சபாஷ், தோழர் திருமா!
கேள்வி: பெரியார் குறித்தும் திராவிடம் குறித்தும் அண்மைக் காலமாக எழுந்துள்ள சர்ச்சைகளில் உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: என்னைப் பொறுத்தவரை அம்பேத்கரை எப்படிப் பார்க்கிறேனோ, அப்படித்தான் பெரியாரையும் பார்க்கிறேன். பெரியார் வாழ்ந்த காலத்தின் நிலவியல், அரசியல் போன்றவற்றைப் புரிந்து கொள்ளாமல் எதுவும் பேசக்கூடாது. ஆந்திரா, கேரள கர்நாடகா ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மாகாணம் இருந்தது. தமிழ்நாடு அப்போது உருவாகவில்லை. அந்தச் சமயத்தில் திராவிடர் கழகத்தை உருவாக்கினார் பெரியார். திராவிடக் கருத்தியலைப் பேசினார். அது சரிதான். அதன் பின்னரே 1956ல் மொழிவழி மாகாணங்கள் உருவாகி தமிழ்நாடு உருவானது.
இன்றைக்கு தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பது சரியானதே. ஆனால், இன்றைக்கு தமிழ்த் தேசியம் பேசவே, அன்றைக்கு பெரியார்தான் வித்திட்டார் என்பதை மறந்து, திராவிடத்தை முற்றிலுமாகப் புறந்தள்ளுவது நன்றியுணர்வு அற்ற செயல். பெரியாரிடம் கருத்து மாறுபட்டால் விமர்சனம் செய்யலாம். ஆனால் அவரையும் திராவிடக் கருத்தியலின் பங்களிப்பையும் கொச்சைப்படுத்துவதை ஒரு போதும் ஏற்கமுடியாது. அப்படிக் கொச்சைப் படுத்துபவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் எத்தகையது? தமிழ்த் தேசியம் என்பது இந்துத்துவ தேசியத்தை, இந்திய தேசியத்தை, இந்தி தேசியத்தை எதிர்ப்பதாக, சாதிகளை ஒழிப்பதாக இருக்க வேண்டும். வெறும் மொழி உணர்வு, இன உணர்வு என்கிற அடிப்படையில் எழும் தமிழ்த் தேசியம் சரியானது அல்ல. ஈழ மக்களை நான் ஆதரிக்கிறேன் என்றால், அங்கு வாழ்பவர்கள் தமிழர்கள் என்பதால் அல்ல. அங்கே அவர்கள் சிங்கள ஒடுக்குமுறையால் பாதிக்கப் படுகிறார்கள் என்பதால்தான். ஆனால் ஈழத்தை ஆதரிக்கிறவர்கள் அங்கே வாழ்பவர்கள் தமிழர்கள் என்கிற ஒரே காரணத்துக்காக ஆதரிக்கிறார்கள். இங்கே தமிழ் நாட்டில் பரமக்குடியில் உள்ள தலித் தமிழர்கள் கொல்லப் பட்டால் கேட்கத் துணிச்சல் இல்லாதவர்கள், ஈழத்தில் நடந்தால் மட்டும் கூக்குரல் இடுவேன் என்பது போலித்தனமானது!
-----------------------------------(ஆனந்தவிகடன் 11.7.2012)
விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்கள் ஆணித்தரமாகவே இவ்வாறு பதில் கூறியுள்ளார் என்றே கூற வேண்டும்.
இதில் இன்னொரு கருத்து முக்கியமானது -முதன்மையானதும் கூட!
திராவிட கருத்தியலின் ஆணிவேர் என்பது பார்ப்பன எதிர்ப்பு என்பதை மறந்துவிடக்கூடாது.
அந்தப் பார்ப்பனீய - பார்ப்பன ஆதிபத்திய எதிர்ப்பும் - போராட்ட நடவடிக்கைகளும்தான் இன்றைய நம் மக்களுக்கு பார்ப்பனர் அல்லாத மக்களுக்குத் தன்மான உணர்வை ஊட்டியது. திராவிட இயக்கம் கொடுத்த அந்தப் பார்ப்பன எதிர்ப்பு உணர்வுதான் தமிழர்கள் மத்தியில் இன உணர்வை ஊட்டியது.
அந்தத் திராவிட இயக்கம் கொடுத்த ஜாதி ஒழிப்புக் குரலும் ஜாதி எதிர்ப்புப் போராட்ட நடவடிக்கைகளும்தான் தமிழர்களிடையே ஓரினக் கோட்பாடு உணர்வை உற்பத்தி செய்தது. தன்னைத் தனித்தனி ஜாதியாக அடையாளம் காட்டிக் கொள்பவன் எப்படி ஓரினக் கொள்கைக் கோட் பாட்டை நெஞ்சில் தரிப்பான்?
தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் மிகச் சரியாக ஓரிடத்தை அடையாளம் காட்டிக் குத்திக் காட்டி யுள்ளாரே - ஜாதி ஒழிப்புக் கோட்பாடு இல்லாத வெறும் தமிழ்த் தேசிய உணர்வு எப்படித் தமிழ்த் தேசிய உணர்வை ஊட்டும் வல்லமை வாய்ந்தது?
தமிழ்த் தேசியவாதிகளுக்குப் பார்ப்பன எதிர்ப்பு உணர்வு இல்லாத நிலையில், நீண்டகால வருணாசிரம சமூக அமைப்பை எப்படி தகர்த்திட வழி கோலும்?
நீண்ட, ஆயிரம் ஆண்டு காலமாக நிலை பெற்று வந்துள்ள பார்ப்பன ஆதிக்க நிலையை ஆணிவேரோடு அழித்து முடிக்காமல் நம்மின மக்களுக்கான மீட்சி எங்கிருந்து குதிக்கப்போகிறது?
தமிழ்த் தேசிய வாதிகளுக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத நிலையில் நம் மக்களுக்குத் தொண்டு செய்யப் போவதாகத் தொடை தட்டுவது மறைமுகமாகப் பார்ப்பனக் கோட்டைக்குக் காவல் காக்கத் துடித்திடும் அடிமைச் சேவகமாகும்.
