Search This Blog

11.8.10

கட்டவிழ்ந்த காவிகள்பிரக்யா தகூர் எனும் சாத்வி (சன்யாசினி), லெஃப்டினன்ட் கர்னல் சிறீகாந்த் புரோஹிட் மற்றும் பிற இந்து பயங்கரவாதிகள் என்று அய்யப்பட்ட வர்கள் கைது செய்யப்பட்டபொழுது, அது ஒரு முக்கிய நிகழ்வு அல்ல என்பது போல் காவிக் கூடாரம் பாசாங்கு செய்தது. சாத்விக்கு எதிராக எதுவும் மெய்ப்பிக்கப்படவில்லை என எல்.கே.அத்வானி கூறினார். அந்த அம்மையார் மீது பொய் வழக்குப் புனையப்படுவதாகவும், பண்பாட்டுத் தேசியத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடமாட்டார்கள் என்றும் ராஜ்நாத்சிங் சொன்னார்.

அடுத்து இரண்டாவது ஒரு விளக்கத்தையும் கொடுத்தார்கள்; பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத்தில் இருந்து இத்தகைய விளக்கத்தை இந்துத்துவா கூட்டத்தினர் தருகிறார் கள். அதாவது இந்து மதத்தைப் பின்பற்றுவோர் வன்முறையில் இறங் கக்கூடியவர்கள் அல்ல என்பது அந்த வாதம்; முஸ்லீம்கள் தான் அவ்வாறு செய்வார்கள் என்பது இதில் தொக்கி நிற்கிறது. சாத்வியும் (சன்யாசினியும்), ராணுவ அதிகாரியும் அபினவ் பாரத் எனும் அமைப்புடன் தொடர்பு உடைய வர்கள். அந்த அமைப்பு, வி.டி.சவார்கர் மற்றும் நாதுராம் விநாயக் கோட் சேயுடன் தொடர்பு கொண்டது. அதே நேரத்தில் சங்பரிவார் அமைப்புடன் தொடர்புடையது அல்ல. இதனால் பா.ஜ.க., தப்பிக்க ஒரு பாதை கிடைத்தது.

இருப்பினும், அண்மையில் ஆர்.எஸ். எஸ்.காரர்கள் இருவர் கைது செய்யப் பட்டதும், மற்றும் இருவர் விசார ணைக்கு உட்பட்டதும், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிகழ்வு களுக்குப் பின்பு, பரிவார் அமைப்பு களின் தலைமை இடத்தில் உள்ள மூத்த உறுப்பினர் ஒருவர் அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்: அதாவது, இந்த அமைப்பு பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கண்டிப்பான முறை யில் குற்றம் சாட்டப்பட்டால், மகாத்மா காந்தி கொல்லப்பட்ட பின்பு நமக்கு நேர்ந்த கதியைவிட மிக மோசமான கதிக்கு ஆளாவோம், என்று அச்சப்படு வதாகக் கூறியுள்ளார்.

தலைவரின் குரலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தைப் பார்த்த பின்பு, பா.ஜ.க.வில் ஓடியாடிச் செயல்படு கிறவர்களும் வாய்மூடி மவுனிகள் ஆகிவிட்டார்கள்; அபினவ் பாரத் உறுப்பினர்கள் தாங்களாகவே தங் களுடைய போரை நடத்திக் கொள்ளட் டும் என விட்டுவிட்டார்கள். இருப் பினும், (காந்தியாரின் கொலையில் குற்றம் சாற்றப்பட்ட) சவார்கர் மற்றும் கோட்சே ஆகியோரின் பக்தர்களும், (ஆர்.எஸ்.எஸ்.சின் மூலத் தலைவர் களான) ஹெக்டேவார், கோல்வால்கர் ஆகியோரின் பக்தர்களுக்கும் அதி தீவிர வலதுசாரிக் கூட்டத்தவர்கள் ஆவர்; இவர்களுக்கு இடையில் உள்ள தொப்புள்கொடி உறவு புறக்கணிக்கத் தக்கதல்ல. இந்தக் கூட்டத்தின் இரண்டு பிரிவினரில் எவர் ஒருவர்மீது குற்றம் மெய்ப்பிக்கப்பட்டாலும், இரண்டு பிரிவினரும் குற்றத்திற்கு ஆளானவர் கள் என மெய்ப்பிப்பது கடினமல்ல.

