தினமலர் இந்தக் கார்ட்டூன் மூலம் என்ன சொல்ல வருகிறது? ஈழத் தமிழர்களின் மீதான நல்லெண்ணத்தில் சொல்லப்படுகிறதா?
ஈழத் தமிழர்கள்மீது இந்தத் தினமலரின் கருத்து என்ன? விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை எத்தனை முறை சாகடித்து இருக்கிறது - இந்தத் தினமலர்? அதனால் தானே நமது தமிழர் தலைவர் தினமலர் ஏட்டுக்குக் கருமாதிப் பத்திரிகை என்று நாம கரணம் சூட்டினார்.
டெசோ செடி, மரமாகிப் பூப்பூத்து, காய் காய்ச்சு பழமாகி விடக் கூடாது என்பதுதான் இவர்களின் நச்சு எண்ணம். அதன் வெளிப்பாடே இந்தக் கார்ட்டூன். டெசோவை அறிவித்தாலும் அறிவித்தார்கள். பார்ப்பனர்களும், தொங்கு சதைகளும் முடியைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.
துக்ளக் என்ன சொல்லுகிறது?
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தியதைக் கண்டித்தால் நீங்கள் மட்டும் இந்தி அரக்கி என்று எழுதவில்லையா? என்று கேட்கிறது துக்ளக்.
இந்தியைப் பற்றிச் சொன்னால் இந்தப் பார்ப்பனர்களுக்கு ரத்தம் கொதிக்கிறது. ஆத்திரத்தால் பூணூல் குதிக்கிறது.
தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்பார்களே அது இதுதானோ!
1938இல் முதல் அமைச்சராக இருந்த ஆச்சாரியார் இந்தியைத் திணித்தபோது லயோலா கல்லூரியில் என்ன பேசினார்?
சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தத்தான் இந்தியைக் கொண்டு வருகிறேன் என்று சொல்லவில்லையா?
இந்தியைப்பற்றி சொன்னவுடன் அவாளுக்கு ஆத்திரம் வருவதற்குக் காரணம் - அது சமஸ்கிருதக் குடும்பத்தில் போடப்பட்ட குட்டி என்பதால் தான் என்பது புரிகிறதா?
சும்மா ஆடுமா சோ கூட்டத்தின் குடுமி?
அண்ணா சொன்னாரே நினைவிருக்கிறதா?
தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும் தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்தில் அன்புக் கொள்வதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின் மீதுதான்.
(திராவிட நாடு 2.11.1947)
பார்ப்பனர்களின் நச்சுப்பையைத் தெரிந்து கொள்வீர்
-------------------"விடுதலை” 29-6-2012
7 comments:
மற்ற மூன்று தேன் மாநிலங்களும், அரசுப் பள்ளிகளிலேயே ஹிந்தியை கட்டாய பாடமாக வைத்திருக்கும் போது, தமிழகத்தில் மட்டும் அதை தடை செய்வது ஏன்? ஹிந்தியை எதிர்த்து தமிழனை வாழ வைத்து விட்டீர்களா? எல்லா விதத்திலும் அவர்கள் தமிழர்களை விட முன்னேறி இருக்கிறார்களே? இந்தியாவின் வட மாநிலங்களுக்கு வேலைக்குப் போகும் தமிழ் மாணவர்கள் மற்றும் இராணுவத்தில் உள்ள தமிழர்கள் படும் கஷ்டம் உங்களுக்குத் தெரியுமா? மொத்தத்தில் தமிழன் உருப்படக் கூடாது, அவன் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டும், அவ்வளவுதானே?
ஒரு பொது மொழி இருந்தால் அபிரிவிதமாக வளர்ந்து விடலாம் என்றால், ஆங்கிலத்தையே பொது மொழியாக வைத்து விடலாமே? வடஇந்தியா மட்டுமலாது ஓரளவுக்கு உலகு எங்கும் சென்று வாழ வழி வகுக்குமே?