திராவிடர் என்பதில் உள்ள ஆரியர் எதிர்ப்பு உணர்வுப் பீரங்கி வேறு எங்கு தேடினாலும் கிடைத் திடாதே!
தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் இந்த வகையில் ஒரே இடத்தில் பயணித்த சகோதரப் பயணிகள் ஆவார்கள்.
அதைத்தான் மானமிகு திருமா அவர்கள் என்னைப் பொறுத்தவரை அம்பேத்கரை எப்படிப் பார்க்கிறேனோ, அப்படித்தான் பெரியாரையும் பார்க்கிறேன் என்ற வார்த்தைகளால் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.
சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் தந்தை பெரியார் அவர்களும் அண்ணல் அம்பேத்கர்அவர்களும் பார்ப்பனர் அந்நியரே என்று வரையறுத்துக் கூறிவிட்டனரே!
ஒரு ஜெர்மானியனுக்கு ஒரு பிரெஞ்சுக்காரன் எப்படி அந்நியனோ, ஒரு வெள்ளைக்காரனுக்கு ஒரு நீக்ரேர் எப்படி அந்நியனோ, அது போலவே பார்ப்பான் அடிமை வகுப்பார்களான சூத்திரர்களுக்கும், தீண்டத்தகாகதவர் களுக்கும் அந்நியனாவான். இவர் களுக்கு அந்நியன் மட்டுமல்ல; அவர்களுக்கு விரோதியாகவும் இருக்கிறான். (காந்தியும், காங்கிரசும் தீண்டப்படாதவர்களுக்குச் செய்தது என்ன? என்ற அம்பேத்கர் அவர் களின் நூலிலிருந்து)
இதையே தந்தை பெரியார்எப்படிக் கூறுகிறார்? ஆங்கிலோ இந்தியர்கள் அதே போலத்தான் இந்நாட்டுப் பார்ப்பனர்களுக்கும். ஆங்கில இந்தியர்களுக்கும் நம் தாய் நாட்டுத் தமிழர்கள் ஈன்றெடுத்தவர்கள்தானே. ஆனால் அவர்களுக்குச் சற்றாவது நம் நாட்டு உணர்வு இருக்கிறதா?
நமது மக்களைப் பார்த்து டேய் டமில் மனுஷா! என்று கேவலமாகத்தானே கூறுகின்றனர். அவர்கள் யார்? எந்த நாட்டில் பிறந்தவர்கள்? என்ற வரலாற்றை அறியாமல் தாம் ஏதோ அய்ரோப்பாவில் பிறந்து இங்கு வந்து குடியேறியது போல ஜாதி ஆண வத்துடன் அல்லவா நடக்கிறார்கள்?
அதே போலவே இந்நாட்டுப் பார்ப்பனர்களும் மேல் நாட்டில் இருந்து வந்து குடியேறிய ஆரியர் களுக்கும், நம் நாட்டவர்களுக்கும் பிறந்தவர்களாய் இருந்தும் கூட ஆரிய ஜாதி முறைகளையும், அதற்கான ஆணவத்தையும் கொண்டு நாட்டுக் குரிய நம்மைக் கீழ் ஜாதிகளாக அடி மைகளாக மதித்து நடத்துகிறார்கள். (குடிஅரசு 28-.5.-1949)
அய்யாவும் அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கம் என்பது இந்த அடிப்படையில்தான். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் மானமிகு திருமா. அவர்களின் சரியான புரிதலுடன் கூடிய இத்தகைய கருத்துகள் பெரிதும் வரவேற்கத் தக்கவை.
தமிழ்த் தேசியவாதிகளிடம் சூத்திர மக்களும் பஞ்சம மக்களும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சூத்திர மக்களுக்காகப் பாடுபட்ட தலைவர்களை வேறு ஜாதியினர் என்றும் வேறு மாநிலத்தவர் என்றும் திரித்துக் கூறி, பார்ப்பன எதிர்ப்புக் கூர்மைகளை மழுங்க அடிக்க முயற்சிக்கின்றனர்.
பெரியார் கன்னடர் என்று பேசும் அளவுக்கு அவர்கள் பார்ப்பனர்களின் கைக்கூலிகளாகிவிட்டனர்.
அடுத்து இவர்கள் எங்கே போவார்கள் தெரியுமா? அம்பேத்கர் யார்? நம் இனத்தவரா? நம் மாநிலத்தைச் சேர்ந்தவரா? நம் மொழியைப் பேசுபவரா?
வேண்டுமானால் அயோத்திதாசரையும், இரட்டைமலை சீனிவாசனையும் ஏற்றுக் கொள்ளட்டும் என்று அடுத்த கட்டத்திற்கு இவர்கள் தாவமாட்டார்கள் என்று சொல்ல முடியுமா?
ஆரியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி இவர்களைத் தொற்று நோயாகத் தொற்றிக் கொண்டுவிட்டது.
எச்சரிக்கை!
எச்சரிக்கை!!
------------ கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 14-7-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
10 comments:
கருநாடகாவைப் பார்த்து பா.ஜ.க.வை எடை போடலாம்!
பாரதீய ஜனதா கட்சி ஒரு மாநிலத்தை ஆளுவதற்கேகூட தகுதியற்ற கட்சி என்பதை நாளும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக கருநாடக மாநிலத்தில் ஆளும் கட்சி என்ற முறையில் நடந்து கொண்டு வரும் செயல்கள் கேவலத்தின் எல்லைக்கே செல்லக் கூடியவை.
பாரதீய ஜனதாவினரே வெட்கித் தலைகுனியும் ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆட்சியைக் கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்தலாம் என்று எல்.கே. அத்வானி போன்றவர்கள் கூறியும்கூட, அதைச் செய்ய முன்வருவதற்கு பா.ஜ.க. மேலிடம் தயங்குவது ஏன் என்ற வினாக்குறி வெடித்துக் கிளம்பியுள்ளது. அவ்வாறு செய்ய முடியாமைக்கான பின்னணி என்ன? அரசியல் நிர்ப்பந்தம் என்ன? இதன் பின்னணியில் பெரும் பூகம்பம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பா.ஜ.க., ஆளும் கட்சியாக இருக்கும் இந்தக் கால கட்டத்தில், அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு பா.ஜ.க.வினர் அடித்த கொள்ளைகள் அசாதாரண மானவை.
