக்கியதற்கு தொடக்கத்தில் என்ன கருத்தினை முன்வைத்தார்? நரிக்குறவர், நாவிதர், வண்ணார், போன்ற பல சமுதாயத்தினரும், வன்னியர்கள் போல கல்வி, வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டனர். இந்தச் சமுதாய அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கத்தான் பா.ம.க.வை ஆரம்பித்ததாகக் கூறினாரே! (நம்பு தம்பி நம்மால் முடியும் ஜூலை 2008) அதன்படி நடந்து கொண்டதுண்டா?

இதுவரை எந்த ஒரு சட்ட மன்றத் தேர்தலிலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலிலோ வன்னியரைத் தவிர்த்த வேறு யாரையாவது வேட்பாளராக நிறுத்தியதுண்டா?

அத்தனை சட்டப் பேரவை உறுப்பினர்களும், அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் வன்னியர்களே - பெயர் மட்டும் பாட்டாளி மக்கள் கட்சி. புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் எம் மீது படுத்துக்கொள்ளுங்கள் என்று கூறும் கதையாக அல்லவா இருக்கிறது!

தொடக்கத்தில் தலித் எழில்மலை, பொன்னுசாமி ஆகிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு மத்தியில் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டாலும், பிற்காலத்தில் அந்த நிலையும் மாற்றப்பட்டு அனைத்தும் வன்னியர் களுக்கே என்பதுதானே பா.ம.க.வின் நிலைப்பாடு.

வன்னியர்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னேற்றம் அடைய வேண்டியது மிகவும் அவசியமே. இதில் இரண்டு கருத்துக்களுக்கு இடம் இல்லை. அதே நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி என்ற போர்வையில் வன்னியர்களுக்கு மட்டுமான அரசியல் நடத்துவது எப்படி சரியாக இருக்க முடியும்?

இன்னொரு பக்கத்தில் ஜாதி ஒழிப்பே தங்கள் கொள்கை என்கிறார். அப்படியானால் ஜாதி ஒழிப்புக்காக அவர் வைத்துள்ள திட்டங்கள் என்ன? குறைந்தபட்சம் ஜாதி ஒழிப்பு மாநாடுகளை நடத்த முன்வருவாரா? தம் கட்சியினர் ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவாரா? வன்னிய ஜாதியில் வேறொரு ஜாதியினர் கலப்பு மணம் செய்தால் வெட்டுவோம் என்பதுதான் ஜாதி ஒழிப்பா? ஜாதிப் பெருமை பேசுபவர்களால் எப்படி இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும்?
31-7-2012