Search This Blog

31.8.10

ஆண்கள் ஏன் குங்குமம் வைக்கிறார்கள்?

மத வக்ரங்கள்


உலகத்தில் ஆறு பெரிய மதங்கள் உள்ளன. யூத மதம், கிறித்துவம், இசுலாம் எனும் மூன்று மதங்களும் ஒரு பிரிவிலும், ஹிந்து, ஜைனம், பவுத்தம் எனும் மூன்றும் ஒரு பிரிவிலுமாக இருபிரிவுகளில் இம்மதங்கள் அடங்கும். முதல் பிரிவு அய்ரோப்பிய, அரேபிய நாடுகளில் தோன்றிப் பரவியவை. இரண்டாம் பிரிவு இந்திய நாட்டில் தோன்றிப் பரவியவை. இரண்டாம் பிரிவு இந்திய நாட்டில் தோன்றிப் பரப்பப்பட்டவை. முதல் பிரிவு வகை மதங்கள் மறுபிறப்பை நம்புவது இல்லை. இரண்டாம் பிரிவு மதங்கள் அதில் நம்பிக்கை கொண்டவை. வாழ்வு என்பது இவ்வுலகப் பிறப்புக்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்திற்கு மட்டுமே உரியது. இந்தப் பிறவியில் ஒருவர் செய்யும் பாபம், புண்ணியம் ஆகிய (நல்லவை, தீயவை) செயல்களுக்கேற்ப நரகம், சொர்க்கம் கிட்டும்; அவற்றைக் கடவுள் தீர்மானிக்கும் என்பது இவ்வகை மதங்களின் கொள்கை, மறுபிறவி என்பதே கிடையாது: மறுஉலக வாழ்வுமட்டுமே என்கிறது.

இரண்டாம் பிரிவான இந்தியப் பிரிவினர், பிறப்பு என்பது மீண்டும் மீண்டும் நிகழ்வது, முக்தி அடையும் வரை நிகழும், இனிப்பிறவா (முக்தி) நிலை அடையும் வரை நிகழும், சக்கரம் சுழல்வது போல பிறப்பும் இறப்பும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்கிறது.

இதன் விளைவு என்னவென்றால், கீழை நாட்டு மதப்பிரிவினர் எப்போதும் இறப்பைப்பற்றியே சிந்தித்துக் கொண்டே இருப்பதால், சிற்சிலசமயம் சிலருக்குத் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமும் ஏற்படுவதாக மனநல மருத்துவர்கள் கருதுகின்றனர்.

கிழக்கும் மேற்கும்

இந்த பிறப்பு இறப்புக் சக்கரம் கீழை நாட்டு ஆன்மீகத்தில்தான் மிகவும் வலுவாகச் சொல்லப்பட்டு, அதன் காரணமாக நம்பப்பட்டு வருகிறது. மேலைநாட்டு மதத்தவர்களிடம் அந்நிலை இல்லை. இருப்பினும் ஒரு சில வக்ரங்கள் ஃபிரெட்ரிக் நீட்சே போன்றோர் மறுபிறப்பில் நம்பிக்கை வைத்து கீழை ஆன்மீகத்தைப் பேசிவந்தனர். மனு நூல், மகாபாரதம் ஆகிய இரண்டு மதக் குப்பைகளை படித்ததன் கெட்ட விளைவு இது. மனுநீதி அல்லது மனு தருமம் அல்லது மனுஸ்மிருதி எனப்படும் மனு சம்ஹிதா என்பது மிகவும் அநீதியான, அதருமமான நூல் ஆகும். இதன் அடிப்படையில்தான் இந்து சமூகமே அமைந்தது, அமைக்கப்பட வேண்டும் என்பது அம்மதத்தவரின் கூற்று. ஆணைவிடப் பெண் மட்டமானவள் என்று மிக மிகக் கேவலமாகவும், மனித இனமே நான்கு வருணங்களாக மேல், கீழ் எனும் தன்மையில் கடவுளால் படைக்கப்பட்டதாகவும் கூறும் மனித விரோத நூலாகும் இது. அத்தகைய நான்கு வருணங்களும் தனித்தனியே இயங்க வேண்டும். வருணக் கலப்பே கூடாது, கலப்பு ஏற்பட்டு விட்டால் ஹிந்து மதத்தின் புனிதத் தன்மையே போய்விடும் எனும் தத்துவத்தைக் கூறும் நூல் இது. பல லட்சக்கணக்கான மக்களை அவர்கள் யூத மதத்தினர் என்ற காரணத்திற்காகக் கொன்று குவித்த கொடுங்கோலன் இட்லர் தன் மேசையில் வைத்திருந்து படித்துப்போற்றிய நூல் இது என்றால்.. இதன் தன்மை விளங்கும்.