இந்த நிலையில் அங்கு தேர்தலை நடத்தினால் பா.ஜ.க. தோல்வி அடைவது என்பது எழுதி வைக்கப் பட்ட ஒன்று! அதிகாரமும் பறிபோன நிலையில் அதி காரத்தைப் பயன்படுத்திக் கொள்ளை அடித்தவர்கள் சிக்கலுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும்.
ஆளும் கட்சியாக இருக்கும்போதே சுரங்கத் தொழில் புகழ் ரெட்டிகளைக் காப்பாற்ற முடியவில்லை. ஆட்சியையும் இழந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.
கருநாடக மாநிலத்தில் அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி பல கோடிகளை சுருட்டிய அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, தான் பிணையில் வெளி வருவதற்கு நீதிபதிக்கே பத்து கோடி ரூபாய் இலஞ்சம் கொடுக்கப்பட்டது; 60 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டது என்பதெல்லாம் சாதாரணமா?
இதில் என்ன விபரீத, வேடிக்கை என்றால் ஊழல் காரணமாக முதல் அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற வேண்டிய அவசியத்திற்கு ஆளான பி.எஸ். எடியூரப்பா, பதவி விலகினாலும் அதன் தொடர்ச்சியாக யார் முதல் அமைச்சராக வர வேண்டும் என்று நிர்ணயிக்கும் சக்தி உள்ளவராக இன்று வரை இருப்பதாகும்.
சதானந்தா கவுடா முதலில் அவர் விருப்பப்படியே நியமிக்கப்பட்டார். புதிய முதலமைச்சரை தன் கைப் பாவையாகப் பயன்படுத்த முடியாத காரணத்தால், அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வெளியேற்றினார். அடுத்த முதலமைச்சராக இப்பொழுது ஜெகதீஷ் ஷெட்டர் என்பவரும் எடியூரப்பா விருப்பப்படியே நியமிக்கப் பட்டுள்ளார்.
இவற்றின் பொருள் என்ன? ஊழல் குற்றச் சாற்றுக்கு ஆளான ஒருவர் தான் நிழல் முதல் அமைச்சராக இருந்து வருகிறார் என்றுதானே பொருள்? தார்மீகம் பேசும் பா.ஜ.க., என்னும் கப்பலில் எத்தனை எத்தனை ஓட்டைகள்!
இந்தப் புதிய முதல் அமைச்சர் பதவி ஏற்கும் போதே நில முறை கேடு என்ற குற்றச்சாற்றையும் தன் தலையில் சுமந்து கொண்டே உள்ளே நுழைகிறார்! சபாஷ்! இவ்வளவு நேர்மைக் குலத் திலகங்களை (?) உலகில் எந்த மூலையில்தான் தேடிக் கண்டுபிடிக்க முடியும்?
அடுத்த அடி ஒன்று இன்று ஆளுநரிடமிருந்து வந்திருக்கிறது. கறை படிந்த சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று அதிரடியாகக் குற்றப் பத்திரிகை படித்திருக்கிறார் ஆளுநர் பரத்வாஜ்.
இதற்கிடையே இன்னொரு சேதி இன்று. அமைச்சர் பதவி கிடைக்காத காரணத்தால் கருணாகரரெட்டி இல்லத்தில் அதிருப்தியாளர்கள் கூடி ஆலோசித்தனர். தங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படாவிட்டால் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகுவதாக அதிருப்தியாளர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
எதற்கும் வெட்கபடப் போவதில்லை என்று சங்கை கெட்டுப் போனவர்கள் எதைத் தான் செய்ய மாட்டார்கள்?
இந்த லட்சணத்தில் இவர்கள் மற்றொரு முறை இந்தியாவை ஆள வேண்டுமாம்!
அவ்வளவு அடி முட்டாள்தனத்தையும் ஏமாளித் தனத்தையும் கொண்டவர்களா நாட்டு மக்கள்? 14-7-2012
அய்யோ பாவம் - சோவும் கைவிட்டு விட்டாரே!
(துக்ளக் 18.7.2012 நாளிதழில் 24-25ஆம் பக்கத்தில் கர்நாடகங்கள் என்ற தலைப்பில் சோவிடம் துக்ளக் வாசகர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில் களும் வருமாறு: ) - கே.என்.பாலகிருஷ்ணன், சென்னை - 66
கே: கர்நாடக முதல்வர் சதானந்த கௌடாவை நீக்கக் கோரி 9 அமைச்சர்கள் ராஜினாமா செய்துவிட்டு, பிறகு வாபஸ் பெற்றுள்ளது பற்றி...?
ப: சதானந்த கௌடாவை இப்போதே நாங்கள் நீக்கிவிட்டால், பா.ஜ.க. தலைமை ரொம்பவும் பலவீனமாக இருக்கிறது என்று எல்லோரும் பேசுவார்கள். அதனால் உங்கள் விருப்பதைப் பூர்த்தி செய்வதற்கு சில நாட்கள் அவகாசம் கொடுங்கள். நாங்கள் அவரை நீக்கிவிட்டு, வேறு யாரை (எடியூரப்பா சுட்டிக் காட்டுகிறாரோ) அவரையே முதல்வராக ஏற்றுக் கொண்டு விடுகிறோம். - என்று பா.ஜ.க. தலைமை, இவர்களிடம் கூறியிருக்கலாம். அதனால் எடியூரப்பா திருப்தி அடைந்திருப்பார். அவருடைய சீடர்கள் ராஜினாமாவை வாபஸ் வாங்கியிருக் கிறார்கள்.
பா.நாராயணன் சென்னை-92
கே: கர்நாடக பா.ஜ.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்கள், வரும் பாராளுமன்றத் தேர்தலில் அங்கு எதிரொலிக்க வாய்ப்பு உள்ளதா?