இவர்களுக்கு இடையில் உள்ள சகோதர உறவுபற்றி ஆழமாக ஆராய்ந் துதான் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது இல்லை. இந்தியா இந்துக் களுக்கு உரியது எனும் எண்ண ஓட்டத்தின் அடிப்படையிலான அரசி யலை நடத்துகிறவர்களாக, சவார்கர், கோட்சே, ஹெக்டேவார், கோல் வால்கர் ஆகியோரின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். காந்தியாரின் கொலைக்குப் பின்பு இந்தக் கருத்து மங்கியிருந்தது; கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் உறங்கி இருந்தது; ஆனால், அது எப் பொழுதும் மறையவில்லை. அதன் விளைவு என்ன? பாபர் மசூதி இடிபட் டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் வகுப்புக் கலவரங்கள் நிகழ்ந்த பொழுது, பிற சமூகத்தினரை வெறுக் கும் இந்த நச்சுக் கருத்துகளின் விளைவுகள் வெளிப்பட்டன.

இதே காலத்தில் மற்றொன்றும் நிகழ்ந்தது; ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. (மற்றும் அரசியல் புலத்திற்கு வெளி யில் இருந்து செயல்படும் அபிநவ் பாரத்) ஆகியவை, தாங்கள் மிக விரும்பும் குறிக்கோளாகிய இந்து ராஷ்டிரத்தை நிறுவுவதற்கு இதுவே தருணம் எனத் தங்களுக்குள்ளே நம்பத் தொடங்கின. பா.ஜ.க.வின் அரசியல் வெற்றிகளிலும் அப்பொழுது திடீரென முன்னேற்றம் ஏற்பட்டது; ஆகையால், ஆட்சிக்கு எளிதாக வரலாம் என நம்பினார்கள். ராம ஜென்ம பூமி இயக்கம் தொடக்கத்தில் ஓர் எழுச்சியைத் தோற்றுவித்தது; தூங்கிக் கொண்டிருந்த இந்துக்கள் கடைசியில் விழித்துக் கொண்டார் கள் என்பதற்கு அது ஒரு அடை யாளம் என நம்பினார்கள். அடல் பிகாரி வாஜ்பேயி பாடல் ஒன்று எழுதினார்:

காதலரின் இறுதி ஊர்வலம் வருகிறது; அதில் அனைவரும் களிப் புடன் கலந்துகொள்வோம். இங்கே காதலர் என்பது காங்கிரஸ் கட்சி யைக் குறிக்கும்.

பா.ஜ.க.வில் பெயரளவிற்கு மிதவாதப் பாதையைப் பின்பற்றும் தலைவரை நோக்கி, என்.டி.டி.வி., பேட்டியில் பிரன்னாய் ராய் கேள்வி ஒன்றைக் கேட்டார்; அயோத்தியில் மசூதியை இடித்ததைப்போல், மது ராவிலும், வாரணாசியிலும் செய்வீர் களா? என்பது அந்தக் கேள்வி. தீர்ப்பைக் கூறுவதில் நீதிமன்றங்கள் மிக அதிகக் காலம் எடுத்துக்கொண் டால், கரசேவகர்கள் பொறுமையை மீண்டும் இழந்துவிடுவார்கள், என்பது மிதவாதத் தலைவரின் பதில். அயோத்தியில் கோயில் கட்டுவதற்கு, ராஜஸ்தானத்தில் இருந்து கைவினை ஞர்களை, விசுவ இந்துப் பரிசத் (வி.எச்.பி.) வரவழைத்தது. வாய்ப்புக் கேடாக, இந்துத்துவாவாதிகள் ஒன்றை மறந்துவிட்டார்கள்:

இந்து மதத்தில் உள்ளார்ந்த வகையில் பல நம்பிக்கைகளும், சகிப் புத் தன்மையும் பொதிந்துள்ளதைப் பார்க்கத் தவறிவிட்டார்கள். இந்துத்து வாவாதிகளின் மதத்தை அடிப்படை யாகக் கொண்ட தேசியத்தில் மதமும் இல்லை, தேசியமும் இல்லை என்பதை வாக்காளர்கள் புரிந்துகொண்டார் கள். பிரிவினை உணர்வுகளைப் பயன்படுத்தி, அதிகாரத்தைக் குறி வைக்கும் தீய மனம் படைத்தவர்கள் இந்துத்துவாவாதிகள் என்பதை அறிந்தார்கள்.