கடவுள் இல்லா மதம்

மனித இனத்துக்கு ஒத்துப் போகாத பல கோட்பாடுகளையுடையது ஜைன (சமண) மதம். அம்மதத்தினர் பெரும்பாலும் வணிகர்கள் என்பதால் அம்மதமே வியாபாரிகளுக்குச் சாதகமான மதமாகவே இருக்கிறது எனலாம். இந்த உலகத்தில் எப்படி லாபம் அடைவது என்பதையே அம்மதம் தன் அடிப்படை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. ஆனால் அம்மதத் துறவிகள் மறுஉலக வாழ்க்கையில் சொர்க்க போகத்தை அடைவதற்காகச் செய்யும் உடல் வருத்தக் காரியங்கள் மன வருத்தத்தை தரும் அளவுக்கு உள்ளன. என்றாலும் அவர்கள் நோக்கம் நிறை வேறுமா? இம்மதத்தின் ஆதாரக் கொள்கையும், நோக்கமும் மறுபிறப்பை தவிர்க்க வேண்டும் என்பதே. இதற்காக இப்பிறப்பு வாழ்க்கையை இவர்களாகவே முடித்துக் கொள்ள தற்கொலை செய்து கொள்ளவும் தயாராகிறார்கள். மதத்தின் பெயரால் இக்குற்றம் செய்யப்படுவதால் இந்தியக் குற்றச் சட்டப் பிரிவின்படி நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. எதுவும் சாப்பிடாமல், நீர்கூடக் குடிக்காமல், நாள் கணக்கில் பட்டினி கிடந்து உயிரைத் துறக்கிறார்கள். கொடுமை! இதற்குப்பிறகு அவர்கள் சொர்க்கவாசலில் நுழைகிறார்களாம்!

இதற்கு ஆசையை ஊட்டுவதற்கு அவர்கள் கையாளும் அச்சுறுத்தல் நரகம் உண்டு; ஏழு உண்டு. ஏழாவதுநரகத்தில் நுழைந்தால் திரும்பவே முடியாது. மீதி ஆறு நரகங்கள் சற்றுப் பரவாயில்லை என்கிறது ஜைன மதம். திரும்பி வரவே முடியாத ஏழாம் நரகத்தை யார் பார்த்தது? யார் பார்த்துத் திரும்பி வந்தது? வெறும் கற்பனை தானே! கேட்டால், பதில் வராது.

ஆனாலும் ஜைன மதம் கடவுளை நம்பாத மதம்! உலகிலேயே, கடவுளை நம்பாத, ஏற்காத ஒரு மதம் உண்டென்றால், அது ஜைன மதம்தான். மதம் என்றாலே கடவுள் பற்றித்தானே பேசும்? பருப்பில்லாமல் கல்யாணமா? ஒரு மதம் நாத்திகக் கொள்கையில் எப்படி இயங்கும்? என்ன கேள்வி கேட்டாலும் உண்மை அதுதான்? ஜைன மதம் நாத்திகக் கொள்கையை அடிப்படையாக வைத்துதான் இயங்குகிறது. அதே சமயத்தில் மதங்களின் லட்சணங்கள் எல்லாவற்றையும் கொண்டுள்ளது. உதாரணத்திற்காக ஒன்று; இவர்கள் உணவில் தக்காளி இடம் பெறாது. அது சிவப்பாக இருப்பதால் இரத்தத்தை நினைவுபடுத்துகிறது. அவர்கள் புலால் உண்ணாதவர்கள் என்பதால் இரத்த நிறம்கூட எதிர்ப்பு! அதுதான் மதம்!