ப: அப்படித்தான் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். கர்நாடக பா.ஜ.க.வில் எடியூரப்பா மீது வந்த குற்றச்சாட்டுக்கள், அது தவிர அங்கு நடந்த குழப்பங்கள், கட்சித் தலைமை எந்த முடிவையும் எடுக்க முடியாமல் தடுமாறும் நிலை போன்றவை எல்லாம் பா.ஜ.க.வை பாராளுமன்றத் தேர்தலில் வெகுவாகப் பாதிக்கக் கூடும் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் பா.ஜ.க.வைச் சார்ந்த சில நண்பர்கள், இது தவறான எண்ணம் என்றும், கர்நாடக பா.ஜ.க.விற்கு அங்கு ஓட்டிழப்பு நேரிடாது என்றும் கூறுகிறார்கள். பார்க்கலாம்.
பி.சூடாமணி, திருச்சி - 6
கே : கர்நாடகாவில் மீண்டும், மீண்டும் முதல்வர்களை பா.ஜ.க. மேலிடம் மாற்றுவது ஆரோக்கியமானதா?
ப: நீங்கள் பா.ஜ.க.வின் ஆரோக்கிய நிலை பற்றிப்பேசுகிறீர்கள். ஆனால், கர்நாடக பா.ஜ.க. அமைச்சரவையோ, அவ்வப்போது ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டிய நிலைக்கு வந்துவிடுகிறது. அந்த மாதிரி சமயங்களில் சிலிண்டர்களை மாற்று கிறார்கள். என்ன செய்வது? அதனால்தான் மீண்டும், மீண்டும் சிலிண்டர்கள் மாற்றப்படுவது போல் முதல்வர்கள் மாற்றப்படுகிறார்கள். - பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி
கே: இவ்வளவு நெருக்கடிகள் தந்தும்கூட, பா.ஜ.க. ஏன் எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுகிறது?
ப: எடியூரப்பாவுக்கு மக்களிடையே - அதுவும் லிங்காயத் மக்களிடையே - பெரும் ஆதரவு இருப்பதாகவும், அதை இழந்தால் பா.ஜ.க.வுக்கு மிகவும் பலவீனமான நிலை ஏற்படும் என்றும், ஓர் உறுதியான கருத்து பா.ஜ.க.வில் சிலருக்கும், பா.ஜ.க நண்பர்கள் சிலருக்கும் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் எடியூரப்பா என்ன செய்தாலும், அதைப் பொறுத்துக் கொள்ளவே பா.ஜ.க. தலைமை முயற்சிக்கிறது. இது நல்ல அரசியல் அல்ல. ஜாதியை நம்பி நடத்தப்படுகிற அரசியல். ஆக, ஜாதி அரசியலுக்கு பா.ஜ.கவும் விதிவிலக்கல்ல.
துக்ளக் பிஜேபிக்காக வக்காலத்துப் போட்டு வழக்காடும் திருவாளர் சோ.ராமசாமியாலேயே பிஜேபியைக் காப்பாற்ற முடியவில்லையே! 14-7-2012
இளைஞர்களே! உங்களுக்குத் தெரியுமா?
பக்கம் 1 எண் 2:
1925 க்கு முன்பு தமிழ்நாட்டிற்குக் காந்தியார் வந்த போதெல்லாம் மைலாப் பூரில் சீனுவாச அய்யங் கார் வீட்டுத் திண்ணை யில்தான் உட்கார்ந் திருப்பார் - உள்ளே போகாமல்.
1926 க்குப் பின்தான் அவர் வீட்டுக்குள் சென் றார். (காரணம் சுயமரியாதை இயக்கத்தினைப் பெரியார் ஆரம்பித்து 1925 முதல் பிரச் சாரம் செய்தார்.)
மகாத்மா காந்திக்கே இந்தக் கதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
பக்கம் 5 எண். 32:
மைலாப்பூர் கபாலீசுவரன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு, மற்ற எல்லாரையும் விட 1916 ஆம் ஆண்டிலேயே ரூ. 10,000 நன்கொடை வழங்கிய நீதிக் கட்சித் தலைவர் தியாகராயர் விழா மேடையில் உட்காரப் பார்ப்பனர்கள் அனுமதிக்க வில்லை! அதே நேரத்தில் தியாக ராயரின் பார்ப்பன கிளார்க்கு களுக்குக் கூட அந்த உரிமை வழங்கப்பட்டிருந்தது!
இந்த அவமானத்தைக் கண்டு கொதித்தெழுந்த தியாகராயர், பார்ப்பன எதிர்ப்பில் மிகத் தீவிரவாதியாக மாறினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?பக்கம் 18 எண். 113 :
1938 ஆம் ஆண்டு நீடாமங் கலத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் மூன்று ஆதிதிராவிட தோழர்கள் சரிசமமாக உட் கார்ந்து விருந்து சாப்பிட்டார்கள் என்பதற்காக அவர்களை மொட்டை அடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பக்கம் 18 எண். 114:
டாக்டர் சுப்பராயன் முதலமைச்சராக இருந்த காலத்தில் பட்டுக்கோட்டை தாலுகா போர்டுக்கு, பட்டுக் கோட்டை மேலத் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து என்ற தாழ்த்தப்பட்ட தோழரை நியமனம் செய்த காரணத்தால், போர்டு கூட்டத்தைக் கூட்டினால், அந்தத் தாழ்த்தப்பட்ட தோழரும் சமமாக உட்காருவார் என்ற காரணத்தால், போர்டு கூட்டத்தைக் கூட்டா மல் காலங்கடத்தி வந் ததும், இதனை எதிர்த் துப் பட்டுக்கோட்டை சுயமரியாதை இயக்கத் தவர்கள் கண்டனக் கூட்டங்களை நடத்தி கடுமையாக எதிர்ப்புக் காட்டியதைத் தொடர்ந்து முதலமைச்சர் சுப்பராயனே தலையிட்டு தாலுகா போர்டு கூட்டத்தைக் கூட்டா விட்டால் போர்டையே கலைத்து விடுவேன் என்று எச்சரித்ததன் பேரில் போர்டு கூட்டம் நடத்தப் பட்டதும், அந்தக் கூட்டத்தில் அந்தத் தாழ்த்தப்பட்ட தோழர் சமமாக அமர்ந்ததும் உங்களுக்குத் தெரியுமா?