ஆகையால், இந்துத்துவா அரசி யல் தோற்றபொழுது, அவர்களில் தீவிரவாத எண்ணங்கொண்டவர்கள் தீவிரவாதத்தை நாடுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. 1990களில் பரிவார் அமைப்புகள் வழிபாட்டு இடங்களைத் தாக்கத் தொடங்கிய பொழுது, அரசமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளுக்கு அவர்கள் மாறினார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மசூதி களையும், சர்ச்சுகளையும் தாக்கிய செயல் அராஜகத்தையும் மீறிய ஒன்று ஆகும். மயானக் கொள்ளையில் ஈடுபட்டு, புதை குழியைத் தோண்டிக் கொள்ளையிட்டு மகிழும் மன நிலையை அது குறிக்கிறது. பா.ஜ.க. வும், காவிக் கூட்டமும் இத்தகைய அரசியல் அழிவில் ஈடுபடுவதற்கு முன்பு, இதைப் போன்ற அராஜகத்தை நாடு கண்டதில்லை. வரலாற்றின் இடைக்காலத்தில்தான் மதத்தின் பெயரில் மோதல்கள் நிகழ்ந்தன.

இவற்றில் எதுவும் வியப்பிற்குரிய நிகழ்ச்சி அல்ல; ஏனென்றால், பா.ஜ.க. வும், பரிவார் கூட்டத்தினரும் அர சமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பதை விரும்பவில்லை என்பது, நீண்ட காலமாகவே தெரிந்த ஒன்று. மத நம்பிக்கை சார்ந்த ஒரு விசயத்தை நீதிமன்றங்கள் தீர்க்க முடியாது என்ற ஒரு எண்ணத்தை ராமஜென்ம பூமிக் கிளர்ச்சியின்பொழுது இந்துத்துவா வீரர்கள் பரப்பினார்கள். இந்நிலை யில், பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக, கல்யாண்சிங் கைது செய்யப்பட்ட பொழுது, மசூதி இடிபட்டதில் தனக்கு வருத்தம் எதுவும் இல்லை எனக் காட்டுவதுபோல், கேமராவுக்கு முன் அவர் சிரித்துக் கொண்டு காட்சி தந்தார்.

அரசமைப்புச் சட்டத்தை மறுபரிசீ லனை செய்வதற்கு வாஜ்பேயி அரசு ஆணையம் ஒன்றை நியமிக்க முடிவு செய்தது; இருக்கு சட்டம் பா.ஜ.க. வுக்கு திருப்தி தரவில்லை என்பது இதிலிருந்தும் நன்கு தெரிகிறது. இந்துராஷ்டிரத்தை பா.ஜ.க. மறந்துவிடவில்லை என்பது இதில் உள்ளடங்கி இருக்கிறது. அரசியல் சட்டத்தின் பெரும்பகுதி 1935 ஆம் ஆண்டு இந்தியா சட்டத்தைப் பின் பற்றுகிறது; ஆகையால், மெகாலே யின் வழிவந்த அரசமைப்புச் சட் டத்தை ஒதுக்கித் தள்ள அக்கட்சி விரும்புகிறது. சட்டப்படியான கட்ட மைப்புகளை செதுக்கித் தள்ளவும், அவற்றின்மீது அவமரியாதையை உண்டாக்கவும் கையாளப்படும் பாசிச முறைகளின் ஒரு பகுதியாக இதைக் கொள்ளலாம்.