குங்கும மகிமை

இப்படி மூடநம்பிக்கைகளின் உறைவிடம் மதங்கள். இந்து மதத்திலோ, சொல்லவே வேண்டாம். லட்சுமி என்று ஒரு பெண் கடவுள். மீன், நண்டு போலக் கடலில் கிடைத்தவள். அமுதத்திற்காகக் கடையும்போது வந்தாளாம்! வரும் போதே கையில் மாலையோடு வந்தாளாம். அவளைப் பார்த்தவுடனே விஷ்ணு, நான் இவளை வைத்துக் கொள்கிறேன் என்று சுட்டிக் கொண்டனாம். இவள் பணத்துக்கு அதிபதியாம். அதனால், வங்கியில் இருக்கிறாள் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இவள் இருக்கும் இடங்கள் 5. பசுவின் யோனி, யானையின் நெற்றி, தாமரைப்பூ, வில்வ இலை, பத்தினிப் பெண் ஆக 5 இடங்கள். கூடுதலாகப் பெண்களின் நெற்றி. அதன் அடையாளமாகத்தான் பெண்கள் குங்குமம் வைக்க வேண்டுமாம். பிச்சை எடுத்துச் சாப்பிடும் பெண்ணுக்கு குங்குமம் ஏன்? யாரும் யோசிக்கவில்லை. நெற்றியில் லட்சுமி இருக்கும் நிலையில் ஏன் வயிற்றுச் சோற்றுக்குப் பிச்சை எடுக்க வேண்டும்? லட்சுமி வங்கி திவால் ஆகிப் போனதா? யாரும் யோசிக்கவில்லை.

சரி, ஆண்கள் ஏன் குங்குமம் வைக்கிறார்கள். ஓர் அரசியல் கட்சி இந்த ஆபாச அநாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தது. ஓர் ஆள் மடம் கட்டி குங்குமம் வைப்பதை வளர்த்து விட்டார். அறிவே இல்லாமல் ஆண்கள் இந்த ஆபாசத்தை நெற்றியில் வைத்துக் கொண்டு அலைகிறார்கள். சிவன் வைத்துக் கொண்டான், நானும் வைத்துக் கொள்கிறேன் என்று சிவஞான சூன்யங்கள் கூறும். சிவன் ஏன் வைத்துக் கொள்கிறான்? திலக புராணம் கூறுகிற கதையைத் தெரிந்து வைத்திருந்தால் அறிவும் சொரணையும் உள்ள எவனும் குங்குமம் வைக்க மாட்டான். சிவனின் வைப்பாட்டி கங்கை அம்மாளைத் தன் தலை மயிரில் மறைத்து வைத்திருக்கிறான் சிவன். அவனுக்கு மாதம் மூன்று நாள் பிரச்சினையில் வெளியாகும் ரத்தம் முகம் முழுவதும் வழிந்து நாறுகிறது. அதை அப்படியே வழித்து ஓரிடத்தில் தேக்கி வைக்கும் ஏற்பாடுதான் குங்குமம் போலத் தெரிகிறது. குங்குமம் வைக்கும் கூழ் முட்டைகள் யாரைத் தலையில் வைத்துக் கொண்டிருக்கின்றன? அதையாவது தெரிவிப்பார்களா?

நெற்றிச் சித்திரம்

நம் தலைவர்தான் கரூரில் சொன்னார் நெற்றியில் டிராயிங் (வரை படம்) போட்டிருப்பவர்களே சைவ, வைணவக்காரர்கள் தானே! உலகில் எந்த மதக்காரனாவது இந்தக் காரியத்தைச் செய்கிறானா? என்று கேட்டார். திடீர் பணக்காரர்கள், திறமையே இல்லாமல் பொது வாழ்க்கையில் உயர்ந்து விட்ட அரசியல்வாதிகள், கள்ள மார்க்கெட் கனவான்கள் என எல்லார் நெற்றியிலும் குறுக்குக் கோடுகள், நட்ட நடுக்குத்துக் கோடுகள், நடுவில் வட்டப்புள்ளி என்று பழைய ஆப்பிரிக்கப் பழங்குடிகள் போலவே நடமாடும் நிலை. பார்க்க அசிங்கமாக இருக்கிறது. இந்த லட்சணத்தில் வெள்ளைக்காரர்களின் கோட், சூட் உடைகள் வேறு! கிழக்கும் மேற்கும் இந்தப் போலிகளிடம் தான் சந்திக்கின்றன போலும்! இந்தக் கண்ராவியைக் கிண்டல் செய்து அமெரிக்க டைம்ஸ் ஏடு எழுதியது. புள்ளி வைத்த தலையன்கள் என்று இந்தியர்களை எழுதியது ஞிஷீமீபீ பிமீணீபீ என்று எழுதியது. உண்மைதானே!