பக்கம் 24 எண். 155:
எட்டயபுரத்திலே நடந்த பாரதி விழா ஒன்றில் மேடையில் நாற் காலியில் ஆச்சாரியார், எம்.எஸ். சுப்புலட்சுமி சதாசிவம் அய்யர் ஆகியோர் அமர்ந்து கொண்டு முதலமைச்சராக இருந்த ஓமந் தூராரையும் டாக்டர் சுப்பரா யனையும் தரையில் பாய்போட்டு உட்கார வைத்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
பக்கம் 27 எண் 174
1929 இல் உத்தமபாளையம் வட்டம் சீலையம்பட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து கோர்ட் உறுப்பினர்களே, பார்ப் பனர்களுக்குச் சரி சமமாக உட் காரத் தடை விதிக்கப் பட்டனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
புரோகித சூழ்ச்சி!
மனித இனத்தின் மகத்தான முதல் கண்டுபிடிப்புகளில் ஒன்று தீ. இன்றும் அது மனிதர்களால் ஒதுக்கி வைக்க இயலாததாக உள்ளது; என்றும் அப்படித்தான் இருக்கவும் செய்யும். காட்டுவாசிகளாக இருந்த நம்முடைய முன்னோர்கள் இருளை அகற்றவும், வனவிலுங்குகளை அச்சுறுத்தி விரட்டவும், குளிரிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும் தீயை பயன்படுத்தத் தொடங்கினர். பிறகு உணவை வேகவைத்து உண்ண தீ பயன்படுமென்பதை அவர்கள் தெரிந்து கொண்டனர். களிமண்ணைச் சுட்டுப் பாத்திரங்கள் செய்யவும், செங்கல் செய்யவும் தீயைப் பயன்படுத்தத் தொடங்கியது நாகரிகத்தின் மற்றொரு வளர்ச்சிக் கட்டத்திலாகும். உலோகங் களைக் கண்டுபிடித்ததும் ஆயுதங்கள் செய்யவும் தீ பயன்படுமென்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.
இயற்கையை வெல்வதற்கு தீ மனி தர்களுக்கு செய்த உதவி கொஞ்சமல்ல. உணவைப் பக்குவப்படுத்தவும், குளிரை அகற்றவும் மட்டுமல்ல, இயந்திரங்களை இயக்கவும், வாகனங்களை ஓட்டவும், விமானங்களைப் பறக்கச் செய்யவும், வான்வெளிக்கு விண்கோள்களை அனுப்பவும் இன்று தீ பயன்படுகின்றது. தீ எரிக்க முன்பு விறகை மட்டுமே பயன்படுத்தினரென்றால், இன்று கேஸ், பெட்ரோல், மண்ணெண்ணெய் முதலிய பலவற்றையும் பயன்படுத்துகின்றனர். எந்தச் சமயத்திலும் எங்கேயும் கொண்டு செல்லவும் எங்கே வைத்தும் தீ உண்டாக்கவும் கூடிய பல கருவிகள் இன்று நமக்கு உண்டு. அவற்றில் சர்வ சாதாரணமான ஒன்று தீப்பெட்டி. கார் ஓட்டுவது பெட்ரோலையோ டீச லையோ எரிய வைப்பது என் றாலும், அதற்கு தீப்பெட்டி கூடத் தேவையில்லை. ஸ்டார்ட் செய்யும் பொழுது அதற்காகப் பயன்படுத்துகின்ற எரி பொருளில் தீ பிடிப்பதற்கான வசதிகள் அதற்கு உள்ளேயே செய்யப்பட்டுள்ளன. சமையலறையில் கேஸை எரியச் செய்வதற்குக் கூட இன்று அதிகமாக எவரும் தீப் பெட்டியைப் பயன்படுத்துவதில்லை. எந்தவித சிரமமுமின்றி தீயை உண்டாக்கவும் கொண்டு செல்லவும் பாதுகாக்கவும் இன்று நம்மால் முடிகின்றனது. ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலை அதுவல்ல. கி.பி. 1828 இல் ஜான்வால்கர் தீப்பெட்டியைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு தீ உண்டாக்க மனிதர்கள் மிகவும் சிரமப்பட்டனர். உலோகங்களை உராயச் செய்தோ, சில வகை மரத் தடிகளைப் பயன்படுத்திக் கடைந்தோ தீ உண்டாக்க வேண்டியிருந்தது. அது மிகவும் சிரமமான வேலையாக இருந் தது. அதனால் தீயை அணைக்காமல் பாதுகாக்க அன்றைய மக்கள் முயன்றனர்.
கோத்திர நாகரிகம் உருவாவதற்கு முன்புள்ள காலத்தில் குகைகளில் வாழ்ந்திருந்த மனிதர்கள் குகையின் ஒரு பகுதியில் நிரந்தரமான நெருப்புக் குண்டங்களை அமைத்தனர். காய். கனிகளைச் சேகரிக்கவோ வேட்டை யாடவோ செல்லும்பொழுது தீ அணையாமல் பாதுகாப்பதற்காக குகையில் எவரேனும் இருக்க வேண்டி இருந்தது. சிறு குழந்தைகளின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்ற பெண், ஆரம்பகாலத்தில் அந்தப் பொறுப் பையும் ஏற்றாள். உணவைப் பக்குவப் படுத்துவதும் குழந்தைகளின் பாது காப்பும் வரலாற்றுக்கும் முந்தைய காலத்திலேயே பெண்களுடைய பொறுப்பில் வந்தது அவ்வாறுதான். பெண்களுடைய அடிமை நிலை அங்கிருந்தே ஆரம்பிக்கிறது.
