Search This Blog

13.8.10

என் தெய்வம் பெரிதா? உன் தெய்வம் பெரிதா


சண்டை!

அனைவரையும் படைத்தவர் கடவுள் என்கின்றனர் அப்படிப் பார்க்கும்பொழுது கடவுள் அனைவருக்கும் தகப்பன் ஆகிறார்.

உண்மையான தகப்பனார் தன் பிள்ளைகளை வேறுபடுத்திப் பார்ப்பாரா? அப்படிப் பார்த்தால் அவர் யோக்கியமான தகப்பனாகத் தான் மதிக்கப்பட முடியுமா?

நாட்டில் என்ன நடக்கிறது. ஒரு கட்டத்தில் கோயி லுக்குள் தாழ்த்தப்பட்டவர் கள் போகக்கூடாது என்று தடை போட்டார்கள். அதற்காகப் போராட்டம் நடத்தப்பட்டு, அந்த உரிமை கிடைக்கப் பெற்றது.

குறிப்பிட்ட ஜாதியினர் தான் சாமியைத் தொட முடியும், குளிப்பாட்ட முடியும், பூஜை செய்ய முடியும் என்று சுவர் எழுப்பி வைத்தனர்.

அதனை உடைக்க அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் சட்டம் திராவிடர் கழகத்தின் முயற்சியால், தி.மு.க. ஆட்சி யில் இயற்றப்பட்டு, அனைத்து ஜாதியினருக்கும் 69 சத விகித இட ஒதுக்கீடு அடிப்படையில் பயிற்சியும் அளிக் கப்பட்டு, இந்துக் கோயில் கருவறைக்குள் இந்து மதத்தைச் சேர்ந்த எந்த ஜாதி யினரும் அர்ச்சகராக ஆணை பிறப்பிக்கப்படவிருந்த ஒரு காலகட்டத்தில், அதனையும் எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றுவிட்டனர் பிரம்மாவின் முகத்தில் பிறந்ததாகத் தங்களுக்குத் தாங்களே எழுதி வைத்துக் கொண்ட பார்ப்பனர்கள்.

ஏடுகளில் ஒரு சேதி இன்று வந்தது. பண்ருட்டி வட்டம் பல்லவராயநத்தம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு முத்துமாரியம்மன் சாமி ஊர்வலம் செல்லத் தடையாம்.

கோயிலுக்குமுன் வைக்கப்படும் மரத்தால் ஆன முத்துமாரியம்மனை வேண்டு மானால் தாழ்த்தப்பட்டவர்கள் கும்பிட்டுத் தொலையலாமாம். சாமி சிலையில்கூட மற்றவர் களுக்கு உலோகத்தால் ஆனது; தாழ்த்தப்பட்டவர் களுக்கு மரத்தால் ஆனதாம்.
அடேயப்பா, இந்தக் கடவுளைப்பற்றி எப்படி எப்படியெல்லாம் குலுக்கி மினுக்கி எழுதித் தள்ளியுள்ளார்கள்? அன்பே உருவானவர் காருண்ய மூர்த்தி, சகல உயிர்களையும் படைத்த சக்தி படைத்தவர் உருவமற்றவர் அரூபி என்று ஒரு பக் கத்தில் கிறுக்கி வைத்து விட்டு, இன்னொரு பக்கத்தில், கடவுளுக்கு உருவம் வைத்து பெண்டாட்டி, வைப்பாட்டிகள் என்று ஏற்பாடு செய்து, குழந்தைக் குட்டிகள் சகிதமாகக் கதை கட்டி, கோயில் திருவிழா என்ற பெயரில் சுரண்டல் தொழிலை நடத்துவதோடு, அதிலும் ஜாதிப் பிளவுகளை ஏற்படுத்தி, உன் கடவுள், என் கடவுள் என்று பேதப்படுத்தி, மக்கள் மத்தியில் மாச்சரியங்களையும், மோதல் போக்குகளையும் உண்டாக்குகிறார் கள் என்றால், இதன் தன்மை என்ன?

வைதிகரும், வைணவருமான ராஜகோபாலாச்சாரியாரே (ராஜாஜியே) முதல மைச்சராக இருந்த நிலையிலே ஒரு உண்மையை ஒப்புக்கொண்டார்.
நம் நாட்டில் மற்றவர்கள் சண்டையைக் காட்டிலும் பக்தர்களின் சண்டையே அதிகம். என் தெய்வம் பெரிதா? உன் தெய்வம் பெரிதா என்ற சண்டைகள்தான் அதிகம் என்று வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார் (சென்னை தமிழிசைச் சங்கத் திறப்பு விழாவில், 15.4.1953).