மற்ற மூன்று தென் மாநிலங்களும் அப்படி என்ன தமிழ் நாட்டை விட வாழ்ந்து காட்டி விட்டார்கள் என்று எனக்கு புரியவில்லை!!!
http://en.wikipedia.org/wiki/List_of_Indian_states_by_GDP
மேலே கொடுத்து இருக்கும் பின்னூட்டத்தை சற்று பாருங்கள். $ per capita GDP முறைப்படி, தமிழனை விட பின்தங்கியே மற்ற தென் மாநில மக்கள் இருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக காணலாம்!
தாய் மொழி ஹிந்தியாக கொண்ட பீகார் மாநிலம் இன்று வரை எவ்வளவு வளர்ந்து இருக்கிறது எனபதையும் அதிலே சற்று பார்க்கவும்...
இங்கு இருந்து வேறு இடத்துக்கு போகும் தமிழன் அந்த பகுதி மொழியை பயில்வது அவசியமே... அதற்காக எல்லோரும் வட நாட்டிற்கே போய் பிழைக்க போவது போல எல்லோரையும் ஹிந்தியே படிக்க வேண்டும் என்று சொல்லுவதில் என்ன நியாயம்? இங்கே வந்து பிழைக்கும் மார்வாடிகள் எல்லோரும் பள்ளியிலேயே தமிழை கட்டாயப் பாடமாக படித்தவர்களா என்ன?
பி.கு. - இதை சொல்லும் நான் தற்சமயம் பூனேவில் வேலை பார்த்து கொண்டிருக்கிறேன். இங்கு வந்து தான் வழக்கு ஹிந்தியும் (spoken hindi) கற்று கொண்டேன். என்னை போல பல நண்பர்கள் சாதாரணமாக ஹிந்தி கற்று கொண்டதையும் பார்த்திருக்கிறேன். நம்புங்கள் அவசியம் ஏற்பட்டால் கண்டிப்பாக எந்த மனிதனாலும் எந்த மொழியையும் எளிமையாய் கற்றுக்கொள்ள முடியும்! யாரும் ஹிந்தியை எதிர்க்கவில்லை, ஹிந்தி'திணிப்பை' தான் எதிர்க்கிறோம்!

@ Udhay said...
அறுபது சதம் ஐ.ஐ.டி. இடங்களையும், மென்பொருள் நிறுவன வேலைகளையும் ஆந்திர மாணவர்கள் தான் பெறுகிறார்கள். அடுத்து மலையாளிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம், மத்திய அரசில் கோலோச்சுவது மட்டுமல்ல போகுமிடமெல்லாம் பணம் குவிக்கத் தெரிந்தவர்கள். கர்நாடகம் இந்திய சிலிகான் valley. இவர்களை தமிழன் முந்திவிட்டானா? காமடி பண்ணாதீங்க பாஸ். மொழிகள் பல கல் என்று ஒரு தமிழ் பழமொழி உண்டு. ஐரோப்பியன் மொழி, ஆங்கிலப் பள்ளிகளை வீதி வீதிக்கு திறந்து விட்டு, பேசும் மொழில் பாதிக்குப் பாதி அம்மொழிச் சொற்க்களை உள்ளே விட்டு, ஆங்கிலக் கலப்பு இல்லாமல் பேசு பார்ப்போம் என டி.வி.யில் போட்டி வைக்கும் அளவுக்கு கேவலமான நிலையில் இருந்து கொண்டு இந்தியாவில் பாதி பேருக்கும் மேல் பேசும் ஒரு மொழியை அரசியல் லாபத்துக்காக எதிர்ப்பது சரியில்லை நண்பரே.