பண்டைய மனிதர்களைப் பொறுத்தவரை அவர்களால் விவரிக்க இயலாத ஒரு திவ்ய படைப்பே தீ. அதனை உண்டாக்குபவர்களும், பாதுகாப்பவர்களும் அதனாலேயே சமூகத்தில் முக்கியத்துவம் பெற்றனர். இந்தத் தீயைப் பாதுகாப்பவர்களே பிற்காலத்தில் புரோகிதர்களாக ஆனார்கள். நெருப்புக்கு அவர்கள் திவ்யத் தன்னமையைக் கொடுத்தனர். தீயில் இடுகின்ற பொருள்கள் எரிவதைக் கண்டதும், தீ உணவு உண்பதாக இயல்பாகவே அவர்கள் சங்கல்பித்தனர். அந்தத் திவ்ய சக்தியை மகிழ்விப்பதற்காக எதைக் கொடுக்கவும் அவர்கள் தயாரானார்கள். உணவுப் பொருள்கள், நெல், விலங்குகள், மனிதர்கள் முதலிய பலவற்றையும் அவர்கள் நெருப்புக்கு உணவாக அர்ப்பணித்தனர். இவ்வாறு நெருப்புக்கு அர்ப்பணிப்பதில் ஒரு பங்கு தீயை பாதுகாப்பவர்களுக்கும் கிடைத்தது. பின்னர் தீயின் மகத்துவத்தைச் சொல்லி வழிபாடுகளை ஏற்கவும் தீயின் பாதுகாவலர்களான புரோகிதர்கள் முயற்சியை ஆரம்பித்தனர். படிப்படி யாகப் புரோகித சூழ்ச்சி ஆரம்பிக்கப் பட்டது.
- ஜோசப் இடமருகு 14-7-2012
உண்ணும் உணவில் மதமும் ஜாதீயமும்
இந்து மதமானது மனித வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் தீண்டாமையை புகுத்தியுள்ளது. உண்ணும் உணவு, உடுக்கும் ஆடை, உறைவிடம், பொரு ளாதாரம், கல்வி போன்றவைகளில் இந்து மதத்தின் ஆளுமை எவ்வாறு இருந்தது என்பதை மத ஆராய்ச்சி யாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். மே ஒன்றாம் நாள் இந்து நாளேட்டில் கல்பனா கண்ணபிரான் அவர்கள் நாம் உண்ணும் உணவில் மதங்கள் மற்றும் சாதீயத்தின் ஆளுமையை விளக்கி யுள்ளார்.
கல்பனா கண்ணபிரானின் கட்டுரை சுருக்கமாகக் கீழே.
இந்தக் கட்டுரையை அவர் வெளியிட நேர்ந்ததின் காரணம் சில நாட்கள் முன்பு ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகம் மாட்டிறைச்சி உணவுத் திருவிழா நடத்தியதும் அதனை எதிர்த்து சில இயக்கங்கள் கூக்குரல் எழுப்பியதும்.
பன்முகத்தன்மைக் கொண்ட நம் நாட்டில் உணவுப் பழக்கமும் பன்முகத் தன்மை வாய்ந்தது. உண்ணும் உணவுக்கும் புனிதத்துவம் கொடுக்கப் பட்டு சமூகத்தில் மேலோர் உண்ணும் உணவு கீழோர் உண்ணும் உணவு என்று வேறுபடுத்தப்பட்டுள்ளது. காலங்காலமாக தலையில் திணிக்கப் பட்ட நம்பிக்கைகள் மற்றும் புனிதத் துவம் என்ற கருத்துகள் உண்ணும் உணவிலும் வெளிப்படும்.
என்ன காய்கறி உண்ணலாம் , மாமிசம் உண்ணலாமா வேண்டாமா, எந்தெந்த மாமிசங்களை உணவாகக் கருதலாம், மாமிசங்களில் சைவ மாமிசங்கள் எவையெவை.
விலங்குகளிலிருந்து பெறப்படும் பொருட்கள் சைவமா அசைவமா என்பவைகளை மத நம்பிக்கைகள் தான் முடிவு செய்யும்.
உண்ணுதல் உணவைப் பற்றி பார்த் தோம். உண்ணுதலைப் பார்ப்போம்
யார் யார் யாருடன் சேர்ந்து உண்ணலாம்.
உணவாக்கப்பட்ட விலங்கின் எந் தெந்த பகுதியை யார் யார் உண்ணலாம்.
உண்ணுதலில் வரிசை முறை --ஆண்/பெண், பெரியோர்/சிறியோர், சமூக அமைப்பில் உயர்ந்தவர்/ தாழ்ந்தவர் ஒரு பல்கலைக்கழக துணை வேந்தர், ஒரு நீதியரசர், ஒரு கடைநிலை ஊழியர் யாவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணலாமா, அதுவும் ஒரே உணவு வகைகளை உண்ணலாமா.
ஒரு தாழ்த்தப்பட்டவர் எச்சில் உணவுக்கு பதிலாக சூடாக பரி மாறப்படும் உணவினை உயர் ஜாதி வர்க்கத்தினரிடம் தைரியமாகக் கேட்க முடியுமா? இத் தருணத்தில் தலித் எழுத்தாளர் ஓம்பிரகாஷ் வால்மீகி படைத்த நூல் "ஜூதன் " நினைவுக்கு வருகிறது. மேலும் இந்த ஜாதீய அமைப்பில் ஒரு பார்ப்பனன் உணவை விழுங்கும் போது - சூத்திரன், மாதவிலக்கு உள்ள பெண், பன்றி மற்றும் நாய் அவன் கண்ணில் படக் கூடாது. மதச்சார்பு உண்ணும் உணவிலும் புகுத்தப் பட்டுள்ளது. எந்தெந்த நாட்களில், நேரங்களில் மாதங்களில் என்னென்ன உணவு உட்கொள்ளவேண்டும் என்பதை, தான் சார்ந்துள்ள மதம் அறிவுறுத்தும். மாமிசத்துக்காக விலங்குகளை வெட்டுவதற்கும் மதம் சில வழிமுறைகளை கூறுகின்றது.
அழுகிய மாமிசத்தையே உண்ண வேண்டும் என்று சில ஜாதியினருக்கு விதிக்கப்பட்டுள்ளது. சில சமூகத்தினர் மத விழாக்களில் மாமிசத்தை புறக் கணிப்பர், சில சமூகத்தினர் விழாக் களில் மாமிசத்தை சேர்த்துக் கொள்வர்.