விழுப்புரம் பல்லவராயபுரத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் பகுதிகளில் சாமி ஊர்வலம் வரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

மகேசன் விஷயத்தில் மாவட்ட ஆட்சியர்தான் தலையிடவேண்டுமோ!

என்ன, மகேசனோ, மண்ணாங்கட்டியோ!

--------------------மயிலாடன் அவர்கள் 12-8-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

அ.முத்து பிரகாஷ் said...

பேரன்பு தோழருக்கு காலை வணக்கங்கள்!

மதங்கள் உருவாக்கும் பிரிவினைகளுக்கும் பூசல்களுக்கும் கடவுள் காரணமல்ல அவை மதத்தின்-மதவாதிகளின் குறைபாடு என உடனேயே ஆன்மீகவாதிகளிடமிருந்து ஒரு ரெடிமேட் பதில் வந்து விடும் உங்கள் பதிவிற்கு.இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு தான் இதையே சொல்லிக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை ;வருத்தப் படத்தான் தோன்றுகிறது.நெஞ்சு பொறுக்குதில்லையே ...
இன்று ஆடிவெள்ளியாமாம் .... அதிகாலை நாலரை மணி முதல் தெருவுக்கு தெரு ஸ்பீக்கர் கட்டி காதலி கிழிக்கிற மாதிரி சத்தம் வெச்சு பண்ற கொடுமை தாங்க முடியல ....

TAI CHI Federation of India said...

bkhHp khw;wkh> tHp khw;wkh> jkpHf murpd; epjp cjtpnahL jpuhtplh; fHfk; jahhpj;j “bghpahh;” jpiug;glk; bjY';fpy; bkhHp khw;wk; bra;ag;gl;Ls;sJ. ,e;j glj;jpd; Kd;ndhl;l epfHr;rp Fwpj;J tpLjiyapy; tphpthd bra;J btspte;Js;sJ. bghpahh; glk; bjY';F bkhHpapy; btsptUtJ kfpH;r;rpf;F chpaJ. Vida ,e;jpa bkhHpfspYk; bkhHpkhw;wk; bra;ag;gl;L/ ,e;j glk; btspaplg;gl ntz;Lk;.
Mdhy; bjY';fpy; ,e;j glj;jpw;fhd jiyg;ig “bghpahh; uhk!;thkp ehaf;fh;” vd;W khw;wpa[s;sdh;. bghpahiu ehaf;fh; vd;W ahuhtJ Fwpg;gpl;lhy;/ tpLjiy fLk; nfhgj;njhL tpkh;rpf;Fk;. mJ epahakhdnj. Mdhy; me;j ,af;fnk Me;jpuhtpy;/ bghpahUf;Fg;gpd;dhy;/ ehaf;fh; vd;w $hjpg; gl;lj;ij xl;l itj;Js;sjd; bghUs; vd;d>. ,jdhy; Me;jpuhtpy; ed;whf XLk; vd;W epidf;fpwhh;fsh> $hjpg;gl;lj;ij Jhf;fpbawpe;j/ $hjp xHpg;gpw;fhf jdJ thH;ehis mh;g;gzpj;j me;j kfj;jhd jiytUf;F ,iHf;fg;gLk; mePjp my;yth. ,J> tpLjiy bra;jpapy; xU ,lj;jpy; Tl bjY';fpy; vd;d bgah; Nl;lg;gl;Ls;sJ vd;W Fwpg;gplg;gltpy;iy. Mdhy; nkilapy; itf;fg;gl;Ls;s ngdhpy; bjY';F bkhHpapy;/ “bghpahh; uhk!@;thkp ehaf;fh;” vd;W bjspthf vGj;g;gl;Ls;sJ. jkpHh;fs; ahUk; bjY';F bkhHpia gof;f khl;lhh;f;s vd;W epidj;Jtpl;lhh;fs; nghYk;.
Ijuhghj;jpy; bghpahh; rpiy itf;f ntz;Lk; vd;W tPukzp nfhhpa[s;shh;. me;j rpiyia jkpHf muR bra;J jUk; vd;W Jiz Kjy;th; Twpa[s;shh;. Me;jpu mikr;rh;/ rpiyf;fhd ,lk; xJf;fg;gLK; vd;W xg;g[jy; mspj;Js;shh;. me;j gPlj;jpyhtJ “uhk!;thkp ehaf;fh;” vd;W bghwpf;fhky; tpl;lhy; rhp. - f.tujhuh$Y. yl;Rkpg[uk; / njdp. jPf;fjph; 13.08.2010