உடனே அங்கே இருக்கும் ஆர்.எஸ்.எஸ். இந்துவுக்குக் கோபம்! டைம்ஸ் ஏட்டைக் கண்டித்துக் கத்தினார். என்ன நியாயம்?

ராஜஸ்தானின் புஷ்கார் எனும் ஊரில் ஒரு நிகழ்ச்சி. பெரிய குளம், ஒட்டகச் சந்தை எனப் பெயர் பெற்ற சுற்றுலாத்தலம். மகளையே புணர்ந்தான் என்பதால் சபிக்கப்பட்ட பிரமனுக்கு எங்குமே கோயில் கூடாது என்பதுதான் சாபம். அதையும் மீறி அவனுக்குக் கோயில் இருக்கும் ஊர் என்று ஒரு சிறப்பு இந்த ஊருக்கு. வெளிநாட்டு ஆணும் பெண்ணும் பார்ப்பன முறைப்படி திருமணம் செய்ய விரும்பி அந்த ஊருக்கு வந்தனர். இந்து முறைப்படி திருமணமும் நடந்தது. புரோகிதர் தட்சணையைக் கை நிறைய வாங்கிக் கொண்டார். அவர்கள் நாட்டு, மதப் பழக்கப்படி திருமணம் முடிந்ததும் முத்தமிட்டுக் கொண்டனர். உடனே, இதே புரோகிதப் பார்ப்பான், ஆச்சாரம் போச்சு என்று கத்திக் கூப்பாடு போட்டுப் புகார் கொடுத்து விட்டான். இந்து முறைத் திருமணம் செய்து கொண்ட வெள்ளைக்காரர்கள் தம் தேனிலவைக் காவல் நிலையத்தில் கொண்டாடி மறுநாள் அபராதம் கட்டி விட்டுத் தப்பித்தனர்.

அவன் நாட்டுப் பழக்கம் அது! இந்த நாட்டுப் பழக்கம் வேறு! அந்த அளவுகோல் வெளிநாட்டுக்குச் சம்பாதிக்கப் போன இந்துக்களுக்கும் பொருந்தும்தானே! டாட்டட் ஹெட் என்று எழுதினால் ஏன் கோபம் வருகிறது? சிந்திக்க வேண்டும்!

---------------------சு. அறிவுக்கரசு அவர்கள் 14-8-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

2 comments:

ஒசை said...

சிவன் ஒரு பயந்தா குழி. அதனால் தன் வைப்பாட்டியை ஒழித்து வைத்து கொள்கிறார். ஆனால் நம்ம ஊரு அரசியல்வாதிகள் (முக்கியமாய் திராவிட செம்மல்கள்) எவ்வளவு தைரியசாலிகள். மனைவி, துணைவி, இணைவி என்று அனைவரையும் தைரியமாய் கூட்டி கொண்டு அலைகிறார்கள்.

நம்பி said...

//Blogger ஒசை. said...

சிவன் ஒரு பயந்தா குழி. அதனால் தன் வைப்பாட்டியை ஒழித்து வைத்து கொள்கிறார். ஆனால் நம்ம ஊரு அரசியல்வாதிகள் (முக்கியமாய் திராவிட செம்மல்கள்) எவ்வளவு தைரியசாலிகள். மனைவி, துணைவி, இணைவி என்று அனைவரையும் தைரியமாய் கூட்டி கொண்டு அலைகிறார்கள்.

August 31, 2010 11:19 AM//

அப்ப சிவன் மாதிரி பயந்து பயந்து இன்னொரு தாரத்தை மறைத்து வைத்துக்கொள்ளலாம் அது தான் சரியாக வரும் என்கிறீரா...?

எது தப்பு என்கிறது இந்த பின்னூட்டம்...கடவுள் அரசியல்ல வந்து வேற கலக்க ஆரம்பிச்சுட்டாரா....இன்னும் எல்க்ஷன்ல நிக்கவேண்டியது தான் பாக்கி...

எதுக்கு எது? சரியா வரலையே...? ஏதோ பின்னூட்டம் போடனுன்னு போடறாப்பல இருக்குது.