ஆந்திர மாநிலத்தில் சில ஜாதியினர் காடுகளில் புலி விட்டுச் செல்லும் மிச்ச மாமிசத்தை உணவாகக் கொள் வர். புலி அவர்களுக்கு தேவையான உணவை விட்டுச் செல்லும் என்று நம்புகின்றனர். இப்பொழுது என் (கட்டுரையாளருக்கு அல்ல) நினைவுக்கு வருவது தந்தை பெரியார் கூறியது. நாட்டில் வாழும் பார்ப்பனனை விட, காட்டில் வாழும் கடும் புலி மேல் என்று. உணவில் மனப்பாங்கு உணவின் தூய்மை, வீரியம், ஊறு நிகழும் வாய்ப்பு, சுவை போன்றவை ஒரு சமூகத்தின் பார்வையை ஆட்கொள் ளுகின்றது. விலங்குகளைக் கறிக்காக வெட்டுவதை பார்க்க நேரிட்டால் கறி உண்ணும் பார்ப்பனர்கள் மற்றும் பயந்தாங்குளிகள் அருவருப்படையலாம்.
மேலும் விலங்குகள் உயிரிழக்கும் சூழல் --விலங்கின் தலை கால் ரத்தம் போன்றவை பரவிக் கிடப்பது மேலும் வெறுப்பூட்டும்.. இந்து மத ஜாதிகளில் பல படித் தட்டுகள் இருப்பது போல காய்கறிகளிலும் உள்ளன. உயர்ந்த ஜாதி காய்கறிகள் தாழ்ந்த ஜாதிக் காய்கறிகள். என்றும் பிரிக்கப்பட்டுள்ளன. புடலங்காய், பாகற்காய் போன்றவை தாழ்ந்த ஜாதிக் காய்களாக பார்க்கப் படுகின்றன. உண்பதிலும் சிலர் துறவறத்தை கடைப் பிடிக்கின்றனர். தான், மிகவும் அன்பு செலுத்திய யாரேனும் இறக்க நேரிட்டால் அவர் நினைவாக தனக்குப் பிடித்தமான உணவை விட்டு விடுவதுண்டு.
மாறிய உணவுப் பழக்கம்
மாறிய உணவுப் பழக்கங்கள் பற்றி பல சரித்திரச் சான்றுகள் உண்டு. எடுத்துக்காட்டாக பண்டைய வேதகால பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்டு வந்தனர். பிற்காலங்களில் தவிர்த்தனர்.
நம் நாட்டில் உண்ணப்படும் மாமிச வகைகள்
ஆடு, கோழி, மீன், சில கடல் வாழும் உயிரிகள், தவளை, வயல்எலி, நாய், மான், பன்றி, குரங்கு, மாடு, எருமை, சில பூச்சி வகைகள், சில பறவைகள், மேலும் பல ஊர்வன மனிதர்களுக்கு தங்கள் உடல்களை மாமிசமாக வழங்குகின்றன.
பிடித்த மற்றும் பிடிக்காத விலங்குகள் என்று மத, ஜாதி, இன சமூக அடிப்படையில் நிச்சயிக்கப் படுகின்றன
நம் நாட்டில் விருந்தோம்பலிலும் அதன் பன்முகத் தன்மை வெளிப்படுகிறது. உணவில் காணப் படும் பன்முகத்தன்மையில் சில பண்பாட்டளர்கள் மதரீதியான அரசியலை புகுத்துகின்றனர். இதனால் மனக் கசப்பும் கலவரங்களும் உருவாகின்றன. அவரவர் மத அல்லது ஜாதி வழக்கப்படி சமைக்கப்படும் உணவானது எல்லா மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் பரிமாறப் படுகிறது. நம் நாட்டில் மதக் கலவரத்துக்கு பயன் படும் மாமிசங்கள் --பன்றிக் கறியும், மாட்டுக் கறியும். இவை இரண்டும் பெரும்பாலானவர்களால் பன்னெடுங்காலமாக உண்ணப்படு கின்றன. மாட்டுக் கறியினை இந்து அல்லாதவர்கள் உண்டு வருகின்றனர். ஆனால் இந்து மதத்தின் பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ள பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களும் நீண்டகாலமாக உண்டு வரும் வழக்கம் உண்டு. இது மறுக்க முடியாத உண்மை . ஆனால் பெரும்பான்மை மதம் இந்த உண்மையை மறைக்க முயல்கின்றது.
பெரும்பான்மை மதம் அதன் உட்பிரிவுகளில் உணவு பற்றிய தனது ஆளுமைக் கருத்துகளைத் திணித்தால் எதிர்ப்பும், வெறுப்பும் கிளம்பும். உணவு பன்முகத் தன்மையில் பாதிப்பை விளைவிக்கும்.
ஒரு விருந்தை ஏற்றுக் கொள்வதோ மறுப்பதோ தனி மனிதரின் உரிமை. அங்கு பரிமாறப் படும் உணவை ஏற்பதும் மறுப்பதும் கூட அவரின் தனி உரிமை..
சமீபத்தில் உஸ்மானியா பல்கலை கழகத்தில் நடந்த மாட்டுக் கறி விழா வில் யார் மீதும் மாட்டுக் கறி உண்ணும் படி கட்டாயப் படுத்தல் நிகழவில்லை. அந்த விருந்துக்குச் சென்றவர்களுக்கு மாட்டுக் கறி ஒன்றும் விலக்கப் பட்டதான உணவு என்ற உணர்வு இல்லை. விரும்பியே சென்றனர். விரும்பியே உண்டனர் அது சுய சிந்தனை மற்றும் ஒருங்கிணைப்பு நோக்கம் உள்ளவர்கள் கலந்து கொண்ட விருந்தாகவே அமைந்தது.
வெறுப்பை வளர்க்கின்றனர் என்று பெரும்பான்மை மதத்தினர் வழக்குத் தொடுப்பதில் அர்த்தம் ஒன்றுமில்லை. மேலும் பேராசிரியர்கள் மாணவர் களைத் தூண்டிவிடுகின்றனர் என்ற குற்றச் சாட்டுக்கும் பொருளில்லை. விருந்து படைப்பதை வழக்காடு மன்றத்துக்கு எடுத்துச் செல்ல எந்த முகாந்திரமும் இல்லை. வழக்காடு மன்றமும் இதில் குறுக்கீடு செய்யவோ விசாரணை செய்யவோ அவசியம் இல்லை. ஏனெனில் நீதி மன்றத்தில் மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய ஏராளமான வழக்குகள் அவர்களின் பார்வைக்காக ஏங்கிக் கொண்டி ருக்கின்றன..