கருத்துக்கு நன்றி நண்பரே. IIT-ல் படிப்பதற்கும் ஹிந்தி தெரிந்து இருப்பதற்கும் உள்ள தொடர்பை சொன்னால் சற்று எளிதாக விளங்கிக் கொள்வேன். பெங்களூரு silicon valley தான். அதே போல சென்னை ஒரு Automobile hub என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன். கீழே கொடுத்திருக்கும் பின்னூட்டத்தின் கடைசி பத்தியை ஒரு முறை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்:
http://sourcing.indiamart.com/automotive/articles/india-most-preferred-automobile-hub/
இதைப் போல ஒவ்வொரு மாநிலமும் ஒரு பொருளில் ஒருவரை ஒருவர் முந்தியும் பிந்தியும் தான் இருப்பார். அதற்கெல்லாம் 'ஹிந்தி 'திணிப்பு' எதிர்ப்பு' தான் காரணம் என்பது பொருத்தம் அல்ல. நான் மீண்டும் கூறுகிறேன், நீங்கள் இந்த மதத்தை தான் பின்பற்ற வேண்டும் என்று என்னால் எப்படி சொல்ல முடியாதோ அதே போல் இந்த மொழியை தான் கற்க வேண்டும் என்றும் என்னால் சொல்ல முடியாது. உங்களுக்கு விருப்பம் என்றால் தாராளமாக உங்களுக்கு பிடித்த எந்த மொழியையும் கற்றுக் கொள்ளுங்கள். அடுத்தவரை கட்டாயப்படுத்தாதீர்கள்.
\\IIT-ல் படிப்பதற்கும் ஹிந்தி தெரிந்து இருப்பதற்கும் உள்ள தொடர்பை சொன்னால் சற்று எளிதாக விளங்கிக் கொள்வேன்.\\ ஹிந்தி கறப்பது அவர்கள் கல்விக்கு எந்த தடையும் இல்லை மேலும், நான்கு தென் மாநிலங்களில் தமிழகம் பொருளாதாரத்தில் முதலிடத்தில் உள்ளது என்று நீங்கள் சொன்னதற்கு என் பக்கமிருந்து பதில் இது. பொருளாதாரத்தில் மேம்பட்டிருந்தால் எதற்காக இத்தனை இலவசங்களைக் கொடுக்க வேண்டும்? சாராயத்தை விற்காவிட்டால் ஆரசையே நடத்த முடியாது என்ற ஒரு கேவலமான நிலை, ஒரு நல்ல அரசாங்கம் சாராயத்தை தன் மக்களுக்கு ஊற்றுமா? இதனால் எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும்? இந்த லட்சணத்தில் தமிழகம் பொருளாதாரத்தில் முதலிடம் என்பது நகைப்புக்குரியது. தமிழர்களின் நிலையை நாங்கள் செல்லுமிடமெல்லாம் நேரில் பார்க்கிறோம், நீங்கள் சொல்வது உண்மை நிலை அல்ல. மற்ற தென் மாநிலங்களில் பள்ளிகளில் ஹிந்தியை அனுமதித்ததால் அவர்கள் மொழி நலிந்து போனதா என்ன? அல்லது கேரளத்தை விட தமிழகம் முன்னேறி விட்டதா? ஹிந்தி படிக்கவில்லையே, என்று இன்றளவும் எனக்கு ஒரு பெரிய மனக்குறை உள்ளது. அதனால் ஏற்பட்ட கஷ்டங்கள் ஏராளம். ஹிந்தியை திணிக்க வேண்டாம் என்று சொல்வது எப்படி உங்கள் உரிமையோ, அதே மாதிரி ஹிந்தியை படிக்க விரும்புபவர்கள் உரிமையை பரிக்காதீர்கள் என்று கேட்கவும் எங்களுக்கு உரிமை இருக்கிறது.
வணக்கம்.. udayஉடன் நான் உடன்படுகிறேன்.... தமிழ்நாட்டில் அரசாங்கம் ஹிந்தியை ஆதரிக்கவில்லையே தவிர... நீங்கள் படிப்தற்கு எந்த தடையும் இல்லையே.... உங்கள் கைகள் கட்டிபோடபடவில்லை... மொழி என்பது வெறும் tool for communication மட்டும் இல்லை... அது நம் பண்பாடு மற்றும் வரலாற்றின் பதிவு...நன்றி
Post a Comment