Search This Blog

12.8.10

இந்து மதம் என்ன செய்தது?

உங்களுடைய உரிமைகளுக்காக பாடுபடக்கூடிய இயக்கம் திராவிடர் கழகம்
வாலாஜா பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு

உங்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கின்ற அமைப்பு திராவிடர் கழகம் என்று வாலாஜா பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

8.8.2010 அன்று வாலாஜாவில் நடைபெற்ற மண்டல திராவிடர் கழக மாநாட்டில் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை யின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

நம்முடைய பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் ஞாபகப்படுத்தினார். தேவநாதன் என்றால் இந்திரன். இந்திரன், என்ன செய்தான்? டி.ஏ.மதுரம் அவர்கள் ஒரு திரைப்படத்தில் மிக அழகாக சொல்லுவார்கள்.

பொட்டி மவன் இந்திரனா?

ஓகோ இந்த பொட்டி மவன் இந்திரன் இவன்தானா? என்று சொல்லுவார். அகலிகையிடம் தவறாக நடந்து கொண்டவன். ரொம்ப அசிங்கமான வேலை. தேவர்களுக்குத் தலைவன் அவன். அவனுடைய யோக்கியதையே அப்படி இருந்திருக்கிறதென்றால், மற்றவனுடைய யோக்கியதை எப்படியிருக்கும் என்பதை நீங்களே நினைத்துப் பார்க்கலாம்.

கடவுள் இல்லை; இல்லவே இல்லை என்பதை ஒரு சோதனைக் கூடம் மாதிரி செய்து காட்டி விட்டான். எங்களை கஷ்டப்படுத்திக் கொண்டு கார் இழுப்பது, தேர் இழுப்பது இதைத் தான் செய்து கொண்டிருக்க முடியுமே தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.

கலைப்பதற்கே பெயர்போன சங்கராச்சாரி

சங்கராச்சாரியார் எவ்வளவு மோசமான காரியங்களை செய்துவிட்டு இப்பொழுது உலா வருகிறார் பாருங்கள். சங்கரராமன் கொலை வழக்கில் 39 சாட்சிகளை கலைத்திருக்கின்றார். கின்னஸ் புத்தகத்தில் அடுத்து அவர் இடம் பெறுவார். கலைப்பதே அவர்களுக்குப் பழக்கம். சாட்சியைக் கலைத்திருக்கிறார். கட்சியைக் கலைத்திருக்கிறார். எல்லாவற்றையும் கலைத் திருக்கிறார்.

இன்னொருவர் நித்யத்துக்கே ஆனந்தன். அவன் பார்த்தான். பாப்பானுக்கே இந்த விளையாட்டு காப்பி ரைட்டா? நாம் ஏன் பண்ணக்கூடாது என்று எல்லாவற்றையும் செய்தான். காவிகள் என்று சொல்லும்பொழுது ஆன்மிகம், ஆத்மார்த்தம் என்று சொல்லுகின்றவனெல்லாம் குண்டு வைக்கின்றான். நாடே நாறுகிறது. திருவண்ணாமலையில் நம்மாள் கிரிவலம் போனால், நரி வலம் வருகிறது. பக்தி என்ற பெயரில் உன் மதம் என்ன செய்தது? மனிதர்களுடைய ஒழுக்கத்தை நாசப் படுத்தியது.

இந்து மதம் ஒழுக்கத்தை நாசப்படுத்தியது

இந்து மதம் என்ன செய்தது? ஒழுக்கத்தை நாசப்படுத்தியது. ஒற்றுமையைக் குலைத்தது. மனித நேயத்தை சிதைத்தது. இதைத்தவிர நீங்கள் செய்திருக்கிற காரியம் என்ன? பெரும்பாலான மக்களுக்கு கல்விக் கண்ணை அழித்தது. அந்தக் கல்விக் கண்ணை அவர்களுக்குக் கொடாததினுடைய விளைவுதான் அவர்கள் மிருகங்களைவிட கேவலமாக வாழக்கூடிய நிலை ஏற்பட்டது. எனவே காவிகள் அதன் மூலம் தத்து வார்த்தங்கள் யார் போட்டிருந்தாலும் அவர் களுடைய முன்பிருந்த நிலைமைகள் என்ன என்று ஆராய்ச்சி செய்து பார்த்தீர்களேயானால் தெளிவாக உங்களுக்குத் தெரியும்.

வேலைக்காரியில் அண்ணா சொல்வார்

அண்ணா அவர்களுடைய வேலைக்காரி படத்தின் வசனத்தில் சொல்லுவார். சிரித்திடும் நரி சிவ சொரூபத்தில் இருந்தது. அந்த ஆஸ்ரமத்தில் என்று அவர்கள் சொல்லுவார்கள். அது மாதிரி சிரித்திடும் நரிகள் எல்லாம் சிவசொரூபத்தில் இருப்பது தானே உன்னுடைய மதம்.