----------------------------

ஜனசங்கம் வகுப்புவாத அரசியலை மட்டும் நடத்திக் கொண்டிருந்தது; அதிலிருந்து விலகி மதமும், வகுப்பு வாதமும் கலந்த அரசியலுக்குப் பரிவார் கூட்டம் நகர்ந்தது; அப்பொழுது இருந்து அது உணர்ச்சி வகை அரசியலில் சிக்கிக் கொண்டது; அப்படிப்பட்ட அரசியலுக்கு அவ்வப் பொழுது ஊக்க ஊசி மருந்து தேவைப்படுகிறது. இந்த மாற்றம் நிகழ்ந்த காலத்தில், வி.எச்.பி., பஜ்ரங் தள் போன்ற துணை அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ். தோற்றுவித்தது; அப்படித் தோற்றுவித்ததன்மூலம் பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க அது விரும்பியது.

-------------------------------

ஜனசங்கம் வகுப்புவாத அரசி யலை மட்டும் நடத்திக் கொண்டி ருந்தது; அதிலிருந்து விலகி மதமும், வகுப்பு வாதமும் கலந்த அரசி யலுக்குப் பரிவார் கூட்டம் நகர்ந்தது; அப்பொழுது இருந்து அது உணர்ச்சி வகை அரசியலில் சிக்கிக் கொண்டது; அப்படிப்பட்ட அரசியலுக்கு அவ்வப் பொழுது ஊக்க ஊசி மருந்து தேவைப்படுகிறது. இந்த மாற்றம் நிகழ்ந்த காலத்தில், வி.எச்.பி., பஜ்ரங் தள் போன்ற துணை அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ். தோற்றுவித்தது; அப்படித் தோற்றுவித்ததன்மூலம் பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க அது விரும் பியது. பா.ஜ.க., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., ஆகியவற்றைவிடச் சொல்லிலும், செயலிலும் அவை அதிக வன்முறை யைக் காட்டின. தாஜ்மகால் உண்மை யில் இந்துக் கோயிலாக இருந்தது என்ற பி.என்.ஓக் என்பவரின் கருத் தையும், (இந்திரா காந்தியின் கண வரான) ஃபெரோஸ் காந்தி முஸ்லிம் பின்னணி உடையவர் என்ற பேச் சையும் தொடர்ந்து மின் அஞ்சலில் காட்டுகிறார்கள்; காவிக் கூட்டத்தின் நயவஞ்சகமான பிரச்சாரம் தணிய வில்லை என்பதை இது காட்டுகிறது. இப்பொழுது அபினவ் பாரத் (மீண் டும்) வெளிப்பட்டிருக்கிறது. (சிவ சேனாவைப் போன்று) இது பரிவார் அமைப்புக்கு வெளியில் இருந்து செயல்படுகிறது; ஆகையால் பரிவார் அமைப்பின் முறைப்படியான கட்டுப் பாட்டிற்கு அது உட்பட்டது அல்ல.

இப்படிப்பட்ட கட்டவிழ்ந்த பீரங்கி களால் ஏற்படும் தொல்லைகள் நன்கு தெரிந்தவை. சிவசேனாவும், அதிலி ருந்து உண்டாகிய மகாராஷ்டிர நவ நிர்மான் சங்கும் (எம்.என்.எஸ்.) தங்களுக்கான தனிப்பாதையில் செல்கின்றன; ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆகியவற்றை எதிர்த்துக் குறை கூறுகின்றன. அபிநவ் பாரத் இயக் கமும் நிறையத் தொல்லைகளைத் தர முடியும்; ஏனென்றால், பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் சட்ட எல்லைகளை விட்டு அதிகம் விலகிச் செல்ல விரும்ப வில்லை. (ஆர்.எஸ்.எஸ். மூன்று முறை தடை செய்யப்பட்டதாகும்: 1. காந்தி யார் கொலை செய்யப்பட்டபொழுது, 2. நெருக்கடியின்பொழுது 197577, 3. பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுது) ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; இந்துத் தீவிரவாதிகளின் உட்புறச் சூழல் மிக மோசமான விளைவுகளை உண்டாக்குவதாக இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

நன்றி:-அமுல்யா கங்குலி
தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ், 5.8.2010

1 comments:

Unknown said...

மதானிய பத்தியும் எழுதுங்க.