கல்பனா கண்ணபிரான் அவர்கள் தற்போது ஹைதராபாத்தில் உள்ள " சமூக மேம்பாட்டுக் குழு" (Council for social Development) வின் முனைவ ராகவும் இயக்குநராகவும் பணியாற்று கிறார்.
இந்து நாளேடு 01.05.2012 தகவல்: சி. நடராசன்.
தடையானவர்கள்
மனிதச் சமுதாய வளர்ச்சிக்கும், மனிதத் தன்மைக்கும் இமயமலை போன்ற தடையானவர்களும், கேடானவர்களும், நமது சோசியர்களும், மந்திரவாதிகளும், மத, புராண, இதிகாசப் பிரச்சாரகர்களும் ஆவார்கள்.
---------பெரியார்(விடுதலை, 4.4.1968)
ஜாதிப் பிடியில் பாரதீய ஜனதா கட்சி
பெங்களூரு, ஜூலை 15- இந்துக்களுக்கும், முஸ் லிம்களுக்கும் இடையே பகையை வளர்த்து அதில் முளைவிட்டது தான் பாரதீய ஜனதா கட்சி. இன்று அக்கட்சி, ஜாதி அரசியலுக்குள் சிக்குண்டு தவிக்கிறது.
ராஜஸ்தானில் தொடர்ந்து ஆட்சி அமைத்து வந்தது பார தீய ஜனதா. அம்மாநி லத்தின் குஜ்ஜார்களும், ஜாட்டுகளும் இரு பெரும் சாதி பிரிவுகள். அரசின் நலன்களை எல்லாம் ஜாட்டுகள் அனுபவித்து வந்தனர். இதனால் குஜ்ஜார்கள் அரசிடம் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தினர். இப்போராட் டத்துக்கு எதிராக ஜாட் டுகள் கலவரம் செய் தனர். குஜ்ஜார்களுக்கு இடஒதுக்கீடு தரக் கூடாது என்று பிடி வாதம் காட்டினர். குஜ் ஜார்களின் போராட்டம் வலுத்ததால் வேறு வழியின்றி ராஜஸ்தான் பாரதீய ஜனதா அரசு 2008ஆம் குஜ்ஜார் களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தது. அடுத்து வந்த சட்டமன்ற தேர் தலில் பாரதீய ஜனதா படுதோல்வி அடைந்தது.
கருநாடகம்
அதுபோல், இப் போது கர்நாடகாவிலும் பாரதீய ஜனதாவிற்கு பிரச்சினை வெடித் திருக்கிறது. பாரதீய ஜனதா முதன்முறையாக கர்நாடகத்தில் ஆட் சியைப் பிடிக்க, எடி யூரப்பா கர்நாடகாவின் முதலமைச்சர் ஆனார். அவர்மீது சுரங்க ஊழல் முதல், குடும்பத்தின ருக்கு அரசு நிலங்களை மலிவான விலையில் விற்றதுவரை பல வழக் குகள் உள்ளன. இவ்வழக் குகள் சம்பந்தமாக எடி யூரப்பா கைதாகி சிறைக் குச் சென்றார். அப் போது அவருக்கு பதி லாக சதானந்தா கௌ டாவை பாரதீய ஜனதா முதல்வராக்கியது. எடியூரப்பா இப்போது ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இப்போது கௌடாவை இறக்கிவிட்டு தனக்கு மீண்டும் முதல்வர் பதவி தர வேண்டும் என்று அடம் பிடித்தார். பார தீய ஜனதா தலைமை அதை ஏற்கவில்லை. எடியூரப்பாவை பல வாறாக சமாதானப்படுத் திப் பார்த்தது. அவர் மசியவில்லை. தனக்கு இல்லாவிட்டாலும் தனது ஜாதிக்காரர் ஒருவர் தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டார். எடி யூரப்பா லிங்காயத்துகள் ஜாதியைச் சேர்ந்தவர். லிங்காயத்துகள் கர்நா டகாவின் பிரதான ஜாதியினர். பாரதீய ஜனதாவில் பலரும் இந்த லிங்காயத்துகள்தான்.
இப்போது வேறு வழியின்றி சதானந்தா கவுடாவை இறக்கி விட்டு லிங்காயத்துக்காரரான ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக் கியுள்ளது. கர்நாடகாவின் மற் றொரு ஜாதியான ஒக் கலிக்கர் சமுதாய மக் களை திருப்திபடுத்த, அந்த சமுதாயத்தைச் சேர்ந்த அசோக் என்ப வரை துணை முதல்வ ராக்கியுள்ளது. பாரதீய ஜனதா இவ்வாறாக ஜாதி பிரிவுக்குள் சிக்கிக் கொண்டு கர்நாடகத்தில் பாரதீய ஜனதா திக்கு முக்காடுகிறது.
புதிய முதல்வருக்கும் சிக்கல்
இந்நிலையில் பதவி யேற்று 2 நாட்கள் ஆகியும் புதிய அமைச் சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள தால் கட்சி மேலிடத்தின் ஒப்புதலை பெற முதல் வர் ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று டெல்லி சென் றுள்ளார்.
இதற்கிடையில் அமைச்சர் பதவி கிடைக் காத சீனிவாச ஷெட்டி மற்றும் அங்கரா ஆகிய இரு எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவியை ராஜி னாமா செய்யப் போவ தாக மிரட்டியுள்ளனர். துறை ஒதுக்குவதில் சிக்கல், அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க் களின் மிரட்டல் ஆகிய வற்றால் முதல்வராக பதவியேற்ற ஜெகதீஷ் ஷெட்டருக்கு இரண்டு நாட்களிலேயே நெருக் கடி ஏற்பட்டுள்ளது.
15-7-2012
பார்ப்பன தர்மம்
பார்ப்பன தர்மம் என்பதே கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு, புரட்டு, பித்தலாட்டம், துரோகம், அசிங்கம், ஆபாசம், நம்பிக்கைக் கேடு, நாணயக் கேடு ஆகிய கூடாத காரியங்களை, குணங்களை அடிப்படையாகக் கொண்டே ஏற்பாடு செய்யப்பட்டவை என்றே சொல்லக்கூடியவையாக இருக்கின்றன. - பெரியார்(விடுதலை, 5.1.1966)
Post a Comment