இந்து மதம் என்கிற பெயரில் அதை நீ திருத்துவதற்கு முயற்சி பண்ணாமல் அடுத்த ஊருக்கு வரவேண்டியது, எங்கு சிறுபான்மை சமுதாய மக்கள் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் தூண்டிவிட்டு, அவர்கள் மேலெல்லாம் ஒரு பழியைப் போடுவது, ஒன்றுமில்லாத அப்பாவிகளாக இருக்கிறான் பாருங்கள் நம்மாள், அவர்களிடம் வம்பை உண்டாக்குவது, அவனை மற்றவனை தகராறு பண்ண வைப்பது, சமூக ஒற்றுமையை சிதைப்பதுதான் இந்தக் காவிகளின் வேலை. வேறு என்ன?

மனிதநேயத்தை விரும்புகிறவர்களுக்குப் பாதுகாப்பு

ஆகவே திராவிடர் கழகம் உங்களுக்குப் பாதுகாப்பான ஓர் அமைப்பு. யாருக்கு? மனித நேயத்தை யார் யார் விரும்புகிறார்களோ அவர்களுக்கெல்லாம் பாதுகாப்பான அமைப்பு. மக்களிடையே பகுத்தறிவு சிந்தனை வளர்ச்சி அடைய வேண்டும். இன்றைக்கு அறிவியல் வளர்ந்த தினாலேதான் இவ்வளவு பெரிய காரியங்கள் நடைபெறுகின்றன.

அறிவியலை வளர்ப்பதற்கு...!

எனவே அறிவியலை வளர்ப்பதற்கு இந்த இயக்கம் தேவை. பகுத்தறிவை வளர்ப்பதற்கு இந்த இயக்கம் தேவை. பெண்கள் படிப்பதற்கு இந்த இயக்கம் தேவை.

உழைக்கின்ற மக்களுக்கான இயக்கம்

உழைக்கின்ற மக்கள் அதன் பலனை அனுபவிக்க முடியாத நிலையில் இருந்ததை மாற்றுவதற்கு இந்த இயக்கம் தேவை. ஆகவே, இந்த இயக்கம் உங்கள் எல்லோருக்கும் பாதுகாப்பு அளிப்பது, எப்படி ஒரு காவல் நிலையம் இருந்தால் அந்த காவல் நிலையம் எல்லோருக்கும் பொதுவானது. அதுமாதிரி திராவிடர் கழகம் எல்லோருக்கும் பொதுவானது.

திராவிடர் கழகம் ஒரு பொது அமைப்பு

அதைத்தான் பெருமாள் சொன்னார். நாங்கள் எந்த கட்சியையும் சார்ந்தவர்கள் இல்லை. நாங்கள் ஒரு பொது அமைப்பு. எல்லோருக்கும் என்று சொன்னார்கள். திராவிடர் கழகம் ஒரு மருத்துவமனை போன்றது. உங்களுடைய மூடநம்பிக்கை நோய்களுக்கெல்லாம் அதுதான் மருந்து போடும். திராவிடர் கழகம் ஒரு பள்ளிக்கூடம் போன்றது. அதுதான் உங்கள் கல்லாமையை, உங்கள் அறியாமையை போக்கக் கூடியதாக இருக்கும். ஒரு தீயணைப்பு நிலையம் போல ஜாதிச் சண்டை, தீ வைப்புகள் வந்தால் அவைகளைப் போக்கக் கூடியதாக திராவிடர் கழகத்தின் பணி இருக்கும்.

ஆதரவு தாரீர்!

எனவே, இப்படிப்பட்ட ஓர் இயக்கத்திற்கு என்றைக்கும் நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டு இவ்வளவு சிறப்பான மாநாட்டை நடத்திய நம்முடைய தோழர்கள் அத்துணை பேருக்கும் மனமுவந்த பாராட்டுதலகளைத் தெரிவிப்பதோடு, பெரியார் நாடு என்று அழைக்கப்படக்கூடிய ஒரத்தநாடு. 19ஆவது முறையாக அவர்கள் விடுதலை சந்தாவை அளித்திருக்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டிற்கே வழிகாட்டக்கூடியதாக அது இருந்திருக்கிறது. ஆகவே அவர்களுக்கு விடுதலையின் சார்பாக, இயக்கத்தின் சார்பாக நன்றியை எடுத்துச் சொல்லி புதிய இளைஞர்களே இந்த இயக்கத்திற்கு வாருங்கள். அதன் மூலம் தன்மானம் பெறுங்கள். பகுத்தறிவைப் பெறுங்கள். இந்த இயக்கத்தைப் பக்குவப்படுத்துங்கள். தமிழர்களே நாங்கள் யாருக்கும் விரோதிகள் அல்லர்.

உங்கள் உரிமைக்குப் பாடுபடக்கூடியவர்கள்

மாறாக உங்களுடைய தன்மானத்தைப் பாதுகாக்கக் கூடியவர்கள். உங்களுடைய சந்ததியினுடைய உரிமைக்குப் பாடுபடக்கூடியவர்கள். சமூக நீதிக்காக உழைக்கின்றவர்கள். ஆகவே எங்களை சரியாக புரிந்துகொள்ளுங்கள் என்று கேட்டு, விடை பெறுகிறேன். இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

---------------------"விடுதலை” 12-8-2010

0 comments: