Search This Blog

21.8.10

ஏன் வேண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு? - 2

சிக்கல் தீர்க்கும் சீரிய படைக்கருவி ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நாம் மட்டும்தான் வலியுறுத்து கிறோமோ என்றால் இல்லை. இதன் பயனை உணர்ந்தவர்கள் வடநாட் டில் உள்ளவர்களும் வலியுறுத்துகிறார்கள். குறிப்பாக லல்லுவின் ஆதரவு உள்ளது. நம் தமிழ்நாட்டில் இந்தக் கோரிக்கை யின் நியாயத்தை உணர்ந்த பா.ம.க.வும் திராவிடக் கட்சிகளுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்ற கோரிக் கையை ஆதரித்துக் குரல் எழுப்ப முன் வந்ததைப் பாராட்ட வேண்டும்.

இரண்டு ஆணையங்கள்

இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் நிலைமையை ஆய்வு செய்ய நியமிக்கப் பட்ட விசாரணை ஆணையங்கள் இரண்டு. ஒன்று காகாகலேல்கர் விசா ரணைக் குழு; மற்றொன்று மண்டல் குழு. இந்த இரண்டு குழுக்களும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நலன் செய்வதில் குறிப்பிடத்தக்கவை. இவை இரண்டுமே ஜாதிவாரிக் கணக்கெடுப் பின் இன்றியமையாமையை உணர்ந்து வலியுறுத்தின.

மண்டல் குழு கூறுவது என்ன?

மண்டல் குழு தெளிவாகவே இதனை இவ்வாறு குறிப்பிட்டது. முன் னேறிய ஜாதிகளில் சில இன்றும் இட ஒதுக்கீட்டின் பயனை நுகர்வதாகக் குற்றம் சாற்றுகிறது. அத்தகைய ஜாதி களைக் கண்டறிந்து நீக்க வேண்டு மானால் அதற்கும் ஜாதிவாரிக் கணக் கெடுப்பு அவசியம் என்கிறது.

இன்றைக்கு ஜாதிச் சங்கங்கள் ஒவ் வொன்றும் தலை தூக்கத் தொடங்கி யுள்ளன. முதலில் ஜாதிச் சங்கங்களாகக் கொடி தூக்குவோர், பிறகு அரசியல் கட்சிகளாக மாறி, சட்டமன்ற உறுப்பி னர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரொட்டித் துண்டுகளுக்காக எந்தக் கோரிக்கைக்கான சங்கம் ஆரம்பித்தார் களோ, அந்த இன முன்னேற்றத்திற் கான கோரிக்கையைக் கைவிட்டு அதற்கு எதிரானவர்களுடன் சேர்ந்து, இட ஒதுக்கீடு, சமூக முன்னேற்றம், பிற்படுத்தப்பட்டோர் நலன் என்று காலமெல்லாம் உழைத்து வரும் தி.மு.க. வை அல்லது தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்துவிடத் துணை போய் விடுகின்றனர். கோவை, ஈரோடு, கொங்கு மாவட்டங்களில் சென்ற தேர்தலில் இது நடைபெற்றதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.

ஜாதிச் சங்கங்கள் தங்கள் ஜாதி மக்கள் தொகை எண்ணிக்கையை உயர்த்திக் காட்டவும், அதைக் கொண்டு அரசை மிரட்டவும், தங்கள் இனத் தவரை எப்போதும் தூண்டிவிடவும், அந்த ஜாதியினர் எத்தனை சதவிகிதம் உண்மையி லேயே உள்ளனர் என்று தெரிந்தால் அந்தப் பம்மாத்து, டகல் பாச்சி வேலை என்று சொல்வார் களே அதையெல்லாம் செய்ய முடியாது.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இது வரை கூறி வந்தபடி பிற்படுத்தப் பட்டவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும் என்று தவறாகக் கருதி விடக்கூடாது. முன்னேறிய ஜாதி களின் எண்ணிக்கையையும் இதன் வாயிலாக அறிந்து கொள்வது நல்லது. முன்னேறிய ஜாதிகள் என்று கருதப்படும் ஜாதியினர் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாய்ப்பு களைப் பெறாமல் இருந்தால் அதைச் சரி செய்வதற்கும் இந்தக் கணக்கெடுப்பு உதவிடும். ஆக மேல்மட்டத்தில் இருப்பவர்களுக் கும் பயனளிக்கக்கூடியதே இந்த ஜாதி வாரியான கணக்கெடுப்பு.

மேல் மட்டத்தவர் எதிர்ப்பது ஏன்?

இருப்பினும் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் இதை எதிர்க்கிறார் களே, ஏன்? அதற்கான காரணம் இதுதான். அதுவும் மேல் வகுப்பினர் நடத்தும் பத்திரிகை இந்து வாயிலாக வெளிப்பட்டது.

மக்களாட்சியின் நான்கு தூண்கள் அதிகார வர்க்கம் (Executive), நீதிமன்றம் (Judiciary), நாடாளுமன்றம் (Legislature), ஊடகங்கள் (Media) ஆகியவை ஆகும்.

இவ்வளவு பிற்படுத்தப்பட்டவர்கள் ஏதோ கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் ஏதோ ஓரளவு இடம் பெற்றிருக்கின்றனர். ஆனால் மய்ய அரசு அலுவலகங்கள் குறிப்பாக ரயில்வே துறை அலுவலகம், கணக் குத் தணிக்கையாளர் அலுவலகம் (A.G.’s Office) நேற்று தோன்றிய பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு நிறுவனம் சென்று பாருங்கள் எத் தனை பேர் பிற்படுத்தப்பட்டவர் கள் என்று. அப்போது உண்மை தெரியும்.

தேசிய ஊடகங்களில் பிற்படுத்தப்பட்டோர் 4 சதவிகிதமே

இந்தியாவில் 50 விழுக்காடு மக் களாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட வர்களில் தேசிய ஊடகங்களில் உள்ளவர்கள் வெறும் 4 சதவிகிதம் பேர்தான். ஏதோ தினத்தந்தி, மாலை முரசு, தினகரன் பத்திரிகை நடத்து பவர்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருப்பதைக் கொண்டு ஊடகங்கள் பிற்படுத்தப்பட்டோர் கைகளில் இருக்கின்றன என்ற மாயையில் சிக்கிவிடக் கூடாது.

மொத்த மக்கள் தொகையில் 15 விழுக்காட்டினராக இருக்கும் சிறு பான்மையினரில் ஊடகத்துறையில் இருப்பவர்கள் வெறும் 3 விழுக்காடு மட்டுமே. 25 விழுக்காடு உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக் களில் ஒருவர் கூடத் தேசிய ஊடகங் களில் இல்லை. பச்சையாகச் சொல்வதானால் இன்று தேசிய ஊடகங்கள் இருப்பது அவர்களின் கைகளில். அதாவது ஆரியர்களின் கைகளில். இதை டில்லியில் உள்ள யு.என்.அய். முதலிய நிறுவனங்களுக் குச் சென்றபோது நேரில் காண முடிந்தது. ஊடகத்துறையில் உயர் பதவிகளில், பொறுப்புகளில் இருப் பவர்கள் உயர் ஜாதியினர். அடி மட்ட வேலை செய்யும் சப் ராசி, அட்டெண்டர் போன்ற பணி களில் அவர்கள் ஒருவர் கூட இல்லை. விடுதலை பெற்று அய்ம்ப தாண்டு, அறுபதாண்டு ஆன பின் னும் இந்நிலை. ஜாதிவாரிக் கணக் கெடுப்பு நடத்தப்பட்டால் இந்த உண்மைகள் ஆயிரம் வாட்ஸ், பத்தாயிரம் வாட்ஸ் வெளிச்சத்தில் வெளிவந்துவிடும். எனவே, உரிமை மறுக்கப்பட்டவர்கள் புள்ளி விவரம் என்ற வலிமை மிக்க ஆயுதம் கொண்டு போராடிவிடுவார்கள் என்ற அச்சத்தில்தான் இதனை எதிர்க்கிறார்கள்.

தம்பி புரிகிறதா சூட்சுமம்?

அண்ணா முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு விரலை நீட்டி தம்பி, புரிகிறதா சூட்சமம்? என்று கேட்பார். அதைத்தான் இப்போதும் சொல்கிறோம். ஏன் எதிர்க்கிறார்கள் என்ப தன் சூட்சமம் புரிகிறதா? ஊடகத் திலிருந்து நீதித்துறைக்கு வருவோம். ஒரே ஒரு தலித் பாலகிருஷ்ணன் - அவருக்கு முன் வரதராசன் உச்ச நீதிமன்ற நீதிபதியானார். இது 18 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்ற தாழ்த்தப்பட்டவர், ஒரு விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்ற பழங்குடி இனத்தவர் நிலை.50 விழுக்காடு மக்களாக இருக்கும் பிற்படுத்தப் பட்டவர்களில் ஒருவர் கூட இது வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆக முடியவில்லை. ஏதோ ஒன்றிரண்டு பேர் பார்ப்பனரல்லாதவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆனார்கள். இவர்களும் பார்ப்பனரல்லாதவர் களில் உயர்ஜாதியினர்.

பெண்கள் இடஒதுக்கீட்டின் நிலை

அடுத்த தூணான சட்டப் பேரவையில், நாடாளுமன்றத்தில் தாழ்த் தப்பட்டவர்களுக்குப் பிரதிநிதித்து வம் இருந்தது. ஆனால் அவர் களைக் கட்டுப்படுத்தும் கட்சி மேலிடத்தில் இருப்பவர்கள் உயர் ஜாதியினரே. பெண்களுக்கான இட ஒதுக்கீடு 33 விழுக்காடு கேட்ட போது, 33 விழுக்காட்டிற்குள் விகி தாச்சாரம் தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்டோருக்கான உள் ஒதுக்கீடு கேட்கப்பட்டது. ஏனென் றால் 534 பேர் உள்ள நாடாளுமன் றத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் ஏறக்குறைய 180 பெண்கள் நாடாளுமன்றத்தில் இடம் பெறுவார்கள்.

இப்போதே பிற்போக்குச் சக்தியான பாரதீய ஜனதா கட்சியினர், முற்போக் குக் கொள்கைகளுக்கு எதிராக இருக் கிறார்கள். தி.மு.கழகம் மட்டுமே 33 இடங்களில் 33 விழுக்காடு - 13 இடங் களைப் பிற்படுத்தப்பட்ட பெண்டிர்க்கு வழங்கும். அ.தி.மு.க. பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு நாடாளு மன்றத்திற்கு மைத்ரேயன் என்ற பார்ப் பனர் கிடைத்தது போல், பெண்டிரில் பார்ப்பனப் பெண்டிர் தவறாமல் கிடைத்துவிடுவார்கள். காங்கிரசின் நிலையும் ஏறக்குறைய அப்படியே. எனவே சமூகத்தில் புரையோடிப் போய் உள்ள புற்று நோய் ஜாதி. எனவே அந்தப் புற்று நோய்க்கு மாற்று மருந்து தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு.

50 விழுக்காட்டிற்கும் அதிகமான பிற்படுத்தப்பட்டவர்களில் மய்ய அரசின் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப் பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 5.4 விழுக்காடுதான். இப்போது புரிகிறதா ஏன் பி.எஸ்.என்.எல்., ஏ.ஜி. அலுவலகம், சுங்கத்துறை ஆகியவற்றில் யாருடைய ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது என்று. தாழ்த்தப்பட்டவர்களின் எண் ணிக்கை 13 விழுக்காடு. அதாவது வேலை பார்க்கும் 100 பேரில் 18.4 சதவிகிதம்தான் பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப் பட்டவர்களும். இவர்கள் தங்கள் அலு வலகங்களில் அம்பேத்கர் படம் இடம் பெறச் செய்வதோடு சரி. இன்னும் தாழ்த் தப்பட்டோர், பழங்குடியினர் நுழைவுக்கு வழி வகுக்க வேண்டும். இவர் களும் திறமையில் மேல்ஜாதியினருக்கு எந்த விதத்திலும் சிறிதும் குறைந்தவர்கள் அல்லர் என்று காட்டவேண்டும்.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது எவ்வகையில் பார்த்தாலும் இன்றியமை யாதது. முழுமையாக அது நிறைவேற்றப் படவேண்டும். ஜாதிவாரிக் கணக் கெடுப்பு என்பது காலக் கண்ணாடி. அது காட்டும் உண்மைத் தகவல்கள் சமூக முன்னேற்றத்திற்கு குறிப்பாக பிற் படுத்தப்பட்டவர்கள் உயரச் செல்ல உதவிடும் ஏணிப்படி என்பதை மறக்கக் கூடாது.

சமூக வாழ்க்கையின் அடித்தளமாக வும் அளவு கோலாகவும் ஜாதி இருப்ப தால் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இன்றி யமையாதது. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஜாதி அடிப்படையில் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகளைக் களைய உதவும். எந்த ஜாதி எத்தனை விழுக்காடு என்று தெரிந்தாலே அதற்கான தீர்வு கிட்டும்.

இருக்கும் வளத்தைக் குறிப்பிட்ட ஒரு சாராரே காலமெல்லாம் நுகர, மற்றவர்கள் வானத்தைப் பார்த்துக் கொண்டி ருக்க, வழி தெரியாமல் திண்டாட விடக் கூடாது. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நிச்சயம் இதற்கெல்லாம் வழிகாட்டும்.

------------------ முனைவர் பேராசிரியர்
ந.க.மங்களமுருகேசன் 17-8-2010 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: